Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. முதல் தடவையாக ட்ரம்பை வென்றார் நிக்கி ஹாலே Published By: SETHU 04 MAR, 2024 | 01:02 PM அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்காக வொஷிங்டன் டிசி நகரில் நடந்த உட்கட்சித் தேர்தலில் நிக்கி ஹாலே வெற்றியீட்டியுள்ளார். குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கான உட்கட்சித் தேர்தல் வரலாற்றில் பெண்ணொருவர், பிராந்திய தேர்தலொன்றில் வெற்றியீட்டியமை இதுவே முதல் தடவையாகும். நேற்று ஞாயிற்றுக்கிழமை வொஷிங்டன் டி.சி. நகரில் நடைபெற்ற தேர்தலில் நிக்கி ஹாலே 63 சதவீத வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் நகரில் நிக்கி ஹாலே 19 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறுவார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 33.3 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவருக்கு வொஷிங்டன் டிசியிலிருந்து பிரதிநிதிகள் எவரும் கிடைக்கவில்லை. டொனால்ட் ட்ரம்ப், நிக்கி ஹாலே ஆகிய இருவர் மாத்திரமே தற்போது குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. குடியரசுக் கட்சியில் அமெரிக்கா முழுவதும் 2429 பிரதிநிதிகள் உள்ளனர். ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு குறைந்தபட்சம் 1215 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. டொனால்ட் ட்ரம்ப் இதுவரை 247 பிரதிநிதிகளையும் நிக்கி ஹாலே பிரதிநிதிகளையும் பெற்றுள்ளனர். நாளை செவ்வாய்க்கிழமை 15 மாநிலங்களில் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான உட்கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177863
  2. சாந்தனின் உடலுக்கு இறுதிக்கிரியை நடைபெற்று இறுதி ஊர்வலம் ஆரம்பம் Published By: DIGITAL DESK 3 04 MAR, 2024 | 03:33 PM உடுப்பிட்டி - இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது. சாந்தனின் தாய் மற்றும் சகோதரி உள்ளிட்ட நெருங்கிய உறவுகளால் புகழுடலுக்கு வாய்க்கரிசி போடப்பட்டு ஊர்மக்களால் அருகில் உள்ள சனசமூக நிலையமொன்றுக்கு புகழுடல் தாங்கிச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவஞ்சலி உரைகள் இடம்பெற்று வருகிறது. இறுதி ஊர்வலம் அறிவகம் சனசமுக நிலையம், தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம், வீரகத்தி விநாயகர் சனசமூக நிலையம் ஊடாக நாவலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக பயணித்து எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிறைவு பெற்று மாலை புகழுடல் தகனம் செய்யப்படும். இறுதி அஞ்சலியில் சமயத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 28ம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். https://www.virakesari.lk/article/177884
  3. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் மற்றும் பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்களும், இலங்கை அரசைக் கண்டித்து தமிழ்நாடு மீனவர்களும் நடுக்கடலில் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். மீனவர்களுக்கு இடையே என்ன பிரச்னை? தமிழக மீனவர்கள் தங்கள் கடற்பரப்பினுள் வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறி, அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று (ஞாயிறு, மார்ச் 3) நடத்தினர். யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்துள்ள கடற்கரைப் பகுதிகளிலுள்ள மீனவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர். படகுகளில் கறுப்பு நிறக்கொடிகளை பறக்கவிட்டு, நடுக்கடலுக்கு சென்று இலங்கை மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால், இதை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிறன்று மண்டபம் மற்றும் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கவில்லை. கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தினர். முன்னர், கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரை தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்தனர். இரண்டு நாட்டு மீனவர்களும் கடலில் போராட்டம் நடத்தும் அளவுக்கு என்ன நடக்கிறது இவ்விஷயத்தில்? அதை அறிந்துகொள்ள பிபிசி தமிழ், யாழ்ப்பாணம் மற்றும் ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்திய மீனவர்களிடம் பேசியது. படக்குறிப்பு, படகுகளில் கறுப்பு நிறக்கொடிகளை பறக்கவிட்டு, நடுக்கடலுக்கு சென்று இலங்கை மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர் போராட்டம் எப்படி நடத்தப்பட்டது? மார்ச் 3-ஆம் தேதி இலங்கை யாழ்ப்பாணம் கடலில் சுமார் மூன்று மணிநேரம் நடத்தப்பட்ட போராட்டத்தில் நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்திய மீனவர்களின் வருகையை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். தடை செய்யப்பட்டுள்ள இழுவை முறையிலான மீன்பிடி நடவடிக்கைகளில் இந்திய மீனவர்கள் ஈடுபடுவதனால் இலங்கையின் கடல் வளங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். தமது கடல் வளத்தையும் அழித்து, தமது வாழ்வாதாரத்தையும் இந்திய மீனவர்கள் அழித்து வருவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இலங்கை கடற்படைக்கு மகஜரொன்றை கையளிக்க இலங்கை மீனவர்கள் முயற்சித்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான படகை மறித்து, மகஜரை கையளிக்க முயற்சித்த போதிலும், இலங்கை கடற்படை படகு நிறுத்தாது அங்கிருந்து பயணித்தது. இதையடுத்து, யாழ்ப்பாணம் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் கரைக்குத் திரும்பினார்கள். படக்குறிப்பு, அருள்தாஸ் இலங்கை மீனவர்கள் சொல்வது என்ன? போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர் அருள்தாஸ், "இந்திய மீனவர்களின் வருகையால் எங்கள் மக்கள் படகை இழந்திருக்கிறார்கள். தொழில் செய்ய முடியவில்லை," என்கிறார். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக, தமது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாக யாழ்ப்பாணத்து மீனவர்கள் கூறுகின்றனர். ''நேற்று 8 வலைகள் இல்லாமல் போயின. மூன்று பேரின் வலைகளை அறுத்து விட்டார்கள். எப்படித் தொழில் செய்வது. இன்றைக்கு தொழிலுக்கு போகாத காரணம் இது தான். இப்படி தொழில் செய்து என்ன பிரயோசனம்? ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இல்லாமல் போயின. அப்படியே எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள்," என ஒரு மீனவர் குறிப்பிட்டார். “ஒருமுறை வல்வெட்டித்துறை கடலுக்கு வந்து இந்திய மீனவர்கள் எங்கள் வலைகளை இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். எங்கள் அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிராலர் வலைகளை நிறுத்தினால்தான், இலங்கை மீனவர்கள் வாழ முடியும்," என மற்றுமொரு மீனவர் கூறினார். படக்குறிப்பு, டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்கள் தங்கள் கடற்பரப்பில் புகுந்து டிராலர் வலைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆவன செய்யவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கூறினர். இலங்கை அமைச்சரின் பதில் என்ன? இலங்கை மீனவர்கள், இலங்கை அரசாங்கம் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டு குறித்து, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பிபிசி தமிழ் வினவியது. “அரசாங்கத்தை பொருத்தவரையில் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் நாங்கள் எங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம்," என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலளித்தார். படக்குறிப்பு, கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரை தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்தனர் தமிழக மீனவர்கள் கூறுவது என்ன? இலங்கை மீனவர்கள் நடத்திய இந்தப் போராட்டம் குறித்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதி எமரிட் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த வாரம் இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாகக் கூறினார். “ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை, இந்திய அரசை கண்டித்து மட்டும் போராட்டம் நடத்தினரே தவிர இலங்கை மீனவர்களுக்கு எதிராக இதுவரை தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தியதில்லை. ஆனால் இன்று தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் கருப்பு கொடியுடன் கடலில் போராட்டம் நடத்தியது தமிழக மீனவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது,” என்றார். மேலும் பேசிய அவர், இரு நாட்டு அரசுகளும் உடனடியாக மீனவர் பிரச்சனையில் கவனம் செலுத்தி மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே தமிழக மீனவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளதாகக் கூறினார். “இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்னையை தீர்வு கிடைப்பதற்கு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையில் மட்டுமே நிரந்தர தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது." “இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே இரு நாட்டு அரசும் மீனவர் பிரச்னைக்கு கவனம் செலுத்தி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க தமிழக மீனவர்கள் எதையும் விட்டுக் கொடுத்து போவதற்கு தயாராக உள்ளோம்,” என்றார். இலங்கை மீனவர்களுடன் மோதல் போக்கு தொடர்வதை தமிழக மீனவர்கள் விரும்பவில்லை. வரையறுக்கப்பட்ட மீன்பிடி தொழில் செய்வதற்கு இரு நாட்டு அரசும் உதவி செய்ய வேண்டும் என்பது தமிழக மீனவர்கள் கோரிக்கை என்றார் மீனவ சங்க பிரதிநிதி எமரிட். ‘தமிழக மீனவர்கள் எதையும் விட்டுக்கொடுக்கத் தயார்’ இலங்கை மீனவர்களின் கருப்புக்கொடி போராட்டம் குறித்து இலங்கை இந்திய பேச்சுவார்த்தை குழு தலைவர் ஜேசுராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த சில மாதங்களாக இருநாட்டு மீனவர்கள் இடையே பிரச்னை பெரிதாகி வருகிறது, என்றார். "இது தொடர்பாகவும், இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்திய மீன்வளத்துறை அமைச்சர் ரூபாலா மற்றும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருவரையும் ராமேஸ்வரம் மீனவர்கள் டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். இருவரும் விரைவில் இரு நாட்டு மீனவ பேச்சுவார்த்தை நடைபெற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ள நிலையில் இன்று தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் கடலில் கருப்பு கொடி கட்டி முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர், இது வேதனையளிக்கிறது," என்றார். “மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக இலங்கையில் மீனவர்கள் போராடுகிறார்கள். அதை தமிழக மீனவர்கள் ஏற்று கொள்ள கூடிய ஒன்று தான். அதே நேரத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை அடைக்கபட்ட மீனவர்களுக்காக இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினோம். “ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தியதால் இன்று இலங்கை மீனவர்கள் கருப்பு கொடி கட்டி இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது எந்த வகையிலும் நியாயம் இல்லை,” என்றார். மேலும் பேசிய அவர், இரு நாட்டு மீனவர்களும் ஒருவருக்கொருவர் ஆர்ப்பாட்டம் செய்வதால் எந்த பயனும் இல்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுமே தவிர பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது, என்றார். “இலங்கை மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக மீனவர்கள் மீன்பிடி முறையில் மாற்று திட்டம் கொண்டு வர பல்வேறு யோசனைகளை செய்து வருகிறோம். தமிழக மீனவர்கள் இழுவை மடி படகை மாற்றி மீன்பிடிக்க அரசுடன் ஆலோசனை செய்து மாற்றுத் திட்டத்திற்கு காத்திருக்கின்றோம்." "போராட்டம் தொடர்ந்தால் கடலில் இரு நாட்டு மீனவர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்படும். இரு நாட்டு மீனவர் பேச்சு வார்த்தையை மீண்டும் நடத்தி மீனவப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க அரசாங்கங்கள் முயற்சி செய்ய வேண்டும்," என இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை குழு தலைவர் ஜேசுராஜா தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c4nd509z0wwo
  4. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை; வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு Published By: DIGITAL DESK 3 04 MAR, 2024 | 12:09 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கானது இன்று திங்கட்கிழமை (04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்கிளாய் பகுதி கிராம அலுவலர், சட்டத்தரணிகளான வீ.எஸ். நிரஞ்சன், கணேஸ்வரன், தனஞ்சயன், ருஜிக்கா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். குறித்த வழக்கின் அகழ்வு பணியினை திட்டமிட்டபடி நடாத்த நிதி கிடைக்கபெறவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், குறித்த வழக்கு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது. அத்தோடு, அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது. அதனையடுத்து குறித்த அகழ்வுப்பணியின் மூன்றாவது கட்டம் இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177857
