Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES 8 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (18/01/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுசூழல் அனுமதி வழங்கியுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ரூ.525 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்தின் கீழ், சுமார் 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், 10,000 பேர் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ஆகியன அமைய உள்ளன. இந்த பன்னாட்டு அரங்கத்தில் திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், சுமார் 10,000 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகளும் அமைக்கப்படும். 2025-ம் ஆண்டின் இறுதி அல்லது 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் அரங்கத்தின் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கவில்லை. இந்த அனுமதி கிடைத்தவுடன் கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கான கட்டுமானத்திற்கு தேவையான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுவதாக தினத்தந்தி தெரிவித்துள்ளது. பெரியார் குறித்து சீமான் சர்ச்சைப் பேச்சு - நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் பெரியார் சொன்னதாக சீமான் சர்ச்சை கருத்து - பெரியார் உண்மையில் அப்படி குறிப்பிட்டாரா? தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வந்த சில நிமிடங்களில் வெளியேறிய ஆளுநர் ரவி - என்ன நடந்தது? தவெக மாநாட்டில் பெரியார், அம்பேத்கருடன் சேர, சோழ, பாண்டியருக்கும் கட்அவுட் - விஜய் என்ன சொல்ல வருகிறார்? பெரம்பலூரில் போலீஸார் கண் முன்பாகவே இளைஞர் படுகொலை பெரம்பலூர் அருகே முன்விரோத தகராறு தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தைக்கு போலீஸார் சென்றபோது, அவர்களது முன்னிலையிலேயே இளைஞர் கொலை செய்யப்பட்டதாக தமிழ் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கை.களத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த, நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராகப் பணிபுரியும் மணிகண்டன், தேவேந்திரன் ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. மணிகண்டன் புகாரின் பேரில், தலைமைக் காவல் ஸ்ரீதர், ஊர்க்காவல் படை வீரர் பிரபு ஆகியோர் இரு தரப்பினரிடையே சமாதானம் செய்ய முடிவு செய்துள்ளனர். அவர்கள் மணிகண்டனை அழைத்துக் கொண்டு, கை.களத்தூர் காந்தி நகர் பகுதியில் உள்ள நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் அருண் என்பவரின் வயலுக்குச் சென்றனர். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த தேவேந்திரன், போலீஸாருடன் வந்த மணிகண்டனை சரமாரியாக வெட்டியதில் அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மணிகண்டன் உடலை எடுத்துக் கொண்டு கை.களத்தூர் காவல் நிலையத்தின் முன் வைத்து, நீதி கேட்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் காவல் நிலையம் மீது கல்வீசித் தாக்கினர். இதில் காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதையடுத்து காவல் நிலையம் பூட்டப்பட்டு, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். ரோஹித், கோலி: இழந்த ஃபார்மை மீட்க என்ன செய்ய வேண்டும்? ரஞ்சி போட்டி தீர்வாகுமா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை: மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியதாக பெற்றோர் கைது - ஆபாச வீடியோக்களை விற்று வருமானம் ஈட்டியதாக புகார்17 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES கர்நாடகாவில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி நகை, பணம் கொள்ளை கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கூட்டுறவு வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மங்களூருவில் உள்ள கோட்டேகார் பகுதியில் அமைந்திருக்கும் கூட்டுறவு வங்கிக்கு வெள்ளிக்கிழமை காலை சுமார் 11.30 மணியளவில் அரிவாள், கத்தி மற்றும் துப்பாக்கிகளுடன் முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளது. வங்கி ஊழியர்கள், அங்கிருந்த பொதுமக்கள் ஆகியோரை மிரட்டிய அக்கும்பல், வங்கிப் பெட்டகத்தில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. அந்த கும்பல் தங்களுக்குள் ஹிந்தியில் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. வங்கியில் கொள்ளையடித்த அந்த கும்பல், கேரளாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று கர்நாடக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து, தேடி வருவதாக தினமணி நாளிதழ் செய்தி கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலை செல்லாதா? கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலை செல்லாது என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "பாதுகாப்பு காரணங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் வகையில் கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலை இந்த மாதம் முதல் செல்லாது. நீலம் மற்றும் பச்சை மையால் எழுதப்பட்ட காசோலைகள் மட்டுமே வங்கிகளால் ஏற்றுக் கொள்ளப்படும்" என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கீழ் செயல்படும் தகவல் சரிபார்ப்பக சமூக ஊடக கணக்கு மறுத்துள்ளது. "காசோலைகளில் எழுதும் போது குறிப்பிட்ட கலர் மையை பயன்படுத்தவது தொடர்பாக பரிந்துரை செய்து ரிசர்வ் வங்கி எந்தவிதமாக அறிவிப்பையும் வெளியிடவில்லை. சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக பகிரப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது," என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை: சீனாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் கடன் பொறியில் சிக்க வைக்கப் போகிறதா?17 ஜனவரி 2025 விடாமுயற்சி: 1997இல் வெளியான 'பிரேக் டவுன்' படத்தின் தழுவலா? அதன் கதை என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் அரிசி பிரச்னைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு - நாமல் கருணாரத்ன இலங்கையில் அரிசி தட்டுப்பாடு பிரச்னைக்கு 2 வாரங்களில் தீர்வு காணப்படும் என்று அந்நாட்டின் விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியிருப்பதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் குறிப்பிடுகையில், "தற்போது நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் விவசாயிகள் நெல் அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வோம். சிறிய, நடுத்தர ஆலை உரிமையாளர்களும் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கிறன. அதனால் அரிசி பிரச்னையில் இருந்து நாங்கள் வெளியில் வருவோம். தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரிசி பிரச்சினை நாங்கள் ஏற்படுத்தியது அல்ல. நாங்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் இருந்தது. என்றாலும் அரசாங்கம் என்ற வகையில் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும் இந்த பிரச்சினை இந்த வருட இறுதியில் மீணடும் சந்திக்க ஏற்பட்டால் மாத்திரம் எங்களது பிரச்சினையாக மாறும், அந்த பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். அதனால் அரிசி பிரச்சினை நாட்டில் மீண்டும் ஏற்படுவதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதில்லை" என்று கூறியதாக வீரகேசரி இணையதளம் கூறுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm211dj2rd4o
  2. ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி; மூன்று போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டது Published By: DIGITAL DESK 3 18 JAN, 2025 | 03:21 PM (நெவில் அன்தனி) மலேசியாவில் சனிக்கிழமை (18) ஆரம்பமான இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் காலையில் நடைபெற்ற 4 போட்டிகளில் ஒன்றில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் மற்றைய மூன்று போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டது. ஸ்கொட்லாந்துக்கு எதிராக பாங்கி YSD - UKM கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற டி குழு போட்டியில் 9 விக்கெட்களால் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றி பெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 15.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எம்மா வால்சிங்கம் (12), சார்லட் நேவார்ட் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் காய்ம்ஹே ப்றே ஒரு ஓட்டத்திற்கு 3 விக்கெட்களையும் எலினோ லரோசா 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹஸ்ரத் கில் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 6.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 49 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. கேட் பெலே ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் ஐன்ஸ் மெக்கியொன் 12 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்துக்கு ஏமாற்றம் ஜொஹார் கிரிக்கெட் பயிற்சியக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான பி குழு போட்டி மழையினால் இடையில் கைவிடப்பட்டது. இது கணிசமான ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்துக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது. ஜெமிமா ஸ்பென்ஸ் 37 ஓட்டங்களையும் சார்லட் ஸ்டப்ஸ் 31 ஓட்டங்களையும் டாவினா பெரின் 26 ஓட்டங்களையும் சார்லட் லெம்பர்ட் 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் எலி மெக்கீ 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 3.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை தொடர்ச்சியாக பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. சராவக் போர்னியோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த சமோஆ அணிக்கும் நைஜீரியா அணிக்கும் இடையிலான சி குழு போட்டியும் ஜொஹார் கிரக்கெட் பயிற்சியக ஓவல் மைதானத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தானுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான பி குழு போட்டியும் சீரற்ற காலநிலையால் முழுமையாக கைவிடப்பட்டது. இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மலேசியா, நேபாளம், நைஜீரியா, சமோஆ ஆகிய அணிகள் முதல் தடவையாக பங்குபற்றுகின்றன. https://www.virakesari.lk/article/204158
  3. ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ணம்: மலேசியாவில் ஆரம்பம்: இலங்கை உட்பட 16 அணிகள் பங்கேற்பு Published By: VISHNU (நெவில் அன்தனி) ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளைமறுதினம் 18ஆம் திகதி நடைபெறவுள்ள 6 போட்டிகளுடன் ஆரம்பமாவுள்ளது. இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியை மலேசியா முன்னின்று நடத்துகின்றது. 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்திய மலேசியாவில் 17 வருடங்கள் கழித்து மற்றொரு பிரதான ஐசிசி கிரிக்கெட் போட்டி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும். தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து இரண்டாவது அத்தியாயம் மலேசியாவில் இந்த வருடம் அரங்கேற்றப்படவுள்ளது. இரண்டாவது அத்தியாயம் ஜனவரி 18ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 2ஆம் திகதி நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறும். இலங்கை அணி ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணிக்கு மனுதி நாணயக்கார தலைவியாகவும் ரஷ்மிக்கா செவ்வந்தி உதவித் தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற முதலாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய மனுதி நாணயக்கார, ரஷ்மிக்கா செவ்வந்தி, தஹாமி செனெத்மா, ரஷ்மி நேத்ராஞ்சலி, சுமுது நிசன்சலா ஆகிய ஐவரும் இந்த வருடமும் விளையாடவுள்ளனர். மனுதி நாணயக்கார (தலைவி - மொறட்டுவை பிறின்சஸ் ஒவ் வேல்ஸ்), ரஷ்மிக்கா செவ்வந்தி (உப தலைவி - மாத்தறை, அனுரா கல்லூரி), விமோக்ஷா பாலசூரிய (திருகோணமலை சிங்கள ம.