Everything posted by ஏராளன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
RESULT 48th Match, Super Eights, Group 1 (N), Kingstown, June 22, 2024, ICC Men's T20 World Cup Afghanistan 148/6 Australia (19.2/20 ov, T:149) 127 Afghanistan won by 21 runs PLAYER OF THE MATCH Gulbadin Naib, AFG 4/20
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 18 இந்திய மீனவர்கள் கைது! 23 JUN, 2024 | 09:15 AM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளையும் அதிலிருந்த 18 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர். கைதானவர்கள் மையிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/186738
-
ஜனாதிபதி கிழக்கிற்கு விஜயம்
மட்டக்களப்பில் காணி உறுதிகளையும் ஆசிரியர் நியமனங்களையும் வழங்கினார் ஜனாதிபதி 22 JUN, 2024 | 04:56 PM நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘உறுமய' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு, திராய்மடு மாவட்ட செயலக வளாகத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று (22) நடைபெற்றது. இதற்கு முன்னதாக மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் 1,055 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டடத்தை ஜனாதிபதி திறந்துவைத்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது, 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இந்த புதிய மாவட்ட செயலகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான சேவைகளை விஸ்தரித்து வினைத் திறனாக்கும் நோக்கில் இந்த புதிய மாவட்ட செயலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெயர் பலகையை திரைநீக்கம் செய்து மாவட்ட செயலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார். இதன்பின்னர் மட்டக்களப்பு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உரிமையற்ற 27,595 குடும்பங்களுக்கு உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது. அதில் இதுவரை 2610 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர உயர்தர தேசிய பொறியியல் டிப்ளோமா நிறுவனத்தில் ஆங்கில டிப்ளோமா பெற்ற 252 பேருக்கும் இன்று ஜனாதிபதி தலைமையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ‘’திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம். அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்த போது அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவது குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்தப் பகுதிகளில் பாரியளவிலான விவசாய செயற்பாடுகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் அபிவிருத்தி செய்யப்படாத மகாவலி காணிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும், வெருகலாறு முதல் அறுகம்பே வரையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கோட்டையை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் சுற்றுலாத் துறைக்காக அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இந்தப் பிரதேசத்திற்கு ஒரு சிறந்த ஹோட்டல் கிடைக்கும். மேலும் இப்பகுதியில் பால் உற்பத்தித் துறையை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பொருளாதார மாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பாரிய பணிகள் இங்கு செயல்படுத்தப்பட உள்ளன. இதன்படி திருகோணமலையை பிரதான ஏற்றுமதி பொருளாதா மையமாக மாற்ற முடியும். கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இங்கு அமைந்துள்ளன. இப்பிரதேசத்தில் கல்வியை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். தொழிற்கல்வித்துறையின் சீர்திருத்தத்தின் மூலம் அதிகளவான இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்க முடியும். மூன்று, நான்கு ஆண்டுகளாக ஆசிரியர்களை நியமிக்க முடியாததால், பாடசாலைக் கல்வி மேம்பாட்டிற்காக, இன்று ஆசிரியர் நியமனமும் வழங்கப்பட்டது. நம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஒரு பாரிய பிரச்சினையாக மாறிவிட்டது. அதற்கேற்ப, புதிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நாங்கள் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொண்டோம். இந்நாட்டின் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு மீண்டும் அபிவிருத்தி அடையும் போது அந்த மக்களை ஒருபோதும் மறக்க மாட்டோம். அதன்படி மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உரிமை வழங்கும் உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். இப்போது உங்களுக்கு ஒரு நிலத்தின் சட்டபூர்வ உரிமை உள்ளது. யாரும் அடிபணிந்து வாழத் தேவையில்லை. குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு “அஸ்வெசும” நிவாரணத் திட்டத்தை செயல்படுத்தினோம். தற்போது விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன. இந்தக் காணி உறுதிப்பத்திரங்களை வினைத்திறனாக வழங்க சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்க அதிகாரிகளையும் கிராமங்களுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டத்தையும் நாங்கள் தயாரித்துள்ளோம். அப்போது, இந்த காணி உறுதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் மாவட்ட செயலகத்திற்கோ பிரதேச செயலகத்திற்கோ செல்லத் தேவையில்லை. மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர் ஆகியோர் கிராமத்திற்குச் சென்று காணி உறுதிகளை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வார்கள். எதிர்வரும் திங்கட்கிழமை அந்த வேலைத்திட்டத்தை தொடங்கி விரைவில் நிறைவு செய்ய அறிவுறுத்தியுள்ளேன். எனக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான் உள்ளது. அந்த உரிமையை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். காணி உரிமையை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ‘’இன்று ஜனாதிபதி ரணில்விகரமசிங்கவை வரவேற்பதில் பெருமைகொள்கிறோம். இந்தத் திட்டம் அவரால் தொடங்கப்பட்ட திட்டம் என்பதைக் கூற வேண்டும். அமைச்சர் வஜிர அபேவர்தனவினால் வழங்கப்பட்ட சுமார் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அன்று, இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த ரணில் விக்ரமசிங்க அவர்களே இன்று ஜனாதிபதியாக இந்தக் கட்டிடத்தைத் திறந்து வைத்துள்ளார். நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி எப்பொழுதும் எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாய திணைக்களத்துடன் இணைந்து செயற்படுகின்றோம். மட்டக்களப்பு மாவட்டம் அதிகளவான விவசாயிகளைக் கொண்ட விவசாய மாவட்டம் என்பதைக் கூற வேண்டும். அத்துடன் நாட்டின் மிக நீளமான கடற்கரை கிழக்கு மாகாணத்தில் அமைந்திருப்பதால் நீர்வாழ் உயிரினங்களை வளர்ப்பத்தை ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி எமக்கு எடுத்துக் காட்டியுள்ளார். எனவே, மீன்வளர்ப்புத் திட்டங்களுக்கு உள்நாட்டு விவசாயிகள் மற்றும் வர்த்தகங்களை ஊக்குவிக்க நாம் தற்போது செயற்பட்டு வருகிறோம். மேலும், எங்களிடம் அதிக அளவில் கணிமப் படிவுகள் உள்ளது. அதற்கு பெறுமதி சேர்த்து, கனிமத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டங்கள் அனைத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு நாம் மிகவும் ஊக்கத்துடன் செயற்பட்டு வருகின்றோம்” என்று ஆளுநர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா ‘’மட்டக்களப்பு மக்களுக்கான புதிய மாவட்ட செயலக கட்டிடத் திறப்பு விழா, காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு, ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு என்பவற்றில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வருகை தந்தமை, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இப்போதெல்லாம் தேர்தல் பற்றித்தான் எல்லோரும் கதைக்கிறார்கள். வேட்பாளர் யார் என்று கேட்கிறார்கள். மேலும் அரசியல் தலைவர்கள் யாழ்ப்பாணம் சென்று தமிழ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்குகின்றனர். தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். உங்களால்தான் அனைவரும் அந்தக் கருத்துக்கு வந்ததில் பெருமை கொள்கிறோம். போரினால் நாம் இழந்தது ஏராளம். இனி இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவது நமது பொறுப்பு. இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம், என அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய ஒரு நாடு உருவாகும் என இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்கள் அதிகாரத்தை வழங்கினால், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.’’ என்று தெரிவித்தார். கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடு மிக மோசமான பொருளாதார சிக்கலில் இருந்தபோது நாட்டைப் பொறுப்பேற்று ஜனாதிபதி பல கொள்கைகளை அமுல்படுத்தியுள்ளார். இந்தக் கொள்கைகள் நீடித்து நிலைக்க வேண்டுமாயின், மக்களும் உறுதியான மனநிலையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக சம்பள உயர்வுகளைக் கோரி ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. நாடு மிக மோசமான பொருளாதார நிலையில் இருக்கும்போது, எவ்வாறு வேலை வாய்ப்புக்களை வழங்குவது, சம்பள உயர்வுகளை வழங்குவது என்ற கேள்வி இருக்கிறது. இந்த நாட்டை கட்டியெழுப்பி, எதிர்கால இளைஞர்களுக்கு நம்பிக்கைக் கொடுக்க வேண்டும். இன்னமும் கடன் வாங்கி பயணிக்கப் போகிறோமா, அல்லது நாட்டை சரியாக நிர்வகித்து, சரியான எதிர்காலத்தை ஏற்படுத்தப் போகிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். இதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம். தூரநோக்குடன் செயல்பட்டு, பொருளாதாரத்தில் நீடித்து நிலைக்க நாம் பணியாற்றி வருகிறோம். இந்த நிலைமையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டம் மண்ணோடும், கடலோடும் சொந்தப் பொருளாதாரத்தில் நிற்கும் ஒரு மாவட்டம். இங்கு நீர்ப்பாசனத் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான பணிப்புரைகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இதனால் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றிய வேண்டியது மிக முக்கியமான விடயமாகும். இதனைத்தவிர மாற்று வழிகள் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. உறுதியான தளம் இல்லாமல் நாங்கள் கட்டிடம் கட்ட முடியாது. எனவே, அரசியல் ரீதியாக எதிர்காலத்தில் சரியான முடிவுகளை எடுத்து நாட்டிற்காக நல்ல தலைவரை மக்கள் தெரிவுசெய்வார்கள் என்று நம்புகிறேன்.’’ என்று தெரிவித்தார். வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், ‘’எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில், முன்னாள் ஜனாதிபதி பலருக்கும் அழைப்பிவிடுத்தார். யாரும் இந்நாட்டைப் பொறுப்பேற்ற முன்வரவில்லை. அத்தியவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள மக்கள் கையில் பணம் இருந்தாலும் வரிசைகளில் பல நாட்கள் நிற்க வேண்டிய நிலை காணப்பட்டது. இந்த நாடு மீண்டும் மீண்டுவரக்கூடிய சூழல் இருக்கவில்லை. அந்நேரத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துணிச்சலாக முன்வந்து, வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை பொருளாதார ரீதியில் மீளக்கட்டியெழுப்ப நாட்டைப் பொறுப்பேற்றார். இருட்டைத் திட்டுவதற்கு பலர் இருந்தாலும் இருட்டை நீக்கி வெளிச்சத்தைக் கொண்டுவர ஒருவர் தேவை. அந்த ஒருவராக ஜனாதிபதி இந்த நாட்டைப் பொறுப்பேற்றார். அவரின் தலைமைத்துவத்தடன் முன்னெடுக்கப்பட்ட கூட்டு முயற்சியால் படிப்படியாக பொருளாதாரம் எழுச்சி கண்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது. நாடளாவிய ரீதியில் உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்கும் பாரிய திட்டத்தை ஜனாதிபதி செயற்படுத்தி வருகின்றார். இதுவரை வசித்து வந்த காணிகளுக்கு உரிமையற்றவர்களாக மக்கள் இருந்தனர். ஆனால் தற்போது அந்த உரிமை மக்களுக்கே வழங்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட அரச அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். இன்று ஆசிரியர் நியமனங்களும் வழங்கப்பட்டன. இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டம் கல்வித்துறையில் மேலும் வளர்ச்சியடையும்" என்று தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதேச அரசியல் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே. முரளிதரன், கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ. ஜி.திஸாநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/186710
-
காஸா போர்: அழிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு, தவிக்கும் குழந்தைகள் - என்ன நடக்கிறது?
