Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் கடன்களை மீள செலுத்துவது பெரிய விடயமல்ல என தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க தற்போது 98ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றுள்ளார். அரசாங்கம் இவ்வாறு பயணிக்குமாக இருந்தால் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக வேண்டிவரும் என புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கலாம். அதிகாரத்துக்கு வந்தால் செய்வதாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கலாம். ஆனால் தேர்தல் மேடைகளில் வாய்சவடால் அரசாங்கம் செய்ய முடியாது. அது மிகவும் கஷ்டமானதாகும். மக்கள் விடுதலை முன்னணி இவ்வளவு காலமும் அரசாங்கத்தை விமர்சித்து வந்து. தற்போது மக்கள் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கம் செய்வதை மக்களுக்கு தற்போது கண்டுகொள்ளலாம். அரசாங்கத்தின் வெளிநாட்டு கடனான 42 பில்லியன் டொலரை செலுத்துவது பாரிய விடயமா என அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடையில் தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாமல் தற்போது 98ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளார். அது மாத்திரமல்லாது பணம் அச்சிட்டுள்ளார்கள். ரணில் விக்ரமசிங்க பணம் அச்சிடாமலே மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார். அதேபோன்று ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு இந்தளவு வாகனம் எதற்கு என அவர் கேட்டிருந்தார். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார வரும்போது அவருக்கு பாதுகாப்புக்காக 6 வாகனங்கள் வருகின்றன. தேர்தல் பிரசார கூட்டத்துக்குள் வரும்போது 5 வாகனங்களை வெளியில் நிறுத்திவிட்டு ஒரு வானத்திலே வருகிறார். மக்களை ஏமாற்றுவதற்கே இவ்வாறு செயற்படுகிறார்கள். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அதிகாரத்துக்கு வந்த இந்த அரசாங்கம், அதிகாரத்துக்கு வந்து ஒரு தாதம் கடந்தும் எந்த மாற்றத்தையும் செய்ய வில்லை. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை குறைப்பதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ஆனால் நாட்டை முன்னேற்ற எந்த வேலைத்திட்டமும் இவர்களிடம் இல்லை. அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தற்போது கடவுச்சீட்டு இல்லாமையால் திரும்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் இயலாமையை மக்கள் தற்போது கண்கிறார்கள். அதனால் அரசாங்கம் இவ்வாறு பயணிக்குமாக இருந்தால், ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக வேண்டி வரும் என்றார். https://www.virakesari.lk/article/197682
  2. இலங்கை - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகளும் காலியில் நடைபெறும் (நெவில் அன்தனி) இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கைக்கு ராசியான மைதானம் என நம்பப்படும் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் 2023 - 2025 தொடரான இந்தத் தொடர் அடுத்த வருடம் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி 2025 ஜனவரி 29ஆம் திகதியிலிருந்த பெப்ரவரி 2ஆம் திகதிவரையும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்ட பின்னர் அவுஸ்திரேலிய அணியினர் ஜனவரி 20ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். https://www.virakesari.lk/article/197669
  3. மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் தெளிவுபடுத்தல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி அலுவலகம் பின்வரும் பலன்களை அவருக்கு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கின்றது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவரின் ஓய்வூதியத்துக்கும், கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் செயலக கொடுப்பனவுக்கும் உரித்துடையவர். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 03 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், Mercedes Benz -600 maybatch (B/P) car 2008, Toyota Land Cruiser – 2017, Mercedes Benz – G63 AMG 4*4 2850 jeep 2013 ஆகிய 03 வாகனங்கள் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்காக மாதாந்த எரிபொருள் கொடுப்பனவாக 1950 லீற்றர் வழங்கப்படுவதுடன், அந்த வாகனங்களுக்காக மூன்று சாரதிகள் வழங்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள இராணுவம் மற்றும் கடற்படை வீரர்களுக்கு மேலதிகமாக 180 இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் 29 பொலிஸ் சாரதிகளும் கடமையில் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மதிப்பிடுவதற்கு தற்போது அமைச்சரவை உபகுழுவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் இது தொடர்பில் தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். https://www.virakesari.lk/article/197684
  4. ஜனாதிபதி நல்லாட்சி காலத்தில் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்க முன்னெடுத்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்றப் போவதான அறிவிப்பு சரித்திரத்தில் முதல் தடவையாக விரும்பி ஏற்றுக்கொள்கின்ற மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கும் எங்களுடைய தலைவிதியை அடிப்படையிலே மாற்றி அமைக்கக்கூடிய தேர்தலாக இருக்கின்றது என மக்களை எச்சரிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். எனவே, இந்த வரலாற்று மாற்றத்தை தடுக்க இந்த முறை எமது கட்சி 10 பேரை நாடாளுமன்றம் அனுப்ப மக்கள் ஆணை வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு அரசடி தெய்வநாயகம் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (31) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில், இந்த தேர்தல் விசேடமாக தமிழ் மக்களுடைய தலைவிதியை மாற்றி அமைக்கக்கூடிய ஒரு தேர்தலாக சமகால அரசியல் ஆக்கிவிட்டது என்ற கருத்து மேலோங்கியுள்ளது. ஆனால், ஒரு தேர்தல் எம்முடைய தலைவிதியை முற்றுமுழுதாக மாற்றி அமைக்கக்கூடிய அளவிற்கு முக்கியத்துவம் பெறுவது என்பது மிகவும் குறைவு. அப்படிப்பட்ட தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. இன்று ஜனாதிபதியாக இருக்கும் ஜே.வி.பி கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி அமைப்பின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை நிறுவுவதன் ஊடாகவும் 2015 மைத்திரி - ரணில் நல்லாட்சி காலத்திலே புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முன்னெடுக்கப்பட்டு 2017 செட்டெம்பர் 19 ஒரு இடைக்கால அறிகையை வெளியிட்டது. அந்த அறிக்கையை தேர்தலுக்கு பின்னர் அதனை நிறைவேற்றி தீர்வு வழங்கப்படும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். எனவே, அந்த இடைக்கால அறிக்கையில் இருப்பது என்ன? அந்த அறிக்கையின் விடயங்களை சரியாக பார்க்க வேண்டும். அந்த அறிகை தயாரித்தபோது வட கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்று அந்த அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஏக மனதாக ஆதரவு வழங்கினர். அந்த நம்பிக்கையில் தான் அனுரகுமார திஸாநாயக்க சர்வதேச மட்டத்துக்கு ஒரு செய்தியை அனுப்பக்கூடிய வகையிலே அந்த இடைக்கால அறிக்கையை தான் நிறைவேற்றப் போவதாக துணிந்து அறிவித்துள்ளார். அந்த இடைக்கால அறிக்கையில் இன்றைக்கு இருக்கும் ஒற்றையாட்சியை விட ஒரு இறுக்கமான ஒற்றையாட்சி முறைமையை கொண்ட பண்பாக அமைந்துள்ளதுடன் அதன் முன்னுரையில் மைத்திரியின் பேச்சின் சாரம்சமே முன்னுரையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒற்றையாட்சி முறைமையை உலகத்துக்கு முதலில் அறிமுகப்படுத்தியது பிரித்தானியா. அங்கும் இன்று வரையும் ஒற்றையாட்சி நடைமுறையில் இருக்கிறது. அங்கு இருக்கின்ற ஒற்றையாட்சி அங்கு இருக்கக்கூடிய நான்கு இனங்களுக்கு தேச அங்கீகாரத்தை வழங்குகிறது. அது மட்டுமல்ல, அதையும் தாண்டி ஸ்கொட்லாந்து பிரிந்து போவதற்கு கூட அனுமதி வழங்கியுள்ளனர். ஆகவே, மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்குரிய ஒற்றையாட்சி அப்படிப்பட்ட பண்புகளை கொண்டதாக இருக்க முடியாது; எனவே இலங்கைக்கு என ஒரு ஒற்றையாட்சி முறைமையை தேடிப்பிடிக்க வேண்டும் என்றார். ஒரு முற்போக்குவாத சிந்தனையில் உலகத்திலே ஏனைய நாடுகளில் இருக்கக்கூடிய ஒற்றையாட்சி முறைமைகளை மாற்றி அமைத்து பல இனங்கள், தேசங்கள் கொண்ட நாடுகளில் அங்கு இருக்கக்கூடிய தேசங்களுக்கு ஒரு அங்கத்துவத்தை சமத்துவத்தை வழங்கி ஒற்றையாட்சியை அமர்த்தி வாசித்து அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய வேறுபாடுகளை கொண்டாடி அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் போக்கு இலங்கைக்கு பொருந்தாது என இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஒற்றையாட்சியா? சமஸ்டி ஆட்சியா என தீர்மானிப்பது ஒரு நாட்டின் இறைமையே. அந்த இறைமை எந்த வகையில் அமைந்துள்ளது என்பதை வைத்துதான் ஒற்றையாட்சியா, சமஸ்டி ஆட்சியா என நீதிமன்றங்கள் தீர்மானிக்கும். இலங்கைக்கு 13ஆவது திருத்தமாக கொண்டுவரப்பட்ட மாகாண சபையை நிறைவேற்ற ஆராய்ந்தபோது இலங்கையில் இருப்பது ஒற்றையாட்சி. எனவே இந்த மாகாண சபை முறைமை கூட இந்த ஒற்றையாட்சிக்குள் இருப்பதாகவும் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுகின்ற முதலமைச்சர் கையில் எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. மாறாக ஜனாதிபதி நியமிக்கும் ஆளுநரின் கையில்தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கும். அதனால் இலங்கையின் மாகாண சபை முறைமை ஒரு ஒற்றையாட்சி முறைமையை மீறவில்லை என பிரகடனப்படுத்தியுள்ளனர். அந்த தீர்ப்பு 1987 வழங்கியதன் பின்னர் அதை ஆமோதிப்பதற்கு 32 வருடத்துக்கு மேலாக உச்ச நீதிமன்றம் வழங்கி இன்று இருக்கின்ற ஓற்றையாட்சியை மிக வலிமையாக உறுதிப்படுத்த கூட அது போதாது என்று இந்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்றுவதற்கு அன்றை அரசாங்கம் முயற்சித்தது. எனவே எங்களுக்கு இருக்கும் சவால்... இந்த ஆட்சியில் இருக்கும் அனுர தலைமையிலான ஜே.