Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 05 MAR, 2024 | 11:50 AM புதுடெல்லி: தமிழகம், கர்நாடகா உள்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான (என்ஐஏ ) சோதனை நடத்தி வருகிறது. தீவிரவாத செயல்களுக்கு ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மண்ணடியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரத்தில் சோதனை நடைபெறுகிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடித்தது. இதில் உணவக ஊழியர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை என்ஐஏ வசம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா, தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால், அந்தச் சம்பவத்துக்கும் இன்றைய சோதனைகளுக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சோதனையின் பின்னணி என்ன? முன்னதாக கடந்த ஜனவரி மாதம், கர்நாடகாவில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த உட்பட 8 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிறையில் தீவிரவாதத்தைப் பரப்பியது, தற்கொலைத் தாக்குதல் சதியில் ஈடுபட திட்டமிட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக தலைமறைவாக உள்ளவர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பெங்களூரு மத்திய சிறையில் உள்ள கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த நசீர், வெளிநாடு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ஜுனைத் அகமது, சல்மான் கான். தவிர சையத் சுஹைல் கான், முகமது ஒமர், ஜாகித் தப்ரேஸ், சையத் முதாசீர் பாஷா, முகமது ஃபைசல் ரப்பானி ஆகியோர் தான் அந்த 8 பேர். முதன்முதலில் கடந்த ஜூலையில், பெங்களூரு மாநகரப் போலீஸார் 7 பிஸ்டல், 4 கையெறி குண்டுகள், ஒரு மேகசின், 45 லைவ் ரவுண்ட் தோட்டாக்கள், 4 வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்தது. 2023 அக்டோபரில் இவ்வழக்கில் என்ஐஏ விசாரணையைத் தொடங்கியது. டிசம்பர் 13, 2023-ல் இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை செய்தது. 2024 ஜனவரியில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 5) தமிழகம், கர்நாடகா உள்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. https://www.virakesari.lk/article/177933
  2. பொலிஸ் அதிகாரி துமிந்த ஜயதிலக்க நாளை கடமைக்குத் திரும்பாவிடின் பணிநீக்கம் செய்யப்படுவாராம்! 05 MAR, 2024 | 11:25 AM போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலக நபர்களிடமிருந்து தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸிலிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க நாளை புதன்கிழமை (06) பணிக்கு திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நாளை (06) அவர் பணிக்கு சமூகமளிக்காவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இவர் வெளிநாடு சென்றிருந்தாலும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/177936
  3. பட மூலாதாரம்,COLOMBIAN GOVERNMENT படக்குறிப்பு, கொலம்பிய ஆட்சித்தலைவர் குஸ்டாவோ பெட்ரோ, இக்கப்பலை மீட்டெடுப்பது தனது நிர்வாகத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், சாண்டியாகோ வனேகஸ் பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் 300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய `சான் ஜோஸ்`என்ற கப்பலில் தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷம் இருப்பதாக நம்பப்படுகிறது. அக்கப்பலில் உள்ள பொக்கிஷத்தைக் கைப்பற்ற ஆழ்கடலில் உயர் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கொலம்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இக்கப்பல் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. இந்த கப்பலில் உள்ள பொக்கிஷம், உலகிலேயே அதிகம் தேடப்படும் பொக்கிஷங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கப்பலின் பாகங்களை கண்டுபிடிக்க ஆழ்கடலில் “புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய” “உயர்மட்ட” ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக கொலம்பிய அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. சான் ஜோஸ் என்பது 40 மீட்டர் நீளமுள்ள ஸ்பானியக் கப்பலாகும். இந்த கப்பல் கொலம்பியாவின் கார்டஜீனா நகருக்கு அருகிலுள்ள தீவுக்கூட்டமான ரொசாரியோ தீவுகளைச் சுற்றி 1708-ல் மூழ்கியது. 2015-ம் ஆண்டு, அக்கப்பல் 600 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக கொலம்பிய அரசு அறிவித்தது. ஸ்பானிய மன்னரின் இறப்புக்குப் பிறகு, வாரிசுப் போரின் ஒரு பகுதியாக, சார்லஸ் வேகரின் கீழ் இருந்த பிரிட்டிஷ் படைக்கும் ஸ்பெயின் படைக்கும் மோதல் மூண்டதாக, கடல்சார் மானுடவியல் பேராசிரியர் ரிக்கார்டோ பொரேரோ தெரிவிக்கிறார். அப்போது, சான் ஜோஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். கப்பலில் என்ன இருக்கிறது? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இந்த கப்பல் விபத்தில் 600 பேர் உயிரிழந்தனர். 20 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் இக்கப்பலில் உள்ளதாக வரலாற்றாய்வாளர்கள் நம்புகின்றனர். “கப்பல்கள் வடிவமைப்பு 20-ம் நூற்றாண்டு வரை மனித கண்டுபிடிப்புகளிலேயே மிக சிக்கலான தொழில்நுட்பம் கொண்டதாகும். தற்போதுள்ள உலகமயமாக்கலுக்கு இந்த தொழில்நுட்பம் பல வழிகளில் வடிவம் கொடுத்திருக்கிறது. இதனை போர்க்கப்பலாகவும் வணிக கப்பலாகவும் பல வழிகளில் பயன்படுத்த முடியும்” என்கிறார் ரிக்கார்டோ பொரேரோ. இந்த கப்பல் 40 மீட்டர் நீளம் கொண்டது. 64 பீரங்கிகள் அதில் இருந்தன. கப்பலில் சுமார் 600 பேர் இருந்தனர். “17-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 18-ம் நூற்றாண்டிலும் இக்கப்பல் உயர் தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட கப்பலாக இருந்தது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்தும் அக்கப்பல் சரக்குகளை ஏற்றிச் சென்றிருக்கிறது” என்கிறார் அவர். இக்கப்பல், கொலம்பியாவின் சொத்தாக 2020-ல் அறிவிக்கப்பட்டது. அதனால் தான், அதன் மதிப்பை பண அடிப்படையில் கணக்கிடக் கூடாது என்று அரசாங்கம் பாதுகாக்கிறது. எனினும், அக்கப்பலின் ஒருபகுதியை சொந்தமாக வைத்திருப்பதாக கூறும் அமெரிக்காவை சேர்ந்த புதையல்களை தேடும் வேட்டை நிறுவனம் ஒன்று, அப்புதையல் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருக்கலாம் என்று ஊகித்துள்ளது . இக்கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட சரக்குகள் குறித்த விவரங்கள், காப்பக ஆதாரங்களிலிருந்தே அறியவருகின்றன. மாறாக, கப்பல் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து அதனை நேரடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. 2022-ம் ஆண்டில், தேசிய கடற்படை மற்றும் கொலம்பியாவின் தேசிய கடல்சார் இயக்குநரகம் ஆகியவை மேற்கொண்ட ஆய்வில் கப்பலில் இருந்த பொருட்களின் புகைப்படங்கள் வெளியாகின. அப்புகைப்படத்தில் பீரங்கிகள், சில நாணயங்கள் மற்றும் சீன மேஜைப் பாத்திரங்கள் சிலவற்றைக் காண முடிந்தது. "ஜாடிகள், பாத்திரங்கள், ஊசிகள், கண்ணாடிகள், பீங்கான்கள், சில நாணயங்கள் உள்ளிட்டவை அதில் காணப்படுகின்றன" என, கொலம்பிய மானுடவியல் மற்றும் வரலாற்று நிறுவனத்தின் இயக்குனர் (ICANH) அலெனா கைசிடோ பிபிசி முண்டோவிடம் விளக்குகிறார். 600 மீட்டர் ஆழத்தில் உள்ள கப்பலில் என்ன இருக்கிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை அறிவதுதான் கொலம்பியா அறிவித்துள்ள புதிய ஆராய்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும். ரோபோட் தொழில்நுட்பம் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு இடையில் நடத்தப்படும் இந்த ஆய்வில், பிரிட்டன் தயாரிப்பு மற்றும் ஸ்வீடன் வடிவமைப்புடன் கூடிய ரிமோட் வாயிலாக இயக்கப்படும் ரோபோட் பயன்படுத்தப்படும் என, கொலம்பிய கலாசார அமைச்சர் ஜுவான் டேவிட் கொரியா தெரிவித்தார். தண்ணீரை விட்டு வெளியேறும்போது இந்த பொருட்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கவனிப்பதே இதன் நோக்கம். "தண்ணீரில் அப்பொருட்கள் 300 ஆண்டுகளாக மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும். எனவே, வெளியே எடுக்கப்பட்டவுடன் அவை முழுமையாக உடைந்துவிடும்" என்று அலெனா கைசிடோ பிபிசி முண்டோவிடம் விளக்கினார். "இந்த வகையான பொருட்களை எவ்வாறு கையாள்வது, எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், ஒருகட்டத்தில் அப்பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்படும்” என்று அவர் கூறுகிறார். மீட்கப்பட்டவுடன் அவை கார்டஜீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படும். அதற்கென அருங்காட்சியகம் அமைப்பது குறித்து சிந்திக்கப்படுகிறது. இப்போதைக்கு, கொலம்பிய அதிகாரிகள் அக்கப்பலில் இருந்து அதிகளவு தங்கம் மற்றும் வெள்ளி எடுக்கப்படுவதாக கூறப்படும் தகவலை நிராகரித்துள்ளனர். 