Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ரா இல்லாமல் இந்திய அணியால் தாக்குப் பிடிக்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக "ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் இல்லாதது, உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடாதது போல் இருக்கும்." இதைக் கூறியவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹார்மின்சன்தான். பும்ரா ஏற்படுத்திய தாக்கத்தின் ஆழத்தை, போட்டியின் சுவாரஸ்யத்தை இவ்வளவு அழகாக, எளிமையாகக் கூற முடியாது. 9வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இங்கிலாந்தை 14 ஆண்டுகளுக்குப் பின் 'ஒயிட்வாஷ்' செய்த இந்திய அணி: கில் சதத்தோடு சாதனை, கோலி, ஷ்ரேயாஸ் அரைசதம் வழிகாட்டி ரன்னர்கள்: பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கெடுக்க உதவும் இவர்கள் யார்? 305 ரன் இலக்கை ஊதித் தள்ளிய இந்தியா: இங்கிலாந்தை சிதறடித்து புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் கோப்பைக்கான உத்தேச இந்திய அணியில் தொடக்கத்தில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றிருந்தாலும், இறுதி செய்யப்பட்டு நேற்று முன்தினம் பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இடமில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு போட்டியையும் தோளில் தூக்கிச் சுமந்த பும்ரா, அதிக பணிப்பளு காரணமாக கடைசி டெஸ்டில் முதுகு வலியால் அவதிப்பட்டார். ஏற்கெனவே பும்ராவுக்கு முதுகுவலிப் பிரச்னை இருந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் 2022 செப்டம்பர் முதல் 2023 ஆகஸ்ட் வரை 11 மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா ஒதுங்கி ஓய்வில் இருந்தார். ஆஸ்திரேலியா தொடருக்குப் பின் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் பும்ரா இடம் பெறவில்லை. இப்போது பும்ராவுக்கு உடல்நிலை தேறிவிட்டாலும், அணியின் எதிர்காலம் கருதி பிசிசிஐ அவரை சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தேர்வு செய்யவில்லை. குறுகிய கால இலக்குகளை மனதில் கொண்டு எடுக்கப்படும் முடிவுகளின் நீண்டகால தாக்கத்தை பிசிசிஐ கவனத்தில் கொண்டு பும்ராவை சேர்க்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சை வழிநடத்தக் கூடியவரான பும்ரா சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடாததால் அவரின் சுமை அனைத்தும் முகமது ஷமி மீது விழுந்துள்ளது. இந்திய அணியில் ஷமி தவிர்த்து அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, ஹர்திக் பாண்டியா ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், இந்த 3 பந்துவீச்சாளர்களும் ஷமிக்கு ஆதரவாக இருக்க முடியுமே தவிர பிரதானமாகச் செயல்பட முடியாது. ஏனென்றால், சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாடிய அனுபவம் இதில் இரண்டு வீரர்களுக்கு இல்லை. ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராகவே அணியில் இடம்பெறுகிறார். சாம்பியன்ஸ் கோப்பை என்பது ஏறக்குறைய மினி உலகக்கோப்பை போன்றதுதான். இதில் பந்துவீச்சுக்கு தலைமை வகிக்கும் பந்துவீச்சாளர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் வீழ்த்துவது, எதிரணி ஸ்கோரை கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசுவது, புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவது, டெத் ஓவர்களில் சக பந்துவீச்சாளர்களை வழிநடத்துவது, ஆலோசனைகள் தருவது என முக்கியப் பணிகளைச் செய்ய வேண்டும். ஜஸ்பிரித் பும்ரா இருந்திருந்தால், இந்தப் பணிகளை அவர் செய்திருப்பார், அவர் இல்லாத நிலையில் ஷமி அந்த இடத்தை நிரப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். IND vs ENG: கோலி வருகையால் ஸ்ரேயாஸ் நீக்கம்? - ஆடுகளம் யாருக்கு சாதகம்?9 பிப்ரவரி 2025 இந்தியா VS இங்கிலாந்து: இந்திய அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்ற மூவர் கூட்டணி7 பிப்ரவரி 2025 பும்ரா ஏன் தேவை? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் பந்துவீச்சில் முக்கிய அச்சாணியாகவும், துருப்புச் சீட்டாகவும் ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். சிறந்த உதாரணத்தைக் கூற வேண்டுமென்றால், டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும், இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து அணியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதில் பும்ராவுக்கு நிகர் பும்ராதான். பும்ரா இடத்தில் வேறு எந்த வேகப்பந்துவீச்சாளர் இருந்தாலும் இதைச் செய்திருக்க முடியாது என்பதை ரசிகர்கள் அறிவர். சக பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தம் வராமல் எதிரணியின் எந்த பேட்டரை எப்படி வெளியேற்றுவது, புதிய பந்தில் விக்கெட்டை வீழ்த்தி எதிரணியினரைச் சுற்றலில் விடுவது என பும்ராவின் பணிகள் மகத்தானது. இந்திய அணி ஏ பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுடன் மோதவிருக்கிறது. இதில் வங்கதேசம் அணி திடீரென அதிர்ச்சியளிக்கும் வகையில் விளையாடினாலும், பும்ரா இல்லாமல் இருந்தால்கூட இந்திய அணி சமாளித்து வெற்றி பெற்றுவிடும். ஆனால், பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த 3 அணிகளுக்கு எதிராகவும் பும்ரா அதிகமான போட்டிகளை ஆடாவிட்டாலும், அவரின் பந்துவீச்சு இந்த அணிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் வாயிலாக அறியலாம். பாகிஸ்தானுக்கு எதிராக 8 ஒருநாள் போட்டிகளில் 51 ஓவர்கள் வீசிய பும்ரா 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 4.5 எக்கானமி வைத்துள்ளார். அதேபோல நியூசிலாந்துக்கு எதிராக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பும்ரா 121 ஓவர்களை வீசியுள்ளார், 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 4.8 எக்கானமி வைத்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிராக 5 போட்டிகளில் 47 ஓவர்கள் வீசிய பும்ரா 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 4.4 எக்கானமி வைத்துள்ளார். இந்த 3 அணிகளுக்கு எதிராகவும் குறைவான போட்டிகளில் பும்ரா பந்து வீசியிருந்தாலும், அவர் வைத்திருக்கும் எக்கானமி ரேட் அற்புதமானது. ஒருநாள் போட்டிகளில் எந்தப் பந்துவீச்சாளரும் இதுபோலக் குறைவான எக்கானமி ரேட் வைத்திருப்பது கடினம். குறிப்பாக, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் 50 ஓவர்கள் போட்டிகளில் நடுப்பகுதி ஓவர்கள் மிகவும் முக்கியமானது. ஓர் அணியின் ஸ்கோர் மேலே உயர்வதும், கட்டுப்படுத்தப்படுவதும் இந்த நடுப்பகுதி ஓவர்களில்தான் தீர்மானிக்கப்படும். இதுபோன்ற முக்கியமான கட்டத்தில் பந்துவீசுவதற்கு பும்ரா எனும் பிரம்மாஸ்திரம் இந்திய அணியில் இருக்க வேண்டும். இப்போது பும்ரா இல்லாததால் நடுப்பகுதி ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும் அவர் இடத்தை நிரப்ப சரியான வீரரைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ரொனால்டோ: உலகின் சிறந்த கால்பந்து வீரரா? தமிழக, கேரள கால்பந்து ரசிகர்கள் சொல்வது என்ன?5 பிப்ரவரி 2025 கோலி, ரோஹித்துக்கு கடைசி வாய்ப்பு - இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் என்னென்ன?6 பிப்ரவரி 2025 டி20 தொடரை வென்ற இந்தியா; அபிஷேக் சர்மாவின் ரன்களை கூட எடுக்க முடியாமல் இங்கிலாந்து தோற்றது எப்படி?3 பிப்ரவரி 2025 இந்திய அணிக்கு எது முக்கியம்? பட மூலாதாரம்,GETTY IMAGES சாம்பியன்ஸ் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாததைப் போல் உலக சாம்பியன்ஸ் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் கம்மின்ஸ் பங்கேற்கவில்லை. அவரோடு, ஹேசல்வுட், மிட்ஷெல் ஸ்டார்க் உள்பட 3 முக்கியப் பந்துவீச்சாளர்களே அந்த அணியில் விளையாடவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு உலக அரங்கில் வெற்றியை தேடித் தந்ததே இந்த மூன்று பந்துவீச்சாளர்கள்தான். இவர்கள் இல்லாத நிலையில் ஸ்மித் தலைமையில் அனுபவமில்லாத இளம் பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு அந்த அணி களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் தேர்வு உணர்த்துவது நம்பிக்கையை மட்டும்தான். அதேபோல பும்ரா இல்லாத சூழலிலும் ஷமி தலைமையில் ஒவ்வொரு போட்டியையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையோடு இந்திய அணி அணுக வேண்டும். இடதுகை வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், அனுபவ வீரர் ஷமி புதிய பந்தில் பந்து வீசினாலும், நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சாளர்களைத் தவிர்த்து ஹர்திக் பாண்டியா, ஹர்சித் ராணா ஆகிய 2 வேகப்பந்துவீச்சாளர்களும் உள்ளனர். இவர்கள்தான் நடுப்பகுதி ஓவர்களில் ஆட்டத்தை கட்டுப்படுத்தக் கூடியவர்கள். பும்ரா இல்லாத இடத்தை நிரப்புவது கடினம் என்ற போதிலும், நம்பிக்கையுடன் அனுகுவது அவசியம். விளையாட்டுத் துறையில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை குவிப்பதை நிதிப் பற்றாக்குறை தடுக்கிறதா?31 ஜனவரி 2025 வருண் மாயஜாலம், அபிஷேக் அதிரடி: முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தின் பேஸ்பால் வியூகத்தை நொறுக்கிய இந்திய அணி23 ஜனவரி 2025 ஐந்து சுழற்பந்துவீச்சாளர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி, சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகிய 5 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. துபை மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றதுதான் என்றாலும், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி ஒரேயொரு முழுநேர சுழற்பந்துவீச்சாளருடன்தான் களமிறங்குகிறது. இதில் பும்ராவுக்கு பதிலாக கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ள தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி மீது கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால்தான் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பளித்து வருணை பரிசோதித்துப் பார்த்தனர். டி20 போட்டிகளில் 4 ஓவர்கள் வீசி அனுபவப்பட்ட வருண், எவ்வாறு 10 ஓவர்களை வீசுவார் என்பது ஒரு சில போட்டிகளை வைத்து முடிவு செய்வது கடினம்தான். ஆனாலும், வருணின் புதிரான, மாயாஜால பந்துவீச்சு துபை போன்ற சுழற்பந்துவீச்சு ஆடுகளத்தில் நன்றாக எடுபடும் என நம்புகிறார்கள். நடுப்பகுதி ஓவர்களில் எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்துவதில் சினாமென் அல்லது மணிக்கட்டைப் பயன்படுத்தி பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் பங்கு முக்கியமானது. இதில் குல்தீப் யாதவ் பந்துவீச்சு பெரியளவு பலன் அளிக்கும் என்றாலும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் குல்தீப்புக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கவில்லை. கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2024 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நடுப்பகுதி ஓவர்களில் குல்தீப் பந்துவீச்சு எந்த அளவுக்கு முக்கியமாக இருந்தது என்பதைப் புரிந்து அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஆதலால் பும்ரா எனும் கருப்புக் குதிரை இல்லாத நிலையில் வெற்றியைப் பெற இந்திய அணி சற்று கடினமாகப் போராட வேண்டியிருக்கும். துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனையின் வெற்றிக் கதை18 ஜனவரி 2025 காதலர் தினம்: வெளியூரில் வீட்டுச்சிறை, காணாமல் தேடிய காதலர் - சாதி தடையை உடைத்து இணைந்த தம்பதி2 மணி நேரங்களுக்கு முன்னர் வெற்றி வாய்ப்பு குறையுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியில் பும்ரா இல்லாதது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஐசிசிக்கு அளித்த பேட்டியில், "இந்திய அணியில் பும்ரா இல்லாததால் இந்திய அணி சாம்பியன் வெல்லும் வாய்ப்பு 30 முத்ல 35 சதவீதம் பாதிக்கும் என்பது நிதர்சனம். பும்ரா ஒருவேளை விளையாடும் உடல் தகுதியைப் பெற்றால் நிச்சயம் டெத் ஓவர்கள் வேறு மாதிரியாக இருக்கும், முக்கியமான தருணத்தில் பும்ராவின் பந்துவீச்சு அற்புதமாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார். அதோடு, பும்ராவின் உடல்நிலை தேறினாலும் இந்த நேரத்தில் அவரை அணிக்குள் சேர்ப்பது மிக ஆபத்தானது எனவும் அவர் தெரிவித்தார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், "பும்ரா இந்திய அணியில் இல்லாத நிலையில் கவனத்தை ஷமி மீது செலுத்த வேண்டும். ஆஸ்திரேலிய பயணத்தில் பும்ராவுக்கு பக்கபலமாக ஷமி போன்ற பந்துவீச்சாளர் இல்லாததுதான் அவர் உடல்நலக்குறைவு ஏற்படக் காரணமாக இருந்தது" எனத் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdry8y0egdpo
  2. 14 FEB, 2025 | 11:29 AM முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை, சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை இன்று (14) காலை ஆரம்பித்துள்ளார். ஒரு காலினை இழந்த முன்னாள் போராளி அழகரெத்தினம் வனகுலராசா இன்றைய தினம் காலை 7 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் நீர், உணவு உட்கொள்ளாமல், நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவர் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை மட்டுமன்றி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆரம்பித்துள்ளார். அவர் முன்வைக்கும் கோரிக்கைகளாவன: 1. தமிழர்களுக்கு தனி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். 2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும். 3. மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். 4. தமிழினத் துரோகிகள் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். 5. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 6. பிரதேசவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். 7. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இல்லாதவர்கள் இருந்ததாகக் கூறி, வெளிநாடு மற்றும் உள்நாட்டில் சக போராளிகளை காரணம் காட்டி, பணம் வசூலித்து, போராளிகளை ஏமாற்றி, சுற்றுலா விடுதி, தோட்டம், பண்ணை அமைத்து வேலை செய்யும் பணியாளர்களுக்கு சரியான சம்பளம் வழங்காமல் இருப்பதை நிறுத்தி, அவர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு 200 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும். 8. முதியோர் மற்றும் இளையோர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 9. காணி மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு காணி, வீடு வழங்கப்பட வேண்டும். 10. இலங்கையில் பிச்சை எடுப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதால், பிச்சை எடுப்பவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்த 10 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராளி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். https://www.virakesari.lk/article/206650 அடிப்படைச் சம்பளம் மணிக்கு 300 - 400 ரூபா வழங்கினால் தான் வாழமுடியும். பெண்களே மணித்தியாலத்திற்கு 200ரூபா வாங்குகிறார்கள்.
