Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் உடல் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது - சட்டத்தரணி திருவருள் 23 AUG, 2024 | 06:12 PM வவுனியா வைத்தியசாலையில் இறந்த சிசுவின் உடல் மருத்துவ பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிரேஸ்ட சட்டத்தரணி தி. திருவருள் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வவுனியா வைத்தியசாலையில் மரணமடைந்த சிசுவின் உடலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்வதற்கு ஏற்பட்ட இழுபறி நிலைமை தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலமாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிசுவின் சார்பில் நான் இன்றைய தினம் ஆஜராகி சிசுவின் சடலத்தை யாழ். வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டுசெல்வதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பில் கெளரவ மன்றுக்கு தெளிவுபடுத்தியிருந்தேன். கௌரவ மன்று குறித்த விசாரணையில் மிகவும் உன்னிப்பாகவும் அவதானத்துடனும் செயற்பட்டு குறித்த சிசுவின் உடலினை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு உரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கூறியதன் பிரகாரம் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்ரன் புனிதநாயகம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக ஒழுங்குபடுத்தி தந்திருந்தார். சிசுவின் சடலத்தினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்று ஒப்படைப்பதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அதன் பிரகாரம், மன்றானது குறித்த சிசுவின் மரண விசாரணையை திறம்பட செய்யுமாறும் அதனுடைய அறிக்கையினை எதிர்வரும் ஒன்பதாம் மாதம் நான்காம் திகதி அல்லது அதற்கு முன்னர் கௌரவ மன்றிலே சமர்ப்பிக்க வேண்டுமென பொலிஸாருக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும் சிசுவின் உடலினை நீதிமன்றத்தின் கட்டளையின் பிரகாரம், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்குமாறும் மன்றின் கட்டளை இல்லாமல் சிசுவினுடைய உடலில் எவ்வித செயல்பாடுகளும் மேற்கொள்ளாமல் கவனமாக வைக்குமாறும் பொலிஸாருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மருத்துவ அறிக்கையிலே திருப்தியின்மை காணப்படுமாக இருந்தால் மேலதிக மருத்துவ பரிசோதனை தொடர்பாக வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும் மன்று உத்தரவாதம் வழங்கியுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/191823
  2. இம்முறை பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் பலர் போட்டியிடுகின்றமையினால் 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஆகவே தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக வாக்காளர்கள் தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ந.ஜெயகாந்தன் இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதிகளவில் வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படும் மற்றும் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையில் நிலவும் கடும் போட்டியால் இம்முறை எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காதுபோகும் நிலைமையே காணப்படுகின்றது. இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், அவர்களில் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தி வேட்பாளரராக அனுரகுமார திஸாநாயக்கவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நாமல் ராஜபக்‌ஷவும் போட்டியிடுவதுடன், இவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ, வர்த்தகர் திலித் ஜயவீர ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோன்று தமிழ்ப் பொது வேட்பாளராக அரியநேந்திரனும் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் இம்முறை தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காது போகலாம் என்பதுடன், இதனால் தேர்தலில் 2 ஆம் , 3ஆம் விருப்பத் தெரிவு வாக்குகள் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் போது 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை இது வரையில் உருவாகியிருக்கவில்லை. ஆனபோதும் இம்முறை பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் பலர் போட்டியிடுகின்றமையினால் 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக வாக்காளர்கள் தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. முதலில் வாக்களிக்கும் முறை தொடர்பாக அவதானம் செலுத்துவோமாக இருந்தால், தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் வேட்பாளர் ஒருவருக்கோ அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகளையோ வாக்குச்சீட்டில் அடையாளமிட முடியும். குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியினுள் 1 எனவும் இரண்டாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 2 எனவும் மூன்றாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 3 எனவும் அடையாளமிடுவது பொருத்தமாகும். இதேவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கொன்று அடையாளமிடப்படாத அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு X என்ற அடையாளமிடப்பட்டுள்ள அல்லது ஒரு வேட்பாளருக்கு 1 எனவும் மற்றுமொரு வேட்பாளருக்கு X என்ற அடையாளமும் இடப்பட்டுள்ள அல்லது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டுக்கள் செல்லுபடியற்றதானதாகும் என்பதுடன் வாக்கு எண்ணும் போது அவை நிராகரிக்கப்படும். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு முறைமை இவ்வாறாக இருக்கும் நிலையில், சிலருக்கு விருப்பத் தெரிவு வாக்களிப்பு முறை தொடர்பாக குழப்பங்கள் காணப்படுகின்றன. ஏன் இந்த முறைமை காணப்படுகின்றது. அதனால் என்ன பிரயோசனம்? மற்றைய தேர்தல்களின் போது இப்படி இலக்கமிட்டு வாக்களிப்பதில்லையே என்ற கேள்விகள் அவர்களிடையே எழுகின்றன. அதாவது ஜனாதிபதித் தேர்தல் என்பது முழு நாட்டிற்கும் ஒரு நபரை தெரிவு செய்வதற்கான தேர்தலாகவே காணப்படுகின்றது. இதனால் அவர் பெரும்பான்மையான ஆதரவை பெற்றவராக இருக்க வேண்டும். இதன்படி அந்த நபர் ஜனாதிபதியாக வேண்டுமென்றால் தேர்தலின் போது அளிக்கப்பட்டு செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதாவது குறைந்தது 50 வீத வாக்குடன் மேலதிகமாக ஒரு வாக்கை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான நிலைமையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்தை விடவும் அதிகமான வாக்குகள் கிடைக்காது போகும் பட்சத்தில் மீண்டும் தேர்தலை நடத்தாது அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த விருப்பத் தெரிவு முறைமை பின்பற்றப்படுகின்றது. குறிப்பாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் வரையில் போட்டியிடும் நிலையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காது அடுத்தக்கட்ட்டமாக விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறானவொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் விருப்பத் தெரிவு வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும் என்பது தொடர்பாக உதாரணங்களுடனான விளக்கத்தைப் பார்ப்போம். தேர்தலில் A, B, C, D மற்றும் E என்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதாக எடுத்துக்கொண்டால் அவர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்காக அளிக்கப்பட்டுள்ள வாக்குகளில் 100 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக கருதுவோம். இதன்படி A = 40 , B = 35 , C = 15 , D = 6 , E = 4 என்ற அடிப்படையில் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்று வைத்துக்கொள்வோம். இவ்வாறாக இவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளுக்கமைய எவரும் 50 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன்போது முதல் இரண்டு இடங்களை வகிப்பவர்களை தவிர்த்து மற்றையவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டவர்களாக கருதப்படுவர். இதன்படி இந்த இடத்தில் A என்பவரும் B என்பவரும் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றனர். C , D , E ஆகியோர் போட்டியிலிருந்து விலக்கப்படுகின்றனர். ஆனபோதும் C , D , E ஆகியோருக்குரிய 25 வாக்கு வாக்கு சீட்டுகளும் A மற்றும் B ஆகியோருக்கு கிடைத்துள்ள 2 ஆம் , 3 ஆம் விருப்பு வாக்குகளை எண்ணுவதற்காக எடுத்துக்கொள்ளப்படும். இவ்வேளையில் முதல் இரண்டு இடங்களை பெற்றுக்கொண்டுள்ள A என்பவருக்கும் B என்பவரினதும் முதலில் எண்ணப்பட்ட வாக்குச்சீட்டுகள் மீண்டும் எண்ணுவதற்கு எடுத்துக்கொள்ளப்படாது. அத்துடன் அந்த வாக்கு சீட்டுகளில் காணப்படும் விருப்பத் தெரிவு வாக்குகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இதனைத் தொடர்ந்து 15 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள C என்பவரின் வாக்குச் சீட்டுகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். இதன்போது Cயிற்காக மாத்திரம் புள்ளடியிடப்பட்ட மற்றும் அவருக்கு 1 என்று குறிப்பிட்டு வேறு யாருக்கும் விருப்பு வாக்குகள் குறிப்பிடப்படாத வாக்குச்சீட்டுகள் ஒதுக்கப்படும். இதன் பின்னர் Cயிற்கு 1 எனவும் A அல்லது Bயிற்கு 2 எனவும் விருப்பத் தெரிவு வாக்கு வழங்கப்பட்டிருக்குமாயின் Aயிற்குறிய வாக்கு சீட்டு அதற்குரிய பெட்டியிலும் Bயிற்குறிய வாக்கு சீட்டு அதற்குறிய பெட்டியிலும் போடப்படும். இதேவேளை Cயிற்கு 1 என குறிப்பிடப்பட்டுள்ள வாக்கு சீட்டியில் 2 ஆவது விருப்பு வாக்கு Dயிற்கோ அல்லது Eயிற்கோ குறிப்பிடப்பட்டிருந்தால் 3 ஆவது விருப்பு வாக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ளதா என ஆராயப்படும். அவ்வாறாக 3 ஆவது விருப்பு வாக்கு Aயிற்கோ அல்லது Bயிற்கோ குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த வாக்கு சீட்டு A அல்லது B ற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த பெட்டியினுள் போடப்படும். ஆனபோதும் அந்த வாக்கு சீட்டில் 2 ஆவது விருப்பு வாக்கு Dயிற்கும் 3 ஆவது விருப்பு வாக்கு Eயிற்கும் குறிப்பிடப்பட்டிருந்தால் அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாது ஒதுக்கி வைக்கப்படும். இதேவேளை D மற்றும் E ஆகியோருக்குரிய வாக்குச்சீட்டுகளும் ஆராயப்பட்டு A அல்லது Bயிற்கு 2 மற்றும் 3 ஆம் விருப்பு வாக்குகள் குறிப்பிடப்பட்டிருந்தால் அதற்குரிய பெட்டிகளுக்குள் போடப்படும். இவ்வாறாகவே C , D , Eக்குரிய 25 வாக்குகளும் எண்ணப்பட்டு A , Bக்குரிய விருப்பு வாக்குகள் ஆராயப்படும். இவ்வாறாக 2ஆம் மற்றும் 3ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது Aயிற்கு 3 மேலதிக வாக்குகளும் Bயிற்கு மேலதிகமாக 10 வாக்குகளும் கிடைத்துள்ளதாக கருதுவோமாகவிருந்தால் Aயிற்கு முதலில் கிடைத்த வாக்குகள் அடங்கலாக மொத்தமாக 43 வாக்குகள் ( A= 40+3 = 43) கிடைத்துள்ளன. அதேபோன்று Bயிற்கு 45 வாக்குகள் (B = 35+10 = 45)கிடைத்துள்ளன. இதன்படி தற்போது 88 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக இருக்கின்ற நிலையில் அவற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற B என்பவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார். இதேவேளை 2 ஆம் மற்றும் 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்கு எண்ணும் நடவடிக்கையின் பின்னர் A என்பவரும் B என்பவரும் சமமான வாக்குகளை பெற்றுக்கொள்வார்களாக இருந்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திருவுளச்சீட்டு மூலம் மேலதிக வாக்கொன்றை வேட்பாளர் ஒருவருடன் இணைத்து அவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க நடவடிக்கையெடுக்கப்படும். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காவிட்டால் மேற்கூறிய முறைமையே பின்பற்றப்படும். இதேவேளை இந்தத் தேர்தலில் 1 , 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு அடிப்படையில் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்கு எண்ணியுள்ள வாக்காளர்கள் சில விடயங்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதாவது தேர்தலில் 39 வரையான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதும் அவர்களில் நால்வருக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்றது. இவ்வாறான நிலைமையில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படுபவர்களுக்கு 1 ஆம் விருப்பை வழங்கிவிட்டு மற்றைய சாதாரண வேட்பாளர்களுக்கு 2 , 3 ஆம் விருப்பு வாக்குகள் வழங்கப்படுமாக இருந்தால் இரண்டாவது வாக்கு எண்ணும் நடவடிக்கையில் போது அந்த வாக்குச்சீட்டு கவனத்தில் கொள்ளப்படாதவொன்றாகவே அமையும். குறிப்பாக யாருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் 2 ஆம், 3 ஆம் விருப்ப தெரிவு வாக்குகளை எண்ணும் போது அதிகூடிய வாக்குகளை பெற்றுக்கொண்ட இரண்டு வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ள 2, 3 ஆம் விருப்பு வாக்குகள் மாத்திரமே எண்ணப்படும். இவ்வேளையில் ஏற்கனவே பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் கிடைத்துள்ள 1ஆம் விருப்பு வாக்கு எண்ணப்பட்டிருப்பதால் அந்த வாக்கு சீட்டுகள் மீண்டும் வாக்கு எண்ணப்படும் போது எடுத்துக்கொள்ளப்படாது. இதன்போது அவர்கள் இருவர் தவிர்த்த மற்றைய வேட்பாளர்களுக்காக முதலாம் விருப்ப தெரிவு வாக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகளில் 2 , 3 ஆம் விருப்ப தெரிவு வாக்குகளே எண்ணப்படும். இதனால் விருப்ப தெரிவு வாக்குகளை வழங்க விரும்பின் சாதாரண வேட்பாளர் ஒருவருக்கு 1 ஆம் விருப்பை வழங்கிய பின்னர் பிரதான வேட்பாளருக்கு 2 ஆவது விருப்பு வழங்கப்பட்டிருக்குமாக இருந்தால் பிரயோசமானதாக அமையும் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும். https://thinakkural.lk/article/307995
