ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
Everything posted by ஏராளன்
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
‘நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்தவர்கள் வாக்களிக்க வேண்டிய அவசியம் இருக்காது’ - டிரம்ப் இவ்வாறு சொன்னது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறிய ஒரு கருத்து செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இது குறித்து பல விவாதங்களும் நடந்து வருகின்றன. கடந்த வாரம் ஃப்ளோரிடாவில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் டிரம்ப், "கிறிஸ்தவர்களே, இந்த ஒரு முறை மட்டும் வெளியே வந்து வாக்களியுங்கள். அதன் பிறகு நீங்கள் வாக்களிக்க வேண்டிய அவசியமே இருக்காது.'' ''நான்கு ஆண்டுகளில் எல்லாம் சரிசெய்யப்பட்டுவிடும். என் அன்பான கிறிஸ்தவர்களே, நீங்கள் இனி ஒருபோதும் வாக்களிக்க வேண்டிய அவசியமே இருக்காது. நான் உங்களை நேசிக்கிறேன்,” என்று கூறினார். டிரம்ப் ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல் என்று ஜனநாயக கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வருகிறது. 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் டிரம்ப் மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்தார். டிரம்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில் மீது தாக்குதல் நடத்தினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிறிஸ்தவர்கள் குறித்து டிரம்ப் கூறிய இந்த கருத்தால் விவாதங்கள் தொடங்கியுள்ளன. டிரம்ப் உண்மையில் என்ன சொல்ல முயன்றார்? டிரம்பின் அறிக்கைக்கு எதிர்வினைகள் இந்த கருத்து குறித்து டிரம்பின் தேர்தல் பிரசார செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் செங்கிடம் விளக்கம் கேட்டபோது அவர் நேரடியாக எதுவும் கூறவில்லை. "டிரம்ப் நாட்டை ஒன்றிணைப்பது பற்றிப்பேசினார்," ஸ்டீவன் கூறினார். ஸ்டீவன் பிறகு பேச்சை மாற்றி, இரண்டு வாரங்களுக்கு முன்பு டிரம்ப் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக அரசியல் செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார். டிரம்ப் மீதான தாக்குதலுக்கான காரணத்தை இதுவரை புலனாய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார். டிரம்பின் இந்த கருத்துக்கு வழக்கறிஞர் ஆண்ட்ரூ சிடல் எதிர்வினையாற்றிள்ளார். "நமது ஜனநாயகத்தை அழித்து கிறிஸ்தவ நாட்டை உருவாக்குவது குறித்து டிரம்ப் பேசுகிறார்,” என்று ஆண்ட்ரூ சமூக ஊடகங்களில் எழுதினார். பட மூலாதாரம்,REUTERS “நான் மீண்டும் வாக்களிக்க விரும்பினால் என்ன செய்வது? ''எங்களுக்கு மீண்டும் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நான் எப்பொழுதுமே கூறிவருகிறேன்… இது அமெரிக்கா,” என்று நடிகர் மோர்கன் ஃபேர்சைல்ட் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.. "ஓ…டிரம்ப் 2028 தேர்தலை ரத்து செய்துவிட்டார்,” என்று அரசியல் விமர்சகர் கீத் ஓல்பர்மேன் கூறினார். "டிரம்ப் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று நாங்கள் சொல்கிறோம். அதன் மூலம் நாங்கள் தெரிவிக்க முயற்சிப்பது இப்போது டிரம்ப் கூறியதைத்தான்" என்றார் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் மார்ட்டின் ஹென்ரிச்சின் தகவல் தொடர்பு இயக்குநர் கேட்டி பெட்டி. ”மீண்டும் வாக்களிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற டிரம்பின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. அது மிகவும் பிற்போக்குத்தனமானது,” என்று கமலா ஹாரிஸின் தேர்தல் பிரசார செய்தித் தொடர்பாளர் ஜேசன் சிங்கர் விவரித்தார். டிரம்பின் கருத்து கவலையளிப்பது ஏன்? வாக்களிக்க அவசியம் இருக்காது என்ற டிரம்பின் தற்போதைய கருத்தை அவரது முந்தைய கருத்துடன் சிலர் இணைத்துப் பார்க்கின்றனர். ”அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், மெக்ஸிகோவுடனான தெற்கு எல்லையை மூடுவதற்கும் எண்ணெய் சுரங்கத்தை விரிவுபடுத்துவதற்கும் முதல் ஒரு நாள் மட்டும் நான் சர்வாதிகாரியாக மாறுவேன்,” என்று 2023 டிசம்பரில் ’ஃபாக்ஸ் நியூஸுக்கு’ அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார். இந்த கருத்தை ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்தபோது, டிரம்ப் அதை ஒரு நகைச்சுவை என்று அழைத்தார். சர்வாதிகார ஆட்சியாளர்களை டிரம்ப் பாராட்டிய பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இந்த ஆட்சியாளர்களில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஹங்கேரியின் விக்டர் ஓர்பன் மற்றும் வட கொரிய ஆட்சியாளர் கிம் ஜாங் உன் ஆகியோரின் பெயர்கள் அடங்கும். ஹிட்லர் சில நல்ல விஷயங்களையும் செய்துள்ளார் என்று டிரம்ப் ஒருமுறை கூறியதாக வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியர் ஒருவரை மேற்கோள்காட்டி ’தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஹிட்லரின் நாஜி ஆட்சியின் போது 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். அதிபர் வேட்பாளராகும் முன்பே இஸ்ரேலிடம் கடுமையான தொனியில் பேசிய கமலா ஹாரிஸ்- காரணம் என்ன?26 ஜூலை 2024 டிரம்ப் ஏன் கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேபிடல் ஹில்லுக்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் சிலுவைகளுடன் காணப்பட்டனர். அமெரிக்காவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறை மக்களின் மதத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதில்லை. அமெரிக்காவின் மக்கள்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் 70 சதவிகிதம் என்று ப்பியூ ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. 2021 ஜனவரியில் டிரம்ப் ஆதரவாளர்கள் கேபிடல் ஹில்லில் நுழைந்தபோது கூட கிறிஸ்தவம் தொடர்பான கொடிகள் அங்கு காணப்பட்டன. சில கொடிகளில் ’ஜீஸஸ் 2020’ என்றும் எழுதப்பட்டிருந்தது. கேபிடல் ஹில் நோக்கி நகரும் முன் சிலர் மண்டியிட்டு பிரார்தனை செய்வதையும் காண முடிந்தது. அமெரிக்காவின் அரசியல் எப்படி பிளவுபட்டுள்ளது என்பதும் 2020 தேர்தலில் வெளிப்பட்டது. வெள்ளையின அமெரிக்க கிறிஸ்தவர்களில் கால் பகுதியினர் டிரம்பிற்கு ஆதரவளித்தனர் என்பதும், அதே நேரத்தில் 90 சதவிகித கறுப்பின கிறிஸ்தவர்கள் பைடனை ஆதரித்தனர் என்பதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்தன. டிரம்ப் கடந்த தேர்தல்களிலும் கிறிஸ்துவ மதத்தைப் பாதுகாப்பது குறித்து பேசி வந்தார். டிரம்பின் தேர்தல் பிரசாரமான 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' என்பதை 'மேக் அமெரிக்காவை கிறிஸ்டியன் அகைன்' என்றும் சில ஆதரவாளர்கள் பார்க்கின்றனர். ”பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டால் மதம் இல்லை. பைபிளுக்கு கேடு, கடவுளுக்கு கேடு. பைடன் கடவுளுக்கும் துப்பாக்கிகளுக்கும் எதிரானவர்,” என்று 2020 ஆம் ஆண்டில், ஓஹியோவில் ஒரு தேர்தல் பேரணியில் டிரம்ப் கூறினார். இப்போது 2024 அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் கிறிஸ்தவம் தொடர்பாக தீவிரமாக பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்வின் போது, கிறிஸ்தவ மதத்தை குறிவைத்து சொல்லப்படும் கருத்துக்களுக்கு எதிராக ஒரு பணிக்குழுவை உருவாக்குவது குறித்து டிரம்ப் பேசியிருந்தார். அமெரிக்காவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார். டிரம்பின் கருத்து மற்றும் அரசியலமைப்பு அமெரிக்காவில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். அதாவது மொத்தம் எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும். டிரம்ப் 2016-2020 வரை அதிபராக இருந்தார். அமெரிக்காவில், ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் மட்டுமே இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருந்துள்ளார். ரூஸ்வெல்ட் 1932 முதல் 1945 இல் இறக்கும் வரை நான்கு முறை அமெரிக்காவின் அதிபராக இருந்தார். “ஃபிராங்க்ளின் 16 ஆண்டுகள் அதாவது நான்கு முறை அதிபராக இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் மூன்று ஆட்சிக்காலம் பற்றி பரிசீலிப்போமா அல்லது இரண்டு ஆட்சிக்காலம் பற்றியா என்று சொல்ல முடியாது,” என்று இதுபற்றி டிரம்ப் ஒரு தேர்தல் பேரணியில் கூறினார். டிரம்பின் கருத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என்று ’தி கார்டியன்’ நாளேடு தெரிவிக்கிறது. டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால், அமெரிக்க அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின்படி, 2029 ஜனவரிக்குப் பிறகு அவர் அதிபர் பதவியை வகிக்க முடியாது என்று அந்த நாளிதழ் எழுதுகிறது. இந்தத் திருத்தத்தில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை. இதற்குப் பிறகு நான்கில் மூன்று பங்கு அமெரிக்க மாகாணங்கள் இந்த மாற்றத்தை அங்கீகரிக்க வேண்டும். மாமியார் பிரச்னையை 'இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்' மூலம் சமாளிக்கும் மருமகள்கள்27 ஜூலை 2024 தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசு கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. செனட்டில் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இல்லை. அத்தகைய சூழ்நிலையில் டிரம்புக்கு இந்தப்பாதை எளிதானது அல்ல. பைடனின் விலகலுக்குப் பிறகு கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் நுழைந்துள்ளார். கமலா ஹாரிஸுடன் டிரம்ப் கடும் போட்டியில் இருப்பதாக குடியரசுக் கட்சியின் பக்கசார்புள்ள ஃபாக்ஸ் நியூஸ் நெட்வொர்க்கின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. பைடன் பின்வாங்குவதற்கு முன்பு கருத்துக் கணிப்புகளில் டிரம்ப் முன்னிலையில் இருந்தார். கமலா ஹாரிஸ் மீதான டிரம்பின் தாக்குதல்கள் இதன் காரணமாகவும் அதிகரித்திருக்கலாம். கமலாவை ’ வெற்றிகரமாக செயல்படாத துணை அதிபர்’ என்று டிரம்ப் கூறி வருகிறார். கூடவே ஹாரிஸின் வம்சாவளி அடையாளம் தொடர்பான தாக்குதல்களையும் குடியரசுக்கட்சி அதிகரித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cj50308ddv2o
-
கோலான்குன்றின் மீது ரொக்கட் தாக்குதல் - 12 சிறுவர்கள் உட்பட பல இஸ்ரேலியர்கள் பலி – பதில் தாக்குதல் குறித்து எச்சரிக்கை
கோலான்குன்று தாக்குதலிற்கு பதிலடி கொடுப்பதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி - முழுமையான யுத்தம் குறித்து அச்சநிலை Published By: RAJEEBAN 29 JUL, 2024 | 12:33 PM ஹெஸ்புல்லா அமைப்பு கோலான்குன்றுகள் மீது மேற்கொண்ட தாக்குதலிற்கு பதிலடி கொடுப்பதற்கு இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அந்த நாட்டின் அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது. கோலான்குன்று தாக்குதலிற்கு எவ்வாறான விதத்தில் எந்த தருணத்தில் பதில்தாக்குதலை மேற்கொள்வது என்பதை தீர்மானிப்பதற்கான அனுமதியை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு அமைச்சரவை வழங்கியுள்ளது. கோலான்குன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையிலேயே இஸ்ரேலிய அமைச்சரவை பதில் தாக்குதலிற்கான அனுமதியை வழங்கியுள்ளது. ஹெஸ்புல்லா அமைப்பு இந்த தாக்குதலை தான் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது. லெபானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் தாக்கப்படும் என எச்சரித்துள்ள இஸ்ரேல் விமானதாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலிற்கும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையில் முழுமையான யுத்தம் மூள்வது குறித்து சர்வதேச அளவில் அச்சநிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பினரும் அதிகளவு பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/189680
-
மோதியின் யுக்ரேன் பயணம் குறித்த ஊகங்கள்- ரஷ்ய ஊடகங்களில் ஏன் இவ்வளவு விவாதம் நடக்கிறது?
