Everything posted by ஏராளன்
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
Published By: VISHNU 08 JAN, 2025 | 09:12 PM 08ஆம் திகதி புதன்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்சியான பங்களிப்பின் முக்கியத்துவம் தேவையென எடுத்துரைக்கப்பட்டது. அதனுடன் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. https://www.virakesari.lk/article/203353
-
தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கையெழுத்து போராட்டம் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக் குழு உறுப்பினர்கள், மாவீரர்கள், பெற்றோர்கள், உரித்துடையவர்கள் இணைந்து குறித்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் காணியின் பெரும்பகுதி இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில்,குறித்த துயிலுமில்ல காணிக்கு முன்பாக கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. https://thinakkural.lk/article/314489
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
'கைதான நபர் திமுக அனுதாபி' - அண்ணா பல்லைகக்கழக மாணவி வன்கொடுமை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது என்ன? பட மூலாதாரம்,TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY படக்குறிப்பு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. அ.தி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்தும் பேட்ஜ் அணிந்தும் அவைக்கு வந்திருந்தனர். மாணவி விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த அதிமுக, "கடந்த ஆட்சியில் 3 முறை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட நபர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது எப்படி?" என்று கேள்வி எழுப்பியது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கம் என்ன? கைதான நபர் குறித்தும், 'யார் அந்த சார்?' என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் கூறியது என்ன? இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ், விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பேசியது என்ன? அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: எஃப்.ஐ.ஆர். வெளியானது எப்படி? சிறப்பு விசாரணைக் குழுவில் உள்ள 3 அதிகாரிகள் யார்? 'வளாகம் மட்டுமல்ல, வகுப்பறையிலும் கூட பிரச்னைதான்' - அண்ணா பல்கலை. மாணவிகள் கூறியது என்ன? சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிட்டால் என்ன தண்டனை? அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம்: இந்த முடிவை எடுத்தது ஏன்? விமர்சனங்கள் பற்றி என்ன கூறினார்? அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்தும் பேட்ஜ் அணிந்தும் வந்திருந்தனர். இதில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்த விவகாரத்திற்கு, பல்கலைக் கழகத்தின் வேந்தரான ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டுமெனக் குறிப்பிட்டார். புரட்சி பாரதம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பூவை ஜெகன்மூர்த்தி, பல்கலைக்கழக பதிவாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினார். கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் பேசும் போது, பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததுதான் இதற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டினார். தமிழக கல்விக் கட்டமைப்பின் மீது ஆளுநரால் மோசமான தாக்குதல் நடைபெற்று வருவதாக வி.சி.கவின் சிந்தனைச் செல்வன் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை தெரிவித்த சில கருத்துகளுக்கு அ.தி.மு.கவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்குப் பிறகு அ.தி.மு.க சார்பில் பேசிய எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், "மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது எப்படி? இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இதுவரை பதில் சொல்லாதது ஏன்" எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரகுபதி, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அந்த நபர் மீது போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY படக்குறிப்பு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல் – பதிலடி கொடுத்த ட்ரூடோ8 ஜனவரி 2025 ஹெச்.எம்.பி.வி: கொரோனா போன்றதா? பயப்பட வேண்டுமா? 7 முக்கிய கேள்விகளும் பதில்களும்4 மணி நேரங்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார். "குற்றம் நடந்த பிறகு குற்றவாளியைக் கைதுசெய்யாமல் விட்டிருந்தாலோ, காப்பாற்ற முடிவுசெய்திருந்தாலோ அரசை நீங்கள் குறை சொல்லலாம். ஆனால், சில மணி நேரங்களில் குற்றவாளி கைது செய்யப்பட்ட பிறகும், அரசைக் குறை செல்வது அரசியல் ஆதாயத்திற்கானது. டிசம்பர் 24ஆம் தேதி பிற்பகல் மாணவி கோட்டூர்புரம் காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு அடுத்த நாள் காலை குற்றவாளி கைது செய்யப்பட்டார். இதற்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்துக் கேட்கிறார்கள். அதற்கு காரணம், மத்திய அரசின் கீழ் செயல்படும் என்.ஐ.சி.தான். காவல்துறை சுட்டிக்காட்டியவுடன் அது சரிசெய்யப்பட்டது. சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லையென பொத்தாம்பொதுவாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் சரியானவையல்ல. குற்றவாளி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டார். முதல் தகவல் அறிக்கையின்படி, 'யார் அந்த சார்?' எனக் கேட்கிறீர்கள். உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி நியமிக்கப்பட்ட புலனாய்வுக்குழுதான் இதனை விசாரிக்கிறது. கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தப் புலன் விசாரணையில் வேறு யாராவது குற்றவாளிகள் இருந்தால் அவர்கள் மீது தயவுதாட்சண்யம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்", என்று பேசினார். பொங்கல் வெளியீடு திரைப்படங்கள் சொல்லும் கதை என்ன? இறுதிப் பட்டியலில் எத்தனை படங்கள்?4 மணி நேரங்களுக்கு முன்னர் ஓயோ: மீரட்டில் திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி அறை கிடைக்காதா? - புதிய விதி கூறுவது என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தொடர்ந்து பேசிய அவர், "இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படும். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும். எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் 'யார் அந்த சார்?' என குற்றம்சாட்டுகிறார்கள். உங்களிடம் அதற்கு ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் சொல்லுங்கள். அதை விட்டுட்டு ஒரு மாணவி சம்பந்தப்பட்ட வழக்கில் மலினமான அரசியலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம். இது மக்கள் மத்தியில் எடுபடாது. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான முதல் பத்து மாநகரங்களில் கோவையும் சென்னையும் இருக்கின்றன. பெண்கள் அதிகம் பேர் வேலைக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடுதான். மனசாட்சி இல்லாமல் பெண்களின் பாதுகாவலர் மாதிரி பேசுபவர்கள், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என நினைத்துப் பாருங்கள். பொள்ளாச்சியில் நடந்தது, ஒரே ஒரு பெண்ணுக்கு நடக்கவில்லை. பல பெண்களுக்கு நடந்தது. ஒரு கும்பலே இதைச் செய்தது. அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சி.பி.ஐ.க்கு போன பிறகுதான் வழக்கில் முன்னேற்றம் இருந்தது. பாதிக்கப்பட்ட பெண் தன் அண்ணனிடம் இதைப் பற்றிச் சொன்னவுடன் அவர் சம்பந்தப்பட்டவர்கள் நான்கு பேரை பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஆனால், காவல்துறை வழக்குப் பதிவுசெய்யவில்லை. எல்லோரையும் விடுவித்துவிட்டார்கள். இதுதான் அன்றைய 'சார்' ஆட்சியில் சட்டம் - ஒழுங்கின் லட்சணம். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை, குற்றம்சாட்டியவரிடமே கொடுத்தார்கள். அ.தி.மு.க பிரமுகர் நாகராஜ், பெண்ணின் சகோதரரை தாக்கினார். பிரச்னை பெரிதானதும் முக்கிய நபரான திருநாவுக்கரசை கைது செய்யாமல், மூன்று பேரை கைது செய்து விவகாரத்தை முடிக்கப்பார்த்தார்கள். ஆனால், சிபிஐ விசாரணையில் அ.தி.மு.கவினர்தான் இதில் ஈடுபட்டனர் எனத் தெரியவந்து" என்றார். சென்னை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பெண் காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் கைது8 ஜனவரி 2025 ஒரே ஆண்டில் 268 பேர் தானம்: தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு தானம் அதிகரிப்பது ஏன்?7 ஜனவரி 2025 படக்குறிப்பு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்தத் தருணத்தில் அ.தி.மு.கவினர் எழுந்து கடுமையாக கோஷமிட்டனர். பிறகு வெளிநடப்புச் செய்தனர். இதற்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தனது பேச்சை மீண்டும் தொடர்ந்தார் . "இப்படி, பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய 'சார்'ங்க எல்லாம் இப்பொழுது பேட்ஜ் அணிந்துகொண்டு உட்கார்ந்திருந்து, பாதியிலேயே எழுந்து போய்விட்டார்கள். இதுபோன்று 100 சார் கேள்விகளை அ.தி.மு.கவைப் பார்த்து என்னால் கேட்க முடியும். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திட அ.தி.மு.க. ஆட்சியில் 12 நாட்கள் ஆனது. ஆனால், சென்னை மாணவி வழக்கிலே புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை போடப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டிருக்கிறார். தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, உயர்கல்வி கற்க வருகிற மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களுடைய கல்வியைக் கெடுத்துவிடாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்" என்று மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். படக்குறிப்பு,அண்ணா பல்கலைக்கழக வளாகம் தொடர்ந்து, அண்ணா நகர் பாலியல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் போது, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், தி.மு.க. அனுதாபி என்பதைத் தாங்கள் ஒப்புக் கொள்வதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். சென்னை அண்ணா நகர் பகுதியில் பத்து வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது அந்தச் சிறுமியின் உறவினரான இளஞ்சிறார் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி தங்களை மோசமாக நடத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் என்பவரைக் கைது செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதற்குப் பிறகு, இந்த வழக்கை சி.பி.ஐக்கு உயர்நீதிமன்றம் மாற்றியது. இதனை எதிர்த்து காவல்துறை மேல் முறையீடு செய்தது. அந்த மேல் முறையீட்டில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை எனக் கூறிய நீதிமன்றம் மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது அ.தி.மு.கவைத் சேர்ந்த சுதாகர் என்பவரையும், பெண் காவல் ஆய்வாளர் ராஜீ என்பவரையும் சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கமளித்தார். அண்ணா நகர் வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிட்டார். அதற்குப் பிறகு, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரனைப் பற்றிக் குறிப்பிட்ட முதல்வர் அந்த நபர் தி.மு.க. அனுதாபி எனக் குறிப்பிட்டார். "சென்னை மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டவர் – நிச்சயமாக, உறுதியாகச் சொல்கிறேன். அவர் தி.மு.கவில் உறுப்பினராக இல்லை. தி.மு.க. ஆதரவாளர். அதை நாங்கள் மறுக்கவில்லை. அமைச்சர்களுடன் அரசியல்வாதிகளுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம். அது தவறில்லை. ஆனால், யாராக இருந்தாலும், தி.மு.கவினராக இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அவர் தி.மு.க. உறுப்பினர் அல்ல; தி.மு.க. அனுதாபி. அதுதான் உண்மை" என்று குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cz0r0m1zr7jo
-
16ஆம் ஆண்டு நினைவு நாளில் லசந்த விக்ரமதுங்கவிற்கு கல்லறையில் அஞ்சலி
16ஆம் ஆண்டு நினைவு நாளில் லசந்த விக்ரமதுங்கவின் கல்லறைக்கு அஞ்சலி Published By: VISHNU 08 JAN, 2025 | 08:30 PM சிரேஷ்ட ஊடகவியலாளரும், 'சன்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், புதன்கிழமை (8) பொரளை பொதுமயானத்திலுள்ள அவரது கல்லறைக்கு முன்பாக அவரின் குடும்பத்தார், நண்பர்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியபோது.... (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/203350 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் என நம்புகின்றோம் - லசந்த விக்கிரமதுங்க குடும்பத்தினர் Published By: RAJEEBAN 08 JAN, 2025 | 08:33 PM தேசிய மக்கள்சக்தி அரசாங்கத்தின் கீழ் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர். லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பிலான உண்மையை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் கண்டறிந்து நீதியை நிலைநாட்டும் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையின் பின்னர் நான்கு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்துள்ளன எனினும் எந்த அரசாங்கத்திற்கு இந்த கொலைகள் குறித்து விசாரணை செய்வதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லை என லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்து விசாரணை செய்வதாக உறுதியளிக்கவில்லை வேறு பல முக்கியமான சம்பவங்கள் குறித்தும் விசாரணை செய்வதாக உறுதியளித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த சம்பவம் குறித்து பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர், விடுதலைப்புலிகளே இதனை செய்தனர் என்ற ஊகத்தின் அடிப்படையில் இந்த விசாரணைகளை அவர்கள் முன்னெடுத்தனர், எனினும் 2015 இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் எங்கள் சட்டத்தரணி சிஐடிக்கு இந்த விசாரணையை மாற்றுமாறு கோரினார், அதனை தொடர்ந்து அதனை சிஐடிக்கு மாற்றினார்கள் அவ்வேளை ஷானி அபயசேகரவும் இந்த விசாரணைகளின் ஒரு பகுதியாக காணப்பட்டார் என லசந்தவின் சகோதரர் தெரிவித்துள்ளார். சிஐடியினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது லசந்தவின் மரணம் குறித்து பல தகவல்கள் வெளிவந்தன, இந்த கொலைகளில் ஈடுபட்டவர்களின் பெயர் முகவரிகள் கூட தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் கீழ் ஷானி அபயசேகர மீண்டும் விசாரணைகளிற்கு திரும்பியுள்ள நிலையில் புதிய விசாரணைகள் அவசியமில்லை, விசாரணைகளை பூர்த்தி செய்தாலே போதும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/203351
-
கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்!
புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று (08) காலை 11 மணியளவில் இடம்பெற்றது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு தரப்பினரதும் பேராதரவுடன் இடம்பெற்றது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. குறித்த கையெழுத்து போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா, வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன், கலைஞர் மாணிக்கம் ஜெகன், போராளிகள் நலன்புரி சங்கத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். https://thinakkural.lk/article/314493
-
வில்பத்து தேசிய பூங்கா பகுதியில் உயிரிழந்த நிலையில் 11 டொல்பின்கள் மீட்பு
Published By: VISHNU 08 JAN, 2025 | 08:45 PM வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டால்பின்கள் உயிரிழந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (7) மீட்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம் தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று சோதனை செய்தனர். இதன் போது டால் பின்கள் குழு ஒன்று இறந்து கிடந்ததை அவதானித்துள்ளனர். பின்னர் இறந்த டால்பின்களை மீட்டு பரிசோதித்ததன் பின்னர் இது தொடர்பான தகவல்கள் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (7) சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலக அதிகாரிகள் உயிரிழந்த டால்பின்களின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை யை மேற்கொண்டனர். இதன் போது வலையில் சிக்கியதால் அவை இறந்ததாக மருத்துவர்கள் ஊகிக்கின்றனர். மேலும் அவற்றின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்காக விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிய வருகிறது. https://www.virakesari.lk/article/203352
-
ரிக்ல்டன் இரட்டைச் சதம், வெரின் சதம், பலமான நிலையில் தென் ஆபிரிக்கா; பாகிஸ்தான் தடுமாறுகிறது
பாகிஸ்தானுடனான 2ஆவது டெஸ்டில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா தொடரை முழுமையாகக் கைப்பற்றியது 06 JAN, 2025 | 10:38 PM (நெவில் அன்தனி) கேப் டவுடன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பலோ ஒன்னில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தென் ஆபிரிக்கா 10 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது. போட்டியில் ஒரு நாள் மீதம் இருக்க இப் போட்டியில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என முழுமையாகக் கைப்பற்றியது. இந்த வெற்றியுடன் நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சிக்கான அணிகள் நிலையில் 69.44 சதவீத புள்ளிகளுடன் முதலாம் இடத்தை தென் ஆபிரிக்கா நிரந்தரமாக்கிக்கொண்டது. 58 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நான்காம் நாளான இன்று திங்கட்கிழமை மாலை இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அப் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 425 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த பாகிஸ்தான் பலோ ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்டது. போட்டியின் 3ஆம் நாளான நேற்றைய தினம் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான், நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் சகல விக்கெட்களையும் இழந்து 478 ஓட்டங்களைப் பெற்றது. இன்று காலை தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஷான் மசூத் 145 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மத்திய வரிசையில் மொஹமத் ரிஸ்வான், சல்மான் அகா, ஆமிர் ஜமால் ஆகிய மூவரும் 30க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றதுடன் மேலும் இருவர் 20க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். மொஹம்மத் ரிஸ்வான், சல்மான் அகா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு சிறு சோதனையைக் கொடுத்தனர். அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்ததும் தென் ஆபிரிக்கா இன்றைய தினத்திற்குள் வெற்றிபெற்றுவிடும் என்பது உறுதியானது. முதல் நாளன்று உபாதைக்குள்ளான சய்ம் அயூப் இரண்டு இன்னிங்ஸ்களிலும் துடுப்பெடுத்தாடவில்லை. பந்துவீச்சில் கெகிசோ ரபாடா, கேஷவ் மஹராஜ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். தென் ஆபிரிக்கா சார்பாக முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் குவித்த ரெயான் ரிக்ல்டன் 3ஆவது நாளன்று உபாதைக்குள்ளானதால் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடவில்லை. அவருக்கு பதிலாக டேவிட் பெடிங்ஹாம் ஆரம்ப வீரராக ஏய்டன் மார்க்ராமுடன் துடுப்பெடுத்தாடினார். எண்ணிக்கை சுருக்கம் தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 615 (ரெயான் ரிக்ல்டன் 259, டெம்பா பவுமா 106, கய்ல் வெரிசன் 100, மார்க்கோ ஜென்சன் 62, கேஷவ் மஹராஜ் 40, மொஹம்மத் அபாஸ் 94 - 3 விக்., சல்மான் அகா 148 - 3 விக்.) பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 194 (பாபர் அஸாம் 58, மொஹம்மத் ரிஸ்வான் 46, கெகிசோ ரபாடா 55 - 3 விக்., கேஷவ் மஹராஜ் 14 - 2 விக்., க்வேனா மஃபாக்கா 43 - 2 விக்.) பாகிஸ்தான் 2ஆவது இன்: (ஃபலோ ஆன்) சகலரும் ஆட்டம் இழந்து 478 (ஷான் மசூத் 145, பாபர் அஸாம் 81, சல்மான் அகா 48, மொஹம்மத் ரிஸ்வான் 41, ஆமிர் ஜமால் 31, கம்ரன் குலாம் 28, சவூத் ஷக்கீல் 23, கெகிசோ ரபாடா 118 - 3 விக்., கேஷவ் மஹராஜ் 137 - 3 விக்., மார்க்கோ ஜென்சன் 101 - 2 விக்.) தென் ஆபிரிக்கா - வெற்றி இலக்கு 58 ஓட்டங்கள் - 2ஆவது இன்: விக்கெட் இழப்பின்றி 61 (டேவிட் பெடிங்ஹாம் 47 ஆ.இ., ஏய்டன் மார்க்ராம் 14 ஆ.இ.) ஆட்டநாயகன்: ரெயான் ரிக்ல்டன். தொடர்நாயகன்: மார்க்கோ ஜென்சன். https://www.virakesari.lk/article/203168
-
ஒரே ஆண்டில் 268 பேர் தானம்: தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு தானம் அதிகரிப்பது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை "என்னுடைய அப்பாவுக்கு 54 வயது. டீக்கடை வைத்து நடத்தி வந்தார். ஜூலை மாதம் அவருடைய டூவீலரில், ஆலங்குளத்தில் இருந்து வீட்டுக்கு வந்த போது விபத்தில் சிக்கிக் கொண்டார். காயமடைந்த அவரை நாங்கள் திருநெல்வேலி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், அவருடைய மூளை செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை.," என்று விவரிக்கிறார் மகேஷ். "அவர் வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே தான் இருக்கும் நிலைமை வரும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவருடைய உடல் உறுப்புகளை தானமாக தந்தால் மற்றவர்கள் வடிவில் அப்பா உயிர் வாழ்வார் என்று நினைத்தோம். முதலில் சற்று யோசித்தோம். பின்னர் அதுவே சரியான முடிவு என்று பட்டது.," என்கிறார் மகேஷ். திருநெல்வேலி மாவட்டம் கரும்பனூர் பகுதியில் வாழ்ந்து வந்த மகேஷின் தந்தை எம்மேல்பாண்டியனின் (Emmelpandian) 6 உடல் உறுப்புகள் ஜூலை மாதம் 9-ஆம் தேதி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், உடல் உறுப்புகளுக்காக காத்துக் கொண்டிருந்த நோயாளிகளுக்கு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் துணை ஆட்சியர் ஷேக் அய்யூப், ஆலங்குளம் தாசில்தார் ஐ. கிருஷ்ணவேல், எம்மேல்பாண்டியனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தி, இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர். இறந்த உறவினரின் சிறுநீரகத்தை தானம் கொடுப்பவர்கள் கைகளை தானம் கொடுக்க முன்வராதது ஏன்? 'என் கணவர் இறக்கவில்லை, உடல் உறுப்பு தானம் மூலம் 6 பேர் உருவத்தில் வாழ்வார்' உடல் உறுப்பு தானம் செய்த 6 வயது குழந்தை - இந்தியாவுக்கே முன்னுதாரணம் ஆன ரோலி பிரஜபதி முதுமை, இறப்பு இரண்டையும் வெல்ல முடியுமா? நோபல் பரிசு பெற்ற தமிழர் வெங்கி ராமகிருஷ்ணன் பேட்டி ஒரே ஆண்டில் 268 பேர் உடல் உறுப்பு தானம் கடந்த ஆண்டில், எம்மேல்பாண்டியனின் உடல் உறுப்பு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. முன்பு எப்போதும் இல்லாத வகையில் 200க்கும் அதிகமான நபர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. 2023-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கூடுதலாக 90 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். சமீபத்தில் இத்தகைய தானங்கள் அதிகரித்து வரக் காரணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், அதற்காக செயல்படும் மருத்துவ கட்டமைப்பும் தான் என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. 2024-ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் தொடர்பாக வெளியான தரவுகள் தெரிவிப்பது என்ன? விளக்குகிறது இந்த கட்டுரை. தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த ரோஸ்மேரி என்பவர் கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினர் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவரின் கல்லீரல் மற்றும் நுரையீரல் தானமாக வழங்கப்பட்டன. அவரின் இறுதிச் சடங்கின் போது, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவின் பேரில் ரோஸ்மேரிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், நாகையகவுண்டபட்டியை சேர்ந்தவர் அஜய். 