2017-ம் ஆண்டு சீனக் கப்பல் கட்டும் தளத்திலிருந்து 13 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கொலம்பிய அரசு வாங்கிய ஏ.ஆர்.சி கரிப் என்ற கப்பலில் இருந்து ஆய்வு செய்யப்படும் கப்பலுக்கு ரோபோட் இறக்கப்படும். "இந்த கப்பல் அலை, காற்று மற்றும் கடலின் ஆறு திசைகளில் உள்ள அனைத்து இயக்கங்களையும் துல்லியமான புள்ளியில் வைத்திருக்கும் திறன் கொண்டது" என்று கடற்படை அதிகாரி ஹெர்மன் லியோன் ஸ்பானிய செய்தி முகமையான EFE-யிடம் விளக்கினார். இந்த ஆய்வு, கலாசார அமைச்சகம், கொலம்பிய மானுடவியல் மற்றும் வரலாறு நிறுவனம், தேசிய கடற்படை (ICANH) மற்றும் தேசிய கடல்சார் இயக்குநரகம், அனைத்து பொது நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்கும். ஜுவான் மானுவல் சாண்டோஸின் அரசாங்கத்தின் போது கொலம்பிய அரசு ஒரு பொது-தனியார் கூட்டணியை உருவாக்குவதற்கான தொடக்கத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. அதன்படி, இப்போது புதையலைப் பிரித்து ஆய்வு நிறுவனத்திற்கும் ஒரு பங்கு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு மேற்கொள்ளப்படும் முதல் கட்ட ஆய்வில், அரசுக்கு சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும். கடலின் அடிப்பகுதியில் என்ன இருக்கிறது என்பது பற்றி அறியப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையில், "18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே கடல்சார் வர்த்தகத்தின் வரலாறு பற்றிய பல அறிவியல் ஆராய்ச்சி கேள்விகளுக்கு பதில்கள் இதன் மூலம் கிடைக்கும் என கொலம்பியா நம்புகிறது" என, கலாசார அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொலம்பியாவின் கலாசார அமைச்சர் இந்த ஆய்வுத் திட்டத்தில் மிக உயர்ந்த அதிகாரிகளில் ஒருவர். விமர்சனங்கள் இந்த திட்டத்தில் சில “முரண்பாடுகளும்” “இடைவெளிகளும்” இருப்பதாக, யூனிவர்சிட்டி நெட்வர்க் ஆப் சப்மெர்ஜ்ட் கல்ச்சுரல் ஹெரிட்டேஜ் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கப்பலில் இருந்து பொருட்களை பிரித்தெடுப்பதற்கு "சரியான அறிவியல் ரீதியிலான நியாயம்" இல்லை என்றும் இது பாதுகாப்பு கொள்கைக்கு எதிரானது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். "இந்த ஆய்வு தற்போதைய அரசாங்கத்தின் சம்பிரதாய நடைமுறை மட்டுமே" என்கின்றனர். மேலும், "இதுகுறித்து எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை. 2015, 2016-க்கு இடைப்பட்ட காலத்தில் புதையல் தேடும் நிறுவனமான மெரிடைம் ஆர்க்கியாலஜி கன்ஸல்டண்ட்ஸ் நிறுவனம் வழங்கிய தகவல்களும் வெளியிடப்படவில்லை. இது இந்த ஆய்வில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்" என்கின்றனர் விமர்சகர்கள். ICANH-ன் இயக்குனர் அலெனா கைசிடோ பிபிசி முண்டோவிடம், ”அரசின் சட்ட பாதுகாப்பு முகமையின் ஆலோசனையின் பேரில், தற்போதைய ஆராய்ச்சி திட்டமானது, கப்பல் குறித்து மெரிடைம் ஆர்க்கியாலஜி கன்ஸல்டண்ட்ஸ் நிறுவனம் வழங்கிய எந்த அறிக்கையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது” என தெளிவுபடுத்தினார். புதையல் யாருக்கு? 3 பேர் உரிமை கோருவதால் சிக்கல் இந்த ஆழ்கடல் அறிவியல் ஆராய்ச்சியை அரசாங்கம் அறிவித்த அதே நேரத்தில், தி ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றம் கொலம்பியாவிற்கும் ’சீ சர்ச் ஆர்மடா’ என்ற அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையே இக்கப்பல் தொடர்பான சர்வதேச வழக்குகளை முறையாக விசாரிக்கத் தொடங்கியது. ’சீ சர்ச் ஆர்மடா’ நிறுவனம் இதுகுறித்து கூறுகையில், கொலம்பியாவிற்கு முன்பே இக்கப்பலை கண்டுபிடித்ததாகவும், எனவே, அக்கப்பலின் பாதி மதிப்புக்கு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலரை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரி வருகிறது. இந்த வழக்கில் கொலம்பியாவின் பாதுகாப்பை ஏற்க வேண்டிய நிறுவனமான தேசிய சட்டப் பாதுகாப்பு முகமையின் இயக்குநர், இந்தக் கூற்றை "கொடூரமானது" மற்றும் "அற்பமானது " என்று விவரித்தார் கொலம்பிய சட்டங்கள் இக்கப்பலை "கைப்பற்ற முடியாதது" என்று கூறுகிறது. ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து யாருடையது என்பது பற்றிய சர்ச்சைகளை இச்சட்டங்கள் தடுக்கவில்லை. 2015-ம் ஆண்டில், ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர், "இக்கப்பல் அரச கப்பல் என்பதால் அதை ஸ்பெயின் விட்டுக் கொடுக்காது" என்று கூறினார். எவ்வாறாயினும், இரு அரசாங்கங்களும் சர்ச்சைக்கு இணக்கமான மற்றும் ராஜதந்திர தீர்வை அடைவதற்கான தங்கள் நோக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. பிப்ரவரி 23 அன்று, கொலம்பியாவிற்கான ஸ்பெயின் தூதர், கொலம்பியாவிற்கு "இதுதொடர்பாக இருதரப்பு ஒப்பந்தத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை" வழங்குவதற்கு தனது நாட்டு அரசாங்கத்திடமிருந்து அறிவுறுத்தல்கள் இருப்பதாகக் கூறினார். "நாங்கள் பலருடன் வரலாற்றைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். குறிப்பாக ஸ்பெயினுடன், பொலிவியாவுடன், கிரனாடா ராஜ்ஜியத்தைச் சேர்ந்த மக்களுடன், நாங்கள் வரலாற்றைப் பகிர்ந்து கொள்கிறோம்" என்று அவர் விளக்குகிறார். பொலிவியன் பூர்வீக குரா குரா (Qhara Qhara) சமூகமும் அக்கப்பலின் ஒரு பகுதியைக் கோருகிறது, வன்முறை மற்றும் சுரண்டல் மூலம் கப்பலில் உள்ள போடோசி சுரங்கங்களிலிருந்து பெறப்பட்டது என்று அவர்கள் வாதிடுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c8v3m15llq2o
  4. இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று (05) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களில் இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பதிவுசெய்யப்பட்ட மாணவர்கள் பிற்பகல் 02:00 மணிக்கு அந்தந்த மையங்களுக்குச் சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கிறது. இத்திட்டத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஆங்கில மொழி, மற்றும் அவர்கள் விரும்பும் தொழில்சார் பாடம் ஆகியவற்றை இலவசமாகப் படிக்க முடியும். இதேவேளை உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் மூலம், குழந்தைகள் அறிவு, அணுகுமுறைகள் மற்றும் திறன்களை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/294358
  5. வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயர்வடையும்! நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்திருக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக போதியளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை, வறட்சியான காலநிலையைக் கருத்தில் கொண்டு விவசாய நடவடிக்கைளுக்காக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி விவசாயிகளை கோரியுள்ளார். https://thinakkural.lk/article/294336
  6. Published By: DIGITAL DESK 3 05 MAR, 2024 | 10:44 AM (நா.தனுஜா) உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டத்தை உருவாக்க முன்னர் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான செயன்முறையொன்றைப் பின்பற்றவேண்டியது அவசியமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் சுட்டிக்காட்டியிருக்கும் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள், எதிர்வருங்காலங்களில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையைக் கட்டியெழுப்பும் அதேவேளை, பொறுப்புக்கூறலுக்கான பாதையை வகுத்தளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை நேற்று திங்கட்கிழமை (4) வாசிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் அவ்வறிக்கை கடந்த வெள்ளிக்கிழமையே (1) வாசிக்கப்பட்டது. அத்தோடு இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவினால் பதில் வழங்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் நேற்றைய தினம் இலங்கை நேரப்படி பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரின் 12 கூட்டத்தில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. அதனையடுத்து உயர்ஸ்தானிகரின் அறிக்கைகள் தொடர்பில் உறுப்புநாடுகளின் பங்கேற்புடனான விவாதம் நடைபெற்றது. இதன்போது பிரிட்டன், கனடா, வட மெசிடோனியா, மாலாவி, மொன்டெனேக்ரோ மற்றும் அமெரிக்கா ஆகிய இலங்கையின் இணையனுசரணை நாடுகளின் சார்பில் உரையாற்றிய மனித உரிமைகளுக்கான பிரிட்டனின் சர்வதேச தூதுவர் ரீட்டா ஃப்ரென்ச் மேலும் கூறியதாவது: இலங்கையைப் பொறுத்தமட்டில் அண்மையகாலங்களில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் சிவில் இடைவெளி ஆகியவற்றுடன் தொடர்புடைய சில முக்கிய சட்ட உருவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் துரதிஷ்டவசமாக இவற்றில் சில சட்ட உருவாக்கங்கள் தீவிர கரிசனையைத் தோற்றுவிப்பவையாக அமைந்துள்ளன. குறிப்பாக நிகழ்நிலைக்காப்பு சட்டமானது நிகழ்நிலை தொடர்பாடலை தீவிரமாக மட்டுப்படுத்தக்கூடியதும், அனைத்துவித வெளிப்படுத்தல்களையும் குற்றமாக்கக்கூடியதும், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின்மீது மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதுமான சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. எனவே இலங்கையின் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளுக்கு ஏற்புடைய வகையில் அச்சட்டத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதேபோன்று இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கு ஏற்புடைய சட்டத்தினூடாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யுமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம். கடந்த நவம்பர் மாதம் தடுத்துவைக்கப்பட்ட 9 தமிழர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும். அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் மிகநீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுவிக்குமாறும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அடுத்ததாக உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை அவதானித்துள்ளோம். ஆனால் எந்தவொரு சட்டத்தையும் உருவாக்க முன்னர் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான அனைவரையும் உள்ளடக்கிய செயன்முறையொன்றைப் பின்பற்றவேண்டியது இன்றியமையாததாகும். எதிர்வருங்காலங்களில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் சுயாதீனமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அர்த்தமுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யக்கூடியதாகவும், நிலைமாறுகால நீதிப்பொறிமுறையைக் கட்டியெழுப்பும் அதேவேளை, பொறுப்புக்கூறலுக்கான பாதையை வகுத்தளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டியது அவசியமாகும். அதுமாத்திரமன்றி அடிப்படை சுதந்திரத்திலும், சிவில் சமூக இடைவெளியிலும் தீவிர மட்டுப்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய சட்டங்களை கொண்டுவருதாக இருந்தால், அதுகுறித்து சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளடங்கலாக சகல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம். மேலும், காணி விடுவிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் கடப்பாட்டை வரவேற்கின்றோம். ஆனால் குறிப்பாக நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் நில ஆக்கிரமிப்புடன் தொடர்புடையவகையில் அதிகரித்துவரும் அமைதியின்மை நிலைவரம் குறித்தும் நாம் கரிசனை கொண்டிருக்கின்றோம். எனவே இச்சவால்களை உரியவாறு கையாள்வதற்கு உங்களுடனும் (உயர்ஸ்தானிகர்), உங்களது அலுவலகத்துடனும் இணைந்து பணியாற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் 51/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/177926
  7. மின் கட்டணம் குறைப்பு! (முழு விபரம்) நேற்று(04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மின் கட்டணம் 21.9 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளது. நேற்று(04) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இதனை அறிவித்தார். சமய வழிபாட்டு தலங்களுக்கான கட்டணம் 33 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தினாலும், பொதுவான கட்டணம் 23 சதவீத்தினாலும் குறைக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 30க்கும் குறைந்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் 33 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம் 28 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கான கட்டணம் 30 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. 91 முதல் 180 வரையான அலகுகளுக்கு 24 சதவீதமும், 180க்கு மேற்பட்ட அலகுகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த கட்டணத் திருத்தம் போதுமானது இல்லை என இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/294324
  8. கூகுள் மேப்பின் வழிகாட்டலோடு அலரி மாளிகைக்குள் குதித்த இருவர் கைது! கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். சொப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஒருவரும், மற்றுமொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரவு விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு கூகுள் மேப்பின் உதவியோடு தாம் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது, வழிதவறி அலரி மாளிகை மதிற்சுவர் அருகே சென்றுள்ளனர். பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் மதிற்சுவர் ஏறி அலரி மாளிகைக்குள் குதிக்க முற்பட்டுள்ளனர்.. அதன்போது, பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவின் சுற்றுலா அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லங்காதீப https://thinakkural.lk/article/294374
  9. 05 MAR, 2024 | 09:21 AM நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை கண்டறிதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குதல் ஆகியவற்றை முறையாக முன்னெடுப்பதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். “பிக்கு கதிகாவத்” சட்டமூலத்தை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கடினமான சூழ்நிலையில் பராமரிக்கப்படும் புனிதத் தலங்களை பாதுகாப்பதற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை வழங்குவதில் எமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் தற்பொழுது சரிபார்க்கப்படுகின்றன. 2024 மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த புனிதத் தலங்களுக்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை வழங்குவதே அமைச்சின் எதிர்பார்ப்பாகும். இந்நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்கள் கண்டறியப்பட்டு, பாதுகாக்கப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு முறையான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது. அதில் சேர்க்கப்பட்டுள்ள சில விடயங்கல் தொடர்பில் அடிப்படை விதிகளை தயாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான கருத்துக்களும் ஆலோசனைகளும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது. “பிக்கு கதிகாவத்” சட்டத்தைத் தயாரிக்கவும் எதிர்பார்த்துள்ளோம். அதற்கான முன்மொழிவுகளை மகா நாயக்க தேரர்களாலும் சங்க சபைகளாலும் வழங்குமாறு கேட்டுள்ளோம். இது எளிதான காரியம் அல்ல. ஆனால் பிக்கு ஒழுக்கம் உட்பட பல்வேறு பிரச்சினைகளை இதன் மூலம் தீர்க்க முடியும் என்று பெரும்பான்மையானவர்கள் நம்புகிறார்கள். அத்துடன் இலங்கையை தேரவாத சர்வதேச பௌத்த நிலையமாக மாற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை நடைமுறைப்படுத்த அமைச்சு என்ற ரீதியில் நாம் தயாராக உள்ளோம். https://www.virakesari.lk/article/177917
  10. Published By: DIGITAL DESK 3 05 MAR, 2024 | 09:23 AM கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். இந்த இரு நபர்களும் சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மென்பொருள் பொறியியலாளர் ஒருவரும் கப்பலில் பணிபுரியும் நபர் ஒருவரும் சனிக்கிழமை (03) இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு மது அருந்தி விட்டு முகாந்திரம் வீதியில் உள்ள தங்குமிடத்திற்கு செல்ல கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்ற போது அவர்கள் அலரிமாளிகை வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். இதன்போது, பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/177916