  3. Published By: VISHNU 12 FEB, 2025 | 09:15 PM ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற உலக அரச உச்சி மாநாட்டின் (WGS) பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (11) ஒரக்கல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பொருளாதாரம் மற்றும் நிர்வாகச் செயற்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கையின் டிஜிட்டல் மாற்றம், பின்டெக் சேவை மற்றும் கிளவுட் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திகொள்ளல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்க ஒரகல் கிளவுட் உட்கட்டமைப்பு (OCI) வழங்க விருப்பம் குறித்த நிறுவனம் தெரிவித்ததுடன், தரவு சுயாதீனத் தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கப்பாடுகளை உறுதிப்படுத்தி, அரசாங்க விண்ணப்பங்கள், இலத்திரனியல் நிர்வாக வசதிகள் மற்றும் தேசிய தரவு கட்டமைப்பு ஒன்றை ஸ்தாபிப்தற்கும் முன்வருமாறு ஜனாதிபதி ஒரகல் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார். பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் நகர்வை விரைவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் ஒரகல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியா ஆகியோர் பின்டெக் மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவு வசதிகளுக்கான ஆரம்பகட்ட முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடினர். இதற்காக, கொழும்பு துறைமுக நகரத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கல் மையமொன்றை அமைக்குமாறு ஒரகல் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அது தெற்காசிய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் (Cloud Hub) மையமாக செயற்படும். அதற்கான குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புமாறு ஜனாதிபதி மைக் சிசிலியாவிடம் கோரிக்கை விடுத்தார். பிராந்திய அடிப்படையிலான டிஜிட்டல் மாற்றம் மற்றும் புத்தாக்கத்துக்கான ஒரகல் நிறுவனத்தின் நோக்குக்கு அமைய அதன் தெற்காசிய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் (Cloud Hub) மையமொன்றை கொழும்பு துறைமுக நகரில் அமைப்பதற்கு ஒரகல் நிறுவனம் ஆர்வமாக உள்ளதாக அந்த நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் தெரிவித்தார். இது ஒரு மூலோபாய நடவடிக்கை என்ற வகையில் செயற்கை நுண்ணறிவின் ஊடாக செயற்படுத்தப்படும் கிளவுட் வசதிகளில் இலங்கையை பிராந்தியத்தின் முன்னோடியாக மாறுவதற்கு உதவும். அதேபோல் அரச - தனியார் கூட்டு முயற்சிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப முதலீடுகளுக்கும் அடித்தளமாக அமையும். அதற்கமைய, இந்தக் கலந்துரையாடலில், நிர்வாக வினைத்திறன், பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலகளாவிய போட்டித் தன்மைக்காக பயன்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய ஜனாதிபதி, அநுர குமார திசாநாயக்க, , இலங்கையின் டிஜிட்டல் பரிணாம செயன்முறையில் முக்கிய பங்கை வகிக்க முன்வருமாறும் ஒரகல் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார். வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மேல்மாகாண ஆளுநர் ஹனீஸ் யூசுப் உள்ளிட்டவர்களும் இந்த கலந்துரையாடலில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/206535
  4. Blind Runners: பார்வையற்ற Paralymic Athletes வழிகாட்டி உதவியுடன் ஓட்டப்பந்தயத்தில் சாதிப்பது எப்படி? பார்வை மாற்றுத் திறனாளி தடகள வீரர்கள் கைட் ரன்னர்களை பயன்படுத்துகின்றனர். அபே, 2 மாதங்களாக சிம்ரனின் கைட் ரன்னராக இருக்கிறார். ரக்‌ஷிதாவும் அவரது கைட் ரன்னர் ராகுலும் நெகிழிக் கயிற்றால் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கைட் ரன்னரை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது. தடகள வீரர் வென்றால் அவர்களுக்கும் பதக்கம் கிடைக்கும், ஆனால், வேறு உதவி எதுவும் கிடைக்காது. "எங்களுக்கு பணமோ, வேலையோ எதுவுமே கிடைக்காது. கைட் ரன்னராக ஓடுவதில் என்ன பயன் இருக்கிறது?" என்கிறார் ரக்‌ஷிதாவுக்கு கைட் ரன்னராக இருக்கும் ராகுல் பாலகிருஷ்ணா. அதில், கைட் ரன்னரான அபே குமாரின் வழிகாட்டுதலோடு சிம்ரன் 200மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  5. பண்பு நிறைந்த பத்திரிகையாளன் பாரதியை இழந்து நிற்கும் தமிழ்ப் பத்திரிகை உலகம் Published By: DIGITAL DESK 7 11 FEB, 2025 | 09:19 AM வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கை பத்திரிகை நிறுவனமும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து மவுண்ட் லவினியா ஹோட்டலில் ஜனவரி 7 ஆம் திகதி இரவு நடத்திய ' சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் ' வழங்கும் வனப்புமிகு விழாவில் இறுதியாக நான் பாரதியைச் சந்தித்தேன். நீண்ட நேரமாக அவருடன் பேசி, மீண்டும் சந்திப்போம் என்று கூறி இருவரும் விடை பெற்றுக் கொண்டோம். ஆனால், அதற்கு பிறகு ஒரு மாதமும் இரு நாட்களும் கடந்த நிலையில் கடந்த ஞாயிறன்று பாரதி எம்மிடமிருந்து நிரந்தரமாகவே விடை பெற்ற துயர்நிறைந்த செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த சில வாரங்களாக பாரதி சுகவீனமுற்று வைத்தியசாலையால் சிகிச்சை பெற்று வந்தார் என்ற போதிலும், அவர் விரைவில் சுகமடைந்து விடுவார், அவரைச் சென்று பார்க்கலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தோம். உண்மையில், அவர் எம்மத்தியில் இன்று இல்லை என்பதை நம்புவதற்கு மனம் மறுக்கிறது. பாரதியின் மறைவு எம்மிடமிருந்து பண்பும் ஆற்றலும் நிறைந்த ஒரு சிறந்த பத்திரிகையாளனை அபகரித்துச் சென்று விட்டது. பாரதி ஒரு சிறந்த பத்திரிகையாளன் என்பதற்கு அப்பால் ஒரு சிறந்த மனிதநேயன். அரசியலைப் போன்றே போட்டியும் சூழ்ச்சியும் நிறைந்ததாக மாறிவிட்ட ஊடகத்துறையில் பாரதியைப் போன்று முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சகலருடனும் இணக்கப் போக்குடன் ஊடாட்டங்களைச் செய்யும் ஒரு பத்திரிகையாளனை இனிமேல் காணமுடியுமா என்று மனம் ஏங்குகிறது. மற்றவர்களுக்கு தீங்கு செய்வதை கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்காத ஒரு பிறவி பாரதி. என்னைப் பொறுத்தவரை, பத்திரிகைத்துறைச் சகபாடி ஒருவர் என்பதற்கு அப்பால் என்னை நன்கு புரிந்து கொண்டு, நான் இழைத்திருக்கக்கூடிய தவறுகளையும் கூட பொருட்படுத்தாமல் என்னுடன் நீண்டகால பழகி நெருங்கிய நண்பனை இழந்து நிற்கிறேன். பாரதிக்கும் எனக்கும் இடையிலான ஊடாட்டம் அவர் 1990 களின் முற்பகுதியில் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் உதவி ஆசிரியராக இணைந்து கொண்டதுடன் தொடங்கியது. எங்களுக்கு இடையிலான நெருக்கத்துக்கு 35 வயது. கொழும்பில் இருந்து பணியாற்றிய எங்களைப் போன்றவர்களைப் போலன்றி, பாரதி பத்திரிகைத் துறையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வளர்ந்தவர். ஆயுமேந்திய தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் தோற்றம் பெறத்தொடங்கிய நாட்களில் அவரின் பத்திரிகைத்துறைப் பிரவேசம் இடம்பெற்றது. முதலில் 1980 களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஈழமுரசு, முரசொலி பத்திரிகைகளில் பணியாற்றி பாரதி இந்திய அமைதி காக்கும் படை வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் விபத்தொன்றில் சிக்கிய பின்னரே வீரகேசரியில் இணைந்துகொணடார். பாரதியின் பத்திரிகைத்துறை வாழ்வு உள்நாட்டுப்போர் நீடித்த மூன்று தசாப்தங்களையும் போர் முடிவுக்கு வந்ததற்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களையும் உள்ளடக்கியதாகும். அதன் காரணமாக அவர் இயல்பாகவே தமிழ்த் தேசியவாத அரசியல் கோட்பாடுகளில் நிறைந்த ஈடுபாடு கொண்டவராக, தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும் பற்றுறுதியுடன் நியாயப்படுத்துவதற்கு தனது எழுத்தை அர்ப்பணித்தவராக வாழ்ந்தார். அதன் விளைவாக சிறந்த ஒரு அரசியல் விமர்சகராகவும் அவரால் விளங்க முடிந்தது. பாரதி வீரகேசரியில் இணைந்த ஆரம்ப நாட்களிலேயே தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலான சில ஆய்வு முயற்சிகளுக்கு முகாமைத்துவம் அவரைப் பயன்படுத்தியதை நான் நன்கு அறிவேன். அந்த ஆய்வுகளை ஒரு நூலாக்கும் முயற்சியும் கூட மேற்கொள்ளப்பட்டது. பாரதி அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து நிறையவே எழுதியிருக்கிறார். பத்திரிகையாளர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் தீவிரமான ஈடுபாடு கொண்டவராக விளங்கிய பாரதி பல தடவைகள் இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவராக பணியாற்றினார். தினக்குரல் பத்திரிகை 1997 ஏப்ரிலில் தொடங்கப்பட்டபோது அதன் முதல் செய்தி ஆசிரியராக நான் இணைந்து கொண்டேன். என்னுடன் முதலில் கூட வந்தவர்கள் பாரதியும் சீவகனுமேயாவர். புதிய பத்திரிகையில் இணைவதில் உங்களுக்கு தயக்கம் எதுவும் இல்லையா என்று நான் இருவரையும் கேட்டபோது" நீங்கள் போகிறீர்கள் ...... எங்களுக்கு என்ன தயக்கம் " என்று இருவரும் கூறியது இன்றும் என் காதில் எதிரொலிக்கிறது. அந்தளவுக்கு என்மீது பாரதி வைத்திருந்த நம்பிக்கை உணர்வு என்னை நெகிழ வைத்தது. இறுதிவரை என்னுடனான அந்த நெருக்கத்தை அவர் பேணினார். தினக்குரலின் பிரதம ஆசிரியராக 2004 ஏப்ரிலில் என்னை பொறுப்பேற்குமாறு முகாமைத்துவம் கேட்டபோது அவர்களிடம் நான் ஒரு கோரிக்கையை முன்வைத்தேன். பாரதியை ஞாயிறு தினக்குரலின் பொறுப்பாசிரியராக நியமிப்பதாக இருந்தால் மாத்திரமே நான் பிரதம ஆசிரியராக பொறுப்பேற்பேன் என்று கூறினேன். பாரதி போன்ற அனுபவமும் ஆற்றலும் கொண்ட ஒருவரை அந்த பொறுப்பில் அமர்த்தினால் எனது பணிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நான் திடமாக நம்பினேன். முகாமைத்துவமும் எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பாரதியை ஞாயிறு தினக்குரலுக்கு பொறுப்பாக நியமித்தது. வாரப்பத்திரிகையின் வளர்ச்சிக்கு பாரதியின் பங்களிப்பு மகத்தானது. செய்திகளைக் கையாளுவதை விடவும் வாரப்பத்திரிகைக்கு உரிய சிறப்பு அம்ச விடயதானங்களைக் கையாளுவதில் பாரதியின் ஆற்றல் அபாரமானது என்பதை அவர் தனது பணியின் மூலம் நிரூபித்தார். கலை இலக்கியத்துறை சார்ந்தவர்களை ஞாயிறு தினக்குரலின் பக்கம் கவர்ந்ததில் பாரதியின் பங்களிப்பு முக்கியமானது. தினக்குரலின் முகாமைத்துவத்தில் 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து நாமெல்லோரும் வீரகேசரி காரியாலயத்தில் பணியாற்ற வேணடியிருந்தது. பாரதியின் திறமையைக் கண்ட வீரகேசரி முகாமைத்துவம் பாரதியை தங்களுக்காக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டியதை நான் நன்கு அறிவேன். நவீன தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடனும் அவர் தன்னை எளிதாகவே பரிச்சயமாக்கிக் கொண்டார். பாரதி ஓய்வபெற்று யாழ்ப்பாணம் திரும்பிய பிறகு அங்குள்ள சில ஊடகங்களில் பணியாற்றினார். ஆனால், இறுதியில் வீரகேசரி நிறுவனம் அதன் யாழ்ப்பாணக் காரியாலயத்தில் பொறுப்பாசிரியராக நியமிப்பதற்கு ஒருவரை தேடியபோது பாரதியை அதற்கு பொருத்தமானவராக அடையாளம் கண்டு நியமித்தது. அந்த நியமனம் பாரதியின் வீரகேசரிக்கான மீள்வருகையாக அமைந்தது. ஆனால், அதில் சில மாதங்களே பணியாற்றிய நிலையில் அவர் எம்மை விட்டு பிரிந்துவிட்டார். திடீரென்று தாக்கிய பக்கவாத நோய் சில வாரங்களில் அவரைப் பலியெடுத்துவிட்டது. ஊடகத்துறையில் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் பல மட்டங்களில் பாரதிக்கு பெருமளவில் நண்பர்கள், அபிமானிகள் இருந்தார்கள். வெறுமனே அலுவலகத்திற்குள் தன்னை முடக்கிக் கொண்ட ஒரு பத்திகையாளராக இல்லாமல் வெளித் தொடர்புகளை நிறையவே அவர் ஏற்படுத்திக்கொண்டதன் விளைவாக புலம்பெயர் தமிழ்ச சமூகத்திலும் அவர் நன்கு அறியப்பட்டவராக விளங்கினார். பல வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டு தனது அனுபவத்தை வளப்படுத்திக் கொண்டார். புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் இயங்கும் சில ஊடகங்களுக்காக பல தடவைகள் என்னை நேர்காணல் செய்து என்னையும் அந்த சமூகத்துக்கு அறிமுகம் செய்தார். அவரது மறைவை ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறுவதை விடவும் நிச்சயமாக ஈடுசெய்யப்பட வேண்டிய இழப்பு என்றே நான் கூறுவேன். ஏனென்றால், பாரதியைப் போன்ற பரந்த அனுபவமும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்ட பத்திரிகையாளர் தமிழ் ஊடகத்துறைக்கு வேண்டும். எனது தனிப்பட்ட குறிப்பை இந்த சந்தர்ப்பத்தில் கூறவிரும்புகிறேன். விரும்புகிறேன். காலஞ்சென்ற முதுபெரும் இலக்கியவாதி டொமினிக் ஜீவா ஒரு தடவை என்னை அணுகி தனது மல்லிகை சஞ்சிகையில் அட்டைப்பட பிரமுகராக என்னை பதிவுசெய்ய விரும்புவதாக கூறினார். " அதற்கு யாரிடம் உங்களைப் பற்றி ஒரு கட்டுரையை வாங்கலாம்? " என்று அவர் என்னையே