Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 07 FEB, 2025 | 11:46 AM படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை செய்யவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து ஒரு நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தத் தயார் என்றும் இன்று வெள்ளிக்கிழமை (7) பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206050
  2. சுவீடனில் துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான கல்வி நிறுவனம் ஒன்று உள்ளது. கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா என்று அழைக்கப்படும் இந்தப் கல்வி நிறுவனம், 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறது. இந்த கல்வி நிறுவனத்தில் தங்கி படித்து வந்த மாணவர்கள் பெரும்பாலானோர் பரீட்சை முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். எனினும் ஒரு சில மாணவர்கள் கல்வி நிறுவனத்தில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் இந்த கல்வி நிறுவனத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 11 பேர் பலியானார்கள். அதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து அந்நாட்டு பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். https://thinakkural.lk/article/315106
  3. Published By: VISHNU 06 FEB, 2025 | 07:24 PM புதிய முப்படைத் தளபதிகள் வியாழக்கிழமை (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர். புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்தனர். பதவியேற்ற பின்னர், முப்படைத் தளபதிகள் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியைச் சந்தித்ததோடு ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினர். https://www.virakesari.lk/article/206015
  4. 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் வெளியிட்டார். அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை 122.41 கோடி ரூபாவாகும் என அவர் மேலும் தெரிவித்தார். இவர்களில், கெஹெலிய ரம்புக்வெல்ல 959 மில்லியன் ரூபா இழப்பீட்டைப் பெற்றுள்ளதோடு, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ 934 மில்லியன் ரூபாவும், காமினி லொக்குகே 749 மில்லியன் ரூபாவும், அலி சப்ரி ரஹீம் 709 மில்லியன் ரூபா மற்றும் நிமல் லன்சா 692 மில்லியன் ரூபாவை இழப்பீட்டுத் தொகையாக பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். கபில நுவன் அத்துகோரள – ரூ. 504,000 விமலவீர திசாநாயக்க – ரூ. 550,000 கீதா குமாரசிங்க – ரூ. 972,000 ஜனக திஸ்ஸகுட்டிஆராச்சி – ரூ. 1,143,000 குணபால ரத்னசேகர – ரூ. 1,412,780 பிரேம்நாத் சி. தொலவத்த – 23 இலட்சம் ரூபா பிரியங்கர ஜயரத்ன – ரூ. 2,348,000 சம்பத் அத்துகோரள – ரூ. 2,540,610 ஜயந்த கெடகொட – ரூ. 2,814,800 விமல் வீரவன்ச – ரூ. 2,954,000 பேராசிரியர் சன்ன ஜயசுமன – ரூ. 3,334,000 அகில எல்லாவல – ரூ. 3,554,250 சமல் ராஜபக்ஷ – ரூ. 6,539,374 சந்திம வீரக்கொடி – ரூ. 6,948,800 அஷோக பிரியந்த – ரூ. 7,295,000 சமன் பிரிய ஹேரத் – 105.2 இலட்சம் ரூபா ஜனக பண்டார தென்னகோன் – 105.5 இலட்சம் ரூபா ரோஹித அபேகுணவர்தன – 116.4 இலட்சம் ரூபா விசேட வைத்தியர் கீதா அம்பேபொல – 137.8 இலட்சம் ரூபா சஹன் பிரதீப் – 171.3 இலட்சம் ரூபா செஹான் சேமசிங்க – 185.1 இலட்சம் ரூபா இந்திக்க அநுருத்த – 195.5 இலட்சம் ரூபா மிலான் ஜயதிலக – 223 இலட்சம் ரூபா வைத்தியர் ரமேஷ் பத்திரன – 281 இலட்சம் ரூபா துமிந்த திசாநாயக்க – 288 இலட்சம் ரூபா கனக ஹேரத் – 292 இலட்சம் ரூபா டீ.பி.ஹேரத் – 321 இலட்சம் ரூபா பிரசன்ன ரணவீர – 327 இலட்சம் ரூபா டபிள்யு டீ.வீரசிங்க – 372 இலட்சம் ரூபா ஷாந்த பண்டார – 391 இலட்சம் ரூபா எஸ்.எம்.சந்திரசேன – 438 இலட்சம் ரூபா சனத் நிஷாந்த – 427 இலட்சம் ரூபா சிரிபால கம்லத் – 509 இலட்சம் ரூபா அருந்திக்க பெர்னாண்டோ – 552 இலட்சம் ரூபா சுமித் உடுக்கும்புர – 559 இலட்சம் ரூபா பிரசன்ன ரணதுங்க – 561 இலட்சம் ரூபா கோகிலா குணவர்தன – 587 இலட்சம் ரூபா மொஹான் பீ டி சில்வா – 601 இலட்சம் ரூபா நிமல் லன்சா – 692 இலட்சம் ரூபா அலி சப்ரி ரஹீம் – 709 இலட்சம் ரூபா காமினி லொக்குகே – 749 இலட்சம் ரூபா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ – 934 இலட்சம் ரூபா கெஹெலிய ரம்புக்வெல்ல – 959 இலட்சம் ரூபா https://thinakkural.lk/article/315167
  5. காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செவ்வாய்க்கிழமை பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காஸா முனையை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது தொடர்பான முன்மொழிவை வழங்கியதோடு, அமெரிக்கா "அதற்கான (காஸா) வளர்ச்சிப் பணிகளையும் செய்யும்" எனக் கூறினார். பாலத்தீனர்கள் நிரந்தரமாக ஜோர்டான் அல்லது எகிப்துக்கு மாற்றப்பட வேண்டும் என டிரம்ப் முன்னதாகப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் இப்படிப் பேசியிருந்தார். இது குறித்துப் பேசிய நேதன்யாகு, "இது கவனிக்கத் தகுந்த விவகாரம்" என்றதோடு, "இதுபோன்ற சிந்தனைகள் மத்தியக் கிழக்கின் வடிவத்தை மாற்றியமைப்பதோடு, அமைதியைக் கொண்டு வரும்" என்றார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மத்தியக் கிழக்கில் புதிய பதற்றத்தை ஏற்படுத்துமா என்பது போன்ற கேள்விகள் எழுந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களிடம் இருந்து இதற்கான எதிர்வினைகளும் வந்துள்ளன. காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா? வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் - காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை காஸாவில் அமைதி: பிரிந்த சொந்தங்கள் மீண்டும் சேர்ந்த உணர்ச்சிமிகு தருணங்கள் காஸா இப்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? கடந்த 2007ஆம் ஆண்டு முதல் காஸா ஹமாஸ் அமைப்பின் நிர்வாகத்தின்கீழ் உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு பாலத்தீன பகுதிகளில் நடந்த தேர்தல்களில் ஹமாஸ் வெற்றி பெற்றதோடு, அதன் போட்டியாளரான ஃபத்தா அமைப்பைப் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றியதன் மூலம் காஸாவில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக உருவெடுத்தது. ஹமாஸ் அமைப்பானது இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில மேற்குலக நாடுகளால் தீவிரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. காஸாவின் 41 கி.மீ நீளமும் 10 கி.மீ அகலமும் கொண்ட நிலப்பரப்பு, சுற்றிலும் இஸ்ரேல், எகிப்து மற்றும் மத்தியத் தரைக்கடலால் சூழப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே பல பெரிய மோதல்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு மோதலின்போதும் இரு தரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் காஸாவில் வசிக்கும் பாலத்தீனர்களே. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் ஆயுதக் குழுவினர் காஸா மீது தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 250க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். இது காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் 15 மாத தொடர் தாக்குதலுக்கு வித்திட்டது. இதில் 47,540 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையினர் பெண்களும் குழந்தைகளும் என்று ஹமாஸால் இயக்கப்படும் மருத்துவ அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், இஸ்ரேல், ஹமாஸ் இருதரப்பும் போர்நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டது. பல மாதங்களாக நடைபெற்ற மறைமுகமான கடினமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டது. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவது, ஹமாஸால் சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது ஆகியவற்றுக்கு மாற்றாக பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பது போன்ற உடன்படிக்கைகள் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் எட்டப்பட்டன. அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிட்டு அழைத்து வந்தது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன?8 மணி நேரங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி?7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா முனையை டிரம்ப் எடுத்துக் கொள்ள முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES காஸா முனையைக் கைப்பற்றுவது குறித்து டிரம்ப் என்ன திட்டம் வைத்துள்ளார் என்பது இதுவரையிலும் வெளிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இந்த அறிவிப்பு உலகளாவிய கண்டனங்களைப் பெற்றுள்ளது. பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தத் திட்டத்தைப் புறக்கணித்துள்ளன. பாலத்தீனர்களை இடம்பெயரச் செய்யும் எந்த முடிவிலும் தங்களின் நிலைப்பாடு தெளிவாகவும், வெளிப்படையாகவும் இருப்பதாக வளைகுடா பிராந்திய நாடான சௌதி அரேபியா கூறியுள்ளது. ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளும் பாலத்தீனர்களை வெளியேற்றுவதற்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. சர்வதேச சட்டங்களின்படி மக்களை வலுக்கட்டாயமாக இடம் மாற்றுவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பாலத்தீனர்களும் அரபு நாடுகளும் டிரம்பின் இந்தத் திட்டத்தைக் கட்டாய வெளியேற்றம் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு சற்றும் குறையாத ஒன்று எனக் கருதுகின்றன. அமெரிக்காவை பொருத்தவரை, டிரம்ப் அதிபராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்புவரை, வெளிவிவகாரங்களில் தலையிடுவது முதன்மையாக இருக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம், குடியேற்றம் போன்றவையே டிரம்ப் ஆதரவாளர்களின் முக்கியப் பிரச்னையாக இருந்தன. தேர்தலுக்கு முன்னதாக வெளியான இப்சோஸ், யுகோவ் கருத்துக் கணிப்புகளின்படி, வாழ்க்கைச் செலவில் கவனம் செலுத்தும் அரசை அமெரிக்கர்கள் விரும்புகிறார்கள் எனக் கூறப்பட்டது. காஸாவை கைப்பற்ற வேண்டுமென்ற டிரம்பின் நோக்கத்தில், அமெரிக்க படைகளை அனுப்பும் நடவடிக்கையும் உள்ளடங்குமா என்பது தெரியவில்லை. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "என்ன தேவையோ அதைச் செய்வோம்" என்று பதிலளித்தார். அரசியலமைப்பின்படி ராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான தீர்மானத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். தற்போதைய சூழலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் குடியரசு கட்சிக்குப் பெரும்பான்மை உள்ளது. பெரும் எண்ணிக்கையில் ஆயுத விற்பனையை மேற்கொள்ளவும் நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படும், அதோடு அது தொடர்பான குழுக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். வாஷிங்டனில் உள்ள மத்தியக் கிழக்கு நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கும் ஹசன் மீயம்னா இது குறித்துப் பேசுகையில், "டிரம்ப் இது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் அவருக்கு நாடாளுமன்றத்தின் வலுவான ஆதரவு இருக்கிறது" என்றார். பேராசிரியர் மீயம்னாவின் கூற்றுப்படி, காஸாவை மீட்டுருவாக்கம் செய்வதற்காகப் பெரும் தொகையைச் செலவிடுவது பற்றி டிரம்ப் இதுவரை எதுவும் பேசவில்லை, இதுகுறித்த திட்டங்கள் இன்னமும் தெளிவற்ற நிலையில் இருக்கின்றன. அதோடு, அரபு நாடுகளிடம் இருந்து நிதியைப் பெற்று காஸா மற்றும் மேற்குக் கரையையை மறுகட்டமைப்பு செய்ய அவர் திட்டமிட்டிருக்கலாம் எனவும் கருதப்படுவதாக மீயம்னா குறிப்பிட்டார். காஸா குறித்த டிரம்பின் பேச்சு இஸ்ரேல், ஹமாஸின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆபத்தில் தள்ளுமா?5 மணி நேரங்களுக்கு முன்னர் விடாமுயற்சி: இரண்டாம் பாதியால் வீண்முயற்சி ஆனதா? - ஊடக விமர்சனம்4 மணி நேரங்களுக்கு முன்னர் வரலாற்று ரீதியாக காஸா முனை யாருக்கு சொந்தம்? பட மூலாதாரம்,REUTERS கடந்த 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு நிறுவப்படுவதற்கு முன்னதாக காஸா பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்தது. தன்னைச் சுதந்திர நாடாக இஸ்ரேல் அறிவித்துக் கொண்டதற்கு மறுநாளே ஐந்து அரபுலக நாடுகளின் ராணுவங்கள் அதைச் சூழ்ந்து தாக்குதல் நடத்தின. கடந்த 1949ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலமாக சண்டை முடிவுக்கு வந்தபோது பிராந்தியத்தின் பெரும்பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியிருந்தது. ஒப்பந்தத்தின்படி, காஸா முனையை எகிப்து ஆக்கிரமித்திருந்தது, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமை ஜோர்டானும், மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலும் ஆக்கிரமித்திருந்தன. பின்னர், 1967ஆம் ஆண்டு போருக்குப் பின்னர் காஸாவில் இருந்து எகிப்து விரட்டப்பட்டு, இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதன் பின்னர் இஸ்ரேலிய குடியிருப்புகள் கட்டப்பட்டு காஸாவின் பாலத்தீன மக்கள் ராணுவ அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இஸ்ரேல் 2005ஆம் ஆண்டில் தனது ராணுவத்தையும், இஸ்ரேலிய குடியேறிகளையும் முழுமையாக விலக்கிக் கொண்டது. ஆனாலும் எல்லைகள், வான் எல்லை கடற்கரை போன்றவற்றில் தனது கட்டுப்பாட்டை இஸ்ரேல் தக்கவைத்துக் கொண்டது. இது நடைமுறையில் மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மீதான முழுமையான கட்டுப்பாட்டை இஸ்ரேலுக்கு வழங்கியது. காஸா மீது இஸ்ரேல் கொண்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு, காஸாவை இப்போதும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகவே கருதுகிறது. 2006ஆம் ஆண்டு பாலத்தீன தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றது. இதன் பின்னர் வந்த ஆண்டில் அதன் போட்டிக்குழுக்களை கடுமையான சண்டையின் மூலம் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றியது. இதற்கு எதிர்வினையாக இஸ்ரேலும் எகிப்தும் கடுமையான தடைகளை விதித்தன. இஸ்ரேல் தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை இறுக்கியது. இதன் பிறகு வந்த ஆண்டுகளில் ஹமாஸ், இஸ்ரேல் இடையே, 2008-09, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் பல பெரிய மோதல்கள் நிகழ்ந்தன. 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் பெரிய மோதல் ஒன்று தொடங்கியது. பின்னர் 11 நாட்கள் கழித்து போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா: இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்படுவது இரு நாட்டு உறவை பாதிக்குமா?8 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கா: பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்க தடை விதிக்கும் டிரம்ப் - பிற நாடுகளில் என்ன நிலை?5 பிப்ரவரி 2025 காஸாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூற்றுப்படி, காஸாவில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பிராந்தியங்களில் அறியப்படாத அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கைப்படி, மூன்று பில்லியன் பேரல் அளவுக்கு எண்ணெய் வளம் அங்கு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. "நிலவியலாளர்கள், இயற்கை வளப் பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் பாலத்தீன பிராந்தியத்தில் மேற்குக் கரையின் சி-ஏரியா மற்றும் காஸாவின் மத்திய தரைக்கடல் கடற்கரைப் பகுதி ஆகியவை குறிப்பிடத்தக்க அளவுக்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளப்படுகையின் மீது அமைந்துள்ளது" என்று அந்த அறிக்கை கூறுகிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள லாவன்ட் படுகையில் கண்டறியப்பட்டுள்ள புதிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு படுகைகளைச் சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை "2017ஆம் ஆண்டு விலை நிலவரப்படி இந்திய மதிப்பில் சுமார் 39.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் (453 பில்லியன் அமெரிக்க டாலர்) 122 டிரில்லியன் கனஅடி அளவுக்கான இயற்கை எரிவாயு மற்றும் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் (71 பில்லியன் அமெரிக்கடாலர்) மதிப்பிலான 1.7 பில்லியன் பேரல் எண்ணெய் வளம் இருக்கலாம்" எனக் கூறுகிறது. டிரம்பின் பரிந்துரைகள் எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை எடுப்பது தொடர்பானதாக இருக்கலாம் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். மற்றவர்களின் கூற்றுப்படி காஸா மீதான அவரது விருப்பங்களுக்கு பொருளாதாரத்தைக் காட்டிலும் அரசியல் காரணங்களே இருப்பதாகக் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES புவிசார் அரசியலில் சிறப்பு ஆர்வம் கொண்ட எரிசக்திக் கொள்கை நிபுணரான லாரி ஹேடன் பிபிசியிடம் பேசுகையில் காஸாவின் கடலோரப் படுகைகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பது 2000ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே கண்டறியப்பட்டதாகவும், அப்போதிருந்தே அப்பகுதியின் வளர்ச்சிக்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் கூறுகிறார். காஸாவை கையகப்படுத்துவது குறித்து டிரம்ப் முன்மொழிவுகளை வைத்திருப்பதற்கு "இதுவும் ஒரு காரணியாக இருக்கலாம்" என்றாலும் இது மட்டுமே காரணமாக இருக்காது என்று கூறினார். "காஸாவில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அளவிடுவதற்கு இன்னமும் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டும் மற்றும் நமது எதிர்பார்ப்புகளையும் மேலாண்மை செய்ய வேண்டும்" என்கிறார் லாரி. காஸாவை சேர்ந்த மற்றொரு பொருளாதார நிபுணரான மஹர் டாபா பேசுகையில், "காஸாவுடன் ஒப்பிடுகையில் எண்ணெய் வளத்தை அதிகமாகக் கொண்ட வளைகுடா உள்ளிட்ட நாடுகள் டிரம்பின் வசம் உள்ளன. காஸா மீதான கவனக் குவிப்புக்கு அரசியல் காரணங்களே இருக்கின்றன" என்றார். பிபிசியிடம் பேசிய இஸ்ரேலுக்கான அமெரிக்க முன்னாள் தூதரான டென்னிஸ் ராஸ், "காஸாவில் நிலவும் பிரச்சனையை ஒரு ரியல் எஸ்டேட் கட்டட பிரச்னையைப் போல டிரம்ப் பார்ப்பதாக" குறிப்பிட்டார். "எப்போதுமே வறுமையில் வாடும் இப்பகுதியை நாங்கள் மாற்றிக் காட்டப் போகிறோம்" என டிரம்ப் கூறியதைச் சுட்டிக்காட்டிய டென்னிஸ், அவர் இதில் மிகத் தீவிரமாக இருப்பதாகத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார். இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு - ஏன்?5 பிப்ரவரி 2025 ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?3 பிப்ரவரி 2025 டிரம்பின் அறிவிப்பு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, டெய்ர் அல் பலாவில் குளிர்காலத்தில் மோசமான வானிலை நிலைமைகளுடன் போராடி, இடிபாடுகளுக்கு மத்தியில் தற்காலிக கூடாரங்களில் உயிர்வாழ முயலும் பாலத்தீனர்கள் டிரம்பின் முன்மொழிவை நேரடியாகத் தங்களை காஸாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையாகவே பாலத்தீனர்கள் பார்க்கின்றனர். பாலத்தீன அதிபரான முகமது அப்பாஸ், காஸாவில் இருந்து பாலத்தீனர்களை வெளியேற்றும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதை எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் அழைப்பை "சர்வதேச சட்டங்களின் மீதான தீவிர விதிமீறல்" எனவும் அப்பாஸ் குறிப்பிடுகிறார். "எங்கள் மக்களின் உரிமைகள் மீதான எந்த மீறலையும் அனுமதிக்க முடியாது, நாங்கள் பல்லாண்டுக் காலமாகச் சிரமப்பட்டிருக்கிறோம், மிகப்பெரிய தியாகங்களைச் செய்திருக்கிறோம்" என்று அப்பாஸ் கூறுகிறார். ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலத்தீன குழுவின் தலைவரான ரியாத் மன்சூர் பேசுகையில் பாலத்தீனர்கள் ஒரு காலத்தில் தங்கள் வீடுகளாக இருந்தவற்றைத் திரும்பப் பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். "பாலத்தீனர்களை நல்ல இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என விரும்புபவர்கள், தற்போது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் தங்களின் அசலான வாழ்விடங்களுக்குத் திரும்புவதை அனுமதிக்கட்டும்" எனவும் மன்சூர் குறிப்பிட்டார். காஸா முனையில் வசிக்கும் சாதாரண பாலத்தீன மக்கள் இதை தண்டனையின் வடிவமாகப் பார்க்கின்றனர். காஸாவில் இருந்து பிபிசியிடம் பேசிய 43 வயதான மகமூத் அல்மாஸ்ரி காஸாவில் வசிக்கும் ஒருவர்கூட டிரம்ப் கூறுவதை ஒப்புக் கொள்ளவில்லை என்றார். "நாங்கள் இடிபாடுகளின் குவியலுக்கு நடுவே இருந்தாலும் சரி, எங்கள் வீடுகளை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டோம், டிரம்ப் போன்றோர் அமெரிக்கர்கள் யாரையாவது அவர்களின் வாழ்விடத்தில் இருந்து வெளியேறி நிரந்தரமாக வேறு எங்கேனும் குடியேறுமாறு கேட்பார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார். காஸாவில் வசிக்கும் 28 வயது பெண்ணான செனபெல் அல்கவுல் டிரம்பின் முன்மொழிவுகளை "மிகவும் அபாயகரமானது" எனக் குறிப்பிடுகிறார். "வலி, பட்டினி, அழிவு, மரணம் போன்றவற்றை எதிர்கொள்வதால் காஸா மீதான எங்கள் உரிமையை எளிதாக விட்டுத் தருவோம் என்று டிரம்ப் நினைக்கிறார்" எனவும் செனபெல் கூறுகிறார். பிபிசியிடம் பேசிய பாலத்தீன வழக்கறிஞரான யூஸ்ஸெஃப் அல்யாதத், "காஸாவை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை, அழுத்தம் கொடுக்கும் கருவியாக டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். இது காஸா மக்களைத் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவொரு தீங்கிழைக்கும் நடவடிக்கை" என்று குறிப்பிடுகிறார். நெவின் அப்தெலால் போன்ற பாலத்தீனர்கள் மறுகட்டமைப்பு திட்டம் என்ற ஒன்று இருக்குமானால், அதை பாலத்தீனர்களின் கரங்களால் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். மறுகட்டமைப்பு முடியும் வரை அங்கு தற்போது இருக்கும் நல்ல இடங்களுக்கு மக்கள் நகர வேண்டும். ஆனால் ஒருவரும் வெளியேறக்கூடாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3vp2lq375ro
