Everything posted by ஏராளன்
-
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
தேர்தலொன்று நடத்தப்படவுள்ளதாகவும் அதற்காகத் தயாராகுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தமது திணைக்களத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடும் பட்சத்தில், அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி அல்லது ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. இதன்படி, ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பாகச் சட்டவாக்கத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல், உரிய காலப்பகுதிக்குள் நடைபெறும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/304726
-
தமிழகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட 8 சிறார்கள் மீட்பு : படகு உரிமையாளர்களுக்கு அபராதம்
Published By: DIGITAL DESK 3 27 JUN, 2024 | 05:43 PM தமிழகத்தில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகில் 18 வயதுக்குட்பட்ட 8 சிறார்கள் தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, படகு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், இந்திய அரசாங்கத்தினால் மானியமாக வழங்கப்படும் டீசல் மற்றும் மீன்பிடி அனுமதிச்சீட்டு இரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து, மீன்பிடியில் ஈடுபடும் விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடிக்கும்போது சிறார்களும் கைது செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனடிப்படையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீன்பிடி படகுகளில் சிறார்கள் மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் ராமேஸ்வரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், தொழிலாளர் நல வாரியம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கூட்டாக திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது, நேற்று (26) ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்பரப்புக்கு அருகில் மீன்பிடிக்க வந்து, இன்று (27) காலை கரை திரும்பிய 8 மீன்பிடி படகுகளில் 8 சிறார்கள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த எட்டு சிறார்களை மீட்ட தொழிலாளர் அமுலாக்கப் பிரிவு உதவி ஆணையர் மலர்விழி தலைமையில் அதிகாரிகள் "சிறார்கள் மீன்பிடி தொழிலுக்கு வரக்கூடாது" என்றும் சிறுவர்களை பள்ளிக்கு செல்லுமாறும் அறிவுரை வழங்கியதுடன், சிறார்களை மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்திய விசைப்படகு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறார்களை மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தியதற்காக தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச் சீட்டு மற்றும் மானிய டீசல் இந்த வழக்கு முடியும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187114
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
அமெரிக்க அதிபர் தேர்தல்: நேருக்கு நேர் மோதிய பைடன் - டிரம்ப் - விவாதத்தில் என்ன பேசினர்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இருவரும் முதன்முறையாக நேருக்கு நேர் விவாதித்தனர். இந்த விவாதத்தில் தனிப்பட்ட தாக்குதல்களுக்குக் குறை இல்லை. மேலும், பைடன் அவ்வப்போது கம்மிய குரலில் பேசினார். இதனால், ஜனநாயக கட்சியினர் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், “மெதுவாக ஆரம்பித்தாலும் வலுவாக விவாதத்தை நிறைவு செய்ததாக,” பைடனுக்கு ஆதரவாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மறுபுறம், டொனால்ட் டிரம்ப், பைடனை பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்து தாக்கிக்கொண்டே இருந்தார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 5 அன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக்கொள்வது அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வு. அதன்படி, ஜூன் 27, வியாழக்கிழமை அன்று ஜார்ஜியாவில் உள்ள அட்லான்டாவில் முதல் விவாதம் நடைபெற்றது. ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையே 90 நிமிடங்கள் இந்த விவாதம் நீடித்தது. 2020 அதிபர் தேர்தலுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இரு தலைவர்களும் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பொருளாதாரம் பொருளாதாரம் சார்ந்துதான் இந்த விவாதம் தொடங்கியது. விவாதத்தில் பணவீக்கம் பிரச்னை எழுப்பப்பட்டபோது, வேலை வாய்ப்பின்மையுடன் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையே டொனால்ட் டிரம்ப் தனக்குக் கையளித்ததாகத் தெரிவித்தார் பைடன். அப்போது, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் ‘சிறப்பாக’ இருந்ததாக டிரம்ப் தெரிவித்தார். டிரம்ப் ஒன்றும் செய்யவில்லை எனக் கூறிய பைடன், அவருடைய ஆட்சிக் காலத்தில் நிலைமை “மோசமாக” இருந்ததாகக் கூறினார். “எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டியிருந்ததாக” பைடன் கூறினார். அப்போது, “பெருங்குழப்பம்” என்ற வார்த்தையை அடிக்கடி பைடன் உபயோகித்தார். “டிரம்ப் பணக்காரர்களுக்கு ஆதரவாக இருந்ததாக” பைடன் தெரிவித்தார். அப்போது டிரம்ப், தான் மக்களுக்கு முன்பு இல்லாத வகையில் வரியை குறைத்ததாகக் கூறினார். ஆப்கானிஸ்தான் விவகாரம் பட மூலாதாரம்,REUTERS ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது குறித்தும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அரசின் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. டிரம்ப் ஆட்சிக் காலத்தில்தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் சண்டையிட்டதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை கண்ணியம் மற்றும் பலத்துடன் திரும்பப் பெறத் தான் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால், “அப்படைகளை (பைடன் ஆட்சிக் காலத்தில்) திரும்பப் பெற்றபோது அது அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் அவமானகரமான நிகழ்வாக இருந்ததாகவும்” டிரம்ப் கூறினார். கொரோனா கொரோனா பெருந்தொற்று விவகாரம் இந்த விவாதத்தில் முக்கிய இடம் பிடித்தது. கொரோனா காலத்தை டிரம்ப் எப்படி கையாண்டார் என்பது குறித்துப் பேசிய பைடன், அச்சமயம் “பெருங்குழப்பங்களுடன் கூடியது” எனக் குறிப்பிட்டார். “கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரின்போது தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் பணத்தைச் செலவழித்தோம். இதனால், மிகுந்த அழுத்தத்திற்குள் நாங்கள் தள்ளப்படவில்லை. எல்லாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது” என்றார் டிரம்ப். எல்லைகள் குறித்த பிரச்னை அமெரிக்க எல்லைகள் சார்ந்த கொள்கைகளில் பைடனை டிரம்ப் தாக்கிப் பேசினார். அப்போது, சிறைவாசிகள், மனநல சிகிச்சை மையங்களில் உள்ளவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் எல்லைகள் வாயிலாக நாட்டுக்குள் வருவதாக டிரம்ப் கூறினார். ஆனால், டிரம்ப் கூறுவதை ஆதரிப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என பைடன் கூறினார். அமெரிக்கப் படையினர் மரணங்கள் பட மூலாதாரம்,REUTERS கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் எந்தப் பகுதியிலும் அமெரிக்கப் படையினர் தன்னுடைய ஆட்சியில்தான் உயிரிழக்கவில்லை என பைடன் கூறினார். பிபிசி உண்மை சரிபார்ப்புக் குழுவின்படி, பைடனின் இந்தக் கூற்று தவறானது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். இதுதவிர, ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும்போது காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் அமெரிக்கப் படையினர் 13 பேர் உயிரிழந்தனர். ஐ.எஸ். அமைப்பின் ஐ.