Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கர்நாடகா மற்றும் கேரளாவைப் போன்று, சூழல் சுற்றுலாவின் கீழ் பாதுகாப்பான முறையில் மலையேற்றம் அழைத்துச் செல்லும் திட்டத்தை ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு வனத்துறை துவங்க உள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு வனத்துறை 12 மாவட்ட வனப்பகுதிகளில், 40 இடங்களில் சுற்றுலா பயணிகளை மலையேற்றம் அழைத்துச் செல்லும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள இந்த மலையேற்றம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய காடுகளில் நடத்தப்படவுள்ளது. வனம், காட்டுயிர்கள் தொடர்பான ஆய்வாளர்கள் மட்டுமின்றி, சாகசம் செய்ய விரும்புவோர், வனத்தை நேசிப்போர் என பலரும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மலையேற்றம் (டிரெக்கிங்) செல்கின்றனர். தமிழ்நாடு தவிர்த்து கேரள, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் அம்மாநிலத்தின் வனத்துறையே முறையான அனுமதி வழங்கி, சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் கட்டணம் பெற்றுக்கொண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் ஆய்வாளர்களை பாதுகாப்பாக மலையேற்றத்திற்கு அழைத்துச் செல்கின்றன. இந்தியாவின் முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலமான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வழியாக பயணித்து குஜராத் மாநிலத்தில் முடிவடைகிறது. இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தவிருக்கும் நிலையில், வனத்துறை, சுற்றுலா பயணிகள் கவனிக்க வேண்டியது என்ன? சூழல் சுற்றுலாவின் சாதக, பாதகங்கள் என்னென்ன? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சூழல் சுற்றுலாவில் தமிழகத்தில் மலையேற்றம் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஆராய்ச்சி மற்றும் ஆன்மீக காரணங்கள் தவிர மலையேற்றத்திற்கு பெரும்பாலான பகுதிகளில் அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால் வனத்துறை சார்பாக சில இடங்களில் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் வனத்திற்குள் வாகன சுற்றுலா(சஃபாரி), படகு சுற்றுலா ஆகியவை உள்ளன. சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் மலையேற்றம் செய்ய தமிழ்நாட்டில் அனுமதி இல்லாத நிலையில், ஒரு சில இடங்களில் அனுமதியற்ற முறையில் சிலர் மலையேற்றத்திற்கு மக்களை அழைத்துச் செல்கின்றனர். இதனால், அசம்பாவிதங்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன. கடந்த 2018 மார்ச் மாதம் தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் இரண்டு குழுக்களாக 36 பேர் மலையேற்றத்திற்கு சென்றனர். அப்போது, காட்டுத்தீ ஏற்பட்டு வனப்பகுதியில் தீயில் சிக்கி 17 பெண்கள் உள்பட 26 பேர் உடல் கருகி பரிதாபமாக மரணித்தனர். இச்சம்பவம் குறித்த விசாரணையின் போது இவர்கள் முறையான வழிகாட்டி இல்லாமல், வனத்துறை அனுமதியின்றி சென்று காட்டுத்தீயில் சிக்கி இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதிகளில் மலையேற்றம் மேற்கொள்ள அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியதுடன், பல இடங்களில் மலை ஏற்றத்திற்கு தடை விதித்தது. இப்படியான நிலையில், கர்நாடகா மற்றும் கேரளாவைப் போன்று, சூழல் சுற்றுலாவின் கீழ் பாதுகாப்பான முறையில் மலையேற்றம் அழைத்துச் செல்லும் திட்டத்தை ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு வனத்துறை துவங்க உள்ளது. இதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், 12 மாவட்டங்களை தேர்வு செய்து 40 பாதைகளை இறுதி செய்துள்ளது. இந்த வழித்தடங்களில் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல பழங்குடியினர், உள்ளூர் மக்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. ‘டிரக்கிங் செல்ல ஆர்வம்’ சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரான உஷா, ஒரு சாகசப்பிரியர். மலையேற்றத்திற்கு தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முன்னெடுப்பு அவருக்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வார இறுதி நாட்களிலும், விடுமுறை தினங்களிலும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் டிரக்கிங் செய்ய தனியாகவோ, குழுவாகவோ பயணிப்பது உஷாவுக்கு மிகவும் பிடித்த ஒன்று. வனத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டின் அடர் வனங்களை சென்று இயற்கையை ரசிக்க ஆர்வமாக உள்ளதாக பிபிசியிடம் கூறினார். “கேரளாவில் உள்ள அகஸ்தியர்கூடம், கர்நாடகாவின் நேத்ராவதி மலையுச்சி ஆகிய இரண்டும் தென்னிந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள். இங்கு செல்ல அந்தந்த மாநிலங்களின் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் அனுமதி பெற்று ஒவ்வொர் ஆண்டும் சென்று வருவேன். தமிழ்நாட்டில் ஊட்டியிலுள்ள சில இடங்களுக்கு இப்படிச் செல்லவேண்டும் என எங்கள் குழுவுக்கு ஆசை உள்ளது. ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இதற்கான அனுமதி கிடைக்கும். இப்போது சூழல் சுற்றுலா திட்டம் மூலமாக பொதுமக்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நல்ல திட்டம். விரைவில் தமிழ்நாட்டில் டிரெக்கிங் செல்ல ஆர்வமாக இருக்கிறேன்.” ‘வணிக நோக்கில் இருந்தால் வனம் அழியும்’ வணிக நோக்கில் மலையேற்ற திட்டம் இருந்தால் வனம் அழியும் என்கிறார் பெங்களூரை சேர்ந்த மூத்த சூழலியலாளரான உல்லாஸ்குமார். பிபிசியிடம் பேசிய உல்லாஸ்குமார், ‘‘வனத்தினுள் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் காடு, காட்டுயிர்களை பற்றி அறிந்துக்கொள்ளும் வாய்ப்பாக பார்க்க வேண்டும். என்னுடன் பயணித்த பலரும் வனம் மீதான ஆர்வத்தினால் சூழல் பாதுகாவலர்களாக மாறியுள்ளனர். அப்படியான திட்டமாக இந்த மலையேற்ற திட்டம் இருந்தால் நல்லது,” என்கிறார். ஆனால், சில மாநிலங்களில் வருமான நோக்கில் மலையேற்ற திட்டம் செயல்படுகிறது எனவும் அவர் குற்றம்சாட்டுகிறார். பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு,கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள சில மலையேற்ற பாதைகளில் தனியார் அமைப்பு அழைத்து வரப்பட்ட நபர்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் திரண்டதால் அங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள சில மலையேற்ற பாதைகளில் தனியார் அமைப்பால் அழைத்து வரப்பட்ட நபர்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் திரண்டதால் அங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதையடுத்து மலையேற்றம் செல்வது தொடர்பாக சில கட்டுப்பாடுகளை கர்நாடகா அரசு அறிவித்தது. அதேபோல பருவமழையின் போது, மகாராஷ்டிரா மாநிலத்திலும் சில இடங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையால் சூழல் சுற்றுலாவில் சிக்கல் ஏற்படுகின்றன என சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ‘‘மலையேற்றத்தின் போது வரும் சுற்றுலா பயணிகள் சிலர் வனத்தை மாசுபடுத்தி, வனத்தின் உயிர் கோள அமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர். வணிக நோக்கங்களுக்காக சூழல் சுற்றுலா மாறும் போது இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கான உதாரணமாக கர்நாடகா, கேரளா மாநிலங்களில் சில நிகழ்வுகள் நடந்துள்ளன,” என்கிறார் உல்லாஸ்குமார். மற்ற மாநிலங்களைப் போல் வருமான நோக்கில் அல்லாமல், தமிழ்நாடு அரசு வனம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்கிறார் அவர். சூழல் சுற்றுலா வழித்தடங்களை பொதுமக்கள் மாசுபடுத்தும் நிகழ்வுகளில் சமூக ஊடகங்களின் தாக்கம் கணிசமாக உள்ளது என்பதை உஷா ஒப்புக் கொள்கிறார். “நான் நிறைய இடங்களுக்கு டிரெக்கிங் செல்லும் போது அங்கு வரும் பலரும் சமூக ஊடகங்களால் ஈர்க்கப்பட்டு அங்கு வருகின்றனர். சில இடங்களில் அனுமதியின்றி அதிக நபர்கள் கூடுவதால் மாசுபாடு ஏற்படுவது உண்மை தான்.” சட்டவிரோத மலையேற்றம் குறையும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வணிக நோக்கில் மலையேற்ற திட்டம் இருந்தால் வனம் அழியும் என்கிறார் பெங்களூரை சேர்ந்த மூத்த சூழலியலாளரான உல்லாஸ்குமார் அரசே மலையேற்றத்தை முறையாக நடத்தினால், தனியார் சார்பில் நடக்கும் சட்ட விரோத மலையேற்றங்கள் குறையும் என்கிறார், ஊட்டியை சேர்ந்த சுற்றுலா ஏற்பாட்டாளரான ஜான்பாஸ்கோ. “நீலகிரியில் உள்ள சில தனியார் ரிசார்ட்கள், மலையேற்றத்திற்கு அழைத்துச்செல்வதாக விளம்பரம் செய்து, சட்ட விரோதமாக சுற்றுலா பயணிகளை ஆபத்தான முறையில் காட்டுக்குள் அழைத்துச் செல்கின்றனர். தமிழ்நாடு அரசு மலையேற்ற திட்டத்தை செயல்படுத்தினால், தனியாரின் சட்ட விரோத செயல்கள் குறையும்,’’ என்று பிபிசியிடம் பேசிய போது கூறினார். மலையேற்றத்திற்காகவே பல சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால், சுற்றுலாவை