Everything posted by ஏராளன்
-
போசணை குறைப்பாட்டினால் 410,000 பெண் பிள்ளைகள் உடல் எடை குறைந்திருப்பதாக ஆய்வில் தகவல்
Published By: DIGITAL DESK 3 09 MAR, 2024 | 02:38 PM இலங்கையில் 5 முதல் 19 வயது வரையிலான 410,000 பாடசாலையில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் போசணைக் குறைபாடு காரணமாக எடை குறைவாக இருப்பதாக வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது, பிரித்தானிய ‘லான்செட் மெடிக்கல் ஜர்னல்’ இதழின் ஆய்வின் படி உலகில் போசணை குறைபாடு காரணமாக உடல் எடை குறைந்தவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது. உலகளவில் உடல் எடை குறைவினால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களின் வீதம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கையில் உள்ளது. 199 நாடுகளில் 22 கோடி பேரிடம் சுமார் 1,900 ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உடற் திணிவுச் சுட்டி (உயரத்திற்கான எடை) முக்கிய அளவுகோலாக எடுக்கப்பட்டுள்ளது. ஒருவரது உடலினது உயரத்திற்கு பொருத்தமான நிறை எவ்வளவு என்பதை கணித்தல் உடற் திணிவுச் சுட்டி ஆகும். 1990-2022 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், போசணைக் குறைப்பாட்டால் பாடசலை பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டு மன்றி, மனவளர்ச்சி குன்றும் ஆபத்தில் உள்ளனர். எனவே இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் தலைமுறை உருவாகும். போசணை குறைபாடு காரணமாக பிள்ளைகளிடையே என்சைம்கள் மற்றும் ஹோர்மோன்களின் உற்பத்தி பலவீனமடைந்து நாளாந்த உடல் செயல்பாடுகளில் தொய்வு நிலை ஏற்பட வழிவகுக்கிறது. அத்தோடு சிறுவர்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள். போசணைக் குறைப்பாடு நெருக்கடி மனவளர்ச்சி குன்றுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இது நாட்டில் தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய கல்வி கற்ற மற்றும் புத்திசாலி இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கும். நாட்டில் 17.8 சதவீத ஆண் பிள்ளைகள் தங்கள் வயதுக்குக் குறைவான எடையுடன் உள்ளனர். அதாவது 450,000 ஆண் பிள்ளைகள் உள்ளனர். அதன்படி, நாட்டில் மொத்தமான 860,000 பாடசாலை மாணவர்கள் எடை குறைவாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. https://www.virakesari.lk/article/178307
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
மகனுடன் விமானப்படையின் கண்காட்சிக்கு சென்றோம்
-
2,100 நாட்களை கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம்
09 MAR, 2024 | 02:58 PM காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு தாம் தொடர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், அந்த அலுவலகத்தின் அதிகாரிகள் தமிழ்த் தாய்மாரிடம் கட்டாயப்படுத்தி தகவல்களை பதிவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா தெரிவிக்கின்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஓ.எம்.பி. அலுவலகத்துக்கு எதிராக நாங்கள் எதிர்த்து போராடுகின்றபோது கச்சேரி ஊடாக வலுக்கட்டாயமாக கடிதம் அனுப்பியிருக்கின்றார்கள். அந்த கடிதத்தின் ஊடாக அவர்கள் வராத பட்சத்தில் அவர்களை வீடு வீடாகச் சென்று அந்த பதிவுகளை மேற்கொண்டு அவர்களுக்கு வாகனத்தை அனுப்பி ஏற்றி அவர்களுக்கான பதிவுகளை மேற்கொண்டு இந்த சர்வதேசத்தையும் ஏமாற்றி எமது உறவுகளையும் ஏமாற்றிக்கொண்டுதான் இவர்கள் இந்த அலுவலகம் ஊடாக பணியாற்றுகின்றார்கள்” என்றார். சர்வதேச மகளிர் தினமான நேற்றைய தினம் (08) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்ட பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 08ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஏழு ஆண்டுகள் பூர்த்தியாவதை நினைவுபடுத்தியும், மகளிர் தினத்தை துக்க தினமாக அறிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் தென்பகுதியில் இருந்து வருகை தந்த மதகுருமார் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் “இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்”, “நீதி தேவதை ஏன் கண்மூடிவிட்டாய்”, “சர்வதேசமே இன்று பெண்கள் தினமா, பெண்கள் ஒடுக்கப்படும் தினமா?”, “முடிவில்லா துயரம் தான் தமிழ் தாயின் தலைவிதியா”, “55ஆவது தொடரிலாவது எமக்கு நீதி கிடைக்குமா”, “கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும்” போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். இதில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி, மகளிர் தினமான இன்றைய தினத்தை (நேற்றைய தினம்) துக்க தினமான அனுஷ்டிப்பதாகவும், அடுத்த வருடத்திலாவது மகளிர் தினத்தை சுதந்திரமாக கொண்டாடும் வகையில் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக கடந்த 2017ஆம் ஆண்டு இது போன்றதொரு நாளில் தமது தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், சரணடைந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைத் தேடி தமிழ்த் தாய்மார் ஆரம்பித்த இந்த போராட்டம் இன்று 2,210 நாட்களை எட்டியுள்ளது. எனினும், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கமோ, பாதுகாப்புத் தரப்பினரோ இதுவரை பதிலளிக்கவில்லை. https://www.virakesari.lk/article/178309
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
வெடுக்கு நாறியில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் அடாவடித்தனமே - அமைச்சர் டக்ளஸ் Published By: DIGITAL DESK 3 09 MAR, 2024 | 03:44 PM வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் இன நல்லிணக்கதை சீர்குலைக்கும் வகையில் அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார். பளைப் பகுதியில் எரிபொருள் நிலைய திறப்புவிழா நிகழ்வு இன்றுகாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் குறித்த விடயம் தொடர்பில் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சிவராத்திரிதினம் என்பது இந்துக்களின் முக்கிய சமயம் சார் நிகழ்வாகும். இதனை முன்னிடு குறித்த ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள அடியவர்கள் சென்றபோது பொலிசார் தடுத்து நிறுத்து அடாவடியில் ஏடுபடுத்துயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவ பக்தர்களையும், அவர்களின் வழிபாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் பொலிசார் நடந்துகொண்ட விதம் அவர்களது அடாவடித்தனமாகவெ இருக்கின்றது. ஆலய தரிசனம் செய்வது அவரவர் உரிமையாகும். இதை தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறான நிலையில் குறித்த ஆலயப் பகுதியில் பொலிஸார் இவ்வாறான தடைகளையும் அடாவடித்தனங்களையும் செய்வதற்கு யார் அனுமதி கொடுத்தது? அதேநேரம் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அத்துடன் நடைபெறவுள்ள அமைச்சரவையிலும் இவ்விடயம் தொடர்பில் கொண்டு செல்லவுள்ளேன் என்பதுடன் இனிவருங்காலங்களில் பொலிசார் இவ்வாறான செயற்பாடுகளை மெற்கொள்ளாதிரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திரிந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178316
-
ஈரோடு: பட்டியல் சாதி இளைஞரை ஆணவக்கொலை செய்ய முயன்ற பெண்ணின் பெற்றோர், சிறுமி பலி - என்ன நடந்தது?
