Everything posted by ஏராளன்
-
மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று ஆரம்பம்
பெங்களூரு சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்தது நோயல் செலஞ்சர்ஸ் 05 MAR, 2024 | 03:22 PM (நெவில் அன்தனி) பெங்களூரு, எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற யூபி வொரியர்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையிலான மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியுடன் இரண்டு அணிகளும் தங்களது முதலாம் கட்டப் போட்டிகளை நிறைவுசெய்துள்ளதுடன் பெங்களூருவில் நடைபெற்றுவந்து போட்டிகளும் முடிவுக்கு வந்தன. இன்று முதல் டெல்ஹியில் எஞ்சிய மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். யூபி வொரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா, எலிஸ் பெரி ஆகிய இருவரும் குவித்த அதிரடி அரைச் சதங்கள் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக்கு அடிகோலின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 198 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப விக்கெட்டில் சபினெனி மேகனாவுடன் 50 ஓட்டங்களைப் பகிர்ந்த ஸ்ம்ரித்தி மந்தனா, 2ஆவது விக்கெட்டில் எலிஸ் பெரியுடன் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். ஸ்ம்ரித்தி மந்தனா 50 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களையும் எலிஸ் பெரி 37 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களையும் குவித்தனர். அவர்களை விட மேகனா 28 ஓட்டங்களையும் ரிச்சா கோஷ் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யூபி வொரியர்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அணித் தலைவி அலிசா ஹீலி 55 ஓட்டங்களையும் தீப்தி ஷர்மா 33 ஓட்டங்களையும் பூணம் கெம்னார் 31 ஓட்டங்களையும் பெற்றனர். சமரி அத்தபத்து உட்பட வேறு எவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் சொஃபி டிவைன், சொஃபி மொலிநொக்ஸ், ஜோர்ஜியா வெயாஹாம், ஆஷா சோபனா ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்தப் போட்டியின்போது அலிஸா ஹீலியின் துடுப்பிலிருந்து சிக்ஸாக பறந்த பந்து அனுசரணையாளர்களின் காரின் பின் கதவுக் கண்ணாடியை செதப்படுத்தியது. https://www.virakesari.lk/article/177964
-
அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் அறிக்கை கோரல்
அரசியல்வாதிகள், அரச தரத்திலான அதிகாரிகள் உள்ளிட்ட 150,000இற்கும் அதிகமானோர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை கையளிக்க வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி வரை அவற்றை கையளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய இம்முறை முதல் தடவையாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது. அதற்கமைய, புதிய அதிகாரிகள் மற்றும் தனிநபர் பிரிவினர், புதிய சட்டத்தின் கீழ் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை வழங்க வேண்டியுள்ளது. ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை வழங்குவதற்கான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிருபம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் www.ciaboc.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/294583
-
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டு
சூடோபெட்ரின்: மெத்தபெட்டமைன் தயாரிக்கப் பயன்படும் இந்தப் பொருள் தமிழ்நாட்டுக்குள் எப்படி வருகிறது? பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்ட, அதனை மறுத்திருக்கிறது தமிழக காவல்துறை. போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான கவனம் தமிழ்நாட்டின் மீது திரும்பியிருக்கும் நிலையில், கடும் நடவடிக்கைகள் எடுத்துவருவதாகக் கூறுகிறது தமிழக அரசு. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? கடந்த சில நாட்களுக்கு முன்பாக, மேற்கு தில்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சூடோபெட்ரின் (Pseudoephedrine) என்ற தடைசெய்யப்பட்ட பொருள் 50 கிலோ அளவுக்குக் கைப்பற்றப்பட்டது. மெத்தாஃபெட்டமைன் என்ற போதைப் பொருளைத் தயாரிக்க இந்த சூடோபெட்ரின் உதவும் என்பதால், இவ்வளவு பெரிய அளவில் அந்தப் பொருள் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட மூலாதாரம்,@BJP4TAMILNADU/X எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இருந்து வந்த தகவல்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து தேங்காய்த் தூள் என அனுப்பப்பட்ட பொட்டலங்களில் சூடோபெட்ரின் இருந்ததாக இந்த நாடுகள் தெரிவித்திருந்தன. இதையடுத்துத்தான் சம்பந்தப்பட்ட கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு 45 முறை இதுபோல வெளிநாடுகளுக்கு இந்த போதைப் பொருள் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் பின்னணியில் ஜாபர் சாதிக் என்பவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைத் தேடுவதற்கான பணிகள் துவங்கின. சென்னையில் இருந்த அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸும் விடுக்கப்பட்டது. அவரது 8 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. ஜாபர் சாதிக் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்து வந்த நிலையில், அவரைக் கட்சியைவிட்டு நீக்குவதாக தி.