Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. டிரம்பை குற்றவாளி என விமர்சித்த கமலா ஹாரிஸ் - சூடு பிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தன்னுடைய பரப்புரையை துவங்கினார் கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மன் ஜூனியர் பதவி, பிபிசி, வாஷிங்டன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பின்வாங்கிய நிலையில், தன்னுடைய பரப்புரையை ஆரம்பித்துள்ளார் கமலா ஹாரிஸ். பைடனின் முழு ஆதரவையும் பெற்ற கமலா ஹாரிஸ் தன்னுடைய முதல் உரையை விஸ்கான்சினில் நிகழ்த்தினார். துப்பாக்கி நுகர்வினை கட்டுப்படுத்துதல், கருக்கலைப்பு மருத்துவ சிகிச்சைகளை எளிமையாக அணுக வழிவகை செய்தல், வறுமையான சூழலில் வாழும் குழந்தைகள், கூட்டாட்சி உரிமைகள் மற்றும் அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையிலான மருத்துவ சேவைகள் பற்றி தன்னுடைய உரையில் பேசினார். அவரை எதிர்த்து போட்டியிடும் டொனால்ட் டிரம்பை ஒரு குற்றவாளி என்று அழைத்தும் காட்டமான முதல் பரப்புரையை மேற்கொண்டார் கமலா ஹாரிஸ். குற்றவாளியா - வழக்கறிஞரா? - கமலா ஹாரிஸின் முதல் பரப்புரை "ஒரு முன்னாள் வழக்கறிஞருக்கும், ஒரு குற்றவாளிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது," என்று அதிபர் பதவிக்கான தன்னுடைய முதல் பரப்புரையில் குடியரசுக் கட்சியினரை விமர்சித்து உள்ளார் கமலா ஹாரிஸ். 3000-க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்த விஸ்கான்சின் பரப்புரை மைதானத்தில் பேசிய கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் டொனால்ட் டிரம்பை மோசடிக்காரர்களுடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் டொனால்ட் டிரம்ப், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், அமெரிக்க எல்லைப் பகுதியில் கமலா ஹாரிஸின் பணிகளை சுட்டிக்காட்டி, "அவர் தொடும் எல்லாம் அழிவைத்தான் சந்திக்கின்றன," என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராகும் முன்பே இந்தியாவை குறிவைக்கும் டிரம்ப் - என்ன பேசினார்?22 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜோ பைடன், அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்குவதாக ஜூலை 21ம் தேதி அறிவித்தார். மேலும், தன்னுடைய ஆதரவை துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கினார். அதிகரிக்கும் ஆதரவு அதிபர் வேட்பாளருக்கு தேவையான ஆதரவை ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு வழங்கிய பிறகு இந்த பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜூன் மாதம் டிரம்புக்கு எதிரான விவாத நிகழ்வுக்கு பிறகு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் நன்கொடையாளர்களின் அதிருப்திக்கு ஆளான ஜோ பைடன், அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தார். மேலும், தன்னுடைய ஆதரவை துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கினார். ராய்ட்டர்ஸ் மற்றும் இப்ஸோ இணைந்து தேசியளவில் நடத்திய ஒரு புதிய கருத்துக் கணிப்பில், டிரம்பை விட கமலா ஹாரிஸ் இரண்டு புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடன் ஆதரித்தாலும் கமலா ஹாரிஸ் முன் நிற்கும் 3 சவால்கள்22 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பைடனைக் காட்டிலும் கமலாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர் அரசியல் கருத்தாளர்கள். நீதித்துறை பணிகளை நினைவு கூறும் கமலா ஹாரிஸ் மில்வாக்கி புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் உயர் நிலைப் பள்ளியில் நடந்த பரப்புரையில் ஜூலை 23ம் தேதி அன்று பேசிய கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவில் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றிய தன்னுடைய அனுபவம் குறித்து நினைவு கூர்ந்தார். "பெண்களை மோசமாக நடத்தும் குற்றவாளிகள், நுகர்வோர்களை ஏமாற்றும் மோசடிக்காரர்கள், தங்களின் சொந்த நலனுக்காக விதிமுறைகளை உடைக்கும் ஏமாற்றுக்காரர்கள் என பலவகையான குற்றவாளிகளை நான் பார்த்திருக்கின்றேன்," என்று கூறிய கமலா ஹாரிஸ், ''டிரம்பைப் போன்ற நபர்களை நான் அறிவேன்'' என்றும் குறிப்பிட்டார். இந்த பேச்சுக்கு ஆரவாரமான கைதட்டிய மக்கள், "கமலா, "கமலா", என்று கோஷமிட்டனர். பைடனைக் காட்டிலும் கமலாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். டொனால்ட் டிரம்பின் பெயரை கமலா கூறும் போதெல்லாம், "அவரை பிடியுங்கள்" என்று பொருள்படும் வகையில் மக்கள் ஆரவாரமாக பதில் அளித்தனர். 2016ம் ஆண்டு ஹிலாரி க்ளின்டனின் டிரம்புக்கு எதிரான பரப்புரையிலும் இதே போன்ற போக்கு நிலவியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிரபலமற்ற துணை அதிபராக கமலா ஹாரிஸ் உள்ளார் என கூறும் ஒரு கருத்துக்கணிப்பு முடிவுகளை டிரம்ப் ட்ரூத் சோசியல் என்ற சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். துப்பாக்கி கட்டுப்பாடு, கருக்கலைப்பு சிகிச்சைகளை எளிமையாக அணுகுதல், வறுமையில் வாடும் குழந்தைகள், அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையிலான மருத்துவ சேவைகள் போன்ற விவகாரங்களுக்கு முன்னுரிமை அளித்து பேசினார் கமலா ஹாரிஸ். "சுதந்திரமான, இரக்க குணம் கொண்ட, சட்டத்தின் ஆட்சியை கொண்டுள்ள நாட்டில் நாம் வாழ வேண்டுமா, இல்லை குழப்பம், அச்சம் மற்றும் வெறுப்பை கொண்டுள்ள நாட்டில் இருக்க வேண்டுமா?" என கமலா ஹாரிஸ் பொதுமக்கள் மத்தியில் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சான் பிரான்சிஸ்கோ பகுதியில் பரப்புரையை காண வந்த கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் அவர் முன்பு இருக்கும் சவால்கள் என்ன? ஆனால் இந்த வேகத்தை கமலா ஹாரிஸ் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகம்தான். கருத்துக் கணிப்பாளர் டோனி ஃபேப்ரிஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வாக்காளர்களுடனான கமலாவின் 'தேனிலவு' காலம் முடிவுக்கு வரும். பிறகு, பைடனின் ஆட்சியில் துணை அதிபராக, கூட்டாளியாக அவர் ஆற்றிய பணிகள் என்ன என்பது குறித்து கவனம் திரும்பும்'' என்று கூறியுள்ளார். அமெரிக்க - மெக்சிகோ எல்லைப் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கமலா ஹாரிஸ் தவறிவிட்டார் என்று டொனால்ட் டிரம்ப் தன்னுடைய பரப்புரையில் குற்றம் சாட்டுகிறார். பைடன் - ஹாரிஸ் ஆட்சியின் போது அதிகரித்த குற்றம் மற்றும் பணவீக்கம் குறித்தும் டிரம்பின் பரப்புரை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொலைக் குற்றவாளிகள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் கலகக்காரர்களுக்கு கமலா ஹாரிஸ் ஜாமீன் பெற்றுக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மின்னஞ்சல் ஒன்றை குடியரசுக் கட்சியின் வேட்பாளர் குழு அனுப்பியுள்ளது. மேலும் இஸ்ரேலை அவமதித்தது, குறைந்துவரும் பைடனின் திறன் குறித்து மக்களுக்கு தெரிவிக்காதது என அந்த மின்னஞ்சலில் குற்றச்சாட்டுகள் நீள்கின்றன. பத்திரிக்கையாளர்களிடம் போனில் பேசிய டிரம்ப், "கமலா ஒரு தீவிர இடதுசாரி. ஆனால் ஒரு இடதுசாரி நபர் இந்த நாட்டை அழிக்க இந்த நாடு விரும்பவில்லை," என்று குறிப்பிட்டிருந்தார். "பைடனைக் காட்டிலும் அவர் எளிமையானவராக இருப்பார் என்று நினைக்கின்றேன். ஏன் என்றால் பைடன் கொஞ்சம் பொது நீரோட்டத்தில் இருந்தவர்," என்றும் அவர் குறிப்பிட்டார். ஏபிசி செய்திகளில் பைடனுடன் டிரம்பின் விவாத நிகழ்வு செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் போட்டியில் இருந்து விலகவே, கமலா ஹாரிஸுடன் செப்டம்பரில் விவாத நிகழ்வில் பங்கேற்க தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். "இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நான் பைடனுடன் விவாதிக்கவே ஒப்புக் கொண்டேன். ஆனால் இப்போது இவருடன் விவாதிக்க விரும்புகிறேன். எந்த வேறுபாடும் இருக்காது," என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிபர் ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் ஜூலை 24 அன்று பைடன் தன்னுடைய ஓவல் அலுவலகத்தில் தேர்தலில் இருந்து பின்வாங்கியது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பைடன், செவ்வாய் கிழமை அன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். ஜார்ஜ் க்லூனி, பார்பரா ஸ்ட்ரெய்சான்ட் மற்றும் ஜேமி லீ கர்டீஸ் போன்ற ஹாலிவுட் பிரபலங்களும் கமலாவுக்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர். இது கமலாவுக்கான நன்கொடை தொடர்ந்து வருவதை உறுதி செய்யலாம். https://www.bbc.com/tamil/articles/crgm1mnd282o
  2. 24 JUL, 2024 | 02:08 PM முல்லைத்தீவு, கல்விளான் பகுதியில் இன்று (24) புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்விளான் பகுதி விவசாய அமைப்பின் செயலாளரே இவ்வாறு காயமடைந்துள்ளார். இவர் வயலுக்குச் சென்றிருந்த போது இனந்தெரியாத நபர்கள் சிலரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, கல்விளான் பகுதியில் மணல் கடத்தல்காரர்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருவதால் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கும் மணல் கடத்தல்காரர்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறாயினும், துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/189262
  3. Published By: DIGITAL DESK 3 24 JUL, 2024 | 02:37 PM வவுனியா ஶ்ரீ இராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலத்தின் அதிபரை மாற்றுமாறு கோரி பெற்றோர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று புதன்கிழமை (24) பாடசாலையின் காலை பிரார்த்தனை முடிவடைந்த பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது, எமது பாடசாலை கல்விநிலையில் வீழ்ச்சி நிலையினை கண்டுள்ளது. பாடசாலையில் நடைபெறும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கணக்கறிக்கைகள் எவையும் சமர்பிக்கப்படவில்லை. அங்கு நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக பெற்றோர்களிற்கு அறிவித்து கலந்துரையாடும் நடவடிக்கையினையும் அவர் முன்னெடுப்பதில்லை. இவ்வாறானா காரணங்களால் பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு போகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்தநிலைமை தொடர்ந்தால் பாடசாலையினை இழுத்து மூடவேண்டிய நிலைமையே ஏற்படும். எனவே உடனடியாக அவரை மாற்றித்தருமாறு உரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றனர். குறித்த விடயம் தொடர்பாக பாடசாலையின் அதிபரை தொடர்புகொண்டு கேட்டபோது, நான் பொறுப்பேற்ற பின்னர் பாடசாலையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்துள்ளோம். குறிப்பாக வெளிநபர்களின் உதவிகளை பெற்று மாணவர்களது கல்விவளர்ச்சிக்கு உரிய தேவைகளை செய்துள்ளோம், வறுமைப்பட்ட மாணவர்களின் தேவை கருதி சத்துணவு திட்டத்தினை விஸ்தரித்துள்ளோம். அனைத்திற்கும் கணக்கறிக்கை சமர்பிக்கப்பட்டு அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலையின் நிர்வாகத்தை ஒரு சிலநபர்கள் சொல்வது போல நடாத்தமுடியாது. சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் சரியாக செயற்பட்டால் நாம் பாடசாலையில் மாணவர்களுடன் முரண்பட வேண்டிய தேவை ஏற்படாது என்றார். https://www.virakesari.lk/article/189265