பட மூலாதாரம்,TN POLICE கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மார்ச் 2024 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, மகளை திருமணம் செய்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை, ஆதிக்க சாதி பெண்ணின் தந்தை டெம்போ ஏற்றி ஆணவக்கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகனின் இருசக்கர வாகனத்தை டெம்போவால் இடித்துவிட்டு, உயிர் இருக்கிறதா என்பதை பெண்ணின் தந்தை இறங்கி வந்து பார்த்ததாக தாயார் மகேஷ்வரி கூறுகிறார். இந்தச் சம்பவம் குறித்துப் பேச முயன்றபோது குற்றம் சாட்டப்பட்ட பெற்றோரின் குடும்பத்தினர் பிபிசியிடம் பேச முன்வரவில்லை. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் படுகாயமடைந்து அவரின் தங்கை இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணவக் கொலைக்கான காரணம் என்ன? டெம்போ ஏற்றியதில் தங்கை பலி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள எரங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஜெயபிரகாஷ் – மகேஸ்வரி தம்பதியின் மகன் சுபாஷ் (24). பட்டியலினத்தைச் சேர்ந்த சுபாஷ் 2023 அக்டோபர் மாதம், அருகிலுள்ள காந்தி நகரில் வசிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த விவசாயி சந்திரன் மகள் மஞ்சு (22) என்பவரைக் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார். சாதியரீதியில் பல தடைகளைத் தாண்டி திருமணம் செய்த சுபாஷ், எரங்காட்டூரில் வசித்து ஆம்புலென்ஸ் தொழில் செய்து வாழ்ந்து வருகிறார். பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, எரங்காட்டூர் – சத்தியமங்கலம் ரோட்டில் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, திடீரென வேகமாக வந்த டெம்போ இவர்கள் மீது மோதியது. இப்படியான நிலையில், மார்ச் 6ஆம் தேதி காலை சுபாஷ், 10ஆம் வகுப்பு பயின்று வந்த தனது தங்கை ஹாசினியை (15) பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். எரங்காட்டூர் – சத்தியமங்கலம் ரோட்டில் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, திடீரென வேகமாக வந்த டெம்போ இவர்கள் மீது மோதியது. விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மக்கள் இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஹாசினி மார்ச் 6ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக மரணித்தார், சுபாஷ் தீவிர சிகிச்சையில் உள்ளார். முதல்கட்டமாக வெறும் விபத்து வழக்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், விபத்து சம்பவம் நடக்கும்போது அருகில் இருந்தவர்கள் விபத்தை ஏற்படுத்தியது மஞ்சுவின் தந்தை சந்திரன் என சாட்சியம் கொடுத்துள்ளனர். அதன்பின், கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட மஞ்சுவின் தந்தை சந்திரன், தாய் சித்ரா உள்பட ஆறு பேரை பவானிசாகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் சுபாஷின் உறவினர்கள், சிறுமி கொல்லப்பட்டதைக் கண்டித்து சந்திரனின் தோப்பிற்குள் இருந்த வீட்டையும், காரையும் சேதப்படுத்தியதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 'கொன்றுவிட்டு உயிர் இருக்கிறதா என்று பார்த்தார்கள்' பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, ஹாசினியின் இறுதி அஞ்சலி நிகழ்வு இந்தச் சம்பவம் தொடர்பாக, பிபிசி தமிழிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய ஹாசினியின் தாய் மகேஷ்வரி, ‘‘என் பெண்ணுக்கு அன்று பள்ளிக்குப் போகத் தாமதமானதால் நானே சாப்பாடு ஊட்டிவிட்டு அனுப்பினேன். என் மகன் சுபாஷும், ஹாசினியும் ஸ்கூட்டியில் புறப்பட்டிச் சென்றனர். அவர்கள் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விபத்து நடந்துவிட்டதாகத் தகவல் வந்தது," என அன்று நடந்தவை குறித்துக் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோதே தனது மகள் இறந்துவிட்டதாகக் கூறிய ஹாசினியின் தாய் மகேஷ்வரி, தனது மகனுக்கு இடுப்பில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார். தனது மருமகளின் பெற்றோரான சந்திரன் - சித்ரா குடும்பத்தைத் தங்களுக்கு நன்றாகத் தெரியும் எனக் கூறும் மகேஷ்வரி, தனது மகள் ஹாசினியை சித்ராதான் பள்ளியிலேயே சேர்த்துவிட்டதாகவும் கூறுகிறார். இந்நிலையில், "என் மகளைப் பள்ளியில் சேர்த்த சித்ராவே அவளைக் கொலை செய்துவிட்டாரே!" என்று கூறிக் கண்ணீர்விட்டார். மஞ்சுவின் பெற்றோர் அவ்வப்போது தங்கள் வீட்டிற்கு வந்து தகராறு செய்து கொண்டிருந்ததாகக் கூறும் அவர், "மகளைப் பெற்றவர்கள் என்பதால் கோவம் இருக்கும் என நினைத்து விட்டுவிடுவோம். ஆனால், கொலை செய்யும் அளவுக்குச் செல்வார்கள் என்று நினைக்கவே இல்லை," என்கிறார் சுபாஷின் தாய் மகேஷ்வரி. சந்திரன் டெம்போவில் வந்து ஸ்கூட்டியை இடித்துவிட்டு, தனது மகனும் மகளும் இறந்துவிட்டார்களா என்பதை இறங்கி வந்து பார்த்துவிட்டு, மனைவி சித்ராவின் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றதாகத் தெரிவித்தார் மகேஷ்வரி. "கொன்றுவிட்டு உயிர் இருக்கிறதா என்பதை இறங்கி வந்து பார்த்திருக்கிறார்கள். இந்தத் தகவலை என் மகன் என்னிடம் சொன்னபோது உடைந்துவிட்டேன்," என்றார் கண்ணீருடன். இந்தச் சம்பவம் குறித்துப் பேச மஞ்சுவின் பெற்றோர் தரப்பில் பேசப் பலமுறை முயன்றும் அவர்கள் பதில் அளிக்க முன்வரவில்லை. ஆணவக் கொலை நடந்தது எப்படி? பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, ஹாசினியின் உடலை சுமந்து வந்த உறவினர்கள் ஆணவக்கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்திரன் வாக்குமூலத்தில் என்ன கூறினார் என்பது குறித்து சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் பிபிசி தமிழிடம் விளக்கினார். பட்டியல் சாதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சுபாஷ், ஆதிக்க சாதியைச் சேர்ந்த சந்திரனின் ஒரே மகளான மஞ்சுவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், "விவசாயம், ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் எனப் பல தொழில்களைச் செய்து வரும் சந்திரன், தனது மகள் மாற்று சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால் கோபத்தில் இருந்துள்ளார். திருமணம் ஆனதில் இருந்தே சுபாஷின் வீட்டுக்குச் சென்ற சந்திரன் மற்றும் சித்ரா தம்பதி தகராறு செய்து, சாபம் விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கைதான பின் கொலை செய்ததற்கான காரணமாக இதைத்தான் வாக்குமூலத்திலும் தெரிவித்துள்ளனர்," என்று கூறுகிறார் டி.எஸ்.பி சரவணன். சம்பவம் நடந்த அன்று, "கோபத்தில் இருந்த சந்திரன் தனது டெம்போவை வைத்து சுபாஷின் இருசக்கர வாகனத்தில் இடித்துக் கொலை செய்ய முயன்றதில் சுபாஷ் படுகாயமடைந்து அவரின் தங்கை ஹாசினி இறந்துள்ளார்,’’ என்றார். மேலும், தனது சாதியைச் சேர்ந்தவர்களை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை என்ற காரணதால் சந்திரன் கடும் கோபத்தில் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக டி.எஸ்.பி சரவணன் கூறுகிறார். இந்த நிலையில், "பல நாட்கள் காத்திருந்து, சுபாஷின் செயல்பாடுகளைக் கண்காணித்து, கொலை செய்ய நினைத்தவர், சுபாஷுடன் சிறுமி இருந்ததைப் பற்றிப் பொருட்படுத்தவில்லை எனவும்" டி.எஸ்.பி சரவணன் கூறினார். ‘கர்ப்பமாக இருக்கும் மனைவி’ பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ‘5 மாதமாகங்களாக சுபாஷிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறதே, போலீஸார் பாதுகாப்பு கொடுக்கவில்லையா?’ என்ற கேள்வியை முன்வைத்தோம். கடந்த 5 மாதங்களாக சுபாஷிற்கு கொலை மிரட்டல் வந்திருந்தபோதிலும், போலீசார் ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை எனக் கேட்டபோது, "பல முறை கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட போதிலும், அதுதொடர்பாக சுபாஷ் தரப்பில் புகார் அளிக்கப்படவில்லை," என்றார். மேலும் விசாரணையின்போது, சுபாஷின் மனைவி மஞ்சு கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தை பிறந்தால் பிரச்னை சரியாகிவிடும் என்று நம்பியதாலும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று சுபாஷ் குடும்பத்தினர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். ‘அசாதாரண சூழல் ஏதும் இல்லை – கண்காணிக்கப்படுகிறது! பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் பிபிசி தமிழிடம் பேசிய ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், "ஆணவக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி கொலையில் ஈடுபட்ட சந்திரன், அவரது மனைவி சித்ரா உள்பட ஆறு பேரை உடனடியாகக் கைது செய்துள்ளோம். எந்தப் பிரச்னையுமின்றி சிறுமியின் சடலத்தை உடற்கூராய்வு செய்து ஒப்படைத்து, உடல் நல்லடக்கமும் முடிந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசின் நிவாரணம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவத்தைப் பொறுத்தவரையில் அசாதாரண சூழல் ஏதும் இல்லை. இரு குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் கிராமத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்," என்றார். சாதி மனிதனை கொடூர ஆணவக்கொலைகளைச் செய்யும் அளவுக்குத் தூண்டுவதாகக் கூறும் சமூக ஆர்வலர்கள், "தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் உருவாக்கி, கடும் தண்டனை கொடுத்தால் ஒழிய சாதிய படுகொலைகள் குறையாது," எனவும் வலியுறுத்துகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c723xjrj12jo
