Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கிளிநொச்சியில் கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41 ஆவது நினைவேந்தல் 23 JUL, 2024 | 03:32 PM (எம்.நியூட்டன்) கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தல், இலங்கைத் தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் மாவட்டப் பணிமனை அறிவகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, எழுத்தாளரும் ஆசிரியருமான தீபச்செல்வன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர். கட்சியின் உறுப்பினர்கள் பலரது பங்கேற்புடன் நடைபெற்ற இந் நினைவேந்தலின் போது, அண்மையில் மறைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவரும், ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளுள் ஒருவருமான தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (பனாகொட மகேஸ்வரன்) அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/189184
  2. வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தார் கஜேந்திரன் எம்பி 23 JUL, 2024 | 03:14 PM தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டுள்ளார் இது தொடர்பில் அவர் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளதாவது வெலிக்கடைச்சிறை படுகொலையின் 41 வருடம். இன்று மகசீன் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகள் சிலரைச் சந்தித்தோம். 15 - 29 வருடங்களாக சிறையில் அணுவணுவாகச் செத்துக்கொண்டிருக்கிறார்கள். 11 கைதிகளதும் விடுதலைக்காக தமிழ் மக்கள் தீவிரமாக குரல் கொடுக்க வேண்டும். https://www.virakesari.lk/article/189181
  3. 1000 ரூபாவை எட்டிய பச்சை மிளகாய் , எலுமிச்சை விலை! ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது. ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை ஏறக்குறைய ஆயிரம் ரூபாயை விட அதிகம் என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக சற்றே குறைந்திருந்த மரக்கறிகள் விலைகள் மீண்டும் வெகுவாக உயர்ந்துள்ளன. காய்கறிகளின் சில்லறை விலைகள் வருமாறு! ஒரு கிலோ கறி மிளகாயின் சில்லறை விலை 900 ரூபாவாகும் ஒரு கிலோ போஞ்சி ரூ.800 இற்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் சில்லறை விலை 560 ரூபாவாகும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் சில்லறை விலை 300 ரூபாவாகும் மேலும் ஒரு கிலோ முருங்கைக் காய் 800 முதல் 1000 ரூபாய் வரை உள்ளது. ஒரு கிலோ பீட்ரூட் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெண்டைக்காயின் விலை ரூ.600 ஆகவும் ஒரு கிலோ தக்காளி விலை 600 ரூபாய் ஆகவும் ஒரு கிலோ கேரட்டின் விலை ரூ.480 முதல் ரூ.500 வரையும் உள்ளது ஒரு கிலோ கோவா ரூ.500 இற்கும் ஒரு கிலோ பாகற்காய் சில்லறை 450 ரூபாவுக்கும் ஒரு கிலோ புடலங்காய் ரூ.400 இற்கும் விற்கப்படும் அதேவேளை ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 3600 ரூபாவாக உள்ளது. https://thinakkural.lk/article/306659
  4. Published By: RAJEEBAN 23 JUL, 2024 | 02:27 PM அரகலய நாட்களின் போது கோட்டாபய ராஜபக்ச மாலைதீவிற்கு தப்பிச்செல்வதற்கு இலங்கை விமானப்படையின் விமானமும் நிதியும் பயன்படுத்தப்பட்டமை தகவல்அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 2022 ஜூலை13ம் திகதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை விமானப்படை விமானம் மூலமே மாலைதீவிற்கு தப்பிச்சென்றுள்ளார். அரகலய போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களும் பொதுமக்களும் ஜனாதிபதி மாளிகையை 2022 ஜூலை 9ம் திகதி ஆக்கிரமித்ததை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் கோட்டாபய மாலைதீவிற்கு தப்பிச்சென்றார். இலங்கை விமானப்படையின் விமானத்தை பயன்படுத்தியே அவர் மாலைதீவிற்கு சென்றார், திறைசேரி பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட நிதி இதற்கு பயன்படுத்தப்பட்டது என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. எனினும் இதற்கான செலவு குறித்து விமானப்படை எந்த தகவலையும் வழங்கவில்லை. ஜனாதிபதியே நாட்டின் தலைவர் முப்படைகளின் தலைவர் என்பதால் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள ஏற்பாட்டின் படி ஜனாதிபதியின் போக்குவரத்திற்கான எரிபொருள் பயன்பாட்டை நாங்கள் கணக்கிடவில்லை என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. நாட்டின் தலைவர் மிக முக்கிய பிரமுகர் என்பதற்குள் அடங்குவதால் ஜனாதிபதியின் போக்குவரத்திற்கான எரிபொருள் பயன்பாட்டை நாங்கள் கணக்கிடவில்லை என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. எனினும் இந்த விவகாரத்தின் இரகசிய தன்மை காரணமாக அனுமதி வழங்கப்பட்டமைக்கான ஆவணத்தை இலங்கை விமானப்படை பகிர்ந்துகொள்ள மறுத்துள்ளது. https://www.virakesari.lk/article/189169
  5. 23 JUL, 2024 | 01:44 PM ஒரு நாட்டின் குடிமக்களின் மனித வள மூலதன வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய சிறந்த திட்டம் கிராமத்திலும் நகரத்திலும் அமைந்து காணப்படும் பாடசாலைகளை வலுப்படுத்துவதாகும். பிள்ளைகளுக்கு தரமான தரத்திலான சர்வதேச கல்வியை வழங்குவதன் மூலம் ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஸ்மார்ட் குடிமக்களைக் கொண்ட ஒரு நாட்டில், மனித மூலதனத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டு பணியாளர்கள் எமது நாட்டிற்காக பெரும் தியாகங்களைச் செய்து, அந்நியசெலாவணியை ஈட்டித் தருகின்றனர். Health care given எனும் தொழிற்துறையின் கீழ் கூடிய வருமானம் சம்பளம் ஈட்டலாம். என்றபடியால், இதன் ஆரம்ப கட்டமாக, அரச-தனியார் கூட்டாண்மைத் திட்டங்களின் ஊடாக நிபுணத்துவம் வாய்ந்த தாதியர்களாக மாற்றும் நடவடிக்கையின் நிமித்தம் 9 மாகாணங்களிலும் சர்வதேச தரத்திலான 9 தாதியர் பயிற்சி நிலையங்களை நிறுவுவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ், திறன் மற்றும் தகுதியை மையமாகக் கொண்ட இலக்கு வைக்கப்பட்ட இத்துறைசார் ஏராளமான வேலைகள் எமது நாடு பெறும் வாய்ப்பு காணப்படுகிறது. பிலிப்பைன்ஸில் இந்தப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதால், நாமும் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 361 ஆவது கட்டமாக 11,77,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கம்பஹா, ஜா-எல, நாகொட புனித ஜோன் பெப்டிஸ்ட் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 22 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. அவ்வாறே, பிரதேச செயலக மட்டத்தில் இளைஞர் அபிவிருத்தி நிலையங்கள் தாபிக்கப்படும். ஒவ்வொரு மாகாணத்திலும் சர்வதேச தாதியர் பயிற்சி நிலையங்கள் நிறுவப்படுவது போல், இந்தியாவில் காணப்படுவது போலான IIT, IIM நிறுவனங்கள் நிறுவப்பட்டு முக்கியமான மனித மூலதனம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் அறிவால் ஆயுதம் ஏந்திய தலைமுறையை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/189155
