Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்களின் பணிப் புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது Published By: VISHNU 01 MAR, 2024 | 02:04 AM வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் வியாழக்கிழமை (29) மாலை ஆளுநர் செயலகத்தில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த தனியார் பேருந்து உாிமையாளர் சங்கத்தினருடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தவிசாளர் மற்றும் பொலிஸார் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர். இன்றைய கலந்துரையாடலில் வழங்கப்பட்ட உறுதி மொழியை அடுத்து பணி புறக்கணிப்பை கைவிட்டு வெள்ளிக்கிழமை (1) முதல் வழமை போன்று சேவை முன்னெடுக்க உள்ளதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்திற்கான தனியார் மற்றும் இ.போ.ச நெடுந்தூர பேருந்து சேவைகள் அனைத்தும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து விரைவில் சேவையை முன்னெடுக்கப்படும் எனவும், ஒரு கிழமை மாத்திரம் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று மின்சார நிலைய வீதியிலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து தாம் சேவை முன்னெடுப்பதாக இருந்தால் இலங்கை போக்குவரத்து சபையினரும் இணைந்து கொள்ள வேண்டும் என தெரிவித்து இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை முற்றிகையிட்டு தனியார் பேருந்து உாிமையாளா்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். இதன்போது போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வியாழக்கிழமை (29) பிற்பகல் 6 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் குறித்த விடையம் தொடர்பில் கலந்துரையாடி உரிய தீர்வினை பொற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கியதை அடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட தனியாா் பேருந்து உாிமையாளா்கள் தொடர்ந்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையிலேயே வியாழக்கிழமை (29) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177635
  2. “சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது!” – ராபர்ட் பயஸ் 29 FEB, 2024 | 09:24 PM சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என ராபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட நளினி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், சாந்தன் ஆகியோரை கடந்த 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இதில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் இந்தியர்கள் என்பதால் அவர்களது இல்லத்திற்கு சென்றனர். ஆனால் முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை குடிமக்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சாந்தனின் இறப்பு குறித்து சிறப்பு முகாமில் உள்ள ராபர்ட் பாயஸ் உலகத் தமிழர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், திருச்சி சிறப்பு முகாம் சிறையை விட கொடுமையானது என குறிப்பிட்டுள்ள அவர், தன் மகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கிய சாந்தனின் தாயிடம் உயிரற்ற உடலை தான் கொண்டு சேர்க்கப்போகிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை நோயாளிகளாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள ராபர்ட் பயஸ், சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை, சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.மேலும், தங்களின் கடைசி காலத்தை குடும்பத்தினருடன் செலவழிக்க அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/177629
  3. ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட கணினியும் யூ.எஸ்.பி. திறப்புகளும் திருடப்பட்டுள்ளது Published By: VISHNU 29 FEB, 2024 | 08:04 PM (நெவில் அன்தனி) பாரிஸ் நகரில் ஆரம்பமாகவுள்ள 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான பாதுகாப்புத் திட்டங்களுடன் பாரிஸ் சிட்டி ஹோல் பொறியியலாளர் ஒருவருக்கு சொந்தமான கணினி மற்றும் இரண்டு யூ.எஸ்.பி. திறப்புகளைக் கொண்ட பை திருடப்பட்டுள்ளது. இந்தத் திருட்டு காரணமாக பிரான்ஸ் அதிகாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் 2024 ஜூலை 26ஆம் திகதியிலிருந்து முதல் ஆகஸ்ட் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழா தொடர்பான முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள் இந்த கணினியில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கெயா டு நோர்ட் என்ற ரயில் நிலையத்தில் வைத்து இந்த கணினியும் இரண்டு யூ.எஸ்.பி. திறப்புகளும் திருடப்பட்டுள்ளது. க்ரெய்ல் நகருக்கு பயணிப்பதற்காக கெயா டு நோர்ட் ரயில் நிலையத்தில் 18ஆவது மேடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக கணினி உரிமையாளரான பாரிஸ் சிட்டி ஹோல் ஊழியர் முறையிட்டுள்ளார். இந்த சம்பவரம் கடந்த திங்கட்கிழமை இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்தது. பையின் உரிமையாளர் ரயிலில் தனது ஆசனத்துக்கு மேலாக உள்ள பொதிகள் வைக்கும் பகுதியில் தனது பையை வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்தப் பை காணாமல் போயிருந்ததை அவர் கவனித்ததாக பொலிசாரிடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார். புலனாய்வு பிரிவினருக்கு பொறியியலாளர் அளித்த வாக்குமூலத்தில், தனது பணி கணினி மற்றும் இரண்டு யூ.எஸ்.பி. குற்றிகளில் மாநகர பொலிஸார் தயாரித்த ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான முக்கியமான தகவல்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாரிஸ் சிட்டி ஹால் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. பிரெஞ்சு தலைநகரில் இடம்பெறும் பல திருட்டுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. எனினும், நவீன யுகத்தின் 33ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் பாரிஸ் அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது. இவ் விடயம் விளையாட்டு விழாவின் பாதுகாப்பில் மற்றொரு சிக்கலை உருவாக்கிவிட்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு விழா உத்தியோகபூர்வமாக ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள போதிலும் கால்பந்தாட்டம் மற்றும் றக்பி ஆகிய விளையாட்டுக்களின் முதலாம் கட்டப் போட்டிகள் ஜூலை 24ஆம் திகதி ஆரம்பமாகும். ஒலிம்பிக் விளையாட்டு விழாவின்போது 2,000 மாநகர பொலிஸாரை பணியில் நிறுத்த பாரிஸ் ஏற்பாட்டுக் குழு திட்டமிட்டுள்ளது. அவர்கள் 35,000 பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து 10,000 விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு வழங்கவுள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டு விழா பாரிஸிலும் அதனைச் சூழவுள்ள நகரங்களிலும் நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/177627
  4. இறப்பதற்கு முன்பே சாந்தனை இலங்கைக்கு அனுப்பாதது ஏன்? - தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் கேள்வி! Published By: RAJEEBAN 29 FEB, 2024 | 02:55 PM சாந்தனை அவர் இறப்பதற்கு முன்பே இலங்கைக்கு ஏன் அனுப்பவில்லை என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, சாந்தனை இலங்கை அனுப்பவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துவிட்டதாக கூறினார். சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி எப்போது கிடைத்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், கடந்த 22ஆம் தேதி அவரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். சாந்தனை இலங்கைக்கு அனுப்ப 22ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அனுப்பவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஜனவரி 24ஆம் தேதி முதலே சாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரால் நகரக்கூட முடியவில்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து, சாந்தனின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர். https://www.virakesari.lk/article/177595
  5. இங்கிலாந்தில் உயிரை மாய்த்துக் கொண்ட இலங்கையரின் மரணத்துக்கு காரணம் நிர்வாண புகைப்படங்களாம்! 29 FEB, 2024 | 02:42 PM இங்கிலாந்தில் வசித்த 16 வயது இலங்கையர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் டினால் த அல்விஸ் என்ற 16 வயது இளைஞராவார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி அன்று உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இளைஞரது நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக கூறி அச்சுறுத்தி ஒருவர் கப்பம் கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் தொடர்பில் எந்தவித தகவல்களும் கண்டறியப்படாத நிலையில் விபிஎன் என்ற தொழில்நுட்ப மென்பொருள் மூலம் நைஜீரியாவிலிருந்து இளைஞருக்கு இந்த அச்சுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபிஎன் மூலம் கப்பம் கோரி அச்சுறுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் இந்த இளைஞரின் இரு நிர்வாண புகைப்படங்களை அவரது கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த இளைஞரின் நிர்வாண புகைப்படங்கள் சந்தேக நபரிடம் சிக்கியதால் தான் இந்த அச்சுறுத்தல் இடம்பெற்றுள்ளதாக இங்கிலாந்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிலாந்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/177592
  6. தலைமன்னாரில் 10 வயது சிறுமி கொலை : சிறுமியின் தாய், தந்தை, பாட்டி உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை : சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு 29 FEB, 2024 | 05:04 PM தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை மீண்டும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி, கடந்த 16ஆம் திகதி காலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் கைதான, அதே கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் கடந்த 19ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், சந்தேக நபரை 29ஆம் திகதி (இன்று) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, சந்தேக நபர் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, உயிரிழந்த சிறுமியின் தாய், தந்தை, அம்மம்மா உள்ளிட்ட 5 பேரை நீதவான் விசாரணை செய்தார். அதையடுத்தே, சந்தேக நபரின் விளக்கமறியலை மார்ச் 7ஆம் திகதி வரை நீட்டித்துள்ளார். https://www.virakesari.lk/article/177610