-
‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்’ திட்டம் நிதி நெருக்கடியிலுள்ள மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தியலுக்கு அமைய 2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட “ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்” திட்டம் பொருளாதார நெருக்கடியிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களை இலக்காகக் கொண்டு புதிதாக 20 வலயக் கல்வி அலுவலங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளது. 2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட ‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்’ திட்டம் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடிப்பதற்கு பெரும் ஆதரவை வழங்கும் என்பதைக் கூற வேண்டும். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கல்வியில் திறமை காட்டினாலும், கல்வியைத் தொடரும் வாய்ப்பை இழக்க, குடும்ப வருமானம் இன்மை ஒரு காரணமாக இருக்கக் கூடாது. எனவே, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், கல்விச் சீர்திருத்தங்களில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளோம். பாடசாலையில் தரம் 13 இல் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் தரம் 12 இல் நடத்த எதிர்பார்த்துள்ளோம். மேலும், தற்போது தரம் 11 இல் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை தரம் 10 இல் நடத்தவும் எதிர்பார்த்துள்ளோம். பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் வயதை மேலும் ஒரு வருடத்தினால் குறைப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி, தொழில் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிப்பதில் பட்டதாரிகளாக இளம் வயதிலேயே பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுவதும் அவர்களுக்கு முக்கியமானது என்பதைக் கூற வேண்டும். மேலும், முதலாம் தரத்திற்கு முன்னதாகவே சிறு குழந்தைகளுக்கு (Pre – Grade) வகுப்புகளைத் தொடங்கவும் தயாராக உள்ளோம். இன்று பிறக்கும் குழந்தைகள் எதையும் மிக விரைவாகப் புரிந்து கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதை அடிப்படையாக வைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது நாடு முழுவதும் சுமார் 100 வலயக் கல்வி அலுவலகங்கள் உள்ளன. புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் கல்வித் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் வலயக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கையை 120 ஆக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பாடசாலைக் கல்வியின் தரத்திற்காக எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்பதை குறிப்பிட வேண்டும். பாடசாலைக் கல்விக்காக பல பாடசாலை இணைத்து ஒரு கொத்தணிக் கல்வி முறையை அறிமுகப்படுத்த உள்ளோம். புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர்கள், அதிபர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தற்போதுள்ள அதிபர் தர வெற்றிடங்களுக்குத் தேவையான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/295049
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்று சாதனை படைத்த இந்தியா இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டொஸ் வென்று முதலில் பெட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்றைய 2 ஆவது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய ரோகித், கில் சிறப்பாக சதம் அடித்து அவுட் ஆகினர். இதனையடுத்து வந்த சர்ப்ராஸ் கான், படிக்கல் அரை சதம் அடித்து அவுட் ஆனார்கள். இதன்மூலம் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்திய டாப் 5 பேட்ஸ்மேன்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜெய்ஸ்வால் 57, ரோகித் 103, சுப்மன் கில் 110, படிக்கல் 65, சர்ப்ராஸ் கான் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/295021
-
அஸ்வினின் 100வது டெஸ்ட்
Ashwin 100 : இதுவரை ஒரு தமிழக வீரர் கூட இந்த மைல்கல்லை எட்டியதில்லை டெஸ்ட் கிரிக்கெட் மனவலிமை உடல் வலிமை இரண்டையும் அதிகமாகச் சோதனைக்கு உட்படுத்தும். அதனால்தான் ஆயிரக்கணக்கான வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான போதும் இதுவரை 76 வீரர்கள் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள். இந்த 76 வீரர்களில் 13 வீரர்கள்தான் இந்தியர்கள். இந்திய அணிக்காக ஆடியிருக்கும் 13 பேரிலுமே கூட அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா என மூன்று பேர்தான் முழுமையான பந்துவீச்சாளர்கள். கபில்தேவ்வையும் இதில் இணைத்துக் கொண்டால் மொத்தம் நான்கு பேர் என எடுத்துக் கொள்ளலாம். 100 டெஸ்ட் போட்டிகள் எனும் சாதனை மைல்கல்லின் முக்கியத்துவத்தை இந்த எண்களின் மூலமே புரிந்துகொள்ள முடியும். ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடிவிட்டார். மூன்று உலகக்கோப்பைகளில் ஆடிவிட்டார். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்துவிட்டார். 100 டெஸ்ட் போட்டிகளை எட்டிவிட்டார். டோனி, கோலி, ரோஹித் என மூன்று கேப்டன்களின் கீழ் ஆடிவிட்டார். இந்திய அணியில் தற்போது இருக்கும் மூன்று, நான்கு சூப்பர் சீனியர்களுள் ஒருவர். ஆனால், இது எதுவுமே இந்திய அணியில் அவருக்கு நிலையான இடத்தை வாங்கிக் கொடுத்ததே இல்லை என்பதுதான் அஷ்வின் கரியரின் மகத்துவமும் சாபமும். அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் இவர்களின் காலகட்டத்திற்கு இந்திய ஸ்பின் பாரம்பரியத்தின் கண்ணி அறுபடாமல் பார்த்துக் கொண்டவர் அஷ்வின். முன்னவர்களைப் போலவே ஒரு தசாப்தத்தை தன் பெயரில் எழுதிக் கொண்டவர். ஆனாலும், ஒவ்வொரு கட்டத்திலுமே பெரும் போராட்டங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. 2011 – 2015 வரை டோனி முழுமையாக இந்திய அணியின் கேப்டனாக இருந்த சமயத்தில் அஷ்வினின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. எந்தச் சூழலிலும் டோனியின் முழு நம்பிக்கையையும் பெற்ற வீரர்களாக சுரேஷ் ரெய்னாவும் அஷ்வினும் இருந்தனர். 2015க்குப் பிறகு டோனி மெது மெதுவாக கேப்டன் பதவிகளிலிருந்து விடைபெறுகிறார். முதலில் டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலி கேப்டன் ஆகிறார். அவர் தனக்கான அணியைக் கட்டமைக்க முயல்கிறார். அதில் முதல் தெரிவாக அஷ்வின் இல்லை. பிரதான வீரர் எனும் இடத்திலிருந்து தேவைப்பட்டால் அழைத்துக் கொள்ளலாம் எனும் இடத்திற்கு அவர் தள்ளப்படுகிறார். white ball கிரிக்கெட்டில் முழுமையாக ஓரங்கட்டப்பட்டார். பிசிசிஐ அவரை முழுமையான டெஸ்ட் கிரிக்கெட்டராக மட்டுமே பார்த்தது. அதிலும் ஒரு க் வைக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியாவில் ஆடப்படும் போட்டிகளில் மட்டுமே அஷ்வின் பிரதான தெரிவாக இருந்தார். குல்தீப் யாதவ்விற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. வெளிநாடுகளில் அவர்தான் முதல் தெரிவாக பார்க்கப்பட்டார். “ஓவர்சீஸ் போட்டிகளில் அணியில் ஒரே ஒரு ஸ்பின்னருடன் ஆடுகிறோம் எனில் அந்த ஒரு இடம் குல்தீப்புக்கு மட்டுமே!” என அப்போதே பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். ஆனால், அதே ரவி சாஸ்திரி 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியின் போது, “அஷ்வின் போன்ற வீரர்களை பிட்ச்சை மனதில் வைத்தெல்லாம் தேர்வு செய்ய முடியாது. அவர்கள் உலகின் எல்லா பிட்ச்களிலும் ஆடத் தகுதியானவர்கள்” என Taking Pitch Out of Equation தியரியை கூறினார். இந்தியா தோற்றபோதும் அந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அஷ்வின் மிகச்சிறப்பாக வீசியிருப்பார். அந்த இறுதிப்போட்டி முடிந்து ஒன்றரை மாத இடைவெளியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி களமிறங்கியது. இந்த ஒன்றரை மாத இடைவெளியில் மற்ற வீரர்கள் கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால், அஷ்வின் கிட் பேக்கைத் தூக்கிக் கொண்டு கவுண்டி போட்டிகளுக்கு ஆடச் சென்றார். இந்த ஒன்றரை மாத இடைவெளியை வரவிருக்கும் இங்கிலாந்து தொடருக்கான பயிற்சி காலமாக பார்த்தார். சர்ரே அணிக்காக தனது மிகச்சிறந்த ஸ்பெல்லை வீசி ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். முழு உத்வேகத்தோடும் தீர்க்கத்தோடும் இங்கிலாந்து தொடருக்கு வந்து சேர்ந்தார் அஷ்வின். ஆனால், நடந்தது என்ன தெரியுமா? அந்தத் தொடரின் ஒரு போட்டியில் கூட அஷ்வின் இல்லை. எல்லா போட்டிகளிலும் பெவிலியனில் ஒரு ஓரமாக அஷ்வின் அமர்ந்திருந்தார். அங்கு மட்டும்தான் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டது. 