Everything posted by ஏராளன்
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக பைடன் கூறியுள்ளார். 22 ஜூலை 2024, 01:21 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபராவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பைடன் இந்த முடிவை எடுத்துள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜோ பைடனின் விலகலால் அதிபர் தேர்தலில் புதிய சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது. ஜோ பைடனின் செயல்திறன் உள்ளிட்டவற்றை விமர்சித்து சொந்தக் கட்சியினரே அவரை போட்டியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுத்து வந்தனர். ஹாலிவுட் பிரபலங்கள் உள்பட பலரும் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று கூறிவந்தனர். இந்த நிலையில், அவரது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தனது ஆதரவை கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் வழங்கியிருந்தாலும் அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜோ பைடன் கூறியிருப்பது என்ன? சமூக வலைத்தளமான எக்ஸில் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். “அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். மீதமுள்ள எனது பதவிக்காலத்தில் எனது கடமைகளைச் செய்வதில் எனது முழு ஆற்றலையும் செலுத்த முடிவு செய்துள்ளேன். 2020- ஆம் ஆண்டில் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸை துணை அதிபராகத் தேர்ந்தெடுப்பதே எனது முதல் முடிவு. என்னுடைய இந்த முடிவு சிறப்பானது." "இன்று நான் கமலா ஹாரிஸை எங்கள் கட்சியின் வேட்பாளராக முழுமையாக ஆமோதிக்கிறேன். ஜனநாயக கட்சியினர் ஒன்றுபட்டு டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம்." என்று ஜோ பைடன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் ஆதரவு தெரிவித்திருந்தாலும், அவர் உடனடியாக அதிபர் வேட்பாளராகி விடமுடியாது. அடுத்து என்ன நடக்கும்? கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் ஆதரவு தெரிவித்திருந்தாலும், அவர் உடனடியாக அதிபர் வேட்பாளராகி விடமுடியாது. ஜோ பைடனின் ஆதரவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கமலா ஹாரிஸ், தான் பெருமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும், அதிபர் வேட்பாளராவதற்கான அனைத்தையும் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். பைடனின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியினர் பெரும்பாலும் கமலா ஹாரிஸை ஆதரிக்க வாய்ப்புள்ளது. எனினும் அதிபர் வேட்பாராகவதற்கு வேறு சிலரும் முயற்சி செய்யக் கூடும். ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு அடுத்த மாதம் நடக்கும்போது, அதிபர் வேட்பாளர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்கள் முறைப்படி அறிவிக்கப்படுவார்கள். நவம்பரில் தேர்தல் நடக்கும். https://www.bbc.com/tamil/articles/c51y5l8erzno
-
திறந்த மூல இயக்க முறைமை/இயங்கு தளங்கள் பற்றிய தகவல்கள்
கள உறவுகளே திறந்த மூல இயக்க முறைமை/இயங்கு தளங்கள் பற்றிய உங்களுக்குத் தெரிந்த தகவல்களை இங்கே பகிருங்கள். அவற்றின் பயன்கள், எவ்வாறு இலகுவாக பயன்படுத்துவது போன்றவற்றையும் பகிருங்கள். நன்றி
-
'கறுப்பு ஜூலையில்' ஒரு பத்திரிகையாளர் குடும்பத்தின் அனுபவம்
21 JUL, 2024 | 02:09 PM டி.பி.எஸ். ஜெயராஜ் 1983 ஜூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான வன்முறை சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையின் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு அத்தியாயம். அந்த இருண்ட மாதத்தின் பெருங்கேடான நிகழ்வுகள் இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்களின் வாழ்வை கடுமையாகப் பாதித்தன. இலங்கையின் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளன் என்ற வகையில், கறுப்பு ஜூலை என்னை தனிப்பட்ட முறையிலும் தொழில்சார் அடிப்படையிலும் பாதித்தது. மேலும், ஆயிரக்கணக்கான ஏனைய தமிழ்க் குடும்பங்களைப் போன்று எனது குடும்பமும் கொந்தளிப்பான அந்த நாட்களில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தது. அப்போது நான் வடக்கில் மன்னார் சென்றிருந்ததால் அந்த வன்முறையின் முழுத் தாக்கத்தையும் நான் அனுபவிக்கவில்லை. மனானாரில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் மகாநாட்டு செய்திகளை சேகரிக்கும் பணிக்காக நான் மன்னாருக்கு அனுப்பிவைக்கப்பட்டேன். எனது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வேறு சில தமிழ்க் குடும்பங்கள் அனுபவித்ததைப் போன்ற கொடூரங்களையும் அவலங்களையும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக அனுபவிக்கவில்லை. எமது குடும்பத்தில் எவரும் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ இல்லை. அந்த வகையில் ஏதோ ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருந்தோம். சுமார் நான்கு தசாப்தங்களாக கறுப்பு ஜூலை குறித்து தனிப்பட்ட நோக்கில் நான் ஒருபோதும் எழுதவில்லை. வேதனையான நிகழ்வுகளை மீட்டிப்பார்க்க நான் விரும்பவில்லை.ஆனால் கறுப்பு ஜூலையின் 40 வது வருடாந்த நினைவாக கடந்த வருடம் எழுதியிருந்தேன். தங்களுக்கு நேர்ந்த சோதனைகள் பற்றி எனது குடும்பத்தவர்கள் கூறியவற்றின் அடிப்படையில் இதை எழுதுகிறேன். 1983ஆம் ஆண்டில் எனது குடும்பம் ஆறு பேரைக்( எனது பெற்றோர், இரு சகோதரிகள், சகோதரன், நான்) கொண்டதாக இருந்தது. அப்போது பிள்ளைகளில் எவரும் திருமணம் செய்திருக்கவும் இல்லை. எனது தந்தையார் குருநாகலையில் இருந்து செயற்பட்ட ஒரு சட்டத்தரணி.எனது தாயார் ஒரு ஆசிரியை. எனது இரு சகோதரிகளில் முத்தவரும் ஒரு ஆசிரியையே. எனது சகோதரனும் நானும் கொழும்பில் வேலை செய்துகொண்டு தனித்தனியாக தங்கியிருந்தோம். எனது இளைய சகோதரி கல்வி பொதுத்தராதர பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்தார். எனது தாயார் 1982 ஆம் ஆண்டில் குருநாகலையில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுக்கு பிறகு தனது பிற்ளைகளுடன் அவர் கொழும்புக்கு குடிபெயர விரும்பினார். முன்னதாக கொழும்பில் பதினேழு வருடங்கள் படிப்பித்ததால் அதை அவர் எப்போதும் சொந்த ஊர் போன்று உணர்ந்தார். அதனால் இரத்மலானையில் கசீயா அவனியூவில் உள்ள ஒரு வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்தோம்.தாயாரும் சகோதரனும் இளைய சகோதரியும் அங்கு வசித்தனர். குருநாகலையில் தொடர்ந்தும் தங்கியிருந்த தந்தையாரும் மற்றைய சகோதரியும் வார இறுதிகளில் கொழும்புக்கு வந்துபோவார்கள். ' த ஐலண்ட் ' பத்திரிகையில் நான் இரவு கடமைகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் கொட்டாஞ்சேனையில் உள்ள அறையிலேயே தங்கியிருந்தேன். இரத்மலானைக்கும் கொட்டாஞ்சேனைக்கும் இடையே நான் 155 ஆம் இலக்க பஸ்ஸில் சென்றுவருவேன். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் மகாநாட்டுக்காக 1983 ஜூலை 22 வெள்ளிக்கிழமை காலை நான் மன்னாருக்கு புறப்பட்டுச் சென்றேன். தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்த வார இறுதியில் நான் மன்னாரில் இருந்தேன். குருநாகலை தமிழ்ப்பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருந்த எனது சகோதரி குருநாகலைக்கு திரும்புவதற்காக ஜூலை 25 காலை புறக்கோட்டையில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டார். செவ்வாய்க்கிழமை குருநாகலைக்கு திரும்பும் எண்ணத்தில் தந்தையார் கொழும்பிலேயே இருந்தார். இரத்மலானை இரத்மலானையில் எமது வீட்டு உரிமையாளரான சிங்களவர் அருகாக ஒரு்பகுதியில் வசித்துவந்தார். பொரளையிலும் திம்பிறிகஸ்யாயவிலும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாக கேள்விப்பட்டதாக அவர் எமது குடும்பத்தவர்களிடம் கூறினார். குண்டர்கள் தாக்குதல் நடத்த வந்தால் வீட்டின் பின்முறமாக பற்றைகள் நிறைந்த சதுப்புநிலப் பகுதியில் மறைந்திருக்குமாறு அவர் எமது குடும்பத்தவர்களுக்கு ஆலோசனை கூறினார். யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தினால் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட செய்தியை காலையில் பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன. அதே தினம் அந்த செய்தி தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அறிவிக்கப்பட்டது. வன்முறை தீவிரமடைந்து பரவியது. குண்டர்கள் இரத்மலானையிலும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார்கள். காசீயா அவெனியூவில் குண்டர்களுக்கு தலைமைதாங்கி வந்தவர் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த மாநகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன். எனது பெற்றோரும் சகோதரனும் சகோதரியும் சதுப்புநிலப் பகுதிக்கு சென்று பற்றைகளுக்குள் மறைந்திருந்தனர். அங்கு கபறக்கொய்யாவும் பாம்புகளும் ஊர்ந்துகொண்டு திரிந்தன. எனது தந்தையாரும் சகோதரரும் பெரிய சமையலறைக் கத்தியையும் மண்கிண்டியையும் ஆயுதமாக எடுத்துக் கொண்டனர். தாயார் சில வாரங்களுக்கு முன்னர் சிறிய விபத்தொன்றில் சிக்கியதால் பற்றைக்குள் பதுங்கியிருப்பதற்கு பெரிதும் கஷ்டப்பட்டார். குண்டர்களின் தலைவர்கள் எமது வீட்டு உரிமையாளரிடம் வந்து எமது குடும்பத்தைப் பற்றி விசாரித்தார்கள். அந்த பகுதியில் வசிக்கும் தமிழர்களின் விபரங்கள் அவர்களிடம் இருந்தன. தனது வீட்டு வாடகைக் குடியிருப்பாளர்கள் குழப்பங்கள் பறாறி கேள்விப்பட்டதும் காலையிலேயே அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டதாக உரிமையாளர் குண்டர்களிடம் கூறினார். எமது வீட்டு வாயிலுக்கு சென்ற குண்டர்கள் கதவை உடைக்க முயற்சித்தனர். தீவைக்கும் ஒரு முயற்சியாக தரைவிரிப்புக்கு பெற்றோலை ஊற்றினர். அதை உரிமையாளர் ஆட்சேபித்தபோது எமது தளபாடங்களை எரிக்கப்போவதாக குண்டர்கள் கூறினார்கள். அவையெல்லாம் வாடகைக்கு இருப்பவர்களுக்கு சொந்தமானவை அல்ல தன்னுடையவை என்று அவர் கூறவே எமது குடும்பம் திரும்பிவந்தால் தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அவரை எச்சரித்துவிட்டு குண்டர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இரவானதும் எனது குடும்பம் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து வெளியே வந்து பின்பக்கத்தால் வீட்டுக்குள் நுழைந்தனர். மின்விளக்கு எதையும் போடாமல் இரவு முழுவதும் அவர்கள் அங்கே இருந்தனர். ஜூலை 26 செவ்வாய்கிழமை விடிந்ததும் எல்லாமே அமைதியாக இருப்பதைப் போன்று தோன்றியது. தனது வீட்டில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என்று உரிமையாளர் விரும்பினார். எனது பெற்றோரும் சகோதரங்களும் பாதுகாப்பு தேடி கல்கிசை பொலிஸ் நிலையத்துக்கு நடந்து சென்றனர். அது அதிகாலை வேளை. வழியில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. பல