Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ஏராளன்

  1. அரச நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு! Published By: DIGITAL DESK 7 30 JUN, 2024 | 09:50 AM (ஆர்.ராம்) ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரச நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமான அறிவிப்பினை விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் முழுமையான ஒத்துழைப்புக்களையும் கடமைகளையும் முன்னெடுக்குமாறு கோரி அரசாங்க அச்சகம், பொலிஸ், இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான உத்தியோகத்தர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிபரத்தை தயாரிக்குமாறு மாவட்ட உதவி மற்றும் பிரதி தேர்தல் ஆணையாளர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட உதவித் தேர்தல் ஆணையர்களுக்கு கிராம சேவை அலுவலர்கள் மூலம் வாக்குச்சாவடிகளைத் தயார் செய்யுமாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் செம்டெம்பர் 17ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 16ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது. அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு தயாரான நிலையிலேயே உள்ளது. ஏனைய திணைக்களங்களையும் தற்போது செயற்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனை விடவும், இம்முறை பிரசார செலவீனம் உள்ளிட்ட விடயங்களையும், தேர்தல் சட்ட மீறல்களை தடுப்பதற்கான புதிய முன்னகர்வுகளையும் தேர்தல்கள் கண்காணிப்பு தரப்பினருடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/187286
  2. டி20 உலகக் கோப்பை: இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் இருந்து ஆட்டத்தை திருப்பியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 ஜூன் 2024, 19:04 GMT 2024 ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது. ஏறக்குறைய 11 ஆண்டுகளாக பலமுறை ஐ.சி.சி போட்டிகளின் பைனல், அரையிறுதிவரை சென்றிருந்த இந்திய அணி, 11 ஆண்டுகள் பஞ்சத்துக்குப்பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. விராட் கோலியும், ரோகித் சர்மாவும் பல அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டு இந்த உலகக் கோப்பையில் விளையாடிய நிலையில் அனைத்தும் இந்த வெற்றி மூலம் விலகியுள்ளன. இந்தியாவின் இந்த வெற்றிக்கு, அணியில் இருந்த ப்ளேயிங் லெவன் அனைவருமே காரணம். இருப்பினும் கிளாசன் விக்கெட்டை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா, அவர் வீசிய கடைசி ஓவர், பும்ராவின் கடைசி இரு ஓவர்கள், அர்ஷ்தீப் வீசிய ஓவர், சூர்யகுமார் பிடித்த கேட்ச் என அனைத்துமே திருப்புமுனையாக அமைந்தன. கிளாசன் களத்தில் இருந்தவரை இந்திய அணியின் வெற்றி உறுதியில்லாததாக இருந்தது. தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 24 பந்துகளில் 26 ரன்கள்தான் தேவைப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியா 17-வது ஓவரை வீச வந்தபின்புதான் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் கைமாறியது. கிளாசன் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தியதுதான் ஆட்டத்தில் திருப்புமுனை அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் பும்ரா வீசிய 18-வது ஓவரில் யான்சென் விக்கெட்டை வீழ்த்தி 2 ரன்கள் கொடுத்து தேவைப்படும் ரன் 12 பந்துகளில் 20 ரன்களாக உயர்ந்தது நெருக்கடி அதிகரித்தது. அர்ஷ்தீப் சிங் 19-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்து தென் ஆப்ரிக்காவை நெருக்கடியில் தள்ளினார். நெருக்கடி, அழுத்தம் வந்தாலே தென் ஆப்ரிக்கா தங்களின் இயல்பான குணத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது இந்த ஆட்டத்திலும் வெளியானது. கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் மில்லர் சிக்ஸர் விளாச அதை சூர்யகுமார் அருமையான கேட்ச் பிடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதே ஓவரில் ரபாடாவும் ஆட்டமிழக்க தென் ஆப்ரிக்கா தோல்விக்குழியில் விழுந்தது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரோகித் சர்மா தரையில் படுத்து கைகளை வைத்து தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் தரையைத் தட்டி மகிழ்ந்த ரோகித், கண்ணீர் விட்ட பாண்டியா இந்திய அணி எதிர்பார்த்திருந்த அந்த வரலாற்று தருணம் வந்தது. 