Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. லெபனானை கற்காலத்திற்கு அனுப்புவோம் - இஸ்ரேல் கடும் எச்சரிக்கை Published By: RAJEEBAN 27 JUN, 2024 | 12:25 PM லெபனானை மீண்டும் கற்காலத்திற்கு அனுப்புவோம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. லெபனானில் யுத்தமொன்றை விரும்பவில்லை எனினும் லெபனானை கற்காலத்திற்கு அனுப்ப முடியும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வோசிங்டனிற்கான விஜயத்தின்போது இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் இதனை தெரிவித்துள்ளார்.தனது நாட்டினால் லெபனானை கற்காலத்தினை நோக்கி தள்ள முடியும் ஆனால் அதனை செய்ய விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் யுத்தத்தை விரும்பவில்லை ஆனால் நாங்கள் அனைத்து சூழ்நிலைகளுக்கும் எங்களை தயார்படுத்துகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தமொன்றை ஆரம்பித்தால் லெபனானிற்கு எங்களால் பேரழிவை ஏற்படுத்த முடியும் என்பது ஹெஸ்புல்லா அமைப்பிற்கு தெரியும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பித்தது முதல் இஸ்ரேல் லெபனான் எல்லையில் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையில் நாளாந்தம் மோதல்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக இந்த மோதல்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து முழுமையான யுத்தம் குறித்த அச்சம் உருவாகியுள்ளது. இஸ்ரேல் லெபனானை தாக்குவது குறித்து எச்சரித்துள்ளதை தொடர்ந்து ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவரும் பதில் எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஹெஸ்புல்லா இஸ்ரேல் மோதல்கள் முழுமையான யுத்தமாக வெடிப்பதை அமெரிக்கா உட்பட இஸ்ரேலின் முக்கிய சகாக்கள் விரும்பாதது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பில் லெபனான் இஸ்ரேல் உட்பட அனைத்து தரப்பினருடனும் அமெரிக்கா தீவிரபேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக வோசிங்டனில் அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187089
  2. பொலிவியா: ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி முறியடிப்பு, சதி செய்த ராணுவத் தலைவர் கைது பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,பொலிவியாவின் ஜெனரல் ஜூனிகா ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், வில் கிரான்ட் பதவி, மெக்சிகோ மத்திய அமெரிக்கா, கியூபாவுக்கான செய்தியாளர் 27 ஜூன் 2024, 09:21 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பொலிவியா தலைநகர் லா பாஸில் உள்ள அதிபர் மாளிகையை ராணுவப் படையினர் சுற்றி வளைத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, சதிப்புரட்சி செய்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி மேற்கொண்ட ராணுவ தலைவரை பொலிவிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முக்கிய அரசாங்க கட்டடங்கள் அமைந்துள்ள முரில்லோ சதுக்கத்தில் (Murillo Square) ராணுவத்தின் கவச வாகனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தங்களை நிலை நிறுத்தியிருந்தனர். அவர்கள் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மேற்கொண்டனர். அதன் பின்னர் அனைவரும் கட்டடங்களை விட்டு வெளியேறினர். கிளர்ச்சி ராணுவத் தலைவரான ஜெனரல் ஜுவான் ஜோஸ் ஜூனிகா (Gen Juan José Zúñiga), தான் "ஜனநாயகத்தை மறுசீரமைக்க" விரும்புவதாகவும், அதிபர் லூயிஸ் ஆர்ஸை மதிக்கும் அதே வேளையில், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் லூயிஸ் ஆர்ஸ் (Luis Arce), "ஜனநாயகத்திற்கு ஆதரவாக ஒன்றுகூடி அணி திரள வேண்டும்" என்று மக்களை வலியுறுத்தினார். "பொலிவிய மக்களின் உயிர்களைப் பறிக்கும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளை மீண்டும் நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று அவர் அதிபர் மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். அவரது வார்த்தைகள் மக்கள் மத்தியில் தெளிவாக எதிரொலித்தது, ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக வீதிகளில் இறங்கிப் போராட்டம் செய்தனர். அதிபர் மாளிகைக்குள் படமாக்கப்பட்ட காட்சிகளில், அதிபர் ஆர்ஸ் ஜெனரல் ஜூனிகாவை எதிர்கொள்வதைக் காணலாம். அந்தக் காட்சிகளில், அவரைக் கீழே நிற்கும்படி கட்டளையிட்டு, பதவியைத் துறக்குமாறும் அதிபர் கேட்டுக் கொண்டார். பொலிவியாவின் முன்னாள் தலைவரான ஈவோ மொரேல்ஸை வெளிப்படையாக விமர்சித்ததைத் தொடர்ந்து ஜெனரல் ஜூனிகா பதவி நீக்கம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை உறுதிப்படுத்தியதோடு, அதிபர் ஆர்ஸ் புதிய ராணுவத் தளபதிகளை நியமிப்பதாகவும் குறிப்பிட்டார். திங்கட்கிழமை தொலைக்காட்சியில் அவர் பேசியது ஒளிப்பரப்பானதைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஜூனிகா தொலைகாட்சி உரையில், முன்னாள் அதிபர் மொரேல்ஸ் அடுத்த ஆண்டு மீண்டும் பதவிக்குப் போட்டியிட்டால் அவரைக் கைது செய்வேன் என்று மிரட்டல் விடுத்திருந்ததைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பட மூலாதாரம்,SHUTTERSTOCK படக்குறிப்பு,லா பாஸில் உள்ள முக்கிய அரசாங்க கட்டடங்களுக்கு வெளியே ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தபட்டனர் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைக் கண்டித்ததோடு, ஜெனரல் ஜூனிகாவும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அதிபர் மொரேல்ஸ் கோரியுள்ளார். இதுதொடர்பாக குற்றவியல் விசாரணையையும் அரசு தொடங்கியுள்ளது. பொலிவிய கடற்படையின் தலைவரான வைஸ்-அட்மிரல் ஜுவான் ஆர்னெஸ் சால்வடாரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெனரல் ஜூனிகா ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை மேற்கொண்டதற்கான உண்மையான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது பெரியளவில் திட்டமிடப்பட்ட அதிகார ஒருங்கிணைப்பு அல்ல, மாறாக ஒரு சிறியளவிலான, மோசமாகத் திட்டமிடப்பட்ட ஆயுதமேந்திய கிளர்ச்சி என்பது தெளிவாகிறது. எவ்வாறாயினும், ஜெனரல் ஜூனிகாவின் ராணுவ எழுச்சி பொலிவியாவில் ஒரு தனித்துவமான அத்தியாயமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில் அடுத்த சில வாரங்கள் முக்கியமானதாக இருக்கும். சந்தேகத்திற்கு இடமின்றி, அரசாங்கம் தற்போது எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழலில் உள்ளது. மற்றவர்கள் அதிபர் ஆர்ஸின் நிர்வாகத்தைக் கவிழ்க்க முயற்சி செய்யலாம். இருப்பினும் ராணுவ சக்திக்கு எதிராக அரசியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், செல்வாக்கு மிக்க முன்னாள் அதிபரும் பொலிவிய இடதுசாரிகளில் மூத்த அரசியல்வாதியுமான ஈவோ மொரேல்ஸின் ஆதரவை தற்போதைய அதிபர் நம்பலாம். மொரேல்ஸ் தனது ஆதரவாளர்களை வீதிக்கு வந்து ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை நிறுத்தக் கோருமாறு வலியுறுத்தினார். குறிப்பாக நாட்நாட்டின் பூர்வீக கோகோ விவசாயிகள் இயக்கத்தினரை அரசுக்கு ஆதரவு கொடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். அந்த மக்கள் சக்தி, ஜெனரல் ஜுனிகாவின் திட்டங்களுக்கு எதிரான உறுதியை வலுப்படுத்த உதவியிருக்கலாம். ஜுனிகாவின் திட்டத்தில் முன்னாள் தலைவர் ஜீனைன் அனெஸ் உட்பட்ட "அரசியல் கைதிகளை" விடுவிப்பதும் அடங்கும். ராணுவப் படைகள் முரில்லோ சதுக்கத்தைக் கைப்பற்றிய பிறகு, ஜெனரல் ஜூனிகா "நாங்கள் இந்தத் தாயகத்தை மீட்டெடுக்கப் போகிறோம்” என்றார். ”எல்லாவற்றையும் நாசமாக்கிய காழ்ப்புணர்ச்சியாளர்களின் உயரடுக்கு பணக்காரர்கள் குழுவால் தேசம் கைப்பற்றப்பட்டுள்ளது" என்று பேசினார். முன்னாள் கூட்டாளிகளான ஆர்ஸ், மொரேல்ஸ் ஆகியோர் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் பொலிவியாவில் அரசியல் மாற்றத்தைக் கட்டாயப்படுத்த ராணுவத்தைப் பயன்படுத்துவதை எதிர்ப்பதில் ஒன்றுபட்டனர். கடந்த 2019ஆம் ஆண்டில், அப்போதைய