Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நீங்கள் குறிப்பிடுவதில் உண்மையுள்ளது அக்கா. ஆனாலும் உண்மையான தேவை உள்ளவை வெளித்தெரியாமல் யாரிடம் கேட்பது எனத் தெரியாதும் இருக்கின்றனர்.
  2. ஐந்தாவது தரம் 03/06/2024 இல் 25000ரூபாவை திரு ரஜிந்தன் உடைய வங்கிக் கணக்கில் வைப்பிட்டுள்ளார். 9) திரு திருமதி சந்திரமோகன் புஸ்பமலர் தம்பதிகளின் திருமணநாளை முன்னிட்டு வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த 25000 ரூபா நன்கொடை அளித்துள்ளனர். ஆறாவது தரம் 05/06/2024 இல் வீடு, மலசல கூடம் ஆகியவற்றை கட்டி முடிக்க 20000ரூபாவை திரு ரஜிந்தன் உடைய வங்கிக் கணக்கில் வைப்பிட்டுள்ளார். 10) திரு துரைசிங்கம் துர்க்கைநாதன்(ராஜன்) 20000 ரூபா வீட்டுத்திட்டப் பணிகளை நிறைவு செய்ய பற்றாக்குறையாக இருந்த பணத்தை வழங்கியுள்ளார். மொத்தமாக 2,50,000 ரூபா பயனாளியின் வங்கிக் கணக்கில் வைப்பிடப்பட்டது. பங்களித்த நட்புகளுக்கும் உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். அவரது குடும்பம் வீடமைப்புப் பணிகளை பூரணப்படுத்தி வீட்டில் குடிபுக அண்ணளவாக இரண்டரை இலட்ச ரூபா பணம் தேவையாக இருந்தது. கருணை உள்ளம் கொண்ட உறவுகள் பலர் இணைந்து அவருடைய வீட்டை கட்டி முடிக்க உதவியிருக்கிறார்கள். ஒரு குடும்பத்தை குடியிருக்க வைத்துள்ளார்கள். தற்போது அவர்கள் அவ்வீட்டில் வசிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறோம். (ஒரு அறைக்கு காறை வேலை முடியவில்லை)
  3. மாமரத்தின் கிளைத் தடியை பூவரசந்தடி நடுவதை போல தமிழ்நாட்டில் ஒருவர் நட்டு வளர்ப்பதாக வாசித்திருந்தேன். இது சம்பந்தமான விபரம் ஏதும் தெரிந்தால் இங்கு பகிருங்கள் @valavan @vasee @உடையார் @குமாரசாமி @ரசோதரன் வீட்டில் உள்ள கறுத்தக் கொழும்பான் மரம் 2008 நிசா புயலில் விழுந்தது, அதன் கிளைகளை வெட்டி ஓரளவு நிமிர்த்தி இப்போதும் சுவையான மாம்பழம் காய்க்கிறது. ஆனால் மரம் நன்றாக சரிந்து உள்ளதால் பெரும் மழைக்காலம், பலத்த காற்று நேரம் தப்புமோ என அச்சமாக இருக்கும். அதன் கிளையில் கன்று உருவாக்க முடிந்தால் என்ற எண்ணத்தில்தான் கேட்கிறேன்.
  4. கனடாவில்(Canada) வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த திருடனின் சைக்கிள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் கனடாவின் ஹமில்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொன்றியல் வங்கியின் கிளையொன்றில் புகுந்த நபர் ஒருவர் வங்கிப் பணியாளரை அச்சுறுத்தி பணம் கொள்ளையிட முயற்சித்துள்ளார். கொள்ளை சம்பவம் இதன்போது, துப்பாக்கி இருப்பதாகக் கூறி வங்கிப் பணியாளரை கொள்ளையர் அச்சுறுத்தியுள்ளார். இந்நிலையில், சக வங்கிப் பணியாளர்கள் குறித்த கொள்ளையரை தடுக்க முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது கொள்ளையரினால் பணம் கொள்ளையிட முடியவில்லை எனவும் வெறும் கையுடன் வங்கியை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், சைக்கிள் ஒன்றில் வங்கியில் கொள்ளையிட சென்றிருந்த குறித்த நபர், வெளியே நிறுத்தியிருந்த சைக்கிளை தேடியுள்ளார். எனினும், சைக்கிளை வேறு ஒருவர் களவாடிச் செல்லப்பட்ட நிலையில் வங்கிக் கொள்ளையர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். மேலும், வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபர் மற்றும் சைக்கிளை கொள்ளையிட்ட நபர் ஆகியோரை அந்நாட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். https://ibctamil.com/article/thief-s-bicycle-stolen-in-canada-1735891615#google_vignette
  5. சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ் கொவிட் -19 வைரஸ் பரவலுக்குப் பின் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன. மேலும், இன்ஃபுளுவென்சா (influenza) வைரஸூம் பரவி வருகிறது. சீனாவில் பல வைரஸ்களின் தாக்கம் வேகமாக பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு சீனாவில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்த வைரஸ் பரவல் நிலை குறித்து சீன அதிகாரிகள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. https://thinakkural.lk/article/314323
  6. யாழ் நோக்கி படையெடுக்கும் ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் : ஏற்படவுள்ள பேராபத்து அண்மையில் தொடர்ந்த சீரற்ற காலநிலை காரணமாக தமிழர் பிரதேசங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளானதுடன் மக்கள் தொடர்ச்சியாக பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. இதில் முக்கிய விடயமாக ஆபிரிக்கா பெரும் நத்தைகள் (Giant African land snai) சமீபத்தில் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இந்தநிலையில், இவை பயிர்பச்சைகளை எல்லாம் தின்று தீர்ப்பதுடன் உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாகவும் நோய்களைப் பரப்பும் காவிகளாகவும் செயற்படுகின்றன. இவற்றை இப்போதே கட்டுப்படுத்தத்தவறின் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக அமையும் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் (P. Ayngaranesan) அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில், இது குறித்து பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய அகளங்கம் நிகழ்ச்சி, https://ibctamil.com/article/disaster-from-african-giant-snails-for-farmers-1735910964#google_vignette
  7. ''தன்னுடைய 30 வருட போராட்டம் இந்த முள்ளிவாய்க்கால் இறுதியோடு முடிவுக்கு வருகின்றது என முன்னாள் போராளி சூசை எங்களிடம் தெரிவித்தார்.'' என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி (T. Sathiyamoorthy) தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழின் நக்கீரன் சபை - புட்டுக்கதை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”2008 ஆம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி முள்ளிவாய்க்காலில் முக்கிய போராளிகளான சூசை, பானு, சொர்ணம் ஆகிய மூவரையும் சந்தித்தோம். தன்னுடைய 30 வருட போராட்டம் இந்த முள்ளிவாய்க்கால் இறுதியோடு முடிவுக்கு வருகின்றது எனவும் ஐக்கிய நாடுகள் முகவர்கள் வருகின்ற போது இந்த ஆயுதங்களை கையளித்து விட்டு நான் போகப் போகின்றேன் என சூசை எங்களிடம் தெரிவித்தார். இருப்பினும் ஏனையவர்கள் இறுதி வரை போராடப்போவதாக தெரிவித்தனர். எனக்கு 2009 இற்கும் 2024 இற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. முள்ளிவாய்க்காலை உணர்வுபூர்வமாக கடமை செய்த இடமாக தான் பார்க்கின்றேன். அதைக்கூறி எனக்கு ஒரு பதவியோ அல்லது ஏதோவொன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. முள்ளிவாய்க்கால் இடம்பெயர் வைத்தியசாலையில் பணியாற்றிய ஒவ்வொரு நாட்களையும் மறக்க முடியாது. உடையார்கட்டு வைத்தியசாலையில் பணியாற்றிய போது ஒரு தாதியர் செல் விழுந்த உடனேயே கண் முன்னாலே இறந்து போனமை மறக்க முடியாத ஒரு சம்பவம், அத்துடன் முள்ளிவாய்க்காலின் கடைசி 3 நாட்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத வடு.” என தெரிவித்தார். மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க..... https://ibctamil.com/article/ex-combatants-said-mullivaikal-dr-sathiyamoorthy-1735898720#google_vignette
  8. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைநகர் படகுத் தளத்தை புனரமைப்பதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 290 மில்லியன் ரூபாய் மானிய உதவியுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 டிசம்பர் 16ஆம் திகதியன்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் அப்போதைய இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் க்சேணுகா திரேனி செனிவிரத்ன ஆகியோரால் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது. இதன்படி, இலங்கையின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், காரைநகர் படகுத் தளத்தை புனரமைக்க இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம், தொழிற்சாலை, இயந்திரங்கள், உபகரணங்கள், பொருட்கள், சேவைகள் போன்றவற்றை நிறுவுதல் உள்ளிட்ட குடிமைப் பணிகள் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததும், புனரமைக்கப்பட்ட படகுத் தளம், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படகுத் தளத்தைச் சுற்றியுள்ள சிறிய நிறுவனங்கள் உட்பட அந்தப்பகுதியில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும், அத்துடன் தரமான மீன்வளப் பொருட்களின் விநியோகத்தை மேம்படுத்த உதவும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/314318
  9. Published By: DIGITAL DESK 3 03 JAN, 2025 | 02:25 PM வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (03) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபர் கல்லூரியின் வளர்ச்சியை சீர்குலைப்பதாகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்கள் இணைந்து இன்றையதினம் காலை 7.30 மணியளவில் பாடசாலை நுழைவாயிலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டமானது 14 ஆசிரியர்களுக்கு அண்மையில் அவர்களுக்கான பதிலீடு இன்றி, தனிப்பட்ட பழிவாங்கல் நோக்கில், இடமாற்றத்திற்கு சிபாரிசு செய்தமை, இவரது பொறுப்பற்ற வார்த்தை பிரயோகங்கள், தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக இவர் பாடசாலையை பொறுப்பேற்கும் போது இருந்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி (83 ஆசிரியர்களிலிருந்து 63 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது) ஏற்பட்டுள்ளது. இவரால் பாடசாலையின் ஏனைய ஊழியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு பாடசாலையின் அகச்சூழல் சீரின்றியும், பாதுகாப்பின்றியும் உள்ளது. பாடசாலை சொத்துகளை பாதுகாப்பது மற்றும் அது தொடர்பான வெளிப்படை தன்மை இல்லாது உள்ளது. (தொழில்நுட்ப ஆய்வுகூட பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் கல்வித்திணைக்கள விசாரணைகள் நடைபெறுகின்றன) அதிபர் மீதான நிதிமோசடி விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. குறித்த விடயங்கள் தொடர்பாக அதிபருடன் பல தடவைகள் SDS/ OBA இணைந்து நடத்திய கலந்துரையாடல்களில் மேற்கொண்ட தீர்மானங்கள், ஆலோசனைகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் தான்தோன்றிதனமான அதிபரின் செயற்பாடுகளால் மாணவர் கல்வி பாதிக்கப்படுகிறது. குறிப்பாக உயர்தர மாணவர்களுக்கு சில பாடங்களுக்கு பொருத்தமான பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. பல பாட வேளைகளில் வகுப்புகள் நடைபெறுவதில்லை. இவ்வாறான காரணங்களாளே குறித்த போராட்டம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த அதிபர் தொடர்பான விடயங்கள் இரு செயலாளர்களாலும் வலயகல்விபணிப்பாளர், செயலாளர் கல்வி அமைச்சு, பிரதிக் கல்விப்பணிப்பாளர் - தேசிய பாடசாலை, கல்வி அமைச்சு என்பவற்றிற்கு நேரிலும், தொலைபேசியிலும், கடிதம் மூலமும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படாத நிலையிலே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. போராட்ட இடத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் குறித்த போராட்டத்திற்கான காரணங்களை கேட்டறிந்திருந்தார். அதன்பின்னர் போராட்டத்திற்கான காரணம் தொடர்பான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இது ஒரு தேசிய பாடசாலை ஆகையினால் மாகாணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் தான் இருக்கின்றது. எனவே மத்திய அரசின் கல்வி அமைச்சின் செயலாளருக்கு இந்த மகஜரை அனுப்புவதாகவும், அதன் பிரதியை சம்பந்தப்பட்ட அரச அலுவலகங்களுக்கு வழங்கி இதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்திருந்தார். குறித்த போராட்டத்தில் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர், பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/202876