வி.பி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். தாங்கள் ஆட்சியை பிடிப்பதாக அவர்கள் 30 வருடங்களாக அரசியல் செய்துகொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டனர். அதில் 3 தொடக்கம் 5 வீதமான வாக்கை பெற்ற இவர்கள் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் வேலை செய்து கட்டமைப்பு ரீதியாக தெற்கிலே ஒரு அமைப்பை வைத்துக்கொண்டு, 4 பேருக்கு மேல் பிரதிநிதியை எடுக்கமுடியாத சூழலை வைத்துக்கொண்டு அதிசயமாக ஜனாதிபதி தேர்தலில் 43 வீத வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த 43 வீதம் அவர்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டே இவர்களுடைய செயற்பாட்டையும் திட்டங்களையும் முற்று முழுதாக உள்வாங்கிக்கொண்டு வாக்களிக்கவில்லை என அவர்களுக்கு நன்றாக தெரியும். மற்றவர்கள் இந்த நாட்டை கொள்ளையடித்து மாறி மாறி இந்த நாட்டை வங்குரோத்து நிலமைக்கு கொண்டு போயுள்ள கோபத்திலே மற்ற தரப்புக்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என மக்கள் முடிவெடுத்திருந்த சூழ்நிலையில் தான் அவர்களுக்கு வாக்களிக்காமல் இன்னொரு தரப்பான தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கலாம் என்ற அடிப்படையில்தான் ஜனாதிபதி தேர்தலில் இந்த 43 வீத வாக்கு பெற்றனர். ஒரு அதிசயமாக கிடைத்த அந்த 43 வீத வாக்கை, தங்களது இருப்பை உறுதிப்படுத்த வேண்டும். அந்த வாக்குகள் எதிர்காலத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டுமாயின் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? மற்றவர்களை போல தெற்கில் இருக்கும் மக்களை ஏமாற்றக்கூடாது என்பதுடன் தேர்தலுக்கு முன்பாக வைக்கும் கருத்தை தேர்தலுக்கு பின்னால் அதனை உறுதிப்படுத்துவதன் மூலமும், தான், வாக்களித்த மக்களை கவர்ந்து, நம்பிக்கையை தங்கள் மீது ஏற்படுத்தி, அவர்களை நிரந்தரமாக தங்களுடைய ஒரு வாக்கு வங்கியாக மாற்றி அமைக்கலாம். அந்த சூழலிலேதான் ஜனாதிபதி அனுர மிகவும் மோசமான பிற்போக்குவாதமாக உருவாக்கப்பட்ட இந்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு நன்றாக தெரியும் வட கிழக்கில் தமக்கு செல்வாக்கு கிடையாது என. ஆனால் அந்த இடைக்கால அறிக்கை கொண்டுவரும் பொழுது தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் அதை ஆதரிப்பார்கள் என. அது தான் அவர்களுக்கு முக்கியமான தேவை. 2015 வடகிழக்கில் தெரிவு செய்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை ஆதரித்தனர் என்றால் எதிர்வரும் தேர்தலிலே வரும் பிரதிநிதிகள் குறைந்தது 10 பேராவது ஆதரிப்பார்கள். அவர்களது எதிர்பார்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் துணிந்து தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த இடைக்கால அறிக்கையின் நிறைவின் ஊடாக அமையும் என தெரிவித்தார். எனவே அனுரவுக்கு நம்பிக்கையான தரப்பு யார்? அன்று அந்த 18 பேரும் யார்? அதில் 16 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பு. அவர்கள் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கும்போது சமஸ்டிக்கான தீர்வினை பெற ஆனையை வழங்குமாறு கேட்டனர். அதனை மக்கள் நம்பி அமோக வெற்றியை கொடுத்தார்கள். அதில் மட்டக்களப்பு மண் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது. அவர்கள் வென்று நாடாளுமன்றம் சென்ற அடுத்த நிமிடம் இந்த ஒற்றையாட்சிக்கு இணங்கினார்கள். இவர்கள் தற்போது பிரிந்து கேட்டாலும் நாடாளுமன்றத்துக்கு 10 பேர் சென்று அறுதி பெரும்பான்மை காண்பிப்பார்கள் என்பதே அனுரவின் நம்பிக்கை. எனவே சரித்திரத்தில் முதல் தடவையாக தமிழரே ஒற்றையாட்சியை விரும்பி ஏற்றுக் கொள்கின்ற மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கான ஒரு முயற்சியாக 14ஆம் திகதி தேர்தல் அமையக்கூடும். அந்த வரலாற்று மாற்றத்தை தடுக்கக்கூடிய ஒரே ஒரு தரப்பு எம்முடைய மக்கள். அதனால்தான் நாங்கள் இந்த தேர்தல் எங்களுடைய தலைவிதியை அடிப்படையிலே மாற்றி அமைக்கக்கூடிய தேர்தலாக இருக்கின்றது என எச்சரிக்கை விட்டுக்கொண்டு வருகின்றோம். தமிழினம் ஓர் இனவாத இனமல்ல. சிங்களவருக்கு பௌத்தத்துக்கோ நாங்கள் எதிரிகள் அல்ல. எங்களுக்கு இருப்பு பாரம்பரியம் இருப்பதை மற்றவர்கள் மதிக்கவேண்டும். அதேவேளை எங்களுடைய அடையாளங்களை அங்கீகரித்து கொண்டாடவேண்டும். நீங்கள் வேறுபாடுகள் அற்ற கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். அதை செய்யாமல் பெரும்பான்மையாக இருக்கின்ற நீங்கள் எங்களின் இருப்பை அழிக்கின்ற வகையில், செய்வதை ஜனநாயகம் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தான் ஒற்றையாட்சி முறைமை ஒரு நாளும் ஒரு பாதுகாப்பை கொடுக்காது என இலங்கையில் ஏற்படுத்திய 3 அரசியல் அமைப்புக்களை தொடர்ச்சியாக நிராகரித்து வந்துள்ளோம். அதனால்தான் சர்வதேசம் கூறுகிறது... போர் முடிந்து 15 வருடங்களின் பின்னரும் மாறி மாறி வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இங்கு ஒரு பயங்கரவாத பிரச்சினை மட்டும்தான் இருப்பதாக சொல்லியும் சர்வதேசம், இல்லை, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் அமைப்பை ஆதரவோடு எப்போது நிறைவேற்றுகின்றீர்களோ. அன்றுதான் இந்த இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாக கருதுவோம் என்றனர். எனவே, இந்த அனுரவின் சதித் திட்டத்தை முறியடிக்கும் ஒரே ஒரு தரப்பு நாங்கள்தான். எனவே, 10 பேரை பிரதிநிதிகளாக அனுப்ப மக்கள் ஆணை வழங்கவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/197681
  5. ஜடேஜா, வாஷிங்டன் சுழலில் சுருண்ட நியூசிலாந்து; இந்தியா 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்தநிலையில் ஹென்றியால் ரன்அவுட் செய்யப்பட்டார் எழுதியவர், போத்திராஜ் . க பதவி, பிபிசி தமிழுக்காக மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவம்பர் 1) துவங்கிய இந்தியா நியூசிலாந்து அணிக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி விரைவாகவே முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் வில் யங் (71), டேரல் மிட்செல் (82) ஆகியோர் சேர்த்த ரன்கள்தான் அதிகபட்சம். இருவரையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்திருந்தால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 150 ரன்களுக்குள்தான் இருந்திருக்கும். முதல் இன்னிங்ஸை சீராகத் தொடங்கிய இந்திய அணி வழக்கம்போல் ரோகித் சர்மாவின் விக்கெட்டை விரைவாக இழந்தது. அதன்பின் முதல்நாள் ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்தபோது, திடீரென அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. 78 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இருவர் நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 186 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என வலுவாக இருந்தது. ஆனால், கடைசி 48 ரன்களுக்கு மட்டும் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நியூசிலாந்து அணியின் பேட்டிங் சரிவுக்கு வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா இருவரின் பங்களிப்பு பிரதானமாகும். ஜடேஜா 22 ஓவர்கள் வீசி 65 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், சுந்தர் 18.4 ஓவர்கள் வீசி 81 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இருவரும் சேர்ந்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டெஸ்ட் போட்டியில் 14-வது முறையாக ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஜாகீர்கான், இஷாந்தை முந்திய ஜடேஜா டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஜாகீர்கான், இஷாந்த் சர்மா, இருவரையும் இந்த ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா பின்னுக்குத் தள்ளி 5-ஆவது இடத்துக்கு முன்னேறினார். ரவீந்திர ஜடேஜா தற்போது டெஸ்ட் போட்டியல் 314 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி அளவில் 5வது இடத்தில் உள்ளார். ஜாகீர்கான், இஷாந்த் சர்மா இருவரும் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அடுத்துவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 3-ஆவது முறையாக இந்திய அணி தகுதி பெறுவதற்கு 6 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் 4 டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டும். 