படக்குறிப்பு,5 வயது சிறுமி தாலா, மற்றும் அவரது குடும்பத்தினர் கூடாரத்தில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஜான் டோனிசன் பதவி, பிபிசி நிருபர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐந்து வயது சிறுமி தாலா இப்ராஹிம் முஹம்மது அல்-ஜலத் கண் விழித்திருந்தார், ஆனால் உடலில் அசைவில்லை. தாலா கடுமையான நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் சிறுமியின் படுக்கைக்கு அருகில் அவரது தந்தை இப்ராஹிம் முஹம்மது அல்-ஜலத் அமர்ந்திருந்தார். சிறுமியின் மெல்லிய மணிக்கட்டில் டிரிப்ஸ் செலுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொந்தரவு செய்யாமல், சிறுமியை கவனமாகப் பற்றிக் கொண்டார் தந்தை இப்ராஹிம். ஏறக்குறைய நாற்பது டிகிரிக்கும் அதிகமான வெப்பம், குடிநீருக்குத் தட்டுப்பாடு ஆகிய சூழல்கள் தனது மகளை மரணத்தின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியதை அவர் அறிவார். "நிலைமை மோசமாகி வருகிறது," என்கிறார் அவர். "எங்கள் கூடாரத்தில் வெப்பநிலை கற்பனை செய்ய முடியாத அளவு அதிகமாக இருக்கும். நாங்கள் மாசுபட்ட தண்ணீரைக் குடிக்கிறோம். அதனால் சிறியவர்கள் மற்றும் வயதானவர்கள் விரைவில் நோய்வாய்ப்படுகிறார்கள்," என்று விவரித்தார். அவர்களது வீடுகள் அழிக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான காஸா மக்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க வசதிகளற்ற தற்காலிக முகாம்களில் வாழ்கின்றனர். தண்ணீர் சுத்தமாக இருந்தாலும் அசுத்தமாக இருந்தாலும் கிடைப்பது கஷ்டம். தண்ணீருக்காக மக்கள் அன்றாடம் போராட வேண்டியுள்ளது. நீர் விநியோக மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். கழிவுநீர் அமைப்பு மோசமாகச் சேதமடைந்து, ஒரு சில கழிப்பறைகள் மட்டுமே இருப்பதால், அங்குள்ள தண்ணீர் எளிதில் மாசுபடுகிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். படக்குறிப்பு,நீர் சேகரிப்பு நிலையங்களுக்கு இதுபோன்று குழாய் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது - ஆனால் அது மாசுபட்டதாக இருக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர் முற்றிலும் அழிக்கப்பட்ட நீர் மற்றும் சுகாதார கட்டமைப்பு "காஸா பகுதியில் தற்போது ஏற்படும் குடல் நோய்த்தொற்றுகளுக்கு மிகப்பெரிய காரணம், இந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் மாசுப்பட்ட தண்ணீர் தான்," என்று நாசர் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவின் தலைமை மருத்துவர் அஹ்மத் அல்-ஃபாரி கூறுகிறார். "முதல் பிரச்னை வாந்தி மற்றும் வயிற்றுப் போக்குடன் ஏற்படும் குடல் நோய்த்தொற்றுகள் ஆகும். இது நீரிழப்புக்குக் காரணமாகிறது," என்று அவர் கூறுகிறார். "இரண்டாவது பிரச்னை, ஹெபடைடிஸ் சி அல்லது ஏ ஆகும். இவையும், குடல் நோய் தொற்றைப் போன்று ஆபத்தான நோய்கள் தான்,” என்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலக கூற்றுபடி, காஸாவின் 67% நீர் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. "இங்கு தண்ணீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மீண்டும் நிறுவ எங்களுக்கு மிகப்பெரிய சர்வதேச முயற்சி தேவை," என்கிறார் கான் யூனிஸ் நகராட்சியின் நீர் பொறியாளர் சலாம் ஷரப். "கான் யூனிஸில் உள்ள நாங்கள் 170கி.மீ. முதல் 200கி.மீ. வரையிலான குழாய்களை இழந்துள்ளோம். அவை கிணறுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளுடன் சேர்த்து முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன,” என்கிறார். கெரெம் ஷாலோம் கடவுப் பாதையின் வழியாக தினமும் மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் சுமார் 200 ட்ரக்குகளை அனுமதிப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. எதிர்தரப்பில் உள்ள நிவாரண அமைப்புகளால் அதை விநியோகிக்க இயலாமல் இருப்பதே பிரச்னை என்றும் கூறுகிறது. படக்குறிப்பு,காஸாவின் நீர் உள்கட்டமைப்பு போரில் பெரிதும் சேதமடைந்துள்ளது தீவிரமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனிதாபிமான அமைப்புகள், காஸாவில் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பது மிகவும் ஆபத்தானது என்று வாதிடுகின்றனர். ஏனெனில், தெற்கு காஸாவில் உள்ள ரஃபாவைச் சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. மேலும், உண்மையான தேவைகளுடன் ஒப்பிடும்போது அனுமதிக்கப்பட்ட நிவாரணத்தின் அளவு மிகவும் சிறியது என்று அவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டக் குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மாசுபட்ட நீர் ஆகியவற்றால் இந்தச் சூழல் கடுமையான விளைவை ஏற்படுத்தும். சிறுமி தாலா வைக்கப்பட்டிருந்த தளத்துக்குக் கீழ் தளத்தில் பெருமூளை வாதம் கொண்ட ஒன்பது வயது சிறுவன் யூனிஸ் ஜுமா, ஒரு படுக்கையில் அரை மயக்கத்தில் படுத்திருக்கிறார். எட்டு மாதப் போர்ச் சூழல், அவரது உடல்நிலையைத் தீவிரமாகப் பாதித்து மோசமாக்கியதாக அவரது தாயார் கானிமா கூறுகிறார். "அவர் இந்த ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நீரிழப்புப் பிரச்னைகளால் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு இப்போது நீங்கள் பார்ப்பதை போல் ஆனார்," என்று கானிமா கூறுகிறார். படக்குறிப்பு,யூனிஸின் தாய் கானிமா அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார் கொள்ளையடிக்கப்படும் நிவாரணப் பொருட்கள் "பாட்டில் தண்ணீர் கிடைப்பதில்லை. குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து செல்கிறார்கள் - கிடைக்கும் தண்ணீரும் அசுத்தமாக எங்களை வந்தடைகிறது," என்று கானிமா மேலும் கூறுகிறார். உணவு மற்றும் தண்ணீருக்கானத் தேவை காஸாவில் அதிகரித்துள்ளதால், அவை கொள்ளையடிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாதாரண குடிமக்கள் மற்றும் துப்பாக்கி ஏந்தியவர்களால் நிவாரண டிரக்குகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் நடப்பதாக அவர் கூறுகிறார். சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர், பஞ்சத்தை போரின் ஆயுதமாகப் பயன்படுத்தியதாக இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியுள்ளார், மேலும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைக் கைது செய்யுமாறு கோரினார். இஸ்ரேலிய அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுக்குச் சீற்றத்துடன் பதிலளித்துள்ளது. காஸாவில் ஏற்கனவே பரவலான பஞ்சம் இருப்பதாக உதவி நிறுவனங்களின் கூற்றுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும், பாலத்தீனியர்களின் துயரத்துக்கு ஹமாஸ் தான் போரை ஆரம்பித்தது என்றும் இஸ்ரேல் கூறியது. 10 லட்சத்துக்கும் அதிகமான காஸா மக்கள் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் மிக உயர்ந்த அளவிலான பட்டினியை எதிர்கொள்வார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இஸ்ரேலிய அமைச்சர்களின் கூற்றுப்படி, காஸாவில் மனிதாபிமானப் பேரழிவு எதுவும் இல்லை, நெருக்கடி இல்லை என்று கூறி வருகின்றனர். நாசரில் உள்ள மருத்துவமனையில் தங்கள் குழந்தைகளின் படுக்கைகளுக்கு அருகில் இருக்கும் இப்ராஹிம் முஹம்மது அல்-ஜலாத் மற்றும் கானிமா ஆகியோருக்கு அது அப்படித் தெரியவில்லை. https://www.bbc.com/tamil/articles/cw99459e81xo
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
கள்ளக்குறிச்சி நகரின் மையப் பகுதியிலேயே கள்ளச்சாராய 'நெட்வொர்க்' செயல்பட்டது எப்படி? படக்குறிப்பு,கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராய வியாபாரம் நடந்துவந்த இடம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 21 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 22 ஜூன் 2024 கள்ளக்குறிச்சியில் 50 பேரைப் பலிவாங்கிய கள்ளச்சாராய விற்பனை அங்கே பகிரங்கமாக நடந்தது எப்படி? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு? கள்ளக்குறிச்சி நகரின் மையப் பகுதியில் கள்ளச்சாராயத்தைக் குடித்து 50 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே அதிரவைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் இதற்கு முன்பாகவும் கள்ளச்சாராயச் சாவுகள் நடந்திருக்கின்றன என்றாலும், நகரின் மையப் பகுதியில் மாவட்ட நீதிமன்றம், காவல் நிலையத்திற்குப் பின்புறத்தில் இருக்கும் பகுதியிலேயே வெளிப்படையாகக் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதும் அதைக் குடித்து இத்தனை பேர் பலியாகியிருப்பதும்தான் இவ்வளவு பெரிய அதிர்ச்சிக்குக் காரணம். கள்ளக்குறிச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது மாவட்ட நீதிமன்ற வளாகம். அதற்கு அருகிலேயே கள்ளக்குறிச்சி நகரக் காவல் நிலையமும் அமைந்திருக்கிறது. இதற்குப் பின்னால் உள்ள பகுதிகளில் ஜோகியர் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களும் வசித்துவருகின்றனர். அங்கே கள்ளச்சாராய விற்பனை தடையின்றி இருந்து வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் உடல் உழைப்பு சார்ந்த தொழிலாளர்கள். காய்கறிச் சந்தையில் மூட்டை தூக்குவது, கொத்தனார், பெயின்டர் போன்ற வேலைகளைச் செய்துவருகின்றனர். இந்தப் பகுதியில் குடிப்பழக்கம் மிகப்பரவலாக இருந்து வந்திருக்கிறது. இந்தப் பணியாளர்கள் ஒரு நாளைக்கு ரூ.200 முதல் ரூ.300 ரூபாய் வரையிலேயே சம்பாதிக்கிறார்கள். அரசின் மதுபான விற்பனை நிலையமான டாஸ்மாக் மதுபானக் கடைகளில், குறைந்தபட்ச விலையே ரூ.150 ரூபாயை நெருங்கிவிட்ட நிலையில், இவர்களுக்கான ஒரு தேர்வு ரூ.40 - ரூ.50 ரூபாய்க்கு விற்கப்படும் கள்ளச்சாராயமாகத்தான் இருக்கிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கள்ளச்சாராய ‘நெட்வொர்க்’ தற்போது, பெரிய அளவில் மரணங்கள் நேர்ந்திருக்கும் கருணாபுரத்தைச் சேர்ந்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜன், அவரது சகோதரர் தாமோதரன் ஆகிய இருவரும்தான் இந்தப் பகுதிக்கான சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்தனர். இங்கிருக்கும் தொழிலாளர்கள் எல்லா நேரங்களிலும் வேலைக்குச் செல்வார்கள் என்பதால், இந்தக் கள்ளச்சாராய விற்பனை 24 மணி நேரமும் நடந்துவந்திருக்கிறது. இவ்வளவு மரணங்கள் நடந்த பிறகும் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்தவர்கள்கூட, யார் அந்தப் பகுதியில் சாராயம் விற்றது, யாராருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்து ஊடகங்களிடம் பேசுவதற்கு மறுக்கிறார்கள். தன் மனைவியுடன் சாராயம் குடித்து இறந்துபோன சுரேஷின் தங்கை