Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மருந்து வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட அதிகம் என அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை விவரித்தார். அதற்காக நூற்றுக்கும் அதிகமான பொலிஸ் மற்றும் படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சில ஜனாதிபதிகளுக்கு 180 வரையான பாதுகாப்பு அதிகாரிகள் கடமையாற்றுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். பாதுகாப்பு அதிகாரிகள் மாத்திரமன்றி பாதுகாப்பு வாகனங்கள், பஸ், டிபன்டர் ரக வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், அம்பியூலன்ஸ் வண்டி என சகலதும் வழங்கப்பட்டுள்ளது. சராசரியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் ஏனைய பராமரிப்பு செயற்பாடுகளுக்காக 1100 மில்லியன் ரூபா வரை செலவிடப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்கட்டினார். ஒரு வருடத்திற்கு செலவாகும் இந்த செலவு பொலிஸ் வைத்தியசாலையின் ஒரு வருடத்திற்கான செலவை விட அதிகம், இவ்வாறான செயற்பாடுகளை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். அதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் சிபாரிசுக்கு இணங்க எதிர்காலத்தில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும், அந்த அமைச்சரவை பத்திரத்திற்கு இணங்க சகல முன்னாள் ஜனாதிபதிகளுக்குமான சலுகை முறைகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மேலும் விசேட பாதுகாப்பு தேவைப்பாடு உள்ள முன்னாள் ஜனாதிபதிகளுக்காக விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் விபரித்தார். https://thinakkural.lk/article/311856
  2. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது. எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி செய்திகள், டெல்லி சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது. நிலவுப் பயணத்தை தொடர்ந்து இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, வெள்ளி (venus) கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்புதல், நாட்டின் முதல் விண்வெளி நிலையத்திற்கான முதல்கட்ட பணிகளை தொடங்குதல் மற்றும் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான புதிய மறுபயன்பாட்டு கனரக ராக்கெட்டை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும். இந்தியாவில் விண்வெளி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு இதுவே ஆகும். ஆனால் திட்டங்களின் அளவு மற்றும் அதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை கருத்தில் கொண்டால், இது மிகவும் ஆடம்பரமான செலவு அல்ல. இதுவரையிலும் இந்தியா விண்வெளி திட்டத்திற்காக மிகவும் குறைவாகவே செலவு செய்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. நிலவு, செவ்வாய் கிரகம் மற்றும் சூரியனுக்கு எப்படி குறைந்த செலவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆய்வு பயணங்கள் மேற்கொள்கிறது என்பதை உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்ப 74 மில்லியன் டாலர்களையும், கடந்த ஆண்டு சந்திரயான்-3 திட்டத்திற்கு 75 மில்லியன் டாலர்களையும் இந்தியா செலவிட்டது. இது சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான ‘கிராவிடியை’ தயாரிக்க செலவிடப்பட்ட 100 மில்லியன் டாலர்களை விட மிகக் குறைவானது. நாசாவின் மேவன் விண்கலத்தை தயாரிக்க 582 மில்லியன் டாலர்கள் செலவானது. சந்திரயான் -3 விண்கலம் தரையிறங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நிலவின் மேற்பரப்பில் மோதிய ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்திற்கு 133 மில்லியன் டாலர்கள் செலவானது. குறைந்த அளவில் செலவு செய்தாலும் இந்தியா, முக்கியமான விண்வெளி ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. எதிர்பார்த்ததை விட அதிகமாக சாதித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சந்திரயான்-1 விண்கலம் நிலவில் நீர் இருப்பதை முதன் முதலில் உறுதி செய்தது; செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் அளவு பற்றி ஆய்வு செய்ய மங்கள்யான் ஒரு கருவியை கொண்டு சென்றது. சந்திரயான்-3 விண்கலம் அனுப்பிய படங்கள் மற்றும் தரவுகள் உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்படுகின்றன. இந்தியா எப்படி குறைந்த செலவில் இவற்றை செய்கிறது? பட மூலாதாரம்,SCREENSHOT FROM DOORDARSHAN படக்குறிப்பு, ககன்யான் விண்கலம் திட்டத்தில் ஒரு பெண் மனித உருவத்தை விரைவில் விண்வெளிக்கு அனுப்புவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது 1960-களில் விஞ்ஞானிகள் முதன்முதலில் ஒரு விண்வெளித் திட்டத்தை அரசாங்கத்திற்கு முன்வைத்த போதிலிருந்து இந்த சிக்கனப்போக்கு தொடங்கியது என்று இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ISRO-வின் நிதியை நிர்வகித்த அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சிசிர் குமார் தாஸ் கூறுகிறார். இந்தியா 1947 ஆம் ஆண்டு பிரிட்டன் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது. அப்போது மக்களின் பசி போக்கவும், போதுமான பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டவும் இந்தியா போராடி வந்தது. “ISRO-வின் நிறுவனரும் விஞ்ஞானியுமான விக்ரம் சாராபாய், விண்வெளித் திட்டம் என்பது இந்தியா போன்ற ஏழை நாட்டில் ஒரு அதிநவீன ஆடம்பரம் அல்ல என்பதை அரசாங்கத்திற்கு நம்ப வைக்க வேண்டியிருந்தது. இந்தியா தனது குடிமக்களுக்கு சிறப்பாகச் சேவை செய்ய செயற்கைக்கோள்கள் உதவக்கூடும் என்று அவர் விளக்கினார்,” என்று பிபிசியிடம் சிசிர் குமார் தாஸ் கூறினார். ஆனால் இந்தியாவில் விண்வெளித் திட்டத்தை, மிகவும் குறுகிய பட்ஜெட்டுக்குள் செயல்படுத்த வேண்டியிருந்தது. 1960கள் மற்றும் 70களின் புகைப்படங்கள், விஞ்ஞானிகள் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை சைக்கிள்கள் அல்லது ஒரு மாட்டு வண்டியில் கொண்டு செல்வதைக் காட்டுகின்றன. பல ஆண்டுகளுக்கு பிறகும், பல வெற்றிகரமான விண்வெளி பயணங்களுக்கு பிறகும், இஸ்ரோவிற்கான நிதி இன்னும் குறைவாகவே உள்ளது. இந்த ஆண்டின் பட்ஜெட்டில் இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்காக 130 பில்லியன் ரூபாய் ($1.55 பில்லியன்) ஒதுக்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் நாசாவின் இந்த ஆண்டு பட்ஜெட் 25 பில்லியன் டாலர்கள் ஆகும். உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்துவதால் இஸ்ரோவின் பணிகளுக்கு மிகவும் குறைந்த செலவு ஏற்படுவதாக சிசிர் குமார் தாஸ் கூறுகிறார். 1974 ஆம் ஆண்டில், இந்தியா தனது முதல் அணுசக்தி சோதனையை நடத்திய பிறகு, இந்தியாவுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் செய்ய மேற்கத்திய நாடுகள் தடை விதித்தன. இந்த கட்டுப்பாடுகள் இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கு மறைமுகமான நன்மையாக இருந்தன என்று அவர் கூறுகிறார். "இந்திய விஞ்ஞானிகள் அதை உள்நாட்டிலேயே தொழில்நுட்பத்தை உருவாக்க ஒரு ஊக்கமாக பயன்படுத்தினர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டன. அமெரிக்கா அல்லது ஐரோப்பாவை விட இங்கு ஊதியம் மற்றும் தொழிலாளர்களுக்கான செலவினமும் மிகவும் குறைவாக இருந்தது”. என்றார் அவர். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சூரியனை பற்றி ஆராய்வதற்கான இந்திய விண்கலமான ஆதித்யா L1-னுக்காக வெறும் 46 மில்லியன் டாலர்களே செலவானது "இஸ்ரோவைப் போலல்லாமல் நாசா தனது செயற்கைக்கோள் உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கிறது. அதன் பணிகளுக்கு காப்பீட்டையும் எடுத்துக்கொள்கிறது, இது அவர்களின் செலவுகளை அதிகரிக்கிறது" என்று கூறுகிறார் அறிவியல் எழுத்தாளர் பல்லவ பாக்லா. “நாசாவைப் போலல்லாமல், இந்தியா ஒரு திட்டத்தை சோதனை செய்ய பயன்படுத்தப்படும் பொறியியல் மாதிரிகளை உருவாக்காது. நாம் ஒரே ஒரு இயந்திரத்தை மட்டுமே உருவாக்குகிறோம், பின்னர் அதனை ஏவுகிறோம். இது ஆபத்தானது, விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது, ஆனால் இது ஒரு அரசாங்க திட்டம் என்பதால் அந்த ஆபத்தையும் அறிந்து நாம் செயல்படுகிறோம்”. என்று பிபிசியிடம் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். இவர் இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாவது நிலவு பயணங்கள் மற்றும் செவ்வாய் கிரக பயணத்தின் தலைவராக இருந்தார். “இஸ்ரோ மிகக் குறைவான நபர்களையே வேலைக்கு அமர்த்துகிறது மற்றும் குறைந்த சம்பளத்தை வழங்குகிறது, இது இந்திய திட்டங்களை போட்டித்தன்மை கொண்டதாக ஆக்குகிறது”, என்று அவர் கூறினார். மயில்சாமி அண்ணாதுரை 10-க்கும் குறைவான நபர்கள் கொண்ட சிறிய குழுக்களை வழிநடத்தியுள்ளார். அந்த நபர்கள் பெரும்பாலும் கூடுதல் நேரம் பணி செய்ததற்கான ஊதியம்கூட இல்லாமல் பல மணிநேரம் வேலை செய்தார்கள் என்றும், செய்யும் பணியின் மீது அவர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார். "திட்டங்களுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பட்ஜெட் ஒதுக்கப்பட்டதால், சில சமயங்களில் அவர்கள் புதுமையான, எளிய வழிமுறைகளை யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர், இது புதுமையான திட்டங்களுக்கு வழிவகுத்தது" என்று அவர் கூறினார். "சந்திரயான்-1 திட்டத்திற்கு, ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 89 மில்லியன் டாலர் மட்டுமே. இது அசல் கட்டமைப்பிற்கு வேண்டுமானால் போதுமானதாக இருந்தது. ஆனால் பின்னர், விண்கலம் நிலவை ஆய்வு செய்ய கூடுதலாக 35 கிலோ கொண்ட கருவியை எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது." என்றார் மயில்சாமி