Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. சாந்தனின் மறைவுக்கு யாழ். பல்கலையில் கறுப்புக் கொடி 02 MAR, 2024 | 02:38 PM மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தாா். அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த ‍பெப்ரவரி 24ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரின் உடல் இலங்கைக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/177744
  2. 02 MAR, 2024 | 05:56 PM (ஆர்.ராம்) தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சிக்கு முதலில் விஜயம் செய்யும் அவர் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் மக்கள் சந்திப்பில் பங்கேற்கவுள்ளதோடு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகலுக்குப் பின்னர் வவுனியாவில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் அவர் பங்கேற்கவுள்ளதோடு அங்கும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொள்வுள்ளார். இதனையடுத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள அவர், இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருப்பதோடு பொதுமக்கள் சந்திப்பில் பங்கேற்று, தொடர்ந்து தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். குறிப்பாக, இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு தற்போது ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளான தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177761
  3. யூபி வொரியர்ஸிடம் வீழ்ந்த குஜராத் ஜயன்ட்ஸின் தோல்வி தொடர்கிறது 02 MAR, 2024 | 02:30 PM (நெவில் அன்தனி) பெங்களூரு, எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் முதல் சுற்றில் குஜராத் ஜயன்ட்ஸ் அணியை 6 விக்கெட்களால் யூபி வொரியர்ஸ் இலகுவாக வெற்றிகொண்டது. இதன் மூலம் இதுவரை தான் விளையாடிய 3 போட்டிகளிலும் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜயன்ட்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. வெள்ளிக்கிழமை (01) நடைபெற்ற இந்த வருடத்துக்கான 8ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது. லோரா வுல்வாட் (28), பெத் மூனி (16) ஆகிய இருவரும் 32 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். பெத் மூனி ஆட்டம் இழந்த பின்னர் மொத்த எண்ணிக்கை 61 ஓட்டங்களாக இருந்தபோது லோரா வுல்வாட் ஆட்டம் இழந்தார். மேலும் 22 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தபோது ஹாலீன் டியோல் 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். இந் நிலையில் ஃபோப் லிச்பீல்ட், ஏஷ்லி காட்னர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 31 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலமான நிலையில் இட்டனர். லிச்பீல்ட் 35 ஓட்டங்களையும் காட்னர் 30 ஓட்டங்களையும் பெற்றனர். மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக விளையாடும் ஒரே ஒரு இலங்கையரான சமரி அத்தபத்து ஆரம்ப பந்துவீச்சாளராக பயன்படுத்தப்பட்டார். அவர் 4 ஓவர்களை சிக்கனமாக வீசி 19 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தார். சொஃபி எக்லஸ்டோன் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யூபி வொரியர்ஸ் 15.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அணித் தலைவி அலிசா ஹீலி (33), கிரான் நவ்கிரே (12) ஆகிய இருவரும் 27 பந்துகளில் அதிரடியாக 42 ஓட்டங்களைக் குவித்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து சமரி அத்தபத்து 17 ஓட்டங்களைப் பெற்றார். ஷ்வேட்டா சேராவத் (2) ஆட்டமிழந்போது யூபி வொரியர்ஸின் மொத்த எண்ணிக்கை 4 விக்கெட் இழப்புக்கு 90 ஓட்டங்களாக இருந்தது. எனினும் க்றேஸ் ஹெரிஸ், தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். க்றேஸ் ஹெரிஸ் 33 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 60 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். தீப்தி ஷர்மா ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களைப் பெற்றார். https://www.virakesari.lk/article/177743
  4. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 1 மார்ச் 2024 மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுர சைவ மடத்தின் மடாதிபதியை பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவரது பெயரை நீக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அது உண்மையா, இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது தருமபுர ஆதீனம். இந்த ஆதீனத்தின் 27-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர் மடாதிபதியாக இருந்து வருகிறார். மடாதிபதியின் சகோதரரான விருதகிரி என்பவர், அவருடைய உதவியாளராகவும் இருந்து வருகிறார். அவர் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதியன்று மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் 'ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவரும் திருவையாறைச் சேர்ந்த மடாதிபதியின் சேவகராகப் பணிபுரியம் செந்தில் என்பவரும் சேர்ந்துகொண்டு, மடாதிபதி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோவும் ஆடியோவும் தங்களிடம் இருப்பதாகவும் அதை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறி மிரட்டியதுடன் என் கழுத்தை நெரித்துக் கொலைசெய்யவும் முயற்சி செய்தார்கள்,' எனத் தெரிவித்திருந்தார். மேலும், 'எங்கள் சார்பில் திருவெண்காட்டைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தொடர்புகொள்வார்' என்றும் அவர்கள் தெரிவித்தனர். என்ன நடந்தது? மேலும், 'விக்னேஷ் என்பவர் இந்தப் பணத்தைக் கேட்டு தன்னை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்ததாகவும்' செம்பனார் கோவிலில் உள்ள கலைமகள் பள்ளிக்கூடத்தின் உரிமையாளர் கொடியரசு, செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், விஜயகுமார், பா.ஜ.