ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: தரம் 6 இற்கு விண்ணப்பங்களை இன்று முதல் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம்
Everything posted by ஏராளன்
-
நீட் பயிற்சிக்கு பணம் இல்லாததால், மருத்துவ கனவுகளை கைவிடும் கிராமப்புற மாணவர்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் நீட் பயிற்சி நிறுவனங்களில் சேர பணம் இல்லாததால் இந்த ஆண்டு தங்களின் மருத்துவ கனவுகள் பறிபோகியுள்ளன என்கிறார்கள் தமிழ்நாட்டின் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்கள். நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறும் பெரும்பாலான மாணவர்கள் தேர்வுக்கான பிரத்யேகப் பயிற்சிப் பெற்றுள்ளனர் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் இந்தப் பயிற்சியில் சேர்ந்து படிக்க ஓராண்டுக்கு ரூ. 2 லட்சம் முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுகிறது. 12ஆம் வகுப்பு படித்த பிறகு ஓராண்டு பயிற்சிக்காக செலவு செய்யவும் வேண்டும். இது முடியாததால் பலரும் தங்கள் மருத்துவர் கனவுகளை கைவிட வேண்டியுள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சேலம் கெடவூரை சேர்ந்த 23 வயது சத்ரியன் தற்போது கிராம போஸ்ட் மேனாக வேலை பார்க்கிறார். நீட் தேர்வு இல்லாமல் இருந்திருந்தால் அவர் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டிக் கொண்டு ஒரு அரசு மருத்துவமனையில் பணியாற்றியிருக்கக் கூடும். மருத்துவராக வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தும், நீட் பயிற்சிக்கான பணம் இல்லை என்பதாலேயே அந்த ஆசையை கைவிட நேர்ந்ததாக பிபிசி தமிழிடம் கூறினார். 2018ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த அவர், ஐந்து முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். முதல் முறை நீட் தேர்வு எழுதும் போது, சில தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன், நீட் பயிற்சியில் சேர்ந்தார். அதில் பெற்ற மதிப்பெண்கள் அரசுக் கல்லூரியில் சேர போதுமானதாக இல்லை. பட மூலாதாரம்,ANI “எனக்கு சுயநிதி கல்லூரியில் அரசு கோட்டாவில் பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் பணம் இல்லை. என்னுடன் தேர்வு எழுதிய நண்பருக்கு காசு இருந்ததால், அவர் தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர்ந்துவிட்டார். நான் அதிக மதிப்பெண் பெறுவதற்காக மறுமுறை நீட் தேர்வு எழுதினேன்” என்றார். தொடர்ந்து நீட் பயிற்சி மையத்திற்கு செல்ல காசு இல்லாவிட்டாலும் தானே வீட்டில் படித்து நான்கு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார் சத்ரியன். அவருக்கு இறுதியாக 281 மதிப்பெண்கள் கிடைத்தன. “அதை வைத்து தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தாலும். ஆனால் ஓராண்டு சுமார் ரூ.5 லட்சம் செலவாகும் என்பதால் சேரவில்லை” எனும் சத்ரியன் தற்போது பாரதி தாசன் பல்கலைகழகத்தில், இரண்டாம் ஆண்டு விலங்கியல் தொலைதூர கல்வி மூலம் படித்து வருகிறார். கூலி வேலை செய்து வந்த அவரது தந்தை தற்போது சிறிய பெட்டிக் கடை வைத்துள்ளார். சத்ரியனுக்கு ஒரு தம்பியும் தங்கையும் இருக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு ஆண்டு பயிற்சிக்கு ரூ.2 லட்சம் செலசெலவு அரியலூர் மாவட்டம் நமங்குணத்தை சேர்ந்த ஆர் ஜீவா இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 600க்கு 543 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரது தந்தை கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாவார். “நான் தமிழ் வழியில் படித்தேன். தமிழில் நீட் தேர்வு தயாரிப்பு பாடங்கள் அதிக அளவில் கிடையாது. ஆங்கிலத்தில் புரிந்துக் கொண்டு தேர்வு எழுத ஓராண்டு பயிற்சி தேவை” என்கிறார் ஜீவா. ஜீவாவின் அண்ணன் ஆர் தமிழ்ஒளி பேசுகையில், “நீட் பயிற்சிக்கு திருச்சியில் ரூ.2 லட்சமும், சேலத்தில் ரூ.1.5 லட்சமும் ஆண்டுக்கு வசூலிக்கப்படுகிறது. அதை எங்கள் குடும்பத்தால் புரட்ட முடியாது. உதவியாக தெரிந்தவர்கள் பலரிடமும், சில சமூக அமைப்புகளிடமும் கேட்டோம். ஆனால் கிடைக்கவில்லை” என்றார். தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற கனவு நிறைவேறாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஜீவா. தற்போது சென்னையில் தனியார் கல்லூரியில் பிஎஸ்.சி கணிதவியல் படிப்பில் சேர்ந்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்து உள்ள காட்டூரை சேர்ந்த பத்மினி, இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்து நீட் தேர்வு எழுதியுள்ளார். பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த அவர், தங்கள் ஊரில் அரசுப் பள்ளி இல்லாததால், அருகில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். நீட் தேர்வு எழுதிய முதல் முயற்சியில் 370 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் வழியில் பயின்றுள்ள பத்மினிக்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை பயன்படுத்த முடியவில்லை. மீண்டும் நீட் தேர்வு எழுத ஓராண்டு செலவிட வேண்டும் என்பதால் மருத்துவ கனவை கைவிட்டுவிட்டார். “தென்னந்தோப்பில் கூலி வேலை செய்யும் எனது பெற்றோர்கள் கொஞ்சம் காசு சேர்த்து, ஒரு மாத நீட் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர். அந்த மையத்தில் நானும் எனது தோழி மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்கள். எங்களுக்கு முறையாக சொல்லிக் கொடுக்க பயிற்றுநர்கள் இல்லை. எனவே, ஒரு வாரத்துக்கு மேல் பயிற்சியை தொடர முடியவில்லை” என்றார். பத்மினியின் ஊருக்கு அருகில் பயிற்சி மையம் எதுவும் இல்லாததால், தினமும் நான்கு மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது அவருக்கு. “இனி இந்த தேர்வை எழுத முடியாது என்று முடிவு செய்துவிட்டேன். சொல்லப்போனால் என் வகுப்பில் உள்ள யாருக்குமே மருத்துவராக வேண்டும் என்ற கனவு இல்லை. எங்கள் வகுப்புக்குள் நுழைந்து யாரெல்லாம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கப் போகிறார்கள் என்று ஆசிரியர் கேட்ட போது, ஒருவர் கூட கை தூக்கவில்லை.” என்றார். “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 7.5% இட ஒதுக்கீடு அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவாக்கப்பட வேண்டும்” என்கிறார் அவர். பிபிசி தமிழ் வாட்ஸ் அப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும். நீட் ஏன் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது? பட மூலாதாரம்,JUSTICE AK RAJAN 2021-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஏ கே ராஜன் குழு அறிக்கையில், முதல் முறையாக தேர்வு எழுதுபவர்களுக்கு எதிராக நிலவும் பாரபட்சத்தை எடுத்துக்காட்டியது. நீட் தேர்வு, தேர்வை மீண்டும் எழுதும் மாணவர்களுக்கு (2021-ல் 71%) மற்றும் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு (2020 -ல் 99%) சாதகமாக உள்ளது என்று கூறியது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் போன்ற வளர்ச்சியடையாத மாவட்டங்களில் மருத்துவ இடங்கள் ஒதுக்கீட்டில் 50% குறைப்பு இருப்பதையும், சென்னை போன்ற நகர்ப்புற மையங்களில் அதிகரிப்பதையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. முதல் தலைமுறை பட்டதாரிகள் (9.74%), கிராமப்புற விண்ணப்பதாரர்கள் (12.1%) மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள் மத்தியில் மருத்துவ மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டில், மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் வழி மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட சதவீதம் 14.88%. இது 2021இல் 1.99% ஆக இருந்தது. "நீட் தேர்வு ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட, அதை நான் எனது அறிக்கையில் விளக்கியுள்ளேன். எனது அறிக்கை எப்போதும் நிலைத்து நிற்கும், இப்போது இன்னும் வலுவாக நிற்கிறது" என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் பிபிசியிடம் தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடி, பின் தற்கொலைக்கு தள்ளப்பட்ட மாணவி அனிதாவின் அண்ணன் எஸ்.மணிரத்னம் கூறுகையில், "நீட் தேர்வு அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதில்லை” என்று தெரிவித்தார். “2017ஆம் ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகம் மட்டும்தான் கோரிக்கை வைத்தது. இப்போது தமிழகத்தின் கோரிக்கையை ஒட்டுமொத்த நாடும் கோருகிறது” என்றார். ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை பரிந்துரைகளின் அடிப்படையில், மருத்துவ சேர்க்கையில் மாநில தன்னாட்சி கோரி 'தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மசோதா, 2021' ஐ மாநில அரசு நிறைவேற்றியது. நீட் தேர்வின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான சர்ச்சைகள் தற்போது பல்வேறு மாநிலங்களில் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாடு சட்டமன்றம் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கடந்த வாரம் நிறைவேற்றியுள்ளது. மேலும் ஏ கே ராஜன் குழுவின் அறிக்கையை மற்ற மாநிலங்களுக்கும் புரியும் வகையில் எட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துள்ளது தமிழக அரசு. நீட் தேர்வுக்கு ஏன் பயிற்சி அவசியம்? பட மூலாதாரம்,NEDUNJELIYAN நீட் தேர்வுக்கு பாடம் சம்பந்தப்பட்ட அறிவு மட்டுமல்ல, தேர்வு எழுதும் திறன்களும் அதிகம் வேண்டும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். "இந்த திறன்களை பெரும்பாலும் அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி மையங்கள் மூலம் பெற முடியும். ஏழை கிராமப்புற மாணவர்கள் தங்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கினாலும், பள்ளியிலேயே இந்த பயிற்சியை பெறுவது சாத்தியமில்லை. நீட் தேர்வின் வடிவம் மற்றும் கேள்வி கேட்கும் முறைகள் பற்றி நன்கு அறிந்தவர்களுக்குத்தான் இந்த தேர்வு சாதகமாக இருக்கும். இதுவே நீட் தேர்வின் அடிப்படை குறைபாடு" என்கிறார் மூத்த கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன். “தமிழ்நாட்டில் மொத்தம் 481 நீட் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. ஓராண்டிற்கு ரூ.5750 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் தொழிலாக பயிற்சி மையங்கள் உள்ளன என்ற தகவலை எங்கள் அறிக்கை வெளிக்கொண்டு வந்தது. தற்போது நாடு முழுவதும் 1.5 லட்சம் கோடி மதிப்பிலான தொழிலாக மாறியுள்ளன என்று சில மதிப்பீடுகள் கூறுகின்றன” என்கிறார் ஜவஹர் நேசன். தமிழ் வழி மாணவர்களுக்கான சவால்கள் ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு எழுதலாம், ஆனால் வினாத்தாள்களில் மொழி அமைப்பு மற்றும் மொழிபெயர்ப்பில் உள்ள பிழைகள், தமிழில் பாடப்புத்தகங்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் குறைவாக கிடைப்பது போன்ற காரணங்களால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு பயிற்சி பெறுவது எளிதாக இல்லை. ஆங்கிலம் தவிர பிற மொழியில் படிப்போருக்கு இந்த தேர்வுகள் சிரமம் ஏற்படுத்துகின்றன. நீட் தேர்வுக்காக ஆன்லைன் வழி இலவச தமிழ் தேர்வுகளை நடத்திய 'டெக் ஃபார் ஆல்' அமைப்பைச் சேர்ந்த ராம் பிரகாஷ், தமிழ் மொழியாக்க சொற்கள் மாணவர்களுக்கு சிரமத்தை உருவாக்குவதாக கூறினார். உதாரணமாக “டயா மேக்னடிக் - போன்ற அறிவியல் சொற்கள் தமிழ் பாட நூல்களில் ஆங்கிலத்திலேயே இருக்கும். ஆனால் மாணவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் பார்த்திராத இந்த சொற்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகள் கேள்வித்தாள்களில் வழங்கப்பட்டன” என்றார். 2018 ஆம் ஆண்டில் இலவச ஆன்லைன் தமிழ் வகுப்புகளை அவர்கள் தொடங்கினர். பட மூலாதாரம்,JAWAHAR NESAN 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மருத்துவக் கல்வியில் சேர்ப்பதுதான் சரி என்று கூறுகிறார் கல்வியாளர் ஜவஹர் நேசன். “நீட் தேர்வில் முதலிடம் பிடித்தவர்கள் ஏன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெறுவதில்லை?. எனவே அது தகுதிக்கான அளவுகோல் இல்லை” என்றார் அவர். தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளின் செல்லுபடியாகும் தன்மையை ஆய்வு செய்ய 2006 ஆம் ஆண்டில் ஆனந்தகிருஷ்ணன் குழுவை நியமித்த மாநில அரசின் உறுப்பினர் நெடுஞ்செழியன், "நாங்கள் தரவுகளை சேகரித்து நுழைவுத் தேர்வுகள் பயனுள்ளதாக இல்லை என்ற முடிவுக்கு வந்தோம்” என்று தெரிவித்தார். நுழைவுத் தேர்வு என்ற முறை ஏழை மாணவர்களை கல்வியை நோக்கி ஈர்ப்பதாக இல்லை என்பதையே கல்வியாளர்களும், மாணவர்களும் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c8vdmm6gvl0o
-
பிரான்ஸ் தேர்தல் - மக்ரோனுக்கு மரண அடி.
பிரான்சில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வன்முறை – வர்த்தக நிலையங்கள் வாகனங்கள் தீக்கிரை Published By: RAJEEBAN 01 JUL, 2024 | 08:34 AM பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினர் தலைநகர் பரிசில் கடும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தீவிரஇடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வர்த்தகநிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்என் கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மக்ரோனின் கட்சி முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது என ஆர்என்கட்சியின் மரைன்லெபென் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் மக்கள் வாக்களித்தால் நான்; அனைத்துபிரான்ஸ் மக்களினதும் பிரதமராக தயார் என ஆர்என் கட்சி தலைவர் ஜோர்டன் பர்டெல்லா தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில் தீவிரவலதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளமை அதன் வரலாற்றில் இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187350
-
கைதான 25 இந்திய மீனவர்களையும் விடுவிடுக்குமாறு இந்திய மீனவர்கள் போராட்டம்!
01 JUL, 2024 | 12:03 PM எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 நாட்டுப் படகுகளை கைப்பற்றியதோடு, அவற்றில் இருந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளமையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் திங்கட்கிழமை (1) காலை கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி பாம்பன் வீதியில்உள்ள பாலத்தில் மீனவர்கள் நடத்திய வீதி மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (1) அதிகாலை இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டுப் படகுகளை கைப்பற்றினர். அத்துடன் அப்படகுகளில் நின்று மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இந்நிலையில், பாம்பன் பகுதி நாட்டுப் படகு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தமையை கண்டித்து மீனவர்களின் உறவினர்கள், நாட்டுப் படகு மீனவர்கள் மற்றும் ஏனைய மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பாம்பன் சாலை பாலத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். மீனவர்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ள நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/187368
-
யாழில் விபத்தில் சிக்கிய வைத்தியர் படுகாயம்!