  6. படிப்படியாக காணிகளை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்கிறார் வடக்கு ஆளுநர் இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். அரசாங்கமும் அந்த விடயத்தில் நேரான சிந்தனையில்தான் உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநருக்கும் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (Pயுசுடு) இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் காணி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். வலி. வடக்கில் முன்னைய ஜனாதிபதியின் காலத்தில் 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அந்தக் காணியை விவசாயக் காணி என்று தவறாக அடையாளப்படுத்துகின்றனர். அது மக்களின் குடியிருப்புக் காணி. அந்தப் பகுதியிலுள்ள இராணுவ முகாமும் இன்னமும் அகற்றப்படவில்லை. மக்கள் குடியிருக்கவும் அனுமதிக்கப்படவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் வலி. வடக்கில் இன்னமும் மீள்குடியமர வேண்டியவர்களின் எண்ணிக்கை தொடர்பில் தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது. எமது காணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இப்போதும் எமது காணிகளுக்குள் பாதுகாப்புத் தரப்பினர் புதிய கட்டடங்களை அமைக்கின்றனர். பலாலி வீதியில், இன்னமும் மூன்று கிலோ மீற்றர்கள் விடுவிக்கப்பட்டாலே மக்களுக்கு முழுமையான நன்மை கிடைக்கும். விமான நிலையத்துக்கு மேலதிகமாக காணிகள் சுவீகரிக்கப்படத் தேவையில்லை. ஏற்கனவே சுவீகரித்த காணிகளே போதுமானது’ என ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோன்று தையிட்டி திஸ்ஸவிகாரை சட்டவிரோதக் கட்டடம் எனவும் விகாரைக்கு உரியதான காணியை மாற்றுக் காணியாக வழங்கினாலும் அது தொடர்பிலும் சந்தேகம் இருப்பதாகவும் காணி உரிமையாளர்கள் இந்தச் சந்திப்பில் தெரிவித்தனர். மாற்றுக்காணியின் உறுதியில் சிக்கல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர்கள், தமது காணிகளை விடுவித்துத்தரவேண்டும் என்று கோரினர். இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுநர், காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மாறாக நான் நடந்து கொள்ளமாட்டேன். காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை எனக் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் இரணைதீவில் கடற்படையினர் இப்போதும் பாஸ் நடைமுறையைப் பேணுகின்றனர் என்றும் பாதுகாப்புத் தரப்பினரால் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் சிறப்பு அதிரடிப்படையினராலும் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன என ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், கேப்பாபிலவு மாதிரிக் கிராமத்தில் சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ள என்றும் காணி விடுவிப்பின் அவசியத்தை முல்லைத்தீவு மாவட்டப் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். மேலும் யாழ். மாவட்டத்தில் காணியற்ற 114 குடும்பங்கள் மருதங்கேணியில் குடியமர்வதற்கு இணக்கம் வெளியிட்டபோதும் அவர்களுக்கு காணிகள் இதுவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை எனவும் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் அரச காணிகள் பகிர்ந்தளிப்பில் நிலவும் சிக்கல் தொடர்பில் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. அவை தொடர்பில் கவனமெடுப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர் எனத் தெரிவித்ததுடன் வவுனியா மாவட்டத்தில் விரைவில் நடமாடும் சேவை நடத்தி தீர்க்கக் கூடிய காணிப் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார். மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பது ஜனாதிபதியினது நிலைப்பாடு எனவும் அந்த நிலைப்பாட்டையே நானும் வலியுறுத்துகின்றேன் எனக் குறிப்பிட்ட ஆளுநர், மாவட்டச் செயலர்களாக 4 மாவட்டங்களில் பதவி வகித்தவன் என்ற அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் தொடர்பான விவரங்கள் தெரியும் என்றும் அதனடிப்படையில் இது தொடர்பில் ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பினருடன் பேச்சு நடத்தி வருவதாகவும் இதன்போது தெரிவித்தார். https://thinakkural.lk/article/315161
  7. வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார் 7 மில்லியன் பேர் உயிரிழப்பு - வைத்திய நிபுணர் நிரஞ்சன் திஸாநாயக்க Published By: VISHNU 06 FEB, 2025 | 06:41 PM (செ.சுபதர்ஷனி) உலகளாவிய ரீதியில் வருடாந்தம் வளி மாசடைதல் காரணமாக சுமார் 7 மில்லியன் பேர் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு முன்னரே உயிரிழப்பதாக சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத் தலைவர் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதன்கிழமை (5) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் வாழும் சூழலில் உள்ள வளி மாசடைந்திருக்குமாயின் எம்மால் காற்றை சுவாசிக்காமல் இருக்க முடியாது. நாளாந்தம் 10 ஆயிரம் லிட்டர் காற்றை உள்ளெடுத்து வெளியிடுகிறோம். அவ்வாறு உடலை வந்தடையும் வளியில் உள்ளடங்கியுள்ள நச்சுப் பதார்த்தங்களும், தீங்கு விளைவிக்கும் காரணிகளும் நுரையீரல் மாத்திரமல்லாமல் உடல் முழுவதும் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஒருவரது ஆயுட்காலமும் குறைவடைந்துச் செல்வதாக தெரியவந்துள்ளது. வருடாந்தம் வளி மாசடைதல் காரணமாக சுமார் 7 மில்லியன் பேர் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு முன்னரே உயிரிழப்பதாக, 70 ஆயிரம் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது மிகப் பெரிய தொகையாகும். வெளியிடங்கள் மற்றும் வீட்டின் உட்புற சூழலில் நிகழும் காற்று மாசு என்பன சுவாச நோய்களை ஏற்படுத்துவதுடன் நாட்பட்ட நோயாளர்களின் நோய் நிலைமையை தீவிரப்படுத்துகிறது. புகைப்பிடித்தல் உள்ளிட்ட ஏனைய காரணிகளால் ஆண்களே அதிகளவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனினும் அண்மைகாலமாக பெண்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு வளி மாசடைதலே பிரதான காரணம் என இந்திய ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. காற்றில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் சுவாசத்தின் ஊடக உடலினுள் சென்று இரத்த அணுக்களுடன் கலப்பதால் அடுத்த தலைமுறையினரும் சுவாச நோய்களுக்கு ஆளாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கர்ப்பிணித் தாய் ஒருவர் நச்சு வாயுக்கள் அடங்கிய காற்றை சுவாசிப்பதால் அவற்றின் தாக்கம் கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கலாம் என்றார். https://www.virakesari.lk/article/206012
  8. ஆசாத் மௌலானவை கைது செய்ய சிஐடியினருக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் ஆசாத் மௌலானவை நாட்டிற்கு மீண்டும் அழைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை சிறந்த விடயம். சிஐடியினருக்கு ஒத்துழைப்பு வழங்கி ஆசாத் மௌலானவை கைது செய்ய உதவுவேன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து முன்னாள் செயலாளர் ஆசாத் மௌலானா வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு பிள்ளையான் இதனை தெரிவித்துள்ளார். உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து வெளிநாட்டில் நிரந்தரவதிவிடத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆசாத் மௌலானா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது. ஏன் அவர் அந்தவேளை அது குறித்த விபரங்களை அம்பலப்படுத்தாமல், நான்கு வருடங்கள் காத்திருந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் சனல் 4ற்க்கும் சென்றார்? ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள்.அவர்களிற்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும்,ஐஎஸ் மற்றும் முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா? நான் ஆயுதப்போராட்டத்தை விரும்பாததால் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து முதலமைச்சரானேன். 2015 முதல் 2020 வரைசிறையிலிருந்த ஒருவரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பேரழிவு தாக்குதலை எவ்வாறு திட்டமிட முடியும். ஆசாத் மௌலானவை நாட்டிற்கு மீண்டும் அழைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை சிறந்த விடயம். சிஐடியினருக்கு ஒத்துழைப்பு வழங்கி ஆசாத் மௌலானவை கைது செய்ய உதவுவேன் என தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/315159
  9. தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை ஏற்றியதற்கு யாழ். பல்கலை நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும் - சரத் வீரசேகர 06 FEB, 2025 | 07:11 PM (எம்.வை.எம்.சியாம்) கடந்த சுதந்திர தினத்தின்போது யாழ். பல்கலைக்கழகத்தில் பிரதான கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தேசியக் கொடியை கீழே இறக்கி அதற்கு பதிலாக அங்கு கறுப்புக் கொடியை ஏற்றியமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும். அதேபோன்று உரிய தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த சுதந்திர தினத்தின்போது யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தேசியக் கொடியை கீழே இறக்கி அங்கு கறுப்புக்கொடியொன்று ஏற்றப்பட்டது. இது நாட்டுக்கு ஏற்படும் அவமரியாதை மாத்திரமல்ல. ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்காகவும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் போராடிய இராணுவ வீரர்களுக்கு செய்யும் அகௌரவமாகும். வக்கிர குணம் உள்ளவர்களால் மாத்திரமே இவ்வாறு நடந்துகொள்ள முடியும். அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, தெற்கில் இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். அவ்வாறாயின் சுதந்திர தினத்தை நாட்டின் அனைத்து மக்களும் கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் வடக்கில் மாத்திரம் கறுப்புக்கொடி ஏற்றுவது என்பது தெற்கில் உள்ள மக்களின் உணர்வை தூண்டுவதாக அமையும். யாழ். பல்கலைக்கழகம் ஏனைய பல்கலைக்கழகங்களை போன்று இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. எனவே இவ்வாறு நடந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு அனுமதி அளித்தமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் அதன் நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும். விடயத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/205998
