Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு மற்றும் ஹார்மோன்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் உதித புளுகஹபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நிபுணர் டொக்டர் உதித புளுகஹபிட்டிய தெரிவித்தார். "நாம் அனைவரும் சர்க்கரை நோயின்றி வாழ முயற்சி செய்ய வேண்டும். அதற்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதிக சர்க்கரை உணவுகளை குறைத்து, அதிக காய்கறிகள், இறைச்சி, மீன் உள்ள உணவில் கவனம் செலுத்தி, ஒருவருக்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும்”. ”குடும்பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், உயர் ரத்த அழுத்தம் இருந்தால், கொலஸ்ட்ரால் இருந்தால், கழுத்துப் பகுதியில் கருப்பு நிறம் இருந்தால், முகப் பகுதியில் முடி வளர்வது போன்ற நிலைகள் இருந்தால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீரிழிவு நோயை பரிசோதிப்பது முக்கியம்.” https://thinakkural.lk/article/306393
  2. ஒமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலின் கப்டன் இலங்கையை சேர்ந்த தமிழர் - தந்தை உட்பட காணாமல் போயுள்ளவர்கள் குறித்து மகள் துளசி கவலை Published By: RAJEEBAN 19 JUL, 2024 | 11:58 AM ஓமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலின் தலைமை மாலுமியான கே.வைத்தியகுமாரின் மகள் துளசி வைத்தியகுமார் காணாமல்போனவர்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார். கப்பலின் 16 பணியாளர்களில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருவரை உயிரிழந்த நிலையில் மீட்டுள்ளதாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 8 இந்தியர்களும் ஒரு இலங்கையர்களும் உள்ளதாக இந்திய கடற்படை தகவல்கள் தெரிவித்துள்ளன. அவர்களிற்கு தற்போது மருத்துவசிகிச்சை வழங்கிவருவதாகவும் உயிர்காக்கும் படகில் புறப்பட்ட ஆறு பேரையே காணவில்லை எனவும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். காணாமல்போன கப்பல் பணியாளர்கள் குறித்து தலைமை மாலுமியின் மகள் (கப்டன் வைத்தியகுமார்) துளசி வைத்தியகுமார் கவலை வெளியிட்டுள்ளார். கப்பலின் கப்டன் எனது அப்பா என தெரிவித்துள்ள அவர் அவரது கப்பலில் 16 பேர் பணியாற்றினார்கள், அவர்களில் மூவர் இலங்கையர்கள் 13 பேர் இந்தியர்கள் என துளசி தெரிவித்துள்ளார். துரதிஸ்டவசமாக ஒருவர் உயிரிழந்துவிட்டார், காப்பாற்றப்பட்ட ஒன்பது பேரில் எட்டு இந்தியர்களும் ஒரு இலங்கையரும் உள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அவர்களிற்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகின்றது ஏனையவர்கள் உயிர்காக்கும் படகில் தப்பிச்சென்றனர் என தெரிவிக்கின்றனர் என மேலும் தெரிவித்துள்ளார். ஓமான் அரசாங்கம் அந்தநாட்டின் கடல்சார் அமைப்பு இந்திய கடற்படை ஆகியன ஒன்றிணைந்து மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளன, ஆனால் இதுவரை எதனையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் குழப்பமும் கவலையும் அடைந்துள்ளோம், அந்த ஆறு பேரையும் அவர்களின் குடும்பத்தவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். கப்டன் வைத்தியகுமார், தலைமை பொறியியலாளர் தயாநிதி அப்பாசாமி, குகனேசன் மகேசடாசன் ஆகியோரே கப்பலில் பயணித்த இலங்கையர்கள். https://www.virakesari.lk/article/188836
  3. விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு! இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு வாக்களிக்கும் வசதியை முதன்முறையாக ஏற்படுத்தத் தேர்தல்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பார்வையற்றோர் தங்கள் வாக்குச் சீட்டில் உள்ள அடையாளங்களை பிரெய்லி எழுத்து முறையிலும், செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் சைகை மொழியிலும் அடையாளம் காணும் வகையில் சிறப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/306396
  4. வரலாறே மாறும்! யாழ் ஆனைக்கோட்டையில் புதிய தடயங்கள் பழந்தமிழர் பண்பாட்டின் தொல்லியல் அடையாளங்களை வெளிக்கொண்டு வரும் ஆய்வொன்று யாழ்ப்பாணத்தில்(Jaffna) ஆனைக்கோட்டை(Anaikoddai) பகுதியோன்றில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த தொல்லியல் ஆராய்ச்சி நடவடிக்கையானது 1980 ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்போது, யாழ்ப்பாணத்தில் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் எலும்பு கூடுகள் இரண்டும், அவற்றின் ஒரு எலும்புக்கூட்டின் தலையில், 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மோதிரமொன்றும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. எனினும், போர்சூழல் காரணமாகவும், சில தலையீடுகள் காரணமாகவும் அந்த தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே 44 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வின் போது பல்வேறு வகையான தொல்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமையானது, வரலாற்று சார்ந்த அம்சங்களுக்கு புதிய வெளிச்சம் ஊட்டுகின்றது. சில தடயங்களை வைத்து பார்க்கும் பொழுது ஆனைக்கோட்டைக்கும் அயல்நாட்டிற்குமிடையிலான தொடர்புகளை அறியகூடியதாக உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் இந்த அகழ்வாராய்ச்சியில் உள்ள கண்டுப்பிடிப்புகள் தொடர்பான பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம். https://ibctamil.com/article/archaeological-evidence-of-tamil-culture-in-jaffna-1721312483
  5. முன்னர் 4000ரூபா வரை போனது பூவரசம் தடியில் செய்த இடியப்ப உரல். பிளாஸ்ரிக் இடியப்பத்தட்டுகள் வாங்கிவிடாதீர்கள், பனை நார்/பிரப்பந்தடியில் செய்த இடியப்பத்தட்டுகள் வாங்குங்கோ.
