Everything posted by ஏராளன்
-
கரூர் சம்பவம் – கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய்
கரூர் நெரிசலில் இறந்தவர்கள் குடும்பத்திடம் விஜய் பேசியது என்ன? பட மூலாதாரம், TVK கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து அக்கட்சியின் தலைவர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். "குடும்பத்தில் ஒருவனாக இருந்து உதவி செய்வேன்" என, விஜய் உறுதியளித்ததாக நிகழ்வில் பங்கேற்றவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால், இந்நிகழ்வில் நான்கு குடும்பங்கள் பங்கேற்கவில்லை. நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு 30 நாட்களுக்குப் பிறகு விஜய் சந்தித்ததை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எப்படிப் பார்க்கின்றன? அவர்களிடம் விஜய் பேசியது என்ன? கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டெம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் கூறுவதற்கு தவெக தலைவர் விஜய் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் செல்லாதது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதேநேரம், கரூர் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை விஜய் வெளியிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை இரண்டு வாரங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஒத்திவைப்பதாக, அக்டோபர் 1 அன்று அக்கட்சியின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ கால் அழைப்பின் மூலம் விஜய் பேசினார். படக்குறிப்பு, கரூரில் கடந்த செப்டெம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர் (கோப்புப் படம்) 2 குடும்பங்களுக்கு வரவு வைக்கப்படாத நிதி தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்ச ரூபாய் நிவாரண நிதி தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக 39 குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாக நாளேடுகளில் செய்தி வெளியானது. இரண்டு குடும்பங்களுக்கு நிவாரண நிதி செல்லவில்லை என கூறப்படுவது குறித்து தவெக திருச்சி மண்டல வழக்கறிஞர் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் அரசுவிடம் பிபிசி தமிழ் கேட்டது. "வங்கிக் கணக்குகளைக் கொடுப்பதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குழப்பம் நீடித்ததால் வரவு வைக்கப்படவில்லை. தீபாவளியை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. வங்கிக் கணக்கு விவரங்கள் கிடைத்த பிறகு வரவு வைக்கப்படும்" எனக் கூறினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கையை மத்திய புலனாய்வுத்துறை தாக்கல் செய்துள்ள நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்துக்கு அழைத்து தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, கோப்புப் படம் விஜய் பேசியது என்ன? மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. , உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கரூரில் இருந்து ஆம்னி பேருந்துகள் மூலம் தவெக நிர்வாகிகள் அழைத்து வந்தனர். திங்கள்கிழமையன்று காலை சுமார் 8.30 மணியளவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் படங்களுக்கு தனித்தனியாக மலர் அஞ்சலி செலுத்திய விஜய், பின்னர் தங்களுக்கு ஆறுதல் கூறியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால், சந்திப்பின்போது பேசப்பட்ட விவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை தமிழக வெற்றிக் கழகம் வெளியிடவில்லை. "எங்களுக்கு இருந்த ஒரே மகனும் உயிரிழந்துவிட்ட வேதனையோடுதான் சென்றோம்" எனக் கூறுகிறார் முருகேசன். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இவரது மகன் தாமரைக்கண்ணன் உயிரிழந்துவிட்டார். எம்.ஏ ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு தரைவிரிப்பு ஒட்டும் வேலையைச் செய்து வந்ததாக முருகேசன் குறிப்பிட்டார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கரூருக்கு விஜய் வருவதைக் கேள்விப்பட்டு சென்றுள்ளான். இந்த விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. கூட்டத்தில் மயக்கம் போட்டு அவன் கீழே விழுந்துவிட்டதாக கூறினார்கள். அதிகாலை 2 மணியளவில் ஆஸ்பத்திரிக்கு போனபோது இறந்துவிட்டதாக சொன்னார்கள்" என்கிறார். "தாமரைக்கண்ணனுக்கு திருமணம் நடந்து ஓராண்டு கூட முடியவில்லை" எனக் கூறும் முருகேசன், "வாழ்க்கையைத் தொடங்கும்போதே என் மகன் இறந்துவிட்டான். மருமகளுக்கு மருத்துவர்கள் இந்த மாதம் பிரசவத்துக்குத் தேதி குறித்துள்ளனர். அதுதான் வேதனையை அதிகரிக்கிறது" எனவும் தெரிவித்தார். விஜய் ஆறுதல் கூறியது குறித்து விவரித்த முருகேசன், "மகன் இறந்துபோனதை நினைத்து அழுது கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் பேசிய விஜய், 'வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு என்ன தேவையோ அதை மகனாக செய்து தருகிறேன்' எனக் கூறினார்" என்கிறார். "விஜய் பேசும்போது கட்சி நிர்வாகிகள் யாரும் உடன் இல்லை" எனக் கூறிய முருகேசன், " ஒவ்வொருவருடனும் தனித்தனியாக வந்து அவர் பேசினார். கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவிகளைச் செய்து தருவதாகக் கூறினார். மருமகளுக்கு பிரசவ தேதி நெருங்குவதால் அதற்கான உதவிகளைச் செய்து தருகிறேன் என உறுதியளித்தார்" எனவும் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கரூர் நிகழ்வில் உயிரிழந்த 41 பேரில் 11 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். கரூர் சம்பவம் குறித்த கேள்விக்கு விஜய் அளித்த பதில் கரூர் மாவட்டம் வடக்கு காந்தி கிராமம், அன்பு நகரை சேர்ந்த கிஷோர் என்பவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி கிஷோர் உயிரிழந்துவிட்டார். இவரின் தந்தை கணேஷ், கரூரில் உள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கணேஷிடம் பிபிசி தமிழ் பேசியது. "எனக்கு ஒரே ஒரு மகன்தான். மனைவியும் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். விஜய் வருவதால் கூட்டத்துக்குப் போய்விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றான். ஆனால், அவன் இறந்துபோய்விட்டதாக இரவு 2.30 மணிக்குத்தான் தெரியும்" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "மாமல்லபுரம் சென்றிருந்தோம். என்னிடம் விஜய் பேசும்போது, 'குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள். மகன் இல்லை எனக் கவலைப்பட வேண்டாம்' எனக் கூறினார். சுமார் ஐந்து நிமிடங்கள் என்னுடன் பேசினார்" என்கிறார். குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக விஜய் உறுதியளித்ததாகக் கூறிய கணேஷ், " ஐந்து லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு போடப்பட்டுள்ளதாக விஜய் கூறினார். அதில் தேவைப்படும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம் என்றார். தேவையான உதவிகளைச் செய்து தருவதாக உறுதியளித்தார்" எனக் குறிப்பிட்டார். "கரூர் சம்பவம் குறித்து ஏதேனும் தெரிவித்தாரா?" எனக் கேட்டபோது, " அதைப் பற்றி கேட்டபோது, 'என்ன நடந்தது என்றே தெரியவில்லை' எனக் கூறி தலைகுனிந்து கொண்டார். கரூர் சம்பவம் குறித்து வேறு எதையும் அவர் பேசவில்லை" எனக் கூறினார். மாமல்லபுரம் செல்லாத 4 குடும்பங்கள் மாமல்லபுரத்தில் நடந்த ஆறுதல் கூறும் நிகழ்வுக்கு உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினர் செல்லவில்லை. அதில் வடிவேல் என்பவரின் குடும்பமும் ஒன்று. தேநீர் கடை ஒன்றை வடிவேல் நடத்தி வந்துள்ளார். 53 வயதான இவருக்கு மனைவியும் மகளும் உள்ளனர். இவரின் மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மாமல்லபுரத்தில் நடந்த ஆறுதல் கூறும் நிகழ்வுக்கு வடிவேலின் குடும்பத்தினர் வராதது குறித்து அவரது உறவினர் சரவணனிடம் பிபிசி தமிழ் பேசியது. "கூட்டத்துக்குச் சென்ற வடிவேல் இறந்துவிட்டார். அவர் இறந்து முப்பது நாள்கள் ஆகிவிட்டது. அதற்கான சடங்குகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால், 'எங்களால் வர முடியாது' எனக் கூறிவிட்டோம்" என்கிறார். "விஜயை இன்னொரு நாள் வந்து பார்ப்பதாக கூறிவிட்டோம்" எனக் கூறுகிறார் சரவணன். 20 லட்சத்தை திருப்பி அனுப்பிய குடும்பம் மாமல்லபுரத்தில் ஆறுதல் கூறும் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தவெக தரப்பில் இருந்து வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 20 லட்ச ரூபாயை திருப்பி அனுப்பிவிட்டதாக சங்கவி என்பவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டி கொங்கு நகரைச் சேர்ந்த இவரின் கணவர் ரமேஷ், கடந்த செப்டெம்பர் 27 அன்று தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார். "நேரில் வந்து விஜய் ஆறுதல் சொல்வார் என்று தான் எதிர்பார்த்தோம். பணத்தை எதிர்பார்க்கவில்லை. பணத்தை வைத்து இறந்த உயிரை யாராலும் திருப்பித் தர முடியாது" என, செய்தியாளர்களிடம் ரமேஷின் மனைவி சங்கவி கூறியுள்ளார். "நாங்களாக தேடிச் சென்று விஜயைப் பார்ப்பதற்கு விருப்பம் இல்லை" எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட தங்களைத் தவிர்த்துவிட்டு தங்களின் வேறு சில உறவினர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று ஆறுதல் கூறும் நிகழ்வில் இடம்பெற வைத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் தரப்படவில்லை. கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் கூறியது சமூக ஊடகங்களில் விவாதப்பொருளாக மாறியது. இது புதிய அணுகுமுறையாக உள்ளதாகக் கூறியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "இந்த விவகாரத்தில் அக்கட்சியினரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கருத்து கூற வேண்டும். நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை" எனக் கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp85zn1p58po
-
இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ஒத்துழையுங்கள் - சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி
இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ஒத்துழையுங்கள் - சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம் Published By: Vishnu 28 Oct, 2025 | 08:17 PM (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கு சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி அதன் மாநாட்டில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பான 'இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள்' எனும் அமைப்பினால் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்பில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட சட்ட அறிக்கையில் உள்ள விடயங்களை அடிப்படையாகக்கொண்டு வரையப்பட்டிருக்கும் மேற்படி தீர்மானத்தில் 'ஈழத்தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட வன்முறைகள், படுகொலைகள், மிகமோசமான மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை அத்தீர்மானத்தில் இலங்கையில் இடம்பெற்ற மீறல்களை ஐக்கிய நாடுகள் இனவழிப்புப் பிரகடனத்தின்படி இனவழிப்பாகக் கருதமுடியுமா என்பது பற்றி சர்வதேச கட்டமைப்புக்களின் ஒத்துழைப்புடன் ஆராயுமாறு சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பு, சுவிற்ஸர்லாந்தில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பு, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படுவதை முன்னிறுத்தி பல தசாப்தகாலமாக அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் என்பவற்றை உள்வாங்கக்கூடியவகையில் மிகத்தெளிவான மனித உரிமைகள்சார் சுவிற்ஸர்லாந்து வெளிநாட்டுக்கொள்கை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும் சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது. மேலும் வருடாந்தம் மேமாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று நடைபெறும் நிகழ்வு உள்ளிட்ட நினைவுகூரல் நிகழ்வுகள் எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும், சுவிற்ஸர்லாந்தில் உள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பும், நீதியும் உறுதிப்படுத்தப்படும் வரை அவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பியனுப்புவது தவிர்க்கப்படவேண்டும் எனவும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/228926