  10. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது அசாத் மவுலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ச, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். “தயவு செய்து, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை படியுங்கள், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வழங்கியுள்ள சாட்சியங்கள் உட்பட.. குறித்த அறிக்கையில் உள்ளதைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது” என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச டெய்லி மிரர் நாளிதழுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/315155
  11. "காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை" Published By: RAJEEBAN 05 FEB, 2025 | 03:32 PM காசாவை விட்டு வெளியேறும் எண்ணமில்லை என காசா மக்கள் தெரிவித்துள்ளனர். காசா மக்களை வேறு பகுதிகளில் மீள்குடியேற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை குறித்து மிகுந்த வெறுப்படைந்துள்ளதாக காசாவில் வசிக்கும் ஒருவர் தெரிவித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது, அக்ரம்கான் ரபாவிற்கும் கான் யூனிசிற்கும் இடையில் காசாவின் தென்பகுதியில் வசிக்கின்றார். யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் காசாவின் வடபகுதியில் பலர் தங்கள் பகுதிகளிற்கு திரும்புவதை அவர் பார்த்துள்ளார். 2023 ஒக்டோபர் மாதம் 7 ம்திகதி மோதல் வெடித்த பின்னர் காசாவிலிருந்த 70 வீதமான கட்டிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக ஐ.நா மதிப்பிட்டுள்ள போதிலும் பாலஸ்தீனியர்கள் வேறு நாட்டிற்கு செல்வதை விட தற்காலிக தங்குமிடங்களிலேயே வாழ விரும்புவார்கள் என அக்ரம் கான் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்கள் மீள்எழும் திறன் கொண்டவர்கள், அவர்கள் இன்னமும் இங்கேயே வாழ விரும்புகின்றனர், அவர்கள் வேறு எங்கும் செல்வார்கள் என நான் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் குடிநீரை போக்குவரத்தை அடிப்படை வாழ்விற்கான விடயங்களை பெறுவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர், ஆனால் அவர்கள் இந்த மண்ணிலிருந்து வெளியேறுவது வேறு எங்காவது செல்வது குறித்து ஒருபோதும் சிந்தித்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/205871
  12. 05 FEB, 2025 | 05:21 PM (எம்.வை.எம்.சியாம்) டிஜிட்டல் மயமாக்கல் என்ற போர்வையில் அரசாங்கம் இலங்கை மக்களின் உயிரியல் தரவுகளை சேகரித்தல் தொடர்பான பகிரங்க விவாதத்திற்கு வருமாறு டிஜிட்டல் அமைச்சர், டிஜிட்டல் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு மக்கள் போராட்டக் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் எனவும் இதுபோன்ற விடயங்களை திருட்டுத்தனமாகவும் மறைத்தும் செய்வதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது எனவும் முன்னிலை சோசலிஸக்கட்சியின் கல்விச்செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, மக்களின் உயிரியல் தரவுகளை சேகரித்தல் குறித்து எமது கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் போதும் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் போதும் உயிரியல் தரவுகளின் அவசியம் எதற்கு? டிஜிட்டல் மயமாக்கல் என்பது வேறு. உயிரியல் தரவுகள் என்பது வேறாகும். எனவே இதில் இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். உதாரணமாக இத்தாலியில் டிஜிட்டல் அடையாள அட்டை பாவனை உள்ளது. ஆனால் அந்த அரசாங்கம் அந்த தரவுகளை கோரவில்லை. அவ்வாறாயின் அரசாங்கம் எவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்தத் தரவுகளைப் பயன்படுத்தும் என்பதைக்கூற வேண்டும்? குறிப்பாக நவீன தொழில்நுட்பத்தின் முதல்நிலையில் இருப்பவர்கள் எனக்கூறிக்கொள்ளும் அமெரிக்கா தென்கொரியாவிலும் எமக்குத் தற்போது டிஜிட்டல் மயமாக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக்கூறும் இந்தியாவிலும் கடந்தகாலங்களில் தரவுக்கட்டமைப்பு திருடப்பட்டது. எமது நாட்டிலும் அண்மையில் அரச அச்சகத்திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கங்கள் ஊடுறவப்பட்டது. எனவே இந்தத் தரவுகள் எதிர்காலத்தில் திருடப்படாது என்பதற்கு அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன? அத்துடன் இந்தத்திட்டத்தை எந்த இந்திய நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது?அந்த நிறுவனம் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது? அந்த நிறுவனத்தைப் பற்றிய தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா? குறித்த இந்திய நிறுவனத்தின் தலையீடு எந்த மட்டத்தில் இருக்கும்? இந்த தரவுத்தள கட்டமைப்பிற்குள் மாற்று முறையை பயன்படுத்தி குறித்த நிறுலனம் ஊடுரூவதை தடுப்பதற்கான மாற்றுவழி உள்ளதா? அவ்வாறாயின் அதனை தடுக்க வழி என்ன? இந்த திட்டத்தில் இலங்கையில் எந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது? அந்த நிறுவனம் எந்த முறையில் தெரிவு செய்யப்பட்டது? இடைப்பட்ட காலப்பகுதியில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் இந்திய நிறுவனம் மீண்டும் அழைக்கப்படுமா? அந்த சந்தர்ப்பத்தில் தரவுகள் திருடப்படமாட்டது என்பதற்கு உத்தரவாதம் என்ன என இது போன்ற பல பிரச்ச்சினைகளுக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும். இது குறித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மற்றும் பிரதி அமைச்சருக்கும் எமது கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு சவால் விடுக்கிறோம். இருவரில் ஒருவர் எமது கேள்விகளுக்கு பதில் வழங்க முடியும். இது பற்றி பேசும் அமைச்சர்களை அழைத்து வரலாம். விசேட நிபுணர்கள் எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரையும் அழைக்கலாம். நாங்கள் தயார். எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் பின்வாங்கக்கூடாது. மக்களுக்கு உண்மைகளை கூற வேண்டும். இதுபோன்ற விடயங்களை திருட்டுத்தனமாகவும் மறைத்தும் செய்வதற்கு எம்மால் அனுமதிக்க முடியாது. எமது அழைப்பை புறக்கணித்து உண்மைகளை மறைக்க அரசாங்கம் முயற்சித்தால் மக்கள் உயிரியல் தரவுகளை வழங்கமாட்டார்கள் என்றார். https://www.virakesari.lk/article/205892
  13. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வாக்குப்பதிவு நிலவரம் 5 பிப்ரவரி 2025, 03:31 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 5 மணி நிலவரப்படி 64.02% வாக்குகள் பதிவாகியுள்ளன. இடைத்தேர்தல் களத்தில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி உள்பட 46 பேர் போட்டியிடுகின்றனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக மற்றும் பாஜக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சீமான் பெரியார் குறித்து பேசுவதற்கு இதுதான் காரணமா? கள நிலவரம் என்ன? 'ஒரே இரவில் மாறிய வேட்பாளர்' - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்குப் பதிலாக திமுக போட்டி ஏன்? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக, பாஜக, தேமுதிக புறக்கணிப்பால் நாம் தமிழர் கட்சி பலன் பெறுமா? வாக்கை வேறொருவர் செலுத்தியதாக பெண் புகார் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது வளையக்காரன் வீதியில் ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 168 எண் வாக்குச்சாவடியில் ஃபரிதா பேகம் என்பவர் கணவருடன் வாக்கு செலுத்த வந்தார். இந்நிலையில், அப்பெயரில் ஏற்கெனவே ஒருவர் வாக்கு செலுத்தியதாக வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்கள் தெரிவித்துள்ளார், இதையடுத்து, தன் வாக்கை வேறொருவர் செலுத்தியதாக, அப்பெண் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டார். தான் மீண்டும் வாக்களிக்க வழிசெய்யும் வகையில், சட்டப்பிரிவு 49பி-ஐ (49P) பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு கோரினார் அப்பெண். இதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுங்கரா, ஈரோடு சம்பத் நகரில் வாக்குச் சாவடியில் வாக்களித்தார். திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். தொகுதி முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலின் முடிவுகளைவிட, இவ்விரு கட்சிகளில் எந்தக் கட்சியின் வாக்கு வங்கி கூடுகிறது, குறைகிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. வாக்குப்பதிவு காரணமாக அங்குள்ள வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளது. இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 8ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. 4 ஆண்டுகளில் மூன்றாவது தேர்தல் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா, போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2023 ஜனவரி 4 அன்று , அவர் மாரடைப்பால் இறந்தார். அதையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அன்று அங்கு மீண்டும் இடைத்தேர்தல் நடந்தது. அதில் அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இளங்கோவன், அந்தப் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதியன்று, உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவி மீண்டும் காலியிடமாக அறிவிக்கப்பட்டு, இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து கடந்த 4 ஆண்டுகளுக்குள் இந்தத் தொகுதியில் மூன்றாம் முறையாக தேர்தல் நடக்கிறது. படக்குறிப்பு, இடைத்தேர்தலில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்திய திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் கடந்த 2023ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் சுமார் 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்கள் இருந்த இத்தொகுதியில் இப்போது சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9 வாக்குச்சாவடி மையங்கள், பதற்றம் நிறைந்தவை என்று கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையம் பொது விடுமுறை அறிவித்துள்ளது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் கூறியது என்ன? ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது குடும்பத்தினருடன், கொசுவண்ண வீதியிலுள்ள பிவிபி குழந்தைகள் பள்ளியில் வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துகளுடன், அமைச்சர் சு.முத்துசாமி வழிகாட்டுதலோடு இந்த இடைத்தேர்தலைச் சந்தித்துள்ளேன். இந்த இடைத்தேர்தலைப் பொருத்தவரை திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்," என்று தெரிவித்தார். மேலும், "அந்த மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமாக இருக்கப் போவது கடந்த நான்கு ஆண்டுகால திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களாகவே இருக்கும்," என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டை விஞ்சிய உத்தர பிரதேசம்: மாணவர்களின் கல்வித் திறன் பற்றிய ஆய்வில் தகவல் - இன்றைய செய்திகள்29 ஜனவரி 2025 ஹிட்லரின் யூத படுகொலை மையமாக திகழ்ந்த 'அவுஷ்விட்ஸ்' வதை முகாம் எவ்வாறு இயங்கியது?28 ஜனவரி 2025 'வாக்குச் சாவடியில் பாரபட்சம்' - நாம் தமிழர் வேட்பாளர் குற்றச்சாட்டு இந்தத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, கோபிச்செட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு இங்கு வாக்கு இல்லை. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை சீதாலட்சுமி ஆய்வு செய்தார். ''முதல் 2 மணிநேரத்தில் வாக்குப்பதிவு வேகமாக நடந்துள்ளது. நான் 30க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்தேன். என்னைப் பார்த்த வாக்காளர்கள் பலர், யார் பணம் கொடுத்தாலும் இந்த முறை சிந்தித்து வாக்களிப்போம் என்று தெரிவித்தனர். இனிமேல் இவர்களை நம்பி வாக்களித்துப் பயனில்லை என்றும் கூறினர்'' என்றார். படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆய்வு செய்தபோது மேலும் அவர் கூறுகையில், ''நான் எனது கட்சித் துண்டைப் போட்டுக் கொண்டு வாக்குச்சாவடி மையத்துக்குச் சென்றபோது, அதை அகற்றுமாறு கூறினர். இந்தத் துண்டில் சின்னம் எதுவுமில்லை. இதைப் பார்த்து, மக்கள் எங்களுக்கு வாக்களிக்கும் அளவுக்கு மாறிவிட்டார்கள் என்றால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆனாலும் நான் பிரச்னை வேண்டாமென்று அதை அகற்றிவிட்டேன். ஆனால், திமுக வேட்பாளர் அவருடைய கட்சிக் கொடி நிறத்திலான துண்டை அணிந்து செல்ல அனுமதிக்கின்றனர். இப்படி அதிகாரிகள் அப்பட்டமாகப் பாரபட்சம் காட்டுகின்றனர்'' என்றார். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் பொது விடுமுறை அறிவித்ததைச் சுட்டிக்காட்டிய சீதாலட்சுமி, இங்குள்ள மக்கள் பலர், அருகிலுள்ள வேறு தொகுதிகளுக்கும் பணிக்குச் செல்கின்றனர். ஏராளமான கூலித்தொழிலாளர்கள், இன்று பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனால் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8edjpelz14o
  14. அதிர்வலையை கிளப்பிய Trump; Netanyahu-வை சந்தித்த பின் பேசியது என்ன? இதன் நிஜ பொருள் என்ன? Explained Greenland, Panama Canal, Canada- வை தொடர்ந்து Gaza -வை கட்டுப்படுத்த விரும்புவதாக America President Trump கூறியது உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. #Trump #Gaza #Netanyahu இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  15. அமெரிக்கா: பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்க தடை விதிக்கும் டிரம்ப் - பிற நாடுகளில் என்ன நிலை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தன் நாட்டில் பிறந்த எவருக்கும் அமெரிக்கா குடியுரிமையை வழங்குகிறது கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ பதவி, பிபிசி உலக சேவை அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த அதிபர் டிரம்பின் உத்தரவு பல்வேறு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, புலம்பெயர் குடும்பங்கள் நிச்சயமற்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 160 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் 14வது திருத்தம், அமெரிக்காவில் பிறக்கும் எந்தவொரு குழந்தைக்கும் இயல்பாகவே அமெரிக்க குடியுரிமை கிடைப்பதை உறுதி செய்கிறது. ஆனால், அதிபர் டிரம்பின் உத்தரவு, இந்த 14வது சட்டத் திருத்தத்திற்கு மறுவிளக்கம் அளித்து, சட்டவிரோதமாக அல்லது தற்காலிக விசாவில் அமெரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அமெரிக்கக் குடியுரிமைக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இந்த புதிய கொள்கை 19 பிப்ரவரி 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதேபோல், இந்தத் தேதிக்கு முன் பிறக்கும் குழந்தைகளுக்கு இதனால் எந்த பாதிப்புமில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள குடியுரிமைச் சட்டங்களுடன் இதை ஒப்பிட்டுக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை செய்து வரும் USAID அமைப்பை டிரம்ப் மூட நினைப்பது ஏன்? அமலுக்கு வந்த அமெரிக்காவின் வரி விதிப்பு - சீனாவின் பதிலடி என்ன? கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்? டிரம்ப் அச்சுறுத்தல்: அமெரிக்காவின் கடுமையான வரிகளைத் தவிர்க்க சீனா என்ன செய்கிறது? எப்படி தயாராகிறது? பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை கிடைக்கும் நாடுகள் பிறந்த இடத்தின் அடிப்படையிலான குடியுரிமை அல்லது ஜூஸ் சோலி (jus soli-பிறந்த மண்ணுக்கான உரிமை) என்பது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை அல்ல. தங்கள் எல்லைகளுக்குள் பிறந்த எவருக்கும் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சுமார் 30 நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. ஒரு நாட்டின் எல்லைக்குள் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கும் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமைக்கு (jus soli) மாறாக, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகள் ஜூஸ் சாங்குனிஸ் (லத்தீன் மொழியில் 'ரத்த உறவின் அடிப்படையிலான உரிமை') எனும் கொள்கையைப் பின்பற்றுகின்றன. அதாவது, குழந்தைகள் பிறந்த இடத்தின் அடிப்படையில் இல்லாமல், அவர்களது பெற்றோரை அடிப்படையாகக் கொண்டு, தங்களது குடியுரிமையைப் பெறுகிறார்கள். மற்ற நாடுகளின் குடியுரிமைச் சட்டம், இந்த இரண்டு கொள்கைகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. மேலும், நிரந்தர குடியுரிமை பெற்றவர்களின் குழந்தைகளுக்கு அந்த நாடுகள் குடியுரிமை வழங்குகின்றன. கனடா, சீனாவுக்கு எதிரான டிரம்பின் முடிவால் அமெரிக்காவுக்கு என்ன இழப்பு ஏற்படும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?3 பிப்ரவரி 2025 இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிறந்த இடத்தின் அடிப்படையிலான குடியுரிமை என்பது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை அல்ல சான் டியாகோவில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியரான ஜான் ஸ்க்ரென்ட்னி, பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை அல்லது ஜூஸ் சோலி, அமெரிக்கா முழுவதும் பொதுவானது என்றாலும், "ஒவ்வொரு தேசமும்- மாநிலமும் அதன் தனித்துவமான பாதையைக் கொண்டுள்ளது" என்று நம்புகிறார். "உதாரணமாக, சில நாடுகள் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ஏற்றுக்கொள்ளும்போது, அடிமைகளும் முன்னாள் அடிமைகளும் குடியுரிமை பெறலாம் என்பதை ஏற்றுக்கொண்டனர். ஆனால் சில நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த வரலாறு சிக்கலானது" என்கிறார் அவர். மேலும், விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் வகையில், அமெரிக்காவில், 14வது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று விளக்குகிறார். இருப்பினும், பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ஏற்றுக்கொண்ட பெரும்பாலான நாடுகள் பொதுவான ஓர் அம்சத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. "முன்னாளில் காலனிய நாடுகளாக இருந்து, பின்னர் தேசிய-அரசுகளாக தங்களை நிலைநிறுத்திக்கொள்வது" தான் அந்த நாடுகளுக்கு இடையில் காணப்படும் பொதுக்கூறு என ஸ்க்ரென்ட்னி விவரிக்கிறார். "அவர்கள் யாரைச் சேர்க்க வேண்டும், யாரை விலக்க வேண்டும் மற்றும் தேசிய அரசை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பது குறித்து ராஜதந்திரமாக செயல்பட வேண்டியிருந்தது" என்று அவர் விவரிக்கிறார். "பல நாடுகளில், தங்கள் நாட்டில் பிறந்த எவருக்கும் குடியுரிமை வழங்குவது அவர்களின் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் ஒரு நடைமுறை உத்தியாக இருந்தது. ஒரு நிலையான மற்றும் ஒருங்கிணைந்த நாட்டை உருவாக்கும் அவர்களின் இலக்குகளுக்கு இது உதவியது" என்றும் குறிப்பிடுகிறார். "சில நாடுகளில், பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை ஐரோப்பியர்களின் குடியேற்றத்தை ஊக்குவித்தது. மற்ற நாடுகளில், பழங்குடியின மக்கள், முன்னாளில் அடிமைகளாக இருந்தவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் நிரந்தர குடிமக்களாகச் சேர்க்கப்படுவதையும் உறுதி செய்தது. இந்த அணுகுமுறை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஏற்றதாக இருந்தது. ஆனால், அந்த காலம் மாறியிருக்கலாம்" என்றும் கூறுகிறார். டொனால்ட் டிரம்ப் ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்ந்தோரை எங்கு அடைத்து வைக்க திட்டமிட்டுள்ளார்?2 பிப்ரவரி 2025 வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான டிரம்பின் நட்பு இந்த ஆட்சியில் தொடருமா? சவால்கள் என்ன?31 ஜனவரி 2025 கொள்கை மாற்றங்கள் மற்றும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிசம்பர் 2004 முதல், இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோர் இருவரும் இந்தியராக இருந்தால் மட்டுமே குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் சமீபத்திய ஆண்டுகளில், சில நாடுகள் தங்கள் குடியுரிமைச் சட்டங்களை மாற்றியமைத்துள்ளன. பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையைக் கடுமையாக்கியுள்ளன அல்லது ரத்து செய்துள்ளன. குடியேற்றத்தையும், தங்களது தேசிய அடையாளத்தைப் பாதுகாப்பதிலும் அந்த நாடுகள் கவனமாக உள்ளன. மேலும், வேறொரு நாட்டைச் சேர்ந்த மக்கள், குழந்தைகளைப் பிரசவிப்பதற்காகவே மற்றொரு நாட்டுக்கு வருகை தரும் நடைமுறையான "பிறப்பு சுற்றுலா" எனும் நடைமுறை குறித்தும் கவனித்துத்தங்களது சட்டங்களைக் கடுமையாக்கியுள்ளார்கள். உதாரணமாக, இந்தியா ஒருமுறை தன் மண்ணில் பிறந்த அனைவருக்கும் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கியது. ஆனால் காலப்போக்கில், சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக வங்கதேசத்தில் இருந்து எழுந்த கவலைகள், கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்தது. டிசம்பர் 2004ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோர் இருவரும் இந்தியராக இருந்தால் மட்டுமே குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் அல்லது குழந்தையின் பெற்றோரில் ஒருவர் இந்திய குடியுரிமை பெற்று, மற்றவர் சட்டவிரோதமாக குடியேறியவராகக் கருதப்படாவிட்டால் மட்டுமே அவர்களின் குழந்தைக்கும் இந்திய குடியுரிமை கிடைக்கும். பல ஆப்பிரிக்க நாடுகள் காலனித்துவ காலத்தில் தங்கள் நாட்டில் பிறந்த எவருக்கும் (jus soli) பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கின. இருப்பினும், சுதந்திரம் பெற்ற பிறகு, இந்த நாடுகளில் பெரும்பாலானவை தங்கள் சட்டங்களை மாற்றிக்கொண்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போது, ஒரு குழந்தை அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் அதன் ஒரு பெற்றோராவது, அந்நாட்டின் குடியுரிமை பெற்றவராகவோ, அல்லது நிரந்தரமாக அங்கு வசிப்பவராகவோ இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளன. சீனா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் காணப்படுவது போல, பெரும்பாலான ஆசிய நாடுகளில் குடியுரிமை பெறுவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த நாடுகளில், குடியுரிமை பெறுபவரின் வம்சாவளியை முதன்மையாகக் கொண்டு அது தீர்மானிக்கப்படுகிறது. ஐரோப்பாவிலும் குடியுரிமைச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பிராந்தியத்தில், பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை (ஜூஸ் சோலியை) அனுமதித்த கடைசி நாடு அயர்லாந்துதான். ஒரு குழந்தை குடியுரிமை பெற குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அந்த நாட்டின் குடியுரிமை கொண்டவராக, நிரந்தரமாக அங்கு வசிப்பவராக அல்லது சட்டப்பூர்வ அனுமதி பெற்று, அங்கு தற்காலிகமாக குடியிருக்க வேண்டும் என்று புதிய திருத்தம் குறிப்பிடுகிறது. ஆனால், ஜூன் 2024இல், 79 சதவிகித வாக்காளர்கள் இந்தக் கொள்கையை மாற்றுவதற்கான அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்தனர். மேலும், தங்கள் குழந்தைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வெளிநாட்டுப் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அயர்லாந்துக்கு வருவதால் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று அரசாங்கம் கூறியது. தமிழ் - ஜப்பானிய மொழிகள் இடையே இவ்வளவு ஒற்றுமையா? விளக்கும் மொழியியல் வல்லுநர்கள்2 பிப்ரவரி 2025 ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கடந்த 1929 முதல் பிறந்த அனைவருக்கும், புதிய குடியுரிமை விதி பொருந்தும் என்று டொமினிகன் குடியரசின் உச்ச நீதிமன்றம், 2013ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது அதேபோல், டொமினிகன் குடியரசில் மிகவும் கடுமையான மாற்றம் ஒன்று ஏற்பட்டது. 