அதிபர் மொரேல்ஸ், அதிபர் தேர்தலில் மோசடி செய்ய முயல்வதாகக் கூறி ராணுவத் தலைவர்களால் ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர், 2019இல் மெக்சிகோவுக்கு நாடு கடத்தப்பட்டார். பட மூலாதாரம்,BLOOMBERG/GETTY படக்குறிப்பு,அதிபர்அதிபர் லூயிஸ் ஆர்ஸ் (நடுவில்) மாளிகையின் மேல்மாடத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார் கடந்த 2005இல் ஈவோ மொரேல்ஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை பொலிவியா அரசியல் ரீதியாக அமெரிக்காவின் மிகவும் நிலையற்ற நாடுகளில் ஒன்றாக இருந்தது. அவர் ஆட்சியில் இருந்த காலகட்டம் ஆண்டியன் தேசத்திற்கு (Andean nations) மிகவும் தேவையான நிலைத்தன்மையைக் கொண்டு வந்தது. தற்போதைய அதிபர் ஆர்ஸ், 2019 தேர்தலில், ஒரு கொந்தளிப்பான காலத்தைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப் பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு கிடைத்தது. வெனிசுலா மற்றும் கொலம்பியாவில் உள்ள சோசலிச ஆட்சிகள் போன்ற நெருங்கிய ஆதரவாளர்கள் இந்தச் சம்பவத்தை உடனடியாகக் கண்டித்து ஜனநாயகத்தை மீட்டெடுக்குமாறு கோரினர். வாஷிங்டனும் நாட்டில் அமைதியைக் கோரியது. அவரது சோசலிச ஆட்சியை எதிர்த்த பொலிவியர்கள்கூட தென் அமெரிக்காவில் ஒரு இருண்ட காலத்திற்குத் திரும்புவதைக் காண விரும்ப மாட்டார்கள். அங்கு பயங்கரமான மனித உரிமைகள் மீறல் நடவடிக்கைகளைக் கொண்ட ராணுவத்தினர், நாட்டின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைத் துப்பாக்கி முனையில் ஆட்சியை விட்டு வெளியேற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cv2ge77l19go
  3. கராச்சியில் வெப்ப அலை : 450 உயிர்கள் பலி! என்ஜிஓ தகவல் பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் வெப்ப அலை தாக்கியதில் கடந்த நான்கு நாட்களில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக ஒரு முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி, கடந்த சனிக்கிழமை முதல் கடுமையான வெப்பமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் மிக அதிகமாக வெப்பநிலை வீசுகிறது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களில் குறைந்தது 427 உடல்களைப் பெற்றதாக எதி அறக்கட்டளை கூறியுள்ளது. இது சிந்து அரசாங்கம் நேற்று 23 உடல்களை மூன்று அரசு மருத்துவமனைகளில் இருந்து பெற்றதாக தெரிவித்துள்ளது. எதி டிரஸ்ட் என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய நலன்புரி அறக்கட்டளை மற்றும் ஏழைகள், வீடற்றோர், ஆதரவற்றக் குழந்தைகள் மற்றும் தாக்கப்பட்ட பெண்களுக்கு பல்வேறு இலவச அல்லது மானிய விலையில் சேவைகளை வழங்குகிறது. இதுகுறித்து, அறக்கட்டளையின் தலைவர் பைசல் எதி கூறுகையில், ” கராச்சியில் அறக்கட்டளையின் கீழ் நான்கு சவக்கிடங்குகள் செயல்படுகின்றன. மேலும் எங்கள் பிணவறைகளில் அதிக உடல்களை வைக்க இடமில்லாத நிலையை நாங்கள் அடைந்துள்ளோம். வருத்தமான உண்மை என்னவென்றால், இந்த உடல்களில் பல கடுமையான வானிலையிலும், நிறைய சுமை கொட்டும் பகுதிகளில் இருந்து வந்தவை. பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது. இந்த மக்கள் நாள் முழுவதையும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக முழு நாளையும் செலவிடுவதால் தீவிர வெப்ப அலை அவர்களுக்கு ஏற்பட்டது. நேற்று மட்டும் 135 உடல்கள் தங்கள் பிணவறைக்கு வந்ததாகவும், திங்கட்கிழமை அன்று 128 உடல்கள் கிடைத்தது” என்றார். https://thinakkural.lk/article/304647
  4. 27 JUN, 2024 | 07:24 PM வவுனியா மகாரம்பைக்குளம் பகுதியில் புலம்பெயர் தேசத்தில் இருந்து வருகை தந்த பெண்ணையும வீதி ஓரங்களில் நிற்கும் நாய்களை பராமரிப்பதற்கு காப்பகத்தை தனது காணியில் மேற்கொண்ட நிலையில் குறித்த பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நோர்வே நாட்டில் இருந்து வருகை தந்த பெண்மணி ஒருவர் வவுனியாவில் வீதி ஓரங்களில் பராமரிப்பின்றி காணப்படும் நாய்களை தனது செலவில் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை தனது காணியில் மேற்கொண்டு வந்தபோது குறித்த செயற்பாட்டினால் கிராமத்தில் வாழும் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் எனவும் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்து இப்பகுதியைச் சூழல் உள்ள மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர். குறித்த பகுதிக்கு வருகை தந்த மகாரம்பைகுளம் பொலிசார் இரு தரப்பினரையும் அழைத்து இது தொடர்பில் அனுமதி பெறப்பட்டதா என கேள்வி எழுப்பியிருந்தனர். எனினும் நாய் காப்பகத்தின் உரிமையாளரான குறித்த பெண்மணி தான் இவ்வாறான ஒரு காப்பகத்தை உருவாக்குவதற்கு அனுமதி பெறவில்லை எனவும் அது தொடர்பிலான கடிதங்கள் தன்னால் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதேவேளை வீதி ஓரங்களில் கவனிப்பாறின்றி நிற்கும் நாய்களையே தான் இவ்வாறான ஒரு காப்பகத்தின் மூலமாக பாதுகாப்பாக வளர்ப்பதற்கு முனைந்ததாகவும் தெரிவித்திருந்ததோடு அதற்கான சகல ஏற்பாடுகளையும் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமைய மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பொது மக்கள் பொலிஸாரிடம் கருத்து தெரிவிக்கையில், தாம் இவ்வாறான ஒரு காப்பகத்தை அமைப்பதற்கு எதிரானவர்கள் இல்லை என்றும் ஆனால் இது சீராக பராமரிக்கப்படாமல் விட்டால் இப்பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு நோய்கள் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் குறித்த பெண் வெளிநாட்டில் இருந்து வந்து இதனை செய்வதனால் அவர் மீண்டும் வெளிநாடு சென்ற பின்னர் இங்கு இருப்பவர்கள் அதனை சீராக பராமரிக்காவிட்டால் இந்த பிரதேசத்தில் இருப்பவர்களே அதனால் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்ததோடு குறித்த திட்டத்தை மக்கள் நடமாட்டம் அற்ற பகுதியில் மேற்கொள்வதற்கு தாமும் ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியிருந்தனர். எனினும் இரு தரப்பினர் உடைய நியாயப்பாடுகளையும் அறிந்த பொலீசார் குறித்த நாய் காப்பகத்திற்கு சென்று அங்கு நடைபெறும் வேலை திட்டங்களையும் பார்வையிட்டு இருந்தனர். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில் அது தொடர்பாக அனுமதியைப் பெற்று காப்பகத்தை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்த நிலையில் இருதரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் அதேவேளை இந்த நாய் காப்பகத்திற்காக உடனடியாக அனுமதியைப் பெற்று அதனை செயல்படுத்துமாறும் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து அப்போது மக்கள் குறித்த பகுதியிலிருந்து சென்றதோடு இது தொடர்பாக பொலிஸார் தமது அவதானத்தையும் செலுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/187119
  5. பாகிஸ்தானில் கடந்த 6 நாட்களில் கடும் வெப்பம் காரணமாக சுமார் 568 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் வெப்பநிலை 49 – 50 பாகை செல்சியஸாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வசிப்பதற்கு வீடுகள் இல்லாதோர் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களே அதிகளவில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பாக்கிஸ்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/304692
  6. MATCH DELAYED BY RAIN 2nd Semi-Final, Providence, June 27, 2024, ICC Men's T20 World Cup India (8/20 ov) 65/2 England England chose to field. Current RR: 8.12 • Last 5 ov (RR): 44/1 (8.80) Live Forecast:IND 184