Published By: DIGITAL DESK 7 01 JUL, 2024 | 11:05 AM யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் ஞாயிற்றுக்கிழமை (30) காலை இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் மோதி ஏ-9 வீதியில் விபத்துக்குள்ளாகின. இதன்போது, இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/187356
-
ரி20 உலக சம்பியனானது இந்தியா
ராகுல் டிராவிட்: கேப்டனாகத் தோற்ற அதே மண்ணில் பயிற்சியாளர் ஆகி சாதித்த கதை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 30 ஜூன் 2024, 13:47 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் “மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள ஸ்லோ விக்கெட் எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான எங்களின் தோல்வி நம்பிக்கையை உடைத்தது. முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் அதைத்தான் மிகப்பெரிய வேதனையாக உணர்ந்தேன். ஒருவேளை சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தால், எங்களின் நம்பிக்கை வளர்ந்திருக்கும். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர் எங்களுக்கு அடுத்தவாய்ப்பை வழங்கவில்லை, அடுத்த ஒரு மாதம் தாயகத்துக்கு திரும்பி மற்ற அணிகள் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நேர்மையாகக் கூறினால் என்னால் என்னையே பார்க்க முடியவில்லை.” 2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியபின், ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரத் தொடங்கியது. அந்தத் தொடரில் ஏற்பட்ட காயம் குறித்து டிராவிட் இ.எஸ்.பி.என் தளத்தில் எழுதிய கட்டுரையில் இதைத் தெரிவித்திருந்தார். தலைகுனிவோடு வெளியேறிய இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் அதே மண்ணில், டி20 சாம்பியனாக்கித் தலைநிமிர வைத்துள்ளார் பயிற்சியாளர் 'தி கிரேட் வால்' ராகுல் டிராவிட். ராகுல் டிராவிட் களத்தில் இருந்தாலே, அவரை ஆட்டமிழக்கச் செய்வது கடினம் என்று எதிரணி பந்துவீச்சாளர்கள் புலம்பிய காலம் இருந்தது. இந்திய அணியில் ஒரு வீரராக தனது முழு பங்களிப்பைச் செய்த ராகுல் டிராவிட், இந்திய அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்றபோது அவரால் வெற்றி பெறமுடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES டிராவிட்டின் கேப்டன்சி தோல்வி ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்த 2003 முதல் 2007-ஆம் ஆண்டுவரை எதிர்பார்த்த அளவுக்கு இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்த முடியவில்லை. 25 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகளையும், 79 ஒருநாள் போட்டிகளில் 49 வெற்றிகளையும் மட்டுமே பெற முடிந்தது. அதிலும் 2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே கேப்டன் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி வெளியேறியது. இதன்பின் டிராவிட்டின் கேப்டன்ஷி, அவரின் பேட்டிங் திறமை மீது பி.சி.சி.ஐ நிர்வாகத்துக்கு சந்தேகம் எழுந்தது. அவரைச் சிறிது சிறிதாக ஒரம் கட்டிய பி.சி.சி.ஐ, ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்ற காரணத்தைக் கூறி 2009-ஆம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து டிராவிட்டை நீக்கியது. 'ரோஷக்காரர்' டிராவிட் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் அதன்பின் 2011-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மீண்டும் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் இந்தத் தொடரில் விளையாடும்போதே டிராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதிகாரபூர்வ ஓய்வுக்காக ஒரு தொடரை நடத்துகிறோம் என பி.சி.சி.ஐ நிர்வாகம் தெரிவித்தும் அதை மறுத்துவிட்ட டிராவிட், அந்தத் தொடர் முடிந்த உடனே ஓய்வுபெற்றார். இங்கிலாந்தின் கார்டிப் நகரில் 2011-ஆம் ஆண்டு, செப்டம்பர் 16-ஆம் தேதி நடந்த கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 79 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து டிராவிட் ஆட்டமிழந்தார். அதோடு ஒருநாள் போட்டியிலிருந்து டிராவிட் ஓய்வு பெற்றார். எந்த பி.சி.சி.ஐ நிர்வாகம் டிராவிட்டின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்று குற்றம்சாட்டி அணியிலிருந்து அவரை நீக்கியதோ அதே நிர்வாகம் அவரை மீண்டும் ஒருநாள் தொடருக்கு தேர்ந்தெடுத்தபோது டிராவிட் தொடர்ந்து விளையாட விரும்பாமல் ஓய்வு பெற்றார். 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடருடன் டெஸ்ட் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிராவிட் அறிவித்தார். இந்திய வீரராக வெற்றி டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,899 ரன்களும் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 52 சராசரியும், ஒருநாள் போட்டியில் 39 சராசரியும் வைத்துள்ள டிராவிட், டெஸ்டில் 36 சதங்கள், 63 அரைசதங்களை விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 12 சதங்களும் 83 அரைசதங்களும் அடித்துள்ளார். ஒரு வீரராக பரிணமிக்க, சாதிக்க முடிந்த டிராவிட்டால் கேப்டனாக ஜொலிக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES வரலாற்றுச் சாதனை டிராவிட் கேப்டன்சியில் முதல்முறையாக மேற்கிந்தியத்தீவுகளில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. 1971-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியால் டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத்தீவுகளில் வெல்ல முடியாமல் இருந்தநிலையில் 2006-ஆம் ஆண்டு 1-0 என்ற டெஸ்ட் தொடரை வென்று டிராவிட் தலைமையில் இந்திய அணி வரலாறு படைத்தது. டிராவிட் தலைமையில் ஒருமுறைகூட ஐ.சி.சி சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் கோப்பையை வென்றதில்லை. இந்தத் தொடரிலிருந்து டிராவிட் கிரிக்கெட் வாழ்க்கையின் அஸ்தமனம் தொடங்கியது. இந்திய அணியிலிருந்து படிப்படியாக ஓரம் கட்டப்பட்டு அடுத்த 4 ஆண்டுகளில் கிரிக்கெட்டிலிருந்து முற்றிலுமாக டிராவிட் ஓய்வு பெற்றார். பயிற்சியாளர் அவதாரம் 2015-ஆம் ஆண்டு, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். பயிற்சியாளராக முதல் ஆண்டிலேயே வெற்றி பெற்ற டிராவிட் 2016-ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை இறுதிப்போட்டிவரை கொண்டு சென்றார். அதன்பின் பயிற்சியாளர் பணியை விரும்பிச் செய்த டிராவிட், 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்தார். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டிராவிட்டின் பட்டறை பட மூலாதாரம்,GETTY IMAGES டிராவிட் தனது பயிற்சிப்பட்டறையில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், இஷான் கிஷன், சுப்மான் கில் என ஏராளமான வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு வழங்கும் சிற்பியாக செயல்பட்டார். அதன்பின், 2019-ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமயின் (என்.சி.ஏ) தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். இந்த தேசிய கிரிக்கெட் அகாடெமிதான் இந்திய அணிக்குத் தேவையான வீரர்களை உருவாக்கிக் கொடுக்கும் பட்டறையாகும். வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்துவீச்சாளர், பேட்டர், ஆல்ரவுண்டர் என வகைவகையான வீரர்களை உருவாக்கி, இந்திய அணிக்கு அனுப்பியவர் டிராவிட்தான். இந்திய அணிக்கு வலிமை சேர்த்தவர் இந்திய அணியின் பெஞ்ச் பலம் தொடர்ந்து அதிகரித்து, பலதிறமையான பேட்டர்கள், பந்துவீச்சாளர்ள் உருவாகியகாலம் ராகுல் டிராவிட், என்.சி.ஏ தலைவராக இருந்தபோதுதான். இந்திய அணயின் பெஞ்ச் பலத்தைப் பார்த்து ஒருமுறை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக், “இந்திய அணிக்கு ஏராளமான வீரர்கள் உருவாக்கி ஒருவர் வழங்கி வருகிறார். அதனால்தான் இந்திய அணியின் பெஞ்ச் பலம் அதிகரித்துள்ளது. அவர் வேறுயாருமல்ல ராகுல்திராவிட்தான்,” எனப் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார். என்.சி.ஏ தலைவராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றபின் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது, மேற்பார்வையிடுவது, உடற்தகுதியைக் கண்காணிப்பது, ஊக்கப்படுத்துவது, வழிநடத்துவது, பயிற்சியாளர்களுக்கு ஊக்கமளிப்பது, வழிகாட்டுவது எனப் பல பணிகளைச் சிறப்பாகச் செய்தார். இந்திய சீனியர் அணியின் உடற்தகுதி சர்வதேச அளவில் சிறப்பாக இருக்க என்.சி.ஏ முக்கியக் காரணமாகவும், டிராவிட்டின் நிர்வாகமும் காரணமாக இருந்தது. சீனியர் அணிக்குப் பயிற்சியாளர் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பயிற்சிக் காலம் முடிந்தபின், 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். முதலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து தொடருக்கு முதன்முதலில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றார். டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணி 56 ஒருநாள் போட்டிகளில் 41 ஆட்டங்களில் வென்றது, 69 டி20 போட்டிகளில் 48 போட்டிகளில் வெற்றி பெற்றது. 5 டெஸ்ட் தொடர்களை வென்று, ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது, 2 தொடர்களை இந்திய அணி சமன் செய்தது. குறிப்பாக 2023 ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES இறுதிப்போட்டிகளில் தோல்வி 2023 ஐசிசி உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிவரை இந்திய அணி முன்னேறியது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்தது. இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பி.சி.சி.ஐ டிராவிட்டின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கேட்டுக்கொண்டது. டிராவிட் காலம் பொற்காலம் பட மூலாதாரம்,GETTY IMAGES இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக இந்திய அணிக்குச் செயல்பட்டடிராவிட், இறுதியாக மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் 2வது முறையாக டி20 சாம்பியனாக்கினார், 11 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சார்பில் நடக்கும் போட்டித் தொடரில் கோப்பையை வெல்ல வைத்தார். 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி, 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் தோல்வி ஆகியவற்றை மட்டும் விலக்கிவைத்து டிராவிட்டின் பயிற்சியைப் பார்த்தால் இந்திய அணிக்கு பொற்காலம்தான். ராகுல் டிராவிட் பயிற்சியில்தான் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. விராட் கோலியிடமிருந்து கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவுக்கு மாறியது. ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில் கேப்டன்பதவிக்கு தயார் செய்யப்பட்டனர். பல இளம் வீரர்கள் பரிசோதனை முயற்சியாக உள்நாட்டு தொடர்களில் விளையாட வைக்கப்பட்டு திறமை கண்டறியப்பட்டது. இந்திய அணிக்கு தலைமை ஏற்று, முதல்சுற்றோடு தலைகுணிந்து எந்த மண்ணில் ராகுல் டிராவிட் வெளியேறினாரோ அதை கரீபியன் மண்ணில், இன்று இந்திய அணிக்கு டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்து தலைநிமிரச் செய்துவிட்டார். https://www.bbc.com/tamil/articles/cn09d9rjrldo
-
102ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டிகள்