  6. வைத்தியர் அர்ச்சுனாவின் சம்பள மிகுதியை தர மறுக்கும் கேதீஸ்வரன் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் (Archuna Ramanathan) சம்பளப் பணத்தின் மிகுதியை யாழ். மாவட்ட வைத்திய பணிப்பாளர் தரமறுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சமூக வலைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட காணொளி ஒன்றில் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இந்தநிலையில், தன்னுடைய மேலதிக கொடுப்பனவானது இன்றுவரை வழங்கப்படவில்லை என்றும் அதற்கான தரவுகளை யாழ் மாவட்ட வைத்திய பணிப்பாளர் கேதீஸ்வரன் பெற்றுக்கொள்ள மறுப்பதாகவும் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் அத்தோடு தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும் பிரதேசங்களில் ஒரு போதும் சேவையை தொடரமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அரசினால் வழங்கப்பட்டுள்ள விடுதியை மூன்று மாதகாலம் தனது பாவனைக்காக வைத்திருப்பதாகவும் அதனை உடைக்கவோ வேறு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அர்ச்சுனா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/allegations-regarding-savagacherry-hospital-money-1721288839
  7. அவர் மருமகனுக்கும் பெறாமகனுக்கும் முன்னால வாயில வைக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்! சீமான் அண்ணன் பாணியில் இது பனம்பால்!! பனை மூலிகைச்சாறு!! என்று பலவிதமாகச் சொல்லியும் மறுத்துவிட்டார்.
  8. Published By: VISHNU 18 JUL, 2024 | 09:18 PM எமது நிலப்பரப்பையோ அல்லது கடற்பரப்பையோ இந்தியாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு அக்கறைகளுக்கு எதிரான விதத்தில் மூன்றாம் தரப்பொன்று பயன்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சீனாவுக்கு சொந்தமான ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பில் தரித்து நின்று ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி கோருவதும், அதனை அனுமதிப்பது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென இந்தியாவுக்குச் சார்பான தரப்புக்கள் மறுதலிப்பதுமான சம்பவங்கள் கடந்த ஓரிரு ஆண்டுகளில் சில தடவைகள் பதிவாகியிருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்திருக்கும் அமைச்சர் அலி சப்ரி, இந்தியாவின் நியாயமான பாதுகாப்பு அக்கறைகளுக்குப் புறம்பான விதத்தில் இலங்கை மண்ணிலோ அல்லது கடற்பரப்பிலோ மூன்றாம் தரப்பொன்று செயற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என உறுதியாகத் தெரிவித்திருக்கிறார். 'எமது அயலகத்தில் எந்தவொரு தரப்பினரும் எவ்விதமான போர் விளையாட்டுக்களிலும் ஈடுபடுவதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம்' எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும் இந்தியா 'பிரிக்ஸ்' போன்ற சில பொதுக்கட்டமைப்புக்களில் சீனாவுடன் இணைந்து பணியாற்றுவதைப்போன்று இலங்கையும் அதன் ஏனைய பங்காளிகளுடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். https://www.virakesari.lk/article/188798
  9. அப்ப மறுபடியும் விசாரித்து உறுதிப்படுத்துகிறேன் அண்ணை! போனமாதம் கனடிய உறவினர்கள் சிலருக்கு வாங்கிக்கொடுத்தது.
  10. தற்கொலை எண்ணம் இருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுபட பல நாடுகளில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகள், தற்கொலை செய்து கொள்வோரின் நோக்கத்தின் அடிப்படையில் அவர்களுக்கு உதவுகின்றன; வலியின்றி மரணிக்க வழிவகைகளைச் செய்து தருகின்றன. சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவர்களின் மேற்பார்வையில்லாமல், வலி தெரியாமல் மரணிக்க விரும்புவர்களுக்கென்றே சிறுரக வாகனம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம், 2019-ம் ஆண்டில் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது. பார்ப்பதற்கு விண்வெளிக்குச் செல்லும் ஓடம் போலத் தோன்றும் இந்த வாகனம், 3டி வடிவில் உள்ளது. 7.10 லட்சம் அமெரிக்க டொலர் செலவில் நெதர்லாந்தில் 12 ஆண்டுக்கால ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு சட்டம் அனுமதிக்காவிட்டாலும் கருணைக் கொலைக்கு அனுமதி உண்டு. சுயநல நோக்கமின்றி வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புவர்களும் தற்கொலை செய்து கொள்ளலாம். அங்கு இதற்கான பணிகளைச் செய்வதற்கென்றே சில அமைப்புகளும் செயல்படுகின்றன. அத்தகைய அமைப்புகளில் ஒன்றான தி லாஸ்ட் ரிசார்ட் (Last Resort) தலைமை நிர்வாகி ஃபோரியன் வில்லட் கூறுகையில், “எங்களிடம் மக்கள் வரிசையில் நிற்பதால், எளிதாக மரணிக்க இந்த வாகனத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரும்புகிறோம். அது விரைவில் நடைபெறும்” என்றார். அதே நேரம், இறக்க விரும்பும் நபர் முதலில் அவர்களின் மனத்திறன் பற்றிய மனநல மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிறது சுவிட்சர்லாந்து நாட்டின் சட்டம். இறக்க விரும்பும் நபர், மரணிப்பதற்கான வாகனத்தில் ஏறி, மூடியை மூடிவிட்டு அவர்கள் யார், அவர்கள் எங்கே இருக்கிறார்கள், பொத்தானை அழுத்தினால் என்ன நடக்கிறது என்பன போன்ற தானாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இதன்பின் வாகனத்தில் உள்ள பொத்தானை அழுத்தி, மரணத்தை தேடிக் கொள்ளலாம். மரண வாகனத்தில் உள்ள பொத்தானை ஒருமுறை அழுத்தினால், காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு 30 விநாடிகளுக்குள் 21 சதவிகிதத்திலிருந்து 0.05 சதவிகிதமாகக் குறையும் போது, உள்ளே இருப்பவர் சிறு மாற்றத்தை உணர்வார். எனினும் சுய நினைவு இழப்பதற்கு முன்புவரை அவர் மகிழ்ச்சியாகவே இருப்பார் என்கிறார், இதன் கண்டுபிடிப்பாளரான பிலிப் நிட்ஸ்கே. வாகனத்தில் உள்ள ஆக்ஸிஜனை நைட்ரஜனுடன் மாற்றி உடனே மரணத்தை விளைவிக்கிறது. இதற்கு கட்டணமாக 20 அமெரிக்க டொலரை செலவிட வேண்டும். “எந்த பீதியோ, மூச்சுத்திணறலோ இல்லாமல் மரணம் நேரிடுகிறது. வாகனத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, நபரின் இதயத் துடிப்பு மற்றும் ரத்தத்தின் ஆக்ஸிஜன் செறிவு ஆகியவற்றை வாகனம் கண்காணிக்கிறது. 