  7. கெஹலிய உட்பட 7 பேரின் விளக்கமறியல் நீடிப்பு! Published By: VISHNU 29 FEB, 2024 | 08:22 PM தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் 5 பேரை எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாளிகாகந்த நீதிவான் முன்னிலையில் இவர்கள் இன்று (29) நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/177628
  8. Published By: RAJEEBAN 29 FEB, 2024 | 04:26 PM ஹெஸ்புல்லா அமைப்பை இஸ்ரேலுடனான வடபகுதி எல்லையிலிருந்து அகற்றுவதற்கான இராஜதந்திர முயற்சிகள் வெற்றியளிக்காவிட்டால் இஸ்ரேல் வசந்தகாலத்தின் பிற்பகுதியில் அல்லது கோடைகால ஆரம்பத்தில் லெபனானிற்குள் தரைவழியாக நுழைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டு வருகின்றது என வெளியான தகவல்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் புலனாய்வாளர்கள் மத்தியில் கவலை நிலவுகின்றது. சிஎன்என் இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு புலனாய்வு பிரிவினர் இஸ்ரேல் லெபனானிற்குள் தரைவழியாக நுழையலாம் என்பது குறித்து தகவல்களை வழங்கியுள்ளனர். கோடைகாலத்தின் ஆரம்பத்தில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை ஆரம்பிக்கும் என புலனாய்வு பிரிவினரின் தகவல்களை பெற்றுக்கொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் இஸ்ரேல் இராணுவநடவடிக்கையில் ஈடுபடலாம் என்ற அடிப்படையிலேயே நாங்கள் செயற்படுகின்றோம் என பைடன் நிர்வாகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். லெபானை இலக்குவைத்து இஸ்ரேல் தரைவழிதாக்குதலை மேற்கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன எனவும் அவர் தெரிpவித்துள்ளார். பலமாதங்களாக இஸ்ரேலிற்கும் லெபானனிற்கும் இடையில் இடம்பெறும் நாளாந்த பயங்கரமான மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான லெபான் மற்றும் இஸ்ரேலிய மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ளனர். ஹெஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் விமான ரொக்கட் ஆளில்லா தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது . அதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பினர் ரொக்கட் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். https://www.virakesari.lk/article/177608
  9. மேற்குலக அச்சுறுத்தல்கள் அணு ஆயுதப் போர் ஆபத்தை ஏற்படுத்துகின்றன - புட்டின் Published By: SETHU 29 FEB, 2024 | 05:05 PM மேற்குலகின் அச்சுறுத்தல்கள், அணுவாயுதப் போருக்கான ஆபத்தை உருவாக்குகின்றன என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார். தனது நாட்டு மக்களுக்கு இன்று வியாழக்கிழமை நிகழ்த்திய வருடாந்த உரையின்போது புட்டின் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரேனில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாக கூறிய அவர், உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்பும் எந்த நாடும் துயரமான பின்விளைவுகளை எதிர்கொள்ளும் என எச்சரித்தார். 'அவர்கள் உக்ரேனுக்கு மேற்குலக இராணுவத்தை அனுப்பும் சாத்தியம் குறித்து அறிவித்துள்ளார்கள். இத்தலையீடுகளின் பின்விளைவுகள் மிக துயரமானதாக இருக்கும். அவர்களின் பிராந்தியங்களைத் தாக்கக்கூடிய ஆயுதங்கள் எம்மிடமும் உள்ளன, மேற்குலகின் அச்சுறுத்தல்கள், அணுவாயுதப் போருக்கான ஆபத்தை உருவாக்குகின்றன என்பதை அவர்கள் உணர வேண்டும்' என புட்டின் கூறினார். உக்ரேனுக்கு படைகளை அனுப்பும் சாத்தியத்தை நிராகரிப்பதற்கு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் அண்மையில் மறுத்திருந்தார். இந்நிலையில், மெக்ரோனின் கருத்துக்கான பதிலடியாகவே புட்டின் மேற்கண்டவாறு கூறியுள்ளார் எனக் கருதப்படுகிறது. உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமானதன் பின்னர், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அணுவாயுதப் போர் குறித்து பேசிவருவதை மேற்குலக தலைவர்கள் விமர்சித்திருந்தனர். கடந்த சில மாதங்களில் அணுவாயுத எச்சரிக்கைகளை புட்டின் தணித்துக்கொண்டிருந்தார். தற்போது உக்ரேனில் ரஷ்ய படைகள் சில பகுதிகளை புதிதாக கைப்பற்றிய நிலையில், மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில் அணுவாயுத போர் குறித்து ஜனாதிபதி புட்டின் மீண்டும் எச்சரித்துள்ளார். https://www.virakesari.lk/article/177611
  10. Published By: SETHU 29 FEB, 2024 | 03:43 PM இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐக கடந்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் இயக்கம் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதல்களையடுத்து, பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியம் மீது இஸ்ரேலியப் படைகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இத்தாக்குதல்கள் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐ கடந்துள்ளது என காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இதுவரை 30,035 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 70457 பேர் காயமடைந்துள்ளனர் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, காஸாவின் அல் ஷிபா நகரிலுள்ள வைத்தியசாலையில், மந்தபோஷாக்கு, நீரிழப்பு மற்றும் பட்டினி காரணமாக 6 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் மரணங்களைத் தடுப்பதற்காக சர்வதேச ஸ்தாபனங்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் காஸா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/177601
  11. தி.மு.க - இடதுசாரி கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதி ஆகியும் தொகுதிகள் சொல்லப்படாதது ஏன்? பட மூலாதாரம்,FILE PHOTO கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 37 நிமிடங்களுக்கு முன்னர் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கான இடங்களின் எண்ணிக்கை இறுதிசெய்யப்பட்டாலும், தொகுதிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. கூட்டணியில் என்ன நடக்கிறது? நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணிகளை இறுதிசெய்வதில் தி.மு.க. தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. அ.தி.மு.க. தரப்பிலும் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் நடந்துவந்தாலும், வெளிப்படையாக அது குறித்து ஏதும் சொல்லப்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டு இரு கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் என அறிவிக்கப்பட்டுவிட்டது. இதற்குப் பிறகு எல்லா கட்சிகளுடனும் முதற்கட்டமாக பேச்சு வார்த்தை நடந்த பிறகும், பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை தேங்கி நிற்கிறது. கடந்த ஜனவரி 28-ஆம் தேதி சல்மான் குர்ஷித் தலைமையில் அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முகுல் வாஸ்னிக், அஜய் குமார் ஆகியோர் அறிவாலயத்திற்கு வந்து தி.மு.கவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சு வார்த்தையில் காங்கிரஸ் ஏற்கனவே வெற்றிபெற்ற 8 என்ற எண்ணிக்கையில் மட்டுமே தொகுதிகளை தருவதாகவும் ஒன்றிரண்டு தொகுதிகள் மாறலாம் என்றும் தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், காங்கிரசைப் பொறுத்தவரை தமிழகத்தில் 9, புதுச்சேரியில் 1 என்ற எண்ணிக்கையில் உறுதியாக நிற்பதால், மேற்கொண்டு எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில்தான் மீதமிருக்கும் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்தி முடிக்க முடிவுசெய்தது தி.மு.க. திங்கட்கிழமையன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஊடகத்தினருடன் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், பேச்சு வார்த்தை சுமுகமாக இருந்ததாகவும் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை மார்ச் 3-ஆம் தேதி நடக்கும் என்றும் கூறியிருந்தனர். பட மூலாதாரம்,FACEBOOK/STALIN தொகுதிப் பெயர்கள் ஏன் வெளியிடப் படவில்லை? ஆனால், அதற்கு முன்பாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் வியாழக்கிழமையன்று பேச்சு வார்த்தைக்கு அழைத்த தி.மு.க. இடங்களை இறுதிசெய்திருக்கிறது. அதன்படி, இந்த இரு கட்சிகளுக்கும் கடந்த தேர்தலைப் போலவே தலா இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்தெந்த தொகுதிகளில் இந்தக் கட்சிகள் போட்டியிடும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. 2019-ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டனம், திருப்பூர் தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோயம்புத்தூர் தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால், இந்த முறை கோயம்புத்தூர், திருப்பூர் தொகுதிகளை பல்வேறு காரணங்களுக்காக மாற்றிக்கொள்ள விரும்புகிறது தி.மு.க. "எங்களைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே போட்டியிட்ட இரண்டு இடங்களையும் கேட்டிருக்கிறோம். அதேபோலத்தான் அவர்களும் கேட்டிருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ், ம.தி.மு.கவுடனான தொகுதிகளை இறுதிசெய்வதில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக ம.தி.மு.கவுக்கு திருச்சி அல்லது விருதுநகரை ஒதுக்க நினைக்கிறார்கள். ஆனால், அவை காங்கிரசின் தொகுதிகள். இதில் ஒரு தீர்வைக் காண்பதற்கான பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும்போது இடதுசாரிக் கட்சிகளுக்கு மட்டுமான தொகுதிகளை அறிவித்தால் நன்றாக இருக்காது என்பதால் அவற்றை அறிவிக்கவில்லை. காங்கிரசுடனான இடங்கள் இறுதிசெய்யப்படும்போது தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும்" என்கிறார் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர். திமுக-மதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை இதற்கிடையில் ம.தி.மு.கவும் தி.மு.கவும் இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தின. இந்தப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. தி.மு.கவைப் பொறுத்தவரை ஒரு இடத்தை அளிப்பதோடு, கடந்த முறையைப் போலவே தி.மு.கவின் சின்னத்தில் போட்டியிடும்படி கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ம.தி.மு.கவைப் பொறுத்தவரை கடந்த தேர்தலைப் போல ஒரு மக்களவைத் தொகுதியையும் ஒரு மாநிலங்களவை தொகுதியையும் எதிர்பார்க்கிறது. மேலும், பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட விரும்புகிறது. இதன் காரணமாகவே, மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறார். தன்னுடைய மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வில் வைகோ சார்பில் முறையிடப்பட்டிருக்கிறது. அதன்படி இந்த வழக்கு நாளை (மார்ச் 1) விசாரணைக்கு வருகிறது. "தி.மு.க. கூட்டணியில் பேச்சு வார்த்தைகள் இழுத்துக்கொண்டே போவதற்கு முக்கியக் காரணம், காங்கிரசுடனான இடங்கள் இறுதிசெய்யப்படாததுதான். ம.தி.மு.கவுக்கு திருச்சியைக் கொடுத்துவிட நினைக்கிறது தி.மு.க. ஆனால், திருச்சியில் அமைச்சர் நேருவின் மகன் போட்டியிட விரும்புகிறார். காங்கிரசிற்கு திருச்சிக்குப் பதிலாக கடலூரைத் தர தி.மு.க. முன்வந்திருக்கிறது. ஆனால், தங்களிடமிருந்து திருப்பூரை எடுத்தால், கடலூரைத் தர வேண்டும் என்கிறது சி.பி.ஐ. அதேபோல, கமலுக்கு கோவையைத் தரலாம் என கருதியது தி.மு.க. ஆனால், அவர் தென் சென்னைத் தொகுதியை விரும்புகிறார். இதனால்தான் பேச்சு வார்த்தைகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். காங்கிரசுடனான இடங்கள் இறுதிசெய்யப்பட்டால், மற்ற கட்சிகளுடனான இடங்களையும் தொகுதிகளையும் இறுதிசெய்துவிடலாம் என்பதால் காங்கிரசுடனான பேச்சு வார்த்தைகளை ஒன்றிரண்டு நாட்களில் மீண்டும் துவங்கவிருக்கிறது தி.மு.க. இதற்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்தி முடிக்க விரும்புகிறது தி.மு.க. ஆகவே அடுத்த சில நாட்களில் தி.மு.க. கூட்டணியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என நம்பலாம். https://www.bbc.com/tamil/articles/cn3n83kydeeo