தமிழ்க் குடும்பங்கள் பொலிஸ் நிலையத்தில் இருந்தன. சிறிது நேரம் கழித்து பொலிசார் எனது குடும்பம் உட்பட சகல குடும்பங்களையும் இரத்மலானை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமுக்கு கூட்டிச் சென்றனர். எதிர்பார்க்கப்பட்தைப் போன்றே ஆட்கள் நிரம்பிவழிந்த விமான நிலைய முகாமில் நிலைமை படுமோசமானதாக இருந்தது. போதிய இடவசதியின்மை, மலசலகூட வசதிகள் போன்ற சுகாதார வசதிகள் இல்லாமை, போதிய உணவின்மை ஆகியவை பெரிய பிரச்சினையாக இருந்தது. குருநாகல் குருநாகலையில் இருந்த எனது சகோதரி பற்றியே எமது குடும்பம் அப்போது பெருங்கவலை கொண்டிருந்தது. தமிழ்பேசும் மக்கள் வாழும் மன்னாரில் நான் பாதுகாப்பாக இருப்பேன் என்பது அவர்களுக்கு தெரியும். கொழும்பில் இருந்து குருநாகலை நோக்கி சென்ற பஸ் ஒன்று அளவ்வ பகுதியில் இடைமறிக்கப்பட்டு அதில் இருந்த சகல தமிழ்ப் பயணிகளும் கொல்லப்பட்டதாகவும் சடலங்கள் பாலத்தில் தொங்கவிடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அதனால் எனது சகோதரி பாதுகாப்பாக இருப்பாரா இல்லையா எமது குடும்பம் கவலைப்பட்டது. என்னைப் பொறுத்தவரை நான் மன்னாரில் பாதுகாப்பாக இருக்கும்போது எனது குடும்பத்துக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்று பெரும் வேதனையாக இருந்தது. ஆனால், எனது சகோதரி பாதுகாப்பாக குருநாகலை போய்ச் சேர்ந்தார். வெளியில் தலைகாட்டாமல் அவர் வீட்டுக்குள்ளேயே அமைதியாக இருந்தார். குடும்பத்தின் ஏனையவர்கள் பற்றியே அவருக்கு கவலை. குருநாகலையில் எமது அயலவர் ஒரு சிரேஷ்ட சிங்கள பொலிஸ் அதிகாரி. அதனால் அயலில் இருந்த தமிழர்கள் நன்கு பாதுகாக்கப்பட்டார்கள். மன்னார் எனது குடும்பத்தின் கதி பற்றியே எனக்கு மனக்கலக்கமும் அச்சமும். அந்த நாட்களில் கைத்தொலைபேசி இருக்கவில்லை. கொழும்பு போன்ற தொலைதூர இடக்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுப்பதும் மன்னாரில் ஒரு பிரச்சி னயாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக நான் அன்றைய மன்னார் மாவட்ட அமைச்சராக இருந்த மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஈ. எச். மஹ்ரூப்பின் செயலாளராக இருந்த ரெறன்ஸ் பிலிப்புப்பிள்ளை என்ற தமிழ் அரசாங்க அதிகாரியுடன் தொடர்புகொண்டேன். அந்த நாட்களில் நான் ' சண்டே ஐலண்ட் ' பத்திரிகையில் ' கிடுகு வேலிக்கு பின்னால் ' ( Behind the Cadjan Curtain) என்ற வாரஇறுதிப் பத்தியொன்றை எழுதிக்கொண்டிருந்தேன். மன்னார் மாவட்ட அமைச்சரின் செயலாளர் ரெறன்ஸ் அதை தவறாது வாசிக்கும் ஒரு எனது ரசிகர் என்பதை அறிந்ததும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. அதற்கு பிறகு தொலைபேசி அழைப்பை எடுப்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மன்னாரில் இருந்து ' த ஐலண்ட் ' ஆசிரிய பீடத்துடன் கிரமமாக தொடர்பில் இருந்தேன். வன்முறை வெடித்தபோது பத்திரிகையின் ஆசிரியர் நாட்டில் இருக்கவில்லை. அன்றைய பிரதி ஆசிரியர் காமினி வீரக்கேன் பொறூப்பாக இருந்தார். ஆசிரிய பீடத்துடன் கிரமமாக தொடர்புகொண்டு எ்்ன நடக்கிறது என்பதை நான் அறிந்துகொண்டேன். எனது ஆசிரிய பீடச் சகாக்களும் நண்பர்களுமான அஜித் சமரநாயக்கவும் பிரசாத் குணவர்தனவும் அலுவலக வாகனத்தில் இரத்மலானைக்கு சென்று எனது குடும்பத்தவர்கள் இரத்மலானை விமான நிலையத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை வீட்டு உரிமையாளரின் மூலமாக அறிந்து கொண்டனர். அதேவேளை , இரத்மலானை விமான நிலைய அதிகாரிகள் ஆட்கள் உள்நாட்டு தொலைபேசி அழைப்புக்களை எடுப்பதற்கு அனுமதிக்கத் தொடங்கினார்கள். கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் அந்த நாட்களில் பிரதமர் ரணசிங்க பிரேமதாசவுக்கு நெருக்கமாக இருந்தவருமான எமக்கு சகோதரர் உறவுமுறை கொண்ட நோபல் வேதநாயகத்துடன் எனது பெற்றோர் தொடர்பு கொண்டனர். நோபல்அண்ணா பம்பலப்பிட்டியில் புதிய வீட்டு்க்கு மாறி புதுக்கடையில் இருந்த முன்னைய வீட்டை தனது அரசியல் அலுவலகமாக மாற்றியிருந்தார். அவரின் புதுக்கடை வீடு ஒரு மினி அகதிமுகாமாக மான்றப்பட்டிருந்தது. உறவினர்கள் அங்கு ' தஞ்சம் ' அடைந்தார்கள். அதற்கு பொலிஸ் பாதுகாப்பு இருந்தது. கொழும்பு 12 இல் இருந்த நோபல் அண்ணாவின் அந்த வீட்டுக்கு எனது குடும்பத்தை கொண்டுவருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனது குடும்பமும் உறவினர்களில் பெரும்பாலானவர்களும் மெதடிஸ்காரர்கள். ஜூலை 29 வெள்ளிக்கிழமை மூன்று மெதடிஸ் மதகுருமார் எனது குடும்பத்தை புதுக்கடைக்கு கூட்டிச் செல்ல ஒரு வானில் வந்திருந்தனர். வாகனத்தில் நிறைய ஆட்கள் இருந்ததால் தாயாரும் சகோதரியும் அதில் செல்வது என்றும் தந்தையாரும் சகோதரனும் பஸ்ஸில் பின்தொடர்ந்து செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஜூலை 28 வியாழக்கிழமை கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் வன்முறை தணிந்து நிலைவரம் மெல்லமெல்ல வழமைக்கு திரும்புவதைப் போன்று தோன்றியது. ஆனால் திடீரென்று நிலைவரம் மாறியது. மயிரிழையில் உயிர்தப்பினர் விடுதலை புலிகள் கொழும்புக்கு வந்து தாக்குதல் நடத்துவதாக வதந்தி ஒன்று பரவத்தொடங்கியது. இது வதந்தி மாத்திரமே. ஆனால் தமிழர்களை மீண்டும் தாக்குவதற்கு சாக்குப்போக்காக அமைந்தது. ஓரளவு பாதுகாப்பாக இருந்த அகதி முகாம்களை விட்டு வெளியேறிய பல தமிழர்கள் அந்த களங்கம் மிக்க 'கொட்டி தவசவ' வில் (புலிகள் தினத்தில்) கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவை பெருங்கவலைக்குரிய சம்பவங்கள். அந்த வெள்ளிக்கிழமை எனது தந்தையாரும் சகோதரரும் மயிரிழையில் உயிர்தப்பினர். விமான நிலைய முகாமில் இருந்து புறப்பட்டு, புதுக்கடைக்கு வருவதற்கு பஸ்ஸையோ, டாக்சியையோ அல்லது முச்சக்கர வண்டியையயோ பிடிப்பதற்காக அவர்கள் இருவரும் காலி வீதி நோக்கி நடந்துவந்தனர். ஆனால் காலி வீதியை அவர்கள் அடைந்தபோது தமிழர்களை மீண்டும் ஆவேசத்துடன் தேடிக்கொண்டிருந்த குண்டர்கள் கூட்டத்துக்குள் சிக்கிக்கொண்டனர். அந்த களேபரத்தில் தந்தையாரும் சகோதரரும் பிரிந்துவிட்டனர். சகோதரர் வன்முறைக் கும்பலுக்குள் கலந்து சிறுது நேரம் அதன் ஒரு்பகுதியாகவே மாறியிருந்தார். வன்முறைக் கும்பலில் ஒரு பிரிவினர் தமிழ்்அகதிகளை ஒழித்துக்கட்டப்போவதாக அச்சுறுத்திக்கொண்டு விமான நிலையத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். எனது சகோதரரும் அவர்களுடன் சேர்ந்து சுலோகங்களை எழுப்பிக்கொண்டு சென்றார். கும்பல் விமான நிலையத்தை அடைந்ததும் எனது சகோதரர் கும்பலிடமிருந்து நழுவி தனது முகாம் அடையாள அட்டையைக் காண்பித்து முகாமுக்குள் சென்றுவிட்டார். கும்பல் சீற்றத்துடன் அங்கு காவல் கடமையில் இருந்த கடற்படை வீரர்களை நோக்கி தூஷண வார்த்தைகளினால் திட்டியது. ஆனால் கடற்படை வீரர்கள்உறுதியாக நிற்கவே கும்பல் படிப்படியாக கலைந்து சென்றது. எனது தந்தையார் இன்னொரு பிரிவு கும்பலுடன் மோசமான அனுபவத்தைச் சந்தித்தார். சிலர் அவரைத் தமிழர் என்று சந்தேகித்து பயமுறுத்தினர். அவர் சரியான உச்சரிப்புடன் கச்சிதமாக சிங்களத்தை பேசியதால் அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதை குண்டர்களினால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. பௌத்த கதை ஒன்றைக் கூறுமாறு அவர் கேட்கப்பட்டார். தான் ஒரு பௌத்தர் அல்ல கிறிஸ்தவர் என்று உண்மையாக அவர் பதிலளித்தார். சிலர் அவரது கழுத்தை நெரித்தனர்." என்னைப் போன்ற வயோதிபனைக் கொலை செய்வதில் உங்களுக்கு என்ன பிரயோசனம்" என்று மூச்சுவிடக் கஷ்டப்பட்ட வண்ணம் தந்தையார் சிங்களத்தில் அவர்களைக் கேட்டார். அவர்கள் விடுவித்ததும் அவரும் நேரடியாக விமானநிலைய முகாமுக்கே சென்றார். மெதடிஸ் மதகுருமார் மெதடிஸ் மதகுருமாருடன் சென்ற வாகனத்தையும் குண்டர்கள் வழிமறித்து பயமுறுத்தினர். சிங்கள போதகர் பேசி ஒருவாறாக பேசி அவர்களிடமிருந்து விடுபடக்கூடியதாக இருந்தது. ஆனால் கொழும்பு நோக்கிப் போவது ஆபத்து என்ற உணரப்பட்டதால் தசையை மாற்றி வாகனம் மொரட்டுவையைச் சென்னடைந்தது. வார இறுதி முழுவதும் தாயாரும் சகோதரியும் சிங்கள மெதடிஸ் வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர். ஜூலை 31 ஞாயிற்றுக்கிழமை மாலை மெதடிஸ் மதகுருமார் தாயாரையும் சகோதரியையும் புதுக்கடைக்கு கூட்டிவந்தனர். அவர்களுக்கு அங்கு மகிழ்ச்சியும் இன்ப அதிர்ச்சியும் காத்திருந்தது. குருநாகலையில் இருந்த எனது மற்றைய சகோதரி நோபல் அண்ணாவின் பாதுகாப்பான புதுக்கடை வீட்டுக்கு வந்துவிட்டார். குருநாகலையில் அயலில் இருந்த சிங்கள பொலிஸ் அதிகாரியின் உதவியுடன் சகோதரி பொலிஸ் ஜீப் ஒன்றில் அங்கு கடடிவரப்பட்டார். தந்தையாரும் சகோதரரும் கூட புதுக்கடைக்கு திங்களன்று வந்துசேர்ந்தனர். என்னைத் தவிர முழுக் குடும்பமும் மீண்டும் இணைந்துவிட்டது. மேலும் உறவினர்கள் படையெடு்க்கவே புதுக்கடை வீடு நிறைந்துவிட்டது. அதனால் பெண்களையும் சிறுவர்களையும் மாத்திரம் அங்கு தங்கவைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தந்தையாரும் சகோதரனும் அங்கிருந்து வெளியேறி கல்கிசை சென். தோமஸ் கல்லாரியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் தங்குவதற்கு வாய்ப்பைத் தேடிக்கொண்டனர். தாங்கள் சகலரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தாயாரும் சகோதரியும் புதுக்கடையில் எமது நோபல் அண்ணாவின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் எனது குடும்பம் ' த ஐலண்ட் ' ஆசிரிய பீடத்துக்கு அறிவித்தது. மன்னார் மாவட்ட அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து நான் தொலைபேசியில் அவர்களுடன் பேசினேன். கொழும்புக்கு திரும்பினேன் 1983 ஆகஸ்ட் 4 ஆம் திகதி நான் கொழும்புக்கு திரும்பினேன். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு உள்ளூர் நிருபராக இருக்கும் மன்னாரைச் சேர்ந்த முஹமட் என்ற ஒரு பத்திரிகையாளர் நண்பர் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடன் பேசி அவரது சொந்த இடமான கண்டிக்கு என்னை வாகனத்தில் கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்தார். வழியில் பிரச்சினை ஏதாவது வருமென்றால் நான் அவரின் ஒரு முஸ்லிம் உறவினராக என்னைக் காட்டிக் கொள்ளவேண்டும். அந்த நேரம் வன்முறை தணிந்திருந்தது. அதனால் மன்னாரில் இருந்து கண்டிக்கான கார்ப்பயணம் சம்பவம் எதுவுமின்றி இனிதே அமைந்தது. கண்டியில் இருந்து கொழும்பு பஸ் ஒன்றில் ஏறி நேரடியாக கொட்டாஞ்சேனையில் புளூமெண்டால் வீதியில் அமைந்திருக்கும் ' த ஐலண்ட் ' அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தேன். என்னைக் கண்டதும் சகாக்களும் நண்பர்களும் மகிழ்ச்சியடைந்தனர். நான் உடனே வேலையில் மூழ்கி உடனடியாகவே எனது பெயரில் எழுதத் தொடங்கினேன். நடந்துமுடிந்த சம்பவங்களைச் சமாளிப்பதற்கு நான் கையாண்ட வழி அது. பத்திரிகையில் எனது பெயரைக் கண்டதும் நண்பர்களும் என்னுடன் தொடர்புகளைப் பேணுகிறவர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னுடன் பேசத்தொடங்கினர். நான் 'த ஐலண்ட்' வளாகத்திலேயே தங்கியிருந்து அலுவலகத்துக்கு அருகாமையில் இருந்த சிங்கள, முஸ்லிம் உணவகங்களில் சாப்பிட்டேன். சாரதிகளின் விடுதியில் குளித்தேன். செய்திப்பத்திரிகைக் கோவைகளை தலையணையாக பயன்படுத்தி ஆசிரியபீட மேசைகளில் இரவில் நித்திரைகொள்வேன். இரவில் என்னுடன் அஜித்,பிரசாத் மற்றும் குலே ( கே.