  5. இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது - மானியங்கள் தேவையில்லை - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் 04 MAR, 2024 | 11:59 AM இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது என மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித்குமாரசுவாமி கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை மானியங்களை வழங்கும் பழைய நிலைக்கு திரும்பக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள், மின்சாரம், உரம் போன்றவைகளை மீண்டும் மானிய அடிப்படையில் வழங்குவது இலங்கையை பின்னோக்கி இழுக்கும் ஒரு நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர் இது ஒரு நீடித்து நிலைக்க முடியாத செயற்பாடு எனவும் தெரிவித்துள்ளார். மானியங்களை வழங்குவது தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள அவர் அதற்கான நிதி எங்களிடம் இல்லை என தெரிவித்துள்ளதுடன் வெளிநாட்டிலிருந்து பணத்தை பெற்று மானியங்களை வழங்குவது மீண்டும் கடன்நெருக்கடிக்குள் சிக்கவைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஏனென்றால் கடனை திருப்பி செலுத்துவதற்கான அந்திய செலாவணியை பெற்றுக்கொள்வதற்கான திறமை எங்களிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அஸ்வசுமா போன்றவற்றை குறுகிய கால நன்மைக்காக பயன்படுத்தலாம். அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இவ்வாறான திட்டங்கள் உதவக்கூடும், சீர்திருத்தங்களிற்கான ஆதரவை பெற உதவக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177856
  6. கழிவுநீர் கால்வாய்க்குள் பாய்ந்த மட்டக்குளி கதிரானவத்தை குடு ராணி கைது! 04 MAR, 2024 | 11:58 AM மட்டக்குளியில் கதிரானவத்தை குடு ராணி என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்துள்ளனர். யுக்திய நடவடிக்கையின்போது முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 5 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸார் குறித்த பெண்னை கைது செய்ய முற்பட்டபோது அவர் அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் குதித்துள்ளார். பின்னர் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/177854
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நீங்கள் கூகுளில் ‘பரிணாமம்’ என்ற வார்த்தையைத் தேடினால் முதலில் வருவது ரால்ப் ஜாலிங்கர் என்பவரின் புகழ்பெற்ற ஓவியம்தான். ‘முன்னேற்றத்தின் அணிவகுப்பு’ என்று பெயரிடப்பட்ட அந்த ஓவியத்தில் இடமிருந்து வலமாக, ஒரு சிம்பன்சி குரங்கு படிப்படியாக மனிதனைப் போல நிமிர்ந்து நடப்பதைக் காணலாம். பரிணாமத்தை இவ்வாறு விளக்கும் படங்களில் பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பொதுவாக நாம் கொண்டிருக்கும் தவறான பார்வைகள் பொதிந்திருக்கின்றன. அதாவது ‘நாம் பரிணாமச் சங்கிலியின் உச்சத்தில் உள்ள ஓர் இனம், பரிணாமத்தின் முழுமை’. நாம் பிழைத்திருக்க மிகவும் தகுதியான உயிரினம், என்று கற்பனை செய்கிறோம். ஆனால் இதில் ஒரு முரண்பாடு இருக்கிறது. நாம் மிகவும் தகுதியான உயிரினமாக இருந்தால், நம்மில் பலர் மரபணு அல்லது வளர்ச்சி நோய்களால் பாதிக்கப்படுவது ஏன்? நேச்சர் என்ற மதிப்புமிக்க அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, நமது பரிணாமத்தின் ஆரம்பக்கட்டத்தில் நிகழ்ந்த சில தவறான மாற்றங்களால் நமது முன்னோர்கள் எப்படித் தங்கள் வால்களை இழந்தனர் என்று பகுப்பாய்வு செய்வதன் முலம் இதற்கான விளக்கத்தை வழங்குகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாம் சுமார் 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நமது வாலை இழந்தோம் வழக்கத்திற்கு மாறான மரபணுப் பிறழ்வுகள் தற்போதைய மதிப்பீடுகளின்படி, மனிதர்களின் இனப்பெருக்கத்தில் கருவுற்ற முட்டைகளில் பாதி கருவாக உருவாவதில்லை. மெலும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், இரண்டு கருக்கள் பிரசவப் பருவத்தை எட்டுவதில்லை என்றும் தரவுகள் கூறுகின்றன. மீன்கள் மற்றும் தவளைகள் போன்ற உயிரினங்களில், இத்தகைய ஒன்று கேள்விப்படாதது. மனிதர்களில் 10%-க்கும் குறைவானவர்கள் ஹீமோபிலியா (ரத்தம் உறையாமலிருப்பது) போன்ற ஆயிரக்கணக்கான ‘அரிதான’ மரபணு நோய்களில் ஒன்றால் பாதிக்கப்படுவார்கள். அரிவாள் ரத்தசோகை மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்ற நோய்கள் நம்மில் அதிகமானவர்களை பாதிக்கின்றன. நாம் பரிணாமத்தின் உச்சத்தில் இருக்கும் இனம் என்றால், இத்தகைய மரபணு நோய்கள் வருவது ஏன்? இந்த பிரச்னைக்கு பல விளக்கங்கள் உள்ளன. ஒன்று, மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது, மனிதர்களிடம் வழக்கத்திற்கு மாறாக அதிக மரபணுப் பிறழ்வு விகிதம் உள்ளது. எனவே நமது டி.என்.ஏ-வில் உள்ள மாற்றங்கள் அனைத்தும் நமது பெற்றோரிடமிருந்து பெறப்பட்டவை அல்ல. உங்கள் டி.என்.ஏ-வில் பத்து முதல் நூறு புதிய மாற்றங்களுடன் நீங்கள் பிறந்திருக்கலாம். மற்ற பெரும்பாலான இனங்களில், அந்த எண்ணிக்கை ஒன்றுக்கும் குறைவாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மீன்கள் மற்றும் தவளைகள் போன்ற உயிரினங்களில் கருக்கள் இறப்பது கேள்விப்படாதது வால்களின் மரபணுவியல் நமக்கும் குரங்கினத்திலுள்ள நமது பல உறவினர்களுக்கும் இடையே உள்ள மிகத் தெளிவான வேறுபாடுகளில் ஒன்று, நமக்கு வால் இல்லை. நாம் சுமார் 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நமது வாலை இழந்தோம். அதன் பரிணாம எச்சமாக நாம் இன்னும் கோசிக்ஸ் (coccyx) என்று அழைக்கப்படும், நமது முதுகுத்தண்டின் கீழ்முனையில் இருக்கும் ஒரு சிறு முக்கோண வடிவிலான எலும்பினைச் சுமக்கிறோம். நமது மூதாதையர்கள் நிமிர்ந்து நடக்கத்துவங்கிய அதே சமயத்தில் தங்கள் வாலை இழந்தனர். அதையொட்டியே நான்கு கால்களுக்கு பதிலாக இரண்டை மட்டுமே பயன்படுத்தும் போக்கும் துவங்கியது. இந்தப் பரிணாம மாற்றங்கள் ஏன் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன என்பதைப் பற்றி நாம் ஊகிக்க முடியும். ஆனால் நாம் ஏன் வாலை இழந்தோம்? அதன் அடிப்படை மரபணு மாற்றங்கள் என்ன? சமீபத்திய ஆய்வு இந்தக் கேள்விக்கு துல்லியமாக பதிலளிக்கிறது. இதற்கான பதிலாக ஒரு புதிரான மரபணு பொறிமுறையை அடையாளம் கண்டுள்ளது: பாலூட்டிகளுக்கு வால் வளர பல மரபணுக்கள் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டும். வால் இல்லாத குரங்கினங்களுக்கு ஒரு கூடுதலான ‘குதிக்கும் மரபணு’ இருப்பதைக் ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்தது. இவை ஒரு மரபணுவின் புதிய பகுதிகளுக்கு மாற்றப்படக்கூடிய டி.என்.ஏ வரிசைகள். இது இருந்தது வால் வளர்வதைத் தீர்மானிக்கும் மரபணுக்களில் ஒன்றான டி.பி.எக்ஸ்.டி-யில் (TBXT). நமது டி.என்.ஏ-வில் பெரும்பகுதி இந்த இடம்பெயரும் மரபணுக்கள் தான். அதனால் அதில் ஒன்று கூடுதலாக ஒருப்பது ஆச்சரியமல்ல. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்பைனா பிஃபிடா - முதுகெலும்பு மற்றும் முதுகுத் தண்டு கருப்பையில் சரியாக வளர்ச்சியடையாமல், முதுகெலும்பில் ஒரு இடைவெளி இருக்கும் நிலை பரிணாமத்தின் பின்விளைவுகள் ஆனால், இதில் அசாதாரணமானது என்னவென்றால், இந்தப் புதிய மரபணு ஏற்படுத்தக்கூடிய விளைவு. அவர்கள் ஆய்வு செய்த அதே குரங்கினங்களில் டி.பி.எக்ஸ்.டி மரபணுவுக்குள் பொதிக்கப்பட்ட டி.என்.ஏ-வுக்கு மிக நெருக்கமாக மற்றொரு பழைய, ஆனால் ஒரே மாதிரியான ஒரு இடம்பெயரும் மரபணுவைக் கொண்டிருப்பதையும் அக்குழு அடையாளம் கண்டுள்ளது. இந்த இரண்டு மரபணுக்கள் மிக அருகருகே உள்ளதால், டி.என்.ஏ-வில் இருக்கும் தகவல்களின்படி நமது புரதங்களைத் தயாரிக்கும் ‘மெசெஞ்சர் ஆர்.என்.ஏ’ எனும் மரபணு மூலக்கூற்றின் செயலாக்கத்தை மாற்றியது. இந்த இரண்டு இடம்பெயரும் மரபணுக்கள் ஆர்.என்.ஏ-வில் ஒன்றாக ஒட்டிக்கொள்ளலாம். இதனால் அது விலக்கப்பட்டு, அந்த ஆர்.என்.ஏ குறுகலான புரதத்தை உருவாக்குகிறது. இந்த விளைவை ஆராய இக்குழு இந்த மரபணுச் சூழ்நிலையை எலிகளில் உருவாக்கிப் பார்த்தது. இதனால் எலிகள் வால் இல்லாமல் பிறக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. இது பரிணாம வளர்ச்சியில் நாம் வால் இழந்ததற்கான வலுவான கோட்பாட்டை வழங்குகிறது. ஆனால் அக்குழு வேறு விசித்திரமான ஒன்றையும் கண்டறிந்தது. TBXT மரபணுவின் வடிவத்தை மட்டும் பிரித்து விலக்கி ஒரு எலி உருவாக்கப்பட்டால், அது மனித ஸ்பைனா பிஃபிடாவைப் (spina bifida) போன்ற ஒரு நோயுடன் பிறக்கிறது. இது முதுகெலும்பு மற்றும் முதுகுத் தண்டு கருப்பையில் சரியாக வளர்ச்சியடையாமல், முதுகெலும்பில் ஒரு இடைவெளி இருக்கும் நிலை. மனித TBXT-இல் உள்ள பிறழ்வுகள் முன்னர் இதே நோய்க்கான காரணமாகக் கண்டுபிடிக்கப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த விளைவை ஆராய இக்குழு இந்த மரபணுச் சூழ்நிலையை எலிகளில் உருவக்கிப் பார்த்தது. இதனால் எலிகள் வால் இல்லாமல் பிறக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்தன நமக்கு வால் இல்லாதது நன்மையா? இந்த ஆய்வில் மற்ற எலிகளும் முதுகெலும்பு மற்றும் முதுகுத்தண்டு ஆகியவற்றில் வெவ்வேறு குறைபாடுகளுடன் இருந்தன. நமக்கு வால் எலும்பு ஒரு பரிணாம எச்சமாக இருப்பதைப் போலவே, வால் இல்லாததை உறுதிப்படுத்தும் மரபணுவின் மாற்றத்திற்கு ஸ்பைனா பிஃபிடாவை நோய் ஒரு அரிய தொடர்ச்சியாக இருக்கலாம் என்று இந்த ஆராய்ச்சிக் குழு கருதுகிறது. வால் இல்லாதது நமக்கு ஒரு பெரிய நன்மையாக இருந்தது என்று அவர்கள் கருதுகின்றனர். எனவே ஸ்பைனா பிஃபிடா ஏற்படும் ஆபத்தையும் பரிணாமம் பொருட்படுத்தவில்லை. நமக்கு வேறு பல மரபியல் மற்றும் வளர்ச்சி சார்ந்த நோய்கள் ஏற்படவும் இதுவே காரணமாக இருக்கலாம். அவை நமக்கு உதவிய மரபணுப் பிறழ்வின் விளைபொருளாக இருக்கலாம். உதாரணமாக, நிமோனியாவை எதிர்த்துப் போராட உதவும் மரபணு மாறுபாடுகள் நமக்கு கிரோன் நோய் (Crohn's disease) எனப்படும் குடல்வீக்கம் ஏற்படக் காரணமாக இருக்கக்கூடும் என ஒரு சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. பரிணாம வளர்ச்சி முற்றிலும் கச்சிதமானதல்ல என்பதையே இது காட்டுகிறது. இந்த ஆய்வு காட்டுவது போல், பல மாற்றங்கள் நமகு பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. இது பரிணாம அணிவகுப்பு அல்ல, ஒரு குழந்தையின் தள்ளாடும் முதல் அடிகள் மட்டுமே. https://www.bbc.com/tamil/articles/cz4zj2gddndo
  8. சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று! Published By: DIGITAL DESK 3 04 MAR, 2024 | 10:44 AM ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து அதிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தன் அவர்களுடைய உடலைச் சுமந்த ஊர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை (03)வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட நிலையில் மக்கள் அஞ்சலிக்காக குமரப்பா நினைவு சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் தலைவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்வுகளில் அவருடன் கூட இருந்து அவரது வழக்குகள் உட்பட பல்வேறு உதவிகளை புரிந்த தமிழக சட்டத்தரணி புகழேந்தி, மக்கள் அஞ்சலி நிகழ்வுகளை ஒருங்கிணைத்து குரலற்றோர் குரல் அமைப்பு தலைவர் கோமகன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க பிரதிநிதி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், உட்பட பலரும் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் சாந்தனின் புகழுடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து சாந்தனின் இல்லத்தில் சடலம் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை (04) காலை 10 மணியளவில் இறுதி கிரிகைகள் மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதேவேளை சாந்தனின் புகழுடல் நீர்கொழும்பிலிருந்து எடுத்துவரும் போது வவுனியாவிலிருந்து மக்கள் வீதி எங்கும் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணத்தில் மாலிசந்தி, நெல்லியடி, உடுப்பிட்டி ஊடாக தீருவில் வரை சென்ற புகழுடலுக்கு மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தியதுடன் வீதி எங்கும் அவரது நினைவு பதாதைகளை கட்டியுள்ளனர். மேலும் வல்வெட்டியில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வில் ஜேவீபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் சாந்தனின் புகளுடலிற்கு அஞ்சலி செலுத்தியதோடு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் சாந்தனின் புகழுடலிற்க்கு சிவப்பு மஞ்சள் கொடி போர்த்தி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உண்மையில் வடமராட்சி ஒரு சோகமான நிலையிலேயே சாந்தன் அவர்களது மறைவிற்கு பின்னர் காட்சியளிக்கிறது. https://www.virakesari.lk/article/177841
  9. பாகிஸ்தானின் புதிய பிரதமர் தெரிவானார் பாகிஸ்தானின் பிரதமர் ஆக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ்(பிஎம்எல் – என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தல் கடந்த பெப்ரவரி மாதம் 8 ம் திகதி இடம்பெற்றது. அதில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றினர். நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் – என் கட்சிக்கு 75 இடங்களும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் பிஎம்எல் -என் கட்சி புதிய அரசை அமைக்க தீர்மானித்தது. அக்கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இம்ரான் கான் கட்சி சார்பில் ஒமர் அயூப் கான் முன்னிறுத்தப்பட்டார். அந்நாட்டின் பாராளுமன்றில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடந்தது. அதில் ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று பிரதமராக தேர்வானார். ஒமர் அயூப் கான் 92 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற ஷெபாஸ் ஷெரீப் தனது சகோதரர் நவாசை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் பேசுகையில், பயங்கரவாதம் நாட்டில் இருந்து அடியோடு அகற்றப்படும். புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்படும், என்றார். https://thinakkural.lk/article/294155
