Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. யோஷிதவிற்கு பிணை வழங்குவதனால் அவர் குற்றமற்றவர் என்று அர்த்தமில்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச, குற்றப் பிரேரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது ஒரு மாத காலத்துக்குள் பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். யோஷிதவிற்கு பிணை வழங்குவதனால் அவர் குற்றமற்றவர் என்று அர்த்தமில்லை எனவும் பிணைமுறி சட்டத்தின் விதிகளின் பிரகாரம் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கங்களைப் போன்று அரசாங்கம் செயற்படுவதாகவும், யோஷித விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்படுவதாகவும் சிலர் நம்ப வைக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “இந்த சந்தேகங்கள் அனைத்தும் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் இன்னும் ஒரு மாதத்தில் நிவர்த்தி செய்யப்படும்,” என்றார். இந்த சம்பவம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும், எனினும் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் சந்தேக நபராக அவர் பெயரிடப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன் சந்தேக நபரிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்வது அவசியம் என அவர் மேலும் கூறினார். https://thinakkural.lk/article/314951
  2. ஹாட்ரிக் வெற்றியுடன் டி20 தொடரை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணிக்கு புதிய 'சிக்கல்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் மற்றும் இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜ்கோட்டில் இன்று நடக்கும் 3வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றும் முயற்சியில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றபின் சூர்யகுமார் தலைமையிலான டி20 அணி இதுவரை எந்த டி20 தொடரையும் இழக்காமல் இருந்து வருகிறது. அந்த நற்பெயரை தக்க வைக்கும் முயற்சியில் விளையாடும் என நம்பலாம். டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது அதில் 15 ஆட்டங்களில் வென்று 2 ஆட்டங்களில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது. இந்த 17 போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி இ்ல்லாமல்தான் இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளைப் பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால், 3-0 என தொடரைக் கைப்பற்றும். கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை ஸ்மிருதி மந்தனா: 16 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகம், பெண்கள் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன் - யார் இவர்? துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனையின் வெற்றிக் கதை கோலி, ரோஹித் பேட்டிங்கில் என்ன பிரச்னை? ரஞ்சி போட்டியில் ஆடுவது மட்டுமே தீர்வாகுமா? ரஞ்சி கோப்பை : 42 முறை வென்ற மும்பை அணி ஜம்மு காஷ்மீரிடம் தோல்வி, போட்டியில் நடந்தது என்ன? சராசரி 389, அடுத்தடுத்து 5 சதம் கண்ட கருண் நாயருக்கு இந்திய அணியில் இடம் தரப்படாதது ஏன்? ஸ்கை மீண்டும் சதம் அடிப்பாரா? இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த இரு போட்டிகளிலும் திலக் வர்மா, அபிஷேக் சர்மா இருவரின் ஆட்டம்தான் அணிக்கு வெற்றி தேடித்தந்தது. சாம்ஸன், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் என யாரும் தங்களின் பங்களிப்பை முழுமையாக வழங்கவில்லை. அதிலும் கேப்டன் சூர்யகுமார் கடந்த 5 இன்னிங்ஸ்களிலும் 20 ரன்களைக் கூட தாண்டவில்லை. அவர் ஃபார்மின்றி தவிக்கிறாரா அல்லது கேப்டன் பதவிக்கான சுமையால் திணறுகிறாரா என்று தெரியவில்லை. இதே ராஜ்கோட் மைதானத்தில்தான் கடந்த 2023-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக சூர்யகுமார் சதம் விளாசினார். அதே நினைவுகளுடன் இந்த ஆட்டத்திலும் விளையாடி அவர் பெரிய ஸ்கோரை எட்டினால் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம். 2வது ஆட்டத்தில் வெற்றிக்காக போராடிய இந்திய அணியை திலக்வர்மாவின் அற்புதமான பேட்டிங் காப்பாற்றியது. தொடக்க வீரர்களும் நடுவரிசை வீரர்களும் கடந்த இரு போட்டிகளிலும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. சூர்யகுமார், சாம்ஸன், ஹர்திக் பாண்டியா, அபிஷேக் ஓரளவுக்கு சிறப்பாக ஸ்கோர் செய்தால் அடுத்து களமிறங்குவோருக்கு சுமை குறையும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரண்டாவது ஆட்டத்தில் வெற்றிக்காக போராடிய இந்திய அணியை திலக்வர்மாவின் அற்புதமான பேட்டிங் காப்பாற்றியது. ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு இந்திய அணியில் நிதிஷ்குமார் ரெட்டி காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த ஆட்டத்தில் துருவ் ஜூரெல் சிறப்பாக ஆடாததால் இன்றைய ஆட்டத்தில் ஷிவம் துபேவுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்த மைதானத்தில் பெரிதாக வேலையிருக்காது என்பதால் அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா இருவருடன் மட்டும்தான் இந்திய அணி களமிறங்கும். அதேசமயம், அக்ஸர் படேல், ரவி பிஸ்னாய், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவரத்தி ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இடம் உறுதியாகும். ஷிவம் துபே இடம் பெற்றால், 7-வது பந்துவீச்சாளராக இருப்பார். அபிஷேக் சர்மா பந்துவீசினாலும் வியப்பில்லை. டிரம்ப் மிரட்டல்: அமெரிக்காவுடன் மோத துணிந்த சில மணி நேரத்தில் பின்வாங்கிய கொலம்பியா4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை : நாயை தூக்கிலிட்டு கொன்றதாக பெண் கைது - நடந்தது என்ன?27 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஷிவம் துபே இடம் பெற்றால், 7-வது பந்துவீச்சாளராக இருப்பார். இந்திய அணிக்கு புதிய 'சிக்கல்' சூர்யகுமார் தலைமையில் விளையாடி வரும் அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களுக்குரிய இடத்தை வலிமையாக பிடித்துவிட்ட நிலையில் அபிஷேக் சர்மா, ஜெய்ஸ்வால், சாம்ஸன் ஆகிய மூவரிடையே தொடக்க வரிசைக்கு கடும் போட்டி நிலவுகிறது. ரோஹித் சர்மா, ஜடேஜா, கோலி டி20 போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்த நிலையில் இவர்களின் இடத்தை நிரப்ப வீரர்களைத் தேர்வு செய்வதுதான் பயிற்சியாளர் கம்பீர் முன்னுள்ள மிகப்பெரிய பணியாக இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு வீரரும் ஏதாவது ஒரு ஆட்டத்தில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக, காரணமாக அமைந்துவிடும் நிலையில் யாரை பெஞ்சில் அமர வைப்பது, ப்ளெயிங் லெவனில் இடம் அளிப்பது என முடிவு செய்வது கடினமான பணியாக மாறிவிட்டது. நாஜி அவுஷ்விட்ஸ் வதை முகாம்: 'சோவியத் படை எங்களை விடுவித்தபோது வாழ்த்தவில்லை, புன்னகைக்கவில்லை'ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் - காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை27 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அபிஷேக் சர்மா, ஜெய்ஸ்வால், சாம்ஸன் ஆகிய மூவரிடையே தொடக்க வரிசைக்கு கடும் போட்டி நிலவுகிறது. இங்கிலாந்து அணியின் செயல்பாடு எப்படி? இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின், அந்த அணியால் வெள்ளைப் பந்தில் நடக்கும் ஆட்டங்களில் பெரிதாக வெற்றியை குவிக்க முடியவில்லை. ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, 2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் இங்கிலாந்து அணி மோசமாகவே செயல்பட்டது. டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக வந்த பிரண்டென் மெக்கலம் ஒருநாள், டி20க்கும் சேர்த்து பணியைக் கவனித்த போதிலும் இவரின் பேஸ்பால் பாணி ஆட்ட முறை பெரிதாக கைகொடுக்கவில்லை. டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டி உலகக் கோப்பையும் மோசமாக அமைந்தது. இந்திய அணிக்கு எதிராக இந்த டி20 தொடரும் கடும் சவாலாக மாறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வருண் வீசும் கூக்ளி பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டன் இருவரும் திணறுகின்றனர். இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பின் வந்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சும் பெரிதாக பலன் அளிக்கவில்லை. மார்க் உட் பந்துவீச்சில் வேகம் இருக்கிறதே தவிர, பேட்டர்களை திணறடிக்கும் வகையில் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்வதில்லை (சரியான லைன் அன்ட் லென்த் இல்லை). ஆல்ரவுண்டர்களையும், ஸ்பெசலிஸ்ட் பேட்டர்களையும் வைத்திருந்தாலும் இரு ஆட்டங்களிலும் அந்த அணி பெரிதாக ரன் குவிக்கவில்லை. இந்தியாவின் சுழற்பந்துவீச்சுப் படையைப் பார்த்து இங்கிலாந்து பேட்டர்கள் எப்படி ஆடுவது எனத் தெரியாமல் விக்கெட்டை இழக்கிறார்கள். அதிலும் வருண் வீசும் கூக்ளி பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டன் இருவரும் திணறுகின்றனர். இங்கிலாந்து அணிக்கு இந்திய வீரர்களின் சுழற்பந்துவீச்சை சமாளிப்பது பெரிய தலைவலியாக இருக்கும். கொரோனா 'சீன ஆய்வகத்திலிருந்து' பரவியதற்கான வாய்ப்புகள் அதிகம் - அமெரிக்க உளவு முகமையான சிஐஏ கூறுவது என்ன?26 ஜனவரி 2025 தினமும் தொழ மாட்டார்கள், ரமலான் நோன்பு இருக்க மாட்டார்கள் - இஸ்லாம் மதத்தில் இப்படி ஒரு குழு இருப்பது தெரியுமா?26 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணிக்கு இந்திய வீரர்களின் சுழற்பந்துவீச்சை சமாளிப்பது பெரிய தலைவலியாக இருக்கும். மைதானம் யாருக்கு சாதகம்? ராஜ்கோட் நிரஞ்சன் மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. தட்டையான பிட்சை கொண்டுள்ள இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்ய படாதபாடு படவேண்டும். சரியான லைன் லெத்தில் (Line Length?) மட்டுமே பந்தை பிட்ச் செய்ய முயல வேண்டும், இல்லாவிட்டால் பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியேதான் பார்க்க முடியும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவு ஒத்துழைக்கும், ஆனால் பந்து நன்றாக திரும்பும் எனக் கூற முடியாது. ஒட்டுமொத்தத்தில் பேட்டர்களுக்கு விருந்தாக இந்த ஆடுகளம் இருக்கும். இந்த ஆடுகளத்தில் குறைந்தபட்ச ஸ்கோரே 189 ரன்கள்தான். அதிகபட்சமாக 228 ரன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆதலால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து பெரிய ஸ்கோரை எட்டுவது பாதுகாப்பானது. இரவு நேர பனிப்பொழிவுதான் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும். இந்த மைதானத்தில்இந்திய அணி இதுவரை 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 4 போட்டிகளில் வென்று, ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்த 5 ஆட்டங்களிலும் 3 போட்டிகள் முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன, 2 ஆட்டங்களில் சேஸிங் செய்த அணிகள் வென்றுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj027ndd407o
  3. கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் Published By: DIGITAL DESK 3 28 JAN, 2025 | 09:53 AM நாட்டில் நேற்றைய தினம் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான அளவிலும், கொழும்பு 07, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையிலும் காணப்பட்டது. இன்றும் மேற்கூறிய பகுதிகளில் 58 மற்றும் 120 க்கு இடையில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்து காணப்படும் என கணிக்கப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் குறைவதால், உடல்நலக் பிரச்சினைகள் உள்ள நபர்கள் குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன், பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1 மணி முதல் 2 மணி மணி வரை காற்றுத் தரக் குறியீடு (AQI) ஆரோக்கியமற்று காணப்படும். நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றுத் தரக் குறியீடு அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/205092