நம்பியுள்ள பலரின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் ஜான்பாஸ்கோ தெரிவிக்கிறார். அரசின் மலையேற்ற சுற்றுலா திட்டத்தில் உள்ளூர் பழங்குடி மக்களை வழிகாட்டியாக பயன்படுத்தவுள்ளதாக வனத்துறை கூறும் நிலையில், இதன் மூலம் பழங்குடியினருக்கு பொருளாதார ரீதியாக வளர்ச்சி கிட்டும் என்கிறார் உல்லாஸ்குமார். மருத்துவ பரிசோதனை அவசியம் மலையேற்றம் என்பது பொதுவாக உடல் வலிமையை வெளிப்படுத்தும் செயலாகத்தான் உள்ளது. ஆனால், வனத்தினுள் மலையேற்றம் என்பது வனத்தில் காட்டுயிர்களின் வீட்டில் பயணித்து அவற்றின் வாழ்வை, சூழலை தெரிந்துகொள்வதற்கான செயலாக இருக்க வேண்டும். இந்த மனநிலையில்தான் சுற்றுலா பயணிகள் வனத்தில் மலையேற்றம் செய்ய வேண்டும் என்கிறார் கோவை ‘ஓசை’ சூழல் அமைப்பின் நிறுவனர் காளிதாசன். பிபிசி தமிழிடம் பேசிய காளிதாசன், ‘‘சூழல் சுற்றுலா நடக்கும் பல பகுதிகளில், பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள் வீசப்படுவதை காண முடிகிறது. வனத்துறை இதைத்தடுக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும். மலையேற்றம் செல்வோர் வனத்தை மாசுபடுத்தாமல், குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். காட்டிலிருந்தும் எதையும் எடுத்து வரக்கூடாது,” என்கிறார். மலையேற்றத்திற்கு செல்லும் நபர்கள் அதிகபட்சமாக எட்டு பேரைக் கொண்ட குழுக்களாக இருக்கவேண்டும் என உல்லாஸ்குமார் வலியுறுத்துகிறார். பாதுகாப்பான மலையேற்றத்திற்காக வயது வாரியாகவும், உடல் தகுதிக்கு ஏற்றவாறும் பாதைகளை தேர்வு செய்ய வேண்டுமென குறிப்பிடுகிறார் காளிதாசன். “கோவை வெள்ளையங்கிரி, கொல்லிமலை ஆகாசகங்கை போன்ற இடங்களுக்கு செல்லும் நபர்களின் உடல் தகுதியை மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிவது போல மலையேற்றம் செல்லும் நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தகுதி சான்றிதழ் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். வனத்துறை இதற்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்”, என்கிறார் அவர். ‘பாதுகாப்பாக இருக்கும்’ பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT தமிழ்நாடு அரசின் மலையேற்ற சுற்றுலா திட்டத்தில் இருக்கும் சில சவால்கள் குறித்து தமிழ்நாடு முன்னாள் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹுவிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. இந்த கட்டுரைக்காக அவரிடம் பேசிய போது வனத்துறை செயலாளராக இருந்த அவர், தற்போது சுகாதாரத்துறையின் செயலாளராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் வனத்தினுள் மலையேற்றம் (டிரெக்கிங்) திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்படும். இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில், மலையேற்ற பகுதிகள், கட்டணம் போன்ற தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ளலாம் என்றார். இத்திட்டத்திற்காக 400 பழங்குடியினர் மற்றும் மலையேற்றம் செல்லும் வனத்துறை பணியாளர்களை தேர்வு செய்துள்ளோம். இவர்களுக்கு, அவசர காலத்தில் எப்படி செயல்பட வேண்டும், மருத்துவ முதலுதவி, தாவரங்கள் மற்றும் வனவிலங்குகள் குறித்து முழுமையான பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கு பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார். ‘‘வனம் மாசுபடாமல் இருப்பதை வனத்துறை நிச்சயமாக உறுதிப்படுத்தும். விழிப்புணர்வு என்ற நோக்கத்தில் மட்டுமே இத்திட்டம் செயல்படும். கோவை, நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி என 12 மாவட்டங்களில், 40 பாதைகளை தேர்வு செய்துள்ளோம். அவற்றில் எவ்வளவு ஆபத்து என்னென்ன இருக்குமென்பதை ஏற்கனவே பதிவு செய்து, வயதிற்கு ஏற்ப ஒவ்வொரு பாதைகளிலும் அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளோம்,’’ என்கிறார் சுப்ரியா சாஹு. https://www.bbc.com/tamil/articles/c4ngmd79rx4o
  2. ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், ரொபோக்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் நோக்கில் சிரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி, உயிருள்ள தோலால் மூடியுள்ளனர். குறித்த இயந்திரத்தில் மனிதனைப் போன்ற ஸ்மைலி முகம், பெரிய அசையாத பச்சை நிற கண்கள் மற்றும் ப்ளாஸ்டிக் போன்ற இளஞ்சிவப்பு படலத்தில் மூடப்பட்டிருப்பது போல் அமைந்துள்ளது. உயிருள்ள தோல் திசுக்களை இயந்திர ரொபோ மேற்பரப்பில் பிணைக்க ஒரு புதியை வழியைக் கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியில் ரொபோக்களின் உணர்திறன் பற்றிய திறனை அறிய உதவுகிறது. https://thinakkural.lk/article/305014
  3. டிரம்பிற்கு விடுபாட்டுரிமை உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளமைக்கு பைடன் கடும் எதிர்ப்பு - டிரம்பிற்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கவேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும் என வேண்டுகோள் Published By: RAJEEBAN 02 JUL, 2024 | 10:57 AM அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு விடுபாட்டுரிமை குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக கண்டித்துள்ள ஜனாதிபதி ஜோ பைடன் இந்த தீர்ப்பு டிரம்பினை மேலும் துணிச்சல்மிக்கவராக மாற்றும் என தெரிவித்துள்ளார். 2020 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முற்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு விடுபாட்டுரிமை உள்ளதாக அமெரிக்க உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதை ஜோ பைடன் கடுமையாக கண்டித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஆற்றிய ஐந்து நிமிட உரையில் நீதிபதிகள் 6- 3 என்ற அடிப்படையில் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என ஜோபைடன் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பின் காரணமாக 2021 ஜனவரி ஆறாம் திகதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ளுமாறு கும்பலொன்றை தூண்டிய குற்றத்திற்காக டிரம்ப் சட்டபூர்வமாக பொறுப்பாளியாக மாட்டார் என சுட்டிக்காட்டியுள்ள பைடன் இதனால் இந்த தீர்ப்பு அமெரிக்க மக்களை மிக மோசமாக அவமதித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பை தொடர்ந்து எதிர்வரும் தேர்தலில் மீண்டும் ஆட்சி பொறுப்பை ஒப்படைப்பதற்கு டிரம்ப் தகுதியானவரா என தீர்மானிக்கவேண்டிய பொறுப்பு அமெரிக்க மக்களின் கரங்களிற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ள ஜோ பைடன் தீர்ப்பின் அர்த்தம் அதுவே எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மன்னர்கள் என எவரும் இல்லை என்ற அடிப்படையிலேயே இந்த தேசம் உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ள பைடன் சட்டத்தின் முன்னாள் நாங்கள் அனைவரும் சமமானவர்கள் எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை அமெரிக்க ஜனாதிபதி கூட சட்டத்திற்கு அப்பாற்பட்டவரோ அதனை விட மேலானவரோ இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக அமெரிக்க ஜனாதிபதி செய்யக்கூடிய விடயங்களிற்கு எல்லை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள பைடன் இது அடிப்படையில் புதிய கொள்கை ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரம் இனி சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படாது என்பதால் இது ஆபத்தான முன்னுதாரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் டிரம்பின் நடத்தை குறித்து அமெரிக்க மக்களே தீர்மானிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் ஜனாதிபதி பதவியை டிரம்பிடம் ஒப்படைக்கப்போகின்றார்களா என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187456
  4. யாழில் இல்லமொன்றில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் பதிவானதா? - அதிகாரிகள் விசாரணை Published By: DIGITAL DESK 3 02 JUL, 2024 | 11:26 AM யாழ்ப்பாணத்தில் மாணவிகள் தங்கி இருந்த இல்லமொன்றில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள பெண் பிள்ளைகள் தங்கி இருக்கும் இடம் ஒன்றின் வெளிப்புறப் பாதுகாப்புக்காக சிசிடிவி கமரா பொருத்தப்பட்டிருந்தது. குறித்த கமராக்களில் பெண் மாணவிகள் குளிக்கும் பகுதியின் சில பகுதிகள் பதிவாகியுள்ளமை தொடர்பிலும் வேறு சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி குறித்த பகுதிப் பிரதேச செயலகத்துக்கு முறைப்பாடு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அதிகாரிகள் குறித்த இல்லத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர். அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/187461
