Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் அறிக்கையை டென்மார்க் பிரதமர் மெட் ஃபெட்ரிக்சன் நிராகரித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், லோரா கோஸி (கோபன்ஹேகன்), ராபர்ட் கிரீனால் (லண்டன்) பதவி, பிபிசி செய்திகள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சமீபத்திய நாட்களாக ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியும், உலகின் மிகப் பெரிய தீவுமான கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டிவருகிறார். 2019-ஆம் ஆண்டு தனது முதல் பதவிக் காலத்தின் போது டிரம்ப், கிரீன்லாந்தை வாங்கும் எண்ணத்தை முதல்முறையாக வெளிப்படுத்தினார். இந்த வாரம் அதற்கு ஒரு படி மேலே சென்ற அவர், கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா தனது பொருளாதார அல்லது ராணுவ வலிமையை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மறுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் விருப்பம் குறித்து கருத்து தெரிவித்த டென்மார்க் மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க விரும்புவது ஏன்? - அங்கு என்ன உள்ளது டிரம்பை எச்சரிக்கும் பிரான்ஸ்: கிரீன்லாந்தை அமெரிக்கா ஆக்கிரமித்தால் ஐரோப்பாவால் தடுக்க முடியுமா? டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க விரும்புவது ஏன்? அவரது உத்தி என்ன? அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அதிபர் ஆவதால் இந்தியா சந்திக்கப் போகும் சிக்கல்கள் என்ன? கிரீன்லாந்து அதன் மக்களுக்கு சொந்தமானது என்றும் அது விற்பனைக்கு இல்லை என்றும் கிரீன்லாந்து தன்னாட்சிப் பிரதேச பிரதமர் மூய்ச் பி ஏகா (Múte B. Egede) கடந்த மாதம் தெரிவித்தார். அனைத்திற்கும் மேலாக இரண்டு நேட்டோ நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய பிரதேசம் தொடர்பான சர்ச்சை ஏற்பட்டு இந்த அசாதாரணமான சூழ்நிலை எவ்வாறு எழுந்தது? 80 சதவிகிதம் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும் இந்தப் பகுதி ஏராளமான கனிம வளங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 300 ஆண்டுகளாக டென்மார்க் ஆளுகையின் கீழ் இருக்கும் கிரீன்லாந்தின் மக்கள் தொகை 56 ஆயிரம். இந்த நடப்பு சூழ்நிலை இவர்களின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும்? கிரீன்லாந்தின் வருங்காலம் பற்றிய நான்கு சாத்தியக்கூறுகளை இங்கே நாம் ஆராய்வோம். கேரளாவில் மாணவி பாலியல் வன்கொடுமை, 64 பேரில் 20 பேர் கைது - 5 ஆண்டு கொடூரம் அம்பலமானது எப்படி?12 ஜனவரி 2025 கோவை: மஞ்சளாக மாறிய நிலத்தடி நீர், துரத்தியடிக்கும் துர்நாற்றம் – வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் பாதிப்புகள்12 ஜனவரி 2025 1. கிரீன்லாந்து மீது டிரம்ப் ஆர்வம் இழக்கலாம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பின் மகன் டிரம்ப் ஜூனியர் சமீபத்தில் கிரீன்லாந்து சென்றிருந்தார் டிரம்பின் அறிக்கை வெறும் பாசாங்கு என்று சில ஊகங்கள் கிளம்பியுள்ளன. இந்தப் பிராந்தியத்தில் தங்கள் செல்வாக்கை அதிகரிக்க சீனாவும் ரஷ்யாவும் முயற்சி செய்துவரும் நிலையில், கிரீன்லாந்தின் பாதுகாப்பை அதிகரிக்க டென்மார்க்கை ஊக்குவிக்கும் வகையில் இது செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. கடந்த மாதம் டென்மார்க் கிரீன்லாந்திற்கு 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ராணுவ உதவித்தொகுப்பை அறிவித்தது. இந்த உதவித் தொகுப்பை வழங்குவது தொடர்பான முடிவுகள் டிரம்பின் அறிக்கைகளுக்கு முன்பே இறுதிசெய்யப்பட்டது. ஆனால் டிரம்பின் அறிக்கை வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு டென்மார்க்கின் பாதுகாப்பு அமைச்சரால் "விதியின் விளையாட்டு" என்று வர்ணிக்கப்பட்டது. "ஆர்க்டிக்கில் டென்மார்க் தனது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் அல்லது அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அமெரிக்காவை அனுமதிக்க வேண்டும் என்பதே டிரம்ப் கூறியதில் முக்கியமான விஷயம்," என்று டென்மார்க்கின் பாலிடிகன் செய்தித்தாளின் தலைமை அரசியல் செய்தியாளர் எலிசபெத் ஸ்வெயின் குறிப்பிட்டார். 'அமெரிக்க அதிபர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு முன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான டிரம்பின் முயற்சி இது' என்று ராயல் டேனிஷ் டிஃபென்ஸ் கல்லூரியின் இணை பேராசிரியரான மார்க் ஜேக்கப்சன் கருதுகிறார். அதே நேரத்தில் "கிரீன்லாந்து இந்த வாய்ப்பை சுதந்திரத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாகவும், சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பயன்படுத்துகிறது," என்றார் அவர். டிரம்ப் கிரீன்லாந்தின் மீதான ஆர்வத்தை இனி இழந்தாலும் கூட, அவர் (ட்ரம்ப்) இந்த விவகாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்று ஜேக்கப்சன் தெரிவித்தார். கிரீன்லாந்தின் சுதந்திரம் பற்றி பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது இந்த விவாதம் எதிர் திசையிலும் செல்லக்கூடும் என்று சிலர் கூறுகிறார்கள். 3 அடி அகல நிலக்கரிச் சுரங்கத்தில் 295 அடி ஆழத்தில் சிக்கிய இந்த தொழிலாளி உயிர் பிழைத்தது எப்படி?12 ஜனவரி 2025 டொனால்ட் டிரம்ப் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்ற விரும்புவது ஏன்? அது சாத்தியமா?9 ஜனவரி 2025 2. சுதந்திரம் குறித்த வாக்கெடுப்புக்கு கிரீன்லாந்து விருப்பம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1951-ஆம் ஆண்டின் ஒப்பந்தம் மூலம் கிரீன்லாந்தின் மீது டென்மார்க் தனது இறையாண்மையை நிறுவியது. தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்ற ஒருமித்த கருத்து கிரீன்லாந்தில் நிலவுகிறது. கிரீன்லாந்து இதை ஆதரித்து வாக்களித்தால் அதனை டென்மார்க் ஆதரிக்கும் என்றும் மக்கள் நம்புகின்றனர். சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நலப் பணிகளுக்கான மானியங்களை டென்மார்க் தொடர்ந்து அளிக்கும் என்ற உத்தரவாதம் கிரீன்லாந்து மக்களுக்கு கிடைக்கும் வரை இத்தகைய வாக்களிப்பு நடக்கும் சாத்தியக்கூறு இல்லை. "கிரீன்லாந்தின் பிரதமர் இப்போது கோபமாக இருக்கலாம். ஆனால் அவர் உண்மையில் ஒரு பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தால், கிரீன்லாந்தின் பொருளாதாரம் மற்றும் நலத்திட்டங்களை அவர் எவ்வாறு பாதுகாப்பார் என்பதற்கான ஒரு வலுவான வாதத்தை அவர் முன்வைக்க வேண்டும்" என்று டேனிஷ் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான உல்ரிக் கெய்ட் பிபிசியிடம் கூறினார். இந்த விவகாரத்தில் சாத்தியமான தீர்வு என்பது, அமெரிக்கா தற்போது பசிபிக் நாடுகளான மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா மற்றும் பலாவ் நாடுகளுடன் சுதந்திர கூட்டமைப்பாக செயல்படுவது போன்று டென்மார்க்கும் செயல்படுவது. கிரீன்லாந்து மற்றும் ஃபரோ தீவுகள் இரண்டிற்கும் இதுபோன்ற அந்தஸ்தை டென்மார்க் முன்பு எதிர்த்தது. ஆனால், டென்மார்க்கின் தற்போதைய பிரதமர் மெட் ஃபெட்ரிக்சன் அதைப் பற்றி அவ்வளவு உறுதியாக இல்லை என்று முனைவர் கெய்ட் கூறுகிறார். "கிரீன்லாந்தின் வரலாற்று அனுபவத்தைப் பற்றிய டென்மார்க்கின் புரிதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது மேம்பட்டுள்ளது. டென்மார்க் இப்போது தன் காலனித்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது," என்று அவர் கூறினார். சமீபத்திய விவாதங்கள், "டென்மார்க் ஆர்க்டிக்கில் நீடித்திருப்பது நல்லது. கிரீன்லாந்துடனான உறவு பலவீனமாக இருந்தாலும் கூட அதனுடன் ஏதோ ஒருவித உறவைப் பேண வேண்டும் என்று சொல்ல ஃபெட்ரிக்சனை வற்புறுத்தக் கூடும்," என அவர் மேலும் கூறினார். ஆனால் டென்மார்க்கின் பிடியில் இருந்து விடுபடுவதில் கிரீன்லாந்து வெற்றி பெற்றாலும் அமெரிக்காவிடமிருந்து விடுபட முடியாது என்பது சமீபத்திய ஆண்டுகளில் தெளிவாகியுள்ளது. இரண்டாம் உலகப்போரில் கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட பிறகு அமெரிக்கா, அதன் பிறகு உண்மையில் தீவை விட்டு முழுமையாக வெளியேறவில்லை. அமெரிக்கா தனது பாதுகாப்பிற்கு இது மிகவும் முக்கியமானது என்று கருதுகிறது. 