23 வயதான அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடலை தானம் செய்வதாக அவரது தந்தை தெரிவித்தார். சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரசுக்கு இந்தியாவிலும் 2 பேர் பாதிப்பு - எவ்வாறு பரவும்? எப்படி தடுப்பது?6 ஜனவரி 2025 உலகத்திலேயே 50 பேருக்கும் குறைவாக உள்ள ரத்த வகை எது?22 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயிரிழந்த எம்மேல்பாண்டியனின் இதயம் உட்பட 6 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. "ஆரம்பத்தில் தயங்கினேன்" எம்மேல்பாண்டியன் விபத்தில் சிக்கிய பிறகு நடந்தவற்றை பிபிசி தமிழிடம் விவரித்தார் அவருடைய மகன் மகேஷ். விபத்துக்கு பிறகு திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்மேல்பாண்டியனை சேர்த்துள்ளனர் அவருடைய உறவினர்கள். மூளைச்சாவு அடைந்துவிட்டதால் அவருக்கு எந்த சிகிச்சையும் பலனளிக்காது என்பதை மருத்துவர்கள் தெரிவித்ததாக அவருடைய மகன் மகேஷ் தெரிவித்தார். பிறகு, மற்றவர்களுக்கு அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என்று மருத்துவர்கள் ஒரு யோசனை வழங்கியதாகவும் தெரிவித்தார் மகேஷ். "உடனே என்னால் அப்படி ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அதனால அன்றைய தினம் நான் வீட்டுக்கு வந்து அம்மா, சித்தி, பாட்டி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் பேசினேன். தானம் செய்வது நல்ல விஷயமாகவே அவர்களுக்கும் தெரிந்தது. மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு சென்ற போது, மருத்துவரிடம் பேசினோம். தானம் வழங்குவது எப்படி? என்னென்ன உறுப்புகளை எடுப்பார்கள்? எப்படி அது அனுப்பப்படும்? என்பன உள்ளிட்ட எல்லா தகவல்களையும் மருத்துவர்கள் எங்களுக்கு விளக்கமாக கூறினார்கள். எங்கள் அப்பாவின் உடல் உறுப்புகளை தானமாக தருவதால் மற்றவர்களுக்கு மறுவாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்ததும், சரி என்று சொல்லி விட்டோம்" என்று விவரித்தார் மகேஷ். அதன் பிறகு அவருடைய அப்பாவின் இதயம், கல்லீரல், தோல், சிறுநீரகம் மற்றும் கார்னியாக்களை எடுத்து தேவைப்படும் நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டை விட உடல் உறுப்பு தானம் அதிகம் 2023-ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பின் அடிப்படையில், உடல் உறுப்புகளை தானம் செய்த அனைவரது உடலுக்கும் அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட தரவுகளில், உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வரும் போக்கை அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவர்களின் எண்ணிக்கை 186-ஆகவும், இதர காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களின் எண்ணிக்கை 82-ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர்களில் 218 பேர் ஆண்கள். 50 பேர் பெண்கள் என்றும் தமிழக அரசின் தரவு தெரிவிக்கிறது. மொத்தமாக அவர்களிடம் இருந்து பெறப்பட்ட 1,500 உடல் உறுப்புகள் பிறருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன. சிறுநீரகத்தில் கல் உருவாவது எப்படி? அது எப்போது உயிருக்கே ஆபத்தாக முடியும்?14 டிசம்பர் 2024 உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?29 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2024-ஆம் ஆண்டு உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர்களில் 218 பேர் ஆண்கள். 50 நபர்கள் பெண்கள் அதிகரிக்கும் உடல் உறுப்பு தானம் 2008-ஆம் ஆண்டு முதல் முறையாக உடல் உறுப்பு தானம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த திட்டத்தை அறிமுகம் செய்தார். அதன் பிறகு அதிமுக ஆட்சியின் போது 2015-ஆம் ஆண்டு தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் உருவாக்கப்பட்டு இன்று முதல் செயல்பட்டு வருகிறது. 2008-ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 7. அதன் பிறகு படிப்படியாக அதிகரித்து வந்த உடல் உறுப்பு தானம், கொரோனா தொற்று காலத்தில் மட்டும் குறைந்தது. 2023-ஆம் ஆண்டில் 178 பேரும், 2024ம் ஆண்டில் 268 பேரும் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என்கிறது தமிழக அரசின் தரவுகள். 2022ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிக அளவில் உடல் உறுப்பு தானங்கள் நிகழ்ந்துள்ளன. டெல்லியில் 3,818 உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டிருப்பதாக அந்த தரவு தெரிவிக்கிறது. தமிழ் நாட்டில் 2,245 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த உறுப்புகள் உயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த தரவில், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 85 பேருக்கு இதயம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. நுரையீரல் தானத்தில் தெலுங்கானாவுக்கு அடுத்தபடியாக 50 நுரையீரல்கள் தமிழ் நாட்டில் தானம் வழங்கப்பட்டுள்ளன என்றும் அந்த தரவுகள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பது ஏன்? தமிழ்நாட்டில் உடல் உறுப்புகளை தானம் செய்வது அதிகரித்து வருவது ஏன்? என்ற கேள்வியை பிபிசி தமிழ், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் (TRANSTAN) உறுப்பினர் செயலராக பணியாற்றும் மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணனிடம் முன்வைத்தது. "அரசு, அதிகாரிகள், மருத்துவக் குழுக்கள், ஊடகங்கள் மற்றும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்ற ஐந்து அம்சங்களே உடல் உறுப்பு தானங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது," என்று தெரிவிக்கிறார் கோபாலகிருஷ்ணன். "ஆரம்பத்தில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி (MMC)-யில் தான் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பிறகு 'மரியாதை அணிவகுப்பு' நடத்தப்பட்டது. உறுப்புகளை தானம் செய்தவரின் உடலை, ஆம்புலன்ஸிற்கு மாற்றும் வரை மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர் அந்த அணிவகுப்பை நடத்தி மரியாதை செய்தனர். 2023-ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட அரசாணைக்குப் பிறகு, இவ்வாறு தானம் செய்யப்பட்ட நபர்களின் உடல்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு மரியாதை வழங்கப்படுகிறது. அவர்கள் இல்லாத போது, அவர்களின் உத்தரவுகளின் பேரில் இந்த அரசு மரியாதை தரப்படுகிறது," என்று தெரிவித்தார் அவர். மருத்துவர்களின் பங்களிப்பு குறித்து பேசும் போது, "அவர்களின் இதர பணிகளுக்கு மத்தியில் இதனை கூடுதல் பொறுப்பாக, தன்னார்வத்துடன் மருத்துவர்கள் எடுத்துக் கொண்டனர். நோயாளிகள் மூளைச்சாவு அடைந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்வது முதல், அவர்களின் உடல் உறுப்புகளில் தானம் வழங்க ஆரோக்கியமாக இருக்கும் உறுப்புகளை தேர்வு செய்தல் போன்ற பணிகள் வரை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்." என்று அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வந்த ஓரிரு நிமிடங்களில் வெளியேறிய ஆளுநர் ரவி - என்ன நடந்தது?6 ஜனவரி 2025 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பனிப்புயலை எதிர்கொள்ளும் அமெரிக்கா - மாகாணங்களில் அவசர நிலை6 ஜனவரி 2025 பட மூலாதாரம்,TRANSTAN.TN படக்குறிப்பு,தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் (TRANSTAN) உறுப்பினர் செயலராக பணியாற்றும் மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணன் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கட்டமைப்பு வசதிகளையும் ஒரு முக்கியமாக அம்சமாக அவர் தெரிவிக்கிறார். "ஆரம்பத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வழங்க போதுமான வசதிகள் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் தான் இத்தகைய உறுப்பு தான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இறந்தவர்களின் உடல் உறுப்புகளை சரியான முறையில் பயன்படுத்தும் வகையில், உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் பெற்று இதர மருத்துவமனைகளுக்கு அனுப்ப Non-Transplant Organ Retrieval Centres அமைப்பதற்கான உரிமம் பல மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலமும் உறுப்பு தானங்கள் அதிகரித்துள்ளன," என்பதை அவர் தெரிவிக்கிறார். "இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் வெளிப்படையாக தமிழக அரசு செய்து வருகிறது. யாருக்கு எந்த உறுப்புகள் தேவை என்பது துவங்கி, யார் மூளைச்சாவு அடைந்துள்ளார்கள், அவர்களின் உறுப்புகள் எங்கே வழங்கப்படுகிறது என்பது வரை தெரிந்து கொள்வதற்கு வெளிப்படையான இணையதளம் செயல்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையும் ஒரு முக்கிய காரணம்," என்றும் கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj0rl57364ro
-
இந்தியாவின் சத்தீஸ்கரில் நக்சல் கண்ணிவெடி தாக்குதலில் 8 வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு
07 JAN, 2025 | 12:44 PM சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் நேற்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இதில் 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சத்தீஸ்கர் காவல் துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டில் மாவட்ட ரிசர்வ் குரூப் (டிஆர்ஜி) என்ற சிறப்பு படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதில் தற்போது 3இ500 வீரர்கள் உள்ளனர். டிஆர்ஜி படைப் பிரிவு வீரர்கள்இ வனப்பகுதிகளில் முகாம் அமைத்து நக்சல் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். இதன்காரணமாக கடந்த 2008-ம் ஆண்டு முதல் இதுவரை சத்தீஸ்கரில் 80 சதவீத நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த சனிக்கிழமை சத்தீஸ்கரின் நாராயண்பூர் தண்டேவாடா மாவட்ட எல்லைப் பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட டிஆர்ஜி படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சல் தீவிரவாதிகள் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருதரப்புக்கும் இடையே நள்ளிரவு வரை துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 5 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிஆர்ஜி படையின் தலைமை காவலர் சன்னு கரம் வீரமரணம் அடைந்தார். அபுஜ்மாத் வனப்பகுதியில் என்கவுன்ட்டர் நடத்திய டிஆர்ஜி படை வீரர்களில் ஒரு பிரிவினர் நேற்று பிஜாப்பூர் மாவட்ட வனப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தனியார் காரில் அம்பிலி பகுதியில் அவர்கள் சென்றபோது சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்துச் சிதறியது. இதில் கார் தூக்கி வீசப்பட்டது. காரில் பயணம் செய்த 8 டிஆர்ஜி வீரர்கள் ஓட்டுநர் உயிரிழந்தனர். இதுகுறித்து பஸ்தர் பகுதி காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் கூறியதாவது: கடந்த 3 நாட்களாக மாநில காவல் துறையும் டிஆர்ஜி வீரர்களும் இணைந்து நக்சல் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதில் ஒரு பிரிவினர் காரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு அவர்களின் கார் கண்ணிவெடியில் சிக்கியது. காரின் பாகங்கள் சுமார் 30 அடி தொலைவுக்கு வீசப்பட்டு உள்ளன. சுமார் 25 அடி உயரம் உள்ள மரத்தின் கிளைகளில் இருந்தும் காரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. கண்ணிவெடி வெடித்த இடத்தில் 10 மீட்டர் ஆழத்துக்கு மிகப்பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. சம்பவ இடத்துக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு உள்ளன. வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. இவ்வாறு ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்தார். சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ கூறும்போது “நக்சல் தீவிரவாதிகள் விரக்தியில் உள்ளனர். இதனால் கோழைத்தனமான தாக்குதலை நடத்தி உள்ளனர். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நக்சல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார். சத்தீஸ்கர் துணை முதல்வர் அருண் கூறும்போது “நக்சல் தீவிரவாதிகள் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். உயிரிழந்த டிஆர்ஜி வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் உயிர்த்தியாகம் வீணாகாது. நக்சல் தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதம் வேரறுக்கப்படும்" என்று தெரிவித்தார். சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் கண்ணிவெடி நேரிட்ட பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். தாக்குதலுக்கு என்ன வகையான வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து மாநில காவல் துறையிடம் அவர்கள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். முதல்கட்ட விசாரணையில்இ கண்ணிவெடி தாக்குதலுக்கு சுமார் 100 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/203209