  5. லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு Published By: DIGITAL DESK 3 02 JUL, 2024 | 10:59 AM லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று செவ்வாய்க்கிழமை (02) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 3,690 ரூபாவாகும். 5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,482 ரூபாவாகும். அதேவேளை, 2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 694 ரூபாவாகும். https://www.virakesari.lk/article/187457
  6. 01 JUL, 2024 | 09:22 PM அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகளிற்கு குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுபாட்டுரிமை உள்ளது என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு தொடர்பான முக்கிய அதிகாரங்கள் தொடர்பில் விடுபாட்டுரிமை உள்ளது என அமெரிக்க உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்சிகளின் அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆறுகென்சவேர்ட்டிவ் நீதிபதிகள் விடுபாட்டுரிமையுள்ளது என தெரிவித்துள்ளனர். எனினும் முன்னாள் ஜனாதிபதிகள் தனிப்பட்டரீதியில் எடுத்த நடவடிக்கைகளிற்கு வழக்கு தொடர்வதில் எந்த விடுபாட்டுரிமையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தலில் தலையீடு செய்த வழக்கிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து இந்த வழக்கு கீழ்நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளது, அந்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து தீர்மானிக்கும். https://www.virakesari.lk/article/187435
  7. இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதில் 10.6 பில்லியன் டொலர் இருதரப்புக் கடன்களும், 11.7 பில்லியன் டொலர் பலதரப்புக் கடன்களும், 12.5 பில்லியன் டொலர் இறையாண்மைப் பத்திரங்களும் அடங்கும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி நாட்டின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கடனை மீளச் செலுத்துவது தொடர்பாக உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும், அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உடன்படிக்கைகள் மற்றும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/305019
  8. கொழும்பில் இன்று சம்பந்தனின் பூதவுடல் அஞ்சலிக்காக வைப்பு Published By: DIGITAL DESK 3 02 JUL, 2024 | 10:29 AM இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (03) பாராளுமன்றத்தில் 2 மணிக்கு சம்பந்தனிக் பூதவுடல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயக்கர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர். அங்கு 4 மணிவரையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/187451
  9. நாட்டை வந்தடைந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 02 JUL, 2024 | 11:05 AM சீனாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (1) திங்கட்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தார். இவர் நேற்று (1) இரவு 11.10 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இவர் கடந்த 28ஆம் திகதி சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பியுள்ளார். இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோருடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இலங்கையின் வளர்ச்சிக்கு சீன அரசாங்கம் தொடர்ந்தும் பங்களிப்பை வழங்கும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/187449
  10. மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான முறைமையை அறிமுகப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட மருந்தின் அளவு வடிவம் மற்றும் வலிமை தொடர்பாக வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்வதே இந்த விலை நிர்ணய முறையின் நோக்கமாகும் என்று வர்த்தமானி அறிவிப்பு கூறுகிறது. இரு வழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த விலை நிர்ணயம் தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டில் பயன்படுத்தப்படும் விலை, தகவல்கள் மற்றும் ஆதாரங்களையே பயன்படுத்த வேண்டும் என வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அமைச்சர் பிறப்பித்த உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305009
  11. ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு பாடசாலைகளுக்கு முன்பாக இன்று(02) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடியாகப் பதில் வழங்க வேண்டும் எனக் கோரி, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை நேரத்தின் பின்னர் குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/304990
  12. 02 JUL, 2024 | 10:29 AM இந்தியர்கள் அதிகபட்சமாக உணவு மற்றும் கல்வியை விட திருமணத்திற்காக அதிக அளவில் செலவு செய்வதாக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உணவு மற்றும் மளிகை பொருட்களுக்கு அடுத்தபடியாக, ஆண்டிற்கு சுமார் ரூ.10 லட்சம் கோடி செலவிடப்படுவது திருமணத்திற்கு தான் என்று நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக ஒரு இந்தியர், கல்வியை விட திருமணத்திற்காக இரண்டு மடங்கு செலவு செய்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவலும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரிஸ் (Jefferies) என்பது பன்னாட்டு முதலீட்டு மற்றும் நிதி நிறுவனம். இந்த நிறுவனம் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த நிறுவனம் 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் இந்தியர்களின் திருமண செய்யும் செலவுகளை பற்றி ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின்படி, இந்தியத் திருமணத்திற்காக ரூ.10.7 லட்சம் கோடி செலவு செய்வதாக கூறப்பட்டுள்ளது. இது அமெரிக்காவைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். ஒவ்வொரு திருமணத்திற்கும் சராசரியாக ரூ.12.5 லட்சம் வரையிலும் செலவு செய்யப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.4 லட்சமாக உள்ள நிலையில், வருமானத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக திருமணத்திற்குச் செலவு செய்வதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், தனிநபரின் ஆண்டு வருமானத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாக திருமணத்திற்காக செலவு செய்வதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. திருமணம் என்றாலே அதில் முக்கியப்பங்கு வகிப்பது ஆடைகள் மற்றும் நகைகள் தான். அவற்றின் செலவிற்காக சுமார் 30% பணம் செலவிடப்படுகிறது. உணவு மற்றும் அது சார்ந்தவைக்காக சுமார் 20% பணம் செலவு செய்யப்படுகிறது. போட்டோகிராஃபி, மேடை அலங்காரம் போன்ற இதர ஆடம்பர செலவுகளுக்காகவும் அதிக அளவில் பணம் செலவு செய்யப்படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187452
  13. போதைப்பொருள் விற்பனை செய்து நான் பணம் சம்பாதிக்கவில்லை - பியூமி ஹன்சமாலி 01 JUL, 2024 | 06:14 PM சூட்சுமமான குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களை சம்பாதித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலி இன்று (01) திங்கட்கிழமை காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். இதன்போது பியூமி ஹன்சமாலி கருத்து தெரிவிக்கையில், நான் மிகவும் நேர்மையான முறையில் இந்த பணத்தை சம்பாதித்தேன். போதைப்பொருள் விற்பனையோ அல்லது சட்டவிரோதமான முறையிலோ இந்த பணத்தை நான் சம்பாதிக்கவில்லை. தனி ஒரு பெண்ணாக எனது தொழிலை முன்னெடுத்து வரும் நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்துவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். எனக்கு 20 வங்கி கணக்குகள் இருப்பதாகக் கூறப்படும் அனைத்து தகவலும் போலியானது. என்னிடம் 9 வங்கி கணக்குகள் மாத்திரமே உள்ளன. அவற்றை எனது தொழில் நடவடிக்கைகளுக்காக நான் பயன்படுத்தி வருகின்றேன். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் தான் எந்தவித அச்சமுமின்றி நான் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளேன் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187407
  14. 01 JUL, 2024 | 09:01 PM தென்கொரிய தலைநகர் சியோலில் பாதசாரிகள் மீது கார் ஒன்றுமோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு கார்கள் மீது மோதிய பின்னர் குறிப்பிட்ட கார் பொதுமக்கள் மீது மோதியுள்ளது. 60 வயது நபர் ஒருவரே குறிப்பிட்ட காரை செலுத்தியுள்ளார். சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/187434
