Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கண்ணீர் பொங்கும் கொண்டாட்டத்துடன் அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியதை அந்த தேசத்தின் மக்கள் கொண்டாடி வருகிறார்கள் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2024-ஆம் ஆண்டு, ஜூன் 24-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத நாளாக மாறிவிட்டது. எப்போது, எங்கு என்ன நடக்கும் என நிச்சயமற்ற வாழ்க்கைக்கு மத்தியில், பல்வேறு சிக்கல்கள், நிர்வாகக் குளறுபடிகள், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, கிரிக்கெட் பயிற்சி எடுத்து, டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியதை அந்த தேசத்தின் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் வெற்றியை வெறுத்து, வங்கதேசத்தின் வெற்றியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து சூப்பர்-8 சுற்றோடு வெளியேறியது. 2022-ஆம் ஆண்டுக்குப்பின் தொடர்ந்து 2-வது முறையாக அரையிறுதிக்குச் செல்லாமல் ஆஸ்திரேலிய அணி வெளியேறியது. வங்கதேச அணியை வென்றால் ஆப்கானிஸ்தானுக்கு வழிபிறக்கும், ஆப்கானிஸ்தானை வங்கதேசம் வென்றால், ஆஸ்திரேலியாவுக்கு கதவுகள் திறக்கும் என்ற ரீதியில்தான் ஆட்டம் நடந்தது. வங்கதேசத்தின் வெற்றி அந்த அணிக்கு நலம் பயக்கிறதோ இல்லையோ, ஆஸ்திரேலியா அரையிறுதி செல்ல உதவியாக இருக்கும் என்பதால், ஆஸ்திரேலியா ஆவலோடு காத்திருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி தனது கட்டுக்கோப்பான பந்துவீச்சு, பீல்டிங்கால் வங்கதேசத்தை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் அரையிறுதிக் கனவை தவிடுபொடியாக்கியது. இதையடுத்து, 27-ஆம் தேதி காலையில் நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியுடன் ஆப்கானிஸ்தான் மோதுகிறது. அன்று இரவு நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் வென்றது. இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு? முதல் அரையிறுதி ஆட்டத்தில் மழை பெய்தால் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 2-வது அரையிறுதி ஆட்டத்துக்கு ரிசர்வ் நாள் இல்லை, மாறாக கூடுதலாக 250 ரன்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியா-இங்கிலாந்து ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே ரத்தானால், இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும். ஏனென்றால் குரூப்-1 பிரிவில் முதலிடம் பிடித்ததால் இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதியாகும். இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் நடக்கும் கயானாவில் 27-ஆம் தேதி 88% மழைக்கும் 18% இடியுடன் மழைபெய்யவும் வாய்ப்புள்ளது. மைதானத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வசதியும் கயானா மைதான நிர்வாகத்திடம் இல்லை. ஆதலால், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டால் இந்தியா இறுதிப்போட்டி செல்வது உறுதியாகும். கிங்ஸ்டவுனில் நடந்த டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான், 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது. மழையின் குறுக்கீட்டால் டி.எல்.எஸ் விதிப்படி 19 ஓவர்களில் 119 ரன்கள் சேர்க்க வங்கதேசத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வங்கதேச அணி 17.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. குரூப்-1 பிரிவில் அரையிறுதிக்கு இந்திய அணி ஏற்கெனவே தகுதி பெற்ற நிலையில் 2-வது இடத்துக்கு ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகள் போட்டியிட்டன. ஒவ்வொரு அணியின் வெற்றியும், தோல்வியும் மற்றொரு அணிக்கு அரையிறுதிக் கதவை திறக்கும் வகையில் இருந்தது. ஆனால், இறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை வெளியேற்றி ஆப்கானிஸ்தான் முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு முதன்முதலாக பயிற்சியாளராகப் பதவி ஏற்ற இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜோனத்தன் டிராட்டுக்கு கிடைத்த முதல் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான் அணிக்குப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பிராவோ இருந்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"நாங்கள் அரையிறுதி செல்வோம் என்று ஜாம்பவான் பிரையான் லாரா மட்டும் சரியாகக் கணித்திருந்தார்" என்றார் ரஷித் கான் ‘நம்பமுடியவில்லை, சாதனைதான்’ வெற்றிக்குப்பின் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித்கான் கூறுகையில், உலகக் கோப்பை அரையிறுதி செல்வது தங்களுக்குக் கனவாக இருந்தது என்றார். “அந்த நோக்கில்தான் போட்டித் தொடரைத் தொடங்கினோம். எங்கள் நம்பிக்கை நியூசிலாந்தை வென்றதும் உறுதியானது. இப்போதும் நம்பமுடியவில்லை. நாங்கள் அரையிறுதி செல்வோம் என்று ஜாம்பவான் பிரையான் லாரா மட்டும் சரியாகக் கணித்திருந்தார். நான் ஒரு பார்ட்டியில் அவரைச் சந்தித்தபோது, உங்கள் கணிப்பைப் பொய்யாக்கி தலைகுனிவை ஏற்படுத்தமாட்டோம் என்று கூறியிருந்தேன்,” என்றார். மேலும், “130 ரன்கள் சேர்த்தாலே இந்த விக்கெட்டில் நல்ல ஸ்கோர். ஆனால் எங்களால் 115 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது. வங்கதேசம் எங்களுக்குக் கடினமான சவால் அளிப்பார்கள் என எங்களுக்குத் தெரியும், அதனால் எங்களின் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றோம். தெளிவான திட்டத்துடன் களமிறங்கினோம். எங்கள் மக்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பினோம். ஒவ்வொரு வீரரும் அற்புதமான பணியைச் செய்துள்ளனர்,” என்றார். “புதிய பந்தில் பரூக்கியும், நவீனும் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தத் தொடர் முழுவதுமே இருவரும் சிறப்பாகப் பந்துவீசினர். குல்புதீன் நயீப் எடுத்தவிக்கெட் எங்களுக்கு அந்த நேரத்தில் விலைமதிப்பில்லாதது. நாங்கள் தாய்தேசம் திரும்பியதும் மிகப்பெரிய கொண்டாட்டம் காத்திருக்கிறது. அரையிறுதி என்பது எங்களுக்கு மிகப்பெரிய சாதனை. 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் அரையிறுதி வரை வந்திருந்தோம். இப்போது உலகக் கோப்பையில் வந்திருப்பது எங்களைப் பொருத்தவரை சாதனைதான். எங்கள் தேசத்துக்கு திரும்பும் அந்த நாளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தெளிவான மனநிலை, திட்டமிடலுடன் அரையிறுதிப் போட்டிக்குச் செல்வோம், அந்த தருணத்தை அனுபவிப்போம்,” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,டி20 உலகக் கோப்பை படக்குறிப்பு,பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்து தடுமாறியது ஆட்டநாயனுக்கு போட்டி ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு கேப்டன் ரஷித் கான் பந்துவீச்சும், வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல்ஹக் பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது. இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், ஆட்டநாயகன் விருது நவீன் உல் ஹக்கிற்கு வழங்கப்பட்டது. பேட்டிங்கில் ரஷித் கான் கடைசி நேரத்தில் அடித்த 3 சிக்ஸர்கள்தான் ஆப்கானிஸ்தானை கவுரவமான ஸ்கோரைப் பெற உதவியது. இருப்பினும் முக்கியத் தருணங்களில் விக்கெட் வீழ்த்திய நவீனுக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பவர்ப்ளே ஓவரில் மூன்றாவது ஓவரிலேயே நவீன் உல் ஹக் சிறப்பான பந்துவீச்சால் கேப்டன் ஷான்டோ, சஹிப் அல் ஹசன் இருவரின் விக்கெட்டையும், கடைசி நேரத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது விக்கெட்டையும் வீழ்த்தி வங்கதேச அணியை நெருக்கடியில் சிக்கவைத்தமைக்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. நம்பிக்கையளிக்கும் ஜோடி ஆப்கானிஸ்தான் அணியைப் பொருத்தவரை வழக்கம்போல் அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ்-இப்ராஹிம் ஜாத்ரன் நல்ல தொடக்கத்தை அளித்து முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் ரன் சேர்க்க திணறிய ஆப்கானிஸ்தான், பவர்ப்ளேயில் 27 ரன்கள் மட்டுமே சேர்த்து 10 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பேட்டிங் செய்வதற்குக் கடினமான விக்கெட்டாக ஆன்டிகுவா இருந்தது ரஷித் கானின் 3 சிக்ஸர்கள் அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 43 ரன்களும், ஜாத்ரன் 18 ரன்களும் சேர்த்தனர். ஓமர்சாய் 10 ரன்களும், கடைசி நேரத்தில் களமிறங்கிய ரஷித்கான் 3 சிக்ஸர்களை விளாசி 19 ரன்களைச் சேர்த்தார். ரஷித்கானின் 3 சிக்ஸர்களால்தான் ஆப்கானிஸ்தான் 100 ரன்களைக் கடந்து கவுரவமான ஸ்கோரைப் பெற்றது. இல்லாவிட்டால், 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது. பேட்டிங் செய்வதற்குக் கடினமான விக்கெட்டாக ஆன்டிகுவா இருந்தது. பந்துகள் தாழ்வாகவும், மெதுவாகவும் பேட்டர்களை நோக்கி வந்ததால் பேட் செய்யவும், பெரிய ஷாட்களை அடிக்கவும் கடினமாக இருந்தது. அதிலும் பந்து தேய்ந்தபின் பெரிய ஷாட்டை அடித்தாலும் பந்து சிக்ஸர், பவுண்டரி செல்வது கடினமாக இருந்தது. வங்கதேசம் தரப்பில் ரிஷாத் ஹூசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விக்கெட்டுகளை இழந்த வங்கேதசம் 116 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்து தடுமாறியது. பரூக்கி வீசிய 2-வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹசன் டக்அவுட் ஆகினார். நவீன் உல் ஹக் வீசிய 3-வது ஓவரில் கேப்டன் ஷான்டோ (5), அனுபவ பேட்டர் சஹிப் அல்ஹசன் (0) விக்கெட்டை இழந்தனர். 23 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறியது. 4வது ஓவர் வீசப்பட்டபோது மழைக் குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,11-வது ஓவர் முடிவில் மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது ரஷித் கான் மாயஜாலம் மழை நின்றபின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அதன்பின் ஆட்டத்தைக் கையில் எடுத்த ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வங்கதேச பேட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்தி வங்கதேசத்தை ரஷித்கான் நெருக்கடியில் தள்ளினார். ரஷித்கான் பந்துவீச்சில் 10 ரன்னில் சவுமியா சர்க்கார் போல்டாகினார், ரஷித்கான் வீசிய 9-வது ஓவரில் ஹிர்தாய் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஷித்கான் வீசிய 11-வது ஓவரில் மெகமதுல்லா (6), ரிஷாத் ஹூசைன் கிளீன் போல்டாகி ஒரே ஓவரில் இருவரும் வெளியேறினர். 80 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தோல்வியில் பிடியில் சிக்கியது. 11-வது ஓவர் முடிவில் மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. அப்போது டிஎல்எல் விதிப்படி ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு வங்கதேசத்துக்கு இலக்கு 114 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கெனவே 80 ரன்களை வங்கதேசம் சேர்த்துவிட்டதால், 35 ரன்கள் மட்டுமே வெற்றிக்குத் தேவைப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடைசி 3 ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது லிட்டன் தாஸ் போராட்டம் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடி 41 பந்துகளில் அரைசதம் அடித்தார், கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. 15-வது ஓவரில் தன்சிம் ஹசன் விக்கெட்டை குல்புதீன் நயீப் எடுக்கவே ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 3 ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. குல்புதீன் வீசிய 17-வது ஓவரில் லிட்டன் தாஸ் 4 ரன்கள் சேர்த்தார். 12 பந்துகளில் வங்கதேசம் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை நவீன் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் தஸ்கின் அகமது தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டு பந்து பேட்டில் பட்டு இன்சைட் எட்ஜில் போல்டாகியது. வங்கேதசம் 9-வது விக்கெட்டை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அடுத்து களமிறங்கிய முஸ்தபிசுர் ரஹ்மான், நவீன் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி அவுட் ஆகவே, ஆப்கானிஸ்தான் வீரர்கள் கட்டித்தழுவி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். குர்பாஸ் கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இரு தேசங்களின் இதயங்கள் நொறுங்கின மிகக் குறைவான ஸ்கோரை அடித்தபோதிலும் வலுவான சுழற்பந்துவீச்சு, துல்லியமான வேகப்பந்துவீச்சு மூலம் வங்கதேசத்தைச் சுருட்டி ஆப்கானிஸ்தான் முதல்முறையாக அரையிறுதி சென்றது. ரஷித்கான் நடுப்பகுதி ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதும், நவீன் உல்ஹக் பவர்ப்ளேயில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதும் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. லிட்டன் தாஸ் வங்கதேச அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லப் போராடியும் கடைசிவரை அவருக்கு ஒத்துழைக்க வீரர்கள் இல்லை. ஆப்கானிஸ்தான் வெற்றி வங்கதேச மக்களின் இதயத்தை மட்டுமல்ல, ஆஸ்திரேலிய ரசிகர்களின் இதயத்தையும் நொறுக்கிவிட்டது, என்றே சொல்லவேண்டும். https://www.bbc.com/tamil/articles/crggkdrp4kro
  2. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க நீதித்துறையிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, ஜூலியன் அசாஞ்ச் இனியும் சிறையில் இருக்க மாட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ண்ட் டெபுஸ்மேன் பதவி, பிபிசி நியூஸ், வாஷிங்டன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு பின்னர், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டு, அதுதொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து, அவர் விடுதலையாகி பிரிட்டனிலிருந்து வெளியேறியதாக, விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தேசிய ஆவணங்களை பெற்று, அதனை வெளியிட சதி செய்ததாக 52 வயதான அசாஞ்சே மீது குற்றம் சுமத்தப்பட்டது. இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர்கள் தொடர்பாக, விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் பலரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக பல ஆண்டுகளாக அமெரிக்கா வாதாடியது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரிட்டன் சிறையில் இருந்த அசாஞ்ச், அங்கிருந்து அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடி வந்தார். பிபிசி-யின் அமெரிக்க கூட்டாளியான சி.பி.எஸ் ஊடகம், அசாஞ்ச் அமெரிக்க காவலில் இனியும் இருக்க மாட்டார் என்று கூறியுள்ளது. நீதித்துறை அளித்துள்ள கடிதத்தின்படி, அசாஞ்ச் ஆஸ்திரேலியா திரும்புவார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பெல்மார்ஷ் சிறையின் சிறிய அறையில் 1,901 நாட்கள் கழித்தநிலையில், திங்கட்கிழமை அங்கிருந்து அவர் வெளியேறியதாக, எக்ஸ் சமூக ஊடகத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. “அவர் பின்னர் மதியத்தில் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் விடுவிக்கப்பட்டு அங்கிருந்து பிரிட்டனுக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா திரும்புவார்,” என விக்கிலீக்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோவில், நீல நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்துள்ள ஜூலியன் அசாஞ்ச், விமானத்தில் புறப்படுவதற்கு முன்னர் காரில் சென்றார். இந்த வீடியோவை பிபிசி-யால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. பட மூலாதாரம்,REUTERS ஆஸ்திரேலியா கூறியது என்ன? அசாஞ்ச்-இன் ஆதரவாளர்களுக்கு எக்ஸ் சமூக ஊடகத்தில் நன்றி தெரிவித்துள்ள அவருடைய மனைவி ஸ்டெல்லா அசாஞ்சே, “இது நனவாக பல ஆண்டுகளாக அணிதிரண்டவர்களுக்கு நன்றி,” என தெரிவித்துள்ளார். தன் குற்றங்களை ஒப்புகொள்வதாக ஜூலியன் செய்துகொண்ட ஒப்பந்தம், ஜூன் 26, புதன் கிழமையன்று வடக்கு மரியானா தீவுகளில் உள்ள நீதிமன்றத்தில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலைதூர பசிபிக் தீவான வடக்கு மரியானா, ஹவாய் அல்லது வட அமெரிக்காவில் (Continental US) உள்ள கூட்டாட்சி நீதிமன்றங்களை விட ஆஸ்திரேலியாவுக்கு சிறிது அருகில் உள்ளது. ஆஸ்திரேலியா அரசின் செய்தித்தொடர்பாளர், “இந்த வழக்கு நீண்ட காலத்திற்கு இழுத்தடிக்கப்பட்டதாக,” கூறியதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது. சி.பி.எஸ் ஊடகம் அசாஞ்ச்சின் வழக்கறிஞர் ரிச்சர்ட் மில்லரை தொடர்புகொண்ட போது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள அவருடைய வழக்கறிஞரையும் பிபிசி தொடர்புகொண்டது. ஜூலியன் அசாஞ்ச் மற்றும் அவருடைய வழக்கறிஞர்கள், அவருக்கு எதிரான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர். அசாஞ்ச்-க்கு எதிரான விசாரணையைக் கைவிடுமாறு ஆஸ்திரேலியாவின் கோரிக்கையைத் தான் பரிசீலித்துவருவதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார். அதற்கு அடுத்த மாதமே, தான் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக புதிதாக அசாஞ்ச் மேல்முறையீடு செய்யலாம் என, பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, தன் மீதான விசாரணை எப்படி நடைபெறும் மற்றும் தன்னுடைய பேச்சு சுதந்திரம் மீறப்படுமா என்பது குறித்து அமெரிக்கா அளித்துள்ள உத்தரவாதங்களை அவர் சவால் விடுக்க அனுமதித்தது. இந்த உத்தரவையடுத்து, அசாஞ்ச்-இன் மனைவி ஸ்டெல்லா, செய்தியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பேசும்போதும் பைடன் நிர்வாகம் “இந்த அவமானகரமான விசாரணையிலிருந்து ஒதுங்கி நிற்க வேண்டும்,” என்று கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஸ்டெல்லா அசாஞ்சே மற்ற குற்றச்சாட்டுகள் ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் நடைபெற்ற போர்கள் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ராணுவ ஆவணங்கள் மற்றும் ராஜதந்திர செய்திகளை வெளியிட்டதற்காக, உளவுச் சட்டத்தின் கீழ் 18 வழக்குகளில் அசாஞ்ச்-ஐ விசாரிக்கவே அமெரிக்க வழக்கறிஞர்கள் முதலில் விரும்பினர். சுமார் ஒரு கோடி ஆவணங்களை வெளியிட்டதாக 2006-இல் அசாஞ்ச் நிறுவிய விக்கி லீக்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதுகுறித்து பின்னர், “அமெரிக்க வரலாற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்கள் மீது பெரியளவில் நடைபெற்ற சமரசம்,” என அமெரிக்க அரசு கூறியது. கடந்த 2010-ம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரில் ராய்ட்டர் செய்தி முகமையின் நிருபர்கள் இரண்டு பேர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இராக் மக்கள் பாக்தாத்தில் கொல்லப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டது. அசாஞ்ச்சின் அதிகம் அறியப்பட்ட கூட்டாளியான அமெரிக்க ராணுவ உளவு ஆய்வாளரான செல்ஸீ மேன்னிங்-க்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, இதையடுத்து 2017-இல் அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா அவருடைய தண்டனையை குறைத்தார். அசாஞ்ச் மீது சுவீடனில் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்குகளும் உள்ளன, அக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். சுவீடனில் உள்ள இந்த வழக்கு தன்னை அமெரிக்காவுக்கு அனுப்ப வழிவகுக்கும் என்பதால், லண்டனில் உள்ள ஈக்வேடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தஞ்சம் புகுந்தார். புகார் அளிக்கப்பட்டதிலிருந்து அதிக காலமானதாகக் கூறி, 2019-ஆம் ஆண்டில் அந்த வழக்கை ஸ்வீடன் நீதித்துறை கைவிட்டது. ஆனால், ஜூலியன் அசாஞ்ச்-ஐ லண்டன் அதிகாரிகள் காவலில் எடுத்தனர். அவர் நீதிமன்றத்தில் சரணடையாததால் சுவீடனுக்கு நாடு கடத்தப்பட்டார். நீண்ட கால சட்டப் போராட்டமாக இருந்தாலும், அவர் பொதுவெளியில் மிக அரிதாகவே காணப்பட்டார். பல ஆண்டுகளாக அவருடைய உடல்நிலை மோசமானதாகவும் சிறையில் 2021-ஆம் ஆண்டில் அவருக்கு லேசான பக்கவாதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. https://www.bbc.com/tamil/articles/c4nngz23d4ro