  3. அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை நாமும் 24 சதவீதத்தால் அதிகரிப்போம் - சஜித் பிரேமதாச Published By: VISHNU 23 AUG, 2024 | 05:46 PM (எம்.மனோசித்ரா) அரச உத்தியோகத்தர்கள் நாட்டுக்கு சுமை என்று இதுவரைக் காலமும் கூறி வந்த அரசாங்கம் தற்போது அவர்கள் மீது கரிசணை காட்டுகின்றது. இது முற்று முழுதாக சந்தர்ப்பவாதமாகும். நாமும் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை 24 சதவீதத்தால் அதிகரிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கேகாலை மாவட்டம், வரகாப்பொல தொகுதியில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச உத்தியோகத்தர்களை நாட்டுக்கு சுமையாகவே இதுவரை காலமும் உள்ள அரசாங்கங்கள் பார்த்து வந்தன. ஆனால் இப்போதுதான் இந்த அரசாங்கத்துக்கு அரச உத்தியோகத்தர்கள் முக்கியத்துவமானவர்களாகியுள்ளனர். இது சந்தர்ப்பவாதமாகும். தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்களை ஏமாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் அரசு சேவை பயனற்றது என்றும் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் அவர்கள் நாட்டின் நாட்டிற்கு சுமை என்றும் கூறினார்கள். ஆனால் இன்று அதே நபர்கள் போலியான வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். நாம் அவ்வாறு போலியான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம். கூறும் அனைத்தையும் நடைமுறையில் செய்து காட்டுவோம். எமது ஆட்சியில் வாழ்க்கை செலவுக்கு சமமாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பிரத்தியேக குழு ஒன்று நியமிக்கப்படும். 2025 ஜனவரி முதல் சகல அரச உத்தியோகத்தர்கள் அடிப்படை சம்பளமும் 24 சதவீதத்தால் அதிகரிக்கப்படும். தற்போது அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் ஆகக்குறைந்த 17500 ரூபாய் வாழ்க்கை செலவு கொடுப்பனவானது 25000 ரூபாய் வரை அதிகரிக்கப்படும். அதற்கமைய சகல கொடுப்பனவுகளும் உள்ளடங்களாக அரச உத்தியோகத்தர்களுக்கு ஆகக் குறைந்த மாத சம்பளமாக 57500 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுப்போம். தற்போது நடைமுறையில் உள்ள 6 - 36 சதவீத வருமான வரியை 1 - 24 சதவீத வீதம் வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/191821
  4. பிரதமர் மோதி, யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை சந்தித்தபின் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,X/ANI படக்குறிப்பு, ஒரு வீடியோவில், பிரதமர் மோதி ஸெலென்ஸ்கியின் தோளில் நீண்ட நேரம் கையை வைத்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன 23 ஆகஸ்ட் 2024, 04:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் படைகள் ரஷ்யாவின் எல்லைக்குள் சென்றுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி யுக்ரேனுக்கு பயணம் செய்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை (ஆகஸ்ட் 23) யுக்ரேன் சென்றடைந்த அவர், யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியைச் சந்தித்துப் பேசினார். ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் ஏராளமான குழந்தைகள் பலியான இடத்தை இருவரும் பார்வையிட்டனர். தொடர்ந்து இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோதி, ‘இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை குழந்தைகளின் குடும்பங்கள் பெறவேண்டும் எனப் பிரார்த்தனை செய்வதாகக்’ குறிப்பிட்டுள்ளார். ஒரு வீடியோவில், பிரதமர் மோதி ஸெலென்ஸ்கியின் தோளில் நீண்ட நேரம் கையை வைத்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியும் இந்தச் சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,X/NARENDRAMODI கடந்த மாதம் பிரதமர் மோதி ரஷ்யாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, யுக்ரேன் அதிபர், மோதி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஒன்றாக இருந்த படங்களுக்குக் கடுமையாக எதிர்வினையற்றியிருந்தார். ரஷ்ய அதிபரை மோதி சந்தித்தபோது மேற்கத்திய நாடுகள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தின. யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி மோதியின் மாஸ்கோ பயணத்தை விமர்சித்திருந்தார். "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒருவர் மாஸ்கோவில் குற்றவாளி ஒருவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது," என்று யுக்ரேன் அதிபர் அப்போது கூறினார். அதைத்தொடர்ந்து, தற்போது மோதி யுக்ரேனுக்கு சென்றுள்ளது உலக அரசியல் சூழலில் அதிக கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாகப் போர் நடந்து வருகிறது. இந்தப் போர் தொடர்பாக ரஷ்யாவை இந்தியா நேரடியாக விமர்சித்ததில்லை. இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காண இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது. பட மூலாதாரம்,PIB INDIA படக்குறிப்பு, ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட யுக்ரேன் அதிபரும், இந்திய பிரதமரும் போலாந்தில் பிரதமர் மோதி யுக்ரேனுக்கு அரசு முறை பயணம் செய்வதற்கு முன்பு போலாந்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி எந்தப் பிரச்னைகளுக்கும் போர் தீர்வாகாது என்று கூறினார். போலாந்து பிரதமர் டோனல்ட் டஸ்குடன் பேசிய பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டத் தேவையான அனைத்து விதமான ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்கத் தயாராக உள்ளோம் என்று கூறினார். "அப்பாவி மக்கள் பிரச்னையின்போது உயிரிழப்பது மனிதகுலம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது," என்று மோதி கூறினார். "இந்தப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை நிலைநிறுத்தத் தேவையான பேச்சுவார்த்தை மற்றும் அரசு நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிக்க விரும்புகிறோம். தமது நட்பு நாடுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது," என்று கூறினார் மோடி. போலாந்தில் இருந்து யுக்ரேனுக்கு ரயிலில் சென்ற மோதி அங்கே யுக்ரேனிய அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்துப் பேசவுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போலாந்து நாட்டு பிரதமருடன் நரேந்திர மோதி முன்னதாக, யுக்ரேன் செல்வதற்கு முன்பு போலாந்து நாட்டுக்குச் சென்ற மோதி இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். "பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்திய பிரதமர் போலாந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வருகை மதிப்புமிக்க நண்பருடனான ஒருங்கிணைப்பை ஆழமாக்கியுள்ளது. பொருளாதார மற்றும் கலாசாரத் தொடர்புகளை மேலும் மேம்படுத்த முயன்று வருகிறோம்." "எங்களின் நட்பு, இந்த உலகை மேலும் சிறப்பாக மாற்றத் தேவையான பங்களிப்பை வழங்கும். போலாந்து நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று பிரதமர் மோதி குறிப்பிட்டிருந்தார். சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யா சென்ற மோதி நரேந்திர மோதி ஜூலை தொடக்கத்தில் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டார். இது 2019க்குப் பிறகு அவரது முதல் ரஷ்யா பயணம். அது மட்டுமின்றி இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் மேற்கொண்ட முதல் சர்வதேச பயணமும் இதுதான். யுக்ரேன் மீது ரஷ்யாவின் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்த நேரத்தில் மோதி ரஷ்யாவுக்கு சென்றார். யுக்ரேனில் ஜூலை 8 அன்று கீயவ் நகரில் 33 பேர் உட்பட மொத்தம் 47 பேர் கொல்லப்பட்டனர். ரஷ்ய ஏவுகணைகள் குழந்தைகள் மருத்துவமனையையும் தாக்கியது. இதனிடையே ரஷ்ய அதிபர் உடனான பேச்சுவார்த்தையின்போது, மோதியை புதின் "எனது அன்பு நண்பர்" என்று குறிப்பிட்டார். ரஷ்ய அதிபருடனான மோதியின் சந்திப்பும், மோதி புதினை நட்பாக ஆரத்தழுவியதும் யுக்ரேனில் சீற்றத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜூலையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்த நரேந்திர மோதி வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பயணம் ஆகஸ்ட் 21, 22 தேதிகளில் போலாந்திற்கு சென்ற மோதி அங்கிருந்து ஆகஸ்ட் 23 (வெள்ளிக்கிழமை) அன்று யுக்ரேனுக்கு சென்றார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் என்று ஆகஸ்ட் 19ம் தேதி அன்று குறிப்பிட்டிருந்தது. ஜூன் மாதம் யுக்ரேன் விவகாரம் தொடர்பாக ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் மோதி பங்கேற்கவில்லை. மாறாக, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பங்கேற்றார். இருப்பினும் அதே மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் மோதியும் ஸெலன்ஸியும் சந்தித்துக் கொண்டனர். "பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க நடவடிக்கைகள் மூலமே அமைதியை எட்ட இய்லும்," என்று அவர் தெரிவித்தார். மோதி நேரடியாக, யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டிக்கவில்லை என்ற போதிலும், தொடர்ச்சியாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எதற்காக இந்த சந்திப்பு? யுக்ரேனுக்கு அரசுப் பயணம் மேற்கொண்டுள்ள மோதி, பொருளாதாரம், உள்கட்டமைப்பு, ஆரோக்கியம், கல்வி, மருந்தாக்க துறை, பாதுகாப்பு, கலாசாரம் குறித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுக்ரேனின் அதிபர் அலுவலகம் இதுகுறித்துப் பேசும்போது நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளது. இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு முன்பே உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து, பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்திய மற்றும் யுக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள், ஜெயஷங்கர் மற்றும் திமித்ரோ குலேபா மார்ச் மாதம் டெல்லியில் சந்தித்துக் கொண்டனர். அப்போது போருக்கு முந்தைய சூழலில் நடைபெற்றதைப் போன்று வர்த்தகம் நடைபெற வேண்டும் என்று இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. தற்போதைய சந்திப்பில் ரஷ்யா - யுக்ரேன் போர் குறித்தும் விவாதிக்கப்படும் என்று இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ராஜாங்க நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தை மூலமே இந்த விவகாரத்திற்குத் தீர்வு எட்டப்படும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஊடகங்கள் என்ன சொல்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2023ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் சந்தித்துக்கொண்ட மோதி மற்றும் ஸெலன்ஸ்கி சர்வதேச அளவில் தன்னை உயர்த்திக் கொள்ளவும், போருக்கு மத்தியில் தன்னை சமநிலையில் வைத்துக் கொள்ளவும் இந்தியா இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று இந்திய ஊடகங்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். "மேற்கு உலகம் மற்றும் ரஷ்யாவுடனான இந்திய உறவில் சமநிலையைப் பேண இந்தியாவுக்கு இது மிக முக்கியமான ஒன்று. மேலும், உலக உணவுப் பாதுகாப்பு குறித்து இந்தியா தன்னுடைய கருத்துகளை வெளியிட இது உதவியாக இருக்கும். உலகளாவிய பிரச்னையாக கருதப்படும் இதுபோன்ற விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு இருப்பது உலக அரங்கில் இந்தியாவை முக்கிய நாடாக மாற்றும்," என்று ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் யுக்ரேன் ஊடுருவியுள்ள