-
ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி, தொழில்நுட்ப உதவி - "Clean Sri Lanka" வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக JICA உறுதி
07 JAN, 2025 | 03:18 PM இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. ஜப்பான் உதவியில் முன்னெடுக்கப்படும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாக அபிவிருத்தி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஜயிக்கா உதவியில் முன்னெடுக்கப்படும் அனைத்து வேலைத்திட்டங்களையும் விரைவில் நிறைவு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய உதவி மற்றும் எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க ஜயிக்கா நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் ஹாரா சொஹெய் மேலும் தெரிவித்தார். இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் முன்னணி வேலைத்திட்டமான "Clean Sri Lanka" திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த சிரேஷ்ட உப தலைவர், அந்த வேலைத்திட்டத்திற்கு அவசியமான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார். இந்நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பு மறுசீரமைப்பு மற்றும் நகர தூய்மையாக்கல் பணிகளுக்கு ஜயிக்கா நிறுவனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிதி மற்றும் பௌதீக உதவிகள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஜனப்பான் தூதுவர் இசோமதா அகியோ, ஜப்பான் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் கென்ஜி ஒஹாஷி,ஜயிக்கா நிறுவனத்தின் இலங்கைக்கான முதன்மைப் பிரதிநிதி டெட்சுயா யமடா, சிரேஷ்ட பிரதிநிதி யூரி இடே உள்ளிட்ட ஜப்பான் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/203218
-
ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
14 ஆம் திகதி ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் Published By: DIGITAL DESK 3 07 JAN, 2025 | 03:46 PM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 14 ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதனை இன்று செவ்வாய்க்கிழமை (07) அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/203230
-
உபகரணங்கள் அடங்கிய 5,000 பாடசாலை பைகளை நன்கொடையாக வழங்கியது சீனா
07 JAN, 2025 | 05:08 PM நாட்டின் ஆரம்பநிலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான கிராமிய அபிவிருத்திக்கான அறக்கட்டளை (CFRD)' மற்றும் அலிபாபா நிறுவனத்தின் உதவியுடன் panda pack வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய 5,000 பாடசாலை பைகள் அடங்கிய நன்கொடை செவ்வாய்க்கிழமை (07) பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டன. இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொக்கினால் (Qi Zenhong) குறித்த பாடசாலை பைகள் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்னவிடம் நன்கொடையின் அடையாளமாகக் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரி, கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகளும் கிராமிய அபிவிருத்திக்கான சீன அறக்கட்டளையின் உதவிப் பணிப்பாளர் Zou Zhiqiang அவர்களும் பங்கேற்றிருந்தார்கள். https://www.virakesari.lk/article/203238
-
விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
இதே போன்ற சம்பவம் எனது வீட்டிலும் நடந்திருந்தது, ஊசி போட்ட அடுத்த சில நாட்களில் வளர்ப்பு நாய் இறந்துவிட்டது. காலாவதியான ஊசி போட்டிருப்பினமோ?! நண்பர் வீட்டில் இரண்டு பொக்கற் நாய்கள் தடுப்பூசியின் பின் இறந்தன.
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
China-ன் மெகா திட்டம்; Brahmaputra-ல் World Biggest Hydropower Dam? இந்திய பொருளாதாரத்துக்கு ஆபத்தா? உலகின் மிகப்பெரிய நீர்மின் அணையை கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இது திபெத்தின் பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்வது குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. அதே போல, இந்த அணை மூலம் இந்திய பொருளாதாரத்தை சீனா கட்டுப்படுத்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் திட்டம்தான் என்ன? இது குறித்து இந்தியா கவலைப்பட வேண்டுமா?
-
ஐ.நா வுக்கு அளித்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வாக்குறுதியிலிருந்து அரசாங்கம் பின்வாங்குவது இலங்கை மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும்; முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசனம்
07 JAN, 2025 | 11:09 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான உள்ளகப்பொறிமுறையொன்றை நிறுவுவதாகத் தமது அரசாங்கம் வாக்குறுதியளித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எனவே தற்போதைய அரசாங்கம் அவ்வாக்குறுதியிலிருந்து பின்வாங்கும் பட்சத்தில் இலங்கை அரசாங்கம் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் என விசனம் வெளியிட்டார். நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூல வரைபைத் தயாரிப்பதற்குமென கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகமொன்று நிறுவப்பட்டு இயங்கிவந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதித்தேர்தலின் ஊடாக இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தை அடுத்து, அந்த இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் புதிய அரசாங்கத்தினால் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டன. அதேவேளை அந்த இடைக்கால செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட சட்ட வரைபு மற்றும் அதனுடன் தொடர்புடைய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தாம் பணிகளை ஆரம்பித்து சொற்ப காலமே பூர்த்தியடைந்திருப்பதாகவும், எனவே இவ்விடயம் தொடர்பில் உரிய கோப்புகளை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அதுபற்றி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்குரிய பணிகளை முனைப்புடன் முன்னெடுத்துவந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் இதுபற்றி வினவியபோது, பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களுக்குரிய பதிலோ அல்லது நீதியோ இன்றிக் காத்திருப்பதாகவும், எனவே அவர்களுக்கான தீர்வை வழங்குவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயன்முறையொன்று இயங்கவேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார். அதேபோன்று இதுவொரு அரசியல் சார்ந்த விடயமல்ல எனக் குறிப்பிட்ட அவர், ஆகவே உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதை இலக்காகக்கொண்டு கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் தொடரவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான உள்ளகப்பொறிமுறையொன்றை நிறுவுவதாகத் தமது அரசாங்கம் வாக்குறுதியளித்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அலி சப்ரி, எனவே தற்போதைய அரசாங்கம் அவ்வாக்குறுதியிலிருந்து பின்வாங்கும் பட்சத்தில் இலங்கை அரசாங்கம் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/203188
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உயிரை மாய்த்துக்கொள்ளும் இஸ்ரேல் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவும் இயங்கி வந்தது. இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே, கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய நிலையிலும், இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் போரில் உயிரிழக்கும் வீரர்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் விகிதம் அதிகரித்து இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் 38 பேர் வரை உயிரை மாய்த்துக்கொண்டு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் 14 பேரும் 2021ஆம் ஆண்டில் 11 பேரும் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இது 2023இல் 17 ஆகவும், 2024இல் 21 ஆகவும் உயர்ந்துள்ளது. 2023ஆம் ஆண்டில் மட்டும், போர், விபத்துக்கள் மற்றும் நோய்கள் உள்ளிட்ட காரணங்களால் மொத்தம் 558 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் சமீபத்திய காஸா போர் நடவடிக்கை வீரர்களிடையே கடுமையான மனநல கவலைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் (IDF) மனநல பிரச்னைகள் அதிகரித்து வருவதைக் குறிக்கும் பரந்த போக்கை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது. 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கப்பட்டதில் இருந்து 3,900க்கும் மேற்பட்ட மனநல அழைப்புகளை அந்நாட்டு ராணுவ வீரர்கள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 24/7 மனநல ஹாட்லைன் போன்ற நடவடிக்கைகளை IDF செயல்படுத்தியதாகவும், கூடுதலாக, 800 மனநல அதிகாரிகளை ராணுவம் நியமித்ததாகவும் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/314431
-
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் பலி