  3. வங்காளம், ஆஸி.யை வெளியேற்றி ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது ஆப்கான் 25 JUN, 2024 | 11:27 AM (நெவில் அன்தனி) சென். வின்சென்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற குழு 2க்கான கடைசியும் தீர்மானம் மிக்கதுமான பங்களாதேஷுக்கு எதிரான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 8 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. இதன் மூலம் முதல் தடவையாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் வரலாறு படைத்தது. ஆரம்ப வீரர் லிட்டன் தாஸ் தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்தி கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் ஆப்கானிஸ்தானின் வெற்றியை அவரால் தடுக்க முடியாமல் போனது. இந்த வெற்றியை அடுத்து 27ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதியில் தென் ஆபிர்க்காவை ஆப்கானிஸ்தான் எதிர்த்தாடவுள்ளது. அதே தினத்தன்று நடைபெறவுள்ள 2ஆவது அரை இறுதியில் இந்தியாவை இங்கிலாந்து சந்திக்கவுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றியில் ரஹ்மானுல்லா குர்பாஸின் சிறப்பான துடுப்பாட்டம் அணித் தலைவர் ரஷித் கான், நவீன் உல் ஹக் ஆகியோர் பதிவு செய்த 4 விக்கெட் குவியல்கள் என்பன பிரதான பங்காற்றின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி நடப்பு ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நான்காவது தடவையாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இருவரும் 59 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது இப்ராஹிம் ஸத்ரான் 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (10), ரஹ்மானுல்லா குர்பாஸ் (43) ஆகிய இருவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். கடைசி 4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அதில் அணித் தலைவர் ராஷித் கான் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ரிஷாத் ஹொசெய்ன் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆப்கானிஸ்தானின் இன்னிங்ஸ் நிறைவடைந்ததும் சிறு மழைத்துளி படர்ந்தது. ஆனால், ஆட்டம் தாமதிக்கவில்லை. 13 ஓவர்களில் 119 ஓட்டங்களைப் பெற்றால் அல்லது 12.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தால் பங்களாதேஷ் அரை இறுதியில் விளையாட தகுதிபெறும் என அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் 116 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்ளாதேஷ் 17.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் 3.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழையினால் ஆட்டம் தடைப்பட்டது.. சுமார் 30 நிமிடங்களின் பின்னர் போட்டி மீண்டும் ஆரம்பமானபோது வெற்றி இலக்கு 116 ஓட்டங்களாகவே இருந்தது. எனினும் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட பங்களாதேஷ் 11.4 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் பங்களாதேஷ் 2 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது. ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் பங்களாதேஷின் வெற்றி இலக்கு 19 ஓவர்களில் 114 ஓட்டங்களாக திருத்தப்பட்டது. 18ஆவது ஓவரில் மழை மீண்டும் பெய்ததால் 3ஆவது தடவையாக ஆட்டம் சில நிமிடங்களுக்கு தடைப்பட்டது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் பங்களாதேஷ் 3 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது. இறுதியில் 7 பந்துகள் மீதம் இருக்க ஆப்கானிஸ்தான் 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. அவரை விட தௌஹித் ரிதோய் (14), சௌமியா சர்க்கார் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ரஷித் கான் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: நவீன் உல் ஹக் https://www.virakesari.lk/article/186911
  4. ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிணை – சிறையிலிருந்து வெளியேறினார். Published By: RAJEEBAN 25 JUN, 2024 | 08:11 AM விக்கிலிக்ஸ் ஸ்தாபகர்களில் ஒருவரான அசஞ்சேயிற்கு பிணைவழங்கப்பட்டுள்ளது அவர் லண்டனின் பெல்மார்ச் உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையிலிருந்து விடுதலையான பின்னர் அவர் ஸ்டான்செட் விமானநிலையத்தில் விமானத்தில் ஏறும் படங்கள் வெளியாகியுள்ளன. மேற்கு பசுபிக்கில் உள்ள மரியனா தீவில் உள்ள சமஸ்டிநீதிமன்றில் அசஞ்சே நீதிமன்றத்தில் ஆஜராவார் .அவர் தேசபாதுகாப்புதகவலை சட்டவிரோதமாக பெறுவதற்கும் பரப்புவதற்கும்சதி செய்த உளவுத்துறை குற்றச்சாட்டில் குற்றத்தை ஏற்றுக்கொள்வார் என அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் பின்னர் அவர் தனது நாடான அவுஸ்திரேலியா திரும்புவார். https://www.virakesari.lk/article/186896
  5. படக்குறிப்பு,வட்டுவாகல் பாலம் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 24 ஜூன் 2024 இலங்கையின் இறுதிக் கட்ட போரின் போது, லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்த முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம் இன்று உடைந்து வீழும் அபாயத்தில் இருக்கின்றது. இந்த பாலத்தை புனரமைத்து தருமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுக்கின்ற போதிலும், இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் ஏன் இதுவரை கவனம் செலுத்தவில்லை என்பது குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் 50/1 என இலக்கமிடப்பட்டுள்ள இந்த பாலம் (A035) இலக்க வீதியில் அமைந்துள்ளது. 410 மீட்டர் தூரத்தை கொண்டமைந்துள்ள இந்த பாலத்தை புனரமைப்பதற்காக இதற்கு முன்னர் 4,000 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், வட்டுவாகல் பாலத்தின் மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், பாலம் புனரமைக்கப்படாமை குறித்து ஆராயும் விரிவான செய்தி தொகுப்பே இது. வட்டுவாகல் பாலம் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய நகரங்களை பிரிக்கும் வகையில் நந்திக்கடல் களப்பு அமைந்துள்ளது. இந்த நந்திக்கடல் களப்பை ஊடறுத்து, முல்லைத்தீவு நகரையும், புதுகுடியிருப்பு பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 410 மீட்டர் தூரத்தை கொண்ட இந்த பாலமானது, இறுதிக் கட்ட போரின் போது மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக காணப்பட்டது. இலங்கையில் நிலைகொண்டிருந்த 30 வருட உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி மௌனிக்கப்பட்டது. போரின் இறுதித் தருணத்தின் போது, இலங்கை ராணுவம் இந்த பாலத்திற்கு மறுபுறத்தில், அதாவது முல்லைத்தீவு பக்கத்திலும், விடுதலைப் புலிகள் அமைப்பு பாலத்திற்கு அடுத்த திசையில் அதாவது புதுகுடியிருப்பு பக்கத்திலும் இருந்தவாறே இறுதி போரை எதிர்கொண்டிருந்தனர். புதுகுடியிருப்பு திசையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக கூறப்படும் முள்ளிவாய்க்கால் பகுதி அமைந்துள்ளது. புதுகுடியிருப்பு, முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளில் இறுதித் தருணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்த பொதுமக்கள், இந்த வட்டுவாகல் பாலத்தை தாண்டி முல்லைத்தீவு பகுதியில் நிலைக்கொண்டிருந்த ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைத் தந்திருந்தனர். ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தாக்குதல்களின் போது, வட்டுவாகல் பாலம் சேதமடைந்தது. அந்த வடுக்களை இன்றும் பாலத்திற்கு அருகில் காண முடிகின்றது. அத்துடன், சுனாமி அனர்த்தத்தின் போதும் இந்த பாலம் சேதமடைந்ததாக கூறப்படுகின்றது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் இந்த பாலத்தை அண்மித்த நந்திக்கடல் பகுதியிலிருந்தே கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அப்போது அறிவித்திருந்தது. இறுதிப் போரின் போது தமது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைத் தர, பல லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த பாலம் உதவியது என இறுதிக் கட்ட போரை சந்தித்த மக்கள் இன்றும் தெரிவிக்கின்றனர். தமது உயிரை பாதுகாத்த இந்த பாலம் இன்று உடையும் தருவாயில் உள்ளமை கவலையளிப்பதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். வட்டுவாகல் பாலம் இப்போது எப்படி உள்ளது? படக்குறிப்பு,துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு பக்கத்தில் பாலம் ஆரம்பமாகும் இடத்தில் ஒரு ராணுவ காவலரண் அமைக்கப்பட்டுள்ளதுடன், புதுகுடியிருப்பு திசையில் பாலம் ஆரம்பமாகும் இடத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாதுகாப்பு தளங்களுக்கும் இடையில் சுமார் 410 மீட்டர் தூரத்தை கொண்ட ஒரு வாகனம் மாத்திரம் செல்லக்கூடிய அளவை கொண்டதாக இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறத்திலும் நந்திக்கடல் களப்பு அமைந்துள்ளதுடன், பாதுகாப்பு வேலிகள் இன்றியே பாலம் இன்றும் காணப்படுகின்றது. பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள சிறு எல்லை கற்களும் உடைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. பாலத்திற்கு இடையில் பல இடங்களில் வெடிப்புக்களை அவதானிக்க முடிவதுடன், பல இடங்களில் பாலம் பெரியளவில் உடைந்துள்ளதையும் காண முடிகின்றது. பாலத்தின் இடையில் உடைந்துள்ள ஓரிரு பகுதிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை தற்காலிகமாக செப்பனிட்டுள்ளதையும் காண முடிகின்றது. எனினும், இந்த பாலத்தை முழுமையாக புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கடைசி போரில் மக்களை காப்பாற்றிய பாலம் படக்குறிப்பு,செல்லையா யோகேந்திரராசா பாலம் உடைகின்ற இடங்களை மாத்திரம் தற்காலிகமாக செய்கின்ற போதிலும், அந்த இடங்களும் மீண்டும் உடைவதாக வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த செல்லையா யோகேந்திரராசா தெரிவிக்கின்றார். ''ஒவ்வொரு ஆட்சியில் வருவோரும் ஒவ்வொரு கதையை சொல்கின்றார்கள். நாங்கள் செய்வோம். நாங்கள் செய்வோம் என சொல்லிக் கொண்டு, எங்களை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்த பாலம் செய்யாததற்கு காரணம் அரசாங்கத்தின் பிரச்னை தான். இந்த பாலத்தை தனிப்பட்ட நபரினால் செய்ய முடியாது. இதை அரசாங்கத்தினால் தான் செய்ய முடியும். வாகனமொன்று போனால், பாலம் இடிந்து வீழும் அளவில் தான் இருக்கின்றது. பாலம் உடைகின்ற போது, அரசாங்கம் கற்களை கொண்டு கொட்டுகின்றது. அடுத்த மாதம் அந்த இடம் உடைந்திருக்கும். மீண்டும் அதே மாதிரி கல்லைகொண்டு வந்து போடுவார்கள். நாங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காலத்திற்கு முன்பிருந்தே இதை தான் செய்கின்றார்கள். " என வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த செல்லையா யோகேந்திரராசா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். கடைசி போரில் மக்களை காப்பாற்றிய பாலம் இது என வட்டுவாகலைச் சேர்ந்த அன்னலிங்கம் நடனலிங்கம் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். ''இந்த பாலம் மிக முக்கியமான ஒரு பாலம். கடைசி யுத்தத்திலும் மக்களை காற்றிய பாலம் இது. அப்படியிருக்கையில், இந்த பாலம் உடைந்து உடைந்து போகின்றது. எந்த அரசாங்கத்திற்கு சொன்னாலும், பாலத்தை செய்வதாக இல்லை. இந்த பாலம் ஒவ்வொரு மாரியிலும் தானாகவே உடைகின்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபை கற்களை போட்டு நிரப்புகின்றார்கள். அரசாங்கம் செய்து தாறேன் என்று சொன்னாலும், அந்த பேச்சுடனேயே அது முடிந்து விடுகின்றது. கடைசி யுத்தத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பாலம் இது. இரண்டு இடங்களில் கிபீர் குண்டுகள் தாக்குதலில் உடைந்திருந்தது. கிபீர் தாக்குதலில் நான் நிற்கும் இந்த இடம் கூட பாதிக்கப்பட்டது. கிபீர் தாக்குதலில் சேதமடைந்த கற்கள் தான் இந்த இடத்தில் இருக்கின்றன. யுத்தத்தில் பாலம் பாதிக்கப்பட்டது. இப்போதும் பாலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் புனரமைக்கப்படாமைக்கு அரசாங்கத்தையே குறைகூறுவோம். நிதி இல்லை என்று கூறுகின்றார்கள்" என அன்னலிங்கம் நடனலிங்கம் தெரிவிக்கின்றார். வட்டுவாகல் பாலத்தை புனரமைத்துக் கொடுக்கும் எண்ணம் இலங்கை அரசாங்கத்திற்கு கிடையாது என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு,அன்னலிங்கம் நடனலிங்கம் ''2009ம் ஆண்டு மே 17, 18 ஆகிய நாட்களில் மக்கள் மிகுந்த வேதனையுடன் தங்களுடைய உறவுகளை இழந்த நிலையில், இந்த பாலத்தின் ஊடாக தான் வந்தார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த பாலத்தின் ஊடாக, மூடை முடிச்சுக்களுடன் சைக்கிள்களை உருட்டிக் கொண்டு தங்களுடைய பிள்ளைகளை தோள் மீது சுமந்துக்கொண்டு வருவது மிகுந்த வேதனையான காட்சியாக தான் இருந்தது. இந்த பாலம் மறக்க முடியாது. இப்படியான பாலத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கு இல்லை என்று தான் கூற வேண்டும்." என அவர் குறிப்பிடுகின்றார். வட்டுவாகல் பாலத்தை ஏன் புனரமைக்கவில்லை - அரசாங்கத்தின் பதில் வட்டுவாகல் பாலத்தை புனரமைக்காமல் அரசாங்கம் பின்வாங்கி வருவதாக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தனவிடம் வினவியது. ''இலங்கையிலுள்ள அனைத்து வீதிகள் மற்றும் பாலங்கள் வெளிநாட்டு கடன்களின் மூலமே செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களின் மூலமே இலங்கை முழுவதும் வீதிகள் மற்றும் பாலங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இலங்கையில் யார் அரசாங்கத்தை செய்தாலும், கடந்த 4 தசாப்தங்களிலும் அரசாங்கத்தின் செலவீனங்களை ஈடு செய்து கொள்ளும் வகையில், அரசாங்கத்திற்கு போதுமான வருமானம் கிடையாது. அதனால், இவை அனைத்தும் கடன்களின் மூலமே செய்யப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் சம்பள கொடுப்பனவு, ஓய்வூதிய கொடுப்பனவு, நிவாரணங்களை வழங்குதல், கடன்களுக்கான வட்டியை செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அரசாங்கத்திற்கு போதுமான கையிருப்பு இருக்காது. வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலுள்ள அனைத்து வீதிகள், பாலங்கள், வேலிகள், மின்சாரம் ஆகியன கடனை பெற்றே அமைக்கப்பட்டுள்ளது பெற்றுக்கொண்ட கடனை நாங்கள் தற்போது செலுத்துவதில்லை. அப்படியென்றால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட யாரும் எங்களுக்கு பணம் வழங்க மாட்டார்கள். அவ்வாறு கடன் கிடைக்கவில்லை என்றால், பாலங்களை நிர்மாணிக்க முடியாது." என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். ''கடனை பெற்றுக்கொண்டு வீதிகள், பாலங்களை நிர்மாணித்திருக்கின்றோம். கடனை செலுத்தி நிறைவு பெறும் போது தான் வீதி அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியும். அரசாங்கத்திடம் தற்போது பணம் இல்லை. மாத இறுதியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் செலுத்துவதற்கு மாத்திரமே பணம் உள்ளது. வேறு வேலைகளை செய்ய பணம் இல்லை. சிறு சிறு வேலைகளை செய்யலாம்;. பாலங்களை நிர்மாணிக்கும் அளவிற்கு இலங்கை அரசாங்கத்திடம் பணம் இல்லை." என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார். https://www.bbc.com/tamil/articles/c99997q20dno
