Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 14 FEB, 2025 | 01:46 PM சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளை கடத்த முயன்ற சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஆவார். இவர் முதலாம் திகதி மாலை 4:30 மணிக்கு கியூஆர்-654 கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளார். அன்று அந்த விமானத்தில் அவரின் பைகள் வரவில்லை. பின்னர் மற்றுமொரு விமானத்தில் அவரின் பைகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பைகளை எடுப்பதற்காக வர்த்தகர் நேற்று வியாழக்கிழமை (13) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன்போது, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 நவீன கைத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகள் விமான நிலையத்திலுள்ள சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சுங்க அதிகாரிகள் வர்த்தகரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/206668
  2. 59 நிமிடங்களுக்கு முன்னர் இவ்வளவு வயதாகியும் காதலனோ, காதலியோ கிடைக்காமல் தனியாக இருக்கிறோமே என எப்போதாவது வருந்தியது உண்டா? உங்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் இளைஞர்கள் தங்கள் காதலியை அடைவதற்காகப் போராடத்தான் வேண்டியுள்ளது. இரான், மெக்சிகோ, பெரு, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா என உலகின் பலதரப்பட்ட நாடுகளிலும் தம்பதிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. சீனாவில் 2014ஆம் ஆண்டில் 13 மில்லியன் திருமணங்கள் நடைபெற்ற நிலையில், 2024இல் சுமார் 6 மில்லியன் திருமணங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன. ஃபின்லாந்து நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு தரவுகளின்படி, தற்போது இணைந்து வாழும் தம்பதிகள்கூட, எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தை உருவாக்குதைக் காட்டிலும் பிரிந்து செல்வதற்கான வாய்ப்பே அதிகமாக இருப்பதாகக் கூறுகிறது காதலர் தினம்: 3 ஆண்டுகள் வெளியூரில் வீட்டுச்சிறை, உறவினர்களின் புறக்கணிப்புகள் - சாதி தடையை உடைத்து இணைந்த தம்பதி காதலர் தினம்: ஓநாய்களின் இரைகளுக்கு உங்கள் முன்னாள் காதலரின் பெயரை வைக்கலாம் - புதுவித முயற்சி ஒரு சிகரெட் துண்டு 30 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி? நீடித்திருக்கும் உறவு கிடைப்பது ஏன் போராட்டமாக இருக்கிறது? பிரேசிலின் சான்டா காத்தரினாவில் வசிக்கும் 36 வயதான ஃபெலிப், தான் ஒரு போதும் காதலில் இருந்ததில்லை எனக் கூறுகிறார். இதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதும் தன்னால் ஒரு துணையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் அவர். பள்ளி படிக்கும்போதே தனக்குப் பிடித்த பெண்களுக்கு ஃபெலிப் காதல் கடிதங்களை எழுதினாலும், ஒருபோதும் சாதகமான பதில் கிடைத்தது இல்லை. அவர் பல்கலைக் கழகத்தில் இருக்கும்போது பெண்கள் தன்னுடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்ற நம்பிக்கையில், அவர்களுக்குப் பாடங்களில் உதவி செய்துள்ளார். தனியாகவே 30 வயதை எட்டிய நிலையில் பெண்களுடன் எப்படி உறவை ஏற்படுத்திக் கொள்வது என்பதை அறிந்து கொள்வதற்காக தெரபி ஒன்றுக்கும் சென்றுள்ளார். ஆனால் இதுவரை எதுவும் பலன் தரவில்லை. "காதல் வாழ்க்கைக்காக என்ன செய்வது எனத் தெரியாத மனிதன் நான்" என்கிறார் ஃபெலிப். நகல் எழுத்தாளராக (Copy Editor) வேலை பார்க்கும் ஃபெலிப் அவரது, 20 வயதுகளில் நிலையான வேலையின்றிக் கழித்துவிட்டார். இதுதான் பெண்களைக் கவர்வதற்கான வாய்ப்பைக் கெடுப்பதாக அவர் கருதுகிறார். "ஆனால் இது எனக்கு மட்டும் நடக்கும் ஒன்றல்ல" எனக் கூறும் ஃபெலிப், இன்னும் பல ஆண்கள் தோல்வியடைந்ததாக உணர்ந்து, டேட்டிங்கை கைவிட்டு விடுகின்றனர் என்கிறார். மோதி - டிரம்ப் சந்திப்பு: இந்தியர்கள் நாடு கடத்தல், அதானி குறித்து அமெரிக்காவில் மோதி பேசியது என்ன? - முக்கிய அம்சங்கள்2 மணி நேரங்களுக்கு முன்னர் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்: இதுவரை நடந்தது என்ன? முழு பின்னணி8 மணி நேரங்களுக்கு முன்னர் சரிவை சந்திக்கும் டேட்டிங் செயலிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க தரவுகளின்படி, 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள், குறிப்பாக ஆண்கள், மற்ற எந்த வயதினர், பாலினத்தவரை விடவும், தனியாக நேரம் செலவிடுகின்றனர். இது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததற்கு முற்றிலும் முரணானது. அப்போது இதே வயது பிரிவினர் 30 மற்றும் 40 வயதினரைப் போலவே 50 வயதினரைவிட அதிகமாக 'சோஷியலைஸ்' அதாவது சமூகத்துடன் உறவாடி இருந்தனர். தற்போது மற்றவர்களுடன் நேரம் செலவிடுவதற்குப் பதிலாக இளைஞர்கள் சமூக ஊடகங்களிலும், கேமிங், தொலைக்காட்சி என நேரத்தைப் போக்குகின்றனர். ஃபெலிப் வசிக்கும் பிரேசில் உலகிலேயே அதிகமாக சமூக ஊடகம் பயன்படுத்தும் நாடாக உள்ளது. இளைஞர்கள் ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவதால், அவர்கள் அங்கும் டேட்டிங் செய்யலாம் என்று எண்ணலாம். ஆனால் டேட்டிங் செயலிகளின் பயன்பாடும் குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. சந்தை நுண்ணறிவு நிறுவனமான சென்சார் டவரின் கூற்றுப்படி, உலகின் 6 பெரிய டேட்டிங் செயலிகளின் பதிவிறக்கங்கள் 2024ஆம் ஆண்டில் 18 சதவீதம் குறைந்துள்ளன. இது அந்த நிறுவனங்களின் வரலாற்றிலேயே முதல் சரிவு. "இத்தகைய டேட்டிங் செயலிகளில் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். ஆனால் உண்மையான நோக்குடன் இருக்கும் நபர்களின் தரம் குறைவாக இருப்பதால், பயனர்கள் விரக்தியும், சோர்வும் அடைந்து திணறுகின்றனர்" என்கிறார், அரிசோனா பல்கலைக் கழகத்தின் உறவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தின் இயக்குநர் லீசல் ஷராபி. பயனர்கள் தங்கள் இணையை எவ்வாறு கண்டறிகிறார்கள் என்பதில் இந்த செயலிகளில் புதுமை ஏதும் இல்லை என்பது லீசல் ஷராபி கண்டறிந்த பிரச்னைகளில் ஒன்று. பெரும்பாலான செயலிகளில் பெண்களைவிட அதிக எண்ணிக்கையில் ஆண் பயனர்கள் உள்ளனர். "ஆண்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்வதால், இது விரக்தியைக் கொடுக்கும்" என்கிறார் ஷராபி. அதே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ஆண்கள் தொடர்புகொள்ள முனைவதால் பெண்கள் திணறுகின்றனர். டேட்டிங்கில் பொறுப்புணர்வற்ற தன்மையை செயலிகள் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், இது முரட்டுத்தனமான அல்லது கவனக் குறைவான நடத்தைக்கு வழிவகுக்கும் எனவும் ஷராபி நம்புகிறார். "ஸ்மார்ட் போனில் ஸ்வைப் செய்துகொண்டே செல்வதால், நீங்கள் கையாளும் நபர்களை உயிரற்ற பொருள் போன்று உணரக்கூடும்" என்பது அவரின் கருத்து. காதலர் தினத்தன்று பௌர்ணமி: முழு நிலவு நாளில் மனிதர்கள் ஓநாயாக மாறினார்களா? புனைவுகளும் உண்மையும்13 பிப்ரவரி 2025 ஆஸ்திரேலியா: பெண்களிடம் நெருங்கிப் பழகி டீப் ஃபேக் மூலம் ஆபாசமாக சித்தரித்து மோசடி - என்ன நடந்தது?13 பிப்ரவரி 2025 பெண்ணிய முற்போக்கு சிந்தனைகளின் தாக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES நைஜீரியாவின் அபுஜாவை சேர்ந்த ஹசானா, தான் ஒருபோதும் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தியதில்லை எனக் கூறுகிறார். "இதில் (டேட்டிங் செயலி) என்னை நானே ஏலம் விட்டுக் கொள்வதைப் போல் உணர்ந்தேன்" என்கிறார் அவர். ஆனால் தன்னுடைய மதிப்பீடுகளைப் புரிந்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், செயலி போன்ற இணைய வழிகள் இல்லாது, நேரடியாக டேட்டிங் செல்வதையும் கடினமான ஒன்றாக ஹசானா உணர்கிறார். "நான் ஒரு பெண்ணியவாதி. சில விஷயங்களில் இனியும் என்னால் கண்ணை மூடிக் கொண்டு இருக்க முடியாது" என்கிறார் ஹசானா. ஹசானாவுக்கு 26 வயதாகிறது. பயிற்சி பெற்ற வழக்கறிஞரான அவர், வெற்றிகரமான சலவைத் தொழிலை நடத்தி வருகிறார். இது தவிர குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். நைஜீரியாவில் இருக்கும் பரவலான இணைய வசதி காரணமாக, குடும்ப வன்முறைகள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதில் முன்னெப்போதும் இல்லாத சுதந்திரம் பெண்களுக்குக் கிடைத்துள்ளதாக அவர் நம்புகிறார். அதாவது மோசமான உறவின் அபாயங்களை அவரது தலைமுறை நன்றாக அறிந்து வைத்துள்ளது. ஆண், பெண்களிடையே அதிகரிக்கும் இடைவெளி அமெரிக்கா, சீனா, தென்கொரியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் எடுக்கப்பட்ட்ட கணக்கெடுப்பு தகவல்களின்படி, பெண்ணுரிமை சார்ந்து முற்போக்காக இருக்கும் பெண்களுக்கும், இந்த முற்போக்குத் தன்மை குறைவாக இருக்கும் ஆண்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமூகவியலாளரான முனைவர் ஆலிஸ் எவன்ஸ், இதை மிகப்பெரும் பாலின வேறுபாடு என அழைப்பதோடு, இது தொடர்பான ஒரு புத்தகத்தையும் எழுதி வருகிறார். இணையத்தில் நாம் கலாசாரத்தை நுகரும் விதமும் இதற்கான காரணமாக இருக்கலாம் என நம்புகிறார். காதலர் வாரத்தின் ஏழு நாளும் 7 தினங்களாக கொண்டாட்டம் - எப்படி தெரியுமா?12 பிப்ரவரி 2025 மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?10 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES "பெண்கள் தங்களின் பெண்ணிய விருப்பங்களுக்கு நிறைவளிக்கும் விதமான நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். ஆனால் இதே வேகத்தில் ஆண்கள் முன்னேற்றமடையாமல் போகலாம்" என ஆலிஸ் கூறுகிறார். ஹசானாவுக்கு ஆலிஸ் எவனின் கருத்து உண்மையாகத் தோன்றுகிறது. தனக்கு விருப்பமுடைய ஆண் ஒருவரைப் பார்த்ததுமே அவர், பெண்ணிய வெறுப்பு பார்வைகளைக் கொண்ட சமூக ஊடக பக்கங்களைப் பின் தொடர்வதையும், பெண்ணிய வெறுப்பு பின்னூட்டங்களுக்கு லைக் செய்வதையும் ஹசானா அடிக்கடி பார்த்திருக்கிறார். "இது ஒரு விதமான அச்சத்தைத் தருகிறது" என்கிறார் ஹசானா. பொருளாதாரம் ஒரு காரணமாக உள்ளதா? இரானில் 40 வயதான நாஸிக்கும் இதே பிரச்னையை எதிர்கொள்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக சிங்கிளாக இருக்கும் அவர் தனக்கான காதலைத் தேடி வருகிறார். "நான் கொஞ்சம் பெண்ணிய வாதி" எனக் கூறும் அவர், "நான் வேலை செய்ய விரும்புகிறேன். எனது துணையைப் போலவே பணம் சம்பாதிக்க எண்ணுகிறேன். ஆனால் அவர்கள் 'இவள் என்னுடன் போட்டியிட விரும்புகிறாள்' என்று நினைக்கின்றனர்." ஆனால் பல பெண்கள் இன்னமும் பாரம்பரியமான பழமைவாத குணங்களில் வேரூன்றிய ஆண் துணைக்கான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். நிதிசார்ந்த விவகாரங்களில் தங்களைப் போன்று பாதுகாப்பாக இல்லாத ஒருவரை துணையாகத் தேர்ந்தெடுக்க நாஸி மற்றும் ஹசானா தயக்கத்துடன் உள்ளனர். இரண்டு பெண்களுமே முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளனர், நல்ல வேலையில் உள்ளனர். அவர்கள் தங்களுக்குச் சமமானவர்களாக கருதக் கூடிய ஆண்களின் எண்ணிக்கை சுருங்கிக் கொண்டே வருகிறது. பெரும்பாலான நாடுகளில் பெண் பட்டதாரிகள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பள்ளிகளில் ஆண்களைவிட பெண்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். 'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?8 பிப்ரவரி 2025 அன்டார்டிக் கிரில்: இந்த 'குட்டி ஹீரோ' இல்லை என்றால் திமிங்கலத்துக்குக் கூட பிரச்னைதான் - ஏன்?7 பிப்ரவரி 2025 மனிதத் தொடர்புகளை தவிர்க்கிறோமா? பட மூலாதாரம்,GETTY IMAGES தனியாக இருப்பதை களங்கமாகக் கருதுவது குறைவாக இருப்பதால், டேட்டிங்கை முற்றிலுமாகத் தவிர்ப்பது எளிதாக இருக்கிறது என்கிறார் முனைவர் எவான்ஸ். "உயர்தர தனிநபர் பொழுதுபோக்குகளின் எழுச்சியால், டேட்டிங் உங்களுக்கு சலிப்பாகத் தோன்றினால், வீட்டிலேயே தங்கி பிரிட்ஜர்டன் தொடர் பாருங்கள் அல்லது வீடியோ கேம்களை விளையாடுங்கள்" என அவர் கூறுகிறார். அதே நேரத்தில் மோசமான துணையைத் தேர்ந்தெடுக்கும் விதமான அழுத்தம் இல்லாமல் இருப்பது முற்றிலும் நல்ல விஷயம்தான் என்று எவான்ஸ் ஒப்புக் கொள்ளும்போதும், இளம் வயதினர் ஒருவருக்கு ஒருவர் தொடர்பின்றி இருப்பது குறித்து கவலை கொள்கிறார். "ஆணும் பெண்ணும் ஒன்றாக நேரம் செலவிட்டு, நெருக்கமான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளாதிருப்பது. உலகைப் பற்றிய தங்களின் வெவ்வேறு கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளாதிருப்பது போன்றவற்றால், மற்றவர் கண்ணோட்டத்தில் இருந்து பிரச்னைகளை அணுகும் பச்சாதாபத்தை வளர்த்துக் கொள்வது கடினமானதாகிவிடும்" என்று எவான் கூறுகிறார். டேட்டிங் செயலிகளைப் பற்றிப் படிக்கும் முனைவர் ஷராபி, அசல் உலக இணைப்புக்கான சாத்தியங்களை தொழில்நுட்பம் நீக்கியுள்ளதை ஒப்புக் கொள்கிறார். "சில இளைஞர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டதன்படி, ஒரு பாரில் அழகான ஒருவரைப் பார்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் நேரடியாகச் சென்று அவர்களிடம் பேச மாட்டார்கள். இதற்குப் பதிலாக டேட்டிங் செயலிகளுக்குச் சென்று அவர்கள் இருக்கிறார்களா என்பதைப் பார்க்கிறார்கள்" என்கிறார் ஷராபி. "நாம் முன்னெப்போதும் பழகியிருக்காத வகையில், பொதுவாகவே மனிதத் தொடர்புகளைத் தவிர்க்கிறோம்" என்பது ஷராபியின் வாதம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e1lwgdzkwo