  4. மத்திய பட்ஜெட்டில் பிகார், ஆந்திராவுக்கு சிறப்புத் திட்டம் - தமிழ்நாடு புறக்கணிப்பா? பாஜக விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 24 ஜூலை 2024, 03:03 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் 2024-25ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதன் அடிப்படை என்ன? இந்த நிதி நிலை அறிக்கையில் ஆந்திரப்பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் பல திட்டங்கள் குறிப்பிடப்பட்டு அவற்றுக்குத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால், மற்ற பல மாநிலங்கள் இந்த பட்ஜெட் குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளன. அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இதனை 'ஆந்திரா - பிகார் பட்ஜெட்' என விமர்சித்துள்ளது. 'ஆந்திரா - பிகார் பட்ஜெட்' இந்த நிதிநிலை அறிக்கைக்கு தமிழ்நாட்டில் இருந்து கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த முறை நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும்போது தமிழ்நாட்டின் சில தேவைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டுமெனக் கூறி, அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். Twitter பதிவை கடந்து செல்ல, 1 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 அதில், "மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள, புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்" என்று முதலமைச்சர் கூறியிருந்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 'இந்தியாவிற்கான பட்ஜெட் அல்ல' ஆனால், இந்த நிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் மெட்ரோ ரயில் திட்டங்கள், புதிய ரயில்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை. மாறாக, அரசியல் காரணங்களுக்காக பிகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது." என்று கூறினார். அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்துவரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது என கடுமையாக விமர்சித்தார் முதலமைச்சர். "இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள பாரதிய ஜனதா கட்சி அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது" என்றும் குறிப்பிட்டுள்ளார். 'தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதி' பட மூலாதாரம்,FACEBOOK இந்த நிதிநிலை அறிக்கையில் பிகார், அசாம் போன்ற மாநிலங்களுக்கு வெள்ள துயர்நீக்கத்திற்கான நிதி குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. தனது பட்ஜெட் உரையில் இது குறித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிகார் மாநிலம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாகவும் இந்த வெள்ளம் நேபாளத்தில் இருந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். “நேபாளத்தில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் திட்டங்கள் முன்னேற்றமடையவில்லை. வெள்ள துயர்நீக்க நடவடிக்கைகளுக்காக நாங்கள்11,500 கோடி ரூபாயை வழங்கவிருக்கிறோம். இந்தியாவுக்கு வெளியில் துவங்கும் பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளால் அசாமில் ஆண்டுதோறும் வெள்ளம் ஏற்படுகிறது. அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகியவை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்படுகின்றன. அவர்களுக்கு உதவிகள் அளிக்கப்படும்" என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இதனைச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். "இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க பேரிடர் நிவாரணத்தை வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியபோதிலும், இந்த பட்ஜெட்டிலும் போதிய நிதி வழங்கப்படவில்லை. 37,000 கோடி ரூபாய் பேரிடர் நிவாரணமாக வழங்குவதற்கான ஒரு விரிவான அறிக்கையினை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த நிலையில், மத்திய அரசு சுமார் 276 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது." என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், "ஆனால் இன்று உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, பிகார் மாநிலத்திற்கு மட்டும் 11,500 கோடி ரூபாய் பேரிடர் தடுப்புப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளது. இது, தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும்" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பட மூலாதாரம்,SANSAD TV படக்குறிப்பு,சில மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்திருக்கிறார். அதேபோல, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு நிதி எதையும் வழங்காதது, கோயம்புத்தூர், மதுரை ரயில் திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஆகியவை குறித்தும், புதிய ரயில் திட்டங்கள், நெடுஞ்சாலைத் திட்டங்கள் இல்லாதது குறித்தும் முதல்வரின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் மாநில அரசின் பங்கே அதிகமாக இருக்கும் நிலையில், கூடுதல் நிதி எதையும் வழங்காமல் வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் முதல்வரின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த அறிக்கை வெளியான பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 27ஆம் தேதி பிரதமர் தலைமையில் முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிடி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். மேலும் புதன்கிழமையன்று தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார். அதிமுகவின் விமர்சனம் தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்: வீடு கட்ட ஆன்லைன் மூலம் உடனடி அனுமதி பெறுவது எப்படி?23 ஜூலை 2024 உங்கள் வீட்டில் ஃபிரிட்ஜை சிறப்பாக நிர்வகிப்பது எப்படி? ஜப்பான் தரும் தீர்வு23 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES எதிர்க்கட்சியான அ.தி.மு.கவும் இந்த நிதி நிலை அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழ்நாட்டின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதாக கூறியிருக்கிறார். "இந்த வரவு - செலவு அறிக்கை வடமாநிலங்களையும் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை." என்று கூறியுள்ளார். குறிப்பாக தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது என்றும் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா? பட மூலாதாரம்,ANI நிதிநிலை அறிக்கையில் சில மாநிலங்களை மட்டும் குறிப்பிட்டு, திட்டங்களை ஒதுக்கீடு செய்வது முன்னெப்போதும் இல்லாத வழக்கம் என்கிறார் பொருளாதாரப் பேராசிரியரும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினருமான ஜோதி சிவஞானம். "இந்தியாவின் நிதிநிலை அறிக்கை என்பது நாட்டின் ஒட்டுமொத்த வருவாயும் எப்படி செலவு செய்யப்படுகிறது என்பதற்கான அறிக்கை. இதில் சில மாநிலங்களை மட்டும் குறிப்பிட்டு அவற்றுக்குத் திட்டங்களை அறிவிப்பது முன்னெப்போதும் நடக்காதது." என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு செய்ய நிதி கமிஷன் இருக்கிறது. எவ்வித பாரபட்சமும் இல்லாமல் நிதிப் பகிர்வை செய்ய வேண்டியது அதன் பொறுப்பு. இல்லாவிட்டால் மத்திய அரசின் திட்டங்கள் மூலமாக மாநிலங்களுக்கு நிதி அளிக்கலாம் அல்லது மத்திய அரசே திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தலாம். ஆனால், ஒரு மாநில அரசு கேட்கிறது என்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்வது சரியல்ல. ஏனென்றால் அது மத்திய அரசுக்கு சொந்தமான நிதி அல்ல. எல்லா மாநிலங்களுக்கும் சொந்தமானது." என்று கூறினார். நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது, அனால் அதுமட்டும் விஷயமல்ல, சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு பல மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதுதான் விஷயம் என்கிறார் ஜோதி சிவஞானம். குஜராத்: 88 வீடு, 700 பேர்- ஒரு கிராமமே மோசடியாக விற்கப்பட்டது எப்படி?23 ஜூலை 2024 பா.ஜ.க கூறுவது என்ன? படக்குறிப்பு,நிடி ஆயோக்கை புறக்கணிப்பது தமிழக மக்களைப் புறக்கணிப்பதற்குச் சமம் என்கிறார் நாராயணன் திருப்பதி ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் சரியானவையல்ல என்கிறார் தமிழக பா.ஜ.கவின் துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி. "சென்னை மெட்ரோ ரயில் முதல் அலகிற்குத்தான் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்போது இரண்டாவது அலகிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றே தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கும்போது ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணத்தைத் தராதது போல பேசுவது சரியல்ல. இந்தப் பிரச்னை மத்திய அரசும் மாநில அரசும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை." என்று கூறுகிறார் அவர். தொடர்ந்து பேசுகையில், "ஆந்திர மாநிலத்தில் பத்தாண்டுகளாக தலைநகரம் இல்லை, அந்தப் பிரச்னையைத் தீர்த்திருக்கிறோம் என மகிழ வேண்டும். அதைவிடுத்து குறை சொல்வது சரியல்ல. நிடி ஆயோக்கை புறக்கணிப்பது தமிழக மக்களைப் புறக்கணிப்பதற்குச் சமம்" என்கிறார் நாராயணன் திருப்பதி. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் சில மாநிலங்கள் நிதி நிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவதை மறுத்திருக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், " ஒவ்வொரு மாநிலமும் அவர்கள் முன்வைத்த திட்டங்களின் அடிப்படையில் தாங்கள் கோரியவற்றைப் பெற்றிருக்கும். எந்த மாநிலமும் விடுபடவில்லை. எந்த மாநிலத்தையும் விட்டுவிடுவது எங்கள் நோக்கமுமில்லை. பிரதமர் துவக்கிவைத்த எல்லாத் திட்டங்களும் எல்லா மாநிலங்களுக்குமானவை" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆந்திராவிற்கும் பிகாருக்கும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்த நிதிநிலை அறிக்கையில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி உதவியாக பலதரப்பு முகமைகள் மூலம் நடப்பு நிதியாண்டில் 15,000 கோடி ரூபாய் ஏற்பாடு செய்யப்படும். அதேபோல, போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்தை முடிப்பதற்குத் தேவையான நிதி உதவி செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஆனால், இந்த நிதியை மத்திய அரசு நேரடியாக அளிக்கப்போவதில்லை என்றும் பலதரப்பு முகமைகள் மூலமாக அளிக்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அது கடனுதவியா, கடனுதவி என்றால் கடனை யார் திருப்பிச் செலுத்துவது போன்றவை விளக்கப்படவில்லை. அதேபோல, பிகாருக்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் பிகாரில் உள்ள நாளந்தாவில் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒடிசாவிலும் சுற்றுலாவை மேம்படுத்த நிதியுதவி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, பிகார், அசாம், உத்தரகாண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேச மாநிலம் ஆகியவற்றுக்கும் வெள்ள துயர் நீக்க நடவடிக்கைகளுக்கு உதவி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/crgk11l4z83o