  11. பங்களாதேஸை அதன் சொந்தமண்ணில் 3 ஓட்டங்களால் திறில் வெற்றி கொண்டது இலங்கை! Published By: RAJEEBAN 04 MAR, 2024 | 11:01 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (04) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது. குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள், ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகள் என்பன இலங்கை வெற்றி அடைவதற்கு உதவின. குறிப்பாக தசுன் ஷானக்க கடைசி ஓவரை சிறப்பாக வீசி 8 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியமை அணியின் வெற்றியை உறுதி செய்வதாக அமைந்தது.அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது. மொத்த எண்ணிக்கை 4 ஓட்டங்களாக இருந்தபோது அவிஷ்க பெர்னாண்டோ (4), 37 ஓட்டங்களாக இருந்தபோது கமிந்து மெண்டிஸ் (19) ஆகிய இருவரும் களம் விட்டகழ இலங்கை ஆட்டம் கண்டது. ஆனால், குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 61 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 133 ஓட்டங்களாக உயர்த்தினர். குசல் மெண்டிஸ் 36 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார். அவர் ஆட்டம் இழந்த பின்னர் ஜோடி சேர்ந்த சதீர சமரவிக்ரமவும் அணித் தலைவர் சரித் அசலன்கவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 32 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர். சதீர சமரவிக்ரம 48 பந்துகளில் 8 பவுண்டறிகள், 1 சிக்ஸ் உட்பட 61 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 21 பந்தகளில் 6 சிக்ஸ்கள் உட்பட 44 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். 207 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் ஒரு கட்டத்தில் 8.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது. ஆனால், 17 மாதங்களின் பின்னர் ரி20 அணிக்கு மீளழைக்கப்பட்ட மஹ்முதுல்லாவும் தனது 5ஆவது ரி20 போட்டியில் விளையாடும் ஜாக்கர் அலியும் 5ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். மஹ்முதுல்லா 31 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 54 ஓட்டங்களைக் குவித்தார். அவர் ஆட்டம் இழந்தபின்னர் ஜாக்கர் அலி, மஹேதி ஹசன் (16) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினர். (180 - 6 விக்.)கடைசி ஓவரில் பங்களாதேஷின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் ஜாக்கர் அலி 68 ஓட்டங்களுடன் பங்களாதேஷுக்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் பந்துவீச்சு எல்லையில் இருந்ததால் இலங்கைக்கு சற்று ஆறுதலாக இருந்தது. கடைசி ஓவரை வீசிய தசுன் ஷானக்க முதல் பந்தில் ரிஷாத் ஹொசெய்னின் விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆனால், தசுன் ஷானக்கவின் அடுத்த பந்து வைடானது. 2ஆவது பந்தில் ஒரு ஓட்டத்தை ஷானக்க கொடுக்க, ஜாக்கர் அலி துடுப்பாட்ட எல்லைக்கு வந்தார். ஆனால், அவரது விக்கெட்டை அடுத்த பந்தில் தசுன் ஷானக்க கைப்பற்றினார். ஜாக்கர் அலி 68 ஓட்டங்களுடன் வெளியேறினார்.அடுத்து களம் புகுந்த ஷொரிபுல் இஸ்லாம் பவண்டறி ஒன்றை விளாசினார். இந் நிலையில் கடைசி 2 பந்துகளில் பங்களாதேஷின் வெற்றிக்கு ஒரு சிக்ஸ் தேவைப்பட்டது. ஆனால் தசுன் ஷானக்க அடுத்து இரண்டு பந்துகளையும் சரியான இலக்குகளில் வீசி லெக் பை ஒன்றையும் ஒரு ஓட்டத்தையும் மாத்திரம் கொடுத்து இலங்கை அணியின் வெற்றியை உறுதிசெய்தார். பந்துவீச்சில் ஏஞ்சலோ மெத்யூஸ் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தசுன் ஷானக்க 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பினுர பெர்னாண்டோ 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சரித் அசலன்க https://www.virakesari.lk/article/177913
  12. ரோத்ஸ்சைல்ட்ஸ்: பிரிட்டன் போன்ற வல்லரசுகளுக்கே கடன் கொடுத்த இந்த யூத குடும்பம் 'இஸ்ரேல்' உருவாக என்ன செய்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லார்ட் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட், இந்த வாரம் தனது 87ஆம் வயதில் இறந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ஏஞ்சல் பெர்முடெஸ் பதவி, பிபிசி நியூஸ் வேர்ல்டு 4 மணி நேரங்களுக்கு முன்னர் திட்டமிட்டபடி அனைத்து விஷயங்களும் நடந்திருந்தால், மேயர் ஆம்ஷெல் ஒரு ரப்பியாக (யூத மதகுரு) இருந்திருப்பார். ஆனால் விதி அவரது திட்டங்களை மாற்றியது. ஒரு ஜெப ஆலயத்தை நடத்துவதற்கு பதிலாக, உலகின் மிகவும் பிரபலமான ரோத்ஸ்சைல்ட் & கோ எனும் தனியார் வங்கி சாம்ராஜ்யத்தை அவர் நிறுவினார். ஃபிராங்க்ஃபர்ட் நகரின் யூத கெட்டோவான ஜூடென்காஸ்ஸில் மேயர் ஆம்ஷெலின் மூதாதையர் ஒருவரின் வீட்டை வேறுபடுத்திக் காட்டிய சிவப்பு நிற அடையாளத்திலிருந்து (ரோத் (Rot) = சிவப்பு, சைல்ட் (schild) = அடையாளம்) உருவான ரோத்ஸ்சைல்ட் என்ற குடும்பப் பெயர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கிறது. ஃபோர்ப்ஸ் இதழின் பில்லியனர்கள் பட்டியலில் இந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் தற்போது இடம்பெறவில்லை என்றாலும், சர்வதேச அரசியல் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஒரு அழியாத தடத்தைப் பதித்துள்ளது இந்த குடும்பம். குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில், நெப்போலியனுக்கு எதிராகப் போரிடும் ஐரோப்பியப் படைகளுக்கு இந்த குடும்பத்தினர் நிதியுதவி அளித்தனர். அதே போல, பிரதம மந்திரி பெஞ்சமின் டிஸ்ரேலி தலைமையிலான பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சூயஸ் கால்வாயில் மில்லியன் டாலர் பங்குகளை வாங்குவதற்கும் நிதியளித்தனர். சமூகத்தில் அவர்களது புகழ் வளர்ந்த அதே நேரத்தில், ரோத்ஸ்சைல்ட்ஸ் குறித்த எண்ணற்ற சதி கோட்பாடுகளும் வளர்ந்தன. அவை மீண்டும் மீண்டும் பொய் என்று நிரூபிக்கப்பட்டாலும், இந்த இரண்டு நூற்றாண்டுகளாக அத்தகைய சதி கோட்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன. கடந்த மாத இறுதியில், இந்த குடும்பத்தின் பிரிட்டிஷ் கிளையின் தலைவராகக் கருதப்பட்ட லார்ட் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட் தனது 87வது வயதில் இறந்த செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல கட்டுக்கதைகள், சதி கோட்பாடுகள் மீண்டும் உலாவந்தன. இந்த குடும்பத்தின் வரலாறு என்ன, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்த அவர்கள் உண்மையில் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள்? கெட்டோவிலிருந்து அரச நீதிமன்றம் வரை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குடும்பத் தலைவரான மேயர் ஆம்ஷெல் ரோத்ஸ்சைல்ட், பிராங்பேர்ட்டின் யூத கெட்டோவில் உள்ள இந்த வீட்டில் பிறந்தார். 1744இல் பிறந்த மேயர் ஆம்ஷெல் ரோத்ஸ்சைல்ட் ஒரு சாதாரண வணிகக் குடும்பத்தின் மகனாவார். அதில் புகழ்பெற்ற ரப்பிகளும் இருந்தனர். அதனால் தான் தங்களது முதல் மகனை ஆன்மிக பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் நினைத்தார்கள். ஆனால் 11 வயதாக இருந்தபோது மேயரின் பெற்றோர் மரணமடைந்ததால் ஒரு வேலை தேட வேண்டிய நெருக்கடிக்கு அவர் தள்ளப்பட்டார். ஹனோவரில் உள்ள ஒரு வங்கியில் ஒரு பயிற்சிப் பதவியில் சேர்ந்த அவர் படிப்படியாக வணிகச் சந்தையில் நுழைந்தார். அந்த வங்கியில் அவர் பல ஆண்டுகள் பணிபுரிந்தார், போதுமான அளவு கற்றுக்கொண்டு, பணம் சேமித்து, 1770இல் பிராங்பர்ட் திரும்ப முடிவு செய்தார். அங்கு அவர் திருமணம் செய்துகொண்டு, தனது சொந்த நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் மேயர் பழங்கால நாணயங்கள், பொருட்கள் மற்றும் கலைப் படைப்புகள் விற்கும் தொழிலைச் செய்தார். பின்னர் அவருக்கு போதுமான முதலீடு கிடைத்ததும், நிதித்துறையில் நுழைந்தார். சில ஆண்டுகளில், அவர் அரசர் வில்லியம் I ஆட்சியின் கீழ் இருந்த லாங்ராவியேட் ஆப் ஹெஸ்ஸே (Landgraviate of Hesse) எனும் சமஸ்தானத்தின் வங்கி நிர்வாகியாக ஆனார். இந்த வேலையில் இருந்த போது, அரசரின் கஜானாவை மட்டுமல்லாது, தனது செல்வத்தையும் எவ்வாறு அதிகரிப்பது என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார். நெப்போலியன் நடத்திய போர்களால் இது சாத்தியமானது. ஏனென்றால் வில்லியம் I தனது போர் வீரர்களின் சேவைகளை இங்கிலாந்து மற்றும் பிரஷியாவிற்கு விற்ற போது, போர்களுக்கு தேவையான நிதியை அரசாங்கங்களுக்கு கடனாக வழங்கினார் மேயர் ஆம்ஷெல். "நெப்போலியனுடனான போர்களுக்கு முக்கிய நிதியாளர்களில் ஒருவராக ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பத்தினர் இருந்தார்கள். அவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு நிதியளித்தனர். நெப்போலியனுக்கு எதிரான கூட்டணிக்கு அவர்கள் கடன்கள் வழங்கினார்கள். தங்கத்தை விற்று அதில் பணம் சம்பாதித்தார்கள்," என்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர் மைக் ரோத்ஸ்சைல்ட். இவரது கடைசிப் பெயர் ரோத்ஸ்சைல்ட் என இருந்தாலும், இந்த வம்சத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர். 200 ஆண்டுகளாக இந்த குடும்பத்தைச் சுற்றி உருவாக்கப்பட்ட முக்கிய கட்டுக்கதைகளைப் பற்றிய புத்தகத்தின் ஆசிரியர் இவர். "போருக்கு அதிக பொருளும் பணமும் தேவைப்பட்டதால், மிக விரைவாக அதிக செல்வத்தை ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தினரால் சம்பாதிக்க முடிந்தது" என்று கூறுகிறார் பத்திரிகையாளர் மைக் . 