  10. நெதன் லயனில் சுழற்சியில் நியூஸிலாந்து சரிந்தது, ஆஸி. 172 ஓட்டங்களால் வெற்றி Published By: VISHNU 04 MAR, 2024 | 12:24 AM (நெவில் அன்தனி) வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் குவியலை நெதன் லயன் பூர்த்தி செய்ததன் பலனாக 172 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அமோக வெற்றிபெற்றது. போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை (03)காலை வெற்றிக்கு மேலும் 258 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்து தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இப் போட்டியில் நியூஸிலாந்து சாதிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், நெதன் லயன் காலையிலேயே விக்கெட்களை வீழ்த்தி 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததால் நியூஸிலாந்தின் வாய்ப்பு நழுவிப்போனது. நியூஸிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரச்சின் ரவிந்த்ரா, டொம் ப்ளண்டல், க்லென் பிலிப்ஸ் ஆகியோரின் விக்கெட்களை நெதன் லயன் வீழ்த்தி அவுஸ்திரேலியாவை வெற்றிப்பாதையில் இட்டார். நியூஸிலாந்து சார்பாக ரச்சின் ரவிந்த்ரா 59 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 38 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர். அவர்கள் இருவரும் 2ஆவது இன்னிங்ஸில் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 67 ஓட்டங்களே நியூஸிலாந்தின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது. இது இவ்வாறிருக்க இந்தப் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததன் மூலம் சாதனை ஒன்றை நெதன் லெதன் சமப்படுத்தினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 9 அணிகளுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்த முரளிதரன், ஷேன் வோன் ஆகிய இருவரது சாதனைகளை நெதன் லயன் சமப்படுத்தினார். இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ், இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகியவற்றுக்கு எதிராகவே அந்த நாடுகளின் சொந்த மண்ணில் நெதன் லயன் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்துள்ளார். நெதன் லயன் முதலாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களையும் கைப்பற்றினார். இந்தப் போட்டியின் 1ஆவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா பெற்ற 383 ஓட்டங்களே நான்கு இன்னிங்ஸ்களிலும் அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக அமைந்தது. மற்றைய 3 இன்னிங்ஸ்களிலும் 200 ஓட்டங்களுக்கு குறைவாகவே பெறப்பட்டது. எண்ணிக்கை சுருக்கம் அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 383 (கெமரன் க்றீன் 174 ஆ.இ., மிச்செல் மார்ஷ் 40, உஸ்மான் கவாஜா 33, ஸ்டீவன் ஸ்மித் 31, மெட் ஹென்றி 70 - 5 விக்.) நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 179 (க்ளென் பிலிப்ஸ் 71, மெட் ஹென்றி 42, டொம் ப்ளண்டல் 33, நெதன் லயன் 43 - 4 விக்.) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 164 (நெதன் லயன் 41, கெமரன் க்றீன் 34, க்ளென் பிலிப்ஸ் 45 - 5 விக்., மெட் ஹென்றி 36 - 3 விக்.) நியூஸிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 196 (ரச்சின் ரவிந்த்ரா 59, டெரில் மிச்செல் 38, நெதன் லயன் 65 - 6 விக்., ஜொஷ் ஹேஸ்ல்வூட் 20 - 2 விக்.) ஆட்டநாயகன்: கெமரன் க்றீன். https://www.virakesari.lk/article/177831
  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஓம்கார் கர்ம்பேல்கர் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மார்ச் 2024 குடற்புழுக்கள் ஒரு பெரிய பிரச்னை. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மற்றும் பிற காரணங்களால் புழுக்கள் உடலில் நுழையலாம். மலத்தில் நீண்ட புழுக்கள் இருப்பது, வயிற்று வலி மற்றும் ஆசன வாயில் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை ஆய்வு செய்த பிறகு நோய் கண்டறிதல் செய்யப்படுகிறது. வயிற்றில் காணப்படும் இந்த புழுக்கள் இரைப்பை புழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. வட்டப்புழுக்கள், தட்டைப்புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்கள் ஆகியவை இதில் அடங்கும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டுள்ளன. நமது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைச் சுழற்சிகளில் அவற்றின் விளைவுகள் மாறுபடும். சாட்டைப்புழுக்கள் மற்றும் கொக்கிப்புழுக்கள் மண்ணின் வழியாக வயிற்றுக்குள் நுழைகின்றன. புழுக்கள் எவ்வாறு பரவுகின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES புழு நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் கைகளை சரியாகக் கழுவாததால் ஏற்படுகின்றன. புழுக்களின் முட்டைகள் மண்ணுடன் தொடர்பு கொள்வது, அசுத்தமான உணவு மற்றும் பானங்களை உட்கொள்வது புழுக்கள் வயிற்றுக்குள் நுழைவதற்கு வழிவகுக்கும். மோசமான கழிவுநீர் மேலாண்மை மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் உள்ள பகுதிகளிலும் இந்த தொற்று பரவுகிறது. வேக வைக்கப்படாத இறைச்சி மற்றும் புழுக்கள் உள்ள மீன்களை சாப்பிடுவதும் இந்த பிரச்னையை ஏற்படுத்தும். சில சமயங்களில் செல்லப் பிராணிகளுக்கு கூட தொற்று ஏற்படலாம். நூற்புழு தொற்று பல குழந்தைகளில் காணப்படுகிறது. நீளமான கயிறு போல் தோற்றமளிக்கும் இந்தப் புழுக்களின் முட்டைகள் வயிற்றில் நுழையும்போது பிரச்னை ஆரம்பமாகிறது. பின்னர் அவை ஆசன வாயில் முட்டைகளை இடுகின்றன. இந்த முட்டைகளை ஆடை, பொம்மைகள், பல் துலக்குதல், சமையலறை, குளியலறை தரை, படுக்கையறை, உணவு ஆகியவற்றில் பரப்பலாம். இந்த பொருள்கள் மற்றும் மேற்பரப்புகளைத் தொட்ட பிறகு, அதே கையை வாயில் வைப்பது உடலுக்குள் நுழையலாம். வட்டப்புழுக்களின் முட்டைகள் சுமார் இரண்டு வாரங்கள் உயிர் வாழும். வயிற்றை அடைந்த பிறகு, முட்டைகள் லார்வாக்களாக உருவாகின்றன. ஓரிரு மாதங்களில் அவை நீண்ட கிருமிகளாக மாறிவிடும். புழுக்களை அழிக்க என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES இவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, குழந்தைகள் மீண்டும் அத்தகைய மேற்பரப்பைத் தொட்டால் மீண்டும் தொற்று ஏற்படலாம். எனவே, குழந்தைகள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கைகளை கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். புழுக்களை அழிக்க இதை செய்ய வேண்டும் அனைவரும் கைகளை கழுவ வேண்டும், நகங்களை வெட்ட வேண்டும். சாப்பிடுவதற்கு முன், கழிப்பறைக்குச் சென்ற பிறகு, குழந்தைகளின் நாப்கின்களை மாற்றிய பின் கைகளைக் கழுவ வேண்டும். குழந்தைகள் அடிக்கடி கைகளை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தினமும் குளிக்க வேண்டும். துலக்குவதற்கு முன்னும் பின்னும் டூத் பிரஷ்களைக் கழுவவும். துண்டுகள் மற்றும் படுக்கை விரிப்புகளை சூடான நீரில் கழுவவும். பொம்மைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையலறை மற்றும் குளியலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போது இந்தப் புழுக்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம். பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு (என்.எச்.எஸ்.) இதற்கென சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. எதையும் சாப்பிடும் முன் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மலம் கழித்த பின் கைகளை சோப்பினால் கழுவ வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட அல்லது பாட்டில் தண்ணீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள். காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசிகள் போட வேண்டும். அவற்றின் கழிவுகளை விரைவில் அகற்ற வேண்டும். நாய், பூனை கழிவுகளுக்கு அருகில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது. தொற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள சுகாதாரமற்ற இடங்களில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவதைத் தவிர்க்கவும். அசுத்தமான இடங்களில் வெறுங்காலுடன் நடக்கக் கூடாது. வயிற்றுப் புழுக்களை எவ்வாறு கண்டறிவது? வயிற்றில் புழுக்கள் நுழைந்த பிறகு சில அறிகுறிகள் தோன்றும். வயிற்று வலி, குமட்டல், வாந்தி. பெரும்பாலானவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. சிலர் மலச்சிக்கலால் அவதிப்படுவார்கள். பசியின்மை மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. பலவீனமாகி கடுமையான சோர்வை அனுபவிக்கிறார்கள். ஆசன வாயில் அரிப்பு மற்றும் தூக்கமின்மை. பெரியவர்களுக்கு வயிற்று வாயு. சில நோயாளிகள் இரத்த சோகைக்கு ஆளாகிறார்கள். பட மூலாதாரம்,RK வயிற்றுக் கிருமிகளை ஏன் அகற்ற வேண்டும்? நம் உடலில் உள்ள பல்வேறு வகையான கிருமிகள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளைக் காட்டுகின்றன. பல வகையான பிரச்னைகள் சிரமத்திற்கு வழிவகுக்கும். இரத்த சோகை குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்துடன் கூடுதலாக, அவை உறுப்பு சேதத்தை ஏற்படுத்தும். இவற்றை தவிர்க்க உலக சுகாதார நிறுவனம் அடிக்கடி குடற்புழு நீக்கம் செய்ய பரிந்துரைக்கிறது. டோம்பிவிலியில் உள்ள மதுசூதன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சுகாதார இயக்குநர் டாக்டர் ரோஹித் காகு, இந்த கிருமிகளை எப்படி அகற்றுவது என்று பிபிசியிடம் விளக்கினார். வயிற்றில் உள்ள கிருமிகளை அகற்ற, 12-23 மாத குழந்தைகளுக்கும், ஒன்று முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கும், 5-12 வயதுடைய ஆண் மற்றும் பெண்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை தடுப்பு கீமோதெரபி கொடுக்க வேண்டும். கிருமிகளை எவ்வாறு அகற்றுவது? கிருமிகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல நோய்களை உண்டாக்குவதாக டாக்டர் ரோஹித் கூறினார். “ஆகவே ஆண்டுக்கு இருமுறை மருத்துவரின் ஆலோசனைப்படி பூச்சி விரட்டி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்த செயல்முறை இரண்டு வயது முதல் தொடங்கலாம். இந்த செயல்பாட்டில், உடலில் உள்ள ஒட்டுண்ணி வெளியேறுகிறது" என்று ரோஹித் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c0jxz44p0jpo
  12. Published By: RAJEEBAN 04 MAR, 2024 | 10:35 AM ஹெய்ட்டி தலைநகரில் உள்ள பிரதான சிறைச்சாலையொன்றின் மீது தாக்குதலை மேற்கொண்ட கும்பலொன்று அங்கிருந்த 4000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்துச்சென்றுள்ளது. தலைநகரின் பிரதான சிறைச்சாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக 4000க்கும் அதிகமான கைதிகள் தப்பியோடிவிட்டனர் என செய்திகள் வெளியாகின்றன. 2021 இல் ஜனாதிபதி ஜொவெனல் மொஸ்சேயை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களும் சிறையுடைப்பு காரணமாக தப்பிச்சென்றுள்ளனர். ஹெய்ட்டியின் வழமையான நெரிசல் மிகுந்த சிறைச்சாலை வெறுமையாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்றி காணப்படுகின்றது காலணிகளும் ஆடைகளும் கதிரைமேசைகளும் சிதறுண்டு காணப்படுகின்றன என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிறைச்சாலை வாயிலில் மூன்று உடல்கள் காணப்படுகின்றன. இதேவேளை 1400 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டாவது சிறைச்சாலையிலும் சிறை உடைப்பு இடம்பெற்றுள்ளது. எத்தனை கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர் என்பது தெரியாது என குறிப்பிட்டுள்ள மனித உரிமை சட்டத்தரணி 4000 சிறைக்iதிகளில் 100க்கும் குறைவானவர்களே எஞ்சியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. நான் ஒருவன் மாத்திரம் எஞ்சியுள்ளேன் என ஒருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால நிலையை அறிவித்துள்ள ஹெய்ட்டி அரசாங்கம் இரவு நேர ஊரடங்கு சட்டத்தையும் பிரகடனம் செய்துள்ளது. https://www.virakesari.lk/article/177839
  13. Published By: VISHNU 03 MAR, 2024 | 05:29 PM பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் தேர்தலும் அதன் பின்னரான அந்நாட்டின் நிலைவரங்களும் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/177818
  14. Published By: VISHNU 04 MAR, 2024 | 01:25 AM வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை (02) முறுகல் நிலை ஏற்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு குறித்த சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்துமாறு வெற்றிலைக்கேணி மீனவர்களின் கையொப்பத்துடன் வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் கரைவலை தொழில் சம்மாட்டியிடம் கடிதம் கையளிக்கப்பட்டது. எனினும் தமது அறிவுறுத்தலைப் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்துவருவதால் நேற்று காலை குறித்த கரைவலை வாடி மீனவர்களால் முற்றுகையிடப்பட்டு உழவு இயந்திரம் மூலம் கரைவலை இழுப்பது நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்தில் அதிகளவான மீனவர்கள் ஒன்று கூடியதால் சிறிது நேரம் பதட்டம் நிலவியதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசாருடனும் மீனவர்கள் முறுகலில் ஈடுபட்டனர். உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்தாவிடில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/177833
  15. கடும் கோவக்காறனா இருப்பானோ?!