  5. படக்குறிப்பு,விபத்தில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மீட்பு குழுவினர் 24 ஜூலை 2024, 07:36 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஒரு விமானம் புறப்பட்டபோது விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து, பிரபல சுற்றுலா தளமான போகராவுக்கு புறப்பட்ட சவுர்யா ஏர்லைன்ஸ் விமானத்தில் 19 நபர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தில், சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 17 பேர் மற்றும் 2 விமானிகள் இருந்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES நெருப்பு மற்றும் புகை சூழ்ந்திருக்கும் விமானத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. பிபிசி நேபாளியிடம் பேசிய காத்மாண்டு காவல்துறை செய்திதொடர்பாளர், தினேஷ் மைனலி, இந்த விபத்தில் சிக்கி 18 நபர்கள் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார். ஒரு விமான ஓட்டி காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பராமரிப்பு பணிக்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய விமான நிலைய பாதுகாப்பு தலைவர் அர்ஜூன் சாந்த் தகுரி, பராமரிப்பு பணிகளுக்காக 17 துறைசார் வல்லுநர்கள் மற்றும் 2 விமானிகளுடன் விமானம் போகராவுக்கு புறப்படட்டது என்று குறிப்பிட்டார். விமான பாதுகாப்பு விவகாரத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக நேபாளத்தின் மீது அடிக்கடி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் யேத்தி ஏர்லைனிஸில் பயணித்த 72 நபர்கள் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. விசாரணை முடிவில், விமானிகள் தவறுதலாக மின்சார இணைப்பை துண்டித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என்பது தெரிய வந்தது. நேபாள விமான விபத்து: 72 பேர் பலியாகக் காரணமாக இருந்த விமானிகளின் தவறு30 டிசம்பர் 2023 நேபாள விமான விபத்து: 68 உடல்கள் மீட்பு, பயணிகளில் 5 பேர் இந்தியர்கள்15 ஜனவரி 2023 https://www.bbc.com/tamil/articles/cne4v4egn3jo
  6. செப்டெம்பரில் ஜனாதிபதி தேர்தல் : அரசாங்கம் அறிவிப்பு 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம் நடத்தப்படவுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன(bandula gunawardena) தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலுக்குரிய பணம் ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான பணமான 10 பில்லியன் ரூபா, வரவு செலவுத் திட்ட ஆவணத்திலேயே ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் 02 தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் பணமில்லை. இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படாது எனவும் நாடாளுமன்ற இந்த ஆண்டு கலைக்கப்படாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். https://ibctamil.com/article/presidential-election-in-september-1721818827
  7. தமிழ் மக்களிற்கான சுயாட்சி தீர்விற்காக மக்கள் போராட்ட முன்னணி போராடும் - - தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்தல் அவர்களுக்கான சுயாட்சி என்பவை தான் எமது நிலைப்பாடு.. -ரஜீவ்காந் Published By: RAJEEBAN 24 JUL, 2024 | 05:33 PM சுயாட்சியுடன் கூடிய , ஒற்றைய ஆட்சியை நிராகரிக்கின்ற, அலகுகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியோடு, மக்கள் போராட்ட முன்னணி இந்த அரசியல் களத்தில் குதித்திருக்கின்றது என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் சுயாட்சிக்காக தொடர்ந்தும் போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். அரகலய போராட்ட குழுவான மக்கள் போராட்ட முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வடக்குகிழக்கில் பிறந்து வளர்ந்து வடக்குகிழக்கினது ஒடுக்குமுறைகளை மிக மோசமாக சந்தித்தவன் என்ற வகையிலே எங்களது அரசியல் பிரச்சினைகள், இன்று வரை தீராமலிருக்கின்றது என்ற வருத்தம் இன்றுவரை எங்களிற்கு இருக்கின்றது. குறிப்பாக இன்று கருப்பு ஜூலை தினம், 1983ம் ஆண்டு கொத்துகொத்தாக தமிழ் மக்கள் தலைநகரில் எந்தவித கரிசனையும் இல்லாமல், கொல்லப்பட்டிருந்தார்கள். இன்றுவரை எந்தவொரு பொறுப்புக்கூறலும் இல்லாத அந்த நிகழ்வு போல எத்தனை ஆயிரக்கணக்கான கொலைகளும், வன்முறைகளும், காணாமல்ஆக்கப்படுதலும், தமிழ் மக்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் தென்னிலங்கையிலிருந்து எத்தனையோ கட்சிகள் வடக்குநோக்கி வருகின்றன, அவர்கள் தமிழ் மக்களிற்கு என்ன வேண்டும் என்ன கொடுக்கப்போகின்றோம் என்பது தொடர்பில் இங்கு ஒன்றை கூறிவிட்டு, தென்னிலங்கையில் அதற்கு மாற்றான வேறு ஒன்றை கூறுவார்கள் கூறுவார்கள். அங்கு இனவாதத்தையும் இங்கு வாக்குகளை பெறுவதற்கான யுக்தியையும் சிங்கள அரசியல்வாதிகள் தொடர்ந்து கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இந்த விடயத்தில், இந்தமாதிரி விடயங்களை தென்னிலங்கையிலும் தமிழ்மக்கள் மத்தியிலும் சரியான விடயங்களை தெரிவிக்ககூடிய ஒரே கட்சியாக மக்கள் போராட்ட முன்னணி உருவெடுத்துள்ளது. நான் நினைக்கின்றேன், வரலாற்றில் முதல் தடவையாக சுயாட்சியுடன் கூடிய, ஒற்றை ஆட்சியை நிராகரிக்கின்ற, அலகுகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியோடு, மக்கள் போராட்ட முன்னணி இந்த அரசியல் களத்தில் குதித்திருக்கின்றது. இது தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் மத்தியில் எப்படியான குழப்பங்களை ஏற்படுத்தும், நன்கறிந்தும் அவை எல்லாவற்றையும் தாண்டி, மக்கள் நலன்கருதி, ஒட்டுமொத்த நாடும் முன்னோக்கி செல்லவேண்டும், நீண்டகால பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்ற நோக்கில் மக்கள் போராட்ட முன்னணி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக தென்னிலங்கையில் இருக்ககூடிய பிரதான இரு சிங்கள இடது சாரி கட்சிகளும் வடக்குகிழக்கில் நீண்டகாலமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இடதுசாரி கட்சியும் இணைந்து இந்த கட்சியை உருவாக்கியுள்ளன. குறிப்பாக சுயாட்சி அலகுகள் என்பது தமிழ் மக்கள் மிக நீண்டகாலமாக தீர்வு என்ற அடிப்படையில் எதனை கேட்டுக்கொண்டிருந்தார்களோ, அதனை எந்த வித பாரபட்சமும் இல்லாமல் அவர்களிற்கு ஒரு ஆட்சிமுறையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. எழுத்து வடிவத்தில், மூன்றுமொழிகளிலும் முன்மொழியப்பட்டுள்ளது. ஏற்கனவே சில கட்சிகள் மாறிமாறி கூறுவது போல இல்லாமல், தீர்க்கமாக உண்மையாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயத்தை நான் இன்று ஊடகங்களிற்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன். நீங்கள் என்று ஆட்சிக்கு வரப்போகின்றீர்கள் இதெல்லாம் எப்போது நடக்கப்போகின்றது என்ற கேள்விகள் எல்லாம் மக்களிற்கு இருக்கலாம். நாங்கள் போராட்ட முன்னணி என்று நாங்கள் சுயாட்சி என்ற முடிவை எடுத்தோமோ அதற்காகவும் எங்கள் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதை நான் இங்குள்ள தமிழ் மக்களிற்கும் ஊடகவியலாளர்களிற்கும் தெளிவுபடுத்த ஆசைப்படுகின்றேன். குறிப்பாக வடக்குகிழக்கை பொறுத்தவரையில் சிங்களமயமாக்கல் திட்டமிடப்பட்டு மிக நீண்டகாலமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது, இதனை நிறுத்துவதற்கான முன்மொழிவுகளை மேற்கொண்டிருக்கின்றோம், இந்த அடிப்படையில் சிங்களமயமாக்கல் தடுத்துநிறுத்தப்படும். அதேபோல பௌத்தமயமாக்கல் தொல்பொருள் என்ற பெயரிலே குறிப்பாக இலங்கையின் வடக்குகிழக்கிலே இடம்பெறுகின்றது. எந்தவிதமான தயவு தாட்சண்யம் இல்லாம் வடக்குகிழக்கு தமிழ் மக்களின் அடையாளங்களிற்கு மேல் எத்தனையோ ஆயிரக்கணக்கான நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன, அந்த நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்படவேண்டும் அவை தமிழ் மக்களிற்குரிய நிலங்கள் எனவே தொல்பொருள் என்ற பெயரில் கைப்பற்றப்பட்ட அத்தனை நிலங்களையும் விடுவிக்கவேண்டும் என்ற கொள்கையையும் நாங்கள் முன்வைத்திருக்கின்றோம். https://www.virakesari.lk/article/189289
  8. இலங்கை மாணவர்களுக்காக அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் அன்பளிப்பு செய்த மடிக்கணனிகளுக்கு சுங்கத்துறையால் ரூபா 2.2 மில்லியன் வரி விதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake)தெரிவித்துள்ளார். நன்கொடையாக வழங்கப்படும் மடிக்கணனிகளுக்கு இது போன்ற வரி விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அவர்கூறினார். முன்னர் ஒருபோதும் செலுத்தியதில்லை “நாங்கள் சுங்க வரியாக ரூ 2,286,000 செலுத்தியுள்ளோம் அதற்கு 18% வரி காரணமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நன்கொடையாக வழங்கப்படும் மடிக்கணனிகளுக்கு இதற்கு முன்னர் நாம் வரி செலுத்தியதில்லை'' என்றார். 200க்கும் மேற்பட்ட மடிக்கணனிகள் இலங்கை மாணவர்களுக்கு 200க்கும் மேற்பட்ட மடிக்கணனிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். ரஞ்சன் ராமநாயக்க அறக்கட்டளை நடாத்தும் நிகழ்வு நேற்று(23) கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. https://ibctamil.com/article/customs-charges-duties-even-for-donated-laptops-1721809221