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தில் இலங்கை மகளிர் அணிக்கு மொத்த பணப்பரிசு 31.5 கோடி ரூபா Published By: Digital Desk 3 28 Oct, 2025 | 03:45 PM (நெவில் அன்தனி) ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்ற இலங்கை மகளிர் அணி 31 கோடியே 51 இலட்சத்து 63,066 ரூபாவை மொத்த பணப்பரிசாக சம்பாதித்துள்ளது. இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் போட்டிகள் நிறைவில் 7 தடவைகள் சம்பியனான அவுஸ்திரேலியா, 4 தடவைகள் சம்பியனான இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, வரவேற்பு நாடான இந்தியா ஆகியவற்றுக்கு அடுத்ததாக அணிகள் நிலையில் இலங்கை 5ஆம் இடத்தைப் பெற்றது. நியூஸிலாந்தில் கடைசியாக நடைபெற்ற 12ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் தகுதியைக்கூட பெறாமல் இருந்த இலங்கை, மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்த வருடம் அதிசிறந்த நிலையை அடைந்தது. போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்றமைக்காக 700,000 டொலர்களை வென்றெடுத்த இலங்கை, ஒரு வெற்றிக்காக 34,314 டொலர்களையும் 3 முடிவுகிட்டாத போட்டிகளுக்கு தலா 17,157 டொலர்களையும் பெறவுள்ளது. அத்தடன் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றியமைக்காக 250,000 டொலர்கள் கிடைக்கவுள்ளது. இதற்கு அமைய இலங்கைக்கு கிடைக்கவுள்ள மொத்த பணப்பரிசு 10 இலட்சத்து 35,785 அமெரிக்க டொலர்களாகும். இது இலங்கை நாணயப்படி 31 கோடியே 51 இலட்சத்து 63,066 ரூபாவாகும். ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இந்தியாவில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான தனது கடைசிப் போட்டியில் மாத்திரமே இலங்கை வெற்றிபெற்றது. கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய அப் போட்டியில் பங்களாதேஷ் வெற்றிபெறுவதற்கு கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் 4 விக்கெட்கள் மீதம் இருந்தன. கடைசி ஓவரை துணிச்சலுடன் சமரி அத்தபத்து வீசினார். அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் ஒரு ரன் அவுட் உட்பட 4 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன. கடைசி 2 பந்துகளில் இரண்டு ஒற்றைகள் மாத்திரமே பங்களாதேஷ் பெற, இலங்கையின் ஒரே ஒரு வெற்றியை சமரி அத்தபத்து உறுதிப்படுத்தினார். அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான இலங்கையின் போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டன. இங்கிலாந்து, தென் ஆபிரிக்க அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இலங்கை தோல்விகளைத் தழுவியிருந்தது. https://www.virakesari.lk/article/228899
-
கடமைகளை பொறுப்பேற்ற தேசிய புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்
Oct 28, 2025 - 04:46 PM தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட இன்று (28) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். மேஜர் ஜெனரல் நியங்கொட நேற்று (27) பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவிடம் இருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். https://adaderanatamil.lk/news/cmhah1vfo0198o29nqvhg69fd
-
கொழும்பில் மாத்திரம் 2 இலட்சம் மாணவர்கள் போதைக்கு அடிமை
Oct 28, 2025 - 01:51 PM கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (27) அக்குரஸ்ஸ கோடபிட்டிய தேசிய பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். தென் மாகாணத்தைப் பற்றிப் பேசினால், இதைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதாள உலக நடவடிக்கைகளில் தென் மாகாணம் தான் முதலிடத்தில் உள்ளது. இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள் ஆவர். அதில் அதிகமானவர்கள் குறைவான எழுத்தறிவு மட்டத்தில் காணப்படுகின்றனர். தங்கள் தாய்மார்கள் செய்த தவறுகளால் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறையில் உள்ளனர். வழக்குகளை விசாரித்து 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். 5 ஆண்டுகள் வரை தாயும், குழந்தையும் ஒன்றாக இருக்க அனுமதிக்கிறோம். 5 வயது பூர்த்தியாகும் நாளில் குழந்தையையும் தாயையும் பிரித்து வைக்கின்றோம். அது என் வாழ்க்கையில் நான் கண்ட மிக சோகமான சந்தர்ப்பங்களில் ஒன்றாகும். குழந்தை அம்மாவை வேண்டி அழுகிறது. அம்மாவும் குழந்தையை வேண்டி அழுகிறாள். 5 வருடங்களாக அவர்களுக்கு இருந்த ஒரே உறவு அதுதான். அதில் சட்டம் குறுக்கிடுகிறது. அதனால் ஒருபோதும் ஒரு பெண்ணாக நீங்கள் தவறு செய்யாதீர்கள். போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்க இந்த அரசாங்கத்திற்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது என தெரிவித்தார். இதனிடையே நேற்று களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த பத்மினி வீரசூரிய, பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். நாங்கள் இப்போது நிறைய அதிகாரிகளை சிவில் உடையில் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். நீங்கள் பாடசாலை முடிந்த பிறகு எப்படிச் செல்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள், எங்கு குழுவாக நிற்கிறீர்கள் என்று பார்க்க. உங்களுக்கு ஏதேனும் தகவல் இருந்தால், பாடசாலை விட்டுச் செல்லும்போது பஸ் நிலையங்கள், கடைகள் போன்ற இடங்களில் இதுபோன்ற விடயங்களைக் கண்டால் எங்களிடம் கூறுங்கள். எனது தொலைபேசி இலக்கம் 071 859 2683 இதுவாகும் என குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmhaarysg0191o29n81mh815f
-
காணி மோசடிகள்⚠️: மக்களே அவதானம்❗| வெளிப்படுத்தல் உறுதி சட்டரீதியானதா? 🤔🤷♂| Thananchayan LL.B LL.M
In this video I explain, Kinds of Deeds, Legality of Deed of Declaration, Procedure of Deed of Declaration, Problems in the North and East Sri Lanka, Land Scams through Deed of Declaration, Duty of Notary Public, Procedure of Deed Attestation, Registration of Land, Prevention of Fraud, Land Sale Scams, And Etc. இந்த வீடியோவில், உறுதிகளின் வகைகள் எவை? வெளிப்படுத்தல் உறுதி என்றால் என்ன ? காணிப் பதிவு, வெளிப்படுத்தல் உறுதிகள்-காணி மோசடிகள், காணி மோசடிகளை தவிர்ப்பது எவ்வாறு ? என்ற தகவல்களுடன் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
-
பாதுகாப்பு கட்டமைப்பு முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது – சாகர காரியவசம்
பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது - நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு 27 Oct, 2025 | 04:28 PM (இராஜதுரை ஹஷான்) பொலிஸ்மா அதிபர் அரசியல்வாதி போன்று செயற்படுகிறார்.பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே பொலிஸார் செயற்படுகின்றனர் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்கள் பிரதிநிதி ஒருவரை பகிரங்கமாக சுட்டுக்கொலை செய்யும் நிலையே இன்று காணப்படுகிறது. இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து கொலைகயையும் அரசாங்கம் பாதாளக் குழுக்களின் கணக்கில் சேர்க்கிறது. எதிர்க்கட்சியின் சகல உறுப்பினர்களும் பாதாளக் குழுக்களுடன் தொடர்புக்கொண்டுள்ளார்கள் என்று மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டையும் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தி புலனாய்வுத் தகவல்களை அலட்சியப்படுத்தியவர்கள் தான் இன்று பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய உயர்பதவிகளில் உள்ளார்கள். இன்றும் புலனாய்வுத் தகவல்களை இவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். 323 கொள்கலகள் எங்கு சென்றது என்பது இன்றுவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.இலங்கைக்கு இரண்டு கொள்கலன்களில் ஐஸ் போதைப்பொருள் வருவதாக சர்வதேச புலனாய்வுப் பிரிவு அரசாங்கத்துக்கு தகவலளித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை.தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை அரசாங்கம் தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறது. பொலிஸ்மா அதிபர் அரசியல்வாதி போன்று செயற்படுகிறார்.பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே பொலிஸார் செயற்படுகின்றனர். அரசியல் நோக்கங்களுக்கு அமைய பொலிஸ் திணைக்களம் செயற்பட்டால் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும் என்றார். https://www.virakesari.lk/article/228813
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப் படம்.
-
கட்டடங்களை நிர்மாணிக்கும் பிரதேச சபையின் அனுமதி அவசியம்!
Oct 28, 2025 - 09:03 AM - வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரானரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக பிரதேச சபையின் ஆளுகைக்குள் பல்வேறு கட்டுமாணங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதில் பல முறையான அனுமதி பெற்று நிர்மாண வேலைகளை முன்னெடுக்கவில்லை என தகவல்களூடாக உறுதிசெய்ய முடிகின்றது. இவ்வாறு முறையான அனுமதி பெறாது நிர்மாணிக்கப்படும் கட்டுமாணங்கள் சட்டமுறையற்ற கட்டுமாணங்கள் என்றே கருத்தில் கொள்ளப்படும். அத்துடன் அவ்வாறு அடையாளப்படுத்தப்படும் கட்டுமாணங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பிரதேச சபை நிர்ப்பந்திக்கப்படும் நிலையும் உருவாகும். எனவே 1987 ஆம் ஆண்டு 15 இலக்க பிரதேச சபைகள் சட்டம் மற்றும் 1978 ஆம் ஆண்டு 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டம் ஆகியாற்றின் அடிப்படையில், 01. பிரதேச சபையில்.கட்டட அனுமதிக்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளல். 02. அமைவுச் சான்றிதழ் அல்லது கால நீடிப்பு அனுமதியை பெறுதல். 03. காணி உப பிரிவிடல் மற்றும் காணி ஒருங்கிணைத்தல் அனுமதியினை பெற்றுக்கொள்ளல். 04. நிலுவையிலுள்ள அனைத்து விண்ணப்பங்களுக்குமான அனைத்து ஆவணங்களையும் சமைப்பித்தல் போன்ற நடைமுறையை பின்பற்றி கட்டடங்களுக்கான நிர்மாண அனுமதியை பெற்றுக்கொள்வது அவசியமாகும். இதே நேரம் அனுமதியின்றி அமைக்கப்படும் கட்டுமாணங்களால் அண்மைக்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றி பல முரண்பாடுகளை எது உருவாக்கி வருவதால் இந்த நடைமுறையை வேலணை பிரதேச ஆளுகைக்குள் கட்டுமாணங்களை மேற்கொள்வோர் பின்பற்றுவது அவசியமாகும் எனதுடன் அவ்வாறு பின்பற்ற தவறும்.பட்சத்தில் சட்ச நடவடிக்கை எடுக்க பிரதேச சபை நிர்ப்பந்திக்கப்படும் என தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmha0hh4a018so29ndtd3u630
-
பாதுகாப்பு கட்டமைப்பு முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது – சாகர காரியவசம்
27 Oct, 2025 | 06:48 PM (இராஜதுரை ஹஷான்) மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் நிகழ்ச்சி நிரலை பொலிஸ்மா அதிபர் செயற்படுத்துகிறார். முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, பூகோள காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொண்டது. நாட்டுக்கு சேவையாற்றிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் திருடர்கள், மோசடியாளர்கள் என்று சித்தரிக்கப்பட்டார்கள். தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகள் வழங்கியது. பொதுத்தேர்தலில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கிய மக்கள் தமது தவறான அரசியல் தீர்மானத்தை உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் விளங்கிக்கொண்டார்கள். பொதுத்தேர்தலில் 61 சதவீத வாக்குகளைப் பெற்ற அரசாங்கம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் 23 இலட்ச வாக்குகளை இழந்து 43 சதவீத வாக்குகளைப் பெற்றது. போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதை நாட்டு மக்கள் விளங்கிக்கொண்டார்கள். நாட்டுமக்களினதும், அரசியல்வாதிகளினதும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.பாதாளக்குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் நிகழ்ச்சி நிரலை பொலிஸ்மா அதிபர் செயற்படுத்துகிறார். முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதை பொலிஸ்மா அதிபர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதுவும் நிலையற்றது. ஆட்சி மாற்றம் ஏற்படலாம். சட்டவிரோதமான முறையில் செயற்பட்டால் அதற்கு சட்டத்தின் ஊடாக பதிலளிக்க நேரிடும் என்றார். https://www.virakesari.lk/article/228827
-
'குகேஷூக்கு ரூ.5 கோடி, கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம்' - தமிழக அரசின் ஊக்கத்தொகை எவ்வாறு முடிவாகிறது?