மட்டும், கன்னுக்குட்டியின் பேரைச் சொன்னார். "இந்தப் பகுதியில் சாராயம் விற்பது கண்னுக்குட்டி அண்ணன்தான். அவரும் அவருடைய தம்பியும்தான் சாராயம் விற்றார்கள். காவல்துறைக்குச் சொன்னால், அவர்கள் ரெய்டு வரும் நேரத்தில் இருக்க மாட்டார்கள். இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது இங்கே," என்று சொன்னார். சாராயம் விற்றுவந்த கன்னுக்குட்டியின் குடிசை அருகே வசிப்பவர்கள் வெளிப்படையாக இதைப் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். "இந்தப் பகுதியில் இரண்டு மூன்று இடங்களில் சாராயம் விற்கப்படுகிறது. அதில் பிரதானமாக இங்கேதான் விற்பார்கள். கன்னுக்குட்டியும் அவரது சகோதரர் தாமோதரனும் கொரோனா காலகட்டத்திலிருந்து இங்கே சாராயம் விற்கிறார்கள். இவர்கள் மீதிருக்கும் அச்சத்தால் யாரும் காவல்துறையிடம் இதுபற்றித் தெரிவிப்பதில்லை. அதுபோல புகார் தெரிவித்த ஒன்றிரண்டு தருணங்களிலும், அக்கம்பக்கத்தினரை மிரட்டுவதுபோலப் பேசுவார்கள். அதனால், இவர்களிடம் யாரும் எதுவும் வைத்துக்கொள்வதில்லை," என்கிறார் அவர்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவர். கன்னுக்குட்டி - தாமோதரன் சகோதரர்களுக்கு, சின்னதுரை என்பவர்தான் சாராயத்தை விற்பனைக்குக் கொடுத்துவந்தது தெரிந்ததும் அவர் கைதுசெய்யப்பட்டார். அவர் ஜோசப் என்பவரது பெயரைச் சொல்ல, அவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் மாதேஷ் என்பவரிடமிருந்துதான் சாராயம் சப்ளை செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாதஷிடம் நடக்கும் விசாரணையின் முடிவிலேயே, எங்கே தயாரிக்கப்பட்டது, எந்த இடத்தில் மெத்தனால் கலக்கப்பட்டது என்பதெல்லாம் தெளிவாகும், என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படக்குறிப்பு,சுகுணாபுரத்தில் கள்ளச்சாராய வியாபாரம் நடந்துவந்த இடம் தொடர்ந்து நடந்துவந்த விற்பனை இந்தப் பகுதிக்கான மதுவிலக்குக் காவல் பிரிவு, சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில்தான் இருக்கிறது. இருந்தபோதும் இவ்வளவு பெரிய அளவிலான விற்பனையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதேபோல, இத்தனை ஆண்டுகளாக சாராயம் விற்றுவந்தவர்கள் திடீரென அதில் மெத்தனாலைக் கலந்தது ஏன் என்பது தெளிவாகவில்லை. இதில் கலக்கப்பட்ட மெத்தனால், புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவத்திருக்கிறார். புதுச்சேரியின் எந்தத் தொழிற்சாலையிலிருந்து, யார் மூலமாக இவர்களுக்கு வந்தது என்பது இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தப் பகுதியில் கோவிந்தராஜன் மட்டுமல்ல, வேறு சிலரும் சாராயம் விற்றுவந்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், மரணங்களை ஏற்படுத்திய சாராயத்தை விற்றது கோவிந்தராஜன் தரப்புதான் என்பதால், மற்றவர்கள் குறித்தே யாரும் பேசவில்லை. இந்த மரணங்கள் பரபரப்பாகும்வரை இந்தப் பகுதியில் விற்பனை தொடர்ந்து நடந்துவந்திருக்கிறது. விவகாரம் ஊடகங்களில் பெரிதாகவும்தான் சாராயம் விற்றவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். படக்குறிப்பு,கள்ளச்சாராய வியாபாரம் நடந்துவந்த இடத்திலிருந்து 3கி.மீ. தூரத்தில் இருக்கும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தமிழகத்தில் மெத்தனால் எங்கு தயாரிக்கப் படுகிறது? இதற்கு முன்பாக கடந்த ஆண்டு மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பத்தில் இதேபோல மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தி குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்வத்தில் சாராயம் விற்றவர்களைப் பிடித்து விசாரித்ததில், இதில் கலக்கப்பட்ட மெத்தனால், சென்னை வானகரத்திலிருந்து செயல்பட்ட ஜெயசக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்திலிருந்து விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இப்போது நடந்திருப்பதைப் போலவே அப்போதும் மரக்காணம் காவல் நிலையம், மதுவிலக்குப் பிரிவு, மேல் மருவத்தூர், மதுராந்தகம் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த முறை, மதுவிலக்குப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி வரை இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். "இந்தப் பகுதியில் சாராயம் விற்பது அரசியல்வாதிகள், காவல்துறையினர் என எல்லோருக்கும் தெரிந்துதான் நடக்கிறது. இதுபோல விபரீதம் நடந்ததும் எல்லோரும் இது குறித்துப் பேசுகிறார்கள். இதற்கு ஒரு நீண்ட காலத் தீர்வு தேவை," என்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி-யான காமராஜ். இந்த விவகாரத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகளை மூடச் சொல்வதற்கான கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் முன்வைக்கின்றன. ஆனால், அரசின் மதுபானக் கடைகளுக்கு வெளியில் மிகப்பெரிய அளவில் சாராய விற்பனையும் நடந்துகொண்டிருக்கிறது. மரக்காணம், கள்ளக்குறிச்சி என கள்ளச்சாராய மரணங்கள் தொடரும் நிலையில் இந்தச் சிக்கலான பிரச்னையை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை. தமிழ்நாட்டில் மொத்தமாக 11 மெத்தனால் தயார் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. பெரும்பாலான கள்ளச்சாராய சாவுகளுக்கு, அவற்றில் மெத்தனால் கலக்கப்படுவதே காரணமாக இருப்பதால் கடந்த 2002-ஆம் ஆண்டு மெத்தனாலின் பயன்பாடு, தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் (1937)-இன் கீழ் கொண்டு வரப்பட்டது. மெத்தனால் விநியோகத்தைக் கட்டுப்படுத்த, 1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு டீ நேச்சர்ட் ஸ்பிரிட், மெத்தில் ஆல்கஹால் மற்றும் வார்னிஷ் விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இருந்தபோதும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இந்த அபாயகரமான வேதிப்பொருள் ஏதோ வழியில் தொடர்ந்து கிடைத்து வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c2jjxd945kpo அரசின் டாஸ்மார்க்கை மக்கள் நாடுவதற்காக திட்டமிட்ட செயலோ இது!
-
ஜனாதிபதி கிழக்கிற்கு விஜயம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு, திராய்மடு மாவட்ட செயலக வளாகத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று (22) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உரிமையற்ற 27,595 குடும்பங்களுக்கு உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது. அதில் இதுவரை 2610 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர உயர்தர தேசிய பொறியியல் டிப்ளோமா நிறுவனத்தில் ஆங்கில டிப்ளோமா பெற்ற 252 பேருக்கும் இன்று ஜனாதிபதி தலைமையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம். அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்த போது அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவது குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்தப் பகுதிகளில் பாரியளவிலான விவசாய செயற்பாடுகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் அபிவிருத்தி செய்யப்படாத மகாவலி காணிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும், வெருகலாறு முதல் அறுகம்பே வரையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கோட்டையை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் சுற்றுலாத் துறைக்காக அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இந்தப் பிரதேசத்திற்கு ஒரு சிறந்த ஹோட்டல் கிடைக்கும். மேலும் இப்பகுதியில் பால் உற்பத்தித் துறையை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பொருளாதார மாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பாரிய பணிகள் இங்கு செயல்படுத்தப்பட உள்ளன. இதன்படி திருகோணமலையை பிரதான ஏற்றுமதி பொருளாதா மையமாக மாற்ற முடியும். கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இங்கு அமைந்துள்ளன. இப்பிரதேசத்தில் கல்வியை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். தொழிற்கல்வித்துறையின் சீர்திருத்தத்தின் மூலம் அதிகளவான இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்க முடியும். மூன்று, நான்கு ஆண்டுகளாக ஆசிரியர்களை நியமிக்க முடியாததால், பாடசாலைக் கல்வி மேம்பாட்டிற்காக, இன்று ஆசிரியர் நியமனமும் வழங்கப்பட்டது. நம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஒரு பாரிய பிரச்சினையாக மாறிவிட்டது. அதற்கேற்ப, புதிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நாங்கள் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொண்டோம். இந்நாட்டின் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு மீண்டும் அபிவிருத்தி அடையும் போது அந்த மக்களை ஒருபோதும் மறக்க மாட்டோம். அதன்படி மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உரிமை வழங்கும் உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். இப்போது உங்களுக்கு ஒரு நிலத்தின் சட்டபூர்வ உரிமை உள்ளது. யாரும் அடிபணிந்து வாழத் தேவையில்லை. குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு “அஸ்வெசும” நிவாரணத் திட்டத்தை செயல்படுத்தினோம். தற்போது விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன. இந்தக் காணி உறுதிப்பத்திரங்களை வினைத்திறனாக வழங்க சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்க அதிகாரிகளையும் கிராமங்களுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டத்தையும் நாங்கள் தயாரித்துள்ளோம். அப்போது, இந்த காணி உறுதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் மாவட்ட செயலகத்திற்கோ பிரதேச செயலகத்திற்கோ செல்லத் தேவையில்லை. மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர் ஆகியோர் கிராமத்திற்குச் சென்று காணி உறுதிகளை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வார்கள். எதிர்வரும் திங்கட்கிழமை அந்த வேலைத்திட்டத்தை தொடங்கி விரைவில் நிறைவு செய்ய அறிவுறுத்தியுள்ளேன். எனக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான் உள்ளது. அந்த உரிமையை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். காணி உரிமையை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார். https://thinakkural.lk/article/304340
-
இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்