  4. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (27) முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலின் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் வருமாறு, அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை கூட்டத்தின் பின்னர் பல்கலைக்கழகத்தின் கலை பீடாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவினை அடுத்துப் பல்கலைக்கழகம் பற்றி பல கருத்துக்கள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நிலைமை குறித்து கலந்துரையாடும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழு கூட்டம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கலைப்பீடத்தில் இடம்பெற்றது. மீறல்களிலும், வன்முறைகளிலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தினை பாதிக்கும் வகையிலும், உடைமைச் சேதங்களை விளைவிப்பதிலும் சீரழிவு மிக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கடந்த காலத்திலே உறுதியான நடவடிக்கைகளை எடுக்க தவறியமை குறித்து இந்தக் கூட்டத்தில் பல உறுப்பினர்களும் தமது கருத்துக்களை வெளியிட்டனர். திட்டமிட்ட முறையில் விசாரணைகளில் தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தண்டனைகளில் இருந்து தப்பித்துச் செல்ல நிர்வாகம் வழிசமைத்துக் கொடுப்பதாகக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. தண்டனையின் நோக்கம் மாணவர்களை விரோதிப்பது அல்ல; மாறாக தாம் செய்யும் தவறுகளை மாணவர்கள் உணர்ந்து எதிர்காலத்திலே செம்மையாகச் செயல்படும் வகையில் ஊக்குவிப்பதே என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை அன்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஓர் அடையாள வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுவது எனவும், நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுவதும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. கோரிக்கைகள்: 1. மோசமான செயல்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ராஜினாமா செய்த கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் அவர்கள் முன்வைத்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். பேராசிரியர் ரகுராம் தனது பதவி விலகலை வாபஸ் பெற்று மீளவும் பீடாதிபதி பொறுப்பை ஏற்பதற்கு உரிய ஒரு சூழலை பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்திலே ஏற்படுத்த வேண்டும். 2. மாணவர்களுக்கு எதிரான‌ ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும். 3. மோசமான செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உறுதியாக இருக்கும் போதிலும், அவற்றைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வேண்டுமென்றே கால தாமதங்கள் ஏற்படுத்தல், வேண்டுமென்றே நிருவாகத் தவறுகளை இழைத்தல் போன்ற செயன்முறைகள் மூலம் மீறல்களில் ஈடுபட்ட மாணவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு நிர்வாகம் வழிசமைத்துக் கொடுக்கும் போக்கு உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்படல் வேண்டும். 4. இரண்டு மாணவர்கள் கணித புள்ளிவிபரவியல் துறையின் வாயிலில் இருந்த பூட்டினை உடைத்தமை தொடர்பிலே இடம்பெற்ற விசாரணையினை வேண்டுமென்றே தாமதமடையச் செய்த பல்கலைக்கழக நிருவாகிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். அதே போன்று கலைப் பீடத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வேண்டுமென்றே இழுத்தடிப்போர் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இது தொடர்பிலே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டினையும் கோருவதற்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. 5. கலைப்பீடத்திலும் விஞ்ஞானப் பீடத்திலும் மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதில் இருந்து தவறிய பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் மீது எமது ஆசிரியர் சங்கம் நம்பிக்கையினை இழந்துள்ளது. எனவே எல்லா வெளிவாரி உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டும். இது தொடர்பான சங்கத்தின் விண்ணப்பம் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்படும். மேற்கூறிய ஐந்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கும், எல்லாப் பீடாதிபதிகளுக்கும் ஆசிரியர் சங்கத்தினால், இன்றைய கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய‌ அனுப்பிவைக்கப்பட்டது – என்றுள்ளது. https://thinakkural.lk/article/314949
  5. யாழ். பல்கலைகழக மாணவர்கள் மீதான பழிவாங்கல்கள், கற்றல் உரிமைகளிற்காக அனைவராலும் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமானது திட்டமிட்டு திரிபுபடுத்தப்பட்டுள்ளது - அனைத்துபீட மாணவ ஒன்றியங்களும் கூட்டாக அறிக்கை Published By: RAJEEBAN 28 JAN, 2025 | 09:01 AM எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் கடந்த 24, 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டமானது நான்கு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து நடைபெற்றிருந்தது. தற்பொழுது ஒரு சில நிர்வாக மற்றும் அரசியல் நோக்கங்களிற்காக அது முழுமையாக திரிபுபடுத்தப்பட்டு போராட்டத்தின் நோக்கம் முழுமையாக திசை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. போராட்டத்தின் நோக்கத்தினையும் சரியான புரிதலையும் வழங்கும் நோக்கத்துடன் இந்த ஊடக அறிக்கையினை வெளியிடுகின்றோம். குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது பின்வரும் நான்கு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து நடைபெற்றிருந்தது. விதிகளிற்குப் புறம்பாக நடைபெறும் / நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்துதல், போராடுதல் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்தல், விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்தல், மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து மாணவர்களிற்கு உடனடி நிவாரணம் வழங்குதல். எமது பல்கலை மாணவர்கள் மீது விதிக்கப்பட்ட வகுப்புத்தடைகள் விதிமீறல்களுடனும் உரிய கால நீட்டிப்புக்களுடனும் நடைபெறவில்லை என்று 25.01.2025 அன்று நடைபெற்ற பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. கல்லாசனங்கள் அகற்றப்பட்ட விடயத்தில் கூட எவ்வித நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படாமலும், ஒப்புதல்கள் பெறப்படாமலும் பொதுச் சொத்தொன்று உடைத்துத் தகர்க்கப்பட்டுள்ள குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளமையினையும் பேரவையானது கண்டறிந்துள்ளமை நோக்கத்தக்கது. மேற்படி விதிமீறல்களுடன் நடைபெற்ற விடயங்கள் குற்றமெனக் கணிக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த செயல்கள் யாவும் போதைப் பொருட்களிற்கு எதிரான நடவடிக்கையின் விளைவுகளாக சித்தரித்து திரிபுபடுத்தப்படுகின்றமை வேதனையானது. முதலாம் ஆண்டு மாணவர்களின் பாடத்தெரிவுச் சிக்கலில் உள்ள பிறழ்வுகளையும், whats app குழுவில் கலந்துரையாடிய மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமையும் திட்டமிட்டு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகார பீடங்கள் தங்களின் நலன்களிற்காக போராடும் வர்க்கங்களை பிரித்தாளும் வழமை யாவரும் அறிந்ததே! அவ்வாறு தான் ஒரு சில நிர்வாக ஒத்தோடிகளின் துணை கொண்டு புதிய புனைவுகள் எம்மத்தியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மாணவர்கள் மீது நடைபெற்ற ஒழுக்காற்று விசாரணைகள் எவற்றிலும் கல்லாசனங்களோ, போதைப் பொருட்களோ நேரடியாகத் தொடர்புபடாத நிலையிலும் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்துகின்றோம். மாணவர் சமூகமாக நாங்கள் ஒருபோதும் போதையை ஆதரித்ததுமில்லை, ஆதரிக்கப் போவதுமில்லை. மாறாக “காலில் புண் என்றால் காலினை வெட்டியெறிவதற்குப் பதில் அதனை ஆற்றுவதே சமூகப் பொறுப்பு”. அதாவது கல்லாசனங்களால் ஏதேனும் சிக்கல் நிலை இருப்பின் அதற்கான முற்காப்பு நடவடிக்கைகளினை மேற்கொள்ளுவதும், அதனை தடுத்து நிறுத்துவதுமே மாணவர் ஒழுக்கம் சார் தரப்பினரின் கடமையும் பொறுப்புமாகும். மாறாக பொதுச் சொத்தினை தகர்ப்பது என்பது பெருந்தவறு. அதனை நியாயப்படுத்தும் விதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகம் ஒரு நெறிபிறழ்ந்த சமூகம் எனும் காட்டிக் கொடுப்புக்கள் திட்டமிட்டு பல்கலைக்கழக மாண்பிற்கு களங்கமேற்படுத்தும் வகையில் ஒரு சில நிர்வாக ஒத்தோடிகளின் துணையுடன்; அரங்கேற்றப்படுகிறமை வேதனைக்குரியது. மாணவர்களுடைய கருத்தாக சித்தரித்து ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட ஊடக சந்திப்பென்பது மாணவர்களுடைய கருத்தன்று! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஒன்றியப் பிரதிநிதிகள், பல்கலை நிர்வாகம் ஆகியவற்றை களங்கப்படுத்தும் வகையில் ஆதாரங்களேதுமற்ற திரிபுபடுத்தப்பட்ட பொய்யான செய்திகள் பொது வெளியில் பகிரப்பட்டு வருகின்றமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பழிவாங்கல்கள் மற்றும் கற்றல் உரிமைகளிற்காக அனைவராலும் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமானது மாணவர்களின் அடிப்படை கற்றல், சனநாயக உரிமை சார்ந்தே முன்னெடுக்கப்பட்டது. எனினும் அது திட்டமிட்டு திரிபுபடுத்தப்படுவதோடு, பல்கலைக்கழகத்திற்கு களங்கமேற்படுத்துவதாக அமைந்துள்ளது. பல்கலைக்கழக பேரவையினையும் துணைவேந்தரையும் திட்டமிட்டு குற்றஞ்சாட்டும் நோக்கில் இவை பரப்பப்படுகின்றமையினையும் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். https://www.virakesari.lk/article/205089
  6. பிரபாகரனை சீமான் சந்தித்ததும், ஆயுதப் பயிற்சி பெற்றதும் உண்மையா?சம்பந்தப்பட்டவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு, சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 28 ஜனவரி 2025, 04:54 GMT புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்தாரா, புகைப்படம் எடுக்கப்பட்டதா என்பதெல்லாம் குறித்த விவாதங்கள் தமிழக அரசியல் களத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்? நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில நாட்களாக பெரியார் மீது தொடர் விமர்சனங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பல வருடங்களுக்கு முன்பாக அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது தொடர்பான விவாதங்களும் எழ ஆரம்பித்திருக்கின்றன. கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் என்பவர், தன்னுடைய X பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில், "இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்" என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் ஊடகங்களுக்கும் இது தொடர்பாக பேட்டியளித்தார் ராஜ்குமார். அந்தப் பேட்டிகளில் சீமானுக்கு பரிசளிப்பதற்காக இதுபோன்ற ஒரு படத்தை உருவாக்கித் தரும்படி ஒருவர் கேட்டதாகவும் அதற்காகவே அப்படி ஒரு படம் உருவாக்கப்பட்டதாகவும், உண்மையில் அப்படி ஒரு படம் எடுக்கப்படவே இல்லையன்றும் அவர் தெரிவித்தார். பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மையா? சமூக வலைதளங்களில் மீண்டும் சர்ச்சை பெரியார் சொன்னதாக சீமான் சர்ச்சை கருத்து - பெரியார் உண்மையில் அப்படி குறிப்பிட்டாரா? பெரியார் குறித்து சீமான் சர்ச்சைப் பேச்சு - நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் சீமான் சர்ச்சைக் கருத்து: பெரியார் உண்மையில் அப்படி கூறினாரா? பிரபாகரனின் அண்ணன் மகன் கருத்து அதற்கடுத்ததாக, பிரபாகரனின் அண்ணன் மகனான கார்த்திக் மனோகரன், சீமான் கூற்றுகளை மறுத்து தொலைக்காட்சி பேட்டி ஒன்றை அளித்தார். அந்தப் பேட்டியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்து சீமானிடம் பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, அவர் மிகுந்த கோபத்துடன் பதிலளித்தது, சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திரைப்பட ஒளிப்பதிவாளரான சந்தோஷ் என்பவர், இரு நாட்களுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மை என்று குறிப்பிட்ட அவர், அது தொடர்பாக சீமான் தெரிவிக்கும் பிற கருத்துகள், தகவல்கள் பொய்யானவை எனத் தெரிவித்தார். அதிநவீன துப்பாக்கியுடன் சீமான் இருக்கும் புகைப்படம், 'எல்லாளன்' என்ற திரைப்பட படப்பிடிப்பின் நடுவே எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பேட்டி வெளியான பிறகு, சமூக வலைதளங்களில் சீமான் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் கடுமையாக மோதி வருகின்றனர். திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கைது - இன்றைய முக்கிய செய்திகள்3 மணி நேரங்களுக்கு முன்னர் கே.எம்.