  12. ரஷ்யாவுக்கு எதிராகப் போருக்குத் தயாராகிறதா பிரான்ஸ்? நேட்டோ ராணுவக் கூட்டணி என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இமானுவேல் மக்ரோங் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனை ஆதரிக்க மேற்கு நாடுகள் தங்கள் துருப்புக்களை அனுப்பும் யோசனையை தவிர்க்கக் கூடாது என பேசியிருந்தார். அவருடைய இக்கருத்து ஐரோப்பா முழுவதும் அதனைக் கடந்தும் எதிர்வினைகளை பெற்று வருகிறது. பிரான்ஸ் அதிபரின் இந்த கருத்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள், நேட்டோ உறுப்பினர்கள் ஆகியோர், இதுகுறித்து தங்கள் கருத்து வேறுபாடுகளை பரவலாக வெளிப்படுத்த வழிவகுத்தது. யுக்ரேனுக்கு மேற்கத்திய துருப்புக்களை அனுப்புவது ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையே நேரடி மோதலை ஏற்படுத்தும் என்று ரஷ்யா பலமுறை எச்சரித்துள்ளது . "இந்த விவகாரத்தில் ‘இது நிகழ்ந்திருக்கலாம்’ என நாம் நினைப்பது குறித்து பேசக்கூடாது. ஆனால், (ஒரு மோதலின்) தவிர்க்க முடியாத தன்மையைப் பற்றி பேச வேண்டும். இதை நாங்கள் இப்படித்தான் மதிப்பிடுகிறோம்,” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பிரான்ஸ் அதிபரின் கருத்து குறித்து கேள்வி எழுப்பியபோது கூறினார். ரஷ்யா கூறியது என்ன? பட மூலாதாரம்,RUSSIAN PRESIDENTIAL PRESS SERVICE படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் புதின் மேலும் பேசிய டிமிட்ரி பெஸ்கோவ் "இந்த நாடுகள் (மேற்கு நாடுகள்) அதை மதிப்பீடு செய்து விழிப்புடன் இருக்க வேண்டும். இது (துருப்புக்களை அனுப்புவது) அவர்களின் நலன்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் நாட்டு குடிமக்களின் நலன்களுக்கும் ஏற்றதா என அவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறினார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறுகையில், "இதுபோன்ற எண்ணங்களை வெளிப்படுத்துபவர்கள், தங்கள் அறிவை ஐரோப்பாவிற்கு பாதுகாப்பான, பகுத்தறிவு சிந்தனைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்," என தெரிவித்தார். ரஷ்ய துருப்புக்கள் சமீபத்தில் யுக்ரேன் பிரதேசத்தில் முன்னேறியுள்ளன. அதேநேரத்தில், யுக்ரேனியர்கள் ஆயுதப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர். ஏராளமான பீரங்கி வெடிமருந்துகளுடன் மிகப்பெரும் ரஷ்ய துருப்புக்களுடன் தொடர்ந்து போரிடுவதற்கு, யுக்ரேன் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளிடமிருந்து, குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து நவீன ஆயுதங்களை பெரிதும் நம்பியுள்ளது . ஆனால் அதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு அமெரிக்க பேரவையில் உடன்பாடு இல்லாதது மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து விநியோகத்தில் தாமதம் ஆகியவை யுக்ரேன் ராணுவத்தின் நிலைமையை சிக்கலாக்குகின்றன. பிரான்ஸ் அதிபர் கருத்துக்கு எதிர்வினைகள் பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக் பாரிஸில் நடைபெற்ற ஐரோப்பிய தலைவர்கள் கூட்டத்தில், யுக்ரேனின் வெற்றி ஐரோப்பாவின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது என்று மக்ரோங் கூறினார். இந்த உச்சி மாநாட்டில் அந்நாட்டுக்கு ராணுவ வீரர்களை அனுப்புவது சாத்தியமா இல்லையா என்பது குறித்து விவாதித்தனர். "தற்போது தரைப்படைகளை அனுப்புவதில் ஒருமித்த கருத்து இல்லை. ஆனால் எதையும் நிராகரிக்க முடியாது," என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்தார். "இந்தப் போரில் ரஷ்யா வெற்றி பெறுவதைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்வோம். ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ரஷ்யாவின் தோல்வி அவசியம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என அவர் கூறினார். கடந்த செவ்வாய்கிழமை, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர், ஸ்டீஃபன் செஜோர்ன், அந்நாட்டு அதிபரின் கருத்து குறித்து கூறுகையில், தீவிரமான போரில் துருப்புக்களை ஈடுபடுத்துவதை மக்ரோங் குறிப்பிடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். "யுக்ரேனை ஆதரிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை நாங்கள் பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக, யுக்ரேனிய பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றுதல், இணைய பாதுகாப்பு, ஆயுதங்கள் உற்பத்தி ஆகியவை குறித்து நான் யோசித்து வருகிறேன்," செஜோர்ன் பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி 'பிரிட்டன் ஏற்கனவே துருப்புகளை அனுப்பியுள்ளது' எப்படியிருந்தாலும், மக்ரோங்கின் பரிந்துரை உயர்மட்ட உலகத் தலைவர்கள் சிலரால் நிராகரிக்கப்பட்டது. ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ், "ஒன்று தெளிவாக உள்ளது: ஐரோப்பிய நாடுகள் அல்லது நேட்டோவில் இருந்து தரைப்படைகளை அனுப்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை," என்றார். பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக், தனது பங்குக்கு, தனது நாடு "ஏற்கனவே சிறிய எண்ணிக்கையிலான துருப்புக்களை யுக்ரேனுக்கு அனுப்பியுள்ளது," என்று கூறினார். “நாங்கள் பெரியளவிலான துருப்புக்களை அனுப்பத் திட்டமிடவில்லை. பிரிட்டன் தனது பிரதேசத்தில் ஏராளமான யுக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. நிச்சயமாக, நாங்கள் யுக்ரேனிய துருப்புக்களுக்கு உபகரணங்கள் மற்றும் பிறவற்றை அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம்,” என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 'யுக்ரேனுக்கு அமெரிக்கா துருப்புக்களை அனுப்பாது' என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், யுக்ரேனிய துருப்புக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட ராணுவ உதவியை வழங்குவதுதான் 'வெற்றிக்கான பாதை' என தான் நம்புவதாக பைடன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அலுவலகம், "ஐரோப்பிய நாடுகள் அல்லது நேட்டோவின் துருப்புக்கள் யுக்ரேனிய பிரதேசத்தில் இருப்பதற்கு இத்தாலியின் ஆதரவு இல்லை," என்று கூறியது. நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் யுக்ரேனுக்கு உடனடியாக துருப்புக்கள் அனுப்பும் யோசனையை நிராகரித்தார். "நேட்டோ போர் துருப்புக்களை யுக்ரேனிய பகுதிக்கு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை," என்று அவர் குறிப்பிட்டார். சுவீடன், ஹங்கேரி, போலந்து மற்றும் செக் குடியரசின் தலைவர்களும் படைகளை போர்முனைக்கு அனுப்பும் நோக்கத்தை நிராகரித்துள்ளனர். யுக்ரேனுக்கு வீரர்களை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பேசுவதோடு மட்டுமல்லாமல், மக்ரோங் தனது உரையில் அந்நாட்டு தலைநகர் கீயவ்-க்கு 'நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை' வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் குறிப்பிட்டுள்ளார். இது மோதலுக்கு வழிவகுக்கும் என்ற மேற்கு நாடுகளின் அச்சத்தால் இதுவரை நடக்கவில்லை. மக்ரோங்கின் நோக்கம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போரால் பாதிக்கப்பட்ட யுக்ரேன் கிராமம் சர்வதேச அரசியல் நிபுணரான உல்ரிச் ஸ்பெக்கைப் பொறுத்தவரை, இத்தகைய கருத்துக்கள் மூலம் மாஸ்கோவை விழிப்புடன் வைத்திருக்கும் 'மூலோபாய நிச்சயமற்ற தன்மையை' ஏற்படுத்துவதுதான் மக்ரோங்கின் நோக்கம் என்றார். "ஆனால், இதுபோன்ற விஷயங்கள் முற்றிலும் எதிர்பாராதது அல்ல: யுக்ரேனுக்கு உறுதியான மற்றும் பெரியளவிலான ராணுவ ஆதரவு தேவை. இது, கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரான்ஸ் செய்யாத ஒன்று," என்று சமூக ஊடகமான ‘எக்ஸ்’ தளத்தில் அவர் தெரிவித்தார். முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியும் ராணுவ ஆய்வாளருமான நிக்கோலஸ் டிரம்மண்ட், பிரான்ஸ் அதிபர் "சர்வதேச அரங்கில் தனது பிம்பத்தை மேம்படுத்த" ஒரு தந்திரத்தைப் பயன்படுத்துகிறார் என்று நம்புகிறார். "பிரான்ஸ் அல்லது வேறு எந்த நேட்டோ நாடும் யுக்ரேன் போர்க்களத்திற்கு துருப்புக்களை அனுப்புவது சாத்தியமில்லை. அந்நாடுகள் ரஷ்யாவிற்கும் புதினுக்கும் எதிராக மறைமுக போரை நடத்தலாம், ஆனால் நேரடியாக பங்கேற்கும் விருப்பம் அவர்களுக்கு இல்லை," என்று அவர் 'எக்ஸ்' தளத்தில் குறிப்பிட்டுள்ளார். பிபிசி ரஷ்ய சேவையின் போர் செய்தியாளர் பாவெல் அக்செனோவின் கருத்துப்படி, "நீண்ட தூர ஏவுகணைகளை அனுப்புவது மற்றும் வீரர்களை நிலைநிறுத்துவது பற்றிய மக்ரோங்கின் கருத்துகள், மேற்கு நாடுகள் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே மறைமுகமான 'சிவப்பு கோடுகளை' மீறுவது போன்று உள்ளது,” என தெரிவித்தார். "யுக்ரேனிய போரில் வெளிநாட்டு துருப்புக்களின் பங்கேற்பு பற்றிய மக்ரோங்கின் கருத்துக்கள் இன்னும் இன்னும் தீவிரமான மீறலாகும். அத்தகைய வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் பல்வேறு மட்டங்களில் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இக்கருத்து தற்போது மிகப்பெரிய ஐரோப்பிய நேட்டோ உறுப்பு நாட்டின் தலைவரால் கூறப்பட்டுள்ளது," என அக்செனோவ் குறிப்பிட்டார். இது சிறிய, நுட்பமான நகர்வுகளின் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c8vnd3gye77o
  13. தனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன். தனிக்காட்டு ராஜாவிற்கு பிறந்தநாள் என முகப்புத்தகம் தெரிவிக்கிறது.