  16. இலங்கையில் மனைவி, குழந்தைகளை மறைத்து வைத்துவிட்டு, பிரான்ஸ் தப்பிச் சென்ற போலீஸ் அதிகாரி - என்ன பிரச்னை? பட மூலாதாரம்,DUMINTHA JAYATHILAKA FB ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் பல்வேறு முக்கிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களை கைது செய்ததாக கூறப்படும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் போலீஸ் உயர் அதிகாரியான போலீஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். தனக்கும், தனது குடும்பத்திற்கும் விடுக்கப்படுகின்ற உயிர் அச்சுறுத்தலை அடுத்தே, தான் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக போலீஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நிழலுலக உறுப்பினர்களினால் தனக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கான பிரிவின் போலீஸ் பரிசோதகராக துமிந்த ஜயதிலக்க கடமையாற்றியிருந்தார்;. இந்த நிலையில், துமிந்த ஜயதிலக்க பிரான்ஸ் நாட்டை நோக்கி கடந்த 14ம் தேதி சென்றுள்ளதாக தெரிய வருகின்றது. மனைவி மற்றும் குழந்தை ஆகியோரை இலங்கையில் மறைத்து வைத்த நிலையிலேயே, துமிந்த ஜயதிலக்க நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். என்ன நடந்தது? பட மூலாதாரம்,DUMINTHA JAYATHILAKA FB தனக்கு உயிர் அச்சுறுத்தலை விடுத்ததாக, சில நிழலுலக உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளையும் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்களை கைது செய்ததன் பின்னர், நிழலுலக உறுப்பினர் என கூறப்படும் ஹினடியன மஹேஷ் என்ற நபரினால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது. ''நீ சிறு குழந்தையுடன் இருக்கின்றாய் அல்லவா? மிகவும் கவனமாக இருந்து கொள். துமிந்த சேர் எதற்கும் கவனமாக இருந்துக்கொள்ளுங்கள். உனக்கு தகவலை வழங்கிய நபரை மூன்று நாட்களில் கொலை செய்வோம். முடியுமானால், அவரை காப்பாற்றிக் கொள். தேவையில்லாமல் கொலை செய்ய வைக்க வேண்டாம். உனது மனைவியை உன் கண் முன்னே துஷ்பிரயோகம் செய்து கொலை செய்வோம்." என அந்த தொலைபேசி உரையாடல் குரல் பதிவில் பதிவாகியுள்ளது. கொழும்பு - ஆட்டுப்பட்டிதெரு போலீஸ் நிலையத்திற்குள், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களுக்கு நஞ்சு வழங்கியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்த பிரதான போலீஸ் உத்தியோகத்தராக துமிந்த ஜயதிலக்க விளங்குகின்றார். இந்த சம்பவத்தை அடுத்து, இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் கஞ்சிபானி இம்ரானும், தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் குரல் பதிவை துமிந்த ஜயதிலக்க வெளியிட்டுள்ளார். பட மூலாதாரம்,DUMINTHA JAYATHILAKA FB ''நீங்கள் அதிகமாக துள்ள வேண்டாம் சேர். அமைதியாக இருந்து கொள்ளுங்கள். நான் உங்களை அச்சுறுத்தவில்லை. ஜயதிலக்க சேர் என மிகுந்த மரியாதைவுடன் கதைத்தேன். உங்களுடன் பிரச்னை ஏற்படுத்திக் கொள்வதற்கு எனக்கு பிரச்னை கிடையாது. எம்மை எமது வேலைகளை செய்து கொண்டிருப்பதற்கு இடமளியுங்கள். உங்களை போன்ற பலர் இருந்தார்கள். இறுதியில் மண்டியிட்டார்கள். புரிந்து கொள்ளுங்கள். மண்டியிட வைக்க எமக்கு தெரியும்." என போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் கஞ்சிபானி இம்ரானினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. துமிந்த ஜயதிலக்கவின் பாதுகாப்பிற்காக போலீஸ் திணைக்களத்தினால் துப்பாக்கியொன்றும் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இவ்வாறான பின்னணியிலேயே, துமிந்த ஜயதிலக்க நாட்டை விட்டு கடந்த 14ம் தேதி பிரான்ஸ் நோக்கி தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில், பிரான்ஸில் தற்போது தங்கியுள்ள துமிந்த ஜயதிலக்க, சமூக வலைத்தளம் ஊடாக வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ''கொழும்பில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல மனித படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய என்னால் முடிந்தது. இவ்வாறு நிழலுலக உறுப்பினர்களை தொடர்ச்சியாக கைது செய்யும் போது, எனக்கும் எனது மனைவி மற்றும் குழந்தையின் உயிருக்கு தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதனை பொருட்படுத்தாத நான் தொடர்ச்சியாக வேலை செய்தேன். இறுதியாக நான் கடந்த 14ம் தேதி இலங்கையிலிருந்து இங்கு வந்தேன். இங்கு வரும் போதும், ஆட்டுப்பட்டித்தெரு போலீஸ் நிலையத்திற்குள் சந்தேக நபர்களுக்கு நஞ்சு வழங்கியமை தொடர்பாக சம்பவத்தின் விசாரணைகளை முடிந்துக்கொண்டே பிரான்ஸிற்கு வந்தேன். தொடர்ச்சியாக விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே நான் இங்கு வந்தேன். நான் இங்கு வந்தாலும், எனது மனைவி மற்றும் குழந்தை ஆகியோரை எனது வீட்டில் இருந்து வெளியேற்றி மறைத்து வைத்துள்ளேன். அவர்களின் உயிருக்கு பாரிய பிரச்னை காணப்படுகின்றது. அவர்களின் உயிருக்கு பிரச்னை ஏற்படாத வகையில் அவர்களை பாதுகாத்து தருமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்." என போலீஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ராணுவத்தில் இணைந்துக்கொள்ளும் வகையிலேயே தான் பிரான்ஸை நோக்கி சென்றுள்ளதாகவும், அதற்கான நேர்முக பரீட்சைகளில் தோற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தை ஆகியோரின் உயிருக்கு ஆபத்து காணப்படுகின்றமையினால், புதிய வேலையில் சேரவும் முடியாமல் நிம்மதி இழந்து தவிப்பதாக அவர் குறிப்பிடுகின்றார். போலீஸ் திணைக்களத்தின் பதில் பட மூலாதாரம்,DUMINTHA JAYATHILAKA FB போலீஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க போலியான நாடகமொன்றை உருவாக்கி பிரான்ஸ் நோக்கி சென்றுள்ளாரா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுகின்றது என போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எனினும், இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிடுகின்றார். ''குறித்த போலீஸ் அதிகாரி பெப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் மார்ச் மாதம் 6ம் தேதி வரை வெளிநாடு செல்வதற்கான விடுமுறையை பெற்று சென்றுள்ளார். விடுமுறையின் அடிப்படையிலேயே அவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். வெளிநாட்டிற்கு சென்றதன் பின்னரே சமூக வலைத்தளங்களின் ஊடாக அவர் இவ்வாறான கருத்துகளை வெளியிட்டுள்ளார். கடிதம் மற்றும் குரல் பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,DUMINTHA JAYATHILAKA FB இந்த அதிகாரி கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் காலப் பகுதியில் அவருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றமை குறித்து போலீஸ் திணைக்களத்திற்கு அறிவிக்கவில்லை. இந்த குரல் பதிவுகளில் கதைக்கும் நபர்கள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த நபர்களா பேசுகின்றார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த அனைத்து விடயங்களும் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்பதை போன்ற விடயத்தை உருவாக்கியிருக்கக்கூடும். அப்படியான ஒரு சந்தேகம் எமக்கு உள்ளது. தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். அவரின் பாதுகாப்புக்கு கைத்துப்பாக்கி ஒன்றை வழங்கியிருந்தோம். இது தொடர்பில் சந்தேகம் காணப்படுகின்றது. இது திட்டமிடப்பட்ட ஒன்றா என்ற சந்தேகம் எழுகின்றது." என போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c2q7rgy7n6lo
  17. சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றார் Published By: VISHNU 03 MAR, 2024 | 10:19 PM ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தனுடைய புகழுடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு ஆரத்தி எடுத்து கொண்டுவரப்பட்டது. இதன்போது அனைவரது நெஞ்சையும் கணக்கவைக்கும் வகையில், “அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்” என கூறிய சாந்தனுடைய சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றார். இதன்போது கனத்த இதயத்துடன் யாரும் அழாது இருந்த நிலையில் ஒம் நமசிவாய சொல்லி ஆரத்தி எடுக்கப்பட்டது. மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் ஊர்தி யாழ்ப்பாணம் வடமராட்சியை வந்தடைந்து நெல்லியடி மற்றும் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. வவுனியாவில் இன்று காலை 8மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் புகழுடல் ஊர்தி ஏ9 வீதி ஊடாக மாங்குளம் – கிளிநொச்சி ஊடாக நகர்ந்து அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது. இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 28ம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சாந்தனுடைய வருகைக்காக அவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக காத்திருந்த நிலையில் இறுதியில் சடலமாகவே வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சாந்தனின் இறுதிக் கிரியைகள், அவரது இல்லத்தில் திங்கட்கிழமை (4) காலை 10 மணியளவில் ஆரம்பமாகும். இறுதிக் கிரியைகள் நிறைவு பெற்றதும் வித்துடல் எடுத்து செல்லப்பட்டு ஊரில் உள்ள சனசமூக நிலையத்தில் நினைவேந்தல் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து வித்துடல் சாந்தன் அண்ணனின் பூர்வீக இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின் இறுதி யாத்திரை ஆரம்பமாகும். வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு புகழுடல் எடுத்துச் செல்லப்படும். https://www.virakesari.lk/article/177828
  18. காஸாவில் 112 பேர் பலி: பசிக்கு உணவு தேடி வந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடா? உண்மை என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், பால் புரெளன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மார்ச் 2024, 11:32 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்ட டிரக்குகளைச் சுற்றி பாலத்தீனர்கள் திரண்டதால், குறைந்தது 112 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என காஸாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இந்த விபத்தில் 760 பேர் காயமடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸா நகரில் வியாழக்கிழமை காலை நடந்த இந்தச் சம்பவத்தில், நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட லாரிகள் வந்து கொண்டிருந்த போது, நூற்றுக்கணக்கான மக்கள் லாரிகளைச் சுற்றி திரண்டனர். அப்போது அங்கு இஸ்ரேலிய ராணுவமும் இருந்தது. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது, நிவாரணப் பொருட்களை சேகரிக்க வந்த மக்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இறந்ததற்கு யார் காரணம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. பிபிசி வெரிஃபை(BBC Verify) இந்த சம்பவம் தொடர்பான முக்கிய உண்மைகளை ஆராய்ந்து, இந்த சம்பவம் எங்கு, எப்படி, எப்போது நடந்தது என்பதை அறிய முயன்றது. இதற்காக பிபிசி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட ட்ரோன் காட்சிகளை ஆய்வு செய்து, என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை நமக்குத் தெரிந்ததை அறிய முயன்றது. பட மூலாதாரம்,REUTERS/KOSAY AL NEMER நூற்றுக்கணக்கானோர் நிவாரணப் பொருட்களுக்காக காத்திருந்தனர் பிப்ரவரி 28 அன்று உள்ளூர் நேரப்படி இரவு 11:30 மணிக்கு சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோவின் படி, காஸாவில் நூற்றுக்கணக்கான மக்கள் நிவாரணப் பொருட்களுக்காக காத்திருந்தனர். அந்த மக்கள் பல்வேறு இடங்களில் தீ மூட்டி அவர்களை சுற்றி ஒரு வட்டம் அமைத்து, மனிதாபிமான உதவி கேட்டு வாகனங்களுக்காக காத்திருந்தனர். வடக்கு காஸாவில் உள்ள மக்கள் பட்டினி அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே எச்சரித்துள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி, காஸாவின் இந்தப் பகுதியில் உணவு மற்றும் குடிநீரின்றி சுமார் மூன்று லட்சம் மக்கள் உள்ளனர். சமீப நாட்களாக, இப்பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் குறைவாகவே வந்துள்ளன. காஸா நகரின் தென்மேற்கே அல்-ரஷித் சாலையில் ஏராளமான மக்கள் திரண்டிருப்பதை அந்த வீடியோவில் காணலாம். அந்தச் சாலை வடக்கே காசா நகரத்திலிருந்து, மத்திய தரைக்கடல் கடற்கரையை ஒட்டி, தெற்கே எகிப்தை நோக்கிச் செல்கிறது. சமீப காலமாக, காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்க இந்தப் பகுதி பயன்படுத்தப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, பிபிசி ஒரு வீடியோவை ஆய்வு செய்தது. அதில் மக்கள் அந்த பகுதியில் நிவாரணப் பொருட்களை சேகரிக்க கூடினர். அந்த இடத்தில் இருந்த பத்திரிகையாளர் மஹ்மூத் அவதேயா பிபிசியிடம், "ஏதாவது உணவுப் பொருட்கள் அல்லது ஒரு மூட்டை மாவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அங்கு வந்திருந்த ஏராளமானோர் திரண்டிருந்தனர்" என்றார். பட மூலாதாரம்,INSTAGRAM நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்ட வண்டிகள் வந்தன பிப்ரவரி 29, வியாழன் அன்று, உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில், எகிப்தியப் பகுதியிலிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிய வாகனங்கள் இஸ்ரேலிய ராணுவம் அமைத்த சோதனைச் சாவடியைக் கடந்தன. விசாரணைக்குப் பிறகு, அந்த வாகனத் தொகுதி அல்-ரஷித் சாலையில் மேலும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியது. இது நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 30 டிரக்குகளின் தொகுதி என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. வாகனத் தொகுதியில் 18 வாகனங்கள் அல்லது சற்று குறைவாக இருந்ததாக நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், அதிகாலை 4:45 மணியளவில் நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்ட டிரக்குகளின் தொகுதி நபுல்சி சந்திப்பை நோக்கி நகர்ந்த போது, மக்கள் வாகனங்களைச் சூழ்ந்து கொண்டனர். கூட்டம் லாரிகளை சூழ்ந்து கொண்டது பட மூலாதாரம்,IDF அகச்சிவப்பு(Infrared) ட்ரோன் காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்தக் காட்சிகள் முழுமையான வரிசை அல்ல, ஆனால் நான்கு பாகங்கள் திருத்தப்பட்டு அதில் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு இடங்களில் நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. வீடியோவின் முதல் இரண்டு பகுதிகளில், நபுல்சி சந்திப்பின் தெற்குப் பகுதியில் மக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாகனங்களைச் சுற்றி வளைத்ததைக் காணலாம். கான்வாயைச் சுற்றி என்ன நடந்தது? வீடியோவின் மற்ற இரண்டு பகுதிகளில், படம் ஐநூறு மீட்டர் தொலைவில் தெற்கு நோக்கி காட்டப்பட்டுள்ளது. இதில் நான்கு வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கும் வாகனங்களை சுற்றி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சிலர் வாகனங்களைச் சுற்றிச் செல்வதைக் காணலாம். ஆனால் பலர் செயலற்றவர்களாக தரையில் கிடப்பதையும் காணலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட வீடியோ காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்டது. இதில், சிவப்பு வட்டத்தில் காணப்படுவது தரையில் படுத்திருப்பவர்கள். படத்தில், இஸ்ரேலிய ராணுவ துப்பாக்கிகளும் மக்களுக்கு அருகில் காணப்படுகின்றன. இந்த சம்பவத்தின் முழுமையான ட்ரோன் காட்சிகளை வழங்குமாறு பிபிசி வெரிஃபை இஸ்ரேலிய இராணுவத்திடம் கோரியுள்ளது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் பட மூலாதாரம்,AL JAZEERA அல் ஜசீரா தொலைக்காட்சியின் பிரத்யேக வீடியோ காட்சிகளை பிபிசி ஆய்வு செய்துள்ளது. இது மற்றொரு இடத்திற்கு அருகில் படமாக்கப்பட்டது. இந்த இரண்டாவது இடம் நபுல்சி சந்திப்பில் இருந்து சுமார் 500 மீட்டர் தெற்கே நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட டிரக்குகளுக்குப் பின்னால் உள்ளது. இந்த வீடியோவில், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது மற்றும் மக்கள் வாகனங்களின் மேல் ஏறுவதையோ அல்லது பின்னால் ஒளிந்து கொள்வதையோ காணலாம். சிவப்பு நிற ட்ரேசர்களையும் வானத்தில் காணலாம். நிவாரணப் பொருட்கள் வந்த பிறகு, இஸ்ரேலிய வாகனங்கள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பத்திரிகையாளர் மஹ்மூத் அவதேயா பிபிசியிடம் தெரிவித்தார். "இஸ்ரேலியர்கள் வேண்டுமென்றே மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மக்கள் மாவு ஏற்றப்பட்ட வாகனங்களை அடைய விரும்பினர். அவர்கள் நேரடியாக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், கொல்லப்பட்டவர்கள் அவர்கள் அருகே வருவதைத் தடுத்தனர்." என்று அவர் கூறினார். அதன் பிறகு என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES இது தவிர, தோட்டாக்கள் வீசப்பட்ட பகுதி தொடர்பான மேலும் சில வீடியோ காட்சிகளையும் பிபிசி ஆய்வு செய்துள்ளது. அதில் இறந்த உடல்களை வாகனங்களில் ஏற்றி நபுல்சி சந்திப்பிலிருந்து வடக்கு நோக்கி எடுத்துச் செல்வதைக் காணலாம். இது தவிர, ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இடைக்கால மருத்துவமனை மேலாளர் டாக்டர். முகமது சல்ஹா பிபிசியிடம் பேசுகையில், "காயமடைந்த 176 பேர் அல்-அவ்தா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். இவற்றில் 142 நோயாளிகளின் உடலில் தோட்டாக் காயங்கள் இருந்தன. இது தவிர, சில சந்தர்ப்பங்களில், நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிலரின் கை, கால்கள் உடைந்துள்ளன." என்று கூறினார். இஸ்ரேல் என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,IDF படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவ செய்தித் தாெடர்பாளர் டேனியல் ஹகாரி வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி 13:06 மணியளவில், இஸ்ரேலிய ராணுவம் அதன் அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், "இன்று காலை, நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்ட டிரக்குகள் வடக்கு காசா பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்த போது, காஸா மக்கள் லாரிகளை சுற்றி வளைத்தனர். விநியோகிப்பதற்கான பொருட்களை அவர்கள் சூறையாடினர். இந்த நேரத்தில் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் நெரிசல் காரணமாக, "டஜன்கணக்கான காஸா மக்கள் காயமடைந்தனர்." என குறிப்பிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 15.35 மணிக்கு (பிற்பகல் 3:35) இஸ்ரேல் இராணுவம் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் மற்றொரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ராணுவம் முன்பு கூறிய தகவலை மீண்டும் வலியுறுத்தியது. இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் பீட்டர் லெர்னர் இங்கிலாந்தின் சேனல் 4 செய்தி நிறுவனத்திடம் இது தொடர்பாகப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், வாகனங்கள் அருகே திரண்டதால், கான்வாய் முன்னோக்கி செல்ல முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. "பாதுகாவலர்களை அழைத்துச் செல்வதற்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேலிய ராணுவ டாங்கிகள், மக்கள் மத்தியில் பீதி இருப்பதைக் கண்டனர். கூட்டத்தை கலைக்க அவர்கள் சில எச்சரிக்கை குண்டுகளை வீசினர்." என்று கூறினார். இதற்குப் பிறகு, இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரியின் வீடியோ அறிக்கை ராணுவத்தின் சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், பிற்பகல் 22.35 மணிக்கு (இரவு 10.35) வெளியிடப்பட்டது. அதில் அவர், "நூற்றுக்கணக்கானவர்களின் எண்ணிக்கை விரைவில் ஆயிரங்களாக மாறியது மற்றும் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது" என்று கூறினார். பொதுமக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில், டாங்கி கமாண்டர் பின்வாங்க முடிவு செய்ததாக அவர் கூறினார். "இராணுவம் எச்சரிக்கையுடன் பின்வாங்கத் தொடங்கியது; அவர்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை" என்று அவர் கூறினார். முன்னதாக, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சிறப்பு ஆலோசகர் மார்க் ரெகேவ் சிஎன்என்- க்கு பேட்டி அளித்திருந்தார் . இஸ்ரேல் எந்த வகையிலும் நேரடியாக ஈடுபடவில்லை என்று அவர் கூறினார். மற்ற சந்தர்ப்பங்களில் இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஆனால் அவை நிவாரணப் பொருட்களுடன் தொடர்புடையவை அல்ல என்றும் அவர் கூறினார். இருப்பினும், அவர் தனது கூற்றை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. மார்க் ரெகெவ் கூறுகையில், "டிரக்கை சுற்றி வளைத்த கும்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, ஆனால் அவை பாலஸ்தீன ஆயுதக் குழுக்களால் சுடப்பட்டன. அது ஹமாஸ் அல்லது வேறு ஏதேனும் குழுவா என்பது எங்களுக்குத் தெரியாது" என்றார். என்ன சொல்கிறது ஹமாஸ்? இஸ்ரேலிய ராணுவத்தின் அந்த அறிக்கையை ஹமாஸ் நிராகரித்துள்ளது. பொதுமக்கள் மீது நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கத்தாரில் நடைபெற்று வரும் விவாதங்கள் ஆபத்தாக இருக்கக்கூடும் என ஹமாஸ் எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சம்பவம் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பதை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக செவ்வாயன்று, காஸா பகுதியில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உணவுப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்திருந்தார். இதற்குப் பிறகு, காஸாவில் மனிதாபிமான நிலைமை குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன. (அலெக்ஸ் முர்ரே, குமார் மல்ஹோத்ரா, மர்லின் தாமஸ் மற்றும் பிபிசி அரபு சேவை நிருபர்களின் கூடுதல் அறிக்கையுடன்) https://www.bbc.com/tamil/articles/cpd35r3emx9o