வி.), ஹிருணி ஹன்சிகா, சுமுது நிசன்சலா, ரஷ்மி நேத்ராஞ்சலி, சஷினி கிம்ஹானி, சஞ்சனா காவிந்தி, ஷெஹாரா இந்துவரி (அறுவரும் ரத்கமை, தேவபத்திராஜ கல்லூரி), தஹாமி சனுத்மா (நுகேகொடை, அநுலா வித்தியாலயம்), அஷேனி தலகுனே (கண்டி, மஹமாயா மகளிர் கல்லூரி), ப்ரமுதி மெத்சரா (அம்பாறை உஹன மத்திய கல்லூரி), சமோதி ப்ரபோதா (மொணராகலை. பஞ்ஞானந்த மகா வித்தியாலயம்), தனுலி தென்னக்கூன் (குருநாகல், மாலியதேவ மகளிர் கல்லூரி), லிமன்சா திலக்கரட்ன (அவுஸ்திரேலியாவில் பயின்றவர்) ஆகியோர் 19 வயதுக்குட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறுகின்றனர். முதலாவது சம்பியன் இந்தியா தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற அங்குரார்ப்பண அத்தியாயத்தில் ஷபாலி வர்மா தலைமையிலான இந்தியா சம்பியனானது. பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் 2023 ஜனவரி 29ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட்களால் வெற்றிகொண்டு இந்தியா சம்பியனாகி இருந்தது. இங்கிலாந்தை 17.1 ஓவர்களில் 68 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா 14 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பியனானது. நான்கு குழுக்கள் இவ் வருடம் பங்குபற்றும் 16 அணிகள் நான்கு குழுக்களில் விளையாடவுள்ளன. ஏ குழுவில் இந்தியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள். மலேசியா ஆகிய அணிகளும் பி குழுவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளும் சி குழுவில் நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, நைஜீரியா, சமோஆ ஆகிய அணிகளும் டி குழுவில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், நேபாளம், ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன. இந்த நான்கு குழுக்களிலும் லீக் முறையில் முதலாம் சுற்று நடத்தப்படும். முதலாம் சுற்று நிறைவில் ஏ மற்றும் டி குழுக்களில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் ஒரு குழுவிலும் பி மற்றும் சி குழுக்களில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் மற்றைய குழுவிலும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதிபெறும். சுப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும். அவற்றில் வெற்றிபெறும் அணிகள் 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண இரண்டாவது அத்தியாயத்தின் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும். முதல் சுற்று நடைபெறும் மைதானங்கள் ஏ குழுவுக்கான போட்டிகள் கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல் மைதானத்திலும் பி குழுவுக்கான போட்டிகள் ஜோஹார் கிரிக்கெட் பயிற்சியகம் ஓவல் மைதானத்திலும் சி குழுவுக்கான போட்டிகள் சரவாக் போர்னியோ கிரிக்கெட் மைதானத்திலும் டி குழுவுக்கான போட்டிகள் பாங்கி YSD-UKM கிரிக்கெட் ஓவல் மைதானத்தினலும் நடைபெறும். போட்டி அட்டவணை ஜனவரி 18 அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து (டி குழு) இங்கிலாந்து எதிர் அயர்லாந்து (பி குழு) சமோஆ எதிர் நைஜீரியா (சி குழு) பங்களாதேஷ் எதிர் நேபாளம் (டி குழு) பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (பி குழு) நியூஸிலாந்து எதிர் தென் ஆபிரிக்கா (சி குழு) ஜனவரி 19 இலங்கை எதிர் மலேசியா (ஏ குழு) இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (ஏ குழு) ஜனவரி 20 அவுஸ்திரேலியா எதிர் பங்களாதேஷ் (டி குழு) அயர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (பி குழு) நியூஸிலாந்து எதிர் நைஜீரியா (சி குழு) ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் (டி குழு) இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் (பி குழு) தென் ஆபிரிக்கா எதிர் சமோஆ (சி குழு) ஜனவரி 21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் இலங்கை (ஏ குழு) இந்தியா எதிர் மலேசியா (ஏ குழு) ஜனவரி 22 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து (டி குழு) இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (பி குழு) நியூஸிலாந்து எதிர் சமோஆ (சி குழு) அவுஸ்திரேலியா எதிர் நேபாளம் (டி குழு) பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து (பி குழு) தென் ஆபிரிக்கா எதிர் நைஜீரியா (சி குழு) ஜனவரி 23 மலேசியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (ஏ குழு) இந்தியா எதிர் இலங்கை (ஏ குழு) நிரல்படுத்தல் போட்டிகள் (13, 14, 15, 16ஆம் இடங்கள்) ஜனவரி 24 பி 4 எதிர் சி 4, ஏ 4 எதிர் டி 4 சுப்பர் சிக்ஸ் ஜனவரி 25 பி 2 எதிர் சி 3 (பாங்கி YSD-UKM கிரிக்கெட் ஓவல்) பி 1 எதிர் சி 2 (சரவாக் போர்னியோ கிரிக்கெட் மைதானம்) டி 1 எதிர் ஏ 3 (பாங்கி YSD-UKM கிரிக்கெட் ஓவல்) சி 1 எதிர் பி 3 (சரவாக் போர்னியோ கிரிக்கெட் மைதானம்) ஜனவரி 26 சுப்பர் சிக்ஸ் ஏ 2 எதிர் டி 3 (கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல்) ஏ 1 எதிர் டி 2 (கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல்) ஜனவரி 27 சுப்பர் சிக்ஸ் பி 1 எதிர் சி 3 (சரவாக் போர்னியோ கிரிக்கெட் மைதானம்) ஜனவரி 28 சுப்பர் சிக்ஸ் டி 2 எதிர் ஏ 3 (கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல்) சி 1 எதிர் பி 2 (சரவாக் போர்னியோ கிரிக்கெட் மைதானம்) ஏ 1 எதிர் டி 3 (கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல்) ஜனவரி 29 (சுப்பர் சிக்ஸ்) சி 2 எதிர் பி 3 (பாங்கி YSD-UKM கிரிக்கெட் ஓவல்) டி 1 எதிர் ஏ 2 (பாங்கி YSD-UKM கிரிக்கெட் ஓவல்) ஜனவரி 31 முதலாவது அரை இறுதி (கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல்) இரண்டாவது அரை இறுதி (கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல்) பெப்ரவரி 2 இறுதிப் போட்டி (கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல்) https://www.virakesari.lk/article/204004
  4. 17 JAN, 2025 | 12:36 PM அமெரிக்காவில் பணபலம் படைத்த ஆதிக்ககுழுவொன்று உருவாகிவருவது குறித்து ஜனாதிபதி ஜோபைடன் தனது பிரியாவிடை உரையில் எச்சரிக்கைவிடுத்துள்ளார். மிக அதிகளவு செல்வத்தையும், அதிகாரத்தையும் தன்வசம் வைத்துள்ள சிறியகுழுவொன்று உருவாகிவருகின்றது, அவர்களின் செல்வாக்கு எங்களின் ஜனநாயகத்திற்கும், அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கும் ஆபத்தானதாக மாறியுள்ளது என ஜோபைடன் தனது பிரியாவிடை உரையில் தெரிவித்துள்ளார். அமெரிக்கர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தக்கூடிய அதி செல்வந்த தொழில்நுட்ப - தொழில்துறை குறித்து தனது உரையில் 82 வயது பைடன் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையிலிருந்து தனது இறுதி தொலைக்காட்சி உரையை ஆற்றிய பைடன் காலநிலை மாற்றம். சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவல் குறித்து எச்சரித்துள்ளார். தனது உரையில் தனது ஆட்சியின் சாதனைகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜோபைடன், தான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அதிகளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டமை, உள்கட்டமைப்பு, சுகாதார செலவீனங்கள், நாட்டை பெருந்தொற்றின் பிடியிலிருந்து விடுவித்தது போன்றவை குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். எங்களின் செயல்களின் பலாபலன்களை உணர்வதற்கு அனுபவிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும், ஆனால் விதைகளை விதைத்துள்ளோம் என பைடன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/204048
  5. Published By: VISHNU 17 JAN, 2025 | 08:49 PM ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு விருட்சம், நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என ஈழத்து நாடக வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையான நாடகம் தந்த உண்மை மனிதன் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் காலமானார். குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் நடிகராக நாடகாசிரியராக, நெறியாளராக, தயாரிப்பாளராக, ஆய்வாளராக, நாடகப்போதானாசிரியராக, நாடகக் களப்பயிற்சியாளராக, விமர்சகராக, உலக நாடக வராலாற்றாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, நாடக அரங்கக் கல்லூரி நிறுவுனராக, கல்விசார் அரங்கினை பிரக்ஞை பூர்வமாக உருவாக்கியவர் என பல்பரிமாணமுடையவராக பல் துறை ஆற்றல் கொண்டவராக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/204111
  6. Published By: DIGITAL DESK 7 17 JAN, 2025 | 05:22 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனங்கள் பல அதன் ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம், மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவது கூறியுள்ள போதும் அதற்கான பணம், சம்பளத்திலிருந்து பெறப்பட்டாலும், கட்டியதற்கான பற்றுச்சிட்டுகளோ, அல்லது வைப்பிலிட்டமைக்கான ஆதாரங்கள் வழங்காது ஊழியர்களை ஏமாற்றி அவர்களிடம் வேலை வாங்கி வருவதாக ஊழியர்கள் பலர் ஊழியர் சேமலாப நிதியம் உதவி பணிப்பாளரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்கள். குறித்த விடயங்கள் தொடர்பில் ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் நாம் ஒரு நிறுவனத்தில் பல வருடங்களாக வேலை செய்து வந்தோம். எமக்கு வேலை தரும் போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவதாக கூறினார்கள். அதுமட்டுமன்றி மாதாந்த சம்பளம் வைப்பிலிட்டதாக கூறினார்கள். ஆனால் சம்பளம் மட்டும் வங்கியில் வைப்பிலிட்டார்கள் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டவில்லை. அதற்கான விண்ணப்பம் நிரப்பப்படவில்லை. ஆனால் எமது சம்பள பணத்தில் அதற்கான பணத்தை கழித்து வருகிறார்கள். எமக்கு சம்பள பட்டியல் தருவதில்லை. வங்கியில் பார்ப்பதன் மூலம் எமக்கான சம்பளம் கிடைத்துள்ளது தெரியவரும். நாம் எதைக் கேட்டாலும் எமக்கு காரணம் கூறி சமாளித்து விடுவார்கள். எனக்கு மட்டுமன்றி எம்மோடு வேலை செய்த பலருக்கும் இதே நிலைதான். சிலர் ஐந்து வருடமாக வேலை செய்த போதும் அவர்களில் சிலருக்கு ஒரு சில மாதங்கள் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டியுள்ளார்கள். அதற்கு பலருக்கு விவரங்கள் வழங்கப்படவில்லை. சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் முறைப்படியாக எவருக்கும் சில நிறுவனங்கள் வர்த்தக நிலையங்கள் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவதில்லை. நிறுவனத்தில் ஒருவர் வேலை செய்தால் இரண்டு வாரத்தில் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு அறிவிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள விதிமுறையாகும். இதை யார் நடைமுறைப்படுத்துகிறார்கள், யார் கண்காணிப்பது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் குறித்த தொழில் திணைக்கள அதிகாரிகள் சில வர்த்தக நிலையங்கள், நிறுவனங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு ஊழியர்கள் நலன்கள் சம்பள விவரங்கள், ஊழியர் விவரங்கள் போன்றவற்றை கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. தற்போது அவை நடைமுறையில் இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதேவேளை பாதுகாப்பு சேவையில் ஈடுபடும் நிறுவனங்களிலும் இத்தகைய ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவதாக கூறுகின்றபோதும் முறையான விபரங்கள் பாதுகாப்பு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. அவர்களது வேலை நேரத்திலும் பல பிரச்சினைகள் காணப்படுகிறது. குறிப்பாக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சேவைக்கு ஆட்களை நியமிக்கும் போது அதிகளவான பணத்தை பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் வேலை செய்யும் ஊழியருக்கு முழுமையான நிதியை வழங்குவதில்லை. இத்தகைய நிறுவனங்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரச ஊழியர்களுக்கு பல்வேறுவிதமாக அரச சலுகைகள் கிடைக்கின்ற போதும் அரச சார்பற்ற தனியார், தனிநபர்களுக்கான சலுகைகள் தொடர்பில் அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஓய்வுகால நிதியாக ஊழியர்களுக் இத்தகைய நிதி கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஆட்சியில் உள்ளவர்கள், வடக்கு மாகாண ஆளுநர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது என மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/204021 என்னுடைய ஆதங்கம் செய்தியாக வந்துள்ளது. தனியார் ஊழியர்களுக்கு முதுமையில் பாதுகாப்பாக அமையும்.