  14. வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்ட அவுஸ்திரேலிய அரசியல்வாதி நாட்டை காட்டிக்கொடுத்தார் - அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவின் தலைவர் திடுக்கிடும் தகவல் Published By: RAJEEBAN 29 FEB, 2024 | 12:15 PM அவுஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியொருவர் நாட்டை வெளிநாட்டின் புலனாய்வு அமைப்பிற்கு காட்டிக்கொடுத்தார் என அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை அவுஸ்திரேலிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடீம் என்ற வெளிநாட்டு புலனாய்வு குழுவினருடன் இணைந்து செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், வெளிநாட்டு புலனாய்வாளர்களை பிரதமரின் அலுவலகம் வரை அழைத்துச்சென்றார் என தேசிய புலனாய்வுபிரிவின் தலைவர் மைக்பேர்கெஸ் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரையோ அல்லது அவர் எந்த நாட்டின் சார்பில் பணியாற்றினார் என்பதையோ வெளியிடாத புலனாய்வு பிரிவின் தலைவர் பல வருடங்களிற்கு முன்னர் இது இடம்பெற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது கலைக்கப்பட்டுள்ள ஏடீம் ஒரு ஆக்ரோசமான மற்றும் அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்பாகும் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் இது அவுஸ்திரேலியாவை முன்னுரிமைக்குரிய இலக்காக கொண்டுசெயற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் உள்ளுர் அரசாங்க அதிகாரிகள், கல்வியாளாகள் உட்பட பல்வேறு போர்வையில் செயற்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் சமூகத்தின் பல தரப்பட்டவர்களை இலக்குவைத்தனர் என தெரிவித்துள்ள புலனாய்வுபிரிவின் தலைவர் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றிற்கு இடையிலான அவுகஸ் உடன்படிக்கை அவர்களின் முக்கிய ஆர்வத்திற்குரிய விடயமாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் பிடிக்குள் சிக்குண்டு அவர்களிற்காக செயற்பட்டவர்களில் முன்னாள் அரசியல்வாதியே முக்கியமானவர் என மைக்பேர்கெஸ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு அரசாங்கத்தின் நலன்களை முன்னெடுப்பதற்காக முன்னாள் அரசியல்வாதி நாட்டை கட்சியை நண்பர்களை விற்றார் என அவர் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த அரசியல்வாதி பிரதமரின் குடும்பத்தவர்களை வெளிநாட்டு புலனாய்வுபிரிவினரின் வட்டத்திற்குள் கொண்டுவர முயன்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177583
  15. யாழ். மத்திய கல்லூரி அதிபர் தெரிவு - பெற்றோர்கள் விடுத்துள்ள கோரிக்கை! 29 FEB, 2024 | 04:44 PM யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சியைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் பாதக முயற்சிகளை பெற்றோர்கள் ஆகிய எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவு குறித்து பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவு குறித்து நேற்றைய தினம் (28) பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவது, 2023.03.02ஆம் திகதி தொடக்கம் எமது கல்லூரிக்கு பதில் அதிபராக நியமிக்கப்பட்ட திரு. சி. இந்திரகுமார் (SLEAS) எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்து வருகின்றார். முன்னைய காலத்தினை விட இவ்வதிபர் பதவியேற்ற குறுகிய காலத்தில் எங்களுடைய பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்விசாரா செயற்பாடுகளில் வளர்ச்சியை ஏற்படுத்தக் காட்டிய சிறப்பான திட்டமிடலுடன் கூடிய அணுகுமுறைகள் எங்களை மகிழ்வடைய வைத்ததுடன், பெற்றோர்கள் ஆகிய எங்கள் மத்தியில் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை மிகவும் வலுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதிபர் சி. இந்திரகுமார், எங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு நிரந்தர நியமனம் வழங்குமாறு பெற்றோராகிய நாங்களும் எங்களுடைய கல்லூரியின் பழைய மாணவர்களும், எமது பாடசாலையின் பழைய மாணவராகிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியிருந்தோம். இக்கோரிக்கை தொடர்பில் எதுவித அரசியல் தலையீடுகளும் கையாளப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், எங்களுடைய கோரிக்கைக்கு இணங்கவே அமைச்சர் அவர்கள், பிள்ளைகளின் எதிர்கால அடைவுகளின் நியாயங்களைச் சமூகம் சார்ந்து ஆழமாக ஆராய்ந்து செயற்படுவது எங்களுக்கு பக்கபலமாக இருப்பது வெளிப்படையான ஒன்றாகும். மேலும், இவ்வதிபர் தன்னலம் சாராது யாழ்ப்பாணத்தின் கல்வி மற்றும் கல்விசாரா மேம்பாட்டுக்கு பெயர் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு பாடசாலையொன்றை உருவாக்க தீவிர முயற்சி எடுத்துவருவதால் பெற்றோர் மற்றும் மாணவர் மத்தியில் இப்பாடசாலையின் பெயர் பேசுபொருள் மட்டுமன்றி, மாணவர் கற்றலுக்கான அனுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே இவற்றை இழந்து யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சியைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் பாதக முயற்சிகளை பெற்றோர்கள் ஆகிய எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென்பது வெளிப்படை உண்மையாகும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/177600
  16. 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல! 29 FEB, 2024 | 03:18 PM நியாயமான காரணமின்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி 100 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை தனக்குப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சட்டத்தரணிகள் ஊடாக மனுத்தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பில் இன்று (29) உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பில் மனுதாரர் கெஹலிய ரம்புக்வெல்ல, கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார். https://www.virakesari.lk/article/177598
  17. கல்வி அமைச்சு, பொதுச்சேவை ஆணைக்குழுவின் விதிகளுக்கமைய அதிபர் நியமனம் இடம்பெற வேண்டும் - யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் 29 FEB, 2024 | 12:05 PM கல்வி அமைச்சு மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் விதிகளுக்கு அமையவே அதிபர் நியமனம் இடம்பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ். மத்திய கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்போதே மேற்கண்டவாறு பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் இது தொடர்பாக மேலும் கூறுகையில்:- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் என்பது 1909ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இன்று வரை அந்த சங்கம் எதுவித பிரச்சினையும் இன்றி தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. புதிய பதில் அதிபர் பதவியேற்றதன் பின்னர், சில காரணங்களுக்காக பழைய மாணாக்கர் சங்கம் என்ற பெயரில் இன்னொரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த சங்கத்துக்கும் எமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர்கள் உருவாக்கியது பழைய மாணாக்கர் சங்கம். இது கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். இது சம்பந்தமான வழக்கு கூட தற்பொழுது நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது. பழைய மாணவர் சங்கமாகிய நாங்களே தற்பொழுது புதிதாக உருவாக்கப்பட்ட பழைய மாணாக்கர் சங்கத்துக்கு எதிராக வழக்கினை தாக்கல் செய்துள்ளோம். பழைய மாணவர் சங்கத்தை பொறுத்தவரையில் நாங்கள் இவர்தான் அதிபராக வரவேண்டும்; அவர்தான் அதிபராக வரவேண்டும் என்று எந்த ஒரு நிபந்தனையும் விதிக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் சட்ட திட்டங்களுக்கு அமையவாக கல்வி அமைச்சினதும் பொதுச் சேவை ஆணைக்குழுவினதும் விதிகளுக்கு அமைவாக ஓர் ஒழுங்குமுறையில் தெரிவு செய்யப்பட்ட அதிபர் வரவேண்டும் என்பதேயாகும். அவ்வாறான ஒருவரை நாம் ஆதரிப்போம். அதுவே எமது நிலைப்பாடாகவும் இருக்கிறது. குறிப்பாக, இந்த அதிபர் விடயத்தில் நாங்கள் தாய் சங்கமாக இருக்கிறோம். கனடா மற்றும் இங்கிலாந்து, கொழும்பைச் சேர்ந்த எமது பழைய மாணவர் சங்கங்களும் எமது நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 118 வருடங்கள் பழமையான சங்கமும் எமது சங்கமாகும். ஆகவே, எமது செயற்பாடுகள் பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் அமைய வேண்டும். அதுவே எமது நிலைப்பாடாகும் என தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/177580