கவின் மாவட்டத் தலைவர் அகோரம் ஆகிய நான்கு பேரின் தூண்டுதலின் அடிப்படையிலேயே விக்னேஷும் வினோத்தும் தன்னையும் மடாதிபதியையும் மிரட்டுவதாகவும் இதன் காரணமாக மடத்தில் உள்ளவர்கள் மன உளைச்சலில் இருப்பதால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார். இதைனையடுத்து வினோத், விக்னேஷ், கொடியரசு, செந்தில், ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகியோர் மீது 323, 307, 389, 506, 120 B ஆகிய பிரிவுகளின் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் ஆடுதுறை வினோத், செம்பனார் கோவிலில் உள்ள கலைமகள் பள்ளிக்கூடத்தின் உரிமையாளர் கொடியரசு, சீர்காழி ஒன்றிய பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ், திருவிடைமருதூர் நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ஆகிய நான்கு பேரை மயிலாடுதுறை காவல்துறை கைதுசெய்துள்ளது. மேலும் ஐந்து பேர் தேடப்பட்டு வருகின்றனர். மடம் சார்பாக விளக்கம் பட மூலாதாரம்,DHARUMAPURAM ADHEENAM தருமபுர மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தற்போது உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் நிலையில், இந்தப் புகாரை விருதகிரி அளித்திருக்கிறார். தவிர, மடாதிபதியின் உதவியாளரான செந்தில் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரும் உத்தரப்பிரதேசம் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் மடத்தின் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. "சில நாட்களாக தருமபுரி மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடம் சம்பந்தமான சில போலியான ஆடியோ மற்றும் வீடியோக்களைத் தயாரித்து, மடத்தில் வேலை செய்பவர்களையும் மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டுமென நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளது. "மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும் எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தருமபுர மடத்தையும் எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த தமிழ்நாடு முதல்வருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்," என கூறப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இந்த கைது தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. திடீர் திருப்பம் இதற்கிடையில் திடீர் திருப்பமாக மடத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட செந்தில் என்பவரின் பெயரை நீக்க காவல்துறையிடம் விருதகிரி மனு ஒன்றை அளித்ததாக செய்திகள் வெளியாயின. இந்த மனுவை மடத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் எடுத்துவந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கடிதத்தில், "நான் தங்களிடம் கொடுத்துள்ள புகாரில் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக, தொடர்பு கொண்டு என்று பதற்றத்தில் கணிணியாக்கம் செய்யும்போது கவனமின்மையால் குறிப்பிட்டுவிட்டேன். "அவர் எங்கள் மடத்தின் நேர்மையான உண்மையான பணியாளர். ஆதீனத்தின் நேரடி உதவியாளராகப் பணிபுரிந்து இதுநாள்வரை தவறான நிலைப்பாட்டை எடுத்ததில்லை. "நான் அவரை புகாரில் குறிப்பிட்டுள்ளது எனது கவனமின்மையே காரணமாகும் அவருக்கும் இந்தப் புகாருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே நான் கொடுத்துள்ள புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவரை விடுவிக்கவேண்டும்," எனக் கூறியிருந்தார். "அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து விஷயத்தை பிரச்சனையில்லாமல் முடித்துக்கொள்ளுங்கள், வீணாக ரவுடிகளிடம் பிரச்சனை வைத்துக்கொள்ளாதீர்கள். அவர்கள் சொல்வதைச் செய்யக்கூடியவர்கள் என மடாதிபதியின் உதவியாளர் செந்தில் கூட்டாகச் சேர்ந்துகொண்டு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்," என்று முதல் தகவல் அறிக்கையில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை புகாரிலிருந்து விடுவிக்க மனு கொடுக்கப்பட்டதாக வெளியான செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்படி மாற்றி மாற்றி செய்திகள் வெளியான நிலையில், புகார்தாரரும் மடாதிபதியின் சகோதரருமான விருதகிரியிடம் தொடர்புகொண்டு பேசியபோது, "நான் எந்த புகாரையும் வாபஸ் வாங்கவில்லை. இதுபோல செய்தி வெளியிடுவதற்கு முன்பாக என்னிடம் எந்த ஊடகமாவது உறுதிசெய்திருக்க வேண்டாமா? செந்தில் மீது தான் அளித்த புகார் அப்படியே இருக்கிறது," என்று குறிப்பிட்டார். இது தவிர வேறு எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. தருமபுர மடாதிபதி ஊரில் இல்லாத நிலையில், காவல்துறையில் இவ்வளவு பெரிய புகார் அளிக்கப்பட்டிருப்பதும் அது தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. https://www.bbc.com/tamil/articles/c3glnjr3793o
  5. இஸ்ரேல் காசா - உணவு வாகனத் தொடரணி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலரின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் - ஐ.நா. தகவல் Published By: RAJEEBAN 02 MAR, 2024 | 12:29 PM காசாவில் உணவுவாகனத்தை சூழ்ந்த மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தினால் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை காயமடைந்த பலரின் உடல்களில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது. காசாவின் அல்ஸிபா மருத்துவமனைக்கு சென்றுள்ள ஐநா அதிகாரிகள் இந்த சம்பவத்தினால் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவரும் 200க்கும் அதிகமானவர்களை பார்வையிட்டுள்ளனர். இஸ்ரேலின் துப்பாக்கி பிரயோகம் காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்பட்டன என ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. உணவு வாகனங்கள் மோதியதால் இழப்புகள் ஏற்பட்டன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உலகதலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வியாழக்கிழமை காலையில் இஸ்ரேலின் பாதுகாப்புடன் நுழைந்த உணவுவாகனத்தொடரணியை ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்துகொண்டதை தொடர்ந்தே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. துப்பாக்கிபிரயோக சத்தங்கள் கேட்பதையும் மக்கள் பதறி ஓடுவதையும் லொறிகள் பின்னால் மறைந்துகொள்வதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. 