Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எப்-35 போர் விமானம் என்பது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும் 15 பிப்ரவரி 2025, 01:22 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் நேற்று வெள்ளை மாளிகையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம், பாதுகாப்பு, குடியேற்றம் போன்ற விஷயங்கள் குறித்து பேசிய அவர்கள் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டனர். பாதுகாப்பு தொடர்பாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் டொனால்ட் டிரம்ப், "இந்த ஆண்டு, இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்களின் விற்பனை பில்லியன் கணக்கான டாலர்கள் அதிகரிக்கும். இது இந்தியாவிற்கு எப்-35 போர் விமானங்களை வழங்குவதற்கும் வழி வகுக்கும்" என்றார். எப்-35 போர் விமானம் என்றால் என்ன என்பதையும், அது ஏன் உலகின் சிறந்த போர் விமானங்களில் ஒன்றாகவும், மிகவும் விலையுயர்ந்த போர் விமானமாகவும் கருதப்படுகிறது? அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன? டிரம்ப் - மோதி: 'அதானி, ஆவணமற்ற இந்தியர்கள்' - செய்தியாளர் சந்திப்பின் 5 முக்கிய அம்சங்கள் தஹாவூர் ஹுசைன் ராணா: இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள இவர் யார்? மும்பை தாக்குதலில் இவரின் பங்கு என்ன? டிரம்ப், புதின் இருவரும் 90 நிமிட தொலைபேசி உரையாடலில் பேசியது என்ன? துளசி கப்பார்ட்: டிரம்ப் அமெரிக்க உளவுத்துறை தலைவராக்கிய இவரது பின்னணி என்ன? எப்-35 போர் விமானத்தின் தனிச் சிறப்புகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூப்பர்சோனிக் வேகத்திற்கு பெயர் பெற்றது இவ்விமானம் எப்-35 போர் விமானம் என்பது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும். (அதாவது ரேடார் மற்றும் பிற கண்காணிப்பு அமைப்புகளால் கண்டறிவதைத் தவிர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு ராணுவ விமானமாகும்). மேலும் அதன் சூப்பர்சோனிக் வேகத்திற்கு பெயர் பெற்றது இவ்விமானம். தொலைதூர இலக்குகளைத் தாக்குவதில் வெற்றியடைவதன் காரணமாக இது நவீன போர்க்களத்தில் சிறந்த விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. லாக்ஹீட் மார்ட்டின் நிறுவன வலைத்தளத்தின்படி, லாக்ஹீட் மார்ட்டின் எப்-35 லைட்னிங்-2, ஸ்டெல்த் தொழில்நுட்பம், மேம்பட்ட சென்சார்கள், ஆயுதத் திறன் மற்றும் தூரம் ஆகியவற்றின் அடிப்படையில், மிகவும் ஆபத்தான போர் விமானம் என்று அறியப்படுகின்றது. பழங்குடியினர் படிப்பறிவு விகிதம் உத்தர பிரதேசத்தைவிட தமிழ்நாட்டில் குறைந்தது ஏன்?14 பிப்ரவரி 2025 சென்னையில் தலித்துகள், முஸ்லிம்கள் வாடகை வீடு தேடுவதில் சந்திக்கும் சவால்கள் என்ன?14 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரேடார் மற்றும் பிற கண்காணிப்பு அமைப்புகளால் கண்டறிவதைத் தவிர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு ராணுவ விமானமாகும் எப்-35 போர் விமானத்தின் வகைகள் இந்த விமானங்களைத் தயாரிக்கும் லாக்ஹீட் மார்ட்டின் வலைத்தளத்தின்படி, இந்த போர் விமானத்தில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன. இந்த நிறுவனம் தனது விமானத்தை அமெரிக்க விமானப்படை, மரைன் கார்ப்ஸ் மற்றும் கடற்படை மற்றும் இஸ்ரேல், பெல்ஜியம், டென்மார்க், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, போலந்து, தென் கொரியா மற்றும் நார்வே உள்ளிட்ட 15 நாடுகளுக்கு விற்றுள்ளது. அதனையடுத்து, இந்நாடுகளின் விமானப் படைகள் இந்த விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றன. விரைவில் இந்தியாவும் இந்த பட்டியலில் சேர்க்கப்படலாம். எப்-35ஏ: இந்த விமானங்கள் நிலையான ஓடுபாதைகளில் இருந்து எளிதாகப் புறப்படும். அமெரிக்க விமானப்படை இந்த விமானங்களை அதிகம் பயன்படுத்துகிறது. எப்-35பி: இந்த விமானங்கள் ஹெலிகாப்டர் போல நேரடியாக தரையிறங்கும் திறன் கொண்டவை. இதன் காரணமாக இந்த விமானத்தால் ஒரு சிறிய இடத்தில் கூட தரையிறங்க முடியும். இந்த திறனின் காரணமாக, இது போர்க்கப்பல்களிலும் தரையிறங்க உதவுகிறது. அமெரிக்க மரைன் கார்ப்ஸ், இத்தாலிய விமானப்படை மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகியவை இந்த விமானங்களைப் பயன்படுத்துகின்றன. காதலர் தினம்: 3 ஆண்டுகள் வெளியூரில் வீட்டுச்சிறை, உறவினர்களின் புறக்கணிப்புகள் - சாதி தடையை உடைத்து இணைந்த தம்பதி14 பிப்ரவரி 2025 'நீதிபதி நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை' - நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?13 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்கா இந்த விமானங்களை இந்தியாவுக்கு எவ்வளவு விலைக்கு விற்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எப்-35சி: இந்த வகையில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் அமெரிக்க கடற்படையின் முதல் ஸ்டெல்த் போர் விமானம் மற்றும் உலகின் ஒரே ஐந்தாம் தலைமுறை போர் விமானமாகும். அவை விமானம் தாங்கிக் கப்பல் நடவடிக்கைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விமானம் 25 மிமீ பீரங்கி, வான்வழி ஏவுகணைகள் மற்றும் 907 கிலோ வழிகாட்டப்பட்ட குண்டுகளை (குறிப்பிட்ட இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் குண்டுகள்) சுமந்து செல்லும் திறன் கொண்டது. எப்-35 விமானத்தால் 1.6 Mach அல்லது 1975.68 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும், ஏனெனில் அதன் இயந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. அது மட்டுமின்றி, ஆயுதங்கள் மற்றும் எரிபொருளுடன் முழுமையாக ஏற்றப்பட்டாலும், எப்-35 விமானத்தால் இந்த வேகத்தை அடைய முடியும். இந்த போர் விமானம் ஆக்டிவ் எலக்ட்ரானிக் ஸ்கேன்டு அரே (ஏஇஎஸ்ஏ) ரேடார், எலக்ட்ரோ-ஆப்டிகல் டார்கெட்டிங் சிஸ்டம் (ஈஓடிஎஸ்) மற்றும் ஹெல்மெட்-மவுண்டட் டிஸ்ப்ளே சிஸ்டம் (எச்எம்டிஎஸ்) போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. அதன் மின்னணு போர் அமைப்பால், எதிரிகளின் இருப்பிடங்களைக் கண்டறியவோ அல்லது கண்காணிக்கவோ மட்டுமல்லாமல், ரேடார்களையும் முடக்கி தாக்குதல்களைத் தடுக்கவும் முடியும். ஆஸ்திரேலியா: பெண்களிடம் நெருங்கிப் பழகி டீப் ஃபேக் மூலம் ஆபாசமாக சித்தரித்து மோசடி - என்ன நடந்தது?14 பிப்ரவரி 2025 காதலர் தினத்தன்று பௌர்ணமி: முழு நிலவு நாளில் மனிதர்கள் ஓநாயாக மாறினார்களா? புனைவுகளும் உண்மையும்13 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES பாதுகாப்பு நிபுணர்கள் எழுப்பும் கேள்விகள் அமெரிக்க அரசாங்க பொறுப்புடைமை அலுவலகம் (GAO) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்கா இதுவரை 2,700 எப்-35 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது, அவற்றில் 900 விமானங்களை ஏற்கனவே பெற்றுள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்த போர் விமானத்தின் விலை அமெரிக்காவிற்கு 82.5 மில்லியன் டாலர் ஆகும், அதாவது தோராயமாக 7.16 பில்லியன் இந்திய ரூபாய். கூடுதலாக, ஒரு மணி நேரத்திற்கு விமானச் செலவு 40 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 34 லட்சத்துக்கும் அதிகம். அமெரிக்கா இந்த விமானங்களை இந்தியாவுக்கு எவ்வளவு விலைக்கு விற்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த விமானங்கள் தற்போது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானங்களாக கருதப்படுகின்றன என்பதும் தெளிவாகிறது. மேலும் அமெரிக்க அரசாங்க பொறுப்புடைமை அலுவலக (GAO) அறிக்கையின்படி, அதன் விலை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விமானத்தின் ஆயுட்காலம் 66 ஆண்டுகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எப்-35 இன் விலை அதிகரித்து வருவதற்கு, அதன் பராமரிப்புக்காக மதிப்பிடப்பட்டுள்ள செலவு, உற்பத்தி செலவுகள் மற்றும் தயாரிப்புக்கு தேவைப்படும் நேரம் ஆகியவை காரணமாகும். இதன் காரணமாக பாதுகாப்பு நிபுணர்கள் கூட இது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர். மறுபுறம், 2022ஆம் ஆண்டில், இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட எப்-35 போர் விமானங்களின் ஒரு தொகுதியில், பைலட் வெளியேற்ற அமைப்புகளில் குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக இதே அமெரிக்க விமானங்களை, தற்போது அமெரிக்க அரசாங்கத்தோடு தொடர்புடைய தொழிலதிபர் ஈலோன் மஸ்க் 'குப்பை' என்று விவரித்துள்ளார். மேலும், இந்த விமானத்தை உருவாக்கியவர்களை 'முட்டாள்கள்' என்றும் அவர் அழைத்தார். சில காலமாக, இந்த போர் விமானத்தின் செயல்பாட்டுத் திறன்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c79dp0xq7ldo
  2. யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி : பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பு புதிய இணைப்பு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய சுழிபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இன்று பிற்பகல் 2 மணியளவில் யாழ். சுழிபுரம், வழக்கம்பரை முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜா, கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். இரண்டாம் இணைப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதனையடுத்து இன்று மதியம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஆசிரியர் கலாசாலையில் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்துவைத்த பின்னர் பிரதமர் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீபவானந்தராஜா, றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ஆசிரியர் கலாசாலை அதிபர் லலீசன் மற்றும் கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் இன்று பல்வேறு நிகழ்வுகளிலும் பொதுமக்கள் சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முதலாம் இணைப்பு வடக்கிற்கு வருகை தந்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) இன்று (15) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்துக்கல்லூரி அதிபருடன் கலந்துரையாடிய அவர் பாடசாலை கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், மாணவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு (Kopay Teacher's College) விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் சந்திப்பு அதன் பின்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் இன்று (15) மாலை, சுழிபுரம், ஏழாலை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளுக்கு சென்று மக்கள் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். நாளை (16) கிளிநொச்சி (Kilinochchi) மற்றும் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டங்களுக்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/harini-amarasuriya-visit-to-jaffna-hindu-college-1739597077#google_vignette
  3. இன்று பிரதமர் வருகை தந்த தொல்புரம் மேடை வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமேடை. பிரதமர் வருகை தந்தபோது சிறிது நேரம் நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தேன்.