  9. காசாவில் உயிரிழப்பு 39,000ஐ தாண்டியது: மக்கள் வெளியேற இஸ்ரேல் புது உத்தரவு காசாவில் தொடர்ந்து மோதல் நீடிக்கும் நிலையில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,000ஐ தாண்டியுள்ளது. தெற்கு நகரான கான் யூனிஸில் நேற்று இடம்பெற்ற சரமாரித் தாக்குதல்களில் 27 பேர் கொல்லப்பட்ட நிலையிலேயே பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. புதிய போர் நடவடிக்கைகளை முன்னேடுக்கும் வகையில் காசாவின் சில பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கான் யூனிஸின் கிழக்காக உள்ள பனீ சுஹைலா சிறு நகரில் இஸ்ரேலிய டாங்கிகள் நடத்திய சரமாரித் தாக்குதல்களில் குறைந்தது 16 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதிகளில் வானில் இருந்தும் குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் ஆறு சிறுவர்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பலரும் காயமடைந்திருப்பதாக அது கூறியது. கொல்லப்பட்ட சடலங்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஏற்றிய ட்ரக் வண்டி ஒன்று கான் யூனிஸில் உள்ள அல் நாசர் மருத்துவமனையை அடைந்திருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்நிலையில் பலஸ்தீன போராளிகளின் புதிய தாக்குதல்களை அடுத்து பலஸ்தீனர்களை வெளியேறும்படி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதில் கான் யூனிஸின் கிழக்கில் ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் இருந்தும் மக்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வெளியேற்ற உத்தரவினால் 400,000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வெளியேற்ற உத்தரவுக்கான துண்டுப்பிரசுரம் வீசப்பட்ட விரைவிலேயே மக்கள் வெளியேறுவதற்கு அவகாசம் இன்றி இஸ்ரேல் படை நடவடிக்கை ஆரம்பித்ததாக அங்கிருக்கும் அல் ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் முன்னணி தளபதிகள் உட்பட போராளிகளை இலக்கு வைத்தே இங்கு தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியபோதும் இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் தாக்குதல்களை நியாயப்படுத்த இவ்வாறு கூறுவதாகவும் பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை காசா நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அடையாளம் இடப்பட்ட ஐ.நா. வாகன தொடரணி மீது இஸ்ரேலியப் படை தாக்குதல் நடத்தியதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார். கட்டார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்துடன் இடம்பெறும் போர் நிறுத்த முயற்சிகளும் போர் தரப்புகள் இடையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஸ்தம்பித்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவை வியாழக்கிழமை அனுப்புவதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை (21) உத்தரவிட்டதாக பிரதமர் அலுவலகம் கூறியபோதும் அந்தத் குழு எங்கே அனுப்பப்படுகிறது என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் உரையாற்றுவதற்காக நெதன்யாகு நேற்று (22) வொஷிங்டன் புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/306685
  10. Published By: VISHNU 24 JUL, 2024 | 01:08 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நீதிமன்ற விசாரணைக்கு சென்று சிறைக்கு திரும்பும் ஆண் மற்றும் பெண் கைதிகள் நிர்வாணமாக சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள் என எதிரணியின் உறுப்பினர் ரோஹன பண்டார குறிப்பிட்ட கருத்துக்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட கைதி மற்றும் முறையற்ற வகையில் செயற்பட்ட அதிகாரியின் பெயர் விபரங்களை தாருங்கள் என அமைச்சர் கோரிய போது விபரங்களை வழங்க முடியாது என ரோஹன பண்டார குறிப்பிட்டார். அவ்வாறாயின் நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள், கீழ்த்தரமாக நடந்துக் கொள்ள வேண்டாம் என நீதியமைச்சர் கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சியின் உறுப்பினர் ரோஹன பண்டார, நீதிமன்ற விசாரணைக்கு சென்று மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பும் ஆண் மற்றும் பெண் கைதிகள் நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள். வைத்தியர்கள், தாதியர்கள் இல்லாமல் சிறைச்சாலை ஊழியர்கள் கைதிகளை முறையற்ற வகையில் மல வாயில் முறையற்ற வகையில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். சிறைக்கைதிகளின் மலவாய் பகுதியை சோதனை செய்யும் போது கைதிகளின் சுய கௌரவமும்,உளவியலும் பாதிக்கப்படும்.நவீன தொழினுட்பம் காணப்படுகின்ற நிலையில் முறையான வகையில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். சிறைச்சாலை ஊழியர்களுக்கும் முறையாக வசதிகள் இன்மையால் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார். இதற்கு எழுந்து பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, சிறைச்சாலை தொடர்பில் இவர் குறிப்பிட்ட கருத்து பாரதுரமானதுடன், கீழ்த்தரமானது. இக்கருத்தினால் சிறைக்கைதிகள் அவமானப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலை அதிகாரிகள் மிக மோசமானவர்கள் என்று சித்தரிக்கப்படுகிறது அத்துடன் இலங்கையில் சிறைக்கைதிகளுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் சர்வதேசத்துக்கு குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான முறையற்ற செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தால் அதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.நாட்டில் பொருளாதார நெருக்கடி என்பதொன்று கிடையாது என்ற நிலையில் இருந்துக் கொண்டு இவர் பேசுகிறார்.சிறைச்சாலை ஊழியர்களுக்கு 13 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இம்மாதம் முதல் வழங்கப்படும் என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, நான் கீழ்த்தரமான விடயத்தை குறிப்பிடவில்லை.சிறைச்சாலையில் இடம்பெறும் கீழ்த்தரமான செயற்பாட்டை உறுதிப்படுத்தியதன் பின்னரே குறிப்பிடுகிறேன்.என்னை விமர்சிக்காமல் உரிய நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என்றார். மீண்டும் எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர், உறுதிப்படுத்தினால் பாதிக்கப்பட்ட கைதி மற்றும் முறையற்ற செயற்பட்ட அதிகாரியின் பெயரை குறிப்பிடுங்கள் அல்லது என்னிடம் தாருங்கள் நான் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறேன் என்றார். இதற்கு பதிலளித்த ரோஹன பண்டார,அந்த விடயங்களை வழங்க முடியாது என்றார். மீண்டும் உரையாற்றிய நீதியமைச்சர் அவ்வாறாயின் நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள், அரச அதிகாரி ஒருவர் முறையற்ற வகையில் செயற்பட முடியாது.ஆகவே விபரங்களை தாருங்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறேன்.விபரங்களை வழங்க முடியாது என்றால் நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள்.கேவலமாக நடந்துக் கொள்ள வேண்டாம் என்று கடுமையாக சாடினார். https://www.virakesari.lk/article/189217
  11. பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மீள பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கர்தினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட 8 தரப்பினரால் 9 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. https://thinakkural.lk/article/306697
  12. கோலி அணியில் நீடிப்பாரா? வெற்றிக்கான 3 அம்சங்களாக கம்பீர் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 23 ஜூலை 2024 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடங்கிய கோலி-கம்பீர் உரசல் அன்றோடு முடியவில்லை, 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 லீகிலும் புகைந்தது. இப்போது தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் வழிகாட்டலில் விராட் கோலி விளையாடப் போகிறார் எனும் போதே பல்வேறு ஊகங்கள் ரசிகர்கள் மனதில் ஓடத்தொடங்கின. கோலியை எவ்வாறு கம்பீர் நடத்தப் போகிறார், அணியிலிருந்து நீக்கப் போகிறாரா, ஐபிஎல் தொடரில் தொடங்கிய உரசல் இந்திய அணியிலும் தொடருமா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. வெற்றிக்கான 3 அம்சங்கள் - கம்பீர் கூறியது என்ன? வரும் 27ம் தேதி இந்திய அணிக்கு அதிகாரபூர்வமாக தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் கம்பீரின் முதல் பணி, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஆகும். ஐபிஎல் அணிகளுக்கு ஆலோசகராக இருந்த ஒருவர் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக வருவது இதுதான் முதல்முறையாகும். தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர், ரேயான் டென் டஸ்சாடேவும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக சாய்ராஜ் பகதுலேவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பீல்டிங் பயிற்சியாளராக டி திலிப் தொடர்கிறார். இலங்கை பயணம் முடிந்தபின் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் மேலும் சிலரைச் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இலங்கை தொடருக்கு முன்பாக பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மும்பையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் டி20 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இந்திய அணியை, தொடர் வெற்றிப் பாதையில் எவ்வாறு அழைத்துச் செல்லப் போகிறீர்கள் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கம்பீர் பதில் அளிக்கையில் “ மிகவும் எளிமையானது. இந்திய அணியின் எதிர்கால வெற்றிக்கு 3 விஷயங்கள் மிக முக்கியம். ஒன்று நம்பிக்கை, 2வது சுதந்திரம், 3வது வெற்றி ஆகியவைதான். வீரர்களுக்கு சுதந்திரம் என்பது மிக முக்கியம், சுதந்திரம் அவசியம் என்பதை நான் நம்புகிறேன். சுதந்திரம் இருந்தால்தான் தலைமைப் பயிற்சியாளர், வீரர் என்ற இடைவெளி இருக்காது. இந்த நட்புறவுதான் நம்பிக்கையை வளர்க்கும். எப்போதுமே நான் வீரர்களுக்கு ஆதரவாகவே இருப்பேன்” என்று தெரிவித்தார். அணியில் சீனியர், ஜூனியர் வீரர்கள் இருக்கும்போது பணிகளை எவ்வாறு பிரிக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்று கேள்விக்கு கம்பீர் பதில் அளிக்கையில் “ வேகப்பந்துவீச்சாளர்களின் பணியை சரிவர நிர்வகிப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். பேட்டர்கள் உடற்தகுதியுடன், விளையாடும் நிலையில் இருந்தால் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும். விராட் கோலி, ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் விளையாடப் போவதில்லை. ஆதலால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இருவரும் விளையாடுவார்கள் என்பதால் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கும் வகையில் உறுதி செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார். லாமின் யமால், நிக்கோ வில்லியம்ஸ்: புலம்பெயர் சிறுவர்கள் ஸ்பானிய கால்பந்து சூப்பர் ஸ்டார்கள் ஆன கதை16 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வரும் 27-ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை இந்திய அணி தொடங்குகிறது. விராட் கோலி பற்றி கம்பீர் கூறியது என்ன? கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரில் கோலியுடன் கம்பீர் உரசலில் ஈடுபட்டுள்ள நிலையில் இப்போது இருவரும் ஒரே அணியில் பணியாற்றப் போவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலியுடனான உறவு அணியில் எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு கெளதம் கம்பீர் பதில் அளிக்கையில் “ நான், விராட் இருவருமே முதிர்ச்சியடைந்த தனிநபர்கள். எங்கள் இருவருக்கும் இடையிலான உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நாங்கள் பகிர்ந்து கொள்வோம். இதை பொதுத்தளத்தில் தெரிவிக்க வேண்டியதில்லை. ஐபிஎல் தொடரில் நாங்கள் இருவருமே வெவ்வேறு அணிக்காக ஆடினோம். அப்போது அந்தந்த அணிக்காக, வெற்றிக்காக உழைத்தோம், சண்டையிட்டோம், போராடினோம். '' ''ஆனால், இப்போது 140 கோடி மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் இருக்கிறோம். நாங்கள் இருவரும் தற்போது ஒரே அணியில் இருப்பதால், இந்திய அணியின் வெற்றிதான், இந்தியாவை பெருமைப்பட வைப்பதுதான் எங்கள் இருவரின் உயரிய குறிக்கோளாக இருக்கும்.” என்றார். “களத்துக்கு வெளியே விராட் கோலியுடனான என்னுடைய உறவு நல்லவிதமாக இருந்துள்ளது, அது தொடரும். எங்களுக்குள் எந்தவிதமான உறவு இருக்கிறது குறித்து தெரிவிக்க வேண்டியதில்லை. சமீபத்தில்கூட இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினோம். அதை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இது இரு தனிநபர்கள் தொடர்புடையது என நான் நினைக்கிறேன்.” “பயிற்சியாளர் குறித்த என்னுடைய அறிவிப்புக்கு முன்பும், பின்பும் நான் எத்தனை முறை கோலியுடன் பேசினேன். போட்டிகளுக்கு பின்பும், முன்பும் நான் பேசியது, எங்களைப் பற்றி குறித்த செய்திகள் தலைப்புச் செய்திகளாக மாறியது போன்றவை இப்போது எல்லாம் முக்கியமானவை அல்ல. இப்போது இருவருக்குமே முக்கியமானவை என்னவென்றால், கடினமாக உழைத்து இந்தியாவை பெருமைப்பட வைப்பதுதான். இதுதான் எங்கள் பணி. விராட் கோலி முழுமையான தொழில்முறை கிரிக்கெட் வீரர், உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அது தொடரும். இருவரும் சேர்ந்து சிறப்பாக பணியாற்றுவோம் என நம்புகிறேன்” என்றார். போதனா சிவானந்தன்: பிரிட்டன் நாட்டுக்காக செஸ் விளையாடப் போகும் 9 வயது சிறுமி5 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோலி, ரோஹித் சர்மாவுக்கு 35 வயதாகிவிட்டது, அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கம்பீர் பதில் அளித்துள்ளார். 