சி. குலசிங்க ) ஆகியோர் என்னுடன் கூட இருப்பர். நாடு்திரும்பிய ஆசிரியர் விஜிதா யாப்பா அலூவலகத்தில் இரவில் தங்குவதையும் சாதிகளின் விடுதியில் குளிப்பதையும் கண்டு பெரிதும் கவலையடைந்தார். எம்.ஆர்.ஏ. (Moral Re - armament) அமைப்பின் ஒரு நீண்டகால உறுப்பினரான விஜிதா எனது பாதுகாப்பு குறித்து அக்கறைகாட்டினார். அவர் ஒரு மற்றவர்களின் துன்பங்களைக் கண்டு இரங்குகின்ற சுபாவமுடைய உணர்ச்சிபூர்வமான ஒரு ஆன்மா. என் முன்னால் கண் கலங்கி அழுது சில சிங்களவர்களினால் தமிழர்களுக்கு செய்யப்பட்ட கொடுமைக்காக மன்னிப்புக் கேட்டார். விஜிதா தனது மாமாயாரின் வீட்டில் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு அறையில் என்னை தங்கவைத்தார். காலையில் தனது காரில் அலுவலகத்துக்கு என்னை கூட்டிச்சென்று பிறகு இரவில் கொண்டுவந்து இறக்கிவிடுவார்.இது பண்பட்ட ஒரு ஆசிரியரின் நல்லெண்ண வெளிப்பாடு. அவரது மாமியாரும் கூட பரிவிரக்கம் கொண்ட ஒரு பெண்மணி. அவர்களது இரக்ககுணத்தை நான் மெசிசினாலும் , அங்கு தொடர்ந்தும் தங்கியிருப்பது எனக்கு எதோ அசௌகரியமானதாக இருந்தது. அதனால் நான் எனது கொட்டாஞ்சேனை அறைக்கு திரும்பினேன். அது முப்பதுக்கும் அதிகமான தமிழர்கள் தங்கியிருந்த ஒரு பெரிய விடுதியின் ஒரு பகுதி. இப்போது தனந்தனியனானேன். எனது அறையில் தனியாக படுத்திருந்து 'த ஐலண்ட்' ஆசிரிய பீடத்துக்கு தொடர்ந்து வேலைக்குச் சென்று வந்தேன். படிப்படியாக விடுதிக்கு மற்றையவர்களும் வரத்தொடங்கினார்கள். கட்டைவேலி அதேவேளை எனது குடும்பம் இரத்மலானைக்கு திரும்பிச் செல்வதற்கு முயற்சித்தது. ஆனால் எங்களது இருப்பிடம் குறித்து தன்னிடம் அடிக்கடி விசாரிக்கப்படுவதாகவும் அதனால் திரும்பிவரவேண்டாம் என்று வீட்டு உரிமையாளர் எச்சரிக்கை செய்தார். அதனால் தாயாரும் இரு சகோதரிகளும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் உள்ள தாயாரின் பூர்வீக கிராமமான கரவெட்டிக்கு ரயிலில் சென்றார்கள். எமது முன்னாள் வீட்டு உரிமையாளர் எமது தளபாடங்களை அப்புறப்படுத்துமாறு கேட்டதால் சில வாரங்கள் கழித்து அவற்றை நாம் இரத்மலானையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் சென்றோம். தந்தையார் குருநாகலைக்கு திரும்பிய அதேவேளை நானும் சகோதரனும் கொழும்பில் தங்கியிருந்து வேலை செய்தோம். சில மாதங்கள் கழித்து எனது சகோதரி குருநாகலையில் வேலைக்கு வரவேண்டியிருந்தது. அல்லது ஆசிரியை தொழிலை அவர் இழக்கவேண்டி வந்திருக்கும். இந்த சூழ்நிலைகளில் தாயாரும் இரு சகோதரிகளும் யாழ்ப்பாணத்தை விட்டு மீண்டும் குருநாகலைக்கு திரும்பிவந்தனர். இதுவே எனது குடும்பத்தின் கறுப்பு ஜூலை அனுபவம் பற்றிய கதை. இது அந்த நாட்களின் பல கதைகளில் ஒன்று. ஒவ்வொன்று வெவ்வேறு விபரங்களைக் கொண்டவை. ஆனால் சாராம்சத்தில் ஒரே மாதிரியானவை.எமது குடும்பத்தின் கதையை அக உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கூறுவதற்கு நான் முயற்சித்திருக்கிறேன். ஆனால் நினைத்துப் பார்க்கும்போது அது உணர்ச்சிவசப்பட வைப்பதாகவும் வேதனையானதாகவும் இருக்கும். https://www.virakesari.lk/article/189003
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
இலங்கையின் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள இந்திய புலனாய்வு தகவல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து கணக்கெடுப்பு அறிக்கைகளிலும் சஜித் பிரேமதாச முன்னிலை வகிப்பதாக இந்திய புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ரோ புலனாய்வு சேவையினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க வெளியிட்ட அறிவிப்பிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிக்கையில் பிரகாரம் இரண்டாவது இடத்தில் அநுரகுமார திஸாநாயக்கவும் மூன்றாவது இடத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு சூழ்ச்சிகளை அரசாங்கம் கையாண்டு வருவதாகவும் அசோக அபேசிங்க கூறியுள்ளார். https://tamilwin.com/article/elections-of-srilanka-indian-intelligence-info-raw-1721552334
-
ஆனைக்கோட்டையின் தொன்மையான நாகரிகம் பற்றிய உண்மைகள் வெளிவரும் - பேராசிரியர் புஸ்பரட்ணம்
ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழா பிரித்தானிய (UK) சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதிப்பங்களிப்பு, யாழ். மரபுரிமை மையத்தின் அனுசரணையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழா இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வானது, நேற்றைய தினம் (20.07.2024) யாழ். (Jaffna) பண்பாட்டு மையத்தில், வாழ் நாள் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் நடைபெற்றுள்ளது. சான்றிதழ் வழங்கல் இதன்போது, ஆனைக்கோட்டை அகழ்வாய்வு குறித்த அனுபவ பகிர்வும், அகழ்வு பணியில் பணியாற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் முன்னெடுக்கப்பட்டன. மேலும், இந்நிகழ்வில் ஜேர்மன் தொல்லியலாளர் கலாநிதி அரியானி, பிரதம விருந்தினராக மருத்துவ பீட முன்னாள் பீடாதிபதி, தொல்லியல் திணைக்கள முன்னாள் பணிப்பாளர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் மற்றும் கலாசார சுற்றுலாத்துறை மற்றுமம் மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். https://tamilwin.com/article/closing-of-anaikota-archaeological-excavation-1721550513
-
வடமாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
சுகாதார அமைச்சரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லவிடாது தடுத்த உயர் அதிகாரிகள் யார்...! சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தான் செல்ல இருந்ததாகவும் ஆனால் அங்கு செல்ல வேண்டாம் என மருத்துவத்துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாகவும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வெளியிட்ட முகநூல் பதிவில் மேற்கண்ட விடயத்தை ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டுள்ளார். ''சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என அறிந்ததும் நாடளுமன்றில் வைத்து அவரிடம் "சாவகச்சேரி மருத்துவமனையில் ஏதோ பிரச்சினை இருப்பதாக பேசப்படுகிறது. ரமேஷ் பத்திரண உங்கள் விஜயத்தின்போது அங்கு சென்று பாருங்கள். என கூறியிருந்தேன் பிறகு அவர் அங்கு செல்லவில்லை என அறிந்ததும், அலைபேசியில் அழைத்து, "ரமேஷ், யாழில் ஏன் சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்லவில்லை? உங்கள் பயண திட்டத்தில் அது அமையப்பெறவில்லையா? அல்லது நிகழ்ச்சி நிரல் இடையில் மாற்றபட்டதா? அங்கே சென்று பாருங்கள், என்று கூறி இருந்தேனே?" என்று கேட்டேன். இதற்கு பதிலளித்த ரமேஷ் பத்திரண , “சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல இருந்தேன். சிலர் வேண்டாம் என்றார்கள். மருத்துவ துறையை சார்ந்த சிலரே இதனை கூறியிருந்தனர். ஆனால் அந்த மருத்துவமனைக்கு 20மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.'' என அவர் பதிலளித்திருந்தார்.'' என மனோ கணேசன் கூறியுள்ளார். https://www.facebook.com/ManoGanesanDPF/posts/1039221627562935?ref=embed_post https://tamilwin.com/article/health-minister-for-savagacherry-hospital-1721541157?itm_source=article
-
மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
மகளிர் ரி20 ஆசிய கிண்ணத்தில் விஷ்மி அபாரம்: பங்களாதேஷை 7 விக்கெட்களால் வென்றது இலங்கை 20 JUL, 2024 | 10:36 PM (நெவில் அன்தனி) ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (20) நடைபெற்ற இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான பி குழு மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது. உதேஷிக்கா ப்ரபோதனி, இனோஷி ப்ரியதர்ஷனி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் விஷ்மி குணரட்ன குவித்த அரைச் சதமும் இலங்கையின் வெற்றியை இலகுவாக்கின. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது. நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய நிகார் சுல்தானா ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட ஷொர்ணா அக்தர் 25 ஓட்டங்களையும் ரபீயா கான் 10 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இனோஷி ப்ரியதர்ஷனி 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் உதேஷிக்கா ப்ரபோதனி ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. மொத்த எண்ணிக்கை 32 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவி சமரி அத்தபத்து 12 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஆனால், நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்னவும் ஹர்ஷிதா சமரவிக்ரமவும் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு பலம் சேர்த்துக்கொடுத்தனர். விஷ்மி குணரட்ன 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 51 ஓட்டங்களையும் ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ஓட்டங்களையும் பெற்றனர். கவிஷா டில்ஹாரி 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஆட்டநாயகி: விஷ்மி குணரட்ன https://www.virakesari.lk/article/188969
-
கூட்டமைப்பை மீள் உருவாக்க வேண்டும் - கூட்டணியின் மாநாட்டில் சிறிதரன் அழைப்பு