  4. டிரம்ப் - மோதி: 'அதானி, ஆவணமற்ற இந்தியர்கள்' - செய்தியாளர் சந்திப்பின் 5 முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 14 பிப்ரவரி 2025, 13:23 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, வியாழக்கிழமை (பிப்ரவரி 13) பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்று, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் எண்ணெய்-எரிவாயு, பாதுகாப்பு, வரிகள், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். அதன் பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது, இரு தரப்பு வர்த்தகம் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசினர். தஹாவூர் ஹுசைன் ராணா: இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள இவர் யார்? மும்பை தாக்குதலில் இவரின் பங்கு என்ன? 'இந்தியா அதிக வரி விதிக்கிறது' - மோதி முன்னிலையில் பேசிய டிரம்ப் யுக்ரேன்-ரஷ்யா போர்: இந்தியா நடுநிலை வகிக்கிறதா? மோதி கூறியது என்ன? கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராகப் பதவி வகிக்கும் நரேந்திர மோதி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிப்பது இது மூன்றாவது முறை. அவர் ஒருபோதும் தனியாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியதில்லை. கடந்த 2019ஆம் ஆண்டில் ஒரு செய்தியாளர் சந்திப்பில், உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தபோது, அவர் அமித் ஷாவுக்கு அருகில் அமர்ந்திருந்தார். 2023ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் இரண்டு கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்தார். பட மூலாதாரம்,REUTERS இந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது குறித்தும், அதானி நிறுவனம் மீது அமெரிக்காவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் பிரதமர் மோதி பதிலளித்தார். அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா முறைபடுத்தும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்புத் தளவாடங்கள் வாங்குவதில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகக் கூறிய டிரம்ப், எஃப்-35 (F-35) எனப்படும் ஸ்டெல்த் போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்கவும் விருப்பம் தெரிவித்தார். டிரம்ப், புதின் இருவரும் 90 நிமிட தொலைபேசி உரையாடலில் பேசியது என்ன?13 பிப்ரவரி 2025 துளசி கப்பார்ட்: டிரம்ப் அமெரிக்க உளவுத்துறை தலைவராக்கிய இவரது பின்னணி என்ன?13 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கௌதம் அதானி இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அமெரிக்காவில் அதானி குழும உரிமையாளரும் தொழிலதிபருமான கௌதம் அதானி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோதி பதில் அளித்துள்ளார். "அதானி குறித்து டிரம்பிடம் பேசுனீர்களா? அந்த வழக்கில் நடவடிக்கை எடுக்குமாறு டிரம்பை வலியுறுத்தினீர்களா?" என மோதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பும் மோதியுடன் இருந்தார். அதற்குப் பதிலளித்த மோதி, "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்கள் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் என்னவென்றால் 'உலகமே ஒரு குடும்பம்' என்பதுதான். நாங்கள் முழு உலகத்தையும் ஒரே குடும்பமாகக் கருதுகிறோம்." "ஒவ்வோர் இந்தியருமே எனக்கு முக்கியம் என்று நான் கருதுகிறேன். அதேவேளையில், ஒரு தனிப்பட்ட நபரின் விஷயத்துக்காக இரு நாடுகளின் தலைவர்களும் சந்திப்பதில்லை, ஒன்றாக அமர்ந்து பேசுவதில்லை" என அவர் கூறினார். கௌதம் அதானி, அமெரிக்காவில் தனது நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் பெற 250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைத்ததாகவும் கடந்த நவம்பர் மாதம் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் 8 பேர் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்தது. அமெரிக்காவில் எஃகு, அலுமினியம் இறக்குமதிக்கு 25% வரி - டிரம்ப் உத்தரவால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?12 பிப்ரவரி 2025 பிறப்பு அடிப்படையில் குடியுரிமை ரத்து - டிரம்பின் உத்தரவு அமெரிக்கவாழ் தமிழர்களை எவ்வாறு பாதிக்கும்?12 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யா - யுக்ரேன் இடையே நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவதாக நரேந்திர மோதி கூறினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான செய்தியாளர் சந்திப்பின்போது, ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே நடந்து வரும் போர் குறித்தும் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார். ரஷ்யா-யுக்ரேன் மோதலில் இந்தியா நடுநிலை வகித்ததாக மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அது தவறு என்று பிரதமர் மோதி கூறினார். "இந்தியா அமைதியையே விரும்புகிறது. இரு தரப்பினரும் (யுக்ரேன் மற்றும் ரஷ்யா) இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்" என்றார். ரஷ்யா - யுக்ரேன் இடையே நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் நரேந்திர மோதி கூறினார். அப்போது, ரஷ்ய அதிபர் புதினுடனான தனது தொலைபேசி உரையாடல் குறித்தும் டிரம்ப் பேசினார். மேலும் இந்த உரையாடல் யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொடக்கத்தைக் குறிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். "ரஷ்யா மற்றும் யுக்ரேனுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெற்றது. போரை முடிவுக்குக் கொண்டுவர நல்ல வாய்ப்பு உள்ளது" என்று முன்னதாக தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் தெரிவித்திருந்தார். முன்னதாக புதன்கிழமை (பிப்ரவரி 12), ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அவரைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். பழங்குடியினர் படிப்பறிவு விகிதம் உத்தர பிரதேசத்தைவிட தமிழ்நாட்டில் குறைந்தது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் காதலர் தினம்: 3 ஆண்டுகள் வெளியூரில் வீட்டுச்சிறை, உறவினர்களின் புறக்கணிப்புகள் - சாதி தடையை உடைத்து இணைந்த தம்பதி14 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற பிறகு, அமெரிக்கா தனது ராணுவ விமானம் மூலம் ஆவணமற்ற இந்தியர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது பிரதமர் நரேந்திர மோதி, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துக் கொள்வது குறித்தும் பேசினார். "இந்த விவகாரத்தில் எங்கள் கருத்து ஒன்றுதான், அதாவது எந்தவொரு இந்தியரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அழைத்துக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று அவர் கூறினார். சில புலம்பெயர்ந்தவர்கள், மனிதக் கடத்தல்களில் ஈடுபடுபவர்களால் கொண்டு வரப்படுவதாகவும், தாங்கள் அமெரிக்காவுக்கு தான் அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது என்றும் மோதி கூறினார். "இவர்கள் மிகச் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் பெரிய கனவுகள் விதைக்கப்படுகின்றன, அவர்களுக்குப் பெரிய வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன" என்றும் அவர் தெரிவித்தார். டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற பிறகு, அமெரிக்கா தனது ராணுவ விமானம் மூலம் ஆவணமற்ற இந்தியர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது. கடந்த வாரம் இதுகுறித்துப் பேசிய இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "இந்தியர்களை திருப்பி அனுப்பும் செயல்பாட்டின்போது, அவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய இந்திய அரசு அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக" கூறினார். மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்: இதுவரை நடந்தது என்ன? முழு பின்னணி14 பிப்ரவரி 2025 தமிழ்நாடு அரசு அவசர கதியில் 658 சிறப்பு மருத்துவர்களை நியமிக்க விரும்புவது ஏன்? இதன் விளைவுகள் என்ன?13 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,@NARENDRAMODI இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, நவம்பர் 26, 2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். உலகம் முழுவதிலும், இஸ்லாமிய கடும்போக்குவாதத்தின் அச்சுறுத்தலைத் தடுக்க இந்தியாவும் அமெரிக்காவும் 'முன்னெப்போதும் இல்லாத வகையில்' இணைந்து செயல்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். "இந்தியா, அமெரிக்காவின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு மூலம் ஒரு சிறந்த சூழலை உலகில் உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பிரதமர் மோதி கூறினார். "இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை, ஜனநாயகம் மற்றும் அரசு நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்துகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்றும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக நிற்பதாகவும் பிரதமர் மோதி தெரிவித்தார். கோவை: கல்லுாரிகளில் மாணவர்கள் மூலம் கஞ்சா விற்கப்படுகிறதா? காவல் துறை பகிரும் அதிர்ச்சி தகவல்13 பிப்ரவரி 2025 எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்தது ஏன்?- செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்12 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,@NARENDRAMODI "இந்தியா எந்த அளவுக்கு அமெரிக்கா மீது இறக்குமதி வரி விதிக்கிறதோ, அதே அளவு வரி இந்தியா மீதும் விதிக்கப்படும்" என்று பரஸ்பர வரி விதிப்பு குறித்து அதிபர் டிரம்ப் பேசினார். வரிகள் தொடர்பாகப் பேசும்போது, "எங்கள் எதிரிகளைவிட எங்கள் கூட்டாளிகள் மோசமானவர்கள்" என்று டிரம்ப் குறிப்பிட்டார். அமெரிக்காவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் எனக் கூறிய டிரம்ப், "அவை நம்மிடம் அதிகமாக உள்ளன. இந்தியாவில் அதற்கான தேவை உள்ளது" என்று குறிப்பிட்டார். "இந்தியாவின் எரிவாயு பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் நாங்கள் கவனம் செலுத்துவோம்," எனக் கூறிய பிரதமர் மோதி, அணுசக்தியில் அதிக முதலீடுகளை மேற்கொள்வது குறித்தும் உறுதியளித்தார். அப்போது, "பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க உள்ளோம். எஃப்-35 ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவோம்" என்று டிரம்ப் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgpdmejvgyo
  5. 14 FEB, 2025 | 03:55 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்து கொழும்பில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனவரி 30ஆம் திகதி ரணில் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள அமாரி ஹோட்டலில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, நிமல் லன்சா, பிரேம் நாத் சி தொலவத்த, உதய கம்மன்பில மற்றும் ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் கலந்து கொண்டிருந்தனர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, இது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடலின் தொடர்ச்சியாகும். அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்காத ஏனைய சகல அரசியல் கட்சிகளுடனும் இணைந்து சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிலைவரம் குறித்து மதிப்பாய்வு செய்கின்றோம். அரசாங்கத்தின் அடக்குமுறைகள், அரசியல் பழிவாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்படுகிறது. இணைந்து செயற்படுவதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார். நிமல் லன்சா தெரிவிக்கையில், இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். அரசாங்கமும் மக்களுக்கு பாரிய வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றது. நாமும் அரசாங்கத்துக்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை. 5 ஆண்டுகள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை வேடிக்கை பார்க்கப் போகின்றோம் என்றார். உதய கம்மன்பில தெரிவிக்கையில், கலந்துரையாடல்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை எதிர்க்கட்சிகளின் இரகசியமாகும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த கருத்து பரிமாற்றமும் இடம்பெறுகிறது. வேலை செய்ய முடியாத அரசாங்கத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதால் நாடு எதிர்நோக்கிய அபாயம் தொடர்பிலேயே பிரதானமாக அவதானம் செலுத்துகின்றோம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த கருத்து வெளியிடுகையில், அரசாங்கத்துக்கு எதிராக ஏதேனும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்திலிருப்பவர்கள் ஆரம்பத்தில் ஆயுதங்களை ஏந்தி பின்னர் ஜனநாயகத்தை பின்பற்றியவர்களாவர். பல்கலைக்கழகங்களில் கூட இவர்களது அரசியல் செயற்பாடுகள் இவ்வாறு தான் காணப்படுகின்றன. எனவே இவர்களிடமிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே எமது நோக்கமாகும். ஏனைய கட்சிகள் ஜனநாயக ரீதியாக ஆட்சியைப் பெறுவதற்கே முற்படுகின்றன. ஆனால் இந்த அரசாங்கம் 'நாம் மீளக் கையளிப்பதற்காக அதிகாரத்தைப் பெறவில்லை' என்று கூறுகின்றது. அவ்வாறெனில் பலவந்தமாக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள இவர்கள் முற்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது என்றார். https://www.virakesari.lk/article/206677