  10. கெஹலிய ரம்புக்வெலவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளின் முடக்க நிலை நீடிப்பு 03 JAN, 2025 | 12:09 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதி திட்டங்களைத் தற்காலிகமாக முடக்குமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை மேலும் மூன்று மாத காலங்களுக்கு நீடிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (04) உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சுமார் 97 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதித் திட்டங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202866
  11. 03 JAN, 2025 | 03:17 PM சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொடர்பில் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமை குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னர் மேலதிக தகவல்களை பொதுமக்களிற்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/202887
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,திஸாநாயக்க, இலங்கையில் இந்தியா மற்றும் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்தும் சவாலை எதிர்கொள்கிறார் கட்டுரை தகவல் எழுதியவர்,அன்பரசன் எத்திராஜன் பதவி,தெற்காசிய பிராந்திய ஆசிரியர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய இடதுசாரி அதிபரும் அவரது கட்சியும் பெற்ற பிரமிக்க வைக்கும் தேர்தல் வெற்றி அந்நாட்டு அரசியல் சூழலை மாற்றியுள்ளன. ஆனால், இலங்கையில் நிதி நெருக்கடி நிலவும் நிலையில் அந்நாட்டின் புதிய தலைவர்கள், தங்கள் பிரசார வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குக் கடினமான சூழல் நிலவுகிறது. செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவின் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. ஒரு புதிய ஆண்டு தொடங்கும் வேளையில், மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் பல ஆண்டுகளாக தவறான ஆட்சியில் இருந்து மீள முயற்சிக்கும் நாட்டுக்கு இது ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்று அவரும் அவரது ஆதரவாளர்களும் விரும்புகிறார்கள். எவ்வாறாயினும், புதிய அரசாங்கத்திடம் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்ட வாக்காளர்களுக்கு, தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல், சற்று கடினமாகவே உள்ளது. கடந்த 2022இல் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு பின்னர், இலங்கையின் பொருளாதார எழுச்சி பலவீனமாகவும் முழுமையற்றதாகவும் உள்ளது. இந்தியாவுடன் 'எட்கா' உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கையில் எதிர்ப்பு ஏன்? இந்தியாவுக்கு இலங்கை அளித்த உறுதிமொழி - தமிழர்கள் பற்றி மோதி கூறியது என்ன? இந்தியா vs சீனா: இலங்கை ஜனாதிபதி முதல் பயணமாக இந்தியா செல்வதன் மூலம் உணர்த்தும் சேதி என்ன? இலங்கையில் திடீரென அதிகரித்த விலைவாசி - ரூ 260க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசி நவம்பரில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி (NPP) 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில்159 இடங்களை வென்றது. மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அடைந்தது. இந்த வெற்றி திஸாநாயக்கவுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வலுவான அதிகாரத்தை வழங்குகிறது. டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி?9 டிசம்பர் 2024 நிதி மோசடி புகார்: இலங்கைக்கு குடும்பத்துடன் அனுப்பப்பட்ட பெண் அகதி - 'சட்டவிரோத நடவடிக்கை' என புகார்26 டிசம்பர் 2024 சர்வதேச நாணய நிதியக் குழுவுடனான அதிபரின் சந்திப்பு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சர்வதேச நாணய நிதியக் (IMF) குழுவுடனான சந்திப்புக்கு புதிய ஜனாதிபதி தயாராக வேண்டியிருந்தது. முந்தைய அரசாங்கம் இலங்கையின் பொருளாதாரத்தை உறுதியாக்கும் விதமாக 2.9 பில்லியன் டாலர் (2.31 பில்லியன் யூரோ) நிதித் தொகைப் பெறுவதற்காக, ஐ.எம்.எஃப் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. கடுமையான சிக்கன நடவடிக்கைகள், வரி உயர்வு மற்றும் எரிசக்தி மானியங்களை குறைவாக வழங்குவதற்கு, ஐஎம்எஃப் ஒப்பந்தம் வழி வகுத்ததால் சர்ச்சைக்குரியதாக மாறியது. மேலும், இது பொதுமக்களின் வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. தேர்தல் பிரசாரத்தின் போது திஸாநாயக்கவும் அவரது கூட்டணியும் ஐஎம்எஃப் உடன்படிக்கையின் சில பகுதிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாக உறுதியளித்தனர். ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில், தனது நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிக்கொண்டார். "பொருளாதாரம் மிகவும் பலவீனமாக உள்ளது, ஒரு சிறிய மாற்றம் கூட பேரழிவை ஏற்படுத்தும்...தவறு செய்வதற்கு எந்த வாய்ப்பையும் வழங்க முடியாது," என்று திஸாநாயக்க கூறினார். "(ஐஎம்எஃப் கடனின்) விதிமுறைகள் நல்லதா அல்லது கெட்டதா, ஒப்பந்தம் நமக்கு சாதகமாக உள்ளதா, இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்க இது நேரம் அல்ல. இந்தச் செயல்முறை சுமார் இரண்டு ஆண்டுகள் எடுத்தது, இதனை எங்களால் மீண்டும் தொடங்க முடியாது" என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்காளர்களின் அமோகமான தீர்ப்பு, பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட மக்கள் எழுச்சியின் விளைவாக பார்க்கப்படுகிறது. இந்த எழுச்சி, 2022 கோடையில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்ற வழிவகுத்தது. மேலும், வெளிநாட்டு நாணயத்தின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டபோதும், உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு போராடியது. சுமார் 46 பில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், இலங்கை திவாலானதாக அறிவிக்கப்பட்டது. இலங்கையின் நிதி நெருக்கடியை சமாளிக்க இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் பில்லியன் கணக்கான டாலர்களை கடனாக வழங்கியுள்ளன. மோதி - டிரம்ப் உறவு எப்படி இருக்கப் போகிறது? 2025இல் இந்தியா சந்திக்கவுள்ள 6 சவால்கள்2 ஜனவரி 2025 வங்கதேசம்: இந்தியா, சீனா உடனான உறவு குறித்து அந்நாட்டு ராணுவ தளபதி கூறியது என்ன?2 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொருளாதார நெருக்கடியால் உந்தப்பட்ட ஒரு எழுச்சி, 2022இல் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை கவிழ்த்தது மக்களின் கோபத்தை பிரதிபலித்தத் தேர்தல் முடிவுகள் பொருளாதார சரிவைக் கையாளத் தவறிய முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீதான மக்களின் கோபத்தையும் சமீபத்திய தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன. "அதிகமான வரிவிதிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்படுத்திய நெருக்கடி காரணமாக மக்களுக்கு சில பொருளாதார நிவாரணங்களை வழங்குவதே திஸாநாயக்கவின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். கடன் மேலாண்மை மற்றொரு பெரிய சவாலாகும்," என்று மூத்த அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட பிபிசியிடம் கூறினார். குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், கொழும்பின் புறநகர் பகுதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான நிலுகா தில்ருக்ஷி போன்றவர்கள் இன்னும் போராடி வருகின்றனர். தினசரி கூலித் தொழிலாளியான அவரது கணவரும், குடும்பத்தினரும் அன்றாடம் வாழ்வதற்கு சிரமப்படுகின்றனர். ஜனவரி 2022 இல், பெருமளவில் போராட்டம் வெடிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, விலைவாசி உயர்வு பற்றி பிபிசி அவரிடம் பேசியது. அப்போது, தனது குடும்பத்தினர் மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதிலாக இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுவதாகவும், மீன் மற்றும் இறைச்சியின் விலை அதிகமாக இருப்பதால், தங்கள் குழந்தைகளுக்குக் காய்கறிகள் மற்றும் அரிசி உணவுகளை மட்டுமே வழங்குவதாகவும் அவர் கூறினார். "நாங்கள் வாழ்க்கையைச் சமாளிக்க இன்னும் போராடுகிறோம், எதுவும் மாறவில்லை. முக்கிய உணவான அரிசியின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை" என்று தில்ருக்ஷி கூறுகிறார். அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க புதிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவரைப் போன்ற மக்கள் விரும்புகின்றனர். இலங்கை இறக்குமதியை சார்ந்த நாடு. உணவு மற்றும் மருந்து போன்ற பொருட்களை இறக்குமதி செய்ய அதற்கு வெளிநாட்டு நாணயம் தேவைப்படுகிறது. தற்போது, கொழும்பு தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தி அதன் நாணய இருப்புகளை பராமரிக்கிறது. விமானத்தில் எந்த 'சீட்' அதிக பாதுகாப்பானது என்று உங்களுக்குத் தெரியுமா?1 ஜனவரி 2025 பறவை மோதினால் என்ன நடக்கும்? நெருக்கடி நேரத்தில் விமானி என்ன செய்வார்? - ஒரு விமானியின் அனுபவம்1 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புதிய அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என இலங்கை மக்கள் விரும்புகின்றனர் இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் தாக்கம் அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும்போது உண்மையான போராட்டம் தொடங்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால், ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் அவரது புதிய அரசாங்கம் பற்றிய மக்களின் பார்வை மாறலாம். "மக்கள் அவருக்கு ஒரு மிகப்பெரும் தீர்ப்பை வழங்கியுள்ளனர். சமூக நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க அவரை அனுமதிப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியம் அதற்கு மதிப்பளிக்க வேண்டும்" என்கிறார் பேராசிரியர் உயங்கொட. திஸாநாயக்க, இலங்கையில் இந்தியா மற்றும் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்தும் சவாலை எதிர்கொள்கிறார். இரண்டு நாடுகளும் சமீபத்திய ஆண்டுகளில் இலங்கையில் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளன. "இந்தியாவும் சீனாவும் இலங்கையை தங்கள் செல்வாக்கின் கீழ் கொண்டு வர முயற்சிக்கும். புதிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை யாருடனும் இணையாமல் நடைமுறைக்குரியதாகவும் யதார்த்தமானதாகவும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் பேராசிரியர் உயங்கொட. டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவை தேர்வு செய்ததன் மூலம் திஸாநாயக்க ஒரு ராஜதந்திர நகர்வை மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது, இலங்கை மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்குவதற்கும், நீண்ட கால ஆற்றல் சார்ந்த ஒத்துழைப்புக்காக இரு நாடுகளின் மின் கட்டமைப்புகளை இணைக்கும் பணிகளை மேற்கொள்வதாகவும் இந்தியா உறுதியளித்தது. இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் தாக்கம், குறிப்பாக சீன "ஆராய்ச்சி" கப்பல்கள் இந்தியாவின் தெற்கு முனைக்கு அருகில் உள்ள தீவின் துறைமுகங்களுக்கு வருகை தருவது இந்தியாவுக்குக் கவலை அளித்துள்ளது. "இந்தியாவின் நலனுக்கு பாதகமான வகையில் எங்களது நிலத்தை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று நான் இந்திய பிரதமரிடம் உறுதியளித்துள்ளேன்," என்று நரேந்திர மோதியுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் திஸாநாயக்க கூறினார். இந்த உறுதிமொழியால் இந்தியா மகிழ்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் சீனாவுக்கு பயணம் செய்யும்போது சீனா என்ன எதிர்பார்க்கிறது என்பதை திஸாநாயக்க அறிந்துகொள்வார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89xn2q9k1po
  13. 03 JAN, 2025 | 11:01 AM சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கள் தொடர்பில் மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பல்வேறு பொருட்கள் அதிக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்களில் உள்ள இணைப்புகளுக்குள் நுழைவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறான போலி விளம்பரங்களில் உள்ள இணைப்புகளுக்குள் நுழைவது மிகவும் ஆபத்தானது எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/202853
