Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. அண்ணை பத்து நாட்கள் இடைவெளியில் இருவர் இறந்தது அதிக ஆழத்தில் தொழிலில் ஈடுபட்டதால் ஏற்பட்ட பாதிப்போ என எண்ணத் தோன்றுகிறது.
  2. Published By: DIGITAL DESK 7 28 AUG, 2024 | 04:30 PM கச்சதீவுக்கு அண்மையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் இன்று புதன்கிழமை (28) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நான்கு மீனவர்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (27) தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர் இரண்டு மீனவர்களை மீட்டுள்ளதோடு, அத்துடன் காணாமல் போன மற்ற இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மீட்கப்பட்ட மீனவர்கள் இருவரும் நேற்றையதினம் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் இன்றையதினம் குமுதினி படகு மூலம் குறிகட்டுவானுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரையும் நாளையதினம் பலாலி விமான நிலையமூடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாண இந்திய துணை தூதரகம் முன்னெடுத்து வருகிறது. https://www.virakesari.lk/article/192238
  3. இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி இயங்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையத்தின் சுழற்சி கட்டம் ஜனாதிபதியால் திறப்பு Published By: DIGITAL DESK 3 28 AUG, 2024 | 04:35 PM "சொபாதனவி" ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் சுழற்சி கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் திறந்து வைத்தார். இலங்கையின் எரிசக்தி துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், திரவ இயற்கை எரிவாயுவை (LNG) முதன்மையாகப் பயன்படுத்தி இயங்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையமான 350 மெகா வோர்ட் திறன் கொண்ட கெரவலப்பிட்டி "சொபாதனவி" ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் சுழற்சி கட்டத்தையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார். https://www.virakesari.lk/article/192221
  4. யாழில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழப்பு! 28 AUG, 2024 | 03:19 PM யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் கடற்தொழிலாளி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு, நாகர் கோவில் கடற்பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புத்தளம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/192219
  5. பட மூலாதாரம்,SLPP படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்டோர். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி நடக்கிறது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. சுதந்திர இலங்கையின் தேர்தல் வரலாறு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த இலங்கை, 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் தேதி சுதந்திரமடைந்தது. எனினும், பிரித்தானியாவின் நாடாளுமன்ற கட்டமைப்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஒரு டொமினியன் அந்தஸ்துடைய அரசாங்கமாகவே 1972ம் ஆண்டு வரை இலங்கை செயற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், 1972ம் ஆண்டு இலங்கை குடியரசாக்கப்பட்டதை அடுத்தே, இலங்கையில் முதலாவது ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டார். இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்ட நிலையில், இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக வில்லியம் கோபல்லாவ நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 1978ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்தன நியமிக்கப்படுகின்றார். இலங்கையில் 1978ம் ஆண்டு புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய அரசியலமைப்பின் ஊடாக, ஜே.ஆர்.ஜெயவர்தன இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் 1982ம் ஆண்டு நடைபெற்றதுடன், அந்த தேர்தலின் ஊடாக ஜே.ஆர்.ஜெயவர்தன மீண்டும் ஜனாதிபதியாக தேர்வானார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க 1988ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் 1992ம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, இடைக்கால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். 1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன், 1999ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார். 2005 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டு, இரண்டு முறை ஆட்சிபீடம் ஏறினார். அதனைத் தொடர்ந்து. 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவும், 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவும் தெரிவானார்கள். இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்களின் போராட்டத்திற்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினார். அந்த இடத்திற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார். தேர்தல்களில் ஏற்பட்ட மாற்றங்கள் 1982ம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் அடங்கலாக ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், லங்கா சமசஜ கட்சி மற்றும் நவ சமசஜ கட்சி ஆகியன போட்டியிட்டன. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அப்போது போட்டியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, 1988ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா மஹஜன பக்ஷய ஆகிய கட்சிகள் மாத்திரமே போட்டியிட்டன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட முதல் இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, 1993ம் ஆண்டு ரணசிங்க பிரேமதாஸ தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில், இடைக்கால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க நியமிக்கப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தனித் தலைமைத்துவத்தின் கீழ் நாடு நிர்வகிக்கப்பட்ட காலம் 1994ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணசிங்க பிரேமதாஸ இந்த நிலையிலேயே, ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு 1994ம் ஆண்டு வெளியிடப்படுகின்றது. இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சி பீடத்தை கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்ச்சியடையச் செய்யும் நோக்கில், இரண்டாவது பெரிய கட்சியாக அப்போது திகழ்ந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முதல் முறையாக கூட்டணியாக தேர்தலை எதிர்நோக்கியது. அதுவரை கை சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற பெயரில் நாற்காலி சின்னத்தில் 1994ம் ஆண்டு தேர்தலை எதிர்நோக்கியது. 1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 6 கட்சிகள் போட்டியிட்ட நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்வசப்படுத்தினார். இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து, 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 13 கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலிலும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூட்டணியாக ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றியை தன்வசப்படுத்தினார். அதன்பின்னர் 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உருவாக்கப்பட்டு, வெற்றிலை சின்னத்தில் மஹிந்த ராஜபக்ஸ போட்டியிட்டு மாபெரும் வெற்றியை தனதாக்கிக் கொண்டார். 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 13 கட்சிகள் போட்டியிட்டன. 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஸ களம் இறங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஆட்சியை முறியடிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் பல கட்சிகளின் ஆதரவுடன் பொது வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்டார். பட மூலாதாரம்,SLPP படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போர் முடிவடைந்த பின்னணியிலேயே இந்த தேர்தல் நடைபெற்றது. போரை முடிவுக்கு கொண்டு வர தலைமைத்துவம் வழங்கிய பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் களம் கண்டார். போரை களத்திலிருந்து வழிநடத்திய ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் பொது வேட்பாளராக களமிறங்கினார். சரத் பொன்சேகா பொது வேட்பாளராக பொது சின்னமான அன்னம் சின்னத்தில் போட்டியிட்டிருந்த போதிலும், அந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியை தன்வசப்படுத்தினார். போர் வெற்றியை மையப்படுத்தியே 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் நடத்தப்பட்டிருந்தன. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் மூன்றாவது முறையாகவும் 2015ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டிருந்தார். 2005, 2010 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஸ, அரசியலமைப்பில் திருத்தத்தை ஏற்படுத்தி 2015ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் வெற்றிலை சின்னத்தில் மஹிந்த ராஜபக்ஸ போட்டியிட்டார். அவரது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன கட்சியிலிருந்து வெளியேறி, அன்னம் சின்னத்தில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டார். பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு, மைத்திரிபால சிறிசேன பொதுச் சின்னத்தில் களமிறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி உள்பட பல கட்சிகளும் ஆதரவு வழங்கியிருந்தன. இந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டிய நிலையில், 'இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம்' என்ற பெயரில் கூட்டணி ஆட்சியொன்று அமைக்கப்பட்டது. பொதுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியதன் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுக் கொண்டார். இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மைத்திரிபால சிறிசேன வசமானதை அடுத்து, ராஜபக்ஸ குடும்பம் அந்த கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை ஸ்தாபித்தது. கூட்டணி அரசின் தலைமை பொறுப்பு அதாவது ஜனாதிபதி பதவி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், பிரதமர் பதவி ஐக்கிய தேசியக் கட்சிக்கும் வசப்படுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே அதிருப்தி ஏற்பட, ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவியை ரணிலிடமிருந்து பறித்து மஹிந்த ராஜபக்ஸவிற்கு கையளித்தார். பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க இதையடுத்து, இலங்கையில் அரசியலமைப்பு குழப்ப நிலைமையொன்று ஏற்பட்டு, ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். 2019ம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதல் முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது. அதேபோன்று, எதிரணியில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிளவுப்பட்ட தரப்பினர் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியிருந்தனர். சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை எதிர்த்து போட்டியிட்டது. பொது வேட்பாளர் என்ற கருப்பொருள் 2019ம் ஆண்டு தேர்தலில் இல்லாது போனது. கூட்டணியாகவே கட்சிகள் அப்போது போட்டியிட்டன. இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தார். எனினும், கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி என பல்வேறு சவால்களை கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் இலங்கை எதிர்நோக்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் அரச எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து, கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவியை துறந்தார். அதனைத் தொடர்ந்து பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவ்வாறான பின்னணியில், 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. https://www.bbc.com/tamil/articles/c047rdld29lo
  6. 28 AUG, 2024 | 02:10 PM இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக்கொள்கையே அவரின் மரணத்திற்கு காரணம் என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ் அகதிகள் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது, தன்னைத் தானே தீக்கிரையாக்கிக் கொண்டு இளைஞன் மரணம். 23 வயதேயான இந்த இளைஞனை ஆஸ்திரேலியா அரசாங்கமும், அரசாங்கத்தின் அகதிகள் மீதான மோசமான கொள்கைகளுமே படுகொலை செய்துள்ளது. அவனது மரணப்படுக்கையின் கடைசி நொடிகளில் அவரோடு கூட இருந்த ரதி கூறியது இதுதான். "பல எதிர்கால கனவுகளோடும், வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற லட்சியத்தோடும் வாழ்ந்த 23 வயதான இளைஞன் மனோ. உள்நாட்டுப் போரில் பாதுகாப்புத் தேடி வந்த ஒரு இளைஞனை இந்த நாட்டின் மனிதத் தன்மையற்ற அகதிகளுக்கு விரோதமான போக்கு, அதன் மூலம் அவன் சந்தித்த தனிப்பட்ட, சமூகப் பிரச்சனைகள் வாழ்வின் மீதான நம்பிக்கை இழக்கச் செய்ததோடு இனி வாழ்வதே வீணென்று இத்தகைய பாரதூரமான முடிவை எடுக்கச் செய்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் எத்தனையோ அப்பாவி அகதிகளின் அகால மரணங்களை நாங்கள் கடந்து வந்துள்ளோம் . இதோ இன்று இன்னொரு இளைஞன். இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கும் பல தமிழ் அகதிகள் போல் பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ஒவ்வொரு நாள் விடியலையும் தங்களுக்கு மாற்றம் ஏற்பட்டு விடும் என்று கனவுகளோடு; இங்கிருந்து ஆபத்து நிறைந்த தங்கள் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு விடுவோமோ என்ற பயத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் பல அகதிகளின் ஒருவரின் மரணம் இது." கிறிஸ்துவ குடும்பத்தை பின்னணியாகக் கொண்ட மனோ இலங்கை இனவழிப்பு போரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு குடும்பமாக தனது பன்னிரண்டாவது வயதில் அவரது நான்கு சகோதரர்களோடு 2013 ஆம் ஆண்டு கப்பல் வழிப் பயணத்தால் ஆஸ்திரேலிய வந்தடைந்தார். இங்கு வந்து பல மாத தடுப்பு காவலுக்கு பிறகு சமூகத்திற்கு விடுவிக்கப்பட்டார். செவ்வாய் அன்று தனக்குத்தானே தீயிட்டுக் கொளுத்தி 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில்( Alfred Hospital, Melbourne) அனுமதிக்கப்பட்ட இன்று 12:27 மணி அளவில் தன் மூச்சை நிறுத்திக் கொண்டான் அந்த இளைஞன். மகிழ்ச்சியாக சாமானியமான வாழ்க்கையை வாழ வேண்டிய ஒரு இளைஞனை இத்தகைய மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவன் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு தள்ளியுள்ளது இந்த நிரந்தரமற்ற அகதி வாழ்க்கை. ஆஸ்திரேலியா அரசாங்கம் இத்தனை ஆண்டுகளாகியும் தஞ்ச கோரிக்கையை அங்கீகரிக்காத பட்சத்தில் மேலும் இலங்கைக்கு அகதிகளை அனுப்ப முற்படும் என்றால் இங்கிருந்து மரணிப்பதே மேல் என்று பல அகதிகள் எண்ணங்கள் மாறி இருப்பது அவர்கள் வாழ்வின் மீதான பேர் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.‌ இத்தகைய சோர்வடைந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல உண்மையான மனநிலை என்று ஒரு இளைஞன் தன் உயிரைத் தீக்கிரையாக்கி உணர்த்திச் சென்றுள்ளான் அனைவருக்கும். ஒரே மாதத்தில் இரு அகதிகளை இழந்துள்ளோம். இது இதோடு முடியப்போவதும் இல்லை என்ற பயம் எங்கள் அனைவரையும் ஆட்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/192220
  7. ராஜாவுக்கு ஒதுங்க வேற இடம் கிடைக்கலையோ?!