17 ஆண்டுகளுக்குப்பின் டி20 கோப்பையை வென்றது சாதித்தது. இந்திய அணி வென்றவுடன் கேப்டன் ரோகித் சர்மா தரையில் படுத்து கைகளை வைத்து தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 2023 உலகக் கோப்பையில் பைனல் வரை சென்று கோப்பையை தவறவிட்ட ரோகித் இந்த முறை அந்தத் தவறை செய்யவில்லை. கடைசி ஓவரை வீசி வெற்றிக்கு துணை செய்த துணைக் கேப்டன் பாண்டியா, கண்ணீர் விட்டு அழுது மகிழ்ச்சியையும், அழுத்தத்தையும் ரீலீஸ் செய்தார். இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்திய அணி மோதும் இறுதிப்போட்டி என்றவுடன் ஆட்டத்தைப் பார்க்கவும், ஆதரவு தெரிவிக்கவும் ஏராளமான இந்திய ரசிகர்கள் வந்திருந்தனர். இந்திய அணி கோப்பையை வென்றவுடன் தேசியக் கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேவைப்படும் நேரத்தில், தேவைப்படும் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை விராட் கோலி தட்டிச் சென்றார். டி20 தொடரின் தொடர் நாயகன் விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டநாயகன் விருது வென்றார் கோலி விராட் கோலி ஓய்வு அறிவிப்பு ஆட்டநாயகன் விருது வென்ற கோலி கூறுகையில், "இதுதான் என்னுடைய கடைசி சர்வதேச டி20 போட்டி. இதைத்தான் சாதிக்க விரும்பி்னோம். குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஓட முடியாது என்பது ஒருநாள் நமக்குத் தெரியும். அது நடந்துவிட்டது. அடுத்த தலைமுறை அணியை வழிநடத்தும் நேரம் வந்துவிட்டது. சில வியத்தகு வீரர்கள் வந்து அணியை வழிநடத்தி தேசியக் கொடியை உயரே பறக்கவிடுவார்கள்,” எனத் தெரிவித்தார் பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்ச்சி 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. ஹென்ட்ரிக்ஸ், டீ காக் ஆட்டத்தைத் தொடங்கினர். பும்ரா 2வது ஓவரை வீசினார், 3பந்திலேயே ஹென்ட்ரிக்ஸ் க்ளீன் போல்டாகி வெளியேறினார். 3வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து மார்க்ரம் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் 12 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்ரி்க்கா. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்தது. ஸ்டெப்ஸ், டீகாக் இருவரும் மெல்ல ஆட்டத்தை நகர்த்தி, ஸ்கோரை உயர்த்தினர். 7.1 ஓவர்களில் தென் ஆப்ரிக்கா 50 ரன்களை எட்டியது. அக்ஸர் படேல் வீசிய 9வது ஓவரில், ஸ்டெப்ஸ் ஃபுல்டாஸ் பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டு 31 ரன்னில் க்ளீன் போல்டாகினார். 3வது விக்கெட்டுக்கு டீ காக், ஸ்டெப்ஸ் 58 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து கிளாசன் களமிறங்கி, டீ காக்குடன் சேர்ந்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 10வது ஓவரில் கிளாசன் ஒரு சிக்ஸர் விளாசி 10 ரன்களைச் சேர்த்தார். 10 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 11வது ஓவரிலும், குல்தீப் வீசிய 12வது ஓவரிலும் கிளாசன் தலா ஒரு சிக்ஸர் விளாசினார். 12வது ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா 100 ரன்களைக் கடந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய 13வது ஓவரில் டீகாக் பவுண்டரி விளாசினர். அதே ஓவரின் 3வது பந்தில் ஃபைன் லெக் திசையில் அடித்த ஷாட்டை குல்தீப் கேட்ச் பிடிக்கவே டீ காக் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டேவிட் மில்லர் களமிறங்கி, கிளாசனுடன் சேர்ந்தார். குல்தீப் வீசிய 14-வது ஓவரில் மில்லர் ஒருபவுண்டரி , சிக்ஸர் விளாசி ரன்ரேட் பதற்றத்தைத் தணித்தார். தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 36 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்டது. அக்ஸர் விளாசிய 15வது ஓவரை கிளாசன் குறிவைத்தார். முதல் பந்தில் கிளாசன் பவுண்டரி அடித்தார், அடுத்த இரு பந்துகளை அக்ஸர் வைடாக வீசினார். 2வது பந்தில் கிளாசன் மேற்கூரையில் சிக்ஸர் விளாசினார். 4வது பந்தில் மீண்டும் கிளாசன் சிக்ஸர் விளாசினார். 5வது பந்தில் கிளாசன் பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் மட்டும் கிளாசன் 24 ரன்களை விளாசி தேவைப்படும் ரன்களையும், பந்துகளையும் சமன் செய்து ஆட்டத்தை தென் ஆப்ரிக்கா பக்கம் திருப்பினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வீரர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் ஆட்டம் இந்திய அணியிடம் கைமாறிய தருணம் கடைசி 4 ஓவர்களில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா 17-வது ஓவரை வீசினார். ஆப்சைடு விலக்கி வீசப்பட்ட பந்தை கிளாசன் அடிக்க முற்பட்டு ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து 27 பந்துகளில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில்5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். கடைசி 18 பந்துகளில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா 18-வது ஓவரை வீசினார். முதல் இரு பந்துகளில் மில்லர் ரன் சேர்க்காமல் 3வது பந்தில் ஒரு ரன் எடுத்தார், 4வது பந்தில் யான்சென் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் தென் ஆப்ரிக்கா 2 ரன்கள் மட்டுமே சேர்த்து ஒரு விக்கெட்டையும் இழந்தது. கேசவ் மகராஜ் அடுத்து களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தென் ஆப்ரிக்காவால் சேர்க்க முடிந்தது. கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. மில்லர் ஸ்ட்ரைக்கில் இருந்தார். ஹர்திக் பாண்டியாவீசிய முதல் பந்தில் மில்லர் சிக்ஸர் விளாச, எல்லையில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவ் பந்தை பிடித்து பவுண்டரி எல்லைக்கு அருகே சென்று தூக்கிபோட்டு, மீண்டும் மைதானத்துக்குள் வந்து அருமையான கேட்ச் பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அடுத்து ரபாடா களமிறங்கி பவுண்டரி அடித்தார். அடுத்தபந்தில் ஒரு ரன் எடுத்தனர். 