  6. பாராளுமன்றத்தில் வைத்தியர் அர்ச்சுனா Published By: DIGITAL DESK 3 23 JUL, 2024 | 03:01 PM யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனா இராமநாதன் இன்று செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்றுக்கு சென்றுள்ளார். பாராளுமன்றத்தில் வைத்தியர் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடியதோடு, புகைப்படங்கங்களையும் எடுத்துள்ளார். இது தொடர்பாக வைத்தியர் வைத்தியர் அர்ச்சுனா உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்து வெகு நாட்களாகிறது. இந்தப் பெரும் சுமையை எனது சின்ன கைகளில் சுமத்தி அழகு பார்க்கும் எனது இனிய தமிழ் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்களுடைய இந்த நம்பிக்கையை இந்த கணத்தில் நான் பிழையான வழியில் அவமதிப்பேன் என்றால் எனது வீரம் செறிந்த தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகி நானாகத்தான் இருப்பேன். இந்த உன்னதமான பணியை எனக்குத் தந்த எனதருமை தமிழ் சொந்தங்கள் இந்த வீர போராட்டத்திலே தங்களையே ஆகுதியாக்கி கொண்ட அண்ணாமார்கள், அக்காமார்கள், தம்பிகள், தங்கைகள் அனைவருக்கும் என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு நன்றி கடன் இது மட்டுமே. எப்போதுமே உங்கள் நம்பிக்கை புதல்வனாக இருந்து மரணிப்பேன் என்று சொல்லிக் கொண்டு இனிவரும் காலங்கள் எமக்கு மிக முக்கியமான காலமாக இருக்கும் என்பதை நான் அறிவேன் என்பதையும் சொல்லிக் கொண்டு எனக்கான மக்களின் போராட்டத்தில் இன்றிலிருந்து நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன் என்பதை சொல்லி இந்தப் பதிவை நான் பதிவிடுகிறேன். நாங்கள் மீண்டும் சந்திப்போம் எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189174
  7. இந்நாட்டு சனத்தொகையில் 20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை என தெரியவந்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் உள்ள 16.1% வீதமான மக்களுக்கான குடிநீரின் பிரதான ஆதாரம் பாதுகாப்பற்ற கிணறுதான் என்பதும் தெரியவந்துள்ளது. இலங்கை மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொடர்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, உள்நாட்டு சனத்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வளாகங்களில் பாதுகாப்பான குடிநீர் சேவையைப் பெற முடியும் என தெரியவந்துள்ளது. நகர்ப்புற மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களும், கிராமப்புற மக்களில் நான்கில் ஒரு பகுதியினரும் பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதாகவும், தோட்டப்புற மக்களில் 3.1% மட்டுமே பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மேலும், இந்நாட்டு மக்களில் 70% க்கும் அதிகமானோர் தங்கள் வளாகங்களில் மேம்படுத்தப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தி குடிநீரைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கையின் சனத்தொகையில் 6.3% அடிப்படை சுகாதார சேவைகளைப் பயன்படுத்துவதில்லை என்றும் 0.1% வீதமான மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதாகவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இலங்கையில் 84.9 வீதமான குடும்ப மக்கள் மூடிய கழிவறைகளைப் பயன்படுத்துவதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது. https://thinakkural.lk/article/306642
  8. பெண்களை துஸ்பிரயோகம் செய்தவர்கள் மோசடிக்காரர்கள் என அனைவரையும் எனது சட்டத்துறை வாழ்க்கையில் எதிர்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளேன் - டிரம்பிற்கு கமலா ஹரிஸ் மறைமுக செய்தி Published By: RAJEEBAN 23 JUL, 2024 | 12:02 PM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் குற்றவியல் வழக்கறிஞராக அவரது கடந்த கால செயற்பாடுகளை நினைவுபடுத்தியுள்ளதுடன் டிரம்ப் எதிர்கொண்டுள்ள நீதிமன்ற வழக்குகளையும் நினைவுபடுத்தியுள்ளார். ஜோபைடன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து வெளியேறிய பின்னர் ஆற்றியுள்ள முதலாவது உரையில் கமலா ஹரிஸ் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஏற்ற விதத்தில் ஜனநாயக கட்சியினரின் பரந்துபட்ட ஆதரவு தனக்கு கிடைத்துள்ளமை குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். குற்றவியல் வழக்கறிஞராக தனது கடந்த காலத்தையை நடவடிக்கைகளை டிரம்பிற்கு எதிராக பயன்படுத்த தயார் என அவர் தெரிவித்துள்ளார். தனது பிரச்சார உத்தி வழக்கறிஞர் எதிர் குற்றவாளி என்ற அடிப்படையில் காணப்படலாம் என்பதை அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார். நான் எல்லாவகையான குற்றவாளிகளையும் எதிர்கொண்டேன். அவர்களிற்கு எதிராக செயற்பட்டேன்- பெண்களிற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள், பெண்களை துஸ்பிரயோகம் செய்தவர்கள், நுகர்வோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மோசடிக்காரர்கள், தங்கள் நன்மைகளிற்காக விதிமுறைகளை மீறிய ஏமாற்றுக்காரர்கள் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். டிரம்பிற்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகள் காணப்படுவதையே அவர் நினைவுபடுத்தியுள்ளார். டொனால்ட் டிரம்ப் போன்றவர்களை எனக்கு தெரியும் அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது எனக்கு தெரியும் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189151