எஸ்-கே பிரிவு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. போரில் உயிரிழக்கும் படையினர் குறித்த ஆய்வு அமைப்பு (Defense Casualty Analysis System) அளித்தத் தகவலின்படி, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த 65 பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. டிரம்ப் மீதான வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்குப் பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியுள்ளார். இந்த வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை விவாதத்தின்போது ஜோ பைடன் குறிப்பிட்டார். பைடன் கூறுகையில், “குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் இங்கு இருக்கிறார், அவரைத்தான் நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என கூறினார். டிரம்ப் ஒழுக்கமான நபர் அல்ல என பைடன் கூறினார். அதேநேநேரம், பைடனின் குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் பட மூலாதாரம்,REUTERS காஸா குறித்த கேள்வி எழுகையில், முன்னாள் அதிபர் டிரம்ப் இஸ்ரேல் தன் வேலையை முடிக்க வேண்டும் எனக் கூறினார். பைடன் பாலத்தீனியராகவே மாறிவிட்டதாக டிரம்ப் கூறினார். மேலும், யுக்ரேனுக்கு அமெரிக்கா உதவுவது குறித்தும் டிரம்ப் எழுப்பினார். யுக்ரேனுக்கு உதவுவதில் அமெரிக்காவை விட ஐரோப்பிய நாடுகள் குறைவாக செலவழித்துள்ளன என தெரிவித்தார். யுக்ரேனுக்கு உதவ அதிகமாக பணம் செலவழிக்குமாறு நேட்டா (NATO) நாடுகளுக்கு பைடன் ஏன் அழுத்தம் தரவில்லை என்றும் டிரம்ப் கேள்வியெழுப்பினார். இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர என்ன செய்வீர்கள் என பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, போரை நிறுத்த ஹமாஸ் விரும்பவில்லை என பைடன் தெரிவித்தார். இஸ்ரேலின் உறுதியை மீண்டும் வலியுறுத்திய பைடன், ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES / REUTERS இருவரும் எப்படி விவாதித்தனர்? வட அமெரிக்கா குறித்து செய்தி சேகரிக்கும் பிபிசி செய்தியாளர் ஆண்டனி ஸர்ச்செர், முன்னாள் அதிபர் டிரம்ப்பின் விவாதம் கட்டுப்பாட்டுடனும் அமைதியுடனும் இருந்ததாகக் கூறினார். வாக்குவாதம் செய்தல், மிகைப்படுத்தப்பட்ட பதில்களைத் தருவதிலிருந்து டிரம்ப் விலகியிருந்தார்55. ஏனெனில், கடந்த தேர்தல் விவாதத்தின்போது, இந்த விஷயங்கள் அவரை பலவீனமாக்கின. டிரம்ப்பின் சில கூற்றுகள் முழுமையான தரவுகளின் அடிப்படையில் இல்லாவிட்டாலும், அவை முழுவதும் தவறான தகவல்கள் இல்லை. எனினும், டிரம்ப்பை பைடனால் மடக்க முடியவில்லை. உதாரணத்திற்கு கருக்கலைப்பு குறித்த விவாதம் எழுந்தபோது, டொனால்டு டிரம்ப் அதை ‘ஜனநாயக (கட்சியினரின்) தீவிரவாதம்’ எனக் குறிப்பிட்டார். மேலும், பைடன் கட்சியின் தலைவர்கள் குழந்தைகள் பிறந்த பிறகு, கருக்கலைப்பை ஆதரிப்பதாக, தவறான தகவலைத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பைடன் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அதைச் செய்ய பைடன் தவறிவிட்டார். விவாதத்தின்போது பல நேரங்களில் பைடனின் குரல் கரகரப்பாக இருந்தது, இதற்கு கடந்த சில தினங்களாகவே அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவே காரணம் என, அவருடைய பிரசார அதிகாரிகள் தெரிவித்தனர். பைடன் விவாதத்தின்போது சில நேரங்களில் தடுமாறியதாகவும் அவருடைய வாதங்கள் தட்டையாக இருந்ததாகவும் பிபிசி செய்தியாளர் ஆண்டனி ஸர்ச்செர் குறிப்பிட்டுள்ளார். விவாதத்தின் ஆரம்பத்தில் அவருடைய வாதங்கள் அறிவுபூர்வமற்றதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். வயதைக் கடந்து தனக்கு போதிய ஆற்றல், வலு இருப்பதாக நிரூபிக்க பைடன் தவறிவிட்டார் என ஸர்ச்செர் குறிப்பிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c8vdpnvg6e8o
-
கனிய மண் அகழ்விற்காக நிலத்தை இழந்தவர்களுக்கு மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் அவசர வேண்டுகோள்
Published By: DIGITAL DESK 3 28 JUN, 2024 | 03:30 PM மன்னாரில் கனிய மண் அகழ்விற்காக நிலத்தை இழந்தவர்கள் மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவ் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை (28) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் நகர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கனிய மண் அகழ்விற்காக உள்ளூர் காணி முகவர்கள் மூலம் சட்ட விரோதமான முறையில் காணி அபகரிக்கப்படுவதாக பல்வேறு விதமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சில குழுக்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியும் அதிகாரத்தை உபயோகித்தும் சாதாரண மக்களின் காணிகளை அபகரித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன், பயன்படுத்தப்படாத நிலங்களுக்கு ஆட்சி உறுதிகளையும் எழுதுவதாகவும் கூறுகின்றனர். அது மாத்திரமின்றி சில காணிகளுக்கு பயன்பாட்டில் இல்லாத வேறு உறுதிகளை எல்லைகளை மாற்றி குறித்த இடங்களில் நில அபகரிப்பிலும் ஈடுபடுகின்றனர் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆதாரங்களோடு குற்றம் சாட்டுகின்றனர். இதில் இவ்வாறு முறைகேடான உறுதிப் பத்திரம் தயாரிப்புகளை சில சட்டத்தரணிகள் மேற் கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகளை பல கோடி ரூபாய் பெறுமதிக்கு அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்டு கனிய மண் அகழ்வில் ஈடுபட உள்ள இலங்கை முகவர் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த சட்டத்தரணிகள் இவ்வாறான மோசடி கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவது என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். இவ்வாறு பாதிக்கப் பட்டிருக்கின்ற மக்கள் எங்களோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த மோசடி கும்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆகவே, நில அபகரிப்பாளர்களுக்கு அஞ்சாமல் முன்வருமாறு தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187181
-
மூதூரில் மதுபானசாலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த 15 பேர் கைது!
மூதூர் மதுபானசாலைக்கு எதிரான போராட்டத்தில் கைதான 15 பேரும் விடுதலை 28 JUN, 2024 | 02:19 PM மூதூர் - இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற மதுபானசாலைக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 15 பேரும் இன்று (28) மூதூர் நீதிமன்றத்தால் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கானது எதிராளிகள் சார்பாக நகர்த்தல் விண்ணப்பத்தின் மூலம் இன்றைய தினம் (28) மூதூர் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்ட அனைவரும் நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.தஸ்னீம் பௌசான் முன்னிலையில் திறந்த நீதிமன்றில் நூற்றுக்கும் அதிகமானவர்களுடன் ஆள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள். பின்னர் ஒவ்வொருவரும் தலா 50,000 பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததோடு, எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இருதயபுரம் பகுதியில் திறக்கப்பட்ட மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இரவு 8.00 மணிக்குப் பின்னர் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருந்த கைகலப்பை காரணம்காட்டி அங்கிருந்தவர்கள் மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். பின்னர் அவ்விடத்திற்கு மேலதிக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அழைக்கப்பட்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீதும், அதனுடன் தொடர்புபடாத மக்கள் மீதும் வீடுகளில் இருந்த நிலையிலும், பாதுகாப்புத்தேடி தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் மீதும் மிலேச்சுத்தனமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவன் உட்பட 11 ஆண்களும், பாலூட்டும் தாய் உட்பட 4 பெண்களுமாக 15 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்ததுடன், 13 துவிச்சக்கரவண்டி, 11 மோட்டார் சைக்கிள், 3 முச்சக்கரவண்டி ஆகியனவும் பொலிஸாரினால் கொண்டு செல்லப்பட்டிருந்தன. கைது செய்யப்பட்டவர்கள் மறுநாள் புதன்கிழமை (26) பொலிஸாரினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்கள். இதன்போது எதிர்வரும் யூலை மாதம் 3 ஆம் திகதி விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கானது நேற்று (27) வியாழக்கிழமை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நகர்த்தல் விண்ணப்பத்தின் மூலம் எடுத்துக் கொள்ளப்பட்டு எதிராளிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த சில வழக்குப் பிரிவுகள் பொலிஸாரினால் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187167
-
யாழ். மருதனார் மடத்தில் உணவகத்திற்கு சீல்!
28 JUN, 2024 | 01:55 PM யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், உரிமையாளருக்கு 54 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வெதுப்பாக உரிமையாளரை கடுமையாக எச்சரித்த நீதிமன்று, அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. சுன்னாகம், மருதனார் மடம் மற்றும் இணுவில் பகுதிகளில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர் . அதன் போது உணவகம் ஒன்றும் வெதுப்பகம் ஒன்றும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை (27) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது உரிமையாளர்கள் இருவரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்து, வெதுப்பக உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று, உணவக உரிமையாளருக்கு 54ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன், உணவகத்தில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டது. https://www.virakesari.lk/article/187162
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