3பந்துகளில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்தில் கேசவ் ஒரு ரன் எடுத்தார். 5-வது பந்தை பாண்டியா வைடாக வீசினார். 2பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் ரபாடா தூக்கி அடித்த ஷாட்டை சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தார். ரபாடா 4 ரன்னில் வெளியேறினார். கடைசி ஒரு பந்தில் நோர்க்கியா ஒரு ரன் எடுக்கவே தோல்வி தென் ஆப்ரிக்கா 7 ரன்களில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோலி, அக்ஸர் படேல் அடுத்து விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில் நிதானமாக பேட் செய்தனர் இந்திய அணியின் தடுமாற்றம் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார், கோலி, ரோஹித் ஆட்டத்தைத் தொடங்கினர். பவர்பளே ஓவரிலேயே கேசவ் மகராஜ் ஓவரில் ரோஹித் (9),ரிஷப்பந்த் (0) ஆட்டமிழந்தனர். ரபாடா வீசிய 5-வது ஓவரில் சூர்யகுமார் (3) ஆட்டமிழக்கவே இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து அக்ஸர் படேல் களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்தது. கோலி, அக்ஸர் படேல் அடுத்து விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில் நிதானமாக பேட் செய்தனர். விராட் கோலி நிதானமாக பேட் செய்த 4வது ஓவரில் கடைசியாக பவுண்டரி அடித்தார். அதன்பின் 6 ஓவர்களாக ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் சேர்த்தது. இருவரும் மெதுவாக பேட் செய்ததால் ரன்ரேட் வேகம் குறையத் தொடங்கியது. சம்ஷி வீசிய 12வது ஓவரில் அக்ஸர் படேல் சிக்ஸர் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். ரபாடா வீசிய 13-வது ஓவரில் ஸ்ட்ரைட்டில் ஒரு சிக்ஸரை அக்ஸர் படேல் விளாசியதையடுத்து, இந்திய அணி 100ரன்களை எட்டியது. அதே ஓவரில் அக்ஸர் படேல் 47 ரன்னில் ரன் அவுட் ஆகினார். 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அருமையாக ஆடிய அஸ்கர் 3 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். 4வது விக்கெட்டுக்கு கோலி, அக்ஸர் கூட்டணி 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 5வது விக்கெட்டுக்கு ஷிவம் துபே களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். விராட் கோலி 48 பந்துகளில் இந்த உலகக் கோப்பையில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இந்த உலகக் கோப்பை முழுவதும் ஃபார்மின்றி தவித்து வந்த கோலி முதல் அரைசதத்தை 48 பந்துகளில் பதிவு செய்தார், இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். கோலி அரைசதம் அடித்தது சிறப்பானது, தேவையான நேரத்தில் அடிக்கப்பட்டது. 18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 150 ரன்களை எட்டியது. 13.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியநிலையில் அடுத்த 5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது இந்திய அணி. யான்சென் 19-வது ஓவரை வீசினார். 5வது பந்தில் கோலி ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து 59 பந்துகளில் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 128 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். 5வது விக்கெட்டுக்கு துபே-கோலி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். அடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். தென் ஆப்ரிக்கத் தரப்பில் நோர்க்கியா 2 விக்கெட்டுகளையும், கேசவ் மகராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். https://www.bbc.com/tamil/articles/c047n0xl891o
  3. India (19.6/20 ov) 176/7 South Africa India chose to bat.Stats view Current RR: 8.80 • Last 5 ov (RR): 58/3 (11.60)
  4. India (13.3/20 ov) 106/4 South Africa India chose to bat. Current RR: 7.85 • Last 5 ov (RR): 45/1 (9.00) Live Forecast:IND 172 பட்டேல் அவுட்.
  5. வலது இடது கைத்துடுப்பாட்டக்காறர்களால் வைற் போடுறாங்கள்!
  6. முக்காடு எதுவும் வேண்டாமண்ணை! கை விரல்களைத் தான் கட்டவேணும்!!
  7. அக்சர் பட்டேல் & கோலி நிலைத்து நின்று ஆடுகிறார்கள். மொத்த ஓட்டம் அதிகரிக்கப்போகிறது. தெ.ஆபிரிக்கா சிரமப்படப்போகிறது.. DRINKS Final, Bridgetown, June 29, 2024, ICC Men's T20 World Cup India (10/20 ov) 75/3 South Africa India chose to bat. Current RR: 7.50 • Last 5 ov (RR): 36/0 (7.20) Live Forecast:IND 171
  8. என்னத்தை அண்ணை? மச் முடியும் மட்டும் பாயைப் போட்டு படுக்கவேண்டியது தான்!
  9. 150-160 ஓட்டங்கள் எடுத்தால் போட்டி சுவாரசியமாக இருக்கும்.
  10. இந்தமுறை கோலி தப்பிடுவார், மிச்ச பேருக்குத்தான் சனம் திட்டப்போது. என்றாலும் இந்திய மத்தியவரிசைத் துடுப்பாட்டக்காறர்களை குறைத்து மதிப்பிடமுடியாது.
  11. பையா என்ன சோதனை இது?! 3 பேர் ஆட்டமிழந்துவிட்டார்கள்!
  12. India (4.3/20 ov) 34/3 South Africa India chose to bat.Stats view Current RR: 7.55 Live Forecast:IND 158
  13. 2 விக்கெட் விழுந்ததால் ஓட்டம் எடுப்பது கட்டுப்படுத்தப்படும்.