2027 உலகக் கோப்பை வரை ரோஹித், கோலி அணியில் இருப்பார்களா? கோலி, ரோஹித் சர்மாவுக்கு 35 வயதாகிவிட்டது, அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கம்பீர் பதில் அளிக்கையில், “ என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். இன்னும் இருவரும் அதிகமாக விளையாட வேண்டியுள்ளது. இருவரும் சிறப்பாக உடற்தகுதியை வைத்திருந்தால், அவர்கள் அடுத்த 50 ஓவர்கள் உலகக் கோப்பை வரை விளையாட முடியும். '' ''2025ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி, 2024நவம்பரில் ஆஸ்திரேலியத் தொடர் ஆகியவை இருப்பதால் நிச்சயம் இருவரும் விளையாடுவார்கள். உடற்தகுதியை பராமரித்தால் 2027 உலகக் கோப்பை வரை கோலி, ரோஹித் விளையாடுவார்கள். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அவர்கள் இன்னும் எவ்வளவு நாட்கள் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை நான் கூற முடியாது, அவர்களைப் பொருத்தது. அவர்களால் அணியின் வெற்றிக்கு எவ்வளவு பங்களிக்க முடியுமோ அதை வழங்கலாம். இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம்” என்று தெரிவித்தார். ஹர்திக்கிற்கு கேப்டன் பதவி மறுப்பு ஏன்? ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டார்களா, ஹர்திக் பாண்டியாவுக்கு டி20 கேப்டன் பதவி ஏன் தரப்படவில்லை என்ற கேள்விகளுக்கு கம்பீர் பதில் அளிக்கையில் “ ஜடேஜா, ஹர்திக் பாண்டியா இருவரும் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்படவில்லை, அவர்கள் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதிப் பிரச்னைதான், சூர்யகுமார் யாதவிற்கு டி20 அணியின் கேப்டன் பதவி வழங்க தூண்டியது. சூர்யகுமார் டி20 போட்டிகளை மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது.” என்றார். மூளையை தின்னும் அமீபா: தற்காத்துக் கொள்ளும் புதிய வழிமுறைகள் - கேரள அரசு கூறுவது என்ன?22 ஜூலை 2024 தமிழ்நாட்டில் சோழர் ஆட்சியில் சமண மதத்தின் நிலை என்ன? ஆண் தேவரடியார்கள் என்ன செய்தனர்?21 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹர்திக் பாண்டியாவுக்கு டி20 கேப்டன் பதவி ஏன் தரப்படவில்லை என்ற கேள்விக்கு கம்பீர் பதில் அளித்தார். கெளதம் கம்பீர் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள் 1. 2025 சாம்பியன்ஸ் டிராபிவரை கோலி, ரோஹித் விளையாடுவார்கள். உடற்தகுதி இருந்தால் 2027 உலகக் கோப்பைவரையிலும் விளையாடலாம். 2. பணி மேலாண்மை விஷயத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கே முன்னுரிமை. குறிப்பாக பும்ராவின் பணிப்பளு நிர்வாகத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும். சீனியர் வீரர்கள் உடற்தகுதியுடன் இருந்தால் தொடர்ந்து விளையாட வேண்டும். 3. சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது. 4. ஜடேஜா, ஹர்திக் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதே தவிர அவர்கள் இருவரும் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்படவில்லை. 5. ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி பிரச்னைதான், டி20 அணியின் கேப்டன் பதவியை சூர்யகுமார் யாதவிடம் வழங்க காரணமானது. 6. டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் உள்நாட்டு துலீப் டிராபியில் விளையாட வேண்டும். 7. சுப்மான் கில்லை அனைத்து ஃபார்மெட்டுக்கும் ஏற்ற வீரராகப் பார்க்கிறேன். எதிர்காலக் கேப்டனாகவும் வரக்கூடும். https://www.bbc.com/tamil/articles/cy681g0ypego
  13. 23 JUL, 2024 | 04:58 PM (நா.தனுஜா) கறுப்பு ஜுலை கலவரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமாரன், இவ்விடயத்தில் நீதிக்கான தமது போராட்டம் தொடரும் என உறுதியளித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட 'கறுப்பு ஜுலை' கலவரங்கள் அரங்கேறி இன்றுடன் (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. தமிழர்கள் மத்தியில் மிகமோசமான தாக்கத்தையும் , தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்பங்களையும் ஏற்படுத்திய இக்கலவரங்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ, பொறுப்புக்கூறலோ நிலைநாட்டப்படவில்லை. இதுகுறித்து அண்மையில் பிரிட்டனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான முதலாவது தமிழ்ப்பெண் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட உமா குமாரன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார். அப்பதிவில் அவர் கறுப்பு ஜுலை கலவரங்களை அடுத்து தமிழ்மக்கள் உலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்ததாகவும்இ அவர்கள் இன்னமும் நீதிக்காகக் காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமாரனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவர்கள் என்ற போதிலும்இ போரின் விளைவாக பிரிட்டனுக்குப் புலம்பெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன்படி கறுப்பு ஜுலை கலவரங்களின்போது இடம்பெற்ற கொடுமைகள் குறித்து தனது பெற்றோர் தனக்குக் கூறியிருப்பதாக எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ள உமா குமாரன், அக்கலவரங்களினால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்றைய தினத்தில் கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்த அனைத்து உயிர்களையும் நினைவுகூருவதாகவும், இவ்விடயத்தில் நீதிக்கான தமது போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189190
  14. மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 25 அடிப்படை புள்ளிகளால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (23) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்கள் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/306701
  15. 40 ஆண்டுகள் கடந்த பின்னரும் சிங்கள இனவெறியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடமுடியாத நிலையில் தமிழர்கள் - கறுப்பு ஜூலை குறித்த செய்தியில் சீமான் 24 JUL, 2024 | 10:33 AM இனப்படுகொலைக்கு உள்ளாகி 40 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்றளவும் சிங்கள இனவெறி ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமல் அடிப்படை உரிமைக்காகப் போராட வேண்டிய அவலநிலையில் தமிழ் மக்கள் வாடுவது வரலாற்றுப் பெருந்துயரமாகும்!என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 1983 ஆம் ஆண்டு இலங்கை இனவாத அரசின் ஆதரவுடன் சிங்கள இனவெறியர்கள் தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் எரித்து உடமைகளைக் கொள்ளையடித்து வீதிகள் தோறும் குருதியில் நனைய வீடுகள் தோறும் பிணங்கள் வீழ திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றழித்த கறுப்பு ஜூலை இனப்படுகொலை நாள் இன்று! ஈழத்தாயகத்தில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி 40 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்றளவும் சிங்கள இனவெறி ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமல் அடிப்படை உரிமைக்காகப் போராட வேண்டிய அவலநிலையில் தமிழ் மக்கள் வாடுவது வரலாற்றுப் பெருந்துயரமாகும்! சிங்கள இனவெறிக்கு இலக்காகி கருப்பு சூலை இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன். https://www.virakesari.lk/article/189236
  16. Published By: RAJEEBAN 23 JUL, 2024 | 10:05 PM இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் குறித்து பொறுப்புக் கூறவேண்டும் என கனடா தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 41 வது வருடத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- 41வருடங்களிற்கு முன்னர் இன்றைய தினம் இலங்கையின் கொழும்பில் தமிழ் பொதுமக்கள் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் ஆரம்பமாகின. ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் இழக்கப்பட்டன, மேலும் பல தமிழர்கள் காயமடைந்தனர், பாலியல் வன்முறைகளிற்கு இலக்கானார்கள், நாட்டிலிருந்து தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். கறுப்பு ஜூலை எனப்படும் தமிழர்களிற்கு எதிரான இனக்கலவரம், பதற்றங்களை அதிகரித்தது. அது பின்னர் தசாப்தகால ஆயுதமோதலாக பரிணமித்தது. இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயமாக அது விளங்குகின்றது. 2022 மே18ம் திகதியை தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினமாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை கனடாவின் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது நிறைவேற்றியது. இந்த அர்த்தமற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களை நினைவு கூர்வதில் கனடாவின் தமிழர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்தினருடன் ஐக்கியத்தை வெளிப்படுத்துவதற்கான கனடாவின் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகின்றது. மனித உரிமைகளின் உறுதியான பாதுகாவலன் என்ற அடிப்படையில் இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் குறித்து பொறுப்புக் கூறவேண்டும் என கனடா தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கும். கறுப்பு ஜூலையின் பின்னர் 1800 தமிழர்கள் கனடாவிற்கு வருவதற்கும் தங்களினதும் தங்கள் குடும்பங்களினதும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தேவையான விசேட நடவடிக்கைகளை கனடா எடுத்தது. உலகில் அதிகளவு புலம்பெயர் தமிழர்கள் தற்போது கனடாவிலேயே வாழ்கின்றனர், ஒவ்வொருநாளும் அவர்கள் எங்கள் சமூகத்திற்கு வழங்குகின்ற பங்களிப்பை நாங்கள் கொண்டாடுகின்றோம், நாங்கள் எப்போதும் அவர்களை பாதுகாப்போம். இன்றைய நாளில், கறுப்பு ஜூலையில் துயரத்தை சந்தித்த அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதில் நான் கனடாவின் பிரஜைகளுடன் இணைந்து கொள்கின்றேன். https://www.virakesari.lk/article/189216