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் மாதம் யுக்ரேனுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே மத்தியஸ்தம் செய்ய வாய்ப்பிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்திய நாடாளுமன்றத்துடன் தொடர்புடைய ஒரு வட்டாரம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோதி யுக்ரேன் செல்லக்கூடும் என்று தூதரக வட்டாரங்களை குறிப்பிட்டு இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய அரசு ஊடகமான ஆர்டி (RT) செய்தி வெளியிட்டுள்ளது. “ யுக்ரேன் பிரச்னையில் இந்தியா மத்தியஸ்தம் செய்ய வாய்ப்புள்ளது. பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணத்தின் போது இது நடக்கலாம். இது இன்னும் பரிசீலனையில் உள்ளது” என்று இந்திய பிரதமரின் யுக்ரேன் பயண வாய்ப்புகள் குறித்த தகவலை வழங்கியவர்கள் கூறுவதாக டாஸ் குறிப்பிடப்பட்டுள்ளது. “ரஷ்யாவுடன் இந்தியா நீண்டகாலமாக நட்புறவை கொண்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனும் பிரதமர் நரேந்திர மோதி நல்லுறவைக் கொண்டுள்ளார். யுக்ரேனும் இந்தியாவுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. இரு நாடுகளும் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளன.” "ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர உதவ முடியும் என்று இந்தியா பலமுறை கூறியுள்ளது. இருப்பினும், இரு தரப்பும் ஒப்புக்கொண்டால் மட்டுமே மத்தியஸ்தம் செய்ய முடியும். யுக்ரேன் எதிர்கொண்டு வரும் நெருக்கடியை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும்" என்று தகவலை வழங்கியவர்கள் டாஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் ஆகஸ்ட் மாதம் நிகழலாம் என டாஸ் செய்தி குறிப்பிடுகிறது. இது இந்திய ஊடகமான WION-ன் செய்தியை மேற்கோள் காட்டியுள்ளது. அதில் "இந்திய பிரதமர் அநேகமாக ஆகஸ்ட் 23 அன்று யுக்ரேன் செல்வார்" என்று தகவலை வழங்கியவர்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் அரசு ஊடக செய்தியில் வெளியான தகவல் ரஷ்ய அரசின் ஊடகமான 'ஆர்டி (RT) ’, இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை மேற்கோள் காட்டி, ஆகஸ்ட் மாதம் யுக்ரேன் தலைநகர் கீவ் செல்ல மோதி திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. ஆர்டி இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், ''மோதி ஆகஸ்ட் 23ஆம் தேதி கீவ்வை அடையலாம். ஜூலை மாதம், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் யுக்ரேனிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசினர்''' என்று இந்திய ஊடகங்களில் வந்த செய்தியை மேற்கொள்காட்டியுள்ளது. ''மோதி ரஷ்யாவுக்கு சென்றது ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளுக்குப் பலத்த அடியாக அமைந்தது. மேலும் மோதியின் ரஷ்ய பயணத்தால் அமெரிக்கா எரிச்சலடைந்துள்ளது என கூறப்படுகிறது'' என ஆர்டி செய்தியில் எழுதியுள்ளனர். சர்வதேச செய்தி முகமையான ராய்ட்டர்ஸ், ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோதி யுக்ரேன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், டெல்லியில் உள்ள யுக்ரேன் தூதரகம் இந்த தகவலை ராய்ட்டர்ஸிடம் உறுதிப்படுத்தவில்லை. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை என்று ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது. அசாமில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்தாகிறது - பாஜக அரசு முடிவின் பின்னணி27 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுப்பிரமணியம் சுவாமி நிபுணர்கள் சொல்வது என்ன? ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டதாக கூறப்படும் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து, வெளியுறவு விவகார மற்றும் புவிசார் உத்தி நிபுணர் பிரம்மா செல்லனே, தன் எக்ஸ் பக்கத்தில் "மோதி யுக்ரேன் செல்வதன் மூலம் என்ன சாதிக்க விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் போர் நிறுத்தத்தை விரும்பினால், அதனை செயல்படுத்த அமெரிக்கா தேவை. போர் நிறுத்த முயற்சிகள் வேகம் பெறுமா இல்லையா என்பதை அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்." என்று பதிவிட்டுள்ளார். பாஜக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி தன் எக்ஸ் பக்கத்தில், "யுக்ரேனில் மோதியின் முயற்சிகள் வரவேற்கத்தக்க செயலாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது அமெரிக்க அதிபரின் அழுத்தத்தால் நடக்கிறது. ஆனால், பஞ்ச தந்திர கதைகளில் வரும் வௌவால்களின் நிலையில் இருந்து மோதி பாடம் கற்க வேண்டும். இரு பக்கங்களில் இருந்தும் விளையாட கூடாது அல்லது வௌவால்களுக்கு ஏற்பட்ட மேசமான நிலைமையை அனுபவிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES முன்னாள் இந்திய தூதர் அசோக் சஜ்ஜன்ஹர் தன் எக்ஸ் பக்கத்தில், "பிரதமர் மோதியின் வழக்கத்திற்கு மாறான ஆகஸ்ட் மாத யுக்ரேன் பயணத்தை நான் வரவேற்கிறேன். உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் செல்வாக்கு என்ன என்பதற்கு இதுவே சான்று. இந்த முடிவு இந்தியாவின் உத்தியில் உள்ள சுயாட்சி மற்றும் பலதரப்பு உறவுகளை மேம்படுத்தும் கொள்கையை பிரதிபலிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். 'தி இந்து' பத்திரிகையின் வெளியுறவுக் கொள்கை விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர், "மோதி யுக்ரேன் சென்றால், போர் தொடங்கியதற்கு பிறகு ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளுக்கும் செல்லும் ஒரு சில தலைவர்களில் அவரும் ஒருவராக இருப்பார். போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் பயணம் செய்த மற்ற நாடுகளின் தலைவர்களில் கினி-பிசாவ், ஹங்கேரி, இந்தோனீசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களும் அடங்குவர்." என்கிறார். இதற்கு முன்பும் மோதியும் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியும் சந்தித்துள்ளனர் பிப்ரவரி 2022இல் ரஷ்யா-யுக்ரேன் போர் வெடித்த பிறகு, பிரதமர் மோதி இத்தாலி மற்றும் ஜெர்மனியில் நடந்த ஜி-7 மாநாடுகளின் போது ஜெலென்ஸ்கியை சந்தித்தார். ஆனால் அவர் இதுவரை யுக்ரேன் செல்லவில்லை. கடந்த மாதம் இத்தாலியில் ஜெலென்ஸ்கியை சந்தித்தபோது, யுக்ரேன் நெருக்கடிக்கு அமைதியான தீர்வு காண இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று மோதி கூறியிருந்தார். இந்த மாத தொடக்கத்தில், ரஷ்ய பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புதினை மோதி சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு, புதினுடனான தனது உரையாடலில் பல 'சுவாரஸ்யமான புதிய யோசனைகள்' வெளிவந்ததாக மோதி கூறினார். ஆனால், ''உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் தலைவர், உலகின் மிகவும் பயங்கரமான குற்றவாளியை அரவணைத்துச் செல்வதைப் பார்ப்பது ஏமாற்றம் அளிக்கிறது'' ஜெலென்ஸ்கி வ் கூறினார். இது அமைதி முயற்சியில் விழுந்த பேரிடியாகும். டெல்லியில் உள்ள யுக்ரேன் தூதரை இந்திய அரசு அழைத்து இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு: தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் - அண்ணா பல்கலைக்கழகம் கூறுவது என்ன?28 ஜூலை 2024 டெல்லி: ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களின் நிலை குறித்து கவலை தெரிவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள்28 ஜூலை 2024 பட மூலாதாரம்,@NARENDRAMODI மோதியின் ரஷ்ய பயணம் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கா பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம் புதினுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் விளைவை பலவீனப்படுத்தியதாக மேற்கத்திய ஊடகங்கள் கூறின. யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கிறது ஆனால் இந்தியா அவர்களின் கொள்கைகளுடன் கைகோர்த்து நிற்கவில்லை. மோதியின் ரஷ்யப் பயணம் வெற்றிகரமாக நிகழ்ந்தது என இந்தியா கூறியிருந்தது. ஆனால் மோதியின் ரஷ்யப் பயணம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கவலை தெரிவித்திருந்தது. யுக்ரேன் போரை நிறுத்துவதற்கான நியாயமான அமைதிக்கான முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்ற மோதியின் முதல் ரஷ்யா பயணம் இதுவாகும். மோதி ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டணியான நேட்டோ கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அமெரிக்காவில் நடைபெற்ற இந்த நேட்டோ கூட்டத்தில், யுக்ரேனுக்கான ஒத்துழைப்பு மற்றும் நேட்டோவில் யுக்ரேனை சேர்ப்பது ஆகியவை முக்கிய விவாதமாக இருந்தது. பாதுகாப்பு மற்றும் இதர தேவைகளுக்கு மேற்கத்திய நாடுகளை முழுமையாக சார்ந்திருக்க முடியாது என்பதை மேற்கத்திய நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் மோதியின் ரஷ்ய பயணம் அமைந்திருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்திருந்தார். “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குகிறது, இது சகஜமாக செயல்பாடுதான்” என்று தெளிவுபடுத்தியிருந்தார். https://www.bbc.com/tamil/articles/ckmg35jnl3no
-
ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள்; திமுக அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி
29 JUL, 2024 | 12:44 PM சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. சட்டம் - ஒழுங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒரே நாளில் மட்டும் 3 கொடிய அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. கடலூர் நகர அதிமுக வட்ட செயலாளரான பத்மநாதன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருப்பணாம்பாக்கம் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர் மீது மகிழுந்தை மோதிச் சாய்த்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறது. சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவு அணி மாவட்ட செயலாளர் செல்வகுமார், இளையான்குடி சாலையில் செல்லும் போது மர்ம ஆட்களால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.r கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் உஷாராணியின் கணவர் ஜாக்சனை இரு சக்கர ஊர்திகளில் வந்த கும்பல் வெட்டிப்படுகொலை செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்பதையே இந்த படுகொலைகள் காட்டுகின்றன. படுகொலை செய்யப்பட்டவர்கள் அனைவருமே முன்விரோதம் காரணமாகத் தான் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறி காவல்துறை அதன் கடமையை தட்டிக்கழிக்கக் கூடாது. கொல்லப்பட்ட மூவருக்குமே முன்விரோதம் இருந்திருக்கிறது என்பது உண்மை தான். அரசியலில் இருக்கும் ஒருவருக்கு எவருடனாவது முன்விரோதம் இருந்தால், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தான் பொருள் ஆகும். அதனால், அவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தவறி விட்டது. கொடூரமான அரசியல் படுகொலைகள் ஒரு புறம் இருக்க போதைக் கலாச்சாரமும், அதனால் நிகழும் குற்றச் செயல்களும் தலைவிரித்து ஆடுகின்றன. சென்னை காசிமேடு பகுதியில், 17 வயது சிறுவன் கஞ்சா போதையில் கையில் கத்தியுடன், இன்னொரு சிறுவனை கொடூரமாக தாக்கும் காணொலி காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள், 17 வயதான சிறுவனால் எளிதில் வாங்கும் அளவுக்கு தாராளமாக புழக்கத்தில் உள்ளது என்றால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கொட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலையாயக் கடமை சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது தான். ஆனால், எந்த அச்சமும் இல்லாமல் குற்றவாளிகள் நடமாடுகின்றனர். இதைத் தடுக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதற்கு இது தான் காரணமாகும். இனியாவது காவல்துறையை தட்டி எழுப்பி , தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். அதை செய்ய முடியா விட்டால், தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189682
-
வெனிசுவேலா ஜனாதிபதி தேர்தல் - நிக்கொலஸ் மதுரோ வெற்றி
வெனிசுவேலா அதிபர் தேர்தல்: மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிப்பு - அமெரிக்கா எழுப்பியுள்ள சந்தேகம் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வெனிசுவேலா அதிபர் தேர்தலில் அதிபர் நிகோலஸ் மதுரோ வெற்றிப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல் கவுன்சில் அறிவித்துள்ளது. இதுவரை 80% ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளதில் அதிபர் மதுரோ 51% வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அவரது முக்கிய போட்டியாளர் 44% வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தேசிய தேர்தல் கவுன்சிலின் தலைவர் எல்வில் அமோரோசோ கூறியுள்ளார். இவர் அதிபர் நிகோலஸ் மதுரோவின் நெருங்கிய கூட்டாளியாக உள்ளார். தேசிய தேர்தல் கவுன்சிலின் முடிவுகள் மோசடியான ஒன்று என எதிர்கட்சி கூறியுள்ளது. தங்களது வேட்பாளர் எட்முண்டோ கோன்ஸாலேஸ் 70% வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அவர்தான் நியாயமான முறையில் அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டவர் என்றும் எதிர்கட்சி தெரிவித்துள்ளது. தாங்கள் பெற்ற மொத்த வாக்குகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஆகியவற்றை தற்போதைய அதிபரை விட எதிர்கட்சி வேட்பாளர் கோன்ஸாலேஸ் 40% சதவீத புள்ளிகள் முன்னிலையில் இருந்ததை காட்டுகின்றன என எதிர்கட்சி கூறியுள்ளது. 