Everything posted by ஏராளன்
-
கோவில்களில் பள்ளி, கல்லூரி மாணவியரை கந்த சஷ்டி கவசம் பாட வைக்க எதிர்ப்பு - அமைச்சர் சேகர்பாபு பதில் என்ன?
பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, சென்னையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள மாணவிகளை வைத்து கோவில்களில் கந்த சஷ்டி பாராயணம் செய்ய வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இதற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. நவம்பர் இரண்டாம் தேதியன்று சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள் 69 பேர், கபாலீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 51 பேர் என மொத்தம் 120 பேர் இதில் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். 'விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதி' பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, இந்நிகழ்வில் 120 பேர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர் அந்தத் தருணத்தில் இதுகுறித்து பேட்டியளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, "இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இசைக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை மட்டுமே அவர்கள் விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதிக்கிறோம்" என்று தெரிவித்தார். 738 மாணவ, மாணவிகளுக்கு கந்த சஷ்டி பாராயணம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோல 12 கோவில்களில் மாணவ, மாணவிகள் பங்கேற்று பாட உள்ளதாகவும் அவர் கூறினார். எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டிருந்த இந்த கந்த சஷ்டி பாராயண நிகழ்வின் வீடியோவை மேற்கோள்காட்டி, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், பாராட்டும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆனால், விரைவிலேயே தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் இயக்கங்களிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. நவம்பர் ஐந்தாம் தேதி வெளியான திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ இதழான விடுதலையின் முதல் பக்கத்திலேயே இதனைக் கண்டித்து செய்தி வெளியானது. "தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தென்மாவட்டத்தில் நடத்தப்படும் கல்லூரியிலிருந்து கந்த சஷ்டி கவசம் பாட முருகன் கோயிலுக்கு மாணவர்/மாணவிகளை அனுப்ப வேண்டும் என்று துறையின் அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவதாக ஒரு செய்தி வருகிறது. கல்லூரி நடத்தப்படுவது எந்தத் துறையால் என்றாலும், மாணவர்கள் வந்திருப்பது கல்வி கற்கத் தானே ஒழிய, பஜனை செய்ய அல்ல. திராவிட மாடல் அரசின் கொள்கை செயல் திட்டங்களுக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது யார் என்ற கேள்வி எழவில்லையா?" என அந்நாளிதழ் கேள்வி எழுப்பியிருந்தது. பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, 'மாணவ, மாணவிகளை மட்டுமே அவர்கள் விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதிக்கிறோம்' என்று தெரிவித்தார் அமைச்சர் சேகர் பாபு ‘திமுக அரசின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது’ அதேபோல, மே 17 இயக்கமும் இதனைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டது. "கந்த சஷ்டி பாராயணம் என்ற தொடர் ஆன்மீக நிகழ்வை முன்னெடுப்பதும், அதில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பங்கேற்க வைப்பதும், திராவிடத்தின் வழிவந்த - 'திராவிட மாடல்' ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொள்ளும் திமுக அரசின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானதாகும்.” “மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை வளர்த்தெடுக்கும் வகையில் செயல்படுவது ஏற்புடையதல்ல" என அந்த இயக்கத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுகவின் தோழமைக் கட்சிகள் எதிர்ப்பு Twitter பதிவை கடந்து செல்ல, 1 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 விரைவிலேயே தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதனை எதிர்க்க ஆரம்பித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார் இதனைக் கண்டித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். "தமிழ்நாட்டில் அதிக அளவில் பெண்கள் கல்லூரிக்குப் போக வேண்டும் என்பதற்காக ‘புதுமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் முதலமைச்சர். அவரது நல்ல நோக்கத்துக்கு மாறாக பள்ளி மாணவிகளைப் பாராயணம் பாடச் சொல்லி ‘பழமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் மாண்புமிகு அமைச்சர் சேகர் பாபு.” “கல்வியின் மதச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ‘அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிறுவனங்களைப் பள்ளி, கல்லூரித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்பது தவிர வேறு வழியில்லை" என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், "அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாடச் சொல்லி கோவிலுக்கு அனுப்புவீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 இதற்கிடையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் சென்னை ராயப்பட்டையில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பாகத் திரண்டு, அமைச்சர் சேகர் பாபுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஊர்வலமாகச் செல்ல முயன்ற அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். இப்படி எதிர்ப்புகள் வந்தபோதும், சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் ஒரு பகுதியாக, நவம்பர் ஆறாம் தேதி மாணவியரை வைத்து கந்த சஷ்டி பாராயணம் நடைபெற்றிருக்கிறது. வட பழனியில் நடந்த நிகழ்வில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள் 69 பேர், கபாலீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 50 பேர் என மொத்தம் 119 பேர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடினர். பட மூலாதாரம்,@DRAVIDARKAZAGAM படக்குறிப்பு, சேகர் பாபுவைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய போராட்டம் அனைத்துலக முருகன் மாநாடும் விமர்சனங்களும் தி.மு.க. அரசு 2021இல் பதவியேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சராக பி.கே. சேகர் பாபு பொறுப்பேற்றார். இதற்குப் பிறகு, இந்து சமய அறநிலையத் துறையின் பணிகள் வேகமெடுத்தன. வெகு சீக்கிரத்திலேயே அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிலரை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நியமனம் செய்தார். மேலும், நூற்றுக்கணக்கான கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்வது, ஆன்மீக நூல்களை வெளியிடுவது என விறுவிறுப்பாகச் செயல்பட்டார் சேகர் பாபு. ஆனால், விரைவிலேயே இவரது நடவடிக்கைகள் மீது விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக, அனைத்துலகமுருகன் மாநாடு நடத்த முடிவுசெய்தபோது பெரும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த மாநாட்டிற்கு தி.மு.கவை கடுமையாக விமர்சனம் செய்துவரும் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத்தை அழைத்ததும், அதில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தன. குறிப்பாக, 8வது மற்றும் 12வது தீர்மானங்கள் விமர்சனத்தை எதிர்கொண்டன. எட்டாவது தீர்மானமாக, 'கந்த சஷ்டி விழாக்காலங்களில் அருள்மிகு முருகன் திருக்கோவில்களில் மாணவர், மாணவியரைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.’ என்றும் 12வது தீர்மானமாக ‘முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது’ என்றும் குறிப்பிடப்பட்டது. இதற்குக் கண்டனம் தெரிவித்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, "இந்த இரண்டு தீர்மானங்களையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? தி.மு.க. அரசின் கொள்கை என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டதாயிற்றே! தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்குக் கூட மதச்சார்பற்ற கூட்டணி என்றுதானே பெயர் - இதற்குமேல் விளக்கத் தேவையில்லை" என்று குறிப்பிட்டார். தி.மு.கவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அந்தத் தருணத்தில் இதற்குக் கண்டனம் தெரிவித்தது. ஆனால், தி.மு.கவின் தரப்பில் இருந்து அப்போது பதில் ஏதும் வரவில்லை. சேகர் பாபு இவற்றையெல்லாம் தானாகச் செய்யவில்லையெனக் கருதுவதாகச் சொல்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி. "அறநிலையத் துறை நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள் மீது தனக்கு உரிமை இருப்பதாகக் கருதுகிறார் சேகர் பாபு. அறநிலையத் துறை அரசின் அங்கம். அப்படியிருக்கும் போது சேகர் பாபு தன் விருப்பப்படி எப்படிச் செயல்படுகிறார் என்பது புரியவில்லை. இது மிகவும் கண்டனத்திற்கு உரியது.” என்கிறார் கொளத்தூர் மணி. தொடர்ந்து பேசிய அவர், “அறநிலையத் துறை செய்வது சரியென்றால், பள்ளிகளில் சென்று இதேபோலப் பேசிய மகாவிஷ்ணு மீது வழக்குப் போட்டது ஏன்? இதையெல்லாம் அவர் தானாகச் செய்வதாகத் தோன்றவில்லை" என்று கூறினார். அமைச்சர் சேகர்பாபு பதில் என்ன? பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் இப்படி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளிக்கவில்லை கந்த சஷ்டி பாராயணம் தொடர்பாக எழுந்திருக்கும் எதிர்ப்புகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் பிபிசி கேட்டபோது, "இதை ஒன்றும் புதிதாகச் செய்யவில்லை. கடந்த ஆண்டும் வடபழனி, கந்தகோட்டம், திருச்செந்தூர் போன்ற இடங்களில் இதேபோன்ற பாராயணம் நடந்தது. இதை ஏன் தேவையில்லாமல் சர்ச்சையாக்குகிறீர்கள்?" என்கிறார் சேகர் பாபு. தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் இப்படி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளிக்கவில்லை. கூட்டணிக் கட்சியினரே இது குறித்து விமர்சிப்பது குறித்துக் கேட்டபோது, "ஆன்மீகம் தொடர்பாக எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்கிறோம். அதில் கவனம் செலுத்துங்கள்" என்று மட்டும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1lge5z7415o
-
டொனால்ட் டிரம்ப் மீது நிலுவையில் உள்ள 4 குற்ற வழக்குகளும் இனி என்ன ஆகும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் தனக்கு எதிரான முதல் குற்றவியல் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார். எழுதியவர், மேடலின் ஹால்பர்ட் பதவி, பிபிசி நியூஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் மீது பல குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தீர்ப்பளிக்கப்படாத பல குற்றவியல் வழக்குகள் உள்ள ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல்முறை. பல குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் அதேவேளையில் டிரம்ப் அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியில் உட்காரப் போவது, அமெரிக்காவில் இதுவரை நடந்திராத ஒன்று. டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் நுழையும் போது, அவர் எதிர்கொள்ளும் நான்கு குற்ற வழக்குகள் என்ன ஆகும் என்பது இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 34 மோசடி வழக்குகள் சுமத்தப்பட்டன வணிக ஆவணங்களில் முறைகேடு செய்ததாக அவர் மீது முன்வைக்கப்பட்ட 34 குற்றச்சாட்டுகள் நியூயார்க் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் உறுதி செய்யப்பட்டது. இவை நியூயார்க்கில் கடுமையான குற்றங்களாக கருதப்படுகின்றன. மே மாதம், நியூயார்க்கின் நடுவர் மன்றம் டிரம்பை குற்றவாளி என்று அறிவித்தது. இந்த கணக்கு பதிவேடு முறைகேடுகள் அனைத்துமே ஆபாச நடிகைக்கு பணம் தரப்பட்டதுடன் (hush money) தொடர்புடையவை. நியூயார்க் நீதிபதி ஜுவான் மார்ச்சென், டிரம்புக்கான தண்டனை அறிவிப்பை செப்டம்பர் மாதத்தில் இருந்து நவம்பர் 26-ஆம் தேதி வரை ஒத்திவைத்திருந்தார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தள்ளிவைக்கப்பட்டது. முன்னாள் புரூக்ளின் வழக்கறிஞர் ஜூலியா ராண்டில்மேன் கூறுகையில், தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றாலும், நீதிபதி மார்ச்சென் திட்டமிட்டபடி சட்ட நடவடிக்கையை தொடர முடியும் என்று கூறினார். ஆனால், முதியவர் என்பதாலும் முதல்முறை குற்றவாளி என்பதாலும் டிரம்புக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பில்லை என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை தண்டனை அறிவிக்கப்பட்டால், டிரம்பின் வழக்கறிஞர்கள் உடனடியாக தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். ஏனெனில் டிரம்ப் சிறைக்கு அனுப்பப்பட்டால், அவர் தனது அதிகாரப்பூர்வ வேலையைச் செய்ய முடியாது என்று ஜூலியா கூறுகிறார். "இந்த மேல்முறையீட்டு செயல்முறை பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்" என்றும் அவர் கூறினார். தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்ததாக வழக்கு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதால், கிரிமினல் வழக்குகளில் அவருக்கு இருந்த பிரச்னைகள் ‘முடிவுக்கு வந்ததுள்ளன’ கடந்த ஆண்டு டிரம்ப் மீது சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித், கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். இந்த வழக்கு 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற பின்னர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பானது. டிரம்ப் இந்த வழக்கில் தன்னை நிரபராதி என்று கூறினார். அதிபர் என்ற