  6. 14 FEB, 2025 | 05:21 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (14) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தனது வரவேற்புரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 56 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவற்றுக்கான முன்மொழிவுகள் உரிய முறையில் சமர்ப்பிப்பதற்கான முன் ஆயத்த கலந்துரையாடலாக இது அமையும் என தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 56 மில்லியன் ரூபாவினை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 9 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தேவை அடிப்படையில் பிரதேச செயலக ரீதியாக இந்த நிதியினை பயன்படுத்துமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரால் தெரிவிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் நீதி ஒதுக்கீடுகள் எவ்வாறு அமையவேண்டும், அதனை யார் செய்யவேண்டும் என்பது தொடர்பில் கஜேந்திரகுமார் தனது கருத்துகளை முன்வைத்ததை தொடர்ந்து, அவரது கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம், கருணாநாதன் இளங்குமரன், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாள‌ர் எம். நந்தகோபாலன், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/206703
  7. Published By: DIGITAL DESK 2 14 FEB, 2025 | 07:03 PM "லிட்டில் ஹார்ட்ஸ்" என்ற போலி கணக்கைத் திறந்து பரிசுத் தொகை தருவதாகக் கூறி இணையதளம் மூலம் 29 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்துறை பகுதியிலும் நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரம்ப பிரதேசத்திலும் சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நொச்சியாகம, பலாவி பிரதேசங்களைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடையவர்கள் ஆவர். சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/206704
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 56 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு கொசு கடித்தால், எறும்போ அல்லது ஒரு பூச்சியோ உடலில் ஊர்வது போன்ற உணர்வு ஏற்பட்டால், உடனே ஏற்படும் அரிப்பை விரல்களால் சொறிந்துகொள்வது நமக்கு ஒரு வித ஆறுதலைக் கொடுக்கும். நிச்சயம் சொறிந்தே தீர வேண்டும் எனும் உணர்வு, நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து நம்மை தன்னிச்சையாகச் சொறியத் தூண்டிவிடும். அந்த ஆறுதல் உணர்வுக்குப் பிறகுதான், நம்மை யாரும் பார்த்தார்களா என்பதைக் கவனிப்போம். சிலருக்கு பிறர் சொறிந்து கொள்வதைப் பார்த்தாலே, அவர்களுக்கும் அரிப்பு ஏற்படுவதைப் போன்ற உணர்வு ஏற்படும். எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வின் முடிவில், தோலில் ஏற்படும் அரிப்பு ஒரு நோய் எதிர்ப்பு சக்தியைச் செயல்படுத்துகிறது என்றும், இது தீங்கு விளைவிக்கும் தொற்றுநோய்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. தோல் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது? தடுப்பதற்கு என்ன வழி? மருத்துவர்கள் கூறுவது என்ன? மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன? உங்களால் இரவில் தூங்க முடியவில்லையா? - நீங்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன? உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள் ஆனாலும் பொதுவாக 'அதிகம் சொறியக் கூடாது, தோல் அழற்சியாக இருந்தால் அதைச் சொறிவது இன்னும் அந்நிலையைத் தீவிரப்படுத்தும்' என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியிருக்க, உடலில் அரிப்பு ஏற்பட்டால் சொறிவது நல்லதா? தோலில் ஏற்படும் அரிப்பு ஒரு நோய் எதிர்ப்பு சக்தியைச் செயல்படுத்துகிறது என்றால், அரிப்பைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அந்த நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்குமா? 'அரிப்பு - ஒரு நோய் எதிர்ப்பு செயல்பாடு' ஜனவரி 30ஆம் தேதியன்று நேச்சர் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், "சொறிவது என்பது ஒரு வகை ஆறுதலை மட்டும் அளிக்கவில்லை, பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற சாத்தியமான அச்சுறுத்தல்களில் இருந்து உடல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவும், ஒரு நோய் எதிர்ப்பு செயல்பாடாகவும் அரிப்பு இருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எலிகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏனென்றால், எலிகளுக்கும் மனிதர்களுக்கும் மரபணு ரீதியாகப் பல ஒற்றுமைகள் உள்ளன. சொறிவது ஒருவிதத்தில் நன்மைகளை அளிக்கும் என இந்த ஆய்வு கூறினாலும், அளவுக்கு அதிகமாக சொறிவது சருமத்தைச் சேதப்படுத்தும் மற்றும் 'அழற்சியை' (Inflammation) தீவிரப்படுத்தும் என்பதையும் அது குறிப்பிடுகிறது. கடலுக்கடியில் 'வீடு' அமைத்து 120 நாட்கள் இவர் வாழ்ந்தது ஏன்?5 பிப்ரவரி 2025 தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்? உணவு உண்ணும் போது நீர் அருந்தலாமா?1 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆய்வு இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டது. அதன் முதல் பகுதி, அரிப்பு ஏற்பட்டு சொறியும்போது என்ன நடக்கிறது? இரண்டாவது பகுதி, ஒரு நாளுக்குப் பிறகு அரிப்பு ஏற்பட்ட இடத்தில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை எந்த அளவில் உள்ளது? பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில், தோல் நோய் எதிர்ப்பு நிபுணர் டான் கப்லான் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், எலிகளின் காதுகளில் ஒரு செயற்கை ஒவ்வாமை மருந்து செலுத்தப்பட்டது. இது அவற்றின் காதுகளில் ஒரு தோல் அழற்சியை ஏற்படுத்தியது. உடனே எலிகள் சொறியத் தொடங்கியபோது, அவற்றின் காதுகள் வீங்கி, அந்தப் பகுதி நியூட்ரோஃபில் (Neutrophils) செல்களால் நிரம்பின. நியூட்ரோஃபில் செல்கள், உடலில் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் ஒரு வகை வெள்ளை ரத்த அணுக்கள். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இவை உள்ளன. ஆனால் பிரத்யேக கருவி அணிவிக்கப்பட்ட, மற்றொரு பிரிவு எலிகளால் அவ்வாறு சொரிய முடியவில்லை. இதனால் ஒவ்வாமை ஏற்பட்ட பகுதியில், குறைவான வீக்கமே தோன்றியது. நியூட்ரோஃபில் செல்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. அரிப்பு-உணர்திறனுக்கான நியூரான் இல்லாத, மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலிகளில் பரிசோதனை மேற்கொண்டபோதும், இதேபோன்ற ஒரு எதிர்வினை வெளிப்பட்டது. அதோடு, சொறிந்து கொள்ளும் செயல்பாடு, அழற்சியை அதிகப்படுத்துகிறது என்பதையும் இந்தச் சோதனை காட்டியது. மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?1 பிப்ரவரி 2025 பிரசவத்தின்போது வயிற்றில் பேன்டேஜ்: பெண்ணுக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு31 ஜனவரி 2025 சொறிந்தவுடன் கிடைக்கும் ஆறுதல் உணர்வுக்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சொறிவதன் மூலம், தோலில் ஆபத்தான பாக்டீரியாக்களின் பரவல் குறைகிறது என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது அரிப்புக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிவதற்காக, காதுகளைச் சொறிந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட எலிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அரிப்பு ஏற்பட்ட பகுதியில், வலி-உணர்திறன் நியூரான்கள் சப்ஸ்டன்ஸ் பி (Substance B) எனப்படும் சக்திவாய்ந்த நியூரோட்ரான்ஸ்மிட்டர்களை (Neurotransmitter) வெளியிட்டன. இந்த 'சப்ஸ்டன்ஸ் பி' ஒருவகை முக்கிய வெள்ளை ரத்த அணுக்களைச் செயல்படுத்துகிறது. இவை ஒவ்வாமை அறிகுறிகளைத் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இது, சொறியப்பட்ட பகுதியில் நியூட்ரோஃபில்கள் எழ வழிவகுத்தது, அதைத் தொடர்ந்து அழற்சி ஏற்பட்டது. ஆய்வின் இரண்டாம் பகுதியில், விஞ்ஞானிகள் எலிகளின் தோலில் உள்ள நுண்ணுயிரிகளை ஆய்வு செய்தனர். இது அவற்றின் தோலில் வாழும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் உள்பட பல நுண்ணுயிரிகளின் தொகுப்பு. இதேபோன்ற அமைப்பு மனித தோலிலும் உள்ளது. சொறிந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட எலிகளிடம், சொறிந்துகொள்ளத் தூண்டக்கூடிய செயற்கை ஒவ்வாமை மருந்து செலுத்தப்பட்டு, ஒரு நாளுக்குப் பிறகு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவற்றின் காதுகளில் ஆபத்தான ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் (Staphylococcus aureus) எனும் பாக்டீரியா குறைவாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எலிகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏனென்றால், எலிகளுக்கும் மனிதர்களுக்கும் மரபணு ரீதியாகப் பல ஒற்றுமைகள் உள்ளன அதுவே சொறிய அனுமதிக்கப்படாத எலிகளில், இந்த பாக்டீரியாவின் அளவு அதிகமாக இருந்தது. ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் என்பது கிராம்-பாசிட்டிவ் பாக்டீரியா, இது பலவிதமான நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த பாக்டீரியா, மனித உடலின் தோல் மற்றும் சீதமென் சவ்வுகளில் (Mucous membrane, பெரும்பாலும் நாசிப் பகுதியில்) காணப்படுகிறது. பொதுவாக ஆரோக்கியமான சருமத்தில் இந்த பாக்டீரியா தொற்றுநோயை ஏற்படுத்தாது. ஆனால், ரத்த ஓட்டத்தில் அல்லது உள் திசுக்களில் இந்த பாக்டீரியா நுழைய வாய்ப்பு கிடைத்தால், அவை பலவிதமான, கடுமையான தொற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடும். எனவே சொறிவதன் மூலம், தோலில் இந்த ஆபத்தான பாக்டீரியாக்களின் பரவல் குறைவதை இந்த ஆய்வு காட்டுகிறது. இதுவே, சொறிந்தவுடன் நமக்குக் கிடைக்கும் ஆறுதலான உணர்வுக்கும் காரணம் என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. உடலில் அரிப்பு ஏற்பட்டால், அது குறித்த சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்பும் நரம்புகளின் ஒரு தொகுப்பும், அழற்சியை அதிகரிப்பதன் மூலம் அரிப்புக்கு எதிர்வினையாற்றும் மற்றொரு தனி தொகுப்பும் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. விஞ்ஞானிகளால் இந்த இரு தொகுப்புகளைப் பிரிக்க முடிந்தால், அவர்களால் ஒரு சமயத்தில் ஒரு தொகுப்பைத் தடுக்க முடியும். இதன் மூலம், ஓர் அரிப்பு வலி மிகுந்ததாக இருந்தாலும்கூட, அதனால் ஏற்படும் அழற்சி உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு எப்படி உதவுகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். சியரா ஸ்பேஸ்: காற்றே இல்லாத நிலவில் ஆக்சிஜன் தயாரிக்க உதவும் கருவி - எப்படி செய்யும்?30 ஜனவரி 2025 சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - ஈலோன் மஸ்க், டிரம்ப் கூறியது என்ன?31 ஜனவரி 2025 'உடலின் பிரச்னைகளை முன்பே காட்டிக் கொடுக்கும் தோல்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அரிப்பு அதிகமானால் நிச்சயம் ஒரு தோல் மருத்துவரை அணுக வேண்டும் அரிப்பு தொடர்பான இத்தகைய ஆய்வுகள், அரிப்பு ஏற்பட்டவுடன் உடலில் என்ன நடக்கிறது என்பது பற்றிய ஆழமான புரிதலை வழங்கக் கூடும் என்றும், அது எக்ஸிமா (Eczema), நீரிழிவு போன்ற நிலைகளின் காரணமாக நாள்பட்ட அரிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் கூடும் என்றும் தோல் மருத்துவர் புவனாஸ்ரீ கூறுகிறார். "இந்த ஆய்வில், தற்காலிகமாக ஏற்படும் அரிப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாள்பட்ட அரிப்பு என்றால் அதிகமாகச் சொறிவது அந்த நிலையை இன்னும் தீவிரமாக்கும். அதற்காகத்தான் அரிப்பைத் தடுக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆகவே, அவை நோய் எதிர்ப்பு சக்தியை எந்தவிதத்திலும் பாதிக்காது" என்று அவர் கூறுகிறார். அதிகமாகச் சொறிவது நல்லதல்ல என்று கூறும் மருத்துவர் புவனாஸ்ரீ, அரிப்பு அதிகமானால் நிச்சயமாக ஒரு தோல் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கூறுகிறார். அதோடு, "உடலில் எந்தப் பிரச்னை என்றாலும், அதை முதலில் வெளிப்படுத்துவது நமது தோல் மற்றும் முடிகள்தான். ஒரு 10-15 வருடங்களில் உடலில் நடக்கவிருக்கும் மாற்றங்களை, சருமமும் முடியும் முன்பே காட்டிக் கொடுத்துவிடும். எனவே தோல் தொடர்பான பிரச்னைகளில் அலட்சியம் கூடாது," என்றும் அவர் எச்சரித்தார். உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்?30 ஜனவரி 2025 மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு - நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன?29 ஜனவரி 2025 மன அழுத்தத்திற்கும் அரிப்புக்குமான தொடர்பு பட மூலாதாரம்,DR.BHUVANSREE படக்குறிப்பு, அரிப்பு என்பது உடலின் முக்கியமான ஒரு செயல்பாடு, ஆனால் அது நாள்பட்ட அரிப்பாக மாறும்போதுதான் பிரச்னை என்கிறார் தோல் மருத்துவர் புவனாஸ்ரீ மன அழுத்தத்திற்கும் அரிப்புக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார் தோல் மருத்துவர் புவனாஸ்ரீ. "மன அழுத்தம் அதிகமாக இருந்தால் நிச்சயமாக அரிப்பு இருக்கும். மன அழுத்தம் சொறிவதற்கான தூண்டுதலை அதிகரிக்கிறது. சொறியும்போது என்டார்ஃபின் (Endorphin) எனும் ஹார்மோன் சுரந்து, ஒரு இன்ப உணர்வை அளிக்கும், அதுவே தற்காலிக நிவாரணத்தையும் அளிக்கிறது. ஆனால், மீண்டும் மீண்டும் சொறிவது தோல் பாதிப்பு, அழற்சி மற்றும் அதீத அரிப்புக்கு வழிவகுக்கிறது" என்கிறார் அவர். அவ்வாறு மீண்டும் மீண்டும் சொறிவதால், ஒரு கட்டத்திற்கு மேல் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் அரிப்பு ஏற்படாவிட்டாலும்கூட தன்னிச்சையாகச் சொறிவது ஒரு பழக்கமாகிவிடும் என்றும் அவர் எச்சரிக்கிறார். உலகம் முழுவதும், சுமார் 180 கோடி பேர் தோல் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக 84.5 மில்லியன் அமெரிக்கர்கள் (நான்கில் ஒருவர்) தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி எனும் அமைப்பு தெரிவிக்கிறது. "அரிப்பு என்பது உடலின் முக்கியமான, அத்தியாவசியமான ஒரு செயல்பாடு. ஆனால், அது அதீத அரிப்பாகவோ அல்லது நாள்பட்ட அரிப்பாகவோ, குறிப்பாக அந்தரங்க உறுப்புகளில் மாறும்போதுதான் பிரச்னை. அத்தகைய பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுக தயக்கம் காட்டக்கூடாது" என்கிறார் தோல் மருத்துவர் புவனாஸ்ரீ. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz0le74dj7po
  9. பாஞ்ச் அண்ணைக்கு முற்கூட்டிய! பிறந்தநாள் வாழ்த்துகள், வளத்துடன் வாழ்க.