  7. கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் - வௌிப்படுத்திய பதில் ஐஜிபி கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக பொலிஸார் முன்னெடுத்துள்ள வாகன சோதனை நடவடிக்கைகள் காரணமாக, வாகன விபத்துகளால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். 'புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் பொலிஸின் செயற்பாடுகள் ' என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், போக்குவரத்து விபத்துகளால் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவித்தார். இது கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் என்றும், வீதி ஒழுக்கத்தைப் பேணுவது மிகவும் முக்கியமானது என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார். கடந்த நாட்களில் வீதி விபத்துகளால் தினமும் சுமார் 9 பேர் உயிரிழந்ததாகவும், இந்த எண்ணிக்கை 4 ஆகக் குறைக்கப்பட்டு தற்போது 2 ஆகக் குறைந்துள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் கூறினார். மேலும், வீதி விபத்துகளால் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 பேர் வரை நிரந்தர மாற்றுத்திறனாளிகளாக ஆவதாகவும், யுத்தத்தின் போது நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 பேர் வரை உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார். பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட வாகன சோதனை நடவடிக்கைகள் காரணமாக, கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று எந்தவொரு வாகன விபத்துகளும் பதிவாகவில்லை என்றும், இது ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=198904
  8. யுத்தநிறுத்த அறிவிப்பு வெளியான பின்னரும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை - ஒரு சில மணித்தியாலங்களில் 45க்கும் அதிகமானவர்கள் பலி Published By: RAJEEBAN 16 JAN, 2025 | 03:10 PM இஸ்ரேலும் ஹமாசும் யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்து இணக்கப்பாட்டிற்கு வந்த ஒருசில மணித்தியாலங்களில் காசா நகரை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஷேக்ரட்வானிற்கு அருகில் உள்ள குடியிருப்பு தொகுதியை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அருகில் உள்ள மற்றுமொரு குடியிருப்பு பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 15பேர் கொல்லப்பட்டனர் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர் என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கட்டிட இடிபாடுகளிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதையும், உடல்கள் காணப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. மற்றுமொரு வீடியோவில் காயமடைந்த சிறுவனை மீட்பு பணியாளர்கள் வைத்தியாசாலைக்கு கொண்டு செல்வதையும்,சிறுவர்கள் சிகிச்சை பெறுவதையும் காணமுடிந்துள்ளது. அல்ரிமாலில் கட்டிடமொன்று இஸ்ரேலின் தாக்குதலில் இடிந்துவிழுந்ததால் 5 கொல்லப்பட்டு;ள்ளனர். காயமடைந்த பலர் காசாநகரில் உள்ள அல்அஹ்லி பப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்என மருத்துவமனையின் இயக்குநர் படெல்நைம் தெரிவித்துள்ளார். யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரான 70 மணித்தியாலங்களும் காசா மக்களிற்கு மிகவும் வன்முறையானதாகவும் வேதனை மிக்கதாகவும் காணப்படும் காசா மீதான தாக்குதல்கள் நிற்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவது குறித்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள போதிலும், தாக்குதல்கள் தொடர்கின்றன, என தெரிவித்துள்ள அல்அஹ்லி பப்டிஸ்ட் மருத்துவமனையின் இயக்குநர் ஆக்கிரமிப்பாளர்கள் காசா நகரத்தின் மீது தாக்குதல்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர், முடிந்தளவிற்கு சேதத்தை ஏற்படுத்தும் முயற்சி போல இது தோன்றுகின்றதுஎன குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/203968
  9. பட மூலாதாரம்,SRI LANKA PMD படக்குறிப்பு, சீன அதிபர் ஷி ஜினபிங்குக்கும் மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அதிகாரப்பூர்வ சீன விஜயத்தில், இலங்கைக்கு பாரிய நேரடி முதலீடுகள் கிடைத்துள்ளன. சீன அதிபர் ஷி ஜினபிங்குக்கும் இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் ஜனவரி 16ஆம் தேதி நடந்த சந்திப்பை அடுத்தே இந்த முதலீடுகள் தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஹம்பாந்தோட்டையில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, சினொபெக் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சீன விஜயம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த 13ஆம் தேதி சீனாவுக்கு பயணமாகியிருந்தார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், கடந்த மாதம் தனது முதல் வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு சென்ற அநுர குமார திஸாநாயக்க, இரண்டாவது வெளிநாட்டு விஜயமாக சீனாவுக்கு பயணித்துள்ளார். சீனா சென்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு, சீனாவில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீன அதிபர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் நேற்றைய தினம் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன அதிபர் அப்போது தெரிவித்துள்ளார். அத்துடன், நெருங்கிய நட்பு நாடு என்ற விதத்தில் சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த சீன அதிபர், எதிர்காலத்தில் இலங்கையுடன் இணைந்து செயல்படத் தயார் எனவும் உறுதி வழங்கியுள்ளார். இலங்கை ஜனாதிபதியின் சீன பயணத்தை எச்சரிக்கையுடன் உற்றுநோக்கும் இந்தியா - என்ன காரணம்? இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை இலங்கை: பில்லியன் டாலர் கடன்; இந்தியா, சீனாவின் செல்வாக்கு - புதிய ஆண்டில் ஜனாதிபதிக்கு காத்திருக்கும் சவால்கள் பட மூலாதாரம்,SRI LANKA PMD படக்குறிப்பு, சீனா சென்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு, சீனாவில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அப்போது, ''இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, கலாசார, அரசியல் தொடர்புகள் குறித்து மிக முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் 15 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. இந்த 15 புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கும், கல்வி, ஊடகம், கலாசாரம் ஆகியவற்றுக்கும் மிக முக்கியமான," என்று தெரிவித்தார். மேலும், "இதன் ஊடாக இலங்கைக்கு பாரிய நன்மைகள் எதிர்காலத்தில் கிடைக்கும். சீன அரசின் ஒத்துழைப்புக்களை தொடர்ச்சியாக வழங்குவதாக சீன அதிபர் உறுதியளித்தார். சீனா தொடர்ச்சியாகப் பல்வேறு விதத்தில் உதவிகளை வழங்குவதாக எம்மிடம் உறுதியளித்தது. சீனாவுடனான உறவை இலங்கை மேலும் வலுப்படுத்தும் என உறுதி வழங்கப்பட்டது." என்று விஜித்த ஹேரத் குறிப்பிடுகிறார். இந்தியாவுக்கு இலங்கை அளித்த உறுதிமொழி - தமிழர்கள் பற்றி மோதி கூறியது என்ன?17 டிசம்பர் 2024 இந்தியா vs சீனா: இலங்கை ஜனாதிபதி முதல் பயணமாக இந்தியா செல்வதன் மூலம் உணர்த்தும் சேதி என்ன?17 டிசம்பர் 2024 இலங்கையில் திடீரென அதிகரித்த விலைவாசி - ரூ 260க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசி10 டிசம்பர் 2024 கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் என்ன? பட மூலாதாரம்,SRI LANKA PMD சீனாவுடன் கைச்சாத்திடப்படும் உடன்படிக்கைகள் குறித்து, இலங்கை அரசாங்கம் கடந்த 6ஆம் தேதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது தீர்மானங்களை எட்டியிருந்தது. இதன்படி, இலங்கை அரசு 'ஒரே சீனா கொள்கையை' தொடர்ச்சியாகக் கடைப்பிடித்தல் என அமைச்சரவை தீர்மானித்திருந்தது. 'இலங்கை அரசு 'ஒரே சீனா கொள்கையை' தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வந்துள்ளதுடன், அதன்மூலம் சட்டரீதியான சீனாவாக மக்கள் சீனக் குடியரசை மாத்திரம் ஏற்றுக்கொள்வதுடன், தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் மாத்திரமே என ஏற்றுக்கொள்வதெனும் நிலைப்பாடாகும். இலங்கை அரசு குறித்த கொள்கையை அவ்வகையிலேயே தொடர்ந்தும் கடைபிடித்து அதற்கிணங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பட மூலாதாரம்,SRI LANKA PMD படக்குறிப்பு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் சீன மக்கள் குடியரசு நிறுவனத்துக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டுள்ளது. இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள், சீன ஊடகக் குழுமம் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடல். சீன சுங்கக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இடையீட்டில் இலங்கையிலிருந்து கோழி இறைச்சி சீனாவுற்கு ஏற்றுமதி செய்வதற்கான நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கை முறைகளுக்கு அமைய மேற்கொள்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடல். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறியளவிலான மீனவர்களுக்கு 35.7 மில்லியன் யுவான்கள் செலவில் சீனாவினால் அவசர உதவிகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிடுதல் இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வருமானம் குறைந்த மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள், பொருத்து வீடுகள் அரசி போன்ற உதவிகளை வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் சீன மக்கள் குடியரசு நிறுவனத்துக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை தேசிய தொலைக்காட்சி, தேசிய வானொலி இலங்கை ஊடக அமைச்சு, வரையறுக்கப்பட்ட ஐக்கிய பத்திரிகை கம்பனி ஆகியவற்றுக்கும், சீனாவின் தேசிய தொலைக்காட்சி, வானொலி, சீன சிங்குவா பத்திரிகை முகவர் நிறுவனம், சீன ஊடகக் குழுமம் ஆகியவற்றுக்கும் இடையில் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுவதாக இலங்கை அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இருபது வீதிகள், பள்ளி, கல்லூரி, நீதிமன்றம் என ஒரு நகரத்தையே உள்ளடக்கிய இலங்கையின் பிரமாண்ட கோட்டை27 நவம்பர் 2024 இலங்கை: தமிழர் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி - தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல் எதிர்காலம் என்ன?20 நவம்பர் 2024 இலங்கை நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாக இந்திய வம்சாவளி மலையக பெண்கள் 3 பேர் தேர்வு19 நவம்பர் 2024 சினொபெக் நிறுவனத்துடன் பாரிய முதலீட்டுக்கான உடன்படிக்கை பட மூலாதாரம்,SRI LANKA PMD படக்குறிப்பு, இந்த உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கைக்கு நேரடியாக 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது. சீனாவின் எரிபொருள் முன்னணி நிறுவனமாகத் திகழும் சினொபெக் சர்வதேச பெற்றோலிய நிறுவனத்துடன், இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று (16) உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கைக்கு நேரடியாக 3.7 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடு கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது. ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இரண்டு லட்சம் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தாங்கிகளைக் கொண்டுள்ளதுடன், அவற்றில் பெருமளவை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவிடம் இருந்து இலங்கைக்குக் கிடைத்த இந்தப் புதிய முதலீட்டின் ஊடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதுடன், ஹம்பாந்தோட்டையில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்தும் என அரசாங்கம் தெரிவிக்கிறது. இந்த முதலீட்டின் நன்மைகள் மிக விரைவில் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை: ராஜபக்ஸ குடும்பத்தை மக்கள் அரசியலில் இருந்து புறக்கணித்து விட்டார்களா?17 நவம்பர் 2024 அநுர குமார திஸாநாயக்க முன்னுள்ள சவால்கள் என்ன? இந்தியா, சீனா, அமெரிக்காவை சமாளிப்பாரா?17 நவம்பர் 2024 இலங்கை: அறுகம்பையில் இஸ்ரேல் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் - புலனாய்வு தகவல் கூறுவது என்ன?24 அக்டோபர் 2024 சீனாவிற்கு நாட்டை தாரைவார்க்கும் முயற்சி? பட மூலாதாரம்,SRI LANKA PMD படக்குறிப்பு, இம்முறை கடந்த அரசுகளைவிட, இந்த அரசின் அணுகுமுறை சற்று வித்தியாசமாக, முதலீடுகளை மையமாகக் கொண்டதாக இருக்கிறது. இதுகுறித்துப் பேசியபோது, அரச நிறுவனங்களை சீனமயப்படுத்தும் திட்டங்கள் இங்கே மறைமுகமாக காய் நகர்த்தப்படுவதாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''சீனா-இலங்கை உறவு என்பது மிக நீண்ட காலமானது. அநுர குமார திஸாநாயக்கவின் பதவிக் காலத்தில் அது மேலதிகமாக வருகிறது. இந்தியாவுடன் உறவைப் பேணும் தேவை அநுர குமாரவின் அரசுக்கு இருக்கின்ற அதேநேரம், சீனாவுடனும் உறவைப் பேணும் தேவை உள்ளது" என்கிறார் நிக்சன். அவரது கூற்றுப்படி, இம்முறை கடந்த அரசுகளை விட, இந்த அரசின் அணுகுமுறை சற்று வித்தியாசமாக, முதலீடுகளை மையமாகக் கொண்டதாக இருக்கிறது. "அரச நிறுவனங்களை சீனமயப்படுத்தும் திட்டங்கள் இங்கே மறைமுகமாகக் காய் நகர்த்தப்படுகின்றன. அதில் ஒன்றுதான் அரச ஊடகங்கள், சீன ஊடகங்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள். இதற்கான அங்கீகாரம் அமைச்சரவையில் கடந்த வாரம் வழங்கப்பட்டது. இப்போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதேபோல மேலும் பல அரச நிறுவனங்களும் ஒப்பந்தங்களைச் செய்து, வேலைத் திட்டங்களைப் பகிர்ந்துகொள்ளுவது, அறிவைப் பகிர்ந்துக்கொள்வது உள்ளிட்ட பல்வேறுப்பட்ட திட்டங்களுடன் வருகிறார்கள்" என்று குறிப்பிட்டார் அவர். அதோடு, இது இந்தியா இலங்கையுடன் செய்துகொள்ளவிருக்கும் எட்கா உடன்படிக்கைக்கு எதிராகச் செல்வதாகவும் நிக்சன் கூறினார். "இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையானது, தொழில்நுட்பம் சார்ந்ததாக உள்ளது. தொழில்நுட்பத் துறை சார்ந்தது என்பது மூலமாக அரச நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் இந்திய தொழில்நுட்ப முறைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. இதற்கான எதிர்ப்புகளை அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்கள் விடுதலை முன்னணி வெளியிட்டது. இப்போது தேசிய மக்கள் சக்தியாக அரசாங்கத்திலுள்ள நேரத்தில் எட்கா உடன்படிக்கையைக் கைச்சாத்திட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. விரும்பியோ விரும்பாமலோ கைச்சாத்திட வேண்டிய தேவை உள்ளது," என்றார். மேலும், அதற்கு மாற்றீடாகத்தான் சீனாவுடன் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றதோ என்ற ஐயப்பாடு எழுந்திருப்பதாகக் கூறுகிறார் நிக்சன். "ஒரு பக்கம் இந்தியாவிடமும், மறுபக்கம் சீனாவிடமும் நாட்டைக் கையளிக்கின்ற ஒரு நிலைமைக்கு தேசிய மக்கள் சக்தி அரசு சென்றுள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் முற்று முழுதாக நாட்டை இந்தியாவிடமோ அல்லது சீனாவிடமோ தாரை வார்க்கும் திட்டங்களுக்குப் போகவில்லை. இது வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கிறது" என்றும் அ.