முறையில் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து அவருக்கு ஓரளவு சட்டப் பாதுகாப்பு இருப்பதை அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு பற்றி குழப்பம் நிலவுகிறது. எவ்வாறாயினும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் டிரம்பின் முயற்சி அதிபர் என்கிற முறையிலான அவரது அதிகாரப்பூர்வ கடமைகளுக்குள் வராது என்று ஸ்மித் தனது வாதத்தை மீண்டும் முன்வைத்தார். முன்னாள் அரசு வழக்கறிஞர் நயீம் ரஹ்மானியின் கூற்றுப்படி, டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதால், கிரிமினல் வழக்குகளில் அவருக்கு இருந்த பிரச்னைகள் ‘முடிவுக்கு வந்ததுள்ளன’. "பதவியில் இருக்கும் அதிபருக்கு எதிரான குற்றம்சாட்டில் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பது உறுதியாகிவிட்டது. எனவே வாஷிங்டன் டிசி நீதிமன்றத்தில் நடந்து வரும் தேர்தல் மோசடி தொடர்பான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும்" என்று அவர் கூறுகிறார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய ஸ்மித் மறுத்தால், டிரம்ப் ஏற்கனவே கூறியதைப் போல அவரை அதிகாரத்தில் இருந்து நீக்க முடியும். "இரண்டு நொடிகளில் நான் அவரை நீக்குவேன்" என்று டிரம்ப் அக்டோபரில் ஒரு வானொலி பேட்டியில் கூறினார். அரசு ஆவணங்கள் தொடர்பான வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தீர்ப்பளிக்கப்படாத பல குற்றவியல் வழக்குகள் உள்ள ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல்முறை (கோப்புப் படம்) டிரம்பிற்கு எதிரான மற்றொரு வழக்கையும் ஸ்மித் முன்னெடுத்தார். அரசின் ரகசிய ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், இதை டிரம்ப் மறுத்தார். டிரம்ப் தனது இல்லமான 'மார்-ஏ-லாகோ'வில் முக்கியமான அரசு ஆவணங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த ஆவணங்களை சட்டத் துறை திரும்பப் பெற முயன்றது. இந்த வழக்கை டிரம்ப் அதிபராக இருந்த போது நியமிக்கப்பட்ட ஃபுளோரிடா நீதிபதி எலைன் கேனன் விசாரித்தார். கடந்த ஜூலை மாதம் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார். இந்த வழக்கை விசாரிக்க சட்டத் துறை ஸ்மித்தை முறைகேடாக நியமித்துள்ளதாகக் கூறி குற்றச்சாட்டுகளை அவர் தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்மித் மேல்முறையீடு செய்துள்ளதாக ரஹ்மானி கூறினார். ஆனால், தற்போது டிரம்ப் அதிபராவது உறுதியாகிவிட்ட நிலையில், தேர்தல் மோசடி தொடர்பான வழக்கை போல் ரகசிய ஆவணங்கள் தொடர்பான வழக்கும் ரத்து செய்யப்படலாம் என ரஹ்மானி கூறுகிறார். "ரகசிய ஆவணங்கள் வழக்கை நிராகரிப்பதற்கான லெவந்த் சர்க்யூட் மேல்முறையீட்டை (Eleventh Circuit appeal) சட்டத்துறை (DOJ) கைவிடும்," என்று அவர் கூறினார். ஜார்ஜியா வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ‘அமெரிக்க அதிபராக, அவர் அதிபர் அலுவலகத்தில் இருக்கும் வரை, அவர் மீது எந்த வழக்கும் பதியப்பட மாட்டாது என நம்புகிறேன்’ என டிரம்பின் வழக்கறிஞர் ஸ்டீவ் செடோ கூறுகிறார் ஜார்ஜியாவிலும் டிரம்ப் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இந்த விவகாரம் 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் முடிவை மாற்றச் சதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பானது. இந்த விஷயத்தில் பல்வேறு தடைகள் இருந்தன. மாவட்ட வழக்கறிஞர் ஃபேன்னி வில்லிஸை தகுதி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழக்கு தொடர்பான வழக்கறிஞர் ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம் வில்லிஸ் இந்த வழக்கில் இருக்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை பரிசீலித்து வருகிறது. ஆனால் தற்போது டிரம்ப் அதிபராக வந்துவிட்டார். எனவே இந்த வழக்கு இன்னும் தாமதமாகலாம் அல்லது தள்ளுபடி செய்யப்படலாம். இந்த வழக்கு ரத்து செய்யப்படும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்து. டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் விசாரணைகளுக்கு வர முடியுமா என்று நீதிபதி கேட்ட போது டிரம்பின் வழக்கறிஞர் ஸ்டீவ் செடோ, "அமெரிக்க அதிபராக, அவர் அதிபர் அலுவலகத்தில் இருக்கும் வரை, அவர் மீது எந்த வழக்கும் பதியப்பட மாட்டாது என நம்புகிறேன்” என்றார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce9g3j4j44no
-
மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு ஆளுனருடன் கலந்துரையாடல்
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (07) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட செயலகம், இலங்கை பொலிஸ், கடற்றொழில் கூட்டுத்தாபனம், கொட்பே மீன்பிடி துறைமுகம், துறைமுக அதிகாரசபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இதில் கலந்துகொண்டனர். இங்கு திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆளுநரிடமும் உரிய அதிகாரிகளிடமும் மீனவர் பிரதிநிதிகள் ஒவ்வொன்றாக முன்வைத்தனர். மீன்பிடி தொழிலில் இடைத்தரகர்கள் கட்டாயமாக மீன் வாங்குவது, பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை ஏலம் விடுவதில் உள்ள சிக்கல்கள், குளறுபடிகள், மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் மிரட்டல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்களை கொல்வது போன்ற பிரச்சினைகள் குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகள் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் போதிய பாதுகாப்பு இல்லை எனவும் அதற்கு போதியளவு பொலிஸ் பாதுகாப்பை வழங்க முடியும் எனவும் திருகோணமலை பொலிஸ் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமிக்க பிரேமசிறி தெரிவித்தார். மேலும், தடைசெய்யப்பட்ட வலை கருவிகள் மூலம் மீன்களை கொல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடலோர காவல்படை மற்றும் கடற்படையினருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார். எந்தவொரு அரசியல் மற்றும் வெளியாட்களின் செல்வாக்கிற்கும் அஞ்சாமல் கடமைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் உரையாற்றிய ஆளுநர், எவ்வித அரசியல் செல்வாக்கும் இன்றி தமது கடமைகளை மேற்கொள்ளக்கூடிய சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் நலனுக்காக பணியாற்றுமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். மீனவர் சங்கப் பிரதிநிதிகளிடம் உரையாற்றிய ஆளுநர், சிலமீனவர்கள் செய்யும் தவறுகளினால் ஒட்டுமொத்த மீனவ சமூகமும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், தற்போதுள்ள சட்டத்தின்படி மீனவர்கள் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/198143
-
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்
டிரம்ப் அதிபராக பதவியேற்பது எப்போது? அதுவரை டிரம்ப், ஜே.டி.வான்ஸ் என்ன செய்வர்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப் என்றாலும், அதை உறுதி செய்யும் இறுதி தேர்தல் முடிவுகள் இன்னும் வரவில்லை. எழுதியவர், ஜார்ஜ் பௌடன் பதவி, பிபிசி நியூஸ், வாஷிங்டன் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவின் அடுத்த அதிபராகிறார் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப். இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழையப் போகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுடனான போட்டி மிக நெருக்கமானதாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் ஒரே இரவில், அதிபராவதற்கு தேவையான வாக்குகளை டிரம்ப் பெற்றுள்ளார் என்பது உறுதியானது. கடந்த 130 ஆண்டுகளில், ஒரு முன்னாள் அதிபர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும், 78 வயதான ஒருவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதும் முதல் முறையாகும். தேர்தல் முடிவுகள் எப்போது இறுதி செய்யப்படும்? இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் உள்ளிட்ட உலக தலைவர்கள் ஏற்கனவே டிரம்பிற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டனர். எனினும், அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் அதிகாரபூர்வமாக இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. முடிவை தீர்மானிக்கக் கூடிய முக்கிய மாகாணங்களில் மிக நெருக்கமான போட்டி இரு வேட்பாளர்களுக்கு இடையில் நிலவினால், முடிவுகள் நிச்சயமற்றதாக இருக்கும் என்ற அச்சம் இருந்தது. ஆனால், எதிர்ப்பார்த்ததை விட முன்னதாகவே வட காரோலினா, ஜார்ஜியா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் வெற்றி கிடைத்துவிட்டது. அத்துடன் குடியரசுக் கட்சியின் கோட்டையாக கருதப்படும் மாகாணங்களில் கிடைத்த வெற்றி, டிரம்ப் 270 இடங்கள் பெற்று அதிபராவதை சாத்தியமாக்கியது. அமெரிக்காவில் உள்ள பிபிசியின் கூட்டாளியான சிபிஎஸ் ஊடகம், டொனால்ட் டிரம்ப் தான் வெற்றி பெறுவார் என்று தேர்தலுக்கு அடுத்த நாள் காலை 5.30 மணிக்கே (பிரிட்டன் நேரப்படி) கணித்திருந்தது. எனினும், ஒவ்வொரு மாகாணத்திலும் விரிவான தேர்தல் முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க மேலும் சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம். டொனால்ட் டிரம்ப் இப்போது அதிபரா? இல்லை. டிரம்ப் இப்போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர், மற்றும் ஜேடி வான்ஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர். 2025ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்பார். அப்போது தான் அவர் அதிபருக்கான அதிகாரங்களையும் பொறுப்புகளையும் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்வார். தேர்தல் நாளுக்கும் பதவியேற்புக்கும் இடையில் என்ன நடக்கும்? தகுதியான ஒவ்வொரு வாக்கும் இறுதி முடிவுகளில் இடம்பெற்ற பிறகு, தேர்வாளர் குழு தேர்தல் முடிவுகளை உறுதி செய்யும். ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்வாளர் குழுவின் வாக்குகள் வெவ்வேறு எண்ணிக்கையில் இருக்கும். வாக்காளர்களின் ஆதரவு மட்டுமல்லாமல் இந்த வாக்குக்களை பெறுவது தான் அதிபராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழிவகுக்கும். பொதுவாக, பெரும்பான்மையான வாக்குகளை (popular vote) யார் பெறுகிறார்களோ அவர்களுக்கே தேர்வாளர் குழுவின் வாக்குகளை மாகாணங்கள் வழங்கிவிடும். இது டிசம்பர் 17-ம் தேதி கூட்டங்களுக்கு பிறகு முடிவு செய்யப்படும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க காங்கிரஸ் ஜனவரி 6-ம் தேதி கூடி, தேர்வாளர் குழுவின் வாக்குகளை எண்ணி, புதிய அதிபர் யார் என்பதை உறுதி செய்யும். கடந்த 2021-ம் ஆண்டு ஜோ பைடனிடம் தோற்றதை டிரம்ப் ஏற்க மறுத்த பிறகு அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்த முயன்றது, இந்தக் கூட்டத்தை தான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2021ம் ஆண்டு டிரம்ப் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை இறுதி செய்யும் காங்கிரஸ் கூட்டத்தை தடுக்க முயன்றனர். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இப்போது என்ன செய்வர்? அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேடி வான்ஸ் இருவரும் தங்கள் குழுக்களுடன் பணியாற்றி, பைடன் அரசிடமிருந்து நிர்வாக மாற்றத்துக்கு ஏற்பாடுகளை செய்வர். தங்கள் கொள்கை முன்னுரிமைகளை கண்டறிந்து, புதிய ஆட்சியில் முக்கியப் பொறுப்புகள் யாருக்கு வழங்கப்படலாம் என முடிவு செய்து, அரசின் செயல்பாடுகளை ஏற்று நடத்தத் தயாராவர். தற்போது நிலவும் அச்சுறுத்தல், நடைபெற்றுக்கொண்டிருக்கும் ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு குறித்து ரகசியங்கள் டிரம்ப் மற்றும் அவரது குழுவினருக்கு விளக்கப்படும். அமெரிக்க ரகசிய சேவையின் கட்டாய பாதுகாப்பு, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் வழங்கப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் முடிந்த பிறகு, வழக்கமாக பொறுப்பில் இருக்கும் அதிபர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதிபரை வெள்ளை மாளிகைக்கு அழைப்பார். ஆட்சி அதிகாரம் சுமூகமான முறையில் கைமாறியதற்கு அடையாளமாக, பதவிக்காலம் முடியவிருக்கும் அதிபர், தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதிபரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது வழக்கம். ஆனால், 2020ம் ஆண்டு பைடன் அதிபராக பதவியேற்ற போது டிரம்ப் இந்நிகழ்வை புறக்கணித்துவிட்டார். எனினும், அடுத்து வரப்போகும் அதிபருக்காக தான் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெள்ளை மாளிகையில் உள்ள அதிபரின் வேலை நிமித்த அறையில் விட்டுச் சென்றார். இது முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் தொடங்கி வைத்த வழக்கமாகும். டிரம்ப் “மிக தாராளமான கடிதம்” ஒன்றை தனக்காக எழுதியிருந்ததாக பைடன் அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்தார். பதவியேற்பு விழாவுக்குப் பின், அதிபர் உடனடியாக தனது வேலைகளை தொடங்குவார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpdv1w2p610o
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், பிரசார செயலாளர் நடராஜர் காண்டீபன், சிரேஸ்ட சட்டத்தரணி கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ், சிரேஸ்ட சட்டத்தரணி மற்றும் கட்சியின் வேட்பாளர்களான திருமதி வாசுகி சுதாகர், திருமதி க.ஞானகுணேஸ்வரி, திருமதி ஜீன்சியா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் முழுமையாக பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும் TNPF Manifesto-2024 Parliamentary Election https://thinakkural.lk/article/311858
-
பிரிட்டன் தம்பதியின் நீண்ட சட்டப் போராட்டம்: கூகுள் நிறுவனத்திற்கு ரூ.26 ஆயிரம் கோடி அபராதம் - ஏன்?