அண்ணாதுரை. அப்போது, விஞ்ஞானிகள் முன்பு இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று, இந்த திட்டத்திற்கு கனரக ராக்கெட்டைப் பயன்படுத்துவது, ஆனால் இது செலவை அதிகரிக்கக் கூடும். மற்றொன்று சுமையை குறைக்க சில கருவிகளை நீக்குவது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விண்வெளித் திட்டங்கள் இந்தியர்களுக்குப் பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்கிறது "நாங்கள் இரண்டாவது முறையை தேர்ந்தெடுத்தோம். நாங்கள் திரஸ்டர்களின் எண்ணிக்கையை 16-இல் இருந்து 8 ஆகக் குறைத்தோம், மேலும் பிரஷர் டேங்குகள் மற்றும் பேட்டரிகளும் இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டன”. பேட்டரிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம், 2008 ஆம் ஆண்டு இறுதிக்குள் விண்கலத்தை ஏவ வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது என்று மயில்சாமி அண்ணாதுரை கூறுகிறார். "இது நீண்ட சூரிய கிரகணத்தை எதிர்கொள்ளமல் நிலவை சுற்றி வர விண்கலத்திற்கு இரண்டு ஆண்டுகள் கொடுக்கும், இந்த கிரகணம் பேட்டரியின் ரீசார்ஜ் செய்யும் திறனை பாதிக்கக்கூடும். எனவே விண்கலம் குறிப்பிட்ட நேரத்தில் ஏவப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் கடுமையான பணிமுறையை பின்பற்றினோம்”. “சந்திரயான்-2 விண்கலம் ஏவுவதற்கு தாமதமானதால், நாங்கள் அதற்கு வடிவமைத்த இயந்திரங்களையே மங்கள்யான் விண்கலத்திற்கும் அதிக அளவில் பயன்படுத்தினோம்”, என்று மங்கள்யான் செலவும் மிகவும் குறைவாக இருந்தற்கான காரணம் குறித்து மயில்சாமி அண்ணாதுரை கூறுகிறார். இவ்வளவு குறைந்த செலவில் வரும் இந்தியாவின் விண்வெளித் திட்டம் "ஒரு அற்புதமான சாதனை" என்கிறார் பல்லவ பாக்லா. ஆனால் இந்தியா திட்டங்களை மேம்படுத்தும் போது, செலவுகளும் அதிகரிக்கக்கூடும். தற்போது, இந்தியா விண்கலத்தை ஏவ சிறிய ராக்கெட்களை பயன்படுத்துகிறது. ஏனெனில் இந்தியாவிடம் சக்தி வாய்ந்த, கனரக ராக்கெட்கள் எதுவும் இல்லை. இதனால், இந்தியாவின் விண்கலங்கள் இலக்கை அடைய அதிக நேரம் எடுக்கும். சந்திரயான் -3 ஏவப்பட்டபோது, அது நிலவின் சுற்றுப்பாதைக்கு செல்வதற்கு முன்பு பூமியை பல முறை சுற்றி வந்தது. நிலவில் தரையிறங்குவதற்கு முன்பு நிலவையும் சில முறை சுற்றி வந்தது. மறுபுறம், ரஷ்யாவின் லூனா -25 விண்கலம் ஒரு சக்திவாய்ந்த சோயுஸ் (Soyuz) ராக்கெட்டை கொண்டு ஏவப்பட்டதால் அது விரைவாக பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து வெளியேறியது. "நாங்கள் பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி நிலவை நோக்கி விண்கலத்தை ஏவினோம். இதற்காக நாங்கள் பல வாரங்கள் திட்டமிட்டோம். இஸ்ரோ இதுபோல பல முறை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது”. என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை. ஆனால் 2040 ஆம் ஆண்டிற்குள், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இந்தியா அறிவித்துள்ளதாகவும், அதற்கு சக்திவாய்ந்த ராக்கெட்டுகள் தேவைப்படும் என்று பல்லவா பாக்லா கூறுகிறார். இது போன்ற புதிய ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணிக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும் 2032 ஆம் ஆண்டுக்குள் அது தயாராகிவிடும் என்றும் இந்திய அரசு சமீபத்தில் கூறியது. இந்த அடுத்த தலைமுறை ராக்கெட் (NGLV) அதிக எடையை சுமந்து செல்லக் கூடியதாக இருக்கும். ஆனால் அதனை தயாரிக்க அதிக செலவாகும். இந்தியா விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் வரவால் செலவுகள் மிகவும் குறையக்கூடும் என்றும் பல்லவ பாக்லா கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cm20lzyzxy2o
  3. பீர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்தின் தலைவர் பீர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கச்சா அரிசி நெல் அறுவடை மூலம் உற்பத்தி செய்யப்படுவதாக சேமசிங்க சுட்டிக்காட்டுகிறார். மேலும் கருத்து தெரிவித்த யு.கே.சேமசிங்க, "பீர் தயாரிக்க கச்சா அரிசி தேவை. ஆனால் பீர் தயாரிக்க தேவையான கச்சா அரிசி நெல் அரிசியில் இருந்து பெறப்படுகிறது. எனவே, பீர் உற்பத்திக்கு அதிக சதவீதத்தை இயக்கும்போது, நெல் அரிசி உற்பத்திக்கு தேவையான நெல் பற்றாக்குறை உள்ளது. " அரிசி விலையை கட்டுப்படுத்த அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. தற்போது வரை கட்டுப்பாட்டு விலையில் அரிசி கிடைக்கவில்லை என கடைக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சில வாரங்களாக இலங்கை சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து அரிசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. நிலைமையை கருத்திற்கொண்ட ஜனாதிபதி, பாரிய அரிசி வியாபாரிகளை அழைத்து கலந்துரையாடினார், அங்கு சில்லறை சந்தையில் அரிசியின் கட்டுப்பாட்டு விலையை பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/198081
  4. பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு, தவெக மாநாட்டில் விஜய் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை நாம் தமிழர் கட்சியைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாகவும் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேரடியாகவும் விமர்சித்துள்ளனர். ஆனால், அ.தி.மு.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் த.வெ.க-வை இதுவரையிலும் விமர்சிக்கவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி ஆகியவை த.வெ.க மீது கடும் விமர்சனத்தை முன்வைப்பது ஏன்? இதன் பின்னணி என்ன? த.வெ.க மாநாடும் விமர்சனமும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், "சாதி, மதம், இனம் என மக்களைப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்பேன்" என்றார். தொடர்ந்து பேசிய விஜய், "மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் குடும்ப சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி" என்றார். 'திராவிடமும் தமிழ்த் தேசியமும்' எனது இரு கண்கள் என்று விஜய் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு, நாம் தமிழர் கட்சியின் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. "திராவிடமும் தமிழ்த் தேசியமும் வேறுவேறு. இரண்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? இது நடுநிலை அல்ல. கொடுநிலை" என்றார் சீமான். மறைமுகமாக விமர்சித்த ஸ்டாலின் திங்கள்கிழமையன்று சென்னை கொளத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், த.வெ.க-வை மறைமுகமாகச் சாடினார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், "புதிது புதிதாக கட்சி தொடங்குகிறவர்கள் எல்லாம் தி.மு.க ஒழிய வேண்டும், அழிய வேண்டும் எனப் பேசி வருகிறார்கள். நான்கு ஆண்டுகளைத் தொடப் போகும் இந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள். உங்களின் வசைச் சொற்களுக்கெல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம்" என்றார். "தி.மு.க.வில் சேரலாம்" -ஹெச்.ராஜா பட மூலாதாரம்,MK STALIN/FACEBOOK படக்குறிப்பு, புதிது புதிதாக கட்சி துவங்கியவர்கள் அனைவரும் திமுக அழிய வேண்டும் என்றுதான் பேசி வருகிறார்கள் என ஸ்டாலின் பேச்சு தமிழக பா.ஜ.க-வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்புக் குழு தலைவரான ஹெச்.ராஜா, "புதிதாக விஜய் தொடங்கிய கட்சியின் தீர்மானங்களைப் பார்க்கும் போது அவர் தி.மு.க.வில் சேரலாம்" என்றார். "மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறும் விஜய் எப்படி பா.ஜ.க.,வின் பி டீமாக இருப்பார்?" எனக் கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, "இத்தனை பி டீம்களை எங்கள் கட்சி தாங்காது" என்றார். தே.மு.தி.க கூறுவது என்ன? "இப்போதுதான் மாநாடு நடத்திக் கொடியேற்றியிருக்கிறார். அவரின் செயல்பாடுகளைப் பொறுத்துதான் எல்லாம் இருக்கிறது" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தேசியம், திராவிடம் குறித்துப் பேசிய பிரேமலதா, "தேசியத்தில்தான் திராவிடம் இருக்கிறது. திராவிடத்தில்தான் தமிழ்நாடு இருக்கிறது" என்றார். அதிமுக கருத்து அ.தி.மு.க-வை நடிகர் விஜய் விமர்சிக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பதில் அளித்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இதில் மற்றவர்களுக்கு என்ன கஷ்டம்?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், "அ.தி.மு.க ஆட்சியில் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும். மற்ற கட்சிகளை ஏன் விமர்சிக்கவில்லை என ஆதங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை" என்றார். தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,SEEMAN/ X தமிழக வெற்றிக் கழகம் குறித்த தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துகள் பற்றி மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணியிடம் பிபிசி தமிழ் பேசியது. "வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், 'தி.மு.க-வை எதிர்த்து வெற்றி பெறுவதற்கு விஜய் வந்திருக்கிறார்' என நினைப்பவர்கள் த.வெ.க-வை ஆதரிக்கின்றனர். இது அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க ஆகிய கட்சிகளின் கணக்காக உள்ளது. இதன் பாதிப்புகளை உணர்ந்ததால்தான் விஜயை முதலைமைச்சர் விமர்சித்துப் பேசுகிறார். பா.ஜ.க.வை பொருத்தவரை ஹெச்.ராஜாவின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. லண்டனில் இருந்து அண்ணாமலை வந்த பின்னர்தான் நிலவரம் தெரியும்" என்கிறார். "தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான கொள்கைகள்தான் உள்ளன. விஜய் கட்சியின் செயல் திட்டங்களைப் பார்த்தால் பிற கட்சிகளுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய கூட்டணி உருவாகுமா? "தற்போதைய அரசியல் நகர்வுகளைப் பார்த்தால், 2026 தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராக அ.