  9. நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய துவங்கினார்- முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 23 ஜூலை 2024, 01:55 GMT புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய துவங்கினார். 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, ஜூன் மாதத் துவக்கத்தில் ஆட்சி அமைத்த நரேந்திர மோதி அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தின் முதல் பட்ஜெட் இது. நிர்மலா சீதாராமன் கடந்த 2019-ஆம் ஆண்டு நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய துவங்கியுள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2024-25ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 முதல் 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டிருந்தது. `வேலையில்லா திண்டாட்டம்’ என்பது மத்திய அரசின் முன்னுள்ள மிகப்பெரிய சவால். இந்திய இளைஞர்களுக்குப் போதுமான வேலைகள் இல்லாத சூழல் நிலவுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு என்பதை முன்னிறுத்தியே காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. இந்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையும் கூட, மக்கள் தொகை வளர்ச்சி, அதிகரிக்கும் தேவைகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பொருளாதாரம் 78.51 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த சவாலை சமாளிப்பதற்கு பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இடம் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES வரி குறைப்பு இருக்குமா? நாட்டின் ஒட்டுமொத்த சில்லறை பணவீக்க விகிதம் கடந்த ஜூன் மாதத்தில் 5.1% ஆக இருந்தது. இந்த பணவீக்கத்தை குறைக்கவும், மக்களின் கைகளில் பணத்தை அதிக அளவில் புழங்கச் செய்யவும் வரிக்குறைப்பு அவசியமான ஒன்று என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி குறைக்கப்படலாம் என்று எதிர்பார்ககப்படுகிறது. ஏனெனில், பெட்ரோல் விலையில் மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் ஆகியவை ஐந்தில் ஒரு பங்கு ஆகும். டீசல் விலையிலோ அது 18 சதவீதமாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் மாற்றம் பெறாத வருமான வரி உச்சவரம்பில் தளர்வு இருக்கலாம். இது குறைவான வருமான வரியை செலுத்த மக்களுக்கு உதவுவதுடன், மக்களை அதிக செலவு செய்ய ஊக்குவிக்கும். தனியார் முதலீடு ஊக்குவிப்பு இந்தியா தரமான உள் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றால் பெரும் அளவில் தனியார் துறை முதலீடு தேவைப்படும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம். பட மூலாதாரம்,SANSAD TV தமிழ்நாடு முதல்வர் கேட்டது கிடைக்குமா? தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 கோரிக்கைகளை பட்டியலிட்டு, அவற்றை மத்திய பட்ஜெட்டில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திட போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்த வேண்டும் வருமான வரிச் சுமையை குறைக்க வேண்டும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் பத்தாண்டுகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அவர் தனது எக்ஸ் தள பதிவில் முன்வைத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யப் போகும் பட்ஜெட்டில் தமிழ்நாடு முதல் மு.க.ஸ்டாலினின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகள் வெளியாகுமா? தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழில்துறையினர் என பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்குமா? https://www.bbc.com/tamil/articles/cley65wwxe3o
  10. பிணையில் விடுதலையாம்! காரணம் மருதராம்!! {@Maruthankerny }
  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நம்மில் பலரும் காலைக்கடன் கழிக்கும்போது நமது மலம் கருப்பாகவோ, நெகிழ்வான தன்மையுடனோ இருப்பதை கவனித்திருப்போம். அது நாம் முந்தைய நாள் உண்ட உணவினால் இருக்கக்கூடும் என்று அதனைப் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டோம். ஆனால், இதனைச் சரியாக கவனிக்காவிட்டால் அது பெரிய சிக்கல்களுக்கு இட்டுச்செல்லும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மலம் கருப்பாக இருப்பது ‘black or tarry stools’ என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ மொழியில் இது மெலெனா (Melena) என்றழைக்கப்படுகிறது. இது ஏன் ஏற்படுகிறது? இது எவ்வளவு ஆபத்தானது? இதனை எப்படிச் சரிசெய்வது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மலம் கருப்பாக மாறுவதற்கு அதில் அதிகபட்சம் 60மில்லி ரத்தம் கலந்திருக்க வேண்டும் மலம் ஏன் கருப்பாக மாறுகிறது? மலம் கருப்பாக இருப்பதற்கு ஜீரண அமைப்பின் மேற்பகுதியில் ஏற்படும் சிக்கல்தான் முக்கியக் காரணம் என்று அமெரிக்க அரசின் தேசிய மருத்துவ நூலகத்தின் தகவல் தெரிவிக்கிறது. அதாவது வயிறு, சிறுகுடல், பெருங்குடலின் வலப்பகுதி ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளால் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது. இந்தப் பகுதிகளில் ஏற்படும் சிக்கலால் ரத்தக்கசிவு ஏற்பட்டு அது வயிற்றில் கலக்கும் போது, அங்கிருக்கும் உணவோடு சேர்ந்து அது மலத்தில் கருப்பாக வெளியேறுகிறது. ஆகவே, மலம் கருப்பாக இருப்பதற்கு நமது ஜீரண அமைப்பில் ஏற்படும் சிக்கல்களால் நடக்கும் ரத்தக்கசிவே காரணம். இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள பிபிசி தமிழ் சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடல் மருத்துவரான மலர்விழியிடம் பேசியது. அதற்கு பதிலளித்த அவர், வழக்கமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் நமது மலம், கருப்பாக மாறுவதற்கு அதனோடு ரத்தம் கலப்பதுதான் காரணம் என்றார். “வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களோடு ரத்தம் கலக்கும்போது இது ஏற்படுகிறது. அப்படிக் கலந்து அது மலக்குடல் வழியே வெளிவருகிறது,” என்கிறார் அவர். இப்படி மலம் கருப்பாக மாறுவதற்கு அதில் அதிகபட்சம் 60மில்லி ரத்தம் கலந்திருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் மலர்விழி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கல்லீரல் பிரச்னைகள் இருந்தால், உணவுக்குழாயில் இருக்கும் நரம்புகள் புடைக்கும் நிலை