Everything posted by ஏராளன்
-
பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்
அது போக்கிரி பாடிசோடா வடிவேலு அண்ணை.
-
பாகிஸ்தான் - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர் செய்திகள்
ஷக்கீல், ரிஸ்வான் அபார சதங்கள் குவிக்க, பாகிஸ்தான் பலமான நிலையை அடைந்தது Published By: VISHNU 22 AUG, 2024 | 11:11 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக ராவல்பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் சவூத் ஷக்கீல், மொஹமத் ரிஸ்வான் ஆகியோர் 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 240 ஓட்டங்களின் உதவியுடன் பாகிஸ்தான் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்று பலமான நிலையை அடைந்தது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான், 6 விக்கெட்களை இழந்து 448 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. சவூத் ஷக்கீல், மொஹமத் ரிஸ்வான் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதங்கள் குவித்தனர். அவர்களில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய சவூத் ஷக்கீல் 261 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள் அடங்கலாக 141 ஓட்டங்களைப் பெற்றார். 11ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஷக்கீல் குவித்த 3ஆவது சதம் இதுவாகும். ஆரம்பத்தில் நிதானத்துடனும் பின்னர் ஆக்ரோஷத்துடனும் கிட்டத்தட்ட முழுநாளும் துடுப்பெடுத்தாடிய மொஹமத் ரிஸ்வான் 239 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 171 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இது அவரது 3ஆவது டெஸ்ட சதமாக அமைந்ததுடன் அவர் பெற்ற 171 ஓட்டங்கள் அவரது தனிப்பட்ட அதிகூடிய டெஸ்ட் இன்னிங்ஸ் எண்ணிக்கையாக பதிவானது. ஷக்கீல் ஆட்டம் இழந்த பின்னர் 6ஆவது விக்கெட்டில் அகா சல்மானுடன் 44 ஓட்டங்களைப் பகிர்ந்த ரிஸ்வான், பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் ஷஹீன் ஷா அப்றிடியுடன் மேலும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அகா கான் 19 ஓட்டங்களையும் ஷஹீன் ஷா அப்றிடி ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷொரிபுல் இஸ்லாம் 77 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு கடைசி ஒரு மணி நேரத்தைத் தாக்குப் பிடித்து துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஷாத்மன் இஸ்லாம் 12 ஓட்டங்களுடனும் ஸக்கிர் ஹசன் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். https://www.virakesari.lk/article/191740
-
ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி
வெளிநாடொன்றில் கொடூர கத்திக்குத்து : மூவர் பலி பலர் காயம் - பாரிய தேடுதல் வேட்டை மேற்கு ஜேர்மனியில் (West Germany) இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கத்திக்குத்து சம்பவம் நேற்றையதினம் மாலை மேற்கு ஜெர்மனியின் சோலிங்கனில் (Solingen) நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், தொழில் நகரம் உருவாக்கப்பட்டு 650 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நகரின் மையப் பகுதியில் நேற்றைய தினம் மாலை விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பாரிய தேடுதல் வேட்டை இதன்போது அங்கு வீதிக்கு அருகில் இருந்த தாக்குதல்தாரி, அவ்வழியாகச் சென்றவர்களை கத்தியால் குத்திவிட்டு ஓடியதாகவும், இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தாக்குதலில் காயமடைந்தவர்களை பாதுகாப்பு படையினர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவரைக் கண்டுபிடிக்க அப் பகுதியில் பாரிய தேடுதல் வேட்டை நடந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சாலைகள் தடை இதேவேளை குறித்த தேடுதல் நடவடிக்கை காரணமாக சோலிங்கனில் சாலைகள் தடைபட்டுள்ளன. மேலும் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வதால் குடியிருப்பாளர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://ibctamil.com/article/germany-mass-stabbing-1-killed-4-seriously-injured-1724473645
-
ஈழத்தின் துயரத்தை படமாக்க விரும்புகிறேன் : இயக்குனர் மாரி செல்வராஜ் அறிவிப்பு
எனது வாழ்க்கையை தாண்டி ஒரு படம் எடுக்கவேண்டுமென்றால் அது ஈழத்தின் துயரத்தை படமாக்க விரும்புகிறேன் என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழை ஆகிய படங்களின் இயக்குனரே மாரி செல்வராஜ் ஆவார். ஈழத்து மக்களின் வாழ்க்கை முறை இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் மேலும் தெரிவிக்கையில், ஈழத்து நாவல்களை படிக்கும்போது அது உணர்வு பூர்வமானதாக இருக்கும். அந்த மக்களுடைய வாழ்க்கை முறை வேறானது. நாம் நினைத்து கூட பாரக்க முடியாத இன்னொரு வாழ்க்கைமுறை அது. ஈழத்தின் நிஜத்தை படமாக்கவேண்டும் எனவே ஈழத்து ஒரு நாவலை அல்லது ஈழத்தின் நிஜத்தை படமாக்கவேண்டும் என்பது எனது விருப்பமாகும் எனத் தெரிவித்தார். https://ibctamil.com/article/mari-selvaraj-wants-to-film-the-misery-of-eelam-1724497401
-
பாகிஸ்தான் - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர் செய்திகள்
அயூப், ஷக்கீல் குவித்த அரைச் சதங்கள் பாகிஸ்தானை நல்ல நிலையில் இட்டன Published By: VISHNU 21 AUG, 2024 | 11:07 PM (நெவில் அன்தனி) பங்களதேஷுக்கு எதிராக ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (21) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இன்று காலை பெய்த மழை காரணமாக சுமார் நான்கரை மணித்தியாலங்கள் தாமதித்தே போட்டி தொடங்கியது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் முதல் 3 விக்கெட்களை 16 ஓட்டங்களுக்கு இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. அப்துல்லா ஷபிக் (2), அணித் தலைவர் ஷான் மசூத் (6), முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் (0) ஆகிய மூவரும் 9 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்து வெளியேறினர். இந் நிலையில் ஜோடி சேர்ந்த சய்ம் அயூப், சவூத் ஷக்கீல் ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையை ஊட்டினர். தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அயூப் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி கன்னிச் அரைச் சதத்தைப் பூர்ததிசெய்து 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சவூத் ஷக்கீல், மொஹம்மத் ரிஸ்வான் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை நல்ல நிலையில் இட்டனர். சவூத் ஷக்கில் 57 ஓட்டங்களுடனும் மொஹம்மத் ரிஸ்வான் 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ஷொரிபுல் இஸ்லாம் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹசன் மஹ்மூத் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/191668
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : வெளியான தகவல் கடந்த நாட்களை விட இந்த நாட்களில் மரக்கறியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். விலை அதிகரிப்பின் காரணமாக மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளதாக வர்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். மரக்கறியின் விலை இதனடிப்படையில், மெனிங் சந்தையில் கரட் 1Kg ரூபாய் 250.00, போஞ்சி 1Kg ரூபாய் 250.00 , கோவா 1Kg ரூபாய் 150.00 , தக்காளி1Kg ரூபாய் 150.00 , பூசணி 1Kg ரூபாய் 300.00 மற்றும் லீக்ஸ் 1Kg ரூபாய் 200.00 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/the-price-of-vegetables-has-increased-in-sri-lanka-1724490207?itm_source=parsely-api
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் விதி மீறல் தொடர்பில் இதுவரை 901 முறைப்பாடுகள் பதிவு 24 AUG, 2024 | 01:00 PM ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை) 901 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 427 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 450 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. https://www.virakesari.lk/article/191855
-
யாழில் மீளுருவாக்கம் செய்யப்படும் 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயம்..!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயம் மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கபப்ட்டுள்ளது. அழிவடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் பணி, யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முன்னோர்களின் வழிப்பாட்டுத் தலம் கல்வெட்டில் இருந்த தகவலின் படி ஆலயத்தின் எஞ்சிய பாகங்களையும் அத்திவாரங்களையும் அழிபாடுகளையும் கொண்டு இவ்வாலயமானது கற்பகிரகம், அந்தராளம், முன்மண்டபம், துணைக்கோவில்கள், சுற்றுமதில், மடங்கள், கேணி என்பவற்றை கொண்டிருந்தது என்பதனை உறுதிப்படுத்த முடிகின்றது. இவ்வாலயத்தின் கற்பக்கிரகத்தின் பின்புறத்தில் பொறிக்கப்பட்ட கிரக சாசனத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாலயமானது 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஆலயமென்பதுடன் ஆலயத்தின் பெயர் பிரகேதீஸ்வரர் என்பதனையும் இக்கல்வெட்டில் இருந்து உறுதிப்படுத்திக் கொள்ள முடிகின்றது. மிகத் தொன்மையான முன்னோர்களின் வழிப்பாட்டுத் தலமான இவ்வாலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள்உருவாக்கம் செய்வதற்கு நீண்ட காலம் முயற்சி எடுக்கப்பட்டது. இநநிலையில், குறித்த ஆலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் முக்கிய பணியில் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட முன்னாள் உத்தியோகத்தர் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். https://tamilwin.com/article/400-year-old-shiva-temple-under-renovation-jaffna-1724482692
-
மின் மோட்டாரை திருத்த முற்பட்ட ஆலய பணியாளர் உயிரிழப்பு - யாழில் சம்பவம்
24 AUG, 2024 | 12:06 PM யாழ். சுன்னாகம் - சூளானை பகுதியில் உள்ள ஆலயமொன்றில் பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட நபர், வீடொன்றில் மின் மோட்டார் திருத்தச் சென்றபோது மர்மமான முறையில் உயரிழந்துள்ளார். நேற்று (23) உயிரிழந்த நபரின் சடலம் இன்று சனிக்கிழமை (24) உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் - சூளானை பகுதியைச் சேர்ந்த 53 வயது நபரே உயிரிழந்தவர் ஆவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், திருவிழா நடைபெற்று வரும் இந்த ஆலயத்தின் அருகில் உள்ள வீடொன்றில் மின் மோட்டார் இயங்காத காரணத்தால் ஆலயத்தில் பிரசாதம் தயாரித்துக்கொண்டிருந்த நபரை வீட்டின் உரிமையாளர் அழைத்து, மின் மோட்டார் திருத்துமாறு கேட்டுள்ளார். அவ்வேளை, அந்த நபர் மின் திருத்த வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் டெஸ்ட்டரை எடுத்துக்கொண்டு வருமாறு வீட்டு உரிமையாளரிடம் கூறியுள்ளார். அவர் வீட்டினுள் சென்று டெஸ்ட்டர் எடுத்துக்கொண்டு சென்று பார்த்தபோது, மின் மோட்டார் திருத்துவதற்காக வந்த நபர் தரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கும், பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/191848