தி.மு.க, த.வெ.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் ஒரு புள்ளியில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் ஷ்யாம். தொடர்ந்து பேசிய அவர், "தி.மு.க எதிர்ப்பு, ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, குடும்ப ஆட்சி முறை ஆகியவற்றை இந்த மூன்று கட்சிகளும் எதிர்க்கின்றன. இவர்களின் இலக்கு என்பது, தி.மு.க எதிர்ப்பு வாக்குகளைத் திரட்டுவது; பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைப் பெறுவது; தமிழ், தமிழ்நாடு, நீட் எதிர்ப்பு, இலங்கைத் தமிழர் ஆதரவு வாக்குகளைக் கவர்வது போன்றவை" என்கிறார் அவர். வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறும் ஷ்யாம், "த.வெ.க பக்கம் அணி சேரும் கட்சிகளால் 35 சதவீத வாக்குகளைப் பெற முடியும் என்றால் அந்தப் பக்கம் மேலும் சில கட்சிகள் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன" என்கிறார். திமுக அழிய வேண்டும் என்று தவெக கூறவில்லை பட மூலாதாரம்,EDAPPADI PALANISAMY/FACEBOOK படக்குறிப்பு, விமர்சிக்கவில்லை என்பதால் மற்றவர்களுக்கு இதில் என்ன கஷ்டம் என்று அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். த.வெ.க முன்வைக்கும் சமத்துவக் கோட்பாடுகளால் தங்களுக்கு பாதிப்பு வரும் என்பதாலேயே சில கட்சிகள் விமர்சிப்பதாகக் கூறுகிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி. "பிற கட்சிகளின் வாக்குகளைப் பிரிப்பதற்காக த.வெ.க வரவில்லை. மற்ற கட்சிகளை அழிப்பதும் நோக்கமல்ல. எங்கள் கொள்கையைப் பிடிக்காதவர்கள்தான் வன்மத்துடன் பேசுகிறார்கள்" என்கிறார் லயோலா மணி. முதலமைச்சரின் விமர்சனம் குறித்துப் பேசிய அவர், "த.வெ.க தலைவரை ஒருமையில் விமர்சித்துப் பேசியது சரியல்ல. தி.மு.க அழிய வேண்டும் என எந்த இடத்திலும் த.வெ.க தலைவர் கூறவில்லை. விஜய் சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதாகக் கூறுவது வருத்தம் அளிக்கிறது" என்கிறார். தி.மு.க-வுக்கும் விஜய்க்கும் பிரச்னையா? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, தங்களுக்கு பாதிப்பு வரும் என்பதாலேயே சில கட்சிகள் விமர்சிப்பதாக கூறுகிறார் லயோலா மணி இந்தக் கருத்தில் முரண்படும் தி.மு.க செய்தித் தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன், "த.வெ.க தலைவரை முதலமைச்சர் ஒருமையில் விமர்சிக்கவில்லை. 'புதிதாக வருகிறவர்கள் எல்லாம் தி.மு.க-வை விமர்சிக்கிறார்கள்' என்றுதான் பேசினார்" என்கிறார். "தி.மு.க ஆட்சிக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க பிரிக்கலாம் அல்லது நாம் தமிழர் கட்சியின் பக்கம் செல்லலாம். இதில் த.வெ.க-வுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை" என்று கூறுகிறார் கான்ஸ்டன்டைன். மேலும், "நடிகர் விஜய்க்கும் தி.மு.க-வுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. தற்போது அவர் பேசி வரும் இதே கருத்தைப் பேசிய பலரும், எங்களுடன் கூட்டணி வைத்துள்ளனர்" என்றும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clydvkw11v7o
  5. உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற ஆப்பிளின் சாதனையை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்ப கணினி சிப் தயாரிப்பு நிறுவனம் என்விடியா. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.38 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை செவ்வாய்க்கிழமை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. என்விடியா நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.43 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. 2022ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற புதிய வசதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் அங்கம் வகித்த என்விடியா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அன்று முதல் தற்போது வரை 850 விழுக்காடு உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குச்சந்தையில் என்விடியா நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 139 புள்ளி 93 டொலர்களாக இருந்தது. https://thinakkural.lk/article/311843
  6. மன்னார் சதோச மனித புதைகுழி "ஸ்கேன்" செயல்பாடு ஆரம்பம்; காணொளி, புகைப்படங்கள் எடுக்க ஊடகங்களுக்கு தடை மன்னார் நகர மையப்பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதோச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ள நிலையில் முதற்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை மற்றும் புதைகுழியை சூழ உள்ள பகுதியை ஸ்கேன் மற்றும் அகழ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மன்னார் சதோச வளாகத்திற்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வு பணிகள் இன்று வியாழக்கிழமை (07) நடைபெற்று வருகின்றது. இருப்பினும் குறித்த அகழ்வு பணி தொடர்பான செயற்பாடுகளையோ, ஸ்கான் செயற்பாடுகளையோ புகைப்படம் எடுக்கவோ, காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே சதோச மனித புதைகுழி அகழ்வு பணியை செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த அகழ்வு பணி தொடர்பான உண்மையான விடயங்களை அறிக்கையிடவும் அகழ்வு செயற்பாடுகளை ஆவணப் படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் புதிய நீதிபதியினால் தற்போது அகழ்வு பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளை கணொளியோ புகைப்படமோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த அகழ்வு தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198110
  7. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பொலன்னறுவை, மொனராகலை மற்றும் களுத்துறை ஆகிய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் ஒரே நெடுவரிசையிலும், ஏனைய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் இரண்டு பத்திகளிலும் அச்சிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் விநியோகிக்கப்படும் வேட்பாளர்களின் பட்டியலில் ஒவ்வொரு தொகுதிக்கான மாதிரி வாக்குச் சீட்டு அச்சிடப்படும். வாக்காளர்கள் வாக்களிப்பதற்கும் விருப்பங்களை குறிப்பதற்கும் புள்ளடியை (X) மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்களிக்கும் போது வாக்காளர்கள் பின்வரும் வாக்களிப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்; https://thinakkural.lk/article/311839
  8. மன்னார் நீதிமன்றத்தில் வைத்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலை அலுவலர் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தரை நாளை வெள்ளிக்கிமை (08) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, கடந்த 5 ஆம் திகதி வவுனியா சிறைச்சாலை அலுவலர் மன்னார் நீதவான் நீதிமன்றில் கடமைக்காக வந்துள்ளார். குறித்த சிறைச்சாலை அலுவலர், மன்னார் நீதிமன்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரை பார்வையிடுவதற்காக சென்ற பெண் ஒருவரிடம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நபரை பார்வையிடுவதற்காக 1,000 ரூபாய் பணத்தை பலவந்தமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் குறித்த சிறைச்சாலை அலுவலர் பாதிக்கப்பட்ட பெண்ணினால் அடையாளம் காண்பிக்கப்பட்ட நிலையில் குறித்த சிறைச்சாலை அலுவலர் நீதவான் நீதிமன்றில் வைத்து கைது செய்து விசாரணைகளின் பின்னர் கடந்த 5 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், குறித்த சிறைச்சாலை அலுவலரை நாளை வெள்ளிக்கிமை (08) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/198096
  9. வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளரட்டை விநியோகம் இன்றுடன் (7) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட 27ஆம் திகதி முதல் இன்று வரை வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் நாளை (8) தபால் நிலையங்களுக்கு சென்று தங்களது வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமென சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். நாளை தொடக்கம் பொதுத் தேர்தல் நடைபெறும் நவம்பர் 14ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளரட்டைகளை தபால் நிலையத்தில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக வாக்காளர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/311849
  10. லொஹான் ரத்வத்தவுக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு! பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்த ஆகியோரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டுள்ளது. லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198111