  18. 26 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் உட்பட கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு வரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார். சமீபத்தில் டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் தலைமையில் இயங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், சென்னையில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்த அதிகாரிகள், அதற்கு சீல் வைத்துள்ளனர். ஜாபர் சாதிக் எங்கே? டெல்லியில் கைதான 3 பேருக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் கூறுவது எனன? திமுகவில் அவர் என்ன பொறுப்பு வகித்து வந்தார்? டெல்லியில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல் டெல்லியில் ஒரு குடோன் வைத்து இயங்கிக்கொண்டிருந்த கும்பலை சமீபத்தில் டெல்லி சிறப்பு போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்தும் சுமார் 50 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இந்தக்கடத்தல் கும்பல், சர்வதேச அளவில், பல ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தி வந்ததாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்தப் போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து பிபிசியிடம் பேசிய ஒரு அதிகாரி, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளே தங்களுக்கு தகவல் கொடுத்ததாகக் கூறினார். “நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள், இந்தியாவில் இருந்து சூடோபெட்ரைன்(pseudoephedrine) என்ற போதைப்பொருள் கிலோக்கணக்கில் அவர்களின் நாட்டிற்கு அனுப்பப்படுவதாகக் கூறினர். அதுவும் சத்து மாவு, தேங்காய் பொடி உள்ளிட்ட பொருட்களுடன் கலந்து இந்த போதைப்பொருளை அவர்களின் நாட்டிற்கு இந்தியாவின் டெல்லியில் இருந்து அனுப்புவதாகத் தகவல் கொடுத்தனர்,”என்றார் அந்த அதிகாரி. தகவலின் பேரில், சுமார் 30 நாட்களுக்கும் மேலாக, விமான நிலையத்திற்கு வந்து செல்வோர், பொருட்களை ஏற்றுமதி செய்வோர், மற்றும் அவர்களின் சந்தேகிக்கும் வகையில் இருப்பவர்களை கண்காணித்து வந்ததாகக் கூறினார் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் உள்ள அந்த அதிகாரி. பட மூலாதாரம்,HANDOUT அப்படி கண்காணித்து வந்தபோது, மேற்கு டெல்லியில் உள்ள ஒரு குடோனில் இருந்து போதைப்பொருள்கள் கலவை தயார் செய்யப்பட்டு, உணவுப்பொருள்கள், சத்துமாவு உள்ளிட்டவையுடன் கலந்து ஏற்றுமதி செய்வது தெரியவந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார். “சுமார் ஒரு மாதம் கண்காணித்ததில், உறுதியான தகவலின் அடிப்படையில், அந்த குடோனை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சோதனை செய்தோம். சோதனையின்போது, போதைப்பொருளை பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்,”என்றார் அந்த அதிகாரி கைது செய்யப்பட்டவர்களில் முகேஷ் மற்றும் முஜ்பீர் ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும், அசோக் குமார், விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் சுமார் 50 கிலோ சூடோபெட்ரைன் கைப்பற்றப்பட்டுள்ளது. சூடோபெட்ரைன் என்ற இரசாயனம், மெத்தாம்பெட்டமைன் என்கிற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படக் கூடியது. உலகளவில், மெத்தாம்பெட்டமைன் என்கிற போதைபொருளுக்கு சந்தை மதிப்பு மிகவும் அதிகம். போலீசாரின் கூற்றுப்படி, இந்த போதைப்பொருள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், ஒரு கிலோ சுமார் ரூ 1.5 கோடியில் இருந்து ரூ 2 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டாரா ஜாபர் சாதிக்? பட மூலாதாரம்,ARJAFFERSADIQ/X படக்குறிப்பு, ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில், திமுக சென்னை மேற்கு மண்டல அயலக அணியின் முன்னாள் அமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் உத்தரவின் பேரில் அவர்கள் செயல்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பிபிசியிடம் பேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், “கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை அவர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தியிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதும், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோர் அவருக்கு துணையாக இருந்ததும் தெரியவந்துள்ளது,”என்றார். இதுதொடர்பாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஜாபர் சாதிக்கிற்கு டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல்? அவர் எங்கே? ஜாபர் சாதிக் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சோதனை முடிந்த பிறகு, அந்த வீட்டை சீல் வைத்துவிட்டு அதிகாரிகள் வெளியேறினர். தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கை போதைப்பொருள கடத்தல் தடுப்புப் பிரிவும், காவல்துறையினரும் தேடி வருகின்றனர். ஜாபர் சாதிக்கை திமுக நீக்க என்ன காரணம்? ஜாபர் சாதிக் நீக்கம் தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்க வைக்கப்படுகிறார். இவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவர் கட்சிக்கு என்ன அவப்பெயர் ஏற்படுத்தினார் என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல, திமுக,வைப் பொறுத்தவரையில், எப்போதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்போது, முதலில் தற்காலிகமாக நீக்கிவிட்டு, உரிய கால அவகாசத்திற்கு பிறகு, நிரந்தரமாக நீக்கப்படுவர். அரிதாகவே, இவ்வாறு முழுமையாக கட்சியில் இருந்து நீக்குவார்கள். “அவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததாலேயே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அது இப்போதுதான் தெரியவந்தது. தெரியவந்ததும், அவரை நீக்கினோம்,” என பிபிசியிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ். பாரதி கூறினார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்க, பிபிசி சார்பில் ஜாபர் சாதிக்கை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. திரைத்துறையில் ஜாபர் சாதிக் பட மூலாதாரம்,ARJAFFERSADIQ/X ஐஎம்டிபி அளிக்கும் தகவலின்படி, ஜாபர் சாதிக், வெற்றிமாறன் எழுதி, அமீர் இயக்கும் இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதைத் தவிர, இந்திரா, மங்கை மற்றும் மாயவலை ஆகிய படங்களையும் அவர் தயாரித்துள்ளார். இதில், மங்கை படத்தின் முதல் பாடலை இயக்குனர் கிருத்திகா உதயநிதி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். தமிழ்த் திரையுலகில் ஜாபர் சாதிக் தயாரித்து வந்த படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. https://www.bbc.com/tamil/articles/cjrkr9xq7pwo
  19. பள்ளி மாணவர், இளைஞர்களுக்கு முதுகுவலி வருவது ஏன்? மருத்துவரை எப்போது அணுக வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் உடல் சார்ந்து அதிக பிரச்னைகளை கூறுவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஒருகாலத்தில் முதுமையின் ஒரு அங்கமாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த முதுகுவலி, மூட்டு வலியெல்லாம் இப்போது பள்ளி குழந்தைகளுக்கே ஏற்படுவதையும் நாம் பார்க்கிறோம். இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவுமுறை, மரபணு சார்ந்த பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 20 முதல் 30 வயதுள்ள இளைஞர்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் கூட முதுகு வலி ஏற்படுவதற்கான உண்மை காரணங்கள் என்ன? அதை எப்படி வருமுன் காப்பது என்பதை பார்க்கலாம். பட மூலாதாரம்,VIJAYARAGHAVAN G படக்குறிப்பு, முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விஜயராகவன் முதுகு வலியோடு வளரும் தலைமுறை பொதுவாகவே வளரிளம் பருவம் என்பது உடலுறுப்புகள் அனைத்தும் வலுவான அமைப்பை பெறுவதற்கான காலம் என்று கூறப்படுகிறது. அதிலும் பதின்ம வயது காலகட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால், வளரிளம் முன் பருவமான 9 வயதில் இருந்தே பலருக்கும் முதுகு வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதை பார்க்க முடிகிறது. அதிலும் 20 வயது முதல் 30 வயது வரை இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள், குறிப்பாக அதிகம் உடல்சார் வேலையில் ஈடுபடாமல், மூளைசார் பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு இந்த பிரச்னை அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசுவதற்காக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் விஜயராகவன் அவர்களை அணுகினோம். அவர் கூறும் தகவல்கள் சில உங்களுக்கு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை அளிக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, “முதுகுவலி வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன" முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? தற்போது பலருக்கும் ஏற்படும் முதுகுவலியை “மெக்கானிக்கல் பேக் பெயின்” என்று குறிப்பிடும் அவர், இவர்களில் 80% பேருக்கு பரிசோதனை செய்து பார்த்தால் எந்த பிரச்னையும் இருக்காது என்கிறார். இதுகுறித்து விவரிக்கையில், “ முதுகுவலி வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அவர்களது வாழ்க்கை முறை. நீண்ட நேரம் எந்த வித உடல்ரீதியான செயல்பாடுகளும் இல்லாமல், அமர்ந்து கொண்டே இருப்பது. இரண்டாவது, அவர்கள் அமர்ந்திருக்கும் நிலை தவறாக இருக்கலாம்” என்கிறார். “இதில் வெகுசிலருக்கே டிஸ்க் சார்ந்த காரணங்கள் இருக்கும். டிஸ்க் என்பது முதுகெலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வு அமைப்பு. பொதுவாக கீழ் முதுகின் வேலையே மேலே இருக்கும் உடலை தாங்குவதுதான். இதற்கு எலும்பு, தசை, மூட்டு ஆகியவை இணைந்து பணியாற்றும். ஆனால், நீண்ட நேரம் அமர்ந்தே இருக்கும்போது இவை எதுவுமே பணியாற்றாமல், ஒட்டுமொத்த சுமையும் ஜவ்வுகளின் மீது போடப்படுவதால், அது கிழிதல் அல்லது பலவீனமடைதல் போன்ற பிரச்னைகளை சந்திக்கிறது. இதனால் கூட 15% பேருக்கு முதுகுவலி