பட மூலாதாரம், olympics.com கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 28 அக்டோபர் 2025, 02:51 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆசிய இளையோர் போட்டிகளில் கபடியில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு அணிகளும் தங்கம் வென்றுள்ளன. அந்த அணிகளில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகா ரமேஷ் மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், பஹ்ரைனில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இரானை எதிர்த்து விளையாடி இந்திய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. கார்த்திகா, அபினேஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவர்கள் விமானத்தில் சென்னை வந்தவுடன் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். இந்த செய்தி வெளியானது முதலே, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை குறித்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற வீரர் குகேஷுக்கு ரூ.5 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியதுடன் ஒப்பிட்டு, கபடியில் சாதித்த வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை மிகவும் குறைவு என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கார்த்திகாவுக்கு உற்சாக வரவேற்பு பட மூலாதாரம், olympics.com கார்த்திகா, அபினேஷ் இருவருமே தத்தமது அணிகள் தங்கம் வெல்வதில் முக்கிய பங்கை ஆற்றியிருந்தாலும், கூடுதலான கவனம் கார்த்திகாவின் பக்கம் திரும்பியுள்ளது. கார்த்திகா சென்னை கண்ணகி நகரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழக குடியிருப்புகளில் வசிப்பவர். நகரின் பல்வேறு இடங்களில் குடிசை வீடுகளில் இருப்பவர்களை அப்புறப்படுத்தும் போது அரசு சார்பில் வழங்கப்படும் மாற்று குடியிருப்புகள் இவை. இந்த குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளே இல்லை என்று பல முறை புகார்கள் எழுந்துள்ளன. விளையாட்டு மைதானமே இல்லாத நிலையில் அங்குள்ள பூங்காவிலேயே கார்த்திகா கபடி விளையாட்டை கற்றுள்ளார். அவரின் தாய் துப்புரவு ஊழியராக இருந்து தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார், அவரது தந்தை கட்டுமானத் தொழிலாளி ஆவார். வெற்றிப்பெற்று கண்ணகி நகருக்கு திரும்பிய கார்த்திகாவுக்கு அப்பகுதியினராலும், காவல்துறை சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. "வேலைக்கு செல்லும் போது 'கண்ணகி நகரில்' இருந்து வருகிறேன் என்று கூறுவதே தாழ்வாக பார்க்கப்படும். இப்போது நான் 'கண்ணகி நகர் ஆளு' என்று பெருமையுடன் கூறுவேன், இப்பகுதியினரும் அதில் பெருமை கொள்ள முடியும்" என்று கார்த்திகா ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். கண்ணகி நகரில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அவர் அதை செய்து தருவதாக உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், olympics.com படக்குறிப்பு, கபடி வீரர் அபினேஷ் மோகன்தாஸ் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இவர்களை தவிர அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோரும் கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். வீடியோ அழைப்பின் (வீடியோ கால்) மூலம் கார்த்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த விசிக தலைவர் திருமாவளவன், கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு தலா ஒரு கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் . சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவருமான வேல்முருகன், சதுரங்க ஆட்டத்தில் வென்ற குகேஷுக்கு ரூ.5 கோடி, பனிச்சறுக்கு விளையாட்டில் வென்ற ஆனந்த் குமாருக்கு ரூ.1.8 கோடி கொடுத்த பெருந்தன்மையான தமிழக அரசு கபடி வீரர்கள் இருவருக்கும் தலா ஒரு கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். "குகேஷுக்கு ரூ.5 கோடி, கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம்தானா?" என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழக அரசின் செயலை ஆதரித்தும் சிலர் பதிவிட்டுள்ளனர். கார்த்திகாவைப் போலவே, தங்கம் வென்ற ஆண்கள் அணியில் இடம்பெற்ற அபினேஷ் மோகன்தாசும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்டவர் தான். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், தந்தையை இழந்தவர். தேனியில் உள்ள தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயின்றவர் ஆவார். பட மூலாதாரம், TNDIPR ஊக்கத்தொகை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? கார்த்திகாவுக்கும் அபினேஷுக்கும் வழங்கப்பட்ட தலா ரூ.25 லட்சம் இரண்டு அலகுகளாக பிரிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை நிர்வாக அலுவலர் /உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி கூறினார். பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "தமிழ்நாடு அரசின் உயரிய ரொக்க ஊக்கத்தொகையாக (High Cash Incentive) ரூ.15 லட்சமும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பாக ரூ.10 லட்சமும் என ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. உயரிய ரொக்க ஊக்கத்தொகை அரசு வெளியிட்டுள்ள ஆணைப்படி நிர்ணயிக்கப்பட்ட தொகையாகும். அது தவிர, இருவரின் விளையாட்டை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு தாமாக முன் வந்து கூடுதலாக ரூ.10 லட்சத்தை தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பாக வழங்க முடிவு செய்துள்ளது." என்று விளக்கம் அளித்தார். எந்த விளையாட்டுக்கு எவ்வளவு ஊக்கத்தொகை? தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வெளியிட்ட 2019-ம் ஆண்டு அரசாணையின் படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.2 கோடி, வெள்ளி வெல்பவருக்கு ரூ.1 கோடி, வெண்கலம் வெல்பவருக்கு ரூ.50 லட்சம் உயரிய ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். அந்த அரசாணையின் படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வெல்பவருக்கு ரூ.50 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.30 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.25 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.15 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதே போன்று, ஆசிய இளைஞர் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.15 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.10 லட்சம், மற்றும் வெண்கலம் வெல்பவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.1 கோடி, வெள்ளி வெல்பவருக்கு ரூ.60 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.40 லட்சம் வழங்கப்படும். அதுவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியாக இருந்தால், அதில் தங்கம் வெல்பவருக்கு ரூ.75 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.50 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும். ஆண்டு தோறும் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெல்பவருக்கு ரூ. 50 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.30 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும். இவை தவிர பல்வேறு போட்டிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்த விவரங்களை அரசாணை குறிப்பிடுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை நிர்வாக அலுவலர் விளக்கம் இது வரை வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகைகள் மேற்குறிப்பிட்ட அரசாணைக்கு உட்பட்டே வழங்கப்பட்டது என்று மேகநாத ரெட்டி கூறினார். 'குகேஷுக்கு ரூ.5 கோடி, கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சமா?' என்று குறிப்பிட்டு எழுந்துள்ள விமர்சனம் குறித்து கேட்ட போது, "இரண்டு விளையாட்டுகளை, இரண்டு போட்டிகளை ஒப்பிடுவதே தவறு. ஆசிய போட்டிகளும் உலக சாம்பியன்ஷிப் போட்டியும் வெவ்வேறானவை. ஐந்து ஆறு நாடுகள் பங்கேற்கும் போட்டியையும் 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் போட்டியையும் ஒப்பிடக் கூடாது. கார்த்திகாவின் திறமையை, பங்களிப்பை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை. அவரது வெற்றியின் காரணமாக தமிழ்நாடு பெருமை கொள்கிறது, அதே போன்று தான் அபினேஷின் வெற்றியும். அவர் அரசு விடுதியில் பயின்றவர். அரசாணைப்படி அவர்களுக்கு ரூ.15 லட்சம் தான் ஊக்கத்தொகை. ஆனால் அவர்களின் அபாரமான விளையாட்டை அங்கீகரிக்கும் வகையிலேயே கூடுதலாக பத்து லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதே போன்று தான் குகேஷுக்கும். தமிழ்நாட்டில் ஊக்கத்தொகை வழங்க மிக நேர்த்தியான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பீடுகள் சரியல்ல" என்று கூறினார். பட மூலாதாரம், கவிதா செல்வராஜ் படக்குறிப்பு, இந்திய கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் கபடி அணி பயிற்சியாளர் கூறியது என்ன? இந்திய கபடி அணியின் தற்போதைய பயிற்சியாளரும் கபடியில் சர்வதேச அளவில் நான்கு முறை தங்கப் பதக்கங்களை வென்றவருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிதா செல்வராஜ் (40), "இப்போது ஊடக கவனம் அதிகம் இருப்பதால் இந்த வெற்றிகள் வெளியில் தெரிகின்றன. அதன் மூலம் ஒரு வெளிச்சம் கிடைப்பது மகிழ்ச்சி. கபடிக்கு, அதுவும் ஆசிய இளைஞர் போட்டிக்கு ரூ.25 லட்சம் கொடுத்திருப்பது குறைவானது அல்ல. நான் 2010-ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற போது ரூ.20 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. 2008-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற போது ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. 2009 தெற்கு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற போது ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது" என்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இந்திய கபடி அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் அவர், "2005-ம் ஆண்டு விளையாட்டு கோட்டாவில் அல்லாமல் எனது சொந்த முயற்சி மற்றும் தகுதியில் காவல்துறையில் சேர்ந்தேன். காவல்துறையில் இருக்கும் போது தான் நான்கு சர்வதேச பதக்கங்களை வென்றேன். ஆனால் எனக்கு எந்த பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. 2013-ம் ஆண்டு அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டேன்" என்கிறார். மேலும் பேசிய அவர், "உடல் ரீதியாக அதிக உழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14pe5z4g1yo
-
13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழீழத்தை உருவாக்குவதே ஐ.நா.வின் நோக்கம்; அதற்கு அரசாங்கமும் துணை நிற்கிறது - முன்னாள் கடற்படை அதிகாரி டி.கே.பி.தசநாயக்க
27 Oct, 2025 | 06:45 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படாமலிருப்பதற்கு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி வடக்கு, கிழக்கை வேறாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேற்றப்படும் வரை ஒவ்வொரு ஐ.நா. கூட்டத் தொடரின் போதும் இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அரசாங்கமும் ஐ.நா.வின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பாடுபடுவதாக முன்னாள் கடற்படை அதிகாரி ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்தார். ஐ.நா.வில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான பழிவாங்கல் தொடர்பில் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இம்முறை இடம்பெற்ற ஐ.நா. கூட்டத் தொடரில் அதிக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்திலிருப்பதாக மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார். எவ்வாறிருப்பினும் அவரது உரையை வெளிவிவகார அமைச்சர் முற்றாக நிராகரித்தமை மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அதன் பின்னரான அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை அவதானிக்கும் போது இது தொடர்பில் இருதரப்புக்குமிடையில் ஏதேனும் தொடர்புகள் காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐ.நா. உயர்ஸ்தானிகர் வலியுறுத்துவதைப் போன்று ரோம் பிரகடனம் கைச்சாத்திடப்பட்டால் அது ஒட்டுமொத்த பாதுகாப்பு படைகளையும் காட்டிக் கொடுப்பதற்கு சமமாகும். பிரிவினைவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இன்னும் இரு மைல் கற்களை மாத்திரமே கடக்க வேண்டியுள்ளது. அதற்கான இரு ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டால் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடிய எல்லை வரை செல்ல முடியும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் நாட்டின் தேசிய பாதுகாப்பு பலவீனமடையும். வெளியகப் பொறிமுறைகளை ஏற்கப் போவதில்லை என அரசாங்கம் கூறினாலும், சர்வதேச அழுத்தங்களை எம்மால் தவிர்க்க முடியாது. உண்மை மற்றும் நல்லிண ஆணைக்குழு அமைக்கப்பட்டாலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. எனவே மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படுவதை தடுப்பதற்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி வடக்கு, கிழக்கை வேறாக்குவதே ஐ.நா.வின் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேற்றப்படும் வரை ஒவ்வொரு ஐ.நா. கூட்டத் தொடர் இடம்பெறும் போதும் தொடர்ச்சியாக எமக்கு இந்த நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டாலும், சர்வதேசத்துடனான அவர்களது தொடர்புகள் இன்னும் காணப்படுகின்றன. அவர்களிடம் பலமும், பணமும் இருக்கிறது. எனவே அவர் இதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வார்கள். இது ஓயாத அலையாகும். எனவே ஐ.நா.வைப் போன்று நாமும் இடைவிடாது இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாது. யுத்தத்தால் தோற்கடிக்கப்பட்ட ஒரு விடயத்தை மீண்டும் ஒப்பந்தம் மூலம் வெற்றி கொள்ள முயற்சிக்கின்றனர். இதற்கு எதிராக பாதுகாப்பு படையினர் குரல் கொடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். பாதுகாப்பு படை மாத்திரமின்றி முழு நாடும் இதற்காக ஒன்றிணைய வேண்டும். புலம் பெயர் தமிழர்களிடம் நாம் உங்களுக்காக நிற்கின்றோம் என்பதைக் காண்பிப்பதற்காகவே ஐ.நா. உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்தார். எதிர்கால நிதி திரட்டலே ஐ.நா. உயர்ஸ்தரினகரின் நோக்கமாகும். ஏதோ ஒரு நோக்கத்துக்காக இந்த அரசாங்கம் ஐ.நா.வின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உறுதி பூண்டுள்ளது. வெளிவிவகார அமைச்சரும் அதற்கேற்பவே பாராளுமன்றத்திலும் சில கூற்றுக்களை முன்வைத்துள்ளார். இதற்கு நாட்டு மக்கள் எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/228826
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எல்லாம் ஒரு குத்து மதிப்பிலதான் போகுது அண்ணை! தரவரிசையில் முன்னணியில் இருப்பவர்களை நம்பிப்போட்டது, எங்க கொண்டுபோய் விடுவினமோ தெரியல!!