11 ஆண்டுளாக பதவியில் இருக்கும் அதிபர் நிகோலஸ் மதுரோவை பதவியிலிருந்து அகற்ற, எதிர்கட்சிகள் கோன்ஸாலேஸ் பின்னால் ஒன்றிணைந்தன. தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள், கோன்ஸாலேஸ் அதிபர் மதுரோவை தோற்கடிப்பார் என கூறின. வெனிசுவேலாவில் 25 வருடங்களாக பொதுவுடமைவாத பிஎஸ்யுவி கட்சி ஆட்சியில் உள்ளது. முதலில் , மறைந்த ஹியூகோ சாவேஸ் அதிபராக இருந்த நிலையில், 2013-ல் அவர் புற்றுநோயால் மறைந்தபிறகு, நிகோலஸ் மதுரோ அதிபரானார். இந்தநிலையில் தாங்கள் மாற்றத்தை விரும்புவதாகப் பல வாக்காளர்கள் கூறினர். இந்த தேர்தலில் அரசு மோசடியில் ஈடுபடலாம் என்ற பரவலான அச்சங்கள் இருந்தபோதிலும், தாங்களுக்கு கிடைக்கும் முன்னணி மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் "தேர்தலைத் திருட" மதுரோ நிர்வாகம் எடுக்கும் முயற்சியை முறியடிக்க முடியும் என எதிர்க்கட்சி நம்பியது. தேசிய தேர்தல் கவுன்சில் தேர்தல் முடிவுகளை அறிவித்த பிறகு, அதுகுறித்த சந்தேகத்தை வெளிப்படுத்தியவர்களில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனும் ஒருவர். வெனிசுவேலா தேசிய தேர்தல் கவுன்சில் அரசு ஆதரவாளர்களால் நிரம்பியுள்ளது. "அறிவிக்கப்பட்ட முடிவு வெனிசுவேலா மக்களின் விருப்பத்தையோ அல்லது வாக்குகளையோ பிரதிபலிக்கவில்லை என்பதில் அமெரிக்கா தீவிர அக்கறை கொண்டுள்ளது" என்று அவர் கூறினார். தேர்தல் முடிவுகளை நம்புவதற்குக் கடினமாக உள்ளது என சிலி அதிபர் கேப்ரியல் போரிக் கூறியுள்ளார். இதற்கிடையே மதுவோவின் கூட்டாளிகள் விரைவாக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ''வெனிசுவேலா மக்களின் கண்ணியமும், துணிச்சலும் அழுத்தம் மற்றும் தவறாக வழிநடத்துதலுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது" என கியூபா அதிபர் கூறியுள்ளார். ''அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் வெற்றி" என்று கேரகஸில் ஆதரவாளர்கள் மத்தியில் மதுரோ விவரித்தார். அவர் வெனிசுவேலா தேர்தல் முறையைப் பாராட்டினார், அது வெளிப்படையானது என்று விவரித்தார். மேலும் எதிர்க்கட்சிகளைக் கேலி செய்த அவர், ஒவ்வொரு தேர்தலிலும், ''மோசடி என்று கூறுகிறார்கள்" என்றார். எதிர்க்கட்சி தனது சொந்த வாக்கு எண்ணிக்கையை அறிவிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான மக்களை சாட்சிகளாக நிறுத்தியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,எதிர்கட்சி வேட்பாளர் கோன்ஸாலேஸ் தங்களது சாட்சிகள் வாக்குச் சாவடிகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என எதிர்கட்சி கூட்டணியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் கண்டனத்திற்குள்ளாவது இது முதல் முறையல்ல. 2018 மதுரோ பெற்ற வெற்றியும் சுதந்திரமானது அல்லது நியாயமானது அல்ல என்று பரவலாக நிராகரிக்கப்பட்டது. வெனிசுவேலாவில் மின்னணு வாக்குப்பதிவு மூலம் தேர்தல் நடைபெறுகிறது. மின்னணு வாக்குப்பதிவின் முடிவுகள் தேசிய தேர்தல் கவுன்சிலின் தலைமையகத்திற்கு அனுப்பப்படுகின்றன. யாருக்கு வாக்களிப்பட்டது என்பதை காட்டும் ரசிது மின்னணு வாக்குப்பதிவு இருந்து அச்சடிக்கப்படும். அது வாக்குப் பெட்டியில் செலுத்தப்படும். சட்டப்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் செலுத்தப்பட்ட இந்த காகித ரசீதுகளை எண்ண கட்சிகள் சாட்சிகளை அனுப்பலாம். ஆனால், இதை செய்வதற்கு பலர் தடுக்கப்பட்டுள்ளனர். தேசிய தேர்தல் கவுன்சில் அறிவித்த முடிவுகள், இந்த காகித ரசீது எண்ணிக்கைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை பார்ப்பதே எதிர்கட்சிகளின் திட்டம். ஆனால், இந்த அச்சிடப்பட்ட ரசீதுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே தங்களுக்கு வழங்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை மாலை எதிர்க்கட்சி கூறியது. https://www.bbc.com/tamil/articles/cpd9ed3km1do
-
ஜனாதிபதி வேட்பாளர்களில் சமஸ்டியை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் ; சிறிதரன்
Published By: DIGITAL DESK 3 29 JUL, 2024 | 02:21 PM தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஸ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) கிளிநொச்சியில் நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எனினும், எதிர்வரும் மாதம் 10 ,11ஆம் திகதிகளில் மத்திய குழு கூடி பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது தேர்தல் விஞ்ஞானத்தில் சமஸ்டியை வலியுறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதா என்று முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். விக்கினேஸ்வரன் வடமாகாண சபையே நடாத்த முடியாதவர் என்று சுமந்திரன் நேற்றைய தினம் குறிப்பிட்டது தொடர்பாக ஊடக வியலாளர் கேள்வி கேட்ட போது எமது கட்சியைச்சேர்ந்தவரின் கருத்திற்கு வியாக்கினம் வழங்குது சரியான விடயம் அல்ல விக்கினேஸ்வரன் தான் வழங்க வேண்டும். இப்போதைய கால சூழல் அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டும் ஒற்றுமையை குழப்பி அதனை விட்டு பேசிக்கொண்டு இருந்தால் அடிப்படை அரசியல் கொண்டு செல்வதில் பிரச்சினை உள்ளது. மகிந்த ராஜபக்ச பிள்ளையானை நம்பி பொலிஸ் அதிகாரம் கொடுக்கலாமா என்று கேட்டிருந்தார். அதற்காகவே முன்னாள் நீதியரசரை களம் இறக்கி பொலிஸ் அதிகாரம் நிதி அதிகாரம் வழங்குமாறு கோரியிருந்தோம் எல்லாருடைய விருப்பத்திலே தெரிவு இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/189691
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்கு விசேட அறிவித்தல் 29 JUL, 2024 | 12:18 PM எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் அடங்கிய ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர்களின் தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் ஜூலை மாதம் 26 ஆம் திகதியிலிருந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு மேலாக, ⦁ பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு , சுதந்திர சதுக்கம், கொழும்பு 07 ⦁ தொழிலாளர் திணைக்களம் நாராஹேன்பிட்டி கொழும்பு 05 ⦁ கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல ⦁ பதிவாளர் நாயகம் திணைக்களம், இல.234/A3,டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல ⦁ தபால் தலைமையகம் ஆர்.விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10 ⦁ கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள். அபிவிருத்தி அமைச்சு, மாளிகாவத்தை தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.elections.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோரின் விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோர் தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இருந்து விண்ணப்பங்களை இலவசமாக பொற்றுக்கொள்ள முடியும் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலக அதிகாரியிடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன் ஒப்படைக்க வேண்டும். தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 5 அல்லது அதற்கு முன்னர் அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் - தேர்தல் ஆணைக்குழு https://www.virakesari.lk/article/189673
-
காட்டு சூழலை ஏற்றுக்கொள்ளாமல் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இடம் மாறிய புலி - காரணம் என்ன?
பட மூலாதாரம்,TAMILNADU FOREST DEPARTMENT படக்குறிப்பு,ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்த 3 வயது மதிக்கத்தக்க ஆண் புலி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் (ஒவ்வொரு வருடமும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள், தனியார் அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.) ‘காடுகளின் காவலன்’ என அழைக்கப்படும் புலிகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது குறித்தும், மனிதர்கள்- புலிகள் மோதல்களைத் தவிர்ப்பது குறித்தும் பல்வேறு முயற்சிகள் மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்த 3 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வனத்துறை கூறுகிறது. இயற்கை இருப்பிடமான காட்டிலிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரு புலி மாற்றப்பட்டது ஏன்? ‘முள்ளம்பன்றியை வேட்டையாடியதால் காயமடைந்த புலி’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் வனத்துறை தகவலின்படி, கடந்த 2021 செப்டம்பர் 27, அன்று, வால்பாறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் தேயிலைத் தோட்டத்தில் சிக்கித் தவித்த எட்டு மாதப் புலிக்குட்டி ஒன்று வனத்துறையால் மீட்கப்பட்டது. அந்த புலிக்குட்டி தாயைப் பிரிந்து தனியாக சுற்றிவந்துள்ளது. முள்ளம்பன்றி ஒன்றை வேட்டையாடியதால், முள்ளம்பன்றியின் முட்கள் குத்தி, முகம், வாய்ப்பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் கூண்டில் அடைக்கப்பட்டு வனக் கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. சில மாதங்கள் சிகிச்சைக்குப் பிறகு காயங்களிலிருந்து புலிக்குட்டி மீண்டது. தாயைப் பிரிந்த குட்டி என்பதால், காட்டிற்குள் அதைத் தனியாக விடுவது பாதுகாப்பாக இருக்காது எனக் கருதி மானாம்பள்ளி அடுத்துள்ள மந்திரி மட்டம் பகுதியில் புலிக்குட்டியை பராமரிக்கவும், பயிற்சி அளிக்கவும் பத்தாயிரம் சதுரஅடி அளவில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் இயற்கையான சூழலுடன் கூண்டு அமைக்கப்பட்டது. இந்தக் கூண்டில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு அந்த புலிக்குட்டிக்கு வேட்டைப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்புலிக்குட்டியை ஓராண்டு வரை பராமரித்து, அதன் எடை 250 கிலோ எடை என்ற ஆரோக்கியமான அளவை எட்டிய பிறகு, புலியின் உடல்நிலை, வேட்டையாடும் தன்மையைப் பொறுத்து காட்டிற்குள் விடுவது குறித்து பரிசீலிக்கலாம் என வனத்துறை முடிவு செய்திருந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வனத்துறை கண்காணிப்பில் இருந்த புலி, கடந்த வாரம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் பார்கவ் தேஜா, “தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாட்டு நடைமுறையின் படி, மந்திரிமட்டம் காப்புக் காடுகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூண்டு கொண்டுவரப்பட்டது.” ''கடந்த இரண்டு ஆண்டுகளாக 10,000 சதுர அடி அரணில் வைக்கப்பட்டிருந்த புலி, அந்தக் கூண்டிற்குள் ஏற்றப்பட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பத்திரமாகச் கொண்டுசெல்லப்பட்டது.” என்று தெரிவித்தார். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் - துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார்28 ஜூலை 2024 ஒரே பேராசிரியர் 32 பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்தது எப்படி? அண்ணா பல்கலைக் கழகம் கூறுவது என்ன?28 ஜூலை 2024 பட மூலாதாரம்,TAMILNADU FOREST DEPARTMENT படக்குறிப்பு,புலியை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்ட வனத்துறை குழு ‘புலிக்கு வேட்டைப் பயிற்சி’ இயற்கை அரணில் வைக்கப்பட்டிருந்த புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து பிபிசியிடம் விளக்கினார் புலிகள் ஆராய்ச்சியாளர் முனைவர் குமரகுரு. “தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக, வனப்பகுதியில் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு, வேட்டைப் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு புலி இதுதான்” என்று கூறினார். “கடந்த 2021ஆம் ஆண்டு, வால்பாறையில் கண்டெடுக்கப்பட்ட போது. அதற்கு வயிறு மற்றும் கணையத்தில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது. முள்ளம்பன்றியை வேட்டையாட முயற்சி செய்து, வாய்க்குள் சென்ற முட்களால் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருந்தது. பின்னர் வனத்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிறப்பாக தேறி வந்தது” என்கிறார் குமரகுரு. படக்குறிப்பு,புலிகள் ஆராய்ச்சியாளர் முனைவர் குமரகுரு அப்புலி வேட்டையாடுவதற்கு ஏதுவாக முயல், காட்டுப் பன்றி போன்ற மிருகங்கள் இயற்கை அரணிற்குள் விடப்பட்டதாகவும் ஆனால் அவற்றை வேட்டையாடுவதில் அந்த புலி ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறுகிறார் குமரகுரு. “மருத்துவ கவனிப்பில் இருந்த காலம் அதிகம் என்பதால் அது மனிதர்களைச் சார்ந்தே வாழ்ந்து பழகிவிட்டது. உடல்நிலை முழுமையாக தேறியபிறகு அதை அப்படியே காட்டில் விட்டால், உணவின்றி இருக்கும் அல்லது பிற மிருகங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் என்பதால் வேட்டைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.” என்று கூறினார். அக்குட்டிக்கு தாய் இருந்திருந்தால், விலங்குகளின் தாக்குதலில் இருந்து அதுவே சில வருடங்களுக்கு பாதுகாத்திருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் குமரகுரு. மீட்கப்பட்ட போது என்ன மனநிலையில் இருந்ததோ அதே குழந்தை மனநிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகும் அந்தப் புலி இருந்ததால்தான், பாதுகாப்பு கருதி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டதாக அவர் கூறினார். வரும்காலத்தில் அந்த புலியை மீண்டும் காட்டில் விட வாய்ப்புகள் உள்ளதா எனக் கேட்டபோது, “இல்லை, புலி என்பது மிகப்பெரிய பரப்பளவை தனது வேட்டைக் களமாக வைத்திருக்கும் ஒரு மிருகம். இந்தப் புலிக்கு அத்தகைய திறன் இல்லை என்பதால் இயற்கைச் சூழலில் தனியாக அதிக காலம் தாக்குப்பிடிக்க முடியாது. ஒரு சராசரி காட்டுப் பன்றி கூட அதைக் கொன்று விடும்” என்று கூறினார். வருமான வரி 'ரீஃபண்ட்' எந்த கட்டத்தில் உள்ளது என்பதை அறிவது எப்படி?28 ஜூலை 2024 வீட்டுக்கடன்: முழு தவணைக் காலம் அல்லது முன்கூட்டியே முடிப்பது இரண்டில் எது சிறந்தது?28 ஜூலை 2024 இந்தியாவில் எத்தனை புலிகள் உள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பாக 2006 முதல், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடந்து வருகின்றது. 2006ஆம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பின் முடிவில் இந்தியக்காடுகளில் 1,411 புலிகள் உள்ளதாகவும், 2010 ஆண்டில் 1,706 புலிகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2014ஆம் வருடம் நடந்த புலிகள் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 2,226 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது, பிறகு 2018ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இது 2,967 ஆக உயர்ந்தது. இறுதியாக எடுக்கப்பட்ட 2022ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 3,167 புலிகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் மொத்தம் 628 புலிகள் இறந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், இந்த காலகட்டத்தில் புலிகளின் தாக்குதலில் 349 பேர் கொல்லப்பட்டுள்ளனர், குறிப்பாக மகாராஷ்டிராவில் மட்டும் 200 மனித இறப்புகள் பதிவாகியுள்ளன. உலகில் வாழும் புலிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான புலிகள், இந்தியாவில் வாழ்கின்றன. இந்தியாவில் 3 ஆயிரத்திற்கு அதிகமாக புலிகள் இருந்தாலும், இன்னும் பல இடங்களில் மக்கள் தொகை நெருக்கம், வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக புலிகளுக்கு வாழ்விடங்கள் போதுமான அளவில் இருப்பதில்லை. “புலிகளைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகள் எடுத்துவருகின்றன. அதனால்தான் கடந்த சில வருடங்களாக புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் உயர்ந்து வருகிறது. புலிகளைக் காப்பாற்றி என்ன செய்யப் போகிறோம் என சிலர் கேலி செய்வார்கள், ஆனால் புலிகள் இல்லையென்றால் காட்டின் சமநிலை தவறும்.” “உதாரணத்திற்கு காட்டில் தாவர உண்ணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, தாவரங்கள் வளர்வது குறைந்து, மண்சரிவு, நீர்ச் சுழற்சியில் மாற்றம் என பல்வேறு விளைவுகள் உண்டாகும்.” என்று எச்சரிக்கிறார் குமரகுரு. இதைக் கருத்தில் கொண்டுதான் வால்பாறையில் கண்டெடுக்கப்பட்ட புலியை மீண்டும் காட்டில் விட, பல லட்சம் செலவு செய்து முயற்சிகள் எடுக்கப்பட்டன என்றும், ஆனால் அது தோல்வியடைந்துவிட்டது என்றும் தெரிவித்தார் அவர். https://www.bbc.com/tamil/articles/cpd9ejr58d1o
-
சூரிய மின் உற்பத்தியை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!
