Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Everything posted by ஏராளன்

  1. ஒரே ஒரு பந்தில் 10 ஓட்டங்ளைப் பெற்ற பங்களாதேஷ் அடுத்த 53 பந்துகளில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்ளை இழந்தது; பலாமான நிலையில் தென் ஆபிரிக்கா (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சட்டோக்ரம், ஸாஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் அபூர்வ சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அப் போட்டியில் பங்களாதேஷ் ஒரே ஒரு பந்தில் பத்து ஓட்டங்களைப் பெற்றுவிட்டது. ஆனால் அந்த ஓட்டங்கள் துடுப்பிலிருந்து பெறப்படவில்லை. தென் ஆபிரிக்காவுக்கு பதிலளித்து முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் தனது துடுப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே 5 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அத்துடன் சட்டபூர்வமான ஒரே ஒரு பந்தில் 10 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றுவிட்டது. அப் போட்டியில் தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது சேனுரன் முத்துசாமி ஓட்டங்களைப் பெறுகையில் அடிக்கடி ஆடுகளத்தின் நடுவில் ஓடியதால் அவர் எச்சரிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவ்வணிக்கு 5 ஓட்டங்கள் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த 5 அபராத ஓட்டங்கள்தான் பங்களாதேஷுக்கு துடுப்பெடுத்தாடுவதற்கு முன்னரே இனாம் ஓட்டங்களாக கிடைத்தது. பங்களாதேஷ் துடுப்பெடுத்தாடியபோது கெகிசோ ரபாடா வெளிநோக்கி வீசிய முதலாவது பந்தை பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர் ஷாத்மன் இஸ்லாம் வெறுமனே விட்டுவிட்டார். இதனிடையே எண்ணிக்கைப் பலகையில் 5 இனாம் ஓட்டங்கள் சேர்ந்திருந்தது. அடுத்த பந்து நோ போல் ஆனதுடன் அப் பந்து விக்கெட் காப்பாளரைக் கடந்து எல்லைக்கொட்டைத் தாண்டி சென்றுவிட்டது. இதனால் மேலும் 5 ஓட்டங்கள் பங்களாதேஷுக்கு சேர, ஒரு சட்டபூர்வ பந்து வீசப்பட்ட நிலையில் அதன் மொத்த எண்ணிக்கை 10 ஓட்டங்களாக இருந்தது. ஆனால் பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் அடுத்த 53 பந்துகளுக்குள் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. பங்களாதேஷின் மொத்த எண்ணிக்கையான 38 ஓட்டங்களில் 5 இனாம் ஓட்டங்கள் உட்பட 13 உதிரிகள் அடங்கியிருந்தது. அப் போட்டியல் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களை இழந்து 575 ஓட்டங்களைப் குவித்திருந்தபோது தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. டோனி டி ஸோர்ஸி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர் ஆகிய மூவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்தனர். இந்த மூவரும் இப் போட்டியில் தத்தமது கன்னிச் சதங்களைப் பெற்றது விசேட அம்சமாகும். போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களை இழந்து 575 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. தனது துடுப்பாட்டத்தை 141 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த டோனி டி ஸோர்ஸி 177 ஓட்டங்களைப் பெற்றார். டேவிட் பெடிங்டன் 59 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் வியான் முல்டர் 105 ஓட்டங்களுடனும் சேனுரன் முத்துசாமி 68 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 152 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். போட்டியில் முதல் நாளான நேற்றைய தினம் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 106 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்திருந்தார். பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் 198 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/197547
  2. புதிய நாடாளுமன்றம் கூடியதன் பின்னரே பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து அரசு முடிவு செய்யும் புதிய அரசாங்கம் தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் அல்லது கடந்த அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான எந்தவொரு முடிவையும் அடுத்த பாராளுமன்றத்திற்குப் பின்னரே பரிசீலிக்கும் என்று உயர்மட்ட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுகம் குடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கையாள்வதில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்தமைக்காக இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், வாராந்த அமைச்சரவை மாநாட்டில் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத், இது இந்த நேரத்தில் ரத்து செய்யப்படவோ அல்லது திருத்தப்படவோ மாட்டாது என தெரிவித்திருந்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கான பணிகளை கடந்த அரசாங்கம் ஆரம்பித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பிறகு, அப்போதைய அரசு அசல் வரைவில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஆனால், அது சட்டமாக்கப்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை அல்லது கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு முழுமையான அமைச்சரவை இல்லை என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்குப் பிறகு பாராளுமன்றம் கூடியதும், அரசாங்கம் இந்த சட்டங்களைப் பார்த்து அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யும்” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/311393
  3. பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 1,136 முறைப்பாடுகள் பதிவு - தேர்தல் ஆணைக்குழு பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை) 1,136 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 316 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 788 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 21 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. https://www.virakesari.lk/article/197599
  4. 2024 ஆம் ஆண்டில் இதுவரை தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று சுகாதார அமைச்சகத்தின் மருத்துவப் பொருட்கள் பிரிவு தெரிவித்துள்ளது. தர சோதனையில் தோல்வியடைந்த 71 மருந்துகளில், சுமார் 39 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை, பத்து மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, மற்றவை சீனா, கென்யா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வந்தவை. இதுகுறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், இந்தியா உலகின் முன்னணி மருந்து உற்பத்தியாளர்களில் ஒருவர் என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் தரக் குறைபாடு ஏற்படுவது சாதாரண நிகழ்வு என்றும் கூறினார். “எனினும், தரமற்ற மருந்து எதுவும் சந்தையில் இல்லை என்பதை உறுதி செய்கிறோம்,” என்றும் அவர் உறுதிப்படுத்தினார். தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில திரும்ப அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அல்லது நிறுத்தப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/311396
  5. சீனாவிடமிருந்து இலங்கைக்கு மற்றொரு மனிதாபிமான உதவி இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இந்த உதவி வழங்கப்படவுள்ளது. சீன தூதரகம் தனது உத்தியோகபூர்வ X பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை (100,000 அமெரிக்க டொலர்) நன்கொடையாக வழங்கியது. அந்த நிதி உதவிக்கு மேலதிகமாக இந்த உதவியும் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் குறிப்பிடுகிறது. https://thinakkural.lk/article/311408
  6. யாழ். கற்கோவளம் இரட்டைக்கொலை : இரு சந்தேகநபர்கள் கைது யாழ்ப்பாணம் - கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான தீவிர நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். அப்பகுதியை சேர்ந்த மாணிக்கம் சுப்பிரமணியம் அவரது மனைவியான சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோர் நேற்றைய தினம் புதன்கிழமை வீட்டில் படுகொலை செய்ய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட குடும்ப தலைவர் சலவை தொழிலாளி எனவும், அவர் அச்சுவேலி வைத்தியசாலை துணிகளை சலவை செய்யும் ஒப்பந்தத்தை அண்மையில் பெற்று இருந்ததாகவும், அதனால் தொழில் ரீதியில் எதிர்ப்புக்கள் சில கிளம்பியிருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பொலிஸார் இருவரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்ய தீவிர நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதேவேளை கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கழுத்தை நெரித்த பின்னர் கொங்கிறீட் கற்களால் தலையில் பலமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. படுகொலையானவர்களின் ஒரு மகன் வெளிநாடொன்றில் வசித்து வருவதாகவும், மற்றைய மகன் தாய் தந்தையாருடன், படுகொலை நடைபெற்ற வீட்டில் வசித்து வந்த நிலையில் சம்பவ தினத்தன்று, தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/197591