-
எம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….
ஒரு முன்குறிப்பு : ========= தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிய தோழன் யுகபாரதியின் ”நேற்றைய காற்று” என்கிற புத்தகம் பற்றித்தான் இந்தவாரம் உங்களோடு கதைக்கப்போகிறேன். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் முன்னரே தமிழ் திரைப்படப் பாடல்களில் உள்ள ஆபாசங்கள்…. வக்கிரங்கள்… பகுத்தறிவற்றதனங்கள் குறித்தெல்லாம் எனது ”வாலி + வைரமுத்து = ஆபாசம்” என்கிற நூலில் துவைத்துக் காயப்போட்டு விட்டபடியால் மீண்டும் அவற்றுள் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. . இங்கு பேசப்போவது தம்பி யுகபாரதியின் நூல்குறித்து மட்டுமே. இந்நூல் குறிப்பிடும் பாடலாசிரியர்களில் மகத்தான பாடல்களைக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்…. கெடுத்தவர்களும் இருக்கிறார்கள். எனவே இது இப்பாடலாசிரியர்களின் பாடல்களைக் குறித்த யுகபாரதியின் பார்வையினூடே பயணிக்கும் ஒரு பயணம்தான். . இனி…. . சில ஆண்டுகளுக்கு முன்னர் வார இதழ் ஒன்றில் கவிஞர் யுகபாரதி எழுதிய தொடர் ஒன்றின் நீட்சிதான் இந்த “நேற்றைய காற்று.” . வார இதழ்களுக்கே உரிய பக்க நெருக்கடியால் சொல்லாமல் விட்டவற்றை விரிவாகவும் ஆழமாகவும் அலசி ஆராய்ந்து அளித்திருக்கிறார். அதுவும் ஐநூறைத் தொடும் பக்கங்களோடு. . இதைப் பற்றி எழுத உட்காரும்போதெல்லாம் யுகபாரதி குறிப்பிடும் பாடல்களைச் சுற்றியும்… கவிஞர்களைச் சுற்றியும் வட்டமிட ஆரம்பித்துவிடும் மனம். . அப்புறம் சும்மாவா இருக்க முடியும் ? . யுகபாரதி ஒரு பாடல் குறித்துக் குறிப்பிட்டால் உடனே அதைக் கேட்டாக வேண்டும் என்கிற ஆவல் எழுந்து யூடியூப்பில் பார்க்கத் தொடங்கிவிடுவேன். . மனம் அந்தப் பாடல்வரிகளில் மிதக்கத் தொடங்கிவிடும். இப்படியே யூடியூப்பில் மூழ்கிக் கிடந்தால் அப்புறம் எப்போதுதான் எழுதுவது? ச்சை…. முதலில் இதை நிறுத்தித் தொலைக்க வேண்டும் என முடிவெடுத்து எழுத ஆரம்பிப்பதற்குள் மூன்று நான்கு வாரங்கள் கடந்தோடி விட்டது. . வெறுமனே பாடல்களைப் பற்றி மட்டும் குறிப்பிடாமல்… அந்தப் பாடலாசிரியர் பயணித்த பாதை எது…? எந்த சித்தாந்தம் அவரை இப்படிப் பயணிக்க வைத்தது…? அந்த வேளையில் கோலோச்சிக் கொண்டிருந்த சித்தாந்ததிற்கு அவர்கள் எப்படி உரமூட்டினார்கள் என்பது குறித்தெல்லாம் விரிவாக…. மிக விரிவாகப் பேசுகிறது “நேற்றைய காற்று”. . யுகபாரதி முன்னுரையில் குறிப்பிடுவதைப் போல “மொழியறியாத ஒருவர் இசையமைப்பாளர் ஆகலாம்… . இனமறியாத ஒருவர் இயக்குநராக ஆகலாம்… . ஆனால், தமிழைப் பிழையற அறியாதவர்களோ, தமிழினத்தைப் பற்றிய புரிதல் இல்லாதவர்களோ பாடலாசிரியராக ஆக முடியாது.” உண்மைதான். . ஆனால், இப்போது பாடல் எழுதிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் இந்த மொழி குறித்தும், இனம் குறித்தும் புரிதல் உள்ளவர்கள்? என்கிற கேள்வியும் யுகபாரதிக்குள் எழமலில்லை. . ஆனால் அவற்றுக்குள் தலையை நீட்டி சர்ச்சைகளுக்குள் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை அவர். . திரைத்துறைக்கு வெளியில் இருக்கும் என்னைப் போன்றவர்கள் வேண்டுமானால் அடித்து ஆடலாம். ஆனால் தம்பியைப் போன்றவர்கள் கடுமையான விமர்சனத்தில் ஈடுபட்டால் அது பொறாமையின் நிமித்தமும், போட்டியின் நிமித்தமும் எழுந்ததாகவே பொருள் கொள்ளப்படும். . ஆயினும் அவ்வப்போது நாசூக்காகச் சுட்டியும் செல்கிறார். . யுகபாரதி தேர்ந்தெடுத்து எழுதியுள்ள இருபது பாடலாசிரியர்களில் கண்ணதாசனோ, கல்யாணசுந்தரமோ, வாலியோ, வைரமுத்தோ இடம்பெறவில்லை. . பரவலாக அறியப்பட்ட இவர்கள் குறித்து எழுதுவதை விட…. இன்னமும் விரிவாக அறிந்தாக வேண்டிய கவிஞர்களின் மீது கவனம் குவித்திருக்கிறார். . நா. காமராசன் / புலமைப்பித்தன் / கவி. கா.மு. ஷெரீப் / உடுமலை நாராயணகவி / அறிவுமதி / மருதகாசி / பஞ்சு அருணாசலம் / ஆலங்குடி சோமு / கங்கை அமரன் / மு. மேத்தா என நீளுகிறது அப்பட்டியல். . இவர்களில் திராவிட இயக்கச் சிந்தனையில் வந்தவர்களும் உண்டு… . பொதுவுடைமைச் சிந்தனையில் வந்தவர்களும் உண்டு…. . தமிழ்த் தேசிய சிந்தனை மரபில் வந்தவர்களும் உண்டு. . . தனது “கருப்பு மலர்கள்” கவிதைத் தொகுப்பால் அதிரவைத்த நா. காமராசனை ”சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது” என “நல்லவனுக்கு நல்லவன்” படத்தின் பாடலைச் சொன்னால் சட்டெனப் புரியும் பலருக்கு. . அறுபதுகளில் பிறந்தவர்களுக்கோ நீதிக்குத் தலைவணங்கு படத்தில் வரும் “கனவுகளே ஆயிரம் கனவுகளே” பாடலும் அதில் வரும்…. . “நகக்குறி வரைகின்ற சித்திரமோ / அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ / முகமென்று அதற்கொரு தலைநகரோ / கைகள் மூடிய கோட்டைக் கதவுகளோ” என்கிற வரிகளும் வந்துபோகும். வானிலே தேனிலா பாடுதே / வெளக்கு வெச்ச நேரத்திலே / பாட்டுத் தலைவன் பாடினால் போன்ற பாடல்களைக் கொடுத்த நா. காமராசனின் பாடல்களில் என்னை இன்னமும் இதமாக வருடும் பாடலும் ஒன்றுண்டு. . அதுதான் : . ’ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் வரும்…. “இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்” என்கிற பாடலும்…. . அதில் வரும் ”புத்தனின் முகமோ / என் தத்துவச் சுடரோ / சித்திர விழியோ / அதில் எத்தனை கதையோ “ என்கிற வரிகளும்தான்… . நா. காமராசனின் பாடல்களோடு நிற்காது அவருக்கும் கலைஞருக்கும் இருந்த தொடர்பு… அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவு… அவரது அதிரடி பேச்சு என பல்வேறு சுவையான செய்திகளையும் சொல்கிறார் யுகபாரதி. . . ”எனக்கு வியாபார புத்தியும் இல்லை. விளம்பர யுக்தியும் தெரியவில்லை.” என வருந்திய புலமைப்பித்தன் கோவை சூலூரில் மரத்தடி பள்ளியில் தமிழ் பயின்று தமிழாசிரியராய் உயர்ந்து எழுதிய பாடல்கள் ஏராளம். . ”பழுதுபார்த்து ஒதுக்க முடியாத பாடல்களை மட்டுமே எழுதிய பாடலாசிரியர்களாக இருவரைக் கொள்ளலாம். . ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மற்றொருவர் புலமைப்பித்தன்” என்கிறார் யுகபாரதி. . 1966 இல் வெளிவந்த ’குடியிருந்த கோயில்’ திரைப்பட்த்தில் வரும் “நான் யார், நான் யார் நீ யார்?” பாடலில் தொடங்குகிறது புலமைப்பித்தனின் திரையுலகப் பயணம். . அணி இலக்கணத்தை முதன்மையாகக் கொண்டு அவர் எழுதியுள்ள பாடல்களின் பட்டியல் நீளமானது. . ”நாயகனில்” வரும்… ”நீயொரு காதல் சங்கீதம் / வாய்மொழி சொன்னால் தெய்வீகம்…” . ”நீதிக்குத் தலை வணங்கு” படத்தில் வரும் “இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்….” . ”ரோசாப்பூ ரவிக்கைக்காரி”யின் “உச்சி வகுந்தெடுத்துப் பிச்சிப்பூ வச்ச கிளி…” . ’அடிமைப்பெண்’“ணின் “ஆயிரம் நிலவே வா… ஓராயிரம் நிலவே வா…” என ஏராளம் எழுதிக் குவித்திருக்கிறார் புலவர். . தம்பி யுகபாரதி ”ஜோக்கரில்” எழுதிய “என்னங்க சார் உங்க சட்டம்” பாடலுக்கான உந்துதலே புலவர் எழுதிய ”நீதிக்குத் தண்டனை” திரைப்படத்தில் வரும் “ஓ மனிதர்களே கொஞ்சம் நில்லுங்கள்” பாடல்தான் என்பது யுகபாரதியின் கருத்து. . எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தாலும் கலைஞரின் படங்களுக்குப் பாடல் எழுதும் துணிச்சல் புலவர் புதுமைப்பித்தனுக்கு இருந்திருக்கிறது. . திரைப்பாடல்கள் மட்டுமின்றி அவரது “புரட்சிப் பூக்கள்” கவிதை நூல் குறித்து… . தமிழீழ மக்களின் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் அவருக்கும் இருந்த நேசம் . குறித்தெல்லாம் விரிவாகச் சிலாகிக்கிறார் யுகபாரதி. . எனது மனதைத் தொட்ட பாடல்கள் வரிசையில் அவர் அழகன் திரைப்படத்தில் எழுதிய “சாதி மல்லிப் பூச்சரமே” பாடலுக்கு பிரதான பங்கிருக்கிறது. . . ”ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?” என நம்மைக் கேட்ட கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதிய மற்றொரு பிரபல பாடல்தான் “பாட்டும் நானே பாவமும் நானே” என திருவிளையாடலில் வரும் பாடல். . போட்டியும் பொறாமையும் நிறைந்த படவுலகில் தான் எழுதிய அப்பாடலை கண்ணதாசன் பெயரில் வெளிவருவதற்குச் சம்மதித்து இருக்கிறார் கா.மு. ஷெரீப் என்பது ஜெயகாந்தன் தனது “ஒரு எழுத்தாளனின் திரையுலக அனுபவங்கள்” என்கிற நூலில் எழுதிய பிறகுதான் வெளி உலகுக்கே தெரிய வந்திருக்கிறது. . கலைஞரின் நண்பராயினும் தமிழரசுக் கட்சியில் தன் பயணத்தைத் தொடர்ந்தவர். மதத்தைத் தாண்டிய மனிதநேயத்தை முன்னிறுத்தியதற்கு முன்னுதாரணமாகச் சொல்லலாம் கவிஞர் கா.மு. ஷெரீப்பை. . “வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா” என்ற கவிஞர் “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” என சுட்டிக்காட்டவும் தவறவில்லை. . ”ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே” பாடல் தந்த உந்துதலே தன்னை ”ஜிங்கு ஜிங்கு ஜிமிக்கு போட்டு” என எழுத வைத்ததென்பது யுகபாரதியின் வாக்குமூலம். . திரைத்தமிழை எதார்த்த தத்துவத் தளத்திற்கு இழுத்து வந்ததில் கவிஞர் கா.மு. ஷெரீப்பிற்கு பெரும் பங்குண்டு. . ”கவிஞன் தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளைமாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக்கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடன் எழுத வேண்டும்.” . என்ற கா.மு. ஷெரீப்பை இத்துறையில் இருந்து சந்நியாசம் வாங்க வைத்ததே “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் / அவன் மாம்பழம் வேண்டுமென்றான்” என்கிற வாலியின் பாடல்தான். . “என்னை சினிமாவை விட்டுத் துரத்திய பாடல் அது” என்று 1986 பத்திரிகை நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர். . இந்நூலில் பாடலாசிரியர்களது திரையுலக அனுபவங்களை மட்டுமல்லாது அவர்களது அரசியல் அனுபவங்களையும் சுவாரசியமாகச் சொல்லிச் செல்லும் யுகபாரதி கா.மு. ஷெரீப்பிற்கு ஏற்பட்ட ஒரு சோகத்தையும் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுகிறார். . தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தமிழரசுக் கழகத்தின் வளர்ச்சிக்காகவே பாடுபட்ட அவருக்கு அதன் தலைவர் ம.பொ.சி. கொடுத்த ”அல்வா” பற்றிய சம்பவம்தான் அது. . ம.பொ.சி. யின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டிற்கு ஐம்பது பவுன் தங்கம் வழங்கத் திட்டம் போடுகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் ஐம்பது பவுனுக்கான தொகை வசூலாவதில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் முடியைப் பிய்த்துக் கொண்டு நிற்கிறார்கள். . இத்தனைக்கும் அப்போது மோடி கிடையாது. . அதைப் பார்த்த அக்கழகத்தின் பொதுச் செயலாளரான கா.மு. ஷெரீப் தன் மனைவி கழுத்தில் போட்டிருந்த நகைகளைக் கழற்றி அவரது தலைவர் ம.பொ.சி. கழுத்தில் போடுகிறார். . அதில்தான் அத்தலைவருக்கான காரே வாங்கப்படுகிறது. ஆனாலும் ”தலைவர்” தான் எழுதிய “எனது போராட்டம்” என்கிற போராட்ட காதையில் கா.