நிக்சன் தெரிவித்தார். 56 ஆண்டுக்கு முன் விமான விபத்தில் பலியான இவரது உடல் பனி படர்ந்த இமயமலையில் மீட்கப்பட்டது எப்படி?16 அக்டோபர் 2024 இலங்கையில் அரசியல் குடும்ப பின்னணி இல்லாத முதல் பெண் பிரதமர் - இவர் சாதித்தது எப்படி?25 செப்டெம்பர் 2024 இலங்கை: பட்டாம்பூச்சிகளை கடத்த முயன்றதாக தந்தை, மகனுக்கு ரூ. 1.67 கோடி அபராதம்14 செப்டெம்பர் 2024 ஜனாதிபதியின் சீன விஜயம் தொடர்பான பொருளாதார நிபுணரின் பார்வை பட மூலாதாரம்,SRI LANKA PMD வெளிநாட்டு முதலீடுகளின் ஊடாக முறையான ஏற்றுமதி உற்பத்திகளை ஊக்குவிக்கும் திட்டங்களை மேற்கொண்டு, அந்த முதலீடுகளைச் சரியான முறையில் கையாளும் பட்சத்திலேயே, எதிர்காலத்தில் கடன் பொறிக்குள் சிக்காது முறையாக பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என கொழும்பு பல்கலைக் கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவிக்கிறார். அவரது கூற்றுப்படி, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் பொருளாதார ரீதியாக இலங்கையின் பொருளாதாரம் ஒரு நிலைபேற்றுத் தன்மையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில், இலங்கைக்கு மிக அத்தியாவசியமாக வெளிநாட்டு முதலீடுகள் தேவைப்படுகின்றன. அதிலும் குறிப்பாக "இந்த முதலீடுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய, வர்த்தகரீதியில் மதிப்புமிக்க பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய துறைகளில் ஏற்பட வேண்டியது மிக அவசியம். அப்படி செய்கின்றபோதுதான் ஏற்றுமதிகளை அதிகரிக்க முடியும். அதேவேளை, வெளிநாட்டு செலாவணியை உழைக்க முடியும்" என்று விளக்கினார் கணேசமூர்த்தி. படக்குறிப்பு, கடன் பொறியில் இலங்கை எதிர்காலத்தில் சிக்காத ஒரு பொறிமுறையையும் அது ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி கூறுகிறார். இலங்கை இப்போது அந்நிய செலாவணியை உயர்த்துவதற்கான ஓர் உற்பத்திக் கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை. அதனாலேயே இந்த வெளிநாட்டு முதலீடுகள் மிக முக்கியமானதாக இருக்கின்றன. "மேற்குலக நாடுகளிடம் இருந்து முதலீடுகள் வருகின்றதைப் போலவே, சீனா போன்ற நாடுகளிடம் இருந்தும் முதலீடுகள் வருகின்றன. இப்போது ஏற்பட்டிருக்கிற இந்தப் புதிய சூழ்நிலையின் கீழ் சீனாவிலிருந்து அதிகளவான முதலீடுகள் இலங்கைக்கு வரக்கூடிய ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி விஜயத்தின்போது அத்தகைய முதலீட்டுத் திட்டங்களுக்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிவதாகத் தோன்றுகிறது" என்கிறார் கணேசமூர்த்தி. ஆனால், பொதுவாக இந்த சீன முதலீடுகள் பலராலும் விமர்சன ரீதியில் பார்க்கக்கூடியதை அவதானிக்க முடிவதாகவும், சீன முதலீடுகள் கடன் பொறியாக அமையக்கூடும் என்ற ஒரு கருத்தும் இருப்பதாகக் கூறுகிறார் அவர். ஆனால், ஆபிரிக்க நாடுகள் உள்ளிட்ட ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீன முதலீடுகளை சுயாதீனமாக ஆராய்ந்து கருத்துகளைத் தெரிவிக்கின்ற நிறுவனங்களின் கருத்துப்படி, சீன முதலீடுகள் கடன் பொறியாக அமைந்திருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் என்ற முடிவிற்குத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என விளக்குகிறார் கணேசமூர்த்தி. அதாவது முதலீடுகளைக் கவர்கின்ற நாடுகள் அதை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதைப் பொருத்துதான் இந்த முதலீட்டுக்கான நன்மை தீமைகள் அமையும். இலங்கையைப் பொருத்தவரை முதலீடுகள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற காலம் இது. ஆகவே, "இந்த காலப் பகுதியில் வருகின்ற முதலீடுகளை மிகக் கவனமாகப் பயன்படுத்தி, வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற, அதிக விலைக்கு வெளிநாடுகளில் விற்பனை செய்யக்கூடிய பொருட்களைத் தயாரிக்க ஏதுவாக இலங்கையின் உற்பத்திக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் வகையில் இந்த முதலீடுகளைக் கொண்டு வருவது முக்கியமானது. உயர் விலைக்கு விற்பனை செய்யக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் வகையான திட்டங்களை உருவாக்குவதன் ஊடாகவே, பொருளாதார மீட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும். கடன் பொறியில் இலங்கை எதிர்காலத்தில் சிக்காத ஒரு பொறிமுறையையும் அது ஏற்படுத்தக்கூடும்" என கொழும்பு பல்கலைக் கழக பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி விளக்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgrr5jxjymo
  10. கோட்டாவிடம் ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு இன்று முற்பகல் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி இன்று காலை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://tamil.adaderana.lk/news.php?nid=198894
  11. எரிசக்தி அமைச்சு விசேட அறிக்கை மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக எரிசக்தி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தத்தை நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று வௌியிட்ட நிலையில், இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்களை குறைக்க தீர்மானித்திருந்தது. அதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம் 6 ரூபாயில் இருந்து 4 ரூபாவாகவும், 31-60க்கு இடையில் 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்க தீர்மானித்திருந்தது. அதேபோல் இந்த மின்சார கட்டண திருத்தத்தின்படி, வீட்டுப் பிரிவிற்கான மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதத்தாலும், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 21 சதவீதத்தாலும் குறைக்க தீர்மானித்திருந்தது. உணவகங்களுக்கு 31 சதவீதமும், தொழில்துறைக்கு 30 சதவீதமும் மற்றும் பொது நோக்கத்திற்கான மின்சாரக் கட்டணங்களை 12% குறைக்கவும் தீர்மானித்திருந்தது. அரசு நிறுவனங்களுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தாலும் மற்றும் தெரு விளக்குகளுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்து. https://tamil.adaderana.lk/news.php?nid=198905
  12. யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி 17 JAN, 2025 | 07:53 PM இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அனுமதியளிக்குமாறு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது பாதுகாப்பு அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அடுத்த கட்டமாக யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய நாடாளுமன்றம் அனுமதியளிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/204109
  13. யாழ். பல்கலையில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 24ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் 17 JAN, 2025 | 04:57 PM பொங்குதமிழ் பிரகடனத்தின் 24ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபிக்கு முன்பாக நடைபெற்ற பொங்குதமிழ் பிரகடன உரையினை தொடர்ந்து, பொங்குதமிழ் தூபிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாணவர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர். 17.01.2001 அன்று தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்படவேண்டும் என பொங்குதமிழ் பிரகடனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/204095
  14. Published By: DIGITAL DESK 3 17 JAN, 2025 | 04:34 PM நீரிழிவு நோய் வகை 2, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட கல்லீரல் மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் பாடசாலை சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாடு பாடசாலை சிறுவர்களிடையே உடல்நலப்பிரச்சினைகளில் ஒரு சிக்கலான அதிகரிப்பை எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பாக சிறுவர் நல வைத்திய நிபுணர் ருவந்தி தெரிவிக்கையில், 12, 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களிடையே தொற்று நோய் அல்லாத குறிப்பாக நீரிழிவு நோய் வகை 2 அதிகமாக காணப்படுவது கவலை அளிப்பதோடு, அபாய எச்சரிக்கையை தூண்டியுள்ளது. இதேவேளை, கல்லீரல் மற்றும் நுரையீரல் நோய்களும் அதிகரித்துள்ளது. இது சுகாதார அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, இந்த நிலைமைகள் பொது சுகாதாரத்தில் சவாலை உருவாக்கி வருகின்றன. இந்த நோய் நிலைமைகளை குறைப்பதற்கு "சிறுவர்களுக்கு தேவையான சுகாதார அறிவை வழங்குவதன் மூலம் உடலுக்கு தீங்கு விளைவிக்காத ஆரோக்கியமானவற்றை தெரிவு செய்ய அவர்களுக்கு உதவ முடியும். அத்தோடு, நோய்கள் அதிகரிப்பதை குறைக்க முடியும். சிறுவர்களிடையே உயர் இரத்த அழுத்தம் நோய் அதிகரித்து வருவது மேலும் கவலை அளிக்கின்றது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி இன்மை மற்றும் பிற நடத்தை மாற்றங்கள் உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களே நோய்கள் அதிகரிப்புக்கு காரணமாகும். இந்த நோய்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் பாடசாலை சிறுவர்களிடையே சுகாதார விழிப்புணர்வு மற்றும் கல்வி அறிவை அதிகரிப்பதில் சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர் என்றார். https://www.virakesari.lk/article/204092
  15. Published By: PRIYATHARSHAN 17 JAN, 2025 | 04:35 PM வீ.பிரியதர்சன் இலங்கையின் ஜனநாயகத்தின் மீள் தன்மையை ஜனாதிபதித் தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மேலும் சீர்திருத்தங்களை ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் செயல்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதுள்ள நிலையில், இலங்கையை ஆதரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளதென ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு தூதுக்குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர் தெரிவித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் குறித்த தனது இறுதி அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புத் தூதுக்குழு இன்று வெள்ளிக்கிழமை (17) வெளியிட்டது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதித் தேர்தல் குறித்த இறுதி அறிக்கையை வெளியிட்டு வைத்து உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு தூதுக்குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர், “ ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிக்கையானது நாடு தழுவிய ரீதியில் 9 மாகாணங்களிலும் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பை அடிப்படையாகக் கொண்டது. இரண்டு மாத காலத்தில் இந்த அறிக்கை பூரணப்படுத்தப்பட்டது. முழு தேர்தல் செயல்முறையின் விரிவான பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டை இந்த அறிக்கை வழங்குகிறது. இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக, ஜனநாயகத் தேர்தல்களுக்கான இலங்கையின் சர்வதேச உறுதிப்பாடுகளுக்கு ஏற்ப, எதிர்கால தேர்தல் செயன்முறைகளை வலுப்படுத்துவதையும் செம்மைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 16 பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இலங்கையின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லையும் அறகலய போராட்டத்திற்கு பின்னரான அரசியல் இயல்புநிலையை மீட்டெடுத்தமையையும் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் குறித்து நிற்கின்றது. பொதுமக்கள் ஜனநாயக செயல்முறைக்கான தங்கள் அர்ப்பணிப்பை இதன்போது வெளிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து முக்கிய தேர்தல் கால கட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்துள்ளது. தேர்தல் காலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவானது சுயாதீனமாகவும் உறுதியுடனும் செயல்பட்டது. தேர்தல் அமைதியாக இடம்பெற்றமையும் வேட்பாளர்கள் முடிவுகளை