  14. LIVE Final, Bridgetown, June 29, 2024, ICC Men's T20 World Cup India (1.6/20 ov) 23/2 South Africa India chose to bat. Current RR: 12.54 Live Forecast:IND 173
  15. ரொனோல்டோவின் போர்த்துகலுக்கு அதிர்ச்சியளித்த ஜோர்ஜியா நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது Published By: DIGITAL DESK 7 28 JUN, 2024 | 03:33 PM (ஆர்.சேதுராமன்) யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டியொன்றில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துகல் அணியை ஜோர்ஜியா 2:0 கோல்கள் விகிதத்தில் வென்று அதிர்ச்சியளித்தது. இவ்வெற்றி மூலம் நொக்அவுட் சுற்றுக்கும் போர்த்துகல் முன்னேறியது. ஜேர்மனியில் நடைபெறும் யூரோ 2024 கிண்ண சுற்றுப்போட்டியின் மிகப் பெரிய தலைகீழ் பெறுபேறாக இது கருதப்படுகிறது. நேற்று முன்தினம் புதன்கிழமை (26) நடைபெற்ற, குழு எவ் அணிகளுக்கு இடையலான இப்போட்டியின் 2 ஆவது நிமிடத்தில் ஜோர்ஜியா முதல் கோலை புகுத்தியது. க்விச்சா க்வாரட்ஸ்க்கேலியா முதல் கோலை புகுத்தினார். 54 ஆவது நிமிடத்தில் ஜோர்ஜஸ் மிகுவாடாட்ஸ் ஜோர்ஜியாவின் இரண்டாவது கோலை புகுத்தினார். இதனால் இப் போட்டியில் 2:0 கோல் விகித்ததில் ஜோர்ஜியா வென்றது. ரொனால்டோவுக்கு மஞ்சள் அட்டை இப்போட்டியின் 28 ஆவது நிமிடத்தில் பெனல்ட்டி வாய்ப்பை மத்தியஸ்தருக்கு எதிர்ப்பு வெளிப்படுத்திய கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த ஜோர்ஜியா, யூரோ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவது இதுவே முதல் தடவை. அந்நாடு பங்குபற்றும் முதலாவது முக்கிய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியும் இதுவாகும். சர்வதேச கால்பந்தாட்டத் தரவரிசையில் போர்த்துகல் 6 ஆவது இடத்தில் உள்ளது. ஜோர்ஜியா 74 ஆவது இடத்தில் உள்ளது. யூரோ 2024 போட்டிகளில் பங்குபற்றும் அணிகளில் தரவரிசையில் கடைசி இடத்திலுள்ள அணி ஜோர்ஜியா ஆகும். இச்சுற்றுப்போட்டியில் போர்த்துகல் அணியை மாத்திரமே ஜோர்ஜியா வென்றது. துருக்கியிடம் 3:1 விகிதத்தில் தோல்வியுற்ற ஜோர்ஜியா, செக் குடியரசுடனான போட்டியை 1:1 விகித்தில் சமநிலையில் முடித்துக் கொண்டது. இதன் மூலம், போர்த்துகல், துருக்கி அணிகளுடன் 16 அணிகளின் சுற்றுக்கு ஜோர்ஜியா தகுதி பெற்றது. 16 அணிகளின் சுற்று நாளை சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. ஜோர்ஜியா அணி நாளை மறுதினம் ஸ்பெய்னுடன் மோதவுள்ளது. https://www.virakesari.lk/article/187179
  16. தளபதி விஜய் பங்கு பற்றிய 'கல்வி விருது வழங்கும் விழா' ! 29 JUN, 2024 | 03:37 PM நடிகரும், தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியின் தலைவருமான தளபதி விஜய், தமிழகத்தில் நடைபெற்ற 'ஓ' லெவல் மற்றும் 'ஏ' லெவல் தேர்வுகளில் அதிக பெறுபேறு பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு விருதும், பரிசும் கொடுத்து ஊக்கப்படுத்தினார். நடிகர் விஜய்- தன்னுடைய ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அதனூடாக தமிழகத்தில் உள்ள மக்களுக்கு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தை தற்போது தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் இயக்கமாக மாற்றி இருக்கிறார். இந்த அரசியல் கட்சியின் சார்பில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டிலும் தமிழகத்தில் 'ஓ' லெவல் மற்றும் 'ஏ' லெவல் தேர்வுகளில் அதிக பெறுபேறு பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு அவர்களுடைய பெற்றோர்களுடன் பங்கு பற்றும் வகையில் கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தினார். இந்த விழா சென்னையில் நடைபெற்றதுடன் இதன் போது தமிழகத்தில் உள்ள இருபதிற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் அவர்களுடைய பெற்றோர்களுடன் வருகை தந்தனர். அவர்களுக்கு விஜய் சால்வை அணிவித்து, சான்றிதழையும், ஊக்கத் தொகையும் வழங்கினார். தேர்வுகளில் முதலிடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு வைர தோடு, வைர மோதிரம் ஆகியவற்றை பரிசாக அளித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வினை தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளராக புஸ்ஸி. என். ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் தளபதி விஜய் பேசிய சில விடயங்கள் ''அனைத்து துறைகளுமே நல்லவை தான். அதில் மாணவச் செல்வங்களாகிய உங்களுக்கு எந்தத் துறை பிடித்திருக்கிறதோ... அதில் கடுமையாக உழைத்து முன்னேறுங்கள். உங்களுக்கு பிடித்த துறையை பற்றியும், அதில் உள்ள தெரிவுகளை பற்றியும் .. உங்களின் ஆசிரியர்களிடத்திலும், உங்களின் பெற்றோர்களிடத்திலும், நண்பர்களிடத்திலும் கலந்து ஆலோசித்து நல்லதொரு முடிவை மேற்கொள்ளுங்கள். மேலும் நமக்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை. தலைவர்கள் என்றதும் அரசியலை பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. நீங்கள் எந்த துறையில் ஈடுபட்டு இருக்கிறீர்களோ..! அந்த துறையில் தலைமை இடத்திற்கு வர வேண்டும். அதைத்தான் நான் குறிப்பிடுகிறேன். அதே தருணத்தில் நன்கு படித்தவர்களும் கூட அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறேன். '' என்றார். https://www.virakesari.lk/article/187254
