Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை 100 வீதம் வழங்குவதாக சீன அரசாங்கம் அமைச்சுக்கு உறுதிப்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்களை பிரதேச களஞ்சியங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும். பிரதான மற்றும் தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் 17 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது பல்கலைக்கழக கட்டமைப்புக்கும் நிர்மாணத் துறைக்கும் மிகவும் முக்கியமானது என்பதைக் கூற வேண்டும். மேலும், கல்வித்துறையில் ஆசிரியர் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான இரண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அதன் கீழ், ஆசிரியர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்டும். அதன் மூலம் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க முடியும். அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பிரகாரம், எதிர்வரும் புதன்கிழமைக்குள், உரிய உத்தரவுக் கடிதங்கள் அமைச்சுக்கு கிடைத்த பின்னர், மாகாண அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும். அத்துடன், இந்தக் காலப்பகுதியில் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் சுமார் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்க ஏற்பாடு செய்தோம். பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வுகளை வழங்குவதில் வெற்றி பெற்றுள்ளோம். மேலும், 2700 Smart Board களை, பாடசாலைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முழுமையான பாடசாலை வலயமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவதே எமது திட்டமாகும். மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க 400 மில்லியன் டொலர்களை வழங்க திட்டமிட்டுள்ளது எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/306628
  2. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது Published By: DIGITAL DESK 3 23 JUL, 2024 | 09:51 AM இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுப்பட்ட இரண்டு விசைப்படகு களையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இதேவேளை, நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடி விசைப் படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகின் பின் பகுதி சேதம் அடைந்து படகில் இருந்த மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கரை சேர்ந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை சுமார் 2 மணியளவில் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லைக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசை படகையும் அதிலிருந்த 9 இந்திய மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களிடம் முதல் கட்ட விசாரணை நடத்திய பின் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் அனைவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்கு பின் மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள். இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/189132
  3. US-ல் அடுத்தடுத்து மாறும் காட்சிகள்; அதிபர் தேர்தலில் விலகிய Biden - என்ன தான் நடக்கிறது? Joe Biden Drops Out : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபராவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பைடன் இந்த முடிவை எடுத்துள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜோ பைடனின் விலகலால் அதிபர் தேர்தலில் புதிய சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.
  4. மகளிருக்கான ஆசிய கிரிக்கெட் சுற்றுத்தொடர் - ஆதிக்கம் செலுத்தும் இந்திய, பாகிஸ்தான் அணிகள் 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண 20க்கு 20 போட்டியின் ஏ பிரிவில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய (India) அணி, தொடர்ந்து இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்துள்ளது. அதேவேளை, முதல் தடவையாக 20க்கு 20போட்டி ஒன்றில் இந்திய மகளிர் அணி, 200இற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தம்புள்ளையில், நேற்று (21.07.2024) இடம்பெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் சபாலி வர்மா 18 பந்துகளில் 37 ஓட்டங்களை எடுத்துள்ளார். மேலும், ஹர்மன்ப்ரீத் 41 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டியுள்ளார். பவர்பிளே ஓவர்கள் இந்தநிலையில், அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்த போதிலும் பவர்பிளே ஓவர்களில் 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது, ரிச்சா கோஸ் 29 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதன்படி, இந்திய மகளிர் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மேலும், பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணியால், 20 ஓவர்களில் 127 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இதேவேளை, பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான போட்டியில், பாகிஸ்தானிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. வெற்றிக்கான 109 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள துடுப்பாடிய பாகிஸ்தானிய அணியின் குல், 35 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றதுடன் முனீபா, 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் விளையாடியிருந்தார். https://tamilwin.com/article/womens-t-20-asia-cup-2024-india-pakistan-1721618756
  5. 22 JUL, 2024 | 05:18 PM (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு தயார் என்று ஜனாதிபதி குறிப்பிடலாம் ஆனால் அதற்கு அவரது தனிப்பட்ட நிதி பயன்படுத்தப்படமாட்டாது. நாட்டு மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்படும். மக்களின் வரிப்பணத்தை வீண்விரயம் செய்ய மக்கள் பிரதிநிதிகள் தயாராக உள்ளார்களா என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார். கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிறைவுப் பெறும் வரை அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட வேண்டாம் என தனது செயலாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கடந்த 18 ஆம் திகதி குறிப்பிட்ட நிலையில் 19 ஆம் திகதி சட்டமூலத்தை ஜனாதிபதி வர்த்தமானியில் வெளியிட்டார். ஜனாதிபதியின் செயற்பாட்டினால் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெறுவதுடன்இசர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும். நிதி பற்றாக்குறை காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.நாட்டு மக்கள் மீது முறையற்ற வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது.கடினமான முறையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில் பல மில்லியன் ரூபா செலவு செய்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் இயலுமை அரசாங்கத்திடம் உள்ளதா? சர்வஜன வாக்கெடுப்புக்கு தயார் என்று ஜனாதிபதி குறிப்பிடலாம் ஆனால் அதற்கு அவரது தனிப்பட்ட நிதி பயன்படுத்தப்படமாட்டாது.நாட்டு மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்படும்.மக்களின் வரிப்பணத்தை வீண்விரயம் செய்ய மக்கள் பிரதிநிதிகள் தயாராக உள்ளார்களா? அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.10 ஆண்டுகள் நிறைவுப் பெறவுள்ள நிலையில் உறக்கத்தில் இருந்து எழுந்ததைப் போன்று சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் பல மில்லியன் ரூபா செலவு செய்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வது பயனற்றது என்றார். https://www.virakesari.lk/article/189102