ஏற்றுக்கொண்டமையும் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களின் சக்தியை அடிக்கோடிட்டுக் காட்டியது. தேர்தல் பிரச்சார நிதியில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இளைஞர்களை அதிக அளவில் இணைப்பது உள்ளிட்ட பல சிறந்த முன்னேற்றங்களை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, தேர்தல் சட்ட கட்டமைப்பு நன்கு வளர்ச்சியடைந்துள்ளதாகவும், தேர்தல் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூகத்தின் கூட்டு ஈடுபாடு தேர்தலுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளமை அறிக்கையின் மூலம் தெளிவாக காணக்கூடியதாக உள்ளது. தேர்தல் பிரச்சார காலங்களில் அடிப்படை சுதந்திரம் மதிக்கப்பட்டதுடன் வாக்காளர்கள் தங்களது விருப்பத்திற்கமைய வேட்பாளர்களை தெரிவு செய்ய உண்மையான அரசியல் மாற்று வழிமுறைகளைக் கொண்டிருந்தனர். இலங்கையின் ஜனநாயகத்தின் மீள்தன்மையை ஜனாதிபதித் தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மேலும் சீர்திருத்தங்களை ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் செயல்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதுள்ள நிலையில், இலங்கையை ஆதரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது. அரசியலில் பெண்களின் பங்கேற்பை அர்த்தமுள்ள வகையில் மேம்படுத்துவதையும், அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக அமுலாக்க வழிமுறைகளை வலுப்படுத்துவதையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாட்டுச் சட்டங்களை ரத்து செய்வதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான அணுகலை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தவும் இந்த அறிக்கை அழைப்பு விடுக்கிறது. இதேவேளை, வெளிப்படைத்தன்மை மற்றும் கருத்துசு் சுதந்திரத்தின் மூலம் ஜனநாயகம் செழித்து வளர்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு தூதுக்குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர் மேலும் தெரிவித்தார். இலங்கைத் தேர்தல் ஆணையக்குழுவினால் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 முதல் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை நாட்டில் தேர்தல் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டது. இது நாட்டின் 9 மாகாணங்களிலும் 70 க்கும் மேற்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்களை நியமித்து கண்காணிப்பு கடமைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/204091
  16. 17 JAN, 2025 | 03:19 PM கொழும்பில் பல வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு இன்னமும் பூர்த்தியடையாத நிலையில்உள்ள பலமாடி ஆடம்பர ஹோட்டலிற்கும் இந்தியாவில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றத்திற்கும் தொடர்புள்ளதா என இந்தியாவில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பணமோசடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் அன்னியசெலாவணி மோசடி போன்ற குற்றங்களை விசாரணை செய்யும் இந்திய அரசாங்கத்தின் அமைப்பு 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களின் ஒரு பகுதியே இலங்கையில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஆடம்பர ஹோட்டல் என தெரிவித்துள்ளது இந்த சொத்து இந்தியாவின் வர்த்தகர் அமிட்கட்யாலின் கிரிஸ்ரியல்டெக் நிறுவனத்திற்கு சொந்தமானது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் கொழும்பு ஒன்றில் உள்ள நான்கு ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் ஆடம்பர ஹோட்டல் மற்றும் குத்தகை உரிமையை இந்த வழக்குடன் இணைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக இந்தியாவின் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் வர்த்தகர் அமிட்கட்யாலிற்கு எதிராக புதுடில்லி மற்றும் குருகிராம் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையிலேயே இது குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றன. கிரிஸ்ரியல் டெக் பல முதலீட்டாளர்களை ஏமாற்றியது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. https://www.virakesari.lk/article/204080
  17. Published By: DIGITAL DESK 3 17 JAN, 2025 | 02:50 PM மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் 6 மாத காலத்தை வரையறுத்து 20 வீத மின்கட்டண குறைப்பை இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்துமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பரிந்துரை செய்துள்ளது. இதேவேளை, ஹோட்டல் மற்றும் அதனுடனான தொழிற்றுறையின் மின்கட்டணத்தை 31 சதவீத்ததால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/204069
  18. Published By: VISHNU 17 JAN, 2025 | 05:01 AM பொங்குதமிழ் நிகழ்வானது 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை (17) நண்பகல் 12 மணியளவில் பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபியில் அனைத்து மாணவர்களும் உணர்வுடன் ஒன்று திரண்டு இந்த பொங்குதமிழ் நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/204016
  19. ஏமன்: இரான் அல்லது சௌதி அரேபியா நினைத்தால் கேரள செவிலியர் நிமிஷாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியுமா? படக்குறிப்பு, நிமிஷா பிரியா தற்போது ஏமனின் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் (கோப்புப் படம்- நிமிஷா பிரியா தனது கணவர் டோமி தாமஸ் உடன்) கட்டுரை தகவல் எழுதியவர்,சிராஜ் பதவி,பிபிசி தமிழ் ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள மத்திய சிறையில், தனக்கு உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படுமா அல்லது மன்னிப்பு வழங்கப்படுமா எனத் தெரியாத நிலையில் தவித்து வருகிறார் நிமிஷா பிரியா. கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா, 2017இல் ஏமனில் அந்நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிச்சயம் தனது மகளை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில், கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக சனாவில் தங்கியுள்ளார் நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி. ஷரியத் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட மஹ்தியின் குடும்பம் 'மன்னிப்பு' வழங்கினால் நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படலாம். உள்நாட்டுப் போரால் பிளவுபட்டுள்ள ஏமனில், எந்த அரசு நிமிஷாவின் வழக்கை கையாள்கிறது? ஏமனின் அரசியலில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தும் சௌதி அரேபியா அல்லது இரான் தலையிட்டால் வழக்கின் போக்கு மாறுமா? ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை குறித்து இந்திய அரசு கூறுவது என்ன? நிமிஷா பிரியா: மரண தண்டனையை தடுக்க வல்ல குருதிப் பணம் என்றால் என்ன? ஏமனில் பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா? நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன? புத்தர் பிறந்த இடமான லும்பினி அழியும் ஆபத்தில் இருக்கிறதா? பிபிசி கள ஆய்வு ஏமனின் தற்போதைய நிலை என்ன? கடந்த 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டின் மேற்குப் பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதால் அங்கு உள்நாட்டு போர் வெடித்தது. 'ஏமன் நாட்டின் இந்த உள்நாட்டுப் போர் தான் உலகிலேயே மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடி' என்று ஐக்கிய நாடுகள் சபை ஒருமுறை கூறியது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது (தற்போது இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது). இதில், இஸ்ரேலுக்கு எதிராக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழுவும் போரில் ஈடுபட்டது. ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு 2023 நவம்பர் முதல் செங்கடலைக் கடக்கும் கப்பல்கள் மீது 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளாகும் காஸாவின் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இதைச் செய்வதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இஸ்ரேலிய போர் விமானங்கள் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தையும், செங்கடல் கடற்கரையில் உள்ள துறைமுகங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தின. இதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். "இரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்கான பதிலடி இப்போதுதான் தொடங்குகிறது" என்று இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார். அப்போது பிபிசியிடம் பேசிய ஹூதி கிளர்ச்சிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் முகம்மது அல்-புகைதி, "காஸா இனப்படுகொலையை இஸ்ரேல் நிறுத்தாத வரை, அதன் ராணுவ நிலைகள் மீது குறி வைப்பதை நாங்கள் நிறுத்தப் போவதில்லை" என்று கூறியிருந்தார். புத்தர் பிறந்த இடமான லும்பினி அழியும் ஆபத்தில் இருக்கிறதா? பிபிசி கள ஆய்வு2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா: ஒருபுறம் டிரம்ப், மறுபுறம் சீனா - நரேந்திர மோதி அரசுக்கு 2025இல் காத்திருக்கும் சவால்கள்2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சனா உள்ளிட்ட ஏமனின் ஒரு பகுதி ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் புதன்கிழமையன்று (ஜனவரி 16) தெரிவித்தன. இந்த புதிய முடிவு, ஏமனிலும் தற்காலிக அமைதியை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏமனின் சனாவில் உள்ள 'குவைத் பல்கலைக்கழக மருத்துவமனையில்' தலைமை மருத்துவராக பணிபுரியும் சாயா சாவந்த், அந்நாட்டின் தற்போதைய நிலை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார். "உள்நாட்டுப் போர் பதற்றம் மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் போன்றவை, இதுவரை எங்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கவில்லை. தாக்குதல்கள் நடப்பது பெரும்பாலும் எல்லைப் பகுதியில் என்பதால் தான் இந்த நிலை." "கடந்த மாதம், சனாவின் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது சற்று அதிர்ச்சி அளித்தது. ஆனால், இப்போதும் சாமானிய மக்களின் வாழ்க்கைக்கு பெரிய பாதிப்பில்லை. அதனால் தான் இன்னும் இந்தியர்கள் பலர் இங்கு வாழ்கின்றனர்." என்று கூறினார். படக்குறிப்பு,ஏமனின் சனாவில் உள்ள 'குவைத் பல்கலைக்கழக மருத்துவமனையில்' தலைமை மருத்துவராக பணிபுரியும் சாயா சாவந்த் நிமிஷாவின் மரண தண்டனையை உறுதி செய்தது யார்? நிமிஷா பிரியா தற்போது ஏமனில் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உள்நாட்டுப் போரால் பிளவுபட்டுள்ள ஏமன் நாடு தற்போது 3 பிரிவினரால் ஆளப்படுகிறது. சனா உள்ளிட்ட ஏமனின் ஒரு பகுதி ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹூதிக்களின் அரசியல் பிரிவு தலைவராக உள்ள மெஹ்தி அல் மஷாத், அந்த கிளர்ச்சிக்குழு அமைத்துள்ள ஏமன் குடியரசின் (சனா) அதிபராக செயல்படுகிறார். சௌதி அரேபியா ஆதரவுடன் செயல்படும், ஐ.நா. அங்கீகாரம் பெற்ற அரசு ஏமனின் மற்றொரு பகுதியை கட்டுப்படுத்துகிறது. இந்த அரசின் தலைவராக, அதிபர் ரஷாத் அல் அலிமி செயல்படுகிறார். மேற்கண்ட இரண்டும் அல்லாத, ஐக்கிய அரபு அமீரக ஆதரவு பெற்ற சதர்ன் டிரான்ஸிஷனல் கவுன்சில் ஏடன் துறைமுகம் உள்ளிட்ட ஏமனின் பகுதிகளை கட்டுப்படுத்துகிறது. நிமிஷாவின் வழக்கில் அனைத்து முடிவுகளையும் எடுப்பது, ஹூதி கிளர்ச்சிக் குழுவின் அரசியல் பிரிவே. ஆனால், ஹூதி கிளர்ச்சிக் குழுவை இந்திய அரசு இதுவரை அங்கீகரிக்கவில்லை. அதிபர் ரஷாத் அல் அலிமி தலைமையிலான சௌதி அரேபியா ஆதரவுடன் செயல்படும் அரசையே இந்தியா அங்கீகரித்துள்ளது. ஆஸ்திரேலியா: நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் முதலைத் தோல் வியாபாரம்16 ஜனவரி 2025 ஜப்பான்: 56 ஆண்டு கால போராட்டம்; தம்பியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய 91 வயது அக்கா16 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிபர் ரஷாத் அல் அலிமி தலைமையிலான சௌதி அரேபியா ஆதரவுடன் செயல்படும் அரசையே இந்தியா அங்கீகரித்துள்ளது நவம்பர் 2023இல் நிமிஷாவுக்கு உறுதி செய்யப்பட்ட தண்டனையை நிறைவேற்ற ஏமன் ஹூதிக்களின் அரசியல் பிரிவு தலைவர் மெஹ்தி அல் மஷாத் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஒப்புதல் அளித்தார். சில ஊடகங்களில், இந்த ஒப்புதலை அளித்தது அதிபர் ரஷாத் அல் அலிமி தலைமையிலான அரசு என்ற செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் இருக்கும் ஏமன் நாட்டு தூதரகம், "ஏமன் நாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியா, ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள சனாவின் சிறையில் உள்ளார்." "இந்த வழக்கு முழுவதையும் கையாள்வது ஹூதி கிளர்ச்சிக் குழுவே. அதிபர் ரஷாத் அல் அலிமி நிர்வாகத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை." என்று விளக்கமளித்ததாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹூதி கிளர்ச்சிக் குழுவின் அரசை இந்தியா இதுவரை அங்கீகரிக்கவில்லை இந்திய அரசு செய்யக்கூடியது என்ன? "நிமிஷாவின் வழக்கில் தன்னால் முடிந்த அனைத்தையும் இந்திய அரசு செய்யும். ஆனால், ஹூதி கிளர்ச்சிக் குழுவுடன் நேரடி தூதரகத் தொடர்பு இல்லாதது, மத்திய கிழக்கு நாடுகளின் கடுமையான தண்டனைச் சட்டங்கள் போன்றவற்றையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்," என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரும் சர்வதேச