திபெத் நிலநடுக்கம்: குறைந்தது 95 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன 7 ஜனவரி 2025, 02:48 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை அன்று காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 130 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் (01:00 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது. ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை. திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக ஷிகாட்சே கருதப்படுகிறது. இது திபெத்திய புத்த மதத்தின் முக்கிய நபரான பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும். அவரது ஆன்மீக அதிகாரம் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக உள்ளது சீன அரசு ஊடகங்கள் ஒளிபரப்பிய வீடியோ பதிவுகள் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததையும், இடிபாடுகளுக்குள் சென்று மீட்புப் பணியாளர்கள் அங்கு சிக்கி உள்ள மக்களுக்கு தடிமனான போர்வைகளை வழங்குவதைக் காட்டுகின்றது. கைபேசிகள் மூலம் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிய முடியுமா? கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம் என்ன? 'வயநாடு சம்பவம் நீலகிரிக்கான எச்சரிக்கை மணி'- மேற்குத் தொடர்ச்சி மலை நிலச்சரிவுகள் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன? சோழ, பாண்டிய மன்னர்கள் 1,000 ஆண்டுக்கு முன்பு பூகம்பம், புயல், வெள்ளம், வறட்சியை எவ்வாறு சமாளித்தனர்? சீனா பூகம்ப வலையமைப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜியாங் ஹைகுன் சீன ஊடகமான சிசிடிவியிடம், "ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் சிறிய அதிர்வுகளின் வலிமை மற்றும் நடுக்கம் படிப்படியாக குறையும்" என்று கூறினார். 5 என்ற அளவிலான மற்றொரு நிலநடுக்கம் இன்னும் நிகழக்கூடும் என்றாலும், "பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது"என்று ஜியாங் கூறினார். நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இப்பகுதி, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. உறைபனிக்குக் கீழே வெப்பநிலை உள்ள இப்பகுதியில், சீன விமானப்படை மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது மற்றும் ஆளில்லா விமானங்களையும் அனுப்பியுள்ளது. அப்பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் 2 குழந்தைகளுக்கு ஹெச்.எம்.பி.வி வைரஸ் தொற்று- எவ்வாறு பரவும்? தற்காப்பு என்ன?6 ஜனவரி 2025 அமெரிக்காவில் பனிப்புயல்: 30 மாகாணங்களில் கடுங்குளிர், 7 மாகாணங்களில் அவசர நிலை - 1,500 விமானங்கள் ரத்து6 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நேபாளத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது, அங்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை நேபாளத்தில் அதிர்வு இதற்கிடையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக ஏஃப்பி செய்தி முகமையின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். நிலநடுக்க அதிர்வுக்கு பிறகு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகளை நேபாள அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக ஏஃப்பி தெரிவித்துள்ளது. "அதிர்வு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, இங்குள்ள அனைவரும் கண்விழித்துகொண்டனர். இதுவரை சேதமும் ஏற்பட்டதாக எந்த தகவலுக்கு எங்களுக்கு வரவில்லை" என்று எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நாம்சே பகுதியின் அரசு அதிகாரி ஜகத் பிரசாத் ஏஃப்பியிடம் தெரிவித்தார். ''ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை'' என்கிறார் நேபாளத்தின் சொலுகும்பு மாவட்ட உதவி தலைமை மாவட்ட அதிகாரி ரூபேஷ் விஸ்வகர்மா. 3 புலிகள் பலி: இந்தியாவில் முதன் முறையாக புலிகளுக்கு பறவைக் காய்ச்சல் - மனிதர்களுக்குப் பரவுமா?6 ஜனவரி 2025 இலங்கை: வாகனங்களில் உள்ள கடவுள் சிலை அகற்றப்படுகிறதா?2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை (கோப்புப்படம்) "பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். நான் வெளியே வந்து பார்த்தேன், இங்கு எந்த சேதமும் இல்லை. லோபுச்சேவை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று விஸ்வகர்மா பிபிசி நேபாள சேவையிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார். தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் செய்தித் தொடர்பாளர் மனிகா ஜா பிபிசியிடம், "இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளம் அல்ல, சீனாதான். ஆனால் அதன் தாக்கம் நேபாளத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது." என்றார். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியானது, இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் மோதும் புவியியல் பிழைக் கோடுக்கு அருகே அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி அடிக்கடி நில அதிர்வுகளுக்கு உள்ளாகிறது. 2015ம் ஆண்டில், நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு அருகே 7.8 ரிக்டர் அளவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த துயர நிகழ்வில் கிட்டத்தட்ட 9,000 மக்கள் இறந்தனர் மற்றும் 20,000க்கும் அதிகமான மக்கள் காயமடைந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj90mv1399yo
-
வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் பிறப்பு, இறப்பு விவாகச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள டிஜிட்டல் வசதி ஆரம்பம்!
Published By: DIGITAL DESK 2 07 JAN, 2025 | 11:06 AM (எம்.ஆர்.எம்.வசீம்) வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் திங்கட்கிழமை (06) முதல் பிறப்புச்சான்றிதழ், விவாகச் சான்றிதழ் மற்றும் மரணச் சான்றிதழ்களை இலத்திரனியல் தொழிநுட்பம் ஊடாக அந்த நாடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும். இதன் ஆரம்பகட்டமாக 7 நாடுகளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டமாக வெளிநாட்டுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அந்த நாடுகளில் அமைந்திருக்கும் தூதரகங்கள் ஊடாக தாமதமின்றி பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச்சான்றிதழ்களை விரைவாக பெற்றுக்கொள்ள முடியுமான டிஜிட்டல் வசதியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது வெளிவிவகார, வெளிநாட்டு தொழில், சுற்றுலா அமைச்சு ஊடாக செயற்படுத்தப்படும் இந்த இணையத்தளத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பிறப்புச்சான்றிதழ், மரணச் சான்றிதழ் மற்றும் விவாகச் சான்றிதழ்களை திங்கட்கிழமை (06) முதல் இலத்திரனியல் தொழிநுட்பம் முறைமை ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் தேவையுடன் செயற்பட்டு வந்தன. அதன் பெறுபேறாகவே இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த வாய்ப்பு வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைக்கிறது. உலகம் பூராகவும் பரந்துவாழும் 35இலட்சம் இலங்கை பிரஜைகளுக்கு தங்களின் பிள்ளைகளின் பிறப்புச்சான்றிதழை நீங்கள் வாழும் இடத்தில் இருந்தே ஒரு சில நிமிடங்களில் உங்களுக்கு தற்போது பெற்றுக்கொள்ள முடியும்.அதேபோன்று உங்களது விவாக சான்றிதழ் மற்றும் உங்களது உறவினர்கள் யாராவது மரணித்தால் அவரின் மரணச் சான்றிதழை பெற்றுக்கொள்ளவும் தற்போது இலங்கைக்கு வரவேண்டிய தேவையில்லை. இது பல வருடங்களாக இருந்துவந்த திட்டமாகும். என்றாலும் செயற்பாட்டில் வரவில்லை. இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த புதிய அரசியல் தலைமையுடன் இந்த அதிகாரிகளுக்கு முடியுமாகி இருக்கிறது. எங்களுக்கு தேவைப்பாடு இருந்தால் செய்ய முடியாத எதுவும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஜனாதிபதியின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தில் இது முதலாவது வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டமாகும். அந்த வகையில் ஆரம்பமாக இந்த வேலைத்திட்டத்தை உலகில் 7 நாடுகளில் நேற்று (06) ஆரம்பமானது. எதிர்காலத்தில் அனைத்து நாடுகளிலும் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும். அந்த வகையில் ஜப்பான், கட்டார், குவைட் தூதரக காரியாலயம் மிலானோ, டொரன்டோ, மெல்பேர்ன் மற்றும் டுபாய் கன்சியுளர் காரியாலயம் ஊமாக இந்த நாடுகளில் இருக்கும் இலங்கையர்களுக்கு இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இந்த வேலைத்திட்டம் மூலம் இலட்சக்கணக்கான மக்களுக்கு பாரியதொரு வசதி கிடைக்கப்பெறுகிறது. இல்லாவிட்டால் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இந்த சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள இலங்கைக்கு வந்து, அதற்கு தேவையாக ஆவணங்களை தயாரித்துக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சென்று தேவையான சேவையை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு நீண்ட நாட்கள் விரயமாக்கவேண்டிவரும். அதேபோன்று அதிக செலவு ஏற்படும். என்றாலும் தற்போது அவர்களின் நேரம், காலம் செலவு அனைத்தும் இந்த வேலைத்திட்டம் மூலம் மீதப்படுத்தப்பட்டுகிறது. சுமார் 22 டொலருக்கு உங்களுக்கு தேவையான சான்றிதழை இருக்கும் இடத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதேபோன்று ஏனைய சேவைகளையும் இருக்கும் நாட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியுமான வேலைத்திட்டத்தை மேற்கொள்வதே எமது திட்டமாகும். அதனையும் நாங்கள் மேற்கொள்வோம். தற்போது எங்களுக்கு இருக்கும் சவால் கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதாகும். அது எங்களது பிரச்சினை அல்ல. இதற்கு முன்னர் எடுத்த பிழையான தீர்மானத்தின் பெறுபேறாகும். கடவுசீட்டை பெற்றுக்கொள்ள முடியாமல் பல மாதங்களாக சிலர் காத்திருப்பதை நாங்கள் அறிகிறோம்.அதனால் தற்போது நாங்கள் ஒருதொகை கடவுச்சீட்டுக்கு கேள்விக் கோரல் முன்வைத்திருக்கிறோம். மிக விரைவில் கடவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோன்று பிறப்புச்சான்றிதழ், மரணச்சான்றிதழ் மற்றும் விவாகச் சான்றிதழ்களை வெளிநாடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியுமாகி இருப்பது போன்று கடவுச்சீட்டையும் இலத்திரனியல் தொழிநுட்பம் ஊடாக புதுப்பிக்கவும் புதிய கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளவும் நாங்கள் விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/203182
-
சர்ச்சைக்குரிய மருந்துகளால் பார்வை இழந்தவர்களுக்கு இழப்பீடு; சுகாதார அமைச்சர் அறிவிப்பு