வட மாகாணத்துக்கு 3ஆவது நேரடி தங்கம் 30 JUN, 2024 | 01:04 PM (யாழ். துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து நெவில் அன்தனி) யாழ். துரையப்பபா விளையாட்டரங்கில் நடைபெற்ற 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் ஓர் அங்கமான ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் வட மாகாணம் மூன்றாவது தொடர்ச்சியான தடவையாக தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. மத்திய மாகாணத்துக்கு எதிராக சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மிக இலகுவான 3 வாய்ப்புகள் உட்பட ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைக் கோட்டை விட்ட வட மாகாணம், 19 வயதான கோல் காப்பாளர் ஆர்ணிகன் 3 பெனல்டிகளைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. போட்டியின் ஆரம்பத்தில் மிகத் திறமையாக விளையாடிய வட மாகாண அணி ஒரு சில கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது. ஆனால், போட்டியின் 15ஆவது நிமிடத்தில் இடதுபுறத்தில் இருந்து பரிமாறப்பட்ட பந்தை கே.ஜீ.ஏல்.டி. (தில்லின) பிரேமச்சந்த்ர கோலினுள் இலாவகமாக புகுத்தி மத்திய மாகாணத்தை முன்னிலையில் இட்டார். அதன் பின்னர், கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்த வட மாகாண அணிக்கு அடுத்தடுத்து 4 கோர்ணர் கிக் வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் கோல் போட முடியாமல் போனது. இடைவேளையின்போது மத்திய மாகாண அணி 1 - 0 என முன்னிலையில் இருந்தது. இடைவேளையின் பின்னர் முழு ஆதிக்கம் செலுத்திய வட மாகாணம் எதிரணியின் கோல் வாயிலுக்கு அருகாமையில் இருந்தவாறு ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது. வின்சென்ட் கீதன், செபமாலை நாயகம் ஞானரூபன், நிதர்சன், மாற்று வீரர் பிரேமகுமார் ஆகியோர் மிக இலகுவான கோல் போடும் வாய்ப்புகளைக் கோட்டை விட்டனர். இதனால் வட மாகாணத்துக்கு அதிர்ஷ்டம் இல்லை என்ற கருத்து நிலவியது. ஆனால், போட்டியின் உபாதையீடு நேரத்தில் வின்சென்ட் கீதன் கோல் நிலையை சமப்படுத்தி வட மாகாண அணிக்க்கு நம்பிக்கையைக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றி கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. ஆனால், போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இதனையடுத்து, வெற்றி அணியைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட பெனல்டி முறையில் வட மாகாணம் 6 - 5 என வெற்றிபெற்று தங்கப் பதக்கதை மூன்றாவது நேரடித் தடவையாக சுவீகரித்தது. ஆட்டநாயகனாக எஸ். ஆர்ணிகன் தெரிவானார். 2019இல் செபமாலைநாயகம் ஞானரூபன் தலைமையிலும் 2023இல் செபமாலை நாயகம் ஜூட் சுபன் தலைமையிலும் இந்த வருடம் எம். என். நிதர்சன் தலைமையிலும் வட மாகாணம் தொடர்ச்சியாக வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது. 2020, 2021, 2021 ஆகிய வருடங்களில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்த வருடம் மத்திய மாகாணம் வெள்ளிப் பதக்கத்தையும் தென் மாகாணம் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. வட மாகாண அணி எம்.என். நிதர்சன் (தலைவர்), எஸ். ஞானரூபன், எஸ். ஜூட் சுபன், வின்சென்ட் கீதன், ஏ. ஜெயராஜ், வி. விக்னேஷ், ரி. கஜகோபன், எஸ். ஆர்ணிகன் (கோல்காப்பாளர்), என். அன்தனி ரமேஷ், ஏ. டிலக்ஷன், கஜமாதன், எம். பிரேமகுமார், ஜே. ஜோன்ராஜ், எம். ஜே. குயின்டன், பி. சுதேசன், ஏ. ரி. தீபன், எம். எஸ். கிரிஷா, ஜே. ஏ. ஜெரிசன், எஸ். மதிவதனன், எஸ். சிந்துஜன். பெண்கள் பிரிவில் மேல் மாகாணம் தங்கப் பதக்கத்தையும் வடமேல் மாகாணம் வெள்ளிப் பதக்கத்தையும் சப்ரகமுவ வெண்கலப் பதக்கதையும் வென்றன. https://www.virakesari.lk/article/187308
-
உலர் கண் பிரச்னை: கண்கள் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சொட்டு மருந்துகள் கண்களை மென்மையாக்க (lubricated) உதவுகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், டிராஃப்ட் பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் உங்கள் கண்கள் அடிக்கடி வீக்கமடைந்து, அரிப்பு, நீர் வடிதல் மற்றும் வெளிச்சத்தை பார்த்தால் அசௌகரியமாக உணர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறதா? உங்களுக்கு உலர் கண்கள் (Dry eye) பாதிப்பு இருக்க வாய்ப்புகள் அதிகம். இது ஒப்பீட்டளவில் தீங்கற்ற நோயாகும். மக்கள் தொகையில் 5% முதல் 40% மக்களை பாதிக்கிறது. இது தீவிரமான உடல்நலப் பிரச்னை இல்லை என்றபோதிலும், உலர் கண்கள் நிலை ஏற்படும் போது மிகவும் அசௌகரியமாக உணர வைக்கும். உலர் கண் என்பது கண்களின் கண்ணீர் படலத்தை மாற்றியமைக்கும் தொடர்ச்சியான காரணங்களின் விளைவாகும். இந்தப் படலம் மூன்று அடுக்குகளால் ஆனது: ஒரு கொழுப்பு அடுக்கு, ஒரு நீர் அடுக்கு, மற்றும் ஒரு மியூகோசல் (சளி போன்ற ஒரு வஸ்து) அடுக்கு. கண்களின் கண்ணீர் படலத்தின் (tear film) மூன்று அடுக்குகளில் பல காரணிகளால் மாற்றம் ஏற்படும். இது கண்கள் வறண்டு போக வழிவகுக்கும். கண்ணின் மேற்பரப்பை மென்மையாகவும் (lubricated), சுத்தமாகவும் பராமரிக்க மூன்று கூறுகளும் இணைந்து செயல்படுகின்றன. இந்த மூன்று அடுக்குகளில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், கண்கள் வறண்டு போகலாம். கண்ணீர் படலம் எப்படி பாதிக்கப் படுகிறது? பிரிட்டனில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கண் மருத்துவப் பேராசிரியரான பர்வேஸ் ஹொசைனின் கூற்றுப்படி, கண்ணீர் படலச் செயலிழப்புக்கு மிகவும் பொதுவான காரணமாக பார்க்கப்படுவது மீபோமியன் சுரப்பி (meibomian glands) செயலிழப்பு தான். இருப்பினும் ஆட்டோ இம்யூன் நோய்கள், சில மருந்துகளின் நுகர்வு போன்ற பிற காரணங்களும் உள்ளன. காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துவது மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் கூட கண்ணீர் படல அடுக்குகள் பாதிக்கப்படலாம். மீபோமியன் சுரப்பிகள் கண் இமைகளில் அமைந்துள்ளன. கண்ணீர் படலத்தை உருவாக்கும் லிப்பிட்களை சுரக்கின்றன. அதை ஆவியாகாமல் தடுக்கின்றன. "இந்தச் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாதபோது, கண்ணீர் அடுக்கு நிலையற்றதாகி, எதிர்பார்த்ததை விட வேகமாக மறைந்துவிடும்," என்று ஹொசைன் விளக்குகிறார். கண்ணீர் அடுக்கு மொத்தமாக பாதிக்கப்படுவதும் நிகழலாம் அல்லது குறைவான/தரமற்ற கண்ணீரைச் சுரக்கும் சூழலும் ஏற்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல மணிநேரம் டிஜிட்டல் திரையைப் பார்ப்பது அறிகுறிகளை அதிகரிக்கச் செய்யும். உலர் கண் பிரச்னை ஏன் ஏற்படுகிறது? உலர் கண் பிரச்னை, ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில அறிகுறிகளுடன், கூடுதலான பாதிப்புகளையும்ஏற்படுத்தும். இவை பார்வை மங்கல், கண்கள் சிவத்தல், மற்றும் ஆகியவை. சுற்றுச்சூழலில் வறட்சி, காற்று அல்லது தூசி போன்ற வெளிப்புற காரணிகளால் இந்த அனைத்து அறிகுறிகளும் மோசமடையலாம். அதே போல் டிஜிட்டல் சாதன திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதாலும், மொபைல் பயன்படுத்துவதன் மூலமும் கண் வறட்சி நிலை மோசமாகும். நாம் கணினியை உற்றுப் பார்க்கும்போது நாம் கண் சிமிட்டும் எண்ணிக்கை குறைகிறது. கண் சிமிட்டுதல் என்பது கண்களைச் சுத்தப்படுத்தவும் கண்ணீரை சீராக விநியோகிக்கவும் தேவையான ஒரு செயலாகும். மேலும் கண் சிமிட்டுவது குறையும் போது கண்ணீர் அடுக்கின் ஆவியாதல் செயல்முறை வேகமடைகிறது. நடுத்தர வயதினர் உலர் கண்கள் பிரச்னையால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக ஆண்களை விடப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். "நாங்கள் செய்த ஆய்வுகளில், 50களின் நடுப்பகுதியில் உள்ள வயதினர் அதிகம் உலர் கண்கள் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மாதவிடாய் நிறுத்தத்தை நெருங்கும் பெண்களுக்கு கண்கள் எளிதல் வறண்டுப் போகிறது," என்று ஹொசைன் சுட்டிக்காட்டுகிறார். "ஏனென்றால் மீபோமியன் சுரப்பிகள் ஹார்மோன் மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றன,” என்கிறார். இருப்பினும், டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால், பிரச்னை இளம் வயதிலேயே தோன்றத் தொடங்குகிறது என்று ஹொசைன் விளக்குகிறார். உலர் கண்கள் பிரச்னைக்கான முக்கிய காரணிகள் தற்போதைய வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது. எனவே, உலர் கண் பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விமானம் போன்ற வறண்ட சூழலில், உங்கள் கண்களைப் பாதுகாக்க சிறிது நேரம் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் உலர் கண் பிரச்னை ஏற்படாமல் தடுப்பது எப்படி? மருத்துவப் பயிற்சி, கற்பித்தல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட அமெரிக்காவில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான மயோ கிளினிக், கண் வறட்சியைத் தடுக்க பின்வரும் செயல்களைப் பரிந்துரைக்கிறது: கண்களில் காற்று படுவதை தவிர்க்கவும் சுற்றியுள்ள காற்று மிகவும் வறண்டு இருக்கும்போது ஈரப்பதத்தைச் சேர்க்க ஈரப்பதமூட்டியைப் (Humidify) பயன்படுத்தவும் காட்சி கவனம் தேவைப்படும் நீண்ட நேரப் பணிகளைச் செய்யும்போது உங்கள் கண்களுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்க வேண்டும் கண்ணீர் ஆவியாவதைக் குறைக்க வறண்ட சூழல்களில் (உதாரணமாக, விமானம் போன்ற இடங்களில்) உங்கள் கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். கண்களை மூட வேண்டும் கண் இமைகளை உயர்த்தி பார்ப்பதை குறைக்க, கணினித் திரையை கண் மட்டத்திற்குக் கீழே இருக்குமாறு தாழ்த்தி வைக்கவும் புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள், மற்றவர்கள் புகைபிடிக்கும் போது அருகில் செல்லாதீர்கள் சிகிச்சையைப் பற்றி, ஹொசைன் கூறுகையில், கண்களை உயவூட்டுவதற்கு (lubricate) செயற்கைக் கண்ணீர் அல்லது கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம். பிரிட்டனில் உள்ள தேசியச் சுகாதார சேவை , "வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டை வைத்து கண் இமைகளை சுத்தம் செய்து, கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் லேசாக அழுத்தம் தர வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறது. இப்படிச் செய்வதால் கண்ணைச் சுற்றியுள்ள சுரப்பிகள் உற்பத்தி செய்யும் கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. சுரப்பிகளில் உள்ள கொழுப்புகளை வெளியே தள்ள உங்கள் விரல் அல்லது பருத்தியால் கண் இமைகளை மெதுவாக மசாஜ் செய்யவும் பரிந்துரைக்கின்றனர். இந்த எளிய நடவடிக்கைகள், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். https://www.bbc.com/tamil/articles/c10l5m268n8o
-
50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தபின், ஒன்றாகக் கருணைக்கொலை செய்துகொண்ட தம்பதி - நெகிழ்ச்சிக் கதை
படக்குறிப்பு,ஜான் (70) மற்றும் எல்ஸ் (71) இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், லிண்டா பிரஸ்லி பதவி, பிபிசி செய்தியாளர் 30 ஜூன் 2024, 10:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் [இந்த கட்டுரையில் மரணம் குறித்த விவரணைகள் உள்ளன. அவை சிலரைச் சங்கடப்படுத்தலாம்.] தம்பதிகளான எல்ஸ் மற்றும் ஜான் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஜூன் மாதத்தின் துவக்கத்தில், அவர்களுக்கு இரு மருத்துவர்கள் மரணத்தை ஏற்படுத்தும் கொடிய மருந்தை கொடுத்தனர். அதன் பின்னர் அவர்கள் ஒன்றாக இறந்தனர். நெதர்லாந்தில், இதனை இரட்டை கருணைக்கொலை (duo-euthanasia) என்கின்றனர். இந்த அரிதான சம்பவம் அங்கு சட்டப்பூர்வமானது தான். ஒவ்வொரு ஆண்டும், அதிகமான டச்சு தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை ஒன்றாக முடிக்க இந்த வழியைத் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் தானாக முன்வந்து இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ஜான் மற்றும் எல்ஸ் வாழ்ந்துவந்த வாகனம் நெதர்லாந்தின் வடக்கே ஃப்ரைஸ்லேண்ட் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. சூரிய ஒளியில் கடற்கரையில் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் பயணங்களை விரும்பும் தம்பதிகள், அவர்களது திருமண வாழ்க்கையின் பெரும்பகுதியை மோட்டார் ஹோமில் அல்லது படகுகளில் கழித்தனர். நான் அவர்களைச் சந்திக்கும்போது, ஜான் மகிழ்ச்சியாகத் தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டார். "நாங்கள் ஒரு சமயம் கற்களின் குவியல் போன்று இருந்த வீட்டில் வாழ முயற்சித்தோம், ஆனால் அது வேலை செய்யவில்லை," என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். 70 வயது ஜான், அவரது வாகனத்தின் டிரைவிங் சீட்டில் ஒரு காலை அவருக்குக் கீழே வளைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். இதுவே அவரது தொடர்ச்சியான முதுகு வலியைப் போக்க ஒரே வழியாகும். 71 வயதான அவரது மனைவி எல்ஸ், டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு வாக்கியங்களை உருவாக்குவதே கடினமாக உள்ளது. படக்குறிப்பு,ஜான் தனது மகனுடன் 1982 இல் எடுத்த புகைப்படம் "இது நன்றாக இருக்கிறது" என்று தனது உடலை சுட்டிக்காட்டி சொல்லும் எல்ஸ், தன் தலையை சுட்டிக்காட்டி "இது மோசமான நிலையில் இருக்கிறது,” என்றார். ஜான் மற்றும் எல்ஸ் அவர்கள் படித்த மழலையர் பள்ளியில் சந்தித்த பிறகு நீண்டகால நண்பர்களாக ஆனார்கள். ஜான் தன் இளமை காலத்தில் நெதர்லாந்தின் தேசிய இளைஞர் அணிக்காக ஹாக்கி விளையாடினார், பின்னர் விளையாட்டுப் பயிற்சியாளராக ஆனார். எல்ஸ் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். இருப்பினும், அவர்களை ஒன்றிணைத்தது படகுகள் மற்றும் தண்ணீரின் மீதான அவர்களின் பரஸ்பர காதல் தான். பட மூலாதாரம்,ELS VAN LEENINGEN படக்குறிப்பு,1968 இல் எல்ஸ் புகைப்படம், பிற்காலத்தில் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டார் 'இதனை முடித்துக் கொள்ள நினைக்கிறேன்' ஒரு இளம் ஜோடியாக அவர்கள் ஒரு படகில் வசித்து வந்தனர். பின்னர் அவர்கள் ஒரு சரக்குப் படகை விலைக்கு வாங்கி நெதர்லாந்தின் உள்நாட்டு நீர்வழிகளைச் சுற்றிப் பொருட்களைக் கொண்டு செல்லும் வணிகத்தை உருவாக்கி செயல்படுத்தினர். இதற்கிடையில், எல்ஸ் அவர்களின் ஒரே மகனைப் பெற்றெடுத்தார் (அவர் மகனின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டு கொண்டார்). அவர் வாரம் ஒருமுறை வீட்டுக்கு வரும்படியான போர்டிங் பள்ளியில் படித்தார். வார இறுதி நாட்களை தனது பெற்றோருடன் கழித்தார். பள்ளி விடுமுறை நாட்களில், ஜான் மற்றும் எல்ஸ் தங்கள் குழந்தை படகில் இருந்தபோதும், ரைன் ஆற்றங்கரை அல்லது நெதர்லாந்தின் தீவுகள் போன்ற சுவாரசியமான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிரீதியான பயணங்களைத் தேர்வு செய்தனர். 