  17. கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆவாரா? அதிபர் பைடன் புதிய வேண்டுகோள் பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்கு தேவையான ஆதரவை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் பின் வாங்கிய நிலையில் தன்னுடைய ஆதரவை துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கினார். ஆனாலும், பைடனுக்கு ஆதரவு அளித்த பிரதிநிதிகள் அனைவரும் கமலா ஹாரிஸை ஆதரிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கமலா ஹாரிஸுக்கு 27 மாகாண பிரதிநிதிகள் ஆதரவு குறைந்தது 27 மாகாணங்களில் உள்ள பிரதிநிதிகள் தங்களின் ஒருமித்த ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்குவதாக அறிக்கை வெளியிட்டிருப்பதாக சிபிஎஸ் நியூஸ் கூறியுள்ளது. ஞாயிறு அன்று தேர்தலில் இருந்து பைடன் பின்வாங்கிய சூழலில், கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரித்து வருவதையே சுட்டிக்காட்டுக்கிறது இந்த கணக்கெடுப்பு. பைடனின் அறிவிப்பு வெளியான சூழலில், லட்சக்கணக்கான டாலர்கள் கமலா ஹாரிஸின் பரப்புரைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடன் ஆதரித்தாலும் கமலா ஹாரிஸ் முன் நிற்கும் 3 சவால்கள்22 ஜூலை 2024 அமெரிக்க அதிபராகும் முன்பே இந்தியாவை குறிவைக்கும் டிரம்ப் - என்ன பேசினார்?22 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிபர் ஜோ பைடன் கமலா ஹாரிஸுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார் தயாராகும் கமலா ஹாரிஸ் கமலா ஹாரிஸின் பரப்புரை தலைமையகம் டெலாவரில் உள்ள வில்மிங்டனில் அமைந்துள்ளது. திங்கள் கிழமை மாலை, "தேர்தலுக்கு இன்னும் 106 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் சில கடுமையான பணிகளை மேற்கொள்ள வேண்டும்," என்று கமலா ஹாரிஸ் பேசியதாக பரப்புரை அதிகாரிகள் கூறினார்கள். அமெரிக்கா குறித்த தன்னுடைய பார்வையை பரப்புரை குழுவிடம் விவரித்த கமலா ஹாரிஸ், அந்த பார்வை தான் அவருடைய பரப்புரையை டிரம்பின் பரப்புரையில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். "எங்களின் பரப்புரையில் இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து இருவேறு பார்வைகள் உள்ளன. ஒன்று எதிர்காலத்தை மையப்படுத்தி மற்றொன்று கடந்த காலத்தைப் பற்றி. டிரம்ப் நம் நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்ல பார்க்கிறார்... நாங்களோ அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஒளிமயமான எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்துள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளார். பைடனின் சாதனைகள் குறித்து பேசிய அவர், பைடனின் ஆட்சி காலத்தில் துணை அதிபராக செயல்பட்டது தன்னுடைய வாழ்வின் கவுரமான தருணங்களில் ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறார் கமலா ஹாரிஸ். தன்னுடைய உணர்வுகள் கலவையாக இருந்ததை தெரிவிக்கும் கமலா ஹாரிஸ், அதிபர் வேட்பாளருக்கான வாய்ப்பைப் பெறவும், ஜனநாயகக் கட்சியினரையும் அமெரிக்க தேசத்தையும் ஒன்றாக இணைக்கவும் கடினமாக உழைக்க இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கமலா ஹாரிஸ் சிறந்தவர் எனவே அவருக்கு ஆதரவு அளியுங்கள் என்று ஆதரவாளர்களை பைடன் கேட்டுக் கொண்டுள்ளார். பைடன் வேண்டுகோள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பைடன், தேர்தலில் இருந்து பின்வாங்கிய பிறகு அலைபேசி வாயிலாக தன்னுடைய முதல் கருத்தை வெளியிட்டிருந்தார். தன்னுடைய ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், கமலா ஹாரிஸ் சிறந்தவர் எனவே அவருக்கு ஆதரவு அளியுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். "நேற்று என்னுடைய அறிவிப்பானது உங்களுக்கு கடினமானதாகவும், ஆச்சரியம் அளிக்க கூடியதாகவும் இருந்திருக்கக் கூடும். ஆனால் அது தான் சரியான முடிவு," என்று அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து குறிப்பிட்டிருந்தார். "இரண்டாவது முறையாக என்னை அதிபராக்க நீங்கள் அனைவரும் உங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கினீர்கள். ஆனால் நான் எங்கும் செல்லவில்லை. இந்த பரப்புரை முழுவதும் உங்களுடன் தான் இருப்பேன்" என்றும் அவர் பரப்புரை குழுவினரிடம் பேசினார். என்னுடைய பரப்புரையில் நீங்கள் எப்படி முழுமனதாக செயல்பட்டீர்களோ அவ்வாறே கமலா ஹாரிஸின் பரப்புரையிலும் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 'இந்த ஜனநாயகத்தை நாம் காக்க வேண்டும். டிரம்ப் இந்த நாட்டிற்கு அபாயமானவர்' என்றும் பைடன் பரப்புரை குழுவினரிடம் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cn053kzqnzpo
  18. மத்திய பட்ஜெட்: தங்கம், வெள்ளி மீதான வரிக் குறைப்பால் யாருக்கு லாபம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 23 ஜூலை 2024, 14:04 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2024-25ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 15 சதவீதம் என்பதிலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான வரியை 6.4 சதவீதமாகவும் குறைத்து அவர் அறிவித்தார். இந்தியாவில் கடந்த சில வருடங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் பின்னணியில் ரஷ்யா-யுக்ரேன் போர், உலகளாவிய பண வீக்கம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு என பல காரணிகள் இருந்தாலும், இந்தியாவில் தங்கம் விலை கூடியதற்கு மத்திய அரசின் 15% இறக்குமதி வரியும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 2,080 குறைந்து 52,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 260 குறைந்து 6,550 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூபாய் 3,100 குறைந்து 92,500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 'நான்கு ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்' இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 800 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை பொதுமக்களும் நகைக்கடை உரிமையாளர்களும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து பேசிய தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி, "கடந்த நான்கு வருடங்களாகவே இந்த இறக்குமதி சுங்கவரியைக் குறைக்க நாங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தோம். இந்த வரி குறைப்பு அறிவிப்பால் நடுத்தர மக்கள் பயனடைவார்கள்" என்று கூறினார். பட மூலாதாரம்,SANSAD TV கடந்த வாரங்களில் சவரனுக்கு 55 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருந்த தங்கம் இப்போது 52,400 விற்பனையாவதை சுட்டிக்காட்டிய அவர், "இனிவரும் காலங்களில் சர்வேதச சந்தைகளில் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ, கிட்டத்தட்ட அதே விலைக்கு இந்தியாவிலும் தங்கம் கிடைக்கும்." என்றார். இந்த வரி குறைப்பால் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து தங்கத்தைக் கடத்துவது குறையும் என்றும் அவர் கூறினார். "கடந்த சில வருடங்களாகவே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் தங்கத்தைக் கடத்தி கொண்டுவருவது அதிகமாக நடைபெற்று வந்தது. அதிக சுங்கவரி தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இதனால் நியாயமாக தொழில் செய்து வந்த பல தங்க நகை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். அரசின் இந்த அறிவிப்பால், இனி அத்தகைய சட்டவிரோத தங்க பரிமாற்றங்கள் குறையும்" என்று கூறினார் ஜெயந்திலால் சலானி. கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆவாரா? அதிபர் பைடன் புதிய வேண்டுகோள்5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபராகும் முன்பே இந்தியாவை குறிவைக்கும் டிரம்ப் - என்ன பேசினார்?22 ஜூலை 2024 பட மூலாதாரம்,CHALLANIJAYANTILAL/INSTAGRAM படக்குறிப்பு,ஜெயந்திலால் சலானி, தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பொதுமக்கள் கூறுவது என்ன? மற்ற நாடுகளில் ஒரு முதலீடாகப் கருதப்படும் தங்கம், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஓர் சொத்தாகவும், அந்தஸ்தின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என சட்டம் கூறினாலும், திருமணங்களில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கவே செய்கிறது. மணப்பெண்ணுக்கு அவரவர் வசதிக்கு ஏற்ப தங்க ஆபரணங்களைச் சூடி அனுப்புவது தொடர் வழக்கமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் திருமணத்திற்கு மட்டுமின்றி சீர்வரிசையாகவும், மொய்யாகவும் தங்கம் பரிசளிக்கப்படுகிறது. அப்படியிருக்க இந்த வரி குறைப்பு குறித்து பொதுமக்கள் கூறுவது என்ன? "எனது மகளுக்கு செப்டம்பர் மாதம் திருமணம் நடக்கவுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை விறுவிறுவென ஏறிக் கொண்டிருக்கிறது. சவரன் 55,000 ரூபாயைக் கடந்த போது, மிகுந்த கவலையில் இருந்தோம். இப்போது மத்திய அரசும் வரி குறைப்பை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. நிச்சயம் இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி. பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்தியாவில் பணவீக்கமும் விலைவாசியும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. அப்படியிருக்க இது ஒருவகையில் நல்ல செய்தி தான். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு மொத்தமாக தங்கம் வாங்குபவர்களுக்கு இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்." என்கிறார் திருவள்ளூரைச் சேர்ந்த வித்யா ராமன். நாகர்கோவிலைச் சேர்ந்த அனிஷா ரஹ்மான் பிபிசியிடம் பேசுகையில், "எனது கணவர் வெளிநாட்டுக்குச் செல்ல என்னிடம் இருந்த நகைகளை அடகு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் அனுப்பும் பணத்தை சேமித்து வைத்து அதை மீட்டு விட்டேன். அடுத்து என் மகளுக்கு புதிதாக நகைகள் வாங்க வேண்டும் என பணம் சேமித்து வருகிறேன். இப்போது இந்த வரி குறைப்பால் சர்வதேச விலையிலேயே இந்தியாவிலும் நகை வாங்கலாம் என்று சொல்கிறார்கள், எனவே இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது" என்று கூறினார். குஜராத்: 88 வீடு, 700 பேர்- ஒரு கிராமமே மோசடியாக விற்கப்பட்டது எப்படி?6 மணி நேரங்களுக்கு முன்னர் "வரிக் குறைப்பால் அரசுக்கு லாபம்தான்" படக்குறிப்பு,வ. நாகப்பன், பொருளாதார நிபுணர் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி சுங்க வரியை குறைத்திருப்பதால் மத்திய அரசுக்கு என்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து பேசினார் பொருளாதார நிபுணர் வ. நாகப்பன். "இந்தியாவில் தங்கத்திற்கான தேவை என்பது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். நீண்ட காலமாகவே தங்கத்தை ஒரு பாதுகாப்பான சேமிப்பு முறையாக மக்கள் பார்க்கிறார்கள். சிறுகச் சிறுக வாங்கலாம், அதே சமயத்தில் பங்குச் சந்தைகள் போல அதிக அபாயமும் இல்லை என்பதால்." "அப்படியிருக்க கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறியதால் மக்களிடையே ஒரு அச்சம் நிலவியது. மறுபுறம், அதிக சுங்க வரி காரணமாக தங்கக் கடத்தலும் அதிகரித்தது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த வரி குறைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது" என்று கூறினார். தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு 10 சதவீதமாக இருந்த அடிப்படை சுங்க வரியை 5 சதவீதமாகவும், ஏஐடிசி (AIDC) எனப்படும் வரி 5 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு, மொத்தமாக 6 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விளக்கிய வ. நாகப்பன், அதே சமயத்தில் இதனால் அரசுக்கு நஷ்டமும் இருக்காது என்கிறார். "15% என்பதிலிருந்து 6% என்பது கேட்க பெரிய வித்தியாசம் போல தெரியலாம், உண்மை என்னவென்றால் அதிகரித்து வரும் தங்கக் கடத்தல்களால் அரசுக்கு பெரும் வரியிழப்பு ஏற்படுகிறது. அதைச் சரிசெய்ய தான் இந்த அறிவிப்பு. இதனால் தங்கத்தைக் கடத்துவது குறையும், தங்கம் விலையும் குறையும், மக்களும் ஆர்வமாக வாங்குவார்கள், அரசுக்கும் போதுமான வரி கிடைக்கும்." என்று கூறுகிறார் பொருளாதார விமர்சகர் வ. நாகப்பன். https://www.bbc.com/tamil/articles/cw8yxl0yyqeo