கேட்டார். " அவுஸ்திரேலியாவில் வாழும் எனது நெருங்கிய நண்பன் முருகபூபதி அல்லது பாரதியிடம் என்னைப் பற்றிய கட்டுரையை வாங்கினால் மாத்திரமே எனது புகைப்படத்தை தருவேன் " என்று நான் ஜீவாவிடம் திட்டவட்டமாக கூறிவிட்டேன். அவர் உடனே தினக்குரல் அலுவலகத்தில் இருந்த பாரதியின் அறைக்குச் சென்று அவரிடம் விடயத்தை சொன்னதாக அறிந்தேன். அடுத்த மல்லிகை இதழ் எனது படத்தைத் தாங்கி வந்திருந்தது. ஜீவாவே அதை கொண்டு வந்து தந்தார். உள்ளே பாரதி என்னைப் பற்றி எழுதிய கட்டுரை. அதை வாசித்த பிறகுதான் பாரதி என்னைப் பற்றி எத்தகைய அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார் என்பதையும் என்மீது எவ்வளவு அன்பை வைத்திருக்கிறார் என்பதையும் நான் புரிந்து கொண்டேன். பாரதி தனது அபிப்பாராயங்களை பெரிதாக வெளியில் பேசாத ஒரு பிறவி. ஆனால், நிதானமாக, ஆரவாரமின்றி சகலவற்றையும் அவதானித்து செயற்பட்ட ஒருவர். பரபரப்புக் காட்டுவதில் நம்பிக்கையில்லாத ஒருவர். ஒப்படைக்கப்பட்ட பொறுப்பைக் கச்சிதமாகச் செய்வதில் கண்ணாயிருப்பார். வீணான அபிப்பிராயங்கள் குறித்து அக்கறை காட்டமாட்டார். அண்மைக்காலமாக நானும் சுகவீனமுற்று சத்திரசிகிச்சைக்கு பிறகு குணமடைந்திருக்கிறேன். பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் என்னை கடந்த மூன்று வருடங்களாக பாரதி வாரம் ஒரு முறை யாழ்ப்பாணத்தில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு சுகம் விசாரிக்கவும் நாட்டு நடப்புகளைப் பேசவும் தவறுவதில்லை. பத்திரிகைகளுக்கு எழுதும் அரசியல் கட்டுரைகளைப் பற்றி காய்தல் உவத்தல் இன்றி கருத்துக்களைக் கூறுவார். மனமுவந்து நான் பேசும் பாரதியிடம் இருந்து இனிமேல் தொலைபேசி அழைப்பு வராது. பாரதியின் மனைவி தேவகி எனது ஊரான வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்தவர். அதனால் பாரதி எம்மவர் என்று மேலதிக உறவு கொண்டாடும் உரிமையும் எனக்கு இருப்பதாக நினைத்துக் கொள்வேன். மனைவிக்கும், மகன் பார்த்திபனுக்கும் சகோதரிக்கும் ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். "பாரதி..... உனக்கு அஞ்சலிக் குறிப்பை எழுதும் துரதிர்ஷ்டம் எனக்கு வரும் என்று நான் நினைத்ததில்லை. நீ முந்தி விட்டாய். சென்றுவா" https://www.virakesari.lk/article/206369
  6. உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் நாம் ஒன்றிணைவோம் - 2025 உலக அரச மாநாட்டில் ஜனாதிபதி Published By: VISHNU 12 FEB, 2025 | 07:49 PM உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாகவும், தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் புதன்கிழமை (12) உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி, புத்தாக்கம் மற்றும் அரச நிர்வாக மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் நோக்கு என்ற தலைப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றினார். இந்த உரையில் நிலையான அபிவிருத்தி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான இலங்கையின் அர்ப்பணிப்பும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. மானிட வர்க்கம் தொடர்பான முக்கியமான துறைகளில் எதிர்கால உத்திகள் மற்றும் திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு இந்த மாநாடு உந்து சக்தியாக அமையும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்க உலகளாவிய கூட்டு செயற்பாடும், முன்னணியொன்றினது அவசியத்தையும் வலியுறுத்தினார். சமூக நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியானது தரமிக்க தேசமொன்றைப் போன்றே வளமிக்க உலகமொன்றுக்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது எனவும், உடன்படிக்கைகளையும் சட்டங்களையும் முறைசார்ந்தவகையில் அமுலாக்குவதும், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் உறுதி நிலையற்ற சமுதாயங்களுக்கு முறைப்படி ஒத்துழைப்பினை வழங்குவதும், உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்காக சுதந்திர ஊடகங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார். டிஜிட்டல் அணுகல் உரிமைகள், சுற்றாடல் உரிமைகள் உள்ளடங்களாக 1948 ஆம் ஆண்டு மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலில் புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய பிரகடனத்தின் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. உலகளாவிய நிதியளிப்பு நிபந்தனைகள் அதிகரிக்கின்றமை, எதிர்காலத்தில் செலுத்தப்படவுள்ள பெருந்தொகையான கடனைச் செலுத்துதல் மற்றும் இறையாண்மைக் கடன் நெருக்கடிக்கு முகங்கொடுக்க நிகழ்கால சர்வதேச நிதிக்கட்டமைப்பு பலவீனமான வகையில் தயாராகியமையால் உலகளாவிய நோக்கு மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நவீன உலகிற்கு நியாயமானவகையில் சீராக்கிக்கொள்ளக்கூடிய நிதிசார் திருத்தங்களின்பால் மாற்றமடைவது மிகவும் முக்கியமான விடயமாக அமைகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார். அதற்காக பிரஜைகளின் பங்கேற்பு முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டியதோடு, பிரஜைகள் சுற்றுச்சூழல் மீது பற்றுக்கொண்ட நவீன சியட்டல்களாக மாற வேண்டும் என்பதை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார். மனிதர்களை மையப்படுத்திய எதிர்கால பொருளாதார அபிவிருத்தி குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, சைபர் பாதுகாப்பு செயன்முறையை நோக்கி உலகம் நகர வேண்டியிருப்பதன் முக்கியத்துவத்தையும், ரொபோக்கள் பயன்பாட்டினால் தொழில் வாய்ப்புக்களை இழக்கின்ற மனித சமூகத்தை வலுவூட்ட கல்வி, திறன் மேம்பாடு,புதிய தொழில் வாய்ப்புக்களை அறிந்துகொண்டு சரியான வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த வேண்டுமெனவும் அதற்காக உலகத் தலைவர்கள் ஒற்றுமையாக செயலாற்ற வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். பிரச்சினைகளைப் போன்றே எமது இதயங்களின் “லப் டப்” ஓசையும் ஒன்றாக ஒன்று சேர்த்து உலகத்தைக் கட்டியெழுப்புவோம்' என்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். “நாங்கள் சகோதரர்கள் என்றவகையில் ஒன்றாக வாழப் பழகிக்கொள்ளவேண்டும்.” என மார்ட்டின் லூதர் கிங் கூறியுள்ளார். “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்பதை உருவாக்கிட ஒன்றுசேர்வோம் என்பதை இலங்கை மக்களும் 2024 ஆம் ஆண்டில் வலியுறுத்தினர் என வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். “நாங்கள் ஒன்றுசேர்ந்து அழகான வாழ்க்கையை அழகான உலகத்தை உருவாக்கிடுவோம்” என உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். https://www.virakesari.lk/article/206533
  7. எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் Published By: VISHNU 12 FEB, 2025 | 09:11 PM யாழ்ப்பாணம், வலி வடக்கு – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி பொது மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மாபெரும் போராட்டமொன்று புதன்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இந்த விகாரைக்கு எதிராக பல்வேறு அச்சுறுத்தல்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) மாலை ஆரம்பமாகிய இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்தது. விகாரைக்கு முன்பாக பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பல நூற்றுக் கணக்கானோர் இன்று காலை முதல் திரண்டிருந்தனர். போராட்டம் இடம்பெறும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு, வீதித் தடைகள் போடப்பட்டு புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரமாக இருந்தது. பல்வேறு அச்சுறுத்தல்கள், கெடுபிடிகள், எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கறுப்பு கொடிகளுடன் பெருமளவில் திரண்ட மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். “அகற்று அகற்று சட்டவிரோத விகாரையை அகற்று”, “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “இனப்படுகொலை இராணுவமே வெளியேறு”, “இந்த மண் எங்களின் சொந்தமண்”, “கண் திறந்த புத்தருக்கு மண்மீது ஆசையா?”, “எமது நிலம் எமக்கு வேண்டும்” போன்ற பல கோசங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எழுப்பப்பட்டன. பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டதால் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டதால் முறுகல் நிலை ஏற்பட்டு பதற்றமான நிலைமையும் தோன்றியது. எனினும், அச்சுறுத்தல்கள், எதிர்ப்புக்குகளுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் விகாரகைக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுகிறது. https://www.virakesari.lk/article/206534
  8. சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்; 214 ஓட்டங்களைத் தக்கவைத்து ஆஸி.யை வீழ்த்தியது இலங்கை Published By: VISHNU 12 FEB, 2025 | 06:57 PM (ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) அவுஸ்திரேலரியாவுக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாடரங்கில் இன்று புதன்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 214 ஓட்டங்களைத் தக்கவைத்து 49 ஓட்டங்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது. மிகவும் நெருக்கடியான வேளையில் அணித் தலைவர் சரித் அசலன்க குவித்த அபார சதம், துனித் வெல்லாலகே, ஏஷான் மாலிங்க ஆகியோருடன் முறையே 6ஆவது, 9ஆவது விக்கெட்களில் அவர் பகிர்ந்த மிகவும் பெறுமதிமிக்க இணைப்பாட்டங்கள் என்பன இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தன. அது மட்டுமல்லாமல் மஹீஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 46 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 214 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முன்வரிசை வீரர்கள் கவனக் குறைவு காரணமாக தங்களது விக்கெட்களைத் தாரை வார்த்தனர். 15ஆவது ஓவரில் இலங்கை 5 விக்கெட்களை இழந்து 55 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. குசல் மெண்டிஸ் (19), ஜனித் லியனகே (11) ஆகிய இருவரே இரட்டை இலக்கங்களைப் பெற்றனர். இதன் காரணமாக இலங்கை 100 ஓட்டங்களை அண்மிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் முன்னாள் தலைவர் துனித் வெல்லாலகே அனுபவசாலிபோல் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு தெம்பூட்டினார்.. அவர் சரித் அசலன்கவுடன் 6ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 67 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அதுவே இலங்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்ததுடன் 33ஆவது ஓவரில் இலங்கை 8 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது. 8ஆவது விக்கெட் வீழ்ந்தபோது சரித் அசலன்க 73 பந்துகளில் 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அதன் பின்னர் சரித் அசலன்க மற்றையவர்களுக்கு முன்னுதாரணமாக புத்திசாதுரியத்துடனும் துணிச்சலுடனும் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்து அணியை பெரு வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்தார். அவரது இரண்டாவது 50 ஓட்டங்கள் 41 பந்துகளில் பெறப்பட்டது. சரித் அசலன்க 126 பந்துகளில் 14 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 127 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன் 9ஆவது விக்கெட்டில் ஏஷான் மாலிங்கவுடன் மிகவும் பெறுமதியான 79 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மாலிங்க 26 பந்துகளில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் சோன் அபொட் 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆரொன் ஹார்டி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நேதன் எலிஸ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்பென்சர் ஜோன்சன் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 215 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 33.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ட்ரவிஸ் ஹெட், க்லென் மெக்ஸ்வெல் ஆகியோருக்கு ஓய்வு கொடுத்தது தவறு என்பதை இந்தத் தோல்வி அவுஸ்திரேலியர்களுக்கு உணர்த்தியிருக்கும் என்பது நிச்சயம். இலங்கையைப் போன்றே அவுஸ்திரேலியாவும் ஆரம்பத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. அசித்த பெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே ஆகியோரின் இலக்கை நோக்கிய துல்லியமான பந்துவீச்சுகளின் காரணமாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் (12) உட்பட நால்வர் முதல் பத்து ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (31 - 4 விக்.) அனுபவசாலிகளான மானுஸ் லபுஷேன் (15), அலெக்ஸ் கேரி (41) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால் இருவரும் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். இந் நிலையில் ஆரோன் ஹார்டி, சோன் அபொட் (20) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் அது பலன் கொடுக்கவில்லை. நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஆரோன் ஹார்டி 32 ஓட்டங்களைப் பெற்றார். 10ஆம் இலக்க வீரர் அடம் ஸம்ப்பா 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன்: சரித் அசலன்க. https://www.virakesari.lk/article/206532