1951ஆம் ஆண்டின் ஒப்பந்தம் கிரீன்லாந்தின் மீது டென்மார்க்கின் இறையாண்மையை நிறுவியது. ஆயினும் அமெரிக்கா விரும்பிய அனைத்தும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டன. கிரீன்லாந்தின் அதிகாரிகள் கடந்த இரண்டு அமெரிக்க அதிபர்களின் நிர்வாகங்களுடன் தொடர்பில் இருந்ததாக டாக்டர் கெய்ட் கூறினார். "அமெரிக்கா அங்கிருந்து ஒருபோதும் வெளியேறாது என்பதை இப்போது கிரீன்லாந்து மக்கள் அறிவார்கள்" என்று அவர் கூறினார். தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தையால் பாகிஸ்தானில் கவலை எழுவது ஏன்?12 ஜனவரி 2025 ஏவாள் உண்மையில் யார்? ஆதாமின் விலா எலும்பில் இருந்து படைக்கப்பட்டவர் என்பதற்கு புது விளக்கம்12 ஜனவரி 2025 3. டிரம்ப் பொருளாதார அழுத்தத்தை அதிகரித்தால் என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் தனது பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தினால் அது பல நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதாரம் குறித்த டிரம்பின் அறிக்கைகள் டென்மார்க்கிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம். ஏனெனில் டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா வரிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக கிரீன்லாந்து விஷயத்தில் சில சலுகைகளை வழங்க டென்மார்க் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது. டென்மார்க் அரசு இதற்கு தயாராகி வருகிறது. இது ஆர்க்டிக் பகுதி என்பதால் மட்டுமே நடக்கவில்லை என்று பேராசிரியர் ஜேக்கப்சன் கூறினார். அனைத்து அமெரிக்க இறக்குமதிகளுக்கும் 10% நேரடி வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அச்சுறுத்துகிறார். இது ஐரோப்பிய நாடுகளுக்கு நிறைய சிரமங்களை உருவாக்கக் கூடும். அதனால் தான் சில டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் இப்போது அமெரிக்காவில் உற்பத்தி ஆலையை அமைப்பது குறித்து சிந்தித்து வருகின்றன. வரிகளை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிமுறைகளில் 1977-ஆம் ஆண்டின் சர்வதேச அவசர கால பொருளாதார அதிகாரச் சட்டத்தை (IEEPA) செயல்படுத்துவதும் அடங்கும் என்று சர்வதேச சட்ட நிறுவனமான பில்ஸ்பரியை சேர்ந்த பெஞ்சமின் கோடே, 'மார்க்கெட்வாட்ச்' வலைத்தளத்திடம் தெரிவித்தார். டென்மார்க்கின் முக்கிய தொழில்களில் ஒன்றான மருந்துத் துறையை இது பாதிக்கக்கூடும். அமெரிக்கா, காது கேட்கும் கருவிகள் (Hearing aid) மற்றும் இன்சுலின் போன்ற பெரும்பாலான தயாரிப்புகளை டென்மார்க்கிலிருந்து வாங்குகிறது. 'ஓசெம்பிக்' என்ற நீரிழிவு மருந்தை டேனிஷ் நிறுவனமான 'நோவோ நோர்டிஸ்க்' தயாரிக்கிறது. அவற்றின் விலை அதிகரிப்பதை அமெரிக்க மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சென்னை: செயற்கை கடல் அலைகளை உருவாக்கி சுனாமி, புயல், கள்ளக்கடல் பாதிப்புகளை தடுப்பது பற்றி ஆய்வு12 ஜனவரி 2025 'பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை' - இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாட்டம்12 ஜனவரி 2025 4. கிரீன்லாந்தை அமெரிக்க ராணுவம் தாக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரீன்லாந்தில் அமெரிக்காவின் இருப்பு உள்ளது. அங்கு ஏராளமான அமெரிக்க வீரர்கள் உள்ளனர். அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் சாத்தியக்கூறு ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். ஆனால் ராணுவ நடவடிக்கையை டிரம்ப் நிராகரிக்காதது, அது ஒரு தெரிவாக இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும் கிரீன்லாந்தை கைப்பற்றி கட்டுப்படுத்துவது அமெரிக்காவுக்கு கடினமாக இருக்காது. ஏனெனில் அங்கு ஏற்கனவே அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ளன. பெரும் எண்ணிக்கையிலான வீரர்களும் உள்ளனர். "கிரீன்லாந்தின் மீது அமெரிக்கா ஏற்கனவே உண்மையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. டிரம்பின் அறிக்கைகள் அவருக்குப் புரியாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது" என்று பேராசிரியர் ஜேக்கப்சன் கூறுகிறார். கிரீன்லாந்தில் அமெரிக்கா தன்னுடைய ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் அது சர்வதேச பிரச்னையாக மாறும். "டிரம்ப் கிரீன்லாந்தை தாக்கினால் நேட்டோவின் பிரிவு 5-இன் படி அவர் நேட்டோவைத் தாக்குவதாக பொருள்படும். ஆனால் ஒரு நேட்டோ நாடு மற்றொரு நேட்டோ உறுப்பு நாட்டைத் தாக்கினால், அங்கு 'நேட்டோ' இருக்காது." என்று ஸ்வெயின் கூறுகிறார். "சீன அதிபர் ஷி ஜின்பிங் தைவான் பற்றிப் பேசுவது போலவோ அல்லது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் யுக்ரேன் பற்றிப் பேசுவது போலவோ டிரம்பின் பேச்சு இருக்கிறது," என்று கெய்ட் தெரிவித்தார். "இந்த நிலத்தை எடுத்துக்கொள்வது அமெரிக்காவுக்கு ஏற்றதாக இருக்கும் என்று டிரம்ப் கூறுகிறார். நாம் உண்மையில் அவரது வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொண்டால், இது மேற்கத்திய நாடுகளின் முழு கூட்டணிக்கும் ஒரு மோசமான சமிக்ஞையாகும்," என்று அவர் குறிப்பிட்டார். Play video, "டிரம்ப்", கால அளவு 1,34 01:34 காணொளிக் குறிப்பு,டிரம்ப் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cm238k136keo
  2. இந்தியாவின் ரோ ஒத்து சேவையைச்சேந்த 400பேருக்கும் அதிகமானவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதை தேடிபார்க்க வேணடும் - துமிந்த நாகமுவ Published By: VISHNU 13 JAN, 2025 | 04:22 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இந்தியாவின் ராே ஒத்து சேவையைச்சேந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என மக்கள் போராட்ட குழுவின் அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாரித்த வேலைத்திட்டத்தை எந்தவித மாற்றமும் இல்லாமல் அதனையும்விட சிறந்தமுறையில் முன்னெடுத்துச்செல்வதை காணமுடிகிறது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கூட்டு பிரகடனம் ஒன்றை மேற்கொண்டார். அதில் வலுசக்தி ஊடாக இந்தியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதாக தெரிவித்திருந்தார். அதேபோன்று இலங்கையுடன் மேலும் பல வேலைத்திடங்களுக்கு தயாராக வருவதாக இந்தியா தெரிவித்திருந்தது. இலங்கை மின்சாரசபை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க சட்டம் ஒன்றை அனுமதித்தார். குறித்த சட்டத்துக்கு தற்போதுள்ள அரசாங்கம் எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தது. மின்சார கட்டமைப்பை இந்தியாவுடன் சம்பந்தப்படுத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருந்து வந்தது. ஆனால் அரசாங்கம் தற்போது இந்தியாவுடன் சூது பொருளாதாரம் ஒன்றையே மேற்கொள்ளப்போகிறது. அதாவது சூது விளையாடி பணம் சம்பாதிக்கும் பொருளாதாரத்தை தயாரிக்கவே முயற்சிக்கிறது. சீனாவிடம் கடன் பெற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதன் விளைவு என்ன என்பதை எங்களுக்கு கண்டுகொள்ள முடியும். துறைமுகத்தை நிர்மாணிக்க பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாமல் இறுதியில் துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்தார்கள். அதேநிலையே இந்தியாவுடனும் எங்களுக்கு ஏற்படும். அத்துடன் அதானிக்கு உலகில் எங்கு பிரச்சினை இருந்தாலும் பரவாயில்லை, நாங்கள் இங்கு அதானியுடன் பணியாற்றுவோம் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இது யாரும் கேட்டதற்கு ஜனாதிபதி தெரிவித்த ஒன்று அல்ல. இது முன்கூட்டிய அறிவிப்புகள். அதேபோன்று எட்கா ஒப்பந்தத்துக்கு 2016ல் பாரிய எதிர்ப்பு வந்தது.இறுதியில் அந்த ஒப்பந்ததை வாபஸ்பெற்றுக்கொண்டது.அந்த எதிர்ப்புக்கு மக்கள் விடுதலை முன்னணி பாரியளவில் முன்னின்று செயற்பட்டு வந்ததை நாங்கள் கண்டோம். ஆனால் மீண்டும் அந்த எட்கா ஒப்பந்தம் பேச்சுக்கு வந்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் இந்தியா இலங்கையின் தேசியவாத அரசியலை நெருக்கடிக்குள்ளாக்க செயற்பட்டு வருவதாக எமக்கு நினைக்க தோன்றுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் திடீரென தோன்றினார். இப்போது அவர் இல்லை. ஆனால் இனறு வடக்கின் பேச்சாளராக செயற்பட்டு வருவது யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகியுள்ள வைத்தியர் அர்ச்சுனா. அர்ச்சுனா போன்றவர்களை கொண்டுவந்து இந்தியா என்ன செய்யப்போகிறது என எமக்கு தெரியாது. அதேநேரம் உத்தியோகபூர்வமற்ற தகவலின் பிரகாரம் இந்தியாவின் ராே ஒத்து சேவையைச்சேந்த 400பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் தேடிப்பார்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/203683