Published By: VISHNU 21 JUL, 2024 | 07:58 PM கூட்டமைப்பினை மீள உருவாக்க வேண்டும். அது தேர்தலுக்கான கூட்டமைப்பு என்பதைத் தாண்டி தேசத்துக்கான கூட்டமைப்பாக கட்டியெழுப்பப்பட வேண்டும், அதற்கு தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும் என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றுகையில்; கடந்த எட்டுத் தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தமிழர்களின் சுதந்திரத்துக்காக, அவர்களின் இறையாண்மையை நிலை நிறுத்துவதற்காக, சிங்கள பௌத்த ஒடுக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக, இரத்தமும் சதையுமாக நடைபெற்று வருகின்ற போராட்ட வலியின் நீட்சியில் உருவான, ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான அரசியல் இயக்கங்களில் ஒன்றாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டுள்ளது தமிழ் மக்கள் கூட்டணி. ஈழத்தமிழினத்தின் இறையாண்மைக்கு நீதிவேண்டி நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப் போராட்டங்களையும், அபிலாசை வெளிப்பாடுகளையும் சிங்கள தேசம் எப்போது புரிந்துகொள்ளத் தலைப்படுகிறதோ, அப்போதுதான் அர்த்தம் மிகுந்த இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும். அரச இயந்திரத்தின் கொள்கை வகுப்பினையும், இனவாத நோக்கில் கட்டமைக்கப்பட்ட அதிகார பீடங்களின் செயல்முறைகளையும் நாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதில் தெளிவுற்றுள்ள போதும், அடிப்படை விருப்புகளைக் கோருகின்ற எமது அரசியல் உரிமையின் மீது போர் தொடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை, ‘தமிழ்த்தேசியம்’ என்னும் ஓர் குடையின் கீழ் நின்று கூட்டாய் எதிர்க்கும் திராணியை உருவாக்குவதில் தான் ஈழத்தமிழினம் இன்று பெருந்தோல்வியைச் சந்தித்திருக்கிறது. எட்டு தசாப்தங்கள் கடந்தும், நீர்த்துப்போகாத அரசியல் அபிலாசைகளைக் கொண்டிருக்கின்ற ஈழத்தமிழர்களின், அடிப்படை மற்றும் அரசியல் உரித்துகளை அங்கீகரித்து, அர்த்தமுள்ள அரசியல் அதிகாரப் பகிர்வின் மூலம் இனச் சமத்துவத்தை அங்கீகரிக்கின்ற, பொருளாதார சுபீட்சமுள்ள இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு, இலங்கை அரசு தொடர்ந்தும் தவறி வருகிறது என்பதை பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகள் உணர்ந்துகொள்ளும் காலமும் நேரமும் நெருங்கி வந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இத்தகையதோர் சாதகத்தன்மை மிக்க அரசியற் சூழமைவில் ஈழத்தமிழர்களின் குரலை, தமிழ்த்தேசியம் என்னும் இயங்குதளத்தில் நின்று கூட்டுக் குரலாக ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமானது. தமிழ்த்தேசிய அரசியலில் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளைத் தீர்மானித்தல், சர்வதேச உறவுகளை மெய்நிலையில் வலுப்படுத்தல், இளைய தலைமுறை அரசியலாளர்களை வலுப்படுத்தல், மக்களை அரசியல்மயப்படுத்தல், மக்களின் உணர்ச்சியையும் திரட்சியையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்தல் உள்ளிட்ட அரசியற் செல்நெறிகளை செயலுருப்பெறச் செய்ய வேண்டியுள்ளது. மேற்கூறிய அத்தனையையும், இனநலன் ஒன்றையே நோக்காகக் கொண்ட நல்ல தலைமைத்துவத்தால் மட்டுமே ஏற்படுத்த முடியும். வினைத்திறனான தலைமைப் பண்புகளுக்குள் இவை அனைத்தும் அடங்கும். இப்போது நம் இனத்துக்கு இருக்கும் மிகப்பெரிய இடைவெளி ஆதர்சனத் தலைமையற்ற தன்மையே. சனத்திரட்சியை உருவாக்;கக்கூடிய, ஜனவசியம் மிக்க, மிக நேர்த்தியான தலைமைத்துவத்தை யாராலும் சரியான முறையில் கொடுக்க முடியவில்லை. அல்லது அத்தகைய அணுகுமுறைகள் குறித்து சிந்திக்கவில்லை. ஆனால் அதற்கான களச்சூழலை உருவாக்க வேண்டியது காலப் பெரும் பணியாக எம்முன் உள்ளதை நாம் உணரத் தலைப்பட வேண்டும். நம் எதிரிகள் ஒரு காலத்தில் நம் தலைவர்களை அழித்தார்கள். இன்று தலைவர்கள் உருவாகுவதற்கான சூழலை அழிக்கின்றார்கள். பொது எதிரியை எதிர்கொள்வதற்காக எமக்குள் உள்ள எதிர்ப்புணர்வுகளை புறம்தள்ளி ஒரு பொதுவான அரசியல் இயக்கத்துக்குள் நாம் நிலமும் புலமுமாக இணைய வேண்டும். இந்தப் புள்ளியில் தான் யதார்த்தப் புறநிலைகளைப் புரிந்தவர்களாக, தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தாது இன நலன்களை முன்னிறுத்தும் ஓர் கூட்டுத் தலைமையின் உருவாக்கம் குறித்தும், அத்தகைய நேர்கோட்டில் இயங்கும் ஒவ்வொரு கட்சிகளினதும் மரபார்ந்த தனித்துவங்களைப் பேணி ஒற்றுமைக்குள் வேற்றுமையும் வேற்றுமைக்குள் ஒற்றுமையும் காணுவது குறித்தும், கூட்டமைப்பை மீள உருவாக்குவது குறித்தும், அவ்வாறு மீளுருவாக்கம் பெறும் கூட்டமைப்பு என்பது தேர்தலுக்கான கூட்டமைப்பு என்பதைத் தாண்டி தேசத்துக்கான கூட்டமைப்பாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும், அதற்கு தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இந்த மாநாட்டின் ஊடாக நான் அழைப்பு விடுக்கிறேன். இன்று தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றன. இங்கு தான் உரிமை அரசியலை சலுகை அரசியல் வெல்கிறது. இந்த நிலைமையைச் சீர்செய்ய தமிழ் தேசிய அரசியல் மறுசீரமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். இனத்துவ அரசியலை முன்னெடுக்கும் சமநேரத்தில், தேர்தல் அரசியலையும் எதிர்கொள்ள வேண்டிய தேவை எம்மிடத்தே திணிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல்கள் என்பதில் உள்ள அதிகார சபைகள் தேர்தல் - இளைய அரசியலாளர்களுக்கான பயில்களமாகவும் மாகாண சபைத் தேர்தல்கள் என்பது அறிவும் ஆற்றலும் மிக்க துறைசார் விற்பன்னர்களை பயன்கொள்ளும் களமாகவும், பாராளுமன்றத் தேர்தல் என்பது இனத்தின் அபிலாசைகளை சர்வதேச அரங்குக்கு கொண்டு செல்லும் விரும்பும் வாண்மைத்துவமும் மிக்க தலைவர்களுக்கான களமாகவும் அமைய வேண்டும். இந்த சிந்தனைத் தெளிவு கட்சி ரீதியாக கட்டியெழுப்பப்பட வேண்டும். இவற்றைத் தாண்டி, நிலத்தையும் புலத்தையும் நாம் உணர்ச்சிகளால் மட்டுமே பிணைத்து வைத்துள்ளோம். இது அறிவு மைய பிணைப்பாக மாறவேண்டும். இந்த விடயத்தில் உள்ள பலம் பலவீனங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய காலத்தேவை எழுந்துள்ளது. தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்கால நிலைத்திருப்பு நோக்கியும் தமிழினத்தினுடைய விடுதலை வேணவாக்களை முன்கொண்டு செல்வதற்கும் நிலத்திலும் புலத்திலும், தாய்த் தமிழகத்திலும் வாழ் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஈழத்தமிழர்கள் எவ்வாறு கொள்கை வேறுபாடுகளோடும் அரசியல் சித்தாந்த வேறுபாடுகளோடும் திசைவேறாக பிரிந்திருக்கிறார்களோ அதேபோன்றதொரு பிரிவினைகள் மிகுந்த நிலை தான் புலத்திலும் வேரோடியிருக்கிறது. விடுதலை வேண்டிப் பயணிக்கும் எங்கள் இனம், தன் இலக்கை அடைந்துகொள்ளும் எதிர்காலப் பயணங்களில் இதனால் பல்வேறு நெருக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும். ஆழமாக நோக்கினால் ஈழத் தமிழ்த் தேசிய இனம் தொடர்ந்தும் தொடர்ந்தும் தன் வல்லமைகள் அத்தனையையும் இழந்து கொண்டேயிருக்கின்றது. மாறாக எதையும் பெறவில்லை. அது அரசியல் தீர்வாக இருக்கலாம். நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்தியாகவும் இருக்கலாம். கருதத்தக்க எதையும் சுதந்திரத்துக்குப் பின் எங்கள் இனம் பெறவேயில்லை. இனத்தின் விடுதலை குறித்த சிந்தனைகள் வலுக்குன்றத் தொடங்கியிருக்கும் எங்களின் இரண்டாம் தலைமுறையினரிடத்தே, எங்கள் அறப்போர் குறித்த புரிதல்கள் குறுகியிருப்பதை அவதானிக்க முடிகிறது. தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரை அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடிய இந்த நாட்டின் ஜனாதிபதி, நாற்பது வயதுக்கு உட்பட்ட இளைய தலைமுறையினர் அரசியல் நாட்டமற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற கருத்தை மிக நாசூக்காக பதிவுசெய்திருந்தார். ஒருவகையில் பார்த்தால் அரசியற் தெளிவும் கொள்கைப் பிடிப்பும் மிக்க இளையோரை வழிப்படுத்துகின்ற, அரசியல் நெறிப்படுத்துகின்ற சமூகப் பொறுப்பிலிருந்து நாம் தவறிவருகிறோம் என்பதை உணர முடிகிறது. ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் எவை என்ற கேள்வியை எங்கள் இளைய தலைமுறையை நோக்கி எழுப்பினால், நிலப்பறிப்பு, காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை என்கின்ற மூன்று தளநிலைகளுமே அவர்களால் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. ஆனால் அந்த மூன்று பிரச்சினைகளும் இனவிடுதலைப் போருக்கான களத்தைத் திறக்கவில்லை என்கின்ற பொதுப் புரிதல் இன்று எங்களிடத்தே இல்லை. பலாலி விளிம்பு முதல் பொத்துவில் வரை தமிழர்களின் மரபுவழித் தாயகமாக எங்கள் வசமிருந்தபோதே எங்கள் இனத்தின் அறப்போர் ஆரம்பித்திருந்தது என்பதையும், மேற்சொன்ன காரணங்கள் அந்தப் போர் சார்ந்து பின்வந்த நாட்களில் வலிந்து திணிக்கப்பட்ட துணைக்காரணங்கள் தாம் என்பதையும் உணரத் தலைப்பட்டால் தான், இனவிடுதலைப் போரின் அறநிலை சார் அடுத்த களங்களை உருவாக்க முடியும். ஆகவே, கொள்கைரீதியாக ஒன்றுபட்டுச் செயற்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்தவாறு புலம்பெயர் தேசக் கட்டமைப்புகளுடனும் இணைந்த வகையில் தமிழர்களின் தாகம் வெல்ல உழைப்பதே இங்குள்ள ஒவ்வொருவரினதும் முதன்மைக் கடமையாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். எமது சிந்தனைகளை மீள் வடிவமைப்புக்கு கொண்டுவருவதன் மூலம் காலத்தின் வேகத்துடனும், பூகோள மாற்றங்களுடனும் எமது மக்களின் அபிலாசைத் தளங்களிலிருந்து தடம்புரளாது பயணிக்க வேண்டியுள்ளது. இந்த நெருக்கடிமிக்க சூழலை எளிதாகக் கையாள்வதாயின், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், புலத்திலிருந்தவாறு இனத்தின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் உறவுகளும் ஒருங்குசேர தம் அரசியற் பயணத்தை முன்கொண்டு செல்வதற்கான எதிர்கால வழி வரைபடம் ஒன்றையும் அதுசார் கொள்கை வகுப்புகளையும் உருவாக்க வேண்டும். அத்தகையதோர் தளத்தில் நின்று எல்லாத் தரப்பினரையும் இணைத்துச் செயலாற்றுவதன் தேவையுணர்ந்த ஒருவனாக, அந்தத் தளத்தின் இணைப்புப்பாலமாக இருந்து என் எல்லா இயலுமைகளைக் கடந்தும் ஈழத்தமிழினத்தின் அரசியல் வேட்கையைச் சுமந்த பயணத்தின் பங்குதாரராக செயலாற்றுவதில் எனக்கிருக்கும் விருப்பையும், கடமையையும் நான் இவ்விடத்தில் வெளிப்படையாகவே பதிவுசெய்து நிறைவுசெய்கிறேன் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/189032