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழர் வரலாற்றில் வடக்கிருத்தல் அல்லது உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல் என்று அறியப்படும் ஒரு செயல்பாடு மன்னர்களிடையே இருந்துள்ளது. வடக்கிருத்தல், நிசீதிகை போன்ற பெயர்களால் அறியப்படும் இதுகுறித்து இங்கு விரிவாகக் காண்போம். "வடக்கிருத்தல் என்பது அக்கால தமிழர்களின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்று," என்று கூறிய விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், "ஊருக்கு வடக்குப் பகுதியில் வட திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாமல் நோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் என்று இலக்கியங்கள் விவரிப்பதாக" கூறினார். முற்காலத் தமிழர்களில், போர்களின்போது முதுகிலே புண்பட்ட வீரர்கள், அதை அவமானமாகக் கருதினர். இதனால், "அந்தப் போர்க்களத்திலேயே வடக்கு திசை நோக்கியபடி உணவேதும் உண்ணாமல் பட்டினியிருந்து தமது உயிரைத் துறந்தனர்." அக்காலத் தமிழர்கள், "தனக்கு இழுக்கு நேர்ந்தாலோ, மானம் இழந்தாலோ, அதைத் தாங்கிக்கொள்ள இயலாத மனநிலை ஏற்படும்போது, வடக்கிருந்து உயிர் விட்டனர்," என்று விளக்கினார் பேராசிரியர் ரமேஷ். மேலும், பிரச்னை அல்லது துன்பத்தை எதிர்கொள்ள இயலாமல், வாழும் வழியிருந்தும் மனக்குறைபாடு ஏற்படும் நிலையிலும் உணவு மறுத்து உயிர் துறப்பது பெரும் பண்பாக அக்காலத்தில் பார்க்கப்பட்டதாகவும் அவர் விவரித்தார். மேலும் "வடக்கிருந்து உயிர் துறந்தோருக்கு நடுகல் இட்டு நினைவுச் சின்னமாக வழிபடுவதும் தமிழரின் மரபாகவே இருந்து வந்துள்ளது." அரசன் சேரமான் வடக்கிருத்தல் படக்குறிப்பு, பேராசிரியர் ரமேஷ் சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்கும் ’வெண்ணிப் பறந்தலை’ என்னும் இடத்தில் போர் நடைபெற்றது. அதில் வளவன் செலுத்திய வேல் சேரமான் மார்பில்பட்டு முதுகின் புறத்தே ஊடுருவிச் சென்று புண்ணாகிப்போனது. "அக்காலப் போர் மரபின்படி முதுகில் புண்படுதல் என்பது புறமுதுகிட்டு ஓடுதல் என்னும் வீரக்குறைபாடாகும்," என்கிறார் ரமேஷ். "தமிழ் மக்கள் போர்க்களத்தில் மார்பில் புண்பட்டு இறப்பதை கௌரவமாகக் கருதினர். ஆனால் முதுகில் புண்படுதலை அவமானமாகக் கருதினர். எனவே, முதுகில் புண் ஏற்பட்டுவிட்டதை மானக் குறைபாடாக எண்ணிய சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் நீத்தான். இதை புறநானூறு 65, 66ஆம் பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன," எனத் தெரிவித்தார். அதேபோல் கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரிக்கும் புலவர் கபிலருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. இந்த நிலையில் மன்னன் பாரி இறந்ததும் அவர் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்த பின்பு புலவர் கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்று புறநானூற்று பாடல் தெரிவிப்பதாகவும் கூறினார் அவர். கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் வடக்கிருத்தல் அதேபோல் "உறையூரை ஆண்ட கோப்பெருஞ்சோழன் அரசுரிமைக்காக சினம் கொண்டு தன் மகன்கள் மீது கோபம் கொண்டார். அவர்கள் மேல் போர் செய்யவும் முயன்றார். அப்போது புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் அறிவில்லாத மகன்களின் மேல் தந்தை போர் செய்வது தவறு என்று எடுத்துக் கூறி அதைத் தடுத்தார். பின்னர் தனது மகன்களின் செயலால் வருத்தப்பட்டு கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கத் தீர்மானிக்கிறார். அவ்வாறே அவன் வடக்கு திசையில் அமர்ந்து உண்ணாமல் இறந்து போகிறார்." மேலும், சோழனுடைய நண்பர் பிசிராந்தையார் என்னும் புலவர் தன் நண்பர் கோப்பெருஞ்சோழன் உயிர் விடுவதைக் கண்டு மனம் வருந்தி அவரும் வடக்கிருந்து உயிர் விட்டதாகக் கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ். கொப்பெருஞ் சோழனுடைய மற்றொரு நண்பரான பொத்தியார் என்பவரும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மனம் வருந்தி வடக்கிருந்து உயிர்விட்டார் என்று புறநானூறு குறிப்பிடுகிறது. சிறுபஞ்சமூலம் என்னும் உரைநூல் இதைக் கீழ் வருமாறு தெரிவிக்கிறது. ''வலி இழந்தார் மூத்தார் வடக்கு இருந்தார் நோயின், நலிபழிந்தார் நாட்டறை போய் நைந்தார்- மெலிவொழிய, இன்னவரால் எண்ணாராய் தந்த ஒரு துற்று, மன்னவராச் செய்யும் மதிப்பு" இந்தப் பாடல் மூலம் வடக்கிருத்தல் பற்றித் தெளிவாக அறிய முடியும். பெண்களும் உண்ணா நோன்பு இருந்து உயிர் பிரிதல் திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மூன்று கல் தூண்களில் பெண்களும் வடக்கிருந்து உயிர்துறந்தது குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஸ்வஸ்தி ஸ்ரீ பாலுச...' எனத் தொடங்கும் கல்வெட்டில் ஒன்று பாலூர் உடையான் பெருங்காடன் என்பவரின் மகள் பொக்கி என்பவர் உண்ணாநோன்பு நோற்று இறந்துள்ளார் என்பதைக் குறிப்பிடுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவனூர் கிராமத்தில் நைனார் தெருவில் பரமசிவம் வீட்டுத் தோட்டத்தில் வேடன் கோவில் மேட்டில் உள்ள பலகைக் கற்களில் கி.பி. 10ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி (கல்வெட்டில் பொறிக்கப்படும் எழுத்தின் ஒரு வகை வடிவ அமைப்பு) கொண்ட கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் கல்வெட்டு குப்பை பிராமணி என்ற சமணர் 12 நாள் நோன்பு நோற்று மறைந்த பின்னர் அவர் நினைவாக நடப்பட்ட நீசிதிகை பற்றியது. 'ஸ்வஸ்தி ஸ்ரீ ஓம் க்ரீம் ரிம் க்ரீம் குப்பை பிராமணி..' என அந்தக் கல்வெட்டு தொடங்குகிறது. அதேபோல், திருக்கோவிலூர் வட்டம் வசந்த கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் நடப்பட்டுள்ள கல்வெட்டில் எச்சில் நங்கை என்பவர் நோன்பு நோற்று மறைந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கணியாம்பூண்டி கிராமத்தில் வீரபத்திர சாமி கோவிலில் கற்பலகையில் உள்ள கல்வெட்டில் ஆன்றாள் என்பவரின் மகள் நங்கையான பெற்றாள் என்பவர் நோன்பு நோற்று உயர் நீத்துள்ளார் என்பதைத் தெரிவிக்கின்றது. செஞ்சி வட்டம் பறையன் பட்டு கிராமத்தில் சுனை பாறை என்ற மலைப்பகுதி குகையில் சமணப் படுக்கையும் அதன் மேற்பகுதியில் வட்டெழுத்துக் கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. "நமோத்து பாணாட்டு...." எனத் தொடங்கும் அந்தக் கல்வெட்டு பாண நாட்டைச் சேர்ந்த வச்சணந்தி என்கின்ற ஆசிரியரின் மாணவர் ஆராராதன் என்பவர் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த இடம் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றது. "கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் அமைந்துள்ள விஜயமங்கலத்தில் இருக்கும் சந்திரப்பிரப தீர்த்தங்கரர் ஆலயத்தின் முன் மண்டபத்தில் ஒரு தூணில் கீழ்ப்புறமாகக் கிரந்தத்திலும் தமிழிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில், சாமுண்ட ராஜனின் தங்கை புல்லப்பை என்ற பெயருடைய சமணப் பெண்மணி "நிசீதிகை' செய்து கொண்டதாகக் கூறுகிறது. சாமுண்டராஜன் கங்க அரசர்களிடம் அமைச்சராக இருந்தவர். இதில் நோன்பிருந்து உயிர் நீத்த சமணப் பெருமாட்டி புல்லப்பை என்பவரின் குவிந்த கரங்களுடன் தவநிலையில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் திருவுருவமும் காணப்படுகின்றன," என்று விவரித்தார் பேராசிரியர் ரமேஷ். நிசீதிகை - வடக்கிருத்தல் வேறுபாடு "நிசீதிகை' என்றால், சமண நெறியில் உண்ணா நோன்பால் உயிர்விடும் நெறி என்பதாகும். இதை "நிஷிதா' என்றும் அழைப்பர். தமிழகத்தில் கொள்கைக்காகவும் மானத்துக்காகவும் நாணப்பட்டு அரசர்களும் புலவர்களும் வடக்கிருத்தல் என்னும் கோட்பாட்டைக் கடைப்பிடித்து உயிர் துறந்தனர். சமண நெறியைக் கடைப்பிடிக்கும் துறவியரும் உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பார்கள். இவை இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. சமணத் துறவியர் உயிர் துறந்த இடத்தில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் "நிசீதிகை' எனப்படும். உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல் அனசனம்(வடக்கிருத்தல்) ஆகும். சல்லேகனை - இதுவும் உயிர் துறக்க சமண நெறியில் கடைப்பிடிக்கப்படும் ஒரு வகை நோன்பாகும். "தமிழர்களின் வடக்கிருத்தலுக்கும் சமணர்களின் சல்லேகனைக்கும் இருக்கும் ஒற்றுமைகளாகத் துயர் பொறுக்கும் துணிவையும், யாக்கைப் பற்றின்மையையும் அடிப்படைப் பண்புகளாகக் கூறலாம்," என்கிறார் பேராசிரியர் ரமேஷ். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், பெருஞ்சேரலாதன், கபிலர், சேரமான் கணைக்கால் இரும்பொறை ஆகியோர் வடக்கிருந்து உயிர் துறந்தமையைச் சங்க நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது. அதைத் தொடர்ந்து சல்லேகனை வடக்கிருத்தல் குறித்து திருச்சியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பார்த்திபன் பிபிசி தமிழிடன் விவரித்தார். "வடக்கு நோக்கி விரதம் (உண்ணா நோன்பு) இருப்பதை உத்ரக மனம், மகாப் பிரத்தானம் என்று வரலாறு கூறுகிறது. அவமானம், போர்க்களத்தில் தோல்வி, நட்பு கருதி உயிர்நீத்தல், நோக்கம் நிறைவேறாமைக்குப் பொறுப்பேற்றல், கோரிக்கை நிறைவேற, கவனம் உண்டாக்க எனப் பல்வேறு காரணங்களுக்காக இந்த உண்ணா நோன்பிருந்து உயிர்விடும் வழக்கம் தமிழக மக்களிடையே இருந்துள்ளது. சமண மதத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று சல்லேகனை விரதம். உண்ணா நோன்பிருந்து இறக்கும் முறையே சல்லேகனம் எனப்படும். சல்லேகனை என்னும் சொல் ஆரம்பக் காலத்தில் ஆராதனை, நிசீதி என வழங்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் வரும்`வடக்கிருத்தல்' வழக்கமே சல்லேகனையாக வந்திருக்கக்கூடும்," என்றும் பார்த்திபன் தெரிவித்தார். தற்கொலை... சல்லேகனை... ஐங்குறுகாப்பியங்களில் ஒன்று நீலகேசி. அது, நீலகேசி என்னும் பெண், குண்டலகேசி என்னும் பௌத்த பெண்ணிடம் வாதிட்டு வெற்றி பெறுவதாய் அமைந்த ஒரு காப்பியம். அதில் முகமலர்ந்து விரும்பியேற்கும் சாவினை `தற்கொலை' என குண்டலகேசி கூறுகிறது. அதை மறுத்து, உடம்பாகிய சிறையிலிருந்து உயிர் விடுதலையடைய இவ்விரதம் (சல்லேகனை) உதவுகிறதென நீலகேசி கூறுகிறது. இவ்விரதம் இருப்போர் பிறவா நிலையடைவோர் என நீலகேசி கூறுகிறது. 57 நாட்கள் உண்ணாமல் இருந்து உயிர் நீத்த நிசீதிகைக் கல்வெட்டுகள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் திருநாதர்குன்று என்னும் மலைக்குன்று உள்ளது. இக்குன்றின் மேற்குப் பகுதியில் காணப்படும் நிசீதிகைக் (உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர்களின்) கல்வெட்டு ஒன்றில், `ஐம்பத் தேழன சனந் நோற்ற சந்திர நந்தி ஆ சிரிகரு நிசீதிகை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சந்திரநந்தி என்னும் சமண ஆசிரியர் 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து அங்கு உயிர்நீத்துள்ளார். மற்றொரு கல்வெட்டு இளையபத்ரர் என்பவர் 30 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்ததைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி. 5-6ஆம் நூற்றாண்டு. விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில், இரண்டு குன்றுகள் காணப்படுகின்றன. அதில் இரண்டாவது குன்றின் உச்சியில் முருகர் கோவில் அமைந்துள்ளது. குன்றின்மேல் உள்ள முருகர் கோவிலைக் கடந்து குன்றின் உச்சியில் ஒரு பழமையான வட்டெழுத்து நிசீதிகை கல்வெட்டு காணப்படுகிறது. ''நமோத்து பாணாட்டு வசணந்தி சாரி...' எனத் தொடங்கும் இந்தக் கல்வெட்டில் ஆராராதன் என்பவர் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த நீசிதிகை (இடம்) என்று இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தல், அல்லது வடக்கிருத்தல், சல்லேகனை தொடர்பான கல்வெட்டுகள் மற்றும் நடு கற்கள் காணப்படுவதாகக் கூறுகிறார் வரலாற்று ஆர்வலர் பார்த்திபன். https://www.bbc.com/tamil/articles/c1064vjzd0po தியாக தீபங்கள் அன்னை பூபதி, திலீபன் ஆகியோரும் கீழ்வரும் காரணங்களில் ஒன்றிற்காகவே அவமானம், போர்க்களத்தில் தோல்வி, நட்பு கருதி உயிர்நீத்தல், நோக்கம் நிறைவேறாமைக்குப் பொறுப்பேற்றல், கோரிக்கை நிறைவேற, கவனம் உண்டாக்க உண்ணா நோன்பிருந்து உயிர்விட்டனர்.