  6. ஆஸியை வீழ்த்தி 5-வது முறை அரையிறுதி சென்ற இந்தியா - அதிரடி ஆட்டத்தால் ஈடுகட்டிய ரோகித் சர்மா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா சேர்த்த 41 பந்துகளில் 92 ரன்களில் 8 சிக்ஸர்கள் அடங்கும் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 25 ஜூன் 2024, 02:52 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டம், சுழற்பந்து வீச்சாளர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, ஆகியவற்றால் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 5-வது முறையாக அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்திய அணியின் வெற்றியால் ஆஸ்திரேலிய அணியின் நிலைமைதான் நிச்சயமில்லாமல் இருக்கிறது. செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) காலை நடக்கும் வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டத்தின் முடிவை எதிர்நோக்கி ஆஸ்திரேலிய அணியினர் காத்திருக்கிறார்கள். வங்கதேசம் வெல்ல வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியினர் பிரார்த்தனை செய்கிறார்கள், ஊக்கப்படுத்துகிறார்கள். ஆஸ்திரேலிய கேப்டன் மிட்ஷெல் மார்ஷ் கூட வங்கதேசத்தின் வெற்றிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேசமயம், வங்கதேசத்தை வீழ்த்தினால், ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குச் செல்லும், ஆஸ்திரேலிய அணி போட்டித் தொடரிலிருந்து வெளியேறும். வங்கதேசம் வென்றால், நிகர ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி செல்லும் என்பதாலேயே வங்கதேசம் வெல்ல வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணி கரிசனம் காட்டுகிறது. செயின்ட் லூசியாவில் நேற்று (திங்கள், ஜூன் 24) நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர்-8 சுற்றில் குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து 24 ரன்களில் தோல்வி அடைந்து. இந்திய அணி விதித்த 206 ரன்கள் இலக்கை 15.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா சேஸிங் செய்திருந்தால், அரையிறுதிக்குச் சென்று இந்தியாவின் நிகர ரன்ரேட்டைவிட உயர்ந்திருக்கும். ஆனால், 15.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி டி20 உலகக் கோப்பைத் தொடரில் 5-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. டி20 உலகக் கோப்பையில் அதிக அளவு வெற்றிகளைப் பெற்று இலங்கை அணிய பின்னுக்குத் தள்ளி 34 வெற்றிகளை இந்திய அணி பதிவு செய்தது. வரும் 27-ஆம் தேதி நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தது என்பது 3-வது முறையாகக் குவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் செயின்ட் லூசியாவின் கிராஸ் ஐலெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2012-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 205 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் குவித்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ‘மனநிறைவாக இருக்கிறது’ வெற்றிக்குப்பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தான் விளையாடியவிதம் தனக்கு மனநிறைவு அளிப்பதாகக் கூறினார். “எதிரணியின் மிரட்டல் குறித்து எங்களுக்குத் தெரியும், அதனால் சிறப்பான ஆட்டத்தை வழங்க முடிவு செய்தோம். 200 ரன்கள் நல்ல ஸ்கோர், இதுபோன்ற ஆடுகளத்தில் காற்றின் வேகத்துக்கு மத்தியில் சேஸ் செய்வது கடினம். இந்தச் சூழலை நாங்கள் சிறப்பாகப் பயன்படுத்தினோம்,” என்றார். மேலும், “ குல்தீப்பின் பலம் என்ன என்பதை உணர்ந்து, அவரைத் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தினோம். அமெரிக்க ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானவை, ஆனால், குல்தீப் பங்கு அடுத்ததாக பெரிதாக இருக்கும் என நினைத்தேன். அரையிறுதி என்பதால் புதிதாக எந்த முயற்சியும் எடுக்காமல், வழக்கம்போல் விளையாடினோம். ஒவ்வொரு வீரரும் சூழலை அறிந்து விளையாடினார்கள், சுதந்திரமாக இருந்தார்கள். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவது சிறப்பு. பெரிதாக அணியில் மாற்றம் இருக்காது,” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேப்டன் ரோகித் சர்மா (92) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ரோஹித் சர்மாவின் சாதனைகள் இந்திய அணியின் மிகப்பெரிய ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்த கேப்டன் ரோகித் சர்மா (92) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் லீக் சுற்றிலிருந்து சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்த ரோஹித் சர்மா நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அதனை ஈடுகட்டிவிட்டர். 19 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 உலகக் கோப்பையில் அதிவிரைவாக அரைசதம் அடித்த வீரர் எனும் பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இதில் 6 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள் அடங்கும். இதற்கு முன் 2007 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் 20 பந்துகளிலும், 2012ல் கெய்ரன் பொலார்ட் 20 பந்துகளிலும் அரைசதம் அடித்திருந்தனர். அதை ரோஹித் சர்மா முறியடித்து டி20 உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய பேட்டர் சேர்த்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை ரோகித் சர்மா பதிவு செய்தார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 2010-ஆம் ஆண்டில் 101 ரன்கள் சேர்த்திருந்தார். அது மட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக இருப்பவர் பதிவு செய்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2010-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பிரிட்ஜ்டவுன் நகரில் இந்தியாவுக்கு எதிராக கெயில் கேப்டனாக இருந்தபோது 98 ரன்களைப் பதிவு செய்திருந்தார். இதற்கு முன் 2016-இல் லாடர்ஹில்லில் 22 பந்துகளில் அரைசதம் அடித்ததே ரோகித் சர்மாவின் சிறந்த பேட்டிங்காக இருந்தது. அந்தச் சாதனையை அவரே முறியடித்து, 2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையிலும் சாதனை படைத்தார். இந்திய அணி பவர்ப்ளே ஓவர்களை முடிப்பதற்குள் நேற்று ரோகித் சர்மா அரைசதம் அடித்துவிட்டார். டி20 உலகக் கோப்பையில் பவர்ப்ளே ஓவர்கள் முடிப்பதற்குள் அரைசதம் அடித்த 4-வது பேட்டர் என்று ரோகித் சர்மா பதிவு செய்தார். இதற்கு முன் ஸ்டீபன் மைபுர்க், கேஎல் ராகுல், லிட்டன் தாஸ் ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர். இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா சேர்த்த 41 பந்துகளில் 92 ரன்களில் 8 சிக்ஸர்கள் அடங்கும். டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய பேட்டர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பெற்று, யுவராஜ் சிங் சாதனையை ரோகித் முறியடித்தார். யுவராஜ் சிங் 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 7 சிக்ஸர்களை அடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா 203 சிக்ஸர்களை பதிவு செய்தார். டி20 போட்டிகளில் 200 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்டர் என்ற சாதனையை ரோகித் படைத்தார். 150 சிக்ஸர்களுக்கு மேல் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் (173) உள்ளார். ரோகித் சர்மா டி20 போட்டிகளில் 4,165 ரன்கள் சேர்த்து பாகிஸ்தானின் பாபர் ஆசமின் 4,145 சாதனையைக் கடந்தார். இந்த ஆட்டத்தில் மட்டும் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் சேர்ந்து 24 சிக்ஸர்களை விளாசியது டி20 உலகக் கோப்பையில் 2-வது அதிகபட்சமாகும். இதற்கு முன் 2014-இல் நெதர்லாந்து-அயர்லாந்து அணிகள் சேர்ந்து 30 சிக்ஸர்களை அடித்திருந்தன. இந்திய அணி 205 ரன்கள் சேர்த்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம்தான். அவர் ஆட்டமிழக்கும்வரை இந்திய அணியின் ரேட் ஓவருக்கு 11 ரன்கள் வரை இருந்தது. ரோகித் ஆட்டமிழந்து சென்றபின் துபே (28) சூர்யகுமார் யாதவ் (31), ஹர்திக் பாண்டியா (27) ஆகியோர் முடிந்தவரை சிறந்த பங்களிப்பு செய்தனர். ஸ்டார்க் பந்தை வெளுத்த ரோகித் ஆட்டம் தொடங்கியது முதலே ரோகித் சர்மா அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்தார். ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 29 ரன்களை ரோகித் விளாசினார். ஸ்டார்க்கின் சர்வதேசக் கிரிக்கெட்டில் மோசமான ஓவராகவும், டி20 உலகக் கோப்பையிலும் மோசமானதாக அமைந்தது. 2021-ஆம் ஆண்டு டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 22 ரன்கள் வழங்கியதுதான் ஸ்டார்க்கின் மோசமான பந்துவீச்சாக இருந்தது. அதைவிட நேற்றைய பந்துவீச்சு மோசமாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி இந்த சீசனில் 2-வது முறையாக டக்-அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான ஃபார்மில் இருப்பதை உறுதி செய்தார் கோலியின் மோசமான ஃபார்ம் 2023-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி கண்ணீருடன் மைதானத்தை விட்டு நடந்து சென்றதற்கு பழிதீர்க்கும் விதத்தில், ரோகித் சர்மாவின் ஆட்டம் அமைந்திருந்தது. விராட் கோலி இந்த சீசனில் 2-வது முறையாக டக்-அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான ஃபார்மில் இருப்பதை உறுதி செய்தார். ஆனாலும் ரோகித் சர்மாவின் அதிரடியை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் 5-வது ஓவரில் 19 பந்துகளில் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை சேர்த்தது. 8.4 ஓவர்களில் 100 ரன்களை இந்திய அணி எட்டியது. 13.4 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. ரோகித்தின் அதிரடி ஆட்டம் ரோகித் சர்மா அரைசதம் அடித்தபோது, ரிஷப் பந்த் ஒரு ரன் மட்டுமே சேர்த்திருந்தார். அதாவது இந்திய அணியின் ஸ்கோரில் 99% ரோகித் சர்மாவின் அரைசதம்தான். ரோகித் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்ய பலமுறை ஸ்டார்க் ஷார்ட் பந்துகளையும், ஸ்விங் செய்யவும் முயற்சித்தார். ஆனால், அனைத்துமே தவறாக முடிந்து, ரோகித் பேட்டிங்கிற்கு இரையானது. ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 21 முறை ஃபிரன்ட்புட் ஷாட்களை ஆடினார் இதில் 71 ரன்களைச் சேர்த்தார். இதில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் ஃபிரன்ட்புட் ஷாட்டில் அடிக்கப்பட்டவை. கம்மின்ஸ், ஸ்டாய்னிஷ், ஆடம் ஜம்பா ஓவர்களையும் ரோகித் சர்மா விட்டுவைக்கவில்லை. இந்த உலகக் கோப்பையில் 2முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய கம்மின்ஸ் ஓவரில் ரோஹித் சர்மா காலை மடக்கி ஸ்வீப்பில் அடித்த சிக்ஸர் அரங்கின் மேற்கூரையில் விழுந்தது. ஆடம் ஜம்பா ஓவரை பதம்பார்த்த ரோகித் சர்மா 7-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினர். ஸ்டாய்னிஷ் வீசிய 8-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்களை ரோகித் சர்மா சேர்த்தார், ஸ்டாய்னிஷ் வீசிய 10-வது ஓவரிலும் 2 பவுண்டரிகளை ரோகித் வெளுத்தார். குறைந்த ரன்ரேட் ரோகித் சர்மா களத்தில் இருந்தவரை இந்திய அணி 10 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளை விளாசி இருந்தது. ஆனால் ரோகித் சர்மா 92 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறியநிலையில் இந்தி அணியின் ரன்ரேட் சற்று குறையத் தொடங்கியது. ரோகித் சர்மா 2-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்துடன் சேர்ந்து 87 ரன்களும், சூர்யகுமாருடன் சேர்ந்து 34 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார். 15-வது ஓவர் முதல் 18-வது ஓவர் வரை 21 பந்துகளாக இந்திய அணி பவுண்டரிகூட அடிக்கவிடாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். ஆனால் ஹர்திக் பாண்டியா களமிறங்கி, 2 சிக்ஸர்கள், பவுண்டரி அடித்து ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அக்ஸர் படேல் எல்லைக் கோட்டில் அற்புதமான கேட்ச் பிடித்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது தப்பித்த ஹேசல்வுட் ஆஸ்திரேலிய அணியில் உயிர்தப்பி பந்துவீசியது ஹேசல்வுட் மட்டும்தான். 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். வார்னர் ஏமாற்றம் 206 ரன்கள் எனும் கடின இலக்கை ஆஸ்திரேலிய அணி துரத்தியது. அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரிலையே வார்னரை (6) வெளியேற்றி அதிர்ச்சியளித்தார். அதன்பின் டிராவிஸ் ஹெட், மார்ஷ் சேர்ந்து ஸ்கோரை உயர்த்தும் விதத்தில் அதிரடியாக ஆடினர். பவர்ப்ளேயில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. திருப்புமுனையான அக்ஸர் படேல் கேட்ச் குல்தீப் யாதவ் ஓவரில் மார்ஷ் சிக்ஸர் அடிக்க முயற்சிக்கவே, அதை அக்ஸர் படேல் எல்லைக் கோட்டில் அற்புதமான கேட்ச் பிடித்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. ஹெட்-மார்ஷ் இடையிலான 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்து மார்ஷ் 37 ரன்களில் வெளியேறினார். அதன்பின் வந்த ஆஸ்திரேலிய பேட்டர்கள் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் பந்துவீச்சுக்கு திணறினர். மேக்ஸ்வெல் 20 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அதன்பின் ஹெட் (76) ஸ்டாய்னிஷ் (2), மேத்யூ வேட் (1), டிம் டேவிட் (15) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா தடுமாறியது. கடைசி 3 ஓவர்களில் 51 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேர்க்க வேண்டியிதிருந்தது. ஆனால் கம்மின்ஸ் (11), ஸ்டார்க் (4) ரன்களில் இறுதிவரை போராடியும் முடியாததால் தோல்வி அடைந்தது. https://www.bbc.com/tamil/articles/c1444700qgeo
  7. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் தடை-தொடர்ந்தும் சட்டப்போராட்டங்கள் மூலமும் நீதியைக் கோருவோம்-நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 25 JUN, 2024 | 10:59 AM ஈழத் தமிழர்களின் சார்பில் தொடர்ந்தும் சட்டப்போராட்டங்கள் மூலமும் நீதியைக் கோருவோம் என தெரிவித்துள்ளது.நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சட்ட ரீதியிலான நடவடிக்கையை அடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பொன்றாக தடை செய்தமை ஏற்றுக் கொள்ளத்தக்கது என தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேன்முறையீட்டு ஆணையகம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆணையகத்தின் தீர்ப்புதொடர்பாக தமது அடுத்த நகர்வை எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கும்.தமிழீழ விடுதலைப் புலிகளை ஐக்கிய இராச்சியம் தடைசெய்தமைக்கெதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட இரண்டாவது சட்ட ரீதியிலானநடவடிக்கை இந்த வழக்காகும். நாடுகடந்த தமிழிழீழ அரசாங்கத்தால் முதலாவதாக கொண்டு வரப்ட்ட சட்ட நடவடிக்கையின் தீர்ப்பில்இ தமிழீழவிடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக எடுக்கப்பட்டமுறைமையில் தவறு இருந்ததாக கூறிய மேன்முறையீட்டுஆணையகம்இ தடையை ஐக்கிய இராச்சிய உள்துறைஅமைச்சு மீள் பரிசீலனை செய்யுமாறு தீர்ப்பளித்திருந்தது. உள்துறை அமைச்சு தடையை மீளவும் தொடர்ந்தது. இவ்வழக்கானது அம்முடிவிற்கு எதிராக மேற்கொண்ட சட்டநடவடிக்கை ஆகும். ஆணைக் குழுவின் தலைவர் இவ் வழக்கானது நெருங்கியதொன்றும் சமநிலையாக இருந்ததென்றும் எனத் தெரிவித்த போதும் உள்துறை அமைச்சின் முடிவை ஏற்றுக் கொள்வதாக ஆணையகம் தீர்ப்பளித்துள்ளது. உள்துறை அமைச்சின் தீர்மானத்துக்கெதிரான சட்டரீதியிலான நடவடிக்கையானது தகுதிஅடிப்படையானதொன்றல்ல என ஆணைக்குழு மீண்டும் குறிப்பிட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்து தடை செய்வது சரியானதா என ஆணைக்குவால் கூற முடியாது. ஆயினும் அம் முடிவு தொடர்பாக உள்துறை அமைச்சால் எடுக்கப்பட்ட முறைமையில் எந்தத் தவறும் இல்லை என உறுதிப்படுத்த முடியும் என தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் புலனாய்வு உறுப்பினர்ஒருவரால் கிளிநொச்சியில் 2020ஆம் ஆண்டு ஜூலை நான்காம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி பஸ் ஒன்றில் கிளைமோர் கண்ணிவெடியை பொதியில் வைத்து கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட செய்தி சிறிலங்கா அரசாங்க இணையத்தளங்களின் மீது தமிழீழ இணையப் படையால் மே 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள்பயங்கரவாதத்திற்கு தயாராகின்றார்கள் என்ற நிலைப்பட்டைஐக்கிய இராச்சியத்தின் உள்துறை அமைச்சு எடுத்திருந்தது. சிறிலங்கா செய்திகள் சிறிலங்கா நீதிமன்றங்களின் முடிவுகள் நம்பத் தகுந்தது அல்ல என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது. எனினும் அந்த ஆவணங்களை விலக்குவதற்கு தேவையான போதுமான சட்டரீதியிலான குறைபாட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது. ஐக்கிய இராச்சிய உள்துறை அமைச்சிற்கு வழங்கப்பட்ட தகவல் தவறானது எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் அவற்றில் ஆறு நாடுகளில் (சிறீலங்கா இந்தியாமலேஷியா ஐக்கிய இராச்சியம் ஐக்கியஅமெரிக்கா கனடா) மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளனர் என்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக்காட்டியிருந்தது. மேலும் 27 நாடுகள் (ஐரோப்பிய ஒன்றியத்தின் 26 நாடுகள்) தங்களது பொருளாதாரத் தடைப் பட்டியலில் மட்டுமே தமிழீழவிடுதலைப் புலிகளை உள்ளடக்கியுள்ளன என்றும் நாடு கடந்ததமிழீழ அரசாங்கம் சுட்டிக் காட்டி இருந்தது. உள்துறை அமைச்சால் அத் தவறுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள தென்பதை ஏற்றுக் கொண்ட ஆணையகம்இ அந்தத் தவறுகள் உள்துறைஅமைச்சின் தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை அல்ல எனக் குறிப்பிட்டிருந்தது. இந்தோ-பசுபிக்கை நோக்கி நகரும் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகாரக் கொள்கைஇ தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது இந்தியா இலங்கையுடனானஇ ஐக்கிய இராச்சியத்தின் உறவுகளை பாதிக்கும் என்ற வெளிநாட்டு பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் ஆலோசனையை உலகளாவியரீதியில் பயங்கரவாதக் குழுக்களிற்கெதிரான ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் பின்னணியில் பார்க்கவேண்டும் என ஆணையகம் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் தனித் தமிழ் நாடொன்றைக் கோருபவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தமது அரசியலை முன்னெடுத்தலிலும் தமிழீழ இலச்சினையை வெளிப்படுத்துவதிலும் தமிழீழவிடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்வாதிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிக்கும் தமிழீழ தேசியக்கொடிக்கு மிடையேயுள்ள வேறு பாட்டை அங்கீகரித்த ஆணையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் நுட்பமான வேறு பாடுகளை புரிந்து கொள்ள மாட்டார்களெனவும் ஏற்றுக்கொண்டுள்ளது. பொலிஸாருக்கும். சமூகங்களுக்கும் இடயேயான உரையாடல்கள் எதிர்காலத்தில் பொலிஸாரின் தவறான புரிதல்களைக் குறைப்பதற்கு வழிவகுக்கும் என ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழஅரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல் வடகிழக்கு சிறீலங்காவில் தமிழ் நாடொன்றை அமைக்கும்சிந்தனையைக் கொண்டிருக்கின்ற போதும் நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்துக் கெதிராக உள்துறை அமைச்சு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆணையகம் மேலும்குறிப்பிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது அதன் சட்டத்தரணி பீற்றர் ஹெய்ன்ஸ் ராஜ சட்டத்தரணி திருமதி சாந்தி சிவகுமரன் சொலிசிட்டர் போல் ஹெரொன் (பொதுநல சட்ட நிறுவகம்) ஆகியோருக்கு அவர்களது மிகச் சிறப்பான சட்டப் பிரதிநிதித்துவத்திற்கு கடமைப்பட்டுள்ளது. சர்வதேச ஒழுங்கு மற்றும் பொறுப்புக் கூறலில் சட்டத்தின் முக்கியத்துவம் கருதி நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது ஈழத் தமிழர்களின் சார்பில் தொடர்ந்தும் சட்டப்போராட்டங்கள் மூலமும் நீதியைக் கோரி நிற்கும். https://www.virakesari.lk/article/186909