  10. 14 FEB, 2025 | 04:24 PM உடல் நலப் பாதிப்பு காரணமாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. நெஞ்சுசளி பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசர் பாதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சுவாசிப்பதில் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்த 88 வயது பாப்பரசர் தனது உரைகளை வாசிக்கும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தார். இன்று காலை ஆராதனைக்கு பின்னர் பரிசுத்த பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/206696
  11. Published By: RAJEEBAN 14 FEB, 2025 | 03:11 PM ரஸ்ய உக்ரைன் யுத்தம் குறித்து உக்ரைன் இல்லாமல் அமெரிக்காவும் ரஸ்யாவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளதை தொடர்ந்து உக்ரைனிற்கு அமெரிக்கா துரோகமிழைக்கின்றதா என்ற கேள்வி சர்வதேச அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. எனினும் இதனை மறுத்துள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் அமெரிக்கா உக்ரைனிற்கு துரோகமிழைக்கவில்லை என தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஸ்ய ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றுவதற்காக நான் ரஸ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த கருத்திற்கு சர்வாதிகாரத்திற்கான வெகுமதி என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதனை நிராகரித்துள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அது உங்களுடைய மொழி என்னுடையதில்லை, இது நிச்சயமாக துரோகமில்லை என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை உக்ரைன் இல்லாமல் எந்த வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறக்கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. ரஸ்யா என்பது உக்ரைனிற்கு மாத்திரம் அச்சுறுத்தல் இல்லை என்பதை நினைவில் வைத்திருப்பது அவசியம் என பிரிட்டனின் பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார். எதிர்கால பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனும் உள்வாங்கப்படுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் இல்லாமல் உக்ரைன் குறித்து பேச்சுவார்த்தைகள் இல்லை என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன் தொடர்பில் அமெரிக்க தனது வெளிவிவகார கொள்கைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. உக்ரைன் 2014இல் அதன் எல்லைகள் காணப்பட்ட நிலைக்கு மீண்டும் திரும்புவது சாத்தியமற்ற விடயம் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்பீட்டே ஹெக்செத் தெரிவித்துள்ளார். உக்ரைன் நேட்டோவில் இணைவது பேச்சுவார்த்தைகள் மூலம் சாத்தியமாக கூடிய விடயமில்லை என தெரிவித்துள்ள அவர்உக்ரைனின் பாதுகாப்பை ஐரோப்பா உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/206683
  12. 14 FEB, 2025 | 02:31 PM பெருமளவு வெடிபொருட்கள் நிரம்பிய ஆளில்லா விமானமொன்று செர்னோபில் அணுஉலை மீது மோதியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். செர்னோபில் அணுஉலையின் அழிக்கப்பட்ட நான்காவது உலையை பாதுகாக்கும் பாதுகாப்பு கவசத்தை வெடிமருந்துகள் நிரம்பிய ஆளில்லா விமானம் தாக்கியது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆளில்லா விமானம் தாக்குவதை காண்பிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். சிதைவுகளையும் வீடியோவில் காணமுடிகின்றது. https://www.virakesari.lk/article/206674
  13. Published By: DIGITAL DESK 3 14 FEB, 2025 | 01:46 PM சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளை கடத்த முயன்ற சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஆவார். இவர் முதலாம் திகதி மாலை 4:30 மணிக்கு கியூஆர்-654 கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளார். அன்று அந்த விமானத்தில் அவரின் பைகள் வரவில்லை. பின்னர் மற்றுமொரு விமானத்தில் அவரின் பைகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பைகளை எடுப்பதற்காக வர்த்தகர் நேற்று வியாழக்கிழமை (13) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன்போது, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 நவீன கைத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகள் விமான நிலையத்திலுள்ள சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சுங்க அதிகாரிகள் வர்த்தகரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/206668
  14. 59 நிமிடங்களுக்கு முன்னர் இவ்வளவு வயதாகியும் காதலனோ, காதலியோ கிடைக்காமல் தனியாக இருக்கிறோமே என எப்போதாவது வருந்தியது உண்டா? உங்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் இளைஞர்கள் தங்கள் காதலியை அடைவதற்காகப் போராடத்தான் வேண்டியுள்ளது. இரான், மெக்சிகோ, பெரு, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா என உலகின் பலதரப்பட்ட நாடுகளிலும் தம்பதிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. சீனாவில் 2014ஆம் ஆண்டில் 13 மில்லியன் திருமணங்கள் நடைபெற்ற நிலையில், 2024இல் சுமார் 6 மில்லியன் திருமணங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன. ஃபின்லாந்து நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு தரவுகளின்படி, தற்போது இணைந்து வாழும் தம்பதிகள்கூட, எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தை உருவாக்குதைக் காட்டிலும் பிரிந்து செல்வதற்கான வாய்ப்பே அதிகமாக இருப்பதாகக் கூறுகிறது காதலர் தினம்: 3 ஆண்டுகள் வெளியூரில் வீட்டுச்சிறை, உறவினர்களின் புறக்கணிப்புகள் - சாதி தடையை உடைத்து இணைந்த தம்பதி காதலர் தினம்: ஓநாய்களின் இரைகளுக்கு உங்கள் முன்னாள் காதலரின் பெயரை வைக்கலாம் - புதுவித முயற்சி ஒரு சிகரெட் துண்டு 30 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி? நீடித்திருக்கும் உறவு கிடைப்பது ஏன் போராட்டமாக இருக்கிறது? பிரேசிலின் சான்டா காத்தரினாவில் வசிக்கும் 36 வயதான ஃபெலிப், தான் ஒரு போதும் காதலில் இருந்ததில்லை எனக் கூறுகிறார். இதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதும் தன்னால் ஒரு துணையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் அவர். பள்ளி படிக்கும்போதே தனக்குப் பிடித்த பெண்களுக்கு ஃபெலிப் காதல் கடிதங்களை எழுதினாலும், ஒருபோதும் சாதகமான பதில் கிடைத்தது இல்லை. அவர் பல்கலைக் கழகத்தில் இருக்கும்போது பெண்கள் தன்னுடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்ற நம்பிக்கையில், அவர்களுக்குப் பாடங்களில் உதவி செய்துள்ளார். தனியாகவே 30 வயதை எட்டிய நிலையில் பெண்களுடன் எப்படி உறவை ஏற்படுத்திக் கொள்வது என்பதை அறிந்து கொள்வதற்காக தெரபி ஒன்றுக்கும் சென்றுள்ளார். ஆனால் இதுவரை எதுவும் பலன் தரவில்லை. "காதல் வாழ்க்கைக்காக என்ன செய்வது எனத் தெரியாத மனிதன் நான்" என்கிறார் ஃபெலிப். நகல் எழுத்தாளராக (Copy Editor) வேலை பார்க்கும் ஃபெலிப் அவரது, 20 வயதுகளில் நிலையான வேலையின்றிக் கழித்துவிட்டார். இதுதான் பெண்களைக் கவர்வதற்கான வாய்ப்பைக் கெடுப்பதாக அவர் கருதுகிறார். "ஆனால் இது எனக்கு மட்டும் நடக்கும் ஒன்றல்ல" எனக் கூறும் ஃபெலிப், இன்னும் பல ஆண்கள் தோல்வியடைந்ததாக உணர்ந்து, டேட்டிங்கை கைவிட்டு விடுகின்றனர் என்கிறார். மோதி - டிரம்ப் சந்திப்பு: இந்தியர்கள் நாடு கடத்தல், அதானி குறித்து அமெரிக்காவில் மோதி பேசியது என்ன? - முக்கிய அம்சங்கள்2 மணி நேரங்களுக்கு முன்னர் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்: இதுவரை நடந்தது என்ன? முழு பின்னணி8 மணி நேரங்களுக்கு முன்னர் சரிவை சந்திக்கும் டேட்டிங் செயலிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க தரவுகளின்படி, 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள், குறிப்பாக ஆண்கள், மற்ற எந்த வயதினர், பாலினத்தவரை விடவும், தனியாக நேரம் செலவிடுகின்றனர். இது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததற்கு முற்றிலும் முரணானது. அப்போது இதே வயது பிரிவினர் 30 மற்றும் 40 வயதினரைப் போலவே 50 வயதினரைவிட அதிகமாக 'சோஷியலைஸ்' அதாவது சமூகத்துடன் உறவாடி இருந்தனர். தற்போது மற்றவர்களுடன் நேரம் செலவிடுவதற்குப் பதிலாக இளைஞர்கள் சமூக ஊடகங்களிலும், கேமிங், தொலைக்காட்சி என நேரத்தைப் போக்குகின்றனர். ஃபெலிப் வசிக்கும் பிரேசில் உலகிலேயே அதிகமாக சமூக ஊடகம் பயன்படுத்தும் நாடாக உள்ளது. இளைஞர்கள் ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவதால், அவர்கள் அங்கும் டேட்டிங் செய்யலாம் என்று எண்ணலாம். ஆனால் டேட்டிங் செயலிகளின் பயன்பாடும் குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. சந்தை நுண்ணறிவு நிறுவனமான சென்சார் டவரின் கூற்றுப்படி, உலகின் 6 பெரிய டேட்டிங் செயலிகளின் பதிவிறக்கங்கள் 2024ஆம் ஆண்டில் 18 சதவீதம் குறைந்துள்ளன. இது அந்த நிறுவனங்களின் வரலாற்றிலேயே முதல் சரிவு. "இத்தகைய டேட்டிங் செயலிகளில் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். ஆனால் உண்மையான நோக்குடன் இருக்கும் நபர்களின் தரம் குறைவாக இருப்பதால், பயனர்கள் விரக்தியும், சோர்வும் அடைந்து திணறுகின்றனர்" என்கிறார், அரிசோனா பல்கலைக் கழகத்தின் உறவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தின் இயக்குநர் லீசல் ஷராபி. பயனர்கள் தங்கள் இணையை எவ்வாறு கண்டறிகிறார்கள் என்பதில் இந்த செயலிகளில் புதுமை ஏதும் இல்லை என்பது லீசல் ஷராபி கண்டறிந்த பிரச்னைகளில் ஒன்று. பெரும்பாலான செயலிகளில் பெண்களைவிட அதிக எண்ணிக்கையில் ஆண் பயனர்கள் உள்ளனர். "ஆண்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்வதால், இது விரக்தியைக் கொடுக்கும்" என்கிறார் ஷராபி. அதே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ஆண்கள் தொடர்புகொள்ள முனைவதால் பெண்கள் திணறுகின்றனர். டேட்டிங்கில் பொறுப்புணர்வற்ற தன்மையை செயலிகள் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், இது முரட்டுத்தனமான அல்லது கவனக் குறைவான நடத்தைக்கு வழிவகுக்கும் எனவும் ஷராபி நம்புகிறார். "ஸ்மார்ட் போனில் ஸ்வைப் செய்துகொண்டே செல்வதால், நீங்கள் கையாளும் நபர்களை உயிரற்ற பொருள் போன்று உணரக்கூடும்" என்பது அவரின் கருத்து. காதலர் தினத்தன்று பௌர்ணமி: முழு நிலவு நாளில் மனிதர்கள் ஓநாயாக மாறினார்களா? புனைவுகளும் உண்மையும்13 பிப்ரவரி 2025 ஆஸ்திரேலியா: பெண்களிடம் நெருங்கிப் பழகி டீப் ஃபேக் மூலம் ஆபாசமாக சித்தரித்து மோசடி - என்ன நடந்தது?13 பிப்ரவரி 2025 பெண்ணிய முற்போக்கு சிந்தனைகளின் தாக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES நைஜீரியாவின் அபுஜாவை சேர்ந்த