  8. கமலா ஹாரிசுக்கு எதிராக தடுமாறும் டிரம்ப் - அதிபர் தேர்தல் வரை இதேநிலை நீடிக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரா ஸ்மித் பதவி, வட அமெரிக்கா ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயக கட்சி மாநாட்டில் வீறுநடையுடன் மேடையேறிய கமலா ஹாரிஸ், தன்னை ஆதரிப்பதற்கு சிறந்ததொரு வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கர்களிடம் தெரிவித்தார். இந்த வார தொடக்கத்தில் அம்மாநாட்டில் ஒபாமாவும் அவருடைய மனைவியும் ஆற்றிய எழுச்சிமிக்க உரை போன்று இல்லை எனினும், கமலா ஹாரிஸின் 40 நிமிட உரையின் போது அரங்கத்தில் பரவசமும் நம்பிக்கையும் எழுந்ததை தெளிவாக காண முடிந்தது. உயர் அதிகார மட்டத்தில் உள்ள பிரபலங்களின் வலியுறுத்தல்கள் மற்றும் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என ஜனநாயக கட்சியினரிடையே நம்பிக்கையும், உற்சாகமும் காணப்படுகிறது. 2008 அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா முதன்முறையாக போட்டியிட்ட போது கூட அக்கட்சி இந்தளவுக்கு நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை. மகிழ்ச்சியில் ஜனநாயக கட்சியினர் ஜோ பைடனின் முதிர்ந்த வயது ஒரு சிக்கலாக எழுந்த நிலையில், அவர் இத்தேர்தலில் போட்டியிடாததும் கமலா ஹாரிஸ் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் இருவரும் எந்த தடையுமின்றி அந்த இடத்தை அடைந்ததும், அக்கட்சியினரின் மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. ஆனால், இந்த மகிழ்ச்சிக்குப் பின்னால், ஜனநாயக கட்சியின் வாக்காளர்களும் செயற்பாட்டாளர்களும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நவம்பர் 5 அன்று வாக்கு செலுத்த ஊக்கம் அளிப்பது குறித்து கட்சி வியூகவாதிகள் கவலை கொண்டுள்ளனர். அதிபர் பைடன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியதையடுத்து, கருத்துக் கணிப்புகள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக வெளிவர தொடங்கினாலும் கடுமையான போட்டியே நிலவுகிறது. வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத ஜார்ஜியா, அரிசோனா, நெவாடா, விஸ்கான்சின், பென்சில்வேனியா, மிச்சிகன், வடக்கு கரோலினா ஆகிய 7 மாகாணங்களே அடுத்த அதிபரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கணவர் டக் எம்ஹாஃப், மற்றும் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் மற்றும் அவருடைய மனைவி க்வென்னுடன் கமலா ஹாரிஸ் கடந்த ஆறு வாரங்களை வைத்துப் பார்க்கும் போது, தேர்தலுக்கு இன்னும் மீதமுள்ள 70 நாட்களில் விரைவில் மீண்டும் அரசியல் சூழல் மாறலாம். பராக் ஒபாமாவின் 2012 தேர்தலின் பிரசாரத்தை நிர்வகித்தவரும் ஜனநாயக கட்சியின் மூத்த வியூகவாதியுமான ஜிம் மெசினா, பிபிசியின் அமெரிகாஸ்ட் எனும் பாட்காஸ்ட்டில், ஜனநாயக கட்சி உறுதியாக வெற்றி பெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று கூறினார். “அமெரிக்க அரசியலில் நீண்ட காலமாக நான் பார்த்ததிலேயே, இந்த போட்டிக்குள் கமலா ஹாரிஸ் நுழைந்ததிலிருந்து சிறப்பான 30 நாட்களை அனுபவித்துள்ளார்” என அவர் கூறினார். “எனினும், அவர் இத்தேர்தலில் எதிராளியுடன் சம பலத்திலேயே உள்ளார். தேர்தலுக்கு இன்னும் சுமார் 70 நாட்கள் மீதம் உள்ள நிலையில், இன்னும் கடும் போட்டியே நிலவுகிறது” என தெரிவித்தார். ஒபாமா பேசியது என்ன? கமலா ஹாரிஸ் உரையின் போது, அதீத உற்சாகம் தென்பட்டாலும், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஜனநாயக கட்சியினர் செய்வதற்கு இன்னும் பல வேலைகள் உள்ளன. கமலா ஹாரிஸுக்கு எதிராக எப்படி பரப்புரை செய்வது என்பதில் டிரம்ப் இன்னும் தடுமாறுவதாக தெரிகிறது. கமலா ஹாரிஸுக்கு எதிராக தாக்குதலை தொடுப்பது எப்படி என்பதையும் அவருடைய வழக்கமான பாணியில் ஹாரிஸுக்கு இன்னும் பட்டப்பெயரையும் அவர் தீர்மானிக்கவில்லை. தன்னுடைய பரப்புரையை சிறப்பானதாக மாற்றும் வகையில், கமலா ஹாரிஸை வரையறுக்கும் வகையில் விரைவில் டிரம்ப் ஒரு திட்டத்தை உருவாக்குவார் என தான் நம்புவதாகவும், அதுதான் அவருடைய சிறப்பான அரசியல் திறன் என்றும் முக்கியமான ஜனநாயக வியூகவாதி ஒருவர் என்னிடம் கூறினார். அதை டிரம்ப் செய்யும் போது கமலா ஹாரிஸுக்கு இந்த தேர்தல் இன்னும் கடினமானதாக மாறும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2022ம் ஆண்டு வெள்ளை மாளிகை நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமாவும், கமலா ஹாரிஸும் ஜனநாயக கட்சி மாநாட்டு மேடையில் நம்பிக்கை தெரிந்தாலும், எச்சரிக்கை உணர்வும் இருந்தது. செவ்வாய்க் கிழமை இரவு மிஷெல் ஒபாமா தன் உரையில், தேர்தலில் மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்று எச்சரித்தார். “எந்த சந்தேகத்தையும் அழித்தொழிக்கும் வகையிலான எண்ணிக்கையில் நாம் வாக்கு செலுத்த வேண்டும்,” என குழுமியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். “நம்மை ஒடுக்கும் எந்த முயற்சியையும் நாம் அடக்க வேண்டும்” என்றார் அவர். இதே கருத்தை வலியுறுத்திய பராக் ஒபாமா, அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியதும் தெருக்களில் இறங்கி வேலை செய்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில் சில வலுவான வார்த்தைகளை பயன்படுத்தினார். “நாம் மதிக்கும் அமெரிக்காவுக்காக போராடுவது நம் கையில்தான் உள்ளது,” என முன்னாள் அதிபர் தெரிவித்தார். “எந்த தவறும் செய்ய கூடாது, இது ஒரு போராட்டம்” என்றார் அவர். "கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார்" இந்த தேர்தலில் முடிவை தீர்மானிக்கக் கூடிய, இழுபறி நிலவும் முக்கியமான மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செய்வதற்கு எவ்வளவு வேலைகள் உள்ளன என்பது நன்றாக தெரிந்திருக்கிறது. “இந்த வாரம் நான் செல்லும் எல்லா இடங்களிலும் ஜனநாயக கட்சியினரிடம், ‘உங்களை போன்றே எல்லோரும் சக்தியுடன் இருக்கிறார்கள் என எண்ணாதீர்கள்’ என கூறி வருகிறேன்,” என ஜனநாயக கட்சியின் பிரதிநிதியும் மிச்சிகன் மாகாணத்தில் செனட் உறுப்பினருக்கான போட்டியில் உள்ளவருமான எலிசா ஸ்லாட்கின், பொலிடிகோ என்ற இணைய ஊடகத்திடம் தெரிவித்தார். இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகள் காரணமாக ஊக்கம் பெற்றுள்ள ஜனநாயக கட்சி பிரதிநிதிகள், ஒபாமாவின் செய்தியை மனதில் கொண்டுள்ளதாக தெரிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கமலா ஹாரிஸ் முக்கிய போட்டி களமான ஜார்ஜியாவை சேர்ந்த 21 வயதான கேமரோ லேண்டின், வெற்றியை சாதாரணமாக பெற முடியாது என தெரிவித்தார். ஜார்ஜியாவில் 28 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக கடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. “கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என நான் நம்புகிறேன்,” என, ஹாரிஸ் மேடை ஏறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு கூறினார். சவன்னா நகரை சேர்ந்த பிராந்திய ஒருங்கிணைப்பாளரான அவர், வாக்குப்பதிவை அதிகப்படுத்துவதில் தான் தன்னைப் போன்றவர்கள் கவனம் செலுத்துவதாக கூறினார். “இதற்காக வாரத்தில் 60 மணி நேரத்திற்கும் அதிகமாக, ஏழு நாட்களும் ஒருங்கிணைக்கின்றனர். இதற்காக தன்னார்வலர்கள் தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவும் நேரில் சென்றும் பரப்புரை செய்கின்றனர்” என்றார். கமலா ஹாரிஸ் மற்றும் வால்ஸை நோக்கி அவர்களின் உருவப்படம் கொண்ட போஸ்டர்களை அசைத்த கட்சி பிரதிநிதிகளை சுட்டிக்காட்டி, “இதுதான் வெற்றி பெறும்” என்றார். “களத்தில் உள்ள மக்களால் தான் வெற்றி கிட்டும்” என்றார். "மாயையில் இல்லை" நெவெடா மாகாணத்தின் ஜனநாயக கட்சி பிரதிநிதி சூசி லீ, லாஸ் வேகாஸ் பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்றும், குறிப்பாக சம பலம் உள்ள தன்னுடைய மாகாணத்தில் கடும் போட்டி நிலவும் என்றும், தான் எந்தவித மாயையிலும் இல்லை என்றும் அவர் கூறினார். “வெற்றி குறித்து அதீத நம்பிக்கையில் இருக்கக் கூடாது” என அவர் கூறுகிறார். நெவாடாவில் சில பகுதிகளில் 50-100 வாக்குகளில் கூட வெற்றி தீர்மானிக்கப்படும் என்றார். “எனவே மக்களை வாக்கு செலுத்த ஊக்குவிக்க வேண்டும். “ஆனால், டொனால்ட் டிரம்ப் குறித்து மக்கள் சோர்வடைந்து விட்டனர் என நான் நினைக்கிறேன்,” என அவர் தெரிவித்தார். “ஹாரிஸ் மற்றும் டிரம்ப்பில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மிக தெளிவாக உள்ளது. மக்களுக்கு அதுகுறித்து தெரியும் என நினைக்கிறேன்.” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் அரசியல் மாநாட்டை கோடிக்கணக்கான மக்கள் பார்த்தனர். முதல் மூன்று நாள் இரவிலும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்தனர். ஹாரிஸ்-வால்ஸ் கூட்டணி நிச்சயமாக மேலும் முன்னேற்றம் அடையும். ஆனால், மற்றொரு கட்சி மாநாட்டை தொடர்ந்தே இது நிகழும் என்று மாநாட்டுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. கமலா ஹாரிஸ் குறித்து அமெரிக்கா இப்போதுதான் அறிந்துவரும் நிலையில், கடினமான ஊடக நேர்காணல்களை இதுவரை அவர் தவிர்த்து வருவதாலும் கொள்கைகளை குறைவாகவே வெளிப்படுத்தியுள்ளதாலும் மாநாட்டின் மகிழ்ச்சி தருணம் நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கிட்டத்தட்ட பாதி அமெரிக்கா, டிரம்ப்பின் பிடியில் உள்ளது. மூன்று தொடர்ச்சியான அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் மூலம் அவர்கள் டிரம்ப்பை நன்கு அறிவார்கள். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியினர் நிச்சயமாக வெற்றி பெறலாம், ஆனால் அவர்கள் செய்வதற்கு பல கடினமான வேலைகள் உள்ளன. பெர்ன்ட் டெபுஸ்மன் ஜூனியர் வழங்கிய கூடுதல் தகவல்களுடன் https://www.bbc.com/tamil/articles/c303vd77g97o
  9. கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிப்புக் கோரினார் அமைச்சர் அலி ஷப்ரி கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று முதல் தினமும் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அருகில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல நாட்களாக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை,பெரும்பாலானோர் அதே இடத்தில் இரவை கழித்து வருகின்றனர். குடிவரவுத் திணைக்களம் வசம் வைத்திருக்கும் வெற்று கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், குடிவரவு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இவ்வாறு வரிசை உருவானது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படும் வரை ஒக்டோபர் மாதம் வரையில் இந்நிலை நீடிப்பதால் அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அந்த திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/308524
  10. இலங்கை கடற்படை சிறைப்பிடித்த மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் 28 AUG, 2024 | 12:13 PM ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மரியசியா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கிங்சன் (40), மெக்கன்ஸ் (37), ராஜ் (43), இன்னாசி ராஜா (45), சசி (40), மாரியப்பன் (45 ), அடிமை (33), முனியராஜ் ( 23) ஆகிய எட்டு பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்கிழமை அதிகாலை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட 8 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 8 பேருக்கும் செப்டம்பர் 14 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மீனவர்களை சிறைப்பிடித்ததைக் கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ராமேசுவரத்தில் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி இறங்குதளத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை. https://www.virakesari.lk/article/192210