  14. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக ராஷ்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணன் எனப்படும் கன்னரதேவனின் கல்வெட்டு ஒன்று, கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கடலூர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டு சொல்லும் புதிய செய்தி என்ன? கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள எஸ். நரையூர் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள முற்றிலும் சிதிலம் அடைந்த சிவன் கோவிலில் சில வாரங்களுக்கு முன்பாக புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. யானை மீது ஊர்வலமாக சென்ற பிரிட்டிஷ் வைஸ்ராய் மீது வெடிகுண்டு தாக்குதல் - புரட்சியாளர்கள் திட்டமிட்டது எப்படி? ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி? தியாகராய நகர்: நூற்றாண்டை கொண்டாடும் சென்னை அங்காடித் தெருவின் கதை ராஜீவ் ஆட்சியில் இந்திய அரசு ரகசியங்களை திருடி 6 நாடுகளுக்கு விற்ற கோவை தொழிலதிபர் - சிக்கியது எப்படி? சிதிலமைடந்து கிடந்த இந்த சிவன் கோவிலைப் புதுப்பிக்க சில வாரங்களுக்கு முன்பாக கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். கடந்த மாதம் அதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளனர். அப்பொழுது, அங்கு சில கல்வெட்டுகள் இருந்ததை உள்ளூர் மக்கள் பார்த்தனர். இந்தக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கிடைத்ததும் அங்கு சென்ற விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் அதனைப் படித்தனர். இதுவரை ஆய்வு செய்யப்படாத ஆறு கல்வெட்டுகள் இந்தக் கோவிலில் ஆறு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டதாகக் குறிப்பிடும் பேராசிரியர் ரமேஷ், அவை இதுவரை படிக்கப்படாத புதிய கல்வெட்டுகள் என்கிறார். இந்தக் கோவிலின் மூலவரின் பெயர் பிரஹமீஸ்வரமுடையார் அல்லது பிரஹமீஸ்வரமுடைய நாயனார் என்றும் அம்பாளின் பெயர் 'தாயிலும் நல்ல நாயகியார்' என்றும் வருகிறது என்று குறிப்பிடுகிறார் ரமேஷ். இங்கு கிடைத்த கல்வெட்டுகளில் ஒன்று, ராஷ்டிரகூட மன்னர் கன்னரதேவனின் கல்வெட்டு எனத் தெரிவித்தார். "ஸ்வஸ்தி ஸ்ரீ கச்சியுந் தஞ்சையும் கொண்ட ஸ்ரீ கண்ணர தேவர்க்கு யாண்டு பதிமூன்றாவது மிலாட்டு கூற்றத்து நரையூருந்து வாழும் கங்க பள்ள சதனென் புத் தரை யடுத்து ப்ரஹமீஸ்வரமுடையார்க்கு வைத்து நொந்தா விளக்கு ஒன்று இது இறக்குவான் ஏழானூழியும் மறுபன் இது பன்மஹெஸ்வரரக்ஷை" என்கிறது அந்தக் கல்வெட்டு. வரலாற்றில் ராஷ்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணரே கன்னரதேவன் எனக் குறிப்பிடப்படுகிறார். ஆகவே, இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி. 949 முதல் 967ஆக இருக்கலாம் என்று குறிப்பிடும் ரமேஷ், கி.பி. 949ல் நடந்த தக்கோலப் போருக்குப் பிறகு இந்த பகுதி ராஷ்டிரகூடர் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது என்பதற்கு இந்தக் கல்வெட்டு மேலும் ஒரு முக்கிய ஆதாரம் என்கிறார். ஸ்காட்லாந்து யார்டு போலீசையே திகைக்கச் செய்த மிகப்பெரிய வங்கி கொள்ளை - 53 ஆண்டுகளாகியும் விலகாத மர்மம்21 நவம்பர் 2024 ராஜராஜ சோழன் பிறந்த ஊர் தற்போது எப்படி இருக்கிறது தெரியுமா?10 நவம்பர் 2024 படக்குறிப்பு, கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள எஸ். நரையூர் பகுதியில் முற்றிலும் சிதிலம் அடைந்த சிவன் கோவில் ராஷ்டிரகூடர்களின் ஆட்சி முதல் பராந்தகச் சோழனின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் திருக்காளகஸ்தி முதல் தொண்டை மண்டலம் வரை சோழர் ஆட்சி பரவி இருந்தது என்ற போதிலும் தக்கோலப் போருக்குப் பிறகு ராஷ்டிரகூடர்களின் ஆட்சி நடு நாடு முழுவதும் பரவியது. கி.பி. 949க்கும் கி.பி. 967க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கன்னரதேவன் என்று அழைக்கப்பட்ட இந்த மூன்றாம் கிருஷ்ணன் சோழர் நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றினார். தக்கோலப் போரில் சோழ இளவரசர் ராஜாதித்தனை வீழ்த்திய கன்னரதேவன் தொடர்ந்து சோழர்களின் எல்லைப் பரப்பை சுருங்கச் செய்தார். "இதுவரை திருவதிகை வீரட்டானம் கோவிலுக்குத் தெற்கே கன்னரதேவன் பற்றிய கல்வெட்டானது அறியப்படவில்லை. ஆனால், தற்போது இந்தக் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. இந்தக் கல்வெட்டின் மூலம் எஸ். நரையூர் வரை கன்னரதேவனின் ஆட்சி நீண்டுள்ளதை அறியலாம். பிறகு மீண்டும் சோழர்கள் வசம் இந்த பகுதி வந்தது என்பதை இங்கு கிடைக்கும் பிற கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன" என்கிறார் ரமேஷ். இதே கோவிலில் கிடைக்கும் உத்தம சோழன் கால கல்வெட்டு நிலம் தானம் வழங்கப்பட்ட செய்தியை தெரிவிக்கிறது. உத்தமசோழனின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் நிலம் தானம் வழங்கப்பட்டது பற்றி தெரிவிக்கும் அந்தக் கல்வெட்டு "(உத்தம சோ)ழரைத் திருவயிரு வாய்த்த செம்பியன் மஹாதேவியார்" என்று தொடங்குகிறது. யுவான் சுவாங் வந்த போது தமிழ்நாடு எப்படி இருந்தது? போதி தர்மர், சோழர் போர் முறை பற்றிய அரிய தகவல்கள்9 நவம்பர் 2024 இந்தியாவுக்கு நெருக்கமான ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேச பிரதமர் ஆவாரா? டிரம்ப் வெற்றியால் மாறும் கணக்குகள்9 நவம்பர் 2024 படக்குறிப்பு, தக்கோலப் போரில் சோழ இளவரசர் ராஜாதித்தனை வீழ்த்திய கன்னரதேவன் தொடர்ந்து சோழர்களின் எல்லைப் பரப்பை சுருங்கச் செய்தார் விளக்கு எரிக்க தானம் இங்குள்ள ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டு குறித்தும் விளக்கினார் ரமேஷ். ராஜராஜசோழன் காலத்தில் சண்டையில் இறந்த வணிகக் குழுவின் வீரன் நினைவாக விளக்கு எரிக்க தானம் வழங்கப்பட்ட செய்தியை அந்தக் கல்வெட்டு அளிக்கிறது. "காந்தளூர் சாலை கலமறுத்த கோ ராசகேசரி பந்மர்க்கு....'' என்று தொடங்கும் இந்தக் கல்வெட்டு ராஜராஜசோழரின் பத்தாவது ஆட்சியாண்டில் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவைச் சேரந்த வீர செட்டி என்பவர் 'பூசலில் பட்டதுக்கு நரையூர் பிரமீஸ்வரமுடையார் நொந்தா விளக்கு எரிக்க 10 கழஞ்சு பொன் குடுத்த பிரம்மதேயத்துக்கு நிலம்விட்ட' செய்தியை சொல்கிறது" என்கிறார் ரமேஷ். இதே கோவிலில் மூன்றாம் ராஜேந்திர சோழன் கால கல்வெட்டு ஒன்றும் இருக்கிறது. "இங்குள்ள அவரது 25ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில், 'தொழுவூருடையான் மாதுயாந்தித்தன் எழுந்தருளி வித்த திருக்காமக் கொட்டமுடைய தாயிலுந் நல்ல நாயகி" என்று அம்பாளுக்கு சந்நிதி எழுப்பியது பற்றிய செய்தியும் இறையிலியாக நிலம்விட்ட செய்தியும் இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இங்கு கிடைக்கும் மற்றொரு கல்வெட்டு 17 அல்லது 18ம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதில் "அதிருங்கழல் பெருமாள் கண்ட திருப்பணி இடிஞ்சு சரிஞ்சு போகையில் மகன் சொக்கப்பெருமாள் சேதிராயன் கண்ட திருப்பணி" என, அந்தக் கோவிலுக்கு தந்தை செய்த திருப்பணி இடிந்து போகவே அதனை மகன் புதுப்பித்ததைக் கூறுகிறது என்கிறார் ரமேஷ். மிகப்பெரிய வேலைப்பாடுடன் கூடிய அந்தச் சிவன் கோவில் இடிந்து, சிதைந்துபோன நிலையில் இருந்துவந்தது. சில தூண்கள் மட்டுமே கோவில் மேற்கூரையைத் தாங்கிக் கண்டிருந்தன. தற்போது சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. மிகுந்த சிதிலமடைந்த நிலையில் இந்த கோவில் தற்போது இருந்தாலும் வரலாற்றில் மிக முக்கியமான செய்திகளை தந்துள்ளது எனக் குறிப்பிடும் ரமேஷ், இதன் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் மேலும் சில கல்வெட்டுகள் இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn7rpz7zrpko
  15. தொடர்ந்து நீங்கள் மது குடிக்கும்போது உங்கள் உடல் மதுவால் என்ன பாதிப்புகளை சந்திக்கும், மதுவுக்கு நீங்கள் எப்படி அடிமையாகிறீர்கள்? என்பது உங்களுக்கு தெரியுமா?
  16. குடிநீர் தொட்டியில் மலம்... 2 Years-க்குப் பின் வேங்கைவயல் நிலை என்ன? | Vengaivayal Situation Vengaivayal Issue: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் பட்டியலினத்தோர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வு நடந்து இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், எப்படியிருக்கிறது வேங்கை வயல்?
  17. 01 JAN, 2025 | 04:40 PM எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். “கிளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது: பொது மக்களின் செயலூக்கமான பங்களிப்புடன் மாத்திரமே '' கிளீன் ஶ்ரீலங்கா '' வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். 2025க்குள் காலடி எடுத்து வைக்கும் இந்த சந்தர்ப்பம் புதிய வருடமொன்றின் ஆரம்பம். புதிய வருடத்தின் உதயம் என்று கூறலாம். எனவே பல தசாப்தங்களாக, எமது நாட்டில் இவ்வாறான பல வருடங்கள் கடந்து சென்றுள்ளன. நாம் நல்ல விடயங்களுக்குள் காலடி வைத்தோமா என்ற கேள்விக்குறி எமக்குள் இருக்கிறது. கடந்த ஒவ்வொரு வருடங்களும் சிறந்த விடயங்களுக்காக புதுப்பித்துக் கொண்டு முன்னோக்கிச் சென்றோமா?இன்றேல் மோசமான விடயங்களை புதுப்பித்து கடந்த காலத்திற்குச் சென்றோமா? என்ற பிரச்சினை எம்முன் உள்ளது. அதனால் இந்த புத்தாண்டுடன் எமது நாட்டை புதிய மாற்றத்துக்கு உட்படுத்தும் நிரந்தரமான நோக்கம் எமக்கு உள்ளது. அதற்கான கடமையும் பொறுப்பும் எம்மை சார்ந்திருக்கிறது. நானும் எனது அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் அனைத்து அரசியல் தரப்புக்களும் இதற்கான அர்ப்பணிப்பை செய்வோம். எமது நாட்டில் புது வருடம் புதியதொரு அரசியல் கலாச்சாரத்துடன் ஆரம்பமாகிறது. இந்த நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் அடித்தளம் இட்டிருக்கிறோம். அரசியல் கலாசாரம், வீண் விரயம், குடும்ப வாரிசுகள், எல்லையை மீறி அதிகாரத்தை பயன்படுத்தல், அதிகாரத்தை மக்களுக்கு எதிராக பயன்படுத்தல், மக்களுக்கு மேலாக இருக்கும் அரசியல்வாதிகளாக இருத்தல் என்ற அனைத்தையும் இல்லாமல் செய்து மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய, மக்களின் தேவையுடன் இசைந்து செல்லக்கூடிய ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். புதிய வருடத்தின் சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய திட்டங்களை நாம் வகுத்திருக்கிறோம். கடந்த காலங்களில் எமது பொருளாதாரம் வங்குரோத்தான நிலையில் காணப்பட்டது. தற்போது பொருளாதாரத்தை மேலோட்டமாக பார்க்கும் போது நிலைபேறான தன்மையை உருவாக்கியிருக்கிறோம். கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு நமக்கு கிடைத்திருந்தது. நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், அதிகாரிகள், அரசியல் துறை என்பன பாரிய முயற்சியை மேற்கொண்டதாலேயே அந்த இலக்கை அடைய முடிந்தது. எனவே பொருளாதாரத்தை ஸ்திரமடையச் செய்ய எம்மால் முடிந்திருக்கிறது. அது போதுமானதல்ல. எமது பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் புதியவையாக அமைந்துள்ளன. அதற்காக அரசியல் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்திருக்கிறோம். அதேபோன்று எமது நாடு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல வகையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருந்தது. எமது நாட்டின் பாதுகாப்பை மிகச் சிறப்பாக உறுதிப்படுத்த எம்மால் முடிந்துள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடனும் உறுதியாகவும் கூறுகிறோம். கடந்த வருடத்தில் அறுகம்பையை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் கிடைத்திருந்தது. எமது பொலிஸார், எமது புலனாய்வுத் துறையினர், எமது முப்படையினர் விறுவிறுப்புடன் செயலாற்றி நாட்டின் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்தியுள்ளனர். அதேபோல் நாட்டிக்குள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கான பலமான வேலைத்திட்டம் எமக்கு இருக்கிறது. எமது