30 விநாடிகளுக்குள் செயல்முறை நிறைவடைய, மரணிப்பதற்கு 5 நிமிடங்கள் முன்பாக அந்த நபர் சுய நினைவு இழந்துவிடுவார்” என்றார் பிலிப் நிட்ஸ்கே. அதே நேரம், மரணிப்பதற்கான வாகனத்தில் ஒருவர் அமர்ந்த பிறகு எல்லா செயல்முறைகளும் தொடங்கி, திடீரென மனமாற்றம் நேரிட்டால் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு பதிலளித்த நிட்ஸ்கே, “ஒருமுறை நீங்கள் அந்த பொத்தானை அழுத்தினால், திரும்பிச் செல்ல வழி இல்லை” என்றார். இந்த வருடத்திற்குள் முழு பயன்பாட்டுக்கு வரும் இந்த வாகனத்தை பயன்படுத்தி இறப்போரின் விவரங்கள் மற்றவர்களுக்கு பகிரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வயது வரம்பு 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இருப்பினும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தால், இந்த வாகனத்தைப் பயன்படுத்தி மரணத்தை எதிர்கொள்ளலாம். https://thinakkural.lk/article/306365
  11. தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் – லூஷா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு மேல் காணாமல் போன நிலைமையில் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன. 15 வயதான சிறுவன் ஒருவரும், 16 வயதான 3 சிறுமிகளும் மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இதுவரையில் வீடு திரும்பவில்லை. அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களின் பெற்றோர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அதேநேரம் காணாமல் போயுள்ளதாக சந்தேகிக்கப்படும் 4 பேரில் ஒரு சிறுமி அவரது பெற்றோருக்கு அன்றைய தினம் பிற்பகல் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தித் தாம் நாவலப்பிட்டி பகுதிக்குச் செல்வதாகக் கூறியிருக்கிறார். குறித்த தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்ற இலக்கத்தை அடிப்படையாக வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/306362
  12. 18 JUL, 2024 | 03:19 PM மதுரை: “தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள் தான். தமிழக மீனவர்களின் பாதுகாப்பு முக்கியமானது” என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணையைச் சேர்ந்த தீரன் முருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். “இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழில் செய்து வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் குற்றவாளிகள் போல கைது செய்கின்றனர். எனவேஇ 26 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் “தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே. அவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது” என்றனர். மத்திய அரசு தரப்பில் “தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை தமிழகம் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. வழக்கு முடிக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர். https://www.virakesari.lk/article/188770
  13. ஜோ பைடன்: கோவிட் தொற்றுக்கு ஆளானதால் அதிபர் தேர்தலில் இருந்து விலகுமாறு வலுக்கும் குரல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தலில் இருந்து விலக வேண்டும் என ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பலரும் பைடனை வலியுறுத்தி வருகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஆன்னா ஃபாகுவே மற்றும் அரசு துறை செய்தியாளர் டாம் பேட்மேன் பதவி, வாஷிங்டன் மற்றும் லாஸ் வேகஸில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பரப்புரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பரப்புரையில் தொய்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அவர் வேட்பாளராகத் தொடர முடியுமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. அமெரிக்க காங்கிரஸில் உள்ள முதல்நிலை தலைவர்களான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, செனட் பெரும்பான்மை தலைவர் சக் ஸூச்சமர், பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ் பைடனை தனித்தனியாகச் சந்தித்து அவர் வேட்பாளராக நீடிப்பது குறித்து தங்களின் கருத்துகளைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் சபாநாயகரான நான்சி பெலோசி இந்த அதிபர் தேர்தலில் பைடன் டொனால்ட் டிரம்பை வீழ்த்த முடியாது என்று அவரிடமே பேசியதாக சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது. ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் டிரம்புக்கு எதிரான விவாத நிகழ்வில் பைடன் பேசத் திணறியது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தி ஏற்படக் காரணமாக அமைந்தது. படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல் பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கோவிட் தொற்றுக்கு ஆளான பைடன் ஜோ பைடனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை அன்று அது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்திப்பிரிவு செயலாளர் கரீன் ஜான் பியர் பேசும்போது, பைடனுக்கு மிதமான அறிகுறிகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். பைடன், டெலவாரில் இருக்கும் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அங்கு தன்னுடைய கடமைகளை பைடன் முழுமையாக மேற்கொள்வார் என்று அறிவித்தார் கரீன். கோவிட் தடுப்பூசிகளையும் பூஸ்டர் தடுப்பூசியையும் ஏற்கெனவே