செரியன்: இஸ்லாமிய பெண்ணுக்கு இந்துவின் இதயத்தை பொருத்திய கிறிஸ்தவர்3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குள்ளாகும் புகைப்படங்களில் ஒன்று "அது வெறும் 12 நிமிட சந்திப்பே" சீமான் அளித்த பல ஊடக பேட்டிகளிலும் மேடைப் பேச்சுகளிலும் பிரபாகரனை தான் சந்தித்த போது நடந்தது என்று கூறி பல தகவல்களை வெளியிட்டுவந்தார். குறிப்பாக, தான் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் பிரபாகரன் நீண்ட நேரம் தன்னுடன் பேசியதாகவும் அவர் தெரிவித்துவந்தார். குறிப்பாக தனக்கு அங்கு அளிக்கப்பட்ட உணவு குறித்து விரிவாகப் பேசிவந்தார் சீமான். இந்தத் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து அவருடைய எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தனர். தற்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் தெரிவிக்கும் தகவல்கள் உண்மை என்கிறார் புலிகளுக்கு நெருக்கமானவராக இருந்தவர்களில் ஒருவராக கருதப்படும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி. "மொத்தமே 12 நிமிடங்கள்தான் பிரபாகரனை சீமான் சந்தித்தார்" என்கிறார் கொளத்தூர் மணி. "ஆவணப் படம் ஒன்றை இயக்குவதற்கு சரியான ஆட்கள் தேவை என புலிகள் கேட்டுவந்தனர். சீமான் பெயர் உட்பட பலரது பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை விசிகவின் வன்னிஅரசு கொடுத்தார். என்னிடமும் சீமானைப் பற்றிக் கேட்டார்கள். நானும் அவரைப் பரிந்துரைத்தேன். இப்படித்தான் 2008ஆம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கைக்குச் சென்றார் சீமான். விமானம் மூலம்தான் அவர் அங்கே சென்றார். ஆனால், அந்த ஆவணப் படத்தை இயக்க இவரைப் பயன்படுத்தவில்லை. அங்கு போய்ச் சேர்ந்த சில நாட்களிலேயே பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மொத்தம் 12 - 13 நிமிடங்கள் அவர் பிரபாகரனுடன் இருந்தார். பிரபாகரனைச் சந்திக்கச் செல்லும் போது log - Book ஒன்றில் செல்லும் நேரத்தையும் திரும்பி வரும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும். அதை வைத்தே இந்தத் தகவலைச் சொல்கிறேன். அங்கிருந்த காலகட்டத்தில், புலிகள் குறித்து மற்றவர்கள் பேசுவது, திரும்பி வந்த பிறகு புலிகளுடன் பழகியவர்கள் சொல்வதை வைத்து, அந்த சம்பவங்கள் தனக்கு நடந்ததாகச் சொல்ல ஆரம்பித்தார் சீமான்" என்கிறார் கொளத்தூர் மணி. '15 ஆண்டு காத்திருப்புக்குப் பின் பிறந்த மகளுக்கு இந்த நிலையா?' - சென்னை சிறுமியின் தாய் கலக்கம்27 ஜனவரி 2025 கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை27 ஜனவரி 2025 பட மூலாதாரம்,VANNI ARASU / FACEBOOK படக்குறிப்பு, "தமிழ்நாட்டில் எந்த இயக்குநரை இதனைச் செய்யச் சொல்லலாம் எனக் கேட்டார்கள். அப்போது நான் புகழேந்தி, ஜான் மகேந்திரன், சீமான் என ஒரு சிறிய பட்டியலைத் தந்தேன்" ஆவணப் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பையும் இழந்தார் சீமான் தான்தான் சீமானின் பெயரை விடுதலைப் புலிகளுக்குப் பரிந்துரைத்தாகச் சொல்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு. "2005, 2007, 2008 என மூன்று முறை அங்கே சென்றேன். 2005-ஆம் ஆண்டில் செல்லும் போது தமிழீழ தொலைக்காட்சிக்காக சில கருவிகளையும் பிரபாகரன் கேட்டதால் சில பறைகளையும் வாங்கிக்கொண்டு சென்றேன். அந்தத் தருணத்தில் ஒரு ஆவணப் படத்தை இயக்குவதற்கான ஏற்பாடுகளை புலிகள் செய்து கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் எந்த இயக்குநரை இதனைச் செய்யச் சொல்லலாம் எனக் கேட்டார்கள். அப்போது நான் புகழேந்தி, ஜான் மகேந்திரன், சீமான் என ஒரு சிறிய பட்டியலைத் தந்தேன். இதற்குப் பிறகு 2008ஆம் ஆண்டு பிப்ரவரியில் சீமான் அங்கு சென்றார். ஆனால், அவர் அந்த ஆவணப் படத்தை இயக்கத் தேர்வாகவில்லை. திரைப்பட இயக்குநர் பயிற்சிக்கும் இவர் தேர்வாகவில்லை. பிரபாகரனை சில நிமிடங்கள் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தத் தருணத்தில் பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் குடும்பத்தோடு சந்தித்ததாகச் சொல்கிறார் சீமான். அப்படி நடந்திருக்க வாய்ப்பேயில்லை" என்கிறார் வன்னியரசு. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் புறந்தள்ளுகிறது நாம் தமிழர் கட்சி. இந்த விஷயங்களை வைத்தெல்லாம் நாம் தமிழர் கட்சியை வீழ்த்த முடியாது என்கிறார் அக்கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளரான சே. பாக்கியராசன். "இப்போது சீமான் பெரியாரைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதனால், பிரபாகரனை வைத்துத்தானே அரசியல் செய்கிறீர்கள், அதைக் காலி செய்கிறோம் என இந்த ஆட்டத்தைத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் வைத்து நாம் தமிழர் கட்சியை வீழ்த்த முடியாது. சந்தோஷ், ராஜ்குமார் போன்றவர்கள் சொல்வது எதுவும் உண்மையில்லை. ஆனால், இதனால் சில நல்ல விஷயங்களும் நடக்க ஆம்பித்திருக்கின்றன. புலிகள் இயக்கத்தில் இருந்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் இதுவரை அமைதியாக இருந்தார்கள். ஆனால் சந்தோஷ் பேசியது அவர்களை ஆத்திரப்படுத்தியிருக்கிறது. அவருக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போலவும் சீமானைப் பற்றி பிரபாகரனுக்கு எதுவும் தெரியாது என்பதைப் போலவும் பேசுகிறார் அவர். அதனால், அவர்கள் தற்போது பேச முன்வருகிறார்கள். நாங்கள்தான் இப்போது வேண்டாம் என சொல்லி வைத்திருக்கிறோம்" என்கிறார் பாக்கியராசன். நாம் தமிழர் கட்சியின் அடிப்படை, சீமான் பிரபாகரனைச் சந்தித்ததும் அது தொடர்பான புகைப்படமும்தான் என பெரியாரியவாதிகள் நினைத்து, அதனைக் காலிசெய்ய நினைக்கிறார்கள். ஆனால், துவக்கத்தில் வேண்டுமானால் அப்படியிருந்திருக்கலாம். நாம் தமிழர் கட்சி அதனைக் கடந்துவந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை வைத்து சீமானையோ, எங்களையோ எரிச்சல்படுத்தலாம், வேறு எதுவும் நடக்கப்போவதில்லை என்கிறார் பாக்கியராசன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxe2gzr2wxo
  7. இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்து அரை இறுதிக்கு முன்னேறியது Published By: VISHNU 27 JAN, 2025 | 07:45 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளைத் தொடர்ந்து இங்கிலாந்து கடைசி அணியாக அரை இறுதிகளில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டது. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் சிக்ஸ் சுற்றில் இரண்டாம் குழுவிலிருந்து முதலாவது அணியாக தென் ஆபிரிக்கா அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் நேற்றைய தினம் அரை இறுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றிருந்தன. இன்றைய தினம் நடைபெற்ற இரண்டாம் குழுவுக்கான ஒரே ஒரு சுப்பர் சிக்ஸ் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து நான்காவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. சரவாக், போர்னியோ கிரிக்கெட் மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (27) நடைபெற்ற இரண்டாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டியில் நியூஸிலாந்தை 6 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது. தென் ஆபிரிக்காவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரை இறுதிவரை முன்னேறியிருந்த நியூஸிலாந்து இந்த வருடம் சுப்பர் சிக்ஸ் சுற்றுடன் வெளியேறுகிறது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நியூஸிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றது. எம்மா மெக்லியோட், கேட் ஏர்வின் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி முதலாவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். ஆனால், ஏனைய வீராங்கனைகள் அதனை அனுகூலமாக்கிக்கொள்ளத் தவறியது நியூஸிலாந்து அணிக்கு பாதகமாக அமைந்தது. கேட் ஏர்வின் 35 ஓட்டங்களையும் எம்மா மெக்லியோட் 18 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை. மேலும் நியூஸிலாந்தின் 10 விக்கெட்கள் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன. பந்துவீச்சில் டில்லி கோர்ட்டீன் கோல்மன் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ப்ரிஷா தனவாலா 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்ருடி ஜொன்சன் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மகளிர் அணி 11.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஜெமிமா ஸ்பென்ஸ் 29 ஓட்டங்களையும் டாவினா பெரின் 21 ஓட்டங்களையும் சார்ளட் ஸ்டப்ஸ் ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிஷிக்கா ஜஸ்வால் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/205076
  8. யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்; பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது. இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்ததாகவும் இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டதாகவும் தெரியவருகின்றது. இதனையடுத்து, ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். கைதான இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ளதால் மீனவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். https://thinakkural.lk/article/314941
  9. 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் ரி20 சிறப்பு அணியில் இலங்கையின் வனிந்து 25 JAN, 2025 | 04:43 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இன்று வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ரி20 சிறப்பு அணியில் இலங்கையின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளார். அதிரடி வீரர்களும் அசாத்திய சகலதுறை திறமை உடையவர்களும் இந்த அணியில் பெயரிடப்பட்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நேற்று வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சிறப்பு அணியிலும் வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் 20 ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வனிந்து ஹசரங்க, 38 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தியிருந்தார். ஸிம்பாப்வேக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்ரங்கில் அவர் பதிவுசெய்து 15 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற பந்துவீச்சுப் பெறுதியே கடந்த வருடம் அவரது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக இருந்தது . 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி சர்வதேச ஆடவர் ரி20 கிரிக்கெட் சிறப்பு அணியின் தலைவராக கடந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவை உலக சம்பியனாக வழிநடத்திய ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி சர்வதேச ஆடவர் ரி20 கிரிக்கெட் சிறிப்பு அணி (துடுப்பாட்ட வரிசையில்): ரோஹித் ஷர்மா (தலைவர் - இந்தியா), ட்ரவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), பில் சோல்ட் (இங்கிலாந்து), பாபர் அஸாம் (பாகிஸ்தான்), நிக்கலஸ் பூரண் (விக்கெட் காப்பளாளர் - மேற்கிந்தியத் தீவுகள்), சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), ஹார்திக் பாண்டியா (இந்தியா), ராஷித் கான் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்க (இலங்கை), ஜஸ்ப்ரிட் பும்ரா (இந்தியா), அர்ஷ்தீப் சிங் (இந்தியா). https://www.virakesari.lk/article/204869 2024ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் வீரர் இந்திய வேகப்பந்துவீச்சு நட்சத்திரம் அர்ஷ்தீப் சிங் 25 JAN, 2025 | 06:57 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த விருதுகளில் ஒன்றான 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் வீரராக இந்தியாவின் நட்சத்திரம் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியனாவதற்கு பெரும் பங்காற்றியவர்களில் அர்ஷ்தீப் சிங்கும் ஒருவராவார். பவர் ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் அசாத்திய திறமையுடன் பந்துவீசி அனைவரினதும் பாராட்டைப் பெற்றிருந்தார். ரி20 சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் கடந்த வருடம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டர். தான் பங்குபற்றிய சகல போட்டிகளிலும் டெத் ஓவர்களில் மிகத் திறமையாக பந்துவீசியதுடன் விக்கெட்களையும் தாராளமாக வீழ்த்தியிருந்தார். கடந்த வருடம் 18 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 36 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவரது சராசரி 15.31 ஆக இருந்ததுடன் ஸ்ட்ரைக் ரேட் 10.80ஆகும். அவரது எக்கொனொமிக் ரேட் 7.49 ஆக இருந்தது. https://www.virakesari.lk/article/204890
  10. டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே என்னை பழிவாங்குகிறார்கள்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கவலை உத்தியோகபூர்வ இல்லம் பறிக்கப்படுமென்றும் எனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீக்கப்படுவார்களென்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியது, தேர்தலில் அவர்களுக்கு உதவிய தமிழ் புலம்பெயர்ந் தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். இன்று பலர் கடந்த காலத்தை மறந்துவிட்டதாகக் கூறிய ராஜபக்ஷ தனது உத்தரவின் பேரில் செயல்பட்டு, விடுதலைப் புலிகள் நாட்டிற்கு ஏற்படுத்த முயன்ற பெரும் அழிவைத் தடுத்தவர்கள் முப்படைகளின் வீரமிக்க வீரர்கள் என்றும் கூறினார். மத்திய வங்கி குண்டு, தெஹிவளை ரயில் குண்டு, எயார் லங்கா குண்டுவெடிப்பு, மற்றும் கொழும்பு மீது விமானங்கள் மூலம் குண்டுவீச்சு. அந்த நேரத்தில் ஒவ்வொரு வாரமும் கிராமங்களுக்கு வீரர்களின் உடல்கள் அடங்கிய சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள் எத்தனை வந்தன என்பதை ராஜபக்ஷ ஊடகமொன்றிடம் நினைவு கூர்ந்தார். மேலும் முன்னாள் இந்தியத் தலைவர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, அரசியல்வாதிகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுத்தது தனது அரசாங்கம்தான் என்றும் மஹிந்த சுட்டிக்காட்டினார். நாட்டின் மிகவும் அச்சுறுத்தலை எதிர்கொண்ட அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பாதுகாப்பை இழந்ததற்கு பொதுமக்களின் எதிர்வினையை வரவிருக்கும் தேர்தல்களில் அரசாங்கம் அறிய முடியும் என்றும் கூறியுள்ள மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு அல்லது உத்தியோகபூர்வ இல்லம் குறித்து ஒருபோதும் புகார் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/314947
  11. உண்மை தான் அண்ணை, யாழில் இணைக்கப்பட்டதா என ஒவ்வொரு சொற்களாக தேடியும் கிடைக்காததால் இணைத்தேன். எங்கோ வாசித்த நினைவும் உள்ளது!