பட மூலாதாரம்,SHIVAUN AND ADAM RAFF படக்குறிப்பு, ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம், கூகுளுக்கு எதிராக நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தினர். எழுதியவர், சைமன் டுலெட் பதவி, பிபிசி செய்தியாளர் "எங்கள் தளத்தை கூகுள் இணையத்தில் இருந்து மறையச் செய்துவிட்டது" என்று ஒரு முக்கியமானக் குற்றச்சாட்டை ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம் ராஃப் ஆகியோர் முன்வைத்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்த ஷிவான் ராஃப் - ஆடம் ராஃப் தம்பதி 2006 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நல்ல ஊதியம் வரும் வேலையை விட்டுவிட்டு, `ஃபவுண்டெம்’ (Foundem) என்ற 'விலை ஒப்பீட்டு’ இணையதளத்தைத் தொடங்கினர். பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கும் தொழில்முனைவோருக்கு அதன் முதல் நாள் உற்சாகமும், அச்சமும் நிறைந்ததாக இருக்கும். ஆனால், ஷிவான் மற்றும் ஆடமுக்கு முதல் நாளே மோசமாக இருந்தது. இருவரும்` Foundem’ என்னும் இணையதளத்தை தொடங்கியபோது, அடுத்தடுத்த நாட்களில் தங்கள் ஸ்டார்ட்அப்பிற்கு பெரிய பிரச்னை வரப்போகிறது என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கூகுள் ஸ்பேம் ஃபில்டர்கள் ஏற்படுத்திய பாதிப்பு? கூகுள் தேடுபொறியின் தானியங்கி ஸ்பேம் ஃபில்டர்களில் ஒன்றின் காரணமாக `ஃபவுண்டெம்’ இணையதளம் மீது கூகுள் சர்ச் பெனால்டி (`Google search penalty’) விதிக்கப்பட்டது. இது அவர்களின் இணையதளத்தின் வணிகத்தை பாதித்தது. விலை ஒப்பீடு பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ராஃப் தம்பதியினரின் `ஃபவுண்டெம்’ இணையதளம், ஷாப்பிங் செய்பவர்கள் வெவ்வேறு விற்பனையகங்களில் விலை ஒப்பீட்டை தெரிந்து கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன்படி பயனர்கள் விலை ஒப்பீடு தொடர்பான தகவல்களை பெற `ஃபவுண்டெம்’ லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் பட்டியலிட்டிருக்கும் பொருட்களை கிளிக் செய்யும் போது ராஃப் தம்பதிக்கு வருவாய் வரும். ஆனால், கூகுள் விதித்தக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த செயல்பாடு பாதிக்கப்பட்டது. இணையதளத்தில் இருந்து பணம் சம்பாதிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. மேலும், விலை ஒப்பீடு மற்றும் ஒப்பீடு ஷாப்பிங் தொடர்பான கூகுள் தேடல் முடிவுகளின் பட்டியலில் `ஃபவுண்டெம்’ மிகவும் பின்தங்கியது. "எங்கள் இணையதளத்தை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருந்தோம். கூகுள் தேடலில் அவை எவ்வாறு தரவரிசை செய்யப்படுகின்றன என்பதை பார்த்தபோது, அவை அனைத்தும் உடனடியாக வீழ்ச்சியடைந்ததைக் கவனித்தோம்" என்று ஆடம் கூறுகிறார். கூகுளுக்கு எதிரான நீடித்த சட்டப் போராட்டம் ஃபவுண்டெம் தளத்தின் முதல் நாள் திட்டமிட்டபடி போகவில்லை. இது 15 ஆண்டுகளாக நீடித்த சட்டப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. தம்பதியினரின் சட்டப்போராட்டத்தின் இறுதியில் கூகுளுக்கு 2.4 பில்லியன் பவுண்டுகள் (ஏறக்குறைய 26 ஆயிரம் கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கூகுள் தனது சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் நம்பப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் உலகளாவிய ஒழுங்குமுறையில் இந்த வழக்கு வரலாற்று தருணமாக பார்க்கப்பட்டது. ஜூன் 2017இல் வெளியிடப்பட்ட அந்த தீர்ப்பை எதிர்த்து கூகுள் ஏழு ஆண்டுகள் போராடியது. இந்த ஆண்டு செப்டம்பரில், ஐரோப்பாவின் உயர் நீதிமன்றமான `ஐரோப்பிய நீதிமன்றம்’ கூகுளின் மேல்முறையீடுகளை நிராகரித்தது. அந்த இறுதித் தீர்ப்பிற்குப் பிறகு, ரேடியோ 4 இன் தி பாட்டம் லைனிடம் ஷிவான் மற்றும் அடாம் கொடுத்த முதல் நேர்காணலில், தங்கள் இணையத்தளத்திற்கு ஏற்பட்ட தடங்கலை ஆரம்பத்தில் சிறிய பிரச்னை தான் என்று நினைத்ததாக விளக்கினர். 55 வயதான ஷிவான் கூறுகையில், “ஆரம்பத்தில் எங்கள் இணையதளத்தை கூகுள் ஸ்பேம் என்று தவறாக கருதியிருக்கலாம் என்று நினைத்தோம். சரியான இடத்தில் புகார் அளித்தால், இந்த தவறு சரி செய்யப்படும் என நினைத்தோம்.” என்றார். ஆடம் (58) பேசுகையில், "இணையதளத்துக்கு பயனர்கள் வரவில்லை எனில், டிராஃபிக் ஏற்படாது (Website Traffic). எனவே வருவாயும் வராது” என்றார். அந்தத் தம்பதியினர் இணையதளத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கூகுளுக்குப் பல கோரிக்கைகளை அனுப்பினர். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், எதுவும் மாறவில்லை என்றும், தங்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை என்றும் அவர்கள் கூறினர். இதற்கிடையில், அவர்களின் இணையதளம் மற்ற தேடுபொறிகளில் (search engine) எந்த பிரச்னையும் இன்றி தரவரிசையில் இருந்தது. ``ஆனால் மக்கள் பெரும்பாலும் கூகுள் தேடுபொறியை தான் பயன்படுத்துகிறார்கள்" என்பது ஷிவானின் கருத்து. அதன் பின்னர், கூகுளால் தங்கள் வலைதளம் மட்டும் பாதிக்கப்படவில்லை என்பதை தம்பதியினர் அறிந்து கொண்டனர். 2017 ஆம் ஆண்டில் கூகுள் தவறிழைத்தது உண்மை எனக் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டபோது, கெல்கு (Kelkoo), டிரிவாகோ (Trivago) மற்றும் யெல்ப் (Yelp) உள்ளிட்ட 20 நிறுவனங்கள் கூகுள் மீது குற்றம்சாட்டி இருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES முன்னதாக, சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆடம், ஒரு நாள், தனது அலுவலகத்திற்கு வெளியே சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த போது, திடீரென ஃபவுண்டெம் இணையதளத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு வந்ததாக அவர் கூறுகிறார். விலை ஒப்பீட்டு இணையதளங்கள் ஆரம்ப நிலையில் இருந்த காலம் அது. அந்த நேரத்தில், ஒவ்வொரு இணையதளமும் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றது. ஆனால், ஃபவுண்டெம் இவை அனைத்திலிருந்தும் வேறுபட்டது. இங்கு வாடிக்கையாளர்களுக்கு ஆடைகள் முதல் விமானங்கள் வரை பல வகையான பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஷிவான் பல உலகளாவிய பிராண்டுகளுக்கு மென்பொருள் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். "எங்கள் இணையதளம் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருந்தது" என்று அவர் புன்னகையுடன் கூறுகிறார். ஐரோப்பிய ஆணையத்தின் தீர்ப்பு ஐரோப்பிய ஆணையம் 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட தீர்ப்பில், கூகுள் தனது சொந்த ஒப்பீட்டு ஷாப்பிங் சேவையை தேடல் (google search) முடிவுகளில் சட்டவிரோதமாக ஊக்குவித்ததும், இதனால் இதுதொடர்பான இணையதளங்களை பின்னுக்குத் தள்ளியதும் கண்டறியப்பட்டது. ``பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஃபவுண்டெம் நிறுவப்பட்ட காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, கூகுள் வேண்டுமென்றே இவ்வாறு செய்யும் என்பதை நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அந்த சமயத்தில் இதுபோன்ற இணையதளங்கள் மிகவும் குறைவு” என்று ஆடம் கூறுகிறார். அத்தம்பதியினர் 2008 ஆம் ஆண்டின் இறுதியில், ஏதோ தவறு இருப்பதாக சந்தேகிக்கத் தொடங்கினர். கிறிஸ்துமஸுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு தம்பதியினருக்கு அவர்களின் இணையதளம் திடீரென மெதுவாகிவிட்டதாக எச்சரிக்கை செய்தி வந்தது. இதுபற்றி ஆடம் சிரித்துக்கொண்டே கூறுகையில், “முதலில் சைபர் தாக்குதல் என்று நினைத்தோம், ஆனால் உண்மையில் அனைவரும் எங்கள் இணையதளத்தைப் பார்க்கத் தொடங்கி இருந்தனர். டிராஃபிக் அதிகமானதால், தளம் மெதுவாகிவிட்டது” என்றார். பட மூலாதாரம்,FOUNDEM சேனல் 5 இன் தி கேட்ஜெட் ஷோவில் பிரிட்டனின் சிறந்த விலை ஒப்பீட்டு இணையதளமாக ஃபவுண்டெம் தளத்தைப் பெயரிட்டது. ஷிவான் கூறுகையில், "அந்த எச்சரிக்கை செய்தி மிகவும் முக்கியமானது. அதற்குப் பிறகு நாங்கள் கூகுளைத் தொடர்புகொண்டு, 'கூகுள் பயனர்களுக்கு எங்கள் இணையதளம் தெரியவில்லை. கூகுள் தேடலில் எங்கள் இணையதளம் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களுக்கும் எங்களுக்கும் எந்தப் பலனும் இல்லை' என்று கூறினோம்” என்று விவரித்தார். "அப்போதும் கூகுள் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. அதன் பிறகு தான் நாங்கள் நீதியை பெற போராட வேண்டும் என்பதை உணர்ந்தோம்" என்கிறார் ஆடம். ராஃப் தம்பதியர் பத்திரிகையாளர்களிடம் சென்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால், அதில் பெரிதாக பலன் கிடைக்கவில்லை. இதற்குப் பிறகு, ஆடம் இதுதொடர்பாக, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஒழுங்கமைப்புகளிடம் வழக்கை முன்வைத்தார். இதற்குப் பிறகு, இந்த விவகாரம் ஐரோப்பிய ஆணையத்திடம் சென்றது. 2010-ம் ஆண்டு விசாரணை தொடங்கியது. தம்பதியினர் பின்னர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு அறையில் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் தங்கள் முதல் சந்திப்பை நடத்தினர். அந்த நேரத்தை நினைவு கூர்ந்த ஷிவான், "ஒழுங்குமுறை அதிகாரி என்னிடம் கேட்ட ஒரு விஷயம் என்னவென்றால், இது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல்பாடு தொடர்பான பிரச்னை. ஆனால் இவ்வாறு புகார் வருவது இது தான் முதல்முறை. இப்படி நடந்ததாக இதுவரை யாருமே வரவில்லையே” என்றார். ஷிவான் மேலும் பேசுகையில் "எங்களும் மட்டும் தான் இப்படி நடந்திருக்கிறது என 100% உத்தரவாதத்துடன் சொல்ல முடியாது. வழக்கு தொடுக்க மக்கள் பயப்படுகிறார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். ஏனெனில் இணையத்தில் உள்ள அனைத்து வணிகங்களும் கூகுளில் இருந்து அவர்கள் பெறும் டிராஃபிக்கை சார்ந்துள்ளது." என்றார். "காயப்படுத்துபவர்களை நாங்கள் விரும்பவில்லை" ஒழுங்குமுறை ஆணையம் இருந்த கட்டடத்திலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ள பிரஸ்ஸல்ஸில் உள்ள ஹோட்டல் அறையில் தம்பதியினர் தங்கியிருந்தனர். ஷிவான் மற்றும் ஆடம் தங்களது தீர்ப்புக்காக காத்திருந்தனர். அவர்கள் மட்டுமின்றி மற்ற ஷாப்பிங் இணையதளங்களும் காத்திருந்தன. ஒழுங்குமுறை ஆணையர் மார்கிரேத் வெஸ்டேஜர் இறுதியாக முடிவை அறிவித்தார். முடிவு அறிவிக்கப்பட்டது, ஆனால் உடனடியாக அவர்கள் கொண்டாடவில்லை. காரணம் இந்த முடிவை ஐரோப்பிய ஆணையம் விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் அனைவரின் கவனமும் குவிந்தது. " கூகுள் எங்களுக்கு இப்படியொரு விஷயத்தை செய்திருப்பது அவர்களுக்கு துரதிருஷ்டவசமாகிவிட்டது" என்கிறார் ஷிவான். "நாங்கள் இருவரும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற உத்தரவாதமற்ற நம்பிக்கையை நாங்கள் கொண்டிருந்தோம். நாங்கள் உண்மையில் காயப்படுத்துபவர்களை (bullies) விரும்புவதில்லை," என்று அவர் கூறினார். கடந்த மாதம் இந்த வழக்கில் கூகுள் தோல்வியடைந்த போதிலும், ராஃப் தம்பதியின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES கூகுளின் அணுகுமுறை இன்னும் மாறவில்லை என்றும் ஐரோப்பிய ஆணையம் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது என்றும் அவர்கள் நம்புகின்றனர். இந்த ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய ஆணையம் அதன் புதிய டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தின் கீழ் கூகுளின் முதன்மை நிறுவனமான `ஆல்பாபெட்’ (Alphabet) மீது விசாரணையைத் தொடங்கியது. கூகுள் தேடல் முடிவுகளில் கூகுள் இன்னும் அதன் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறதா என்பதை அறிவதே இதன் நோக்கமாக இருந்தது. கூகுள் தரப்பு விளக்கம் கூகுள் செய்தித் தொடர்பாளர், "ஐரோப்பிய நீதிமன்றத்தின் முடிவு 2008 மற்றும் 2017க்கு இடையில் தயாரிப்பு முடிவுகளை நாங்கள் எவ்வாறு காட்டினோம் என்பது பற்றியது தான்." என்றார். அவர் மேலும் கூறுகையில் : "ஐரோப்பிய ஆணையத்தின் முடிவுக்கு இணங்க 2017 இல் நாங்கள் செய்த மாற்றங்கள் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகச் செயல்பட்டன. 800க்கும் மேற்பட்ட ஒப்பீட்டு ஷாப்பிங் சேவை இணையதளங்களுக்கு பில்லியன் கணக்கான கிளிக்குகள் பதிவானது." "எனவே , ஃபவுண்டெம் நிறுவனர்களை கூற்றுக்களை நாங்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்ப்போம், மேலும் இந்த வழக்கை நீதிமன்றம் பரிசீலிக்கும் போதும் அதைச் செய்வோம்" என்று அவர் கூறினார். ராஃப் தம்பதியினர் கூகுளுக்கு எதிராக ஒரு சிவில் வழக்கையும் தாக்கல் செய்துள்ளனர், இது 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் விசாரிக்கப்பட உள்ளது. ஆனால், ராஃப் தம்பதி இறுதியில் வழக்கில் வெற்றி பெற்றிருந்தாலும், அது அவர்களுக்கு அதிக பலனைத் தராது. ஏனெனில், 2016 இல் ஃபவுண்டெம் இணையத்தளத்தை மூட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. கூகுளுக்கு எதிரான இந்த நீண்ட போராட்டம் தம்பதியருக்கும் கடினமாக இருந்தது என்கின்றனர். ஆடம் கூறுகையில், "இந்த போராட்டம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால், நாங்கள் இதைச் செய்ய முடிவு செய்திருக்க மாட்டோம்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cp3nl3dneelo
-
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: 06 கோடா பரல்கள் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, மாவடிமுன்மாரி கிராமங்களின் எல்லைப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் வியாழக்கிழமை பகல் (07) முற்றுகையிடப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸ் கடமைப் பிரிவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. கிராமத்தின் பொதுமக்கள் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சட்டவிரோத உற்பத்திக்கு தயாரான கோடா ஆறு பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட கோடா பரல்கள் அவ்விடத்தில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198146