  6. அமெரிக்காவின் பல பிரபலங்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவு Published By: RAJEEBAN 22 JUL, 2024 | 12:12 PM அமெரிக்காவின் பல பிரபலங்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து ஜோபைடன் விலகி கமலா ஹரிஸ் போட்டியிடவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் பல பிரபலங்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர். ஹரிஸ் நம்பகரமானவர், ஆழமாக மக்களால் பரிசோதிக்கப்பட்டவர் என நடிகை ஜேமி லீ ஹேட்ரிஸ் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் வெள்ளையர் அல்லாதவர்களின் உரிமைகளிற்காக வலுவான விதத்தில் குரல்கொடுப்பவர் அமெரிக்கா தேசிய ரீதியில் பெரும் பிளவை சந்தித்துள்ள தருணத்தில் அவரது செய்தி அமெரிக்காவிற்கு நம்பிக்கையை ஐக்கியத்தை அளிக்கும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார். இது பெண்களின் உலகம் நீங்கள் அதில் வாழ்வது அதிஸ்டம் என பாடகர் கட்டி பெரி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் நகைச்சுவை நடிகர் போட்டியிலிருந்து விலகும் ஜோ பைடனின் முடிவு குறித்து லெஜென்ட் என பதிவிட்டுள்ளார். எங்கள் ஜனநாயகத்தை காப்பாற்றியமைக்காக ஜோ பைடனிற்கு நாங்கள் நன்றியுடையவர்களாக விளங்கவேண்டும் என ஒஸ்கர் வென்ற நடிகை பார்பரா ஸ்டிரெய்ஸான்ட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189072
  7. "தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" : புரிந்துணர்வு உடன்படிக்கையில் 9 அம்சங்கள் வலியுறுத்தல்! Published By: VISHNU 22 JUL, 2024 | 06:38 PM தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகிய இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் இக்கட்டமைப்பு "தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" என அழைக்கப்படும் என உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கைச்சாத்திட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கட்சிகள் - தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்றைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமாவது, தமிழ்த் தேசியக் கட்சிகள் - தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 9 அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கில் தமக்கென ஒரு மரபு வழித் தாயகத்தைக் கொண்ட, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வடக்கு கிழக்கு உள்ளடங்கலாக இலங்கைத் தீவில் வாழும் தேசிய இனம் என்ற அடிப்படையில், சுயநிர்ணய உரிமையைக் கொண்டவர்கள். அடிப்படையிலும் உச்சபட்ச தன்னாட்சியைக் கோருவதற்கான உரித்துடையவர்கள். அதனடிப்படையிலும் பன்னாட்டுச் சட்டங்களின் நீண்ட வரலாற்றையும் மிகச் செழிப்பான பண்பாட்டையும் கொண்ட தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை சிதைக்கும் நோக்கத்துடன், நிலப்பரப்பு ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், மதரீதியாகவும் என பல்வேறு வழிகளில் இலங்கைத்தீவில் இனவழிப்பு நடவடிக்கைகள் சிறீலங்கா அரசினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்களின் நியாயமான உரிமைப் போராட்டம் தீவிரவாதமாகவும் பிரிவினைவாதமாகவும் பயங்கரவாதமாகவும் சித்தரிக்கப்பட்டு வருகின்றது. ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவில் ஒரு தேசிய இனமாக இருப்பதும், கேந்திர முக்கியத்துவம் மிக்க புவிசார் அமைவிடத்தை வாழ்விடமாகக் கொண்டிருப்பதும் அவர்களது பிரதான அரசியல் பலமாகும் என்னும் யதார்த்தத்தின் பின்னணியில்தான் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் முதலில் பிராந்தியமயப்பட்டது. பின்னர் அனைத்துலகமயப்பட்டது. நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் விவகாரத்தில் பன்னாட்டுச் சமூகம் காட்டி வந்திருக்கின்ற கரிசனைகளைச் சிறீலங்கா அரசு எந்தவிதத்திலும் பொருட்படுத்தவும் இல்லை; ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுத்திருக்கவுமில்லை. அதேநேரத்தில் முள்ளிவாய்க்காலின் பின்னரான கடந்த பதினைந்து ஆண்டுகளில், இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக தமிழ் மக்களிற்கு சமஉரிமையை வழங்கும் அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவொரு நகர்வுகளைக்கூட இதுவரை காலமும் முன்னெடுக்கவில்லை. இனப்படுகொலைக்கு எதிரான நீதியுமின்றி, அரசியல் தீரவுமின்றி, ஒன்றுபட்ட அரசியல் தலைமைத்துவமும் இன்றி பாரபட்சங்களும், அடக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும், ஆக்கிரமிப்புக்களும். அழிப்புகளும், பிரித்தாளும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அரசியல், பொருளாதார, இராணுவச் சூழலில் தமிழ் மக்களின் தேசிய இருப்பு கேள்விக்குள்ளாகி நிற்கின்றது. இவ்வாறான வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலும், இதுகாலவரையிலான அனுபவங்களின் அடிப்படையிலும், சிறீலங்காவின் 2024 அரசுத்தலைவர் தேர்தலைத் தமிழ் மக்கள் தரப்பில் செயல்முனைப்புடன் எதிர்கொள்ளவேண்டிய அரசியல் தேவையும் அவசியமும் எழுந்திருக்கின்றது. இந்த யதார்த்தத்தின் பின்னணியில், தமிழ்த் தேசத்தின் மக்களை ஒன்றுபடுத்துவது என்னும் பிரதான நோக்கத்தோடு, எதிர்வரும் சிறீலங்காவின் அரசுத்தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்று தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணக்கம் கண்டுள்ளன. அத்துடன், இதனைச் செயல்முனைப்புடன் கையாளும் நோக்கில், பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதென்றும் முடிவைக் கொண்டுள்ளன. இதன்பிரகாரம் இவ்வுடன்படிக்கையின் சம தரப்புக்கள் என்னும் வகையில், தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவை பின்வரும் அடிப்படையில் புரிந்துணர்வு ஒன்றினை ஏற்படுத்திக்கொள்கின்றன. 1. தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை இவ்வுடன்படிக்கையில் சம தரப்பினர் என்னும் வகையில், இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் இக்கட்டமைப்பு "தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" என அழைக்கப்படும். 2. இவ்வுடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்படும் “தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு” எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை. சிறிலங்காவின் அரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக கையாளும் வகையில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதெனத் தீர்மானித்துள்ளது. 3. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்தல், நிதி தொடர்பான விடயங்கள். பரப்புரைகளை முன்னெடுத்தல் போன்ற, அனைத்து அவசியமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான, துணைக் குழுக்களை தேவைக்கேற்ப உருவாக்கும் அதிகாரங்களை கொண்டிருக்கும். 4. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பால் பொதுவேட்பாளரை நடவடிக்கைக்காக உருவாக்கப்படும் குறித்த துணைக் குழுக்கள் மற்றும் ஏனைய துணைக் கட்டமைப்புக்கள் அனைத்திலும் தமிழ்த் தேசியக் கட்சிகள். தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை சமதரப்பாகப் பங்குபற்றும். 