2023 டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியிலுமே ப்ளேயிங் லெவனில் அஷ்வினுக்கு இடம்கொடுக்கப்படவில்லை. இன்னமும் பதின்ம வயதின் ஆர்வத்தோடு பந்தைச் சுழற்றிக் கொண்டு எப்போதும் தயாராக நிற்கும் இந்தியாவின் சீனியர் பௌலரின் நிலை இதுதான். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் போராட வேண்டியிருந்தது. தனக்கான இடத்தையும் முக்கியத்துவத்தையும் அணியில் பெற்றுக்கொள்ள கடுமையான சோதனைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அஷ்வின் இடத்தில் கொஞ்சம் மனவலிமை குன்றிய சலிப்புத்தட்டும் வீரர் வேறு யாராவது இருந்திருந்தால் எப்போதோ ஓய்வை அறிவித்துவிட்டு கமென்ட்ரி பக்கமாகச் சென்றிருப்பார். அஷ்வின் நெஞ்சுரம் மிக்கவர். போராடும் வலிமைமிக்கவர். அதை ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபித்துக் கொண்டே இருந்திருக்கிறார். white ball கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து 50 ஓவர் உலகக்கோப்பையில் ஆடிவிட்டார். டி20 உலகக்கோப்பைக்கும் கம்பேக் கொடுத்துவிட்டார். டெஸ்ட்டிலும் அவரை இன்னும் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 500 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லைக் கடந்து சாதனை மேல் சாதனை செய்து கொண்டிருக்கிறார். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை எனினும் ஒரே நாள் விடுப்பில் சென்றுவிட்டு அணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத மாதிரி மீண்டும் ஓடி வந்துவிடுகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரின் ஏலத்தில் அமர்கிறார். இந்திய அணிக்காக ஆடிவிட்டு மறுநாளே சென்னையின் எதோ ஒரு கல்லூரி மைதானத்தில் டிவிஷன் போட்டிகளில் ஆடுகிறார். கிரிக்கெட்டின் மீதான அவரின் ஆத்மார்த்த காதல்தான் அவரை பல தடைகளையும் போராட்டங்களையும் தாண்டி ஓட வைக்கிறது. நன்றி – விகடன் https://thinakkural.lk/article/294793
-
உணவகத்தில் தங்கத்தூள் கலந்து செய்த பருப்பு குழம்பு
ஓட்டல்கள் ஆனாலும், வீடு ஆனாலும் பருப்பு குழம்பு தயாரிக்கும் போது அதில் காய்கறிகள் சேர்ப்பதை பார்த்திருப்போம். ஆனால் டுபாயில் உள்ள ஒரு உணவகத்தில் தயாராகும் சிறப்பு பருப்பு குழம்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரான ரன்வீர் பிரார் வித்தியாசமான உணவுகளை தயார் செய்வதில் பெயர் பெற்றவர். இவர் டுபாயில் நடத்தி வரும் உணவகத்தில் சிறப்பு உணவாக ‘தால் கஷ்கான்’ என்ற பெயரில் விசேஷமாக பருப்பு குழம்பை தயாரித்து வழங்குகிறார். இந்த பருப்பு குழம்பு ஒரு மரப்பெட்டியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த பருப்பு கரைசலில் 24 கரட் தங்க பவுடர் கலக்கப்படுவது தான். இதனை ஒடர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கண் முன்பே தங்க பவுடர் கலந்த கரைசல் பருப்புடன் சேர்த்து நெய் கலந்து பரிமாறப்படுகிறது. இந்த சிறப்பு உணவின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,300 ஆகும். டுபாயில் உள்ள பிரபல சிட்டி மொலில் இந்த சிறப்பு உணவு பரிமாறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 84 இலட்சம் பார்வைகளை குவித்துள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், தங்கம் உடலால் உறிஞ்சப்படுவதில்லை எனவும், மற்றொரு நபர் தங்கத்தின் ஊட்டச்சத்து மதிப்பு என்ன? எனவும் பதிவிட்டுள்ளனர். இது முட்டாள் தனத்தின் உயரம் என ஒரு பயனரும், நம் உடலுக்கு தங்கம் தேவையில்லை, ஒரு சொட்டு தண்ணீர் இந்ததங்கத்தை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளார். இது போன்று பல பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/294815
-
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா? இதன் பக்கவிளைவுகள் என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு புதிய 'டயட்' திட்டங்கள் அவ்வப்போது டிரெண்டாகும். பெரும்பாலானோர் அந்த 'டயட்' திட்டங்களை பின்பற்றி உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவர். அப்படி, பேலியோ, கீட்டோ என பல்வேறு 'டயட்டுகள்' உள்ளன. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை குறைப்பு முயற்சியில் பெரும்பாலானோர் பின்பற்றும் டயட் திட்டமாக இருக்கிறது 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) எனப்படும் 'இடைநிலை உண்ணாவிரதம்'. இதுவொரு வகை விரத முறையே. பொதுவாக நாம் ஒருநாள் முழுதும் காலையிலிருந்து இரவு வரை 3-4 முறை உணவு எடுத்துக்கொள்வது வழக்கம். இதில், குறைவான கால இடைவெளியில் உணவை உட்கொண்டுவிட்டு, அதைத்தொடர்ந்து அதிகமான நேரம் விரதமிருப்பதே இந்த 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்'. 8 மணிநேரம் உணவு - 16 மணிநேரம் விரதம் (16:8) என்ற முறையை பெரும்பாலானோர் கடைபிடிக்கின்றனர். தங்களின் வசதிக்கேற்ப இந்த நேரம் 14:10, 12:12, 18:6 என நேர இடைவெளிகளை மாற்றிக்கொள்கின்றனர். இப்படி அதிக நேரம் சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்லதா? இதனால் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா? இந்த விரதமுறையை யாரெல்லாம் கடைபிடிக்கக் கூடாது? இதுகுறித்த கேள்விகளுக்கு பிபிசியிடம் பதிலளித்தார் ஈரோட்டை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரும் யூடியூபில் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் தொடர்பான காணொளிகளைப் பதிவிட்டு வருபவருமான அருண்குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES உடல் எடையை குறைப்பதில் 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' உதவுமா? உடல் எடையை குறைக்க சமவிகித உணவை மூன்று வேளையும் உண்கிறோம் என எடுத்துக்கொண்டால், அப்போது இன்சுலின் அதிகமாகிக் கொண்டே இருக்கும். நாம் குறைவாக சாப்பிட வேண்டும் என நினைத்தாலும் உணவு மீதான ‘கிரேவிங்’ இருந்துகொண்டே இருக்கும். ஒருநாளைக்கு 1,200 கலோரிகள் கணக்கிட்டு உண்ணலாம் என நினைத்தாலும் அதில் தோல்வியடைவதற்கான காரணம் இதுதான். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் கலோரி பற்றாக்குறையை ஏற்படுத்த வேண்டும். உடல் எடை அதிகமாவதற்கு முக்கியமான ஹார்மோன் இன்சுலின். எவையெல்லாம் இன்சுலினை அதிகரிக்கிறதோ, அவை உடல் எடையையும் அதிகரிக்கும். இன்சுலினை எவையெல்லாம் குறைக்கிறதோ, அவை உடல் எடையை குறைக்கும். இதனால் நாம் இன்சுலினுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இதுதான் அடிப்படை. இதற்கு கார்போஹைட்ரேட் உணவுகளை குறைக்க வேண்டும். மாறாக, புரோட்டீன், கொழுப்பு, காய்கறியை அதிகமாக எடுத்தால் இன்சுலின் கட்டுப்பாட்டுடன் இருக்கும். உடல் எடை குறையும். ‘கிரேவிங்’ குறையும். இந்த அடிப்படையில்தான் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்கும் வேலை செய்கிறது. ஒருநாளைக்கு மூன்று வேளை உணவு, நான்கு வேளை 'ஸ்நாக்ஸ்' எடுக்கும்போது இன்சுலின் அதிகரிப்பதால், விரதத்தில் இருக்கும்போது இன்சுலின் கட்டுப்படும். எட்டு அல்லது பத்து மணிநேரம் மட்டுமே நீங்கள் உணவு எடுத்துக்கொண்டு, 14 அல்லது 16 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கும்போது, அந்த 16 மணிநேரம் உங்கள் இன்சுலின் அளவு அதிகரிக்காமல் இருக்கிறது. அப்போது உடலில் கொழுப்பு சேராது. உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்திலும் ஆரோக்கியமான உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் குறைந்த அளவில் எடுத்துக்கொண்டு, புரதம், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள், காய்கறிகளை எடுத்துக்கொண்டால் பசியை நன்றாக கட்டுப்படுத்த முடியும். இன்சுலின் கட்டுக்குள் கொண்டு வரும்போது உடல் எடை குறையும், என்கிறார் மருத்துவர் அருண்குமார். இந்த முறையை கடைபிடிக்கும் முன் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமா? பட மூலாதாரம்,GETTY IMAGES உடல் எடையைக் குறைப்பதற்காக எந்தவொரு உணவுத்திட்டத்தையும் எடுப்பதற்கு முன் ஒவ்வொருவரின் உடல் வளர்சிதை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சில அடிப்படையான ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். ரத்தப் பரிசோதனை எடுத்துப் பார்த்தால்தான் நீரிழிவு நோய் இருக்கிறதா, யூரிக் அமிலம் அதிகமாக இருக்கிறதா என்பது தெரியவரும். அதற்கேற்றவாறு நாம் டயட்டை எடுத்துக்கொள்வது அவசியம், என்கிறார் மருத்துவர் அருண்குமார். 18 மணிநேரம் விரதம் இருந்தால் உடல் எடை வேகமாக குறையுமா? 