-
போராட்டத்தில் பங்களிக்காதவர்கள் போராட்டத்திற்காக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள் - சித்தார்த்தன்
விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள் விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன், விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள். மிகவும் தாழ்வான முறையில் அவர்கள் தங்களது விமர்சனங்களை செய்து வருகிறார்கள். இவர்கள் எந்த காலத்திலும் தமிழர்கள் தரப்பாக இருந்ததில்லை, தமிழர்களுக்காக எந்தவொரு சேவையையும் செய்யவில்லை. பதவிகள் கிடைக்கின்ற போது அந்த பதவிகளை துஷ்பிரயோகம் செய்து தான் அவர்களுடைய தொழிலாக இருந்து வந்துள்ளது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/311851
-
பிரமிட் திட்டத்தின் ஊடாக 180 கோடி ரூபா பணமோசடி செய்தவர் விமான நிலையத்தில் கைது
மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வந்த 52 வயதுடைய இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 180 கோடி ரூபாய் பணமோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில், இன்றைய தினம் மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வருகை தந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சந்தேகநபரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198150
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் போராட்டத்தை கைவிடமாட்டேன்; சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும்; இதன் அர்த்தம் நாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்பதல்ல - கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் சுதந்திரத்திற்கான, வாய்ப்பிற்கான, அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான, எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். வோசிங்டன் டிசியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றல்ல, நாங்கள் போராடியது இந்த முடிவிற்காக இல்லை, நாங்கள் இதற்காக வாக்களிக்கவில்லை, ஆனால் நான் சொல்வதை செவிமடுங்கள். நாம் கைவிடாத வரை, நாங்கள் தொடர்ந்து போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதியின் வெளிச்சம் என்றும் பிரகாசமாக ஒளிரும். நாங்கள் போட்டியிட்டது குறித்தும் போட்டியிட்ட விதம் குறித்தும், நான் மிகவும் பெருமிதமடைகின்றேன். இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்த 107 நாட்களாக, நாங்கள் சமூகங்களை உருவாக்குவது, கூட்டணிகளை உருவாக்குவது குறித்த நோக்கத்துடன் செயற்பட்டோம். அமெரிக்காவினது அன்பினால் பிணைக்கப்பட்ட, அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக போராடும் உற்சாகமும் மகிழ்ச்சியையும் உடைய, வாழ்க்கையின் அனைத்து தரப்பையும், பின்னணியை சேர்ந்த மக்களையும், ஒன்றிணைக்க முயன்றோம். எங்களை பிரிப்பதை விட எங்களிற்கு இடையில் பொதுவான விடயங்கள் உள்ளன என்ற அடிப்படையில் நாங்கள் இதனை செய்தோம். தற்போது நீங்கள் பல்வேறுபட்ட உணர்ச்சி பாதிப்புகளிற்கு உள்ளாகியிருப்பது எனக்கு தெரியும், ஆனால் நாங்கள் இந்த தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் உரையாடினேன் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அதிகார மாற்றத்தின் போது அவருக்கும் அவரது குழுவினருக்கும் நாங்கள் உதவுவோம் என நான் தெரிவித்தேன். அமைதியான அதிகார மாற்றத்தில் நாங்கள் ஈடுபடுவோம். தேர்தலில் நாங்கள் தோற்றால் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதே அமெரிக்க தேர்தலின் அடிப்படை கொள்கை. அந்த கொள்கை மற்றையவற்றை போல முடியாட்சி சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகின்றது. மக்களின் நம்பிக்கையை பெற முயலும் எவரும் இதனை மதிக்கவேண்டும். அதேவேளை எங்கள் தேசத்தில் நாங்கள் ஜனாதிபதிக்கோ கட்சிக்கோ விசுவாசமானவர்கள் இல்லை, மாறாக அமெரிக்காவின் அரசமைப்பிற்கே விசுவாசமானவர்கள், எங்கள் மனசாட்சி மற்றும் கடவுளுக்கு விசுவாசமானவர்கள். நான் இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும், இந்த பிரச்சாரத்தை தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அந்த போராட்டம் -சுதந்திரத்திற்கான போராட்டம், வாய்ப்பிற்கான போராட்டம், அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான போராட்டம், எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான போராட்டம். இந்த போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். துப்பாக்கி வன்முறையிலிருந்து எங்கள் வீதிகளையும், பாடசாலைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம். ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமநீதி மற்றும் எங்கள் ஒவ்வொருவருக்கும், நாங்கள் யாராகயிருந்தாலும் எங்கிருந்து ஆரம்பித்திருந்தாலும் சில அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் உள்ளன அவை மதிக்கப்படவேண்டும், உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம். நாங்கள் இந்த போராட்டத்தை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், பொதுசதுக்கங்களிலும் முன்னெடுப்போம். மேலும் நாங்கள் இன்று வாழ்வது போன்று, ஒருவரையொருவர் அன்புடன் இரக்கத்துடன் நடத்துவதன் மூலம், அந்நியர் ஒருவரின் முகத்தை பார்த்து அயலவரின் முகத்தை பார்ப்பது போல, எங்கள் பலத்தை எப்போதும் கௌரவத்திற்காக போராடுவதற்காக மக்களிற்கு கைகொடுப்பதற்கு போராடுவது போல அமைதியான விதத்திலும் நாங்கள் போராடுவோம். எங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. ஆனால் நான் எப்போதும் தெரிவிப்பதை போல நாங்கள் கடினமாக உழைப்பதை விரும்புபவர்கள் கடின உழைப்பு என்பது சிறந்த உழைப்பு, கடின உழைப்பு என்பது மகிழ்ச்சியான உழைப்பு, எங்கள் நாட்டிற்காக போராடுவது எப்போதும் பெறுமதியான விடயம், இளம் வயதினருக்கு - கவலைப்பவதும் ஏமாற்றமடைவதும் நியாயமான விடயங்கள், ஆனால் அனைத்தும் சரியானதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் போராடினால் நாங்கள் வெற்றிபெறுவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அடிக்கடி தெரிவித்திருக்கின்றேன். ஆனால் ஒரு விடயம் உள்ளது, சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும். இதன் அர்த்தம் நாங்கள் வெற்றிபெறமாட்டோம் என்பதல்ல. மிக முக்கியமான விடயம் போராட்டத்தை ஒருபோதும் கைவிடாமலிருப்பதே. ஒருபோதும் கைவிடாதீர்கள். உலகினை மிகச்சிறந்த இடமாக மாற்றும் செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்களிடம் அதற்கான சக்தி உள்ளது. உலகிற்கு மிகச்சிறந்த நன்மையை செய்வதற்கான திறன் உங்களிடம் உள்ளது. ஆகவே எனது உரையை அவதானித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்- விரக்தியடையவேண்டாம். இது நாம் கைகளை உயரஉயர்த்தும் நேரமில்லை, இது நீங்கள் ஒரு குழுவாக கடினமாக முயற்சி செய்வதற்கான தருணம், சுதந்திரம் நீதிக்காக, நாங்கள் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப கூடிய எதிர்காலத்திற்காக, ஒழுங்கமைக்கவேண்டிய அணிதிரட்டவேண்டிய தருணம். உங்களில் பலருக்கு தெரியும் நான் ஒரு வழக்கறிஞராக எனது வாழ்க்கையை ஆரம்பித்தேன், எனது வாழ்க்கை முழுவதும் தங்கள் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் உள்ள பலரை நான் சந்தித்தேன். பெரும் தீமையை எதிர்கொண்டவர்களை பெரும் துயரத்தினை அனுபவித்தவர்களை நான் சந்தித்தேன். ஆனால் அவற்றின் மத்தியிலும் அவர்களிற்குள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான நீதிக்காக போராடுவதற்கான, மற்றவர்களிற்காக போராடுவதற்கான தைரியமும், உறுதியும் காணப்படுவதை பார்த்துள்ளேன். எனவே அவர்களின் துணிச்சல் எங்களிற்கான உந்துசக்தியாக விளங்கட்டும், அவர்களின் உறுதி நமது பொறுப்பாக விளங்கட்டும். நான் எனது உரையை இதனுடன் நிறைவு செய்கின்றேன் - ஒரு பழமொழி உள்ளது, வரலாற்றாசிரியர் ஒருமுறை இதனை வரலாற்றின் சட்டம் என்றார், காலங்காலமாக அனைத்து சமூகத்திலும் இதுவே உண்மை. அந்த பழமொழி இதுதான் - இருட்டில்தான் நட்சத்திரங்களை பார்க்க முடியும். பலர் நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைகின்றோம் என எண்ணுவதை என்னால் உணரமுடியும். ஆனால் எங்கள் அனைவரினதும் நன்மைக்காகவும் இது இடம்பெறாது என நாங்கள் கருதுவோம். ஆனால் இன்னுமொரு விடயம் - அமெரிக்கா - நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைந்தால் நாங்கள் இரவை பில்லியன் கணக்காண திறமைவாய்ந்த நட்சத்திரங்களால் ஒளிரவிடுவோம். வெளிச்சம் , நம்பிக்கையின் வெளிச்சம், உண்மையின் சேவையின் வெளிச்சம், அது பின்னடைவுகளின் போதும், அமெரிக்காவின் அசாதரண வாக்குறுதியை நோக்கி வழிகாட்டட்டும். https://www.virakesari.lk/article/198099
-
உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான அவசர உதவிகளை வழங்க தயாராகும் பைடன்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின்(Donald trump) பதவியேற்பதற்கு முன்னதாக, உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை பாதுகாப்பு உதவியாக வழங்க வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் அரசாங்கத்தை வலுப்படுத்தும் நம்பிக்கையுடன், ஜோ பைடன்(Joe Biden) ஜனவரி மாதம் பதவி விலகுவதற்கு முன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளை மாளிகை தொடர்பிலும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் கீழ் ஜனாதிபதி உக்ரைன் வோலோடோமிர் ஜெலென்ஸ்கியின் அரசாங்கத்திற்கான ஆதரவின் எதிர்காலம் தொடர்பிலும் கடந்த காலங்களில் ட்ரம்ப் விமர்சித்திருந்தார். பைடனின் உதவி இதில் உக்ரைனுக்கான பைடனின் உதவியை ட்ரம்ப் மேற்கோள்காட்டியிருந்தார். மேலும், கடந்த ஆண்டு இடம்பெற்ற சந்திப்பொன்றில் உக்ரைன் - ரஷ்ய மோதல் அமைதிபெற ஜெலன்ஸ்கி விட்டுக்கொடுப்பை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். உக்ரைன் அரசாகங்ம் எனினும் அதை உக்ரைன் அரசாங்கம் மறுத்திருந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகளை புதிய அமெரிக்க ஜனாதிபதி கட்டுபடுத்தினால் உக்ரைன் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://tamilwin.com/article/us-ready-to-provide-aid-to-ukraine-1730957383#google_vignette
-
5 வயது பேரனின் கேள்வி
வாழைச்சேனை காகித ஆலையா? எனது பெரியப்பாவும் இதே போன்ற காரணங்கள் ஓய்வு பெறும் வயது வர முதலே வேலையை விட்டிட்டார். மண்வாசம் புலம்பெயர்ந்து அங்கு பிறந்தாலும் ஈர்க்கிறதோ!
-
அநுரா குமார திசாநாயக்க; இலங்கை வானில் 'இடதுசாரி' நட்சத்திரம்
2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியின் வாசனையை அநுர எவ்வாறு முகர்ந்து பிடித்தார்? பாகம் 5 டி.பி.எஸ்.ஜெயராஜ் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) வுக்கும் அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலும் 2020 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தலும் பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. ஒரு தந்திரோபாய நகர்வாகவே ஜே.வி.பி. அந்த இரு தேர்தல்களிலும் திசைகாட்டி புதிய சின்னத்தின் கீழ் புதியதொரு அரசியல் முன்னணியின் அங்கமாக போட்டியிட்டது. அந்த கட்சி தேசிய மக்கள் சக்தி என்ற பரந்த ஒரு முன்னணியை அமைத்துக்கொண்டது. பெயரளவில் சமத்துவமான அமைப்புக்கள் மத்தியில் முதலாவதாக தோன்றினாலும், நடைமுறையில் தேசிய மக்கள் சக்தியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆதிக்கம் கொண்ட கட்சியாக அதுவே விளங்கியது. ஒரேயொரு எளிமையான காரணத்துக்காகவே ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தி என்ற ஆடையை அணிந்துகொண்டது. தேர்தல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற அது விரும்பியது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் இலங்கை அரசைத் தூக்கியெறிய ஜே.வி.பி. இரு தடவைகள் முயற்சித்தது. இரு முயற்சிகளும் தோல்வியடைந்தன. நூற்றுக் கணக்கான அர்ப்பணிப்புச் சிந்தையுடைய செயற்பாட்டாளர்களை கொண்டிருந்த ஜே.வி.பி.யின் பொதுக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்துகொண்டாலும் கூட, குறிப்பிட்ட ஒரு எல்லைக்கு அப்பால் தங்களால் வாக்குகளைப் பெறமுடியாமல் இருக்கிறது என்பதை செஞ்சட்டைத் தோழர்கள் கண்டுகொண்டார்கள். பாராளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாகவும் இலங்கை அரசியலில் நிலையான மூன்றாவது சக்தியாகவும் இருக்கவேண்டியதே ஜே.வி.பி.யின் விதியாகிப் போய்விட்டது போன்று தோன்றியது. அதனால் ஜே.வி.பி. அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி என்ற புதிய தோற்றத்தைக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. உள்ளடக்கம் ஒன்று தான் ஆனால் வடிவத்தில் அது வேறுபட்டதாக தோன்றும். தேசிய மக்கள் சக்தி என்ற தோற்றமாற்றம் இரு காரணங்களுக்காக ஜே.வி.பி.க்கு தேவைப்பட்டது. முதலாவதாக, கடந்த காலத்தில் ஜே.வி.பி.யின் அட்டூழியங்களை அனுபவித்த பழைய தலைமுறையினர் அவற்றை மறந்து புதிய தேசிய மக்கள் சக்தியாக மறுசீரமைப்புக்குள்ளாகிவிட்டதாக அவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் ஜே.வி.பி. விரும்பியது. இரண்டாவதாக, வன்முறைக் கடந்த காலத்தை மறந்து முற்போக்கான தேசிய மக்கள் சக்தியாக மாற்றம் பெற்றுவிட்டதை காட்டுவதன் மூலமாக இளந் தலைமுறையினரை கவருவதற்கு ஜே.வி.பி. விரும்பியது. புதிய மொந்தையில் பழைய கள்ளு ஜே.வி.பி. நம்பிக்கையுடன் செயற்பட்டபோதிலும், 2019 ஆம் ஆண்டிலும் 2020 ஆம் ஆண்டிலும் தேர்த்களில் மிகவும் குறைந்தளவு வாக்குகளையே தேசிய மக்கள் சக்தியினால் பெறக்கூடியதாக இருந்தது. பெயரளவில் புதிய தேசிய மக்கள் சக்தியாக தோன்றினாலும், அது பழைய ஜே.வி.பி.