ஹசானா, தான் ஒருபோதும் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தியதில்லை எனக் கூறுகிறார். "இதில் (டேட்டிங் செயலி) என்னை நானே ஏலம் விட்டுக் கொள்வதைப் போல் உணர்ந்தேன்" என்கிறார் அவர். ஆனால் தன்னுடைய மதிப்பீடுகளைப் புரிந்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், செயலி போன்ற இணைய வழிகள் இல்லாது, நேரடியாக டேட்டிங் செல்வதையும் கடினமான ஒன்றாக ஹசானா உணர்கிறார். "நான் ஒரு பெண்ணியவாதி. சில விஷயங்களில் இனியும் என்னால் கண்ணை மூடிக் கொண்டு இருக்க முடியாது" என்கிறார் ஹசானா. ஹசானாவுக்கு 26 வயதாகிறது. பயிற்சி பெற்ற வழக்கறிஞரான அவர், வெற்றிகரமான சலவைத் தொழிலை நடத்தி வருகிறார். இது தவிர குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். நைஜீரியாவில் இருக்கும் பரவலான இணைய வசதி காரணமாக, குடும்ப வன்முறைகள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதில் முன்னெப்போதும் இல்லாத சுதந்திரம் பெண்களுக்குக் கிடைத்துள்ளதாக அவர் நம்புகிறார். அதாவது மோசமான உறவின் அபாயங்களை அவரது தலைமுறை நன்றாக அறிந்து வைத்துள்ளது. ஆண், பெண்களிடையே அதிகரிக்கும் இடைவெளி அமெரிக்கா, சீனா, தென்கொரியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் எடுக்கப்பட்ட்ட கணக்கெடுப்பு தகவல்களின்படி, பெண்ணுரிமை சார்ந்து முற்போக்காக இருக்கும் பெண்களுக்கும், இந்த முற்போக்குத் தன்மை குறைவாக இருக்கும் ஆண்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமூகவியலாளரான முனைவர் ஆலிஸ் எவன்ஸ், இதை மிகப்பெரும் பாலின வேறுபாடு என அழைப்பதோடு, இது தொடர்பான ஒரு புத்தகத்தையும் எழுதி வருகிறார். இணையத்தில் நாம் கலாசாரத்தை நுகரும் விதமும் இதற்கான காரணமாக இருக்கலாம் என நம்புகிறார். காதலர் வாரத்தின் ஏழு நாளும் 7 தினங்களாக கொண்டாட்டம் - எப்படி தெரியுமா?12 பிப்ரவரி 2025 மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?10 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES "பெண்கள் தங்களின் பெண்ணிய விருப்பங்களுக்கு நிறைவளிக்கும் விதமான நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். ஆனால் இதே வேகத்தில் ஆண்கள் முன்னேற்றமடையாமல் போகலாம்" என ஆலிஸ் கூறுகிறார். ஹசானாவுக்கு ஆலிஸ் எவனின் கருத்து உண்மையாகத் தோன்றுகிறது. தனக்கு விருப்பமுடைய ஆண் ஒருவரைப் பார்த்ததுமே அவர், பெண்ணிய வெறுப்பு பார்வைகளைக் கொண்ட சமூக ஊடக பக்கங்களைப் பின் தொடர்வதையும், பெண்ணிய வெறுப்பு பின்னூட்டங்களுக்கு லைக் செய்வதையும் ஹசானா அடிக்கடி பார்த்திருக்கிறார். "இது ஒரு விதமான அச்சத்தைத் தருகிறது" என்கிறார் ஹசானா. பொருளாதாரம் ஒரு காரணமாக உள்ளதா? இரானில் 40 வயதான நாஸிக்கும் இதே பிரச்னையை எதிர்கொள்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக சிங்கிளாக இருக்கும் அவர் தனக்கான காதலைத் தேடி வருகிறார். "நான் கொஞ்சம் பெண்ணிய வாதி" எனக் கூறும் அவர், "நான் வேலை செய்ய விரும்புகிறேன். எனது துணையைப் போலவே பணம் சம்பாதிக்க எண்ணுகிறேன். ஆனால் அவர்கள் 'இவள் என்னுடன் போட்டியிட விரும்புகிறாள்' என்று நினைக்கின்றனர்." ஆனால் பல பெண்கள் இன்னமும் பாரம்பரியமான பழமைவாத குணங்களில் வேரூன்றிய ஆண் துணைக்கான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். நிதிசார்ந்த விவகாரங்களில் தங்களைப் போன்று பாதுகாப்பாக இல்லாத ஒருவரை துணையாகத் தேர்ந்தெடுக்க நாஸி மற்றும் ஹசானா தயக்கத்துடன் உள்ளனர். இரண்டு பெண்களுமே முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளனர், நல்ல வேலையில் உள்ளனர். அவர்கள் தங்களுக்குச் சமமானவர்களாக கருதக் கூடிய ஆண்களின் எண்ணிக்கை சுருங்கிக் கொண்டே வருகிறது. பெரும்பாலான நாடுகளில் பெண் பட்டதாரிகள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பள்ளிகளில் ஆண்களைவிட பெண்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். 'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?8 பிப்ரவரி 2025 அன்டார்டிக் கிரில்: இந்த 'குட்டி ஹீரோ' இல்லை என்றால் திமிங்கலத்துக்குக் கூட பிரச்னைதான் - ஏன்?7 பிப்ரவரி 2025 மனிதத் தொடர்புகளை தவிர்க்கிறோமா? பட மூலாதாரம்,GETTY IMAGES தனியாக இருப்பதை களங்கமாகக் கருதுவது குறைவாக இருப்பதால், டேட்டிங்கை முற்றிலுமாகத் தவிர்ப்பது எளிதாக இருக்கிறது என்கிறார் முனைவர் எவான்ஸ். "உயர்தர தனிநபர் பொழுதுபோக்குகளின் எழுச்சியால், டேட்டிங் உங்களுக்கு சலிப்பாகத் தோன்றினால், வீட்டிலேயே தங்கி பிரிட்ஜர்டன் தொடர் பாருங்கள் அல்லது வீடியோ கேம்களை விளையாடுங்கள்" என அவர் கூறுகிறார். அதே நேரத்தில் மோசமான துணையைத் தேர்ந்தெடுக்கும் விதமான அழுத்தம் இல்லாமல் இருப்பது முற்றிலும் நல்ல விஷயம்தான் என்று எவான்ஸ் ஒப்புக் கொள்ளும்போதும், இளம் வயதினர் ஒருவருக்கு ஒருவர் தொடர்பின்றி இருப்பது குறித்து கவலை கொள்கிறார். "ஆணும் பெண்ணும் ஒன்றாக நேரம் செலவிட்டு, நெருக்கமான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளாதிருப்பது. உலகைப் பற்றிய தங்களின் வெவ்வேறு கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளாதிருப்பது போன்றவற்றால், மற்றவர் கண்ணோட்டத்தில் இருந்து பிரச்னைகளை அணுகும் பச்சாதாபத்தை வளர்த்துக் கொள்வது கடினமானதாகிவிடும்" என்று எவான் கூறுகிறார். டேட்டிங் செயலிகளைப் பற்றிப் படிக்கும் முனைவர் ஷராபி, அசல் உலக இணைப்புக்கான சாத்தியங்களை தொழில்நுட்பம் நீக்கியுள்ளதை ஒப்புக் கொள்கிறார். "சில இளைஞர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டதன்படி, ஒரு பாரில் அழகான ஒருவரைப் பார்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் நேரடியாகச் சென்று அவர்களிடம் பேச மாட்டார்கள். இதற்குப் பதிலாக டேட்டிங் செயலிகளுக்குச் சென்று அவர்கள் இருக்கிறார்களா என்பதைப் பார்க்கிறார்கள்" என்கிறார் ஷராபி. "நாம் முன்னெப்போதும் பழகியிருக்காத வகையில், பொதுவாகவே மனிதத் தொடர்புகளைத் தவிர்க்கிறோம்" என்பது ஷராபியின் வாதம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e1lwgdzkwo
  15. ஆஸி.யை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்ற இலங்கை! கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (14) நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியானது 174 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி, குசல் மெண்டீஸின் சதம் மற்றும் அணித் தலைவர் சரித் அசலங்கவின் அதிரடியான துடுப்பாட்டத்தினால் இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபடியாக குசல் மெண்டீஸ் 101 (115) ஓட்டங்களையும், சரித் அசலங்க 78 (66) ஓட்டங்களையும், நிஷான் மதுஷங்க 51 (70) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். 282 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இலங்கையின் பந்து வீச்சுக்களில் நிலை தடுமாறியது. ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை அடுத்தடுத்து பறிகொடுத்த அவுஸ்திரேலியா இறுதியாக 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால், இலங்கை அணி 174 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபடியாக அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மாத்திரம் 29 ஓட்டங்களை எடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் துனித் வெல்லலாகே 4 விக்கெட்டுகளையும், அஷித பெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டீஸ் தெரிவானதுடன், சரித் அசலங்க தொடரின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். https://thinakkural.lk/article/315218
  16. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையை அயர்லாந்து அணி படைத்துள்ளது. அயர்லாந்து அணி 10 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள நிலையில் குறித்த சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 14 போட்டிகளில் விளையாடி தென்னாப்பிரிக்க அணி ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. தென்னாப்பிரிக்கா வசமிருந்த சாதனையை தற்போது அயர்லாந்து அணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/315203
  17. பட மூலாதாரம்,CROWN OFFICE படக்குறிப்பு, 1984ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மேரி மெக்லாஃப் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஓ'ஹரே பதவி, பிபிசி ஸ்காட்லாந்து நியூஸ் 52 நிமிடங்களுக்கு முன்னர் மேரி மெக்லாஃப்லின் குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிகரெட் துண்டு, 30 ஆண்டுகளுக்கு முன்னர், அவரது கழுத்தை நெரித்துக் கொன்ற கொலையாளியை அடையாளம் காண்பதற்கான முதல் தடயத்தை வழங்கியது. அதன் பின்னர், 11 குழந்தைகளின் தாயான மேரியைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆடையில் உள்ள கயிற்றின் முடிச்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மரபணு விவரமும் கண்டுபிடிக்கப்பட்டது. முடிவுக்கு வராத இந்த கொலை வழக்கில் சந்தேகத்துக்குரிய முக்கிய நபர், சம்பவத்தின்போது எடின்பர்க் சிறையில் இருந்தார். மறுபுறம், 58 வயதான மேரி, கிளாஸ்கோ நகரின் மேற்கு முனையில் இறந்து கிடந்ததால், இந்த வழக்கைத் துப்பறியும் அதிகாரிகள் ஆரம்பத்தில் குழப்பமடைந்தனர். ஆனால், மேரி கொல்லப்பட்டபோது, தொடர் பாலியல் குற்றவாளியான கிரஹாம் மெக்கில் பரோலில் இருந்ததை, ஆளுநரின் பதிவு புத்தகம் உறுதிப்படுத்தியது. நெல்லை பொறியியல் பட்டதாரி ஜமைக்காவில் சுட்டுக்கொலை - என்ன நடந்தது? உடலை கொண்டு வருவது எப்போது? இரவில் தனியாக பயணிக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் அயோத்தியில் தலித் பெண் படுகொலை: கதறி அழுத எம்.பி - என்ன நடந்தது? ஆவடி: தந்தை, மகள் உடலை அழுகாமல் 5 மாதம் பூட்டிய வீட்டில் பதப்படுத்திய மருத்துவர் - என்ன நடந்தது? 