ஏற்படும் ரத்தக் கசிவு ஏன் ஏற்படுகிறது? இவ்வாறு வயிற்றிலும் குடலிலும் ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான முக்கியக் காரணம், அல்சர் எனப்படும் குடல் மற்றும் வயிற்றுப்புண் என்கிறார் மருத்துவர் மலர்விழி. அல்சர் ஏற்பட்டிருந்தால், அந்தப் புண்களிலிருந்து கசியும் ரத்தம் வயிற்றில் கலந்து மலத்தைக் கருப்பாக்குகிறது. இதற்கு மற்றொரு முக்கியக் காரணம், கல்லீரல் பிரச்னை என்கிறார் மருத்துவர் மலர்விழி. கல்லீரல் பிரச்னைகள் இருந்தால், உணவுக்குழாயில் இருக்கும் நரம்புகள் புடைக்கும் நிலை ஏற்படும் என்கிறார் அவர். இது ஈசோஃபேகல் வேரிசஸ் (Esophageal varices) என்று அழைக்கப்படுகிறது. இப்படிப் புடைக்கும் நரம்புகள் வெடித்து, அவறிலிருந்து ரத்தம் கசிந்தாலும், அது மலத்தோடு கலந்து மலம் கருப்பாக மாறும் என்கிறார் மருத்துவர் மலர்விழி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வயிற்றிலும் குடலிலும் ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான முக்கியக் காரணம், அல்சர் எனப்படும் குடல் மற்றும் வயிற்றுப்புண் முக்கியக் காரணங்கள் என்ன? இப்படி ரத்தம் கசிவதற்குக் காரணமான குடல் மற்றும் கல்லீரல் பிரச்னைகள் ஏன் ஏற்படுகின்றன என்று மருத்துவரிடம் கேட்டபோடது, அவர் இதற்குப் பல காரணிகள் உள்ளன என்கிறார். குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுவதற்கு மிகமுக்கியமான காரணம் ஹெலிகோபாக்டர் பைலோரி (Helicobacter pylori) எனப்படும் கிருமி என்கிறார் அவர். இந்தக் கிருமி பெப்டிக் அல்சர் அல்லது கேஸ்ட்ரிக் அல்சர் ஆகிய நோய்களை ஏற்படுத்துகிறது, என்கிறார் அவர். “இந்தக் கிருமி கலந்த உணவை உட்கொண்டால் அல்சர் ஏற்படும். உணவுப் பொருட்கள் சரியாகப் பாதுகாத்து வைக்கப்படாவிட்டால் இக்கிருமிக் கலப்பு ஏற்படும்,” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹெலிகோபாக்டர் பைலோரி (Helicobacter pylori) கிருமி கல்லீரல் பிரச்னைகள் ஏற்படுவதைக் குறித்துப் பேசிய அவர், மது அருந்துவதால் கல்லீரல் சேதம் ஏற்படும் என்கிறார். அதேபோல், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் உட்கொண்டால், கல்லீரலில் கொழுப்பு சேரும் (fatty liver), என்கிறார். இவைகளும் கல்லீரல் பிரச்னைகளை ஏற்படுத்தி, நரம்புப் புடைப்பின் மூலம் ரத்தக்கசிவை ஏற்படுத்தலாம் என்கிறார் மருத்துவர் மலர்விழி. மேலும், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய காரணங்களும் இந்தப்பிரச்னைகளைத் தீவிரப்படுத்தும் என்கிறார் அவர். இது எவ்வளவு ஆபத்தானது? பொதுவாக குடல் அல்லது வயிற்றுப்புண் ஏற்பட்டால், ரத்த வாந்தி வரும், அதனால் பீதியடைந்து மக்கள் மருத்துவரை நாடுவார்கள். ஆனால் அதே காரணத்தால் மலத்தில் ரத்தம் கலந்து கருப்பாக வெளியேறினால், அது அலட்சியமாக எடுத்துக்கொள்ளப் படுகிறது, என்கிறார் மருத்துவர் மலர்விழி. “இப்படி தொடர்ந்து அதிக நாட்கள் மலத்தில் ரத்தம் கலந்து வெளியேறினால், அது ரத்தசோகை ஏற்பட வழிவகுக்கும். அதனால் இந்த வயிற்றுப்பிரச்னையைச் சரிசெய்யாமல் ரத்தசோகையைக் குணப்படுத்துவது இயலாது,” என்கிறார் அவர். மலம் கருப்பாக வெளியேறினால் என்ன செய்ய வேண்டும்? உடனடியாகச் சென்று மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர் மலர்விழி. “அப்போதுதான் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, உடனே சிகிச்சை அளிக்க முடியும்,” என்கிறார் அவர். “இல்லையென்றால் தொடர்ந்து ரத்த இழப்பு ஏற்படும்,” என்கிறார். இதற்கு என்ன சிகிச்சை? முதலில் எந்த இடத்திலிருந்து ரத்தம் கசிகிறது என்பதைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் சோதனை ஆகியவை செயப்படும், என்கிறார் மருத்துவர் மலர்விழி. எந்த இடத்திலிருந்து ரத்தம் கசிகிறது என்பதைக் கண்டறிந்தவுடன் அதனை நிறுத்துவதற்கான சிகிச்சைகள் வழங்கப்படும் என்கிறார் அவர். “ஒவ்வொரு நோயாளிக்கும் இதற்கான சிகிச்சை மாறுபடும்,” என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மலத்தின் நிறமும் தன்மையும் உங்கள் உடல் ஆரோக்கியத்தின் நேரடிப் பிரதிபலிப்பு ‘உங்கள் மலத்தை கவனியுங்கள்’ இதுகுறித்து மேலும் பேசிய மருத்துவர் மலர்விழி, முன்பு மது அருந்துவதால் கல்லீரல் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தாலும், கடந்த 20 வருடங்களில், மதுப்பழக்கம் சாராத கல்லீரல் பிரச்னைகள் அதிகரித்து வடுவதாகக் கூறுகிறார். இதற்கு முக்கியக் காரணம் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்தான், என்கிறார். “உங்கள் மலத்தின் நிறமும் தன்மையும் உங்கள் உடல் ஆரோக்கியத்தின் நேரடிப் பிரதிபலிப்பு. நம்மில் பலரும் நமது மலத்தைக் கவனிப்பதற்குச் சங்கடப்பட்டுக்கொண்டு அதனைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். ஆனால் அதனைக் கவனித்து, அதில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்,” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c3gv7ve5kddo
  12. எங்களிடம் ஒற்றுமையில்லையென கூறுவோருக்கு பலமான செய்தியை கூறியுள்ளோம் : சுரேஷ் 23 JUL, 2024 | 10:13 AM எங்களிடம் ஒற்றுமை இல்லை என கூறுபவர்களுக்கு பலமான செய்தியை கூறியுள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்ட பின்னர் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களிடம் ஒற்றுமை இல்லை என கூறுபவர்களுக்கு பலமான செய்தியை கூறியுள்ளோம் இனி எமது கட்டமைப்புடன்தான் பேசவேண்டும் அடுத்த கட்ட அரசியல் நகர்வாக இருக்கும் இந்தக் கட்டமைப்பை உருவாக்கக்கூடாது என்று பலர் முயற்சிகள் எடுத்தார்கள் எங்களுக்குள்ளேயும் பலர் சவால் விட்டார்கள் எதிராக பிரச்சாரம் செய்வோம் என்றார்கள் எனினும் நாம் ஒன்றிணைந்து கையெழுத்திட்டுள்ளோம் இனியும் இதைக் குழப்புவதற்கு பலர் இருக்கின்றார்கள். பல சிக்கல்களும் உருவாகும் இவை அனைத்தையும் எதிர்த்து போராடித்தான் முன்னேறிச் செல்லவேண்டும். ஏன் பொது வேட்பாளர் தேவை என்பதற்கு பல காரணங்கள் உண்டு யுத்தத்திற்கு பிற்பாடு அரசாங்கம் எங்களைக் அரைத்து கலந்துரையாடுவார்கள் ஆனால் எதுவும் நடக்காது இப்போது நாங்கள் ஒரு நிலையில் தோற்வித்திருக்கின்றோம் நீங்கள் யாராவது பேசவிரும்பினால் வரலாம் நாங்கள் கூறவேண்டிய அவசியமில்லை. நாங்கள் இப்போது