29 JUL, 2024 | 12:27 PM மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் சூரிய மின் உற்பத்தியை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (29) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். நாவற்காடு கிராமத்தில் கடந்த 2022 ஒக்டோபர் மாதம் திறக்கப்பட்டு இயங்கி வரும் சூரிய சக்தி மின் உற்பத்தி (சோலார் பவர்) நிலையம் மேலும் பல மடங்கு விஸ்தரிக்கப்படவிருப்பதாக கூறி சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அண்டிய கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த சூரிய மின் உற்பத்தியை விஸ்தரித்தால் தமது விவசாய நிலங்களுக்கும், குடியிருப்புக்களுக்கும் கிராம மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து இதன்போது தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்த விஸ்தரிப்பு திட்டத்தினை நிறுத்தக் கோரி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கையளித்தனர். https://www.virakesari.lk/article/189679
-
வெனிசுவேலா ஜனாதிபதி தேர்தல் - நிக்கொலஸ் மதுரோ வெற்றி
வெனிசுவேலாவின் ஜனாதிபதி தேர்தலில் நிக்கொலஸ் மதுரோ வெற்றி - இடதுசாரிகளின் 25 வருட ஆட்சியை முடிவிற்கு கொண்டுவரும் எதிர்கட்சிகளின் கனவு கலைந்தது 29 JUL, 2024 | 11:02 AM வெனிசுவேலாவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ வெற்றிபெற்றுள்ளார் என அரசாங்கத்தின் கரங்களில் உள்ள தேர்தல் அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெனிசூலாவில் 25 வருட இடதுசாரி ஆட்சியை முடிவிற்கு கொண்டுவருவது குறித்த எதிர்கட்சியினரின் கனவை கலைத்துள்ளது. தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் சில மணிநேர தாமதம் காணப்பட்டதால் கரிசனைகள் வெளியாகியிருந்தன. இதன் பின்னர் தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ள தேர்தல் அதிகாரசபை மதுரோவிற்கு 51 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்கட்சி வேட்பாளர் எட்முன்டோ உருட்டியா 44 வீத வாக்குகளை பெற்றுள்ளார். 80 வீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதிக்கு ஐந்து மில்லியன் வாக்குகள் கிடைத்துள்ளதாக தேர்தல் அதிகார சபை அறிவித்துள்ளது. எதிர்கட்சியினர் தேர்தல்வாக்கு முடிவுகளை எண்ணுவதில் பெரும் மோசடி காணப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளதுடன் தேர்தல் முடிவுகளை எதிர்க்கப்போவதாக தெரிவித்துள்ளன. 11 வருடங்களாக ஆட்சியில் உள்ள மதுரோவிற்கு எதிராக எதிர்கட்சிகள் பொதுவேட்பாளரை நிறுத்தியிருந்தன. https://www.virakesari.lk/article/189666
-
மூளையை தின்னும் அமீபா தாக்கிய 14 வயது கேரள சிறுவன் உயிர் பிழைத்தது எப்படி?
பட மூலாதாரம்,SIDDIQUI படக்குறிப்பு,பெற்றோருடன் அஃப்னான் ஜாசிம் கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி இந்திக்காக, பெங்களூருவில் இருந்து 28 ஜூலை 2024 சமூக ஊடகங்களில் நடத்தப்பட்ட ஒரு பொது விழிப்புணர்வுப் பிரசாரத்தால், கேரளாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மூளையை உண்ணும் அமீபா தாக்கத்திலிருந்து தப்பியுள்ளார். அஃப்னான் ஜாசிம் என்ற அந்த மாணவர் இந்தக் கிருமியிடமிருந்து உயிர் பிழைத்த ஒன்பதாவது நபர் ஆவார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் இருந்து 22 நாட்களுக்குப் பிறகு அஃப்னான் ஜாசிம் வீடு திரும்பியுள்ளார். அவர் உயிர் பிழைக்க காரணம், இந்தக் கிருமித் தொற்று இருந்தது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டது தான். இதேபோல் ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்பட்டதால், இதுவரை உலகில் எட்டு பேர் ‘ப்ரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்’ (PAM) என்ற இந்தக் கொடிய நோயிலிருந்து தப்பித்திருக்கின்றனர். நெக்லேரியா ஃபௌலேரி (Naegleria Fowleri) என்ற அமீபாவால் இந்த நோய்த் தொற்று ஏற்படும். இந்த நோய்த் தொற்றுக்கு ஆளான 97% உயிரிழக்கின்றனர். 1971 மற்றும் 2023-க்கு இடையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மெக்சிகோ, மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளில் மட்டும் இந்த நோய்த்தொறு ஏற்பட்ட 8 பேர் உயிர் பிழைத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம், இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட 9 மணி நேரம் முதல் அதிகபட்சம் 5 நாட்களுக்குள் அது கண்டறியப்பட்டதுதான் என்று, அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஃப்னான் முதலில் தலை வலிக்கிறது என்று கூறியிருக்கிறார். அதன்பின் அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரது பெற்றோர் திகைத்துப் போயிருக்கின்றனர். சிகிச்சையின் முதல் இரண்டு நாட்களுக்கு, அஃப்னான் வலிப்பு ஏற்பட்ட பாதிப்பிலேயே இருந்திருக்கிறார். “அஃப்னான் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னர், கேரளாவில் இந்த நோயால் மூன்று பேர் இறந்திருந்தனர். அவர்களில் இருவர் மிகவும் தாமதமாக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். ஆனால், இது பொது சுகாதாரப் பிரச்னை என்பதால் நாங்கள் அரசுக்குத் தெரிவித்தோம், ஒரு விழிப்புணர்வு பிரசாரம் துவங்கப்பட்டது,” என்று கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அப்துல் ரவூப் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். கோழிக்கோடு மாவட்டத்தின் பயோல்லி நகராட்சியின் திக்கோட்டி கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் சில நாட்களுக்கு முன்பு தனது மகன் நீச்சலடிக்கச் சென்றதாக மருத்துவர்களிடம் அஃப்னானின் தந்தை எம்.கே.சித்திக் தெரிவித்தார். இது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறுகிறார் மருத்துவர் ரவூப். “நான் சமூக ஊடகங்களில் நிபா வைரஸின் விளைவுகள் பற்றி படித்துக் கொண்டிருந்த போது, அமீபா கிருமியைப் பற்றி ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. இந்த நோய்த்தொற்றினால் ஏற்படும் வலிப்பு பற்றி அதில் படித்தேன். அஃப்னானுக்கு வலிப்பு ஏற்பட்டவுடன், நான் அவரை உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். வலிப்பு நிற்காததால், வடக்கரையில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு நரம்பியல் நிபுணர் இல்லாததால், அவர்கள் எங்களை பேபி மெமோரியல் மருத்துவமனைக்குச் செல்லப் பரிந்துரைத்தனர்,'' என்று பால் பண்ணையாளரான சித்திக் (46) பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். “என் மகனுக்கு ஏன் வலிப்பு வருகிறது என்பதை மருத்துவரிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்பினேன். இது அவருக்கு அதுவரை நடக்காத ஒன்று. காய்ச்சல்- தலைவலி ஏற்படும் ஐந்து நாட்களுக்கு முன்பு அவர் குளத்தில் நீந்தச் சென்றதாக மருத்துவரிடம் சொன்னதற்கு இதுவே முக்கிய காரணம்,” அஃப்னானின் தந்தை ரவூப் கூறுகிறார். மூளையை தின்னும் அமீபா: தற்காத்துக் கொள்ளும் புதிய வழிமுறைகள் - கேரள அரசு கூறுவது என்ன?22 ஜூலை 2024 இந்த அமீபா மூளையை எவ்வாறு அடைகிறது? நெக்லேரியா ஃபௌலேரி அமீபா மனித உடலில் நாசி வழியாக நுழைந்து மண்டையோட்டில் உள்ள கிரிப்ரிஃபார்ம் தட்டு வழியாக மூளையை அடைகிறது. "இது ஒரு ஒட்டுண்ணி, இது பல்வேறு ரசாயனங்களை வெளியிட்டு மூளையை அழிக்கிறது," என்று டாக்டர் ரவூப் கூறினார். இது காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து விறைப்பு, உணர்திறனில் மாற்றம், வலிப்புத் தாக்கங்கள் மற்றும் கோமா ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான நோயாளிகள் மண்டை ஓட்டுக்குள் ஏற்படும் அழுத்தம் காரணமாக இறக்கின்றனர். "இக்கிருமி நன்னீர் ஏரிகளில், குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் காணப்படுகிறது. இதுபோன்ற நீர்நிலைகளில் மக்கள் குதிக்கவோ மூழ்கவோ கூடாது. அது அமீபா உடலில் நுழைவதற்கான உறுதியான வழி. தண்ணீர் மாசுபட்டிருந்தால், அமீபா உங்கள் மூக்கு வழியாக நுழைகிறது. அசுத்தமான நீர்நிலைகளைத் தவிர்ப்பது நல்லது. நீச்சல் குளங்களில் கூட நீச்சல் வீரர் தனது வாயை நீர் மட்டத்திற்கு மேல் வைத்திருக்க வேண்டும். நீர் ஆதாரங்களில் குளோரின் சேர்ப்பது மிகவும் முக்கியமானது,'' என்று டாக்டர் ரவூஃப் கூறுகிறார். ஆனால் கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியின் ஆய்வுக் கட்டுரையில், நைஜீரியா மற்றும் மங்களூருவில் பிற நீர் ஆதாரங்களில் இருந்து குழந்தைகள் நேக்ளேரியா ஃபைலேரி அமீபாவை எடுத்துக் கொண்டிருப்பதாகவும், அங்கு குளியலுக்கான நீர் நோய்க்கான ஆதாரமாக இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றும் 'செயற்கை கருப்பை' - மருத்துவ துறையில் என்ன நடக்கிறது?21 ஜூலை 2024 தமிழ்நாட்டில் சோழர் ஆட்சியில் சமண மதத்தின் நிலை என்ன? ஆண் தேவரடியார்கள் என்ன செய்தனர்?21 ஜூலை 2024 பட மூலாதாரம்,CDC/IMAGE POINT FR/BSIP/UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES படக்குறிப்பு,நெக்லேரியா ஃபௌலேரி அமீபா இதுவரை பிழைத்தவர்கள் யார்? பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு குழு எழுதிய ஆய்வுக் கட்டுரை அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டது. அதன் படி, இந்த அமீபா தொற்று ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்களின் வயது ஒன்பது வயது முதல் 25 வயது வரை இருக்கும். உயிர் பிழைத்தவர்களின் விவரங்கள்: ஆஸ்திரேலியா (1971) – 14 வயது ஆண், அறிகுறிகள் தெரியவில்லை அமெரிக்கா (1978) - ஒன்பது வயது ஆண், ஆரம்பக்கட்ட அறிகுறிகள் - மூன்று நாட்கள் மெக்சிகோ (2003) - 10 வயது ஆண், ஆரம்பக்கட்ட அறிகுறிகள் - ஒன்பது மணிநேரம் அமெரிக்கா (2013) - 12 வயது பெண், ஆரம்பக்கட்ட அறிகுறிகள் - இரண்டு நாட்கள் அமெரிக்கா (2013) - எட்டு வயது ஆண், ஆரம்பக்கட்ட அறிகுறிகள் - ஐந்து நாட்கள் பாகிஸ்தான் (2015) - 25 வயது ஆண், ஆரம்பக்கட்ட அறிகுறிகள் – மூன்று நாட்கள் அமெரிக்கா (2016) - 16 வயது ஆண், ஆரம்பக்கட்ட அறிகுறிகள் - ஒரு நாள் பாகிஸ்தான் (2023) - 22 வயது ஆண், ஆரம்பக்கட்ட அறிகுறிகள் - இரண்டு நாட்கள் “உலகம் முழுவதும், இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட சுமார் 400 பேர் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 30-க்கும் குறைவான நபர்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. கேரளாவில் 2018 மற்றும் 2020-இல் தலா ஒரு நோய்த்தொற்று பதிவானது. இந்த ஆண்டு சுமார் 5 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது,” என்று மருத்துவர் ரவூஃப் கூறினார். நாகப்பாம்பு விஷத்தை முறிக்கும் மலிவு விலை மருந்து கண்டுபிடிப்பு20 ஜூலை 2024 பட மூலாதாரம்,MEMORIAL HOSPITAL, MUMBAI படக்குறிப்பு,மருத்துவர் அப்துல் ரவுஃப் (வலது) அஃப்னான் ஜாசிமுடன் இதற்கு என்ன சிகிச்சை? அஃப்னானைப் பொறுத்தவரை, மருத்துவர்களால் அவரது இடுப்புப் பகுதியில் இருக்கும் தண்டுவடத்திற்கான சிகிச்சையைச் செய்ய முடிந்தது. அறிகுறிகள் தோன்றிய 24 மணி நேரத்திற்குள் அவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் கலவையை வழங்கினர் (ஆம்போடெரிசின் பி, ரிஃபாம்பின் மற்றும் அசித்ரோமைசின்). “நோயாளியின் செரிப்ரோஸ்பைனல் திரவத்தில் நேக்ளேரியா ஃபைலேரி கிருமியைக் கண்டறியும் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் சோதனை (PCR) செய்தோம்,'' என்று மருத்துவர் கூறினார். “முன்பு பெறுவதற்கே கடினமாக இருந்த மில்டெஃபோசின் மருந்தையும் அவருக்குக் கொடுத்தோம். இதேபோன்ற தொற்றுகள் பதிவானவுடன் அரசாங்கம் அதை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்தது. இந்த மருந்து இந்தியாவில் அரிதான நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் விலை உயர்ந்ததும் அல்ல,'' என்றார் மருத்துவர். “முதல் நாள் வலிப்பு ஏற்பட்டிருந்ததால், அஃப்னானுக்கு சுயநினைவு அவ்வளவாக இல்லை. மூன்று நாட்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு வாரத்திற்குப் பிறகு, இடுப்புப் பகுதியில் மீண்டும் சோதனை செய்தோம். ஆனால் அது எதிர்மறையான முடிவைக் கொடுத்தது. அதனால் நாங்கள் அவரை ஒரு அறைக்கு மாற்றி சிகிச்சையைத் தொடர்ந்தோம்,” என்று மருத்துவர் ரவூஃப் கூறினார். 10-ஆம் வகுப்பு படிக்கும் அஃப்னான், அடுத்த ஒரு மாதத்திற்கு மருந்துகளை உட்கொண்டு, தனது வீட்டில் ஓய்வெடுப்பார். அவருடைய எதிர்காலத் திட்டங்கள் என்ன? அவரது தந்தை சித்திக், பிபிசியுடன் பகிர்ந்து கொள்ள தனது மகனின் சுவாரஸ்யமான கதையை வைத்திருந்தார். “எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அவனிடம் கேட்டார்கள். அவன் நர்சிங் பட்டம் பெற விரும்புவதாக அவர்களிடம் கூறினான். மருத்துவமனைகளில் செவிலியர்கள் செய்யும் மகத்தான சேவையால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர்கள் நோயாளிகளுக்காக மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், அவர் மருத்துவர்களிடம் கூறினார்,” என்று சித்திக் மனம்விட்டு சிரித்தார். https://www.bbc.com/tamil/articles/cj7d4yxel5vo
-
ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகளை சோதனை செய்தது இந்தியா: எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக இந்திய விமானப்படை தகவல்
