ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: தரம் 6 இற்கு விண்ணப்பங்களை இன்று முதல் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம்
Everything posted by ஏராளன்
-
படிக்கட்டுகளில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட ரோபோ: உலகின் முதல் சம்பவமாக பதிவு
தென் கொரியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில், தற்கொலை செய்து கொண்ட உலகின் முதல் ரோபோ இது என தெரிவிக்கப்படுகின்றது. தென் கொரியாவின் குமி நகர சபையில் அரசு ஊழியராக குறித்த ரோபா பணியாற்றி வந்துள்ளது. ஆவணங்களை எடுத்துச் செல்லும் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய ரோபோ, தான் பணிபுரிந்த கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையே உள்ள படிக்கட்டுகளில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக குறித்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது. தற்கொலை செய்து கொண்ட ரோபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தற்கொலை செய்த ரோபோவை நகர அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான விரிவான விசாரணைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/305134
-
முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் பலி - யாழில் சம்பவம்
முரல் மீன் குத்தி நபர் பலி! யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் முரல் மீன் குத்தி உயிரிழந்தார். குருநகர் கடலில் நேற்று முன்தினம் (01) இரவு இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருநகரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதான மைக்கேல் கொலின் டினோ எனத் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். https://thinakkural.lk/article/305109
-
நயினாதீவுக்கு சென்ற படகு கவிழ்ந்தது : ஒருவர் பலி; மூவர் வைத்தியசாலையில்!
03 JUL, 2024 | 10:14 AM யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு பொருட்கள் ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தார். புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திரலிங்கம் அருண் (42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். குறிகட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பொருட்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்ட படகொன்று நான்கு தொழிலாளர்களுடன் நேற்று (02) இரவு 7 மணியளவில் நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் பயணித்த நால்வரும் கடலில் வீழ்ந்தனர். அவர்கள் கரை நோக்கி நீந்தியவேளை, கிராம மக்களின் உதவியுடன் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், நால்வரில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடலானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/187556
-
ரா. சம்பந்தன் காலமானார்: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்
விடைபெற்றார் தமிழினத்தின் தலைமகன் 02 JUL, 2024 | 04:23 PM ஆர்.ராம் “தமிழ் மக்கள் பாரம்பரியமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆகவே அவர்கள் உள்ளக சுயநிர்ணயத்துக்கு உரித்துடையவர்கள். அந்த அடிப்படையில் பிரிக்க முடியாத, பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்சமான அளவில் அதிகாரங்கள் பகிரப்பட்டு அவை மீளப்பெறப்படாத வகையில் உறுதி செய்யப்பட வேண்டும்” இந்தக் கூற்றுக்கள் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி மிகமிக உறுதியாக வெளிப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. அந்தக் கூற்றுக்களுக்காக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது ஆணையை தொடர்ந்தும் அளித்து வந்திருக்கின்றமையையும் கண்கூடாக கணாக்கூடியதாகவும் இருக்கின்றது. இனமொன்றின் விடுதலைக்காகவுள்ள இறுதியான வாயிற்கதவான இந்தக் கூற்றுக்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் அல்ல. ஆயதப்போராட்ட மௌனிப்பின் பின்னர் தமிழ் மக்களால் அரசியல் தலைமகனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இராஜவரோதயம் சம்பந்தனுடையதுதான். கடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி வீரகேசரி வார வெளியீட்டில் பிரசுரமாகிய விசேட நேர்காணலுக்காக 14ஆம் திகதி மாலை 6 மணியளவில் கொழும்பிலுள்ள இல்லத்துக்குச் சென்று நேர்காணலை ஆரம்பித்தபோது, ஜனாதிபதி ரணில், சஜித், அநுர ஆகிய மூவரும் களமிறங்கினால் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தினை, எதனடிப்படையில் எடுப்பீர்கள்? என்று வினாவொன்று எழுப்பப்பட்டது. அந்த வினாவுக்கான பதில் மிகத்துல்லியமாக அமைந்தது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக காணப்படுகின்ற ஒரேயொரு வழி இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு காணப்படுவதுதான் என்பது சம்பந்தனின் தளர்ந்த உடலிலிருந்து வெளியான உறுதியான குரலாக அமைந்திருந்தது. இறுதிவரையில் தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்ற பிரதிபலிப்பும் பட்டவர்த்தனமாகவும் இருந்தது. குறித்த நேர்காணல்தான் அவருடைய அரசியல் வாழ்க்கையில் வழங்கிய இறுதி நேர்காணலாக இருக்கிறது. ஆனால் அந்த நேர்காணலிலும் அவர் இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழர்களின் அபிலாஷைகள் உறுதி செய்யப்படுவதற்கான அவசியம் மற்றும் முகங்கொடுக்கும் சமகாலப் பிரச்சினைகள் ஆகிய விடயங்களில் தொடர்ச்சியாகக்கொண்டிருந்த உறுதியான நிலைப்பாட்டிலிருந்து பிறழ்வடையவில்லை. தமிழினத்தின் விடுதலைக்காக கிடைக்கின்ற அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்த வேண்டும் என்பதில் சம்பந்தன் உறுதியாக இருந்தார். எவருடனான பேச்சுவார்த்தை மேசையையும் தவிர்த்துச் செல்லக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருந்தார். அதற்காக திம்பு பேச்சுவார்த்தை முதல் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் அவர் பயன்படுத்தினார். தமிழ்த் தலைவர்கள் பேச்சுக்களுக்காக திறக்கப்பட்ட வாயில்கள் ஊடாக முயற்சித்துப் பார்க்கவில்லை என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதில் இறுதிவரையில் உறுதியாக அவர் இருந்தார். அதனை அவர் தனது நேர்காணலிலும் வெளிப்படுத்தினார். “அடுத்த தேர்தலில் ரணிலோ, சஜித்தோ, அநுரவோ யாருடனும் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்” என்றும் “அவர்களின் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில்தான் தீர்மானங்கள் எடுப்போம்” என்றும் இறுதியாகக் கூறினார். கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி தனது 91ஆவது வயதில் காலடி பதித்திருந்த சம்பந்தன், வயதால் மூப்படைந்திருந்தார். அதனால் உடல்நிலையில் தளர்வுகள் காணப்பட்டன. ஆனால் அவருடைய சிந்தனைகள், கருத்துக்கள் மாறவில்லை. நினைவாற்றால் குன்றவில்லை. அவரது, உரையாடல்களில் சிறுசிறு தெளிவின்மைகள் காணப்பட்டாலும், ஆண்டுகள், திகதிகள் மாறுபடாது வரலாற்று நிகழ்வுகளையும், குறிப்புக்களையும், துன்பங்கள் துயரங்களையும் வெளிப்படுத்தி இனப்பிரச்சினைக்கான தீர்வினை வலியுறுத்தும் தர்க்க ரீதியான பண்பு நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. தனிநாடு கோரிய ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றபோது, திக்கற்று நின்ற தமிழினத்துக்கு தமிழ்த் தேசியக் கொள்கையில் நின்று தமிழ்த்தேசிய அரசியலை கட்டுறுதியாக வைத்திருந்ததில் விமர்சனங்களையும் தாண்டி காத்திரமான பங்கு சம்பந்தனின் உடையது. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவற்றை ஒன்றிணைந்து பேரம் பேசும் தமிழர் கட்டமைப்பை வழிநடத்தியதில் சம்பந்தனுக்கு பெரும் பங்குண்டு. அது பின்னாளில் சிதைவடைவதற்கு பல்வேறு காரணங்களும் இல்லாமலில்லை. உள்நாட்டு அரசியலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரேமதாச போன்றவர்களுடன் ஊடாட்டங்கள் இருந்தாலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காக சந்திரிகா, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்த தமிழ்த் தலைவராகவும் சம்பந்தன் உள்ளார். தெற்காசியப் பிராந்தியத்தில் தலைமை நாடான இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி முதல் அனைத்து நாடுகளின் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் மதிப்பளித்து செவிசாய்த்த பெருமைக்குரிய தலைவராகவும் சம்பந்தன் திகழ்கின்றார். விசேடமாக, இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களுடன் சந்திப்புக்களை நடத்திய தமிழ்த் தலைவராகவும் சம்பந்தன் திகழ்வதோடு அவர்களுடன் தொடர்ச்சியான ஊடாட்டங்களையும் பேணி வந்திருந்தார். அதுமட்டுமன்றி, உலகத்தவர்கள், சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியிலும் அவர் நன்மதிப்புக்களைப் பெற்றிருந்ததோடு அவர்கள் ஊடாக தமிழ் மக்களுக்கான விடியலைப் பெறுவதற்கும் தீவிரமான முயற்சிகளையும் எடுத்திருக்கத் தவறவில்லை. பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், அமெரிக்காவின் முன்னாள் செயலாளர் ஜோன் கெரி, ஐ.நா.செயலாளர் பான் கீ மூன், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர்களான நவநீதம்பிள்ளை, செயிட் அல் ஹூசைன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனான அவரது சந்திப்புக்கள் மிக முக்கியமானவை. தமிழ் மக்களின் தலைமகனாக சம்பந்தன் உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியாக ஆளுமைமிக்கவராக மிளிர்ந்தார், செயற்பட்டார். அந்த உயரத்தை அவர் அடைவதற்கு கடந்துவந்த பாதை மிகவும் நெடியது, கரடுமுரடானது. ஆம், 1933ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி திருகோணமலையில் இராஜவரோதயம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொறட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று சட்டத்தரணியானதோடு லீலாதேவியை திருமணம் முடித்தார். அவரின் இல்லற வாழ்வின் பலனாக சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். சட்டத்தரணியாக மிளிர்ந்த சம்பந்தன் இளவயதிலேயே தமிழினத்தின் விடுதலைக்கான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். சட்டரீதியான போராட்டங்களிலும், ஜனநாயக ரீதியான போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதன்பலனாக 1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியில் சம்பந்தன் இணைந்துகொண்டார். எனினும் தேர்தல் அரசியலில் பங்கேற்குமாறு 1963இல் தமிழினத்தின் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கேட்டுக்கொண்டார். எனினும் அதனை சம்பந்தன் உடனடியாக ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. எனினும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து 1972இல் ஸ்தாபித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் 1977இல் தேர்தல் அரசியலுக்குள் சம்பந்தன் பிரவேசித்தார். அதன்விளைவாக, 1977இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்று முதன்முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அக்காலத்தில் இருந்த தமிழினத் தளபதி அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றவர்களுடன் கூட்டிணைந்து தாக்கம் செலுத்தும் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்றார். 1977 முதல் 1983 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன், 1989, 1994, 2000 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கவில்லை. பின்னர் 2001ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக்கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ரெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப் பு என்ற புதிய கூட்டணியை தமிழீழ விடுதலைப்புலிகள் ஸ்தாபித்தனர். இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்கட்சி தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாதபடியால் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் பாராளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார. எனினும் 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை. இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர். சம்பந்தன் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளராக, துணைத்தலைவராக, பொருளாளராகவும் பதவி வகித்ததோடு தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். பின்னர் அவர் 2004, 2010, 2015, 2020 எனத் தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு திருகோணமலை தமிழ் மக்களின் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்டு வந்தார். 2015 செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 18 வரை இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். இந்தப் பதவி நிலையே சம்பந்தன் தனது அரசியல்வாழ்வில் வகித்த அதியுச்சமான பதவிநிலை என்பது குறிப்பிடத்தக்கதாக இருப்பதோடு, தற்போதும் தமிழ் மக்களின் பெருந்தலைவர் என்ற உயரிய அந்தஸ்து சம்பந்தனுக்கே உரியதாகிறது. தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் அரசியலுக்காகவும், இன விடுதலைக்காகவும் அர்ப்பணித்த தலைவராக இருக்கும் சம்பந்தனின் இழப்பு விமர்சனங்களுக்கு அப்பால் தமிழ்த் தேசிய அரசியலுக்கும், தமிழினத்துக்கும் நிரப்ப முடியாத பெருவெற்றிடம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. https://www.virakesari.lk/article/187499
-
ரி20 உலக சம்பியனானது இந்தியா
