Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் மிக நீண்ட கால மரண தண்டனைக் கைதியான தனது சகோதரனை விடுவிக்கப் போராடுவதில், 91 வயதான ஹிடெகோ ஹகமாடா தனது வாழ்நாளில் பாதி நாட்களைக் கழித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ஷைமா கலீல் பதவி, டோக்யோ செய்தியாளர், ஹமாமட்சுவில் இருந்து கடந்த 2024 செப்டம்பரில் இவாவோ ஹகமாடா குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், மரண தண்டனை விதிக்கப்பட்டு உலகின் மிக நீண்ட காலம் போராடிய ஒரு கைதியாக அவரால், அந்தத் தருணத்தில் மகிழ்ச்சிகொள்ள முடியவில்லை. "அவர் விடுவிக்கப்பட்டதாக நான் அவரிடம் சொன்னேன். அவர் அமைதியாக இருந்தார்" என்று அவரது 91 வயதான சகோதரி ஹிடெகோ ஹகமாடா, ஜப்பானின் ஹமாமட்சுவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தபோது பிபிசியிடம் தெரிவித்தார். "இவாவோ புரிந்து கொண்டாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை" என்றார் அவரது சகோதரி ஹிடெகோ ஹகமாடா. கடந்த 1968ஆம் ஆண்டில் நான்கு கொலைகளுக்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது முதல் ஹிடெகோ தனது சகோதரனின் மறு விசாரணைக்காகப் போராடி வந்தார். செப்டம்பர் 2024இல், தனது 88 வயதில், அவர் இறுதியாக விடுவிக்கப்பட்டார். இது ஜப்பானில் மிக நீண்ட காலம் நீடித்த சட்டப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஹகமாடாவின் வழக்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், இது ஜப்பானின் நீதி அமைப்பு முறையின் அடிப்படையில் இருக்கும் மிருகத்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஜப்பானில் மரண தண்டனை கைதிகளுக்கு அவர்களின் தண்டனை குறித்து சில மணிநேரங்களுக்கு முன்பே அறிவிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் இது தங்களின் கடைசி நாளாக அமையுமா என்பதை அறிய முடியாமல், கைதிகள் பல வருடங்களைக் கழிக்கின்றனர். 'அம்மா, நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்' - யுக்ரேனிய போர்க் கைதிகளை தொடர்ந்து கொல்லும் ரஷ்யா அம்பேத்கர் சர்ச்சையால் காங்கிரஸ் பலன் அடைந்ததா? ராகுலுக்கு சவாலாக பிரியங்கா மாறுவாரா? நியாண்டர்தால் மனிதர்களின் புத்தி கூர்மையை பசை வெளிப்படுத்தியது எப்படி? மனித உரிமை வல்லுநர்கள் இத்தகைய நடத்தை, கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது என்று நீண்டகாலமாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது கைதிகளிடம் தீவிர மனநோயை உருவாக்கும் ஆபத்தை அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர். தான் செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனைக்காக காத்திருந்து, தனிமைச் சிறையில் வாழ்நாளில் பாதிக்கு மேல் கழித்த ஹகமாடாவுக்கு இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 2014இல் மறு விசாரணை வழங்கப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதில் இருந்து, அவர் ஹிடெகோவின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். நாங்கள் வீட்டிற்குச் சென்றபோது, அவரையும் அவரது சகோதரியையும் கவனித்துக்கொள்ளும் ஒரு தன்னார்வக் குழுவுடன் அவர் வெளியில் சென்றிருந்தார். அவர் அந்நியர்களைக் கண்டால் பதற்றப்படுகிறார் எனவும் பல ஆண்டுகளாக அவர் 'தனது சொந்த உலகில்' இருக்கிறார் எனவும் ஹிடெகோ விளக்கினார். "இதிலிருந்து அவர் மீள முடியாமல்கூட போகலாம்," என்று ஹிடெகோ கூறுகிறார். "40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறிய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால் இப்படித்தான் நடக்கும். அவரை ஒரு விலங்கைப் போல் அவர்கள் வாழ வைத்தார்கள்" என்றும் ஹிடெகோ குறிப்பிட்டார். தென் கொரிய அதிபர் இல்லத்திற்குள் ஏணி மூலம் குதித்த அதிகாரிகள் - என்ன நடந்தது?3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் அந்தப்புர பெண்ணுக்காக நடந்த கொலையால் 'மகுடம் இழந்த மன்னர்' யார் தெரியுமா?3 மணி நேரங்களுக்கு முன்னர் மரண தண்டனையில் கழிந்த வாழ்க்கை படக்குறிப்பு, இவாவோ ஹகமாடா 2014இல் மறுவிசாரணை வழங்கப்பட்டது முதல் அவரது சகோதரி ஹிடெகோவுடன் வாழ்ந்து வருகிறார். முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை வீரரான இவாவோ ஹகமாடா ஜப்பானின் பாரம்பரிய சுவையூட்டியான மிசோ (ஜப்பானிய சோயாபீன் பேஸ்ட்) தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரது முதலாளி, முதலாளியின் மனைவி மற்றும் அவர்களின் இரண்டு இளம் குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நான்கு பேரும் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தனர். ஹகமாடா, அந்தக் குடும்பத்தைக் கொலை செய்ததாகவும், ஷிசுவோகாவில் உள்ள அவர்களது வீட்டை எரித்து 200,000 யென் (199 பவுண்டு; 556 டாலர்) பணத்தைத் திருடியதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டினர். கடந்த 1966இல், காவல்துறையினர் தனது சகோதரனை கைது செய்ய வந்த நாள் குறித்துக் கூறும்போது, "என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை," என்று ஹிடெகோ கூறுகிறார். அந்தக் குடும்பத்தின் வீடு மற்றும் அவர்களது இரண்டு மூத்த சகோதரிகளின் வீடுகளும் சோதிக்கப்பட்டன. பின்னர் ஹகமாடா கைது செய்யப்பட்டார். அவர் முதலில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார், ஆனால் பின்னர் அவர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வரை நீடித்த உடல்ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் விசாரணைகளைத் தொடர்ந்து, கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்ததாக விவரித்தார். கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கொலைகள் மற்றும் தீ வைத்த குற்றத்தில், ஹகமாடா தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட அறைக்கு மாற்றப்பட்டபோதுதான், ஹகமாடாவின் சகோதரியான ஹிடெகோ, ஹகமாடாவின் நடத்தையில் ஒரு மாற்றத்தைக் கவனித்தார். ஹிடெகாவுக்கு ஒரு சிறைச்சாலை சந்திப்பு குறிப்பாக நினைவில் நிற்கிறது. "அவர் என்னிடம் 'நேற்று ஒரு மரண தண்டனை இருந்தது - அது அடுத்த அறையில் உள்ள ஒருவருக்கு நிகழ்ந்தது' என்று கூறினார்" என ஹிடெகோ நினைவுகூர்கிறார். "அவர் என்னை கவனமாக இருக்கச் சொன்னார். அன்றிலிருந்து, அவர் மனதளவில் முற்றிலும் மாறி, மிகவும் அமைதியாகிவிட்டார்" என்றும் ஹிடெகோ குறிப்பிடுகிறார். அமெரிக்கா vs சீனா: பனாமா கால்வாயை கட்டுப்பாட்டில் எடுக்க விரும்பும் டிரம்ப் - என்ன காரணம்?24 டிசம்பர் 2024 பின்லேடனை கொன்ற அமெரிக்காவால் தாலிபன் தலைவர் முல்லா ஒமரை கடைசி வரை நெருங்க முடியாதது ஏன்?22 டிசம்பர் 2024 படக்குறிப்பு, கடந்த 1968ஆம் ஆண்டில் நான்கு கொலைகள் மற்றும் தீ வைத்தல் குற்றச்சாட்டில், மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு, இவாவோ ஹகமாடா (இடது) ஒரு தொழில்முறை குத்துச்சண்டை வீரராக இருந்தார் ஜப்பானின் மரண தண்டனைக் கைதிகள் வரிசையில், பாதிக்கப்பட்ட ஒரே நபர் ஹகமாடா மட்டும் அல்ல. அங்கு கைதிகள் ஒவ்வொரு நாள் காலையிலும் இது தங்கள் கடைசி நாளாக அமையுமா என்று தெரியாமலே கண் விழிக்கின்றனர். "காலை 08:00 முதல் 08:30 மணி வரை மிகவும் முக்கியமான நேரம். ஏனெனில் பொதுவாக கைதிகளுக்கு மரண தண்டனை அறிவிக்கப்படும் நேரம் அது," என்று 34 வருடங்கள் மரண தண்டனை சிறைவாசத்தை அனுபவித்த மெண்டா ஸாகே, தனது அனுபவத்தைப் பற்றி ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார். "அவர்கள் சிறையில் உள்ள உங்கள் அறைக்கு முன் வந்து நிற்கப் போகிறார்களா என்று உங்களுக்குத் தெரியாது. ஆகையால், நீங்கள் மிகவும் மோசமான பதற்றத்தை உணரத் தொடங்குவீர்கள். இந்த உணர்வு எவ்வளவு மோசமானது என்பதை வார்த்தைகளில் விவரிப்பது சாத்தியமற்றது" என்றும் மெண்டா ஸாகே தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டில் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட ஓர் அறிக்கையில், அதன் முதன்மை ஆசிரியர் ஜேம்ஸ் வெல்ஷ், மரண தண்டனை நிபந்தனைகள் குறித்து, "மரண தண்டனையின் தினசரி அச்சுறுத்தல் கொடூரமானது, மனிதாபிமானமற்றது, இழிவானது" என்று குறிப்பிட்டார். கைதிகள் "குறிப்பிடத்தக்க மனநலப் பிரச்னைகளை" சந்திக்க வாய்ப்பிருப்பதாக, அந்த அறிக்கை முடிவுகள் தெரிவித்தன. ஆண்டுகள் செல்லச் செல்ல தனது சொந்த சகோதரனின் மனநலம் மோசமடைந்ததை ஹிடெகோவால் பார்க்க முடிந்தது. "ஒருமுறை ஹகமாடா என்னிடம், 'நான் யார் தெரியுமா? என்று கேட்டார். நானோ, 'எனக்குத் தெரியும், நீங்கள்தான் இவாவோ ஹகமாடா என்றேன். அதற்கு அவர், 'இல்லை, நீங்கள் அது வேறொரு நபர்' என்று கூறிவிட்டுத் தனது அறைக்குத் திரும்பிவிட்டார்" என ஹிடெகோ தெரிவித்தார். ஹகமாடாவின் முதன்மை செய்தித் தொடர்பாளராகவும் வழக்கறிஞராகவும் ஹிடெகோ செயலாற்றினார். ஆனால் 2014ஆம் ஆண்டு வரை அவரது வழக்கில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. "ரூ.9 லட்சம் கொடுத்து மகனின் மரணத்தை நானே விலை கொடுத்து வாங்கிவிட்டேனே" - ஒரு பாகிஸ்தானிய தந்தையின் கண்ணீர்22 டிசம்பர் 2024 கனடாவில் ட்ரூடோ அரசு தப்புமா? இந்திய வம்சாவளி தலைவரின் கட்சி ஆதரவு வாபஸ்22 டிசம்பர் 2024 படக்குறிப்பு, 'தனது சகோதரனை' பாதுகாக்க வேண்டிய அவசியத்தை 91 வயதான ஹிடெகோ, எப்போதும் உணர்ந்து இருந்ததாகக் கூறுகிறார். ஹகமாடாவுக்கு எதிராக இருந்த முக்கியமான ஆதாரங்களில் ஒன்று அவரது பணியிடத்தில் உள்ள மிசோ தொட்டியில் சிவப்பு நிறக் கறை படிந்த ஆடைகள். இந்தக் கொலைகள் நடந்து ஓராண்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவை மீட்கப்பட்டன. அவை ஹகமாடாவுக்கு சொந்தமானவை என்று வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக ஹகமாடாவின் வழக்கறிஞர் குழு ஆடைகளில் இருந்து மீட்கப்பட்ட மரபணுக் கூறுகள் அவரது ஆடையுடன் பொருந்தவில்லை என்று வாதிட்டது. மேலும் அவருக்கு எதிராக அந்த ஆதாரங்கள் வேண்டுமென்றே புனையப்பட்டவை என அவர்கள் குற்றம் சாட்டினர். கடந்த 2014ஆம் ஆண்டில், அவரைச் சிறையில் இருந்து விடுவிக்கவும், மறுவிசாரணை வழங்கவும் நீதிபதியைச் சம்மதிக்க வைத்தனர். நீண்டகால நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக ஹகமாடா வழக்கின் மறுவிசாரணை, கடந்த அக்டோபர் மாதம்தான் தொடங்கியது. இறுதியில் விசாரணை நடந்தபோது, ஹிடெகோ நீதிமன்றத்தில் ஆஜராகி, தனது சகோதரனின் உயிருக்காக மன்றாடினார். ஹகமாடாவின் வயது மற்றும் ஆடைகளில் இருந்த கறையின் நிலை ஆகியவை வழக்கின் தீர்ப்பில் முக்கியப் பங்கு வகித்தன. ஆடைகள் மீட்கப்பட்டபோது கறைகள் சிவப்பு நிறமாக இருந்ததாக ஹகமாடாவுக்கு எதிரான வழக்கறிஞர் தரப்பு கூறியது. ஆனால் நீண்ட நேரம் மிசோவில் மூழ்கி இருந்தால் ரத்தம் கருப்பு நிறத்திற்கு மாறியிருக்கும், சிவப்பு நிறத்திலேயே இருக்காது என்று ஹகமாடா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். தலைமை நீதிபதி கோஷி குனியை நம்ப வைக்க இந்த வாதம் போதுமானதாக இருந்தது. "விசாரணை அதிகாரிகள் ஆடையில் ரத்தக் கறைகளைச் சேர்த்து, சம்பவம் நடந்த பிறகு அவற்றை மிசோ தொட்டியில் மறைத்துவிட்டதாக" நீதிபதி அறிவித்தார். மேலும் நீதிபதி கோஷி குனி, விசாரணைப் பதிவு உள்பட பிற ஆதாரங்கள் புனையப்பட்டதைக் கண்டறிந்து, ஹகமாடா குற்றமற்றவர் என்று அறிவித்தார். இதைக் கேட்டதும் ஹிடெகோ முதலில் அழுதுவிட்டார். "பிரதிவாதி குற்றவாளி இல்லை என்று நீதிபதி கூறியபோது, நான் மகிழ்ச்சியடைந்தேன்; கண்ணீர் சிந்தினேன்," என்று ஹிடெகோ கூறுகிறார். "நான் அழக்கூடியவள் இல்லை. ஆனால் அன்று சுமார் ஒரு மணிநேரம் இடைவிடாமல் அழுதேன்" என்றும் ஹிடெகோ தெரிவித்தார். 'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி19 டிசம்பர் 2024 சிரியா: செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 'எலும்புக்கூடு போல் தோற்றமளித்த' மர்ம கைதி19 டிசம்பர் 2024 பிணைக் கைதிக்கான நீதி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷிஸுவோகா காவல்துறையின் தலைவரான தகாயோஷி சுடா, ஹகமாடா மற்றும் அவரது சகோதரி ஹிடெகோ முன்பாகத் தலை வணங்கி மன்னிப்பு கோரினார். ஹகமாடாவுக்கு எதிரான ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டவை என்ற நீதிமன்றத்தின் முடிவு, கவலைக்குரிய கேள்விகளை எழுப்புகிறது. ஜப்பானில் 99% தண்டனை விகிதம் உள்ளது. அதோடு "பிணைக் கைதிகளுக்கான நீதி" என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பு உள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜப்பான் இயக்குநர் கனே டோய் கூறும்போது, "இந்த அமைப்பு கைது செய்யப்பட்ட நபர்களின் சில அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதப்படுவதற்கான உரிமை, விரைவான மற்றும் நியாயமான ஜாமீன் விசாரணைக்கான உரிமை, விசாரணைகளின் போது சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான உரிமை ஆகியவற்றையும் இந்த அமைப்பு பறிக்கிறது" என்று தெரிவிக்கிறார். "இந்தத் தவறான நடைமுறைகள், அவர்களுடைய வாழ்க்கை மற்றும் குடும்பங்கள் பிளவுபடுவதற்கும், தவறான தீர்ப்புகளை வழங்கவும் காரணமாக இருந்துள்ளது" என்று 2023இல் கானே டோய் குறிப்பிட்டார். மனோவாவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியரான டேவிட் டி ஜான்சன், கடந்த 30 ஆண்டுகளாக ஹகமாடாவின் வழக்கைப் பின்பற்றி வருகிறார். மேலும் ஜப்பானில் குற்றவியல் நீதியை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறார். இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டதற்கு, "முக்கியமான ஆதாரங்கள் சுமார் 2010ஆம் ஆண்டு வரை பிரதிவாதி தரப்புக்கு வெளிப்படுத்தப்படவில்லை என்பது ஒரு முக்கியக் காரணம்" என்று பேராசிரியர் டேவிட் கூறினார். இந்தத் தவறான நடைமுறை "மிகவும் மோசமானது, மன்னிக்க முடியாதது" என்று மிஸ்டர் ஜான்சன் பிபிசியிடம் கூறினார். "நீதிபதிகள் வழக்கைத் தொடர்ந்து தள்ளி வைத்தனர். ஏனெனில் அவர்கள் விசாரணை கோரிக்கைகளுக்கு மீண்டும் பதிலளிக்கும்போது வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அதைச் செய்ய சட்டம் அவர்களை அனுமதிக்கிறது" என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹிடெகோ தனது சகோதரரின் மறு விசாரணைக்காக பல ஆண்டுகளாக பிரசாரம் செய்தார் அவரது சகோதரர் அளித்த கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் வற்புறுத்தல் ஆகியவை அநீதியின் மையமாக இருப்பதாக ஹிடெகோ கூறுகிறார். ஆனால் தவறான குற்றச்சாட்டுகள் ஒருவரின் தவறால் மட்டுமே ஏற்படுவதில்லை. மாறாக, காவல்துறையில் இருந்து வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் வரை அனைத்து மட்டங்களிலும் உள்ள ஒன்றிணைந்த தோல்விகளால் அவை ஏற்படுவதாக ஜான்சன் குற்றம் சாட்டுகிறார். "நீதிபதிகளே இறுதியில் தீர்ப்பு சொல்லும் உரிமையுடையவர்கள்," என்று அவர் மேலும் கூறினார். "ஒரு தவறான தண்டனை வழங்கப்படும்போது, அது இறுதியில் அவர்களின் அறிவிப்பால்தான் ஏற்படுகிறது. தவறான தீர்ப்புகளை உருவாக்குவது மற்றும் அவற்றைப் பாதுகாப்பது போன்ற நீதிபதியின் பொறுப்புகள், பெரும்பாலான நேரங்களில் புறக்கணிக்கப்படுகின்றன மற்றும் கவனிக்கப்படுவதில்லை" என்றும் ஜான்சன் தெரிவித்தார். அந்தப் பின்னணியில், ஹகமாடாவின் விடுதலை ஒரு முக்கியத் திருப்பமாக இருந்தது. இது நீண்டகாலம் கழித்துக் கிடைத்துள்ள நீதியின் அரிதான தருணம். ஹகமாடா குற்றமற்றவர் என்று அறிவித்த பிறகு, அவரது மறுவிசாரணைக்கு தலைமை தாங்கிய நீதிபதி, நீதியை அடைவதற்கு இவ்வளவு காலம் ஆனதற்காக ஹிடெகோவிடம் மன்னிப்பு கேட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஷிஸுவோகா காவல்துறையின் தலைவரான தகாயோஷி சுடா, அவரது வீட்டிற்குச் சென்று ஹகமாடா மற்றும் அவரது சகோதரி ஹிடெகோவின் முன்பாகத் தலை வணங்கினார். "கடந்த 58 ஆண்டுகளாக நாங்கள் விவரிக்க முடியாத கவலையையும் சுமையையும் உங்களுக்கு ஏற்படுத்தினோம். நாங்கள் உண்மையிலேயே வருந்துகிறோம்," என்று சுடா கூறி அதற்கு வருத்தம் தெரிவித்தார். காவல்துறை உயரதிகாரிக்கு ஹிடெகோ எதிர்பாராத பதில் அளித்தார். "நடந்தது அனைத்தும் எங்கள் விதி என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் இப்போது எதைப் பற்றியும் புகார் செய்ய மாட்டோம்" ," என்று ஹிடெகோ தெரிவித்தார். குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?22 டிசம்பர் 2024 100 வயதை கடந்தவர்கள் இத்தனை லட்சம் பேர் இருப்பார்களா? உடல்நல ரகசியம் என்ன?22 டிசம்பர் 2024 இளஞ்சிவப்பு நிறக் கதவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு அரை நூற்றாண்டுக்குப் பிறகு, செப்டம்பர் 26இல் ஜப்பானிய நீதிமன்றம் சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டதாகத் தீர்ப்பளித்தது ஏறக்குறைய 60 ஆண்டுக்கால கவலை மற்றும் மனவேதனைக்குப் பிறகு, சிறிது வெளிச்சத்தை அனுமதிக்க வேண்டுமென்ற ஹிடெகோ, தனது வீட்டை ஒளிமிக்கதாக மாற்றியுள்ளார். அறைகள் பிரகாசமாகவும் அழகாகவும் இருக்கின்றன. அவற்றில் குடும்ப நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஹிடேகோ மற்றும் இவாவோவின் படங்கள் நிறைந்துள்ளன. கறுப்பு-வெள்ளை குடும்பப் புகைப்படங்கள் மூலம், குழந்தையாக இருந்த தனது "அழகான" சிறிய சகோதரனின் நினைவுகளைப் பகிர்ந்து சிரிக்கிறார் ஹிடெகோ. ஆறு சகோதரர்களிலேயே இளையவரான அவர், எப்போதும் ஹிடெகோவின் பக்கத்தில் நிற்பது போலத் தெரிகிறது. "நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எப்போதும் ஒன்றாகவே இருந்தோம். எனது தம்பியைக் கவனிக்க வேண்டும் என்பதைத்தான் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுதான் இப்போதும் தொடர்கிறது," என்று ஹிடெகோ விளக்கினார். ஹகமாடாவின் தங்கள் அறைக்குள் நுழைந்து, அவர்களின் பூனையை அறிமுகப்படுத்துகிறார். அது அவர் வழக்கமாக அமரும் நாற்காலியில் உட்கார்ந்திருந்தது. பின்னர் ஹகமாடா ஓர் இளம் தொழில்முறை குத்துச்சண்டை வீரராக இருந்தபோது எடுத்த படங்களைச் சுட்டிக்காட்டுகிறார். "அவர் ஒரு சாம்பியனாக விரும்பினார். அந்த நேரத்தில்தான் அச்சம்பவம் நடந்தது" என்றும் ஹிடெகோ கூறுகிறார். 