  15. இரா.சம்பந்தன் மறைவு: தமிழக முதல்வர் ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழர்கள் மட்டுமல்லாது இலங்கை மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர் சம்பந்தன் . இறுதிமூச்சு வரையிலும் தமிழ்மக்களின் நலனுக்காகவே சிந்தித்தார், செயல்பட்டார். நாடாளுமன்றவாதியாக அரைநூற்றாண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இலங்கையின் அரசியலில் பாரதூரமான தாக்கத்தைச் செலுத்தி வந்தன. இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக மிக நீண்டகாலம் அறவழியில் சம்பந்தன் அவர்கள் போராடி வந்தார். இந்தியாவோடும் தமிழ்நாட்டுடனும் மிகச் சிறந்த நட்புறவை சம்பந்தன் பேணி வந்தார். கருணாநிதியின் நண்பராகவும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் பல முறை அவரைச் சந்தித்து மிகவும் முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து சம்பந்தன் ஆலோசித்துள்ளார். ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தன் அவர்களின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவு இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் பேரிழப்பாகும். இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தனை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ராமதாஸ்: இரா. சம்பந்தன் முதுமை காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பினர், ஈழத்தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்த இரா.சம்பந்தன், ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே போர் மூள்வதை தடுக்க இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர். அவரது மறைவு ஈழத்தில் தமிழர்களுக்கு உரிமைகளையும், அதிகாரங்களையும் வென்றெடுத்துத் தரும் முயற்சிகளுக்கு பெரும் இழப்பு ஆகும். டிடிவி தினகரன்: இலங்கையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான சம்பந்தன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி வந்த முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தனை இழந்துவாடும் உறவினர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்புமணி இராமதாஸ்: இலங்கையின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான பெரியவர் இரா. சம்பந்தன் முதுமை காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அடிப்படையில் வழக்கறிஞரான இரா.சம்பந்தன் தமது வாழ்நாள் முழுவதையும் இலங்கை இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக அர்ப்பணித்துக் கொண்டவர். அதற்காக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களிடம் மன்றாடியவர். கடந்த அரை நூற்றாண்டில் இந்தியாவின் பிரதமர்களாக இருந்த அனைவரிடமும் நட்பு பாராட்டியவர். இலங்கை இறுதிப் போருக்குப் பிறகு ஒன்று பட்ட இலங்கை என்ற அமைப்புக்குள்ளாகவாவது ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடி வந்தார். நான் ஸ்ரீலங்கன் என்று பொதுவெளியில் முழங்குவதற்கு கூட தயாராக இருக்கிறேன்; ஆனால், ஒருபோதும் இரண்டாம் தர குடிமகனாக வாழ விரும்பவில்லை என்று முழங்கியவர். அவரது விருப்பத்திற்கிணங்க இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவது தான் அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும். https://thinakkural.lk/article/304956
  16. 01 JUL, 2024 | 02:34 PM சென்னை: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும், அவர்களை விடுதலை செய்து தாயகத்துக்கு அழைத்து வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மற்றும் கடலூர் மாவட்ட மீனவர்கள் 10 பேரை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள இலங்கைக் கடற்படையினர், அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். ஒரு குற்றமும் செய்யாத தமிழக மீனவர்கள் மீது பொய்யான கொலை வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், கடலூர் மாவட்ட மீனவர் ஒருவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் என மொத்தம் 10 பேர் கடந்த ஜூன் 23ஆம் நாள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தங்களின் சுற்றுக்காவல் படகை தமிழக மீனவர்களின் படகு மீது மோதியுள்ளனர். அதில் சுற்றுக்காவல் படகில் இருந்த ரத்னாயகா என்ற வீரர் கடலில் விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தமிழக மீனவர்கள் 10 பேரும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த நாளே கடலில் விழுந்து மீட்கப்பட்ட கடற்படை வீரர் ரத்னாயகா உயிரிழந்து விட்டதால் தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசால் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவரை அழைத்த இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள், நடுக்கடலில் நடந்த சண்டையில் தான் இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா கொல்லப்பட்டதாகக் கூறி, அதற்கு கட்டணம் தெரிவித்து உள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி, மீன் பிடிப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல், இந்தியாவுக்கான இலங்கை தூதர் சேனுகா செனவிரத்னே தில்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இலங்கை கடற்படை வீரர் கொல்லப்பட்டது குறித்து இலங்கை அரசின் சண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்கு கடுமையாக தண்டனையை பெற்றுத்தருவதன் தொடக்கமாகவே இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செயல்பாடுகள் தெரிகின்றன. இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகாவின் உயிரிழப்புக்கு தமிழக மீனவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல, அவர்கள் அப்பாவிகள். வங்கக்கடலில் பிழைப்புக்காக மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை கைது செய்யும் நோக்குடனும், தாக்கும் நோக்குடனும் அவர்களின் படகுகள் மீது இலங்கைக் கடற்படை வீரர்கள், தங்களின் ரோந்து படகுகளை அதிவேகமாக ஓட்டி வந்து மோதினார்கள். அதனால் ஏற்பட்ட நிலைகுலைவில் தான் இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா முதுகுத் தண்டில் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பயனின்றி உயிரிழந்தார். இது முழுக்க முழுக்க விபத்து. அதுவும் இலங்கைக் கடற்படையினரால் ஏற்படுத்தப்பட்ட விபத்து. அதற்கு எந்தத் தவறும் செய்யாத அப்பாவி தமிழக மீனவர்களை பொறுப்பாக்குவதும், தண்டிக்கத் துடிப்பதும் நியாயமல்ல. இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா கொலை வழக்கில் தமிழக மீனவர்களை தொடர்புப்படுத்தி இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரியும் என்ன பதில் கூறினார்கள்? என்பது தெரியவில்லை. வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பறிக்க இலங்கை தொடர்ந்து சதி செய்து வருகிறது. அதற்காக தமிழக மீனவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர், இலங்கை வீரர்களை கொலை செய்கின்றனர் என்பன போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். அவற்றை மத்திய அரசு ஏற்கக் கூடாது. இன்னும் கேட்டால் இதுவரை 800-க்கும் கூடுதலான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு காரணமான இலங்கை வீரர்களை தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி தான் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும், அவர்களை விடுதலை செய்து தாயகத்துக்கு அழைத்து வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக வங்கக் கடலில் எல்லைகளைக் கடந்து தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்கள் முறை வைத்து மீன்பிடிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/187390
  17. மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 03ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வை நடத்தாதிருக்கவும் ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை நாளை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நாளை (02) விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த குறித்த தீர்மானம் பற்றிய விவாதத்தை நடத்தாதிருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி அஞ்சலிக்காக நாளைமறுதினம் (03) பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவருவதற்கும், அன்றையதினம் பாராளுமன்ற அமர்வை முன்னெடுக்காதிருப்பதற்கும் இன்று (01) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் ஆளும்-எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சம்பந்தனின் பூதவுடல் நாளைமறுதினம் (03) பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை இறுதி அஞ்சலிக்காக பாராளுமன்ற கட்டடத்தின் முன்பக்கத்திலுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது. https://thinakkural.lk/article/304977