  9. எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின் உயர் அதிகாரியே காரணம் : சட்ட நடவடிக்கை எடுக்க கோட்டா இணங்கவில்லை - காமினி லொக்குகே 12 FEB, 2025 | 06:24 PM எமது ஆட்சிக் காலத்தில் மின்சார சபையின் உயர் அதிகாரியின் முறையற்ற செயற்பாட்டின் காரணமாகவே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இந்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்த போது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார். பிலியந்தல பகுதியில் இன்று புதன்கிழமை (12) நடைபெற்ற ஆசன அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில், மின் விநியோக துண்டிப்பு தற்போதைய பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. இதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடப் போவதில்லை. மின்சார சபையின் பொறியியலாளர்களே பொறுப்புக் கூற வேண்டும். ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களையும் மின்சார சபையே நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. எமது அரசாங்கத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டபோது அவ்விடயம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் என்ற ரீதியில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்தேன். விசாரணைகளில் மின்சார சபையின் உயர் அதிகாரியின் முறையற்ற செயற்பாட்டின் காரணமாகவே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இந்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்த போது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. மின்சார சபையின் முறையற்ற செயற்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மின்சார சபைக்குள் அரசியல் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணிக்கு சார்பான தொழிற்சங்கத்தினர் எப்போதும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் தான் செயற்படுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/206531
  10. இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும் தரப்பினரே எமது வீடுகளுக்கு தீ வைத்தனர்; காமினி லொக்குகே 12 FEB, 2025 | 06:05 PM (இராஜதுரை ஹஷான்) மே 09 வன்முறையில் எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. வீட்டை புனரமைக்க 54 மில்லியன் ரூபாவை இழப்பீடாக பெற்றுக் கொண்டேன். இதில் யாருக்கு என்ன பிரச்சினை? இழப்பீடு தொகையை பற்றி பேசும் ஆளும் தரப்பினரே எமது வீடுகளுக்கு தீ வைத்தனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார். மே 09 வன்முறையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் தான் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 150 மில்லியன் ரூபா செலவழித்து நான் வீட்டை நிர்மாணித்தேன். கலவரத்தின் போது எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. ஆகவே வீட்டை நிர்மாணிப்பதற்கு 54 மில்லியன் ரூபாவை இழப்பீடாக பெற்றுக் கொண்டேன். இதில் யாருக்கு என்ன பிரச்சினை? இழப்பீட்டு தொகை பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை வெளியிடும் தரப்பினர்கள் தான் எமது வீடுகளுக்கு தீ வைத்தார்கள். முடிந்தால் அவர்களின் பெயர்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். பிலியந்தல பகுதியில் புதன்கிழமை (12) நடைபெற்ற ஆசன அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/206523
  11. 12 FEB, 2025 | 12:02 PM (நெவில் அன்தனி) இலங்கையுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் மெத்யூ குனேமானின் பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டுள்ளது. காலியில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் குனேமான் மொத்தமாக 16 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். அவரது பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ஐசிசியின் அங்கீகாரம் பெற்ற நிலையத்தில் சுயாதீன பரிசோதனைக்கு குனேமான் உட்படுத்தப்படவுள்ளார். பெரும்பாலும் பிறிஸ்பேனில் அமைந்துள்ள நிலையத்திலேயே அவரது பந்துவீச்சு பாணி தொடர்பான பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது முழங்கை 15 பாகை அளவுக்கு மடிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு மேல் மடிந்தால் அது விதிகளை மீறியதாக கருதப்படும். தொழில்சார் கிரிக்கெட்டில் குனேமான் 2017இல் ஈடுபட ஆரம்பித்த பின்னர் அவரது பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அவருக்கு பந்துவீச அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது பந்துவீச்சு பாணி விதிகளுக்கு உட்பட்டதென உறுதிபடுத்தப்படும்வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் அவரது பந்துவீச்சு பாணி விதிமீறியதென உறுதிப்படுத்தப்பட்டால் அவரது பந்துவீச்சு பாணி திருத்தப்பட்டு விதிக்குட்பட்டது என உறுதிப்படுத்தப்படும் வரை அவருக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/206482
  12. படக்குறிப்பு, பகிடெரு கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், கர்க்கிபட்டி உமாகண்ட் பதவி, பிபிசிக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீரானது கிணறுகள், கடல் நீர் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருகின்றது. தெலங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பகிடேரு கிராமத்தில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வந்துகொண்டிருக்கிறது. மோட்டார்களோ, வேறு எந்த உபகரணங்களோ இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக 365 நாட்களும் வெந்நீர் வந்துகொண்டிருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். "இந்த பகுதியில் அதிக நிலக்கரி இருக்கின்றது. பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி வளங்களை பற்றி தெரிந்துகொள்ள, 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் சோதனை செய்வதற்காக ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டன. அத்துடன் 1000 முதல் 2000 மீட்டர் ஆழத்திற்கு வேறு சில ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. அவற்றிலிருந்து வெந்நீர் பெருக்கெடுத்து வந்தது. இது விவசாயத்திற்கு அல்லது வேறு ஏதாவது தேவைகளுக்கு பயன்படும் என நினைத்து இதனை மூடாமல் வைத்தனர். அப்போது முதல் 24 மணி நேரமும் நீர் வந்துகொண்டிருக்கிறது", என்கிறார் இந்த கிராமத்தை சேர்ந்த கோரம் ராம்பாண்டு. "இந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து வெந்நீர் தானாக வெளியேறுகிறது. மின்சாரம், மோட்டார் போன்றவற்றின் உதவியின்றி தண்ணீர் வருகிறது", என்று பகிடேரு கிராமத்தின் முன்னாள் கிராமத் தலைவர் தாடி பிக்‌ஷாம் தெரிவித்தார். அதிகமான வெப்பத்துடன் வரும் நீர் "சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய புவியியல் ஆய்வு மையம் பகிடேரு கிராமத்தின் அருகே 8 ஆழ்துளை கிணறுகளை தோண்டியது. சுமார் ஒரு கிலோமீட்டர் ஆழம் வரை இந்த ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டன. இந்தப் பகுதியில் புவிவெப்ப ஆற்றல் (geothermal energy) இருந்ததற்கான அடையாளம் இருந்ததால் இங்கு இந்த கிணறுகள் தோண்டப்பட்டன. இவை தோண்டப்பட்ட நாளில் இருந்து, பூமியில் உள்ள அழுத்தம் காரணமாக இதிலிருந்து வெந்நீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த நீரின் வெப்பம் கிட்டதட்ட 60 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த நீரில் அதிக அளவில் கந்தகம் இருக்கின்றது", என்று இங்குள்ள சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தின் பொது மேலாளர் துர்கம் ராமசந்தர் பிபிசியிடம் தெரிவித்தார். காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா?11 பிப்ரவரி 2025 எஃகு, அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதித்த டிரம்ப் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?8 மணி நேரங்களுக்கு முன்னர் இதற்கான காரணம் என்ன? பூமியின் உட்புறங்களில் இயற்கையாகவே அதிக வெப்பம் இருக்கின்றது. "பூமியின் உட்புறத்தில் பல வெடிப்புகள் இருப்பதும், ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் வெந்நீர் இருப்பதும்தான், இந்த ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வருவதற்கான காரணமாக இருப்பதாக கருதப்படுகின்றது", என்று ராமசந்தர் கூறினார். இருப்பினும், இதற்கான சரியான காரணத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். படக்குறிப்பு,துர்கம் ராமசந்தர் பயிர் சாகுபடிக்கு உதவும் நீர் பகிடேரு கிராமத்தில் இந்த ஆழ்துளை கிணறுகளில் இருந்து வரும் வெந்நீரை பயன்படுத்தி சுமார் 200 ஏக்கர் அளவிலான விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆழ்துளை கிணறுகளிலிருந்து வரும் இந்த வெந்நீரானது, குளங்களில் ஒருநாள் தேக்கி வைக்கப்பட்டு அதற்கு அடுத்த நாள் வயல்களில் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது. "முன்னதாக இந்த வெந்நீரை நெல் சாகுபடிக்கு பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் இருந்தது. தற்போது இந்த வெந்நீரை ஆற வைத்து பயன்படுத்துவதன் மூலம் நான் இரண்டு ஏக்கர் நிலத்தில் இரண்டு போகம் சாகுபடி செய்கிறேன். இதற்கு முன்பு ஒரு போகத்திற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கிறது. கொதிக்கும் சூட்டில் உள்ள இந்த நீரானது, குளங்களில் சேகரித்து, ஆறவைக்கப்பட்டு பின்னர் வயல்களுக்கு பாசனத்துக்காக அனுப்பப்படுகிறது," என்று விவசாயி பத்ரய்யா கூறினார். பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?11 பிப்ரவரி 2025 கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடுவது தவிர வேறு என்னவெல்லாம் செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு7 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்த வெந்நீரானது, குளங்களில் ஒரு நாள் தேக்கி வைக்கப்பட்டு அதற்கு அடுத்த நாள் வயல்களில் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, இரண்டு ஆழ்துளை கிணறுகளில் இருந்து வந்த வெந்நீர் நின்றுவிட்டதாகவும், மீண்டும் ஆழ்துளை கிணறுகளை தோண்ட வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். "டிசம்பர் 4ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இரண்டு ஆழ்துளை கிணறுகள் முழுமையாக சேதமடைந்துவிட்டன. விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் ஆழ்துளை கிணறுகளை இழந்துவிட்டதால் அவர்களுக்கு கடினமானதாக இருக்கின்றது. அரசாங்கம் இதற்கு தீர்வு கண்டு, ஆழ்துளை கிணறுகளை மீண்டும் தோண்டி தண்ணீர் கொண்டுவரவேண்டும்" என்று விவசாயி சோம நரசய்யா கூறினார். இந்த ஆழ்துளை கிணறுகளே தங்களது வாழ்வாதாரம் எனக் கூறும் இந்த கிராமத்தை சேர்ந்தவர்களான பி. நாகம்மா மற்றும் வெல்லெட்டி சுகுணா, ஏற்கனவே இருக்கும் ஆழ்துளை கிணறுகளுடன் சேர்த்து புதிய ஆழ்துளை கிணறுகளையும் அரசு அமைத்துத் தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர். படக்குறிப்பு, விவசாயி சோம நரசய்யா வெந்நீர் ஆழ்துளை கிணறுகளால் புகழ் பெற்ற கிராமம் இந்த ஆழ்துளை கிணறுகள் காரணமாக, பகிடெரு கிராமம் தனிச்சிறப்பை அடைந்துள்ளது. இப்போது இந்த வெந்நீர் ஆழ்துளை கிணறுகளை காண சுற்றுலா பயணிகள் வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். "எங்கள் பகிடெரு கிராமத்தில் உள்ள கிணறுகளிலிருந்து வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வெந்நீர் வருவதால், எங்கள் கிராமம் தனிசிறப்பு பெற்ற கிராமமாகிவிட்டது. எங்கள் கிராமத்தைக் காண பலர் வருகின்றனர். இது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது", என்று முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தாடி பிக்‌ஷம் மற்றும் இந்த கிராமத்தைச் சேர்ந்த குஞ்சா ரேவதி ஆகியோர் தங்களது மகிழ்ச்சியை பிபிசியுடன் பகிர்ந்துகொண்டனர். ஆனால், உள்ளூர் மக்களால் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் சாதாரண வெப்பத்தில் நீர் வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். கிராமத்தில் ஒரு ஆழ்துளை கிணறு 300 மீட்டர் ஆழத்திற்கு அமைத்தால் தண்ணீர் பொங்கி வழியும் எனவும் அவர்கள் சொல்கின்றனர். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி எவ்வளவு? பாஜக பட்டியலை நிராகரிக்கும் தமிழ்நாடு அரசின் சரிபார்ப்புக் குழு8 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா?11 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, கிராமவாசி சுகுணா வெந்நீரை கொண்டு மின்சாரம் வெந்நீர் தொடர்ந்து 55 முதல் 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வருவதால் அதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக ராமசந்தர் தெரிவித்தார். "அனல் மின் நிலையத்தில், நாம் நிலக்கரியை எரித்து, தண்ணீரை சூடாக்கி, மின்சாரம் தயாரிக்கிறோம். அதேபோல், இங்கு புவிவெப்ப ஆற்றலினால் சூடாக வரும் இந்த நீரை பயன்படுத்தி ஏன் மின்சாரம் தயாரிக்கக் கூடாது? அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டத்தின் கீழ், டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திடம் இந்த திட்டத்தை ஒப்படைத்துள்ளோம்", என்றும் அவர் தெரிவித்தார். இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை என்ன வித்தியாசம்? காஸாவில் டிரம்ப் செய்ய நினைப்பது என்ன?11 பிப்ரவரி 2025 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்தது ஏன்?11 பிப்ரவரி 2025 ''தற்போது பகிடெருவில் 20 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நோக்கில் ஒரு புவி வெப்ப ஆற்றல் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது'' என ராமசந்தர் தெரிவித்தார். "20 கிலோவாட் மின் உற்பத்தி வெற்றி பெற்றால், இது இந்தியாவில் இத்தகைய முதல் திட்டமாக இருக்கும்", என்றும் அவர் கூறினார். புவிவெப்ப ஆற்றல் ஆலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போது அது முதலில் தங்களது கிராமத்தில் இருக்கும் தெருவிளக்குகளை எரியவைக்க பயன்படுத்தப்படவேண்டும் என பகிடேரு பஞ்சாயந்து தலைவர் சாவித்ரி கேட்டுக்கொண்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c897n989p08o