112 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 760 பேர் காயமடைந்துள்ளனர் என ஹமாசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பதற்றமடைந்ததை தொடர்ந்து ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாகவே உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வாகனத்தொடரணியை சூழ்ந்துகொண்டதை தொடர்ந்து இஸ்ரேலிய படையினர் அங்கிருந்து அவர்களை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை பாலஸ்தீனியர்கள் தரப்பிலிருந்தே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என இஸ்ரேலிய பிரதமரின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த அன்றைய தினமே ஐநாவின் பிரதிநிதிகள் அல்சிபா மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டனர். அன்றைய சம்பவத்தில் சிக்கிய பலர் துப்பாக்கி காயங்களால் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்தனர் என ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்டீபனே துஜாரிக் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177733
  6. ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் - உங்களை நாங்கள் மறக்கமாட்டோம் - புட்டின் இல்லாத ரஸ்யா என கோசம் Published By: RAJEEBAN 02 MAR, 2024 | 12:43 PM கடும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி ஆயிரக்கணக்கான ரஸ்ய மக்கள் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர் ரஸ்ய ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த அலெக்ஸி நவால்னி 16 ம் திகதி சிறையில் உயிரிழந்தார். இது தொடர்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது குற்றம் என அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதிலும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நவால்னியின் பெயரை குறிப்பிட்டு கோசங்களை எழுப்பினர். நவால்னி பல வருடங்களாக வசித்த ரஸ்யாவின் மர்யினோ பகுதியில் நேற்று இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றவேளை ஆயிரக்கணக்கில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கடும் குளிருக்கும் மேல் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என நவால்னியின் குழுவினர் தெரிவித்துள்ளனர். அங்கு காணப்பட்ட மக்கள் அரசியல் ரீதியில் கோசங்களை எழுப்பினர் எனினும் பொலிஸார் அதில் தலையிடவில்லை. யுத்தம் வேண்டாம், புட்டின் இல்லாத ரஸ்யா, ரஸ்யா சுதந்திரமடையும் என மக்கள் கோசங்களை எழுப்பினர். ஐகோன் ஒவ் அவர் லேடி குயின்ஞ் மை சொரோவ்ஸ் தேவாலயத்தில் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன . ரஸ்ய அதிகாரிகள் இறுதிநிகழ்வுகளிற்கு பல இடையூறுகளை ஏற்படுத்தினர். பிரேதத்தை கொண்டுசெல்வதற்கான வாகனங்கள் கிடைக்க விடாமல் தடுத்தனர் என நவால்னியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் காத்திருந்தனர் ஜேர்மன் பிரான்ஸ் உட்பட பல நாடுகளின் தூதுவர்களும் அப்பகுதிக்கு சென்றிருந்தனர். தேவாலயத்திற்குள் சில நிமிடங்களே ஆராதனைகள் இடம்பெற்றன நவால்னியின் உடலிற்கு பலர் அஞ்சலி செலுத்துவதையும் அவரது தாயார் மனைவி காணப்படுவதையும் காண்பிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் தேவாலயத்தின் மணியோசை கேட்டதும் பிரேதப்பெட்டி வெளியே கொண்டுவரப்பட்டது. பூக்களை எறிந்த மக்கள் நாங்கள் உங்களை மறக்கமாட்டோம் என கோசம் எழுப்பினர். https://www.virakesari.lk/article/177737
  7. 02 MAR, 2024 | 11:29 AM இலங்கையில் நீதி செத்துவிட்டது என போராட்டம் நடத்தியவர்கள் இன்று தமது உட்கட்சி பிரச்சினைக்கு நீதி வேண்டி இலங்கை நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் சனிக்கிழமை (02) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றவர்கள், இலங்கை நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லை என்றவர்கள், முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டுப்போனதை வைத்து இலங்கையில் நீதி செத்துவிட்டதென்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியவர்கள், எல்லா பிரச்சினைகளுக்கும் சர்வதேச நீதி விசாரணையே தேவை என்றவர்கள், தமது உட்கட்சி விவகாரத்துக்கு தீர்வு கோரி இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினை என்றால் அது தீர்ந்துவிடக்கூடாதென்று சர்வதேச நீதிமன்றத்துக்கும் போவோம் என்பார்கள். தமது பிரச்சினை என்றவுடன் அதை இலகுவாக தீர்க்கும் விருப்பத்தோடு இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதிலிருந்து இவர்களது அரசியல் நாடக வேடம் முற்றாக கலைந்துவிட்டது" என்றுள்ளது. https://www.virakesari.lk/article/177731
  8. இலங்கையின் புதிய - உத்தேச சட்டங்களால் அடிப்படை உரிமைகள் சுதந்திரம் சட்டத்தின் ஆட்சிக்கு கடும் பாதிப்பு - ஐநா மனித உரிமை ஆணையாளர் கவலை Published By: RAJEEBAN 02 MAR, 2024 | 07:32 AM இலங்கையில் அடிப்படை உரிமைகள் சுதந்திரம் சட்டத்தின் ஆட்சி ஜனநாயக ஆட்சி முறை ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய உத்தேச சட்டங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்றவை ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துகின்றன பாதுகாப்பு படையினருக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்குகின்றன ஒன்றுகூடல் கருத்து சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கின்றன எனவும் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177722