போட்டுக் கொண்ட பைடனுக்கு இதற்கு முன்பு இருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கடந்த புதன்கிழமை காலை லாஸ் வேகஸில் நடைபெற்ற பரப்புரையில் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அன்று பிற்பகல் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவே, லத்தீன் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் யுனிடோஸ்யூஎஸ் (UnidosUS) அமைப்பினருடன் பேசும் நிகழ்வு கைவிடப்பட்டது. டிரம்ப் மீதான கொலை முயற்சிக்குப் பிறகு ஜோ பைடன் முழுவீச்சுடன் பரப்புரையில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த சூழலில் அவருக்கு ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து ஸ்பானிய பூர்வீகத்தைக் கொண்ட ஹிஸ்பானிக் மக்களின் வாக்கு வங்கிகளில் சரிவைச் சந்தித்த அவர், அவர்களின் நம்பிக்கையைப் பெற அதிக நேரத்தை லாஸ் வேகஸில் செலவிட்டார். தொற்று உறுதி செய்யப்பட்டதும், மிகவும் மெதுவாக ஆனால் எச்சரிக்கையுடன் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறிச் சென்றார். மாஸ்க் அணியாமல் விமானத்தில் ஏறியதும், "நன்றாக இருக்கிறேன்," என்று கூறினார். டிரம்புக்கு எதிராகக் கடந்த மாதம் நடைபெற்ற விவாத நேரலையில் மிகப் பதற்றமாக உரையாடியதைக் காட்டிலும், கோவிட் தொற்றால் நிவாடாவில் இருந்து திரும்பிச் சென்ற பிறகு, மீண்டும் அதிபராகும் அவரின் முயற்சியில் பெருத்த அடி விழுந்துள்ளது. பைடனின் பரப்புரையானது குழப்பமான, அதே நேரத்தில் அனுமானிக்க முடியாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. 'மீண்டும் போட்டியிடுவதைக் கைவிட வேண்டும்' - வலுக்கும் வேண்டுகோள்கள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,உணவகம் ஒன்றில் ஆதரவாளர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட அதிபர் ஜோ பைடன் கடந்த சில வாரங்களாக பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். கடந்த வாரம் தனித்தனியாக பைடனை சந்தித்த ஸூச்சமரும், ஜெஃப்ரீஸூம் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் பைடன் போட்டியிடுவது காங்கிரஸின் ஏதேனும் ஓர் அவையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதைக்கூட கேள்விக்குறி ஆக்கிவிடும் என்று கவலை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இந்தச் செய்திகள் வெளியான நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ், "பைடன் இரண்டு தலைவர்களிடமும், கட்சி தேர்வு செய்யப்பட்டிருக்கும் வேட்பாளர் அவர் என்றும், வெற்றி பெறத் திட்டமிட்டு வருவதாகவும், இரு தலைவர்களுடன் சேர்ந்து உழைக்கும் குடும்பங்களுக்கு உதவும் 100 நாள் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற இருப்பதாகவும் கூறியுள்ளதாக," தெரிவித்தார். ஜெஃப்ரீஸின் செய்தித் தொடர்பாளர், "ஜெஃப்ரீஸும் பைடனும் பேசியது தனிப்பட்ட உரையாடல் என்பதால் அது அப்படியே இருக்கட்டும்," என்று கூறினார். ஸூச்சமரின் அலுவலகமோ இந்தச் செய்திகளை வெற்று ஊகம் என்று அழைத்தது. அதே நேரத்தில் தன்னுடைய கட்சியினர் என்ன நினைக்கின்றனர் என்பதை பைடனிடம் ஸூச்சமர் நேரடியாகத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டது. சி.என்.என். செய்தியின்படி, பெலோசியும் சமீபத்தில் பைடனுடன் பேசுகையில், அதிபர் வேட்பாளராக பைடன் தொடரும்போது அது ஜனநாயகக் கட்சியின் தோல்விக்கு வித்திடும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பற்றிக் கூறியிருக்கிறார். பைடன் இதை எதிர்க்க, பெலோசி, அதிபரின் நீண்ட நாள் ஆலோசகரிடம் இருந்து இதுதொடர்பான தரவுகளைக் கேட்டதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. தன்னுடைய செய்தியில் இது தொடர்பான தகவல்களை நான்கு நபர்களிடம் அலைபேசி மூலம் பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் பெலோசி பைடனுடன் எப்போது பேசினார் என்பது தெரியவில்லை. பெலோசியின் அலுவலகம் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு பெலோசி அதிபருடன் பேசவில்லை என்று பதில் கூறியுள்ளது. கடந்த சில வாரங்களில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலரும் பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று வெளிப்படையாக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கலிஃபோர்னியாவை சேர்ந்த கட்சித் தலைவர் ஆடம் ஸ்கிஃப், “மற்றவர்களுக்கு வாய்ப்பை வழங்குங்கள் பைடன்” என்று கூறியிருக்கிறார். "பைடன் அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான அதிபர். அவர் இந்த வாய்ப்பை மற்ற தலைவருக்கு வழங்கித் தன்னுடைய தலைமைப் பண்பின் மரபை நிலை நிறுத்த முடியும்," என்று கூறினார் ஆடம். பி.இ.டி. நேர்காணலில் பேசிய பைடனோ, பிளவுபட்டிருக்கும் இந்த நாட்டில் இந்த வாய்ப்பை மற்றவருக்கு வழங்க முடியும் என்று தாம் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவருக்கு ஏதேனும் ஆரோக்கியக் குறைபாடுகள் இருப்பதாக அவரின் மருத்துவர்கள் கூறினால் போட்டியில் இருந்து விலகுவது பற்றி யோசிக்கலாம் என்றும் கூறினார். கர்நாடகா: வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை என்ற சட்டம் சரியா? - வலுக்கும் எதிர்ப்புகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு: மொஹரம் தினத்தில் அல்லாவுக்கு தீ மிதித்த இந்துக்கள், பிரசாதம் வழங்கிய முஸ்லிம்கள்3 மணி நேரங்களுக்கு முன்னர் பரப்புரையைக் கைவிட்டு வீடு திரும்பிய பைடன் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடும் ஜோ பைடன் பைடனுக்கு கோவிட் தொற்று இருக்கும் தகவல் உறுதியாவதற்கு முன்பு, அவர் தனது பரப்புரை நடக்கவிருந்த பகுதியில் இருந்த ஒரு மெக்சிகன் உணவகத்தில் இருந்ததாக லாஸ் வேகஸ் செய்தியாளர்கள் கூறினர். கோவிட் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, பரப்புரையைக் கைவிட்டு