  12. 2024க்கான ஐசிசி டெஸ்ட் அணியில் கமிந்து மெண்டிஸ் 24 JAN, 2025 | 05:21 PM (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கடந்த வருடம் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பு அணியில் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார். கமிந்து மெண்டிஸ் கடந்த வருடம் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள், 3 அரைச் சதங்களுடன் 1049 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அவர் 7 டெஸ்ட் போட்டிகளில் 8 தடவைகள் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று சாதனை நிலைநாட்டியிருந்தார். வருடத்தின் ஐசிசி டெஸ்ட கிரிக்கெட் அணிக்கு அவுஸ்திரேலியாவின் பெட் கமின்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் குழாம் (துடுப்பாடட வரிசையில்) யஷஸ்வி ஜய்ஸ்வால் (இந்தியா), பென் டக்கெட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஹெரி ப்றூக் (இங்கிலாந்து),கமிந்து மெண்டிஸ் (இலங்கை), ஜெமி ஸ்மித் (விக்கெட் காப்பாளர் - இங்கிலாந்து), ரவிந்த்ர ஜடேஜா (இந்தியா), பெட் கமின்ஸ் (தலைவர் - அவுஸ்திரேலியா), மெட் ஹென்றி (நியூஸிலாந்து), ஜஸ்ப்ரிட் பும்ரா (இந்தியா). https://www.virakesari.lk/article/204811
  13. இலங்கை : நாயை தூக்கிலிட்டு கொன்றதாக பெண் கைது - நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்பு படம் கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்றை தூக்கிட்டு கொலை செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் இன்றைய தினம் (ஜனவரி 27) கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார். மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். ''மாங்குளம் பகுதியில் நாய் ஒன்றின் கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு, கொன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய மாங்குளம் போலீஸார், 48 வயதான பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.'' என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இலங்கையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாகன இறக்குமதி - விலை இரட்டிப்பாகும் என்ற அச்சம் ஏன்? மஹிந்த ராஜபக்ஸ பாதுகாப்பு குறைப்பு, அவரது மகன் கைது - இலங்கையில் என்ன நடக்கிறது? முழு விவரம் யாழ்ப்பாணத்தில் 'திருவள்ளுவர் கலாசார மையம்' என்ற பெயருக்கு எதிர்ப்பு ஏன்? புதிய பெயர் என்ன? இலங்கையில் செல்போன் வாங்க புதிய கட்டுப்பாடு - ஜன.28 முதல் புதிய விதிகள் அமல் நடந்தது என்ன? முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியைச் சேர்ந்த சாந்தரூபன் ஜீவநந்தினி, தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்ந்து வந்துள்ளார். சாந்தரூபன் ஜீவநந்தினியின் அண்டை வீட்டில் வசித்து வந்த விஜேந்திரன் சஜிதா என்ற பெண், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாக மத்தியஸ்த சபை தெரிவிக்கின்றது. இந்த நிலையில், விஜேந்திரன் சஜிதா வளர்ந்து வந்த ஆட்டை, சாந்தரூபன் ஜீவநந்தினி வளர்த்த நாய் கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த ஆடு இறந்த நிலையில், இருவருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஒட்டுச்சுட்டான் மத்தியஸ்த சபைக்கு வந்துள்ளதாக மத்தியஸ்த சபையின் தலைவர் கனகலிங்கம் ஜெயதீபன், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் கடந்த 25ம் தேதி இடம்பெற்றுள்ளது. நாகரிக வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்குள்ளேயே வேறுபாடுகள் இருந்தனவா?6 மணி நேரங்களுக்கு முன்னர் நாஜி அவுஷ்விட்ஸ் வதை முகாம்: 'சோவியத் படை எங்களை விடுவித்தபோது வாழ்த்தவில்லை, புன்னகைக்கவில்லை'4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,POLICE MEDIA படக்குறிப்பு, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர் என புத்திக்க மனதுங்க தெரிவித்தார் மத்தியஸ்த சபை கூறியது என்ன? நாயை கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக நாயின் உரிமையாளர் மத்தியஸ்த சபையின் விசாரணைகளின் போது கூறியுள்ளார். ''நாயை கட்டுப்படுத்த முடியாதுள்ளது என உரிமையாளர் கூறினார். இரண்டு தரப்பும் தங்களுக்குள் கதைத்துள்ளனர். நாயை வழங்க அதன் உரிமையாளர் இணங்கியுள்ளனர். அப்போது நாயை தான் வாங்கிக் கொள்வதாக ஆட்டின் உரிமையாளர் குறிப்பிட்டார். நாங்கள் இணக்கப்பாட்டிற்கு வருகின்றோம் என்ற பின்னரே நாங்கள் அதற்கான சான்றிதழை வழங்கினோம்.'' ''நாங்கள் நாயை கொலை செய்து படத்தை அனுப்புமாறோ அல்லது தூக்கில் போடுமாறோ நாங்கள் எந்தவொரு ஆலோசனையும் நாங்கள் வழங்கவில்லை. ஆனால் நாயை கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நான் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்." "போலீஸார் சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து விசாரணை நடத்தியது. தான் கொண்டு செல்லும் போது கழுத்து நெரிப்பட்டு நாய் இறந்ததாக அவர் போலீஸாரிடம் தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்துள்ளேன்'' என மத்தியஸ்த சபையின் தலைவர் கனகலிங்கம் ஜெயதீபன், பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். மத்தியஸ்த சபை அவமதிப்பு தொடர்பிலும் போலீஸ் நிலையத்தில், குறித்த பெண்ணிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக அவர் கூறுகின்றார். முறைப்பாட்டாரான விஜேந்திரன் சஜிதாவிடம் ஏன் நாயை கையளிக்கும் தீர்மானம் எட்டப்பட்டது என்பது குறித்து கேட்டபோது, ''நான் பராமரித்துக்கொள்கிறோன் என அவர் கூறியதன் அடிப்படையிலேயே நாயை அவரிடம் கொடுத்தோம். ஆனால், தீர்வு ஆவணத்தில் பராமரிப்பு என்ற வசனத்தை எழுதாது விட்டு விட்டோம். நாங்கள் பராமரித்துக்கொள்கின்றோம். இனி பிரச்னை இல்லை என அவர் கூறினார்.'' என அவர் குறிப்பிட்டார். உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்?6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை போல 4 மடங்கு பெரிய பிரமாண்ட பனிப்பாறை ஒரு தீவின் மீது மோதும் அபாயம் - என்ன நடக்கும்?27 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விஜேந்திரன் சஜிதா வளர்ந்து வந்த ஆட்டை, சாந்தரூபன் ஜீவநந்தினி வளர்த்த நாய் கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது (சித்தரிப்பு படம்) 'புகைப்படத்தை வெளியிட்ட பெண்' மத்தியஸ்த சபையின் இணக்கப்பாட்டிற்கு அமைய, நாயின் உரிமையாளரான சாந்தரூபன் ஜீவநந்தினி, ஆட்டின் உரிமையாளரான விஜேந்திரன் சஜிதாவிடம் நாயை கையளித்துள்ளார். இந்த நிலையில், நாயின் கழுத்து கயிற்றினால் நெரிக்கப்பட்டு தொங்கும் வகையிலான புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. நாயை கொன்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்த நிலையிலேயே, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் மூன்றாம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70k16ydj46o
  14. Published By: VISHNU 27 JAN, 2025 | 08:51 PM வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது; ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். தீவின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தீவின் தென்மேற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/205071
  15. சீனாவின் Three Gorges Dam அணையானது சுமார் 40,000 தொழிலாளர்களால் கட்டப்பட்டது. இந்த மெகா திட்டத்தின் பணிகள் 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய இந்த அணையை 2011ஆம் ஆண்டு, 31 மில்லியன் டாலர்கள் செலவில் சீனா கட்டியது. 2005ஆம் ஆண்டில், அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான நாசா, Three Gorges Dam-ன் மிகப்பெரிய நீரின் அழுத்தத்தால் உலகம் முன்பை விட சற்று தாழ்ந்துவிட்டது என்று கூறி உள்ளது. அதுமட்டுமின்றி, அணையில் ஏற்பட்ட மிகப்பெரிய நீர் அழுத்தம் பூமியின் இயக்கத்தின் வேகத்தை மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், நாளின் நீளமும் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அணை சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சர்வதேச அரசியலிலும் உலகப் பொருளாதாரத்திலும் செல்வாக்கை செலுத்தவும் வழிநடத்தவும் சீனா செயல்படுத்திய பல பெரிய திட்டங்களில் இந்த அணையின் கட்டுமானமும் ஒன்றாகும். Three Gorges Dam பூமியின் நீரோட்டம் மற்றும் வடிவத்தையே மாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய நதி யாசி (Yasi). சீனாவின் மேற்குப் பகுதியில் மலைகளால் சூழப்பட்ட இந்த ஆறு கிட்டத்தட்ட முழு சீனாவிலும் பாய்ந்து தென் சீனக் கடலில் கலக்கிறது. 1911ல் பெய்த அதிகனமழை காரணமாக யாங்சே ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததாகவும், இந்த பயங்கர வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 2,00,000 பேர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். 1931ல், சீனாவில் மற்றொரு பயங்கர வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் விளைவுகள் இன்னும் மோசமாக இருந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் 3 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். இதையடுத்து வெள்ளத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் வகையில், சீன அரசு இந்த விலையுயர்ந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. இந்த அணையின் கட்டுமானத்தில் 2 கோடியே 80 லட்சம் யூரிக் மீட்டர் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நாட்டில் இந்தளவு கான்கிரீட்டை ஒரு முறை ஊற்றினாலே, சுவிட்சர்லாந்து முழுவதும் இரண்டு அடி கான்கிரீட்டின் கீழ் மூழ்கிவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அணையில் அதிகளவு தண்ணீர் தேக்கி வைத்திருப்பதால் பூமி மெதுவாக சுழல ஆரம்பித்துள்ளது. 0.06 மைக்ரோ விநாடிகள் வேகம் குறைந்ததால், உலகளவில் நாளின் நீளம் 0.06 மைக்ரோ விநாடிகள் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, சீனா இயற்கை பேரழிவு வெள்ளத்தை சமாளிக்க முடியும். அதே நேரத்தில், இந்த அணையின் மூலம் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வறட்சியை சமாளிக்க அவசியம் ஏற்படும் போது, சீனா இந்த அணையின் மூன்று நீர்த்தேக்கங்களை திறந்து விடுகிறது. https://thinakkural.lk/article/314915