  9. பெங்களூரு குண்டுவெடிப்பு | சிசிடிவியில் சிக்கிய சந்தேக நபர் 02 MAR, 2024 | 10:39 AM பெங்களூருவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உணவகமொன்றில் மர்ம நபர் ஒருவர் பையை எடுத்துச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் மிகவும் பிரபலமான உணவமாக ‘ராமேஸ்வரம் கபே’ கடை திகழ்கிறது. திவ்யா ராகவேந்திர ராவ்-ராகவேந்திர ராவ் தம்பதி இந்த கடைகளை நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கபே மூலம் மாதம் ரூ.4½ கோடி வருமானம் வருவதாக கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர அப்துல்கலாமின் நினைவாக அவர் பிறந்த ஊரான ராமேஸ்வரம் பெயரை கொண்டு ‘ராமேஸ்வரம் கபே’ என்ற பெயரில் திவ்யா-ராகவேந்தர் தம்பதி உணவகங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூர் குந்தலஹள்ளியில் உள்ள புரூக்பீல்டிலும் ராமேசுவரம் கபே இயங்கி வருகிறது. அந்த உணவகத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். சரியாக மதியம் 1 மணி 5 நிமிடத்தில் ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் 2 முறை வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது. இதனால் உணவகம் மொத்தமும் புகை மண்டலமாக மாறியது. இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. தரையில் பதிக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்களும் உடைந்து சேதமாகின. ல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள், குண்டுகள் வெடித்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனடியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்த உணவுப்பொருட்களை அப்படியே போட்டுவிட்டு, பதறி அடித்து வெளியே ஓடிவிட்டார்கள். சிலிண்டர் வெடித்ததாக பலரும் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வெடித்து குண்டு என்பது அதன்பின்னரே அவர்களுக்கு தெரிந்தது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த பெண் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். சாப்பிட வருவது போல வந்த வாடிக்கையாளர் ஒருவர், தான் கையோடு கொண்டு வந்த பையை வைத்து விட்டு சென்றதாகவும், அவர் விட்டு சென்ற பை ஒன்றில் இருந்த பொருள்தான் வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிசிடிவியில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து உள்ளார். வெடித்தது மிக வீரியமிக்க IED வெடிகுண்டு என போலீசார் கூறுகின்றனர். தீவிர விசாரணை நடந்து வருகின்றது என்று துணை முதல்வர் டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். பையில் இருந்ததைத் தவிர, வளாகத்தில் ஐஇடி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 28 முதல் 30 வயதுடையவர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவரை கைது செய்தது போலீஸ். வாடிக்கையாளர்போல் வந்து வெடிகுண்டு வைத்தது யார் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கைதானவர் யார் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற விவரம் வெளியாகவில்லை. சந்தேக நபர், முகமூடி, கண்ணாடி மற்றும் தலைக்கு மேல் தொப்பியால் முகத்தை மறைத்து, இட்லி தட்டை எடுத்துச் செல்வது ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் சிக்கியுள்ளது. https://www.virakesari.lk/article/177729
  10. Published By: RAJEEBAN 02 MAR, 2024 | 10:02 AM இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஐக்கியநாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்கெர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை அரசாங்கம் கடந்தகாலத்தைய தற்போதைய மனித உரிமை மீறல்கள் பொருளாதார குற்றங்கள் தொடர்பி;ல் விசாரணைகளை மேற்கொண்டு வழக்குகளை தாக்கல் செய்வதற்கான நம்பகதன்மை மிக்க பொறுப்புக்கூறல்நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் உலகளாவிய மற்றும் சர்வதேச நியாயதிக்க எல்லைக்கு பொருத்தமான இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகளை இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என நம்பதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/177725
  11. காத்தான்குடியில் சந்தேகத்தில் கைதான 30 பேரும் பிணையில் விடுதலை! 02 MAR, 2024 | 01:12 AM காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (1) மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். காத்தான்குடி பாலமுனை பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கூட்டம் நடாத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலையான ஸஹ்ரான் காசிமின் சகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை (01) அதிகாலையில் பொலிசார் கைது செய்துள்ளதுடன் 23 மோட்டார்சைக்கிள்கள் ஆட்டோ ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு பொலிசார் சென்று விசேட சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதையடுத்து பிரதேசத்தில் பெரும் பரபரப்பு எற்பட்டது. இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இவர்களை வெள்ளிக்கிழமை (1) மாலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்தார். https://www.virakesari.lk/article/177720
  12. சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க கைது Published By: VISHNU 01 MAR, 2024 | 09:58 PM சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக வைத்தியர் சமன் ரத்நாயக்க வெள்ளிக்கிழமை (01) பிற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்தார். சுமார் 7 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177712
  13. சின்ன சாந்தனின் ஈழத்திற்கான செயற்பாடு அளப்பரியது