1999-ஆம் ஆண்டளவில் உள்நாட்டுக் கப்பல் தொழில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. ஜான் பத்து வருடங்களுக்கும் மேலாக அதிக உழைப்பாளியாக வேலை செய்து வந்தார். இதனால் அவருக்குக் கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. அவரும் எல்ஸும் நிலப்பகுதிக்குக் குடியேறினர். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் ஒரு படகில் வசிக்கத் தொடங்கினர். அது பொறுக்க முடியாத அளவுக்கு முடியாத அளவுக்கு ஆனதும், அவர்கள் தங்கள் விசாலமான கேம்பர்வேனை (வீடு போன்ற வசதிகளைக் கொண்ட ஒரு நான்கு சக்கர வாகனம்) வாங்கினார்கள். ஜானுக்கு 2003-இல் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆனால் அவரது உடல்நிலை சரியாகவில்லை. அவரால் வேலை செய்ய இயலவில்லை. மேலும் வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார். எல்ஸ் கற்பிப்பதில் மிகவும் பிஸியாக இருந்தார். சில நேரங்களில் அவர்கள் கருணைக்கொலை பற்றி உரையாடினர். வாழ்க்கையை முடித்துக்கொள்வதைப் பற்றி அவர்கள் விவாதித்த தருணங்கள் இருந்தன. ஜான் தனது உடல் ரீதியான தடைகளைக் கருத்தில் கொண்டு நீண்ட காலம் வாழ விரும்பவில்லை என்று தனது குடும்பத்தினரிடம் விளக்கினார். இந்த நேரத்தில்தான் தம்பதியினர் 'NVVE' என்னும் நெதர்லாந்தின் 'இறப்பதற்கான உரிமைகள்' அமைப்பில் சேர்ந்தனர். "நீங்கள் நிறைய மருந்துகளை உட்கொண்டால், நீங்கள் ஒரு நடைபிணமாக போல வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்," என்று ஜான் என்னிடம் கூறினார். "எனவே, என்னுடைய உடல் உபாதைகள் மற்றும் எல்ஸின் நோயால், இதனை முடித்துக் கொள்ள நினைக்கிறேன்," என்றார். "முடித்து கொள்ள நினைக்கிறேன்" என்று ஜான் குறிப்பிட்டது அவர்களின் வாழ்க்கையை! 2018-இல், எல்ஸ் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு அப்போது டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தது. ஆனால் மருத்துவரைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டார். ஒருவேளை எல்ஸ் தனது தந்தையின் நிலை மோசமடைந்து, அல்சைமர் நோயிலிருந்து காலமானதைக் கண்டதால் அந்த நோய்க்கு சிகிச்சை பெற விரும்பாமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு அறிகுறிகள் அதிகமாகி, புறக்கணிக்க முடியாத ஒரு சூழல் வந்தது. இரட்டை கருணைக்கொலை நவம்பர் 2022-இல், டிமென்ஷியா இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, எல்ஸ் தனது கணவரையும் மகனையும் விட்டுவிட்டு மருத்துவரின் ஆலோசனை அறையை விட்டு வெளியேறினார். "எல்ஸ் மிகவும் கோபமாக இருந்தார்,” என்று அந்த தருணத்தை ஜான் நினைவு கூர்ந்தார். எல்ஸ் தனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாது என்பதை அறிந்த பிறகு, அவரும் ஜானும் தங்கள் மகனுடன் இரட்டை கருணைக்கொலை பற்றி விவாதிக்கத் தொடங்கினர். இருவரும் ஒன்றாக இறக்க திட்டமிட்டனர். நெதர்லாந்தில், கருணைக்கொலை மற்றும் தற்கொலை செய்துகொள்வது சட்டப்பூர்வமானது. நெதர்லாந்தில், நோயாளி தானாக முன்வந்து கோரிக்கையை விடுத்து, அவர்களின் உடல் அல்லது மன துன்பம் 'தாங்க முடியாதது' என்று மருத்துவ நிபுணர்களால் கருதப்பட்டால், அது குணமடைவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தால், தற்கொலை மற்றும் கருணைக்கொலை அங்கு அனுமதிக்கப்படுகிறது. தற்கொலைக்கு உதவி கேட்கும் ஒவ்வொரு நபரும் இரண்டு மருத்துவர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள், இரண்டாவது மதிப்பீடு முடிவுகளை உறுதிப்படுத்துகிறது. டிமென்ஷியா நோயாளிகளுக்குக் கருணைக்கொலை 2023-ஆம் ஆண்டில், நெதர்லாந்தில் 9,068 பேர் கருணைக்கொலையால் இறந்தனர் - மொத்த இறப்புகளின் எண்ணிக்கையில் இது 5% ஆகும். 33 இரட்டை கருணைக்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, எனவே 66 பேர் இதனால் இறந்துள்ளனர். கருணைக்கொலை கோரும் தம்பதியில் ஒருவருக்கு டிமென்ஷியா பாதிப்பு இருந்தால், அவர்களின் சம்மதம் தெரிவிக்கும் நிலையில் இருக்கமாட்டார்கள் என்பதால் சூழல் சிக்கலாகும். ராட்டர்டாமில் உள்ள ஈராஸ்மஸ் மருத்துவ மையத்தில் உள்ள முதியோர் மருத்துவரும், நெறிமுறை நிபுணருமான மருத்துவர் ரோஸ்மரிஜ்ன் வான் ப்ரூச்செம் கூறுகையில், “டிமென்ஷியா நோயாளிக்கு கருணைக்கொலை செய்வதைப் பற்றி யோசிப்பதை கூட நிறைய மருத்துவர்கள் விரும்பவில்லை,” என்கிறார். இது ஜான் மற்றும் எல்ஸின் நிலை. மருத்துவர்களிடையே உள்ள அந்த தயக்கம் கருணைக்கொலை புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்கிறது. 2023-இல் இறந்த ஆயிரக்கணக்கானவர்களில் 336 பேருக்கு டிமென்ஷியா இருந்தது. டிமென்ஷியா நோயாளிகளின் 'தாங்க முடியாத துன்பத்திற்கான' சட்டத் தேவையை மருத்துவர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள்? ஆரம்ப நிலை டிமென்ஷியா பிரச்னை உள்ள பலருக்கு, உடல்நலனில் எப்படி முன்னேற்றம் இருக்கும் என்பது பற்றிய நிச்சயமற்ற தன்மையே அவர்களின் வாழ்க்கையை முடித்துக் கொள்வது பற்றி சிந்திக்க வழிவகுக்குகிறது என்று மருத்துவர் வான் புருசெம் விளக்குகிறார். "என்னால் முக்கியமான விஷயங்களை இனி செய்ய முடியாமல் போகுமோ? என்னால் இனி என் குடும்பத்தை அடையாளம் காண முடியாமல் போகுமோ? என்ற நிலையில் இருக்கும் நோயாளிகள், அதை வெளிப்படுத்தும் நிலையில் இருந்தால் போதும். கருணைக்கொலை செய்யத் தயாராக இருக்கும் மருத்துவர் மற்றும் மனத் திறனில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் ஆகிய இருவருக்குமே நோயாளிகள் சொல்வது புரிந்தால், கருணைக்கொலையைப் பரிசீலிக்க வேண்டும்," என்றார் இரட்டைக் கருணைக்கொலையில் உள்ள சிக்கல்கள் அவர்களின் குடும்ப மருத்துவருக்கு இதில் ஈடுபாடு இல்லாததால், ஜான் மற்றும் எல்ஸ் ஒரு கருணைக்கொலை கிளினிக்கை (mobile euthanasia clinic) அணுகினர் - கருணைக்கொலை குறித்த நிபுணத்துவ மையம் அது. இது கடந்த ஆண்டு நெதர்லாந்தில் 15% கருணைக்கொலை இறப்புகளை மேற்பார்வையிட்டது. சராசரியாக அது பெறும் கோரிக்கைகளில் மூன்றில் ஒரு பங்கை ஏற்றுக் கொள்கிறது. ஒரு தம்பதி தங்கள் வாழ்க்கையை ஒன்றாக முடிக்க விரும்பினால், ஒரு இணையரின் முடிவு மற்றவரை பாதிக்கவில்லை என்பதில் மருத்துவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். இருவருக்குமே சம்மதம் இருக்க வேண்டும். மருத்துவர் பெர்ட் கெய்சர் இரண்டு இரட்டைக் கருணைக்கொலை கோரிக்கைகளைக் கையாண்டிருக்கிறார். அவர் ஒரு வித்தியாசமான தம்பதியை நினைவுக்கூர்ந்தார். அந்த நபர் தனது மனைவியை கருணைக்கொலைக்கு வற்புறுத்துகிறாரோ என்று மருத்துவருக்குச் சந்தேகம் வந்தது. அடுத்த சந்திப்பின் போது, மருத்துவர் கெய்சர் அந்தப் பெண்ணுடன் தனியாகப் பேசினார். "அவர் பல திட்டங்களை வைத்திருப்பதாக சொன்னார்," என்று மருத்துவர் கெய்சர் கூறுகிறார். அந்தப் பெண் தனது கணவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை தெளிவாக உணர்ந்தார், ஆனால் அவருடன் இறக்கும் திட்டம் அந்தப் பெண்ணுக்கு இல்லை. மருத்துவர் இதனை அறிந்ததும் அவர்களின் கருணைக்கொலை செயல்முறை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த நபர் நோய்வாய்பட்டு இறந்தார். அவருடைய மனைவி இன்னும் உயிருடன் இருக்கிறார். படக்குறிப்பு,எல்ஸ் மற்றும் ஜான் அவர்களின் திருமண நாளில், 1975 'வேறு தீர்வு இல்லை' புராட்டஸ்டன்ட் தியாலஜிகல் பல்கலைக்கழகத்தின் சுகாதார நெறிமுறைகள் பேராசிரியரான டாக்டர் தியோ போயர், நெதர்லாந்தில் கருணைக்கொலையை வெளிப்படையாக விமர்சிப்பவர்களில் ஒருவர். அவர் , நோய்த்தடுப்பு சிகிச்சையின் முன்னேற்றம் கருணைக்கொலை பயன்பாட்டின் தேவையைக் குறைக்கிறது என்று நம்புகிறார். “என்னைப் பொறுத்தவரை மருத்துவரால் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியும். இருப்பினும், அது மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும்,” என்கிறார். டாக்டர் போயர் மேலும் கூறுகையில், “கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இரட்டைக் கருணைக்கொலை வழக்குகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரும் அவரது மனைவியும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தம்பதியாக இறப்பதைத் தேர்ந்தெடுத்து, உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பிறகு அதன் தாக்கம் மேலும் அதிகரித்தது. "கடந்த ஆண்டில் பத்துக்கும் மேற்பட்ட இரட்டைக் கருணைக்கொலை வழக்குகளை நாங்கள் பார்த்தோம், மேலும் ஒன்றாக இறப்பதை போற்றும் (hero-ify) போக்கு உள்ளது," என்றார். ஜானும் எல்ஸும் தங்கள் கேம்பர்வேனில் காலவரையின்றி வாழலாம். அவர்கள் மிக விரைவில் இறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்களா? "இல்லை, இல்லை, இல்லை - என்னால் அதைப் பார்க்க முடியாது," என்று எல்ஸ் கூறுகிறார். அவரது கணவர், "எனக்கு இனி வலி வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன்," என்று பதிலளித்தார். "நாம் வழிநடத்திய வாழ்க்கை நம்மை முதுமையாக்குகிறது. அதன் காரணமாக மட்டுமே அது முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்கிறார். இன்னும் ஒரு பிரச்னை இருக்கிறது. மருத்துவ வல்லுநர்களால் எல்ஸின் மதிப்பீட்டின்படி, அவரது டிமென்ஷியா மோசமடைந்தால் அது மாறக்கூடும் என்றாலும், தன் வாழ்க்கையை எப்போது, எப்படி முடிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் திறனை அவர் இன்னும் பெற்றிருக்கிறார். ஜான் மற்றும் எல்ஸின் மகனுக்கு, இவை எதுவும் எளிமையானதாக இல்லை. "உங்கள் பெற்றோரை இழக்க நீங்கள் விரும்பமாட்டீர்கள்," என்று ஜான் விளக்குகிறார். "எனவே மகன் கண்ணீர் விடுவார் தான். அவர் 'நல்ல காலம் வரும்' என்றார். ஆனால் எனக்கு வருத்தம் இல்லை,” என்கிறார் ஜான். எல்ஸ் அதையே உணர்கிறார். "வேறு தீர்வு இல்லை," என்பதே அவர்களின் நிலைபாடு. இறுதி நாள் கருணைக்கொலை செய்ய மருத்துவர்களுடன் அவர்கள் சந்திப்புக்கு முந்தைய நாள், எல்ஸ், ஜான், அவர்களது மகன் மற்றும் பேரக்குழந்தைகள் ஒன்றாக இருந்தனர். நல்ல நிலையில் இருக்கும் தன் கேம்பர்வேனின் தனித்துவத்தை ஜான் விளக்க விரும்பினார், எனவே அது விற்பனைக்குத் தயாராக இருக்கும். "நான் என் அம்மாவுடன் கடற்கரையில் நடந்து சென்றேன்," என்று அவர்களது மகன் கூறுகிறார். "குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள், வேடிக்கையான தருணங்கள் இருந்தன... அது மிகவும் வித்யாசமான நாள்,” என்கிறார். "நாங்கள் இரவு உணவு சாப்பிட்டது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் அனைவரும் ஒன்றாக அந்த இறுதி இரவு உணவை சாப்பிடுவதைப் பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்தது,” என்கிறார். திங்கள்கிழமை காலை, அனைவரும் உள்ளூர் மருத்துவமனையில் கூடினர். தம்பதியரின் சிறந்த நண்பர்கள், ஜான் மற்றும் எல்ஸ் இருவரின் சகோதரர்களும், அவர்களின் மருமகளும் தங்கள் மகனுடன் இருந்தனர். "டாக்டர்கள் வருவதற்கு முன்பு நாங்கள் இரண்டு மணிநேரம் ஒன்றாக இருந்தோம்," என்று அவர் கூறுகிறார். "நாங்கள் எங்கள் நினைவுகளைப் பற்றி பேசினோம் ... நாங்கள் இசையைக் கேட்டோம்." "இறுதி அரை மணி நேரம் கடினமாக இருந்தது," என்று அவர்களின் மகன் கூறுகிறார். "டாக்டர்கள் வந்தார்கள், எல்லாம் சீக்கிரமாக நடந்தது. அவர்கள் தங்கள் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள், பின்னர் அதற்கு ஒரு நிமிடம் ஆகும்,” என்கிறார். எல்ஸ் வான் லீனிங்கன் மற்றும் ஜான் ஃபேபர் ஆகியோருக்கு மருத்துவர்கள் மரணமடையும் மருந்துகளை வழங்கினர் மற்றும் 2024-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி திங்கள்கிழமை ஒன்றாக அவர்கள் இறந்தனர். அவர்களின் கேம்பர்வேன் இன்னும் விற்பனைக்கு வைக்கப்படவில்லை. எல்ஸ் மற்றும் ஜானின் மகன் அதைச் சிறிது காலம் தன்னுடன் வைத்திருக்க முடிவு செய்துள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதில் விடுமுறைக்குச் செல்ல முடிவு செய்துள்ளார். "காலம் வரும்போது அதை விற்பேன்," என்று அவர் கூறுகிறார். "முதலில் நான் என் குடும்பத்திற்குச் சில நினைவுகளை உருவாக்க விரும்புகிறேன்," என்கிறார் தீர்க்கமாக. https://www.bbc.com/tamil/articles/cjk318y0325o
-
சீகன் பால்கு: கிறிஸ்தவத்தை பரப்ப வந்து தமிழ் அறிஞராக மாறிய ஜெர்மன் பாதிரியார்