88 வயதான ஹகமாடா, செப்டம்பர் 2024இல் விடுவிக்கப்பட்டார். மாணவர்களுக்கு 'கணித' பயம் வருவது ஏன்? கற்றல் குறைபாட்டின் அறிகுறியா?22 டிசம்பர் 2024 கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 88 வயதான ஹகமாடா, செப்டம்பர் 2024இல் விடுவிக்கப்பட்டார் ஹகமாடா 2014இல் விடுதலையான பிறகு, அவர்களது வீடு முடிந்தவரை பிரகாசமாக இருக்க வேண்டும் என்று ஹிடெகோ விரும்பியதாகக் கூறினார். அதனால் அந்த வீட்டின் முன்கதவுக்கு இளஞ்சிவப்பு வண்ணம் பூசினார். "அவர் ஒரு பிரகாசமான அறையில் இருந்தால், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தால், அவர் இயல்பாகவே குணமடைவார் என்று நான் நம்பினேன்" என்று ஹிடெகோ குறிப்பிடுகிறார். ஹிடெகோவின் வீட்டிற்குச் செல்லும்போது ஒருவர் கவனிக்கும் முதல் விஷயம், நம்பிக்கை மற்றும் நெகிழ்ச்சியின் அடையாளமாக உள்ள பிரகாசமான இந்த இளஞ்சிவப்பு நிறக் கதவு. இந்த மாற்றங்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஹகமாடா பல மணிநேரம் முன்னும் பின்னுமாக நடந்து செல்கிறார். மூன்று ஒற்றை டாடாமி பாய்களின் அளவுள்ள சிறையில் பல ஆண்டுகளாகச் செய்ததைப் போலவே தற்போதும் செய்கிறார். ஆனால் நீதி தவறாமல் கிடைத்திருந்தால் அவர்களது வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைப் பற்றி ஹிடெகோ யோசிக்க மறுக்கிறார். தனது சகோதரனின் துன்பத்திற்கு யாரைக் குறை கூறுகிறார் என்று கேட்டதற்கு, "யாரும் இல்லை" என்று ஹிடெகோ பதில் கூறினார். "நடந்ததைப் பற்றி புகார் செய்வதால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை" என்றும் ஹிடெகோ தெரிவித்தார். இப்போது ஹிடெகோவின் முன்னுரிமை அவருடைய சகோதரரை வசதியாக வைத்திருப்பதுதான். ஹிடெகோ அவருக்கு முகச்சவரம் செய்து, ஹகமாடாவின் தலையில் மசாஜ் செய்கிறார். தினமும் காலையில் அவருக்கு காலை உணவாக ஆப்பிள் மற்றும் ஆப்ரிகாட் பழங்களை அளிக்கிறார். தனது 91 ஆண்டுகளின் பெரும்பகுதியைத் தனது சகோதரரின் விடுதலைக்கான போராட்டத்தில் கழித்த ஹிடெகோ, இது அவர்களின் தலைவிதி என்று கூறுகிறார். மேலும் ஹிடெகோ பேசியபோது, "நான் எவ்வளவு காலம் வாழப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆகையால் கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திக்க விரும்பவில்லை," என்று கூறினார். "ஐவாவோ அமைதியான மற்றும் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றும் ஹிடெகோ தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvg7rj3yl0yo
  2. கிளிநொச்சியின் மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் இரணைமடு குளத்துக்கு வந்து கொண்டிருக்கிறமையால் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலதிக நீர் வெளியிடப்படுகின்றமையால் குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=198798
  3. தமிழ் கைதிகளை விடுவியுங்கள்! 'சிறையில் அரசியல் கைதிகள் இல்லை' என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் தம்பி மகன். இன்றைய ஜேவிபி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். அன்று அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி போராடிய தமது கட்சி அங்கத்தவர்களை 'அரசியல் போராளிகள்' என்று கூறிய ஜேவிபி, இன்று தமிழ் அரசியல் போராளி கைதிகளை 'அரசியல் கைதிகள்' என அங்கீகரிக்க மறுக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கருத்து தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில், இது எங்களுக்கு பழகி போன ஒரு பழைய பல்லவி. இன்று புது புரட்சி மாற்றம் செய்ய போகிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த புரட்சி அரசாங்கமும் அதே அரைத்த மாவையே அரைக்கிறது. இப்படியான பல பல்லவிகளை கேட்டு, முரண்பட்டு, ஜனநாயக ரீதியாக போராடிய வரலாற்றை கொண்ட எமக்கு, இது பழகி போன ஒரு மேலாதிக்க அரசியல் கருத்து. 'அரசியல் கைதிகள் இல்லை' என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள். 'சிறையில் அரசியல் கைதிகள் இல்லை' என்ற கருத்தைத்தான் எப்போதும் எல்லா சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களிலும், எல்லா அமைச்சர்களும் சொன்னார்கள். அரசாங்க தரப்பு அப்படிதான் சொல்வார்கள். அவர்களுக்கு 'பயங்கரவாதி'. மக்களுக்கு 'போராளி'. பாலஸ்தீனம் முதல் இலங்கை வரை, உலகம் முழுக்க போராட்டங்கள் நிகழ்ந்த நாடுகளில் இப்படி தான். இந்நாட்டில், 1971 இல் தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே ஆயுதம் தூக்கி பின்னர், 1989 களிலும் ஆயுதம் தூக்கி ஜேவிபி போராட்டம் செய்த போது, கைதாகி சிறையில் இருந்த ஜேவிபி போராளிகளை, அன்றைய அரசாங்கம், 'பயங்கரவாதிகள்' என்றது. ஆனால் ஜேவிபியினர், 'இல்லை, அவர்கள் அரசியல் போராளிகள்' என்றார்கள். 2015-2019 கால நமது நல்லாட்சியிலும் இடைக்கிடை ஓரிரு அமைச்சர்கள் இப்படி சொன்னார்கள். ஆனால் அன்றைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்து, அவர்களை கண்டித்து, அமைச்சரவைக்குள் அவர்களை புறந்தள்ளி, ஏனைய முற்போக்கு அமைச்சர்களுடனும், வெளியே தமிழ் தேசிய கட்சிகளுடனும் இணைந்து, கணிசமான தமிழ் அரசியல் கைதிகளை நாம் சத்தமில்லாமல் விடுவித்தோம். தமிழ் அரசியல் கைதிகளை அதிகமாக விடுவித்தது எமது நல்லாட்சி அரசாங்கம் தான். இதில் மாற்று பேச்சுக்கு இடமில்லை. இதனால்தான் இன்று வரை இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. ஆனால், அன்று ஆயுத போராட்டம் செய்த ஜேவிபியே, இன்று இப்படி கூறுகிறது. 'அரசியல் கைதிகள் இல்லை' என்று கூறி, அவர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்ட முனைகிறது. 1971 இல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே, ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியல் போராளிகளாக அடையாளம் காணும் ஜேவிபி, கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகிறது. இந்த இரட்டை வேடம், இவர்களுக்கு இன்று வாக்களித்த செந்தமிழர்களுக்கு தான் வெளிச்சம் என தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=198804
  4. மாணவி கடத்தல் - வௌியான புதிய தகவல் தவுலகலவில் 5 மில்லியன் ரூபா கப்பம் கோரி பாடசாலை மாணவி ஒருவரை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது வேனின் சாரதியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி காஞ்சனா கொடிதுவக்கு உத்தரவிட்டார். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் இன்று காலை கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபரையும் நாளை (15) வரை தடுப்புகாவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், மாணவியை அவரது தந்தையிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபர் இன்று அதிகாலை கம்பளை, ஜயமாலபுர பகுதியில் வைத்து தவுலகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான மொஹமட் நசீர் என்பவர், அம்பாறை பகுதியில் கைது செய்யப்பட்டதுடன், அதே நேரத்தில் வேனின் சாரதியான மொஹமட் அன்வர் சதாம் என்பவர் கம்பளை கஹடபிட்டிய பகுதியில் வைத்து தவுலகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கடத்தப்பட்ட 18 வயதான மாணவி, பிரதான சந்தேகநபரின் தாயின் சகோதரனின் மகள் ஆவார். மாணவியை கடத்தப் பயன்படுத்தப்பட்ட வேன் கம்பளை, கஹடபிட்டிய பகுதியில் உள்ள வாடகை வாகன இடத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கடத்தல் சம்பவம் தொடர்பாக தவுலகல பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தவுடன், அதன் பதில் பொறுப்பதிகாரியாக சேவையாற்றும் பொலிஸ் பரிசோதகர் சம்பத் ரணசிங்க உள்ளிட்ட குழுவினர், மோட்டார் வாகனத் திணைக்களத்தின் மூலம் வேனின் உரிமையாளரை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த வேனில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம், வேன் பொலன்னறுவை பகுதியில் இருப்பது அடையாளம் காணப்பட்டதுடன், பொலன்னறுவை பொலிஸாருக்கு தகவல் அளித்த பின்னர், வாகனம் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டது. அதற்குள், இந்த வேனில் சென்ற பிரதான சந்தேகநபரும் மாணவியும் பேருந்தில் ஏறி மட்டக்களப்பு பகுதிக்குச் சென்றுள்ளதுடன், அதே நேரத்தில் அவர்களுக்கு உதவிய இரண்டு உதவியாளர்களும் கம்பளை பகுதிக்குத் திரும்பிவிட்டனர். பிரதான சந்தேகநபர், மாணவியின் தந்தையிடமிருந்து ஐந்து மில்லியன் ரூபா கப்பம் மற்றும் ஒரு வேனை கோரும் ஒலிப்பதிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானில் வேலை செய்து நாடு திரும்பியுள்ள பிரதான சந்தேகநபர், அந்த இளம் பெண்ணுக்காக பணம் செலவழித்து, வீட்டைக் கட்டியுள்ளதுடன், அவரது தந்தைக்கு வேன் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ள தகவல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த தகவல் உண்மையா? என்பது குறித்தும் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பொலன்னறுவை பொலிஸாரின் பொறுப்பிலிருந்த வேனும் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரதான சந்தேகநபருடன் குறித்த மாணவி, அம்பாறை மற்றும் கல்குடா பகுதிகளில் உள்ள விடுதிகளில் இரண்டு இரவுகள் தங்கியிருந்த போதிலும், தான் எந்தவொரு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை என்று மாணவி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும், இன்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. https://tamil.adaderana.lk/news.php?nid=198776
  5. சர்வதேச பட்டத் திருவிழா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வினோத விசித்திர சர்வதேச பட்டத் திருவிழா நேற்று (14) மிகச் சிறப்பான விழாவாக இடம்பெற்றது. கொட்டும் மழைக்கும் மத்தியிலும் பட்டத் திருவிழா இடம்பெற்றது. இதனைக் கண்டுகழிக்க பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக வெளிநாட்டவர்களும் பட்டத் திருவிழாவை பார்வையிட வந்திருந்தனர். இதன் போது இலங்கை அரசின் Clean Srilanka என்ற பெயரைப் பொறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் இளைய தளபதி விஜய் அவர்களது உருவப் படம் பொறித்த ஒரு நூலில் இரட்டைப் பட்டங்கள் மூன்றாமிடத்தைப் பிடித்துக் கொண்டது. வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்டத்திருவிழாவில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=198790
  6. Published By: DIGITAL DESK 3 15 JAN, 2025 | 10:39 AM தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, "வல்வை பட்டத் திருவிழா - 2025" வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது. வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமாரும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த பட்ட போட்டியில் சுமார் 130 பட்டங்களை அதனை வடிவமைத்தவர்கள் விண்ணில் பறக்க விட்டிருந்தனர். அவற்றில் "உயிர்த்தெழும் ராகன்" பட்டம் முதலாமிடத்தையும், "மின் பிறப்பாக்கி பட்டம்" இரண்டாம் இடத்தினையும் , "ஹெலிகாப்டர் மூலம் தூக்கி செல்லும் திரையரங்கு" பட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. அத்துடன் இந்த நிகழ்வில் கல்விச் சாதனையாளர்களையும் ஆளுநர் கௌரவித்தார். இங்கு பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர், யாழ். மாவட்டச் செயலராக 2018ஆம் ஆண்டு இருந்தபோது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதை நினைவுகூர்ந்ததுடன் இந்த நிகழ்வு தொடர்ச்சியாக சிறப்பாக இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார். எமது மண்ணின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் இந்தப் போட்டிகள் அமைந்துள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், இது பாராட்டப்படவேண்டிய விடயம் எனவும் குறிப்பிட்டார். ஒவ்வொருவரதும் தனித்துவமான திறமைகளை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பமாக இந்தப் பட்டப்போட்டி அமைந்துள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக சிந்தித்து பட்டங்களை உருவாக்குவது சிறப்பானது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/203835
  7. Published By: DIGITAL DESK 2 14 JAN, 2025 | 07:39 PM (நமது நிருபர்) இழுவைமடிப்படகு , சுருக்குவலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக அரசாங்கமும் தடைசெய்வதற்கு உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அயகத்தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதல்வர், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் மூலம் தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையால் கைது செய்யப்படுகின்றார்கள் என்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ஆனால் அவர்கள் ஏன் கைது செய்யப்படுகின்றார்கள் என்பதை கூறுவதற்கு அவர் மறுதலித்துவிட்டார். எந்தவொரு பிரஜையும் வெளிநாட்டுக்குச் செல்கின்றபோது காரணம் இல்லாது கைது செய்யப்படுவதில்லை. உண்மையில் இந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதாலும், சுருக்குவலை, இழுவைமடிப்படகு ஆகிய சட்டவிரோத முறைமைகளை பின்பற்றுவதாலும் தான் கைது செய்யப்படுகின்றார்கள். இவ்வாறு அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி முறைமைகள் மூலமாக நாளைய தலைமுறைக்குச் சொந்தமான வளங்கள் நிறைந்த கடற்பரப்பினையே நாசமாக்கிக் கொண்டுவருகின்றார்கள். இந்தச் செயற்பாட்டுக்கு பெருமளவான தமிழக மீனவர்களே எதிர்ப்பு வெளியிடுகின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட சிலர் தான் அவ்விதமாகச் செயற்படுகின்றார்கள். அவ்வாறு குறிப்பிட்ட சிலர் வளங்கள் நிறைந்த கடற்பரப்பினை நாசமாக்குவதால் பாதிக்கப்படுவது யாரென்று பார்த்தீர்கள் என்றால் வடக்கில் உள்ள தமிழர்கள் தான். அவர்கள் மூன்று தசாப்தமாக போருக்கு முகங்கொடுத்து உயிர்கள், உடைமைகள் என்று அனைத்தையும் இழந்து நின்றவர்கள் தற்போது தான் தங்களுடைய வாழ்க்கையை பொருளாதார ரீதியாக மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். வடக்கு தமிழ் மீனவர்கள் என்னிடத்தில் நேரடியாகவே பல சந்தர்ப்பங்களில், இழுவை மடிப்படகுகள் உட்பட சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்களை தடுத்து நிறுத்துங்கள் இல்லையென்றால் நாங்கள் கடலில் வீழ்ந்து தான் மரணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். ஆகவே இந்தவிடயம் சம்பந்தமாக நாம் இந்திய உயர்ஸ்தானிகரிடத்தில் எடுத்துரைத்துள்ளோம். தமிழக முதல்வரிடத்திலும் ஒருவிடயத்தினை நாம் கோரிக்கையாக முன்வைக்கின்றோம். அதாவது சட்டவிரேதமான மீன்பிடி முறைமைகளை தடைசெய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மேலும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபவர்கள் தான் கைது செய்யப்படுகின்றாhகள் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். தமிழக மீனவர்கள் இந்தியாவின் ஏனைய மாநிலங்களான ஆந்திராவுக்குள்ளோ, குஜராத்துக்குள்ளோ, கேரளாவுக்குள்ளோ செல்லமுடியுமா? இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்பரப்பிற்குள்ளோ, சீனக் கடற்பரப்பிற்குள்ளோ செல்ல முடியுமா? இல்லை. ஆனால் இலங்கைக் கடற்பரப்பினையே தான்தோன்றித்தனமாக பயன்படுத்தும் செயற்பாடு எதேச்சதிகாரமாக முன்னெடுக்கப்படுகின்றது. அந்தச் செயற்பாட்டையே நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். சட்டவிரோத மீன்பிடி முறைமைகளான சுருக்குவலை மற்றும் இழுவைமடிப்படகு ஆகியவற்றை தடைசெய்யும் தீர்மானத்தினை இந்திய மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நிலையில் தமிழக அரசாங்கமும் அத்தீர்மானத்தினை எடுப்பதோடு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அதில் காணப்படுகின்ற தாமதங்களால் தான் கைதுகள் தொடருகின்றன என்றார். https://www.virakesari.lk/article/203812