ஸ்டார்லைனர் விண்கலனில் கோளாறு - சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தாமதம் பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை சோதிக்க, விண்வெளிக்குச் சென்ற இரண்டு விண்வெளி வீரர்கள் இந்நேரம் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியிருக்க வேண்டும். புதன்கிழமை இரவே புறப்பட்டிருக்க வேண்டிய அவர்கள், இன்னும் கிளம்பவில்லை. தற்போது அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர். பூமிக்குத் திரும்ப வேண்டிய விண்கலனில் சில கோளாறுகள் இருப்பதால், இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது. விண்கலனில் உள்ள த்ரஸ்டர் (thruster), விண்கலனை உந்தித் தள்ளும் இயந்திரமாகும். அதில் சில பிரச்னைகள் இருப்பதாலும், ஹீலியம் வாயு கசிவாலும் விண்கலன் குறித்த நேரத்தில் கிளம்ப முடியவில்லை. இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உயர்மட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறது. அதன் பிறகே, விண்கலனும் அதிலுள்ள விண்வெளி வீரர்களும் பூமிக்குத் திரும்புவது குறித்து முடிவு எடுக்கப்படும். இந்த விண்கலனில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் இருவருக்கும் எந்த ஆபத்தும் கிடையாது. ஆனால் விண்கலனில் ஏன் இந்தக் கோளாறுகள் ஏற்பட்டன, அவர்கள் பூமிக்குத் திரும்புவதை இது எப்படி பாதிக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ஹீலியம் வாயுக் கசிவு எப்போது நடைபெற்றது? பட மூலாதாரம்,NASA ஹீலியம் வாயு சிறதளவில் கசிந்த போதும், ஸ்டார்லைனர் ஜூன் 5ஆம் தேதி, விண்ணில் செலுத்தப்பட்டது. விண்கலனை வான்வெளியில் இயக்குவதற்கும், பூமியின் வளி மண்டலத்தில் நுழையும்போது அதன் வேகத்தைக் குறைப்பதற்கும் உதவும் த்ரஸ்டர் இயந்திரத்தை இயக்குவதற்கு ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுகிறது. ஹீலியம் கசிவு மிகச் சிறிய அளவிலேயே இருந்ததால், விண்வெளி பயணத் திட்டத்தை இது எந்த வகையிலும் பாதிக்காது என்று பொறியாளர்கள் நம்பினர். எனவே விண்கலன் வானில் செலுத்தப்பட்டது. ஆனால், தனது விண்வெளி பயணத்தைத் தொடங்கிய பிறகு, ஸ்டார்லைனரில் மேலும் நான்கு முறை ஹீலியம் கசிவு ஏற்பட்டது. விண்கலனை திசை மாற்றி இயக்குவதற்காக உள்ள 28 த்ரஸ்டர்களில் ஐந்து விண்வெளி மையத்தை அடையும் முன்பே பழுதாகிவிட்டன. பழுதான ஐந்து த்ரஸ்டர்களில் நான்கு மீண்டும் இயக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டன. இந்தப் பயணம் எட்டு நாட்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டது. ஆனால், பொறியாளர்கள் இந்தக் கோளாறுகளை ஆய்வு செய்து வருவதால், விண்கலன் பூமிக்குத் திரும்புவது தாமதமாகியுள்ளது. அமெரிக்க நேரப்படி ஜூன் 26ஆம் தேதி இரவு பத்து மணிக்கு (இந்திய நேரப்படி ஜூன் 27ஆம் தேதி காலை 7.30 மணி) ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கும் என்று நாசா அறிவித்திருந்தது. ஹீலியம் கசிவால் விண்வெளி வீரர்களுக்கு பாதிப்பா? பட மூலாதாரம்,NASA ஹீலியம் கசிவுகளால் விண்வெளி வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று நாசா முன்னரே தெரிவித்திருந்தது. “விண்கலன் செய்யவேண்டிய இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொள்ள ஏழு மணிநேரம் மட்டுமே ஆகும். ஸ்டார்லைனரில் 70 மணிநேரங்களுக்குத் தேவையான ஹீலியம் இருப்பில் உள்ளது.” ஆனால் சில நாட்கள் கழித்து, ஸ்டார்லைனர் ஜூலை மாதத்தில் பூமிக்குத் திரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாசா முடிவு செய்தது. பூமிக்குத் திரும்பும் தேதி ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்தக் கோளாறுகள் எதனால் ஏற்பட்டது என்று, விண்கலன் பூமிக்குத் திரும்புவதற்கு முன்பாகவே, முழுவதுமாகக் கண்டறிய விண்கலனின் பொறியாளர்கள் விரும்புவதாக நாசா தெரிவித்துள்ளது. ஏனென்றால், விண்வெளியில் இருந்து திரும்பி வரும்போது, பூமியின் வளிமண்டலத்தில் விண்கலம் நுழையும் நேரத்தில், ஸ்டார்லைனரின் கோளாறுகள் நிறைந்த கீழ் சர்வீஸ் மோட்யூல் (service module) எனும் பகுதி எரிந்துவிடும். அதிலுள்ள தகவல்களை இழந்துவிட்டால், கோளாறு எதனால் ஏற்பட்டது என்று தெரிந்துகொள்ள முடியாது. விண்வெளி வீரர்கள் விண்வெளி மையத்தில் சிக்கிக் கொள்ளவில்லை என்று நாசா வலியுறுத்துகிறது. சர்வதேச விண்வெளி மையத்தில், ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், விண்கலன் உடனடியாக பூமிக்குத் திரும்பத் தயார் நிலையில் உள்ளது என்று நாசா கூறியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பது நாசாவின் மறு ஆய்வுகளைப் பொருத்ததாகவே இருக்கும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ஹீலியம் கசிவு ஏற்பட்ட பிறகும் விண்ணில் செலுத்தியது சரியா? தற்போது நடைபெற்றுள்ளதைப் பார்க்கும்போது, ஹீலியம் கசிவு ஏற்பட்ட பிறகும், ஸ்டார்லைனர் விண்ணில் செலுத்தப்பட்டது சரியா என்ற கேள்விகள் எழுகின்றன. விண்கலன்கள் உந்து இயந்திரங்களைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ‘ராக்கெட் என்ஜினியரிங்’ என்ற நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆதாம் பேகர், ஹீலியம் கசிவு ஏற்பட்ட பிறகும், விண்கலன் ஏன் விண்ணில் செலுத்தப்பட்டது என்று தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார். இருப்பினும் கசிவு ஏற்பட்ட போதே, எதனால் ஏற்பட்டது என்ற காரணத்தை அறிந்து அதை முழுமையாகச் சரி செய்திருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். “எல்லாவற்றையும் மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்று வெகு காலம் எடுத்துக்கொள்ளும்போது, அதற்கான செலவு அதிகரிக்கும். மக்கள் மற்றும் அரசியல் ஆதரவும் மறைந்துவிடும்” என்று கூறிய அவர், அதே நேரம், “விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு இந்தக் கசிவுகள் மோசமடையலாம் என்று போதுமான அளவு கணித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நாசாவும் போயிங் நிறுவனமும் செய்திருக்க வேண்டியது இதுதான்” என்றார். அதாவது, விண்கலனை அதன் ஏவுதளத்தில் இருந்து விலக்கி, விண்கலனில் உள்ள உந்து இயந்திரங்களை நீக்கி ஆய்வு செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்வது அதிக செலவுகளை உள்ளடக்கிய நடவடிக்கை. பட மூலாதாரம்,NASA நாசா கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயத்தை ஒபன் யூனிவர்சிட்டியில் உள்ள விண்வெளி விஞ்ஞானி டாக்டர் சிமோன் பார்பர் சுட்டிக்காட்டுகிறார். இந்த விண்கலன் ஏற்கெனவே இரண்டு முறை ஆளில்லாமல் பயணம் மேற்கொண்டபோது, இந்தக் கோளாறு ஏன் கண்டறியப்படவில்லை என்பதை நாசா ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார். “கடந்த சில வாரங்களாக ஏற்படும் கோளாறுகள், பொதுவாக இறுதிக் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் விண்கலனில் ஏற்படும் என்று யாரும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள்” என்றார் அவர். “இந்தத் திட்டத்தின் நோக்கமே, விண்கலனை விண்வெளி வீரர்கள் இயக்கினால், அதன் செயல்திறன் எப்படி இருக்கும் என்று சோதித்துப் பார்ப்பதுதான். ஆனால் அதைவிட்டு, சில அடிப்படையான விஷயங்களைக் கையாண்டு கொண்டிருக்கிறோம்” என்றார். இந்த ஹீலியம் கசிவுகள் எதனால் ஏற்பட்டன என்ற சரியான காரணத்தைக் கண்டறியும் முக்கியப் பணி நாசாவுக்கு உள்ளது. அதைக் கண்டறியும் வரை, விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவது குறித்து திட்டமிடுவதும், அவசர காலத் திட்டமிடல்களும் முழுமை பெறாது என்று டாக்டர் பார்பர் தெரிவிக்கிறார். “கோளாறுகளுக்கான ஆணிவேர் என்னவென்று கண்டறியும் வரை, விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்புவது குறித்து என்ன கணிப்பு இருந்தாலும் அது முழுமையான தகவல் கையில் இல்லாமல் எடுக்கப்படுவதாகும். தவறு எதனால் நடந்தது என்று புரிந்து கொள்ளவில்லை என்றால், அடிப்படை உந்து இயந்திரங்கள் மட்டுமல்லாமல் மாற்று இயந்திரங்களையும் பாதிக்கும் கோளாறுகள் எதுவும் விண்கலனில் இல்லை என்று உறுதியாகக் கூற முடியாது” வேறு வழியே இல்லை என்றால், விண்வெளி வீரர்களை ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் விண்கலனில் (ஈலோன் மஸ்க்-க்கு சொந்தமான நிறுவனம்) பூமிக்குத் திரும்ப அழைத்து வரலாம். ஆனால் அது போயிங் நிறுவனத்துக்கு மிகுந்த தர்ம சங்கடத்தை உருவாக்கும். இன்னும் அப்படி ஒரு சூழல் ஏற்படவில்லை என்கிறார் டாக்டர் பேகர். “ஒரு புதிய விண்கலனில் எதிர்ப்பார்க்காததை எதிர்ப்பார்க்க வேண்டும்” என்கிறார் அவர். “இந்தப் பயணத்தில் இது முழுவதுமாக எதிர்ப்பார்க்கப்பட்ட தடங்கல்தான். இது மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம் என்று நான் கருதவில்லை. இதை ஆய்வு செய்து, அடுத்த முறை ஆட்களுடன் விண்வெளிக்குச் செல்லும் முன் சீரமைக்க வேண்டும்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/cjqe28xy1v0o
-
யாழ். வைத்தியசாலை முன் சந்தேகத்திற்கு இடமான நிறுத்தி வைக்கப்பட்ட கார் பொலிஸாரால் மீட்பு!