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு இடமில்லை - ராேஹன ஹெட்டியாரச்சி Published By: VISHNU 21 JUL, 2024 | 08:05 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. என்றாலும் அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஜனாதிபதி தேர்தலை பிற்படுத்துவதற்கோ ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கோ எந்த இடமும் இல்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராேஹன ஹெட்டிஆரச்சி தெரிவித்தார். அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (21) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் அவரசமாக அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளதன் மூலம் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. என்றாலும் 22ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதி தேர்தலை பிற்படுத்துவதற்கோ ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கோ எந்த இடமும் இல்லை என்பதை தெளிவாக கூறமுடியும். சர்வஜன வாக்கெடுப்பு சட்டத்தின் பிரகாரம் சர்வஜன வாக்கெடுப்பொன்று நீதிமன்றம் ஊடாக வந்தாலும் ஜனாதிபதி அதுதொடர்பான கட்டளையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோன்று சர்வஜன வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி கட்டளை பிரப்பித்து ஒரு மாதத்துக்கு பின்னரே சர்வஜன வாக்கெடுப்புக்கு திகதி அறிவிக்கப்பட வேண்டும். அதனால் ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தற்போது நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த வாரத்துக்குள் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். செப்டம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும். அதனால் 22ஆம் திருத்தம் இந்த காலப்பகுதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும், அதனை அனுமதித்துக்கொள்ள இருக்கும் கால இடைவெளியை பார்க்கும்போது, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல எந்த இடம்பாடும் இல்லை என்பது தெளிவாகிறது.அதனால் 22ஆம் திருத்தம் ஜனாதிபதி தேர்தலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. இது தொடர்பாக மக்கள் எந்த சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை. அதேநேரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தெளிவாக இரண்டு தடவைகள் தீர்ப்பளித்திருக்கிறது. அதனால் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பது உறுதியாக இருக்கிறது. அதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பு திருத்தம் பாதிப்பாக அமையாது. அவ்வாறான நிலையில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் தற்போதைய சூழலில் 22ஆம் திருத்தத்தை கொண்டுவராமல் இருந்திருக்க வேண்டும். இதனை அடுத்துவரும் புதிய அரசாங்கத்துக்கு இடமளித்திருக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/189034
-
இந்த நான்கு வகை புற்றுநோயாளிகளின் ஆயுளை நீட்டிக்கும் புதிய சிகிச்சை முறைகள் பற்றித் தெரியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்ட்ரே பீர்நாத் பதவி, பிபிசி செய்தி பிரேசில் 21 ஜூலை 2024, 11:06 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் புற்றுநோய்க்கான முக்கிய அறிவியல் மாநாட்டில் சமீபத்திய ஆண்டுகளில் சந்தைப்படுத்தப்பட்ட, நன்கு அறியப்பட்ட மருந்துகளை முன்னிலைப்படுத்தியுள்ளனர். பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் இந்த மருந்துகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற அமெரிக்கன் சொசைட்டி அமெரிக்கப் புற்றுநோய் மருத்துவக் கழகம் (ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி - American Society of Clinical Oncology - ASCO), 2024-ஆம் ஆண்டு ஆண்டு மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறைகளை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த முக்கிய நிகழ்வில் முன்வைக்கப்பட்ட ஆராய்ச்சி வரைவுகள், உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் தீவிர தோல் புற்றுநோயான மெலனோமாவை சரிசெய்வதற்கான வெவ்வேறு அணுகுமுறைகளை முன்மொழிந்தன. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சில பூர்த்தி செய்யப்படாத பிரச்னைகளுக்கு அவை தீர்வுகளை வழங்குகின்றன. பிபிசி நியூஸ் பிரேசிலுக்கு பேட்டியளித்த மருத்துவர்கள், இவை இனி கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் இந்த நோய்களுக்கான சிகிச்சை முறைகளை மாற்றியமைக்கும் என்றனர். வல்லுநர்கள் சிலர் ஆணுறுப்பு புற்றுநோய்கான சிகிச்சை சில முன்மொழிவுகளை முன்வைத்தனர். பிரேசிலில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனை, பொதுவெளியில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் ஆணுறுப்புப் புற்று நோய்க்கான புதிய சிகிச்சை முறையை பரிந்துரைக்கிறது. பிபிசி நியூஸ் பிரேசில் 'ASCO 2024’ மாநாட்டில் பங்குபெற்ற மருத்துவர்களிடம் பேசியது. மாநாட்டில் விவாதிக்கப்பட்ட புற்றுநோய் பற்றிய நான்கு முக்கிய தகவல்கள் பற்றி கீழே சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES 1. நுரையீரல் புற்றுநோயாளிகள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிப்பு நுரையீரல் புற்றுநோயின் மிகவும் பொதுவான வகையால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே நிலை 3-ல் இருந்தாலும், நோய்த் தொற்று உடலின் மற்ற பகுதிகளுக்கு இன்னும் பரவவில்லை என்றால், அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை மிகவும் குறைவு. இந்தச் சந்தர்ப்பங்களில், வழக்கமான சிகிச்சை முறைகளான கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை பரிந்துரைக்கப்படும். 2017-ஆம் ஆண்டு, உலகெங்கிலும் பல நிறுவனங்களால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், நுரையீரல் புற்றுநோயின் மூன்றாவது நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, நோய் எதிர்ப்பு சிகிச்சை ( immunotherapy) அளித்தால், அவர்களின் ஆயுட்காலம் கணிசமாக அதிகரிப்பது தெரிய வந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நோயுற்ற செல்களை அழிக்கும் முறை 'இம்யூனோதெரபி' என்பது ஒப்பீட்டளவில் புதிய சிகிச்சை முறையாகும், இது புற்றுநோய்க் கட்டியை நேரடியாக தாக்காது, மாறாக நோயாளியின் சொந்த நோய் எதிர்ப்பு மண்டலமே நோயுற்ற செல்களை அடையாளம் கண்டு அழிக்க தூண்டுகிறது. அப்போதிருந்து, நோய் எதிர்ப்பு சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை வழக்கமான சிகிச்சைத் திட்டமாக ஒன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. "இருப்பினும், உலகம் முழுவதும், நோய்திர்ப்பு சிகிச்சை மூலம் பயனடையாத நோயாளிகள் உள்ளனர். அவர்கள் உடலில் இந்த சிகிச்சை முறையால் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை," என்று 'Oncoclínicas & Co’ நிறுவனத்தின் தொழில்நுட்ப மருத்துவ இயக்குநர் மரியானா லலோனி எடுத்துரைக்கிறார். EGFR மரபணுவில் பிறழ்வு உள்ளவர்களுக்கு, இந்தச் சிகிச்சை முறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மருத்துவர் குறிப்பிடுகிறார். EGFR மரபணுவில் பிறழ்வு என்பது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15% முதல் 25% சதவீதத்தினரின் டி.என்.ஏ-வில் காணப்படும் ஒரு நிலை ஆகும். அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி (ASCO) மாநாட்டில் பகிரப்பட்ட ஓர் ஆய்வு, EGFR மரபணுவில் பிறழ்வு உள்ள நோயாளிகளுக்கு துல்லியமானத் தீர்வுகளைக் கண்டறிய முயன்றது. அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் மருந்தான 'ஓசிமெர்டினிப்' (Osimertinib) மூலம், EGFR மரபணுவில் உள்ள பிறழ்வுடன் மூன்றாவது நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆயுளை நீட்டிக்க முடியுமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்தனர். இந்த ஆய்வு முடிவுகள் ஊக்கமளிப்பதாகவும் எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குவதாகவும் லலோனி நம்புகிறார். இருப்பினும், இன்னும் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் உள்ளன என்று அவர் நம்புகிறார். "கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையுடன் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு அல்லது நோய் முன்னேற்றம் அடையும் போது உடனடியாக இந்த மருந்தைப் பயன்படுத்துவது சிறந்ததா என்பதை பற்றி நாங்கள் ஆய்வு செய்து தெரிந்து கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES 2. உணவுக்குழாய் புற்றுநோய் 'உணவுக்குழாய் அடினோகார்சினோமா' எனப்படும் உணவுக்குழாயில் ஏற்படும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பற்றிய விவாதங்கள் அந்த மாநாட்டில் நடந்தன. ஒருபுறம், மருத்துவர்கள் குழு 'நியோட்ஜுவண்ட்' (neoadjuvant) எனப்படும் சிகிச்சை முறையைப் பரிந்துரைத்தது. புற்றுநோய்க் கட்டியை அகற்றுவதற்காக நோயாளியை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு முன், கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை மேற்கொள்வதை இந்தத் திட்டம் கொண்டுள்ளது. மறுபுறம், சில நிபுணர்கள் பெரியோபரேடிவ் (perioperative) சிகிச்சையை பரிந்துரைக்கின்றனர். இது அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் கீமோதெரபி செய்யும் செயல்முறையை உள்ளடக்கியது. "எங்களிடம் இருந்த தரவுகள் இரண்டு சிகிச்சை முறைகளில் எது சிறந்தது என்பதை வரையறுக்கவில்லை. எனவே ஒன்று அல்லது மற்றொன்றைத் தேர்ந்தெடுப்பது அந்தந்தமருத்துவ நிறுவனத்தின் முடிவைப் பொறுத்தது," என்கிறார் ஆன்கோலாஜியா டி'ஓர் மையத்தின் தலைவர் டாக்டர் பாலோ ஹாஃப். இந்தக் குழப்பத்தைப் போக்க, ஜெர்மனியில் உள்ள பல மையங்களின் ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு அணுகுமுறைகளை ஒப்பிட முடிவு செய்தனர். பெறப்பட்ட முடிவுகள் பெரியோபரேடிவ் (perioperative) சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலித்தன. இந்த பெரியோபரேடிவ் சிகிச்சைக்கு உட்பட்ட நோயாளிகள் சராசரியாக 66 மாதங்கள் உயிர்வாழ்ந்தனர். நியோட்ஜுவண்ட் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 37 மாதங்கள் உயிர் பிழைத்தனர். இந்த குழுக்களிடையே கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது. இதன் விளைவாக, நோய் ஏற்கனவே தீவிரமடைந்திருந்தாலும், உடலின் மற்ற பகுதிகளுக்கு இன்னும் பரவாமல் இருக்கும் போது, பெரியோபரேடிவ் (perioperative) சிகிச்சை மருத்துவர்களுக்கு முக்கியத் தேர்வாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES 3. தோல் புற்றுநோய்க்கு மருந்துகளால் என்ன பலன்? மெலனோமா தோல் புற்றுநோயை (ஒரு வகை தோல் புற்றுநோய்) பொறுத்தவரை, சிகிச்சை முறையின் வரிசை பற்றிய விவாதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது அரிதாக வரும் தோல் புற்றுநோய் என்றாலும், அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. பல டச்சு நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கிரேடு 3 மெலனோமாவிற்கு வெவ்வேறு சிகிச்சை முறைகளை சோதித்தனர், நோய் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவவில்லை என்னும் சூழலில் அறுவை சிகிச்சை சாத்தியமாகும். இந்த சந்தர்ப்பங்களில், நிணநீர் முனைகளை (lymph nodes) அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. புற்றுநோய்க் கட்டிகளைக் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அக்குள், கழுத்து அல்லது இடுப்பு பகுதியில் அமைந்துள்ள நிணநீர் மண்டலத்தின் கட்டமைப்புகளை அகற்றுகின்றனர். இந்த ஆய்வில் முன்வைக்கப்பட்ட பெரிய கேள்வி: அறுவை சிகிச்சைக்கு முன் அல்லது பின் மருந்து சிகிச்சையைத் தொடங்குவது சிறந்ததா? இந்தக் கேள்விக்கான விடையை கண்டுபிடிக்க, விஞ்ஞானிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 423 பேரை இரண்டு குழுக்களாகப் பிரித்தனர். முதல் குழு ஐபிலிமுமாப் மற்றும் நிவோலுமாப் என்னும் இரண்டு இம்யூனோதெரபி சிகிச்சைகளைப் பெற்றனர். பின்னர் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த செயல்முறைக்குப் பிறகு நல்ல முன்னேற்றத்தை கண்டவர்கள், அதாவது, 10%-க்கும் குறைவான சாத்தியமான நோயுற்ற செல்களைக் கொண்டிருந்தவர்கள் மேற்கொண்டு எந்த உயர் சிகிச்சையையும் பெற வேண்டியிருக்கவில்லை. 