  8. பட மூலாதாரம்,REUTERS 15 ஜனவரி 2025, 02:22 GMT தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரான யூன் சுக் யோல் சற்று முன் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தென் கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரை கைது செய்ய இரண்டாவது முறையாக அதிகாரிகள் இன்று முயற்சி செய்தனர். முதல் முறையைப் போலவே, இம்முறையும் அவரது பாதுகாப்புப் பிரிவினர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். வீட்டை சுற்றிலும் யூன் சுக் யோலின் பாதுகாப்பு சேவையால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் வேறு வழியின்றி, சில அதிகாரிகள் ஏணிகளைப் பயன்படுத்தி அவரது வீட்டுக்குள் நுழைந்ததாக யோன்ஹாப் என்ற தென் கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது. யூன் சுக் யோலை கைது செய்து அவரது இல்லத்தில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் அழைத்து சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "புலனாய்வு அதிகாரிகள் யூனை கைது செய்ய வழங்கப்பட்டிருந்த உத்தரவை நிறைவேற்றிவிட்டதாக", தென் கொரியாவின் ஊழல் புலனாய்வு அலுவலகம் (CIO) தெரிவித்துள்ளது பட மூலாதாரம்,GETTY IMAGES இம்மாத தொடக்கத்தில் யூனை கைது செய்வதற்கான முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், அவரை கைது செய்ய நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் வழங்கியது. கடந்த டிசம்பர் மாதத்தில் தென் கொரியாவில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற யூனின் குறுகிய கால முயற்சிக்குப் பிறகு, பல வாரங்களாக யூனிடம் விசாரணை நடந்து வந்தது. யூனின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆகியோர் திரளாக கூடியுள்ளனர். மேலும் இவர்களை கட்டுப்படுத்த 1000 பேர் கொண்ட காவல்படை அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக சோலில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் நுழைந்ததை அடுத்து, யூனின் ஆதரவாளர்கள் மிகவும் கோபமாகவும் வருதத்துடனும் இருக்கின்றனர். யூனின் வீட்டிற்குள் நுழைவது சட்டவிரோதமானது என்று அவரது ஆதரவாளர்கள் கோஷமிடுகின்றனர். பட மூலாதாரம்,BBC / LEEHYUN CHOI படக்குறிப்பு, யூனின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆகியோர் திரளாக கூடியுள்ளனர். யூனின் ராணுவச் ஆட்சி அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு பிறகு ஏற்பட்டிருக்கும் விளைவுகள் அவரை விசாரிக்கும் ஊழல் புலனாய்வு அலுவலகத்திற்கு (CIO) சவாலாக உள்ளது. இந்த அமைப்பு தொடங்கி நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆகின்றது. இது முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹே மீதான பொதுமக்களின் கோபத்திற்கு பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, ஊழல் மோசடிக்காக சிறையில் அடைக்கப்பட்டார். தென் கொரிய அதிபர்கள் இதற்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், பதவி விலகுவதற்கு முன்பு கைது நடவடிக்கையை எதிர்கொண்ட முதல் நபர் யூன் ஆவார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யூன் சுக் யோல் ஊழல் புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராக ஒப்புக்கொண்டுள்ளதாக வீடியோ பதிவு ஒன்றின் மூலம் யூன் சுக் யோல் தெரிவித்துள்ளார். "இந்த விசாரணை சட்டவிரோதமாக இருந்தாலும், எந்தவொரு விரும்பத்தகாத வன்முறையும் நடக்காமல் தடுப்பதற்காக ஊழல் புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராக முடிவு செய்தேன். ஆனால் இதன் மூலம் நான் அவர்களின் இந்த விசாரணையை ஏற்றுக்கொள்கிறேன் என்று பொருளல்ல", என்று அவர் கூறியுள்ளார். தென் கொரியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்றும், தன்னை விசாரணை செய்யும் அமைப்புகளுக்கோ அல்லது தன்னை கைது செய்ய உத்தரவு பிரப்பிக்கும் நீதிமன்றங்களுக்கோ, அவ்வாறு செய்ய அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். "இவை இருண்ட நாட்கள் என்றாலும், இந்த நாட்டின் எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாகவே இருக்கின்றது", என்று அவர் குறிப்பிட்டார். இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5yv4342r95o
  9. Avaniyapuram Jallikattu: பலியான உயிர்; வாடிவாசல் பகுதிக்கு மீண்டும் திரும்பிய மாடுகள்; என்ன நடந்தது? பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு jஜனவரி 14ஆம் தேதி நடைபெற்றது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபுஅலூஃப் பதவி, பிபிசி செய்திகள் 14 ஜனவரி 2025 காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய மத்தியஸ்தம் செய்பவர்கள் கத்தாரில் மீண்டும் கூடியுள்ளனர். இஸ்ரேலும் ஹமாஸும் இது குறித்த ஒரு ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளைப் பற்றி நன்கு அறிந்த பாலத்தீன அதிகாரி ஒருவர், இஸ்ரேல் – பாலத்தீன போரில் முதல் முறையாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் பிரதிநிதிகள் ஒரே கட்டடத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக பிபிசியிடம் கூறினார். இஸ்ரேல் படைகள் அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையை ஹமாஸ் கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. தோஹாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, பேச்சுவார்த்தைகள் "இறுதி கட்டத்தில்" இருக்கிறது என்றும், ஒப்பந்தம் ஏற்படுவதைத் தடுத்த முக்கிய பிரச்சினைகள் "தீர்க்கப்பட்டுள்ளன" என்றும் கூறினார். லெபனான் வாக்கி டாக்கி வெடிப்பில் 20 பேர் பலி, 450 பேர் காயம் - ஹெஸ்பொலா, இஸ்ரேல் கூறுவது என்ன? ஹெஸ்பொலா ஆர்டர் செய்த 5,000 பேஜர்களில் மொசாட் ரகசியமாக வெடிமருந்து வைத்ததா? புதிய தகவல்கள் 'இஸ்ரேல் அமெரிக்காவை கடவுள் பழிவாங்கட்டும்' - காஸாவில் கதறும் பெண் இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் "விளிம்பில்" இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். "சில மணிநேரத்திலோ, நாட்களிலோ அல்லது அதற்கும் மேற்பட்ட காலத்திலோ" ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக சாத்தியம் இருக்கிறது என்று இஸ்ரேல் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார். ஜனவரி 20-ஆம் தேதி தான் பதவியேற்பதற்குள் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால் "மோசமான சூழ்நிலை ஏற்படும்" என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து இந்த புதிய முயற்சி நடைபெற்றுள்ளது. பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்யும் கத்தார் ஆட்சியாளர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியுடன் திங்கட்கிழமையன்றும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் ஞாயிற்றுக்கிழமையன்றும் பைடன் பேசினார். திங்கள்கிழமை அன்று, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் ஒரே கட்டடத்தில் ஆறு மணி நேரமாக மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பாலத்தீன அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். "இந்த ஒப்பந்தம் பற்றி விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் இவ்வளவு நேரம் எடுத்தது", என்று ஒப்பந்தத்தின் சில சாத்தியமான விவரங்களை பற்றி அந்த அதிகாரி கூறினார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் முரண்டு பிடித்த 'ஹிட்லர்' - என்ன நடந்தது?14 ஜனவரி 2025 1,60,000 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றிய அரிய வால் நட்சத்திரம் - வெறுங்கண்களால் எங்கே, எப்படி பார்ப்பது?14 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES நிபந்தனைகள் என்ன? ஒப்பந்தத்தின் முதல் நாளில் ஹமாஸ் மூன்று பணயக்கைதிகளை விடுவிக்கும் என்றும், அதன் பிறகு மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் அதன் படைகளை திரும்பப் பெறத் தொடங்கும் என்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். ஏழு நாட்களுக்குப் பிறகு, ஹமாஸ் கூடுதலாக நான்கு பணயக்கைதிகளை விடுவிக்கும், மேலும் தெற்கு காஸாவுக்கு இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் வடக்கு பகுதிக்கு திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கும். ஆனால் கடற்கரை சாலை வழியாக மக்கள் நடந்தே செல்ல வேண்டும் காஸாவில் உள்ள சலா அல்-தின் சாலையை ஒட்டியுள்ள ஒரு பாதை வழியாக கார்கள், விலங்குகளால் இழுக்கப்படும் வண்டிகள் மற்றும் ட்ரக்குகள் செல்ல அனுமதிக்கப்படும். இந்த பாதை கத்தார்- எகிப்து நாடுகளின் ஒரு தொழில்நுட்ப பாதுகாப்பு குழுவால் இயக்கப்படும் எக்ஸ்-ரே இயந்திரம் கொண்டு கண்காணிக்கப்படும். ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட முதல் 42 நாட்களுக்கு இஸ்ரேல் படைகள் பிலடெல்பி பாதையில் தொடர்ந்து இருப்பதற்கும், கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் 800 மீட்டர் தூரத்தை ராணுவ நடவடிக்கையற்ற பகுதியாக வைத்திருப்பதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. 1,000 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இவர்களுள் 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சுமார் 190 நபர்கள் அடங்குவர். இதற்கு ஈடாக ஹமாஸ் 34 பணயக்கைதிகளை விடுவிக்கும். ஒப்பந்தத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகள் போர் நிறுத்தத்தின் 16வது நாளில் தொடங்கும். அநுர குமார திஸாநாயக்க: இந்தியாவை தாண்டி சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேணுவாரா?14 ஜனவரி 2025 'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?14 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்பால் நியமிக்கப்பட்ட மத்திய கிழக்குத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் என்பவரும் கத்தாரில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியன், இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், "முன்பை விட இம்முறை மிகவும் சிறப்பாக இருந்தது" என்றும் தெரிவித்தார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது ஆளும் கூட்டணிக்குள் இருந்து ஒப்பந்தத்திற்கு கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட நிலையில் சமீபத்திய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நெதன்யாகுவின் லிகுட் கட்சியைச் சேர்ந்த சிலர் உட்பட பத்து வலதுசாரி உறுப்பினர்கள் போர் நிறுத்தத்தை எதிர்த்து அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். 90 மணி நேர வேலை: இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட வேலை நேரம் எவ்வளவு? தொழிலாளர்கள் கூறுவது என்ன?14 ஜனவரி 2025 ஆடை உலகில் ஐந்தே ஆண்டுகளில் சிகரம் தொட்ட சீன நிறுவனம் - உள்ளே என்ன நடக்கிறது?14 ஜனவரி 2025 இஸ்ரேல் - பாலத்தீன போர் 2023-ஆம் ஆண்டு, அக்டோபர் 7-ஆம் தேதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாக காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டதால் போர் வெடித்தது இதற்கு பதிலடியாக ஹமாஸை அழிக்க இஸ்ரேல் காஸா மீது ராணுவ தாக்குதலை நடத்தியது. இந்த போரின் போது 46,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக காஸாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், கூறுகிறது. 94 பணயக்கைதிகள் இன்னும் காஸாவில் இருப்பதாகவும், 34 பேர் இறந்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கூடுதலாக, நான்கு இஸ்ரேலியர்கள் போருக்கு முன்னர் கடத்தப்பட்டனர், அவர்களில் இருவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது காஸாவில் இன்னும் மோசமான சூழல் நீடிக்கிறது. போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதிலும், தெற்கில் ரஃபா, கான் யூனிஸ் மற்றும் வடக்கில் காஸா நகரம் போன்ற பகுதிகள் உட்பட காஸாவில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்ததாக, மெடிசின்ஸ் சைன்ஸ் பிரான்டியர்ஸ் எனும் அமைப்பை சேர்ந்த சேர்ந்த அமண்டே பசரோல் பிபிசி டுடே நிகழ்ச்சியில் தெரிவித்தார். போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டாலும், உடனடியாக முன்னேற்றம் ஏற்படும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று பசரோல் தெரிவித்தார். மேலும் "நீங்கள் எதிர்பார்க்கும் அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் இங்கே இல்லை," என்றும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c4gp24zrwgqo
  11. Published By: DIGITAL DESK 2 14 JAN, 2025 | 07:36 PM (நமது நிருபர்) 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற அயகத்தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக நாங்கள் என்ன கருதுகின்றோம் என்பதை விடவும் தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது தான் முக்கியமான விடயமாகும். தமிழ் மக்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்றார்கள் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்துள்ளது. அதனடிப்படையில் தான் நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை உள்ளீர்த்திருந்தோம். அதுமட்டுமன்றி, 13ஆவது திருத்தச்சட்டம் நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பிலும் காணப்படுகின்றது. அந்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தவுள்ளதோடு அதனையடுத்து இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். மேலும், தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்கும் விடயமாக 13ஆவது திருத்தச்சட்டத்தினையும், மாகாண சபை முறைமையும் கருதுகின்றபோது அதனை அர்த்தபுஷ்டியான நிருவாகக் கட்டமைப்பாக செயற்படுத்திப் பார்ப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். ஆகவே 13ஆவது திருத்தச்சட்ட விடயத்தில் எமது நிலைப்பாட்டை விடவும் தமிழ் மக்களின் நிலைப்பாடே முக்கியமானது. அதேநேரம், தோழர் அநுரகுமார தலைமையிலான அரசாங்கமானது அனைத்து மக்களின் ஆணையுடனேயே ஆட்சிப்பொறுப்பினைப் பெற்றுள்ளது. இதனால், அது அனைத்து மக்களுக்கான அரசாங்கமாகச் செயற்படவுள்ளதோடு, மக்கள் நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/203814