  11. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிறந்த குழந்தையின் குடலில் எந்த வகையான பாக்டீரியாக்கள் முதலில் வளர்கின்றன என்று மல மாதிரிகளில் இருந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யப்பட்டது. (சித்தரிப்புப்படம்) எழுதியவர், ஸ்மிதா முண்டாசாத் பதவி, சுகாதார செய்தியாளர், பிபிசி நியூஸ் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மல மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர். இந்த மாதிரிகள் மூலம், பிறந்த குழந்தையின் குடலில் எந்த வகையான பாக்டீரியா முதலில் வளர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் முயன்றனர். அந்த ஆய்வில், குழந்தைகளின் மலம் மூன்று வெவ்வேறு நுண்ணுயிரியல் வகைகளின் கீழ் வருவதை அறிந்து ஆச்சரியமடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு "முன்னோடி பாக்டீரியாக்கள்" அதிக அளவில் காணப்பட்டன. இந்த முன்னோடி பாக்டீரியாக்கள் எந்தப் புதிய சூழலிலும் முதலில் குடியேறி வளரக் கூடியவை. 1288 குழந்தைகளின் மல மாதிரிகள் ஆய்வு இவற்றில் ஒன்று பி.ப்ரீவ் (பிஃபிடோபாக்டீரியம் ப்ரீவ்) என்று ஆரம்ப சோதனைகள் சுட்டிக்காட்டின. இது குழந்தைகளுக்கு தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகளை ஜீரணிக்க உதவுகிறது மற்றும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கிறது. இந்த பாக்டீரியாவின் மற்றொரு வகை தீங்கு விளைவிக்கக்கூடியது என்றும் குழந்தைகளுக்குத் தொற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நேச்சர் மைக்ரோபயாலஜி என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது. ஒரு நபரின் மைக்ரோபயோம் அதாவது அவரது குடலில் வாழும் லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் அந்த நபரின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. ஆனால் ஒரு குழந்தையின் மைக்ரோபயோம் குறித்து மிகக் குறைந்த ஆய்வுகளே செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் இது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் உருவாகிறது. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் வெல்கம் சேங்கர் கழகம் மற்றும் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 1,288 ஆரோக்கியமான குழந்தைகளின் மல மாதிரிகளை ஆய்வு செய்தனர். பட மூலாதாரம்,WELCOME SANGER INSTITUTE படக்குறிப்பு,பி.ப்ரீவ், தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகளை பயன்படுத்த குழந்தைகளுக்கு உதவும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மல மாதிரிகள் அனைத்தும், பிரிட்டனில் உள்ள மருத்துவமனைகளில் ஒரு மாதத்திற்கு உள்ளாகப் பிறந்த குழந்தைகளிடம் இருந்து சேகரிப்பட்டன. பெரும்பாலான மாதிரிகள் மூன்று பரந்த குழுக்களாகப் பிரிந்ததை இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதில் வெவ்வேறு பாக்டீரியாக்கள் ஆதிக்கம் செலுத்தின. பி.ப்ரீவ் மற்றும் பி.லோங்கம் பாக்டீரியா குழு, நன்மை செய்யக்கூடியவை எனக் கருதப்படுகிறது. தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பயன்படுத்த அவை குழந்தைகளுக்கு உதவ முடியும் என்று அவற்றின் மரபணு விவரம் தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கு சில நேரங்களில் எ.ஃபேகலிஸ் காரணமாகத் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகப் பூர்வாங்க சோதனைகள் கூறுகின்றன. பல காரணிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES விஞ்ஞானிகளால் ஆய்வில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, பிறந்த முதல் சில வாரங்களில் முழுமையாகவோ அல்லது ஓரளவோ தாய்ப்பால் கொடுக்கப்பட்டது. ஆனால் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது அல்லது ஃபார்முலா பால் கொடுப்பது அவற்றின் குடலில் வாழும் முன்னோடி பாக்டீரியா மீது எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பிரசவத்தின்போது ஆன்டிபயாடிக்குகள் கொடுக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு எ.ஃபேகலிஸ் (Enterococcus faecalis) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும் கண்டறியப்பட்டது. இது ஆரோக்கியத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துமா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் தாயின் வயது, இனம் மற்றும் தாய்க்கு எவ்வளவு குழந்தைகள் உள்ளன என்பன போன்ற பிற காரணிகளும் வளரும் நுண்ணுயிரிகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குழந்தைகளின் நீண்டகால ஆரோக்கியத்தில் இந்த நுண்ணுயிரிகளின் சரியான தாக்கத்தை அறிய மேலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரசவம் மற்றும் தாய்ப்பால் தொடர்பான முடிவுகள் "சிக்கலானவை மற்றும் தனிப்பட்டவை" என்று நிபுணர்கள் கூறுகிறார்கள் (சித்தரிப்புப் படம்) "நாங்கள் 1,200க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் இருந்து உயர் தெளிவுத் திறன் கொண்ட மரபணு தகவல்களைப் பகுப்பாய்வு செய்து மூன்று முன்னோடி பாக்டீரியாக்களை அடையாளம் கண்டுள்ளோம். இவை குடல் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை இயக்கும் பாக்டீரியாக்கள். எனவே நாம் அவற்றை குழந்தைகளின் மைக்ரோபயோம் பிரிவில் வகைப்படுத்தலாம்,” என்று வெல்கம் சேங்கர் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் யான் ஷாவோ கூறுகிறார். "இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் உள்ள கட்டமைப்பு மற்றும் வேறுபாடுகளை காட்சிப்படுத்துவதும் புரிந்துகொள்வதும், ஆரோக்கியமான மைக்ரோபயோமை உருவாக்கப் பயனுள்ள ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையிலான சிகிச்சை முறைகளை உருவாக்குவதற்கான முதல் படியாக இருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார். நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? "இந்த ஆய்வு வாழ்க்கையின் முதல் மாதத்தில் குடல் நுண்ணுயிரிகளை உருவாக்குவது பற்றிய தற்போதைய அறிவை கணிசமாக விரிவுபடுத்துவதாக" இந்த ஆய்வில் பங்கேற்காத, ஸீ பீச்சில் உள்ள லண்டன் குயின் மேரி பல்கலைக் கழகத்தில் நுண்ணுயிர் அறிவியல் விரிவுரையாளராக இருக்கும் டாக்டர் ருய்ரி ராபர்ட்சன் கூறினார். "சமீபத்திய ஆண்டுகளில் நாங்கள் குடல் மைக்ரோபயோம் கலவை, ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை போன்ற பொதுவான குழந்தைப் பருவ நோய்கள் மீது பிறப்பு முறை மற்றும் தாய்ப்பாலின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது பற்றி நிறைய கற்றுக் கொண்டோம்," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES "ஆனால் இது இன்னமும் பயனுள்ள நுண்ணுயிர்-மையப்படுத்தப்பட்ட சிகிச்சையாக உருமாறவில்லை," என்றார் அவர். குழந்தைப் பேறு மற்றும் தாய்ப் பாலூட்டுதல் பற்றிய முடிவுகள் "சிக்கலானவை மற்றும் தனிப்பட்டவை." இதில் சிறந்த வழிகள் என்று வரும்போது, 'அனைத்து அணுகுமுறைகளுக்கும் பொருந்தக்கூடிய' வழி என எதுவும் இருக்க முடியாது என்று லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லூயிஸ் கென்னி கூறினார். "பிறப்பு முறைகள் மற்றும் குழந்தைக்குப் பாலூட்டும் முறைகள், குடல் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, பிற்காலத்தில் இது அவர்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பன பற்றிய முழுமையான தகவல்கள் எங்களிடம் இல்லை. எனவே இந்த ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது," என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆராய்ச்சி யுகே பேபி பயோம் என்ற ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வெல்கம் மற்றும் வெல்கம் சேங்கர் கழகம் இதற்கு நிதியளித்தது. இதில் பங்கேற்றவர்களில் ஒருவரான டாக்டர். ட்ரெவர் லாலி, வயது வந்தோருக்கான ப்ரோபயாடிக்குகளில் பணிபுரியும் ஒரு நிறுவனத்தின் இணை நிறுவனராக இருப்பதோடு, வெல்கம் சேங்கர் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9vnmym9dk8o
  12. பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்து இஸ்ரேல் பிரதமர் அதிரடி: காரணம் என்ன? டெல் அவிவ்: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லன்டை அதிரடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அவரது செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாததால் பதவி நீக்கம் செய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெதன்யாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த சில மாதங்களில் நம்பிக்கை இழந்துவிட்டேன். இதனால் தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரை அப்பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளேன்" என்று கூறப்பட்டுள்ளது. இது இஸ்ரேல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த போரில் 43,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பெரும்பாலான பகுதிகள் இடிபாடுகளாக மாறிவிட்டன. அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலைத் தாக்கி, சுமார் 1,200 பேரைக் கொன்று, 251 பணயக்கைதிகளை காசாவிற்கு அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து போர் தொடங்கியது. இதன் நீட்சியாக தற்போது லெபனான் எல்லைக்குள் உள்ள ஈரானிய ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லாக்களை அழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்து நடவடிக்கையில் இறங்கியது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,002 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 13,492 ஆகவும் உள்ளது. காசா, லெபனான் என இரு முனைகளில் இஸ்ரேல் ராணுவம் முழுவீச்சில் தாக்குதல் நடத்திவரும் சூழலில் பாதுகாப்பு அமைச்சரை யோவ் கெல்லன்டை பிரதமர் பதவி நீக்கம் செய்துள்ளார். அடுத்தது யார்? யோவ் கெல்லன்டுக்கு பதிலாக தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள இஸ்ரல் காட்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்பார் என்று தெரிகிறது. கிடியோன் சார் என்பவர் இஸ்ரேல் நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பதவி நீக்கம் குறித்து யோவ் கெலான்ட் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே என் வாழ்வின் முக்கிய பணியாக இருந்தது.. இனிமேலும் அதுவே தான் இருக்கும்” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/198011
  13. அண்ணை நான் நினைச்சன் சொந்தங்கள் சேர்ந்து சுயேட்சையா நிக்கினமோ என்று!