நாட்டில் நீண்ட காலமாக சட்டத்தின் ஆதிக்கம் கருத்தில்கொள்ளப்படாத நிலைமை காணப்பட்டது. குறிப்பாக குற்றவாளிகளும் மோசடிக்காரர்களும் சட்டத்துக்கு மேலாக இருக்கும் வகையில் அரசியல் துறை இருந்தது. தனக்கு தேவையான மற்றும் தாம் நினைத்தவாறு சட்டத்தை மீறிச் செல்லும் நிலைமை காணப்பட்டது. அரசியலமைப்பை மீறினர். எமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் அரசியலமைப்பை மீறியிருப்பதாக பல சந்தர்ப்பங்களில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் பிரஜை சட்டத்தின் ஆதிக்கத்தை சிதைக்கும் நாட்டில், சட்ட ஒழுங்கு பற்றி என்ன பேசுவதோ என்பதை கேட்கிறேன். எனவே நாம் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதேபோல் எமது நாட்டின் அரசகட்டமைப்பு, அரசியல் கட்டமைப்பு மற்றும் முழு சமூகத்திற்குள்ளும் ஊழல் மோசடி, வீண் விரயம் என்பன பரவியுள்ளன. எமது முழு நாட்டுக்குள்ளும் புற்றுநோயினைப் போல பரவியுள்ளது. ஊழல் மோசடியை நிறுத்த நாம் பாரிய முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. அதற்குள் எமது நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பெரும் பணி உள்ளது. அதற்கான பணியை ஆற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்பை சட்டமா அதிபர் திணைக்களம் வழங்குமென நம்புகிறேன். அதேபோல் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றக் கட்டமைப்புக்கு மீண்டும் எமது நாட்டை ஊழல், மோசடி அற்றதாக மாற்றுவது தொடர்பிலான பணிக்காக அர்ப்பணிக்கும் என்று நம்புகிறோம். அரசியல் அதிகார தரப்பு என்ற வகையில் செயற்பாடுகள் வாயிலாக ஊழலை தடுக்கவும் மோசடியை தடுக்கவும் நாம் முன்மாதிரியாக செயற்படுவோம். ஆனால் அரசியல் தரப்பின் முன்னுதாரணமும் தலையீடும் மாத்திரம் போதுமானதல்ல. அதற்கான அரச நிறுவனங்கள் தம்மீதான பொறுப்புக்களை சரியாக புரிந்துகொண்டு அந்த மாற்றத்திற்கு தேவையான உதவி, ஒத்துழைப்புக்களை எமக்கு வழங்குமாறு கோருகிறேன். எந்தவொரு வலுவான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும், வலுவான அடித்தளம் அவசியமாகும். எமது நாடும் தேசமும் அத்திவாரம் இழந்த நாடாகும். அடிப்படை இழந்த நாடாகும். அதனால் அதற்கான ஆரம்ப பிரவேசத்தை குறிப்பிடத்தக்க அளவு சாதகமாக நிறைவு செய்திருக்கிறோம். இந்த நாட்டை மீளமைப்பதற்கு தேவையான அத்திவாரம், அடித்தளத்தை அமைக்க வேண்டும். அரசியல் அதிகாரம், அரச பொறிமுறை, சட்டத்தின் ஆதிக்கம் என்பவற்றை போலவே அரசியலமைப்பிற்கு மதிப்பளித்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் ஊழல்,மோசடிகளை ஒழித்தல் என்பவற்றுக்கான இந்த அத்திவாரம் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல எமக்கு தேவைப்படுகிறது. நாம் மிகத் துரிதமாக திட்டமிடலின் அடிப்படையில் இந்த அத்திவாரத்தை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறோம். எமது பிரஜைகளுக்காக கட்டியெழுப்பப்பட்டுள்ள அத்திவாரத்தின் அடிப்படையில் உருவாகின்ற பெரும் பொருளாதாரத்தின் பலன்கள் பரவலாக சென்றடைய வேண்டும். அதனால் எமது நாட்டில் எமது அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டங்கள் மூன்றும், பிரதான மூன்று நோக்கங்களை மையப்படுத்தி கொண்டுச் செல்லப்படுகிறது. அதன் முதன்மை நோக்கமாக நாட்டையும் நாட்டு மக்களையும் வறுமையில் இருந்து மீட்க வேண்டும் என்பதே காணப்படுகிறது. கிராமிய மக்கள் வரையில் பொருளாதாரத்தின் பலன்கள் கொண்டுச் செல்வதற்கு தேவையான பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்யும்போது, பொருளாதாரம் மிகச் சிறிய குழுவின் மீது குவிந்திருப்பது சமூகத்திற்குள் ஒருபோதும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவராது. பொருளாதாரம் ஒரு சிறிய குழுவிடம் குவிந்திருப்பது நாட்டிலும் மக்களிடமும் நிலையற்ற தன்மையை உருவாக்கும். எனவே, பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை உருவாக வேண்டுமெனில் பொருளாதாரத்தின் பலன்கள் கிராமிய மக்கள் வரையில் சென்றடைய வேண்டும். எனவே, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினை நமது நாட்டில் வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட திசையை நோக்கி நகர்த்தும் ஒரு பொருளாதாரத் வேலைத்திட்டத்தின் ஆரம்பமாக்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். எமது இரண்டாவது இலக்கு இந்த நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதாகும். செயல்திறனற்ற வீண் விரயத்தை குறைத்தல் மற்றும் ஊழல்,மோசடியை மட்டுப்படுத்தவும் பிரஜைகளுக்கு மிக இலகுவாக அரசாங்கத்துடன் இருக்கின்ற தொடர்பை தொடர்ச்சியாக பேணிக்கொள்ளவும் தேவையான அடித்தளத்தை டிஜிட்டல் மயமாக்கல் உருவாக்கும். எமது அடுத்த முக்கிய திட்டம் Clean Sri Lanka. இது சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவது தொடர்பிலானது மட்டுமல்ல. இது முழுமையாக சிதைந்து போயுள்ள சமூகக் கட்டமைப்பினால் அநாதரவான நிலையிலிருக்கும் எமது தாய்நாட்டை மீளமைப்பதற்காக அனைத்துத் துறைகளிலும் செய்யப்படும் தூய்மையாக்கலை காண்பதே எமது நோக்கமாகும். நான் சில விடயங்களை எடுத்துக்கூறுகிறேன். அது எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். குறிப்பாக நமது நாடு மிக அழகான சுற்றுச்சூழல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. நமது நாடு மிக முக்கியமான அமைவிடத்தை கொண்டுள்ளது. அது மிக உயர்வான முக்கியத்துவமாகும். எந்தவொரு வெளிநாட்டவரை சந்தித்தாலும், உங்களுக்கு அழகான இலங்கை இருக்கிறது என்றே கூறுவர். ஆனால் இந்த இலங்கையில் இன்று என்ன நடந்துள்ளது? சிறந்ததொரு சுற்றுச்சூழல் கட்டமைப்பு உள்ள நாட்டில் 2023ஆம் ஆண்டு யானை - மனித மோதலால் நூற்று எண்பத்திரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2023 ஆம் ஆண்டில் 484 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன. சிறந்த அழகியலுடன் கூடிய சுற்றுச்சூழல் கட்டமைப்பு இருந்தாலும் வருடத்திற்கு 484 யானைகள் இறக்கும் நாடாக இருக்கிறோம். யானைகளினால் 182 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பெருமளவானோர் இடப்பெயர்கின்றனர். உயிரிழப்பு, பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்படுத்துகின்றன. எனவே, சுற்றுச்சூழல் கட்டமைப்பை மீளமைப்பதை Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் மிக முக்கியமான அங்கமாக கருத வேண்டும். நமது நாட்டுக்கும் நாட்டின் பிரஜைகளுக்கும் புதிய மதிப்புக்கள் மற்றும் புதிய நெறிமுறைகள் அவசியப்படுகின்றன. மிகத் தவறான விடயங்களை நாம் மதிப்பாக புரிந்து கொண்டுள்ளோம். இன்று இந்த சமுதாயத்திற்குள் ஒரு புதிய மதிப்பு கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். இதனை எங்கிருந்து ஆரம்பிப்பது? முதலில், தமது வாழக்கை பற்றிய தமது மதிப்பு அவசியமாகிறது. நான் நினைக்கும் வகையில் எமது நாட்டில் பெரும்பாலான பிரஜைகளுக்கு தமது வாழ்க்கை தொடர்பில் மதிப்பு கிடையாது ஏன் அவ்வாறு சொல்கிறேன்? கடந்த வருடத்தில் ஐந்நூற்று தொண்ணூற்றைந்து பேர் கடலில் அல்லது நீர்த்தேக்கங்களில் அல்லது கிணற்றில் அல்லது குளத்தில் விழுந்து இறந்துள்ளனர்.நீரில் மூழ்கி ஐந்நூற்று தொண்ணூற்றைந்து பேர் இறந்துள்ளனர் என்பதிலிருந்து என்ன தெரிகிறது? 2321 பேர் விபத்துக்களினால் இறந்துள்ளனர். நாளொன்றுக்கு ஏழு பேர் வாகன விபத்துக்களால் இறக்கும் நாடு உருவாகியுள்ளது. அதனால் வாழ்வின் மதிப்புக்களை பற்றி அறியாத சமுதாயம், பிறர் வாழ்வு குறித்து அக்கறை இல்லாத சமூகம் உருவாகியிருக்கிறது. எனவே, இந்த சமூகத்தை மீண்டும் குணப்படுத்த வேண்டும். இந்த சமூகத்தில் புதிய நெறிமுறையும்,புதிய மதிப்பு முறையும் உருவாக்கப்பட வேண்டும். எமது Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ், சமூகத்திற்கு ஒரு புதிய நெறிமுறைக் கட்டமைப்பையும், மதிப்புக் கட்டமைப்பையும் உருவாக்குவோம். வாகன விபத்துகளை குறைக்க வேண்டும். அதற்காக, நான் முதலில் சட்டத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. மக்கள் மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். அதற்காக மக்களின் ஒத்துழைப்பும் தலையீடும் அவசியம். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் நாம் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயார். மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் இந்த மாற்றத்தை ஏற்படுத்த நாம் தயார். நெகிழ்வுத் தன்மையுடன் இந்த திருப்புமுனையை ஏற்படுத்த எவரேனும் தடையாக நிற்கும் பட்சத்தில், இந்த சமூகத்தை மீண்டும் குணப்படுத்த கடுமையான முறையில் திருப்புமுனையை ஏற்படுத்தவும் நாம் தயார். அதேபோல், எமது நாட்டின் பிரஜைகளுக்கு தாம் சந்தைகளில் கொள்வனவு செய்யும் உணவுப் பொருட்கள் குறித்து நம்பிக்கை உள்ளதா? அதனால் எமது நாட்டு பிரஜைகளுக்கு விசமற்ற உணவு வேளையை வழங்கும் பொறுப்பு நாடு என்ற வகையில் எமக்கு இருக்கிறது. பொறுப்பை நிறைவேற்றுவதும் இந்த Clean Sri Lanka வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப் பட்டுள்ளது. மேலும், ஒரு சமூகத்தினால் நமது பிரஜைகள், நம் நாட்டின் அங்கவீனமுற்ற சமூகங்கள் என்பவற்றை பராமரிக்க வேண்டும். இது சமூக நீதி தொடர்பான பிரச்சினையாகும். வயது முதிர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க முடியுமா? அவர்கள் அங்கவீனமடைந்துள்ளதால் சமூகத்திற்கு பங்களிப்பவராக இல்லாமல் இருப்பதால் அவர்களை ஒதுக்கிவைக்க முடியுமா? அப்படிப்பட்ட சமுதாயம் ஒருபோதும் நல்ல சமுதாயமாக மாறாது. தங்களுக்கு அருகில் உள்ள மாற்றுத்திறனாளி சமூகம், தங்கள் அருகில் உள்ள முதியவர்கள், தங்கள் அருகில் இருக்கும் பெண்கள், இளைஞர்கள் மீது இந்த சமூகத்திற்கு கருணை இல்லையென்றால் அந்த சமூகம் குறித்து அன்போ அக்கறையோ,பராமரிப்போ இல்லாவிட்டால் அந்த சமுதாயம் நல்ல சமுதாயமாக மாறாது. அந்தச் சமூகம் பிறரைப் பற்றி குறிப்பிடத்தக்க அளவில் சிந்திக்காத குரூரமான மனப்பான்மையுள்ள சமூகம். எனவே, அந்த சமூகத்தில் புதிய மனப்பாங்கை உருவாக்க வேண்டும். பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும். நம் நாட்டில் நீண்ட காலமாக, குடிமக்கள் மத்தியில் பொது சொத்துக்கள் தொடர்பில் சிறப்பான மனப்பாங்கு காணப்பட்டது. ஆனால் இன்று என்ன நடந்துள்ளது என்றால் தனது தனிப்பட்ட சொத்துக்களின் மீதுள்ள மதிப்பு தொடர்பான உணர்வு பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதில் இல்லை. அரசொன்றை உருவாக்குவதில் அதன் பொதுச் சொத்துக்கள் மீதான அனைவரினதும் தேவை பற்றிய உணர்வு உள்ளது. அதனை தமக்காக மாத்திரம் பாதுகாப்பது கிடையாது. இவை அனைத்தும் தற்காலத்தில் வாழும் நம் தலைமுறைக்காக மாத்திரமா? இவை யாவும் எமது தலைமுறையில் அழிந்து விடுமா? எதிர்கால சந்ததிக்காக இவற்றைப் பாதுகாப்பது தற்போதைய தலைமுறையின் பொறுப்பாகும். அதனால் ‘’கிளீன் ஶ்ரீலங்கா’’ திட்டத்தில் இதனை செயற்படுத்த தயாராக இருக்கிறோம். குறிப்பாக அரச இயந்திரம் மற்றும் அரசியல் அதிகாரத்தினை மிக விரைவான செயல்திறனுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு குடிமகனும் தனக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும். பொறுப்பை புறக்கணித்தால், ஒருவரின் பொறுப்பின் எடை சரிந்துவிடும். எனவே, இந்தக் கட்டமைப்பு பல்வேறு அரச, அரசியல்,தனியார் துறை என பல்வேறு கட்டமைப்புகளில் மீது கட்டமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பின் அங்கத்தவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றாவிட்டாலோ அல்லது அந்த பொறுப்பை கைவிட்டாலோ, அந்த பொறுப்பை புறக்கணித்தாலோ அது கட்டமைப்பிற்கே மிகவும் தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது. எனவே, நீங்கள் உங்கள் பொறுப்பிற்கு பொறுப்புக் கூற தயாராகுமாறு குறிப்பாக அரச சேவையிடம் கோருகிறோம். அதற்கு இன்று பல முன்னுதாரணங்கள் உள்ளன. இன்று, இலங்கையில் பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு விடயத்திலும் மிக முக்கியமான பல துறைகளை நிர்வகிக்கும் நிறுவனங்களை எமது அரசாங்கம் கொண்டுள்ளது. அந்த நிறுவனங்களில் பெருமளவான நிறுவனங்களின் தலைவர்கள் தாமாக முன்வந்து தொண்டர் அடிப்படையில் பணியாற்றுகின்றனர். எயார் லங்காவின் தலைவரைப் போன்றே டெலிகாம் நிறுவனத்தின் தலைவர், போர்ட் சிட்டி நிறுவனத்தின் தலைவர், முதலீட்டுச் சபையின் தலைவர், எரிவாயு நிறுவனத்தின் தலைவர் போன்ற பல திறமையானவர்கள் மிகவும் தொழில்முறை திறன்களைக் கொண்டுள்ளவர்கள் தொண்டர் அடிப்படையில் பணியாற்றுகின்றனர். அதே போன்று தனிப்பட்ட ரீதியில் நோக்கினால் எனது ஆலோசகர்கள் மூவரும் அரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறாமல் பணிபுரிகின்றனர். டிஜிட்டல் மயமாக்கலில் அனுபவம் உள்ள இலங்கையில் பிறந்த மிக சிரேஷ்ட நிபுணரான அவர், தொண்டர் அடிப்படையில் பணியாற்றுகிறார். அறிவியல் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த அவர், அத்துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.