'வித்தைக்கார' ஹர்திக் பாண்டியா மன உளைச்சலில் இருந்து மீண்டு மனங்களை வென்றது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரசிகர்களின் ஏச்சுக்கும் அவமரியாதைக்கும் உள்ளான ஹர்திக் பாண்டியா தன்னை மீட்டுருவாக்கம் செய்துகொண்டது எப்படி? 2024 ஐ.பி.எல் சீசன். மும்பை வான்ஹடே மைதானத்தில் மும்பை இந்தியன் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் பேட்டி எடுத்தார். அப்போது மைதானத்துக்குள் நாய் ஒன்று நுழைந்து ஓடவே ரசிகர்கள் அனைவரும் ‘ஹர்திக் ஹர்திக்’ என்று கோஷமிட்டனர். இதைக் கேட்ட வர்ணனையாளர் மஞ்சரேக்கர் சற்று ஆவேசமாக “மும்பை ரசிகர்கள் மரியாதையாக நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று மைக்கிலேயே கண்டித்தார். அணியின் கேப்டனாகியபின்பும், சொந்தமண்ணின் ரசிகர்களால் வஞ்சிக்கப்படுவது, கேலி, கிண்டல் செய்யப்படுவதைப் போன்று கொடுமையானது ஏதுமில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் கிளாசன் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தியபின் அதே ரசிகர்கள் பாண்டியாவை சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவுக்கு மாறியதால் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் உலகக் கோப்பையை வென்றபின் அதே ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்து அவரின் கன்னத்தில் ரோகித் சர்மா முத்தமிட்டார். எந்த ரசிகர்களால் கேலி, நய்யாண்டி வார்த்தைகளை கேட்டாரோ அதே ரசிகர்களை புகழவைத்த வித்தைக்காரர் ஹர்திக் பாண்டியா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூப்பர்-8 சுற்றில் ஹர்திக்கின் பேட்டிங்கும், முக்கியமான நேரத்தில் எடுத்த விக்கெட்டுகளும் உலகளவில் சிறந்த ஆல்ரவுண்டராக அவரை உயர்த்தியது சர்ச்சை நாயகன் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டபின், அவரின் பேட்டிங், பந்துவீச்சு எந்த அளவு பேசப்பட்டதோ அந்த அளவு அவரின் சர்ச்சைப் பேச்சுகளும், செயல்களும் செய்தியாகின. ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு, அதிரடியான பேட்டிங், மேட்ச் வின்னிங் ஆட்டம் ஆகியவற்றைப் பார்த்து அடுத்த கபில்தேவ் உருவெடுத்துவிட்டார் என்று கிளப்பிவிடப்பட்டன. ஆனால், இந்த வார்த்தைகளை ஹர்திக் பாண்டியா நம்பவில்லை என்றாலும், அவரின் செயல்பாடுகள், பேச்சுகள் மனதில் லேசான அந்த எண்ணம், கர்வம் இருப்பதையே காட்டியது. குறிப்பாக கரன்ஜோகர் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் ஹர்திக் பேசிய பல கருத்துகள் சர்ச்சையாகியதால், அவர் இந்திய அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ளுதல், ஏராளமான தோழிகள், உயர்குடி மக்கள் போன்ற ஆடம்பர வாழ்க்கை, ஐ.பி.எல் தொடருக்கு முக்கியத்துவத்தால் கிடைத்த பணம் என ஹர்திக் பாண்டியா கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த விமர்சனங்களைக் கடந்து, போராடி வென்றுதான் ஹர்திக் பாண்டியா தன்னை உயர்த்திக்கொண்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுவயதிலிருந்தே மனதில் பட்டதை மறைக்கத் தெரியாமல் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர் ஹர்திக் பாண்டியா இளமைக் காலம் ஹர்திக் பாண்டியா பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்தவர் அல்ல.1993-ஆம் ஆண்டு, அக்டோபர் 11-ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் சூரத்நகரில் சோர்யாசி பகுதியில் ஹர்திக் பிறந்தார். வாடகை வீட்டில், அடுக்குமாடி குடியிருப்பில்தான் ஹர்திக் பிறந்து வளர்ந்தார். ஹர்திக்கின் தந்தை ஹிமான்சு பாண்டியா, சூரத் நகரில் வாகனங்களுக்கான பைனான்ஸ் வழங்கும் சிறிய நிறுவனத்தை நடத்தி வந்தார். ஹர்திக்கிற்கும், அவரின் சகோதரர் குர்னல் பாண்டியாவுக்கும் சிறந்த கிரிக்கெட் பயிற்சி தேவை என்பதற்காக சூரத் நகரிலிருந்து வதோதரா நகருக்கு ஹிமான்சு குடிபெயர்ந்தார். வதோதராவில் உள்ள முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோர் அகாடெமியில் ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா இருவரும் சேர்க்கப்பட்டனர். சிறுவயதிலிருந்தே ஹர்திக்றிக்கு படிப்பில் இருந்த கவனம், அக்கறையைவிட கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருந்தது. 'வெளிப்படையாகப் பேசி வாய்ப்பை இழந்தேன்' கிளப் கிரிக்கெட்டில் ஆர்வத்துடன் விளையாடும் ஹர்திக், தனி ஒருவனாக களத்தில் இருந்து ஆட்டத்தைபலமுறை வென்று கொடுக்கும் அளவுக்குத் திறமையாக இருந்தார். சிறுவயதிலிருந்தே மனதில் பட்டதை மறைக்கத் தெரியாமல் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர் ஹர்திக் பாண்டியா. இதனால்தான் மாநில அளவிலான அணியில் இடம் கிடைக்கும்போது, ஹர்திக் பாண்டியா வெளிப்படையாக பேசிய பேச்சுகள் அவருக்கான இடத்தை பறிபோகவைத்தது. இந்தத் தகவலை ஹர்திக்பாண்டியா ஒருமுறை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “ நான் எதையும் வெளிப்படையாகப் பேசுவேன். மறைக்கமாட்டேன். அவ்வாறு பேசியதுதான் எனக்கான மாநில அளவிலான அணியில் இடம் கிடைக்கவிடாமல் செய்துவிட்டது,” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தேர்வாகினார் லெக் ஸ்பின்னர் வேகப்பந்துவீச்சாளராக மாற்றம் ஹர்திக் பாண்டியா சிறுவயதிலிருந்து கிரிக்கெட் பயிற்சி எடுத்தபோது, 18 வயது வரை அவர் லெக் ஸ்பின்னராகவே இருந்து வந்தார். ஆனால், அதன்பின், பரோடா பயிற்சியாளர் சனத் குமார், ஹர்திக் பாண்டியாவின் திறமையைப் பார்த்து அவரை வேகப்பந்துவீச்சுக்கு மாற்றினார். 2013-ஆம் ஆண்டு பரோடா அணிக்காக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 2013-14 சீசனில் பரோடா அணி சயத் முஸ்தாக் அலி கோப்பையை வெல்ல ஹர்திக் ஆட்டம் முக்கியக் காரணமாக அமைந்தது. 2016-ஆம் ஆண்டில் சயத் முஸ்தாக் அலிக் கோப்பைத் தொடரில் விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா 8சிக்ஸர்கள் விளாசி 86 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்குத் துணை செய்தார். ஐ.பி.எல் தந்த புதுவாழ்க்கை ஹர்திக் பாண்டியா பரோடா அணியில் விளையாடியதைக் கேள்விப்பட்ட மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ஐ.பி.எல் ஏலத்தில் 2015-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியது. 2015-ஆம் ஆண்டிலிருந்து 2021-ஆம் ஆண்டுவரை ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியின் செல்லப்பிள்ளை போலத்தான் இருந்தார். 2015-ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஹர்திக் அடித்த 31 பந்துகளில் 61 ரன்கள்தான் அனைவரின் கவனத்தையும் ஹர்திக் மீது குவித்தது. 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றபோது ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு அளப்பறியது. 2019-ஆம் ஆண்டு சீசன்தான் ஹர்திக் பாண்டியாவை உச்சத்தில் அமரவைத்தது. 432 ரன்கள் சேர்த்த ஹர்திக் பாண்டியா, உலகளவில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக மதிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒருநாள் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடி ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்தார் இந்திய அணிக்குள் வருகை ஹர்திக் பாண்டியா ஐ.பி.எல் தொடரில் விளையாடியவிதம் இந்திய அணியின் தேர்வாளர்களை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடருக்கு ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் டி20 போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 விக்கெட்டுகளை ஹர்திக் எடுத்தார். 2016 ஆசியக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக ஹர்திக் 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து இந்திய அணி பெரிய ஸ்கோர் வர காரணமாக அமைந்தார். பந்துவீச்சிலும் ஒருவிக்கெட்டை வீழ்த்தினார். 2016-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை ஹர்திக் எடுத்தார். 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தேர்வாகினார். ஆனால், எதிர்பார்த்ததைவிட மோசமாக செயல்பட்டு கடுமையாக விமர்சனத்துக்கு ஹர்திக் ஆளாகினார். இதனால் உலகக் கோப்பைத் தொடர் முடிந்தபின் டி20 அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டார். பின்னர் 2022-ஆம் ஆண்டு, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டார். அறிமுக ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் 2016-ஆம் ஆண்டு, அக்டோபர் 16-ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்டியா இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகினார். முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன்விருதை ஹர்திக் வென்று சாதனை படைத்தார். அறிமுக ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது வென்றவர்களில் சந்தீப் பாட்டில், மோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு அடுத்தார்போல் ஹர்திக் இடம் பெற்றார். ஒருநாள் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடி ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்தார். 2017-ஆம் சாம்பியன்ஸ் டிராபி, 2019-ஆம் உலகக் கோப்பை ஆகியவற்றில் ஹர்திக்கின் பந்துவீச்சும், பேட்டிங்கும் அனைவராலும் பாராட்டப்பட்டது. டெஸ்ட் போட்டியிலும் 2016-ஆம் ஆண்டில் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமாகினார். ஆனால் காயத்தில் அவரால் விளையாடமுடியவில்லை. இதைத் தொடர்ந்து 2017-ஆம் ஜூலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா அறிமுகமாகினார். இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மதிய உணவு இடைவேளைக்கு முன்பே ஹர்திக் சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற சாதனை படைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.பி.எல் தொடரிலும் மும்பை அணியில் பேட்டராக இருந்த பாண்டியா குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் பந்துவீசி அதை பயிற்சிக் களமாக மாற்றினார் டி20, ஒருநாள் நாயகன் டெஸ்ட் போட்டிகளில் குறைவாக ஆடிய ஹர்திக் பாண்டியா 11 டெஸ்ட்களில் 532 ரன்களும், 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் 86 ஆட்டங்களில் 1,769 ரன்களையும், டி20 போட்டிகளில் 100 போட்டிகளில் 1,492 ரன்களையும் ஹர்திக் சேர்த்துள்ளார். டி20 போட்டியில் 140-க்கும் மேலாக ஸ்ட்ரைக் ரேட் வைத்தும், ஒருநாள் போட்டியில் 110 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலா 84 விக்கெட்டுகளை ஹர்திக் வீழ்த்தியுள்ளார். அறுவை சிகிச்சை, காயங்கள் ஹர்திக் பாண்டியா முதுகுப் பகுதியில் காயம் ஏற்படவே லண்டனில் முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் நீண்டகாலம் கிரிக்கெட் விளையாடாமல் ஒதுங்கி இருந்து, தீவிரமான பயிற்சிக்குப்பின மீண்டும் அணிக்கள் திரும்பினார். அது மட்டுமல்லாமல் அணியில் ஸ்பெஷலிஸ்ட் பேட்டராக மட்டுமே ஹர்திக் இருந்தார், அவர் பந்துவீசவில்லை. ஐ.பி.எல் தொடரிலும் மும்பை அணியில் பேட்டராக இருந்த பாண்டியா குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் பந்துவீசி அதை பயிற்சிக் களமாக மாற்றினார். 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா கனுக்காலில் காயமடைந்து பாதியிலேயே போட்டியிலிருந்து வெளியேறினார். ஏறக்குறைய 3 மாதங்களுக்குப்பின்புதான் ஹர்திக் அணிக்குள் திரும்பினார். ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கும் உடற்தகுதிச் சிக்கல்கள், பிரச்சினைகள் அவரை பல நேரங்களில் பொறுப்புகளில் அமர்த்துவதை தடுத்தது. குஜராத் அணியின் கேப்டன் ஐபிஎல் தொடரில் 2015-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே ஹர்திக் இருந்தார். ஆனால், 2021-ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவை மும்பை நிர்வாகம் ரிலீஸ் செய்தவுடன் அவரை குஜராத் அணி விலைக்கு வாங்கி அவரை கேப்டனாக நியமித்தது. ஹர்திக் பாண்டியா முதல்முறையாக ஒரு அணிக்கு தலைமை ஏற்று, தொடரை வழிநடத்தினார். தனது முதல் கேப்டன்ஷிப்பிலேயே குஜராத் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக்கொடுத்து வியப்பில் ஆழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES புயல்வீசிய காலம் அதன்பின்புதான் ஹர்திக் பாண்டியா வாழ்க்கையில் புயல்வீசத் தொடங்கியது. குஜராத் அணியிலிருந்து பெரிய தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஹர்திக்கை விலைக்கு வாங்கியது. மும்பை அணிக்க ஏற்கெனவே கேப்டனாக ரோகித் சர்மா இருப்பதால், பாண்டியா ஒரு வீரராகத் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை நிர்வாகம் நியமித்து, ரோகித் சர்மாவை கீழே இறக்கியது. மும்பை அணிக்கு கேப்டனாக மண்ணின் மைந்தன் ரோகித் சர்மாவை பார்த்துப் பழகிய ரசிகர்கள் ஹர்திக்கை ஏற்க முடியவில்லை. இதனால் கடந்த சீசன் முழுவதும் ஹர்திக் பாண்டியா சொந்த அணியின் ரசிகர்களால் மைதானத்துக்குள் அவமானப்படுத்தப்பட்டார், கேலி கிண்டல் பேச்சுகளுக்கு ஆளாகி, பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகினார். அதிலும் சமூக ஊடகங்களில் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக ரசிகர்கள் விமர்சித்தனர், தரக்குறைவான வார்த்தைகளால் ஏசினர். ஆனால், எதற்கும் ஹர்திக் பாண்டியா எதிர்வினையாற்றவில்லை. இதற்கிடையே ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏற்பட்ட பிரச்சினைகள், சிக்கல்கள் அவரை புரட்டிப்போட்டன. மும்பை அணியில் ரோகித் சர்மா சார்பாக சில வீரர்களும், ஹர்திக் சார்பாக சில வீரர்களும் தனித்தனி குழுவாக செயல்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. ரோகித், ஹர்திக் இடையே களத்தைத் தவிர ஓய்வறையில் கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. இதனால் ஹர்திக் பாண்டியா பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகினார். இந்த மன உளைச்சலோடு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியோடு மேற்கந்தியத்தீவுகள் செல்ல முடியாது என்பதை உணர்ந்த ஹர்திக் பாண்டியா தனியாக லண்டன் சென்று அங்கு ஓய்வு எடுத்து தன்னைச் சரி செய்து கொண்டு பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் சென்றார். கடும் மன உளைச்சல் இது குறித்து ஹர்திக் பயிற்சியாளர் கிரண் மோர் கூறுகையில் “ நான் டி20 உலகக் கோப்பைத் தொடர்பாக ஹர்திக்கிடம் பேசியபோது, நான் இந்திய அணியுடன் பயணிக்கவில்லை, மனது சரியில்லை. அதனால் லண்டன் சென்று சிறிது ஓய்வு எடுத்தபின் அணியுடன் நேரடியாக சேர்ந்து கொள்கிறேன் என்றார். இந்திய அணிக்காக கோப்பையை பெற்றுத்தர விளையாட வேண்டும் இதற்கு நான் தயாராக வேண்டும் என்றார். கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து அதிலிருந்து புதிய ஹர்திக்கை உலகக் கோப்பையில் பார்த்தேன். சூப்பர்-8 சுற்றில் ஹர்திக்கின் பேட்டிங்கும், முக்கியமான நேரத்தில் எடுத்த விக்கெட்டுகளும் உலகளவில் சிறந்த ஆல்ரவுண்டராக அவரை உயர்த்தியது. 