பட மூலாதாரம்,THE GRASSLANDS TRUST படக்குறிப்பு,இந்த விலங்கு வழக்கமான சாம்பல் நிற ஓநாய்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கட்டுரை தகவல் எழுதியவர், ஜான்வி மூலே பதவி, பிபிசி மராத்தி 21 ஜூன் 2024 சித்தேஷ் பிரம்மங்கர் புனே அருகே உள்ள மக்ரானா என்னும் நகருக்கு சென்ற போது, கொஞ்சம் வித்தியாசமான ஒரு மிருகத்தைப் பார்த்தார். “நாங்கள் அப்பகுதியில் நடந்து சென்றபோது அந்த மிருகத்தை பார்க்க நேர்ந்தது. அது ஓநாய் போல தோற்றமளித்தது, ஆனால் அது ஓநாயா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அது ஓநாய்களின் வழக்கமான சாம்பல் நிறத்தில் இல்லை. ஆனால் ஒருவித மஞ்சள் நிறத்தில் இருந்தது. இந்த சம்பவம் 2014 இல் இருந்து வந்தது." அந்த சமயத்தில், புனேவில் உள்ள மக்களால் நிறுவப்பட்ட `கிராஸ் லேண்ட்’ அறக்கட்டளையைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் சித்தேஷ் அந்த பகுதியில் நடந்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது தான் அந்த மிருகத்தை பார்க்க நேர்ந்தது. பின்னர், அந்த பகுதியில் பல நிறங்களில் விலங்குகள் காணப்பட்டது பற்றி அப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. அவர்கள் அனைவரும் இதுகுறித்து மேலும் தீவிரமாக விசாரிக்க முடிவு செய்தனர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். `கிராஸ் லேண்ட்’ அறக்கட்டளையின் நிறுவனர் மிஹிர் காட்போல் கூறுகையில், “ கொரோனாவின் போது பொதுமுடக்க நாட்களில், புனே அருகே மற்றொரு மஞ்சள் நிற விலங்கைப் பார்த்தோம். பின்னர் ஒரு பெண் விலங்கை பார்த்தோம். அது ஓநாய் போல தோற்றமளித்தது. ஆனால் அதன் தோலில் கோடுகள் இருந்தன. விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல் மற்றும் வனத்துறையின் அனுமதியுடன், அவர்கள் விலங்குகளின் முடி மற்றும் மலம் ஆகியவற்றை சேகரித்தனர். நிச்சயமாக, இந்த பணி எளிதானது அல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். மிஹிர் கூறுகையில், “ஓநாய் ஒரு உன்னதமான அதேசமயம் மர்மமான உயிரினம். அவை மனித குடியிருப்புகளுக்கு அருகில் ஒன்றாக வாழ்வதால், ஓநாய்கள் மக்களுடன் நெருங்கிய பழக்கம் கொண்டவை. எனவே, நாங்கள் அதை எளிதாக கண்காணித்தோம். "அவற்றின் நடமாட்டம், அவற்றின் இருப்பிடம் எங்கே, அந்த இருப்பிடங்களை விட்டு வெளியேறும்போது எங்கே செல்கிறது என்பதை கண்காணித்தோம். அதனால்தான் இந்த வினோதமான விலங்கின் முடி மற்றும் மலத்தை எங்களால் சேகரிக்க முடிந்தது.” என்கிறார். மரபணு வரிசைப்படுத்தலுக்குப் பிறகு, அவர்களின் சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விலங்கு ஒரு நாய் மற்றும் ஓநாய் ஆகியவற்றின் கலப்பினத்திலிருந்து உருவான ஒரு கலப்பின விலங்கு என்பது உறுதியானது. இத்தகைய விலங்குகள் 'ஓநாய்-நாய்கள்' ('wolf-dogs') என்று அழைக்கப்படுகின்றன. இந்த கலப்பின விலங்கு `wolfdogs’ எனப்படும் இனங்களில் இருந்து வேறுபட்டது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். நாய்களுக்கும் ஓநாய்களுக்கும் இடையிலான இனக்கலப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற உறுதியான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை. இந்த ஆய்வு மேலும் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தி உள்ளது - இந்த கலப்பின விலங்கு புதிய சந்ததிகளை உருவாக்கும். சுற்றுச்சூழல் மற்றும் பரிணாம ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி அறிக்கை, தி கிராஸ்லேண்ட்ஸ் டிரஸ்ட், அசோகா டிரஸ்ட் ஃபார் எக்காலஜி அண்ட் என்விரன்மென்ட் (ATREE) மற்றும் தேசிய உயிரியல் அறிவியல் மையம் (NCBS) ஆகியவற்றால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகு, ஓநாய் பாதுகாப்பு முயற்சிகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஓநாய்களுக்கும் நாய்களுக்கும் இடையில் இந்த கலப்பு ஏன் ஏற்படுகிறது? இந்த மதிப்பாய்வு, தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே காரணமா என்றும், ஏன் அதிக ஆராய்ச்சி தேவை என்பதையும் ஆராய்கிறது. புல்வெளிக்காடுகளின் மன்னர்கள் பட மூலாதாரம்,THE GRASSLANDS TRUST படக்குறிப்பு,ஓநாய்-நாய் சாம்பல் ஓநாய்கள் (wolf) உலகெங்கிலும் புல்வெளிகள், காடுகள், பனிப்பிரதேசம் அல்லது பாலைவனங்கள் என பல்வேறு வகையான வாழ்விடங்களில் வசிக்கின்றன. இந்தியாவில் சாம்பல் ஓநாய்கள் முக்கியமாக மனித குடியிருப்புகளை ஒட்டியுள்ள 'சவன்னா' என்னும் புல்வெளிக்காடுகளில் வாழ்கின்றன. கென்யாவைப் போன்ற ஒரு ஆப்பிரிக்க தேசத்தில் சவன்னா (Savannah) என்று அழைக்கப்படும் புல்வெளிக்காடு உள்ளது. இதேபோன்ற புல்வெளிகள் இந்தியாவில் இமயமலையை ஒட்டிய தெராய் பகுதியிலும், ராஜஸ்தானிலும், மகாராஷ்டிரத்திலும் (புனே-சாஸ்வாத், அகமதுநகர், சோலாப்பூர்) காண முடியும். "இந்திய புல்வெளிக்காடுகள் (சவன்னா) ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் கொண்ட பகுதி. பல விலங்குகள் அதில் வாழ்கின்றன . இந்த சுற்றுச்சூழல் அமைப்பில் ஓநாய்கள் உணவுச் சங்கிலியின் மிக உயர்ந்த மற்றும் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறது" என்று மிஹிர் விளக்குகிறார். இந்தியாவில் இரண்டு வகையான ஓநாய்கள் உள்ளன. இமயமலை ஓநாய்கள் மற்றும் இந்திய ஓநாய் (Canis lupus pallipes) என்று அழைக்கப்படும் இந்திய சாம்பல் ஓநாய் ஆகியவை ஆகும். இந்திய ஓநாய் இனம் உலகின் முக்கியமான இனமாகும், ஏனெனில் இந்தியாவைச் சேர்ந்த இந்த சாம்பல் ஓநாய் இனம் உலகின் பழமையான சாம்பல் ஓநாய் இனங்களில் ஒன்று . அதாவது, ஒரு விதத்தில், அவை உலகின் சாம்பல் ஓநாய்களின் மூதாதையர்கள். அவை அழிந்துவிட்டால், பரிணாம வளர்ச்சியின் ஒரு முக்கியமான சங்கிலி அறுந்துவிடும். இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) வகைப்பாட்டின் படி, சாம்பல் ஓநாய் அழிந்து வரும் உயிரினம் அல்ல. ஆனால் இந்தியா போன்ற சில நாடுகளில் இது ஆபத்துக்குள்ளாகிறது. இந்தியாவில் 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனவிலங்கு சட்டத்தின் கீழ் ஓநாய்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், அவற்றின் வாழ்விடங்களில் மனித தலையீடு அதிகரித்து வருவதால், அந்த விலங்குகள் ஆபத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் ஓநாய்களின் எண்ணிக்கை சுமார் 2,000 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இந்த எண்கள் உண்மையல்ல என்கின்றனர். ஏனெனில் இந்த எண்ணிக்கை மதிப்பீடுகளாக கூறப்படுவது. புலிகளுக்கு செய்வது போல் கண்க்கெடுப்பு நடத்தப்படவில்லை. மகாராஷ்டிராவின் சவன்னா புல்வெளிகளில் ஓநாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புனே மாவட்டத்தில் மட்டும் 30 ஓநாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புனேவின் மல்ரான்ஸில் ஓநாய்-நாய் கலப்பின விலங்கை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஆய்வில் வெளிவந்த தகவல் பட மூலாதாரம்,THE GRASSLANDS TRUST படக்குறிப்பு,புனே அருகே புல்வெளியில் சுற்றித்திரியும் ஓநாய்கள் "நாய்கள் மற்றும் ஓநாய்கள் மரபணு ரீதியாக மிக நெருங்கிய உறவினர்கள்" என்கிறார் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலில் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளையின் பல்லுயிர் ஆய்வாளர் அபி வனக். நாய்கள் ஓநாய்களிலிருந்து உருவானது - ஒரு விதத்தில் நாய்களை வளர்ப்பு ஓநாய் என்று கூட சொல்லலாம்" அபி வனக் மேலும் கூறுகையில், “உலகம் முழுவதும் ஓநாய்-நாய் கலப்பினங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் சில புகைப்பட ஆதாரங்களும் உள்ளன. ஏனென்றால், ஒரு இடத்தில் ஓநாய்களின் எண்ணிக்கை குறைந்தால், அவற்றால் புதிய துணையை கண்டுபிடிக்க முடியாது. அந்த நேரத்தில் அவை நாய்களுடன் கலப்பினம் செய்கின்றன. சமீப காலமாக, புல்வெளிக்காடுகளில் மனிதர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. விவசாயம், கால்நடை மேய்ச்சல், குப்பை கொட்டுதல் போன்ற செயல்பாடுகளால் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். நகரமயமாக்கல் விரிவாகும் போது, தெருநாய்களுக்கு காட்டு ஓநாய்களுடனான தொடர்பு அதிகரிக்கிறது." என்றார். கடந்த காலங்களில், நாய்களின் சில இனங்களை உருவாக்க நாய்களுக்கும் ஓநாய்களுக்கும் இடையில் மனித கலப்பின வழக்குகள் உள்ளன, மேலும் இதுபோன்ற இனப்பெருக்கம் பல இடங்களில் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது . "ஆனால் காடுகளில் இத்தகைய கலப்பினம் உருவாவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது ஓநாய் இனத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். அவற்றின் தனித்துவமான மரபணு அடையாளம் அழிந்துவிடும்." இது குறித்து மூலக்கூறு சூழலியல் நிபுணர் உமா ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையத்தில் (NCBS) பேராசிரியராக உள்ளார். உமாவின் சொந்த ஆய்வகம் ஓநாய்-நாய் கலப்பின விலங்கின் மரபணு வரிசைமுறையைச் செய்து, இந்தியாவில் அத்தகைய கலப்பின விலங்கு இருப்பதை நிரூபித்தது. உமா கூறுகையில், “நீங்கள் இரண்டு வண்ணங்களை எடுத்து அவற்றை ஒன்றாக கலந்தீர்களானால் இறுதியில் கிடைக்கும் வண்ணங்கள் முதலில் இருந்ததைப் போலவே இருக்காது. இதேபோல் கலப்பினமானது ஒரு இனத்தின் மரபணு பண்புகளை நீர்த்துப்போகச் செய்கிறது.” "இங்கு நாய்களைப் போல ஓர் இனத்தில் அதிக விலங்குகள் இருக்கும் உயிரினம் ஓநாய்கள் போல குறைவாக இருக்கும் இனத்துடன் கலப்பினம் செய்யும் போது, நாய்கள் ஓநாய்களின் மரபணு பண்புகளை அழித்து, இறுதியில் ஓநாய் இனத்தையே அழித்துவிடும்." என்கிறார். அபி வனக் விவரிக்கையில், “நாய்க்கும் ஓநாய்க்கும் மரபணு வேறுபாடு உள்ளது. மனிதர்களால் வளர்க்கப்படுவதால், நாய்கள் ஓநாய் போன்ற குணங்களை இழந்துவிட்டன. அதாவது, அவை அளவு சிறியதாகி, அவற்றின் வலிமை குறைந்துவிட்டது. கலப்பினம் ஏற்பட்டால், நாய்களின் குணங்கள் ஓநாய்களுக்குள் செல்லலாம், இது ஓநாய்களை ஆபத்தில் ஆழ்த்தலாம்." ஆனால் அத்தகைய கலப்பினம் மட்டுமே பிரச்னை என்று சொல்ல முடியாது. மிஹிர் காட்போல் கூறுகையில், “நாய்கள் ஓநாய்களுக்கு ரேபிஸ் போன்ற நோய்களையும் வைரஸ்களையும் கடத்தும். இந்த வைரஸ்கள் மிகவும் ஆபத்தானவை, இதுபோன்ற தொற்று அந்த பகுதியில் உள்ள அனைத்து காட்டு ஓநாய்களையும் கொல்லக்கூடும். ஓநாய்கள் உணவாக சாப்பிடும் சிறிய விலங்குகளைத் தெருநாய்கள் கொல்கின்றன. நிச்சயமாக, ஓநாய்களை ஆபத்தில் ஆழ்த்துவது நாய்கள் மட்டுமல்ல. `கிராஸ் லேண்ட்’ அறக்கட்டளையில் மிஹிரின் குழு நடத்திய மற்றொரு ஆய்வில், ஓநாய் வாழ்விடங்களில் சிறுத்தைகள் இருப்பதும் அந்த வாழ்விடங்களின் சமநிலையை சீர்குலைப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் இன்னும் இந்திய ஓநாய்களைப் பாதுகாக்க போதுமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பட மூலாதாரம்,THE GRASSLANDS TRUST படக்குறிப்பு,ஓநாய்கள் மகாராஷ்டிராவின் புல்வெளி காடுகளில் உணவுச் சங்கிலியின் முக்கிய அங்கமாகும். ஓநாய்கள் மற்றும் மான்களின் பாதுகாப்பு பட மூலாதாரம்,THE GRASSLANDS TRUST படக்குறிப்பு,இந்திய ஓநாய் மிகவும் பழமையான ஓநாய் இனங்களில் ஒன்றாகும். அபி வனக் கூறுகையில், “புலிகள் எவ்வாறு பாதுகாக்கப்படும் அதே வழியில், ஓநாய்களைப் பாதுகாக்க நினைத்தால் அது நடக்காது. ஓநாய்களுக்கு தனியாக பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களை உருவாக்க முடியாது. ஏனெனில் அவை கலவையான நிலப்பகுதியில் வாழ்கின்றன. அவை பெரும்பாலும் வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடி உண்கின்றன. எனவே, இவற்றை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்கிறார். `கிராஸ் லேண்ட்’ அறக்கட்டளை தற்போது ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இது கிராமவாசிகள் மற்றும் அனைத்து பிரமுகர்களையும் உள்ளடக்கியது. இந்த புல்வெளிக்காட்டின் பாதுகாப்பு மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக இது செயல்படுகிறது. மாநிலத்தில் ஓநாய் பாதுகாப்புக்காக வனத்துறைக்கு ஒரு திட்டத்தை அவர்கள் முன்மொழிந்துள்ளனர். ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. ஆனால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சில கேள்விகளை எழுப்பியுள்ளதாக உமா ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார். "நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று இந்த கலப்பின விலங்கை எவ்வாறு வகைப்படுத்துவது? வனவிலங்கு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறதா? அத்தகைய விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை என்ன செய்வது? இவை நெறிமுறைகள் மட்டுமல்ல, சூழலியல் மற்றும் உயிரியல் பற்றிய கேள்வியும் கூட. "பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி சிந்திக்கிறோம். ஆனால் எதிர்காலத்திலும் பரிணாமம் நிகழும். உயிரினங்களின் இந்த பரிணாம வளர்ச்சியின் திசையை மனிதர்களாகிய நாம் தீர்மானிக்கப் போகிறோமா?" https://www.bbc.com/tamil/articles/cl7755w2vkjo
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
சேஸ் பந்துவீச்சிலும் ஹோப் துடுப்பாட்டத்திலும் அசத்தல்; சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் அமெரிக்காவை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் 22 JUN, 2024 | 11:11 AM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவுக்கு (USA) எதிராக பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்ரங்கில் இன்று காலை நடைபெற்ற குழு 2க்கான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் (WI) 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது. இங்கிலாந்துக்கு எதிரான தனது முதலாவது போட்டியில் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள், நிகர ஓட்ட வேகத்தை அதிகரிப்பதைக் குறியாகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடி அதனை நிறைவேற்றுக்கொண்டது. ரொஸ்டன் சேஸ், அண்ட்றே ரசல் ஆகியோரின் சிறந்த பந்துவீச்சுகளும் ஷாய் ஹோப்பின் அதிரடி துடுப்பாட்டமும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. இந்தப் போட்டியில் சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் வெற்றியீட்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் நிலையில் 2ஆம் இடத்துக்கு முன்னேறி அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டது. ஐக்கிய அமொரிக்காவை 128 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள், 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களைக் குவித்து மிக இலகுவாக வெற்றியீட்டியது. அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷாய் ஹோப் 39 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் அடங்கலாக 82 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆரம்ப விக்கெட்டில் ஜோன்சன் சார்ள்ஸுடன் 42 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்த ஷாய் ஹோப், பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 23 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஜோன்ஸ்டன் சார்ள்ஸ் 15 ஓட்டங்களையும் நிக்கலஸ் பூரன் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆறு பேர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களால் கணிசமான ஓட்டங்களைப் பெற முடியாமல் போனது. அண்ட்றீஸ் கௌஸ் (29), நிட்டிஷ் குமார் (20) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 51 ஓட்டங்களாக உயர்த்தினர். ஆனால், அதன் பின்னர் 9 விக்கெட்கள் 78 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. கௌஸ், குமார் ஆகியோரை விட மிலிந்த் குமார் (19), ஷெட்லி வன் ஷோக்வைக் (18), அலி கான் (14 ஆ.இ.), அணித் தலைவர் ஆரோன் ஜோன்ஸ் (11) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அண்ட்றே ரசல் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன்: ரொஸ்டன் சேஸ். https://www.virakesari.lk/article/186685
-
ஜனாதிபதி கிழக்கிற்கு விஜயம்
புதிய மாவட்ட செயலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி 1055 மில்லியன் நிசிச்செலவில் அமைக்கப்பட்ட புதிய மாவட்ட செயலக கட்டிட தொகுதியை திறந்து வைத்துள்ளார். இன்றும், நாளையும் மட்டக்களப்பில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/304310
-
கடும் வெப்பத்தால் 4 பால்கன் நாடுகளில் பாரியளவில் மின் தடை
Published By: DIGITAL DESK 3 22 JUN, 2024 | 10:55 AM வெப்ப அலையில் தத்தளிக்கும் நான்கு பால்கன் நாடுகளில் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதன்படி, அல்பேனியா, போஸ்னியா, மொண்டினீக்ரோ மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளின் கரையோரப் பகுதிகள் பிற்பகலில் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் நிலவும் கடும் வெப்பத்தினால் வீடுகளில் குளிரூட்டும் கருவிகளை பயன்படுத்தியமையின் பின்னர் மின்பாவனை அதிகரித்த நிலையில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மின் தடையினால் போஸ்னியா மற்றும் குரோஷியாவில் போக்குவரத்து சமிக்ஞைகள் தடைப்பட்டு, சரஜேவோ, ஸ்பிலிட் மற்றும் பிற பெரிய நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வேளையில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டதாகவும், ஆனால் நான்கு நாடுகளின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மின்சக்தி அமைப்புகளில் எங்கே பிரச்சினை ஏற்பட்டது என்பதை அடையாளம் காண முயற்சித்து வருவதாகவும் மின்சாரம் வழங்குனர்கள் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி 13:00 மணிக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதோடு, மொண்டினீக்ரோவின் தலைநகரான போட்கோரிகாவில் நீர் விநியோக தடையும் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த குரோசியா நாட்டில் உணவகங்கள், கழியாட்ட விடுதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மின்சார தடையால் மூடப்பட்டதால் விடுமுறைக்கு சென்றவர்கள் குழப்பத்திற்குள்ளானார்கள். அப்பகுதி முழுவதும் பகல் வேளையில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக மின் நுகர்வு திடீரென அதிகரித்தது மின் தடைக்கு காரணம் என மொண்டினீக்ரோவின் எரிசக்தி அமைச்சர் சாசா முஜோவிக் தெரிவித்துள்ளார். அல்பேனியாவில், அரை மணி நேரத்திற்குள் மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டது, ஆனால் மின்சார பயன்பாடு அதிகமாக இருப்பதால், மேலும் மின்தடை ஏற்படும் அபாயம் அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/186673
-
பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிப்பு
ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் நாற்பது வயதிற்கு மேற்பட்ட இதுவரையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான கால அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இவர்கள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. முன்னதாக இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தக் கால அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/304298
-
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு; 3 பேர் பலி; 10 பேர் காயம்
Published By: DIGITAL DESK 3 22 JUN, 2024 | 10:40 AM அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக ஆர்கன்சாஸ் மாநில பொலிஸ் தெரிவித்துள்ளது. காயமடைந்த 10 பேரில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர். தெற்கு ஆர்கன்சாஸ் மாநிலத்தில் ஃபோர்டைஸ் நகரத்தில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்ததாகவும் ஆர்கன்சாஸ் மாநில பொலிஸ் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்கத் துப்பாக்கி வன்முறை பதிவேடுகள் என்ற அமைப்பு, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இதுவரை 234 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவங்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக அமெரிக்கா முழுவதும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 21 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/186675
-
ஜனாதிபதி கிழக்கிற்கு விஜயம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த சீயோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம் Published By: DIGITAL DESK 3 22 JUN, 2024 | 04:33 PM உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம் செய்துள்ளார். தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் இதுவரை ஏன் நிறைவடையவில்லை என்பது தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது குறித்து உடனடியாக ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அத்துடன், தேவாலயத்தின் திருத்தப் பணிகளை ஜனாதிபதி அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் துரிதமாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அந்த நடவடிக்கைகளுக்கு இலங்கை இராணுவத்தின் ஆதரவை வழங்குமாறும் ஜனாதிபதி இராணுவத் தளபதிக்கு பணிப்புரை விடுத்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனும் இச்சத்தர்ப்பத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/186705
-
மனித குரங்குகள் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்வது எப்படி?