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், பிரான்சிஸ் மாவோ, பெத்தனி பெல் பதவி, பிபிசி நியூஸ் ஸ்பெயின், கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளத்தை தற்போது சந்தித்து வருகிறது. கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 95 பேர் இறந்துவிட்டனர், மேலும் பலர் காணாமல் போய்விட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலங்களும் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் வீட்டுக் கூரைகளின் மீது ஏறியும், மரங்களைக் கட்டி அணைத்தும் உயிர் தப்பினர். இந்தப் பேரிடருக்காக மூன்று நாட்கள் ஸ்பெயினில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் பெட்ரோ சான்சேஸ் அறிவித்துள்ளார். "பலர் காணாமல் போயுள்ளனர்" என்பதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சுவதாக அரசு கூறுகிறது. வலென்சியாவில் குறைந்தது 92 இறப்புகள் பதிவாகியுள்ளன, வலென்சியாவின் மேற்கில் உள்ள காஸ்டில்லா-லா மன்சாவில் மேலும் இரண்டு இறப்புகளும், மலாகாவில் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளன. மலாகாவில் 71 வயதான பிரிட்டிஷ் நபர் தனது வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் இறந்தார். கடந்த 1973ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 150 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு ஏற்படும் மிக மோசமான வெள்ள பாதிப்பு இது. ஸ்பெயின் நாட்டு மக்களுக்கு பிரதமர் சான்சேஸ் ஆற்றிய உரையில், குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியதுடன், முழுமையாக மீள்வோம் என்றும் உறுதி அளித்துள்ளார். "ஒட்டுமொத்த ஸ்பெயினும் உங்களுடன் சேர்ந்து அழுகிறது... நாங்கள் உங்களைக் கைவிட மாட்டோம்" என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் சான்சேஸ் கூறினார். வலென்சியாவுக்கு அருகிலுள்ள முதல் நகரங்களில் ஒன்றான ஷிவாவில், ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை எட்டு மணிநேரத்தில் பெய்துள்ளதாக தேசிய வானிலை நிறுவனமான ஏமெட் தெரிவித்துள்ளது. 'சுனாமி போல வந்த வெள்ளம்' பட மூலாதாரம்,GETTY IMAGES புதன்கிழமை காலை ஸ்பெயின் ராணுவம் மற்றும் அவசரக்கால குழுக்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்ள விரைந்தபோது, பால்கனிகள் மற்றும் கார் கூரைகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். வலென்சியாவில் தப்பிப் பிழைத்தவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளத்தின் கொடூரத்தை விவரித்தனர். திடீரென ஏற்பட்ட அலை வீதிகள் மற்றும் சாலைகளை ஆறுகளாக மாற்றியது எனவும், பல வாகன ஓட்டிகள் அதில் தெரியாமல் சிக்கிக்கொண்டனர் எனவும் தெரிவித்தனர். வலென்சியாவுக்கு அருகிலுள்ள பைபோர்ட்டாவை சேர்ந்த 21 வயதான கில்லர்மோ செரானோ பெரெஸ், தண்ணீர் "சுனாமி போல" நெடுஞ்சாலையில் தங்களை நோக்கி வந்ததை நினைவு கூர்கிறார். அவரும் அவரது பெற்றோரும் தங்கள் காரைவிட்டு, உயிர் பிழைக்க ஒரு பாலத்தில் ஏறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட மற்றொருவர், “வெள்ளம் ஆக்ரோஷமாக நெருங்கி வருவதை உணர்ந்த வாகன ஓட்டிகள், சாலையின் தடுப்புகளுக்கு அருகில் மனித சங்கிலி உருவாக்கி கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு நின்றனர். நல்ல வேளையாக யாரும் கீழே விழவில்லை. விழுந்திருந்தால் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்கள்” என்று 45 வயதான பாட்ரிசியா ரோட்ரிக்ஸ் எல் பைஸ் செய்தித்தாளிடம் கூறினார். லா டோரேவில் வசிக்கும் ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், அவரது நண்பர்கள் சிலர் தங்கள் வீடுகளை இழந்துவிட்டதாகவும், செவ்வாய்க் கிழமை இரவு "தண்ணீரில் கார்கள் மிதப்பதையும்" அலைகள் "சில சுவர்களை உடைத்துக் கொண்டு செல்வதையும்" பார்த்ததாகக் கூறினார். இதற்கிடையில், வலென்சியாவுக்கு அருகிலுள்ள ஹார்னோ டி அல்செடோ நகரின் மேயர், சில நிமிடங்களில் நீர் மட்டம் ஒரு மீட்டருக்கும் அதிகமாக எவ்வாறு உயர்ந்தது என்று பிபிசி நியூஸ்ஹவரிடம் தெரிவித்தார். "வெள்ளப்பெருக்கு மிக விரைவாக இருந்தது - நாங்கள் அவசர சேவைகளை அழைத்தோம், அவர்கள் கழுத்து வரை தண்ணீருடன் இருந்த சிலரை மீட்கத் தொடங்கினர்" என்று கான்சுவேலோ தாராசோன் கூறினார். உரிய நேரத்தில் எச்சரிக்கை வழங்கப்பட்டதா? பட மூலாதாரம்,GETTY IMAGES அவசரக் காலங்களில், உரிய எச்சரிக்கைகள் இருந்தபோதும், பேரிடர் நிவாரண அதிகாரிகள் மிகவும் தொய்வாகச் செயல்பட்டதாகப் பல நேரங்களில் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் மக்கள் சாலைகளைப் பயன்படுத்தவோ, உயரமான இடத்திற்குச் செல்லவோ முடியவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. செவ்வாய்க் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 8.15 மணி வரை, தேசிய பேரிடர் காலங்களில் பொறுப்பாக நியமிக்கப்படும், தி சிவில் பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்து வெள்ளம் குறித்த எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. ஆனால் அதற்குள்ளாக ஷிவா மற்றும் அதற்கு அருகில் இருந்த சில பகுதிகள் 2 மணிநேரமாக வெள்ளத்தில் தத்தளித்து வந்தன. வெள்ளம், காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்க முந்தைய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட வலென்சியா அவசரக்கால பிரிவைத் தற்போதுள்ள அரசு நீக்கியிருந்தது. அந்த முடிவை நியாயப்படுத்த வேண்டிய நிர்பந்தமும் தற்போது அரசுக்கு எழுந்துள்ளது. 'முன்னெப்போதும்' இல்லாத மழை பட மூலாதாரம்,GETTY IMAGES புதன்கிழமை மீட்புப் பணிகளில் ஈடுபட ஸ்பெயின் அரசு 1,000க்கும் மேற்பட்ட துருப்புகளை களத்தில் இறக்கியது. ஆனால் பல குழுக்கள் வெள்ளம் சூழ்ந்த சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட நகரங்களை நெருங்க முடியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஸ்பெயினின் மீட்புக் குழுக்களை ஒருங்கிணைக்க உதவுவதற்காக அதன் கோப்பர்நிக்கஸ் செயற்கைக்கோள் அமைப்பு செயல்படத் தொடங்கியதாகக் கூறினார். மற்ற ஐரோப்பிய அண்டை நாடுகளும் கூடுதல் படைகளை அனுப்ப முன்வந்துள்ளன. ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோபில்ஸ், இந்த வெள்ளம் "முன்னெப்போதுமே இல்லாத நிகழ்வு" என்று புதன்கிழமை கூறியிருந்தார். நாட்டின் மத்திய கிழக்கில் புதன்கிழமையன்று மழை தணிந்தது. ஆனால் மழை வடகிழக்கு நோக்கி கட்டலோனியா பிராந்தியத்திற்கு நகர்வதாக வானிலை அதிகாரிகள் எச்சரித்தனர். நாட்டின் பல பகுதிகளிலும் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன, வெள்ளத்தை எதிர்கொள்ளவும் தஞ்சமடையவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. வெள்ளம் பல்வேறு காரணங்களால் உருவாகிறது. ஆனால் காலநிலை மாற்றத்தால் வளிமண்டலம் வெப்பமடையும்போது, அது தீவிர மழைப் பொழிவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. தீவிர மழைக்கு முக்கியயக் காரணம் "கோட்டா ஃப்ரியா" என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இலையுதிர்க் காலத்திலும் குளிர்காலத்திலும் மத்தியதரைக் கடலில் சூடான நீரில் குளிர்ந்த காற்று இறங்கும்போது ஸ்பெயினை தாக்கும் ஒரு இயற்கை வானிலை நிகழ்வு இது. மழை வெடிப்புகளுக்கு காலநிலை மாற்றம் காரணமா? பட மூலாதாரம்,GETTY IMAGES இருப்பினும், புவி வெப்பநிலை அதிகரிப்பது, மேகங்கள் அதிக மழையைக் கொண்டு செல்ல வழிவகுத்துள்ளதாக விஞ்ஞானிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். "புதைபடிம எரிபொருள் உமிழ்வால் புவி வெப்பமடையும் ஒவ்வொரு முறையும் வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தை வைத்திருக்க முடியும். இது கனமழை வெடிப்புகளுக்கு வழிவகுக்கிறது" என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ஃப்ரெடெரிக் ஓட்டோ கூறினார். "இதில் எந்தச் சந்தேகமும் இல்லை, இந்த மழை வெடிப்புகள் காலநிலை மாற்றத்தால்தான் தீவிரமடைந்தன" என்கிறார் ஓட்டோ. தொழில்புரட்சி தொடங்கியதில் இருந்து உலகம் ஏற்கெனவே சுமார் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்துள்ளது. உலக நாடுகள், தங்கள் கரிம வெளியீட்டை விரைந்து குறைக்காவிட்டால், வெப்பநிலை மேலும் உயரும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy9jlr9q8jgo
  8. டி ஸோர்ஸி, ஸ்டப்ஸ் கன்னிச் சதங்கள்; பலமான நிலையில் தென் ஆபிரிக்கா (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ரம், ஸாஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (29) ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் போட்டியில் டோனி டி ஸோர்ஸி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் குவித்த கன்னிச் சதங்களின் உதவியுடன் தென் ஆபிரிக்கா பலமான நிலையில் இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைக் குவித்திருந்தது. தங்களது எட்டாவது போட்டியிலும் 5ஆவது போட்டியிலும் விளையாடும் டோனி டி ஸோர்ஸியும் ட்ரைஸ்டன் ஸ்டப்பஸும் இரண்டாவது விக்கெட்டில் 201 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் தென் ஆபிரிக்கா பலம்வாய்ந்த நிலையை அடைந்தது. தென் ஆபிரிக்க ஜோடியினரால் ஆசிய மண்ணில் பகிரப்பட்ட 3ஆவது அதிசிறந்த இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டம் இதுவாகும். பலமான நிலையை அடைந்ததன் மூலம் தென் ஆபிரிக்கா இந்தத் தொடரை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான அத்திவாரத்தை இட்டுக்கொண்டுள்ளது. இந்த ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமைந்ததை தென் ஆபிரிக்கா துடுப்பாட்ட வீரர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். ஆரம்ப வீரரான அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம், டோனி டி ஸோரி ஆகிய இருவரும் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். மார்க்ராம் 33 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து டோனி டி ஸோர்ஸி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் மிகுந்த பொறுப்புணர்வுடன் திறமையாக துடுப்பெடுத்தாடி இரண்டாவது விக்கெட்டில் 201 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர். 198 பந்துகளை எதிர்கொண்ட ட்ரைஸ்டன், 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைப் பெற்றார். டோனி டி ஸோர்ஸி முழுநாளும் துடுப்பெடுத்தாடி 211 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 141 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். டேவிட் பெடிங்ஹாம் ஆட்டம் இழக்காமல் 18 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 110 ஓட்டங்களைக் கொடுத்து வீழ்ந்த இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/197456