2011-ஆம் ஆண்டு ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் யுவராஜ் சிங் செய்த பணியை இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஹர்திக் செய்தார். ஒரு வீரர் மனஉளைச்சலுடன் இருக்கும் போது அவரால் 100% சிறந்த பங்களிப்பை அளிக்க முடியாது. அதனால்தான் ஹர்திக் லண்டன் சென்று ஓய்வெடுத்து கரீபியன் திரும்பினார். சிறுவயதிலிருந்து ஹர்திக்கை தெரியும், கடினமான சூழலில் இருந்து வளர்ந்தவர் ஹர்திக்,” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹர்திக் லண்டன் சென்று ஓய்வெடுத்து கரீபியன் திரும்பினார் இந்தியாவை சாம்பியனாக்கும் கனவு பயிற்சியாளர் கிரண் மோர் கூறுகையில் "ஒவ்வொரு கடினமான காலகட்டத்திலும் அதிலிருந்து எளிதாக மேலே வந்துவிடுவார். கடந்த 6 மாதங்களாக அவர் சந்தித்த சிக்கல்கள், சவால்கள், கிண்டல்கள் ஏராளம். ஆனால் எது குறித்தும் ஹர்திக் இதுவரை எதிர்வினையாற்றவில்லை. உலகக் கோப்பையை வென்றபின்புதான் ஹர்திக் பாண்டியா மனம்திறந்து பேசியுள்ளார். "இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தர வேண்டும் என கடந்த ஓர் ஆண்டாக என்னிடம் ஹர்திக் தெரிவித்துவந்தார். அவரின் கனவு கடினமான உழைக்குப்பின் நிறைவேறியுள்ளது” எனத் தெரிவித்தார் "எல்லாவற்றிற்கும் மேலாக, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கும். கடந்த சீசனிலிருந்து மும்பை ரசிக்களின் கருத்தை எப்படி பாண்டியாவுக்கு சாதகமாக மாற்றுவது என்பது அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் எனும் பிராண்டைப்(brand) பாதித்தது,” என்றார். டி20 உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய மேடையில் தேசத்தின் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்ததுபோல் ரசிகர்களை வெல்வதற்கு வேறு கருவி எதுவும் இல்லை. தான் முதலில் இந்திய அணியின் ஒரு அங்கம், அதன்பின்புதான் மும்பை இந்தியன்ஸ் வீரர் என்பதை காட்டுவதன் மூலமும், பாண்டியா அனைத்து இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cne4xwx2wpmo
-
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
02 JUL, 2024 | 04:12 PM சென்னை: “தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில் மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையானஇ உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றுஇந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று (ஜூலை 1) இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்திஇ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை2) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சமீப வாரங்களில் இலங்கைக் கடற்படையினரா தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும் இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளிலும் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் ஜூலை 1 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 1974 ஆம் ஆண்டிலிருந்தே அப்போதைய மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ஜூன் 27 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைக் கோடிட்டுக் காட்டியுள்ளதமிழக முதல்வர் திமுக தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது என்பதையும் தனது எதிர்ப்பை தமிழக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு இது சம்பந்தமாக மாநில அரசுடன் முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் இந்திய மீனவர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத் தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்போதைய மத்திய அரசுதான் என்று தனது கடிதத்தில் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். தனது தலைவரும் அப்போதைய திமுக தலைவருமான கருணாநிதி உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து அதில் “மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்புக்கு முரணானதாக இருக்கும்போதுஇ கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்ததை முதல்வர் தனது கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார். பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்தாலும் இந்தப் பிரச்சினையை தேர்தல் நேர முழக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும் என முதல்வர் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார். எனவே தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில் மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/187506
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை நாளாந்தம் சித்திரவதைகள் - விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் Published By: RAJEEBAN 02 JUL, 2024 | 12:18 PM அல்ஷிபா மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலிய படையினர் தன்னை பல மாதங்களாக தடுத்து வைத்திருந்தவேளை கடுமையான சித்திரவதைகளிற்குட்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய படையினரால் ஏழு மாத காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முகமட் அபு சல்மியா இஸ்ரேலிய படையினர் தன்னை மிக மோசமாக சித்திரவதை செய்தனர் என குறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை முகமட் அபு சல்மியா உட்பட பல பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருந்த மருத்துவர் எங்களை இஸ்ரேலிய படையினர் நாளாந்தம் சித்திரவதை செய்தனர் என தெரிவித்துள்ளார். தடியால் தாக்கினார்கள் நாய்களை கடிக்கவிட்டார்கள் மருந்துகள் உணவுகளை வழங்கமறுத்தார்கள் என தெரிவித்துள்ள மருத்துவர் உளவியல் உடல்ரீதியான சித்திரவதைகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். மருத்துவருடன் விடுதலை செய்யப்பட்ட ஏனைய சிறைக்கைதிகளும் தாங்கள் துஸ்பிரயோகத்தை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பல மருத்து பணியாளர்கள் சித்திரவதைகள் துஸ்பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளனர் போதிய மருத்துவகிசிச்சைகளை வழங்காததால் சிலரின் அவயங்களை துண்டிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என மருத்துவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187468
-
உத்தரப் பிரதேச ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேசம்: ஹத்ராஸ் மத நிகழ்ச்சியின் கூட்ட நெரிசல் பலி 100 ஆக உயர்வு - சமீபத்திய தகவல்கள் பட மூலாதாரம்,DHARMENDRA CHAUDHARY 2 ஜூலை 2024, 13:26 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் (சத்சங்), கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது. உத்தரபிரதேசக் காவல்துறையின் ஆக்ரா மண்டல ஏ.டி.ஜி அலுவலகம் இதை உறுதி செய்துள்ளது. முன்னதாக இச்சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் பிபிசி நிருபர் தில்னாவாஸ் பாஷாவிடம், விபத்தில் 60 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் கூறியிருந்தார். அப்போது, எட்டா மாவட்ட எஸ்எஸ்பி ராஜேஷ் குமார் சிங் கூறுகையில் , "ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே உள்ள முகல்கர்ஹி கிராமத்தில் போலே பாபாவின் (Bole Baba) நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலங்கள் எட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன," என்றார். முன்னதாக, எட்டா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி உமேஷ் குமார் திரிபாதி கூறுகையில், "இதுவரை 50க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் 25-க்கும் மேற்பட்டோர் பெண்கள். 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படும்," என்றார். மத நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட அதீத கூட்ட நெரிசல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மக்களவையில் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோதி மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பிரதமர் நரேந்திர மோதி ஹத்ராஸ் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்தார். “இந்த விவாதத்திற்கு இடையே எனக்கு ஒரு சோகமான செய்தி கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வருகின்றன. இறந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்றார். பட மூலாதாரம்,DHARMENDRA CHAUDHARY முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம் சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி “காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ள முதல்வர், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளித்து, நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஆக்ரா ஏடிஜி மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் சம்பவத்திற்கான காரணத்தை விசாரிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.” பட மூலாதாரம்,DHARMENDRA CHAUDHARY மக்களின் கோபம் காயமடைந்தவர்கள் சிக்கந்த்ராவ் அவசர சிகிச்சை மையத்துக்கு (Sikandrarao Trauma Centre) கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பிபிசி பத்திரிக்கையாளர் தர்மேந்திர சவுத்ரி அந்த சிகிச்சை மையத்திலிருந்து சில வீடியோக்களை அனுப்பியுள்ளார், அதில் பாதிக்கப்ப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கோபத்தை வெளிப்படுத்துவதை தெளிவாகக் காண முடிகிறது. சிகிச்சை மையத்தில் இருந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர், "இவ்வளவு பெரிய விபத்து நடந்துள்ளது, ஆனால் ஒரு மூத்த அதிகாரி கூட இங்கு இல்லை. இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை இங்கு நடத்த போலே பாபாவுக்கு அனுமதி வழங்கியது யார். அரசு நிர்வாகம் எங்கே போனது?" என்கிறார். காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் டிரக்குகள், டெம்போக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சை மையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். வீடியோவில், சிகிச்சை மையத்திற்கு வெளியே தரையில் பெண்களின் சடலங்கள் கிடப்பதைக் காணலாம். சிகிச்சை மையத்திற்கு வெளியே பதற்றமான சூழல் நிலவுகிறது, மேலும் மக்கள் தங்கள் குடும்பத்தினரைத் தேடி கூச்சல் எழுப்பி வருகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் என்ன சொன்னார்? உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் எக்ஸ் தளத்தில், "ஹத்ராஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் மனவேதனையை கொடுக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மீட்புப் பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளேன். போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார். நிகழ்ச்சிக்கு ஒப்புதல் கொடுத்தது யார்? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் இந்தச் சம்பவம் பற்றி ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கூறுகையில், "மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மக்கள் இன்னும் மீட்கப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 50-60 பேர் வரை உயிரிழந்ததாக மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர்,” என்றார். "இந்நிகழ்ச்சிக்கு அனுமதி சப்-கலெக்டரால் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி. இது குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதே நிர்வாகத்தின் முதன்மை நோக்கம். காயமடைந்தவர்களுக்கும், இறந்தவரின் உறவினர்களுக்கும் முடிந்த உதவிகள் செய்து வருகிறோம்," என்றார். https://www.bbc.com/tamil/articles/cd1d6el8d3eo
-
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை பெறும் தீவிர வலதுசாரிகள் - அதிபர் மக்ரோங்குக்கு என்ன சிக்கல்?