நோயுற்ற அல்லது காயமடைந்த மனித குரங்குகள் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்வது எப்படி? பட மூலாதாரம்,ELODIE FREYMANN படக்குறிப்பு,மனித குரங்குகள் என்ன சாப்பிட விரும்புகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித குரங்குகள் (chimpanzees), வலி நிவாரணி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தாவரங்களை சாப்பிடுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உகாண்டாவின் காடுகளில் தாங்கள் செய்த ஆய்வை அவர்கள் விவரித்தனர். காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்டதாக தோன்றிய விலங்குகள் தாவரங்கள் மூலம் சுய மருந்துவம் செய்துகொள்கின்றனவா என்பதை அவர்கள் ஆய்வு செய்தனர். காயமடைந்த விலங்கு ஒன்று காட்டில் இருந்து குறிப்பிட்ட ஒரு செடியை தேடிய போது, ஆராய்ச்சியாளர்கள் அந்த தாவரத்தின் மாதிரிகளை சேகரித்து அதை பகுப்பாய்வு செய்தனர். பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தாவரங்கள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். PLOS One இதழில் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்ட விஞ்ஞானிகள், புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பில் சிம்பன்சிகள் உதவக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். "இந்த காடுகளில் உள்ள எல்லா தாவரங்களையும் மருத்துவ குணங்களுக்காக நம்மால் சோதிக்க முடியாது. எனவே நம்மிடம் இந்த தகவல் உள்ள தாவரங்களை நாம் ஏன் சோதிக்கக் கூடாது, அதாவது சிம்பன்சிகள் தேடும் தாவரங்கள்?" என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் எலோடி ஃப்ரீமேன் குறிப்பிட்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக, தொடர்ச்சியாக பல மாதங்களை புடோங்கோ மத்திய வனக் காப்பகத்தில் செலவிட்டுள்ள டாக்டர் ஃப்ரீமேன் அங்கு காட்டு மனிதக் குரங்குகளின் இரண்டு சமூகங்களை கவனமாக பின்தொடர்ந்து ஆய்வு செய்தார். பட மூலாதாரம்,ELODIE FREYMANN படக்குறிப்பு,காயம் அல்லது நோயின் அறிகுறிகளைக் காட்டிய சிம்பான்சிகள் ஆய்வின் மையமாக இருந்தன வலியின் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதையும் ஒரு விலங்கு நொண்டியபடி செல்கிறதா அல்லது அசாதாரணமான முறையில் தன் உடலைப் பிடித்துக் கொண்டுள்ளதா என்பதையும் அவரும் அவரது குழுவினரும் கவனிப்பார்கள். பின்னர் அவற்றுக்கு என்ன நோய் அல்லது தொற்று இருக்கிறது என்று அறிய சோதனை செய்வதற்காக அவற்றின் மலம் மற்றும் சிறுநீரின் மாதிரிகளை சேகரிப்பார்கள். காயம்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட சிம்பான்சி தான் பொதுவாக சாப்பிடாத மரத்தின் பட்டை அல்லது பழத்தோல் போன்ற ஒன்றைத் தேடும் போது அவர்கள் குறிப்பாக அதன் மீது கவனம் செலுத்தினர். "தாவரங்கள் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கலாம் என்பதற்கான இந்த தடயங்களை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம்" என்று டாக்டர் ஃப்ரீமேன் விளக்கினார். கையில் மோசமாக காயம்பட்டிருந்த ஒரு ஆண் மனித குரங்கு பற்றி அவர் விவரித்தார். பட மூலாதாரம்,AUSTEN DEERY படக்குறிப்பு,மனித குரங்குகள் தேடிய மரங்கள் மற்றும் தாவரங்களிலிருந்து டாக்டர் எலோடி ஃப்ரீமேன் மாதிரிகளை சேகரித்தார். "அந்தக் குரங்கு நடப்பதற்கு காயம்பட்ட கையை பயன்படுத்தவில்லை. அது நொண்டிக் கொண்டிருந்தது. இந்த சமூகத்தின் மற்ற குரங்குகள் ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, காயமடைந்த இந்தக் குரங்கு மட்டும் நொண்டியபடி ஒருவகை செடியை (fern) தேடிச்சென்றது. இதைத்தேடி உண்ட ஒரே சிம்பன்சி அதுதான்," என்று அவர் நினைவு கூர்ந்தார். கிறிஸ்டெல்லா பாராசிட்டிகா என்று அழைக்கப்படும் இந்த தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்து பகுப்பாய்வு செய்தனர். அதில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருந்தன. மொத்தத்தில் ஆராய்ச்சியாளர்கள் 13 வெவ்வேறு தாவர இனங்களில் இருந்து 17 மாதிரிகளை சேகரித்து அவற்றை சோதிக்க ஜெர்மனியில் உள்ள நியூபிரான்டன்பர்க் அப்ளைடு சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் ஃபேபியன் ஷுல்ட்ஸுக்கு அனுப்பி வைத்தனர். கிட்டத்தட்ட 90% சாறுகள், பாக்டீரியா வளர்ச்சியைத் தடுத்தன. மேலும் மூன்றில் ஒரு பங்கு செடிகள் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தன. அதாவது அவை வலியைக் குறைத்து குணப்படுத்துவதை ஊக்குவித்தன. பட மூலாதாரம்,AUSTEN DEERY படக்குறிப்பு,அழிந்துவரும் இந்தக் காடுகளில் ஆய்வு மேற்கொண்டால் சில புதிய மருத்துவ தாவரங்களை கண்டுபிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வில் பின்தொடரப்பட்ட எல்லா காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட மனித குரங்குகளும் முழுமையாக குணமடைந்துவிட்டதாக டாக்டர் ஃப்ரீமேன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். "ஃபெர்ன்களை சாப்பிட்ட அந்தக்குரங்கு அடுத்த சில நாட்களில் மீண்டும் தனது கையைப் பயன்படுத்தியது," என்று அவர் விளக்கினார். "ஆயினும் இவை அனைத்துமே இந்த வளங்களை உண்டதன் நேரடி விளைவு என்பதை எங்களால் 100 சதவிகிதம் நிரூபிக்க முடியாது," என்று அவர் பிபிசி நியூஸிடம் கூறினார். "ஆனால் காடுகளில் உள்ள மற்ற உயிரினங்களை கவனிப்பதன் மூலம் நாம் பெறக்கூடிய மருத்துவ அறிவை இது எடுத்துக்காட்டுகிறது. எதிர்கால சந்ததியினருக்காக இந்த 'வன மருந்தகங்களை' பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது." என்று அவர் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/c4nnq1glz9no
-
19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் உதவித் தலைவரானார் ஷாருஜன்
Published By: VISHNU 22 JUN, 2024 | 12:37 AM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ள 19 வயதுக்குபட்பட்ட இலங்கை அணியின் உதவித் தலைவராக சண்முகநாதன் ஷாருஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணியின் தலைவரும் விக்கெட்காப்பாளருமாவார். தென் ஆபிரிக்காவில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 போட்டிகளில் 118 ஓட்டங்களைப் பெற்றதுடன் 7 ஆட்டமிழப்புகளில் (5 பிடிகள், 2 ஸ்டம்ப்கள்) பங்களிப்பு செய்திருந்தார். இதேவேளை, 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக காலி, மஹிந்த கல்லூரி வீரர் தினுர களுபஹன நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்திருந்தார். 3 அரைச் சதங்களுடன் 196 ஓட்டங்களைப் பெற்ற அவர், 5 விக்கெட்களையம் கைப்பற்றியிருந்தார். அணியில் இடம்பெறுவோரில் புலிந்து பெரேரா, விஹாஸ் தெவ்மிக்க ஆகியோரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மற்றைய இரண்டு வீரர்களாவர். 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு முன்னாள் தேசிய வீரரும் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான ருவன் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளார். துடுப்பாட்டப் பயிற்றுநராக தம்மிக்க சுதர்ஷனவும் வேகப்பந்துவீச்சுப் பயிற்றுநராக ஒமேஷ் விஜேசிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுப் பயண தெரிவாளராக டில்ருவன் பெரேரா இங்கிலாந்து செல்லவுள்ளார். போட்டி விபரங்கள் இங்கிலாந்துக்கு சனிக்கிழமை (22) காலை புறப்பட்டுச் செல்லவுள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி அங்கு முதலாவதாக 50 ஓவர் பயிற்சிப் போட்டி ஒன்றில் விளையாடும். பயிற்சிப் போட்டி லோபரோ பல்கலைக்கழக மைதானத்தில் ஜூன் 25ஆம் திகதி நடைபெறும். அதனைத் தொடர்ந்து செல்ஸ்போர்ட், க்ளவ்ட் கவுன்டி மைதானத்தில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நடைபெறும். தொடர்ந்து ஹோவ் செஞ்சரி கவுன்டி மைதானத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் ஜூலை 1ஆம், 3ஆம் திகதிகளில் நடைபெறும். இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது நான்கு நாள் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வோர்ம்ஸ்லியில் ஜூலை 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரையும் இரண்டாவது போட்டி செல்டன்ஹாமில் ஜூலை 16ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதிவரையும் நடைபெறும். 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாம் தினுர களுபஹன (தலைவர் - காலி மஹிந்த), சண்முகநாதன் ஷாருஜன் (உதவித் தலைவர் - கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர்), சதேவ் சமரசிங்க (நாலந்த), புலிந்து பெரேரா ஷேஷான் மாரசிங்க (இருவரும் கண்டி தர்மராஜ), ஹிரான் ஜயசுந்தர (மருதானை புனித சூசையப்பர்), தினிரு அபேவிக்ரமசிங்க (மாத்தறை புனித சர்வேஷஸ்), மஹித் பெரேரா, நேதன் கல்தேரா (இருவரும் கல்கிஸ்ஸை பரி. தோமா), கயன வீரசிங்க (குருநாகல் மலியதேவ), திசர ஏக்கநாயக்க (கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார்), யூரி கொத்திகொட (காலி றிச்மண்ட்), மஞ்சுள சன்துக்க (மொறட்டுவை புனித செபஸ்தியார்), விஹாஸ் தெவ்மிக்க (கொழும்பு தேர்ஸ்டன்), துமிந்து செவ்மின, ப்ரவீன் மனீஷ (இருவரும் கொழும்பு லும்பிணி), ஹிவின் கெனுல (களுத்துறை திருச்சிலுவை), கீத்திக்க டி சில்வா (குருநாகல் புனித ஆனாள்) https://www.virakesari.lk/article/186671
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
முதல் தாக்குதல் காரணமாக அச்சமடைந்து கதறியவர்களை காப்பாற்ற சென்ற பலர் இரண்டாவது தாக்குதலில் பலி - காசாவில் சர்வதேச செஞ்சிலுவை அருகில் இஸ்ரேல் தாக்குதல் Published By: RAJEEBAN 22 JUN, 2024 | 12:08 PM காசாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையலுவலகத்திற்கு அருகில் உள்ள கூடார முகாம்மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 25க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு தடவைகள் தாக்குதல் இடம்பெற்றதாக தாக்குதலில் தனது கணவரை இழந்த பெண்ணொருவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார். முதல் தாக்குதலை தொடர்ந்து பாரிய சத்தம் கேட்டது வெளிச்சம் வெளிவந்தது இதனை தொடர்ந்து என்ன நடக்கின்றது என பார்ப்பதற்காக ஏனையவர்கள் சென்றவேளை இரண்டாவது தாக்குதல் இடம்பெற்றது என மொனா அசூர் தெரிவித்துள்ளார். நாங்கள் முகாம்களிற்குள் இருந்தோம் அவ்வேளை அவர்கள் செஞ்சிலுவை சங்கத்திற்கு அருகில் உள்ள கூடாரங்கள் மீது சத்த குண்டுதாக்குதலை மேற்கொண்டனர் அவ்வேளையே எனது கணவர் வெளியே சென்றார் என கான்யூனிஸ் மருத்துவமனைக்கு அருகில் வைத்து அந்த பெண் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் இரண்டாவது தாக்குதலை மேற்கொண்டனர் செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலக வாயிலிற்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார். முதல் தாக்குதல் காரணமாக பதற்றமடைந்த மக்களிற்கு உதவிக்கொண்டிருந்த தனது இரண்டு மகன்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என ஹசான் அல் நஜாய் தெரிவித்துள்ளார். பெண்களும் குழந்தைகளும் அலறியதை தொடர்ந்து எனது புதல்வர்கள் அவர்களை காப்பாற்ற விரைந்தனர் என அவர் மருத்துவமனையிலிருந்தவாறு தெரிவித்துள்ளார். அவர்கள் பெண் ஒருவரை காப்பாற்ற சென்றனர் அவ்வேளை இரண்டாவது ஏவுகணை தாக்கியது அவர்கள் தியாகினார்கள் என அந்த பெண் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186689
-
இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் முன்னேறுவதே நோக்கம் - ஜனாதிபதி