  3. ஜனாதிபதி அநுரவுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்கிற்கும் இடையில் நாளை சந்திப்பு Published By: VISHNU 13 JAN, 2025 | 03:54 AM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்கிற்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பு 14ஆம் திகதி செய்வாய்க்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விஜயத்தின் போது இருநாடுகளுக்குமிடையில் முதலீடு, மின்துறை, மீன்பிடி, மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பிரதான துறைகளை உள்ளடக்கிய வகையில் 7 ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன. இலங்கைக்கும் - சீனாவுக்கும்; இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் அமையும். இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா என்றும் தயாராகவே உள்ளது. நேர்மை, பரஸ்பர ஆதரவு மற்றும் நிலையான நட்புறவை உள்ளடக்கிய இலங்கையின் மூலோபாய கூட்டுறவு பங்பாளித்துவம் ஆகியவற்றால் இரு நாட்டு மக்களுக்கும் அதிக பயன் கிடைக்கும் என சீன வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார். இரு தரப்பு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியததின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்கு சீனாவின் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பின்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான உத்தியோகபூர்வ நான்கு நாள் அரசமுறை விஜயத்தை நாளை செவ்வாய்கிழமை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீன ஜனாதிபதியுடன் பரஸ்பர பல்துறை அபிவிருத்தி தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.மேலும் சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் சாவோ லெஜி ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஈடுபடவுள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் 7 இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. மீன்பிடித்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், சமூக நலன் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கும் வகையிலான திட்டங்கள், மீனவர்களுக்கான வீட்டுத் திட்டம், விவசாயத்துறையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தல் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன் சீன அரசின் ஒத்துழைப்புடன் மின்சக்தி திட்டங்களை அறிமுகப்படுத்துவது இந்த புரிந்துணர்வு திட்டங்களில் ஒன்றாக காணப்படுகிறது. சீன துறைமுக பொறியியல் நிறுவனம், சீனா மேர்ஷன்ட் குழுமம், சினொபெக், உவாவி, பி.வை.டி உள்ளிட்ட பிரதான சீன நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்குபெறும் முதலீட்டாளர் மன்றத்தில் ஜனாதிபதி கலந்துக் கொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து டான்பெங் எலக்ட்ரிக் கோர்பரேஷன், ஜான் கி கிராமம், தியாங்கி லித்தியம் கோர்பரேஷன் மற்றும் செங்டு தேசிய வேளாண்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிடவுள்ளார். அத்துடன் சிச்சுவான் மாகாணக் குழுவின் சீனக் கம்யூனிசக் கட்சியின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயம் குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் கடந்த வெள்ளிக்கிழமை (10) செய்தியாளர் சந்திப்பில் பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். சீன வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் ' இலங்கைக்கும் - சீனாவுக்குமு; இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் அமையும். சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் செயற்திட்டம், சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பல்துறை பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தில் விரிவாக ஆராயப்படும். இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா என்றும் தயாராகவே உள்ளது. நேர்மை, பரஸ்பர ஆதரவு மற்றும் நிலையான நட்புறவை உள்ளடக்கிய இலங்கையின் மூலோபாய கூட்டுறவு பங்பாளித்துவம் ஆகியவற்றால் இரு நாட்டு மக்களுக்கும் அதிக பயன் கிடைக்கும்' என செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சீனாவும் இலங்கையும் நீண்டகால நண்பர்களாகவும், நெருக்கமான அயல்நாடாகவும் உள்ளது.1957 ஆம் ஆண்டில் இருந்து இரு நாடுகளும் இராஜதந்திர மட்டத்தில் தொடர்புக் கொண்டுள்ளது.இருதரப்பு உறவுகள் மாற்றமடையும் சர்வதேச நிலைவரங்களுக்கு மத்தியில் நிலையானதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/203681
  4. பட மூலாதாரம்,SIMON&SCHUSTER படக்குறிப்பு, இரானிய அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ர்சாதே மொசாட் தாக்குதலுக்கு இலக்கானார் கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 27, 2020 அன்று, மொசாட் முக்கியத்துவம் வாய்ந்த ஆப்ரேஷன் ஒன்றை மேற்கொண்டது. இரானின் ராணுவ அணுசக்தி திட்டத் தலைவர் மொசீன் ஃபக்ர்சாதே, தெஹ்ரானுக்கு கிழக்கே 40 மைல் தொலைவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கருப்பு நிற காரில் சென்று கொண்டிருந்தார். பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ஃபக்ர்சாதே காரில் இருந்து கீழே விழுந்தார். அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் மாலை 6:17 மணிக்கு, இரானின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அடுத்த நாள் இரானின் பச்சை, வெள்ளை மற்றும் சிவப்புக் கொடியால் மூடப்பட்ட அவரது சவப்பெட்டி இரானின் முக்கிய புனித இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயியால், ஃபக்ர்சாதேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் அவரது பிரதிநிதி ஜியாவுதீன் அவர் சார்பாக இரங்கல் செய்தியை வாசித்தார். பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹடாமி, ஃபக்ர்சாதேவின் சவப்பெட்டியை முத்தமிட்டு, "இதற்குப் பழித்தீர்க்கப்படும்" என்றார். கேரளாவில் மாணவி பாலியல் வன்கொடுமை, 64 பேரில் 20 பேர் கைது - 5 ஆண்டு கொடூரம் அம்பலமானது எப்படி?12 ஜனவரி 2025 தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சு நடத்துவதால் பாகிஸ்தானில் கவலை எழுவது ஏன்?12 ஜனவரி 2025 ரகசிய வாழ்க்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃபக்ர்சாதேயின் சவப்பெட்டி இரானின் புனித தலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது கடந்த 2023ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'டார்கெட் டெஹ்ரான்' என்ற புத்தகத்தில், யோனா ஜெர்மி பாப் மற்றும் இலன் எவிட்டார் ஃபக்ர்சாதே பற்றி எழுதியுள்ளனர். "அவரைப் பற்றிய தகவல்கள் மிகவும் ரகசியமாகக் காக்கப்பட்டன, அவருடைய சில புகைப்படங்கள் மட்டுமே கிடைத்தன" என்று அந்தப் புத்தகத்தில் ஃபக்ர்சாதே பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. "அவரது பிறந்த இடம், தேதிகூடத் தெரியவில்லை. 