தீவிர வலதுசாரி கட்சிக்கு பிரான்ஸ் மக்கள் வாக்களித்ததற்கு 4 காரணங்கள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,முன்பு எப்போதும் இல்லாத வகையில் பிரான்ஸ் வாக்காளர்கள் மரைன் லே பென் கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸாண்ட்ரா ஃபூஷ்ஷே பதவி, பிபிசி உலக சேவை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்சின் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் 33% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. இடதுசாரிகள் கூட்டணியான புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி, 28% வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், பிரான்ஸ் அதிபர் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கூட்டணி 21% வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. நாடாளுமன்றத்தில் வலதுசாரிகள் அதிக இடங்களைப் பெறுவதைத் தடுக்க, மையவாத மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென அதிபர் மக்ரோங் தற்போது அழைப்பு விடுத்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் முதல் முறையாக மரைன் லே பென் மற்றும் ஜோர்டான் பர்டெல்லா தலைமையிலான தேசிய பேரணிக் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பிரான்ஸ் வாக்காளர்கள் இந்த கட்சிக்கு ஆதரவளித்ததின் சில முக்கிய காரணங்கள் என்ன? இது சாத்தியமானது என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரான்சின் மூத்த அரசியல் விமர்சகர் அலைன் டுஹாமெல் கூறுகிறார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 1) உள்நாட்டுக் காரணம் மற்றும் பொருளாதாரத்தில் நிலை மக்களின் வாங்கும் திறனைக் குறைத்த விலைவாசி உயர்வு, அத்துடன் எரிபொருட்களின் விலை உயர்வு, மருத்துவ சேவைகள் முறையாகக் கிடைப்பதில் சிக்கல், "பாதுகாப்பின்மை’’ என்று பிரான்ஸ் மக்கள் அழைக்கும் குற்றங்கள் அதிகரித்து வரும் அச்சம் ஆகியவை வாக்காளர்களின் முதன்மை பிரச்சனைகளாக உள்ளன. பிரான்சின் பொருளாதாரம் நல்ல நிலையிலிருந்தாலும், பெரிய நகரங்களிலிருந்து தள்ளிச் சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் வசிக்கும் மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்ததாக பிபிசியிடம் கூறினர். நிதியும், கவனமும் பெரிய நகரங்களுக்குச் சென்ற நிலையில், பிற பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது. சில இடங்களில் வேலைவாய்ப்பின்மை 25 சதவீதத்தைக் கூட தொட்டது. உள்ளூரில் சிலரால் வீடுகளை வாங்க முடியாத அளவுக்கு, வீடுகளின் விலை அதிகரித்தது. நிதிப் பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன. நகர்ப்புறங்களில் உள்ள மிகப்பெரிய சுகாதார மையங்களுக்காக, உள்ளூர் சுகாதார மையங்கள் மூடப்பட்டது பலரைக் கவலையடைய வைத்தது. உலகமயமாக்கலில் பலனடைந்தவர்கள் மக்ரோங்கிற்கு ஆதரவளித்தனர். இதில் கைவிடப்பட்டவர்கள் வலதுசாரிகள் பக்கம் திரும்பினர் என பேராசிரியர் தாமஸ் பிகெட்டி பிபிசியிடம் கூறினார். Capital in the Twenty-First Century என்ற அதிக விற்பனையான புத்தகத்தை எழுதிய தாமஸ் பிகெட்டி, ’’ தொழிற்சாலைகள் மூடப்பட்டது, பொதுச் சேவைகளை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொண்டது, ரயில்கள் நிறுத்தப்பட்டது, மருத்துவமனைகள் மூடப்பட்டது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட சிறு நகரங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் வலதுசாரிகளுக்கு ஆதரவளித்தனர். பெரிய நகரங்களிலிருந்து வெகு தொலைவில் வசிக்கும் மக்களுக்கு, தங்களது குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி வழங்குவது கூட கடினமானதாக உள்ளது’’ என்கிறார். படக்குறிப்பு,37 வயதான தூய்மைப்பணியாளரான அவுரிலே தனது இரண்டு மகன்களுடன் அமியென்ஸ் நகரில் வசிக்கிறார் பாரிஸின் கிழக்கே பொன்டால்ட் - கம்பால்ட் நகரில் வசிக்கும் பேட்ரிக், ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் தேசிய பேரணி கட்சிக்கு வாக்களித்தார். பிபிசியிடம் பேசிய அவர், ’’இங்கு வசிக்கும் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அவர்கள் வாக்களிப்பதில் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. சாலைகளில் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள்’’ என்றார். 37 வயதான தூய்மைப்பணியாளரான அவுரிலே தனது இரண்டு மகன்களுடன் வடக்கு பிரான்ஸின் அமியென்ஸ் நகரில் வசிக்கிறார். இங்குதான் பிரான்ஸ் அதிபர் மக்ரோங் வளர்ந்தார். தேசிய பேரணி கட்சியினருடன் தான் உடன்படுவதில் ’பாதுகாப்பின்மை’ முதன்மையானது என்கிறார். '’நான் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து வேலைக்குச் செல்வேன். முன்பு சைக்கிளிலோ அல்லது நடந்தோ செல்வேன். ஆனால் இப்போது காரில் செல்கின்றேன்’’ என பிபிசியிடம் கூறினார். ‘’இளைஞர்கள் எப்போதும் வெளியே சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு பயமாக உள்ளது’’ ஓய்வூதியம் வழங்குவதற்கான வயதை 62-இல் இருந்து 64-ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மக்ரோங் அரசு கொண்டுவந்த சட்டம் வாக்காளர்களிடையே பிரச்சனையாக உருவெடுத்தது. ஓய்வூதிய திட்டத்தை நிலைக்க வைக்க, சீர்திருத்தம் அவசியம் என்று மக்ரோங் கூறினார். குளிர்காலத்தில் வீடுகளை வெப்பப்படுத்தும் எரிவாயு மற்றும் மின்சாரத்தின் விலை சமீப காலத்தில் கடுமையாக உயர்ந்தது. 100 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மின்சாரம்/எரிவாயுவின் விற்பனை வரி குறைப்பதில் கவனம் செலுத்தப்படும் எனவும், சில மாதங்களில் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் ரத்து செய்யப்படும் எனவும் தேசிய பேரணி கட்சியின் தலைவர் ஜோர்டான் பர்டெல்லா கூறினார். 2) தற்போது உள்ள அமைப்பின் மீதான வெறுப்பு பிரான்ஸில் தற்போது உள்ள அரசியல் அமைப்பு தங்களுக்கு ஏற்றதாக இல்லை என வாக்காளர்கள் அடிக்கடி கூறி வந்துள்ளனர். "நான் திருப்தி அடைகிறேன், ஏனென்றால் எங்களுக்கு மாற்றம் தேவை," என்று மரைன் லே பென் கட்சியின் வடக்கு பகுதி கோட்டையான ஹெனின்-பியூமண்டில் வசிக்கும் ஜீன்-கிளாட் கெயில்லெட் ஞாயிற்றுக்கிழமையன்று வாக்களித்த பிறகு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். ’’எந்த விஷயமும் மாறவில்லை. அவை மாற வேண்டும்’’ ’’மக்கள் சோர்ந்து போனதால் அவர்களால் [தேசிய பேரணி] வாக்குகளைப் பெற முடிந்தது. எங்களுக்குக் கவலை இல்லை, அவர்களுக்கு வாக்களித்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்’’ என்கிறார் தேசிய பேரணி கட்சியின் மற்றொரு ஆதரவாளரான 80 வயதான மார்குரைட். '’ஆனால் இப்போது நான் பயப்படுவது என்னவென்றால், மற்ற அரசியல் கட்சிகள் தடைகளை ஏற்படுத்தும். நாங்கள் வாக்களித்தோம், இவைதான் முடிவுகள். அவற்றை ஏற்றுக்கொண்டு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.’’ என்கிறார் அவர். ஆனால், யமினா அட்டோ தேசிய பேரணி கட்சியின் வெற்றியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார். தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவாக வாக்காளர்கள் தவறாக வழி நடத்தப்பட்டதாவும், அவர்களின் முடிவு பிரான்ஸ் சமுதாயத்தில் ஆபத்தான பிளவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். ’’அது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நான் மிகவும் வருத்தமாக உணர்கிறேன். ஏனென்றால் என்ன நடக்கிறது என்பதை மக்கள் உணரவில்லை. அவர்கள் வாங்கும் திறன் குறித்தும், பிற குறுகிய கால விஷயங்களை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளனர்’’ என்கிறார் யமினா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சிக்கு அதிபர் மக்ரோங்கே காரணம் என கூறப்படுகிறது நாடு தற்போதுள்ள நெருக்கடிக்கு அதிபர் மக்ரோங்கை பலர் குற்றம் சாட்டுகின்றனர். எகனாமிஸ்ட்டின் பாரிஸ் அலுவலக தலைவரான சோஃபி பெடர், “அனைத்து விதமான அரசியல் சார்பு மக்களையும் ஒன்றிணைக்க மக்ரோங் ஒருமித்த இயக்கத்தை உருவாக்கினார். அது பலனளித்தது. நாடாளுமன்றத்திலும் இரு தரப்புக்கும் இடையே நடந்த முடிவில்லாத சண்டைக்கு இது முற்றுப்புள்ளி வைத்தது'' "ஆனால் விளைவு என்னவென்றால், இடது மற்றும் வலது மிதவாதிகள் அனைவரும் மக்ரோங் கட்சியில் சேர்ந்தனர். அவருக்கு மாற்றாக, தீவிர வலதுசாரிகள் மட்டுமே இருந்தனர்’’ என பிபிசியிடம் கூறினார். 3) குடியேற்றம் மற்றும் பிரான்ஸ் அடையாளத்தைச் சுற்றியுள்ள அச்சம் தேசிய பேரணியின் நாடாளுமன்ற தலைவரான மரைன் லே பென், தனது கட்சியை பிரதான அரசியல் நீரோட்டத்துடன் இணைக்கவும், மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றவும் பல ஆண்டுகளாக பணியாற்றினார். தனது தந்தை ஜீன்-மேரி லே பென் மற்றும் சிலர் சேர்ந்து உருவாக்கிய தேசிய முன்னணி கட்சியை தேசிய பேரணி என்று மறுபெயரிட்டதுடன், கட்சியின் கொள்கையை யூத எதிர்ப்பு மற்றும் தீவிர கொள்கையிலிருந்து நகர்த்தினார். இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் குடியேற்றத்திற்கு எதிரான கட்சியாகவே இது உள்ளது. புலம்பெயர்ந்தோருக்கான சமூக நலனை மட்டுப்படுத்தவும், வெளிநாட்டில் பிறந்த பெற்றோரைக் கொண்ட குழந்தைகளுக்கு பிரான்ஸ் குடியுரிமைக்கான உரிமையை அகற்றவும் தேசிய பேரணி கட்சியின் தற்போதைய தலைவர் ஜோர்டான் பர்டெல்லா வலியுறுத்துகிறார். புலம்பெயர்ந்தோர், குறிப்பாக முஸ்லீம்கள், பிரான்ஸ் சமுதாயத்தில் இணைய மாட்டார்கள் என்ற அச்சத்தை வைத்து இக்கட்சி அரசியல் செய்கின்றது. எடுத்துக்காட்டாக, இக்கட்சியின் வேட்பாளரான இவான்கா டிமிட்ரோவா, "பிரான்ஸ் தேசத்தின் சட்டங்களுக்கு மேலாக தங்கள் மதச் சட்டத்தை வைத்திருக்க விரும்பும் குடியேறிகளுக்கு எதிராக தங்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்’’ என்று பிபிசியிடம் கூறினார். தேசிய பேரணி கட்சியின் நேட்டோ எதிர்ப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு கொள்கைகள் மென்மையாக்கப்பட்டுள்ளன. விளாடிமிர் புடினில் ரஷ்யாவுடனான தேசிய பேரணியின் நெருங்கிய உறவுகள் அமைதியாகக் கைவிடப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முழுக்கத்தை 2022 முதல் தேசிய பேரணி கட்சி முன்னிலைப்படுத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புலம்பெயர்ந்தோர், குறிப்பாக முஸ்லீம்கள், பிரான்ஸ் சமுதாயத்தில் இணைய மாட்டார்கள் என்ற அச்சத்தை வைத்து தேசிய பேரணி கட்சி அரசியல் செய்கின்றது. 4) சமூக ஊடகத்தில் தீவிர பரப்புரை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜோர்டான் பர்டெல்லாவை டிக்டோக் அரசியல்வாதி என்று அழைக்கின்றனர் தேசிய பேரணி கட்சி எளிய முழக்கங்கள் மற்றும் யோசனைகளில் வெற்றிகரமாகப் பிரசாரம் செய்தது. மக்கள் தங்கள் பிரெஞ்சு அடையாளத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தையும்,விலைவாசி உயர்வையும் முன்னிலைப்படுத்தி இக்கட்சியினர் பிரசாரம் செய்தனர். வாக்காளர்களை இடையே தாங்கள் நம்பகமானவர்கள் மற்றும்ன் பரிச்சயமானவர்கள் என்பதை உணர வைக்க சமூக ஊடகங்களை மிகவும் திறம்படப் பயன்படுத்தினர். "பிரான்சில், ஜோர்டான் பர்டெல்லாவை டிக்டோக் அரசியல்வாதி என்று அழைக்கிறோம். ஏனென்றால் அவர் சமூக ஊடகங்களில் மக்களைத் திரட்டும் அரசியல்வாதி" என்று பிரான்ச்-காம்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வின்சென்ட் லெப்ரூ பிபிசியின் நியூஸ்நைட் நிகழ்ச்சியில் கூறினார். ’’பெரும்பாலான மக்கள் இனவெறி கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தற்போது உள்ள அமைப்பால் சோர்வடைந்துவிட்டனர். அவர்கள் மக்ரோங்கின் கொள்கைகளால் சோர்வடைந்துள்ளனர்’’ என்கிறார் தேசிய பேரணிக்கு எதிராகப் போட்டியிடும் புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியின் வேட்பாளர் சார்லஸ் குலியோலி. https://www.bbc.com/tamil/articles/c97dpyzjzgdo
-
யாழில் முதியவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது!
02 JUL, 2024 | 05:57 PM யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் முதியவர் ஒருவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக முதியவருடன் வசித்து வந்த இளைஞன் தெரிவித்துள்ளார். மரணத்தில் சந்தேகம் காணப்பட்டமையால், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. உடற்கூற்று பரிசோதனையில் முதியவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் முதியவருடன் வசித்து வந்த இளைஞனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று திங்கட்கிழமை (01) யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187515
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
கெஹலியவின் பிணை மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு 02 JUL, 2024 | 04:33 PM தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவை நீக்கி தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) உத்தரவிட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஏழு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா இல்லையா மற்றும் பிணை தொடர்பான தீர்ப்பு ஆகியன தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. https://www.virakesari.lk/article/187500
-
முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் பலி - யாழில் சம்பவம்
தற்செயல் தான் அண்ணை. கூடுதலாக வயிற்றுப் பகுதிகளை தான் தாக்குவதாக பெரியவர்கள் கதைப்பார்கள்!
-
பேரின்பம்
அது ஒரு காலம். யார்க் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தோம். கையில் அவ்வளவாகப் பசை இருக்காது. ஒவ்வொரு டாலரும் பார்த்துப் பார்த்து செலவு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் அங்கிருக்கும் பள்ளிக்கூடங்களில் C/C++ வகுப்பு எடுப்பதன்வழி மாதம் $350 கிடைக்கும். பெரிய பணம் அது. அது போக ஊரிலிருந்து குடிவரவாக வந்திருப்பவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவிப்பதன்வழி அவ்வப்போது வயிறார சாப்பாடுகிடைக்கும். சனிக்கிழமை மாலையானால், மார்க்கம் ரோட்டில் இருக்கும் அண்ணன் ஒருவரது வீட்டுக்குப் போய்விடுவது வழக்கம். அண்ணனுக்கு ஒரு மகன், ஒரு மகள். முறையே 4, 1 வயதுப் பிள்ளைகள். நான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வேன். பெரிதாக வெளித்தொடர்பு இல்லாத அவர்களுக்கு என் வருகையானது ஒரு விடுப்பு. வெளியில் செல்வது போவதென இருப்பர். எப்போதாவது ஒருநாள், டாலர் ஸ்டோர்களில் ரெண்டு டாலர், மூன்று டாலருக்கு பையனுக்கு ஏதாவது விளையாட்டுப் பொருள் வாங்கிப் போவேன். அப்படித்தான் ஒருநாள் “கார்” ஒன்று வாங்கிப் போனேன். அவனுக்குக் கொள்ளை மகிழ்ச்சி. அடுத்தடுத்த வார ஈறுகள் சென்ற போதெல்லாம் கவனித்தேன். அந்த காரின் பெட்டியை வைத்து ஓட்டிக் கொண்டிருந்தான் அவன்பாட்டுக்கு. “தம்பி, கார் எங்கடா?”. “அது வந்து, ரூம்புக்குள்ள இருக்கு”. அடுத்தடுத்த வாரங்கள். அந்தப் பெட்டி அடிவாங்கி, அழுக்காகி, நைந்தே போயிருந்தது. “தம்பி, கார் எங்கடா?”. “அது வந்து, ரூம்புக்குள்ள இருக்கு”. அடுத்தவாரம். சென்றமுறை சிவப்புவண்ணக்கார். இம்முறை நீலவண்ணம் வாங்கிக்கொள்ளலாமென வாங்கிக் கொண்டோம். பிரித்தெடுத்து, காரை பையில் வைத்துக் கொண்டு, பெட்டியை மட்டும் பிரிக்காதபடிக்கு மீண்டும் ஒட்டி, கொண்டு போய்க் கொடுத்தோம். ஒரே சிரிப்பு. ஓடோடி வந்தான். வாங்கி உள்ளே பார்த்தான். தூக்கிவீசி விட்டு, மீண்டும் பழைய பெட்டியையே ஓட்டலானான். நமக்குப் படு ஏமாற்றம். அண்ணன் பார்த்துச் சிரித்தார். நான் பையைத் திறந்து, புதுக்காரை வெளியில் எடுத்துக் கொடுத்தேன். அவன் கண்டுகொள்ளவே இல்லை. பெட்டிக்குள் வைத்து, புதிதாய்க் கொடுப்பது போலக் கொடுத்தும் பார்த்தேன். கண்டுகொள்ளவே இல்லை. அந்த வாரத்தங்கல் பெருந்துக்கமாகப் போய்விட்டது நமக்கு. அண்ணன் சொன்னார், “மணி, எடுத்துட்டுப் போயி ரிட்டர்ன்பண்ணிட்டு, ரெண்டொரு வாரம் கழிச்சி வேற எதனா வாங்கியாங்க, செரி ஆயிருவான்”. ஒருமாதமே ஆகியிருக்கும். மஞ்சள்வண்ணக்கார், பதினைந்து டாலர்களுக்கு, ரிமோட்டுடன், கனடியன் டைர் எனும் கடைக்குச் சென்று தனிக்கவனத்துடன் வாங்கி வந்தேன். மனசெல்லாம் உலுக்கம். என்ன ஆகுமோ ஏது ஆகுமோவென. “தம்பி, இங்கபாரு, இந்தவாட்டி என்னானு”. அமைதியாகக் கிட்ட வந்தான். கையில் வாங்கி, எடையைக் கணித்தான். உலுக்கினான். உட்கிடை இருப்பதை உணர்ந்து கொண்டான். இந்தப் பெட்டி, பளபளவென உயர்தரத்தில் இருப்பதைக் கவனித்துக் கொண்டான். சமையலறையில் இருக்கும் அவனது அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். சமையலறைக்குள் போனான். வெளியில் வந்தான். பெட்டியைத் தூக்கிக் கொண்டு உள்ளே, படுக்கையறைக்குள் போனான். “அம்மா, இங்க வாங்க நீங்க”. கொஞ்ச நேரத்தில் முன்னறைக்கு வந்தான், வெறும் பெட்டியோடு. தரையில் ஓட்டுபவன், பக்கவாட்டில் சுவர்களினூடாக ஓட்டினான், ஓட்டினான், ஓட்டிக்கொண்டேவும் இருந்தான். சாப்பிடக் கூப்பிட்டாலும் அவனுக்கு வர விருப்பமில்லாது, ஓயாமல் ஓட்டிக் கொண்டே இருந்தான். “தம்பி, கார் எங்கடா?”. “அது வந்து, ரூம்புக்குள்ள பத்திரமா இருக்கு”. புரியவே இல்லை. “இதென்னுங்ணா இது? புதுக்காரு, இதுக்கும் ரிமோட் காரு, இப்படிப் பண்றானே?” “அது மணீ, சந்தோசம்ங்றது கார்ல இல்ல. நம்மகிட்டக் கார் இருக்குங்றதுல இருக்கு சந்தோசம். நீங்க வாங்க சாப்ட்லாம்”. பணிவுடன் பழமைபேசி http://maniyinpakkam.blogspot.com/2024/06/blog-post_28.html