யே, அதாவது புதிய மொந்தையில் பழைய கள்ளு என்றே அதை மக்கள் நோக்கினார்கள் போன்று தோன்றியது. மேலும், புதிய அவதாரமான தேசிய மக்கள் சக்தியுடன் ஒப்பிடும்போது ஜே.வி.பி.யாக கூடுதல் வாக்குகளை பெற்றிருந்ததை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின. உதாரணமாக, ஜே.வி.பி.யின் தாபகத்தலைவர் றோஹண விஜேவீர 1982 ஜனாதிபதி தேர்தலில் 273, 428 ( 4.18 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றார். அதேபோன்று நந்தன குணதிலக 1999 ஜனாதிபதி தேர்தலில் 344, 173 ( 4.08 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். இருவரும் அந்த தேர்தல்களில் மூன்றாவதாக வந்தனர். அநுர குமார திசாநாயக்க 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது 418, 553 (3.16 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றார். விஜேவீரவையும் குணதிலகவையும் விட அநுர கூடுதலான வாக்குகளைப் பெற்றபோதிலும், சதவீதம் குறைவானதாகவே இருந்தது. பல வருடங்களாக இடம்பெற்ற சனத்தொகை அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது மற்றைய இருவரையும் விட அநுரா கூடுதலான வாக்குகளைப் பெற்றதை விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் சதவீதம் தேசிய மக்கள் சக்தி என்ற வேடத்தில் ஜே.வீ.பி.க்கான மக்கள் ஆதரவில் ஒரு குறைவு ஏற்பட்டிருந்ததையே வெளிக்காட்டியது. 2020 பாராளுமன்ற தேர்தலில் அது மேலும் மோசமானதாக இருந்தது. தேசிய மக்கள் சக்தியினால் திசைகாட்டி சின்னத்தில் வெறுமனே 445,958 ( 3.84 சதவீதம் ) வாக்குகளை மாத்திரமே பெறக்கூடியதாக இருந்தது. இது 2015 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. பெற்ற 543,944 (4.87 சதவீதம்) வாக்குகளையும் விட குறைவானதாக இருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அரைலாசியாகக் குறைந்தது. 2015 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யின் நான்கு உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, தேசியப்பட்டியல் மூலம் இரு ஆசனங்கள் கிடைத்தன. மொத்தம் ஆறு உறுப்பினர்கள் பாராளூமன்றம் வந்தார்கள். 2020 ஆம் ஆண்டில் இருவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனம் கிடைத்தது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அநுர 49,814 விருப்பு வாக்குகளை பெற்றார். 2015 ஆம் ஆண்டில் அநுரவுக்கு 65,066 விருப்பு வாக்குகள் கிடைத்த அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட விஜித ஹேரத் 37, 008 விருப்பு வாக்குகளைப் பெற்றார். தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார். அநுரவுக்கு எதிரான உணர்வு தேசிய மக்கள் சக்தியாக தேர்தல்களில் போட்டியிட்ட ஜே.வி.பி.யின் பரிசேதனை எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. என்னதான் தேர்தல் தந்திரோபாயங்களை வகுத்தாலும், ஜே.வி.பி.யினால் அதன் வாக்குப்பங்கை அதிகரிக்க முடியவில்லை என்று தோன்றியது. தேசிய மக்கள் சக்தியாக போட்டியிட்டதோ இல்லையோ ஜே.வி.பி.யினால் மூன்றாவது சக்தி என்ற அந்தஸ்தில் இருந்து மேம்பட முடியவில்லை என்று தோன்றியது. இந்த நிலைவரங்களின் விளைவாக ஜே.வி.பி. அணிகளுக்குள் அநுராவுக்கு எதிராக சிறிய ஒரு எதிர்ப்புணர்வு தோன்ற ஆரம்பித்தது. தேசிய மக்கள் சக்தி தந்திரோபாயம் ஒரு தோல்வி என்று பொதுச் செயலாளர் தலைமையிலான செல்வாக்குமிக்க ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் குழுவொன்று உணர்ந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. தேசிய மக்கள் சக்கதியுடன் பிணைந்திருக்காமல் ஜே வி.பி. அதன் முன்னைய அந்தஸ்துக்கு திரும்ப வேண்டும் அவர்கள் விரும்பினார்கள். தேசிய மக்கள் சக்தியை அமைக்கும் யோசனையை பெரும் எண்ணிக்கையானவர்கள் ஆதரித்த போதிலும், அந்த யோசனையின் உந்துசக்தியாக இருந்தவர் அநுரவே. அது ஜே.வி.பி.யின் ஒரு கூட்டுத் தீர்மானமாக இருந்தாலும், அதை செயல் முறையில் வழிநடத்தி சாத்தியமாக்கியதற்கு அநுரவே பெரிதும் பொறுப்பாக இருந்தார். அதனால், தேசிய மக்கள் சக்தி மீதான விமர்சனங்கள் மறைமுகமாக அநுராவை நோக்கியவையாகவே இருந்தன. எதிர்ப்புக்கு மத்தியில் அநுரா பின்வாங்கவில்லை. தலைவர் என்ற வகையில் அதற்காக அவர் மெச்சப்பட வேண்டியவர். உட்கட்சி நெருக்குதலின் கீழ் தளர்ந்துபோவதற்கு பதிலாக அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். தேசிய மக்கள் சக்தி அமைக்கப்பட்டு ஒருவருடமே கடந்திருக்கும் நிலையில், அந்த தந்திரோபாய மாற்றம் வெற்றியா தோல்வியா என்று தீர்ப்புக் கூறுவதற்கு மேலும் சில காலம் தேவை என்று அவர் சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்தியாக மேலும் கொஞ்சக்காலம் தொடர்ந்து பயணிப்போம் என்று அவர் வலியுறுத்தினார். தேசிய மக்கள் சக்தி கோட்பாட்டை எதிர்காலத்தில் பெரிய அளவில் ஆதரித்து ஊக்கமளிக்க வேண்டியிருக்கும் என்றும் என்றும் அநுர கூறினார். அவரின் நிலைப்பாட்டுக்கே வெற்றி கிடைத்தது. தேசிய மக்கள் சக்தியாக தொடருவதற்கு ஜே.வி.பி. இறுதியில் தீர்மானித்தது. ஒரு எதிர்க்கட்சி என்ற கருத்துக் கோணத்தில் இருந்து பார்த்தபோது அன்றைய நிலைவரம் மனச்சோர்வைத் தருவதாகவே இருந்தது. மிகப்பெரிய பெரும்பான்மையுடன் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். பாராளுமன்றத்தில் 146 ஆசனங்களை கைப்பற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சி மாறுவதற்கு தூண்டியதன் மூலமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டது. பாராளுமன்றத்தில் அரசியலமைப்புக்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக்கொண்ட ராஜபக்சாக்கள் 19 வது அரசியலமைப்புத் திருத்தத்தில் இருந்த பல நேர்மறையான அம்சங்களைை நீக்கினார்கள். ராஜபக்சாக்களும் அவர்களை அடிவருடிகளும் அட்டகாசமாக ஆட்சி செய்தார்கள். துடிப்பில்லாத எதிர்க்கட்சி எதிர்க்கட்சி துடிப்பில்லாததாக இருந்ததால் ராஜபக்சாக்களுக்கு அது வசதியாகப் பே்ய்விட்டது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 2020 பாராளுமன்ற தேர்தலில் துடைத்தெறியப்பட்டது. அதில் இருந்து பிரிந்து வந்தவர்கள் சஜித் பிரேமதாச தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியை ( சமகி ஜன பலவேகய) அமைத்தார்கள். அதற்கு பாராளுமன்றத்தில் 54 ஆசனங்கள் கிடைத்தன. பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக வந்தார். தமிழ், முஸ்லிம் கட்சிகள் அவற்றின் சமூகங்களை பாதித்த பிரச்சினைககளில் பிரதானமாக கவனத்தை செலுத்திய நிலையில் தேசிய கவனக்குவிப்பில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டது. சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். தனது கட்சியின் ஏனைய உறூப்பினர்களுக்கு போதுமான நேரத்தை ஒதுக்காமல் அனேகமாக சகல விடயங்களிலும் அவரே பேசினார். அவரது உரைகளில் ஆழமோ தெளிவோ இருந்ததில்லை. தந்தையாரின் பேச்சுக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. ரணசிங்க ஆற்றல்மிக்க ஒரு பேச்சாளர். தனது சிந்தனைகளை சபையோருக்கு உறுதியான முறையில் தெளிவாகச் சொல்வார். மறுபுறத்தில், அளவு கடந்தை சொல் அலங்காரத்துடனான சஜித் பிரேமதாசவின் பேச்சு கேட்போரை கவருவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், ஜே வி.பி./ தேசிய மககள் சக்தியின் அநுர, ஹரினி, விஜித மூவரும் பாராளுமன்றத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக அநுர குமார திசாநாயக்க ஒரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சிறப்பாகச் செயற்பட்டு அரசாங்கத்தின் தவறுகளையும் குறைபாடுகளையும் அம்பலப்படுத்தினார். நடப்பில் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக இருந்திருக்கலாம், ஆனால் மெய்யான எதிர்க்கட்சி தலைவராக அநுராவே காணப்பட்டார். இதை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். முன்னணி எதிர்க்கட்சி சக்தியாக அநுர வருவதற்கு சஜித் இடமளித்துவிட்டார் என்று அவர் கூறினார். முன்மாதிரியாக பசில் ராஜபக்ச தேசிய மக்கள் சக்தி பசில் ராஜபக்சவின் வழமுறையை பின்பற்றத் தொடங்கியது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தொடங்கியபோது பசில் பாராளுமன்றத்தின் மீதோ அல்லது மாகாணசபைகள் மீதோ கவனத்தைச் செலுத்தவில்லை. மாறாக, அவர் உள்ளூராட்சி சபைகளில் சமூகத்தின் அடிமட்டத்தில் கிளைகளை அமைத்தார். வேட்பாளர்களாக நியமிக்கப்படக்கூடியவர்களை தெரிவுசெய்து தங்களின் " வாக்காளர் தொகுதிகளை " வளர்த்துக் கொள்வதற்கு அவர்களுக்கு வழிகாட்டினார். தேர்தல் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றம் வட்டாரங்களில் இருந்து நேரடியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுடன் மேலதிகமாக விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு வழிவகுத்தது. தனது வேட்பாளர்களைக் கொண்டு விசேடமாக வாக்காளர்களை இலக்குவைக்க பசிலினால் இயலுமாக இருந்தது. இந்த அணுகுமுறையின் விளைவாக, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொதுஜன பெரமுனவினால் 2018 பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல்களில் 5, 006, 837 (40.47 சதவீதம்) வாக்குகளைப் பெறக்கூடியதாக இருந்தது. அதனால் வட்டார அடிப்படையில் 3,265 உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கும் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் இன்னொரு 181 உறுப்பினர்களுக்கும் பொதுஜன பெரமுன உரித்துடையதாகியது. அந்த கட்சி அதன் தேர்தல் ஞானஸ்நானத்தில் நாடுபூராவும் 126 உள்ளூராட்சி சபைகளின் கடடுப்பாட்டை பெற்றது. மறுபுறத்தில் ஜே.வி.பி. அந்த உள்ளூராட்சி தேய்தலில் 710, 932 (5.75 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றது. வட்டார அடிப்படையில் ஜே.வி.பி.யின் ஒரேயொரு உறுப்பினர் மாத்திரமே தெரிவாகக் கூடியதாக இருந்தது. விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் அந்த கட்சியின் 433 உறூப்பினர்கள் தெரிவாகினர். நாட்டின் எந்தப் பாகத்திலுமே தனியொரு உள்ளூராட்சி சபையின் கட்டுப்பாட்டைக் கூட ஜே.வி.பி.யினால் பெறமுடியவில்லை. 2018 உள்ளூராட்சி தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வெற்றி அநுராவுக்கு ஒரு உத்வேகமாக அமைந்தது. அடுத்த உள்ளூராட்சி தேர்தல்கள் 2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டியவையாக இருந்தன. தேசிய மக்கள் சக்தி பொதுஜன பெரமுனவின் அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கு தீர்மானித்தது. பிரதேச மட்டத்தில் வட்டாரங்களை இலக்கு வைப்பதற்கு கட்சியின் கிளைகள் மீளக் கடடமைக்கப்பட்டன. வீடுவீடாக கவனம் செலுத்தப்பட்டது. ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர்கள் திட்டமிட்ட முறையில் ஒவ்வொரு வீட்டுக்கு விஜயம் செய்து ஒவ்வொரு குடும்பத்தையும் அணுகினார்கள். அது ஒரு குறுகிய நோக்க அணுகுமுறை. ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மோட்டார் சைக்கிள்களிலும் ஸ்கூட்டர்களிலும் வீடுகளுக்கு சென்று வந்தார்கள். இது மறுபுறத்தில் இந்த இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு வெளிநாடொன்று நிதயுதவி செய்கிறது என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது. உள்ளூராட்சி தேர்தல்கள் ஒரு வருடம் தள்ளி 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன. முக்கியமான தினம் நெருங்கும்போது ஜே.வி.பி. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு மாகாணங்களில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையா வாழும் வடக்கிலும் கிழக்கிலும் குறிப்பிட்ட சில உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கு தயாராகவும் விருப்பம் கொண்டும் இருந்தது. அந்த நேரமளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக ரணில் வி்க்கிரமசிங்க பதவிக்கு வந்தார். புதிய ஜனாதிபதி உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படுவதை தடு்க்க சகல விதமான தந்திரங்களையும் கையாண்டார். உள்ளூராட்சி தேர்தல்ளை நடத்துவதற்கு உத்தரவிடக்கோரி தேசிய மக்கள் சக்தி நீதிமன்றத்தை நாடியது. பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறூப்பினர் சுனில் ஹந்துனெத்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க ஆகியோர் 2023 மார்ச் 14 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்தனர். சுதந்திரமானதும் நீதியானதுமான உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டது. இது அந்த நேரத்திலேயே தேர்தல் வெற்றியின் நறுமணத்தை தேசிய மக்கள் சக்தி முகரத் தொடங்கிவிட்டது எனபதைக் காட்டியது. ஆனால், திட்டமிட்டபடி உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தப்படவில்லை. அறகலய அனுபவம் அதேவேளை, நாடு முன்னென்றும் இல்லாத வகையில் அறகலய ( போராட்டம் ) அனுபவமொனறைச் சந்தித்தது. பொதுவில் அரசாங்கத்துக்கு எதிராகவும் குறிப்பாக ராஜபக்சாக்களுக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட சீற்றத்தை ஜே.வி.பி.யும் தனக்கு வாய்ப்பாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டியது. சஜித்தையும் விட அநுர காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு கூடுதலான அளவுக்கு ஏற்புடையவராக இருந்தார். அநுர காலிமுகத்திடலில் வரவேற்கப்பட்ட அதேவேளை சஜித் விரட்டியடிக்கப்பட்டார். ஆனால் அறகலயவை ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தலைமைத்துவ பாத்திரத்தை வகித்தது. போரட்டத்தை பொறுத்தரை முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி ஜே.வி.பி.யை மேவிவிட்டது. இறுதியில் கோட்டாபய பதவி விலக ரணில் ஜனாதிபதியாக வந்தார். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தனது கட்சிக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே இருந்தபோதிலும், அநுராவும் போட்டியிட்டார். அந்த போட்டியில் இருந்து பின்வாங்கிய சஜித், டலஸ் அழகப்பெருமவை ஆதரித்தார். அதன் மூலமாக மீண்டும சஜித் ஒரு பலவீனமான தலைவர் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. ரணில் விக்கிரமசிங்க 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவானார். அநுராவுக்கு மூன்று வாக்குகள் மாத்திரமே கிடைத்த போதிலும், அரசியல் ரீதியில் அவர் சஜித்தை விடவும் கூடுதல் புள்ளிகளைத் தட்டிக்கொண்டார். அதன் மூலமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் போது தான் ஒரு முக்கியமான வேட்பாளராக இருக்கப்போதை முன்னிலைப்படுத்திக் காட்டிக்கொண்டார். அதேவேளை சஜித் உறுதிப்பாடும் அரசியல் துணிச்சலும் இல்லாததன் விளைவாக ஒரு பலவீனமான - தடுமாறுகிற அரசியல்வாதியாக நோக்கப்பட்டார். 2024 ஜனாதிபதி தேர்தல் ஒரு மும்முனைப் போட்டியாக இருக்கப்போகிறது என்பது அப்போதே தெரிந்தது. ஜனாதிபதியாக ரணில் இலங்கை முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துக் கொண்டிருந்தபோது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அந்நிய செலாவணி அருகிப்போயிருந்த நிலையில் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. எங்கு பார்த்தாலும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துநின்றார்கள். ஆனால் விநியோகங்கள் கிடைக்கவில்லை அல்லது போதுமானவையாக இருக்கவில்லை. மின்சக்தி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகள் நாட்டை உண்மையில் முடங்கச் செய்திருந்தன. ரணிலிடம் என்னதான் குறைபாடுகள் இருந்தாலும், அவர் நெருக்கடியான ஒரு நேரத்தில் ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் தனது துணிச்சலையும் பற்றுறுதியையும் வெளிக்காட்டினார். மேலும், உருப்படியான முறையில் ஜனாதிபதியாக செயற்படுவதற்கு ராஜபக்சாக்களின் நல்லெண்ணத்திலும் பொதுஜன பெரமுனவின் ஆதரவிலும் தங்கியிருக்க வேண்டியிருந்ததால் விக்கிரமசிங்கவுக்கு இடையூறுகள் இருந்தன. அவரது ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் ஒரேயொரு உறுப்பினர் மாத்திரமே இருந்த காரணத்தினால் ராஜபக்சக்களின் தலைமையிலான " தாமரை மொட்டு " கட்சியின் உதவியுடன் கடமைகளை நிறைவேற்றுவதை தவிர விக்கிரமசிங்கவுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. ஆனால் ரணில் அதை இலங்கையினதும் அதன் மக்களினதும் நீண்டகால நலன்களுக்காக பொறுத்துக்கொள்ள வேண்டிய ஒரு வசதியீனமாக கருதிச் செயற்பட்டார். பொருளாதாரப் பிரச்சினையை ஒரு தேசிய நெருக்கடியாக விக்கிரமசிங்க சரியான முறையில் அடையாளம் கண்டார். நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு ஐக்கியப்பட்ட தேசிய முயற்சி ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு பாராளும்னறத்தில் அங்கம் வகித்த அரசியல் கட்சிகளை அவர் திரும்பத் திரும்ப அழைத்தார். சகல கட்சிகளையும் உள்ளடக்கிய ஒத்துழைப்புச் செயற்பாடு அவசியம் என்பதை அவர் உணர்ந்தார். ஆனால், அவர் இடையறாது விடுத்த அழைப்புக்கள் தொடர்ச்சியாக அலட்சியம் செய்ப்பட்டன. முன்னேற்றத்துக்கான சந்தர்ப்பம் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பொருளாதார நெருக்கடியில் தாங்கள் அரசியல் ரீதியில் முன்னேறுவதற்கான வாய்ப்பைக் கண்டார்கள். விக்கிரமசிங்கவுடன் ஒத்துழைப்பதற்கு பதிலாக அவர்கள் விலகி இருந்துகொண்டு ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் விமர்சிப்பதிலேயே தீவிர நாட்டம் காட்டினர். பொருளாதார நெருக்கடியின் பாரதூரத்தன்மையை அவர்கள் குறைத்து மதிப்பிடவும் செய்தார்கள். நெருக்கடியின் தன்மையை ஜனாதிபதி மிகைப்படுத்துகின்றார் என்று கூறி அநுர ஏளனமும் செய்தார். அநுரவைப் பொறுத்தவரை அது ஒரு பெரிய பிரச்சினையே அல்ல, ரணில் தான் அதை பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்று கருதினார். விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதையும் தேசிய மக்கள் சக்தி கண்டனம் செய்தது. இலங்கையில் இடதுசாரிகள் " பிரெட்டன் வூட்ஸ் இரட்டை " என்று அழைக்கப்டுகின்ற சர்வதேச நாணய திதியம் மற்றும் உலக வங்கி மீது வெறுப்புணர்வைக் கொண்ட வரலாற்றை உடையவை. இப்போது அந்த வெறுப்புக்கு ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி புத்தூக்கம் கொடுத்தது. சர்வதேச நாணய நிதியத்தின் விளைவாக மக்கள் குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் இடர்பாடுகளை எதிர்நோக்கப் போகிறார்கள் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு பதிலாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைச் சமூகத்திடம் இருந்து பெறக்கூடிய உதவிகளின் ஊடாக பொருளாதார பிரச்சினைக்கு தங்களால் தீர்வு காணமுடியும் என்று கூட ஜே.வி.பி.யின் பொருளாதார ' மந்திரவாதி ' சுனில் ஹந்துனெத்தி கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்பது விரைவாகவே தெளிவாகத் தெரிந்தது. ஒரு ஆரோக்கியமான விமர்சன ரீதியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு பதிலாக எடுத்ததற்கெல்லாம் பிழை கண்டுபிடிக்கும் அணுகுமுறையை அவர்கள் கடைப்பிடித்தார்கள். அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்துக்கு மக்களின் ஒவ்வொரு பொருளாதார குறைபாடும் உச்சத்துக்கு பயன்படுத்தப்பட்டது. பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதை விக்கிரமசிங்கவினால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தபோதிலும், அவற்றை பெரும்பாலான மககளினால் வாங்க முடியாமல் இருந்தமை கூர்மையானஒரு பிரச்சினையாக விளங்கியது. வாழ்க்கைச் செலவு உயர்ந்துகொண்டு போனது, ஆனால் சம்பளங்கள் அதிகரிக்கவில்லை. தனவந்தர்கள் மேலும் தனவந்தர்களாகிக் கொண்டுபோக வறியவர்கள் மேலும் வறியவர்களானார்கள். நடுத்தர வர்க்கம் தாழ்வுற்றது. அறகலய பேராட்டம் ராஜபக்சக்களின் ஆட்சி தூக்கியெறியப்படுவதை துரிதப்படுத்தியதற்கு மேலதிகமாக அறகலய போராட்டம் பல விடயங்களை சாதித்தது. பொதுவில் மக்கள் சக்தியினதும் குறிப்பாக இளைஞர் சக்தியினதும் வெற்றியை அது நிரூபித்தது. குடும்ப அரசியல் அதிகாரம், நெரூங்கியவர்களுக்கு சலுகை செய்யும் போக்கு மற்றும் ஊழலுக்கு எதிரான உணர்வை அது அதிகரித்தது. முறைமையில் அல்லது தற்போதுள்ள ஒழுங்கில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்ற வேட்கையுடைய ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை அறகலய வளர்த்து வளமாக்கியது. மாறிவிட்ட சமநிலையை கணக்கில் எடுத்த தேசிய மக்கள் சக்தி ஒரு ஆய்வுச் செயன்முறையை ஆரம்பித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் அறிய முடிந்தது. இதில் அநுர குமார திசாநாயக்க முக்கியமான பாத்திரத்தை வகித்தார். ஜனாதிபதி பதவியை இலக்குவைத்து பெரியளவில் தயாராவதன் மூலமாக தங்களது அரசியல் மேம்பாட்டுக்கு மிகவும் சாதகமான நிலைவரம் ஒன்று இருப்பதை ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி உணர்ந்தது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனியாக போட்டியிட வேண்டும் என்பதில் மீண்டும் அநுரா உறுதியாக இருந்தார். ஜனாதிபதி வேட்பாளராக அவரே களமிறங்குவார் என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அதற்கு பிறகு தேசிய மக்கள் சக்தி 2024 ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகத் தொடங்கியது. ஜனாதிபதி விக்கிரமசிங்க உரிய காலத்தில் தேர்தலை நடத்துவாரா என்ற ஒரு சந்தேகம் இருந்தது. அவ்வாறு அவர் நடத்த முன்வராத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலை அல்லது பாராளுமன்ற தேர்தலை நடத்தக் கோரி நாடுதழுவிய பாரிய அரசியல் போராட்த்தை முன்னெடுப்பதற்கும் தேசிய மக்கள் சக்தி தயாராக இருந்தது. ஆனால், ரணில் தேர்தலை நடத்துவதற்கே எப்போதும் உத்தேசித்திருந்ததால் எந்தவொரு போராட்டத்துக்கும் தேவை இருக்கவில்லை. அவர் அவ்வாறே செய்தார். வெற்றியின் கதை ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக பிரசாரங்களை தேசிய மக்கள் சக்தி விடாமுயற்சியுடன் முன்னெடுத்தது. ஜனாதிபதி தேர்தல் போட்டியில் வெற்றியின் நறுமணத்தை முகரத்தொடங்கிய அநுர இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தன்னை காட்சிப்படுத்தினார். இந்த ' கனவு ' 2024 செப்டெம்பரில் நனவாகியது. ஜனாதிபதி தேர்தலில் அநுராவின் வெற்றியின் மருட்சியூட்டும் கதையை அடுத்தவாரம் விரிவாக எழுதுவேன். அதுவே இந்த கட்டுரைத் தொடரின் இறுதிப் பாகமாகவும் நிச்சயமாக அமையும். https://www.virakesari.lk/article/198000
-
ரணில் உணவகமொன்றை ஆரம்பிக்கப்போகிறார் என நினைத்தேன் - தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அனுர
முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தலில் தோற்ற பின்னர் பெருமளவு சமையல்காரர்கள் தனக்கு தேவை என வேண்டுகோள் விடுத்தவேளை அவர் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றாரோ என நினைத்தேன் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் சொகுசு வீடுகள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என்பன அதிகளவில் காணப்படுகின்றன. நாம் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அதனை தான் தேசிய மக்கள் சக்தி செய்யவுள்ளது. அரசியல் என்பது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு கீழ்படிய வேண்டும். அதற்கு மாறாக சட்டத்தை மீறி செயற்பட கூடாது. அப்படி ஒரு நாட்டை தான் தேசிய மக்கள் சக்தி உருவாக்கவுள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198120
-
விமான நிலையத்தின் நாணய மாற்று கருமப்பீட ஏலம் : ஐந்து நிறுவனங்கள் தெரிவு
கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) மூன்று வருட காலத்திற்கு நாணய மாற்று கருமப்பீடங்களை இயக்குவதற்கான ஏலத்தில் ஐந்து நிறுவனங்கள் வென்றுள்ளன. அவற்றின் மொத்த ஏல மதிப்பு 2.3 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமாகும். இதன்படி, இலங்கை வங்கி 798.028 மில்லியன் ரூபாய்களுடனும், சம்பத் வங்கி 633.662 மில்லியன்களுடனும், கொமர்சல் வங்கி 381.364 மில்லியன்களுடனும், தோமஸ் குக் லங்கா (பிரைவேட்) லிமிடெட் 299.064 மில்லியன்களுடனும், ஹட்டன் நெசனல் வங்கி 225.689 மில்லியன் ரூபாய்களுடனும் ஏலத்தில் வென்று, நாணய மாற்று கருமப்பீடங்களை தக்கவைத்துள்ளன. தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த பிரேரணைக்கு அமைவாக நேற்று அமைச்சரவை இந்த ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் நிலையான கொள்முதல் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏல ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன. https://tamilwin.com/article/five-entities-win-bia-currency-exchange-counter-1730964676#google_vignette
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் தோல்விக்கான 5 முக்கிய காரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பிடம் தோற்கும் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை தோற்கடித்து, அமெரிக்க அதிபராக மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைகிறார் டொனால்ட் டிரம்ப். டிரம்புக்கும் ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி, பலர் எதிர்ப்பார்த்தது போல மிக நெருக்கமானதாக இல்லை. 2020-ஆம் ஆண்டு போல் அல்லாமல், ஆரம்பம் முதலே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார். வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் பெரும்பாலான அமெரிக்கர்கள் டிரம்புக்கு தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் கடந்த ஜுலை மாதம் விலகிய பிறகு, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் கமலா ஹாரிஸ். 2016-ஆம் ஆண்டு டிரம்ப் அதிபரான போது ஹிலாரி கிளிண்டன் அவரிடம் தோல்வியை தழுவினார். அதன் பிறகு டிரம்புக்கு எதிராக போட்டியிட்டு தோற்ற பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆவார், அவர் தோற்றதற்கு முக்கியமான ஐந்து காரணங்கள் என்னென்ன? பொருளாதாரம் வேலையின்மை குறைவாகவும், பங்குச் சந்தை வலுவாகவும் இருந்த போதிலும் கூட அமெரிக்கர்கள் பலர் பணவீக்கத்தின் விளைவுகளை சந்தித்து வருவதாக கூறுகின்றனர். நாட்டின் பொருளாதாரம் அவர்களுக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது. 1970-களில் இருந்ததை விட பணவீக்கம் அதிகரித்தது. இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்ப டிரம்புக்கு ஒரு வாய்ப்பாக இது அமைந்தது. “நீங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது செழிப்பாக இருக்கிறீர்களா?” என்ற கேள்வியை அவர் மக்களிடம் முன் வைத்தார். 2024-ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு பகுதிகளில், ஆட்சியில் இருக்கும் கட்சியை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நிலவும் பணவீக்கம் இதற்கு ஒரு காரணமாகும். அமெரிக்க வாக்காளர்களும் மாற்றத்துக்காக காத்திருந்துள்ளனர். நான்கில் ஒரு அமெரிக்கர் மட்டுமே நாட்டின் போக்கு குறித்து திருப்தியாக இருக்கின்றனர். மூன்றில் இரண்டு பேர் நாட்டின் பொருளாதாரம் குறித்து பெரிய நம்பிக்கைக் கொள்ளவில்லை. “பண வீக்க உயர்வுக்கு பைடனின், பெரிய செலவுகளை உள்ளடக்கிய திட்டங்களும் காரணமாகும். இது மக்களுக்கு கவலை அளிக்கக் கூடியதாகவே இருந்தது. பைடனின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகின. இதனால் கமலா ஹாரிஸுக்கு தேர்தல் வெற்றி சவாலானது” என்று வெளியுறவுக் கொள்கைகள் குறித்து எழுதி வரும் மைக்கேல் ஹிர்ஷ் கூறினார். சி.என்.