6 ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றால், எந்தவிதமான தடையும் இன்றி, இறுதிப்போட்டிக்குச் செல்லலாம். நியூசிலாந்துடன் மும்பையில் இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் இந்திய அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதலால் இன்று கட்டுக்கோப்பான பீல்டிங், பந்துவீச்சை வெளிப்படுத்தி 235 ரன்களுக்குள் நியூசிலாந்தைச் சுருட்டினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரவீந்திர ஜடேஜா அஸ்வினுக்கு சாதாரண நாள் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சு புனே டெஸ்ட் போட்டியிலிருந்து எதிர்பார்த்த அளவு எடுபடவில்லை. மும்பை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிலும் அஸ்வினுக்கு சாதாரண நாளாக அமைந்துவிட்டது. வழக்கமாக பந்துவீச்சில் பல்வேறு உத்திகங்களைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அஸ்வினின் பந்துவீச்சு நியூசிலாந்து பேட்ஸ்மேன்களிடம் எடுபடவில்லை. டெஸ்ட் போட்டியில் ஃபார்முக்கு வராத நிலையிலும் ஆஸ்திரேலியாவுக்கு அஸ்வின் பயணிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கிரிக்கெட் வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மும்பையில் கொளுத்திய வெயில் மும்பையில் இன்று வெயில் 37 டிகிரி செல்சியஸாக சுட்டெரித்து, நண்பகலில் 41 டிகிரி வரை சென்றது. இதனால் இந்திய வீரர்கள் பீல்டிங் செய்யவும், நியூசிலாந்து பேட் செய்யவும் மிகுந்த சிரமப்பட்டனர். ஒவ்வொரு 3 ஓவர்களுக்கும் இடையே நீர், குளிர்பானங்கள் வீரர்களுக்கு வழங்கப்பட்டன, ஐஸ் பேக், ஐஸ் துண்டு ஆகியவற்றை வைத்து வீரர்கள் முகத்தையும், வியர்வையையும் துடைத்தவாறு இருந்தனர். காலை நேரத்தில் கடும் வெயிலும், காற்று குறைவாகவும், காற்றில் ஈரப்பதத்தின் அளவும் அதிகரித்து காணப்பட்டதால் வீரர்கள் வியர்வை மழையில் நனைந்து, சிறிது நேரத்தில் சோர்வடைந்தனர். இதுபோன்ற கடும் வெயிலை அனுபவித்திராத நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் டேரல் மிட்செல், வில் யங் மிகுந்த சிரமப்பட்டனர். பும்ராவுக்கு ஓய்வு ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை மனதில் வைத்தும், வைரஸ் தொற்று காரணமாகவும் பும்ராவுக்கு இந்த டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டு முகமது சிராஜ் சேர்க்கப்பட்டிருந்தார். சிராஜின் பந்துவீச்சு சாரசரிக்கும் கீழாகவே இருந்தது, பெரிதாக சொல்லிக் கொள்ளும் வகையில் அவர் வீசிய பந்து ஸ்விங் ஆகவில்லை, லென் லென்த்தும் (line length) கிடைக்கவில்லை. நியூசிலாந்து திணறல் ஆனால், ஆகாஷ் தீப், அரவுண்ட் ஸ்டெம்ப் பக்கம் வந்து பந்துவீசியதால், தொடக்கத்திலிருந்தே டேவன் கான்வே, லாதம் திணறினர். அதற்கு ஏற்றார்போல் கான்வே கால்காப்பில் வாங்கி, ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 15 ரன்களுக்கு முதல் விக்கெட்டை நியூசிலாந்து பறிகொடுத்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் லாதமுடன், வில் யங் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர். சுந்தர், ஜடேஜா பந்துவீச வந்தபின் ரன் சேர்க்கும் வேகம் குறைந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் 44 ரன்கள் சேர்த்தநிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டாம் லாதம் (28) க்ளீன் போல்டாகி வெளியேறினார். கடந்த டெஸ்டில் இந்திய அணிக்கு சிம்மசொப்னமாக இருந்த ரச்சின் ரவீந்திரா இந்த முறை நிலைக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ரச்சின் ரவீந்திரா போல்டாகி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். புனே டெஸ்டில் இருந்து மூன்றாவது முறையாக சுந்தர் பந்துவீச்சில் ரவீந்திரா விக்கெட்டை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உணவு இடைவேளைக்கு செல்லும்போது நியூசிலாந்து அணி 91 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆடுகளம் தொடக்கத்திலிருந்தே சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது. இதனால் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் பந்து நன்கு டர்ன் ஆகியது, சிறிது பவுன்ஸும் ஆகியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டாம் லாதம் (28) க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். வலுவான பார்ட்னர்ஷிப் நான்காவது விக்கெட்டுக்கு வில் யங் - டேரல் மிட்செல் கூட்டணி சிறப்பாக விளையாடினர். ஜடேஜா, அஸ்வின், சுந்தர் பந்துவீச்சை சமாளித்து ஆடி ரன்களைச் சேர்த்தனர். வில் யங் 94 பந்துகளிலும், மிட்ஷெல் 90 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். வில் யங் இந்த டெஸ்ட் தொடரிலேயே முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்திருந்த நிலையில் இந்த பார்ட்னர்ஷிப்பை ஜடேஜா பிரித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டேரல் மிட்செல் ஆட்டத்தில் திருப்புமுனை ஜடேஜா பந்துவீச்சில் வில் யங்க் ஸ்லிப்பில் இருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 71 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தத் தருணம்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும், அடுத்து களமிறங்கிய டாம் பிளென்டல் இதே ஓவரில் ஜடேஜா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். ஜடேஜா வீசிய 45-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை நியூசிலாந்து அடுத்தடுத்து இழந்தது. அதன்பின் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்களைக் கடக்கவில்லை. இஷ் சோதி (7), மாட் ஹென்றி (0), அஜாஸ் படேல் (7), கிளென் பிலிப்ஸ் (17) என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கடைசி 48 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. டேரல் மிட்செல் 82 ரன்கள் சேர்த்தநிலையில் சுந்தர் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு டேரல் மிட்செல் அடித்த 3 சிக்ஸர்கள்தான் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் தொடங்கினர். ரோகித் மீண்டும் ஏமாற்றம் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் தொடங்கினர். அதிரடியாக பவுண்டரிகள் அடித்த ரோகித் சர்மா கடந்த டெஸ்டைப் போல் நீடிக்கவில்லை. ஹென்றி பந்துவீச்சில் அவுட்சைட் ஆப்சைடு சென்றபந்தைரோஹித் சர்மா தேவையின்றி தட்டிவிட ஸ்லிப்பில் நின்றிருந்த லாதம் கேட்ச் பிடித்தார். ரோகித் சர்மா 18 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சுப்மான் கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். இருவரும் விரைவாக ரன்களைச் சேர்த்தனர். நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் என அடித்தால் ரன்ரேட் வேகமெடுத்தது. 13 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. இருவரின் அதிரடியான ஆட்டத்தால் 58 பந்துகளில் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைத் தொட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்தநிலையில் ஹென்றியால் ரன்அவுட் செய்யப்பட்டார் கடைசி நேரத்தில் திணறல் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முற்பட்டு ஜெய்ஸ்வால் 30 ரன்கள் சேர்த்தநிலையில் க்ளீன் போல்டாகினார். முதல் நாள் ஆட்டம் முடிய சில ஓவர்கள் இருக்கையில் களமிறங்கிய முகமது சிராஜ் கால்காப்பில் வாங்கி அஜாஸ் படேலின் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 18வது ஓவரில் மட்டும் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து களமிறங்கிய விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்தநிலையில் ஹென்றியால் ரன்அவுட் செய்யப்பட்டார். முதல்நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்துள்ளது. ரிஷப் பந்த் ஒரு ரன்னிலும், கில் 31 ரன்களிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சை வெற்றிகரமாகத் தொடங்கி, ரோஹித் சர்மா, கோலி என பெரிய விக்கெட்டுகளை குறைந்த ஓவர்களில் வீழ்த்தி நிம்மதி அடைந்துள்ளது. ஆடுகளம் நாளை சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், நாளை இரு அணிகளிலும் விக்கெட் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c62jz9484ydo
  6. முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் கோரியுள்ளார். முப்படையினருக்கு வழங்கப்பட்ட உணவு கொடுப்பனவை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு தமது அரசாங்க ஆட்சியில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். உணவு கொடுப்பனவை சம்பளத்துடன் சேர்க்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் படையினர் கோரி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். படையினரின் சம்பளங்கள் அதிகரிப்பு எனவே தற்போதைய அரசாங்கம் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் ஆகியோரது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரியுள்ளார். படையினரின் சம்பளங்களை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/tri-forces-salary-must-increase-1730430548
  7. யாழ்ப்பாணம் (Jaffna) - மண்டைதீவு பெரியகுளம், கலங்கரை விளக்க கடற்படை முகாமை விஸ்தரிப்பதற்காக தனியார் காணி ஒன்றை அளவீடு செய்யும் நடவடிக்கையை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அண்மையில், கடற்கரையை அண்மித்த தனியார் காணியை அளவீடு செய்வதற்காக நில அளவை திணைக்கள அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்தபோது, காணி உரிமையாளருடன் இடத்திற்கு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளிட்டோர் அந்நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளனர். காணி உரிமையாளருக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்ததோடு, காணியை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம், தொடர்ந்து பலனளிக்காத இந்த முயற்சியை கைவிடுமாறு குறிப்பிட்டுள்ளனர். உரிமையாளரின் அனுமதி நில அளவைத் திணைக்களமும், பிரதேச செயலகமும், பொதுமக்களும், உரிமையாளரும் விரும்பாத காணி அளவீட்டுக்காக எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அது கைகூடாத நிலையில், காணி அளவீட்டை மேற்கொள்ளும் செற்பாட்டை கைவிடுவது பொருத்தமான செயல் என அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுநலனுக்காக என்றாலும், உரிமையாளரின் அனுமதி இன்றி மேற்கொள்ளப்படும் காணி அளவீடு சட்டவிரோதமான செயல் என சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். உரிமையாளர் விரும்பாத இடத்தில் பொது நலனுக்காக காணியை அளவீடு செய்வது சட்டத்திற்கு முரணான செயல். இது, பொது நலனுக்காக எடுக்கப்படலாம், ஆனால் உரிமையாளரும், பொது மக்களும் எதிர்ப்பது பொது நலனாக இருக்க முடியாது.” தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை கடற்படையினருக்காக கையகப்படுத்துவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதியின் கீழும் எவ்வித மாற்றமும் இன்றி இந்த முயற்சி தொடர்வதாக வடமாகாண ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். https://tamilwin.com/article/land-issue-jaffna-people-stoped-navy-s-activities-1730466968