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஜெர்மன் நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த சீகன் பால்குவிற்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என கடந்த வாரம் சட்டப் பேரவையில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. தரங்கம்பாடி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இதை வரவேற்றுள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த ஒருவருக்கு சிலையும் அரங்கமும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது ஏன்? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கிறிஸ்தவத்தை பரப்ப வந்து தமிழ் அறிஞரான பாதிரியார் மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியில் உள்ள சீகன் பால்கு அருங்காட்சியகத்தின் இயக்குநர் முனைவர் சாமுவேல் மனுவேல் பிபிசி தமிழிடம் விரிவாக விளக்கினார். மத போதகரான ஜெர்மனியை சேர்ந்த பார்த்லோமேயு சீகன் பால்கு 10.7.1682 அன்று ஜெர்மனியில் சாக்சோனி மாநிலத்தில் உள்ள புல்நிட்ஸ் என்ற ஊரில் பிறந்தார். டென்மார்க் அரசர் 4ஆம் ஃபிரெட்ரிக் சமயப் பணி செய்ய அவரை அனுப்பி வைத்தார். 11.11.1705 அன்று தனது நண்பர் ஹென்ரிக்புளுசோவுடன் கோபன்ஹேகனில் இருந்து கப்பலில் இந்தியா புறப்பட்டார். 222 நாட்கள் கப்பல் பயணத்திற்குப் பின் 9.7.1706 தரங்கம்பாடி வந்தடைந்தார். "மிஷினரிகளான இவர்களை வரவேற்பதற்காக யாரும் அங்கு காத்திருக்கவில்லை. கவர்னர் இவர்களை சந்தேகப்பட்டதுதான் அதற்குக் காரணம். ஜெர்மனியில் இருந்து வரும் இவர்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக அனுப்பப்பட்டார்களா அல்லது தன்னை வேவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டார்களா என்ற சந்தேகம்தான் அதற்குக் காரணம்" என்று கூறிய இயக்குநர் சாமுவேல் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களையும் விவரித்தார். "கடல் வழியாக வந்த அவர்களை கவர்னர் மாலை வரை சந்திக்கவில்லை. ஆளுநர் மாலையில் தனது அதிகாரிகளுடன் வந்து டென்மார்க் மன்னரின் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களால் தனது பிரதேசத்தில் நற்செய்தியைப் பிரசங்கிக்க முடியாது என்றும், விரும்பினால் பள்ளியை நிறுவி ஆசிரியர்களாகப் பணியாற்றலாம் என்றும் கூறினார்." ஆனால் ஆளுநர் ஹேசியஸ், அவர்களுக்கான தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் பற்றி எதுவும் கூறாமலே அந்த இடத்தை விட்டு வெளியேறினார். கோட்டை அதிகாரி ஒருவர் அவர்கள் மீது இரக்கம் கொண்டு வெள்ளிப்பாளையம் அழைத்துச் சென்றார். இந்நிலையில், மாமனார் வீட்டில் இரவு தங்க ஏற்பாடு செய்ததாகவும் தொடர்ந்து சில இடையூறுகளைச் சந்தித்தாலும் சீகன் பால்கு தனது பணியில் கவனமுடன் தீவிரமாகச் செயல்பட்டதாகவும் விளக்கினார் இயக்குநர் சாமுவேல் மனுவேல். சீகன் பால்கு இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றார். அவர் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 8 மணிநேரம் செலவழித்து, தமிழை முழுமையாகக் கற்றுக்கொண்டார். கணவரை இழந்த பெண்களுக்கு ஆதரவு "சீகன் பால்கு எப்பொழுதுமே உண்மை மற்றும் நியாயத்தின் பக்கமே இருப்பார்" என்று கூறிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் சாமுவேல் அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையும் விவரித்தார். "சீகன் பால்குவிற்கு கவர்னர் ஹாசியஸிடமிருந்து நிறைய பிரச்னைகள் இருந்தன. ஒரு கத்தோலிக்க, கணவரை இழந்த பெண் உள்ளூர் மோசடி நபர் ஒருவரால் ஏமாற்றப்பட்டார், அவர் கவர்னர் ஹேசியஸிடம் புகார் செய்தார். ஆனால் கவர்னர் மோசடிப் பேர்வழியான உள்ளூர் ஆசாமிக்கு ஆதரவாக இருந்தார். பாதிக்கப்பட்ட பெண்மணி சீகன் பால்குகுவிடம் புகார் செய்தார். சீகன்பால்கு வழக்கை எடுத்துக் கொண்டார். அவர் ஆளுநரிடம் சென்று அப்பெண்ணுக்காக வாதிட்டார். இருவருக்கும் இடையே மோதல் ஏற்படும் அளவிற்கு சம்பவம் நிகழ்ந்தது. இதனால் சீகன் பால்கு சிறையிலும் அடைக்கப்பட்டார். நான்கு மாதத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்." இருந்த போதிலும் "அவர் பணியில் கவனமாகவே செயல்பட்டு வந்தார். அவர் இந்தியாவுக்கு வந்தபோது தரங்கம்பாடி கிராமப் பகுதிகள், குறிப்பாக பட்டியலின மக்கள் வாழ்ந்த காலனி பகுதிகளில் மக்கள் மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்தனர். கல்வி அவர்களுக்கு வழங்கப்படவில்லை. கல்வி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகப் பல வழிகளில் முயயன்று அதில் வெற்றியும் பெற்றார். அதேபோல் கணவனை இழந்த பெண்களும் சமூகத்தில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு கற்பித்து அவர்களைக் கல்வியாளர்களாக மாற்றி அவர்களைக் கொண்டே கிராமப் பள்ளிகளையும் நடத்தினார்." கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக தரங்கம்பாடிக்கு வந்திருந்தபோதிலும், தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வம் கொண்டார். அவர் தமிழ் மொழிப் புத்தகங்களை மொழி பெயர்த்து பிற மொழிகளிலும் அச்சிட்டு வழங்கியதாகக் கூறுகிறார் இயக்குநர் சாமுவேல். சீகன் பால்கு வாழ்ந்த வீடுதான் அருங்காட்சியகம் படக்குறிப்பு,பேராசிரியர் மரிய லாஸர் மிக எளிமையாக வாழ்ந்த அவரின் வீடு தற்போது அருங்காட்சியமாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் பயன்படுத்திய மேசை, புத்தகங்களை அச்சிடப் பயன்படுத்திய அச்சு இயந்திரம், (அச்சு இயந்திரம் தற்பொழுது வரை பயன்பாட்டில்தான் உள்ளது, விளக்கமும் மக்களுக்காக அவ்வப்போது காண்பிக்கப்படுகிறது), அவர் எழுதிய கடிதங்கள் ஆகியவை இன்னமும் பாதுகாப்பாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தரங்கம்பாடியில் வாழ்ந்த ஜெர்மனிய கிறிஸ்தவர்களுக்கு ஜெர்மன் மொழியில் வழிபாடு நிகழ்த்துவது, சீகன் பால்குவின் தொடக்க காலப்பணியாக இருந்ததாகச் சொல்கிறார் பொறையாரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் மரிய லாசர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சீகன் பால்கு தொடர்ந்து புதிய கிறிஸ்தவர்களை உருவாக்கும் லட்சியத்தைக் கருத்தில் கொண்டு அப்பணியில் ஈடுபட்டார். அப்போது நிறைய இடர்பாடுகளையும் அவர் சந்தித்துள்ளார். பெரும்பாலும் அடித்தட்டு மக்களே கிறிஸ்தவ மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியிலேயே இவர் அதிக நேரம் செலவிட்டார்." தரங்கம்பாடி வந்த சீகன் பால்கு தமிழ் மொழியின் மீது ஆர்வம் கொண்டு விரைவாக எழுதவும், படிக்கவும் கற்று கொண்டார். அதைத் தொடர்ந்து தமிழில் அச்சு எழுத்துகளை வடிவமைத்து அச்சுக் கலையில் தமிழைக் கொண்டுவரப் பெரும் முயற்சி மேற்கொண்டதாக விவரிக்கிறார் ஓய்வுபெற்ற பேராசிரியர் மரிய லாசர். தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் தரங்கம்பாடியில் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ் மொழிக்கான அச்சுக் கூடத்தை 24.10.1712 அன்று அமைத்தார். அதன் மூலம் புதிய ஏற்பாடு, தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி இந்து சமய கடவுள்களின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை ஓலைச் சுவடியிலிருந்து காகிதத்தில் அச்சேற்றி வெளியிட்டார். சீகன் பால்கு, ‘புதிய ஏற்பாட்டைத் தமிழில் அச்சடிக்கும்போது பைபிளில் சொல்லப்பட்ட பல வார்த்தைகளுக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தைகளைத் தேர்வு செய்வது அவருக்குக் கடும் சவாலாக இருந்ததாகக் கூறுகிறார் பேராசிரியர் மரியா லாசர். அவர், அச்சு எந்திரம் கொண்டு வருவதற்கும் எழுத்துகளைக் கோர்க்கவும் பலவித இன்னல்களைச் சந்தித்தார். முடிவில் கி.பி.1713ஆம் ஆண்டு பைபிள் புதிய ஏற்பாட்டுக்கான அச்சு கோர்க்கும் பணி தொடங்கியது. சுமார் 2 ஆண்டுக்காலம் இடைவிடாத முயற்சிக்குப் பிறகு, கி.பி.1715ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பணிகள் முடிவடைந்தன. புதிய ஏற்பாடு முழுவதும் தயாராகியிருந்தது. தமிழில் புத்தக வடிவில் முதன்முதலில் வெளிவந்த நூல் ‘புதிய ஏற்பாடு’தான். அதைத் தொடர்ந்து பல புத்தகங்களையும் அச்சிட்டு வழங்கினார். காகித தொழிற்சாலை தற்போது போன்று அக்காலத்தில் காகிதம் தொடர்ந்து கிடைப்பதில்லை, எனவே அந்தக் காகிதத்தைத் தயாரிப்பதற்காக கி.பி.1715ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முதலாக பொறையார் அருகே கடுதாசிப்பட்டறை என்ற கிராமத்தில் ஒரு காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையையும், அச்சு மை தயாரிக்கும் தொழிற்சாலையும், பித்தளை, ஈயம் போன்ற உலோகங்களில் தமிழ் எழுத்துகளை உருவாக்கும் எழுத்து தயாரிக்கும் கூடம் ஒன்றையும் ஏற்படுத்தினார். இதன்மூலம் அவர் தடையின்றி புத்தகங்களை அச்சிட்டார். அதோடு, மரியாடாரத்தி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு இருவருமாகச் சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பல்வேறு போராட்டங்களை தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டா பகுதிகளில் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கிறார் பேராசிரியர் மரியா லாசர். இந்து மத நூல்களையும் அச்சிட்ட சீகன் பால்கு தரங்கம்பாடியில் ஆசியாவின் முதல் புராட்டஸ்டண்டு(சீர்திருத்த) தேவாலயமான புதிய எருசலேம் ஆலயத்தை கி.பி.1718இல் கட்டினார். அதுமட்டுமின்றி, ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்துறையை நிறுவியதில் பெரும் பங்கு இவருக்கு உள்ளதாகவும் கூறுகிறார் பேராசிரியர் மரியா லாசர். "பெண்களுக்கான முதல் கல்வி நிலையம், கணவரை இழந்த பெண்களை ஆசிரியர்களாகக் கொண்டு பள்ளிக்கூடம், தையற்பயிற்சிப் பள்ளி, விடுதிகள் ஆகியவற்றை அமைத்து எளியவர்களின் கல்வி, சமூக முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார். கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வந்திருந்தாலும் மக்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு பல்வேறு வழிகளில் உதவி செய்தார்." 13 ஆண்டுகள் தரங்கம்பாடியில் வாழ்ந்த அவர் 23.3.1719இல் இயற்கை எய்தினார். "சீகன் பால்கு கட்டிய ஆலயத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார். சர்வ சமய உரையாடல்களைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி மத நல்லிணக்கத்தைப் பேணிகாத்தவர். கிறிஸ்தவத்தை பரப்புகின்ற பணிக்கு வந்து அப்பணியைப் பின்னுக்குத் தள்ளி தமிழுக்காக உழைத்து தமிழ் நூல்களைக் காகிதத்தில் அச்சேற்றி பெரும் பணியைச் செய்ததோடு, தமிழர்கள், பெண்களின் உரிமைகளுக்காக அக்காலத்திலேயே போராட்டங்கள் பலவற்றைச் செய்தவர் சீகன்பால்கு," என்றார் பேராசிரியர் மரியா லாசர்.. திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் ஆகியவற்றை ஓலைச்சுவடியில் இருந்து காகிதத்தில் அச்சடித்துப் புத்தகமாக வெளியிட்டார். கிறிஸ்தவ மதம் தொடர்பான நூல்களை மட்டுமல்லாமல் இந்து மதம் தொடர்பான நூல்களையும் அவர் எழுதி, அச்சிட்டு வெளியிட்டார். 57 பார்வதி தேவி, 77 வகை பேய்கள் குறிப்பாக ஜெர்மனிய மொழியில் தென்னிந்திய தெய்வங்கள் குறித்து "தென்னிந்திய தெய்வங்களின் மரபு (ஜீனியாலஜி ஆப் சௌத் இந்தியன் டெய்டிஸ்)" என்ற நூலை அவர் எழுதியுள்ளார். இந்த நூலில் சைவ, வைணவ தெய்வங்கள் குறித்த புராண செய்திகளையும் எழுதியுள்ளார். அத்துடன் அய்யனார், எல்லம்மன், மாரியம்மன், அங்காளம்மன், பத்ரகாளி ஆகிய தெய்வங்கள் குறித்தும் எழுதியுள்ளார். பேய்களின் வகை குறித்தும் அவரது நூல் குறிப்பிடுகிறது. அதில் கலகப்பேய், காவல் பேய், பரிகாசப்பேய், நிர்மூலப் பேய் என 77 வகை பேய்கள் பற்றி அவர் எழுதியுள்ளார். அதேபோல் இந்து கடவுளான பார்வதியைக் குறிக்கும் 57 பெயர்களையும் தொகுத்து அளித்துள்ளார்," என்று விவரித்தார் மரியா லாசர். அதேபோல் "தென்னிந்தியாவில் மருத்துவர்கள் மூலம் வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் குறிப்பெடுத்து அனுப்பியுள்ளார். ஜெர்மனியில் உள்ள ஹால்வே பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவுவதற்குப் பெரும்பங்காற்றினார். தரங்கம்பாடியில் சுமார் 300 நூல்கள் (பெரும்பகுதி ஓலைச்சுவடிகள்) அடங்கிய நூலகம் ஒன்றைத் தமது இறுதிக் காலத்தில் உருவாக்கினார்." விளிம்பு நிலை மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக, முதல் மிஷன் பாடசாலையையும் குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார். சென்னை மற்றும் கடலூரில் பல பள்ளிக் கூடங்களை நிறுவினார். "இந்தியாவில் பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க 300 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கெனத் தனியாக முதல் பள்ளிக்கூடத்தை அமைத்து கணவரை இழந்த பெண்களை ஆசிரியர்களாக்கி சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவர் சீகன் பால்கு" என்று கூறுகிறார் மரியா லாசர். தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ் வளர்ச்சிதுறை மானிய கோரிக்கையில் தமிழ்நாட்டில் முதன் முதலில் அச்சகத்தை அமைத்து பெருமை சேர்த்த சீகன் பால்குவுக்கு சிலையுடன் அரங்கம் அமைக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv2gd84z73vo
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்த விவகாரம் - இந்திய இராஜதந்திரியை அழைத்து கரிசனை வெளியிட்டது இலங்கை 30 JUN, 2024 | 08:17 PM எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையின் போது இலங்கை கடற்படை வீரர் உயிரிழக்க நேரிட்டமை குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகாராலய இராஜதந்திரியொருவரை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது கரிசனை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியான சட்டவிரோதமான மீன்பிடித்தல் நடவடிக்கைகள் குறித்தும் இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைள் குறித்தும் இழுவைமடி படகுகள் குறித்தும்; இலங்கை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை இலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் இந்திய இராஜாதந்திரியிடம் கையளித்துள்ளார். வெள்ளிக்கிழமை இந்திய இராஜதந்திரி இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டார் என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. இலங்கையின் கரிசனையை வெளியிடுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு இந்த விடயத்தை இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் கொண்டுவந்துள்ளார். https://www.virakesari.lk/article/187337