2010ஆம் ஆண்டில், குடியுரிமை சார்ந்து ஒரு அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது. இதன் விளைவாக, ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள், குடியுரிமை பெறுவதில் இருந்து விலக்கப்பட்டனர், கடந்த 1929 முதல் பிறந்த அனைவருக்கும், புதிய குடியுரிமை விதி பொருந்தும் என்று டொமினிகன் குடியரசின் உச்ச நீதிமன்றம், 2013ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள், பெரும்பாலும் ஹைட்டியன் வம்சாவளியினர், டொமினிகன் குடியுரிமையை இழந்துள்ளனர். இவர்களில் பலரிடம் ஹைட்டியன் ஆவணங்களும் இல்லை. எனவே அவர்களுக்கு எந்த நாட்டின் குடியுரிமையும் கிடைக்காமல் போகலாம் என உரிமைக் குழுக்கள் எச்சரித்தன. இந்த நடவடிக்கையை சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை வழக்குகளைக் கையாளும் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச நீதிமன்றம் ஆகியவை கடுமையாகக் கண்டித்தன. பொதுமக்களுடைய எதிர்ப்பின் காரணமாக, டொமினிகன் குடியரசு 2014இல் ஒரு சட்டத்தை இயற்றியது. இதன்மூலம், டொமினிகன் நாட்டில் பிறந்த புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கு, குறிப்பாக ஹைட்டிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக இந்தச் சட்டம் உதவுகிறது. ஸ்க்ரென்ட்னி இதை உலகளாவிய மாற்றங்களின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார். "இப்போதெல்லாம், வெகுஜன இடப்பெயர்வு மற்றும் எளிதான போக்குவரத்தின் மூலம், நீண்ட தூரம் கடல் வழியாகக்கூட பயணிக்க முடியும். இதன் காரணமாக, எந்த நாட்டின் குடியுரிமை பெற விரும்புகிறார்கள் என்பது குறித்தும் மக்கள் சில உத்திகளைக் கொண்டிருக்க முடியும். அதனால்தான் தற்போது அமெரிக்காவில் குடியுரிமை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது," என்கிறார். ஸ்வீடனில் குர்ஆனை எரித்த இராக்கியர் சுட்டுக் கொலை - வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு உள்ளதா?31 ஜனவரி 2025 மாவை சேனாதிராஜா காலமானார்: இலங்கை தமிழர்களுக்காக குரல் எழுப்பிய இவர் யார்?30 ஜனவரி 2025 சட்ட சிக்கல்கள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அதிபர் டிரம்பின் நிர்வாக உத்தரவு ஏற்கெனவே சட்ட சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது அதிபர் டிரம்ப், குடியுரிமை குறித்து ஆணை பிறப்பித்த சில மணிநேரங்களுக்குள், ஜனநாயகக் கட்சி தலைமையிலான 22 மாநிலங்கள், சான் பிரான்சிஸ்கோ நகரம், கொலம்பியா மாவட்டம், சிவில் உரிமைக் குழுக்கள் ஆகியவை அவரது நடவடிக்கையை எதிர்த்து கூட்டாட்சி அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தன. டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற நான்காவது நாளில், அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜான் கோகெனோர் புதிய குடியுரிமைக் கொள்கை "முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரானது" என்று கூறி தற்காலிகமாகத் தடை செய்தார். மேலும், அதிபர் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்பதைப் பெரும்பாலான சட்ட அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். "அவர் அதிகளவு மக்களை வருத்தமடையச் செய்யும் ஒரு காரியத்தைச் செய்கிறார். ஆனால் இறுதியில் இதுகுறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும்" என்று அரசியலமைப்பு நிபுணரும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் சட்டத் துறைப் பேராசிரியருமான சாய்கிருஷ்ண பிரகாஷ் கூறினார். மேலும் "இது அவர் சொந்தமாக முடிவு செய்யக்கூடிய விஷயம் அல்ல" என்றும் அவர் குறிப்பிட்டார். அதிபர் டிரம்பின் நிர்வாக உத்தரவு அரசியலமைப்பில் ஏற்கெனவே உள்ள திருத்தத்தை மறு விளக்கம் செய்கிறது. இந்தத் திருத்தத்தை மாற்ற, பிரதிநிதிகள் சபை, செனட் ஆகிய இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை, அதனோடு சேர்த்து பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்க மாகாணங்களின் ஒப்புதலும் தேவை. இந்நிலையில், சட்ட நடவடிக்கைகள் தொடரும் நிலையில் அதிபரின் உத்தரவு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், கூட்டாட்சி அரசின் வழக்கறிஞர்கள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இறுதியில் இந்த வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr53l5qp8l2o
  16. யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம்? Published By: RAJEEBAN 05 FEB, 2025 | 09:43 AM சர்வதேச அளவில் யுஎஸ்எயிட் அமைப்பு நேரடியாக பணிக்கு அமர்த்திய அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் யுஎஸ்எயிட்டிற்காக பணியாற்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை மீள அழைக்கப்போவதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏழாம் திகதி முதல் யுஎஸ்எயிட் பணிக்கு அமர்த்திய அனைவரும் நிர்வாகவிடுப்பில் வைக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு யுஎஸ்எயிட்டின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. நெருக்கடியா சூழலில் செயற்படுவதற்கு அவசியமானவர்கள், முக்கிய தலைவர்கள், சிறப்பாக நியமிக்கப்பட்ட திட்டங்களிற்கு பொறுப்பானவர்களிற்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக யுஎஸ்எயிட்டின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. யுஎஸ்எயிட்டிற்காக பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர் இவர்களில் பெருமளவானவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். உலகின் 60நாடுகளில் யுஎஸ்எயிட்டின் அலுவலகங்கள் உள்ளன. வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்கர்களிற்கான திட்டமொன்றை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ள இணையதளம், அவர்கள் அமெரிக்காவிற்கு மீள பயணித்தமைக்கான செலவீனங்களை30 நாட்களிற்குள் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிர்ச்சி நடவடிக்கை காரணமாக ஆயிரக்கணக்கான பணியாளர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்காவின் பல மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு உதவி திட்டங்களிற்கு பொறுப்பான யுஎஸ்எயிட் திங்கட்கிழமை முதல் கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது. யுஎஸ்எயிட்டின் பணியாளர்களிற்கு அலுவலகத்தில் நுழைவதற்கும் கணிணிகளை பயன்படுத்துவதற்குமான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யுஎஸ்எயிட்டின் செயற்பாடுகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்குவதற்கு டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதை தொடர்ந்து யுஎஸ்எயிட்டின் சிரேஸ்ட ஊழியர்கள் பலர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். யுஎஸ்எயிட்டின் இயக்குநர் தானே என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க் ரூபியோ தெரிவித்துள்ளார். யுஎஸ்எயிட்டின் செயற்பாடுகள் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைக்கு ஏற்ற விதத்தில் அமைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். யுஎஸ்எயிட் வரலாற்றுரீதியாக அமெரிக்க காங்கிரஸிற்கும் வெள்ளை மாளிகைக்கும் பதிலளிக்காத ஒன்று என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அது ஒரு அமைப்பாகயிருந்தாலும் அது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திலிருந்தே உத்தரவுகளை பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் யுஎஸ்எயிட் அதனை புறக்கணித்து தொண்டு என்பது அமெரிக்காவின் நலன்களில் இருந்து வேறுபட்டதாகயிருக்கவேண்டும் என்ற கருத்தினை கொண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். யுஎஸ்எயிட் வழங்குவது அமெரிக்க மக்களின் வரிப்பணத்தையே நாங்கள் ஒவ்வொரு டொலருக்கும் பதிலளிக்கவேண்டும் ஒவ்வொரு டொலரும் எங்கள் தேசிய நலனை அடிப்படையாக கொண்டது என்ற உத்தரவாதத்தை மக்களிற்கு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/205823
  17. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வாகனங்களை வழங்காது என்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ. நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவது முன்னுரிமை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/315141