1984ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி அதிகாலையில் மேரியின் வீட்டை விட்டு வெளியேறிய சில மணிநேரங்களிலேயே அவர் சிறைக்குத் திரும்பினார் என்பதும் அந்தப் பதிவேட்டின் மூலம் அறியப்பட்டது. பிபிசியின் 'மர்டர் கேஸ்: தி ஹண்ட் ஃபார் மேரி மெக்லாஃப்லின்ஸ் கில்லர்" (Murder Case: The Hunt for Mary McLaughlin's Killer) எனும் புதிய ஆவணப்படம், இந்த பழைய வழக்கு விசாரணையின் கதையைச் சொல்கிறது. மேலும், அந்தக் கொலையால் மேரியின் குடும்பத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. "சில கொலைகள் உங்கள் நினைவில் தங்கிவிடும்," என்று இக்கொலை குறித்து கூறுகிறார் மூத்தத் தடயவியல் விஞ்ஞானி ஜோன் கோக்ரேன். மேலும், "மேரியின் கொலை வழக்கு நான் கையாண்ட வழக்குகளிலேயே, மனதுக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்திய தீர்க்கப்படாத வழக்குகளில் ஒன்றாகும்" என்றும் தெரிவித்தார் ஜோன். கொலை செய்யப்பட்ட இரவு என்ன நடந்தது? கொலை செய்யப்படுவதற்கு முந்தைய இரவு மேரி , ஹைண்ட்லேண்ட் மதுபான விடுதியில் குடித்துவிட்டு டோமினோஸ் விளையாடினார். இப்போது 'டக் கிளப்' என அழைக்கப்படும் இந்த விடுதி, மான்ஸ்ஃபீல்ட் பூங்காவுக்கு எதிரே அமைந்துள்ளது. இரவு 10:15 மணியிலிருந்து 10:30 மணிக்கு இடையில், ஹைண்ட்லேண்ட் தெருவில் அமைந்துள்ள மதுபான விடுதியில் இருந்து மேரி தனியாக வெளியேறினார். அங்கிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் இருந்த தன் வீட்டுக்கு நடந்து சென்றார். வழியில், டம்பர்டன் சாலையில் உள்ள அர்மாண்டோ எனும் கடைக்குச் சென்றார். அங்கு ஊழியர்களுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டே ஃப்ரிட்டர்ஸ் எனப்படும் பொறித்த உணவு மற்றும் சிகரெட்டுகளை வாங்கினார். மேரியை 'வீ மே' என்ற பெயரில் அறிந்திருந்த ஒரு டாக்ஸி ஓட்டுநர், மேரி தனது காலணிகளை கையில் ஏந்தியவாறு சாலையில் வெறுங்காலுடன் நடந்து செல்வதை பார்த்தார். மேலும், தூரத்தில் ஒருவர் மேரியை பின்தொடர்வதையும் பார்த்ததாக பின்னர் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,FIRECREST படக்குறிப்பு, வாரத்துக்கு ஒருமுறை, அவரது மகன்களில் ஒருவரான மார்ட்டின் கல்லன் மேரியை பார்க்க வருவார் கிராதி கோர்ட் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் உள்ள மேரியின் வீட்டுக்குள் மெக்கில் எப்படி உள்ளே நுழைந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. வீட்டுக்குள் உள்ளே நுழைந்ததும், தன் வயதை விட இரண்டு மடங்கு பெரியவரான மேரியின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடங்கினார் மெக்கில் . மொபைல்போன்கள் பயன்பாட்டில் இல்லாத அக்காலகட்டத்தில், கிளாஸ்கோ, லானார்க்ஷயர் மற்றும் அயர்ஷயர் ஆகிய இடங்களில் வாழ்ந்த தனது குடும்ப உறுப்பினர்களை அடிக்கடி தொடர்புகொள்ளாமல் வாழ்ந்துள்ளார் மேரி. ஆனால், வாரத்துக்கு ஒருமுறை, அவரது மகன்களுள் ஒருவரான மார்ட்டின் கல்லன் மேரியைப் பார்க்க வருவார். அப்போது 24 வயது இளைஞனாக இருந்த மார்ட்டின், 1984ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி அன்று மேரியின் வீட்டுக்குச் சென்றபோது, அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. பிறகு அவர் வீட்டின் கடிதப் பெட்டியைத் திறந்தபோது உள்ளிருந்து "மோசமான நாற்றம்" வீசியது. வீட்டின் உள்ளே ஒரு மெத்தையில் படுத்த நிலையில் இறந்து கிடந்தார் மேரி. அவரது போலி பற்கள் தரையில் கிடந்தன, மேலும் மதுபான விடுதிக்குச் சென்றபோது, அவர் அணிந்திருந்த புதிய பச்சை நிற ஆடையின் பின்புறம் அவருக்கு முன்புறமாக அணிவிக்கப்பட்டிருந்தது. விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி என்ன? தி.மு.க-வுக்கு பாதிப்பா? த.வெ.க-வில் குழப்பம் வருமா?11 பிப்ரவரி 2025 காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா?11 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,FIRECREST படக்குறிப்பு, முன்னாள் மூத்த விசாரணை அதிகாரி இயன் விஷார்ட்டும் அவருடைய குழுவினரும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த ஆதாரங்களை பாதுகாத்தனர், அதன் வாயிலாக கொலை செய்தவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது முன்னாள் மூத்த விசாரணை அதிகாரி இயன் விஷார்ட் குற்றம் நடந்த இடத்தைக் "கொடூரமான இடம்" என்று விவரித்தார். மேலும், "சோகம் என்னவென்றால், அவர் கொலை செய்யப்பட்டபோது, கொலையாளியின் கண்களை நேராக பார்த்துக்கொண்டிருந்திருப்பார்" என்றும் தெரிவித்தார். அதன் பிறகு, மேரி கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டது. மேலும் அவரது உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்பே இறந்திருப்பார் என்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் நீடித்த குழப்பம் மேரியின் கொலைக்குப் பிறகு, துப்பறிவாளர்கள் அதற்கு அடுத்த மாதங்களில் பல்வேறு நபர்களிடமிருந்து பெறப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட வாக்குமூலங்களை சேகரித்தனர். ஆனால், கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அடுத்த ஆண்டு, விசாரணை முடிந்துவிட்டதாக மேரியின் குடும்பத்தினரிடம் கூறப்பட்டது. இருப்பினும், குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர், மேரியின் மகள் ஜீனா மெக்கேவினிடம், "நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்" என்று கூறினார். படக்குறிப்பு, தன்னுடைய வாழ்நாளில் தன் தாயின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் என ஜீனா மெக்கேவின் நினைத்துக்கூட பார்க்கவில்லை வெவ்வேறு காலகட்டங்களில் இரு நபர்களுடன் வாழ்ந்த மேரிக்கு அவர்கள் மூலமாக, 11 குழந்தைகள் பிறந்தனர். மேலும், உள்ளூரில் நன்கு அறியப்பட்டவராகவும் மேரி இருந்தார். ஆனால் மேரி தனது முதல் ஆறு குழந்தைகளையும், இரண்டாவது துணைவருடன் பெற்ற ஐந்து குழந்தைகளையும் விட்டுச் சென்றதால் குடும்பத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது என மேரியின் மகள் ஜீனா அந்த ஆவணப்படத்தில் கூறியுள்ளார். மேலும், "குடும்பத்துக்குள்ளேயே ஒரு கொலையாளி மறைந்திருப்பதாக நான் நினைத்தேன்" என்றும் ஜீனா தெரிவித்தார். தன் தாயின் கொலை குறித்து ஒரு புத்தகம் எழுதிய ஜீனா, தனது சந்தேகங்களை காவல்துறையுடன் பகிர்ந்ததாக கூறினார். "1984ல் என் உடன்பிறந்தவர்களும் என்னைப்போலவே நினைத்தார்கள்"என்றும் குறிப்பிடுகிறார் ஜீனா. தொடர்ந்து பேசிய அவர், "மேரியின் சொந்த குழந்தைகளில் ஒருவருக்கு இதில் தொடர்பு இருந்திருக்கலாம் அல்லது இதுகுறித்து அவருக்கு அதிகமாகத் தெரிந்திருக்கலாம். ஆனால் எங்களால் எதையும் நிரூபிக்க முடியவில்லை" என்கிறார். பனாமாவில் உள்ள இந்த தீவிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியது ஏன்? - அங்கு என்ன நடக்கிறது?12 பிப்ரவரி 2025 எஃகு, அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதித்த டிரம்ப் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?12 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,CROWN OFFICE படக்குறிப்பு, கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் இரவு மேரி உள்ளூரில் இருந்த பப் ஒன்றில் இருந்தார் 2008 ஆம் ஆண்டுக்குள் நடந்த நான்கு தனித்தனி விசாரணைகளாலும் சந்தேகத்துக்குரிய நபர் குறித்த தகவல்களை வழங்க முடியவில்லை. ஐந்தாவது மறுவிசாரணை 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. வடக்கு லானார்க்ஷயரின் கார்ட்கோஷில் உள்ள ஸ்காட்டிஷ் க்ரைம் கேம்பஸில் (SCC) மரபணு மூலம் குற்றம் சாட்டப்படுபவரின் விவரத்தைக் கண்டறியும் புதிய வசதி மூலம் இறுதியாக இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டது. முன்னதாக நிபுணர்களால் 11 தனிப்பட்ட மரபணு அடையாளங்களை ஆராய முடிந்தது. ஆனால், புதிய தொழில்நுட்பத்தின் மூலம், 24 மரபணு அடையாளங்களை கண்டறிய முடிந்தது. இந்த புதிய தொழில்நுட்பம் சிறிய அல்லது குறைவான தரத்துடைய மாதிரிகளில் இருந்து முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை பெரியளவில் அதிகரித்தது. இதுகுறித்து, "இந்த தொழில்நுட்பம் கடந்த கால நிகழ்வுகளை பின்தொடர்ந்து, நம்பிக்கையைக் கைவிட்டவர்களுக்கு நீதி பெற உதவக்கூடியதாக இருக்கும்"என ஸ்காட்டிஷ் காவல்துறை ஆணையத்தின் தடயவியல் இயக்குனர் டாம் நெல்சன் 2015ம் ஆண்டில் கூறினார். பட மூலாதாரம்,FIRECREST படக்குறிப்பு, 1984ல் சந்தேகிக்கப்படும் நபர் குறித்து காவல் துறை வெளியிட்ட படம் 1984 இல் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் மேரியின் கூந்தல், நகங்கள் , மற்றும் சிகரெட் துண்டுகள் ஆகியவை அடங்கும். அதனையடுத்து, சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்டு 30 ஆண்டுகளாக காகிதப்பையில் பாதுகாக்கப்படும் ஆதாரங்களை மீண்டும் பரிசீலிக்குமாறு எஸ்சிசியில் (SCC) பணிபுரியும் கோக்ரேனிடம் கேட்கப்பட்டது. "அந்த நேரத்தில் மரபணு விவரக்குறிப்பு பற்றி அவர்களுக்கு (குற்றவியல் அதிகாரிகளுக்குத்) தெரியாது" என்று கூறினார் கோக்ரேன். மேலும் "சேகரிக்கப்பட்ட இந்த மாதிரிகளில் உள்ள திறனை அவர்கள் அறிந்திருக்கவில்லை"என்றும், "அதன் மதிப்பை அவர்கள் அறிந்திருக்க முடியாது" என்றும் குறிப்பிட்டார் கோக்ரேன். மறுபுறம், முதல் விசாரணைக் குழு இந்த ஆதாரங்களைப் பாதுகாத்து "அற்புதமான தொலைநோக்குப் பார்வையுடன்" செயல்பட்டுள்ளது என்றார் மூத்த தடயவியல் விஞ்ஞானி. கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடுவது தவிர வேறு என்னவெல்லாம் செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு12 பிப்ரவரி 2025 காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் என்ன தினம் தெரியுமா? அன்றைய தினம் என்ன செய்வார்கள்?12 பிப்ரவரி 2025 வழக்கில் முக்கிய திருப்புமுனை பட மூலாதாரம்,FIRECREST படக்குறிப்பு, மேரியின் வீட்டில் கொலையாளி புகைத்த சிகரெட் துண்டு இந்த வழக்கில் முதல் துப்பாக அமைந்தது மேரியின் வீட்டில் தங்கும் அறையில் உள்ள காபி டேபிளில் இருந்த ஆஷ்ட்ரேயில் எம்பஸி சிகரெட் துண்டு ஒன்றை கண்டுபிடித்தபோது விசாரணையில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. ஏனென்றால், மேரி வழக்கமாக வூட்பைன் என்ற வித்தியாசமான சிகரெட்டைப் புகைத்துவந்தார். ஆனால், அங்கு எம்பஸி சிகரெட் துண்டுகளை கண்டறிந்தபோது, தீர்க்கப்படாத இந்த வழக்கை ஆராயும் குழுவுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. மேலும், தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், சிறிய அளவிலான மரபணுவைக் கூட கண்டறிய அனுமதிக்கும் என்று கோக்ரேன் நம்பிக்கை தெரிவித்தார். "பின்னர் அந்த ஆச்சரியமிக்க தருணத்தை நாங்கள் அடைந்தோம். முன்பு எங்களுக்கு மரபணு விவரத்தை வழங்காத சிகரெட் துண்டு இப்போது எங்களுக்கு ஒரு ஆணின் விவரங்களை வழங்கியுள்ளது" என அவர் ஆவணப்படத்தில் குறிப்பிடுகிறார். "இந்த சான்று எங்களிடம் இதற்கு முன்பு இல்லாத ஒன்று, மேலும் இந்த வழக்கில் தடயவியல் அறிவியலின் முதல் குறிப்பிடத்தக்க சான்றாகும்", என்றும் தெரிவித்தார் கோக்ரேன். பட மூலாதாரம்,FIRECREST படக்குறிப்பு, மேரியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆய்வு செய்தார் மூத்தத் தடயவியல் விஞ்ஞானி ஜோன் கோக்ரேன் 'மெய்சிலிர்த்த தருணம்' மூத்தத் தடயவியல் விஞ்ஞானி ஜோன் கோக்ரேன், வடக்கு லானார்க்ஷயரில் உள்ள கார்ட்கோஷில் உள்ள ஸ்காட்டிஷ் குற்ற வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் மேரியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்தார். பின்னர் சேகரிக்கப்பட்ட அந்த சான்று, ஸ்காட்டிஷ் மரபணு தரவுத்தளத்துக்கு அனுப்பப்பட்டு, தண்டனை பெற்ற குற்றவாளிகளின் ஆயிரக்கணக்கான