  11. தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக வவுனியாவில் துண்டுப்பிரசுர விநியோகம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ப.அரியநேத்திரனை ஆதரித்து வவுனியா நகரில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது. தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் நடந்த இந்த விநியோக பணியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பொதுஅமைப்புக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://thinakkural.lk/article/308533
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விக்டோரியா பப்ளிக் ஹால், சென்னை கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 28 ஆகஸ்ட் 2024, 06:20 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அமைந்திருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் ஒரு காலகட்டத்தில் சென்னையின் மகத்தான அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்தது. சென்னையின் வரலாற்றோடு பிணைக்கப்பட்ட இந்த கட்டடத்தின் வரலாறு என்ன? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் செல்லும் யாரும், அந்த ரயில் நிலையத்திற்கும் மாநகராட்சிக் கட்டடமான 'ரிப்பன் பில்டிங்கி'ற்கும் இடையில், இந்தோ - சராசெனிக் பாணியில் கட்டப்பட்டு கம்பீரமான தோற்றத்தோடு நிற்கும் ஒரு கட்டடத்தை பார்க்காமல் செல்ல முடியாது. செங்கல் நிறத்தில் உயர்ந்து நிற்கும் அந்தக் கட்டடம், விக்டோரியா பப்ளிக் ஹால். ஒரு காலத்தில் சென்னையின் பரபரப்பான நிகழ்வுகளின் மையமாக இருந்த இடம் அது. 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 'Town Hall' எனப்படும் அரங்கங்களைக் கட்டுவது வழக்கமாக இருந்தது. நகர நிர்வாகத்திற்கென தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இது போன்ற டவுன் ஹால்களில் கூடி, அந்நகரம் குறித்த முடிவுகளை எடுப்பார்கள். அம்மாதிரி கூட்டங்கள் நடக்காத காலகட்டத்தில், நகரின் முக்கிய நிகழ்ச்சிகள், நகருக்கு வருகை தரும் முக்கியப் பிரமுகர்களுக்கான வரவேற்பு போன்றவை அந்த அரங்கில் நடக்கும். அந்த காலகட்டத்தில், கல்கத்தா, பம்பாய் போன்ற இடங்களில் டவுன் ஹால்கள் கட்டப்பட்டுவிட்டன. ஆனால், பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கிய நகரமான மெட்ராஸில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்கூட அப்படி ஒரு கட்டடம் இல்லை. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மெட்ராஸிலும் அப்படி ஒரு கட்டடத்தைக் கட்ட வேண்டும் என்ற விருப்பம் உருவானது. பிற நகரங்களில் இருந்த டவுன் ஹால்களில் நகராட்சிக் கூட்டங்கள் நடந்தாலும், மெட்ராஸ் டவுன் ஹாலின் நோக்கம், நகராட்சிக் கூட்டத்தை நடத்துவதாக இல்லை. காரணம், மெட்ராஸ் மாநகராட்சி அந்தத் தருணத்தில் எர்ரபாலு தெருவில் இருந்த ஒரு கட்டடத்தில் இயங்கிவந்தது. ஆகவே, புதிய கட்டடம், முக்கிய நிகழ்வுகளை நடத்தும் இடமாகவே இருக்கும் என்பது ஆரம்பத்திலேயே தெளிவாக இருந்தது. நிதியுதவி செய்த அரசர்கள் 1882ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜார்ஜ் டவுனில் இருக்கும் பச்சையப்பா அரங்கில் ஒரு கூட்டம் நடைபெற்றது. சென்னை நகரின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், மெட்ராஸ் நகருக்கென ஒரு டவுன் ஹாலைக் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் அந்தக் கட்டடத்திற்காகப் பங்களிப்புச் செய்தனர். முடிவில், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 30 பேரிடமிருந்து 16,425 ரூபாய் வசூலானது. படக்குறிப்பு, ஒரு லாட்டரி நடத்தப்பட்டு, அதில் கிடைத்த நிதியும் கட்டட நிதியில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து பணிகள் விறுவிறுப்படைந்தன. இந்தக் கட்டடத்தைக் கட்ட 12 உறுப்பினர்களைக் கொண்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மெட்ராஸ் மாகாண அரசிடம் இதற்கென ஒரு நிலத்தை ஒதுக்கித் தரும்படி கேட்கப்பட்டது. தற்போது நேரு விளையாட்டரங்கம், சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை மாநகராட்சி ஆகியவை இருக்கும் இடத்தில், அந்தக் காலகட்டத்தில் மக்கள் பூங்கா (Peoples Park) என்ற பெயரில் 117 ஏக்கரில் மிகப் பெரிய பூங்கா இருந்தது. அந்த பூங்காவில் 3.14 ஏக்கர் நிலத்தை சென்னை மாகாண அரசு 99 வருட குத்தகைக்கு ஒதுக்கித் தந்தது. வருடத்திற்கு 28 ரூபாய் குத்தகைக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. விஜயநகர மன்னரான புசபதி ஆனந்த கஜபதி ராஜு, 1883 டிசம்பர் 17ஆம் தேதி கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். திருவனந்தபுர அரசர், மைசூர், ராமநாதபுரம், எட்டயபுர மன்னர்கள் இந்தக் கட்டடம் கட்டுவதற்காக நிதியுதவியைச் செய்திருந்தனர். இருந்த போதும், கட்டடத்தைக் கட்டி முடிக்க அந்த நிதி போதுமானதாக இல்லை. இதையடுத்து இதற்கென ஒரு லாட்டரி நடத்தப்பட்டு, அதில் கிடைத்த நிதியும் கட்டட நிதியில் சேர்க்கப்பட்டது. கட்டடத்தை முடிக்க ஐந்து ஆண்டுகள் அந்தத் தருணத்தில் வங்காளத்தின் பொதுப் பணித் துறையில் செயற்பொறியாளராக ராபர்ட் ஃபெலோவஸ் சிஸோம் என்பவர் பணியாற்றி வந்தார். அவர், சென்னை மாகாணத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். அவர்தான் இந்தக் கட்டடத்தின் வடிவமைப்பாளராகச் செயல்பட்டார். கட்டடத்தைக் கட்டும் பொறுப்பு, சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகம், சட்டக் கல்லூரி, கன்னிமாரா நூலகம் போன்றவற்றைக் கட்டிய புகழ் பெற்ற கட்டட ஒப்பந்ததாரரான டி. நம்பெருமாள் செட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தைக் கட்டி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆயின. 48 மீட்டர் நீளத்துடனும் 24 மீட்டர் அகலத்துடனும் செவ்வக வடிவில் அமைந்திருந்த இந்த கட்டடத்தில் இரண்டு அரங்குகள் உண்டு. ஒன்று, தரைத்தளத்திலும் மற்றொன்று முதல் தளத்திலும் இருந்தது. அதற்கு மேல் ஓடுகள் வேயப்பட்டிருந்தன. படக்குறிப்பு, விக்டோரியா பப்ளிக் ஹாலின் அழகு வேலைப்பாடுகள் நிறைந்த சன்னல் 1837ல் ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசியாகியிருந்த விக்டோரியா மகாராணி ஆட்சியின் பொன் விழா 1887ல் நடந்து முடிந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக புதிதாக மெட்ராஸில் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்திற்கு மகாராணியின் பெயரைச் சூட்ட விரும்பியது பிரிட்டிஷ் அரசு. அதன்படி, அவரது பெயரே அந்தக் கட்டடத்திற்குச் சூட்டப்பட்டது. கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, இந்தக் கட்டடத்தை திறந்து வைத்தது யார் என்பதில் சிறு குழப்பம் நிலவுகிறது. ஆனால், சென்னை குறித்த வரலாற்றாய்வாளரான எஸ். முத்தையா சென்னை மாகாண ஆளுநராக இருந்த லார்ட் கன்னிமாராதான் இதனைத் திறந்துவைத்ததாகக் குறிப்பிடுகிறார். இந்தக் கட்டடம் திறக்கப்பட்ட பிறகு, பல புகழ்பெற்ற ஆளுமைகள் இந்த அரங்கில் பேசினர். சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, கோபால கிருஷ்ண கோகலே, பாரதியார் ஆகியோர் இங்கே பேசியிருக்கின்றனர். திரையிடப்பட்ட படங்கள் "சிகாகோவிலிருந்து திரும்பிய விவேகானந்தர் பேசுவதைக் கேட்க பெரும் கூட்டம் அரங்கத்திற்குள் நிரம்பிவிட்டதால், அவரால் உள்ளே நுழையவே முடியவில்லை. இதனால், வெளியில் இருந்தபடியே பேசினார். அதேபோல, மகாத்மா காந்தி 1915ல் பம்மல் சம்பந்த முதலியாரின் ஹரிச்சந்திரா நாடகத்தை இங்கேதான் பார்த்தார். பாரதியார் இங்கே Cult of the Eternal (நித்தியத்தின் வழிபாடு) என்ற தலைப்பில் பேசியபோது, அவரது பேச்சைக் கேட்க ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது" என்கிறார் சென்னை குறித்த வரலாற்றாய்வாளரான வெங்கடேஷ் ராமகிருஷ்ணன். 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரதியார் இங்கே பேசினார். அந்த காலகட்டத்தில் தமிழ் நாடக உலகில் புகழ்பெற்று விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோர் இங்கு தங்கள் நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றினர். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் இங்கு தமிழில் மேடையேறின. சென்னையில் முதன் முதலில் கட்டப்பட்ட சினிமா அரங்கம் வேறு என்றாலும், முதன் முதலில் சினிமா இங்குதான் காட்டப்பட்டது. 1896 டிசம்பரில் மெட்ராஸ் ஃபோடோகிராஃபிக் ஸ்டோர் என்ற கடையை நடத்திவந்த டி. ஸ்டீவன்சன் சில சிறு படங்களைத் திரையிட்டார். அந்த நாட்களில் பெரும் மழை பெய்துகொண்டிருந்ததால், அதைப் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. செய்யாத குற்றத்திற்கு 38 ஆண்டு சிறைவாசம் - நிரபராதி என்று நீதிபதி அறிவித்தும் விடுதலை ஆகாதது ஏன்?27 ஆகஸ்ட் 2024 படக்குறிப்பு, நிகழ்ச்சிகள் குறைந்ததால் பராமரிப்பும் குறைந்தது. இவை எல்லாவற்றையும்விட, தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு இங்கே நடந்தது. 1916ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி, நகரின் பிராமணரல்லாத தலைவர்கள் இங்கே ஒன்றுகூடி, South Indian Liberation Federation அமைப்பை உருவாக்கினர். இதுவே பிற்காலத்தில் தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப் போட்ட திராவிட இயக்கம் உருவாகக் காரணமாக அமைந்தது. இதற்குப் பிறகு, சுகுண விலாஸ் சபா, சென்னபுரி ஆந்திர மஹாசபா, தென்னிந்திய தடகள வீரர்கள் சங்கம் போன்றவை இங்கு சிலகாலம் செயல்பட்டன. ஒரு கட்டத்தில் இந்தக் கட்டடத்தின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது. அதற்குக் காரணம் இருந்தது. "நாட்கள் செல்லச்செல்ல மெட்ராஸ் நகரம் தெற்கு நோக்கி வளர ஆரம்பித்தது. முக்கிய நிகழ்ச்சிகள், கூட்டங்கள், நாடகங்கள் ஆகியவே நிகழ்ச்சிகள் நகரின் தெற்கில் புதிதாக உருவான அரங்கங்களுக்கு மாற ஆரம்பித்தன. இதனால், இந்த அரங்கின் மவுசு குறைய ஆரம்பித்தது" என்கிறார் வெங்கடேஷ். நிகழ்ச்சிகள் குறைந்ததால் பராமரிப்பும் குறைந்தது. பராமரிப்புப் பணிகள் 1967ல் சி.என். அண்ணாதுரை முதலமைச்சராகப் பதவியேற்ற போது, கட்டடத்தைப் புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது நடக்கவில்லை. இதற்குப் பிறகு, ஒரு உணவகம், சில கடைகள் ஆகியவை இங்கே செயல்பட்டுவந்தன. இந்தக் காலகட்டத்தில் கட்டடம் பாழடைய ஆரம்பித்தது. கட்டடம் துவங்கப்பட்டதிலிருந்து சென்னை நகர ஷெரீஃப் தலைமையிலான ஒரு அறக்கட்டளை இந்தக் கட்டடத்தை நிர்வகித்து வந்தது. அந்த அறக்கட்டளையில் விஜயநகர ஜமீன் குடும்பத்திற்கும் சென்னை மாநகராட்சிக்கும் பெரும் பங்கு இருந்தது. ஷெரீஃப் பதவி ஒழிக்கப்பட்ட பிறகு, கட்டடம் மாநகராட்சியின் பொறுப்பிற்கு வந்தது. ஆனால், அந்தத் தருணத்தில் கட்டடம் மிக மோசமான நிலையில் இருந்தது. பிறகு, கட்டடத்தைப் புதுப்பிக்கும் நோக்கில், அதிலிருந்த கடைகள் போன்றவை அகற்றப்பட்டன. சிறிய அளவில் பராமரிப்புப் பணிகளும் நடந்தன. ஆனால், அந்தப் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கியதும், மீண்டும் பொதுமக்களின் பார்வையிலிருந்து இந்தக் கட்டடம் மறைந்தது. இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு, சுமார் 32 கோடி ரூபாய் செலவில் முழுமையாக இந்தக் கட்டடம் சீரமைக்கப்பட்டு வருகிறது. 2025ல் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து கட்டம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/c5y848y5ry8o