அவர் தொண்டர் அடிப்படையில் பணியாற்றுகிறார்.பொருளாதாரம் தொடர்பில் நிறைய நடைமுறை அனுபவங்களைக் கொண்டிருக்கும் அவர் தொண்டர் அடிப்படையில் பணியாற்றுகிறார். இவ்வாறான அரசியல் தான் நம் நாட்டுக்கு தேவை. இந்த நாட்டைக் கட்டியெழுப்ப, இதுபோன்ற புதிய அனுபவங்களைக் கொண்ட மாற்றம் வேண்டும். சம்பளம் பெறாமல் ஒரு மணி நேரம் யாரும் வேலை செய்ய மாட்டார்கள் என்ற நிலையில் இந்த புதிய அனுபவம் காணப்படுகிறது. ஆனால், அவர்கள் தங்கள் அறிவையும், நேரத்தையும், உழைப்பையும், உயர்ந்த தொழில்களையும் விட்டுவிட்டு தொண்டர் அடிப்படையில் பணியாற்றத் தொடங்கியுள்ளனர். ஒரு சிறந்த முன்மாதிரி நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாம் எழுச்சி பெறுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதைச் உங்களுக்கு சொல்கிறேன்.இதனை கடைசிச் சந்தர்ப்பம் என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன். மக்களுக்கு கடைசி சந்தர்ப்பம் என்று சந்தர்ப்பம் கிடையாது. மக்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. ஒரு தேசமாக ஒரு நாடாக எழுந்து நிற்பதற்கு வாய்ப்பு இன்று கிடைத்துள்ளதாக நாம் நினைக்கிறோம். இந்த நாட்டின் பிரஜைகளிடம் நான் கேட்பது என்னவென்றால், இந்த வாய்ப்பை தவறவிடப்போகிறீர்களா?, இந்த வாய்ப்பை உறுதியாகப் புரிந்துகொண்டு, நம் நாட்டை முன்னேற்றத்திற்காக தங்கள் பங்கை ஆற்றத் தயாரா என்ற கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். இது வெறும் நாட்டின், அரசின் பொறுப்பு மட்டும்தானா? இது வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரலா? இல்லை இது ஒரு கூட்டு முயற்சி. உலகின் பல்வேறு நாடுகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சவால்களை எதிர்கொண்டுள்ளன. அதன் தொடக்கத்தில் இருந்தே சவால்கள் இல்லாமல் பயணித்த எந்த ஒரு நாட்டையும் உலகில் கண்டு கொள்ள முடியும் என்று நான் நினைக்கவில்லை. உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சவால்களை எதிர்கொண்டுள்ளன. அந்நாட்டின் அரசியல் அதிகாரம், அரச இயந்திரம் மற்றும் பொது மக்கள் கூட்டாக எழுந்து அந்தச் சவால்களைச் சமாளித்து வெற்றி பெற்றுள்ளனர். எனவே நாம் நீண்ட வரலாற்றிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. கடந்த 20 ஆம் நூற்றாண்டை மட்டும் நாம் நினைத்துப் பார்த்தால், ஆசியாவில் அமைந்துள்ள ஏராளமான நாடுகள் இந்த கூட்டுச் செயற்பாட்டினால் எழுச்சி பெற்றுள்ளன. ஆனால் நாம் என்ன செய்துள்ளோம்? சண்டையிட்டுக்கொண்டு, ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையை உருவாக்கி, இனவாத, மதவாத, மிக அசிங்கமான அரசியல் சூதாட்டத்தில் நமது பொதுச் சமூகத்தை புதைத்து , ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையையும், குரோதத்தையும், வெறுப்பையும் வளர்க்கும் ஆட்சியையே செய்துள்ளோம்.மக்கள் ஒருபோதும் ஒன்றுபட்டு நிற்கத் தயாராக இல்லை என்றால், இந்தச் சவாலில் இருந்து எம்மால் மீள முடியாது. அதனாலேயே எமக்கு எழுந்து நிற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைத்து பிரிவினைகளையும் முடிவுக்கு கொண்டு வர நாம் தயாராக உள்ளோம். நாம் ஒன்றாக இலங்கையில் பிறந்தவர்கள் என்ற வகையில் இந்த நாட்டை கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைய தயாராக உள்ளோம். எனவே, இந்தக் ‘’கிளீன் ஶ்ரீலங்கா’’ வேலைத்திட்டத்தை பொதுமக்களின் செயலூக்கமான பங்களிப்புடன் மட்டுமே வெற்றிகொள்ள முடியும். இல்லையெனில், அரசாங்கத்தினாலும் அரசாங்கம் இயற்றும் சட்டங்களால் மற்றும் அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகளால் மாத்திரம் இதனை முழுமைப்படுத்த முடியாது. இதற்காக அரசாங்க பொறிமுறை தேவை. அதற்காக பதினெட்டு பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தொண்டர் அடிப்படையில் பணியாற்றுகிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். மேலும் இந்த நோக்கத்திற்காக கிளீன் ஶ்ரீலங்கா செயலகத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். மேலும், கிராமம் வரை மக்களை ஒன்று திரட்டுவதற்காக ‘’கிளீன் ஶ்ரீலங்கா ‘’சபைகளை உருவாக்க எதிர்பார்க்கிறோம். இந்த திட்டம் எப்போது முடிவடையும்? இது நிறைவடையும் திட்டமல்ல. இது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படும் உலகின் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் தன்மை மாற்றிக் கொண்டு அரசை மாற்றியமைக்கும் ஒரு வேலைத்திட்டம். இது ஓரிரு வருட திட்டம் அல்ல. உலகம் வேகமாக மாறி வருகிறது. உலகம் பாரிய சாதனைகளை அடைந்து வருகிறது. சமூக மனப்பாங்குகள், புதிய பெறுமதிகள் மற்றும் புதிய மதிப்புக் கட்டமைப்புகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. அந்த விடயங்களையெல்லாம் உள்வாங்கிய புதிய இலங்கைத் தேசம் இந்த நாட்டில் கட்டியெழுப்பப்படுகிறது. கு றிப்பாக இந்த முயற்சிக்காக தனியான நிதியமொன்றை நிறுவுகிறோம். இந்நாட்டு குடிமக்கள் அந்த நிதியத்திற்கு பங்களிக்கலாம். நிதியமைச்சினால் மேற்பார்வை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பணி நாம் கூட்டு முயற்சியுடன் வெற்றிகொள்ள வேண்டிய பணியாகும், அதற்காக அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன். இவற்றைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும். இந்த வருடம் இனிய வருடமாக அமைய வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்தார். “கிளீன் ஶ்ரீலங்கா” திட்டத்திற்காக இதன் போது நன்கொடையாளர்கள் நிதி அன்பளிப்புச் செய்தனர். மகாசங்கத்தினர், மத குருமார்கள், அமைச்சர்கள், தூதுவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/202718
  18. பட மூலாதாரம்,TN DIPR படக்குறிப்பு, தி.மு.கவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் திருவள்ளுவர் தொடர்பான இரண்டு கட்டுமானங்களுக்கு முடிவுசெய்யப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கு 77 மீட்டர் நீளத்தில் கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. எதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது? அதன் முக்கியத்துவம் என்ன? எப்படிக் கட்டப்பட்டது? கண்ணாடி இழைப்பாலம் திறப்பு கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தையும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தையும் இணைக்கும் வகையிலான கண்ணாடி இழைப் பாலம் சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. கடல் மீது இப்படி கண்ணாடிப் பாலம் கட்டப்பட்டிருப்பது இதுவே முதல் முறை எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை விவேகானந்தர் நினைவிடத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் அழைத்துச் செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் படகுப் போக்குவரத்து நடத்தப்படுகிறது. விவேகானந்தர் நினைவிடம் அமைந்திருக்கும் பாறையோடு ஒப்பிட்டால், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை உயரம் குறைவானது. ஆகவே, கடல் கொந்தளிப்பாக இருக்கும்போதும் நீர்மட்டம் குறைவாக இருக்கும்போதும் திருவள்ளுவர் சிலைக்கு படகுகளை இயக்க முடிவதில்லை. உத்தராகண்டில் மீண்டும் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு - என்ன நடந்தது? திருவள்ளுவர் உருவம் உருவானது எப்படி? இதுவரை எத்தனை உருவங்களில் அவர் வரையப்பட்டுள்ளார்? இதனால் இந்த இரு நினைவுச் சின்னங்களையும் இணைக்கும் வகையில் ஒரு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. சுமார் 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தப் பாலம் 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்தில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்திற்கான வளைவு 11 மீட்டர் உயரம் கொண்டது. இந்த பத்து மீட்டர் அகலமுள்ள பாலத்தின் கவனம் ஈர்க்கும் அம்சமாக, அதன் நடுவில் 2.4 மீட்டர் அகலத்திற்கு கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆகவே, பாலத்தின் மீது நடந்து செல்பவர்கள் அதன் வழியாக கீழே கடலைப் பார்க்க முடியும். பொதிகை, வைகை, சேரன்: ரயிலின் பெயரை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் தெரியுமா?4 மணி நேரங்களுக்கு முன்னர் வேளாண் கடன், ஓய்வூதியம், அமெரிக்க விசா - புத்தாண்டில் அமலான 5 முக்கிய மாற்றங்கள்5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TN DIPR படக்குறிப்பு, பாலத்தின் பகுதிகள் தனித்தனியாக புதுச்சேரியில் செய்யப்பட்டு, கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டன. கண்ணாடி இழைப் பாலத்தை கட்டியது எப்படி? "இந்தப் பாலம் ஒரு தனித்துவம் மிக்க பாலம். கடலின் மீது கட்டப்பட்டதால் தூண்கள் ஏதும் அமைக்கப்படாமல் இரு பாறைகளையும் இணைக்கும் வகையில் ஒரு வளைவு (arch) அமைக்கப்பட்டு, அந்த வளைவிலிருந்து வரும் கம்பிகள் பாலத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்தில் பாலம் முழுக்கவும் கான்கிரீட்டால் அமைக்கவே முடிவு செய்யப்பட்டிருந்த. பின்னரே, கண்ணாடியை பொருத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது" என்கிறார் இந்தப் பாலத்தை வடிவமைத்த எம்ஐஏ டிசைன்ஸின் ஆர்க்கிடெக்டான டேவிட் ஆர். ஞானசுவாமி. இந்தப் பாலம் precast முறையில் கட்டப்பட்டதாகச் சொல்கிறார் அவர். "அதாவது பாலத்தின் பகுதிகள் தனித்தனியாக புதுச்சேரியில் செய்யப்பட்டு, கன்னியாகுமரிக்குக் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டன. இதில் உள்ள கண்ணாடி உறுதியாக்கப்பட்ட கண்ணாடி (toughened glass) வகையைச் சேர்ந்தது. இது 53 மி.மீட்டர் தடிமனானது. ஆகவே இது உடையாது" என்கிறார் டேவிட். முழுமையாக கண்ணாடியால் கட்டப்படாமல் நடுப் பகுதி மட்டும் கண்ணாடி பொருத்தப்பட்டதற்கு காரணங்கள் உள்ளன. "எல்லோருமே உயரத்தில் உள்ள கண்ணாடி மீது நடக்க விரும்ப மாட்டார்கள். மேலும் மழை பெய்யும் காலங்களில் கண்ணாடி வழுக்கவும் கூடும். ஆகவேதான் இரு புறங்களிலும் கான்கிரீட்டும் நடுவில் கண்ணாடியும் பொருத்த முடிவுசெய்யப்பட்டது" என்கிறார் டேவிட். கண்ணாடி இழைப் பாலம் உள்ள எல்லா இடங்களிலும் இதுபோன்ற தடிமனில்தான் கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றனவா? "அந்த இடத்தில் எவ்வளவு பேர் கண்ணாடி மீது ஒரே நேரத்தில் நிற்பார்கள் என்பதை வைத்து இது முடிவு செய்யப்படும். இங்கே வரும் மக்கள் கூட்டத்திற்கு சுமார் ஐந்தரை சென்டிமீட்டர் கனமுள்ள கண்ணாடி தேவை என முடிவு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே கடல் மீது இப்படி ஒரு பாலம் கட்டப்படுவது இதுதான் முதல் முறை" என்கிறார் அவர். இந்தப் பாலம் திறக்கப்பட்டிருப்பதன் மூலம், திருவள்ளுவர் சிலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'பயமோ பதற்றமோ கூடாது' - விமானிகள் அவசர சூழல்களில் எப்படி முடிவெடுப்பார்கள்? - ஒரு விமானியின் அனுபவம்2 மணி நேரங்களுக்கு முன்னர் 2024ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிக கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள்29 டிசம்பர் 2024 திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன் பின்னணி பட மூலாதாரம்,TN DIPR படக்குறிப்பு, சுமார் 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தப் பாலம் 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டது. தி.