  18. Published By: RAJEEBAN 01 JUL, 2024 | 12:16 PM விளையாட்டு துப்பாக்கியை பயன்படுத்திய 13 வயது சிறுவனை அமெரிக்க பொலிஸார் சுட்டுக்கொல்வதை காண்பிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. பொலிஸாருக்கு விளையாட்டு துப்பாக்கியை காண்பித்த 13 வயது சிறுவனை நியுயோர்க் பொலிஸார் சுட்டுக்கொல்லும் வீடியோ அமெரிக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மான்ஹட்டனிலிருந்து வடமேற்கில் உள்ள உட்டிகா நகரின் பொலிஸார் ஆயுதமுனையில் கொள்ளை தொடர்பில் இரண்டு இளைஞர்களை தடுத்து நிறுத்தியதை தொடர்ந்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தடுத்துநிறுத்தப்பட்ட இரண்டுசிறுவர்களும் சந்தேகநபரின் சாயல் கொண்டவனாக காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லாதை உறுதிசெய்வதற்காக அவர்களை கீழே அமரச்செய்து சோதனையிடவேண்டும் என பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவிப்பதும், அவ்வேளை நியாமுவே என்ற சிறுவன் அங்கிருந்து தப்பிச்செல்வதையும் பொலிஸாரின் உடலில் காணப்பட்ட கமராகாண்பித்துள்ளது. அந்த சிறுவன் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிபோன்ற ஒன்றை காண்பிப்பதையும் கமரா காண்பித்துள்ளது சிறுவனை நிலத்தில் விழுத்தி கைது செய்வதற்காக இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்;டார் அந்த சிறுவனிற்கு உடனடி முதலுதவியை வழங்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் அங்கு அவன் உயிரிழந்துவிட்டான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலில் அது கைத்துப்பாக்கி என்ற பொலிஸார் நினைத்தனர் பின்னர் அது போலித்துப்பாக்கி என உறுதி செய்யப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட நபர் ஒருவர் பதிவு செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சிறுவனை துரத்திச்சென்று நிலத்தில் வீழ்த்துவதையும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவனை தாக்குவதையும் சிறுவன் நிலத்தில் வீழ்;ந்துகிடக்கும் துப்பாக்கி சத்தம் கேட்பதையும் வீடியோ காண்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/187375
  19. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பைடன் விலகுவதா? குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு Published By: RAJEEBAN 01 JUL, 2024 | 11:28 AM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடவேண்டும் அவர் போட்டியிலிருந்து விலகக்கூடாது என அவரது குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான நேரடிவிவாதத்தின் போது ஜோபைடன் தடுமாறியதை தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து விலகவேண்டும் என்ற வேண்டுகோள்கள் கருத்துக்கள் காணப்படும் நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை காம்ப் டேவிட்டில் தனது குடும்பத்தவர்களை சந்தித்துள்ளார். குடும்பத்தவர்களுடனான சந்திப்பின்போது அவரது அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கார்டியன் தெரிவித்துள்ளது. காம்ப்டேவிட் சந்திப்பின்போது ஜோபைடனின் மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் கலந்துகொண்டுள்ளனர். தன்னால் மேலும் நான்கு வருடங்களிற்கு அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகிக்க முடியும் என்பதை பைடனால் அமெரிக்க மக்களிற்கு நிரூபிக்க முடியும் என குடும்பத்தவர்கள் தெரிவித்தனர் என நியுயோர்க் டைம்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. முதல்விவாதத்தில் அவர் மிகவும் பலவீனமான விதத்தில் நடந்துகொண்டதை அறிந்துள்ள அவரது குடும்பத்தினர் அதேவேளை டொனால்ட் டிரம்ப்பை தோற்கடிக்க கூடிய ஓரேயொருவர் பைடனே என கருதுகின்றனர். போட்டியிலிருந்து விலகவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களை புறக்கணிக்கவேண்டும் என ஜோபைடனின் மனைவியும் மகன் ஹன்டருமே அதிகளவிற்கு வற்புறுத்தினார்கள் என ஏபி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/187367
  20. ஹிருணிக்காவின் பிணை மனு மீதான விசாரணை 4 ஆம் திகதி 01 JUL, 2024 | 03:56 PM தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட கால கடூழியச் சிறைத்தண்டனையை நீக்கி தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், சிறைத்தண்டனையை நீக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தன்னை பிணையில் விடுவிக்குமாறு ஹிருணிக்கா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பிணை மனு எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/187401
  21. சம்மந்தனின் மறைவிற்கு அதிமுக பொதுசெயலாளரான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் Published By: DIGITAL DESK 3 01 JUL, 2024 | 03:41 PM ''இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன் ஐயாவின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.'' என அதிமுக பொது செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரை தொடர்ந்து முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''இலங்கை தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதவரும், மறுக்க முடியாதவருமாகிய.. ஈழ தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய தூணாக திகழ்ந்தவருமான இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் தனது 91 வது வயதில் கொழும்பில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். இலங்கை தமிழரின் அடுத்த தலைமுறை பாதுகாப்பான வாழ்வியலை கட்டமைக்க ஒரு சரியான அடித்தளத்தை அமைத்த தமிழின தலைவரான அவரது இழப்பு ஈழத்தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.'' என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187400
  22. Published By: DIGITAL DESK 7 01 JUL, 2024 | 03:21 PM திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரிய கவனயீர்பொன்று இன்று திங்கட்கிழமை (01) திருகோணமலை திருக்கோனேஸ்வரர் ஆலய பரிபாலன சபைக்கு முன்னால் இடம்பெற்றது. குறித்த கவனயீர்ப்பினை திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினர், தொண்டர்கள் மற்றும் சைவ அடியார்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர். திருக்கோணேஸ்வர ஆலயத்தை அண்மித்த கடைத் தொகுதியில் கசிப்பு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதாகியதையடுத்து அதனை சீல் வைக்கச் சென்ற திருகோணமலை நகர சபை ஊழியர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனை கண்டித்தும் புனித தன்மையை பாதுகாக்க அரச துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் இதன் போது தெரிவித்தனர். இப் புனித ஆலய சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் சட்ட ரீதியாக கடையை சீல் வைக்க சென்றவரை தாக்கியதும் கண்டிக்கத்தக்கது எனவும் இதன் போது தென்காயிலை ஆதினம் அகத்தியர் அடிகளார் தெரிவித்தார். இதில் ஆலய பரிபாலன சபை தலைவர் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண ஆளுனருக்கு இது தொடர்பான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது குறித்த கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது இப் புனித தளத்தில் சில வருடங்களுக்கு முன்னர் தற்காலிக கடைகள் அமைத்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பல இடர்பாடுகளை சந்திக்க நேரிடுவதாக ஆலய பரிபாலன சபை மூலமாக உரிய தரப்புக்களுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் எடுத்துக் கூறப்பட்டது. இது தொடர்பில் 2019.06.10 மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது ஆலயம் ஊடாக செல்லும் கடைகள் அகற்றப்பட்டு வேறொரு இடத்தில் அமைத்துக் கொடுப்பது தொடர்பான விடயத்தை அனைவரும் ஏகமானதாக ஏற்றுக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்கள் 11.10.2022 குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி இணக்கம் தெரிவிக்கப்பட்டும் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் அண்மையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் சட்டவிரோத செயற்பாடு ஒன்று இடம் பெற்றது எனவே ஆலயத்தின் புனிதத்தை பாதுகாக்க இது போன்ற நடவடிக்கையில் இருந்து பாதுகாத்து வியாபாரிகளின் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாது. எனவே அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் மாற்று இடத்தை வழங்கி வியாபாரத்தை நடாத்த நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187369