  14. 02 MAR, 2024 | 10:17 AM கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் காடுகளை வெட்டி காணியை கைவசப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஆனையிறவுக்கும் இயக்கச்சிக்கும் இடையில் ஏ9 வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள காட்டுப் பகுதியில் இயந்திர உபகரணங்கள் மூலம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் காடுகளை வெட்டி பல ஏக்கர் பரப்பளவில் காணிகளை பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரதேசத்துக்கு அருகில் இராணுவ முகாம் ஒன்றும் இருக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், பளை பொலிஸார், கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கும் பொது மக்கள், தாம் சிலர் காடுகளை அழித்து அப்புறப்படுத்துபவர்களிடம் சென்று விசாரித்தபோது அவர்கள் பதிலளிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். எனவே, உரிய தரப்பினர் இக்காடழிப்பு விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/177726
  15. 1 மார்ச் 2024 கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் உணவகத்தில் பயங்கர வெடிச்சத்தத்துடன் மர்மப்பொருள் ஒன்று வெடித்துள்ளது. பெங்களூருவின் ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் இன்று மதியம் ஒரு வெடிப்பு நிகழ்ந்தது. இது குண்டுவெடிப்பா அல்லது சிலிண்டர் வெடிப்பா என போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நடந்தது IED குண்டுவெடிப்பு எனக் கூறப்படுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேட்டி அளித்துள்ளார். சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் உணவகத்திற்கு வந்த ஒருவர் விட்டுச் சென்ற பையில் இருந்து வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்ததாக கர்நாடக டிஜிபி அலோக் மோகன் தெரிவித்தார். சம்பவம் நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஒயிட் பீல்டு பகுதி தீயணைப்பு துறையினர் கூறுகையில், தங்களுக்கு சிலிண்டர் வெடித்ததாக அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த வெடிகுண்டு கண்டறிதல் குழுவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். https://www.bbc.com/tamil/articles/cd14deeyel8o
  16. நெஞ்சுக்கு நீதியும் என்னும் பாரதியார் பாடல். மனதுக்குள் புகுந்து இடம் பிடித்து அமர்ந்து விடும் பாடல். சக்தி ஓம் சக்தி ஓம் சொல்லும்போதும் சக்திவேல் சக்திவேல் சொல்லும்போதும் உணர்ச்சி பொங்கும். சிலிர்க்கும். பாரதியார் வரிகளா, ராகமா, எம் எஸ் அம்மா குரலா... எல்லாம் சேர்ந்து செய்யும் மாயம். நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப்பூண் பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாம் இவள் பார்வைக்கு நேர்பெருந்தீ. வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி வையக மாந்தரெல்லாம் தஞ்சமென்றே யுரைப் பீர் அவள் பேர் சக்திஓம் சக்தி ஓம் சக்தி ஓம் [2.நல்லதும் தீயதுஞ் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்; அல்லது நீங்கும்" என்றேயுல கேழும் அறைந்திடு வாய்முரசே சொல்லத்தகுந்த பொருளன்று காண் இங்குச் சொல்லு மவர்தமையே அல்லல் கெடுத்தம ரர்க்கினை யாக்கிடும் ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.] 3.நம்புவதேவழி என்ற மறைதன்னை நாமின்று நம்பிவிட்டோம் கும்பி ட்ட நேரமும் சக்தி யென்றாலுனைக் கும்பிடுவேன் மனமே . அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி . உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம். 5. வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு ளாக விளங்கிடுவாய்! தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு விண்ணப்பம் செய்திடுவேன் . எள்ளத் தனைபபொழு தும் பய னின்றி யிராதென்றன் நாவினிலே வெள்ள மெனப்பொழி வாய் சக்திவேல் சக்திவேல் சக்திவேல் சக்தி வேல்!
  17. ரஷ்ய பசிபிக் கடற்படையின் ஏவுகணை கப்பல் வர்யாக் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. “இன்று, பசிபிக் கடற்படையின் முதன்மையான, கார்ட்ஸ் ஆர்டர் ஆஃப் நக்கிமோவ் ஏவுகணை கப்பல் வர்யாக் இலங்கையின் மிகப்பெரிய துறைமுகமான கொழும்பில் வணிக அழைப்பை மேற்கொண்டுள்ளது” என கடற்படையின் பத்திரிகை அலுவலகம் இன்று ரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 187 மீ நீளமுள்ள இந்த கப்பல் 529 பேர் கொண்ட ஏவுகணை கப்பலாகும். கப்பலின் கொடி அதிகாரி கெப்டன் 1 ஆவது தரவரிசை வெலிச்கோ அனடோலி வாசிசீவிச் மற்றும் கெப்டன் 2 ஆவது தரவரிசை குளுஷாகோவ் ரோமன் நிகோலாவிச் கட்டளை அதிகாரியாக பணியாற்றுகிறார். இதேவேளை, கப்பலின் கொடி அதிகாரி மற்றும் கட்டளை அதிகாரி ஆகியோர் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவை சந்திக்க உள்ளனர். இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள், நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களை பார்வையிடும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருக்கும் போது, ரஷ்ய கடற்படை கப்பல் நீர் மற்றும் எரிபொருள் விநியோகங்களை நிரப்பும். கப்பல் வரவேற்பு விழாவில் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரக ஊழியர்கள், அந்நாட்டின் கடற்படை அதிகாரிகள் மற்றும் துறைமுக சேவைகளின் பணியாளர்கள் கலந்துகொண்டதாக ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய போர்க்கப்பல் மார்ச் 4 வரை கொழும்பு துறைமுகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/293982
  18. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிணையில் விடுவிக்கப்பட்ட 30 பேர் கைது! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடியில் வீடொன்றில் ஒன்றுகூடியுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (01) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சில குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/293948