மு.கவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் திருவள்ளுவர் தொடர்பான இரண்டு கட்டுமானங்களுக்கு முடிவுசெய்யப்பட்டது. ஒன்று, சென்னையில் அமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம். இரண்டாவது, கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு மிகப் பெரிய சிலை ஒன்றை அமைப்பது. திருவள்ளுவர் சிலை தொடர்பாக தமிழக அமைச்சரவை 1975ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி முடிவெடுத்தது. விவேகானந்தர் பாறையிலிருந்து சுமார் 590 அடி தூரத்தில் அமைந்திருக்கும் மற்றொரு பாறையில் சுமார் பத்து லட்ச ரூபாய் செலவில் 75 அடி உயரத்திற்கு திருவள்ளுவர் சிலையை உருவாக்குவது என அந்தத் தருணத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதில் சிலையின் பீடம் 42 அடி உயரத்திலும் சிலை 33 அடி உயரத்திலும் இருக்கும் என முடிவுசெய்யப்பட்டது. ஆனால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்ட ஒரே மாதத்தில் ஜனவரி 31ஆம் தேதி தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. 404 ஏக்கருக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம், 2 மாதங்களாக போராடும் கிராமம் - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு21 டிசம்பர் 2024 இயேசு காலத்தில் பல இறைத்தூதர்கள் தோன்றினாலும் அவர் மட்டும் பிரபலமாக இருப்பது ஏன்?25 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையில் இருந்த வள்ளுவர் கோட்டம் ஆளுநர் கே.கே. ஷா தலைமையில் அப்போதைய குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவால் 1976ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திறக்கப்பட்டது என்றாலும் திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், 1979ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் கலந்துகொண்ட நிகழ்வில் அப்போதைய இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், அதற்கு பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. "கல்லில் சிலை அமைக்கலாமா, சிலைக்கு பதில் நினைவுச் சின்னம் அமைக்கலாமா சிலை செப்புத் தகட்டினால் வடிவமைக்கப்படலாமா என்பன போன்ற கேள்விகளால் சிலை அமைப்பதற்கான எந்தப் பணியும் நடைபெறவில்லை" என வள்ளுவர் சிலை திறப்பை ஒட்டி வெளியிடப்பட்ட "கோட்டம் முதல் குமரி வரை" நூலில் தான் எழுதிய கட்டுரையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி குறிப்பிட்டிருந்தார் . இதற்குப் பிறகு 1989-இல் மு. கருணாநிதி தலைமையில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அப்போது கணபதி ஸ்தபதி தலைமையில் இந்தப் பணியை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. கருணாநிதி பேசிய போது சிலையின் உயரம் 133 அடியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு மே மாதத்தில் செப்புச் சிலையாக அல்லாமல், கல்லினால் அந்தச் சிலையை அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. நிதி மோசடி புகார்: இலங்கைக்கு குடும்பத்துடன் அனுப்பப்பட்ட பெண் அகதி - 'சட்டவிரோத நடவடிக்கை' என புகார்26 டிசம்பர் 2024 இந்தியாவுக்கு இலங்கை அளித்த உறுதிமொழி - தமிழர்கள் பற்றி மோதி கூறியது என்ன?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,TN DIPR பீடத்தின் உயரம் 38 அடியாக இருக்கும் என்றும் சிலையின் உயரம் 95 அடியாக இருக்கும் என்றும் முடிவுசெய்யப்பட்டது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி பணிகள் கன்னியாகுமரியில் முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டன. ஆனால், ஐந்து மாதங்களுக்குள் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. இதற்குப் பிறகு திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி மீண்டும் முடங்கியது. 1996-இல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, சிலையை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. திருத்திய மதிப்பீட்டில் 6 கோடியே 16 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. பிறகு வேகமாக பணிகள் நடந்து, 1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி சிலை முழுமையாக எழுப்பி முடிக்கப்பட்டது. "இந்த சிலையின் எந்த இடத்திலும் இரும்போ கன்கிரீட்டோ பயன்படுத்தப்படவில்லை. கற்களை இணைக்க கல்லால் ஆன ஆணிகள் செய்யப்பட்டு, அதன் மூலம் சில இடங்களில் கற்கள் இணைக்கப்பட்டன. இந்தச் சிலை 3 டன் முதல் 8 வரை எடை கொண்ட 3,681 கற்களால் ஆனது" என 'கோட்டம் முதல் குமரி வரை' நூலில், இந்தச் சிலை உருவான தொழில்நுட்பத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தலைமை ஸ்தபதியான கணபதி ஸ்தபதி. இந்தக் கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குவதன் மூலமே சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் இரு கற்களுக்கு இடையிலான இடைவெளியை மூடவே சாந்து பூசப்பட்டிருப்பதாகவும் கற்களைப் பிடித்துக் கொள்வதற்காக அல்ல என்றும் கூறுகிறார் அவர். கடற்காற்று சிலையைச் சேதப்படுத்தாமல் இருக்க, சிலையின் மீது பாலிசிலிகான் (polysilicon) கலவை பூசப்பட்டிருக்கிறது. இந்தச் சிலையை அமைக்கும் பணிகள் ஒரு வருடம் 9 நாட்கள் நடந்தது என்றும் கற்களை உடைப்பதிலிருந்து சிலையை பொருத்துவது வரை சுமார் 500 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்றும் கணபதி ஸ்தபதி குறிப்பிடுகிறார். இந்தச் சிலையின் திறப்பு விழா 1999ஆம் ஆண்டு டிசம்பர் 31 - 2000வது ஆண்டு ஜனவரி 1 ஆகிய தேதிகளில் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியால் நடத்தப்பட்டது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjwlxld17e8o
  19. Published By: DIGITAL DESK 7 01 JAN, 2025 | 04:29 PM தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (01) காலை மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்கள் இல்லாத தனியாருக்கு சொந்தமான காணிகளையும், பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பகுதி மக்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது “புதைபொருள் திணைக்களமே குச்சவெளி சந்தைக்கட்டட காணியை புதைக்காதே”, “தொல்பொருள் திணைக்களமே குச்சவெளி நெற்களஞ்சிய கட்டடத்திற்கு தொல்லை தராதே”இ “தொல்பொருள் அதிகாரிகளே சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களிடையே வேற்றுமையை உண்டாக்காதே”, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களையும் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். குறித்த ஆர்ப்பாட்டத்தில் குச்சவெளி கிராம சங்கங்கள், பொதுமக்கள் மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள். குறித்த காணிகளை கையகப்படுத்தும் முகமாக அப்பகுதிகளில் எவ்வித அறிவித்தலும் இன்றி இரவோடு இரவாக பெயர்ப்பலகையை காட்சிப்படுத்தியுள்ளதாகவும் இந்த காணிகளில் தொல்லியல் சின்னங்கள் எவையும் இல்லாத நிலையில் தொல்லியல் திணைக்களம் இந்த காணிகளை கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன் பிரதேச சபைக்குச் சொந்தமான 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் கடைத்தொகுதிகளுடன் காணப்பட்ட பகுதியும் மற்றுமொரு இடத்தில் நெற் களஞ்சியமாக காணப்பட்ட பழைய கட்டடங்களுடன் கூடிய பகுதியையும் தொல்லியலுக்குரிய இடமாக கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் இதை அனுமதிக்க முடியாது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் குறித்த சட்ட விரோதமான செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குச்சவெளி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அரசியல்வாதிகளிடமும் இது தொடர்பான மகஜர்களை கையளிக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் இது தொடர்பாக தொல்லியல் திணைக்கள் திருகோணமலை மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் இது தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினுடைய அதிகாரத்திற்கு உட்பட்டது எனவும் அவர்களுடன் கலந்தாலோசித்து தீர்வினை பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/202713
  20. 01 JAN, 2025 | 04:22 PM வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை, பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மாக இன்று புதன்கிழமை காலை (01) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். புத்தாண்டு வாழ்த்துக்களை இருவரும் பரிமாறிக்கொண்டதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து சந்தித்துப் பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/202711
  21. யுக்ரேன் வழியே ஐரோப்பாவுக்கு ரஷ்ய எரிவாயு விநியோகம் நிறுத்தம் - யாருக்கு பாதிப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நிக் தோர்ப் & லாரா கோஸி பதவி, மத்திய ஐரோப்பா நிருபர் மற்றும் பிபிசி செய்தியாளர் ஐந்தாண்டு கால ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து யுக்ரேன் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ரஷ்ய எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாக நீடித்த செயல்முறை முடிவுக்கு வந்துள்ளதை குறிக்கிறது. யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, யுக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு நடக்கும் எரிவாயு விநியோகத்தை தடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், "எங்கள் ரத்தத்தில் இருந்து பணம் சம்பாதிக்க ரஷ்யாவை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். ஜெலென்ஸ்கி மேலும் கூறுகையில், "ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழிகளை ஏற்பாடு செய்ய ஏற்கனவே ஒரு வருடம் அவகாசம் அளித்துள்ளேன்" என்றார். "யுக்ரேன் வழியாக எரிவாயு விநியோகம் முடிவுக்கு வருவதை சமாளிக்க போதுமான திறன் தங்களுக்கு இருக்கிறது" என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத மால்டோவா ஏற்கனவே எரிவாயு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்லோவாகியாவோ எரிவாயு விநியோக சிக்கல்களை எதிர்கொண்டது. டிரம்ப் - புதின் நட்பால் இந்தியாவுக்கு என்ன நன்மை? ஓர் அலசல் யுக்ரேன் உடனான போரில் ரஷ்யாவை தொடர்ந்து முன்னேற வைக்கும் ஒரு 'பயங்கர' உத்தி இதுதான் ரஷ்யா - யுக்ரேன் போரை இந்தியாவால் நிறுத்த முடியுமா? அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம் - என்ன நடக்கிறது? எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள ரஷ்யாவுக்கு மற்றொரு வழி உள்ளது. கருங்கடல் வழியாக டர்க்ஸ்ட்ரீம் குழாய் மூலம் ஹங்கேரி, துருக்கி மற்றும் செர்பியாவிற்கு ரஷ்யாவால் எரிவாயு அனுப்ப முடியும். எரிவாயு விநியோகம் நிறுத்தம் - ரஷ்ய நிறுவனம் தகவல் ரஷ்ய நிறுவனமான கேஸ்ப்ரோம் (Gazprom) யுக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கு மேற்கொள்ளும் எரிவாயு விநியோகம் புதன்கிழமை முதல் நிறுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யா 1991 முதல் யுக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயுவை ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது இந்த விநியோகம் நிறுத்தப்பட்டதால், உடனடி விளைவுகள் இல்லை என்ற போதிலும், முழு ஐரோப்பாவிற்குமான மூலோபாய ரீதியான தாக்கம் பெரியளவில் ஏற்படும். ரஷ்யா ஒரு முக்கியமான சந்தையை இழந்துவிட்டது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினோ, "இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மிகவும் பாதிக்கப்படும்" என்கிறார். 