அவர் அங்கிருந்து விரைவாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த உணவகத்தின் சுவர்களில் மெக்சிகன் ஓவியங்களும் கித்தார் இசைக்கருவிகளும் மாட்டப்பட்டிருந்தன. பல வண்ண பேனர்களும் சுவர்களில் ஜொலித்துக் கொண்டிருந்தன. ஒரு சுவரில் மட்டும் ஜோ பைடன் - கமலா ஹாரீஸின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அங்கே மின்விசிறி மெதுவாகச் சுழல, லத்தினோ பாப் இசை ஸ்பீக்கர்களில் இசைக்கப்பட்ட வண்ணம் இருந்தது. பைடன் சமையலறை வழியாக உணவகத்தின் முக்கியப் பகுதிக்கு வந்தார். அங்கு உணவு அருந்திக் கொண்டிருந்த நபர்கள், அவரின் வருகை குறித்து ஏற்கெனவே அறிந்திருந்தார்கள். அவர்களில் சிலரிடம் பைடன் கை குலுக்கினார். ஒருவருக்கு முத்தம் கொடுத்தார். மற்றவர்களோடு செல்ஃபி எடுத்துக் கொண்டார். ஆனால், பார்ப்பதற்கு அவர் சிரமப்படுவதைப் போல் இருந்தார். அதற்கு ஒரு நாள் முன்பு தேசிய சிவில் உரிமைகள் குழுக்களுடன் உற்சாகமாகப் பேசிய பைடனோடு ஒப்பிடுகையில் புதன்கிழமையன்று அவர் மிகவும் மெதுவாகச் செயல்பட்டார். சாதி அடிப்படையில் பணிகளை ஒதுக்கும் சிறைச்சாலைகள் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் குஜராத்தில் குழந்தைகளின் உயிரைப் பறித்த 'சந்திபுரா வைரஸ்' - பரவாமல் தடுப்பது எப்படி?57 நிமிடங்களுக்கு முன்னர் பைடனின் மருத்துவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பைடனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பாக்ஸ்லோவிடின் முதல் டோஸ் வழங்கப்பட்டிருக்கிறது. பைடனின் மருத்துவர் கெவின் ஓ'கான்னர் பைடனுக்கு மேல் சுவாசத் தொற்று அறிகுறிகளும், சளி, இருமலும் இருப்பதாக புதன்கிழமை தெரிவித்தார். பைடனுக்கு பாக்ஸ்லோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டிருக்கிறது. புதன் அன்று நடைபெற்ற பரப்புரையின் முதல் நிகழ்வில் பைடன் நன்றாக இருந்தார். அதன் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் மருத்துவர் ஓ'கான்னர் குறிப்பிட்டார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்த பைடன், அமெரிக்க மக்களுக்கான பணியை தொற்றிலும் இருந்து மீளும் வேளையிலும்கூடச் செய்ய இருப்பதாகக் குறிப்பிட்டார். மற்றொரு பதிவில் "ஈலோன் மஸ்க் மற்றும் அவரது பணக்கார நண்பர்கள் இந்தத் தேர்தலை விலைக்கு வாங்க முயல்கிறார்கள். இதை நீங்கள் ஒப்புக்கொண்டால் இங்கே கூறவும்" என்று பதிவிட்டார். எக்ஸ் தளத்தில் அறிமுகமாகியுள்ள டொனேஷன் போர்ட்டலை குறிப்பிட்டிருந்தார். https://www.bbc.com/tamil/articles/c8498q5p7n9o
  14. மலரின் நேர்மையாலும் திறமையாலும் அவளின் கற்றல் தொடர்கிறது... நன்றி ஐயா.
  15. ஜனாதிபதி தேர்தல் : நிச்சயமற்ற தன்மையை நீக்கும் நோக்கில் நடவடிக்கை Published By: VISHNU 18 JUL, 2024 | 08:41 PM அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற 22 வது அரசியலமைப்பு திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, நீதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை நீக்கும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188797
  16. கள்ளு 1 போத்தல் 200ரூபா, சொல்லி வைச்சு ஒரு பனைக்கள்ளும்(வெறிக்காது) வாங்கலாம். ஆனால் முன்னர் போல இளைஞர்கள் கள்ளு இறக்கும் தொழிலில் ஈடுபடுவதில்லை.
  17. முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையில் வைத்திய நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வைத்தியசாலையை அண்டிய வீதியோரத்தில் பாடசாலை முடிந்தவுடன் மகளை ஏற்றி வந்த தந்தையும் மகளும் தெருவில் நின்ற நாய் ஒன்றுடன் மோதுண்டு இருவரும் காயங்களுடன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். இந்தநேரம் கடமையில் இருந்த தாதியர்கள் "வைத்தியர் இல்லை" எனக் கூறியுள்ளதோடு ஒரு மணி நேரம் காத்திருந்தும் அவர்கள் காயத்துக்கு மருந்து அளிக்காமலும் அவர்களை உள்ளேயும் எடுக்காமல் காத்திருக்க வைத்துவிட்டு கடமை பொறுப்புணர்வு இன்றி செயல்பட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு குறைபாடுகள் இந்நிலையில், பாடசாலை முடிந்து வந்த மகளும் தந்தையும் மிகவும் மன வருத்தத்துடன் வைத்தியசாலைக்கு வெளியில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையில் இருந்த தாதியர்களுடைய இந்த செயல்பாட்டினால் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதேவேளை, அன்மைக் காலமாக வடமாகாணத்தின் சுகாதாரத் துறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்க ஒன்றாகவே காணப்படுகின்றது. https://tamilwin.com/article/irresponsible-behavior-of-a-mullaitivu-hospital-1721285596
  18. சுழிபுரம் - பெரியபுலோ அரசடி ஞான வைரவர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவமானது நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேற்படி ஆலயத்தின் திருவிழாவானது கடந்த 05.07.2024 அன்று ஆரம்பமாகி, 12 தினங்கள் வெகு சிறப்பாக திருவிழாக்கள் இடம்பெற்றன. 13ஆவது நாளான நேற்றையதினம் பொங்கல் உற்சவம் இடம்பெற்றது. ஆலயத்தின் கிரியை ஆலயத்தின் கிரியைகளை சிவசிறி குகன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர். பக்தர்கள் காவடி, பாற்செம்பு, கற்பூரச் சட்டி, அங்கப் பிரதிஷ்டை செய்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். குறிப்பாக பக்தர் ஒருவர் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்து தூக்குக் காவடி எடுத்து, 130 கிலோமீட்டர்கள் தூரம் தாண்டி வந்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார். பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் வைரவப் பெருமானை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர். அத்துடன் 19.07.2024 நாளை வெள்ளிக்கிழமை நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து பெண்கள் பாற்செம்பு எடுத்து வந்து அபிஷேம் இடம்பெறவுள்ளதுடன், வைரவப் பெருமானுக்கு 1008 சங்குகளால் சங்காபிஷேக உற்சவமும் இடம்பெறவுள்ளது. https://tamilwin.com/article/annual-pongal-festival-of-arasati-vairavar-temple-1721294242