  3. ஆஸி.யை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்ற இலங்கை! கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (14) நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியானது 174 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி, குசல் மெண்டீஸின் சதம் மற்றும் அணித் தலைவர் சரித் அசலங்கவின் அதிரடியான துடுப்பாட்டத்தினால் இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபடியாக குசல் மெண்டீஸ் 101 (115) ஓட்டங்களையும், சரித் அசலங்க 78 (66) ஓட்டங்களையும், நிஷான் மதுஷங்க 51 (70) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். 282 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இலங்கையின் பந்து வீச்சுக்களில் நிலை தடுமாறியது. ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை அடுத்தடுத்து பறிகொடுத்த அவுஸ்திரேலியா இறுதியாக 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால், இலங்கை அணி 174 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபடியாக அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மாத்திரம் 29 ஓட்டங்களை எடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் துனித் வெல்லலாகே 4 விக்கெட்டுகளையும், அஷித பெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டீஸ் தெரிவானதுடன், சரித் அசலங்க தொடரின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். https://thinakkural.lk/article/315218
  4. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையை அயர்லாந்து அணி படைத்துள்ளது. அயர்லாந்து அணி 10 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள நிலையில் குறித்த சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 14 போட்டிகளில் விளையாடி தென்னாப்பிரிக்க அணி ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. தென்னாப்பிரிக்கா வசமிருந்த சாதனையை தற்போது அயர்லாந்து அணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/315203
  5. பட மூலாதாரம்,CROWN OFFICE படக்குறிப்பு, 1984ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மேரி மெக்லாஃப் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஓ'ஹரே பதவி, பிபிசி ஸ்காட்லாந்து நியூஸ் 52 நிமிடங்களுக்கு முன்னர் மேரி மெக்லாஃப்லின் குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிகரெட் துண்டு, 30 ஆண்டுகளுக்கு முன்னர், அவரது கழுத்தை நெரித்துக் கொன்ற கொலையாளியை அடையாளம் காண்பதற்கான முதல் தடயத்தை வழங்கியது. அதன் பின்னர், 11 குழந்தைகளின் தாயான மேரியைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆடையில் உள்ள கயிற்றின் முடிச்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மரபணு விவரமும் கண்டுபிடிக்கப்பட்டது. முடிவுக்கு வராத இந்த கொலை வழக்கில் சந்தேகத்துக்குரிய முக்கிய நபர், சம்பவத்தின்போது எடின்பர்க் சிறையில் இருந்தார். மறுபுறம், 58 வயதான மேரி, கிளாஸ்கோ நகரின் மேற்கு முனையில் இறந்து கிடந்ததால், இந்த வழக்கைத் துப்பறியும் அதிகாரிகள் ஆரம்பத்தில் குழப்பமடைந்தனர். ஆனால், மேரி கொல்லப்பட்டபோது, தொடர் பாலியல் குற்றவாளியான கிரஹாம் மெக்கில் பரோலில் இருந்ததை, ஆளுநரின் பதிவு புத்தகம் உறுதிப்படுத்தியது. நெல்லை பொறியியல் பட்டதாரி ஜமைக்காவில் சுட்டுக்கொலை - என்ன நடந்தது? உடலை கொண்டு வருவது எப்போது? இரவில் தனியாக பயணிக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் அயோத்தியில் தலித் பெண் படுகொலை: கதறி அழுத எம்.பி - என்ன நடந்தது? ஆவடி: தந்தை, மகள் உடலை அழுகாமல் 5 மாதம் பூட்டிய வீட்டில் பதப்படுத்திய மருத்துவர் - என்ன நடந்தது? 1984ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி அதிகாலையில் மேரியின் வீட்டை விட்டு வெளியேறிய சில மணிநேரங்களிலேயே அவர் சிறைக்குத் திரும்பினார் என்பதும் அந்தப் பதிவேட்டின் மூலம் அறியப்பட்டது. பிபிசியின் 'மர்டர் கேஸ்: தி ஹண்ட் ஃபார் மேரி மெக்லாஃப்லின்ஸ் கில்லர்" (Murder Case: The Hunt for Mary McLaughlin's Killer) எனும் புதிய ஆவணப்படம், இந்த பழைய வழக்கு விசாரணையின் கதையைச் சொல்கிறது. மேலும், அந்தக் கொலையால் மேரியின் குடும்பத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. "சில கொலைகள் உங்கள் நினைவில் தங்கிவிடும்," என்று இக்கொலை குறித்து கூறுகிறார் மூத்தத் தடயவியல் விஞ்ஞானி ஜோன் கோக்ரேன். மேலும், "மேரியின் கொலை வழக்கு நான் கையாண்ட வழக்குகளிலேயே, மனதுக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்திய தீர்க்கப்படாத வழக்குகளில் ஒன்றாகும்" என்றும் தெரிவித்தார் ஜோன். கொலை செய்யப்பட்ட இரவு என்ன நடந்தது? கொலை செய்யப்படுவதற்கு முந்தைய இரவு மேரி , ஹைண்ட்லேண்ட் மதுபான விடுதியில் குடித்துவிட்டு டோமினோஸ் விளையாடினார். இப்போது 'டக் கிளப்' என அழைக்கப்படும் இந்த விடுதி, மான்ஸ்ஃபீல்ட் பூங்காவுக்கு எதிரே அமைந்துள்ளது. இரவு 10:15 மணியிலிருந்து 10:30 மணிக்கு இடையில், ஹைண்ட்லேண்ட் தெருவில் அமைந்துள்ள மதுபான விடுதியில் இருந்து மேரி தனியாக வெளியேறினார். அங்கிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் இருந்த தன் வீட்டுக்கு நடந்து சென்றார். வழியில், டம்பர்டன் சாலையில் உள்ள அர்மாண்டோ எனும் கடைக்குச் சென்றார். அங்கு ஊழியர்களுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டே ஃப்ரிட்டர்ஸ் எனப்படும் பொறித்த உணவு மற்றும் சிகரெட்டுகளை வாங்கினார். மேரியை 'வீ மே' என்ற பெயரில் அறிந்திருந்த ஒரு டாக்ஸி ஓட்டுநர், மேரி தனது காலணிகளை கையில் ஏந்தியவாறு சாலையில் வெறுங்காலுடன் நடந்து செல்வதை பார்த்தார். மேலும், தூரத்தில் ஒருவர் மேரியை பின்தொடர்வதையும் பார்த்ததாக பின்னர் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,FIRECREST படக்குறிப்பு, வாரத்துக்கு ஒருமுறை, அவரது மகன்களில் ஒருவரான மார்ட்டின் கல்லன் மேரியை பார்க்க வருவார் கிராதி கோர்ட் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் உள்ள மேரியின் வீட்டுக்குள் மெக்கில் எப்படி உள்ளே நுழைந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. வீட்டுக்குள் உள்ளே நுழைந்ததும், தன் வயதை விட இரண்டு மடங்கு பெரியவரான மேரியின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடங்கினார் மெக்கில் . மொபைல்போன்கள் பயன்பாட்டில் இல்லாத அக்காலகட்டத்தில், கிளாஸ்கோ, லானார்க்ஷயர் மற்றும் அயர்ஷயர் ஆகிய இடங்களில் வாழ்ந்த தனது குடும்ப உறுப்பினர்களை அடிக்கடி தொடர்புகொள்ளாமல் வாழ்ந்துள்ளார் மேரி. ஆனால், வாரத்துக்கு ஒருமுறை, அவரது மகன்களுள் ஒருவரான மார்ட்டின் கல்லன் மேரியைப் பார்க்க வருவார். அப்போது 24 வயது இளைஞனாக இருந்த மார்ட்டின், 1984ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி அன்று மேரியின் வீட்டுக்குச் சென்றபோது, அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. பிறகு அவர் வீட்டின் கடிதப் பெட்டியைத் திறந்தபோது உள்ளிருந்து "மோசமான நாற்றம்" வீசியது. வீட்டின் உள்ளே ஒரு மெத்தையில் படுத்த நிலையில் இறந்து கிடந்தார் மேரி. அவரது போலி பற்கள் தரையில் கிடந்தன, மேலும் மதுபான விடுதிக்குச் சென்றபோது, அவர் அணிந்திருந்த புதிய பச்சை நிற ஆடையின் பின்புறம் அவருக்கு முன்புறமாக அணிவிக்கப்பட்டிருந்தது. விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி என்ன? தி.மு.க-வுக்கு பாதிப்பா? த.வெ.க-வில் குழப்பம் வருமா?11 பிப்ரவரி 2025 காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா?11 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,FIRECREST படக்குறிப்பு, முன்னாள் மூத்த விசாரணை அதிகாரி இயன் விஷார்ட்டும் அவருடைய குழுவினரும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த ஆதாரங்களை பாதுகாத்தனர், அதன் வாயிலாக கொலை செய்தவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது முன்னாள் மூத்த விசாரணை அதிகாரி இயன் விஷார்ட் குற்றம் நடந்த இடத்தைக் "கொடூரமான இடம்" என்று விவரித்தார். மேலும், "சோகம் என்னவென்றால், அவர் கொலை செய்யப்பட்டபோது, கொலையாளியின் கண்களை நேராக பார்த்துக்கொண்டிருந்திருப்பார்" என்றும் தெரிவித்தார். அதன் பிறகு, மேரி கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டது. மேலும் அவரது உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்பே இறந்திருப்பார் என்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் நீடித்த குழப்பம் மேரியின் கொலைக்குப் பிறகு, துப்பறிவாளர்கள் அதற்கு அடுத்த மாதங்களில் பல்வேறு நபர்களிடமிருந்து பெறப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட வாக்குமூலங்களை சேகரித்தனர். ஆனால், கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அடுத்த ஆண்டு, விசாரணை முடிந்துவிட்டதாக மேரியின் குடும்பத்தினரிடம் கூறப்பட்டது. இருப்பினும், குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர், மேரியின் மகள் ஜீனா மெக்கேவினிடம், "நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்" என்று கூறினார். படக்குறிப்பு, தன்னுடைய வாழ்நாளில் தன் தாயின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் என ஜீனா மெக்கேவின் நினைத்துக்கூட பார்க்கவில்லை வெவ்வேறு காலகட்டங்களில் இரு நபர்களுடன் வாழ்ந்த மேரிக்கு அவர்கள் மூலமாக, 11 குழந்தைகள் பிறந்தனர். மேலும், உள்ளூரில் நன்கு அறியப்பட்டவராகவும் மேரி இருந்தார். ஆனால் மேரி தனது முதல் ஆறு குழந்தைகளையும், இரண்டாவது துணைவருடன் பெற்ற ஐந்து குழந்தைகளையும் விட்டுச் சென்றதால் குடும்பத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது என மேரியின் மகள் ஜீனா அந்த ஆவணப்படத்தில் கூறியுள்ளார். மேலும், "குடும்பத்துக்குள்ளேயே ஒரு கொலையாளி மறைந்திருப்பதாக நான் நினைத்தேன்" என்றும் ஜீனா தெரிவித்தார். தன் தாயின் கொலை குறித்து ஒரு புத்தகம் எழுதிய ஜீனா, தனது சந்தேகங்களை காவல்துறையுடன் பகிர்ந்ததாக கூறினார். "1984ல் என் உடன்பிறந்தவர்களும் என்னைப்போலவே நினைத்தார்கள்"என்றும் குறிப்பிடுகிறார் ஜீனா. தொடர்ந்து பேசிய அவர், "மேரியின் சொந்த குழந்தைகளில் ஒருவருக்கு இதில் தொடர்பு இருந்திருக்கலாம் அல்லது இதுகுறித்து அவருக்கு அதிகமாகத் தெரிந்திருக்கலாம். ஆனால் எங்களால் எதையும் நிரூபிக்க முடியவில்லை" என்கிறார். பனாமாவில் உள்ள இந்த தீவிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியது ஏன்? - அங்கு என்ன நடக்கிறது?12 பிப்ரவரி 2025 எஃகு, அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதித்த டிரம்ப் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?12 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,CROWN OFFICE படக்குறிப்பு, கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் இரவு மேரி உள்ளூரில் இருந்த பப் ஒன்றில் இருந்தார் 2008 ஆம் ஆண்டுக்குள் நடந்த நான்கு தனித்தனி விசாரணைகளாலும் சந்தேகத்துக்குரிய நபர் குறித்த தகவல்களை வழங்க முடியவில்லை. ஐந்தாவது மறுவிசாரணை 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. வடக்கு லானார்க்ஷயரின் கார்ட்கோஷில் உள்ள ஸ்காட்டிஷ் க்ரைம் கேம்பஸில் (SCC) மரபணு மூலம் குற்றம் சாட்டப்படுபவரின் விவரத்தைக் கண்டறியும் புதிய வசதி மூலம் இறுதியாக இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டது. முன்னதாக நிபுணர்களால் 11 தனிப்பட்ட மரபணு அடையாளங்களை ஆராய முடிந்தது. ஆனால், புதிய தொழில்நுட்பத்தின் மூலம், 24 மரபணு அடையாளங்களை கண்டறிய முடிந்தது. இந்த புதிய தொழில்நுட்பம் சிறிய அல்லது குறைவான தரத்துடைய மாதிரிகளில் இருந்து முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை பெரியளவில் அதிகரித்தது. இதுகுறித்து, "இந்த தொழில்நுட்பம் கடந்த கால நிகழ்வுகளை பின்தொடர்ந்து, நம்பிக்கையைக் கைவிட்டவர்களுக்கு நீதி பெற உதவக்கூடியதாக இருக்கும்"என ஸ்காட்டிஷ் காவல்துறை ஆணையத்தின் தடயவியல் இயக்குனர் டாம் நெல்சன் 2015ம் ஆண்டில் கூறினார். பட மூலாதாரம்,FIRECREST படக்குறிப்பு, 1984ல் சந்தேகிக்கப்படும் நபர் குறித்து காவல் துறை வெளியிட்ட படம் 1984 இல் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் மேரியின் கூந்தல், நகங்கள் , மற்றும் சிகரெட் துண்டுகள் ஆகியவை அடங்கும். அதனையடுத்து, சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்டு 30 ஆண்டுகளாக காகிதப்பையில் பாதுகாக்கப்படும் ஆதாரங்களை மீண்டும் பரிசீலிக்குமாறு எஸ்சிசியில் (SCC) பணிபுரியும் கோக்ரேனிடம் கேட்கப்பட்டது. "அந்த நேரத்தில் மரபணு விவரக்குறிப்பு பற்றி அவர்களுக்கு (குற்றவியல் அதிகாரிகளுக்குத்) தெரியாது" என்று கூறினார் கோக்ரேன். மேலும் "சேகரிக்கப்பட்ட இந்த