2022 இல் யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிலிருந்து எரிவாயு இறக்குமதியை கணிசமாகக் குறைத்து வந்துள்ளது. ஆனால் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இன்னும் ரஷ்யப் பொருட்களையே அதிகம் நம்பியுள்ளன. இதனால் ரஷ்யா ஆண்டுக்கு 5 பில்லியன் யூரோ ($5.2bn) வருவாய் ஈட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் அதன் எரிவாயு இறக்குமதியில் ரஷ்ய எரிவாயுவின் பங்களிப்பு 10% க்கும் குறைவாக இருந்தது. அதுவே 2021-ஆம் ஆண்டில் 40% ஆக இருந்தது. ஆனால் ஸ்லோவாகியா, ஆஸ்திரியா உள்ளிட்ட பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து கணிசமான அளவு எரிவாயுவை தொடர்ந்து இறக்குமதி செய்து வந்தன. ஆஸ்திரியாவின் எரிசக்தி கட்டுப்பாட்டு துறை, "ஆஸ்திரியா பல்வேறு ஆதாரங்களைக் கொண்டிருப்பதாலும், எரிவாயுவை சேமித்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாலும் மக்களுக்கான எரிவாயு விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது" என்று கூறினார். ஆனால் எரிசக்தி விநியோக ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருப்பது ஸ்லோவாகியா நாட்டில் ஏற்கனவே பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ரஷ்ய எரிவாயு விநியோகப் பாதையில் உள்ள ஸ்லோவாகியா, எரிவாயுவை ஆஸ்திரியா, ஹங்கேரி மற்றும் இத்தாலிக்கு பம்ப் செய்வதன் மூலம் கட்டணமாக கணிசமான வருவாயை ஈட்டுகிறது. தென் கொரியா: தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான விமானம் - 167 பேர் உயிரிழப்பு29 டிசம்பர் 2024 ஹெஸ்பொலா: லெபானான் பேஜர் வெடிப்பு மொசாட்டால் எப்படி நடத்தப்பட்டது - முன்னாள் ஏஜெண்ட்கள் கூறிய தகவல்29 டிசம்பர் 2024 புதன்கிழமை அன்று ஸ்லோவாகியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ, "இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், ஆனால் ரஷ்யாவில் அப்படி ஏதும் நடக்காது" என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளியன்று, புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாஸ்கோவிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட ஃபிகோ, யுக்ரேனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்துவதாக அச்சுறுத்தல் விடுத்தார். இதனையடுத்து, புதினின் "போருக்கு நிதியளித்து யுக்ரேனை பலவீனப்படுத்த" உதவியதாக ஃபிகோ மீது யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டினார். "யுக்ரேனியர்களுக்கு அதிக துன்பத்தை ஏற்படுத்தும் ரஷ்யாவின் முயற்சிகளுக்கு ஃபிகோ ஆதரவளிப்பதாகவும் " அவர் கூறினார். யுக்ரேனின் மின் உற்பத்தி நிலையங்கள் ரஷ்யாவால் தொடர்ந்து தாக்கப்படும் நிலையில், ஸ்லோவாகியா அதன் மின்சார ஏற்றுமதியை நிறுத்தினால் யுக்ரேனுக்கு உதவத் தயார் என்று போலந்து அறிவித்துள்ளது. போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் பேசினார். "குரோஷியாவில் உள்ள முனையம், ஜெர்மனி மற்றும் போலந்தில் உள்ள இணைப்புகள் என சர்வதேச சந்தைகளில் மாற்று எரிவாயு விநியோக வழிகள் பல உள்ளன. இந்த வழிகள் ஆராயப்பட வேண்டும். இதனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பதன் மூலம் ரஷ்யாவால் பணம் சம்பாதிக்க முடியாது" என்று சிகோர்ஸ்கி கூறினார். அமெரிக்கா, கத்தார் மற்றும் வட கடல் வழியே போலந்து எரிவாயுவை பெறுகிறது. "நான் புரிந்து கொண்ட வரையில், அனைத்து நாடுகளுக்கும் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழிகள் உள்ளன" என்று அவர் கூறினார். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் - முழு விவரம்29 டிசம்பர் 2024 திபெத்தில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டம் - இந்தியாவுக்கு ஏற்படப்போகும் பாதிப்பு என்ன?29 டிசம்பர் 2024 மால்டோவாவுக்கு சிக்கல் படக்குறிப்பு, ஐரோப்பாவின் பிரதான எரிவாயு விநியோகப் பாதையைக் குறிக்கும் வரைபடம். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இல்லாத மால்டோவா எரிசக்தி விநியோக ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததால் கடுமையாக பாதிக்கப்படலாம். ஏனெனில் இந்த நாடு, ரஷ்ய எரிவாயு மூலம் இயங்கும் ஒரு மின் நிலையத்தை கொண்டுள்ளது. மால்டோவா அதன் பெரும்பாலான மின்சாரத் தேவைகளுக்கு இந்த மின் உற்பத்தி நிலையத்தையே நம்பியுள்ளது. மால்டோவா - யுக்ரேன் இடையே ரஷ்யா ஆதரவுடன் தன்னிச்சையாக செயல்படும் டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிரதேசத்திற்கும் இந்த ஆலையே மின்சாரம் வழங்குகிறது. அங்கு சுமார் 300,000 மக்கள் வாழ்கின்றனர். ரஷ்ய எரிவாயு நிறுவனமான கேஸ்ப்ரோம், ஜனவரி 1 முதல் மால்டோவாவிற்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தப் போவதாக டிசம்பர் 28-ஆம் தேதியன்றுகூறியது. ஏனெனில் அது எரிவாயுவுக்கான பணத்தை முறையாக செலுத்தவில்லை என குற்றம்சாட்டியது. மால்டோவா பிரதமர் டோரின் ரெசியன், இந்த குற்றச்சாட்டை மறுத்து, கட்டணங்கள் முறையாக செலுத்தப்படுவதாக கூறினார். ரஷ்யா "எரிவாயுவை ஒரு அரசியல் ஆயுதமாக" பயன்படுத்துவதாக ஒரு சமூக ஊடக பதிவில் அவர் குற்றம் சாட்டினார். இதனால், டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிரதேசத்தில் கடுங்குளிர் வாட்டும் இந்த காலத்தில் ஒளி மற்றும் வெப்பம் இல்லாத சூழலை உருவாக்கிவிடும் என்று அவர் அச்சம் தெரிவித்துள்ளார். புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 07:00 மணிக்கு "எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால்" டிரான்ஸ்னிஸ்ட்ரியாவிற்கு எரிவாயு, வெப்பநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது என்று எரிசக்தி நிறுவனமான டிரஸ்டெப்லோனெர்கோ டெலிகிராமில் தெரிவித்துள்ளது. மக்கள் குளிரை தாக்குப்பிடிக்க, உடலை சூடுபடுத்தும் வகையில் கடினமான உடை அணியுமாறும், மின்சாரத்தை சேமிக்க குடும்ப உறுப்பினர்களை ஒரே அறையில் தங்குமாறும், ஜன்னல்களில் போர்வைகள் அல்லது தடிமனான திரைச்சீலைகளைத் தொங்கவிடுமாறும், மின்சார ஹீட்டர்களைப் பயன்படுத்தவும் அந்த நிறுவனம் வலியுறுத்தியது. அங்கே புதன்கிழமை இரவு வெப்பநிலை 0 டிகிரி செல்சியசுக்கும் கீழே குறைந்துவிட்டது. மால்டோவா எரிசக்தி துறை அமைச்சர் கான்ஸ்டன்டின் போரோசன், தனது அரசாங்கம் நிலையான மின் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஆனால் எரிசக்தியை சேமிக்க குடிமக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார். டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து எரிசக்தி துறையில் 60 நாள் அவசர நிலை அமலில் உள்ளது. 2025 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் தனது நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்யா "பிளாக்மெயில்" செய்ததாக அதிபர் மையா சாண்டு குற்றம் சாட்டினார். மால்டோவாஅரசாங்கம் டிரான்ஸ்னிஸ்ட்ரியாவிற்கு உதவி வழங்கியதாக கூறியுள்ளது. ரஷ்யா-யுக்ரேன் போர் தொடங்கிய சமயத்தில் , கத்தார் மற்றும் அமெரிக்காவிலிருந்து எரிவாயு (எல்என்ஜி) இறக்குமதி செய்ததன் மூலம் மாற்று ஆதாரங்களை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்துள்ளது. நார்வேயில் இருந்து குழாய் எரிவாயு வாங்கவும் திட்டமிட்டுள்ளது. டிசம்பரில், ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் யுக்ரேன் வழியாக எரிவாயு பரிமாற்றத்தை முழுவதுமாக நிறுத்துவதற்கான திட்டங்களை வகுத்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c62wq3133lzo
  22. அமெரிக்காவில் வாகனத்தை பொதுமக்கள் மீது மோதிய நபர் வேண்டுமென்றே அவ்வாறு செயற்படுபவர் போல காணப்பட்டார் - பொலிஸ் அதிகாரி 01 JAN, 2025 | 08:49 PM அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது வாகனத்தை மோதியவர் வேண்டுமென்றே அவ்வாறு செயற்படுபவர் போல காணப்பட்டார் என நியுஓர்லியன்சின் தலைமை பொலிஸ் அதிகாரி ஆன்கேர்க்பட்ரிக் தெரிவித்துள்ளார் அவர் தெரிவித்துள்ளதாவது, அந்த நபர் மிகவேகமாக டிரக் வண்டியை செலுத்தினார். அவர் வேண்டுமென்றே அவ்வாறு செயற்படுபவர் போல காணப்பட்டார், தனது வாகனத்தை பயன்படுத்தி தன்னால் முடிந்தளவிற்கு பலரை தாக்குவதற்கு அவர் முயன்றார். பத்து பேர் உயிரிழந்துள்ளனர் 35 பேர் காயமடைந்துள்ளனர், இந்த எண்ணிக்கை மாறலாம். மருத்துவமனையில் உள்ள நபர் குறித்து எங்களிடம் குறைந்தளவு தகவல்களே உள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் வெளிநாட்டவர்கள் எத்தனை பேர் அமெரிக்கர்கள் என்பது தெரியவில்லை. வாகனத்தை செலுத்தியவர் அதிலிருந்து பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டார். இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/202736
  23. 'காசாவின் அழிக்கப்பட்ட சுகாதாரதுறையின் குரலாக விளங்கியவர் மருத்துவர் ஹ_சாம் அபு சைபியா - இஸ்ரேல் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்" - சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் 31 DEC, 2024 | 02:21 PM காசாவின் கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் ஹ_சாம் அபு சபியாவை இஸ்ரேல் விடுதலை செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. அவரது நலன் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கடும் கரிசனையையும் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 27ம் திகதி கமால் அத்வான் மருத்துவமனையின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்ட மருத்துவமனையின் இயக்குநர் ஹ_சாம் அபு சபியா மற்றும் ஏனையவர்கள் குறித்தும் அவர்களின் நலன்கள் குறித்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் சமூக ஊடக பதிவில்தெரிவித்துள்ளார். மருத்துவரை நிபந்தனையற்ற விதத்தில் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காசாவின் அழிக்கப்பட்ட சுகாதாரதுறையின் குரலாக ஹ_சாம் அபு சபியா விளங்கினார், அவர் மருத்துவமனையின் பாதுகாப்பு குறித்து வேண்டுகோள்களை விடுத்தார், தனது மகன் கொல்லப்பட்ட பின்னரும் மிகவும் மோசமான ஆபத்தான சூழ்நிலையிலும் அவர் பணிபுரிந்தார் என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு எதிரான இனப்படுகொலையை ஆரம்பித்தது முதல் இஸ்ரேல் குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் 100க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களை கைதுசெய்துள்ளது நீதிமன்ற விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என தெரிவித்துள்ள கலமார்ட் சுகாதார பணியாளர்கள் சித்திரவதைகளிற்கும் மோசமான நடத்தைகளிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர், வெளி உலக தொடர்பு இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மருத்துவமனையும் மருத்துவ பணியாளர்களும் இலக்குகள் இல்லை, என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/202613