1887இல் வெளியிடப்பட்ட மற்றொரு படைப்பான 'தி ரோத்ஸ்சைல்ட்ஸ்: தி ஃபைனான்சியல் ரூலர்ஸ் ஆஃப் நேஷன்ஸ்' (The Rothschilds: the Financial Rulers of Nations) நூலில், "ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் (1808-1814) தீபகற்பப் போரின் போது அரசுக்கு தொடர்ந்து நிதி வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. நிதியைக் கொண்டு செல்வதற்கான பொறுப்பை ஏற்க அப்போதைய நிதியாளர்கள் தயக்கம் காட்டினர். எனவே ரோத்ஸ்சைல்ட்ஸ் ஒரு நல்ல கமிஷனுக்காக இதைச் செய்ய முன்வந்தார்கள். அது மட்டுமல்லாது தொடர்ந்து எட்டு ஆண்டுகள் இந்த தொழிலை மிகவும் இலாபகரமான முறையில் நடத்தினர். இந்த வெற்றியால், ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நட்பு நாடுகளின் இளவரசர்களுக்கு நிதி அனுப்புவதை நிர்வகிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை நியமித்தது." என்கிறார் ஜான் ரீவ்ஸ். ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோத்ஸ்சைல்ட் குடும்ப சின்னம் ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தைச் சுற்றி பின்னப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்று, அந்தக் காலத்தின் பல முக்கிய ஐரோப்பிய தலைநகரங்களில் இந்த குடும்ப நிறுவனத்தின் கிளைகளை நிறுவுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வகையான ஒருங்கிணைந்த திட்டத்தைக் குறிக்கிறது. உண்மையில், முதலில் பிறந்த ஆம்ஷெல் ஃபிராங்க்ஃபர்ட்டில் தங்கியிருந்தபோது, குடும்பத்தின் மற்ற நான்கு மகன்கள் லண்டன் (நாதன்), பாரிஸ் (ஜாகோப், பின்னர் ஜேம்ஸ்), வியன்னா (சாலமன்) மற்றும் நேபிள்ஸ் (கார்ல்) ஆகிய இடங்களில் நிறுவனத்தின் கிளைகளை நிறுவினர். இருப்பினும், இந்த கிளைகள் ஒரே நேரத்தில் உருவாக்கப்படவில்லை, 1804இல் லண்டன் அலுவலகத்தை உருவாக்குவதற்கும், 1820களில் வியன்னா மற்றும் நேபிள்ஸில் கிளைகளை நிறுவுவதற்கும் இடையில் 15 ஆண்டுகளுக்கும் மேல் இடைவெளி இருந்தது. இந்த குடும்பத்தைச் சுற்றியுள்ள மிகப்பெரிய புரளிகளில் ஒன்று, நாதன் ரோத்ஸ்சைல்ட் குறித்தது. 1846இல் வெளியிடப்பட்ட, சாத்தான் என்ற புனைப்பெயருடன் கையெழுத்திட்ட ஒரு துண்டுப் பிரசுரம் ஐரோப்பா முழுவதும் விரைவாக பரவியது. நெப்போலியனுக்கு எதிரான போர் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி பங்குச் சந்தையில் மில்லியன்களை ஈட்டினார் நாதன் ரோத்ஸ்சைல்ட் என்று அதில் கூறப்பட்டது. இந்தக் கதையின்படி, வாட்டர்லூ போரில் (பெல்ஜியம்) நெப்போலியன் தோல்வியடைந்ததை வங்கியாளர் நாதன் கண்டார். அங்கிருந்து அவர் விரைவாக, வலுவான புயலையும் பொருட்படுத்தாமல் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து, லண்டனுக்கு வந்தார். போர் குறித்த செய்திகள் வெளியாவதற்கு முன்பே பல பங்குகளை வாங்கினார். பின்னர், போரின் முடிவுகள் பற்றிய செய்தி இறுதியாக நகரத்தை எட்டிய போது, அந்த பங்குகளின் விலை பலமடங்கு உயர்ந்தது. 2015இல், பிரிட்டிஷ் செய்தித்தாள் தி இன்டிபென்டன்ட்டில், பத்திரிகையாளர் பிரையன் கேத்கார்ட், "போர் நடந்த சமயத்தில் நாதன் ரோத்ஸ்சைல்ட் வாட்டர்லூவிலோ அல்லது பெல்ஜியத்திலோ இல்லை, அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பங்குச் சந்தையில் மகத்தான லாபத்தைப் பெறவில்லை. கூடுதலாக, ஆங்கில கால்வாயில் அப்போது வலுவான புயல் எதுவும் இல்லை" எனக் கூறியுள்ளார். எனவே இந்தக் கதை தவறானது. இந்த கதை பல தசாப்தங்களாக பரவி வருகிறது. 1910 இல் வெளியிடப்பட்ட என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பதிப்புகளில் கூட இது இடம்பெற்றது. நெப்போலியன் போர்களால் இந்தக் குடும்பம் பெரும் செல்வத்தை குவித்தது உண்மை தான். ஆனால் அது முன்னர் சுட்டிக்காட்டப்பட்டபடி, அரசாங்கங்கள் மற்றும் இராணுவங்களுக்கு கடனாக நிதி வழங்கியதன் மூலம் கிடைத்தது. போர்களில் இரு தரப்பினருக்கும் நிதியளிப்பதன் மூலம் ரோத்ஸ்சைல்ட்ஸ் தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள் என்பதும் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் அவ்வாறு நடக்கல்லை என பிபிசியிடம் கூறுகிறார் மைக் ரோத்ஸ்சைல்ட் "வரலாற்று ரீதியாக கணிசமான ரோத்ஸ்சைல்ட் இருப்பைக் கொண்ட இரண்டு நாடுகள் போரில் ஈடுபட்ட சம்பவங்கள் உண்டு. நெப்போலியன் போர்களில் கூட அதைக் காண முடியும். பாரிஸில் ஒரு ரோத்ஸ்சைல்ட் அலுவலகம் மற்றும் லண்டனில் ஒரு ரோத்ஸ்சைல்ட் அலுவலகம் இருந்தது. போர்களில் இத்தகைய சிக்கலான சூழல்களை சமாளிப்பது கடினம்" என்று அவர் குறிப்பிடுகிறார். "அவர்கள் இரு தரப்பினருக்கும் நிதியுதவி செய்தார்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் அதைச் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், அவர்கள் நெப்போலியன் போர்கள் முடியும் வரை பிரான்சின் எதிரிகளுக்கு தொடர்ந்து நிதியுதவி செய்தனர் ," என்று அவர் மேலும் கூறுகிறார். மேயர் ஆம்ஷெல் இறக்கும் நேரத்தில், குடும்பம் ஏற்கனவே 'மேயர் ஆம்ஷெல் ரோத்ஸ்சைல்ட் அண்ட் சன்ஸ்' என்ற நிறுவனத்தை நிறுவியிருந்தது, அதன் செல்வம் ஐந்து மகன்களுக்கு சமமாகப் பிரிக்கப்பட்டது. அதை வீணாக்காமல், என்ன நடந்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தந்தை ஆம்ஷெல் அறிவுறுத்தியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த விளக்கப்படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, வாட்டர்லூவிலிருந்து லண்டனுக்கு பயணித்ததன் மூலம் நாதன் ரோத்ஸ்சைல்ட் பணக்காரர் ஆனார் என்ற பொய் பல நூற்றாண்டுகளாக பரவலாகப் பரப்பப்பட்டது. ஐரோப்பிய காலனித்துவத்திற்கு நிதி அளித்தவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நதானியேல் மேயர் டி ரோத்ஸ்சைல்ட் என்பவர் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நுழைந்த முதல் யூதர் ஆவார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு (1815-1914) காலம் 'உலகின் மிகப்பெரிய வங்கி' என்று அழைக்கப்பட்ட ரோத்ஸ்சைல்ட்ஸ் வங்கியை அந்த குடும்பம் சிறப்பாக பராமரித்தனர். ஆனால் அவர்களுடையது ஒரு பாரம்பரிய வங்கி அல்ல. அங்கு மக்கள் தங்கள் சேமிப்புகளை டெபாசிட் செய்து கடன் வாங்கவில்லை, மாறாக அரசாங்க கடன்கள் மற்றும் பத்திரப் பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்தும் முதலீட்டு வங்கி போன்றது. "1820களில் ரோத்ஸ்சைல்ட்ஸ், சர்வதேச பத்திர சந்தையாக மாறும் சாத்தியம் கொண்டிருந்த ஐரோப்பிய நிதித்துறையில் ஆதிக்கம் செலுத்தியது" என மைக் ரோத்ஸ்சைல்ட் தனது 'Jewish Space Lasers: The Rothschild and 200 Years of Conspiracy Theories' நூலில் குறிப்பிடுகிறார். "அவர்கள் ஐரோப்பிய ராயல்டி, வாட்டிகன், நாட்டின் பிரதம மந்திரிகள் மற்றும் கிங் ஜார்ஜ் IV ஆகியோருக்கு ஆலோசகர்களாகவும் கடன் வழங்குபவர்களாகவும் இருந்தனர். மேலும் அவர்கள் எதிர்கால பிரெஞ்சு சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட உருவான ரஷ்யா, பிரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவின் ஒப்பந்தக் குழுவான புனிதக் கூட்டணிக்கும் வங்கியாளர்களாக இருந்தனர்." என அவர் கூறுகிறார். 1836இல் இறக்கும் போது, நாதன் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. செல்வத்துடன் பொது அங்கீகாரமும் வந்தது. மேயர் ஆம்ஷெலின் ஐந்து மகன்களுக்கும் ஆஸ்திரிய பேரரசின் மதிப்பிற்குரிய பட்டங்கள் கிடைத்தன மற்றும் அவர்களின் சந்ததியினரால் சமூகத்தின் மிக உயர்ந்த அடுக்குகளில் ஒருங்கிணையவும் முடிந்தது. உதாரணமாக, லியோனல் நாதன் டி ரோத்ஸ்சைல்ட் (1808-1879) பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முதல் யூத உறுப்பினர் ஆவார். 1875இல் பிரிட்டிஷ் அரசாங்கம் சூயஸ் கால்வாயில் பங்குதாரராக ஆவதற்கு, குறுகிய அவகாசத்தில் 4 மில்லியன் பவுண்டுகள் கடனை வழங்கியவர். அவரது உறவினர் மேயர் அல்போன்ஸ் டி ரோத்ஸ்சைல்ட் (1827-1905), குடும்பத்தின் பிரெஞ்சு கிளையைச் சேர்ந்தவர், 1870களுக்குப் பிறகு பிராங்கோ-பிரஷ்யன் போரில் பிரெஞ்சு அரசாங்கத்திற்குத் தேவையான இழப்பீடுகளைச் செலுத்த வேண்டிய இரண்டு பெரிய கடன்களை சாத்தியமாக்கிய வங்கிகளின் கூட்டணிக்கு தலைமை தாங்கினார். இது நாட்டில் இருந்த வெளிநாட்டு துருப்புகளை திரும்பப் பெறுவதற்கு உதவியது மற்றும் ஜனாதிபதி அடோல்ஃப் தியர்ஸ் அரசாங்கம் அதிகாரத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு உத்தரவாதம் அளித்தது. லியோனல் நாதன் டி ரோத்ஸ்சைல்டின் மகனான நதானியேல் மேயர் (நாட்டி) டி ரோத்ஸ்சைல்ட் (1840-1915), பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நுழைந்த முதல் யூதர் மற்றும் முதல் லார்ட் ரோத்ஸ்சைல்ட் ஆனார். 