  19. அவுஸ்திரேலியாவின் விர்ஜின் விமான நிறுவனத்தில் இணைந்துள்ள பெண்ணொருவர் தற்போது சமூக ஊடகங்களில் அதிக பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுவருகிறார். விசேட தேவையுடைய அலே சேயர்ஸ் என்ற குறித்த பெண் தனது திறமையால் விமான நிறுவனத்தில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் சீருடையுடன் உள்ள புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. விர்ஜின் விமான நிறுவனம் அலே சேயர்ஸ் பிறப்பிலிருந்தே விசேட தேவை உடைய பெண்ணாக காணப்பட்டுள்ளார். எனினும் தனது தனித்துவ திறமையாலும், அவரது செயற்பாட்டினாலும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். அலே சேயர்ஸின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். தனது மகளின் திறமைகளை வெளிக்கொண்டுவர சிறப்பாக பங்களித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் விர்ஜின் விமான நிறுவனத்திற்கு கடமைப்பட்டுள்ளவனாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார். அத்தோடு விர்ஜின் விமான நிறுவனமானது ஒவ்வொரு ஊழியர்களினதும் தனித்துவத்துக்கு மதிப்பளிக்கின்ற விடயம் இதனூடாக வெளிப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. https://tamilwin.com/article/alle-sayers-join-virgin-australia-s-airline-1721279120
  20. டிரம்ப் சுடப்பட்ட தருணத்தை வீடியோவில் நடித்துக்காட்டிய உகண்டா சிறுவர்கள் - சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு Published By: RAJEEBAN 18 JUL, 2024 | 03:03 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை உகண்டாவை சேர்ந்த சிறுவர்கள் நடித்துக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிரம்ப்மீது தாக்குதல் நடத்தப்பட்ட மறுநாள் டிக்டொக்கெர் பிளட்அக் தலைமையிலான சிறுவர் குழுவினர் டிரம்ப்மீது தாக்குதல் இடம்பெறும் தருணத்தை வீடியோவில் நடித்துக்காட்டியுள்ளனர். மரத்தினால் துப்பாக்கிகளை செய்து, அவர்கள் வீடியோவில் நடித்துள்ளனர். டிரம்ப் துப்பாக்கி சூட்டின் பின்னர் நிலத்தில் அமர்ந்து பின்னர் எழும்பி கைமுஷ்டிகளை உயர்த்தி கோசமிடுவதை டிரம்ப்போன்று நடித்த சிறுவன் செய்து காட்டியுள்ளான். மில்லியன் கணக்கானவர்கள் சமூக ஊடகங்களில் இதனை பார்த்துள்ளனர். டிரம்பை படுகொலை செய்யும் முயற்சி உலகம் முழுவதும் அதிர்ச்சியுடன் பார்த்தது என்பதை சிறுவர்களின் இந்த வீடியோ வெளிப்படுத்தியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவிற்காக சிறுவர்கள் டிரம்பின் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிமிடத்தின் உண்மையான ஒலிகள் அலறல்கள் சத்தங்களை பயன்படுத்தியுள்ளனர். ஒரு சிறுவன் டிரம்ப்போல தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாய்வு மேசையின் பின்னால் நின்று உரையாற்றியுள்ளான். டிரம்ப் போன்று கைகளை உயர்த்தி போராடுவோம் என அவன் சத்தமிட்டுள்ளான். இரகசிய சேவைபிரிவினர் டிரம்பை உடனடியாக பாதுகாப்பாக அழைத்து செல்ல முயன்றவேளை அவர் மீண்டும் தனது கைமுஷ்டியை உயர்த்திக் காண்பித்ததையும் அந்த உகன்டா சிறுவன் நடித்துக் காட்டியுள்ளான். கொலை முயற்சி சர்வதேச அளவில் பதற்றத்தையும் அமெரிக்காவில் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ள அதேவேளை அமெரிக்காவில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து வேடிக்கையாக பேசுவதற்காக பலர் இந்த வீடியோவை பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் நடைபெறுவதை முழு உலகமும் பார்க்கும் என்பதை மக்கள் மறந்துவிட்டனர் என ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188767
  21. Published By: DIGITAL DESK 7 18 JUL, 2024 | 01:33 PM தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள பெறமுடியாமையினால் மனமுடைந்த குடும்ப பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம், அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். உறவு முறையான இரு பெண்களுக்கு இடையில் நீண்ட கால நட்பு இருந்து வந்துள்ளது. அதில் ஒரு பெண் பண கஷ்டத்தில் இருந்த போது மற்றைய பெண் வங்கியில் பெருந்தொகை பணத்தினை கடனாக பெற்று, தனது நண்பிக்கு பண உதவி செய்துள்ளார். பண உதவியை பெற்றுக்கொண்ட பெண், பணத்தினை மீள செலுத்தாத நிலையில், வங்கியில் கடன் பெற்ற பெண் பண நெருக்கடிக்குள்ளாகி, மனவுளைச்சலில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நண்பியின் பெயரை முகநூலில் பதிவிட்டு, தனது மரணத்திற்கு காரணம் இவர் தான் என்றும் இவரால் தான் தனது மூன்று பிள்ளைகளையும் அநாதையாக விட்டு செல்வதாக பதிவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/188760
  22. சட்டவிரோத மீன்பிடியால் கடல் முலையூட்டிகள் அழிவு; வனஜீவராசிகள் திணைக்களம் Published By: DIGITAL DESK 3 18 JUL, 2024 | 12:03 PM நாட்டின் கடற்பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்படுவதால் ஆமைகள் மற்றும் டொல்பின்கள் போன்ற கடல் முலையூட்டிகள் உயிரிழப்பதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் அனைத்து மீன்கள் உட்பட கடல் முலையூட்டிகள் இறக்கின்றன. இந்நிலையில், மேற்கு கரையோரப் பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் 10 ஆமை சடலங்களை திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட ஆமைகளின் உடல்களில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவைகள் சுவாசிப்பதில் சிரமம், காயங்கள் மற்றும் செதில்கள் சேதமடைதல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத மீன்பிடி முறைகளினாால் கடல் ஆமைகள் அழிவது மட்டுமல்லாமல் டொல்பின்கள் போன்ற கடல் முலையூட்டிகளுக்கும் தீங்கு விளைவிக்கப்படுகிறது. எனவே, கடல் முலையூட்டிகளை பாதுகாப்பதற்காக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/188744