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
5 தடவைகள் ஒலிம்பிக் சம்பியனான எலைன் தொம்சன் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிலிருந்து விலகினார் 29 JUN, 2024 | 11:25 AM (ஆர்.சேதுராமன்) 5 தடவைகள் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற, ஜமைக்காவின் குறுந்தூர ஓட்ட நட்சத்திரமான எலைன் தொம்சன் ஹேரா, காயம் காரணமாக பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ஏற்கெனவே 200 மீற்றர் ஓட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்த அவர், தற்போது 100 மீற்றர் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார். ரியோ 2016, டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கங் களை வென்றவர் எலைன் தொம் சன் ஹேரா. அத்துடன், டோக்கியோ 2020 ஒலிம்பிக் 4 X100 மீற்றர் தொடரோட்டப் போட்டியிலும் அவர் தங்கம் வென்றார். ரியோ 2016 ஒலிம்பிக்கில் 4 X100 மீற்றர் தொடரோட்டப் போட்டியில் அவர் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தார். நேற்று வெள்ளிக்கிழமை (28) அவர் தனது 32ஆவது பிறந்த தினத்தை கொண்டாடினார். உலக வரலாற்றின் மிகச் சிறந்த குறுந்தூர ஓட்ட வீராங்கனைகளில் ஒருவரான அவர், தற்போது உலகிலுள்ளவர்களில் மிக வேகமான வீராங்கனையாக விளங்குகிறார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டங்களில் அவர் தங்கப் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், ஒலிம்பிக் 200 மீற்றர் போட்டியிலிருந்து தான் விலகுவதாக அவர் இவ்வார முற்பகுதியில் அறிவித்திருந்தார். எனினும், 100 மீற்றர் போட்டியில் பங்குபற்ற முடியும் என அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், நேற்றுமுன்தினம் (27) ஆரம்பமான ஜமைக்காவின் ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளில் எலைன் தொம்சன் பங்குபற்றவில்லை. இந்நிலையில், பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து அவர் வாபஸ் பெற்றுள்ளார். இதனால், 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வெல்லும் அவ ரின் கனவு கலைந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க க்ரோன் ப்றீ 100 மீற்றர் ஓட்டப்போட்டியின்போது எலைன் தொம்சன் காயமடைந்தார். அதனால், 11.48 விநாடிகளில் ஓடி முடித்து அவர் 9ஆவது இடத்தையே பெற்றார். 2023 ஏப்ரல் மாதத்தின் பின்னர் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் பங்குபற்றவில்லை. பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து தான் வாபஸ் பெற்றுள்ள போதிலும் சக நாட்டவர்க ளுக்கு, பெரும்பாலும் அரங்குக்கு சென்று, உற்சாகமளிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளை தவறவிட்டாலும் தனது மெய்வல்லுநர் வாழ்க்கையை தான் தொடரவுள்ளதாகவும் எலைன் தொம்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187238
-
ஈரான் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்- இரு பிரதான வேட்பாளர்களிற்கு இடையில் கடும் போட்டி
எந்த வேட்பாளருக்கும் 50 வீத ஆதரவில்லை - இரண்டாம் சுற்றில் ஈரான் ஜனாதிபதி தேர்தல் 30 JUN, 2024 | 11:57 AM ஈரான் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் 50 வீத வாக்குகள் கிடைக்காததை தொடர்ந்து தேர்தல் இரண்டாம் சுற்றிற்கு தள்ளப்பட்டுள்ளது. ஐந்தாம் திகதி இரண்டாம் சுற்று வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற தேர்தலில் மிகக்குறைந்தளவான வாக்களித்துள்ளனர் - 1979 இல் ஈரானிய குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட தேர்தல்களில் இம்முறையே மிகக்குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் வாக்களித்;துள்ளனர். சீர்திருத்த வேட்பாளர் மசூத் பெசெக்கியான் தீவிர பழமைவாத வேட்பாளர் மற்றும் அணுவாயுத பேச்சாளர் சயீத் ஜலீல் இருவருக்கும் அதிகளவு வாக்குகள் கிடைத்துள்ளன எனினும் இரு வேட்பாளர்களும் 50 வீத வாக்குகளை பெற தவறியுள்ளனர். மசூத் பெசெக்கியானிற்கு 42.5வீத வாக்குகளும் ஜலிலிக்கும் 38 வீத வாக்குகளும் கிடைத்துள்ளன. வாக்களிக்க தகுதியான 60 மில்லியன் வாக்காளர்களில் 24 மில்லியன் வாக்காளர்கள் மாத்திரமே வாக்களித்துள்ளனர். தேர்தல் முடிவுகளை 12 பேர் கொண்ட பேரவை மீளாய்வு செய்த பின்னர் இரண்டு வேட்பாளர்களும் மீண்டும் தங்கள் பிரச்சாரத்தினை ஆரம்பிப்பார்கள். https://www.virakesari.lk/article/187302
-
இலங்கையின் கடற்படுக்கையில் உள்ள மிகவும் பெறுமதியான கனிய வளம் - கண் வைத்தது அதானி நிறுவனம்
Published By: RAJEEBAN 30 JUN, 2024 | 12:57 PM கொழும்பு துறைமுகத்தின் மேற்குமுனை அபிவிருத்தி மற்றும் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் அதானி குழுமம் இலங்கையில் கடல்படுக்கையில் கனிமங்களை அகழும் திட்டத்திலும் ஈடுபடவுள்ளது. கோபல்ட் கனிமங்களை Cobalt deposit அகழ்வதற்கான நடவடிக்கையில் தாய்வானை சேர்ந்த உமிகோர் நிறுவனத்துடன் இணைந்து அதானி குழுமம் செயற்படவுள்ளது என இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த கனிமங்கள் பல தொழில்துறைகளுக்கும் இராணுவ பயன்பாட்டிற்கும் மிகவும் அவசியமானவை. இது குறித்து இன்னமும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளிற்கும் இடையிலான கடற்படுக்கை உரிமை பிரச்சினைக்கு தீர்வை கண்டதன் பின்னர் இந்திய பெருங்கடலின் ஆழத்தில் பதிந்துள்ள பெறுமதிமிக்க கனியங்களை கண்டறிவதற்காக இந்தியாவுடன் கூட்டு சேர்வதன் மூலம் குறிப்பிடதக்க நன்மைகளை பெறுவதற்கு இலங்கை எண்ணியுள்ளது. ஐக்கியநாடுகளின் கடல்சட்ட ஒப்பந்தத்தின் படி இலங்கை தனது கண்ட அடுக்கினை 200 கடல்மைல்களில் இருந்து நீடித்துள்ளது. 2009 இல் சர்வதேச கடற்படுக்கை ஆணையத்திடம் சமர்ப்பித்த விண்ணப்பத்தினை தொடர்ந்து இது சாத்தியமாகியுள்ளது. தற்போது இலங்கைக்கு கடற்கரையிலிருந்து 200 மைல்களிற்கு விசேட உரிமை காணப்படுகின்றது, இலங்கை இதன் காரணமாக மத்திய இந்திய சமுத்திரத்தில் கோபல்ட்டுகள் நிறைந்த பெரோமங்கனீஸ் மேலோடுகளை பொருளாதார நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம். எனினும் சர்வதேச கப்பல் பாதைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் இதனை முன்னெடுக்கவேண்டும். இந்தியாவும் தனது எல்லையிலிருந்து 350 கடல்மைலிற்கு உள்ள தனது கண்ட அடுக்கிற்கு உரிமையை கோரியுள்ளது. இந்தியா அதற்கான உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைத்ததும் அகழ்வில் ஈடுபடுவதற்காக காத்திருக்கின்றது. இந்த சர்ச்சையை தீர்ப்பதற்கு இரு நாடுகளிற்கும் இடையே ஒரு மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரை காத்திருக்க விரும்பாத இந்தியா கோபால்ட் நிறைந்த பகுதிகளை ஆராய்வதற்காக சர்வதேச கடற்படுக்கை அதிகார சபையிடம் 2024 ஜனவரி முதலாம் திகதி விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. எனினும் அபானசி நிக்கிட்டின் கடல்மலைப்பகுதி இலங்கையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என தெரிவித்து சர்வதேச கடற்படுக்கை அதிகார சபை இந்தியாவின் இந்த விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது. இது குறித்து சர்வதேச அமைப்பு இந்திய அதிகாரிகளிற்கு அறிவித்துள்ளது. எனினும் சர்வதேச கடற்படுக்கை அதிகார சபை மார்ச் மாநாட்டில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற விதத்தில் இந்தியா தனது பதிலை அனுப்பவில்லை. இந்த சூழ்நிலையில் இரு நாடுகளும் இந்த விவகாரத்திற்கு பரஸ்பர இணக்கப்பாட்டுடன் தீர்வை காணவேண்டிய நிலையில் உள்ளன. இலங்கை கடற்பரப்பில் சீன கப்பல்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து அதன் அதிகார வரம்பிற்கு உட்படாத இந்து சமுத்திர கடற்படுக்கையை ஆராய்வதற்கான உரிமையை இந்தியா கோருகின்றது. இலங்கையின் அதிகாரத்தின் கீழ் வரும் கோபால்ட் அதிகம் காணப்படும் அபனசி நிகிடின் கடல்மலையை ஆராய்வதற்கும் இந்தியா விரும்புகின்றது. இந்த கடல்மலையில் பில்லியன் டொலர்கள் பெறுமதியான கோபால்ட்கள் காணப்படுகின்றன. இந்த கனிமங்கள் பல தொழில்துறைகளுக்கும் இராணுவ பயன்பாட்டிற்கும் மிகவும் அவசியமானவை. https://www.virakesari.lk/article/187307
-
சிறப்பு பொலிஸ் பிரிவுகளை ஸ்தாபிக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிரான் அலஸ்
Published By: DIGITAL DESK 7 30 JUN, 2024 | 11:44 AM சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு சிறப்பு பொலிஸ் பிரிவுகளை ஸ்தாபிப்பதற்கு ஐ.நா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இலங்கை தயாராகவுள்ளதாகவும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொலிஸ்மா அதிபர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வன்முறையான மோதல்களின் எழுச்சி மோதல் வலயங்களில் பொதுமக்களின் அவலநிலை, சைபர் கிரைம், ஆயுதமயமாக்கப்பட்ட தொழில்நுட்பம் போன்ற பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களின் தோற்றம் உட்பட சர்வதேச ரீதியாக பாதுகாப்பு சவால்களின் அதிகரித்து வருகின்றமையானது சிக்கலான தன்மைகளை அனைத்து நாடுகளுக்கும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கும்பல்களின் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலைமை சர்வதேச அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. சர்வதேச பாதுகாப்புக்காக இலங்கையின் அர்ப்பணிப்பு தொடர்ந்தும் இருக்கும் என்பதோடு தற்போது தயார் நிலையில் இலங்கை பொலிஸ் பிரிவு உள்ளது. அத்துடன் இலங்கை பொலிஸ் பிரிவு தரம் மூன்றிலும் காணப்படுகின்றமை நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கும்பல் வன்முறைகளின் அதிகரித்துவரும் அச்சுறுத்தலை சமாளிக்க விசேட பொலிஸ் பிரிவுகளை ஸ்தாபிப்பதோடு நிலைநிறுத்துவது பற்றி ஐக்கிய நாடுகள் பரிசீலனை செய்ய வேண்டும். அத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அனுபவம் வாய்ந்த பொலிஸ் அதிகாரிகள் குற்றவியல் நீதித்துறை வல்லுநர்களுக்கு பங்களிக்க எமது நாடு தயாராக இருக்கிறது. இதேபோன்று பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் பங்காளி நாடுகளுடன் தனது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள இலங்கை தயாராக உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/187290
-
மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல்தரையை ஒப்படைக்க ஜனாதிபதி ரணில் மீண்டும் உத்தரவு; ஜுலை 2ஆம் வாரத்தில் பண்ணையாளர்களுடன் சந்திப்பு
மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையை ஒப்படைக்க ஜனாதிபதி ரணில் மீண்டும் உத்தரவு Published By: DIGITAL DESK 7 30 JUN, 2024 | 11:56 AM ஆர்.ராம் மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ஜுலை இரண்டாம் வாரம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் தருணத்தில் பண்ணையாளர்களை நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார். இவ்விடயம் சம்பந்தமாக ரணில் செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று சனிக்கிழமை (29) ஜனாதிபதி செயலகத்தில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர், மகாவலி அதிகார சபையின் அதிகாரிகள், வனத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களை சந்தித்திருந்தார். இதன்போது மயிலத்தமடு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரையை உறுதி செய்யுமாறு தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டம் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டது. பண்ணையாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன் பண்ணையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கடந்த தடவை உத்தரவினைப் பிறப்பித்தபோதும் அது நடைமுறையில் செயற்படுத்தப்படாமை தொடர்பிலும் ஜனாதிபதி அதிகாரிகளிடத்தில் கேள்வி எழுப்பியுள்ளதோடு குறித்த விடயத்துக்கு உரிய தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் மேய்ச்சல் தரையில் விவசாயச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது என்பதும், குடியேற்றங்கள் அகற்றப்படும் என்பதும் அதிகாரிகளால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி என்னிடத்தில் தொலைபேசி வாயிலாக தெரிவித்ததோடு, ஜூலை இரண்டாம் வாரத்தில் பண்ணையாளர்களை நேரடியாகச் சந்திப்பதற்கும் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் என்றார். https://www.virakesari.lk/article/187293
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியை ஒவ்வொரு முறையும் சிறப்பாக நடத்தும் கிருபன் அண்ணைக்கு எனது நன்றிகள். போட்டியில் வெற்றிபெற்ற பிரபா அண்ணைக்கும் இரண்டாம் இடம்பெற்ற பிரியன் அண்ணைக்கும் மூன்றாமிடம் பெற்ற கந்தப்பு அண்ணைக்கும் எனது வாழ்த்துகள். போட்டியில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளையும் வாழ்த்துகிறேன்.
-
கதிர்காம காட்டுப்பாதை திறக்கும் திகதியில் மாற்றம் : குழப்பத்தில் யாத்திரிகர்கள்!