  9. அரசாங்கம் தற்போது பயணிப்பதை பார்க்கும்போது எதிர்க்கட்சியில் இருந்து அரச அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியும்; ரணில்! (எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கம் அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அவர்ளுக்கு கை காட்டிவிட்டு சென்றாலும் புதிய ஜனநாயக முன்னணி குழுவினர் அரச ஊழியர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை. அரசாங்கம் தற்போது பயணிப்பதை பார்க்கும்போது எதிர்க்கட்சியில் இருந்து அரச அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் மாலை பன்னல பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பெரும்பான்மை இல்லாத நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் தெரிவாகி உள்ள சந்தர்ப்பத்திலேயே இந்த தேர்தல் இடம்பெறுகிறது. அதனால் இந்த தேர்தலில் வெற்றிபெறுவது கஷ்டம் என நாங்கள் நினைக்கக்கூடாது அரசாங்கத்தை பெற்றுக்கொள்ள நாங்கள் முயற்சிப்போம். அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்க்கட்சியில் நாங்கள் பலமான இடத்துக்கு வரவேண்டும். சிலவேளைகளில் அரசாங்கம் தற்போது பயணிப்பதை பார்க்கும்போது எதிர்க்கட்சியில் இருந்து அரச அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் அது தொடர்பாகவும் மனதில் வைத்துக்கொண்டு நாங்கள் முன்னுக்கு வந்திருக்கிறோம். நாடு வீழ்ச்சியடைந்திருந்தபோது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப என்னுடன் முன்வந்தவ குழுவே தற்போது சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறது. எமது குழுவின் அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு அனைவரும் கலந்து இருந்ததாலே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமாகியது. இந்த வருடம் இறுதிவரைக்கும் பேதுமானளவு நிதி வழங்கிய பின்னரே நாங்கள் அரசாங்கத்தை ஒப்படைத்தோம். வெளிநாட்டு கையிருப்பு இருக்கிறது. தற்போது அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மாத்திரமே அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு அதனை செய்துகொள்ள முடியுமாகுமா என எனக்கு தெரியாது. அனுபவமுள்ள அணியொன்று இருந்தால் அரசாங்கத்தை சரியான திசைக்கு செலுத்த முடியும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அதிகாரிகளின் அனுமதியை பெற்றுக்கொள்ளவில்லை என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்திருந்ததை நான் கண்டேன். மக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் காலத்தில் வழங்கி பொய் வாக்குறுதி எனவும் அவர் தெரிவித்திருந்தார். அமைச்சரவை செயற்படுவதற்கு அதிகாரிகளின் அனுமதி தேவை என பிரதமர் தெரிவிக்கிறார். அரசியலமைப்பு தொடர்பில் இவர் எங்கு கற்றுக்கொண்டார்? அரசியலமைப்பில் 43ஆவது உறுப்புரையை பாருங்கள். நாட்டை நிர்வகிப்பது அமைச்சரவையாகும். பிரதமருக்கு அரசியலமைப்பு தொடர்பில் தெரிந்துகொள்ள தேவை என்றால் சொல்லுங்கள் நான் வருகிறேன். இல்லாவிட்டால் முன்னாள் பிரதமர் வருவார். அமைச்சர்களின் வேலை நடவடிக்கைகளை அதிகாரிகளுக்கு வழங்கப்போகிறார்கள். இவ்வாறான குழுவுக்கு நாட்டை கட்டியெழுப்ப முடியுமா? அனுபவமுள்ளவர்கள் இருக்க வேண்டும். நான் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சராகவும் தினேஷ் குணவர்த்தன பிரதமர் மற்றும் பொது நிர்வாக அமைச்சராகவும் கடந்த மே மாதம் 27ஆம் திகதி நாங்கள் எடுத்த தீர்மானத்துக்கமைய அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக எனது செயலாளர் சமன் ஏக்கநாயக்க கடந்த ஜூலை 11ஆம் திகதி விசேட நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்தார். என்றாலும் அந்த சம்பள அதிகரிப்பை வழங்க பணம் இல்லை என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்திருந்தார். நான் பொய் சொல்லி இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். அரச ஊழியர்களின் ஆரம்ப பிரிவின் மாதாந்த அடிப்படைச் சம்பளம் 30ஆயிரம் ரூபாவாகக் கொண்டு, அரச சேவையின் நிவைவேற்று குழு, உயர் சேவை குழு, அமைச்சரவை செயலாளர் ஆகிய பதவிகளுக்கிடையில் 1:6 விகிதாசாரங்களுக்கு அமைவாக ஒட்டுமொத்த அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பள அளவு திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இரண்டு கட்டங்களாக இந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமையவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இருப்பவர்கள் அரச திணைக்களங்களின் பணிப்பாளர்கள், ஓய்வு பெற்ற அரச சேவை பணிப்பாளர்கள் மற்றும் தற்போதும் சேவையில் இருப்பவர்களாகும். இந்த குழுவில் இருக்கும் ஒருவர் தற்போது ஜனாதிபதியின் ஆலாேசகராக இருக்கிறார். இவர்கள் அனைவரும் சம்பள அதிகரிப்பு அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். இது தொடர்பில் பிரதமருக்கு தெரியுமா? அப்படியானால் இந்த விடயத்தை அரசாங்கம் பொய் என எவ்வாறு தெரிவிக்க முடியும். திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருடன் இந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடி இருக்கிறோம். அதனால் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட பணத்தை அரச அதிகாரிகளுக்கு செலுத்த முடியும். இவர்களுக்கு கண்டுபிடிக்க முடியாத வகையில் பொய் சொல்ல தெரியாது. பணம் இருக்கிறது. தேடிக்கொள்ளவும் முடியும். அதன் பிரகாரம் இந்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியும். அத்துடன் நான் ஒன்றை சொன்னால் நிச்சயமாக அதனை செய்வேன் திசை காட்டியை போன்று செயற்பட மாட்டேன். அதனால் எமது அணி மீது நம்பிக்கை வையுங்கள். எங்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு அன்று இவர்கள் அரச ஊழியர்களுக்கு கூறினர். அதன்படி அவர்களும் வாக்களித்தனர். இப்போது திசைகாட்டி அரச ஊழியர்களுக்கு டாடா காட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் எங்களால் தீர்மானிக்கப்பட்ட இந்த சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் இணங்கும் வரையில் நாங்கள் எதிர்ப்பை முன்னெடுப்போம். இந்த சம்பள அதிகரிப்பை கோரிய தொழிற்சங்கங்கள் எங்கே? இவர்களில் அதிகமானவர்கள் தற்போது அரசாங்கத்துடனே இருக்கின்றனர். இந்த தொழிற்சங்கங்கள் அரச ஊழியர்களை காட்டிக்கொடுத்துள்ளன. அரச ஊழியர்களுக்காக தற்போது குரல்கொடுப்பது சிலிண்டரில் போட்டியிடுபவர்கள் மாத்திரமாகும். ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில் கதைத்து பயன் இல்லை. அநுவுடன் மோதப்போவதில்லை என சஜித் தெரிவித்திருக்கிறார். உண்மையான அநுரகுமார இருக்கும் போது எதற்கு கார்ட்போர்ட் அநுரகுமாரவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/197503
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, காலநிலை மற்றும் அறிவியல் நிருபர் 2014-ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய விண்கல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். டைனோசரை அழித்த விண்கல்லைக் காட்டிலும் 200 மடங்கு பெரிய விண்கல் சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியை தாக்கியது. இதை பற்றி தெரிந்து கொள்வதற்காக, தென்னாப்பிரிக்காவில் இந்த விண்கல் விழுந்த பகுதிக்கு விஞ்ஞானிகள் சென்றனர். அங்கு அவர்கள் ஸ்லெட்ஜ் சுத்தியல்களை கொண்டு அந்த விண்கல்லின் சில பாறை துண்டுகளை எடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். மிகப்பெரிய இந்த விண்கல் தாக்கியதால் பூமியில் பேரழிவு ஏற்பட்டதையும் தாண்டி, பூமியில் உயிர்கள் செழிக்க உதவியது என்பதற்கான ஆதாரங்களையும் விஞ்ஞானிகள் குழு கண்டறிந்தது. "பூமி உருவான கால கட்டத்தில், விண்வெளியில் ஏராளமான சிறிய விண்கல்கள் சுற்றிக்கொண்டிருந்தன. அவற்றில் பலவும் பூமி மீது மோதியிருக்கலாம் என்பதை நாம் அறிவோம்", என்று இந்த புதிய ஆராய்ச்சியை வழிநடத்திய ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நட்ஜா டிராபன் கூறுகிறார். "ஆனால் இதுபோன்ற மிகப்பெரிய விண்கல் மோதலுக்கு நடுவே, பூமியில் உயிர்கள் தாக்குப்பிடிக்குமா என்ற நெருக்கடியான நிலை இருந்தது என்பதை கண்டறிந்தோம். ஆனால் அதன் பிறகே உயிர்கள் மிகவும் செழிப்பாக உருவாகி வளர்ந்துள்ளன", என்று அவர் கூறுகிறார். நமக்கு இதற்கு முன் தெரிந்த விண்கற்களை விட S2 விண்கல் மிகப் பெரிய ஒன்று. 