மாதிரிகளில் உள்ள திறனை அவர்கள் அறிந்திருக்கவில்லை"என்றும், "அதன் மதிப்பை அவர்கள் அறிந்திருக்க முடியாது" என்றும் குறிப்பிட்டார் கோக்ரேன். மறுபுறம், முதல் விசாரணைக் குழு இந்த ஆதாரங்களைப் பாதுகாத்து "அற்புதமான தொலைநோக்குப் பார்வையுடன்" செயல்பட்டுள்ளது என்றார் மூத்த தடயவியல் விஞ்ஞானி. கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடுவது தவிர வேறு என்னவெல்லாம் செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு12 பிப்ரவரி 2025 காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் என்ன தினம் தெரியுமா? அன்றைய தினம் என்ன செய்வார்கள்?12 பிப்ரவரி 2025 வழக்கில் முக்கிய திருப்புமுனை பட மூலாதாரம்,FIRECREST படக்குறிப்பு, மேரியின் வீட்டில் கொலையாளி புகைத்த சிகரெட் துண்டு இந்த வழக்கில் முதல் துப்பாக அமைந்தது மேரியின் வீட்டில் தங்கும் அறையில் உள்ள காபி டேபிளில் இருந்த ஆஷ்ட்ரேயில் எம்பஸி சிகரெட் துண்டு ஒன்றை கண்டுபிடித்தபோது விசாரணையில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. ஏனென்றால், மேரி வழக்கமாக வூட்பைன் என்ற வித்தியாசமான சிகரெட்டைப் புகைத்துவந்தார். ஆனால், அங்கு எம்பஸி சிகரெட் துண்டுகளை கண்டறிந்தபோது, தீர்க்கப்படாத இந்த வழக்கை ஆராயும் குழுவுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. மேலும், தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், சிறிய அளவிலான மரபணுவைக் கூட கண்டறிய அனுமதிக்கும் என்று கோக்ரேன் நம்பிக்கை தெரிவித்தார். "பின்னர் அந்த ஆச்சரியமிக்க தருணத்தை நாங்கள் அடைந்தோம். முன்பு எங்களுக்கு மரபணு விவரத்தை வழங்காத சிகரெட் துண்டு இப்போது எங்களுக்கு ஒரு ஆணின் விவரங்களை வழங்கியுள்ளது" என அவர் ஆவணப்படத்தில் குறிப்பிடுகிறார். "இந்த சான்று எங்களிடம் இதற்கு முன்பு இல்லாத ஒன்று, மேலும் இந்த வழக்கில் தடயவியல் அறிவியலின் முதல் குறிப்பிடத்தக்க சான்றாகும்", என்றும் தெரிவித்தார் கோக்ரேன். பட மூலாதாரம்,FIRECREST படக்குறிப்பு, மேரியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆய்வு செய்தார் மூத்தத் தடயவியல் விஞ்ஞானி ஜோன் கோக்ரேன் 'மெய்சிலிர்த்த தருணம்' மூத்தத் தடயவியல் விஞ்ஞானி ஜோன் கோக்ரேன், வடக்கு லானார்க்ஷயரில் உள்ள கார்ட்கோஷில் உள்ள ஸ்காட்டிஷ் குற்ற வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் மேரியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்தார். பின்னர் சேகரிக்கப்பட்ட அந்த சான்று, ஸ்காட்டிஷ் மரபணு தரவுத்தளத்துக்கு அனுப்பப்பட்டு, தண்டனை பெற்ற குற்றவாளிகளின் ஆயிரக்கணக்கான சுயவிவரங்களுடன் ஒப்பிடப்பட்டது. பின்னர், இந்த பரிசோதனை முடிவுகள் கோக்ரேனுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது. அந்த மின்னஞ்சலின் கடைசிப் பகுதியைப் பார்க்க விரைந்த அவர், "நேரடி பொருத்தம்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டார். "உண்மையாகவே மெய்சிலிர்த்த தருணம் அது" என்று அந்த உணர்வை விளக்குகிறார் கோக்ரேன். மேலும், "அந்த ஆதாரம், கிரஹாம் மெக்கில் என்ற நபரை அடையாளம் காட்டியது. மேலதிக தகவல்களில், அவர் மேல் பாலியல் குற்றங்களில் தீவிரமான தண்டனைகள் இருப்பதைக் கண்டறிய முடிந்தது" என்றும் விளக்குகிறார் அவர். "30 வருடங்களுக்குப் பிறகு, அந்த மரபணு விவரத்துடன் பொருந்தக்கூடிய ஒரு நபரை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்கிறார் கோக்ரேன். பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?13 பிப்ரவரி 2025 தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி எவ்வளவு? பாஜக பட்டியலை நிராகரிக்கும் தமிழ்நாடு அரசின் சரிபார்ப்புக் குழு12 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GOOGLE படக்குறிப்பு, கிளாஸ்கோவின் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் உள்ள வீட்டில் மேரி தனியாக வசித்து வந்தார் கிளாஸ்கோவின் பார்ட்டிக் பகுதியில் உள்ள க்ராத்தி கோர்ட்டில் உள்ள மூன்றாவது மாடியில் மேரி தனியாக வசித்து வந்தார். பாலியல் வன்புணர்வு மற்றும் அதற்கான முயற்சிக்கு தண்டனை பெற்ற மெக்கில், மேரி கொல்லப்பட்டபோது ஏற்கெனவே சிறையில் இருந்தார் என்பது நீண்ட நாட்களாகக் காத்துக்கொண்டிருந்த இந்த வழக்கில் ஒரு புதிரை உருவாக்கியது. ஆனால், மெக்கில் அக்டோபர் 1984ம் ஆண்டு 5ம் தேதி அன்று விடுதலை செய்யப்பட்டார், அதாவது மேரி கடைசியாக உயிருடன் காணப்பட்ட 9 நாட்களுக்குப் பின்னர் தான் விடுதலை செய்யப்பட்டார் என்று பதிவுகளின்படி அறியப்பட்டது. அதனையடுத்து, முன்னாள் துப்பறியும் அதிகாரி கென்னி மெக்கப்பினுக்கு இந்த குழப்பமான மர்மத்தைத் தீர்க்கும் பணி வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,FIRECREST படக்குறிப்பு, மேரியின் கழுத்தை நெரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட, அவருடைய ஆடையின் கயிற்றில் இருந்த முடிச்சு, கொலையாளியின் டிஎன்ஏவை மறைக்கிறதா என்பதை அறிய ஜோன் கோக்ரேன் முடிச்சை அவிழ்த்தார் மேலும் இந்த வழக்கைக் கட்டமைக்க இன்னும் அதிகமான தடயவியல் சான்றுகள் தேவை என்று கோக்ரேனிடம் கூறப்பட்டது. மேரியின் கழுத்தை நெரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆடையின் கயிற்றில் இருந்த முடிச்சை, அது கொலையாளியின் டிஎன்ஏவை மறைக்கிறதா என்பதை அறிந்துகொள்வதற்காக கோக்ரேன் அந்த முடிச்சை அவிழ்த்தார். அந்தத் தேடலானது, "நீண்ட நாட்களாக பாதுகாக்கப்பட்ட மரபணுவை நோக்கி" அழைத்துச் சென்றது. அதாவது, மற்றொரு தடயம் மேரியின் கழுத்தை நெரிக்கப் பயன்படுத்திய ஆடையின் கயிற்றில் காணப்பட்டது. மேரியின் ஆடையின் முடிச்சை இறுக்கியவர், அதில் பொதிந்திருக்கும் பொருட்களில் தனது மரபணுவின் சில தடயங்களை விட்டுச் சென்றிருக்கக் கூடும் என கோக்ரேன் நம்பினார். அதனால், அவரது ஆய்வகத்தில் உள்ள பிரகாசமான ஒளிரும் விளக்குகளின் கீழ், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரிக்கப்படாத துணியை முதல் முறையாக ஆராய, அந்த ஆடையின் கயிற்றை சிறிது சிறிதாக கவனமாக அவிழ்த்தார் கோக்ரேன். பின்னர், "அந்த ஆடையின் முடிச்சுகளில் இருந்து, கிரஹாம் மெக்கிலுடன் பொருந்திய முக்கிய ஆதாரமான மரபணுவை நாங்கள் கண்டுபிடித்தோம்" என்று கோக்ரேன் தெரிவித்தார். "அவர் மேரியின் கழுத்தில் ஆடையின் கயிற்றைக் கட்டி, அவரது கழுத்தை நெரிக்க, அந்தக் கயிற்றால் முடிச்சுப் போட்டுள்ளார்" என்றும் கோக்ரேன் விளக்கினார். இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா?11 பிப்ரவரி 2025 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்தது ஏன்?11 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,FIRECREST படக்குறிப்பு, மேரியின் கொலையாளியை கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரிகள் தகவல் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர் குற்றவாளியை கண்டுபிடித்தது எப்படி? மேலும், மேரியின் பச்சை நிற ஆடையில் மெக்கிலின் விந்தணுவின் தடயங்களும் தனித்தனியாகக் காணப்பட்டன. தடயவியல் சான்றுகள் முக்கியப் பங்கு வகித்தாலும், வழக்கில் தண்டனையை உறுதி செய்ய அது மட்டும் போதுமானதாக இல்லை என்று இப்போது ஓய்வு பெற்றுள்ள மெக்கபின் மேரியின் ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். "எங்களிடம் என்ன மரபணு உள்ளது என்பது முக்கியமில்லை" என்றார் அவர். "கொலை நடந்தபோது அவர் சிறையில் இருந்துள்ளார். அப்படியென்றால், அவரால் எப்படி கொலை செய்திருக்க முடியும்?" எனக் கேட்கிறார் மெக்கபின். கொலை நடந்த நேரத்தில் ஹெச்எம்பி எடின்பரோ சிறை மீண்டும் கட்டப்பட்டிருந்ததாலும், கணினிகளுக்கு முந்தைய காலத்தில் கொலை நடந்திருந்ததாலும், அது தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதாலும் பதிவுகளை கண்டுபிடிக்கக் கடினமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. எனவே, மெக்கபினுடைய தேடலானது இறுதியில் அவரை எடின்பரோவின் மையத்தில் உள்ள ஸ்காட்லாந்தின் தேசிய பதிவு மையத்துக்கு அழைத்துச் சென்றது, அங்கு அவர் ஆளுநரின் பதிவுகளைக் கண்டறிந்தார். அங்கு கண்டறியப்பட்ட ஒரே ஒரு பதிவு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. சிறை எண்ணுக்கு அடுத்ததாக "ஜி மெக்கில்" என்ற பெயரும் "டிஎஃப்எஃப்" என்ற சுருக்கக் குறியீடும் இருந்தது. "அது விடுதலைக்கான பயிற்சி, அதாவது வீட்டுக்குச் செல்வதற்காக வார இறுதியில் வழங்கப்படும் விடுப்பு" என்று விளக்கினார் முன்னாள் துப்பறியும் அதிகாரி மெக்கபின். அதனையடுத்து, பரோலுக்கு முந்தைய மூன்று நாட்கள் விடுப்புடன் சேர்த்து, இரண்டு நாள் வார இறுதி விடுப்பில் மெக்கில் சென்றிருப்பதைக் கண்டறிந்தது விசாரணைக் குழு. அதன்பிறகு, 1984ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி அன்று மெக்கில் சிறைக்குத் திரும்பியதும் கண்டறியப்பட்டது. "அதுதான் நாங்கள் தேடிக்கொண்டிருந்த முக்கியத் தகவல்" என்று முன்னாள் மூத்த விசாரணை அதிகாரி மார்க் ஹென்டர்சன் கூறினார். கிரஹாம் மெக்கில் மேரியைக் கொன்று சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். பட மூலாதாரம்,POLICE SCOTLAND படக்குறிப்பு, மேரி கொலை செய்யப்பட்டு 37 ஆண்டுகள் கழித்து மெக்கில் தண்டிக்கப்பட்டார் இறுதியாக 4 டிசம்பர் 2019 அன்று மெக்கில் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில், அவர் இன்னும் ஒரு பாலியல் குற்றவாளியாகவே கருதப்பட்டார். ஆனால், கிளாஸ்கோவின் லின்வுட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார். இந்த நிறுவனம் ரென்ஃப்ரூஷைரில் உள்ளது. மெக்கில் கைது செய்யப்பட்ட செய்தி நிம்மதியளித்ததாகக் குறிப்பிட்ட ஜீனா, "என் வாழ்நாளில் இதைக் காண்பேன் என்று நான் நினைக்கவே இல்லை" என்றார். 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற நான்கு நாள் விசாரணைக்குப் பிறகு, மெக்கில் இறுதியாக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 14 ஆண்டுகள் தண்டனையுடன் சிறையில் அடைக்கப்பட்டார். மெக்கில் மேரியைக் கொலை செய்தபோது 22 வயதாக இருந்தார், ஆனால் குற்றவாளிக்கூண்டில் நிற்கும்போது அவர் 59 வயதாகி இருந்தது என கிளாஸ்கோவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி, லார்ட் பர்ன்ஸ் தெரிவித்தார். மேலும், "இந்தச் செயலைச் செய்தவர் அவர்களது சமூகத்தில் வசிக்கக்கூடியவர் என்று தெரிந்தும், அவரைக் கண்டறிய அவரது குடும்பத்தினர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது" என்பதையும் குறிப்பிட்ட அவர், "மேரிக்கு என்ன நடந்தது என்பதை ஒரு நாள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையை அவர்கள் ஒருபோதும் கைவிடவில்லை" என்றும் தெரிவித்தார் நீதிபதி லார்ட் பர்ன்ஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg4yw1044zo
  6. 14 FEB, 2025 | 12:55 PM கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஏ32 பிரதான வீதியின் வாடியடி சந்தியை அண்மித்த பகுதியில் இயங்கிவரும் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தியே இப்போராட்டத்தில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். அதனையடுத்து, பூநகரி பிரதேச செயலாளர் அகிலனிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர்களை போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் கையளித்தனர். https://www.virakesari.lk/article/206662