  17. 28 JUN, 2024 | 02:17 PM இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கென் தெரிவித்துள்ளார். சமீபகாலாமாக இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான மதமாற்றத் தடைச் சட்டம், வெறுப்புப் பேச்சு, அவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கென் தெரிவித்துள்ளார். சர்வதேச மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆண்டறிக்கையை வெளியிட்டுப் பேசிய ப்ளிங்கென் தெரிவித்ததாவது.. ” இந்தியாவில், சிறுபான்மையினரின் மதச் சுதந்திரம் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், உலகெங்கிலும் மக்கள் மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர். இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் சில மாநிலங்களில் திருமணத்திற்காக மதமாற்றம் செய்வதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் இந்தியாவில் உள்ள மதச் சுதந்திரக் குறைபாடுகள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு, வன்முறைகளில் இருந்து சிறுபான்மையினரைப் பாதுகாப்பது, சிறுபான்மையினருக்கு எதிராகக் குற்றங்களை விசாரிப்பது, சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது குறித்த விஷயங்களில் சில சிறுபான்மைக் குழுக்கள் நமது அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். மதங்களுக்குத் தனி சட்டம் இருப்பதை மாற்றி பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர பிரதமர் மோடியின் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இஸ்லாம், சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் பழங்குடியின மக்களும், சில மாநில அரசுகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவை ஹிந்து ராஷ்டிராவாக மாற்றுவதற்கான முயற்சியாக இதனை அவர்கள் மேற்கொள்கின்றனர் “ என வெளியுறவுத்துறை ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அறிக்கையை வரவேற்றுள்ள இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் இந்தியாவின் மதச் சுதந்திர நிலைமையைக் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது. https://www.virakesari.lk/article/187174
  18. 29 JUN, 2024 | 03:07 PM வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய (JICA) தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றபோதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையத்தின் தொண்டர்களை வரவழைத்து முன்னெடுக்கவுள்ள திட்டங்களை ஆளுநருக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.பிரணவநாதன் கூட்டத்தில் கலந்துக்கொண்டார். பாரிய அழிவிலிருந்து ஜப்பான் மீண்டெழுந்து வர காரணமாகிய அறிவு, வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். தொழில்நுட்ப அறிவு , திறன் அபிவிருத்தி, மனிதவள முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். விவசாயம், கல்வி, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, நிதி முகாமைத்துவம், ஊட்டச்சத்து திட்டங்கள், விசேட தேவையுடையோருக்கான கல்வி உள்ளிட்ட விடயங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் குறிப்பிட்டார். இவ்வாறன திட்டங்களை செயற்படுத்துவதற்கு தமது அமைப்பு தயாராக உள்ளதென தெரிவித்த JICA அமைப்பின் பிரதிநிதிகள், அவற்றிற்கு ஆளுநரின் பூரணமான ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுவதாக தெரிவித்ததுடன் திண்ம கழிவு முகாமைத்துவம், பிளாஸ்டிக் அற்ற சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதற்காக ஜப்பான் நாட்டிலிருந்து துறைசார் அனுபவமிக்க தொண்டர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் இலங்கைக்கு வரவழைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/187253
  19. 29 JUN, 2024 | 01:14 PM எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில் தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின்பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில்இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 2005ம் ஆண்டு ஒருதலைமைத்துவத்திற்கு கீழ் செயற்பட்டு அன்று உலகத்திற்கு ஒரு செய்தி சொல்லப்பட்டது. சில நாடுகள் அந்த செய்தியை ஜனநாயகத்தை பயன்படுத்த தவறியதாகவும் குற்றம் சுமர்த்துகின்றன. யுத்தம் முடிந்தவுடன் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்து அவர் தோல்வி அடைந்தார். அதற்கு பிறகு எங்களுக்காக அவர் எதனையும் இதுவரை கதைக்கவில்லை. மைத்திரி, மஹிந்த தேர்தலில் போட்டியிட்ட போது இரண்டும் எதிரி, அதில் யாருக்கு ஆதரவளிப்பது என தீர்மானித்து மைத்திரிக்கு ஆதரவளித்தோம். அதிலும் தோற்றோம் அடுத்து சஜீத்துக்கு ஆதரவு அளித்தோம் அங்கும் இராஜதந்திரம் தோல்வியடைந்தது. நாட்டில் அரகலய போராட்டத்தைத் தொடர்ந்து டலஸ், ரணில் போட்டியிட்டபோது டலஸ்க்கு ஆதரவு அளித்தோம் அங்கும் தோல்வியடைந்தோம். மக்களிடத்தில் அபிவிருத்தி தேவையுள்ளது. மேடையில் அதைப்பற்றி நாங்கள் கதைக்கவில்லை. உரிமைக்காகவே மக்கள் என்றும் வாக்களிக்கின்றனர்.எங்கள் சுகபோகத்திற்காக இல்லை. 