விவகாரங்கள் நிபுணருமான கிளாட்ஸன் சேவியர். இதற்கு உதாரணமாக, இலங்கையைச் சேர்ந்த ரிஸானா நஃபீக் என்ற பெண்ணுக்கு சௌதி அரேபியாவில் வழங்கப்பட்ட தண்டனையை சுட்டிக்காட்டுகிறார் கிளாட்ஸன் சேவியர். கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு பணிப்பெண்ணாக சௌதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றார் ரிஸானா. பணியின்போது, அவரது பராமரிப்பில் இருந்த ஒரு 4 மாத குழந்தையை கொலை செய்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், ரிஸானா அதை மறுத்தார். பால் புட்டியில் குழந்தைக்கு பால் புகட்டும்போது, மூச்சுத் திணறி குழந்தை இறந்துவிட்டதாக அவர் தெரிவித்தார் என்றும், இந்த சம்பவம் நடந்தபோது ரிஸானாவுக்கு வெறும் 17 வயது தான் என்றும் அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் அமைப்பின் அறிக்கை கூறுகிறது. ரிஸானா 2005ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார், 2007ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு சௌதியின் உச்சநீதிமன்றம் அதை உறுதி செய்தது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து - 15 மாத போரை முடிவுக்குக் கொண்டு வருமா?16 ஜனவரி 2025 டிரம்ப், ரஷ்யா, ஐரோப்பா: சீனா முன்னுள்ள 5 சவால்களையும் அதிபர் ஜின்பிங் சமாளிப்பாரா?15 ஜனவரி 2025 படக்குறிப்பு,ஏமன் நாட்டு குடிமகனின் கொலை தொடர்பான வழக்கு என்பதால், இதில் இந்திய அரசுக்கும் சில வரம்புகள் உள்ளன என்கிறார், பேராசிரியர் கிளாட்ஸன் சேவியர் "மத்திய கிழக்கு நாடுகளின் சட்டங்கள் கடுமையானவை. அங்கு வேலைக்கு செல்பவர்கள் அதை நன்கு அறிந்து தான் செல்வார்கள். அப்படியிருக்க தனது நாட்டு குடிமகன் ஒருவரது கொலை தொடர்பான வழக்கு எனும்போது, அதை அந்த நாட்டு அரசுகள் இன்னும் கடுமையாகவே கையாளும்." "இதில் பிற நாட்டு அரசுகளின் தலையீடுகளுக்கு வரம்புகள் இருக்கும். இறுதி முடிவு என்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கையில் இருக்கும். கொலைக் குற்றம் போன்ற கடுமையான குற்றங்களில் அவர்கள் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே விடுதலை கிடைக்கும்." என்கிறார் கிளாட்ஸன் சேவியர். ஷரியா சட்டம் அமலில் இருக்கும் இந்த மத்திய கிழக்கு நாடுகளில், பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் 'குருதிப் பணம்' எனும் இழப்பீடு கொடுத்து, மன்னிப்பு பெற்றால், குற்றவாளியின் தண்டனை குறைக்கப்படலாம் அல்லது முழு விடுதலையும் பெறலாம். கொலை, காயப்படுத்துதல் அல்லது சொத்துகளைச் சேதப்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான குற்றங்களுக்கு இது பொருந்தும். ரிஸானாவின் வழக்கில் தண்டனையை சௌதி உச்சநீதிமன்றம் உறுதி செய்த பிறகு, அவருக்கு மன்னிப்பு வழங்க பாதிக்கப்பட்ட குடும்பம் மறுத்துவிட்டது. ரிஸானாவைக் காப்பாற்ற அப்போதைய இலங்கை அரசு பல முயற்சிகள் எடுத்தது. ஆனால் அவை பலனளிக்கவில்லை. கடந்த 2013ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதை அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் உட்பட மனித உரிமை குழுக்கள் வன்மையாக கண்டித்தன. "இந்திய அரசு தனது ராஜ்ஜிய தொடர்புகள் மூலம் தேவையான உதவிகளைச் செய்கிறது. ஆனால், ஏமன் நாட்டு குடிமகனின் கொலை தொடர்பான வழக்கு என்பதால், இதில், நமது அரசுக்கும் சில வரம்புகள் உள்ளன," என்கிறார் பேராசிரியர் கிளாட்ஸன் சேவியர். இலங்கை ஜனாதிபதியின் சீன பயணத்தை எச்சரிக்கையுடன் உற்றுநோக்கும் இந்தியா - என்ன காரணம்?15 ஜனவரி 2025 தென் கொரிய அதிபர் இல்லத்திற்குள் ஏணி மூலம் குதித்த அதிகாரிகள் - என்ன நடந்தது?15 ஜனவரி 2025 இரான் அல்லது சௌதி அரேபியா தலையிட முடியுமா? படக்குறிப்பு,ஹூதி கிளர்ச்சிக் குழுவின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் இரான் போன்ற ஒரு நாடு, இந்த விவகாரத்தில் உதவ வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய சமூக அறிவியல் ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி, "இந்த வழக்கில் முழுக் கட்டுப்பாடும், ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கையில் உள்ளது. எனவே, சௌதி அரேபியா அரசோ அல்லது அதன் ஆதரவு பெற்ற அதிபர் ரஷாத் அல் அலிமி அரசோ இதில் ஆர்வம் காட்டாது" என்கிறார். ஏமனின் அரசியலில், குறிப்பாக ஹூதி கிளர்ச்சிக் குழுவின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் இரான் போன்ற ஒரு நாடு, இந்த விவகாரத்தில் உதவ வாய்ப்பிருப்பதாக அவர் கூறுகிறார். "இதற்கு முன்னும் பல சமயங்களில் தனது ராஜ்ஜிய தொடர்புகளைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அப்படியிருக்க, இந்த வழக்கில் கூடுதலாக அவகாசம் கிடைத்தால், நிமிஷா மீட்கப்பட வாய்ப்பு உள்ளது." என்று கூறும் பெர்னார்ட் டி சாமி, அதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பு முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். "இஸ்லாமியர்களின் புனித மாதமான 'ரமலான்' மாதம் நெருங்கிவருகிறது. அந்த மாதத்தில் பல வழக்குகளில் மன்னிப்பு வழங்கப்படும். எனவே, அதைக் கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னிப்பு வழங்க வாய்ப்புள்ளது." என்று கூறினார் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn0yx699g6eo
  20. Published By: VISHNU 17 JAN, 2025 | 04:42 AM (இராஜதுரை ஹஷான்) சுயாதீன தாய்வான் எண்ணக்கருவை தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைந்துக் கொள்வதற்காக சீன அரசினால் முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் ஆதரிப்பதாகவும்,சீனாவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தின் போது சீன மக்கள் குடியரசிடம் உறுதியளித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்துவதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கை சீன நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஒப்புக் கொண்டவாறு, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு தாம் தயாராகவிருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் சீன அரசாங்கம் உத்தரவாதமளித்துள்ளது. சீன மக்கள் குடியரசின் தலைவர் ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்புக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த செவ்வாய்க்கிழமை சீனாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், அரச சபை பிரதமர் லீ சியாங், மற்றும் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுத் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோருக்கிடையிலான இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றது. இதனையடுத்து இரு நாடுகளினதும் உயர்மட்ட பிரநிதிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள இலங்கை – சீன கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, சுமுகமான மற்றும் நட்பு சூழ்நிலையில் இரு தரப்பினருக்கிடையில் பாரம்பரிய நட்பை மேலும் வலுப்படுத்தல், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒரு மண்டலம் - ஒரு பாதை திட்டத்தை மேம்படுத்தல், பல்துறை நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இவ்விஜயத்தின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகள் தொடர்பில் இரு நாடுகளின் தலைவர்களினதும் வலுவான மூலோபாய வழிகாட்டுதலைப் பேணுவதற்கும், இரு அரசுகள், சட்டமன்ற அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான இருதரப்பு பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும், அரசியலில் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் ஒருவருக்கொருவர் ஆட்சி மற்றும் அபிவிருத்திக்கான அனுபவத்தை பகிர்ந்துக் கொள்வதற்கும் அவற்றின் மூலம் கற்றுக் கொள்வதற்கும், சீன- இலங்கை உறவுகளை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் முயற்சிகளை மேற்கொள்வதற்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர். இரு தரப்பினரும் தமது முக்கிய நலன்கள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பிலான பிரச்சினைகளில் தமது பரஸ்பர ஆதரவை மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானம் 2758 இன் அதிகாரத்தை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், சீன அரசானது, முழு சீனாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டப்பூர்வ அரசாங்கம் என்பதையும், தாய்வான் சீனப்பிரதேசத்தில் பிரித்தெடுக்க முடியாத பிரதேசம் என்பதையும் அங்கீகரித்து ஒரே சீனா கொள்கைக்கான தனது வலுவான உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சுயாதீன தாய்வான் எண்ணக்கருவுக்கு இலங்கை எதிர்ப்பு தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைவதற்கான சீன அரசின் அனைத்து முயற்சிகளையும் இலங்கை உறுதியாக ஆதரிப்பதுடன் 'சுயாதீன தாய்வான்' எண்ணக்கருவின் எவ்வித நிலையையும் எதிர்த்து நிற்கிறது. சீன தொடர்பான எந்தவொரு எதிர் மற்றும் பிரிவினைவாத செயற்பாடுகளுக்கு இலங்கை தனது பிரதேசத்தை என்றும் பயன்படுத்த அனுமதிக்காது. ஷிசாங் மற்றும் ஷின்ஜியாங்தொடர்பான பிரச்சினைகளில் சீனாவை உறுதியாக ஆதரிக்கும் என்றும் இலங்கை மீண்டும் வலுயுறுத்தியது.தேசிய சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இலங்கையை தொடர்ந்து வலுவாக ஆதரிப்பதாகவும், அதன்; தேசிய நிலைவரங்களுக்கு ஏற்ப வளர்ச்சிப் பாதையை சுயாதீனமான தெரிவுகளில் இலங்கைக்கு மதிப்பளித்து, அவற்றுக்கு ஆதரிப்பதாகவும் சீன மீண்டும் உறுதியளித்துள்ளது. சுதந்திரமானதும், அமைதியானதுமானதுமான வெளிவிவகாரக் கொள்கைக்கான அதன் உறுதிப்பாட்டை சீனத் தரப்பு மீண்டும் உறுதியளித்துள்ளது. ஒரு மண்டலம் -ஒரு பாதை திட்டம் இரு நாடுகளின் தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தலின் கீழ் சீனாவும் இலங்கையும் ஒரு மண்டலம் - ஒரு பாதை ஒத்துழைப்பில் பலனுறுதிமிக்க பெறுபேறுகளை உருவாக்கியுள்ளன. இலங்கை இதன் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியிலும், தனது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் ஒரு மண்டலம் ஒருபாதை ஒத்துழைப்பு பங்கு வகிப்பது பாராட்டத்தக்கது. கொழும்புத் துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக ஒருங்கிணைந்த அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கக்கூடிய செயற்பாட்டு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும், பட்டுப்பாதைச் செயற்பாட்டுத் திட்டம் போன்ற தளங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கும், வாழ்வாதாரத்துக்கான நிகழ்ச்சித் திட்டங்களுக்கமைவாக ஒன்றாகத் திட்டமிடுதல், ஒன்றாகக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒன்றாக பயடைதல், திறந்தும் என்ற வகையில் சீன ஜனாதிபதி முன்வைத்த எட்டு முக்கிய படிவுகளை பின்பற்றுவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். கடன் மறுசீரமைப்பு கடன் பிரச்சினைகளை திறம்பட கையாள்வதற்கு இலங்கைக்கு சீனா ஆதரவாக விளங்கியது. கடன்களை மறுசீரமைப்பதற்கு வழங்கிய முக்கிய உதவி உட்பட நிதிசார் நெருக்கடி மிகுந்த காலப்பகுதியில் சீனாவிடமிருந்து இலங்கை பெற்ற பெறுமதிமிக்க ஆதரவுக்கு இலங்கை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது. இலங்கை சீன நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஒப்புக் கொண்டவாறு, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் சீனா தொடர்ந்து நேர்மறையான பங்கை பகிப்பதுடன், இலங்கையின் நிதிச் சிக்கல்களைத் தணிக்கவும், கடன் ஸ்திரத்தன்மையை பேணவும் உதவும் வகையில், ஏனைய கடன் வழங்குநர்களுடன் நட்புரீதியான தொடர்பைப் பேணுகிறது. இலங்கை மத்திய வங்கியும், சீன மக்கள் வங்கியும், தங்கள் நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதுடன், நிதிசார் ஒத்துiபை;பைத் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளன. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் இருதரப்ப ஒத்துழைப்பின் முன்னேற்றத் குறித்து இரு தரப்பினும் அதிருப்தியடைந்துள்ளனர். தேயிலை, இரத்தினக்கல் மற்றும் பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனங்களுக்கு சீன இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கங்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவளிக்க இணங்கப்பட்டுள்ளது. சீன - இலங்கை சமத்துவம், பரஸ்பர நன்மை மற்றும் இருதரப்பினதும் வெற்றியை நோக்காகக் கொண்ட கொள்கைகளுக்கு இணங்க சகலதும் அடங்கிய தொகுப்பொன்றில் விரிவாக சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியதாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். விவசாயத்துறை மேம்பாடு விவசாயம் தொடர்பான பரந்த அளவிலான ஒத்துழைப்பு மற்றும் ஆழமான பரிமாற்றங்கள் குறித்து நேர்மறையான மதிப்பீடுகளை இரு தரப்பினரும் பகிர்ந்துக் கொண்டனர். இலங்கையின் நிலையானதும், வளங்குன்றாததுமான விவசாய வளர்ச்சிக்கான திறனை மேம்படுத்த உதவும் வகையில் வெப்பமண்டல பயிர்களுக்கான உயிரியற் தொழில்நுட்பங்கள், தாவரப் பெருக்கம், பயிர்ச்செய்கை மற்றும் மீன்வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் இலங்கையுடன் பயிற்சி மற்றும் செயற்விளக்க நடவடிக்கைகளில் ஈடுபட தயாராகவிருப்பதாக சீன தெரிவித்துள்ளது. நீல (கடல்சார்) கூட்டாண்மைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை,வெளிப்படைத்தன்மை, மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கடல்சார் ஒத்துழைப்பைத் தொடரவும், கடல்சார் விவகாரங்களில் தொடர்ந்து இருதரப்பினரும் ஆலோசனை நடத்தவும் இணங்கியுள்ளனர்.