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திரசிகிச்சை காரணமாக பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும், குறித்த மருந்து இறக்குமதிக்கு காரணமான அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தெரிவித்தார். நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல நோயாளர்கள் பார்வையிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பார்வையிழந்த 17 நோயாளர்களுக்கு அரசினால் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நேற்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. இதுபோன்ற இழப்பீடு வழங்குவது இதற்கு முன் நடந்ததில்லை. எனவே, நாங்கள் இப்போது இழப்பீட்டு முறையைத் தயாரித்து வருகிறோம். அது மாத்திரமன்றி, இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது என்றார். https://thinakkural.lk/article/314443
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
எமது அன்புக்குரியவர்களை பாதுகாப்பாக மீட்டுத்தாருங்கள் ரஷ்ய படையில் இணைக்கப்பட்டுள்ள இளையவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி அநுர, அமைச்சர் விஜிதவுக்கு கடிதம் Published By: DIGITAL DESK 2 07 JAN, 2025 | 12:26 PM ஆர்.ராம்- ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை பாதுகாப்பாக எம்மிடத்தில் மீட்டுத்தருவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுங்கள் என்றுகோரிக்கை விடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு தாய்மார் கடிதம் அனுப்பியுள்ளனர். ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது உறவுகள் முகவர்கள் ஊடாக ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக பயணமாகியபோது இறுதித் தருணத்தில் ரஷ்யாவின் ஊடாக பயணத்தினை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டனர். அதற்கமைவாக அவர்கள் ரஷ்யாவுக்குச் சென்றபோது அங்கு இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய அதிகாரியொருவர் அவர்களை சில நாட்களுக்கு பராமரித்ததோடு பின்னர் ரஷ்ய படையில் பயிற்சிகளைப் பெறுவதற்கான இணைப்புச் செய்துள்ளார். அப்போதும் கூட அவர் அடையாள அட்டையைப் பெறுவதற்காகவே அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். எனினும் பயிற்சியின் பின்னர் எமது உறவுகள் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை மீட்டுத்தருமாறு ஏற்கனவே டிசம்பர் 2ஆம் திகதி நாம் எழுத்துமூலமான கோரிக்கையை விடுத்துள்ளபோதும் இதுவரையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுத்ததாக நாம் அறியவில்லை. எமக்கும் வெளிவிவகார அமைச்சு எவ்விதமான பதில்களையும் வழங்கவில்லை. இந்நிலையில், எமது உறவுகளுடன் காணப்பட்ட தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இற்றையக்கு ஒருமாதமாக எமக்கு எந்தவிதமான பதில்களும் அளிக்கப்படாதுள்ள நிலையில் எமது உறவுகளை மீட்டுத் தருவதற்காக உரிய நடடிவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். விசேடமாக, எமது அன்புக்குரியவர்கள் தொடர்புகள் துண்டிக்கப்படுவதற்கு முன்னதாக அவர்கள் உயிருக்கு ஆபத்தான போர்க்களத்தில் இருப்பதாக வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. ஆகவே அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து எம்மிடத்தில் ஒப்படைக்குமாறு நாம் கோரிக்கை விடுப்பதோடு கிளீர் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு ஆட்கடத்தில் வலையமைப்புக்களையும் முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம். எமது நீதியையும், நியாயத்தையும் பெற்றுத்தருவீர்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு காணப்படுவதோடு விரைந்து இந்த விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் இதனால் நாம் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிப்படைந்து வருகின்றோம் என்பதையும் குறிப்பிடுகின்றோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/203199
-
சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு; அரச அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் என்கிறார் அமைச்சர்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் சட்டவிரோதமான முறையிலும், வழங்கப்பட்ட அனுமதிகளுக்கு மேலதிகமாகவும் சுண்ணக்கல் அகழ்வுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், சுண்ணக்கல் ஏற்றி சென்ற கனரக வாகனங்களை பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். அதனை அடுத்து, சுண்ணக்கற்களை உரிய அனுமதிகளுடனேயே எடுத்து செல்வதாகவும், கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக சுண்ணக்கல் வர்த்தகத்தில் தாம் ஈடுபட்டு வருவதாகவும், சிட்டி ஹாட்வெயாரின் உரிமையாளர் யாழில் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சடடவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்பட்ட பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் சென்று, சுண்ணக்கல் அகழப்பட்டு பாரிய பள்ளங்களாக காணப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கடற்தொழில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது, யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் அரச அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும். இது தொடர்பிலான விசாரணைகள் விரைந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/314405
-
யாழில் மீண்டும் சோதனைச்சாவடிகள்
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. குறித்த சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்திருந்தனர். இந்த நிலையில் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்ற பின்னர் அங்கு இருந்த சோதனைச் சாவடிகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன. இவ்வாறான நிலையில் திடீரென அகற்றப்பட்ட அந்த சோதனைச் சாவடிகள் தற்போது மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. மாற்றம் என்று கூறி புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அனுர அரசாங்கம் சோதனைச் சாவடிகளை தாமே அகற்றுவதும் மீண்டும் தாமே அமைக்கின்ற இந்த நடவடிக்கை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகத்தையும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/314426
-
தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு
Published By: DIGITAL DESK 7 07 JAN, 2025 | 10:22 AM வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (06) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு குறித்த பதாகை நடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பையும், விசனத்தையும் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எவ்வளவு பகுதி தொல்லியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது? அதற்காக வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா? ஏதிர்காலத்தில் அப்பகுதியில் புத்த விகாரை வருமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தொல்லியல் திணைக்களத்தின் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகின்றது. கடந்த 28.12.2024 அன்று இரவோடு இரவாக குச்சவெளி பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் பதாகை நடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 01ஆம் திகதியன்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/203181
-
சென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தம்பியை கொல்வதாக மிரட்டிய நபர் - பாட்டியால் ஒரே ஆண்டில் கிடைத்த நீதி
பட மூலாதாரம்,AFP கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 6 ஜனவரி 2025 எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். சென்னையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 43 வயதான நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதில் சிறுமியின் பாட்டிக்கு பிரதான பங்கு உள்ளதாகக் கூறுகிறார், அரசு சிறப்பு வழக்கறிஞர் அனிதா. வழக்குப் பதிவான ஓராண்டில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. போக்சோ வழக்குகளில் முன்னுதாரண வழக்காக இது இருப்பதாகக் கூறுகின்றனர், குழந்தைகள் நல ஆர்வலர்கள். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது? ஒரே ஆண்டில் நீதிமன்ற தீர்ப்பு வந்தது எப்படி? குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைத்ததன் பின்னணியில் சிறுமியின் பாட்டி செய்தது என்ன? 'பாலியல் வன்புணர்வு செய்தி வந்தால் சேனலை மாற்றிவிடுவோம்' - சவாலாக இருக்கிறதா ஆண் குழந்தை வளர்ப்பு? அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் அரசியலாக்கப்படுகிறதா? சியாரா லியோன்: அவசர நிலையை ஏற்படுத்திய குழந்தை பாலியல் வல்லுறவு வழக்குகளில் நீதி கிடைத்ததா? ராஜஸ்தான்: 18 வயதில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் 32 வருட சட்டப் போராட்டம் சிறுமிக்கு நடந்தது என்ன? சென்னை பாரிமுனை பகுதியில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் நடந்த சம்பவம் இது. பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை அவருக்கு நன்கு அறிமுகமான சையது இப்ராஹிம் என்ற நபர் தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமி வசிக்கும் வீட்டிலிருந்து சற்று தொலைவில் தனது தாயார் வசிக்கும் வீட்டுக்கு சிறுமியை சையது இப்ராஹிம் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை வீட்டுக்குள் வருமாறு இப்ராஹிம் அழைத்துள்ளார். சிறுமி மறுக்கவே அவரை வீட்டுக்குள் தள்ளி தாடையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் சிறுமி மயக்கமடைந்ததாக நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இதன் பிறகு கண் விழித்த சிறுமி தனக்கு ஏதோ நடந்திருப்பதை அறிந்து அங்கிருந்து தடுமாறி தனது வீட்டுக்கு வந்துள்ளார். "சிறுமி வசிக்கும் குடியிருப்புக்கு அருகில் இப்ராஹிம் குடும்பம் வசித்து வருகிறது. சம்பவத்துக்குப் பிறகு சிறுமி நடந்து வருவதை இப்ராஹிம் கவனித்துள்ளார். நடந்த சம்பவத்தை உன் அம்மாவிடமோ, என் மனைவிடமோ சொன்னால் உன் தம்பியைக் கொன்றுவிடுவேன்" என மிரட்டியதாக நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. "இப்ராஹிமின் மகளுக்கும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான். இருவரும் ஒன்றாக பள்ளிக்குச் சென்று வந்துள்ளனர். சம்பவம் நடந்த நாளில், நான் உனக்கு அப்பா மாதிரி எனக் கூறி சிறுமியை கூட்டிச் சென்றுள்ளார்" என்கிறார் இந்த வழக்கில் வாதாடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் அனிதா. சிறுமியின் தந்தை சிறு வயதிலேயே பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் ஒரு நபரை சிறுமியின் தாயார் மறுமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறார். 