  13. Published By: VISHNU 27 AUG, 2024 | 11:02 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) அடுத்த சுயாதீனத் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா போட்டியின்றி தெரிவானார். 2019இலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கௌரவ செயலாளராகவும் 2021இலிருந்து ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் பதவி வகிக்கும்ஜெய் ஷா, ஐசிசியின் தலைவர் பதவியை டிசம்பர் 1ஆம் திகதி பொறுப்பேற்பார். சமகாலத் தலைவர் க்ரெய்க் பாக்லே, மூன்றாவது முறையாக பதவியேற்க முன்வராத நிலையில் அடுத்த தலைவர் பதவிக்கு ஜெய் ஷாவின் பெயர் மாத்திரமே பிரேரிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் போட்டியின்றி தெரிவானார். தலைவர் பதவிக்கு தெரிவானதை அடுத்து, உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டை பரப்பச் செய்வதும் பிரபல்யம் அடையச் செய்வதுமே தனது நோக்கம் என ஜெய் ஷா குறிப்பிட்டார். குறிப்பாக லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட்டை இணைப்பதன் மூலம் அதன் வளர்ச்சிக்கு முக்கிய வாய்ப்பு உருவாவதாக அவர் கூறினார். 'சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக பிரேரிக்கப்பட்டமைக்காக தாழ்மை அடைகிறேன்' என்றார் ஷா. 'கிரிக்கெட்டை மேலும் உலகமயமாக்கும் பொருட்டு ஐசிசி குழுவினருடனும் உறுப்பு நாடுகளுடனும் நெருக்கமாக பணியாற்ற அர்ப்புணிப்புடன் இருக்கிறேன். பல கிரிக்கெட் வடிவங்களின் சமநிலையைப் பேணுவதற்கும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் புதிய உலகளாவிய சந்தைகளுக்கு எங்கள் பிரதான நிகழ்வுகளை அறிமுகப்படுத்துவதற்கும் தேவையான ஒரு முக்கிய கட்டத்தில் நாங்கள் நிற்கிறோம். முன்னெப்போதும் இல்லாதவாறு கிரிக்கெட்டை முழுமைப்படுத்தி பிரபலமாக்குவதே எங்கள் குறிக்கோள்' என்றார். https://www.virakesari.lk/article/192170
  14. டெலிகிராம் செயலி தலைமை நிர்வாக அதிகாரியுடன் கைது செய்யப்பட்ட இளம்பெண் ஜூலி - மொசாட் உளவாளியா? 28 AUG, 2024 | 11:45 AM டெலிகிராம் செயலியின் தலைமைநிர்வாக அதிகாரி பவெல் துரோவ் உடன் இளம்பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஜூலி வவிலோவா என்ற அந்தப் பெண் இஸ்ரேலின் மொசாட் உளவாளி என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது. டெலிகிராம் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறியது, பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். 90 கோடி பயனாளர்களைக் கொண்ட டெலிகிராமின் சிஇஓ கைது செய்யப்பட்டது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பவெலுடன் ஜூலி வவிலோவா என்ற இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பவெலின் காதலிஎன்று நம்பப்படுகிறது. 24 வயதான ஜூலி வவிலோவா துபாயைச் சேர்ந்த கிரிப்டோ பயிற்சியாளர் மற்றும் சமூக ஊடக பங்கேற்பாளர் என்பது தெரியவந்துள்ளது. கேமிங், கிரிப்டோ, மொழி ஆகியவற்றை தனது ஆர்வப் பட்டியலில் தெரிவித்துள்ள அவர் ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். இவர் மொசாட் ஏஜென்ட்டாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வவிலோவாவும், டெலிகிராம் சிஇஓவும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அஜர்பைஜான் போன்ற பல்வேறு நாடுகளில் ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளனர். அவர்களது வீடியோ இன்ஸ்டாகிராமில் தற் போது வைரலாகியுள்ளது. https://www.virakesari.lk/article/192208
  15. ஜே.ஆர்., ரணசிங்க பிரேமதாசவை மதிப்பவர்கள் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவமளிக்க மாட்டார்கள் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Published By: VISHNU 28 AUG, 2024 | 03:12 AM (எம்.மனோசித்ரா) நாடு நெருக்கடியில் இருக்கும் போது கட்சியை மறந்து நாட்டுக்காக சிந்தியுங்கள் எனக் கற்றுக் கொடுத்த ஜே.ஆர்.ஜெயவர்தனவின் கொள்கையையே இன்றும் நான் பின்பற்றுகின்றேன். அவரையும் ரணசிங்க பிரேமதாசவையும் உண்மையாக மதிக்கும் எவரும் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். செவ்வாய்கிழமை (27) மாவனல்லையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு நெருக்கடியில் இருக்கும் போது கட்சியை மறந்து நாட்டுக்காக சிந்தியுங்கள் என்று எனது தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கற்றுக் கொடுத்திருக்கின்றார். 1971 ஜே.வி.பி. கலவரம் இடம்பெற்றபோது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நாம் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அன்றைய எதிர்கட்சி தலைவர் குறிப்பிட்டார். அந்த சந்தர்ப்பத்தில் எமது கட்சியின் இளைஞர் அணியின் செயலாளரும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனும் சிறையிலடைக்கப்பட்டிருந்தனர். எனினும் அந்த பிரச்சனைகளை பின்னர் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் தற்போது நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்போம் என்றும் அவர் கூறினார். அதேபோன்று தான் 1983இல் ஜே.வி.பி. கலவரம் ஏற்பட்டபோதும் அப்போதைய எதிர்க்கட்சி ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு ஒத்துழைப்பு வழங்கியது. ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொலை செய்யப்பட்ட போது, உங்களது கட்சியில் ஜனாதிபதி ஒருவரை நிறுத்துங்கள் என்று பண்டாரநாயக்க தெரிவித்தார். இவ்வாறு தான் முன்னர் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட்டன. அதேபோன்றுதான் நாடு நெருக்கடியான சூழலில் இருந்தபோது அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நாம் அனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்பினோம். எனவே ஜே.ஆர்.ஜெயவர்த்தனவையும் ரணசிங்க பிரேமதாசவையும் மதிக்கும் ஐக்கிய தேசிய கட்சியினரான நாம் நாட்டுக்காக இணைந்து செயல்படுவோம் என்று கேட்டுக் கொள்கின்றேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் கட்சியை பற்றி சிந்தித்திருந்தால் நாடு இன்று இந்த நிலைமையில் இருந்திருக்காது. எதிர்க்கட்சித் தலைவரை மாற்று பிரதமர். ஐக்கிய தேசியக் கட்சியை பாரம்பரியமாகக் கொண்ட அவர் அன்று பிரதமர் பதவியை பொறுப்பேற்றிருக்க வேண்டும். யாரும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே நான் இந்த இடத்துக்கு வந்தேன். பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் முழுமையாக அந்த இடத்துக்கு செல்லவில்லை. மக்களின் வாழ்க்கை சுமையை மேலும் குறைப்பதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்கும் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் எதிர்பார்க்கின்றோம். இன்னும் தொங்கு பாலம் உள்ள பாதையிலேயே பயணிக்க வேண்டியிருக்கின்றது. சிலர் வரியை முற்றாக நீக்குவதாக கூறுகின்றனர். வரி இல்லை என்றால் என்ன செய்வார்கள்? எமது வருமானம் முற்றாக இழக்கப்படும். அவர்கள் தொங்கு பாலத்தை அறுத்து எறிந்து விட்டு செல்லுங்கள் என்று கூறுகின்றார்கள். அவ்வாறு செய்தால் நாம் ஆற்றில் விழ வேண்டியதுதான். தொங்கு பாலத்தில் அவதானமாக பயணிப்பதா அல்லது அதனை அறுத்தெறிந்து ஆற்றில் விழுவதா? தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய அரசாங்கத்தின் வருமானம் சுமார் 200 பில்லியன் வரை இழக்கப்படும். வருமானத்தை குறைத்து எவ்வாறு செலவை அதிகரிக்க முடியும்? இந்த கணிதமும் பொருளாதாரம் தெரியாத அவர்கள் தொங்கு பாலத்தின் இரு பகுதிகளையும் அறுத்துவிடவே எண்ணுகின்றனர். தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தை நானும் வாசித்தேன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி அதன் பிரதிபலனை உங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எனது இலக்காகும். வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் வரை சுமையை குறைத்து பொருட்களின் விலைகளையும் குறைக்க முடியும். பொருளாதாரத்தை மேம்படுத்தினால் மாத்திரமே வாழ்க்கை சுமையை மேலும் குறைக்க முடியும். ஐக்கிய மக்கள் சக்திக்கு அவர்களது கொள்கை என்னவென்றே தெரியவில்லை. வியாழனன்று எமது முழுமையான வேலைத்திட்டத்தை கொள்கை பிரகடனத்தில் உங்களுக்கு வெளிப்படுத்துவோம். எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டர் அருகில் புள்ளடியிடுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/192178
  16. பட மூலாதாரம்,BBC படக்குறிப்பு, சீமேநே எனும் ஒரு நாடோடி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் மார்டினா கட்டுரை தகவல் எழுதியவர், அலெகான்ட்ரோ மிலன் வலென்சியா பதவி, பிபிசி நியூஸ் முண்டோ 27 ஆகஸ்ட் 2024 பொலிவியக் காட்டில் மார்டினா காஞ்சி நேட் நடந்து செல்லும்போது, சிவப்பு வண்ணத்துப்பூச்சிகள் அவரைச் சுற்றி பறக்கின்றன. அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் எங்கள் குழு அவரை மெதுவாக நடக்க கோரிக்கை வைத்தது. அவருடைய அடையாள அட்டை அவருக்கு 84 வயது என்று சொல்கிறது. ஆனால் 10 நிமிடங்களுக்குள், மூன்று யூக்கா (Yucca) மரங்களின் வேர்களில் இருந்து கிழங்குகளைப் பிரித்தெடுக்க அவற்றை தோண்டி எடுக்கிறார். தனது கத்தியால் இரண்டே வெட்டுகளில் ஒரு வாழை மரத்தை சாய்த்துவிட்டார். தன் முதுகில் ஒரு பெரிய வாழைத் தாரைச் சுமந்துகொண்டு, தனது தோட்டத்திலிருந்து வீட்டை நோக்கி நடக்க தொடங்குகிறார். இந்த தோட்டத்தில்தான் மரவள்ளிக்கிழங்கு, சோளம், வாழை மற்றும் அரிசி ஆகியவற்றை அவர் பயிரிடுகிறார். பொலிவியாவின் தலைநகரான லா பாஸுக்கு வடக்கே 600 கிமீ தொலைவில் உள்ள அமேசான் மழைக்காடுகளின் உள் பகுதிகளில் வாழும், Tsimanes (‘சீ-மே-நே’ என்று உச்சரிக்கப்படுகிறது) எனும் ஒரு நாடோடி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் மார்டினா. இந்த பழங்குடி சமூகத்தில் 16,000 பேர் வாழ்கின்றனர். மார்டினாவின் வலிமை என்பது அவரது வயதையொத்த ‘சீமேநே’ பழங்குடிகளுக்கு அசாதாரணமானது ஒன்றும் அல்ல. இதுவரை ஆய்வு செய்யப்பட்டதில் இவர்களுக்குதான் ஆரோக்கியமான தமனிகள் (Arteries) உள்ளன என்று விஞ்ஞானிகள் குழு கூறுகிறது. இவர்களின் மூளை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் உள்ளவர்களை விட மெதுவாகவே மூப்படைகிறது என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். சீமேநே மிகவும் அரிதான ஒரு பழங்குடிக் குழு. வேட்டையாடுதல், உணவு தேடுதல் மற்றும் விவசாயம் என முழுமையான ஒரு வாழ்க்கை முறையை வாழும், உலகின் சில குறிப்பிட்ட சமூகங்களில் சீமேநேவும் ஒன்று. இந்த சமூகம், ஒரு கணிசமான அறிவியல் மாதிரியை வழங்கும் அளவுக்கு பெரியது. நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் ஹில்லார்ட் கப்லான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இருபது ஆண்டுகளாக இச்சமூகத்தை ஆய்வு செய்துள்ளனர். படக்குறிப்பு, தனக்கு வயது 78 என்று சொல்கிறார் ஜுவான் ‘சீமேநே’ பழங்குடிகளின் வாழ்க்கை முறை விலங்குகளை வேட்டையாடுதல், பயிர் செய்தல் மற்றும் கூரைகளை வேய்தல் என ‘சீமேநே’ பழங்குடிகள் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்கள். பகல் நேரத்தில் 10%க்கும் குறைவான நேரத்தையே அதிக உடலுழைப்பு தேவைப்படாத வேலைகளில் சீமேநே பழங்குடிகள் செலவிடுகிறார்கள். அதே சமயம் தொழில்துறையில் உள்ள மக்கள், 54% நேரத்தை அதிக உடலுழைப்பு