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார் ரா.சம்பந்தன் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் முப்பதைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியப் பங்கு வகித்த இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், இலங்கை தமிழரசு கட்சியின் பெரும் தலைவருமான ரா.சம்பந்தன் காலமானார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெறுவதற்காக நீண்ட காலம் பணியாற்றியவர் அவர். அவருக்கு வயது 91. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ரா.சம்பந்தனின் அரசியல் பயணம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த பெருந்தலைவரான ரா.சம்பந்தன், கிழக்கு திரிகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். பல தசாப்தங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன், நாடாளுமன்றத்தில் தமிழர் பிரச்சனைகளுக்காக உறுதியான, இடைவிடாத குரலை எழுப்பியவர். "ரா. சம்பந்தன் பல வேறுபட்ட அரசியல் சூழ்நிலைகளைத் தாண்டிவந்த மனிதர். அந்தந்த சூழ்நிலைகளுக்கு அரசியல்ரீதியான பொறுப்புகளோடு எதிர்வினை ஆற்றியவர். பல அவமானங்களை எதிர்கொண்டாலும், தமிழர்களின் நலனை மனதில் வைத்து தனது பயணத்தைத் தொடர்ந்தவர். தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு தனது வாழ்நாளிலேயே வரும் என நம்பினார் சம்பந்தன்" என்கிறார் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர்ந்து எழுதிவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன். திருகோணமலையை மையமாக வைத்து, 1970ஆம் ஆண்டுவாக்கில் தனது அரசியல் பிரவேசத்தைத் தொடங்கினார் சம்பந்தன். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில், இரா.சம்பந்தன் திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையின் தமிழர் அரசியல் வேறொரு பாதைக்குத் திரும்பியிருந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர்கள், ஆயுதப் போராட்டத்தை தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக முன்வைத்து செயல்பட ஆரம்பித்திருந்தனர். 1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது சட்டத் திருத்தம் தனிநாடு கோருவதற்கு எதிராக இருப்பதைக் கண்டித்தும் 1983 கறுப்பு ஜூலை நிகழ்வுகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபெறாததால், 1983 செப்டம்பரில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் சம்பந்தன். பட மூலாதாரம்,TNA தமிழர் பகுதியாக விளங்கிய திருகோணமலை தேர்தல் தொகுதியை மையப்படுத்தி, 1970ஆம் ஆண்டு காலப் பகுதியில் ரா.சம்பந்தன் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலை கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி, ரா.சம்பந்தன் திருகோணமலை தொகுதி தேர்தலில் போட்டியிட்டார். இந்த தேர்தலின் ஊடாக இரா.சம்பந்தன், இலங்கை நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார். இவரது அரசியல் பிரவேசம் இடம்பெற்ற காலப் பகுதியானது, உள்நாட்டு போர் ஆரம்பமான காலப் பகுதி என்பதுடன், பெருமளவான இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காலப் பகுதியாகவும் அமைந்திருந்தது. இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, ரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழர் விடுதலை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 1983ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை புறக்கணித்திருந்தனர். தனிநாட்டு கோரிக்கைக்கு இடமளிக்க முடியாது என்ற உள்ளடக்கத்துடனான அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளிக்க முடியாது எனவும், 1983ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான தமிழர்கள், படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் நாடாளுமன்ற அமர்வுகளை தமிழர் விடுதலை கூட்டணி புறக்கணித்திருந்தது. நாடாளுமன்ற அமர்வுகளை தொடர்ந்து மூன்று மாத காலம் புறக்கணித்த காரணத்தை முன்னிலைப்படுத்தி, ரா.சம்பந்தனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 1983ஆம் ஆண்டு பறிக்கப்பட்டது. இதையடுத்து, 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி தலைமையில் பல தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட கூட்டமைப்பு சார்பில் சம்பந்தன், திருகோணமலை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார். எனினும், அந்த தேர்தலில் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோட்டாபய ராஜபக்ஷேவுடன் ரா.சம்பந்தன் இதற்குப் பிறகு தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, டெலோ ஆகிய கட்சிகள் கைகோர்த்து 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பின் தலைவராக ரா.சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கூட்டமைப்பிற்கு தேர்தல்கள் செயலகம் அங்கீகாரம் வழங்காத நிலையில், 2001ஆம் ஆண்டு தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொண்டது. இந்தத் தேர்தலின் மூலம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார் சம்பந்தன். இந்த நிலையில், இலங்கை தமிழர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கூறியது. ஆனால், இதனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி ஏற்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை. இதனால் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த காலகட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் ரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார். இதற்குப் பிறகு வந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் சம்பந்தன் வெற்றிபெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2012இல் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் ரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவரான ரா.சம்பந்தன் சுதந்திர இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் தற்போதுவரை இரண்டு தமிழர்கள் மாத்திரமே எதிர்கட்சித் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். 1977ஆம் ஆண்டில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரான அ. அமிர்தலிங்கம், இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் இணைந்து ஆட்சி அமைத்தனர். இதனால், இந்த இரு கட்சிகளுக்கும் அடுத்தபடியாக அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இலங்கை தமிழரசு கட்சி விளங்கியது. இந்தக் கட்சிக்கு 16 இடங்கள் கிடைத்திருந்தன. ஆகவே 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, இலங்கையின் தமிழர் தலைவர் ஒருவருக்கு மீண்டும் கிடைத்தது. ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளுடனும் இணைந்து செயற்பட்ட தலைவர்களில் ரா. சம்பந்தனுக்கு முக்கிய இடம் இருக்கிறது. "மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் இந்தியாவில் அவருக்கு ஒரு பெரிய மதிப்பு இருந்தது. ஆனால், 2014க்குப் பிறகு இந்தியாவுக்கு இலங்கை பற்றிய அணுகுமுறையே இல்லாத நிலை ஏற்பட்டது. இந்தியா தற்போது மலையக மக்களுக்கு பல உதவிகளைச் செய்துவரும் நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களைப் பற்றி பெரிதாக யோசிப்பதில்லை என்ற நிலை இருந்தாலும் அதைப் பற்றி அவருக்கு பெரிய புகார்கள் ஏதும் இல்லை. தொடர்ந்து இலங்கை விவகாரத்தில் இந்தியா கவனம் செலுத்தும்படி கோரிவந்தார் அவர்" என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன். இலங்கைச் சூழல் குறித்து இந்தியாவுக்கு பல தருணங்களில் சம்பந்தன் கடிதம் எழுதியிருக்கிறார் என்றும், அது தொடர்பாக பதில் ஏதும் வராத போதும் தனது முயற்சிகளை அவர் கைவிடவில்லை என்றும் கூறுகிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரணில் விக்கிரமசிங்கவுடன் ரா.சம்பந்தன் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் மனித உரிமை மீறல் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழர் பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறிய குடியேற்றம், காணி பிரசினைகள் உள்பட தமிழர்கள் எதிர்நோக்கி வந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்த முக்கிய தலைவராக சம்பந்தன் இருந்தார். "அங்கிருக்கும் அரச கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு என்ன செய்ய முடியுமோ, அதை அவர் செய்திருக்கிறார். இலங்கையில் எல்லாமே ஒரு போராட்டமாகத்தான் இருந்தது. புலிகள் முழுமையாகத் தோற்ற பிறகு, தமிழர் நலன் தொடர்பான சிறிய முன்னேற்றத்திற்குக்கூட பெரிதாகப் போராட வேண்டியிருந்தது. தீர்க்கமான முடிவெடுக்க தயங்குவார் என்ற அவரைப் பற்றிய விமர்சனம் சரியானதல்ல. சம்பந்தனாக இருந்தால்தான் அவரது நிலை புரியும்" என்கிறார் ராதாகிருஷ்ணன். ஆனால், மூத்த பத்திரிகையாளரான பகவான் சிங், சம்பந்தன் குறித்த மாறுபட்ட சித்திரத்தை முன்வைக்கிறார். "தனது ஆங்கிலப்புலமை, விவாதம் செய்யும் திறம், ஈழம் குறித்த ஆழமான புரிதல் ஆகியவற்றை அவர் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால் சிங்கள ஆதிக்கத்திற்கு எதிரான தமிழர் அரசியலில் ஒரு ஒற்றுமையை, ஒருமித்த கருத்தைக் கொண்டுவந்திருக்க முடியும். அமிர்தலிங்கம் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிலையில், தலைமைப் பதவி இவருக்குக் கிடைத்தது. ஆனால், தமிழ் - சிங்கள அரசியலில் உள்ள மோசமான சக்திகளின் ஆதாயத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு நபராக சம்பந்தன் தன்னைக் குறுக்கிக் கொண்டார்" என்கிறார் பகவான் சிங். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரா.சம்பந்தன் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு 2004ஐ ஒட்டிய வருடங்களில் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாக இவர் மீது விமர்சனம் வைக்கப்படுவதும் இருக்கிறது. "ஆனால், புலிகள் வலுவாக இருந்த நிலையில், அதைத் தவிர வேறு எதையும் செய்திருக்க முடியாது. மற்றொரு பக்கம், புலிகள் இவரைக் கண்டுகொள்ளவேயில்லை. இருந்தபோதும் மக்களுக்காக செயல்பட வேண்டுமா அல்லது தனது மான - அவமானம் சார்ந்து செயல்பட வேண்டுமா என்ற நிலையில், மக்களுக்காக செயல்பட்டார் அவர்" என்கிறார் ராதாகிருஷ்ணன். தனது மரணத்தின் மூலம் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை இலங்கைத் தமிழர் அரசியலில் ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் சம்பந்தன். "ஆனால் அந்த வெற்றிடம் முன்பே ஏற்பட்டுவிட்டது. இவர் மிகவும் உடல் நலம் குன்றியிருந்த மூன்று, நான்கு வருடங்களில் தமிழர் அரசியலே சின்னாபின்னமாகிவிட்டது. தமிழரசுக் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்குள் இருந்த போட்டி இதற்கு முக்கியக் காரணம். தற்போது ரா. சம்பந்தன் மரணமடைந்திருக்கும் நிலையில், இதைவிட பெரிய துரதிர்ஷ்டம் இருக்க முடியாது" என்கிறார் ராதாகிருஷ்ணன். பட மூலாதாரம்,GETTY IMAGES "உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததற்குப் பிறகான தமிழர் அரசியலில் சம்பந்தனுக்கு ஒரு முக்கியப் பங்கு இருந்தது. ஆனால், அது எந்த அளவுக்கு தமிழர்களுக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவந்தது என்பது ஒரு முக்கியமான கேள்வி. சம்பந்தனைப் பொறுத்தவரை, இலங்கையில் தமிழ் தேசிய அரசியலை ஒன்றிணைக்கக் கூடிய நிலையில் இருந்தார். அவர் இல்லாவிட்டால் தமிழர் அரசியல் சிதறிப் போயிருக்கும். ஆனால், அந்த ஒற்றுமையால் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார அபிலாஷைகளுக்கு முன்னேற்றம் ஏற்பட்டதா என்பதும் ஒரு கேள்வி.” என்கிறார் இலங்கையைச் சேர்ந்த அரசியல் - பொருளாதார ஆய்வாளரான அகிலன் கதிர்காமர். “அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்ற முக்கிய தமிழ் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட நிலையில்தான் சம்பந்தன் தலைமைத்துவத்தைப் பெற்றார். அப்போதிருந்தே தமிழர்களின் நாடாளுமன்ற அரசியலுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாகத்தான் சொல்லவேண்டும். யுத்தம் முடிந்த பிறகு அந்தப் பின்னடைவு மேலும் அதிகரித்தது. இங்கிருந்த தலைவர்களால் தமிழ் அரசியலை சரியான வகையில் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால், இதனை சம்பந்தன் என்ற தனி நபர் மீது சொல்லப்படும் குறைபாடாக பார்க்கக்கூடாது. இது தமிழ் அரசியலுக்கே இருக்கும் ஒட்டுமொத்த சவாலாகத்தான் பார்க்க வேண்டும்" என்கிறார் அகிலன் கதிர்காமர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2014இல் அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த ரா.சம்பந்தன் ரா. சம்பந்தனின் தனிப்பட்ட வாழ்க்கை ரா.சம்பந்தன் என அனைவராலும் அழைக்கப்பட்ட ராஜவரோதயம் சம்பந்தன், திருகோணமலையில் 1933ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி பிறந்தார். யாழ்ப்பாணம் - சம்பத்தரிசியார் கல்லூரி, மொறட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி ஆகியவற்றில் படித்த ரா.சம்பந்தன் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டம் பயின்று வழக்கறிஞரானார். சம்பந்தனின் மனைவி லீலாவதி. இந்தத் தம்பதிக்கு சஞ்சீவன், செந்தூரன், கிருஷாங்கிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். நீண்ட நாட்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சம்பந்தன், நாடாளுமன்றத்திற்குச் செல்வதிலிருந்து விடுப்பு எடுத்திருந்தார். உடல்நலம் மோசமடைந்த நிலையில், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த ரா.சம்பந்தன், சிகிச்சை பலனின்றி ஜூன் 30ஆம் தேதி இரவில் உயிரிழந்தார். https://www.bbc.com/tamil/articles/cjjw07e1pl7o
  24. Published By: DIGITAL DESK 7 01 JUL, 2024 | 02:59 PM கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) நண்பகல் மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்த பொழுது வீடு தீ பிடித்து எரிந்துள்ளது. சமையலில் ஈடுபட்டவர் குடும்பப்பெண் மீனை வெட்டுவதற்காக வீட்டிலிருந்து வெளியில் சென்று மீனை வெட்டிக் கொண்டிருந்த பொழுது திடீரென வீடு தீப்பற்றி எரிந்ததை அவதானித்து ஓடிச் சென்று தொட்டிலில் படுத்துறங்கிய அவரது பிள்ளையை தூக்கியுள்ளார். இதன்பின்னர் அயலவர்கள் மற்றும் உறவினர்களின் துணையுடன் வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த முயன்ற போதும் வீடு முற்றாக எரித்து நாசமாகியுள்ளது . இதன் போது வீட்டில் இருந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணம், கையடக்கத்தொலைபேசி, 2 மீன் பிடிவலைகள், உடைகள் மற்றும் வீட்டில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளன. இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தற்பொழுது இடமின்றி அயலவர் வீட்டில் வசித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர் மேலும் தெரிவிக்கையில், தமக்கென நிரந்தர வீடு வழங்கப்பட்டிருந்த போதிலும் அவ்வீட்டினை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இடைநடுவே கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. எமக்கு இருப்பதற்கோர் இடமின்றி தற்காலிக வீடு ஒன்றை அமைத்து வசித்து வந்ததாகவும் தற்பொழுது அதுவும் தீயில் எரிந்து இல்லாமல் போய் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187359
  25. பட மூலாதாரம்,REUTERS/YVES HERMAN ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளில் மிக முக்கியமான நாடான பிரான்ஸில் தற்போது இரண்டு சுற்றுக்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று வாக்குப்பதிவு நேற்று (ஜூன் 30) நடைபெற்றது. பிரான்ஸைப் பொறுத்தவரை அதிபர் ஆட்சி முறை நிலவுகிறது. இந்த தேர்தல் முடிவுகளால் தற்போதைய அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் பதவிக்கு எந்த ஆபத்தும் கிடையாது. காரணம் இப்போது நடைபெறும் தேர்தல் என்பது பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் 577 உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டுமே. இதன் மூலம் பிரான்ஸ் நாட்டின் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும். ஆனால் அதிபரும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அதிபருக்கான அதிகாரம் குறையும். புதிய சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களை இயற்றுவதில் அதிபருக்கு சிக்கல்கள் ஏற்படலாம், எனவே தான் இந்த தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். மூன்று வாரங்களுக்கு முன்பு, பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் திடீரென முன்கூட்டியே தேர்தல்களை அறிவித்தார். அதன் பிறகு தான் முதல் சுற்று வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. தீவிர வலதுசாரிகளின் கட்சி, இடதுசாரிகளின் கூட்டணி மற்றும் பிரான்ஸ் அதிபரின் மையவாதக் கூட்டணி என இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. நடந்து முடிந்த முதல் சுற்றுத் தேர்தலில் தீவிர வலதுசாரிகளின் கட்சி முன்னிலைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது. முதல் சுற்றுத் தேர்தலில் 12.5 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். அடுத்த சுற்று வாக்குப்பதிவு ஜூலை 7ஆம் தேதி நடைபெறும். முன்னிலைப் பெற்ற தீவிர வலதுசாரிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மரைன் லே பென்னின் தீவிர வலதுசாரிக் கட்சியின் 39 எம்.பி-க்கள் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளிலும் தீவிர வலதுசாரிகளின் கட்சியான தேசிய பேரணிக் கட்சி (ஆர்என்- National Rally) முன்னிலையில் இருந்தது. அதற்கு அடுத்த இடத்தில் இடதுசாரிகளின் கூட்டணியும், அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் மையவாதக் கூட்டணி மூன்றாம் இடத்திலும் இருந்தன. இதையே பிரதிபலிக்கும் விதமாக, தீவிர வலதுசாரிகளின் கட்சி 33.2% வாக்குகளுடன் முன்னிலையிலும், இடதுசாரிகளின் கூட்டணி 28.1% பெற்று இரண்டாம் இடத்திலும், அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கூட்டணி 21% வாக்குகளுடன் பின்தங்கியும் உள்ளது. இது தொடர்பாக பேசிய தீவிர வலதுசாரிகள் கட்சியின் தலைவர் ஜோர்டான் பர்டெல்லா, "பிரெஞ்சுக் குடிமக்கள் தங்கள் வாக்குகளை எங்களுக்கு வழங்கினால், அனைத்து பிரெஞ்சு மக்களுக்கான பிரதமராக நான் இருப்பேன்." என்று கூறினார். 