Published By: VISHNU 28 JUN, 2024 | 12:19 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 13ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்திற்கு செல்லும் நுழைவாயிலான 13ஆம் இலக்க நுழைவாயிலை முற்றாக மறித்தவாறான நிலையில் நபர் ஒருவர் காரினை நிறுத்தி சென்றுள்ளார். அதனால் மருந்து களஞ்சியத்தில் இருந்து வைத்தியசாலை வாகனம் வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டமையால் , வைத்தியசாலை ஊழியர்கள் , காரின் சாரதியை தேடி உள்ளனர். நீண்ட நேரமாகியும் காரின் சாரதி அவ்விடத்திற்கு வராதமையால், வைத்தியசாலை பணிப்பாளர் ஊடாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து , விசாரணைகளை மேற்கொண்டதுடன் , அயலில் உள்ள கடைகளில் விசாரித்த போதிலும் காரின் சாரதியை கண்டறிய முடியாததால் , காரினை அவ்விடத்தில் இருந்து கனரக வாகனத்தின் உதவியுடன் மீட்டு , பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். காரின் இலக்க தகட்டின் ஊடாக அதன் உரிமையாளரை கண்டறிவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/187125
-
மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள்சென்ற எரிபொருள் கொள்கலன் வாகன விபத்தில் இருவர் காயம்
Published By: VISHNU 27 JUN, 2024 | 10:52 PM திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை_கண்டி பிரதான வீதியின் 98ம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் வியாழக்கிழமை (27) மாலை இடம் பெற்றுள்ளது . கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த எரிபொருள் கொள்வனவு வாகனமே இவ்வாறு வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுள்ளது. நித்திரை கலக்கம் காரணமாக இவ்விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது. இதில் எரிபொருள் கொள்கலனைச் செலுத்திய சாரதி வயது (50), உதவியாளர் வயது (45) ஆகிய இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மதுகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/187124
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
தடுமாறிய பைடன் - கலக்கத்தில் ஜனநாயக கட்சியினர் Published By: RAJEEBAN 28 JUN, 2024 | 11:26 AM அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிற்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற நேரடி விவாதத்தின் போது ஜோ டைபனின் தடுமாற்றம் மிகுந்த பதில்களும் செயற்பாடுகளும் கரிசனையை ஏற்படுத்தியுள்ளன. சிஎன்என் ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி தேர்தல் விவாதம் பைடனின் பிரச்சாரகுழுவினருக்கு பல கேள்விகளிற்கு பதில் சொல்லவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவரது பிரச்சார குழுவினர் பாதிப்புகளை சரிசெய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். பைடனும் டிரம்பும் குடியேற்றவாசிகள், பொருளாதாரம், கருக்கலைப்பு உரிமை போன்றவை குறித்து விவாதித்தனர். பைடனின் மெதுவான ஆரம்பம் ஜனநாயக கட்சியின் சிலருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜோ பைடனின் கரடுமுரடான குரலும்( உடல்நிலை சரியில்லை என அவரது பிரச்சாரகுழுவினர் தெரிவித்துள்ளனர்)பைடன் தனது சிந்தனையை இழந்ததாக தோன்றிய சில தருணங்களும், பார்வைக்கு தென்பட்ட சிறந்த விடயங்கள் இல்லை என பிபிசி தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நவம்பரில் பைடன் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து அமெரிக்க ஊடகங்களில் ஆய்வாளர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர். குடியரசுக் கட்சியினரும் இதே விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை ஜனநாயக கட்சியினர் உடனடியாக ஜனாதிபதியின் பின்னாள் அணி திரண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/187160
-
டெல்லியில் கனமழை பாதிப்பு: விமான நிலைய மேற்கூரை விழுந்து 3 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
28 JUN, 2024 | 10:57 AM புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் நடந்துள்ளது. மழை காரணமாக விமான சேவையும் தாமதம் அடைந்துள்ளதாக தகவல். இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதை டெல்லி தீயணைப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கூரை சரிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 5.30 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அங்கு அவர்கள் விரைந்துள்ளனர். பீம் சரிந்து விழுந்து சேதமடைந்த காரில் இருந்து ஒருவரை மீட்டுள்ளனர். பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சம்பவத்தால் டெர்மினல் 1 பகுதியில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. செக்-இன் கவுண்டர்களும் மூடப்பட்டுள்ளன. இந்த இடையூறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது விமான நிலைய தரப்பு. மேலும், இந்த சம்பவத்தை தனிப்பட்ட கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணித்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இதனை அவர் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். டெல்லி மழை: கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இதன் காரணமாக அங்கு தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இந்த சூழலில் நேற்று (வியாழக்கிழமை) அங்கு மழை பதிவானது. அதோடு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரம் பதிவான மழை காரணமாக டெல்லி மற்றும் அதனை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அங்கு பருவமழை முன்கூட்டியே எதிர்பார்க்கப்படுவதாக தனியார் வானிலை ஆய்வு நிறுவனங்கள் நேற்று தெரிவித்து இருந்தன. அதே நேரத்தில் காலநிலை மாற்றம் காரணமாக அதீத வெப்பம் மற்றும் மழை என இரண்டையும் எதிர்கொண்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/187154
-
ஹிருணிகாவுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை
அண்ணை மருதர் காஜலிசத்தில் மூழ்கிவிட்டார் என நினைக்கிறேன்!
-
யாழில் மிக்ஸரில் பல்லி; 15 ஆயிரம் ரூபாய் தண்டம்
Published By: DIGITAL DESK 3 28 JUN, 2024 | 11:13 AM யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸரில் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு, ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது, அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை சான்று பொருளாக பெற்றுக்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, மிக்ஸரை விற்பனை செய்த நபரை கடுமையாக எச்சரித்த மன்று அவருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. https://www.virakesari.lk/article/187156
-
கடற்படை மாலுமியின் இறுதி நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் !
28 JUN, 2024 | 11:19 AM நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்த கடற்படை மாலுமியின் இறுதி கிரியைகளில் வியாழக்கிழமை (28) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதேவேளை யாழ்.மாவட்டத்தில் இருந்து கடற்தொழிலாளர்களின் பிரதிநிதிககளும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உயிரிழந்த கடற்படை மாலுமிக்கு அஞ்சலி செலுத்தினர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய படகொன்றினை வழிமறித்து, படகில் இருந்தவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை கடற்படை மாலுமி உயிரிழந்தார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும், கடற்படை சிறப்பு மாலுமியான குருநாகல் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ரத்நாயக்க என்பவரே உயிரிழந்திருந்தார். சம்பவத்தினை அடுத்து, படகில் இருந்த 10 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு புதன்கிழமை காங்கேசன்துறை பொலிஸார் ஊடாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை அவர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187155
-
நாய் கடிக்கு உள்ளானால் உடனே வைத்திய சிகிச்சை பெறுங்கள் ; வைத்தியர் ஜமுனானந்தா!
28 JUN, 2024 | 10:55 AM நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்தார் . அந்நிலையில் அது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை (27) யாழ். போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , விசர் நாய் கடிக்கு உள்ளான கிளிநொச்சியை சேர்ந்த 4 வயதான சிறுமி நேற்று முன்தினம் புதன்கிழமை (26) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விசக் கடிக்கு தீண்டப்பட்டால், 5 நிமிடங்களுக்கு நீரினால் நன்றாக கழுவ வேண்டும். சவர்க்காரம் இட்டும் கழுவலாம் பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். வைத்தியர்களிடம் நாய் அல்லது பூனை தொடர்பாக முழுவிபரத்தை தெரிவிக்க வேண்டும். தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாய்கள் கடிக்கும் போது அதில் கிருமிகள் இருக்காது. ஆனால் தெரு நாய்கள் கடிக்கும் போது கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/187151
-
102ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டிகள்
பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மங்கை தக்சிதா புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார் 27 JUN, 2024 | 02:59 PM (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் யாழ். மாவட்ட மெய்வல்லுர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றிய நேசராசா தக்சிதா புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார். கோலூன்றிப் பாய்தலில் 3.72 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலமே தக்சிதா புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவ வீராங்கனை சச்சினி பெரேரா 3.71 மீற்றர் உயரத்தைத் தாவி நிலைநாட்டியிருந்த தேசிய சாதனையையே தக்சிதா இன்று வியாழக்கிழமை (27) முறியடித்தார். சாவகச்சேரி இந்து கல்லூரியின் பழைய மாணவியான இவர் தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்கிறார். இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அருந்தவராசா புவிதரன் 5.00 மீற்றர் உயர் தாவி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியின் பழைய மாணவரான இவர் தற்போது இராணுவ விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். கடந்த மார்ச் மாதம் இராணுவ மெய்வல்லுநர் போட்டியில் 5.17 மீற்றர் உயரம் தாவி தேசிய சாதனை படைத்த புவிதரன், போதிய வெளிச்சமின்மைக்கு மத்தியில் நேற்றைய போட்டியில் பங்குபற்றியதால் புதிய சாதனைக்கு இலக்கு வைக்க முடியாமல் போனதாக கவலையுடன் தெரிவித்தார். ஆண்களுக்கான கோலூன்றிப்பாய்தல் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி போதிய வெளிச்சமின்மைக்கு மத்தியல் மாலை 6.30 மணிவரை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. தக்சிதாவுக்கும் புவிதரனுக்கும் கணாதீபன் பயிற்சி அளித்துவருகிறார். இதேவேளை, ஆண்களுக்கான குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற எஸ். மிதுன்ராஜ் இன்று நடைபெற்ற தட்டெறிதல் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். தட்டெறிதலில் 45.08 மீற்றர் தூரத்தை மிதுன்ராஜ் பதிவு செய்து இரண்டாம் இடத்தைப் பெற்றார். இது அவரது தனிப்பட்ட அதிசறிந்த தூரப் பெறுதியாகும். https://www.virakesari.lk/article/187101
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
ஜோ பைடனை சீன வடகொரிய சர்வாதிகாரிகள் மதிப்பதில்லை – நேரடி விவாதத்தின் போது டிரம்ப் தெரிவிப்பு Published By: RAJEEBAN 28 JUN, 2024 | 08:23 AM யாரும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உலகம் மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான நேரடி விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் வெளிவிவகார பாதுகாப்பு கொள்கைகளை கடுமையாக சாடியுள்ள அவர் வடகொரிய ஜனாதிபதி, சீனா ஜனாதிபதி போன்ற வெளிநாட்டு சர்வாதிகாரிகள் பைடனை மதிப்பதில்லை அவரை பார்த்து அச்சப்படுவதில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஜோ பைடன் நேட்டோவின் உறுப்புநாடு தாக்கப்பட்டதும் தான் நேட்டோவின் சரத்து ஒன்றை பயன்படுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய தருணத்தில் அமெரிக்கா உலகிற்கு தேவைப்படுகின்றது. எங்கள் சமூகத்தின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ளதால் உலகின் ஒரு பகுதியை பாதுகாக்க நாங்கள் அவசியம் என பைடன் தெரிவித்துள்ளார். விளாடிமிர் புட்டின் தடையின்றி உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொள்ள அனுமதிப்பதே மூன்றாம் உலகத்திற்கு இட்டுச்செல்லும் என பைடன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187135
-
'முற்போக்கான' தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகள், தாக்குதல்கள் தொடருவது ஏன்?
கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து வைத்ததற்காக சில நாட்களுக்கு முன்பாக திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பாக சென்னையிலேயே ஒரு ஆணவக் கொலை நடைபெற்றது. இந்த வாரம் மதுரையில் ஒரு ஆணவக் கொலை நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக் காரணம் என்ன? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். விருதுநகர் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த அழகேந்திரன் என்ற இளைஞர் தான் வசிக்கும் பகுதியில் பட்டியலினத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் 24ஆம் தேதி மதுரைக்குத் தன் உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு அழகேந்திரன் சென்றிருக்கிறார். பிறகு தலை துண்டிக்கப்பட்ட அவரது சடலம் மதுரை வேளான்பூர் கண்மாய் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. உறவினரின் வீட்டிற்கு வந்த அவரை, பெண்ணின் சகோதரரான பிரபாகரன் அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டதாக அந்த இளைஞரின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இப்போது பிரபாகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அடித்து நொறுக்கப்பட்ட சிபிஎம் அலுவலகம் பட மூலாதாரம்,TIRUNELVELI CPM இதற்கு முன்பாக, காதல் திருமணத்திற்கு ஆதரவாக இருந்ததற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த உதயதாட்சாயிணி என்ற பெண்ணும் பாளையங்கோட்டை நம்பிக்கைபுரம் பகுதியைச் சேர்ந்த மதன் என்ற இளைஞரும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தனர். இதில் மதன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், உதயதாட்சாயிணி தரப்பில் இந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் ஜூன் 13ஆம் தேதி திருமணம் செய்தனர். ஜூன் 14ஆம் தேதி அந்தத் திருமணத்தைப் பதிவு செய்ய நினைத்திருந்தனர். இதை பெண் வீட்டார் தடுக்கலாம் என்பதால் திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அணுகினர். இதனால், காவல்துறை பாதுகாப்போடு திருமணத்தைப் பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிகளை மேற்கொண்டது. இந்த நிலையில், பெண் வீட்டார், அவர்களது உறவினர்கள், இவர்களது சாதியைச் சேர்ந்த பந்தல் ராஜா, அவருடைய ஆதரவாளர்கள் ஆகியோர் திருநெல்வேலி வினோபா நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த மேசை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். இதைத் தடுக்க முயன்ற கட்சியினர் சிலரும் தாக்குதலுக்கு உள்ளாயினர். காதல் திருமணத்திற்காக ஒரு கட்சியின் அலுவலகம், ஒரு சிறிய சாதி அமைப்பைச் சேர்ந்தவர்களால் அடித்து நொறுக்கப்பட்டது மாநிலத்தையே அதிர வைத்தது. கல்லூரிகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்ட மாநிலம், அதிக அளவில் பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலம் எனப் பொதுவாகவே முற்போக்கான மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. பட மூலாதாரம்,TIRUNELVELI CPM "தமிழ்நாட்டில் நாம் நினைப்பதைப் போல சாதி மறுப்புத் திருமணங்கள் அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. திருநெல்வேலியில் நடந்த சம்பவம் இதற்கு ஓர் உதாரணம். இதுபோன்ற திருமணங்களைத் தடுக்க எந்த எல்லைக்கும், அதாவது கொலை செய்யும் எல்லைக்கும் போக இவர்கள் தயாராக இருக்கிறார்கள்" என்கிறார் தாக்குதல் நடந்த நேரத்தில் அலுவலகத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரான கே.ஜி. பாஸ்கரன். சாதிக்கு வெளியில் காதலித்து, திருமணம் செய்பவர்கள் பாதுகாப்பு கேட்டால், பாதுகாப்பு அளிப்பதாக அரசு சொல்கிறது, ஆனால், அப்படி ஏதும் நடப்பதில்லை என்கிறார் பாஸ்கரன். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து ஜூன் 26ஆம் தேதி வரை, 7 ஆணவக் கொலை சம்பவங்கள் நடந்திருப்பதாகச் சொல்கிறது மதுரையிலிருந்து செயல்படும் எவிடன்ஸ் அமைப்பு அளிக்கும் புள்ளிவிவரம். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திருமணங்கள் தொடர்பான மனநிலை மாறாமல் இருப்பதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன என்கிறார் மதுரையிலிருந்து செயல்படும் 'எவிடன்ஸ்' அமைப்பின் கதிர். "கடந்த 2004ஆம் ஆண்டில் நிலக்கோட்டைக்கு அருகிலுள்ள ஊர் ஒன்றில் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்ததற்காக ஊர் நடுவில் ஒரு மரத்தில் நாயைக் கட்டும் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டார். அதற்குப் பிறகு ஊரில் பணம் வசூலித்து, ஒரு தண்ணீர் லாரியைக் கொண்டு வந்து அதில் மஞ்சளைக் கலந்து ஊரையே கழுவிவிட்டார்கள்.மூன்று நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண் கொலை செய்யப்பட்டார்." என்கிறார் கதிர். மேலும் தொடர்ந்த அவர், "இந்த ஆண்டு துவக்கத்தில் பட்டுக்கோட்டை மாவட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்தார் என்பதற்காக, தந்தையே அந்தப் பெண்ணை ஒரு மரத்தில் தூக்கில் மாட்டிக் கொலை செய்தார். இது ஊரே பார்க்க நடந்தது. முதல் கொலைக்கும் இரண்டாவது கொலைக்கும் இடையில் இருபது ஆண்டுகள் கால இடைவெளி இருக்கிறது. ஆனால், எதுவும் மாறவில்லை" என்கிறார் கதிர். 'சாதி பெருமிதம் வெகுவாக அதிகரித்துள்ளது' ஆனால் கடந்த சில ஆண்டுகளில் சாதி தொடர்பான பெருமிதம் வெகுவாக அதிகரித்திருக்கிறது என்கிறார் ஆய்வாளரும் பேராசிரியருமான ஸ்டாலின் ராஜாங்கம். "இந்த சாதிப் பெருமிதத்தின் முக்கியமான அம்சமாக, சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள். சாதியப் படிநிலையில் தங்களைவிட கீழே உள்ள சாதியினர் தங்கள் சாதியைச் சீரழிக்க தங்கள் சமூக பெண்ணைக் காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லி கோபத்தை மூட்டுகிறார்கள். அதன்மூலம் தங்கள் சாதியினரை உளவியல் ரீதியாகத் திரட்டுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பல கலாசார நிகழ்வுகளில் இதுபோல பேசப்படுவது சமீப நாட்களில் அதிகரித்திருக்கிறது" என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். சாதியப் படிநிலையில் தங்கள் சமூகத்திற்குக் கீழே உள்ள ஆண்கள், தங்கள் சமூகப் பெண்களைக் காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துப் படம் எடுப்பதும் பேசுவதும் சமீப காலங்களில் அதிகரித்திருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். "தமிழ்நாட்டில் சாதியப் படிநிலையில் கீழிருக்கும் சமூகங்களில் எழுச்சி வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்களுக்கு என உருவாக்கப்பட்ட சினிமா, கட்சி போன்றவை வெளிப்படையாகத் தெரிகின்றன. இதை வைத்து இவர்கள்தான் எதிரிகள் எனச் சுட்டிக்காட்ட, ஒரு வாய்ப்பு ஆதிக்க சாதியினருக்கு இப்போது கிடைத்திருக்கிறது" என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். பட மூலாதாரம்,TIRUNELVELI CPM தமிழ்நாட்டில் சாதிப் பெருமிதம் அதிகரிப்பதற்கும் பா.ஜ.கவின் வாக்கு வங்கி அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பிருக்கிறது என்கிறார் ஸ்டாலின். "பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை மதத்தைப் பற்றியே பேசினாலும் சாதியை மையமாக வைத்துத்தான் அவர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த முறை பா.ஜ.க. கணிசமாக வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்றால், அதில் சாதிரீதியான அணிதிரட்டல்களுக்கும் பங்கு இருக்கிறது" என்கிறார் அவர். ஆணவக் கொலை, ஆணவத் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் மனநிலையில் பல்வேறு அடுக்குகள் இருக்கின்றன என்கிறார் எவிடன்ஸ் கதிர். "ஆதிக்க சாதியினரைப் பொறுத்தவரை, பெண்தான் சாதியை உற்பத்தி செய்யும் நிறுவனம். ஆகவே தங்கள் சாதிப் பெண்களைப் படிநிலையில் கீழே இருக்கும் சாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால், தங்கள் மானம் போய்விட்டதாகவும், அந்தப் பெண்ணையோ, அந்த இளைஞரையோ கொலை செய்தால், அந்த மானம் மீட்கப்படுவதாகவும் கருதுகிறார்கள். அதேபோல, சாதி கடந்த காதல்கள் - திருமணங்களில் சாதி தவிர பொருளாதாரம், ஆணாதிக்கம், மதம், கல்வி போன்ற வேறு சில அம்சங்களும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக காதலுக்கு சாதி எதிரியாக இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், சாதிக்குத்தான் காதல் எதிரியாக இருக்கிறது. அதனால்தான் இதெல்லாம் நடக்கிறது," என்கிறார் அவர். ஆணவக் கொலைகளுக்கு தனிச் சட்டம் தீர்வாகுமா? படக்குறிப்பு,எவிடன்ஸ் கதிர் ஆணவக் கொலைகள் நடப்பதைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது தொடர்பாக இருவேறு கருத்துகள் இருக்கின்றன. "ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் கொண்டு வருவதில் பிரச்னையில்லை. ஆனால் அதுவே இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வாக அமையும் என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே உள்ள எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகள் உள்ளன. சாதியின் பெயரைச் சொல்லித் திட்டினாலே அதில் தண்டனை உண்டு. ஆனாலும் அதுபோன்ற செயல்கள் இப்போதும் நடக்கத்தானே செய்கின்றன?" என கேட்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். ஏற்கெனவே உள்ள கடுமையான சட்டத்தாலேயே வன்கொடுமைகளைத் தடுக்க முடியாத நிலையில், புதிதாக வரும் சட்டம் என்ன செய்துவிடும்? தனியாக ஒரு சட்டம் கொண்டு வருவது ஒரு அழுத்தமாக இருக்கலாமே தவிர, அதற்கு மேல் அந்தச் சட்டத்தால் ஏதும் செய்ய முடியாது என்பது