தேவைப்படாத வேலைகளில் செலவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு சராசரி வேட்டை நிகழ்வு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மற்றும் 18 கிமீ (11 மைல்) தூரம் வரை செல்ல வேண்டியிருக்கும். அவர்கள் மானிக்கி நதியில் வாழ்கின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவுகள், மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் போன்ற பொருட்கள் அவர்களுக்கு எளிதாகக் கிடைப்பதில்லை. அவர்கள் உண்ணும் கலோரிகளில் 14% மட்டுமே கொழுப்பிலிருந்து கிடைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், இது அமெரிக்காவில் 34% ஆகும். அவர்களின் உணவுகளில் நார்ச்சத்து அதிகம் மற்றும் 72% கலோரிகள் கார்போஹைட்ரேட்டிலிருந்து வருகின்றது. ஆனால் இது அமெரிக்காவில் 52% ஆகும். அவர்கள் வேட்டையாடும் பறவைகள், குரங்குகள் மற்றும் மீன்கள் போன்ற விலங்குகளிலிருந்து புரதங்கள் கிடைக்கின்றன. அவர்களது பாரம்பரிய சமையல் முறைப்படி உணவைப் பொரிப்பது இல்லை. பட மூலாதாரம்,MICHAEL GUVERN படக்குறிப்பு, சீமேநே பழங்குடிகளின் பாரம்பரிய சமையல் முறைப்படி உணவைப் பொரிப்பது இல்லை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கப்லான் மற்றும் அவரது சக பணியாளரான மைக்கேல் குர்வெனின் ஆரம்பக்கால பணி மானுடவியல் சார்ந்ததாக இருந்தது. சீமேநே சமூகத்தின் முதியோர்களிடம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது இதயப் பிரச்னைகள் போன்ற முதுமையின் பொதுவான நோய்களின் அறிகுறிகள் தென்படவில்லை என்பதை அவர்கள் கவனித்தனர். பின்னர் 2013இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு பேராசிரியர் கப்லானின் ஆராய்ச்சி குழுவின் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்காவை சேர்ந்த இதய நோய் நிபுணர் ராண்டால் சி தாம்சன் தலைமையிலான குழு, பண்டைய எகிப்து, இன்கா மற்றும் உனங்கன் நாகரிகங்களிலிருந்து 137 மம்மிகளை ஆய்வு செய்ய சிடி (CT) ஸ்கேனிங்கைப் பயன்படுத்தியது. மனிதர்களுக்கு வயதாகும்போது, கொழுப்புச் சத்து, ரத்தக் கொழுப்பு மற்றும் இதர பொருட்களின் உருவாக்கம் தமனிகளை கெட்டியாக்குகிறது அல்லது கடினப்படுத்துகிறது. இதனால் அத்தரோஸ்கிலரோசிஸ் (atherosclerosis) என்ற பாதிப்பு ஏற்படுகிறது. 47 மம்மிகளில் இதற்கான அறிகுறிகளை அவர்கள் கண்டறிந்தனர். நவீன வாழ்க்கை முறைகளால்தான் இதுபோல ஏற்படுகிறது என்ற அனுமானங்கள் மீதான சந்தேகத்தை இது எழுப்பியது. இரண்டு ஆராய்ச்சிக் குழுக்களும் இணைந்து, 40 வயதிற்கு மேற்பட்ட 705 சீமேநே பழங்குடிகள் மீது சிடி ஸ்கேன்களை மேற்கொண்டனர். அடைபட்ட இரத்த நாளங்கள் மற்றும் மாரடைப்பு அபாயத்தின் அடையாளமாக இருக்கும் கரோனரி ஆர்டரி கால்சியத்தைக் (சிஏசி) கண்டறிவதே இதன் நோக்கம். ‘தி லான்செட்’ இதழில் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வில், 75 வயதுக்கு மேற்பட்ட 65% சீமேநே பழங்குடிகளுக்கு சிஏசி இல்லை என்பதைக் காட்டுகிறது. அந்த வயதுடைய பெரும்பாலான அமெரிக்கர்கள் (80%) அதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர். படக்குறிப்பு, சீமேநே பழங்குடிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 16,000 முதல் 17,000 அடிகள் வரை நடக்கிறார்கள் ‘யாருக்கும் அல்சைமர் நோய் இல்லை’ கப்லான் கூற்றுப்படி, "75 வயதான சீமேநே பழங்குடிகளின் தமனிகள் 50 வயதான அமெரிக்கரின் தமனிகளைப் போன்று உள்ளது." இரண்டாம் கட்டமாக, 2023இல் ‘ப்ரோசீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ்’ இதழில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. பிரிட்டன், ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற தொழில்மயமான நாடுகளில் உள்ள மக்களுடன் ஒப்பிடும்போது, சீமேநே பழங்குடிகள் 70% குறைவான பெருமூளைச் சிதைவை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு கூறியது. "சீமேநே பழங்குடி மக்கள்தொகையில், யாருக்கும் அல்சைமர் நோய் இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது மிகப்பெரிய சாதனை" என்று ஆராய்ச்சியாளர்களின் மருத்துவ ஒருங்கிணைப்பாளரான பொலிவியன் மருத்துவர் டேனியல் ஈத் ரோட்ரிக்ஸ் கூறுகிறார். படக்குறிப்பு, ஹில்டா தனது இரண்டாவது கணவர் பாப்லோவுடன் வசித்து வருகிறார் ‘முதுமையை உணர்கிறோம்’ அவர்களின் பதிவுகளின்படி, ஹில்டாவுக்கு வயது 81. ஆனால் சமீபத்தில் தனது குடும்பம் ‘தனது 100வது பிறந்தநாளைக்’ கொண்டாடுவதற்காக ஒரு பன்றியை வெட்டி விருந்து வைத்ததாக ஹில்டா கூறுகிறார். தனக்கு வயது 78 என்று சொல்லும் ஜுவான் எங்களை வேட்டையாட அழைத்துச் செல்கிறார். அவரது தலைமுடி கருமையாகவும், கண்கள் உற்சாகத்துடனும், கைகள் உறுதியாகவும் உள்ளன. தனக்கு வயதாவதை உணர்வதாகவும் அவர் ஒப்புக்கொள்கிறார், "இப்போது எனக்கு மிகவும் கடினமான விஷயம் என் உடல்தான். நான் இனி அதிக தூரம் நடப்பதில்லை” என்கிறார் அவர். மார்டினாவும் தனது முதுமையின் சிரமத்தை ஒப்புக்கொள்கிறார். காடுகளின் உள்பகுதிகளில் வளரும் தாவரமான ஜடாட்டாவிலிருந்து மேற்கூரைகளை வேய்வதில் சீமேநே பெண்கள் புகழ்பெற்றவர்கள். இந்தத் தாவரத்தைக் கண்டுபிடிக்க, மார்டினா மூன்று மணி நேரம் காட்டுக்குள்ளும், பிறகு மூன்று மணி நேரம் வீட்டிற்கும், ஜடாட்டா கிளைகளை முதுகில் சுமந்து நடக்க வேண்டும். "நான் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே இதைச் செய்கிறேன், இப்போது அது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது," என்று அவர் கூறுகிறார். படக்குறிப்பு, தனக்கு வயதாவதை உணர்வதாக ஜுவான் ஒப்புக்கொள்கிறார் இருப்பினும், பல சீமேநே மக்கள் முதுமையை அடைவதில்லை. இந்த ஆய்வு தொடங்கியபோது, அவர்களின் சராசரி ஆயுட்காலம் 45 ஆண்டுகளாக இருந்தது. இப்போது அது 50ஆக உயர்ந்துள்ளது. "80 வயதை எட்டும் இந்த மக்களில் சிலர், நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் நிறைந்த குழந்தைப் பருவத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள்" என்கிறார் டாக்டர் ஈத். அனைத்து சீமேநே மக்களும் தங்கள் வாழ்நாளில் ஒட்டுண்ணிகள் அல்லது புழுக்களால் ஒருவித தொற்றுநோய்க்கு ஆளானதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அவர்கள் சீமேநே பழங்குடிகள் உடலில் அதிக அளவு நோய்க்கிருமிகள் மற்றும் வீக்கத்தைக் கண்டறிந்தனர். சீமேநே பழங்குடிகள் தொடர்ந்து தொற்றுநோய்களுடன் போராடுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. உணவு பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியோடு சேர்த்து, வயதான சீமேநே மக்களின் ஆரோக்கியத்திற்கு பின்னால், இந்த ஆரம்பகால நோய்த்தொற்றுகள் மற்றொரு காரணியாக இருக்க முடியுமா என்று ஆச்சரியப்படுவதற்கு இது வழிவகுத்தது. படக்குறிப்பு, இரண்டு ஆராய்ச்சிக் குழுக்களும் இணைந்து, 40 வயதிற்கு மேற்பட்ட 705 ‘சீமேநே’ பழங்குடிகளுக்கு சிடி ஸ்கேன்களை மேற்கொண்டனர் ‘மாறிவரும் வாழ்க்கை முறை’ இருப்பினும், இந்த சமூகத்தின் வாழ்க்கை முறை மாறி வருகிறது. சில மாதங்களாக போதுமான அளவு பெரிய விலங்கை வேட்டையாட முடியவில்லை என்று ஜுவான் கூறுகிறார். 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட தொடர் காட்டுத் தீ, கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஹெக்டேர் காடுகளை அழித்தது. "நெருப்பு விலங்குகளை இங்கிருந்து வெளியேறச் செய்தது," என்று அவர் கூறுகிறார். அவர் இப்போது கால்நடைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளார். மோட்டார் படகுகளின் பயன்பாடும் மாற்றத்தைக் கொண்டுவருவதாக டாக்டர் ஈத் கூறுகிறார். இதன் மூலம் சீமேநே பழங்குடிகள் வணிகச் சந்தைகளை எளிதாக அடைய முடிகிறது. சர்க்கரை, மாவு மற்றும் எண்ணெய் போன்ற உணவுகளை அவர்களால் எளிதில் அணுக முடிகிறது. படக்குறிப்பு, மோட்டார் படகுகளின் பயன்பாடும் மாற்றத்தைக் கொண்டுவருவதாக டாக்டர் ஈத் கூறுகிறார் மோட்டார் படகுகள் காரணமாக அவர்கள் முன்பை விட குறைவான துடுப்பு படகுகளை பயன்படுத்துகிறார்கள் என்று டாக்டர் ஈத் சுட்டிக்காட்டுகிறார். "மிகவும் உடலுழைப்பு தேவைப்படும் செயல்பாடுகளில் துடுப்பு படகு ஓட்டுவதும் ஒன்று" என்கிறார் அவர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, நீரிழிவு நோய் பாதிப்பு அரிதாகவே இருந்தது. இப்போது இம்மக்களிடையே அவை தோன்றத் தொடங்கியுள்ளன. மேலும் இளைஞர்களிடையே கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். "அவர்களின் பழக்கவழக்கங்களில் ஏதேனும் ஒரு சிறிய மாற்றம் இந்த சுகாதாரக் குறியீடுகளை பாதிக்கிறது" என்று டாக்டர் ஈத் கூறுகிறார். இந்த ஆராய்ச்சியாளர்களின் 20 ஆண்டுகால ஈடுபாடு சீமேநே பழங்குடிச் சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்புரை அறுவை சிகிச்சை முதல் எலும்பு முறிவுகள் மற்றும் பாம்பு கடிகளுக்கான சிகிச்சை வரை சீமேநே மக்களுக்கான சிறந்த மருத்துவ வசதிகளை அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் ஹில்டாவைப் பொறுத்தவரை, முதுமை என்பது பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல. "நான் இறப்பதைப் பற்றி பயப்படவில்லை, ஏனென்றால் அவர்கள் என்னை பூமியில்தான் அடக்கம் செய்யப் போகிறார்கள், நான் இங்கேயேதான் இருக்கப் போகிறேன்…மிகவும் அமைதியாக" என்று அவர் புன்னகையுடன் எங்களிடம் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cly3z2dz2e2o
  17. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் Published By: VISHNU 28 AUG, 2024 | 02:38 AM வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடகிழக்கு மாகாண சங்கம் அறிவித்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அறிவித்துள்ளனர். எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போரட்டம் ஆரம்பமாகி, அங்கிருந்து பேரணியாக டிப்போ சந்தியை நோக்கி சென்று, அங்கு ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபைக்கான மகஜர் கையளிக்கப்படவுள்ளது. குறித்த போராட்டத்தில் கட்சி பேதங்களை கடந்து, அனைத்து அரசியல் கட்சியினரும், சிவில் சமூகங்கள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். அதேவேளை எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192176
  18. Published By: VISHNU 28 AUG, 2024 | 02:29 AM வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா பீட மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார். நாரஹேன்பிட்டி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு செவ்வாய்க்கிழமை (27) முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் வண, மகுலேவே விமல நாயக தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார். ஜனாதிபதி தனது தேர்தல் பணிகளை ஆரம்பித்த பின்னர், இவ்வாறு ராமன்ய மகா நிகாயவின் மகா நாயக தேரரரைச் சந்தித்தார். அதன்போது வண, வலேபொட குணசிறி தேரர், பிரதிப் பொதுச் செயலாளர் அக்குரெல்லே குணவன்ச தேரர், பிரதிப் பொதுச் செயலாளர் வண, வாந்துவே தம்மாவங்ச தேரர், பிரதி நீதிச் செயலாளர் வண, ஹால்பன்வில பாலித தேரர், கொழும்பு பிராந்திய சங்க சபையின் தலைவர் வண, சூரியவெவ ஹேமாநந்த தேரர் உட்பட மகாசங்கத்தினரும் கலந்துகொண்டனர். இதன்போது மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு தமது ஆசிகளைத் தெரிவித்தனர். அதன் பின்னர் ஜனாதிபதி, மகா சங்கத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார். அத்துடன், பிரிவெனாக் கல்வி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள், புனித பூமி சார்ந்த காணிப் பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்தும் ஜனாதிபதி, மகாநாயக்க தேரருக்கு அறிவித்தார். https://www.virakesari.lk/article/192174