கடல்சார் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல், மற்றும் மறுசீரமைத்தல், கடல்சார் கள விழிப்புணர்வு கடல்சார் மீட்பு மற்றும் பேரிடர் நிவாரணம், கடல்சார் பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுப்படுத்தவும் இரு தரப்பினரும் தயாராகவுள்ளனர். நீல (கடல்சார்) கூட்டாண்மைக்கான கடல்சார் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். கல்வித்துறை மேம்பாட்டுக்கு இணக்கம் கல்வித்துறையில் ஒத்துழைப்பு மேம்படுத்த இரு தரப்பினரும் தயாராகவுள்ளனர். புரிதல் மற்றும் நட்பை மேம்படுத்துவதற்கு கல்வித்துறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.இலங்கை மாணவர்கள் சீனாவில் உயர்கல்வியை தொடர்வதை சீன வரவேற்று ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கு அரசாங்க புலமைப்பரிசல்கள் வழங்குவதற்கு தயாராகவுள்ளது.இரு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு மற்றும் கல்வித் துறையை மேம்படுத்தவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ஆசிய முன்முயற்சி மற்றும் ஆசியாவில் கலாச்சார பாரம்பரியத்துக்கான கூட்டணி ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்புக்கான கூட்டணி போன்றவற்றில் பங்கேற்பதற்கான இலங்கையின் நேர்மறையான பதிலை சீனத் தரப்பு பாராட்டியுள்ளது. இக்கூட்டணியின் கீழ் இலங்கையுடன் இருதரப்பு கலாச்சார பாரம்பரிய ஒத்துழைப்பை சீனா மென்மேலும் ஊக்குவிக்கும். தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் இணையத்தள குற்றங்களை கட்டுப்படுத்தல் நீதித்துறை, சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்கள் என்பதை இலங்கை- சீன தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளதுடன்,தொலைத் தொடர்பு மோசடிகள் மற்றும் இணையத்தள சூதாட்டம் போன்ற குற்றங்களை கூட்டாகக் கட்டுப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்த அரசமுறை விஜயத்தில் விவசாயம், சுற்றுலா, வாழ்வாதார உதவி, ஊடகம் மற்றும் ஏனைய துறைகளில் இரு தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன. https://www.virakesari.lk/article/204013
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சஞ்சய தகல் பதவி, பிபிசி நேபாளி சேவை, லும்பினியில் இருந்து நேபாளத்தின் சமவெளிப் பகுதியில் அமைந்துள்ள புத்தரின் பிறந்த இடமான லும்பினி, 1997ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மரபுச் சின்னமாக இருந்து வருகிறது. ஆனால், விரைவில் அழியும் நிலையிலுள்ள மரபுச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம் நிலவுகிறது. புனித யாத்திரையின் மையத்தில் இருக்கும் மாயா தேவி கோவிலின் உள்ளே ஓர் அடையாளக் கல் அமைந்துள்ளது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் இங்குதான் பிறந்தார் என்று பௌத்தர்கள் நம்பும் இடத்தை அது குறிக்கிறது. கொரியா, பிரான்ஸ் உள்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பௌத்த மதத்தினரால் கட்டப்பட்ட 14 மடாலயங்களால் இது சூழப்பட்டுள்ளது. இந்த மதம் உலகில் எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதற்கு இதுவொரு சான்று. "உலகம் முழுவதும் இருந்து மக்கள் இங்கு அமைதியைத் தேடி வருகிறார்கள்," என்று சிங்கப்பூர் மடாலயத்தின் துறவி கென்போ ஃபுர்பா ஷெர்பா, பிபிசி நேபாளியிடம் தெரிவித்தார். ஆனால் கோடை மாதங்களில் கோவில்களுக்குச் செல்வது சவாலானதாக இருக்கும் என்றார் அவர். சேலம் தலைவெட்டி முனியப்பன் சிலை உண்மையில் 'புத்தர் சிலை' என்ற தீர்ப்புக்கு பிறகும் இந்து வழிபாடு தொடர்வது ஏன்? உலகிற்கே முன்மாதிரியாக முழு மலையை குடைந்து உருவான பௌத்த கோவில் - ஆந்திராவில் எங்கே உள்ளது? 100 சகோதரர்கள் கொலை, அந்தப்புர பெண்கள் எரிப்பு - பேரரசர் அசோகரின் அறியப்படாத மறுபக்கம் எவரெஸ்டில் வெற்றிக்கொடி நாட்டிய டென்சிங் - ஹிலாரி: சாமானியர்கள் 'சாகச நாயகர்கள்' ஆன கதை "ஒரு சில நிமிடங்களுக்கு மேல் உள்ளே இருக்க முடியாது. ஏனெனில், அந்த இடம் மிக வெப்பமாகவும், ஈரப்பதம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதால் மூச்சு முட்டுவதைப் போல் இருக்கும்." ஆபத்தில் உள்ள உலக பாரம்பரிய மரபுச் சின்னங்களின் பட்டியலில் லும்பினியை சேர்க்க யுனெஸ்கோ பரிந்துரைத்தமைக்கு கோவிலுக்குள் உள்ள சூழ்நிலைகளும் ஒரு காரணம். தளத்தின் முக்கிய அம்சங்களில் காணப்படும் சீரழிவானது, பராமரிப்பு இல்லாத நிலையைப் பிரதிபலிப்பதாகச் சொல்லப்படுகிறது. காற்று மாசுபாடு, வணிக வளர்ச்சி, தொழில்துறை பகுதிகள், தவறான மேலாண்மை ஆகியவை இந்த இடத்திற்கு முக்கிய அச்சுறுத்தல்களாக இருப்பதாக யுனெஸ்கோ தெரிவிக்கிறது. ஆனால், நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற தளத்தை மீட்டெடுக்க அதிக கால அவகாசம் வழங்க ஐநா கலாசார முகமை முடிவு செய்துள்ளது. அதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய 2025 பிப்ரவரி 1ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ வேகமாகப் பரவியது எப்படி? எளிதாக விளக்கும் ஐந்து புகைப்படங்கள்15 ஜனவரி 2025 டிரம்ப், ரஷ்யா, ஐரோப்பா: சீனா முன்னுள்ள 5 சவால்களையும் அதிபர் ஜின்பிங் சமாளிப்பாரா?15 ஜனவரி 2025 கசியும் கூரை, வாடிய நிலையில் தாவரங்கள் பட மூலாதாரம்,LUMBINI DEVELOPMENT TRUST படக்குறிப்பு, மாயாதேவி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது ஒவ்வோர் ஆண்டும் சுமார் பத்து லட்சம் யாத்ரீகர்கள் இந்தப் புனித தலத்திற்கு வருகிறார்கள். ஆனால், அருகிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் மாசுபட்ட காற்று, குவிந்திருக்கும் குப்பைகளின் துர்நாற்றம், நீர் தேங்கி நிற்கும் தோட்டங்களின் துர்நாற்றம் ஆகியவற்றால் தாங்கள் அதிருப்தி அடைந்ததாகப் பலர் கூறுகிறார்கள். யாத்ரீகர்களுக்கு வரைபடங்கள் மற்றும் தகவல்களை அதிகாரிகள் வழங்க வேண்டும். தகவல் எதுவுமின்றி நாங்கள் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது," என்று இந்தியாவை சேர்ந்த யாத்ரீகரான பிரபாகர் ராவ் பிபிசியிடம் கூறினார். ஏற்பாடுகள் இன்னும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று யாத்ரீகர்கள் மட்டும் கருதவில்லை. உள்ளூர் டாக்ஸி ஓட்டுநரான மனோஜ் செளத்ரியும் இதுகுறித்து கவலையில் உள்ளார். "தவறான நிர்வாகத்தைப் பார்த்து நான் கோபமாக இருக்கிறேன். சேகரிக்கப்படாமல் கிடைக்கும் இந்தக் குப்பைகளைப் பாருங்கள்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். கூரை கசிவு மற்றும் தரையில் இருந்து நீர் புகுவது ஆகியவற்றால் கோவில் பாதிக்கப்பட்டுள்ளது. பழங்கால செங்கற்கள் பூஞ்சை பிடித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடந்த ஆண்டு இங்கு வருகை தந்தபோது நட்ட மரக்கன்றுகூட வாடி வருகிறது. நேசிப்பாயா விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? விஷ்ணுவர்தனின் கம்பேக் படமாக அமையுமா?15 ஜனவரி 2025 நீலகிரி, கொடைக்கானல்: இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறதா?15 ஜனவரி 2025 பட மூலாதாரம்,SANJAYA DAHKAL / BBC NEPALI படக்குறிப்பு, மாயாதேவி கோவிலின் வெளிப்புறத்தில் நீர் மட்டம் அதிகமாக உள்ளது மாயா தேவி கோவிலிலும் அதைச் சுற்றியும் நீர் புகுந்து இருப்பதன் காரணமாக ஏற்பட்டுள்ள ஈரப்பதம் நிறைந்த சூழலால் அந்தத் தலத்திற்கு ஏற்பட்ட சேதம், யுனெஸ்கோ இந்த இடத்தை அழியும் ஆபத்தில் இருக்கும் மரபுச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கும்படி பரிந்துரைப்பதற்கான காரணங்களில் ஒன்று. ஆனால், ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள மற்றும் திட்டமிடப்பட்டுள்ள பெரிய அளவிலான சுற்றுலா திட்டங்கள், யாத்திரைகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் போன்றவற்றால் அந்த இடத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் யுனெஸ்கோ கவலைப்படுகிறது. மாயா தேவி கோவிலில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் 5,000 பேர் தங்கக்கூடிய ஒரு தியான மற்றும் நினைவு மண்டபம் 2022ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இந்தத் திட்டம் அந்த இடத்தின் சிறந்த உலகளாவிய மதிப்பு (Outstanding Universal Value, OUV) மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று யுனெஸ்கோ மதிப்பிட்டுள்ளது. சிறந்த ஒ.யு.வி காரணமாகவே இந்தத் தலம் உலக பாரம்பரிய மரபுச் சின்ன பட்டியலில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ஆம் ஆண்டில், நேபாள அரசு மற்றொரு லட்சிய திட்டத்தை அறிவித்தது. அதாவது, 760 மில்லியன் டாலருக்கும் அதிகமான (600 மில்லியன் பவுண்ட்) வெளிநாட்டு முதலீட்டுடன் லும்பினியை "உலக சமாதான நகரமாக" மேம்படுத்துவது. யுனெஸ்கோ உள்பட உலகம் முழுவதும் எழுந்த பரவலான எதிர்ப்புக்குப் பிறகு இந்தத் திட்டம் திரும்பப் பெறப்பட்டது. "லும்பினி உலக சமாதான நகர திட்டம், அந்தத் தலத்தின் சிறந்த உலகளாவிய மதிப்பு மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகள் இருந்தன" என்று யுனெஸ்கோ 2022இல் தனது அறிக்கையில் தெரிவித்தது. ஜப்பான்: 56 ஆண்டுகள் போராடி தம்பியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய அக்கா16 ஜனவரி 2025 இந்தியாவில் அந்தப்புர பெண்ணுக்காக நடந்த கொலையால் 'மகுடம் இழந்த மன்னர்' யார் தெரியுமா?15 ஜனவரி 2025 உலக மரபுச்சின்ன பட்டியல் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மாயா தேவி கோவிலுக்கு வருகை தந்தார் யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்ன பட்டியலில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் லும்பினியும் ஒன்று. கிழக்கு ஆப்பிரிக்காவின் செரெங்கெட்டி, எகிப்தின் பிரமிடுகள், ஆஸ்திரேலியாவில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப், லத்தீன் அமெரிக்காவின் பரோக் கதீட்ரல்கள் ஆகியவை பன்முகத்தன்மை கொண்ட மற்றும் தனித்துவமான, இயற்கையான மற்றும் பாரம்பரிய மரபுச் சின்னங்களை உள்ளடக்கிய பட்டியலில் உள்ளன. மனித குல மேன்மையை ஊக்குவிக்கும் தனிச்சிறப்புள்ள உலகளாவிய மதிப்புகொண்ட (OUV) இடங்களை, உலக பாரம்பரிய மரபுச் சின்னங்களாக யுனெஸ்கோ வரையறுக்கிறது. மேலும், எதிர்கால சந்ததியினர் பார்த்து மகிழவும், அவற்றை அனுபவிக்கும் விதமாகவும் அவை பாதுகாக்கப்பட வேண்டிய தலங்களின் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. உலக மரபுச் சின்னப் பட்டியலில் ஓர் இடம் சேர்க்கப்பட்டதற்கான பண்புகளை அச்சுறுத்தும் நிலைமைகளை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதும், அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதை ஊக்குவிப்பதும், அழியும் ஆபத்தில் உள்ள உலக மரபுச் சின்னங்களின் பட்டியலின் நோக்கமாக உள்ளது. 2024ஆம் ஆண்டு நிலவரப்படி 50க்கும் மேற்பட்ட இடங்கள் அழியக்கூடிய ஆபத்தில் இருக்கும் பட்டியலில் உள்ளன. அழிந்து வரும் மரபுச் சின்ன தளமாகப் பெயரிடப்படுவது, சர்வதேச அளவில் மீட்டெடுப்பு நடவடிக்கைகளைத் தூண்டும் பொருட்டு செய்யப்படும் நடவடிக்கையாகும் என்று யுனெஸ்கோ பிபிசிக்கு அளித்த எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. "யுனெஸ்கோ மற்றும் அதன் கூட்டாளர்களிடம் இருந்து நிதி உதவிக்கான கதவைத் திறக்கும் ஒரு பிரத்யேக செயல் திட்டத்தை உருவாக்குவதற்கு இது தூண்டும். அதை அழியும் நிலைக்குத் தள்ளக்கூடிய ஆபத்து நீங்கியதும், அந்தப் பட்டியலில் இருந்தும் நீக்கப்படலாம்" என்றும் யுனெஸ்கோ தெரிவித்தது. காதலிக்க நேரமில்லை: இன்றைய இளைஞர்களின் மனக் குழப்பங்களை காட்டுகிறதா? ஊடக விமர்சனம்15 ஜனவரி 2025 'என் தந்தை ஒரு குற்றவாளி' - மனைவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவரின் மகள் பேட்டி15 ஜனவரி 2025 பட மூலாதாரம்,SANJAYA DAHKAL / BBC NEPALI படக்குறிப்பு, லும்பினியின் முன் வாயிலில் அள்ளப்படாமல் கிடக்கும் குப்பை ஆனால் லும்பினியை அழியும் நிலையில் உள்ள உலக மரபுச் சின்ன பட்டியலில் சேர்ப்பது "மிகவும் வருத்தம் அளிக்கும் சூழ்நிலை" என்று லும்பினி வளாகத்திற்குள் உள்ள ராஜ்கியா பௌத்த மடாலயத்தின் தலைமை பூசாரி சாகர் தம்மா தெரிவித்தார். "தங்கள் ஆன்மீக ஆசிரியரின் பிறந்த இடம் அழிந்து வரும் பாரம்பரிய தலமாகப் பெயரிடப்படும் அபாயத்தில் உள்ளது என்பது உலகெங்கிலும் உள்ள 50 கோடிக்கும் அதிகமான பௌத்தர்களுக்கு அவமானகரமான விஷயம்" என்று தம்மா பிபிசியிடம் கூறினார். ஆனால், ஆபத்தில் உள்ள உலக மரபுச் சின்ன பட்டியலில் லும்பினி சேர்க்கப்பட்டுவிட்டால், அது உலக பாரம்பரிய மரபுச் சின்ன பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்பது கிடையாது. "ஓர் இடம் தனது தனிச்சிறப்புள்ள உலகளாவிய மதிப்பை (ஒயுவி) உண்மையிலேயே இழக்கும்போதுதான் அது உலக மரபுச் சின்ன பட்டியலில் இருந்து நீக்கப்படும். ஆனால், இந்த நிலைமை மிகவும் அரிதானது. 1972 முதல் மூன்று இடங்களுக்கு மட்டுமே இது நடந்துள்ளது" என்று யுனெஸ்கோ பிபிசிக்கு அளித்த எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. யாரை பழிவாங்க இவர்கள் இரவு 2 மணி வரை கண் விழிக்கிறார்கள்? ஆண், பெண்ணில் என்ன மாற்றம் நிகழும்?15 ஜனவரி 2025 தென் கொரிய அதிபர் இல்லத்திற்குள் ஏணி மூலம் குதித்த அதிகாரிகள் - என்ன நடந்தது?15 ஜனவரி 2025 லும்பினியில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லும்பினியில் உள்ள போதி மரம் கடந்த 1978ஆம் ஆண்டில், ஐ.நா.