  14. டொனால்ட் டிரம்ப்: இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக அவரது ஆட்சி எப்படி இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். அவரின் புதிய ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கான அறிகுறிகளை அவரின் கடந்த கால ஆட்சியே கூறியள்ளதாக சில அரசியல் விமர்சகர்கள் தங்களின் கருத்துகளை முன்வைக்கின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு அவர் எங்கே எதை விட்டுச் சென்றாரோ அதைத் தொடர்வார் என்றும் அவர்கள் நம்புகின்றனர். சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றும் திட்டம் அப்படி விட்டுச்சென்ற பல திட்டங்களில், அமெரிக்காவின் தெற்கு எல்லையில், குடியேறிகள் வருவதை தடுக்க தடுப்புச் சுவர் எழுப்புவதும் ஒன்று. அவரின் அந்தத் திட்டத்திற்கு நிதி அளிப்பதற்கான நாடாளுமன்ற ஒப்புதல் அவருக்கு அப்போது கிடைக்கவில்லை. இந்த முறை தேர்தல் பிரசாரத்தின்போது அந்தக் கட்டுமானத்தை விரைவில் முடிப்பேன் என்று கூறியே வாக்கு சேகரித்தார். அதை அவர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் நுழைந்தவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான அவருடைய திட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அவர் நாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில், 2022ஆம் ஆண்டில் 11 மில்லியன் மக்கள் சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறியுள்ளார்கள் என்ற தரவுகளை வெளியிட்டது பியூ ஆராய்ச்சி அமையம். ஆனால் டிரம்ப் மற்றும் அவருடைய பிரசாரம் இந்த எண்ணிக்கைக்கும் அதிகமாக சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர் என்று கூறியுள்ளது. குடியேறிகளை நாட்டைவிட்டு வெளியேற்றும் திட்டமானது அதிக செலவீனத்தைக் கொண்டது என்றும் கடினமானது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் ஆவணப்படுத்தப்படாத பணியாட்கள் முக்கியப் பங்காற்றும் பொருளாதாரத்தின் சில பகுதிகளில் எதிர்மறையான தாக்கம் ஏற்படக் கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, பணவீக்கம், வட்டி விகிதத்தைக் குறைப்பேன், எரிசக்திப் பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்படும் என்றும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக உறுதி செய்யப்பட்ட பிறகு கடந்த ஜூலையில் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்தார். அடுத்த ஆண்டுக்குள் நிறைவடைய உள்ள, அவர் அறிமுகம் செய்த வரிக்குறைப்பை நீட்டிக்க உள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். 2017ஆம் ஆண்டு வரிகளை எளிமைப்படுத்தவும், வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கவும், பல பத்தாண்டுகளுக்குப் பிறகு அறிமுகம் செய்யப்பட்ட வரி மறுசீரமைப்புத் திட்டம் அது. ஆனால் அத்தகைய குறைப்பானது வர்த்தகம் மற்றும் அதிக வசதி படைத்தவர்களுக்கு உதவும் வகையில் அமைந்தது. அதை மாற்றக் கூறி ஜனநாயகக் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர். கார்ப்பரேட் வரிகளை 15% ஆகக் குறைக்கவும், 'டிப்ஸ்' மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான 'சோசியல் செக்யூரிட்டி' பரிவர்த்தனைகளுக்கான வரிகளை டிரம்ப் நீக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு வர்த்தகப் போர்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கடந்த 2021ஆம் ஆண்டு தெற்கு எல்லையைப் பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப் கச்சா எண்ணெய் உற்பத்தியில் அவர் அதிக நாட்டம் செலுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க இது பயன்பட்டது என்று அவர் நம்புகிறார். வருங்காலத்தில் எரிசக்திப் பொருட்களின் விலையை இதைக் கொண்டு குறைக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார். ஆனால் நிபுணர்கள் இதற்கான சாத்தியத்தைச் சந்தேகிக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கும் பொருட்களுக்கு 10 முதல் 20% வரை வரி விதிக்கப்படும் என்றும் சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 60% வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பொருளாதார ஆய்வாளர்கள் இதனால் ஏற்படக்கூடிய பாதகங்களைப் பட்டியலிட்டினர். இது விலைவாசியை அதிகரித்து, அமெரிக்க நுகர்வோர்கள் அதிக பணம் கொடுக்கும் சூழலுக்கு ஆளாகக் கூடும் என்று எச்சரித்துள்ளனர். தன்னுடைய முதல் ஆட்சியின்போது, சீனா நியாயமற்ற வர்த்தக முறைகளைப் பின்பற்றுவதாகவும், அறிவுசார் சொத்துகளைத் திருடுவதாகவும் குற்றம் சுமத்தி வர்த்தகப் போரை துவங்கினார். அவர் நினைத்தது போன்ற மாற்றங்களை கொள்கைகள் மூலமாகக் கொண்டு வர இயலுமா என்பதை அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானிக்கும். கடந்த 2017 முதல் 2019 வரை குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தின் செனெட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்க நாடாளுமன்றம் எப்படிப் பணியாற்றுகிறது என்பது குறித்து முழுமையாக அறியாத காரணத்தால், வெள்ளை மாளிகையில் இருந்த குடியரசுக் கட்சியின் பலத்தையும், நாடாளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மையையும் பயன்படுத்திப் பெரிய கொள்கைகளை அறிமுகம் செய்து டிரம்பால் வெற்றி பெற இயலவில்லை என்று அரசியல் நிபுணர்கள் அந்தக் காலகட்டத்தில் கூறினார்கள். கருக்கலைப்பு தடை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தன்னுடைய முதல் ஆட்சியின்போது, சீனா நியாயமற்ற வர்த்தக முறைகளைப் பின்பற்றுவதாகவும், அறிவுசார் சொத்துகளைத் திருடுவதாகவும் குற்றம் சுமத்தி வர்த்தகப் போரை துவங்கினார். கடந்த 1973ஆம் ஆண்டு கருக்கலைப்பிற்கான அரசியலமைப்பு உரிமையை நிலைநாட்டிய வழக்கின் தீர்ப்பை மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு திரும்பப் பெற்றது. இந்தக் குழுவை நியமித்தவர் டொனால்ட் டிரம்ப். தற்போது மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார் என்று பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். செப்டம்பர் மாதம் கமலா ஹாரிஸுடன் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்வில் நாடு முழுமைக்குமான கருக்கலைப்பு தடைக்கு ஆதரவு வழங்க மாட்டேன் என்று கூறினார். தனிமைவாதம், ஒருதலைப்பட்சவாதம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செப்டம்பர் மாதம் கமலா ஹாரிஸுடன் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்வில் நாடு முழுமைக்குமான கருக்கலைப்பு தடைக்கு ஆதரவு வழங்கமாட்டேன் என்று கூறினார் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தமட்டில், உலகின் பல பகுதிகளில் நடந்து வரும் போர்களில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது என்ற கடந்த ஆட்சியில் அவர் பின்பற்றிய கொள்கைகளையே தற்போதும் பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் யுக்ரேன் போரை நிறுத்துவேன் என்று அவர் கூறியுள்ளார். இது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வலுவாக்கும் என்று ஜனநாயகக் கட்சியினர் வாதாடுகிறார்கள். காஸா மீது இஸ்ரேல் நடத்தும் போரைப் பொறுத்தவரை, அவர் இஸ்ரேலுக்கு ஆதரவானவர் என்ற நிலைப்பாட்டை ஏற்கெனவே கூறிவிட்டார். காஸாவில் நடைபெறும் போரை நிறுத்துவது எப்படி என்று இதுவரை அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. "தனிமைவாதம் மற்றும் ஒருதலைப்பட்ச நிலைப்பாடுகளைக் கொண்ட ஆட்சியாகவே டிரம்பின் ஆட்சியை நான் பார்க்கிறேன். அந்த ஆட்சியில் குறைவான நன்மைகளையே வழங்குகின்றன ஆனால் அது சர்வதேச அளவிலான நிச்சயமற்ற தன்மையை ஆழப்படுத்தும்" என்கிறார் மார்டின் க்ரிஃபித்ஸ். மார்டின் க்ரிஃபித்ஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளைச் சிறப்பாக நடத்தும் மத்தியஸ்தர் என்று அறியப்பட்ட அவர் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைச் செயலாளராகவும், அவசரக் கால நிவாரண ஒருங்கிணைப்பாளராகவும் அவர் பணியாற்றி வந்தார். பட மூலாதாரம்,REUTERS முன்னாள் நேட்டோ அதிகாரியும், எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் வியூகம் மற்றும் பாதுகாப்புப் பிரிவு பேராசிரியருமான ஜேமி ஷியா, டொனால்ட் டிரம்பின் முந்தைய ஆட்சியானது சீர்குலைக்கும் தன்மையைக் கொண்டிருந்தது. ஆனால் அதில் ஒரு தொடர்ச்சி இருந்து வந்தது," என்று கூறுகிறார். "அவர் நாட்டோவில் இருந்து வெளியேறவில்லை. ஐரோப்பாவில் இருந்து தன்னுடைய ராணுவ துருப்புகளை வெளியேற்றவில்லை. யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கிய முதல் அதிபர் அவரே" என்றும் மேற்கோள் காட்டுகிறார் ஷியா. அமெரிக்க வரலாற்றில் இரண்டு முறை (தொடர்ச்சியாக அல்லாமல்) அதிபராகப் பதவியேற்கும் இரண்டாவது அதிபர் டொனால்ட் டிரம்ப். இதற்கு முன்பு க்ரோவர் க்ளீவ்லேண்ட், 1885 முதல் 1889ஆம் ஆண்டு வரை அமெரிக்காவை ஆட்சி செய்தார். அதற்கு அடுத்த தேர்தலில் அவரால் வெற்றிபெற இயலவில்லை. பிறகு 1893ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அவர் 1897ஆம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்தார். முன்னதாகத் தனது வெற்றி உறுதியான பிறகு, புளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "இந்த நாட்டை மீட்டெடுக்க நாங்கள் உதவப் போகிறோம்" என்று கூறினார். “இது அமெரிக்காவின் பொற்காலம்" என்று கூறிய டிரம்ப், "இது அமெரிக்க மக்களுக்குக் கிடைத்த அற்புதமான வெற்றி, இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c86qgpx4z01o