'ரூ.25 லட்சத்தை இழந்தேன்' - இந்தியாவில் வேலைக்குச் செல்லும் மணமான பெண்கள் ஊதியத்தை என்ன செய்கிறார்கள்?4 ஜனவரி 2025 உங்கள் குழந்தைகளை 'வக்கிர ஆண்களின்' பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க என்ன செய்யவேண்டும்?5 ஆகஸ்ட் 2023 பாட்டி கொடுத்த தைரியம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் தனது தம்பியைக் கொன்றுவிடுவதாக இப்ராஹிம் மிரட்டியதால் சிறுமியும் அவரது தாயும் பயந்து போய் அமைதியாக இருந்துள்ளதாகக் கூறுகிறார் அரசு வழக்கறிஞர் அனிதா. இதுதொடர்பாக சையது இப்ராஹிமிடம் நியாயம் கேட்கச் சென்ற சிறுமியின் தாயாருக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்ததால் தாயும் மகளும் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். மேற்கொண்டு பேசிய அனிதா, "பல நாட்களாக சிறுமி தூக்கத்தில் எழுந்து, 'தம்பியை கொன்றுவிடுவார்களா?' எனக் கேட்டு அழுதுள்ளார். தன் மகளுக்கு நேர்ந்த துன்பத்தால் சிறுமியின் தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்" என்றார். ''சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்து (அக்டோபர்) தனது மகளின் உடல்நலனை விசாரிப்பதற்காக சிறுமியின் பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனது பேத்திக்கு நடந்த சம்பவம், அவருக்குத் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சையது இப்ராஹிமை அவரது வீட்டில் சந்தித்து சண்டை போட்டுள்ளார். அப்போது பாட்டியை சையது மிரட்டியுள்ளார். இதன் பிறகும் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையம் செல்வதற்கு அஞ்சியுள்ளனர். ஆனால், அவரது பாட்டிதான் தனது மகளுக்கு தைரியம் கொடுத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வைத்தார்" என்கிறார் அரசு வழக்கறிஞர் அனிதா. புதிய சாதனை படைத்த பும்ரா இல்லாமல் இந்திய அணி ஆவேசம் - கடைசி டெஸ்ட் மூன்றாவது நாளே முடிவுக்கு வருமா?4 ஜனவரி 2025 காதலி சத்தியத்தை நம்பி ஒரே வீட்டில் 50 ஆண்டு காத்திருந்த இவர் என்ன ஆனார்? காதலி எங்கே போனார்?4 ஜனவரி 2025 சட்டப் பிரிவை மாற்றிய நீதிபதி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் சிறுமியின் தாயார் புகார் கொடுத்த பிறகு குற்றம் சுமத்தப்பட்ட நபர் மீது 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் போக்சோ சட்டப்பிரிவு 8-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின்படி ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். "இது குழந்தைகளைத் தவறாக தொடுவதற்காகப் போடப்படும் சட்டப் பிரிவு" எனக் கூறிய அனிதா, இந்த வழக்கில் கைதான இப்ராஹிமின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, 'சிறுமியிடம் பேச வேண்டும்' என நீதிபதி கூறியதாகத் தெரிவித்தார். சிறுமியை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி நேரில் அழைத்துப் பேசினார். அப்போது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதை உறுதி செய்து, மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதன் பின்னரே இந்த வழக்கில் சட்டப் பிரிவுகள் மாற்றப்பட்டதாகக் கூறுகிறார் அனிதா. மருத்துவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், போக்சோ பிரிவு 6-இன் கீழ் வழக்கு மாற்றப்பட்டது. "அதன்படி ஆயுள் தண்டனை கிடைக்கும்'' என்றார் அவர். பூமிக்கும் வானில் இரட்டை சூரியன்கள் இருந்தனவா? ஆய்வில் புதிய தகவல்28 டிசம்பர் 2024 பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரமாண்ட அணை கட்ட தயாராகும் சீனா - இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு?29 டிசம்பர் 2024 படிப்பை தொடர்ந்த மாணவி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் அதேநேரம், காவல் நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்ததால் சிறுமியின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி நீதிபதியிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் எடுத்துக் கூறியதும், 'அதே பள்ளியில் சிறுமி படிக்க வேண்டும். காவல் துறை அதிகாரிகளிடம் நான் கூறியதாகப் பேசுங்கள்' என நீதிபதி கூறினார் என்கிறார் அரசு வழக்கறிஞர் இதையடுத்து, தற்போது அதே பள்ளியில் சிறுமி படித்து வருகிறார். "மிக நன்றாகப் படிக்கக் கூடிய மாணவி அவர். இந்தச் சம்பவத்தால் அவருக்கு ஓர் ஆண்டு படிப்பு வீணாகிவிட்டது" எனக் கூறுகிறார் அனிதா. ''கடந்த பத்து மாதங்களில் பல்வேறு சவால்களை இந்த வழக்கு சந்தித்துள்ளது. குற்றம் நடந்த நேரத்தில் சிறுமி மயக்கமாகிவிட்டதால் சையது இப்ராஹிமை தொடர்புபடுத்தும் நேரடிகள் சாட்சிகள் எதுவும் இல்லை. தன்னுடைய தரப்பை நியாயப்படுத்துவதற்கு ஏழு சாட்சிகளை சையது இப்ராஹிம் கொண்டு வந்தார். அவர்களின் சாட்சிகளில் முரண்பாடு உள்ளதை அரசுத் தரப்பு நிரூபித்தது" எனக் கூறுகிறார் அனிதா. குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?22 டிசம்பர் 2024 கூகுள் மேப் பார்த்து கோவா செல்ல முயன்ற 4 பேர் நள்ளிரவில் நடுக்காட்டில் சிக்கியது எப்படி?16 டிசம்பர் 2024 தண்டனை விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நீதிபதி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அளித்த தீர்ப்பில், 'குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் 30 ஆயிரம் ரூபாய் அபராதம்' விதிப்பதாக அறிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 10 லட்ச ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கவும் நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார். "கைதான நாளில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் சிறையில்தான் இருந்தார். இந்த வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது" என்கிறார் அரசு வழக்கறிஞர் அனிதா. சிறுமி வழக்கில் பாட்டியின் தைரியத்தால் இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்ததாகக் கூறிய அனிதா, "தற்போது அந்தப் பாட்டியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை விசாரணைக்கு அழைக்கவில்லை" என்றார். கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?28 டிசம்பர் 2024 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மூத் யானை குட்டியின் உடல் மீட்பு - சுவாரஸ்ய தகவல்கள்26 டிசம்பர் 2024 'எந்த விவரமும் வெளிவராது' பட மூலாதாரம்,GETTY IMAGES மேலும், "குழந்தைகளுக்கு முதலில் தன்னம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்களில் முதல் அடி, குழந்தைக்குத்தான் விழுகிறது. சில பெற்றோர், குடும்ப மானம் போய்விடும் என அஞ்சுகின்றனர். போக்சோ வழக்குகளில் குழந்தைகள் தொடர்பான எந்த விவரங்களும் வெளியில் செல்லாது. இத்தகைய வழக்குகளில் அனைத்துத் தகவல்களையும் மிக ரகசியமாகவே கையாள்கிறோம். ஆவணங்களில் சிறுமியின் பெயர், பெற்றோர் பெயர் என அனைத்தும் மறைக்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான சட்ட உதவியும் மனநல ஆலோசனையும் உடனுக்குடன் கிடைக்கிறது" எனக் கூறினார் அனிதா 'அறிமுகமான நபர்களால்தான் பிரச்னை' இந்தியாவில் குழந்தைகளுக்கு நேரும் பாதிப்புகள் தொடர்பாக 2007ஆம் ஆண்டு மத்திய அரசு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதுகுறித்துப் பேசிய குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் அரசு, "13 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான நபர்கள், பாலியல் தொல்லை தருவது தெரிய வந்தது" எனக் கூறுகிறார். பட மூலாதாரம்,DEVANEYAN ARASU/FB படக்குறிப்பு, குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் அரசு இதே விவரங்கள், 2022-ஆம் ஆண்டு தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். "ஒரே நாளில் இது நடப்பதில்லை" எனக் கூறும் அவர், "குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுப்பதில் தொடங்கிப் பல்வேறு நிலைகளில் அவர்களிடம் அத்துமீறுகின்றனர்," என்றார். சென்னை சிறுமி வழக்கில் பாட்டியின் தைரியத்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை வரவேற்றுப் பேசிய தேவநேயன் அரசு, "தன்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட துன்பம், வேறு குழந்தைக்கு நடக்கக்கூடாது என்ற எண்ணம் பாராட்டப்பட வேண்டியது" என்றார். மேலும், சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குவதிலும் சமூகரீதியான கட்டுப்பாடுகளை உடைப்பதிலும் இந்த வழக்கு உதாரணமாக உள்ளதாக தேவநேயன் அரசு தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1j06djxndjo
-
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஓரிரு நாட்களில் பதவி விலகலா? புதிய தகவல்கள்