  18. ஜனாதிபதி நிதிய நிவாரணத்தை சகல பிரதேச சபைகளினூடாக வழங்க தீர்மானம் - பிரதமர் தெரிவிப்பு 05 FEB, 2025 | 04:04 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை விரிவுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சகல பிரதேச சபைகள் ஊடாக நிதியத்தின் நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்கும் பிரதேச சபைகள் ஊடாக குறித்த விண்ணப்பதாரிகளுக்கு நிவாரண நிதியத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) நடைபெற்ற அமர்வின்போது பிரதமருடனான கேள்வி நேரத்தின்போது ஆளும் தரப்பின் உறுப்பினர் டி.கே. ஜயசுந்தர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பதிலளித்ததாவது, ஏழ்மை ஒழிப்பு, கல்வி மற்றும் மத மேம்பாடு மற்றும் நாட்டுக்கு சேவையாற்றிய தரப்பினருக்கு நிவாரணமளித்தல் மற்றும் நலன்புரி சேவைகளுக்காக ஜனாதிபதி நிதியம் உருவாக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு 07ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் நிதியத்தின் தலைவராக ஜனாதிபதியும் நிர்வாக சபையின் உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். ஜனாதிபதி நிதியத்தின் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கமைய சகல பிரதேச சபைகள் ஊடாக நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு நிகழ்நிலை முறைமை ஊடாக விண்ணப்பம் செய்வதற்கும், பிரதேச சபைகள் ஊடாக நிவாரண நிதியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு புதிய கணினி கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அரச உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நலனை கருத்திற்கொண்டே ஜனாதிபதி நிதியம் உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த கால அரசாங்கங்களில் ஜனாதிபதிகளின் நண்பர்கள் மற்றும் அவர்களுக்கு சார்பான அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே நிதி வழங்கப்பட்டது. நிதியம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது. இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்றுக்கொண்டவர்கள் நாட்டுக்கு சேவையாற்றியவர்கள் என்ற அடிப்படையில் நிதி பெற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, இவ்விடயம் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். https://www.virakesari.lk/article/205857
  19. Published By: DIGITAL DESK 7 05 FEB, 2025 | 05:21 PM (எம்.மனோசித்ரா) வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை, ஜப்பான் அரசாங்கங்களுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்திற்கும் (ஜைக்கா) நிறுவனத்துக்கும் இடையிலான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை அரசால் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் கடன் மீள்கட்டமைப்புக் கலந்துரையாடல்களைப் பூர்த்தி செய்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்ட பின்னர், ஜப்பான் அரசுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கமைய, அந்நாட்டு அரசுடன் கடன் மீள்கட்டமைப்பு செயன்முறையைப் பூர்த்தி செய்வதற்கான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட வேண்டியுள்ளது. கையொப்பமிடப்பட வேண்டிய குறித்த ஆவணங்களுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, ஜப்பான் அரசுடன் பரிமாற்றுப் பத்திரம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்துடனான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/205881
  20. அர்ச்சுனா எம்.பி.க்கு தலையில் பிரச்சினை; தயாசிறியின் பேச்சால் சபையில் சலசலப்பு இராமநாதன் அர்ச்சுனாவின் தலையில் பிரச்சினை என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து நாடாளுமன்றில் சாசலப்பு ஏற்பட்டது. கடந்த 29 ஆம் திகதி அநுராதபுரம் பகுதியில் வைத்து திட்டமிட்ட வகையிலேயே என்னை போக்குவரத்து பொலிஸார் மறித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். மேலும், கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெறவிருந்த நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்த போதே இவ்வாறு பொலிஸார் மறித்து விசாரணை நடத்தினர். எனது, வாகனத்தில் விஐபி விளக்குகள் போடப்பட்டிருந்ததாக தெரிவித்து அவர்கள் என்னை மறித்தார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இதன்போது சுட்டிக்காட்டினார். இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் உரையை இடைநிறுத்திய சபாநாயகர் நீங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவித்திருந்தீர்கள் எனவே தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள் என அறிவித்த பின்னர் தனது உரையை ஆங்கிலத்தில் ஆற்றியமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றிய அர்ச்சுனா, “தன்னை அநுராதபுரம் பகுதியில் வைத்து பொலிஸார் மறித்ததாகவும், தனது அடையாள அட்டையை கேட்டதாகவும், தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் என்னுடைய அடையாள அட்டை நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது, நாடாளுமன்றத்தால் தரப்பட்ட தற்காலிக அட்டை என்னிடம் உள்ளது என்று அதனைக் காட்ட முற்பட்டும் அந்த போக்குவரத்து பொலிஸார் அதனை ஏற்க மறுத்துவிட்டதாக கூறினார். இதனையடுத்து, குறுக்கிட்ட சபாநாயகர், அர்ச்சுனா எம்.பியைப் பார்த்து “உங்களுடைய அடையாள அட்டை நாடாளுமன்ற அலுவலகத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் தான் பெற்றுக் கொள்ள தவறியுள்ளீர்கள் என சுட்டிக்காட்டினார். இதனையடுத்து மீண்டும் உரையாற்ற ஆரம்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் அநுராதபுரத்தில் வைத்து இடைமறிக்கப்பட்ட பின்னர், தனக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடந்த உரையாடலை பொலிஸார் பதிவு செய்து அதனை ஊடகங்களில் வெளியிட்டதாகவும், பொலிஸாரின் இந்த செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற காரணத்தினால் இவ்வாறு பொலிஸார் பதிவு செய்து ஊடகங்களில் வெளியிட்டதாகவும் கூறினார். இந்த நாடாளுமன்றம் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இது தொடர்பில் வெட்கப்பட வேண்டும் என்றும் சபையில் மீண்டும் மீண்டும் சத்தமாக தெரிவித்தார் இதன்போது, இடையில் குறுக்கிட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, சபையைப் பார்த்தும், சபாநாயகரைப் பார்த்தும் இவ்வாறு உரையாற்றுவதை இந்த சபை எப்படி அனுமதிக்கின்றது என்றும், இங்கு பாகுபாடு இல்லை என்றும் கடும் தொனியில் பேசினார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை என்றும் தயாசிறி சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, உரையாற்றிய சபாநாயகர், நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, எனவே அது சாதாரண மனிதர் என்றாலும், எம்.பியாக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவ்வாறே பின்பற்றப்படும். இதில் பாகுபாடு இல்லை என அறிவித்ததுடன், அர்ச்சுனா எம்.பி சபையில் கூறிய தகாத வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் அறிவித்தார். எவ்வாறாயினும், சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, இந்த உரைகளை ஹன்சாட்டில் இருந்து நீக்குவதால் பயனில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிரபல யூடியூபர் என்றும், அவர் உரையாற்றும் இந்த நேரத்திலேயே அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/315139
  21. கோட்டாபய கைது செய்யப்படுவார் என்பதை கம்மன்பில எவ்வாறு அறிவார்? - அமைச்சரவை பேச்சாளர் கேள்வி 05 FEB, 2025 | 05:20 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் யாரை எப்போது கைது கைது செய்வது என்பதை விசாரணைகளை முன்னெடுப்பவர்களே தீர்மானிப்பர். அவ்வாறிருக்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவார் என்பதை கம்மன்பில முன்கூட்டியே ஊகித்திருக்கின்றார் என்றால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் அவர் முன்னரே அறிந்திருக்கின்றார் என்று தோன்கிறது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று செவ்வாய்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவாரா என்பது எமக்குத் தெரியாது. அது விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவினரின் கடமையாகும். அவை அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுபவையல்ல. விசாரணை முன்னெடுக்கும் திணைக்களங்கள் கூறினால் மாத்திரமே நாமும் அறிவோம். எனவே யார் எப்போது கைது செய்யப்படுவார் என்பது எமக்குத் தெரியாது. அவ்வாறிருகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய கைது செய்யப்படுவார் என்பதை கம்மன்பில எவ்வாறு அறிவார் என்பதும் எமக்கு தெரியாது. ஒருவேளை அவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அனைத்தும் தெரிந்திருக்கலாம். அதனால்தான் யார் கைது செய்யப்படப் போகின்றார்கள் என்பதை முன்கூட்டியே கூறுகின்றார் என்றார். https://www.virakesari.lk/article/205889
  22. 05 FEB, 2025 | 01:38 PM (நெவில் அன்தனி) சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தானின் சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ராஷித் கான் நிலைநாட்டியுள்ளார். தென் ஆபிரிக்காவில் தற்போது நடைபெற்றுவரும் SA20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் கேப் டவுன் அணிக்காக விளையாடிவரும் ராஷித் கான், பார்ல் றோயல்ஸ் அணி வீரர் துனித் வெல்லாலகே கேயை ஆட்டம் இழக்கச் செய்ததன் மூலம் 632ஆவது ரி20 விக்கெட்டைக் கைப்பற்றி புதிய சாதனை நிலைநாட்டினார். MI கேப் டவுன் அணியின் தலைவரான ராஷித் கான் அப் போட்டியில் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அத்துடன் இதுவரை 461 ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ராஷித் கான் 633 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளின் ட்வேன் ப்ராவோவுக்கு இதுவரை சொந்தமாக இருந்த 632 ரி20 விக்கெட்கள் என்ற சாதனை ராஷித் கானினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மகத்தான சாதனை எனவும் இதனையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதாகவும் ராஷித் கான் தெரிவித்துள்ளார். பத்து வருடங்களுக்கு முன்னர் யாராவது ரி20 பந்துவீச்சில் சாதனை படைப்பீர்களா என என்னிடம் கேட்டிருந்தால், நான் அப்படி நினைக்கவில்லை என்றுதான் கூறியிருப்பேன் என்றார் ராஷித் கான். 'நீங்கள் பத்து வருடங்களுக்கு முன்னர் நான் சாதனை நிலைநாட்டுவேனா என கெட்டிருந்தால், நான் அப்படி நினைக்கவில்லை என்றுதான் பதிலளித்திருப்பேன். ஆப்கானிஸ்தானியனாக இந்த சாதனையை நிலைநாட்டியது பெருமை தருகிறது. ரி20 பந்துவீச்சாளர்களில் ட்வேன் ப்ராவோ மிகச் சிறந்த பந்துவீச்சாளர் ஆவார். அவரது சாதனையை முறியடித்தது பெருமை தருகிறது. எனது சாதனைகளை தொடர்வேன்' என ராஷித் கான் மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/205856
  23. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/315130