ஸ்டாலின் போன்றவர்களின் போன்றவர்களின் கருத்தாக உள்ளது. "இருப்பினும், இதுபோன்ற சட்டங்களை ஏன் கொண்டு வரச் சொல்கிறோம் என்றால், இம்மாதிரியான சூழலில் வேறு என்ன செய்வதென்று நமக்குத் தெரியவில்லை. காந்தி சொல்வதைப் போல உரையாடலில் நம்பிக்கை வைக்கச் சொல்லும் திறன் எந்தத் தலைவருக்கும் இல்லை" என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம். ஆனால், இதை வேறுவிதமாகப் பார்க்கிறார் எவிடன்ஸ் கதிர். "2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது, 2017 முதல் 2021 வரை மூன்று ஆணவக் கொலைகள்தான் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டது. அதேபோல, தேசிய அளவிலும் மிகக் குறைவான எண்களே தரப்பட்டன. காரணம், இதுபோன்ற சம்பவங்கள் முறைப்படி ஆவணப்படுத்தப்படுவதில்லை. தனிச்சட்டம் வரும்போது, அந்தச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் நாம் நிலவரம் குறித்து சரியான புரிதலைப் பெற முடியும். இதுபோன்ற கொடுமைகள் நீண்ட காலமாக இருப்பவைதான். சட்டத்தின் மூலம் மட்டுமே இவற்றை நிறுத்திவிட முடியாது என்பதை நானும் புரிந்துகொள்கிறேன். ஆனால், இவற்றைக் கட்டுப்படுத்த ஒரு கருவியாக அந்தச் சட்டம் அமையும்" என்கிறார் கதிர். மேலும், "எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைச் சட்டங்களைப் பொறுத்தவரை, பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படும்போதுதான் பயன்படுத்த முடியும். மாறாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்குள் ஆணவக் கொலை நடந்தால் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார் அவர். நீளும் ஆணவக் கொலைகளின் பட்டியல் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிவரை சுமார் 30 ஆணவக் கொலை/தாக்குதல் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன. 2024ஆம் ஆண்டில் தற்போதுவரை 7 கொலைகள் நடந்திருக்கின்றன. பட்டுக்கோட்டையில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரைத் தனது மகள் காதலித்ததால், அந்தப் பெண்ணை ஜனவரி 3ஆம் தேதி அவரது தந்தையே தூக்கிலிட்டுக் கொலை செய்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிற்படுத்தப்பட்ட இரு வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் காதலித்துத் திருமணம் செய்தனர். இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர், இருவரையும் ஜனவரி 30ஆம் தேதியன்று கொலை செய்தார். சென்னை சீனிவாசா நகரில் பட்டியலினத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவர் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் சகோதரர்கள், ஜனவரி 31ஆம் தேதி காதலனை வெட்டிக் கொலை செய்தனர். சென்னை பள்ளிக்கரணையில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரான பிரவீன் என்பவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர்கள் பிப்ரவரி 24ஆம் தேதியன்று பிரவீனை வெட்டிக் கொலை செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரான சுபாஷ், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர், மார்ச் 6ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற சுபாஷை நான்கு சக்கர வாகனத்தை ஏற்றிக் கொல்ல முயன்றனர். இதில் சுபாஷின் சகோதரி கொல்லப்பட்டார். சுபாஷ் படுகாயமடைந்தார். மதுரை அவனியாபுரத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய உறவினரான இளம்பெண்ணைக் காதலித்து வந்தார். இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர், ஏப்ரல் 11ஆம் தேதி கார்த்திக்கை கொலை செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த அழகேந்திரன், பட்டியலினத்தில் வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தார். இதற்குப் பிறகு அழகேந்திரன் தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக பெண்ணின் சகோதரர் பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆணவக் கொலைகளில் காதலர்களில் ஒருவரோ, இருவரோ கொல்லப்படுள்ளனர். காதலர்கள் மட்டுமல்லாமல் காதலுக்குத் துணையாக நின்றவர்களும் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். காதலர்களில் ஒருவரது பெற்றோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. திருமணம் செய்தால் சாதிப் பெருமிதம் போய்விடும் என காதலனே காதலியைக் கொலை செய்த நிகழ்வும் நடந்திருக்கிறது. ஒரே சாதிக்குள்ளும் காதல் தொடர்பான ஆணவக் கொலைகள் நடந்திருக்கின்றன. வெகு சில தருணங்களில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களைக் கொலை செய்ததும் நடந்திருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cn05rqd73l9o
-
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் மடுவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட கலந்துரையாடல்! Published By: VISHNU 28 JUN, 2024 | 01:34 AM மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் வியாழக்கிழமை (27) காலை 11 மணியளவில் மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ், கடற்படை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு தொடர்பாக உரிய தரப்புடன் கலந்துரையாடப்பட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பமானது. தொடர்ந்து நவநாள் திருப்பலி தமிழ் சிங்கள மொழிகளில் ஒப்புக் கொடுக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் 2 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்க உள்ளனர். இம்முறை நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் மரு அன்னையின் ஆசி பெற வருகை தர உள்ளமையினால் சகல விதமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் அரசாங்க அதிபர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்திருந்த அமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187128
-
ஹிருணிகாவுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை
2015ஆம் ஆண்டு தெமட்டகொடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்ப்பு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமால் ரணராஜாவினால் அறிவிக்கப்பட்டது. https://thinakkural.lk/article/304713 ஹிருணிகாவின் ரசிகர் எப்படி இதை தாங்கிக்கொள்ளப் போகிறார்!!
-
சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது
இலங்கையின் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்பட்ட மொத்த சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 944 மெகாவாட் கூரை சூரிய சக்தி பேனல்களும் 156 மெகாவோட் நிலத்தடி சூரிய சக்தி பேனல்களும் தேசிய மின் அமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், கூரை சூரிய சக்தி பேனல்கள் மூலம் 1,000 மெகாவாட்களுக்கு மேல் தேசிய மின் அமைப்புடன் சேர்க்கப்படும். மின்சார சபையின் நீண்டகால உற்பத்தித் திட்டத்தின்படி, அடுத்த 4 ஆண்டுகளில் கூரை சூரிய சக்தி பேனல்கள் மூலம் தேசிய மின் அமைப்புடன் ஒவ்வொரு ஆண்டும் 150 மெகாவாட் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் மட்டும் 132 மெகாவாட் கூரை சூரிய சக்தி பேனல்கள் தேசிய மின் அமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/304710
-
உயர்மட்ட சந்திப்புகளை நடத்த மஹிந்த சீனா பயணம்!
சீன வெளிவிவகார பிரதி அமைச்சரை சந்தித்தார் மஹிந்த Published By: DIGITAL DESK 3 28 JUN, 2024 | 09:41 AM சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டோங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு பீஜிங்கில் இடம்பெற்றுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கைக்கு மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க விஜயத்தை நினைவுகூர்ந்த பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டோங், சீனாவின் பழைய நண்பர் என்றும் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187141
-
இணைய மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் உட்பட 33 பேர் கைது
இணையத்தில் நிதிமோசடி – 60 பேர் கைது 30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்களைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று(27) கைது செய்துள்ளனர். இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்தேகநபர்கள் தலங்கம, மாதிவெல மற்றும் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/304699