  7. 14 FEB, 2025 | 12:00 PM சட்டமா அதிபர் அனுர பி மெதகொட செயற்பட்ட விதத்தினை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நியாயப்படுத்தியமை குறித்து படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் கடும் விசனமும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கபடநாடகமாடுகின்றார்இஇரட்டை நிலைப்பாட்டை பேணுகின்றார் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள அஹிம்சா விக்கிரமதுங்க சட்டமா அதிபர் தனது தந்தையின் கொலை விசாரணைகளிற்கு வேண்டுமென்றே இடையூறு விளைவிக்கின்றார்இஎன தெரிவித்துள்ளார் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்திலேயே அஹிம்சா விக்கிரமதுங்க தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இலங்கைசட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பிரதமர் நீதியமைச்சர் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கும் இந்த கடிதத்தினை அவர் அனுப்பிவைத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. குற்றத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு உள்ள உரிமையை பாதுகாப்பதற்காகவும்;எங்கள் குற்றவியல் நீதித்துறையின் நேர்மையை தன்மையை பாதுகாப்பதற்காகவும் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தமைக்காக ஜனாதிபதியை அச்சுறுத்தும் விதத்தில் நீங்கள் -7-2-25 எழுதிய கடிதத்தை பார்த்து கவலையடைந்தேன். 2024 ஒக்டோபர் மாதம் 11ம் திகதி டெய்லிமிரருக்கு வழங்கிய பேட்டியில் மனித உரிமைகளிற்காக குரல் கொடுப்பதில் செயற்படுவதில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்னணியில் நிற்பதாக நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். நீங்கள் விசேடமாக எனது தந்தை லசந்த விக்கிரமதுங்கவின் கொலை குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள் 'மிகச்சமீபத்தில் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் தொடர்பில்இநாங்கள் கவனம் செலுத்தியிருந்தோம் அவர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் கூட" என நீங்கள்தெரிவித்திருந்தீர்கள். ஆம்இ2009 ஆண்டு ஜனவரி 8 ம் திகதி பரவலாக கண்டிக்கப்பட்ட அரசாங்கத்தின் படுகொலையினால் அவரின் உயிர் பறிக்கப்படும் வரை எனது தந்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினராக விளங்கினார். அவர் பாசத்திற்குரிய தந்தைஇகணவர் மகன் சகோதரர்.அவரது பத்திரிகைகள் சர்வதேச அளவில் வாசிக்கப்பட்டன. எனினும்அவர் பணிக்கு செல்கையில் படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்களின் பின்னரும் நீங்கள் அவரை பற்றியோ அவருக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பது குறித்தோ ஒரு வார்த்தை கூற குறிப்பிடவில்லை. எனது தந்தையின் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் அலுவலகம் அதனது அதிகாரத்தை வெளிப்படையாக துஸ்பிரயோகம் செய்யும்போது சட்டமா அதிபர் அலுவலகத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கான முயற்சிகள் என நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது பாசாங்குத்தனமானது. உங்கள் கட்சிக்காரர்களில் ஒருவரின்நலன்கள் என வரும்போது நீங்களும் உங்கள் சட்டத்தரணிகள் சங்கமும் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றீர்கள். 2022 ஒக்டோபர் 12ம் திகதி விசேடஅதிரடிப்படையி;னரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ் இந்திக பிரபாத்தின் சார்பில் நீங்கள் ஆஜராகியிருந்தீர்கள். உங்கள் கட்சிக்காரர் கொலை செய்யப்பட்டார் என தீர்ப்பளித்த பலப்பிட்டிய நீதவான் இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என உத்தரவிட்டார். எனது தந்தை தொடர்பான வழக்கை போல இந்த வழக்கையும் தொடரவேண்டிய அவசியமில்லை என சட்டமா அதிபர் 2024 ஆகஸ்ட் 27ம் திகதிதீர்மானித்தார். பெருமளவு ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும் அவர் இவ்வாறு தீர்மானித்தார். உங்கள் கட்சிக்காரரை சுட்டுக்கொன்ற விசேட அதிரடிப்படையை சேர்ந்தவருக்கு எதிரான வழக்கை தொடரவேண்டிய அவசியமில்லை என சட்டமா அதிபர் தீர்மானித்தார். https://www.virakesari.lk/article/206656
  8. Published By: DIGITAL DESK 2 14 FEB, 2025 | 11:35 AM பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். நாமல் ராஜபகஷ சட்டப் பரீட்சையை முடித்ததில் கிடைக்கப்பபெற்ற பல புகார்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/206651
  9. Published By: VISHNU 14 FEB, 2025 | 01:40 AM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் வசிக்கும் கட்டிடத்தின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சிறுபிள்ளைத்தனமாக அரசாங்கம் செயற்படுவது கவலைக்குரியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக வெளியாகிய செய்தி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை. வியாழக்கிழமை (13) காலை நீர்வடிகாலமைப்பு அதிகார சபையின் சேவையாளர்கள் விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்துக்கு வருகை தந்தார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் தங்கும் கட்டிடம் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை அண்மித்ததாகவே உள்ளது.இந்த கட்டிடத்துக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் உத்தியோகஸ்த்தர்களை அசௌகரியத்துக்குள்ளாக்க முடியாது.ஆகவே மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இருந்து தற்போது அந்த கட்டிடத்துக்கு மாற்று வழிமுறை ஊடாக நீர் விநியோகிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், கடமையில் அமர்த்தப்பட்டுள்ளவர்களை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.அரசாங்கத்தின் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு கவலைக்குரியது என்றார். https://www.virakesari.lk/article/206627
  10. Published By: VISHNU 14 FEB, 2025 | 01:26 AM (எம்.ஆர்.எம்.வசீம்) வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை ஒன்றை மேற்கொள்வது வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு மிகவும் பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையின் மூலோபாய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு மனித வளத்தை வலுப்படுத்த தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதுக்குழுவினர் புதன்கிழமை (12) தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்ணாந்துவை தொழில் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். நாட்டின் மனிதவள மேம்பாட்டு செயல்முறைக்கு திறம்பட பங்களிக்க தேவையான பயிற்சி நடவடிக்கைகளுக்கும் தனது பங்களிப்பை வழங்க முடியும் என்பதுடன் இந்த நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டிற்கு அமெரிக்க மனித வளத்தை விணைத்திரன் மிக்கதாக தேவையான பயிற்சி நடவடிக்கைகளுக்கு பங்களிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் முதலீட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் திறன் அமெரிக்க வர்த்தகர்களுக்கு இருப்பதாகவும் அது இலங்கையின் அபிவிருத்தியின் முன்னுரிமை ஒழுங்கின் படி செய்யப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை ஒன்றை மேற்கொள்வது வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக மிகவும் பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்குவுவோம். வரிகள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக எடுக்கப்படும் கொள்கைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைத் தயாரிப்பது முக்கியமாகும். என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது. வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை ஒன்றை மேற்கொள்வது வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு மிகவும் பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்குவதாக இதன்போத அவர்கள் மிகவும் வலியுறுத்தி தெரிவித்தனர். இலங்கையின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப முதலீடுகளை கொண்டுவருவதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், வரவு செலவு திட்டத்தில் முன்னுரிமை மற்றும் இலங்கையின் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் மூலோபாயங்களுக்கு ஏற்ப அந்த முதலீடுகள் மற்றும் வியாபாரங்களை அபிவிருத்தி செய்வதற்கும் தயாராக இருப்பதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. இரண்டு நாடுகளுக்கிடையிலான நட்புறவை விருத்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் இதற்காக முடியுமான ஒத்துழைப்பை வழங்குவதாக இதன்போது அமைச்சர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/206626
  11. 13 FEB, 2025 | 02:05 PM (எம்.மனோசித்ரா) சட்ட மா அதிபரை பதவியிலிருந்து விலக்குவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக செயற்படுவதற்கு தாம் தயாராக உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் சட்ட ரீதியான முறைமைக்கு அமையவே விடுதலை செய்யப்பட்டதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனவரி 27ஆம் திகதி சட்ட மா அதிபரால் வெளியிடப்பட்ட ஆலோசனை தொடர்பில் வேறுபட்ட நிலைப்பாடுகள் தெரிவிக்கப்படுவதோடு, அது குறித்த தவறான தகவல்களும் பரப்பப்படுகின்றன. குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் விடுவிப்பதற்கு ஆலோசனை வழங்கியபோது அதற்குரிய சட்ட முறைகள் சட்ட மா அதிபரால் முறையாக பின்பற்றப்பட்டுள்ளன. அரசியல் நலன்களுக்காகவோ மக்களின் நிலைப்பாடுகளைக் கருத்திற்கொண்டோ அந்த தீர்மானம் எடுக்கப்படவில்லை. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத் தன்மையின் அடிப்படையிலேயே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, சட்ட மா அதிபரை பதவியிலிருந்து விலக்குவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கு எதிராகவும் நாம் குரல் கொடுப்போம். ஒரு சுயாதீனமான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தனிச்சிறப்பு அரசியல் விளைவுகள் அல்லது பொது ஒப்புதலைப் பொருட்படுத்தாமல் முடிவுகளை எடுப்பதாகும். அந்த அடிப்படையிலேயே இந்த விவகாரத்திலும் சட்ட மா அதிபர் செயற்பட்டிருக்கிறார். சட்ட மா அதிபர் மற்றும் அதன் அதிகாரிகள் மீதான தனது நம்பிக்கையை எமது சங்கம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. குறித்த ஆலோசனைகள் தொடர்பான விடயங்களில் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் உரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து முக்கிய உண்மைகளையும் சட்டத்தையும் பரிசீலித்து, மூன்று சந்தேக நபர்களையும் விடுவிப்பதற்கு தங்கள் பரிந்துரைகளை முறையாக வழங்கியுள்ளனர். சட்ட மா அதிபர் அதைப் பரிசீலித்த பின்னர், பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதுடன், அதற்குப் பிறகு உரிய ஆலோசனையை வழங்கினார். அரசியல் பின்விளைவுகளோ பொதுக் கருத்துக்களோ இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை. குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மற்றும் சந்தேக நபர்களை விடுவிப்பது என்பது ஒரு சுயாதீனமான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தனிச்சிறப்பாகும். சட்ட மா அதிபரின் முடிவுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய முடிவெடுக்கும் செயல்முறையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உயர்ந்த மரபுகளுக்கு ஏற்ப தங்கள் சுயாதீனமான தொழில்முறை தீர்ப்பைப் பயன்படுத்தியிருக்கின்றனர். எனவே சட்ட மா அதிபரை பதவி நீக்கம் செய்யும் எந்தவொரு முயற்சியையும் எதிர்த்து நின்று தோற்கடிக்க தயங்க மாட்டோம் என்பதை சட்ட அதிகாரிகள் சங்கம் அழுத்தமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/206566
  12. Published By: DIGITAL DESK 2 14 FEB, 2025 | 12:07 PM யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு வியாழக்கிழமை (13) அத்திவாரம் வெட்டும் போதே மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனை அடுத்து, கட்டட வேலைகளை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர், இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில், கட்டட பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி உள்ளிட்ட 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை 1995ஆம் ஆண்டு மற்றும் 96ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டு, செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகள், குறித்த மயானத்தை அண்மித்த பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206638
  13. சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ரா இல்லாமல் இந்திய அணியால் தாக்குப் பிடிக்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக "ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் இல்லாதது, உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடாதது போல் இருக்கும்." இதைக் கூறியவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹார்மின்சன்தான். பும்ரா ஏற்படுத்திய தாக்கத்தின் ஆழத்தை, போட்டியின் சுவாரஸ்யத்தை இவ்வளவு அழகாக, எளிமையாகக் கூற முடியாது. 9வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இங்கிலாந்தை 14 ஆண்டுகளுக்குப் பின் 'ஒயிட்வாஷ்' செய்த இந்திய அணி: கில் சதத்தோடு சாதனை, கோலி, ஷ்ரேயாஸ் அரைசதம் வழிகாட்டி ரன்னர்கள்: பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கெடுக்க உதவும் இவர்கள் யார்? 305 ரன் இலக்கை ஊதித் தள்ளிய இந்தியா: இங்கிலாந்தை சிதறடித்து புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் கோப்பைக்கான உத்தேச இந்திய அணியில் தொடக்கத்தில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றிருந்தாலும், இறுதி செய்யப்பட்டு நேற்று முன்தினம் பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இடமில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு போட்டியையும் தோளில் தூக்கிச் சுமந்த பும்ரா, அதிக பணிப்பளு காரணமாக கடைசி டெஸ்டில் முதுகு வலியால் அவதிப்பட்டார். ஏற்கெனவே பும்ராவுக்கு முதுகுவலிப் பிரச்னை இருந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் 2022 செப்டம்பர் முதல் 2023 ஆகஸ்ட் வரை 11 மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா ஒதுங்கி ஓய்வில் இருந்தார். ஆஸ்திரேலியா தொடருக்குப் பின் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் பும்ரா இடம் பெறவில்லை. இப்போது பும்ராவுக்கு உடல்நிலை தேறிவிட்டாலும், அணியின் எதிர்காலம் கருதி பிசிசிஐ அவரை சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தேர்வு செய்யவில்லை. குறுகிய கால இலக்குகளை மனதில் கொண்டு எடுக்கப்படும் முடிவுகளின் நீண்டகால தாக்கத்தை பிசிசிஐ கவனத்தில் கொண்டு பும்ராவை சேர்க்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சை வழிநடத்தக் கூடியவரான பும்ரா சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடாததால் அவரின் சுமை அனைத்தும் முகமது ஷமி மீது விழுந்துள்ளது. இந்திய அணியில் ஷமி தவிர்த்து அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, ஹர்திக் பாண்டியா ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், இந்த 3 பந்துவீச்சாளர்களும் ஷமிக்கு ஆதரவாக இருக்க முடியுமே தவிர பிரதானமாகச் செயல்பட முடியாது. ஏனென்றால், சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாடிய அனுபவம் இதில் இரண்டு வீரர்களுக்கு இல்லை. ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராகவே அணியில் இடம்பெறுகிறார். சாம்பியன்ஸ் கோப்பை என்பது ஏறக்குறைய மினி உலகக்கோப்பை போன்றதுதான். இதில் பந்துவீச்சுக்கு தலைமை வகிக்கும் பந்துவீச்சாளர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் வீழ்த்துவது, எதிரணி ஸ்கோரை கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசுவது, புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவது, டெத் ஓவர்களில் சக பந்துவீச்சாளர்களை வழிநடத்துவது, ஆலோசனைகள் தருவது என முக்கியப் பணிகளைச் செய்ய வேண்டும். ஜஸ்பிரித் பும்ரா இருந்திருந்தால், இந்தப் பணிகளை அவர் செய்திருப்பார், அவர் இல்லாத நிலையில் ஷமி அந்த இடத்தை நிரப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். IND vs ENG: கோலி வருகையால் ஸ்ரேயாஸ் நீக்கம்? - ஆடுகளம் யாருக்கு சாதகம்?9 பிப்ரவரி 2025 இந்தியா VS இங்கிலாந்து: இந்திய அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்ற மூவர் கூட்டணி7 பிப்ரவரி 2025 பும்ரா ஏன் தேவை? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் பந்துவீச்சில் முக்கிய அச்சாணியாகவும், துருப்புச் சீட்டாகவும் ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். சிறந்த உதாரணத்தைக் கூற வேண்டுமென்றால், டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும், இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து அணியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதில் பும்ராவுக்கு நிகர் பும்ராதான். பும்ரா இடத்தில் வேறு எந்த வேகப்பந்துவீச்சாளர் இருந்தாலும் இதைச் செய்திருக்க முடியாது என்பதை ரசிகர்கள் அறிவர். சக பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தம் வராமல் எதிரணியின் எந்த பேட்டரை எப்படி வெளியேற்றுவது, புதிய பந்தில் விக்கெட்டை வீழ்த்தி எதிரணியினரைச் சுற்றலில் விடுவது என பும்ராவின் பணிகள் மகத்தானது. இந்திய அணி ஏ பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுடன் மோதவிருக்கிறது. இதில் வங்கதேசம் அணி திடீரென அதிர்ச்சியளிக்கும் வகையில் விளையாடினாலும், பும்ரா இல்லாமல் இருந்தால்கூட இந்திய அணி சமாளித்து வெற்றி பெற்றுவிடும். ஆனால், பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த 3 அணிகளுக்கு எதிராகவும் பும்ரா அதிகமான போட்டிகளை ஆடாவிட்டாலும், அவரின் பந்துவீச்சு இந்த அணிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் வாயிலாக அறியலாம். பாகிஸ்தானுக்கு எதிராக 8 ஒருநாள் போட்டிகளில் 51 ஓவர்கள் வீசிய பும்ரா 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 4.5 எக்கானமி வைத்துள்ளார். அதேபோல நியூசிலாந்துக்கு எதிராக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பும்ரா 121 ஓவர்களை வீசியுள்ளார், 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 4.8 எக்கானமி வைத்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிராக 5 போட்டிகளில் 47 ஓவர்கள் வீசிய பும்ரா 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 4.4 எக்கானமி வைத்துள்ளார். இந்த 3 அணிகளுக்கு எதிராகவும் குறைவான போட்டிகளில் பும்ரா பந்து வீசியிருந்தாலும், அவர் வைத்திருக்கும் எக்கானமி ரேட் அற்புதமானது. ஒருநாள் போட்டிகளில் எந்தப் பந்துவீச்சாளரும் இதுபோலக் குறைவான எக்கானமி ரேட் வைத்திருப்பது கடினம். குறிப்பாக, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் 50 ஓவர்கள் போட்டிகளில் நடுப்பகுதி ஓவர்கள் மிகவும் முக்கியமானது. ஓர் அணியின் ஸ்கோர் மேலே உயர்வதும், கட்டுப்படுத்தப்படுவதும் இந்த நடுப்பகுதி ஓவர்களில்தான் தீர்மானிக்கப்படும். இதுபோன்ற முக்கியமான கட்டத்தில் பந்துவீசுவதற்கு பும்ரா எனும் பிரம்மாஸ்திரம் இந்திய அணியில் இருக்க வேண்டும். இப்போது பும்ரா இல்லாததால் நடுப்பகுதி ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும் அவர் இடத்தை நிரப்ப சரியான வீரரைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ரொனால்டோ: உலகின் சிறந்த கால்பந்து வீரரா? தமிழக, கேரள கால்பந்து ரசிகர்கள் சொல்வது என்ன?5 பிப்ரவரி 2025 கோலி, ரோஹித்துக்கு கடைசி வாய்ப்பு - இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் என்னென்ன?6 பிப்ரவரி 2025 டி20 தொடரை வென்ற இந்தியா; அபிஷேக் சர்மாவின் ரன்களை கூட எடுக்க முடியாமல் இங்கிலாந்து தோற்றது எப்படி?3 பிப்ரவரி 2025 இந்திய அணிக்கு எது முக்கியம்? பட மூலாதாரம்,GETTY IMAGES சாம்பியன்ஸ் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாததைப் போல் உலக சாம்பியன்ஸ் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் கம்மின்ஸ் பங்கேற்கவில்லை. அவரோடு, ஹேசல்வுட், மிட்ஷெல் ஸ்டார்க் உள்பட 3 முக்கியப் பந்துவீச்சாளர்களே அந்த அணியில் விளையாடவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு உலக அரங்கில் வெற்றியை தேடித் தந்ததே இந்த மூன்று பந்துவீச்சாளர்கள்தான். இவர்கள் இல்லாத நிலையில் ஸ்மித் தலைமையில் அனுபவமில்லாத இளம் பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு அந்த அணி களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் தேர்வு உணர்த்துவது நம்பிக்கையை மட்டும்தான். அதேபோல பும்ரா இல்லாத சூழலிலும் ஷமி தலைமையில் ஒவ்வொரு போட்டியையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையோடு இந்திய அணி அணுக வேண்டும். இடதுகை வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், அனுபவ வீரர் ஷமி புதிய பந்தில் பந்து வீசினாலும், நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சாளர்களைத் தவிர்த்து ஹர்திக் பாண்டியா, ஹர்சித் ராணா ஆகிய 2 வேகப்பந்துவீச்சாளர்களும் உள்ளனர். இவர்கள்தான் நடுப்பகுதி ஓவர்களில் ஆட்டத்தை கட்டுப்படுத்தக் கூடியவர்கள். பும்ரா இல்லாத இடத்தை நிரப்புவது கடினம் என்ற போதிலும், நம்பிக்கையுடன் அனுகுவது அவசியம். விளையாட்டுத் துறையில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை குவிப்பதை நிதிப் பற்றாக்குறை தடுக்கிறதா?31 ஜனவரி 2025 வருண் மாயஜாலம், அபிஷேக் அதிரடி: முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தின் பேஸ்பால் வியூகத்தை நொறுக்கிய இந்திய அணி23 ஜனவரி 2025 ஐந்து சுழற்பந்துவீச்சாளர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி, சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகிய 5 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. துபை மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றதுதான் என்றாலும், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி ஒரேயொரு முழுநேர சுழற்பந்துவீச்சாளருடன்தான் களமிறங்குகிறது. இதில் பும்ராவுக்கு பதிலாக கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ள தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி மீது கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால்தான் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பளித்து வருணை பரிசோதித்துப் பார்த்தனர். டி20 போட்டிகளில் 4 ஓவர்கள் வீசி அனுபவப்பட்ட வருண், எவ்வாறு 10 ஓவர்களை வீசுவார் என்பது ஒரு சில போட்டிகளை வைத்து முடிவு செய்வது கடினம்தான். ஆனாலும், வருணின் புதிரான, மாயாஜால பந்துவீச்சு துபை போன்ற சுழற்பந்துவீச்சு ஆடுகளத்தில் நன்றாக எடுபடும் என நம்புகிறார்கள். நடுப்பகுதி ஓவர்களில் எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்துவதில் சினாமென் அல்லது மணிக்கட்டைப் பயன்படுத்தி பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் பங்கு முக்கியமானது. இதில் குல்தீப் யாதவ் பந்துவீச்சு பெரியளவு பலன் அளிக்கும் என்றாலும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் குல்தீப்புக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கவில்லை. கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2024 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நடுப்பகுதி ஓவர்களில் குல்தீப் பந்துவீச்சு எந்த அளவுக்கு முக்கியமாக இருந்தது என்பதைப் புரிந்து அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஆதலால் பும்ரா எனும் கருப்புக் குதிரை இல்லாத நிலையில் வெற்றியைப் பெற இந்திய அணி சற்று கடினமாகப் போராட வேண்டியிருக்கும். துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனையின் வெற்றிக் கதை18 ஜனவரி 2025 காதலர் தினம்: வெளியூரில் வீட்டுச்சிறை, காணாமல் தேடிய காதலர் - சாதி தடையை உடைத்து இணைந்த தம்பதி2 மணி நேரங்களுக்கு முன்னர் வெற்றி வாய்ப்பு குறையுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியில் பும்ரா இல்லாதது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஐசிசிக்கு அளித்த பேட்டியில், "இந்திய அணியில் பும்ரா இல்லாததால் இந்திய அணி சாம்பியன் வெல்லும் வாய்ப்பு 30 முத்ல 35 சதவீதம் பாதிக்கும் என்பது நிதர்சனம். பும்ரா ஒருவேளை விளையாடும் உடல் தகுதியைப் பெற்றால் நிச்சயம் டெத் ஓவர்கள் வேறு மாதிரியாக இருக்கும், முக்கியமான தருணத்தில் பும்ராவின் பந்துவீச்சு அற்புதமாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார். அதோடு, பும்ராவின் உடல்நிலை தேறினாலும் இந்த நேரத்தில் அவரை அணிக்குள் சேர்ப்பது மிக ஆபத்தானது எனவும் அவர் தெரிவித்தார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், "பும்ரா இந்திய அணியில் இல்லாத நிலையில் கவனத்தை ஷமி மீது செலுத்த வேண்டும். ஆஸ்திரேலிய பயணத்தில் பும்ராவுக்கு பக்கபலமாக ஷமி போன்ற பந்துவீச்சாளர் இல்லாததுதான் அவர் உடல்நலக்குறைவு ஏற்படக் காரணமாக இருந்தது" எனத் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdry8y0egdpo
  14. 14 FEB, 2025 | 11:29 AM முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை, சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை இன்று (14) காலை ஆரம்பித்துள்ளார். ஒரு காலினை இழந்த முன்னாள் போராளி அழகரெத்தினம் வனகுலராசா இன்றைய தினம் காலை 7 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் நீர், உணவு உட்கொள்ளாமல், நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவர் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை மட்டுமன்றி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆரம்பித்துள்ளார். அவர் முன்வைக்கும் கோரிக்கைகளாவன: 1. தமிழர்களுக்கு தனி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். 2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும். 3. மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். 4. தமிழினத் துரோகிகள் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். 5. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 6. பிரதேசவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். 7. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இல்லாதவர்கள் இருந்ததாகக் கூறி, வெளிநாடு மற்றும் உள்நாட்டில் சக போராளிகளை காரணம் காட்டி, பணம் வசூலித்து, போராளிகளை ஏமாற்றி, சுற்றுலா விடுதி, தோட்டம், பண்ணை அமைத்து வேலை செய்யும் பணியாளர்களுக்கு சரியான சம்பளம் வழங்காமல் இருப்பதை நிறுத்தி, அவர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு 200 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும். 8. முதியோர் மற்றும் இளையோர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 9. காணி மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு காணி, வீடு வழங்கப்பட வேண்டும். 10. இலங்கையில் பிச்சை எடுப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதால், பிச்சை எடுப்பவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்த 10 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராளி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். https://www.virakesari.lk/article/206650 அடிப்படைச் சம்பளம் மணிக்கு 300 - 400 ரூபா வழங்கினால் தான் வாழமுடியும். பெண்களே மணித்தியாலத்திற்கு 200ரூபா வாங்குகிறார்கள்.