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் முக்கிய நாளிதழ்கள் மற்றும் ஊடக இணையதளங்களில் இன்று (ஜனவரி 15) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம். தமிழ்நாடு உதவியால் ஐபோன் ஏற்றுமதியில் ஆப்பிள் நிறுவனம் ரூ.1 லட்சம் கோடி ரூபாயை பெற்றிருப்பதாக தினமணி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஐபோன் ஏற்றுமதி சுமார் 77.8 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2024-ம் ஆண்டில் அது 42 சதவீதம் அதிகரித்து 1.08 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இதில், தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெரும்பங்கு வகிக்கிறது. அமெரிக்கா - சீனா வர்த்தப் போரால் சீனாவில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி தளங்கள் வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்த வகையில் அந்த மாற்றங்களை விரைவுபடுத்த முடியவில்லை. "இந்திய - இலங்கை மீனவர் பிரச்னை பற்றி விரைவில் பேச்சு" இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்காக மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே கூறியிருப்பதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தலை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அதிகாரிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டுமாறு பல மீன்பிடி தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் "இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியத் தரப்பும் தயாராக உள்ளது. தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் விடயங்களை முன்னெடுப்பதற்கு நாமும் தயாராகவே உள்ளோம். ஆனால் அடுத்து வரும் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையுடன், இந்திய அதிகாரிகளுடன் விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது கூட இந்த விவகாரம் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது மட்டும் போதாது. எனவே, இந்திய அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்." என்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். யூன் சுக் யோல் கைது: தென் கொரியாவில் அதிபர் வீட்டிற்குள் ஏணி மூலம் குதித்த அதிகாரிகள் - என்ன நடந்தது?2 மணி நேரங்களுக்கு முன்னர் 'இறுதி கட்டத்தில்' காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தை - போர் முடிவுக்கு வருமா?14 ஜனவரி 2025 பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை வரும் பயணிகளுக்காக சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி ஜன.19ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு (06168) சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மதுரை - சென்னை எழும்பூர் முன்பதிவு செய்யப்படாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் ஜனவரி 19, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4.00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 00.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரெயில், மேல்மருவத்தூர், திண்டிவனம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடை ரோடுஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டின் வரலாறு என்ன? - தமிழ் அடையாளங்களில் ஒன்றாக மாறியது எப்படி?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டாக்கு மகாராஜ் விமர்சனம்: படம் எப்படி உள்ளது? பாலையா வெற்றி பெற்றாரா?14 ஜனவரி 2025 கிராமியக் கலைஞர்களுக்கு ஒருநாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்வு பட மூலாதாரம்,@KANIMOZHIDMK சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்றுள்ள கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியத்தை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழ் இந்து இணையதள செய்தி கூறுகிறது. சென்னை மாநகரில் தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா'-வை முதல்வர் ஸ்டாலின் முழவு இசைத்து திங்கள்கிழமை (ஜன.13) தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள 18 இடங்களில் நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர். செ ன்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 'என் தந்தை ஒரு குற்றவாளி' - மனைவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவரின் மகள் பேட்டி3 மணி நேரங்களுக்கு முன்னர் 90 மணி நேர வேலை: இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட வேலை நேரம் எவ்வளவு? தொழிலாளர்கள் கூறுவது என்ன?14 ஜனவரி 2025 பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா படக்குறிப்பு, பொள்ளாச்சியில் 3 நாள் சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3 நாள் சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா பற்றி தினத்தந்தி இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 10வது ஆண்டாக நடக்கும் இந்த பலூன் திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். திருவிழா நடக்கும் ஆச்சிபட்டி மைதானத்தில் இருந்து யானை வடிவிலான பிரம்மாண்ட ராட்சத பலூனில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பைலட்டுகளுடன் இரண்டு சிறுமிகளும் இருந்தனர். அந்த ராட்சத பலூன் கேரள மாநிலம் கன்னிமாரி முல்லந்தட்டில் என்ற பகுதியில் வயல்வெளியில் தரையிறங்கியது. உள்ளூர் மக்கள் உதவியுடன் ராட்சத பலூன் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதிலிருந்த சிறுமிகள் எந்த பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்திருக்கவில்லை. என்றாலும், எந்தவொரு காயமும் இல்லாமல் அவர்கள் தப்பினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9w5ljp7pylo
  13. Published By: DIGITAL DESK 2 14 JAN, 2025 | 07:58 PM இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்காக மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தலை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அதிகாரிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டுமாறு பல மீன்பிடி தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிந்திய மீனவர்கள் இழுவைபடகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதோடு சட்டவிரோத உபகரணங்களையும் பயன்படுத்துகின்றார்கள். இதனை இலங்கை மீனவர்கள் எதிர்க்கின்றார்கள். அத்துடன் இந்த நடைமுறைகள் இந்தியப் பெருங்கடலின் கடல் வளங்களுக்கும் தீங்கு விளைவிப்பதால் இரு தரப்பினருக்குமே பாதிப்புக்கள் ஏற்படுகிறன. இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியத் தரப்பும் தயாராக உள்ளது. தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் விடயங்களை முன்னெடுப்பதற்கு நாமும் தயாராகவே உள்ளோம். ஆனால் அடுத்து வரும் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையுடன், இந்திய அதிகாரிகளுடன் விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது கூட இந்த விவகாரம் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது மட்டும் போதாது. எனவே, இந்திய அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்தியப் பெருங்கடலுக்கு ஏற்படும் சேதங்கள் காரணமாக பெரும்பாலான தென்னிந்திய மீனவர்களும் சட்டவிரோதமான மீன்படி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவே உள்ளனர், இருப்பினும் ஒரு சில மீனவர்கள் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோத நடைமுறைகளில் ஈடுபடுகிறார்கள். ஒரு நாடாக தனியாக நடவடிக்கைகளை எடுப்பதை விட, ஒரு இராஜதந்திர அணுகுமுறை மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். கடந்த ஆண்டு ஒக்டோபரில், ஆறாவது தடவையாக இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழு கூட்டம் கொழும்பில் நடைபெற்றது, இதில் இந்திய மீன்வள அமைச்சின் மூத்த அதிகாரிகள் தலைமையிலான இந்தியக் குழு கலந்து கொண்டது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கூட்டு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர் இருப்பினும், அது இறுதித் தீர்மானம் இல்லாமல் முடிந்தது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய அடிமட்ட இழுவைப் படகுகளால் உள்ளுர் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் 700 மில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது என்றார். https://www.virakesari.lk/article/203807
  14. பட மூலாதாரம்,@AKRACINGOFFL படக்குறிப்பு, வெகு நாட்களாகவே ஊடகங்களிடம் பேசுவதைத் தவிர்த்துவந்தார் நடிகர் அஜித் குமார் 14 ஜனவரி 2025, 08:32 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் துபையில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தொடரில் (24H series) 911 போர்ஷே கார் பிரிவில் நடிகர் அஜித் குமாரின் அணி 3-வது இடத்தைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் அஜித்துக்கும் அவரது அணியினருக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. வெகு நாட்களாகவே ஊடகங்களிடம் பேசுவதைத் தவிர்த்துவந்த நடிகர் அஜித் குமார், இந்த கார் பந்தய நிகழ்வின் போது ஊடகங்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். துபையில் அவர் அளித்த ஒரு சமீபத்திய நேர்காணலில், "படங்களை பார்ப்பது கொண்டாடுவது எல்லாம் சரிதான். அஜித் வாழ்க அல்லது விஜய் வாழ்க என்று சொல்கிறீர்கள். நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?" என ரசிகர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் அஜித் பேசும் அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் குறித்து மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களில் நிலவும் வெறுப்பு, பாதுகாப்பாக இரு சக்கர வாகனம் ஓட்டுவதன் அவசியம் உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பேசியுள்ளார். நடிகர் அஜித் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 53 வயதில் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்று சாதிக்க உதவியது எது? அஜித் குமார்: துபாய் ஹெச்24 கார் பந்தயத்தில் பெற்ற வெற்றி என்ன? பிரபலங்கள் கூறுவது என்ன? 'விடாமுயற்சி' தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா? சேத்தன் கொரடா: இரு கால்களும் இல்லாமலே கார் பந்தயத்தில் சாதிக்கும் வீரர் துபை 24 மணிநேர கார் பந்தயத் தொடரில் தனது அணி பெற்ற வெற்றிக்காக வாழ்த்திய மற்றும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் அஜித். அவரது மேலாளர் சுரேஷ் சந்திராவின் எக்ஸ் பக்கத்தில் இந்த அறிக்கை பதிவிடப்பட்டுள்ளது. 12 ஆண்டுக்கு பிறகு வெளியான மத கஜ ராஜா கவனத்தை ஈர்த்ததா - இன்றைய சூழலில் கதை ஒத்துப்போகிறதா?13 ஜனவரி 2025 வணங்கான் பாலாவின் பாணியில் இல்லையா? படம் எப்படி இருக்கிறது? - ஊடக விமர்சனம்10 ஜனவரி 2025 பட மூலாதாரம்,@SURESHCHANDRAA பல வருடங்களுக்கு பிறகு அஜித் அளித்த நேர்காணல் இதற்கிடையே துபையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் அஜித் அளித்த பேட்டியில், "விளையாட்டு மற்றும் பயணங்களை நான் மிகவும் விரும்புகிறேன். என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், உற்சாகத்துடன் வேலைக்கு (சினிமா) திரும்பவும் உதவுவது அவை தான். எனது பிள்ளைகளுக்கும் அதை கற்றுக் கொடுக்கிறேன்" என்று கூறினார். பல வருடங்களுக்கு பிறகு ஊடகத்திற்கு அவர் அளிக்கும் ஒரு முழு நேர்காணல் இது. சில மாதங்களுக்கு முன்பாக மதங்கள் மனிதர்களை எப்படி மாற்றும் என்பது குறித்து அவர் தெரிவித்த கருத்தை, இந்த நேர்காணலில் மீண்டும் சுட்டிக்காட்டினார். "மதம் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்கள் மீது கூட வெறுப்பைத் தூண்டும் என்று ஒரு வாசகம் உள்ளது. அது உண்மை தான். மதம், சாதி எதுவாக இருந்தாலும் சரி. மனிதர்களை சந்திக்கும் முன்பே அவர்கள் மீதான தவறான மதிப்பீடுகளை செய்து விடுகிறோம்." "நீங்கள் பயணங்கள் மேற்கொண்டால் வெவ்வேறு தேசம், மதம், கலாசாரத்தைச் சேர்ந்த மக்களை காண்பீர்கள். இதன் மூலம், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும். பயணம் உங்களை நல்ல மனிதனாக்கும்" என்று கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான ஒரு காணொளியில் அவர் பேசியிருந்தார். அஜித்தின் அந்தக் கருத்து, அவரது ரசிகர்களால் மட்டுமின்றி பலராலும் அப்போது பாராட்டப்பட்டது. பாலியல் தொல்லை: நடிகை ஹனிரோஸ் புகாரின் பேரில் நகைக்கடை அதிபர் கைது - என்ன நடந்தது?11 ஜனவரி 2025 கேம் சேஞ்சர் விமர்சனம்: ஷங்கர் கதையில் புதுமை இல்லையா? படம் எப்படி இருக்கிறது?10 ஜனவரி 2025 பட மூலாதாரம்,@SURESHCHANDRAA படக்குறிப்பு, பயணங்களின் போது, தான் மனநிறைவாக உணர்வதாகவும் அஜித் நேர்காணலில் தெரிவித்திருந்தார் துபையில் அவர் அளித்த நேர்காணலில் கார் பந்தயத்தில் இருக்கும் சவால்கள் குறித்தும் பேசினார். "ஒருமுறை காருக்குள் அமர்ந்துவிட்டால், பிரேக் மீதும் ரேஸ் டிராக் மீதும் மட்டும் தான் முழு கவனமும் இருக்க வேண்டும். இது சினிமா அல்ல, இங்கு உங்களுக்கு ரீடேக் (Retake) கிடையாது. ஒரு நொடி கவனம் சிதறினால், அது படுகாயங்களை ஏற்படுத்தும் அல்லது உயிரைப் பறித்துவிடும்" என்றார். இந்த பந்தயங்கள் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், விதிமுறைகளுடன் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், சாலைகளில் பொறுப்பற்ற முறையில் வேகமாக வாகனங்களை இயக்குவது உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் நிலவும் வெறுப்பு குறித்து பேசிய அவர், "அது பிரபலங்களை மட்டுமல்ல, அனைவரையும் பாதிக்கிறது. உடல்நலமும் மனநலமும் முக்கியம். என் ரசிகர்களுக்கு நான் சொல்வது, வாழ்க்கை மிகச் சிறியது, அப்படியிருக்க ஏன் வெறுப்பைப் பரப்ப வேண்டும்? உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள்" என்று கூறினார். அந்த நேர்காணலின் இறுதியில், "திரைப்படங்களை பார்ப்பது கொண்டாடுவது எல்லாம் சரிதான். அஜித் வாழ்க அல்லது விஜய் வாழ்க என்று சொல்கிறீர்கள். நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? நீங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் இந்த பேரன்பிற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்." "நீங்கள், என்னுடைய நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் மீதும், பிற மனிதர்கள் மீதும் அன்பு செலுத்தி, நல்ல வாழ்க்கையை வாழ்ந்தால் மிகவும் மகிழ்வேன். வாழ்க்கை மிகவும் குறுகியது. எனவே அதை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்" என்று அஜித் தெரிவித்தார். பட மூலாதாரம்,@AKRACINGOFFL படக்குறிப்பு, நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு 'உங்கள் வாழ்க்கையை பாருங்கள்' என்ற ரீதியில் வேண்டுகோள் விடுப்பது இது முதல் முறையல்ல சமூக வலைத்தளங்களில் வைரலான நேர்காணல் அஜித்தின் இந்த நேர்காணல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அவரது கருத்துகளை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். "நான் விஜய் ரசிகன், ஆனாலும் நீங்கள் சொன்னதை இதுவரை யாரும் சொல்லவில்லை. நீங்கள் சிறந்த மனிதர்" என ஒருவர் பதிவிட்டுள்ளார். "அஜித்தின் முந்தைய நேர்காணல்களிலும் கூட மனிதர்கள் மீது அவருக்கு இருக்கும் அன்பும் மரியாதையும் வெளிப்படும். அவர் எப்போதும் ஒரே மாதிரியான மனிதராகவே இருக்கிறார், சினிமாவில் அறிமுகமானபோதும் இப்போது உச்சத்தில் இருக்கும் போதும்" என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "அஜித் என்றால் தனி பிராண்ட். தன்னுடைய சுயநலத்துக்காக ரசிகரை வழிநடத்தாமல் நேரான பாதையில் கொண்டு செல்லும் அஜித்குமாருக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களைப் போலவே உங்கள் ரசிகனும் நல்வழியில் செல்வான் என்ற நம்பிக்கை நீங்கள் ரசிகர் மன்றம் வேண்டாம் என்று சொல்லும்போதே வந்து விட்டது" என்று பதிவிட்டுள்ளார். "நடிப்பு என்பது தொழில் என்பதில் நடிகர்கள் எல்லாம் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். நிழலை நிஜம் என்று