28 JUL, 2024 | 12:56 PM புதுடெல்லி: ‘‘ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் பயிற்சியில் ‘எதிரி’ விமானங்களை துல்லியமாக தாக்கின’’ என விமானப்படை கூறியுள்ளது. ரஷ்யாவிடம் எஸ்-400 என்ற அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன. இது எதிரி நாட்டு போர் விமானங்களை நடுவானிலே சுட்டு வீழ்த்தும் திறன் படைத்தவை. இந்திய விமானப்படை பயன்பாட்டுக்காக 5 எஸ்-400 படைப்பிரிவுகளை ரூ.35இ000 கோடிக்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில் 3 எஸ்-400 படைப்பிரிவுகளை ரஷ்யா இதுவரை விநியோகம் செய்துள்ளது. மீதமுள்ள 2 எஸ்-400 படைப்பிரிவு 2026-ம் ஆண்டில் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விரைந்து விநியோகம் செய்ய இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிடம் வாங்கப்பட்ட எஸ்-400 ஏவுகணைகளுக்கு சுதர்ஸன் ஏவுகணைகள் என பெயரிடப்பட்டு விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. பகவான் கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்ஸன சக்கரம் எதிரிகளை வீழ்த்தும் திறன் வாய்ந்தது.அதனால் எஸ்-400 ஏவுகணைகளுக்கு சுதர்ஸன் ஏவுகணைகள் என பெயரிடப்பட்டுள்ளன. விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள எஸ்-400 ஏவுகணைகளின் வலிமையை பயிற்சியில் சோதித்து பார்க்க விமானப்படை முடிவு செய்தது. இதற்காக உண்மையான போர் விமானங்களும் ‘எதிரி’ விமானங்களாக பயன்படுத்தப்பட்டன. இதில் எஸ்-400 ஏவுகணைகள் 80 சதவீத ‘எதிரி’ விமானங்களை சுட்டுவீழ்த்தின. மற்ற போர் விமானங்களை தாக்குதலை கைவிட்டு திரும்பி செல்ல வைத்தன. எஸ்-400 ஏவுகணையின் செயல்பாடு விமானப்படைக்கு முழு திருப் தியை அளித்துள்ளது. சீனா தனது எல்லையில் வான் பாதுகாப்பை மிகப் பெரியளவில் பலப்படுத்தி வருகிறது. இதற்கு போட்டியாக இந்தியாவும் மிகப் பெரிய அளவில் வான் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. இந்திய விமானப்படையில் சமீபத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எம்ஆர்-எஸ்ஏஎம் மற்றும் ஆகாஷ் ஏவுகணைகள் இஸ்ரேல் தயாரிப்பு ஸ்பைடர் ஏவுகணைகளும் சேர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/189590
-
இ.போ.சபையில் தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டுவந்த ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!
Published By: VISHNU 29 JUL, 2024 | 01:40 AM வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளில் (டிப்போக்களில்) கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (28) முதற் கட்டமாக 29 பேருக்கான நியமனக் கடிதங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வைத்தியசலையின் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்தும் ஆராய்வுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/189643
-
குறுங்கதை 24 - ஆதித்தாயின் மொழி
நன்றி அண்ணை உங்கள் ஆக்கத்திற்கு. எனக்குப் பிடித்த வரிகள் தடித்த எழுத்தில். நீங்கள் ஒரு சிறந்த வாசகரும் கூட.
-
தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அவதானம்!
முறையான உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் மூலம் குறித்த அபராதத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் உரிமம் பெறாத வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் விதிக்கப்படும் எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/306962
-
யார் பொதுவேட்பாளர்; பொதுக் கட்டமைப்பின் சில முக்கிய தீர்மானங்கள்!
Published By: VISHNU 28 JUL, 2024 | 11:43 PM தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள பொதுக் கட்டமைப்பு சில முக்கிய தீர்மானங்களை ஞாயிற்றுக்கிழமை (28) எடுத்துள்ளது. தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டம் யாழ் நகரிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற போதே பொதுக் கட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து முக்கிய சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இச் சந்திப்பு தொடர்பாக சிவில் சமூகப் பிரதிநிதியும் பொதுக் கட்டமைப்பின் உறுப்பினருமான அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். இதன் போது அவர் தெரிவித்ததாவது.. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் போது பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்தான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சில தீர்மானங்களை எடுத்திருக்கிறோம். அதாவது இந்த பொதுக் கட்டமைப்பிற்கு கீழ் வரக் கூடிய உப கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வேட்பாளர் யார் என்பதை தெரிவதற்கும், தேர்தல் அறிக்கையை தீர்மானிப்பதற்கும், கட்சி சின்னத்தை தீர்மானிப்பதற்குமான உப கட்டமைப்புக்கள் நிதி மற்றும் பரப்புரை நடவடிக்கைகளுக்கான உபகட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் உரிய கட்டமைப்புக்களால் உரிய நேரத்தில் அந்தந்த விடயங்கள் தொடர்பில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/189641
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
கேப்டனாக முதல் தொடரையே வென்ற சூர்யகுமார்; சிறப்பாகத் தொடங்கி, மோசமாக முடித்த இலங்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் பல்லேகலே நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த 2-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை ஆடவர் அணியை தங்களின் சுழற்பந்துவீச்சால் வீழ்த்தி, சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி முதல் டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல், ரியான் பராக் ஆகியோர் 3 பேரும் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி 86 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் சரிவுக்கு காரணமாக அமைந்தனர். 2-ஆவது டி20 ஆட்டத்திலும் ஆட்டத்தின் பிற்பகுதியில் இலங்கை பேட்டர்கள் மோசமான விக்கெட் சரிவைச் சந்தித்து தங்களுக்குதாங்களே தோல்வியை தேடிக்கொண்டனர். முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்திய அணியின் இன்னிங்ஸ் தொடங்கியவுடனே மழை குறுக்கிட்டதால் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இதையடுத்து, இந்திய அணிக்கு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டு, 8 ஓவர்களில் 78 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 6.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்து டக்வொர்த் விதிப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டி20 தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. இந்திய டி20 அணிக்கு நிரந்தர புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலும்,புதிய தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தலைமையிலும் இந்திய அணி வென்ற முதல் டி20 தொடர் இதுவாகும். புதிய சாதனை படைத்த இந்திய அணி இந்த வெற்றி மூலம் இந்திய அணி இலங்கைக்கு எதிராக புதிய சாதனையைப் படைத்தது. அதாவது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இந்திய அணி புதிய சாதனையைப் படைத்தது. இலங்கைக்கு எதிராக மட்டும் 21 வெற்றிகளை இந்திய அணி பெற்று வரலாறு படைத்துள்ளது. இலங்கை வீரர்களைத் திணறவைத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 12 டாட்பந்துகளையும் வீசிய ரவி பிஷ்னோய் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்ஸர் படேல் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ரியான் பராக் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து விக்கெட்டின்றி முடித்தார். இந்த 3 சுழற்பந்துவீச்சாளர்களும்தான் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை பேட்டர்களுக்கு எதிராக சிம்மசொப்னமாகத் திகழ்ந்தனர். 3 பந்துவீச்சாளர்களும் 12 ஓவர்களை வீசி 86 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.அதிலும் கடைசி 5 டெத் ஓவர்களில் இலங்கைக்கு எதிராக 31 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் கைப்பற்றி சரிவை ஏற்படுத்தினர். ரியான் பராக் முதல் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் இந்த ஆட்டத்திலும் பந்துவீசினார். விக்கெட்டின்றி பந்துவீசினாலும் அவரின் பந்துவீச்சு இலங்கை பேட்டர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முழுநேர சுழற்பந்துவீச்சாளர்களின் வீசும் பந்து திரும்பு அளவைவிட, ரியான் பராக் வீசிய பந்து நன்றாக டர்ன் ஆகியது. அக்ஸர் படேல் வீசிய பந்து 3 டிகிரியும், பிஸ்னோய் வீசிய பந்து ஒரு டிகிரியும் டர்ன் ஆகிய நிலையில் ரியான் பராக் வீசிய பந்துகள் 3.7 டிகிரி டர்ன் ஆகி திகைக்க வைத்தது. விக்கெட்டின்றி ரியான் பராக் பந்துவீசினாலும் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாகச் செய்தார். முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் இருவரின் பந்துவீச்சும் கடந்த 2 போட்டிகளாக சிறப்பாக எடுபடவில்லை. அதிலும் சிராஜ் பந்துவீச்சு பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அர்ஷ்தீப் 3 ஓவர்களை வீசி 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். சிராஜ் விக்கெட்டின்றி 3 ஓவர்களை வீசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES நாங்கள் முன்பே தீர்மானித்தோம் - சூர்யகுமார் வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசுகையில், “எந்தவிதமான பிராண்ட் கிரிக்கெட் விளையாடப் போகிறோம் என்பதை இந்த தொடர் தொடங்கும் முன்பே நாங்கள் பேசினோம். குறைந்த இலக்காக இருந்தபோதிலும்கூட, நாங்கள் என்ன பிராண்ட் கிரிக்கெட்டை ஆடப் போகிறோம் என்பதை இந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்தினோம். காலநிலை மோசமாக இருந்ததால், 150 ரன்களுக்குள் இலக்கு இருந்தால் அது சிறப்பாக இருக்கும் என நினைத்தோம். அதற்கு ஏற்றபடி மழையும் எங்களுக்கு உதவியது. எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக பேட் செய்தனர், அற்புதமாக பந்துவீசினர். அடுத்த போட்டியில் புதிய ப்ளேயிங் லெவன் குறித்தும், எவ்வாறு ஆட்டத்தை எடுத்துச் செல்வது என்பது குறித்து ஆலோசிப்போம். எங்களுக்கு சிறிது அதிர்ஷ்டமும் இருக்கிறது என்பதை மழை உணர்த்திவிட்டது” எனத் தெரிவித்தார். கடைசி 6 ஓவர்களில் நடுங்கும் இலங்கை இலங்கை அணி கடந்த 2 போட்டிகளிலும் அருமையான தொடக்கத்தை அளித்தாலும், கடைசி 6 ஓவர்களில்தான் ஆட்டத்தை கோட்டைவிட்டுள்ளது. கடந்த 2 ஆட்டங்களிலும் கடைசி 6 ஓவர்களில் 68 ரன்கள் சேர்த்து 16 விக்கெட்டுகளை இலங்கை இழந்து 6 ரன்ரேட்டில் விளையாடியுள்ளது. சனிக்கிழமை நடந்த முதல் டி20ஆட்டத்தில் 30 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது, நேற்றைய ஆட்டத்தில் கடைசி 5 ஓவர்களில் 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இலங்கை பறிகொடுத்தது. ஆனால், இலங்கை அணி கடந்த 2 போட்டிகளிலும் முதல் 14 ஓவர்களில் 263 ரன்களை சேர்த்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 9.39 ரன்ரேட்டில் விளையாடியுள்ளது. கடைசி 6 ஓவர்களில்தான் இலங்கையின் பேட்டிங்கில் திடீர் சரிவு ஏற்பட்டு, தோல்வி அடைந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இலங்கை அணி கடந்த 2 போட்டிகளிலும் அருமையான தொடக்கத்தை அளித்தாலும், கடைசி 6 ஓவர்களில்தான் ஆட்டத்தை கோட்டைவிட்டுள்ளது. வாய்ப்பை தவறவிட்ட சாம்ஸன் மழை காரணமாக 45 நிமிடங்களுக்குப்பின் ஆட்டம் தொடங்கியது, டக்வொர்த் விதிப்படி இலக்கு திருத்தப்பட்டு 8 ஓவர்களில் 78 ரன்கள் என இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சுப்மான் கில்லுக்கு கழுத்து வலி காரணமாக அவருக்குப் பதிலாக வாய்ப்புப் பெற்று சஞ்சு சாம்ஸன் நேற்று களமிறங்கினார். இக்கட்டான சூழலில் பேட் செய்த சாம்ஸன், தீக்சனா வீசிய முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சூர்யகுமார், ஜெய்ஸ்வால் அதிரடி ஆனால் ஹசரங்கா வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் சூர்யகுமார், ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து 16 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு இருந்த நெருக்கடியைக் குறைத்தனர். தீக்சனா வீசிய 4வது ஓவரில் சூர்யகுமார் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து 15 ரன்களை சேர்த்து ரன்ரேட் நெருக்கடியைக் குறைத்தார். இந்த இரு ஓவர்கள்தான் இந்திய அணிக்கு திருப்புமுனையாக மாறி, ரன்ரேட்டைக் குறைக்க உதவியது. பதிராணா வீசிய 4வது ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த சூர்யகுமார், அடுத்த பந்தில் லாங்ஆனில் கேட்ச் கொடுத்து 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், சிறப்பான கேமியோவை ஆடினார். ஹசரங்கா வீசிய 6வது ஓவரில் ஹர்திக் ஒரு பவுண்டரி சிக்ஸரும், ஜெய்ஸ்வால் ஒரு சிக்ஸரும் விளாசினர். ஜெய்ஸ்வால் தனது இயல்பான அதிரடி பேட்டிங்கை மாற்றாமல் பேட் செய்து ஸ்வீப் ஷாட்டிலும், ரிவர்ஸ் ஸ்வீப்பிலும் பவுண்டரிகளை விளாசி 30 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பதிராணா வீசிய 7–ஆவது ஓவரில் ஹர்திக் தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஹர்திக் 22 ரன்களிலும், ரிஷப் பந்த் ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவி பிஷ்னோய் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நல்ல தொடக்கம், மோசமான முடிவு - இலங்கையின் தோல்விக்கு என்ன காரணம் இதுதான் இலங்கை அணி கடந்த 2 போட்டிகளிலும் நல்ல தொடக்கத்தை அளித்தது. முதல் போட்டியைப் போன்றே இந்த ஆட்டத்திலும் நிசங்கா, மென்டிஸ் அதிரடியாகத் தொடங்கினர். ஆனால், அர்ஷ்தீப் வீசிய 4வது ஓவரில் ஸ்லோவர் பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு மென்டிஸ் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு வந்த பெரேரா, நிசங்காவுடன் சேர்ந்து ஸ்கோரை மெல்ல உயர்த்தினார். பவர்ப்ளேயில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் என வலுவாக இருந்தது. நிசங்கா முதல் போட்டியைப் போல் இந்த ஆட்டத்திலும் சீராக ரன்களைச் சேர்த்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி அளித்தார். ஆனால், பிஷ்னோய் வீசிய 10-வது ஓவரில் கால்காப்பில் வாங்கி நிசங்கா 32 ரன்னில் வெளியேறினார். 2-ஆவது விக்கெட்டுக்கு இருவரும் 54 ரன்கள் சேர்த்தனர். குஷால் பெரேரா 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்து வந்த கமிந்து மென்டிஸ் அதிரடியாக ஆடினார், இதனால். 130 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்று வலுவாக இருந்து. ஆனால், மென்டிஸ் 24 ரன்னில் ஹர்திக் பாண்டியா வீசிய 16-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 53 ரன்களுடன் ஆடி வந்த பெரேராவும் அதே ஓவரில் விக்கெட்டை இழக்க இலங்கை தடுமாறியது. சரிவு தொடங்கியது இதன்பின் இலங்கை அணியின் சரிவு தொடங்கியது.நடுவரிசை பேட்டர்களும், கீழ்வரிசை பேட்டர்களும் முதல் ஆட்டத்தைப் போன்று சொதப்பியதால், கடைசி 5 ஓவர்களில் மட்டும் 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இலங்கை மளமளவென இழந்தது. பிஸ்னோய் வீசிய 17-வது ஓவரில் சனகா, ஹசரங்கா இருவருமே டக்அவுட்டில் க்ளீன் போல்டாகினர். அக்ஸர் படேல் வீசிய கடைசி ஓவரில் தீக்சனா, மென்டிஸ் இருவரும் விக்கெட்டை இழந்தனர். https://www.bbc.com/tamil/articles/cxe2rrlr374o