  23. ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை தாமதமின்றி வழங்க இணக்கம் ஜனாதிபதி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபா நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேவைக்கேற்ப தாமதமின்றி வழங்குவதாக நிதியமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் கடுமையான நிதி முகாமைத்துவத்துடன் செயற்படுவதால் குறித்த நிதியை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை எனவும் தபால் சேவைகள், அச்சிடும் பணிகள் மற்றும் பாதுகாப்பிற்கான செலவுகளை வழங்க தயாராக உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/306348
  24. லிங்கன் முதல் ரீகன் வரை: கொலைத் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க அதிபர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பேரணியின் போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதன் போது டிரம்பின் வலது காதை உரசியபடி ஒரு தோட்டா சென்றது. அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல்வாதி மீது கொலை முயற்சித்தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் பல அமெரிக்க அதிபர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களில் சிலர் உயிரிழந்தனர், சிலர் உயிர் பிழைத்தனர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தாக்குதலில் ஆளான அதிபர்கள் ஜான் எஃப். கென்னடி (1963) ஜான் எப்.கென்னடி அமெரிக்காவின் 35-ஆவது அதிபர். 1963 நவம்பர் 25 ஆம் தேதி அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். டல்லாஸ் பயணத்தின் போது திறந்த காரில் சென்றுகொண்டிருந்த போது அவர் சுடப்பட்டார். கென்னடியின் கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பு இருந்ததாக துப்பாக்கி சூடு நடந்த போது அவருடன் காரில் இருந்த, ரகசிய சேவை ஊழியர் கிளின்ட் ஹில் கூறினார். ஆனால் அதிபரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. கென்னடியின் படுகொலைக்காக லீ ஹார்வி ஓஸ்வால்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜான் எஃப். கென்னடி மீதான தாக்குதலுக்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம். அவர் தன்னை நிரபராதி என்று கூறினார். லீ ஹார்வி ஓஸ்வால்ட் ஒரு முன்னாள் கடற்படை வீரர். அவர் தன்னைத்தானே மார்க்சிஸ்ட் என்று அறிவித்துக்கொண்டவர். அவர் 1959 இல் சோவியத் யூனியனுக்குச் சென்று 1962 வரை அங்கேயே இருந்தார். அவர் மின்ஸ்கில் ஒரு வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழிற்சாலையில் பணிபுரிந்தார். கென்னடி படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹார்வி, கியூபா மற்றும் ரஷ்யாவின் தூதரகங்களுக்குச் சென்றிருந்ததை வாரன் விசாரணைக் கமிஷன் கண்டறிந்தது. லீ ஹார்வி ஓஸ்வால்ட், டெக்சாஸ் பள்ளி புத்தக வைப்பு கட்டடத்தில் (Texas school book depository building) இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக,1964 செப்டம்பரில் வெளியிடப்பட்ட வாரன் கமிஷன் அறிக்கை கூறியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓஸ்வால்ட் சுட்டுக் கொல்லப்பட்டார். அங்கு இரண்டாவது துப்பாக்கி ஏந்திய நபர் இருந்திருக்காலாம் என்று சிலர் சொல்கின்றனர். கென்னடி பின்னால் இருந்து சுடப்படவில்லை, முன்னால் இருந்து சுடப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஓஸ்வால்டின் கன்னங்களில் பாரஃபின் சோதனை செய்யப்பட்டதில் அவர் துப்பாக்கியால் சுடவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், இந்த சோதனையின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. கென்னெடியின் கொலை பற்றி இன்றும்கூட சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆபிரகாம் லிங்கன் (1865) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆபிரகாம் லிங்கன் ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16-ஆவது அதிபராவார். 1865 ஏப்ரல் 15 ஆம் தேதி வாஷிங்டன் டிசியில் உள்ள ஃபோர்டு தியேட்டரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆபிரகாம் லிங்கன் தனது தேர்தல் பரப்புரைகளில் அடிமை முறைக்கு தனது எதிர்ப்பை வெளிப்படையாக தெரியப்படுத்தினார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு லிங்கன் அடிமைத்தனத்தை ஒழித்துவிடுவாரோ என்று அமெரிக்காவின் தென் மாகாணங்களில் பலர் பயந்தனர். அமெரிக்காவின் தெற்கில் அமைந்துள்ள ஏழு மாகாணங்கள் தங்களின் தனி கூட்டமைப்பை உருவாக்கியதற்கு ஒரு வேளை இது காரணமாக இருந்திருக்கலாம். பின்னர் மேலும் நான்கு மாகாணங்கள் இந்த கூட்டமைப்பில் இணைந்தன. இந்த மாகாணங்கள் அனைத்தும் ஒன்றாக ’கூட்டுக்குழு’ (Confederacy) என்று அழைக்கப்பட்டன. 1861-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. இது நான்கு ஆண்டுகள் நீடித்தது. போரில் 6 லட்சம் அமெரிக்கர்கள் இறந்தனர். 