  8. - எம்.மனோசித்ரா எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் அபாயகரமான நிலைமைக்கான ஒரு முன் அறிவிப்பாகும். தற்போதைய அரசாங்கத்துக்கு இது ஒரு சிறந்த முன்னறிவிப்பு இல்லை என்பது மாத்திரம் தெளிவாகிறது. எதிர்க்கட்சியின் உறுப்பினராக இருந்த போது கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது எந்தளவு கடினமானது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது புரிந்து கொண்டிருப்பார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் அபாயகரமான நிலைமைக்கான ஒரு முன் அறிவிப்பாகும். பிரதேசசபைக்கான தலைவரை தெரிவு செய்தல், வரவு - செலவு திட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் ஆளுங்கட்சி சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும். ஓரிரு வாக்குகளால் இவை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக அமையும். எனவே தற்போதைய அரசாங்கத்துக்கு இது ஒரு சிறந்த முன்னறிவிப்பு இல்லை என்பது மாத்திரம் தெளிவாகிறது. எதிர்க்கட்சியின் உறுப்பினராக இருந்த போது கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது எந்தளவு கடினமானது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது புரிந்து கொண்டிருப்பார். பேசுவதைப் போன்று நடைமுறையில் செயற்படுத்துவது இலகுவானதல்ல. எரிபொருள் விலைகள் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளிட்டவை தொடர்பிலும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவை எவற்றையும் தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதேபோன்று நாணய நிதியத்துடன் இந்த அரசாங்கம் எவ்வாறு பயணிக்கின்றது என்பதும் இரகசியமானதாகவே உள்ளது. அதனையும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். மறுபுறம் பெண்களின் உரிமைகள் தொடர்பில் குரல் கொடுத்த தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் லால் காந்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்லவின் மகள் மீது மோசமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தற்போதைய பிரதமரும் ஒரு பெண் என்ற ரீதியில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/197656
  9. ஸ்பெயின்: 50 ஆண்டுகளில் கண்டிராத பெருமழையின் பாதிப்பைக் காட்டும் படங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அக்டோபர் 30 அன்று கிழக்கு ஸ்பெயினின் வலென்சியாவின் தெற்கு பகுதியில் இருக்கும் டி லா டோரே பகுதியில், வெள்ளத்தால், குவியலாகக் கிடக்கும் கார்கள் எழுதியவர், மட் மெக்கிராத் பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர் ஸ்பெயின், கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளத்தைத் தற்போது சந்தித்து வருகிறது. அந்நாட்டின் கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 150 பேர் இறந்தனர், மேலும் பலர் காணாமல் போயிருக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. இந்த வெள்ளத்தின் பாதிப்புகளை காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்பெயினின் வலென்சியா நகரில் குழந்தையை மீட்ட மீட்புப்படையைச் சேர்ந்தவர் படக்குறிப்பு, லெடூர் பகுதியில் வெள்ளத்தால் காயமடைந்தவரை மீட்கும் மீட்புப்படையினர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பைபோர்ட்டா நகராட்சியில் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் காலநிலை மாற்றம் காரணமா? எந்தவொரு அதீத காலநிலை நிகழ்வையும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாக குறிப்பிடுவதில் விஞ்ஞானிகள் தயக்கம் காட்டிவரும் நிலையில், ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு வெப்பநிலை உயர்வின் பங்கு குறித்து ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். “இந்தப் பெருமழை, காலநிலை மாற்றத்தால் தான் தீவிரமடைந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை,” என காலநிலை நிகழ்வுகளில் வெப்பமயமாதலின் பங்கு குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச குழுவை வழிநடத்திய, லண்டனில் உள்ள இம்பெரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஃபிரெடரிக் ஓட்டோ கூறுகிறார். படக்குறிப்பு, லெடூர் நகராட்சியில் தன் நாயுடன் வெள்ளச் சேதத்திலிருந்து தப்பிக்கும் ஒரு நபர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வலென்சியாவில் வெள்ள பாதிப்புகளால் அழுதுகொண்டிருக்கும் பெண் ஒருவஒருவர் புதைபடிவ எரிபொருட்களால் ஏற்படும் வெப்பமயமாதல் “புதைபடிவ எரிபொருட்களால் ஏற்படும் வெப்பமயமாதலின் ஒவ்வொரு பகுதியிலும், வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தைத் தக்க வைப்பதன் விளைவாக அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது,” என்று ஃபிரெடரிக் ஓட்டோ கூறுகிறார். ஸ்பெயினில் இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தில் இயற்கையாக ஏற்படும் வானிலை நிகழ்வு இந்தப் பெருமழைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெள்ளத்திற்கு பிறகு சாலையில் சேதமடைந்து கிடக்கும் கார்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்தால் சில பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன படக்குறிப்பு, வலென்சியா நகரில் உள்ள பைபோர்ட்டா பகுதியில் தனது கடையில் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்வையுடும் உருமையாளர் மிகுவெல் 'ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு 7% அதிக மழை' இத்தகைய வானிலை நிகழ்வு ‘கோட்டா ஃப்ரியா’ (gota fría) அல்லது ‘கோல்ட் டிராப்’ (cold drop) என அழைக்கப்படுகிறது. அதாவது, கடந்த சில ஆண்டுகளாக அதீத வெப்பநிலையைச் சந்தித்துவரும் மத்திய தரைக்கடலில், குளிர்காற்று வெப்பமான நீரை நோக்கிக் கீழிறங்குகிறது. இதனால் மத்திய தரைக்கடலின் மேற்பரப்பில் வெப்பமான ஈரக்காற்று உயர்ந்து, அதிஉயர் மேகங்களை உருவாக்கி அவை பெருமழையை ஏற்படுத்துகின்றன. இந்த மேகங்கள் உருவாக்கும் மழையின் அளவில், காலநிலை மாற்றம் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் 7% மழை அதிகரிப்பதாக கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அக்டோபர் 30 அன்று ஸ்பெயினின் வலென்சியாவில் உள்ள செடாவி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குக்குப் பிறகு கார்கள் தெருவில் குப்பைகளைப்போலக் குவிந்துள்ளன பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்ட கார்கள் இவை. இவற்றை சுத்தம் செய்யும் வேலையை மக்கள் கவனிக்க வேண்டியுள்ளது மண்ணில் வெப்பத்தன்மை அதிகரிப்பு இதனால், மழை பெய்யத் துவங்கும்போது, அது அதீத தீவிரத்துடன் நிலத்தில் விழுகிறது. இவ்வளவு அதிகமான நீரை உறிஞ்சும் தன்மை மண்ணுக்கு இல்லை. “அதீத மழைப்பொழிவு நிகழ்வுகளுடன், அதிக வெப்பமான கோடைக்காலத்தை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அதனால், மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மை குறைகிறது,” என லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்க் ஸ்மித் கூறுகிறார். “அதிகமான நீர் ஆறுகளில் கலப்பதால், அதீத மழையின் உடனடி விளைவுகள் தீவிரமடைகின்றன,” என்கிறார் அவர். வெப்பநிலை உயர்வு இத்தகைய புயல்களை மெதுவாக நகர்பவையக மாற்றி, அதனால் மழைப்பொழிவை அதிகமாக்குவதாக, விஞ்ஞானிகளுக்கு இடையே விவாதங்கள் நடைபெறுகின்றன. படக்குறிப்பு, வியாழக்கிழமை வலென்சியாவுக்கு அருகே ஏற்பட்ட வெள்ளத்தின் சேதக் காட்சிகளை காட்டும் கழுகுப்பார்வை புகைப்படம் படக்குறிப்பு, வலென்சியாவில் மால் ஒன்றின் தரைத்தளத்தில் வெள்ள நீர் புகுந்ததால் நூற்றுக்கணக்கானோர் அதற்குள் சிக்கியுள்ளனர் அதிகரிக்கும் புயல்கள் இவ்வித புயல்களையும் அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் இந்த ஆண்டு நாம் கண்டோம். மத்திய ஐரோப்பாவில் கடந்த செப்டம்பர் மாதம் போரிஸ் புயல் உயிரிழப்புகளையும் பேரழிவையும் ஏற்படுத்தியது. இதன் விளைவுகளும் மத்திய தரைக்கடலின் அதீத வெப்பத்தால் அதிகரித்தன. இத்தகைய மெதுவாக நகரும் பேரழிவை காலநிலை மாற்றம் இரட்டிப்பாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஸ்பெயினில் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்படாதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,MATTHIAS BACHLER படக்குறிப்பு, வலென்சியா பகுதியில் இந்த வெள்ளம் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது பட மூலாதாரம்,DANIEL ROSS படக்குறிப்பு, வலென்சியா பகுதியில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பட மூலாதாரம்,DARNA ANIMAL RESCUE படக்குறிப்பு, ஸ்பெயினில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாய்கள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இந்த வெள்ளத்தால் லெடூர் நகராட்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது ஆனால், வேகமாக நகரும், தீவிரமான இடியுடன் கூடிய மழையை முன்கூட்டியே கணிப்பது சிக்கலான பணி என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “வெள்ளத்திற்கு முன்னதாக, உயர்வான இடங்களுக்குச் செல்ல மக்களுக்கு உதவுவதிலும் பாதுகாப்பிலும் முன்னெச்சரிக்கைகள் உயிர்காக்கும் அம்சமாக விளங்குகின்றது. ஆனால், தற்போது நாம் ஸ்பெயினில் பார்த்தது போன்ற தீவிர, இடியுடன் கூடிய மழைக்கு முன்னெச்சரிக்கை விடுப்பது மிகவும் கடினமானது. ஏனெனில், எங்கு கனமழை பொழியும் என்பதை பெரும்பாலும் முன்கூட்டியே அறிய முடியாது.” என்கிறார், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் டாக்டார் லிண்டா ஸ்பெயிட். “வானிலை முன்னறிவிப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், இந்தச் சாவலை எதிர்கொள்வதற்குப் புதுமையான தீர்வுகளைக் கண்டறிய கடுமையாக பணியாற்றி வருகின்றனர். இது எளிமையான ஒன்றாக இருக்கப் போவதில்லை,” என்கிறார் அவர். அதீத வெள்ளம் போன்ற காலநிலை நிகழ்வுகளைத் தாக்குப்பிடிக்கும் திறன் நவீன உட்கட்டமைப்புகளுக்கு இல்லை என்பதை ஸ்பெயின் வெள்ளம் சுட்டிக்காட்டுகிறது. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல நமது சாலைகள், பாலங்கள், தெருக்கள் ஆகியவை கடந்த நூற்றாண்டின் காலநிலையைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டவை, மாறிவரும் காலநிலைக்கு ஏற்றவை அல்ல. https://www.bbc.com/tamil/articles/c4gpem2xy13o