5. தமிழ்ப் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவரும் அவருக்கான தேர்தல் சின்னமும் தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான ஒரு குறியீடாக மட்டுமே கருதப்படுதல் வேண்டும். 6. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது பொது வேட்பாளராகத் தெரிந்தெடுக்கப்படுபவருடனும், அவர் எந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் உத்தியோகபூர்வமாக நிறுத்தப்படுகின்றாரோ அந்த நபருடனும் அந்தக் கட்சியுடனும் அவசியமானதும் உகந்ததுமான, உடன்படிக்கையைத் தனித்தனியே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். 7. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகிய இரு தரப்பும். ஒரு பொதுக் கட்டமைப்பாக செயற்படுபவர்கள் என்னும் அடிப்படையில் கூட்டுப் பொறுப்புடையவர்கள் என்பதில் இணக்கம் காணப்படுவதுடன், வழிகாட்டல் நெறிமுறை ஒன்றை உருவாக்கிக் கொள்வது என்றும் இணக்கம் இதற்கான காணப்படுகின்றது. 8. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உடன்பாடுள்ள ஏனைய கட்சிகள் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, பொதுக் கட்டமைப்புடன் இணைந்து பயணிக்க முன்வரும்போது, அவர்களை உள்வாங்கிக் கொள்வதென்றும் இணக்கம் காணப்படுகின்றது. 9. தமிழ்த் தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் குறிக்கோளுடன் தொடர்ந்து செயற்படுவதென இருதரப்பும் மேலும் இணங்கிக் கொள்கின்றனர் என 09 புரிந்துணர்வுகள் அடங்கிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். குறித்த உடன்படிக்கையில், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) , தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) தமிழ் தேசிய கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ் தேசிய பசுமை இயக்கம் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளனர். தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவை கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/189119
  8. ஜனாதிபதி தேர்தலுக்கு தபால் திணைக்களம் தயார் - பிரதி தபால் மா அதிபர் Published By: DIGITAL DESK 3 22 JUL, 2024 | 05:17 PM தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளை ஆரம்பிக்க தபால் திணைக்களம் முழுமையாக தயாராக உள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கொண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். சுமூகமான தேர்தல் நடைமுறையை உறுதிப்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. அனைத்து வீடுகளுக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க 8,000 தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பான முறையில் பரிமாற்றுவதற்கு தபால் திணைக்களங்கள் கடமைப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/189103
  9. பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் தனுஷ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : தனுஷ் ஆண் : அடங்காத அசுரன் தான் வணங்காத மனுஷன்தான் தோளோடு தோள் நின்னா தருவானே உசிர தான் குழு : போருக்கு போகணும் போகணும் பொருள எடுத்து வாயா யார் அங்க ஒடுங்கு ஒதுங்கு ராயினும் வருவான் தீயா ஆண் : போகி போகி போகி போகி குழு : பகைய கொழுத்து சாமி ஆண் : போகி போகி போகி போகி குழு : எவண்டா எதிரி காமி ஆண் : போகி போகி போகி போகி குழு : பகைய கொழுத்து சாமி ஆண் : போகி போகி போகி போகி குழு : எவண்டா எதிரி காமி ஆண் : தந்தானா தந்தானா தந்தானா குழு : டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் குழு : டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் குழு : டும் டும் டும் வீரமும் டும் டும் டும் பாசமும் டும் டும் டும் ரோஷமும் ஒண்ணா சேர்ந்து வந்து ஆண் : டும் டும் டும் ……………………. டும் டும் டும் ……………………… குழு : முனங்கல் …. ஆண் : ஹே எட்டு திக்கும் இங்க நம்ம கைய்யிக்குள்ள எல்லையே இல்ல இல்ல அரை ஜானு வயித்துக்கும் அளவில்லா ஆசைக்கும் அலையுற கூட்டமில்ல ஆண் : கொட்டட்டும் கொட்டட்டும் மும்மாரி கொட்டட்டும் காரணம் யாரு புள்ள நல்லவன் சாவதும் கெட்டவன் வாழ்வதும் நம்ம கையில் இல்ல ஆண் : உசுரே நீ தானே நீ தானே நிழலா உன் கூட நானே எதுவும் வேணாமே வேணாமே முடிவும் உன் கூட தானே ஆண் : போகி போகி போகி போகி குழு : பகைய கொழுத்து சாமி ஆண் : போகி போகி போகி போகி குழு : எவண்டா எதிரி காமி ஆண் : போகி போகி போகி போகி குழு : பகைய கொழுத்து சாமி ஆண் : போகி போகி போகி போகி குழு : எவண்டா எதிரி காமி முனங்கல் : …………….. ஆண் : ஏ அங்க வெச்சான் எவ்ளோ வெச்சான் எப்படி வெச்சான் எதுக்கு வெச்சான் என்ன இங்கு கொண்டு வந்தான் என்ன இங்கு கொண்டு போவான் குழு : போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி ஆண் : அடங்காத அசுரன் தான் வணங்காத மனுஷன்தான் தோளோடு தோள் நின்னா தருவானே உசிர தான் குழு : போருக்கு போகணும் போகணும் பொருள எடுத்து வாயா யார் அங்க ஒடுங்கு ஒதுங்கு ராயினும் வருவான் தீயா குழு : …………………… https://www.tamil2lyrics.com/lyrics/adangaatha-asuran-song-lyrics/
  10. கமலா ஹரிசிற்கு கறுப்பின பெண்கள் ஆதரவு 22 JUL, 2024 | 11:51 AM கமலா ஹரிசிற்கு அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான கறுப்பின பெண்கள் ஆதரவு வெளியிட்டுள்ளனர். மெய்நிகர் ஊடாக இவர்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவுவெளியிட்டுள்ளனர். ஜனநாயக கட்சியின்செயற்பாட்டாளர்கள் ஹரிசின் சிரேஸ்ட பணியாளர்களும் இந்த மெய்நிகர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். வின்வித் எ பிளக்வுமன் என்ற அமைப்பு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. தேர்தலில் போட்டியிடுவது உறுதியானால் ஹரிஸ் டிரம்பின் வயது மற்றும் அவருக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை இலக்குவைத்து பிரச்சாரம் மேற்கொள்வார் என கமலா ஹரிசின் சிரேஸ்;ட பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189067
  11. பட மூலாதாரம்,KAILAASAA.ORG 2 மணி நேரங்களுக்கு முன்னர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, தன்னையே கடவுள் என்று அறிவித்துக்கொண்டுள்ள நித்யானந்தா வெகு காலமாக பேசி வந்த கைலாசா என்ற தனது 'நாட்டைப்' பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் மீதுள்ள பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக போலீஸாரால் தேடப்பட்டும் வரும் நபர் நித்யானந்தா. கைலாசா என்ற 'நாட்டை' உருவாக்கியிருப்பதாக நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்த நித்யானந்தா, அது எங்கு உள்ளது, அந்த நாடு எப்படி இருக்கும் என்ற தகவல்களை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தார். இணைய விவாதங்களில் கைலாசா எங்குள்ளது என்பது அவ்வப்போது பேசுபொருளாக இருந்து வந்துள்ளது. தற்போதும் கைலாசா எங்குள்ளது என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. சில கூடுதல் தகவல்களை மட்டும் வெளியிட்டுள்ளார் நித்யானந்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES நித்யானந்தா மீதுள்ள வழக்குகள் இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாலியல் தொந்தரவு வழக்கு, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் சிலவற்றில் விசாரிக்கப்பட்டு வந்தவர் நித்யானந்தா. 2019-ம் ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதியினர் தங்களது இரு மகள்களை நித்யானந்தா சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளார் என்று வழக்கு தொடுத்திருந்தனர். 