  15. Published By: VISHNU 12 FEB, 2025 | 09:15 PM ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற உலக அரச உச்சி மாநாட்டின் (WGS) பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (11) ஒரக்கல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பொருளாதாரம் மற்றும் நிர்வாகச் செயற்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கையின் டிஜிட்டல் மாற்றம், பின்டெக் சேவை மற்றும் கிளவுட் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திகொள்ளல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்க ஒரகல் கிளவுட் உட்கட்டமைப்பு (OCI) வழங்க விருப்பம் குறித்த நிறுவனம் தெரிவித்ததுடன், தரவு சுயாதீனத் தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கப்பாடுகளை உறுதிப்படுத்தி, அரசாங்க விண்ணப்பங்கள், இலத்திரனியல் நிர்வாக வசதிகள் மற்றும் தேசிய தரவு கட்டமைப்பு ஒன்றை ஸ்தாபிப்தற்கும் முன்வருமாறு ஜனாதிபதி ஒரகல் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார். பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் நகர்வை விரைவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் ஒரகல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியா ஆகியோர் பின்டெக் மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவு வசதிகளுக்கான ஆரம்பகட்ட முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடினர். இதற்காக, கொழும்பு துறைமுக நகரத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கல் மையமொன்றை அமைக்குமாறு ஒரகல் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அது தெற்காசிய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் (Cloud Hub) மையமாக செயற்படும். அதற்கான குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புமாறு ஜனாதிபதி மைக் சிசிலியாவிடம் கோரிக்கை விடுத்தார். பிராந்திய அடிப்படையிலான டிஜிட்டல் மாற்றம் மற்றும் புத்தாக்கத்துக்கான ஒரகல் நிறுவனத்தின் நோக்குக்கு அமைய அதன் தெற்காசிய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் (Cloud Hub) மையமொன்றை கொழும்பு துறைமுக நகரில் அமைப்பதற்கு ஒரகல் நிறுவனம் ஆர்வமாக உள்ளதாக அந்த நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் தெரிவித்தார். இது ஒரு மூலோபாய நடவடிக்கை என்ற வகையில் செயற்கை நுண்ணறிவின் ஊடாக செயற்படுத்தப்படும் கிளவுட் வசதிகளில் இலங்கையை பிராந்தியத்தின் முன்னோடியாக மாறுவதற்கு உதவும். அதேபோல் அரச - தனியார் கூட்டு முயற்சிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப முதலீடுகளுக்கும் அடித்தளமாக அமையும். அதற்கமைய, இந்தக் கலந்துரையாடலில், நிர்வாக வினைத்திறன், பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலகளாவிய போட்டித் தன்மைக்காக பயன்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய ஜனாதிபதி, அநுர குமார திசாநாயக்க, , இலங்கையின் டிஜிட்டல் பரிணாம செயன்முறையில் முக்கிய பங்கை வகிக்க முன்வருமாறும் ஒரகல் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார். வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மேல்மாகாண ஆளுநர் ஹனீஸ் யூசுப் உள்ளிட்டவர்களும் இந்த கலந்துரையாடலில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/206535
  16. Blind Runners: பார்வையற்ற Paralymic Athletes வழிகாட்டி உதவியுடன் ஓட்டப்பந்தயத்தில் சாதிப்பது எப்படி? பார்வை மாற்றுத் திறனாளி தடகள வீரர்கள் கைட் ரன்னர்களை பயன்படுத்துகின்றனர். அபே, 2 மாதங்களாக சிம்ரனின் கைட் ரன்னராக இருக்கிறார். ரக்‌ஷிதாவும் அவரது கைட் ரன்னர் ராகுலும் நெகிழிக் கயிற்றால் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கைட் ரன்னரை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது. தடகள வீரர் வென்றால் அவர்களுக்கும் பதக்கம் கிடைக்கும், ஆனால், வேறு உதவி எதுவும் கிடைக்காது. "எங்களுக்கு பணமோ, வேலையோ எதுவுமே கிடைக்காது. கைட் ரன்னராக ஓடுவதில் என்ன பயன் இருக்கிறது?" என்கிறார் ரக்‌ஷிதாவுக்கு கைட் ரன்னராக இருக்கும் ராகுல் பாலகிருஷ்ணா. அதில், கைட் ரன்னரான அபே குமாரின் வழிகாட்டுதலோடு சிம்ரன் 200மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  17. பண்பு நிறைந்த பத்திரிகையாளன் பாரதியை இழந்து நிற்கும் தமிழ்ப் பத்திரிகை உலகம் Published By: DIGITAL DESK 7 11 FEB, 2025 | 09:19 AM வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கை பத்திரிகை நிறுவனமும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து மவுண்ட் லவினியா ஹோட்டலில் ஜனவரி 7 ஆம் திகதி இரவு நடத்திய ' சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் ' வழங்கும் வனப்புமிகு விழாவில் இறுதியாக நான் பாரதியைச் சந்தித்தேன். நீண்ட நேரமாக அவருடன் பேசி, மீண்டும் சந்திப்போம் என்று கூறி இருவரும் விடை பெற்றுக் கொண்டோம். ஆனால், அதற்கு பிறகு ஒரு மாதமும் இரு நாட்களும் கடந்த நிலையில் கடந்த ஞாயிறன்று பாரதி எம்மிடமிருந்து நிரந்தரமாகவே விடை பெற்ற துயர்நிறைந்த செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த சில வாரங்களாக பாரதி சுகவீனமுற்று வைத்தியசாலையால் சிகிச்சை பெற்று வந்தார் என்ற போதிலும், அவர் விரைவில் சுகமடைந்து விடுவார், அவரைச் சென்று பார்க்கலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தோம். உண்மையில், அவர் எம்மத்தியில் இன்று இல்லை என்பதை நம்புவதற்கு மனம் மறுக்கிறது. பாரதியின் மறைவு எம்மிடமிருந்து பண்பும் ஆற்றலும் நிறைந்த ஒரு சிறந்த பத்திரிகையாளனை அபகரித்துச் சென்று விட்டது. பாரதி ஒரு சிறந்த பத்திரிகையாளன் என்பதற்கு அப்பால் ஒரு சிறந்த மனிதநேயன். அரசியலைப் போன்றே போட்டியும் சூழ்ச்சியும் நிறைந்ததாக மாறிவிட்ட ஊடகத்துறையில் பாரதியைப் போன்று முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சகலருடனும் இணக்கப் போக்குடன் ஊடாட்டங்களைச் செய்யும் ஒரு பத்திரிகையாளனை இனிமேல் காணமுடியுமா என்று மனம் ஏங்குகிறது. மற்றவர்களுக்கு தீங்கு செய்வதை கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்காத ஒரு பிறவி பாரதி. என்னைப் பொறுத்தவரை, பத்திரிகைத்துறைச் சகபாடி ஒருவர் என்பதற்கு அப்பால் என்னை நன்கு புரிந்து கொண்டு, நான் இழைத்திருக்கக்கூடிய தவறுகளையும் கூட பொருட்படுத்தாமல் என்னுடன் நீண்டகால பழகி நெருங்கிய நண்பனை இழந்து நிற்கிறேன். பாரதிக்கும் எனக்கும் இடையிலான ஊடாட்டம் அவர் 1990 களின் முற்பகுதியில் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் உதவி ஆசிரியராக இணைந்து கொண்டதுடன் தொடங்கியது. எங்களுக்கு இடையிலான நெருக்கத்துக்கு 35 வயது. கொழும்பில் இருந்து பணியாற்றிய எங்களைப் போன்றவர்களைப் போலன்றி, பாரதி பத்திரிகைத் துறையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வளர்ந்தவர். ஆயுமேந்திய தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் தோற்றம் பெறத்தொடங்கிய நாட்களில் அவரின் பத்திரிகைத்துறைப் பிரவேசம் இடம்பெற்றது. முதலில் 1980 களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஈழமுரசு, முரசொலி பத்திரிகைகளில் பணியாற்றி பாரதி இந்திய அமைதி காக்கும் படை வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் விபத்தொன்றில் சிக்கிய பின்னரே வீரகேசரியில் இணைந்துகொணடார். பாரதியின் பத்திரிகைத்துறை வாழ்வு உள்நாட்டுப்போர் நீடித்த மூன்று தசாப்தங்களையும் போர் முடிவுக்கு வந்ததற்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களையும் உள்ளடக்கியதாகும். அதன் காரணமாக அவர் இயல்பாகவே தமிழ்த் தேசியவாத அரசியல் கோட்பாடுகளில் நிறைந்த ஈடுபாடு கொண்டவராக, தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும் பற்றுறுதியுடன் நியாயப்படுத்துவதற்கு தனது எழுத்தை அர்ப்பணித்தவராக வாழ்ந்தார். அதன் விளைவாக சிறந்த ஒரு அரசியல் விமர்சகராகவும் அவரால் விளங்க முடிந்தது. பாரதி வீரகேசரியில் இணைந்த ஆரம்ப நாட்களிலேயே தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலான சில ஆய்வு முயற்சிகளுக்கு முகாமைத்துவம் அவரைப் பயன்படுத்தியதை நான் நன்கு அறிவேன். அந்த ஆய்வுகளை ஒரு நூலாக்கும் முயற்சியும் கூட மேற்கொள்ளப்பட்டது. பாரதி அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து நிறையவே எழுதியிருக்கிறார். பத்திரிகையாளர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் தீவிரமான ஈடுபாடு கொண்டவராக விளங்கிய பாரதி பல தடவைகள் இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவராக பணியாற்றினார். தினக்குரல் பத்திரிகை 1997 ஏப்ரிலில் தொடங்கப்பட்டபோது அதன் முதல் செய்தி ஆசிரியராக நான் இணைந்து கொண்டேன். என்னுடன் முதலில் கூட வந்தவர்கள் பாரதியும் சீவகனுமேயாவர். புதிய பத்திரிகையில் இணைவதில் உங்களுக்கு தயக்கம் எதுவும் இல்லையா என்று நான் இருவரையும் கேட்டபோது" நீங்கள் போகிறீர்கள் ...... எங்களுக்கு என்ன தயக்கம் " என்று இருவரும் கூறியது இன்றும் என் காதில் எதிரொலிக்கிறது. அந்தளவுக்கு என்மீது பாரதி வைத்திருந்த நம்பிக்கை உணர்வு என்னை நெகிழ வைத்தது. இறுதிவரை என்னுடனான அந்த நெருக்கத்தை அவர் பேணினார். தினக்குரலின் பிரதம ஆசிரியராக 2004 ஏப்ரிலில் என்னை பொறுப்பேற்குமாறு முகாமைத்துவம் கேட்டபோது அவர்களிடம் நான் ஒரு கோரிக்கையை முன்வைத்தேன். பாரதியை ஞாயிறு தினக்குரலின் பொறுப்பாசிரியராக நியமிப்பதாக இருந்தால் மாத்திரமே நான் பிரதம ஆசிரியராக பொறுப்பேற்பேன் என்று கூறினேன். பாரதி போன்ற அனுபவமும் ஆற்றலும் கொண்ட ஒருவரை அந்த பொறுப்பில் அமர்த்தினால் எனது பணிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நான் திடமாக நம்பினேன். முகாமைத்துவமும் எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பாரதியை ஞாயிறு தினக்குரலுக்கு பொறுப்பாக நியமித்தது. வாரப்பத்திரிகையின் வளர்ச்சிக்கு பாரதியின் பங்களிப்பு மகத்தானது. செய்திகளைக் கையாளுவதை விடவும் வாரப்பத்திரிகைக்கு உரிய சிறப்பு அம்ச விடயதானங்களைக் கையாளுவதில் பாரதியின் ஆற்றல் அபாரமானது என்பதை அவர் தனது பணியின் மூலம் நிரூபித்தார். கலை இலக்கியத்துறை சார்ந்தவர்களை ஞாயிறு தினக்குரலின் பக்கம் கவர்ந்ததில் பாரதியின் பங்களிப்பு முக்கியமானது. தினக்குரலின் முகாமைத்துவத்தில் 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து நாமெல்லோரும் வீரகேசரி காரியாலயத்தில் பணியாற்ற வேணடியிருந்தது. பாரதியின் திறமையைக் கண்ட வீரகேசரி முகாமைத்துவம் பாரதியை தங்களுக்காக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டியதை நான் நன்கு அறிவேன். நவீன தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடனும் அவர் தன்னை எளிதாகவே பரிச்சயமாக்கிக் கொண்டார். பாரதி ஓய்வபெற்று யாழ்ப்பாணம் திரும்பிய பிறகு அங்குள்ள சில ஊடகங்களில் பணியாற்றினார். ஆனால், இறுதியில் வீரகேசரி நிறுவனம் அதன் யாழ்ப்பாணக் காரியாலயத்தில் பொறுப்பாசிரியராக நியமிப்பதற்கு ஒருவரை தேடியபோது பாரதியை அதற்கு பொருத்தமானவராக அடையாளம் கண்டு நியமித்தது. அந்த நியமனம் பாரதியின் வீரகேசரிக்கான மீள்வருகையாக அமைந்தது. ஆனால், அதில் சில மாதங்களே பணியாற்றிய நிலையில் அவர் எம்மை விட்டு பிரிந்துவிட்டார். திடீரென்று தாக்கிய பக்கவாத நோய் சில வாரங்களில் அவரைப் பலியெடுத்துவிட்டது. ஊடகத்துறையில் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் பல மட்டங்களில் பாரதிக்கு பெருமளவில் நண்பர்கள், அபிமானிகள் இருந்தார்கள். வெறுமனே அலுவலகத்திற்குள் தன்னை முடக்கிக் கொண்ட ஒரு பத்திகையாளராக இல்லாமல் வெளித் தொடர்புகளை நிறையவே அவர் ஏற்படுத்திக்கொண்டதன் விளைவாக புலம்பெயர் தமிழ்ச சமூகத்திலும் அவர் நன்கு அறியப்பட்டவராக விளங்கினார். பல வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டு தனது அனுபவத்தை வளப்படுத்திக் கொண்டார். புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் இயங்கும் சில ஊடகங்களுக்காக பல தடவைகள் என்னை நேர்காணல் செய்து என்னையும் அந்த சமூகத்துக்கு அறிமுகம் செய்தார். அவரது மறைவை ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறுவதை விடவும் நிச்சயமாக ஈடுசெய்யப்பட வேண்டிய இழப்பு என்றே நான் கூறுவேன். ஏனென்றால், பாரதியைப் போன்ற பரந்த அனுபவமும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்ட பத்திரிகையாளர் தமிழ் ஊடகத்துறைக்கு வேண்டும். எனது தனிப்பட்ட குறிப்பை இந்த சந்தர்ப்பத்தில் கூறவிரும்புகிறேன். விரும்புகிறேன். காலஞ்சென்ற முதுபெரும் இலக்கியவாதி டொமினிக் ஜீவா ஒரு தடவை என்னை அணுகி தனது மல்லிகை சஞ்சிகையில் அட்டைப்பட பிரமுகராக என்னை பதிவுசெய்ய விரும்புவதாக கூறினார். " அதற்கு யாரிடம் உங்களைப் பற்றி ஒரு கட்டுரையை வாங்கலாம்? " என்று அவர் என்னையே கேட்டார். " அவுஸ்திரேலியாவில் வாழும் எனது நெருங்கிய நண்பன் முருகபூபதி அல்லது பாரதியிடம் என்னைப் பற்றிய கட்டுரையை வாங்கினால் மாத்திரமே எனது புகைப்படத்தை தருவேன் " என்று நான் ஜீவாவிடம் திட்டவட்டமாக கூறிவிட்டேன். அவர் உடனே தினக்குரல் அலுவலகத்தில் இருந்த பாரதியின் அறைக்குச் சென்று அவரிடம் விடயத்தை சொன்னதாக அறிந்தேன். அடுத்த மல்லிகை இதழ் எனது படத்தைத் தாங்கி வந்திருந்தது. ஜீவாவே அதை கொண்டு வந்து தந்தார். உள்ளே பாரதி என்னைப் பற்றி எழுதிய கட்டுரை. அதை வாசித்த பிறகுதான் பாரதி என்னைப் பற்றி எத்தகைய அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார் என்பதையும் என்மீது எவ்வளவு அன்பை வைத்திருக்கிறார் என்பதையும் நான் புரிந்து கொண்டேன். பாரதி தனது அபிப்பாராயங்களை பெரிதாக வெளியில் பேசாத ஒரு பிறவி. ஆனால், நிதானமாக, ஆரவாரமின்றி சகலவற்றையும் அவதானித்து செயற்பட்ட ஒருவர். பரபரப்புக் காட்டுவதில் நம்பிக்கையில்லாத ஒருவர். ஒப்படைக்கப்பட்ட பொறுப்பைக் கச்சிதமாகச் செய்வதில் கண்ணாயிருப்பார். வீணான அபிப்பிராயங்கள் குறித்து அக்கறை காட்டமாட்டார். அண்மைக்காலமாக நானும் சுகவீனமுற்று சத்திரசிகிச்சைக்கு பிறகு குணமடைந்திருக்கிறேன். பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் என்னை கடந்த மூன்று வருடங்களாக பாரதி வாரம் ஒரு முறை யாழ்ப்பாணத்தில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு சுகம் விசாரிக்கவும் நாட்டு நடப்புகளைப் பேசவும் தவறுவதில்லை. பத்திரிகைகளுக்கு எழுதும் அரசியல் கட்டுரைகளைப் பற்றி காய்தல் உவத்தல் இன்றி கருத்துக்களைக் கூறுவார். மனமுவந்து நான் பேசும் பாரதியிடம் இருந்து இனிமேல் தொலைபேசி அழைப்பு வராது. பாரதியின் மனைவி தேவகி எனது ஊரான வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்தவர். அதனால் பாரதி எம்மவர் என்று மேலதிக உறவு கொண்டாடும் உரிமையும் எனக்கு இருப்பதாக நினைத்துக் கொள்வேன். மனைவிக்கும், மகன் பார்த்திபனுக்கும் சகோதரிக்கும் ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். "பாரதி..... உனக்கு அஞ்சலிக் குறிப்பை எழுதும் துரதிர்ஷ்டம் எனக்கு வரும் என்று நான் நினைத்ததில்லை. நீ முந்தி விட்டாய். சென்றுவா" https://www.virakesari.lk/article/206369