16:8, 14:10, 12:12 என எந்த நேர இடைவெளியை எடுத்துக்கொண்டாலும் முடிவுகள் ஒன்றாகத்தான் இருக்கும். இந்த விரத முறையில் சாப்பிடும் நேரத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம். நீங்கள் ஆறு மணிநேரம் மட்டுமே சாப்பிட்டாலும், அதில், நொறுக்குத் தீனிகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட கெடுதல் விளைவிக்கும் உணவுகளை சாப்பிட்டால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதனை பின்பற்ற நினைப்பவர்கள், தங்களின் சௌகரியங்களுக்கு ஏற்ப கால இடைவெளியில் ஆரம்பிக்கலாம். எடுத்ததும் 16:8 இடைவெளியை பின்பற்ற முடிந்தாலும் அதனை கடைபிடிக்கலாம். ஒன்றும் பிரச்னை வராது, என்கிறார் மருத்துவர் அருண்குமார். யாரெல்லாம் இதனை தவிர்க்க வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையைப் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இதை அவர்களின் உடல் ஏற்காவிட்டால், பிரச்னைகள் அதிகரிக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஏற்கனவே அவர்களின் உடல் பல மாற்றங்களுக்குள் சென்றிருக்கும். அதனுடன் இதையும் சேர்க்க வேண்டாம் என நினைக்கிறோம். குழந்தைகளால் விரதத்தைத் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் அவர்களும் இம்முறையை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம். நீரிழிவு அதிகமாக உள்ளவர்கள், மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் அதே சமயம் விரத முறையை கடைபிடித்தால், சர்க்கரை அளவு வெகுவாக குறையும். அதேபோன்று பல்வேறு பிரச்னைகளுக்காக மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும், என்கிறார் மருத்துவர் அருண்குமார். நீரிழிவு நோயை இந்த முறையால் கட்டுப்படுத்த முடியுமா? கார்போஹைட்ரேட்டை குறைப்பதனால் மட்டுமே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும். இந்த விரத முறை நீரிழிவு நோயின் ஆரம்பத்தில் உள்ளவர்கள் அதனை அந்நோயிலிருந்து விடுபடுவதில் உதவிபுரியும். ஆனால் நாள்பட்ட நீரிழிவு நோயை இதனால் குணப்படுத்த முடியாது, என்கிறார் மருத்துவர் அருண்குமார். இந்த முறையால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுமா? ஓரிரண்டு வாரங்கள் சில விளைவுகள் இருக்கும். சிலருக்கு மயக்கம் ஏற்படலாம், நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். சிலரால் விரதம் இருக்க முடியாது. அவர்கள் 1-2 வாரங்கள் கடந்தும் பிரச்னை தொடர்ந்தால், இதிலிருந்து வெளியேறலாம், அல்லது சாப்பிடும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இது பெரிய விஷயமல்ல. விரத நேரத்தில் தண்ணீரோ, சூப்போ அருந்துவதன் மூலம் இதனை தவிர்க்கலாம், என்கிறார் மருத்துவர் அருண்குமார். ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தக் கேள்விக்கு பதிலளித்தார், ஊட்டச்சத்து நிபுணர் தரணி கிருஷ்ணன். சில வழிமுறைகளைப் பின்பற்றி இம்முறையில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதையோ, தசை இழப்பையோ தவிர்க்கலாம் என்றார் அவர். காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. காலை முதல் மாலை வரைதான் இம்முறையை பின்பற்ற வேண்டும். காலை உணவைத் தவிர்த்துவிட்டு எடுத்ததும் மதிய உணவுக்குள் செல்லக் கூடாது. உணவைத் தவிர்க்க வேண்டும் என்றே, பலர் அதிக நேரம் தூங்கிவிட்டு, மதியம் எழுந்து உண்கின்றனர். இது தவறு. இரண்டு வேளை முழு உணவு, ஒரு வேளை ஸ்நாக்ஸ் எடுக்க வேண்டும். இருவேளை உணவிலும் நிச்சயம் புரோட்டீன் இருக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்கும். சிறிதளவு கார்போஹைட்ரோட் எடுக்கலாம். ஒரு கப் சாதம் அல்லது சப்பாத்தி அல்லது தோசை எடுக்கலாம். இன்னொரு கப்பில் பருப்பு, முட்டை, மீன், இறைச்சி எடுக்க வேண்டும். அதற்கு இரு மடங்கு காய்கறிகள் எடுக்க வேண்டும். காபி அல்லது டீ, சுண்டல் ஆகியவற்றை ஸ்நாக்ஸ் ஆக எடுக்கலாம். உடற்பயிற்சி செய்து தசை இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தோல் தளர்ந்து வயதானவர் போன்ற தோற்றம் ஏற்படும். இந்த முறையை தவறாக பின்பற்றினாலோ என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டாலோ எதிர்பார்க்கும் விளைவுகள் இருக்காது, ஆபத்தில்தான் முடியும். நெஞ்செரிச்சல் இருப்பவர்கள் இதனை பின்பற்றக் கூடாது. சிஜிஎம் மூலம் சர்க்கரை அளவை கண்காணித்துதான் பின்பற்ற வேண்டும். சர்க்கரை அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் சத்துணவு நிபுணர் இருவரையும் ஆலோசித்துத்தான் நிச்சயம் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மிகவும் வயதானவர்களுக்கு செரிமான பிரச்னைகள் ஏற்கனவே இருக்கும். அவர்களும் இதனை எடுக்கக் கூடாது, என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தரணி கிருஷ்ணன். https://www.bbc.com/tamil/articles/c9945q5w5p8o
-
காசாவை நோக்கி பரசூட்கள் மூலம் உணவுப்பொதிகளை வீசியது அமெரிக்கா
காஸாவில் பரசூட் பொதுமக்கள் மீது விழுந்து 5 பேர் பலி Published By: DIGITAL DESK 3 09 MAR, 2024 | 10:40 AM இஸ்ரேல் மீது காஸாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253 பேரை காஸாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதனிடையே, காஸாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 130க்கும் மேற்பட்டோர் காஸாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதலுக்கு பதிலடியாக காஸாமுனை மீது போர் அறிவித்துள்ள இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதலில் காஸா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 30 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் நடந்த மோதலில் 424 பேர் உயிரிழந்துள்ளனர். காஸா முனையில் நடைபெற்றுவரும் போரால் அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. காசாவில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஐ.நா. மூலம் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலும் தேவை அதிகரிப்பு காரணமாக காசாவில் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எகிப்து, இஸ்ரேல் எல்லைகள் வழியாக காஸாவுக்கு லொறிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், பணய கைதிகளை விடுவிக்காதவரை நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் லொறிகள் காஸாவுக்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, காஸாவுக்கு விமானம் மூலம் எகிப்து மற்றும் அமெரிக்கா நிவாரண பொருட்களை வழங்கின. எகிப்து விமானப்படை விமானங்கள் மற்றும் அமெரிக்க விமானப்படை விமானங்கள் காசா மீது உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசி வருகின்றன. இந்நிலையில், காஸா மீது அமெரிக்க விமானப்படை வீசிய நிவாரண பொருட்கள் அகதிகள் முகாம் மீது விழுந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். காஸா சிட்டியின் ஷதி அகதிகள் முகாமில் பொதுமக்கள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது, அமெரிக்க விமானப்படை விமானங்கள் நிவாரண பொருட்களை வீசின. பரசூட் மூலம் நிவாரண பொருட்கள் காஸாவில் தரையிறங்கின. அப்போது, நிவாரண பொருட்களின் தொகுப்பு ஒன்று பரசூட் திறக்காததால் அதிவேகமாக கீழே விழுந்தது. அது அகதிகள் முகாமில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். பரசூட் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசுவது பயனற்றது என்றும், நில எல்லை வழியாக நிவாரண பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென ஹமாஸ் ஆயுதக்குழுவால் நிர்வகிக்கப்பட்டுவரும் காஸா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. தினத்தந்தி https://www.virakesari.lk/article/178300
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு 10 ஆயிரம் ட்ரோன்களை வழங்கும் இங்கிலாந்து ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் இரண்டு வருடங்களை கடந்து இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதியுதவி அளித்து வருவதுடன் ஆயுதங்களும் கொடுத்து உதவி வருகிறது. இந் நிலையில் இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ், உக்ரைன் தலைநகர் கீவ் நகர் சென்றிருந்தார். அப்போது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்து சண்டையிட 10 ஆயிரம் ட்ரோன்கள் வழங்கப்படும் என கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ட்ரோன்களுக்காக 200 மில்லியன் பவுண் ஒதுக்கப்படும் என இங்கிலாந்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது, 125 மில்லியன் பவுண் மேலதிகமாக ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளது. 10 ஆயிரம் ட்ரோன்களில் கப்பல்களை குறிவைத்து தாக்கும் ஆயிரம் ட்ரோன்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் படைகள் கருங்கடலில் ரஷ்யாவின் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு இங்கிலாந்தின் ஆயுதங்களை இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது பயன்படுத்தி வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் ட்ரோன் மூலம் ரஷ்யாவின் போர்க்கப்பலை தாக்கி அழித்தது. இதுவரை மூன்று கப்பல்களை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/294960
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிரமயுகம், பிரேமலு வரிசையில் பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம் குறித்து ஊடகங்கள் என்ன சொல்கின்றன? குணா குகையின் அறிவியல் மர்மம் என்ன? 🤯 Guna Cave Secrets 😱 Manjummel Boys | Mr.GK
-
பேஸ்புக்கில் அதிகரிக்கும் ஏமாற்று வித்தை! அவதானம்!