2011ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் இருந்து செயல்படும் கிளர்ச்சி அமைப்பான 'நேஷனல் கவுன்சில் ஆஃப் ரெசிஸ்டன்ஸ் ஆஃப் இரான்' அவரது படத்தை வெளியிட்டது. அதில் அவர் கருப்பு நிற முடி மற்றும் சற்று நரைத்த தாடியுடன் நடுத்தர வயது மனிதராக இருப்பதைக் காட்டியது.'' ஃபக்ர்சாதே 1958இல் ஓமில் பிறந்தார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 1979 புரட்சிக்குப் பிறகு அவர் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையில் உறுப்பினரானார். பின்னர் இயற்பியலில் பட்டமும், அணுசக்தி பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். ஃபக்ர்சாதே ஆரம்பத்தில் இமாம் ஹுசைன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார், ஆனால் அதே நேரத்தில் புரட்சிகர காவல் படையில் பிரிகேடியர் ஜெனரலாக பணியாற்றினார். அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகமான பக்தர்கள் கூடும் 'கும்பமேளா'வின் சிறப்பு என்ன?12 ஜனவரி 2025 இலங்கையில் அரிசித் தட்டுப்பாடு: 'பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை' என்று மக்கள் குமுறல்12 ஜனவரி 2025 'இரானிய அணுசக்தி திட்டத்தின் தந்தை' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் முதல் அமெரிக்க அணுகுண்டை உருவாக்கினார் அவரது மரணத்திற்குப் பிறகு, இரானின் அணுசக்தி திட்டத்தில் அவரது பங்களிப்பு பற்றி வெளிப்படையாகப் பேசப்பட்டது. முதன்முறையாக அவரது புகைப்படம் வெளியிடப்பட்டது. அதில் அவர் அதிபர் ஹசன் ரூஹானியிடம் இருந்து விருது பெறும் காட்சி இடம்பெற்றிருந்தது. அவரது குழுவின் மற்ற உறுப்பினர்கள் அலி அக்பர் சாலிஹி (இரான் அணுசக்தி அமைப்பின் தலைவர்) மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஹொசைன் டெஹ்கானி அனைவர் முன்னிலையிலும் கௌரவிக்கப்பட்டனர். அதேநேரத்தில் ஃபக்ர்சாதேவுக்கு யாரும் இல்லாத தனி அறையில் விருது வழங்கப்பட்டது. அவரின் இருப்பு பற்றி இந்த அளவுக்கு ரகசியம் காக்கப்பட்ட போதிலும், இரானுக்கு வெளியே உள்ள நிபுணர்களுக்கு ஃபக்ர்சாதே பற்றி நன்கு தெரிந்தது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அணு ஆற்றல் முகமையின் (IAEA) பல அறிக்கைகளில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில், 'ஸ்பிகல்' என்ற ஜெர்மன் இதழில், 'இரானின் அணுசக்தி லட்சியங்களின் வரலாறு' என்ற புலனாய்வு செய்தியில் அவரை 'இரானின் ஓப்பன்ஹெய்மர்' (Oppenheimer) என்று விவரித்தனர். அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை ஓப்பன்ஹெய்மர் மேற்பார்வையில் தயாரித்தது. "இரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால், இரானின் அணுகுண்டு ஆயுதத்தின் தந்தை என ஃபக்ர்சாதே அழைக்கப்படுவார்'' என ஒரு மேற்குலக ராஜ்ஜீய அதிகாரி கூறியதை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 10 விஷயங்கள்11 ஜனவரி 2025 மதுரை டங்ஸ்டன் திட்டம்: மத்திய அரசின் மறுஆய்வு அறிவிப்பு வந்த பின்னரும் போராட்டம் ஏன்? பிபிசி கள ஆய்வு8 ஜனவரி 2025 அணு விஞ்ஞானிகள் உடனான தொடர்பு யோனா ஜெர்மி பாப் மற்றும் இலன் எவிடார் தங்கள் புத்தகத்தில், "ஃபக்ர்சாதே பலமுறை வடகொரியாவுக்கு சென்று அங்கு அணு ஆயுத சோதனைகளை நேரில் பார்த்தார். பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தின் தலைவர் அப்துல் காதர் கானையும் சந்தித்தார். அவர்தான் யுரேனியத்தை சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை இரானுக்கு விற்றார்." இது மட்டுமல்ல, "ஃபக்ர்சாதே ரஷ்ய விஞ்ஞானிகளுடன் இணைந்து ஓர் அணுமின் நிலையத்தைக் கட்டினார். இஸ்ஃபஹான் அணுமின் நிலையத்தை உருவாக்கிய சீன அணு விஞ்ஞானிகளுடன் ஃபக்ர்சாதே உறவுகளைப் பேணி வந்தார் என்று இஸ்ரேலின் ராணுவ உளவுத்துறையின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் அஹரோன் ஃபர்காஷ் எங்களிடம் கூறினார்" என்றும் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தின் தலைவராக அப்துல் காதீர் கான் இருந்தார் ரிமோட்டால் இயக்கப்பட்ட இயந்திர துப்பாக்கியால் கொலை ஃபக்ர்சாதேவை கொல்ல திட்டமிட்டவர்கள் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவர் செல்லும் பாதைகள் பற்றிய முழுமையான தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தனர். செப்டம்பர் 18, 2021 அன்று நியூயார்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட தங்கள் கட்டுரையில் ரோனென் பெர்க்மேன் மற்றும் ஃபர்னாஸ் ஃபசிஹி இதுகுறித்து எழுதியுள்ளனர். "ஃபக்ர்சாதேவின் மகன்களில் ஒருவரான ஹமீத், இரானிய உளவுத் துறைக்கு அன்றைய தினம் தனது தந்தையைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை வந்ததாகக் கூறுகிறார். அவர் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டார். ஆனால் ஃபக்ர்சாதே தனது பாதுகாப்புக் குழுவின் ஆலோசனையைப் பின்பற்றவில்லை". இரானின் உச்ச பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ஜெனரல் அலி ஷமகானி, 30 நவம்பர் 2020 அன்று ஃபக்ர்சாதேவின் இறுதிச் சடங்கில், "செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்ட ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கியால் ஃபக்ர்சாதே கொல்லப்பட்டதாக" கூறினார். இஸ்ரேலிய உளவுத்துறை வட்டாரங்கள் 'டார்கெட் தெஹ்ரான்' ஆசிரியர்களிடம் இது அறிவியல் புனைகதை அல்ல என்றும், ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கி உண்மையில் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்டது என்றும் உறுதிப்படுத்தின. வங்கதேசம்: இந்தியா, சீனா உடனான உறவு குறித்து அந்நாட்டு ராணுவ தளபதி கூறியது என்ன?2 ஜனவரி 2025 மோதி - டிரம்ப் உறவு எப்படி இருக்கப் போகிறது? 2025இல் இந்தியா சந்திக்கவுள்ள 6 சவால்கள்2 ஜனவரி 2025 ஃபக்ர்சாதேவை கண்காணித்த குழு பின்னர் அந்த ஆயுதம் பாகங்களாக இரானுக்குள் கொண்டு வரப்பட்டு ரகசியமாக ஒன்றிணைக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த வேலையை சுமார் 20 பேர் கொண்ட குழு எட்டு மாதங்களாகத் திட்டமிட்டு செய்தது. ஃபக்ர்சாதேவின் ஒவ்வோர் அசைவையும் அவர்கள் கண்காணித்தனர். ஃபக்ர்சாதேவை கண்காணித்த ஒர் உளவு ஏஜென்ட், "நாங்கள் அந்த நபருடன் சுவாசித்தோம், அவருடன் தூங்கினோம், அவருடன் எழுந்தோம்" என்கிறார் (டார்கெட் டெஹ்ரான், பக்கம் 193). ஃபக்ர்சாதேவின் இறுதி ஊர்வலத்திற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, புரட்சிகர காவல் படையின் துணைத் தளபதி, ரியர் அட்மிரல் அலி ஃபடாவி நடந்ததை விவரித்தார். "ஃபக்ர்சாதே தனது சொந்த காரை ஓட்டிச் சென்றார். அவரது மனைவி அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தார், அவரது மெய்க்காப்பாளர்கள் அவருக்கு முன்னும் பின்னும் மற்ற கார்களில் பயணம் செய்தனர்." இயேசு காலத்தில் பல இறைத்தூதர்கள் தோன்றினாலும் அவர் மட்டும் பிரபலமாக இருப்பது ஏன்?25 டிசம்பர் 2024 இலங்கை: பில்லியன் டாலர் கடன்; இந்தியா, சீனாவின் செல்வாக்கு - புதிய ஆண்டில் ஜனாதிபதிக்கு காத்திருக்கும் சவால்கள்3 ஜனவரி 2025 பட மூலாதாரம்,SIMON&SCHUSTER படக்குறிப்பு, இந்த காரில் தான் ஃபக்ர்சாதே பயணித்தார் இரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான தஸ்னிம் நியூஸில், 'இரானிய விஞ்ஞானியின் படுகொலையில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவால் (AI) இயங்கும் ஆயுதம்' என்ற தலைப்பிலான செய்தி வெளியானது. அதில் ''மொசாட்டில் பணிபுரியும் இரானிய ஏஜென்ட்கள்,சாலையில் நீல நிற நிசான் ஜிமியாட் வாகனத்தை நிறுத்தியிருந்தனர்" என்று அலி ஃபடாவி குறிப்பிட்டிருந்தார். "வாகனத்தின் பின்புறத்தில் 7.62 மிமீ அமெரிக்க தயாரிப்பான M240C இயந்திர துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரிமோட் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும்." "மற்றொரு கார் அங்கு நிறுத்தப்பட்டு பழுதடைந்த நிலையில் இருந்தது. ஆனால் அதிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஃபக்ர்சாதே அந்த இடத்தை அடைவதற்கு முக்கால் மைல் தூரத்தில் படம் எடுத்து, காரில் அமர்ந்திருப்பது ஃபக்ர்சாதே என்பது உறுதி செய்யப்பட்டது." ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச போட்டிகளில் ஆட தடை வருமா? ஐ.சி.சி.யில் என்ன நடக்கிறது?12 ஜனவரி 2025 அமெரிக்காவால் தாலிபன் தலைவர் முல்லா ஒமரை நெருங்க முடியாதது ஏன்?10 ஜனவரி 2025 பட மூலாதாரம்,TEHRAN TIMES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் அலி ஃபதவி 13 ரவுண்டுகள் சுட்ட இயந்திர துப்பாக்கி "ஃபக்ர்சாதேவின் கார் தூரத்தில் தெரிந்தது. கட்டளை கொடுக்கப்பட்டவுடன், இயந்திர துப்பாக்கியில் இருந்து மொத்தம் 13 சுற்றுகள் சுடப்பட்டன. இதைத் தொடர்ந்து இயந்திர துப்பாக்கி தானாக வெடித்துச் சிதறி, அது வைக்கப்பட்டிருந்த வாகனமும் வெடித்துச் சிதறியது" என்கிறார் அலி ஃபடாவி. "அந்த இயந்திர துப்பாக்கி ஃபக்ர்சாதேவின் முகத்தைக் குறிவைத்தது. ஷாட் மிகவும் துல்லியமாக இருந்தது, அவருக்கு அருகில் 25 சென்டிமீட்டர் தூரத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவி காயமடையவில்லை." ஜூயிஷ் கிரானிக்கல் எனும் பத்திரிக்கையில் வெளியான 'இரான் விஞ்ஞானியின் கொலைக்குப் பின்னால் உள்ள உண்மை' என்ற கட்டுரையில் பிரபல பத்திரிகையாளர் ஜேக் வாலிஸ் சைமன்ஸ், இந்த விவரத்தை உறுதிப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃபக்ர்சாதேவின் இறுதி ஊர்வலம் அவர் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு, ரோனென் பெர்க்மேன் டிசம்பர் 4, 2020இல் இஸ்ரேலிய செய்தி தாளான யெடியோத் அஹ்ரோனோத்தில் இதுபற்றி எழுதினார். "அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நினைவாக 12 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட இரவு விருந்தில், அணு ஆயுதங்களை உருவாக்கும் இரானின் முயற்சிகள் பற்றிய ஃபக்ர்சாதேவின் டேப் ஒன்றை பிரதமர் எஹுட் ஓல்மர்ட் போட்டுக் காண்பித்தார்." "நான் உங்களுக்காக ஒரு டேப்பை போடப் போகிறேன். ஆனால் நீங்கள் யாருடனும் இதுபற்றி விவாதிக்க வேண்டாம், சிஐஏ இயக்குனருடன்கூட இதுபற்றிப் பேச வேண்டாம்" என்று ஓல்மர்ட் புஷ்ஷிடம் கூறினார். அவர் ஒரு டிஜிட்டல் மீடியா பிளேயரில் பாரசீக மொழியில் பேசும் ஃபக்ர்சாதேவின் பதிவை ஒலிப்பரப்பினார். அதில், "எங்கள் பாஸ் எங்களிடம் ஐந்து அணு ஆயுதங்களைக் கோருகிறார், ஆனால் இதற்குத் தேவையானவற்றை வழங்கத் தயாராக இல்லை" என்று ஃபக்ர்சாதே பேசியது ஒலித்தது. '9 ஆண்டுகள், 3 முறை ஐ.வி.எஃப், 2 கருக்கலைப்புகள்' - சிகிச்சை தரும் உடல், மன வலியை பகிரும் பிபிசி செய்தியாளர்10 ஜனவரி 2025 HbA1C: நீரிழிவு நோயாளிகள் மட்டும்தான் இந்த பரிசோதனையை செய்ய வேண்டுமா? முடிவுகள் உணர்த்துவது என்ன?12 ஜனவரி 2025 ஃபக்ர்சாதே பற்றி மொசாட்டில் எழுந்த விவாதம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் மற்றும் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் பல ஆண்டுகளாக அவரைப் பற்றிய தகவல்களை அனுப்பிய ஒரு இரானிய ஏஜென்டை இஸ்ரேலிய உளவு அமைப்புகள் ஃபக்ர்சாதே அருகே ரகசியமாக வைத்துள்ளதாக ஓல்மெர்ட் புஷ்ஷிடம் கூறினார். இந்த ஏஜென்ட்தான் ஓல்மெர்ட்டுக்கு ஃபக்ர்சாதேவின் ஆடியோ பதிவுகளை வழங்கினார். ஜூன் 10, 2021 அன்று இஸ்ரேலிய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், முன்னாள் மொசாட் தலைவர் யோசி கோஹன் "மொசாட் ஃபக்ர்சாதேவை பற்றி அதிகம் அறிந்திருந்தது, அது அவரது முகவரி, தொலைபேசி எண் மற்றும் அவரது பாஸ்போர்ட் எண்ணையும்கூட அறிந்திருந்தது" என்று கூறினார். ஃபக்ர்சாதே உடனடியாகக் கொல்லப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து மொசாட்டில் கடும் விவாதம் நடந்தது. முன்னாள் இஸ்ரேலிய ராணுவ தலைவர் ஷால் மொஃபாஸின் கூற்றுப்படி, பிரதமர் ஏரியல் ஷாரோன் மொசாட்டின் தலைவராக மெய்ர் தாகனை நியமித்தபோது, அவரைத் தீவிமாகக் கண்காணிக்கும்படி கேட்டுக் கொண்டார். பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: காலத்தால் அழியாத 15 பாடல்கள்10 ஜனவரி 2025 ஆஸ்கர் விருதுக்கு கங்குவா போட்டியிடுகிறதா? படங்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?9 ஜனவரி 2025 புதிய திசையை வழங்கிய ஃபக்ர்சாதே பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் முன்னணி அணு விஞ்ஞானி மொசீன் ஃபக்ர்சாதே கடந்த 2001 முதல் 2010 வரை இரானிய அணுசக்தித் திட்டத்தில் ஃபக்ர்சாதேவின் செல்வாக்கு, அவர் கொல்லப்பட்ட 2020இல் இருந்ததைவிட அதிகமாக இருந்தது. இரானின் அணுசக்தித் திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய பிறகு ஃபக்ர்சாதே கொல்லப்பட்டார். கடந்த 2020இல் அவர் கொல்லப்பட்டது இரானின் நற்பெயருக்குப் பெரும் அடியாக விழுந்தது. அவர் இல்லாததால், இரானின் அணுசக்தித் திட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஈடுபட்டு வந்த அனுபவமும், அறிவும் கொண்ட ஒரு திறமையான நபரை இரான் இழந்தது. கடந்த 2018இல், பெஞ்சமின் நெதன்யாகு ஒரு செய்தியாளர் சந்திப்பில் இரான் அணுக் காப்பகங்கள் திருடப்பட்டது பற்றி அறிவித்தபோது, அவர் 'ஃபக்ர்சாதே. இந்த பெயரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்' என்றும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃபகர்சாதே வெளியேறிய பிறகு, இரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பான சவாலை எதிர்கொள்கிறது அணுசக்தித் திட்டத்தில் பின்னடைவு எதிர்காலத்தில் இரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்க நினைத்தால், இந்தத் திட்டம் தொடர்பான ரகசிய தகவல்களை உலகுக்கு மறைக்கும் அனுபவம் ஃபக்ர்சாதேவின் வாரிசுகளுக்கு இருக்காது. ஜேக் வாலிஸ் சைமன்ஸ் எழுதியுள்ள தகவலின்படி, "ஃபக்ர்சாதேவுக்கு மாற்றாக ஒருவரைக் கண்டுபிடித்து செயல்பட வைக்க இரானுக்கு குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் ஆகும் என்று இரானிய உள்நாட்டு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அவரது மரணம் இரானின் வெடிகுண்டு தயாரிக்கும் திறனுக்கான காத்திருப்பைக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் நீட்டித்துள்ளதாக நம்புகின்றனர் இஸ்ரேலிய ஆய்வாளர்கள்." https://www.bbc.com/tamil/articles/c8r5de2gk2yo
  5. உங்கள் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக கடற்றொழில் செய்வதானால் நாங்கள் பொழுதுபோக்கிற்காகவா மீன்பிடியில் ஈடுபடுகிறோம் - இலங்கை மீனவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி 11 JAN, 2025 | 06:06 PM இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வாழ்வாதாரத்துக்காக மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள் என்றால் நாங்கள் பொழுதுபோக்கிற்காகவா மீன்பிடியில் ஈடுபடுகிறோம் என யாழ்ப்பாண மாவட்ட மீன்பிடி கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதி மகேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் (11) யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், தங்களுடைய மீனவர்கள் வாழ்வாதார நோக்கத்துக்காக எங்களுடைய கடல் எல்லைக்குள் வந்ததாகவும், அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 30 வருடங்களாக இந்திய மீனவர்களை கைது செய்வதும் விடுவதும் தொடர்கதையாக காணப்படுகிறது. அவர்கள் வாழ்வாதாரத்துக்காக கடலுக்கு வந்தால் நாங்கள் பொழுதுபோக்கிற்காக கடலுக்குச் செல்வதில்லை. நாங்களும் வாழ்வாதாரத்திற்காகத்தான் கடல் தொழிலுக்கு செல்கின்றோம். இந்திய இழுவைப் படகின் அட்டகாசத்தினால் எங்களால் எமது கடலில் தொழில் செய்ய முடியவில்லை. தமிழக முதலமைச்சரே எமது மக்களின் வாழ்வுரிமையை பற்றியும் சற்று நீங்கள் சிந்தியுங்கள். உங்களுடைய கடற்பகுதியில் பாகிஸ்தான் மீனவர்களோ அல்லது சீன மீனவர்களோ வந்து மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை வாழ்வாதார அடிப்படையிலோ அல்லது மனிதாபிமான அடிப்படையிலோ நீங்கள் விடுதலை செய்வீர்களா? நிச்சயம் நீங்கள் அவர்களை கைது செய்வீர்கள். இன்றைக்கும் உங்கள் எல்லையில் நீங்கள் சண்டை செய்துகொண்டுதான் இருக்கின்றீர்கள். அதுபோல எங்களது எல்லைக்குள் நீங்கள் வரவேண்டாம். எங்களது வளங்களை சுரண்டிக்கொண்டு, வாழ்வாதாரம் மனிதாபிமானம் என்று பொய்களை கூறிக்கொண்டு எங்களது மக்களை நிர்க்கதியாக்குகிறீர்கள். எனவே, உங்களது கடற்படையினை வைத்து உங்களுடைய மீனவர்களை எல்லை தாண்ட விடாமல் கட்டுப்படுத்துங்கள். எங்களது வளங்களை நாங்கள் பாதுகாத்துக்கொள்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/203599