ஏற்படுகிறது.” பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வெவ்வேறு பணி செய்பவர்களுக்கும் வழிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றினால் மட்டுமே ஆரோக்கியமாக முதுகை பராமரிக்க முடியும். எப்படி அமர வேண்டும்? மருத்துவர் கூற்றுபடி, இயற்கையாகவே உங்களது முதுகுத்தண்டில் கழுத்துப்பகுதி, நடுமுதுகு, கீழ்முதுகு என வளைவுகள் உள்ளன. நீங்கள் சரியாக அமராத போது அவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை தவிர்க்க கீழ் உள்ள வழிமுறைகளை அடிப்படையாக பின்பற்ற வேண்டும். லேப்டாப் போன்ற கணினி முன் பணியாற்றுபவர்கள் திரையில் தெரியும் முதல் வரிக்கு நேராக உங்கள் கண்கள் இருக்குமாறு அமர வேண்டும். நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது உங்களது கீழ் முதுகு நாற்காலியை தொட்டவாறு அமர வேண்டும். நாற்காலிக்கும், முதுகுக்கும் இடையில் இடைவெளி இருக்க கூடாது. உங்களது தொடைப்பகுதி தரைக்கு இணையாக இருக்க வேண்டும். உங்களது முட்டி பகுதியில் இருந்து கால் வரை இருக்கும் தொலைவே, உங்கள் இருக்கைக்கும் தரைக்கும் இருக்க வேண்டும். இருக்கையில் அமரும்போது கைகளை விரித்த நிலையில் அமராமல், உடலோடு ஒட்டியவாறு அமர்ந்திருக்க வேண்டும். கீபோர்டு பயன்படுத்தும்போது மணிக்கட்டு, முன் கை உள்ளிட்ட மூன்றும் ஒரே வரிசையில் இருக்க வேண்டும். இதேபோல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வெவ்வேறு பணி செய்பவர்களுக்கும் வழிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றினால் மட்டுமே முதுகை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, “பள்ளி மாணவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பையின் எடையும் அவர்களுக்கு முதுவலியை ஏற்படுத்தலாம்” மாணவர்களுக்கு அதிகம் முதுகுவலி ஏற்படுவது ஏன்? தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள், இளைஞர்களை தாண்டி பள்ளி முதல் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும் அதிகம் முதுவலி ஏற்படுவதை பார்க்க முடிகிறது. இதற்கான காரணம் என்ற கேள்வியை மருத்துவர் விஜயராகவனிடம் முன்வைத்தோம். இதற்கு பதிலளித்த அவர், “இதுவும் உடல்சார் செயல்பாடுகளோடு தொடர்புடையது தான். இப்போதெல்லாம் மாணவர்கள் பெரிதும் விளையாடுவதில்லை. அதிகம் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்களின் உடல்சார் செயல்பாடு குறைகிறது. எனவே அவர்களது உடல்சார் செயல்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும்” என்கிறார். மேலும், “பள்ளி மாணவர்கள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடையும் அவர்களுக்கு முதுவலியை ஏற்படுத்தலாம்” என்கிறார் மருத்துவர் விஜயராகவன். இது மட்டுமில்லாமல் நோயெதிர்ப்பு குறைந்த குழந்தைகளுக்கும் இந்த பிரச்னை வருகிறது. இந்தியாவில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் எவ்வளவு எடையுள்ள புத்தகப் பையை சுமந்து வர வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன. 2020 பரிந்துரைக்கப்பட்ட அந்த விதியின்படி, ஒரு மாணவர் தன்னுடைய எடையில் 10 சதவீத எடை கொண்ட புத்தகப்பையை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். இதை குறிப்பிட்டு பேசிய மருத்துவர் புத்தகப் பையை எப்படி அணிந்து செல்ல வேண்டும் என்பதற்கே வழிமுறைகள் உள்ளதாக கூறுகிறார். மாணவர்களின் வலியை எப்படி குறைப்பது? புத்தகப் பையை இரண்டு பக்கமும் மாட்ட வேண்டும். பையின் மேல்பகுதி உங்கள் தோள்பட்டைக்கு இணையாக இருக்க வேண்டும். சில பைகளில் இடுப்பில் கட்டிக்கொள்ளுமாறும் வசதி இருக்கும். அதையும் பயன்படுத்தினால் நல்லது. பைக்கும், முதுகுக்கும் இடையில் இடைவெளி இருக்கக்கூடாது. அதிக எடையுள்ள புத்தகத்தை முதுகை ஒட்டியவாறும் குறைந்த எடையுள்ள புத்தகங்களை அடுத்தடுத்த வரிசையிலும் அடுக்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, “தசைகள் பலவீனமடைந்து சரியாக வேலை செய்யாதபோது பெல்ட்டை நாம் பயன்படுத்துகிறோம்." முதுகு வலிக்கு பெல்ட் போடுவது உதவுமா? பெரும்பாலும் முதுகுவலி அல்லது கழுத்தில் வலி ஏற்படும் பலர் பெல்ட் போன்ற ஒன்றை அணிந்திருப்பதை பலரும் பார்த்திருப்போம். அதை கட்டிக்கொண்டு அவர்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பார்கள். அது உண்மையில் பலனளிக்கிறதா? அதன் பணி என்ன? என்பது குறித்து மருத்துவர் விஜயராகவனிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “தசைகள் பலவீனமடைந்து சரியாக வேலை செய்யாத போது பெல்ட்டை நாம் பயன்படுத்துகிறோம். அந்த சமயத்தில் தசை செய்ய வேண்டிய வேலையை பெல்ட் செய்யும். ஆனால், அதை தொடர்ந்து பயன்படுத்த தொடங்கிவிட்டால் தசை மீண்டும் வலுவடையாது. வலி குறைவு ஏற்பட்டவுடன் பெல்ட்டை நீக்கிவிட்டு, மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே தசை வலுப்பெற்று மீண்டும் அதன் பணியை செய்ய தொடங்கும்” என்கிறார். எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? சிலர் சாதாரண முதுகுவலி வந்துவிட்டாலே பயந்து போய் எம்ஆர்ஐ ஸ்கேன் வரை எடுத்துவிடுகிறார்கள். அதை பார்த்து மேலும் பயந்து ஏதாவது ஒரு மருத்துவ மையத்திற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். இறுதியில் அது பலனளிக்கவில்லை என்றால் ஏமாந்தும் போகிறார்கள். ஆனால், அப்படி எல்லா நேரத்திலும் மருத்துவரை அணுக தேவையில்லை என்கிறார் விஜயராகவன். மேலும், தேவையில்லாமல் ஸ்கேன் எடுத்தல், மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வதும் கூடாது என்கிறார் அவர். அப்படியென்றால் எந்த நிலையில் மருத்துவரை அணுக வேண்டும் என்ற கேட்டபோது கீழுள்ள சில அறிகுறிகளை குறிப்பிடுகிறார் மருத்துவர். முதுகுவலி தொடங்கி நீண்ட நாட்களாக நீங்காமல் இருந்தால் மருத்துவரை அணுகலாம். முதுவலியாக தொடங்கி பின்னர் அந்த வலி காலுக்கும் பரவுகிறது, கால் மரத்து போகிறது என்றால் மருத்துவரை அணுகலாம். முதுவலியோடு எடை இழப்பு, பசியின்மை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம். இதைத் தாண்டி தீவிரமான அறிகுறிகளோ அல்லது வித்தியாசமான உணர்வுகளோ ஏற்பட்டாலும் கூட நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, “சாதாரண முதுகுவலிக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்." எந்த மருத்துவரை அணுக வேண்டும்? தீராத முதுகுவலியையும் தீர்ப்போம் என்று பல விளம்பரங்களையும் கூட நம்மால் சமீபத்தில் அதிகம் பார்க்க முடிகிறது. இது போன்ற சூழலில் முதுகுவலி வந்தால் எந்த மருத்துவரை அணுகுவது என்று கேட்டோம். அதற்கு பதிலளித்த மருத்துவர், “சாதாரண முதுகுவலிக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இதே பிரச்னை நாள்பட்டதாகவும், தீவிரமாகவும் இருந்தால் ஆர்த்தோ மருத்துவர் அல்லது எழும்பியல் நிபுணரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார். தீர்வு என்ன? முதுகுவலி ஏற்படும் 80% பேருக்கு பெரும்பாலும் அவர்கள் வாழும் சூழல் மற்றும் அவர்களது வாழ்க்கை முறையே காரணமாக அமைகிறது. இது போன்ற சூழலில் முதுகுவலியை வருமுன் காப்பது எப்படி? மருத்துவர் விஜயராகவன் கூற்றுப்படி, மேற்சொன்ன அமரும் முறை, தினசரி செயல்பாடுகள் ஆகியவற்றை ஒழுங்கமைத்து கொள்ள வேண்டும். அமர்ந்தே பணியாற்றுபவர்கள் ஒவ்வொரு 20-30 நிமிடத்திற்கும் ஒருமுறை 10 நொடிகள் எழுந்து உடலை தளர்த்த வேண்டும். உங்களது பணி சூழலியலை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து கொள்ள வேண்டும். https://www.bbc.com/tamil/articles/cv28g097750o
  20. குலசேகரப்பட்டினம்... இனி இந்திய விண்வெளிப் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக மாறப்போகும் இடம். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டியுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
  21. யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் ! 29 FEB, 2024 | 10:16 AM பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் யாழ்ப்பாணம் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். இதனால் தனியாா் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளன. இந்நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனால் இ.போ.ச பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியாதளவு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை சந்தித்தனர். https://www.virakesari.lk/article/177566