தமிழ்த்தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகள் சிவில் அமைப்புக்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு செய்தியைச் செல்லுகின்றோம் யாராக இருந்தாலும் எம்மிடம் பேசவேண்டியிருந்தால் எங்களை நோக்கி வருவார்கள் . நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்த காலத்திலேயே தென் பகுதியில் ஒரு அச்ச நிலை ஏற்பட்டது இவர்கள் ஒன்றாக போகின்றார்கள் என்று இந்தக் காலத்தில் முக்கியமான ஜனாதிபதி வேட்பாளர்கள் எங்களைத் தேடி வீடு வீடாக வந்தார்கள் கடந்த காலத்தில் கொழும்பிலே யாருடனே பேசி முடிவுகளை அறிவிப்பார்கள் ஆனால் இன்று தேடி வருகின்றார்கள் என்றால் இவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தப் போகின்றார்கள் அதற்கு முன்பாக இவர்களுடன் பேசி ஆதரவைபெறவேண்டும் என்றுதான் வந்தார்கள். ஆகவே அவர்கள் எங்களைத் தேடி வரவேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். ஏனி தனிப்பட்ட எவரையும் சந்தித்துப் பேசுவதில்லை. தற்போது தமிழ்த்தேசியத்துடன் இணைந்து செயற்படுகின்றவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள். இனிமேல் இவர்களுடன் பேசித்தான் முடிவுகள் எடுக்கவேண்டும் என்பதை உருவாக்கியுள்ளோம். ஆகவே இது வரை காலமும் ஒற்றுமை இல்லை எனக்கூறியவர்களுக்கு மிகக் காத்திரமான பதிலை வழங்கியுள்ளோம். இந்தக் கட்டமைப்புக்குள் வராத ஏனைய கட்சிகள் குறிப்பாக தமிழரசுக் கட்சியும் இதற்குள் வரவேண்டும் இதன் நோக்கத்தை புரிந்து கொள்ளவேண்டும். பொது வேட்பாளர் விடையம் என்பது எமது அடுத்த கட்ட அரசியல் நகர்வை நோக்கி நகரவுள்ளது இதில் காத்திரமான வெற்றியைப் பெறுவேம் என்றால் குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள் பெருவாரியாக வாக்களிப்பார்கள் என்றால் அந்தச் செய்தி சிங்களத்தரப்பு இராஜதந்திரத் தரப்பு சர்வதேச தரப்பு பலமான செய்தியைச் செல்லும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரேகுரலில் பேசுகின்றார்கள் அந்தக் குரலை செவிசாய்ககவேண்டும் என்பது எல்லோருக்கும் ஏற்படும் என்றார். https://www.virakesari.lk/article/189134
  13. ஐபோன் உற்பத்தி, ஆண் - பெண் பருமன்: தமிழ்நாடு பற்றி பொருளாதார ஆய்வறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,SANSAD TV கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 22 ஜூலை 2024 இந்தியாவின் நிதி நிலை அறிக்கைக்கு முன்னாட்டமாகக் கருதப்படும் இந்திய பொருளாதார ஆய்வறிக்கை இன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. நிதிநிலை அறிக்கை நாளை (23.07.2024) தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 'இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 2023-2024'ஐ (Economic Survey of India 2023-24) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பொருளாதார ஆய்வறிக்கை என்பது, மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் அரசின் நிதிச் செயல்பாடு எப்படி இருந்தது, இந்தியப் பொருளாதாரம் எப்படி செயல்பட்டது என்பதை சொல்லும் ஓர் அறிக்கை. எதிர்காலத்தில் வரவிருக்கும் கொள்கை மாற்றங்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டும். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பொருளாதார ஆய்வறிக்கை நிதித் துறையால் தாக்கல் செய்யப்படுகிறது. பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கியமான 15 விஷயங்கள் வரும் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5 – 7 சதவீதமாக இருக்கும். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து 7 சதவீதத்திற்கு மேல் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்திருப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. மக்கள் தொகை வளர்ச்சி, அதிகரிக்கும் தேவைகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பொருளாதாரம் 78.51 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தியாவில் 56.5 கோடி பேர் பணியாளர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 45 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் விவசாயத் துறையில் இருக்கிறார்கள். 11.4 சதவீதம் பேர் உற்பத்தித் துறையிலும் 28.9 சதவீதம் பேர் சேவைத் துறையிலும் 13 சதவீதம் பேர் கட்டுமானத் துறையிலும் இருக்கின்றனர். இந்தியாவில் பெண்கள் வேலை பார்ப்பது கடந்த ஆறு ஆண்டுகளில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை குறைந்து வருவதாகவும் 2023வது நிதியாண்டில் வேலைவாய்ப்பின்மை 3.2 சதவீதமாக இருந்ததாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் வேலை பார்ப்போர் அனுப்பும் தொகை (Remittances), இந்த ஆண்டில் 3.7 சதவீதம் அதிகரித்து 124 பில்லியன் டாலர்களாகவும் அடுத்த ஆண்டில் இது 4 சதவீதம் அதிகரித்து 129 பில்லியன் டாலர்களாகவும் இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை மதிப்பிட்டிருக்கிறது. இந்தியா தரமான உள் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றால் பெரும் அளவில் தனியார் துறை முதலீடு தேவைப்படும் என்றும் இதற்கு மத்திய அரசின் கொள்கை மற்றும் அமைப்பு ரீதியான ஆதரவு மட்டும் போதுமானதாக இருக்காது என்றும் மாநில அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் மிக முக்கியமான பங்கை வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விரைவான நகர்மயமாக்கத்தால் வீடுகளின் தேவை அதிகரிக்கும் என்றும் இது ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்திய அரசின் Universal Services Obligation Fund (USOF) நிதியில் ஐந்து சதவீதத்தை தொலைத்தொடர்புத் துறையில் ஆராய்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் செலவிட உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியில் தற்போது 80,000 கோடி ரூபாய் இருக்கிறது. இந்த நிதியின் பெயர் இனி 'டிஜிட்டல் பாரத் நிதி' என மாற்றப்படும். கரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்தியச் சுற்றுலாத் துறை சற்று வளர்ச்சி கண்டிருக்கிறது. 2023ஆம் ஆண்டில் 92 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டால் இது 43.5 சதவீத வளர்ச்சியாகும். 