15வருட வரலாற்றில் அநுர,சஜித், ரணில் பேசிய வரலாறு இல்லை. ஆனால் இப்பொழுது பேசுகிறார்கள் அவர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் நாங்கள் ஏன் பொது வேட்பாளரை இறக்கக்கூடாது.13ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஜெய் சங்கருடன் கதைத்தோம். இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்தித்த சஜித் 13ஐ தருவதாக சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது தமிழில் கேட்டார் பொலிஸ் அதிகாரமும் இருக்கின்றதா என்று, சஜீத் இங்கே இப்படி சொல்ல மரிக்கார் கொழும்பில் இவ்வாறு சொல்லவில்லை என்கிறார். தமிழ் நாட்டில் பொலிஸ், நிதி அதிகாரங்கள் இருக்கு எமக்கு இல்லை. வடக்கு மாகாண சபை முறைமை தான் 13. இதில் மாகாணத்தில் தமிழ் பேசும் அதிகாரிகள் இல்லை. பொது வேட்பாளரை களமிறக்கும் போது வேட்பாளர்கள் இறங்கி வருவார்கள். 13ஐ விட மேலதிகமாக ஒன்றை தருகின்றோம் என்று சொன்னால் அதைப்பற்றி யோசிப்போம் ஏற்கனவே உள்ள 13 ஐ தருவோம் என்று சொல்கிறார்கள். 34வருடமாக பொலீஸ் அதிகாரம் இல்லை காணி அதிகாரம் இல்லை மத்திய அரசாங்கம் காணிகளை பிடிக்கிறது. சிவாஜிலிங்கம் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியபோது அவரை ஒருவரும் கணக்கில் எடுக்கவில்லை. குமார் பொன்னம்பலம் ஒரு இலட்சத்திற்கு மேல் கிடைத்தது. சிங்கள மக்கள் கூட வாக்களிக்கவுள்ளனர். எனவே, வரலாறு தந்திருக்கிற சந்தர்ப்பத்தை தவறாது இறுக்கியாக பிடித்து இந்த மண்ணில் நாம் யார் என்பதை காட்டலாம் ரணிலுக்கு மஹிந்த ஆதரவு, சஜித் இறங்கி போனால் அநுரவை நம்ப தயாரில்லை எமக்குரிய கருவி தமிழ் பொதுவேட்பாளர். தேர்தல் விஞ்ஞானபத்தில் எமக்கான தீர்வை வெளியிட்டால் சிங்கள மக்களிடத்தில் செல்வாக்கு இல்லை என்றால் இந்திய, அமெரிக்க,பிரித்தானியா தூதுவருக்கு முன்பாக மறைமுகமாக தீர்வை எழுதித் தாருங்கள் எனவும் சிறிதரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/187249
  20. Published By: DIGITAL DESK 3 29 JUN, 2024 | 02:04 PM நாட்டுக்கு வருகை தந்த இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் திருகோணமலையில் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டுக்கு அமைய திருகோணமலை உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 22ஆம் திகதி நாட்டுக்கு வருகை தந்த 25 வயதுடைய டேமர் எமிடாய் (Tamar Amitai) என்ற இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணியே திருகோணமலைக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார். அவர் இணையவழி ஊடாக திருகோணமலையிலுள்ள ஹோட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய்து, 22ஆம் திகதி அங்கு சென்று தங்கியுள்ளார். இந்நிலையில், அவர் 26ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து, ஹோட்டலின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். காணாமல் போன சுற்றுலாப் பயணி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் உப்புவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணி தொடர்பில் தகவல் அறிந்தோர் +972508899698 என்ற வட்ஸ் அப் இலக்கத்திற்கு அல்லது sar@magnus.co.il மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிக்க முடியுமென மேக்னஸ் என்ற சர்வதேச தேடல் மற்றும் மீட்பு அமைப்பு சமூக ஊடகங்களில் பதிவொன்றை பகிர்ந்து கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/187251
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக கண்ணாடி விரியன் பாம்புகள் குறித்த அச்சம் அதிகளவில் பரவி வருகிறது. அந்நாட்டின் பல்வேறு இடங்களில், கண்ணாடி விரியன் எனத் தவறாகக் கருதி, வேறு வகையான பாம்புகள் பல அடித்துக் கொல்லப்படுகின்றன. இதுகுறித்துப் பல்வேறு வதந்திகளும் பரவி வருகின்றன. வங்கதேசத்தில் காணப்படும் பாம்புகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை நஞ்சற்றவை என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், சமீப நாட்களில் மக்கள் நஞ்சுள்ள கண்ணாடி விரியனுக்கு பயந்து கொல்லும் பாம்புகளில் பெரும்பாலானவை நஞ்சற்றவை மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பெரும் பங்காற்றக்கூடியவை. பல்லுயிர்ப் பெருக்கத்தில் பாம்புகள் முக்கியப் பங்கு வகிப்பதாக உயிரியலாளர்கள் கூறுகின்றனர். பாம்புகளும், மற்ற உயிரினங்களைப் போலவே, சூழலியல் சமநிலையைப் பராமரிக்க மிகவும் முக்கியம். இப்போது மக்கள் சூழலியல் குறித்த சிந்தனையின்றி பாம்புகளைக் கொல்லும் விதம் சுற்றுச்சூழலில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். திடீரென பெருகிய கண்ணாடி விரியன் பாம்புகள் கடந்த சில வாரங்களாக வங்கதேச ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட பிரச்னைகளில் கண்ணாடி விரியன் பாம்பும் ஒன்று. இந்த வகைப் பாம்பு வங்கதேசத்தில் சந்திரபோடா அல்லது உலுபோடா என்று அழைக்கப்படுகிறது. வங்கதேசத்தில் இந்தப் பாம்பு ஒருகாலத்தில் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், சுமார் 10-12 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அதன் கடியால் மீண்டும் இறக்கத் தொடங்கினர். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இந்தப் பாம்பு நாட்டில் அதிகம் காணப்படுவதாக ஊர்வன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டில், நாட்டின் வடமேற்கில் சில பகுதிகளில், குறிப்பாக பத்மா ஆற்றின் சில மாவட்டங்களில் கண்ணாடி விரியன் கடித்ததால் இருவர் உயிரிழந்தனர், பலர் நோய்வாய்ப்பட்டனர். அப்போது இந்தச் சம்பவம் பெரும் செய்தியாக வெளியானது. கடந்த 3 மாதங்களில் மாணிக்கஞ்ச் பகுதியில் பாம்பு கடித்து 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். தற்போது நெல் அறுவடைக் காலம். பயிர்கள் நிறைந்த வயல்களில் பாம்புகள் அதிகம் வாழ்வது இயற்கையில் அதிகம் அவதானிக்கப்பட்ட ஒன்று. “கண்ணாடி விரியன் பாம்புகள் பத்மா படுகையில் உள்ள மாணிக்கஞ்ச் கடற்கரைப் பகுதியில் பரவியுள்ளன,” என்று சிட்டகாங் பல்கலைக் கழகத்தில் விலங்கியல் துறை பேராசிரியர் ஃபரித் அஹ்சன் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES மறுபுறம், இந்த வாரம் ராஜ்ஷாஹியில் பாம்புக்கடியால் ராஜ்ஷாஹி பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நெல் அறுவடை சீசனில் கண்ணாடி விரியனால் தாக்கப்படுவதை எண்ணி விவசாயிகள் மத்தியில் அதிகபட்ச பீதி அடைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ராஜ்ஷாஹி நகரத்திற்கு உட்பட்ட சார்காட் நகராட்சியில் உள்ள சாரதா பகுதியில் பத்மா நதிக்கரையில் அமைந்துள்ள போலீஸ் அகாடமி வளாகத்தில் 8 கண்ணாடி விரியன் குட்டிகள் மீட்கப்பட்டன. ஆனால், காவல்துறையினரே அவற்றை அடித்துக் கொன்றதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. ஃபரித்பூரை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் கண்ணாடி விரியன்களைக் கொல்பவர்களுக்கு ஒரு பாம்புக்கு 50,000 டாக்கா (35,500 ரூபாய்) பரிசு வழங்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்தார். இருப்பினும், அவர் தனது அறிவிப்பை ஞாயிறு அன்று திரும்பப் பெற்றார். கண்ணாடி விரியன்கள் மீது கொண்ட அச்சத்தால், கட்டுவரியன், மலைப்பாம்பு, பேண்டட் கிரைட் என்றழைக்கப்படும் கட்டுவரியன் வகையைச் சேர்ந்த மற்றொரு பாம்பு வகை, சாரைப் பாம்பு, நீர்க்கோலி போன்ற வேறு பல பாம்புகளும் கொல்லப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவற்றில் கட்டு வரியன் போன்ற பாம்புகள் கண்ணாடி வரியன்களை விழுங்கி இயற்கையின் சமநிலையைப் பேணுவதாகவும் அப்படிப்பட்ட பயனுள்ள பாம்புகள் மக்களின் அச்சத்திற்குப் பலியாவதாகவும் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES கண்ணாடி விரியன் பாம்புகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் பெருமளவிலான எதிர்மறை பதிவுகளால், இயற்கையின் நண்பர்களாகக் கருதப்படும் பல்வேறு வகையான நஞ்சற்ற பாம்புகளை, அவை குறித்து எதுவுமறியாத மக்கள் பீதியடைந்து கொன்று வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வங்கதேசத்தின் இப்போதைய சூழலில் மக்கள் எந்தப் பாம்பைக் கண்டாலும் கொன்றுவிடுகிறார்கள். சைன்தலைமை வனப் பாதுகாவலர் முகமது அமீர் ஹுசைன் சௌத்ரி பிபிசி பங்களாவிடம் கூறுகையில், “கண்ணாடி விரியன் ஓர் ஆக்ரோஷமான பாம்பு அல்ல. அது காயமடைந்தால் மட்டுமே திருப்பித் தாக்கும். மக்கள் பாம்பைக் கண்டவுடன் கொல்ல வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று கூறினார். வங்கதேச மருத்துவ சேவையின் தரவுகள்படி, நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7,500 பேர் பாம்புக் கடியால் இறக்கின்றனர். இவர்களில் தோராயமாக 120 பேர் கண்ணாடி விரியன் கடியால் இறக்கின்றனர். பயிர்கள் விளையும் பகுதிகளில் பாம்புகள் அதிகம் இருப்பதாகவும் அவற்றைக் கொல்வதைத் தடுக்கவும் விவசாயிகளுக்கு அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தலைமை வனப்பாதுகாவலர் ஹுசைன் தெரிவித்தார். மேலும், மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து சமூக ஊடகங்களில் எதிர்மறையான விளம்பரம் குறைவதாகவும் இந்த மோசமான நிலைமை இன்னும் சில நாட்களில் கணிசமாகக் குறையும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். பாம்புகள் சுற்றுச்சூழலுக்கு எப்படி நன்மை பயக்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES பாம்புகள் சுற்றுச்சூழலின் முக்கியமானதோர் அங்கம் எனவும் பல்லுயிர்ப் பாதுகாப்பில் பாம்புகளின் பங்கு மிக முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வங்கதேசத்தில் முகமது அபு சயீத், முகமது ஃபரித் அஹ்சன் ஆகியோர் இணைந்து எழுதிய ‘பாம்புகள், பாம்புக்கடி தடுப்பு மற்றும் சிகிச்சை’ என்ற நூலில், பாம்புகள் மிகுந்த சோம்பேறிகள் எனவும் அவை அப்பாவி உயிரினங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் பாம்புகள் மனிதர்களைக் கண்டு அஞ்சுகின்றன. மனிதர்களைக் கண்டவுடனேயே உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓட வேண்டும் என்பதே அவற்றின் முதல் எண்ணமாக இருக்கும். ஆனால், அவை மீது தாக்குதல் நடந்தால், தற்காப்புக்காக மனிதர்களைக் கடிக்கின்றன. இந்த நூலை எழுதியவரும், சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியருமான முகமது ஃபரித் அஹ்சன் பிபிசி பங்களாவிடம் பேசியபோது, பாம்புகள் சுற்றுச்சூழலில் வேட்டையாடி, இரை என இரண்டாகவும் செயல்படுகின்றன என்றார். “அவை மற்ற உயிரினங்களை உண்பதன் மூலமும், மற்ற உயிரினங்களுக்கு உணவாக இருப்பதன் மூலமும் சூழலியலின் சமநிலையைப் பேணுவதில் பெரும் பங்காற்றுகின்றன.” இந்த சுழற்சியில், எலி போன்ற உயிரினங்கள் எண்ணிக்கையில் பெருகிவிடாமல் தடுப்பதில் பாம்புகளின் பங்கு