  7. அமைச்சர் பவித்திராவின் விடத்தல்தீவு குறித்த வர்த்தமானி அறிவித்தலிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை 27 JUN, 2024 | 02:56 PM விடத்தல்தீவு இயற்கை சரணாலய பகுதியின் ஒரு பகுதியை இறால்பண்ணை திட்டத்திற்கு ஒதுக்கும் வகையில் வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மீன் வளர்ப்பு தொழில்பூங்காவை அமைப்பதற்காக, மன்னார் மாவட்டம் விடத்தல்தீவு இயற்கை சரணாலயம் என குறிப்பிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் முடிவிற்கு வருவதாக மே மாதம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகியிருந்தது. எனினும் அரசாங்கத்தின் முடிவிற்கு எதிராக சூழல்நீதிக்கான நிலையம் நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்தது. இந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. https://www.virakesari.lk/article/187098
  8. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது. கம்பஹா மாவட்ட செயலக அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் கோபா குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, இந்த விடயங்கள் தொடர்பான விபரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. துணை கணக்காய்வாளர் ஜெனரல் எம்.எஸ். நயன குமார இந்தத் தகவலை குழுவில் தெரிவித்துள்ளார். பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதிய திணைக்களத்தின் தவறான செயற்பாடுகளினால் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், முப்படையினருக்கு அதிகளவான ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கோபா குழுவில் தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைச் செலவுகளும் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் குழுவில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சுமார் 6,400 சட்டவிரோத ஓய்வூதியங்கள் பதிவாகியுள்ளதாகவும் கோபா குழு உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/304689
  9. வெறும் 7 சதவீத கடன் தள்ளுபடிக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை நற்செய்தியல்ல - ஹர்ஷ டி சில்வா Published By: VISHNU 27 JUN, 2024 | 07:19 PM (எம்.மனோசித்ரா) சர்வதேச கடன் வழங்குனர்களுடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய 7 சதவீத கடன் தள்ளுபடி மாத்திரமே கிடைக்கப்பெறவுள்ளது. 28 சதவீத கடன் தள்ளுபடி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 7 சதவீதத்துக்கு மாத்திரம் இணக்கம் காணப்பட்டுள்ளமை ஒரு நற்செய்தியல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பிரதான இரு தரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான சீனா, ஜப்பான், இந்தியா உட்பட ஏனைய நாடுகளுடன் இணக்கப்பாட்டை எட்டியமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. அதன் ஊடாக நன்மை கிடைக்குமானால் இலங்கை என்ற குழந்தையை அங்குமிங்கும் இழுத்து சிதைப்பதற்கு நாம் தயாராக இல்லை என்நும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார். வியாழக்கிழமை (27) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை தொடர்பில்கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரையை செவிமடுத்தோம். அதில் நாட்டுக்கு சிறந்த தாய் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நாணய நிதியத்தை நாட வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள் தற்போது அதனை எதிர்க்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தி எல்லா விடயங்களுக்கும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ஜனாதிபதிக்கு இந்த உரையை எழுதிக் கொடுத்தவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தாலும், அதனை வாசிக்க முன்னர் ஜனாதிபதி சற்று சிந்தித்திருக்கலாம். சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு நாமே ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வந்தோம். ஐக்கிய மக்கள் சக்தி அசடு போல் தான் இதுவரை செயற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். நாம் எவ்வாறு செயற்பட்டோம் என்பதை ஜனாதிபதி ஒருமுறை சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். 2020இல் பாராளுமன்றத்துக்கு வந்த முதல் நாளே நாணய நிதியத்தை நாட வேண்டும் என்று நாம் கூறினோம். இதனைப் புரிந்து கொள்ளுங்கள். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டமைக்கெதிராக நாம் எமது வாக்கினைப் பயன்படுத்தவில்லை. ஜனாதிபதியின் உரையை தயாரித்தவர் அதனை அறிந்திருக்கவில்லை போலும். நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டில் சில திருத்தங்களை மேற்கொள்வோம் என்றே நாம் கூறினோம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பீட்டர் பீருவருடனான கலந்துரையாடலிலும் எவ்வாறு நாம் இதில் திருத்தங்களை ஏற்படுத்துவோம் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளோம். பிரதான இரு தரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான சீனா, ஜப்பான், இந்தியா உட்பட ஏனைய நாடுகளுடன் இணக்கப்பாட்டை எட்டியமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. அதன் ஊடாக நன்மை கிடைக்குமானால் இலங்கை என்ற குழந்தையை அங்குமிங்கும் இழுத்து சிதைப்பதற்கு நாம் தயாராக இல்லை. நாம் மக்களுக்கான எதிர்க்கட்சியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இது எமது இராஜதந்திர உறவுகளினால் கிடைத்த பலன் ஒன்றாகும். மாறாக லஸாட் மற்றும் கிளிபோர் சான்ஸ் நிறுவனங்களின் தலையீட்டினால் கிடைத்த ஒன்றல்ல. தற்போது ஜப்பானுடன் இணக்கப்பாட்டை எட்டியதற்கு கரகோஷமெழுப்பியவர்களே, அன்று ஜப்பானை கன்னங்களில் அறைந்து நாட்டை விட்டு விரட்டினர். இந்தியாவுடன் எமக்கு பெரும் சகோதரத்துவ பிணைப்புள்ளது. ஜப்பான் எமது நீண்ட நட்பு நாடாகும். நாடுகளோடு நாம் பேணி வந்த நட்புகளாலயே இந்த வெற்றி எமக்கு கிடைத்தது. இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதற்கு ஆதரவு வழங்குமாறும் ஜனாதிபதி கோரியுள்ளனர். அதன் உள்ளடக்கம் குறித்து அறிய வேண்டியுள்ளது. எத்தனை வருடங்களுக்கு சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது? 2028 வரை கடன் தவணைகளை செலுத்த வேண்டிய தேவை இல்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். கடன் தவணைகளை காலம் தாழ்த்தும் போது வட்டி செலுத்த வேண்டுமா? இல்லையா? அதன் பிற்பாடு வட்டி விகிதம் என்ன? இது தொடர்பான விடயங்களை அறிய விரும்புகிறோம். சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்கள் அடங்களாக சர்வதேச வணிக்கடன் தரப்பினரோடு இதுவரை எந்த நிலையான இணக்கப்பாடுகளையும் எட்டவில்லை. சர்வதேச வணிக கடன் தாரர்கள் தற்போது முன்வைத்துள்ள விடயங்களுடன் இலங்கை இணக்கப்பாட்டை எட்டுமாக இருந்தால் இதற்கு நாம் எமது எதிர்ப்பை தெரிவிக்கிறோம். காரணம் அவர்கள் முன்வைத்துள்ள விடயங்கள் நாட்டுக்கு பாதகமானவையாகும். கடன் செலுத்தும் இயலுமையையே பார்க்கின்றனர். நிதி ஸ்திரதன்மையை மீட்டெடுக்கும் நிலை இங்கு அவதானிக்கப்படுகிறது. இதனால் புதிய தரப்படுத்தல் நிலையை எட்டலாம். சர்வதேச நாணய நிதியம் புதிதாக முன்வைத்துள்ள இணக்கப்பாட்டறிக்கையில் கடன்மீள் செலுத்தாமை சலுகை வீதம் என்ன என்பது குறிப்பிடப்படவில்லை. இந்த இணக்கப்பாட்டுக்கமைய கடன் தள்ளுபடி 50 வீதம் என ஆரம்பத்தில் அரசாங்கம் தெரிவித்தது. பின்னர் 30 சதவீதம் எனத் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் 28 சதவீதமென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருந்தாலும் இது 2028ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறைக்கு வரும். சர்வதேச நாணய நிதியம் புதிதாக முன்வைத்துள்ள இணக்கப்பாட்டறிக்கையின் பிரகாரம் அவதானிக்குமிடத்து கடன் தள்ளுபடி 28 சதவீதத்திலிருந்து - 7 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. இந்தளவு குறைந்த மட்டத்துக்கு உடன்பாட்டை எட்டியமை நாட்டிக்கு நற்செய்தியல்ல. மக்களுக்கு பாதமே. இதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள பரிசீலனை பரிந்துரைகளின் பிரகாரம் முன்னோக்கி செல்லும் தீர்மானத்துக்கு வந்தால் இது குறித்து கலந்துரையாடலாம் என்றார். https://www.virakesari.lk/article/187121
  10. பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியன் அண்ணை, வாழ்க வளத்துடன்.