2023ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் புதிதாக 14,000 அறைகள் கட்டப்பட்டிருக்கின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப் பெரிய காலணி உற்பத்தியாளராக இந்தியா இருக்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் காலணிகளின் மதிப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, 2024ல் 2.5 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. செல்போன் உற்பத்தியைப் பொருத்தவரை, 2024ஆம் ஆண்டில் உலகில் உற்பத்தியாகும் ஐஃபோன்களில் 14 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் கர்நாடக மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் புதிய தொழிற்சாலைகளுக்காக முதலீடுகளைச் செய்திருக்கிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டில் 67 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது 23.2 டாலராக குறைந்திருக்கிறது. ஆனால், நேரடி அன்னிய முதலீட்டைப் பொருத்தவரை கடந்தாண்டோடு ஒப்பிட்டால் கணிசமாகக் குறைந்திருக்கிறது. வளர்ந்த நாடுகளில் வட்டி விகிதம் அதிகரித்தும், இந்தியாவில் பங்குச் சந்தை வளர்ச்சி அடைந்ததால், அதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர் லாபத்தை எடுத்ததும் இதற்கு காரணங்கள் என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,ANI இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அடுத்த பத்து மாதங்களின் இறக்குமதிக்குப் போதுமானதாக இருக்கும். இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 18.7 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவில் உடல் பருமனானவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகவும் குழந்தைகளிடம் இந்தப் பிரச்சனை அதிகரிப்பது உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் என்றும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆண்களில் 37 சதவீதம் பேரும் பெண்களில் 40.4 சதவீதம் பேரும் உடல் பருமனாக உள்ளனர். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களில் துவங்கி மிகத் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் வரை மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் ஆண்டுகளிலும் தசாப்தங்களிலும் உயர் வளர்ச்சியை இந்தியா எட்டுவதில் இது பல தடைகளை உருவாக்கும். 2024ஆம் ஆண்டு மே மாதத்தில், நிலக்கரி, டீசல், எரிவாயு போன்ற மரபுசார் மின் ஆதாரங்கள் தவிர்த்து, பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 45.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2047ஆம் ஆண்டில் இந்தியாவின் எரிசக்தித் தேவை 2 முதல் 2.5 மடங்கு உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. கோவிட் தொற்று, புவிசார் அரசியல் பதற்றங்கள், சப்ளையில் ஏற்பட்ட தடைகள் ஆகியவற்றால் 2022-23ல் உலகம் முழுவதுமே விலைகள் உயர்ந்தன. ஆனால், மத்திய அரசின் கொள்கைகளாலும் ரிசர்வ் வங்கி தலையீட்டாலும் 2024ஆம் ஆண்டில் பணவீக்கம் 5.4 சதவீதமாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வி. ஆனந்த நாகேஸ்வரன், இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பேட்டி இந்தியப் பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவருடைய பேச்சின் முக்கிய அம்சங்கள்: கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொருளாதாரம் 8 சதவீதம் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொருத்த வரை, கோவிட்டிற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததைவிட 20 சதவீதம் அதிகமாக இருக்கிறது." உலகமயமாக்கம் உச்சத்தில் இருக்கிறது. இந்த சவால்களுக்கு நடுவில் நாம் 'விக்சித் பாரத்'திற்கான பாதையை நாம் தேர்வுசெய்ய வேண்டும். அதனால் உள்நாட்டு வளர்ச்சி என்பது மிக மிக முக்கியமாகிறது" குடும்பங்களின் சேமிப்பு மேம்பட்டிருக்கிறது. "குடும்பங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படக் கூடிய நிதி சொத்துகளில் முதலீடு செய்துள்ளனர். சந்தையோடு இணைக்கப்படாத நிதிச் சொத்துகளை சிறப்பாகவே மேம்பட்டிருக்கின்றன". இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் குறைவாகவே இருப்பதால் ரூபாய் வீழ்ச்சியடைவது பாதிப்பை ஏற்படுத்தாது. டாலர்களில் கடன் வாங்கியிருந்தால் பணத்தின் மதிப்பு குறைவது பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கும். வர்த்தகத்தில் கிடைக்கும் லாபம், வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதில் போயிருக்கும். ஆனால், இந்தியாவில் நிலைமை அப்படியில்லை." இந்தியாவில் 85 சதவீதத்திற்கு அதிகமான விளைநிலங்கள் 2 ஹெக்டேர் அளவிலோ அதற்குக் குறைவாகவோதான் இருக்கின்றன. 1970களில் இருந்து தனிநபர் நிலவுடமையின் அளவு குறைந்து வருகிறது. இதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். நான்கு ஹெக்டேர் அளவுக்கு குறைவான நிலத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது பொருளாதார ரீதியாக லாபகரமாக இருக்காது தக்காளி, வெங்காயம், பருத்தி போன்றவற்றின் விளைச்சல் உலகளாவிய விளைச்சலோடு ஒப்பிட்டால் 20 - 40 சதவீதம் குறைவாக இருக்கிறது. நிலங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் விளைச்சலை அதிகரிக்கவும்செய்யலாம். https://www.bbc.com/tamil/articles/c0xj5jl75jeo
  14. Published By: DIGITAL DESK 7 23 JUL, 2024 | 09:28 AM (துரைநாயகம் சஞ்சீவன்) வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான திருகோணமலை – உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையின் அளவை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 600 மீற்றர் வரையான நடைபாதையின் அகலத்தை 6அடி 3அங்குலம் வரை அதிகரிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன. இதற்காக 1கோடியே 50 இலட்சம் ரூபா மாகாணசபையின் நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. குறித்த, வீதியானது சிங்கள மகாவித்தியாலயம் தொடக்கம் துறைமுக பொலிஸ் நிலையம் வரையான 1078 மீற்றர் தூரம் நீளமான நடைபாதையின் அளவை 6அடி 3அங்குலம் வரை வீதியின் உட்புறமாக அகலமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக 600 மீற்றர் வரையான தூரத்தை விஸ்தரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் புதிதாக போடப்பட்ட குறித்த நடைபாதையானது முற்றாக உடைக்கப்பட்டு வருகின்றது. இதனால் அனைத்து மக்களும் இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வீதிக்கு மாகாணசபையின் பெருமளவான நிதி செலவிடப்படுவதாகவும், அண்ணளவாக 1 தொடக்கம் 2 அடி அகலமாக்குவதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையினை முற்றாக உடைத்து வருவதாகவும் மக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் மாகாண சபையின்கீழ் உள்ள பெருமளவான வீதிகள் பயன்படுத்த முடியாமல் செப்பனிட வேண்டியும், புணரமைக்கப்பட வேண்டியும் உள்ள நிலையில் அவற்றை கருத்தில் கொள்ளாது பெருமளவான மக்களுடைய பணம் வீண் செலவு செய்யப்படுவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். https://www.virakesari.lk/article/189130