மு.க. அறிவித்தது. அவருடைய சகோதாரர் அ. முகமது சலீம் என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். அவர் வி.சிகவிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இன்னமும் ஜாபர் சாதிக்கும் முகமது சலீமும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் உடனடியாக கையில் எடுத்துக்கொண்டன. முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி. பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இதனை முன்வைத்து ஆளும் கட்சி மீது கடுமையான தாக்குதலை நடத்தினர். எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் அ.தி.மு.க. நடத்தியது. இதன் உச்சகட்டமாக மார்ச் 4ஆம் தேதியன்று சென்னைக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் இதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். "ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் சார்பில், போதைப் பொருட்கள் தங்குதடையின்றி அனைத்து இடங்களிலும் புழங்கிவருகிறது என்பது என் மனதை உருக்கும் கவலை" என்று குறிப்பிட்டார் மோதி. தமிழ்நாடு காவல்துறை கூறுவது என்ன? பிரதமரின் பேச்சுக்கு பதில் சொல்லும் வகையில், கடந்த ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் எவ்வளவு போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் பிடிபட்டன என்பது குறித்த விவரத்தை தமிழக காவல்துறை வெளியிட்டது. காவல்துறை வெளியிட்ட தகவல்களின்படி, போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 470 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மாநிலம் முழுவதும் சேர்த்து 1914 கிலோ கஞ்சா, 2 கிலோ மெத்தபெட்டமைன், வலி நிவாரணியான டெபென்டடால் 100 எம்ஜி மாத்திரைகள் 70, 321 நைட்ரேசன் மாத்திரைகள், 2200 டைடால் மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில், தமிழ்நாட்டின் இரண்டு இடங்களில் மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையினரால் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருப்பதும் நடந்திருக்கிறது. மார்ச் 1ஆம் தேதி அதிகாலை மதுரைக்கு வந்த சேர்ந்த பொதிகை ரயிலில் இருந்து இறங்கிய நபரிடமிருந்து 15 கிலோ பவுடர், 15 கிலோ திரவ வடிவிலான மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. போதைப் பொருளுடன் பிடிபட்ட நபர், சென்னையைச் சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டார். அவர் தந்த தகவல்களின் அடிப்படையில், சென்னையில் இருந்து 3 பொட்டலங்களில் ஆறு கிலோ எடையுள்ள மெத்தபெட்டமைனை கைப்பற்றப்பட்டது. இந்த போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த அவர் திட்டமிட்டிருந்ததாக வருவாய் புலனாய்வுத் துறை கூறியது. மொத்தமாக மதுரையிலும் சென்னையில் மொத்தமாக கைப்பற்றப்பட்ட 36 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைனின் சர்வதேச மதிப்பு 180 கோடி ரூபாய் இருக்கும், என்றும் வருவாய் புலனாய்வுத் துறை குறிப்பிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கைக்கு கடத்தப்பட்ட போதைப் பொருள் இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, மார்ச் ஐந்தாம் தேதி ராமேஸ்வரம் கடல் பகுதியில் இலங்கையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகை வழிமறித்த வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அந்தப் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சாக்குப் பைகளைக் கைப்பற்றியதாகவும் அந்த சாக்குப் பைகளில் இருந்து 99 கிலோ எடையுடைய 111 பாக்கெட்களை எடுத்ததாகவும் தெரிவித்தனர். அந்தப் பாக்கெட்டுகளில் இருந்த பழுப்பு நிற பிசுபிசுப்பான பொருளை ஆய்வு செய்ததில், அது தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான ஹஷீஷ் என்பது தெரியவந்ததாக வருவாய் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. படகிலிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தங்களுக்கு இந்தப் பொருளை பாம்பனில் இருந்த ஒருவர்தான் தந்து, இலங்கையைச் சேர்ந்த ஒருவரிடம் தரச் சொன்னதாக கூறியதையடுத்து, அந்த நபரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து நடந்த விசாரணைகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட இந்த போதைப் பொருள் இலங்கைக்குக் கடத்தப்படுவதற்காக இங்கே கொண்டுவரப்பட்டதாக வருவாய் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. போதைப் பொருள் பயன்பாடு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதா? தமிழ்நாட்டில் போதைப் பொருள் அதிகரித்துள்ளதா, இல்லையா என்பதைச் சொல்லும் வகையில் நடப்பு வருடத்திற்கான புள்ளிவிவரங்கள் ஏதும் இதுவரை பதிப்பிக்கப்படவில்லை. 