2010ம் ஆண்டு பெங்களூரூவில் தொடுக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் நித்யானந்தா. ஜாமீனில் வெளிவந்த நித்யானந்தா, 2019ம் ஆண்டு முதல் அந்த வழக்கு தொடர்பான எந்த விசாரணைக்கும் நேரில் ஆஜராகவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அவர், 2020ஆம் ஆண்டில் திடீரென தாம் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் அங்கு இந்து சமயத்தை தழுவிய தேசத்தை உருவாக்கியிருப்பதாகவும் கூறி அதற்கென ஒரு கொடி, நாணயம், ஆட்சி முறை போன்றவற்றை வெளியிட்டிருந்தார். 2019ம் ஆண்டு அவரால் தேசம் என அழைத்துக் கொள்ளப்படும் கைலாசாவுக்கு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்திய நித்யானந்தா, ஆஸ்திரேலியாவுக்கு வந்தால் அங்கிருந்து கைலாசாவுக்கு அழைத்துச் சென்று 15 நாட்கள் ஆன்மிக அனுபவத்தை கொடுத்து பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவிலேயே விட்டு விடுவோம் என்று கூறினார். தமது தேசத்தில் வந்து போகும்வரை அனைத்து செலவையும் தமது நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் என்று கூறி ஒரு காணொளியை நித்யானந்தா வெளியிட்டார். அவர் நாட்டை விட்டு தப்பியோடியதாக கூறப்படும் நிலையில், இப்போதும் தனது யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொளிகளை வெளியிட்டு வருகிறார். கைலாசா எப்படி இருக்கும்? கைலாசவாசியாக இருக்க, இந்து வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கும் எவரும் தகுதியானவர் என்றும், இந்துவாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர், இயற்கை பேரிடர், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் இடம் பெயர்ந்தவர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் மூலம் அகதியாக பதிவு செய்து கைலாசாவுக்கு வரலாம் என்றும் நித்தியானந்தா சார்பில் கூறப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கைலாசா “ஒரு பக்கம் கடலும், மறு புறம் பனிமலையும் சூழ” அமைந்திருக்கும் நாடு என்று விவரித்திருந்தார். “கைலாசாவில் எனக்கு என்று தனி அறை கிடையாது. பிரதான அரங்கில் எனது ஊஞ்சல் இருக்கும். நான் அங்கேயே தான் இருப்பேன். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து என்ன வேண்டுமானாலும் பேசலாம்” என்றும் பேசியிருந்தார். நித்தியானந்தா வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பு என்ன? தற்போது, நித்தியானந்தாவின் யூ டியூப் பக்கத்தில் வெளியிடப்படும் வீடியோக்கள் ஒன்றின் மூலம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். கடலோரப் பகுதிகள், மலைப் பகுதிகள், தீவுப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு புவியியல் அம்சங்களை உள்ளடக்கிய, உலகம் முழுவதும் உள்ள இறையாண்மை கொண்ட மற்றும் தன்னாட்சி பிரதேசங்களில் 'கைலாசா' இருப்பதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கைலாசா பல நாடுகளுடன் பரஸ்பர உறவுகளை ஏற்படுத்தியிருப்பது , சர்வதேச சமூகத்தில் அதன் அங்கீகாரத்தை குறிக்கிறது என்றும் கைலாசா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைலாசா தற்போது 149 நாடுகளில் உள்ள 108-க்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இயங்கி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைலாசத்தில் ஏழு அமைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் சந்நியாசிகளுக்கான இருப்பிடம் ராமகிருஷ்ண மடத்தின் அடிப்படையிலும், பெண் சந்நியாசிகளின் இருப்பிடம் சாரதா மடத்தின் அடிப்படையிலும், திருமணமானவர்களுக்கு புதுச்சேரியில் உள்ள ஆரோவில் போன்ற இருப்பிடமும் அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரியும் இல்லை, காவல்துறையும் கிடையாது கல்விக்கான குருகுலம், நித்யானந்தா இந்து பல்கலைகழகம், தொழில் செய்வதற்கான இந்து உலக வர்த்தக மையம் அமைக்கப்படுகிறது. இதன் ஆன்மிக மற்றும் நிர்வாக மையமாக அமையும் மஹாகைலாசாவில் தான் வசிக்கப் போவதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார். கைலாசாவில் உணவு, தங்குமிடம், உடை , மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என அறிவித்திருக்கும் நித்யானந்தா ராணுவமோ, காவல்துறையோ கைலாசத்தில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். கைலாசாவில் வரி விதிப்பு முறை இல்லை என்றும் இந்து வர்த்தக மையத்தின் மூலம் கிடைக்கும் வருமானமும், உலகம் முழுவதிலிருந்தும் கிடைக்கும் நன்கொடையும் கைலாசாவை நடத்த பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறித்தவர்களுக்கு வாடிகன் இருப்பது போல, இந்து மதத்தின் அடிப்படையிலான நாடுகள் இயங்கி வந்தன என்றும்,மீண்டும் அப்படி ஒரு அமைப்பு இருந்தால் தான் இந்து சனாதன தர்மத்தை உயிருடன் வைத்திருக்க முடியும் என்றும் நித்யானந்தா கூறுகிறார். பட மூலாதாரம்,KAILAASA.ORG படக்குறிப்பு,மூன்று வயதில் நித்யானந்தா இப்படி இருந்ததாக அவரது kailaasaa.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உலக நாடுகளை ஏமாற்றிய நித்யானந்தா கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியின் நெவார்க் நகரம் கைலாசாவுடன் கலச்சார, சமூக பரிமாற்றங்களுக்கான ஒப்பந்தம் போட்டது பெரும் சர்ச்சையை எழுப்பியது. ஒரு கைலாசா என்ற நாடு இருப்பதாகக் கூறி தங்களை ஏமாற்றி ஒப்பந்தம் போடப்பட்டதாக நெவார்க் நகர நிர்வாகம் பின் தெளிவுப்படுத்தியது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு கூட்டங்களில் கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் என்று கூறி பங்கேற்றவர்களின் உரையை நீக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை முன்னதாக தெரிவித்திருந்தது. பட மூலாதாரம்,UNITED NATIONS படக்குறிப்பு,விஜயபிரிய நித்யானந்தா என்ற பெண் கைலாசாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். ஒருவரால் தனி நாடு அறிவிக்க முடியுமா? ஒருவரிடம் நிறைய பணம் இருந்தால், எந்த நாட்டிலாவது தீவுகளை விலைக்கு வாங்கலாம். அந்தத் தீவை ஒரு நாடாக அறிவிக்கலாம். ஆனால், அதற்கு தீவை விலைக்குக் கொடுக்கும் நாடும் சம்மதிக்க வேண்டும். பிற நாடுகள் அல்லது ஐக்கிய நாடுகள் அவை போன்றவை அதை அங்கீகரிக்கின்றனவா என்பதுதான் "நாடு" என்ற அங்கீகாரம் பெறுவதில் முக்கியமான அம்சம். இவை இல்லாமல் பல 'நாடுகள்' உலகில் இருக்கின்றன. லட்சங்களில் மக்கள்தொகை கொண்ட பல சிறிய தீவு நாடுகள் உள்ளன. அந்த நாட்டு அரசுகள் சம்மதித்தால், பணம் கொடுத்து அவற்றைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம். நிலத்தில் கிடைக்கவில்லை என்றால் தண்ணீரில் கொடியை நட்டு ஒரு நாட்டை அமைக்கலாம். சர்வதேச கடல் பரப்பு எந்தவொரு நாட்டின் அதிகார வரம்புக்கும் உட்பட்டது அல்ல. எனவே, கடலில் ஒரு தீவை செயற்கையாக உருவாக்கி ஒரு நாடாக அறிவிக்கலாம். பிரிட்டனுக்கு அருகில் வடக்கு கடலில் உள்ள 'பிரின்சிபாலிட்டி ஆஃப் சீலாண்ட்' என்ற சுய-அறிவிக்கப்பட்ட நாடு உள்ளது. இது பிரிட்டனின் கடற்கரையில் இருந்து சுமார் 12கிமீ தொலைவில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது நாஜி விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ள பிரிட்டன் விமான எதிர்ப்புத் தளங்களை உருவாக்கியது. அங்கு சுமார் 300 பிரிட்டிஷ் வீரர்கள் பணியாற்றினார்கள். 1956இல் பிரிட்டன் அங்கிருந்து வெளியேறியது. முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ராய் பேட்ஸ் 1967இல் ஹெச்எம் ஃபோர்ட் ரஃப்ஸை கோட்டையைக் கைப்பற்றினார். அதன்பிறகு அதை அவர் ஒரு தேசமாக அறிவித்தார். அவர் அதற்கு சீலாண்ட் என்று பெயரிட்டு தன்னை இளவரசர் என்று அழைத்துக்கொண்டார். பட மூலாதாரம்,FACEBOOK மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த சுயாஸ் தீட்சித் என்பவர் 2017ஆம் ஆண்டு ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியதாக அறிவித்தார். எகிப்துக்கும் சூடானுக்கும் இடையே உள்ள பிர் தவில் என்ற இடத்தில் 'தீட்சித் ராஜ்ஜியம்' நிறுவப்பட்டதாக அவர் கூறினார். சுமார் 2,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட பிர் தவில் பகுதியில் எந்தவொரு நாட்டிற்கும் உரிமை இல்லை. அங்கு தனது ராஜ்ஜியத்தை நிறுவிய சுயாஸ் தன்னை ராஜாவாக அறிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c3gv70gv6rzo