வும் நேபாள அரசும் லும்பினி மேம்பாட்டுத் திட்டத்தை அங்கீகரித்தன. மாயா தேவி கோவிலின் மறுசீரமைப்பு, மடாலய மண்டலம் அமைத்தல், 'ஆன்மீகம், அமைதி, உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் அகிம்சை ஆகியவற்றின் சூழலை' உருவாக்கும் குறிக்கோளுடன் ஒரு கிராமத்தை அமைத்தல் ஆகியவை இதில் அடங்கும். இரண்டு முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, லும்பினி 1997இல் உலக பாரம்பரிய மரபுச் சின்ன பட்டியலில் சேர்க்கப்பட்டது. "தற்போது நீங்கள் பார்க்கும் மாயா தேவி கோவிலை நாங்கள் மீண்டும் கட்டியபோது யுனெஸ்கோவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்போடு பணியாற்றினோம்," என்று லும்பினியின் முன்னாள் தலைமை தொல்பொருள் ஆய்வாளர் பசந்த் பிதாரி கூறினார். நேபாள அரசின் தொல்பொருள் துறையின் முன்னாள் தலைவரான கோஷ் பிரசாத் ஆச்சார்யாவும் லும்பினிக்கு பாரம்பரிய மரபுச் சின்ன அந்தஸ்தை பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டார். "ஆனால், அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் அதன் பராமரிப்பு மற்றும் சீரமைப்பில் நாம் தீவிரமாக ஈடுபடவில்லை என்று கருதுகிறேன்," என்று ஆச்சார்யா பிபிசியிடம் கூறினார். "இது நிதிப் பற்றாக்குறையால் மட்டும் ஏற்படவில்லை. நமது அணுகுமுறையும் இதற்குக் காரணம்," என்றார் அவர். லும்பினியை அழிந்து வரும் மரபுச் சின்ன பட்டியலில் யுனெஸ்கோ சேர்ப்பதைத் தடுப்பதற்காக அதிகாரிகள் தூதாண்மை மட்டத்தில் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் பிப்ரவரி காலக்கெடுவுக்கு முன்னர் "யுனெஸ்கோவின் கவலைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான தீவிரத்தை" தான் காணவில்லை என்று ஆச்சார்யா கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லும்பினி மாயா தேவி கோவில் அடிப்படைப் பிரச்னை அரசியல் ரீதியானதாக இருக்கக்கூடும். "லும்பினியை நிர்வகிக்கும் லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளையின் (LDT) தலைவராக நிபுணர்களையும் திறமையானவர்களையும் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, பாரம்பரிய சின்னங்களைப் பராமரித்துப் பாதுகாப்பதில் போதுமான திறமை இல்லாதவர்களை நியமிப்பதில் அரசு முனைப்புடன் இருப்பதாகத் தெரிகிறது," என்று முன்னாள் கலாசார அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தீப் குமார் உபாத்யாயா பிபிசியிடம் தெரிவித்தார். "விமர்சனங்கள் என்ன என்பது எனக்குப் புரிகிறது" என்று நேபாளத்தின் கலாசார அமைச்சர் பத்ரி பிரசாத் பாண்டே பிபிசியிடம் கூறினார். "இதுவொரு புனிதமான இடம். அதன் புனிதம் எல்லா வகையிலும் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அத்தகைய புனித இடங்களில் ஊழலைத் தடுப்பதில் ஒருவர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்." "எல்லா கவலைகளையும் நிவர்த்தி செய்ய நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஏனெனில், அது நாட்டின் கௌரவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். லும்பினி நிர்வாக அமைப்பு, சில சிக்கல்களைத் தீர்க்க யுனெஸ்கோவுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. பண்டைய செங்கற்களைப் பூஞ்சையிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ரசாயன சிகிச்சையை மேற்கொள்ள யுனெஸ்கோ நிபுணர்களை அழைத்துள்ளதாக எல்டிடியின் நிர்வாகத் தலைவரான லர்க்யால் லாமா கூறினார். "கோவிலில் நீர்க்கசிவைத் தடுக்க முதல்கட்ட நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்," என்று லாமா பிபிசியிடம் கூறினார். "எப்பாடுபட்டாவது லும்பினி பாதுகாக்கப்பட வேண்டும்" என்று அந்த இடத்தைப் பாதுகாத்து பராமரிக்கும் முயற்சியில் 40 ஆண்டுகளை செலவிட்ட மிதாரி, கண்களில் கண்ணீருடன் பிபிசியிடம் கூறினார். "இல்லையென்றால் அது தாங்க முடியாததாக இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy4m7elzjnjo
  22. மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. Published By: VISHNU 17 JAN, 2025 | 05:07 AM மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் 16ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,, மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம் உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகவும், காட்டு மிராண்டித்தனமான ஒரு விடயமாகும். இந்த மிலேச்சத்தனமான செயலுக்கு மன்னாரில் உள்ள பொலிஸார் முழுப்பொறுப்பையும் எடுக்க வேண்டும். நொச்சிகுளம் மக்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுகிறார்கள். இன்றும் தொடர்ச்சியாக அந்த நொச்சிகுளம் கிராமத்தின் மக்கள் படிப்படியாக படுகொலை செய்யப்படுகின்ற சூழல் காணப்படுகிறது. இந்த விடயத்தை கடந்த அரசாங்கத்தில் மக்கள் பாதுகாப்பு தொடர்பாடல் அமைச்சரோடு நான் நேரடியாக பேசியிருந்தேன். காரணம் துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஏ.கே 47 பாவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது எந்த வகையான துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது என்பது தெரியப் படவில்லை. இந்த துப்பாக்கி பிரயோகம் நொச்சிகுளம் மக்களை பார்த்து தான் பிரயோகிக்கப்படுகிறது எல்லோருக்கும் தெரிந்த விடயம். மன்னார் பொலிசாருடைய மெத்தனப் போக்கும் இதில் அடங்கியிருக்கிறது. அந்த கிராமத்து மக்கள் அச்சத்தோடு வாழும் சூழலிலே மீண்டும் மன்னார் நீதி மன்றத்திற்கு முன் இந்த படுகொலைகள் நடைபெற்றிருக்கிறது. ஆகவே இது கண்டிக்கத்தக்கது. இவ் விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி அவர்களினதும் கவனத்திற்கும்,பாராளுமன்ற கவனத்திற்கும் முக்கியமான விடயமாக கொண்டு வரவுள்ளேன். ஏனென்றால் இது தொடர்ச்சியாக நடைபெறுகிற விடயமாக இருக்கிறது. போன உயிர்களை மீளப் பெற முடியாது. துப்பாக்கி பிரயோகத்தால் உயிர் நீத்த குடும்பங்கள் பல இ அந்த கிராம மக்கள் அச்சத்தோடு வாழுகின்ற நிலமை தொடர்கின்றது. ஆகவே இதன் முழுப்பொறுப்பையும் போலீசார் எடுக்க வேண்டும் .இந்த சம்பவத்திற்கு காரணம் பொலிசாருடைய கவனயீனம் அசமந்தப்போக்கு என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். முப்படைகள் அங்கே பாதுகாப்பு நடவடிக்கையில் இருக்கும் நிலையில் போன்று காட்டிக்கொண்டு இவ்வாறான விடயங்கள் நடைபெறுவது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அந்த வகையில் இவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டிய விடயங்களாகும். சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்ட வேண்டும். இதற்கான குழு அடங்கிய புலனாய்வு துறை நடவடிக்கைகளை பொலிசார் உடனடியாக ஆரம்பித்து செயலில் இறங்க வேண்டும். மன்னாரில் உள்ள பொலிசாரை மட்டும் வைத்து இதற்குரிய நடவடிக்கைகளை செய்து கொள்வது முடியாத காரியமாகும். எனவே கொழும்பில் இருந்து விசேட குழு அடங்கிய பொலிசார் வரவழைக்கப்பட்ட வேண்டும். ஆகவே இந்த சம்பவத்தில் உயிர்நீத்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன் பொலிசார் அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை.என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/204017
  23. இலங்கை தமிழர்களுக்கு இனி விடிவுகாலம் பிறக்குமா? அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பகீர் | PTD தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வி
  24. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: வெளிநாட்டவர் தகுதி நீக்கம் - சமீபத்திய தகவல்கள் 9 மணி நேரங்களுக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில் இன்று (ஜன. 16) ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடர்ந்து, புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரர்களும் வந்துள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு: 15 காளைகளை அடக்கிய வீரருக்கு முதல் பரிசு - அவரது கோரிக்கை என்ன? அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளை குத்தி ஒருவர் உயிரிழப்பு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறி வரும் காளைகளை எதிர்கொள்ளும் வீரர்கள் ஏறு தழுவுதல் - ஜல்லிக்கட்டு இரண்டும் ஒன்றா? சங்க காலம் முதல் எவ்வாறு விளையாடப்படுகிறது? ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 5,786 காளைகளும், 1,698 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். ஆன்லைன் பதிவு சான்றிதழை காண்பிக்கும்போது டோக்கன் வழங்கப்படும் என்றும் அதே நேரத்தில் மருத்துவப் பரிசோதனை, எடை சரிபார்ப்பு உள்ளிட்டவற்றுக்குப் பிறகு மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு காளைகளும் களமிறக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை சுமார் 7 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். களத்தில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் மோதிரம், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளையும் அவர் வழங்குகிறார். இந்நிகழ்வின்போது, உதயநிதியின் மகன் இன்பநிதி உடனிருந்தார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து - 15 மாத போரை முடிவுக்குக் கொண்டு வருமா?16 ஜனவரி 2025 வெறும் 350 கிராம் தான்: தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த ஆண் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்16 ஜனவரி 2025 படக்குறிப்பு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைத்தபோது வெளிநாட்டை சேர்ந்தவர் தகுதிநீக்கம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்பதற்காக சென்னையில் வசித்து வரும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான் என்பவர் இன்று காலை அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக சென்றார். அவரது வயது மூப்பை காரணம் காட்டி, அவரை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு மாடுகளை அடக்குவதற்கு தகுதி நீக்கம் செய்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி மற்றும் மருத்துவக் குழுவினர் அறிவித்தனர். அவருக்கு வயது 54. இது வரை கான் உட்பட 13 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலை 10.00 மணி நிலவரப்படி, பரிசோதனைக்கு வந்த மொத்த காளைகள் - 201 பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிக்கப்பட்டவை - 200 பரிசோதனையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காளைகள் - 0 காங்கிரஸ் கட்சியின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கு சாட்சியாக இருந்த 24 அக்பர் சாலை தலைமையகம்15 ஜனவரி 2025 மகா கும்பமேளா: ஆயுதப் பயிற்சி, புனித சாம்பல்களுடன் வாழ்க்கை - நாகா துறவி ஆவதற்கான செயல்முறைகள்7 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கான் வயது மூப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். முதல் சுற்று முடிவு முதல் சுற்று முடிவில், களம் கண்ட காளைகள்: 110 பிடிபட்ட காளைகள்: 14 இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றவர்கள்: 4 சூர்யா (Y 3) - 3 காளைகள் தினேஷ் (Y 50) - 2 காளைகள் கண்ணன் (Y 24) - 2 காளைகள் கௌதம் (Y 28) - 2 காளைகள் குளித்த பிறகு பயன்படுத்தும் துண்டை வாரத்திற்கு எத்தனை முறை, எப்படி துவைக்க வேண்டும்?16 ஜனவரி 2025 லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ வேகமாகப் பரவியது எப்படி? எளிதாக விளக்கும் ஐந்து புகைப்படங்கள்15 ஜனவரி 2025 மூன்றாம் சுற்று முடிவின் நிலவரம் தகுதியான மாடுபிடி வீரர்கள்: 314 தகுதி நீக்கம்: 33 போலி டோக்கன்கள்: 13 வயது மூப்பு: 01 மொத்தம்: 347 போலி டோக்கன் பெற்ற 13 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்யப்படாமல் வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள், பரிசுகள் விவரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கும், பிடிபடாத சிறந்த காளைக்கும் கார்கள் பரிசாக வழங்கப்படுவதுடன் தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ, மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், சில்வர் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன. அலங்காநல்லூர் போட்டியை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, வாடிவாசல் அருகே நிரந்தரமாக பிரம்மாண்ட கேலரி அமைக்கப்பட்டு அவர்கள் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரே அறையில் ஒன்றாக தூங்க விரும்பாத மில்லினியல் தம்பதியர் - என்ன காரணம்?1 ஜனவரி 2025 புத்தாண்டு உறுதிமொழியை கடைபிடிப்பதில் பலரும் தோல்வியடைவது ஏன்?31 டிசம்பர் 2024 ஜல்லிக்கட்டு போட்டிக்காக 2,500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3vpr6pdr9qo
  25. மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி, இருவர் காயம் 16 JAN, 2025 | 01:11 PM மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் படுகாயமடைந்த இரு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சவேரியன் அருள் வயது-(61) மற்றும் செல்வக்குமார் யூட்வயது-(42) என தெரிய வந்துள்ளது. படுகாயம் அடைந்த ஆனொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். உயிரிழந்த இருவரும், காயமடைந்த ஆண் ஒருவரும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற இருந்த வழக்கு விசாரணைகளுக்காக வருகை தந்த போதே மோட்டார் சைக்கிளில் வந்தவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றதாக தெரிய வருகிறது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை படுகொலையை தொடர்ந்து நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் இவர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/203933

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.