  19. சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு : அறிக்கை நிதி அமைச்சின் அனுமதிக்காக சமர்ப்பிப்பு! சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன இன்று (01) அங்கீகாரம் வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சில் இன்று காலை 72 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். அதற்கமைவாக, கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான யோசனை அறிக்கையானது, நிதி அமைச்சின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். வைத்தியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் அண்மையில் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தன. இந்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சரினால் தொழில்நுட்பக் குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/293960
  20. ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல் 174 : நியூஸிலாந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 179 ஓட்டங்கள் 01 MAR, 2024 | 04:18 PM (நெவில் அன்தனி) வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வீரர் கெமரன் க்றீன் தனித்து ஆட்டம் இழக்காமல் 174 ஓட்டங்களைக் குவிக்க, நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் க்றீன், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் கடைசி விக்கெட்டில் பகிர்ந்த சாதனைமிகு 116 ஓட்டங்களின் உதவியுடன் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 383 ஓட்டங்களைப் பெற்றது. இந்த இணைப்பாட்டமானது நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் அவுஸ்திரேலியாவின் கடைசி விக்கெட் ஜோடியினரால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும். நியூஸிலாந்துக்கு எதிராக 2004ஆம் ஆண்டு க்ளென் மெக்ராவும் ஜேசன் கிலெஸ்பியும் 10ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 114 ஓட்டங்களே முன்னைய சாதனையாக இருந்தது. மேலும் கெமரன் க்றீன், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் பகிர்ந்த இணைப்பாட்டமே அவுஸ்திரேலியாவின் முதலாவது இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. போட்டியின் முதாலாம் நாளான வியாழக்கிழமை (29) மொத்த எண்ணிக்கை 267 ஓட்டங்களாக இருந்தபோது ஜோடி சேர்ந்த கெமரன் க்றீன், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவைப் பலப்படுத்தினர். கடைசி விக்கெட் இணைப்பாட்டத்தில் ஹேஸ்ல்வூடின் பங்களிப்பு 22 ஓட்டங்களாகும். கெமரன் க்றீன் 6 மணித்தியாலங்கள, 36 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 275 பந்தகளை எதிர்கொண்டு 174 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாக 41 உதிரிகள் அமைந்தது. மிச்செல் மாஷ் 40 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 33 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மெட் ஹென்றி 70 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஸ்கொட் குகெலின் 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வில்லியம் ஓ'றூக் 87 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. டொம் லெதம் (5), கேன் வில்லியம்சன் (0), ரச்சின் ரவிந்த்ரா (0), டெரில் மிச்செல் (11), வில் யங் (9) ஆகிய 5 முன்வரிசை வீரர்களும் ஆஸி.யின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆட்டம் இழந்தனர். (29 - 5 விக்.) எனினும் டொம் ப்ளெண்டலும் க்ளென் பிலிப்ஸும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர். டொம் ப்ளெண்டல் 33 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஸ்கொட் குகேலின் ஓட்டம் பெறாமல் களம் விட்டகன்றார். (113 - 7 விக்.) இந் நிலையில் க்ளென் பிலிப்ஸ், மெட் ஹென்றி ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைக் கட்டி எழுப்ப முயற்சித்தனர். எனினும் மொத்த எண்ணிக்கை 161 ஓட்டங்களாக இருந்தபோது க்ளென் பிலிப்ஸ் 71 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். கடைசியாக ஆட்டம் இழந்த மெட் ஹென்றி 42 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நேதன் லயன் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 13 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதம் இருக்க 217 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது. https://www.virakesari.lk/article/177689
  21. அண்ணை போலிச் செய்திகளை நீக்குவதும் கடினமான பணியாகத் தான் இருக்கும்.
  22. டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி பிரகாசிப்பு; மந்தனாவின் அரைச் சதம் வீண் 01 MAR, 2024 | 03:05 PM (நெவில் அன்தனி) பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (29) இரவு நடைபெற்ற மகளிர் பீறிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 25 ஓட்டங்களால் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி வெற்றிகொண்டது. மாரிஸ்ஆன் கெப், ஜெஸ் ஜொனாசன் ஆகியோரின் சகலதுறை ஆட்டங்கள், ஷஃபாலி வர்மாவின் அதிரடி துடுப்பாட்டம் என்பன டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை வெற்றிபெறச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களைக் குவித்தது. ஷஃபாலி முதாலவது ஓவரில் கொடுத்த இலகுவான பிடியை ஷ்ரியன்கா மேகனா தவறவிட்டது றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை சாதகமாக்கிக்கொண்டு அதிரடியில் இறங்கிய ஷஃபாலி வர்மா 31 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 3 பவண்டறிகளுடன் 50 ஓட்டங்களைக் குவித்ததுடன் அலிஸ் கெப்சியுடன் 2ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். அலிஸ் கெப்சி 33 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்றார். அவர்களை விட மத்திய வரிசையில் மாரிஸ் ஆன் கெப் 16 பந்துகளில் 32 ஓட்டங்களையும் ஜெஸ் ஜொனாசென் 16 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சொஃபி டிவைன் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நாடின் டி க்ளார்க் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா தனது வழமையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களைக் குவித்தார். மந்தனாவும் சொஃபி டிவைனும் முதலாவது விக்கெட்டில் 51 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். சொஃபி டிவைன் 23 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய துடுப்பாட்ட வீராங்னைகளில் சபினேனி மேகான (36), ரிச்சா கோஷ் (16) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் ஜெஸ் ஜொனாசன் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அருந்ததி ரெட்டி 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/177669