  11. Published By: DIGITAL DESK 3 27 JUN, 2024 | 01:32 PM கிளிநொச்சி, குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் விசர்நாய்க் கடிக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (26) உயிரிழந்துள்ளார். சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/187095
  12. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றதுடன், சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோருடன் அவர் அங்கு தங்கியிருக்கும் போது கலந்துரையாடுவார் தெரிவிக்கப்படுகிறது. பெய்ஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ள அமைச்சர் வாங் யீ விடுத்த அழைப்பின் பேரில் ராஜபக்ச சீனா செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. நினைவு நிகழ்வுகளில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரதமர் லீ கியாங், வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் இதர முன்னணி சிபிசி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ராஜபக்சே பிரதமர் லீ கியாங் மற்றும் அமைச்சர் யீ ஆகியோருடன் பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகள் மற்றும் இலங்கைக்கு நன்மை பயக்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவார். சிங்கப்பூர் வழியாக பெய்ஜிங் சென்ற ராஜபக்சே, ஜூலை 1ஆம் திகதி நாடு திரும்புவார். https://thinakkural.lk/article/304672
  13. Published By: RAJEEBAN 27 JUN, 2024 | 12:23 PM இந்தியாவின் அதானி நிறுவனம் முன்னெடுத்துள்ள மின் உற்பத்தி திட்டங்களில் பாரிய நிதிமோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது. மன்னார் பூநகரியில் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி கிறீன்ஸ் எனேர்ஜி நிறுவனத்திற்குஅரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கையின் வலுசக்தி துறையின் காற்று வலுசக்திதுறையை ஜனாதிபதியும் அமைச்சர் காஞ்சன விஜயசேகரவும் இந்திய நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதால் பாரிய அளவிலான நிதிமோசடி இடம்பெறுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். இந்தியாவின் அதானி கிறீன்ஸ் எனர்ஜி நிறுவனம் மூலம் மன்னார் மற்றும் பூநகரியில் காற்றாலை மின்நிலையங்களை உருவாக்க முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை ஒரு கிலோவோட்டிற்கு என்ற அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தினை கேள்விப்பத்திரத்தை கோராமல் இந்திய நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர் என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இதன் காரணமாக 20 வருடங்களில் இலங்கை பல மில்லியன் டொலர்களை இழக்கவேண்டியநிலையேற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். வின்ட்போர்ஸ் என்ற நிறுவனம் காற்றுமின்சக்தி நிலையத்தை உருவாக்க முன்வந்தது அந்த நிலையம் அதானி நிறுவனத்தை விட அதிக விலையை வழங்க முன்வந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கேள்விப்பத்திர முறைகள் மூலம் இந்த நிறுவனத்திற்கு 50 மெகாவோட் காற்றுமின்சக்தி நிலையத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை அனுமதிவழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187087
  14. டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவின் தொடக்க ஜோடியை குறிவைக்கும் 2 இங்கிலாந்து வீரர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய அணி தொடர் வெற்றியைப் பெற்று வந்தாலும், கடந்த கால வரலாறு அந்த அணிக்குச் சாதகமாக இல்லை. கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து இந்திய அணி ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல் அரையிறுதிவரை வந்துவிட்டது. அதேநேரம், இங்கிலாந்து அணி, லீக் ஆட்டத்தைக் கடப்பதற்கே போராட்டத்தைச் சந்தித்தது. நடப்பு சாம்பியன் அணி, லீக் சுற்றோடு வெளியேறிவிடும் என்று கருதப்பட்டநிலையில், சூப்பர்-8 சுற்றுக்கு வந்து முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணி தொடர் வெற்றியைப் பெற்று வந்தாலும், கடந்த கால வரலாறு அந்த அணிக்குச் சாதகமாக இல்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது ஒரு வகையில் அணியின் பலவீனம் வெளிப்பட்டு வந்திருக்கிறது. அதனால் இங்கிலாந்துடனான ஆட்டம் இந்தியாவுக்கு எளிதாக அமைந்துவிடும் என யாரும் கணிக்கவில்லை. இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, மழையால் ஸ்காட்லாந்துடன் ஆட்டம் ரத்து, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி என லீக் சுற்று போராட்டமாகத்தான் தொடங்கியது. ஆனால், அடுத்தடுத்து 2 மாபெரும் வெற்றிகளை பெற்று நிகர ரன்ரேட்டில் சூப்பர்-8 சுற்றுக்குள் இங்கிலாந்து வந்தது. சூப்பர்-8 சுற்றில் தென் ஆப்ரிக்காவிடம் தோல்வி அடைந்தாலும், மேற்கிந்தியத்தீவுகளையும், அமெரிக்காவையும் வென்று நிகர ரன்ரேட்டில் வலுவாக அமர்ந்து குரூப்-2 பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தும்வரை இங்கிலாந்து அணிக்கு யாருடன் அரையிறுதி உறுதியாகவில்லை. இந்திய அணி வென்றபின்புதான், அரையிறுதி போட்டி நடக்கும் மைதானம் இங்கிலாந்து அணிக்கு உறுதியானது. அதன்பின்புதான் தனிவிமானத்தில் செவ்வாய்கிழமை காலை ஜார்ஜ்டவுன் சென்றது. இந்திய அணி திங்கள்கிழமை இரவு சென்றது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இங்கிலாந்தின் பலவீனம் என்ன? அரைறுதி போட்டி நடக்கும் பிராவிடன்ஸ் அரங்கில் 2010ம் ஆண்டுக்குப்பின் இங்கிலாந்து அணி விளையாடியதில்லை என்பதே அந்த அணிக்கு பெரிய பின்னடைவு. ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்குப்பின்புதான் அந்த அணி வீரர்கள் அந்த விக்கெட்டில் விளையாடுகிறார்கள். இதில் இங்கிலாந்து அணியில் இருக்கும் ஜோர்டான் மட்டும் கரீபியன் லீக்கில் விளையாடுவதால் அந்த விக்கெட்டில் விளையாடிய அனுபவம் உடையவர். மற்ற இங்கிலாந்து வீரர்கள் யாருக்கும் பிராவிடன்ஸ் விக்கெட் குறித்த அனுபவம் இல்லை. ஆனால், இந்திய அணியில் இருக்கும் பல வீரர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிராவிடன்ஸ் மைதானத்தில் டி20 போட்டிகளை விளையாடியதால் விக்கெட் குறித்த அனுபவம் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிராவிடன்ஸ் விக்கெட்(ஆடுகளம்) சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரி. ஆடுகளம் எப்படிப்பட்டது? பிராவிடன்ஸ் விக்கெட்(ஆடுகளம்) சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரி. இது ஸ்லோ விக்கெட் என்பதால், வேகப்பந்துவீச்சாளர்கள் உயிரைக்கொடுத்து வீசினாலும் ஸ்விங் ஆகாது, பவுன்ஸ் ஆவது கடினம். பந்துவீச்சில் வெவ்வேறு வேகத்தையும், சுழலையும் வெளிப்படுத்தும்போது அதற்கான பலன்களைப் பெற முடியும். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 146 ரன்களை ஆப்கானிஸ்தான் சேர்த்துள்ளது. இந்த உலகக் கோப்பைக்காக மைதானம் ஓரளவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டாஸ் வெல்லும் அணி சிறிதுகூட யோசிக்காமல் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து விக்கெட் பற்றி யோசிக்காமல் பவர்ப்ளே ஓவர்களை பயன்படுத்தி ரன்களைச் சேர்க்க முயற்சிக்கலாம். குறைந்தபட்சம் 150 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது. முதலில் பேட் செய்த அணி 5 முறையும், சேஸிங் செய்த அணி 4 முறையும் இந்த விக்கெட்டில் வென்றுள்ளன. இந்த உலகக் கோப்பைத் தொடரிலும் இங்கு 5 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட் செய்த அணிகள் 3 முறையும் சேஸிங் செய்த அணிகள் 2முறையும் வென்றுள்ளன. ஆதலால் இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். இங்கிலாந்து அணியில் அதில் ரஷீத், மொயின் அலி, லிவிங்ஸ்டன் ஆகியோரும், இந்திய அணியில் குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்ஸர் படேல் சேர்க்கப்படலாம், தேவைப்பட்டால் சஹலுக்குக் கூட வாய்ப்பு வழங்கப்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES விராட் கோலி இடம் பறிக்கப்படுமா? விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் மோசமான ஃபார்மோடு தவிக்கிறார். இதுவரை கோலி விளையாடிய போட்டிகளில் 2 டக்அவுட், என 66 ரன்கள்தான் சேர்த்துள்ளார், அதிகபட்சமே 37 ரன்கள்தான். வழக்கமாக விராட் கோலி 3வது வீரராகத்தான் களமிறங்குவார் ஆனால், அவரை டி20உலகக் கோப்பைக்காக புதிய பந்தை எதிர்கொள்ளச் செய்யும்போது அவரால் விக்கெட்டை தாக்குப்பிடித்து ஆடமுடியவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் அரையிறுதியில் விராட் கோலி வழக்கம்போல் 3-ஆவது இடத்திலும் தொடக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆனால், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் கோலியுடன் சேர்ந்து ஆடிய ஏபிடி கோலியின் தொடக்க பேட்டிங் குறித்து யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கோலிக்கு தொடக்க ஆட்டக்காரர் வரிசை சரியாக வராது. அவரை எப்போதும்போல 3-ஆவது வீரராகக் களமிறக்குங்கள். அவர் 3-ஆவது வீரராக வந்தாலே எதிரணிக்கு ஒருவிதமான