  10. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள் - 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் - ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை திரும்பிப்பாருங்கள் - அனுரகுமாரவிற்கு மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கடிதம் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய வாக்குறுதிகள் குறித்து மீண்டும் அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் அவருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது. மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, 2024 செப்டம்பர் ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான காலப்பகுதியிலும் நவம்பரில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னதாகவும் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இந்த கடிதத்தை எழுதுகின்றது. இலங்கை தொடர்ந்தும் பல சவால்களை எதிர்கொண்டுள்ள, மிக மோசமான பொருளாதார வன்முறைகள்; மற்றும் வன்முறைகளில் இருந்து மீண்டு மீட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்ற சூழமைவில் உடனடியாக கவனம் செலுத்தப்படவேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம். 2022 அரகலய இயக்கம் ஆட்சிமுறை மாற்றம், ஊழலிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், வெளிப்படைதன்மை ஆகியவற்றினை வெளிப்படுத்தியது. இவை மக்களின் நம்பிக்கையை அழித்துள்ள விடயங்கள். இலங்கையில் காணப்படும் நிறைவேற்று அதிகாரம் ,அரசியலமயப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், மற்றும் தண்டனையின்மை கலாச்சாரம், போன்றவற்றை முடிவிற்கு கொண்டுவருவதற்காக நிர்வாக சீர்திருத்தங்களின் முக்கிய தேவையாக உள்ளதை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் உட்பட ஏனைய அமைப்புகள் தொடர்ந்து சுட்டிக்காட்டிவந்துள்ளன. அர்த்தபூர்வமான ஆட்சிமுறை சீர்திருத்தம்,நாட்டில் ஊழல் கலாச்சாரத்திற்கு எதிராக போராடவேண்டியதன் அவசியம், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல் உட்பட பொறுப்புக்கூறலை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது நீங்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பை நாங்கள் அறிந்துள்ளோம் அங்கீகரிக்கின்றோம். மேலும் சமீபத்தைய நிகழ்வுகள் இலங்கையின் வன்முறை மற்றும் பலவீனமான சமாதானங்கள் குறித்த அனுபவங்களை மீள நினைவுபடுத்துகின்றன. மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் தீர்வைகாண தவறியமை ஏற்கனவே காணப்படும் மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன் புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த நேரத்தில் 2024 ஒக்டோபரில் பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து நீங்கள் வெளியிட்ட முக்கியமான வாக்குறுதி குறித்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. சவால்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில், நீங்கள் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளை திரும்பிபார்க்கவேண்டும், எனவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை வெளிப்படையான அனைவரையும் உள்வாங்கி முன்னெடுக்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த மாற்றங்களில் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும், புதிய நாடாளுமன்றத்திலேயே இதனை முன்னெடுக்க முடியும் என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகள் குறித்த உறுதிப்பாட்டை மீள உறுதி செய்யவேண்டும். மேலும் புதிய நாடாளுமன்றம் இந்த சீர்திருத்தங்களை தாமதமின்றி முன்னெடுப்பதற்கான ஆயத்தவேலைகளை செய்யவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு அடையாளமாக விளங்குகின்ற சம்பவங்கள்- இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு அடையாளமாக விளங்குகின்ற நன்கு அறியப்பட்ட சம்பவங்கள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்வது, பொதுமக்களின் நம்பிக்கையை மீள ஏற்படுத்துவதற்கு மிகவும் அவசியமான விடயம். இதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட ஏனைய சம்பவங்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துதல் அடங்கும். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல்- நிறைவேற்றதிகார முறையை நீக்கவேண்டும் என நீண்டகாலமாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது, உங்கள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் கடைசி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விடயத்தில் சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்கு நீங்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்- 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தேசிய இனப்பிரச்சினை மற்றும் இலங்கையின் சிறுபான்மையினர் மத்தியில் பல தசாப்தங்களாக நிலவும் துயரங்களை தீர்ப்பதற்கான அர்ப்பணிப்பை காண்பிப்பதற்கான முதல்படியாகும். தற்போதுள்ள அரசியலமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது இனமத சிறுபான்மையினரின் நம்பிக்கைகளை மேம்படுத்துவதற்கு இன்றியமையாத முன்நிபந்தனை என்பதை நாங்கள் கவனத்தில் கொள்கின்றோம். சட்ட சீர்திருத்தம் முன்மொழியப்பட்ட சட்டங்கள் மனித உரிமைதராதரங்களிற்கு ஏற்ப காணப்படுவதை உறுதி செய்யவும், சிறுபான்மையினத்தவர்களை பாதிக்கும் தவறான பயன்பாட்டிலிருந்து பாதுகாக்கவும், சீர்திருத்தங்களை நாங்கள் கோருகின்றோம். பயங்கரவாத தடைச்சட்டம் இணையவழிபாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை நீக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். கடந்த காலங்களில் வன்முறைகள் நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்ளுதல் இலங்கை முழுவதிலும் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் உண்மை நீதியை தேடி மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களின் வேண்டுகோளிற்கு தீர்வை காண்பதற்கான நேர்மையான முயற்சிகள் அவசியம். பொறுப்புக்கூறல் தொடர்பான சுயாதீனமான நடவடிக்ககளை ஆரம்பித்தல், ஆழமாக வேரூன்றியுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்திற்கு முடிவை காண்பதற்காக உண்மையை தெரிவிக்கும் முயற்சிகளையும் முன்னெடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/197629
  11. சீனாவின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதன்படி, சீனாவின் ஸ்டேட் கவுன்சில் சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில், பிரசவத்திற்கான மானியங்கள் மற்றும் பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டி உள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான ஆதரவான சூழலை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. State Council’s 13-point plan திட்டமானது, குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்துதல், கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆதரவை மேம்படுத்துதல் மற்றும் பிரசவ உதவி திட்டங்களை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். குழந்தை வளர்ப்பை ஊக்குவிக்கும் ஒரு சமூக சூழலை மேம்படுத்துவதையும், பிரசவ மானிய முறையை மேம்படுத்துவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், திருமணம் மற்றும் பெற்றோருக்குரிய ஒரு புதிய கலாச்சார அணுகுமுறையை இந்த கவுன்சில் பரிந்துரைக்கிறது. சரியான வயதில் திருமணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், பெற்றோரின் பொறுப்புகளை பகிர்ந்து கொள்கிறது. சிறந்த மகப்பேறு நன்மைகள், நீட்டிக்கப்பட்ட மகப்பேறு விடுப்பு, மானியங்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகள் ஆகியவையும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு வரவு செலவுத் தொகையை ஒதுக்கவும், இந்த சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கவும் உள்ளாட்சி அமைப்புகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. சீனாவின் மக்கள் தொகை தற்போது 1.4 பில்லியனாக உள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. இதை தொடர்ந்து பிறப்பு விகிதத்தை உயர்த்த சீனா திட்டமிட்டு வருகிறது. கணிசமான எண்ணிக்கையிலான வயதான குடிமக்களை சீனா எதிர்கொள்வதால், நாட்டின் மக்கள் தொகை விவரம், இந்தியாவின் இளம் மக்கள் தொகையுடன் முரண்படுகிறது. 2023ஆம் ஆண்டில், சீனாவில் சுமார் 300 மில்லியன் மக்கள் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் சுமார் 21.1% பேர் ஆகும். இதுவே முந்தைய ஆண்டு 280 மில்லியனாக இருந்தது. https://thinakkural.lk/article/311401
  12. ஆசியாவில் வங்கதேசம், இலங்கை, இந்தியா போன்ற அணிகளுடன் விளையாட நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் சென்று விளையாடத் துவங்கியதிலிருந்து அந்த அணிக்குப் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டார்.