10%-க்கும் அதிகமான நோயுற்ற செல்களை கொண்டிருந்தவர்கள் மருந்துகளின் புதிய சுழற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இரண்டாவது குழு நிலையான சிகிச்சைக்கு உட்பட்டது: நோயாளிகள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர், பின்னர் நிவோலுமாபின் என்னும் 12 மாத சுழற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 12 மாத ஆய்வுக்குப் பிறகு, அறுவை சிகிச்சைக்கு முன் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை மேற்கொண்டது சிறந்த பலன் தந்தது என்பதை நிபுணர்கள் கண்டறிந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES 4) ஆணுறுப்பு புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை சோதனை ஒவ்வோர் ஆண்டும், உலகளவில் 35,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் ஆணுறுப்பு புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். "இது பொதுவாக மிகவும் தாமதமான கட்டத்தில் கண்டறியப்படும் ஒரு நோயாகும், தவறான புரிதல் தான் இதற்கு முக்கிய காரணம்," என்று வென்சர் அல் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனரான புற்றுநோயியல் நிபுணர் பெர்னாண்டோ மாலுஃப் கூறுகிறார். இந்தப் புற்றுநோய்க் கட்டியின் வளர்ச்சிக்கு மோசமான சுகாதாரம் கொண்ட வாழ்க்கை முறை முக்கிய காரணங்களில் ஒன்று. மனித பாப்பிலோமா வைரஸுக்கு (HPV) தடுப்பூசி இல்லாதது மற்றொரு காரணம். பொதுவாக, இந்த சிகிச்சையில் ஆணுறுப்பு அறுவை சிகிச்சைகள் மற்றும் கீமோதெரபி மேற்கொள்ளப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிகின்றனர். இது தனிநபரின் ஆயுளை கணிசமாக நீடிக்காது. மேலும் நோய்த்தொற்று பொதுவாக சிறிது காலத்தில் மீண்டும் தோன்றும். "ஆணுறுப்பு புற்றுநோய்க்கான சிகிச்சைகள் நீண்ட காலமாக உள்ளன. இந்த வழிமுறைகளை மாற்றியமைக்க எந்தச் சமீபத்திய முன்னேற்றமும் எங்களிடம் இல்லை," என்று மாலுஃப் கூறுகிறார். இந்தச் சூழ்நிலையை மாற்ற புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரேசிலிய புற்றுநோயியல் நிபுணர் மாலுஃப், லத்தீன் அமெரிக்க கூட்டுறவு புற்றுநோயியல் குழுவின் (லாகோக்) ஆய்வுக்கு தலைமை தாங்கினார். கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி பயன்பாடுகளைக் கொண்ட ஒரு புதிய சிகிச்சை கலவையை சோதிப்பதே இதன் நோக்கம். ஆணுறுப்பு புற்றுநோய் கட்டியுள்ள 33 ஆண்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்குட்படுத்தினர். ஒவ்வொரு ஒன்றரை மாதங்களுக்கும் இமேஜிங் சோதனைகள் மூலம் நோயின் தீவிரத்தை கண்காணித்தனர். ASCO 2024 மாநாட்டில் வழங்கப்பட்ட தரவு, 75% நோயாளிகள் மத்தியில் ஓரளவு கட்டி சுருங்குவது பதிவாகியுள்ளது. அவர்களில் 39.4% பேர் குறிப்பிடத்தக்கதாக பலனை அனுபவித்துள்ளனர். "நீண்ட கால நிவாரணத்தைப் பராமரிப்பதோடு மட்டுமல்லாமல், சிகிச்சை பெற்ற நோயாளிகள் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தனர். கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி மருந்துகளின் கலவையை நன்கு பொறுத்துக் கொண்டனர்," என்று அவர் மேலும் கூறினார். புற்றுநோயியல் நிபுணரின் கூற்றுப்படி, பிரேசிலில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி புதிய வழிகளை திறக்கிறது மற்றும் ஆணுறுப்பு புற்றுநோய்க்கான மருத்துவ நடைமுறையில் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c97dvwnq923o
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
Breaking நல்லூரில் உண்ணாவிரத போராட்டம் : வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு
-
உலகம் முழுவதும் 85 லட்சம் கணினிகள் முடக்கம் - தமிழ்நாட்டில் ஐ.டி. நிறுவனங்களில் என்ன பாதிப்பு?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 21 ஜூலை 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு' (IT outage), கடந்த இரண்டு நாட்களாக உலகம் முழுவதும் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த நவீன யுகத்தில் ஒரு சிறு தொழில்நுட்ப தவறு கூட நமது அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதற்கு வெள்ளிக்கிழமை நடந்தவை ஒரு உதாரணம். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது விமான சேவைகள் தான். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன. வங்கித் துறை, பங்குச் சந்தை மற்றும் மருத்துவத்துறையும் இதனால் பாதிக்கப்பட்டது. சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்ட்ரைக் இந்தச் செயலிழப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதனால் உலகம் முழுவதும் 85 லட்சம் விண்டோஸ் கணினிகள் செயலிழந்தன என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் விமான சேவைகள், வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ப்ளூ ஸ்க்ரீன் எரர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹாங்காங் விமான நிலையத்தின் கணினித் திரையில் தோன்றும் 'ப்ளூ ஸ்க்ரீன் எரர்' கடந்த வெள்ளிக்கிழமை காலை தங்களது கணினிகளை ஆன் செய்த விண்டோஸ் பயனர்கள் பலரும் திரையில் தோன்றிய ப்ளூ ஸ்க்ரீன் எரர் 'Blue Screen of Death (BSOD)' கண்டு சற்று திகைத்துப்போயினர். 'உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன் பின்னர், ரீஸ்டார்ட் செய்யப்படும்’ என அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஐ.டி துறையை எவ்வாறு பாதித்தது என்பது குறித்த விவரங்களை தமிழ்நாட்டின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர். காக்னிசன்ட் நிறுவனத்தில் பணிபுரியும் அஜய் பேசுகையில், "வெள்ளிக்கிழமை என்றவுடன் சரி சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டால், இரண்டு நாட்கள் விடுமுறை என்ற எண்ணத்தில் கணினியை ஆன் செய்தேன். எங்கள் கணினி திரைகளில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் ஏற்படவில்லை, காரணம் நாங்கள் இணைய சர்வர் மூலம் மற்றொரு கணினியில் தான் லாக்-இன் செய்வோம். ஆனால், அவ்வாறு லாக்-இன் செய்வதில் தான் சிக்கல் ஏற்பட்டது. 5 முதல் ஆறு மணி நேரம் வரை எங்களால் பணிபுரிய முடியவில்லை" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "முதலில் எங்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்னை என்று நினைத்தோம். பின்னர் செய்தியைப் பார்த்த பிறகு உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது புரிந்தது. எங்களது கிளையண்ட் (Client) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் சுகாதார நிறுவனம். 5 மணி நேரம் தாமதமானதால் அதற்கு ஈடாக இரவு வரை பணிபுரிந்தோம்." என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாங்காக் விமான நிலையத்தில் குவிந்துள்ள பயணிகள் தங்கள் குழுவுக்கு நஷ்டம் என்று பார்க்கும் போது மனித உழைப்பும், நேரமும் தான் என்கிறார் அஜய். "ஆனால் வங்கித்துறை, பங்குச் சந்தைகள் போன்றவற்றில் ஒவ்வொரு நொடியும் பணம் சார்ந்தது. எனவே வேலை சரியான நேரத்தில் நடக்கவில்லை என்பதால் அதில் தான் நிதி சார்ந்து அதிக பாதிப்பு ஏற்பட்டது" என்கிறார். "வழக்கமாக வெள்ளிக்கிழமை அதிக வேலை இருக்கும், பரபரவென்று அலுவலகம் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் அன்று காலை முழுவதும் வேலையில்லாமல் இருந்தது, பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியார் வரமால் போனால் கிடைக்கும் ஒரு நிம்மதி உணர்வு தோன்றியது. அதேவேளை பொதுமக்கள் பலரும் இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் அவதிப்பட்டதை செய்திகளில் கண்டபோது வருத்தமாகவும் இருந்தது" என்கிறார் அஜய். 'லினக்ஸ் பயன்படுத்துவதால் பாதிப்பில்லை' பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் சிவசங்கர் இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் தங்களது நிறுவனத்தின் 20 சதவீத பணிகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் கூறினார். "காரணம் எங்கள் நிறுவனம் பெரும்பாலும் லினக்ஸ் இயங்குதளத்தை சார்ந்து உள்ளது. அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் போல பயன்படுத்த எளிதாக இருக்காது" என்று கூறுகிறார். சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்ட்ரைக் (Crowdstrike) இந்தச் செயலிழப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. மைக்ரோசாஃப்ட் வின்டோஸில் செயல்படும் கணினி உள்ளிட்ட கருவிகளில் வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உருவாக்கப்பட்ட 'ஃபால்கன் ஆண்டி-வைரஸ்' (Falcon antivirus software) மென்பொருளைப் புதுப்பித்த போது (update) இந்தச் செயலிழப்பு நிகழ்ந்துள்ளது என்கிறது அந்த நிறுவனம். "அந்த ஆஆன்ட்டி-வைரஸ் மென்பொருள் அடிக்கடி தானாகவே புதுப்பிக்கப்படும். கடைசி அப்டேட் (Update) வியாழன் இரவு வந்தது. வெள்ளிக்கிழமை காலை எல்லா கணினிகளிலும் ப்ளூ ஸ்க்ரீன் எரர் தோன்றியவுடன் பிரச்னை புரிந்துவிட்டது. ஏனென்றால் எங்களது கிளையண்ட் ஒரு பிரபலமான வெளிநாட்டு வங்கி, ஒவ்வொரு நிமிடமும் நடக்கும் பல நிதிப் பரிவர்த்தனைகள் இதனால் பாதிக்கப்பட்டன." என்று கூறுகிறார் மென்பொறியாளர் மனோஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் மனோஜ், இந்த தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பால் தங்களது நிறுவனத்திற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஆனால் அதன் முழுமையான விவரங்கள் இனி வரும் வாரங்களில் தான் தெரியவரும் என்றும் கூறினார். மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் கிரவுட்ஸ்ட்ரைக் ஆன்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்தும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த பணிகளை செய்த ஐ.டி. நிறுவனங்களில் மட்டுமே பாதிப்பு இருந்ததாக அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.