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களின் அழிவுக்கு வழிவகுத்த விண்கல் சுமார் 10 கிலோமீட்டர் அளவுக்கு அகலமானது. பூமியின் தொடக்க காலகட்டத்தில் S2 விண்கல் பூமியை தாக்கியது. அப்போது பூமி பெரும்பாலும் கடலால் சூழப்பட்டு இருந்தது. சில கண்டங்கள் மட்டுமே உருவாகியிருந்தன. அப்போது இருந்த உயிர்களும் ஒற்றை செல் உடைய எளிய உயிர்களாக இருந்தன. இந்த விண்கல் தாக்கிய கிழக்கு பார்பர்டன் கிரீன்பெல்ட் பகுதி பூமியின் பழமையான இடங்களில் ஒன்றாகும். இங்கு விண்கல்லின் எச்சங்கள் இன்னும் உள்ளன. பட மூலாதாரம்,NADJA DRABON பேராசிரியர் டிராபன், தன்னுடன் பணியற்றுபவருடன் இணைந்து மூன்று முறை இந்த பகுதிக்கு பயணம் செய்துள்ளார். இந்த மலைப்பகுதிகளில் யானைகள், காண்டாமிருகங்கள் போன்ற வன விலங்குகளிடமிருந்தும் மற்றும் வேட்டையாடுபவர்களிடமிருந்தும் அவர்களைப் பாதுகாக்க துப்பாக்கிகளுடன் படைவீரர்கள் உடன் சென்றனர். அவர்கள் இந்த விண்கல்லின் சிறிய துகள்களை தேடிச் சென்றனர். சுத்தியலை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான கிலோகிராம் பாறை துண்டுகளை சேகரித்து ஆய்வகங்களுக்கு அவர்கள் கொண்டு சென்றனர். இதில் முக்கியமான மதிப்பு மிக்க விண்கல் துகள்களை பேராசிரியர் டிராபன் தனது பெட்டியில் வைத்திருந்தார். "நான் பயணம் செய்யும் போது பெட்டிகளை சோதனை செய்வதற்காக நிறுத்தப்படுவேன். அப்போது அதிகாரிகளிடம் விஞ்ஞானம் எவ்வளவு அற்புதமானது என்பதைப் பற்றி ஒரு பெரிய விளக்கத்தை கொடுப்பேன். இதை கேட்டு அவர்கள் சலிப்படைந்து என்னை கடந்து செல்ல அனுமதிப்பார்கள்", என்று அவர் கூறுகிறார். S2 விண்கல் பூமியில் விழுந்த போது என்ன பாதிப்பு ஏற்பட்டதோ அதேபோன்ற மாதிரியை இந்த குழு செயற்கையாக மீண்டும் உருவாக்கி ஆய்வு செய்தது. இந்த விண்கல் பூமியில் விழுந்த போது 500 கிலோமீட்டர் அளவிற்கு பெரிய பள்ளத்தை உருவாக்கியது. அதிலிருந்து சிறு பாறை துண்டுகள் மிக வேகமாக சிதறின. இதனால் உலகம் முழுவதும் புகை மண்டலம் போல உருவானது. "ஒரு மழை மேகத்தை கற்பனை செய்து பாருங்கள். அதிலிருந்து நீர்த்துளிகள் கீழே விழுவதற்கு பதிலாக, வானத்தில் இருந்து உருகிய பாறைத் துகள்கள் பொழிவதை போன்றது அது", என்று பேராசிரியர் டிராபன் கூறினார். பட மூலாதாரம்,NADJA DRABON உலகம் முழுவதும் கடலில் ஒரு பெரிய சுனாமி எழும்பி, கடலோரப் பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்திருக்கும். "அந்த சுனாமியுடன் ஒப்பிடுகையில், 2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி மிகவும் சாதாரண ஒன்று" என்று பேராசிரியர் டிராபன் கூறுகிறார். அப்போது வெளிப்பட்ட அதிக அளவிலான ஆற்றல், அதிக அளவில் வெப்பத்தை ஏற்படுத்தி கடலை கொதிக்கச் செய்து, பல மீட்டர் ஆழம் அளவிற்கு தண்ணீரை ஆவியாகச் செய்திருக்கிறது. இதனால் காற்றின் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்திருக்கும். வானம் தூசி மற்றும் துகள்களால் நிறைந்து கருப்பாக மாறி இருந்திருக்கும். இந்த கருமையை தாண்டி சூரிய ஒளி ஊடுருவாது என்பதால், ஒளிச்சேர்க்கையை நம்பியிருந்த நிலத்திலும் நீரிலும் இருந்த உயிர்கள் அழிந்திருக்கக் கூடும். இந்த தாக்கங்கள் S2 விண்கல் போன்ற மற்ற பெரிய விண்கல் தாக்கிய இடங்களை போல ஒத்திருந்தது என்று புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர் ஆனால் பேராசிரியர் டிராபன் மற்றும் அவரது குழு அடுத்து கண்டுபிடித்ததுதான் ஆச்சரியமாக இருந்தது. இந்த பாறை துகள்கள் மாதிரிகளை ஆராய்ந்து பார்த்ததில் உலகில் உள்ள உயிர்களின் உணவான பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துகள் அதில் இருந்தன. பட மூலாதாரம்,NADJA DRABON "பூமியில் இருந்த உயிர்கள் தாக்குப்பிடித்து, விரைவாக மீண்டு வந்து செழித்துள்ளன", என்று அவர் கூறுகிறார். "இது காலையில் பல் துலக்குவது போன்றது. என்னதான் அது 99.9% பாக்டீரியாவைக் கொன்றாலும், மாலைக்குள் அவை அனைத்தும் மறுபடியும் உண்டாகிவிடும் அல்லவா?" என்றார் அவர். S2 விண்கல் மோதியதால் ஏற்பட்ட மிகப்பெரிய தாக்கம் என்னவென்றால், பாஸ்பரஸ் போன்ற உயிர்கள் செழிக்கத் தேவையான இன்றியமையாத பொருட்களை உலகம் முழுக்கப் பரவச் செய்திருக்கலாம் என்று புதிய கண்டுபிடிப்பு கூறுகிறது. அப்போது ஏற்பட்ட சுனாமி கடலின் அடியாழத்தில் இருந்து இரும்புச்சத்துள்ள நீரை மேலே கொண்டு வந்ததன் மூலம் பூமியின் தொடக்க காலத்தில் இருந்த எளிய உயிர்களுக்கு கூடுதல் ஆற்றல் கிடைத்திருக்கலாம். பூமியின் தொடக்க காலத்தில் நிகழ்ந்த விண்கற்களின் அடுத்தடுத்த மோதல்களே ஆரம்ப கால உயிர்கள் தோன்ற வழிவகுத்திருக்கலாம் என்ற விஞ்ஞானிகளின் கருதுகோளுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பு வலுசேர்க்கிறது. "பூமியில் இந்த விண்கல் மோதலுக்குப் பிந்தைய சூழல் உயிர்கள் செழிக்க சாதகமான சூழலை உருவாக்கியிருக்கலாம் என்பது போல் தோன்றுகிறது" என்று அவர் கூறுகிறார். இந்த கண்டுபிடிப்புகள் அறிவியல் இதழான PNAS-இல் வெளியிடப்பட்டுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr5m616e432o
  11. (நா.தனுஜா) தேசிய மக்கள் சக்தியின் ஆழமான இனவாதப்போக்கை உணர்ந்திருப்பதாலேயே தமிழ் மக்கள் அவர்களைத் தொடர்ச்சியாக நிராகரித்துவருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த்தேசிய தலைவர்கள், பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பான அவர்களது தற்போதைய நிலைப்பாடு தெற்கில் வாழும் சிங்கள மக்களை கண்திறக்கச்செய்வதாக அமையும் எனத் தெரிவித்துள்ளனர். நாட்டில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என தேசிய மற்றும் சர்வதேச தரப்புக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (29) இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் விஜித்த ஹேரத், 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து தற்போது ஆராயப்படவில்லை. அது உள்ளவாறே தொடர்ந்து நடைமுறையில் இருந்தாலும், அச்சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும். அடுத்துவரும் புதிய பாராளுமன்றத்தில் இச்சட்டம் தொடர்பில் திருத்தங்களை முன்மொழிந்து, அவை பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் மாத்திரமே பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்துள்ளார். கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்திருக்கும் அவரது இக்கருத்து தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 'தேசிய மக்கள் சக்தி இற்றைவரை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஒழிப்போம் என்ற தெளிவான நிலைப்பாட்டை எடுத்துவந்திருக்கிறது. அச்சட்டத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் வழங்கவில்லை. மாறாக இச்சட்டத்தை ஒழிப்பதாக தேசிய மக்கள் சக்தியினால் உறுதியாகத் தீர்மானிக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் நான் கலந்துகொண்டு பேசியிருக்கிறேன். ஆனால் இப்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து வழுக்கத்தொடங்கிவிட்டார்கள்' என விசனம் வெளியிட்டிருக்கிறார். அதேபோன்று புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதற் எதிர்மாறாகவே செயற்பட்டுவருவதாக சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவர்களது ஆழமான இனவாதப்போக்கை உணர்ந்து தான் தமிழ்மக்கள் அவர்களைத் தொடர்ச்சியாக நிராகரித்துவந்திருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய நிலைப்பாடு தெற்கில் வாழும் சிங்கள மக்களைக் கண்திறக்கச்செய்யும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை இதனை தாம் முன்னரேயே எதிர்பார்த்ததாகத் சுட்டிக்காட்டிய புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானம், காணி விடுவிப்பு, பயங்கரவாதத்தடைச்சட்டம் என்பன உள்ளடங்கலாக சகல விடயங்களிலும் கடந்தகால அரசாங்கங்கள் எவ்வாறு செயற்பட்டனவோ, அதே வழியில் செயற்படுவதற்கே தேசிய மக்கள் சக்தி முற்படுவதாகவும், எனவே இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/197545
  12. பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரை) 1,042 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 297 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 714 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 10 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 21 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. https://www.virakesari.lk/article/197521
  13. தலைவரின் கூட்டமைப்பையே சிதைத்தவர்களால் தமிழ் மக்களின் நலன் பற்றிச் சிந்திக்க இயலுமா? என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டுள்ள அவர், இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; எம் மக்கள் அரசியல் ரீதியாகவும் தலைநிமிர்ந்து தன்மானத்துடன் நிற்க வேண்டும் என்றால் தமிழர்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையே பலம் என அவர் அன்றே கணித்து தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பதில் அதிக கவனம் செலுத்தினார். ஆனால் இன்று எம் தமிழ் தலைமைகள் எமக்காக உயிர் தியாகம் செய்தவர்களை மறந்து தமது சுயலாபத்திற்காக ஆளுக்கோர் பக்கம் நீயா? நானா? எனப் பிரிந்து நிற்கின்றனர். தமிழ் மக்களுக்காக தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் என அனைவரும் நம்பி இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிளவடைய இடமின்றி உள்ள போதிலும் மேலும் பிளவடைவதற்கான வாய்ப்புக்கள் கண்ணூடாக தெரிகின்றன. வீடாக இருந்த அந்த ஒற்றைச் சின்னம் இன்று சைக்கிள்,மான்,மாம்பழம் ,சங்கு என பிளவடைந்து மக்களுடைய எதிர்பார்ப்பிலும் மண் அள்ளிப் போட்டுள்ளது. மக்களுக்காக ஒன்றுபட இயலாதவர்கள் எப்படி மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார்கள்? என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். https://www.virakesari.lk/article/197529
  14. பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்பு! பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட விநாயகமூர்த்தி சகாதேவன் இன்று புதன்கிழமை (30) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் மோகனதாஸ், பனை அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/197527