  13. லொஹான் ரத்வத்தவுக்குச் சொந்தமான மற்றுமொரு வாகனம் மீட்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மற்றுமொரு ஜீப் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றின் கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது இந்த ஜீப் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜீப் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள இலக்கத் தகட்டில் உள்ள இலக்கங்கள் அதே பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு நபரின் வாகனத்தில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/197626
  14. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு விளக்கமறியல்! முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (31) உத்தரவிட்டுள்ளது. லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்ட லொஹான் ரத்வத்த நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197617
  15. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவு மற்றும் பணிப்புரைக்கு அமைவாக விசேட பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சிபாரிசுகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 60 அதிகாரிகள், 2 ஜீப் வாகனங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி என்பன வழங்கப்பட்டுள்ளன. இது தவிர மேலதிகமாக அதிகாரிகள் இருந்தால் நாளை (2) அந்த பிரிவுக்கு பொறுப்பான டி.ஐ.ஜி.யிடம் முறைப்பாடு அளிக்க வேண்டும் என்றும், வழங்கப்பட்ட வாகனங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இருந்தால் அவற்றை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் ஒப்படைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/311434
  16. காசாவில் பொதுமக்களை கொலை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தெரிவித்துள்ளமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்க முஸ்லீம்களும் அராபிய அமெரிக்கர்களும் பில்கிளின்டனின் கருத்திற்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஜனநாயக கட்சியினர் மிச்சிக்கன் உட்பட பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் அராபியர்களின் வாக்குகளை நம்பியுள்ள நிலையில் பில்கிளின்டனின் இந்த கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிச்சிகனில் கமாலா ஹரிசிற்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் பேசியவேளை பில்கிளின்டன் நான் காசாவில் இரத்தகளறி குறித்த மக்களின் கரிசனையை புரிந்துகொள்கின்றேன். ஆனால் சர்வதேசநீதிமன்றத்தில் இஸ்ரேல் இனப்படுகொலைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டாலும், காசாவில் பொதுமக்களை கொலை செய்வதை தவிர இஸ்ரேலிற்கு வேறு வழியிருக்கவில்லை என தெரிவித்திருந்தார். ஹமாஸ் அமைப்பு தான் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கின்றது, நீங்கள் உங்களை பாதுகாக்கவேண்டும் என்றால் பொதுமக்களை கொலை செய்யவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றீர்கள் என பில்கிளின்டன் தெரிவித்துள்ளார். கிளின்டனின் இந்த கருத்தினை தொடர்ந்து அவர் அராபிய இஸ்லாமிய சமூகத்தினை பகைத்துக்கொள்ளும் விதத்தில் கருத்து தெரிவித்தமைக்காக அமெரிக்காவின் அராபிய இஸ்லாமிய தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் அராபியர்கள் பெரும்பான்மையாக வாழும் முதலாவது நகரமான டியர்போர்னின் மேயர் அப்துல்லா ஹமூட் பில்கிளின்டனின் இந்த கருத்து ஜனநாயக கட்சியினருக்கு தனது சமூகத்தின் ஆதரவு கிடைப்பதற்கு உதவாது என தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி எப்படி இஸ்ரேல் பொதுமக்களை கொலை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானது என கருத்து தெரிவிப்பதை பார்க்கும்போது அது கடும் விரக்தியை ஏற்படுத்துகின்றது என அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார். காசாவில் பொதுமக்களின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்காக பில்கிளின்டனின் முரட்டுத்தனமான நேர்மையற்ற முயற்சி இஸ்லாமியர்கள் குறித்து அச்சத்தை ஏற்படுத்துவதை போல அவமானகரமானது என அமெரிக்க இஸ்லாமிய உறவுகளிற்கான பேரவையின் ரொபேர்ட் எஸ் மக்கோவ் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197633
  17. மாவீரர் தினத்தை நினைவு கூரும் போதும் அநுர அரசாங்கத்தின் உண்மை முகத்தை அறியமுடியும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு - கிழக்கு பகுதியிலும் எமது இளைஞர்கள் அநுரகுமாரவுக்கு பின்னால் அணிதிரள்வது போன்ற ஒரு நிலமை இருக்கிறது. அது உண்மையில் ஒரு மாயை. அரசியல் நோக்கத்திற்காக இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற வேண்டும் என்பதற்காக சினிமா பாணியில் கருத்துக்களை கூறுகிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் அவர்களுடைய உண்மை முகம் தெரியும். தமிழ் மக்களுக்காக அநுர என்ன தீர்வினை தரப் போகின்றார் என்பதும், தமிழ் மக்களுக்காக என்ன புதிய விதிமுறைகளை உருவாக்கப் போகிறார்கள் என்பதும் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் தெரியவரும். அத்துடன் எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் தினத்தை நினைவு கூருகின்ற போது அவர்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்து தான் அவர்களுடைய நிலைப்பாட்டை அறிய முடியும் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/311431
  18. யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (01) துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இன்றிலிருந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துப்புரவுப் பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோர் இணைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/197624
  19. யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைக்காக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்வது தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை (29) வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வட மாகாண பிரதம செயலாளர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளுராட்சி ஆணையாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவி செயலாளர், வலி. வடக்கு பிரதேச சபையின் செயலாளர், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் இராணுவ உயர் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர். விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு செல்லும் பாதைகள் பற்றைக் காடாக காணப்படுகின்றமையால் காணிகளுக்கான பாதைகள் பிரதேச சபையால் துப்புரவு செய்து வழங்கப்படும் எனவும் அதன் பின்னர், பொதுமக்களின் காணிகள் மாவட்ட செயலத்தால் துப்பரவு செயது வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் மீள் அளிக்கப்படுகின்ற விவசாய காணிகளுக்குள் மக்கள் சென்று விவசாயத்தில் ஈடுபடக்கூடிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அதன்படி, மின்சார வசதிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197631
  20. மதீஷ பத்திரணவை பெரிய விலைக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் தக்கவைத்தது (நெவில் அன்தனி) இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் 2025 அத்தியாயத்தை முன்னிட்டு இலங்கையின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ உட்பட 5 வீரர்களை பிரபல அணிகளில் ஒன்றான சென்னை சுப்பர் கிங்ஸ் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. மதீஷ பத்திரணவை இலங்கை நாணயப்படி 45 கோடி ரூபாவுக்கு (13 கோடி இந்தியா ரூபா) சென்னை சுப்பர் கிங்ஸ் தக்க வைத்துக்கொண்டுள்ளது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் (ஐபிஎல்) அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலம் இம் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் விளையாடும் பத்து அணிகளும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31ஆம் திகதி மாலைக்குள் ஐபிஎல் நிருவாகத்திடம் அறிவிக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய பத்து அணிகளும் தங்களால் தக்கவைக்கப்படும் வீரர்களின் பெயர்களை நேற்று மாலை வெளியிட்டன. சென்னை சுப்பர் கிங்ஸ் தனது ஐந்து வீரர்களை இந்திய நாணயப்படி 65 கோடி ரூபாவுக்கு (இலங்கை நாணயப்படி 226 கோடி ரூபா) தக்கவைத்துக்கொண்டது. மதீஷ பத்திரணவை 13 கோடி இந்தியா ரூபாவுக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் தக்கவைத்துக்கொண்டது. அவரை விட அணித் தலைவர் ரூத்துராஜ் கய்க்வாட், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் தலா 18 கோடி இந்திய ரூபாவுக்கும் ஷிவம் டுபே 12 கோடி இந்திய ரூபாவுக்கும் தக்கவைக்கப்பட்டனர். முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ். தோனி, தேசிய வீரரல்லாதவராக 4 கோடி இந்திய ரூபாவுக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். ஏனைய அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் (இந்திய நாணயப்படி) மும்பை இண்டியன்ஸ் ஜஸ்ப்ரிட் பும்ரா (18 கோடி ரூபா), ஹார்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் (இருவரும் தலா 16.35 கோடி