  18. உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் நாம் ஒன்றிணைவோம் - 2025 உலக அரச மாநாட்டில் ஜனாதிபதி Published By: VISHNU 12 FEB, 2025 | 07:49 PM உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாகவும், தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் புதன்கிழமை (12) உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி, புத்தாக்கம் மற்றும் அரச நிர்வாக மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் நோக்கு என்ற தலைப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றினார். இந்த உரையில் நிலையான அபிவிருத்தி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான இலங்கையின் அர்ப்பணிப்பும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. மானிட வர்க்கம் தொடர்பான முக்கியமான துறைகளில் எதிர்கால உத்திகள் மற்றும் திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு இந்த மாநாடு உந்து சக்தியாக அமையும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்க உலகளாவிய கூட்டு செயற்பாடும், முன்னணியொன்றினது அவசியத்தையும் வலியுறுத்தினார். சமூக நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியானது தரமிக்க தேசமொன்றைப் போன்றே வளமிக்க உலகமொன்றுக்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது எனவும், உடன்படிக்கைகளையும் சட்டங்களையும் முறைசார்ந்தவகையில் அமுலாக்குவதும், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் உறுதி நிலையற்ற சமுதாயங்களுக்கு முறைப்படி ஒத்துழைப்பினை வழங்குவதும், உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்காக சுதந்திர ஊடகங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார். டிஜிட்டல் அணுகல் உரிமைகள், சுற்றாடல் உரிமைகள் உள்ளடங்களாக 1948 ஆம் ஆண்டு மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலில் புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய பிரகடனத்தின் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. உலகளாவிய நிதியளிப்பு நிபந்தனைகள் அதிகரிக்கின்றமை, எதிர்காலத்தில் செலுத்தப்படவுள்ள பெருந்தொகையான கடனைச் செலுத்துதல் மற்றும் இறையாண்மைக் கடன் நெருக்கடிக்கு முகங்கொடுக்க நிகழ்கால சர்வதேச நிதிக்கட்டமைப்பு பலவீனமான வகையில் தயாராகியமையால் உலகளாவிய நோக்கு மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நவீன உலகிற்கு நியாயமானவகையில் சீராக்கிக்கொள்ளக்கூடிய நிதிசார் திருத்தங்களின்பால் மாற்றமடைவது மிகவும் முக்கியமான விடயமாக அமைகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார். அதற்காக பிரஜைகளின் பங்கேற்பு முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டியதோடு, பிரஜைகள் சுற்றுச்சூழல் மீது பற்றுக்கொண்ட நவீன சியட்டல்களாக மாற வேண்டும் என்பதை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார். மனிதர்களை மையப்படுத்திய எதிர்கால பொருளாதார அபிவிருத்தி குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, சைபர் பாதுகாப்பு செயன்முறையை நோக்கி உலகம் நகர வேண்டியிருப்பதன் முக்கியத்துவத்தையும், ரொபோக்கள் பயன்பாட்டினால் தொழில் வாய்ப்புக்களை இழக்கின்ற மனித சமூகத்தை வலுவூட்ட கல்வி, திறன் மேம்பாடு,புதிய தொழில் வாய்ப்புக்களை அறிந்துகொண்டு சரியான வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த வேண்டுமெனவும் அதற்காக உலகத் தலைவர்கள் ஒற்றுமையாக செயலாற்ற வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். பிரச்சினைகளைப் போன்றே எமது இதயங்களின் “லப் டப்” ஓசையும் ஒன்றாக ஒன்று சேர்த்து உலகத்தைக் கட்டியெழுப்புவோம்' என்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். “நாங்கள் சகோதரர்கள் என்றவகையில் ஒன்றாக வாழப் பழகிக்கொள்ளவேண்டும்.” என மார்ட்டின் லூதர் கிங் கூறியுள்ளார். “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்பதை உருவாக்கிட ஒன்றுசேர்வோம் என்பதை இலங்கை மக்களும் 2024 ஆம் ஆண்டில் வலியுறுத்தினர் என வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். “நாங்கள் ஒன்றுசேர்ந்து அழகான வாழ்க்கையை அழகான உலகத்தை உருவாக்கிடுவோம்” என உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். https://www.virakesari.lk/article/206533
  19. எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் Published By: VISHNU 12 FEB, 2025 | 09:11 PM யாழ்ப்பாணம், வலி வடக்கு – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி பொது மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மாபெரும் போராட்டமொன்று புதன்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இந்த விகாரைக்கு எதிராக பல்வேறு அச்சுறுத்தல்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) மாலை ஆரம்பமாகிய இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்தது. விகாரைக்கு முன்பாக பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பல நூற்றுக் கணக்கானோர் இன்று காலை முதல் திரண்டிருந்தனர். போராட்டம் இடம்பெறும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு, வீதித் தடைகள் போடப்பட்டு புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரமாக இருந்தது. பல்வேறு அச்சுறுத்தல்கள், கெடுபிடிகள், எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கறுப்பு கொடிகளுடன் பெருமளவில் திரண்ட மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். “அகற்று அகற்று சட்டவிரோத விகாரையை அகற்று”, “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “இனப்படுகொலை இராணுவமே வெளியேறு”, “இந்த மண் எங்களின் சொந்தமண்”, “கண் திறந்த புத்தருக்கு மண்மீது ஆசையா?”, “எமது நிலம் எமக்கு வேண்டும்” போன்ற பல கோசங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எழுப்பப்பட்டன. பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டதால் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டதால் முறுகல் நிலை ஏற்பட்டு பதற்றமான நிலைமையும் தோன்றியது. எனினும், அச்சுறுத்தல்கள், எதிர்ப்புக்குகளுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் விகாரகைக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுகிறது. https://www.virakesari.lk/article/206534
  20. சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்; 214 ஓட்டங்களைத் தக்கவைத்து ஆஸி.யை வீழ்த்தியது இலங்கை Published By: VISHNU 12 FEB, 2025 | 06:57 PM (ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) அவுஸ்திரேலரியாவுக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாடரங்கில் இன்று புதன்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 214 ஓட்டங்களைத் தக்கவைத்து 49 ஓட்டங்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது. மிகவும் நெருக்கடியான வேளையில் அணித் தலைவர் சரித் அசலன்க குவித்த அபார சதம், துனித் வெல்லாலகே, ஏஷான் மாலிங்க ஆகியோருடன் முறையே 6ஆவது, 9ஆவது விக்கெட்களில் அவர் பகிர்ந்த மிகவும் பெறுமதிமிக்க இணைப்பாட்டங்கள் என்பன இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தன. அது மட்டுமல்லாமல் மஹீஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 46 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 214 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முன்வரிசை வீரர்கள் கவனக் குறைவு காரணமாக தங்களது விக்கெட்களைத் தாரை வார்த்தனர். 15ஆவது ஓவரில் இலங்கை 5 விக்கெட்களை இழந்து 55 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. குசல் மெண்டிஸ் (19), ஜனித் லியனகே (11) ஆகிய இருவரே இரட்டை இலக்கங்களைப் பெற்றனர். இதன் காரணமாக இலங்கை 100 ஓட்டங்களை அண்மிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் முன்னாள் தலைவர் துனித் வெல்லாலகே அனுபவசாலிபோல் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு தெம்பூட்டினார்.. அவர் சரித் அசலன்கவுடன் 6ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 67 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அதுவே இலங்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்ததுடன் 33ஆவது ஓவரில் இலங்கை 8 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது. 8ஆவது விக்கெட் வீழ்ந்தபோது சரித் அசலன்க 73 பந்துகளில் 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அதன் பின்னர் சரித் அசலன்க மற்றையவர்களுக்கு முன்னுதாரணமாக புத்திசாதுரியத்துடனும் துணிச்சலுடனும் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்து அணியை பெரு வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்தார். அவரது இரண்டாவது 50 ஓட்டங்கள் 41 பந்துகளில் பெறப்பட்டது. சரித் அசலன்க 126 பந்துகளில் 14 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 127 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன் 9ஆவது விக்கெட்டில் ஏஷான் மாலிங்கவுடன் மிகவும் பெறுமதியான 79 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மாலிங்க 26 பந்துகளில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் சோன் அபொட் 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆரொன் ஹார்டி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நேதன் எலிஸ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்பென்சர் ஜோன்சன் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 215 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 33.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ட்ரவிஸ் ஹெட், க்லென் மெக்ஸ்வெல் ஆகியோருக்கு ஓய்வு கொடுத்தது தவறு என்பதை இந்தத் தோல்வி அவுஸ்திரேலியர்களுக்கு உணர்த்தியிருக்கும் என்பது நிச்சயம். இலங்கையைப் போன்றே அவுஸ்திரேலியாவும் ஆரம்பத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. அசித்த பெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே ஆகியோரின் இலக்கை நோக்கிய துல்லியமான பந்துவீச்சுகளின் காரணமாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் (12) உட்பட நால்வர் முதல் பத்து ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (31 - 4 விக்.) அனுபவசாலிகளான மானுஸ் லபுஷேன் (15), அலெக்ஸ் கேரி (41) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால் இருவரும் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். இந் நிலையில் ஆரோன் ஹார்டி, சோன் அபொட் (20) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் அது பலன் கொடுக்கவில்லை. நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஆரோன் ஹார்டி 32 ஓட்டங்களைப் பெற்றார். 10ஆம் இலக்க வீரர் அடம் ஸம்ப்பா 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன்: சரித் அசலன்க. https://www.virakesari.lk/article/206532
  21. எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின் உயர் அதிகாரியே காரணம் : சட்ட நடவடிக்கை எடுக்க கோட்டா இணங்கவில்லை - காமினி லொக்குகே 12 FEB, 2025 | 06:24 PM எமது ஆட்சிக் காலத்தில் மின்சார சபையின் உயர் அதிகாரியின் முறையற்ற செயற்பாட்டின் காரணமாகவே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இந்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்த போது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார். பிலியந்தல பகுதியில் இன்று புதன்கிழமை (12) நடைபெற்ற ஆசன அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில், மின் விநியோக துண்டிப்பு தற்போதைய பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. இதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடப் போவதில்லை. மின்சார சபையின் பொறியியலாளர்களே பொறுப்புக் கூற வேண்டும். ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களையும் மின்சார சபையே நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. எமது அரசாங்கத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டபோது அவ்விடயம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் என்ற ரீதியில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்தேன். விசாரணைகளில் மின்சார சபையின் உயர் அதிகாரியின் முறையற்ற செயற்பாட்டின் காரணமாகவே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இந்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்த போது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. மின்சார சபையின் முறையற்ற செயற்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மின்சார சபைக்குள் அரசியல் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணிக்கு சார்பான தொழிற்சங்கத்தினர் எப்போதும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் தான் செயற்படுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/206531
  22. இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும் தரப்பினரே எமது வீடுகளுக்கு தீ வைத்தனர்; காமினி லொக்குகே 12 FEB, 2025 | 06:05 PM (இராஜதுரை ஹஷான்) மே 09 வன்முறையில் எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. வீட்டை புனரமைக்க 54 மில்லியன் ரூபாவை இழப்பீடாக பெற்றுக் கொண்டேன். இதில் யாருக்கு என்ன பிரச்சினை? இழப்பீடு தொகையை பற்றி பேசும் ஆளும் தரப்பினரே எமது வீடுகளுக்கு தீ வைத்தனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார். மே 09 வன்முறையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் தான் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 150 மில்லியன் ரூபா செலவழித்து நான் வீட்டை நிர்மாணித்தேன். கலவரத்தின் போது எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. ஆகவே வீட்டை நிர்மாணிப்பதற்கு 54 மில்லியன் ரூபாவை இழப்பீடாக பெற்றுக் கொண்டேன். இதில் யாருக்கு என்ன பிரச்சினை? இழப்பீட்டு தொகை பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை வெளியிடும் தரப்பினர்கள் தான் எமது வீடுகளுக்கு தீ வைத்தார்கள். முடிந்தால் அவர்களின் பெயர்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். பிலியந்தல பகுதியில் புதன்கிழமை (12) நடைபெற்ற ஆசன அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/206523