மு. ஷெரீப் அவர்களைப் பற்றி கூடுதலாக ஒரு வரிகூட குறிப்பிடவில்லை என்பதுதான் அதிலுள்ள சோகம் என்கிறார் தம்பி யுகபாரதி. . . பராசக்தி படத்தில் ”கா… கா… கா…” பாடலில் வரும் ”எச்சிலை தனிலே எறியும் சோற்றுக்குப் பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே / வலுத்தவன் இளைத்தவன் இனச்சண்டை பணச்சண்டை / எத்தனையோ இந்த நாட்டிலே “ வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ஐம்பதுகளிலேயே இப்படியொரு கருத்தாழம்மிக்க பாடலை யார் எழுதியிருப்பார்கள் என்று யோசித்ததுண்டு. . பிற்பாடுதான் தெரிந்தது அந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் உடுமலை நாராயணகவி என்பது. . திராவிட இயக்கக் கருத்துக்களை மக்கள் மத்தியில் வரவேற்புக்குரியதாக மாற்றியதில் பெரும் பங்கு இவரையே சாரும். . திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த நாராயணகவிக்கு தமிழையும் கலையையும் கற்றுத் தந்தவர் முத்துசாமிக் கவிராயராம். . பெரியாரின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் பற்றுக் கொண்டவர் நாராயணகவி. . சோவியத்து ரஷ்யாவைப் பார்த்துவிட்டு வந்த பெரியாருக்கு கலைத்துறையினர் பாராட்டுவிழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்ய… வரமாட்டேன் என்று மறுத்து விடுகிறார் பெரியார். . ஆனால் அவசியம் நீங்கள் கலந்து கொள்ளவேண்டும் என நாராயணகவி வேண்டுகோள் விடுக்க… . ”யாருக்காக இல்லாவிட்டாலும் நாராயணகவிக்காகக் கலந்து கொள்கிறேன்” என்று கூறி கலந்து கொண்டிருக்கிறார் பெரியார். . திரைத்துறை மீது அவ்வளவு நல்ல எண்ணம் இருந்ததில்லை பெரியாருக்கு என்பது ஊரறிந்த ரகசியம். . ஆனால் அவரையே யோசிக்க வைத்த பாடல் உண்டென்றால் அது ”டாக்டர் சாவித்திரி” படத்தில் இடம்பெற்ற “காசிக்குப் போனால் கருவுண்டாகுமென்ற காலம் மாறிப் போச்சு” என்கிற நாராயணகவியின் பாடல்தான். . அவருக்கும் கலைவாணருக்கும் இருந்த உறவு…. . அவருக்கும் பாபநாசம் சிவனுக்கும் இருந்த உறவு என இதில் விரிவாகச் சொல்லியிருக்கிறார் யுகபாரதி. . இதில் சுவாரசியமான ஒரு தகவல் உண்டென்றால் அது உடுமலையார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கன்னத்தில் விட்ட அறைதான். . தேவதாஸ் படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான “உலகே மாயம், வாழ்வே மாயம்” பாடல் பதிவின் போது நடந்த சம்பவம்தான் அது. . நாராயணகவி எழுதிய அப்பாடலை பாடிய கண்டசாலா தமிழையும் தெலுங்கு போல உச்சரித்து “உல்கே மாயம், வால்வே மாயம்” எனப் பாட ”தமிழை ஏண்டா இப்படிக் கொலை செய்கிறீர்கள்?” என்று விழுந்திருக்கிறது அறை எம்.எஸ்.வி.க்கு. . இதைச் சொல்லிவிட்டு ஆனால் அதற்குப் பிறகு தம்பி யுகபாரதி சொல்வதுதான் உச்சகட்டமான சமாச்சாரம். அதை அவரது வரிகளிலேயே சொல்வதானால்…. . “காலத்திற்கேற்ப பாடுவதாகச் சொல்லிக் கொண்டு, என்னுடைய பலபாடல்களை இந்தப் பாடகர்கள் கொன்று புதைத்திருக்கின்றனர். . இசையமைப்பாளரை அறையக்கூடிய கவிராயர்கள் இப்போதில்லை என்பதல்ல, எழுதக்கூடிய கவிராயர்கள் பலருக்கே தமிழ் சரியாகத் தெரியாது என்பதுதான் இன்றைய நிலை.” என்கிற யுகபாரதியின் ஆதங்கத்துக்கு யார் ஆறுதல் சொல்வது? . . என்னடா இவன் இன்னும் அறுபதுகளையே தாண்டவில்லையே எப்போது இவன் நம்ம காலத்துக்கு வந்து சேரப் போகிறான் என நீங்கள் சலித்துக் கொள்வது புரிகிறது. . என்ன செய்வது…. நேற்றைய செய்திதானே நாளைய வரலாறு…? . . இசைஞானியை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலத்தின் பக்கம் வருவோம். 1962 இல் அவர் எழுதிய “மணமகளே மருமகளே வா வா” என எழுதிய அந்தப் பாடல்தான் தமிழக மக்கள் மத்தியில் அவரைப் பிரபலப்படுத்தியது. . இன்றைக்கும் திருமண வீடுகளில் ஒலிக்கும் பாடல்களில் அதுவும் ஒன்று. நமது நோஸ்டால்ஜியாவைக் கிளப்பிவிடும் பாடல்களில் ஏகப்பட்ட பாடல்கள் பஞ்சு அருணாசலத்தினுடையவைதான். . . ”சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்” / ”தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்” / “கண்மணியே காதலென்பது” / “அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை” / “பருவமே புதிய பாடல் பாடு” / “விழியிலே மலர்ந்தது” / “ராஜா என்பார் மந்திரி என்பார்” / “குயிலே கவிக்குயிலே” / ”தூரத்தில் நான் கண்ட உன்முகம்” என எண்ணற்ற அற்புதமான பாடல்களுக்குச் சொந்தக்காரர் அவர். . அவர் எழுதியவற்றிலேயே எனக்கு மிகவும் பிடித்தது என்றால் 1965 இல் வெளிவந்த ”கலங்கரை விளக்கம்” படத்தில் வரும் “பொன்னெழில் பூத்தது புதுவானில் வெண்பனி தூவும் நிலவே நில்” என்கிற பாடல்தான். . இளையராஜாவின் ஆளுமையைப் புகழ்வதற்கென்றே எண்ணற்ற பாடல்களை எழுதியவர் பஞ்சு அருணாசலம். . ஆனால் அவர் வசனம் எழுதிய இயக்கிய படங்களில் சிலவற்றில் பெண்கள் பற்றிய பார்வை பிற்போக்கானவைதான் என்பதை யுகபாரதியும் ஒப்புக் கொள்கிறார். . நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இங்கு நூல் குறித்து மட்டுமே எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் என்பதால் விமர்சனங்களைத் தவிர்த்திருக்கிறேன். . அதை வேறொரு தளத்தில்… வேறொரு தருணத்தில் பார்ப்போம். . . அடுத்ததாக யுகபாரதி சிலாகித்து எழுதியிருக்கிற ”அண்ணன்” எனக்கும் அண்ணன் தான். . அதுதான் பாவலர் அறிவுமதி. . மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ”சிறைச்சாலை” படத்தின் பாடல்களைக் கேட்டு சொக்கிப் போயிருக்கிறேன் நான். . அதிலும் அதில் வரும்… ஆசை அகத்திணையா / வார்த்தை கலித்தொகையா / அன்பே நீ வா வா புது காதல் குறுந்தொகையா… என்கிற வரிகளாகட்டும்…. கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ / கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ? என்கிற வரிகளாகட்டும்…. . ”நிலாவின் பிள்ளை இங்கு நீ தானோ? பூஞ்சோலைப் பூக்களுக்குத் தாய்தானோ…?” என வளைய வரும் வரிகளாகட்டும் இன்றும் என் பொழுதுகளை இனிமையாக்கக் கூடியவை. . பலநாட்கள் யார் எழுதியது என்பதை அறிந்து கொள்ளாமலேயே “முத்தமிழே முத்தமிழே முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன” பாடலை ரசித்திருக்கிறேன். . பாலு மகேந்திரா இயக்கி இளையராஜா இசையில் வெளிவந்த ”ராமன் அப்துல்லா” படப்பாடல் அது. . அதில் வரும் ”நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல் மழை….” . “உந்தன் பேரைச் சொல்லித்தான் காமன் என்னைச் சந்தித்தான்… “ என்கிற அறிவுமதியின் வரிகள் கிறக்கம் வரவழைப்பவை. . ”சேது”வில் வரும் ”எங்கே செல்லும் இந்தப் பாதை”யாகட்டும்… . ”மாலை என் வேதனை கூட்டுதடி…”யாகட்டும் எல்லாம் அறிவுமதியின் சாதனையைக் கூட்டும் பாடல்கள்தான். . அவரது பாடல்களை விடவும் நாம் கொண்டாட வேண்டிய குணாம்சம் ஒன்று இருக்கிறதென்றால் அது அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் அவரது அறச்சீற்றம்தான். . எழுத்தாளர் சுஜாதாவின் புறநானூற்று உரைக்கான மறுப்பாகட்டும்…. . மணிரத்னத்தின் ”இருவர்” படத்துக்கான எதிர்ப்பாகட்டும்…. . எல்லாமே அவரது அறச்சீற்றத்தின் அடையாளங்கள்தான். ”மதுரை வீரன் தானே”…. “அழகூரில் பூத்தவளே”… “தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்”… ”பொய் சொல்லக்கூடாது காதலி”… என நீண்டுகொண்டே போகும் பாவலர் அறிவுமதியின் பட்டியல். . . அரசவைக் கவிஞர் பதவியைப் பெற்ற கடைசிக் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய மாஞ்சோலைக் கிளிதானோ / பொன்மானத் தேடி / இதயம் போகுதே / சங்கீதமேகம் என பலபாடல்களைக் குறிப்பிடுகிறார் “நேற்றைய காற்றில்.” . . . இந்த நூலைப் படிக்கும் வரையில்கூட “மனுசனை மனுசன் சாப்பிடறாண்டா தம்பிப் பயலே” பாடலை எழுதியவர் நிச்சயம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன் நான். . ஆனால் 1956 இல் வெளிவந்த ”தாய்க்குப் பின் தாரம்” படத்திற்காக இப்பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி. . அதைப் போலவே “வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே” பாடலை எல்லோரும்கண்ணதாசன் தான் எழுதியிருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதை எழுதியவரும் மருதகாசிதான் என்கிற செய்தியை உரக்கச் சொல்கிறார் யுகபாரதி. . மருதகாசி அவர்களின் ”சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா….” ”காவியமா நெஞ்சின் ஓவியமா…” ”மணப்பாற மாடுகட்டி….” ”சமரசம் உலாவும் இடமே…” போன்ற அற்புதமான பாடல்கள் தோன்றிய விதம்… அதன் பின்னே ஒளிந்திருக்கும் சுவாரசியமான சம்பவங்கள் என நம்மை அழைத்துக் கொண்டு போகிறது ”நேற்றைய காற்று.” . . ஆலங்குடி சோமுவின்… ”உள்ளத்தின் கதவுகள் கண்களடா” “பொன்மகள் வந்தாள்” ”மஞ்சக்குளிச்சி அள்ளி முடிச்சு” போன்ற பாடல்கள் குறித்தும்…. . . கு.மா. பாலசுப்ரமணியத்தின்… ”அமுதை பொழியும் நிலவே” . ”சிங்கார வேலனே தேவா” . ”குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே” . ”இன்பம் பொங்கும் வெண்ணிலா” போன்ற நினைவை விட்டு அகலாத பாடல்கள் குறித்தும்…. விலாவாரியாகச் சொல்கிறது தம்பி யுகபாரதியின் கைவண்ணத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் படைப்பு. . . இங்கு சொன்னதை விடவும் நான் சொல்லாமல் விட்டதே அதிகம். . உண்மையில் இந்தநூல் ஒரு முனைவர் பட்டம் பெறுவதற்கான சகல தகுதியும் கொண்ட ஆய்வேடு என்றுகூட சொல்லலாம். . அவ்வளவு சுவாரசியம்மிக்க தகவல்கள். . தன் சமகாலத்துக் கவிஞர்கள் குறித்தும் இதில் விடுபட்ட முந்தைய தலைமுறைக் கவிஞர்கள் குறித்தும் அடுத்தடுத்து வரும் தனது தொகுப்பில் சேர்க்க இருக்கிறார் யுகபாரதி. அதன் பொருட்டு அவற்றை இத்தொகுப்பில் தவிர்த்திருக்கிறார். . வரிக்கு வரி…. பக்கத்திற்குப் பக்கம்… சுவாரசியமூட்டும் இந்நூல் எனது பல பொழுதுகளை இனிமையாக்கியது. . எனது காலக்குதிரையை பின்னோக்கி பயணிக்க வைத்ததில் தம்பி யுகபாரதியின் இப்புத்தகத்திற்குப் பெரும்பங்கிருக்கிறது. . எனவே….. யான் பெற்றதை நீங்களும் பெற… . “நேற்றைய காற்றை”… https://pamaran.wordpress.com/2019/12/04/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5/
-
தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - எப்படி நடைபெறும்?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உட்பட10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தப்பட உள்ளது. போலி பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவதாக இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் , சமீபத்தில் பிகாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தை "வாக்கு திருட்டு" எனக் கூறி நிராகரித்துள்ளது. மேலும் நிஜமான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம் சுமத்தியிருந்தது. முதல் கட்ட சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்ததாக ஞானேஷ் குமார் தெரிவித்தார். நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வருகிற 29-ஆம் தேதி மாலை 4 மணிக்கு எஸ்.ஐ.ஆர் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சிறப்பு தீவிர திருத்தம் எங்கெல்லாம் மேற்கொள்ளப்பட இருக்கிறது? அந்தமான் நிகோபார் சத்தீஸ்கர் கோவா குஜராத் கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் புதுச்சேரி ராஜஸ்தான் உத்திரப் பிரதேசம் மேற்கு வங்கம் தமிழ்நாடு சிறப்பு தீவிர திருத்ததுக்கான தேவை பற்றி முன்னர் பல முறை விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஞானேஷ் குமார் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுவது அவசியம் என்றும் தெரிவித்தார். "கடந்த சில தசாப்தங்களாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்காளர் பட்டியலில் குறைபாடு உள்ளது எனப் புகார் அளித்துள்ளனர். 1951 - 2004 வரை எட்டு முறை தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட்டு 21 வருடங்கள் ஆகிவிட்டது." எனத் தெரிவித்தார். பிகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அங்கு சிறப்பு தீவிர திருத்தம் அறிவிக்கப்பட்டது. அங்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், ECI படக்குறிப்பு, டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு சிறப்பு தீவிர திருத்தத்திற்கான அவசியத்திற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது. அவை விரைவான நகரமயமாக்கல் மக்கள் இடப்பெயர்வு இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெறுவது வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் சேர்க்கப்பட்டது பிகார் மக்கள் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை வெளிப்படுத்தியதாக ஞானேஷ் குமார் தெரிவித்தார். இந்தப் பணியின் போது தேர்தல் ஆணையத்துடன் பல தேர்தல் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். சராசரியாக ஒவ்வொரு 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி உள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியும் ஒரு வட்டார நிலை அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ளது. வட்டார நிலை அலுவலர் பணிகள் என்ன? புதிய வாக்காளர் பெயர்களை சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ சேகரித்து அவற்றை பட்டியலுடன் இணைக்க உதவி செய்வது படிவத்தை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவுவது ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை செல்வது. நகர்ப்புற வாக்காளர்கள் அல்லது தற்காலிகமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் இணையத்திலும் வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்யலாம் இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பதிவு செய்த வாக்காளர்களை அடையாளம் காண்பது முதல் கட்டத்தில் வாக்காளர் படிவத்துடன் வேறு எந்த ஆவணமும் சேகரிக்க வேண்டிய அவசியமில்லை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிகாரில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள் யாவை? அடையாள அட்டை, ஓய்வூதியம் பெறும் உத்தரவு, கடவுச்சீட்டு, கல்லூரி அல்லது பல்கலைக்கழக பட்ட சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட பல ஆவணங்கள் இதில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் என்பது குடியுரிமை, இருப்பிடம் அல்லது பிறந்த நாளுக்கான சான்று இல்லை எனத் தெரிவித்த ஞானேஷ் குமார், ஆனால் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு அதை ஒரு அடையாள அட்டையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். முக்கியமான நாட்கள் அச்சிடுதல்/பயிற்சி: அக்டோபர் 28 - நவம்பர் 3, 2025 வீடு வாரியாக சென்று தகவல் சேகரிப்பது: நவம்பர் 4 - டிசம்பர் 4, 2025 வரைவு வாக்காளர் பட்டியல்: டிசம்பர் 9, 2025 ஆட்சேபனை தெரிவிக்கும் காலகட்டம்: டிசம்பர் 9, 2025 - ஜனவரி 8, 2026 ஆட்சேபனை மீதான விசாரணை மற்றும் சரிபார்ப்பு: டிசம்பர் 9, 2025 - ஜனவரி 31, 2026 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பிப்ரவரி 7 , 2026 பட மூலாதாரம், Getty Images அசாம் ஏன் இடம்பெறவில்லை? நவம்பர் மாதம் நடைபெறும் பிகார் சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாமில் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இடங்களில் அசாம் இடம்பெறவில்லை. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கான விளக்கத்தை வழங்கினார் ஞானேஷ் குமார். "இந்திய குடியுரிமை சட்டத்தில் அசாமிற்கு தனி பிரிவுகள் உள்ளன. மேலும் அங்கு உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் குடியுரிமை சரிபார்ப்பு திட்டம் தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது." "எனவே ஜூன் 24-ஆம் தேதி சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஆணை ஒட்டுமொத்த நாட்டிற்குமானது. ஆனால் அது அசாமிற்கு மட்டும் பொருந்தாது. எனவே அந்த மாநிலத்திற்கென்று தனி ஆணை பிறப்பிக்கப்படும்." என்றார். எனினும் பிகாரில் நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டு தலைவர்கள் சொல்வது என்ன? சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "SIR எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தமாகிவிட்டது. மக்களின் வாக்குரிமையையே பறிக்கும் இந்த அநியாயம் ஏற்கெனவே பீகாரில் அரங்கேற்றப்பட்டதைப் பார்த்தோம்." எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக சிறப்பு தீவிர திருத்தத்தை வரவேற்பதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், "இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள S.I.R எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார். மேலும் திருத்தப்பணிகளை மாநில அரசின் கீழுள்ள அலுவலர்கள் தான் செய்யப்போகிறார்கள் என்பதால் அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பதில் " சதி" உள்ளது என்பது உண்மைதான். வாக்காளர் திருத்த பட்டியல் தமிழகத்தில் முறையாக நடக்குமா என்பது சந்தேகமே." எனத் தெரிவித்தார். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் தமது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj6n1w6w915o
-
தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: மத்தியஸ்தம் செய்த ட்ரம்ப்
Published By: Digital Desk 1 27 Oct, 2025 | 02:13 PM தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வந்த எல்லைப் பிரச்சினையால் வெடித்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் (ASEAN Summit) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது.இரு நாட்டுப் படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும், எல்லைப் பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடிச் சென்றனர். இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர முதலில் மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது. எனினும், மோதல் தொடர்ந்து நீடித்ததால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதில் நேரடியாகத் தலையிட்டு இரு நாட்டுத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆசிய நாடுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக மலேசியாவில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. கம்போடிய பிரதமர் {ஹன் மானெட் மற்றும் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் ஆகியோர் டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு கம்போடிய பிரதமர் {ஹன் மானெட் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான முக்கிய நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து காவலில் வைத்திருந்த 18 கம்போடிய வீரர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான 800 கிலோமீற்றர் நீளமுள்ள எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த கனரக ஆயுதங்களை அகற்றும் பணிகளை உடனடியாக ஆரம்பித்துள்ளன. அமைதி ஒப்பந்தத்துடன் சேர்த்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிராந்தியத்தில் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேலும் சில முக்கிய பொருளாதார ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டார். மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அரிய மண் தாதுக்கள் ஒப்பந்தம் (Critical Minerals Deal) ஆகியவற்றில் டிரம்ப் கையெழுத்திட்டார். மேலும், கம்போடியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்துடனான கனிம வள ஒப்பந்தம் ஆகியவற்றிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். https://www.virakesari.lk/article/228783
-
இனிய தீபாவளி
அண்ணை, முதலில் இந்த நாட்களுக்கு பெயர் வைக்க ஒரு நாள் முந்தியோ பிந்தியோ இருந்தால் இன்றைய திங்கள் ஞாயிறாகவோ அல்லது செவ்வாயாகவோ இருந்திருக்கலாம்!🤔
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
சுவி அண்ணை முன்னாள் சாம்பியன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்! (அப்ப நான் இரண்டாமிடம்!!) அண்ணை நீங்க வாங்கோ மேல, நான் ஒதுங்கி நிக்கிறேன்.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மைத்திரிபால சிறிசேனவின் மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
27 Oct, 2025 | 06:14 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த எச்சரிக்கையை புறக்கணித்து அதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்ஆகியோரால் கோட்டை நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட மனு தாக்கல் செய்திருந்தனர். அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார். மைத்திரிபால சிறிசேனவின் மனு இன்றைய தினம் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/228823
-
இலங்கை தொடர்பான புதிய தீர்மானம்: நீதிக்குப் பதிலாக தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கையே ஊக்குவிக்கிறது - ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்