  23. சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் - வாங்கல் : ஆரம்பகட்ட விசாரணைகள் 14 நாட்களுக்குள் நிறைவடைய வேண்டும் : மாளிகாகந்த நீதவான் அதிகாரிகளுக்கு உத்தரவு 01 MAR, 2024 | 07:10 PM (எம்.வை.எம்.சியாம்) சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பெப்ரவரி 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாமல் இருக்கும் அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்படவில்லை என உடல்நலக்குறைவு தொடர்பில் பரிசீலனை மேற்கொண்ட 9 பேர் அடங்கிய வைத்தியக் குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனிடையே எதிர்வரும் 14 நாட்களுக்குள் இந்த வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் அனைத்தையும் நிறைவு செய்யுமாறும், மேலும் இந்த மருந்து கொடுக்கல் வாங்கலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு மாளிகாகந்த நீதவான் உத்தரவு பிறப்பித்தார். வழக்கின் 8ஆவது சந்தேக நபரான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, உடல் நலம் தொடர்பில் பொய்யான காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு, கடந்த 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாவதை அவர் தவிர்த்திருப்பதாக வாதங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அவரது உடல்நலக்குறைவு தொடர்பில் நீதிமன்றத்துக்கு போலியான தகவல்களை முன்வைத்த சிறைச்சாலை வைத்தியர் தொடர்பில் கட்டளையை பிறப்பிக்குமாறும் குறிப்பிட்டார். தரமற்ற இம்யுனோகுளோபுலின் மருந்து கொள்வனவு விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று (29) மாளிகாகந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபயவிக்கிரம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, “எனது சேவை பெறுநர் நின்று கொண்டிருக்க முடியாத அளவுக்கு இருக்கிறார். அவர் ஆசனத்தில் அமர்வதற்கு அனுமதியளியுங்கள்" என கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த நீதவான் “நின்றுகொண்டிருக்க முடியாத எந்த சந்தேக நபரும் குற்றவாளிக் கூண்டில் அமர முடியும்” என குறிப்பிட்டார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கடந்த 15ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் இருந்த காரணிகளாக குறிப்பிடப்பட்ட உடல்நலக்குறைவு தொடர்பில் பரிசீலனையை மேற்கொண்ட 9 பேர் அடங்கிய வைத்திய குழுவின் அறிக்கையை அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம திறந்த மன்றில் முன்வைத்தார். ".....கனம் நீதவான் அவர்களே, இதுவரையில் எனது கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள விசேட வைத்திய அறிக்கையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கடந்த 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாமல் இருக்கும் அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்படவில்லை என மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு மூச்சு விடுவதற்கும், மார்பின் வலது புறத்தில் வருத்தம் காணப்பட்ட போதிலும், அது நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கவில்லை என நியமிக்கப்பட்ட விசேட வைத்திய குழு குறிப்பிட்டுள்ளது." அத்துடன் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சந்தேக நபரை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக இருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றத்துக்கு பொய்யான தகவல்களை முன்வைத்த சிறைச்சாலை வைத்தியருக்கு உரிய கட்டளை பிறப்பிக்குமாறு உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” இதற்கு பதிலளித்த நீதவான், இதுபோன்ற வழக்குகளில் ஏனைய சந்தேக நபர்களை போன்று அறிக்கை வழங்கக் கூடாது என சிறைச்சாலை வைத்தியர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில், இவ்வாறான அறிக்கை நீதிபதிகளின் தீர்மானங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, சட்டமா அதிபர் தலையிட்டு வைத்திய சபையுடன் ஒன்றிணைந்து சிறைச்சாலை வைத்தியர் நீதிமன்றத்துக்கு உண்மையான தகவல்களை மாத்திரம் வழங்கும் வகையில் தயார்ப்படுத்த வேண்டும்' என குறிப்பிட்டார். அத்துடன், இந்த சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு விவகாரத்தில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் தலையீடு எவ்வாறு இருந்தது என நீதவான் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம ...கனம் நீதவான் அவர்களே “முன்னாள் சுகாதார அமைச்சரால் போலியான முறையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவைக்கு முன்வைத்த பத்திரத்தை வைத்தியர் சமன் ரத்நாயக்கவின் கீழ் உள்ள மருத்துவ உற்பத்தி மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல் பிரிவே தயார்ப்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பில் மேலதிக வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள சி.ஐ.டிக்கு முன்னிலையாகுமாறு அவரது நிரந்தர முகவரிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தோம். அதனை அவரது மனைவி பொறுப்பேற்றுக்கொண்டார். எவ்வாறாயினும், அவரது தொலைபேசி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர் தற்காலிகமாக வசிப்பதாக அதிகாரிகளுக்கு குறிப்பிட்டுள்ள முகவரியும் போலியானது. இவ்வாறான நிலையில் அவர் நேற்றுமுன்தினம் பகல் விசாரணை அதிகாரிக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக இரண்டு நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளதாக குறுஞ்செய்தி மூலம் அனுப்பியிருக்கிறார். மேலும் வனாத்துவில் பகுதியில் இருப்பதாகவும் பிறிதொரு நாளில் வருகை தந்து வாக்குமூலம் வழங்குவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டபோது இரண்டு நாட்கள் விடுமுறை எனக் கூறிய போதிலும் அவர் காரியாலயத்தில் கடமையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. ஆகவே இந்த காரணங்களை ஆராய்ந்து நாளை காலை 9 மணிக்கு சி.