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் - ஷிகர் தவான்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அதிரடி துடுபாட்ட வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரராக களமிறங்கும் ஷிகர் தவான், 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிமுகமானார். தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் இடம்பிடித்தார். 24 சதங்கள் இந்திய அணிக்கு சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் ஷிகர் தவான், இந்திய அணிக்காக 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,793 ஓட்டங்களை பெற்றுள்ளார். 68 டி20 போட்டிகளில் 1,759 ஓட்டங்களையும், 34 டெஸ்ட் போட்டிகளில் 2,315 ஓட்டங்களையும் தனதாகியுள்ளார். இவர் இந்திய அணிக்காக ஒட்டுமொத்தமாக 24 சதங்களை பெற்றுக்கொடுத்துள்ளார். இளம் வீரர்களின் வருகையால் ஏற்பட்ட கடும் போட்டியின் காரணமாக தொடர்ந்து அணியில் இடம் கிடைக்காமல் தவிர்க்கப்பட்டு வந்த ஒரு வீரராக தவான் காணப்படுகிறார். இறுதியாக 2022இல் பங்களாதேஷிற்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியை விளையாடியிருந்தார். ஐ.பி.எல் தொடர்களில் டெல்லி, மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ், ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ள தவான், கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இந்திய அணி இந்த நிலையில், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், சர்வதேச போட்டிகள் மாத்திரம் இல்லாது உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிகவேகமாக சதம் அடித்தவர் என்ற சாதனையை தவான் படைத்துள்ளார். 2015ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அதிக ஓட்டங்களை இவர் பெற்றிருந்தார். ஐ.சி.சி. செம்பியன்ஸ் (2013,2017) தொடர்களில் அதிக ஓட்டங்களை குவித்து கோல்டன் பேட் விருதை வென்ற வீரராவார். மேலும், 2021ல் விளையாட்டில் சிறந்து விளங்கியதற்காக, உயரிய விருதான அர்ஜுனா விருது இந்திய மத்திய அரசால் தவானுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/shikhar-dhawan-retires-from-icc-update-1724473424
-
ரஷ்யா பெரும் தாக்குதலுக்கு தயாராகும் வேளையில் யுக்ரேன் செல்வதா? மோதியை எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள்
யுக்ரேன் - ரஷ்யா இடையே அமைதியை கொண்டு வரும் சக்தி பிரதமர் மோதிக்கு இருக்கிறதா? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நரேந்திர மோதி - வோலோதிமிர் ஸெலன்ஸ்கி 24 ஆகஸ்ட் 2024, 05:40 GMT புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோதி யுக்ரேனுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். அமைதியை நிலைநாட்டுவதில் தனிப்பட்ட பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக, மோதி அந்நாட்டு அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. யுக்ரேன் தலைநகர் கீயவில் கடந்த மாதம் பெரிய குழந்தைகள் மருத்துவமனை உட்பட, ரஷ்யா மோசமான தாக்குதலை நடத்திய நாளில், மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த மோதி, அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினை கட்டியணைத்ததை ஸெலன்ஸ்கி விமர்சித்திருந்தார். பிரச்னைகளைப் போர்க்களத்தில் சரிசெய்ய முடியாது என்று தாம் புதினிடம் கூறியதாக பிரதமர் மோதி கூறியிருந்தார். “இரு தரப்பினரும் அமர்ந்து இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான வழிகள் குறித்து ஆராய வேண்டும்,” என்று கீயவில் நடைபெற்ற கூட்டங்களுக்குப் பின்னர் மோதி தெரிவித்தார். போலாந்தில் இருந்து ரயில் மூலமாக யுக்ரேன் தலைநகர் கீயவை மோதி அடைந்தார். யுக்ரேனிய படைகள் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் நுழைந்ததில் இருந்து யுக்ரேனுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் சர்வதேச தலைவர் மோதி. குர்ஸ்க் பிராந்தியத்தில் 1,250 சதுர கி.மீ.க்கும் அதிகமான பகுதியைக் கைப்பற்றியதாக, யுக்ரேன் ராணுவம் தெரிவித்தது. நரேந்திர மோதி, ரஷ்ய அதிபரை ஆரத்தழுவியதைக் கண்டு தாம் “பெருத்த ஏமாற்றம் அடைந்ததாக” ஆறு வாரங்களுக்கு முன்பு யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். “ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். இதில் மூன்று குழந்தைகளும் அடக்கம். யுக்ரேனில் உள்ள மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்யா தாக்கியது. அந்த நாளில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், மாஸ்கோவில் உலகின் மிகப் பெரிய ரத்தம் தோய்ந்த குற்றவாளியை ஆரத் தழுவுவது அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று அந்த நேரத்தில் ஸெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் சமநிலைப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது. யுக்ரேன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் மோதல் குறித்து மோதிக்கும் ஸெலன்ஸ்கிக்கும் இடையே என்ன நடந்தது என்று விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 23) யுக்ரேன் அதிபரை மோதி ஆரத்தழுவினார். மோதி - ஸெலன்ஸ்கி சந்திப்பு பிரதமர் நரேந்திர மோதி, ஸெலன்ஸ்கியை கட்டிப்பிடித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், யுக்ரேன் தேசிய அருங்காட்சியகத்தில் பல்லூடக கண்காட்சியை பிரதமர் மோதி பார்வையிட்டார். பட மூலாதாரம்,@NARENDRAMODI படக்குறிப்பு, யுக்ரேனுடன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த இந்தியா விரும்புகிறது பிரதமர் மோதி பேசுகையில், “முக்கியமாக குழந்தைகளுக்கு மோதல்கள் பேரழிவை ஏற்படுத்துகின்றன. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். துக்கத்தைத் தாங்கும் சக்தியை அவர்கள் பெற பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார். உயிரிழந்த குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்களின் நினைவாக அங்கு பொம்மை ஒன்றை பிரதமர் மோதி வைத்தார். நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து பிரதமர் நரேந்திர மோதியின் யுக்ரேன் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. விவசாயம், உணவுத் தொழில், மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் தயாரிப்பு, சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். அப்போது, விரைவான மருத்துவ உதவிகளை வழங்கும் வகையிலான பீஷ்ம் (BHISHM) திட்டத்தின்படி, மருந்துப் பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியிடம் வழங்கினார். காயம் அடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும், உயிரைக் காப்பாற்றவும் அவை உதவும் என இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு பெட்டகத்திலும் அனைத்து வகையான காயங்கள் மற்றும் மருத்துவ நிலைமைகளைச் சமாளிக்க அடிப்படை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும். அடிப்படை அறுவை சிகிச்சை அறைக்குத் தேவையான அறுவை சிகிச்சைக் கருவிகள் இதில் இருக்கும். இதில் ஒரு நாளில் 10-15 அறுவை சிகிச்சைகள் செய்யலாம். இவை, தீக்காயங்கள், எலும்பு முறிவுகள் அல்லது ரத்தப்போக்கு போன்ற அவசரக்கால சூழ்நிலைகளில் 200 பேரைக் கையாளும் திறன் கொண்டது. அந்தப் பெட்டகங்கள், தாமாகவே மின்சாரம் மற்றும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. சந்திப்பின் தாக்கம் என்ன? கீயவில் ஸெலன்ஸ்கியுடன் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தியதாக பிரதமர் மோதி கூறினார். யுக்ரேனுடன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. “விவசாயம், தொழில்நுட்பம், மருந்து மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் விவாதித்தோம். கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் ஒப்புக்கொண்டோம்” என்று பிரதமர் மோதி கூறினார். 'இந்தியா எப்போதும் உங்களுடன் நிற்கும்' யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நிலவும் மோதலைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோதி, பேச்சுவார்த்தை மூலம்தான் அதற்குத் தீர்வு காண முடியும் என்று யுக்ரேன் அதிபரிடம் தெரிவித்ததாகக் கூறினார். “இரு தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்." குறிப்பாக, யுக்ரேனிய மண்ணில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பாதை குறித்து விவாதிக்க விரும்புவதாகவும் யுக்ரேனிய அதிபரிடம் மோதி கூறினார். பட மூலாதாரம்,@NARENDRAMODI படக்குறிப்பு,இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஸெலன்ஸ்கியிடம் மருந்து பொருட்களை ஒப்படைத்தார் "அமைதிக்கான அனைத்து முயற்சிகளிலும் இந்தியா தீவிரமாகப் பங்கு வகிக்கத் தயாராக உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் இதற்கு பங்களிக்க முடிந்தால், அதை நிச்சயமாகச் செய்ய விரும்புகிறேன். ஒரு நண்பராக, இதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று ஸெலன்ஸ்கியிடம் கூறினார். "இது இந்தியாவின் அர்ப்பணிப்பு என்பதை உங்களுக்கும் முழு உலக சமூகத்திற்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை எங்களுக்கு முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம், நாங்கள் அதை ஆதரிக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார். இரு தலைவர்களும் விவாதித்தது என்ன? எக்ஸ் தளத்தில் பிரதமர் மோதி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவருக்கு முன்பாக ஸெலன்ஸ்கி அமர்ந்துள்ளார். ஸெலன்ஸ்கி முன்னிலையில் பிரதமர் மோதி, "மனிதாபிமான அணுகுமுறைதான் இந்த விவகாரத்தில் எங்களுடைய முதன்மையான பங்கு. இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் அதற்கு நிறைய தேவை உள்ளது. மனிதாபிமான அணுகுமுறையை மையமாக வைத்து அதை நிறைவேற்ற இந்தியா முயன்றுள்ளது" என்றார். “மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எந்த வகையான உதவி தேவைப்பட்டாலும், இந்தியா எப்போதும் உங்களுடன் நிற்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று மோதி கூறினார். பட மூலாதாரம்,@NARENDRAMODI படக்குறிப்பு,பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிப்பதாக மோதி கூறினார் ஸெலன்ஸ்கி முன்னிலையில் ரஷ்ய அதிபர் புதினையும் மோதி குறிப்பிட்டார். ரஷ்ய பயணத்தின்போது அதிபர் விளாதிமிர் புதினுடன் தான் நடத்திய பேச்சுவார்த்தையைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோதி, இது போருக்கான நேரம் அல்ல என்று புதினிடம் கூறியதாகத் தெரிவித்தார். “எந்தவொரு பிரச்னைக்கும் போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது, பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய ரீதியிலான முடிவுகள் மூலம்தான் தீர்வு கிடைக்கும் என்றும், நேரத்தை வீணடிக்காமல் அந்தத் திசையில் செல்ல வேண்டும் என்றும் நான் தெளிவாகக் கூறியுள்ளேன்” என்று பிரதமர் மோதி தெரிவித்தார். ஸெலன்ஸ்கி கூறியது என்ன? பிரதமர் மோதியுடனான சந்திப்பு குறித்து ஸெலன்ஸ்கி கூறுகையில், “இது மிகவும் சிறப்பான சந்திப்பு, இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு” எனத் தெரிவித்தார். பிரதமர் மோதியின் வருகைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இதுவொரு நல்ல தொடக்கம் எனவும் கூறிய யுக்ரேன் அதிபர், "அவருக்கு (பிரதமர் மோதி) அமைதி குறித்து ஏதேனும் கருத்து இருந்தால், அதைப் பற்றி பேசுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்” என்றார். மேலும், “புதினைவிட பிரதமர் மோதி அமைதியை விரும்புகிறார். புதின் அதை விரும்பவில்லை என்பதுதான் பிரச்னை” என்றும் குறிப்பிட்டார். இந்தியா என்ன செய்ய முடியும்? சமநிலையை எட்டுவது குறித்த கேள்விக்கு, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் ஐரோப்பிய ஆய்வுகள் மையத்தின் பேராசிரியர் பஸ்வதி