28 வயதான ஜோர்டான் பர்டெல்லா, தேசிய பேரணிக் கட்சியின் முக்கியத் தலைவரான மரைன் லே பென்னின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார். "பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் தீவிர வலதுசாரிகளின் இதற்கு முன் எப்போதும் வெற்றி பெற்றதில்லை. இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு தேர்தல்" என்கிறார் பிரான்ஸ் அரசியலின் மூத்த விமர்சகர் அலைன் டுஹாமெல். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் ஆனால் தீவிர வலதுசாரிகள் இன்னும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை. 577 உறுப்பினர்கள் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்கு 289 இடங்களைப் பெற வேண்டும். இரண்டாம் சுற்றுத் தேர்தலுக்கு பிறகு தான் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது முழுமையாக தெரிய வரும். ஏற்கெனவே முதல் சுற்றுக்குப் பிறகு, 39 தேசிய பேரணிக் கட்சியின் எம்.பி.க்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், அதே போல இடதுசாரிகளின் கூட்டணியிலிருந்தும் 32 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நடக்கும் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள், ஆனால் பிரான்ஸ் தேர்தலில் 50% வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். யாருக்கும் 50% கிடைக்கவில்லை என்றால் இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெறும். முதல் சுற்றுத் தேர்தலில் 12.5 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே இதில் கலந்துகொள்வார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டது ஏன்? கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி, அதிபர் எமானுவேல் மக்ரோங், பிரான்ஸ் நாட்டில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தொலைக்காட்சி செய்தியில் தெரிவித்திருந்தார். அவரது திடீர் அறிவிப்புக்கு ஒருநாள் முன்னதாக, ஐரோப்பிய தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதில் பிரான்சும் பங்கேற்றது. அந்தத் தேர்தலில், மக்ரோனின் மையவாதக் கூட்டணியை விட, தீவிர வலதுசாரிக் கட்சியான தேசிய பேரணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இதைச் சுட்டிக்காட்டி, "எதுவும் நடக்காதது போல் என்னால் இருக்க முடியாது, எனவே பிரான்ஸ் தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்துள்ளேன்" என்று எமானுவேல் மக்ரோங் கூறினார். இந்தத் தேர்தல்கள் நாடாளுமன்றத்துக்காக நடத்தப்படுவதால், மக்ரோனின் பதவிக்காலம் பாதிக்கப்படாது. அவரது பதவிக்காலம் முடிய இன்னும் மூன்றாண்டுகள் உள்ளன. முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்ற மக்ரோனின் அறிவிப்பு தங்களுக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று பல பிரான்ஸ் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயத்தில் மக்ரோனுக்கும் வேறு வழியில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் எமானுவேல் மக்ரோங் முழுப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதால், புதிய சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களை இயற்றுவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எமானுவேல் மக்ரோங்கின் புகழ் சமீப காலங்களில் குறைந்துவிட்டது. முன்கூட்டியே தேர்தலை நடத்துவதன் மூலம் குறைந்தபட்சம் தனது கூட்டணிக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும் என அவர் நம்புகிறார். பிரான்ஸ் மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை தான் மதிப்பதாகவும், ஒருவேளை தீவிர வலதுசாரியான தேசிய பேரணிக்கு அரசை அமைப்பதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டுமென மக்கள் விரும்பினாலும் கூட அதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தத் தேர்தல்கள் ஏன் முக்கியமானவை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேசிய பேரணிக் கட்சி (வலதுசாரி) வெற்றி பெற்றால் 28 வயதான ஜோர்டான் பர்டெல்லா பிரதமராக பதவியேற்பார் பிபிசி செய்தியாளர் ஹுவ் ஸ்கோஃபீல்ட் கூறுகையில், "இந்தத் தேர்தல் பிரான்ஸுக்கு மட்டுமல்ல, மொத்த ஐரோப்பாவுக்கும் ஒரு வரலாற்று திருப்புமுனையாக இருக்கக்கூடும்" என்கிறார். பிரான்ஸ் போன்ற ஒரு நாட்டில், கடுமையான யூத-விரோத சித்தாந்தம் கொண்ட தீவிர வலதுசாரிகளின் கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது சில காலத்திற்கு முன்பு வரை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது என்று அவர் கூறுகிறார். ஒருவகையில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்ட சூழலில் இருந்து இந்த நாடு வெளியேறத் தொடங்கியிருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் நிரூபிக்கலாம். பாசிசம், பழமைவாதம், தேசியவாதம் மற்றும் குடியரசு முன்னணி போன்ற அரசியல் சொற்கள் தேர்தல் விவாதத்தில் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அவற்றின் உண்மையான அர்த்தம் குறைந்து வருகிறது. "தேசியப் பேரணி போன்ற ஒரு பிரபலமான வலதுசாரிக் கட்சிக்கு வாக்களிப்பது ஏன் சங்கடத்தை ஏற்படுத்தவில்லை என்பதையும் இது விளக்குகிறது" என்று ஹூவ் ஸ்கோஃபீல்ட் கூறுகிறார். களத்தில் இருக்கும் கூட்டணிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரான்ஸ் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது பிரான்ஸ் தேர்தலில் பல கட்சிகள் களம் காண்கின்றன. ஆனால் முக்கியமான போட்டி என்பது மூன்று கூட்டணிகள் இடையே தான். தேசிய பேரணி (ஆர்என்) இது ஒரு தீவிர வலதுசாரிக் கட்சியாகும். சமீபத்திய ஐரோப்பிய தேர்தல்களில் இந்தக் கட்சி மிகச் சிறப்பாக செயல்பட்டது. சமீப காலங்களில், யூத-எதிர்ப்பு மற்றும் தீவிரவாத அரசியல் கொள்கைகளை ஆதரிக்கும் அதன் அடிப்படை சித்தாந்தத்தில் இருந்து இந்தக் கூட்டணி விலகி இருந்தாலும், அது குடியேற்றத்தை கடுமையாக எதிர்க்கிறது. பிறநாட்டு குடிமக்கள் பிரான்ஸில் குழந்தைப் பெற்றால், அக்குழந்தைக்கு தானாகவே கிடைக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை தேசிய பேரணிக் கட்சி ஆட்சியைப் பிடித்தால் வழங்கப்படாது. 28 வயதான ஜோர்டான் பர்டெல்லா தலைமையிலான அக்கட்சி வெற்றி பெற்றால், பிரான்ஸ் நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி தற்போது, சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்ட்கள், பசுமைவாதிகள் மற்றும் பிரான்ஸ் அன்பௌட் (LFI) உள்ளடங்கிய இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி தேர்தலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த கட்சிகள் அனைத்தும் தீவிர வலதுசாரிகளை அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்கும் நோக்கத்துடன் ஒன்று சேர்ந்துள்ளன. தற்போதைய அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தங்களை மாற்றியமைக்கவும், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவும் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கான மீட்பு நிறுவனத்தை உருவாக்கவும் இக்கூட்டணி விரும்புகிறது. மையவாதக் கூட்டணி பிரான்ஸ் மக்கள் வலதுசாரி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பக்கம் சாயத் தொடங்கியுள்ளதாக கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டும் சூழ்நிலையில், மையவாத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் இக்கூட்டணியில் இணைந்துள்ளன. ஆனால் இந்த கூட்டணியின் சில வேட்பாளர்கள் தேர்தலில் இரண்டாம் சுற்றை எட்டாமல் போகவும் வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பிரான்சில் தேர்தல் எப்படி நடைபெறுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு (Assemblée Nationale) பிரதிநிதிகள் என அழைக்கப்படும் 577 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். ஆட்சி அமைக்க அல்லது நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற 289 இடங்கள் தேவை. முதல் சுற்றில் 12.5 சதவீத வாக்குகளைப் பெற முடியாத வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெற்றாலோ அல்லது தனது தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் நான்கில் ஒரு பங்கையாவது பெற்றாலோ வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார். இருப்பினும், இது மிகவும் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே நிகழ்கிறது. பிரான்சில், அதிபர் மற்றும் பிரதமர் என இருவரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விவகாரங்களைக் கையாளுகின்றனர். பிரதமர் அரசாங்கத்தின் தலைவர், அதிபர் நாட்டின் தலைவர். பிரான்சில் கடந்த 2002ஆம் ஆண்டு முதல், அதிபர் தேர்தல் முடிந்த உடனேயே நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் 2027இல் நடைபெற வேண்டியது. ஆனால் இந்த ஆண்டே தேர்தலை நடத்த எமானுவேல் மக்ரோங் முடிவு செய்தார். https://www.bbc.com/tamil/articles/ced31ege2j2o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.