ஐ.டி.,க்கு ஆஜராகுமாறு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” இந்த கோரிக்கைக்கு பதிலளித்த நீதவான் நபர் ஒருவர் விசாரணைகளை தவிர்ப்பாராயின் அதற்குரிய விடயதானங்களுக்கு அமைய உரிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுங்கள் என்றார். சர்ச்சைக்குரிய இந்த மருந்து கொள்வனவு மற்றும் விநியோகப் பிரிவின் உறுப்பினராக செயற்பட்ட வைத்தியர் ஜெயனாத் புத்திக்க, விசாரணைகளை புறக்கணித்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் சந்தேக நபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பித்து அவரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறும் அரச சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் கோரிக்கை விடுத்தார். இதற்கு நீதவான் சந்தேக நபருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பித்தார். இந்நிலையில், விடயங்களை ஆராய்ந்த நீதவான், எதிர்வரும் 14 நாட்களுக்குள் இந்த வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளையும் அனைத்தையும் நிறைவு செய்யுமாறும் மேலும் இந்த மருந்து கொடுக்கல் வாங்கலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 பேரும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிபதி லோசினி அபேவிக்கிரம உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/177699
  24. யாழில் அதிகரிக்கும் விபத்துக்கள்: பேராசிரியர் சுரேந்திரகுமார் கவலை யாழில் இடம்பெறும் விபத்துக்கள் உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவைக் காட்டிலும் அதிகமாக இடம்பெறுவதாக யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திர குமார் கவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் மருத்துவ பீடத்திற்காக எட்டுமாடிகள் கொண்ட கட்டிடம் யாழ் நகரத்திலுல் அமைக்கப்பட்டிருக்கிறது. குறித்த கட்டடத்திற்கான நிலத்தினை 2015ஆம் ஆண்டு மாநகர சபை வழங்கப்பட்டிருந்தது. குறித்த கட்டடத்தில் கல்வி, ஆய்வுகள் சேவைகள் என்பன இடம்பெறவுள்ளது. பாரிய தாக்கம் மேலும், மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் நோயாளர்களுக்கான சிகிச்சைகள் என்பனவும் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன் மாணவர்கள், வைத்தியர்கள், தாதியர்களுக்கான நவீனத்துவமான பயிற்சிகளை வழங்குவதற்கான பயிற்சிகள் என்பனவும் வழங்கப்படவுள்ளது. குறித்த சேவைகளை முன்னெடுப்பதற்கு எமக்கு சவாலாக இருப்பது நீண்ட தூரம் தரித்து நிற்கும் பேருந்துகளே. நாம் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருப்பினும் இப்போது எமது கட்டடத்திற்கு முன்பாக தரித்து நிற்கும் பேருந்துகள் எமது மருத்துவ சேவைகளை முன்னெடுப்பதற்கும் குறிப்பாக நோயாளிகளின் ஆரோக்கியம் தொடர்பிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. யாழ்.மாநகரசபை, மாவட்டச்செயலகம், ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து யாழ்ப்பாண ஆரோக்கிய நகரம் எனும் திட்டத்தினை உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளோம். வாகன நெரிசல் ஒரு இடையூறு குறித்த திட்டத்தினை மேற்கொள்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை பணியாளர்களும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பணியாளர்களும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வருகைதரவுள்ளனர். எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் யாழ்ப்பாண நகரத்தினை ஆரோக்கிய நகரமாக மாற்றுவதற்கான வேலை திட்டங்களை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர். எனவே, எதிர்காலத்திலும் அது நகரத்தினை ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதற்கு வாகன நெரிசல் ஒரு இடையூறாக காணப்படுகிறது. இந்த போக்குவரத்தின் செயற்பாடுகள் இடையூறாகவும் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. நமது எல்லைக்குள் இடம்பெறும் விபத்துக்கள் உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவைக் காட்டிலும் அதிகமாக இடம்பெறுகிறது. எனவே, இதற்கு காரணமாக உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி நகரத்தை தூய்மையாக பேணுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/accidents-increase-in-july-1709277457
  25. வடக்கின் 3 தீவுகளை இலக்கு வைத்து இந்தியாவின் புதிய திட்டம் வடமாகாணத்தின் மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அமைப்பு முறைகளை உருவாக்குவது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 10995 அமெரிக்க டொலர் முழுமையான நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நெடுந்தீவு, அனலை தீவு, நயினா தீவு ஆகியன 2025ஆம் மார்ச் மாதத்திற்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்புமுறைகளை பெற்றுக் கொள்ளும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் நன்றி தெரிவிப்பு இந்தியாவை தளமாக கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன்ஸ் என்ற நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் 530 கிலோவோட் காற்றாலை மின்சாரம் 1700 கிலோவோட் சூரியசக்தி உட்பட சக்தி அமைப்புகளை இந்த தீவில் உருவாக்கவுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்ட உதவிகளுக்காக இந்திய அரசாங்கம் இலங்கைக்கான இந்திய தூதுவர் முன்னாள் தூதுவர் உட்பட இந்திய அதிகாரிகளுக்கு அமைச்சர் காஞ்சன விஜயசேகர நன்றி தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/india-s-plan-in-northern-province-1709296184

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.