முக்கியமானது. அவற்றை உண்பதன் மூலம் பாம்புகள் சூழலியல் சமநிலையைப் பேணுவதாக உயிரியலாளர்கள் கூறுகின்றனர். “இந்தப் பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடி விரியன்கள் இருந்தன. சூழலியலில் ஏற்பட்ட மாற்றங்களால், அவற்றின் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த வகைப் பாம்புகளை அதிகம் வேட்டையாடும் உடும்பு, கழுகு, பருந்து, போன்ற உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவே கண்ணாடி விரியன்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மிக முக்கியக் காராணம்.” கண்ணாடி விரியன்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக, வங்கதேசத்தின் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறார் அஹ்சன். “இந்தப் பாம்புகளை உண்ணும் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்ததே இவற்றின் எண்ணிக்கைப் பெருக்கத்திற்குக் காரணம்,” என்கிறார் அவர். பாம்புகளைக் கொல்வது சுற்றுச்சூழலுக்கு ஏன் ஆபத்தானது? பட மூலாதாரம்,GETTY IMAGES இயற்கையின் ஓர் அங்கமான பாம்புகளைக் கொல்வது ஒட்டுமொத்த சூழலியல் அமைப்பிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். விளைநிலங்களில் பாம்புகளைக் கொன்றால் எலிகளின் தொல்லை அதிகரிக்கும். எலிகள் பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் 10 முதல் 20 சதவீத பயிர்களை அழித்துவிடும். பாம்புகளைச் சிறிதும் யோசிக்காமல் கொன்றால் எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், பயிர்களின் உற்பத்தி குறையும். தலைமை வனப் பாதுகாவலர் ஹுசைன் கூறும்போது, “எலி, தவளை போன்ற உயிரினங்களை பாம்புகள் உண்ணுகின்றன. வயல்களில் பாம்புகள் எலிகளைச் சாப்பிடுகின்றன. எலிகளை உண்பதன் மூலம் பயிர்களைப் பாதுகாத்து, விவசாயிகளுக்கு நன்மை செய்கின்றன. கழுகு, பருந்து, காட்டுப்பூனைகள் போன்ற உயிரினங்கள் பாம்புகளை வேட்டையாடுகின்றன. மறுபுறம், நாகம், கட்டுவரியன் போன்ற பாம்புகள் கண்ணாடி விரியன் உள்ளிட்ட பிற வகைப் பாம்புகளைச் சாப்பிடுகின்றன.” பட மூலாதாரம்,PRITOM SUR ROY “இந்தச் சுழற்சியில் மனிதர்கள் இடையூறு செய்தால், எதிர்காலத்தில் எலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, பயிர்களை நாசம் செய்துவிடும். இதனால், உற்பத்தி குறைந்து, உணவு சுழற்சியில் பாதகமான பாதிப்புகள் ஏற்படும்,” என்று விளக்கினார். பாம்புகள் இப்படியே தொடர்ந்து கொல்லப்படுமானால், எதிர்காலத்தில் இத்தகைய மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் ஹுசைன் எச்சரிக்கிறார். டாக்கா பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியரான எம்.டி.அமினுல் இஸ்லாம் புய்யான், “வங்கதேசத்தில் பாம்புகள் மீதான எதிர்மறையான அணுகுமுறையால், அவை எந்தச் சிந்தனையும் இல்லாமல் கொல்லப்படுகின்றன. ஆனால், சுற்றுச்சூழலுக்கு அவை செய்யும் நன்மையை வேறு எந்த உயிரினத்தாலும் செய்ய முடியாது,” என்கிறார். பிபிசி பங்களாவிடம் அவர் பேசியபோது, “சுற்றுச்சூழலில் பாம்புகளின் பங்கை வேறு எந்த உயிரினத்தாலும் ஈடுசெய்ய முடியாது. ஒவ்வோர் உயிரினத்தின் வாழ்க்கை சுழற்சியில் ஏற்படும் இடையூறும் மற்றொன்றைப் பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், பாம்புகள் இல்லாமல் போனால், முழு உணவுச் சங்கிலியும் பாதிக்கப்படும்,” என்றார். வங்கதேச காட்டுயிர் சட்டம் 2012இன் படி, கண்ணாடி விரியன் பாம்பு பாதுகாக்கப்பட்ட உயிரினமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, கண்ணாடி விரியன் பாம்பைக் கொல்வது, பிடிப்பது, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றம். இதனிடையே, சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் பாம்புகளைக் கொல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cz47377z8x2o
  22. இல்லை அண்ணை, இந்தச் செய்தியின் பின்னர் தான் மாலைதீவிற்கு கிளம்புவதாக கதைச்சவை!!
  23. Published By: RAJEEBAN 29 JUN, 2024 | 12:54 PM ஈரானில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரு பிரதான வேட்பாளர்களிற்கு இடையில் கடும் போட்டி நிலவுவது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. எட்டு மில்லியனிற்கு மேற்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் கடும்போக்காளர் சயீட் ஜலீலிக்கும் மிதவாத வேட்பாளர் மசூட் பெசெக்கியானிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது - இருவரும் சுமார் 40 வீத வாக்குகளை பெற்றுள்ளனர். இரண்டு வாக்காளர்களும் 50 வீத வாக்குகளை பெறவிட்டால் வெள்ளிக்கிழமை இரண்டாம் சுற்று தேர்தல் இடம்பெறும். மே 19ம் திகதி முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து ஈரானில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/187245
  24. சீன ஜனாதிபதியை சந்தித்தார் மஹிந்த Published By: DIGITAL DESK 3 29 JUN, 2024 | 12:08 PM சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடினார். சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இடம்பெற்ற அமைதியான சகவாழ்வுக்கான 5 கோட்பாடுகளின் 70 ஆவது ஆண்டுவிழாவின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/187241

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.