  15. பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் வண்டி, வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் என்பவற்றை மீண்டும் சுகாதார அமைச்சிற்கு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி தலைமையில் செவ்வாய்க்கிழமை (05) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி அவர்களினால் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவிடம் அதற்கான ஆவணங்கள் மற்றும் திறப்புகள் இதன்போது கையளிக்கப்பட்டன. அத்தியாவசியமற்ற செலவுகளை குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கமைய இந்த பிரிவிடம் காணப்பட்ட மனிதவள மற்றும் பௌதீக வளங்கள் சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவை பொதுமக்களின் சுகாதார தேவைகளுக்கென பயன்படுத்தப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/198061
  16. பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் குற்றமற்றவர்கள் என தெரிவித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் விடுவிக்கப்பட்டனர். வவுனியா பெரிய புளியாளங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர், மற்றும் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர். கடந்த 2019 ஆண்டு தை மாதம் வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் தீங்கு விளைவிக்க கூடிய ஆயுதங்களான கிளைமோர் குண்டுகளை உடமையில் வைத்திருந்தனர் என்று கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் பீ அறிக்கை தயார் செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். குறித்த எதிரிகளுக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நிறைவுபெற்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்பட்டு 1996 ஆண்டின் 18 ஆம் இலக்க தீங்குவிளைவிக்கும் ஆயுதசட்டம் 2(1)ஆ பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக எதிரிகளான மூவருக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசதரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால் இறை ஒப்புச்சாட்சியங்கள் எம்பிக்க தவறியமையால் சட்டவிதிகள் வழக்கத்தில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தநிலையில் இன்றையதினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது. அந்தவகையில் தீர்ப்பை அறிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எதிரிகளான மூவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார். https://thinakkural.lk/article/311820
  17. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி: இரண்டாவது முறையாக அதிபராகிறார் படக்குறிப்பு, டிரம்பை அதிபர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தேவையான தேர்வாளர் குழு வாக்குகளை அவர் இன்னும் பெறவில்லை அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகவுள்ளார். ஹிலாரி கிளின்டனை அதிர்ச்சியடைச் செய்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோ பைடன் அவரை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் அதிபராகவுள்ளார் டொனால்ட் டிரம்ப். இதுவரையிலான முடிவுகளின்படி, ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் இதுவரை 279 தேர்வாளர் குழு (எலக்ட்டோரல் காலேஜ்)வாக்குகளைப் பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார். எனவே டிரம்பின் வெற்றி உறுதியாகி விட்டது. முன்னதாக, அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியானபோது, அவர் புளோரிடாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார். கமலா ஹாரிஸைப் பொருத்தவரை, கலிபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், நியூயார்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், ஓரிகன், இல்லினாய்ஸ், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களை வசப்படுத்தியுள்ள அவர் இதுவரையிலும் 219 தேர்வாளர் குழு வாக்குகளைப் பெற்றுள்ளார். டிரம்ப் உரை புளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "இந்த நாட்டை மீட்டெடுக்க நாங்கள் உதவப் போகிறோம்" என்று கூறினார். டிரம்பை அதிபர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையான தேர்வாளர் குழு வாக்குகளை அவர் இன்னும் பெறவில்லை என்றாலும் கூட, தான் வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் அறிவித்துக் கொண்டுள்ளார். “இது அமெரிக்காவின் பொற்காலம்" என்று கூறிய டிரம்ப், "இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த அற்புதமான வெற்றியாகும், இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்" என்றார். “அமெரிக்கர்கள், வரும்காலத்தில் இந்த நாளைப் பற்றி எண்ணிப் பார்க்கையில், இதுதான் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனக் கருதுவார்கள்” என்றார் டிரம்ப். பட மூலாதாரம்,REUTERS மேடையில் தன்னுடன் இருந்த மனைவி மெலனியா மற்றும் தனது குழந்தைகளுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், “அவர் (மெலனியா) ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளார். மக்களுக்கு உதவ மிகவும் கடினமாக உழைக்கிறார்" என்று கூறினார். தனது பிரசாரக் குழுவில் முக்கிய பங்கு வகித்த ஈலோன் மஸ்க் குறித்து பேசிய டிரம்ப், அவரை குடியரசுக் கட்சியின் ‘புதிய நட்சத்திரம்’ என்றும், அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும் விவரித்தார். வடக்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் ஒன்றாக கருதப்படும் வடக்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 தேர்வாளர் குழு வாக்குகளை டிரம்ப் வென்றுள்ளார். வடக்கு கரோலினாவில் இதுவரை 90.1% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், டிரம்ப் 50.7% வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 47.8% வாக்குகளையும் பெற்றுள்ளனர். வடக்கு கரோலினாவின் வெற்றி குடியரசுக் கட்சியினருக்கு முக்கியமானது என்றாலும், இது கடந்த காலங்களில் இந்த மாகாணம் எவ்வாறு வாக்களித்தது என்பதற்கு ஏற்பவே உள்ளது. டிரம்ப், 2016இல் வடக்கு கரோலினாவை 3.66% வித்தியாசத்திலும், 2020இல் 1.34% என்ற சிறிய வித்தியாசத்திலும் வென்றார். ஜனநாயகக் கட்சி கடைசியாக 2008ஆம் ஆண்டு இங்கு வெற்றி பெற்றது. அப்போது முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வெற்றி பெற்றார். பின்னர் ஒபாமா 2012ஆம் ஆண்டில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்ட போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியிடம் இந்த மாகாணத்தை இழந்தார். ஜார்ஜியாவிலும் டிரம்ப் வெற்றி ஜார்ஜியாவில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப், 50.7% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் டிரம்புக்கு கூடுதலாக 16 தேர்வாளர் குழு வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த மாகாணத்தில் 98.4% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கமலா ஹாரிஸ் 48.3% வாக்குகளைப் பெற்றுள்ளார். கடந்த 2020 தேர்தலில் இந்த மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார் பென்சில்வேனியாவைக் கைப்பற்றிய டிரம்ப் வடக்கு கரோலினா, ஜார்ஜியாவைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் மிக முக்கியமான ‘முடிவைத் தீர்மானிக்கும் மாகாணமான’ பென்சில்வேனியாவில் வெற்றி பெற்று, அதன் 19 தேர்வாளர் குழு வாக்குகளை வென்றுள்ளார் டிரம்ப். இங்கு டிரம்ப் 50.9% வாக்குகளைப் பெற்றுள்ளார், கமலா ஹாரிஸ் 48% வாக்குகளைப் பெற்றுள்ளார். அமெரிக்க செனட் சபையைக் கைப்பற்றும் குடியரசுக் கட்சி அமெரிக்க செனட் சபையை குடியரசுக் கட்சி கைப்பற்றும் என்று பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி முகமை கணித்துள்ளது. இன்னும் வாக்கு எண்ணிக்கை முழுமையடையவில்லை, ஆனால் ஜனநாயகக் கட்சியினர் தனிப் பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளில், அமெரிக்க செனட் சபையில் 51 இடங்களை குடியரசுக் கட்சியினரும், 40 இடங்களை ஜனநாயகக் கட்சியினரும் பெற்றுள்ளனர். ஒரு இடத்தை சுயேட்சை வேட்பாளர் பெற்றுள்ளார். 