  8. 25 JUN, 2024 | 10:58 AM யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் சுகாதார சீர்கேடாக இயங்கிய வெதுப்பகம் ஒன்றுக்கு சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இந்த இரண்டு வெதுப்பகங்களும் சுகாதார சீர்கேடாக இயங்கிய வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது இந்த இரண்டு வெதுப்பகங்களிற்கும் எதிராக கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் நேற்று திங்கட்கிழமை (24) யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். வழக்குகளினை விசாரித்த நீதவான் ஒரு வெதுப்பகத்தினை சீல் வைத்து மூடுமாறும் மற்றைய வெதுப்பகத்தினை சீர் திருத்துமாறும் உத்தரவிட்டுள்ளதுடன் உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் ஆட்பிணையிலும் விடுவித்துள்ளார். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் தொடர்ச்சியாக உணவகங்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சுகாதார சீர்கேடான உணவகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186907
  9. Published By: DIGITAL DESK 3 25 JUN, 2024 | 10:13 AM இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டினை மேம்படுத்துவதற்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபையானது அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், இலங்கையில் ஆரம்ப சுகாதார அமைப்பை மேம்படுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதன் ஊடாக உள்ளூர் மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், பராமரிப்பின் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186900
  10. பட மூலாதாரம்,@VANNIKURAL படக்குறிப்பு,முழு மதுவிலக்கு கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று மாலை (ஜூன் 24, 2024) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் வட்டாரத்திலும் இவ்விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரி அ.தி.மு.க சார்பில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் உள்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 24, 2024) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதேபோல, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி, திங்கள்கிழமை அன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து தமிழக பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் மனு அளித்துள்ளனர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தி.மு.க-வுக்கு தர்ம சங்கடம் இந்நிலையில் தி.மு.க-வின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் திங்கள்கிழமை அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் மற்றும் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் இது நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஆளுநரைச் சந்திப்பது போன்றவை எதிர்பார்த்த ஒன்று தான் எனவும், ஆனால் தி.மு.க-வின் தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது தி.மு.க-வுக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கூறியது என்ன? தி.மு.க இதை எப்படிப் பார்க்கிறது? பட மூலாதாரம்,@ALOOR_SHANAVAS படக்குறிப்பு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் திங்கள்கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் 'தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு' சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை (ஜூன் 24, 2024) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "மதுவிலக்கு பற்றி நாங்கள் புதிதாக பேசவில்லை. பம்பாய் மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மதுவிலக்கு குறித்து அதே அவையில் வலியுறுத்தியுள்ளார். நாங்கள் அம்பேத்கரின் வாரிசுகள் அதனால் முழு மதுவிலக்கை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்," என்று கூறினார். தமிழ்நாட்டில் மட்டுமே மதுவை தடைசெய்ய சொல்லவில்லை என்றும் தேசிய அளவில் இதை கொள்கையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசையும் வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார். "சாராயத்தில் கள்ளச்சாராயம், நல்ல சாராயம் என்பதே கிடையாது. எல்லாம் விஷம் தான். இப்படி சாராயத்தை வாங்கி குடிப்பவர்கள் அடித்தட்டு மக்கள். எனவே அனைத்து வகையான சாராயத்தையும் தடை செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்," என்று கூறினார். போதைப் பழக்கம் என்பது தேசியப் பிரச்னை என்றும், கள்ளக்குறிச்சி விவகாரத்தை மட்டும் பேசாமல், தொலைநோக்குப் பார்வையில் மதுவிலக்கே நிரந்தரத் தீர்வு என்பதை விடுதலைச் சிறுத்தைகள் முன்வைப்பதாகவும் அவர் கூறினார். "பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் அணுகுவது போல நாங்கள் இதை அணுகவில்லை. அதே நேரத்தில் தி.மு.க-வுக்கு வக்காலத்தும் வாங்கவில்லை. மதுவிலக்கு கொண்டுவந்தால் ஏற்படும் நிதியிழப்பை மட்டும் தமிழக அரசு பார்க்கக்கூடாது. குடிப்பழக்கத்தால் ஏற்படும் மனிதவள இழப்பையும் கணக்கில் கொள்ள வேண்டும்," என்றார் திருமாவளவன். இத்தகைய விஷச் சாராய மரணங்கள், இந்தியா முழுவதும் பல்வேறு கட்சிகளின் ஆட்சியின் கீழ் நடந்துள்ளதாகவும், எனவே 'தி.மு.க எதிர்ப்பு' என்ற மனநிலையில் இருந்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை அணுகக் கூடாது என்றும் அவர் கூறினார். மதுவிலக்கு தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாடா? படக்குறிப்பு,'தி.மு.க எதிர்ப்பு' என்ற மனநிலையில் இருந்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை அணுகக் கூடாது என்று திருமாவளவன் கூறினார் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு குறித்தும் நம்மிடம் பேசினார் அக்கட்சியின் மாநிலக் கொள்கைபரப்புத் துணைச் செயலாளர் ஆதிமொழி. "மக்களுக்கான பணி என்பது வேறு, தேர்தல் அரசியல் என்பது வேறு. அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக போராட்டம், ஆளுநர் சந்திப்பு என செயல்படுகின்றன. ஆனால் விடுதலைச் சிறுத்தைகளோ அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், மதுவிலக்கின் அவசியம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம்," என்கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு குறித்து தி.மு.க புரிந்துகொள்ளும் என்றும், கூட்டணியில் எந்தச் சலசலப்பும் இல்லை என்றும் கூறுகிறார் ஆதிமொழி. "நிச்சயம் மதுவிலக்கு சவாலான ஒன்று தான். ஆனால், சாத்தியமில்லாத ஒன்று இல்லை. 2016-இல் அதைத் தேர்தல் வாக்குறுதியாகக் கூட தி.மு.க அளித்திருந்தது. டாஸ்மாக் என்பதே 1983-இல் எம்.ஜி.ஆர் கொண்டு வந்தது தான், பின்னர் அதற்கு 2003-இல் ஏகபோக அதிகாரத்தை அளித்தவர் ஜெயலலிதா. எனவே டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று வலியுறுத்துவது தி.மு.க-விற்கு எதிரான நிலைப்பாடு அல்ல," என்றார். படக்குறிப்பு,2022-23-ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்துள்ளது ரூ.44,000 கோடி வருமானம் தமிழ்நாடு வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation Limited என்பதன் சுருக்கமே டாஸ்மாக். 1983-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது இது தொடங்கப்பட்டது. இது முற்றிலும் அரசால் நிர்வகிக்கப்படும் நிறுவனம். மாநிலத்தில் மதுவை மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் உரிமை இந்த நிறுவனத்துக்கு மட்டுமே இருக்கிறது. தமிழ்நாட்டில் தனியார்வசம் இருந்த மதுபானச் சில்லறை விற்பனையை கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தன் வசம் எடுத்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து மது விற்பனை மூலம் அரசுக்கு வரும் வருமானம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2003-04-ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.3,639.93 கோடி வருவாய் கிடைத்தது. 2008-2009-ஆம் ஆண்டில் இந்த வருமானம் ரூ.10,000 கோடியைத் தாண்டியது. அடுத்த நான்கே ஆண்டுகளில் (2012-2013) ரூ.20,000 கோடி வருவாயை டாஸ்மாக் நிர்வாகம் எட்டியது. 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.30,000 கோடியைக் கடந்த டாஸ்மாக் நிர்வாகத்தின் வருமானம் , 2022-2023-ஆம் நிதியாண்டில் ரூ.40,000 கோடியைக் கடந்துள்ளது. 2022-23-ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பட மூலாதாரம்,@DRSENTHIL_MDRD படக்குறிப்பு,தி.மு.க-வின் உறுப்பினரும், தருமபுரி தொகுதியின் முன்னாள் எம்.பியுமான செந்தில்குமார் தி.மு.க கூறுவது என்ன? இது தொடர்பாக கருத்து தெரிவித்த தி.மு.க-வின் உறுப்பினரும் முன்னாள் எம்.பி-யுமான செந்தில்குமார், "2016 தேர்தலில் மதுவிலக்கை நாங்கள் வலியுறுத்தினோம். அப்போது ஒரு அரசியல் கட்சியாக அதுவே எங்களுக்கு சரியான தீர்வாகத் தோன்றியது. ஆனால் ஒரு அரசியல் கட்சியாக எடுக்கக்கூடிய முடிவுகளுக்கும், ஆளும் அரசாக எடுக்கக்கூடிய முடிவுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன," என்று கூறுகிறார். 2016-ஆம் ஆண்டில் மதுவிலக்கை அமல்படுத்தியே தீர வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஒரு பொதுக்கருத்து உருவாகியிருந்ததை அந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் பிரதிபலித்தது. தேர்தலில் முக்கிய விவாதப் பொருளாக மது விலக்கு இருந்தது. பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டுமே மதுவிலக்கைக் கொண்டு வர உறுதியளித்தன. தொடர்ந்து பேசிய செந்தில்குமார், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு என்று சில கொள்கைகள் உள்ளன. அவர்களை நம்பியிருக்கும் மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய கடமையும் உள்ளது. அதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்," என்றும் கூறினார். பட மூலாதாரம்,THIRUMA OFFICIAL FACEBOOK PAGE படக்குறிப்பு,வேங்கைவயல் பிரச்னையை விடுதலைச் சிறுத்தைகள் தீவிரமாக கையாளவில்லை என்ற விமர்சனம் எழுந்தது 'விடுதலைச் சிறுத்தைகள் மீதான நெருக்கடி' கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான தங்களின் நிலைப்பாடு, எந்த வகையிலும் தோழமைக் கட்சியான தி.மு.க-வை பாதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தான், தேசிய அளவில் மதுவிலக்கு என்பதை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன். "நிச்சயமாக தி.மு.க-வுக்கு இதுவொரு தர்மசங்கடமான நிலை தான். ஆனால் அதே சமயத்தில் நிர்வாகச் சீர்கேட்டை மட்டும் தான் விடுதலைச் சிறுத்தைகள் கண்டித்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தை மதுவிலக்கு என்ற பெயரில் தான் முன்னெடுத்தார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பக்கம் தாங்கள் நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் கூட்டணியிலும் விரிசல் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது," என்கிறார் பிரியன். தொடர்ந்து பேசிய அவர், "இப்போதுதான் மக்களவைத் தேர்தல் முடிந்துள்ளது. வரப்போகும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் தி.மு.க கூட்டணிக்கு பெரிய பாதிப்பு இருக்காது. வாக்கு சதவீதம் வேண்டுமானால் பாதிக்கப்படலாம். மற்றபடி தி.மு.க ஆளும் கட்சியாக இடைத்தேர்தலைச் சந்திப்பதால், அதற்கான ஆதாயங்களும் உள்ளன. எனவே தான் தி.மு.க-வும் இந்த ஆர்ப்பாட்டத்தைத் தங்களுக்கு எதிரானதாக பார்க்கவில்லை," என்கிறார். படக்குறிப்பு,தி.மு.க-வின் தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது தி.மு.க-வுக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது கட்சி தர்மம், கூட்டணி தர்மம் வேங்கைவயல் பிரச்னையை விடுதலைச் சிறுத்தைகள் தீவிரமாக கையாளவில்லை என்ற விமர்சனம் எழுந்ததாகவும், எனவே கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்ய வேண்டிய நெருக்கடி அக்கட்சிக்கு ஏற்பட்டதாகவும் கூறுகிறார் அரசியல் விமர்சகர் ரகு. "தங்களுக்கான வாக்கு வங்கியை இழந்துவிடக்கூடாது, அல்லது பலப்படுத்த வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. இதற்கு முன்பும் பலமுறை அடித்தட்டு மக்கள் அல்லது பட்டியிலின மக்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் களத்தில் நின்றுள்ளது,” என்கிறார். "அதேபோல தி.மு.க-வின் மற்றொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட (சி.பி.எம்) பல போராட்டங்களை நடத்தியுள்ளது. கூட்டணி தர்மம் என்பது வேறு. கூட்டணிக்காகத் தங்கள் நிலைப்பாடு அல்லது கொள்கைகளை விட்டுக்கொடுத்தால், கட்சிகள் மக்களின் மனதில் இருந்து மறைந்து விடும். அதற்குச் சிறந்த உதாரணம் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக்கொண்ட கட்சிகள்," என்கிறார் ரகு. https://www.bbc.com/tamil/articles/c87772lgz5go
  11. யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது : இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழப்பு! 25 JUN, 2024 | 09:17 AM யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்யச் சென்ற இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்திய மீனவர்களை கைதுசெய்ய முயன்ற போது படகிலிருந்து தவறி விழுந்த கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இதன்போது ஒரு இந்திய மீனவர்களின் படகு இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் 10 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகை பிடிக்க காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படையினர் சென்றிருந்தனர். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகும் கைதுசெய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரதே பரிசோதனையின் பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/186897
  12. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி நன்றி அண்ணை.
  13. தமிழக மீனவர்கள் ஓணானைப் பிடித்து வேட்டிக்குள்ள விட்டிட்டார்கள்! இனி என்னாகுமோ?
  14. 24 JUN, 2024 | 03:01 PM விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை விவகாரத்தில் பெரும்பான்மையினப் பௌத்தர்கள் நீதிமன்றக் கட்டளைகளையும் சட்டங்களையும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை. குருந்தூர் மலையில் எவ்வித மதம் சார்ந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படக்கூடாது என நீதிமன்றம் கட்டளைகளைப் பிறப்பித்தபோதும் அந்த நீதிமன்றக் கட்டளைகளை பல தடவைகள் மீறி, பெரும்பான்மையின பௌத்தர்களால் பாரிய அளவில் பௌத்த விகாரை குருந்தூர் மலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அந்த விகாரை அகற்றப்பட வேண்டுமென முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அந்த விகாரையை உடைத்தால் இனங்களுக்கிடையில் பிளவு ஏற்படுமென பெரும்பான்மையின பௌத்தர்களின் பக்கம் துணை நின்று சட்டமா அதிபர் திணைக்களம் வாதிட்டு, சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றவிடாமல் பாதுகாத்தனர். இதேபோல குருந்தூர் மலையில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் உரிய அரச திணைக்களங்களுக்கும், அங்கு பாதுகாப்புக் கடமையிலிருக்கும் பொலிஸாருக்கும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்களும் குருந்தூர் மலையில் பாதுகாப்பு கடமையிலிருக்கும் பொலிஸாரும் அங்கு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணை நிற்கின்றார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. குறிப்பாக முல்லைத்தீவு நீதிமன்றம் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், 31ஆம் திகதியன்று பிறப்பித்த கட்டளையில், நீதிமன்றக் கட்டளையைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு இருப்பதாகவும், எனினும் நீதிமன்றத்தால் இதற்கு முன் வழங்கப்பட்ட கட்டளைகளை குறித்த தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சரிவர பின்பற்றவில்லை எனவும், நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டிருப்தாகவும் முல்லைத்தீவு நீதிமன்றம் அந்தக் கட்டளையில் சுட்டிக்காட்டியிருந்தமையையும் இதில் முக்கியமாக குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்நிலையில் தற்போதும் குருந்தூர் மலை தொல்லியல் பிரதேசத்தில் மரங்கள் வெட்டப்படுதல், தீ மூட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் பெரும்பான்மையின பௌத்தர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக தீ மூட்டி வழிபாடுகளை மேற்கொண்டபோது, பெரும்பான்மையின பௌத்த துறவிகளாலும், பொலிஸாராலும், தொல்லியல் திணைக்களத்தினராலும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது பெரும்பான்மையின பௌத்தர்கள் குருந்தூர் மலை தொல்லியல் பகுதிக்குள், எவ்வித தொல்லியல் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாது தீ மூட்டுதல் மற்றும் மரங்களை வெட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். ஆனால், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக தொல்லியல் திணைக்களமோ, வனவளத் திணைக்களமோ எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. இவ்வாறாக குருந்தூர் மலை விவகாரத்திலே பெரும்பான்மையின பௌத்தர்கள் நீதிமன்றக்கட்டளைகளையும் சட்டங்களையும் மீறுகின்ற வகையில் செயற்படுகின்றனர். நீதிமன்றக் கட்டளைகளையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தவேண்டிய தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட அரச இயந்திரங்கள், மாறாக சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற பெரும்பான்மையின பௌத்தர்களுக்குத் துணைநிற்கின்றன. அதேவேளை நீதிமன்றக் கட்டளைகளைப் பின்பற்றி, சட்ட திட்டங்களையும் நிபந்தனைகளயும் ஏற்று அதன்படி செயற்படுகின்ற தமிழ் மக்களின் வழிபாடுகளுக்கு பெரும்பான்மையின பௌத்தர்களால் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. தமிழ் மக்களின் வழிபாடுகளைக் குழப்புவதற்கு பெரும்பன்மையின பௌத்தர்களுடன் இந்த அரச இயந்திரங்களும் உடந்தையாகச் செயற்படுகின்றன. இவ்வாறாக நீதிமன்றக் கட்டளைகளையோ, சட்டங்களையோ சற்றும் பொருட்படுத்தாத பெரும்பான்மையின பௌத்தர்களுடன் அரச இயந்திரங்களும் இணைந்துகொண்டு, தமிழர்களை வஞ்சிக்கின்ற செயற்பாடுகளே இங்கு இடம்பெறுகின்றன. இது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம். குருந்தூர் மலையில் நீதிமன்றக் கட்டளைகளை மீறி, அரச இயந்திரங்களின் ஒத்துழைப்புடன் விகாரை கட்டப்பட்ட வரலாறு முல்லைத்தீவு நீதிமன்றம் குருந்தூர் மலையில் மதம் சார்ந்த கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என வழக்கின் ஆரம்பத்திலேயே கட்டளை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தொல்லியல் திணைக்களம் குருந்தூர் மலையில் அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு நீதமன்றில் அனுமதியைப் பெற்றது. இவ்வாறு அகழ்வாய்வுப் பணிக்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டு, அகழ்வாய்வு இடம்பெறும் பகுதிக்குள் எவரும் நுழைய முடியாதெனத் தெரிவித்து, குருந்தூர் மலை வளாகத்தினுள் தமிழ்த் தரப்பை நுழையவிடாது தடுத்துவைத்துக்கொண்டு, தந்திரமான முறையிலே நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர் மலையில் பாரிய பௌத்த விகாரை கட்டி எழுப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி குருந்தூர் மலையில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு கலசம் ஒன்றை நிறுவுவதற்கும், 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழ் மக்களுக்கு தகவல்கள் கிடைத்தன. இவ்வாறு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்காக தமிழ் மக்கள் அங்கு சென்றபோது, அங்கு பௌத்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் குருந்தூர் மலை தொடர்பான வழக்கிலக்கம் AR/673/18 இல் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து, குருந்தூர் மலையில் எந்தத் தரப்புக்களும் கட்டுமானங்கள் எவற்றினையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கட்டளை பிறப்பித்த பிற்பாடும் அங்கு தொடர்ந்தும் பௌத்த கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தனர். அத்தோடு அவ்வாறு குருந்தூர் மலையில் பௌத்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்களையும் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர். அதற்கமைய இந்த வழக்கினை ஆராய்ந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி அன்று, குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்தக் கட்டுமானங்களை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி, குருந்தூர் மலை தொடர்பான வழக்கின் மீது சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வருகைதந்த சட்டத்தரணிகளால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு குறித்த வழக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த கட்டுமானங்களை அகற்ற முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருப்பதானது இனங்களுக்கிடையில் சமாதானக்குலைவினை ஏற்படுத்துமென சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வருகைதந்த சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தனர். சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகளின் கருத்துக்களைச் செவிமடுத்த நீதவான், அன்றைய தினமே உடனடியாக குருந்தூர் மலைக்குச் சென்று கள விஜயம் செய்யத் தீர்மானித்தார். அதனடிப்படையில் குருந்தூர் மலைக்கு கள விஜயம் செய்த நீதவான் அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆய்வுசெய்து, குறிப்புக்களை எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பில் கட்டளை வழங்கிய நீதிபதி, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்கு மேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதெனவும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதியன்று கட்டளை பிறப்பித்திருந்தார். எனினும், நீதிமன்றம் இவ்வாறு கட்டளை வழங்கிய பிற்பாடும், நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர் மலையில் தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. குறிப்பாக கடந்த 23.02.2023 அன்று குருந்தூர் மலைக்கு, தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரும் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின்போது இவ்வாறு நீதிமன்றத்தின் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வாறு நீதிமன்றக் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுவது தொடர்பில் கள விஜயத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடந்த 23.02.2023 அன்றைய தினமே முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை அதனைத் தொடர்ந்து 02.03.2023 அன்று முல்லைத்தீவு நீதிமன்றில் AR/673/18 என்னும் வழக்கிலக்கத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டு மீண்டும் கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு குருந்தூர் மலையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்கு கடந்த 2023 ஜூலை மாதம், 04ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மீண்டும் குருந்தூர் மலைக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். கள விஜயத்தின்போது குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற மேம்படுத்தல் லேலைகள் தொடர்பில் நீதிபதியால் ஆராயப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களம் இது தொடர்பிலான பதில் அறிக்கைகளை நீதிமன்றின் முன் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டதையடுத்து, முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்புக்கள் நீதிமன்றில் முன்னிலையாகி இது தொடர்பிலான தமது விளங்கங்களை நீதிமன்றுக்கு வழங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்குடன் தொடர்புடைய அனைத்து தரப்புக்களினதும் விளங்கங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து நீதிமன்றம் குறித்த வழக்கின் கட்டளை வழங்குவதற்காக கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், 31ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, குறித்த திகதியில் இந்த வழக்கு கட்டளைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் குருந்தூர் மலைக்கு மேற்கொண்ட கள விஜயம் மற்றும் கடந்த 2023 ஜூலை மாதம் 04ஆம் திகதி நீதவானால் மேற்கொள்ளப்பட்ட கள விஜயம் என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த வழக்குக்கான கட்டளைகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் இக்கட்டளையில் ஏற்கனவே நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளைகள் மீறப்பட்டிருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. அத்தோடு நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளைகளுக்கு விரோதமாக குருந்தூர் மலையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04ஆம் திகதி களவிஜயத்தின்போது நீதிமன்றம் அவதானித்த கல்லொன்று, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி அங்கு இருக்கவில்லை எனவும், அதேபோல அங்கு புதிதாக பெயர்ப்பலகை ஒன்று அவதானிக்கப்பட்டதாகவும், அதனை போல இன்னும் பல விடயங்களையும் இரண்டாவது கள விஜயத்தின்போது அவதானிக்க முடிந்ததாக நீதிமன்றம் இதன்போது சுட்டிக்காட்டியது. குறித்த குருந்தூர் மலைப் பிரதேசத்தில் நீதிமன்றம் வழங்கிய கட்டளையைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு இருப்பதாகவும், எனினும் நீதிமன்றத்தால் இதற்கு முன் வழங்கப்பட்ட கட்டளைகள் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சரிவரப் பின்பற்றவில்லை எனவும், நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் கட்டளையாக்கியிருந்தது. இவ்வாறாகத்தான் குருந்தூர் மலையில் நீதிமன்றக் கட்டளைகள் மீறப்பட்டு, சட்டவிரோதமாக பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குருந்தூர் மலையில் அரச இயந்திரங்களின் ஒத்துழைப்புடன் தொடரும் சட்ட மீறல்கள் குறிப்பாக கடந்த 2024.06.20ஆம் திகதி மிகிந்தலையிலிருந்து, பௌத்த துறவிகள் மற்றும் பெரும்பான்மை இன மக்கள் இணைந்து 200க்கும் மேற்பட்டோர் பாத யாத்திரையாக குருந்தூர் மலைக்கு வருகைதந்து அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டிருற்தனர். இந்நிலையில் மறுநாளான ஜூன் 21ஆம் திகதி வெள்ளிக்கழமை பொசன் தினத்தன்று குருந்தூர் மலைப்பகுதிக்கு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புக்காகச் சென்றிருந்தனர். அப்போது அங்கு சென்ற ஊடகவியலாளர்களது விபரங்கள் பதிவுசெய்யப்பட்டதுடன், தொடர்ந்து பொலிசாரின் கண்காணிப்பிலேயே செய்திசேகரிக்க அனுமதிக்கப்பட்டது. அங்கு பொசன் தினத்தில் பல பெரும்பான்மை இனத்தவர்கள் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் தமது வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது. அதேவேளை குறித்த தொல்லியல் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருப்பதையும், சில வெட்டப்பட்ட மரங்களில் தீமூட்டப்பட்டிருப்பதையும் மேலும் அவதானிக்கமூடிந்தது. அத்தோடு குறித்த தொல்லியல் பகுதியில் தகரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிலில் தங்கியிருந்தமைக்கான தடையங்களும் தென்பட்டன. இருப்பினும் ஊடகவியலாளர்கள் அங்கு சென்றபோது எவரும் இருக்கவில்லை. அதுதவிர தொல்லியல் பகுதியில் கட்டட வேலைக்குப் பயன்படுத்தப்படுகின்ற 'மட்டக்கம்பு' என்று சொல்லப்படுகின்ற ஒரு பொருள் சீமெந்துக் கலவை பட்டு உலர்ந்த நிலையிலும் காணப்பட்டது. எனவே மரம் வெட்டுதல், தீ மூட்டுதல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளையும் தாண்டி, அங்கு வேறு ஏதேனும் கட்டட வேலைகள் இடம்பெறுகின்றனவா என்கின்ற வலுவான சந்தேகமும் எழுகின்றது. இந்நிலையில், இத்தகைய சட்டமீறல் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்களை கண்காணிக்க வந்திருந்த பொலிஸாரிடம் வினவியபோது, மரம் வெட்டப்பட்டுள்ளமை மற்றும் தீ மூட்டப்பட்டுள்ளமை முதலான சம்பவங்கள் சட்டமீறல் செயற்பாடுகள் என ஏற்றுக்கொண்ட அவர், இது தொடர்பில் தமக்கு ஏதும் தெரியாது எனவும் தெரிவித்தார். பொலிஸாரின் இந்தக் கருத்து ஏற்புடையதாக இல்லை. அங்கு பாதுகாப்புக் கடமையில் இருக்கும் பொலிஸார் தமக்கு எதுவும் தெரியாது எனக் கைவிரிப்பது அவர்களுடைய பொறுப்பற்ற செயற்பாட்டை காட்டுகிறது. அத்தோடு பொலிஸார் இந்த சட்டமீறல் செயற்பாட்டுக்கு துணை நிற்கின்றார்கள் என்பதையும் உறுதிசெய்வதாக அமைகின்றது. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் தண்டனை வழங்கப்படுமென வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை குற்றச்செயல்களுக்கு நடவடிக்கை எடுக்காத அரச இயந்திரங்கள். குருந்தூர் மலை தொல்லியல் பகுதி வளாகத்தில் பல்வேறு செயற்பாடுகளை செய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அங்கு தொல்லியல் திணைக்களத்தினால் மும்மொழிகளிலுமான அறிவிப்புப் பலகையொன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இந்த இடத்துக்குரிய காணி நிலத்தைச் சுத்தம் செய்தல், மரம் வெட்டுதல், தீ மூட்டுதல், விவசாய நடவடிக்கையில் ஈடுபடுதல், அகழ்வு செய்தல், கல் உடைத்தல், வேலி அடைத்தல், குடியேறுதல், நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளுதல், இவ்விடத்தில் காணப்படுகின்ற தொல் பொருட்களுக்கு பாதுகாப்பின் நிமித்தம் அமைக்கப்பட்டுள்ள வேலிகள், எல்லைக்கற்கள், அறிவித்தல் பலகை என்பவற்றை சேதப்படுத்துதல், மாற்றம் செய்தல், இடத்தை மாற்றுதல், களவு செய்தல் அழிவடையச்செய்தல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்றுள்ளது. அத்தோடு இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டால் தொல்பொருளியல் சட்டத்தின் பிரகாரம் பிணை வழங்கமுடியாத பாரிய குற்றமாவதுடன், இக்குற்றங்களில் ஈடுபட்டால் 50,000 ரூபாய்க்கும் மேற்பட்ட தண்டப்பணம் அல்லது இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளும் வழங்கப்படுமென குறித்த அறிவிப்புப் பலகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மரம் வெட்டுதல், தீ மூட்டுதல் ஆகிய குற்றச்செயல்கள் அங்கு இடம்பெற்றுள்ளது. இருப்பினும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், பொலிஸார் இன்னும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய தரப்பினர், அந்தப் பொறுப்பிலிருந்து விலகி நிற்பதாலும், குற்றவாளிகளுக்குத் துணை நிற்பதாலுமே இந்த குற்றச் செயல்களுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிக்கிற தமிழர்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள். குருந்தூர் மலை விவகாரத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொள்கின்ற பெரும்பான்மை இனத்தவர்கள் மீது சட்டத்தை நடைமுறைப்படுத்தாது அவர்களுக்குத் துணைநிற்கும் அரச இயந்திரங்கள், நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதித்து நடக்கின்ற தமிழர்களின் சைவ வழிபாடுகளுக்கு பெரும்பான்மை இனத்தவர்களுடன் சேர்ந்து குழப்பத்தை விளைவிக்கின்றனர். இந்த விடயத்தில் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். குருந்தூர் மலையில் கடந்த 14.07.2023 அன்று நீதிமன்றத்தின் அனுமதியுடனும், தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவும் ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் பொங்கல் பொங்குவதற்காக மூட்டியபோது, தொல்லியல் மற்றும் வனப்பகுதிக்குள் தீ மூட்ட முடியாதென சில பௌத்த துறவிகளாலும், பொலிஸாராலும் குழப்பம் விளைவிக்கப்பட்டது. குழப்பங்களையும் மீறி தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைக்கு அமைவாக பொங்கலுக்காகத் தீ மூட்டியபோது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவ்வாறு பொங்கலுக்காக மூட்டிய தீயை சப்பாத்துக் கால்களால் மிதித்து அணைத்த சம்பவம் ஒன்றும் பதிவாகியிருந்தது. இது ஒரு மத நிந்தனைச் செயற்பாடு என சைவமக்கள் அப்போது இதுகுறித்து கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட பொங்கல் வழிபாட்டை நடைபெறவிடாது தமிழ் மக்கள் அடித்துத் துரத்தப்பட்டனர். அதில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள், தமிழ் ஊடகவியலாளர்கள் என அனைவரும் பொலிஸாரால் தாக்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அவலம் அங்கே நடந்தேறியது. பின்னர் இதுகுறித்து முல்லைத்தீவு நீதிமன்றம் பொலிஸாரிடம் வினவியபோது, இனங்களுக்கிடையில் சமாதானக் குலைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே பொங்கல் விழாவை நடத்தவிடாமல் தடுத்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த விடயத்தில் பொலிஸார் நீதிமன்றுக்கு கூறிய அந்த விடயம், தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயம் இல்லை. ஏனெனில் நீதிமன்ற அனுமதியுடன், முறையான சட்ட ஒழுங்குகளைப் பின்பற்றியே தமிழ் மக்கள் அங்கு பொங்கல் வழிபாட்டை மேற்கொண்டனர். இந்நிலையில் இவ்வாறு நீதிமன்ற அனுமதியுடன் இடம்பெற்ற பொங்கல் விழாவுக்கு பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு பொலிஸாருக்கு இருக்கின்றது. அத்தோடு அங்கு குழப்பம் விளைவிக்கப்பட்டால், அவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துபவர்களை பொலிஸார் கைதுசெய்திருக்கவேண்டும். ஆனால் இங்கு பொலிஸார் குழப்பங்களை ஏற்படுத்திய பெரும்பான்மை இனப் பௌத்தர்களுடன் இணைந்துகொண்டு தமிழ் மக்களைத் தாக்கி, வழிபடவிடாது அவர்களை அங்கிருந்து வெளியேற்றியது ஏற்புடைய நடவடிக்கையல்ல. இது தமிழ் மக்களைத் திட்டமிட்டு வஞ்சிக்கின்ற ஒரு செயற்பாடாகும். அதனைத் தொடர்ந்து குருந்தூர் மலையில் கடந்த 18.08.2023அன்று குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆல யநிர்வாகத்தினரால் நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் பொங்கல் வழிபாடொன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பொங்கல் வழிபாடு இடம்பெற்றால் இனங்களுக்கிடையில் சமாதானக் குலைவு ஏற்படுமெனத் தெரிவித்து அந்த பொங்கல் வழிபாட்டிற்கு நீதிமன்றிடம் பொலிஸார் தடை உத்தரவைக் கோரியிருந்தனர். எனினும் நீதிமன்றம் அந்தத் தடை உத்தரவை நிராகரித்திருந்தது. இத்தோடு அரச இயந்திரங்கள் தமது தமிழ் மக்கள் மீதான வஞ்சனைச் செயற்பாட்டை நிறுத்தவில்லை. தொடர்ந்து இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பொங்கல் வழிபாடுகளுக்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிராந்திய தொல்லியல் உதவிப் பணிப்பாளர் ஆர்.ஜி. ஜயதிலக பல நிபந்தனைகளை விதித்திருந்தார். அந்த நிபந்தனைகளில் முக்கியமாக குருந்தூர் மலையின் நிலம் மற்றும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திறந்த வெளியில் இரும்புத் தகடு வைத்து அதன் மீது தொல்பொருள் அல்லாத கற்களை பயன்படுத்தி அடுப்பினை தயார் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. அத்தோடு தீ மூட்டும்போது வன பாதுகாப்பு துறையின் சட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், நிலம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நினைவுச் சின்னங்களிலிருந்து விலகி தொல்லியல் துறை அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்படும் இடத்தை பொங்கல் வழிபாட்டிற்கு பயன்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறாக நீதிமன்ற அனுமதியோடு, தொல்லியல் திணைக்கள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி இடம்பெற்ற இந்த பொங்கல் வழிபாட்டும் பௌத்த துறவிகளில் குழப்ப முயற்சிகளுக்கு மத்தியிலேயே இடம்பெற்றது. இவ்வாறாக நீதிமன்றம் விடுக்கின்ற கட்டளைகளையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துகின்ற தரப்புக்கள் பெரும்பான்மையின பௌத்தர்களுக்குச் சார்பாகவும், தமிழ் மக்களை வஞ்சிக்கின்ற வகையிலும் செயற்படுகின்றனர். தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிற அவலம் தீரவேண்டும் குருந்தூர் மலை விவகாரத்தில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு ஒரு விதமாகவும், சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு வேறொரு விதமாகவும் அரச இயந்திரங்களால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அவலம் தீரவேண்டும். தமிழ் மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகின்ற அந்த அவலநிலை நிலை மாறவேண்டும். https://www.virakesari.lk/article/186816