  19. சுவிஸ் குடும்பஸ்தர் கொலை; இருவர் கைது Published By: VISHNU 28 AUG, 2024 | 12:23 AM வவுனியா கனகராயன்குளம் சின்னடம்பன் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுவிஸில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐய்யனார் கோவில் திருவிழாவில் பின்னர் அங்குள்ள வீடொன்றில் சுவிசில் இருந்து வந்தவரும் அவரது உறவினரும் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் இரவு மது போதையில் வீட்டில் தூங்கிய போது வீட்டுக்குள் நுழைந்தவர்களினால் ஒருவர் வீட்டிற்குள் இருந்து இழுத்து வரப்பட்டு வெளியே விடப்பட்டதன் பின்னர் மற்றவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கொலை செய்யப்பட்டவருடன் வீட்டில் தங்கியிருந்தவரும் சுவிஸில் இருந்து அண்மையில் நாட்டிற்கு வருகை தந்து வவுனியா உக்கிளாங்குளத்தில் வசித்து வந்த நபர் ஒருவரும் கனகராயன்குளம் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை வீட்டில் இருந்த சிசிடிவி கமரா இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/192173
  20. Published By: VISHNU 28 AUG, 2024 | 02:05 AM (நா.தனுஜா) உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக கடந்தகால மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்படுமா எனவும், இந்த ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடு உள்ளதா எனவும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகப் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்துள்ளார். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகப் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (26) கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இடைக்கால செயலகத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச மற்றும் கொள்கைப்பிரிவுத்தலைவர் கலாநிதி யுவி தங்கராஜா ஆகியோர் உள்ளடங்கலாக அறுவர் கலந்துகொண்டிருந்தனர். இச்சந்திப்பின்போது உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் அதன் பணிகள் குறித்து இடைக்கால செயலகத்தின் பிரதிநிதிகள் அமெரிக்கத்தூதுவருக்கு எடுத்துரைத்தனர். அதனை செவிமடுத்த தூதுவர் ஜுலி சங், இலங்கையில் கடந்த காலங்களில் நிறுவப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு முற்படல், வட, கிழக்கு மாகாணங்களில் படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என அப்பகுதி மக்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக கடந்தகால மீறல்கள் குறித்து பொறுப்புக்கூறவேண்டியவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பினார். அவற்றுக்குப் பதிலளித்த இடைக்கால செயலகப் பிரதிநிதிகள் மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வரையறுக்கப்பட்ட அளவிலான ஆணை குறித்தும், அவை சார்ந்து தாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் விளக்கமளித்தனர். அதேவேளை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உத்தேசித்திருக்கும் காலப்பகுதி மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடு குறித்து அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இடைக்கால செயலக அதிகாரிகள், எவ்வாறெனினும் தேர்தல் முடிவடைந்ததன் பின்னரே அச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், இருப்பினும் அது நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடு குறித்து தம்மால் உறுதியாக எதனையும் கூறமுடியாது எனவும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/192172
  21. 27 AUG, 2024 | 09:23 PM (இராஜதுரை ஹஷான்) மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனை அலட்சியப்படுத்த முடியாது. தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எமது ஆட்சியில் இராணுவத்தினரை பாதுகாப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். குருணாகல் - கல்கமுவ பகுதியில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கட்சி என்ற ரீதியில் நாங்கள் நாட்டுக்கு அபிவிருத்தி செய்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நகரத்தை அபிவிருத்தி செய்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருமித்த பொருளாதார கொள்கையை நாங்கள் செயற்படுத்தினோம். மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனை அலட்சியப்படுத்த முடியாது. பிறிதொரு தரப்பினர் இராணுவத்தையும் கேலிக்கூத்தாக்கினார்கள். விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்த இராணுவத்தினர் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள். சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. உலக நாடுகளில் தற்போது இடம்பெறும் போரினால் சிவில் பிரஜைகள் கொல்லப்படுகிறார்கள். இதனை பற்றி எந்த நாடும் பேசுவதில்லை. நாங்கள் மனிதாபிமான கண்காணிப்புக்களை முன்னெடுத்தோம். தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எமது அரசாங்கத்தின் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்போம். இராணுவத்தினர் இந்த நாட்டுக்கு செய்த சேவையை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே அவர்களுக்கான புதிய நலன்புரித் திட்டங்களை முன்னெடுப்போம். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஒரு தரப்பினரது தவறான ஆலோசனைகளுக்கமைய விவசாயத்துறையில் முன்னெடுத்த தவறான தீர்மானத்தால் இரண்டு போக விவசாய நடவடிக்கை பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விவசாய கொள்கையையே நான் செயற்படுத்துவேன். இறக்குமதி செய்து உணவளிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. தேசிய உற்பத்திகளை சகல வழிகளிலும் மேம்படுத்த விசேட கொள்கை திட்டங்களை செயற்படுத்துவோம் என்றார். https://www.virakesari.lk/article/192152
  22. உருவக் கேலியை கடந்து உலக அரங்கில் சாதிக்கும் தமிழக வீராங்கனை - பாராலிம்பிக்கில் சாதிப்பாரா? பட மூலாதாரம்,@07NITHYASRE/X படக்குறிப்பு, பாராலிம்பிக் 2024 போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டின் நித்ய ஸ்ரீ கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 27 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “உருவத்தில் சிறிதாக இருப்பது குறையல்ல, பெரிய கனவுகள் காணாமல் இருப்பதும், அவற்றை நிறைவேற்ற முயற்சி எடுக்காமல் இருப்பதுமே மிகப்பெரிய குறை” என்று கூறுகிறார் 19 வயதான, பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்ய ஸ்ரீ சிவன். தமிழ்நாட்டின் ஓசூரைச் சேர்ந்த நித்ய ஸ்ரீ சிவன், பாரிஸில் நடைபெறும் 2024 பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக களமிறங்கவுள்ளார். ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை, பாரிஸில் நடைபெறும் பாராலிம்பிக் 2024இல், மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள் என 4,400 வீரர்/வீராங்கனைகள், 549 பதக்கங்களுக்காக 22 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர். அதில் பாரா பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார் தமிழ்நாட்டின் நித்ய ஸ்ரீ சிவன். ‘11 வயது முதல் பேட்மிண்டனில் ஆர்வம்’ தனது 11வது வயதில் (2016) பேட்மிண்டன் விளையாடத் தொடங்கிய நித்ய ஸ்ரீ, மாற்றுத்திறனாளிகளுக்கென பாரா போட்டிகள் இருப்பதை 2019இல் தான் தெரிந்துகொண்டார். பாரிஸ் நகரில், நாளை (28 ஆகஸ்ட்) தொடங்கவுள்ள பாராலிம்பிக் போட்டிகளுக்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நித்ய ஸ்ரீ தொலைபேசி மூலமாக பிபிசி தமிழிடம் பேசினார். “அப்பாவும், அண்ணனும் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர்கள். ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டுமென அப்பா என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றதைப் பார்த்தபோது, எனக்கான விளையாட்டு பேட்மிண்டன்தான் என்பதை முடிவு செய்தேன்” என்கிறார் நித்ய ஸ்ரீ. உள்ளூரில் ஒரு பேட்மிண்டன் பயிற்சி மையத்தில் இணைந்து விளையாடத் தொடங்கியவர், முதலில் இதை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்த்துள்ளார். “அப்பாவின் நண்பர் ஒருவர் பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டவர். அவர் தான் எனது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, பாரா போட்டிகள் குறித்து எடுத்துக் கூறினார். அதுவரை பொழுதுபோக்காக மட்டுமே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நான், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினேன்” என்கிறார் நித்ய ஸ்ரீ. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, 2019ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா பேட்மின்டன் போட்டியில் நித்ய ஸ்ரீ தங்கம் வென்றார். “பின்னர் வேறு சில மாநில அளவிலான போட்டிகள், அதைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகள் என கலந்துகொள்ளத் தொடங்கினேன். அப்போது தான் இந்திய பாரா பேட்மிண்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் கண்ணாவின் அறிமுகம் கிடைத்தது” என்கிறார் நித்ய ஸ்ரீ. பட மூலாதாரம்,@07NITHYASRE/X படக்குறிப்பு, தனது பயிற்சியாளர் கௌரவ் கண்ணாவுடன் நித்ய ஸ்ரீ ‘அதிகம் பேசாத, திறமையான ஒரு வீராங்கனை’ உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ளது ‘கௌரவ் கண்ணா பேட்மிண்டன் அகாடெமி’. இதை நடத்துபவர் இந்திய பாரா பேட்மிண்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் கண்ணா. இந்தியாவில் பாரா பேட்மிண்டன் விளையாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்தவர்களில் முக்கியமானவராக இவர் கருதப்படுகிறார். இவருக்கு, 2020இல் துரோணாச்சார்யா விருதும் (விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான விருது), 2024இல் பத்ம ஸ்ரீ விருதும் மத்திய அரசால் வழங்கப்பட்டது. “முதன்முதலில் நித்ய ஸ்ரீ பேட்மிண்டன் விளையாடியதைப் பார்த்தபோது, யாரிடமும் அதிகம் பேசாத, ஆனால் மிகவும் திறமையான ஒரு வீராங்கனை என்பதைப் புரிந்துகொண்டேன். அவரது திறமைக்காகத் தான் இங்கு பேட்மிண்டன் பயிற்சி எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை அளித்தோம்” என்று பிபிசியிடம் கூறினார் கௌரவ் கண்ணா. பஹ்ரைனில், 2021இல் நடைபெற்ற ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டி தான் நித்ய ஸ்ரீ கலந்துகொண்ட முதல் சர்வதேசப் போட்டி. “அப்போது நித்ய ஸ்ரீ மிகவும் பதற்றமாக இருந்தார். ஆனால் எங்களுக்கு அவர் மீது பெரும் நம்பிக்கை இருந்தது. அது வீண் போகவும் இல்லை” என்கிறார் கௌரவ் கண்ணா. பட மூலாதாரம்,@07NITHYASRE/X பஹ்ரைனில் நடைபெற்ற போட்டிகளில், பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்றிருந்தார் நித்ய ஸ்ரீ. அதன் பிறகு 2022இல் ஜப்பானின் டோக்கியோவில் நடந்த ‘உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில்’ பெண்கள் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என் மூன்று பிரிவுகளிலும் வெண்கலப் பதக்கம் வென்றார் நித்ய ஸ்ரீ. “2022 ஆசிய பாரா போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்றது, அதே ஆண்டு பெருவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம், இரட்டையர் பிரிவில் வெண்கலம் என அவரது