சர்கார் பதிலளித்தார். பிபிசியிடம் பேசிய அவர், "24 பிப்ரவரி 2022 அன்று ரஷ்யா யுக்ரேனை தாக்கியதில் இருந்து இந்தியா இந்த விவகாரத்தில் சமநிலையைப் பேணி வந்திருக்கிறது. இந்தியா ரஷ்யாவுடன் ஆழமான உறவைக் கொண்டுள்ளது, அதை நாம் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. வெகுகாலமாக அந்நாடுகளுடன் இந்தியா அந்த உறுதிப்பாட்டை வைத்துள்ளது” என்றார். அவர் கூறுகையில், "இந்தியா ஐரோப்பாவில், குறிப்பாக அமெரிக்காவில் தனது உறவை ஆழப்படுத்த முயல்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளன" என்றார். பட மூலாதாரம்,@NARENDRAMODI படக்குறிப்பு,ஸெலன்ஸ்கியை ஆரத்தழுவிய மோதி போரை நிறுத்துவதில் இந்தியாவின் பங்கு குறித்த கேள்விக்கு, “இது போருக்கான நேரம் அல்ல என்று பிரதமர் மோதியால் மட்டுமே புதினிடம் கூற முடியும் என்பது உண்மை. எந்த ஐரோப்பியரும் இதைப் பேச முடியாது. பேச்சுவார்த்தை இல்லாமல் தீர்வு கிடைக்காது என பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்” என்றார். "போரை நிறுத்தப் பலர் முனைப்பு காட்டுகின்றனர். சீனாவும் அதையே செய்தது. சுவிட்சர்லாந்தில் நடந்த உலக அமைதி மாநாட்டிலும் இது நடந்தது. ஆனால் ரஷ்யா இதில் பங்கேற்கவில்லை. சண்டையிட்டுக் கொள்ளும் இரு நாடுகளும் அமர்ந்து பேசாமல், இதில் முடிவை எட்ட முடியாது. இரு நாடுகளையும் ஒன்றிணைப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்ற முடியும்” என்கிறார் அவர். அதே நேரம், ரஷ்ய விவகாரங்களில் நிபுணரும், ஜேஎன்யுவின் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸின் பேராசிரியருமான ராஜன் குமார், “இது நிச்சயமாக மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு சமிக்ஞை” என்று பிபிசியின் பாட்காஸ்டில் கூறினார். பிரதமர் மோதி வருகையின் அர்த்தம் என்ன? இது மோதியின் அடையாளப் பயணமா அல்லது இதற்கு ஆழமான அர்த்தம் உள்ளதா? ஏனெனில் மோதி இந்த ஆண்டு மாஸ்கோவுக்கும் சென்றிருந்தார். இது குறித்து பேராசிரியர் ராஜன் குமார் கூறுகையில், "இந்தப் பயணம், இந்தியா சமநிலை வெளியுறவுக் கொள்கையைக் கடைபிடிப்பது குறித்து, மேற்கத்திய நாடுகளுக்குத் தெரிவிக்கும் சமிக்ஞை. இது துணிச்சலான ராஜதந்திர நடவடிக்கை" என்றார். "யுக்ரேன் ஒரு சுதந்திர நாடாக மாறிய பிறகு இத்தகைய அளவில் இந்திய பிரதமர் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை. போரின்போது, யுக்ரேன் சில பகுதிகளை ஆக்கிரமித்ததாக சமீப காலமாகக் கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இது முதல் முறையாக நடந்தது. மோதி முதலில் ரஷ்யா சென்றார், இதனால் மேற்கத்திய நாடுகள் கோபமடைந்தன” எனக் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜூலை மாதத்தில் விளாதிமிர் புதினை நரேந்திர மோதி சந்தித்தார் குவாட் அமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளதாகவும், இருந்த போதிலும் ரஷ்யாவை ஆதரிப்பதாகவும் பேராசிரியர் ராஜன் குமார் கூறினார். “ஒருவகையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சமநிலையானது என்பதைக் காட்டும் முயற்சியே இந்தப் பயணம். இது ஒருபுறம் சமநிலைப்படுத்தும் முயற்சி, மறுபுறம், இது இருநாடுகளிடையே 'பாலமாகச் செயல்படும்’ முயற்சி” என்றார். ரஷ்யாவையும் யுக்ரேனையும் எப்படி இணைப்பது என்பது முதல் முயற்சி என்றும், ‘தெற்குலக’ பிரதிநிதியாக உள்ள இந்தியா, யுக்ரேனை தெற்குலகத்துடன் இணைப்பது எப்படி என்பது இரண்டாவது முயற்சி என்றும் அவர் கூறினார். “ஏனெனில், தெற்குலகில் இந்தப் போர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது 'புத்தரின் நேரம், போருக்கான நேரம் அல்ல' என்றும், இந்த சுற்றுப் பயணம் அமைதிக்கான முயற்சி என்றும் பிரதமர் இந்த சுற்றுப் பயணத்தில் கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார். இந்தியாவின் பங்கு என்ன? ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையில் இந்தியாவின் பங்காக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “பனிப்போருக்குப் பிறகு, அதாவது 1991ஆம் ஆண்டு முதல், ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் என எந்த நாட்டு விவகாரத்திலும் மத்தியஸ்தம் பற்றிப் பேச இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என பேராசிரியர் ராஜன் குமார் கூறினார். “இரு தரப்பையும் முன்னோக்கிக் கொண்டு வருவதைப் பற்றி இந்தியா பேசுகிறது என்றால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் காண்கிறோம் என்று சொல்லலாம். இந்த விஷயத்தைப் பொறுத்த வரை அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தம் பற்றிப் பேசவில்லை” என்கிறார் பேராசிரியர் ராஜன் குமாகுமார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரதமர் மோதியும், யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர் ராஜன் குமார் கூறுகையில், "போர்நிறுத்தம் பற்றிப் பேசும் அளவுக்கு அரசியல் சூழல் இல்லை. சீனா, துருக்கி போன்று இந்தியாவும் அமைதித் திட்டத்தைப் பற்றி பேசவில்லை. மத்தியஸ்தம் குறித்த பேச்சு எழுந்தால் இந்தியா எந்த மாதிரியாகப் பங்கு வகிக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை” என்றார் அவர். கடந்த 1991ஆம் ஆண்டு யுக்ரேன் சுதந்திர நாடாக மாறிய பிறகு, இந்திய பிரதமர் அந்த நாட்டுக்குச் செல்வது இதுவே முதல்முறை. பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா யுக்ரேனை தாக்கியது. அன்று முதல் இன்று வரை இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. பிப்ரவரி 2022 முதல் நடந்து வரும் இந்த சண்டை, எப்போது நிற்கும் என்பதைக் காலம்தான் சொல்லும். ஆனால், ஸெலென்ஸ்கி, புதின் ஆகிய இருவரிடமும் சமாதானம் மட்டுமே தீர்வு என்று பிரதமர் மோதி கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c5y8p8xn00xo
-
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி!
24 AUG, 2024 | 11:33 AM கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று குறித்த பகுதியில் பயணிகளை ஏற்றி சென்றபோது வீதியால் சென்ற ஒருவர் திடீரென பஸ்ஸை வழிமறித்து ஏற முற்பட்ட வேளை பஸ் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/191850
-
ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி
வீரகேசரிக்கு தானண்ணை திரிஞ்சிருக்கு.
-
வட மாகாண பாடசாலைகள் குத்துச்சண்டை : முல்லைத்தீவு மாவட்டம் முதலாம் இடம்
22 AUG, 2024 | 12:29 PM (என்.வீ.ஏ.) வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் பெற்ற மொத்த பதக்கங்கள் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முல்லைத்தீவு மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்றது. பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட குத்துச்சண்டை போட்டி முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் சார்பாக பங்குபற்றிய வீர, வீராங்கனைகள் 12 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் உட்பட மொத்தமாக 27 பதக்கங்களை வென்று வடமாகாணத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வரலாறு படைத்தனர். பதக்கங்கள் விபரம் உடையார்கட்டு மகா வித்தியாலயம் தங்கம்: பி. மதுஷன், ஜே. கலைநிலா, வெள்ளி: ஆர். டிலக்சிகா, ரி. பேரிசை, வெண்கலம்: ரி. தனுசன், எஸ். கிரி, கே. புகழ்மாரவன், கே. கஜந்தன். வட்டப்பாலை மகா வித்தியாலயம் தங்கம்: எஸ். யதுர்சன், எஸ். கேதுக்ஷன், ஆர். ராஜ்குமார், ஜே. புவிதரன், வெண்கலம்: கலையரசன். தண்ணீரூற்று தமிழ் வித்தியாலயம் தங்கம்: கே. கவிபிரியன், வெள்ளி: ஜே. இசைபிரியன், எல். ஷர்மிசன். வித்தியானந்தா கல்லூரி தங்கம்: எஸ். சோபிசனன், வெண்கலம்: எம்.ஆர்.எம். பர்சின். முல்லைத்தீவு மகா வித்தியாலயம் தங்கம்: கோபிகன் இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலை தங்கம்: ஜே. தனுஜன் சிலாவத்துறை மகா வித்தியாலயம் தங்கம்: ஈ. சுரேஷ், வெண்கலம்: ஜே. பிரியந்தன். புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வெண்கலம்: சதுர்சன் கொக்குதொடுவாய் மகா வித்தியாலயம் தங்கம்: கே. கொனிலா, வெள்ளி: கே. புகழரசன், வெண்கலம்: ஐ. திவ்வியன். வல்லிபுரம் மகா வித்தியாலயம் வெள்ளி: கிருஷாந்தன். வட மாகாண பாடசாலை குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பயிற்சிகளை வள்ளுவன், தேசிந்தன், நிதீஷ் ஆகியோர் வழங்கினர். https://www.virakesari.lk/article/191693
-
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
இங்கிலாந்துடனான டெஸ்டில் இக்கட்டான நிலையில் இலங்கை; 4 விக்கெட்கள் மீதமிருக்க 82 ஓட்டங்களால் மாத்திரம் முன்னிலை Published By: VISHNU 24 AUG, 2024 | 12:04 AM (நெவில் அன்தனி) மென்ச்செஸ்டர், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் இக்கட்டான நிலையை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 132 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த இலங்கை மூன்றாம் நாளான இன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. மேலும் 4 விக்கெட்கள் மீதம் இருக்கும் நிலையில் 82 ஓட்டங்களால் மாத்திரம் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. போட்டியில் மேலும் 2 நாட்கள் மீதம் இருப்பதால் அதிசயம் நிகழ்ந்தாலன்றி இலங்கையினால் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போகும். இரண்டாவது இன்னிங்ஸில் நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர். (1 - 2 விக்.) முன்னாள் அணித் தலைவர்களான திமுத் கருணாரட்னவும் ஏஞ்சலோ மெத்யூஸும் 3ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர் செய்தனர். திமுத் கருணாரட்ன 29 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 74 ஓட்டங்களாக இருந்தபோது தினேஷ் சந்திமால் காயத்திற்குள்ளாகி தற்காலிக ஓய்வுபெற்றார். மார்க் வூட் வீசிய மணிக்கு 149 கிலோ மீற்றர் வேகப் பந்து. தினேஷ் சந்திமாலின் வலது பெரு விரலைத் தாக்கியதால் அவர் 12 ஓட்டங்களுடன் ஓய்வுபெற நேரிட்டது. தொடர்ந்து தனஞ்சய டி சில்வா 11 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். (95 - 4 விக்.) இந் நிலையில் ஏஞ்சலோ மெத்யூஸும் கமிந்து மெண்டிஸும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். அதுவரை மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த மெத்யூஸ் 145 பந்துகளை எதிர்கொண்டு 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து மிலன் ரத்நாயக்கவும் பின்னர் கமிந்த மெண்டிஸும் எல் பி டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்ததாக கள மத்தியஸ்தர் கிறிஸ் கவனி தீர்ப்பு வழங்கினார். ஆனால், மிலன் ரத்நாயக்கவும் கமிந்து மெண்டிஸும் மீளாய்வுக்கு உட்படுத்தியபோது கிறிஸ் கவனியில் இரண்டு தீர்ப்புகளும் மாற்றி அமைக்கப்பட்டது. ஏனெனில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் பந்து துடுப்பை உராய்து சென்றமை சலன அசைவுகளில் தெளிவாகத் தெரிந்தது. மறுபக்கத்தில் சிறு ஆக்ரோஷத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த கமிந்து மெண்டிஸ் தனது 3ஆவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்தார். முதல் இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்த மிலன் ரத்நாயக்க, இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான அடி தெரிவினால் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (190 - 6 விக்.) மொத்த எண்ணிக்கை 74 ஓட்டங்களாக இருந்தபோது 18ஆவது ஓவரில் உபாதைக்குள்ளாகி தற்காலிக ஓய்வு பெற்றுவந்த தினேஷ் சந்திமால் 56ஆவது ஓவரில் 6ஆவது விக்கெட் வீழ்ந்ததும் மீண்டும் துடுப்பெடுத்தாட களம் நுழைந்தார். போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது கமிந்து மெண்டிஸ் 56 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். 