கதிர்காமம் காட்டுப்பாதை திறக்கப்பட்டது; காட்டுவழிப் பாத யாத்திரையை ஆரம்பித்தனர் பக்தர்கள்! 30 JUN, 2024 | 11:21 AM கதிர்காமம் முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை வழியாக மக்கள் இன்று (30) காலை பாத யாத்திரையை தொடங்கினர். பக்தர்களுக்கான லாகுகலை உகந்தை காட்டுப் பாதையின் கதவானது, உகந்தை முருகன் ஆலயத்தில் இன்று காலை 6.00 மணியளவில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டினை தொடர்ந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்துவைக்கப்பட்டது. பாத யாத்திரீகர்களுக்காக பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மேற்பார்வையுடன் மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகளும் ஆளுநரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட குழுவினர் இதன்போது கலந்துகொண்டனர். அரோஹரா கோஷத்துடன் பக்தர்கள் தங்களது காட்டுவழிப் பயணத்தினை இன்று ஆரம்பித்தனர். மேலும், எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் கதிர்காம உற்சவம் 2024.07.22 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும். அத்துடன் இன்று திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் 2024.07.11 அன்று மூடப்படும். https://www.virakesari.lk/article/187294
-
யாழில் வாள்களுடன் நடமாடமுடியுமென்றால் இராணுவம், பொலிஸார் என்ன செய்கின்றனர் - சிறீதரன் கேள்வி
உங்கட படத்தைப் பார்த்த பின்னர் தான் செய்தியை தேடி இணைத்தேன் ஐயா.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தீவிரமாகும் காசா போர்.. 38 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்புகள்.. கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் பலி பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளிலுமே ஆவர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, போர் நிறுத்த முன்மொழிவு என உலக நாடுகளும் ஐ.நா சபையும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் அது அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் பாலஸ்தீன நகரங்களான காசா மற்றும் ரஃபாவில் உள்ள பொதுமக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ரஃபாவில் மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் பொழிந்த குண்டுமழையில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மற்றும் காசா நகரத்தின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவை ஏற்படுத்தும் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் தயாராக உள்ள நிலையில் இஸ்ரேல் அதை மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/304875
-
ரி20 உலக சம்பியனானது இந்தியா
இந்தியா தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி கோப்பையை முத்தமிட உதவிய ரோஹித் சர்மாவின் வியூகங்கள் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நடக்கும்போது அங்கு மகிழ்ச்சி, சோகம், கண்ணீர், விடைபெறுதல், முடிவுகள் எனப் பலவும் இருக்கும். இந்திய அணி 2வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்ற தருணத்திலும் இவை நடந்தன. கிரிக்கெட்டில் சில கேட்சுகள் காலத்தால் நினைவு கொள்ளப்படும், சில விக்கெட்டுகள் என்றென்றும் மறக்கப்படாது, சில ஓவர்கள் எப்போதும் பேசப்படும். சூர்யகுமார் பிடித்த கேட்ச், பாண்டியாவின் 2 ஓவர்கள், பும்ராவின் 2 விக்கெட்டுகள் ஆகியவை இந்திய அணி 2வது முறையாக டி20 சாம்பியன் பெற்றது பற்றி பேசப்படும் போதெல்லாம் நிச்சயம் பேசப்படும். இந்திய அணி டி20 சாம்பியன் பட்டத்தை 17 ஆண்டுகளுக்குப் பின் பெறுவதற்கும் வரலாறு படைப்பதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் என்பதை மறுக்க முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அதிலும் இந்திய அணியின் பிரம்மாஸ்திரமாக கருதப்படும் பும்ரா தேவைப்பட்ட நேரத்தில் வீசிய 2 திருப்புமுனை ஓவர்கள், ஹர்திக் பாண்டியாவின் ஆகச் சிறந்த பந்துவீச்சில் கிடைத்த 2 விக்கெட்டுகள் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி ஆட்டத்தை இந்திய அணியின் கைகளில் சேர்த்தன. இந்தத் தருணத்தைத்தான் இந்திய அணியும் கடந்த 11 ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்தது. 11 ஆண்டுகளாக ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட பல போட்டிகளைச் சந்தித்தும் அதில் அரையிறுதி, இறுதிப்போட்டி வரை சென்றும் ஒன்றில்கூட சாம்பியன் பட்டத்தை இந்திய அணியால் வெல்ல முடியாத சூழல் இருந்தது. அந்த ஏக்கத்துக்கும் நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதோடு, இரு மிகப்பெரிய ஜாம்பவான்களின் டி20 வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டது. ஆம், ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா, ‘கிங்’ கோலி இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, ரசிகர்களிடம் இருந்து மகிழ்ச்சியோடு விடைபெற்றனர். பர்படாஸில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்து 7 ரன்களில் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பரிசுத் தொகை எவ்வளவு? பட மூலாதாரம்,GETTY IMAGES டி20 உலகக்கோப்பைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.93.80 கோடியை பரிசுத் தொகையாக ஐசிசி அறிவித்திருந்தது. சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் இந்திய மதிப்பில் ரூ.20.42 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2வது இடம் பெற்ற தென் ஆப்ரிக்க அணிக்கு ரூ.10.67 கோடி வழங்கப்பட்டது. அரையிறுதி வரை வந்த இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ரூ.6.56 கோடி கிடைக்கும். 2வது சுற்றைக் கடக்காத அணிகளுக்கு தலா ரூ.3.18 கோடியும், 9 முதல் 12வது இடம் வரை பெற்ற அணிகளுக்கு ரூ.2.06 கோடியும் பரிசாக வழங்கப்படும். மேலும், 13 முதல் 20வது இடம் பிடித்த அணிகளுக்கு ரூ.1.87 கோடி வழங்கப்படும். ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு வெற்றிக்கும் கூடுதலாக ரூ.26 லட்சம் பெறும். இந்தக் கணக்கில் அரையிறுதி, இறுதிப்போட்டி வெற்றிகள் சேராது. ஓய்வு பெறச் சிறந்த தருணம் இல்லை சாம்பியன் பட்டம் வென்றபின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக கடினமாக உழைத்தது, கடந்து வந்ததை நான் தொகுத்துக் கூறுவது கடினம். ஏராளமானோரின் உழைப்பு, பணிகள், திட்டங்கள் இந்த வெற்றிக்குப் பின்னால் அடங்கியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் இந்த சாம்பியன்ஷிப். ஏராளமான அழுத்தங்கள், நெருக்கடிகள் நிறைந்த ஆட்டம். இந்த அழுத்தத்தில் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை அணியினர் நன்கு உணர்ந்திருந்தனர் என்பது சிறந்த உதாரணம். இதற்கு முன் அதிக அழுத்தம் கொண்ட ஆட்டங்களில் தவறும் செய்துள்ளோம். ஆனால் இந்த ஆட்டத்தில் என்ன செய்யக்கூடாது என்பதை வீரர்கள் நன்கு தெரிந்திருந்தனர். இந்த அணியை வழிநடத்திச் சென்றதை பெருமையாகக் கருதுகிறேன்," என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அணியை சுதந்திரமாக வழிநடத்தி, விளையாடி, திட்டங்களை செயல்படுத்த அனுமதியளித்த நிர்வாகம், பயிற்சியாளர் டிராவிட், மேலாண்மை என அனைவருக்கும் நன்றி தெரிவித்த ரோஹித், வீரர்கள் தனிப்பட்ட ரீதியிலும், குழுவாகவும் சிறப்பாகச் செயல்பட்டதாகப் பாராட்டினார். "விராட்டின் ஃபார்ம் குறித்து கடந்த 15 ஆண்டுகளாக யாரும் சந்தேகத்தித்து இல்லை. இதுபோன்ற தருணத்தில்தான் பெரிய வீரர்கள் விஸ்வரூமெடுப்பார்கள். கடைசி வரை கோலி இருந்து ஆட்டத்தில் முக்கியப் பங்காற்றினார். பேட்டிங் செய்வதற்கு எளிதான விக்கெட் இல்லை, இருப்பினும் கோலி அருமையாக பேட் செய்தார். அக்ஸர் படேல் ஆட்டம் முக்கியமானதாக இருந்தது. பும்ராவை பற்றிக் கூற வேண்டுமானால், அவரின் பந்துவீச்சு மாஸ்டர் கிளாஸ். ஹர்திக் கடைசி ஓவரை அற்புதமாக வீசினார். இதுதான் இந்திய அணிக்காக நான் விளையாடிய கடைசி சர்வதேச டி20. டி20 தொடரிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இதைவிடச் சிறந்த தருணம் இருக்காது. ஒவ்வொரு தருணத்தையும் நேசிக்கிறேன். டி20 மூலம் இந்திய அணிக்குள் வந்து, அதிலிருந்தே விடை பெறுகிறேன். சாம்பியன்ஷிப் என்ற வார்த்தையைத்தான் விரும்பினேன், இதுதான் தேவையாக இருந்தது” எனத் தெரிவித்தார். டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித், கோலி என்ற இரு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் யாரும் எதிர்பாராதது. ரோஹித் சர்மா 159 டி20 போட்டிகளில் 4,231 ரன்களையும், 5 சதங்களையும் விளாசியுள்ளார். 2 உலகக்கோப்பைகளை வென்றபோதும் ரோஹித் இருந்துள்ளார். 2007ம் ஆண்டில் இந்திய அணியில் வீரராகவும், 2024இல் கேப்டனாகவும் ரோஹித் இருந்தார். இரு ஜாம்பவான்களும் கடந்த 2022 டி20 உலகக்கோப்பைக்குப் பின் டி20 போட்டிகளில் விளையாடவில்லை. டி20 உலகக்கோப்பைக்காகவே ஜனவரியிலிருந்து ரோஹித் விளையாடத் தொடங்கினார். இந்த உலகக் கோப்பையிலும் 257 ரன்களை ரோஹித் குவித்து அதிக ரன் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பெற்றார். வியூகம் அமைத்த இந்திய அணி பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீரா வெறி இந்திய வீரர்களிடம் இருந்தது. இதனால் தென் ஆப்ரிக்கா பேட்டர்களின் ஒவ்வொரு விக்கெட்டையும் சரியான வியூகம் அமைத்து வீழ்த்தினர். விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கிலேயே பும்ரா முதல் ஓவரை வீசினார். அவரின் எண்ணப்படியே அவரது முதல் ஓவரில் வீசப்பட்ட இன்கட்டரில் ஹென்ட்ரிக் கிளீன் போல்டாகி(9) ஆட்டமிழந்தார். அடுத்ததாக அர்ஷ்தீப் தனது பங்குக்கு கேப்டன் மார்க்ரம்(4) விக்கெட்டை சாய்த்தார். டீ காக், ஸ்டெப்ஸ் இருவரும் சேர்ந்து ஆட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்று பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால், இந்த பார்ட்னர்ஷிப்பையும் இந்திய அணியினர் உடைத்தனர். ஸ்டெப்ஸை அதிரடியாக சில ஷாட்களை ஆட வைத்து, அடுத்த பந்தை ஃபுல் டாஸாக வீசி போல்டாக்கினார் அக்ஸர் படேல். ரோஹித் வலையில் சிக்கிய டீ காக் இருப்பினும் டீ காக் தொடர்ந்து டீப் பேக்வார்ட் திசையில் சிக்ஸர், பவுண்டரி அடித்ததைக் கண்டறிந்த கேப்டன் ரோஹித் சர்மா அடுத்த வியூகத்தை அமைத்தார். டீ காக் மீண்டும் டீப் பேக்வார்டு திசையில் ஷாட் அடிக்கும் வகையில் அர்ஷ்தீப்பை பந்துவீசச் செய்து அங்கு குல்தீப் யாதவை ஃபீல்டிங் செய்ய வைத்தார். ஃபீல்டர் இருப்பதைக் கவனிக்காமல் மீண்டும் பெரிய ஷாட்டுக்கு முயன்றபோது, இந்திய கேப்டன் ரோஹித் விரித்த வலையில் டீ காக் சிக்கி(39) விக்கெட்டை இழந்தார். இதுவரை இந்திய அணியின் திட்டப்படி நகர்ந்தது. மிரட்டிய கிளாசன் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், கிளாசன் களத்திற்கு வந்தது முதல் ஆட்டத்தின் போக்கு அப்படியே திசை மாறி தென் ஆப்ரிக்கா பக்கம் சென்றது. ரன்ரேட்டை குறையவிடாமல் சிக்ஸர், பவுண்டரி என இந்திய பந்துவீச்சைத் துவைத்த கிளாசன் ஒட்டுமொத்த ரசிகர்களையும் நிசப்தமாக்கினார். களத்தில் இருந்த இந்திய அணியினருக்கு கிளாசனின் முரட்டுத்தனமான ஷாட்கள், அசுரத்தனமான பேட்டிங்கை பார்த்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. கீரிஸில் நின்று கொண்டே ஃபேக்புட்டில் சிக்ஸர், லாங்ஆனில் சிக்ஸர் என இந்திய பந்துவீச்சைக் காலி செய்தார் கிளாசன். ஒரு கட்டத்தில் பந்துகள் குறைவாகவும், தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்குத் தேவைப்படும் ரன்கள் அதிகமாகவும் இருந்தது, ஏறக்குறைய 20 பந்துகள் வித்தியாசத்தில் இருந்தது. ஆட்டம் திரும்பியது பட மூலாதாரம்,GETTY IMAGES அக்ஸர் படேல் ஓவரை குறிவைத்து கிளாசன் சிக்ஸர், பவுண்டரி என விளாசி, 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். கிளாசன் தனது காட்டடியால் தேவைப்படும் ரன்கள், பந்துகளை சமன் செய்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆட்டம் மெல்ல இந்திய அணியின் கரங்களில் இருந்து நழுவுவதை கேப்டன் ரோஹித் அறிந்தார். கடைசி 30 பந்துகளில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 30 ரன்கள்தான் தேவைப்பட்டது. ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற நிலை இருந்தது. திருப்புமுனை தந்த பாண்டியா அப்போதுதான் ஹர்திக் பாண்டியாவை 2வது ஓவர் வீச ரோஹித் அழைத்தார். ஹர்திக் பாண்டியா முதல் பந்தை ஆஃப் சைடில் விலக்கி வீசவே அதைத் தேவையின்றி தொட்ட கிளாசன் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். கிளாசன் விக்கெட் வீழ்ந்ததுமே இந்திய அணியினர் மகிழ்ச்சியில் குதித்தனர். கிளாசன் ஆட்டமிழந்தது முதல் தென் ஆப்ரிக்கா நெருக்கடியிலும், அழுத்தத்திலும் சிக்கி பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதை மறந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ரா மாஸ்டர்கிளாஸ் பும்ரா 18வது ஓவரை வீசினார். வர்ணனையாளர்கள் கூறியபடி, பும்ராவின் ஓவரில் யான்சென் கிளீன் போல்டாகி வெளியேற 4 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுக்கவே வெற்றி இந்தியாவின் அருகே வந்தது. அர்ஷ்தீப்பும் 19வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசி 4 ரன்கள் கொடுக்கவே ஆட்டம் பரபரப்பானது. கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. வரலாற்று கேட்ச் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை வீசினார். முதல் பந்திலேயே லாங்ஆன் திசையில் மில்லர் பெரிய ஷாட் அடிக்க, சிக்ஸருக்கு சென்ற பந்தை சூர்யகுமார் கேட்ச் பிடித்தார். ஆனால் நிலை தடுமாறி பவுண்டரிக்கு வெளியே செல்லும்போது பந்தை மைதானத்துக்குள் தூக்கி வீசிவிட்டு, மீண்டும் எல்லைக் கோட்டுக்குள் வந்து கேட்ச் பிடித்து ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதன்பின் வந்த ரபாடா ஒரு பவுண்டரி அடித்த நிலையில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி நேர அழுத்தத்தைத் தாங்காமல் தென் ஆப்ரிக்க அணியினர் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். ஹர்திக் பாண்டியா வீசிய 17வது ஓவரில் இருந்துதான் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பியது. இந்த ஓவரில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா வியூகம் அமைத்துச் செயல்பட்ட அனைத்தும் வெற்றியாக அமைந்தது. உலகத் தரமான பந்துவீச்சாளர் பும்ரா பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எப்படி ஒரு மால்கம் மார்ஷல் கிடைத்தாரோ அதுபோல் இந்திய அணிக்கு கிடைத்தவர் ஜஸ்பிரித் பும்ரா. தட்டையான பார்படாஸ் ஆடுகளத்தில் பந்தை ஸ்விங் செய்வது கடினமானது. இந்த விக்கெட்டில் பேட்டர்கள் ‘விளையாட முடியாத’ இரு பந்துகள் வீசி இரு விக்கெட்டுகளை பும்ரா எடுத்தது ஆட்டத்தின் திருப்புமுனை. பும்ராவின் ஒவ்வொரு பந்தும் மிகத் துல்லியமாக லைன் லென்த்தில் கச்சிதமாக ஈட்டிபோல் இறங்கின. அதிலும் 18வது ஓவரில் தேய்ந்த பந்தில் யான்சென் விக்கெட்டை இன்கட் மூலம் போல்டாக்கியது பந்துவீச்சில் பும்ரா அறிவுஜீவி, உலகின் முதல்தரமான பந்துவீச்சாளர் என்பதை வெளிக்காட்டியது. 1983இல் கபில்தேவ், 2024இல் ஸ்கை பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1983ஆம் ஆண்டு இந்திய அணி முதல் உலகக்கோப்பையை வென்றது. அப்போது விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த ஷாட்டில் கேப்டன் கபில் தேவ் ஓடிச் சென்று பிடித்த கேட்ச் இன்றுவரை மறக்க முடியாதது, இன்னும் பேசப்படுகிறது. அதுபோன்ற ஒரு கேட்சைத்தான் சூர்யகுமார் நேற்று எடுத்தார். இந்திய அணி 16 ரன்களை டிபெண்ட் செய்தாக வேண்டிய நிலையில் இருந்தது. மில்லர் சிக்ஸருக்கு அடித்துவிட்டோம் என்று பெருமூச்சு அடைந்த நேரத்தில் அந்த பந்தை கேட்ச் பிடித்த சூர்யகுமார், தான் பவுண்டரி கோட்டுக்கு வெளியே நிலைதடுமாறிச் செல்கிறோம் என்றுணர்ந்த தருணத்தில் பந்தை மேலே தூக்கிப் போட்டுவிட்டு வெளியே சென்றார். பின்னர் மீண்டும் எல்லைக் கோட்டுக்குள் வந்து பந்தை கேட்ச் பிடித்த அவரின் ஸ்மார்ட் கேட்ச் காலத்துக்கும் மறக்கப்படாது. 