ரூபா), ரோஹித் ஷ்மா (16.30 கோடி ரூபா), திலக் வர்மா (8 கோடி ரூபா) லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் நிக்கலஸ் பூரண் (21 கோடி ரூபா), ரவி பிஷ்னோய், மயாங் யாதவ் (இருவரும் தலா 11 கோடி ரூபா), மோஷின் கான், ஆயுஷ் படோனி (இருவரும் தலா 4 கொடி ரூபா) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஹென்றிச் க்ளாசன் (23 கோடி ரூபா), பெட் கமின்ஸ் (18 கோடி ரூபா), அபிஷேக் ஷர்மா, ட்ரவிஸ் ஹெட் (இருவரும் தலா 14 கோடி ரூபா) குஜராத் டைட்டன்ஸ் ராஷித் கான் (18 கோடி ரூபா), ஷுப்மான் கில் (16.5 கோடி ரூபா), சாய் சுதர்சன் (8.5 கோடி ரூபா), ராகுல் தெவாட்டியா, ஷாருக் கான் (இருவரும் தலா 4 கோடி ரூபா) பஞ்சாப் கிங்ஸ் ஷஷாங் சிங் (5.5 கோடி ரூபா), பிரப்சிம்ரன் சிங் (4 கோடி ரூபா) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரின்கு சிங் (13 கோடி ரூபா), வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன், அண்ட்றே ரசல் (மூவரும் தலா 12 கோடி ரூபா), ஹர்சித் ராணா, ராமன்தீப் சிங் (இருவரும் தலா 4 கோடி ரூபா) ராஜஸ்தான் றோயல்ஸ் சஞ்சு செம்சன், யஷஸ்வி ஜய்ஸ்வால் (இருவரும் தலா 18 கோடி ரூபா), ரெயான் பரக், த்ருவ் ஜுரெல் (இருவரும் தலா 14 கோடி ரூபா), ஷிம்ரன் ஹெட்மயர் (11 கோடி ரூபா), சந்தீப் ஷர்மா (4 கோடி ரூபா) றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் விராத் கோஹ்லி (21 கோடி ரூபா), ரஜாத் படிதார் (11 கோடி ரூபா), யாஷ் தயாள் (5 கோடி ரூபா) டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அக்சார் பட்டேல் (16.5 கோடி ரூபா), குல்தீப் யாதவ் (13.25 கோடி ரூபா), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (10 கோடி ரூபா), அபிஷேக் பொரெல் (4 கோடி ரூபா) https://www.virakesari.lk/article/197646
  21. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதன்போது, லொஹான் ரத்வத்தவும் அவரது மனைவியும் இது தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், “கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் இந்த காரை வீட்டின் கராஜில் நிறுத்தி வைத்தார்” என தெரிவித்துள்ளனர். பின்னர், இந்த காரானது மேலதிக விசாரணைகளுக்காக மிரிஹான பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/197578
  22. பட மூலாதாரம்,TNSWA படக்குறிப்பு, சென்னையில் சதுப்பு நிலங்கள் 85% குறைந்துவிட்டதாக, உலக காட்டுயிர் நிதியம் குறிப்பிடுகிறது. எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் உலகளாவிய அமைப்புகள் அவ்வப்போது, காலநிலை மாற்றம், சூழலியல் பிரச்னைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கும் அறிக்கைகளை வெளியிடும். சமீபத்தில் உலக காட்டுயிர் நிதியம் வெளியிட்டுள்ள அத்தகைய ஓர் அறிக்கையான 'தி லிவிங் பிளானட் 2024' (The Living Planet 2024), தமிழ்நாட்டின் சென்னையில் ஏற்பட்டுள்ள சூழலியல் பாதிப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை, அமேசான் காடுகள் இழப்பால் உலக வானிலை எப்படி பாதிக்கப்படுகிறது, கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஐரோப்பா, வட அமெரிக்காவில் வானிலையின் போக்கு எப்படி மாறுகிறது என்பது குறித்து, உலகளவில் நேரிட்டுள்ள பல சூழலியல் பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசுகிறது. குறிப்பாக சென்னை பெருநகரம், வேகமெடுக்கும் நகரமயமாதல் காரணமாக, அதன் சதுப்புநிலப் பரப்பில் 85% பகுதியை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. உலக காட்டுயிர் நிதியத்தின் ஆய்வறிக்கை, சென்னையிலுள்ள சதுப்பு நிலங்கள் அழிந்து வருவது குறித்துப் பேசியுள்ளது, அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்த ஆய்வறிக்கை, சென்னையில் சதுப்புநிலங்கள் குறைந்துள்ளதால் ஏற்படப் போகும் பாதிப்புகள் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பித்தல், வெள்ளத் தடுப்பு ஆகிய முக்கியமான இயற்கை செயல்பாடுகள் இதனால் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடுகிறது. இந்த அறிக்கை குறித்துப் பேசும் சூழலியலாளர்கள், “இனி சதுப்பு நிலத்தில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்தால் மட்டுமே, மிச்சம் இருக்கும் சதுப்பு நிலங்களையாவது நாம் பாதுகாக்க முடியும்,” என்கின்றனர். இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் தங்கம் தென்னரசு, "மீதமுள்ள சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கப் பல்வேறு துறைகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக" பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது என்ன? உலக காட்டுயிர் நிதியம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், சதுப்பு நிலங்கள் அழிந்ததன் காரணமாக, காலநிலை மாற்றத்தால் வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களால் சென்னை மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு கோடையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய நீர்நிலைகள் வறண்டதையும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சதுப்பு நில அழிவின் காரணமாக, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,ARUN SANKAR படக்குறிப்பு, சென்னையில் 2019ஆம் ஆண்டு கோடையில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டதை இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. “கடந்த 2015ஆம் ஆண்டில் மழை அளவு அதிகமாக இருந்தது என்றாலும், இது முன்பு நிகழாதது அல்ல. ஆனால், வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களில் இருந்து காக்கும் சதுப்பு நிலங்களின் அழிவால் நிலைமை மோசமானதாக” அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை மீள்நிரப்பு செய்யவும், தண்ணீரைத் தக்க வைக்கவும் சதுப்பு நிலங்கள் இல்லாத காரணத்தால், சென்னையின் ஒரு கோடியே 12 லட்சம் மக்கள், தண்ணீர்ப் பற்றாக்குறையால் குடிக்க, குளிக்க, சமைக்க என தங்கள் நீர்த்தேவையை லாரிகள் மூலம் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர் என்கிறது அந்த அறிக்கை. சதுப்பு நிலங்கள் ஏன் முக்கியம்? சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தையும் அவை மேற்கொள்ளும் இயற்கை செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அவை, நீரை மாசுபடுத்தும் அம்சங்கள், வண்டல் ஆகியவற்றைத் தடுக்கும் இயற்கை வடிகட்டியாக சதுப்பு நிலங்கள் செயல்படுகின்றன. ஆறுகள், ஏரிகள், சிற்றோடைகள் போன்றவற்றின் நீரை வறட்சிக் காலங்களில் பயன்படுத்தும் வகையில், ஒரு பஞ்சு போல உறிஞ்சி சேமித்து வைக்கும் ஒரு சூழலியல் அமைப்பாகத் திகழ்கிறது. வலசை வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் தளமாகவும் சதுப்பு நிலங்கள் திகழ்கின்றன. தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கான இயற்கை வாழ்விடமாக அவை செயல்படுகின்றன. இதன்மூலம், வறட்சி, வெள்ளம் ஆகியவற்றைத் தடுப்பதில் சதுப்பு நிலங்கள் எவ்வாறு துணைபுரிகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,TNSWA படக்குறிப்பு, அழிந்துவரும் பல உயிரினங்களின் வாழ்விடமாக பள்ளிக்கரணை சதுப்புநிலம் விளங்குகிறது சென்னையில் பள்ளிக்கரணை, பழவேற்காடு, எண்ணூர் ஆகியவை முக்கியமான சதுப்புநிலப் பகுதிகளாக விளங்குகின்றன. "சென்னை பெருநகரை விரிவுபடுத்தும் நோக்கத்தில் சதுப்பு நிலங்கள் குடியிருப்புப் பகுதிகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாலேயே" இத்தகைய அழிவு ஏற்பட்டுள்ளதாக, சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால், எஞ்சியிருக்கும் சதுப்புநிலங்களை உடனடியாகக் காக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வறிக்கை சுட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். அதற்கு முதல்படியாக, “எந்த வகையிலும் சதுப்பு நிலங்களை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக முடிவெடுக்க வேண்டும்” என்கிறார், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கோ. சுந்தர்ராஜன். வெள்ளத்தைத் தடுக்க மட்டுமல்ல, வறட்சியைக் கட்டுப்படுத்தவும் சதுப்பு நிலங்கள் முக்கியம் என்கிறார் அவர். சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கும் ‘‘தமிழ்நாடு வெட்லாண்ட் மிஷன்’ (Tamilnadu Wetland Mission) குறித்துக் குறிப்பிடுகிறார் சுந்தர்ராஜன். “இந்தத் திட்டம் பள்ளிக்கரணை, பழவேற்காடு போன்ற பெரிய சதுப்பு நிலங்கள் மீதுதான் கவனம் செலுத்துகிறது. இதுதவிர, மற்ற நீர்நிலைகள் மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், இந்தத் திட்டத்திற்கான விதிமுறைகளை அரசு இன்னும் அறிவிக்கவில்லை” என்கிறார் அவர். வறுத்த, பொரித்த உணவுகள் நீரிழிவு நோயை உண்டாக்கலாம் - புதிய ஆய்வில் தகவல்26 அக்டோபர் 2024 தமிழ்நாடு அரசின் திட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எண்ணூர் சதுப்புநிலப் பகுதி சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், இயற்கையாக அமைந்த, கடைசியாக எஞ்சியிருக்கும் சதுப்புநிலப் பகுதிகளில் ஒன்று என தமிழ்நாடு வெட்லாண்ட் மிஷன்’ இணையதளம் குறிப்பிடுகிறது. “அதன் கிழக்கு சுற்று எல்லை, பக்கிங்ஹாம் கால்வாய், பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. அப்பகுதி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக உள்ளது. தெற்கு, மேற்கு எல்லைகள் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களால் நிறைந்துள்ளன” என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 250 சதுர கி.