சுயவிவரங்களுடன் ஒப்பிடப்பட்டது. பின்னர், இந்த பரிசோதனை முடிவுகள் கோக்ரேனுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது. அந்த மின்னஞ்சலின் கடைசிப் பகுதியைப் பார்க்க விரைந்த அவர், "நேரடி பொருத்தம்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டார். "உண்மையாகவே மெய்சிலிர்த்த தருணம் அது" என்று அந்த உணர்வை விளக்குகிறார் கோக்ரேன். மேலும், "அந்த ஆதாரம், கிரஹாம் மெக்கில் என்ற நபரை அடையாளம் காட்டியது. மேலதிக தகவல்களில், அவர் மேல் பாலியல் குற்றங்களில் தீவிரமான தண்டனைகள் இருப்பதைக் கண்டறிய முடிந்தது" என்றும் விளக்குகிறார் அவர். "30 வருடங்களுக்குப் பிறகு, அந்த மரபணு விவரத்துடன் பொருந்தக்கூடிய ஒரு நபரை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்கிறார் கோக்ரேன். பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?13 பிப்ரவரி 2025 தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி எவ்வளவு? பாஜக பட்டியலை நிராகரிக்கும் தமிழ்நாடு அரசின் சரிபார்ப்புக் குழு12 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GOOGLE படக்குறிப்பு, கிளாஸ்கோவின் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் உள்ள வீட்டில் மேரி தனியாக வசித்து வந்தார் கிளாஸ்கோவின் பார்ட்டிக் பகுதியில் உள்ள க்ராத்தி கோர்ட்டில் உள்ள மூன்றாவது மாடியில் மேரி தனியாக வசித்து வந்தார். பாலியல் வன்புணர்வு மற்றும் அதற்கான முயற்சிக்கு தண்டனை பெற்ற மெக்கில், மேரி கொல்லப்பட்டபோது ஏற்கெனவே சிறையில் இருந்தார் என்பது நீண்ட நாட்களாகக் காத்துக்கொண்டிருந்த இந்த வழக்கில் ஒரு புதிரை உருவாக்கியது. ஆனால், மெக்கில் அக்டோபர் 1984ம் ஆண்டு 5ம் தேதி அன்று விடுதலை செய்யப்பட்டார், அதாவது மேரி கடைசியாக உயிருடன் காணப்பட்ட 9 நாட்களுக்குப் பின்னர் தான் விடுதலை செய்யப்பட்டார் என்று பதிவுகளின்படி அறியப்பட்டது. அதனையடுத்து, முன்னாள் துப்பறியும் அதிகாரி கென்னி மெக்கப்பினுக்கு இந்த குழப்பமான மர்மத்தைத் தீர்க்கும் பணி வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,FIRECREST படக்குறிப்பு, மேரியின் கழுத்தை நெரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட, அவருடைய ஆடையின் கயிற்றில் இருந்த முடிச்சு, கொலையாளியின் டிஎன்ஏவை மறைக்கிறதா என்பதை அறிய ஜோன் கோக்ரேன் முடிச்சை அவிழ்த்தார் மேலும் இந்த வழக்கைக் கட்டமைக்க இன்னும் அதிகமான தடயவியல் சான்றுகள் தேவை என்று கோக்ரேனிடம் கூறப்பட்டது. மேரியின் கழுத்தை நெரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆடையின் கயிற்றில் இருந்த முடிச்சை, அது கொலையாளியின் டிஎன்ஏவை மறைக்கிறதா என்பதை அறிந்துகொள்வதற்காக கோக்ரேன் அந்த முடிச்சை அவிழ்த்தார். அந்தத் தேடலானது, "நீண்ட நாட்களாக பாதுகாக்கப்பட்ட மரபணுவை நோக்கி" அழைத்துச் சென்றது. அதாவது, மற்றொரு தடயம் மேரியின் கழுத்தை நெரிக்கப் பயன்படுத்திய ஆடையின் கயிற்றில் காணப்பட்டது. மேரியின் ஆடையின் முடிச்சை இறுக்கியவர், அதில் பொதிந்திருக்கும் பொருட்களில் தனது மரபணுவின் சில தடயங்களை விட்டுச் சென்றிருக்கக் கூடும் என கோக்ரேன் நம்பினார். அதனால், அவரது ஆய்வகத்தில் உள்ள பிரகாசமான ஒளிரும் விளக்குகளின் கீழ், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரிக்கப்படாத துணியை முதல் முறையாக ஆராய, அந்த ஆடையின் கயிற்றை சிறிது சிறிதாக கவனமாக அவிழ்த்தார் கோக்ரேன். பின்னர், "அந்த ஆடையின் முடிச்சுகளில் இருந்து, கிரஹாம் மெக்கிலுடன் பொருந்திய முக்கிய ஆதாரமான மரபணுவை நாங்கள் கண்டுபிடித்தோம்" என்று கோக்ரேன் தெரிவித்தார். "அவர் மேரியின் கழுத்தில் ஆடையின் கயிற்றைக் கட்டி, அவரது கழுத்தை நெரிக்க, அந்தக் கயிற்றால் முடிச்சுப் போட்டுள்ளார்" என்றும் கோக்ரேன் விளக்கினார். இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா?11 பிப்ரவரி 2025 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்தது ஏன்?11 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,FIRECREST படக்குறிப்பு, மேரியின் கொலையாளியை கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரிகள் தகவல் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர் குற்றவாளியை கண்டுபிடித்தது எப்படி? மேலும், மேரியின் பச்சை நிற ஆடையில் மெக்கிலின் விந்தணுவின் தடயங்களும் தனித்தனியாகக் காணப்பட்டன. தடயவியல் சான்றுகள் முக்கியப் பங்கு வகித்தாலும், வழக்கில் தண்டனையை உறுதி செய்ய அது மட்டும் போதுமானதாக இல்லை என்று இப்போது ஓய்வு பெற்றுள்ள மெக்கபின் மேரியின் ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். "எங்களிடம் என்ன மரபணு உள்ளது என்பது முக்கியமில்லை" என்றார் அவர். "கொலை நடந்தபோது அவர் சிறையில் இருந்துள்ளார். அப்படியென்றால், அவரால் எப்படி கொலை செய்திருக்க முடியும்?" எனக் கேட்கிறார் மெக்கபின். கொலை நடந்த நேரத்தில் ஹெச்எம்பி எடின்பரோ சிறை மீண்டும் கட்டப்பட்டிருந்ததாலும், கணினிகளுக்கு முந்தைய காலத்தில் கொலை நடந்திருந்ததாலும், அது தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதாலும் பதிவுகளை கண்டுபிடிக்கக் கடினமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. எனவே, மெக்கபினுடைய தேடலானது இறுதியில் அவரை எடின்பரோவின் மையத்தில் உள்ள ஸ்காட்லாந்தின் தேசிய பதிவு மையத்துக்கு அழைத்துச் சென்றது, அங்கு அவர் ஆளுநரின் பதிவுகளைக் கண்டறிந்தார். அங்கு கண்டறியப்பட்ட ஒரே ஒரு பதிவு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. சிறை எண்ணுக்கு அடுத்ததாக "ஜி மெக்கில்" என்ற பெயரும் "டிஎஃப்எஃப்" என்ற சுருக்கக் குறியீடும் இருந்தது. "அது விடுதலைக்கான பயிற்சி, அதாவது வீட்டுக்குச் செல்வதற்காக வார இறுதியில் வழங்கப்படும் விடுப்பு" என்று விளக்கினார் முன்னாள் துப்பறியும் அதிகாரி மெக்கபின். அதனையடுத்து, பரோலுக்கு முந்தைய மூன்று நாட்கள் விடுப்புடன் சேர்த்து, இரண்டு நாள் வார இறுதி விடுப்பில் மெக்கில் சென்றிருப்பதைக் கண்டறிந்தது விசாரணைக் குழு. அதன்பிறகு, 1984ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி அன்று மெக்கில் சிறைக்குத் திரும்பியதும் கண்டறியப்பட்டது. "அதுதான் நாங்கள் தேடிக்கொண்டிருந்த முக்கியத் தகவல்" என்று முன்னாள் மூத்த விசாரணை அதிகாரி மார்க் ஹென்டர்சன் கூறினார். கிரஹாம் மெக்கில் மேரியைக் கொன்று சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். பட மூலாதாரம்,POLICE SCOTLAND படக்குறிப்பு, மேரி கொலை செய்யப்பட்டு 37 ஆண்டுகள் கழித்து மெக்கில் தண்டிக்கப்பட்டார் இறுதியாக 4 டிசம்பர் 2019 அன்று மெக்கில் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில், அவர் இன்னும் ஒரு பாலியல் குற்றவாளியாகவே கருதப்பட்டார். ஆனால், கிளாஸ்கோவின் லின்வுட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார். இந்த நிறுவனம் ரென்ஃப்ரூஷைரில் உள்ளது. மெக்கில் கைது செய்யப்பட்ட செய்தி நிம்மதியளித்ததாகக் குறிப்பிட்ட ஜீனா, "என் வாழ்நாளில் இதைக் காண்பேன் என்று நான் நினைக்கவே இல்லை" என்றார். 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற நான்கு நாள் விசாரணைக்குப் பிறகு, மெக்கில் இறுதியாக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 14 ஆண்டுகள் தண்டனையுடன் சிறையில் அடைக்கப்பட்டார். மெக்கில் மேரியைக் கொலை செய்தபோது 22 வயதாக இருந்தார், ஆனால் குற்றவாளிக்கூண்டில் நிற்கும்போது அவர் 59 வயதாகி இருந்தது என கிளாஸ்கோவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி, லார்ட் பர்ன்ஸ் தெரிவித்தார். மேலும், "இந்தச் செயலைச் செய்தவர் அவர்களது சமூகத்தில் வசிக்கக்கூடியவர் என்று தெரிந்தும், அவரைக் கண்டறிய அவரது குடும்பத்தினர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது" என்பதையும் குறிப்பிட்ட அவர், "மேரிக்கு என்ன நடந்தது என்பதை ஒரு நாள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையை அவர்கள் ஒருபோதும் கைவிடவில்லை" என்றும் தெரிவித்தார் நீதிபதி லார்ட் பர்ன்ஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg4yw1044zo
  18. 14 FEB, 2025 | 12:55 PM கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஏ32 பிரதான வீதியின் வாடியடி சந்தியை அண்மித்த பகுதியில் இயங்கிவரும் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தியே இப்போராட்டத்தில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். அதனையடுத்து, பூநகரி பிரதேச செயலாளர் அகிலனிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர்களை போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் கையளித்தனர். https://www.virakesari.lk/article/206662
  19. 14 FEB, 2025 | 12:00 PM சட்டமா அதிபர் அனுர பி மெதகொட செயற்பட்ட விதத்தினை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நியாயப்படுத்தியமை குறித்து படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் கடும் விசனமும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கபடநாடகமாடுகின்றார்இஇரட்டை நிலைப்பாட்டை பேணுகின்றார் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள அஹிம்சா விக்கிரமதுங்க சட்டமா அதிபர் தனது தந்தையின் கொலை விசாரணைகளிற்கு வேண்டுமென்றே இடையூறு விளைவிக்கின்றார்இஎன தெரிவித்துள்ளார் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்திலேயே அஹிம்சா விக்கிரமதுங்க தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இலங்கைசட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பிரதமர் நீதியமைச்சர் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கும் இந்த கடிதத்தினை அவர் அனுப்பிவைத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. குற்றத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு உள்ள உரிமையை பாதுகாப்பதற்காகவும்;எங்கள் குற்றவியல் நீதித்துறையின் நேர்மையை தன்மையை பாதுகாப்பதற்காகவும் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தமைக்காக ஜனாதிபதியை அச்சுறுத்தும் விதத்தில் நீங்கள் -7-2-25 எழுதிய கடிதத்தை பார்த்து கவலையடைந்தேன். 2024 ஒக்டோபர் மாதம் 11ம் திகதி டெய்லிமிரருக்கு வழங்கிய பேட்டியில் மனித உரிமைகளிற்காக குரல் கொடுப்பதில் செயற்படுவதில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்னணியில் நிற்பதாக நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். நீங்கள் விசேடமாக எனது தந்தை லசந்த விக்கிரமதுங்கவின் கொலை குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள் 'மிகச்சமீபத்தில் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் தொடர்பில்இநாங்கள் கவனம் செலுத்தியிருந்தோம் அவர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் கூட" என நீங்கள்தெரிவித்திருந்தீர்கள். ஆம்இ2009 ஆண்டு ஜனவரி 8 ம் திகதி பரவலாக கண்டிக்கப்பட்ட அரசாங்கத்தின் படுகொலையினால் அவரின் உயிர் பறிக்கப்படும் வரை எனது தந்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினராக விளங்கினார். அவர் பாசத்திற்குரிய தந்தைஇகணவர் மகன் சகோதரர்.