வெற்றி தொடர்ந்தது” என்று கூறுகிறார் கௌரவ் கண்ணா. நித்ய ஸ்ரீயின் உயரம் மற்றும் உடலமைப்பு காரணமாக, மற்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனைகளோடு ஒப்பிடுகையில் அவருக்கு சில கூடுதல் சவால்கள் உள்ளன என்கிறார் அவர். “அவர் கடந்த சில மாதங்களாக கடும் முதுகு வலியால் அவதிப்படுகிறார். இருந்தும் ஒருநாள் கூட பயிற்சியைத் தவறவிட்டதில்லை. அவருக்கென பிரத்யேக பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.” என்கிறார் கௌரவ் கண்ணா. மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு பட மூலாதாரம்,@07NITHYASRE/X படக்குறிப்பு, ஆசிய பாரா போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பிறகு, நித்ய ஸ்ரீயைப் பாராட்டிய பிரதமர் மோதி கடந்த ஜூலை மாதம், ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வாகியிருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த 5 வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 7 லட்சம் வீதம், 35 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருந்தார். பிருத்விராஜ் தொண்டைமான் (துப்பாக்கி சுடுதல்), துளசிமதி முருகேசன் (பாரா பேட்மிண்டன்), மனிஷா ராமதாஸ் (பாரா பேட்மிண்டன்), நித்ய ஸ்ரீ சிவன் (பாரா பேட்மிண்டன்) மற்றும் சிவரஞ்சன் சோலைமலை (பாரா பேட்மிண்டன்) ஆகியோரே அந்த 5 பேர். “மத்திய மற்றும் மாநில அரசுகள் அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. முதல்முறையாக நித்ய ஸ்ரீ பாராலிம்பிற்கு தகுதி பெற்றுள்ளார். அவர் நிச்சயம் தங்கம் வெல்வார்” என்கிறார் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் கண்ணா. பட மூலாதாரம்,@UDHAYSTALIN படக்குறிப்பு, நித்ய ஸ்ரீக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ‘உருவக் கேலிகளில் இருந்து மீண்டுவர உதவிய விளையாட்டு’ பட மூலாதாரம்,@07NITHYASRE/X “உருவக் கேலிகள் என்பது எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்று. எனது பிள்ளைகளும் மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்துவிட்டார்களே என வருத்தம் இருந்தது. அதிலிருந்து அவர்களைத் திசைதிருப்பதான் விளையாட்டில் கவனம் செலுத்த ஊக்குவித்தேன்” எனக் கூறுகிறார் நித்ய ஸ்ரீயின் தந்தை சிவன். தொடர்ந்து பேசிய அவர், “நித்ய ஸ்ரீ பிறந்த சில மாதங்களில் எனது மனைவி இறந்துவிட்டாள். பாட்டியின் அரவணைப்பில் தான் அவள் வளர்ந்தாள். பேட்மிண்டன் போட்டிகளில் அவளது திறமையைப் பார்த்துவிட்டு பயிற்சியாளர் கௌரவ் கண்ணன் லக்னோ வரச் சொன்னபோது, உறவினர்கள் பலரும் அனுப்ப வேண்டாம் என்று சொன்னார்கள்” என்கிறார் சிவன். அடுத்தடுத்து நித்ய ஸ்ரீ பெற்ற வெற்றிகளால், எதிர்ப்பு தெரிவித்த உறவினர்களே பாராட்டியதாகவும் கூறுகிறார் அவர். உருவக் கேலிகள், அவமானங்கள் மட்டுமல்லாது, உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு உடல்ரீதியாகவும் பல சவால்கள் இருக்கும். அதையெல்லாம் கடந்துதான், நித்ய ஸ்ரீ இந்த உயரத்தை அடைந்திருப்பதாகக் கூறுகிறார் சிவன். “பாராலிம்பிக் போட்டிகளில் இப்போது பல நாடுகள் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளன. போட்டிகள் கடுமையாக உள்ளன. தங்கம் வெல்ல வேண்டும் என்பதைத் தாண்டி, இறுதிவரை போராட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். சிறுவயது முதலே நான் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடமும் அதுதான்” என்று கூறிவிட்டு தனது பேட்மிண்டன் பயிற்சியைத் தொடரச் சென்றார் நித்ய ஸ்ரீ சிவன். பாரிஸ் நகரில், ஆகஸ்ட் 29, 30 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்களில் நித்ய ஸ்ரீ கலந்துகொள்ளும் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெறவுள்ளன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் மட்டுமல்லாது, கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் சிவரஞ்சன் சோலைமலையுடனும் களமிறங்கவுள்ளார் நித்ய ஸ்ரீ. https://www.bbc.com/tamil/articles/c1l5z4z5p2yo
  23. அதிகரிக்கும் வெப்பநிலை; தோல் நோய்கள் ஏற்படலாம் - வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை Published By: DIGITAL DESK 3 28 AUG, 2024 | 09:17 AM நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நமது சருமத்திற்கு நேரடியாக படும் அதிகளவிலான சூரிய ஒளியினால் தோல் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் குழந்தைகளிடையே தோல் நோய் பிரச்சினைகள் மிகவும் பொதுவான ஒன்றாக உள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படுவதோடு, உடலில் நீர்ச்சத்து குறைபாடு அதிகரிக்கும். எனவே, அதிக சூரிய ஒளி படும் இடங்களில் இருப்பதை தவிர்ப்பதோடு, அதிகளவு தண்ணீர் பருக வேண்டும். மேலும், செயற்கையான குளிர் பானங்களை அருந்துவதை தவிர்த்து இயற்கையான தண்ணீர், எலுமிச்சை சாறு, இளநீர் போன்றவற்றை பருக வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிர்ப்பாட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வதால் இன்று (28) முதல் செப்டெம்பர் 06 ம் திகதி வரையில் சூரியன் நாட்டின் பல பிரதேசங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது. அதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவன்கோட்டை மற்றும் சுண்டிக்குளம் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும். இந்த நிகழ்வுக்கு உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களே காரணம் என வளிமண்டலவியல் ஆய்வுத் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192189
  24. மோகன்லால் ராஜினாமா: மலையாள சினிமாவை உலுக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் விலகியுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி ஹிந்திக்காக 27 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரே அறிக்கை ஒட்டுமொத்த மலையாள சினிமாவையும் உலுக்கியுள்ளது. மலையாள திரை உலகில் பெண் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், புகார்கள் போன்றவை நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையின் மூலம் பொது வெளிக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நடிகைகள் பலரும், பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். மலையாள நடிகர் சங்கத்தில் சேர்வதற்கே கூட பாலியல் சமரசத்திற்கு சிலர் நிர்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த அறிக்கை எதிரொலியாக, ஆகஸ்ட் 27ம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் மோகன்லால் விலகியுள்ளார். அவர் மட்டுமின்றி, அந்த சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 17 பேரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சங்கத்தின் உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பெண் கலைஞர்கள் வைத்திருப்பதால், சங்கத்தின் செயற்குழுவை கலைக்க வேண்டும் என்ற முடிவு அன்றைய தினம் நடைபெற்ற இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 2024ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்ட அவர்களின் பதவிக் காலம் வரும் 2027-ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், சில மாதங்களிலேயே பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஆகஸ்ட் 25-ஆம் தேதி பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2017ம் ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவின் அடிப்படையில் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி உருவாக்கப்பட்டது 'பல தீவிரமான புகார்கள் எழலாம்' கடந்த 48 மணி நேரத்தில், மலையாள திரைத்துறையில் பணியாற்றும் பெண்கள் பலரும் 2009ம் ஆண்டு முதல் அவர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும் அதில் ஈடுபட்ட ஆண்கள் பெயர்களையும் பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர். குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒரே ஒரு நபர் மட்டுமே காவல்துறையினரிடம், அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்று கூறியுள்ளார். கேரள அரசு சமீபத்தில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் நான்கு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள், பெண் கலைஞர்களிடம் இருந்து புகார்களை பெறுவார்கள். ஆனால் அவர்களால் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இயலாது. பிரபல இயக்குநர் ரஞ்சித் மீது ஒரு நடிகை குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். அதே நேரத்தில் கேரளா ஃபிலிம் அகாடமியின் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 26ம் தேதி அந்த நடிகை கொச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முறையாக புகார் அளித்தார். பிணையில் வெளிவர இயலாத பிரிவுகளில் ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிபிசி ஹிந்தியிடம் பேசிய நடிகை மாலா பார்வதி, "முன் வந்து புகார் அளித்த நபர்கள் குறைவாகவே இருக்கின்றனர். ஆனால் மிக முக்கியமான பிரச்னைகள் நிச்சயமாக வெளிவரும். இப்போது பொது வெளியில் பேசியவர்கள் நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணையின் போது ஆஜராகவில்லை," என்று தெரிவித்தார். கேரள அரசு உத்தரவின் பெயரில் நீதிபதி ஹேமா கமிட்டி 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 'வுமென் இன் சினிமா கலெக்டிவ்' என்ற பெண்கள் அமைப்பு இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வலியுறுத்தியது. பிரபலமான நடிகை ஒருவர் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு இந்த நிகழ்வுகள் அரங்கேறின. இந்த விவகாரத்தில் முதன்மையாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரான நடிகர் திலீப் தற்போது பிணையில் வெளியே உள்ளார். நான்கரை ஆண்டுகள் கழித்து இந்த அறிக்கையை வெளியிட்டது கேரளா அரசு. அனைத்து புகார்களும் முறையாக காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை அரசு தானாக விசாரிக்காது என்று கூறிய நிலையில், இரண்டு புகார்கள் அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்ட பிறகு மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புக்காட்சி புகாரில் இடம் பெற்றிருப்பது என்ன? சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்களில் இடம் பெற்றுள்ள விவகாரங்கள் ஏற்கனவே நீதிபதி ஹேமா கமிட்டியில் இடம் பெற்றுள்ளது. தங்களுக்கு நடந்த பிரச்னைகள் குறித்து புகாரில் குறிப்பிட்டுள்ள பெண்கள், தொடர்ச்சியாக அவர்கள் எவ்வாறு 'சமரசம்' செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் என்று மேற்கோள்காட்டியிருந்தனர். அதற்கு கைமாறாக, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (அம்மா) உறுப்பினர் ஆக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு நடிகை பிபிசி ஹிந்தியிடம் பேசும் போது, "மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, கழிவறையில் இருந்து வெளியே வந்த என்னை பிரபல நடிகர் ஒருவர் பின்னால் இருந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார். என்னுடைய அனுமதி இல்லாமல் இது நடந்தது," என்று குற்றம் சாட்டினார். "அவரை தள்ளிவிட்டு நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். திருவனந்தபுரத்தில் அவருக்கு வீடு ஒன்று இருக்கிறது. அங்கே அவர் என்னை சந்திக்க விரும்புவதாகவும் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார். மற்றொரு பிரபல நடிகர் ஒருவர், நான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையின் கதவை திறந்து வைக்க வேண்டும் என்றும் அவர் என்னை காண அங்கே வருவார் என்றும் கூறிக் கொண்டிருந்தார்," என கூறினார். "நிச்சயமாக அது முடியவே முடியாது என்று நான் தெளிவாக கூறினேன். ஆனால் அவர், உங்களுக்காக நான் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து இங்கே வந்திருக்கிறேன் அதனால் இதனை செய்ய வேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் படபிடிப்பின் போது தேவையில்லாமல் என்னிடம் கத்திக் கொண்டிருந்தார். இதே போன்று நடிகரும் எம்.