கலக்கம் இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார். இதனால் விராட் கோலி அரையிறுதி ஆட்டத்தில் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறங்குவாரா அல்லது 3-ஆவது வீரராகக் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக, ரோஹித் சர்மாவும், கோலியும் ஒரே ஒருமுறைதான் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்களை விளாசி அவரின் ஃபார்மை நிரூபித்துவிட்டார். ஆனால், கோலி இதுவரை பெரிதாக எந்த இன்னிங்ஸிலும் ஆடவில்லை. இதனால் அடுத்துவரும் அரையிறுதி, அல்லது பைனலில் கோலி தன்னுடைய பேட்டிங்கை நிரூபிக்க வேண்டிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்களை எடுக்க முடியாமல் தவிக்கிறார். பும்ரா, குல்தீப் வருகை கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் 160 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 10 விக்கெட்டில் வென்று இந்திய அணியை வெளியேற்றினர். அப்போது இந்திய அணியின் துருப்புச்சீட்டுகளாகக் கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் இருவரும் அணியில் இல்லை. ஆனால், இந்தமுறை பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு, குல்தீப்பின் சமாளிக்க முடியாத சுழற்பந்துவீச்சு என இரு அஸ்திரங்களோடு இந்திய அணி களமிறங்குவது பெரிய பலமாகும். பிராவிடன்ஸ் விக்கெட் தொடக்கத்திலிருந்தே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆதலால், பவர்ப்ளேயில் பட்லர், பில்சால்ட் இருவரும் பெரிய ஸ்கோர் செய்ய அதிரடியாக ஆடலாம். பும்ரா பந்துவீச்சில் 12 இன்னிங்ஸில் பட்லர் 4 முறை ஆட்டமிழந்துள்ளார். 82 பந்துகளில் 71 ரன்களை பட்லர் சேர்த்துள்ளார். ஆதலால் தொடக்கத்திலேயே பும்ரா புதிய பந்தில் விக்கெட் வீழ்த்துவது வெற்றியை நோக்கி செல்ல எளிதாக அமையும். ஒருவேளை பட்லர் நிலைத்து நின்றால், நடுப்பகுதியில் குல்தீப் பந்துவீச்சை எதிர்கொள்ள நேரிடும். கடந்தஆண்டில் உலகளவில் அனைத்து தரப் போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளராக குல்தீப் அறியப்பட்டுள்ளார். அதிலும் நடுப்பகுதி ஓவர்களில் எதிரணியின் ரன்ரேட்டை இழுத்துப் பிடிப்பதில் வல்லவராக குல்தீப் இருந்து வருகிறார். இதுவரை 3 முறை குல்தீப் பந்துவீச்சில் பட்லர் ஆட்டமிழந்துள்ளார். 63 பந்துகளில் 87 ரன்களை பட்லர் சேர்த்துள்ளார். இங்கிலாந்து பேட்டர்கள் இடதுகை சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளனர். இருந்தாலும் அனுபவம் மிகுந்த அக்ஸர், ஜடேஜாவின் பந்துவீச்சை இங்கிலாந்து பேட்டர்கள் எளிதாக ஆட முடியாது. இங்கிலாந்து அணிக்கு நடுப்பகுதி ஓவர்களில் பெரிய தொந்தராக இருக்கப் போதுவது குல்தீப் பந்துவீச்சுதான். பெரிய அணிகளுக்கு எதிராகவே குல்தீப் 6 எக்னாமி வைத்துள்ளது இங்கிலாந்து ரன்ரேட்டை இழுத்துப் பிடிக்க வைக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிராவிடன்ஸ் விக்கெட் தொடக்கத்திலிருந்தே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு தலைவலியாக இருக்கப்போகும் ஆர்ச்சர், மொயின் அலி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 3 முறை ஜோப்ரா ஆர்ச்சரிடம் விக்கெட்டை இழந்துள்ளது எச்சரிக்கையாகும். டி20 போட்டிகளில் ஜோப்ரா ஆர்ச்சரின் 20 பந்துகளைச் சந்தித்த ரோஹித் 17 ரன்கள் சேர்த்து 3 முறை விக்கெட்டை இழந்துள்ளார். அதேபோல மொயின் அலி பந்துவீச்சிலும் 2 முறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆதலால் இருவரின் பந்துவீச்சில் ரோகித் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டியிருக்கும். விராட் கோலியை மொயின் அலி 10 முறை சர்வதேச கிரிக்கெட்டில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஒருநாள் போட்டியில் 3 முறை, டி20 போட்டியில் ஒருமுறை, டெஸ்ட் போட்டியில் 6 முறை என கோலியின் விக்கெட்டை மொயின் அலி வீழ்த்தியது எச்சரிக்கையாகும். ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் கோலியின் விக்கெட்டை 2முறை மொயின் அலி வீழ்த்தியுள்ளார். மொயின் அலியின் 26 பந்துகளைச் சந்தித்த கோலி, 18 ரன்கள்தான் சேர்த்துள்ளார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் பவர்ப்ளேயில் மொயின்அலியை பந்துவீசச் செய்து பெரிதாக அவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ஆதலால், பவர்ப்ளே ஓவருக்குப்பின்புதான் அவர் பந்துவீசக்கூடும் என்று எதிர்பார்த்தாலும், கோலிக்கும், ரோஹித்துக்கும் அழுத்தம் தர வேண்டும், ரன்ரேட்டைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்து மொயின் அலியை பவர்ப்ளே ஓவருக்குள் பந்துவீசவும் வைக்க முடியும். பவர்ப்ளேயில் ஆர்ச்சர் 8 ஓவர்களை சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வலுவாக இருக்கிறார் என்பதால் அவரின் பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும். டாப்ளியும் புதிய பந்தில் பந்துவீசும்போது, வலதுகை பேட்டர்களான ரோகித், கோலிக்கு பெரிய சவாலாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டி20 போட்டிகளில் ஜோப்ரா ஆர்ச்சரின் 20 பந்துகளைச் சந்தித்த ரோஹித் 17 ரன்கள் சேர்த்து 3 முறை விக்கெட்டை இழந்துள்ளார். ஒருவேளை ரோகித் சர்மா தொடக்கத்திலேயே ஆட்டமிழந்துவிட்டால், அடுத்துவரும் ரிஷப் பந்த், கோலிக்கு சுழற்பந்துவீச்சு மூலம் கடும் அழுத்தத்தை இங்கிலாந்து வழங்கலாம். ஏனென்றால் இருவருமே சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பெரிதாக ஸ்ட்ரைக் ரேட் இல்லை, சமாளித்து ஆடுவதிலும் சிரமப்படுவார்கள். 2021ம் ஆண்டிலிருந்து சுழற்பந்துவீச்சுக்கு எதிராக கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 117 ஆகவும், ரிஷப் பந்த் ஸ்ட்ரைக் ரேட்125 ஆகவும் இருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனால், சுழற்பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்யக்கூடிய ஷிவம் துபேயை 3-ஆவது வீரராக களமிறக்கவும் இந்திய அணி முயற்சிக்கலாம். ஏனென்றால், சுழற்பந்துவீச்சாளர்கள் நெருக்கடி தரும்போது அவர்களின் வியூகத்தை உடைக்க துபே போன்ற பவர் ஹிட்டர்கள் தேவை என்பதால், தேவைக்கு ஏற்றபடி திட்டங்களை மாற்றலாம். இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆர்ச்சர் ஒருமுறை மட்டுமே தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டெத் ஓவர்களை வீசி, 3விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மற்ற ஆட்டங்களில் நடுப்பகுதி ஓவர்களோடு ஆர்ச்சர் முடித்துவிடுவார். இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடுப்பகுதியில் ஆர்ச்சர் பந்துவீசினால், சூர்யகுமார், ஹர்திக் ஆகியோருக்கு எதிராக பந்துவீசலாம். இருவரையும் ஐபிஎல் தொடரில் பலமுறை ஆர்ச்சர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். பாண்டியாவை 3 முறையும், சூர்யகுமாரை ஒருமுறையும் ஆர்ச்சர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஆர்ச்சருக்கு எதிராக இருவருமே 110 ஸ்ட்ரைக் ரேட்டுக்குள்ளாகவே வைத்துள்ளது இந்தியாவுக்கு கவலைக்குரியதுதான். பட மூலாதாரம்,GETTY IMAGES நிலைத்து ஆடாத இந்தியாவின் முக்கிய வீரர்கள் இதுவரை நடந்த ஆட்டங்களில் ரிஷப் பந்த், துபே, ஜடேஜா, கோலி, என யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. ஐபிஎல் போட்டியில் மஞ்சள் ஆடை அணிக்கு சிறப்பாக ஆடிய துபேவை ஆல்ரவுண்டர் என்ற வரிசையில் தேர்ந்தெடுத்தும், இதுவரை பெரிய இன்னிங்ஸோ, கேமியோ என இந்திய அணிக்காக ஆடவில்லை. விராட் கோலிக்கு இதுதான் கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கலாம் என்பதால் ரசிகர்கள் மனதில் நிற்கும் பங்களிப்பை அரையிறுதியில் அளித்தால் அணியின் வெற்றிக்கு உதவும். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா இருவருமே நடுவரிசை பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கிறார்கள். இருவரும் பல போட்டிகளில் சிறப்பாக பேட் செய்து கவுரமான ஸ்கோர் வரவும், வெற்றித் தேடித்தந்துள்ளனர். இவர்களின் பங்களிப்பு இங்கிலாந்துக்கு எதிராகவும் தொடர வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு சிறப்பாக ஆடிய துபேவை ஆல்ரவுண்டர் என்ற வரிசையில் தேர்ந்தெடுத்தும், இதுவரை எதிலும் சிறப்பாக ஆடவில்லை சொதப்பும் இங்கிலாந்து பேட்டர்கள் இங்கிலாந்து பேட்டர்களில் இதுவரை பட்லர், பேர்ஸ்டோ மட்டுமே ஒரு ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் அடித்துள்ளனர். ஹேரி புரூக் அரைசதம் அடித்துள்ளார். மற்றவகையில் பில்சால்ட், லிவிங்ஸ்டன், மொயின் அலி, சாம் கரன், ஜேக்ஸ் என யாரும் பெரிய ஸ்கோர் செய்யவில்லை என்பது இந்திய அணிக்கு ஆறுதலாகும். இங்கிலாந்து அணி பட்லர், பேர்ஸ்டோ, சால்ட் ஆகிய 3 பேட்டர்களை நம்பியே பெரும்பாலான ஆட்டங்களை நகர்த்தியுள்ளது. இந்த 3 பேரையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிட்டாலே இந்திய அணிக்கு பாதி வெற்றி கிடைத்தது போலத்தான். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் மொயின் அலி, அதில் ரஷீத்துடன் சேர்த்து வில் ஜேக்ஸ் களமிறங்கலாம். மார்க்வுட்டுக்கு பதிலாக ஜோர்டனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணிக்கு விளையாடாமலே பைனல் வாய்ப்பு கிடைக்குமா? இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதி ஆட்டத்துக்கு ரிசர்வ் நாள் இல்லை, மாறாக கூடுதலாக 250 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியா-இங்கிலாந்து ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே ரத்தானால், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லும். ஏனென்றால் குரூப்-1 பிரிவில் முதலிடம் பிடித்ததால் இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதியாகும். இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் நடக்கும் கயானாவில் 27ம் தேதி 88 சதவீதம் மழைக்கும் 18 சதவீதம் இடியுடன் மழைபெய்யவும் வாய்ப்புள்ளது. மைதானத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வசதியும் கயானா மைதான நிர்வாகத்திடம் இல்லை. ஆதலால், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டு பின்னர் ஆட்டத்தை நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டால் இந்தியா-இறுதிப்போட்டி செல்வது உறுதியாகும். இந்திய அணி(உத்தேச வீரர்கள்) ரோகித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப்யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து அணி(உத்தேச வீரர்கள்) ஜாஸ் பட்லர்(கேப்டன்), பில் சால்ட, ஜானி பேர்ஸ்டோ, ஹேரி ப்ரூக், மொயின் அலி, லியாம் லிவிங்டன், சாம் கரன், கிறிஸ் ஜோர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அதில் ரஷித், ரீஸ் டாப்ளி அல்லது வில் ஜேக்ஸ். https://www.bbc.com/tamil/articles/c147gqnpp10o
  15. Published By: VISHNU 26 JUN, 2024 | 07:15 PM சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி அணிகளைத் தீர்மானிப்பதற்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையை உருவாக்கியவர்களில் ஒருவரான ப்ராங்க் டக்வேர்த்தின் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையில் 2014வரை புள்ளியியல் ஆலோசகராக பணியாற்றிய டக்வேர்த் தனது 84ஆவது வயதில் கடந்த வெள்ளியன்று காலமானார். டக்வேர்த்தின் சேவையை பாராட்டிய கிரிக்கெட் செயற்பாடுகளுக்கான ஐசிசி பொது முகாமையாளர் வசிம் கான், அன்னாரது மறைவையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் 'பிராங்க் புள்ளியியல் நிபுணராக தனது கடமையை சிறப்பாக ஆற்றினார். அவரை அவரது சகாக்களும் கிரிக்கெட் குடும்பத்தினரும் மதித்தனர். அவர் இணைந்து உருவாக்கிய டக்வேர்த் லூயிஸ் முறைமை (DLS) முறைமை காலத்தின் தேவையாக இருந்தது. மேலும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அதனை சர்வதேச கிரிக்கெட்டில் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். 'கிரிக்கெட் விளையாட்டில் ப்ராங்க் டக்வேர்த்தின் பங்களிப்பு அளப்பரியது. அவரது மறைவால் கிரிக்கெட் உலகம் கவலை அடைகிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என குறிப்பிட்டுள்ளார். டக்வேர்த் லூயிஸ் முறைமையை டக்வேர்துடன் இணைந்து உருவாக்கிய மற்றையவர் டோனி லூயிஸ் ஆவார். பிரித்தானியாவின் பிரபுக்களில் ஒருவராக 2011இல் டக்வேர்துக்கு பதக்கம் சூட்டப்பட்டது. -- (என்.வீ.ஏ.) https://www.virakesari.lk/article/187053
  16. 27 JUN, 2024 | 10:08 AM பொலிவியாவில் சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்ட குழுவின் தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்ட இராணுவீரர்கள் தலைநகர் லா பாஸில் உள்ள அரண்மணை மீது தாக்குதலை மேற்கொண்ட சில மணிநேரத்தின் பின்னர் சதிப்புரட்சி குழுவின் தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சதிப்புரட்சி முயற்சியை தொடர்ந்து தலைநகரில் அரசாங்கத்தின் முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ள முரிலோ சதுக்கத்தில் கவச வாகனங்களுடன் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டனர் - பின்னர் அவர்கள் விலக்கப்பட்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தை மீண்டும் மறுசீரமைக்க விரும்புவதாக கிளர்ச்சி குழுவின் தலைவரான ஜெனரல் ஜூவான் ஜோஸ் சூனிகா தெரிவித்துள்ளார். நான் ஜனாதிபதியை மதிக்கின்றேன், ஆனால் ஆட்சி மாற்றம் இடம்பெறும் என தெரிவித்த அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி லூயில் ஆர்சே இந்த சதிப்புரட்சியை கண்டித்துள்ளதுடன், பொதுமக்கள் ஜனநாயகத்திற்காக அணிதிரளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மீண்டும் பொலிவியாவில் சதிப்புரட்சி முயற்சிகள் உயிர்களை பலிகொள்வதை அனுமதிக்க முடியாது என அவர்தெரிவித்துள்ளார். இராணுவத்தின் தலைமையில் மாற்றங்களை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/187073
  17. Published By: DIGITAL DESK 3 27 JUN, 2024 | 09:57 AM யாழ்ப்பாணம், இணுவில் கிழக்கு பகுதியில் பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று புதன்கிழமை (26) உயிரிழந்துள்ளது. நேற்றைய தினம் அதிகாலை குழந்தை அசைவற்றுக் கிடப்பதனை அவதானித்த பெற்றோர் குழந்தையினை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். குழந்தையினை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மரணம் தொடர்பிலான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் பால் புரைக்கேறியமையினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187072
  18. 27 JUN, 2024 | 10:41 AM இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் தலைமையிலான உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவிற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜப்பான் வரவேற்றுள்ளது. 2023 இல் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு ஓசிசியை ஆரம்பித்துவைத்ததன் மூலம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஜப்பான் பிரதான தலைமைத்துவத்தை வழங்கியிருந்தது. பரிஸ் கிளப் நாடுகள் பரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத நாடுகளிற்கு இடையில் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஒருங்கிணைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட உலகின் முதலாவது குழு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டமைப்பின் கீழ் இலங்கையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை இறுதி செய்துள்ளமை ஒருமைல் சாதனை என ஜப்பானின் நிதியமைச்சர் சுஜிகி சுனிச்சி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் கடன் மறுசீரமைப்பிற்கான ஒரு உதாரணமாக இது விளங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவிற்கு வெளியே உள்ள இரு தரப்பு கடன் வழங்குநர்களுடன் தனியார் கடன் வழங்குநர்களுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ள அவர் வெளிப்படையான ஒப்பிடக்கூடிய விதத்தில் இதனை இலங்கை முன்னெடுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/187078
  19. வவுனியாவில் பால்புதுமையினர் நடைபவனி 27 JUN, 2024 | 10:35 AM பால்புதுமையினர் தங்களது உரிமைகளை வலியுறுத்தி, தங்களையும் சக மனிதர்களாக எண்ண வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து நேற்று புதன்கிழமை (26) வவுனியாவில் நடைபவனியொன்றை முன்னெடுத்தனர். இந்த நடைபவனி வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, நகர் வழியாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சென்றடைந்ததோடு நிறைவு பெற்றது. 'யாழ். சங்கம்' என்ற பால்புதுமையினத்தவர்களுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நடைபவனியில் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர். இந்த நடைபவனியில் தமது உரிமைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாமும் உணர்வுகள் கொண்ட மனிதப் பிறப்புக்களே என்பது போன்ற கருத்துக்கள் பால்புதுமையினர் இதன்போது முன்வைத்திருந்தனர். https://www.virakesari.lk/article/187074
  20. Published By: VISHNU 27 JUN, 2024 | 05:08 AM ஆர்.ராம் மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல்தரையை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், ஜுலை இரண்டாம் வாரம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் தருணத்தில் பண்ணையாளர்களை நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் சம்பந்தமாக ரணில் செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர், மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள், வனத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களைச் சந்தித்திருந்தார். இதன்போது மயிலத்தமடு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரையை உறுதி செய்யுமாறு தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டம் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டது. பண்ணையாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன் பண்ணையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கடந்த தடவை உத்தரவினைப் பிறப்பித்தபோதும் அது நடைமுறையில் செயற்படுத்தப்படாமை தொடர்பிலும் ஜனாதிபதி அதிகாரிகளிடத்தில் கேள்வி எழுப்பியுள்ளதோடு குறித்த விடயத்தியத்துக்கு உரிய தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் மேய்ச்சல் தரையில் விவசாயச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது என்பதும், குடியேற்றங்கள் அகற்றப்படும் என்பதும் அதிகாரிகளால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி என்னிடத்தில் தொலைபேசி வாயிலாக தெரிவித்ததோடு, ஜுலை இரண்டாம் வாரத்தில் பண்ணையாளர்களை நேரடியாகச் சந்திப்பதற்கும் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் என்றார். https://www.virakesari.lk/article/187064