19ஆம் நூற்றாண்டு முழுவதும், குடும்பத்தின் வணிகங்கள் தொடர்ந்து செழித்து வளர்ந்தன. வங்கி மற்றும் அரசாங்க பத்திர வர்த்தகத்திற்கு அப்பால் அவை பன்முகப்படுத்தப்பட்டன. அவர்கள் காப்பீட்டு நிறுவனங்களிலும் முதலீடு செய்தனர் மற்றும் தொழில்துறை, உலோகவியல், சுரங்க மற்றும் இரயில்வே நிறுவனங்களில் பங்குகளை வாங்கினார்கள். கூடுதலாக, 19ஆம் நூற்றாண்டில், அவர்கள் ஆப்பிரிக்காவில், குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் பல ஐரோப்பிய காலனித்துவ சாகசங்களுக்கு நிதியளித்தனர். "அந்த நிலங்களில் வாழ்ந்த மக்களுக்கு எதிராக நடந்த பல துஷ்பிரயோகங்களுக்கு உடந்தையாகவோ அல்லது குறைந்தபட்சம் அதைக் குறித்து தெளிவற்றவர்களாகவோ இருந்தார்கள்" என்று மைக் ரோத்ஸ்சைல்ட் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அவர்களின் வங்கி வணிகம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தது. ஆனால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவர்கள் ஏற்கனவே மற்ற பெரிய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க குழுக்களிடமிருந்து போட்டியை எதிர்கொண்டனர். இது நிதித்துறையில் அவர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாரோன் எட்மண்ட் ஜேம்ஸ் டி ரோத்ஸ்சைல்ட் (1845-1934) ஓட்டோமான் பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றங்களை நிறுவுவதற்காக அங்கு நிலம் வாங்க பெரும் நிதியை ஒதுக்கீடு செய்தார். சியோனிசம் மற்றும் இஸ்ரேல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1836 இல் அவர் இறக்கும் போது, நாதன் ரோத்ஸ்சைல்ட் உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்பட்டார். பாரம்பரியமாக, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் தலைவர் அந்த நாட்டில் உள்ள யூத சமூகத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறார். இஸ்ரேல் நாட்டை உருவாக்கியதில் இந்த குடும்பம் முக்கிய பங்கு வகித்தது. எட்மண்ட் ஜேம்ஸ் டி ரோத்ஸ்சைல்ட் (1845-1934), மேயரின் பேரன் மற்றும் ஜேம்ஸ் டி ரோத்ஸ்சைல்டின் இளைய மகன். யூத மக்களுக்கு ஒரு தாயகத்தை நிறுவும் யோசனையான சியோனிசத்தின் சிறந்த ஊக்குவிப்பாளர்களில் ஒருவர். யூத எதிர்ப்பு மற்றும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் யூதர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களை உணர்ந்த எட்மண்ட், அப்போது ஒட்டோமான் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் நிலம் வாங்குவதற்கு பெரிய வளங்களை ஒதுக்கீடு செய்தார். யூத காலனிகளை நிறுவுவதற்கும், அந்த நாடுகளில் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கும் எட்மண்ட் நிதியளித்தார். 1934இல் அவர் இறந்த போது, சுமார் 500 சதுர கிலோமீட்டர் நிலத்திலும் கிட்டத்தட்ட 30 குடியிருப்புகளிலும் பிரதிநிதித்துவம் செய்பவராக இருந்தார். அவர் இறந்த பிறகு, பாரிஸில் முதலில் புதைக்கப்பட்டாலும், 1954இல் எட்மண்ட் மற்றும் அவரது மனைவி அட்லிஹெய்டின் உடல்கள் இஸ்ரேலுக்கு ஒரு போர்க்கப்பலில் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்கள் உடல்களுக்கு பிரதமர் டேவிட் பென் குரியன் தலைமையிலான அரசு இறுதி மரியாதை செய்தது. லியோனல் வால்டர் (வால்டர்) ரோத்ஸ்சைல்ட் (1868-1937), இரண்டாவது லார்ட் ரோத்ஸ்சைல்டான இவர், 1917இல் கையெழுத்திடப்பட்ட, புகழ் பெற்ற பால்ஃபோர் பிரகடன ஆவணத்தைப் பெற்றவர் என்பதால், இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு வழிவகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் பாலஸ்தீனத்தில் "யூத மக்களுக்கான தேசிய இல்லத்தை" உருவாக்குவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தனது ஆதரவை அறிவித்தது. சைம் வெய்ஸ்மேன் - சியோனிசத்தின் சிறந்த ஊக்குவிப்பாளர்களில் ஒருவர், பின்னர் அவர் பிரிட்டிஷ் அரசாங்க உதவியுடன் இஸ்ரேலின் முதல் ஜனாதிபதியாக இருந்தார் . பால்ஃபோர் பிரகடனம் தொடர்பான பேட்டியில் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட் கூறுகையில், "ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் யூதர்களின் வாழ்க்கையில் இது மிகப்பெரிய நிகழ்வு, ஒரு அதிசயம். இது நடக்க 3,000 ஆண்டுகள் ஆனது." என்கிறார். டோரதி டி ரோத்ஸ்சைல்ட், 'யாட் ஹனாடிவ்' என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவினார், இது நெசெட் (பாராளுமன்றம்) கட்டிடங்கள், உச்சநீதிமன்றம் மற்றும் மிக சமீபத்தில் இஸ்ரேலின் தேசிய நூலகத்தை கட்டுவதற்கு நிதியளித்தது. சமீபத்தில் இறந்த ஜேக்கப் டி ரோத்ஸ்சைல்ட் கடந்த சில தசாப்தங்களாக இந்த அறக்கட்டளைக்கு தலைமை தாங்கினார். அவரது வழிகாட்டுதலின் கீழ் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் முயற்சிகள் மற்றும் இஸ்ரேலில் அரபு சிறுபான்மையினருக்கு சம வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது இந்த அறக்கட்டளை. "இஸ்ரேலில் ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம் இப்போதும் மிகவும் மதிக்கப்படுகிறது. சியோனிச இயக்கத்தின் முக்கிய நிதியாளர்களில் ஒருவராக அவர்கள் உள்ளனர்” என்று மைக் ரோத்ஸ்சைல்ட் பிபிசியிடம் கூறுகிறார். அதேநேரத்தில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சியோனிச யோசனையைச் சுற்றி ஒன்றுபடவில்லை என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார். "சில ரோத்ஸ்சைல்ட்ஸ் இஸ்ரேல் தேசத்தை நிறுவுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாலும், மற்றவர்கள் உண்மையில் அதற்கு எதிராக இருந்தனர்," என்று அவர் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் உறுப்பினர்களின் ஆதரவுடன், பாலஸ்தீனத்தில் யூத மக்களுக்கு ஒரு தேசிய இல்லத்தை உருவாக்குவதற்கு ஆதரவை வழங்குமாறு பிரிட்டிஷ் அதிகாரிகளை சாய்ம் வெய்ஸ்மேன் சமாதானப்படுத்தினார். ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம் என்ன ஆனது? முதலாம் உலகப் போருக்குப் பிறகு, ரோத்ஸ்சைல்ட்ஸின் சக்தியும் செல்வமும் குறையத் தொடங்கின, அவர்கள் ஒரு பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த குடும்பமாக இருந்தபோதிலும், அவர்கள் ஒரு காலத்தில் அனுபவித்த வசதி, மரியாதை அவர்களுக்கு இல்லை. இருந்தபோதிலும், தொடர்ந்து கட்டுக்கதைகள் மற்றும் சதி கோட்பாடுகளுக்கு ஆளாகினர். ஏன்? " ரோத்ஸ்சைல்ட்ஸ் குறித்து தொடர்ந்து மக்கள் பேசுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் மேற்கில் நன்கு அறியப்பட்ட யூத குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறார்கள். சதி கோட்பாடுகள் மற்றும் யூத எதிர்ப்பு எண்ணங்கள் கைகோர்த்துச் செல்கின்றன" என்கிறார் மைக் ரோத்ஸ்சைல்ட். "சதி கோட்பாடுகள் பொதுவாக சில வகையான யூத-விரோத கூறுகளைக் கொண்டுள்ளன, குறிப்பாக அதில் கூறப்பட்டுள்ள திட்டங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள், யார் நிதியளிக்கிறார்கள் என்பது பற்றிய சில கூறுகள்." "சதி கோட்பாடுகளை நம்புபவர்களில் பலர், யூதர்கள் தான் அவற்றை உருவாக்குகிறார்கள் என்று நினைக்கிறார்கள். யூதர்களைப் பற்றி பேசும்போது, மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார யூதக் குடும்பத்தை குறிவைப்பது மிகவும் எளிதானது அல்லவா" என்கிறார் மைக். https://www.bbc.com/tamil/articles/cxwz8m777mmo
  13. காசா மக்களுக்கு வான்வழியாக நிவாரண பொருட்களை அமெரிக்கா அனுப்பியது இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். வடக்கு காசாவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் இராணுவம் அனுமதித்தால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையிலான உதவிப் பொருட்கள் காசா மக்களுக்கு சென்றடையும் நிலை உள்ளது. காசாவின் மேற்கு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்க இஸ்ரேல் இராணுவம் சம்மதம் தெரிவித்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வந்தன. இதற்கிடையே, காசாவில் அமெரிக்க இராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும். ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபட உள்ளோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். இந்நிலையில், அமெரிக்கா இராணுவம் வான் வழியாக காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது. முதல்கட்டமாக 38,000-க்கும் மேற்பட்ட உணவு பொதிகளை அனுப்பியது. https://thinakkural.lk/article/294272