  6. பெரியார் சொன்னதாக சீமான் சர்ச்சை கருத்து - பெரியார் உண்மையில் அப்படி குறிப்பிட்டாரா? கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் பெரியார் சொன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்ட கருத்து பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. பெரியார் அப்படிச் சொன்னாரா? கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை மேற்கோள்காட்டி பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. சீமான் மன்னிப்பு கேட்க தூது விட்டாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன பிரச்னை? முழு பின்னணி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகுவது ஏன்? கட்சிக்குள் என்ன நடக்கிறது? திராவிடம் - தமிழ்த் தேசியம் என்ன வேறுபாடு? பிராமணர் மீதான அவற்றின் பார்வை என்ன? விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன? சீமான் என்ன பேசினார்? அந்தச் செய்தியாளர் சந்திப்பில், "தமிழ் மொழியையே காட்டுமிராண்டி மொழி என பெரியார் பேசியிருக்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியம் எழுதியவருக்கெல்லாம் கற்றுக்கொடுத்தது யார்? மொழியையே இழிவாகப் பேசிய பிறகு என்ன சமூக சீர்திருத்தம் பேசுகிறீர்கள்? கம்பன் உங்களுக்கு எதிரி, இளங்கோவடிகள் ஒரு எதிரி, திருவள்ளுவர் எதிரி - பிறகென்ன சமூக சீர்திருத்தம்? அப்படிப்பட்டவரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி?'' என சீமான் பேசினார். மேலும் பெரியாரின் பெண்ணிய உரிமை குறித்து பேசிய சீமான், பெரியார் சொன்னதாக கூறி ஒரு கருத்தை குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்து உடனடியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவின் 5 ச.கி.மீ. நிலத்தை வங்கதேசம் கைப்பற்றியதா? எல்லையில் ஒரு வாரமாக நீடிக்கும் பதற்றம்11 ஜனவரி 2025 கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 10 விஷயங்கள்7 மணி நேரங்களுக்கு முன்னர் பெரியாரிய அமைப்புகள் பெரும் கண்டனம் தெரிவித்தன. அப்படிப் பெரியார் பேசிய அல்லது எழுதிய ஆதாரங்களை வெளியிடும்படி கோரினர். இதற்கடுத்து புதுச்சேரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டபோது, "எல்லா ஆதாரங்களையும் நீங்கள் முடக்கிவைத்துக் கொண்டு என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? இவ்வளவு பேர் எடுத்து காணொளிகளாகப் போடுகிறோம். பொய் என்றால் எப்படி? பெரியாரின் எழுத்துகளை அரசுடமையாக்கிவிட்டு, சான்று கேளுங்கள் தருகிறேன். வெளியிட்ட புத்தகத்தையெல்லாம் முடக்கிவைத்துக்கொண்டு, என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி?" என்று பதிலளித்தார். இதற்குப் பிறகு, தமிழ்நாட்டின் பல இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெரியார் குறித்த சீமானின் கருத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என கூறியது. மேலும் அவர் மீதான புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஜனவரி 20-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டது. ஆபாசப் பட நடிகை வழக்கு: டிரம்ப் 'குற்றவாளி' என்ற நீதிபதி தண்டனை விதிக்காதது ஏன்?11 ஜனவரி 2025 ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச போட்டிகளில் ஆட தடை வருமா? ஐ.சி.சி.யில் என்ன நடக்கிறது?11 ஜனவரி 2025 பெரியார் அப்படிப் பேசியது உண்மையா? இதுபோல பெரியார் பேசியதாக கூறப்படுவது முதல் முறையல்ல. 2017-ஆம் ஆண்டுவாக்கில்தான் முதன்முதலில் பெரியார் இப்படிச் சொன்னதாக செய்தி பரவ ஆரம்பித்தது. சில இயக்கங்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோன்ற வாசகத்துடன் பதிவுகளை வெளியிட்டன. இந்தச் செய்தி 1953-ஆம் ஆண்டு மே மாதம் திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ ஏடான விடுதலையில் வெளிவந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு, அவ்வப்போது சமூக வலைதளங்களில் இந்தக் கருத்து பரப்பப்பட்டு வந்தது. இதனை அந்தத் தருணத்திலேயே திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மறுத்தனர். 2020ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு செய்தியைப் பதிவுசெய்த, பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் மீது காவல்துறையில் புகாரும் அளித்தனர். அவரைக் காவல்துறை கைதும் செய்தது. இந்த நிலையில்தான் மீண்டும் சீமான் இதே கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். இது தொடர்பான சமூக வலைதள பதிவுகளில் இந்தச் செய்தி விடுதலை இதழில் 1953-ஆம் ஆண்டின் மே 11ஆம் தேதி வெளியாகியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. படக்குறிப்பு, தென் சென்னை திராவிட கழக மாநாடு குறித்த செய்தியும் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் குறித்த செய்தியுமே பிரதானமாக இடம்பெற்றிருந்தன. படக்குறிப்பு, குறிப்பிட்ட தினத்தன்று வெளியான விடுதலை இதழ், மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்டிருந்தது இது தொடர்பாக பிபிசி ஆராய்ந்த போது, அப்படி எந்தச் செய்தியும் அன்றைய தினம் வெளியான விடுதலை இதழில் இடம்பெறவில்லை. குறிப்பிட்ட தினத்தன்று வெளியான விடுதலை இதழ், மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்டிருந்தது. ஆனால், இந்த நான்கு பக்கங்களிலும் இதுபோன்ற ஒரு செய்தி எங்கேயும் இடம்பெறவில்லை. தென் சென்னை திராவிட கழக மாநாடு குறித்த செய்தியும் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் குறித்த செய்தியுமே பிரதானமாக இடம்பெற்றிருந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdd97j831yro
  7. "Life-ல ஜெயிக்க கூடாதுனு Trap இது"😭Gobi-ன் Emotional கேள்விக்கு AR Rahman Honest Interview - Part 3
  8. இசையை தாண்டி Raja sir இப்படித்தான்!😱ARR Opens up about Ilaiyaraja🔥Goosebumps Interview - Part 2
  9. 10 JAN, 2025 | 06:25 PM இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங் மற்றும் பாத்ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொட ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு குறித்தும், கடந்த 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சீன - இலங்கை ஒத்துழைப்பு கற்கைகள் நிலையத்தின் செயற்பாடுகளை மையப்படுத்திய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, கொவிட் - 19 வைரஸ் பெருந்தொற்றுக்கு முன்னரான காலகட்டத்தைப் போன்று சீன - இலங்கை ஒத்துழைப்பு கற்கைகள் நிலையத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மையப்படுத்திய கலந்துரையாடல்களுக்கு சீன புத்திஜீவிகள் மற்றும் துறைசார் நிபுணர்களை உள்வாங்குவது பற்றி ஆராயப்பட்டது. அத்தோடு இலங்கை - சீன நல்லுறவு மற்றும் அதன் கூறுகளை உள்ளடக்கி சீன மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூல்களை மொழிபெயர்ப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் பாத்ஃபைன்டர் பவுன்டேஷனின் தலைவர் பேர்னாட் குணதிலக மற்றும் சீனத் தூதரக அதிகாரி ஜின் என்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/203516