  19. 23 JUL, 2024 | 03:09 PM (நா.தனுஜா) சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் தேர்தலின் பின்னர் தாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான மீள்பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றியமைக்கப்போவதாக கூறுகின்றன. ஆட்சிபீடம் ஏறும் அரசாங்கம் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முற்படுகையில், முன்னைய அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மாற்றியமைக்கக்கூடும். தேர்தலின் பின்னர் தமக்கான நிவாரணங்கள் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் உயர்வாகக் காணப்படும். இருப்பினும் நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அடுத்து இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. அதனைத்தொடர்ந்து பேணுவதற்கும், மேம்படுத்துவதற்கும் தற்போதைய மறுசீரமைப்புக்களைத் தொடர்வது அவசியமாகும் என உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளர் கிரெகரி ஸ்மித் வலியுறுத்தியுள்ளார். தேசிய தேர்தல்கள் நடைபெறவுள்ள பின்னணியில் நாட்டின் பொருளாதார நிலைவரம் குறித்து விளக்கம் வகையில் யூடியூப் தளமொன்றின் கலந்துரையாடலில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது: இதற்கு முன்னர் இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கின்றது. இருப்பினும் 2009 ஆம் ஆண்டின் பின்னரான பொருளாதார நெருக்கடி மற்றும் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகியவையே சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட இரண்டு மிகமோசமான சந்தர்ப்பங்களாகும். சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது மிகக்கடினமான செயன்முறையாகும். நெருக்கடிகளின்போது நாணய நிதியம் உதவ முன்வந்தாலும், அதற்கு ஈடாக மிகக்கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும். எது எவ்வாறிருப்பினும் இலங்கை கடந்தகால நெருக்கடியிலிருந்து தற்போது படிப்படியாக மீட்சியடைய ஆரம்பித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 6 சதவீத பொருளாதார வளர்ச்சி உள்ளடங்கலாக மிகச்சிறந்த நேர்மறை குறிகாட்டிகளையே காண்பித்தது. இருப்பினும் 2018 ஆம் ஆண்டளவில் அதற்கு முன்னர் பெற்ற அதிகளவிலான கடன்கள் சுமையாக மாறத்தொடங்கிவிட்டது. இப்பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் - 19 பெருந்தொற்றுப்பரவல் மற்றும் அதன்விளைவாக சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏற்பட்ட வருமான இழப்பு என்பன தூண்டுதலாக அமைந்திருந்தாலும், நீண்டகாலமாக மறுசீரமைப்பு செயன்முறைகளில் நிலவிய பின்னடைவு, பெருமளவிலான வரிக்குறைப்பு, ஏற்றுமதிகள் மீதான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடு, வெளிநாட்டு முதலீடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பன இந்நெருக்கடி தோற்றம் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்தன. இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டில் பல்வேறு துறைகளிலும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதில் அரசாங்கம் சிறப்பாக செயற்பட்டுவருகின்றது. இருப்பினும் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்ப்பதற்கு அம்முதலீட்டாளர்களைக் கவரக்கூடிய பொருத்தமான தெரிவுகள் மற்றும் சலுகைகளை வழங்கவேண்டும். அதேவேளை கடந்த சில மாத அவதானிப்புக்களின் பிரகாரம் இலங்கை உரியவாறான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து, சரியான பாதையில் பயணிக்கின்றது. குறிப்பாக நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதற்குத் தேவையான மறுசீரமைப்புக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவசியமான சட்டங்கள் உருவாக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இருப்பினும் இம்மறுசீரமைப்புக்களையும், சட்டங்களையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதே கடினமானதாகும். இருப்பினும் அவற்றை உரியவாறு அமுல்படுத்துவதன் ஊடாக நிலையான நேர்மறை மாற்றத்தை அடைந்துகொள்ளமுடியும். மேலும் சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் தேர்தலின் பின்னர் தாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான மீள்பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றியமைக்கப்போவதாக கூறுகின்றன. ஆட்சிபீடம் ஏறும் அரசாங்கம் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முற்படுகையில், முன்னைய அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மாற்றியமைக்கக்கூடும். தேர்தலின் பின்னர் தமக்கான நிவாரணங்கள் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் உயர்வாகக் காணப்படும். இருப்பினும் நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அடுத்து இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. அதனைத்தொடர்ந்து பேணுவதற்கும், மேம்படுத்துவதற்கும் தற்போதைய மறுசீரமைப்புக்களைத் தொடர்வது அவசியமாகும் என்றார். https://www.virakesari.lk/article/189175
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவில் சாண்ட்ரா (சாண்டி) ஹெம்மி செய்யாத கொலைக் குற்றத்திற்காக 43 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், டாம் மெக்ஆர்தர் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் செய்யாத கொலைக்காக 43 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த பெண் ஒருவரின் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. நவம்பர் 1980இல், அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் செயின்ட் ஜோசப் பகுதியை சேர்ந்த நூலகப் பணியாளர் பாட்ரிசியா ஜெஷ்கேவைக் கத்தியால் குத்திய வழக்கில் சாண்ட்ரா ஹெம்மி என்ற 20 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு மனநல மருத்துவமனையில் கடுமையான மயக்க மருந்தின் வீரியத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். மயக்கத்தில் இருந்த அவர் அந்த சமயத்தில் அளித்த வாக்குமூலத்தைத் தவிர, இந்த கொலை குற்றத்தில் அவரைத் தொடர்புப் படுத்தும் எந்த ஆதாரமும் இல்லை. இது அவரது வழக்கின் மறு ஆய்வில் கண்டறியப்பட்டது. இப்போது சாண்ட்ராவுக்கு 64 வயதாகிறது. அவருக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் மேற்கொள்ளும் பிரதிநிதிகளின் கூற்றுபடி, அமெரிக்க வரலாற்றில் செய்யாத குற்றத்துக்காக நீண்ட காலம் தண்டனை அனுபவித்த ஒரே பெண் இவராக தான் இருப்பார் என்கின்றனர். இன்னசென்ஸ் ப்ராஜெக்ட் (Innocence Project) அமைப்பில் உள்ள அவரது சட்டக் குழு, "ஹெம்மி இறுதியாக அவரது குடும்பத்துடன் இணைந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த வழக்கில் இருந்து அவரது பெயரை முழுமையாக நீக்க தொடர்ந்து போராடுவோம்" என்று கூறினர். அவர் தற்போது சிறையிலிருந்து விடுதலை ஆகிவிட்டார் என்றாலும், அவரது வழக்கு இன்னும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. சர்க்யூட் கோர்ட் நீதிபதி ரேயான் ஹார்ஸ்மேன் ஜூன் 14 அன்று வெளியிட்ட 118 பக்க தீர்ப்பில், ஹெம்மியின் தண்டனை ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். அவர் குற்றமற்றவர் என்பதற்கான தெளிவான ஆதாரம் ஹெம்மியின் வக்கீல்களிடம் இருப்பதாக தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. "ஒட்டுமொத்த சாட்சியங்களும் ஹென்னி உண்மையில் குற்றமற்றவர் என்பதை ஆதரிப்பதாக இந்த நீதிமன்றம் நம்புகிறது" என்று கூறி, நீதிபதி ஹார்ஸ்மேன் தீர்ப்பை வாசித்து முடித்தார். உண்மையில் கொலை செய்தது யார்? ஹென்னி குற்றம்சாட்டப்பட்ட கொலை வழக்கில் ஒரு போலீஸ் அதிகாரிக்கு நேரடி தொடர்பிருப்பதை, அப்போதைய அதிகாரிகள் புறக்கணித்ததாக சமீபத்திய விசாரணை கண்டறிந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அதிகாரி, தன்னுடன் பணியாற்றிய மைக்கேல் ஹோல்மன் என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பிருப்பதை சுட்டிக்காட்டும் ஆதாரங்களை புறக்கணித்துள்ளார். ஹோல்மன் தற்போது உயிருடன் இல்லை. மற்றொரு குற்றத்திற்காக சிறைக்குச் சென்ற ஹோல்மன், 2015இல் இறந்துவிட்டார். அவருக்கு எதிரான ஆதாரங்களை உள்ளூர் போலீசார் புறக்கணித்ததாக சமீபத்திய மதிப்பாய்வு கண்டறிந்துள்ளது. கொலை நடந்த அன்று, ஹோல்மனுக்கு சொந்தமான டிரக் அப்பகுதியில் காணப்பட்டது. ஆனால் அவருக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் கொலை செய்யப்பட்ட பாட்ரிசியா ஜெஷ்கேவின் கிரெடிட் கார்டை ஹோல்மன் பயன்படுத்தினார், பின்னர் அதை ஒரு பள்ளத்தில் இருந்து எடுத்ததாக சமாளித்துவிட்டார். ஜெஷ்கேயின் தந்தையால் அடையாளம் காணப்பட்ட ஒரு ஜோடி தனித்துவமான தங்க காதணியும் ஹோல்மன் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. அது கொல்லப்பட்ட பாட்ரிசியாவின் காதணி என்பதை அவரின் தந்தை உறுதிபடக் கூறினார். ஹோல்மன் பற்றிய இந்த தகவல்கள் எதுவும் அந்த நேரத்தில் ஹெம்மியின் வழக்கறிஞர் குழுவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதை விசாரணை மதிப்பாய்வு வெளிப்படுத்தியது. யோகி ஆதித்யநாத் மீது பா.ஜ.