அவரது பத்திரிகைகள் சர்வதேச அளவில் வாசிக்கப்பட்டன. எனினும்அவர் பணிக்கு செல்கையில் படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்களின் பின்னரும் நீங்கள் அவரை பற்றியோ அவருக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பது குறித்தோ ஒரு வார்த்தை கூற குறிப்பிடவில்லை. எனது தந்தையின் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் அலுவலகம் அதனது அதிகாரத்தை வெளிப்படையாக துஸ்பிரயோகம் செய்யும்போது சட்டமா அதிபர் அலுவலகத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கான முயற்சிகள் என நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது பாசாங்குத்தனமானது. உங்கள் கட்சிக்காரர்களில் ஒருவரின்நலன்கள் என வரும்போது நீங்களும் உங்கள் சட்டத்தரணிகள் சங்கமும் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றீர்கள். 2022 ஒக்டோபர் 12ம் திகதி விசேடஅதிரடிப்படையி;னரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ் இந்திக பிரபாத்தின் சார்பில் நீங்கள் ஆஜராகியிருந்தீர்கள். உங்கள் கட்சிக்காரர் கொலை செய்யப்பட்டார் என தீர்ப்பளித்த பலப்பிட்டிய நீதவான் இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என உத்தரவிட்டார். எனது தந்தை தொடர்பான வழக்கை போல இந்த வழக்கையும் தொடரவேண்டிய அவசியமில்லை என சட்டமா அதிபர் 2024 ஆகஸ்ட் 27ம் திகதிதீர்மானித்தார். பெருமளவு ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும் அவர் இவ்வாறு தீர்மானித்தார். உங்கள் கட்சிக்காரரை சுட்டுக்கொன்ற விசேட அதிரடிப்படையை சேர்ந்தவருக்கு எதிரான வழக்கை தொடரவேண்டிய அவசியமில்லை என சட்டமா அதிபர் தீர்மானித்தார். https://www.virakesari.lk/article/206656
  20. Published By: DIGITAL DESK 2 14 FEB, 2025 | 11:35 AM பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். நாமல் ராஜபகஷ சட்டப் பரீட்சையை முடித்ததில் கிடைக்கப்பபெற்ற பல புகார்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/206651
  21. Published By: VISHNU 14 FEB, 2025 | 01:40 AM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் வசிக்கும் கட்டிடத்தின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சிறுபிள்ளைத்தனமாக அரசாங்கம் செயற்படுவது கவலைக்குரியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக வெளியாகிய செய்தி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை. வியாழக்கிழமை (13) காலை நீர்வடிகாலமைப்பு அதிகார சபையின் சேவையாளர்கள் விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்துக்கு வருகை தந்தார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் தங்கும் கட்டிடம் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை அண்மித்ததாகவே உள்ளது.இந்த கட்டிடத்துக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் உத்தியோகஸ்த்தர்களை அசௌகரியத்துக்குள்ளாக்க முடியாது.ஆகவே மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இருந்து தற்போது அந்த கட்டிடத்துக்கு மாற்று வழிமுறை ஊடாக நீர் விநியோகிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், கடமையில் அமர்த்தப்பட்டுள்ளவர்களை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.அரசாங்கத்தின் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு கவலைக்குரியது என்றார். https://www.virakesari.lk/article/206627
  22. Published By: VISHNU 14 FEB, 2025 | 01:26 AM (எம்.ஆர்.எம்.வசீம்) வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை ஒன்றை மேற்கொள்வது வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு மிகவும் பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையின் மூலோபாய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு மனித வளத்தை வலுப்படுத்த தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதுக்குழுவினர் புதன்கிழமை (12) தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்ணாந்துவை தொழில் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். நாட்டின் மனிதவள மேம்பாட்டு செயல்முறைக்கு திறம்பட பங்களிக்க தேவையான பயிற்சி நடவடிக்கைகளுக்கும் தனது பங்களிப்பை வழங்க முடியும் என்பதுடன் இந்த நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டிற்கு அமெரிக்க மனித வளத்தை விணைத்திரன் மிக்கதாக தேவையான பயிற்சி நடவடிக்கைகளுக்கு பங்களிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் முதலீட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் திறன் அமெரிக்க வர்த்தகர்களுக்கு இருப்பதாகவும் அது இலங்கையின் அபிவிருத்தியின் முன்னுரிமை ஒழுங்கின் படி செய்யப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை ஒன்றை மேற்கொள்வது வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக மிகவும் பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்குவுவோம். வரிகள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக எடுக்கப்படும் கொள்கைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைத் தயாரிப்பது முக்கியமாகும். என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது. வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை ஒன்றை மேற்கொள்வது வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு மிகவும் பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்குவதாக இதன்போத அவர்கள் மிகவும் வலியுறுத்தி தெரிவித்தனர். இலங்கையின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப முதலீடுகளை கொண்டுவருவதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், வரவு செலவு திட்டத்தில் முன்னுரிமை மற்றும் இலங்கையின் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் மூலோபாயங்களுக்கு ஏற்ப அந்த முதலீடுகள் மற்றும் வியாபாரங்களை அபிவிருத்தி செய்வதற்கும் தயாராக இருப்பதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. இரண்டு நாடுகளுக்கிடையிலான நட்புறவை விருத்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் இதற்காக முடியுமான ஒத்துழைப்பை வழங்குவதாக இதன்போது அமைச்சர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/206626
  23. 13 FEB, 2025 | 02:05 PM (எம்.மனோசித்ரா) சட்ட மா அதிபரை பதவியிலிருந்து விலக்குவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக செயற்படுவதற்கு தாம் தயாராக உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் சட்ட ரீதியான முறைமைக்கு அமையவே விடுதலை செய்யப்பட்டதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனவரி 27ஆம் திகதி சட்ட மா அதிபரால் வெளியிடப்பட்ட ஆலோசனை தொடர்பில் வேறுபட்ட நிலைப்பாடுகள் தெரிவிக்கப்படுவதோடு, அது குறித்த தவறான தகவல்களும் பரப்பப்படுகின்றன. குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் விடுவிப்பதற்கு ஆலோசனை வழங்கியபோது அதற்குரிய சட்ட முறைகள் சட்ட மா அதிபரால் முறையாக பின்பற்றப்பட்டுள்ளன. அரசியல் நலன்களுக்காகவோ மக்களின் நிலைப்பாடுகளைக் கருத்திற்கொண்டோ அந்த தீர்மானம் எடுக்கப்படவில்லை. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத் தன்மையின் அடிப்படையிலேயே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, சட்ட மா அதிபரை பதவியிலிருந்து விலக்குவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கு எதிராகவும் நாம் குரல் கொடுப்போம். ஒரு சுயாதீனமான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தனிச்சிறப்பு அரசியல் விளைவுகள் அல்லது பொது ஒப்புதலைப் பொருட்படுத்தாமல் முடிவுகளை எடுப்பதாகும். அந்த அடிப்படையிலேயே இந்த விவகாரத்திலும் சட்ட மா அதிபர் செயற்பட்டிருக்கிறார். சட்ட மா அதிபர் மற்றும் அதன் அதிகாரிகள் மீதான தனது நம்பிக்கையை எமது சங்கம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. குறித்த ஆலோசனைகள் தொடர்பான விடயங்களில் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் உரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து முக்கிய உண்மைகளையும் சட்டத்தையும் பரிசீலித்து, மூன்று சந்தேக நபர்களையும் விடுவிப்பதற்கு தங்கள் பரிந்துரைகளை முறையாக வழங்கியுள்ளனர். சட்ட மா அதிபர் அதைப் பரிசீலித்த பின்னர், பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதுடன், அதற்குப் பிறகு உரிய ஆலோசனையை வழங்கினார். அரசியல் பின்விளைவுகளோ பொதுக் கருத்துக்களோ இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை. குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மற்றும் சந்தேக நபர்களை விடுவிப்பது என்பது ஒரு சுயாதீனமான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தனிச்சிறப்பாகும். சட்ட மா அதிபரின் முடிவுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய முடிவெடுக்கும் செயல்முறையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உயர்ந்த மரபுகளுக்கு ஏற்ப தங்கள் சுயாதீனமான தொழில்முறை தீர்ப்பைப் பயன்படுத்தியிருக்கின்றனர். எனவே சட்ட மா அதிபரை பதவி நீக்கம் செய்யும் எந்தவொரு முயற்சியையும் எதிர்த்து நின்று தோற்கடிக்க தயங்க மாட்டோம் என்பதை சட்ட அதிகாரிகள் சங்கம் அழுத்தமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/206566
  24. Published By: DIGITAL DESK 2 14 FEB, 2025 | 12:07 PM யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு வியாழக்கிழமை (13) அத்திவாரம் வெட்டும் போதே மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனை அடுத்து, கட்டட வேலைகளை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர், இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில், கட்டட பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி உள்ளிட்ட 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை 1995ஆம் ஆண்டு மற்றும் 96ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டு, செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகள், குறித்த மயானத்தை அண்மித்த பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206638

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.