Published By: PRIYATHARSHAN 09 MAR, 2024 | 10:36 AM நாளுக்கு நாள் சமூக ஊடகங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், அவற்றில் ஏமாற்றுப் பேர்வழிகளின் செயல்களும் அதிகரித்துக்கொண்டே காணப்படுகின்றது. அண்மைக்காலமாக பேஸ்புக்கின் மேசஞ்சரில் (Messenger) தொடர்புகொள்ளும் சில ஹக்கர்களின் ஏமாற்று வித்தை அரங்கேறி வருகின்றது. இவ்வாறான ஹக்கர்கள் பேஸ்புக் கணக்குகளுக்குள் நுழைந்து மேசஞ்சர் ஊடாக குறித்து நபரின் மேசஞ்சருக்கு தொடர்புகொள்கின்றார். பேஸ்புக்கை ஹக்செய்து அவர்களுக்குப் பரீட்சயமான நண்பர்களின் போலி கணக்குகள் ஊடாக மேசஞ்சரில் தொடர்புகொண்டு அவர்களை ஒரு குழுவில் இணைக்க விரும்புவதாகவும் அதற்கு அவர்கள் தொலைபேசி எண் வேண்டும் எனவும் கேட்கிறார்கள். அதைத் தொடர்ந்து குழுவில் இணைக்க ஒரு OTP வந்திருக்கும் என்று கேட்பார்கள். அதைக் கொடுத்துவிட்டால் உங்கள் தனிப்பட்ட தரவுகள் அனைத்தையும் திருடிவிடுவார்கள். இவ்வாறு தான் மெசஞ்சர் மூலம் தொடர்பு கொள்கின்றனர், “ Hello I’m contesting for an ambassadorship spot at an online Facebook access program can you pls vote for me ” இவ்வாறு தொடர்புகளை ஏற்படுத்துகின்றனர். நாம் பதில்களை வழங்கும் போது பின்னர் “ You have to send me your number so I can add you to the voting group” இவ்வாறு பதிலனுப்புகின்றனர். இவ்வாறான கேள்விகளுக்கு நீங்கள் பதிலனுப்பும் போது உங்களது வங்கிக்கணக்கு உள்ளிட்ட ஏனைய தனிப்பட்ட தரவுகள் ஹக் செய்யப்பட்டுவிடும். பின்னர் ஹக்செய்யப்படும் பேஸ்புக் கணக்குகள் அவர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றப்பட்டு ஏனையவர்களை நம்பும் படி இவ்வாறு இணைத்துவிடுவார்கள். எனவே இணையத்தில் எப்போதும் எல்லாவற்றையும் சந்தேகப்படுங்கள். அத்துடன் உடனடியாக தீர்மானம் எடுத்து உங்களது தனிப்பட்ட தரவுகளை வழங்கி விடாதீர்கள். முதலில் தீவிரமாக சிந்தித்து செயலாற்றுங்கள். இவ்வாறான ஹக்கர்கள் தொடர்பில் பேஸ்புக்கில் முறையிடுவதற்கான வழிகள் உள்ளன. முறையிட்டு Block செய்யுங்கள். https://www.virakesari.lk/article/178299
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை – இன்று அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு! கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் கொல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 இலங்கையர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அந்த நாட்டு நேரப்படி இன்று முற்பகல் 11 மணியளவில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டாவா நகர முதல்வரினால் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் அந்த நாட்டு அரசியல் தரப்பினர் மற்றும் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரட்ன வேறதுவ உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் சம்பவத்தில் உயிரிழந்த குறித்த 6 இலங்கையர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காக கனடாவின் பால்மேடியா பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 இலங்கையர்கள் நேற்று முன்தினம் கொல்லப்பட்டனர். 35 வயதுடைய தர்ஷனி ஏகநாயக்க என்ற தாயும் அவரது ஏழு வயதான மகன், நான்கு மற்றும் இரண்டு வயது நிரம்பிய இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மாதங்களேயான குழந்தை உள்ளிட்ட நான்கு பிள்ளைகளும் இவ்வாறு கொல்லப்பட்டனர். அத்துடன், குறித்த வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய காமினி அமரகோன் என்ற அவர்களது நண்பர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். கத்தி அல்லது அது போன்ற கூரிய ஆயுதத்தினால் இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சந்தேகநபர் சார்பில் மன்றில் முன்னிலையாகுவதற்காக சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்வதற்காக வழக்கு விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/295037
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
Play video, "மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது?", கால அளவு 4,28 04:28 காணொளிக் குறிப்பு, மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது? 28 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 29 பிப்ரவரி 2024 மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிரமயுகம், பிரேமலு வரிசையில் பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம் குறித்து ஊடகங்கள் என்ன சொல்கின்றன? கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சும்மல் எனும் சிறிய ஊரில் இருந்து 11 நண்பர்கள் தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர். குணா படத்தின் மூலம் பிரபலமான குணா குகையை சுற்றிப்பார்க்க சென்றபோது 11 பேரில் ஒருவர் அந்தக்குகையில் இருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்துவிட அவருக்கு என்ன ஆனது? நண்பர்களால் காப்பாற்றப்பட்டாரா? என்பதுதான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் கதை. 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM இந்தியா டுடே விமர்சனம் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் நட்பு, உயிர் வாழ்வதற்கான வேட்கை, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை போன்ற பல்வேறு விஷயங்களை குறித்து பேசுவதாக இந்தியா டுடே தனது திரை விமர்சனத்தில் தெரிவித்துள்ளது. மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கமல்ஹாசனின் குணா படத்தில் இளையராஜா இசையில் வரும் 'கண்மணி அன்போடு காதலன்' பாடலில் 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது' எனும் வரியோடு தொடங்குகிறது. க்ளைமேக்சில் மீண்டும் ஒருமுறை வரும் இந்த பாடல் வரி இது வரை காதல் குறித்து பாடுவதாகவே பார்க்கப்பட்டது. ஆனால், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் இந்த வரி பயன்படுத்தப்பட்ட விதம் படத்தில் வரும் 11 நண்பர்களுக்கு இடையேயுள்ள நட்பை கூறும் விதமாக இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது. இந்த ஒட்டுமொத்த கதையும் மனித உணர்வுகளை பற்றி ஆழமாக பேசுவதாக இந்தியா டுடே கூறுகிறது. பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM படத்தின் ஆரம்பத்திலேய ஸ்ரீநாத் பாஸி பள்ளத்தில் விழும் காட்சி காட்டப்பட்டு அதற்கு அவரது நண்பர்கள் கொடுக்கும் ரியாக்ஷனோடு படத்தின் தலைப்பு போடப்படுவதில் இருந்தே, பார்வையாளர்களை படத்திற்குள் இயக்குநர் இழுத்து வந்துவிடுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் திரைபடத்தின் கதை 2006ல் நடப்பதாக இருப்பதால், அந்த காலகட்டத்தை இயக்குனர் உறுத்தல் இல்லாமல் இயல்பாகவும் சிறப்பாகவும் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம், படம் வேகம் எடுக்கும் இடமே 11 நண்பர்களும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல்லும்போதுதான். அப்போது கலகலப்பாக இருக்கும் திரைப்படம், நண்பர்கள் குணா குகைக்கு சென்றவுடன் த்ரில்லிங்காக மாறுவதாக குறிப்பிட்டுள்ளது நண்பர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள் முதல் ஒரு உயிரை காப்பாற்ற போராடுவது வரை படம் முழுவதும் மனித உணர்வுகளின் இரண்டு எல்லைகளையும் இயக்குனர் சிதம்பரம் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதாக இந்தியா டுடே புகழாரம் சூட்டியுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அனைவராலும் பொதுவாக பாராட்டப்படும் ஒரு அம்சம் நடிகர்கள் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு. தனது நண்பர் ஒருவர் பெரும் பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதும் அவரை உயிருடன் மீட்க வேண்டும் எனும் சூழலில் அனைத்து நடிகர்களிடமும் வெளிப்படும் நடிப்பு அபாரமாக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM 'கூஸ்பம்ப்ஸ்' தரும் இளையராஜா நடிப்பை தாண்டி படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது படத்தின் இயக்குனர் சிதம்பரத்தின் திரைக்கதை, சுஷின் ஷ்யாமின் இசை மற்றும் ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு என இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது. படத்தில் ஒரெயொரு குறை இருப்பதாக சுட்டிகாட்டும் டைம்ஸ் ஆஃப் இந்தியா, பள்ளத்தில் விழுந்த ஸ்ரீநாத் பாஸியை காப்பாற்ற முயலும் காட்சி குறைந்த நேரமே வருவதால் அது படத்தோடு ஒட்டவில்லை என விமர்சித்துள்ளது