நம்பும் ரசிகர்கள் தான் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள். அவர்களை தான் இவர் கூறுகிறார்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு 'உங்கள் வாழ்க்கையை பாருங்கள்' என்ற ரீதியில் வேண்டுகோள் விடுப்பதோ அல்லது திரைப்படங்களைக் கடந்து தன்னை கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்துவதோ இது முதல் முறையல்ல. பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: காலத்தால் அழியாத 15 பாடல்கள்10 ஜனவரி 2025 ஆஸ்கர் விருதுக்கு கங்குவா போட்டியிடுகிறதா? படங்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?9 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டில், தன்னை இனிமேல் 'தல' என்று அழைக்க வேண்டாம் என ஊடகங்கள் மற்றும் ரசிகர்களிடம் நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்தார் நடிகர் அஜித் குமார், கடந்த 2011ஆம் ஆண்டு தனது ரசிகர் நற்பணி மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார். "கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இணங்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள், என் எண்ண ஓட்டத்துக்கு உகந்ததாக இல்லை." "சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறேன். நலத் திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும் போதும் என்பதே என் கருத்து." என்று அப்போது அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பாக, சமூக வலைத்தளங்களில் அஜித்தின் பெயரைப் பயன்படுத்தி 'கடவுளே, அஜித்தே' என்ற வாசகம் வைரலானது. அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், "சமீபகாலமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரிகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க… அஜித்தே' என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது." "எனது பெயரைத் தவிர்த்து, எனது பெயருடன் வேறெந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியளவும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்." என்று தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாக 2021ஆம் ஆண்டில், தன்னை இனிமேல் 'தல' என்று அழைக்க வேண்டாம் என ஊடகங்கள் மற்றும் ரசிகர்களிடம் நடிகர் அஜித் குமார் வேண்டுகோள் விடுத்து, மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை வெளியிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c77r4382443o
  15. US Wildfire: அமலுக்கு வந்த புதிய Warning; காற்று வேகத்தால் காட்டுத் தீ மேலும் பரவக் கூடுமா? அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கோர காட்டுத்தீயின் 8ஆவது நாள் இன்று. கடந்த வார இறுதியில் குறைந்த காற்றின் வேகம் புதன்கிழமைவரை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர். குறிப்பாக செவ்வாய்க்கிழமையான இன்று உச்சக்கட்ட காற்று வீசலாம் என எதிர்பார்க்கப்படுவதாக பசடேனா தீயணைப்புத் தலைவர் சாட் அகஸ்டின் பிபிசியிடம் கூறியிருந்தார். இது தொடர்பாக தேசிய வானிலை சேவையின் சிவப்புக் கொடி எச்சரிக்கை அமலுக்கு வந்துள்ளது. புதன்கிழமை 12 மணி வரை இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும். Los Angeles Fire: Firefighters in the Los Angeles area are facing a crucial day, as forecasters warn that particularly dangerous winds in north-west LA could spread blazes இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  16. டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள் எதற்கு? - மக்கள் போராட்ட இயக்கம் கேள்வி 14 JAN, 2025 | 07:35 PM (நமது நிருபர்) இந்திய நிறுவனம் மூலம் வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகளில் பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்களை ஒருங்கிணைப்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்துமாறு மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியது. மக்கள் போராட்ட இயக்கத்தின் நிர்வாக உறுப்பினர் வசந்த இதுதொடர்பில் தெரிவித்துள்ளதாவது, புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்கள் ஏன் பெறப்படுகின்றன என்பதற்கான விளக்கம் வெளியிடப்பட வேண்டும். டிஜிட்டல் அடையாள அட்டையானது தொழில்நுட்பம், பாதுகாப்பு அல்லது வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக வழங்கப்படுகின்றதென ஒருவர் நினைக்கலாம். ஆனால், அது அப்படியல்ல. அந்த விவரங்களைப் பெறுவதானது தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காகவாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது. பயோமெற்றிக் விவரங்களுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்துவது குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ந்திருந்தாலும், அந்தந்த நாடுகளில் எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன. இந்த செயல்முறையின் போது ஒரு நபரின் மரபணு (டிஎன்ஏ), கைரேகைகள், குரல், காதுகளின் வடிவம், ஒருவர் நடக்கும் முறைமை, கையெழுத்து தொடர்பான தரவுகள் உட்பட பல்வேறு வகையான தரவுகளைப் பெறுவதற்கு குறித்த திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அரசாங்கத்தின் ஈடுபாட்டுடன், டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக இந்த விவரங்கள் அனைத்தையும் சேகரிக்க இந்தியாவுக்கு நாங்கள் அனுமதி வழங்குகிறோம் என்பதாகும். ஒரு இந்திய நிறுவனத்தின் சேவைகளைப் பெறுவதற்கான மேற்கூறிய முடிவு முந்தைய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாகும். மேலும், இந்தியாவில் இதுபோன்ற கசிவுகள் ஏற்கனவே பதிவாகியுள்ள சூழலில், எமது நாட்டுத் தகவல்களும் கசியவிடப்படாது என்பதற்கு உறுதிப்பாடான நிலைமைகள் இல்லை என்றார். https://www.virakesari.lk/article/203815
  17. 14 JAN, 2025 | 02:11 PM (நெவில் அன்தனி) வடக்கு மாகாணத்தில் மேசைப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு விசேட பயிற்சித் திட்டத்தை இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கம் அண்மையில் நடத்தியது. சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கம் நடத்திய இந்தத் திட்டத்தில் பயிற்சியாளர்களுக்கு விசேட நுட்பவியல் பயிற்சி அளிக்கப்பட்டது. பிராந்தியத்தில் உள்ளூர் பயிற்றுநர்களின் ஆற்றல்களையும் தரத்தையும் உயர்த்தும் வகையில் இந்த பயிற்சித் திட்டம் சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுநர் மொஹம்மத் அத்தூம் தலைமையில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் 30 மணித்தியாலங்களுக்கு நடத்தப்பட்டது. இதனைவிட சிரேஷ்ட பயிற்றுநர்களின் கீழ் பயிற்றுநர்களை ஆளுகைப்படுத்துதல் மற்றும் செயற்பாட்டு அனுபவம், ஆழமான கற்றல் ஆகிய விடயங்களும் புகட்டப்பட்டது. இலங்கை மெசைப்பந்தாட்ட விளையாட்டுத்துறையின் எதிர்காலத்திற்கு தேவையான வலுவான அத்திவாரத்தை இடும் பொருட்டு இந்தப் பயிற்சித் திட்டத்தை இலங்கை மேசைப்பந்தாட்ட சம்மேளனம் நடைமுறைப்படுத்தியது. இந்தப் பயிற்சியின்போது சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் 3ஆம் நிலை பயிற்றுநர் சான்றிதழ் கொண்ட அபிவிருத்தித் திட்ட செயலாளரும் இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கத்தின் முன்னாள் தலைவருமான சந்தன பெரேரா விசேட ஆலோசனைகளை வழங்கினார். இப் பயிற்சிகள் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம், கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை, பருத்தித்துறை, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/203804
  18. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய விஜயம் முடிவுற்று ஒரு மாத காலத்தில், இரண்டாவதாக சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரபூர்வ விஜயமாக இன்று சீனா சென்றுள்ளார். வரும்17-ஆம் தேதி வரை அவர் அங்கு தங்கியிருப்பார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைந்திருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் கூறுகிறது. 'பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை' - இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாட்டம் இலங்கை: இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சையாகப் பேசிய பௌத்த துறவிக்கு சிறைத் தண்டனை இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை இலங்கை: பில்லியன் டாலர் கடன்; இந்தியா, சீனாவின் செல்வாக்கு - புதிய ஆண்டில் ஜனாதிபதிக்கு காத்திருக்கும் சவால்கள் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவான பிறகு அநுர குமார திஸாநாயக்க, தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கு கடந்த மாதம் 15-ஆம் தேதி மேற்கொண்டிருந்தார். இந்திய விஜயம் முடிவுற்று ஒரு மாத காலத்தில் அவர் சீனாவுக்கு சென்றுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன. இந்தியாவுடன் 'எட்கா' உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கையில் எதிர்ப்பு ஏன்?24 டிசம்பர் 2024 இந்தியாவுக்கு இலங்கை அளித்த உறுதிமொழி - தமிழர்கள் பற்றி மோதி கூறியது என்ன?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்தியா வந்தார் இந்தியாவுடனான இரண்டு உடன்படிக்கைகள் 1,500 இலங்கை அரச சேவையாளர்களுக்கு இந்தியாவினால் பயிற்சி பாடநெறி வேலைத்திட்டம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற வரி நடைமுறைகளில் இரு தரப்பு வரிகளை இல்லாது செய்யும் வகையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை என்ற இரண்டு உடன்படிக்கைகள் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்டன. அத்துடன், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையான எட்கா உடன்படிக்கையை கையெழுத்திடுவது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி எட்காவுக்கு கடந்த காலங்களில் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இணக்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே சீனாவிற்கான விஜயத்தை அநுர குமார திஸாநாயக்க மேற்கொள்கின்றார். 'சீனப் பயணத்தை இந்தியா எச்சரிக்கையுடன் அவதானிக்கும்' ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சீன விஜயத்தை இந்தியா மிகவும் எச்சரிக்கையுடன் அவதானிக்கும் என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார். ''சீனாவுக்கு அவர் பயணம் செய்வது என்பது வழமையானது. இலங்கையை பொருத்தவரை எந்தவொரு ஜனாதிபதியும் பதவியேற்றவுடன், அண்டை நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பயணிப்பார்கள். முதலில் இந்தியாவுக்குதான் பயணிப்பார்கள். அதன் பின்னர் சீனாவுக்கு செல்வார்கள்." என்கிறார். "இலங்கைக்கு எப்போதும் சீனாவுடன் உறவு இருக்கின்றது. ஆனால், இலங்கையில் இந்தியாவை மீறி சீனாவினால் எதுவும் செய்ய முடியாது. இந்த பயணத்தின் போது முதலீடுகள் மற்றும் பொருளாதார உதவிகளை பற்றிதான் பேச போகின்றார்கள்." என்றும் அவர் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "நிச்சயமாக இந்த பயணத்தில் இந்தியாவுக்கு அல்லது அமெரிக்காவுக்கு எதிரான, விடயங்களை பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லை." "ஆனால், அந்த விடயங்களில் சீனா அழுத்தங்களை கொடுத்தாலும், ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க, சந்திரிகா போன்றோர் இந்த விடயத்தில் எவ்வாறான முறையை கையாண்டார்களோ அதே முறையைதான் அநுர குமார திஸாநாயக்கவும் கையாள்வார். இந்த பயணம் பெரிய தாக்கத்தை செலுத்தாது. குறிப்பாக இலங்கைக்கான உதவிகளைதான் கொண்டு வரும்" என்று கூறுகிறார். ஆனால், இந்தோ-பசிபிக் போட்டியால் இந்தியா, இந்த பயணத்தை மிகவும் எச்சரிக்கையும் பார்ப்பதாக சிங்கள ஊடகங்கள் ஊகங்களை வெளியிடுகின்றன. ''இந்தியா எச்சரிக்கையுடன் இருக்கும். எனினும், அளவுக்கு அதிகமான எச்சரிக்கையுடன் இருக்கும் என சொல்ல முடியாது'' என்று அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார். இந்தியா vs சீனா: இலங்கை ஜனாதிபதி முதல் பயணமாக இந்தியா செல்வதன் மூலம் உணர்த்தும் சேதி என்ன?17 டிசம்பர் 2024 அமெரிக்க ராணுவம் தாக்குமா? கிரீன்லாந்து விவகாரத்தில் சாத்தியமான 4 விஷயங்கள்13 ஜனவரி 2025 பட மூலாதாரம்,NIKSON படக்குறிப்பு, பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு, இந்தியா செய்த உதவி என்பது சீனாவை விட அதிகமானது என்கிறார் நிக்சன் இலங்கையில் சீனாவின் முதலீடுகள் இந்தியாவை தாண்டி, சீனாவுடன் அநுர குமார திஸாநாயக்க நெருங்கிய உறவை பேணுவாரா என்ற கேள்விக்கும் அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் பதிலளித்தார். ''இலங்கையில் சீனாவின் முதலீடுகள் என்பது இந்தியாவுக்கு பாதகமாக இருக்கக்கூடாது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீனாவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்பது எதிர்பார்ப்பாகும்." என்கிறார் அவர். அடுத்தது சீனாவின் ராணுவ ரீதியான செயற்பாடுகளுக்கு இலங்கையில் எந்தவொரு இடமும் தளமாக அமையக்கூடாது என்பது இந்தியாவின் முக்கியமான கோரிக்கையாக இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டும் நிக்சன், "அதேவேளை, சீனாவும் அதே கோரிக்கையை முன்வைக்கின்றது. இந்தியாவுக்கு இலங்கை வழங்கப் போகின்ற ராணுவ தளங்கள் தொடர்பான விடயங்களை சீனா எப்போதும் கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. அந்த விடயத்தில் இலங்கை சமாந்திர போக்கை கையாள்கின்றது. இந்த இரண்டு நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொண்டாலும், இந்தியாவின் அழுத்தங்களை மீறி, இலங்கையினால் செயற்பட முடியாது." என்று கூறுகிறார். அதற்கான காரணத்தை விளக்கும் நிக்சன், "ஏனென்றால், பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா செய்த உதவி என்பது சீனாவை விட அதிகமானது. அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் வித்தியாசமானது. சீனாவுடன் நெருக்கமான உறவை பேணலாம் என்ற எதிர்வு கூறல் சிங்கள ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றது. அது எவ்வளவு தூரத்துக்கு சாத்தியமாகும் என்று சொல்ல முடியாது." "ஏனென்றால் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸ, சந்திரிகா போன்றோர் வகுத்த அந்த திட்டத்தின் அடிப்படையில் இலங்கையின் வெளியுறவு கொள்கை இருக்கின்றது. அதை விட புதிய திட்டத்தை அநுர குமார திஸாநாயக்க செய்யக்கூடிய வாய்ப்பு இல்லை." என கூறுகின்றார். இரானிய அணு விஞ்ஞானியை ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கி மூலம் 'மொசாட்' கொன்றது எப்படி?13 ஜனவரி 2025 தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சு நடத்துவதால் பாகிஸ்தானில் கவலை எழுவது ஏன்?12 ஜனவரி 2025 'இந்தியாவை மீறி இலங்கையால் செயற்படுவது மிகவும் கடினம்' பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, 2016இல், அநுர குமார திஸாநாயக்க எதிர்கட்சியிலிருந்து எட்கா உடன்படிக்கையை கடுமையாக எதிர்த்திருந்தார் ''இந்தியாவை மீறி இலங்கையால் செயற்படுவது என்பது மிகவும் கடினமான விடயம். எட்கா உடன்படிக்கையை கையெழுத்திட வேண்டிய தேவை இருக்கின்றது. ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன இருந்த 2016ம்ஆண்டு காலப் பகுதியில் கொண்டு வரப்பட்ட உடன்படிக்கை இது. அந்த சந்தர்ப்பத்தில் அநுர குமார திஸாநாயக்க எதிர்கட்சியிலிருந்து இதனை கடுமையாக எதிர்த்திருந்தார். ஆனால், இன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் வைத்துக்கொண்டு இந்தியாவின் எட்காவை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு சென்றிருக்கின்றார்." என்று கூறினார் நிக்சன். உடன்படிக்கையில் மாற்றங்கள், திருத்தங்கள் என்று சொன்னாலும் கூட அந்த உடன்படிக்கையை கையெழுத்திட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் இலங்கை வந்துள்ளது என்று நிக்சன் கூறுகிறார். 