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் நெட்ஸாரிம் பாதை (Netzarim Corridor) என அறியப்படும் சாலையை வழியாக பயணிக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்பி வருகின்றனர். கடலோர பாதையில் பெருந்திரளான மக்கள் வடக்கு நோக்கி நடந்து செல்வதை டிரோன் காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் கார்களில் பயணிக்கும் மக்கள், சோதனைச் சாவடிகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,EPA பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,கார்களில் பயணிக்கும் மக்கள், சோதனைச் சாவடிகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்பி வருகின்றனர் பாலத்தீனியர்கள் கடந்த சனிக்கிழமை அன்றே, வடக்கு நோக்கி திரும்புவதாக இருந்தது. ஆனால் பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலைச் சேர்ந்த அர்பெல் யெஹுத் என்ற பெண்ணை விடுவிப்பது தொடர்பான சர்ச்சையால், இஸ்ரேல் நெட்ஸாரிம் பாதையை அடைத்து வைத்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவிற்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பிறகு இதில் ஒரு முடிவு எட்டப்பட்டது. யெஹுத், வரும் வியாழக்கிழமை (ஜனவரி 30) சிறைபிடிக்கப்பட்ட மற்ற இரண்டு பணயக்கைதிகளுடன் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படுவார். இதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பாலத்தீனியர்களுக்கு தெற்கு காஸாவில் இருந்து வடக்கு நோக்கி கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES அதிர்ச்சியூட்டும் யதார்த்த நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காஸா நகரின் வடக்கு பகுதிகளில், சில இடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் போல காட்சியளிக்கின்றன சிலர் இந்த தருணத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்தனர். ஆனால் வடக்கு காஸாவை அடைந்ததும், அங்கு அவர்கள் கண்ட யதார்த்த நிலை அதிர்ச்சியூட்டுவதாவே இருந்தது. காஸா நகரின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், சில இடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் போல காட்சியளிக்கின்றன. பட மூலாதாரம்,REUTERS வடக்கு காஸாவை அடைந்த குடும்பங்களில், முடிதிருத்தும் கலைஞரான முகம்மது இமாத் அல்-தினின் குடும்பமும் அடங்கும். தனது வீட்டை மீண்டும் பார்க்கும் ஆவலுடன் சென்றவருக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. தனது வீடு முற்றிலும் எரிந்து போயிருந்ததாகவும், தனது சலூன்-அழகு நிலையம் திருடர்களால் சூறையாடப்பட்டதாகவும், அதன் பின்னர் அருகிலுள்ள கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் அது மேலும் சேதமடைந்ததாகவும் முகம்மது இமாத் பிபிசி நிருபரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,வடக்கு காஸாவிற்கு வரும் மக்களுக்கு தங்குமிடம் அளிக்க காஸா நகரத்திற்கு 1,50,000-க்கும் அதிகமான கூடாரங்கள் தேவைப்படும் மற்றொன்று, லுப்னா நாசர் என்ற பெண்ணின் குடும்பம். அவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன், வடக்கு காஸாவில் உள்ள தனது கணவருடன் மீண்டும் இணைவதற்காக, சோதனைச் சாவடியின் நீண்ட வரிசையில் ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் தனது வீடு இருந்த பகுதியை அடைந்ததும் அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அவரது வீடு அழிக்கப்பட்ட இடத்திற்கு அருகே, அவரது கணவர் ஒரு கூடாரத்தில் வசித்து வருவதைக் கண்டார் லுப்னா. பட மூலாதாரம்,REUTERS "எங்கள் குடும்பம் மீண்டும் சேர்ந்துவிட்டது, ஆனால் அந்த சந்தோஷத்தை வீட்டை இழந்ததன் துக்கம் மறைத்துவிட்டது. இப்போது வடக்கு காஸாவில் உள்ள ஒரு கூடாரத்தில் வசிக்கிறோம்" என்று பிபிசியிடம் கூறினார் லுப்னா நாசர். பட மூலாதாரம்,REUTERS ஹமாஸ் அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, "இதுவரை திரும்பி வந்தவர்கள் அல்லது அடுத்தடுத்த நாட்களில் வடக்கு காஸாவை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மக்களுக்கு, தங்குமிடம் அளிக்க காஸா நகரத்திற்கு 1,50,000-க்கும் அதிகமான கூடாரங்கள் தேவைப்படும்." வடக்கு காஸாவில் இத்தகைய நிலை உள்ளபோதிலும், தெற்கு காஸாவில் பல மாதங்களாக துன்பங்களை அனுபவித்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு இதுவொரு குறிப்பிடத்தக்க தருணமாகவே உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c07kvz84r8jo இந்தப் படங்களைப் பார்க்கையில் 1995 அக்டோபர் 30 யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?
  17. 27 JAN, 2025 | 07:11 PM கனடாவில் இருந்து வருகைதந்துள்ள ஈழத்தின் முன்னணி பாடகர் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்துக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திங்கட்கிழமை (27) காலை வரவேற்பு அளிக்கப்பட்டது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை ஆசிரிய மாணவர் இ.செந்தூர்ச் செல்வன் முன்னிலைப்படுத்தினார். கலாசாலையில் முதலாவது இசையாசிரியர் அணியில் பயிற்சி பெற்ற தனது அனுபவங்களை பொன் சுந்தரலிங்கம் எடுத்துக் கூறினார். அத்துடன் கலாசாலையை வாழ்த்தி பாடல் ஒன்றையும் இயற்றி பாடினார். கலாசாலை சமூகத்தின் சார்பில் பொன் சுந்தரலிங்கத்தை கலாசாலை முகாமைத்துவக் குழுவினர் கௌரவித்தனர். https://www.virakesari.lk/article/205072
  18. கலைப்பீட பீடாதிபதியாக ரகுராம் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும்; யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்கள் வேண்டுகோள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த கௌரவத்தோடு என்ன விடயத்திற்காக பாடுபட்டாரோ அந்த விடயத்திற்கான வெற்றியோடு மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என பல்கலை கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் ரகுராம் நியமிக்கப்படும் வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் சாத்வீக ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கும் என கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார். யாழ் பல்கலையில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பேரவை கூட்டம், கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமின் பதவி விலகல் என்பதை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இந்த ஊடக சந்திப்பை நடத்துகிறோம். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை நுகர்ந்து பரமேஸ்வரன் ஆலயம் பொங்குதமிழ் தூபி முன்பாகவும் முச்சக்கர வண்டிகள் சகதிம் நின்று ஏனைய மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட வேளை கலைப்பீட பீடாதிபதி, சட்ட நிறைவேற்று அதிகாரி, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்பவர்களால் அவதானிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்படி உத்தியோகத்தர்களிடம் குறித்த மாணவர் குழு தகாத வார்த்தைகளில் முரண்பட்டு பொதுமக்கள் மத்தியில் தகாத வார்த்தைகளை மேற்கொண்டார்கள் என்ற அடிப்படையில்,குறித்த மாணவர்கள் மீது முறைப்பாடு முன் வைக்கப்பட்டு ஆரம்பகட்ட விசாரணை, இரண்டாம் கட்ட விசாரணை, ஒழுக்காற்று சபை குழு, அதனைத் தொடர்ந்து பேரவை என்ற முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஒழுக்காற்றுச் சபையானது குறித்த மாணவர்களுக்கு குறித்த காலப்பகுதிக்கான தண்டனையை வழங்கியிருந்ததாகவும் பேரவை அதனை கேள்விக்குட்படுத்தி பொது மன்னிப்பு வழங்கியதாகவும் அறிவிக்கப்பட்டது. போதைவஸ்து பாவனை, மதுபான பாவனை என்பன தினமும் இடம்பெற்று வந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பான பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பு காணப்படுகின்ற சில தடயங்கள் இங்கு போதைப் பொருள் பாவனைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று எண்ணத்தை எங்களுக்கு ஏற்படுத்துகின்றது. மேற்படி விடயம் தொடர்பாக குறித்த மாணவர்கள் கல்லாசனம் அகற்றப்பட்டதையும் அதன் விளைவாக அதனை விமர்சித்ததன் காரணத்தாலே பழிவாங்கப்பட்டோம் என்ற விடயத்தையும் கூறி இருந்தனர். கல்லாசனம் அகற்றப்பட்டது என்ற விடயத்தை கேள்விக்குட்படுத்துகின்ற பெரிதுபடுத்துகின்றவர்கள் ஏன் அந்த கல்லாசனம் அகற்றப்பட்டது என்ற கேள்வியை எழுப்பியிருந்தால் இந்த ஊடக சந்திப்பை நடத்தியிருக்க வேண்டிய தேவை வந்திருக்காது. கலைப்பீட மாணவர் ஒன்றியத்துடன், கலைப்பீட பீடாதிபதி உரையாடி பத்து கல்லாசனங்கள் பொருத்தமான இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பரமேஸ்வரா ஆலயத்திற்கு முன்பாக கல்லாசனம் அகற்றப்பட்டது தொடர்பில் மாணவர்கள் பலரும் எம்மிடம் மகிழ்ச்சியாக கருத்து தெரிவித்துள்ளனர். நான் எட்டு பேருக்கு மட்டும் கலைப்பீட மாணவ பிரதிநிதி அல்ல. 3500 மாணவர்களுக்கான தலைவராகவே நான் உள்ளேன். சகலரின் கருத்தையும் கேட்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறான சூழலில் பல்கலைகழக பேரவை குறித்த முறைப்பாடு தொடர்பாக ஒழுக்காற்று குழுவின் முறைமைகளை கடந்து உண்ணாவிரதம் இருந்துவிட்டார்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் வகுப்புத் தடையை விடுவித்து இருப்பது எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கின்றது. மாணவர்களின் பிரச்சனை தானே போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என பலர் கேட்கலாம். போராட்டம் இருக்கின்ற இடத்தில் இவ்வாறான விடயங்களை மேற்கொண்ட நபர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில் சமூகப் பொறுப்புள்ள பெண்களை மதிக்கின்ற போதைப் பொருளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நாங்கள் மதுபானத்துக்கு எதிராக செயல்படுகின்ற நாங்கள் எதனடிப்படையில் அந்த இடத்தில் சமூகமளிக்க முடியும் என்ற கேள்வியை நான் சமூகத்திடம் எழுப்புகின்றேன். அதனாலேயே பேரவை கூட்டம் வரும் வரை நாம் மௌனம் காத்துக் கொண்டிருந்தோம். இனியும் மௌனம் காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்த மாணவ ஒழுக்காற்று விசாரணை நடுநிலைப்படி ஒழுங்குமுறைப்படி நடத்தப்பட வேண்டும் கலைப்பீட முதலாம் வருட மாணவர்களின் பாடப் பிரச்சனை தொடர்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கான முழுமையான தெளிவான பதிலை நாங்கள் கூறுகின்றோம் பல்கலைக்கழக மூதவையால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றறிக்கையின்படி பாடத் தெரிவு அமைகின்றது. 