நிலையில், தி பிரின்ட் செய்தி இணையதளம், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மோதியின் இந்தப் பயணம் மிக முக்கியமானதாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே இந்தியா தன்னுடைய பங்களிப்பை வழங்குவதற்கும், முதலீட்டு வாய்ப்புகளை அறிந்து கொள்வதற்கும் இதுதான் சரியான தருணம் என்று குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் அதிகாரப்பூர்வமான அரசு ஊடகம் மோதியின் யுக்ரேன் வருகை குறித்து செய்தி வெளியிடவில்லை. இருப்பினும் சில ரஷ்ய ஊடகங்கள் இதுகுறித்த தங்களின் செய்திகளை வெளியிட்டுள்ளனர். ரஷ்ய ஊடகங்கள் சொல்வது என்ன? மாஸ்கோவிஸ்கி கொம்சோமோலெட்ஸ் (Moskovsky Komsomolets) என்ற பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்யாவுடன் நட்பு பாராட்டிய நாட்டின் தலைவர் தன்னை விமர்சித்த ஸெலன்ஸ்கியை கீயவில் சந்திக்க உள்ளார் என்று குறிப்பிட்டிருந்தது. மாஸ்கோவில் புதினுடன் பேசிய பிரதமர் மோதிக்கு கீயவ் கண்டனங்களைப் பதிவு செய்த சில வாரங்கள் கழித்து அவர் யுக்ரேனுக்கு பயணம் செய்வதையும் மேற்கோள் காட்டியுள்ளது அந்த நாளிதழ். ரஷ்ய ஆதரவு செய்தித்தாளான இஸ்வெஸ்டியா, "ரஷ்ய - யுக்ரேன் போரில் தன்னை ஒரு மத்தியஸ்தராக நிலை நிறுத்திக்கொள்ள இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று" எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும், "தெற்கத்திய நாடுகள் அனைத்தும், அரசியல் ஆதாயங்களுக்காக, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணத் தங்களின் பங்களிப்பை வழங்கி வருகின்றன," என்று குறிப்பிட்டிருந்தது. தனியார் செய்தி நிறுவனமான நெசாவிசிமயா கஜெட்டா (Nezavisimaya Gazeta), "இந்தியா ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே சமநிலையைப் பேண முயல்கிறது. எனவே மோதியின் யுக்ரேன் பயணம் ரஷ்யாவுக்கு எதிரான போக்கு என்ற கோணத்தில் அணுகக்கூடாது," என்று குறிப்பிட்டிருந்தது. https://www.bbc.com/tamil/articles/cn0lr24ree3o
  5. போலியான செலவின தகவல்களை சமர்ப்பிக்கும் வேட்பாளர்களின் குடியுரிமை இரத்தாகும் - தேர்தல்கள் ஆணைக்குழு Published By: DIGITAL DESK 7 23 AUG, 2024 | 04:52 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு முடிவடைந்து 21 நாட்களுக்குள் தேர்தல் செலவினங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்காத மற்றும் போலியான தகவல்களை முன்வைக்கும் வேட்பாளர்களின் குடியுரிமை மூன்று ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படும். தேர்தல் செலவினங்கள் ஒழுங்குப்படுத்தல் சட்டத்துக்கமைய அனைத்து வேட்பாளர்களும் செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தேர்தல் பிரச்சார செலவினங்கள் தொடர்பான சட்டம் 1946 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.தேர்தல் சட்டத்துக்கு அமைய செயற்படாதவர்களின் பதவி நிலைகளும் நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக இரத்துச் செய்யப்பட்ட வரலாற்று பதிவுகளும் காணப்படுகின்றன. தேர்தல் கட்டமைப்பில் விருப்பு வாக்கு முறைமையை அறிமுகப்படுத்தப்பட்டவுடன் நிதியை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் செயற்பாடுகளை தீர்மானிக்கும் செயற்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. வாக்காளர்களும் தமக்கு என்ன கிடைக்கும் என்பதை கருத்திற் கொண்டு தேர்தலை தீர்மானக்கும் நிலை தோற்றம் பெற்றது. தேர்தல் காலத்தில் நிதி பரிமாற்றம் தீவிரமடைந்ததன் பின்னர் அரசியல்வாதிகளுக்கும் வாக்காளர்களுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தம் பலவீனமடைந்து. வியாபார நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. வேட்பாளருக்கும் வாக்காளருக்கும் இடையிலான உறவு வியாபாரிக்கும், நுகர்வோருக்கும் இடையிலான உறவாக மாற்றமடைந்துள்ளமை கவலைக்குரியது. இவ்வாறான பின்னணியில் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்துக்காக செலவு செய்ய வேண்டிய நிதி தொடர்பில் ஒரு வரையறையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக 2010 ஆம் ஆண்டு தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தல் சட்டம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டு பாரிய போராட்டத்துக்கு மத்தியில் 2023 ஆம் ஆண்டு தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தல் சட்டம் இயற்றப்பட்டது. 2023 ஆம் ஆண்டு நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தை செயற்படுத்த எதிர்பார்த்திருந்தோம். இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக தேர்தலை நடத்த முடியவில்லை. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவது குறித்து கலந்துரையாடியுள்ளோம். ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன. தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் சட்டத்துக்கு அமைய வாக்காளர் ஒருவருக்கு வேட்பாளர் ஒருவர் பிரச்சார செலவுக்காக 109 ரூபாவை செலவழிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே அனைத்து வேட்பாளர்களும் இந்த தொகைக்கு உட்பட்ட வகையில் செயற்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்து 21 நாட்களுக்குள் 38 வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சார செலவினங்கள் தொடர்பிலான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களை சமர்ப்பிக்காத மற்றும் போலியான ஆவணங்களை சமர்ப்பிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மூன்று ஆண்டுகள் தேர்தலில் வாக்களிப்பதற்கும்,வாக்கு கோருவதற்கும் தடை விதிக்கப்படும் அதனுடன் குடியுரிமையை இழக்க நேரிடும்.ஆகவே சகல வேட்பாளர்களும் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் தரப்பினரும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்துக்கு அமைய செயற்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/191790
  6. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உள்ளுராட்சி தேர்தல் - நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களிற்கு கிடைத்த வெற்றி - மகிந்த தேசப்பிரிய 23 AUG, 2024 | 12:52 PM ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் உள்ளுராட்சி தேர்தல் இடம்பெறும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எதிர்வுகூறியுள்ளார். உள்ளுராட்சி தேர்தல்கள் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மக்களிற்கு கிடைத்த வெற்றி என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை தாமதப்படுத்தியது தவறான நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர் நீதிமன்றம் இதனை உறுதி செய்துள்ளமை நீதியை நோக்கிய முக்கியமான நடவடிக்கை என தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்த தீர்மானம் ஆச்சரியமளிக்கும் ஒன்றல்ல என தெரிவித்துள்ள அவர் தேர்தல்களை பிற்போடுவது ஒத்திவைப்பது மக்களின் உரிமைகளை மீறும் செயல் என நீதிமன்றம் தொடர்ச்சியாக தெரிவித்துவந்துள்ளது என தெரிவித்துள்ளார். தாமதமானாலும் இறுதியாக நீதிநிலைநாட்டப்பட்டுள்ளது என நான் கருதுகின்றேன். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளுராட்சி தேர்தல்களை நடத்தும் என நான் எதிர்பார்க்கின்றேன் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191777
  7. கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை - சந்தேகநபர் ஆபாச படங்களை பார்ப்பதற்கு அடிமையானவர் என உளவியல் அறிக்கையில் தகவல் 23 AUG, 2024 | 11:58 AM கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல்வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த நபர் ஆபாசபடங்களை பார்ப்பவர் அதற்கு அடிமையானவர் என்பது உளவியல் பரிசோதனைகளின் போது தெரியவந்துள்ளது. : மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையின் முதுநிலை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் கைதாகியுள்ள சஞ்சய் ராய்க்கு நடத்தப்பட்ட மனோதத்துவ பரிசோதனையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. : சஞ்சாய் ராய் ஆபாசபடங்களை பார்ப்பவர்படங்களைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதில் அவர் மூழ்கி அதற்கு அடிமையாகியுள்ளார். அவருக்கு மிருகத்தனமான இச்சைகள் இருந்துள்ளன. அவர் எப்போதும் எந்தக் குற்றம் குறித்தும் கவலையோ, குற்ற உணர்வோ கொள்வதில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஐ கோரிக்கைக்கு இணங்க சஞ்சய் ராய்க்கு மனோதத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் வெளியாகி மேலும் அதிர்ச்சியளிக்கின்றன. முன்னதாக சஞ்சய் ராயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சிபிஐ அதிகாரி ஒருவர், “சஞ்சய் ராயிடம் நாங்கள் விசாரணை மேற்கொண்டபோது அவர் எவ்வித வருத்தமும் இல்லாமல் நடந்தவற்றை சிறு நுணுக்கமான தகவல்களையும் விடாமல் எங்களிடம் தெரிவித்தார். அவர் அந்தச் சம்வபம் குறித்து எந்த கவலையும் கொண்டதாக எங்களுக்குத் தோன்றவில்லை” எனக் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. ஆனால் அந்தப் பேட்டியில் அந்த அதிகாரி பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிபிஐ விசாரணையில், ஆகஸ்ட் 8 ஆம் தேதி பின்னிரவில் சஞ்சய் ராய் வடக்கு கொல்கத்தாவில் உள்ள பாலியல் தொழில் மையங்களுக்குச் சென்றதும் விசரணையில் தெரியவந்துள்ளது. மிகுந்த போதையில் இருந்த சஞ்சய் ராய் ஒரு பெண்ணிடம் நிர்வாண புகைப்படம் கோரியதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், போவானிபோர் பகுதியில் உள்ள சஞ்சய் ராயின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர், சக பணியாளர்களிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. சிபிஐ விசாரணை அறிக்கை நேற்று (ஆக.22) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. https://www.virakesari.lk/article/191770
  8. வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் அம்மாவை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்; ஜனநாயகக் கட்சி மாநாட்டில் நெகிழ்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாநாட்டில் கமலா ஹாரிஸை வாழ்த்திய மக்கள் கட்டுரை தகவல் எழுதியவர், அந்தோணி சுர்ச்சர் பதவி, பிபிசி செய்திகள், சிகாகோ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வியாழன் இரவு அன்று அமெரிக்காவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற கமலா ஹாரிஸ், அதிகாரப்பூர்வமாக அந்த கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அந்த அறிவிப்பை அவர் ஏற்றுக் கொண்டார். அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பின மற்றும் ஆசிய - அமெரிக்க பெண் அதிபர் வேட்பாளர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் கமலா ஹாரிஸ், 45 நிமிடம் மாநாட்டில் பேசினார். அவர் யார்? அமெரிக்க மக்களுக்காக அவர் என்ன செய்ய இருக்கிறார்? தற்போது நடைபெற்று வரும் காஸா - இஸ்ரேல் போர் குறித்த நிலைப்பாடு என்ன? என்பது குறித்தும், அவரின் குடும்பப் பின்னணி, அவர் தாயாரின் பங்களிப்பு குறித்தும் மாநாட்டில் குழுமியிருந்த மக்கள் முன் கமலா ஹாரிஸ் பேசினார். நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து வருகிறேன் - கமலா ஹாரிஸ் பலருக்கும் கமலா ஹாரிஸ் யார் என்று தெரியும். ஆனால் அவரின் பின்புலம், அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை போன்றவை பற்றி அறிந்திருக்கவில்லை. முதன்முறையாக தன்னுடைய குடும்பப் பின்னணி குறித்து பேசி தன்னைப் பற்றிய ஒரு முழுமையான அறிமுகத்தை மக்கள் முன்பு ஏற்படுத்தினார். தன்னுடைய அம்மாவைப் பற்றி பேசிய அவர், எவ்வாறு 19 வயதில் அவர் அம்மா அமெரிக்காவுக்கு வந்தார் என்றும், அவருடைய பெற்றோர்கள் எவ்வாறு சந்தித்துக் கொண்டனர், எவ்வாறு விவாகரத்து பெற்றனர் என்றும் கூறினார். கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாந்தில், உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் பகுதியில் கழிந்த தன்னுடைய பால்ய காலத்தைக் குறித்தும் அவர் பேசினார். "நான் ஒரு நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து வருகிறேன். என்னுடைய அம்மா இவ்வளவுதான் செலவழிக்க வேண்டும் என்ற பட்ஜெட்டை நிர்ணயம் செய்திருப்பார். அதில்தான் நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்தோம். எங்களுக்கு அந்த சூழலில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று என்னுடைய அம்மா எதிர்பார்த்தார்," என்று கூறினார். மேற்கொண்டு பேசிய அவர் ஏன் ஒரு வழக்கறிஞராக வர