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை பழிதீர்த்த இந்தியா - மீண்டும் ஏமாற்றிய கோலி பற்றி ரோகித் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் கடந்த 11 ஆண்டுகளுக்குப்பின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. கடைசியாக 2014ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிக்கு தோனி தலைமையில் இந்திய அணி முன்னேறி இலங்கையிடம் கோப்பையை பறிகொடுத்தது. ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்குப்பின் தற்போது ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கும் கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்று கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழந்தது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது. பர்படாஸ் நகரில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்ரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி கோப்பைக்காக மோதுகிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பழிதீர்த்த இந்திய அணி பிராவிடன்ஸில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 68 ரன்களில் வென்றது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் எனும் கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு சுருண்டு 68 ரன்களில் தோல்வி அடைந்தனர். 2022ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி அடிலெய்ட் நகரில் அடைந்த தோல்விக்கு, நேற்று இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி பழிதீர்த்துக்கொண்டது. கடந்த 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டைக் கூட இழக்காமல் 170 ரன்கள் சேர்த்து இந்திய அணியை துவம்சம் செய்திருந்தது. இந்த முறை 103 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணியிடம் சின்னாபின்னமாகியது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டநாயகன் அக்ஸர் இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் ரோஹித் சர்மாவின் துணிச்சலான அதிரடி ஆட்டமும் அவரின் அரைச் சதமும், சூர்யகுமார்(47), ஹர்திக் பாண்டியாவின்(23) பங்களிப்பும் முக்கியக் காரணம். பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பும்ராவோடு சேர்ந்து அக்ஸர் படேலின் பங்களிப்பு முக்கியக் காரணமாக அமைந்தது. அக்ஸர் படேல் தனது ஒவ்வொரு ஓவரின் முதல் பந்திலும் விக்கெட் வீழ்த்தியது திருப்புமுனை. குறிப்பாக பட்லர், பேர்ட்ஸ்டோ, மொயின் அலி விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் இங்கிலாந்து அணியை நெருக்கடியில் தள்ளி பெரிய திருப்புமுனையை இந்திய அணிக்கு ஏற்படுத்தியது. சிறப்பாக பந்துவீசிய அக்ஸர் படேல் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES கடினமான ஆடுகளம் பிராவிடன்ஸ் ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருந்தது என்பது இந்திய பேட்டர்கள் ஒவ்வொரு பந்துக்கும் திணறியபோதே தெரிந்தது. வேகப்பந்து வீசினால்கூட தாழ்வாகவும், திடீரென பவுன்ஸ் ஆவதும், ஸ்விங் ஆவதும் என கணிக்க முடியாத வகையில் களிமண் விக்கெட்டாக இருந்தது. இந்த ஆடுகளத்திலும் துணிச்சலாக அதிரடி ஆட்டத்தைக் கையாண்டு, அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தது ரோஹித் சர்மாவின் பேட்டிங் மட்டும்தான். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இன்னும் சற்று ஒழுங்குடன் பந்துவீசியிருந்தால், நிச்சயமாக இந்திய பேட்டர்களுக்கு இன்னும் நெருக்கடி கொடுத்திருக்க முடியும். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் மட்டும் இந்திய அணி 8 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளை விளாசியது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா 133 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவர்களை வீணடிக்காத ரோகித் சர்மா, ஸ்கோரை உயர்த்த ரிஸ்க் எடுத்து சில ஷாட்களையும் நுணுக்கமாக ஆடினார். டி20 போட்டியில் ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 141 ஆக இருக்கும்நிலையில் இதில் 131 ஆக இருந்தது. மோசமான பந்துகளை மட்டும் ரோகித் சர்மா பெரிய ஷாட்களாக மாற்றவில்லை, அணிக்கு ஸ்கோர் உயர்வு தேவைப்படும்போதெல்லாம் எந்த பந்தையும் பார்க்காமல் வெளுத்தார். ரோகித் சர்மா 4வது ஓவரிலிருந்தே கட்டுப்பாட்டுடன் பேட் செய்யத் தொடங்கி 26 பந்துகளில் 20ரன்களை சேர்த்தார். ரோகித் சர்மா 40 ரன்கள் சேர்த்திருந்தபோது அதில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களும் அடக்கம். பட மூலாதாரம்,GETTY IMAGES மீண்டும் தடுமாறிய கோலி; ரோகித் கூறியது என்ன? தொடக்க வீரராகக் களம் இறங்கும் விராட் கோலி இந்தத் தொடர் முழுவதும் சரியாக ரன் எடுக்கவில்லை. ஒருவேளை விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்கி இருந்தால், அவரால் அணிக்கு இன்னும் கூடுதலான ஸ்கோர் கூட கிடைத்திருக்கும் என்ற விவாதம் தொடர்ந்து எழுந்து வருகிறது. வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “மனநிறைவான வெற்றி. அனைவருமே கடுமையாக உழைத்தோம், அதற்கான பலன் கிடைத்துள்ளது. இந்த சூழலுக்கு ஏற்றபடிபோல் மாறியது சவாலானது. எங்களுக்கு வெற்றிப் பயணமாக இருந்து வருகிறது. பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை நன்கு புரிந்து கொண்டதால்தான் சிறப்பாக விளையாட முடிந்தது. 150ரன்கள் சேர்த்தாலே இந்த ஆடுகளத்தில் போதுமானது என நினைத்தோம் ஆனால், 170 கிடைத்தது.” என்றார். “பேட்டர்களின் திறமையை, விருப்பத்தை திசைதிருப்ப விரும்பவில்லை, அவர்களுக்கு முழுசுதந்திரம் உண்டு. 171 ரன்கள் இந்த மைதானத்தில் பெரிய ஸ்கோர். பந்துவீச்சாளர்கள் பணியும் அற்புதமாக இருந்தது. அக்ஸர், குல்தீப் இருவரும் எதிரணிக்கு சிம்மசொப்னமாக இருந்தார்கள். இவர்களின் பந்துவீச்சில் பெரிய ஷாட்கள் அடிப்பது கடினமாக இருந்தது. அழுத்தமான நேரத்தில் அமைதியாகப் பந்துவீசினர். விராட் கோலி பேட்டிங் பற்றி எங்களுக்குத் தெரியும். ஃபார்ம் ஒரு பிரச்சினை இல்லை. கடந்த 15 ஆண்டுகளாக கோலி விளையாடி வருகிறார். இறுதிப்போட்டிக்கு இன்னும் தீவிரமாகத் தயாராகுவோம். நாங்கள் எந்த நேரத்திலும் பதற்றப்படாமல், நிதானமாகவே விளையாடினோம். அதுதான் முக்கியம். நல்ல அணியாக உருவெடுத்துள்ளநிலையில் சாம்பியன் பட்டத்துக்காக முயற்சிப்போம்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவுக்கு தலைவலியாக மாறிய ரஷித் பந்துவீச்சு இந்திய அணிக்கு நேற்று பெரிய சவாலாக இருந்தது அதில் ரஷித் பந்துவீச்சும், லிவிங்ஸ்டோன் பந்துவீச்சும்தான். அதிலும் குறிப்பாக ரஷீத் பந்துவீச்சை ரோகித் சர்மாவும், சூர்யகுமார் பெரிய ஷாட்டுக்கு மாற்றவே தயங்கினர். இதனால் இந்திய அணியின் ரன்ரேட்டை ரஷித் பந்துவீச்சால் இறுக்கிப் பிடித்தார். சரியான நீளத்தில், ஸ்டெம்பை நோக்கியே ரஷித் வீசியதால், பெரிய ஷாட்களாக மாற்றுவது ரோகித், சூர்யாவுக்கு கடினமாக இருந்தது. அதில் ரஷித் தனது முதல் ஸ்பெல்லில் 2 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்த நிலையில் மழைக்குப்பின் ஆட்டம் தொடங்கியபின், அடுத்த 2 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதில் ரஷித் சிறப்பாகப் பந்துவீசி, கேப்டன் ரோகித் சர்மா(57) விக்கெட்டை வீழ்த்தி, தனக்குரிய பணியை முடித்தார். அதேபோல நேற்று மொயின் அலி இருந்தும் அவருக்குப் பதிலாக பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர் லிவிங்ஸ்டனை பந்துவீசச் செய்தார். ஆடுகளம் ஏற்கெனவே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், லிவிங்ஸ்டன் பந்துவீச ஏதுவாக இருந்தது. அவரும் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, இந்திய ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தினார். ஆனால், இதே ஆடுகளத்தை இந்தியப் பந்துவீச்சாளர்கள் குல்தீப், அக்ஸர், ஜடேஜா ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களும் சிறப்பாகப் பயன்படுத்தினர். இந்த 3 பந்துவீச்சாளர்களும் 11 ஓவர்கள் வீசி, 58 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர், ஓவருக்கு சராசரியாக 5.2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். 28 டாட் பந்துகள் ஏறக்குறைய 5.4 ஓவர்களை டாட்பந்துகளாக வீசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்புமுனையை ஏற்படுத்திய அக்ஸர் பவர்ப்ளே ஓவருக்குள் அக்ஸர் பந்துவீச அழைக்கப்பட்டார். அவரின் முதல் ஓவர் முதல் பந்திலேயே ஜாஸ் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரில் பேர்ஸ்டோ போல்டாகியது என திருப்புமுனையை அக்ஸர் ஏற்படுத்தினார். அதேபோல 7-வது ஓவரை அக்ஸர் வீசியபோது முதல் பந்தில் மொயின் அலி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அக்ஸர் படேல் வீசிய 3 ஓவர்களில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார். குல்தீப், பும்ரா மிரட்டல் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை, மிகவும் தாழ்வாக வருகிறது, பவுன்ஸரும் இல்லை என்பதால் இங்கிலாந்து அணியிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், பும்ரா தனது ஸ்லோவர் பால், கட்டர்கள், ஸ்விங் பந்துவீச்சு மூலம் தொடர்ந்து இங்கிலாந்து பேட்டர்களை மிரட்டனர். ஒரு கட்டத்தில் பில் சால்ட்டுக்கு அருமையான ஸ்விங் பந்தைவீசி கிளீன் போல்டாக்கினார் பும்ரா. கடைசி நேரத்தில் ஜோப்ரா ஆர்ச்சரை கால்காப்பில் வாங்க வைத்து 2வது விக்கெட்டையும் பும்ரா வீழ்த்தினார். 