2024 ஆம் ஆண்டு புதிய கலைப்பீட மாணவர் ஒன்றிய நிர்வாகம் பதவியேற்ற நிலையில் குறித்த மாணவர்களுக்கு பத்து மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட விரிவுரைகள் நிறைவடைந்திருந்தன. நாங்கள் பதவியேற்பதற்கு ஒன்றரை மாதத்திற்கு முதலேயே பாடத் தெரிவு தொடர்பான பிரச்சினைகள் இருந்தது. அதற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியம் பேசாமல் இருந்தது. தற்போது புதிய கலைப்பீட மாணவர் ஒன்றியம் பதவியேற்று அடுத்த நாள் போராட்டம் செய்ய வேண்டும் என்று முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் கேட்டால் எந்த அடிப்படையில் நாங்கள் போராட்டம் செய்ய முடியும் என்ற கேள்வியை நான் எழுப்புகின்றேன். கடந்த முறை இதே சம்பந்தமான பிரச்சனை நடந்து இதே மாதிரி போராட்டம் நடைபெற்ற போது கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர், துறைத் தலைவர்கள், கலைப்பீட மாணவர்களாகிய நாங்கள் இருந்தபோது பல்கலைக்கழக சட்டரீதியான முறைமையை கேள்விக்கு உட்படுத்த முடியாது. மாணவர்களுக்கு பிரச்சினை என்றால் இதற்கு பதிலீடான முறைமையை கொண்டு வாருங்கள். அதனை கலைப்பீட நிர்வாகம் செய்யும் என்று பீடாதிபதியால் சொல்லப்பட்டு இருந்தது. ஆனால் 8 மாதங்களாக அமைதியாக இருந்து விட்டு இன்னும் ஒரு வருட மாணவர்கள் வந்துவிட்ட நிலையில் தாங்கள் செய்த பிழைகளை மறைப்பதற்காக செயற்படுவது எந்த வகையில் நியாயம். மாணவர்களுக்கு பாட சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். கலைப்பீட மாணவர் ஒன்றிய நிர்வாக கூட்ட அறிக்கையில் இந்த பிரச்சனை சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை எடுத்து பீடச் சபையில் அது சம்பந்தமாக காட்சிப்படுத்தி பீடச் சபையின் அனுமதியுடன் மாணவர்களுக்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். இதற்காக ஏனைய ஐந்து பல்கலைக்கழகங்களின் பாடத் தெரிவுகள் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்து அதற்கான விடயங்களை செய்ய துறைத்தலைவர்களுடன் கலந்துரையாட நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆகவே முறைப்படி பாடப் பிரச்சினை சம்பந்தமாக நாம் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றோம். பாடப் பிரச்சினை சம்பந்தமாக போராடிய நபர்கள் கலைப்பீட மாணவர் ஒன்றியத்துடன் எந்தவித உரையாடலையும் செய்திருக்கவில்லை. முதலாம் வருட மாணவன் உள்ளிட்ட குறிப்பிட்ட இரண்டு கலைப்பீட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதில் நேற்று ஒரு உண்மையொன்று வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது. முதலாம் வருட மாணவன் திட்டமிட்டு குறித்த போராட்டத்தில் சிலரின் தூண்டுதலின் அடிப்படையில் எங்களுக்கு எதிராக செயல்பட்டு, கலைப்பீட நிர்வாகத்தை குழப்ப வேண்டும் என்ற அடிப்படையில் வழிநடத்தப்பட்டார். முறையான வழியில்லாமல் போராட்டத்தை கையாண்டதன் அடிப்படையில் முதலாம் வருட மாணவன் வகுப்பு தடைக்குள்ளாக்கப்பட்டார். குறித்த விடயத்தை நேற்று நடைபெற்ற விசாரணையில் சட்ட நிறைவேற்று அதிகாரி,மாணவ ஒழுக்க அதிகாரி முன்னிலையில் அந்த மாணவன் ஒத்துக் கொண்டிருக்கின்றார். இந்த விடயங்களை தேடி ஆராய்ந்து பார்த்தால் போராடியவர்களின் எண்ணத்திற்கும் இதற்குமான தொடர்புகளை அறிந்து கொள்ள முடியும். என்னிடம் ஆதாரங்கள் இருந்தாலும் அந்த ஆதாரங்களை நான் காட்சிப்படுத்த முடியாது. ஊடகங்கள் அந்த விடயங்களை வெளியில் எடுக்க வேண்டும். குறித்த இரண்டு விடயங்கள் அடிப்படையில் கலைப்பீட மாணவர்களின் பேரவை கூட்டம் நடைபெற்றது. குறித்த போதைப்பொருள் சம்பந்தப்பட்ட விடயத்தை பேரவையில் விசாரிக்காமல், மூன்று விசாரணைகளில் உண்மை என்ற நிரூபிக்கப்பட்ட நிலையில் அந்த விடயம் உண்மை என்றால் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் பதவி விலகியதற்கு பேரவை எடுத்த முடிவுதான் காரணம் என்றால் இது வெறுமனே பேராசிரியர் ரகுராமுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கலைப்பீட சமூகத்திற்கும் மேலே கொடுக்கப்பட்ட கறை. அவமானமாகவே நான் பார்க்கின்றேன். பல்கலைக்கழகத்துக்கு ஒவ்வொரு மாணவனையும் அனுப்புகின்ற அம்மா அப்பா சகோதரர்கள் மிகவும் அவமானப்படக்கூடிய விடயமாகவே இதனை நான் பார்க்கின்றேன். போதைப்பொருள் விடயத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எந்த நம்பிக்கையில் இங்கு பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்புவார்கள். தற்போது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு தண்டனை விலக்களிக்க முடியும் என்றால் இதுவரை பல்கலைக்கழகத்தினால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவர்களுக்கு என்ன பதிலை பேரவையும் பல்கலைக்கழகமும் சொல்லப்போகின்றது. எந்த தவறிழைத்தாலும் உண்ணாவிரதம் செய்தால் வகுப்பு தடையை விடுத்து உள்ளே வரலாம் என்ற முன்னுதாரணத்தை இந்த பேரவை மேற்கொண்டிருந்தால் என்ன செய்யும் என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். பண்பாட்டு அடையாளம், தமிழ் தேசியத்தின் இருதயநாதம் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இவ்வாறான போதைப்பொருள் தொடர்பான செயல்களை அனுமதிக்கின்ற இந்த நிர்வாகம் சமூகத்திற்கு சொல்ல வருகின்றது. கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த கௌரவத்தோடு என்ன விடயத்திற்காக பாடுபட்டாரோ அந்த விடயத்திற்கான வெற்றியோடு மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் ரகுராம் நியமிக்கப்பட வேண்டும். நியமிக்கப்பட்டால் மாத்திரமே இந்த விடயத்தை முன் கொண்டு செல்ல முடியும் என்ற அடிப்படையில் கலைப்பீட மாணவர் ஒன்றியம் மீளவும் பீடாதிபதியாக ரகுராம் நியமிக்கப்படும்வரை சாத்வீக ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கும். போராட்டம் தொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/314921
  19. 2024ஆம் வருடத்துக்கான ஐசிசி ஒருநாள் அணிக்கு சரித் அசலன்க தலைவர், அணியில் 4 இலங்கையர்கள்! 24 JAN, 2025 | 03:25 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பெயரிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு இலங்கையின் சரித் அசலன்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இந்த சிறப்பு அணியில் சரித் அசலன்கவுடன் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க ஆகிய இலங்கை வீரர்களும் இடம்பெறுகின்றனர். சரித் அசலன்க கடந்த வருடம் 16 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 4 அரைச் சதங்களுடன் 605 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். அவரது சராசரி 50.2ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 97.1ஆகவும் அமைந்துள்ளது. ஸிம்பாப்வேக்கு எதிராக பெற்ற சதத்துடன் (101 ஓட்டங்கள்) கடந்த வருடம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டை ஆரம்பித்தார். பந்துவீச்சில் 10 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார். பெத்தும் நிஸ்ஸன்க கடந்த வரும் 12 போட்டிகளில் ஓர் இரட்டைச் சதம் உட்பட 3 சதங்கள், ஒரு அரைச் சதத்துடன் 694 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அவரது சராசரி 63.09ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 106.44ஆகவும் இருந்தது. குசல் மெண்டிஸ் 17 போட்டிகளில் ஒரு சதம், 6 அரைச் சதங்களுடன் 742 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். அவரது சராசரி 53.00ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 90.59ஆகவும் இருந்தது. சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க 10 போட்டிகளில் 26 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். ஸிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்திருந்தார். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணியில் 3ஆம் இலக்க வீரராக பெத்தும் நிஸ்ஸன்கவும் 4ஆம் இலக்க வீரராக குசல் மெண்டிஸும் 5ஆம் இலக்க வீரராக சரித் அசலன்கவும் 8ஆம் இலக்க வீரராக வனிந்து ஹசரங்கவும் இடம்பெறுகின்றனர். இந்த அணியில் இந்தியர்கள், அவுஸ்திரேலியர்கள் எவருமே இடம்பெறவில்லை. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலா மூவர் இந்த அணியில் இடம்பெறுவதுடன் ஒரே ஒரு மேற்கிந்தியத் தீவுகள் வீரர் இடம்பெறுகிறார். சுருக்கமாக சொன்னால் இந்த அணி கிட்டத்தட்ட தெற்காசிய அணியாக காணப்படுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணி விபரம் (துடுப்பாட்ட வரிசையில்) சய்ம் அயூப் (பாகிஸ்தான்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்), பெத்தும் நிஸ்ஸன்க (இலங்கை), குசல் மெண்டிஸ் (இலங்கை), சரித் அசலன்க (தலைவர் - இலங்கை), ஷேர்பேன் ரதபர்ட் (மே.தீவுகள்), அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்க (இலங்கை), ஷஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்), ஹரிஸ் ரவூப் (பாகிஸ்தான்), ஏ.எம். கஸன்பார் (ஆப்கானிஸ்தான்) https://www.virakesari.lk/article/204787