  14. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். எஞ்சிய மூன்று பாடங்களுக்கு உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அறிவை மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எந்தவொரு மாணவரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையவும், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தமக்கு விருப்பமான மற்றும் திறமையான பாடப் பிரிவுகளில் தொழில்சார் பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 3,370,000 மாணவர்களில் 50,000 மாணவர்களுக்கு ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டல் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார். நாளை (மார்ச் 05) முதல் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 300 நிலையங்களில் இந்த பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/294280
  15. குஜராத்தை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய டெல்ஹி 04 MAR, 2024 | 04:13 PM (நெவில் அன்தனி) குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு, எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 25 ஓட்டங்களால் வெற்றியீட்டிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி புள்ளிகள் நிலையில் முதலாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அணித் தலைவி மெக் லெனிங் குவித்த அரைச் சதம், ஜெஸ் ஜோனாசன், ராதா யாதவ் ஆகிய இருவரின் துல்லியமான பந்துவீச்சகள் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது. மெக் லெனிங் 55 ஓட்டங்ளையும் அலிஸ் கெப்சி 27 ஓட்டங்களையும் அனாபெல் சதலண்ட் 20 ஓட்டங்களையும் ஷிக்கா பாண்டி ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மெக்னா சிங் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஏஷ்லி காட்னர் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களைப் பெற்றார். குஜராத் ஜயன்ட்ஸின் மொத்த எண்ணிக்கையில் 17 உதிரிகள் இரண்டாவது அதிகப்பட்ச எண்ணிககையாக இருந்தது. பந்துவீச்சில் ராதா யாதவ் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெஸ் ஜோனாசன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஜெஸ் ஜோனாசன் https://www.virakesari.lk/article/177870
  16. பத்து வருடங்களின் பின்னர் பாலஸ்தீன பெண் ஒருவர் இரட்டையர்களிற்கு தாயானார் - இஸ்ரேலின் தாக்குதல் அவர்கள் இருவரையும் கொன்றது Published By: RAJEEBAN 04 MAR, 2024 | 03:51 PM apnews ரனியா அபு அன்ஜா கர்ப்பம் தரிப்பதற்கு பத்து வருடங்களும் மூன்று ஐவிஎவ் சிகிச்சைகளும் தேவைப்பட்டன - ஆனால் அவர் ஐந்து நிமிடங்களில் தனது இரண்டு ஐந்துமாத இரட்டையர்களையும் இழந்துவிட்டார். கடந்த சனிக்கிழமை ரபாவில் உள்ள அவரது வீட்டை இஸ்ரேல் தாக்கியவேளை அவரது பிள்ளைகள் கணவர் உறவினர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். ஒன்பது பேர் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர், என உயிர்தப்பியவர்களும் மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர். இரவு பத்துமணிக்கு தனது மகனிற்கு பால் ஊட்டுவதற்காக கண்விழித்த அவர் அதன் பின்னர் தனது ஒருகையில் மகனும் ஒரு கையில் மகளுமாக உறங்கச்சென்றார். கணவர் அருகில் உறங்கிக்கொண்டிருந்தார். அதற்கு ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் அந்த வெடிப்புச்சத்தம் இடம்பெற்றது. நான் எனது கணவருக்காகவும் குழந்தைகளிற்காகவும் கதறினேன் என அவர் கண்ணீர் விட்டபடி குழந்தைகளின் போர்வைகளை தனது நெஞ்சில்வைத்து ஆட்டியபடி தெரிவித்தார். அவர்களின் அப்பா என்னை தனியாக விட்டுவிட்டு இரண்டு பிள்ளைகளுடனும் போய்சேர்ந்துவிட்டார் என அவர் குறிப்பிட்டார். காசாவில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் இஸ்ரேல் பொதுமக்கள் பெருமளவில் வசிக்கும் வீடுகளை தொடர்ச்சியாக தாக்கிவருகின்றது. ஒக்டோபரில் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட ரபா தற்போது பெரும் அழிவை ஏற்படுத்தும் தரைவழிதாக்குதலின் அடுத்த இலக்காக காணப்படுகின்றது. இந்த தாக்குதல்கள் முன்னெச்சரிக்கை இன்றி இடம்பெறுகின்றன - வழமையாக நள்ளிரவில். பொதுமக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்ப்பதாக தெரிவிக்கும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பே இதற்கு காரணம் என குற்றம்சாட்டுகின்றது. ஹமாஸ் தனது அமைப்பினரை பொதுமக்கள் மத்தியில் நிறுத்தியுள்ளது சுரங்கப்பாதைகளை பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று ரொக்கட் லோஞ்சர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் காணப்படுகின்றன என்கின்றது இஸ்ரேல். எனினும் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லும் தனது தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் எதனையும் தெரிவிப்பதில்லை. இந்த குறிப்பிட்டதாக்குதல் குறித்து எதனையும் தெரிவிக்காத இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை பின்பற்றுவதாகவும் பொதுமக்கள் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. அபுஅன்சாவின் வீட்டில் கொல்லப்பட்ட 14 பேரில் ஆறுபேர் சிறுவர்கள் நான்கு பேர் பெண்கள் என உடல்கள் கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் மர்வன் அல் ஹாம்ஸ் தெரிவித்தார். தனது கணவர் பிள்ளைகளை இழந்த ரனியா தனது சகேதாரி கர்ப்பிணியான மற்றுமொரு பெண் உட்பட பல உறவினர்களை இழந்தார். தாக்குதல் இடம்பெற்றவேளை வீட்டில் 35 பேர் காணப்பட்டனர் என தெரிவித்த பாரூக், அபு அன்சாவின் உறவினர் இவர்களில் சிலர் வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் சிறுவர்கள் ஆயுதக்குழுக்களை சேர்ந்த எவரும் அங்கு இருக்கவில்லை என தெரிவித்தார். ரனியாவிற்கும் கணவருக்கும் 29 வயது கடந்த ஒரு தசாப்தகாலமாக அவர்கள் பிள்ளைக்காக பல தடவை தங்களை மருத்துவ கிசிச்சைகளிற்கு உட்படுத்திக்கொண்டனர். இரண்டு தடவை தோல்வியடைந்த ஐவிஎவ் சிகிச்சைக்கு பின்னர் மூன்றாவது ஐவிஎவ் சிகிச்சையின் பின்னர் கடந்த வருட ஆரம்பத்தில் அவர் கர்ப்பம் தரித்தார். ஒக்டோபர் 13ம் திகதி இரட்டையர்கள் பிறந்தனர். கூலித்தொழிலாளியான அவரது கணவர் பெண்பிள்ளைக்கு தாயின் பெயரையே வைக்கவேண்டும் என அடம்பிடித்தார். https://www.virakesari.lk/article/177888
  17. தேங்காயின் விலை உயர்வானது எதிர்காலத்தில் பொதி செய்யப்பட்ட உணவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என உணவுத் தொழில்துறை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான கறிகள் தேங்காய் பாலினை கொண்டு தயாரிக்கப்படுவதால் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர். 60 ரூபா முதல் 80 ரூபா வரையில் இருந்த தேங்காயின் வழமையான விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன ஊடகங்களுக்கு தெரிவித்தார். தேங்காய் தற்போது ரூ.120 முதல் 150 ரூ .வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிகரித்துள்ள தேங்காய் விலையினால் உணவு பொதிகளை தயார் செய்ய முடியாமல் சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இதனால் உணவுப் பொதிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் . அரிசி, கோழியிறைச்சி, முட்டை, எரிவாயு உள்ளிட்ட அனைத்தும் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் தேங்காய்களின் எதிர்பாராத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தேங்காய்களின் திடீர் அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் தேங்காய் எண்ணெயின் விலையும் உயரும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/294220
  18. இன்று முதல் டிஜிட்டல் முறைமைக்கமைய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஊடாக வழங்கப்படும் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சகல கிளைகள் ஊடாக வழங்கப்படும் சேவைகளுக்காக டிஜிட்டல் முறைமையின் கீழ் பதிவு செய்து நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். https://thinakkural.lk/article/294214
  19. 04 MAR, 2024 | 09:43 PM இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இதேவேளை, 95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 447 ரூபா குறிப்பிடப்பட்டுள்ளது. சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 458 ரூபாவாகும். மண்ணெண்ணெயின் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 ரூபாவாகும். https://www.virakesari.lk/article/177912
  20. AB21 வீதி யாழில் இருந்து வட்டுக்கோட்டைச் சந்தியூடாக பொன்னாலைச் சந்தியூடாக மாதகல் ➡️ சேந்தாங்குளம் ➡️ கீரிமலை ➡️ மாவிட்டபுரம் ➡️ காங்கேசன்துறை ➡️ மயிலிட்டி ➡️ பலாலி ➡️ செல்வச்சந்நிதி ➡️ வல்வெட்டித்துறை ➡️ பருத்தித்துறை வரை செல்கிறது. AB21 வீதி பகுதி பகுதியாக புனரமைக்கப்படுகிறது. யாழில் இருந்து வட்டுக்கோட்டைச் சந்தியூடாக பொன்னாலைச் சந்திவரை தரமாக வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. வழுக்கியாற்றுப் பாலம் புனரமைக்கப்படவில்லை.