ஆசைப்பட்டார் என்பதையும் கூறினார். "என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் ஒரே ஒரு வாதிக்காகதான் வாதாடியுள்ளேன். அது மக்கள்தான்," என்று பேசினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கணவர் டக் எம்ஹாஃப், மற்றும் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் மற்றும் அவருடைய மனைவி க்வென்னுடன் கமலா ஹாரிஸ் காஸா போரில் கமலா ஹாரிஸின் நிலைப்பாடு என்ன? பாலத்தீன ஆதரவாளர்கள் பலரும் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகுதிக்கு வெளியே பேரணி நடத்தி வருகின்ற சுழலில், தன்னுடைய உரையில் வெளியுறவுக் கொள்கை குறித்து பேசினார் கமலா ஹாரிஸ். தற்போது நடைபெற்று வரும் காஸா போர் குறித்து பேசிய அவர், "பைடனும், நானும் இது குறித்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுக்கும் நபர்களை காப்பாற்றி, போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று கூறினார். போர் நிறுத்தம் குறித்து பேசினாலும் கூட, இஸ்ரேல் தன்னை காத்துக் கொள்ளும் முழுத்திறனும் உள்ளது என்பதை உறுதி செய்த அவர் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் குறித்தும் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். மேலும் பாலத்தீனர்கள் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்கள் மன வேதனையை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு, பைடனின் காஸா போர் குறித்த கொள்கைகளையே ஹாரிஸின் ஆட்சியும் பின் தொடரும் என்ற கருத்தை வெளிப்படையாக்கியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேசிய ஜனநாயகக் கட்சி மாநாடு கருக்கலைப்பு தடை குறித்து கமலா ஹாரிஸ் கூறியது என்ன? கொள்கைகள் தொடர்பாக தன்னுடைய உரையில் பேசிய ஹாரிஸ் மக்களின் அன்றாட தேவைகளுக்கான செலவீனத்தை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். சுகாதார சேவை, வீட்டு வசதி மற்றும் உணவு என பல அன்றாட தேவைகளின் விலையை கட்டுப்படுத்த இருப்பதாக கூறினார். மேற்கொண்டு பேசிய அவர் பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமையை நிலை நாட்டுவது குறித்து தன்னுடைய கருத்தை வெளியிட்டார். "டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வரும் பட்சத்தில் தேசிய அளவில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்படும்," என்று மாநாட்டில் குறிப்பிட்டார். டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த போது மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமித்தார். 50 ஆண்டுகளாக பெண்களின் இந்த உரிமையை பாதுகாத்து வந்த ரோ Vs வேட் என்ற வழக்கின் தீர்ப்புக்கு எதிராக முடிவெடுத்து அந்த தீர்ப்பை செல்லாது என்று அறிவித்தனர். இதன் விளைவாக, தற்போது 22 மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதித்துள்ளன. அதில் 14 மாகாணங்களில் எந்த விதமான சூழலிலும் கருக்கலைப்புக்கு அனுமதி இல்லை. 10 மாகாணங்களில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிய பெண்களின் கருக்கலைப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 'டிரம்ப் ஒரு அச்சுறுத்தல்'- கமலா ஹாரிஸ் ''டொனால்ட் டிரம்பை மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் அனுமதித்தால் ஏற்படும் பின்விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும் என்று மாநாட்டில் அவர் பேசினார். அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்தை 2021 ஜனவரி 6ம் தேதி அன்று டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்கியதை குறித்து பேசிய அவர், டொனால்ட் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் பட்டியலிட்டார். குடியரசுக் கட்சியினரால் அறிமுகம் செய்யப்பட்ட ஹெரிட்டேஜ் ஃபவுண்டேஷன் திட்டம் 2025 குறித்து விமர்சனம் செய்த கமலா ஹாரிஸ் இது அமெரிக்காவை பின்னோக்கி இழுத்து செல்லும் திட்டம் என்றும் குறிப்பிட்டார். ஏற்கனவே இந்த திட்டத்தை டொனால்ட் டிரம்ப் கைவிட்டிருந்த போதிலும், இது டிரம்பின் ஆலோசகர்களால் எழுதப்பட்டது என்றும் இது அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். கமலா ஹாரிஸின் பரப்புரையில் எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தின் ஒப்பீடு ஒரு முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. இது அவருடைய அதிபர் வேட்பாளர் ஏற்புரையிலும் இடம் பெற்றிருக்கிறது. இந்த ஒரு அம்சம் அவருடைய குடியரசுக் கட்சியின் வேட்பாளரிடம் இருந்து மட்டுமல்ல, தற்போதைய அதிபர் ஜோ பைடனிடம் இருந்தும் கமலா ஹாரிஸை தனித்து காட்டுகிறது. https://www.bbc.com/tamil/articles/c4gx223kzv4o
  9. ஜனாதிபதி வெளியிட்டுள்ள சொத்து விபரங்களை மக்கள் நம்பமாட்டார்கள் - சுனில் ஹந்துநெத்தி 23 AUG, 2024 | 02:36 PM ஜனாதிபதியானதும் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சொத்துக்கள் குறித்து முதலில் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது சொத்துக்கள் குறித்த விபரங்களை நேர்மையான விதத்தில் வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது சொத்துக்கள் குறித்து வெளியிட்டுள்ள விபரங்களை பொதுமக்கள் நம்பமாட்டார்கள் என செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் வெளியிட்டுள்ள சொத்து விபரங்களை விட குறைவான சொத்து விபரங்களை ஜனாதிபதி காண்பித்துள்ளாரே என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சொத்துக்களை விட குறைவான சொத்துக்களை ஜனாதிபதி காண்பித்துள்ளதை மக்கள் நம்புவார்கள் என நீங்கள் நம்புகின்றீர்களா? ரணில் இங்கும் ஏமாற்றியுள்ளார் ஜனாதிபதியானதும் முதல் வேலையாக அனுரகுமார திசநாயக்க ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட சொத்து விபரங்கள் சரியானவையா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191788
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிருஷ்ணகிரியில் என்.சி.சி., முகாம் என்ற பெயரில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 21 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான போலி என்.சி.சி ஆசிரியர் சிவராமனும் அவரது தந்தையும் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். இந்த வழக்கில் யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுவதாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், காவேரிபட்டினத்தைச் சேர்ந்த போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன், தனியார் பள்ளி முதல்வர் சதீஷ்குமார் ஆகியோர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சேலம் சரக டி.ஐ.ஜி உமா, கிருஷ்ணகிரி, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து, சிவராமன், பள்ளி தாளாளர் வெஸ்லி, முதல்வர் சதீஷ், ஆசிரியை ஜெனிபர், போலி என்.சி.சி பயிற்சியாளர் சக்திவேல் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். என்ன நடந்தது? கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி புகார் ஒன்று பதிவானது. அந்தப் புகாரின் அடிப்படையில் பதிவான முதல் தகவல் அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் 5ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் பள்ளியில் என்.சி.சி முகாம் ஒன்று நடந்தது. இந்த முகாமில் பாதிக்கப்பட்ட மாணவியுடன் சேர்த்து 17 மாணவிகள் பங்கேற்றனர். ஆகஸ்ட் 8 ஆம் தேதி அதிகாலையில் என்.சி.சி அலுவலர் எனக் கூறப்படும் சிவராமன் என்பவர், எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனக்கு நேர்ந்த கொடூரத்தை சக மாணவிகளிடமும் ஆசிரியைகளிடமும் மாணவி தெரியப்படுத்தியுள்ளார். சீனியர் மாணவிகளுடன் இணைந்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும் மாணவி முறையிட்டுள்ளார். அவரோ, 'இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம். உங்கள் பெற்றோருக்கு தெரிந்தால் வருத்தப்படுவார்கள்' எனக் கூறி மாணவியை திருப்பி அனுப்பியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பிறகு மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாணவியின் பெற்றோர் விசாரித்தபோது தான், நடந்த கொடூரம் வெளியில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிவராமன், பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியை உள்பட 11 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். என்.சி.சி தலைமை அலுவலகத்தின் மறுப்பு தேசிய மாணவர் படையின் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தலைமை அலுவலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிருஷ்ணகிரியில் நடந்தது போலியான என்.சி.சி முகாம் என்றும் முகாம் நடத்தியவர்களுக்கும் என்.சி.சி அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. “என்.சி.சி முகாமுக்காக பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இந்தப் பள்ளி இல்லை. கிருஷ்ணகிரியில் என்.சி.சி சார்பில் முகாம்களும் நடத்தப்படவில்லை,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவராமன் மற்றும் அவரது தந்தையின் மரணம் பட மூலாதாரம்,GETTY IMAGES கைது செய்யப்பட்ட சிவராமன், வலது காலில் கட்டுப்போடப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் வெளியானது. அவர் போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்றதாகவும் இதனால் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கில் கைதான சிவராமன், நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். வழக்கு தொடர்பான செய்திகள் வெளிவந்த நிலையில், அக்கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமன், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை மரணம் அடைந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதல் நாள் இரவு சிவராமனின் தந்தை அசோக்குமார், காவேரிபட்டினம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, நிலை தடுமாறிக் கீழே விழுந்து உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. சிவராமன் மரணம் குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 19ஆம் தேதி எலும்பு முறிவு காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிவராமன் அனுமதிக்கப்படுவதற்கு, இரண்டு நாள்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டுள்ளது. அவரது உயிரைக் காப்பாற்ற கிருஷ்ணகிரி மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் 21ஆம் தேதி அனுமதிக்கப்ப்டட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை காலை இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை பட மூலாதாரம்,FACEBOOK/K.ANNAMALAI மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை துரிதமாக நடந்து கொண்டிருந்த நிலையில், தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கு இடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை சிவராமன் வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது" எனத் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்தக் கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். பள்ளிகளில் போலி முகாம்கள்? இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், என்.சி.சி என்ற பெயரில் வெளியில் உள்ள ஆட்களை அழைத்து வந்து முகாம் நடத்தியதாக குறிப்பிடுகிறார் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு. செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சரயு, "முகாமில் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழிகாட்டுதல் எதுவும் பின்பற்றப்படவில்லை. முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு கவுன்சலிங் வழங்கப்பட்டு வருகிறது. வேறு பள்ளிகளில் போலி என்.சி.சி முகாம்கள் நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது," என்றார். பொதுவாக, பள்ளிகளில் தேசிய மாணவர் படை, சாரணர் படை என பல்வேறு அமைப்புகளில் மாணவர்கள் ஆர்வமுடன் இணைகின்றனர். பட மூலாதாரம்,KMSARAYU படக்குறிப்பு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு என்.சி.சி முகாம்கள் எப்படி இயங்கும்? என்.சி.சி.,யில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் என்னென்ன, பெற்றோர் எந்தளவுக்கு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த தேசிய மாணவர் படை அலுவலர் ஆனந்தராஜிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவர் கூறிய தகவல்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மாணவர் படையில் இணையும் அனைவருக்கும் ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாம் என்பது பொதுவானது. இதில், பள்ளிக்கு 2 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் பயிற்சி முகாமுக்கு அனுப்பப்படுவர். பயிற்சி முகாம் நடப்பதாக இருந்தால் என்.