  13. 12 FEB, 2025 | 05:19 PM தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி சட்ட ஆட்சியைப் பலப்படுத்தப் போவதாக தனது கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்டார். ஆனால், சட்டவிரோதமாக சட்ட ஆட்சிக்கு எதிராக, தனியார் காணியில் ஆக்கிரமிப்பு ரீதியாகக் கட்டப்பட்ட தையிட்டி விகாரையைப் பாதுகாப்பதில் பௌத்த சாசன அமைச்சரும் பொலிஸாரும் படையினரும் அக்கறையாக உள்ளனர் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். சட்ட ஆட்சி தையிட்டி விகாரை விடயத்தில் செல்லுபடியாகாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்தத்துக்கு ஒரு சட்டம், ஏனைய மதத்தவர்களுக்கு ஒரு சட்டம் என்ற பாரபட்சங்கள் புதிய தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் நடைபெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தையிட்டி விகாரை தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை (12) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: உண்மையில் சிங்களவர் ஒருவருக்குச் சொந்தமான தனியார் காணியில் கோவிலோ தேவாலயமோ பள்ளிவாசலோ அமைப்பதற்கு இந்த அரசாங்கம் கடைசி வரை அனுமதிக்காது. அவ்வாறு தவறுதலாக அமைத்திருந்தால், உடனடியாக இந்த அரசாங்கம் உடைத்து அழித்து விட்டிருக்கும். இதனை சட்ட ஆட்சி என்று கூறுவர். அந்த சட்ட ஆட்சி தையிட்டி விகாரை விடயத்தில் செல்லுபடியாகாது. அதே போன்றுதான் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்தத்துக்கு ஒரு சட்டம், ஏனைய மதத்தவர்களுக்கு ஒரு சட்டம் என்ற பாரபட்சங்கள் புதிய தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் நடைபெறுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி சார்பாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இவற்றை கண்டும் காணாமல் இருக்கின்றார்கள். இதுதான் கூட்டுப் பொறுப்புக் கொள்கை என்று தேசிய மக்கள் சக்தி கற்பிக்கிறது. வடக்கு, கிழக்கு காணி அபகரிப்புகளைக் கண்டும் காணாமல் இருப்பதற்கு வடக்கு, கிழக்கு மக்கள் அங்கிருந்து தமிழ்ப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்திருக்க மாட்டார்கள். வடக்கில் தமிழ் அரசுக் கட்சியினர் வேட்பாளர் தெரிவில் விட்ட தவறுதான் அங்கு தேசிய மக்கள் சக்தியில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலதிகமாக தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணமாகும். இல்லாவிட்டால் அந்த ஆசனங்கள் தமிழ் அரசுக் கட்சிக்கு உரியதாக அமைந்திருக்கும். இந்த நிலையில், வட பகுதித் தமிழ் மக்கள் உணர்ந்திருப்பார்கள். ஆளுங்கட்சியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் தமிழர்களுக்கு எதிரான எதனையும் தட்டிக்கேட்க முடியாமல் உள்ளது. தையிட்டி விகாரை, வெடுக்குநாறி மலை, மயிலத்தமடு மாதவனை, கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் போன்ற விடயங்களையும் தேசிய மக்கள் சக்தி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களால் தட்டிக்கேட்க முடியாமல் உள்ளதை அறிய முடிகின்றது. எனவே தமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதன் மூலமாகவே தமிழர்களின் பிரச்சினைகளை தடுக்க முடியும் அல்லது குறைக்க முடியும். இதனைத் தமிழ் மக்கள் உணரும் சந்தர்ப்பத்தை தையிட்டி விகாரை உணர்த்துகிறது என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206521
  14. Published By: DIGITAL DESK 3 12 FEB, 2025 | 03:06 PM வளி மாசடைவு கர்ப்பிணித் தாய்மார்களின் கருவில் பாதிப்பை ஏற்படுத்தும் என பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பேராசிரியரும் சுவாச ஆரோக்கியம் வைத்தியர் நிபுணருமான துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். மாசடைந்த வளியை சுவாசிப்பதால் கருவில் உள்ள சிசுவின் எடை குறைவதற்கு வழிவகுப்பதோடு, பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் சிசு இறந்த நிலையில் பிறக்க வாய்ப்புள்ளது. சுவாச ஆரோக்கியத்தில் வளி மாசடைவின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக பேராதனை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் உதவியுடன் ஒரு புதிய ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு (OPDs) வருகை தரும் நோயாளிகளில் 40 சதவீதமானவர்கள் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் யசரத்ன குறிப்பிட்டார். சுவாசிப்பதில் சிரமம், தடிமல் மற்றும் வைரஸ் தொற்று நிமோனியா போன்ற கடுமையான நிலைகள் வரை இருக்கும். நீண்ட கால சுகாதார பாதிப்புக்களை தடுக்க வளி மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/206501
  15. இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய நினைவுகள் நிழலாடி மனம் வேதனைக்குள்ளாகிறது - சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் மறைவுக்கு தமிழக இயக்குநர் கௌதமன் இரங்கல் 12 FEB, 2025 | 02:49 PM இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பல முறை மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்துடன் பேசிய நினைவுகள் வந்து நிழலாடி மனம் வேதனைக்குள்ளாவதாக தமிழக இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ. கௌதமன் தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்தியினை பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் வ. கௌதமன், மூத்த பத்திரிகையாளர் ஐயா பாரதி அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் அஞ்சலியும். தமிழ்நாடு அம்பத்தூரில் அவரை ஒருமுறை நேரில் சந்தித்து பேசிய நிகழ்வும் இனம் சார்ந்தும் ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்தும் பல முறை பகிரியில் பேசியதும் வந்து வந்து நிழலாடி மனம் வேதனைக்கு உள்ளாகிறது. ஈழத்தின் பாலும் தமிழினத்தின் பாலும் அடங்காப்பற்று கொண்டு அறத்தோடு இயங்கிய ஐயா பாரதி அவர்களுக்கு மீண்டும் அழியாப் புகழ் வணக்கத்தை என் சார்பிலும் எனது தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/206498
  16. 'சனிக்கிழமைக்குள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால்..' - இஸ்ரேல் எச்சரிக்கை; ஹமாஸ் கூறுவது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காஸாவுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் ராணுவத்தைக் குவிக்குமாறு இஸ்ரேலிய படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு கூறினார் கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 56 நிமிடங்களுக்கு முன்னர் "பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ், வரும் சனிக்கிழமைக்குள் (பிப்ரவரி 15) பணயக்கைதிகளை எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்'' என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, காஸாவில் மீண்டும் போர் தொடங்கக்கூடும் என்ற கவலை அதிகரித்து வருகிறது. மூன்று வாரங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் ஆயுதக்குழு குற்றம்சாட்டியது. 'மறு அறிவிப்பு வரும் வரை' இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாகவும் ஹமாஸ் அறிவித்திருந்தது. இதையடுத்து பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) அன்று கூடியது. மீதமுள்ள 76 பணயக்கைதிகளையும் விடுவிக்க நெதன்யாகு கோருகிறாரா அல்லது இந்த சனிக்கிழமை விடுவிக்கப்படவிருந்த மூவரை மட்டும்தான் கோருகிறாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்தது ஏன்? இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை என்ன வித்தியாசம்? காஸாவில் டிரம்ப் செய்ய நினைப்பது என்ன? காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா? சௌதி, பாலத்தீனம் பற்றிய இஸ்ரேல் பிரதமர் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு - என்ன பேசினார்? இதற்கு பதிலளித்த ஹமாஸ், 'போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், இதில் சிக்கல்கள் அல்லது தாமதங்கள் ஏற்பட்டால், அதற்கு இஸ்ரேல்தான் பொறுப்பு' என்றும் கூறியது. இஸ்ரேலுக்கு எதிரான புகார்களின் பட்டியலை மத்தியஸ்தர்கள் குழு பரிசீலிக்க வேண்டும் என்று ஹமாஸ் கோரியுள்ளது. இந்தப் புகார்களில் 'கூடாரங்கள் போன்ற முக்கிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுக்கிறது' போன்றவை அடங்கும். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரபு நாடுகள் ஹமாஸுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. மோதி - டிரம்ப் நாளை சந்திப்பு: டிரம்பை சமாதானப்படுத்த இந்தியா எடுத்த நடவடிக்கைகள் என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் எஃகு, அலுமினியம் இறக்குமதிக்கு 25% வரி - டிரம்ப் உத்தரவால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'காஸாவில் மோதல் முடிவுக்கு வந்ததும், அது இஸ்ரேலால் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும்' என்று டிரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியது என்ன? காஸாவின் மறுகட்டமைப்புக்கான 'ஒரு விரிவான தொலைநோக்குப் பார்வையை' முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது. ஆனால் அது அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த திட்டத்தைப் போலல்லாமல், அதாவது மக்களை வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தாமல் காஸாவை சீரமைப்பது ஆகும். ஹமாஸின் முடிவு, இந்த வார இறுதியில் நிகழவிருந்த பணையக்கைதிகளின் விடுதலையை தாமதப்படுத்தியுள்ளது. "சனிக்கிழமைக்குள் அனைத்து பணயக்கைதிகளும் விடுதலை செய்யப்படாவிட்டால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும். அதனால் பேரழிவு ஏற்பட்டாலும் பரவாயில்லை" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று நடைபெற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவையின் நான்கு மணி நேர கூட்டத்திற்கு பிறகு, ''அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை வரவேற்பதாக'' ஒரு காணொளி வாயிலாக தெரிவித்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. "ஹமாஸ் நமது பணயக்கைதிகளை விடுவிக்கப் போவதில்லை என்றும் அறிவித்ததை அடுத்து, நேற்று இரவு காஸா பகுதிக்குள் மற்றும் அதைச் சுற்றி படைகளை குவிக்குமாறு இஸ்ரேல் ராணுவத்துக்கு நான் அறிவுறுத்தினேன்." என்றும் அவர் கூறினார். "தற்போது மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மிக விரைவில் நிறைவடையும்." என்றார் நெதன்யாகு. பின்னர் அவர் ஒரு இறுதி எச்சரிக்கையை வெளியிட்டார். பாதுகாப்பு அமைச்சரவையின் ஒருமித்த ஒப்புதலுடன் இது வெளியிடப்படுவதாகவும் கூறினார். "சனிக்கிழமை (பிப்ரவரி 15) நண்பகலுக்குள் ஹமாஸ் எங்களது பணயக்கைதிகளை திருப்பி அனுப்பவில்லை என்றால், போர்நிறுத்தம் முடிவுக்கு வரும். ஹமாஸின் முழுமையான வீழ்ச்சி நிகழும் வரை நீடிக்கக்கூடிய, ஒரு தீவிரமான சண்டையை இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தொடங்கும்." என்று அவர் எச்சரித்தார். பிறப்பு அடிப்படையில் குடியுரிமை ரத்து - டிரம்பின் உத்தரவு அமெரிக்கவாழ் தமிழர்களை எவ்வாறு