  10. தானியங்கி காரில் ஒரே இடத்தில் சுற்றிவந்த பயணி!
  11. ஜோனியை பாராட்ட ஒருத்தரும் முன்வரவில்லை! ரேபிஸ் அச்சமா?!
  12. டொனால்ட் டிரம்ப்: ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் நிபந்தனையின்றி விடுவிப்பு பட மூலாதாரம்,REUTERS அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸை அமைதிப்படுத்த பணம் கொடுத்த வழக்கில் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். தீர்ப்பை வழங்கும்போது, நீதிபதி மெர்ச்சன், "உங்கள் இரண்டாவது பதவிக் காலத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்று கூறியுள்ளார். டிரம்பை நிபந்தனையின்றி விடுவிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதாவது இந்த வழக்கில் அவர் எந்த அபராதமும் செலுத்த வேண்டியதில்லை, சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டியதில்லை. இந்த வழக்கில் டிரம்பை நிபந்தனையின்றி விடுவிப்பது நாட்டின் மிக உயர்ந்த பதவியை மீறாமல் வழங்கப்படும் ஒரு சட்டப்பூர்வ தண்டனை என்று நீதிபதி மார்ச்சன் தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு, ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவர் கடந்த ஆண்டு மே மாதம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார். ஜனவரி 20ஆம் தேதியன்று டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவேற்கவுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy173eryg2o
  13. இலங்கை: இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சையாகப் பேசிய பௌத்த துறவிக்கு சிறைத் தண்டனை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஃபான் வாங்க் பதவி, பிபிசி நியூஸ் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய, இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவியான கலகொடாத்தே ஞானசாரவுக்கு ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதால் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஞானசார, ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் முக்கிய நபர். கடந்த 2016ஆம் ஆண்டு அவர் தெரிவித்த இஸ்லாமிய வெறுப்பு கருத்துகள் தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் 9ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இலங்கையில் பௌத்த துறவிகளுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும் நிகழ்வு மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஆனால் தொடர்ச்சியாக இஸ்லாம் மதத்திற்கு எதிராக வெறுப்பைப் பரப்பும் கருத்துகளைப் பேசி வந்த ஞானசாரவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது இது இரண்டாவது முறை. கடந்த 2018ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அரசியல்ரீதியாக கார்ட்டூன் வரையும் கலைஞர் ஒருவரின் மனைவியை மிரட்டிய விவகாரத்தில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் 2019ஆம் ஆண்டு அந்த சிறைத் தண்டனைக்கு எதிராக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டது. தற்போதைய வழக்கை விசாரித்த கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இஸ்லாம் மதத்திற்கு எதிராக சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் டிசம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை, ஜனவரி 9ஆம் தேதியன்று, தீர்ப்பளித்த நீதிமன்றம் அரசியலமைப்பு சாசனத்தின்படி எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை சுதந்திரமாகப் பின்பற்ற உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அவருக்கு 1500 இலங்கை ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. அதைச் செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தண்டனைக்கு எதிராக ஞானசார மேல்முறையீடு செய்துள்ளார். கோட்டாபயவின் நம்பிக்கைக்குரிய வட்டாரங்களில் ஒருவராக ஞானசார அறியப்படுகிறார். 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார். 'தண்டனையை தாமதிக்க முடியாது': டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் - தீர்ப்பு குறித்து காட்டம்5 மணி நேரங்களுக்கு முன்னர் 'எவ்வளவு நேரம் தான் வீட்டில் அமர்ந்திருப்பீர்கள்?' - வாரத்திற்கு 90 மணிநேரம் பணி செய்யுமாறு கூறிய எல்&டி தலைவர்10 ஜனவரி 2025 பொது மன்னிப்பு பெற்ற ஞானசார படக்குறிப்பு, தனது மகனுடன் சந்தியா எக்னெலிகொட கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் சிங்கள பௌத்த தேசிய குழுவை வழி நடத்தினார் ஞானசார. மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் பணிக் குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். ராஜபக்‌ஷ பதவியில் இருந்து விலகிய பிறகு, இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ப்ரதீக் எக்னெலிகொட அரசியல் கார்ட்டூனிஸ்டாக பணியாற்றினார். ஆளும் சிங்கள அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வந்த அவரை 2010ஆம் ஆண்டு முதல் காணவில்லை. இந்நிலையில், அவருடைய மனைவி சந்தியா எக்னெலிகொடவை மிரட்டியதற்காகவும், நீதிமன்ற அவமதிப்புக்காகவும் 2018ஆம் ஆண்டு அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். ஆனால் 9 மாதங்கள் கழித்து, அன்றைய ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்ரிபால சிறிசேன அவருக்கு பொது மன்னிப்பை வழங்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cd64y49e48qo
  14. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தற்சமயம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளதாகவும் அவர்களை, இலங்கைக் கடற்படையினர் சிறைபிடிப்பதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குறித்த கடிதத்தில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய இராஜதந்திர வழிமுறைகளை முன்னெடுத்து, அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார். https://thinakkural.lk/article/314531
  15. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் நினைவேந்தல் யாழில்! 10 JAN, 2025 | 06:33 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (10) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உயிரிழந்த ஒன்பது உறவுகளையும் நினைவுகூரி அமைக்கப்பட்ட நினைவுத்தூபியின் முன் சி.வி.கே சிவஞானத்தினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது வட மாகாண அவைத் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சி.வி.கே சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரான சுகிர்தன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் ஆர்னோல்ட், இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/203518
  16. ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு விசாரணை கோரியிருக்கும் அமெரிக்கா சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்குகின்ற பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் திட்ட இயக்குநர் Carlos Martínez de laSerna அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் டிசம்பர் 26 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் வைத்து தாக்கப்பட்டு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவர் அதிலிருந்து தப்பியிருக்கிறார். பின்னர் அவர் நெஞ்சு, கழுத்து, முதுகில் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை பெற்றுள்ளார். அவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் படி டிசெம்பர் 27ஆம் திகதி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு 30 ஆம் திகதி நீதிமன்றில் சந்தேக நபர்கள் தமிழ்ச் செல்வனால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவித்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரசிங்கவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் உடனடியாக பதில் கூற முடியாது என தெரிவித்துவிட்டார். உள்ளூர் நாளிதழ்களில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதி வருவதன் காரணமாக தான் தாக்கப்பட்டிருக்கலாம் என தமிழ்ச்செல்வன் சந்தேகம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு தண்டனைகள் கிடைக்காமை தொடர்பில் பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழு ஆவணப்படுத்தி இருக்கிறது. 1983 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் உள்நாட்டு போர் காரணமாக கொல்லப்பட்ட அதிகளவான பத்திரிகையாளர் தமிழ் பத்திரிகையாளர்கள். எனவே, புதிதாக பொறுப்பேற்ற அரசு தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், துன்புறுத்தல்கள் மற்றும் தண்டனை விலக்களிப்பு என்பவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் திட்ட இயக்குநர் கோரியுள்ளார். https://thinakkural.lk/article/314539