-
இரணைமடுக்குள பகுதியில் மாவட்ட பயிர்செய்கை குழுவின் தீர்மானங்களை மீறி மேலதிக நெற் செய்கை
Published By: DIGITAL DESK 7 28 JUL, 2024 | 08:28 PM கிளிநொச்சி இரணை மடுக்குளத்தின் கீழ் உள்ள புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்புக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 750ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப் பரப்பில் மாவட்ட பயிர்செய்கை குழுவின் தீர்மானங்களை மீறி மேலதிக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கமக்கார அமைப்பின் சிபார்சுகளின் படி சிறுபோகத்துக்கான அரச மானியங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி இரணை மடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோக நெற்செய்கைக்கு தீர்மானிக்கப்பட்ட அளவுகளின் படி புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்புக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள ஆயிரத்து 707 ஏக்கர் நீர்வரி காணிகளில் 530 ஏக்கர் காணி தவிர்ந்த ஏனைய ஆயிரத்து 177 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலப்பரப்புடன் சேர்த்து மேலும் 750 ஏக்கர் நிலப்பரப்பு மேலதிகமாக செய்கை பண்ணப்பட்டுள்ளது அதாவது மாவட்ட பயிர் செய்கை குழுவின் தீர்மானங்களை மீறி குறிப்பதேசத்தில் கமக்கார அமைப்புகளின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களும் அவர்களோடு சேர்ந்து செயல்படுபவர்களும் குறித்த பயிர்செய்கைகளை மேற்கொண்டுள்ளனர் இதனால் தனிப்பட்ட விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதே நேரம் குறித்த பிரதேசத்தில் மூன்று ஏக்கருக்கும் குறைவான அனுமதிக்கப் பட்ட நிலப்பரப்பில் வாழ்வாதார பயிர்செய்கை மேற்கொண்ட 22 பேரின் காணிகளில் மொத்தமாக 30 ஏக்கர் நிலப்பரப்பை மேலதிக செய்கையாக அடையாளப்படுத்தியுள்ளனர் ஆனாலும் சட்டவிரோத செய்கை மேற்கொள்ளப்பட்ட குறித்த நிலப்பரப்புகளை மூடி மறைத்து மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோதச் செய்கைகளுக்கு குறித்த கமக்கார அமைப்பினால் அரச மானியங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/189620
-
மகாராஷ்டிரா: காட்டிற்குள் சங்கிலியால் மரத்தில் கட்டப்பட்டிருந்த பெண் மீட்பு - தமிழ்நாட்டை சேர்ந்தவரா?
படக்குறிப்பு,போலீசார் சங்கிலியை உடைத்து அந்த பெண்ணை மீட்டனர். கட்டுரை தகவல் எழுதியவர், முஷ்டாக் கான் பதவி, பிபிசி மராத்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சாவந்த்வாடி தாலுகாவில் இருக்கும் கரடி மலை வனப்பகுதியில் அமெரிக்க வம்சாவளி பெண் ஒருவர் இரும்புச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் கணவரே அவரை கட்டி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பாதிக்கப்பட்ட அந்த பெண், ஒரு பேப்பரில் எழுதி காட்டியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்துள்ளார். அவரது ஆதார் அட்டையில் தமிழ்நாடு முகவரி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பெண் சில நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் காட்டில் கட்டி வைக்கப்பட்டிருப்பதாக பேப்பரில் எழுதி காண்பித்துள்ளார். அந்த பெண் எவ்வளவு காலம் இந்த நிலையில் இருந்தார் என்னும் தகவல் வெளியாகவில்லை. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அது முடியும் வரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் போலீசார் தெரிவித்தனர். சனிக்கிழமை கரடி மலை வனப் பகுதி வழியாகச் சென்ற விவசாயிகள் மற்றும் மாடு மேய்ப்பவர்கள் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். அதன் பிறகு, அந்தப் பெண் மீட்கப்பட்டு சாவந்த்வாடியில் உள்ள உபாசிலா மருத்துவமனையில் முதன்மை சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்த சமயத்தில், உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்ததால் அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாதந்தோறும் ரூ.1.5 கோடி: உத்தரபிரதேசத்தில் மிரட்டிப் பணம் பறித்த போலீஸ் சிக்கியது எப்படி?27 ஜூலை 2024 கால்நடை மேய்ப்பவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கேட்ட குரல் படக்குறிப்பு,அந்த பெண் காட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் சிந்துதுர்க் மாவட்டத்தின் சாவந்த்வாடியில் உள்ள ரோனபால் சோனுர்லி (Ronapal Sonurli) கிராமத்தின் மையத்தில் கரடி மலை உள்ளது. இந்த மலைப்பாங்கான வனப் பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் மற்றும் விவசாயிகள் சிலர் சனிக்கிழமை காலை கால்நடைகளை மேய்க்கச் சென்றுள்ளனர். அப்போது ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் வந்த திசையில் அனைவரும் தேடி சென்றனர். அப்போது, காட்டுக்குள் சிறிது தூரத்தில் ஒரு பெண்ணின் கால்கள் மரத்தடியில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர். அந்த பெண்ணின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவரை பார்த்த விவசாயிகள் அச்சமடைந்தனர். உடனே அருகில் உள்ள கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை சுற்றி பரிசோதித்து, அவரின் காலில் பிணைத்திருந்த சங்கிலியை உடைத்து அவரை விடுவித்து, சிகிச்சை அளிக்க அழைத்துச் சென்றனர். மீட்கப்பட்ட சமயத்தில் அந்த பெண்ணால் சரியாக பேச முடியவில்லை. போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து சவந்த்வாடியில் உள்ள அப்ஜிலா மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இன்று காலை (ஜூலை 28) அவர் மேல் சிகிச்சைக்காக ஓரோஸில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது பெண்ணின் உடலில் அதிக காயங்கள் இல்லை. ஆனால், பல நாட்களாக எதையும் சாப்பிடாமலும், குடிக்காமலும் இருந்ததால் அவர் மிகவும் பலவீனமாகிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது. பெண்ணை சங்கிலியால் கட்டியது கணவரா? படக்குறிப்பு,மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சில முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த பெண்ணால் சரியாக பேச முடியாததால் அதிகாரிகளிடம் எழுதி காண்பிக்க, பேனா மற்றும் பேப்பரை கேட்டு தனக்கு நேர்ந்ததை எழுதினார். தன்னை சங்கிலியால் கட்டிப்போட்டது தன் கணவர் தான் என்று அவர் எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளார். ஆனால் அவர் எதற்காக இதை செய்தார் என்பது பற்றி எந்த தகவலும் இன்னும் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை. வீட்டுக்கடனை விரைவாக முடிப்பது நல்லதா? தவணைக் காலம் முழுக்க கட்டுவது சிறந்ததா?3 மணி நேரங்களுக்கு முன்னர் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் - துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார்5 மணி நேரங்களுக்கு முன்னர் பேச முடியாததால் எழுதிக் காட்டினார் படக்குறிப்பு,மீட்கப்பட்ட பெண் ஒரு காகிதத்தில் தன்னைப் பற்றிய தகவல்களை எழுதி கொடுத்தார். மீட்கப்பட்ட அந்த பெண் பேசும் நிலையில் இல்லாததால், என்ன நடந்தது என்று இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பெண் ஒரு காகிதத்தில் எழுதி தனக்கு நடந்ததை ஓரளவுக்கு கூறியுள்ளார். அதன்படி, அவருக்கு ஒருவித ஊசி போடப்பட்டுள்ளது. இதனால் தாடை பகுதியை அவரால் அசைக்க முடியவில்லை. அவரால் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை. 40 நாட்களாக வனப்பகுதியில் உணவு, தண்ணீர் இல்லாமல் இந்த நிலையில் இருந்ததாக பேப்பரில் இந்த பெண் ஒரு கோரிக்கையை எழுதி வைத்துள்ளார். ஆனால் அவர் எப்படி இவ்வளவு நேரம் உணவும் தண்ணீரும் இல்லாமல் இருந்தார்? போன்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அவர் இறுதியாக எழுதி காண்பித்தது, "என் கணவர் என்னை மரத்தில் கட்டிவைத்து விட்டு என் வாழ்க்கை இங்கே முடிந்துவிடும் என்று ஓடிவிட்டார். நான் பாதிக்கப்பட்ட பெண். தற்போது உயிர் பிழைத்திருக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். உறுதியான தகவலுக்குப் பிறகுதான் போலீசார் பேசுவார்கள். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தீவிர விசாரணைக்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பெண் மீட்கப்பட்ட சமயத்தில் மனநிலை சரியில்லாத நிலையில் இருப்பது போன்று தெரிந்தது. ஆனால் இதுகுறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என காவல்துறை கண்காணிப்பாளர் சவுரப் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த பெண் இதற்கு முன்பு டெல்லி, மும்பை, கோவா போன்ற இடங்களில் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்றுள்ளார். அதற்கான ஆவணங்கள் அந்த பெண்ணிடம் இருந்துள்ளது. தனது கணவர் தமிழ்நாட்டில் இருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். அவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஒரு குழுவையும் தமிழ்நாட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அந்த பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் அவருடைய வார்த்தைகளில் முரண்பாடு இருக்கிறது. எனவே, போலீசார் அனுப்பியுள்ள குழுக்களின் விசாரணையில் உறுதியான விஷயம் தெரியவந்த பின்னரே தகவல்களை வழங்க முடியும் எனவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/cx72l97nw41o
-
கோலான்குன்றின் மீது ரொக்கட் தாக்குதல் - 12 சிறுவர்கள் உட்பட பல இஸ்ரேலியர்கள் பலி – பதில் தாக்குதல் குறித்து எச்சரிக்கை
கோலான் குன்று தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலி - ஹெஸ்புலா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பதிலடி பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ், பார்பரா பிளெட் உஷெர் & ஐடோ வோக் பதவி, பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலான் குன்றுகள் எனப்படும் பகுதியில் நடைபெற்ற ராக்கெட் தாக்குதலில் 12 குழந்தைகள் மற்றும் இளம்வயதினர் கொல்லப்பட்டதாகவும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர். லெபனான் நாட்டைத் தளமாகக் கொண்டு இயங்கும் அதிகாரமிக்க ஹெஸ்புல்லா அமைப்பினர் ஏவிய ராக்கெட் ட்ரூஸ் நகரமான மஜ்தல் ஷாம்ஸ் பகுதியில் விழுந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளது. இதை ஹெஸ்புல்லா அமைப்பு உறுதியாக மறுத்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஹெஸ்புல்லா அமைப்பு அதிக விலை கொடுக்க நேரிடும்” எனத் தெரிவித்தார். இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக லெபனானில் ஹெஸ்புல்லாவை குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் விமானப் படை தெரிவித்துள்ளது. “ஹெஸ்புல்லாவின் எல்லைக்குள் ஏழு இலக்குகளைக் குறிவைத்து” ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. “ஆயுதக் கிடங்குகள் மற்றும் கட்டமைப்புகள்” உள்பட “தீவிரவாத இலக்குகளை” தாக்கியதாக இஸ்ரேல் விமானப் படை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் - காஸா இடையே சண்டை தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹெஸ்புல்லா படைகள் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இச்சம்பவம் இரு தரப்புக்கும் இடையே விரிவான போரைத் தூண்டுவதற்கான சாத்தியம் கொண்டதாக உள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதல், அக்டோபர் 7ஆம் தேதி முதல் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலின் வட எல்லையில் அதிகமான உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கும் மோசமான தாக்குதலாக உள்ளது. “நம்ப முடியாத அளவுக்கு ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பேரழிவுக்கு இட்டுச் செல்லும் வகையிலான பரந்த மோதலுக்கான அபாயம் உள்ள நிலையில், அனைத்துத் தரப்பில் இருந்தும் அதிகபட்ச கட்டுப்பாடு முக்கியமானது” என ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராக்கெட்டா? ஹெஸ்புல்லா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆஃபிஃப், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்காத நிலையில், இத்தாக்குதல் இஸ்ரேலின் இன்டர்செப்டர் ராக்கெட்டால் (வெகுதொலைவுக்கு ஏவப்படும் பாலிஸ்டிக் ராக்கெட்டுகளை இடைமறித்துத் தடுக்கும் வகையிலான