2.3 ஓவர்களை வீசிய பும்ரா 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்துஅணி 4 விக்கெட்டுகளை இழந்து 49ரன்கள் சேர்த்திருந்தபோது குல்தீப் பந்துவீச வந்தார். கடந்த ஓர் ஆண்டில் கவனிக்கத்தக்க பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் குல்தீப் பந்துவீச்சில் ரன்களைச் சேர்க்க இங்கிலாந்து பேட்டர்கள் திணறினர். ஓரளவுக்கு செட்டில் ஆகி விளையாடிவந்த பேட்டர் ஹேரி ப்ரூக்(25), சாம் கரன்(2) இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்துக்கு நெருக்கடி அளித்தார். ஆல்ரவுண்டர் என்ற பெயருடன் அணிக்குள் களமிறங்கிய ஜோர்டானையும் குல்தீப் தனது மந்திரப் பந்துவீச்சால் சாய்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியப் பந்துவீச்சில் சுருண்ட நடப்புச் சாம்பியன் அரையிறுதி ஆட்டம் என்பதால், இங்கிலாந்து வீரர்கள் பொறுப்புடன் ஆடுவார்கள், யாராவது ஒரு பேட்டராவது பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்த்திருந்தது ஏமாற்றத்தை அளித்தது. அந்த அணியில் சேர்க்கப்பட்டஅதிகபட்ச ஸ்கோர் ஹேரி ப்ரூக் சேர்த்த 25 ரன்கள்தான். கேப்டன் பட்லர்(23), ஐபிஎல் தொடரில் கலக்கிய பில் சால்ட்(5), பேர்ஸ்டோ(0), லிவிங்ஸ்டன்(11), சாம் கரன்(2) என ஒருவர்கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, போராட்டக் குணத்தை வெளிப்படுத்தவில்லை. கடந்த 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியிடம் இருந்த துணிச்சல், விடாமுயற்சி, போராட்டக் குணம் அனைத்தும் இந்த முறை இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES கோலி இதுவரை செய்தது என்ன? ரோகித் சர்மாவின் துணிச்சலான ஆட்டத்துக்கு கிடைத்த பரிசுதான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக கிடைத்த வெற்றியாகும். இந்தத் தொடரில் 248 ரன்கள் சேர்த்து ரோகித் 3-ஆவது இடத்தில் 155 ஸ்ட்ரைக் ரேட்டில் இருக்கிறார், 41.33 சராசரி வைத்துள்ளார். ஆனால், தனது பாணியிலிருந்து மாறி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடும் கோலி இந்தத் தொடரில் இதுவரை 75 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், 100 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 10 ரன்கள் சராசரியும் வைத்துள்ளார். இருவருக்கும் ஏறக்குறைய இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர்தான் கடைசியாக இருக்கலாம். ஆனால், கோலியின் பேட்டிங் பாணியும், ரோஹித்தின் பேட்டிங் பாணியும் வெவ்வேறு. அப்படி இருக்கையில் இருவரையும் ஒருசேர களமிறக்குவது அணியின் ஸ்கோரையே கடுமையாக இந்த தொடரில் பாதித்தது. கோலியிடம் இருந்து முழுமையாக கிடைக்க வேண்டிய ஸ்கோர் இந்தத் தொடரில் இந்திய அணி தவறவிட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/crg5np2zqe5o
-
பொலிஸார், அரச அதிகாரிகளின் ஆதரவுடன் இலங்கையில் மத சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் - மத சுதந்திர அறிக்கையில் அமெரிக்கா குற்றச்சாட்டு
Published By: RAJEEBAN 27 JUN, 2024 | 05:56 PM இலங்கையில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதாக தெரிவித்துள்ள அமெரிக்கா இந்த நடவடிக்கைகளிற்கு அரச அதிகாரிகள் ஆதரவளிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2023 ம் ஆண்டு மத சுதந்திரம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்கா இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளதாவது, உள்ளுர் பெரும்பான்மை மதசமூகத்தின் உறுப்பினர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிவித்த மத சிறுபான்மையினத்தவர்கள் அவர்களிற்கு அரச அதிகாரிகள் ஆதரவளித்ததாக தெரிவித்தனர். பௌத்த கிராமங்களில் கிறிஸ்தவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் அல்லது மதவழிபாட்டிற்காக பௌத்தசாசன அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என வேண்டுகோள் விடுப்பவர்களிற்கு ஆதரவாக அரசஅதிகாரிகள் செயற்பட்டனர் என கிறிஸ்தவர்களிற்கு எதிரான வன்முறைகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் தேசிய கிறிஸ்தவ சுவிசே கூட்டணி அமைப்பு (என்சிஈஏஎஸ்எல் )அமைப்பு இதனை ஏற்றுக்கொண்டதுடன் பொலிஸாரும் அரச அதிகாரிகளும் சிறுபான்மை மதசமூகத்தினர் துன்புறுத்தப்படுவதிலும் அவர்களுடைய மதவழிபாட்டுதலங்கள் தாக்கப்படுவதிலும் தொடர்புபட்டுள்ளனர் என கிறிஸ்தவ குழுக்கள் தொடர்ந்தும் தெரிவித்துவருவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் பெரும்பான்மை மதகுழுவின் பக்கம் சாய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மே 23ம் திகதி யாழ்மாவட்டத்தில் தையிட்டி என்ற இடத்தில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்தவிகாரை என அவர்கள் சொல்வதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் நீதிமன்ற உத்தரவை மீறியமைக்காக கைதுசெய்யப்பட்டதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் உள்ளுர் ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. பொலிஸார் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை அங்கிருந்து வெளியேற்றினர். மே 24ம் திகதி மல்லாகம் நீதிமன்றம் 9 பேரையும் பிணையில் விடுதலை செய்ததுடன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கியது. குறிப்பிட்ட பௌத்த ஆலயத்தை சுற்றியுள்ள பகுதியில் அந்தபகுதி விவசாயிகளிற்கு 12 ஏக்கர் நிலமிருப்பதாகவும் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த காலம் முதல் இராணுவம் அந்த பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகவும் சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். 2019 உயிர்த்த ஞாயிறு இடம்பெற்றதை தொடர்ந்து தற்போது வரை பொலிஸாரின் கண்காணிப்பினையும் துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளதாக முஸ்லீம் அரசசார்பற்ற அமைப்புகள் தெரிவித்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முஸ்லீம்களின் குடும்பத்தவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களும் தாங்கள் தொடர்ந்தும் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அரசாங்க பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை விசாரணை செய்கின்றனர். அரசாங்கம் முஸ்லீம் சமூகத்தினை சிங்கள பௌத்த சமூகத்தின் மேலாதிக்கத்திற்கான கலாச்சார நில சனத்தொகை ஆபத்தாக கருதுகின்றது என சிறுபானமை சமூக பிரதிநிதிகளும் அரசசார்பற்ற அமைப்புகளும் தெரிவித்தன. இலங்கையில் சட்டவிரோதமான மதமாற்றத்தை கிறிஸ்தவ சமூகம் முன்னெடுப்பதாகவும் இந்துகள் பௌத்தர்களின் தொல்பொருபகுதிகளை ஆக்கிரமிப்பதாகவும் அரசாங்கம் கருதுவதாக அவர்கள் தெரிவித்தனர். கடந்த வருடம் கருத்துசுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் மத ஐக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியது மத பகைமையை தூண்டிய குற்றச்சாட்டுகளின் நபர்களை கைதுசெய்வதற்காகவும் பயன்படுத்தியது அரசாங்கம் ஐசிசிபிஆர் சட்டத்தை பயன்படுத்தியது என சிவில் சமூக அமைப்புகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும பதிவு செய்யவேண்டும் என்ற 2022 ம் ஆண்டின் சுற்றுநிரூபம் தற்போதைய சட்டத்தின் அடிப்படையிலானது இல்லை அரசமைப்பிற்கு முரணானது என சிவில் சமூக அமைப்பினரும் சட்டத்தரணிகளும் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் இந்த சட்டத்தை சிறுபான்மையினத்தவரின் வழிபாட்டுதலங்களை இலக்குவைப்பதற்கு பயன்படுத்துகின்றது என என்சிஈஏஎஸ்எல்லும் சிவில்சமூக பிரதிநதிகளும் தெரிவிக்கின்றனர். பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை காண்பிக்காவிட்டால் கிறிஸ்தவவழிபாட்டுதலங்களை அரசாங்க அதிகாரிகள் சட்டவிரோதமானது அல்லது அனுமதியளித்தது என கருதுகின்றனர் பதிவு செய்யாவிட்டால் சட்டநடவடிக்கைகளை எடுப்போம் என எச்சரிக்கின்றனர் என கிறிஸ்தவ குழுக்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்தவ குழுக்கள் பதிவு செய்ய முயலும்போது அந்த நடவடிக்கை தீர்வின்றி தொடர்வதாக அந்த குழுக்கள் தெரிவிக்கின்றன.ஒரு தேவலாயம் தன்னை பதிவு செய்வதற்கான முயற்சிகளி;ல் பலவருடங்களாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இலங்கையின் தேசியகிறிஸ்தவ சுவிசே கூட்டணி அமைப்பு அச்சுறுத்தல் மிரட்டல் போதகர்கள் அவர்களின் வழிபாடுகளிற்கு எதிரான வன்முறைகள் வழிபாடுகளை தடுத்தல் என 43 கிறிஸ்தவ விரோத சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 2022 இல் இந்த எண்ணிக்கை 80 ஆக காணப்பட்டது. பௌத்த குழுக்களின் அச்சுறுத்தல்கள் வன்முறைகளிற்கு சிலவேளை பௌத்த மதகுருமார் தலைமை தாங்கினார்கள் அதனை தூண்டினார்கள் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பொலிஸார் ஆராதனைகளை நடத்தியமைக்காக போதகர்களை குற்றம்சாட்டவேண்டும் என தெரிவித்துள்ளதுடன் போதகர்களே அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். முஸ்லீம்களிற்கு எதிரான 9 சம்பவங்களையும் இந்துகளிற்கு எதிரான 13 சம்பவங்களையும் தேசியகிறிஸ்தவ சுவிசே கூட்டணி பதிவு செய்துள்ளது. 2023 இல் குருந்தூர் மலையில் சமயச்சடங்குகளை நடத்துவது தொடர்பான இனமதப்பதற்றம் நிலவியது. ஜூலை 14ம் திகதி 100 சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள் பௌத்த பிக்குமார்கள் பொலிஸார் மற்றும் அதிகாரிகள் இந்துக்களின் பொங்கல் பூஜையை தடுக்க முயன்றனர் என தமிழ் ஊடகங்கள் தெரிவித்தன. முல்லைத்தீவு நீதிமன்றம் முன்னர் உத்தரவை வழங்கியிருந்த போதிலும் பொலிஸார் இது அமைதிக்கு பாதகம் ஏற்படுத்தும் என தெரிவித்தனர். 2022 இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் 2020 இல் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான ஜனாதிபதி செயலணி செயற்படுவதை நிறுத்தியது என சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்தன. தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்வது சமயப்பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பது இந்த குழுவின் செயலாகும். சிறுபான்மை இன அரசியல்வாதிகள் உட்பட விமர்சகர்கள்இ இந்த பணிக்குழு பாரம்பரியத்தை பாதுகாப்பது என்ற பெயரில் மத்திய அரசின் நில அபகரிப்புக்கு வழிவகுக்கும் என்று அஞ்சுவதாக தெரிவித்தனர். செயலணி செயலிழந்த போதிலும் பல பௌத்த பிக்குகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரம்பரியமாக தமிழ் மற்றும் முஸ்லீம் நிலங்களை ஆண்டு முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் செயலணியின் முன்னாள் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து மௌன ஆதரவை வழங்குவதாகவும் கூறியுள்ளனர். குருந்தூர் மலையில் பௌத்தவிகாரைகளை அமைக்கும் நடவடிக்கைகளில் தொல்பொருள் திணைக்களம் தொடர்ந்தும் ஈடுபட்டது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/187115