சி.சியில் பதிவு செய்துள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். அதில், முகாமில் எவ்வளவு பேர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். தனியார் பள்ளி மாணவர்கள், உணவு மற்றும் பயண செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். பயிற்சி முகாமில் மாணவர்கள் பங்கேற்பதற்கு தலைமை ஆசிரியர் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். அதன்பின், மாணவர் தொடர்பான மருத்துவ சான்று, பெற்றோர் விருப்ப சான்று, அபாய சான்று (Risk) ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் என்.சி.சி அங்கீகரிக்கும். முகாமுக்கு மாணவர்களை ஏ.என்.ஓ (Associate NCC Officer) எனப்படும் பள்ளியின் என்.சி.சி ஆசிரியர் அழைத்துச் செல்வார். கூடவே, அவரது கையெழுத்துடன் கூடிய விண்ணப்பத்தை சமர்ப்பித்தால்தான் முகாமுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும். இந்த சான்றுகளில் ஒன்று இல்லாவிட்டாலும் அனுமதி மறுக்கப்படும். எப்போது முகாம் நடக்கும், எப்போது முடியும், மாணவர்கள் எப்போது புறப்படுவார்கள் என்பதெல்லாம் ராணுவ ஒழுங்குடன் கட்டமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முகாமுக்கும் 6 முதல் 10 என்.சி.சி ஆசிரியர்கள் இருப்பார்கள். இவர்கள் வகுப்பெடுப்பார்கள். மற்றபடி, பரேடு, பயிற்சி ஆகியவற்றை ராணுவத்தினர் முன்னெடுப்பார்கள். ஒவ்வொரு மண்டலத்துக்கும் 500 மாணவர்கள் முகாமில் பங்கேற்பது வழக்கம். ஒரே முகாமில் மாணவர்களும் மாணவிகளும் இருப்பார்கள். ஆனால், அவர்கள் தங்கும் விடுதி தனித்தனியாக இருக்கும். பெண் என்.சி.சி ஆசிரியர் (ANO) கட்டுப்பாட்டில் மாணவிகள் இருப்பார்கள். ராணுவத்தில் ஜிஏசி (Girls Cadet incharge) என்ற பணியிடம் உள்ளது. ஒவ்வொரு முகாமிலும் ஒரு ஜிஏசி கட்டாயம் இருப்பார். இவர்கள் தங்கியுள்ள பகுதிக்குச் செல்வதற்கு கமாண்டிங் அதிகாரிக்கு அனுமதியில்லை. மாணவ, மாணவிகள் இருவருக்கும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கொடுப்பார்கள். 10 நாள்கள் நடக்கும் முகாமில் பரேடு பயிற்சி, ஆயுதப் பயிற்சி ஆகியவை வழங்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் முதலுதவி வழங்கப்படும். அதன்பிறகும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் முகாமில் இருந்து அனுப்பப்படுவார்கள். ஒருவருக்கு பயிற்சி பிடிக்காவிட்டாலும் அவ்வளவு எளிதில் அனுப்ப மாட்டார்கள். பயிற்சியை மாணவரின் உடல் ஏற்கும் வரையில் என்.சி.சி ஆசிரியர் பயிற்சி வழங்குவார். எட்டாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையில் இரண்டாண்டுகள் என்.சி.சி பயிற்சி வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு சென்றவுடன் முகாமுக்கு செல்லும் மாணவர்கள் என்.சி.சி தேர்வை எழுதுவார்கள். கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு நடக்கும். அரசின் சீருடை பணிகளில் என்.சி.சி. மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. என்.சி.சி முகாமில் கமாண்டிங் அலுவலராக (Commanding office) வருகிறவர், லெப்டினென்ட் கமாண்டன்ட் ஆகவோ மேஜர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியாகவோ இருப்பது நடைமுறை. பட மூலாதாரம்,ANANDRAJ படக்குறிப்பு,தேசிய மாணவர் படை அலுவலர் ஆனந்தராஜ் என்.சி.சி ஆசிரியர் தேர்வு செய்யப்படுவது எப்படி? பள்ளி நிர்வாகம் தரப்பில் என்.சி.சி-க்கு விண்ணப்பித்து அனுமதி வாங்கியிருந்தால் அதற்கான ஆசிரியர் நேர்காணல் தலைமைச் செயலகத்தில் நடக்கும். அந்த நேர்காணலில் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை அதிகாரிகள் இருப்பார்கள். இதில் ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே பயிற்சிக்காக நாக்பூர் அனுப்புவார்கள். அதுவும் ஓராண்டுக்குப் பிறகுதான் பயிற்சிக்கு வரவழைக்கப்படுவார்கள். முன்பு 90 நாள்களாக இருந்த பயிற்சி 60 நாள்களாக குறைத்துவிட்டார்கள்.பயிற்சி முடியும் போது, சம்பந்தப்ப்டட ஆசிரியர் கெஜட்டட் அலுவலராக வெளியில் வருவார். தமிழக அரசின் 2 சிறப்பு குழுக்கள் இந்த சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் காவல்துறை தலைவர் பவானீஸ்வரி ஐ.பி.எஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து உரிய பரிந்துரைகள் அளித்திட, சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ் தலைமையில் பல்நோக்கு குழு ஒன்றும் அமைக்கப்படும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் தொடர்பாக ஆராய்ந்து, இனி இதுபோல நடைபெறாமல் தடுப்பது குறித்தும் இந்த பல்நோக்கு குழு பரிந்துரைகள் அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி விவகாரத்தில் விசாரணையை 15 நாட்களுக்குள் முடித்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cp3dee6r1nxo
  11. சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலரே பொது வேட்பாளரை எதிர்க்கின்றனர் - சுரேஸ் பிரேமச்சந்திரன் Published By: DIGITAL DESK 7 23 AUG, 2024 | 04:46 PM சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலரே பொது வேட்பாளரை எதிர்க்கின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிக்கையில், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள் ஆதரவாக இருக்கின்றார்கள். சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற ஒரு சிலரைத் தவிர கட்சியின் ஏனைய மேல் மட்டங்களும் சரி, ஏனைய கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களும் சரி பொது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அது மாத்திரமல்ல, அவர்கள் களத்தில் இறங்கி பணிபுரிவதற்கும் தயாராக இருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சியினுடைய இளைஞர் அணியைச் சேர்ந்த பலரை சந்தித்து நான் பேசியிருக்கின்றேன். இதனை முன்னெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். கிளிநொச்சியைச் சேர்ந்த சிறிதரனும் பொது வேட்பாளரை வாழ்த்தியிருக்கிறார். ஏற்கனவே அதற்கான கூட்டங்களும் - கிளிநொச்சியில் கூடப்பட்டிருக்கிறது. அதேபோல தலைவராக இருக்கின்ற சேனாதிராஜாவும் இதனை வரவேற்றிருக்கின்றார். ஆகவே தமிழரசுக் கட்சியினுடைய பெரும்பான்மையானோர் இதனை ஆதரித்து வரவேற்றிருக்கிறார்கள். ஒரு சிலர் தங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக இவ்வாறு எதிர்க்கின்றனர். குறிப்பாக சொல்லப் போனால், இலங்கை அரசாங்கம் அங்கு அபிவிருத்திக்காக தனக்கு கொடுத்ததாக சாணக்கியன் கூறியிருக்கின்றார். ஆகவே, வாங்கிய பணத்துக்கு பேச வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்ப காண வேண்டும் என அவர்கள் யோசித்தால், அதற்காக அவர்கள் சில நல்ல முடிவுகளை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். கடைசி நேரத்தில் அவர்கள் என்ற முடிவு எடுப்பார்களோ என்று எனக்கு தெரியாது. நிச்சயமாக தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக இவர்கள் ஆதரவு முடிவு எடுப்பார்களாக இருந்தால் அது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான முடிவாகத்தான் இருக்கும் என அவர் தெரிவித்தார். தமிழ்ப் பொது வேட்பாளளை ஆதரிக்கும் வகையில் தமிழ் தேசியக் கட்சிகளும், சிவில் அமைப்புக்களுமாக ஒன்றாக இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட எவரும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக எந்தவிதமான தீர்வுகளும் இல்லாத காலகட்டத்தில், ஏற்கனவே பல கட்சிகளுக்கு வாக்களித்தும் ஏமாற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில், தொடர்ந்தும் அவர்களுக்கு வாக்களிப்பதன் ஊடாக எதையும் சாதிக்க முடியாது என்ற அடிப்படையில் தமிழ் மக்களினுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் முகமாகவும், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்காமல் நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை அவர்களுக்கு விளக்கும் வகையிலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிப்பதன் ஊடாக அவர்களுக்கு தெளிவுபடுத்த முடியும். எங்களுக்கு இருக்கக் கூடிய ஜனநாயக தளம் என்பது இந்த ஜனாதிபதி தேர்தேலேயாகும். அந்த களத்தை பாவித்து ஒட்டுமொத்த வட கிழக்கு தமிழ்களும் இணைந்து இந்த செய்தியை சொல்ல விரும்புகின்றோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/191796
  12. ஹேமா கமிட்டி எதிரொலி: 'தமிழ் சினிமாவின் மோசமான பக்கம்' - அனுபவங்களை பகிரும் பெண் கலைஞர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 23 ஆகஸ்ட் 2024, 08:08 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் “பிரபலமான இயக்குநர் ஒருவர் இயக்கிய படம் ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியிருந்தேன். ஆனால், படப்பிடிப்புத் தளங்களில் பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட அனைவரையும் மரியாதை இன்றி, ஒருமையில் அழைக்கும் போக்கு இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது,” என்கிறார் நடிகை அனு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கேரள திரையுலகில் பெண்களின் பாதுகாப்பு குறித்து வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை பல்வேறு தளத்திலும் விவாதத்தை எழுப்பியிருக்கும் நிலையில், தமிழ்த் திரையுலகிலும் அதிர்ச்சியளிக்கும் மற்றொரு பக்கம் இருப்பதாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பெண்கள் பலர் கூறினர். இருப்பினும் இந்தப் பிரச்னைகளைக் களைய உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அதே நேரத்தில், "பெண்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழலின் தேவை குறித்து உணர்ந்துள்ளதாக" தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். பிரபல நடிகர்களின் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள அனு உள்ளிட்ட பலர் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டனர். ஃபிலிம்ஃபேர் விருது பெற்ற நடிகர் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறிய அனு, அதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றபோது, "அதை அவர்கள் சாதாரண நிகழ்வாகக் கடந்து சென்றனர்" என்று தனது மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். ஹேமா கமிட்டியின் அறிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES கேரள திரையுலகில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை பெண்கள் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்கள் மட்டுமின்றி, திரையுலகம் பெண்களின் அடிப்படை உரிமைகளைக்கூட கண்டும் காணாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஹேமா கமிட்டியின் பரிந்துரையில் கூறப்பட்டிருப்பது போல, பெண்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தீர்ப்பாயம் ஒன்றைத் தமிழ்த் திரையுலகமும் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையைப் பெண் கலைஞர்கள் முன்வைத்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, எத்தகைய தீர்வுகளை அவர்கள் எதிர்பார்க்கின்றனர், திரையுலகில் பெண்களுக்கான இடம் மற்றும் அங்கீகாரம் போன்றவை கிடைக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ், நடிகைகள், பாடகிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் பேசியது. குறுஞ்செய்திகள் மூலம் பாலியல் ரீதியான அழைப்பு "சில நேரங்களில் இந்தத் துறையை விட்டே சென்றுவிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால் யாருடைய உதவியுமின்றி, எனக்கான இடத்தைத் தக்க வைக்கப் போராடிக் கொண்டிருக்கிறேன். இனி அனைத்தையும் முதலில் இருந்து துவங்குவது சவாலானதாக இருக்கும்,” என்கிறார் அனு. பட மூலாதாரம்,GETTY IMAGES பிரபல நடிகர் குறித்துப் புகார் தெரிவித்த விவகாரத்திற்குப் பிறகு அந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து தனக்கு எந்த விதமான வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பாலியல் ரீதியான 'ஒத்துழைப்பு' போன்ற விவகாரங்கள் குறித்துப் பேசும்போது அவர், “முன்பு போல் நேரடியாக யாரும் எதையும் கேட்பதில்லை. மாறாக, ‘டேட்டிங்’ செல்லலாமா?, இன்று இரவு நாம் இங்கே நடக்கும் ‘பார்ட்டிக்கு’ செல்லலாமா என்று குறுஞ்செய்திகள் வாயிலாக அணுகுவதாக" கூறுகிறார். அதற்கு "முடியாது என்று மறுக்கும் பட்சத்தில் எங்களுக்கு இங்கே வாய்ப்புகள் இல்லை. முடியாது என்று கூறிய காரணத்திற்காகவே கடந்த 6 ஆண்டுகளில் என்னால் மூன்றே மூன்று படங்களில் மட்டும்தான் நடிக்க முடிந்தது,” என்று கூறினார். இதுபோன்ற செய்திகளைப் பெரும்பாலும் அனுப்பும் நபர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர்கள் தான், என்றார் அனு. ஒத்துழைக்காவிட்டால் சம்பளம் கிடைக்காது பட மூலாதாரம்,GETTY IMAGES நடிகை நயன்தாரா, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பெரிய திரை நட்சத்திரங்களுடன் பணியாற்றிய நடிகை உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசி தமிழிடம் பேசியபோது, வாய்ப்புகள் வேண்டுமென்றால் "சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்ற போக்கு தமிழ்த் திரையுலகில் எழுதப்படாத விதியாகவே" உள்ளதாகக் கூறுகிறார். "பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கதாநாயகி, அவர்களின் தோழிகள் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் எதிர்கொள்கின்றனர். இந்தத் திரைத்துறை எப்படிச் செயல்படுகிறது என்று தெரியாமல் பெரிய கனவுகளுடன் வரும் இளம் பெண்கள் இதில் சிக்கிக்கொள்ளும் அவலமும் நிகழ்வதாக," உஷா கவலையுடன் கூறினார். "முடியாது என்று முழுமையாக நிராகரித்துவிட்டு, அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தாலும்கூட எங்களுக்கான சம்பளம் வழங்கப்படுவதில்லை," என்கிறார் உஷா. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இத்தகைய சூழலை எதிர்கொண்ட அவர், இயக்குநரின் போக்கு சரியில்லாத காரணத்தால் படத்தில் இருந்து வெளியேறினார். அவர் நடித்துக் கொடுத்த நாட்களுக்குத் தற்போது வரை சம்பளம் வழங்கவில்லை என்றும் கூறினார். வெளியூர் படப்பிடிப்புகளில் ஏற்படும் பிரச்னைகள் என்ன? இவை மட்டுமின்றி, படப்பிடிப்புத் தளங்களில் ஆடை மாற்றுவதுகூட சிக்கலாக இருப்பதாகவும், போதிய கழிவறை வசதிகள் செய்து தரப்படுவதில்லை எனவும் உஷா குற்றம் சாட்டுகிறார். "வெளியூர்களில் நடக்கும் படப்பிடிப்புகளின்போது இது மிகவும் சவாலாக இருக்கிறது. மறைவான இடங்களுக்குச் சென்றுதான் ஆடைகள் மாற்றும் சூழல் ஏற்படுகிறது. அதோடு தங்கும் இடங்களும் பாதுகாப்பாக இருப்பதில்லை. படத்தில் பணியாற்றும் ஆண்கள், குடித்துவிட்டு வந்து கதவைத் தட்டும் செயல்பாடுகளும் அரங்கேறிய வண்ணம்தான் இருக்கின்றன,” என்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES நடிகைகள் மட்டுமல்ல, தொழில்நுட்பக் கலைஞர்களும் இத்தகைய பிரச்னையை எதிர்கொள்வதாகக் கூறுகிறார் ஶ்ரீமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). “அருகில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்தான் பெரும்பாலான நேரங்களில் எங்களைப் பாதுகாக்கின்றனர். எங்கள் இன்னல்களைப் புரிந்துகொண்டு எங்களுக்கு உதவ முன்வருகின்றனர்,” என்று கூறினார் ஶ்ரீமதி. இதுவரை நான்கு திரைப்படங்களுக்கு துணை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ள ஶ்ரீமதி, “ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, தெலுங்கு திரையுலகத்தினர் சிறப்பாகச் செயல்படுவதாகவும், ஒவ்வொரு துறையிலும் பெண்கள் இருப்பதால், அவர்களின் தேவைகளையும் உரிமைகளையும் கோருவதற்கான இடம் அங்கு உள்ளதாகவும்" தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், "தமிழ், மலையாள திரையுலகில் அப்படி இல்லை. 70 நாட்கள், ஒரு மலையாளப் படத்தில் பணியாற்றினேன். என்னைத் தவிர அந்தப் படத்தில் பெண் தொழில்நுட்பக் கலைஞர்களே இல்லை. பெண்கள் குறைவாக இருக்கும்போது, அவர்களுக்கான தேவை எளிதில் நிராகரிக்கப்படுகிறது. இதுபோன்ற அவல நிலையைப் பார்க்கும்போது, புதிதாக இந்தத் துறைக்கு வரும் பெண்கள், சில மாதங்களிலேயே காணாமல் போய்விடுகின்றனர்,” என்றார் ஸ்ரீமதி. சமீபத்தில் தமிழில் வெளியான தங்கலான் திரைப்படத்தின் துணை இயக்குநர்களில் ஒருவரான ஸ்ருதி, பிபிசியிடம் பேசும்போது, இயக்குநர்கள் நினைத்தால் இதில் மாற்றங்களைக் கொண்டு வர இயலும் என்று கூறுகிறார். "தங்கலான் படப்பிடிப்புக்காக சில நாட்கள் நாங்கள் கடப்பாவில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பெண் கலைஞர்களுக்காகவே தனியாக கேரவன்கள் வழங்கப்பட்டன. நடமாடும் கழிவறைகள் எப்போதும் படப்பிடிப்புத் தளத்தில் வைக்கப்பட்டிருந்தன. தேவையெனில், இயக்குநரின் கேரவன்களை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது," என்று தெரிவித்தார். பெண் கலைஞர்கள் சந்திக்கும் இதர பிரச்னைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழ் திரையுலகில் பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் மிகவும் குறைவான அளவே உள்ளனர் ஆணாதிக்கப் போக்கு மற்ற அனைத்து துறைகளைக் காட்டிலும் இங்கே அதிகம் என்று கூறுகிறார் மற்றொரு துணை இயக்குநரான அபி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). “நான் கடந்த ஓராண்டாக ஒரு படத்தில் பணியாற்றி வருகிறேன். இங்கே நடிக்கும் நடிகர்களிடம் திருத்தங்களைக் கூறுவதே பெரிய சிக்கலாக உள்ளது. ஒரு பெண் கூறி, அதை நான் கேட்க வேண்டுமா என்ற மனப்பான்மையுடன் தான் அவர்கள் நடந்து கொள்கிறார்கள்,” என்று அவர் கூறினார். பெண்கள் என்றால் பலவீனமானவர்கள் என்ற எண்ணம் திரைத்துறையில் உள்ள அனைவரிடமும் பொதுவாக உள்ளதாகக் கூறுகிறார் ஒளிப்பதிவாளர் ஶ்ரீமதி. “இவர்கள் பெண்கள் குறித்து ஏற்படுத்தியிருக்கும் பிம்பம், இங்கே எங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வழி செய்கிறதே தவிர, எங்களுக்கான அதிகாரத்தையும், அங்கீகாரத்தையும் உறுதி செய்வதில்லை,” என்றார் அவர். அதேபோல், ஓய்வின்றி 24 மணிநேரமும் வேலை பார்க்கும் நிலைகூட இருப்பதாகவும் சரியாக ஊதியமும் வழங்கப்படுவதில்லை எனவும் ஸ்ரீமதி கூறினார். குறிப்பாக மலையாள திரையுலகில் இது அங்கீகரிக்கப்பட்ட உழைப்புச் சுரண்டலாகவே இருப்பதாகத் தெரிவித்தார் அவர். குஷ்பு கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நடனம், சண்டை, கிராஃபிக்ஸ் வடிவமைப்பு, சவுண்ட் இஞ்சினியர், ஒளிப்பதிவு போன்ற பிரிவுகளில் பெண்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பணியாற்றுகின்றனர். கேரளாவில் பெண் திரைத்துறை கலைஞர்களுக்கான கூட்டமைப்பு (WCC – Women in Cinema Collective) தான் இந்த ஹேமா கமிட்டி அறிக்கையின் தொடக்கப்புள்ளி. இதுபோன்ற கூட்டமைப்பு தமிழ்நாட்டில் சாத்தியமா என்ற கேள்வியை பிபிசி தமிழ் முன்வைத்தது. அதற்கு பிரபலமான பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்த குஷ்பு, "தமிழ்த் திரையுலகம் மிகவும் சிறப்பானது" என்று தெரிவித்தார். "என்னுடைய திரை அனுபவத்தில் இதுபோன்ற சவாலான சூழலை நான் சந்திக்கவில்லை. ஆனால் பெண்களுக்கு எதிரான போக்கு திரைத்துறையில் இருக்கும் என்றால் நிச்சயமாக நான் குரல் கொடுப்பேன். உண்மையாகவே ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது நீதிப் போராட்டத்திற்குத் துணை நிற்பேன்," என்று தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகப் பதவி வகித்த அவர், தமிழகத்தில் இதுபோன்ற ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்படும் என்றால் அதற்கு "முதல் ஆதரவு தரும் நபராக நான் இருப்பேன்" என்றும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,KUSHBOO SUNDAR/INSTAGRAM படக்குறிப்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வகித்த பாஜக தலைவர் குஷ்பு புறக்கணிக்கப்பட்டதாகக் கூறும் சின்மயி ஆனால், தமிழில் பெண் கலைஞர்களுக்கான கூட்டமைப்பு சாத்தியமில்லை என்று கூறினார் பின்னணிப் பாடகி சின்மயி. பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பொதுவெளியில் தெரிவித்தார் சின்மயி. “எனக்கு எந்த ஆதரவும் இந்தத் திரைத்துறையில் கிடைக்கவில்லை. மாறாக நான் தனிமைப்படுத்தப்பட்டேன். என்னுடைய ஆறு ஆண்டுக்கால வருமானம் பாதிக்கப்பட்டது. அனைவருக்கும் தான் நான் குரல் கொடுக்கிறேன்." ஆனால் "என்னுடைய பிரச்னையின் போது எனக்கு உதவ இந்த திரையுலகில் இருந்து எந்த ஒரு முன்னணி பெண் கலைஞர்களும் குரல் கொடுக்கவில்லை. உண்மையை பேசினால் ஓரங்கட்டப்படுவீர்கள், ஒதுக்கப்படுவீர்கள் என்பதை தமிழ் திரையுலகம் என்னுடைய விவகாரத்தில் தெளிவாக்கியது,” என்று கூறினார் அவர். பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பாகவும் கணவரின் முழு ஆதரவுடனும் இருப்பதாலேயே தன்னால் போராட முடிவதாகக் கூறிய சின்மயி, இது பாதிக்கப்படும் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்று கூறினார். "மாற்றங்களை எதிர்பார்க்கும் பெண்களிடம் அதிகாரம் இல்லை. அதிகாரம் உள்ள பெண்கள் இதுபோன்ற விவகாரங்களில் உதவ முன்வருவதில்லை,” என்றும் சின்மயி தெரிவித்தார். இதுபோன்ற காரணங்களால் தான் இங்கு இத்தகைய கூட்டமைப்புக்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறும் அவர், அப்படியே கூட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும் அது பெயரளவில் தான் செயல்படுமே தவிர, அது ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளாது என்றும் கூறினார். “எனக்குத் தெரிந்தவரை, தெலுங்கு சினிமாவில் அன்னப்பூர்ணா ஸ்டுடியோ மற்றும் தமிழில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோ பாதுகாப்பானவை,” என்றார் சின்மயி. ரஹ்மானின் மகள் கத்தீஜாதான் பெண்கள் பாதுகாப்பு குறித்து தீவிரமாகச் செயல்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,RAHUL RAVINDRAN/ INSTAGRAM படக்குறிப்பு, திரைப்பட பின்னணி பாடகி சின்மயி 'பெண்களுக்காக பெண்கள்தான் குரல் கொடுக்கின்றனர்' பிபிசி தமிழிடம் பேசிய பெரும்பாலான தொழில்நுட்பக் கலைஞர்கள், திரைப்படத்தில் பெரிய நடிகைகள் நடிக்கின்றனர் என்றால், பெண்களுக்கான பிரச்னை ஓரளவுக்குச் சமாளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறினார்கள். "நயன்தாராவுடன் நடிக்கும்போது, அவருடைய கேரவனில் உடை மாற்றிக் கொண்டேன். அவருடன் பணியாற்றும் பெண்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் உறுதி செய்தார்," என்றார் உஷா. “தங்கலான் படத்தில் நடிகை பார்வதி நடித்திருந்தார். எங்களுக்குத் தேவையான அனைத்தும் ஏற்கெனவே படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறது. இருப்பினும், பார்வதி எங்களிடம் ஏதாவது குறைகள் இருக்கிறதா, ஏதாவது தேவை இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பார்,” என்றார் ஸ்ருதி. “நிறைய பெண்கள் இந்தத் துறையில் பணியாற்ற வரும்போது, இந்தச் சூழல் நிச்சயமாக மாறும். ஒவ்வொரு துறையிலும் இவ்வளவு பெண்கள் இடம்பெற வேண்டும் என்று இட ஒதுக்கீட்டு முறையைப் பின் தொடரும்போது, அவர்களுக்கான பாதுகாப்பான பணி இடங்களையும் உருவாக்குவது தயாரிப்பு நிறுவனத்தின் கடமையாகிவிடும்,” என்கிறார் ஶ்ரீமதி. உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒரு பெண்தான் மற்ற பெண்ணைத் தனிப்பட்ட ரீதியாகவோ, குழுவாகவோ பாதுகாத்துக் கொள்கிறோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,KHATIJA RAHMAN / INSTAGRAM படக்குறிப்பு, ரஹ்மானின் ஏ.எம்.ஸ்டுடியோவில் இசையமைப்பாளர் கத்தீஜா ரஹ்மான் (வலது) தயாரிப்பாளர்கள் கூறுவது என்ன? BOFTA திரைப்பட மையத்தின் நிறுவனரும், தயாரிப்பாளருமான ஜி. தனஞ்செயன் பிபிசி தமிழிடம் பேசியபோது, "பாலியல் ரீதியிலான அத்துமீறல்கள் குறித்த புகார்கள் வரும்போது நிச்சயமாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று தெரிவித்தார். அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியாகும் படங்களில் பணியாற்றும் பெண் கலைஞர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தருவதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார். விசாரணைக் குழு (IC) ஏதேனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியபோது, தயாரிப்பாளராக இதுபோன்ற விவகாரங்களில் நேரடியாக அவர் தலையிட்டு பிரச்னைக்குத் தீர்வு காண்பதால் இதுவரை குழு ஏதும் அமைக்கவில்லை என்று கூறினார். "ஏதேனும் பிரச்னைகளை எங்கள் பெண் குழுவினர்கள் சந்திக்கிறார்கள் என்றால் அவர்கள் நேரடியாக என்னை அணுகும் வகையில்தான் இங்கே தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. நேரடியாகப் பிரச்னை என் பார்வைக்குக் கொண்டு வரப்படும் என்பதால் அதன் தீவிரம் என்ன என்பதைப் படக்குழுவினர் அறிவார்கள். அதனால் இதுபோன்ற அத்துமீறல்களில் அவர்கள் ஈடுபடுவது தடுக்கப்படுகிறது," என்று தெரிவித்தார் தனஞ்செயன். இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி பிபிசியிடம் பேசும்போது, "பாதுகாப்பான பணிச்சூழலின் தேவை மற்றும் சமத்துவம் குறித்து நன்றாக உணர்ந்துள்ளோம். பெண் கலைஞர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதாகப் புகார்களை முன்வைக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என்று தெரிவித்தார். விசாரணைக் குழுக்கள் (IC) அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தயாராகி வருவதாகத் தெரிவித்த அவர், இனி அனைத்து தயாரிப்பு நிறுவனங்களிலும் இதைக் கட்டாயமாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். "ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும் மனிதவள மேம்பாட்டு அலுவலர் (HR) ஒருவரை நியமித்து, படப்பிடிப்புத் தளங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், அடிப்படை விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்," என்றும் முரளி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/credvelr2yjo