மலையாளத்தில் இந்த வருடம் தொடங்கி இரண்டு மாதத்திற்குள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களான பிரம்மயுகம், பிரேமலு ஆகிய படங்களின் வரிசையில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படமும் தனக்கான இடத்தை பிடித்திருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. பார்வையாளர்களால் கணிக்க கூடிய வகையில் படத்தின் முடிவு இருந்தாலும், எங்கேயும் விறுவிறுப்பு குறையாமல் பார்வையாளர்களை படத்திற்குள் கட்டிப்போட்டதுதான் படத்தின் வெற்றி என தி இந்து ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது. தமிழில் சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடித்த குணா திரைப்படக் குழுவினருக்கு நன்றி என்ற கார்டு உடன் தான் இந்தப்படமே தொடங்குகிறது என இந்து தமிழ் திசை தமது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. கண்மணி அன்போடு காதலன் பாடல்தான் டைட்டில் கார்டில் வருகிறது. படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் இந்தப் பாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி வரும், அது படம் பார்க்கும் அனைவருக்கும் கூஸ்பம்ப்ஸைத் தருகிறது என இந்து தமிழ் திசை கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cd1wezzrd5jo
-
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்துக்கு அபராதத்துடன் சீல்
Published By: DIGITAL DESK 3 09 MAR, 2024 | 10:43 AM யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, 73 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ள நீதிமன்று, குறித்த உணவகத்தையும் சீல் பண்ணுமாறு உத்தரவிட்டுள்ளது. சண்டிலிப்பாய் பகுதியில் பொது சுகாதார பரிசோதகரான செ. பிரின்சன் தலைமையில் உணவகங்களில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது , 180 கிலோ பழுதடைந்த ரொட்டிகள் , 05 கிலோ இடியப்பம் மற்றும் 08 கிலோ பிட்டு என்பவற்றை பொலித்தீன் பைகளில் கட்டி குளிர்சாதன பெட்டிகளில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை கண்டறியப்பட்டது. குறித்த உணவகத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், உணவாக உரிமையாளருக்கு 73ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று உணவகத்தை சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டது. அதேவேளை, பழுதடைந்த இறைச்சி மற்றும் இறால் ஆகியவற்றை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த உணவக உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டமும், பழுதடைந்த இறைச்சி ரொட்டியை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் உணவகத்தை சுத்தமின்றி பேணிய மற்றுமொரு உணவக உரிமையாளருக்கு 33 ஆயிரம் ரூபாய் தண்டமும் நீதிமன்று விதித்துள்ளது. அதேவேளை மல்லாகம் நீதவான் நீதிமன்று நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட 06 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் சுமார் 03 இலட்ச ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ள நிலையில், சில உணவகங்களை சீல் வைத்து மூடுமாறும் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178302
-
ஆரோக்கிய நிகேதனம்
இதனால தானோ ஏனோ பலரும் தண்ணீர் மட்டும் தாங்கோ என கேட்கிறார்கள்?!
-
யாழ். மத்திய கல்லூரிக்கும் - யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி ஆரம்பம்.
117ஆவது வடக்கின் சமர்: பலம்வாய்ந்த நிலையில் சென். ஜோன்ஸ் Published By: VISHNU 08 MAR, 2024 | 10:14 PM (நெவில் அன்தனி) யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையிலான 117ஆவது வடக்கின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் சென் ஜொன்ஸ் பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது. போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் யாழ். மத்திய கல்லூரி அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மீதம் இருக்க 69 ஓட்டங்களால் மாத்திரம் யாழ். மத்திய கல்லூரி அணி முன்னிலையில் இருக்கிறது. இதற்கு அமைய போட்டியின் கடைசி நாளான சனிக்கிழமையன்று யாழ். மத்திய கல்லூரி அணி அதிசியம் நிகழ்த்தினாலன்றி சென். ஜோன்ஸின் வெற்றி தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே, யாழ். மத்திய கல்லூரியின் கடைசி ஜோடியினர் அழுத்தங்களை புறந்தள்ளி வைத்துவிட்டு எதிர்த்தாடும் யுக்தியைக் கையாண்டு மேலும் 50 அல்லது 60 ஓட்டங்களைப் பெற்றால் சென் ஜோன்ஸ் அணி நெருக்கடியை எதிர்கொள்ளும். ஆனால், யாழ். மத்திய கல்லூரியின் கடைசி ஜோடி தாக்குப்பிடித்து துடுப்பெடுத்தாடும் என்பது சந்தேகம் என்றே கூறத்தோன்றுகிறது. போட்டியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (08) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த சென். ஜோன்ஸ், மதிய போசன இடைவேளைக்குப் பின்னர் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. அதுவரை அணித் தலைவர் நேசகுமார் ஜேஸியல், முர்ஃபின் ரெண்டியோ ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலுசேர்த்துக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் தகுதாஸ் அபிலாஸ், முரளி திசோன் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி கடைசி 7 விக்கெட்களை தம்மிடையே பகிர்ந்து சென் ஜோன்ஸ் அணியை 228 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர். ஜேஸியல் 99 பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 52 ஓட்டங்களையும் ரெண்டியோ 5 பவுண்டறிகளுடன் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் ஜெயச்சந்திரன் அஷ்னாத் 11 ஓட்டங்களைப் பெற்றார். யாழ். மத்திய கல்லூரி பந்துவீச்சில் தகுதாஸ் அபிலாஷ் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 8 ஓவரகளில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் முரளி திசோன் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சுதர்ஷன் அனுஷாந்த் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 71 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த யாழ். மத்திய கல்லூரி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. முதலாவது இன்னிங்ஸில் போன்றே இரண்டாவது இன்னிங்ஸிலும் இணைப்பாட்டங்கள் கட்டி எழுப்பப்படாதது யாழ். மத்திய கல்லூரி அணிக்கு பாதகத்தன்மையை ஏற்படுத்தியது. அணித் தலைவர் நிஷாந்தன் அஜய் (23), சதாகரன் சிமில்டன் (21) சுதர்ஷன் அனுஷாந்த் (20), ரஞ்சித்குமார் நியூட்டன் (17) சகாதேவன் சயந்தன் (16) ஆகியோர் 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். கடைசி விக்கெட்டில் ஜோடி செர்ந்துள்ள விக்னேஸ்வரன் பாருதி 15 ஓட்டங்களுடனும் முரளி திசோன் 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். பந்துவீச்சில் ஸ்டன்லி செம்சன் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கிருபானந்தன் கஜகமன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெயச்சந்திரன் அஷ்னாத் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார். யாழ். மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் 157 ஓட்டங்களைப் பெற்றது. https://www.virakesari.lk/article/178291
-
திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்
திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 2024 மார்ச் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சார கட்டணத்தை 21.9% இனால் குறைக்க முடிந்தது. 30 அலகுகளுக்கு குறைவான மின் பாவனையாளர்களின் மின் அலகு ஒன்றுக்கான விலை 33% இனால் குறைக்கப்பட்டுள்ளது. 31 – 60 அலகுகளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு அலகு ஒன்றுக்கு 28% இனால் கட்டணம் குறைந்துள்ளது. 60 – 90 அலகுளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு 30% கடடண குறைப்புச் செய்யப்பட்டுள்ளது. மேலும் 90 – 180 இடையிலான பாவனையாளர்களுக்கு 24% இனால் கட்டண குறைப்புச் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், 180 அலகுகளுக்கு மேலான வீட்டு பாவனையாளர்களுக்கு 18% கட்டண குறைப்பும் வழிபாட்டுத் தலங்களுக்கு 33% கட்டண குறைப்பும் ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைகளுக்கு 18% கட்டண குறைப்பும் அரச துறைக்கு 23% கட்டண குறைப்பும் தனியார் துறைக்கு 22% கட்டண குறைப்பும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதற்கு நிகராக உணவு விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குரியாக உள்ளது. பொது சேவைகளில் ஈடுபடுவோரால் மக்களுக்கு பெருமளவான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் . அதனை மின்சார சபையோ அல்லது அமைச்சுக்களோ செய்ய முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும். மேலும், அண்மைக் காலமாக கிடைத்த பெரும் மழைவீழ்ச்சியின் காரணமாக, மின் உற்பத்தி செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை குறைந்துள்ளது. அதன் பலனாக 2022 ஆம் ஆண்டின் 270 பில்லியன் ரூபா இழப்பீட்டையும் அதனால் சரிசெய்ய முடிந்தது. இருப்பினும் இருள் யுகத்தில் கிடந்த நாடு பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதன் பலனாகவே மின்சார கட்டணத்தை குறைக்க முடிந்துள்ளது. அதனால் மின்சார உற்பத்திச் செலவு பெருமளவில் குறைவடைந்துள்ளதோடு, அதேபோலு மூன்றிலக்க பெறுமதியாக காணப்பட்ட வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளமையும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், இந்திய கடனின் கீழ் பெறப்பட்ட 100 மில்லியன் டொலர்களில் முதல் பகுதியைக் கொண்டு, பாடசாலைகள், பாதுகாப்பு முகாம்கள், பல்கலைக்கழகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் மின்சாரம் பெறுவதற்கு சூரிய சக்தி படலங்களை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மின் கட்டணத்தை மேலும் குறைக்க, தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அல்லது தற்போது அதிக விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதை விடுத்து குறைந்த செலவிலான மாற்று முயற்சிகளுக்கு செல்ல வேண்டும். 2025 ஆம் ஆண்டில் சியாம்பலாண்டுவ மின் உற்பத்தித் திட்டத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் நூறு மெகாவோட் மின்சாரத்தை 25 – 26 ரூபாய்க்கு பெற்றுகொள்ள முடியும். இதேபோன்ற பல பாரிய மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதற்காக ஏராளமான முதலீட்டாளர்கள் எம்மோடு இணைந்துகொண்டுள்ளனர். மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புதிய முதலீட்டாளர்களுக்காக 10 காற்றாலை மற்றும் சூரிய ஒளி திட்டங்கள் திறக்கப்பட்டுள்ளன. மன்னார் பகுதியை மையமாக கொண்டு 50 மெகாவாட் காற்றாலைக்கான விலைமனு அடுத்த வாரம் கோரப்படும். மேலும் உரியவர்களுடன் கலந்துரையாடி எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையினையும் மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம். அத்துடன், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதன்படி, புதிய சட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் மாற்றங்களை உரிய தரப்பினரும், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கத்தினரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இது தொடர்பான 46 திருத்தங்களுடன் கூடிய சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/294967
-
எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்! : முல்லைத்தீவில் தபால் அட்டை மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை அனுப்பிவைப்பு
08 MAR, 2024 | 06:14 PM நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக 'எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்' எனும் தொனிப்பொருளில் வட மாகாண ரீதியாக முப்படைகள் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி, தபால் அட்டை மூலம் ஜனாதிபதியை கோரும் நடவடிக்கை மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகிறது. வட மாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் முப்படையினர் கையகப்படுத்தி, அந்த காணிகளில் வணிக செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், காணிகளின் உரிமையாளர்கள் தமது காணியின்றி வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். மக்களின் காணிகளில் குடியிருக்கும் இராணுவத்தினர், அந்த காணிகளை விடுவித்து, மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியின் காரியாலயத்துக்கு ஐயாயிரம் தபால் அட்டைகளை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல்வேறு காணிகளை சேர்ந்த மக்களை இணைத்து ஜனாதிபதிக்கான தபால் அட்டையை அனுப்புவதற்கான பணிகள் நேற்று (07) மேற்கொள்ளப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளினால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற முக்கியமாக கேப்பாப்புலவு வட்டுவாகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தமது காணிகள் முப்படைகளினால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் உள்ள மக்களை இணைத்து இவர்களினூடாக தபால் அட்டைகளை அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முன்னதாக காணி உரிமையாளர்கள் மெசிடோ நிறுவன பிரதிநிதிகள், சூழலியல் மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் காணியை இழந்த மக்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்தே, தபால் அட்டைகளை பூர்த்தி செய்த மக்கள் முல்லைத்தீவு அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று, அங்கு தபால் அட்டைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர். https://www.virakesari.lk/article/178281
-
249 பேருடன் பறந்த விமானத்திலிருந்து கழன்று வீழ்ந்த சக்கரம்: அமெரிக்காவில் சம்பவம்
Published By: SETHU 08 MAR, 2024 | 01:37 PM பறந்துகொண்டிருந்த சர்வதேச விமானத்தின் சக்கரமொன்று கழன்று வீழ்ந்த சம்பவம் அமெரிக்காவில் நேற்று இடம்பெற்றுள்ளது. சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமானநிலையத்திலிருந்து ஜப்பானை நோக்கி புறப்பட்ட யுனைடெட் எயார்லைன்ஸ் விமானமொன்றிலிருந்தே இவ்வாறு சக்கரம் கழன்றது. போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த அவ்விமானம் தரையிலிருந்து கிளம்பிய நிலையில் அதன் சக்கரமொன்று கழன்று, விமான நிலையத்தின் வாகனத் தரப்பிடப் பகுதியில் வீழ்ந்தது. அதையடுத்து அவ்விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜப்பானின் ஒசாக்கா நகரை நோக்கி புறப்பட்ட அவ்விமானத்தில் 249 பேர் இருந்தனர் என யுனைடெட் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. போயிங் 777 விமானத்தின் ஒவ்வொரு சக்கரத் தொகுதியிலும் 6 சக்கரங்கள் இருப்பதாகவும், ஏதேனும் ஒரு சக்கரம் சேதமடைந்தால் அல்லது தொலைந்தாலும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கக் கூடிய வகையில் அவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் யுனைடெட் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/178249
-
நேட்டோவில் உத்தியோகபூர்வமாக இணைந்தது சுவீடன்
Published By: SETHU 08 MAR, 2024 | 11:41 AM நேட்டோ அமைப்பில் சுவீடன் நேற்றிரவு உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டது. நேட்டோவின் 32 ஆவது அங்கத்துவ நாடு சுவீடன் ஆகும். நீண்டகாலம் அணிசேரா நாடாக விளங்கிய சுவீடன், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தது. எனினும், நேட்டோவில் சுவீடன் இணைவதற்கான சம்மதத்தை தெரிவிப்பதற்கு துருக்கியும் ஹங்கேரியும் தயங்கிவந்தன. பின்னர் இவ்விரு நாடுகளும் தமது சம்மத்தை தெரிவித்த நிலையில், நேட்டோவில் சுவீடன் இணைந்துகொண்டது. நேட்டோவில் சுவீடன் இணைந்ததை வரவேற்றுள்ள சுவீடன் பிரதமர் ஊல்வ் கிறிஸ்டேர்சன், இது சுதந்திரத்துக்கான ஒரு வெற்றி என கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/178238
-
காஸாவில் தற்காலிக துறைமுகமொன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும்: பைடன்
Published By: SETHU 08 MAR, 2024 | 11:10 AM மனிதாபிமான உதவிப் பொருட்களை விநியோகிப்பற்காக காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை (07) நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார். இத்தற்காலிக துறைமுகமானது, பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஸாவுக்கு மேலும் அதிகளவு விநியோங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி பைடன் கூறினார். அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார். கஸாவிலுள்ள மக்களில் கால்வாசிப் பேர் பஞ்சத்தை எதிர்கொள்வதாக ஐநா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178234
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நாம் தமிழர் கட்சி சின்னம் சர்ச்சை குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பாண்டே பேட்டி