'சீனாவுடனான உடன்படிக்கை இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவின் முதலீடுகள் இலங்கையில் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் சிவராஜா ''இந்திய விஜயத்தை விடவும் மிகவும் ஒரு எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் அநுர குமார சீனாவுக்கு போகின்றார். இந்திய விஜயத்தை விடவும் அதிகளவிலான நன்மைகள் கிடைக்கும் என்பது அநுர குமாரவின் நம்பிக்கையாக காணப்படுகின்றது." என கூறுகிறார் மூத்த செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சிவராஜா. தொடர்ந்து பேசிய அவர், "ஏனென்றால், சீனாவுடன் இவர்கள் மிக நீண்ட காலமாக நெருக்கமாக செயற்பட்டு வருகின்றார்கள். இந்த விஜயத்துக்கு பிறகு நிறைய உதவிகளை சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த விஜயத்துக்கு பிறகு அவர் பிராந்திய ரீதியான சில ராஜதந்திர சவால்களை நிச்சயம் எதிர்கொள்வார்." "ஏனென்றால், அவர் இப்போது சீனாவுக்கு சென்று அவர் கொடுக்கப் போகின்ற வாக்குறுதிகள், பிராந்திய ரீதியான சில எதிர்வினைகளை ஏற்படுத்தப் போகின்றது. குறிப்பாக சீன கப்பல்கள் இலங்கைக்கு வருவதில் கடந்த காலங்களில் இருந்த பிரச்னை, இந்த விஜயத்தின் பின்னர் அந்த ஆராய்ச்சி கப்பல்கள் இங்கு வருவதற்கு சீனாவுக்கு வசதியான வகையில் அமைந்து விடும் என்பதுதான் மிக முக்கியமான கருத்தாக இருக்கின்றது." என்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அகதிகளை இலங்கையில் மீள் குடியேற்ற புதிய திட்டம் - நாளிதழில் வெளியான 5 முக்கிய செய்திகள்14 ஜனவரி 2025 இந்திய தூதருக்கு வங்கதேசம் மீண்டும் சம்மன் - இருநாட்டு எல்லையில் என்ன பிரச்னை?14 ஜனவரி 2025 பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, 'இந்திய விஜயத்தை விடவும் மிகவும் ஒரு எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் அநுர குமார சீனாவுக்கு போகின்றார்' (கோப்புப்படம்) இந்தியாவின் முதலீடுகள் இலங்கையில் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று கூறும் அவர், "அதானியின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சீனா தற்போது அதேபோன்ற சில வலுசக்தி ஒப்பந்தங்களையும் செய்வதற்கு காத்திருக்கின்றது. இந்தியாவின் ஒப்பந்தங்களை ஒத்ததான விடயங்களை சீனாவுக்கு வழங்குவதாக உறுதி வழங்கி விட்டால், நிச்சயமாக பிராந்திய ரீதியான முறுகல் நிலையை ஏற்படுத்தும்." என்கிறார் இலங்கை ஜனாதிபதி, தம்முடன் நெருங்கி பழகுகின்றார் என்ற தோற்றப்பாட்டை உலகத்துக்கு வெளிப்படுத்த சீனா முயற்சித்து வருவதாகவும் மூத்த செய்தியாளர் ஆர்.சிவராஜா கூறுகின்றார். ''எனவே இந்த விஜயத்தை அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் கூர்மையாக அவதானித்துக்கொண்டிருக்கின்றன." என ஆர்.சிவராஜா கூறுகின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0m10eexl90o
  19. 14 JAN, 2025 | 11:34 AM தென்னாபிரிக்காவில் சுரங்கமொன்றிற்குள் சிக்குண்டுள்ளவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. கடந்த ஒருவருடகாலமாக தென்னாபிரிக்காவின் சுரங்கமொன்றிற்குள் சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் நிலை குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக கடந்த வருடம் குடிநீர் உணவு மருந்துபோன்றவை அந்த சுரங்கத்திற்குள் செல்வதை பொலிஸார் தடுத்திருந்தனர். உள்ளே சிக்குண்டுள்ள ஒருவரின் கடிதத்தை அடிப்படையாக வைத்து உள்ளே சிக்குண்டுள்ள ஒருவரின் சகோதரி நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையிலேயே அரசாங்கம் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. ஸ்டில்பொன்டெய்னிற்கு அருகில் உள்ள பவல்பொன்டெய்னில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சிக்குண்டுள்ளவர்களில் 109 ஏற்கனவே உயிரிழந்துள்ளனர் என உள்ளேயிருந்து அனுப்பப்பட்ட கடிதமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களில் சட்டவிரோதமாக அகழ்வுப்பணிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ள நிலையில் தென்னாபிரிக்க அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. https://www.virakesari.lk/article/203797
  20. Published By: VISHNU 13 JAN, 2025 | 07:48 PM ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பான் வானிலை ஆய்வு மையம், நாட்டின் இரண்டு மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் பூமியில் இருந்து 37 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 9:19 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/203773
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் பேசிய வீடியோ ஒன்று ரெட்டிட் வலைதளத்தில் வைரலாக பரவியது. வாரத்திற்கு 90 மணி நேரம் பணியாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்றும், ஞாயிறு அன்றும் வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார். அமெரிக்காவைப் போன்று பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் சீனர்கள் பணியாற்றுவது போன்று வாரத்திற்கு 90 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் எல் & டி நிறுவன ஊழியர்களிடம் பேசியுள்ளார். அது விமர்சனங்களுக்கு வழி வகை செய்தது. குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவதாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர். தொழிலாளர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இந்திய பணிச்சூழலில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய முதலில் முயலவேண்டும் என்றும் பலர் தங்களின் கருத்தை கூறுகின்றனர். இந்தியாவில் ஒரு நாளுக்கான வேலை நேர உச்சவரம்பு எவ்வளவு? உலகில் அதிகம் மற்றும் குறைவான வேலை நேரம் கொண்ட நாடுகள் எவை? அங்கெல்லாம் வாரந்தோறும் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள்? சென்னையில் பெண் உணவு டெலிவரி ஊழியருக்கு பாலியல் துன்புறுத்தலா? என்ன நடந்தது? இந்திய நிறுவனங்களில் பணியாளர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களும் சவால்களும் சாம்சங் ஊழியர் தொழிற்சங்கம் தொடங்க நிர்வாகம் அனுமதி மறுப்பது ஏன்? ஐந்துமுறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி சென்னையில் இரவுநேரப் பணியில் பெண் துப்புரவுப் பணியாளர்கள் சந்திக்கும் சவால்கள் தொழிலாளர்கள் கூறுவது என்ன? ஒரு ஞாயிறு அன்று நீங்கள் என்ன செய்ய விரும்புவீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தது பிபிசி தமிழ். ஒரு சிறிய சிரிப்புக்கு பிறகு, "இது என்ன கேள்வி. அனைவரையும் போன்று நானும் காலை 11 மணிக்கு எழுவேன். மனைவியோடு சேர்ந்து அசைவ உணவு சமைத்து சாப்பிட்டுவிட்டு, மாலையில் அப்படியே மெரினாவுக்கு குழந்தைகளோடு சென்றுவிட்டு வருவேன்," என்றார் சென்னையில் பெயிண்ட் அடிக்கும் பணியில் 12 வருடங்களாக ஈடுபட்டிருக்கும் சூரியகுமார். மதுரையில் செவிலியராக பணியாற்றும் செல்வியிடம் இதே கேள்வியை கேட்ட போது, "வாரத்தின் மற்ற நாட்களில் வேலைக்கு சென்றுவிடுவேன். ஞாயிறு அன்று மட்டுமே நான் என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட இயலும். அன்று எப்படி வேலைக்கு செல்ல முடியும்? வாரம் முழுவதும், வேலை பார்க்கும் இடத்தில் நடந்த அனைத்தையும் என்னுடைய கணவரிடம் கூறினால் தான் ஒரு மன நிம்மதியே வரும். அவரிடம் பேசினால், வேலைக்கு செல்வதால் ஏற்படும் அழுத்தம் குறையும்," என்று கூறினார். சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் பவ்யா, பிபிசியிடம் பேசும் போது, பெரும்பாலான வார இறுதி நாட்களில் ஓய்வெடுக்க விரும்புவதாக தெரிவித்தார். சில நேரங்களில் புத்தகங்கள் படிக்கவும், ஓவியம் வரையவும் நேரத்தை செலவிட விரும்புவதாகவும் அவர் கூறினார். ஓய்வாக இருக்கிறோம் என்பதற்காக, அலுவலக வேலைகளை அன்றும் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லையே? என்று அவர் கேள்வி எழுப்பினார். கும்பமேளா: பல லட்சம் பேர் புனித நீராடுவது ஏன்? பிரயாக்ராஜின் சிறப்பு, முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரம்14 ஜனவரி 2025 லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: வீடுகள், பங்களாக்களை இழந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் யார்? என்ன சொல்கின்றனர்?13 ஜனவரி 2025 பட மூலாதாரம்,LARSENTOUBRO.COM படக்குறிப்பு, எல் & டி தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் எஸ்.என். சுப்ரமணியன் கருத்தும் விவாதமும் சுப்ரமணியன் தன்னுடைய ஊழியர்களுடனான சந்திப்பின் போது, "உங்கள் அனைவரையும் ஞாயிறு அன்றும் வேலைக்கு வர வைக்க இயலவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. நான் உங்களை அப்படி பணியாற்ற வைத்துவிட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஏன் என்றால் நான் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணியாற்றுகிறேன்," என்று கூறியுள்ளார். விடுமுறை எடுப்பதால் ஊழியர்களுக்கு என்ன நன்மை கிடைத்து விடுகிறது என்ற கேள்வியை முன்வைத்த அவர், "வீட்டில் அமர்ந்து கொண்டு என்ன செய்வீர்கள்? எவ்வளவு நேரம் உங்களின் மனைவியை பார்த்துக் கொண்டிருப்பீர்கள்? மனைவிகளும் கணவரின் முகத்தை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்? அலுவலகத்திற்கு வந்து வேலையை பாருங்கள்" என்று கூறியுள்ளார். தன்னுடைய கருத்தை நியாயப்படுத்தும் வகையில் பேசிய அவர், "சீனர்கள் ஒரு வாரத்திற்கு 90 மணி நேரம் பணியாற்றுகிறார்கள். அமெரிக்கர்கள் 50 மணி நேரம் பணியாற்றுகிறார்கள். நீங்கள் உலகின் தலைமைப் பொறுப்பிற்கு வர வேண்டும் என்றால் நீங்கள் 90 மணி நேரம் பணியாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டார். இவரின் இந்த கருத்துக்கு எதிராக பல பிரபலங்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளனர். மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இந்த விவாதம் எதிர் திசையில் செல்கிறது என்று குறிப்பிட்டார். "70, 80, 90 மணி நேரம் பணியாற்றுவதில் ஒன்றும் இல்லை. 10 மணி நேரம் வேலை பார்த்தாலும் அதில் கிடைக்கும் முடிவு தான் முக்கியம். நீங்கள் உங்கள் குடும்பம், நண்பர்களுடன் நேரத்தை செலவிடவில்லை என்றால், நீங்கள் வாசிக்கவில்லை என்றால் உங்களால் எப்படி ஒரு சரியான முடிவை எடுக்க இயலும்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும்,"என்னுடைய மனைவி மிகவும் அற்புதமானவர். அவரை பார்த்துக் கொண்டிருக்கவும், அவருடன் நேரம் செலவிடவும் எனக்கு மிகவும் பிடிக்கும்," என்றும் குறிப்பிட்டார். ரசிகர்களுக்காக கார் ரேஸை விட்ட நடிகர் அஜித் - மீண்டும் களமிறங்கி வெற்றி பெற்றது எப்படி?8 மணி நேரங்களுக்கு முன்னர் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நீக்க பாஜக மேலிடம் தயாராகிறதா?13 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இது ஒன்றும் முதல் முறையல்ல இந்திய பெரும் நிறுவனங்களின் தலைவர்கள் இப்படி அதிக நேரம் உழைப்பதை ஆதரிக்கும் போக்கு முதல்முறையல்ல. ஏற்கனவே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழக அரசு கடந்த 2023ம் ஆண்டு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் சட்ட திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தது. அதற்கு தமிழகத்தில் செயல்பட்டு வந்த தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளே இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு அந்த மசோதாவை நிறுத்தி வைத்தது. சுப்ரமணியன் கூறுவதைப் போன்று பணியாற்றினால், வாரம் முழுவதும் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்திற்கும் மேல் பணியாற்றும் நிலைமை ஏற்படும். அதே நேரத்தில் ஒரு நாள் விடுப்புடன் ஒருவர் பணியாற்றும் சூழல் ஏற்பட்டால், நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் பணியாற்ற வேண்டும். 18 ஆண்டுகளாக சிறையில் உள்ள பின்லேடன் கூட்டாளியை விடுவிக்க மனைவி கோரிக்கை - அமெரிக்கா செவி சாய்க்குமா?13 ஜனவரி 2025 அஜித் குமார்: துபாய் ஹெச்24 கார் பந்தயத்தில் பெற்ற வெற்றி என்ன? பிரபலங்கள் கூறுவது என்ன?12 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இன்ஃபோசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி 70 மணி நேரம் இந்திய இளைஞர்கள் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார் "ஆதிக்கப் போக்கையே காட்டுகிறது" அமைப்புசாரா தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர், கீதா ராமகிருஷ்ணன் பேசும் போது, "வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டு பேசும் போக்கை நம்மால் காண முடிகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை பொருளாதாரத்தில் இந்தியா பின்னுக்கு தள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளில் பணி நேரம் 6 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ஏன் இந்த நிறுவனத்தினர் பின்பற்றக் கூடாது?" என்ற கேள்வியை எழுப்பினார். "வேலை நேரத்தை வெகுவாக குறைப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அறிவியல் ஆய்வுகளின் படி, அதிக நேர உழைப்பு அதிக உற்பத்தியை தராது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது அந்த நாடுகளில் அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, 6 மணி நேரம் வேலை வழங்கப்படுகிறது. அந்த 6 மணி நேரத்தையும் குறைக்க, முன்னேறிய நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்ற இந்த காலகட்டத்தில் 15 மணி நேரம் ஒருவரை பணியில் இருக்க சொல்வது மனித சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டது," என்று குறிப்பிட்டார். பணி நேரத்தை நீட்டிப்பதற்கு பதிலாக, பணியில் இருப்பவர்களுக்கு தேவையான சமூக பாதுகாப்பு திட்டங்களை இத்தகைய நிறுவனங்கள் நிறைவேற்றுகின்றனவா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும் என்று கூறுகிறார் கீதா. "இந்தியாவில் பல்வேறு அமைப்புசாரா தொழில்துறைகளில் பணியாற்றும் மக்களுக்கு ஓய்வூதியம், தொழிலாளர் வைப்பு நிதியெல்லாம் கிடைப்பதில்லை. வயதானவர்களுக்கு இங்கே வழங்கப்படும் ஓய்வூதியம் என்பது சில ஆயிரம் ரூபாய் மட்டும் தான். இந்த 70 மணி நேரம், 80 மணி நேரம் உழைப்பு என்பது எல்லாம், தனக்கென தனிப்பட்ட வாழ்க்கையை வாழாமல் மக்கள் இயந்திரம் போல் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஆதிக்கப்போக்கு" என்கிறார் கீதா. ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அரசுடன் முரண்படும் தேர்தல் ஆணையம்13 ஜனவரி 2025 லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ எவ்வாறு பற்றியது? கட்டுக்கடங்காமல் பரவ என்ன காரணம்? முழு விவரம்13 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவில் பல்வேறு அமைப்புசாரா தொழில்துறைகளில் பணியாற்றும் மக்களுக்கு ஓய்வூதியம், தொழிலாளர் வைப்பு நிதியெல்லாம் கிடைப்பதில்லை 90 மணி நேர வேலை சாத்தியமா? "இங்கு பணியாளர்களுக்கு சமமான வாய்ப்புகளே கிடைப்பதில்லை. அதனை நிவர்த்தி செய்தாலே பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலும்" என்று கூறுகிறார் சென்னை பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் திருநாவுக்கரசு. "இன்றும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கும், பாலியல் சிறுபான்மையினர், திருநங்கைகளுக்கும் வேலைகள் கிடைப்பதே சிக்கலாக உள்ளது. இன்று பணிக்கு வரும் பெண்களுக்கு இரட்டை வேலைப்பளு இருக்கிறது. அவர்கள் அலுவலகத்திலும் பணியாற்ற வேண்டும், வீட்டிலும் பணியாற்ற வேண்டும் என்று வரும் போது எப்படி ஒருவர் 90 மணி நேரம் பணியாற்ற இயலும்?" என்ற கேள்வியை முன்வைக்கிறார் திருநாவுக்கரசு. இயந்திரம் போல் பணியாற்றுவதால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துவிடும் என்று கூறுவது ஒரு தவறான கருத்தாக்கம் என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வோர் ஆண்டும் நம்முடைய நாட்டில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இத்தகைய நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை ஏன் உருவாக்கக் கூடாது என்று கேள்வி எழுப்புகிறார் திருநாவுக்கரசு. டொனால்ட் டிரம்ப் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்ற விரும்புவது ஏன்? அது சாத்தியமா?9 ஜனவரி 2025 கோவை: மாட்டிறைச்சி கடை போட்ட முஸ்லிம் தம்பதியை பாஜக நிர்வாகி மிரட்டினாரா? என்ன நடந்தது?9 ஜனவரி 2025 அதிகம், குறைவான வேலை நேரம் உள்ள நாடுகள் பூட்டான் நாட்டு மக்கள் வாரத்திற்கு சராசரியாக 54.4 மணி நேரம் பணியாற்றுகின்றனர் என்று கூறுகிறது சர்வதேச உழைப்பாளர் அமைப்பு (International Labour Organisation). அதனைத் தொடர்ந்து அமீரகத்தில் 50.9 மணி நேரமும், காங்கோவில் 48.6 மணி நேரமும், கத்தாரில் 48.0 மணி நேரமும் மக்கள் சராசரியாக பணியாற்றுகின்றனர். இந்திய ஊழியர்கள் வாரத்திற்கு 46.7 மணி நேரம் பணியாற்றுகின்றனர். மேலும் இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொகையில் 51% பேர் வாரத்திற்கு 49 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றுகிறார்கள். அதே நேரத்தில் வனுவாட்டுவில் ஒரு வாரத்திற்கு சராசரியாக மக்கள் 24.7 மணி நேரமே உழைக்கின்றனர். கிரிபாடி நாட்டில் 27.3 மணி நேரமும், மைரோனேசியா, ருவாண்டா நாட்டினர் 30.4 மணி நேரமும், சோமாலியாவில் 31.4 மணி நேரமும் மக்கள் உழைக்கின்றனர். நெதர்லாந்தில் 31.6 மணி நேரமும், கனடாவில் 32.1 மணி நேரமும் மக்கள் பணியாற்றுகின்றனர். இதில் கிரிபாதி, மைக்ரோனேசியா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் மேம்பட்ட வேலை-வாழ்க்கை (work-life) சமநிலை கொள்கைகளுக்காக அறியப்பட்டவை. டிரம்பை எச்சரிக்கும் பிரான்ஸ்: கிரீன்லாந்தை அமெரிக்கா ஆக்கிரமித்தால் ஐரோப்பாவால் தடுக்க முடியுமா?8 ஜனவரி 2025 மதுரை டங்ஸ்டன் திட்டம்: மத்திய அரசின் மறுஆய்வு அறிவிப்பு வந்த பின்னரும் போராட்டம் ஏன்? பிபிசி கள ஆய்வு8 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பூடான் மக்கள் வாரத்திற்கு சராசரியாக 54.4% மணி நேரம் பணியாற்றுகின்றனர் என்று கூறுகிறது சர்வதேச உழைப்பாளர் அமைப்பு பாதிப்புகள் என்ன? "ஞாயிறு அன்று மனைவியின் முகத்தைக் கூட பார்க்காமல் பணிக்கு வருமாறு கூறும் போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது," என்று தெரிவிக்கிறார் மன நல ஆலோசகர் அக்‌ஷயா. சென்னையில் மன நல ஆலோசனை மையத்தை நடத்தி வரும் அவர், ஒரு வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறுவது மக்களின் மன நலத்தை பெரிதும் பாதிக்கும் ஒன்று. இது ஆரோக்கியமான கருத்து இல்லை," என குறிப்பிடுகிறார். மோசமான வேலைச்சூழல் காரணமாக இளம் ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலமும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவதும் அவ்வபோது நடைபெற்று வருகிறது. அதிக வேலைப்பளு காரணமாக உடல் நலக் கோளாறு ஏற்பட்டு மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனமும் சர்வதேச உழைப்பாளர் அமைப்பும் அறிவித்துள்ளது. 2016-ஆம் ஆண்டில், வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கு மேலாக பணியாற்றிய நபர்களில் 3,98,000 பேர் பக்கவாதத்தாலும், 3,47,000 பேர் இதய நோயாலும் உயிரிழந்ததாக அறிவித்துள்ளது. அதிக நேரம் பணி செய்வதன் காரணமாக 2000 முதல் 2016-ஆம் ஆண்டு வரை இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42% ஆகவும், பக்கவாதத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19% ஆகவும் அதிகரித்துள்ளது என்றும் இந்த அமைப்புகள் கூறியுள்ளன. 35 மணி நேரம் முதல் 40 மணி நேரம் வரை பணியாற்றுபவர்களோடு ஒப்பிடுகையில், 55 மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாக பணியாற்றுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட 35% அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், இஸ்கிமிக் இதய நோய் ஏற்பட 17% வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு?8 ஜனவரி 2025 இஸ்ரோ தலைவராகும் வி.நாராயணன் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று சாதித்தது எப்படி?8 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிக வேலைப்பளு காரணமாக உடல் நலக் கோளாறு ஏற்பட்டு மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனமும் சர்வதேச உழைப்பாளர் அமைப்பும் அறிவித்துள்ளது இந்தியாவில் ஒரு நாளுக்கான வேலை நேர உச்சவரம்பு எவ்வளவு? 19-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் மக்கள் 12 முதல் 16 மணி நேரம் வேலை பார்த்து வந்தனர். 1817-ஆம் ஆண்டு "8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணி நேரம் ஓய்வு" என்ற புகழ்பெற்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார், ராபர்ட் அவன். ஆனால் பல பத்தாண்டுகளுக்குப் பிறகே அது பிரிட்டனில் சாத்தியமானது. தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக 8 மணி நேர வேலையை வலியுறுத்த, சட்டங்கள் இயற்றப்பட்டன. அமெரிக்கா 1868-ஆம் ஆண்டு, எட்டு மணி நேரம் தான் பணியாற்ற வேண்டும் என்ற சட்டத்தை இயற்றியது. பிரிட்டனில், பெக்டன் ஈஸ்ட் லண்டன் எரிவாயுத் தொழிற்சாலை ஊழியர்கள் தங்களின் வேலை நேரத்தை 18 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்ற நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். 1869-ஆம் ஆண்டு இந்த பாரிய போராட்டத்திற்கு பிறகு பிரிட்டனில் 8 மணி நேர பணிக்கான சட்டம் இயற்றப்பட்டது. சோவியத் ஒன்றியத்தில், 1917-ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சிக்குப் பிறகு இந்த சட்டம் இயற்றப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு உருவாக்கப்பட்டு, எட்டு மணி நேர வேலை குறித்தான விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. 1919 நவம்பர் 28ஆம் தேதி "ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அல்லது வாரத்திற்கு 48 மணி நேரம்" என்பதை தீர்மானமாக நிறைவேற்றியது சர்வதேச தொழிலாளர் அமைப்பு. பிரிட்டிஷ் இந்திய அரசாங்கமும் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. இருப்பினும் உடனடியாக இது அமலுக்கு வரவில்லை. பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தில் தொழிலாளர் துறை 1937-இல் தான் உருவாக்கப்பட்டது. 1942-இல் பி.ஆர். அம்பேத்கர் இந்திய வைஸ்ராயின் எக்ஸிக்யூட்டிவ் கவுன்சிலில் தொழிலாளர் துறைக்குப் பொறுப்பேற்றார். 1942 நவம்பர் 27ஆம் தேதி இந்திய தொழிலாளர் மாநாட்டின் ஏழாவது அமர்வு டெல்லியில் கூடிய போது, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் என்பதை அவர் அங்கே முன்மொழிந்தார். இந்த சட்டம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே முன்மொழியப்பட்டாலும் கூட, 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் மூலமே 9 மணி நேரம் பணி என்பது சட்டமாக்கப்பட்டது. சட்டத்தின் பிரிவு 54, 9 மணி நேரம் வேலை, அரை மணி நேரம் உணவு இடைவேளை என்பதையும், பிரிவு 51 வாரத்திற்கு 48 மணி நேரம் பணியாற்றுவதை உச்ச வரம்பாக்கியும் அறிவித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1dg5zg2ny0o
  22. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம்! 14 JAN, 2025 | 01:39 PM யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பித்த போராட்டம் திங்கட்கிழமை (13) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சட்டத்தரணி ந.காண்டீபன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் எனப்பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/203799
  23. பட மூலாதாரம்,XIQING WANG/BBC படக்குறிப்பு, குவாங்சோ அருகில் அமைந்திருக்கும் பன்யூ பகுதி ஷையன் கிராம் என்று அழைக்கப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, சீன செய்தியாளர், குவாங்சோ தெற்கு சீனாவின் 'பேர்ல்' நதிக்கரையில் அமைந்திருக்கும் துறைமுக நகரமான குவாங்சோவின் (Guangzhou) பல பகுதிகளில் தையல் இயந்திரங்களின் சத்தம் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருக்கும். அந்த தையல் இயந்திரங்களின் சத்தம், தொழிற்சாலைகளின் திறந்திருக்கும் ஜன்னல்கள் வழியாக, காலை துவங்கி, நள்ளிரவு வரை கேட்கும். மக்கள் அங்கு ஆயத்த ஆடைகளான டி-சர்ட், கால்சட்டை, மேலாடை, நீச்சல் ஆடைகள் ஆகியவற்றை தைத்து 150 நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். உலகின் மிகப்பெரிய ஆயத்த ஆடை விற்பனை நிறுவனமான ஷையனுக்கு (Shein) ஆதாரமாக திகழும் பல தொழிற்சாலைகள், பன்யூ என்ற நகரத்தில் செயல்பட்டு வருகிறது. இதனை ஷையன் கிராமம் என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். ஒரு மாதத்தில் 31 நாட்கள் வேலை இருந்தால், நான் 31 நாட்களும் பணியாற்றுவேன் என்று ஒரு தொழிலாளர் பிபிசியிடம் தெரிவித்தார். பலரும், அவர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் மட்டுமே விடுப்பு கிடைக்கும் என்று கூறுகின்றனர். பிபிசி இந்த ஷையன் கிராமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தது. இங்குள்ள 10 தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டோம். நான்கு உரிமையாளர்களிடம் பேசினோம். 20க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் பேசினோம். தொழிலாளர்களுடன் நேரத்தை செலவிட்டோம். சில விநியோகஸ்தர்களிடமும் உரையாடினோம். சாம்சங் போராட்டம் முடிந்த பிறகும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள் - என்ன நடக்கிறது? சாம்சங் இந்தியா: தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் - என்ன பிரச்னை? அரசு கூறுவது என்ன? உலகின் 90% வைரத்தை இங்கே பட்டை தீட்டினாலும் தொழிலாளர்கள் தற்கொலை செய்வது ஏன்? பிபிசி கள ஆய்வு தேசிய அளவில் 42%: ஜவுளி முதல் கார் உற்பத்தி வரை தமிழ்நாட்டுப் பெண்கள் நுழைந்து சாதித்தது எப்படி? மாபெரும் பேஷன் சாம்ராஜ்ஜியத்தின் இதயத்துடிப்பு, வாரத்திற்கு 75 மணி நேரம் தையல் இயந்திரங்களுடன் அமர்ந்து பணியாற்றும் மக்களின் உழைப்பு தான் என்பதை அறிந்து கொண்டோம். இந்த அதிக வேலை நேரம் சீன தொழிலாளர்கள் சட்டத்தை மீறுவதாகும். ஆனால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யும் தொழில் மையமான குவாங்சோவிலோ, நிகரற்ற தொழிற்சாலைகளைக் கொண்டிருக்கும் சீனாவிலோ, வாரத்திற்கு 75 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றுவது என்பது வழக்கத்திற்கு மாறான நிகழ்வு இல்லை. ஒரு காலத்தில் சீனாவைச் சேர்ந்த தொழில் நிறுவனமாக மட்டுமே அறியப்பட்ட ஷையன், வெறும் ஐந்தே ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஃபேஷன் நிறுவனமாக மாறிவிட்டது. அதிக நேரம் மக்கள் இங்கே உழைப்பது ஷையன் பற்றி புதிய கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்கிறது. குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தியதாக சர்ச்சை ஷையனின் மொத்த மதிப்பானது 36 பில்லியன் யூரோக்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டனின் பங்கு வர்த்தகத்தில் செயல்பட ஆர்வம் காட்டிவருகிறது இந்த நிறுவனம். ஆனாலும் இந்நிறுவனம் அதன் தொழிலாளர்களை எவ்வாறு நடத்துகிறது என்பது தொடர்பான பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, சீன தொழிற்சாலைகளில் குழந்தைகள் பணியாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டது. பிபிசியுடனான நேர்காணலுக்கு மறுப்பு தெரிவித்த அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஷையன் நிறுவனம், "அதன் விநியோக சங்கிலியில் உள்ள அனைத்து ஊழியர்களையும் நியாயமாகவும் மரியாதையாகவும் நடத்த உறுதி பூண்டுள்ளோம்," என்று குறிப்பிட்டிருந்தது. நிர்வாகம் மற்றும் இணக்கத்தை வலுப்படுத்த பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது அந்த நிறுவனம். "நாங்கள் ஊதியத்திற்கான மிக உயர்ந்த தரத்தை உருவாக்க முயற்சி செய்கிறோம். இந்த விநியோகச் சங்கிலியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் எங்களின் நடத்தை நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்," என்று குறிப்பிட்டிருந்தது. ஷையனின் வெற்றியானது அதன் உற்பத்தியின் அளவைப் பொறுத்தது. ஆன்லைனில் சரக்குகள் லட்சக்கணக்கில் விற்கப்படுகிறது. 10 யூரோக்களுக்கு ஆடைகள், 6 யூரோக்களுக்கு ஸ்வெட்டர்கள் என்று பல சலுகைகளையும் அது வழங்கி வருகிறது. ஹெச் & எம், ஸாரா மற்றும் பிரிட்டனின் பிரைமார்க் போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி அதன் வருவாயை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இத்தகைய சலுகை விலை விற்பனை, ஷையன் கிராமம் போன்ற கிராமங்களால் சாத்தியமாகிறது. இப்பகுதியில் மொத்தம் 5,000 தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஷையன் நிறுவனத்திற்கு ஆடைகளை விநியோகம் செய்கின்றன. தையல் இயந்திரங்கள், துணி மூட்டைகள் போன்றவற்றை கையாள கட்டிடங்களில் போதுமான காலியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. 'டெலிவரிகள்' மற்றும் ஆடைகளை சேமிப்பதற்காக தொடர்ந்து நடைபெறும் பணிகளை கருத்தில் கொண்டு அந்த தொழிற்சாலைகளின் தரைத்தள கதவுகள் திறந்தே உள்ளன. நேரம் செல்லச் செல்ல கிடங்கில் உள்ள அலமாரிகளில், ஐந்தெழுத்துகள் கொண்ட லேபிளுடன் பிளாஸ்டிக் பைகள் நிரம்ப ஆரம்பிக்கின்றன. தரைத்தளத்தில், பெரிய லாரிகள் மூலம் வண்ண துணி ரகங்கள் கொண்டு வரப்பட்டுக் கொண்டே இருக்க, அங்கே பணியாற்றும் மக்கள் இரவு பத்து மணிக்கும் மேலாக, தையல் இயந்திரங்கள் முன்பு அமர்ந்து தைத்துக் கொண்டிருக்கின்றனர். பேஸ்புக் காதலியைத் தேடி எல்லை தாண்டி பாகிஸ்தான் சென்ற இந்திய இளைஞர் - என்ன ஆனார்?7 ஜனவரி 2025 'விடாமுயற்சி' தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?4 ஜனவரி 2025 பட மூலாதாரம்,XIQING WANG/ BBC படக்குறிப்பு, தொழிற்சாலைகளுக்கு வந்து கொண்டே இருக்கும் துணிகள் 12 மணி நேரம் பணியாற்றும் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 10, 11, 12 மணி நேரம் வேலை பார்ப்போம் என்று கூறுகிறார், பெயர் கூற விரும்பாத 49 வயது பெண்மணி. அவர் சியாங்ஷி பகுதியை சேர்ந்தவர். "ஞாயிறு அன்று மூன்று மணி நேரம் குறைவாக பணியாற்றுவோம்," என்று அவர் குறிப்பிடுகிறார். அவர் பாதையில் நின்று நம்மிடம் பேசும் போது, ஒரு சிலர் கால் சட்டை ஒன்றை தைத்துக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பணி குறித்து தகவல் பலகையில் பார்த்துக் கொண்டிருந்தனர். பெரிய அல்லது சிறிய அளவிலான அளவில் 'ஆர்டர்கள்' வரும் போது, அதனை உருவாக்கும் வகையில் இந்த தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இப்போது தைக்கப்படும் சினோஸ் வகையான ஆடைக்கு நல்ல வரவேற்பு இருந்தால், 'ஆர்டர்களும்' அதிகரிக்கும், உற்பத்தியும் அதிகரிக்கும். உற்பத்தியை அதிகரிக்க நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை போதவில்லை என்றால் தற்காலிக பணியாளர்களை தொழிற்சாலைகள் நியமிக்கும். சியாங்ஷியில் இருந்து குறைந்த கால ஒப்பந்தத்தை தேடிக் கொண்டிருக்கும் ஒரு புலம் பெயர் தொழிலாளிக்கு இது நல்வாய்ப்பாக இருக்கும். கும்பமேளா: பல லட்சம் பேர் புனித நீராடுவது ஏன்? பிரயாக்ராஜின் சிறப்பு, முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரம்9 மணி நேரங்களுக்கு முன்னர் லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: வீடுகள், பங்களாக்களை இழந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் யார்? என்ன சொல்கின்றனர்?13 ஜனவரி 2025 பட மூலாதாரம்,XIQING WANG/ BBC படக்குறிப்பு, பன்யூவில் இரவு நேரங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் "குறைவாகவே சம்பாதிக்கின்றோம். இங்கு விலைவாசி மிகவும் அதிகம்," என்று கூறுகிறார் அந்த பெண்மணி. தன்னுடைய சொந்த ஊரில் தாத்தா, பாட்டியுடன் வசித்து வரும் அவரின் இரண்டு குழந்தைகளுக்கும் பணம் அனுப்ப போதுமான அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறார். ஒரு ஆடைக்கு இவ்வளவு ஊதியம் என்ற அடிப்படையில் தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு ஆடையை தைப்பதற்கு இருக்கும் சவால்களைப் பொறுத்து அதற்கான ஊதியமும் மாறுபடும். ஒரு எளிமையான டி-சர்ட் என்றால் அதற்கு ஒன்று அல்லது இரண்டு யுவான்கள் (சீன பணம்) வழங்கப்படும். "ஒரு மணி நேரத்திற்கு என்னால் டஜன் டி-சர்ட்டுகளை தைக்க இயலும்," என்கிறார் அந்த பெண்மணி. சினோஸில் உள்ள தையலை சரிபார்ப்பது ஒரு முக்கியமான பணி என்று அவர் கூறுகிறார். அவரைச் சுற்றியுள்ள அனைவரும், ஒரு மணி நேரத்தில் அவர்களால் எந்தெந்த ஆடைகளை தைக்க இயலும்? ஒவ்வொன்றுக்கும் வழங்கப்படும் ஊதியம் என்ன? ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பணம் சம்பாதிக்க இயலும் என்று கணக்கிட்டனர். பன்யூவில் உள்ள தெருக்கள் தொழிலாளர் சந்தைகளாகவே செயல்படுகின்றன. அதிகாலையில் வேலையாட்களும், இருசக்கர வாகனங்களும் காலை உணவு வண்டிகள், சோயாபீன்ஸ் பால் விற்கும் வண்டிகள், சிக்கன் மற்றும் கோழி முட்டைகளை விற்பனை செய்யும் விவசாயிகளை கடந்து செல்கின்றனர். சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு?8 ஜனவரி 2025 இஸ்ரோ தலைவராகும் வி.நாராயணன் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று சாதித்தது எப்படி?8 ஜனவரி 2025 பட மூலாதாரம்,XIQING WANG/BBC படக்குறிப்பு, ஒரு மணி நேரத்திற்கு ஊழியர்கள் தங்களால் எவ்வளவு சம்பாதிக்க இயலும் என்பதை கணக்கிடுவார்கள் சட்டத்திற்கு புறம்பாக நீடிக்கும் பணி இங்கு வேலை நேரமானது காலை 8 மணிக்கு ஆரம்பித்து இரவு பத்து மணியை தாண்டி செல்கிறது என்பதை பிபிசி கண்டறிந்தது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த, உரிமைகளுக்காக போராடும் குழுவான பப்ளிக் ஐ அமைப்பு வெளியிட்ட அறிக்கையோடு இது ஒத்துப்போகிறது. ஷையன் நிறுவனத்திற்கு ஆடைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பணியாற்றிய 13 ஊழியர்களிடம் நடத்திய நேர்காணலின் அடிப்படையில் பப்ளிக் ஐ இந்த அறிக்கையை வெளியிட்டது. தொழிற்சாலைகளில் பணியாற்றும் பலர், மிகை நேரமாக பணியாற்றுகின்றனர் என்று கண்டறிந்தது அக்குழு. மிகை நேரம் இல்லாமல் பணியாற்றும் போது கிடைக்கும் ஊதியமானது 2,400 யுவான் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருந்தது. ஆசியா ஃப்ளோர் வேஜ் அல்லியன்ஸ், வாழ்வதற்கு தேவையான வருமானம் என்று நிர்ணயித்திருக்கும் 6512 யுவான்களைக் காட்டிலும் இது குறைவு. ஆனால் பிபிசியிடம் பேசிய பல பணியாளர்கள், ஒரு மாதத்திற்கு 4000 முதல் 10,000 யுவான்கள் வரை சம்பாதிப்பதாக தெரிவித்தனர். "இவர்களின் பணி நேரம் என்பது அசாதாரணமானது இல்லை. ஆனால் நிச்சயமாக சட்டத்திற்கு புறம்பானது. அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல்," என்று அந்த குழுவில் பணியாற்றும் டேவிட் ஹாச்ஃபீல்ட் கூறுகிறார். "இது உழைப்புச்சுரண்டலின் தீவிர போக்கு. இது வெளிச்சத்திற்கு வர வேண்டும்," என்றார் ஹாச்ஃபீல்ட். சீன தொழிலாளர்கள் சட்டத்தின்படி, ஒரு வாரத்திற்கு சராசரியான பணி நேரம் என்பது 44 மணி நேரத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது. தொழிலாளர்கள் ஓய்வு பெற வாரத்திற்கு ஒருமுறையாவது விடுப்பு வழங்குவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்டம் வலியுறுத்துகிறது. இந்த குறிப்பிட்ட வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டுமென்றால் அதற்கு காரணங்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் குறிப்பிடுகிறது. மதுரை டங்ஸ்டன் திட்டம்: மத்திய அரசின் மறுஆய்வு அறிவிப்பு வந்த பின்னரும் போராட்டம் ஏன்? பிபிசி கள ஆய்வு8 ஜனவரி 2025 டிரம்பை எச்சரிக்கும் பிரான்ஸ்: கிரீன்லாந்தை அமெரிக்கா ஆக்கிரமித்தால் ஐரோப்பாவால் தடுக்க முடியுமா?8 ஜனவரி 2025 பட மூலாதாரம்,XIQING WANG/BBC படக்குறிப்பு, ஒரு டி-சர்ட் தைக்க அவர்களுக்கு ஒரு டாலருக்கும் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது ஷையனின் வெற்றி அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்துள்ளது ஷையனின் தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் இருந்தாலும், அநேக ஆடைகள் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. சீன நிறுவனங்கள் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்கும் அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்துள்ளது ஷையனின் வெற்றி. வெளியுறவுத்துறை செயலாளராக டொனால்ட் டிரம்பால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மார்கோ ரூபியோ ஜூன் மாதம், சீனாவுடனான ஷையன் நிறுவனத்தின் உறவு கவலை அளிப்பதாக தெரிவித்தார். அடிமைத்தனம், உழைப்பை சுரண்டுவது, மோசமான சூழலில் பணியாற்றுவது, வர்த்தக தந்திரங்கள் ஆகியவை தான் ஷையனின் வெற்றிக்கு காரணம் என்று கூறினார். ரூபியோவின் இந்த கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் குவாங்சோவில் பலரின் வாழ்க்கை முறை, நீண்ட வேலை நேரம் கொண்டதாக மாறியுள்ளது. இது நியாயமற்றது மற்றும் சுரண்டல் போக்கைக் கொண்டது என்று உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. பட மூலாதாரம்,XIQING WANG/BBC படக்குறிப்பு, நாங்கள் பார்வையிட்ட தொழிற்சாலைகளில் போதுமான வெளிச்சம் இருந்தது ஒரு வேலை நாளை, அங்கே கேட்கும் தையல் இயந்திரத்தின் சத்தம் கொண்டு தீர்மானிக்கலாம். உணவு இடைவேளையின் போது மட்டுமே அது நிற்கும். அப்போது பணியாளர்கள் தட்டும், கையில் சாப்ஸ்டிக்ஸுடனும் உணவகத்தில் சாப்பாடு வாங்க நீண்ட வரிசையில் நிற்பார்கள். உட்கார்ந்து உணவு உண்ண இடம் இல்லையென்றால் தெருவில் நின்று உண்பார்கள். "நான் நாற்பது ஆண்டுகளாக இங்கே பணியாற்றி வருகிறேன்," என்று கூறுகிறார் 20 நிமிடம் உணவுக்காக வெளியே வந்த பெண். நாங்கள் பார்வையிட்ட தொழிற்சாலைகள் நெரிசலுடன் இல்லை. போதுமான வெளிச்சம் உள்ளது. தொழிற்சாலைகளுக்கான மின்விசிறி அங்குள்ள சூழலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டதாக இரண்டு வழக்குகள் பதிவான சூழலில், சிறுவர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் உடனே புகாரளிக்க வலியுறுத்தி பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,XIQING WANG/BBC படக்குறிப்பு, பன்யூவில் செயல்படும் ஒரு தொழிற்சாலையின் உள்புறம் இது அவர்களின் நற்பெயர் பற்றிய பிரச்னை லண்டன் பங்குச் சந்தையில் தங்களின் நிறுவனத்தை பட்டியலிட நிறுவனம் முயற்சி செய்து வருவதால், ஷையன் அதன் விநியோகஸ்தர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. "இது அவர்களின் நற்பெயரைப் பற்றியது," என்று குறிப்பிடுகிறார் ஷெங் லு. அவர் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் ஃபேஷன் மற்றும் ஆடை ஆய்வுகள் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். "ஷையன் ஒரு ஐ.பி.ஓவை வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டால், அது ஒரு கண்ணியமான நிறுவனம் என்று அங்கீகரிக்கப்பட்டிருப்பதை குறிப்பதாகும். ஆனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தக்க வைக்க அந்த நிறுவனம் சில பொறுப்புகளை ஏற்று தான் ஆக வேண்டும்," என்று தெரிவித்தார். ஷையன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் இருந்து பருத்தியை பெறுகிறது என்ற குற்றச்சாட்டு தான். உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினரை கட்டாயப்படுத்தி இந்த பகுதியில் பருத்தி விளைவிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதனை பெய்ஜிங் மறுத்தாலும், ஒரு காலத்தில் சிறந்த பருத்தி விளையும் பகுதி என்ற புகழைப் பெற்ற ஜின்ஜியாங், தன்னுடைய மதிப்பை இழந்தது. இந்த விமர்சனத்தைச் சமாளிப்பதற்கு இருக்கும் ஒரே வழி ஷையன் இன்னும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதுதான் என்கிறார் ஷெங். "தொழிற்சாலைகள் பட்டியலை முழுமையாக வெளியிடாத வரையில், விநியோகச் சங்கிலியை பொதுமக்களுக்கு வெளிப்படையானதாக மாற்றும் வரையில், ஷையனுக்கு இது மிகவும் சவாலானதாக இருக்கும்," என்றார் ஷெங். இந்த விநியோக சங்கிலி முழுமையாக சீனாவில் ஒருவகையில் நன்மை. ஏன் என்றால் வெகு சில நாடுகளே முழுமையான விநியோக சங்கிலியை அந்தந்த நாடுகளுக்குள் வைத்துள்ளது. சீனாவிடம் இது இருக்கிறது என்பதால் அதனுடன் யாராலும் போட்டியிட இயலாது. வியட்நாம் மற்றும் வங்கதேசம் போன்ற போட்டி நாடுகள், துணிகளை தயாரிக்க சீனாவில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்கின்றன. ஆனால் சீன தொழிற்சாலைகள் துணியிலிருந்து பொத்தான்கள் வரை அனைத்திற்கும் உள்ளூர் வளங்களையே நம்பியுள்ளன. எனவே பலவிதமான ஆடைகளை தயாரிப்பது எளிது. அதனை விரைவாக செய்தும் முடிக்க இயலும். பட மூலாதாரம்,XIQING WANG/BBC படக்குறிப்பு, பன்யூவில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகள் சீனாவின் விநியோக சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கிறது. செலவுகளை குறைக்க பணியாளர்களை குறைக்கும் தொழிற்சாலைகள் ஷையனுக்கு இது நன்றாகவே செயல்படுகிறது. ஏன் என்றால் அதன் 'அல்காரிதம்' தான் 'ஆர்டர்களை' தீர்மானிக்கிறது. ஆன்லைனில் ஆடைகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஒரே ஆடையை பலமுறை 'க்ளிக்' செய்தாலோ, ஒரே ஸ்வெட்டரை பல முறை பார்த்தாலோ, அத்தகைய ஆடைகளை தொழிற்சாலைகள் அதிகமாகவும், விரைவாகவும் உருவாக்க ஆடை நிறுவனங்கள் வேண்டுகோள் வைக்கும். குவாங்சோவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இது சவால் மிக்கதாக இருக்கும். ஷையன் நிறுவனத்தில் நன்மை தீமை என இரண்டும் உள்ளது. ஆர்டர்கள் மிகப்பெரியதாக இருக்கும் என்பது நல்லது. ஆனால் லாபம் மிகவும் குறைவாகவும், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாகவும் இருக்கும். ஷையனின் அளவு, செல்வாக்கை கருத்தில் கொண்டால், பேரம் பேசுவது கடுமையானதாக இருக்கும். அதனால் செலவீனத்தைக் குறைக்க தொழிற்சாலை உரிமையாளர்கள் பிற வழிகளை நாடுகின்றனர். இது இறுதியில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க செய்கிறது. "ஷையனுக்கு முன்புவரை ஆடைகளை சொந்தமாக உற்பத்தி செய்து விற்பனை செய்தோம்," என்கிறார் மூன்று தொழிற்சாலைகளின் உரிமையாளர். "செலவு, விலை மற்றும் லாபம் என அனைத்தையும் எங்களால் அப்போது முடிவு செய்ய முடியும். ஆனால் தற்போது ஷையன் விலையை கட்டுப்படுத்துகிறது. எனவே செலவினங்களைக் கட்டுப்படுத்த பிற வழிகளை யோசிக்க வேண்டிய நிலை ஏற்படும்," என்று அவர் தெரிவித்தார். ஆனால் ஆர்டர்கள் அதிகரிக்கும் போது அது கூடுதல் பலன் தான். ஷிப்மேட்ரிக்ஸ் என்ற லாஜிஸ்டிக்ஸ் ஆலோசனை நிறுவனத்தின் தரவுகளின் படி, ஷையன் நிறுவனம் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேக்கேஜ்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகிறது. கேரளா: தாய், இரட்டை குழந்தை கொலை - 19 ஆண்டுக்கு பிறகு ஏ.ஐ மூலம் துப்பு துலங்கியது எப்படி?14 ஜனவரி 2025 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? வாக்குகள் சீமானுக்கு போகுமா?14 ஜனவரி 2025 பட மூலாதாரம்,XIQING WANG/ BBC படக்குறிப்பு, சில தொழிற்சாலைகள் இரவும் திறக்கப்பட்டுள்ளது. பலர் நள்ளிரவு வரை அங்கே பணியாற்றுகின்றனர். நள்ளிரவு வரை செயல்படும் தொழிற்சாலைகள் ஷையன், ஃபேஷன் உலகின் ஒரு தூண் என்று கூறுகிறார் விநியோகஸ்தரான குவோ க்யூங் இ. "அந்த நிறுவனம் துவங்கும் போது நான் என்னுடைய பணியை துவங்கினேன். அதன் வளர்ச்சியை நான் பார்த்தேன். உண்மையில் இது ஒரு சிறந்த நிறுவனமாக செயல்படுகிறது. வருங்காலத்தில் இது மிகவும் பலம் அடையும். ஏன் என்றால் அந்த நிறுவனம் சரியான நேரத்தில் சம்பளத்தை வழங்கிவிடுகிறது. அதனால் தான் இது மிகவும் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக இருக்கிறது" என்றார். "எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி அன்று சம்பளம் வழங்க வேண்டும். லட்சமோ, கோடியோ, எதுவாக இருந்தாலும் அந்த பணம் சரியான நேரத்தில் எங்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது," என்றார். ஷையன் தொழிற்சாலையில் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் பணியாற்றுவது என்பது பல உழைப்பாளர்களுக்கு ஆனந்தமான ஒன்று அல்ல. சிலருக்கு இது பெருமையான விஷயமாக இருக்கிறது. "உலகுக்கு, சீனர்களாகிய எங்களின் பங்களிப்பு இது," என்று கூறுகிறார் 33 வயது பெண்மணி. தன்னுடைய அடையாளத்தை வெளியிட விரும்பாத அவர், காங்டாங்கில் (Guangdon) உள்ள ஷையன் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மாலை முடிந்து இரவு படரும் வேளையில், தொழிலாளர்கள் அவர்களின் இரவு உணவை முடித்துக் கொண்டு மீண்டும் தொழிற்சாலைக்குள் வந்து கொண்டிருந்தனர். வேலை பார்க்கும் நேரம் மிகவும் அதிகம் என்பதை ஒப்புக் கொள்ளும் அந்த மேற்பார்வையாளர், "நாங்கள் ஒவ்வொருவரும் நன்றாக பழகத் துவங்கிவிட்டோம். ஒரு குடும்பம் போல் செயல்படுகிறோம்," என்று கூறினார். சில மணி நேரம் கழித்து தொழிலாளர்கள் அவர்களின் வீடுகளுக்கு திரும்பிச்செல்கின்றனர். அந்த இரவிலும் பல வீடுகளில் மின்விளக்கு எரிந்த வண்ணம் இருந்தது. சிலர் நள்ளிரவு வரை பணியில் ஈடுபடுவார்கள் என்று ஒரு தொழிற்சாலையின் உரிமையாளர் கூறுகிறார். அவர்களுக்கு நிறைய சம்பாதிக்க வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c4g9lg3y4ylo
  24. Published By: DIGITAL DESK 2 14 JAN, 2025 | 02:33 PM (நமது நிருபர்) இலங்கைக்கு வந்த இஸ்ரேலியர்களுக்கு எதிராக ஏற்கனவே கூறப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரியுள்ள தேசிய ஷுரா சபையானது, இஸ்ரேலிய வீரர்களுக்கான விசா வழங்குதலை இலங்கை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இலங்கையில் இஸ்ரேலிய பிரஜைகள் தொடர்பான அவதானங்களும் சமூக நல்லிணக்கத்திலும் தேசிய பாதுகாப்பிலும் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படும் பாதிப்பும் என்ற தலைப்பில் தேசிய ஷுரா சபையின் பொதுச்செயலாளர் ரஷீத் எம். இம்தியாஸ் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/203801
  25. 14 JAN, 2025 | 01:54 PM நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் தைப்பொங்கல் பண்டிகையினை இன்று செவ்வாய்க்கிழமை (14) தமிழர்கள் சிறப்பாக கொண்டாடினர். உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் தமிழர்கள் ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் நாட்டிலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன. கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன. மன்னார் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் கத்தோலிக்க தமிழ் மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட தைப் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது. மேலும் வர்த்தக நிலையங்கள், நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட தோடு விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் பொங்கி மக்கள் மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். கண்டி கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட சமய வழிபாடு கோயில் அறங்காவலர் கிருஸ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. காலையில் பொங்கல் நிகழ்வுகளுடன் விசேட சமய வழிபாடுகள் இடம்பெற்றன. பக்த அடியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) சிறப்பு பொங்கல் வழிபாடு இடம்பெற்றது. வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள் அதன் பிரதம குரு ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள் தலமையில் இன்று இடம் பெற்றது. புத்தளம் தைப்பொங்கள் விஷேடப் பூஜை புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டது புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பொங்கள் விஷேட பூஜைகள் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ அம்பலவானன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. வவுனியா உழவர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றன. அதற்கிணங்க, வவுனியாவின் பிரதான ஆலயங்களில் ஒன்றாகிய கந்தசாமி ஆலயத்தில் புதுப் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் இடம்பெற்றதுடன், ஆலய பிரதம குரு தலைமையில் விசேட பூசையும் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/203792

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.