22 JUN, 2024 | 01:12 PM இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வலுசக்தித் துறை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பங்காளித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு புதிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் 20 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற 31ஆவது அகில இந்திய பங்காளித்துவக் கூட்டம் 2024 (AIPM 2024) இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். கொழும்பில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற 31 ஆவது ‘அகில இந்திய பங்காளித்துவக் கூட்டம் – 2024’, இந்தியாவின் KPMG மற்றும் இலங்கையின் KPMG ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய - இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் சமூக-பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட ஒத்துழைப்புத் திட்டங்களுக்கு இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தி நடைபெற்ற இக்கூட்டத்தில் 600 இற்கும் மேற்பட்ட இந்திய பங்காளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். KPMG இந்தியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி Yezdi Nagporawalla மற்றும் KPMG இலங்கை முகாமையாளர் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினர். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க : ‘’இலங்கையில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவையும் இலங்கை மீதான உங்கள் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. கடினமான கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் இந்தியா வழங்கிய 3.5 பில்லியன் டொலர் கடன் உதவி, எமக்கு பலமாக அமைந்தது. அந்தப் பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மேலும், பங்களாதேஷ் எங்களுக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை நாங்கள் ஏற்கனவே செலுத்திவிட்டோம். சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்கள் குழுவுடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்துள்ளோம். எங்களின் உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு, அடுத்த வாரம் கூடவுள்ளது. எமக்கு கடன் வழங்கிய நாடுகளின் பிரதிநிதிகள், பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஆகிய தரப்பினரை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலும், சீனா மற்றும் சீனா எக்சிம் வங்கியுடனும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம். அதன் பிறகு, எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும், சீனாவின் எக்சிம் வங்கியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக உள்ளோம். அதன்படி, வரும் புதன் கிழமை உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவை (OCC) சந்திப்போம். அடுத்த வாரம் அல்லது அதற்குள், ஒரு நாடாக நாம் வங்குரோத்துநி லையிலிருந்து விடுபட்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் இத்துடன் இந்தப் பிரச்சினை முடிந்துவிடாது. நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார சரிவைத் தவிர்க்க வேண்டுமாயின், புதிய பொருளாதார பொறிமுறைக்கு நாம் துரிதமாக மாற வேண்டும். அது ஒரு போட்டிமிக்க, டிஜிட்டல் ஏற்றுமதி சார்ந்த பசுமைப் பொருளாதாரமாக இருக்க வேண்டும். அது நமக்குள்ள இரண்டாவது பொறுப்பு. எனவே, இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையை சட்டப்பூர்வமாக்க புதிய அணுகுமுறைக்குச் செல்ல முடிவு செய்தோம். மேலும், வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதி வருமானம் மற்றும் பல பரிமாண வறுமையைக் குறைப்பதற்கான அளவுகோல்கள் அமைக்கப்பட வேண்டும். இப்பிராந்தியத்தில் அவ்வாறு செய்யும் முதல் நாடு இலங்கை என்று நான் நம்புகிறேன். ஒரு அரசாங்கம் பொருளாதாரக் கொள்கையை முன்வைத்தவுடன், அடுத்து வரும் அரசாங்கம் நிச்சயமாக அந்தக் கொள்கையை மாற்றியமைக்கின்றது. அப்போது நாம் ஒரு நாடாக முன்னேற முடியாது. நாங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பொருளாதார மாற்ற சட்ட மூலம், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. நாங்கள் தயாரித்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு மேலதிகமாக, முதலீட்டு சபையின் செயல்பாடுகளுடன் முழுமையான முதலீட்டு செயல்முறையையும் நிர்வகிக்கும் பொருளாதார ஆணைக்குழு போன்ற புதிய நிறுவனங்களும் இந்த சட்டத்தின் மூலம் நிறுவ எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டு வலயங்களை முகாமைத்துவம் செய்ய ஒரு தனியான முகவர் நிறுவனம், நமது சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்த சர்வதேச வர்த்தக அலுவலகம், உற்பத்தித் திறன் மேம்பாட்டை உறுதி செய்ய தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு மற்றும் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான நிறுவனம் ஆகியவை இதில் அடங்கும். இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து கடந்த வாரம் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் இது தொடர்பாக மேலும் கலந்துரையாட இலங்கைக்கு வருகை தந்தார். எதிர்கால அபிவிருத்தி இலக்கை அடைய, இலங்கை இந்தியாவுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்க்கிறது. அதன்போது பல விசேட அபிவிருத்தித் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் முதலாவது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மின்சார விநியோக வலையமைப்புகளை ஒன்றோடொன்று இணைப்பதாகும். அப்போது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நிலைபேறான வலுசக்தியைக் கடத்தும் திறன் உருவாகும். அதன் மூலம் புதிய வருமானத்தைப் பெற முடியும். மேலும், இந்த ஜூலை மாதம் சாம்பூரில் சூரிய சக்தி திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம். இந்தத் திட்டம் எங்கள் வலுசக்திக் கூட்டாண்மைக்கு அடிப்படையாக அமைவதோடு, மேலும் காற்றாலை மற்றும் சூரிய சக்திக்கான பாக்கு நீரிணையை அபிவிருத்தி செய்யவும் நாம் எதிர்பார்க்கின்றோம். இரு நாடுகளும் ஒன்றிணைந்து சூரிய ஒளி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கான பாரிய அளவிலான மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதற்கு மேலதிகமாக, யாழ் குடாநாட்டின் பிரதான துறைமுகமான காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சருடனான கலந்துரையாடலில் முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் பலாலி விமான நிலையம் மற்றும் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை, இந்தியாவின் அமுல் பால் நிறுவனத்துடன் இணைந்து, இந்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைமார்க்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்கான திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்தும் நாம் விரிவாகக் கலந்துரையாடினோம். திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தில் கைத்தொழில்களுக்கான முதலீட்டு வலயங்களும் உள்ளடங்கும். அதேபோன்று சுற்றுலாப் வலயத்தையும் கொண்டுள்ளது. மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து திருகோணமலைக்கு எண்ணெய் குழாய் அமைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான இறுதி கண்காணிப்பு அறிக்கைக்காக காத்திருக்கிறோம். மேலும், திருகோணமலையை எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக மாற்ற எதிர்பார்ப்பதுடன், துறைமுகங்கள் மற்றும் முதலீட்டு வலயங்களை நிர்மாணிப்பதன் மூலம் திருகோணமலை துறைமுகம் வங்காள விரிகுடாவில் ஒரு பிரதான துறைமுகமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, முழு கிழக்கு கடற்கரையும் சுற்றுலாத்துறைக்காக திறக்கப்பட்டுள்ளது. காலி மற்றும் தெற்கு பிரதேசங்களில் ஹோட்டல்களுக்கு மேலதிக காணிகள் வழங்கப்படுகின்றன. நாட்டில் புதிய முதலீட்டு வலயங்கள் திறக்கப்படும். எமது தொழிற் பயிற்சித் திட்டமும் விரிவுபடுத்தப்படுகிறது. எனவே, இந்தத் திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறோம்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார். KPMG இந்தியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி யெஸ்டி நாக்போரேவெல்லா, ‘’ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையும், இலங்கை மக்களின் நலனுக்கான இடைவிடாத அர்ப்பணிப்பும் அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணமாகும். சிறந்த தலைமைத்துவம் இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு வழிவகுத்துள்ளதை நாம் கண்டோம். நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை முன்னேற்றுவதற்கும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும், சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் இலங்கை ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைகள் இலங்கை மக்களிடம் மட்டுமன்றி சர்வதேச சமூகத்தினரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. இலங்கை நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளது.’’ என்று அவர் தெரிவித்தார். KPMG குளோபல் நெட்வேக்கின் ஏனைய உறுப்பு நிறுவனங்களின் பல பங்காளர்களும், முன்னணி இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை நிபுணர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/186693
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை - மீண்டும் நிராகரித்தது இலங்கை
Published By: RAJEEBAN 22 JUN, 2024 | 10:35 AM ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறையை இலங்கை மீண்டும் நிராகரித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை பயனற்றது இலங்கையில் சமூகங்களை பிரிக்கவும் துருவமயப்படுத்தவும் மாத்திரம் அது உதவும் அதனால் குறிப்பிடத்தக்க நன்மைகள் இல்லை என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார். இந்த பொறிமுறையால் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவுமில்லை உள்நாட்டு பொறிமுறை குறித்த அர்ப்பணிப்பை இது முன்கூட்டியே தீர்மானம் செய்கின்றது,உறுப்புநாடுகளின் வளங்களை வீணடிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள சவாலான மனித உரிமை சூழ்நிலைகளை பாரபட்சமற்றவிதத்தில், தேர்ந்தெடுக்கப்படாத தன்மையுடன், புறநிலையுடன் இரட்டை நிலைப்பாடுகளை தவிர்த்து மதிப்பிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த கோட்பாடுகளிற்கு முரணாண தன்னிச்சையான செயற்பாடுகளை இலங்கை கடுமையாக எதிர்க்கின்றது மேலும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை என்பது ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு உறுப்புநாடுகள் வழங்கிய ஆணைக்கு முரணானது எனவும் இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தெரிவித்துள்ளார். இது ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினை அரசியல் மயப்படுத்தி அதன் மீதான நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186683
-
பதிவற்ற மோட்டார் வாகனம் மற்றும் 5 வாள்களுடன் யாழில் இளைஞன் கைது!
22 JUN, 2024 | 09:38 AM யாழில் இளைஞன் ஒருவரிடமிருந்து பதிவற்ற மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாள்களையும் நேற்று வெள்ளிக்கிழமை (21) யாழ்ப்பாணம் பொலிஸார் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் பொலிஸார் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் வாகனமொன்றினை வழிமறித்துச் சோதனையிட்ட நிலையில் வாகனப்பதிவின்றி வாகனம் பயணித்தமை தெரியவந்தது. இதனையடுத்து குறித்த இளைஞரை கைது செய்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரது வீட்டிலிருந்து 5 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/186674
-
வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!