8 இடங்களுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க செனட் சபையில் பெரும்பான்மையை பெற ஒரு கட்சிக்கு 51 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. தீர்மானிக்கும் மாகாணங்களில் என்ன நடக்கிறது? அமெரிக்க அதிபரைத் தீர்மானிக்கும் 7 முக்கிய மாகாணங்களில் வடக்கு கரோலினா, ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியா ஆகியவற்றில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் மற்ற தீர்மானிக்கும் மாகாணங்களில் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி, அரிசோனா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மற்ற 4 மாகாணங்களிலும் டிரம்பே முன்னிலை வகிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பென்சில்வேனியாவில் டிரம்ப் 50.9% வாக்குகளைப் பெற்றுள்ளார் கமலா ஹாரிஸ் தரப்பு என்ன செய்கிறது? “இன்றிரவு கமலா ஹாரிஸ் இங்கு வரமாட்டார்" என்று பிரசாரக் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் அறிவித்த பின்னர், ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்தில் கூடியிருந்த கூட்டம் கிட்டத்தட்ட காணாமல் போனது. வடக்கு கரோலினா, ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய 3 முடிவை தீர்மானிக்கும் மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் உற்சாக மனநிலையை இழந்துவிட்டனர். சில மணிநேரங்களுக்கு முன்புவரை கூட, ஹாவர்ட் பல்கலைக்கழக வளாகத்தில் கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் குழுமியிருந்தனர். ஆனால் பின்னர் அவர்கள் கலைந்து செல்லத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இன்று இரவு நடக்கவிருந்த கொண்டாட்ட நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாகவும், கமலா ஹாரிஸ் உரை நிகழ்த்தப் போவதில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்? அமெரிக்க அதிபர் தேர்தலின் முதல் வாக்கெடுப்புகள் செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க நேரப்படி மாலை 6 மணிக்கு (1800 EST), அதாவது இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு முடிவடைந்தது. கடைசி வாக்கெடுப்புகள் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு (0100 EST), அதாவது இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு முடிவடையும். சில அதிபர் தேர்தல்களில், வெற்றி பெற்றவர் யார் என்பது தேர்தல் நாளன்று இரவில் தாமதமாகவோ அல்லது அடுத்த நாள் அதிகாலையிலோ அறிவிக்கப்படும். இந்த முறை, பல மாகாணங்களில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால், யார் வெற்றியாளர் என்பதை விரைவாக அறிவிப்பதில் சிக்கல் ஏற்படலாம். ஆனால் வெற்றி யாருக்கு என்பதை முன்கூட்டியே எளிதில் கணிக்கக்கூடிய வகையில் இருந்த மாகாணங்களில் இருந்து, எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எனவே மிகக் குறைவான வாக்கு வித்தியாசமே இருந்தால், அது மறு வாக்கு எண்ணிக்கையின் அறிகுறியாக இருக்கலாம். உதாரணமாக, பென்சில்வேனியாவில், வெற்றியாளருக்கும் தோல்வியுற்றவருக்கும் இடையில் 0.5 சதவீத வாக்கு வித்தியாசம் மட்டுமே இருந்தால், மறுவாக்கு எண்ணிக்கை தானாகவே நடைமுறைக்கு வந்துவிடும். 2020ஆம் ஆண்டில், இந்த வித்தியாசம் 1.1 சதவீதமாக இருந்தது. சட்ட ரீதியான சிக்கல்கள் எழவும் சாத்தியங்கள் உள்ளன. ஏற்கனவே,100க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வாக்காளர் தகுதி மற்றும் வாக்காளர் பட்டியல் நிர்வாகத்தை எதிர்த்து குடியரசுக் கட்சியினரால் தாக்கல் செய்யப்பட்டவை ஆகும். கடந்த தேர்தலை விட இம்முறை குறைவான தபால் வாக்குகளே பதிவாகியுள்ளன. 2020 அதிபர் தேர்தல் கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறுகிறது? வழக்கமாக, தேர்தல் நாளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் முதலில் கணக்கிடப்படும். அதைத் தொடர்ந்து முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குகள், தபால் வாக்குகள், சந்தேகத்திற்குரிய வாக்குகள், பின்னர் வெளிநாட்டு மற்றும் ராணுவ வாக்குகள் கணக்கிடப்படும். உள்ளூர் தேர்தல் அதிகாரிகள் கேன்வாசிங் (Canvassing) என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையில் தனிப்பட்ட வாக்குகளைச் சரிபார்க்கிறார்கள் மற்றும் எண்ணுகிறார்கள். கேன்வாசிங் செயல்முறையில் யார் பங்கேற்கலாம், வாக்குகள் செயலாக்கப்படும் வரிசை மற்றும் எந்தெந்த பகுதிகள் பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன, வாக்கு எண்ணிக்கையில் பக்கச்சார்பான பார்வையாளர்கள் எவ்வாறு கண்காணிக்கலாம் மற்றும் தலையிடலாம் என்பது உள்பட ஒவ்வொரு மாகாணத்திலும் வட்டாரத்திலும் தேர்தல் தொடர்பான கடுமையான விதிகள் உள்ளன. குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக முடிவுகள் வெளியானால், அது செய்தி ஊடகங்கள் தங்கள் கணிப்புகளை வெளியிடக் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாது அத்தகைய முடிவுகள் மறுவாக்கு எண்ணிக்கை மற்றும் சட்டரீதியான சவால்கள் போன்ற பெரிய பிரச்னைகளையும் எழுப்புகின்றன. அதிபர் தேர்தல் முடிவுகளில் சிக்கல் ஏற்பட்டால் என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒவ்வொரு அதிகாரப்பூர்வ வாக்கும் இறுதி முடிவுகளில் சேர்க்கப்பட்டவுடன், மறுவாக்கு எண்ணிக்கை போன்ற செயல்முறைகள் முடிந்த பிறகு, தேர்தல் முடிவுகள், முதலில் உள்ளூர் அதிகார வரம்புகளில், பின்னர் மாகாண அளவில், சான்றளிக்கப்படுகின்றன. பிறகு ஒரு மாகாண நிர்வாகி (பொதுவாக ஆளுநர்) ‘தேர்வாளர் குழுக்களில்’ தங்கள் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர்களின் பட்டியலுக்கு சான்றளிக்கிறார். இந்த வாக்காளர்கள் டிசம்பர் 17 அன்று அந்தந்த மாகாணங்களில் கூடி வாக்களித்து, அதை வாஷிங்டனுக்கு அனுப்புகிறார்கள். ஜனவரி 6 அன்று, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை கூடி, தேர்வாளர் குழு வாக்குகளை எண்ணும் செயல்முறையில் ஈடுபடும். அதற்கு தற்போதைய துணை அதிபர் தலைமை தாங்குவார். புதிய அதிபர் எப்போது பதவி ஏற்பார்? இந்த தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்படுபவர், 2025, ஜனவரி 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தின் மைதானத்தில் அறிமுகப்படுத்தப்படுவார். அமெரிக்க வரலாற்றில் நடைபெறவிருக்கும் 60வது அதிபர் பதவியேற்பு விழா இது. இந்த நிகழ்வில் புதிய அதிபர் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான உறுதிமொழியுடன் பதவியேற்பார், பின்னர் தொடக்க உரையை நிகழ்த்துவார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdxvkwnj9pgo
  18. யாழில் பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் போராட்டம் யாழ். கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்று புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். சபைக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர் ஊழியர்களுடன் நடந்து கொள்ளும் அநாகரிகமாக செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, “NPP அரசே தகுதயற்ற புதிய தலைவர் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய், பனை தறித்த காசுதான் ஊழியர்களின் ஊதியமா?, நிர்வாக திறன் அற்ற பதில் பொதுமுகாமையாளரை உடனடியாக பதிவி நீக்கம் செய், NPP அரசே செல்வினின் பதவி நீக்கத்திற்கு தகுந்த காரணம் கூறு, அண்ணன் பதில் முகாமையாளர் ஊழலை மறைக்க தங்கை உள்ளக கணக்காய்வாளர், பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் தண்டச் சோறுகளா?, ஊழலற்ற அரசின் தலைவர் நியமனம் இதுவா? என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதிவியேற்ற பின்னர் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக செல்வின் நியமிக்கப்பட்டார். அவர் தனது கடமைகளை பெறுப்பேற்று சில தினங்களின் அவர் மாற்றப்பட்டு புதிய தலைவராக விநாயகமூர்த்தி சகாதேவன் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198064
  19. இந்திய நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மட்டு.போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை அலகு திறந்து வைப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்திரசிகிச்சை பிரிவை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித குணரத்ன மகிபால ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன், கிழக்கு மாகாண சுகாதார செயலாளரும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருமான சிவலிங்கம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கலராஞ்சனி கணேசலிங்கம், சுகாதார அமைச்சு, கிழக்கு மாகாண சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக அலகுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள், மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இம்மருத்துவமனை விடுதிகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மற்றும் அங்கு இடம்பெறும் அதிகளவான அறுவை சிகிச்சைகள் காரணமாக இம்மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை பிரிவுக்கான தேவை 2015 ஆம் ஆண்டில் உணரப்பட்டிருந்தது. இதற்கான திட்டம் முன்மொழியப்பட்ட காலத்தில், சுமார் 1280 நோயாளிகள் சத்திர சிகிச்சைக்காக காத்திருப்புப் பட்டியலில் இருந்தனர். இங்கு போதிய வசதிகள் இல்லாததால், நோயாளர்கள் அதிக காலப்பகுதிக்கு காத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இங்கு புதிய சத்திர சிகிச்சை பிரிவு ஒன்றை நிர்மாணிப்பதற்கான உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியது. இந்த திட்டப்பணிக்காக 275 மில்லியன் இலங்கை ரூபாவை நன்கொடை உதவியாக வழங்க இந்தியா தீர்மானித்த நிலையில் 2016 பெப்ரவரியில் அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன் பின்னர் இந்திய அரசு கூடுதல் நிதியை குறித்த திட்டத்துக்காக ஒதுக்கிய நிலையில் இத்திட்டத்திற்கான மொத்த இந்திய ஒதுக்கீடு SLR 302 மில்லியனாக உயர்வடைந்தது. IT சார்ந்த பணிகள், தொழில்நுட்ப வேலைகள், மின்சார வசதிகள், நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வடிகால் அமைப்புகள் போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்புகளுடனான நான்கு அதிநவீன சத்திரசிகிச்சை கூடங்கள் மற்றும் பத்து ICU கட்டில்களுடன் 1464 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு மாடிக் கட்டடங்களை அமைக்கின்றமையே இத்திட்டத்தின் பரந்த