1983இல் கபில்தேவ், 2024இல் சூர்யகுமார். “கேட்சஸ் வின் மேட்சஸ்” என்று சொல்வார்கள், இந்த கேட்ச்தான் உலகக் கோப்பையை வென்று கொடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES கிங் என நிரூபித்த கோலி டி20 உலகக்கோப்பை தொடங்கியது முதல் மோசமான ஃபார்ம், அரையிறுதிலும் சொதப்பலான ஆட்டம் என்று கோலி மீது கடுமையான விமர்சனங்கள் வந்தன. கோலிக்கு சாதாரண சூழலில் மலரக்கூடியவர் அல்ல, அசாதாரண சூழல்,நெருக்கடியில்தான் கோலி என்ற பேட்டர் விஸ்வரூமெடுப்பார் என்பதை நேற்றும் வெளிப்படுத்தினார். முதல் 5 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்களை விளாசிய கோலி, அடுத்தடுத்து இந்திய அணிக்கு 3 விக்கெட்டுகள் சென்றவுடன் ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்து ஆங்கர் ரோலுக்கு மாறினார். அடுத்த 48 பந்துகளில் ஒரு பவுண்டரி மட்டுமே கோலி விளாசினார். கோலியின் ஆங்கர் ரோல் குறித்து பல விமர்சனங்கள் வந்தநிலையில் அதைக் கண்டு கொள்ளாமல் நேற்று தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதிப்போட்டி, இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் வேறு இல்லை என்பதை உணர்ந்த கோலி ஆங்கர் ரோலிலிருந்து அதிரடிக்கு மாறவே இல்லை. ரபாடாவின் 18வது ஓவர், யான்சென் ஓவரில்தான் கோலி தனது கியரை மாற்றி சிக்ஸர் விளாசினார். இரு ஓவர்களில் இருந்தும் 33 ரன்கள் கிடைத்தது. கோலி தனது கடைசி 11 பந்துகளில் 26 ரன்களை சேர்த்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார். என்னால் ஆங்கர் ரோலும் செய்ய முடியும், இதுபோல் தேவைக்கு ஏற்றார்போல் பேட்டை சுழற்றவும் முடியும் என்பதை நிரூபித்துவிட்டு கிங் கோலி விடைபெற்றார். அர்ஷ்தீப் கட்டுக்கோப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானவர். நான்கு ஓவர்களை வீசிய அர்ஷ்தீப் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 12 டாட் பந்துகள் அதாவது 2 ஓவர்கள் மெய்டன் எடுத்ததும் அடக்கம். பவர்ப்ளேவில் அர்ஷ்தீப் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதிலும் கேப்டன் மார்க்ரம் விக்கெட், டீக் காக்கிற்கு வலை விரித்து அவரைச் சிக்க வைத்த பந்துவீச்சு ஆகியவை மாஸ்டர் கிளாஸ். மேலும், 19வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய 4 ரன்கள் மட்டுமே கொடுத்து மில்லரை ரன் அடிக்கவிடாமல் அடக்கியது அர்ஷ்தீப்பின் சிறப்பான பந்தவீச்சை வெளிக்காட்டியது. தோல்வி அடைந்த சுழற்பந்துவீச்சு சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற மைதானம் என நம்பி குல்தீப், ஜடேஜா, அக்ஸர் என 3 சுழற்பந்துவீச்சாளர்களை எடுத்தநிலையில் 9 ஓவர்களை வீசி இவர்கள்தான் 109 ரன்களை வாரி வழங்கினர். வேகப்பந்துவீச்சாளர்கள் 3 பேரும் 58 ரன்களையே வழங்கியிருந்தனர், 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதில் ஒன்றில்தான் ரோஹித்தின் கணிப்பு தவறியது. https://www.bbc.com/tamil/articles/cne4zkl3vvwo
-
ஜோ பைடனை மாற்ற வலியுறுத்தல்: வேட்பாளராகிறார் மிச்சைல் ஒபாமா?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பொது விவாத நிகழ்ச்சியில், ஜனாதிபதி ஜோ பைடனின் வாதம் திறம்பட அமையவில்லை. இதனால், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக, அவருக்கு பதிலாக மிச்சைல் ஒபாமாவை நிறுத்த வேண்டும் என்ற வாதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப், போட்டியிட உள்ளனர். விரைவில் நடக்க உள்ள இந்த கட்சிகளின் மாநாட்டில், இவர்கள் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இதில் இருவரும் வரம்புமீறி, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜோ பைடன் வாதங்கள் வலுவிழந்து இருந்தது என, பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, டிரம்பின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஜோ பைடன் தடுமாறினார். வயது முதிர்வும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது, ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால், ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடனை மாற்றுவது தொடர்பாக பேச்சு எழுந்து உள்ளது. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி, மிச்சைலை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பராக் ஒபாமா, ஜோ பைடனுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ‘விவாதத்தில், பைடன் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், அவர் நாட்டுக்காக செய்த பணிகளை நினைத்து பார்க்க வேண்டும்’ என, அதில் அவர் கூறியுள்ளார். https://thinakkural.lk/article/304869
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறத் தவறிய ஒலிம்பிக் சம்பியனான கேத் கெம்பல் ஓய்வு Published By: DIGITAL DESK 7 28 JUN, 2024 | 02:55 PM அவுஸ்திரேலியாவின் பிரபல நீச்சல் வீராங்கனை கேத் கெம்பல் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற தவறியதால் சர்வதேச நீச்சல் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடந்த ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில், கேத் கெம்பல் அடைவு மட்டத்தை எட்டவில்லை. இதன் காரணமாக 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் போட்டியிடும் தகுதியை அவர் இழந்தார். ப்ரீஸ்டைல் நீச்சலின் 100 மீற்றர் மற்றும் 50 மீற்றர் போட்டிகளில் அடைவு மட்டத்தை எட்டாததன் காரணமாக, 5 ஆவது தடவையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கின்ற அரிய வாய்ப்பை 32 வயதான கெத் கெம்பல் இழந்தார். 2008 பிஜிங் , 2012 லண்டன், 2016 ரியோ மற்றும் 2022 டோக்கியோ ஆகிய நான்கு ஒலிம்பிக் அத்தியாயங்களில் பங்குபற்றிய கேத் கெம்பல், 4 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக 8 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார். 2008 பீஜிங் ஒலிம்பிக்கின் 50 மீற்றர் ப்ரீஸ்டைல் மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கின் 100 மீற்றர் ப்ரீஸ்டைல் ஆகிய இரண்டு தனிநபர் போட்டி நிகழ்வுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார். ஏனைய 6 பதக்கங்களையும் அணிநிலை போட்டிகளிலேயே வென்றிருந்தார். உலக சம்பியன்ஷிப்பிலும் 4 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்கள் வென்றுள்ளார் கேத் கெம்பல். "பல்வேறு விதமான உணர்ச்சிகள் இருந்தாலும், நான் எதிர்பார்த்த விதத்தில் முடிவு கிடைக்கவில்லை. நான் 5 ஆவது தடவையாகவும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக முழு முயற்சியையும் எடுத்தேன். அதற்காக என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தேன், சிறப்பான விதத்தில் நான் விடை பெறுகின்றேன்" என்றார். அணிநிலை நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றிருந்த கேத் கெம்பல், தனது இளைய சகோதரியான பிரொன்டேவுடன் இணைந்து ஒலிம்பிக், உலக சம்பியன்ஷிப் , பொதுநலவாய விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார். "நாங்கள் 3 ஒலிம்பிக், 2 பொதுநலவாய விளையாட்டு மற்றும் மூன்று உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு ஒன்றாகச் செல்வோம் என்று நாங்கள் கற்பனை செய்து பார்த்ததில்லை” என கேத்தின் இளைய சகோதரி பிரொன்டே கெம்பல் குறிப்பிட்டுள்ளார். தகுதிகாண் போட்டியின் முடிவில் ஒலிம்பிக் தகுதியை எட்டாத கேத் கெம்பலை, நீச்சல் தடாகத்தில் சக போட்டியாளர்கள் ஆரத்தழுவி விடைகொடுத்திருந்தமை அனைவரையும் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியது. https://www.virakesari.lk/article/187173
-
யாழில் வாள்களுடன் நடமாடமுடியுமென்றால் இராணுவம், பொலிஸார் என்ன செய்கின்றனர் - சிறீதரன் கேள்வி
யாழில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாடமுடியுமென்றால் இராணுவம், பொலிஸார் என்ன செய்கின்றனர் - சிறீதரன் கேள்வி 29 JUN, 2024 | 08:17 PM யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாடமுடியும் என்றால் யாழில் சிவில் நடவடிக்கைகள், பொலிஸார், இராணுவம், கடற்படை, விமானப்படை செயற்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடியமை தொடர்பாக நாளை மறுதினம் சபாநாயகருக்கும் எழுத்து மூலம் வழங்கி உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன் என்றார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின், இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் அவதானிக்கப்படமை தொடர்பாக கொடிகாமத்தில் இன்று ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த போதே சிவஞானம் சிறீதரன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் இந்து கல்லுாரிக்கு அருகில் உள்ள எனது இல்லத்தின் முன்பாக 4 மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் இனந்தெரியாதவகையில் முகத்தையும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தகட்டையும் கறுப்பு துணிகளால் மறைத்து வாள்களை சுழற்றியவாறு வீதியால் செல்வது எனது வீட்டு கண்காணிப்பு கமராவின் மூலம் அவதானிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல குற்றச்செயல்களுக்குப் பின்னால் இராணுவம் கடற்படை, விமானப்படை, பொலிஸார், உளவுப்பிரிவு பின்னணியில் இருப்பது மிகத் துலாம்பரமாக வெளிப்படுத்துகிறது. யுத்தகாலத்தில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் ஃபீல்ட் பைக்கில் கறுப்பு துணிகளை கட்டியவாறு வந்து துப்பாக்கி சூட்டில் ஈடுப்ட்டனர். அதே பாணியில் உள்ளூர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி ஏன் இராணுவம் கடற்படை, விமானப்படை, பொலிஸார், உளவுப்பிரிவு செய்யக்கூடாது என்ற சந்தேகம் எமக்கு இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் செய்வதாகவும் குழுக்கள் செய்வதாகவும் காட்டிக்கொண்டு அவர்களை கைது செய்யாமலும் நடவடிக்கை எடுக்கமாலும் விட்டு யாழ்ப்பாணத்தை அச்ச சூழலுக்குள் வைத்திருக்க முற்படுகின்றனர். இதற்கு பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு இருப்பது மிகத் துலாம்பரமாக தெரிகிறது. யாழ்ப்பாணம் தற்போது மிகப் பயங்கரமான சுழலில் இருப்பது என்பதை மிகத்தெளிவாக சொல்லிவைக்க விரும்புகிறேன். எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடியமை தொடர்பாக நாளை மறுதினம் சபாநாயகருக்கும் எழுத்து மூலம் வழங்கி உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன். இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தயங்கினால் யாழ்ப்பாணம் இன்னமும் மோசமான நிலைக்குச் செல்லும். - என்றார். https://www.virakesari.lk/article/187277
-
திருகோணமலையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மாயம்
காணாமல்போன இஸ்ரேலியப் பெண் மயங்கிய நிலையில் 3 நாட்களின் பின் மீட்பு 29 JUN, 2024 | 11:50 PM மர்மமான முறையில் காணாமல்போன இஸ்ரேலிய பெண் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில் இன்று சனிக்கிழமை (29) மீட்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், மூன்று நாட்களுக்கு பின்னர் இன்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகம், உப்புவெளி பிரதேச சபை, சுற்றுலாப் பணியகம் ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டது. ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய, குறித்த தரப்பினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு, மர்மமான முறையில் காணாமல்போன பெண்ணை மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில் இன்று(29) மீட்டு எடுத்துள்ளனர். குறித்த சுற்றுலா பயணி மருத்துவ பரிசோதனையின் பின், அவருடைய நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. இதில் மாகாண சுற்றுலா பணியக தலைவர் ஏ .பி.மதனவாசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டுக்கு அமைய திருகோணமலை உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 22ஆம் திகதி நாட்டுக்கு வருகை தந்த 25 வயதுடைய டேமர் எமிடாய் (Tamar Amitai) என்ற இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணியே திருகோணமலைக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இந்தப் பெண் இணையவழி ஊடாக திருகோணமலையிலுள்ள ஹோட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய்து, 22ஆம் திகதி அங்கு சென்று தங்கியுள்ளார். இந்நிலையில், அவர் 26ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து, ஹோட்டலின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 நாட்களின் பின் இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187281
-
ரி20 உலக சம்பியனானது இந்தியா
தென் ஆபிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது தடவையாக ரி20 உலக சம்பியனானது இந்தியா 29 JUN, 2024 | 11:51 PM (நெவில் அன்தனி) பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 7 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இந்தியா ரி20 உலகக் கிண்ணத்தை 2ஆவது தடவையாக சுவீகரித்தது. தென் ஆபிரிக்காவில் 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் எம்.ஸ். தோனி தலைமையில் சம்பியனான இந்தியா இப்போது 17 வருடங்களின் பின்னர் ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இரண்டாவது தடவையாக உலக சம்பியனானது. இந்த இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவுக்கு மீண்டும் துரதிர்ஷ்டமே காத்திருந்தது. விராத் கோஹ்லி குவித்த அபார அரைச் சதம், ஹார்திக் பாண்டியாவின் கடைசி ஓவர் உட்பட கட்டுப்பாடான பந்துவீச்சு, ஜஸ்ப்ரிட் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு என்பன இந்தியாவை சம்பியனாக்கின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்ததாடத் தீர்மானித்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. விராத் கோஹ்லி, அக்சார் பட்டேல் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் பலனாகவே இந்தியா கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. ரோஹித் ஷர்மா (9), ரிஷாப் பான்ட் (0), சூரியகுமார் யாதவ் (3) ஆகிய மூவரும் முதல் 5 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்ததால் இந்தியா பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், விராத் கோஹ்லி, அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணிக்கு உயிர்ப்பைக் கொடுத்தனர். இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த விராத் கோஹ்லி 59 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களைக் குவித்தார். அவருக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடிய அக்சார் பட்டேல் 31 பந்துகளில் ஒரு பவண்டறி, 4 சிக்ஸ்களுடன் 47 ஓட்டங்களைப் பெற்றார். அவர்களை விட ஷிவம் டுபே 27 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அன்றிச் நோக்கியா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 177 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இந்தியாவைப் போன்றே தென் ஆபிரிக்காவின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை. ரீஸா ஹெண்ட்றிக்ஸ் (4), அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் (4) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். எனினும் குவின்டன் டி கொக், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 31 ஓட்டங்களுடன் வெளியேறினார். மொத்த எண்ணிக்கை 106 ஓட்டங்களாக இருந்தபோது குவின்டன் டி கொக், ஒரே விதமாக லோங் லெக்கில் இரண்டாவது சிக்ஸ் அடிக்க முயற்சித்து 39 ஓட்டங்களுடன் வீணாக தனது விக்கெட்டை இழந்தார். ஹென்றிச் க்ளாசன், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடி இந்தியாவுக்கு சோதனையைக் கொடுத்தனர். அவர்கள் இருவரும் 45 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஹென்றிச் க்ளாசன் 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (151 - 5 விக்.) க்ளாசனின் ஆட்டம் இழப்பு தென் ஆபிரிக்காவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. கடைசி ஓவரில் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு மேலும் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஹார்திக் பாண்டியாவின் முதல் பந்தை சிக்ஸாக விளாசி அடிக்க டேவிட் மில்லர் முயற்சித்தார். ஆனால், பவுண்டறி எல்லையில் சூரியகுமார் யாதவ் பவுண்றி எல்லையில் பந்தைப் பிடித்து உள்ளே எறிந்துவிட்டு வேளியே சென்று மீண்டும் உள்ளே வந்து பந்தைப் பிடிக்க டேவிட் மில்லர் ஆட்டம் இழந்தார். அத்துடன் தென் ஆபிரிக்காவின் வெற்றிக் கனவு கலைந்துபோனது. அடுத்த 5 பந்துகளில் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்திய பாண்டியா இந்தியா உலக சம்பியனாவதை உறுதிசெய்தார். இதேவேளை, விராத் கோஹ்லி ஆட்டநாயகன் விருதுடன் ரி20 உலகக் கிண்ண சம்பியன் பட்டத்துடன் விடைபெற்றார். https://www.virakesari.lk/article/187282