பாதிக்கும்?8 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா, சூடான்: போரால் பள்ளிகள் சிதைந்தாலும் கல்விக் கனவை விடாமல் துரத்தும் குழந்தைகள்11 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, 16 மாத கால போரில் காஸா நகருக்கு வடக்கே உள்ள ஜபாலியாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று நெதன்யாகு விரும்புகிறாரா இல்லையா என்பது குறித்து இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து முரண்பட்ட செய்திகள் வந்தன. திட்டமிட்டபடி சனிக்கிழமை அன்று மூன்று பணயக்கைதிகள் கொண்ட அடுத்த குழு விடுவிக்கப்பட்டால், போர் நிறுத்தத்தைத் தொடரத் தயாராக இருப்பதாக இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸிடம் ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, மீதமுள்ள ஒன்பது பணயக் கைதிகளை (உயிருடன் உள்ளவர்கள்) விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாக பின்னர் செய்திகள் வெளியாகின. ஆனால், இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சரும் போர் அமைச்சரவை உறுப்பினருமான மிரி ரெகேவ் தனது எக்ஸ் தள பதிவில், "நாங்கள் மிகத் தெளிவான முடிவை எடுத்துள்ளோம். பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். சனிக்கிழமைக்குள், அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்" என்று அவர் தெரிவித்தார். இலங்கைக்கான நிதியை நிறுத்தும் அமெரிக்கா, என்ன பாதிப்பு?10 பிப்ரவரி 2025 டிரம்ப் இந்தியர்களை விலங்கிட்டு அனுப்பியது குறித்து அமெரிக்க ஊடகங்கள் கூறுவதென்ன?10 பிப்ரவரி 2025 'இஸ்ரேல் சாமர்த்தியமாக செயல்பட முயற்சிக்கிறது' பட மூலாதாரம்,REUTERS இதற்கிடையில் இஸ்ரேல் ராணுவம், அதன் தெற்கு கட்டுப்பாட்டு தளத்தை தயார்நிலையில் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த தளமே காஸா செயற்பாடுகளுக்கு பொறுப்பு என்பதால், இருப்புப் படையினர் உட்பட கூடுதல் துருப்புகள் மூலம் இது வலுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. சில இஸ்ரேலிய ஆய்வாளர்கள், இஸ்ரேல் சாமர்த்தியமாக செயல்பட முயற்சிக்கிறது என்று கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது, வெள்ளை மாளிகைக்கு தங்களது விசுவாசத்தைக் காட்டுவது மற்றும் ஒப்பந்தத்தையும் பின்பற்றுவது. இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஒரு சமரசம் எட்டப்பட இப்போதும் சாத்தியம் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர். இஸ்ரேலும் ஹமாஸும், மத்தியஸ்தர்கள் மூலமாக இதைச் செய்யலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா காஸாவை கைப்பற்றி, அங்கு வசிக்கும் 2 மில்லியன் பாலத்தீனர்களை நிரந்தரமாக இடமாற்றம் செய்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற டொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய முன்மொழிவை ஹமாஸ் செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் நிராகரித்தது 1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த போருக்கு முன்னரும் போரின் போதும் நூறாயிரக்கணக்கான பாலத்தீனர்கள் தப்பி ஓடினர் அல்லது தங்கள் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டனர். அது போன்ற 'நக்பா' (பேரழிவு)மீண்டும் நிகழுமோ என்று பாலத்தீனியர்கள் அஞ்சுகின்றனர். ஐ.நா தகவலின்படி, அந்த பாலத்தீன அகதிகளில் பலர் காஸா போய் சேர்ந்தனர். அங்கு அவர்களும் அவர்களுடைய சந்ததியினரும், மொத்த மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்காக உள்ளனர். மேலும் 9,00,000 பதிவு செய்யப்பட்ட அகதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வாழ்கின்றனர். 3.4 மில்லியன் பேர் ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானில் வாழ்கின்றனர். 'டிரம்பின் கருத்து இன சுத்திகரிப்புக்கான அழைப்பு'- ஹமாஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்பின் கருத்துக்கள் 'இனவெறி மற்றும் பாலத்தீனிய அடிப்படையை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட இன சுத்திகரிப்புக்கான அழைப்பு' என்று ஹமாஸ் விவரித்தது. ஐ.நா, அரேபிய நாடுகள் மற்றும் பிற உலகத் தலைவர்களும், மனித உரிமைக் குழுக்களும், பாலத்தீன ஆணையமும் அவரது கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தனர். 'எந்தவொரு கட்டாய இடப்பெயர்வும் சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்படும் என்றும், அது இன சுத்திகரிப்புக்கு சமமானதாகும்' என்று ஐ.நா. எச்சரித்தது. ''காஸா குறித்த அமெரிக்க அதிபரின் புரட்சிகர பார்வையை பாராட்டுவதாக'' நெதன்யாகு தெரிவித்துள்ளார். முன்னதாக செவ்வாய்க்கிழமை அன்று, ஹமாஸின் மூத்த அதிகாரி பசிம் நயீம் பிபிசியிடம் பேசியபோது, "அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தர்கள் தலையிட்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வழி இன்னும் திறந்திருக்கிறது" என்று கூறினார். "இந்த ஒப்பந்தம் தோல்வியடைவதை நாங்கள் விரும்பவில்லை. இதில் எந்தவொரு தடைகளையும், சவால்களையும் தவிர்க்க நாங்கள் அதிகபட்சமாக முயற்சி செய்கிறோம். எனவே மத்தியஸ்தர்கள் மூலம் நிலைமை சரிசெய்யப்பட்டால், அடுத்த சனிக்கிழமை கைதிகளை ஒப்படைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்றும் அவர் கூறினார். வடக்கு காஸாவில் உள்ள பகுதிகளுக்கு பாலத்தீனியர்கள் திரும்புவதை பலமணிநேரங்கள் தாமதப்படுத்தியது முதல் உணவு, மருத்துவம் மற்றும் தங்குமிடம் போன்ற அவசர உதவிகளின் விநியோகங்களை தடுத்தது உட்பட, இஸ்ரேல் போர்நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து மீறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். டிரம்ப் உத்தரவு எதிரொலி: USAID இடைநிறுத்தத்தால் இலங்கைக்கு என்ன பாதிப்பு?9 பிப்ரவரி 2025 டீப்சீக்: உயர் தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுக்கு சீனா சவால் விட அடிகோலிய பத்தாண்டு திட்டம் பற்றி தெரியுமா?8 பிப்ரவரி 2025 இதுவரை விடுவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 33 இஸ்ரேலிய பணயகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் 16 பேர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் கடந்த மாதம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலத்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும். விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 30 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை. முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 33 இஸ்ரேலிய பணயகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் 16 பேர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 17 இன்னும் விடுவிக்கப்பட உள்ளனர். அந்த 17 பேரில் 8 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. மற்றொரு ஒப்பந்ததின்படி தாய்லாந்தை சேர்ந்த 5 பேரை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு இணையாக 1900 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும். அதில் நூற்றுக்கணக்கானவர்கள் விடுதலையாகியுள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹமாஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் இறங்கியது. இந்த தாக்குதலில் காஸாவில் 46,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவித்தது. அங்குள்ள 23 லட்சம் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் இடம்பெயந்தனர். மேலும் அங்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7d94z47ezo
  17. யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள் போராட்டம்! 12 FEB, 2025 | 02:19 PM யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் புதன்கிழமை (12) தொடர்கிறது. காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். “பௌத்தம் உன் மதம் வழிபடு தையிட்டி என் மண் வழிவிடு”, “சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று”, “கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்து” போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/206496
  18. Published By: DIGITAL DESK 3 12 FEB, 2025 | 02:21 PM நாளை வியாழக்கிழமை (13) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பகல் வேளையில் வெப்பமாகவும் இரவு வேளையில் குளிராகவும் வெப்பநிலையில் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என வளிமண்டலவியல் நிபுணர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான காலநிலை நிலவும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை, பதுளை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும். திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மழை எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சீரான வானிலை நீடிக்கும். கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் வீசுவதுடன் மணிக்கு 35 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/206495
  19. பட மூலாதாரம்,@NARENDRAMODI படக்குறிப்பு, ஜனவரி 27 அன்று நடந்த தொலைபேசி உரையாடலில் மோதியை அமெரிக்காவுக்கு அழைத்தார் டிரம்ப் 12 பிப்ரவரி 2025, 07:58 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவரை வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் ஜோர்டான் அரசர் அப்துல்லா ஆகியோர் சந்தித்துள்ளனர். இப்போது, டிரம்பை சந்திக்கவுள்ள நான்காவது சர்வதேச தலைவராகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. அதிபரானவுடன் டிரம்ப் பல நாடுகளின் பொருட்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய கூடுதல் வரிகளை அறிவித்தார். இந்தியா மீது இதுவரை தனியாக எந்தவொரு வரியும் விதிக்கப்படவில்லை. ஆனால், எஃகு மற்றும் அலுமினியம் மீது இறக்குமதி வரியை டிரம்ப் விதித்துள்ளார். இந்தியாவும் அவற்றை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. டிரம்ப் பல வழிகளில் இந்தியாவை சங்கடப்படுத்தியுள்ளார். ஆனால், மோதி அரசு அவற்றுக்கு மிக எச்சரிக்கையாகவே எதிர்வினையாற்றி வருகிறது. கடந்த காலங்களில் இந்தியாவை 'வரி மன்னன்' என டிரம்ப் அழைத்தார். இந்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் ஆவணங்களின்றி, சட்ட விரோதமாக இருந்ததாக 104 இந்தியர்கள் ராணுவ விமானம் மூலம் அமிர்தசரஸுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுடைய கை மற்றும் கால்களில் விலங்கு பூட்டப்பட்டிருந்தது. எஃகு, அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதித்த டிரம்ப் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? பிறப்பு அடிப்படையில் குடியுரிமை ரத்து - டிரம்பின் உத்தரவு அமெரிக்கவாழ் தமிழர்களை எவ்வாறு பாதிக்கும்? 'ரூ.40 லட்சம் செலவு, 6 மாத கடும் பயணம்' - அமெரிக்கா சென்ற 11 நாட்களில் நாடு கடத்தப்பட்ட இந்தியர் டிரம்ப் உத்தரவு எதிரொலி: USAID இடைநிறுத்தத்தால் இலங்கைக்கு என்ன பாதிப்பு? சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான புகாரை இந்தியாவிடம் டிரம்ப் ஏற்கெனவே எழுப்பியிருந்தார். பொருளாதாரம் சார்ந்தும் இரு நாடுகளுக்கிடையே தீவிரமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. அமெரிக்காவுடனான இருதரப்பு வணிகத்தில் இந்தியா வர்த்தக உபரியுடன் இருப்பதை டிரம்ப் விரும்பவில்லை. ஒரு நாடு மற்றொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதைவிட அதிகளவில் ஏற்றுமதி செய்வதைத்தான் வர்த்தக உபரி என்கிறோம். அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா குறைக்க வேண்டும் என்றும் டிரம்ப் விரும்புகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் மெதுவான வேகத்தில் வளர்ந்துவரும் சூழலில், டிரம்ப் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். அமெரிக்காவுடன் வர்த்தக உபரியில் இருப்பது இந்தியாவுக்கு முக்கியம். அமெரிக்க முதலீடுகளும் இந்தியாவுக்கு தேவை. ஒரு சவரன் தங்கத்தின் விலை இந்தாண்டு இறுதிக்குள் ரூ.1 லட்சத்தை எட்டுமா? 10 கேள்விகளும் பதில்களும்9 மணி நேரங்களுக்கு முன்னர் பிகார்: ரயிலில் ஏ.