  15. ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாமரி அத்தபத்து சதம் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சாமரி அத்தபத்து, மகளிர் இருபதுக்கு 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மலேசியாவுக்கு எதிரான மகளிர் டி20 ஆசியக் கோப்பை போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். டி20 சர்வதேசப் போட்டிகளில் அவர் பெற்றுக்கொண்ட மூன்றாவது சதம் இதுவாகும். https://www.facebook.com/reel/1800883233736286 119 ஓட்டங்கள் இந்த போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையாக களமிறங்கிய அதபத்து 69 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்த போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றிருந்தது. மலேசியாவிற்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இலங்கையால் நிர்ணயிக்கப்பட்ட 184 ஓட்டங்களை நோக்கி மலேசிய அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது. https://tamilwin.com/article/chamari-athapaththu-t20-record-in-histry-1721648586
  16. மூதூர் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றியவர்கள் கௌரவிப்பு யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி புறப்பட்ட பேருந்து கடந்த 19ஆம் திகதி மூதூர் இறால்குழி கங்கை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியது. பொது அமைப்புகள் இந்நிலையில் விபத்தின் போது உடனடியாக செயற்பட்ட பொது அமைப்புகளையும், தனிநபர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் பதில் பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மது கனியின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது நேற்று (22) பிரதேச செயலக வளாக முன்றலில் நடைபெற்றுள்ளது. இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மத குருமார்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். https://tamilwin.com/article/those-who-saved-victims-of-accident-are-honored-1721688313
  17. ஜோ பைடன் ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியதன் பின்னணி அம்பலம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் இருந்து ஜோ பைடன்(Joe Biden) திடீரென்று விலகுவதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட கட்சியின் முதன்மையான தலைவர்கள் பலர் விலகச் சொல்லியும், கடவுள் நேரிடையாக வந்து தம்மை விலகச் சொல்ல வேண்டும் என்று கூறி வந்த ஜோ பைடன், கடைசி நொடியில் அதிரவைக்கும் அந்த முடிவுவை எடுத்துள்ளதற்கு காரணம், வெற்றி வாய்ப்பு தொடர்பில் அவரிடம் அளிக்கப்பட்ட விரிவான தரவுகளே என தெரிவிக்கப்படுகிறது. விரிவான தரவுகள் நேற்று முன்தினம் அந்நாட்டு நேரப்படி மதியம் 1.45 மணிக்கு ஜோ பைடன் தாம் போட்டியிடவில்லை என அறிவிக்கும் 48 மணி நேரம் முன்னர் வரையில், டொனால்ட் ட்ரம்பை தம்மால் தோற்கடிக்க முடியும் என்றே ஜோ பைடன் கூறி வந்துள்ளார். நேரலை விவாதத்தில் பதற்றம் அடைந்ததும், பல்வேறு பரப்புரை மேடைகளிலும் தடுமாறிய ஜோ பைடன், நவம்பர் தேர்தலில் தாம் கண்டிப்பாக டொனால்ட் ட்ரம்பை எதிர்கொள்வேன் என அடம் பிடித்து வந்தார். ஆனால், கடந்த சனிக்கிழமை அவரிடம் தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் தொடர்பான விரிவான தரவுகள் அளிக்கப்பட, 81 வயது ஜோ பைடன் வேறு வழியின்றி தனது முடிவை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் உடனடியாக தமக்கு நெருக்கமான வட்டாரத்தை கலந்து பேசிய ஜோ பைடன், ஞாயிறன்று மதியம் 1.45 மணிக்கு தமது முடிவை அமெரிக்க மக்களுக்கு அறிவித்திருந்தார். மேலும், ஜோ பைடனுக்கு அளிக்கப்பட்டுள்ள தரவுகளில், 6 முக்கிய மாகாணங்களில் அவர் மிகவும் பின்தங்கியிருந்ததும், வர்ஜீனியா மற்றும் மினசோட்டா மாகாணங்களிலும் நிலை கவலைக்கிடம் என்றும் கூறப்பட்டது. ஆனால் கோவிட் பாதிப்பால், தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஜோ பைடன், உடனடியாக அரசியல் சூழலை புரிந்துகொண்டு, விலகும் முடிவுக்கு வந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. https://tamilwin.com/article/background-to-joe-biden-s-resignation-1721685176?itm_source=parsely-detail
  18. ஒரு மில்லியன் ரூபாவாக உயரும் அபராதத் தொகை: சட்டத்தில் திருத்தம் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றினால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகையை அதிகரிக்கும் சட்ட மூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அபராதத் தொகையை அதிகரிக்கும் நோக்கில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha) தாக்கல் செய்த சட்ட மூலம், வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டம் இதுவரையில் 1500 ரூபாவாக காணப்பட்ட அபராதத் தொகை ஒரு மில்லியன் ரூபாவாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தினை திருத்தும் நோக்கில் சட்ட மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டத்தின் சில சரத்துக்கள் இந்த சட்ட மூலத்தின் ஊடாக திருத்தப்பட்டுள்ளது. அபராத தொகை நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகையும் அதிகரிக்கும் வகையில் சட்ட மூலத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. குழப்பம் விளைவித்தல் தொடர்பில் விதிக்கப்பட்ட அபராதத் தொகை 100 ரூபாவிலிருந்து பத்தாயிரம் ரூபாவாக உயர்த்துவதற்கு யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/1500-fine-will-be-increaed-to-1-million-1721664072?itm_source=parsely-api