Published By: VISHNU 21 JUN, 2024 | 11:51 PM வவுனியா பொது வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலைக்குச் செல்லும் குறித்த வீதியில் நீண்டகாலமாக வாகன நெரிசல் ஏற்ப்பட்டுவருகின்றது,இதனால் அந்த வீதியினை பயன்படுத்தும் பொதுமக்கள், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததுடன் நோயாளர்காவு வண்டிகளும் சிரமத்துடனேயே பயணிக்கவேண்டியிருந்தது. இந்நிலையில் குறித்த வீதியானது எதிர்வரும் வாரங்களிலிருந்து ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் வவுனியா கண்டி வீதி வழியாக வருகைதரும் பொதுமக்கள் வழமைபோல வைத்தியசாலை சுற்று வட்டத்தினை பயன்படுத்தி வைத்தியசாலை வீதியால் தமது பயணத்தினை மேற்கொள்ள முடியும். அத்துடன் பூந்தோட்டம் பகுதியிலிருந்து வைத்தியசாலைக்கு வருகைதரும் பொதுமக்கள் கித்துள் வீதியினையோ அல்லது குளவீதியினை பயன்படுத்தி வைத்தியசாலைக்குச் செல்ல முடியும். இது தொடர்பான தீர்மானங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சிரமங்கள் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம், நகரசபை,பிரதேசசெயலகம், பொலிசார் ஆகியவை இணைந்து கலந்துரையாடி தீர்க்கமான முடிவினை எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/186664
-
பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிப்பு
22 JUN, 2024 | 12:27 PM பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்த 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க மார்ச் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளைக் கருத்திற் கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186687
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக எளிய இலக்கை கோட்டை விட்டாலும் இங்கிலாந்துக்கு வாய்ப்பு பிரகாசம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றில் குருப்-2 பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா அணி. இதன் மூலம் அரையிறுதிக்கு முதல் அணியாக தென் ஆப்ரிக்கா தகுதி பெறக்கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளது. மே.இ.தீவுகளுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் வென்றுவிட்டால் அந்த அணி அரையிறுதிக்கு எளிதாக முன்னேறும். அதிரடி நாயகன் டீ காக் மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த டி20 லீக் தொடர்களில் டீகாக் விளையாடிய அனுபவம் இருந்ததால், ஆடுகளத்தின் தன்மையை எளிதாகப் புரிந்து கொண்டு செட்டிலாகினார். டீகாக்கை 6 முறை டாப்ளியும், மொயின் அலியும் ஆட்டமிழக்கச் செய்திருப்பதால், அவர்களை பந்துவீச கேப்டன் பட்லர் பயன்படுத்தினார். ஆனால் இருவரின் ஓவரையும் டீகாக் வெளுத்துவாங்கினார். குயின்டன் டீ காக் 22 பந்துகளில் அரைசதம் அடித்து உலகக் கோப்பையில் குறைந்தபந்துகளில் அரைசதம் அடித்த ஆரோன் ஜோன்ஸ் சாதனையுடன் டீ காக் இணைந்தார். பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்திய டீகாக், தென் ஆப்ரிக்க அணிக்கு சிறந்த தொடக்கத்தை அளித்தார். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி தென் ஆப்ரிக்க அணி 63 ரன்கள் சேர்த்தது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். டீ காக் 58ரன்களில் இருந்தபோது, அதில் ரஷீத் வீசிய பந்தில், பேக்வார்ட் ஸ்குயர் திசையில் அடித்த ஷாட்டை மார்க் உட் கேட்ச் பிடித்தார். களநடுவர் அவுட் வழங்கியநிலையில், டீகாக் 3வது நடுவருக்கு அப்பீல் செய்தார். அதை ஆய்வு செய்த 3வது நடுவர் பந்தை கேட்ச் பிடித்தபோது, பாதி பந்து தரையில் பட்டவாறு இருந்ததால் அவுட் வழங்க மறுத்துவிட்டனர். இந்த முடிவு சிறிதுநேரம் சலசலப்பை ஏற்படுத்தி நடுவர்களிடம் இங்கிலாந்து வீரர்கள் விளக்கம் கேட்டனர். டீ காக் 38 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தார். டீ காக்கிற்கு அடுத்தபடியாக மில்லர் 43 ரன்கள் பங்களிப்பு செய்தார். ஆனால் மற்ற வீரர்கள் பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் தென் ஆப்ரிக்க அணியால் மிகப்பெரிய ஸ்கோரை எட்டமுடியவில்லை. 20 ஓவர் முடிவில் 163 ரன்களை மட்டுமே அந்த அணி சேர்த்தது. தென் ஆப்ரிக்க அணி பவர்ப்ளே முடிவில் 63 ரன்கள் சேர்த்தநிலையில் அடுத்த 14 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து மந்தமான பேட்டிங் இங்கிலாந்து அணி 13-வது ஓவர் வரை மந்தமாக ஆடிவிட்டு, அதன்பின்புதான் ஆட்டத்தை வேகப்படுத்தியது, முதல்நிலை வீரர்கள் யாரும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. 14-வது ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 6 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்கு 77 ரன்கள் தேவைப்பட்டன. ரபாடா வீசிய 15-வது ஓவரில் லிவிங்ஸ்டன் ஒரு சிக்ஸரும், ப்ரூக் 2பவுண்டரிகளும் விளாசி 18 ரன்கள் சேர்த்தனர். நோர்க்கியா வீசிய 16-வது ஓவரில் ப்ரூக் 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்கள் சேர்த்தார். பார்ட்மேன் வீசிய 17-வது ஓவரில் லிவிங்ஸ்டன் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர், ப்ரூக் ஒரு பவுண்டரி என 21 ரன்கள் சேர்த்து இங்கிலாந்தை வெற்றிக்கு அருகே கொண்டு வந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், 17-வது ஓவரிலிருந்து சுதாரித்த தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்துவந்தனர். ரபாடா வீசிய 18-வது ஓவரில் லிவிங்ஸ்டன், நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் ஹேரி ப்ரூக் இருவரும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் 18 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில், யான்சென், ரபாடா, நோர்க்கியா ஆகிய 3 அதிவேகப் பந்துவீச்சாளர்களும் துல்லியத் தாக்குதல் தொடுத்து தென் ஆப்ரிக்க அணிக்கு வெற்றி தேடித்தந்தனர். இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம் இங்கிலாந்து பேட்டர்களின் மந்தமான ஆட்டமும், பொறுப்பற்ற பேட்டிங்கும்தான். தொடக்கத்திலேயே பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி இருந்தால் கடைசி நேரத்தில் நெருக்கடி வந்திருக்காது. 13வது ஓவர்களுக்குப் பின்புதான் இங்கிலாந்து பேட்டர்கள் அதிரடி ஆட்டத்தையே கையில் எடுத்தனர். பட்லர்(17), பேர்ஸ்டோ(16), மொயின் அலி(9) என யாரும் எதிர்பார்த்த பங்களிப்பை அளிக்கவில்லை. கடைசி நேரத்தில் ஹேரி ப்ரூக் 37 பந்துகளில் 53, லிவிங்ஸ்டோன் 33 ரன்கள் ஆகியோரின் 78 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தில் பரபரப்பைச் சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் அபாரம் அதேசமயம், கிடைத்த வாய்ப்பை தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் கச்சிதமாகப் பயன்படுத்தினர். அவர்கள் கடைசி 3 ஓவர்களில் 25 ரன்களை டிபெண்ட் செய்து அசத்தினர். 18-வது ஓவரை வீசிய ரபாடா, லிவிங்ஸ்டோனை டீப் பேக்வார்ட் ஸ்குயர் திசையில் ஷாட் அடிக்க வைத்து கேட்சாக்கினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே வழங்கினார். 12 பந்துகளில் இங்கிலாந்து வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய யான்சென் 4 ரன்களை மட்டுமே வழங்கினார். கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டன. 20வது ஓவரை வீசிய நோர்க்கியா செட்டில் பேட்டர் ஹேரி ப்ரூக்(53) விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் களத்தில் இருந்த சாம் கரனால் 5 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் சிறப்பான பணியைச் செய்தனர். சுழற்பந்துவீச்சாளர்கள் அதில் ரஷித், மொயின் அலி இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 45 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரீஸ் டாப்ளியும் 4 ஓவர்களில் 23 ரன்கள் என கட்டுக்கோப்புடன் வீசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES தோல்விக்கு காரணம் என்ன? இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் “ பவர்ப்ளேயில் டீ காக்கை அடிக்கவிட்டதுதான் நாங்கள் தோல்விக்கான காரணமாகப் பார்க்கிறோம். பவர்ப்ளேயில் அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கத்தோடு டீகாக் இருந்தார். எங்களால் அவரின் ஆட்டத்துக்கு தடைபோட முடியவில்லை. 160 ரன்களை எளிதாக சேஸ் செய்துவிடலாம் என மகிழ்ச்சியுடன்தான் களமிறங்கினோம், ஆனால், தென் ஆப்ரிக்க பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ப்ரூக், லிவிங்ஸ்டன் இருவரின் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை மாற்றி வெற்றிக்கு அருகே கொண்டு சென்று நாங்கள் வெல்லக்கூடிய நிலையில் இருந்தோம். ஆனால், டி20 கிரிக்கெட்டில் எதுவுமே நம் கைகளில் இல்லை. நாங்கள் இன்னும் தொடரில் உயிர்ப்புடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அரையிறுதி செல்லுமா தென் ஆப்ரிக்கா? இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பைத் தொடரில் லீக் சுற்றிலிருந்து சூப்பர்-8 வரை தோல்வி அடையாத அணி என்ற பெயரை தென் ஆப்ரிக்கா தக்கவைத்துள்ளது. சூப்பர்-8 சுற்றில் குரூப் 2 பிரிவில் 2 போட்டிகளிலும் வென்று 4 புள்ளிகளுடன், 0.625 நிக ரன்ரேட்டில் முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் வென்றுவிட்டால் தென் ஆப்ரிக்க அணி 3வது முறையாக டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை தென் ஆப்ரிக்கா அணி மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்தால், அமெரிக்க அணியை மேற்கிந்தியத்தீவுகளும், இங்கிலாந்து அணியும் வென்றால் 3 அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்குப் போட்டியிடும். அப்போது நிகர ரன்ரேட் கவனிக்கப்படும். ஆனால், தென் ஆப்ரிக்க அணியைப் பொருத்தவரை அதன் நிகர ரன்ரேட் பெரிதாக உயரவில்லை, 0.625 என்ற நிலையில்தான் இருக்கிறது. இந்த ரன்ரேட்டை இங்கிலாந்து அணியாலும் கடைசி லீக்கில் பெறும் வெற்றியால் கடக்க முடியும், மேற்கிந்தியத் தீவுகளும் அடுத்தடுத்து வெற்றி பெற்றால், தென் ஆப்ரிக்காவுக்கு கடும் போட்டியளிக்க முடியும். ஆதலால், தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டதேத் தவிர இன்னும் உறுதி செய்யவில்லை. மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தினால், தென் ஆப்ரிக்கா அரையிறுதி செல்வது உறுதியாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்துக்கு வாய்ப்பு பிரகாசம் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, மற்றொன்றில் தோல்வி என 2 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டாக 0.412 என வைத்துள்ளது. அடுத்துவரும் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டால், 4 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிக்குள் செல்ல முடியும். அமெரிக்காவை நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெல்வது ஏறக்குறைய உறுதிதான் என்றாலும் நிகர ரன்ரேட்டை உயர்த்தும் அளவு வெற்றி அமைவது அவசியம். தமது கடைசி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெஸ்ட் இண்டீசையும், இங்கிலாந்து அணி அமெரிக்காவையும் சந்திக்கவிருப்பதால் இங்கிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாகவே உள்ளது. https://www.bbc.com/tamil/articles/c2xx3dn326no
-
வைத்தியர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகுவதாக தகவல்
Published By: DIGITAL DESK 3 22 JUN, 2024 | 01:40 PM பொருளாதார நெருக்கடியால் மூளைச் சலவைக்கு உள்ளாகும் வைத்தியர்களில் 25 சதவீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 1,800 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சம்மில் விஜேசிங்க அரபு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் 2021 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் சராசரியாக 200 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றும் குறைந்தது 25 சதவீதமான வைத்தியர்கள் வெளிநாட்டில் வேலை பெற்றுக் கொள்வதற்கான பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தரவுகள் காட்டுவதால் இன்னும் பலர் அவர்களை பின்பற்ற வாய்ப்புள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது ஓமான் நாடுகளில் வைத்திய துறையில் ஈடுபட வைத்தியர்களுக்கான பிரத்தியேகமான பரீட்சைக்கு தோற்ற வேண்டும். இங்கிலாந்தில் வைத்திய துறையில் ஈடுபட தொழில்முறை மற்றும் மொழியியல் மதிப்பீட்டு குழுமத்தின் பரீட்சைக்கு தோற்றவேண்டும். அவுஸ்திரேலியாவில் அவர்கள் அவுஸ்திரேலிய மருத்துவ சபையின் பரீட்சைக்கு தோற்றவேண்டும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186695
-
மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?
நன்றி அக்கா. இரண்டு கண்களும் தெரியாத நிலையில் விக்ரோறியாக் கல்லூரியின் முன்னாள் அதிபர்(1965ஆம் ஆண்டளவில் பதவி வகித்தவர்) ஒருவர் இருந்திருக்கிறார். அவருடன் கற்பித்த ஆசிரியர் சென்று சந்தித்து உரையாடுகையில் பார்வைப் பிரச்சனையால் சிரமப்படுகிறீர்களா என வினவியபோது இல்லை நான் செய்த நற்செயல்களை நினைத்து மகிழ்வாக இருக்கிறேன் என கூறியிருக்கிறார்.
-
பிறரின் கையடக்கத் தொலைபேசி சிம் அட்டைகளை பயன்படுத்தி பண மோசடி; சந்தேகநபருக்கு விளக்கமறியல்
அண்ணை #132# என்ற இலக்கத்திற்கு அழைத்தால் உங்கள் பெயரில் எத்தனை இலக்கங்கள் பாவனையில் உள்ளது என தெரியவரும். அத்துடன் உங்கள் பெயரிலா அல்லது வேறொருவர் பெயரிலா சிம் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் முகவரியையும் சரி பார்க்கலாம்.