சி. பெட்டியின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைய முயற்சி - இன்றைய முக்கிய செய்திகள்8 மணி நேரங்களுக்கு முன்னர் மோதி - டிரம்ப் சந்திப்புக்கு முன் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் என்ன? தேர்தல் சமயத்தில் இந்தியா மீது இறக்குமதி வரி குறித்து டிரம்ப் எச்சரித்திருந்தாலும், அதிபரானவுடன் கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு விதித்தது போன்று இந்தியாவுக்கு செய்யவில்லை. அமெரிக்காவுக்கான தன் பயணத்துக்கு முன்பே நரேந்திர மோதி சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். உதாரணத்துக்கு, அமெரிக்க இருசக்கர வாகனம் ஹார்லி டேவிட்சன் மீதான இறக்குமதி வரியைக் குறைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. அமெரிக்க விஸ்கி மற்றும் இன்னும் சில பொருட்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா குறைக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் எனும் நிறுவனத்தின் அஜய் ஸ்ரீவஸ்தவா புளூம்பெர்க் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "பிரீமியம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் விஸ்கி ஆகியவற்றை விடுத்து, 75 சதவிகித அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா 5% இறக்குமதி வரிதான் விதித்துள்ளது. இந்தியா வரி மன்னன் இல்லை என்பதை மோதி டிரம்புக்கு விளக்க வேண்டும். வர்த்தகத்தைத் தாண்டி இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகள் பார்க்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு, அமேசான் முதல் ஓபன் ஏஐ உள்ளிட்ட அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்காக இந்தியா தன் சந்தையை வழங்கியுள்ளது. இந்த வசதி அமெரிக்காவுக்கு சீனாவில் இல்லை" என கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES அத்துடன், சமீப ஆண்டுகளில் ரஷ்ய ஆயுதங்களை சார்ந்திருப்பதை இந்தியா குறைத்து வருகிறது. அமெரிக்காவுடன் பாதுகாப்பு தொடர்பான கூட்டுறவை இந்தியா அதிகரித்துள்ளது. இந்த உறவு, மோதியின் பயணத்துக்குப் பின் அதிகரிக்கலாம். அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் கருத்தை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. 100 ஜிகாவாட் அணுசக்தியை உற்பத்தி செய்ய தீர்மானித்துள்ள இந்தியா, அந்த இலக்கை எட்டும் நோக்கில் அணுசக்தி விபத்து இழப்பீட்டுச் சட்டத்தில் (Nuclear Liability Act) திருத்தம் செய்யயும் முடிவு செய்துள்ளது. இது அமெரிக்க நிறுவனங்களுக்கும் பலனளிக்கும் என கூறப்படுகிறது. டிரம்பை மோதி சந்திப்பதற்குள் நேர்மறையான சூழலை உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி என்ன? தி.மு.க-வுக்கு பாதிப்பா? த.வெ.க-வில் குழப்பம் வருமா?11 பிப்ரவரி 2025 காதலர் தினத்தன்று பௌர்ணமி: முழு நிலவு நாளில் மனிதர்கள் ஓநாயாக மாறினார்களா? புனைவுகளும் உண்மையும்7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா எதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும்? ஆவணங்களின்றி அமெரிக்காவில் இருந்த இந்தியர்களை அந்நாடு அனுப்பிய விதம் அவமானகரமானது என, எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. ஆனால், இந்த விமர்சனத்துக்கு மோதி அரசாங்கம் மிகுந்த பொறுமையுடன் பதிலளித்தது. தி புரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூஷன் எனும் சிந்தனை மையத்தின் மூத்த ஆய்வு மாணவர் தான்வி மதன் தன் எக்ஸ் பக்கத்தில், "அமெரிக்கா இந்தியர்களை அனுப்பிய விதம் குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. ஆனால், மோதி அரசாங்கம் அதனை விமர்சிக்கவில்லை. டிரம்பின் முதல் ஆட்சியைவிட இரண்டாம் ஆட்சியை மோதி அரசாங்கம் வித்தியாசமாக அணுகுகிறது. இந்தியா பொதுவாகவே எந்த நாட்டையும் பொதுவெளியில் விமர்சிக்காது. பொதுவெளியில் விமர்சிப்பது பிரச்னையை தீர்க்காமல் மேலும் சிக்கலாக்கும் என்பதே இந்தியாவின் வியூகமாக உள்ளது. டிரம்புடன் குழப்பத்தில் ஈடுபடுவது நல்லதல்ல என இந்தியா நினைக்கிறது. அமெரிக்காவுடன் பிரச்னைகள் குறித்து எழுப்புவோம் என்றே இந்தியா கூறுகிறது." என பதிவிட்டிருந்தார். இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் டிரம்பை கையாள்வதே நரேந்திர மோதிக்கு இருக்கும் மிகப்பெரும் சவால். கடந்தாண்டு இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 45 பில்லியன் டாலராக இருந்தது. இதன் அர்த்தம், இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறையை அமெரிக்கா எதிர்கொள்கிறது என்பதல்ல. இந்த வரிசையில், அமெரிக்காவை பொறுத்தவரை இந்தியா 11வது இடத்தில் உள்ளது. ஆனால் டிரம்ப் எதையும் ஒருதலைபட்சமாக அனுமதிக்கும் மனநிலையில் இல்லை. டிரம்பின் வரி அச்சுறுத்தல் தொடர்பாக இந்திய வெளியுறவு முன்னாள் செயலாளர் கன்வால் சிபல், "இந்தியா மீது டிரம்ப் வரி விதித்தால், அது அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தைக் காட்டுவதாகும். அமெரிக்காவின் பொருளாதாரம் இந்தியாவை விட மிகவும் பெரியது. அமெரிக்க பொருளாதாரம் 29 டிரில்லியன் டாலர் மதிப்புடையது, அதேசமயம் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு வெறும் 4 டிரில்லியன் டாலர்களே." என பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவிடமிருந்து இந்தியா அதிக அளவில் ராணுவ தளவாடங்களை வாங்க வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார் 'இந்தியா-அமெரிக்காவை ஒப்பிடுவது நியாயமல்ல' சிபல் தன் பதிவில், "அமெரிக்காவில் தனிநபர் வருமானம் 66 ஆயிரம் டாலராக உள்ளது, அதுவே இந்தியாவில் 2,400 டாலராக உள்ளது. உலகின் பொருளாதார கட்டமைப்பை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது. சர்வதேச வர்த்தகம் அனைத்தும் டாலரில் தான் நடைபெறுகிறது, இதுவும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை அதிகரிக்கிறது." என தெரிவித்துள்ளார். மேலும், "அமெரிக்காவின் கொள்கைகள் ஒட்டுமொத்த உலகின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. அமெரிக்கா இந்தியாவை தன்னுடன் ஒப்பிடாது. சரிசமமாக உள்ள இருவரிடையே நடப்பதுதான் போட்டி. அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை அதிகளவில் சீனாவுடன் தான் உள்ளது. அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை சீனாவுடன் 30%, ஐரோப்பிய ஒன்றியத்துடன் 16%, கனடாவுடன் 15% என்கிற அளவில் உள்ளது. அதேசமயம், இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 3.2 சதவிகிதம்தான்" என கூறியுள்ளார். ஜனவரி 27-ஆம் தேதி, டிரம்ப் இந்திய பிரதமர் மோதியுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, மோதியை வெள்ளை மாளிகைக்கு அழைத்தார் டிரம்ப். அமெரிக்காவிடமிருந்து இந்தியா அதிகளவில் பாதுகாப்பு உபகரணங்களை வாங்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறினார். இருநாட்டு வர்த்தகத்தை சமநிலையில் வைக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறினார். காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா?11 பிப்ரவரி 2025 கடல் நடுவே உள்ள சிறிய தீவை ஆயிரக்கணக்கான மக்கள் காலி செய்ய என்ன காரணம்?9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பை அமெரிக்க தேச பற்றாளர் என அமைச்சர் ஜெய்சங்கர் அழைத்தார் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டிரம்பை 'அமெரிக்க தேச பற்றாளர்' என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அழைத்தார். மோதியின் கொள்கைகள் வெளிநாட்டுச் சார்பைக் குறைக்கும் தேசியவாதத்தின் அம்சத்தையும் வலியுறுத்துகின்றன. அமெரிக்காவிடம் இருந்து முடிந்தளவுக்கு பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்க வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார். மற்றொருபுறம், பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவிலேயே தயாரிக்க மோதி விரும்புகிறார். இம்மாதிரியான சூழலில் இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் மூத்த இயக்குநர் லிசா கர்ட்டிஸ் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "மோதியின் 'மேக் இன் இந்தியா' கொள்கைக்கும் டிரம்பின் 'அமெரிக்காவுக்கு முன்னுரிமை' (America First) கொள்கைக்கும் நேரடி மோதல் நடப்பதாக நான் நினைக்கிறேன். குறிப்பாக, பாதுகாப்பு வர்த்தகத்தில் மோதல் இருக்கிறது. முதல் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு ஆயுதங்களுடன் கூடிய ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான தடைகளை டிரம்ப் நீக்கினார். ஆனால், அந்த ஒப்பந்தம் இறுதியாக ஏழு ஆண்டுகளாகின. நிச்சயமாக, டிரம்ப் இந்த முறை தாமதத்தை விரும்ப மாட்டார்." என்றார். "இந்தியாவை பொருத்தவரை அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவாலாக உள்ளது. அமெரிக்க ஆயுதங்களை இந்தியா வாங்க வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார். இந்தியாவிலேயே அதை உற்பத்தி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெறுகின்றன. ஆனால், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா தொடர்ந்து வாங்க வேண்டும் என்றும் டிரம்ப் எதிர்பார்ப்பார்." ஆனால், டிரம்பை இதில் சமாதானம் செய்வது எளிதானது இல்லை என்றும், அதற்கு முடிவே இல்லை என்றும் பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான நிபுணரும் பொருளாதார நிபுணருமான அமிடெண்டு பலிட் எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "டிரம்பை சமாதானப்படுத்த முயற்சிப்பதில் இந்தியாவுக்கு உள்ள சவால்களுக்கு எல்லையே இல்லை. எதிர்காலத்தில் டிரம்ப் பல விவகாரங்களில் அழுத்தம் தரலாம். டிரம்புடன் ஒரு விஷயத்தில் ஒருமுறை ஒப்புக்கொண்டால், அதுவே இறுதி அல்ல என்பதே டிரம்பின் வழக்கமாக உள்ளது. இது, இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70ql7l4555o
  20. 86 வயது இஸ்ரேலிய பணயக்கைதி மரணம் 11 FEB, 2025 | 03:20 PM ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட 86 வயது இஸ்ரேலியர் உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. சொலொமோ மன்சுர் என்ற இஸ்ரேலிய பணயக்கைதி உயிரிழந்துவிட்டார் எனஇஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார். ஈராக்கில் பிறந்தவரான இவர் இஸ்ரேலின் கிபுட்ஸ் கிஸிபும் பகுதியில் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டார். ஹமாஸ் அமைப்பு முதல்கட்டமாக விடுதலைசெய்யவுள்ள 33 பணயக்கைதிகளின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது. இதேவேளை சமீபத்தில் பெறப்பட்ட புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் 86 வயது பணயக்கைதி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/206415
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ரக்‌ஷனா.ரா பதவி, பிபிசி தமிழுக்காக 11 பிப்ரவரி 2025, 08:47 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் காதல்.... உலகெங்கும் உள்ள புராண, இதிகாசங்கள் மற்றும் இலக்கியங்களில் வெவ்வேறு பெயர்களில் விரவிக் கிடக்கிறது. காதலின் தொடக்கம் என்னவென்பதை அறுதியிட்டு கூற முடியாது. சங்க கால 'தலைவன் தலைவிக்கு விடும் தூது' முதல் இந்த காதல் கதைகள் காலத்திற்கேற்ப புது வடிவம் பெற்றுள்ளன. ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் இந்த அளப்பரிய அன்பை அங்கீகரிக்கும் வகையிலும் அதை போற்றும் வகையிலும் கொண்டாடப்படும் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் கொண்டாடும் அனைவருக்கும் அது ஏன் வாலண்டைன் தினம் என்று அழைக்கப்படுகிறது என்றும் அது ஏன் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்றும் தெரியுமா? கே.எம்.செரியன்: இஸ்லாமிய பெண்ணுக்கு இந்துவின் இதயத்தை பொருத்திய கிறிஸ்தவர் உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்? ஏ.