109 பந்துகளை எதிர்கொண்ட கமிந்து மெண்டிஸின் ஆட்டம் இழக்காத இன்னிங்ஸில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கியிருந்தன. பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து, சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றது. தனது 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜெமி ஸ்மித் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது கன்னிச் சதத்தைப் பூர்த்திசெய்தார். 148 பந்துகளை எதிர்கொண்ட ஜெமி ஸ்மித் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 111 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் 7ஆவது விக்கெட்டில் கஸ் அட்கின்சனுடன் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மத்திய பின்வரிசையில் கஸ் அட்கின்சன் 20 ஓட்டங்களையும் மெத்யூ பொட்ஸ் 17 ஓட்டங்களையும் மார்க் வூட் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 103 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 85 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 73 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையம் வீழ்த்தினர். அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க தனது முதலாவது டெஸ்ட் விக்கெட்டாக கஸ் அட்கின்சனை ஆட்டம் இழக்கச் செய்தார். இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. https://www.virakesari.lk/article/191836
-
ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி
24 AUG, 2024 | 07:53 AM ஜேர்மனியின் சொலிங்ஜென் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். நகரில் பெருமளவானவர்கள் கலந்துகொண்ட திருவிழா நிகழ்வொன்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட நபர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. நபர் கண்மூடித்தனமாக ஏனையவர்கள் மீது கத்திக்குத்தினை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/191842
-
பெண்களை ஆபத்துக்குள்ளாக்கும் போலி சமூக ஊடக பதிவுகள் - ஆபத்திற்கு உள்ளாகும் ஆரோக்கியம்
பெண்ணுறுப்பின் கருமை நிறம் ஆபத்தா?- பெண்களை ஆபத்துக்குள்ளாக்கும் சமூக ஊடக பதிவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்ணுறுப்பின் வாசனை மற்றும் தோற்றத்தை மாற்றுவதற்கு அழகு சாதன தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை அதிக எண்ணிக்கையிலான ஆன்லைன் பதிவுகள் பரிந்துரைக்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஓஸ்ஜ் ஓஸ்டெமிர் பதவி, பிபிசி துருக்கி 23 ஆகஸ்ட் 2024 சமூக ஊடகங்களில் பெண்ணுறுப்பு பற்றி நடந்து வரும் விவாதங்கள், உலகம் முழுவதும் உள்ள பல பெண்களின் மனதில் தேவையற்ற அச்ச உணர்வை விதைத்துள்ளது. பெண்ணுறுப்பின் உள்புறம் ‘யோனிக் குழல்’ (vagina) எனப்படும். கருப்பையை வெளிப்புற உடலுடன் இணைக்கின்ற தசைக்குழாய் இது. பெண்ணுறுப்பின் வெளிப்புறம் ‘யோனிப் புழை’ (vulva) எனப்படும். தற்போது பெண்ணுறுப்பு பற்றிப் பல தவறான கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன. “யோனிக் குழல் எப்படி இருக்க வேண்டும்?”, “அதன் வாசனை எப்படி இருக்க வேண்டும்?” போன்ற தலைப்புகளில் விவாதங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்ட, இந்த ஆன்லைன் பதிவுகள் மற்றும் வீடியோக்களில் சில பெண்ணுறுப்புகளின் வாசனை மற்றும் தோற்றத்தை மாற்ற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றனர். ஆனால், மகப்பேறு மருத்துவர்கள் இந்தப் பொருட்கள் ஆபத்தானவை என்று எச்சரிக்கின்றனர். அவை யோனிப்புழையின் pH அளவைச் சீர்குலைத்து தொற்றுநோயை ஏற்படுத்தும் என்கின்றனர். வாசனைத் திரவியமா? பெண்ணுறுப்பின் யோனிக் குழல் (vagina) மற்றும் யோனிப் புழை (vulva) ஆகிய பகுதிகள் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை கொண்டிருக்கும். அவற்றின்மீது பயன்படுத்தப்படும் செயற்கை ரசாயனங்கள் அவற்றின் இயல்பான தன்மையைச் சீர்குலைக்கும் என்று மகப்பேறு மருத்துவர் முஜ்தேகுல் ஜாயிஃபோக்லு கராகா எச்சரிக்கிறார். “நான் 'வஜைனா பெர்ஃப்யூம்' (vagina perfume) பற்றி முதலில் கேள்விப்பட்டபோது பயந்தேன். ஆணுறுப்பு மட்டும் ஏன் வாசனைத் திரவியங்கள் இல்லை?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார். யோனிப்புழை (vulva) என்பது ஒரு பெண் அல்லது பாலின-பன்முகத்தன்மை கொண்ட நபரின் வெளிப்புற பிறப்புறுப்புகளுக்கான கூட்டுப் பெயர். யோனிக்குழல் (vagina) என்பது ஒரு தசைக் குழல், இது கருப்பை வாயை உடலின் வெளிப்புறத்துடன் இணைக்கிறது. துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள கல்லூரி மாணவியான எய்லுல் குல்சே காரா, சமூக ஊடகங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அழுத்தத்தால் விரக்தியடைந்துள்ளார். “சமூகத்தின் கருத்துகளுக்கு இணங்க நாங்கள் தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டுமா?” என்று அவர் கேட்கிறார். தந்தையின் மதுப்பழக்கம் குழந்தையை கருவிலேயே பாதிக்கும் ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு11 ஆகஸ்ட் 2024 ‘சிறந்த யோனிப் புழை என்று எதுவும் இல்லை’ ‘சிறந்த’ அல்லது ‘சரியான’ யோனிப்புழை என்று எதுவும் இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். லண்டனில் உள்ள ராயல் மகப்பேறு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் பெரின் டெஸ்கான், “ஒவ்வொரு பெண்ணின் பெண்ணுறுப்பும் தனித்துவமானது,” என்கிறார். “எந்தப் பெண்ணின் பெண்ணுறுப்பும் மற்றொரு பெண்ணின் பெண்ணுறுப்பு போன்று அதே உருவம், அளவு, நிறம், அல்லது தோற்றத்தைக் கொண்டிருக்காது,” என்கிறார். “என்னிடம் மருத்துவ ஆலோசனை பெற வரும் பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பில் பிரச்னை இருக்கிறதோ என்ற பயத்துடன் வருகின்றனர். அவர்களின் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்களது பெண்ணுறுப்பு முற்றிலும் இயல்பாக இருக்கிறது என்று நான் அவர்களுக்குப் புரியவைத்த போது அவர்களில் 90% பேர் நிம்மதி அடைந்தனர்,” என்கிறார் அவர். ஆனால் சில நாடுகளில், ஒரு மகப்பேறு மருத்துவரை பார்த்து இதற்கான ஆலோசனை பெறுவதில் பெண்கள் தயக்கம் கொள்கின்றனர். உதாரணமாக, இரானில், பெண்களின் பாலியல் ஆரோக்கியம் சங்கடமான விவகாரமாகக் கருதப்படுகிறது. ஒரு சில மருத்துவர்கள், தங்களை உருவ கேலி செய்து அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதாகச் சில சமூக ஊடகப் பயனர்கள் புகார் கூறுகின்றனர். அறுவை சிகிச்சையா? “எனது தோழிகளில் ஒருவர் லேபியாபிளாஸ்டி (labiaplasty) செய்து கொண்டார். அது மிகவும் சங்கடமான அறுவை சிகிச்சை ஆயிற்றே, அதை ஏன் செய்தீர்கள் என்று கேட்டேன்” என்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு கூறுகிறது. மேலும் அந்த பதிவில், “என் தோழி என்னிடம் ‘என் மகப்பேறு மருத்துவர் என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்: ‘உங்கள் லேபியா (யோனிப் புழையின் வெளிப்பாகம்) ஏன் மிகவும் மோசமாக இருக்கிறது? அது ஏன் இவ்வளவு பெரியதாகவும் இருக்கிறது? யோனிப் புழை ஏன் மிகவும் அகலமாக உள்ளது? உங்களுக்கு சுகப்பிரசவம் நடந்ததா?’. அதனால்தான் நான் அறுவை சிகிச்சை செய்தேன்.” என எழுதப்பட்டுள்ளது. ‘லேபியாபிளாஸ்டி’ என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் அழகு அறுவை சிகிச்சையின் (cosmetic surgery) மிகவும் பொதுவான வகை. உலகெங்கிலும் உள்ள இளம் பெண்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் செயல்முறைகளில் ஒன்றாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்ணுறுப்பின் தோற்றம் குறித்த கவலையால் அறுவை சிகிச்சையை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அவசியமின்றிச் செய்யப்படும் அறுவை சிகிச்சை இந்த அறுவை சிகிச்சை லேபியா மைனோரா (labia minora) பகுதியை மறுவடிவமைப்பு செய்கிறது. லேபியா மைனோரா என்பது யோனிப்புழையின் இருபுறமும் உள்ள தோலின் மடிப்புகள், பொதுவாக ‘யோனி உதடுகள்’ எனக் குறிப்பிடப்படுகின்றன. 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு இந்தச் செயல்முறையைச் செய்யக்கூடாது, ஏனெனில் பருவமடைவதைத் தாண்டி, குறிப்பிட்ட வயதுவந்த பருவம் வரை லேபியா தொடர்ந்து வளர்ச்சி நிலையைக் கொண்டிருக்கும். இது, பெண்கள் மற்றும் பாலின-பன்முகத்தன்மை கொண்ட நபர்களுக்கு சுகாதாரம், உடலுறவின் போது ஏற்படும் சிரமங்கள் அல்லது உடற்பயிற்சியின் போது ஏற்படும் அசௌகரியம் ஆகியவற்றுக்கான சிகிச்சையாக இருக்கும். ஆனால் பெண்ணுறுப்பின் தோற்றம் பற்றிய கவலையால் இந்த அறுவை சிகிச்சை செய்யக்கூடாது. இருப்பினும், தோற்றம் குறித்த கவலையால் அறுவை சிகிச்சையை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் லேபியாபிளாஸ்டி ஆஸ்திரேலியாவில், 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் ‘லேபியாபிளாஸ்டி’ அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர், அல்லது செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது. ஜூன் மாதம் விமன்ஸ் ஹெல்த் விக்டோரியா எனும் அமைப்பால் வெளியிடப்பட்ட ‘லேபியா டைவர்சிட்டி’ என்ற அறிக்கையில் 1,030 பெண்களிடம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. “ஆபாசப் படங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், பெண்ணுறுப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். இதனால் லேபியா அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அல்லது அதனை செய்துக்கொள்ள நினைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,” என்று அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான சர்வதேச சங்கத்தின் (ISAPS) கூற்றுப்படி, 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023-இல் உலகளவில் லேபியாபிளாஸ்டி செய்பவர்களின் எண்ணிக்கை 14.8% அதிகரித்துள்ளது. ‘ISAPS’ நடத்திய வருடாந்திர உலகளாவியக் கணக்கெடுப்பு, லேபியாபிளாஸ்டி சிகிச்சையில் முன்னணி நாடாக பிரேசில் இருப்பதாகக் காட்டியது. அங்கு ஆண்டுக்கு 28,000-க்கும் அதிகமானோர் இந்த அறுவை சிகிச்சையைச் செய்துகொள்கின்றனர். பிரேசிலின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் உறுப்பினரும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான ரெனாட்டா மாகல்ஹேஸ் கூறுகையில், “பிரேசிலியப் பெண்கள் தங்கள் தோற்றத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். கலாசார ரீதியாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை நாடுகிறார்கள்,” என்கிறார். பட மூலாதாரம்,INSTAGRAM.COM/VALSANTANAFITT படக்குறிப்பு,வால் சந்தனா ‘உடலுறவின் போது சங்கடம்’ பிரேசிலைச் சேர்ந்த 27 வயதான வால் சான்டானா, ஒரு பாடிபில்டிங் வீராங்கனை. அவர் கடந்த ஆண்டு லேபியாபிளாஸ்டி செய்து கொள்ள முடிவு செய்தார். “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் பாடிபில்டிங் செய்யத் தொடங்கியபோது, அனபோலிக் ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்தினேன். அந்தச் சமயம், இந்த அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது,” என்று அவர் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார். “போல்டெனோன் மற்றும் ஆக்ஸாண்ட்ரோலோன் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதன் பக்க