க-வில் அதிருப்தி ஏன்? என்ன நடக்கிறது உத்தரப் பிரதேசத்தில்?21 ஜூலை 2024 பட மூலாதாரம்,INNOCENCE PROJECT படக்குறிப்பு,சாண்ட்ரா ஹெம்மி (இடது) 43 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். குடும்பத்துடன் ஒன்றிணைந்த ஹெம்மி விசாரணையின் போது, ஹெம்மி ஒரு மனநல மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அனுமதிக்கப்பட்ட பின்னர், அவருக்கு ஆன்டிசைகோடிக் மருந்து மற்றும் சக்தி வாய்ந்த மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டன. அந்த மருந்துகளின் வீரியத்தால் மயக்க நிலையில் இருந்த ஹெம்மியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பதிவு செய்தனர். ஹெம்மி 12 வயதிலிருந்தே அவ்வப்போது மனநல சிகிச்சை பெற்று வந்தார். விசாரணையின் போது, அவரது பதில்கள் ஒற்றை வார்த்தைகளாக தான் இருந்தன. மேலும் "என்ன நடக்கிறது என்பதை அவர் முழுமையாக அறியவில்லை" என்று நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன. சில சமயங்களில் அவரால் தன் தலையை நிமிர்த்தி நேராக கூட பார்க்க முடியவில்லை. மருந்துகளின் பக்க விளைவால் தசைப்பிடிப்பு வலியும் இருந்தது. நீதிபதி ஹார்ஸ்மேனின் மதிப்பாய்வு, தடயவியல் ஆதாரங்கள் ஹெம்மிக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தமில்லை என்று குறிப்பிட்டது. அவருக்கு இந்த கொலை செய்ய எந்த நோக்கமும் இல்லை, அவர் இந்த கொலையை செய்ததற்கான எந்த சாட்சிகளும் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. சாண்ட்ரா ஹெம்மி இறுதியாக வெள்ளிக்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் தனது சகோதரியுடன் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவார் என்று கன்சாஸ் சிட்டி ஸ்டார் ஊடகம் தெரிவித்துள்ளது. ஹெம்மி விடுதலை ஆன பிறகு, அருகிலுள்ள பூங்காவில் தன் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார். அங்கு அவர் தனது சகோதரி, மகள் மற்றும் பேத்தியைக் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார். அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். ஹெம்மி விரைவில் தன் தந்தையை சந்திப்பார் என்று அவரின் சட்டக்குழு கூறியது. ஹெம்மியின் வழக்கறிஞர் சீன் ஓ பிரையன் ஸ்டார் ஊடகத்திடம் பேசுகையில், "ஹெம்மி தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்திருக்கிறார். அவருக்கு சமூகப் பாதுகாப்பு தேவை. அவருக்கு மேலும் பல உதவி தேவைப்படும்" என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/c87r1yj5j4mo
  21. இலங்கை தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. போலந்துக்கு விஜயம் செய்த பின்னர் தனது “எக்ஸ்” தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார். இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா வசதிகளை தளர்த்துவது குறித்தும் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தனது கோரிக்கைகள் தொடர்பில் போலந்து வெளிவிவகார அமைச்சரின் பதில்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/306662
  22. 23 JUL, 2024 | 09:10 PM (எம்.மனோசித்ரா) வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்த நபர்களுக்கு சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியில் அனைத்து பிரிவுகளும் நேரடியாக அல்லது மறைமுகமாக பாதகமான தாக்கத்துக்கு உள்ளானார்கள். அதன் விளைவாக தங்க நகைகளை அடகு வைத்தல் வேகமாக அதிகரித்துள்ளது. 2019 ஆண்டில் 210 பில்லியன் ரூபா அளவிலிருந்த அடகு முற்பண நிலுவைத் தொகை 2024 ஆண்டு மார்ச் மாதமளவில் 571 பில்லியன் வரை அதிகரித்து 172 வீத அதிகரிப்பை காட்டியுள்ளது. குறித்த நிலையை கருத்திற் கொண்டு உரிமம் பெற்ற வங்கிகள் மூலம் அடகு முற்பணம் பெற்றுள்ள குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, வாடிக்கையாளர்கள் தனிநபர் அடிப்படையில் 2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற முற்பணத்துக்கு வருடாந்தம் 10 வீதம் உச்ச எல்லைக்கு உட்பட்ட சலுகை வட்டியை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/189205
  23. நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொதுமக்களின் அமைதியை பேணும் நோக்கில், முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது. அதற்கமைய இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் சகல உறுப்பினர்களும் நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். நேற்று(22) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/306679
  24. ராமநாதபுரத்தில் செல்போனால் பறிபோன உயிர் - செல்போன் திடீரென வெடிப்பது ஏன்? படக்குறிப்பு,உயிரிழந்த ரஜினியும், அவர் பயன்படுத்திய செல்போனும் கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 23 ஜூலை 2024, 09:43 GMT புதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (36). இவர் தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்தார். பரமக்குடியைச் சேர்ந்த இவரது நண்பரான பாண்டியை அழைத்துக் கொண்டு கடந்த ஜூலை 21-ஆம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு புத்தாடைகள் வாங்க சென்றுள்ளார். அன்று பிற்பகல் ஆடைகளை வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். செல்போன் வெடித்து பறிபோன உயிர் ''மதுரையில் இருந்து பரமக்குடியை நோக்கி, கமுதக்குடி அருகே சென்று கொண்டு இருந்தபோது, ரஜினி பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்தது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரஜினியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்'' என பரமக்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வண்டியில் அவர் பின்னால் அமர்ந்து பயணித்து வந்த பாண்டியின் தலையில் காயம் ஏற்பட்டது. பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,இந்த விபத்தில் உயிரிழந்த ரஜினி வாங்கிய 10 மாதங்களில் வெடித்த செல்போன் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ரஜினியின் சகோதரர் பி. பாலா,"எனது அண்ணன் 10 மாதங்களுக்கு முன்பாக 9,500 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கினார். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது செல்போன் வெடித்த அதிர்ச்சியில், சாலை தடுப்பில் மோதி உயிரிழந்தார். செல்போன் எப்படி வெடித்தது என்று தெரியவில்லை," என்று கூறினார். சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த முதியவர் ப்ளுடூத் ஹெட்போன் அணிந்து பாட்டு கேட்ட போது, ஹெட்போன் வெடித்ததில் அவர் காதில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் கால்சட்டை பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கான காரணம் குறித்து வல்லுநர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,ரஜினி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் செல்போன் வெடிக்கும் முன்பே அதனை கண்டறிய முடியுமா? இது போன்ற நிகழ்வுகள் ஏன் நடக்கிறது என்ற கேள்வியை அண்ணா பல்கலைகழகத்தின் மின்னணு மற்றும் கருவியல் துறையின் பேராசிரியர் ஜீ .சக்திவேலிடம் கேட்டது பிபிசி தமிழ். “சில நேரங்களில் பேட்டரிகள் அதிக வெப்பத்தால் வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன அல்லது செல்போன் கீழே விழுந்து பழுது ஏற்பட்டு, வெப்பமடைந்து வெடிக்க வாய்ப்புகள் உள்ளன. பேட்டரியில் உள்ள வேதிப்பொருட்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு ஏற்பட்டாலும் செல்போன்கள் வெடிக்க வாய்ப்புகள் உள்ளன," என்று சக்திவேல் குறிப்பிடுகிறார். செல்போன்களில் பெரும்பாலும் லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகிறது. நீண்ட நேரம் வெப்பமான சூழலில் இருக்கும் போது அவை வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். படக்குறிப்பு,சக்திவேல், பேராசிரியர், அண்ணா பல்கலைக் கழகம் எந்தெந்த காரணங்களால் செல்போன்கள் வெடிக்கின்றன? செல்போன் வெடிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக தெரிவிக்கிறார் பேராசிரியர் ஜி. சக்திவேல். அளவுக்கு அதிகமான பயன்பாடு, நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துதல், செயல்திறன் குறைவு போன்றவை காரணமாகவும் செல்போன்கள் வெடிப்பதாக அவர் பட்டியலிடுகிறார். செல்போன் பேட்டரியில் உள்ள வேதிப்பொருட்கள் நாளடைவில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்பட்டு, பேட்டரிகள் வீங்கி வெடிக்க வாய்ப்புகள் உள்ளன. செல்போன்களை இரவு முழுவதும் சார்ஜ் போடுவதன் மூலமாக பேட்டரியின் செயல் திறன் குறைந்து வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. செல்போன்களில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடுவதால் அதிக வெப்பமடையும். இதன் காரணமாக ப்ராசசரில் (processor) அதிக வெப்பம் உருவாகி வெடிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. செல்போன்களை அதிக வெப்ப நிலையில் பயன்படுத்துவதன் வழியாக பேட்டரிகள் வெப்பநிலை அதிகரித்து வெடிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார் அவர். தமிழ்நாட்டில் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல் அதிகரிக்கிறதா? புள்ளிவிவரம் சொல்வது என்ன?18 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செல்போன்களை இரவு முழுவதும் சார்ஜ் போடுவதன் மூலமாக பேட்டரியின் செயல் திறன் குறைந்து வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. செல்போன் பேட்டரி திறன் குறைந்ததை கண்டறிவது எப்படி? செல்போன் பேட்டரி முழுவதும் சார்ஜ் செய்தாலும் குறுகிய நேரத்திற்குள் பேட்டரி உடனடியாக குறைவது ஒரு முக்கியமான அறிகுறியாகும் என்கிறார் சக்திவேல். செல்போனை சில நிமிடங்கள் பயன்படுத்தியதும் அதிலிருந்து அதீத அளவில் வெப்பம் வெளியேறுகிறதா என்பதை கவனிக்க வேண்டும் என்று எச்சரிக்கும் அவர், செல்போன் பேட்டரி அமைந்திருக்கக் கூடிய பகுதி வீங்கி (bulge) வெளியே தெரியும் பட்சத்தில் அந்த செல்போன் உபயோகத்தை மறுபரிசீலனை செய்யுமாறு எச்சரிக்கிறார். செல்போன் கீழே விழுந்த பின் பேட்டரி செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுவதன் வழியாகவும் பேட்டரி திறன் குறைந்து வருகிறது என்பதை அறியமுடியும் என்கிறார் அவர். உங்கள் குளிர்சாதன பெட்டியை சரிவர நிர்வகிப்பது எப்படி? ஜப்பான் தரும் தீர்வு3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செல்போன்களுக்கு அந்தந்த கம்பெனியின் சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும். செல்போன் வெடிப்பதை தடுப்பது எப்படி? ''செல்போன்களை இரவு முழுவதும் சார்ஜரில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இது பேட்டரியின் சக்தியை சிறிது சிறிதாக குறைக்கும். சூப்பர்சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யப்படும் செல்போன்களை ஒரு மணி நேரம் மட்டும் சார்ஜ் செய்தால் போதுமானது'' ''குறைந்த விலையில் கிடைக்கும் சார்ஜர்களை பயன்படுத்துவதை தவிர்த்து அந்த குறிப்பிட்ட கம்பெனியின் சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும்.'' என சக்திவேல் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cjjw86440gpo
  25. 23 JUL, 2024 | 04:35 PM வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று செவ்வாய்க்கிழமை (23) முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கலைத்தூது மண்டபத்திற்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஆனாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் நாட்களில் சுழற்சி முறையில் முன்னெடுக்கவுள்ளதாக உறவுகள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/189194

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.