  12. நோயாளியின் உணர்வுகளை கேளிக்கை ஆக்குகின்றதா...! சாவகச்சேரி வைத்திய நிர்வாகம் யாழ். மாவட்டத்தின் வைத்தியத் துறை தொடர்பான சர்ச்சைகள், போராட்டங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வலுப்பெற்று தற்போது அமைதி பெற்றிருப்பதை நோக்கக் கூடியதாய் உள்ளது. இதற்கு பிரதானமாக, சாவகச்சேரி வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) முறைகேடுகளும், குறித்த வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதனின் முன்வருகையும் பேசுபொருளாகியிருந்தது. இந்நிலையில், வைத்தியர் அர்ச்சுனவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேற்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ''திருநீலகண்டன் பாம்புக்கடிக்கு உள்ளான எனது தந்தையை சிகிசிச்சைக்காக கொண்டுவந்தபொழுது, வைத்தியர்கள் எவரும் இருக்க வில்லை எனவும், இதனை தற்போதய பதில் வைத்திய அத்தியட்சகர் கவனமெடுக்கவும் என வைத்தியர் ரஜீவை மேற்கோள் காட்டி முகப்புத்தக பதிவொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் நேற்றைய கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிக்கப்பட்ட தரப்புக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி விளக்கம் கோரப்பட்டது. இதன்போது, தனது தந்தையின் மருத்துவ தேவைக்காக வந்தபொழுது வைத்தியர்களோ, சக ஊழியர்களோ வைத்தியசாலையில் இல்லை எனவும், இதன்போது வைத்தியசாலையில் ஊழியர்கள் எவரும் இருப்பதை உறுதிசெய்துக்கொள்ள வாகனத்தின் ஒளியை எழுப்பியதாகவும் அவர் பதிலளித்துள்ளார். இதன்போது, கருத்து தெரிவித்த அமைச்சர், நீங்கள் வருகைதந்த வாகனத்தின் சாரதிக்கு, சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கின்றதா? வைத்தியசாலைக்கு முன்னாள் ஒலி எழுப்பக்கூடாது என்பது சரியா? என கேள்வி எழுப்புகின்றார்? இதன் பின்னர் பாம்பு கடிக்கு இலக்கணவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்றதாக பாதிக்கப்பட்டவர் கூறுகின்றார். இங்கு தவறு செய்தவர் யார்? வைத்தியதேவைக்கு நோயாளர்கள் வரும்வேளையில் ஊழியர்கள் இல்லாமை நிர்வாகத்தில் உள்ளவர்களின் தவறா? அல்லது, வைத்தியசாலைக்குள் எவரேனும் இருக்கின்றார்களா என்பதை உறுதி செய்ய ஒலி எழுப்பிய சாரதியின் தவறா? இதன்போது பொறுப்புக்கூறவேண்டிய வைத்தியத்துறைக்கு விசாரணை அறிக்கை மாத்திரம் முடிவென்றால், மருத்துவ தேவைக்காக வரும் நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்போவது யார்? https://ibctamil.com/article/minister-chavakachcheri-hospital-dr-archchuna-1721634557
  13. அமெரிக்காவில் போட்டிகளை நடத்தியதால் ஐசிசிக்கு நட்டம்! அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டிகளைப் பிரபலப்படுத்தும் நோக்கில், 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சில போட்டிகள் அமெரிக்காவில் நடத்தப்பட்டன. இதன்காரணமாக சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு சுமார் 167 கோடி இந்திய ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க், டெக்சாஸ் மற்றும் புளோரிடா மாநிலங்களில் நடத்தப்பட்ட போட்டிகளைக் காண இரசிகர்கள் குறைந்த அளவில் வருகைத் தந்தமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/306439
  14. பட மூலாதாரம்,PA RANJITH/FACEBOOK படக்குறிப்பு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 22 ஜூலை 2024, 02:59 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு வீரவணக்கம் செலுத்துவது, அந்த படுகொலையை கண்டிப்பது போன்றவை விடுதலைச் சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். யாரோடும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியவர், அதே சமயத்தில் எந்தவொரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்நிலையில் வைத்து அணுகியது இல்லை என்றும் குறிப்பிட்டார். சனிக்கிழமை அன்று, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 'ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி' நிகழ்வைக் குறிப்பிட்டுதான் திருமாவளவன் பேசியதாக விமர்சனங்களும் எழுந்தன. இந்த பேரணியின் போது பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், "எங்களுக்கு எதிராக அண்ணன் திருமாவளவனை நிறுத்துவது கொடுமையான விஷயம். அவருக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் நிற்க மாட்டோம். அவர் எங்களுடைய குரல்" எனக் கூறினார். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளில் சிலவற்றுக்குள் முரண்பாடுகள் நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,FACEBOOK/THIRUMAOFFICIAL 'விசிகவுக்கு எதிரான அவதூறுகள்' வெள்ளிக்கிழமை (20.07.2024) அன்று தனது முகநூல் பக்கத்தில், நேரலையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "கூலியைப் பெற்றுக் கொண்டு, சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிற, அரசியல் அறியாமையில் உளறுகிற அற்பர்கள், ஆம்ஸ்ட்ராங் கொலையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவுக்கு என்பதை விட விசிகவுக்கு எதிராக அவதூறுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை இயக்கத் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார். விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்படும் நிலையில், அப்படிப்பட்ட சக்திகள் பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கக் கூடாது என்றும் தன் கட்சியினருக்கு அறிவுறுத்தினார் திருமாவளவன். சனிக்கிழமை (21.07.2024) அன்று நீலம் பண்பாட்டு மையத்தின் பேரணி நடைபெறும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஒருநாள் முன்பாக திருமாவளவன் இவ்வாறு பேசினார். ஆனால், திருமாவளவன் நீலம் பண்பாட்டு மையத்தைக் குறித்து பேசவில்லை என்றும், தங்களுக்குள் எந்த முரண்பாடுகளும் இல்லை என்றும் கூறுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலக் கொள்கைபரப்புத் துணைச் செயலாளர் ஆதிமொழி. "ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் நீதி வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அப்படியிருக்க, உண்மையில் சில சக்திகள் கூலி வாங்கிக்கொண்டு இந்த விஷயத்தை திமுகவுக்கு விசிகவுக்கும் எதிராக திருப்ப முயல்கிறார்கள். இதன் பின்னணியில் பாஜக உள்ளது. அவர்களைதான் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டார்" என்கிறார். பட மூலாதாரம்,@AATHIMOZHI_VCK படக்குறிப்பு,நாங்கள் கண்மூடித்தனமாக திமுகவுக்கு ஆதரவளிப்பவர்கள் அல்ல என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலக் கொள்கைபரப்புத் துணைச் செயலாளர் ஆதிமொழி ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஈடுபட்டவர்களை விரைவாக கைது செய்துவிட்டோம் என்று காவல்துறை தெரிவித்த போது, விசிக தலைவர் திருமாவளவன் அதனை மறுத்து, "கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை" என்று தெரிவித்தார். இதைச் சுட்டிக்காட்டிய ஆதிமொழி, "நாங்கள் கண்மூடித்தனமாக திமுகவுக்கு ஆதரவளிப்பவர்கள் அல்லர். மக்களுக்கான பணி என்பது வேறு, தேர்தல் அரசியல் என்பது வேறு என்பதில் தெளிவாக உள்ளோம். தொடக்கத்திலிருந்தே இந்த படுகொலை வழக்கில் நீதிக்காக தீவிரமாக பணியாற்றுவது விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான்" என்று கூறினார். பல வருடங்களாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நிற்கும் அமைப்பு என்ற முறையில், ஆம்ஸ்ட்ராங் தொடர்பான நிகழ்வுகள் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதில் தவறு இல்லை என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,PA RANJITH/FACEBOOK 'நாங்கள் பாஜகவுக்கு எதிரானவர்கள்' சென்னை எழும்பூரில், சனிக்கிழமையன்று நடைபெற்ற 'ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணியில்' பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், "ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை குறித்துப் பேசினால் பி-டீம் என்று சொல்கின்றனர். நம் ஒற்றுமைக்கு விலை பேசுகின்றனர். பாஜகவிற்கு எப்போதும் நேர் எதிரானவர்கள் நாங்கள்” எனக் கூறினார். திமுகவை மட்டுமல்லாது அனைத்துக் கட்சிகளையும் தான் விமர்சிப்பதாக கூறிய அவர், "அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றியுள்ளன. அதிமுக, திமுகவுக்குதான் நாங்கள் மாற்றி மாற்றி வாக்கு செலுத்தியுள்ளோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு செய்தது என்ன?" என்று கேள்வி எழுப்பினார். இது பணத்திற்காக கூடிய கூட்டம் அல்ல என்பதைக் குறிப்பிட்ட பா. ரஞ்சித், பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுதிரள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பட மூலாதாரம்,@NEELAM_CULTURE படக்குறிப்பு,நீலம் பண்பாட்டு மையத்தின் 'ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணியில்' நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்தப் பேரணியின் முடிவில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்லாத பட்சத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும், தமிழகத்தின் தலித் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், ஆம்ஸ்ட்ராங் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை விசாரிக்க நாடாளுமன்ற குழு ஒன்றை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பேரணி குறித்து பேசிய நீலம் பண்பாட்டு மையத்தின் வாசுகி பாஸ்கர், "பொதுவாகவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலில், இயக்கங்களுக்கும் தேர்தல் அரசியலில் இருக்கும் கட்சிகளுக்கும் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அப்படி சில சிக்கல்கள் எங்களுக்கும் விசிகவுக்கும் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி தலைவர் திருமாவளவனை ஒரு முன்னோடியாகத்தான் பார்க்கிறோம்" என்றார். பட மூலாதாரம்,PA RANJITH/FACEBOOK ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுதிரள வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியிருப்பதன் அர்த்தம், நீலம் பண்பாட்டு மையம் தேர்தலில் களம் காணப்போகிறது என்பது அல்ல என்கிறார் வாசுகி பாஸ்கர். "அண்ணன் ஆம்ஸ்ட்ராங்கை 'ரவுடி' என்று சொன்னார்கள். தலித் ஒருவரை 'ரவுடி' என குற்றம் சுமத்தினால் அதை இந்த சமூகம் எளிதாக ஏற்றுக்கொள்ளும். இதை மாற்ற தான் நீலம் பண்பாட்டு மையம் போராடி வருகிறது. இப்போதைக்கு தேர்தல் அரசியலில் நுழையும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எங்கள் பின்னால் எந்தக் கட்சியும் இல்லை. மக்களை அணிதிரள சொல்வது, அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்வி கேட்கத்தான்" என்று கூறினார் வாசுகி பாஸ்கர். 'திருமாவளவன் செய்தது சரியே' படக்குறிப்பு,மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் பல வருடங்களாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் களத்தில் நிற்கும் ஒரு தலைவர் என்ற முறையில் திருமாளவன் இந்த விஷயத்தை அணுகுவது சரியே என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன். "ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே அரசுக்கும் காவல்துறைக்கும் அழுத்தம் கொடுத்து வருபவர் திருமாவளவன். அவர் இதுபோல பல சூழ்நிலைகளை கையாண்டவர் என்பதால், எது நடைமுறையில் சாத்தியம் என அவருக்கு தெரியும். ஆனால் இந்த விஷயத்தில் ரஞ்சித் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுகிறார்." என்று கூறுகிறார் அவர். "தமிழகத்தில் திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை என ரஞ்சித் கூறுகிறார், திமுகவின் உறுப்பினர்களை விமர்சிக்கிறார். அதேவேளையில் திருமாவளவனுக்கு எதிராக நிற்கவில்லை என்றும் கூறுகிறார். அப்படியென்றால் திமுக கூட்டணியை விட்டு விசிக வெளியே வர வேண்டும் என்று பா.ரஞ்சித் எதிர்பார்க்கிறாரா?" என்று கேள்வி எழுப்பினார். இப்படிப்பட்ட திமுக எதிர்ப்பு கருத்துகள் நீலம் பண்பாட்டு மையத்தின் பேரணியில் வெளிப்படும் எனக் கணித்ததால்தான் திருமாவளவன் அதைப் புறக்கணித்துவிட்டார் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன். https://www.bbc.com/tamil/articles/c6p2g5nx1j4o
  15. காசா முகாம்கள் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.. ஒரே நாளில் 39 பேர் பலி! பாலஸ்தீன நகரமான காசாவின் பல்வேறு இடங்களில் நேற்று [ஜூலை 20] இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. உயிரிழந்தவர்களில் உள்ளூர் பத்திரிகையாளர் முகமது அபு ஜஸீர் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் அடங்குவர். இதனால் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று இரவு புலம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த குடியிருப்பு பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். அல்- நஸ்ரேத் அகதி முகாமின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக மற்றொரு முகாம் கட்டிடம் மீது மிஷைல் தாக்குதல் நடந்த நிலையில் 2 பத்திரிகையாளர் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் பீரங்கிகள் தற்போது ரஃபாவின் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 38,798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்டஇஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த அமைதிப்பேச்சுவார்தைகள் தோல்விமுகத்தில் உள்ளன. இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்த வாரம் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/306551