-
முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் பலி - யாழில் சம்பவம்
02 JUL, 2024 | 01:28 PM யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (01) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருநகர் 5மாடி குடியிருப்பினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய மீனவர் ஆவார். குறித்த மீனவர் குருநகர் கடற்பரப்பிலிருந்து நேற்று கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் மீனவரின் கழுத்து பகுதியில் முரல் மீன் தாக்கியுள்ளது. முரல்மீனின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ள மீனவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/187477
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
பெனால்டி தவறியதால் மைதானத்தில் கண்ணீர்விட்ட ரொனால்டோ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போட்டி முழுவதுமே உணர்ச்சிவசப்பட்டவராக இருந்தார் ரொனால்டோ 3 மணி நேரங்களுக்கு முன்னர் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை தவறவிட்டதால் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு கால்பந்து உலகில் பேசுபொருளாகி இருக்கிறது. யூரோ கோப்பை தொடரில் ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியின்போது கூடுதல் நேரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி மூலம் கோல் அடிக்க முயன்றார். ஆனால் ஸ்லோவேனியா கோல்கீப்பர் அதைத் தடுத்து விட்டார். எனினும் இதனால் போர்சுகலின் வெற்றி பாதிக்கப்படவில்லை. ஷூட்அவுட் முறையில் போர்ச்சுகல் அணி யூரோ 2024 இன் காலிறுதிக்கு முன்னேறியது. இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில், ஷூட் அவுட் முறையில் போர்ச்சுகல் வென்றது. யூரோ 2024 தொடரில் தனது முதல் கோலை அடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ரொனால்டோ. ஆனால் இதுவரை அவரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இந்தப் போட்டியின் ஆட்ட நேரத்தின் கடைசி நேரத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பு ஒன்றை அவர் வீணடித்தார். நேராக பந்தை ஸ்லோவேனியா கோல்கீப்பர் ஒப்லாக்கிடம் அடித்ததால், அவர் அதை எளிதாகத் தடுத்துவிட்டார். முன்னதாக போட்டி முழுவதும் தலையால் முட்டி பந்தைக் கடத்தும் அவரது பல முயற்சிகள் வெற்றிபெறவில்லை. பல வாய்ப்புகளை அவர் தவறவிட்டதைப் பார்க்க முடிந்தது. பெனால்ட்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் வெற்றிபெறாமல் போயிருந்தால், அது ரொனால்டோவுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்திருக்கும். வெள்ளிக்கிழமை ஹம்பர்க்கில் நடக்கும் காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் பிரான்ஸை எதிர்கொள்கிறது, அதே சமயம் ஸ்லோவேனியா போட்டியை விட்டு வெளியேறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES கோல் அடிக்கத் திணறும் ரொனால்டோ எப்போதும்போல ரொனால்டோவுக்கும் ரசிகர்களின் பலமான வரவேற்பு யூரோ போட்டியில் இருக்கிறது. ஆனால் இதுவரை ஒரு கோல் கூட அடிக்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஸ்லோவேனியாவுடனான போட்டியில் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார். தனது உணர்ச்சிகளையும் அவ்வப்போது காட்டிக் கொண்டிருந்தார். கைகளை வானத்தை நோக்கி வீசுவதும், விரக்தியில் காற்றில் குத்துவதும், தவறவிட்ட வாய்ப்புகளைக் கண்டு திகைத்து நிற்பதும் ரொனால்டோவின் வழக்கமாக இருந்தது. ஆனால் அவருக்கான வாய்ப்பு வந்தபோது, அவர் அதைத் தவறவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES கண்ணீர்விட்ட ரொனால்டோ கூடுதல் நேரத்தில் போர்சுகலுக்கு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது. ரொனால்டோ அதை கோலாக்குவதற்கு அடித்தார். ஆனால் ஸ்லோவேனியா கோல்கீப்பர் அதை சிறப்பாகத் தடுத்துவிட்டார். 29 கோல்களை பெனால்டி மூலம் அடித்திருக்கும் ரொனால்டோ, மிக முக்கியமான தருணத்தில் கோல் அடிக்க முடியாததால் திகைத்து நின்றார். கோலடிக்க முடியவில்லை என்பதை அவராலேயே நம்பமுடியவில்லை என்பது போலக் காணப்பட்டார். சில நொடிகளில் கூடுதல் நேரத்தின் பாதி முடிந்துவிட்ட விசில் அடித்ததால், ரொனால்டோ கண்ணீர் மல்க அழத் தொடங்கிவிட்டார். சக வீரர் பல்கின்ஹா அவரை ஆறுதல்படுத்தினார். ரொனால்டோ அழுவதை பெரிய திரையில் கண்ட அவரது ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தும் பாடலைப் பாடினர். பட மூலாதாரம்,GETTY IMAGES பெனால்ட்டி ஷூட் அவுட்டில் வென்ற பிறகு மகிழ்ச்சி ஆட்ட நேரம் முடிந்த பெனால்ட்டி ஷூட் அவுட் வந்த பிறகு, 3-0 என்ற கணக்கில் போர்ச்சுகல் வென்றது. “முதலில் ஒரு துயரம். பிறகு மகிழ்ச்சி அதுதான் கால்பந்து உங்களுக்குத் தருவது” என்று வெற்றி பெற்ற பிறகு ரொனால்டோ கூறினார். “இந்த ஆண்டில் பெனால்ட்டியில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் கண்டிப்பாகத் தேவைப்பட்டபோது ஒப்லாக் அதைத் தடுத்துவிட்டார்” என்று கூறினார் அவர். யூரோ கோப்பையில் ரொனால்டோ பட மூலாதாரம்,GETTY IMAGES நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இதுவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இத்தொடரில் கோல் அடிக்காத வீரர்களின் பட்டியலில், 20 முறை கோல் அடிக்க முயற்சி செய்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ரொனால்டோ ரொனால்டோ கடந்த எட்டு யூரோ கோப்பை அல்லது உலகக்கோப்பை போட்டிகளில் கோல் அடிக்காமல் இருந்ததில்லை யூரோ கோப்பை 2024 தொடரின் லீக் சுற்று போட்டிகளில் கோல் அடிக்க தவறியதன் மூலம், இத்தொடரின் லீக் போட்டிகளில் முதல் முறையாக கோலை பதிவு செய்ய தவறியுள்ளார் ரொனால்டோ https://www.bbc.com/tamil/articles/c6p23331mlno
-
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள்!
கடனை முழுமையாக செலுத்தி முடிக்க 8 வருட கால அவகாசம்! பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் பல்வேறு நபர்கள் கடன் மறுசீரமைப்பு மற்றும் அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி இன்று (02) பாராளுமன்றத்தில் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட உரையொன்றை நிகழ்த்தினார். அந்த உரையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான சவாலான பயணம் தொடங்கிய நாள் முதல், நான் அவ்வப்போது பாராளுமன்றத்தில் அது தொடர்பிலான விடயங்களை முன்வைத்தேன். முதலில் நாங்கள் பின்பற்றி வரும் திட்டங்களை பாராளுமன்றத்தில் விளக்கினோம். அதன் பிறகு நாங்கள் செய்த முன்னேற்றம் குறித்து விளக்கினோம். 2022ஆம் ஆண்டு கடன் செலுத்த முடியாத நாட்டிற்கு, மீண்டும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சவாலான பயணத்தில் இன்னுமொரு முக்கியமான மைல்கல்லை எட்டுவதற்கு எம்மால் முடிந்தது. கடந்த ஜூன் 26ஆம் திகதி எது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் மீண்டும் கடனைச் செலுத்துவதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முடிந்தது. அமைச்சரவையினால் அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரிகள், எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த இணக்கப்பாடுகளிலும், ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டனர். அன்றிரவு இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக நாட்டு மக்களுக்கு இதுகுறித்து அறிவித்தேன். பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் சவால் மிக்க பயணத்தின் ஆரம்ப நாள் முதல் நான் இதுகுறித்து அவ்வப்போது பாராளுமன்றத்தில் தகவல்களை முன்வைத்தேன். முதலில் நாம் பின்பற்றும் திட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்தினோம். அதன்பின்னர் நாம் பெற்றுக்கொண்ட முன்னேற்றங்கள் குறித்து தகவல்களை முன்வைத்தோம். இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சவாலை நான் ஏற்றுக்கொண்ட பின்னர், எமது நான்கு அம்சக் கொள்கைகளை நான் பாராளுமன்றத்தில் முன்வைத்தேன். 1. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து, விரிவான கடன் வசதிகளைப் பெற்று நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவது, 2. சர்வதேச நிதி மற்றும் சட்ட வல்லுனர்களான லாஸார்ட் மற்றும் கிளிபோர்ட் சான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து கடன் உறுதிப்படுத்தல் திட்டத்தைத் தயாரித்து கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டுவது, 3. வெளிநாட்டு முதலீட்டை உறுதிப்படுத்திக் கொள்வதோடு, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் கொள்கைகள், சட்ட திட்டங்களை உருவாக்குவதுடன், டிஜிட்டல் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவது, 4. இத்திட்டத்தின் மூலம் 2048 ஆம் ஆண்டுக்குள் கடனற்ற பொருளாதாரத்தை உருவாக்கி அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவது, அதிலிருந்து நாம் கடினமான, கஷ்டமான பயணத்தை ஆரம்பித்தோம். அந்தப் பயணமே எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நாம் அறிந்திருந்தோம். படிப்படியாக நாம் முன்னேறிச் சென்றோம். 2023 – 2024 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அந்த வேலைத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தினோம். 2023 மார்ச் மாதத்தில் ஐ.எம்.எப். நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கான இணக்கப்பாடுகளை எட்டினோம். அதன் முதல் தவணையை 2023ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் திகதி பெற்றுக்கொண்டோம். நாம் அடைந்திருந்த முன்னேற்றத்தை மீளாய்வு செய்த பின்னர், இரண்டாம் தவணையை 2023ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதியும், மூன்றாம் தவணையை 2024 ஜூன் 12ஆம் திகதியும் பெற்றுக்கொண்டோம். ஐ.எம்.எப். வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், கடன் மறுசீரமைப்பிற்கான பேச்சுவார்த்தைகளை நாம் ஆரம்பித்தோம். இந்தப் பணிகளுக்குத் தேவையான நிபுணத்துவ அறிவைப் பெற்றுக்கொள்வதற்காக லஸார்ட் (Lazard) மற்றும் கிளிபோர்ட் சான்ஸ் (Clifford Chance) சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து பெற்றோம். எமது வெளிநாட்டு கடன் 37 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் 10.6 பில்லியன் டொலர் இரு தரப்பு கடன், 11.7 பில்லியன் டொலர்கள் பல்தரப்பு கடன், 14.7 பில்லியன் டொலர் வணிகக் கடன், 12.5 பில்லியன் டொலர் கடன் பிணை முறிகள் மூலம் பெறப்பட்டவை. கடனை வெட்டிவிடுதல், கடன் சலுகை காலம், கடனை மீளச் செலுத்தும் கால அவகாசத்தை நீடித்தல் உள்ளடங்களான கடன் மறுசீரமைப்பு மற்றும் அதடனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்திலும், வெளியிலும் பல தரப்பினர், பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவற்றில் சில விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை. சில விடயங்களில் பாதி உண்மையே இருந்தது. அதனால் கடன் மறுசீரமைப்பு குறித்த விடயங்களில் சர்வதேச நடைமுறைகளையும், உண்மைகளையும் நான் இந்தத் தருணத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். வெளிநாட்டுக் கடன்கள் என்றால் என்ன? வெளிநாடுகள் கடன்களை வழங்க எங்கிருந்து பணத்தைப் பெறப்படுகின்றன? அந்தந்த நாட்டு மக்களின் வரிப் பணத்தையும், சேமிப்புக்களையுமே எமது கடனாக வழங்குகின்றனர். ஆனால் எமது நாட்டில் எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்யாமல் கடன் சலுகைகளைப் பெற வேண்டும் என்று யோசனை முன்வைக்கின்றனர், அவ்வாறு நடக்காது. இது நடைமுறைச் சாத்தியமற்றது. சர்வதேச நடைமுறைகளுக்கமைய அவ்வாறு செய்ய முடியாது. மக்களின் வரிப் பணத்தைப் போலவே, அவர்களின் சேமிப்புக்கள் குறித்து தீர்மானங்களை எடுக்கும்போது, எங்களுக்கும் சில அர்ப்பணிப்புக்களைச் செய்ய நேரிடும். நாம் இதற்காக அர்ப்பணிப்புச் செய்யாவிட்டால், அந்நாட்டு மக்கள் எங்களுக்காக அர்ப்பணிப்புச் செய்ய முன்வர மாட்டார்கள். அதுமட்டுமன்றி, கடன் மறுசீரமைப்பு என்பது மிகக் கடினமான பணி. இந்தப் பணி கடினமானது மற்றும் வேதனையானது என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். கடன் வழங்குநர்களுக்கும், கடனாளிகளுக்கும், நாட்டு மக்களுக்கும், மத்தியஸ்தர்களுக்கும், இந்தப் பணி கடினமானது. உத்தியோகபூர்வ இரு தரப்பு கடன் வழங்குநர்கள், அடிப்படை கடன் தொகையைக் குறைக்கமாட்டார்கள். எமக்கு சலுகைகளை மட்டுமே பெற முடியும். கடன் செலுத்தும் காலத்தை நீடித்துக் கொள்வது, கடன் சலுகைக் காலம், வட்டி வீதத்தைக் குறைப்பது ஆகிய விடயங்களில் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். எனினும், இந்த யதார்த்தைப் புரிந்துகொள்ளாமல், சிலர் அடிப்படை கடன் தொகையைக் குறைப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர். இன்னும் சிலர் தாம் அதிகாரத்திற்கு வந்தபின்னர் அடிப்படைக் கடன் தொகையில் 50 வீதத்தைக் குறைத்துக் கொள்வதற்கு கடன் வழங்கியுள்ள நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறுகின்றனர். இவ்வாறான பணியைச் செய்வதற்கு இரு தரப்பினரும் இணக்கம் காண்பது அவசியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் சொல்வதை மட்டும் கடன் வழங்குநர்கள் செய்யமாட்டார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சர்வதேச பொருளாதார வழிமுறைகள் குறித்து இவர்களுக்கு எந்தப் புரிதலும் இல்லை என்பதே இவ்வாறான கருத்துக்களின் மூலம் தெரிகிறது. கடன் மறுசீரமைப்பை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் கடன் வழங்குநருக்கோ, கடன் பெறுநருக்கோ இல்லை. இதுகுறித்த தீர்மானத்தை ஐ.