  24. முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினைத் தழுவிய இலங்கை வீரர்கள் சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, இரு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்துள்ளது. காலியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (31) மழையின் காரணமாக நிறைவுக்கு வந்த நிலையில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை அணி 136 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. இலங்கை அணி சார்பில் களத்தில் நின்ற தினேஷ் சந்திமால் 63 ஓட்டங்களை பெற்றிருக்க, குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களை எடுத்திருந்தார். இன்று போட்டியின் நான்காம் நாளில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணியினர் குறுகிய இடைவெளிகளில் தம்முடைய எஞ்சிய விக்கெட்டுக்கள் அனைத்தினையும் பறிகொடுத்து 52.2 ஓவர்களுக்கு 165 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றனர். இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பாக தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 09 பௌண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் பெற்றார். ஆஸி. பந்துவீச்சில் மெதிவ் குஹ்னமேன் 63 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்க்க, நதன் லயன் 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்கிற காரணத்தினால் அவர்கள் மீண்டும் பலோவ் ஒன் முறையில் மீண்டும் ஆடப்பணிக்கப்பட்டதோடு, இரண்டாம் இன்னிங்ஸிலும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 54.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 242 ஓட்டங்கள் பெற்று போட்டியில் படுதோல்வி அடைந்தனர். இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் சார்பாக ஜெப்ரி வன்டர்செய் தன்னுடைய கன்னி டெஸ்ட் அரைச் சதத்தோடு 47 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் அஞ்செலோ மெதிவ்ஸ் 41 ஓட்டங்கள் பெற்றார். அவுஸ்திரேலிய பந்துவீச்சில் மீண்டும் சிறப்பாக செயற்பட்ட மெதிவ் குஹ்னமென் மற்றும் நதன் லயன் ஜோடி தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தது. போட்டியின் ஆட்டநாயகனாக உஸ்மான் கவாஜா தெரிவானார். போட்டியின் சுருக்கம் RESULT Sri Lanka 165/10 (52.2) & 247/10 (54.3) Australia 654/6 (154) AUSTRALIA WON BY AN INNINGS AND 242 RUNS Updated at 03:18 PM 2025-02-01 https://www.thepapare.com/australia-tour-of-sri-lanka-2025-1st-test-day-04-report-tamil/
  25. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எட் ஷீரன் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெ.பஷீர் அஹமது பதவி, பிபிசி தமிழுக்காக அண்மைக் காலமாக இந்தியாவில் சர்வதேச இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தும் நிகழ்வு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. தனது பாடல்கள் மூலம் உலக அளவில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் 33 வயதான எட் ஷீரன், சென்னையில் தனது இசை நிகழ்ச்சியை பிப்ரவரி 5ஆம் தேதி நடத்துகிறார். சமீபத்திய ஆண்டுகளில் உலகளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட பிரபல இசைக் கலைஞர் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவது இதுவே முதல்முறை. இந்தியாவில் கான்செர்ட் பொருளாதாரம் உலகளாவிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டாடிஸ்டா(statista), "இந்திய இசைத்துறையின் மதிப்பு 2021ஆம் ஆண்டு 1900 கோடி ரூபாயாக இருந்தது. 2026ஆம் ஆண்டுக்குள் 3700 கோடி ரூபாயாக உயரும்", என மதிப்பிடுகிறது. அண்மையில் ஆமதாபாத்தில் நடைபெற்ற கோல்ட் ப்ளே(Cold Play) கான்செர்ட்(இசை நிகழ்ச்சி) குறித்து கருத்து தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, "இசை, நடனம் மற்றும் கதை சொல்லுதல் ஆகியவற்றில் வளமான பாரம்பரியத்தைக் கொண்டது இந்தியா. இசை நிகழ்ச்சிகளுக்கான மிகப்பெரிய நுகர்வோர் தளம், அதிக அளவில் இளைஞர்கள் இருப்பதால் கான்செர்ட் பொருளாதாரத்துக்கு பரந்த வாய்ப்புகள் உள்ளன. கோல்ட் ப்ளே கான்செர்ட் இந்தியாவில் லைவ் நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதற்கு சிறந்த சான்றாகும்," என்றார். இந்தியாவில் கான்செர்ட் பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும், மிகப்பெரிய இசை நிகழ்ச்சிகளை நடத்தும் அளவுக்கு வெளிநாடுகளில் உள்ளது போல அரங்கம் இந்தியாவில் இல்லை என்ற கருத்து சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது. அண்மையில் பாடகர் தில்ஜித் டெல்லி மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு பிறகு, அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று ரசிகர்கள் தெரிவித்தனர். டெல்லியில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சிக்கு பயன்படுத்திய விளையாட்டு மைதானம், சேதமானது குறித்து தடகள வீரர் ஒருவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். சென்னையில் இசை நிகழ்ச்சி பற்றி ரசிகர்கள் கூறுவது என்ன? உலகம் முழுவதும் தனது ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தி வரும் எட் ஷீரன், இந்தியாவில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். சென்னை உட்பட இந்தியாவின் சில நகரங்களில் தனது இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இதற்கு முன்பாக மும்பையில் எட் ஷீரன் தனது இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். எட் ஷீரனின் இசை நிகழ்ச்சிக்கு(கான்செர்ட்) செல்ல டிக்கெட் வாங்கியுள்ள சென்னையைச் சேர்ந்த நஜீலா பிபிசி தமிழிடம் பேசினார். "2014 முதல் வெஸ்டெர்ன் பாடல்களை கேட்டு வருகிறேன். எட் ஷீரன் பாடல் மிகவும் பிடிக்கும். அவரது பாடல்கள் மெதுவான இசையில் மெலடியாகவும் உணர்வுப் பூர்வமாகவும் இருக்கும். அவரது பாடல் வரிகள் எல்லோரையும் இணைக்கும்படி இருக்கும். குறிப்பாக அவரது போட்டோகிராஃப் பாடல் நான் தினமும் கேட்கும் பாடல். இதற்கு முன் கான்செர்ட்களில் நான் பங்கேற்றதில்லை. இந்த கான்செர்ட்டுக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன்." என்றார் ராம்குமார் என்ற ரசிகர் பிபிசியிடம் பேசும் போது, "பெரும்பாலும் மும்பையில்தான் இது போன்ற இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற எட் ஷீரன் நிகழ்ச்சிக்கு செல்ல முடிவெடுத்தோம். ஆனால், ஆரம்பத்தில் குறிப்பிட்ட கட்டணத்தை மிகவும் அதிகப்படுத்திவிட்டனர். விமான கட்டணமும் அதிகமாக இருந்தது என்பதால் செல்லவில்லை. இப்போது சென்னைக்கே எட் ஷீரன் வருகிறார் என்பதால் இதை தவறவிடக் கூடாது என செல்கிறேன்," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES யார் இந்த எட் ஷீரன் இணையத்தில், உலகளவில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 வீடியோக்கள் என்ன என்று தேடினால் அதில் எட் ஷீரனின் பாடல் இடம்பெற்று இருக்கும். பல நூறு கோடி பார்வைகளைப் பெற்ற ஷேப் ஆஃப் யூ (Shape Of You) என்ற பாடல் மூலம் இசை உலகில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை எட் ஷீரன் ஏற்படுத்தியுள்ளார். எட் ஷீரன் 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பிரிட்டனில் பிறந்தவர். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்கன் இன்ஸ்டியூட் ஃபார் ஸ்டட்டரிங் என்ற அமைப்பின் 9-ஆவது ஆண்டு விழாவின் போது எட் ஷீரனுக்கு விருது ஒன்று வழங்கப்பட்டது. அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனக்கு பிறக்கும்போதே உடலில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. மேலும் எனது முகத்தில் இருந்த மச்சத்தை (Birthmark) நீக்க லேசர் சிகிச்சை செய்யப்பட்டது. மயக்க மருந்து கொடுக்காமல் எனக்கு இந்த சிகிச்சை செய்யப்பட்டதால் புதிய சிக்கல் உருவானது. அதன் பின்விளைவாக எனக்கு பேசுவதில் சிரமம் ஏற்பட்டு, 'திக்குவாய்' பிரச்னை ஏற்பட்டது. மேலும் எனது ஒரு பக்க காதிலும் கேட்கும் குறைபாடு இருந்தது. பள்ளிப்பருவத்திலேயே எனக்கு பார்வைத்திறனில் குறைபாடு இருந்ததால் பெரிய கண்ணாடி அணிய வேண்டியிருந்தது. இத்தனை பிரச்னைகள் இருந்தபோதிலும் எனக்கு சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகவும் இருந்தது. ஆகவே திக்குவாய் பிரச்னை எனக்கு மிகவும் குறைந்தபட்ச பிரச்னையாகவே இருந்தது" என்றார். கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?4 பிப்ரவரி 2025 தமிழ்நாடு: நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஜிபிஎஸ் நோயால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு - நாளிதழ்களில் முக்கிய செய்திகள்4 பிப்ரவரி 2025 தடையாக இருந்த 'திக்குவாய்' பிரச்னை பட மூலாதாரம்,GETTY IMAGES "பேசும் போது வார்த்தைகளை உச்சரிப்பில் பிரச்னை இருந்தநிலையில், அதனை மீறி எப்படி பாடுவது என்று யோசித்து அதற்காக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டேன். ஸ்பீச் தெரபி, ஹோமியோபதி என சிகிச்சை முறைகளையும் எடுத்திருக்கிறேன். ஆனால் அவை எதுவும் எனக்கு பலன் தரவில்லை. சிறு வயதில் இருந்தே எனக்கு இசை மீது ஆர்வம் இருந்தது, குறிப்பாக ராப் இசை. எனது தந்தை எனக்கு ராப் இசைப்பாடகர் எமினெமின் (Eminem) பாடல்களின் இசைத்தொகுப்பு கேசேட்களை வாங்கி கொடுத்தார். அப்போது எனக்கு 9 வயதுதான் ஆகியிருந்தது. அதில் இருந்த அனைத்து பாடல்களையும் முழுமையாக மனப்பாடம் செய்து அதே போல பாட முயற்சி செய்தேன். இது எனது திக்கிப் பேசும் பிரச்னையை தீர்க்க உதவியாக இருந்தது", என்றும் எட் ஷீரன் அந்த நிகழ்ச்சியின் பேசினார். இளமைப் பருவத்தில் எமினெம் பாடல்களை மனப்பாடம் செய்து பாடிய இவர், பிற்காலத்தில் எமினெம் உடன் ஒரே மேடையில் பாடவும் செய்தார். பாடல்கள் பாடுவதோடு இவர் கிட்டார் போன்ற இசைக்கருவிகளையும் இசைப்பார். கனடா, சீனாவுக்கு எதிரான டிரம்பின் முடிவால் அமெரிக்காவுக்கு என்ன இழப்பு ஏற்படும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?3 பிப்ரவரி 2025 ஜப்பான்: சாலையில் தீடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த லாரி - 7 நாட்களாக ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எமினெமுடன் எட் ஷீரன் வைரலான பாடல்கள் இசை தொழில் முனைவோரான ஜமால் எட்வர்ட்ஸ் என்பவர் எஸ்பி டிவி மீயூசிக் (SBTV: Music) என்ற தனது யூட்யூப் சேனலில் 2010ஆம் ஆண்டு எட் ஷீரனை பாடவைத்தார். அவர் பாடிய You Need Me, I Don't Need You பாடல் அப்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆக எட் ஷீரன் குறித்து பலரும் பேசத் தொடங்கினர். அதனைத்தொடர்ந்து, + (Plus), X (Multiply), ÷ (Divide), No.6 Collaborations Project, = (Equals) ஆகிய பல இசை ஆல்பங்களை எட் ஷீரன் வெளியிட்டார். இந்த ஆல்பங்கள் மூலம் உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உருவாகினர். பட மூலாதாரம்,GETTY IMAGES எட் ஷீரனுக்கு கணிதத்தில் ஆர்வமா? இந்தக் கேள்விக்கு எட் ஷீரனே ஒரு தனியார் யூட்யூப் சேனலின் நேர்காணலில் விடை சொல்கிறார். "நான் எனது இசை வாழ்க்கையின் ஆரம்பக் காலத்திலேயே ஒரு முடிவு எடுத்தேன். ஆல்பம் போஸ்டரில் என்னுடைய படம் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை. அதனால் ஆல்பத்தின் போஸ்டர் ஒரு கலர் மற்றும் ஒரு அடையாளக் குறியுடன் இருக்கும்படி அதை அமைத்தேன்," என்கிறார். 600 கோடி பார்வைகள் கடந்து சாதனை இவரது ஷேப் ஆஃப் யூ என்ற பாடல் இதுவரை 600 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து யூட்யூப் தளத்தில் அதிக பார்வைகளை பெற்ற வீடியோக்கள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. எட் ஷீரனின் பல பாடல்கள், யூட்யூபில் 100 கோடி பார்வைகளை கடந்துள்ளன. பெர்ஃபெக்ட், திங்கிங் அவுட் லௌட், போட்டோகிராஃப் போன்றவை இவரது ஹிட் பாடல்கள் ஆகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgl5657d27o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.