2022ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் தான் மிக சமீபத்திய புள்ளிவிவரம். மதுவிலக்குத் துறையின் 2023-24ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்புகளின்படி பார்த்தால், 2022ஆம் ஆண்டு 10,665 வழக்குகள் இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. 28,383 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. 63,848 மாத்திரைகள் பிடிபட்டுள்ளன. 98 கிலோ இதர போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளன. 2022ஆம் ஆண்டில், கஞ்சாவைத் தவிர்த்த பிற பொருட்கள் மிகக் குறைவாகவே பிடிபட்டுள்ளன. ஓபியம் அடிப்படையிலான ஹெராயின் 21 கிலோ 360 கிராமும், கொக்கையின் 104 கிராமும் சூடோஎஃபிட்ரின் 27 கிலோவும் எல்.எஸ்.டி. 1 கிலோ 640 கிராமும் மெதாபெட்டமைன் 18 கிலோ 111 கிராமும் பிடிபட்டுள்ளன. தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறதா என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். "சூடோஎஃபிட்ரின் கடத்தப்படுவது பல காலமாக நடந்துவருகிறது. சூடோஎஃபிட்ரின் என்பது ஒரு மருந்துப் பொருள். அது இருமல் மருந்துகளில் சேர்க்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனை தனி மனிதர்கள் யாரும் தயாரிக்க முடியாது. மருந்து நிறுவனங்கள்தான் தயாரிக்க முடியும். இந்திய அளவில் எந்தெந்த மருந்து நிறுவனங்கள் இதனைத் தயாரிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்." "அங்கிருந்து கசியும் மருந்துகள்தான் இப்படி கடத்தப்படுகின்றன. இந்த சூடோஎஃபிட்ரினை வைத்துத்தான் மெத்தபெட்டமைன் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கஞ்சாதான் அதிகம் பிடிபடும் போதைப் பொருளாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அதீதமான அளவில் திடீர் அதிகரிப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை" என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர். ஆனால், கடந்த சில நாட்களில் போதைப் பொருள் தொடர்பாக வெளியாகும் செய்திகளை வைத்துப் பார்த்தால், தமிழ்நாட்டில் திடீரென போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்ததைப் போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஆளும்கட்சி உடனடியாக சேதத் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியது. அரசு கூறுவது என்ன? நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்து இதுதொடர்பாக விளக்கமளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, குஜராத்தில்தான் போதைப் பொருள் அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்டார். "தமிழ்நாட்டில் கஞ்சா விளைவிக்கப்படுவதில்லை. ஆந்திர மாநிலத்தில் விளைகிறது. அந்த மாநில டிஜிபியுடன் பேசி அதனைத் தடுக்க முயற்சித்து வருகிறோம். கடந்த ஆட்சியில் அமைச்சரே கஞ்சா வியாபாரத்திற்கு ஆதரவாக இருந்தார். இப்போது அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. " "2019இல் 11,418 கிலோ கஞ்சாவும் 2020இல் 15,144 கிலோ கஞ்சாவும் 2021இல் 20,431 கிலோ கஞ்சாவும் 2022இல் 28,383 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தவிர, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடி, செங்கல்பட்டு, பெரம்பலூர் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒரு கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள்" என்று குறிப்பிட்ட அமைச்சர் ரகுபதி, அவர்கள் பா.ஜ.கவில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை வாசித்தார். மேலும், குஜராத்தில்தான் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கிடையில் சில குறிப்பிட்ட ரக மருந்துகளை வாங்கி போதைப் பொருளாக பயன்படுத்துவதைத் தடுக்க சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, X, H, H1 ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் மருந்துகளை விற்கக்கூடிய மருந்துக் கடைகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு சிசிடிவிகளை பொருத்த வேண்டுமெனக் கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/ckmv0mz33v7o
-
மின் கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு - முழுமையான விபரம் இதோ!
மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணம் குறைப்பு! மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணத்தை 3000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க நேற்று (05) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், மின் இணைப்பு மீளமைக்கப்படும் போது வாடிக்கையாளர்கள் செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் குறைக்கப்பட்டதால், தற்போது 30 யூனிட் பயன்படுத்தும் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய தொகை 540 ரூபாயிலிருந்து 390 ரூபாயாக குறைந்துள்ளது. 60 யூனிட்களை பயன்படுத்தும் ஒருவர் செலுத்த வேண்டிய தொகை ஒருவர் 1,620 ரூபாயிலிருந்து 1,140 ரூபாயாக குறைந்துள்ளது. 90 யூனிட்களை பயன்படுத்தும் ஒருவர் செலுத்த வேண்டிய தொகை, 3,990 ரூபாயிலிருந்து 2,800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 120 யூனிட் பயன்படுத்தியவருக்கு கட்டணம் 6,460 ரூபாயில் இருந்து, 4,900 ரூபாயாக குறையும் என தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/294549
-
ஹெய்ட்டியில் சிறை மீது ஆயுதகும்பல் தாக்குதல் - 3000க்கும் அதிகமானகைதிகள் தப்பியோட்டம்
ஹைதி: ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி, நாட்டை கலங்கடிக்கும் கேங்ஸ்டராக மாறிய கதை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜிம்மி 'பார்பெக்யூ' செரிசியர் 6 மார்ச் 2024, 04:51 GMT புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் ஹைதி நாட்டில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் நாட்டையே கலங்க வைக்கும் தாதாவாக மாறி அச்சுறுத்தி வருகிறார். அவரது பெயர் ஜிம்மி செரிசியர். ஹைதியில் தொடரும் வன்முறையின் காரணமாக அந்நாட்டு அரசாங்கம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. நாட்டின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்தும் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள், ஹைதி பிரதம மந்திரி ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்தத் தலைவர்களில் ஒருவர்தான் ஜிம்மி செரிசியர். இவர் 'பார்பெக்யூ' என்றும் அழைக்கப்படுகிறார். ஹைதியின் வன்முறை நிகழ்வுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஜி-9 அண்ட் ஃபேமிலி (G-9 and Family) என்ற மிகவும் சக்திவாய்ந்த ஆயுதக் குழுவின் தலைவர் இவர். சனிக்கிழமையன்று நாட்டின் பிரதான சிறைக்குள் நுழைந்த ஆயுதக் குழுக்கள், 3,700க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்த பின்னர் இந்த வன்முறை புதிய நிலைகளை எட்டியது. அந்தத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பிரதான சிறைச்சாலை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஹைதி நாட்டில் 2020ஆம் ஆண்டு முதல் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலைக்கு மற்றொரு சாட்சியாகும். நாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஆயுதக் குழுக்கள் முன்னெடுத்த போர், நாட்டில் வன்முறை பரவ அடிப்படையாக செயல்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஹைதியில் இப்போது பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸின் 80% நிலப்பரப்பை ஆயுதக் குழுக்கள் கட்டுப்படுத்துகின்றன. தலைநகரை ஆளும் ஆயுதக்குழுக்கள் ஜூலை 7, 2021 அன்று அதிபர் ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டது மிகவும் தீவிரமான தருணங்களில் ஒன்றாகும். இது அரசு நிர்வாகத்தில் ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது, அது இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளது. தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸின் 80% நிலப்பரப்பை இந்த ஆயுதக் குழுக்கள் கட்டுப்படுத்துகின்றன. வெவ்வேறு செய்தி அறிக்கைகளின்படி, சிறைச்சாலை மீதான இவர்களின் சமீபத்திய தாக்குதலின் நோக்கம், அதிபர் மொய்ஸின் மரணத்திற்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்த பிரதமர் ஹென்றி பதவி விலக வேண்டும் என்பதாகும். தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஹென்றி வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இன்றுவரை நடத்தப்படாததால் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. "ஹைதி தேசிய காவல்துறை மற்றும் ராணுவம் தங்கள் பொறுப்பை ஏற்று பிரதமர் ஏரியல் ஹென்றியை கைது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மீண்டும் சொல்கிறோம், மக்கள் எங்கள் எதிரி அல்ல. ஆயுதக் குழுக்களின் நோக்கம் மக்களுக்கு எதிராக செயல்படுவது அல்ல" என்று சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு செய்தியில் செரிசியர் கூறினார். ஆயுதக் குழு தலைவரான செரிசியர் கடந்த காலத்தில் ஹென்றியின் அரசாங்கத்திடம் பொது மன்னிப்பு கோரியிருந்தார். தனது குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். முன்னாள் போலீஸ் அதிகாரியான செரிசியர், சமீபத்திய ஆண்டுகளில் ஹைதியை உலுக்கி வரும் ஒரு முன்னணி ஆயுதக் குழுவின் தலைவராக மாறியுள்ளார். நாட்டின் வன்முறை அலைக்கு பின்னால் ஒரு முக்கிய புள்ளியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் கூற்றுப்படி, ஹைதியில் நடக்கும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு இவரே பொறுப்பு. இந்த காரணத்திற்காக, அமெரிக்காவும் ஐ.நாவும் இவர் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளன. அதிபர் மொய்ஸின் மரணத்திற்குப் பிறகு, நாட்டின் 'ஊழல்' அரசியல்வாதிகளுக்கு எதிரான புரட்சியை ஊக்குவிப்பதில் செரிசியர் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளார். அவரது விருப்பமான வழிகளில் ஒன்று சமூக வலைதளங்கள். தனது குழுவின் செய்தியை உலகுக்கு அறிவிக்க மட்டுமல்லாமல், அவரது ஆயுத குழுவுக்கு புதிய உறுப்பினர்களை ஈர்க்கவும் அது உதவுகின்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES காவல்துறை அதிகாரி முதல் கேங்ஸ்டர் வரை 'பார்பெக்யூ' என்ற அவரது புனைப்பெயருக்கான காரணம் என்ன என்பதே முதல் கேள்வியாக இருக்கும். அவரது அம்மா தெருவில் கோழி விற்றதே இதற்கு காரணம் என்று அவர் பேட்டிகளில் கூறியுள்ளார். ஆனால் ஹைதி வன்முறைகளை நேரில் கண்ட சில சாட்சிகளின் கூற்றுப்படி, அவர் பொதுவாக பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் உடல்களை எரிப்பதால் தான் இந்த புனைப்பெயர் வந்துள்ளது. ஒரு போலீஸ் அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய செரிசியர் இன்று ஜி-9 அண்ட் ஃபேமிலி என்ற குழுவின் தலைவராக உள்ளார். உலகின் அதிக வன்முறைகள் நிகழும் நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஹைதியின் மிகவும் ஆபத்தான ஆயுதக் குழுக்களின் கூட்டணி தான் இந்த ஜி-9 அண்ட் ஃபேமிலி. 2021ஆம் ஆண்டில் 17 அமெரிக்க மற்றும் கனேடிய மிஷனரிகளைக் கொண்ட குழுவைக் கடத்தியது உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் இந்த குழு ஈடுபட்டுள்ளது. 