  22. Published By: VISHNU 29 FEB, 2024 | 02:23 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உலக பொருளாதாரத்தின் மையப்பகுதியில் மீண்டும் இந்து - பசிபிக் பிராந்தியம் நிலைக்கொள்கின்றது. மூடப்பட்ட ஒரு புவியியலை இன்று உலகில் காண இயலாது. புவிசார் அரசியலின் மேலடுக்கு உண்மையான தீர்வுகளை நோக்கிய பயணத்தில் ஆதிக்கத்தை செலுத்துகின்றது என இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மூத்த இராஜதந்திரியுமான சிவசங்கர் மேனன் தெரிவித்தார். கொழும்பில்; புதன்கிழமை (28) இடம்பெற்ற இந்துமா சமுத்திர மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், இந்து - பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக கடந்த பல வருடங்களாக கலந்துரையாடி வருகின்றோம். இவ்வகையான கலந்துரையாடல்களை முன்னெடுப்பது தொடர்பில் பாத்பைண்டர் மன்றத்திற்கு நன்றி கூறுகின்றேன். அவற்றை கருத்தில் கொள்ளும் பொது இன்று நான் முக்கியமான தருணத்தில் உள்ளளோம் என்பதை உணர முடிகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரலாற்றை நினைவுக்கூர்ந்து இன்று நாம் எங்கு உள்ளோம் என்பதை கூறினார். உலக பொருளாதாரத்தின் மையப்பகுதியில் மீண்டும் இந்து - பசிபிக் பிராந்தியம் நிலைக்கொள்கின்றது. மூடப்பட்ட ஒரு புவியியலை இன்று உலகில் காண இயலாது. திறந்ததும் வெளிப்படையானதுமான உலக பூவி சார்ந்த போக்கே எம்முன் உள்ளது. ஆனால் இன்றைய சூழல் பல சிக்கல்களுக்கு உள்ளானதாகவே உள்ளன. உலகம் எதிர்கொள்கின்ற பொதுவான பல்துறைசார்ந்த அச்சுறுத்தல்களும் சவால்களும் இந்து மா சமூத்திரத்தை சூழ காணப்படுகின்றன. இவை இந்து மா சமூத்திரத்தின் பாதுகாப்பு எச்சரிக்கைகளாகவே உள்ளன. செங்கடலில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள ஹெளதி குழுக்களின் செயல்பாடுகளினால் உலக கப்பல் போக்குவரத்தின் 90 வீதம் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறான செயல்பாடுகளினால் பல தீவு நாடுகளின் கடல் இறையாண்மை அச்சுறுத்தலுக்குள்ளாகின்றது. இதனை தவிர கால நிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்று பல்வேறு சவால்கள் எம்முன் உள்ளன. அனால் இவற்றை மேலும் ஆபத்தாக்க கூடிய வகையில் இரு விடயங்கள் காணப்படுகின்றன. அதாவது புவிசார் அரசியலின் மேலடுக்கு உண்மையான தீர்வுகளை நோக்கிய பயணத்தில் ஆதிக்கத்தை செலுத்துகின்றது. நிலையான உலக ஒழுங்கு இன்னும் ஸ்தீரப்பட வில்லை. அமெரிக்காவின் மீள் எழுச்சி மற்றும் சீன நலன்கள் என பேசலாம். ஆனால் ரஷ்ய - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர் போன்ற உலகின் நெருக்கடிக்கான தலைப்புகளின் பட்டியல் மிக நீண்டதாக உள்ளன. நில பரப்புககளை எல்லையாக கொண்ட நேபாளம் எதிர்க்கொண்டுள்ள நிலைமைகளை கருத்தில் கொள்ளுங்கள். எனவே ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்நோக்கு திட்டங்களை உள்ளடக்கிய அமைப்புகளை நம்பியிருப்பது எந்தளவு சாத்தியம் என்பதையே உணர்த்துகின்றன என்றார். https://www.virakesari.lk/article/177563
  23. Published By: VISHNU 29 FEB, 2024 | 01:54 AM இலங்கை சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே, எல்லை மீறிய இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்திய மீனவர்களும் மற்றும் அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் மீனவர் சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். “இலங்கையிலுள்ள நீதிமன்றத்தினால் அரசியல் அமைப்பில் உள்ள சட்டத்திற்கு ஏதுவாகவே வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக இந்திய மீனவர்கள் இரண்டு, மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அச்செயலானது எவ்வித அடாவடித்தனமான செயலாக தென்படவில்லை. எல்லைக்குள் அத்துமீறி வந்தமையாலேயே அவர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய தேவை வந்துள்ளது,” யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீகந்தவேள் புனிதப்பிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். எல்லை மீறும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை கடல் எல்லையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 4) கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்தாக யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஏக மனதாக தீர்மானித்துள்ளதாக அவர் இந்த ஊடக சந்திப்பில் அறிவித்தார். எல்லை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு, இலங்கை அரசாங்கத்தை கோரும் இந்திய அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஸ்ரீகந்தவேள் புனிதப்பிரகாஷ் இந்த ஊடக சந்திப்பில் வலியுறுத்தினார். “சில இந்திய அரசியல் தரப்புகள் எமது அரசாங்கத்துடன் பேசி அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார்கள். இது எந்த வகையிலும் நியாயமான செயற்பாடாக தென்படவில்லை. இதுபோல செயற்பாடுகள் இங்கு இடம்பெறுமானால் எமது மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகவே போய்க்கொண்டிருக்கும் என்பதை எமது இலங்கை அரசாங்கமும் கணக்கில் எடுக்க வேண்டும்.” இலங்கை மீனவர்களை காப்பாற்ற வேண்டிய கடமை மற்றும் பொறுப்பு இலங்கை கடற்படை மற்றும் நீதித்துறைக்கு காணப்படுவதாகவும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீகந்தவேள் புனிதப்பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார். மூன்று மீனவர்களுக்கு சிறை இலங்கை கடல் பரப்பில் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட, இரண்டு படகுகளையும் அதிலிருந்து 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினரால் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி மீண்டும் யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 23 மீனவர்களில் 20 மீனவர்களை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார். மேலும், இரண்டு விசைப் படகு ஓட்டுநர்களுக்கு தலா ஆறு மாத காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல் இலங்கை கடற்படையால் 2019ஆம் ஆண்டு எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட மீனவர் ஒருவர், அதேத் தவறை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு இலங்கை கடற்படை கைது செய்யும் தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த இராமேஸ்வரம் மீனவர்கள், இந்த வருட கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணித்தனர். மேலும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதை கண்டித்தும், மீனவர்களின் படகுகளை இலங்கை அரசுடமையாக்குவதை கண்டித்தும், 700ற்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 18ஆம் திகதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். மேலும் இராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர். மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்குச் சென்ற, திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் மீனவர்களுக்கு சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் நேற்றைய தினம் (பெப்ரவரி 25) முடிவுக்கு வந்தது. முற்றுகைப் போராட்டம் இந்திய இழுவைப் படகுகள் எல்லைமீறி இலங்கையின் வடக்கு கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்து, வடக்கு தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை முற்கையிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புக்கள் கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுத்தன. இந்திய துணை உயர்ஸ்தானிகரிடம் தமது பிரச்சினைகளைத் தெளிவுபடுத்திய மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கைகள் அடங்கிய மஜரையும் கையளித்தனர். "நாங்கள் இந்திய இழுவைப் படகால் சாகப்போகின்றோம். இது தொடர் போராட்டமாகத்தான் மாறப்போகிறது. ஒரு சில நாட்களில் முடிவு தரவேண்டும். தராத பட்சத்தில் தொடர் போராட்டம் ஒன்று நடக்கும். கடலில் அசம்பாவிதங்களும் நடக்கும்" என யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அத்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் இதன்போது எச்சரித்திருந்தார். https://www.virakesari.lk/article/177561
  24. பட மூலாதாரம்,AFP 12 நிமிடங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சையை விரைவில் பதவி நீக்கம் செய்ய வேண்டும், இல்லையெனில் அவரே ராஜினாமா செய்வார் என, ஹீலியோஸ் கேப்பிட்டல் நிறுவனர் சமீர் அரோரா கருத்து தெரிவித்துள்ளதாக, ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து, சுந்தர் பிச்சை ராஜினாமா குறித்து பல செய்திகள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கின. கூகுளின் செயற்கை நுண்ணறிவு தளமான 'ஜெமினி ஏஐ'யின் தோல்வியே இதற்கு காரணம் என்று ’எக்ஸ்’ சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ள சமீர், சுந்தர் பிச்சையின் பதவிக்காலம் முடிவடைவதாக உணர்கிறேன் என்றார். "அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் அல்லது பதவி விலகுவார் என்பது எனது யூகம். செயற்கை நுண்ணறிவு தளத்தை வெற்றியடையச் செய்வதில் அவர் முற்றிலும் தோல்வியடைந்ததால், வேறு யாராவது அவரது பதவியில் பொறுப்பேற்பார்,” என்று அரோரா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். இதனால், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியில் இருந்து சுந்தர் பிச்சை பதவி விலக நெருக்கடி வந்திருப்பதாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிகம் பேசப்படுகிறது. என்ன பிரச்னை? கூகுள் நிறுவனத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்-ன் தலைமையகம், கலிஃபோர்னியாவில் உள்ள மவுண்டன் வியூவில் உள்ளது. மோதி குறித்து ’ஜெமினி ஏஐ’ சொன்னது என்ன? இதுகுறித்து ‘தி எகனாமிக் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூகுள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பும் என தகவல்கள் வெளியாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோதியைப் பற்றி ’ஜெமினி ஏ’யின் பாரபட்சமான பதிலே இதற்குக் காரணம் என்று அந்தக் கட்டுரை கூறுகிறது. பிரதமர் மோதி பாசிசவாதியாஎன்று ’ஜெமினி ஏஐ’யிடம் நெட்டிசன் ஒருவர் கேட்டதற்கு, மோதி பின்பற்றும் சில கொள்கைகளால் சிலர் மோதியை பாசிசவாதி என்று அழைக்கிறார்கள் என்று சர்ச்சைக்குரிய