  15. (புருஜோத்தமன் தங்கமயில்) வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள், தென் இலங்கைக் கட்சிகள் மற்றும் அவற்றின் உதிரிக் கட்சிகளிடம் சென்றுவிடுமோ என்கிற அச்சம், தமிழ்த் தேசிய அரசியலைப் பற்றிக் கொண்டிருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தென் இலங்கையின் பாரம்பரியக் கட்சிகளின் வேட்பாளர்களைத் தோற்கடித்து, தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றிருக்கின்றார். அதனை ‘புதிய புரட்சி மாற்றம்’ என்று அடையாளப்படுத்துகிறார்கள். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும், அந்த வெற்றியின் நீட்சியை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பிலேயே ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒருசில நாட்களிலேயே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கான அறிவிப்பை அநுர வெளியிட்டார். இந்தப் புரட்சி மாற்ற அலைக்குள் தமிழ் மக்களும் அள்ளுண்டுவிடுவார்கள் என்கிற பயம், தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாத்திரமல்ல, கடந்த காலங்களில் ஆட்சியாளர்களின் பங்காளியாக இயங்கிய ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றன என்பது கவனத்தில் கொள்ளப்படக் கூடியது. ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 22 பாராளுமன்ற ஆசனங்களை வெற்றி கொண்டமைதான், அதியுச்ச தேர்தல் வெற்றியாகும். அது, தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அங்கு, கூட்டமைப்பின் தலைவர்களோ, பங்காளிக் கட்சிகளோ வெற்றிக்கான உரித்தாளர்கள் அல்ல. அவர்கள், புலிகளினால் மக்களிடம் முன்மொழியப்பட்டு, வெற்றியைச் சுவைத்தவர்கள். அத்தோடு, அப்படியான தமிழர் வாக்கு ஒருங்கிணைவு, தற்போதுள்ள தேர்தல் நடைமுறைக்குள் சாத்தியம் இல்லாதது. அன்றைய திகதியில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 9 பாராளுமன்ற ஆசனங்கள். இன்று அது, 6 ஆக சுருங்கிவிட்டது. ஆக, 22 என்கிற பாராளுமன்ற ஆசனத்தை 19 எண்ணிக்கை அடிப்படையில் வைத்துக் கொண்டுதான், தமிழ்த் தேசிய வாக்குகளின் ஒருங்கிணைவின் அடைவு தொடர்பில் பேச வேண்டி ஏற்படுகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பினர் 10 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்றன. அப்படிப் பார்த்தாலும் 6 ஆசனங்களின் இழப்பு, தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஏற்பட்டிருப்பதாக வாதம் முன்வைக்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் மட்டக்களப்பில் 2 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் இழந்தன. அவற்றை பிள்ளையானும், வியாழேந்திரனும் வென்றனர். அம்பாறையில் வெற்றி கொள்ளப்பட வேண்டிய ஒற்றை ஆசனமும் கருணா அம்மானின் வாக்குப் பிரிப்பினால், இல்லாமற்போனது. யாழ்ப்பாணத்தில், அங்கஜன் ஒரு ஆசனத்தை வென்றார். வன்னியில் ஈபிடிபிக்கு உதிரி வாக்குகளினால் ஒரு ஆசனம் கிடைத்தது. நேரடியாக தமிழ் வாக்குகளின் மூலம், 4 ஆசனங்களை தமிழ்த் தேசியம் பேசாத ராஜபக்ஷக்களின் ஆதரவுக் கட்சிகள் வென்றன. ஒரு ஆசனம் அம்பாறையில் நேரடியாக இழக்கப்பட்டது. இந்த ஆசனங்களுக்கான வாக்குகளை தமிழ்த் தேசியக் கட்சிகளை நோக்கித் திருப்பினாலே, நேரடியாக 5 ஆசனங்கள் மற்றும் இன்னொரு தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்கான வாக்கின் திரட்சி அளவு என்பவற்றைக் கணக்கில் எடுத்தால், தமிழ்த் தேசியக் கட்சிகள் 19 ஆசனங்களை வெற்றி கொள்ள முடியும். இதில், யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசனம் உள்ளடக்கப்படவில்லை. ஏனெனில், அவர் புலிகளின் அலைக்குள்ளாலும் தப்பி, 2004 தேர்தலில் வென்றவர். ஆக, 22 என்கிற அதியுச்ச வெற்றிக் கணக்கினை தற்போது ஒப்பிட்டால், அது 19 என்று கொள்ளப்பட வேண்டும். அவற்றை மீளவும் வெற்றிகொள்வது என்பது மிகப்பெரிய சாதனை. கிட்டத்தட்ட அந்த இலக்கை தமிழ்த் தேசியக் கட்சிகள் அடைந்தால், அது 2004 பொதுத் தேர்தல் வெற்றியைவிட பெரிய வெற்றியென்று கொள்ளப்பட வேண்டியது. அதற்கான காரணங்களை, வெளிப்படையாக பேச வேண்டியதில்லை. தமிழ்த் தேசியக் கட்சிகள் இழந்திருக்கின்ற ஐந்து ஆறு ஆசனங்களை மீண்டும் கைப்பற்றுவதன் மூலம், தமிழ் மக்களை தமிழ்த் தேசிய வாக்குத் திரட்சிக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்பது ஒரு வகையிலான தேர்தல் கணக்கு ஒப்பீடு. ஆனால், அது சாத்தியமாக என்றால், நிச்சயமாக இல்லை. ஏனெனில், கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கும், அவர்களை தங்களின் கருவிகளாக கையாள்வதற்கும் விடுதலைப் புலிகள் போன்ற ஆளுமையுள்ள தரப்பொன்று தமிழ்ச் சூழலில் இல்லை. அத்தோடு, தமிழ்த் தேசியக் கட்சிகளை அழுத்தங்களை வழங்கி வழிப்படுத்துவதற்கான சிவில் சமூக அமைப்புக்களும் இயங்கு நிலையில் இல்லை. அப்படியான வாய்ப்புக்களை தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு என்ற பெயர்களில் எழுந்து அடங்கியவர்கள் அழித்துவிட்டார்கள். இதனால், தேர்தல் மைய அரசியல் கட்சிகளை ஓரணிக்குள் கொண்டு வருவதும், அதன் மூலம் தமிழ்த் தேசிய வாக்குகளை திரட்டி பெரிய வெற்றியைப் பெறுவதும் சாத்தியமில்லாதது. தற்போது ஒவ்வொரு கட்சியும் தங்களின் தனித்த வெற்றி தொடர்பில்தான் அக்கறையோடு இருக்கின்றன. யார் அதிக ஆசனங்களை வெற்றி கொள்கிறார்களோ, அவர்கள்தான், தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைக் கட்சி என்கிற நிலையில் இருப்பார்கள். அப்படியான நிலையில், அந்த இடத்தைத் தக்க வைப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியும், அந்த இடத்தை அடைவது தொடர்பில் ஏனைய கட்சிகளும் இயங்கும். கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வென்ற 10 ஆசனங்களில், 4 ஆசனங்களை ரெலோவும், புளொட்டும் வென்றிருந்தன. அதனைக் கொண்டே தங்களை அதிகளவில் அலைக்கழித்துவிட்டார்கள் என்று தமிழரசுக் கட்சியினர் எரிச்சலோடு இருந்தார்கள். தங்களின் வீட்டுச் சின்னத்தில் நின்று வெற்றியைப் பெற்றுவிட்டு, தங்களுக்கே பிரச்சினைகளைக் கொடுக்கிறார்கள் என்ற கோபத்தில்தான், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை எடுத்தார்கள். அது, இந்தப் பொதுத் தேர்தல் வரையில் வந்து நிற்கின்றது. அப்படியான நிலையில், தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய ஒருங்கிணைவு என்பது பற்றிப் பேசினாலும், அது தன்னடைய தலைமையின் கீழ் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. அங்கு, தங்களைக் கேள்விக்குட்படுத்தாதவர்களாக பங்காளிக் கட்சிகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிரதானமாக தொக்கி நிற்கின்றது. ஒரு பேச்சுக்கு தமிழரசின் தலைமையின் கீழ், ஏனைய கட்சிகள் இணைந்தாலும் முன்னணி அடையாளத்துக்குள் இருக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இணைவதற்கான எந்த வாய்ப்புக்களும் இல்லை. அந்தக் கட்சி, அவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளை இறுகச் சாத்திக் கொண்டுதான், அரசியலே செய்கின்றது. அத்தோடு, அதற்கு வடக்குக் கிழக்குப் பூராவும் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதோ, வெற்றிபெற வேண்டும் என்பதோ நோக்கமும் இல்லை. அதிகபட்சம் யாழ்ப்பாணத்தில் இரண்டு ஆசனங்களை வென்று, பெரிதாக பொறுப்புக் கூறாத நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால் போதும் என்பதுதான் அந்தக் கட்சியின் நிலைப்பாடு. அதற்கு, அந்தக் கட்சி தொடர்ச்சியாக ஒரு குடும்பத்தின் கீழ் இருப்பதும் காரணமாகும். கட்சியை வடக்குக் கிழக்குப் பூராவும் கட்டமைப்புக்களை பலப்படுத்தி வளர்த்து, அதிக வெற்றியைப் பெற்றால், அதுவே எதிர்காலத்தில் கட்சி மீதான கட்டுப்பாட்டினை பொன்னம்பலம் குடும்பத்திடம் இருந்து பறித்துக் கொண்டுவிடும் என்கிற எச்சரிக்கை உணர்வு அவர்களோடு தொடர்ந்து வருகின்றது. அதனால், அவர்கள் யாழ்ப்பாணத்துக்குள் சுருங்கிக் கொண்டுவிட்டார்கள். கட்சியை உண்மையிலேயே வளர்க்கும் நோக்கம் இருக்குமானால், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் கிழக்கில் பிரச்சாரங்களை முன்னெடுத்த காங்கிரஸ், தங்களுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தால் அதனை கிழக்கிற்கு வழங்குவோம் என்று அறிவித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை. மாறாக, யாழ்ப்பாணத்துக்குள் அதனை வைத்துக் கொண்டார்கள். இன்றைக்கு அவர்கள் வடக்கு கிழக்குப் பூராவும் போட்டியிட்டாலும், அதன் நோக்கம் நேரடியாக வெற்றிபெறுவது அல்ல. மாறாக, தேசியப் பட்டியலுக்கான வாக்குத் திரட்டுதலாகும். கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்புக்குள் வேட்பாளர்களுக்கு இடையில் சொல்லிக் கொள்ள முடியாதளவுக்கு குழிபறிக்கும் வேலைகள் இடம்பெற்றன. அது, கூட்டமைப்பின் தோல்விகளுக்கான பிரதான காரணமாக மாறியது. அதுபோலவே, ஓரிரு ஆசனங்களை வெற்றிபெறும் களம் தங்களுக்கு வாய்த்திருக்கின்றது என்பதை உணர்ந்த காங்கிரஸ்காரர்களுக்குள்ளும் விருப்பு வாக்குப் போட்டியும் குழிபறிப்புக்களும் அரங்கேறின. மணிவண்ணன் அதிக வாக்குகளைப் பெற்றுவிடக்கூடாது என்பதில் கஜன்களும், கஜன்களைத் தாண்டி அதிக வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் மணிவண்ணனும் குறியாக இருந்தார்கள். இரு தரப்பும், மற்றத்தரப்புக்கு வாக்குப்போட வேண்டாம் என்ற பிரச்சாரத்தை வெளிப்படையாகவே செய்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் மணிவண்ணனை முன்னணியில் இருந்து விரட்டினார்கள். இன்றைக்கு வடக்குக் கிழக்கு