உள்ளட்டக்கமாகும். இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் ஏனைய பொருளாதார சிக்கல்கள் காரணமாக இத்திட்டத்தில் சில சவால்கள் ஏற்பட்ட நிலையில், இத்திட்டமானது அண்மையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், இச்சத்திர சிகிச்சை அலகானது பரீட்சார்த்த செயற்பாடுகளின் பின் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக, இம்மருத்துவமனை அதிகாரிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில், மின்பிறப்பாக்கி, மருத்துவ வாயு மற்றும் அருகிலுள்ள சிறுநீரக பராமரிப்பு அலகிலிருந்து மின் வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான் வழிவகைகளை அமைத்தல் போன்ற மேலதிக வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்தியா மேலதிக உதவிகளை வழங்கியது. இந்நிலையில், நவம்பர் 4 ஆம் திகதி நடைபெற்ற திறப்பு விழாவில், உரை நிகழ்த்திய இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் மஹிபால அவர்கள், மருத்துவமனையால் முக்கியமான மருத்துவ சேவைகளை தடையின்றி வழங்குவதில் இந்த அலகானது குறிப்பிடத்தக்க தேவையை பூர்த்தி செய்யும் எனக் குறிப்பிட்டதுடன், இந்த திட்டத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நன்றியையும் தெரிவித்தார். அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சனி கணேசலிங்கம் அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சத்திரசிகிச்சைப் பிரிவினால் சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் 50 வீதத்தால் குறைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன், ஆண்டுதோறும் 3,000 முதல் 5,000 வரையிலான புதிய நோயாளர்கள் பயனடைவார்கள், இதனால் பிராந்தியத்தில் தரமான சுகாதாரப் பராமரிப்பு சேவைக்கான அணுகல் கணிசமான அளவில் முன்னேற்றமடைகின்றது எனச் சுட்டிக்காட்டினார். இதேவேளை இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்கள், இலங்கையில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில், முதலீட்டினை அடிப்படையாகக் கொண்டும் நன்கொடை உதவி-அடிப்படையிலும் முன்மொழியப்பட்ட பணித்திட்டங்கள், ஏற்கனவே திட்டமிடப்பட்ட மற்றும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இருதரப்பு திட்டங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தார். முதலீட்டு திட்டங்களின் அடிப்படையில், தாங்கி தொகுதிகள் அபிவிருத்தி, சம்பூரில் சூரியசக்தி மின் உற்பத்தி ஆலை மற்றும் பல்பொருள் குழாய் இணைப்பு ஆகியவற்றை இவற்றுக்கான உதாரணங்களாக குறிப்பிட்டிருந்தார். அத்துடன், அபிவிருத்தி உதவித்திட்டங்களின் அடிப்படையில், மொத்தம் 46,000 வீடுகளை உள்ளடக்கிய இந்திய வீட்டுத்திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 4000 வீடுகளை நிர்மாணித்தமை மற்றும் புனரமைத்தமை, 2009-10 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இந்திய அவசர மருத்துவ நிலையங்களில் சிகிச்சை அளித்தமை, அம்மாகாணத்தின் மீனவ சமூகத்திற்கு அந்தந்த காலப்பகுதிகளில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள், திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் ரயில்-பேருந்து சேவை அமைக்கப்பட்டமை, கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் வந்தாறுமுல்லை மற்றும் ஒந்தாச்சிமடத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் அந்நிலையங்களுக்கான உபகரண விநியோக திட்டங்கள், வாழ்வாதார நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மேம்பாட்டுக்கான ஆதரவு, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்கும் பொருளாதார ரீதியான ஆதரவு தேவைப்படும் மாணவர்களுக்கான நிதி உதவிகள் மற்றும் ஏனைய முக்கிய திட்டங்கள் தொடர்பாக அவர் இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டியிருந்தார். மேலும் கடந்த ஆண்டில் 2.35 பில்லியன் இலங்கை ரூபாவை புதியதொரு திட்டமாக கிழக்கு மாகாணத்தின் பல் நோக்கு உதவிகளுக்காக நன்கொடையாக வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்திருந்ததாக உயர் ஸ்தானிகர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார். இந்த திட்டத்தின் கீழ் 33 வாழ்வாதார உதவி திட்டங்களுக்கான ஒத்துழைப்புக்கான கட்டமைப்பின் உருவாக்கம் நிறைவடையும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சத்திர சிகிச்சை அலகானது இலங்கையின் சுகாதாரத்துறையில் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்களின் நீண்டதொரு பட்டியலில் இணைந்துகொள்கின்றது. இப்பட்டியலில் மிகவும் முக்கியமான உதாரணங்களாக நாடளாவிய ரீதியிலான 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை, அதேபோல ஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதிகளிலும் கொவிட் 19 பெருந்தொற்று ஏற்பட்ட காலப்பகுதிகளிலும் வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள், டிக்கோயாவில் நிர்மாணிக்கப்பட்ட 150 கட்டில் வசதிகளைக் கொண்ட மருத்துவமனை, உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் மற்றும் மேம்பாடு, யாழ் போதனா வைத்திய சாலை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனைகளுக்கான சாதனங்கள் விநியோகம் மற்றும் ஏனைய திட்டங்கள் காணப்படுகின்றன. https://thinakkural.lk/article/311806
  20. அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பின் வெற்றிக்கு காரணமான மாகாணங்கள் எவை? முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 50 மாகாணங்கள் மற்றும் தலைநகர் வாஷிங்டனை உள்ளடக்கிய கொலம்பியா மாவட்டம் ஆகியவற்றில் பெரும்பாலான மாகாணங்களில் முடிவுகள் வெளியாகிவிட்டன. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்குத் தேவையான வாக்குகளைப் பெற்றுவிட்டார். எந்த மாகாணத்தில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்பதைப் பார்க்கலாம். டொனால்ட் டிரம்ப் வென்ற மாகாணங்கள் என்னென்ன? மான்டனா - 4 வட டகோட்டா - 3 தெற்கு டகோட்டா - 3 வியோமிங் - 3 உட்டா - 6 ஒக்லஹாமா - 7 டெக்சாஸ் - 40 அர்கான்சஸ் - 6 மிஸோரி - 10 லூசியானா - 8 மிஸிஸிப்பி - 6 அலபாமா - 9 புளோரிடா - 30 தெற்கு கரோலினா - 9 டென்னஸி - 11 கென்டக்கி - 8 இண்டியானா - 11 ஒஹையோ - 17 மேற்கு விர்ஜீனியா - 4 இடாஹோ - 4 அயோவா - 6 வடக்கு கரோலினா - 16 விஸ்கான்சின் - 10 கமலா ஹாரிஸ் வென்ற மாகாணங்கள் என்னென்ன? கலிபோர்னியா - 54 கொலராடோ - 10 இல்லினாய்ஸ் - 19 நியூயார்க் - 28 மாசசூசெட்ஸ் - 11 டெலவர் - 3 மேரிலேண்ட் - 10 கொலம்பியா மாவட்டம் (வாஷிங்டன் டி.சி) - 3 ரோட் ஐலேண்ட்- 4 வெர்மான்ட் - 3 ஒரேகான் - 8 வாஷிங்டன் - 12 ஹவாய் - 4 விர்ஜீனியா - 13 நியூஜெர்சி - 14 முடிவைத் தீர்மானிக்கும் போர்க்கள மாகாணங்களில் யாருக்கு வெற்றி? முடிவைத் தீர்மானிக்கும் 7 மாகாணங்களிலும் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் மற்றும் ஜார்ஜியாவில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசோனா - 11 நெவேடா - 6 விஸ்கான்ஸின் - 10 - டிரம்ப் மிச்சிகன் - 11 பென்சில்வேனியா - 19 - டிரம்ப் ஜார்ஜியா - 16 - டிரம்ப் வடக்கு கரோலினா - 16 - டிரம்ப் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ckgv30p42rno
  21. தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தான விடயம் என ஜேவிபியின் ஸ்தாபக தலைவர் ரோகண விஜய வீரவின் மகன் உவிந்து விஜயவீர எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது அரசியல் ரீதியில் பேரழிவாக அமையும் என இரண்டாவது தலைமுறை கட்சியின் பொதுச்செயலாளரான உவிந்து விஜயவீர தெரிவித்துள்ளார். ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு கிடைத்தால் உருவாகக்கூடிய விளைவுகள் குறித்து வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 1977 பொதுத்தேர்தலில் மிகப்பெரும் பெரும்பான்மையை பெற்ற பின்னர் ஜேஆர் ஜெயவர்த்தன முன்னெடுத்த அரசியல் தந்திரோபாயங்கள் குறித்து நினைவுபடுத்தியுள்ள ரோஹன விஜயவீரவின் மகன், அவ்வாறானதொரு நிலைமையை நாடு தாங்காது என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வதற்காக ஊழல் அரசியல்வாதிகளை தோற்கடிக்கவேண்டும் என்ற தேசிய மக்கள் சக்தியின் பிரகடனம் பிழையானது என நான் கருதவில்லை, ஆனால் புதிய பழைய கட்சிகளில்இருந்து புதியவர்கள் பலர் போட்டியிடும் இந்த தருணத்தில் வாக்காளர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டும் என அழுத்தம் கொடுப்பது சரியானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிதாக தேர்தலில் போட்டியிடும் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைக்கு வாக்காளர்கள் பலியாகவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/198053
  22. சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லையென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தகவலை தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகள் குறிப்பாக சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பு நீக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். அப்படி எந்த நீக்கமும் செய்யப்படவில்லை. 30 வரை குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். அது தவறு. அவருக்கு தற்போது 57 பேர் வழங்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/311801

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.