மீ. அளவுக்கு பள்ளிக்கரணை சதுப்புநிலம் பரவியுள்ளது. அந்த சதுப்புநிலம், கண்ணாடி விரியன் எனப்படும் பாம்பு ( Russel’s Viper) மற்றும் அரிவாள் மூக்கன் (Glossy lbis), நீளவால் தாழைக்கோழி (Pheasant-tailed Jacana) உள்ளிட்ட பறவைகள் போன்ற அழிந்துவரும் உயிரினங்களின் வாழ்விடமாக பள்ளிக்கரணை விளங்குகிறது. “பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் உண்மையான மொத்த பரப்பளவில், தற்போது 10% மட்டுமே எஞ்சியிருப்பதாக’ அரசின் ‘வெட்லாண்ட் மிஷன்’ இணையதளம் குறிப்பிட்டுள்ளது. “சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் குறித்த நிலவரைத் தொகுப்பை அரசு (Atlas) உருவாக்க வேண்டும். அதன் எல்லைகளைத் தெளிவாக வரையறுத்து அங்கு யாரும் ஆக்கிரமிக்காமல் பாதுகாக்க வேண்டும். இதன்மூலம், சதுப்பு நிலம் குறித்த வரையறையை மக்கள் அறிந்து கொள்ள முடியும்” என்கிறார் சுந்தர்ராஜன். பட மூலாதாரம்,TNSWA படக்குறிப்பு, பெருகி வரும் நகரமயமாக்கல் சதுப்பு நில அழிவுக்கு காரணமாக இருப்பதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது சதுப்பு நிலங்கள் குறித்த ஆராய்ச்சியாளரான தாமோதரன் கூறுகையில், “அனைத்துமே குடியிருப்புப் பகுதியாக மாறிவிட்டது. அப்படி இருக்கையில் நகரை விரிவுபடுத்த சதுப்பு நிலங்களும் ஆக்கிரமிக்கப்படுகின்றன” என்றார். சதுப்பு நிலங்களின் அழிவுக்கு அதில் கொட்டப்படும் கட்டடக் கழிவுகளும், மக்களால் உருவாக்கப்படும் கழிவுகளும் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். “சதுப்பு நிலங்களின் பௌதீக எல்லை என்பது வேறு, அதன் சூழலியல் எல்லை என்பது வேறு. சூழலியல் எல்லை என்பது, சதுப்பு நிலத்தின் எல்லையையும் தாண்டியது. நீர்பிடிப்புப் பகுதி வரை சதுப்பு நிலத்தின் எல்லை உள்ளது. இதை மனதில் வைத்து அதன் எல்லையை வரையறுக்க வேண்டும்," என்கிறார் தாமோதரன். மேலும், சதுப்பு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பல சிக்கல்கள் தொடர்ந்து நிலவுகின்றன என்கிறார் அவர். தமிழக அரசு என்ன கூறுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1911ஆம் ஆண்டு வருவாய் ஆவணப் பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக சர்வே செய்து, அதைத் தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, "சென்னையில் எஞ்சியுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. நகராட்சி மற்றும் நீர்வளத்துறை இணைந்து இதற்காகப் பணியாற்றுகிறோம். மக்களும் இதற்கான ஒத்துழைப்பைத் தரவேண்டும். ஆக்கிரமிப்புகள் காரணமாக சதுப்பு நிலம் அழிந்திருக்கிறது. மனிதர்களால் ஏற்படும் கழிவுகளும் ஆபத்தானவையாக உள்ளன," என்றார். நகரமயமாக்கல் காரணமாக இத்தகைய அழிவு ஏற்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, "வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானவை. ஆனால், அவை நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. திட்டங்களை இயற்கையை அழித்து மேற்கொள்ள முடியாது, அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற பார்வை அரசுக்கு உள்ளது," எனத் தெரிவித்தார் தங்கம் தென்னரசு. நீர்நிலைப் பகுதிகளில் கட்டடங்கள் அமைக்கக் கூடாது எனப் பல உத்தரவுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டும் அவர், அப்படி உத்தரவுகளை மீறி கட்டப்பட்டிருக்கும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். அதோடு, சென்னை மற்றும் புறநகரில் இருக்கக்கூடிய ஏரிகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளையும் அரசு மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1dpp65w2weo
  23. பிறந்தநாள் வாழ்த்துகள் தில்லை ஐயா, வளத்துடன் வாழ்க.
  24. மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இருதரப்பினரதும் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விடயங்களாக காணப்படுவதால் அவற்றை மனிதாபிமான முறையில் கையாண்டு நிவர்த்தி செய்வதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென இந்திய - இலங்கை தரப்பினரும் இணங்கியுள்ளனர். அத்துடன் இரக்கம், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அணுகுமுறை மட்டுமே இருதரப்பு மீனவர்களாலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளுக்கு நீடித்த அடித்தளமொன்றினை உருவாக்குமெனவும் அவர்கள் இணங்கியிருந்தனர். மீன்பிடி விவகாரங்கள் குறித்த இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஆறாவது அமர்வு ஒக்டோபர் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. இந்த அமர்வில் கலந்துகொண்டிருந்த இந்திய தூதுக்குழுவுக்கு இந்திய அரசாங்கத்தின் மீன்பிடித்துறை செயலர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி தலைமை தாங்கியிருந்த அதேவேளை, மீன்பிடித் துறை, விலங்கு பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சு, வெளியுறவுத் துறை அமைச்சு, தமிழக அரசாங்கம், கடற்படை, கரையோரக் காவல் படை, மத்திய சமுத்திர மீன்வள ஆராய்ச்சி நிலையம் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரலாயம் ஆகியவற்றின் சிரேஸ்ட அதிகாரிகளும் இணைந்துகொண்டிருந்தனர். இதேவேளை இலங்கை தூதுக்குழுவுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தலைமைதாங்கியிருந்த அதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சு, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், கடற்படை, கரையோரக் காவல் படை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் சிரேஸ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். இந்த அமர்வின்போது மீனவர்கள் தொடர்பாகவும் மீன்பிடித்துறை குறித்தும் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக பரந்தளவான மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இருதரப்பினரதும் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விடயங்களாக காணப்படுவதால் அவற்றை மனிதாபிமான முறையில் கையாண்டு நிவர்த்தி செய்வதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர். அத்துடன் இரக்கம், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அணுகுமுறை மட்டுமே இருதரப்பு மீனவர்களாலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளுக்கு நீடித்த அடித்தளமொன்றினை உருவாக்குமெனவும் அவர்கள் இணங்கியிருந்தனர். இதேவேளை, இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் முற்கூட்டியே விடுதலை செய்யுமாறு இந்திய தரப்பினர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், இலங்கையில் இந்திய மீனவர்களும் அவர்களது படகுகளும் நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கப்பட்டு அதிகளவான தண்டப்பணம் விதிக்கப்படுகின்றமை அதிகரித்துள்ளமை தொடர்பாகச் சுட்டிக் காட்டியுள்ள இந்திய தரப்பு, மீனவர்கள் விவாகரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஏற்கனவெ காணப்படுகின்ற புரிந்துணர்வுகள் மற்றும் முறைமைகளைப் பின்பற்றவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தது. இந்தியக் கடற்படை மற்றும் கரையோரக் காவல் படை அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் தற்போது காணப்படுகின்ற ஒத்துழைப்பினை சுட்டிக்காட்டி, கண்காணிப்பு மற்றும் ரோந்து, இருதரப்பு கடற்படையினர் இடையிலான நேரடி இணைப்புகள் மூலமாக கிரமமான தொடர்புகளை மேற்கொள்ளல், மற்றும் ஏனைய சகல செயற்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் மேம்பட்ட ஒத்துழைப்பினை தொடர இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர். அத்துடன் துரதிஷ்டவசமாக ஏற்பட்ட காயங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த சம்பவங்கள் அண்மையில் கடலில் இடம்பெற்றிருந்தமை தொடர்பாக கவனத்துக்கு கொண்டுவந்திருந்த இந்திய தரப்பு, பலத்தினை பயன்படுத்துவது அனைத்து சந்தர்ப்பங்களிலும் தவிர்க்கப்படவேண்டியதாகுமெனவும் கடுமையாக வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், மீனவர்களின் விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக இரு நாடுகளினதும் மீனவ அமைப்புகளின் கூட்டத்தினை விரைவில் நடத்தவேண்டுமெனவும் இந்திய தரப்பினரால் வலியுறுத்தப்பட்டிருந்தது. மீனவர்கள் பிரச்சினைக்கு, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்கதும் நீண்டகாலம் நீடித்திருக்கக் கூடியதுமான தீர்வு ஒன்றினை எட்டுவது குறித்த விடயங்கள் தொடர்பாக பரந்த பேச்சுகளை முன்னெடுப்பதற்காக கிரமமாகவும் தொடர்ச்சியாகவும் சந்திப்புகளை மேற்கொள்ளவும் இருதரப்பும் இணங்கியுள்ளன. https://www.virakesari.lk/article/197621
  25. யாழில் 34 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்ட வீதி யாழ்ப்பாணம் பலாலி வீதி - வசவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று (01) காலை ஆறு மணி முதல் அனுமதிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீற்றர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/197614

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.