  23. 12 FEB, 2025 | 12:02 PM (நெவில் அன்தனி) இலங்கையுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் மெத்யூ குனேமானின் பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டுள்ளது. காலியில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் குனேமான் மொத்தமாக 16 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். அவரது பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ஐசிசியின் அங்கீகாரம் பெற்ற நிலையத்தில் சுயாதீன பரிசோதனைக்கு குனேமான் உட்படுத்தப்படவுள்ளார். பெரும்பாலும் பிறிஸ்பேனில் அமைந்துள்ள நிலையத்திலேயே அவரது பந்துவீச்சு பாணி தொடர்பான பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது முழங்கை 15 பாகை அளவுக்கு மடிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு மேல் மடிந்தால் அது விதிகளை மீறியதாக கருதப்படும். தொழில்சார் கிரிக்கெட்டில் குனேமான் 2017இல் ஈடுபட ஆரம்பித்த பின்னர் அவரது பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அவருக்கு பந்துவீச அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது பந்துவீச்சு பாணி விதிகளுக்கு உட்பட்டதென உறுதிபடுத்தப்படும்வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் அவரது பந்துவீச்சு பாணி விதிமீறியதென உறுதிப்படுத்தப்பட்டால் அவரது பந்துவீச்சு பாணி திருத்தப்பட்டு விதிக்குட்பட்டது என உறுதிப்படுத்தப்படும் வரை அவருக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/206482
  24. படக்குறிப்பு, பகிடெரு கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், கர்க்கிபட்டி உமாகண்ட் பதவி, பிபிசிக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீரானது கிணறுகள், கடல் நீர் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருகின்றது. தெலங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பகிடேரு கிராமத்தில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வந்துகொண்டிருக்கிறது. மோட்டார்களோ, வேறு எந்த உபகரணங்களோ இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக 365 நாட்களும் வெந்நீர் வந்துகொண்டிருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். "இந்த பகுதியில் அதிக நிலக்கரி இருக்கின்றது. பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி வளங்களை பற்றி தெரிந்துகொள்ள, 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் சோதனை செய்வதற்காக ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டன. அத்துடன் 1000 முதல் 2000 மீட்டர் ஆழத்திற்கு வேறு சில ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. அவற்றிலிருந்து வெந்நீர் பெருக்கெடுத்து வந்தது. இது விவசாயத்திற்கு அல்லது வேறு ஏதாவது தேவைகளுக்கு பயன்படும் என நினைத்து இதனை மூடாமல் வைத்தனர். அப்போது முதல் 24 மணி நேரமும் நீர் வந்துகொண்டிருக்கிறது", என்கிறார் இந்த கிராமத்தை சேர்ந்த கோரம் ராம்பாண்டு. "இந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து வெந்நீர் தானாக வெளியேறுகிறது. மின்சாரம், மோட்டார் போன்றவற்றின் உதவியின்றி தண்ணீர் வருகிறது", என்று பகிடேரு கிராமத்தின் முன்னாள் கிராமத் தலைவர் தாடி பிக்‌ஷாம் தெரிவித்தார். அதிகமான வெப்பத்துடன் வரும் நீர் "சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய புவியியல் ஆய்வு மையம் பகிடேரு கிராமத்தின் அருகே 8 ஆழ்துளை கிணறுகளை தோண்டியது. சுமார் ஒரு கிலோமீட்டர் ஆழம் வரை இந்த ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டன. இந்தப் பகுதியில் புவிவெப்ப ஆற்றல் (geothermal energy) இருந்ததற்கான அடையாளம் இருந்ததால் இங்கு இந்த கிணறுகள் தோண்டப்பட்டன. இவை தோண்டப்பட்ட நாளில் இருந்து, பூமியில் உள்ள அழுத்தம் காரணமாக இதிலிருந்து வெந்நீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த நீரின் வெப்பம் கிட்டதட்ட 60 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த நீரில் அதிக அளவில் கந்தகம் இருக்கின்றது", என்று இங்குள்ள சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தின் பொது மேலாளர் துர்கம் ராமசந்தர் பிபிசியிடம் தெரிவித்தார். காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா?11 பிப்ரவரி 2025 எஃகு, அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதித்த டிரம்ப் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?8 மணி நேரங்களுக்கு முன்னர் இதற்கான காரணம் என்ன? பூமியின் உட்புறங்களில் இயற்கையாகவே அதிக வெப்பம் இருக்கின்றது. "பூமியின் உட்புறத்தில் பல வெடிப்புகள் இருப்பதும், ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் வெந்நீர் இருப்பதும்தான், இந்த ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வருவதற்கான காரணமாக இருப்பதாக கருதப்படுகின்றது", என்று ராமசந்தர் கூறினார். இருப்பினும், இதற்கான சரியான காரணத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். படக்குறிப்பு,துர்கம் ராமசந்தர் பயிர் சாகுபடிக்கு உதவும் நீர் பகிடேரு கிராமத்தில் இந்த ஆழ்துளை கிணறுகளில் இருந்து வரும் வெந்நீரை பயன்படுத்தி சுமார் 200 ஏக்கர் அளவிலான விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆழ்துளை கிணறுகளிலிருந்து வரும் இந்த வெந்நீரானது, குளங்களில் ஒருநாள் தேக்கி வைக்கப்பட்டு அதற்கு அடுத்த நாள் வயல்களில் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது. "முன்னதாக இந்த வெந்நீரை நெல் சாகுபடிக்கு பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் இருந்தது. தற்போது இந்த வெந்நீரை ஆற வைத்து பயன்படுத்துவதன் மூலம் நான் இரண்டு ஏக்கர் நிலத்தில் இரண்டு போகம் சாகுபடி செய்கிறேன். இதற்கு முன்பு ஒரு போகத்திற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கிறது. கொதிக்கும் சூட்டில் உள்ள இந்த நீரானது, குளங்களில் சேகரித்து, ஆறவைக்கப்பட்டு பின்னர் வயல்களுக்கு பாசனத்துக்காக அனுப்பப்படுகிறது," என்று விவசாயி பத்ரய்யா கூறினார். பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?11 பிப்ரவரி 2025 கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடுவது தவிர வேறு என்னவெல்லாம் செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு7 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்த வெந்நீரானது, குளங்களில் ஒரு நாள் தேக்கி வைக்கப்பட்டு அதற்கு அடுத்த நாள் வயல்களில் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, இரண்டு ஆழ்துளை கிணறுகளில் இருந்து வந்த வெந்நீர் நின்றுவிட்டதாகவும், மீண்டும் ஆழ்துளை கிணறுகளை தோண்ட வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். "டிசம்பர் 4ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இரண்டு ஆழ்துளை கிணறுகள் முழுமையாக சேதமடைந்துவிட்டன. விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் ஆழ்துளை கிணறுகளை இழந்துவிட்டதால் அவர்களுக்கு கடினமானதாக இருக்கின்றது. அரசாங்கம் இதற்கு தீர்வு கண்டு, ஆழ்துளை கிணறுகளை மீண்டும் தோண்டி தண்ணீர் கொண்டுவரவேண்டும்" என்று விவசாயி சோம நரசய்யா கூறினார். இந்த ஆழ்துளை கிணறுகளே தங்களது வாழ்வாதாரம் எனக் கூறும் இந்த கிராமத்தை சேர்ந்தவர்களான பி. நாகம்மா மற்றும் வெல்லெட்டி சுகுணா, ஏற்கனவே இருக்கும் ஆழ்துளை கிணறுகளுடன் சேர்த்து புதிய ஆழ்துளை கிணறுகளையும் அரசு அமைத்துத் தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர். படக்குறிப்பு, விவசாயி சோம நரசய்யா வெந்நீர் ஆழ்துளை கிணறுகளால் புகழ் பெற்ற கிராமம் இந்த ஆழ்துளை கிணறுகள் காரணமாக, பகிடெரு கிராமம் தனிச்சிறப்பை அடைந்துள்ளது. இப்போது இந்த வெந்நீர் ஆழ்துளை கிணறுகளை காண சுற்றுலா பயணிகள் வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். "எங்கள் பகிடெரு கிராமத்தில் உள்ள கிணறுகளிலிருந்து வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வெந்நீர் வருவதால், எங்கள் கிராமம் தனிசிறப்பு பெற்ற கிராமமாகிவிட்டது. எங்கள் கிராமத்தைக் காண பலர் வருகின்றனர். இது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது", என்று முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தாடி பிக்‌ஷம் மற்றும் இந்த கிராமத்தைச் சேர்ந்த குஞ்சா ரேவதி ஆகியோர் தங்களது மகிழ்ச்சியை பிபிசியுடன் பகிர்ந்துகொண்டனர். ஆனால், உள்ளூர் மக்களால் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் சாதாரண வெப்பத்தில் நீர் வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். கிராமத்தில் ஒரு ஆழ்துளை கிணறு 300 மீட்டர் ஆழத்திற்கு அமைத்தால் தண்ணீர் பொங்கி வழியும் எனவும் அவர்கள் சொல்கின்றனர். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி எவ்வளவு? பாஜக பட்டியலை நிராகரிக்கும் தமிழ்நாடு அரசின் சரிபார்ப்புக் குழு8 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா?11 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, கிராமவாசி சுகுணா வெந்நீரை கொண்டு மின்சாரம் வெந்நீர் தொடர்ந்து 55 முதல் 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வருவதால் அதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக ராமசந்தர் தெரிவித்தார். "அனல் மின் நிலையத்தில், நாம் நிலக்கரியை எரித்து, தண்ணீரை சூடாக்கி, மின்சாரம் தயாரிக்கிறோம். அதேபோல், இங்கு புவிவெப்ப ஆற்றலினால் சூடாக வரும் இந்த நீரை பயன்படுத்தி ஏன் மின்சாரம் தயாரிக்கக் கூடாது? அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டத்தின் கீழ், டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திடம் இந்த திட்டத்தை ஒப்படைத்துள்ளோம்", என்றும் அவர் தெரிவித்தார். இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை என்ன வித்தியாசம்? காஸாவில் டிரம்ப் செய்ய நினைப்பது என்ன?11 பிப்ரவரி 2025 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்தது ஏன்?11 பிப்ரவரி 2025 ''தற்போது பகிடெருவில் 20 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நோக்கில் ஒரு புவி வெப்ப ஆற்றல் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது'' என ராமசந்தர் தெரிவித்தார். "20 கிலோவாட் மின் உற்பத்தி வெற்றி பெற்றால், இது இந்தியாவில் இத்தகைய முதல் திட்டமாக இருக்கும்", என்றும் அவர் கூறினார். புவிவெப்ப ஆற்றல் ஆலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போது அது முதலில் தங்களது கிராமத்தில் இருக்கும் தெருவிளக்குகளை எரியவைக்க பயன்படுத்தப்படவேண்டும் என பகிடேரு பஞ்சாயந்து தலைவர் சாவித்ரி கேட்டுக்கொண்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c897n989p08o
  25. 12 FEB, 2025 | 05:19 PM தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி சட்ட ஆட்சியைப் பலப்படுத்தப் போவதாக தனது கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்டார். ஆனால், சட்டவிரோதமாக சட்ட ஆட்சிக்கு எதிராக, தனியார் காணியில் ஆக்கிரமிப்பு ரீதியாகக் கட்டப்பட்ட தையிட்டி விகாரையைப் பாதுகாப்பதில் பௌத்த சாசன அமைச்சரும் பொலிஸாரும் படையினரும் அக்கறையாக உள்ளனர் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். சட்ட ஆட்சி தையிட்டி விகாரை விடயத்தில் செல்லுபடியாகாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்தத்துக்கு ஒரு சட்டம், ஏனைய மதத்தவர்களுக்கு ஒரு சட்டம் என்ற பாரபட்சங்கள் புதிய தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் நடைபெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தையிட்டி விகாரை தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை (12) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: உண்மையில் சிங்களவர் ஒருவருக்குச் சொந்தமான தனியார் காணியில் கோவிலோ தேவாலயமோ பள்ளிவாசலோ அமைப்பதற்கு இந்த அரசாங்கம் கடைசி வரை அனுமதிக்காது. அவ்வாறு தவறுதலாக அமைத்திருந்தால், உடனடியாக இந்த அரசாங்கம் உடைத்து அழித்து விட்டிருக்கும். இதனை சட்ட ஆட்சி என்று கூறுவர். அந்த சட்ட ஆட்சி தையிட்டி விகாரை விடயத்தில் செல்லுபடியாகாது. அதே போன்றுதான் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்தத்துக்கு ஒரு சட்டம், ஏனைய மதத்தவர்களுக்கு ஒரு சட்டம் என்ற பாரபட்சங்கள் புதிய தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் நடைபெறுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி சார்பாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இவற்றை கண்டும் காணாமல் இருக்கின்றார்கள். இதுதான் கூட்டுப் பொறுப்புக் கொள்கை என்று தேசிய மக்கள் சக்தி கற்பிக்கிறது. வடக்கு, கிழக்கு காணி அபகரிப்புகளைக் கண்டும் காணாமல் இருப்பதற்கு வடக்கு, கிழக்கு மக்கள் அங்கிருந்து தமிழ்ப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்திருக்க மாட்டார்கள். வடக்கில் தமிழ் அரசுக் கட்சியினர் வேட்பாளர் தெரிவில் விட்ட தவறுதான் அங்கு தேசிய மக்கள் சக்தியில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலதிகமாக தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணமாகும். இல்லாவிட்டால் அந்த ஆசனங்கள் தமிழ் அரசுக் கட்சிக்கு உரியதாக அமைந்திருக்கும். இந்த நிலையில், வட பகுதித் தமிழ் மக்கள் உணர்ந்திருப்பார்கள். ஆளுங்கட்சியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் தமிழர்களுக்கு எதிரான எதனையும் தட்டிக்கேட்க முடியாமல் உள்ளது. தையிட்டி விகாரை, வெடுக்குநாறி மலை, மயிலத்தமடு மாதவனை, கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் போன்ற விடயங்களையும் தேசிய மக்கள் சக்தி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களால் தட்டிக்கேட்க முடியாமல் உள்ளதை அறிய முடிகின்றது. எனவே தமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதன் மூலமாகவே தமிழர்களின் பிரச்சினைகளை தடுக்க முடியும் அல்லது குறைக்க முடியும். இதனைத் தமிழ் மக்கள் உணரும் சந்தர்ப்பத்தை தையிட்டி விகாரை உணர்த்துகிறது என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206521

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.