  21. Published By: VISHNU 27 JUN, 2024 | 04:57 AM தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் நிராகரிப்பதுடன், தமிழர்தேசத்தை அங்கீகரித்து தமிழர்கள் ஒருபோதும் இழக்கமுடியாத சுயநிர்ணய உரிமையை, அனுபவிக்கக் கூடியதுமான ஒரு சமஸ்டித் தீர்வுக்கான ஆதரவை வெளிப்படுத்தவேண்டும் என பொதுநலவாய அமைப்பின் தென் ஆசிய பகுதிக்குப் பொறுப்பதிகாரியான Lesley Craig அம்மையார் மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பா.உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நகரிலுள்ள ஜெற்விங் (Jetwing) விடுதியில் பொதுநலவாய அமைப்பின் தென் ஆசியப் பகுதிக்குப் பொறுப்பதிகாரியான Lesley Craig அம்மையார் மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்குமிடையில் செவ்வாய்க்கிழமை (25) இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார் கடந்த 75 வருடங்களாக இலங்கை அரசு கடைபிடித்துவரும் கொள்கைகளும், தீர்க்கப்படாமல் நீண்டு செல்லும் இனப்பிரச்சினையுமே இலங்கையின் இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குப் பிரதான காரணங்களாகும். இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் பொருளாதாரத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. இலங்கையில் இனப்பிரசினைக்கான அடிப்படை காரணியாக அமைந்தது இலங்கையிலிருக்கும் 'ஒற்றையாட்சி' அரசியல் அமைப்பாகும். சிறிலங்கா அரசியலமைப்பில் 13 ம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு முற்றுமுழுதாக நடைமுறையில் இருக்கும்போதே தமிழ்த் தேசம் மீதான இலங்கை அரசின் இனவழிப்பு நடைபெற்றிருந்தது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு புரிந்த இனவழிப்புக்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை போன்றவற்றிற்கும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் தமிழர் தேசம் மீதான கட்டமைப்புசார் இனவழிப்பும் தீவிரமடைந்து மீண்டும் இனமுரண்பாடுகள் வலுவடைந்து செல்வதற்கும் அடிப்படைக் காரணம் இதே ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பேயாகும். 13 ம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, அதன் அதிகாரங்கள் குறித்து சிறிலங்காவின் மீயுயர் நீதிமன்றுகளில் ஏறத்தாழ 30 வழக்குகள் விசாரிக்கப்பட்டு அதன் தீர்ப்புகள் அனைத்தும், அரச கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் வரைக்கும், அனைத்து அதிகாரங்களும் , கொழும்பை மையப்படுத்திய மத்திய அரசிடமே இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது, அதிகார பகிர்வுக்கு எதிராகவே நீதிமன்றங்கள் தீர்ப்புகளை அளித்திருக்கிறன. உச்ச நீதிமன்று 13ம் திருத்த அதிகாரங்கள் குறித்து இதுவரைகாலமும் வழங்கிய தீர்ப்புக்களின் அடிப்படையிலும், 13 ம் திருத்தமானது, சிறிலங்காவின் சட்ட வரம்புகளின் பிரகாரம் அது 'முழுமையாக' அமுல்படுத்தப்பட்டே உள்ளது. இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கான வரைபைத் தயாரிக்கும் பணிகள் கடந்த 2016இல் ஆரம்பித்து - 2019 சனவரியில் நிறைவடைந்தது. அந்த வரைபானது தற்போதுள்ள ஒற்றையாட்சிக் கட்டமைப்பினை விடவும் மிகவும் இறுக்கமான ஒற்றையாட்சி கட்டமைப்புக்கான வரைபாகும். அரச கட்டமைப்பு ஒற்றையாட்சி அரசமைப்பாக இருக்கும் வரையில்;, அர்த்தமுள்ள சுயாட்சியை அனுபவிக்கவோ அல்லது சுயநிர்ணய உரிமையை உரியமுறையில் பிரயோகிக்கவோ முடியாது. இந்த காரணிகளின் அடிப்படையிலே எமது அமைப்பானது, 13 ஆம் திருத்தினைத் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாகவேனும் கருத்திலெடுக்க கூடாதெனும் நிலைப்பாட்டினை ஆரம்பம் முதல் உறுதியாகவுள்ளது. ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் தமிழர்கள் நிராகரிப்பதுடன், தமிழர் தேசத்தை அங்கீகரித்து அதைப் பாதுகாக்கின்ற வகையிலானதும், தமிழர்கள் ஒருபோதும் இழக்கமுடியாத தங்களது சுயநிர்ணய உரிமையை, அனுபவிக்கக் கூடியதுமான ஒரு சமஷ்டி தீர்வுக்கான தன் ஆதரவை வெளிப்படுத்தவேண்டும் எனவும் எமது அமைப்பு பிரித்தானியாவை கோரிநிற்கின்றது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் கடந்த 12 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் விவகாரத்தினை அங்கிருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர் ஒருவரை இலங்கையின் பெயர்குறித்து வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பான அறிக்கையிடலுக்காக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கடந்த 14 ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான அமர்வுகளில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீதான இடையீட்டு விவாதங்களின்போதான எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பு யார் என்பதுபற்றி இதுவரை வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதுடன் ஆனால் கடந்த 2024 மார்ச் 1 திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையில் மியன்மார் நாடு குறித்து பிரித்தானியா சமர்ப்பித்த அறிக்கையில் 6 தடவைகள் றோகின்யா இனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே எதிர்காலத்தில் ஐ.ந மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்களில் பாதிக்கப்பட்ட தரப்பு தமிழ்கள் என்பதனைத் தெளிவாக குறிப்பிட பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேவேளைப் போரினால் அழிவடைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் கடந்த 15 ஆண்டுகளாக இலங்கை அரசினால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தினை போரால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாகப் பிரகடனம் செய்யவும் இப்பிரதேச அபிவிருத்திக்கென சர்வதேச நிதி உதவியைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழர் தாயகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள சிங்களமயமாக்கல்களையும் பௌத்த மயமாக்கல்களையும் தடுத்து நிறுத்த உடனடி அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டுமெனவும். கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் கைது செய்யப்படுவதும் சிறையிலடைக்கப்படுவதும் பொய் வழக்குகள் தொடர்வதும் இன்னமும் தொடர்கின்றது. இக்கொடிய சட்டத்தை நீக்கப் பிரித்தானிய அரசு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 15 – 29 வருடங்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் 11 பேரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும். என்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டது. அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கேட்கப்பட்டபோது அதற்கு மாறி மாறி ஆட்சிப்பீடமேறும் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் கட்டமைப்புசார் இனவழிப்பையும் தீவிரப்படுத்திவரும் நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பதென எமது அரசியல் இயக்கம் தீர்மானித்துள்ளது என்பதனையும் ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்படும் நிலையிலேயே முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என்பதனையும் தெளிவுபடுத்தப்பட்டடது என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/187063
  22. ஜனாதிபதி கொண்டு வந்த பிரேரணை மீண்டும் நிராகரிப்பு! Published By: VISHNU 27 JUN, 2024 | 01:24 AM சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனையை அரசியலமைப்பு பேரவை மீண்டும் நிராகரித்துள்ளது. இதன்படி குறித்த பிரேரணைக்கு எதிராக 5 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187058
  23. இரண்டாவது நாளாகவும் தொடரும் அதிபர்கள், ஆசிரியர்களின் போராட்டம் Published By: DIGITAL DESK 3 27 JUN, 2024 | 09:58 AM அதிபர்கள், ஆசிரியர்களின் தொழிற்சங்க ஏற்பாட்டில் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை (27) சுகயீன விடுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடளாவியரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சுகயீன விடுமுறை போராட்டத்தினால் இன்றும் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. மாணவர்கள் வரவின்றி பாடசாலைகள் காணப்பட்டதுடன், பாடசாலைகளுக்கு அதிபர்கள், ஆசிரியர்கள் சமூகமளிக்காமையால் மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. https://www.virakesari.lk/article/187070
  24. இனிமேல் ஒன்றையும் அவிழ்க்கக் கூடாது என ஒப்பந்தமாமே அண்ணை!