  21. 04 MAR, 2024 | 04:10 PM இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) புறா மலை (Pigeon Island) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக உலக வன ஜீவராசிகள் தினமான நேற்று ஆளுநரால் உத்தியோகபூர்வமாக புறா மலை (Pigeon Island) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நிலாவெளி சுற்றுலா அபிவிருத்தி குழு,திருகோணமலை ஹோட்டல் சங்கம் மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுற்றுலா பணியக தவிசாளர் மதன்,வனவிலங்கு ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். https://www.virakesari.lk/article/177868
  22. சாந்தனின் உடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயானத்தில் நல்லடக்கம்! 04 MAR, 2024 | 09:19 PM சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் சாந்தன் திடீரென உயிரிழந்திருந்தார். சாந்தன் உயிரோடு இலங்கைக்கு வருவாரென எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென உயிரிழந்த நிலையில் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. மக்கள் பல்வேறு இடங்களிலும் அலைகடலெனத் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து பெருமளவிலான மக்கள் புடைசூழ நல்லடக்கத்திற்காக உடல் தூயிலுமில்லத்திற்கு எடுத்துவரப்பட்ட போது வீதிகளில் திரண்டு மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். இறுதியாக எள்ளங்குளம் மாவீர்ர் துயிலுமில்லத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் போராளிகள் எனப் பெருமளவிலானோரின் கண்ணீர் கதறலுடன் விபூதி போடப்பட்டு சாந்தனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. https://www.virakesari.lk/article/177911
  23. வீட்டு மின்பாவனையின் ஆரம்ப கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு - முழுமையான விபரம் இதோ! 04 MAR, 2024 | 07:53 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணத்தை இன்று திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனை மற்றும் செலவுகளுக்கு அமைய 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்சாரத்துறை சட்டத்தின் 30 ஆவது பிரிவு மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மானியங்களுக்கு அமைவாக கண்காணிப்பு மற்றும் மீள்பரிசீலனைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி மாதம் நூற்றுக்கு 3.34 சதவீதத்தாலும் பின்னர் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பித்த மின்கட்டண திருத்த யோசனையின் பிரகாரம் நூற்றுக்கு 14 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட செலவினங்கள் தொடர்பான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு மற்றும் பொதுமக்களின் கருத்துக்கோரலின் போது கிடைக்கப்பெற்ற யோசனைகளை கருத்திற் கொண்டு மொத்த மின்கட்டணத்தை 21.9 சதவீதத்தினால் குறைப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டிருக்கும் இத்திருத்தம் சகல மின்நுகர்வு கட்டங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வீட்டு பாவனையில் 30 அலகுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் மின்பாவனையாளர்களின் மின்னலகுக்கான கட்டணம் நூற்றுக்கு 33 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 அலகுகளுக்கான மின்கட்டணம் 28 சதவீதத்தால் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளது.61-90 வரையான அலகுக்கான கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 90 அலகுக்கு மேற்பட்டதும் 180 இற்கும் குறைந்ததுமான மின்னலகுக்கான கட்டணம் 24 சதவீதத்தாலும் 180 அலகுகளுக்கு மேற்பட்ட பாவனைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது. மத தலங்களுக்கான மின்கட்டணம் 33 சதவீதத்தாலும் பொது பாவனைகளுக்கான மின்கட்டணம் 23 சதவீதத்தாலும், அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹோட்டல் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும், வீதி மின்விளக்குகளுக்கான கட்டணம் 20 சதவீததத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண திருத்தத்துக்கு அமைய 30 அலகுகளுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் நுகர்வோருக்கான மாதாந்த மின்கட்டணம் 180 ரூபாவில் இருந்து 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு அலகுக்கு அவர்கள் செலுத்தும் கட்டணம் 12 ரூபாவில் இருந்து 08 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 31 - 60 அலகுகளுக்காக அறவிடப்பட்ட 360 ரூபா மின்கட்டணம் 300 ரூபாவாகவும் ஒரு அலகுக்கான கட்டணம் 30 ரூபாவில் இருந்து 20 ரூபாவாகவும் குறைக்கப்பட்டதுள்ளது. https://www.virakesari.lk/article/177909
  24. நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் மறுப்பு - பின்னணி என்ன? தேர்தல் ஆணைய நடைமுறை என்ன? பட மூலாதாரம்,X/நாம் தமிழர் கட்சி 3 மணி நேரங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக அக்கட்சியின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். கடந்த தேர்தல்களைப் போலவே கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி மன்மோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்து இன்று(திங்கள்கிழமை) வழக்கை முடித்து வைத்தனர். வழக்கின் இன்றைய நிலையில், நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட முடியாது. கடந்த ஆண்டு இறுதியில், கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதே காரணம். அதனால்தான், இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னம் கிடைக்கவில்லை. என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் தமிழர் கட்சி 2010-இல் தொடங்கப்பட்டது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் அக்கட்சி தேர்தலில் போட்டியிடத் தொடங்கியது. கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஆண், பெண் இரு பாலருக்கும் சரிபாதி தொகுதிகளை ஒதுக்கியது. அதாவது, அக்கட்சி சார்பில் 20 தொகுதிகளில், ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் களமிறங்கினர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பதிவுபெற்ற கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கும் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆணடு அக்டோர் மாதம் தொடங்கியது. இந்த நிலையில், டிசம்பர் 17 ஆம் தேதி, கர்நாடகாவைத் சேர்ந்த ஒரு பதிவுபெற்ற கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டதால், அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அந்தச் சின்னத்தை ஒதுக்கியது. அந்தச் சின்னத்திற்காக நாம் தமிழர் கட்சியினர் தாமதமாகவே அணுகியிருக்கிறார்கள். இது பாஜகவின் சதி எனச் சாடினார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஊடகங்களிடம் பேசிய அவர்,”நாங்கள் முதன் முதலில் தேர்தலில் போட்டியிடுவதற்காக சின்னத்தை கோரிய போது, நாங்கள் மயில் சின்னத்தைக் கேட்டோம். அது தேசியப் பறவை என்பதால், அந்தச் சின்னத்தை ஒதுக்க மறுத்தனர். ஆனால், தேசிய மலரான தாமரையை பாஜக,விற்கு ஒதுக்கியுள்ளார். இருவருக்கும் ஒரே நியாயம் என்றால், அவர்களுக்கும் தாமரையை ஒதுக்கியிருக்கக் கூடாது,” என்றார். இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கக் கோரி, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிற்கு கடிதம் எழுதினார். அதற்கு எந்த பதிலும் வராத நிலையில், அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். என்ன சொன்னது உயர் நீதிமன்றம்? பட மூலாதாரம்,TWITTER நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மார்ச் 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பல தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதை கருத்தில் கொண்டு இந்த முறையும் அந்தச் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அக்கட்சி சார்பில் வாதிடப்பட்டது. வாதத்தின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி மோகன், “பொது சின்னம் பட்டியலில் உள்ள அந்த சின்னத்தை முதலில் கோருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதன்படி, அந்த சின்னம் தற்போது வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது,”எனக் கேட்டார். தொடர்ந்து பேசிய நீதிபதி, “எந்த ஒரு குறுப்பிட்ட கட்சிக்காகவும் ஆணையத்தின் நடைமுறையை மாற்ற முடியாது. நாம் தமிழர் கட்சி இன்னும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி. அப்படியிருக்கும் போது எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை உரிமை கோர முடியும்,”எனக் கேட்டார். வழக்கு விசாரணை முடிந்த பிறகு வழக்கு மீதான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என வழக்கை ஒத்தி வைத்தார். இந்நிலையில், வழக்கு தொடர்பாக தீர்ப்பு இன்று வெளிவந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்திற்கு எந்த உத்தரவும் இடாமல், நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். நாம் தமிழர் கட்சி கூறுவது என்ன? அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கே சின்னங்கள் ஒதுக்கப்படும் என்பது உண்மைதான் என்று கூறும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி,“பதிவு செய்யப்பட்ட கட்சி தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு, அதே சின்னத்தில் ஒரு விழுக்காடு வாக்குகளுக்கு மேல் பெற்றால், அவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். நாங்கள் எட்டு விழுக்காடு வரை வாக்குகள் பெற்றுள்ளோம். இந்த முறை எங்களுக்கு இந்தச் சின்னத்தைக் கொடுத்தால், நிச்சயம் அதை விட அதிக சதவீத வாக்குகள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பட்டியலில் இடம்பெறுவோம். அதைத் தடுக்கவே, இப்படி சதி செய்துள்ளார்கள்,”என்று கார்த்தி சாடினார். உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாகவும் கார்த்தி கூறினார். கட்சிகள் அங்கீகாரம் - தேர்தல் ஆணைய நடைமுறை என்ன? தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்கள்(ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கன்றது. அதன்படி, தேர்தல் ஆணையம், இரண்டு வகையாக கட்சிகளை அங்கீகரிக்கிறது. ஒன்று- அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி; இரண்டு- அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி. அரசியல் கட்சிகள் இந்த அங்கீகாரத்தை பெறவேண்டும் என்றால் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேன்டும். ஒரு கட்சி மாநில கட்சி அங்கீகாரத்தை பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். மாநில சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும். மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 3 சதவீதம், அதாவது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதேபோல அம்மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 1 நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் 25 இடங்களுக்கு ஒன்று வீதம் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் 2 தொகுதிகளில் வெல்ல வெண்டும். ஒரு கட்சி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்கவேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளில் 6 சதவீத வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள தொகுதிகளில் 2 சதவீத இடங்களை(11 இடங்கள்) 3 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வெற்றி பெற வேண்டும். ஒரு அரசியல் கட்சி 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c51ex253z28o
  25. காசாவில் உடனடி யுத்த நிறுத்தம் - அவுஸ்திரேலிய மலேசிய தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் Published By: RAJEEBAN 04 MAR, 2024 | 01:22 PM இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்கள் காரணமாக உருவாகியுள்ள பிராந்திய பதற்றங்களைத் தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய மலேசிய தலைவர்கள் உடனடியுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அன்டனி அல்பெனிசும் அன்வர் இப்ராஹிமும் இணைந்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து பேசவிரும்பவில்லை, மாறாக பொது உடன்பாடு காணப்படும் உடனடி யுத்த நிறுத்தம் குறித்து பேசவிரும்புகின்றேன் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மெல்பேர்னில் இடம்பெறும் விசேட ஆசியான் மாநாட்டின்போது இருவரும் சந்தித்துக் கொண்டவேளை இந்த கருத்தினை வெளியிட்டுள்ளனர். இந்த மாநாட்டின் இறுதியில் காசா குறித்த அறிக்கையொன்றை வெளியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனினும் மலேசியாவும் ஹமாசும் கடுமையான நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளன. எனினும் பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியநாடுகள் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளன. இதேவேளை ஒக்டோர்பர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் காணப்படும் மோசமான மனிதாபிமான நிலை குறித்து அவுஸ்திரேலிய மலேசிய தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இஸ்ரேல் மீதான தாக்குதலை கண்டிக்காத அவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். காசாவிற்கான பாதுகாப்பான தடையற்ற தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/177865

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.