  20. 'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை நிலைப்பாடுகளை ஏற்கோம் - காஸா மக்கள் தொடர்பான தீர்மானங்கள் எங்கே என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கேள்வி 03 MAR, 2024 | 04:11 PM (நா.தனுஜா) தேசிய பாதுகாப்புக் கரிசனைகளைக் கவனத்திற்கொள்ளும் அதேவேளை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்திருக்கும் இலங்கை, இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதைவிடுத்து, அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்குத் துணைபோகும் சில தரப்பினரின் 'இரட்டை நிலைப்பாடுகளை' தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி காஸாவிலுள்ள மக்களின் நிலைவரம் மோசமடைந்திருக்கும் நிலையில், அதுபற்றிய தீர்மானங்களும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் எங்கே? எனவும் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. அதன்படி நாளை திங்கட்கிழமை (4) இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து ஆராயப்படவுள்ள நிலையில், நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் நேற்று முன்தினம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் வாய்மொழி மூல அறிக்கை வெளியிடப்பட்டது. உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டவரைபை அரசாங்கம் வெளியிட்டிருப்பினும், நம்பத்தகுந்த உண்மையைக் கண்டறியும் செயன்முறைக்கு ஏதுவான சூழல் இலங்கையில் இல்லை எனவும், ஒடுக்குமுறைச்சட்டங்கள் மற்றும் எதேச்சதிகாரப்போக்கிலான நடவடிக்கைகள் மூலம் நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை அடைந்துகொள்ளமுடியாது எனவும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டினார். அதனையடுத்து அவரது அறிக்கை தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தியும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தியும் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணாதிலகவினால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு: அண்மைய காலங்களில் முகங்கொடுத்திருக்கும் சவால்களிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில், நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பக்களின் நிலையான தன்மையைப் பேணும் அதேவேளை, பொருளாதார மீட்சி மற்றும் நல்லிணக்கம் சார்ந்த இலக்குகளில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அதேவேளை பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் நலிவுற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்துறை சார்ந்த விடயங்களில் வழமையான நிலையை அடைந்துகொள்வதில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது. அதேபோன்று மிகத் தீவிர மட்டுப்பாடுகள் இருப்பினும், தேசிய ஒருமைப்பாடு, போரின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான எமது முயற்சிகள் மாற்றமின்றித் தொடர்கின்றன. அத்தோடு ஏற்கனவே நிறுவப்பட்ட உள்ளகப் பொறிமுறைகளின் ஊடாக இவ்விடயத்தில் முன்னேற்றத்தை எட்டுவதில் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதன்படி, உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டவரைபு தொடர்பான கலந்துரையாடல்கள் அரசாங்கம், சிவில் சமூகம், சர்வ மதத்தலைவர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று காணாமல்போனோர் அலுவலகத்துக்கு முதற்கட்டமாகக் கிடைக்கப்பெற்ற 6,025 முறைப்பாடுகளில் 5,221 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1,313 குடும்பங்களுக்கு காணாமல்போனமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதுடன் அது செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் 2028ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக கடந்த ஆண்டு நாடு முகங்கொடுத்திருந்த நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் ஊடாக காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு 42 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகமானது பாராளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்ட பிரத்யேக சட்டத்தின் ஊடாக மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சார்ந்த விவகாரங்களைக் கையாள்வதற்கும், தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குமென ஜனாதிபதி செயலகத்தின்கீழ் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் ஆதாரங்களை திரட்டுவதற்கான வெளியகப் பொறிமுறையை முன்மொழிந்திருக்கும் 46/1 மற்றும் 51/1 ஆகிய இரண்டு தீர்மானங்களையும் நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். ஐக்கிய நாடுகள் சபையானது நிதிநெருக்கடி மற்றும் மனிதவளப்பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய பயனற்ற பொறிமுறைக்கு உறுப்புநாடுகளின் நிதியைப் பயன்படுத்துவது பேரவையின் கோட்பாடுகளுக்கு முரணானதாகும். அதன் நோக்கம் சில நபர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதேயன்றி, அதனூடாக இலங்கை மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிட்டாது. அடுத்ததாக தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் சில உள்நாட்டு சட்டங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டத்தைப் பொறுத்தமட்டில், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரிடமிருந்தும் ஆலோசனைகளை பெற்று அதனைத் திருத்தியமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம், இச்சட்டமூலம் குறித்த தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறது. அடுத்ததாக, அரச சார்பற்ற அமைப்புக்கள் குறித்த சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்களுடன் 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. இவையனைத்தும் இலங்கையில் முன்மொழியப்படும் எந்தவொரு சட்டமூலத்தையும் சவாலுக்குட்படுத்தும் சுதந்திரம் பொதுமக்களுக்கு உண்டு என்பதையே காண்பிக்கிறது. மேலும், தேசிய பாதுகாப்புக் கரிசனைகளைக் கவனத்திற்கொள்ளும் அதேவேளை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டியது அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எமது அண்மையகால நடவடிக்கைகளே அதற்கு சான்றாகும். அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதை விடுத்து, அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு துணைபோகும் சில தரப்பினரின் 'இரட்டை நிலைப்பாடுகளை' எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. காஸாவில் உள்ள மக்கள் தீவிர அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளனர். அவ்வாறிருக்கையில் அது பற்றிய தீர்மானங்களும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் எங்கே? என்று கேள்வி எழுப்பினார். https://www.virakesari.lk/article/177811
  21. Space Race: நிலவில் கால்பதிக்க India, US, China இடையே யுத்தம்? Space X மூலம் போட்டிப்போடும் ElonMusk
  22. பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில் முன்னேற்றம் அவசியம் : வலியுறுத்துகிறது ஐரோப்பிய ஒன்றியம் 03 MAR, 2024 | 03:55 PM (நா.தனுஜா) ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைத் தொடர்ந்து வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் அளிக்கப்பட்ட உத்தரவாதத்துக்கு இலங்கை நன்றி தெரிவித்திருக்கும் அதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் விடயத்தில் மேலும் முன்னேற்றம் எட்டப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 26ஆவது கூட்டம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்திய பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் பயோலா பம்பலோனி ஆகியோர் தலைமையில் கடந்த மாதம் 22ஆம் திகதி ப்ருஸேல்ஸில் நடைபெற்றது. இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை உள்ளடக்கியதாக இரு தரப்பினரும் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி இக்கூட்டத்தின்போது பொருளாதார பாதுகாப்புக் கொள்கை, செயற்கை நுண்ணறிவுசார் கொள்கை, வர்த்தக மற்றும் மனித உரிமைகள் நிலைப்பாடு, சூழலியல் பாதுகாப்பு, உலகளாவிய இணைப்பு உத்தி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்திய - பசுபிக் உத்தி என்பன உள்ளடங்கலாக கடந்த சில வருடங்களில் தாம் பின்பற்றிவந்த முக்கிய கொள்கைகள் மற்றும் சட்டதிட்டங்கள் தொடர்பில் இலங்கை பிரதிநிதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். அதேவேளை பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மீட்சி ஆகியவற்றில் கடந்த ஆண்டு எட்டப்பட்ட முன்னேற்றம் தொடர்பில் இலங்கை பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். அதன்படி, நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும், நலிவடைந்த நிலையில் உள்ளோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குமான நகர்வுகள் இலங்கையால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சி என்பன தொடர்பில் தமது வாழ்த்தினைத் தெரிவித்தனர். அதேபோன்று காலநிலை மாற்ற சவால்களைக் கையாளல், சூழல் நேய சக்திவலு உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப நிலை மாற்றத்துக்கு நிதியளித்தல், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைதல், உள்நாட்டுக் கடன் நெருக்கடியைக் குறைத்தல், பயங்கரவாத குற்றங்கள், தவறான அல்லது போலித்தகவல் அச்சுறுத்தல்கள் என்பன உள்ளடங்கலாக சமகாலத்தில் உலகளாவிய ரீதியில் நாடுகள் முகங்கொடுத்துவரும் சவால்கள் தொடர்பில் இக்கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டது. அதுமாத்திரமன்றி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சர்வதேச சட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு விசேடமாக குறித்துரைக்கப்பட்டது. அடுத்ததாக இவ்வாண்டு நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் தொடர்பில் இலங்கை பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர். குறிப்பாக அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென அவர்கள் உறுதியளித்தனர். அதற்குப் பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், இலங்கை அழைப்பு விடுக்கும் பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவொன்றை அனுப்பிவைப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினர். மேலும், கடந்த மாதம் 6ஆம் திகதி நிகழ்நிலை முறைமையில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை பணிக்குழு கூட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதன்படி, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து மீளாய்வு செய்வதற்கான நடைமுறை தொடர்பில் விளக்கமளித்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், புதிய நடைமுறை அமுலுக்கு வந்தவுடன் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் பயனடையும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் அதனைத் தொடர்ந்து பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டினர். அதற்குப் பதிலளித்த இலங்கை பிரதிநிதிகள், இரு தரப்பினருக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகத் தொடர்புகளை நினைவுகூர்ந்ததுடன் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து வழங்குவது குறித்து அளிக்கப்பட்ட உத்தரவாததத்துக்கு நன்றி தெரிவித்தனர். அதேவேளை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்குரிய கடப்பாடுகள் உரியவாறு பூர்த்திசெய்யப்படுகின்றனவா என ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து கண்காணிக்கும் என அத்தரப்பு பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். அதேவேளை பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தின் ஊடாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கும், அச்சட்ட வரைபை சர்வதேச தராதரங்களுக்கு அமைவாகத் தயாரிப்பதற்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் பற்றி இலங்கை பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். அதனை செவிமடுத்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், இருப்பினும் இவ்விவகாரத்தில் மேலும் முன்னேற்றம் எட்டப்படவேண்டும் என வலியுறுத்தினர். அத்தோடு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரின் விடுவிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சமவாயச் சட்டத்தின் பிரயோகம், காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற உள்ளக சுயாதீனக் கட்டமைப்புக்களின் இயக்கம், பயங்கரவாதத்தை முறியடிப்பதில் ஒத்துழைப்புடன் செயலாற்றல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177810