எம்.எப் நிறுவனமே எடுக்கும். நாட்டில் கடன் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துவதற்குத் தேவையான மறுசீரமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் அந்த நிறுவனமே தீர்மானிக்கும். அந்தந்த நாடுகளின் பொருளாதார பலம் குறித்து சுயாதீன மதிப்பீட்டின் பின்னர் அந்தத் தீர்மானத்தை எடுப்பார்கள். எமது நாட்டில் கடன் ஸ்திரத் தன்மை இல்லை என்று ஐ.எம்.எப். நிறுவனம் 2022ஆம் ஆண்டு நாம் கஷ்டத்தில் விழுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே எங்களுக்கு அறிவித்திருந்தது. அதேபோல் ஐ.எம்.எப். நிறுவனம் பின்பற்றும் நடைமுறை நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. குறைந்த வருமானம் பெறும் நாடுக் தொடர்பில் ஒரு நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். நடுத்தர வருமானம் பெறும் நாடுகள்தொடர்பில் வேறொரு நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதுகுறித்து ஒரு உதாரணத்தை முன்வைக்கிறேன். இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் பட்டியலில் வருகிறது. நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ள புதிய கடன் ஸ்திரத்தன்மை விசேட வரையறைகளைப் பயன்படுத்தி கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொண்ட நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கைக்காக அவர்கள் முன்வைத்த செயல்திட்டத்திற்கமைய 2032 ஆண்டு அரச கடன் தொகை, மொத்த தேசிய உற்பத்தியில் 95 வீதத்தையும்விட குறைத்திட வேண்டும். குறைந்த வருமானம் பெறும் நாடான கானாவிற்கு இதற்கு மாறான வேலைத் திட்டத்தையே முன்வைத்திருந்தனர். இந்த வேலைத் திட்டத்திற்கமைய 2028ஆம் ஆண்டில் அவர்களின் அரச கடனானது மொத்த தேசிய உற்பத்தியில் 55 வீதத்தைவிட குறைவானதாக இருக்க வேண்டும். கானாவும் இலங்கையைப் போன்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதியும் நானும் இதுகுறித்து அடிக்கடி பேசிவந்துள்ளோம். ஆனால் கானா என்பது குறைந்த வருமானம் பெறும் நாடாகும். எனினும், எமது இரு நாடுகளுக்கும் பொதுவான சில விடயங்களும் இருந்தன. சில விடயங்கள் மாறுபட்டிருந்தன. ஆனால் இரு நாடுகளுக்கும் இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடிந்துள்ளது. இந்தப் பின்னணியில், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் பெரிஸ் கழகம், இந்தியா மற்றும் சீனா எக்ஸிம் வங்கியுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது. எனினும், இதில் எந்தவொரு தரப்பினருக்கும் சிறப்பிடம் கொடுப்பதற்கு எமக்கு அனுமதியிருக்கவில்லை. இந்த இரு தரப்பினரையும் சமமாக நடத்தும் பொது நிபந்தனைகளை தயாரிப்பதே எமக்கிருந்து பாரிய சவாலாகும். தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பூகோள அரசியல் முன்னேற்றங்களுக்கு மத்தியிலேயே நாம் இந்த இந்த சிக்கலான சவாலை சந்தித்தோம். இதனால் எமது இலக்குகளை நோக்கிப் பயணிப்பது இலகுவானதாக அமையவில்லை. பொம்மலாட்டத்தையும் முகக் கவச நடனத்தையும் ஒன்றாக ஆடுவதைப் போல இது மிகவும் சிக்கலான பணியாக இருந்தது. இது செய்ய முடியாத பணியாகும். இருந்தாலும் நாம் செய்து முடித்தோம். எனினும், இந்த அனைத்து கஷ்டங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் ஐ.எம்.எப். வேலைத் திட்டத்தை ஆரம்பித்து 15 மாதங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் வெளிநாட்டு இரு தரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டிற்கு வர முடிந்தது. இந்த குறுகிய காலத்திற்குள் கடன் மறுசீரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்த நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் பட்டியலில் நாம் முன்னணி வகிக்கிறோம். இது மிகப் பெரிய வெற்றியாகும். இது நற்செய்தியாகும். இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், இணைத் தலைமைத்துவம் வகிக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீன எக்ஸிம் வங்கி ஆகிய தரப்புக்களுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்து நான் பாராளுமன்றத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அடிப்படை கடனை மீளச் செலுத்துவதற்காக 2028ஆம் ஆண்டு வரை கால அவகாசம் எங்களுக்கு கிடைத்துள்ளது. வட்டி வீதம் குறிப்பிடத்தக்களவு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வட்டிவீதம் 2.1 அல்லது அதற்கு குறைந்தளவில் தக்கவைத்துக் கொள்ள அனுமதி கிடைக்கும். கடனை முழுமையாக செலுத்தி முடிக்க 8 வருட கால அவகாசம் கிடைத்துள்ளது. இன்னுமொரு வகையில் கூறுவதாயின், 2043ஆம் ஆண்டு வரை அவகாசம் கிடைத்துள்ளது. கடன் சேவை காலத்தை நீடித்துக் கொள்வதுடன் அடிப்படைக் கடனை மீளச் செலுத்தும் தொகையை தொடர்ந்து அதிகரிக்க முடியும். இதன்பலனாக வட்டியாக செலுத்த வேண்டிய 5 பில்லியன் டொலர்களை சேமித்துக் கொள்ள முடியும். எனவே, பொருளாதாரத்தை வழமை நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.அந்நியச் செலாவணியை அதிகரித்துகொள்ள வேண்டும். அரச அடிப்படை நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் கடனை மீளச் செலுத்தும் இயலுமையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இவற்றின் ஊடாக எதிர்காலத்தில் வலுவான நிலையில் இருந்து கடன் செலுத்துவதற்கான வாய்ப்பு கிட்டும். 2023ஆம் ஆண்டு எமது உள்நாட்டு கடன் மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்தோம். இதன்போது நாம் மிகவும் கவனமாக செயல்பட்டோம். எமது நாட்டின் நிதி நிறுவனங்கள் பலனவீனமடையாத வகையிலும், அந்தந்த நிறுவனங்களுக்கு, நெருக்கடி ஏற்படாத வகையிலும், வைப்பாளர்கள் நெருக்கடிகளைச் சந்திக்காத வகையிலும் உள்நாட்டு மறுசீரமைப்பு பணிகளை முன்னெடுத்தோம். தற்போது நாம் 10 பில்லியன் டொலர் உள்நாட்டு இரு தரப்புக் கடன் மறுசீரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளோம். கடன் மறுசீரமைப்பு தொடர்பான சர்வதேச பிரகடனங்களுக்கமைய பல்தரப்பு கடன்கள் இந்த வேலைத் திட்டத்திற்குள் உள்ளடங்காது. உண்மையில் பல்தரப்பு கடன்களை எந்த இடத்திலும் குறைத்துக் கொள்ள முடியாது. இவை ஐ.எம்.எப், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்களாகும். அடுத்தகட்டமாக 14.7 பில்லியன் அமெரிக்க டொலர் வணிகக் கடன்களை மறுசீரமைக்க வேண்டியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்களில் அந்தப் பணிகளை நிறைவுசெய்ய முடியும் என எதிர்பார்க்கிறோம். அதன்பின்னர் எமது கடன் மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்கள் பாராளுமன்ற அரச நிதி செயற்குழுவில் சமர்ப்பிக்கப்படும். முன்னதாக இரண்டு ஒப்பந்தங்களை மட்டும் நிதி செயற்குழுவில் சமர்ப்பிக்க எதிர்பார்திருந்தோம். ஆனால், தற்போது தனியார் பிணை முறி கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. ஆனால், பிரான்சில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தேர்தல் ஒன்று நடப்பதால் இதனை சில நாட்களுக்கு பிற்போடுமாறு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் கோரியுள்ளனர். இதற்கு நான் இணக்கம் தெரிவித்துள்ளேன். எனினும், இதனால் எமக்கு பாதிப்பு ஏற்படாது. கானாவும், இலங்கையும் இவற்றில் கையெழுத்திட்டுள்ளன. இதுபற்றிய தெளிவுபடுத்தல்களுக்கான சந்தர்ப்பத்தை நாம் வழங்க வேண்டும். அதேபோல் பிரான்சின் புதிய அரசாங்கத்துடன் பேச வேண்டிய இன்னும் பல விடயங்கள் இருக்கக் கூடும். பின்னர் இதுகுறித்து ஆழமாகவும், விரிவாகவும் ஆராயுமாறு நிதி தொடர்பான குழுவிடம் கேட்டுக் கொள்கிறேன். நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுடன் இதுகுறித்து பேசியிருக்கிறேன். இந்த தகவல்கள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டு இதுகுறித்து ஆழமான, விரிவாக ஆராயுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது எமது எதிர்காலம் தொடர்பானது. எனவே அனைவரும் இதுகுறித்து ஆராய வேண்டும். இது வரையில் நாம் சரியான பாதையில் பயணித்ததால் குறுகிய காலத்தில் இவ்வாறான முன்னேற்றத்தை அடைய முடிந்தது. தற்போது நாம் அடைந்துள்ள சாத்தியமான பெறுபேறுகளினால் நாட்டிற்கு கிடைக்கும் பலன்கள் குறித்தும் பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கடன் செலுத்தும் இயலுமை இல்லை என 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட பின்னர், எந்தவொரு வெளிநாடும் எமக்கு கடன் வழங்க முன்வரவில்லை. அவ்வாறான பின்னணியில் அவர்களால் சட்டபூர்வமாக கடன் வழங்கவும் முடியாது. இந்தக் காலப்பகுதியில் நட்பு நாடுகள் என்ற வகையில், இந்தியாவும், பங்களாதேசும் குறுகிய கால கடன் உதவிகளை வழங்கின. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் பல வழிகளில் சலுகைக் கடன்களைப் பெற்றுத் தந்தன. அதுதவிர வேறெந்த நாட்டிற்கும் நீண்ட கால கடன்களை வழங்க முடியாத நிலை இருந்தது. சில அரசியல் குழுக்கள் எமது வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளைப் பரப்பி வருகின்றன. அநுரகுமார திஸாநாயக்க எம்.பியின் ஆதரவாளர்களின் பதிவொன்றைப் பார்த்தேன். ‘நற்செய்தி. கிழவன் நாட்டைப் பொறுப்பேற்கும் போது வெளிநாட்டுக் கடன் 71 பில்லியன். தற்போது 100 பில்லியன் டொலர்’ அநுரகுமார திஸாநாயக்க அவர்களுடன் நான் வாதப் பிரதிவாதங்கள் செய்திருக்கிறேன். முட்டி மோதியுள்ளேன். எனினும், அவரை இவ்வாறான கீழ்தரமாக விமர்சிக்கவில்லை. எனினும், அவரின் சில ஆதரவாளர்கள் அவரையும் சீரழிக்க முயற்சிக்கின்றனர். இந்தப் பதிவை மேற்கோள்காட்டியே அதுதொடர்பான விடயங்களைத் தெளிவுபடுத்துகிறேன். எமது மொத்த வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்களாகும். ஆனால், இது தொடர்பில் பதிவிட்ட நபர் 71 பில்லியன் டொலர்கள் என பொய்யான தகவலை குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கடந்த இரண்டு வருடங்களில் 100 பில்லியன் டொலர்கள் வரை கடன்களைப் பெற்றுக்கொண்டதாகவும் பதிவிட்டுள்ளார். ஆனால், கடனை திரும்பிச் செலுத்த முடியாது என அறிவிக்கப்பட்ட பின்னர் எந்தவொரு நாடும் எமக்கு கடன் வழங்கவில்லை என்பது அனைவரும் அறிந்தவிடயமாகும். எந்தவொரு நாட்டிற்கும் எமக்கு கடன் வழங்குவதற்கான சட்டபூர்வமான அனுமதி இருக்கவில்லை. இவ்வாறான பொய்களை சமூகமயப்படுத்துவதால் இவர்கள் எதனை எதிர்பார்க்கின்றனர்? எந்தவொரு நாடும் எமக்கு கடன் வழங்கவில்லையெனில், நாம் எவ்வாறு கடன் பெற முடியும். நான் இங்கிலாந்து மத்திய வங்கியைக் கொள்ளையிடுவதா என்ற கேள்வியை இவர்களிடம் கேட்க விரும்புகிறேன். பதிவிட்ட அந்த நபர், என்னைவிட மத்திய வங்கியைக் கொள்ளையிட்டதில் அனுபவம் பெற்றிருக்கிறார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் இரு தரப்புக் கடன்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு மீண்டும் உருவாகியுள்ளது. எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள், பெரிஸ் கழகம், சீன எக்ஸிம் வங்கி ஆகிய தரப்பினரிடம் இருந்து மீண்டும் கடன் பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அதேபோல், வெளிநாட்டு கடன் உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு, இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிக்கவும் முடியும். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது நாடு என பெயரிடப்பட்டதாலும் அந்தந்த நாடுகள் நிதி வழங்கியதை இடைநிறுத்தியதாலும் எமது அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பிதமடைந்தன. விசேடமாக கட்டுமானப் பணிகள் அனைத்தையும் மீள ஆரம்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது கட்டுமானத்துறையில் மிகப் பெரிய பாய்ச்சலாகும். அதனால் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு கிட்டும். தற்போது கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளையும் நிறைவுசெய்ய முடியும். வெளிநாட்டு வேலைத் திட்டங்கள் இடைநடுவில் நின்றுபோனதால், எமது பொருளாதார வளர்ச்சி குறைந்தது. ஆனால் தற்போது நாம் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளோம். மீண்டும் உலக நாடுகளின் நிதியுதவியுடன் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் போது அபிவிருத்திகளை மேலும் துரிதப்படுத்த முடியும். வெளிநாட்டு கடன்கள் தொடர்பில் சமூகத்தில் பரப்பப்படும் பொய்கள் தொடர்பாக சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இலங்கையைப் போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றினால் தனியாக இயங்க முடியாது. தனியாக இயங்கும் வகையில் வருமானத்தை நாம் ஈட்டவும் இல்லை. அதனால், நாம் கடன்களையும், நிவாரணங்களையும் பெற்றுக்கொள்ள நேரிடும். ஆனால் நாளாந்தம் உணவுத் தேவைக்காகவும், சம்பளம் வழங்கவும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. சுதந்திரத்தின் பின் எமது நாடு செய்த பெரும் பிழை இதுவாகும். சம்பளத்தை அதிகரிக்க கடன்களைப் பயன்படுத்தினோம். அரச தொழில் வழங்க கடன்களைப் பயன்படுத்தினோம். இலவசமாக உணவுகளை வழங்க கடன்களைப் பயன்படுத்தினோம். உணவு, எரிபொருள், மின்சாரம் போன்றவற்றை குறைந்த செலவில் வழங்குவதற்காகவும் கடன்களைப் பயன்படுத்தினோம். அரச சேவைகளின் நட்டத்தை ஈடுசெய்ய கடன்களைப் பயன்படுத்தினோம். இவை எதனையும் செய்யாமல் எம்மால் அஸ்வெசும நிவாரணம் வழங்க முடிந்தது. பயனாளிகளை அதிகரிக்க முடிந்தது. தலா 10 கிலோ அரிசையை இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்க முடிந்தது. வீட்டுரிமையை வழங்க முடிந்தது. காணி உறுதிகளை வழங்க முடிந்தது. வெளிநாட்டு கடன் பெறாமல் இவை அனைத்தையும் நாம் செய்திருக்கிறோம். சில அரசியல் குழுக்கள், ஆட்சிக்கு வந்தவுடன் சம்பளத்தை அதிகரிப்போம் என்று கூறுகின்றனர். வரியைக் குறைப்போம், சலுகைகளை வழங்குவோம் என்று ஆயிரக் கணக்கான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். ஆனால் அதற்கான பணத்தை எப்படி திரட்டப்போகிறார்கள் என்பது தொடர்பில் ஒருவார்த்தைக் கூட பேசுவதில்லை. ஆனால் நான் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற பின்னர் பல அரசாங்கங்கள் செய்த தவறுகளை நிறுத்தினேன். அடுத்ததாக வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் காரணமாக, எமக்குக் கிடைத்த பலன்கள் குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2022ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த மொத்தத் தேசிய உற்பத்தியில் 9.2 வீதத்தை செலவிட வேண்டியிருந்தது. 