  24. பட மூலாதாரம்,SEEMAN/VARUNKUMARIPS/X படக்குறிப்பு, சீமானிடம் ரூ. 2 கோடி நஷ்டஈடு கேட்டு வருண்குமார் ஐபிஎஸ் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் தன்னிடம் மன்னிப்புக் கேட்பதற்காக தொழிலதிபர் மூலமாக சீமான் தூது அனுப்பியதாக, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் திங்களன்று (டிசம்பர் 30) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 'தன்னுடைய பரம்பரைக்கே மன்னிப்புக் கேட்கும் வழக்கம் இல்லை' என சீமான் கூறுகிறார். தன்னை அவதூறாகப் பேசியதற்காக சீமான், 2 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் எனக் கோரி அவதூறு வழக்கு ஒன்றையும் வருண்குமார் தொடர்ந்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் திருச்சி சரக டிஐஜி-க்கும் இடையில் என்ன மோதல்? பிரச்னை தொடர்வது ஏன்? வருண்குமார் ஐபிஎஸ் vs சீமான்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது என்ன? நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகுவது ஏன்? கட்சிக்குள் என்ன நடக்கிறது? திராவிடம் - தமிழ்த் தேசியம் என்ன வேறுபாடு? பிராமணர் மீதான அவற்றின் பார்வை என்ன? தமிழ் தேசியம் பேசி, விஜய் தனது வாக்கு வங்கியைக் குறிவைப்பதாக நினைக்கிறாரா சீமான்? வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண்குமார் கிரிமினல் அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜரான வருண்குமார், சீமானின் அறிக்கை மற்றும் காணொளிகள் என ஒன்பது ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சீமான் மீது சில விமர்சனங்களை முன்வைத்தார். "நான் சாதிரீதியாக செயல்படுவதாகக் கூறியும் என் குடும்பப் பெண்களை மார்பிங் செய்தும் நாம் தமிழர் கட்சியினர் செயல்பட்டுள்ளனர். ஆனால், அதை அவரது கட்சியினர் செய்யவில்லை என சீமான் கூறுகிறார். எனக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கைதான நபர்கள், அவரது கட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகின்றனர்" என அவர் கூறினார். "நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது நான் எடுத்த நடவடிக்கைக்கு என் பெற்றோரும் மனைவியும் என்ன செய்தார்கள்? ஓய்வு பெற்ற பிறகு பார்த்துக் கொள்கிறேன் என சீமான் கூறுகிறார். இது மிரட்டல் தானே?" எனவும் வருண்குமார் கேள்வி எழுப்பினார். மேலும், பிரச்னைக்கு நடுவில் தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது அனுப்பிய சீமான், தனி காரில் வந்து தன்னிடம் மன்னிப்பு கேட்பதாக கூறியதாகவும் வருண்குமார் குறிப்பிட்டார். வருண்குமார் பேட்டி தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சீமான், "தன்னுடைய பரம்பரையில் மன்னிப்புக் கேட்கும் வழக்கம் யாருக்கும் இல்லை" எனக் கூறியிருக்கிறார். சென்னையில் செவ்வாய் அன்று (டிசம்பர் 31) செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தவறு செய்தது அவர்தான். அவர் ஏதோ காமெடி செய்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு சாதாரண டிஐஜியாக இருக்கிறார். அவர் டிஜிபியாக கூட வரட்டும். அதனால் எங்களுக்கு என்ன? அவர்தான் அந்த தொழிலதிபரை அனுப்பினார்" எனத் தெரிவித்தார். தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்புவதாக வருண்குமார் கூறியுள்ள விமர்சனத்துக்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அவதூறு செய்வதை நாம் தமிழர் ஆதரிப்பதில்லை. அவ்வாறு செயல்படும் கட்சியினர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்காக சீமான்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு என அவர் கூறுவதை எப்படி ஏற்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தின் பின்னணி என்ன?44 நிமிடங்களுக்கு முன்னர் ஏமன்: கேரள செவிலியரின் மரண தண்டனைக்கு அதிபர் ஒப்புதல் - காப்பாற்ற உள்ள ஒரே வழி என்ன?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BAKKIYARASAN/X படக்குறிப்பு, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அவதூறு செய்வதை கட்சி ஆதரிப்பதில்லை என நாம் தமிழரின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் கூறுகிறார் பிரச்னை எங்கே தொடங்கியது? விக்கிரவாண்டி இடைத்தேர்தல் (ஜூலை மாதம்) பிரசாரத்தில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் அபிநயாவை ஆதரித்து, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் பிரசாரம் செய்தார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அவர் இழிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, தி.மு.க நிர்வாகி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தென்காசியில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட அவர் மீது, பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் உள்பட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடுத்து வந்த நாட்களில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குறித்து சீமான் பேசியதாக சில தனிப்பட்ட ஆடியோ பதிவுகள் இணையதளத்தில் வெளியானது. இதன் பின்னணியில் திருச்சி எஸ்.பி., வருண்குமார் (தற்போது திருச்சி சரக டிஐஜி) உள்ளதாக சீமான் குற்றம் சுமத்தினார். பட மூலாதாரம்,@SAATTAIDURAI படக்குறிப்பு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில், நாம் தமிழரின் கொள்கைப் பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை இழிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது எக்ஸ் தளத்தில் மோதல் சாட்டை துரைமுருகனை போலீஸார் கைது செய்தபோது, அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார், அதில் இருந்த ஆடியோக்களை பொதுவெளியில் பரப்பியதாக சீமான் கூறியிருந்தார். இதுதொடர்பாக கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், "ஓர் அதிகாரியை எஸ்.பியாக வைத்திருக்கிறீர்கள். அவர் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். எங்கள் மீது அவருக்கு வெறுப்பு உள்ளது" எனக் கூறினார். தொடர்ந்து பேசிய சீமான், "துரைமுருகன் மீது வழக்குப் போட்டது குறித்துக் கேட்டால் மேலிடம் அழுத்தம் என்கிறார். இன்னும் எத்தனை நாள் மேலிட ஆதரவில் இருப்பீர்கள்?" என வருண்குமாரை நோக்கி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சில சாதிப் பெயர்களைக் குறிப்பிட்டு சீமான் விமர்சித்தார். இதற்கு தனது தனது எக்ஸ் பக்கத்தில் பாரதியாரின், 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாடலை வருண்குமார் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் சீமான் பேசிய வீடியோவை இணைத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 4-ஆம் தேதி மின் கட்டண உயர்வைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் சீமான் விமர்சித்தார். இந்த விவகாரத்தில் தனது வழக்கறிஞர் மூலம் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை சீமானுக்கு வருண்குமார் அனுப்பினார். அதை தனது எக்ஸ் பக்கத்திலும் அவர் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், 'சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பொதுவெளியில் சீமான் பேசும் பேச்சுக்களை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்' எனப் பதிவிட்டிருந்தார். பட மூலாதாரம்,VARUNKUMARIPS/X படக்குறிப்பு, வருண்குமாரின் எக்ஸ் தள பதிவுகள் 'பயமோ பதற்றமோ கூடாது' - விமானிகள் அவசர சூழல்களில் எப்படி முடிவெடுப்பார்கள்? - ஒரு விமானியின் அனுபவம்7 மணி நேரங்களுக்கு முன்னர் ஹெச்1பி விசா பற்றிய விவேக் ராமசாமி கருத்தால் அமெரிக்காவில் என்ன சர்ச்சை?31 டிசம்பர் 2024 பிபிசி தமிழுக்கு சீமான் சொன்ன விளக்கம் வருண்குமார் நோட்டீஸ் அனுப்பியது குறித்து கடந்த ஆக்ஸ்ட் மாதம் பிபிசி தமிழிடம் பேசிய சீமான், "எனக்கு எந்தவகையிலும் அவர் எதிரி அல்ல. ஐ.பி.எஸ்., படித்தால் அதற்குரிய வேலையை மட்டும் பார்க்க வேண்டும். தி.மு.க தலைமையிடம் நற்பெயரை பெறும் நோக்கில் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன" என்றார். "துரைமுருகனை கைது செய்த இரண்டு முறையும் செல்போன்களை பறித்துள்ளனர். அந்த செல்போனில் உள்ள உரையாடல்களை எடுப்பதுதான் ஓர் ஐ.பி.எஸ் அதிகாரியின் வேலையா?" என சீமான் கேள்வி எழுப்பினார். "என்னுடைய கட்சிக்காரர்களிடம் நான் பேசுவதில் இவருக்கு என்ன பிரச்னை? துரைமுருகனின் செல்போனில் இருந்து ஆடியோவை எடுத்து வெளியில் கசியவிட்டதே வருண்குமார் தான்" எனக் கூறினார். வழக்கறிஞர் நோட்டீஸை வருண்குமார் அனுப்பியது குறித்து கேட்டபோது, அதை சட்டரீதியாக நீதிமன்றத்தில் சந்திக்க உள்ளதாக சீமான் தெரிவித்தார். பட மூலாதாரம்,SEEMAN/X படக்குறிப்பு, திமுக தலைமையிடம் நற்பெயரை பெறும் நோக்கில் வருண்குமாரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்கிறார் சீமான் சண்டிகர் மாநாடு சர்ச்சை இதன்பிறகு, சமூக வலைதளங்களில் வருண்குமாருக்கு எதிராக பதிவிடத் தூண்டியதாக சீமான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த 22 பேர் மீது திருச்சி தில்லைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு சண்டிகரில் நடைபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி மீது வெளிப்படையான விமர்சனத்தை வருண்குமார் முன்வைத்தார். அப்போது பேசிய அவர், "நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத கட்சி, அது தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று. அக்கட்சிக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர்." என்றார். அக்கட்சியினரின் சைபர் குற்றங்களால் தானும் தன் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தன் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படத்தை மார்பிங் செய்து பொதுவெளியில் நாம் தமிழர் கட்சியினர் பரப்புவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். வேங்கைவயல்: 2 ஆண்டுகளாக தீராத மர்மமும் எழுப்பப்படும் சந்தேகங்களும் - பிபிசி கள ஆய்வு31 டிசம்பர் 2024 'அந்த இடத்தில் இருந்தால்தான் புரியும்' - அண்ணா பல்கலை. மாணவிகள், பெற்றோர்கள் கூறுவது என்ன?31 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,VARUNKUMARIPS/X படக்குறிப்பு, சண்டிகரில் நடைபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி மீது வெளிப்படையான விமர்சனத்தை வருண்குமார் முன்வைத்தார் 'மோதிப் பார்த்துவிடுவோம்'- சீமான் இதற்குப் பதில் அளித்த சீமான், "இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக இந்தக் கட்சியை நடத்துகிறோம். தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக நாம் தமிழர் உள்ளது. திடீரென பிரிவினைவாத இயக்கம், கண்காணிக்க வேண்டும் என்றால் இவர் தான் நாட்டை ஆள்கிறாரே?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், "பிரதமர், உள்துறை அமைச்சர் பங்கேற்ற விழாவில் இவர் பேசியது மட்டும் பொதுவெளியில் வருவது எப்படி? மோதுவோம் என்றாகிவிட்டது, மோதிப் பார்த்துவிடுவோம்" என்றார். இந்த சூழலில் தொழிலதிபர் மூலமாக தன்னைச் சந்திக்க சீமான் தூது அனுப்பியதாக செய்தியாளர்களிடம் வருண்குமார் கூறியிருந்தார். நாம் தமிழர் கட்சியினர் மீது திருச்சி சரக டிஐஜி முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சீமானிடம் தற்போது விளக்கம் பெறுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அவரிடம் விளக்கம் பெற முடியவில்லை. இதுகுறித்து திருச்சி சரக டிஐஜி வருண்குமாரிடம் விளக்கம் கேட்பதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அவர் அழைப்பை ஏற்காததால் வாட்ஸ்ஆப் மூலமாக விளக்கம் கேட்டோம். "எது குறித்து?" எனக் கேள்வி எழுப்பிய வருண்குமார், மேற்கொண்டு பதில் அளிக்கவில்லை. அவர் பதில் அளிக்கும்பட்சத்தில் சேர்க்கப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c205yqqv0r1o
  25. 01 JAN, 2025 | 01:49 PM (நமது நிருபர்) வட பகுதி மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனவரி மாத இறுதியில் சந்தித்துப் பேசுவதற்கு கடற்றொழிலாளர் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. அதேவேளையில் எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரையும் இவ்வமைப்புகள் சந்தித்துப் பேசவுள்ளன. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்திற்கும், வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பிலேயே இது தொடா்பான தீமானம் எடுக்கப்பட்டது. இந்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சால் முன்மொழியப்படவுள்ள புதிய சட்டமூலத்தை இடைநிறுத்தல், தமிழக அரசியல் தலைமைகளுடன் வடக்கு கிழக்கு தமிழ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை முன்னெடுப்பதை வலியுறுத்தல், தேசிய மக்கள் சக்தியால் மீனவர் பிரச்சினை தொடர்பில் கோரப்பட்ட கால அவகாசம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைதல், 2025 ஆண்டில் வடமாகாண மீனவர்களின் வாழ்வியல் செயற்திட்டங்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை சந்திப்பதற்கான தீர்மானம் போன்ற விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன. கடற்றொழில் அமைச்சா் இராமலிங்கம் சந்திரசேகா் எதிா்வரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை தம்மைச் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கிகொடுத்திருப்பதாக வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளா் மொகமட் ஆலம் கேசரிக்குத் தெரிவித்தாா். நேற்றைய சந்திப்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஏமன் குமார, வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்சிஸ், இணையத்தின் செயலாளர் மொகமட் ஆலம், இணையத்தின் பொருளாளர் ரவீந்திரன் பிரியா, ஊடக பேச்சாளர் அ.அன்னராசா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/202692

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.