விளைவாக என் பெண்ணுறுப்பு விரிவடைந்தது,” என்கிறார் அவர். அவரைப் பொறுத்தவரை இந்தப் பிரச்னையால், உடலுறவின் போது அவர் எப்படி சங்கடமாக உணர்ந்தார் என்பதுதான் முதன்மையான கவலை. இன்ஸ்டாகிராமில் தனது அறுவை சிகிச்சை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சான்டானா, இந்தச் சிகிச்சை செயல்முறை தனது நம்பிக்கையையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியதாகக் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மகப்பேறு மருத்துவர் முஜ்தேகுல் வீகோக்லு கராக்கா, பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பு பற்றி மேலும் அறிந்து கொள்வதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறார் பின் விளைவுகளின் அபாயம் பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதாரச் சேவை (NHS), “லேபியாபிளாஸ்டி செய்துகொள்வது ஒரு பெரிய முடிவாகும். ஒருவர் அந்த முடிவை கவனமாகச் சிந்தித்து எடுக்கவேண்டும்,” என்று அறிவுறுத்துகிறது. "இது விலை உயர்ந்த அறுவைசிகிச்சை. பல அபாயங்களைக் கொண்டுள்ளது. நீங்கள் எதிர்பார்த்த முடிவைப் பெறுவீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும் அது உங்கள் உடலைப் பற்றிய நல்ல உணர்வை ஏற்படுத்தாது,” என்று தேசிய சுகாதாரச் சேவை கூறுகிறது. லேபியாபிளாஸ்டியில் எப்போதாவது ரத்தப்போக்கு, நோய்த்தொற்று, திசுக்களில் வடு, பெண்ணுறுப்புகளின் உணர்திறன் குறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். “சில பெண்கள் தங்கள் லேபியாவின் தோற்றத்தை விரும்பாததால் லேபியாபிளாஸ்டி செய்ய விரும்புகிறார்கள். ஆனால் உங்கள் யோனிப்புழையைச் சுற்றிக் குறிப்பிடத்தக்க தோல் மடிப்புகள் இருப்பது முற்றிலும் இயல்பானதும்,” என்று NHS கூறுகிறது. மகப்பேறு மருத்துவர் முஜ்தேகுல் வீகோக்லு கராக்கா, பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்வதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும் எந்த ஒரு அறுவை சிகிச்சை முறைகயையும் கருத்தில் கொள்வதற்கு முன்பு அவர்கள் தங்கள் சொந்த உடலுடன் நல்ல உணர்வை கொண்டிருக்க வேண்டும், என்கிறார். பல்கலைக்கழக மாணவியான எய்லுல் குல்சே காரா இதனை ஒப்புக்கொள்கிறார். "பெண்களின் பாலியல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க நாம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும். அறுவை சிகிச்சை அல்லது க்ரீம்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்திற்கு எதிராக, குற்றவுணர்ச்சி, கவலைகள் போன்ற உணர்வுகளில் இருந்து விடுதலை அளிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார். கூடுதல் செய்தி: பிபிசி நியூஸ் பிரேசில் நிருபர் ஜியுலியா கிராஞ்சி https://www.bbc.com/tamil/articles/c049l4v2px3o
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது! 24 AUG, 2024 | 09:31 AM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (23) யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவை படகு இலங்கை கடற்படையினரால் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளை மயிலிட்டி கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/191843
-
சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
புதுப்பிக்கப்படாத சாரதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்ய எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை - ரஞ்சித் ரூபசிங்க Published By: VISHNU 24 AUG, 2024 | 12:00 AM புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அவ்வாறு எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்தார். இதுவரை புதுப்பிக்கப்படாத சுமார் 2 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிப்பதற்காக புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான அனைத்துப் பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (23) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 1960 களில் இந்நாட்டின் முதல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டதிலிருந்து, சுமார் 12.3 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித் ரூபசிங்க குறிப்பிட்டார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க, ‘’இந்த நாட்டில் முதல் சாரதி அனுமதிப் பத்திரம் 60 காலப்பகுதிகளில் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சுமார் 12.3 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 60 களில் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு காலாவதி திகதி இல்லாததால், அந்த அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்காமல் பயன்படுத்தலாம். எனவே, சுமார் 2 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்களை வைத்திருப்பவர்களின் தகவல்கள் புதுப்பிக்கப்படவில்லை. போக்குவரத்துத் துறை தொடர்பான அனைத்து சேவைகளும் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் சாரதிகளுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள புள்ளிகள் குறைத்தல் முறைமை மற்றும் குறித்த இடத்திலேயே அபராதம் செலுத்துவதற்கான பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன. 2025 ஜனவரி 01 முதல் இந்தப் புள்ளி குறைக்கும் புதிய முறை மற்றும் குறித்த இடத்திலேயே அபராதம் செலுத்துதல் உள்ளிட்ட புதிய வழிமுறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கு அனைத்து சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்களின் புதுப்பிக்கப்பட்ட தகவல்களும் அவசியமாகும். அதன்படி, இதுவரை புதுப்பிக்கப்படாத சுமார் 02 மில்லியன் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களின் தகவல்களை புதிப்புக்க ஒரு பொறிமுறையை மிக விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம். அதற்காக புதிய மருத்துவ அறிக்கைகளைப் பெறவோ அல்லது மோட்டார் வாகனத் திணைக்களத்தற்கு வருகை தரவோ அவசியமில்லை. புதிய முறைமையின் கீழ் அனைத்து சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்களின் தகவல்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்க எதிர்பார்க்கிறோம். அது தவிர, புதிய சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படமாட்டாது அல்லது ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட மாட்டாது. இது தொடர்பாக வெளியாகும் பிரச்சாரங்கள் முற்றிலும் தவறானவை என்பதைக் கூற வேண்டும். மேலும், இந்தப் புதுப்பிப்புகளைச் செய்த பிறகு, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இ-சாரதி அனுமதிப் பத்திரங்களை ( e-Driving license ) அறிமுகப்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம். இதேவேளை, கடந்த காலத்தில் அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 08 இலட்சம் பேருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டியிருந்தது. அதில் இதுவரை 91,000 பேருக்கு மாத்திரமே அட்டை வழங்கவேண்டியுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் அவர்களுக்கும் அட்டைகளை வழங்க முடியும். அதில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 02 லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் அட்டைகள் வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் வழமை போன்று சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்க முடியும். மேலும், இணைய வழி ஊடாக புகையிரத பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை நேற்று (22) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. www.pravesha.lk இணையத் தளம் மூலம் டிஜிட்டல் வழியில் பயணிகள் வரிசையில் காத்திருக்காமல் டிஜிட்டல் புகையிரத பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். தேவையானவர்கள் முன்னர் போன்றே கவுன்டர்கள் மூலமாகவும் பயணச்சீட்டுகளைப் பெறலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் சீசன் டிக்கெட்டுகளுக்கும் இந்த முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம். மேலும், புகையிரத இருக்கை முன்பதிவு, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளுக்கும் அடுத்த 03 மாதங்களில் புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்படும்.’’ என்று தெரிவித்தார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்கவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/191835
-
யாழில் ஆரம்பமான மாபெரும் வர்த்தக கண்காட்சி..!
யாழ்ப்பாணத் தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (23.08.2024) ஆரம்பமான இந்த கண்காட்சி நாளை (24) மற்றும் நாளை மறுதினம் 25ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளது. அனுமதி இலவசம் இக் கண்காட்சியினை முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும். இன்றைய நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணைதூதரக அதிகாரி ராஜேஷ் பேனகார், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்.பிரணவன், நிகழ்வின் ஊடக இணைப்பாளர் ஜெயரஞ்சன் யோகராஜ் ஆகியோர் அதிதியாக கலந்து கொண்ட. இந்நிலையில், இரண்டாம் நாள் நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். https://tamilwin.com/article/a-grand-trade-fair-started-in-jaffna-1724410658
-
தமிழ் மக்கள் ஒருமித்த சக்தியானால் இனியும் எம்மை ஏமாற்ற முடியாது; அரியம் நேர்காணல்
தேர்தல் பேரம் பேசும் அரசியலினூடாக எதையும் தமிழ் மக்கள் சாதிக்கப்போவதில்லை என்பதை கடந்த தேர்தல்களின் ஊடாக வரலாற்று பாடத்தை நாங்கள் கற்றுக்கொண்டுவிட்டோம். அந்த அடிப்படையில் சிங்கள தலைவர்களிடம் ஏமாறியது போதும் என்ற ரீதியில் தான் தமிழர் தாயகத்தில் இருக்கின்ற கட்சிகளும் சிவில் சமூகத்தவர்களும் இணைந்து ஒரு பொது கட்டமைப்பை உருவாக்கி அதனூடாக பொது வேட்பாளராக என்னை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்கள். இணைந்த வட – கிழக்கு மக்கள் ஒருமித்து ஒரு சக்தியாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சர்வதேசத்துக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கும் ஒரு தீர்க்கமான செய்தியை கொடுக்க முடியும். இனியும் தமிழ் மக்களை ஏமாற்றமுடியாது, அவர்களுக்கான தீர்வை வழங்கியே ஆக வேண்டுமென்ற செய்தியை கொடுக்கின்ற அதேவேளை, இனியும் சிங்கள தலைவர்களை நம்பி அவர்களுக்கு வாக்களிக்கமாட்டோம் என்ற செய்தியையும் தமிழ் மக்கள் வழங்க வேண்டும் என தமிழ் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ந.லெப்ரின்ராஜ் கேள்வி: தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் இணைந்து பொதுக் கட்டமைப்பினூடாக உங்களை பொது வேட்பாளராக வடக்கு - கிழக்கில் நிறுத்தியிருக்கின்றன. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த கருத்திட்டம் ஏற்பட்டதன் பின்னணி என்ன? இதனூடாக நீங்கள் சாதிக்கப்போவது என்ன? பதில்:கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறார்கள். யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த ஐந்து ஜனாதிபதிகளுடன் தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகள் சம்பந்தமாகவும் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் பேசியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தமிழர்களை ஏமாற்றுவதையே குறிக்கோளாக கொண்டு செயற்பட்டார்கள். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலாக இருக்கட்டும் பொது தேர்தலாக இருக்கட்டும் இந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆணையை மதித்து தமிழ் மக்கள் தென்னிலங்கையின் தலைவர்களுக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் தமிழ் மக்களுடைய வாக்குகளை பெற்றுக்கொண்ட தென்னிலங்கை தலைவர்கள் தேர்தலுக்கு பின்னர் தமிழ் மக்களை ஒரு பொருட்டாக மதிக்காத நிலைமையே தொடர்ந்தது. ஏற்கனேவே அரசியலமைப்பில் இருக்கின்ற 13 ஆவது திருத்த சட்டத்தையே கொடுப்பதற்கு எந்த ஆட்சியாளர்களும் தயாராயிருக்கவில்லை. பேசி பேசி காலத்தை இழுத்தடித்தார்களே தவிர, தமிழ் மக்களுக்கு ஒரு சிறு தீர்வை கொடுப்பதற்கு கூட அவர்கள் முன்வரவில்லை. 2015 இல் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்தபோதிலும் கூட, குறிப்பாக அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்பட்ட போதிலும் கூட தமிழர்களுக்கு ஒரு தீர்வை தர அவர்கள் முன்வந்திருக்கவில்லை. எனவே தேர்தல் பேரம் பேசும் அரசியலினூடாக எதையும் நாங்கள் சாதிக்கப்போவதில்லை என்பதை கடந்த தேர்தல்களின் ஊடாக வரலாற்று பாடத்தை நாங்கள் (தமிழர்கள்)கற்றுக்கொண்டுவிட்டோம். அந்த அடிப்படையில் ஏமாறியது போதும் என்ற ரீதியில் தான் தமிழர் தாயகத்தில் இருக்கின்ற கட்சிகளும் சிவில் சமூகத்தவர்களும் இணைந்து ஒரு பொது கட்டமைப்பை உருவாக்கி அதனூடாக ஒரு பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்கள். இணைந்த வட-கிழக்கு மக்கள் ஒருமித்து ஒரு சக்தியாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சர்வதேசத்துக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கும் ஒரு தீர்க்கமான செய்தியை கொடுக்க முடியும். இனியும் தமிழ் மக்களை ஏமாற்றமுடியாது, அவர்களுக்கான தீர்வை வழங்கியே ஆக வேண்டுமென்ற செய்தியை கொடுக்கின்ற அதேவேளை, இனியும் சிங்கள தலைவர்களை நம்பி அவர்களுக்கு வாக்களிக்கமாட்டோம் என்ற செய்தியையும் தமிழ் மக்கள் வழங்க வேண்டும். கேள்வி: மிகப்பெரியதொரு பொறுப்பு உங்களிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 2009 இற்கு பின்னரான ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்கள் தென்னிலங்கையின் தலைவர்களுக்கே வாக்களித்து வந்த நிலையில், இந்த 15 வருடங்களில் புதியதொரு தெரிவாக இந்த பொது வேட்பாளர் விடயம் தற்சமயம் உதயமாகியிருக்கிறது. இந்நிலையில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் நீங்கள் இதனை எவ்வாறு கையாளப்போகிறீர்கள்? பதில்: தமிழ் பொது கட்டமைப்பு மிகப்பாரியதொரு பொறுப்பை கையிலெடுத்திருக்கிறார்கள். அதில் என்னை ஒரு அடையாளமாக-குறியீடாக காட்டியிருக்கிறார்கள். ஆகவே இந்த தேர்தலில் ஏற்படவிருக்கின்ற முடிவுகள் அனைத்தும் எனக்கு மாத்திரம் உரியதல்ல, அது தமிழர் தேசம் முழுவதற்குமானது. கேள்வி: உங்களுடைய தெரிவை கிழக்கு மாகாண மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்? பதில்: கிழக்கு மாகாண மக்கள் தமிழ் தேசியம் தொடர்பில் உறுதியானவர்கள். தந்தை செல்வநாயகத்தின் காலம் தொடக்கம் அதேபோல், ஆயுதப்போராட்ட காலத்திலும் தற்பொழுதும் அவர்கள் (கிழக்கு மாகாண மக்கள்) தமிழ் தேசியம் தொடர்பில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், 2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதாவது தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பிளவுக்கு பின்னர் கிழக்கு மாகாண மக்களின் இந்த உறுதித்தன்மையை குலைப்பதற்காக பல சதி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரதேசவாதத்தை முதலீடாக கொண்டு அரசியல் செய்யும் ஒரு மோசமான கலாசாரம் கிழக்கு மாகாணத்தில் வலிந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனூடாக பல அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் அடிவருடிகளாக இருந்துகொண்டு தங்களுடைய சுயநல அரசியலை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதன் மூலமாக மக்கள் எந்த நன்மையையும் பெற்றதாக இல்லை. பல வருடங்களாக மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையை மீட்பதற்காக அப்பிரதேச மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல், கல்முனை பிரதேச செயலகத்துக்கு ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாது அந்த போராட்டம் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இவ்விரு விவகாரங்களும் மக்கள் சார்ந்த பிரச்சினைகள். இவற்றைக் கூட தீர்த்துவைக்க முடியாது அரசாங்கத்துடன் தொங்கி கொண்டு இருக்கும் தலைவர்கள் தங்களுடைய அரசியல் பிழைப்பை நடத்துவதற்கு தேர்ந்தெடுத்த ஆயுதமே பிரதேசவாத அரசியல். இது தமிழினத்துக்கு ஆரோக்கியமான அரசியல் அல்ல. வடக்கு-கிழக்கு மக்கள் இவ்வாறான பிடிகளுக்குள் அகப்பட்டுவிடக்கூடாது. தமிழ் மக்கள் நீண்டகாலமாக சமஷ்டி தீர்வையே வேண்டி நிற்கிறார்கள். 13 ஆவது திருத்தம் என்பது ஏற்கனவே இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரு விடயம். அதனை ஒரு இரவில் சர்வாதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியால் அமுல்படுத்த முடியும். ஆனால் 13 தான் தமிழ் மக்களுடைய தீர்வு என்றும் அதனை ஒரு பூதாகாரமான விடயமாக சிங்கள மக்களுக்கு காட்டி அதனை பேசி பேசியே அரசியல் செய்யும் சிங்கள தலைவர்களிடத்திலிருந்து தமிழ் மக்கள் எதனை பெற முடியும் என சிங்கள தரப்புகளின் பின்னால் செல்லும் தமிழ் தலைவர்கள் சிந்திக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. ஆகவே சிங்கள தலைவர்களின் இவ்வாறான பேச்சுக்களை நம்புவதற்கும் அவர்களுடைய அருவருடிகளாக இயங்கும் தமிழ் தலைவர்களின் பேச்சுக்களை, வாக்குறுதிகளை நம்புவதற்கு தமிழ் மக்கள் முட்டாள்களல்ல. எனவே இனியும் தமிழ் மக்களை முட்டாள்களாக்க முடியாது என்பதை எதிர்வரும் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் மூலம் தமிழ் மக்கள் அந்த கடமையை ஒட்டுமொத்தமாக உணர்த்துவார்கள். அந்த கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. இதுவரை காலமும் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் போராடியிருக்கிறார்கள், ஆயுதம் ஏந்தி போராடியிருக்கிறார்கள். இன்று புதியதொரு போராட்டத்துக்கு தமிழ் மக்கள் முகம்கொடுக்கவிருக்கிறார்கள். அதாவது எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கும் போராட்டத்தை செய்யவிருக்கிறார். அந்த போராட்டத்தில் தமிழ் மக்கள் வென்றே ஆகவேண்டுமென்ற ஒரு அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதனை அவர்கள் சிறப்பாக செய்வார்கள். இந்த தேர்தலில் ‘தமிழ் பொது வேட்பாளர்’ என்பவர் வென்றால் ஜனாதிபதி கதிரையில் அமரப்போவதில்லை. ஆனால், இந்த வெற்றி தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை கூறும் செய்தியாக இருக்கப்போகிறது. அதேபோல், அவர்கள் (தமிழர்கள்)தங்களுடைய உரிமை, அரசியல் தீர்வில் இன்றும் ஒருமித்த கொள்கையுடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை சர்வதேசத்துக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கும் ஒரு ஆணித்தரமான செய்தியை கூறவிருக்கிறது. அதனூடாக எங்களுடைய (தமிழர்கள்)நகர்வுகளுக்கு சாதகமான சமிக்ஞைகள் உருவாகும்-உருவாக்கப்படும். 2009 இற்கு பின்னரான காலகட்டத்தில் தமிழ் தேசிய கட்சிகள் சிதறுண்டு பரவிக்கிடக்கின்றன. ஒரு தலைமை என்ற நிலைமை மாறி பல தலைமைகள் என்ற சூழல் உருவாகியிருக்கிறது-உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழ் தேசிய கட்சிகள் ஒரு குடையின் கீழ் உருவாவதற்கான ஒற்றுமை இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்து வாக்களிப்பதன் ஊடாக ஏற்படும். அதேபோல் தமிழ் தேசிய அரசியலை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்கும் இந்த தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கும். எனவே இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்து வாக்களிப்பதன் ஊடாக தமிழ் தேசத்தின் பல தலைவிதிகள் மாற்றப்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு பொதுக்கட்டமைப்பின் தீர்மானத்துக்கு அமைய அணிதிரள்வது அவசியமாகும். யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் சென்றாலும், யுத்தம் தான் மௌனிக்கப்பட்டிருக்கிறது; ஆயுத போராட்டம் தான் மௌனிக்கப்பட்டிருக்கிறதே தவிர, தமிழர்களுடைய விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்படவில்லை, உரிமை போராட்டம் மௌனிக்கப்படவில்லை, தீர்வுக்கான போராட்டம் மௌனிக்கப்படவில்லை என்ற செய்தியை சர்வதேசத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் மீண்டும் ஒரு தடவை உறுதியாக சொல்வதற்கான ஒரு களமாக இந்த தேர்தலை வடக்கு-கிழக்கு மக்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். கேள்வி; ‘தமிழ் பொது வேட்பாளர்’ விவகாரம் தொடர்பில் தமிழரசு கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் இருக்கின்றன. அவர்கள் (தமிழரசு கட்சி) இதுவரை எந்த இறுதி முடிவையும் அறிவிக்காத ஒரு நிலையில்தான் தாங்கள் பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கிறீர்கள். இதன் பின்னணி என்ன? பதில்: தமிழரசுக் கட்சிக்குள் இரு பிரிவுகள் என்ற சூழல் ஏற்பட்டது. அண்மையில் நடந்த தலைமைக்கான போட்டியின் பின்னரே தலைமைக்கான தெரிவு தொடர்பில் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எந்தவொரு முடிவையும் மத்திய குழுவில் ஒற்றுமையாக எடுக்கமுடியாத நிலைமை தொடர்ந்தும் இருந்துகொண்டிருக்கிறது. தன்னிச்சையாக கருத்துக்களை கூறுகின்ற விடயம், தன்னிச்சையாகா முடிவுகளை எடுத்துவிட்டு அது கட்சியின் முடிவு என்று வெளியில் கூறுவது என தனிமனித போக்கு தமிழரசு கட்சிக்குள் அண்மைக்காலமாக இருந்துவருகிறது. உண்மையில் நான் தமிழரசுக்கட்சிக்குள் இருந்து கொண்டு பொது வேட்பாளராக வரவில்லை. நான் பொதுவேட்பாளராக வந்ததன் நோக்கம் என்னவென்றால், தந்தை செல்வாவின் கொள்கையின்பால் -தந்த செல்வா என்ன நோக்கத்திற்காக இந்த கட்சியை உருவாக்கினாரோ அவருடைய நோக்கத்தின் அடிப்படையில்தான் நான் பொது வேட்பாளராக களமிறங்கியதை பார்க்கிறேன். அதேபோல், இதனை தமிழரசு கட்சிக்கு கிடைத்த பெருமையாகத்தான் நான் பார்க்கின்றேன். தமிழரசு கட்சிக்குள் இருந்துகொண்டு நான் பொதுவேட்பாளராக களமிறங்கியது தவறு என்று அந்த கட்சி சார்ந்த சிலர் விமர்சித்தாலும் நான் அவ்வாறு பார்க்கவில்லை. தமிழரசு கட்சி என்ன நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் இந்த பொது வேட்பாளர் விடயத்திலும் இருக்கிறது என்பதை உணர்ந்தே இந்த தெரிவுக்கு நான் விரும்பி சம்மதித்தேன். கேள்வி: கட்சிக்கு தெரிவிக்காமல் இந்த முடிவை தங்கள் எடுத்ததால் உங்கள் மீது அதிருப்தி கொண்டிருக்கும் தமிழரசு கட்சியின் தரப்பு தங்களிடம் விளக்கம் கேட்டிருப்பதை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறீர்கள்? பதில்: கட்சிக்கு எதிராக வழக்கு போட்டவர்கள் கூட இன்னும் கட்சிக்குள் இருந்துகொண்டு கட்சியின் செயற்பாடுகளில் கலந்துகொள்கிறார்கள். அதேபோல், கட்சியை பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய அரசியல் முன்னெடுப்புகளை முன்னெடுக்கிறார்கள். நீதிமன்ற செயற்பாடுகள் நிறைவடையும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் கலந்துகொள்ளக்கூடாது என தடைபோடவேண்டுமென்று கட்சியின் மத்திய குழுவில் நாங்கள் தீர்மானித்திருக்கமுடியும். ஆனால், எவரும் அவ்வாறு செய்யவில்லை. உண்மையில் வழக்கு போட்டவர்கள் தான் கட்சிக்கு எதிராக செயற்பட்டிருக்கிறார்கள் கட்சியை மலினப்படுத்தியிருக்கிறார்கள். நான் அவ்வாறு செய்யவில்லை. தமிழ் தேசியத்துக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் நான் எடுத்திருக்கின்ற முடிவுக்காக என்னிடம் விளக்கம் கோருவது எந்த அடிப்படையில் என்பதை தமிழ் மக்கள் தான் சிந்திக்கவேண்டும். கட்சியை சிதைத்தவர்களிடத்தில் எந்த விளக்கமும் கோராமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டு தமிழ் தேசியத்துக்காக களமிறங்கியிருக்கும் என்னிடத்தில் விளக்கம் கோருகிறார்கள் என்றால் அவர்களுடைய திட்டம், மனநிலை எப்படிப்பட்டது என்பதை மக்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் (மக்கள்)தான் இதற்கு தக்க பதிலை வழங்கவேண்டும். தமிழரசு கட்சி இதுவரை பொதுவேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்றோ ஆதரிக்க கூடாது என்றோ முடிவெடுக்கவில்லை. அல்லது சிங்கள வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கவேண்டுமென்று முடிவெடுக்கவில்லை. இப்படியிருக்கையில் ஏற்கனவே ஒரு முடிவை கட்சி எடுத்துவிட்டு அதனை அறிவித்த பின்னர் நான் இந்த முடிவை எடுத்திருந்தால் அது தவறு என்று நான் ஏற்றுக்கொள்வேன். ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவை எடுக்கமுடியாத ஒரு சூழலில்தான் இதுவரை தமிழரசு கட்சி இருந்துவருகிறது. நான் என்னமோ சிங்கள தரப்புடன் இணைந்து போட்டியிடுவது போன்று என்னிடம் விளக்கம் கேட்பது மிகவும் வருத்தம் தரும் விடயமாக இருக்கிறது. தமிழ் மக்கள் தான் இது தொடர்பில் உணர்ந்துகொள்ள வேண்டும். 2004 ஆம் ஆண்டு முதல் தமிழரசு கட்சியில் இருப்பவன் என்ற அடிப்படையில் விளக்கம் கூற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதனை நான் செய்வேன். ஆனால் சிலர் செய்யும் பெரிய தவறுகளை பொருட்படுத்தாமலும் என்னை போன்ற தவறே செய்யாத ஒருவருக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிப்பதும் தமிழரசு கட்சிக்கு ஆரோக்கியமான விடயமாக இருப்பதாக நான் கருதவில்லை. கேள்வி: பொது வேட்பாளர் என்ற விடயத்துக்கு பின்னால் ஒரு சிங்கள வேட்பாளரை வெல்லவைக்கும் சதித்திட்டம் இருப்பதாக சில தமிழ் தேசிய கட்சிகள் கூறிவருகின்றனவே. இது தொடர்பில் உங்களுடைய விளக்கம் என்ன? பதில்: தேர்தல் காலங்களில் வழமையாக வருகின்ற விமர்சனங்களாகவே இதனையும் நான் பார்க்கின்றேன். எதிர்வரும் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக நான்கு பேர் களமிறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்குள்ளேயே தங்களுடைய வெற்றி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. குறிப்பாக இம்முறை தேர்தலில் தான் ஒரு கணிப்பை அல்லது இவர்களுக்கிடையில் தான் போட்டி என்ற முடிவுக்கு வரமுடியாத ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் கூறுவதை போன்று எந்த சிங்கள வேட்பாளரை வெல்ல வைக்க முடியும்? சிங்கள வேட்ப்பாளர்களுக்கிடையிலேயே ஒரு தெளிவான முடிவு இல்லாத நிலையில் நாங்கள் யாரை வெல்லவைப்பதற்கு இந்த பொது வேட் பாளர் விவகாரத்தை கையாள்கிறோம் என்பதை அவர்களே கூறவேண்டும். பொதுக்கட்டமைப்புக்கு எதிராக – தமிழ் தேசிய கொள்கையை மழுங்கடிப்பதற்காக – இந்த நோக்கத்தை குழப்பி திசைதிருப்புவதற்காக திட்டமிட்டு செய்யப்படுகின்ற ஒரு விமர்சனமாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம். என்னை பொருத்தமட்டில் நான் வேட்பாளராக களமிறங்கினாலும் நான் தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்துவதற்கும் அதனை பாதுகாத்து அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்வதற்கும் பொது கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்குமான ஒரு அடையாளமாகவே நான் இருக்கிறேன். என்னுடைய பணி என்னவென்றால் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வெளியாகவிருக்கின்ற மக்களின் ஆணையின் பிரதிபலிப்பை பொதுக்கட்டமைப்பிடம் கொடுப்பது மாத்திரமே. அதன்பின்னரான நடவடிக்கைகளை பொதுக்கட்டமைப்பு தான் தீர்மானிக்கும். நான் எடுத்துக்கொண்ட பணி என்பது செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மாத்திரமே. கேள்வி: பொதுக்கட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தென்னிலங்கையின் வேட்பாளர்கள் தொடர்ந்தும் அழைப்பு விடுத்து வருவதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? பதில்: பொதுக்கட்டமைப்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள், இல்லாதவர்களும் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் ஒரு நாட்டின் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அழைக்கும்போது அவர்களை சென்று சந்திப்பது என்பது வளமையானதொன்று. அதனை பெரிய விடயமாக நான் பார்க்கவில்லை. பொதுக்கட்டமைப்பு என்பது ஒரு கொள்கையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக உழைத்தவர்களும் இதில் இணைந்தவர்களும் ஒரு கொள்கையின் பால் இணைந்திருக்கிறார்கள். ஆகவே அந்த கொள்கைக்கு எதிராக எவரும் செயற்படமாட்டார்கள் என்பதில் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டுள்ளோம். ஆகவே எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி ஆட்சியாளர்களுக்கும் சர்வதேசத்துக்கு மாத்திரம் தமிழ் மக்கள் ஒரு செய்தியை கூறப்போவதில்லை. பதிலாக பிரிந்து நிற்கின்ற தமிழ் தேசிய கட்சிகளுக்கும் ஆணித்தரமான செய்தியை கொடுக்கும். கேள்வி: தமிழரசு கட்சி இதுவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை. மிகப்பெரும் பழமையான ஒரு கட்சி முடிவெடுப்பதில் தடுமாறிவருவது எவ்வாறான பாதிப்பை தேர்தலில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறீர்கள்? பதில்: தமிழ் தேசிய அரசியலில் தாய் கட்சியாக இருப்பது தமிழரசு கட்சி. அந்த அக்கட்சி முடிவெடுக்காமல் திண்டாடுகிறதென்றால் அது கவலைக்குரிய விடயமாகும். விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம் என தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் சி.வி.கே சிவஞானம் அவர்கள் கூறியிருக்கிறார். இன்னொருவர் கூறுகிறார் தேர்தலுக்கு முதல் நாள் முடிவை அறிவித்தாலும் பரவாயில்லை என்று. ஆகவே, இவ்வாறான தெளிவற்ற கதைகள்-பேச்சுக்கள் மக்களை குழப்புகின்ற மக்களை முட்டாள்களாக்குகின்ற கருத்தாகவே நான் பார்க்கிறேன். பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சி இந்த நிலைமைக்கு வந்திருப்பது பெரும் கவலைக்குரியது. கேள்வி: பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் மக்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன? பதில்: விடுதலை போராட்டத்தை எடுத்துக்கொண்டால் புலம்பெயர்ந்த தமிழர்களும் அதில் பங்கெடுத்தவர்கள். அவர்கள் அச்ச சூழ்நிலைகளால் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். அதேபோல், ஈழத்திலும் விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்த பலர் இருக்கிறார்கள். அவர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து இருக்கின்ற அதேவேளை, இன்றும் தங்களுடைய உறவுகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை துன்பங்களை அனுபவித்த போதிலும் எங்களுக்கான உரிமை இதுவரை கிடைக்கவில்லை. 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை தமிழர்கள் இழந்திருக்கிறார்கள். இத்தனை உயிர்களை காவுகொடுத்தும் எங்களுக்கான உரிமை, தீர்வு இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஆகவே, எனவே எமக்கான தீர்வு என்பது சர்வதேசத்தின் ஊடாகவே அமையும் என்ற ஒரு முடிவுக்கு தமிழ் மக்கள் வந்திருக்கிறார்கள். எனவே காத்திரமான இராஜதந்திர முறையில் தான் எங்களுடைய தீர்வை நாங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். ஆகவே அந்த இராஜதந்திர ரீதியான பங்களிப்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் உரிமை இருக்கிறது. அவர்களும் அதில் பங்காளர்களாக இருக்கவேண்டும். இதுவரை காலமும் எவ்வாறு தமிழர்களுடைய விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் புலம்பெயர்ந்த தேசங்களிலிருந்து பங்களித்தார்களோ அதே பங்களிப்பு இனியும் தொடர வேண்டும். ஆகவே ஈழத்தமிழர்கள் தங்களுடைய உரிமைகள் - தீர்வுத்திட்டத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறார்களா அல்லது சிங்கள ஆட்சியாளர்கள் பக்கம் சோரம் போய் விட்டார்களா என்ற செய்தியை இந்த தேர்தலின் ஊடாக காட்டவேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கிறது. எனவே தமிழ் மக்கள் தங்களுடைய உறுதியான பயணத்தை மீண்டும் நிரூபித்துக்கொள்வதற்கும் இன்னும் தமிழ் மக்கள் தங்களுடைய உரிமையிலும் தீர்விலும் திடமாக இருக்கிறார்கள் என்பதை சர்வதேசத்துக்கு இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு பல குரலில் ஒரு செய்தியை கூறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதுடன், புலம்பெயர்ந்த உறவுகளும் இந்த பயணத்தில் தங்களுடைய காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டுமென கேட்கிறேன். https://thinakkural.lk/article/308029
-
கொஞ்சம் ரசிக்க
அம்புவிடும்......
-
"மா.. பிலக வெங்கடேசு.."
இந்த ஆட்டத்தையும் பாருங்கோ
-
இந்திய உயர்ஸ்தானிகர் - தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு
23 AUG, 2024 | 07:46 PM (நா.தனுஜா) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும், தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதித்தேர்தல் நிலைவரம் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பரந்துபட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் ரி.கலையரசன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை ( 22 ) மட்டக்களப்பில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது நாட்டின் சமகால அரசியல் நிலைவரம், ஜனாதிபதித்தேர்தல், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ் பிரதிநிதிகள் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் எடுத்துரைத்தனர். அதேபோன்று அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனால் கல்முனையில் கலாசார மண்டபமொன்றைத் தாபிப்பதற்கும், கிழக்கு மாகாணத்தில் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் கிளை அலுவலகத்தினை நிறுவுவதற்குமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/191831
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