  20. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விடுத்து எமது குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுகிறது அரசு; நாமல் குற்றச்சாட்டு நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, எமது குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுவதற்கே இந்த அரசாங்கம் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக குற்றம்சாட்டியுள்ளார். யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில், அப்போது அங்கு விஜயம் செய்திருந்த நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் தான் என்றாலும், அதற்கான விலையை தனது சகோதரர் கொடுக்க வேண்டியிருந்தது என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். ”ஏன் இதைச் செய்கிறார்கள் என்று என்னிடம் கேட்க வேண்டாம்.” அதனை பிரதி பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் அமைச்சர் மற்றும் நாட்டின் ஜனாதிபதியிடம் கேளுங்கள்.ஆனால், நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் செலவிட வேண்டிய நேரத்தை, அரசியல்வாதிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வேட்டையாடுவதற்கு அரசாங்கம் பயன்படுத்துகிறது. நெடுஞ்சாலை வழியாக பெலியத்த வரை வந்து அவரைக் கைது செய்தது வீண். எங்களை வர சொன்னால் நாங்கள் வருவோம் அல்லவா.எரிபொருளை நிரப்பிவிட்டு பெலியத்தவுக்குச் சென்றது வீண்தானே என்றார். https://thinakkural.lk/article/314912
  21. 24 JAN, 2025 | 03:07 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பெயரிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சிறப்பு அணியில் சமரி அத்தபத்து இடம்பெற்றுள்ளார். ஐசிசி விருதுகள் சிலவற்றுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சமரி அத்தபத்து கடந்த வருடம் 9 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி ஒரு சதம், 2 அரைச் சதங்கள் உட்பட 458 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார். தென் ஆபிரிக்காவுக்கு எதிராக பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் அவர் குவித்த ஆட்டம் இழக்காத 195 ஓட்டங்களின் உதவியுடன் இலங்கை 6 விக்கட்களால் அமோக வெற்றிபெற்றிருந்தது. பந்துவீச்சில் 9 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் சமரி அத்தபத்து தற்போது முதலிடம் வகிக்கிறார். 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவியாக தென் ஆபிரிக்காவின் லோரா வுல்வார்ட் பெயரிடப்பட்டுள்ளார். அணி விபரம் (துடுப்பாட்ட வரிசையில்) ஸ்ம்ரித்தி மந்தனா (இந்தியா), லோரா வுல்வார்ட் (தலைவி - தென் ஆபிரிக்கா), சமரி அத்தபத்து (இலங்கை), ஹேலி மெத்யூஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), மாரிஸ்ஆன் கெப் (தென் ஆபிரிக்கா), ஏஷ்லி கார்ட்னர் (அவுஸ்திரேலியா), அனாபெல் சதர்லண்ட் (அவுஸ்திரேலியா), அமி ஜோன்ஸ் (விக்கெட் காப்பாளர் - இங்கிலாந்து), தீப்தி ஷர்மா (இந்தியா), சொபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து), கேட் க்ரொஸ் (இங்கிலாந்து) https://www.virakesari.lk/article/204784
  22. அரை இறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை; இந்தியா, அவுஸ்திரேலியா முன்னேறியது Published By: VISHNU 26 JAN, 2025 | 07:43 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் அரை இறுதிக்கு செல்லும் இலங்கையின் வாய்ப்பு இயற்கை அன்னையின் சீற்றத்தால் பறிபோனது. இக் குழுவிலிருந்து அவுஸ்திரேலியாவும் நடப்பு சம்பியன் இந்தியாவும் அரை இறுதிகளில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டன. இலங்கைக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த முதலாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டி சீரற்ற காலநிலையால் நாணய சுழற்சி நடத்தப்படாமலேயே முழமையாக கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. சுப்பர் சிக்ஸ் சுற்றை முதலாம் குழுவில் 2 புள்ளிகளுடன் ஆரம்பித்த இலங்கை தற்போது 3 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது. ஸ்கொட்லாந்து ஒரு புள்ளியுடன் 6ஆம் இடத்தில் இருக்கிறது. சுப்பர் சிக்ஸ் சுற்றை தலா 4 புள்ளிகளுடன் ஆரம்பித்த அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் இந்த சுற்றில் தத்தமது முதலாவது போட்டிகளில் வெற்றி பெற்றதால் தலா 6 புள்ளிகளைப் பெற்று அரை இறுதியில் விளையாடுவதை உறுதி செய்துகொண்டன. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற சுப்ப சிக்ஸ் போட்டியில் 7 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி 16.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ப்றைஅனா ஹரிச்சரன் 17 ஓட்டங்களையும் சமாரா ராம்நாத் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் எலீனோர் லரோசா, காய்மி ப்றே, டேஜான் வில்லியம்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் அணி 10.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் லூசி ஹெமில்டன் 28 ஓட்டங்களைப் பெற்றார். பங்களாதேஷுக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா 8 விக்கெட்களால் வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் சார்பாக சுமய்யா அக்தர் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் ஜன்னத்துள் மௌஆ 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வைஷ்ணவி ஷர்;மா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 7.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ட்ரிஷா கங்காடி 31 பந்துகளில் 8 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களைக் குவித்தார். இப் போட்டி முடிவுகளை அடுத்து இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் தலா 6 புள்ளிகளைப் பெற்றுள்ளன. நிகர ஓட்ட வேக அடிப்படையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இக் குழுவில் இடம்பெறும் மற்றைய நான்கு அணிகளால் 6 புள்ளிகளைப் பெற முடியாது என்பதால் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டன. https://www.virakesari.lk/article/204971
  23. பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி அபார வெற்றி பெற்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமநிலை செய்ததோடு 34 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட்டை வென்றது மே.இ.தீவுகள். முல்டானில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 163 ஓட்டங்களுக்கு சுருண்டு போக பாகிஸ்தான் அணி வெறும் 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2வது இன்னிங்சில் மே.இ.தீவுகள் 244 ஓட்டங்கள் எடுக்க வெற்றி இலக்கான 254 ஓட்டங்களை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் 133 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வி கண்டது. இரண்டரை நாட்களில் டெஸ்ட் முடிந்து போனது. இந்திய அணி பாணியில் குழிப்பிட்ச்தான் ஒரே கதி என்று நம்பிய பாகிஸ்தான் குழிப்பிட்ச்களைப் போட்டு இங்கிலாந்துக்கு எதிராக தொடரை வென்றது, இப்போது தனக்குத் தானே குழி தோண்டிக்கொள்ளுமாறு வெஸ்ட் இண்டீஸிடம் டெஸ்ட்டைக் கோட்டை விட்டு தொடரை சமன் செய்ய அனுமதித்தது. வெஸ்ட் இண்டீஸின் இடது கை ஸ்பின்னர் வாரிக்கன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இன்று காலை 76/4 என்று களமிறங்கிய பாகிஸ்தான் அணி அதே ஸ்கோரிலேயே சவுத் ஷகீல், காஷிஃப் அலி ஆகியோரை இழந்தது. முகமது ரிஸ்வான் மட்டுமே 25 ஓட்டங்களை எடுத்து கொஞ்சம் தடுத்துப் பார்த்தார். ஆனால் எதிர்முனையில் சல்மான் ஆகா-15, சஜித் கான் – 7, நோமன் அலி -6, அப்ரார் அகமது 0 என்று வரிசையாக ஆட்டமிழக்க 133 ஓட்டங்களுக்கு 44 ஓவர்களில் சுருண்டது. மே.இ.தீவுகளின் இடது கை ஸ்பின்னர் வாரிக்கன் இந்த போட்டியில் 70 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பாகிஸ்தான் மண்ணில் 1990-க்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட் வெற்றியை ருசித்தது. ஜோமல் வாரிக்கன் இந்தப் போட்டியில் பேட்டிங்கிலும் முதல் இன்னிங்ஸில் கடைசியாக இறங்கி 36 ஓட்டங்கள் என்ற உபயோகமுள்ள ரன்களை எடுத்தார், 2வது இன்னிங்சிலும் 18 ஓட்டங்கள் எடுத்தார் வாரிக்கன். இவரது பந்து வீச்சின் சிறப்பு அம்சம், இவரது வேரியேஷன் மற்றும் ஒரே லெந்த்தில் சொல்லி சொல்லி வீசுவது. இதுதான் பாகிஸ்தானின் சரிவுக்குக் காரணமாகியுள்ளது. பாகிஸ்தானில் ஆடி நீண்ட காலமான வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தானின் ரண சிகிச்சையை அவர்களுக்கே செய்து காட்டி விட்டது. குறிப்பாக 2வது இன்னிங்ஸில் 244 ரன்கள் எடுத்தது இந்தப் பிட்சில் பிரமாதமான சாதனைதான். பாகிஸ்தானைப் பொறுத்தவரை நல்ல உண்மையான பிட்ச்களைப் போட்டு ஆடுவதை விடுத்து இப்படிப்பட்ட குழிப்பிட்ச்களைப் போட்டு ஆடுவதால் ஒரு கட்டத்தில் இந்திய அணி போல் ஸ்பின்னையும் ஆடத்தெரியாத, வேகப்பந்து வீச்சையும் ஆடத்தெரியாத வீரர்களைக் கொண்ட அணியாக மாறிவிடும். https://thinakkural.lk/article/314929