எல்.ஏவுமான ஒருவரும் என்னிடம் கூறினார். எனக்கு இந்த கலை பிடிக்கும் என்பதால்தான் நான் நடிக்க வந்தேன். அதனால்தான் நான் அவர்களின் பிடியில் மாட்டிக் கொள்ளவில்லை," என்று கூறினார். '''அம்மா' அமைப்பில் உறுப்பினராக இருந்தால் இது போன்ற பிரச்னைகளை சந்திக்க மாட்டேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதில் உறுப்பினராகவே நான் 'சமரசம்' செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.'' என அவர் கூறினார். ''தயாரிப்பு மேற்பார்வையாளர் ஒருவர் காரில் வைத்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார். 2013ம் ஆண்டு நாளிதழ் ஒன்றுக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில் இது குறித்து குறிப்பிட்டிருந்தேன். ஆனால் யார் மீதும் விசாரணை நடத்தப்படவில்லை'' என்றும் அந்த நடிகை தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் புகைப்படம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலைப்பாடு என்ன? புகார்களுக்கு உள்ளான சில நடிகர்கள், இயக்குநர்களிடம் இருந்து எந்த விதமான பதிலும் இதுவரை வெளியாகவில்லை. அவர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றினால், இந்த செய்தித் தொகுப்பில் சேர்க்கப்படும். அறிக்கையில் இடம் பெற்றுள்ள புகார்கள் அனைத்தும் 2008ம் ஆண்டு முதல் 2012 ஆண்டு வரை நடைபெற்றது. கீதா விஜயன், ஶ்ரீதேவிகா போன்ற நடிகைகள் பிரபல இயக்குநர் ஒருவர் நள்ளிரவில் அவர்களின் அறைக் கதைவை தட்டியதாக புகார் அளித்துள்ளனர். ஶ்ரீதேவிகா நான்கு நாட்கள் இந்த தொந்தரவை எதிர்கொள்ள நேரிட்டது. கீதா விஜயன் இது தொடர்பாக புகார் அளிக்க தயாராக உள்ளார். அந்த இயக்குநர் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எந்த விதமான பதிலும் இதுவரை வழங்கவில்லை. அவர் இது தொடர்பாக பேசினால் இந்த செய்தி தொகுப்பில் பின்னர் இணைக்கப்படும். பெண் கதை ஆசிரியர் ஒருவர் காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். 2022ம் ஆண்டு கொல்லத்தில் ஒரு திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தைக்காக சென்ற போது இயக்குநர் - நடிகர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர் புகார் அளித்தார். அந்த இயக்குநர் - நடிகர் மன்னிப்பு கேட்டார் எனவும் மேலும், இது குறித்து வெளியே யாரிடமும் தெரிவிக்க கூடாது என்பதற்காக உதவியாளர் மூலம் ரூ. 10 ஆயிரம் கொடுக்க முயன்றார் எனவும் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் பின், அந்த கதை ஆசிரியர் திரைப்படத் துறையை விட்டே வெளியேறினார். ஒரு நடிகை தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக நடிகர் சித்திக் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதனை தொடர்ந்து நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சித்திக் விலகினார். காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ள சித்திக், அந்த நடிகை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக குற்றம் சாட்டினார். 2016ம் ஆண்டு ஒரு திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட்ட பிறகு இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுவதை சித்திக் மறுத்துள்ளார் "அந்த நடிகை பெற்றோர்களுடன்தான் என்னை சந்தித்தார். எட்டறை ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் அவரிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை," என்று சித்திக் குறிப்பிட்டார். நடிகர் சங்கம் மற்றும் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இது போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைக்கின்றனர் என்று சித்திக் கூறினார். ஆரம்பத்தில் அவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முரணாக தற்போது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் என்று குறிப்பிட்டார் சித்திக். நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டாலும் புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் புகைப்படம் சட்டம் கூறுவது என்ன? இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் பலரும் ஆளும் கட்சியினரை விமர்சித்து வருகின்றனர். அறிக்கையை மிகவும் தாமதமாக வெளியிட்ட காரணத்திற்காக மக்களும் ஆளும் கட்சியை விமர்சிக்கின்றனர். பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான நடிகைகள் புகார் அளிக்க முன்வந்தால் விசாரணை நடத்தப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. வேறு விதமாக கூற வேண்டும் என்றால், மாநில அரசு நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தானாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளாது. "பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கவில்லை என்றால், அரசாங்கம் எப்படி நடவடிக்கை எடுக்கும்? ஒரு குற்றம் நடந்திருக்கும் பட்சத்தில் அரசு தாமாக நடவடிக்கை எடுக்க இயலுமா? இது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் பேசி வருகிறோம்," என்று கேரளாவை சேர்ந்த, பெயர் கூற விரும்பாத, அமைச்சர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார். நீதிபதி ஹேமா கமிட்டியிடம் குற்றம் சாட்டியுள்ள நபர்களையும் விசாரிக்க வேண்டும் என்று சிலர் தங்களின் வாதத்தை முன்வைக்கின்றனர். கமிட்டிக்கு முன்பு ஆஜராகும் போது பெண்கள் தங்களுக்கு நடந்த வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அவர்களிடம் வழங்கியுள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று மாலா பார்வதி கூறியுள்ளார். கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சந்தியா ராஜூ, பிபிசி ஹிந்தியிடம் பேசும் போது, "ஒரு குற்றம் நடைபெறும் போது, இது அரசுக்கு எதிரான குற்றமாக இருக்கிறது. விசாரணை முகமைகள் தாமாக முன்வந்து விசாரித்து நீதிமன்ற வழக்கு தொடர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களே வந்து குற்றம் சுமத்தினால் மட்டுமே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் இல்லை," என்று குறிப்பிட்டார். ஒரு குற்ற வழக்கு வரும் போது, மாநில அரசு ஒரு முக்கியமான வாதியாக மாறுகிறது. இது போன்ற சூழலில் அரசுதான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் சந்தியா கூறுகிறார். இந்த விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கேரள உயர் நீதிமன்றம் முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய 54 பக்கங்களையும் இணைத்து இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதன் தாக்கம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். திரைத்துறை மட்டுமின்றி, கட்டுமான துறை, கார்ப்பரேட் துறை, சட்டத்துறை உள்ளிட்ட இதர துறைகளிலும் இதன் தாக்கத்தை காண இயலும், என்று சந்தியா கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/c14zvd4k6e6o
  25. ஐ.சி.சி. மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் புதிய அட்டவணை! 27 AUG, 2024 | 12:19 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷில் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த 9ஆவது மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இடம் மாற்றப்பட்டதை அடுத்து புதிய போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. பங்களாதேஷில் இடம்பெற்ற அரசியல் கொந்தளிப்பு காரணமாக அங்கு நடைபெறவிருந்த ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றுவதற்கு ஐசிசி கடந்த 20ஆம் திகதி தீர்மானித்து அதற்கான அறிவிப்பையும் விடுத்திருந்தது. பத்து நாடுகள் இரண்டு குழுக்களில் பங்குபற்றும் மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிகள் துபாய சர்வதேச விளையாட்டரங்கிலும் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கிலும் நடைபெறும். ஆறு தடவைகள் உலக சம்பியனானதும் நடப்பு சம்பியனுமான அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகிறது. 2009இல் நடைபெற்ற அங்குராரப்பண ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான இங்கிலாந்து, பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, தென் ஆபிரிக்கா, 2016 உலக சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் பி குழுவில் இடம்பெறுகின்றன. ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அக்டோபர் 3ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானை ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் அக்டோபர் 3ஆம் திகதி சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும். தொடர்ந்து 5ஆம் திகதி இரவு நடைபெறவுள்ள போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாயை இலங்கை எதிர்த்தாடும். இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் அக்டோபர் 9ஆம் திகதி இரவு நடைபெறும். இலங்கை தனது கடைசிப் போட்டியில் நியூஸிலாந்தை ஷார்ஜா விளையாட்டரங்கில் சந்திக்கும். இப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும். 18 தினங்கள் நீடிக்கும் ஒன்பதாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெறும். ஏ, பி ஆகிய இரண்டு குழுக்களில் தலா 10 லீக் போட்டிகள் நடத்தப்பட்டு அந்த இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் நான்கு அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும். இரண்டு குழுக்களிலும் முதலாம் இடங்களைப் பெறும் அணிகள், இரண்டாம் இடங்களைப் பெறும் அணிகளை அரை இறுதுகளில் சந்திக்கும். அக்டோபர் 3ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை லீக் போட்டிகளும் அக்டோபர் 17ஆம், 18ஆம் திகதிகளில் அரை இறுதிப் போட்டிகளும் அக்டோபர் 20ஆம் திகதி இறுதிப் போட்டியும் நடைபெறும். முதலாவது அரை இறுதிப் போட்டியும் ஐசிசி மகளிர் ரி20 உலக கிண்ண சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியும் துபாய் சர்வதேச விளையாட்டரங்கிலும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கிலும் நடைபெறும். இந்தியா அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றால் அவ்வணி முதலாவது அரை இறுதியில் விளையாடும். 10 நாடுகள் சம்பந்தப்பட்ட 10 பயிற்சிப் போட்டிகள் செவன்ஸ் விளையாட்டரங்கிலும் ஐசிசி கிரிக்கெட் பயிற்சியக மைதானத்திலும் செப்டெம்பர் 28ஆம் திகதியிலிருந்து அக்டோபர் 1ஆம் திகதிவரை நடைபெறும். இப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படவுள்ள போதிலும் எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையுடன் பங்காளியாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையே ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் உரிமைத்துவத்தைக் கொண்டிருக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/192110

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.