பூராவும் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதான கட்சியாக களம் காண்கிறது. யாழ்ப்பாணத்தில் ஓரிரு ஆசனங்களுக்காக காங்கிரஸும் போட்டியில் இருக்கின்றது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினரான சங்குக் கூட்டணி யாழ்ப்பாணத்தில் ஒன்று, வன்னியில் ஒன்று என்ற ஆசன இலக்குகளோடு களம் கண்டிருக்கின்றது. அவர்களினால் ஏனைய மாவட்டங்களில் பெரிய வெற்றியைப் பெற முடியாது. வேணுமென்றால், ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்கான வாக்குத் திரட்சியை அவர்கள் குறி வைக்கலாம். அதன்மூலம், அதிக பட்சம் சங்குக் கூட்டணி, மூன்று ஆசனக் கணக்கோடு இருக்கின்றது. ஒப்பிடுகையில், கடந்த தேர்தலில் நான்கு ஆசனங்களைக் கொண்டிருந்தார்கள். இப்போது, அவற்றில் ஒன்று தமிழரசுக் கட்சியிடம் இழக்கப்படும் வாய்ப்புண்டு. தமிழரசுக் கட்சியினர் அலங்கரித்து அழகுபார்த்து விக்னேஸ்வரனை வடக்கு முதலமைச்சர் பதவியில் இருந்தினார்கள். அவரோ, தன்னுடைய தனிப்பட்ட ஓட்டத்துக்காக பேரவையைக் கொண்டு தனிக் கட்சி ஆரம்பித்து, கடந்த தேர்தலில் வென்று பதவியை அனுபவித்தும் விட்டார். இறுதியில் அவர், சாராயக்கடை அனுமதிப்பத்திரத்தை வாங்கிக் கொடுத்து, தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவு முகங்களின் ஒன்றாக மாறினார். இப்போது, அவரின் கட்சியில் மணிவண்ணன் அணியினர் போட்டியிடுகிறார்கள். அவர்களோடு, தமிழரசுக் கட்சியில் ஆசனம் கோரி, மறுக்கப்பட்ட இருவர் இணைந்திருக்கிறார்கள். இந்தக் குழுவினரால், தேர்தல் வெற்றியை நோக்கி பெரிதாக ஓட முடியாது. ஏனெனில், அவர்கள் தேர்தல் பிரச்சாரக் களத்தில், விக்னேஸ்வரன் சாராயக்கடை முகவராக செயற்பட்ட அவதூறுக்கு பதில் சொல்வதிலேயே காலத்தைக் கடத்த வேண்டியிருக்கின்றது. இன்னொரு பக்கம், தமிழரசுக் கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து சுயேட்சையாக மாங்காய் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். அவர்களினால் சில ஆயிரம் வாக்குகளை பெறுவதே பெரிய காரியமாக இருக்கும். அப்படியான நிலையில், ஆசனங்களை வெற்றிகொள்வதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது. அதனால்தான், அவர்கள் ஊடகங்களில் செவ்விகளின் வழியாக மாத்திரம் அரசியல் செய்கிறார்கள். அதிலும், சுமந்திரனை தாக்குவது மாத்திரம்தான் தமிழ்த் தேசிய அரசியல் என்றும் நினைத்துக் கொண்டு இயங்குகிறார்கள். தமிழ்த் தேசியக் கட்சிகளின் இந்தக் குழறுபடி நிலைக்குள் நின்றுகொண்டு, சில ஆசனங்களை வென்றுவிட வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி குறியாக இருக்கின்றது. அத்தோடு, கிழக்கில் அந்தக் கட்சி திருகோணமலை, அம்பாறையில் பெரிய வெற்றியையும் பெறும். அங்கு, அதற்கான வாய்ப்புக்களை சிங்கள, முஸ்லிம் மக்கள் வழங்கும் சாத்தியம் காணப்படுகின்றது. அப்படியான நிலையில், அந்த மாவட்டத்து தமிழ் மக்கள் புரட்சி மாற்றத்துக்கு வாக்களிக்கப் போகிறோம் என்று தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது, அந்த மாவட்டங்களின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழக்கப்பண்ணுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். குறித்த இரு மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தியில் நின்று, விருப்பு வாக்கு அடிப்படையில் தமிழ் வேட்பாளர் ஒருவர் வெற்றிபெறுவது என்பது குதிரைக் கொம்பு போன்றது. அப்படியான சூழலில், களத்தினையும் தேவையையும் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். வடக்கில், தேசிய மக்கள் சக்தியினால் ஆசனங்களை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அந்தக் கட்சியிடம் அது தொடர்பிலான எதிர்பார்ப்பு அவசரமாக இருப்பது மாதிரியும் தெரியவில்லை. ஏனெனில், அந்தக் கட்சியின் வேட்பாளர் தெரிவுகளே அதனை வெளிப்படுத்துகின்றன. தேசிய மக்கள் சக்தியில் வேட்பாளராக வேண்டும் என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பிரபலமான கல்வியாளர்கள் தொடங்கி பலரும் முண்டியடித்தார்கள். ஆனால் அவர்களையெல்லாம் தவிர்த்துவிட்ட ஒப்பீட்டளவில் வெற்றிக்கான முகமாக அடையாளம்பெற முடியாதவர்களை அந்தக் கட்சி தெரிவு செய்திருக்கின்றது. அது, தனித்த ஆளுமைகளினால் அல்லாமல், கட்சி அடையாளத்தோடு வெற்றிபெற வேண்டும் என்பதும், அதுதான் எதிர்கால கட்சி வளர்ச்சிக்கு அவசியம் என்றும் அந்தக் கட்சியின் நிறைவேற்றுக்குழு நினைக்கின்றது. அதனை நோக்கிய தெரிவுதான் வடக்கில் அந்தக் கட்சி செய்திருப்பது. கிட்டத்தட்ட அதனைத்தான் மட்டக்களப்பிலும் அந்தக் கட்சியின் வேட்பாளர் தெரிவு வெளிப்படுத்தியிருக்கின்றது. எங்கெல்லாம் தமிழ் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று தோன்றிய இடங்களில், அதனை ஒரு நிலைப்பாடாகவே அந்தக் கட்சி கடைப்பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்திக்கு விழும் வாக்குகள், இன்றைய வெற்றிகளுக்கானது அல்ல. எதிர்கால நிலைத்த வெற்றிகளுக்கான அடித்தளம். அதனை, புரட்சி மாற்ற அலைக்குள் அல்லாட நினைக்கும் தரப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில், தேசிய மக்கள் சக்தி என்பது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தேர்தலுக்கான புதிய முகம். அந்த முகத்துக்குப் பின்னால், இருப்பது கடும்தேசியவாதமும், தமிழர் விரோதமும் கட்டவிழ்த்துவிட்ட கடந்த காலங்களும். அதனைத் தாண்டிய புதிய புரட்சிகளை, வரலாற்றை, அதிகாரப் பகிர்வினை அந்தக் கட்சி செய்துவிடும் என்ற நம்பிக்கை கொள்வது தேவையில்லாதது. ஆக, தமிழ் மக்கள், தங்களின் அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளை நோக்கி திரள்வதுதான் இருப்பதில் புத்திசாலித்தனமான தெரிவு. தமிழ்த் தேசியக் கட்சிகள் பொறுப்பற்றுச் செயற்பட்டாலும், தமிழ்த் தேசிய அரசியலை விடுதலைக்கான மூச்சாக கொண்டு சுமப்பதற்கான பொறுப்புணர்வின் அடிப்படையைக் கருதி, தமிழ் மக்கள் அந்த முடிவின் பக்கம் நிற்க வேண்டும். -காலைமுரசு பத்திரிகையில் ஒக்டோபர் 27, 2024 வெளியான பத்தி. http://maruthamuraan.blogspot.com/2024/10/blog-post_27.html
  16. தமிழ் அரசியல் வாதிகள் ஒன்றிணையாமல் ஆசனங்களை பெறுவதை மாத்திரம் நோக்கமாக கொண்டுசெயற்ப்படுவதாக வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (30) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், இம்முறை தேர்தலில் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் வேட்பாளர்கள் பேரம்பேசக்கூடிய ஒருசக்தியாக மக்களின் நன்மை கருதி ஒன்றிணையவில்லை. ஆசனங்களை பெறுவதனை மாத்திரம் நோக்கமாக கொண்டு ஏட்டிக்கு போட்டியாக தனித்தனியாக தேர்தலில் நிற்கின்றனர். இப்படி நின்று யாருக்காக நீங்கள் கதைக்கப்போகின்றீர்கள். நீங்கள் ஒரு அணியாக எப்போதாவது திரண்டிருக்கிறீர்களா? உங்களுக்குள்ளேயே போட்டியிட்டு குழப்பங்களை ஏற்ப்படுத்தி கட்சிகளை பிளவுபடுத்தி தமிழ்த்தேசியத்தையே இன்று இல்லாது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட தமிழ்மக்களை ஒன்றிணைத்து கலந்துரையாடி ஒற்றுமையாக எப்போது பயணித்துள்ளீர்கள். இந்த தேர்தலில் அதிகரித்துள்ள சின்னங்களால் தமிழ் மக்கள் குழப்பநிலையை அடைந்துள்ளனர். சங்கு, வீடு சுயேட்சை, சைக்கிள் என்று பலகட்சிகள், பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றது. இதனால் அரசியலை பற்றியே தெரியாதவர்கள் எல்லாம் பாராளுமன்றம் செல்லக்கூடிய நிலமையே இன்று ஏற்ப்பட்டுள்ளது. வடக்கில்12 ஆசனங்களை பெறுவதற்காக 800 ற்கும் மேற்ப்பட்டவர்கள் களம் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு யார் வாக்களிப்பது. நண்பர்கள் உறவினர்கள் வாக்களித்தால் அந்த வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது. இதன் மூலம் சிங்கள கட்சிகள் ஆசனங்களை கைப்பற்றும் நிலைமையினை நீங்களே உருவாக்கப்பார்க்கின்றீர்கள். பணத்தை ஏன் இவ்வாறு வீணடிக்கிறீர்கள் அதனை மக்களுக்கு வழங்குங்கள். நீங்கள் மாற்றத்தை உருவாக்குவோம் என்று கூறிவிட்டு இன்னும் கீழ் நிலைக்கே மக்களை தள்ளப்போகின்றீர்கள் என்று தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/197506
  17. பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு இலங்கையின் அரசமைப்பு பற்றி ஏதாவது தெரியுமா? என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவைக்கு அரச அதிகாரிகளின் அனுமதி அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். முன்னைய அமைச்சரவை உரிய நடைமுறைகளை பின்பற்றாமலே அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்க தீர்மானித்தது என பிரதமர் தெரிவித்துள்ளமை குறித்தே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிப்பதற்கு திறைசேரி நிதியமைச்சின் அதிகாரிகளின் சம்மதத்தை முன்னைய அரசாங்கம் பெறவில்லை என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார், அமைச்சரவை இயங்குவதற்கு அவர்களின் அனுமதி அவசரம் என அவர் தெரிவிக்கின்றார். நீங்கள் எங்கிருந்து அரசமைப்பினை கற்றீர்கள் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சரவையே நாட்டை ஆள்கின்றது அரசமைப்பின் எந்த இடத்திலும் அதிகாரிகள் பற்றி குறிப்பிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரசமைப்பு குறித்து அறியவேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் நான் உதவுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197497
  18. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து சொகுசு வாகனம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த 23 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, இவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/197495