டி. செயலிழப்பின் காரணமாக கிரவுட்ஸ்ட்ரைக்கின் பங்குகள் 21% வரை வீழ்ச்சி அடைந்தன. தொடர்ந்து பேசிய அவர், "பொதுவாக ஒரு நிறுவனத்தில் 1000 மென்பொருள் பொறியாளர்கள் இருந்தால், அவர்களது கணினிகளை பராமரிப்பதற்கான குழு ஒன்று இருக்கும். ஆனால் அதில் 20 முதல் 25 நபர்கள் மட்டுமே இருப்பார்கள். வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கில் கணினிகள் பழுதானதால் அவர்கள் தான் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டார்கள். ஆனால் ஒரு நல்ல விஷயம் இது வெள்ளிக்கிழமை ஏற்பட்டது தான். பெரும்பாலும் சனி மற்றும் ஞாயிறுகளில் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் விடுமுறை என்பதால் இதை இந்த இரண்டு நாட்களில் முழுமையாக சரிசெய்ய முயற்சிப்பார்கள். நிச்சயமாக இது மிகப்பெரிய எச்சரிக்கை. பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் விண்டோஸை தான் பயன்படுத்துகிறார்கள். எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இது போல மீண்டும் நடக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று கூறினார். மைக்ரோசாஃப்ட் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நியூயார்க்கில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவன அலுவலகம் இதுகுறித்து பேசிய மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, "அண்மையில் கிரவுட்ஸ்ட்ரைக் வெளியிட்ட அப்டேட் உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறையை முடக்கியுள்ளது. இந்த சிக்கலை நாங்கள் அறிவோம். அதோடு இதற்கு தீர்வு காணும் வகையில் பணியாற்றி வருகிறோம். வாடிக்கையாளர்களின் ஆன்லைன் இயக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் கிரவுட்ஸ்ட்ரைக் உடன் மைக்ரோசாஃப்ட் இயங்கி வருகிறது. இதிலிருந்து மீள வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய வழிகாட்டு செயல்முறையை வழங்கி வருகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், "மைக்ரோசாப்டிலோ அல்லது விண்டோஸிலோ எந்தப் பிரச்னையும் இல்லை. ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் தான் மைக்ரோசாஃப்ட் மென்பொருளில் குளறுபடி ஏற்பட்டது" என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்னர் விளக்கம் அளித்திருந்தது. வெள்ளிக்கிழமை நடைபெற்றது சைபர் தாக்குதல் அல்ல. இந்தச் செயலிழப்பு தங்களின் தவறால் ஏற்படவில்லை என்பதையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உடனடியாகச் சுட்டிக்காட்டியது. வாடிக்கையாளர்கள் மீண்டு வர உதவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஒரு வலைப்பதிவில் "கிரவுட்ஸ்ட்ரைக் அப்டேட் காரணமாக உலகம் முழுவதும் விண்டோஸ் பயன்படுத்தும் 85 லட்சம் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளோம்." என்று குறிப்பிட்டுள்ளது. நிறுவனத்தின் துணைத் தலைவரான டேவிட் வெஸ்டன், "இந்த எண்ணிக்கை உலகெங்கிலும் உள்ள அனைத்து விண்டோஸ் கணினிகளிலும் 1% க்கும் குறைவுதான். ஆனால். பரந்த அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக தாக்கங்கள் முக்கிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் க்ரவுட்ஸ்ட்ரைக் மென்பொருளை பயன்படுத்துவதைப் பிரதிபலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cy79y3e8rd4o
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் : செப்டம்பர் 21இல் வாக்களிப்பு? Published By: RAJEEBAN 21 JUL, 2024 | 11:16 AM ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு செப்டம்பர் 21ம் திகதி நடைபெறலாம் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட்மாத நடுப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள சண்டேடைம்ஸ் உறுதியான திகதி இந்த வாரம் வெளியாகும் என தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என செய்தி வெளியிட்டுள்ளது. முன்னர் ஒக்டோபர் 5ம் திகதிமுதல் 12ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் தேர்தல்கள் செப்டம்பர் மாதம் நடைபெறலாம் என தெரியவருவதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 16 முதல் 21நாட்களிற்குள் வேட்புமனுக்கள் பெறப்படவேண்டும்,28 முதல் 42 நாட்களிற்குள்தேர்தல் நடைபெறவேண்டும் என இதன் மூலம் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையகத்திற்கு 63 நாட்களை வழங்க முடியும் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை அரசியல் கட்சிகள் முன்கூட்டியே தேர்தலைநடத்துமாறு வேண்டுகோள் விடுக்ககூடாது இது தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் செயலாக பார்க்கப்படலாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கதெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188988
-
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
கிரவுட்ஸ்ட்ரைக்: அமெரிக்கா உள்பட பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்பட்டாலும் சீனா மட்டும் தப்பியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் பாதிப்பு குறைவு. கட்டுரை தகவல் எழுதியவர், நிக் மார்ஷ் பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை உலகத்தின் பெரும்பகுதி ‘ப்ளூ ஸ்க்ரீன் எரர்’ காரணமாக போராடிய நிலையில், அதிலிருந்து பெருமளவு தப்பித்த ஒரு நாடு சீனா. அதற்கு காரணம் மிக எளிது. கிரவுட்ஸ்டிரைக் மென்பொருள் அங்கு அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. பெய்ஜிங் சைபர்-பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக அமெரிக்கா கூறிவந்த நிலையில், அமெரிக்காவிடம் இருந்து வெகுசில சீன நிறுவனங்கள் மட்டுமே மென்பொருளை வாங்குகின்றன. உலகின் மற்ற பகுதிகளை போன்று சீனா, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நம்பி இருக்கவில்லை. பெரும்பாலும் அலிபாபா, டென்சென்ட் மற்றும் ஹவாய் போன்ற உள்நாட்டு நிறுவனங்களே தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்களாக உள்ளன. எனவே, சீனாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. உதாரணமாக, சீன நகரங்களில் உள்ள ஷெரட்டன், மேரியட், ஹயாத் போன்ற சர்வதேச உணவகங்களில் அறையை பதிவு செய்ய முடியவில்லை என, சீன சமூக ஊடக தளங்களில் சில பயனாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சீனா மீதான மற்ற நாடுகளின் தடைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுனைடட், டெல்டா, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை விமானங்களை இயக்கவில்லை. சீனாவில் சமீப ஆண்டுகளாக அரசு அமைப்புகள், வணிகங்கள், உள் கட்டமைப்பு ஆபரேட்டர்கள் வெளிநாட்டு ஐ.டி. அமைப்புகளுக்கு பதிலாக உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை அதிகமாக மாற்றிவருகின்றனர். இதனை சில ஆய்வாளர்கள் “ஸ்ப்ளிண்டர்நெட்” (இணையத்தை பிளவுபடுத்துவது) என அழைக்கின்றனர். “வெளிநாட்டு தொழில்நுட்ப அமைப்புகளை கையாள்வதில் சீனாவின் திறமையான நிர்வாகத்திற்கான ஆதாரமாக இது உள்ளது” என, சிங்கப்பூரை சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர் ஜோஷ் கென்னடி ஒயிட் கூறுகிறார். “21வயாநெட் (21Vianet) எனும் உள்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து சீனாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இயங்கிவருகிறது. சீனாவில் மைக்ரோசாஃப்ட் சேவையை தன்னிச்சையாக அந்நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த ஏற்பாட்டின் மூலம் சீனாவின் அத்தியாவசிய சேவைகளான வங்கி மற்றும் விமான போக்குவரத்து சேவைகளில் வெளிப்புற காரணிகளால் தடங்கல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.” வெளிநாட்டு அமைப்புகளை சாந்திருக்காமல் அவற்றை தடுப்பது தேச பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக சீனா பார்க்கிறது. இது, 2019-ஆம் ஆண்டில் சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாயை சில மேற்கு நாடுகள் தடை செய்தன. அது 2023-ஆம் ஆண்டில் சீனாவின் டிக்டாக் செயலியை தடை செய்த பிரிட்டனின் நடவடிக்கையை போன்றதாகும். அப்போதிருந்து, அமெரிக்க வணிகங்கள் சீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதைத் தடுக்கவும், அதிநவீன செமி கன்டக்டர் சிப் தொழில்நுட்பத்தை சீனாவிற்கு விற்பதை சட்டவிரோதமாக்கவும் அமெரிக்காவால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தேச பாதுகாப்புக்காக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்தது. அமெரிக்காவை விமர்சித்த சீனா பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,தொழில்நுட்ப செயலிழப்பால் ஹாங்காங் விமான நிலையத்தில் சில சேவைகள் பாதிக்கப்பட்டன. சீன அரசு சார்பு ஊடகமான குளோபல் டைம்ஸில் சனிக்கிழமை வெளியான தலையங்கத்தில், சீன தொழில்நுட்பம் மீதான இத்தகைய கட்டுப்பாடுகள் குறித்து மேலோட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தன. “சில நாடுகள் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக பேசி வருகின்றன, பாதுகாப்பு என்ற கருத்தை பொதுமைப்படுத்துகின்றன. ஆனால், உண்மையான பாதுகாப்பு பிரச்னையை புறக்கணித்துவிட்டன, இது முரணாக உள்ளது,” என அந்த தலையங்கம் கூறுகிறது. இங்குள்ள வாதம் என்னவென்றால், உலகளாவிய தொழில்நுட்பத்தை யார் பயன்படுத்தலாம் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற விதிமுறைகளை அமெரிக்கா கட்டளையிட முயற்சிக்கிறது. ஆனால் அதன் சொந்த நிறுவனம் ஒன்றை சரியாக கவனிக்காததால் உலகளாவிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான். தகவல் தொழில்நுட்பத்தை “ஏகபோக உரிமை” கொண்டாடும் சர்வதேச நிறுவனங்களையும் ‘தி குளோபல் டைம்ஸ்’ விமர்சித்தது: “இணைய பாதுகாப்புக்காக பெரிய நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்குமாறு சில நாடுகள் வாதிடுவது, நிர்வாக முடிவுகளை உள்ளடக்கிய பகிர்வுக்கு மட்டும் தடையாக இல்லாமல், புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் அறிமுகப்படுத்தும்.” என்கிறது அந்த தலையங்கம். 'மைக்ரோசாஃப்டுக்கு நன்றி' பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கத்திய தொழில்நுட்பத்தை நகலெடுப்பதாகவோ அல்லது திருடுவதாகவோ சீனா அடிக்கடி குற்றம் சாட்டப்படுவதால், "பகிர்வு" என்ற சொல், அறிவுசார் சொத்து பற்றிய விவாதத்தின் ஒரு குறிப்பாக இருக்கலாம். திறந்த உலகளாவிய தொழில்நுட்ப சந்தைக்காக வாதிடும் சீனா, உள்நாட்டு சூழலை இன்னும் இறுக்கமாக கட்டுப்படுத்துகின்றது. எனினும், சீனாவில் எதுவுமே பாதிக்கப்படவில்லை என கூற முடியாது. வாரத்தின் இறுதி வேலை நாளை முன்கூட்டியே முடித்து வைத்ததற்கு அமெரிக்க மென்பொருள் நிறுவனத்திற்கு சில பணியாளர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். ‘ப்ளூ எரர்’ திரையின் படங்களை சீன சமூக ஊடக தளமான வெய்போவில் (Weibo) பகிர்ந்துள்ள பயனாளர்கள், “முன்கூட்டியே விடுமுறை அளித்ததற்காக மைக்ரோசாஃப்டுக்கு நன்றி” (Thank you Microsoft for an early vacation) என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/ced3g4ggqn8o
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
மீண்டும் வைத்தியர் அருச்சுனா? | மக்களின் கருத்தை ஏற்றுக்கொண்டார் டக்ளஸ்|சாவகச்சேரியில் இன்று!
- அர்ஜுனாவும் இரும்பு மோதிரமும்- நிலாந்தன்
-
தமிழ் தேசிய பேரவையின் புரிந்துணர்வு உடன்பாடு நாளை!