  16. 22 JUL, 2024 | 01:17 PM இலங்கை முழுவதிலும் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் முறைமையை மேம்படுத்துவதற்காக யுனிசெப் நிறுவனம் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுகாதார அமைச்சிற்கு ஒன்பது குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளை கையளித்தது. இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான செயல்படும் பிரதிநிதி பேகோனா அரேலானோ ஆகியோரின் பங்கேற்புடன் சுகாதார அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரனவிடம் அந்த ட்ரக் வண்டிகள் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றிய வைத்தியர் ரமேஷ் பதிரன, இலங்கையின் சுகாதார முறைமையின் மிகவும் முக்கிய தூண்களில் ஒன்றான நிர்ப்பீடனமாக்கல் செயற்றிட்டத்தினை மேலும் பலப்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் மற்றும் யுனிசெப் நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த ஒத்துழைப்பினை மனப்பூர்வமாக வரவேற்பதாக கூறி, இது தடுப்பூசிகளை பாதுகாப்பாக உரிய நேரத்திற்கே கொண்டு செல்வதற்கு சுகாதார அமைச்சிற்கு துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டார். ஜப்பான் அரசாங்கம் 2021ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் காலத்துக்குக் காலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான குளிர்ச் சங்கிலி உபகரணத் தொகுதிகளை இலங்கையின் சுகாதார அமைச்சிற்கு வழங்கி வந்துள்ளன. தடுப்பூசிகளை பாதுகாப்பான வெப்பநிலையில் களஞ்சியப்படுத்துவதற்காக பெரிய நடமாடும் குளிரூட்டப்பட்ட அறைகள், எடுத்துச் செல்லத்தக்க தடுப்பூசி கொள்கலன்கள் மற்றும் வெப்பநிலைக் கண்காணிப்பு மானிகள் என்பன ஏற்கனவே கையளிக்கப்பட்ட குளிர்ச் சங்கிலி உபகரணங்களாகும். அதன் தொடராகவே இன்று குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகள் கையளிக்கப்படுகின்றன. இங்கு உரையாற்றிய இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் திரு. மிசுகோஷி ஹிடேகி, “இலங்கையின் சுகாதார அமைச்சிற்கு ஒன்பது குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளை கையளிப்பதில் நான் பெருமிதம்கொள்கிறேன். இது இலங்கையின் பொதுச் சுகாதார சேவைகளை பலப்படுத்துவதற்காக ஜப்பான் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற அர்ப்பணிப்பினை பறைசாட்டுமென உறுதியாக நம்புகிறேன். நாடு முழுவதும் தடுப்பூசிகளை தடையின்றி கொண்டு செல்வதற்கான முக்கியமான போக்குவரத்துச் சாதனமாக இந்த ட்ரக் வண்டிகள் விளங்குமென்பதோடு, ஒவ்வொரு சமூகமும் தடுக்கக்கூடிய நோய்களுக்கெதிராக அவசியமான பாதுகாப்பினைப் பெறுவதை உறுதி செய்யும்” என்றும் குறிப்பிட்டார். தடுப்பூசிகளை மத்திய களஞ்சிய அறையிலிருந்து பிராந்திய களஞ்சிய அறைகளுக்கும் அங்கிருந்து சுகாதார வசதிகளை வழங்கும் நிலையங்களுக்கும் கொண்டு செல்வதற்கு இந்த ட்ரக் வண்டிகள் உதவும். தடுப்பூசி கொள்கலன்கள் மற்றும் குளிர் பெட்டிகள் ஏற்கனவே சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. “தடுப்பூசியேற்றல் சிறுவர்களை தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாப்பதுடன், அவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு துணைநிற்கின்றது. தடுப்பூசிகள் வெப்பநிலை உணர்திறன் கொண்டவை என்பதால் அவற்றை பொருத்தமான நிலைமைகளில் கொண்டு செல்வது அவசியம். எனவே, இலங்கையின் ஒவ்வொரு மூலையிலும் வாழ்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் சரியான தடுப்பூசி சரியான நேரத்தில் சென்றடைவதற்கு இந்த ட்ரக் வண்டிகள் உதவும் என்பதில் ஐயமில்லை. நாட்டின் சிறுவர்களின் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கத்தின் நீண்டகால ஆதரவையும் சுகாதார அமைச்சின் கூட்டு ஒத்துழைப்பினையும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் பெரிதும் மதிக்கின்றது” என யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான செயல்படும் பிரதிநிதி பேகோனா அரேலானோ இந்நிகழ்வில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். சிறுவர்களின் குறுகிய மற்றும் நீண்டகால தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமும் சுகாதார அமைச்சும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் பல ஆண்டுகளாக பாரிய பங்களிப்புக்களை வழங்கி வருகிறது. https://www.virakesari.lk/article/189076
  17. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை (22) கைச்சாத்திடபட்டது. தமிழ் சிவில் சமூகத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்டது. கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவருக்கு வாக்களித்தும் எந்தவித பயனும் இல்லை என தமிழ்க் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இதனால் தமிழ் மக்களின் நிலைமையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகளை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் ஆதரவை வழங்காது தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் அண்மைக் காலமாக சிவில் சமூகத்தினராலும் அரசியல் கட்சிகளாலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த்து. இந்நிலையில், இரு தரப்பினர்களுக்கு இடையிலும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கி ஒப்பந்தம் கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து பொது வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உடன்படிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.வி விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தான் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொ. ஐங்கரநேசன், சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம், யதீந்திரா போன்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கையொப்பமிட்டனர். https://thinakkural.lk/article/306604
  18. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாக வாய்ப்பு - துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி 22 JUL, 2024 | 02:51 PM திருவாரூர்: அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஜனாதிபதிர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க ஜனாதிபதிர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார். ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பி.வி கோபாலன் குடியேறினார். பின்னர் அமெரிக்காவில் பி வி கோபாலன் குடும்பம் குடியேறியது.இவரது இரண்டாவது மகள் சியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரீஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் செனட் உறுப்பினராக பதவி வகித்தார். அரசியலில் வளர்ந்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் வெற்றி பெற்ற போது துணை அதிபராக போட்டியிட்டு கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். கமலா ஹாரீஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்களில் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும் அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலாஹரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விபரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கமலா ஹாரீஸ் கடந்த 2019 ம் ஆண்டு "Truth Be Hold'' என்ற புத்தகத்தில் தனது தாத்தா . கோபாலன் தனக்கு ஊக்க சக்தியாக இருந்ததாகவும் கடந்த 1991 ஆம் ஆண்டு தனது தாத்தாவுக்கு நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் குடும்பத்தினரோடு கலந்து கொண்டது இன்றளவும் தனது நினைவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்பதிலிருந்து தனது பொது வாழ்க்கைக்கு இந்திய வம்சாவளி உறவுகள் தான் அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளதை உணர்ந்திருக்கிறார் என அவரது உறவினர்கள் பெருமிதத்தோடு தெரிவிக்கிறார்கள். https://www.virakesari.lk/article/189090
  19. டொலர் ஏறுது என்று ஏற்றிய தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் இறங்கின பிறகு இறங்கவில்லை!