  15. 23 JUN, 2024 | 06:27 PM டி.பி.எஸ்.ஜெயராஜ் "காப்டன் பிளட் : தீரச்செயல்கள் நிறைந்த அவரது நீள்பயணம்" (Captain Blood : His Odyssey) என்பது பிரபலமான எழுத்தாளர் றஃபீல் சபாட்டினி 1922 ஆம் ஆண்டில் எழுதிய ஒரு சாகச நாவல். உண்மையான, வரலாற்று நிகழ்வுகளின் பின்புலத்தில் புனைவுப் பாத்திரங்களை உருவாக்குவதில் விருப்பார்வம் கொண்டவர் சபாட்டினி. பனைவினதும் உண்மையினதும் ஒரு கலவையான இந்த நாவல் வாசகர்களினால் பெரிதும் வரவேற்கப்பட்டது. காப்டன் பிளட் மிகவும் ஜனரஞ்சகமான நாவலாக விளங்கியது. அதை அடிப்படையாகக் கொண்டு பல வருடங்களாக பல்வேறு மொழிகளில் திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டன. எம்.ஜி. இராமச்சந்திரனின் நடிப்பில் 1965ஆம் ஆண்டில் வெளியான வசூலில் சாதனைபடைத்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் காப்டன் பிளட் நாவலின் ஒரு தழுவலேயாகும். அந்த திரைப்படத்தில் ஆளும் சர்வாதிகாரிக்கு எதிரான கிளர்ச்சியில் காயமடைந்த மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தமைக்காக பழிவாங்கப்படும் மணிமாறன் என்ற பெயர்கொண்ட மருத்துவர் பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். பிரிட்டனின் வரலாற்றில் 1685ஆம் ஆண்டில் ஜேம்ஸ் மன்னருக்கு எதிரான கிளர்ச்சி ஒன்றுக்கு இரண்டாவது மொன்மவுத் கோமகன் தலைமை தாங்கினார். அந்த கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. பல கிளர்ச்சியாளர்கள் அடிமைகளாக பார்படோஸுக்கு அனுப்பப்பட்டனர். இந்த பின்னணியைக் கொண்டதே சபாட்டினியின் நாவல். நாவலில் சபாட்டினியின் முக்கியமான புனைவுக் கதாபாத்திரம் சமர்செட் பிராந்தியத்தில் வசித்த ஒரு மருத்துவரான டாக்டர் பீற்றர் பிளட். அவர் மொன்மவுத் கிளர்ச்சியில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. ஆனால் மோதல்களில் காயமடைந்த கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ உதவிகளை வளங்கினார். இரக்க உணர்வுடனான இந்த மனிதாபிமானச் செயல் தேசத்துரோகச் செயல் என்று குற்றஞ்சாட்டப்பட்டு டாக்டர் பிளட் ஒரு அடிமையாக பார்படோஸுக்கு அனுப்பப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் தம்பிச்சென்று பழைய வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு நாடு திரும்புவதற்கு முன்னதாக தொடர்ச்சியான பல சாகசச்செயல்களில் ஈடுபடுகிறார். காயமடைந்த மொன்மவுத் கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ உதவிசெய்து பிறகு ஒரு அடிமையாக பார்படோஸுக்கு அனுப்பப்பட்ட ஒரு ஆங்கில சத்திரசிகிச்சை மருத்துவரான டாக்டர் ஹென்றி பிற்மனின் வாழ்வை ஓரளவு அடிப்படையாகக் கொண்டே றஃபில் சபாட்டினி டாக்டர் பிளட் பாத்திரத்தை வடித்தார். டாக்டர் பிற்மன் பார்படோஸில் இருந்து தப்பி இறதியில் இங்கிலாந்து திரும்பிவந்தார். அவர் தனது அனுபவங்கள் பற்றி எழுதியதை சபாட்டினி தனது நாவலுக்கு பயன்படுத்திக் கொண்டார். இலங்கை மருத்துவர் "வாழ்வை நகல்செய்யும் கலையின்" விசித்திரமான ஒரு இலங்கையிலும் ஒரு மருத்துவர் இருந்தார். அவர் உண்மையான வாழ்வில் டாக்டர் பிற்மன், டாக்டர் பிளட், மணிமாறன் ஆகியோரின் கதிக்கு உள்ளானார். இலங்கை ஆயுதப்படைகளுக்கும் ஆயுதமேதந்திய தமிழ் தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையிலான போரின் நீண்ட வரலாறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நிறைந்தது. அத்தகைய சம்பவங்களில் ஒன்று உண்மையான ஹென்றி பிற்மனினதும் புனைவுப் பாத்திரமான பீற்றர் பிளட்டினதும் அதே போன்ற அனுபவங்களைக் கடந்துவந்த வடபகுதியைச் சேர்ந்த ஒரு தமிழ் டாக்டரின் கதை. இந்த தமிழ் டாக்டர் 1982ஆம் ஆண்டில் காயமடைந்த விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு சிகிச்சை அளித்தமைக்காக கைதுசெயயப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். "கறுப்பு ஜூலையில்" வெலிக்கடைச் சிறை படுகொலைகளின்போது கொலைகாரச் சிங்களக் கைதிகள் கும்பலுடன் நேரடியாக சண்டையிட்டு உயிர்தப்பினார். பிறகு இந்த டாக்டர் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுடன் சேர்ந்து தப்பிச்சென்று படகு மூலம் இரகசியமாக இந்தியாவுக்குச் சென்றார். 1987 ஜூலை இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பின்னரே அவர் தமிழ்நாட்டில் இருந்து இலங்கை திரும்பினார். அந்த உடன்படிக்கையின் பிரகாரம் மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு அவர் மீண்டும் மருத்துவ சேவை வாழ்வைத் தொடங்கி இறுதியில் அவர் ஒரு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக ஓய்வுபெற்றார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வாரம் ஜூன் 16ஆம் திகதி தனது 81 வயதில் அமைதியாக மரணத்தைத் தழுவிக்கொண்ட டாக்டர் துரைராஜா வில்லியம் ஜெயகுலராஜா அவர்களே நான் இங்கு குறிப்பிடுகின்ற அந்த தமிழ் டாக்டர். இந்த கட்டுரை டாக்டர் ஜெயகுலராஜாவின் சுவாரஸ்யமானதும் நிகழ்வுகள் நிறைந்ததுமான வாழ்க்கை மீது கவனத்தைச் செலுத்துகிறது. இந்த தனித்துவமான ஆளுமை குறித்து மேலும் அறிவதற்கு பேரார்வம் கொண்ட பல வாசகர்கள் என்னுடன் தொடர்புகொண்டார்கள். "ஜெயம் மாமா" எனது தாயாரின் மைத்துனி கிறிஸ்டினாவை (பபா மாமி) திருமணம் செய்தார் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு. ஆனால் அவர் அந்த திருமணத்துக்கு முன்னரே எனது உறவினர். டாக்டர் ரி.டபிள்யூ. ஜெயகுலராஜா 1943 பெப்ரவரியில் திருக்கோவிலில் பிறந்தார். அவரது தாயார் றோஸ் மனோன்மணி அப்போது அங்கு ஆசிரியையாக பணியாற்றினார். அவர்வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியூற்று பகுதியைச் சேர்ந்தவர். ஜெயகுலராஜாவின் தந்தையார் எட்வேர்ட் துரைராஜா கிழக்கு மாகாணத்தின்அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர். ஜெயகுலராஜா திருக்கோவில் மெதடிஸ்ற் தமிழ் பாடசாலை, கல்முனை வெஸ்லி உயர்பாடசாலை, மட்டக்களப்பு மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றில் கல்விகற்றார். அந்த கல்லூரியின் மாணவர் விடுதியில் அவர் தங்கியிருந்தே பயின்றார். பாடசாலை நாட்களில் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கிய ஜெயகுலராஜா மெய்வல்லுநர் போட்டிகள், பட்மின்டன், ரேபிள் ரெனிஸ் ஆகிய விளையாட்டுக்களில் தனது திறமையை வெளிக்காட்டினார். இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் அவர் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் பிரவேசித்து ஒரு டாக்டராக வெளியேறினார். டாக்டர் முத்துத்தம்பி, டாக்டர் ஆட்டிக்கல ஆகியோரின் கீழ் உள்ளகப் பயிற்சிக் காலப்பகுதியை முடித்துக்கொண்ட டாக்டர் ஜெயகுலராஜா 1971 ஆம் ஆண்டில் திருகோணமலை வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.1972 ஆம் ஆண்டில் திருகோணமலையில் அவரின் திருமணம் நடந்தது. அதற்கு பிறகு அவர் அரசாங்க சேவையில் இருந்து விலகி திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையில் கனிமமணல் கூட்டுத்தாபனத்தில் ஒரு டாக்டராக கடமைகளைப் பொறுப்பேற்றார். புல்மோட்டையில் சில வருடங்களுக்கு பிறகு ஜெயகுலராஜா குடும்பம் யாழ்ப்பாணத்துக்கு குடிபெயர்ந்தது. அவர்களது ஒரே மகன் டானியல் ஜேசனின் யாழ்ப்பாண சென் ஜோன்ஸ் கல்லூரி கல்வியே அதற்கு காரணம். 1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில்தான் ஜெயகுலராஜாவின் வாழ்க்கை முற்றாக மாறியது. ஜெயகுலராஜாவும் அவரது மனைவியும் மெதடிஸற் திருச்சபையின் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவரகள். யாழ்ப்பாணத்துக்கு வந்த பிறகு ஜெயகுலராஜா புத்தூரில் மெதடிஸ்த் திருச்சபையினால் நிருவகிக்கப்பட்ட சென் லூக்ஸ் வைத்தியசாலையில் பணியாற்றினார். அவரது குடும்பம் வைத்தியசாலைக்கு அண்மையாக இருந்த மருத்துவர்களின் விடுதியில் வசித்தது. ஜெயகுலராஜாவின் சகோதரர் வண. ஜெயதிலகராஜா யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி மெதடிஸ்ற் திருச்சபையில் போதகராக இருந்தார். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 1977ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததையடுத்து இலங்கையின் இனநெருக்கடி தீவிரமடையத் தொடங்கியது. தனித்தமிழ் நாட்டுக்காக போராடிய ஆயுதமேந்திய பல்வேறு தமிழ் தீவிரவாதக் குழுக்கள் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக இயங்கின. அவற்றில் பிரதானமானது விடுதலை புலிகள் இயக்கம். சாவகச்சேரி தாக்குதல் 1982ஆம் ஆண்டில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய விடுதலை புலிகள் சில பொலிஸ்காரர்களைக் கொன்ற பிறகு பெருமளவு ஆயுதங்களுடன் தப்பிச்சென்றனர். துப்பாக்கிச் சமரில் விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சீலன், ரகு, புலேந்திரன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களுக்கு அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படடது. வண. ஜெயதிலகராஜாவுடன் சில தொடர்புகளைக் கொண்ட விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் அவரைத் தொடர்புகொண்டார். அவர் தனது மூத்த சகோதரர் டாக்டர் ஜெயகுலராஜாவிடம் சென்று விடயத்தைக் கூறினார். சற்று நேரம் யோசித்த ஜெயகுலராஜா தனது சகோதரருடன் காயமடைந்த புலிகள் இருந்த மறைவிடத்துக்கு சென்று மருத்துவ உதவியைச் செய்தார். காயமடைந்த புலிகள் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாக மேலும் சில தடவைகள் அவர் அவர்களைச் சென்று பார்த்தார். ஜெயகுலராஜாவின் மருத்துவக் கவனிப்பு இல்லையென்றால் காயமடைந்த புலிகளில் ஒருவர் மரணமடைந்திருக்கக்கூடும். மோதல் ஒன்றில் புலிகள் காயமடைந்தது அதுவே முதற் தடவையாகும். பல வருடங்களுக்கு பிறகு சம்பாஷணை ஒன்றின்போது ஆபத்தைப் பற்றி யோசிக்காமல் ஏன் காயமடைந்த புலிகளுக்கு சிகிச்சை அளித்தீர்கள் என்று நான் ஜெயகுலராஜாவிடம் கேட்டேன். "நான் ஒரு மருத்துவ டாக்டர். மருத்துவத்துறையின் பதவிப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளுக்கு நான் கட்டுப்பட்டவன்" என்பதே அவரது பதிலாக இருந்தது. அதைப் போன்ற ஒரு சூழ்நிலையில் காயமடைந்திருக்கக்கூடிய எந்தவொரு நபருக்கும் தான் மருத்துவ உதவியைச் செய்திருப்பார்" என்று அவர் மேலும் சொன்னார். காயமடைந்த நபர் ஒரு பொலிஸ்காரராக இருந்தாலென்ன, ஜே.வி.பி. உறுப்பினராக இருந்தாலென்ன ஏன் பொலிசாரினால் சுடப்பட்ட ஒரு குற்றவாளியாகக் கூட இருந்தலென்ன அவர்களுக்கு நான் சிகிச்சை அளித்திருப்பேன். இந்த சந்தர்ப்பத்தில் காயமடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற இலட்சியவாத இளைஞர்கள்" என்று அவர் பதில் கூறினார். அரசு மிகவும் கடுமையான நடவடிக்கையில் இறங்கி குடாநாடு பூராவும் தீவிர தேடுதலை நடத்தியது. யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இருந்த கத்தோலிக்க மடாலயம் ஒன்றில் சோதனை நடத்திய பாதுகாப்பு அதிகாரிகள் நன்கு தெரிந்த கத்தோலிக்க மதகுருவை சம்பந்தப்படுத்தும் சான்றுகளை பெறக்கூடியதாக இருந்தது. யாழ்ப்பாணம் நீர்வேலியில் வங்கிப்பணம் கொண்டுசெல்லப்பட்ட வான் ஒன்று 1981 மார்ச் 25 கொள்ளையிடப்பட்டது. அந்த சம்பவத்தில் இரு பொலிஸ்கார்கள் பலியாகினர். நீர்வேலி வங்கிக்கொள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலை புலிகள் இயக்கமும் தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையாகும். நீர்வேலியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி வணபிதா ஆபரணம் சிங்கராயரிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடர்பாக கொழும்புத்துறை மடாலயம் பொலிசாரினாலும் இராணுவத்தினராலும் முற்றுகையிடப்பட்டது. வணபிதா சிங்கராயரின் அறையும் சோதனைக்கு உள்ளானது. சில புலிகள் காயமடைந்திருந்தால் அவர்களுக்கு மருத்துவப் பராமரிப்பை வழங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய சாத்தியம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கவனம் செலுத்தினர். சந்தேகத்துக்கிடமான மருந்து கொள்வனவு ஏதாவது இடம்பெற்றிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக பார்மசிகளையும் மருந்துக் களஞ்சியங்களையும் கண்காணிப்புக்கு உட்படுத்தியது முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்று. வணபிதா சிங்கராயர் வழமைக்கு மாறாக பெருமளவு மருந்துகளையும் பண்டேஜுகளையும் வாங்கியதாக இரகசிய தகவல் ஒன்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்தது. அதனால் அவர் மீது குறிவைக்கப்பட்டது. வணபிதா சிங்கராயர் 1982 நவம்பரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரின் கைதினை தொடர்ந்து அப்போது நெடுந்தீவு பங்குத்தந்தையாக இருந்த வணபிதா அன்ரன் சின்னராசா கைதுசெயயப்பட்டார். அவரின் கைதும் அதைத் தொடர்ந்து அவர் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையும் சாவகச்சேரி பொலிஸ்நிலைய தாக்குதல் தொடர்பிலான விசாரணையில் ஒரு முன்னேற்றத்துக்கு வழிவகுத்தன. சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட உண்மையான புலிகள் பிடிபடவில்லை என்றபோதிலும் கூட தாக்குதலில் காயமடைந்த புலிகளுக்கு உதவியதாகச் சந்தேகிக்கப்பட்ட ஆட்களை பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யக்கூடியதாக இருந்தது.யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் எம். நித்தியானந்தன், சுண்டிக்குளி மகளிர் உயர்பாடசாலை ஆசிரியையான அவரின் மனைவி நிர்மலா, வண. ஜெயதிலகராஜா மற்றும் டாக்டர் ஜெயகுலராஜா ஆகியோர் கைதுசெய்யப்பட்டு குருநகர் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். இரு கத்தோலிக்க மதகுருமார், ஒரு புரட்டஸ்தாந்து போதகர், ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர், ஒரு மருத்துவ டாக்டர், ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டமை குறிப்பாக தமிழர்கள் மத்தியிலும் பொதுவில் நாட்டிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதுவரை தமிழ்த் தீவிரவாதம் என்பது தமிழ் இளைஞர்களுடன் மாத்திரம் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமென்றே கருத்தப்பட்து. மதகுருமார் மற்றும் துறைசார் நிபுணர்களின் கைதுகள் ஆயுதப் போராட்டத்துக்கு பரந்ததும் ஆழமானதுமான ஆதரவு இருந்தது என்பதை வெளிக்காட்டியது. இந்த கைதுகளுக்கு முன்னதாக காந்தீய இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு டாக்டரும் கட்டிடக்கலைஞரும் கைது செய்யப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலை முன்னணிக்கு தலைமை தாங்கிய இன்னொரு ஓய்வுபெற்ற மருத்துவ டாக்டரும் ' சுதந்திரன் ' பத்திரிகையின் ஆசிரியரும் கூட கைது செய்யப்பட்டிருந்தனர். இனப்பிளவு மேலும் கூர்மையடைந்தது. சிறில் ரணதுங்க அதேவேளை, அந்த கைதுகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அப்போது நான் 'த ஐலணட்' பத்திரிகையின் ஒரு அலுவலக செய்தியாளர். ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான செய்திகளை திரட்டுவதற்காக அன்றைய ஆசிரியர் விஜித யாப்பா என்னை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார். அப்போது யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதியாக பிரிகேடியர் சிறில் ரணதுங்க இருந்தார். பிறகு அவர் இராணுவத் தளபதியாகவும் வந்தார். லெப்டினண்ட் கேணல் தயா விஜேசேகரவும் மேஜர் சாலிய குலதுங்கவும் அவரது பிரதம உதவியாளர்கள். வட பகுதி பத்திரிகையாளர்களின் சார்பில் நான் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து பிரிகேடியர் ரணதுங்க (பிறகு லெப்டினண்ட் ஜெனரல்) குருநகரில் செய்தியாளர்கள் மகாநாடொன்றை நடத்தினார். ஜெயகுலராஜாவுக்கும் ஜெயதிலகராஜாவுக்கும் புறம்பாக கைது செய்யப்பட்டவர்களில் இன்னொருவரும் எனக்கு தெரிந்தவராக இருந்தார். நிர்மலா நித்தியானந்தனே அவர். (நித்தியானந்தனை திருமணம் செய்வதற்கு முன்னர் அவர் நிர்மலா இராஜசிங்கம்) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் அவர் எனது சமகாலத்தவர். இராணுவக் காவலில் நிர்மலாவின் உடல் பாதுகாப்பு குறித்து யாழ்ப்பாணத்தில் பெருவாரியான வதந்திகள் கிளம்பின. அந்த செய்தியாளர்கள் மகாநாட்டில் நிர்மலாவின் பாதுகாப்பு குறித்து நான் கேள்விகளை எழுப்பினேன். என்னைச் சீண்டிய பிறகு பிரிகேடியர் ரணதுங்க நிர்மலாவை அந்த இடத்துக்கு அழைத்துவந்து அவர் பத்திரமாக இருககிறார் என்று ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டது. அதையடுத்து நிர்மலாவின் தோற்றம் குறித்து பத்திரிகைகள் விரிவான செய்திகளை வெளியிட்டன. அதன் மூலம் வதந்திகளுக்கு முடிவு கட்டப்பட்டது. சாலிய குலதுங்க அந்த நேரத்தில் ஊடகங்களுடன் தொடர்பாடல்களை பேணிவந்தவர் மேஜர் சாலிய குலதுங்க. (அவர் பிறகு மேஜர் ஜெனரல்) அவர் ஒரு நல்ல நண்பராக இருந்தார். டாக்டர் ஜெயகுலராஜா தொடர்பில் குலதுங்கவுக்கு நான் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்துவந்தேன். ஜெயகுலராஜா எனது அன்புக்குரிய மாமனார் என்றும் அவரிடம் கூறினேன். பிரிகேடியர் ரணதுங்கவின் உள்ளார்ந்த சம்மதத்துடன் சாலிய எனக்கும் ஜெயகுலராஜாவுக்கும் இடையில் ஒரு சந்திப்பை குருநகர் முகாமில் ஏற்பாடு செய்துதந்தார். எந்த இடையூறும் இல்லாமல் நானும் அவரும் தனியாக ஒரு மணிநேரம் பேசினோம். புத்தூரில் எனது மாமியைச் சந்தித்து எனது சந்திப்பு குறித்து கூறி அவரது கவலையையும் ஏக்கத்தையும் தணித்தது நன்றாக நினைவிருக்கிறது. டாக்டர் ஜெயகுலராஜாவும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்களும் பிறகு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பனாகொட இராணுவத் தளத்தில் தடுத்துவைக்கப்பட்டனர். குருநகரை போலன்றி விசாரணை என்ற பெயரில் அங்கு மோசமான பெருமளவு சித்திரவதைகள் இடம்பெற்றன. பிறகு அவர்களுக்கு எதிராக கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த சட்டம் முதலில் 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு பிறகு 1982 முதல் நிரந்தர சட்டமாக்கப்பட்டு இன்று வரை நடைமுறையில் இருக்கிறது. வெலிக்கடை சிறை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயகுலராஜாவும் மற்றையவர்களும் வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது தடுத்துவைக்கப்பட்ட பெரும்பாலான தமிழர்கள் அன்று புலிகளாகவே நடத்தப்பட்டனர். வெலிக்கடைக்கு சென்று ஜெயகுலராஜாவை ஒரு தடவை நான் பார்த்தேன். அன்று பயங்கரவாத தடுப்புச்சட்ட தடுப்புக்காவல் கைதிகளைச் சந்திப்பதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனது பெயர் டி.