2027 முதல் 2032ஆம் ஆண்டு வரையில் அந்தத் தொகையை 4.5 வீதமாக குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. 2022ஆம் ஆண்டில் மொத்த நிதித் தேவை மொத்த தேசிய உற்பத்தியில் 34.4 வீதமாக இருந்தது. 2027ஆம் ஆண்டு முதல் 2032ஆம் ஆண்டு வரையில் இதனை 13 சதவீதமாக பேண வேண்டும். அதனால், அரச சேவைகளுக்காக பெருமளவு நிதியை ஒதுக்குவதற்கான வாய்ப்பு கிட்டும். அதேபோல் உள்நாட்டு வட்டி வீதத்தை மேலும் குறைக்க வாய்ப்பு கிட்டும். பாதாளத்தில் விழுந்து கிடந்த எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு கட்சி, பேதமின்றி ஒத்துழைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தேன். நீண்டகாலமாக அரசியலில் எனக்கெதிராக செயல்பட்டவர்கள் கூட, நாட்டின் நலனுக்காக இந்தப் பணியில் என்னுடன் நேரடியாகவே கைக்கோர்த்துக் கொண்டனர். இன்னும் சிலர் அமைதியாக ஒத்துழைப்பு வழங்குகின்றனர். மற்றும் சிலர் தொடர்ச்சியாக இடையூறு செய்தனர். தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது உடனடியாக ஐ.எம்.எப்.ஐ நாட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சி மாநாட்டை எதிர்க்கட்சியின் சில தரப்பினர் புறக்கணித்த போதும், தனியொரு எம்.பி.யாக அதில் பங்கேற்றேன். எனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்தேன். ஐ.எம்.எப். உதவிகளைப் பெறுவது மட்டுமே எமக்கான ஒரே வழியாகும் என்பதைக் கூறியிருந்தேன். அதிலிருந்து பல மாதங்களின் பின்னர் விழுந்து கிடந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப யாரும் முன்வராத சந்தர்ப்பத்தில் நான் இதனை ஏற்றுக்கொண்டேன். அந்த பாரதூரமான சவாலை எனது நாட்டுக்காகவே ஏற்றுக் கொண்டேன். இலங்கை அன்னையை ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து எவ்வாறாவது மீட்டு வருவேன் என சபதமெடுத்து இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அனைத்து மக்களும் இந்த வேலைத் திட்டத்திற்கு ஆதரவளித்தனர். அவர்களுக்கு மீண்டும் நன்றி கூறுகிறேன். பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஐ.எம்.எப். உடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். எம்மை விமர்சித்தவர்கள் ஒருபோதும் ஐ.எம்.எப். பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காது என்று கூறினர். ஆனால் இந்தப் பணிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்தோம். அப்போது எம்மை விமர்சித்தவர்கள் தடத்தை மாற்றிக் கொண்டனர். ஐ.எம்.எப். ஒத்துழைப்புடன் முன்னேறிய எந்தவொரு நாடும் இல்லை என்று கூறினார்கள். தாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஐ.எம்.எப் இணக்கப்பாடுகளை புறக்கணிப்பதாக கூறுகின்றனர். ஆனால் நாம் வெற்றிகரமாக முன்நோக்கிச் சென்றோம். விமர்சகர்கள் மீண்டும் தடத்தை மாற்றிக் கொண்டனர். ஐ.எம்.எப். நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்று சிலர் சில அறிக்கைகளை மேற்கோள்காட்டி கூறிவந்தனர். எமது வேலைத் திட்டம் சாத்தியமற்றது என்றும் கூறினர். முதலாவது தவணை கிடைத்தாலும், இரண்டாவது தவணைக் கிடைக்காது என்று கூறினர். ஆனால் எமக்கு இரண்டாவது தவணையும் கிடைத்துவிட்டது. அப்போது மறுபடியும் விமர்சித்தவர்கள் தடத்தை மாற்றினர். ஐ.எம்.எப். நிபந்தனைகளில் சிலவற்றை பூர்த்தி செய்ய முடியாமல் போனதாக சில மதிப்பீட்டு நிறுவனங்கள் கூறியிருந்தன. அதனால் மூன்றாம் தவணையைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினர். முழு நாட்டையும் அச்சத்தில் ஆழ்த்த முயற்சித்தனர். எனினும், மூன்றாவது தவணையையும் நாம் பெற்றுக்கொண்டோம். விமர்சகர்கள் மீண்டும் தமது தடத்தை மாற்றிக் கொண்டனர். மூன்று தவணைகளைப் பெற்றாலும் கடன் மறுசீரமைப்பு ஒருபோதும் வெற்றியளிக்காது என்று கூறினர். அதுமட்டுமன்றி, மறுசீரமைக்கு இணக்கம் தெரிவிக்க வேண்டாம் என கடன் வழங்கிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தனர். ஆனால் கடன் மறுசீரமைப்புப் பணிகளை நாம் வெற்றிகரமாக நிறைவுசெய்தோம். அப்போது மீண்டும் தடத்தை மாற்றிக் கொண்டார்கள். இப்போது கடன் தரப்படுத்தல்களில் இலங்கையின் நிலை மேம்படாமல் இருப்பதால் மறுசீரமைப்பில் பயனில்லை என்கின்றனர். அதனால் நாம் இப்போதும் வங்குரோத்து நாடு என்றும் கூறுகின்றனர். அதுபற்றியும் சில விடயங்களைக் கூற விரும்புகிறேன். 2019ஆம் ஆண்டில் நாம் சர்வதேச தரப்படுத்தல்களில் B நிலையில் இருந்தோம். 2020ஆம் ஆண்டில் இலங்கை C தரத்திற்கு பின்தள்ளப்பட்டது.கடன் செலுத்த முடியாது என்று அறிவிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே இது நடந்தது. அதனால், தரப்படுத்தல்களுக்காக வேறுபல காரணங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. இப்போது நாம் பல வெற்றிகளைக் கண்டுள்ளோம். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளோம். வெளிநாட்டு இரு தரப்பு கடன் மறுசீரமைப்பை நிறைவுசெய்துள்ளோம். வணிகக் கடன்களை மறுசீரமைக்கும் பணிகளை விரைவில் பூர்த்தி செய்ய முடியும். அவற்றையும் விரைவில் நிறைவுசெய்ய முடியும். இதனால், எமது பொருளாதார குறிகாட்டிகள் உயர்வடையும். எமது பொருளாதாரக் குறிகாட்டிகளை மையப்படுத்திய உரிய நேரத்தில் கடன் தரப்படுத்தல்களை மேம்படுத்த சர்வதேச நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும். அப்போதுதான் எமது விமர்சகர்கள் மீண்டும் தமது தடத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அரசாங்கத்திற்கும் விமர்சகர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. அதேபோல் அரசாங்கத்திற்கும் வெட்டிப் பேச்சாளர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. அதேபோல் வாய்ச் சவடால் பேர்வழிகளுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. நாம் நாட்டிற்காக சரியான கொள்கையுடன், சரியான பாதையில் பயணிக்கிறோம். அவர்கள் அதிகாரத்திற்காக நாளொன்றுக்கு ஒவ்வொன்றைக் கூறுகின்றனர். இதுகுறித்து கவனமாக அவதானிக்கும் தரப்பினரும் பாராளுமன்றத்தில் உள்ளனர். பல அரசியல் கட்சிகளையும் சார்ந்தவர்கள் இந்த விடயங்கள் குறித்து சுயாதீனமாகவும், கட்சி சாராமலும் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கட்சிக்காக அல்லது ஒரு தனிநபருக்காக செயல்படுவதா? அல்லது நாட்டிற்காக செயல்படுவதா? என்பது குறித்து கவனம் செலுத்துகின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலை என்ன? அந்த நிலைமையை மறந்துவிட முடியுமா? பொருளாதார ரீதியாக மட்டுமன்றி, சமூக, அரசியல் ரீதியாகவும் அந்த நிலைமை மாறி கடன் மறுசீரமைப்பு தொடர்பான நற்செய்தி வந்தபோது பலர் அதிருப்தியடைந்ததைக் காண முடிந்தது. மண்ணெண்ணெய் பட்ட சாரைப் பாம்பைப் போல நடந்துகொண்டனர். சமூக வலைத்தள மொழியில் கூறுவதாயின், உடம்பில் கம்பளி பூச்சு ஊர்ந்து செல்வது போல் இருந்தது. ஏன் அது? ஐ.எம்.எப் வேலைத் திட்டம் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது நற்செய்தியா? துயரச் செய்தியா? எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசைகளில் பல நாட்கள் இனி மேல் காத்திருக்க வேண்டியிருக்காது என்பது நற்செய்தியா? துயரச் செய்தியா? 30 வீதத்திற்கும் மேலாக இருந்த வங்கி வட்டி வீதம் 9 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளமை நற்செய்தியா? துயரச் செய்தியா? 70 சதவீதத்திற்கும் மேலாகச் சென்ற பண வீக்கம் கடந்த மாத இறுதியில் 1.7 வரை குறைந்திருப்பது நற்செய்தியா? துயரச் செய்தியா? தொடர்ச்சியாக 6 காலாண்டுகள் ஆட்டம் கண்ட எமது பொருளாதாரம், வளர ஆரம்பித்தது நற்செய்தியா? துயரச் செய்தியா? 2022ஆம் ஆண்டு மே மாதமளவில் அதளபாதளத்தில் வீழ்ந்து, வற்றிப் போயிருந்த அந்நியச் செலாவணிக் கையிருப்பு 5410 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்திருப்பது நற்செய்தியா? துயரச் செய்தியா? ரூபா வலுவடைந்திருப்பது நற்செய்தியா? துயரச் செய்தியா? அடிப்படை வைப்புக் கணக்கில் உபரி ஏற்பட்டுள்ளமை நற்செய்தியா? துயரச் செய்தியா? பணத்தை அச்சிடாமல், வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகையை நிவர்த்தி செய்வது நற்செய்தியா? துயரச் செய்தியா? வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கலுக்கான நடைமுறைக் கணக்கில் உபரி ஏற்பட்டது நற்செய்தியா? துயரச் செய்தியா? காலிமுகத்திடல் மைதானத்தில் அடி வாங்காமல் செல்ல, சுதந்திரம் இல்லாதிருந்த கட்சித் தலைவர்களுக்கு, நாட்டின் தெற்கில் இருந்து வடக்கு வரை சென்று வர முடிந்துள்ளமை நற்செய்தியா? துயரச் செய்தியா? பாராளுமன்றத்திற்கு வருவது மட்டுமன்றி வீடுகளில் கூட இருக்க முடியாமல் இருந்த நாட்டில் எந்த சந்தேகமும் அச்சமும் இன்றி வாழக்கூடிய நிலை உருவானது நற்செய்தியா? துயரச் செய்தியா? நாடு நல்ல நிலையை அடைவது நற்செய்தியா? துயரச் செய்தியா? இங்கிருந்து முன்னேறிச் செல்வதற்கு எமக்கிருக்கும் ஒரே வழி இதுவாகும். நற்செய்தியை எதிர்காலம் வரை கொண்டுசெல்வதற்கான ஒரே வழியும் இதுவாகும். கடந்த காலத்தில் நாம் பெற்ற வெற்றிகள் ஊடாக அது மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொங்கு பாலத்தின் கஷ்டமான பயணத்தில் தொடர்ந்து செல்ல வேண்டியுள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் திரும்பிவர முடியாது. மீண்டும் வேறு வழியில் திரும்பிச் செல்ல முற்பட்டால், ஓரிரு மாதங்களுக்குள் மீண்டும் வரி யுகத்திற்குச் செல்ல நேரிடும். மிகப் பெரிய ஆபத்திற்குள் நாடு தள்ளப்படும். 25 – 30 வருடங்களுக்கு மீட்டெடுக்க முடியாத நிலைக்குள் நாடு தள்ளப்படும். ஹுனுவட்டயே கதையில் வரும் குருஷா, குழந்தையைத் தூக்கிக் கொண்டு தொங்கு பாலத்தைக் கடக்கத் தீர்மானித்தார். அந்த நேரத்தில் மாற்று வழிகள் இருக்கவில்லை. அப்போது குருஷாவின் அருகில் இருந்த ஒருவர், ”சாகப் போகிறாரா? அடிவாரம் தெரிகிறதா? பாதாள உலகத்தைப் போல் இருக்கிறது.” என்று கேட்டார். ஆனால் குருஷா, சவால்மிகு தீர்மானத்தை எடுத்தார். அவர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு எப்படியாவது தொங்கு பாலத்தைக் கடந்தார். ஆனால் குருஷா தொங்கு பாலத்தில் இருந்து விழுந்துவிடுவார் என்று பலர் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இறுதியில் அவர், குழந்தையுடன் வெற்றிகரமாக பாலத்தைக் கடந்தார். ”அவர் விழுவார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.” என்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கோபத்தோடு கூறினார். இவ்வாறு பிற்போக்கு சிந்தனைக் கொண்டவர்களும் சமூகத்தில் இருக்கின்றனர். நாட்டிற்காகவும், நாட்டின் எதிர்காலத்திற்காகவும் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுமாறு நான் அவர்களிடம் கோருகிறேன். விழும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல் நாம் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பவது குறித்து சிந்திப்போம். அதற்காக பாடுபடுவோம். நான் விரும்பும், விரும்பாத, என்னை மதிக்கும், மதிக்காத இந்த சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் நாட்டைப் பற்றி சிந்தியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். அரசியல் அதிகாரத்திற்காகவோ, அரசியல் பிரசித்தத்திற்காகவோ நான் தீர்மானங்களை எடுப்பதில்லை. நாட்டிற்காகவும், இளைஞர்களின் எதிர்காலத்திற்காகவுமே நான் தீர்மானங்களை எடுக்கிறேன். கடந்த இரண்டு வருடங்கள் நான் அரசியல் செய்யவில்லை. அரசியல் இலாபங்களைப் பெறுவதற்காக தீர்மானங்களை எடுக்கவில்லை. இந்த பாராளுமன்றத்தில் என்னைப் போன்று நாட்டை நேசிக்கும் பலர் உள்ளனர். தமது தனிப்பட்ட தேவைகளைவிடவும், நாட்டின் நலன் குறித்து சிந்திக்கும் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரிடமும் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியுடன் இணைந்துகொள்ளுமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நற்பணியில் கைகோர்த்துக் கொள்ளுங்கள். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று மீண்டும் அழைக்கிறேன் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/305063
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
02 JUL, 2024 | 12:46 PM யாழ்ப்பாண வலயக் கல்விப்பணிப்பாளருக்கு எதிராக இலங்கை சிவசேனை சிவதொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். யாழ்ப்பாண கல்வி வலயத்தில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) யாழ்ப்பாண வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. பலவேறு வாசகங்கள் எழுதிய பாதாதைகள் ஏந்தியும் கோசமிட்டும் தமது எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதில் இலங்கை சிவசேனை சிவதொண்டர் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தம், சிவ தொண்டர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/187469 போராட்டம் செய்யவேண்டியவற்றுக்கு செய்யாதேங்கோ!