  20. அண்ணை இந்தக் கடிதம் முன்னாள் ஜனாதிபதி சொல்லச் சொல்ல எழுதினதோ?!
  21. பாரிஸில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றார் தர்ஷன் செல்வராஜா! 17 JUL, 2024 | 01:15 PM (ஆர்.சேதுராமன்) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஒலிம்பிக் சுடரை இலங்கையரான தர்ஷன் செல்வராஜா பாரிஸில் நேற்று முன்தினம் ஏந்திச் சென்றார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்ற முதல் இலங்கையராக தர்ஷன் செல்வராஜா வரலாறு படைத்துள்ளார் என பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதுடன், இது இலங்கைக்கு பெருமையான தருணம் எனவும் தெரிவித்துள்ளது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தெரிவுசெய்யப்பட்ட புகழ்பெற்ற பிரெஞ்சு பிரஜைகளில் தர்ஷன் செல்வராஜாவும் ஒருவராவார். இப்போட்டிக்காக, கிறீஸின் நாட்டின் ஒலிம்பியா நகரில் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி பாரம்பரிய முறையில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் சுடர் 19 ஆம் நூற்றாண்டின் பாய்மரக் கப்பல் மூலம் கடந்த மே 8 ஆம் திகதி பிரான்ஸை சென்றடைந்தது. அதன்பின் பல்லாயிரக்கணக்கானோரால் தொடர் ஓட்டம் மூலம் பிரான்ஸின் சுமார் 450 நகரங்களுக்கு ஒலிம்பிக் சுடர் கொண்டுசெல்லப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள பாரிஸ் நகரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தடவையாக ஒலிம்பிக் சுடர் சென்றடைந்த நிலையில், திங்கட்கிழமை (15) மாலை தர்ஷன் செல்வராஜா ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றார். இலங்கையின் தேசிய கொடியுனும் பலர் வீதிகளில் திரண்டிருந்து அவரை வரவேற்றனர். 38 வயதான தர்ஷன் செல்வராஜா, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த நிலையில் 16 வருடங்களாக பேக்கரி தொழிலில் ஈடுபட்டுள்ளார். கடந்த வருடம், பிரான்ஸின் பாரம்பரிய 'பகெட்' எனும் பாண் தயாரிப்புக்கான வருடாந்த போட்டியில் 126 பேரை தோற்கடித்து தர்ஷன் செல்வராஜா முதலிடம் பெற்றார். அதன் மூலம் ஒரு வருடகாலத்துக்கு பிரெஞ்சு ஜனாதிபதி மாளிகைக்கு பாண் விநியோகிக்கும் உரிமையையும் பெற்றுக்கொண்டிருந்தார். இவ்வெற்றியைத் தொடர்ந்து அவர் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்பவர்களில் ஒருவராக தெரிவானார். ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்காக தன்னையும் தெரிவுசெய்த பிரெஞ்சு விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி கஸ்டேரா உட்பட தெரிவுக்குழுவினருக்கு தான் நன்றி தெரிவிப்பதாக ஏற்கெனவே தர்ஷன் செல்வராஜா தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/188665
  22. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜனநாயக கட்சியின் புதிய வேட்பாளராக கமலா ஹரிஸினை அறிவித்தார் பைடன் Published By: RAJEEBAN 22 JUL, 2024 | 06:51 AM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ள ஜோபைடன் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹரிசினை அறிவித்துள்ளார். இந்த வருடம் எங்கள் கட்சியின் வேட்பாளராக கமலா வருவதற்கு நான் எனது முழு ஆதரவையும் ஒப்புதலையும் வழங்கவிரும்புகின்றேன் என டுவிட்டரில் பைடன் தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியினரே ஒன்றிணைந்து டிரம்பினை தோற்கடிக்கவேண்டிய நேரம் இது இதனை செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189044
  23. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் ஜோ பைடன் Published By: RAJEEBAN 21 JUL, 2024 | 11:43 PM அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக ஜோபைடன் அறிவித்துள்ளார். எனது கட்சியினதும் நாட்டினதும் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகைக்கான தேர்தலில் இன்னமும் நான்கு மாதங்களில் அமெரிக்க மக்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் இடம்பெற்ற டொனால்ட் டிரம்புடனான விவாதத்தின்போது ஜோபைடன் தடுமாற்றத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து விலகவேண்டும் என ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் அழுத்தங்களை கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. தனது வாழ்நாளில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகித்தமை பெரும் கௌரவத்திற்குரிய விடயம் என சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள கடிதத்தில் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம் என்றாலும்,கட்சியினதும் நாட்டினதும் நலனை கருத்தில்கொண்டு போட்டியிலிருந்து விலகிநின்று எனது எஞ்சிய காலத்தில் ஜனாதிபதி என்ற கடமையை பூர்த்தி செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189038
  24. Published By: DIGITAL DESK 7 22 JUL, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களிடம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறியவர்களை நம்பி பணத்தினை கொடுத்து ஏமாந்த மூவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர் மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை 10 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும், காத்தான்குடி பகுதியை சேர்ந்தவரும் தற்போது களுத்துறை பகுதியில் வசித்து வரும் பெண்ணொருவரை 25 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் தற்போது தெஹிவளையில் வசித்து வரும் நபரொருவரை 40 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/189068

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.