400 மாவோஸோ போன்ற சக்திவாய்ந்த குற்றவியல் அமைப்புகளுடன் இணைந்து செரிசியர் இதைத் தொடர்ந்து செய்து வருகிறார். ஏறக்குறைய 47 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதியின் தலைநகரில் பிறந்தார் செரிசியர். அவருக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடைகளோ அல்லது அவரது நாட்டில் உள்ள எந்த அதிகார அமைப்போ அவரது நடவடிக்கைகளை இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. செரிசியரின் குற்றவியல் வாழ்க்கை, அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தபோது தொடங்கியது. நவம்பர் 2017இல், போர்ட்-ஓ-பிரின்ஸ் நகருக்கு அருகில் இருந்த கிராண்ட் ரவைன் பகுதியில் மாஃபியாக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நடவடிக்கையில் பொதுமக்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இதில் செரிசியரின் பங்கு இருந்ததாக கூறப்பட்டது. அந்த தருணத்திலிருந்து, நாட்டில் செயல்படும் ஆயுதக் குழுக்களுடனான அவரது உறவும் தொடங்கியது. தொடக்கத்தில் டெல்மாஸ் 6 என்ற குழுவின் முக்கிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரானார். உள்ளூர் மற்றும் சர்வதேச அறிக்கைகளின்படி, செரிசியர் அந்த கும்பலிடமிருந்து அதிகாரத்தைப் பெற முடிந்தது. காவல்துறை செல்வாக்கு மற்றும் மொய்ஸின் அரசாங்கத்தின் உதவிகளும் அதற்கு காரணம். ஒரு போலீஸ் அதிகாரியாக அவர் சில அட்டூழியங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது, அதற்காக அவர் மீது சர்வதேச அமைப்புகள் சில தடைகளை விதித்தன. போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே நடந்த லா சலின் படுகொலையில் ஈடுபட்ட அதிகாரிகளில் இவரும் ஒருவர் என்று ஐ.நாவும் அமெரிக்காவும் சுட்டிக்காட்டியுள்ளன. அரசுக்கு எதிராக லா சலின் மக்கள் நடத்திய போராட்டத்தில், போலீஸ் மற்றும் குற்றவியல் குழுக்களின் ஒருங்கிணைந்த தாக்குதலால் பலர் கொல்லப்பட்டனர். உள்ளூர் மக்களின் போராட்டத்தை அடக்கவே இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டது என அமெரிக்கா கூறியது. அப்போது குறைந்தது 71 பேர் இறந்தனர். ஆனால் செரிசியர் எப்போதும் போல அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். பட மூலாதாரம்,REUTERS 'ஜி-9 அண்ட் ஃபேமிலி' உருவானது எப்படி? "நான் ஒரு கேங்க்ஸ்டர் அல்ல, நான் ஒருபோதும் அப்படி நடந்து கொள்ள மாட்டேன்," என்று அவர் செய்தி நிறுவனமான அல்-ஜசீராவிடம் 2021இல் ஒரு நேர்காணலில் கூறினார். "இது நான் எதிர்த்துப் போராடும் அரசு அமைப்பு செய்யும் வேலை. அந்த அமைப்பு பணத்தின் மூலம் ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறது. நான் ஒரு கேங்க்ஸ்டர் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்” என்று அவர் கூறியிருந்தார். 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில், போர்ட்-ஓ-பிரின்ஸின் சில இடங்களில் நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களில் செரிசியருக்கு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. "காவல்துறையை விட குற்றக் கும்பல்களிடம் சிறப்பான ஆயுதங்கள் உள்ளன. அதிகாரிகளின் ஆதரவும் அவர்களுக்கு உள்ளது" என்று ஹைதியின் 'மனித உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய கூட்டமைப்பின்' இயக்குநர் பிபிசியிடம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆயுத பலம் மற்றும் அதிகார பலத்துடன், போர்ட்-ஓ-பிரின்ஸின் பிராந்தியக் கட்டுப்பாட்டிற்கான போரைத் தொடங்கினார் செரிசியர். அங்கு தொடர்ச்சியான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. அது தலைநகரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பயங்கரவாதத்தை பரப்பியது. ஹைதியில் மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பின் தகவல்படி, செரிசியர் மற்றும் அவரது ஆயுதக் குழுக்கள் மக்களைக் கொல்வதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, அவர்களின் குடியிருப்புகளை