ராக்கெட்) நிகழ்த்தப்பட்டது என அந்த அமைப்பு ஐநாவிடம் தெரிவித்ததாக வரும் செய்திகளை பிபிசி சரிபார்க்க முயன்று வருகிறது. இத்தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் 10 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், சிலர் மிகவும் சிறுவயதினர் என இஸ்ரேல் ஊடகங்கள் கூறுகின்றன. கால்பந்து மைதானம் ஒன்றில் மக்கள் குழுமியிருப்பதையும், ஆம்புலன்ஸ்களில் ஸ்ட்ரெட்ச்சர்கள் மூலம் காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்படுவதையும் சரிபார்க்கப்பட்ட காணொளிகள் மூலம் பார்க்க முடிகிறது. கோலான் குன்றுகளில் உள்ள நான்கு கிராமங்களுள் ஒன்றான மஜ்தல் ஷாம்ஸ் கிராமத்தில், அரபுமொழி பேசும் ட்ரூஸ் இனத்தைச் சேர்ந்த சுமார் 25,000 பேர் வாழ்கின்றனர். இத்தாக்குதலின் பாதிப்புகள் குறித்த செய்திகள் வருவதற்கு முன்னர், ஹெஸ்புல்லா மற்ற நான்கு தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றது. அதில், இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைக்கு இடையே அமைந்துள்ள ஹெர்மோன் மலைத்தொடரின் சரிவில் அமைந்துள்ள ராணுவ சுற்றுப் பகுதிக்கு அருகே நடைபெற்ற தாக்குதலும் ஒன்று. அதன் அடித்தளம், கால்பந்து மைதானத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் ஒரே வாக்குச்சீட்டில் 3 பேருக்கு வாக்களிக்கலாம் - எப்படி தெரியுமா?27 ஜூலை 2024 'முழு அளவிலான போர்' பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,மஜ்தல் ஷாம்ஸில் உள்ள கால்பந்து மைதானத்தில் இத்தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டது. தாக்குதல் நிகழ்ந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “இத்தாக்குதலுக்குத் தாங்கள் பொறுப்பல்ல என ஹெஸ்புல்லா பொய் கூறுவதாக” தெரிவித்தார். “ஹெஸ்புல்லா அமைப்பினர் பிரத்யேகமாக வைத்திருக்கும்” ஃபலாக்-1 (Falaq-1) எனும் இரானிய தயாரிப்பு ராக்கெட்டால் இத்தாக்குதல் நடைபெற்றதாக அவர் தெரிவித்தார். “எங்களின் உளவுத்துறை தகவல் தெளிவானது. அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு ஹெஸ்புல்லா அமைப்புதான் பொறுப்பு,” எனத் தெரிவித்த அவர், அதற்காக பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் முதல், இஸ்ரேல், ஹெஸ்புல்லா மாறி மாறித் தொடுத்த தாக்குதலால் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், தெற்கு லெபனானில் எல்லைப் போர் ஏற்படும் ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கான நடவடிக்கைகளை இருதரப்பும் தவிர்த்து வருகின்றன. அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னதாகவே நாடு திரும்ப உள்ளார். இஸ்ரேலின் ட்ரூஸ் இனத் தலைவரான ஷேக் மொவாஃபக் டரிஃப் வெளியிட்ட காட்டமான அறிக்கையில், “இந்தப் பயங்கரமான படுகொலை, அனைத்து சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டதாக” தெரிவித்துள்ளார். “தங்கள் நாட்டு குடிமக்கள் மற்றும் குடியிருப்பவர்களுக்குத் தொடர்ச்சியாகத் தீங்கு ஏற்படுவதை முறையான ஓர் அரசு அனுமதிக்காது. கடந்த ஒன்பது மாதங்களாக வட பகுதியில் வாழும் சமூகத்தினர் எதிர்கொள்ளும் யதார்த்தமாக இத்தாக்குதல் உள்ளது,” என்றும் அவர் கூறினார். வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், “ஒரு முழு அளவிலான போரை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம்,” என சேனல் 12 ஊடகத்திடம் தெரிவித்தார். இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் இத்தாக்குதல் “பயங்கரமான மற்றும் அதிர்ச்சிகரமான பேரழிவு சம்பவம்” எனத் தெரிவித்தார். மேலும், “நாட்டு குடிமக்கள் மற்றும் இறையான்மையை இஸ்ரேல் அரசு காக்கும்” என உறுதி தெரிவித்தார். கமலா ஹாரிசுக்கு எதிரான டொனால்ட் டிரம்பின் 3 அஸ்திரங்கள்27 ஜூலை 2024 நாடு திரும்பும் பெஞ்சமின் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லெபனான் அரசு வழக்கத்திற்கு மாறாக அரிதாக அறிக்கை ஒன்றை இதுகுறித்து வெளியிட்டுள்ளது. அதில், “பொதுமக்களுக்கு எதிரான எந்தவித வன்முறை மற்றும் மோதல்களையும் கண்டிக்கிறோம். இத்தகைய மோதல்களை நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்." “பொதுமக்களை குறிவைப்பது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும், மேலும் மானுட தத்துவத்திற்கே எதிரானது,” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா தூதுவர் டோர் வென்னஸ்லேண்ட், அனைத்து தரப்பும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தினார். “மத்தியக் கிழக்குப் பகுதி ஆபத்தின் விளிம்பில் உள்ளது; மற்றுமொரு வெளிப்படையான மோதலை உலகமும் இந்தப் பிராந்தியமும் தாங்காது,” என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ட்ரூஸ் சமூகத்தினர் பெரும்பாலானோர் வடக்கு இஸ்ரேல், லெபனான், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர். இஸ்ரேலில் அவர்களுக்கு முழு குடியுரிமை உள்ளது. இஸ்ரேலின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ட்ரூஸ் இனத்தினர் 1.5% உள்ளனர். சிரியாவிடம் இருந்து 1981இல் கோலான் குன்றுகள் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டதில் இருந்து அவர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை வழங்கப்படுகிறது, ஆனால் அவர்கள் எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேலில் உள்ள ட்ரூஸ் இனத்தினர் அங்கு படிக்கவும் வேலை செய்யவும் முடியும். ஆனால் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ட்ரூஸ் இனத்தைச் சேர்ந்த ஆண்கள் ராணுவத்தில் கட்டாயம் பணியாற்ற வேண்டும். இஸ்ரேல் ராணுவத்தில் யூதர்கள் அல்லாத மிகப்பெரிய குழுவாக ட்ரூஸ் இனத்தினர் உள்ளனர். கோலான் குன்றுகளை இஸ்ரேல் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டதை பெரும்பான்மை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை. https://www.bbc.com/tamil/articles/ck5g68gnpreo
-
மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
மகளிர் ஆசிய கிண்ணத்தை முதல் தடவையாக சுவீகரித்து வரலாறு படைத்தது இலங்கை Published By: VISHNU 28 JUL, 2024 | 09:05 PM (நெவில் அன்தனி) ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற மகளிர் ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்ட இலங்கை முதல் தடவையாக மகளிர் ஆசிய சம்பியனாகி வரலாறு படைத்தது. இரண்டு வகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 5 தடவைகள் இந்தியாவிடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை இம்முறை இந்தியாவை மிக இலகவாக வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சூடியது. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி ஆசிய சம்பியனானது. இலங்கையின் இந்த வெற்றியில் சமரி அத்தபத்து, ஹஷினி சமரவிக்ரம, காவிஷா டில்ஹாரி ஆகியோரின் பொறுப்புணர்வுடனான துடுப்பாட்டங்கள் பெரும் பங்காற்றின. இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. சமரி அத்தபத்துவின் கவனக் குறைவால் விஷ்மி குணரட்ன ஒரு ஓட்டத்துடன் ரன் அவுட் ஆனார். என்றாலும் அதற்கு பிராயச்சித்தமாக சமரி அத்தபத்து திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஹர்ஷிதா சமரவிக்ரமவுடன் 2ஆவது விக்கெட்டில் 62 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். சமரி அத்தபத்து 43 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களை பெற்றார். தொடர்ந்து ஹர்ஷிதா சமரவிக்ரம, காவிஷா டில்ஹாரி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 40 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை ஆசிய சம்பியனாவதை உறுதிசெய்தனர். ஹர்ஷிதா சமரவிக்ரம 51 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 69 ஓட்டங்களுடனும் காவிஷா டில்ஹாரி 16 பந்துகளில் 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. ஷபாலி வர்மா, ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஷபாலி வர்மா 16 ஓட்டங்களுடன் வெளியேறிய சொற்ப நேரத்தில் உமா சேத்ரி (9) ஆட்டம் இழந்தார். அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்று நடையைக் கட்டினார். (87 - 3 விக்.) இந நிலையில் மந்தனாவும் ஜெமிமா ரொட்றிகஸும் ஜோடி சேர்ந்து 4ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். எவ்வாறாயினும் ரொட்றிகஸ் (29), மந்தனா ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (133 - 5 விக்.) திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மந்தனா 10 பவுண்டறிகளுடன் 69 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் ரிச்சா கோஷ் 14 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகி: ஹர்ஷிதா சமரவிக்ரம, தொடர்நாயகி: சமரி அத்தபத்து. https://www.virakesari.lk/article/189633
-
யாழ். சிறையில் 74 தமிழ்நாட்டு மீனவர்கள்!
யாழ். சிறையில் 74 தமிழக மீனவர்கள்! 28 JUL, 2024 | 11:17 AM இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 74 தமிழக கடற்றொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு காலகட்டங்களில் கைதாகி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 64 பேரின் வழக்குகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (30) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த ஜூலை முதலாம் திகதி 25 கடற்தொழிலாளர்களும், ஜூலை 16ஆம் திகதி 04 கடற்றொழிலாளர்களும், ஜூலை 11ஆம் திகதி 13 கடற்தொழிலாளர்களும், ஜூலை 22ஆம் திகதி 22 கடற்தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதாகியுள்ள 64 கடற்றொழிலாளர்களின் வழக்கு விசாரணைகளே செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/189576
-
கோலான்குன்றின் மீது ரொக்கட் தாக்குதல் - 12 சிறுவர்கள் உட்பட பல இஸ்ரேலியர்கள் பலி – பதில் தாக்குதல் குறித்து எச்சரிக்கை
Published By: RAJEEBAN 28 JUL, 2024 | 07:43 AM இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன்குன்றுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 சிறுவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை ரொக்கட் தாக்கியது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ட்ரூஸ் நகரத்தின் மஜ்டல் சாம்ஸினை இலக்குவைத்து லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எனினும் ஹெஸ்புல்லா அமைப்பு இதனை மறுத்துள்ளது. ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக பதில்தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அந்த அமைப்பு பெரும் விலையை செலுத்தும் என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேலிய படையினருக்கும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையில் முழுமையான யுத்தம் வெடிக்கும். ஆபத்து எழுந்துள்ளது. ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேலிய எல்லையின் மீது மேற்கொல்லப்பட்ட தாக்குதலில் அதிகளவானவர்கள் கொல்லப்பட்ட சம்பவமாக கோலான் குன்று தாக்குதல் காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/189565
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
சிங்கள மக்களின் வாக்குகளுடன் மாத்திரம் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ஜே.வி.பி. விரும்பவில்லை - அனுரகுமார Published By: RAJEEBAN 28 JUL, 2024 | 10:45 AM ஐக்கிய அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கு முஸ்லீம்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணையவேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் முஸ்லீம் சகோதரத்துவத்தின் காலி பேரணியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் முன்னணி எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க இலங்கையை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடனேயே தனது அரசாங்கம் ஆட்சிக்குவரும் எனவும் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களின் ஆதரவை பெற்ற அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என எதிர்பாத்துள்ளதாக தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க ஐக்கிய அரசாங்கமொன்றை உருவாக்குதே தனது கட்சியின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார். சிங்களவாக்காளர்களின் வாக்குகளுடன் தேர்தலை வெல்வது மாத்திரம் எங்களிற்கு போதுமானதல்ல என தெரிவித்துள்ள அவர் வெற்றிபெறுவதற்கு சிங்களமக்களின் வாக்குகள் போதுமானவை ஆனால் எங்களின் நோக்கம் அதுவல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தை அமைப்பதற்கு நாங்கள் விரும்புகின்றோம்,எங்கள் இயக்கம் தேர்தலில் வெற்றிபெறுவதை மாத்திரம் நோக்கமாக கொண்டதல்ல,உண்மையின் நலனை அடிப்படையாகவைத்தே எங்கள் இயக்கம் அரசியலில் ஈடுபடுகின்றது,என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் எந்த சமூகமாவது பாரபட்சத்தை எதிர்கொண்டால் எங்கள் இயக்கம் அவர்களிற்கு ஆதரவளிக்கும் என குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற தீர்ப்புகளிற்கு எதிராக செயற்படுகின்றார் நேற்று நடந்தது மாத்திரமே அவரை ஜனாதிபதி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதற்கு போதுமானது என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார். சஜித்பிரேமதாச குறித்து நான் அதிகம் பேசுவதில்லை அவரை நாங்கள் பேசவிடுகின்றோம் அது எங்களிற்கு தேவைக்கு அதிகமான பலனை அளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189578
-
தமிழ்நாடு: தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் - அண்ணா பல்கலைக்கழகம் கூறுவது என்ன?