  24. சென்னை போல 4 மடங்கு பெரிய பிரமாண்ட பனிப்பாறை ஒரு தீவின் மீது மோதும் அபாயம் - என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் & எர்வன் ரிவால்ட் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிட்டத்தட்ட சென்னையைப் போல் நான்கு மடங்கு பெரிதாக இருக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை, பிரிட்டனுக்குச் சொந்தமான தொலைதூரத்தில் இருக்கும் தீவு ஒன்றின் மீது மோதும் வகையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது அங்கு வாழும் பென்குயின்கள் மற்றும் சீல்களை ஆபத்தில் தள்ளக்கூடும். இந்தப் பெரும் பனிப்பாறை அன்டார்டிகாவில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பாதையில் அது தெற்கு ஜார்ஜியாவை நோக்கிச் சுழன்று நகர்கிறது. அதுவொரு கரடுமுரடான நில அமைப்பைக் கொண்ட, பென்குயின் போன்ற பல விலங்குகள் வாழும் பிரிட்டிஷ் தீவு. அதன்மீது மோதுவதால், இந்தப் பனிப்பாறை பல துண்டுகளாக நொறுங்கக் கூடும். தெற்கு ஜார்ஜியா தீவில் இருந்து, பனிப்பாறை தற்போது 280 கி.மீ தொலைவில் இருக்கிறது. சென்னை போல 4 மடங்கு பெரிதான இந்த பனிப்பாறை தெற்கு ஜார்ஜியா தீவின் மீது மோதினால் என்ன நடக்கும்? கடந்த காலங்களில் இத்தகைய பெரும் பனிப்பாறைகள் இந்தத் தீவு மீது மோதிய போது, தெற்கு ஜார்ஜியாவில் இருந்த எண்ணற்ற பென்குயின்களும் சீல்களும் நீர்நாய்களும் உணவு கிடைக்காமல் உயிரிழந்துள்ளன. "இயல்பாகவே பனிப்பாறைகள் ஆபத்தானவை. தீவின் மீது மோதாமல் அந்த பனிப்பாறை பாதை மாறிச் சென்றால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்," என்று தெற்கு ஜார்ஜியாவின் அரசாங்க கப்பலான ஃபரோஸில் இருந்து பேசுகையில், அதன் கேப்டன் சைமன் வாலேஸ் பிபிசியிடம் கூறினார். சிங்கப்பூரை விட பெரிய ராட்சத பனிப்பாறையின் நகர்வை 'அழிவின் பாதை' என்று விஞ்ஞானிகள் கூறுவது ஏன்? பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை கரையாமல் மாதக்கணக்கில் சுழன்று வருவது எப்படி? பெண்ணை மகிழ்விக்க பரிசு மட்டுமின்றி, உயிரையே தரும் ஆண் - பூச்சி, பறவைகளில் என்ன நடக்கிறது? உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மாலுமிகள், மீனவர்கள் அடங்கிய குழு இந்தப் பனிப்பாறையின் அன்றாட நகர்வைக் கண்காணிக்க செயற்கைக்கோள் படங்களை ஆர்வத்துடன் அவதானித்து வருகிறது. பனிப்பாறைகளின் ராணியாகக் கருதப்படும், உலகின் பழமையான பனிப்பாறைகளில் ஒன்றான இது, A23a என்று அழைக்கப்படுகிறது. இது 1986இல் அன்டார்டிகாவில் உள்ள ஃபில்ஷ்னர் பனி அடுக்கில் (Ice Shelf) இருந்து உடைந்து பிரிந்தது. நீண்ட காலத்திற்கு கடலடியில் சிக்கியிருந்த அந்த பனிப்பாறை பின்னர் கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நீரோட்டச் சுழலில் சிக்கிக்கொண்டது. இறுதியாக கடந்த டிசம்பரில் அதிலிருந்து விடுபட்டு, தற்போது அதன் இறுதிப் பயணத்தில் வேகமெடுத்து நகர்ந்து கொண்டிருக்கிறது. அன்டார்டிகாவின் வடக்கே இருக்கும் வெப்பம் மிகுந்த நீரோட்டம், 1,312 அடி வரை உயரமாக பனிப்பாறையின் பரந்த பக்கங்களை உருக்கி பலவீனப்படுத்துகிறது. பட மூலாதாரம்,BFSAI படக்குறிப்பு, ராயல் விமானப்படை சமீபத்தில் A23a பனிப்பாறை தெற்கு ஜார்ஜியாவை நெருங்கியபோது அதைப் பார்வையிட்டது. இது ஒரு காலத்தில் 3,900 சதுர கி.மீ பரப்பளவுக்கு இருந்தது. ஆனால், சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் அது மெதுவாகச் சிதைந்து வருவதைக் காட்டுகின்றன. இப்போது இந்தப் பெரும் பனிப்பாறை சுமார் 3,500 சதுர கி.மீ அளவுக்கு இருக்கிறது. அதிலிருந்து பெரிய அளவில் பனிக்கட்டிகள் உடைந்து கடலில் மூழ்கி வருகின்றன. A23a பனிப்பாறை எப்போது வேண்டுமானாலும் பல்வேறு பகுதிகளாக உடைந்து போகக் கூடும். பின்னர் அது தெற்கு ஜார்ஜியா தீவை சுற்றிக் கட்டுப்பாடின்றிச் சுழன்று, மிதக்கும் பனி நகரங்களைப் போல பல ஆண்டுகளுக்குச் சுற்றிக் கொண்டிருக்கக் கூடும். இது அந்தத் தீவு மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது, தெற்கு ஜார்ஜியா மற்றும் சாண்ட்விச் தீவுகளை அச்சுறுத்தும் முதல் பிரமாண்ட பனிப்பாறை இல்லை. கடந்த 2004ஆம் ஆண்டில், A38 என்ற ஒரு பனிப்பாறை கடலடியில் தரைதட்டியது. அதன் அளவு மிகப் பிரமாண்டமாக இருந்ததால், அதைக் கடந்து உணவு கிடைக்கும் இடத்தை அடைய முடியாமல் போனதால், பல பென்குயின் குஞ்சுகள், சீல் குட்டிகள் உயிரிழந்தன. இந்தப் பிரதேசம், கிங் பென்குயின்களின் காலனிகள், லட்சக்கணக்கான சீல்கள், நீர்நாய்கள் வாழும் பகுதி. ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்17 ஜனவரி 2025 புத்தர் பிறந்த லும்பினி அழியும் ஆபத்தில் இருக்கிறதா? கசியும் கூரை, வாடிய நிலையில் தாவரங்கள் - பிபிசி கள ஆய்வு17 ஜனவரி 2025 பட மூலாதாரம்,SIMON WALLACE படக்குறிப்பு, பனிப்பாறைகள் ஆபத்தானவை என்பதையும் அவற்றைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அனுபவம் வாய்ந்த மாலுமிகள் அறிந்திருப்பதாக சைமன் வாலஸ் கூறுகிறார் "தெற்கு ஜார்ஜியாவின் மீன் வளம், இதர உயிரினங்கள் என இரண்டின் மீதும் இந்தப் பனிப்பாறையின் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்" என்று தெற்கு ஜார்ஜியா அரசுக்கு ஆலோசனை வழங்கும் கடல் சூழலியல் நிபுணர் மார்க் பெல்ச்சியர் கூறுகிறார். பனிப்பாறைகள், அதிகரித்து வரும் ஒரு பிரச்னையாக இருப்பதாக மாலுமிகளும் மீனவர்களும் கூறுகின்றனர். 2023ஆம் ஆண்டில், A76 எனப்படும் ஒரு பனிப்பாறை, தரை தட்டும் நேரத்தில் அவர்களை மிகவும் அச்சுறுத்தியதாகக் கூறுகின்றனர். "அந்த பனிப்பாறையின் துண்டுகள் சாய்ந்து கொண்டிருந்தன. அது பார்ப்பதற்கு நுனியில் ஒரு பெரிய பனி கோபுரம் போலவும், அடிப்பகுதியில் ஒரு பனி நகரத்தைப் போலவும் காட்சியளித்தது," என்று பனிப்பாறை கடலில் இருந்த போது பார்த்த பெல்ச்சியர் கூறுகிறார். அந்தப் பனிப்பாறையின் சிதைந்த பகுதிகள், இன்றும் தீவுகளைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன. "அளவில் பல விளையாட்டு மைதானங்களை ஒன்று சேர்த்தது போல் இருந்த அந்த பனிப்பாறை, மேசை அளவிலான துண்டுகளாக உடைந்து சுழன்று கொண்டிருக்கிறது" என்று தெற்கு ஜார்ஜியாவில் பணியாற்றும் ஆர்கோஸ் ஃப்ரோயன்ஸ் மீன்பிடி நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ நியூமன் கூறுகிறார். "அந்தத் துண்டுகள் அடிப்படையில் ஒரு தீவு அளவுக்கு விரவிக் கிடக்கின்றன. அவற்றுக்கு இடையே நாங்கள் போராடிக் கப்பலைச் செலுத்த வேண்டும்," என்று கேப்டன் வாலெஸ் கூறுகிறார். பட மூலாதாரம்,ROB SUISTED/REUTERS நியூமனின் கூற்றுப்படி, A76 ஒரு "கேம்சேஞ்சர்". "அது எங்கள் ஆபரேஷன்களில், எங்களுடைய கப்பலையும் பணியாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது." ஆண்டுதோறும் உருகிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள், கடலிலுள்ள பனிப்பாறைகளின் நிலையற்ற தன்மை என இவர்கள் மூன்றும் பேருமே, வேகமாக மாறி வரும் சூழலை விவரிக்கிறார்கள். பனி உறைந்த அன்டார்டிகாவில் இருந்து உடைந்து, தனியே A23a பனிப்பாறை உருவாக, காலநிலை மாற்றம் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அது மிக நீண்ட காலத்திற்கு முன்பே உடைந்து, பிரிந்துவிட்டது. இப்போது நாம் எதிர்கொள்ளும் வெப்பநிலை உயர்வின் தாக்கங்களுக்கு முன்பே அது உருவாகிவிட்டது. ஆனால், இத்தகைய ராட்சத பனிப்பாறைகள் நமது எதிர்காலத்தின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. கடல் மற்றும் காற்றின் வெப்ப நிலை அதிகரித்து, அன்டார்டிகா மேலும் நிலையற்றதாக மாறும் போது, பிரமாண்ட பனிப் படலங்கள் இப்படியான பனிப்பாறைகளாக உடைந்துவிடும். டைனோசர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? பிரிட்டனில் கிடைத்த பிரமாண்ட கால்தடங்கள் சொல்வது என்ன?18 ஜனவரி 2025 லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ வேகமாகப் பரவியது எப்படி? எளிதாக விளக்கும் ஐந்து புகைப்படங்கள்15 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES A23a பனிப்பாறை, அதன் காலம் முடிவதற்குள்ளாக, விஞ்ஞானிகளுக்கு ஒரு பரிசை விட்டுச் சென்றுள்ளது. சர் டேவிட் அட்டன்பரோ ஆராய்ச்சிக் கப்பலில் இருந்த பிரிட்டிஷ் ஆய்வுக் குழுவுக்கு, 2023இல் இந்த பிரமாண்ட பனிப்பாறைக்கு அருகில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அரிய வாய்ப்பை, இத்தகைய ராட்சத பனிப்பாறைகள் சுற்றுச்சூழல் மீது எத்தகைய தாக்கத்தைச் செலுத்துகின்றன என்பதை ஆராய்வதற்காகப் பயன்படுத்த விஞ்ஞானிகள் விரும்பினர். அந்தக் கப்பல், A23a பனிப்பாறையில் இருந்த ஒரு விரிசலுக்குள் நுழைந்தது. உள்ளே 400 மீட்டர் தொலைவில், ஆராய்ச்சியாளர் லாரா டெய்லர் பனிப்பாறைகளில் இருந்த நீர் மாதிரிகளைச் சேகரித்தார். "என் கண்களுக்கு எட்டிய வரை உயர்ந்திருந்த மிகப்பெரிய பனிச் சுவரைக் கண்டேன். அது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டிருந்தது. ஆங்காங்கே பனித் துண்டுகளாக உதிர்ந்து கொண்டிருந்தன. அது பார்க்க மிகவும் அற்புதமாக இருந்தது," என்று அவர் கேம்பிரிட்ஜில் உள்ள தனது ஆய்வகத்தில் இருந்து விளக்கினார். அங்கு அவர் சேகரித்து வந்த மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்து வருகிறார். கோனோ கார்பஸ்: அழகான ஆபத்தா இந்த மரங்கள்? இவற்றை தமிழகத்தில் வளர்க்கத் தடை ஏன்?4 மணி நேரங்களுக்கு முன்னர் தினமும் தொழ மாட்டார்கள், ரமலான் நோன்பு இருக்க மாட்டார்கள் - இஸ்லாம் மதத்தில் இப்படி ஒரு குழு இருப்பது தெரியுமா?26 ஜனவரி 2025 பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC படக்குறிப்பு, A23a-இல் இருந்து லாரா டெய்லர் எடுத்த நீர் மாதிரிகள், பனிப்பாறைகள் கரிம சுழற்சியை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய உதவுகின்றன பனிப்பாறையில் இருந்து உருகும் நீர், தெற்கு கடலில் கரிம சுழற்சியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர் ஆய்வு செய்கிறார். "இது நாம் குடிப்பதைப் போன்ற தண்ணீர் மட்டுமில்லை. இது ஊட்டச்சத்துகளும் ரசாயனங்களும் நிறைந்தது. இதனுள்ளே மிதவை நுண்ணுயிரிகளும் உறைந்திருக்கும்," என்று டெய்லர் கூறுகிறார். பனிப்பாறைகள் உருகும் போது நுண்துகள்களையும் கடலில் கலக்க விடுகின்றன. இந்தத் துகள்கள் கடலின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளை மாற்றுகிறது. அந்தத் துகள்கள் கடலில் மூழ்கினால், காலநிலை மாற்றத்தைத் துரிதப்படுத்தக் கூடிய கரிம வாயுவை காற்றில் இருந்து அவற்றால் கிரகிக்க உதவ முடியும். இந்தச் செயல்முறை, வளிமண்டலத்தில் இருக்கும் கரிமத்தை ஓரளவு கிரகித்து, ஆழ்கடலில் சேமிக்க உதவுகிறது. பனிப் பாறைகளை யாராலும் கணிக்க முடியாது. ஆகவே, அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் விரைவில், இந்த பிரமாண்ட பனிப்பாறை தெற்கு ஜார்ஜியா போன்ற தீவுகளில் இருந்தே பார்க்கும் அளவுக்கு நெருங்கி வரும். அப்போது, ஒரு பெருந்தீவு நெருங்கி வருவதைப் போல அது தோற்றமளிக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg8v0lq3gqo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.