  19. 22 JUL, 2024 | 10:45 PM மும்பை: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் கப்பலில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டபோது விபத்து. இதில் மாலுமி ஒருவரை காணவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு பின்னரும் அதனை நிமிர்த்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மாலுமியை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் இருந்த மற்ற அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடற்படை தளத்தில் இருந்த மற்ற கப்பல்களின் உதவியுடன் திங்கட்கிழமை காலை தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளது. பின்னர் தீயின் சேதத்தை அறிவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில்தான் திங்கட்கிழமை மதியம் முதல் கப்பல் ஒரு பக்கமாக (துறைமுகத்தின் பக்கமாக) சாய்ந்துள்ளது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அதை நிலையாக நிறுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ள இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது. ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா: கடந்த 2000-மாவது ஆண்டில் இந்த கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் இது. இதில் 40 அதிகாரிகள் மற்றும் 330 மாலுமிகள் பணியில் உள்ளனர். 125 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் மீடியம் ரேஞ், குளோஸ் ரேஞ், ஆன்டி-ஏர்கிராப்ட் துப்பாக்கிகள், கடற்பரப்பில் இருந்து வானுக்கும், பரப்புக்கும் ஏவுகணையை ஏவ முடியும். இதில் போரின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில் அதிக சென்சார்களைக் கொண்டுள்ளது. ஹெலிகாப்டர்களையும் இதிலிருந்து இயக்க முடியும். https://www.virakesari.lk/article/189125
  20. அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு இந்த வாரத்தில் தீர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். கொழும்பில் (Colombo) நேற்று (22.07.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதிபர்கள் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களினால் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இரண்டு வார காலம் சட்டப்படி வேலை தொழிற்சங்கப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இன்றைய தினம் முதல் இரண்டு வாரங்களுக்கு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. எவ்வாறெனினும், இந்தப் போராட்டமானது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை பாதிக்காது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் 16000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/teachers-issues-will-solve-this-week-susil-1721665624
  21. சவாலுக்காக சுமார் 10 மணி நேரமாக தொடர்ந்து சாப்பிட்ட சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது பலரும் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலம் அடைய முயற்சிக்கின்றனர். சில தகவல் தருவதாகவும், வ்லாக் மற்றும் நகைச்சுவை போன்றவற்றை உருவாக்கி நெட்டிசன்களை மகிழ்வித்து வருகின்றனர். சிலர் சாப்பிடும் வீடியோக்களை உருவாக்கி பார்வைகளையும், பின் தொடர்பவர்களையும் பெறுக்குகின்றனர். ஆனால் அதிகப்படியான உணவு எப்போதும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சவாலை ஏற்று அதிகமாக சாப்பிட்டு நேரலையில் உயிரிழந்தார். அந்த இளம்பெண்ணின் பெயர் பான் ஜோதிங். அவருக்கு 24 வயது. அவர் சாப்பிடும் சவால்களை ஏற்றுக் கொண்டு அவற்றை நேரலையில் ஸ்ட்ரீம் செய்து வீடியோக்களை உருவாக்குகி வந்துள்ளார். சில நேரங்களில் அவர் 10 கிலோவுக்கு மேல் உணவை உண்ணுவாராம். ஆனால் அவரது பெற்றோர் இப்படி சாப்பிடுவதை எச்சரித்து வந்தனர். ஆனால், அவர் அவர்களின் வார்த்தைகளைக் கவனிக்கவில்லை. வழக்கம் போல் அவர் சாப்பிடும் சவாலை ஏற்றுக் கொண்டு, 10 மணிநேரம் சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிடும் போது உடல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவரது பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிட்டதால் அவர் இறந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். பிரேத பரிசோதனை முடிவுகளில் அவரது வயிறு கடுமையாக சிதைந்திருந்ததும், அவரது வயிற்றில் செரிக்கப்படாத உணவு இருந்தது தெரியவந்தது. https://thinakkural.lk/article/306638
  22. Published By: DIGITAL DESK 7 22 JUL, 2024 | 02:54 PM 'திமுக ஒரு குடும்பக் கட்சி. திமுக நடத்துவது குடும்ப ஆட்சி. கருணாநிதி பேரன் - ஸ்டாலின் மகன் - என்பதால் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதா?' என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி வினா எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக சேலத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, '' திமுக ஆட்சியில் அம்மா உணவகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் அம்மா ஆட்சியில் தொடங்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களில், 19 உணவகங்களை திமுக ஆட்சியில் முடி விட்டனர். இதனால் திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. எனவேதான் அம்மா உணவகத்திற்கு சென்று முதல்வர் ஆய்வு செய்துள்ளார்.‌ தமிழகத்தில் 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன. கஞ்சா, போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையை தடுக்காவிட்டால் மாணவர்கள் இளைஞர்கள் சீரழிவார்கள். திமுகவில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களும், அனுபவமிக்க அமைச்சர்களும் உள்ளனர். ஆனால் குடும்ப கட்சியான திமுகவில் அவர்களுக்கு எல்லாம் துணை முதல்வர் பதவி கிடைக்காது. கருணாநிதியின் பேரன் -ஸ்டாலினின் மகன்- என்ற தகுதி மட்டும் தான் உதயநிதிக்கு உள்ளது. இவருக்கு துணை முதல் அமைச்சர் பதவி கொடுப்பதா? '' என தெரிவித்திருக்கிறார்.‌ https://www.virakesari.lk/article/189089

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.