ஜஸ்டின் ட்ரூடோ சகாப்தம் முடிவுக்கு என்ன காரணம்? - டிரம்ப் அச்சுறுத்தலா? உள்கட்சி மோதலா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரூடோ தான் பதவி விலகுவதை அறிவித்தார் கட்டுரை தகவல் எழுதியவர்,மைக் வென்ட்லிங், நாடின் யூசிஃப், ஜான் சுட்வொர்த் பதவி,பிபிசி நியூஸ் கனடாவின் லிபரல் கட்சிக்குள் அதிகரித்துவரும் அழுத்தங்களைத் தொடர்ந்து, ஒன்பது ஆண்டுகாலமாக தான் வகித்து வந்த பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். தனது லிபரல் கட்சி ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை மட்டுமே தான் பதவியில் நீடிக்கப் போவதாகவும், மார்ச் 24 வரை நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் எனவும் ட்ரூடோ கூறினார். "அடுத்த தேர்தலில், மக்கள் விரும்பும் தலைவரை தேர்வு செய்வதற்கான உரிமை கனடாவுக்கு உள்ளது. உட்கட்சி மோதல்களை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தால், என்னால் அந்த தேர்தலில் ஒரு நல்ல வேட்பாளராக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது." என திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ கூறினார். கனடாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், ட்ரூடோ மீதான கனேடியர்களின் அதிருப்தி அவரது கட்சியின் வெற்றிக்கு ஒரு பெரிய தடையாக மாறியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு - என்ன காரணம்? டிரம்ப் கனடாவை அமெரிக்க மாகாணமாக மாற்ற விரும்புவது ஏன்? இதற்கு கனடாவின் பதில் என்ன? கனடாவில் ட்ரூடோ அரசு தப்புமா? இந்திய வம்சாவளி தலைவரின் கட்சி ஆதரவு வாபஸ் கனடாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவு, சிக்கலில் ஜஸ்டின் ட்ரூடோ - இந்தியாவை பாதிக்குமா? 'ட்ரூடோவின் ராஜினாமாவால் எதுவும் மாறவில்லை' ஒட்டாவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த முடிவைப் பற்றி, நேற்று இரவு உணவு உண்ணும்போது என் குழந்தைகளிடம் சொன்னேன்" என்று கூறினார். "ஒரு முறையான, நாடு தழுவிய போட்டி செயல்முறை மூலம் கட்சிக்கான அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். லிபரல் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையைத் தொடங்க, இயக்குநர்கள் குழுவின் கூட்டம் இந்த வாரம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் சச்சித் மெஹ்ரா கூறினார். "எங்கள் கட்சிக்கும் நாட்டிற்கும் பத்தாண்டுகளுக்கும் மேலாக தலைமை வகித்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நாடு முழுவதும் உள்ள லிபரல் கட்சியினர், மிகவும் கடமைப்பட்டுள்ளோம்." என தனது அறிக்கையில் சச்சித் மெஹ்ரா தெரிவித்திருந்தார். "ஒரு பிரதமராக, அவரது தொலைநோக்குப் பார்வை கனேடியர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியது," என்று அவர் கூறினார். குழந்தைகள் நலத் திட்டம் உள்பட ட்ரூடோ ஆட்சியில் நாட்டின் மருத்துவத்துறையில் கொண்டுவரப்பட்ட சில நலத்திட்டங்களை மேற்கோள் காட்டி இவ்வாறு அவர் தெரிவித்தார். "ட்ரூடோவின் ராஜினாமாவால் எதுவும் மாறவில்லை" என்று கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே கூறினார். "லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமைப் பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள், 9 ஆண்டுகளாக ட்ரூடோ செய்த அனைத்தையும் ஆதரித்தனர். இப்போது அவர்கள் பெயரளவுக்கு தங்கள் தலைமையின் முகத்தை மாற்றி, அடுத்த நான்கு வருடங்களுக்கு, கனேடியர்களை ஏமாற்ற விரும்புகிறார்கள். அதாவது ஜஸ்டினைப் போலவே" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பொய்லிவ்ரே தெரிவித்தார். தமிழ்நாட்டிலும் 2 குழந்தைகளுக்கு ஹெச்.எம்.பி.வி வைரஸ் தொற்று- எவ்வாறு பரவும்? தற்காப்பு என்ன?6 ஜனவரி 2025 அமெரிக்காவில் பனிப்புயல்: 30 மாகாணங்களில் கடுங்குளிர், 7 மாகாணங்களில் அவசர நிலை - 1,500 விமானங்கள் ரத்து6 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 53 வயதான ட்ரூடோ பதவி விலக வேண்டுமென்ற அழுத்தங்கள் அவரது லிபரல் கட்சிக்குள் இருந்து எழுந்தன ட்ரூடோவுக்கு எதிரான உள்கட்சி அழுத்தங்கள் ட்ரூடோ பதவி விலக வேண்டுமென்ற அழுத்தங்கள் அவரது லிபரல் கட்சிக்குள் இருந்து எழுந்தன. டிசம்பரில் கனடாவின் துணைப் பிரதமரும் ட்ரூடோவின் நீண்ட கால நண்பருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் திடீரென ராஜினாமா செய்தபோது, இந்த அழுத்தம் அதிகரித்தது. ஃப்ரீலேண்ட் தனது ராஜினாமா கடிதத்தில், "அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கனேடிய பொருட்கள் மீதான வரி தொடர்பாக பல அச்சுறுத்தல்களை விடுக்கிறார். ஆனால் டிரம்ப் முன்வைக்கும் இந்த 'கடுமையான சவாலை' எதிர்கொள்ள ட்ரூடோ போதுமான அளவு பணியாற்றவில்லை" என்று குற்றம் சாட்டினார். கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார். இது கனடாவின் பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். "ஃப்ரீலாண்ட் துணைப் பிரதமராகத் தொடர்ந்து செயல்படுவார் என்று நம்பினேன். ஆனால் அவரது முடிவு வேறுவிதமாக இருந்தது" என்று ட்ரூடோ செய்தியாளர்களிடம் கூறினார். டிரம்பின் இந்த அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடனான எல்லையில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தப்போவதாக கனடா அறிவித்துள்ளது. டிரம்ப் ஒரு ஆன்லைன் பதிவில், வரிகள் தொடர்பான அழுத்தம் ட்ரூடோவின் ராஜினாமாவுக்கு வழிவகுத்தது என்று கூறினார், மேலும் கனடாவை, 'அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற வேண்டும்' என்ற தனது வழக்கமான கருத்தை மீண்டும் கூறினார். "கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் குறையும். கனடாவைத் தொடர்ந்து சுற்றி வரும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து கனடா முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்," என்றும் டிரம்ப் அந்த பதிவில் கூறினார். அதிபர் பதவியின் கடைசி கட்டத்தில் இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்க பைடன் முடிவு5 ஜனவரி 2025 தென் கொரியா: பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரை ஏன் கைது செய்ய முடியவில்லை - தடுப்பது யார்?5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார் லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் கனடாவில் 2019 முதல், லிபரல் கட்சி பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி செய்து வருகிறது. ஃப்ரீலாண்டின் ராஜினாமாவைத் தொடர்ந்து, ஆட்சியைத் தக்கவைக்க லிபரல் கட்சிக்கு உதவிய பிற கட்சிகளின் ஆதரவை ட்ரூடோ இழந்தார். அதாவது இடதுசாரி சார்பு கொண்ட புதிய ஜனநாயகவாதிகள், மற்றும் கியூபெக் தேசியவாத கட்சியான பிளாக் கியூபெகோயிஸ் (Bloc Quebecois) போன்ற கட்சிகளின் ஆதரவை இழந்தார் கனடாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, கருத்துக்கணிப்புகளில் பல மாதங்களாக லிபரல் கட்சியை விட முன்னிலையில் உள்ளது. ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், லிபரல் கட்சி கணிசமான தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கன்சர்வேடிவ் கட்சி கூறுகிறது. இப்போது லிபரல் கட்சியினர் அடுத்த தேர்தலுக்கான தங்கள் கட்சியின் முகமாக இருக்க ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். இந்தத் தேர்தல் அக்டோபர் 20 அல்லது அதற்கு முன் நடைபெற வேண்டும். இந்த உட்கட்சி தேர்தல் வெளிப்படையாக நடைபெறும் என்றும், பிரதமர் அலுவலகம் இந்த செயல்முறையிலிருந்து முற்றிலும் விலகி இருக்கும் என்றும், லிபரல் கட்சி உறுப்பினர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை அவர்களிடமே வழங்கப்படும் என்றும் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிளாக் கியூபெகோயிஸ் தலைவர் ஈவ்ஸ்-பிரான்சுவா பிளான்செட், 'லிபரல் கட்சியினர் தங்கள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தவுடன், கனடாவுக்கான தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டும்' என்று பரிந்துரைத்தார். ஹெச்1பி தவிர, அமெரிக்காவில் இந்தியர்களுக்கு அதிக வேலை அனுமதி தரும் மேலும் ஒரு திட்டத்திற்கும் எதிர்ப்பு4 ஜனவரி 2025 அமெரிக்க அதிபராக தயாராகும் டிரம்புக்கு ஆபாசப் பட நடிகை வழக்கில் என்ன தண்டனை? நீதிமன்றம் புதிய அறிவிப்பு4 ஜனவரி 2025 ட்ரூடோ சகாப்தத்தின் முடிவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ட்ரூடோவின் முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன 1970கள் மற்றும் 80களில் கனடாவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய முன்னாள் கனேடிய பிரதமர் பியர் ட்ரூடோவின் மகன் தான் ஜஸ்டின் ட்ரூடோ. ஜஸ்டின் ட்ரூடோ யாரும் எதிர்பாராத சமயத்தில், 2015இல் தனது கட்சியை பெரும்பான்மை ஆதரவுடன் கனடாவின் அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். ட்ரூடோவின் அமைச்சரவையில் வழங்கப்பட்ட பாலின சமத்துவம் (இப்போதும் 50% பெண் உறுப்பினர்கள் என்ற அமைப்பே தொடர்கிறது), கனடாவில் பழங்குடி மக்களுடனான நல்லிணக்கச் செயல்பாடுகளில் முன்னேற்றம், தேசிய கார்பன் வரி கொண்டு வரப்பட்டது, குடும்பங்களுக்கு வரி இல்லாத குழந்தை நலத் திட்டத்தை அமல்படுத்துதல், மற்றும் கஞ்சாவை (Recreational cannabis) சட்டப்பூர்வமாக்குதல் போன்றவை அவரது புகழ்பெற்ற அரசியல் திட்டங்களில் அடங்கும். ட்ரூடோவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அசெம்பிளி ஆஃப் ஃபர்ஸ்ட் நேஷன்ஸ் (Assembly of First Nations) அமைப்பின் தேசியத் தலைவர் சிண்டி உட்ஹவுஸ் நெபினாக், பழங்குடியின பிரச்னைகளில் ட்ரூடோ முன்னெடுத்த நடவடிக்கைகளை பாராட்டினார். நெபினாக் வெளியிட்ட அறிக்கையில், "அசெம்பிளி ஆஃப் ஃபர்ஸ்ட் நேஷன்ஸ் அமைப்பின் முக்கியமான பிரச்னைகளைத் தீர்க்க பல அர்த்தமுள்ள நடவடிக்கைகளை ட்ரூடோ எடுத்துள்ளார்" என்று கூறினார். "இதில் இன்னும் நிறைய வேலைகள் எஞ்சியுள்ளன, ஆனால் ட்ரூடோவின் நடவடிக்கைகள் எதிர்கால முன்னேற்றத்திற்கான ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளன." என்று கூறினார் நெபினாக். ட்ரூடோவின் முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன. அதன் பிறகு கொரோனா பெருந்தொற்று காலத்தின் தடுப்பூசி தொடர்பான ஆணைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளும் சில கனேடியர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டன. இது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 'ஃப்ரீடம் கான்வாய் டிரக்' (Freedom Convoy truck) போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இறுதியில் போராட்டக்காரர்களை அகற்ற அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தினார் ட்ரூடோ. மிக சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் ட்ரூடோவின் ஆட்சி மீதான விரக்தி காரணமாக அவரின் செல்வாக்கு குறைந்து வருகிறது. செப்டம்பர் மாதம் `Ipsos' தளத்திற்கு பதிலளித்தவர்களில் 26% பேர் மட்டுமே ட்ரூடோ பிரதமருக்கான சிறந்த தேர்வு என்று கூறினர். ஒட்டாவாவில், ட்ரூடோவின் ராஜினாமாவைக் கொண்டாடும் வகையில், ஒரு சிறிய எதிர்ப்பாளர்கள் குழு நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே நடனமாடினர். ஆனால், அங்கிருந்த ஒரு நபர் 'ட்ரூடோவின் ஆட்சியில் அனைத்தும் சரியாகவே இருப்பதாக தான் கருதுவதாகக்' கூறினார். "நான் ஒரு தச்சன். நான் என் சொந்த வணிகத்தில் கவனம் செலுத்துகிறேன், எனக்கு வருமானம் வருகிறது, அதை வைத்து வாழ்க்கையை நடத்துகிறேன். எல்லாம் சரியாகவே இருக்கிறது" என்று பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஹேம்ஸ் கமர்ரா பிபிசியிடம் கூறினார். மற்றொரு கனேடியரான மரிஸ் காசிவி, இது ஒரு அரசியல் சகாப்தத்தின் முடிவு போல தோன்றுகிறது என்றார். ட்ரூடோ பதவி விலகியதற்கு வருத்தப்படுகிறீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு, "இல்லை, இதுதான் சரி" என்று பதிலளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9wl91r4qdno