  17. நாட்டில் பிறப்பு வீதம் வீழ்ச்சி! - விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா 10 JAN, 2025 | 07:08 PM கடந்த பத்து வருடங்களை கருத்தில் கொள்ளும்போது நாட்டில் பிறப்பு வீதம் படிப்படியாக குறைவடைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு 350,000ஆக இருந்த பிறப்பு எண்ணிக்கை 2024ஆம் ஆண்டாகும்போது 228,000ஆக குறைவடைந்துள்ளதாக கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பத்து வருடங்கள் கருத்தில் கொள்ளும்போது நாட்டில் பிறப்பு வீதம் படிப்படியாக குறைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு 350,000ஆக இருந்த பிறப்பு எண்ணிக்கை 2023ஆம் ஆண்டாகும்போது 250,000ஆக குறைவடைந்ததுடன் 2024ஆம் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை 228,000ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பிறக்கும் குழந்தைகளிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகள் நோய் நிலைமைகளுக்கு ஆளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் காணக்கிடைக்காத குழந்தை பருவ நீரிழிவு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதும் அதிகரித்துள்ளது. அவ்வாறு நீரிழிவு நோயால் பாதிப்புக்குள்ளான சுமார் 100 குழந்தைகள் சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிறுவர் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பைக் காண முடிகிறது. அதிகரித்த உடல் பருமன், மந்தபோசனை போன்ற உடலியல் நோய்களாலும் மன நோய் காரணமாகவும் சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாவதும் அதிகரித்துள்ளது. சிறுவர்களின் குறும்புத்தனமும் அதற்கு எதிர்மாறான ஆடிசம் நிலையும் மன உளைச்சலுக்கு ஆளாகுவதும் மேலோங்கியுள்ளது. குழந்தைகள் இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு ஆளாகுவதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம். ஆகையால், பெற்றோர் மற்றும் சமூகம் என்ற ரீதியில் இவை தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல், எதிர்காலத்தில் ஆபத்தான நிலைக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றார். https://www.virakesari.lk/article/203510
  18. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் 10 JAN, 2025 | 04:06 PM (எம்.நியூட்டன்) உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் அழைப்பின் பெயரில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இன்று (10) காலை நடைபெற்றது. இதன்போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சிவகு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், சோலமன் சிறில் இலங்கை தமிழரசு கட்சி பதில் தலைவர் சீ விகே சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம், முன்னாள் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், கஜதீபன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் கருணாகரன் நாவலன், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜோதிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் இறுதியில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் பூ மரக்கன்றுகள் அப்பகுதியில் நட்டு வைக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/203490
  19. மீட்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பு மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் இன்று (09) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், முதலில் மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், ரனித்தா ஞானராஜ் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி புராதணி சிவலிங்கம் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர். மேலும் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவன், மன்னார் பொலிஸார் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர். இதன்போது ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் கையளிக்கப்பட்டது. 76 இலக்கம் தொடக்கம் 156 வரையிலான 80 பெட்டிகள் சட்ட வைத்திய அதிகாரியிடம் மேலதிக பகுப்பாய்விற்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் கையளிக்கப்பட்டது. மிகுதி 75 எலும்புக்கூட்டு பெட்டிகள் நாளை (10) கையளிக்கப்பட உள்ளது. இவை பகுப்பாய்வு செய்து மேலதிக அறிக்கைகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். கையளிக்கப்பட்டுள்ள 'சதோச' மனித புதைகுழி எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியினால் இறப்புக்கான காரணம், வயது, பால் நிலை போன்ற விடயங்களையும் இறப்பு ஏற்பட்டமைக்கான காரணங்களும் மன்றில் சமர்பிக்கப்பட உள்ளது. இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் சில தினங்களில் மன்றில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு விசாரணை மீண்டும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணை இடம்பெற்றது.இதன்போது கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அவர்களினால் ஏற்கனவே பகுப்பாய்வு செய்யப்பட்ட 81 மனித எச்சங்களில் 27 மனித மச்சங்களுக்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம், வயது, பால் நிலை போன்ற காரணங்கள் குறித்த 27 மனித உடலங்களுக்கான அறிக்கைகள் மன்றில் கையளிக்கப்பட்டுள்ளது. மிகுதி மனித எச்சங்களுக்கான அறிக்கை 6 மாத காலத்தில் மன்றில் கையளிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார். -மன்னார் நிருபர் லெம்பட்- https://tamil.adaderana.lk/news.php?nid=198551
  20. இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=198559
  21. கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) செய்த முதலீடுகளின் சந்தை மதிப்பு 2024 செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு 109.69 பில்லியன் ரூபாவாக உள்ளதாக நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பங்குச் சந்தையில் நிதியத்தால் செய்யப்பட்ட முதலீடுகளின் மொத்த கொள்முதல் செலவு 88.67 ரூபாவாகும், மேலும் பங்குச் சந்தையில் முதலீடுகளிலிருந்து ஊழியர் சேமலாப நிதியம் ஈட்டிய மொத்த இலாபம் 21.01 பில்லியன் ரூபாவாகும். 2024 ஜூன் 30 ஆம் திகதிக்கு, கொழும்பு பங்குச் சந்தையில் ஊழியர் சேமலாப நிதியம் செய்த முதலீடுகளின் சந்தை மதிப்பு 110.03 பில்லியன் ரூபாவாகும். தற்போது, ஊழியர் சேமலாப நிதியம் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 66 ஆகும். 2024 ஜூன் 30ஆம் திகதிக்கு அந்த எண்ணிக்கை 67 ஆக இருந்த நிலையில், கடந்த காலாண்டில் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸில் உள்ள அதன் முதலீடுகளை முழுமையாக வெளியேற்ற நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=198584

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.