28 ஜூலை 2024, 03:34 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், ஒருவரே பல தனியார் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியதாகக் காட்டப்பட்டு மோசடி நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது எப்படி நடந்தது? தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதுமான பேராசிரியர்கள் பணியாற்றாத நிலையில், ஒரு சிலரே பல கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றுவதாகக் காட்டி தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகள் அனுமதி பெற்றிருப்பதாக தமிழ்நாட்டில் இருந்து செயல்படும் தன்னார்வ அமைப்பான 'அறப்போர் இயக்கம்' குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்ததையடுத்து, தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர் விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் தெரிவித்திருக்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த அமைப்பு கூறும் குற்றச்சாட்டுகளின்படி, 'ஒரு நபரே பல கல்லூரிகளில் பணியாற்றும் மோசடி' 224 கல்லூரிகளில் நடந்திருப்பதாகவும் 353 பேராசிரியர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஒரு தனியார் கல்லூரியில் ஒவ்வொரு பொறியியல் படிப்புக்கும் இருக்க வேண்டிய கட்டமைப்பு என்ன என்பதை தொழில்நுட்ப கல்விக்கான அனைந்திந்திய மன்றம்(All India Council for Technical Education - AICTE) வகுத்துள்ளது. ஏ.ஐ.சி.டி.இ வகுத்துள்ள இந்த விதிமுறைகளின் அடிப்படையில், ஒவ்வொரு கல்லூரியிலும் அண்ணா பல்கலைக்கழகம் நேரடி ஆய்வு மேற்கொள்கிறது. அந்த ஆய்வில் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசியர்களின் எண்ணிக்கை, அவர்களின் கல்வித்தகுதி, மாணவர்களுக்கான செய்முறை பரிசோதனைக் கூடம் போன்றவற்றின் உட்கட்டமைப்பைப் பொறுத்தே அந்தந்த கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். ஒரு கல்லூரியில் பணிபுரியும் முழுநேரப் பேராசிரியர் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே அந்தக் கல்லூரியில் பல்வேறு பாடப் பிரிவுகளுக்கும், அந்தப் பாடப் பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கைக்கும் அனுமதி அளிக்கப்படும். ஒரு கல்லூரியின் முழுநேர பேராசிரியர், மற்றொரு கல்லூரியில் முழுநேர பேராசியராகப் பணிபுரிய முடியாது, அப்படிப் பணி புரிந்தால் மோசடி என்று AICTE-யின் விதிகள் கூறுகின்றன. இதை உறுதி செய்யவே அண்ணா பல்கலைக்கழகத்தின் ‘நிறுவனங்களின் இணைப்பு மையத்தின் (Centre for Affiliation of Institutions)' ஆய்வுப் பிரிவு ஆண்டுதோறும், தமிழ்நாட்டில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்துகிறது. அப்படி நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தும் பிரிவு, 2023-24 கல்வியாண்டில் தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. மனிதர்களின் முதல் மூதாதையான பாலூட்டி இனம் டைனோசர் காலத்தில் எப்படி வாழ்ந்தது தெரியுமா?25 ஜூலை 2024 ‘எல்லோருக்கும் தெரிந்த விஷயம்’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் பொதுவாக, கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ தனித்துவமான அடையாள எண்களை வழங்குகிறது. அதன் மூலம் ஒரு பேராசிரியர் ஒரு கல்லூரியில் பணிபுரிவதாக உள்ளீடு செய்துவிட்டால், இன்னொரு கல்லூரியில் பணியாற்றுவதாக உள்ளீடு செய்ய முடியாது. ஆனால், குற்றம் சாட்டப்படும் பேராசிரியர்கள் போலியான தனித்துவ எண்களை வழங்கி இந்த முறைகேடுகளைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதுபோல தனித்துவ எண்கள் இல்லாமல் போலி எண்களை வைத்து 13,891 பேர் பணிபுரிவதாக அறப்போர் இயக்கம் கண்டறிந்துள்ளது. இந்தப் பின்னணியில் 2023-24இல் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்ட அப்போதைய நிறுவனங்களின் இணைப்பு மைய இயக்குநர் ஏ. இளையபெருமாள், ஆய்வுக் குழுவின் உறுப்பினர்கள், 224 கல்லூரியின் நிர்வாகிகள், 353 பேராசிரியர்கள் ஆகிய அனைவரையும் விசாரிக்க வேண்டும் என இந்த அமைப்பு கோரியிருக்கிறது. "இதுபோல நடக்கிறது என்பது இந்தத் துறையைக் கவனிக்கும் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகத்தான் இருக்கிறது. இது குறித்து எங்களிடம் சிலர் தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், நாங்கள் கடந்த ஓராண்டாக இதில் பணியாற்றினோம்,” என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன். தமிழ்நாட்டில் சுமார் 430 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகின்றன. “முதலில் இந்தக் கல்லூரிகளின் பட்டியலை எடுத்தோம். பிறகு அங்கு பணியாற்றிய பேராசிரியர்களின் பட்டியலை எடுத்து ஒவ்வொன்றாக ஒப்பிட்டுப் பார்த்தபோது இந்தத் தகவல்கள் தெரிய வந்தன. அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆய்வுக்குச் செல்லும் குழுவுக்குத் தெரிந்தேதான் இது நடப்பதாக நாங்கள் கருதுகிறோம்,” என்கிறார். மேலும், எந்தக் குழுவினர் இந்த ஆய்வுக்குச் சென்றார்கள் என்பதைப் பல்கலைக்கழகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, அவர்கள் தர மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார் அவர். “ஆசிரியர்களுக்கான தனித்துவம் மிக்க எண்ணை மட்டும்தான் பொறியியல் கல்லூரிகள் பேராசிரியர்களுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆனால், AU, AI என என்னென்னவோ எண்களைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒவ்வொரு புகைப்படத்தை அளிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் 47 ஆயிரம் பேர் வேலை பார்த்தால் அதில் 14 ஆயிரம் பேருக்கு தனித்துவம்மிக்க எண்களே இல்லை. இவர்கள் என்ன படித்திருக்கிறார்கள், இவர்களது தரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது," என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன். ‘15 ஆண்டுகாலப் பிரச்னை’ பட மூலாதாரம்,ARAPPOR IYAKKAM படக்குறிப்பு,அறப்போர் இயக்கத்த்தைச் சேர்ந்த ஜெயராமன் தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் இது குறித்து வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். பெயர் தெரிவிக்க விரும்பாமல் பேசிய தனியார் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஒருவர், இந்த விவகாரத்தில் இருக்கும் பல்வேறு பிரச்னைகளைப் பட்டியலிட்டார். "ஏ.ஐ.சி.டி.இ 60 மாணவர்களுக்கு 9 பேராசிரியர்கள் இருக்க வேண்டும் எனச் சொல்கிறது. ஆனால், அந்த அளவுக்குத் தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் கிடைப்பதில்லை. நிலைமை இப்படியிருக்கும்போது புதிய புதிய படிப்புகளுக்கு வேறு அனுமதி தருகிறார்கள். இந்தப் படிப்புகளைக் கற்பிக்கவெல்லாம் எங்கிருந்து பேராசிரியர்கள் கிடைப்பார்கள்?” என்கிறார். “ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டியது அண்ணா பல்கலைக்கழகத்தின் கடமை. ஆகவே தவறு அவர்கள் பக்கமும் இருக்கிறது. இதனால், ஒட்டுமொத்தமாக மாணவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்," என்கிறார் அந்தப் பேராசிரியர். ஒரே பேராசிரியர் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றினால் மாணவர்களுக்கு எப்படிப் பாடம் நடத்தப்படும்? "ஆன்லைனில் இருக்கும் வீடியோக்களை வைத்துப் பாடம் நடத்துகிறார்கள். அது புரிந்தவர்கள் தேறுகிறார்கள். மற்றவர்களுக்குச் சிக்கல்தான்," என்கிறார் அவர். இந்தப் பிரச்னை இப்போதுதான் பெரிதாக வெடித்திருந்தாலும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பொறியியல் கல்லூரிகளில் இப்படித்தான் நடப்பதாகக் கூறுகிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான பாலகுருசாமி. "இந்த விஷயம் இப்போது துவங்கியதல்லை. கடந்த 15 ஆண்டுகளாகவே இப்படித்தான் நடக்கிறது. இதில் பல பிரச்னைகள் இருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகள் தகுதி வாய்ந்தவையாக இருக்கின்றனவா என்பதைப் பார்வையிட ஒரு குழு செல்லும். அங்கிருக்கும் குறைபாடுகளைப் பதிவுசெய்து, ஒரு மாதத்திற்குள் அதைச் சரிசெய்ய வேண்டுமெனக் கடிதம் ஒன்று அனுப்பப்படும். ஆனால், அதற்குப் பிறகு அந்தக் குறைபாடு சரி செய்யப்பட்டதா என்பதை மீண்டும் சரிபார்க்க வேண்டுமல்லவா, அது நடக்காது,” என்கிறார் அவர். மேலும், “பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ தனித்துவமான எண்களைக் கொடுக்கிறது. அந்த எண்கள் உண்மையானவையா, அந்த எண்களைக் கொண்டவர்கள் எங்கெங்கே பணியாற்றுகிறார்கள் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், அதையும் செய்வதில்லை. போலி எண்கள் இருந்தாலும் கண்டுகொள்வதில்லை,” என்கிறார் அவர். ‘பாதிக்கப்படுவது மாணவர்கள்தான்’ படக்குறிப்பு,கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி மேலும் பேசிய பாலகுருசாமி, “அண்ணா பல்கலைக்கழகம் ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட அமைப்பு. அந்தப் பல்கலைக்கழகம் நினைத்தால் இதையெல்லாம் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இதில் அரசியல் தலையீடு அதிகம் இருக்கும். காரணம், அரசியல்வாதிகளே பல பொறியியல் கல்லூரிகளை நடத்துகிறார்கள். இம்மாதிரி சூழலில் பல்கலைக்கழகம்தான் மிகுந்த கண்டிப்புடன் செயல்பட வேண்டும். அப்படி நடப்பதில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது,” என்கிறார். “இதனால், மிகவும் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் தேர்ச்சி விகிதம் 0 - 20 சதவீதம் வரைதான் இருக்கிறது. ஆசிரியர்களே இல்லாவிட்டால் யார் பாடம் நடத்துவார்கள்? எப்படி மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள்? தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் தரம் மிகக் கீழே போய்க் கொண்டிருப்பதற்கு இதுதான் முக்கியக் காரணம்" என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பாலகுருசாமி. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள், கல்லூரிகள் மட்டுமல்ல, அங்கீகாரம் வழங்கிய அண்ணா பல்கலைக்கழகம், கட்டமைப்புகளை ஆராயாமலே அனுமதி தரும் ஏ.ஐ.சி.டி.இ ஆகிய அனைவருக்கும் இந்தக் குளறுபடியில் பங்கிருப்பதாகக் கூறுகிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி. "இதில் ஒரு தரப்பின் மீது மட்டும் குற்றம் சுமத்த முடியாது. கல்லூரி, பல்கலைக்கழகம், ஏ.ஐ.சி.டி.இ ஆகிய மூன்றின் மீதும் தவறுகள் இருக்கின்றன. ஒரு பொறியியல் கல்லூரியில் கூடுதல் இடங்கள் கேட்டால், உடனடியாக அனுமதி தரக்கூடாது. அப்படியே அனுமதி தந்தாலும் முதல் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி தரக்கூடாது. அந்த ஆண்டில் அவர்கள் தங்கள் கட்டமைப்பை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். புதிதாக படிப்புகளைத் துவங்கும்போது, ஏ.ஐ.சி.டி.இ-யே பயிற்சி வழங்க வேண்டும். பேராசிரியர்கள் அந்தப் பயிற்சியில் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். இதுபோல எதையும் செய்யாமல், போலி பேராசிரியர் பிரச்னையை மட்டும் பேசுவதால் பயனில்லை" என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி. இந்த விவகாரம் நடந்த தருணத்தில் சி.ஏ.ஐ குழுவின் இயக்குநராக இருந்த இளையபெருமாளைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. நிறுவனங்களின் இணைப்பு மையத்தின் (CAI) இணையதளத்தில் மாவட்ட வாரியாக அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால், பலருக்கு ஏஐசிடிஇ-யின் தனித்துவ எண்களே இல்லை. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் என்ன சொல்கிறார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இந்த விவகாரம் பெரிதாக வெடித்ததையடுத்து, தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர் விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் தெரிவித்திருக்கிறார். "அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 52,500 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், 2 ஆயிரம் பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை இருந்ததால் 189 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவதாக கல்லூரி நிர்வாகத்தினர் கணக்கு காட்டியுள்ளனர். அவர்கள் வெவ்வேறு ஆதார் எண்களைக் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த பேராசிரியர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்," என்கிறார் ஆர். வேல்ராஜ். இதற்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக ஆளுநரும் அண்ணா பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cpd9ldkv8yko