27 Oct, 2025 | 06:18 PM (நா.தனுஜா) இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படைக்காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியுள்ளது. குறிப்பாக அத்தீர்மானம் தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பிரித்தானிய தமிழர் பேரவை தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்றுமுடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 60/1 தீர்மானம் குறித்து தமது கரிசனையை வெளிப்படுத்தி பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் வி.ரவிகுமார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். இப்புதிய தீர்மானமானது தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அத்தோடு 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படை காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியிருப்பதுடன், தமிழர் தாயகத்தில் பல தசாப்த காலமாக அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்டவரும் வன்முறைகளுடன் கூடிய இனவழிப்பின் கூறுகளை முழுமையாகப் புறக்கணித்திருப்பதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று 1956 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சட்டத்துக்கு முரணான கட்டமைக்கப்பட்ட வன்முறைகள் இடம்பெற்றுவருவதைக் காண்பிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை வசம் 120,000 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ள போதிலும், இப்புதிய தீர்மானம் தமிழர்களின் நம்பிக்கையை சீர்குலைத்திருப்பதாக அதில் விசனம் வெளியிடப்பட்டிருப்பதுடன் நம்பகத்தன்மையும், சுயாதீனத்துவமும் அற்ற உள்ளகப்பொறிமுறைகளிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை 'ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திடம் சாட்சியம் அளிக்கும் பாதிக்கப்பட்ட தமிழர்கள், அதுகுறித்த இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே அதனை வழங்குகின்றனர். அவ்வாறிருக்கையில் மேற்படி சாட்சியங்கள் இலங்கையின் அரச கட்டமைப்புக்களுக்கு அனுப்பப்படுமாயின், அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மீது ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதற்கு வழிவகுப்பதுடன் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையின்மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைவடையச்செய்யும்' என்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/228824
-
ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவுக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி
டிரம்பின் ஆசிய பயணத்தின் மீதான எதிர்பார்ப்புகள் - யாருக்கு வெற்றி கிடைக்கும்? பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, கோலா லம்பூர் வந்தடைந்த டிரம்ப் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பை உள்ளடக்கிய ஓர் முக்கியமான அரசியல் பயணத்துக்காக ஆசியாவுக்கு வருகை தந்துள்ளார். உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக வர்த்தகம் உள்ளது. டிரம்ப் முதலில் மலேசிய தலைநகர் கோலா லம்பூரில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் (ஆசியான்) உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். அதன் பிறகு, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்குச் செல்கிறார். தென் கொரியாவில் அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திப்பார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தில் டிரம்பும் மற்ற உலகத் தலைவர்களும் எதை வெல்ல விரும்புகிறார்கள் என்பது குறித்தும், அதில் உள்ள சவால்கள் குறித்தும் பிபிசி செய்தியாளர்கள் விளக்குகிறார்கள். டிரம்புக்கு சீனா தான் முக்கியம் அமெரிக்க நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வர்த்தக ஒப்பந்தங்களை செய்வதும், சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் மூலம் அமெரிக்க அரசுக்கு வருவாய் கிடைப்பதை உறுதிப்படுத்துவதும், டிரம்புடைய பயணத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என பிபிசி வட அமெரிக்க செய்தியாளர் அந்தோணி ஸுர்ச்சர் எழுதுகிறார். உலக வர்த்தகத்தில் பல நாடுகளின் பங்கு இருந்தாலும், டிரம்பின் வெற்றி அல்லது தோல்விக்கு சீனாவே முக்கிய காரணமாக உள்ளது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக, ஏபெக் (Asia-Pacific Economic Cooperation) மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கை டிரம்ப் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பு, டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்கா-சீனா உறவுகளுக்கு ஒரு புதிய பாதையை அமைக்கக்கூடும். டிரம்ப் ஏற்கெனவே ஒப்புக்கொண்டது போல, சீனாவுக்கு விதிக்கப்பட்ட கடுமையான வரிகள் நீட்டிக்க முடியாதவை. இதனை அவர் நேரடியாக சொல்லவில்லை என்றாலும், சீனாவுடன் அதிகரிக்கும் பொருளாதாரப் போர், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும், உலகம் முழுவதற்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா-சீனா உறவுகள் பதற்றமடைந்தால், அமெரிக்கப் பங்குச் சந்தைகள் உடனே சரிவடைவது இந்த உண்மையை தெளிவாக காட்டுகிறது. அடுத்த வாரம் அமெரிக்காவுக்குத் திரும்பும் போது, தென் கொரியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை முடிக்கவும், அமெரிக்க உற்பத்தியில் ஜப்பானிய முதலீட்டை உறுதி செய்யவும் டிரம்ப் முயற்சிப்பார். ஆனால், சீனாவை மீண்டும் அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க வைப்பது, சீனாவில் இருந்து கிடைக்கும் அரிய கனிமங்களை வெளிநாடுகளில் இருந்து அணுகுவதற்கான சமீபத்திய கட்டுப்பாடுகளை தளர்த்துவது, அமெரிக்க நிறுவனங்களுக்கு சீன சந்தையில் அதிக வாய்ப்புகளை வழங்குவது மற்றும் முழுமையான வர்த்தகப் போரைத் தவிர்ப்பது ஆகியவை அவரது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். டிரம்புக்கு அது தான் முக்கியமான விஷயம். ஜின்பிங்கின் உத்தி அக்டோபர் 30-ஆம் தேதி, தென் கொரியாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டிரம்பைச் சந்திக்கிறார். அந்த சந்திப்பில், ஷி ஜின்பிங் கடுமையான பேச்சுவார்த்தையாளராக இருக்க விரும்புகிறார் என்ற பார்வையில் பிபிசி சீன செய்தியாளர் லாரா பிக்கர் எழுதும் கருத்து இது. ஜின்பிங் சீனாவிடம் உள்ள அரிய கனிமங்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார். இந்த கனிமங்கள் இல்லாமல், செமி கண்டக்டர்கள், ஆயுதங்கள், கார்கள், ஸ்மார்ட்போன்கள் போன்றவற்றைத் தயாரிக்க முடியாது. இது அமெரிக்காவின் பலவீனம். அதைப் பயன்படுத்தி, சீனா அமெரிக்க விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, அமெரிக்காவிடம் இருந்து சோயாபீன்ஸ் வாங்காமல், டிரம்பின் கிராமப்புற வாக்காளர்களான விவசாயிகளை காயப்படுத்துகிறது. ஜின்பிங், டிரம்பின் முதல் பதவிக்காலத்திலிருந்து பாடம் கற்றுள்ளார். இப்போது, சீனா வரி சுமைகளை ஏற்கத் தயாராக இருக்கிறது. ஏனெனில், ஒரு காலத்தில் சீன ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கை பெற்ற அமெரிக்கா, இப்போது அவ்வளவு முக்கியமான சந்தையாக இல்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்த வாரம் நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்திலும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான டிரம்பின் வரிகள் முக்கிய பங்கு வகிக்கும். அமெரிக்காவுடனான பொருளாதாரப் போருக்கும், உள்நாட்டு சவால்களுடனான அவரது போராட்டத்துக்கும் இடையில், ஜின்பிங் ஒரு சமநிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதேபோல், அமெரிக்காவுக்கு ஜின்பிங்கின் பிரச்னைகள் பற்றியும் தெரியும். சீனாவில் உள்ள வேலையின்மை, ரியல் எஸ்டேட் நெருக்கடி, அதிகரித்து வரும் உள்ளூர் அரசாங்கக் கடன் மற்றும் மக்கள் செலவிட தயங்குவது போன்றவற்றைக் குறித்து அமெரிக்கா அறிந்திருக்கிறது. டிரம்ப் மேம்பட்ட ஏஐ சிப்களை ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டாலோ அல்லது தைவானுக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் ராணுவ ஆதரவை திரும்பப் பெற்றாலோ, சீனா ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முன்வரக்கூடும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனால் இது எளிதாக நடக்காது. முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், டிரம்ப் திடீரென துணிச்சலாக முடிவெடுக்கிறார். ஆனால், ஷி ஜின்பிங், நீண்ட காலத்துக்கான திட்டத்துடன் செயல்படுகிறார். ஆனால், டிரம்பால் அந்த நீண்ட காலத்துக்கு காத்திருக்க முடியுமா என்பது தான் முக்கியக் கேள்வியாக உள்ளது. முக்கிய பங்கு வகிக்கும் ஒப்பந்தம் உலக உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசியாவின் தொழிற்சாலைகள், டிரம்ப் விதித்த வரிகளிலிருந்து விலக்கை எதிர்பார்க்கின்றன என்கிறார் பிபிசி ஆசிய வணிக செய்தியாளர் சுரஞ்சனா திவாரி. சில நாடுகள் ஒப்பந்தங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றன, சில ஏற்கெனவே குறிப்பிட்ட அம்சங்களில் உடன்பட்டுள்ளன. ஆனால், இன்னும் எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. எனவே, ஒரு உறுதியான ஒப்பந்தம் அல்லது குறைந்தபட்சம் நம்பிக்கையூட்டும் பேச்சுவார்த்தைகள் கூட வரவேற்கப்படுகின்றன. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, 2017-ஆம் ஆண்டு அமெரிக்க விஜயத்தின் போது டிரம்பும் ஷி ஜின்பிங்கும் சீனாவை எடுத்துக்கொண்டால், டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு ஒரு முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஆனால் வரிகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள், மற்றும் அனைத்துக்கும் மூல காரணமாக உள்ள, அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போட்டி போன்ற பல விஷயங்களையும் இரு நாட்டுத் தலைவர்களும் தீர்க்க வேண்டும். ஏனென்றால் அந்த இரு நாடுகளும் ஏஐ மற்றும் உயர் தொழில்நுட்பத்தில் முன்னிலை பெற போராடுகின்றன. இந்த பதற்றங்கள் குறைந்தால், நடுவில் சிக்கியுள்ள மற்ற ஆசிய நாடுகளுக்கு நிம்மதி கிடைக்கும். குறிப்பாக, தென்கிழக்கு ஆசியா அமெரிக்க மின்னணு விநியோகச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் சீனாவின் தேவையை பெரிதும் சார்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தப் பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது. ஆனால் 10% முதல் 40% வரையிலான வரிகள், வியட்நாம், இந்தோனீசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள உற்பத்தியாளர்களை கடுமையாக பாதிக்கும். இது அமெரிக்க சிப் நிறுவனங்களையும் பாதிக்கலாம். உதாரணமாக, மலேசியாவில் தொழிற்சாலைகள் கொண்ட மைக்ரான் டெக்னாலஜி. கடந்த ஆண்டு, மலேசியா சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள சிப்புகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்காவின் மொத்த சிப் இறக்குமதியில் ஐந்தில் ஒரு பங்கு. ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற பணக்கார நாடுகள் வேறுபட்ட சவால்களை எதிர்கொள்கின்றன. அந்த நாடுகள் அமெரிக்காவின் நெருக்கமான கூட்டாளிகளாக இருந்தாலும், தற்போதைய சூழ்நிலை மிகவும் குழப்பமானது. அதனால், அந்த நாடுகளும் வரி விதிகள் மற்றும் முதலீடுகளை உறுதிப்படுத்த விரும்புகின்றன. அதேபோல், இரு நாடுகளிலும் உள்ள வாகன உற்பத்தியாளர்கள், அமெரிக்க சந்தையை முக்கியமாகக் கருதுகிறார்கள். ஆனால், தற்போதைய குழப்பத்தில் வழி கண்டுபிடிக்க அவர்களும் போராடி வருகின்றனர். ஜப்பானின் புதிய பிரதமருக்கு முன் உள்ள சவால் ஜப்பானின் புதிய பிரதமர் சனே டாக்காய்ச்சியை "வலிமையும் ஞானமும் கொண்ட பெண்மணி" என டிரம்ப் புகழ்ந்துள்ளார், என்பதைக் குறிப்பிட்டு, ஜப்பானின் பார்வையில் இந்த சந்திப்பு குறித்து விளக்குகிறார் ஜப்பான் செய்தியாளர் ஷைமா கலீல், இந்த வாரம், டிரம்புடன் நல்ல உறவை உருவாக்கும் டாக்காய்ச்சியின் திறன், அவருடைய தலைமைத்துவத்துக்கும், மாறிவரும் உலக அரசியல் அமைப்பில் ஜப்பானின் இடத்துக்கும் ஒரு ஆரம்பகட்ட சோதனையாக இருக்கும். நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில், ஜப்பானின் பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்கப் போவதாக டாக்காய்ச்சி அறிவித்தார். இது, அமெரிக்காவுடன் பாதுகாப்புப் பொறுப்பை பகிர்ந்துகொள்ளும் அவரது நோக்கத்தை காட்டுகிறது. டிரம்ப் இதைப் பற்றி முன்பே பேசியுள்ளார். அவர், ஜப்பானில் உள்ள அமெரிக்க படைகளுக்கான செலவில் டோக்கியோ அதிக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தலாம். தற்போது ஜப்பான், வெளிநாடுகளில் அதிகமான அமெரிக்க வீரர்களை (சுமார் 53,000 வீரர்கள்) கொண்டுள்ள நாடாக திகழ்கிறது. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, ஜப்பானின் புதிய பிரதமர் சானே டாக்காய்ச்சி இரு நாடுகளும், அவர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் வரி ஒப்பந்தத்தை இறுதி செய்ய விரும்புகின்றன. இந்த ஒப்பந்தம், ஜப்பானின் முக்கிய கார் நிறுவனங்களான டொயோட்டா, ஹோண்டா, நிசான் ஆகியவற்றுக்கு நன்மை பயக்கும் . அமெரிக்கா, ஜப்பானிய கார்கள் மீது விதிக்கும் இறக்குமதி வரியை 27.5% இலிருந்து 15% ஆக குறைக்கிறது. இதனால், சீன கார்களுக்கு எதிராக ஜப்பானிய கார்கள் அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாறும். டாக்காய்ச்சி, ரியோசி அகசாவாவை தலைமை வரி பேச்சுவார்த்தையாளராக தக்க வைத்துள்ளார். இதற்குப் பதிலாக, ஜப்பான், அமெரிக்காவில் மருந்துகள் மற்றும் சிப் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்த 550 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. அதேபோல், அமெரிக்காவில் விளைந்த பொருட்களை (அரிசி உட்பட) ஜப்பான் அதிகமாக கொள்முதல் செய்யும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இந்த முடிவுக்கு ஒருபுறம் அமெரிக்காவில் வரவேற்பு கிடைத்தாலும், ஜப்பானிய விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். டிரம்புடன் நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொண்ட மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயுடனான டாக்காய்ச்சியின் உறவுகளும் அவருக்கு சாதகமாக அமையக்கூடும். அபே, டிரம்பின் நம்பிக்கையைப் பெற மார்-எ-லாகோவில் கோல்ஃப் விளையாடியதற்காக பிரபலமாக அறியப்பட்டவர். அந்த மாதிரியான தனிப்பட்ட ராஜ்ஜீய உத்தியை டாக்காய்ச்சியும் பின்பற்ற விரும்பலாம். கிம் ஜாங் உன் வருகையும் வரி தொடர்பான பேச்சுவார்த்தையும் கொரியாவின் பார்வையில் டிரம்பின் பயணம் குறித்து எழுதுகிறார் பிபிசியின் சியோல் செய்தியாளர் ஜேக் குவோன். தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கிற்கு முக்கிய கவலையாக டிரம்ப் விதித்த வரிகள் உள்ளன. ஆனால், டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உனைப் பார்க்க செல்லலாம் என்ற ஊகங்கள் பரவியதால் அந்தப் பிரச்னை சற்று பின்னால் தள்ளப்பட்டுள்ளது . ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா அதிபரின் அலுவலகத்தில் "சமாதானத் தூதர்" என்று டிரம்பை லீ புகழ்ந்து பேசினார். இந்நிலையில் 2019 சந்திப்பிக்குப் பின் கிம்மைப் பார்க்காததால், அவருடனான சந்திப்பு பற்றி டிரம்ப் உற்சாகத்துடன் பதிலளித்துள்ளார். கடந்த மாதம், கிம் டிரம்பை இன்னும் "அன்புடன்" நினைவில் வைத்திருப்பதாகக் கூறினார். டிரம்புடனான மற்றொரு உச்சிமாநாட்டின் மூலம் தனது அணு ஆயுதத் திட்டத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி பெறலாம் என கிம் நம்புவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனால் அத்தகைய சந்திப்பு நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எப்படியிருந்தாலும், லீயின் முக்கிய வேலை வர்த்தக ஒப்பந்தம் பேசுவது தான். தென் கொரிய ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க வரிகளை 25% இலிருந்து 15% ஆகக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள், தென் கொரிய அதிகாரிகள் அமெரிக்காவுக்கு பலமுறை பயணம் செய்த போதிலும் தடைபட்டுள்ளன. தென் கொரியா அமெரிக்காவில் முன்கூட்டியே 350 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்துவது அதற்கான முக்கியக் காரணமாக உள்ளது. ஏனென்றால் இது தென் கொரிய பொருளாதாரத்தின் ஐந்தில் ஒரு பங்கு. எனவே, இவ்வளவு பெரிய தொகை நிதி நெருக்கடியை உருவாக்கலாம் என்று தென் கொரியா அஞ்சுகிறது. ஆனால், சமீபத்திய நாட்களில் பேச்சுவார்த்தையில் உறுதியான முன்னேற்றம் இருப்பதாக தென் கொரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், டிரம்ப் மற்றும் லீ இடையே புதன்கிழமை நடைபெறும் உச்சிமாநாட்டின் முடிவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அவர்கள் நம்புகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj97vlxrenmo
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
நியூஸிலாந்துக்கு எதிராக பெரிய வெற்றியைப் பதிவு செய்த இங்கிலாந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியது; சொஃபி டிவைன் ஒய்வு பெற்றார் Published By: Vishnu 27 Oct, 2025 | 12:01 AM (நெவில் அன்தனி) விசாகப்பட்டினம் மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் பெரிய வெற்றியை ஈட்டிய இங்கிலாந்து, அணிகள் நிலையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. லின்சி ஸ்மித், அணித் தலைவி நெட் சிவர்-ப்றன்ட், அலிஸ் கெப்சி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், அமி ஜோன்ஸ் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன இங்கிலாந்துக்கு பெரிய வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 38.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. ஜோர்ஜியா ப்ளிம்மர் 43 ஓட்டங்களையும் அமேலியா கேர் 35 ஓட்டங்களையும் அணித் தலைவி சொஃபி டிவைன் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லின்சி ஸ்மித் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நெட் சிவர் - ப்றன்ட் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அலிஸ் கெப்சி 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 29.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. அமி ஜோன்ஸ் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 86 ஓட்டங்களையும் டெமி போமொன்ட் 40 ஓட்டங்களையும் ஹீதர் நைட் 33 ஓட்டங்களையும் பெற்றனர். ஆட்டநாயகி: அமி ஜோன்ஸ் சொஃபி டிவைன் ஓய்வுபெற்றார் நியூஸிலாந்து அணித் தலைவி சொஃபி பிரான்செஸ் மொனிக் டிவைன் இந்தப் போட்டியுடன் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 19 வருடங்களுக்கு முன்னர் அவஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான சொஃபி டிவைன், இன்று நடைபெற்ற நியூஸிலாந்தின் இந்த வருடத்திற்கான கடைசி மகளிர் சர்வதேச உலகக் கிண்ணப் போட்டி முடிவில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 159 போட்டிகளில் 144 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய சொஃபி டிவைன் 9 சதங்கள், 18 அரைச் சதங்களுடன் 4279 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். சகலதுறை வீராங்கனையான டிவைன் 111 விக்கெட்களையும் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/228739
-
கனகராயன்குளத்தில் மின்சாரம் தாக்கி யானை பலி
27 Oct, 2025 | 11:11 AM வவுனியா - கனகராயகுளம் குறிசுட்ட குளம் பகுதியில் விவசாய காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. திங்கட்கிழமை (27) காலை விவசாய காணிக்கு சென்ற விவசாயி யானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை அவதானித்ததையடுத்து அயலவர்களுக்கும் கனகராயன்குளம் பொலிஸாருக்கும் தகவலை வழங்கியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர். https://www.virakesari.lk/article/228764
-
தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்
Oct 27, 2025 - 09:35 AM - இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பல போட்டிகளில் இந்தியாவுடன் போட்டியிட்ட இலங்கை, பதக்கப் பட்டியலில் 4 தங்கப் பதக்கங்கள் வித்தியாசத்தில் முதலாம் இடத்தை இழந்தது. இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலத்துடன் 40 பதக்கங்களை வென்றது. 20 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்றதுடன், 20 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது. இருப்பினும், இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாடும் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை. குறிப்பாக, 02 வெள்ளிப் பதக்கங்களை வென்ற நேபாளத்தைத் தவிர, வேறு எந்த நாடும் வெள்ளிப் பதக்கத்தை ஏனும் வெல்லவில்லை பங்களாதேஷ் 3 வெண்கலப் பதக்கங்களையும், மாலைத்தீவு 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்ற போதும், பூட்டான் ஒரு பதக்கத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 60 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை நடத்திய இந்தியா மற்றும் இலங்கையைத் தவிர, பூட்டான், நேபாளம், மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். https://adaderanatamil.lk/news/cmh8m6pz20188qplpbb297cwt
-
யாழ்ப்பாணம், Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது.
உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம் Oct 27, 2025 - 02:02 PM - உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகப் பிராந்தியப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது. ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுடன் யாழ்ப்பாணமும் இணைக்கப்பட்டிருப்பது, வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. 1970-இல் நிறுவப்பட்ட லோன்லி பிளானட், உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக வர்த்தக நாமங்களில் ஒன்றாகும். இது உலகளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான வழிகாட்டிப் புத்தகங்களை விற்றுள்ளதுடன், விரிவான டிஜிட்டல் அணுகலையும் கொண்டுள்ளது. லோன்லி பிளானட்டின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டில் பயணிக்க சிறந்த 25 இடங்கள் இவை, பெரு, தென் அமெரிக்கா யாழ்ப்பாணம், இலங்கை மெயின், அமெரிக்கா காடிஸ், ஸ்பெயின் ரீயூனியன், ஆப்பிரிக்கா போட்ஸ்வானா, ஆப்பிரிக்கா கார்டஜீனா, கொலம்பியா பின்லாந்து, ஐரோப்பா டிப்பரரி, அயர்லாந்து மெக்சிகோ நகரம் கெட்சால்டெனாங்கோ, குவாத்தமாலா பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா சார்டினியா, இத்தாலி லிபர்டேட், சாவ் பாவ்லோ யூட்ரெக்ட், நெதர்லாந்து பார்படாஸ், கரீபியன் ஜெஜு-டோ, தென் கொரியா வடக்குத் தீவு, நியூசிலாந்து தியோடர் ரூஸ்வெல்ட் தேசியப் பூங்கா, வடக்கு டகோட்டா குய் நோன், வியட்நாம் சீம் ரீப், கம்போடியா பூக்கெட், தாய்லாந்து இக்காரா-ஃப்ளிண்டர்ஸ் ரேஞ்சஸ் மற்றும் அவுட்பேக், தென் ஆஸ்திரேலியா துனிசியா, ஆப்பிரிக்கா சாலமன் தீவுகள், ஓசியானியா https://adaderanatamil.lk/news/cmh8vqm3i018iqplpczm4u15f