சந்திரயான்-3: கடந்த ஓர் ஆண்டில் நிலவில் செய்த ஐந்து முக்கிய சாதனைகள் பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சந்திரயான்-3 பயணம் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 23 ஆகஸ்ட் 2024, 02:50 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 23, 2023. கடந்த ஆண்டு இதே நாளில், ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனையை வியந்து பார்த்தது. கடந்த ஆண்டு, சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில், இந்த நாளை தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நாளில், சந்திரயான்-3இல் இருந்து பெறப்பட்ட தகவல்கள் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. அதற்கு முன்பாக, சந்திரயான் 3 செய்த சாதனைகள் என்ன, அவை அறிவியல் உலகத்திற்கு ஆற்றிய முக்கியமான பங்களிப்புகள் என்ன என்பதை அறிந்துகொள்வது அவசியம். அதுகுறித்து சந்திரயான்-3இன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பிபிசி தமிழிடம் விளக்கினார். அதோடு சந்திரயான்-3இன் ஐந்து முக்கியமான கண்டுபிடிப்புகளை, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும் மூத்த விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரன் இங்கு தொகுத்து வழங்கியுள்ளார். இந்தியாவின் விண்வெளி சாதனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று, இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. சந்திரயான்-3 நிலவை முத்தமிட்ட தருணத்தின்போது, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதமர் நரேந்திர மோதி தேசியக் கொடியை அசைத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவைப் பாராட்டினார். நிலவின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா தனது சந்திரயான்-3 திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பெற்றது. அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் சீனாவிற்குப் பிறகு, நிலவில் ஒரு விண்கலத்தை மென்மையாகத் தரையிறக்கும் சக்தி வாய்ந்த நாடுகளின் அங்கமாக இந்தியா இச்சாதனையின் மூலம் மாறியது. 'மிகவும் வெற்றிகரமான திட்டம்' சந்திரயான்-3இல் இரண்டு முக்கியப் பாகங்கள் உள்ளன. ஒன்று, விக்ரம் லேண்டர் எனப்படும் தரையிறங்கிக் கலன், மற்றொன்று பிரக்யான் எனப்படும் உலாவி கலன். இந்த இண்டிலும் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், வெறும் 11 நாட்களில் “பல முக்கியமான” கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளதாக, சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் (நடுவில்) அவர் கூறுகையில், ”எதை நினைத்து சந்திரயான்-3 திட்டத்தைச் செயல்படுத்தினோமோ அதைவிட நிறைய சாதனைகளும் கண்டுபிடிப்புகளும் அரங்கேறியுள்ளன. இது மிகவும் வெற்றிகரமான திட்டம். அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். தென் துருவத்தில் நிலை நிறுத்தியதே பெரும் சாதனைதான். சந்திரயான்-3 நிறைய அறிவியல் ரீதியான தகவல்களைக் கொடுத்துள்ளது. இரண்டு கருவிகள் ரோவரிலும் மூன்று கருவிகள் லேண்டரிலும் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றின் மூலம், நிலவின் தரைப்பரப்பில் உள்ள வேதிப்பொருட்கள், நிலவின் மணல், வெப்பநிலை, பிளாஸ்மா, சீஸ்மிக் கதிர்கள் குறித்துப் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இவை அனைத்துமே முதன்முறை. யாரும் செய்யாததை சந்திரயான்-3 செய்திருக்கிறது,” என்றார். எப்படி இயங்கியது? சந்திரயான் 3இன் கண்டுபிடிப்புகளையும் அதனால் நிலவு குறித்த ஆராய்ச்சி எந்தளவுக்கு வேகம் அடைந்துள்ளது என்பது குறித்தும், விரிவாக பிபிசி தமிழிடம் விளக்கினார் மூத்த விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன். "கங்காரு எப்படி தன் வயிற்றில் குட்டியை வைத்துக்கொண்டு செல்லுமோ, அதேபோன்று, தன் வயிற்றில் ரோவரை சுமந்துகொண்டு விக்ரம் லேண்டர், ஆகஸ்ட் 23, 2023 அன்று சந்திரனில் தரையிறங்கியது. தரையிறங்கிய நேரத்தில் சூரியன் நிலவின் கிழக்கு அடிவானில் சுமார் ஆறு டிகிரி மேலே இருந்தது. அதாவது நிலவில் சூரியன் உதயம் ஆன பிறகுதான் தரையிறங்கியது. சூரியன் மெல்ல மெல்ல மேற்கே சென்று மறையும் வரை, 11 நாட்கள் அந்த விண்கலன் அங்கே இருந்தது." படக்குறிப்பு, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும் மூத்த விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரன் "விக்ரம் லேண்டர், பிரக்யான் மற்றும் அவற்றில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் இயங்குவதற்கு மின்னாற்றல் தேவை. சூரியன் ஒளியிலிருந்து வரும் மின்கதிர்கள் மூலம்தான் அந்த மின்னாற்றலை அக்கருவிகள் பெற்றன. சூரியன் தோன்றும் நேரத்தில் அதன் வெப்பநிலை சுமார் 50 முதல் 60 டிகிரி வரை இருக்கும். அதேவேளையில் சூரியன் மறைந்துவிட்டால் மைனஸ் 100 டிகிரியில் உறைகுளிர் ஏற்படும். இந்த உறைகுளிரில் மின்னணு கருவிகள் தாக்குப்பிடிக்க முடியாது. அதனால்தான் சூரிய வெளிச்சம் போதுமான வரையில் இருந்த இந்த 11 நாட்கள் மட்டுமே இந்த இரு கலன்களும் இயங்கின. அதனால்தான், அதன்பிறகு இந்த இரு கருவிகளையும் முடக்கி, ஆழ் உறக்கநிலைக்கு அனுப்பியது இஸ்ரோ," என்று விளக்கினார் த.வி.வெங்கடேஸ்வரன். ஆனால், இந்த 11 நாட்களிலேயே குறிப்பிடத்தக்க அளவிலான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறிய த.வி. வெங்கடேஸ்வரன் ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார். ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பார்கள். அதுபோலத்தான், இந்த 11 நாட்களில் அற்புதமான பல வேலைகளை இந்த லேண்டரும் ரோவரும் செய்திருக்கின்றன” என்கிறார் வெங்கடேஸ்வரன். பிரக்யான் ரோவர், இந்த 11 நாட்களில் சுமார் 103 மீட்டர் அங்கேயும் இங்கேயும் நகர்கிறது. போகும் வழியில் 23 இடங்களில் நின்று ஆராய்ச்சி செய்துவிட்டு நகர்ந்து சென்றது. சந்திரயான்-3இன் ஐந்து முக்கியமான கண்டுபிடிப்புகள், த.வி.வெங்கடேஸ்வரன் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. 1. சல்ஃபர் கண்டுபிடிப்பு உணர்த்துவது என்ன? ரோவரில் இரண்டு ஆய்வுக் கருவிகளை வைத்திருந்தனர். ஆல்ஃபா துகள் எக்ஸ்ரே நிறமாலை மானி (Alpha Particle X-ray Spectrometer – APXS) லேசர் தூண்டுதலுடன் சிதைக்கும் நிறமாலை மானி (Laser Induced Breakdown Spectroscope – LIBS) பெயருக்கேற்றாற்போல், முதல் கருவி ஆல்ஃபா துகள்களையும் அடுத்த கருவி லேசர் கதிர்களையும் உமிழும். நிலவின் தரைப்பரப்பில் உள்ள தாதுப் பொருள்கள் துடிப்பு நிலைக்குச் சென்று கதிர்களை வெளியிடும். ஒவ்வொரு தாதுப்பொருளும் வெளியிடும் கதிரின் அலைநீளம் அதன் கைரேகை போலத் தனித்துவமாக இருக்கும். எனவே வெளிப்படும் கதிர்களை நிறமாலை பகுப்பு செய்தால் நிலவின் தரையில் உள்ள தனிமங்களை அறிந்து கொள்ளலாம். இந்த இரண்டும், நிலவின் தரையிலுள்ள பொருட்கள் மீது பட்டுத் தெறிக்கும்போது, அதிலிருந்து வெளிவரும் கதிர், அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப இருக்கும். அந்தக் கதிர்களை நிறமாலை மானி மூலம் நாம் பகுத்தாராய்ந்தால், அங்குள்ள தாதுப் பொருட்கள், தனிமங்கள் குறித்து அறியலாம். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, நிலவின் தரைப்பரப்பில் சல்ஃபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இரு கருவிகளைக் கொண்டு தொகுப்பாக ஆராய்ந்து பார்க்கும்போது, அலுமினியம், குரோமியம், டைட்டானியம், இரும்பு, கால்சியம் போன்ற தனிமங்கள் இருக்கின்றன என்பதையும் மாங்கனீசு, சிலிகான், ஆக்சிஜன் போன்ற தாதுப்பொருட்கள் இருக்கின்றன என்பதும் தெரிய வந்தது. நிலவில் செறிவான அளவில் சல்ஃபர் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. எரிமலை வெடித்து, எரிமலைக் குழம்பு (லாவா) பரவி இருக்கும் பகுதியில்தான் சல்ஃபர் செறிவாக இருக்கும். இதிலிருந்து, நிலவின் தென்துருவப் பகுதி நிலவின் குழந்தைப் பருவத்தில் எரிமலை வெடித்து எரிமலைக் குழம்பு பரவிய பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்ற யூகத்திற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் வருகின்றனர். இந்தத் தகவல், ‘நேச்சர்’ ஆய்விதழில் வெளியாகியுள்ளது. 2. நிலா நடுக்கம் “இது ஒருபுறமிருக்க, விக்ரம் லேண்டர் எனும் தரையிறங்கிக் கலன் நின்ற இடத்திலேயே பல ஆராய்ச்சிகளைச் சிறப்பாகச் செய்திருக்கின்றது” எனக் கூறிய வெங்கடேஸ்வரன், அதையும் விரிவாக விளக்கினார். ஆகஸ்ட் 26, 2023 அன்று, தரையிறங்கிய மூன்றாவது நாளில் நிலவில் தற்செயலாக ஏற்பட்ட ‘நிலா நடுக்கத்தை’ விக்ரம் கலத்தில் உள்ள நிலா நடுக்க ஆய்வு மானி (Instrument for Lunar Seismic Activity – ILSA) பதிவு செய்திருக்கிறது. நிலாவில் ஏற்படக்கூடிய அதிர்வுகளை இது பதிவு செய்யும். விண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கிய வீரரின் உடலில் என்ன மாற்றம் நிகழும்?18 ஜூன் 2024 பட மூலாதாரம்,ISRO திராட்சைப் பழத்தோல் உலர்ந்துபோனால் எப்படிச் சுருங்கிவிடுமோ, அப்படி ஒரு காலத்தில் சூடாக இருந்த சந்திரன், குளிர்ச்சியின் காரணமாகச் சுருங்கிக்கொண்டே இருக்கிறது. இதனால் அதன் மேல்பகுதியில் நிறைய சுருக்கங்கள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் சுருக்கங்கள் காரணமாக ஏற்படும் அதிர்வுகள்தான் நிலா நடுக்கம் என்ற ஒரு கருத்து உள்ளது. இந்தக் குறிப்பிட்ட நிலநடுக்கம் எதனால் ஏற்பட்டது என்பது நமக்கு முழுமையாகத் தெரியாது. அதுகுறித்து ஆய்வு செய்துகொண்டிருக்கின்றனர். எதற்காக நிலா நடுக்கத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும்? எதிர்காலத்தில் சந்திரனில் நாம் குடியிருப்பு கட்டினால், எந்தளவுக்கு அதிர்வுகளைத் தாங்கும் வகையிலான கட்டடங்களை உருவாக்க வேண்டும் என்று தெரிய வேண்டும் அல்லவா? அதற்கு இந்த ஆராய்ச்சி உதவும். 3. நிலாவில் உள்ள மண்ணின் வெப்பத் தன்மை உலோகம் வெப்பத்தைக் கடத்தும் என்பது தெரியும். அதேபோன்று, மரம் போன்றவை வெப்பத்தைக் கடத்தாதவை என்றும் தெரியும். நிலாவில் உள்ள மண்ணின் வெப்பம் கடத்தும் திறன் என்ன? இது நமக்கு தெரியாது. இதை ஆராய்வதற்கான ஒரு கருவியை விக்ரம் லேண்டர் எடுத்துச் சென்றது. சந்திரனின் தரைப் பரப்பு வெப்ப இயற்பியல் ஆய்வு (Chandra’s Surface Thermo-physical Experiment – ChaSTE) என்பதுதான் அதன் பெயர். பூமியிலிருந்து செல்லும்போது விக்ரம் லேண்டரில் அந்தக் கருவி அப்படியே மடங்கியிருக்கும். நிலவுக்குச் சென்ற பின்பு, நிலத்தைத் தொட்டு, சிறியதாகத் துளையிட்டு சுமார் 1 செ.மீ அளவுக்கு அதனுள் செல்லும். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு,நிலாவின் மண்ணில் அவ்வளவாக வெப்பத் தன்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அப்படிச் செல்லும்போது ஒவ்வொரு மண்ணின் அடுக்கிலும் என்ன வெப்பநிலை என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடித்ததில், இந்தக் கருவியை இயக்கிய முதல் நாளில், நிலாவின் தரைபரப்பு சுமார் 50 டிகிரி வெப்பமாக இருந்தது. ஆனால், 88 மி.மீட்டருக்குக் கீழே மைனஸ் 10 டிகிரியாக இருந்தது. அப்படியென்றால், நிலாவின் மண்ணுக்கு அவ்வளவாக வெப்ப கடத்துத் திறன் இல்லை என்பது தெரிய வருகிறது. இதனால், என்ன பயன்? எதிர்காலத்தில் இந்த மண்ணை நிலவில் கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தினால் குறைவான ஆற்றலில் வெப்பக் கட்டுபாட்டைச் செய்ய முடியும் என வெளிபடுகிறது. 4. பிளாஸ்மா குறித்த கண்டுபிடிப்பு பூமியில் திடம், திரவம், வாயு நிலைகள் உள்ளன. ஆனால், நான்காவது நிலையும் உள்ளது. மிக அரிதாகத் தோன்றும் இந்த நிலை, மின்னல் வெட்டும்போது ஏற்படும். ஆனால், சூரியக் கதிர்களின் தாக்கத்தில் நிலவின் மேற்புறத்தில் தோல் போல பிளாஸ்மா அடுக்கு உள்ளது. நிலவின் தரைப்பரப்பின் அருகே பிளாஸ்மா நிலையில் உள்ள பொருள்களை ‘ரம்பா’ கருவி (Radio Anatomy of Moon Bound Hypersensitive ionosphere and Atmosphere – RAMBHA) ஆய்வு செய்தது. ஒரு கனமீட்டர் பகுதியில் ஐம்பது லட்சம் முதல் மூன்று கோடி எலக்ட்ரான்கள் செறிவு உள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. சூரியனின் கோணம் அதிகரிக்க அதிகரிக்க பிளாஸ்மா அடர்த்தி மாறுகிறதா எனவும் ஆய்வு செய்துள்ளனர். 5. பூமிக்கும் நிலாவுக்குமான தொலைவு இதுதவிர ஒரு வியப்பான கருவியும் வைத்து அனுப்பினர். விக்ரம் லேண்டரின் தலையில் ஒரு கண்ணாடி வைத்து அனுப்பினர். அதில் லேசர் பிரதிபலிப்புக் கண்ணாடி (Laser Retroreflector Array - LRA) பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு இங்கு பூமியிலிருந்து லேசர் கதிர்களை அனுப்புவார்கள். அந்தக் கதிர் இந்தக் கண்ணாடியில் பட்டுத் திரும்புவதற்கு எடுக்கும் கால இடைவெளியைக் கொண்டு நிலவின் தொலைவை மிகத் துல்லியமாக அளவிடுவார்கள். https://www.bbc.com/tamil/articles/cd057edl38zo