  19. யாழ். கற்கோவளத்தில் கணவன், மனைவி தாக்கப்பட்டு கொலை ! யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர். கணவன், மனைவி இருவரும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர். மாணிக்கம் சுப்பிரமணியம் என்ற 53 வயதுடைய கணவனும், மேரி என்ற 54 வயதுடைய மனைவியுமே கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட கணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களைப் பார்வையிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/197493
  20. இதுவரை தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அரசாங்க வீட்டுவசதிகளை நிர்வகிக்கும் விதிமுறைகளுக்கு இணங்குவதாக அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். கடந்த ஆட்சியில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 28 குடியிருப்புகளில் 12 வீடுகள் திரும்ப வழங்கப்படாமல் உள்ளன. வீடுகள் திரும்ப ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் மின்சாரம் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டுக் கட்டணங்களும் அகற்றப்படுவதை உறுதிசெய்யவும் அமைச்சகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/311356
  21. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் ஒருவகை மீனினம் கடலிலிருந்து செவ்வாய்கிழமை (29) மாலை வேளையிலிருந்து கரை ஒதுங்குகின்றன. களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையும், மாங்காடு, குருக்கள்மடம் உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு மீன்கள் கரை ஒதுகுவதை அப்பகுதி கடற்றொழிலாழர்கள் அவதானித்துள்ளனர். சிறிய அவளவிலான கறுப்பு நிற மீனினமே இவ்வாறு கரை ஒதுங்கி கடங்கரையில் இறந்து கிடக்கின்றன. https://www.virakesari.lk/article/197494
  22. நிஜ்ஜார் கொலை வழக்கு: அமெரிக்க பத்திரிகையிடம் இந்திய அமைச்சர் அமித்ஷா பெயரை கூறியதாக கனடா அமைச்சர் ஒப்புதல் பட மூலாதாரம்,HOUSE OF COMMONS, CANADA படக்குறிப்பு, கனடாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசன் கனடா குடிமக்களை அச்சுறுத்தும் அல்லது கொல்லும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் ஒப்புதல் அளித்ததாக அந்நாட்டின் குடிமைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவிடம் கனடாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை (அக்டோபர் 29) அன்று கனடாவில் குடிமைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவின் விசாரணை ஒன்று நடந்தது. அப்போது, அக்குழுவின் துணைத் தலைவரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரக்கேல் டான்சோ கனேடிய குடிமக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பினார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வான்கூவர் அருகே 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். விசாரணையின் போது, "கனடாவில் நடக்கும் குற்றங்களில் இந்திய உள்துறை அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு சார்பாக 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாளிடம் தெரிவித்தது யார்?", என்று அந்த குழுவின் துணைத் தலைவர் ரக்கேல் டான்சோ அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நத்தாலி ட்ரூயினிடம் கேள்வி எழுப்பினார். "இதுபோன்ற தகவல்களை பத்திரிக்கையாளர்களிடம் அரசு பகிர்ந்து கொள்ளவில்லை", என்று நத்தாலி ட்ரூயின் பதில் அளித்தார். அக்டோபர் 14 ஆம் தேதி அன்று 'தி வாஷிங்டன் போஸ்ட்' என்ற அமெரிக்க செய்தித்தாளில் வெளியான ஒரு செய்திக்கட்டுரையை பற்றி ரக்கேல் டான்சோ கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். அந்த செய்தியில் கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டிருந்தது. "பத்திரிகையாளருக்கு யார் அந்த தகவலை கொடுத்தது? உங்களுக்கு அது பற்றி தெரியுமா? இந்த தகவலை நீங்கள் கொடுக்கவில்லை தானே?", என்று ரக்கேல் டான்சோ கேட்டார். இந்த விசாரணையியின் போது கனடாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசனும் இருந்தார். "மோரிசன், நீங்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியுமா? இந்த தகவலை நீங்கள் வழங்கினீர்களா?", என்று டேவிட் மோரிசனிடம் ரக்கேல் டான்சோ கேட்டார். "ஆம், பத்திரிகையாளர் ஒருவர் என்னை அழைத்து இதுபற்றி கேட்டார். நான்தான் அந்த நபரைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தேன்", என்று டேவிட் மோரிசன் பதில் அளித்தார். "அந்த பத்திரிகையாளர் பல்வேறு தரப்புகளிடம் இருந்து பெற்ற தகவல்களை வைத்து இது குறித்து நிறைய எழுதியிருந்தார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபரைப் பற்றி உறுதிப்படுத்தும்படி என்னிடம் கேட்டார். நான் அதை உறுதிப்படுத்தினேன்", என்று டேவிட் மோரிசன் கூறினார். ஆனால் இந்திய உள்துறை அமைச்சர் பற்றி டேவிட் மோரிசன் ஏதும் கூறவில்லை. செவ்வாய்க்கிழமை அன்று வெளிவந்த இந்த விஷயம் குறித்து கனடாவிலுள்ள இந்திய தூதரக அலுவலகமும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் கனடா முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று இந்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது. பட மூலாதாரம்,MEA படக்குறிப்பு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் "குற்றச்சாட்டுகள் ஆதாரமாற்றவை" நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி முதலில் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளில் வெளியான போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து தனது கருத்தினை தெரிவித்திருந்தது. "இந்த செய்தி ஒரு தீவிரமான விஷயத்தில் நியாயமற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது", என்று இந்த செய்திக்கட்டுரை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. "குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளின் நெட்வொர்க் குறித்து அமெரிக்க அரசு கவலை எழுப்பியதைத் தொடர்ந்து இந்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதைப் பற்றி ஊகங்களையும் பொறுப்பற்ற கருத்துகளையும் தெரிவிப்பது பயனுள்ளதாக இருக்காது", என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. கனடாவில் நடந்த குற்றங்களில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம்சாட்டியது. இந்த குற்றங்களில் கொலை, மக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவை அடங்கும். இந்த ஏஜெண்டுகள் கனடா குடிமக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கனடா கூறியிருந்தது. இந்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே இதுபற்றி கூடுதல் தகவல்கள் தெரிந்திருக்கும் என்று கனடா அதிகாரிகள் செவ்வாய்கிழமைக்கு முன் வெளிப்படையாக தெரிவித்து வந்தனர். கனடாவில் நடக்கும் பெரிய அளவிலான குற்றங்களில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் உடந்தையாக இருப்பதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு கனடாவின் காவல்துறை தெரிவித்த அதிர்ச்சியூட்டும் கருத்து குறித்தும் இக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். ராயல் கனேடிய மவுண்டன் எனப்படும் கனேடிய காவல்துறையின் தலைவர் மைக் டுஹெம் செவ்வாய்கிழமையன்று இந்த குழுவிடம் சாட்சியம் அளித்தார். இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் இந்திய அரசாங்கத்திற்காக தகவல்களை சேகரித்ததை காவல்துறையிடம் உள்ள சாட்சிகள் உறுதிப்படுத்துகின்றன என்று அவர் கூறியிருந்தார். கனடாவில் கொலை, மக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் மிரட்டல் ஆகிய குற்றச் செயல்களை செய்யுமாறு அவர்கள் தூண்டியதாக மைக் டுஹெம் தெரிவித்திருந்தார். "இந்த வழக்கில் (நிஜ்ஜார் கொலை) இந்தியாவுக்கு பெரிய அளவில் பங்கு உள்ளது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.", என்றுகனடாவின் அரசு செய்தி நிறுவனமான சிபிசிக்கு அளித்த பேட்டியில் மைக் டுஹெம் கூறியிருந்தார். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், 13 கனேடிய குடிமக்களுக்கு இந்திய ஏஜென்டுகளால் ஆபத்து நிகழக்கூடும் என்று காவல்துறை எச்சரித்திருப்பதாக மைக் டுஹெம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிஜ்ஜார் கொலைக்குப் பிறகு இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு உறவுகள் மேலும் மோசமடைய வாய்ப்பு கனடா அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்த பிறகு இந்தியா-கனடா உறவில் மேலும் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தும் இந்திய எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தியா அதனை மறுத்து வருகிறது. சமீப காலமாக இந்த விவகாரத்தால் இரு நாடுகளும் தத்தமது தூதரக அதிகாரிகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விலக்கிக் கொண்டன. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிஜ்ஜாரின் கொலைக்குப் பிறகு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தக் குற்றத்தில் இந்திய அதிகாரிகளின் தொடர்பு குறித்து கனடாவிடம் 'உறுதியான ஆதாரம்' இருப்பதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், கனடா அரசாங்கம் உறுதியான ஆதாரங்கள் எதையும் முன்வைக்கவில்லை. இந்தியா இந்த குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்தது. கனடாவிடம் அதற்கான ஆதாரத்தையும் இந்தியா கேட்டது. கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக இந்தியா அறிவித்த பிறகு, இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், "ட்ரூடோ அரசாங்கம் இந்திய அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரத்தையும் இந்தியாவிற்கு வழங்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தது. தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவை களங்கப்படுத்தும் முயற்சி இது என்று இந்தியா குற்றம்சாட்டியது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (கோப்பு படம்) கனடா தனது நிலைப்பாட்டில் உறுதி ஆனால், தற்போது வரை ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி வருகிறார். கடந்த பதினைந்து நாட்களாக தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், ட்ரூடோ தனது குற்றச்சாட்டுகளில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரிடம் 'உரிய ஆதாரங்கள்' இல்லை. முதன்முறையாக, இந்த விவகாரத்தில் அவர் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அவரிடம் புலனாய்வு தகவல்கள் மட்டுமே இருந்தன. "இந்தியாவிடம் கனடா எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. இந்த வழக்கில் இந்தியாவுடன் இணைந்து பணி செய்யவே விரும்பியது. ஆனால் இந்தியா தொடர்ந்து ஆதாரங்களைக் கேட்டது" என்று வெளிநாட்டு தலையீடு ஆணையத்திடம் கனடா பிரதமர் கூறியிருந்தார். "ஆதாரங்கள் உங்கள் பாதுகாப்பு ஏஜென்சிகளிடமே உள்ளன" என்று மட்டும் பதிலளித்ததாக அவர் தெரிவித்தார். "கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியதற்கான தெளிவான சான்றாக இது இருக்கிறது", என்று விசாரணைக் குழுவிடம் அவர் கூறினார். பட மூலாதாரம்,FB/VIRSA SINGH VALTOHA படக்குறிப்பு, 2023 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதியன்று கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட என்ன காரணம்? இந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதிக்குப் பிறகு கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளன. கனடா அரசாங்கத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாததால் தனது தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாக இந்தியா கூறியது. அதே நேரத்தில்தான், இந்தியாவின் ஆறு தூதரக அதிகாரிகளை கனடாவை விட்டு வெளியேற்றியுள்ளதாக அறிக்கை ஒன்றில் கனேடிய பிரதமர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக இந்தியாவும் கனடாவின் 6 தூதரக அதிகாரிகளை இந்தியாவைவிட்டு வெளியேற்றியது. கடந்த ஆண்டு கனடா குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றம் நிலவுகிறது. இந்த கொலையில் இந்தியாவுக்கு பங்கு இருப்பதாகக் குற்றம்சாட்டி, கனடா பகிரங்கமாக கேள்விகளை எழுப்பியது. 2023 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதியன்று கனடாவில் உள்ள குருத்வாரா ஒன்றில் வாகன நிறுத்துமிடத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நிஜ்ஜார் கனடாவின் வான்கூவரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் இருந்தார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார், இந்தியாவின் ஜலந்தரில் உள்ள பார் சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர். காலிஸ்தான் புலிப் படையின் தலைவராக இருந்து, உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல், ஒருங்கிணைத்தல், நிதியுதவி அளித்தல் உள்ளிட்ட போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று இந்திய அரசு கூறுகிறது. "நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசாங்கத்தின் சாத்தியமான தொடர்பு பற்றிய குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன", என்று செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கனேடிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கனடாவின் 40 தூதரக அதிகாரிகளுக்கான சிறப்புரிமையை இந்தியா ரத்து செய்தது. இதனால், கனேடிய தூதரக ஊழியர்களில், மூன்றில் இரண்டு பங்கு பேர் இந்தியாவை விட்டு வெளியேறி சொந்த நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு கனடா அளிக்கும் சலுகை இந்தியாவுக்கு மட்டுமல்ல, கனடாவுக்கும்கூட சரியானது அல்ல என்று இந்தியா கூறியிருந்தது. 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் கூட, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிஜ்ஜார் கொலை பற்றியும் இந்தியாவுடனான உறவுகள் பற்றியும் மீண்டும் குறிப்பிட்டார். இந்தியா அப்போதும் மறுப்பு தெரிவித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj6k5rzyzxzo
  23. மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது புதன்கிழமை (30) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர் இரண்டு சரீர பிணையில் குறித்த வைத்தியர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவின் வழக்கு விசாரணைகள் புதன்கிழமை (30) மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் அவர் மன்றில் முன்னிலையாக வில்லை. மேலும் இரண்டு பிணைதாரர் களில் ஒருவர் மாத்திரமே மன்றில் முன்னிலையாகி இருந்தார். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் வைத்தியர் அர்ச்சுனா மற்றும் பினையாளி ஆகிய இருவரையும் கைது செய்து மன்றில் முன்னிலை யாக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/197546
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காலையில் வெயிலுடன் தொடங்கிய இன்றைய தினத்தில், 10 மணி முதல் சட்டென்று குளிர்ந்த வானிலை நிலவத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. இதையடுத்து, இன்று காலையில் தூரலுடன் தொடங்கிய மழை சற்று நேரத்தில் கனமழையாக வேகமெடுத்தது. அண்ணா நகர், பாடி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணிநேரத்தில் 10செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன. அண்ணா மேம்பாலத்தின் கீழ், கனமழை காரணமாக மழைநீர் சூழ்ந்து, வாகனங்கள் செல்வது சிரமமாகியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுரங்கப் பாதைகளில் மழைநீர் நிரம்பியிருந்தது. கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் கூறியது என்ன? தமிழ்நாடு வானிலை ஆய்வு மையத் தகவலின்படி, மதியம் 12 மணி முதல் 1 மணிவரை அண்ணா நகர் மேற்கில் 9 செ.மீ மழை பெய்துள்ளது. புதிய மணலி டவுன், கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரை ஆகிய பகுதிகளில் 6செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஆனால், கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES மேலும், நவம்பர் 1-ம் தேதி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதோடு, நவம்பர் 2-ம் தேதியன்று, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தீபாவளி தினத்தன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது கனமழை பெய்துள்ளது. இதுகுறித்துப் பேசிய தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், “இன்று பெய்த கனமழை கணிக்க முடியாத ஒன்று” எனக் கூறினார். திடீர் மழைக்கு என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES பிபிசி தமிழிடம் பேசிய பிரதீப் ஜான், கிழக்கு திசையில் இருந்து வந்த மேகங்கள் காரணமாக மழை பெய்து வருவதாகவும், காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாகப் பெய்த இந்தத் திடீர் மழையைக் கணிக்க முடியவில்லை எனவும் கூறினார். “இதை முன்கூட்டியே கணிக்க முடியவில்லை. அதிலும், சென்னை அண்ணா நகர் மேற்குப் பகுதியில் 1 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் 100மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளதை எதிர்பார்க்கவில்லை,” என்று கூறினார். மேலும், “கொளத்தூர், அம்பத்தூர், கொரட்டூர், முகப்பேர், பாடி, வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் குறுகிய காலத்தில் கனமழை பெய்துள்ளது.” இது எதிர்பாராத ஒன்று என்கிறார் பிரதீப் ஜான். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yxd00xwqxo
  25. யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (29) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கோப்பாய் பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் விமான நிலையத்திற்கு உரிய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர். விமான நிலையத்தின் விமான ஓடுபாதை விஸ்தரிப்பது தொடர்பாகவும் அனைத்து விதமான சர்வதேச விமானங்களும் வந்து செல்லக் கூடியவகையில் விமான ஓடுபாதை விஸ்தரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது. விமான நிலைய அபிவிருத்தி, விமான நிலைய உட்கட்டுமான அபிவிருத்தி, விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் நலன் சார்ந்த உட்கட்டமைப்பு வசதி வாய்ப்புகள் அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. விமான நிலையத்துக்கு வந்தடைந்த பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்ளாதவாறு விமான நிலையம் மட்டுமன்றி சுற்றியுள்ள பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி செய்தல், வீதி மின் விளக்குகள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய பிரதேச சபைக்கு ஆளுநர் அவர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு விமான நிலையத்திற்காக ஒப்படைக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளுக்கான இன்றைய பெறுமதியை காணி உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டமிடல் தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. https://www.virakesari.lk/article/197474

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.