பதில் அளித்ததாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதே கேள்வியை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கி குறித்து கேட்டபோது, 'முற்றிலும், தெளிவாக கூற முடியாது' என அந்த பதில் அளித்ததால், ’ஜெமினி ஏஐ’ கருவி பக்கச்சார்புடையது என நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ’ஜெமினி ஏஐ’ தளத்தின் செயல்பாடுகள் இந்திய தொழில்நுட்ப விதிகளுக்கு எதிரானது என்றார். ’தி எகனாமிக் டைம்ஸ்’ கட்டுரையின்படி, இது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதி 3 (1)-ஐ மீறுகிறது மற்றும் குற்றவியல் சட்டத்தின் பல விதிகளுக்கு முரணானது. பட மூலாதாரம்,GOOGLE/GEMINI படக்குறிப்பு, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் வீரர்கள் குறித்த கேள்விக்கு ஜெமினி ஏஐ காட்டிய படங்கள் விமர்சனங்களும் கூகுள் நிறுவனத்தின் மன்னிப்பும் மிகப்பெரிய தேடுபொறியான கூகுள், அதன் செயற்கை நுண்ணறிவு கருவியான 'ஜெமினி ஏஐ' க்காக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அக்கருவி, வரலாற்று உண்மைகளை தவறாக சித்தரிப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். கூகுளின் செயற்கை நுண்ணறிவுதொடர்பான பிரச்னை காலம் தாழ்த்தி தீர்க்கப்படும் விஷயமா என, பிபிசி தொழில்நுட்ப ஆசிரியர் ஜோ க்ளின்மேன் கட்டுரையொன்றில் இதுகுறித்து விவாதித்துள்ளார். ஜெமினி ஏஐ கருவி, மற்றொரு செயற்கை நுண்ணறிவு கருவியான சாட் ஜிபிடி-க்கு (ChatGPT) போட்டியாக கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது எழுத்து வடிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. மேலும், இது நாம் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்து வடிவில் பதிலளிக்கும். சில சமயங்களில் கேள்விக்கேற்ப படங்களையும் தரும். இந்த வரிசையில், அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர்கள் பற்றிய கேள்விக்கு கருப்பர்களை சுட்டிக்காட்டி பொருத்தமற்ற பதிலை அளித்ததாக சர்ச்சை உள்ளது. மேலும், இரண்டாம் உலகப்போரின் நாஜி வீரர்களை கறுப்பினத்தவராகவும் காட்டும் படங்களை வெளியிட்டது. இதற்கு, கூகுள் உடனடியாக பதிலளித்து மன்னிப்பு கேட்டது. ஆனால், இந்த விவகாரம் இதோடு நிற்கவில்லை. லட்சக்கணக்கானவர்களை ஹிட்லர் கொன்றது விபத்தா அல்லது ஈலோன் மஸ்க் வெளியிட்ட மீம்ஸ்கள் அதிக தீங்கு விளைவிப்பதா அல்லது சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு ஜெமினி ஏஐ உறுதியான பதிலை அளிக்கவில்லை. இதுகுறித்து ஈலோன் எலோன் மஸ்க் பதிலளித்துள்ளார். "லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் கூகுள் தயாரிப்புகளில் இந்த கருவி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, ஆனால் அது தரும் தவறான பதில்கள் 'எச்சரிக்கை மணியாக உள்ளது'," என்று அவர் கூறினார். "ஜெமினி ஏஐ கருவியை முற்றிலுமாக நிறுத்த வேண்டுமா என்று கூகுளிடம் கேட்டபோது, சிறிது நேரம் கழித்து அந்த நிறுவனத்திடம் எந்தக் கருத்தும் இல்லை என்று பதில் வந்தது. "மக்களை கேலிக்கூத்தாக நினைப்பது சரியல்ல" என்று மஸ்க் கூறினார். இருப்பினும், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஜெமினி ஏஐ செய்யும் தவறுகளை உணர்ந்ததாக, நிறுவனத்தின் உள்குறிப்பில் தெரிவித்துள்ளார். "ஜெமினி வாடிக்கையாளர்களை காயப்படுத்துகிறது, பாரபட்சமாக இருக்கிறது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதை சரிசெய்ய எங்கள் குழு 24 மணிநேரமும் உழைத்து வருகிறது," என்று அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES பாரபட்சமான தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான் ஒரு சிக்கலைத் தீர்த்து, மற்றொரு சிக்கலை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில், ஏஐ தொழில்நுட்பம், இணையத்தில் கிடைக்கும் வரம்பற்ற தகவல்களின் அடிப்படையில் இயங்குகிறது. இந்த பாரபட்சமான தகவல்கள் அனைத்தும் இணையத்தில் அனைவரையும் சென்றடையும். இயற்கையாகவே, இணையத்தில் ஆண்களின் படங்கள் மருத்துவர்களாகக் காணப்படுகின்றன. சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் படங்கள் பெண்களாகக் காட்டப்படுகின்றன. இதுபோன்ற தகவல்களில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் கடந்த காலங்களில் பல தவறுகளை செய்துள்ளன. ஆண்களால் மிக சக்தி வாய்ந்த வேலைகளைச் செய்ய முடியும் என்பதைக் காட்டுவது, கறுப்பின மக்களை மனிதர்களாக அங்கீகரிக்காதது போன்றவையும் இதில் அடங்கும். ஆனால், இதுபோன்ற அனுமானங்களைச் செய்யாமல், இந்த தவறுகளை எல்லாம் சரி செய்ய கூகுள், ஜெமினி ஏஐ-க்கு போதுமான அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், ஜெமினி ஏஐ விமர்சனத்திற்கான காரணம் மனித வரலாறு மற்றும் கலாசாரம். இவற்றைப் புரிந்துகொள்வது நாம் நினைப்பது போல் எளிதானது அல்ல. இவற்றில் உள்ள சிறிய வேறுபாடுகளை நாம் உள்ளுணர்வால் புரிந்துகொள்கிறோம், ஆனால் அந்த உணர்திறனை இயந்திரங்கள் புரிந்து கொள்ளவில்லை. படங்களை வெளியிடும்போது ஏற்படும் சிக்கலை சரிசெய்ய சில வாரங்கள் ஆகும் என, `டீப்மைண்ட்` நிறுவனத்தின் இணை நிறுவனர் டெமிஸ் ஹசாபிஸ் தெரிவித்துள்ளார். இந்த `டீப்மைண்ட் ஏஐ` நிறுவனத்தை கூகுள் வாங்கியிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் மற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிபுணர்கள் இதனை அவ்வளவாக நம்பவில்லை. “இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எளிதல்ல. இது அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஷயம் அல்ல,” என்கிறார் ஹக்கிங்ஃபேஸின் (HuggingFace) ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர் சாஷா லுச்சியோனி. "செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகள் குழுவில் உள்ளவர்கள் இந்த சிக்கலை முடிந்தவரை பல வழிகளில் தீர்க்க முயற்சிக்கின்றனர்," என்று அவர் கூறினார். இல்லை என்றால் இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. `படம் எவ்வளவு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்` என்று பயனர்களிடம் கேட்டுக்கொள்வதன் மூலம் இதை ஓரளவுக்குக் குறைக்க முடியும், ஆனால் இந்த தீர்வில் கூட சாத்தியமான சிக்கல்கள் உள்ளன" என தெரிவித்தார். "சில வாரங்களில் பிரச்னையை சரி செய்துவிடுவார்கள் என்று சொல்வது கொஞ்சம் ஆணவத்துடன் இருப்பது போன்று தோன்றுகிறது. இந்த பிரச்னை குறித்து அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார். சர்ரே பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானி பேராசிரியர் ஆலன் உட்வார்ட் கூறுகையில், "இது மிகவும் தீவிரமான பிரச்னை போல் தெரிகிறது. தரவைப் பயிற்றுவிப்பதும் அதன் நெறிமுறைகளை (algorithm) சரிசெய்வதும் கடினமான பணியாகும்” என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பிரச்னைக்கு என்ன காரணம்? கூகுள் இதைத் தீர்க்க மிகவும் சரியான வழியைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரியவில்லை. இது தெரியாமல் புதிய பிரச்னைகளை உருவாக்குகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பந்தயத்தில் கூகுள் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. செயற்கை நுண்ணறிவு செயலாக்கத்திற்குத் தேவையான ஏ.ஐ ‘சிப்’கள் மற்றும் கிளவுட் நெட்வொர்க் அதனிடம் உள்ளது. அந்நிறுவனம் மிகப்பெரிய பயனர் தளத்தையும் கொண்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு நிபுணர்களை அந்நிறுவனத்தால் பணியமர்த்த முடியும். அந்நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு செயல்திறன் உலகளவில் பாராட்டப்பட்டது. கூகுளின் போட்டி தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், “கூகுளின் தவறான நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, ’கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்றுதான் சொல்ல தோன்றுகிறது” என்றார். https://www.bbc.com/tamil/articles/cv2xgzkm9vmo
  25. தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் - யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் Published By: VISHNU 29 FEB, 2024 | 01:49 AM தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரிடம் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று சந்தித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (28) இந்த சந்திப்பு நடைபெற்றது. மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது இந்திய துணைத் தூதுவருக்கு தெளிவுப்படுத்தினார். அதற்கமைய, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும் என இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி தெரிவித்தார். இளைஞர், யுவதிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்றுக்கொடுக்கவும், தீவுகளுக்கான படகு சேவையை விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான வசதிகளை ஒழுங்கு செய்வதுடன், தரை மற்றும் கரையோர தூய்மை திட்டத்திற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் கூறினார். தூய்மை திட்டத்திற்கு தேவையான நிதியை இந்திய துணை தூதரகத்திலிருந்து ஒதுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம் யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/177560

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.