21 JUL, 2024 | 10:26 AM ஆர்.ராம் தமிழ் தேசிய பேரவையின் புரிந்துணர்வு உடன்பாடு நாளை திங்கட்கிழமை (22) கைச்சாத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களின் ஒன்றிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையும் கூட்டிணைந்து தமிழ்த் தேசிய பேரவை என்ற பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கு இணக்கப்பாட்டை எட்டியுள்ள நிலையில் கடந்த 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின் மறைவினையொட்டி இந்த புரிந்துணர்வு உடன்பாட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட இந்த கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டபோதும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கு நேரமின்மை காரணமாக பிற்போடப்பட்டது. அதனையடுத்து சிவில் அமைப்பின் பிரமுகர்களுக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் உரையாடல்கள் இடம்பெற்ற நிலையில் நாளைய தினம் கைச்சாத்திடும் நிகழ்வை முன்னெடுப்பதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிரகாரம், தந்தை செல்வா கலையரங்கில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/188977
-
மாகாண சபை முறைமை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளது - யாழ். வணிகர் கழகத்துடனான சந்திப்பில் தேசிய மக்கள் சக்தி
Published By: DIGITAL DESK 7 21 JUL, 2024 | 11:47 AM (ஆர்.ராம்) அரசியலமைப்பில் காணப்படுகின்ற மாகாண சபை முறைமையை மீண்டும் முன்னெடுப்பதற்கு ஆட்சிப்பொறுப்பையேற்று சொற்பகாலத்துக்குள் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அம்முறைமை உள்ளடக்கப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. யாழ்.வணிகர் கழகத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோதே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளதாவதுரூபவ் யாழ்.வணிகர் கழகத்துடனான சந்தப்பின்போது, நாம் எமது பொருளாதாரக் கொள்கைகளை வெளிப்படுத்தினோம். விசேடமாக நாட்டின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தல் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்தல், அனைவரையும் பொருளாதார மீள்கட்டியெழும்பும் செயற்றிட்டத்தில் பங்காளிகளாக்குதல் உள்ளிட்டவற்றை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தினோம்.அதனையடுத்து தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமான உரையாடல்கள் நடைபெற்றன. தேசிய இனப்பிரச்சினை தொடர்பான எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினோம். குறிப்பாக, அரசியலமைப்பில் உள்ள மாகாண சபை முறைமையை நாம் ஆட்சிப்பொறுப்பேற்று சொற்பகாலத்துக்குள் வினைத்திறனுடன் மீளச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்பதை தெரிவித்தோம். அத்துடன் மாகாண சபைகள் முறைமை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்டினேம். எவ்வாறாயினும் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. அந்த அரசியலமைப்பானது அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். அதன்மூலமாகவே மீண்டும் இனரீதியான குழப்பநிலைமைகள் உருவெடுக்காது என்பதோடு சமத்துவமும் உறுதியாகும் என்ற விடயத்தினை அவர்களிடத்தில் குறிப்பிட்டோம். இதனையடுத்து 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு நடவடிக்ககைளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வணிகர் கழகத்தால் எம்மிடத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பில் ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானத்தினை எடுப்போம் என்று பதிலளித்துள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/188975
-
ரணில் பதவியேற்று இன்றுடன் ஈராண்டு நிறைவு - ஜனாதிபதி வேட்பாளராவதை அறிவிக்கவும் தீர்மானம்
Published By: DIGITAL DESK 7 21 JUL, 2024 | 11:43 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்று (21) ஞாயிற்றுக்கிழமையுடன் ஈராண்டுகள் நிறைவடைந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளமையை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். பல கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள அரசியல் கூட்டணியில் பொதுவான சின்னத்தில், பொது வேட்பாளராக 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார். 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கை வரலாறு காணாத அரசியல் மற்றும் பொருளாதார பெரும் நெருக்கடிக்களை எதிர்கொண்டது. இந்த நெருக்கடிகள் அதிகாரபூர்வமற்ற ஆட்சி மாற்றத்துக்கும் காரணமாகியது என்பது மறுக்க இயலாது. மக்கள் ஆணையால் தெரிவு செய்யப்பட்ட அப்போதைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ, வன்முறை மிக்க மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாது நாட்டை விட்டு தப்பித்துச் சென்றார். இந்த அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் நாடு பெரும் அச்சுறுத்தல்களை எதிர்க்கொண்ட போது, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க ஆளும்ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்தது. 2020 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தேசிய ஆசனத்தைமாத்திரம் பெற்று ஐக்கிய தேசிய கட்சி படுமோசமான தோல்வியை சந்தித்திருந்தது. நீண்ட நாட்கள் காத்திருப்புகளுக்கு பின்னர் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தனது கட்சிக்கு கிடைத்த தேசிய ஆசனத்தில் பாராளுமன்ற உறுப்பினராகரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமானம் செய்துக்கொண்டார். 'அரகலய' அரச எதிர்ப்பு போராட்டங்கள் தளிர்விட்ட நாட்களாகவே அந்த காலப்பகுதி அமைந்தது. நாளுக்கு நாள் நாட்டின் நிலைமை மோசமடைந்து இலங்கை முழுவதிலும் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, இறுதியில் தலைநகர் கொழும்பு அரச எதிர்ப்பு போராட்டக்காரர்களின் களமாகியது. நிலைமையை சீர்ப்படுத்த அரசாங்கம் பல வழிகளில் முயற்சித்த போதிலும் வெற்றியளிக்க வில்லை. மாறாக ஆட்சியாளர்களை பதவி விலகுமாறு மக்கள் வலுவாக கூறி நின்றனர். அப்போதைய பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ முதலில் பதவி விலகி, அந்த பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்தார். இதனை தனிப்பட்ட தீர்மானம் என்பதை விட ஒட்டுமொத்த ராஜபக்ஷர்களின் தீர்மானத்தையும் தாண்டி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின முழுமையான அழுத்தமாகவும் இது அமைந்தது. ஏனெனில் இறுதி தருணத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் ஆளும் கட்சியை நெருக்கடியான நிலைமைக்கு கொண்டு சென்றது. இந்த நிலைமை அடுத்த நிலைக்கு செல்லாது தடுக்கப்பட வேண்டுமாயின், ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவர் என்பதை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ தீர்மானித்திருந்தனர். அதே போன்று ஆட்சி அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்திக்கோ அல்லது மக்கள் விடுதலை முன்னணிக்கோ சென்றுவிடக்கூடாது என்பதில் ராஜபக்ஷர்கள் இருந்தனர். ராஜபக்ஷர்களுக்கு ஏற்பட்ட இந்த சூழலே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கதிரையில் அமரவைத்தது. '69 இலட்சம் மக்கள் ஆதரவை பெற்றவருக்கு நாட்டில் இடமில்லை, ஒரே ஒரு ஆசனத்தில் பாராளுமன்றம் சென்றவருக்கு நாடே சொந்தமானது' என்று சிங்கள நாளேடுகள் அன்று செய்திகளை பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188973
-
IMFஇன் தூதுக்குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்!
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அதற்கான வழிவகைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த தூதுக்குழு இலங்கை வரவுள்ளது. எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த தூதுக்குழு நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டம் தொடர்பில் மதிப்பாய்வை மேற்கொள்ளாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/306563
-
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 வருடங்களாக மாற்றியமைக்கும் நடவடிக்கை முறையாக இடம்பெற்றது - மைத்திரி
21 JUL, 2024 | 02:57 PM (எம்.ஆர்.ஆர்.வசீம்) அரசியலமைப்பின் 18ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இருந்துவந்த வரையறையற்ற அதிகாரங்களை சாதாரண ஜனநாயக முறைக்கு மாற்றும் வகையிலேயே 19ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைக்கும் நடவடிக்கை முறையாக இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் நேற்று சனிக்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அரசியலமைப்பின் 19ஆம் திருத்தம் தொடர்பில் நானே மிகவும் அறிந்தவன். ஏனெனில், நாங்கள் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில் அரசியலமைப்பின் 18ஆம் திருத்தத்தில் உள்ள ஜனாதிபதியின் வரையறையற்ற அதிகாரங்களை குறைத்து, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடமாக குறைக்கவேண்டும் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 19ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என முறையாக திருத்தி அமைக்கப்பட்டது. அத்துடன் இன்று அதிகமானவர்கள் 18ஆம் திருத்தத்தை மறந்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தனக்கு தேவையான வகையில் அதிகாரங்களை குவித்துக்கொள்ளவே 18ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நான் பொது வேட்பாளராக வந்து, 18ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இருந்த பாரியளவிலான அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். இதன்போது மைத்திரிபால சிறிசேனவின் 6 வருட ஜனாதிபதி பதவிக்காலத்தை 5ஆக குறைக்கவில்லை. மாறாக, ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருங்களில் இருந்து 5 வருடமாக குறைக்கப்பட வேண்டும் என்றே பாராளுமன்றத்தில் 19ஆம் திருத்தம் அனுமதிக்கப்பட்டதாக உயர் நீதிமன்றில் எனது சட்டத்தரணியாக ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்திருந்தார். அதன் பிரகாரமே உயர் நீதிமன்றம் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும்போது 6 வருடத்தை 5ஆக குறைக்க முடியும். அதற்கு மேல் குறைப்பதாக இருந்தால், அதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என தெரிவித்திருந்தது. அதன்போதுதான் அதிகமான சட்டத்தரணிகள் 6 வருட காலத்தை 7 வருடமாக அதிகரிப்பதாக இருந்தால் அதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டு்ம் எனவும் ஆனால் 6 வருடத்தை 5ஆக குறைக்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல தேவையில்லை என தெரிவித்தனர். எனவே, ஜனாபதியின் பதவிக்காலம் தொடர்பி்ல் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 19ஆவது திருத்தமும் ஜனாதிபதியின் 6 வருட பதவிக்காலத்தை 5 வருடமாக குறைக்க வேண்டும் என்பதாகும் என்றார். https://www.virakesari.lk/article/189008
-
பெண்ணின் தலைக்குள் 77 ஊசி – மந்திரவாதி கைது
வயர்லெஸ் கனக்சன் கொடுத்திருப்பாரோ?!
-
மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
ஆசியக்கிண்ண தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணி இலங்கையின் தம்புள்ளையில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளின், ஆரம்ப ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வெற்றி கொண்டுள்ளது. இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) மற்றும் ஃபாலி வர்மா (Shafali Verma) ஆகியோரின் ஆரம்பத் துடுப்பாட்டம் இந்த வெற்றிக்கு உதவியுள்ளது. இந்தப்போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 108 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. சிட்ரா அமீன் 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். நேபாளம் மகளிர் அணி எனினும் இந்திய மகளிர் அணி, 14.1 ஓவர்களில் இந்த ஓட்ட இலக்கை 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நேபாளம் மகளிர் அணி, ஆசிய கிண்ண முதல் வெற்றியை பதிவு செய்தது. 116 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாளம், தொடக்க ஆட்டக்காரர் சம்ஜனா கட்காவின் 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களின உதவியுடன் இலக்கை அடைந்தது. இந்தநிலையில், மலேசியா தாய்லாந்தையும், இலங்கை பங்காளதேஸ் அணியையும் இன்று எதிர்த்தாடுகின்றன. https://tamilwin.com/article/indian-women-s-team-defeated-pakistan-asia-cup-1721442576
-
மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி இதன்படி இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், போட்டியின் அனைத்து போட்டிகளையும் விளையாட்டு ரசிகர்கள் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு தொடங்கிய ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டியாக நடத்தப்பட்டு, 2012 ஆம் ஆண்டு முதல் டி20 போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 8 அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டிகள் 2 குழுக்களாக நடைபெறவுள்ளது. இதன்படி ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. போட்டிகளின் முதல் நாளில், நேபாளம் – ஐக்கிய அரபு இராச்சியம் அணிகளும், இந்தியா – பாகிஸ்தான் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இலங்கை மகளிர் அணி ஆரம்ப சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் முதலாவது போட்டி நாளை (20) பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது. https://thinakkural.lk/article/306406
-
மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது வெற்றியை சுவைத்தது நேபாளம் Published By: VISHNU 19 JUL, 2024 | 08:45 PM (நெவில் அன்தனி) ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமான ஐந்தாவது மகளிர் ரி20 கிரிக்கெட் அத்தியாயத்தின் முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொண்ட நேபாளம் 6 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் தனது 3ஆவது அத்தியாயத்தில் விளையாடும் நேபாளம் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். 2012, 2016 ஆகிய இரண்டு அத்தியாயங்களில் விளையாடிய நேபாளம் அவற்றில் தோல்விகளையே தழுவியிருந்தது. இன்றைய போட்டியில் அணித் தலைவி இந்து பர்மா பதிவுசெய்த 3 விக்கெட் குவியல், ஷம்ஜானா கத்கா குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன நேபாளத்தை இலகுவாக வெற்றிபெறவைத்தன. ஐக்கிய அரபு இராச்சியம் சார்பாக கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட கவிஷா எகொடகே துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் பிரகாசித்ததுடன் குஷி ஷர்மா துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தினார். ஆனால், ஏனையவர்கள் பிரகாசிக்கத் தவறியமை ஐக்கிய அரபு இராச்சியத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் குஷி ஷர்மா (36), கவிஷா எகொடகே (22) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் அணித் தலைவி இந்து பர்மா 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 16.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்ளைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. ஆரம்ப வீராங்கனை சம்ஜானா கத்கா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 45 பந்துகளில் 11 பவுண்டறிகள் அடங்கலாக 72 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார். 14 உதிரிகளே நேபாளத்தின் மொத்த எண்ணிக்கையில் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. ரூபினா சேத்ரி 10 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் கவிஷா எகொடகே ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகி: சம்ஜானா கத் https://www.virakesari.lk/article/188895