1865 ஏப்ரல் 9 ஆம் தேதி கான்ஃபெடரேட் ஜெனரல் ராபர்ட் ஈ லீ சரணடைந்த பின்னர் போர் முடிவுக்கு வந்தது. வடக்கு மற்றும் தென் அமெரிக்க மாமாகாணங்களுக்கு இடையிலான உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த ஒரு வாரத்தில் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையாளி ஜான் வில்க்ஸ் பூத், தெற்கு மாகாணங்களின் வலுவான ஆதரவாளராக இருந்தார். வில்லியம் மெக்கின்லி (1901) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெள்ளை மாளிகையில் வில்லியம் மெக்கின்லி. வில்லியம் மெக்கின்லி அமெரிக்காவின் 25-ஆவது அதிபர். படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் 1897 மார்ச் 4 முதல் 1901 செப்டம்பர் 14 வரை அமெரிக்க அதிபராக இருந்தார். மெக்கின்லியின் ஆட்சிக் காலத்தில் நடந்த 100 நாள் போரில் அமெரிக்கா, கியூபாவில் ஸ்பெயினை தோற்கடித்தது. பிலிப்பைன்ஸின் மணிலா மற்றும் போர்ட்டோ ரிக்கோ ஆகியவை கைப்பற்றப்பட்டன. 1901 செப்டம்பரில் ஒரு கண்காட்சியில் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது அவர் துப்பாக்கியால் இரண்டு முறை சுடப்பட்டார். எட்டு நாட்களுக்குப் பிறகு அவர் காலமானார். மிச்சிகனில் வசிக்கும் லியோன் சோல்கோஸ் (Leon Czolgosz) என்ற நபர் அதிபர் மெக்கின்லியை படுகொலை செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார். "அதிபர் மெக்கின்லியைக் கொன்று நான் என் கடமையை செய்துள்ளேன். ஒருவரிடம் இத்தனை அதிகமான வேலையும், வேறு ஒருவரிடம் வேலையே இல்லாமல் இருப்பதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை,” என்று கைது செய்யப்பட்டபோது அவர் கூறினார். ஜேம்ஸ் ஏ. கார்பீல்ட் (1881) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜேம்ஸ் கார்பீல்ட் மீதான தாக்குதலை சித்தரிக்கும் ஓவியம். ஜேம்ஸ் ஏ கார்பீல்ட் அமெரிக்காவின் 20-ஆவது அதிபராக இருந்தார். அவர் 1831 இல் ஓஹியோவில் பிறந்தார். 1881 ஜூலை 2 ஆம் தேதி அவர் வாஷிங்டன் ரயில் நிலையத்திற்கு வெளியே ஒரு நபரால் சுடப்பட்டார். பலத்த காயமடைந்த கார்பீல்ட் பல நாட்கள் வெள்ளை மாளிகையில் இருந்தார். தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தனது இயந்திரம் ஒன்றின் உதவியுடன் அதிபரின் உடலில் புதைந்திருந்த தோட்டாவை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை. செப்டம்பர் 6 ஆம் தேதி கார்பீல்ட் நியூ ஜெர்சிக்கு அருகிலுள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சில நாட்களுக்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் 1881 செப்டம்பர் 19 ஆம் தேதி காயங்கள் மற்றும் உள் ரத்தப்போக்கு காரணமாக அவர் காலமானார். அதிபர் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்றவர் சார்லஸ் ஜே கைடோ என்று அடையாளம் காணப்பட்டார். கொலை முயற்சித் தாக்குதலில் உயிர் தப்பிய அமெரிக்க அதிபர்கள் ரொனால்ட் ரீகன் (1981) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரொனால்ட் ரீகன் மீதான தாக்குதலுக்குப் பிறகு தாக்குதல் நடத்தியவரை பிடிக்கும் முயற்சி. ரொனால்ட் ரீகன் அமெரிக்காவின் 40-ஆவது அதிபர். சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் பனிப்போரின் முடிவு ஆகியவற்றில் அவர் ஒரு முக்கிய நபராக கருதப்படுகிறார். ரீகன் 1911 பிப்ரவரி 6 ஆம் தேதி இல்லினாயில் உள்ள டாபின்கோவில் பிறந்தார். ரீகன் ஒரு ஹாலிவுட் நடிகர் மற்றும் 50 படங்களில் நடித்துள்ளார். 1942-45 காலகட்டத்தில் அவர் ராணுவத்திலும் பணியாற்றினார். 1981 மார்ச் 30 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்ற 69 நாட்களுக்குப் பிறகு அவர் கொடூரமாக தாக்கப்பட்டார். வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியே அவர் சுடப்பட்டார். ஆனால் அவர் உயிர் பிழைத்தார். தாக்குதலில் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். சுடப்பட்ட நபர் ஜான் ஹிங்க்லி ஜூனியர் என அடையாளம் காணப்பட்டார். தியோடர் ரூஸ்வெல்ட் (1912) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பேரணியில் உரை நிகழ்த்தும் தியோடர் ரூஸ்வெல்ட். அமெரிக்காவின் 26வது அதிபராக இருந்தவர் தியோடர் ரூஸ்வெல்ட். இவர் 1858 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி நியூயார்க்கில் பிறந்தார். அவர் குடியரசுக் கட்சியின் தலைவராக இருந்தார். 1898 இல் ரூஸ்வெல்ட் நியூயார்க்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டார், 1900 இல் அவர் அமெரிக்காவின் துணை அதிபரானார். 1901 இல் அதிபர் மெக்கின்லி படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவர் அமெரிக்காவின் அதிபராக நியமிக்கப்பட்டார். ரஷ்ய-ஜப்பானிய போரை முடிவுக்குக் கொண்டுவந்ததில் முக்கிய பங்காற்றியதற்காக அவருக்கு 1906 இல் நோபல் சமாதான விருது வழங்கப்பட்டது. 1912 அக்டோபர் 14 ஆம் தேதி அமெரிக்க நகரமான மில்வாக்கியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒரு அடிப்படைவாதியால் அவர் மார்பில் சுடப்பட்டார். தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு ரூஸ்வெல்ட் குணமடைந்தார். ரூஸ்வெல்ட்டைத் தாக்கியவர் வில்லியம் எஃப். ஷ்ராங்க் என அடையாளம் காணப்பட்டார். டொனால்ட் டிரம்ப் (2024) - அதிபர் வேட்பாளர் பட மூலாதாரம்,AFP 2024 ஜூலை 14 ஆம் தேதி பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடைபெற்ற பேரணியின் போது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தத்தாக்குதலில் டிரம்பின் காதை உரசியபடி தோட்டா சென்றது. தாக்குதலுக்குப் பிறகு டிரம்பின் முகத்தில் ரத்தம் காணப்பட்டது. முன்னாள் அதிபர் டிரம்பை தாக்கிய இளைஞர் சம்பவ இடத்திலேயே பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டார். அந்த இளைஞர் அப்பகுதியில் உள்ள நர்ஸிங் ஹோமில் சமையல் அறையில் வேலை செய்து வந்தார். டிஎன்ஏ மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தாக்குதல் நடத்தியவரை பாதுகாப்பு அமைப்புகள் அடையாளம் கண்டன. அந்த இளைஞர் பயன்படுத்திய துப்பாக்கி 6 மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்டது. அது அவரது தந்தைக்கு சொந்தமானது. https://www.bbc.com/tamil/articles/c03l73g1jydo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.