ஐ. உலகில் புதிய அலை: ஒரே செயலி மூலம் அமெரிக்க நிறுவனங்களை மிரளச் செய்த சீன நிறுவனம் நாகரிக வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்குள்ளேயே வேறுபாடுகள் இருந்தனவா? காதலர் தினம் வரலாறு வரலாற்றின் பக்கங்களை திரும்பி பார்த்தால், காதலர் தினம் கொண்டாடுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது. இந்த தினத்தின் பெயர் காரணத்திற்கு சொந்தக்காரராக இருப்பவர் வாலண்டைன். ஆனால் இவர் யார் என்று தெளிவான தரவுகள் இல்லாத போதும் வாலண்டைன் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த மத போதகர் என்று பரவலான நம்பிக்கை ஒன்று நிலவுகிறது. காதல் மனைவியையும் குடும்பத்தையும் தனியே விட்டு, போருக்கு செல்ல வீரர்கள் தயக்கம் காட்டியதால் பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் திருமணத்திற்கு தடை விதித்தார். இதை எதிர்த்த வாலண்டைன், அங்கு இருந்தவர்களுக்கு ரகசியமாக திருமணங்களை செய்து வைத்தார். இதை அறிந்த மன்னர், வாலண்டைனுக்கு மரண தண்டனை விதித்தார். அப்பொழுது சிறையில் இருந்த வாலண்டைன், அந்த சிறை பாதுகாவலரின் மகளை விரும்பியதாகவும், மரண தண்டனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்ட போது, 'ஃப்ரம் யுவர் வாலண்டைன்' அதாவது உன்னுடைய வாலண்டைனிடமிருந்து என்ற வரியைக் கொண்ட காதல் கடிதத்தை கொடுத்ததாகவும் கதைகள் உள்ளன. பிப்ரவரி 14ஆம் தினத்தன்று காதலுக்காக தன்னுடைய உயிரை நீத்த வாலன்டைனின் நினைவாகவே அந்த நாள் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது என்பது பரவலான நம்பிக்கை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டப்ளின் நகர தேவாலயத்தில் உள்ள வாலண்டைன் சிலை மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?10 பிப்ரவரி 2025 தமிழ்நாட்டில் காட்டுப்பன்றிகளைச் சுட அனுமதி - விவசாய சேதம் குறையுமா? அல்லது காடுகளுக்குப் பாதிப்பா?9 பிப்ரவரி 2025 காதலர் வாரம் காதலர் தினமாக தொடக்கத்தில் கொண்டாடப்பட்ட இந்த தினம் தற்போது பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை காதலர் வாரமாகவே கொண்டாடப்படுகிறது. காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் எந்த தினமாக கொண்டாடப்படுகிறது? அதன் பின்னணி என்ன? பிப்ரவரி 7: ரோஸ் தினம் பட மூலாதாரம்,GETTY IMAGES காதலர் வாரம் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கியது. காதலர் வாரத்தின் முதல் நாளாக ரோஸ் தினம் உள்ளது. ரோம புராணக் கதைகளில் காதலின் கடவுளாக இருக்கும் வீனசுடன் தொடர்புடையதாக இந்த மலர் சொல்லப்படுகிறது. இந்த தினத்தில் பரிமாறிக் கொள்ளப்படும் ஒவ்வொரு நிற ரோஜா மலருக்கும் ஒவ்வொரு தனித்துவமான அர்த்தங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. சிவப்பு ரோஜா, காதல் உறவையும், காதலர்களுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான பரிமாற்றங்களையும் குறிக்கிறது. மஞ்சள் ரோஜா, இரு நண்பர்களுக்கிடையே உள்ள நட்பையும் தூய நேயத்தையும் குறிக்கிறது என்றும் வெள்ளை ரோஜா மலர்கள் புதிய தொடக்கங்களையும், மாசற்ற அன்பையும் வெளிப்படுத்துகிறது என்றும் இன்றைய தலைமுறையினர் கூறுகின்றனர். 'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?8 பிப்ரவரி 2025 டீப்சீக்: உயர் தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுக்கு சீனா சவால் விட அடிகோலிய பத்தாண்டு திட்டம் பற்றி தெரியுமா?8 பிப்ரவரி 2025 பிப்ரவரி 8 - ப்ரபோஸ் தினம் பட மூலாதாரம்,GETTY IMAGES காதலர்கள் தங்களுடைய காதல் உறவை வெளிப்படையாக தங்களுடைய துணைக்கும், இந்த உலகத்திற்கும் கூறும் ஒரு நாளாக இந்த ப்ரபோஸ் தினம் கொண்டாடப்படுகிறது. மறக்க முடியாத பரிசுகளுடனோ அல்லது எதிர்பாராத வியக்கத்தக்க ஏற்படுகளுடனோ காதலை வெளிப்படுத்துவது இந்த நாளின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. மேற்கூறிய படி இந்த நாளுக்கான வரலாற்று தரவுகள் இல்லையென்றாலும், இந்த தினம் கொண்டாடப்பட்டதற்கான உறுதி செய்யப்படாத தகவல்கள் உள்ளன. அதில் 1477ஆம் ஆண்டு முதலாம் மாக்சிமிலியன் என்பவர் வைர மோதிரத்துடன் தன்னுடைய காதலியான மேரி ஆஃப் பர்கன்டிக்கு காதலை ப்ரபோஸ் செய்துள்ளார் என்று நம்பப்படுகிறது. இந்திய வரலாற்றையே மாற்றிய 'நாகா சாதுக்கள்' - கையில் வாளுடன் நிர்வாண கோலத்தில் வலம் வரும் இவர்கள் யார்?8 பிப்ரவரி 2025 புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன?7 பிப்ரவரி 2025 பிப்ரவரி 9 - சாக்லேட் தினம் பட மூலாதாரம்,GETTY IMAGES காதலர் வாரத்தின் மூன்றாவது நாளாக கொண்டாடப்படுவது சாக்லேட் தினம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த சாக்லேட், அதை உண்பவரின் மனதை மகிழ்விக்கும். அதாவது சாக்லேட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தியோப்ரோமைன், ட்ரிப்டோஃபான் போன்ற கூறுகள் அதை உட்கொள்பவரின் மனதை அமைதியாக்கி மகிழ்விக்கின்றன. சாக்லேட் தருவது அன்பையும் காதலையும் எடுத்துரைப்பதாக கருதப்படுகிறது. பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்7 பிப்ரவரி 2025 மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?3 பிப்ரவரி 2025 பிப்ரவரி 10 - டெடி தினம் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நாளன்று தன்னுடைய காதலருக்கோ அல்லது நண்பருக்கோ அன்பின் அடையாளமாக வழங்கப்படுவது தான் இந்த டெடி பியர் பொம்மைகள். மிகவும் நெருக்கமான நபருக்கு இதை கொடுப்பது என்பது நாம் அவர்களுடன் என்றுமே இருப்போம் என்ற எண்ணத்தையும், அதை கொடுப்பவரின் ஞாபகத்தையும் அவர்களுக்கு கொடுக்கும். இந்த நாள் கொண்டாடப்பட்டதற்கான வரலாறு இல்லை என்றாலும் இந்த பொம்மைகள் தோன்றியதற்கான வரலாறு உள்ளது. 1902 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட், மிஸிஸிப்பி என்ற இடத்தில் வேட்டையாட சென்றிருந்த போது அங்கிருந்த கரடியை சுட்டுக்கொல்ல மறுத்துவிட்டார். இவரின் இந்த செயலையும் இரக்கத்தையும் பாராட்டி, முதல் முதலாக உருவாக்கப்பட்டதே இந்த டெடி பியர். ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நேயத்தின் அடையாளமாக திகழ்கிறது இந்த பொம்மைகள். பல ஆண்டுகளாக வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பிடித்தமான ஒரு பரிசாக இந்த பொம்மை இருந்துவருகிறது. பிப்ரவரி 11 - பிராமிஸ் தினம் பட மூலாதாரம்,GETTY IMAGES காதலர் வாரத்தில் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுவது இந்த வாக்குறுதி தினம். இந்த நாளன்று மக்கள் தங்கள் உறவை மேம்படுத்தும் வகையிலான வாக்குறுதிகளை எடுத்துக்கொள்வர். ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையை வளர்க்கும் இந்த நாள் அவர்களின் வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான நாளாக பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் எந்த துன்பம் வந்தாலும் ஒருவரை ஒருவரை விட்டு விலகாமல் உடன் நிற்போம் என்ற சத்தியத்தை காதலர்கள், நண்பர்கள் என அனைத்து உறவுமுறைகளும் ஏற்றுக்கொள்வர் . ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?3 பிப்ரவரி 2025 உங்களால் இரவில் தூங்க முடியவில்லையா? - நீங்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன?31 ஜனவரி 2025 பிப்ரவரி 12 - ஹக் தினம் பட மூலாதாரம்,GETTY IMAGES தொடுதல் என்பது ஒரு மொழி. அன்புக்குரியவர்களுக்கு காதலை வெளிப்படுத்தும் ஒரு செயலாக கட்டிப்பிடிப்பது இந்த தினத்தில் மேற்கொள்ளப்படுகிறது. பிப்ரவரி 13 - கிஸ் தினம் பட மூலாதாரம்,GETTY IMAGES அன்பின் வெளிப்பாடான முத்தத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நாள் தான் இந்த கிஸ் தினம். இந்த தினத்தன்று ஒருவருக்கொருவர் முத்தத்தை பகிர்ந்து கொள்வது அவர்களிடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கிறது. காதலர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் முத்தத்துடன் தங்களது நேசத்தையும் பகிர்கின்றனர். இதற்கு பின்னர் பிப்ரவரி 14 ஆம் தேதி வரும் காதலர் தினம் உலக நாடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்கு குறிப்பிடப்பட்ட எந்த டிரஸ் கோடும் இல்லையென்றாலும், இந்த நாளன்று காதலிப்பவர், காதலை எதிர்பார்த்து காத்திருப்பவர், காதலித்துப் பிரிந்தவர் என ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்கேற்ப வெவ்வேறு நிறத்தில் ஆடைகளை அணிந்துகொள்வர். காலத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்களை இந்த உலகம் சந்தித்துக்கொண்டு வருவது போல, இந்த காதலர் தினம் கொண்டாடப்படும் விதமும் மாறிக் கொண்டே வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்பொழுது சிங்கிளாக இருக்கும் இளைஞர்களும் காதலித்து பிரிந்தவர்களும் ஆன்டி வாலன்டைன் என்ற ஒரு புதிய வாரத்தை கொண்டாடுகின்றனர். வாலன்டைன் தினத்திற்கு அடுத்த நாளிலிருந்து கொண்டாடப்படும் இந்த வாரம், ஸ்லாப் தினம் (Slap day), கிக் தினம் (Kick Day), பெர்ஃப்யூம் தினம் (Perfume day), ஃப்ளர்ட் தினம் (Flirt Day), கன்ஃபெஷன் தினம் (Confession Day), மிஸ்ஸிங் தினம் (Missing Day) மற்றும் பிரேக் அப் தினம் (Breakup Day) என்று காதலுக்கு மாறான செயல்களை உள்ளடக்கியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0m17ev8mm7o
  22. கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டார் ஜப்பானியத் தூதுவர் 11 FEB, 2025 | 02:50 PM ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (Akio Isomata) தூதரக அதிகாரிகள், கிளிநொச்சி முகமாலை பகுதிக்குச்சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (Akio Isomata) தூதரக அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை முகமாலைப்பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் நிறுவவனப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட்டுள்ளார். அந்தப் பகுதியில் வெடிபொருட்கள் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் இந்தப்பகுதியில் மீள் குடியேற்றத்திற்குப் பின்னர் வெடிபொருட்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப்பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், முகமாலைப் பகுதியில் ஜப்பான் நிதிப்பங்களிப்புடன் டாஸ், கலோரெஸ்ட் மற்றும் சாப் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை யப்பானிய தூதுவர் பார்வையிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/206409
  23. Published By: DIGITAL DESK 2 11 FEB, 2025 | 02:21 PM சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் வரிக் கொள்கை, வரி வருவாயை திறம்பட நிர்வகித்தல் மற்றும் பொதுத்துறை செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான கொள்கை முயற்சிகளை வலியுறுத்தி, அரசாங்கத்தின் எதிர்கால வளர்ச்சி, நிகழ்ச்சி நிரலையும் பிரதமர் இதன்போது கோடிட்டுக் காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிர்வாக இயக்குனர் கலாநிதி பி.கே.ஜி. ஹரிச்சந்திராவும் இக் கலந்துரையாடலில் பங்கேற்றார். https://www.virakesari.lk/article/206402
  24. 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பம் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று (11) ஆரம்பமாக உள்ளது. இன்று முதல் 13 ஆம் திகதி வரை டுபாயில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பையேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் புறப்படுச் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க டுபாயில் நடைபெறும் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் உரை நிகழ்த்தவுள்ளார். எதிர்கால நோக்கிலான பிரவேசங்கள், தொழில்நுட்ப புத்தாக்கம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தும் கருத்தாடலை ஏற்படுத்த உலகத் தலைவர்களை ஒரே மேடையில் அமர்த்துவதே உலகத் தலைவர்கள் மாநாட்டில் முக்கிய நோக்கமாகும். இந்த மாநாட்டில் மனித சமூகம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால முன்னேற்றங்கள், புதிய வாய்ப்புகள் தொடர்பில் நாடுகளுக்கிடையில் கருத்து பரிமாறிக்கொள்ளப்படவுள்ளது. இதில் 150 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 4000 ற்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியன் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பும் இதன்போது நடைபெறவுள்ளதுடன், அதனூடாக இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறை சார்ந்த ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளவும் இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயிக் மொஹமட் பின் ரஷீட் அல் மக்டூமையும் சந்திக்கவுள்ளார். இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, வலுசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் முன்னணியில் உள்ள உலக நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் பலருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார். வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந் விஜயத்தில் இணைந்து கொண்டார். https://tamil.adaderana.lk/news.php?nid=199970
  25. 11 FEB, 2025 | 05:22 PM (எம்.மனோசித்ரா) அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளுக்கமைய 7,456 பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அது தொடர்பாக கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவை அடையாளங் கண்டு அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களால், அவற்றின் கீழ் காணப்படுகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டு, அக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நிலவும் 3,000 பதவி வெற்றிடங்களையும், பாதுகாப்பு அமைச்சில் நிலவும் 9 பதவி வெற்றிடங்களையும், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சில் நிலவும் 179 பதவி வெற்றிடங்களையும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் நிலவும் 132 பதவி வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 400 பதவி வெற்றிடங்களையும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் நிலவும் 161 பதவி வெற்றிடங்களையும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நிலவும் 3,519 பதவி வெற்றிடங்களையும், மேல் மற்றும் கிழக்கு மாகாணசபைகளில் நிலவும் 39 பதவி வெற்றிடங்களையும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிலவும் 17 பதவி வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/206436

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.