பி.எஸ். ஜெயராஜ் என்பதற்கு பதிலாக டி.ஜே.பி.சபாபதி என்று எழுதப்பட்டிருந்த எனது பழைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி உண்மையாகவே நான் அவரின் ஒரு மருமகன் என்று உரிமை கோரினேன். அவர் என்னைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைப் பற்றி சிந்திக்காமல் தன்னைச் சந்திப்பது குறித்து கவலையடைந்தார். சிறைச்சாலையில் படுகொலைகள் அதற்கு பிறகு பல நிகழ்வுகள் நடந்தேறின. "கறுப்பு ஜூலை" என்று வர்ணிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான படுமோசமான இன வன்முறை 1983ஆம் ஆண்டில் இடம்பெற்றது. வெலிக்கடையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளும் தாக்குதலுக்கு இலக்காகினர். மொத்தமாக அங்கு 72 தமிழ் அரசியல் கைதிகள் இருந்தனர். ஜூலை 25 திங்கட்கிழமை சிங்களக் கைதிகள் 35 தமிழ்க் கைதிகளை கொலைசெய்தனர். அந்த தாக்குதலுக்கு தலைமை தாங்குவதற்கு வெளியில் இருந்து கொலைகாரர்கள் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது. அந்த படுகொலைகளுக்கு பல சிறைக்காவலர்கள் உதவியும் ஒத்தாசையும் புரிந்தனர். பயங்கரவாத தடைச்சட்ட தடுப்புக்காவல் கைதிகளின் பாதுகாப்பைப் பேணுவதற்கு வெலிக்கடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட இராணுவப் பிரவு எதையும் செய்யவில்லை. கொலை செய்யப்பட்ட கைதிகளில் ரெலோ தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோரும் அடங்குவர். இரண்டாவது படுமோசமான படுகொலை ஜூலை 27 புதன்கிழமை இடம்பெற்றது. எஞ்சியிருந்த தமிழ்க் கைதிகள் அவர்களின் பாதுகாப்புக்காக சிறைச்சாலைக்குள் வேறு ஒரு பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தனர். அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. தமிழ்க்கைதிகள் எதிர்த்துப் போராடினர். ஆனால் 18 பேர் கொலை செய்யப்பட்டனர். அந்த பகுதியில் இருந்தவர்களில் 11 பேர் மாத்திரமே சாவில் இருந்து தப்பினர். அவர்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான இன்றைய கபினெட் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். ஜெயகுலராஜாவும் ஏனைய துறைசார் நிபுணர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஜூலை 25 தாக்குதலுக்கு பிறகு ஒன்பது கைதிகள் மேல்மாடியில் இருந்த தங்குமிடத்துக்கு கூட்டிச் செல்லப்பட்டிருந்தனர். வணபிதா சிங்கராயர், வணபிதா சின்னராசா, வண. ஜெயதிலகராஜா, டாக்டர் இரராஜசுந்தரம், ஓய்வுபெற்ற டாக்டர் தருமலிங்கம்,டாக்டர் ஜெயகுலராஜா, பத்திரிகை ஆசிரியர் கோவை மகேசன், விரிவுரையாளர் நித்தியானந்தன், கட்டடக்கலைஞர் டேவிட் ஆகியோரே அந்த ஒன்பது பேருமாவர். அந்த மேல்மாடி தங்குமிடத்துக்கு செல்வதற்கு ஒடுக்கமான படிக்கட்டு ஒன்றே இருந்தது. இவர்களைத் தாக்குவதற்கு வன்முறைக்கும்பல் ஒன்றுகூடியபோது மகாத்மா காந்தியின் தீவிர பக்தனான "காந்தீயம்" இயக்கத்தைச் சேர்ந்த டாக்டர் இராஜசுந்தரம் "நாங்கள் அவர்களுடன் நியாயத்தைப் பேசி இந்த பிரசசினைக்கு தீர்வைக் காண்போம்" என்று அப்பாவித்தனமாக யோசனை கூறினார். வன்முறைக் கும்பலுடன் சிங்களத்தில் பேசுவதற்காக இராஜசுந்தரம் படிகளில் இறங்கி கீழே சென்றபோது அவரை அவர்கள் தலையில் தாக்கி வெட்டிக் கொலை செய்தனர். மேசைக்கால் ஆயுதங்கள் தமிழ்க் கைதிகளில் ஒரளவு இளம் வயதினராக இருந்தவர்கள் வன்முறைக் கும்பலை எதிர்த்துச் சண்டையிட தீர்மானித்தனர். மதகுருமார் ஆராதனை நடத்துவதற்கு ஒரு சிறிய மேசை கொடுக்கப்பட்டிருந்தது. மேசையை உடைத்து வணபிதா சின்னராசா, வண. ஜெயதிலகராஜா, டாக்டர் ஜெயகுலராஜா, நித்தியானந்தன் ஆகிய நால்வரும் ஆளுக்கொரு காலை கையிலெடுத்தனர். மாடிப்படி ஒடுக்கமானதாக இருந்ததால் கீழிருந்து மேலே ஒருவர் அல்லது இருவரே ஒரே நேரத்தில் ஏறிவர முடியும். இவ்வாறுதான் நான்கு தமிழ்க் கைதிகளும் தங்களது மேசைக்கால் ஆயுதத்தைப் பயன்படுத்தி வன்முறைக் கும்பலின் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்து உயிர் தப்பக்கூடியதாக இருந்தது. அரை மணி நேரத்துக்கு பிறகு சிறை அதிகாரிகள் வன்முறைக் கும்பலைக் கலைத்ததை அடுத்து தமிழ்க் கைதிகளின் கொடூர அனுபவம் ஒரு அதிசயம் போன்று முடிவுக்கு வந்தது. வெலிக்கடை சிறையில் ஆரம்பத்தில் இருந்த 72 தமிழ்க் கைதிகளில் இரு படுகொலைச் சம்பவங்களில் இருந்தும் 19 பேரினால் மாத்திரமே உயிர் பிழைக்கமுடிந்தது. அவர்கள் அருவருக்கத்தக்க "புலிநாளான (கொட்டி தவச) ஜூலை 29 மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர். கைதிகள் பொதிகளைப் போன்று ட்ரக் ஒன்றில் ஏற்றப்பட்டு வீதியால் கொண்டு செல்லப்பட்டனர். முதலில் அவர்கள் கொழும்பு கோட் ட காலிமுகத்திடலில் பல மணி நேரம் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இயற்கைக் கடன்களை கழிப்பதற்கு கூட அனுமதிக்கப்படாமல் மட்டக்களப்புக்கு கொண்டு செல்லப்பட்டனர். மட்டக்களப்பு சிறையுடைப்பு டாக்டர் ஜெயகுலராஜா பல வருடங்களுக்கு முன்னர் தனது பயங்கரமான அனுபவங்களை தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கத்தில் வைத்து என்னிடம் விரிவாகக் கூறினார். மட்டக்களப்புக்கு கூட்டிச்செல்லப்பட்ட பிறகு 1983 செப்டெம்பரில் இடம்பெற்ற சிறையுடைப்பின்போது ஜெயகுலராஜா தப்பிச் சென்றார். மீண்டும் பிடிபடாமல் அவர் இந்தியாவுக்கு இரகசியமாக படகு மூலம் சென்றார். இதையும் தொடர்புடைய ஏனைய விடயங்களையும் அடுத்துவரும் கட்டுரையில் பார்ப்போம். https://www.virakesari.lk/article/186786
  16. 24 JUN, 2024 | 05:22 PM மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிகோரி போராட்டமொன்று இன்று திங்கட்கிழமை (24) காலை காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர். காணாமல் போனவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும் அச்சுறுத்துவதையும் நிறுத்துங்கள், கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா??, பிள்ளைகளை தினம் தேடிக் கொண்டே நீதி இன்றியே இறந்து கொண்டிருக்கின்றோம், நாங்கள் கேட்பது இழப்பீட்டையோ மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதி விசாரணையே, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சர்வதேச சமூகத்திற்கு கொண்டுசெல்லும் வகையிலான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் இங்கு சங்க செயலாளரினால் வாசிக்கப்பட்டது. சுமார் 100 க்கு மேற்பட்ட காணமல்ஆக்கப்பட்டவர்களின் கலந்து கொண்டதுடன் ஒரு மணி நேரம் இவ்வார்ப்பாட்டம் இடம் பெற்றது. ஒவ்வொரு மாதமும் 24ஆம் திகதி தமது உறவுகளுக்கு நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அமலநாயகி, கடந்த கால தொடர் போராட்டங்கள் மூலமாக சர்வதேசத்தினுடைய பார்வை எமது பக்கம் திரும்ப பட்டிருக்கின்றது எங்களுடைய மக்களுக்கான நீதி விசாரணை வேண்டும் என்பதனை அழுத்தமாக சர்வதேச நாடுகள் அறிக்கைகளின் ஊடாக வெளிப்படுத்தி இருந்தாலும் எங்களுடைய தொடர் போராட்டங்கள் எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது அதற்கான பொறுப்பு கூற வேண்டிய அவசியம் எமது உறவுகள் நமக்கு கிடைக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்கின்ற விடயங்களை சர்வதேசத்தின் ஊடாக நாங்கள் கொடுத்த பாரிய போராட்டங்கள் ஊடாக சர்வதேச பார்வை திரும்பப் பெற்ற நிலையில் எமது வடக்கு கிழக்கு உள்ள 8 மாவட்டங்கள் இணைந்து 23 ஆம் திகதி தொடக்கம் 30-ம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் இந்தப் போராட்டங்கள் இடம்பெறும். நாளைய தினம் கிளிச்சி மாவட்டத்தில் தொடர் போராட்டம் இடம்பெற இருக்கின்றது இவ்வாறு மாறி மாறி வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் உறவினர்களால் இந்த கவன ஈர்ப்பு போராட்டங்கள் எங்களுடைய உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரைக்கும் இந்த போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் காணப்படும். இந்த சந்தர்ப்பத்தில் எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது இனிமேல் இந்த ஆற்கடத்தல்கள் அத்தோடு எங்களுக்கு நடந்த நிலைமைகள் இவருக்கும் நடக்கக்கூடாது என்பதற்காகவும் இவ்வாறான பதினைந்து வருடங்கள் கடந்த நிலையில் நாங்கள் தொடர்ச்சியாக போராடிக் கொண்டு வருகின்றோம். 2017 ஆம் ஆண்டு தொடக்கம் தனித்துவமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இந்த போராட்டங்களை வடக்கு கிழக்கு இணைந்து செயல்பட்டு இந்த போராட்டங்களை செய்து வருகின்றதன் பிரதிபலனாக இன்று சர்வதேசத்தின் பார்வை எங்கள் பக்கம் ஈர்க்கப்பட்டு இருக்கின்றது. இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தையும் கொண்டு வந்து அவர்களுக்கான நாட்ட ஈடுகளை வழங்குகின்றோம் எனக் கூறி மக்களை பெருமளவு ஏமாற்றி அந்த கோப்புக்களை முடிவுறுத்தி விடுவதற்கான செயல்பாடுகளை சரியாக கள்ளத்தனமான வேலைகளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றனர். உண்மையில் நான் அந்த அலுவலகத்திற்குச் சென்று பதிவு செய்யவில்லை ஆனால் எங்கேயோ இருந்து எங்களுடைய தரவுகளை எடுத்துக் கொண்டு தங்களுக்கு எங்களுடைய ஆவணங்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது உடனடியாக வந்து பதிவு செய்யுங்கள் என்று கூறி இந்த அப்பாவி தாய்மாரை மரண பதிவு எடுத்தால்தான் இலங்கை அரசாங்கத்தின் எந்த ஒரு உதவி திட்டமும் கிடைக்கும் என்று கூறி அவர்கள் கட்டாயப்படுத்தி மரண பதிவுகளையும் கொடுத்து இந்த மக்களை கஷ்டப்படுத்தி ஏற்கனவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற மக்களை இன்னும் இன்னும் கஷ்டப்படுத்தி கொண்டு மன உள ரீதியான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இது ஒரு பொய்யான அலுவலகம் அல்லது இலங்கை உள்ளக பொறிமுறையை கொண்டு ஏமாற்றி ஏமாற்றி இந்த வேலைகளை இலங்கை அரசாங்கம் செய்து கால இழுத்தடிப்புகளை செய்து உறவுகளை தேடிக் கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட தாய்மார்களை நாங்கள் இன்று இழந்து இருக்கின்றோம் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது எங்களுடைய உண்மையான சாட்சியங்கள் இல்லாமல் போகின்றது. கண்கண்ட சாட்சியங்களாக நாங்கள் இருக்கின்றோம் ஆனால் நாங்களும் இல்லாமல் போனால் இந்த கால இழுத்தடிப்புக்கு காரணமே அதுதான் உங்களை இல்லாமல் செய்தால் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்திற்கு குரல் கொடுப்பதற்கு யாரும் இல்லை என்று இந்த இலங்கை அரசாங்கமும் அதனோடு சேர்ந்து செயல்படுபவர்களும் நினைத்து கொண்டிருக்கின்றார்கள். இளம் சந்ததி இதனை கொன்டு செல்கின்றது இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் ஊடாக இனி ஒவ்வொரு மாதமும் 24ஆம் தேதி இந்த காந்தி பூங்கா முன்பாக எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்களுடைய உரிமைகளுக்காக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்காக நாங்கள் இந்த இடத்தில் ஒன்று கூடி ஒவ்வொரு மாதமும் எமது குரலை கொடுப்போம். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரைக்கும் அல்லது சாகும் வரைக்கும் இந்த போராட்டம் தொடரும் என்றார் . https://www.virakesari.lk/article/186851
  17. India (11.2/20 ov) 127/3 Australia Australia chose to field. Current RR: 11.20 • Last 5 ov (RR): 61/2 (12.20) Live Forecast:IND 224
  18. Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 05:19 PM (செ.சுபதர்ஷனி) சமூக ஊடகங்கள் வாயிலாக பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் பல்வேறு வங்கிகள், வணிக நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி நன்கொடைகள், பணப் பரிசுகள், வெற்றிகள், வேலைவாய்ப்பு போன்றவற்றைப் பெறுவதற்கு உடனடியாக பதிவுசெய்துக் கொள்ளுமாறு பகிரப்படும் போலி தகவல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். போலி இணையதளங்கள், சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி மற்றும் வட்ஸ்அப் செயலி மூலம் பகிரப்படும் போலி தகவல்கள் வாயிலாக இணைய மோசடியில் ஈடுபடுபவர்கள்அதன் வாயிலாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள். போலி செய்தியின் இணைப்புகளை அணுகுவதன் மூலம் மோசடிக்காரர்கள் தங்களுடன் இணைக்கப்பட்ட நபர்களின் கணினி, தொலைப்பேசியில் உள்ள தகவல்களைத் திருடி முறைகேடான மற்றும் பண மோசடியில் ஈடுபடுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இவ்வாறான மோசடிகள் அதிகரித்து வருவதுடன், இவற்றால் பாதிப்புக்குள்ளாகுவோரின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. குறித்த மோசடிக்காரர்கள் தேசிய மற்றும் சமய விழாக்களின் போது இதுபோன்ற செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. பொது மக்களின் அறியாமையும் அலட்சியமும் இவ்வாறன குற்றங்கள் சமூகத்தில் அதிகரிப்பதற்கு சாதகமாக அமைந்துள்ளன. சந்தேகத்திற்கிடமான தகவல்கள் ஏதேனும் கிடைக்கப்பெறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அவர்களை தொடர்புக் கொண்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு உறுதிப்படுத்த முடியாத செய்திகளை அணுகுவதை தவிர்த்துக் கொள்ளலாம். https://www.virakesari.lk/article/186842
  19. இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவோம் : பிரிட்டனின் தொழில்கட்சி உறுதி மொழி - பொருளாதார தடைகள், இனப்படுகொலை இடம்பெற்றதை அங்கீகரிப்பது சாத்தியமில்லை : கென்சவேர்ட்டிவ் கட்சி Published By: RAJEEBAN 24 JUN, 2024 | 05:00 PM tamil guardian பிரிட்டனின் தொழில்கட்சி இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது. ஜூலை நான்காம் திகதி பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கென்சவேர்ட்டிவ் தொழில்கட்சி மற்றும் பசுமை கட்சிகளின் பிரதிநிதிகள் பிரிட்டனில் முதல்தடவையாக இடம்பெற்றுள்ள தமிழ் தேர்தல் மேடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளதுடன் இலங்கையில் இடம்பெற்ற பாரிய அநீதிகளிற்கு நீதி பொறுப்புக்கூறலை உறுதி செய்வதை நோக்கிய நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளனர். தமிழ் கார்டியன் பிரிட்டிஸ் தமிழ் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு வெஸ்ட்மினிஸ்டரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பிரிட்டனின் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டிற்கான அவர்களின் தொலைநோக்கையும் பிரிட்டனின் தமிழ் சமூகத்திற்கான தங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் முன்வைத்தனர். கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட்இபசுமை கட்சியின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் ஆதரவு பேச்சாளர் பெனாலி ஹம்தாச்சே ஆகியோர் தமிழ்கார்டியன் ஆசிரியர் மருத்துவர் துசியன் நந்தகுமாரும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரித்தல் பாரிய அநீதிகளிற்கான சர்வதேச நீதி உட்பட முக்கிய விடயங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளிற்கு பதிலளித்தனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரத்தை கென்சவேர்ட்டிவ் கட்சி தொடர்ந்தும் எழுப்பும் என கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல தெரிவித்தார். ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த நடவடிக்கைகளிற்காக கென்சவேர்டிவ் கட்சி தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரத்தை எழுப்புவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் நாங்கள் நிச்சயமாக ஆராய்வோம் இங்குள்ள தமிழ் சமூகத்தினர் அதற்கான அழுத்தங்களை கொடுத்தால் நாங்கள் நிச்சயமாக அதனை செய்வோம் என தெரிவித்தார். தடைகள் இந்த நிகழ்வில் தடைகள் குறித்தும் ஆராயப்பட்டது. தடைகள் குறித்து கருத்து தெரிவித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் இராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு வகையான பதிலே தடைகள் என குறிப்பிட்டதுடன் பிரிட்டன் அதனை பயன்படுத்தலாம் என தெரிவித்தார். எனினும் முன்கூட்டியே தடைகள் குறித்து விவாதிப்பது தடைகள் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைக்கும் என்பதால் பிரிட்டன் அது குறித்து விவாதிக்கவிரும்பவில்லை எனவும் தெரிவித்தார். பிரிட்டனின் கொள்கைகள் ஒருநாடு சார்ந்தது அல்ல என தெரிவித்த அவர் மாறாக குற்றங்களை அடிப்படையாக கொண்டவை எனவும் தெரிவித்தார். இந்த விடயத்தில் இலங்கை அலட்சியம் செய்யப்பட்டுள்ளது என நீங்கள் கருதக்கூடாது என கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் தெரிவித்தார். இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை அங்கீகரித்தல் கனடா நாடாளுமன்றம் மே 18 ம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக நினைவுகூருவதை போல பிரிட்டன் நாடாளுமன்றம் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் குறிப்பிட்ட நினைவுநாள் என்பது இல்லை என்றாலும் கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்கள் மற்றும் அவர்களை தேடும் உறவுகளை தொடர்ந்தும் நினைவுகூருவதாக தெரிவித்தார். குறிப்பாக இனப்படுகொலை என்ற சொல் குறித்து மேலும் கேள்வி எழுப்பியபோது யூதர்கள் இனவழிப்பு ருவாண்டா படுகொலை நினைவுவுகூருவதில் தனது பணியை நினைவுகூர்ந்தார். இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது குறித்து நான் மிகவும் கவனமாக உள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். இனப்படுகொலை இடம்பெறுகின்றது என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கின்றன என குறிப்பிட்ட அவர் பேரழிவை ஏற்படுத்திய அச்சத்தை ஏற்படுத்திய மோதல் இடம்பெற்றது அதன்போது மிக பயங்கரமான செயல்கள் இடம்பெற்றதை அவை பலரை அச்சத்திற்குள்ளாக்கியதை நாங்கள் கண்டோம் என்பது குறித்து எந்த சந்தேகமும் இல்லை அதனை மறுக்கவும் முடியாது எனவும் குறிப்பிட்டார். பரந்துபட்ட தடைகள் இலங்கைக்கு எதிரான பரந்துபட்ட தடைகள் குறித்த கேள்விகளிற்கு பதிலளித்த அமைச்சர் வர்த்தக தடைகளை விதிப்பது பொருத்தமான விடயம் என நான் கருதவில்லை என தெரிவித்தார். நாங்கள் கருத்துவெளியிடும் ஏனைய பொறிமுறைகளே நீதியை முன்னெடுப்பதற்கு பொருத்தமானவை என அவர் தெரிவித்தார். சுயநிர்ணய உரிமை சுயநிர்ணய உரிமை குறித்து கருத்து தெரிவித்த அவர் சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பு குறித்து வேண்டுகோள்கள் காணப்படுகின்றன என தெரிவித்தார். ஆனால் ஒரு அரசாங்க அமைச்சராக நான் மற்றுமொரு நாட்டின் இறையாண்மை முடிவுகளில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் மிகவும் கவனமாகயிருக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்வீர்கள் எனவும் அவர் தெரிவித்தார். மன்னிக்கவும் நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை என்னால் கொடுக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார். ஜூலை நான்காம் திகதி நாங்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் உங்கள் சமூகத்துடனும் உங்களுடனும் நாங்கள் முன்னெடுத்துள்ள உரையாடல்களை தொடர்பாடல்களை நாங்கள் தீவிரப்படுத்த முடியும் என கருதுகின்றேன்இஇலங்கைக்குள் நல்லிணக்கத்தை கொண்டுபோய் சேர்ப்பதில் நாங்கள் நல்ல சக்தியாக விளங்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். தொழில்கட்சி இதேவேளை தொழில்கட்சி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தை போல இல்லாமல் சர்வதேச சட்டத்தினை எங்களின் வெளிவிவகார கொள்கையின் முக்கிய கருப்பொருளாக நாங்கள் பின்பற்றுவோம் என தெரிவித்த அவர் தொழில் கட்சியின் தலைவர் கெயர் ஸ்டார்மெர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதில் பிரிட்டனின் முக்கிய பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்துள்ளார் என்பது உங்களிற்கு தெரியும் எனவும் குறிப்பிட்டார். மதிப்பீடு மற்றும் பொறிமுறையானது பிரிட்னின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்திற்குள் உள்ளது எனினும் அந்த பொறிமுறையை இயக்குவது குறித்த அரசியல் உறுதிப்பாடு இல்லை என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். இந்த விடயத்தில் எங்களிற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் தெளிவான வித்தியாசம் உள்ளது மனித உரிமை மீறல்களில் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கின்றோம் என என தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்தார். இலங்கையின் யுத்த குற்றவாளிகள் ஏன் பிரிட்டனின் தடைகளை இன்னமும் எதிர்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இது ஆச்சரியமளிக்கின்ற கேள்விக்குரிய விடயம் என தெரிவித்தார். இரண்டுவாரங்களில் நான் அமைச்சரானால் மாக்னிட்ஸ்கி பாணியிலான பொருளாதார தடைகள் குறித்து வெளிவிவகார அலுவலகத்தின் மதிப்பீடுகள் என்ன என்பதையும் அவை பலனளிக்குமா என்பதையும் அவர்களிடம் மேற்கொள்கின்ற உரையாடல்கள் மூலம் நான் புரிந்துகொள்வேன் என அவர் தெரிவித்தார். இனப்படுகொலை என்பது நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்படவேண்டிய விடயம் என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்தலாம் என குறிப்பிட்டார். அதுவரை நாங்கள் மே மாத முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து முன்னெடுப்போம் என தெரிவித்த அவர் தமிழ் சமூகம் தங்களிற்கு எத்தகைய செயற்பாடுகள் பொருத்தமானது என கருதுகின்றதோ அந்த வகையில் அவர்களுடன் இணைந்து செயற்படுவோம் என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c9wwzrpkd1lo
  20. LIVE 51st Match, Super Eights, Group 1, Gros Islet, June 24, 2024, ICC Men's T20 World Cup India (8.1/20 ov) 94/2 Australia Australia chose to field. Current RR: 11.51 • Last 5 ov (RR): 59/1 (11.80) Live Forecast:IND 234
  21. வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதை உறுதிப்படுத்துங்கள் - அமைச்சர் விதுரவிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 04:01 PM (எம்.நியூட்டன்) நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன் கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/186825
  22. கல்முனை பகுதியில் பதற்ற நிலை; போக்குவரத்து பாதிப்பு; 7 மணித்தியாலங்களாக போராட்டகாரர் வசமான நகரம் Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 03:54 PM கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை (24) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் பதற்ற நிலை தொடர்ந்தது. அத்துடன், பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில் அதிகாரிகளை உள்நுழைய விடாமல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும் அதற்கான உரிய தீர்வு கோரியும் தொடர்ச்சியாக 92 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பு - கல்முனை வீதி தடைப்பட்டுள்ளதால் வாகனங்களை மாற்று வீதிகளில் அனுப்புவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதே வேளை 7 மணித்தியாலங்களாக கல்முனை நகர் போராட்டக்காரர் வசம் இருந்த நிலையில் கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 8.00 மணிமுதல் பி.ப 2 மணி வரை கல்முனை மாநகரம் ஸ்தம்பித்திருந்ததுடன், நகரில் இருந்து அனைத்து பொது போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தது. மருத்துவ சேவை வாகனங்கள் மாத்திரம் மக்களால் அனுமதிக்கப்பட்டிருந்தன. அத்துடன், தமது நியாயமான கோரிக்கைக்கு பதில் என்ன? என பல கோஷத்துடன் வீதியில் அமர்ந்தும் போராட்டம் செய்தனர். பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் பொலிஸாரின் மத்தியஸ்த்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எட்டுப் பேர் மாவட்ட செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர். அதுவரை வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வழமை போன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக சுழச்சிமுறை போராட்டம் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வழமைக்கு மாறாக இன்று பாரிய விமானம் ஒன்று பெரும் இரைச்சலுடன் ஆகாயத்தில் வட்டமடித்த வண்ணம் இருந்ததையும் காண முடிந்தது. https://www.virakesari.lk/article/186845
  23. டி20 உலகக்கோப்பை: 10 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதி சென்ற தென் ஆப்பிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் தோற்றது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மழையின் குறுக்கீடு, உள்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு, சொந்த நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை ஆட்டம் உள்ளிட்ட இந்த அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டு ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சூப்பர்-8 சுற்றில் போராடித் தோற்றது. மாறாக 10 ஆண்டுகளுக்குப்பின் தென் ஆப்ரிக்கா அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தோல்வியை சந்திக்காத அணி தென் ஆப்ரிக்கா அணி இதுவரை எட்டு டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடினாலும், 2 முறை மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது. 2009-ஆம் ஆண்டு அரையிறுதியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த தென் ஆப்ரிக்கா 2014-ஆம் ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் அரையிறுதியில் தோற்றது. இந்த இருமுறையைத் தவிர அரையிறுதிக்கு தென் ஆப்ரிக்க அணி தகுதி பெறவில்லை. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை என்ற பெயரை தென் ஆப்ரிக்க அணி காப்பாற்றி வருகிறது. தற்போது மேற்கிந்தியத்தீவுகளை வென்றதன் மூலம் குரூப்-2 பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES குரூப்-1 பிரிவில் யாருடன் மோதல் ? ஆனால், அரையிறுதியில் குரூப்-1 பிரிவில் 2வது இடத்துக்கு வரும் அணியுடன் தென் ஆப்ரிக்கா மோதும். ஆனால், இன்று நடக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி வென்றால் முதலிடம் பெற்று அரையிறுதி செல்லும். ஆனால், அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவுடன் மோதாது. ஒருவேளை ஆஸ்திரேலிய அணி வென்றால் 4 புள்ளிகள் பெறும், ஆனாலும் அரையிறுதியை எந்த அணியும் உறுதி செய்யாது. ஏனென்றால், வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் ஒருவேளை ஆப்கானிஸ்தான் வென்றால், 4 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் பார்க்கப்படும் என்பதால், குரூப்-1 பிரிவில் இந்தியாவின் வெற்றியைப் பொருத்தே யார் அரையிறுதி செல்வார் என்பது முடிவாகும். இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டம் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருக்க அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரையிறுதி ஆட்டத்துக்கு ரிசரவ் நாள் இல்லை, மாறாக 250 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டம் ரத்தானால், இந்திய அணி அரையிறுதி செல்லும், ஆஸ்திரேலிய அணி, வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வெளியேறும், ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்லும். ஆதலால் மழைதான் ஆஸ்திரேலியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் கருவியாகும். ஆன்டிகுவாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில், குரூப்-2 பிரிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்ரிக்க அணி. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. 136 ரன்களை இலக்காகக் கொண்டு ஆட்டம் தொடங்கிய நிலையில் மழைக் குறுக்கிடவே தென் ஆப்பிரிக்காவுக்கு டிஎல்எஸ் முறையில் இலக்கு திருத்தப்பட்டு 17 ஓவர்களில் 123 ரன்கள் என்று மாற்றப்பட்டது. இதையடுத்து, 123 ரன்களைத் துரத்திய தென் ஆப்ரிக்கா 16.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்து வென்றது. 10 ஆண்டுகளுக்குப்பின் 2014-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்க அணியை இறுதிப்போட்டிவரை எய்டன் மார்க்ரம் கொண்டு சென்றார். அதன்பின் 10 ஆண்டுகளுக்குப்பின் சீனியர் அணியை அரையிறுதிவரை மார்க்ரம் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அது மட்டுமல்லாமல் இந்த ஆட்டத்தில் மார்க்ரம் தொடக்கத்திலேயே சுழற்பந்துவீசத் தொடங்கி, 4 ஓவர்களை முழுமையாக வீசி 28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். தென் ஆப்ரிக்க அணி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சுழற்பந்துவீச்சுக்கு இந்த அளவு முக்கியத்துவம் அளித்து பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியதில்லை. இந்த ஆட்டத்தில் மார்க்ரம், ஷம்சி, கேசவ் மகராஜ் என 3 சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். இதற்கு முன் 2021-ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகமாகப் பந்துவீசியிருந்தனர். தென் ஆப்ரிக்கா என்றாலே வேகப்பந்துவீச்சில்தான் பலம் என்ற நிலையை மாற்றி, சுழற்பந்துவீச்சுக்கு மார்க்ரம் மாற்றியுள்ளார். இந்த போட்டியில் 12 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்கள் வீசி 79 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் ஷம்சி 3 விக்கெட், மார்க்ரம், மகராஜ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பேட்டிங்கில் படுமோசம் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் பேட்டிங்கில் படுமோசமாகச் செயல்பட்டது என்பதை பதிவு செய்ய வேண்டும். மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர்கள் 58 டாட் பந்துகளை விட்டுள்ளனர். இது ஏறக்குறைய 9.4 ஓவர்களுக்கு சமம். அதாவது 10 ஓவர்களில்தான் 135 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் கெயில் மேயர்ஸ்-ரஸ்டன் சேஸ் ஆகியோர் சேர்ந்து 81 ரன்கள் சேர்த்து பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் அணியை ஓரளவுக்கு கவுரவமான ஸ்கோருக்கு கொண்டு வந்தது. இல்லாவிட்டால் மேற்கிந்தியத்தீவுகள் அணி 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். சேஸ், மேயர்ஸ் தவிர இருபேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் பொறுப்பற்று ஆட்டமிழந்தனர். டிபெண்ட் சாத்தியமில்லை மிகக்குறைவான ஸ்கோரை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்ய நினைப்பது அமெரிக்கா போன்ற ஆடுகளங்களில் சாத்தியம். ஆனால், ஆன்டிகுவா, பர்படாஸ் போன்ற பேட்டர்களுக்கு சாதகமான விக்கெட்டில் சாத்தியமில்லை. இருப்பினும் மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சாளர்கள் அனல் பறக்கும் பந்துவீச்சை வெளிப்படுத்தி, தொடக்கத்திலேயே தென் ஆப்ரிக்காவின் 2 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள் வீழ்த்தி நெருக்கடி அளித்தனர். ஆனால் மழைக் குறுக்கீடு முடிந்து ஆட்டம் தொடங்கியபின், மார்க்ரம் (18), ஸ்டெப்ஸ் (29), கிளாசன் (22) ஆகியோரின் கேமியோ ஆட்டத்தை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் நம்பிக்கையைத் தளரவிடாமல் போராடினாலும் கடைசி நேரத்தில் யான்சென் 21 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சரியான உத்தி இல்லை பட மூலாதாரம்,GETTY IMAGES யான்சென் ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் இல்லை. அவரை கடைசிவரை நிலைத்து ஆடவும் மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்கள் அனுமதித்திருக்கக்கூடாது. யான்சென் பலவீனத்தை அறிந்து சரியான பந்துவீச்சாளரைப் பயன்படுத்தி இருந்தால் நிச்சயம் மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி பெற்றிருக்கும். வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருந்தும், சரியான உத்திகளை மேற்கிந்தியத்தீவுகள் செயல்படுத்தாமல் விட்டதால் வெற்றியை இழக்க நேரிட்டது என்ற கூற முடியும். தென் ஆப்ரிக்கா மோசமான பீல்டிங் தென் ஆப்ரிக்கா என்றாலே பீல்டிங்கிற்கு பெயரெடுத்தவர்கள். கிப்ஸ், ஜான்டி ரோட்ஸ், ஹன்சி குரோனியே, கல்லினன், மெக்மிலன் என பலரைக் குறிப்பிடலாம். ஆனால் இந்த ஆட்டத்தில் மட்டும் தென் ஆப்ரிக்க அணி 4 கேட்சுகளைத் தவறவிட்டனர். கேப்டன் மார்க்ரம், நோர்க்கியா, டேவிட் மில்லர், கேசவ் மகராஜ் என 4 பேரும் கேட்சுகளை கோட்டைவிட்டனர். ரபாடாவை பயன்படுத்தாத மார்க்ரம் இந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சு சிறப்பாக ஒத்துழைத்ததால் கடைசிவரை ரபாடாவை பந்துவீச மார்க்ரம் அழைக்கவில்லை. கடைசி நேரத்தில் 18-வது ஓவரை வீச ரபாடா அழைக்கப்பட்டார். 62 டி20 போட்டிகளில் விளையாடிய ரபாடா இதுபோன்று கடைசிவரை பந்துவீசாமல் இருந்ததில்லை. இதற்குமுந்தைய 61 ஆட்டங்களில் தொடக்கத்திலேயே முதல் 4 ஓவர்களிலேயே ரபாடா பந்துவீசிவிடுவார். ஐபிஎல் தொடர்களில் ரபாடாவை 10 ஓவர்களுக்கு மேல் பயன்படுத்தியுள்ளனர். 2021-ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 5வது ஓவருக்குப்பின் ரபாடா ஒருமுறை பந்துவீசியுள்ளார். ஆனால், இதுபோன்று 18-வது ஓவர்வரை முதல் ஓவரைக்கூட வீசாமல் ரபாடா இருந்ததில்லை. ஆனாலும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்லை. இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினாலும் 7 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மழை சென்டிமென்ட் தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே டீ காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ் விக்கெட்டைஇழந்து மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தென் ஆப்ரிக்க அணியின் வாழ்க்கையில் விதி மீண்டும் விளையாடுகிறதோ என்று ரசிகர்கள் ஆதங்கம் அடைந்தனர், 1992, 2003, 2015 ஆகிய ஆண்டுகளில் தென் ஆப்ரிக்காவுக்கு நேர்ந்த கதி மீண்டும் ஏற்படுமா என்று நினைத்தனர். ஆனால், 75 நிமிடங்கள் தாமதத்துக்குப்பின் ஆட்டம் மீண்டும் தொடங்கிவிட்டது. பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டோம் தோல்வி அடைந்த மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் பாவெல் கூறுகையில் “கடைசி வரை போராடிய எங்கள் வீரர்களுக்கு பாராட்டுகள். இதுபோன்ற மோசமான பேட்டிங்கை எதிர்காலத்தில் மறந்துவிட வேண்டும். நடுப்பகுதியில் நாங்கள் சரியாக பேட் செய்யவில்லை. இது ரன் ஸ்கோர் செய்வதற்கு எளிதான விக்கெட் இல்லை. நடுப்பகுதி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்கு ஆளாகினோம்,” என்றார். "பந்துவீச்சில் எங்கள் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். 135 ரன்களையும் டெபெண்ட் செய்ய முடியும் என்று போராடினர். தரவரிசையில் 9வது இடத்தி்ல் இருக்கும் அணிக்கும், 3வது இடத்தில் இருக்கும் அணிக்கும் இடையிலான மோதல் சிறப்பானதாக இருந்தது. கரீபியன் வீரர்களிடம் ஏராளமான திறமை இருக்கிறது, தொடர்ந்து குழுவாக செயல்பட்டு, மக்களை பெருமைப்படுத்த முயல்வோம். மக்களும் எங்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர். இரவுவரை இருந்து எங்களுக்கு ஆதரவு அளித்த ஆன்டிகுவா மக்கள், கரீபியன் மக்களுக்கு நன்றி,” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cxeeelk03m1o
  24. 2024இல் இதுவரையான காலப்பகுதியில் 27 இந்திய படகுகள் கைப்பற்றல்; 204 மீனவர்கள் கைது Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 03:25 PM 2024 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 27 இந்திய இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 204 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதி அதிகாலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் கடற்படையினரால் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளையும் அதிலிருந்த 18 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186841

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.