  25. ரஷித் கானின் ‘தவறு’, தென்னாப்பிரிக்காவின் ‘நல்வாய்ப்பு’ - ஆப்கானிஸ்தான் தோல்விக்குக் காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்ரிக்கா அணி கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் 31 நிமிடங்களுக்கு முன்னர் 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக, தென் ஆப்ரிக்கா அணி தகுதி பெற்றது. டி20 உலகக் கோப்பை அரையிறுதி பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டம் ஒருதரப்பாக அமைந்தது. ஆடுகளத்தை சரியாகக் கணிக்காமல் ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது அவர்களின் இத்தனை ஆண்டு கடின உழைப்பை வீணாக்கியது. இதுவரை ஐசிசி நடத்திய அனைத்துப் போட்டிகளிலும் அரையிறுதியைக் கூட தாண்டியதில்லை, ‘சோக்கர்ஸ்’ என்ற பெயரெடுத்த தென் ஆப்ரிக்க அணி அரையிறுதியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி முதல்முறையாக இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது. கேப்டன் எய்டன் மார்க்ரம் தலைமையில் தென் ஆப்ரிக்கா அணி 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை கடந்த 2014ம் ஆண்டு வென்றிருந்தது. அதன்பின் இதுவரை ஐசிசி சார்பில் எந்தஒரு கோப்பையையும் தென் ஆப்ரிக்கா அணி வென்றதில்லை. ஆனால், இந்த முறை லீக் போட்டி முதல் அரையிறுதிவரை ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியுள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். டரூபாவில் நேற்று(26ம்தேதி) நடந்த டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்ரிக்கா அணி. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்ரிக்கா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 11.5 ஓவர்களில் 56 ரன்களில் சுருண்டது. 57 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய தென் ஆப்ரிக்கா 67 பந்துகள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று(27ம்தேதி) இரவு நடக்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- இந்தியா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இதில் வெல்லும் அணி தென் ஆப்ரிக்காவுடன் கோப்பைக்காக மல்லுக்கட்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்தி அரையிறுதிவரை பயணித்திருக்கிறது ஆப்கானிஸ்தான். மறக்கமுடியாத பயணம் தென் ஆப்ரிக்க அணிக்கும், ஆப்கானிஸ்தான் அணிக்கும் 2024 டி20 உலகக் கோப்பை பயணம் மறக்கமுடியாததாக அமைந்துவிட்டது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி நடத்தும் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதேபோல 50 ஆண்டுகளில் பல அணிகள் செய்த சாதனையை வெறும் 20 ஆண்டுகளில் செய்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அரையிறுதிவரை வந்துள்ளது. 2010ம் ஆண்டு ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சியும், அந்த அணி பல்வேறு ஜாம்பவான் அணிகளுக்கு அவ்வப்போது அளித்த அதிர்ச்சித் தோல்விகளும் தாங்கள் வளர்ந்து வருகிறோம் என்பதை சொல்லிவந்தன. இந்த உலகக் கோப்பை பயணத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்தி அரையிறுதிவரை பயணித்திருக்கிறது ஆப்கானிஸ்தான். வரும் காலத்தில் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்வோம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு ஆப்கானிஸ்தான் விடைபெற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி பந்துவீச்சைக் கூட எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் ஆட்டமிழந்தனர். விக்கெட் வீழ்ச்சி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய ஆப்கானிஸ்தான் தீர்மானித்தது. அது எவ்வளவு பெரிய தவறு என்பது சற்று நேரத்திலேயே தெரிய வந்தது. தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் அனல் தெறிக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் மைதானம் வருவதும், அடுத்த சில நிமிடங்களில் பெவிலியன் செல்வதுமாக இருந்தனர். ஆப்கானிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் குர்பாஸ், சந்தித்த முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்தடுத்து வந்த குல்புதீன் நயீப்(9), இப்ராஹிம் ஜாத்ரன்(2), முகமது நபி(0),கரோடே(2) என பவர்ப்ளே ஓவருக்குள் ரபாடா, நோர்க்கியா, யான்சென் பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசை சரிந்தது. பவர்ப்ளே முடிவில் 23ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி பந்துவீச்சைக் கூட எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்த பதற்றம், ஆட்டத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்ற குழப்பம் பேட்டர்கள் முகத்தில் தெரிந்தது. வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் பேட்டர்களுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து 11.5 ஓவர்களில் 56 ரன்களில் ஆட்டத்தை முடித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே அரையிறுதியில் ஒரு அணி சேர்த்த, ஆப்கானிஸ்தான் சேர்த்த குறைந்தபட்ச ஸ்கோராகும். உலகக் கோப்பையில் மிகக்குறைவு ஆப்கானிஸ்தான் அணியில் ஓமர்ஜாய்(10) மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தார். மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னிலும் 3 பேட்டர்கள் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே அரையிறுதியில் ஒரு அணி சேர்த்த, ஆப்கானிஸ்தான் சேர்த்த குறைந்தபட்ச ஸ்கோராகும். தென் ஆப்ரிக்கத் தரப்பில் யான்சென் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். ரபாடா, நோர்க்கியா தலா 2 விக்கெட்டுகளையும், ஷம்சி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். எளிதான வெற்றி 57 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் தென் ஆப்ரிக்க பேட்டர்கள் களமிறங்கினர். ஃபரூக்கி வீசிய 2வது ஓவரில் டீகாக் 5 ரன்னில் கிளீன் போல்டாகினார். ஆனால், ஹென்ட்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம் இருவரும் சேர்ந்து தென் ஆப்பிரிக்க அணியை எளிதாக வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். மார்க்ரம் 23 ரன்களிலும், ஹென்ட்ரிக்ஸ் 29 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES எங்கே தவறு செய்தோம்? - ரஷித் கான் கூறியது என்ன? போட்டி முடிந்த பிறகு பேசிய ரஷித் கான், "ஒரு அணியாக இது எங்களுக்கு கடினமான இரவு என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இதைவிட சிறப்பாக ஆடியிருக்க முடியும். நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை. முஜீப் காயம் அடைந்ததால் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பந்துவீச்சில் நிலைத்தன்மையாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த போட்டியில் பெரிய ஆட்டத்தில் வெல்வது... ஆம் நாங்கள் எந்த அணியையும் வீழ்த்தும் திறன் கொண்டவர்கள்.” என்றார். நல்லவேளையாக இதைச் செய்யவில்லை - தென்னாப்பிரிக்க கேப்டன் கூறியது என்ன? “இது ஒரு பெரிய கூட்டு முயற்சி” என்றார் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம். “நாங்கள் டாஸில் தோற்றது எங்களது அதிர்ஷ்டம். இல்லையென்றால் நாங்களும் பேட்டிங் செய்திருப்போம்.” என்று அவர் கூறினார். “இதற்கு முன்பு நாங்கள் அங்கு (இறுதிப் போட்டி) சென்றதில்லை, ஆனால் நிறைய நம்பிக்கை இருக்கிறது.” என்றார் அவர். https://www.bbc.com/tamil/articles/cjl62z4242po

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.