என் ஊடகத்தின் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்புகளின் படி, பொருளாதாரத்தை கையாள்வதில் ஹாரிஸை விட டிரம்புக்கே தங்கள் ஆதரவு என 50%க்கும் மேலானவர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரம் தங்களின் பிரதான பிரச்னை என்று 31% வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். பைடனின் செல்வாக்கின்மை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பைடனின் பொருளாதாரக் கொள்கைகள் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன மாற்றத்துக்கான வேட்பாளர் என்று கமலா ஹாரிஸ் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும், ஜோ பைடன் ஆட்சியின் துணை அதிபராக இருந்து கொண்டு, தனது தலைமையிடமிருந்து தன்னை தனித்துக் காட்டுவதில் அவர் சிரமப்பட்டார். பணவீக்கத்தை கையாள்வதிலும், அமெரிக்கா - மெக்சிகோ எல்லை பிரச்னையை கையாள்வதிலும் அமெரிக்கர்களுக்கு பைடன் மீது அதிருப்தி இருந்த போதிலும், கமலா ஹாரிஸ் பைடனுக்கு விசுவாசமாக இருந்துள்ளார். இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாக, ஏபிசி ஊடகத்தின் தி வியூ என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பங்கேற்ற போது நிகழ்ந்ததை அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தனது பின்புலத்தைப் பற்றி தெரியாத அமெரிக்கர்களுக்கு கமலா ஹாரிஸ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பலர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தனர். ஆனால், பைடனை விட தான் எவ்வாறு மாறுபட்டவராக இருப்பார் என்று கேட்டதற்கு விளக்கமளிக்க கமலா தடுமாறினார். “எனக்கு எதுவும் தோன்றவில்லை” என்று அவர் பதிலளித்தார். இது டிரம்பின் பிரசார விளம்பரத்தில் பின்பு பயன்படுத்தப்பட்டது. இந்த உரையாடல் கமலாவுக்கு ‘நாசகரமானதாக’ அமைந்தது என்று பராக் ஒபாமாவின் முன்னாள் ஆலோசகர் டேவிட் எக்செல்ராட் தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியில் ஒரு “பிம்பச் சிக்கல்” நிலவுவதாக அந்தக் கட்சியுடன் தொடர்புடையவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஒருவர், முதலில் கட்சியில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மேல்தட்டு ஆட்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று பிபிசியின் லோன் வெல்ஸிடம் கூறினார். வேறு சிலர், கட்சியின் பிரசாரத்துக்கான முயற்சிகளை பாராட்டினர். விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்கள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, கட்சியின்‘பிம்பச் சிக்கலுக்கு’ காரணம் என்று கருதினர். குடியரசு கட்சி ஆதரவாளருடன் டிரம்பின் பிரசாரக் கூட்டத்தின் போது நடந்த உரையாடல் தனக்கு நினைவுக்கு வருவதாக வெல்ஸ் கூறுகிறார். “குடியரசுக் கட்சியை டிரம்ப் முற்றிலும் ‘மறு உருவாக்கம்’ செய்துள்ளார் என்று அந்த ஆதரவாளர் கூறினார். மேல் தட்டு மக்களின் கட்சி என்ற பிம்பத்திலிருந்து விலகி, உழைக்கும் வர்க்கத்தினரை டிரம்ப் அணுகினார். அதே நேரம் ஜனநாயகக் கட்சியினர் ஹாலிவுட்டின் கட்சியாக மாறிவிட்டதாக அவர் கூறினார்” என்று வெல்ஸ் தெரிவித்தார். சமூக பிரச்னைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருத்தடை விவகாரத்தை கமலா ஹாரிஸ் கையில் எடுத்த வேளையில் குடியேற்ற விவகாரத்தை டிரம்ப் பேசினார் பொருளாதாரத்தை தவிர, தேர்தலை தீர்மானிக்கக் கூடியவை உணர்ச்சி மிகுந்த விவகாரங்கள் ஆகும். கருத்தடை விவகாரத்தை ஜனநாயகக் கட்சியினர் கையில் எடுத்த போது, குடியேற்ற விவகாரம் குறித்து டிரம்ப் பேசினார். பைடனின் ஆட்சியில் நடைபெற்ற வரலாறு காணாத எல்லை மோதல்களும், குடியேற்றம் காரணமாக எல்லைக்கு அருகில் இல்லாத மாகாணங்களிலும் ஏற்பட்ட தாக்கங்களும், இந்த விவகாரத்தில் பைடனை விட டிரம்ப் மீது மக்கள் அதிக நம்பிக்கைக் கொள்ள காரணமாக இருந்தன என்று ப்யூ ஆய்வு மையம் நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. எடிசன் ஆய்வு கருத்துக்கணிப்புகளின் படி, கருத்தடை உரிமைகளை மீட்டெடுப்பது குறித்த கமலா ஹாரிஸின் தீவிர பிரசாரம், பெண் வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு 54% ஆதரவை பெற்றுத் தந்தது. டிரம்புக்கு 44% ஆதரவு மட்டுமே இருந்தது. எனினும், 2020-ஆம் ஆண்டில் தனது போட்டியாளருக்கு 42% பெண் வாக்காளர்களின் ஆதரவு இருந்த போது, பைடனுக்கு 57% பெண்களின் ஆதரவு இருந்தது. தனது போட்டியாளரை விட கமலா பெற்றிருந்த முன்னிலை, பைடன் பெற்றிருந்ததை விட குறைவாகும். டிரம்பின் ஆதரவாளர்களில் 54% ஆண்கள், 44% பெண்கள் ஆவர். இறுதியில், 2022-ஆம் ஆண்டு கருத்தடை விவகாரத்துக்கு இருந்த தாக்கம் இந்த முறை இல்லை. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் ஹூவர் நிறுவனத்தில் உள்ள பிரிட்டன் அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் நியால் ஃபெர்குசன், “அமெரிக்க வாக்காளர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி கடந்த நான்கு ஆண்டுகளின் கொள்கைகளை மறுத்துள்ளனர்” என்கிறார். பண வீக்கத்தை உண்டாக்கிய பொருளாதாரக் கொள்கைகள், மத்திய கிழக்கில் போருக்கு இட்டுச் சென்ற வெளியுறவுக் கொள்கை, சமூக கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர் என்று அவர் கூறுகிறார். “ஜனநாயக கட்சி தனது பல முற்போக்கான முன்னெடுப்புகளில், வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தை மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்கர்களையும், ஹிஸ்பானிக் மக்களையும் அந்நியப்படுத்தியது. நாடு முழுவதிலும் மக்களை அந்நியப்படுத்தியது” என்று அவர் பிபிசி ரேடியோ-4 நிகழ்ச்சியில் பேசிய போது தெரிவித்தார். ஜனநாயகக் கட்சிக்கு தெளிவான செய்தி கிடைத்துள்ளது. அமெரிக்க மக்களுக்கு இந்த கொள்கைகள் தேவை இல்லை. அவர்களுக்கு வலிமையின் மூலம் அமைதி வேண்டும். பணவீக்கம் இல்லாத செழிப்பு வேண்டும். கருப்பின மற்றும் லத்தீன் வாக்காளர்களிடையே குறைந்த செல்வாக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லத்தீன் அமெரிக்கர்கள், குறிப்பாக ஆண்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றார். பென்சில்வேனியா மாகாணத்தையும் அதன் 19 தேர்வாளர் குழு வாக்குகளையும் டிரம்ப் கைப்பற்றிய போது, அவர் வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் நுழையப் போகிறார் என்பது உறுதியானது. 1988-ஆம் ஆண்டு முதல் அந்த மாகாணத்தை ஜனநாயகக் கட்சி ஒரே ஒரு முறை மட்டுமே, 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டனை டிரம்ப் தோற்கடித்த போது மட்டுமே இழந்துள்ளது. அரிசோனா, நெவேடா, ஜார்ஜியா, வட காரோலினா போன்ற முக்கியமான மாகாணங்களில் ஹாரிஸ் தனது பிரசாரத்தின் போது அதீத கவனம் செலுத்தியிருந்தார். டிரம்ப் ஆட்சியின் போது ஏற்பட்ட பிரிவினைகளால் வெறுப்படைந்த, அங்குள்ள ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களையும் தன் பக்கம் ஈர்க்க இந்த முயற்சிகளை ஹாரிஸ் மேற்கொண்டார். ஆனால் அது பலனளிக்கவில்லை. கருப்பினத்தவர், லத்தீன் அமெரிக்கர்கள், இளம் வாக்காளர்களிடம் ஜனநாயகக் கட்சிக்கு வழக்கமாக கிடைக்கும் ஆதரவு இந்த முறை சிதறியது. கல்லூரி படிப்பை முடிந்த நகரவாசிகளிடம் கமலா தனது ஆதரவை தக்க வைத்துக் கொண்டாலும், ஜனநாயகக் கட்சியின் கோட்டைக்குள் டிரம்புக்கு கிடைத்த ஆதரவை தோற்கடிக்க அது போதவில்லை. எடிசன் ஆய்வு மையத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, கமலா ஹாரிஸ் கருப்பின மக்களின் 86% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 53% வாக்குகளையும் பெறுவார் என்று கூறியது. எனினும் 2020-ஈல் பைடன் இதை விட அதிக முன்னிலை வகித்திருந்தார். அவர் கருப்பின மக்களின் 87% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 65% வாக்குகளையும் பெற்றிருந்தார். லத்தீன் ஆண் வாக்காளர்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். அவர்களிடம் கமலாவுக்கு 44% வாக்குகளும் டிரம்புக்கு 54% வாக்குகளும் இருந்தன. இதே பிரிவு மக்களிடம் பைடனுக்கு 2020-ஈல் 59% வாக்குகள் இருந்தன. குடியரசுக் கட்சிக்கு ஆதரவான கிராமப்புற பகுதிகளில், 2020-ஆம் ஆண்டு பைடனுக்கு கிடைத்ததை விட, ஹாரிஸுக்கு குறைவான வாக்குகளே கிடைத்தன. இது 2016-ஆம் ஆண்டு கிளிண்டனுக்கு கிடைத்த ஆதரவுக்கு நிகராக குறைவாகவே இருந்தது. டிரம்பை மையப்படுத்திய பிரசாரம் பட மூலாதாரம்,GETTY 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் செய்தது போலவே, கமலா ஹாரிஸும் டிரம்பை மையப்படுத்தியே தனது பிரசாரத்தை மேற்கொண்டார். இந்த தேர்தலை டிரம்ப் மீதான பொது வாக்கெடுப்பாக அவர் முன்னிறுத்தினார். பிரசாரத்தின் கடைசி வாரங்களில், வெள்ளை மாளிகையின் தலைமைப் பணியாளர் (chief of staff) ஜான் கெல்லி, டிரம்ப் ஹிட்லரை ஆராதிப்பவர் என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, "டிரம்பை பாசிசவாதி, மனநோயாளி, நிலையற்றவர்" என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். இந்த தேர்தலை ஜனநாயகத்துக்கான போராட்டம் என்று கமலா ஹாரிஸ் வர்ணித்தார். ஜூலை மாதம் அதிபர் தேர்தலில் இருந்து விலகும் முன் பைடனும் இதையே தான் கூறியிருந்தார். “டொனால்ட் டிரம்பை தாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்திய கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்” என்று தனது எக்ஸ் பக்கத்தில், தேர்தல் கருத்து கணிப்பாளர் ஃப்ராங் லுண்ட்ஸ் பதிவிட்டிருந்தார். “டிரம்பைப் பற்றி வாக்காளர்களுக்கு ஏற்கனவே தெரியும். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அவர் முதலாம் ஆண்டில் என்ன செய்வார் என்று தெரிந்துக் கொள்ளவே மக்கள் விரும்பினர்” என்று அவர் கூறியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy9jxzlp0q8o
-
கனடாவில் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள இந்திய இராஜதந்திரிகள்
கனடாவில் (Canada) உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்தியா (India) தெரிவித்துள்ளது. இந்த கருத்தை வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (07) வெளியிட்டுள்ளார். அத்துடன், கடந்த ஆண்டில், கனடாவில் உள்ள இந்திய இராஜதந்திரிகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களை அதிகளவில் எதிர்கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு இந்தநிலையில் தமது உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்ட போதும், கனேடிய தரப்பால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, இந்திய பேச்சாளர் கடுமையாகக் கண்டித்துள்ளார். அத்துடன், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் வன்முறைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். https://tamilwin.com/article/indian-diplomats-in-under-surveillance-in-canada-1730990907#google_vignette
-
இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொ.காலமானார்
ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் காலமானார் ஈழத்தின் முதுபெரும் கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம் (மு. பொ) நேற்று புதன்கிழமை (06) கொழும்பில் காலமானார். மறைந்த எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் சகோதரரான மு.பொ. 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தார். இவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலவற்றை எழுதி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார். 1968இல் வெளியான “அது” கவிதைத் தொகுதியே இவரது முதல் நூலாகும். அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், கடலும் கரையும், நோயில் இருத்தல், திறனாய்வு சார்ந்த பார்வைகள், பொறியில் அகப்பட்ட தேசம், சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள், முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை முதலான நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார். எழுத்தாளர் மு. பொன்னம்பலத்தின் மறைவு ஈழத்து இலக்கியத்துறைக்கே பேரிழப்பாக கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/198112
-
உயர்தரப் பரீட்சை செய்திகள் - 2024
உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு 2024ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை என்பன அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு அத்துடன், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை என்பன தபால் மூலம் அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், தபால் மூலமாக அனுமதி அட்டைகளைப் பெறாத தனியார் விண்ணப்பதாரர்கள், நவம்பர் 18ஆம் திகதி முதல் www.doenets.lk என்ற பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், வழங்கப்பட்ட அனுமதி அட்டையில், பெயர் உள்ளிட்ட திருத்தங்கள் இருப்பின், ஊடகம் மற்றும் பெயர் திருத்தங்கள் onlineexams.gov.lk/eic/index.php/clogin என்ற இணையதளத்தின் ஊடாக திருத்தங்களைச் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 18 நள்ளிரவு 12.00 வரை இவ்வாறு திருத்தங்களைச் செய்ய முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், எக்காரம் கொண்டும் பரீட்சை நிலையங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையில் மாத்திரம் கவனம் செலுத்துமாறும் பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/g-c-e-a-l-exam-2024-1730962937
-
கொழும்பில் காற்றின் தரம் குறைந்து இருள் சூழ்கிறது
கொழும்பு உட்பட தீவின் பல நகரங்களில் காற்றின் தரக் குறியீடு "சற்று ஆரோக்கியமற்ற நிலையை" எட்டியுள்ளது. இதன் விளைவாக, சுவாசிப்பதில் சிலர் சிரமங்களை சந்தித்தால் அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறியது. காற்றின் தரமானது இன்று வியாழக்கிழமை (7) கொழும்பு மற்றும் கண்டி நகரங்களின் காற்றின் தரச் சுட்டெண் 122 முதல் 130 வரையிலும், குருநாகலில் 118 முதல் 126 வரையிலும் இருந்தது. மேலும், கண்டி, கேகாலை, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பதுளை, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய நகரங்களில் நிலைமை சுட்டெண் சற்று சாதகமற்ற மட்டத்திற்கு உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198142
-
நெல்லை: பட்டியல் பிரிவு மாணவர் மீது தாக்குதல்; வீட்டையும் அடித்து நொறுக்கினர் - என்ன நடந்தது?
எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் தகவல்கள் உங்கள் மனதை சங்கடப்படுத்தலாம். நெல்லையில் பட்டியல் பிரிவை சேர்ந்த மாணவர் மீது ஆதிக்க சாதியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதாக 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. மாணவரின் தற்போதைய நிலை என்ன? இச்சம்பவம் குறித்து காவல்துறை கூறுவது என்ன? திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது மேலப்பாட்டம் கிராமம். இந்த கிராமத்தில் பட்டியலின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மேலப்பாட்டம் கிராமத்திற்கு அருகில் திருமலைக்கொழுந்துபுரம் எனும் ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் வேறு சாதிபிரிவினரே பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள், மேலப்பாட்டம் சாலையை பொதுவழியாக பயன்படுத்தி வருகின்றனர். சாலையில் நடந்த மோதல் கடந்த திங்கட்கிழமையன்று (நவம்பர் 4) மேலப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர், தனது வீட்டுக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திருமலைக்கொழுந்துபுரம் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் காரில் வந்துள்ளனர். இதன்பிறகு நடந்த சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் விவரித்தார், மாணவரின் தாய். "மதியம் 3 மணி இருக்கும். வீட்டுக்கு வருவதற்காக என் மகன் சாலையை கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தான். அப்போது காரில் வந்த சிலர் என் மகனை இடிப்பது போன்று வேகமாக ஓட்டியிருக்கின்றனர். 'ஏன் இப்படி இடிப்பது போன்று போகிறீர்கள்?' என அவர்களிடம் கேட்டிருக்கிறான். அதுக்கு காரில் இருந்த மூன்று பேரும் இறங்கி வந்து என் மகனுடைய சட்டையைப் பிடித்து அடித்திருக்கின்றனர்" என்கிறார் அவர். பதிலுக்கு தன் மகனும் அவர்களுடைய சட்டை காலரை பிடித்து கேட்டதாகவும் அவர் தெரிவித்தார். "இதைப் பார்த்துவிட்டு அவர்களுடைய (பிற பிரிவை) ஆள் ஒருவர் வந்து, இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார். என் மகனும் வீட்டுக்கு வந்துவிட்டான்" என்கிறார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, ஆதிக்க சாதியை சேர்ந்த ஒன்பது பேர் வீட்டுக்கு வந்து மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் ஒன்பது பேர் நடத்திய தாக்குதல் இதன்பிறகு மாலை 5.30 மணியளவில் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஒன்பது பேர் அந்த மாணவரின் வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கு தனியாக இருந்த அவரை அரிவாளால் கடுமையாக தாக்கியதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறை விசாரணையில் கூறிய அந்த மாணவர், "உள்ளே வந்தவர்கள் பீர் பாட்டிலால் தலையில் அடித்தனர். அரிவாளால் இரண்டு காலிலும் தலையிலும் வெட்டினார்கள். வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டனர். அவர்கள் சென்றது பக்கத்து வீட்டில் சென்று ஒளிந்துகொண்டேன். அங்கேயும் வந்து அடித்தனர்" எனக் கூறியிருக்கிறார். "அரிவாளால் காலில் வெட்டியதால் என் மகனால் எங்கும் ஓட முடியலை. அவனை படுக்க வைத்து வயிற்றில் உதைத்திருக்கின்றனர். பாட்டிலை வைத்து மண்டையில் அடித்ததும் வலி தாங்காமல் கீழே விழுந்துவிட்டான். ஆனால், 'இன்னும் உயிரோடு தான் இருக்கிறான்'னு சொல்லி சொல்லி அடித்திருக்கின்றனர். அவர்களுடன் முன் பகை என எதுவும் இல்லை. சாலையில் கேள்வி கேட்டதற்காக அடித்திருக்கின்றனர். 17 வயது சிறுவனை ஒன்பது பேர் சேர்ந்து வெட்டியிருக்கின்றனர். எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?" எனக் கேள்வி எழுப்புகிறார் தாய் சுகந்தி. தற்போது பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் காயமடைந்துள்ள மாணவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, மாணவர் வீட்டின் கதவில் இருந்த அரிவாள் வெட்டு தடயங்கள் சாலை மறியல்; போராட்டம் மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மேலப்பாட்டம்-திருமலைக்கொழுந்துபுரம் கிராமங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தின. இந்த தாக்குதலைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் பின்னணியில் உள்ள நபர்களைக் கைது செய்வதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதாகக் கூறி, கடந்த செவ்வாய்கிழமை அருகில் மலைக்குன்றின் மீது ஏறி போராட்டம் நடத்தும் முயற்சியில் மேலப்பாட்டம் மக்கள் இறங்கியுள்ளனர். இதையடுத்து, கிராம மக்களிடம் நெல்லை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவரை தாக்கிய நபர்களைப் பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் எஸ்.பி., கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் மாணவரின் தாய் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் தொடர்புடையதாக திருமலைக்கொழுந்துபுரம் கிராமத்தில் வசிக்கும் முத்துக்குமார், லட்சுமணன், தங்க இசக்கி உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலரை காவல்துறை தேடி வருகிறது. கைதான நபர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை திருத்த சட்டம், கொலை முயற்சி, அவதூறாகப் பேசுதல் உள்பட எட்டு பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, இந்த தாக்குதல் மேலப்பாட்டம்-திருமலைக்கொழுந்துபுரம் கிராமங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தின டி.எஸ்.பி சொல்வது என்ன? "மாணவரை தாக்கியதாக கைதான நபர்களும் 17 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் தான். இவர்களில் ஒரு நபர் மீது மட்டும் குற்ற வழக்குகள் உள்ளன" என்கிறார், பாளையங்கோட்டை டி.எஸ்.பி ரகுபதி ராஜா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "காரை மறிக்கும்போது இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளது" என்கிறார். இந்த சம்பவத்தால் இரு கிராமங்களிலும் பதற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார், டி.எஸ்.பி ரகுபதி ராஜா. "4 சிறுவர்களால் ஏற்பட்ட பதற்றம்" மாணவர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து, திருமலைக்கொளுந்துபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஐயப்பனிடம் பிபிசி தமிழ் பேசியது. "இரு கிராம மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். நான்கு சிறுவர்களின் செயலால் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டுவிட்டது. இதைப் பற்றி மேலப்பாட்டம் கிராமத்தில் உள்ள ஊர்ப் பெரியவர்களிடமும் பேசியிருக்கிறோம். இதனால் இரண்டு ஊர்களுக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை. காரை வேகமாக ஓட்டியதாக எழுந்த தகராறு தான் பிரச்னைக்கு காரணம். அந்த ஊர் வழியாகத் தான் நாங்கள் செல்ல வேண்டும். இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த வழியாக செல்வதற்கு மேலப்பாட்டம் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். இரு தரப்பிலும் எந்தப் பிரச்னையும் இல்லை" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c2dl09gwxz2o
-
இராசவன்னியரின் மகன் திருமணம்
யாழ்கள உறவு இராசவன்னியன் அண்ணாவின் மகன் செல்வன் திலீபன் B.E.,M.S.(Singapore) மருமகள் செல்வி அருந்ததி B.E., இருவருக்கும் திருமண வாழ்த்துகள்.
-
சமூக ஊடக மோசடிகள் குறித்து அரசாங்கத்தின் எச்சரிக்கை..!
வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஒன்லைன் நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள், பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. dir.ccid@police.gov.lk ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நிதி உதவிக்கான கோரிக்கைகள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக கணக்குகளை ஊடுருவதன் மூலம் பொதுமக்கள் நிதி மோசடி செய்யப்படுவதாக பல புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணைப்புகளைத் திறக்கவோ அல்லது ஒரு முறை கடவுச்சொற்கள் (OTP/ PIN), குறியீடுகள் அல்லது SMS அல்லது WhatsApp செய்திகள் மூலம் அனுப்பப்படும் நிதி உதவிக்கான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என்றும் பொதுமக்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. https://tamilwin.com/article/government-warning-about-social-media-scams-1730970446#google_vignette
-
அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு 3ஆம் இடம்
யாழ்ப்பாணம் கல்லூரிக்கு 3ஆம் இடம் (நெவில் அன்தனி) இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட 31ஆவது மைலோ அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பி பிரிவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்று அசத்தியது. 13, 15, 17, 19 ஆகிய நான்கு வயது பிரிவுகளில் நடத்தப்பட்ட மைலோ பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றின. இந்த சுற்றுப் போட்டியில் வட மாகாணத்திலிருந்து பங்குபற்றிய ஒரே ஒரு அணியான வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி 17 வயதுக்குட்பட்ட பி பிரிவில் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது. மாத்தறை உயன்வத்தை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பி பிரிவுக்கான 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் மொணராகலை ஆனபல்லம வித்தியாலய அணியை 18 - 15 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டு யாழ்ப்பாணம் கல்லூரி வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது. https://www.virakesari.lk/article/198115
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
கிழக்கை மண்ணை காப்பாற்றுவதற்காக மக்களுடன் இனைந்து கடந்த 15 வருடமாக போராடிவருகின்றோம். எனவே கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் கிழக்கை காப்பாற்ற முடியும் என இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் தேசிய அமைப்பாள் தர்மலிங்கம் சுரேஸ் கிழக்கு மண்ணிலிருந்து அறைகூவல் விடுத்துள்ளார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை சந்தியில் புதன்கிழமை(06) மாலை சைக்கிள் சின்னதில் தேர்தல் பிரச்சாரத்துக்கான கட்சி காரியாலயம் திறந்துவைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார். இந்த தேர்தலை இதுவரைக்கும் நடந்த தேர்தல்போல எங்கள் மக்கள் கையாளக் கூடாது என ஆரம்பத்திலிருந்தே தெரிவித்துவருகின்றோம். இந்த தேர்தல் தமிழ் மக்களுக்குப் பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பமாக அமையப் போகின்ற இந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மக்களுடைய வாழ்வு இந்த தீவிலே ஒரு அடிமைத்தனமாக இருக்கப் போகின்றதா? அல்லது சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் சம உரிமையோடு வாழப்போகின்றோமா? என்ற ஒரு கேள்வி எழுப்புகின்ற ஒரு தேர்தல் அமையப் பெற்றிருக்கின்றது. தமிழர்களை பொறுத்தமட்டில் தமிழர்கள் ஒரு நீண்ட நெடிய வரலாற்று ரீதியாகப் போராடி ஒரு மரபுவழியாக தமக்கான ஒரு தனித்துவத்தை பெற்றிருக்கும் ஒரு இனம் அதனடிப்படையில் தமிழர்கள் இந்த தீவிலே சுதந்திரமாக வாழ்வதற்காக அதிக விலை கொடுத்துள்ளனர், உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர், கோடான கோடி சொத்துக்களை இழந்துள்ளனர் நிலங்களைப் பறிகொடுத்துக் கட்டமைக்கப்பட்ட இனழிப்புக்கு உட்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் இந்த தேர்தல் தொடர்பாக மிகுந்த ஆர்வத்துடனும் கரிசனையுடனும் கையாளவேண்டும். வடக்கு கிழக்கிலே சைக்கிள் அணி மிகப் பெரும் பலமாக வந்து கொண்டிருக்கின்றது. தென்பகுதியை பொறுத்தமட்டில் ஒரு ஊழல் அற்ற நேர்மையான ஒரு அரச தலைவராக அனுரகுமார திசாநாயக்காவை ஜனாதிபதியாக அந்த மக்கள் தெரிவு செய்துள்ளனர். ஆனால் வடகிழக்கிலே அவ்வாறான ஒரு தலைவரை இதுவரைக்கும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை ஆனால் இந்த தேர்தல் அந்த சந்தர்ப்பத்தை மக்களுக்குக் கொடுத்திருக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைகளைச் சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொடுப்போம் அதற்கு தலமைதாங்க வேண்டும் என்ற அடிப்படையிலே தமிழர்கள் நம்பி யுத்தத்தின் பின்னர் மூன்று தடவைகள் வாக்களித்து அறுதி பெரும்பான்மையான ஆணைகளைப் பெற்று தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனழிப்புக்கு சந்தர்பம் கிடைக்கின்ற போதெல்லாம் அதனைத் தட்டிக்களித்து எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்காது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்ததை தவிர வேறு எந்தவொரு வேலையையும் இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செய்யவில்லை. அதனால் நாங்கள் கடந்த 15 வருடங்களாக தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வடகிழக்கிலே நடைபெறுகின்ற கட்டமைப்புசார் இடம்பெறும் இன அழிப்பை மக்களுடன் இணைந்து தடுத்து நிறுத்தி வருகின்றோம் அப்படிப்பட்ட எங்கள் தலைமைக்கும் அணிக்கும் ஒரு தடவை இந்த தேர்தலில் சந்தர்ப்பம் தாருங்கள். எந்த நோக்கத்தோடு எங்களைச் சிங்கள தேசம் அழித்ததோ அதற்கான பரிகாரத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் பேரம் பேசி .நா. மனித உரிமை இனழிப்பு தொடர்பான பொறுப்புக்கூறலை சரியான இடத்துக்கு கொண்டு செல்ல ஆணையை தாருங்கள் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காகச் செயற்படுகின்ற சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் இந்த அணியைப் பலப்படுத்தப் போகின்றீர்களா? இல்லை வழமைபோன்று சாராயம் அரிசி மாவுக்கும் வெறும் சலுகைகளுக்கும் நீங்கள் வாக்களித்து இனிமேல் உரிமை என்றால் என்ன என்று கேட்கமுடியாத ஒரு நிலைக்கு இட்டுச் சென்று நிரந்தரமாகத் தமிழர்கள் அடிமையாகப் போகின்றோமா? என்ற கேள்வியைப் பெருவாரியான மக்கள் விளங்கி வடக்கிலும் கிழக்கிலும் சைக்கிள் அணிக்குப் பின்னால் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக கடந்த 15 வருடங்களாக இந்த மண்ணில் இருந்து போராடி செயற்பட்டு வருகின்றோம் கிழக்கில் மக்கள் நிச்சயமாக ஆணையை தரும் அதேவேளை வடக்கில்; எங்கள் கட்சி மீது மக்கள் திசை திரும்பியுள்ளனர் அதனால் ஏனைய சிங்கள கட்சிகளும் அவர்களுடன் சோந்திருக்கின்ற கட்சிகளும் குழப்புவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே கூடியளவு சாராயம் மற்றும் பணங்களையும் கொடுத்து இந்த மக்களை திசைதிருப்புவதற்கான வேலைத் திட்டங்களை செய்கின்றனர். வீடு, சங்கு, சின்னத்திலே போட்டியிடுகின்ற அந்த அரசியல்கட்சிகளின் கடந்தகால செயற்பாடு பற்றி எங்கள் மக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் கிடையாது பிறிந்து செயற்படும் அத்தனை பேரும் இந்த இனத்தை அழிப்பதற்காக 2015ம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கான இடைக்கால யாப்பை உருவாக்கி வைத்துள்ளனர் எனவே இந்த மண்ணிலே தமிழ் மக்கள் நிம்மதியாக சிங்கள மக்கள் போன்று ஒரு சுபீட்சத்துடன் வாழவேண்டும் என்றால் இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/198140