  13. இரத்து செய்யப்படவுள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களமோ அல்லது அரசாங்கமோ எந்தவொரு தீர்மானத்தினையும் எடுக்கவில்லை என அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விரசிங்க (Nishantha Anurudtha Wirasinghe) தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாரதிகள் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தயாராகி வருவதாக வெளியான செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், போக்குவரத்து அமைச்சுடன் ஆலோசித்து சாலை பாதுகாப்பு தொடர்பான சூழ்நிலையை கருத்தில் கொண்டு சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு கருப்பு மதிப்பெண் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய முறை அதன்படி, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "புதிய முறையின் மூலம் சாரதியொருவர் போக்குவரத்து விதிமீறலைச் செய்த பிறகு போக்குவரத்து காவல்துறையினர் வழங்கும் பற்றுசீட்டுக்கு ஏற்ப அபராதத் தொகையை ஒரே நேரத்தில் செலுத்த டிஜிட்டல் சிஸ்டம் தயார் செய்யப்பட்டு அந்த விதிமீறலுக்கான அபராதப் புள்ளிகள் சாரதி அனுமதிப்பத்திரத்தில் சேர்க்கப்படும். ஓட்டுநர் உரிமம் இந்த முறையின் கீழ் 24 கருப்பு புள்ளிகளை எட்டியதும் ஓட்டுநர் உரிமம் இரத்து செய்யப்படும். இவ்வாறு இரத்து செய்யப்படும் ஓட்டுநர் உரிமத்தை திரும்பப்பெற ஒரு ஓட்டுநர் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இலங்கையில் நாளொன்றுக்கு ஏழு பேர் நெடுஞ்சாலை விபத்துகளில் உயிரிழப்பதாலும் வீதி விபத்துக்களினால் அங்கவீனர்களாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் நெடுஞ்சாலைகளில் ஒழுக்கத்தை ஏற்படுத்த இந்த முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/notification-department-regarding-driving-licences-1724335002
  14. பிரசார கூட்டத்தில் திடீரென்று மருத்துவ உதவி கேட்ட ட்ரம்ப்: வெளியான காரணம் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின் முதல்முறையாக பொதுவெளியில் உரையாற்றிய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) திடீரென உரையை நிறுத்திவிட்டு மருத்துவ உதவி கோரியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று (22) வடக்கு - கரோலினாவில் (North Carolina) டெனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இடம்பெற்றுள்ளது. மருத்துவ உதவி சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்குப்பற்றிய ஒருவருக்கு மருத்துவ உதவி தேவை என்று உணர்ந்ததை அடுத்து ட்ரம்ப் தனது உரையை நிறுத்தியுள்ளார். துப்பாக்கி குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் இருந்து உரையாற்றிக்கொண்டிருந்த ட்ரம்ப் குறித்த பெண்ணுக்கு மருத்துவ உதவிகளை வழங்குமாறு வைத்தியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதுடன் பெண் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சென்று அவரின் உடல்நிலை தொடர்பில் விசாரித்துள்ளார். மேலும், டொனால்ட் ட்ரம்பின் இந்த செயலானது, பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தவர்களிடையே பெரும் பாராட்டுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/trump-s-rally-halted-for-urgent-help-1724360425
  15. ரூட், புறூக், ஸ்மித் ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பு; இலங்கையைவிட 23 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து Published By: VISHNU 22 AUG, 2024 | 11:28 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக மென்ச்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவின்போது இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் மீதம் இருக்க 23 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. இலங்கை அதன் முதன் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கையைப் போன்றே இங்கிலாந்து துடுப்பாட்டத்திலும் மத்திய வரிசையில் ஹெரி புறூக், ஜெமி ஸ்மித் ஆகியோர் அரைச் சதங்கள் குவித்து தமது அணியை பலப்படுத்தினர். இன்று காலை பெய்த மழை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் பிற்பகல் 1.15 மணிக்கே ஆரம்பமானது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்தது. பென் டக்கெட் (18), டான் லோரன்ஸ் (30), ஒல்லி போப் (6) ஆகிய மூவரும் களம் விட்டகல இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 67 ஓட்டங்களாக இருந்தது. எனினும் ஜோ ரூட், ஹெரி புறூக் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஜோ ரூட் 42 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜெமி ஸ்மித்துடன் 5ஆவது விக்கெட்டில் மேலும் 62 ஓட்டங்களைப் பகிர்ந்த ஹெரி புறூக் 56 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். அதன் பின்னர் ஜெமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலப்படுத்தினர். கிறிஸ் வோக்ஸ் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஜெமி ஸ்மித் 72 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 68 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 58 ஓட்டங்களுக்க 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/191741
  16. உக்ரைனில் (Ukraine) மட்டுமன்றி பிரித்தானிய நிலைகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் என ரஷ்யாவின் (Russia) பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படையாக கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். பிரித்தானியா (UK) வழங்கியுள்ள ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தினால், ரஷ்யா கடுமையான தாக்குதலில் இறங்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குறித்த அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் இரு நாடுகளும் நேரடியாக மோதும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. பிரித்தானியா வழங்கியுள்ள ஆயுதங்கள் இதற்கான காரணம், பிரித்தானியா பல நவீன ரக ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ள நிலையில், அமெரிக்கா வழங்கியுள்ள ஆயுதங்களைக் காட்டிலும் , பிரித்தானியா சிறிய அளவிலான ஆயுதங்களை தான் கொடுத்துள்ளது. எனினும் பிரித்தானியா கொடுத்துள்ள ஆயுதங்கள் என்பது, பல மடங்கு அழிவை ஏற்படுத்தக் கூடியவை என்பது ஒரு புறம் இருக்க, அவை மிக மிக நவீன ரக ஆயுதங்கள் ஆகும். இதனால் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் உக்ரைன் படைகள் பிரித்தானியா வழங்கிய சலெஞ்சர் 2 கவச வாகனங்களைப் பயன்படுத்தியே ரஷ்யாவுக்குள் ஊடுருவி நிலைகொண்டுள்ளதுடன், பிரித்தானியா மேலும் பல நவீன ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுத்துள்ளது. ரஷ்யாவில் கைதான பிரித்தானிய நபர் ரஷ்யாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு பிரித்தானிய நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அந்நாட்டில் உளவு பார்த்தார் என ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. பிரித்தானிய உளவுத் துறையைச் சேர்ந்த குறித்த நபரை தாம் கைதுசெய்துள்ளதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளதுடன் கடும் ஆத்திரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலைமை மோசம் ஆனால் ரஷ்யா, உக்ரைன் மற்றும் வேறு நாடுகளில் உள்ள பிரித்தானிய தளங்களை ஏவுகணை கொண்டு தாக்கக் கூடும் என குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை அவ்வாறு நடந்தால் பிரித்தானியா இதற்கு பதிலடி கொடுக்கவேண்டிய சூழ் நிலை உருவாகுவதுடன் இது மூன்றாம் உலகப் போருக்கு வித்திடலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/british-positions-will-be-attacked-russia-threate-1724387307
  17. Published By: DIGITAL DESK 7 23 AUG, 2024 | 09:36 AM ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மக்களுக்கு மானியங்கள் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அத்தோடு, வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க மானியங்கள் வழங்குவது அவசியமானால் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அவற்றை வழங்க முடியும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191754
  18. தென்னாபிரிக்கத் தூதுவரை சந்தித்தார் சிறீதரன் எம்பி! இலங்கைக்கான (Sri Lanka) தென்னாபிரிக்கத் (South Africa) தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க் (Sandhill Edwin Schalk), துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி (Renee Everson Varney) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sridharan) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்றையதினம் (21) கொழும்பிலுள்ள (Colombo) தென்னாபிரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்மக்களின் நிலைப்பாடு மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்த சாதகத் தன்மைகள் குறித்தும், ஈழத்தமிழர்கள் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. மனித உரிமை இதன்போது, காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ICC) வழக்குத் தாக்கல் செய்துள்ள தென்னாபிரிக்கா, ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கும் சர்வதேச நீதியைப் பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும் என சிறீதரன் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலும் இந்த விடயம் சார்ந்து தங்களின் கரிசனையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சிறீதரன், தென்னாபிரிக்கத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/sridharan-mp-met-the-south-african-ambassador-1724318218
  19. உலகின் மிக வயதான பெண்மணி என்ற கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ் 117 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்களைப் பார்த்துள்ளதுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர் மற்றும் 1918 ஆம் ஆண்டு பெரிய அளவில் பரவிய காய்ச்சல், கொவிட் தொற்று ஆகியவற்றையும் பார்த்துள்ளார். இவர் 1907 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 4 ஆம் திகதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓலோட் நகரில் சாண்டா மரியா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வந்த இவர் காலமானார். உலகின் மிக வயதான பெண்மணியான மரியா பிரன்யாஸ் உயிரிழந்ததை அடுத்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான தொமிக்கோ இதூக்கா உலகின் மிக வயதான பெண்மணியாக கின்னஸ் புத்தக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். 1908 ஆம் ஆண்டு மே 23 இல் இதூக்கா பிறந்துள்ளார்.இதூக்கா இளமைக்காலங்களில் மலையேற்ற வீராங்கனையாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/308251