-
சம்பந்தனின் பூதவுடலுக்கு புதன்கிழமை பாராளுமன்றில் அஞ்சலி
சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தினார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் Published By: DIGITAL DESK 3 02 JUL, 2024 | 01:23 PM இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை (02) பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு சென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சம்பந்தனின் பூதவுடலுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/187479
-
யாழில் 3 பிள்ளைகளின் தாய் கணவனின் கண்முன்னே தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
Published By: DIGITAL DESK 7 02 JUL, 2024 | 12:05 PM யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் கணவனின் கண்முன்னே தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இதன்போது, கூழாவடி மேற்கு ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 3 பெண் பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவர் சுவிஸில் வசித்து வருகின்றார். அவருடன் கடந்த 24ஆம் திகதி வீடியோ அழைப்பில் கதைத்துக்கொண்டு இருந்தவேளை இருவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பெண் கணவனின் கண்முன்னே தற்கொலை செய்துள்ளார். இதன்போது கணவன் அயல் வீட்டவருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதையடுத்து அயல் வீட்டார்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை (01) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/187447
-
இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்! - மகன் போட்டியிடுவார்
எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தம்ம சிறிசேன போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/305051
-
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதி!
02 JUL, 2024 | 03:38 PM (எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே வர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கான விடுமுறை முன்மொழியப்பட்டது . தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஜூலை 2 ஆம் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்கு விடுமுறையளிக்குமாறு வேண்டுகின்றேன் என லக்ஷ்மன் கிரியெல்லவினால் விடுமுறை முன்மொழியப்பட்டது.இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் வழிமொழிந்தார். இதனையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்க சபை இணக்கம் வெளியிட்டது. https://www.virakesari.lk/article/187482
-
சம்பந்தர் காலமானார்
நானும் தான் பிறக்கவில்லை சகோ. இங்கும் இந்த அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் இருந்தது... இருக்கிறது... தொடர்கிறது.
-
பாலின மாற்றம் செய்து பெண்ணாக மாறிய நீச்சல் சம்பியன் வழக்கில் தோல்வி!
02 JUL, 2024 | 11:46 AM ஆர்.சேதுராமன் ஆணாகப் பிறந்து ஆண்களுக்கான நீச்சல் போட்டிகளில் பங்குபற்றிய பின்னர், பாலினமாற்றம் செய்து பெண்ணாக மாறிய லியா தோமஸ், பெண்களுக்கான நீச்சல் போட்டிகளில் தான் பங்குபற்றுவதை தடுக்கும் வகையிலான விதிகளுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுவை, சர்வதேச விளையாட்டுத்துறை நீதிமன்றமான விளையாட்டுப் பிணக்குத் தீர்ப்பாயம் (CAS) நிராகரித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயதான லியா தோமஸ் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் ஆண்களுக்கான நீச்சல் போட்டிகளில் பங்குபற்றியவர். அப்போது அவரின் பெயர் வில்லியம் தோமஸ். 6 அடி 1 அங்குல உயரமான வில்லியம் தோமஸ், நீச்சல் போட்டிகளில் பல வெற்றிகளை ஈட்டினார். 2019 ஆம் ஆண்டின் பின்னர் அவர பாலின மாற்றம் செய்துகொண்டு பெண்ணாக மாறினார். தனது பெயரையும் லியா கெத்தரின் தோமஸ் என மாற்றிக்கொண்டார். பின்னர் பெண்களுக்கான நீச்சல் போட்டிகளில் பங்குபற்றி சாதனைகளை படைக்க ஆரம்பித்தார். இவ்விடயம் பலரின் கவனத்தை ஈர்த்ததுடன் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. அதையடுத்து, நீரியல் விளையாட்டுக்களுக்குப் பொறுப்பான சர்வதேச சம்மேளனமான 'வேர்ல்ட் அக்வாட்டிக்ஸ்' 12 வயதுக்குப் பின் பாலின மாற்றம் செய்து, பெண்ணாக மாறியவர்கள் பெண்களுக்கான போட்டிகளில் பங்குபற்றுவதற்கு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தடை விதித்தது. பாலின மாற்றம் செய்தவர்களும் பங்குபற்றக்கூடிய திறந்த பிரிவொன்றை அச்சம்மேளனம் ஏற்படுத்தியது. இத்தடைக்கு எதிராக, சுவிட்ஸர்லாந்திலுள்ள விளையாட்டுப் பிணக்குத் தீர்ப்பாயத்தில் கடந்த ஜனவரி மாதம லியா தோமஸ் வழக்குத் தொடுத்தார். இத்தடையை செல்லுபடியற்றது. சட்டவிரோதமானது மற்றும் பாரட்பசமானது என அவர் அறிவிக்கக் கோரினார். ஆனால், லியா தோமஸின் மனுவை நிராகரித்து. விளையாட்டுப் பிணக்குத் தீர்ப்பாயம் அண்மையில் தீர்ப்பளித்தது. இக்கோரிக்கைக்கு அவர் தகுதியற்றவர் என அந்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பு குறித்து தான் மிகவும் ஏமாற்றம் அடைவதாக லியா தோமஸ் தெரிவித்துள்ளார். 'பாலின மாற்றம் செய்த பெண்களுக்கான ஒட்டுமொத்த தடையானது, பாரபட்சமானது. அத்துடன் இது பெறுமதியான விளையாட்டு வாய்ப்புகளை எமக்கு இல்லாமல் செய்கிறது. இத்தீர்மானமானது, பாலின மாற்றம் செய்த பெண்கள் தமது கௌரவத்துக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடுவதற்கான அழைப்பாக நோக்கப்பட வேண்டும்' எனவும் அவர் கூறியுள்ளார். பாரபட்சங்களுக்கு எதிரான ஒருபாலின சேர்க்கையாளர்களின் அமைப்பின் தலைவர் சாரா கெட் எலிஸ் இது தொடர்பாக விடுத்த அறிக்கையில், கடினமாக பாடுபடும், தமது கனவுகளை பின்தொடரும் அனைத்து மனிதர்களையும் போன்று லியா தோமஸுக்கும் அவரின் விளையாட்டில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கு தகுதியானவர் எனக் கூறியுள்ளார். 'பெண்களை பாதுகாப்பதற்கான உருக்குலைந்த ஒரு வழியாக, பாலின மாற்றம் செய்தவர்கள் குறித்து தவறான தகவல்களை வேர்ல்ட் அக்வாட்டிக்ஸ்' தொடர்ந்தும் பரப்புகிறது எனவும் சாரா எலிஸ் கூறியுள்ளார். விளையாட்டுப் பிணக்குத் தீர்ப்பாயத்தில் வேர்ல்ட் அக்வாட்டிக்ஸ் முன்வைத்த வாதத்தில், இந்த வழக்கு ஆரம்பமான வேளையில், அமெரிக்க நீச்சல் சம்மேளனத்தின் ஓர் அங்கத்தவராக லியா தோமஸ் இருக்கவில்லை எனத் தெரிவித்தது. உலக நீச்சல் போட்டிகள், ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படும் நோக்கத்துடன் பெண்களுக்கான போட்டிகளில் அவர் பங்குபற்றவும் இல்லை எனவும் அச்சம்மேளனம் கூறியது. வேர்ல்ட் அக்வாட்டிக்ஸின் (சர்வதேச நீரியல் விளையாட்டுச் சம்மேளனம்) தற்போதைய நடைமுறைக் கட்டமைப்பில் கொள்கை மற்றும் செயல்பாட்டுத் தேவைகளை சவாலுக்குட்படுத்த லியா தோமஸுக்கு தகுதியில்லை என விளையாட்டுத்துறை பிணக்குத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. விளையாட்டுப் பிணக்குத் தீர்ப்பாயத்தின் தீரப்பை சர்வதேச நீச்சல் சம்மேளனம் வரவேற்றுள்ளது. 'இவ்விளையாட்டிலுள்ள பெண்களை பாதுகாக்கும் எமது முயற்சிகளில் இது ஒரு பெரிய படியாகும் என நாம் நம்புகிறோம்' என அச்சம்மேளனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/187446
-
சம்பந்தர் காலமானார்
56-77 காலத்தில் நடந்ததை மறந்திட்டியளோ?!
-
ரி20 உலக சம்பியனானது இந்தியா
உலக சம்பியன் இந்தியாவுக்கு 456 கோடி ரூபாவை வழங்கும் இந்திய கிரிக்கெட் சபை 02 JUL, 2024 | 11:21 AM ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்பட்ட ஒன்பதாவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் உலக சம்பியனான இந்தியாவுக்கு 125 கோடி ரூபாவை (இலங்கை நாணயப்படி 456 கோடி ரூபா) பணப்பரிசாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வழங்கவுள்ளது. பார்படொஸ், ப்றிஜ்டவுனில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மிகவும் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்தியா 7 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டி 17 வருடங்களின் பின்னர் மீண்டும் உலக சம்பியனானது. இதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றைத் தொடர்ந்து இரண்டு தடவைகள் ரி20 உலக சம்பியனான 3ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுக்கொண்டது. அத்துடன் இந்த மைல்கல் சாதனையை படைத்த முதலாவது ஆசிய நாடு என்ற பெருமையையும் இந்தியா தனதாக்கிக்கொண்டது. இந்த வெற்றியை அடுத்து இந்திய அணிக்கு கொளுத்த பணப்பரிசை வழங்கப்போவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜெய் ஷா தனது டுவிட்டரில் பதிவிட்டார். 'ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை இந்த வருடம் வென்றெடுத்ததற்காக இந்திய அணிக்கு (இந்திய நாணயப்படி)125 கோடி ரூபா பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என ஷா பதிவிட்டுள்ளார். 'உலக சம்பியனான இந்திய அணியினர், ரி20 உலகக் கிண்ணப் போட்டி முழுவதும் அதிசிறந்த ஆற்றல்கள், மனஉறுதி, விளையாட்டுத்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த மகத்தான சாதனைக்காக வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகுக' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சம்பியன் அணிக்கு சுமார் 75 கோடி ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனைவிட குழுநிலை மற்றும் சுப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் ஈட்டிய ஒவ்வொரு வெற்றிக்கும் 95 இலட்சம் ரூபா பணப்பரிசு கிடைக்கவுள்ளது. இதேவேளை இரண்டாம் இடத்தைப் பெற்ற தென் ஆபிரிக்காவுக்கு 39 கோடி ரூவாவுக்கு மேல் ஐசிசி வழங்கவுள்ளது. அரை இறுதிகளில் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு தலா 24 கோடி ரூபா கிடைக்கவுள்ளது. https://www.virakesari.lk/article/187458