  23. உலகை வலம் வந்த ஸ்பெயின் பெண் இந்தியாவில் கூட்டு பாலியல் வன்கொடுமை - கணவர் கண்ணெதிரே பயங்கரம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரவி பிரகாஷ் பதவி, ராஞ்சியிலிருந்து, பிபிசி ஹிந்திக்காக 3 மார்ச் 2024, 08:37 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கணவர் கண்ணெதிரே கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தின் தீவிரம் கருதி, மாநில முதல்வர் சம்பாய் சோரன் இந்த முழு விவகாரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜார்க்கண்ட் டிஜிபி அஜய் குமார் சிங், “இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,” என்று தெரிவித்தார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் ஜார்க்கண்டின் காவல்துறை நிர்வாகத்தையும் சட்டம் ஒழுங்கையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் வீடியோவில் கணவன் – மனைவி வேதனை பிரேசிலில் பிறந்த ஸ்பானிய பெண்ணான ஹியானா, அவரது கணவர் ஜான்(இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) உடன் மார்ச் 2ஆம் தேதியன்று காலை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து பயன்படுத்தும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரண்டு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். வீடியோவில், ஹியானாவும் ஜானும் தங்களுக்கு நடந்த சம்பவம் குறித்த தகவல்களை அளித்துள்ளனர். அவர் ஸ்பானிய மொழியில் பேசியுள்ள அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “எங்களுக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. என்னை ஏழு பேர் பாலியல் வல்லுறவு செய்தனர். அவர்கள் எங்களை அடித்து, கொள்ளையடித்தனர். அவர்கள் வேறு எதுவும் செய்யவில்லை, ஏனெனில் அவர்களுக்கு என்னை வல்லுறவு செய்வதே நோக்கமாக இருந்தது. நாங்கள் மருத்துவமனையில் காவல்துறையுடன் இருக்கிறோம். இந்தச் சம்பவம் எங்களுக்கு இந்தியாவில் நடந்தது,” என்று அவர் தெரிவித்துள்ளார். மற்றொரு வீடியோவில் ஜான், “எனது முகம் சேதமடைந்துள்ளது. ஆனால், ஹியானாவின் நிலை என்னைவிட மோசமாக உள்ளது. அவர்கள் என்னை ஹெல்மெட்டால் பலமுறை அடித்தார்கள். அதிர்ஷ்டவசமாக அவள் ஜாக்கெட் அணிந்திருந்தாள். ஆகையால் அவளுக்குக் காயம் சிறிதளவு ஏற்பட்டது,” என்று கூறியுள்ளார். அந்தக் காணொளிகளில், இருவரின் முகத்திலும் பல இடங்களில் காயங்கள் காணப்படுகின்றன. இந்த வீடியோ மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, ஹியானா, “விசாரணையில் சிக்கல்களை உருவாக்கக் கூடும் என்பதால், வழக்கு குறித்த தகவல்களை வெளியிட காவல்துறை மறுக்கிறது” என்று தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தின் அவர் பகிர்ந்துள்ள சுய விவரக் குறிப்பில் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் குடிமக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜான், ஹியானா இருவருமே ஸ்பானிய சுற்றுலாப் பயணிகள். ஜான் ஸ்பெயினில் உள்ள கிரனாடா என்ற கடலோர நகரத்தில் வசிப்பவர். ஹியானா பிரேசிலை சேர்ந்தவர். அனால், அவர் ஸ்பானிய குடியுரிமையைப் பெற்றுள்ளார். இருவரிடமும் ஸ்பானிய பாஸ்போர்ட் உள்ளது. மோட்டார் சைக்கிளில் உலகைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய இந்தக் கணவன்-மனைவி, கடந்த 5 ஆண்டுகளில் 66 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து 1,70,000 கிலோமீட்ட தூரத்தைக் கடந்துள்ளதாக அவர்களது சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன. மோட்டார் சைக்கிளில் ஒன்றாகப் பயணிக்கும் இருவரும் இந்தியாவை தொடர்ந்து நேபாளம் வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிருந்தனர். அவர்களது பயணத்தின்போது, ஜான் - ஹியானா தம்பதி இரான், இராக், இத்தாலி, ஜார்ஜியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைக் கடந்து வந்துள்ளனர். இந்தத் தம்பதி கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் இருந்தனர். ஜார்க்கண்ட் வருவதற்கு முன், அவர்கள் தென்னிந்தியா, காஷ்மீர், லடாக், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்குச் சென்றுள்ளனர். சமூக ஊடகங்களில் அவர்களுக்கு லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தவிர, யூடியூப்பிலும் அவர்கள் பிரபலமாக உள்ளனர். ஜார்க்கண்டில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,RAVI PRAKASH/BBC ஹியானாவும் ஜானும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பிகார் வழியாக நேபாளம் செல்ல வேண்டும் என்பது அவர்களது திட்டமாக இருந்தது. அவர்கள் இருவருமே சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளனர். மார்ச் 1ஆம் தேதி இரவு, அவர் தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற சிறிய கிராமத்தில் சாலையில் இருந்து சிறிது தொலைவில் ஒரு கூடாரம் அமைத்து உறங்கினார்கள். அப்போது சில இளைஞர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தமது மற்ற நண்பர்கள் சிலரை அங்கு அழைத்தனர். அவர்கள் அனைவரும் ஜான், ஹியானாவின் கூடாரத்திற்குள் நுழைந்து ஹியானாவை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். அப்போது, ஹியானா, ஜான் இருவரும் தாக்கப்பட்டனர். ஹியானாவின் குற்றச்சாட்டுப்படி, அவர்கள் அவரை பாலியல் வல்லுறவு செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அவர்களது கூடாரத்தையும் அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் திகிலடைந்த ஜான், ஹியானா இருவரும் தங்களது பொருட்களைச் சேகரித்துக் கொண்டு சாலைக்கு வந்தனர். பிறகு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஹன்ஸ்திஹா காவல் நிலைய போலீசார், இரவு 10:30 மணியளவில் இருவரும் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து விசாரித்தனர். போலீசார் அவரை சரையாஹாட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ஹியானாவுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் கொள்ளை பற்றிய முழு தகவலும் கிடைத்தது. ஸ்பானிய தம்பதியை புரிந்துகொள்வதில் சிரமங்கள் பட மூலாதாரம்,RAVI PRAKASH/BBC தும்கா எஸ்பி பீதாம்பர் சிங் கெர்வார் பிபிசியிடம் பேசியபோது, அவர்களது நிலையைப் பார்த்ததும் ஹன்ஸ்திஹா போலீசார் அவருக்கு ஏதோ தவறு நடந்துள்ளது என்பதைப் புரிந்துகொண்டனர். ஆனால், மொழிச் சிக்கல் காரணமாக அவருடன் நேரடியாகப் பேச முடியவில்லை என்றார். மேலும், “அவர்கள் ஸ்பானிய மொழியில் மட்டுமே பேசினர். அவர்களின் ஆங்கிலம் சிறிதளவே பேசினர். எங்கள் போலீசார் அவர்களிடம் இந்தியில் பேசிக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களுக்கு என்ன ஆனது என்று தொடக்கத்தில் தெரியவில்லை,” என்று தெரிவித்தார். “மருத்துவமனையை அடைந்ததும், கூகுள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் நடந்த முழு சம்பவத்தையும் அவர்கள் போலீசாரிடம் கூறினர். மேலும் குற்றவாளிகளின் தோற்றத்தை விவரித்தனர். நள்ளிரவுக்குப் பிறகு, முழு சம்பவம் பற்றிய தகவலும் கிடைத்தது. நான் சம்பவ இடத்திற்கு விரைந்தேன். போலீசார் சிலரைப் பிடித்தனர். இரவிலேயே குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் விசாரணையின்போது அவர் இந்தச் சம்பவத்தில் தனக்குத் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டதோடு, மற்ற கூட்டாளிகளின் பெயர்களையும் தெரிவித்தார். எஞ்சியவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்கள் குழுக்கள் இதில் ஈடுபட்டுள்ளன,” என்றார் எஸ்பி பீதாம்பர் சிங் கெர்வார். குற்றவியல் சட்டப்பிரிவு 164இன் கீழ் ஸ்பெயின் சுற்றுலாப் பயணியின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு, தும்காவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து கூடாரம் அமைத்துத் தங்கியது குறித்து உள்ளூர் போலீசாருக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட விவகாரம் பட மூலாதாரம்,SCREENGRAB ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ அமித் மண்டல் இந்த விவகாரத்தை எழுப்பி, காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார். முன்னாள் முதல்வரும் பாஜக மாநிலத் தலைவருமான பாபுலால் மராண்டியும் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் குற்றவாளிகளுக்கு தைரியம் அதிகரித்துள்ளதாகவும் இந்தச் சம்பவத்தால் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு ஜார்க்கண்ட் அரசுதான் காரணம் எனவும் அவர் கூறினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ தீபிகா பாண்டே சிங்கும் இது வெட்கக்கேடான சம்பவம் என்று கூறியுள்ளார். மீதமுள்ள குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் உறுதியளித்துள்ளனர். விரைவு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து குற்றவாளிகளை விரைவில் தண்டிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். ஸ்பெயின் தூதரகத்திற்கு தகவல் இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும், இந்தியாவில் உள்ள ஸ்பெயின் தூதரக அதிகாரிகள் ஜார்க்கண்டில் உள்ள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊடக செய்திகளின்படி, தூதரக அதிகாரி ஒருவர் தும்காவுக்கு சென்று பாதிக்கப்பட்ட தம்பதியைச் சந்தித்து முழு வழக்கு பற்றிய தகவல்களைக் கேட்டறிவார். ஜார்க்கண்டில் தினமும் 4க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள். அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஜார்க்கண்ட் காவல்துறையின் இணையதள தரவுகளின்படி, மாநிலத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் நான்கு பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள். மேலும், மாநிலத்தில் 2015 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், அதாவது கடந்த 9 ஆண்டுகளில் மொத்தம் 13,533 வல்லுறவு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கான தண்டனையும் திருப்திகரமாக இல்லை. https://www.bbc.com/tamil/articles/c4nv59gk397o
  24. யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல் ஊர்தி! 03 MAR, 2024 | 05:52 PM மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்கிற சாந்தனின் புகழுடல் ஊர்தி சற்று முன்னர் யாழ்ப்பாணம் வடமராட்சியை சென்றடைந்தது. வவுனியாவில் இன்று (03) காலை 8 மணியளவில் சாந்தனின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சாந்தனின் உடல் வைக்கப்பட்ட ஊர்தியானது ஏ9 வீதியூடாக சென்று, முல்லைத்தீவு, கிளிநொச்சி என பயணித்தது. இதன்போது பொது மக்கள் அஞ்சலிக்காக சாந்தனின் உடல் வைக்கப்பட்டு, தற்போது யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் - நெல்லியடி ஊடாக சாந்தனின் பிறந்த ஊரான உடுப்பிட்டிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, வல்வெட்டித்துறை தீருவிலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இன்று மாலை சாந்தனின் வீட்டுக்கு கொண்டுசெல்லப்படும் அவரது பூதவுடல் நாளை திங்கட்கிழமை (04) எள்ளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவில்லுக்கு மக்கள் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள், இறுதிக் கிரியைகள் நடைபெறும் நாளைய தினம் குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த 24ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கடந்த 28ஆம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். https://www.virakesari.lk/article/177819
  25. சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியை மறித்த பொலிஸாரால் வவுனியாவில் பதற்றம்! 03 MAR, 2024 | 03:12 PM வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று (03) காலை சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை வழிமறித்த போக்குவரத்து பொலிஸார் ஊர்தியின் சாரதியை கைது செய்ய முயற்சித்தமையால் அவ்விடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. சாந்தனின் உடல் இன்று காலை வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்போது சாந்தனின் உடலை தாங்கிய ஊர்தி வவுனியா பழைய பேருந்து நிலையத்தினுள் நுழைந்தது. அவ்வேளை, அங்கு கடமையில் இருந்த பொலிஸார் ஊர்தி அருகே சென்று ஊர்தியினை இவ்விடத்தில் தரித்து நிறுத்த முடியாது. அவ்வாறு தரித்து நிறுத்தினால் சாரதியினை கைது செய்வோம் என கூறியுள்ளனர். அத்தோடு, வாகன சாரதியினையும் வாகனத்தினை விட்டு கீழே இறங்குமாறு தெரிவிக்க, அவ்விடத்தில் பதற்றமான சூழல் நிலவியது. அதன் பின்னர், ஊர்வல ஏற்பாட்டுக் குழுவினர் பழைய பேருந்து நிலையத்திலுள்ள வாகன தரிப்பிடத்தில் ஊர்தியினை தரித்து நிறுத்தி அஞ்சலி நிகழ்வினை நடத்தினர். https://www.virakesari.lk/article/177807

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.