  20. தமிழ்மக்களின் மனோநிலையை ஜனநாயக ரீதியாக எவரும் புரிந்து கொள்ள முடியும்; பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழ்தேசிய பொது கட்டமைப்பு சுவிஸ் தூதுவரிடம் எடுத்துரைப்பு Published By: DIGITAL DESK 3 22 AUG, 2024 | 10:04 PM (எம்.நியூட்டன்) தமிழ் மக்களின் மனோநிலையை ஜனநாயக ரீதியாக எவரும் புரிந்து கொள்ள முடியும் என்பதற்காவே பொதுவேட்பாளரை களத்தில் இறக்கியுள்ளோம் என தமிழ்தேசிய பொது கட்டமைப்பு சுவிஸ் தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளது. தமிழ்தேசிய பொதுக் கட்டமைப்பை சேர்ந்தவர்களுக்கும் இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து துதூவருக்குமிடையிலான சந்திப்பு புதன்கிழமை மாலை இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பொதுகட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமசந்திரன் முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் மற்றும் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்டோர் கலந்துரையாடியிருந்தனர். இந்த சந்திப்பு தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமசந்திரன் கருத்து தெரிவிக்கையில், சுவிட்ஸர்லாந்து துதூவர் தலைமையிலான குழுவினர் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தார்கள். அதிலும் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் ஆர்வமாக கேட்டறிந்து கொண்டார்கள் குறிப்பாக இலங்கையில் ஜனாதிபதி என்னும் ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் தமிழ்மக்களை பொறுத்தவரையில் யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்குத்தான் வாக்களித்து வந்திருக்கிறார்கள். ஆனால் எந்த ஜனாதிபதியும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் ஆக்க பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்வில்லை. யுத்தத்திற்கு பிற்பாடு கூட இதுவரையில் மூன்று ஜனாதிபதிகள் வந்தும் எந்த ஐனாதிபதியும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய ஐனாதிபதியும் கடந்த இரண்டு வருடமாக பதவியில் இருக்கிறார். அவரும் குறைந்த பட்சம் 13 ஆம் திருத்த சட்டத்தை தானும் நடைமுறைப்படுத்த அக்கறையாக இருக்கவில்லை. ஆதலால் இலங்கையின் சிங்கள அரசியல் கட்சிகள் அல்லது ஜனாதிபதிகளுடைய நடவடிக்கை காரணமாகத்தான் நாங்கள் வேறுவழியில்லாமல் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்வேட்பாளரை நிறுத்துவதற்கு முன்வந்து இருக்கிறோம். இதற்கூடாக நாங்கள் கூறவுள்ள விடயம் இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய இனப்பிரச்சினையை பின்னுக்கு தள்ளி இந்த நாட்டில் வெறும் பொருளாதார பிரச்சினை மட்டும்தான் இருக்கிறது என்ற மாயையை உருவாக்க நினைக்கிறது அது அவ்வாறு இல்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமல் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்பதனை வெளிப்படுத்தும் நோக்கத்துடனும் அதனை சிங்கள அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும், இராஐதந்திர சமுகங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது எங்களுடைய முக்கிய நோக்கம். அதன் அடிப்படையில்தான் பொதுவேட்பாளரை நிறுத்தியிருக்கின்றோம். ஆகவே வடக்க, கிழக்கில் சுமார் பதின்மூன்று இலட்சம் தமிழ் வாக்குகள் இருக்கின்றது. அந்த நிலையில் நாம் பெரும்பான்மை வாக்குகளை எடுப்பதன் ஊடாக தமிழ்மக்களினுடைய மனோநிலையை ஜனநாயக ரீதியாக எவரும் புரிந்து கொள்ள முடியும். இதுவரை காலமும் தமிழ் மக்களிடையே ஒற்றுமையில்லை என கூறிவந்தவர்களினுடைய பிரச்சினைகளையும் அது தீர்க்கும் எனில், தற்போழுது சிவில் சமூகங்கள், தமிழ்தேசிய பரப்பில் இருக்கக் கூடிய தமிழ்கட்சிகள் மிகப் பெருமளவில் ஒன்றுசேர்ந்து இந்த விடயத்தை முன்னேடுத்துள்ளன. ஆகவே இத்தகைய விடயத்திற்காக நாம் இவற்றை கையாளுகின்றோம் என்பதை அவருக்கு கூறியிருந்தோம். இதனைவிட தற்போது வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் தற்போதைய நிலமைகள், தென்னிலங்கை நிலைப்பாடுகள் தொடர்பிலும் நிண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன என்றார். https://www.virakesari.lk/article/191717
  21. தமிழ் பொதுவேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு வழங்கவில்லை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை எனவும் நாம் அறிவிக்கும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள் எனவும் தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்கும் என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது. வாக்களிப்பு இடம்பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம். ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு ஒரு தரப்பினர் குறிப்பிடுவதை தமிழ் மக்கள் ஏற்கபோவதில்லை. இவர்கள் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தெரிவிப்பார்கள். ஆனால் மக்கள் அந்தக் கோரிக்கையை ஏற்றதில்லை. இம்முறையும் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதில்லை. தமிழ் பொது வேட்பாளருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவர் எங்களின் கட்சி உறுப்பினர். அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். இதனுடாக எமது நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ளவேண்டும். கடந்த கால தேர்தல்களிலும் எமது நிலைப்பாட்டை இறுதி தருணத்திலேயே அறிவித்திருந்தோம். அதற்கமைய 80 சதவீதமானோர் எமது தீர்மானத்துக்கு அமையவே வாக்களித்தார்கள். ஆகவே இம்முறையும் நாங்கள் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள் எனவும் சுமந்திரன் தெரிவித்தார். https://thinakkural.lk/article/308267
  22. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - கமலா ஹரிஸிற்கு ஆதரவை வெளியிட்டார் கிளின்டன் - மகிழ்ச்சியின் ஜனாதிபதி என தெரிவிப்பு 22 AUG, 2024 | 12:03 PM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹரிசிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டன் மகிழ்ச்சியின் ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி வாக்களிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். எங்களிற்கு மகிழ்ச்சியின் ஜனாதிபதி கமலா ஹரிஸ் தலைமை தாங்கவேண்டிய தேவையுள்ளது, நான் எனது கடமையை செய்கின்றேன் நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் 42 வது ஜனாதிபதியான பில்கிளின்டன் அமெரிக்கா மேலும் அதிகளவிற்கு அனைவரையும் உள்வாங்குவதாகவும், அதிகளவிற்கு எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துவதாகவும் மாறவேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார். பல சந்தர்ப்பங்கள் வாய்ப்புகள் காணப்படுகின்ற சூழலில் பல பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டிய நிலையில் அர்த்தமற்ற சொல்லாட்சிகளில் நாங்கள் சிக்குண்டு கிடப்பது எங்கள் மீதான எவ்வளவு பெரும் சுமை என்பதை நீங்கள் சிந்தித்து பாருங்கள், என வேண்டுகோள் விடுத்துள்ள பில்கிளின்டன், கமலா ஹரிஸ் தலைமை தாங்கும் அமெரிக்காவை விரும்புவதாக தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191690
  23. அன்புள்ள அராத்து, வன்புணர்வுக் குற்றங்களை மட்டுமல்ல எந்தக் குற்றத்தையும் தண்டனைகளால், கடும் தண்டனைகளால் கூட, குறைக்க முடியாதென்றே நினைக்கிறேன். என்னை விடுங்கள், ஆய்வுகளும் இதையே சொல்கின்றன. சமூக வெறுப்பு, கூச்சத்தினாலும் முடியாது. தண்டனைகள் குற்றவாளியைத் திருத்தவோ எதிர்காலக் குற்றவாளியைத் தடுக்கவோ அல்ல, குற்றவாளி அல்லாதோரின் திருப்திக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. கடவுளுக்கு பலி கொடுப்பதன் நவீன வடிவமே இன்றைய நவீனத் தண்டனைகள். அவை இல்லாமல் போகும் போது சமூகத்துக்கே பைத்தியம் பிடிக்க ஆரம்பிக்கும். நம்மால் நம்மையே தண்டிக்க முடியாமல் போவதும் குற்றவாளியைத் தண்டிப்பதற்கு ஒரு காரணம். ஒவ்வொரு குற்றமும் நம் அந்தரங்கத்தைத் தீண்டுகிறது. அதனாலே ஆன்மீகப் பொது நிகழ்வைப் போலக் குற்றங்கள் ஒரே சமயம் பொதுவயமாகவும் அந்தரங்கமாகவும் நம்மிடையிலும் நமக்குள்ளும் நிகழ்கின்றன. குற்றங்கள் நவீன மனிதனின் அந்தரங்க உலகம். அவனது பாழ்பட்ட ஆன்மீக உலகம். குற்றம் நிகழும் போது கடவுளுடனான உரையாடலைப் போன்றே பொதுசமூகம் இருப்பதில்லை. இது பாலியல், பாலியல் அல்லாத எல்லா குற்றங்களுக்கும் பொருந்தும். குற்றத்தின் போது குற்றவாளி அந்தரங்கமாக தனித்திருக்கிறான், குற்றமே அவன் தன்னில் இருந்து பொதுவுக்கு வரும் போது அம்பலமாவதே. ஒரு சாதாரண செயல் பொதுவுக்கு வரும் போதே அசாதாரண குற்றச்செயல் ஆகிறது. ராணுவம் ஒருவரை சுடும் போது அது அந்தரங்க வெளிக்கு வருவதே இல்லை. அதனாலே அது குற்றமாவதில்லை. ராணுவம் அதனாலே அந்தரங்க வெளி முழுக்க மறுக்கப்பட்டதாக உள்ளது. ஒழுக்கமீறல் என்பது மட்டுமே அவர்களுடைய அந்தரங்க வெளி. அவர்கள் இனப்படுகொலை செய்தால் அது போர்க் குற்றமாவதும், ஒரு தேசம் அதற்குப் பொறுப்பேற்க நேர்வதும், அது நாட்டிலுள்ள எல்லாரையும் 'அம்மணமாக', சங்கடமாக, சுயவெறுப்பு கொள்ள வைப்பது அதனாலே. எந்த தேசியவாதியாலும் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை ஏற்க முடியாது, எந்த ஜெர்மானிய தேசியவாதியாலும் ஹிட்லரை குற்றவாளி ஆக்க முடியாது - அவை பொதுவில் நிகழ்வதாலே அவற்றை அவர்கள் அந்தரங்கத்துள் கொண்டு வந்தால் அவர்களுடைய தேசியமும் இறையாண்மையும் அதனால் காலியாகி விடும். குற்றம் இந்தளவுக்கு சிக்கலான ஒன்று - குற்றத்தைப் புரிந்துகொள்வது தெய்வம், பேய் போன்ற தர்க்கத்துக்கு அப்பாலான அனுபவங்களைப் புரிந்துகொள்வதற்கு சமானமானது. நான் குற்றங்களை நியாயபடுத்த இதைச் சொல்லவில்லை. பாலியல் அதன் இயல்பிலேயே குற்றச் செயல் தான் - இருவர் இணங்கிச் செய்யும் போதும் அது குற்றத்திற்கு வெகு அருகில் தான் வருகிறது. ஆகையால் பாலியல் என ஒன்று இருக்கும் வரை மனிதர்கள் குற்றம் புரிந்துகொண்டே இருப்பார்கள். பாலியல் குற்றங்களுக்கு தீர்வு அதற்கு மாற்றாக உலகில் ஆன்மீகத்தை, கடவுள் பக்தியைக் கொண்டு வருவது மட்டுமே. இரண்டும் எதிரிடைகள் - கடவுளும் பேய்களும் அதிகமாக பிரசன்னமாகும் உலகில் பாலியலும் குற்றங்களும் தரும் அந்தரங்க வெளி மனிதனுக்கு குறைவாகவே தேவைப்படும். ஆனால் கடவுள் இறந்து போன நவீன உலகில் மனிதன் அந்த ஹேங்க் ஓவரில் குற்றத்தை நாடிக் கொண்டே தான் இருப்பான். இனி கடவுளும் ஆன்மீகவும் மீள வாய்ப்பில்லை. ஆகையால் நான் பக்தியை முன்வைக்கவில்லை, அது தலைவலிக்கு அனாசின் போல பயன்படும் என்றாலும் கூட. நாம் வேறொரு புதிய தீர்வைப் பற்றி யோசிக்க வேண்டும். நவீன மனிதனுக்கு கடவுளற்ற ஒரு ஆன்மீகம் தேவை. சிறை, சமூக ஒதுக்கல், அவமதித்தல் எவையும் நமக்கானவை, குற்றவாளி அல்லாதோருக்கானவை, குற்றவாளியை அவை சீண்டாது. - ஆர். அபிலாஷ் http://thiruttusavi.blogspot.com/2024/08/blog-post_17.html
  24. இங்கிலாந்துடனான 1ஆவது டெஸ்ட்: இலங்கையின் அறிமுக வீரர் மிலன் 41 வருட சாதனையை முறியடித்தார் 22 AUG, 2024 | 12:30 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக மென்ச்செஸ்டர், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (21) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க அரைச் சதம் குவித்து அசாத்திய சாதனை ஒன்றை நிலைநாட்டினார். அப் போட்டியில் கடுமையாக போராடிய இலங்கை சார்பாக 72 ஓட்டங்களைப் பெற்ற சகலதுறை வீரர் மிலான், டெஸ்ட் கிரிக்கெட்டில் 9ஆம் இலக்கத்தில் அறிமுக வீரராக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்று புதிய சாதனையை நிலைநாட்டினார். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத்தில் 1983இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பால்விந்தர் சாந்து 9ஆம் இலக்கத்தில் அறிமுக வீரராக பெற்ற முந்தைய அதிகூடிய 71 ஓட்டங்கள் என்ற 41 வருட டெஸ்ட் சாதனையை மிலன் முறியடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு கட்டத்தில் இலங்கை 7 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது களம் நுழைந்த பின்வரிசை வீரர் மிலன் ரத்நாயக்க, தனது அணித் தலைவருடன் 8ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்ளையும் விஷ்வா பெர்னாண்டோவுடன் 9ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை மீட்டெடுத்து மொத்த எண்ணிக்கை 236 ஓட்டங்களாக உயர உதவினார். தனஞ்சய டி சில்வா 74 ஓட்டங்களையும் விஷ்வா பெர்னாண்டோ 13 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரும். https://www.virakesari.lk/article/191694
  25. சிசிலியில் கடலில் மூழ்கிய ஆடம்பர படகிலிருந்து ஐந்து உடல்கள் மீட்பு - அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம் 22 AUG, 2024 | 11:06 AM இத்தாலியின் சிசிலியில் கடலில் மூழ்கிய ஆடம்பர படகின் சிதைவுகளில் இருந்து ஐந்து உடல்களை சுழியோடிகள் மீட்டுள்ளனர். ஆடம்பர படகின் சிதைவுகளை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுழியோடிகள் காணாமல்போன ஆறுபேரில் ஐவரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர். பெயேசியனின் சிதைவுகளில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை இத்தாலிய கடற்படையினர் இன்னமும் அடையாளம் காணவில்லை. படகு கவிழ்ந்ததை தொடர்ந்து பிரிட்டனை சேர்ந்த நால்வரையும் அமெரிக்காவை சேர்ந்த இருவரையும் சுழியோடிகள் தேடிவருகின்றனர். காணாமல்போனவர்களில் பிரிட்டனின் செல்வந்தரும் அவரது மகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. விபத்துக்குள்ளான படகு அவரது மனைவிக்கு சொந்தமானது. முதலில் புதன்கிழமை மதியம் இரண்டு உடல்கள் போர்ட்டிசெலோ துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் பின்னர் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/191683

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.