தீயிட்டு எரிப்பதிலும் கவனம் செலுத்தியது. ஜூன் 2020 வரை நிலவிய அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, ஒன்பது ஆயுதக் குழுக்களை ஒன்றிணைத்தார் செரிசியர். அதற்கு ஜி-9 அண்ட் ஃபேமிலி என்று பெயரிட்டார். இந்த அறிவிப்பை தனது யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டார். ஆனால் 2021இல் அதிபரின் படுகொலை அவரது அமைப்புக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. சர்வதேச ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அதுவரை அவருக்கு கிடைத்த அரசாங்க பாதுகாப்பை இழக்க வழிவகுத்தது. இன்சைட் கிரைம் போர்ட்டல் தளத்தின் தகவலின் படி, மொய்ஸின் கொலைக்கு முன், ஜி-9 இன் நிதியில் 50% அரசாங்கப் பணத்திலிருந்து வந்தது, 30% கடத்தல்களிலிருந்து வந்தது, மீதமுள்ள 20% மிரட்டி பணம் பறித்தல் மூலம் திரட்டப்பட்டது. அதிபர் படுகொலைக்குப் பிறகு, அரசாங்க நிதியுதவி 30% குறைந்தது. இந்த வீழ்ச்சி தான் நாட்டின் அரசியல் கட்டுப்பாட்டை மரபுரிமையாகக் கொண்ட மக்களுக்கு எதிரான தனது போரைத் துவங்க செரிசியரைத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இந்த வார இறுதியில் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பிரதான சிறைச்சாலைக்குள் ஆயுதக் குழுக்கள் படையெடுத்ததை அடுத்து ஹைதியில் நிலைமை மோசமாக உள்ளது. ஹைதி பிரதமர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மொய்ஸின் படுகொலைக்குப் பிறகு பிரதமராகப் பதவி ஏற்றார் ஹென்றி. 2021 அக்டோபரில், அவர் ஒரு நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த சென்ற போது பலவந்தமாக தடுத்து நிறுத்தப்பட்டார். ஏனெனில் செரிசியரின் ஆயுதக்குழு உறுப்பினர்கள் அப்போது திடீரென்று தோன்றி பிரதமரை நோக்கி சுட்டனர். வெள்ளை நிற உடையை அணிந்துகொண்டு, சுற்றி ஆயுதமேந்திய நபர்கள் நிற்க, தலைவர் செரிசியர் அதே நினைவுச்சின்னத்தில் மலர் மாலையை வைத்து அஞ்சலி செலுத்தினார். இது நாட்டில் அவருக்கு இருந்த அசாதாரணமான சக்தியை வெளிப்படுத்தியது. நாட்டின் எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக நாசவேலை நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக செரிசியர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஹென்றியின் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையாக செரிசியரின் ஆட்கள் பெட்ரோல் ஏற்றிச் செல்லும் பல வாகனங்களை தடுத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு ஹைதியில் நிலைமையை மேலும் மோசமாக்கியது. அவரது ஜி-9 குழு, எதிரி குழுவான ஜி-பெப் உடன் தொடர்ந்து போரிட்டு வருகிறது. படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அதிபர் மொய்ஸை சில கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வந்தன. அந்த கட்சிகளுடன் ஜி-பெப் குழுவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இரு குழுக்களிடையே நடக்கும் துப்பாக்கிச் சூடு மற்றும் போர்கள் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டன. தொலைதூர கிராமங்களில் இருந்து தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் வரை இந்த சண்டைகள் பரவியுள்ளன. இத்தகைய சண்டைகள் அவர்களின் வட்டத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாது, புதிய உறுப்பினர்களை ஈர்க்கவும் உதவுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆயுதக் குழு தலைவராக மாறுவதற்கு முன்பு ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தார் செரிசியர். யூடியூப் மூலம் உத்தரவுகள் போர்ட்-ஓ-பிரின்ஸின் தெருக்களில் இருப்பது போலவே சமூக வலைத்தளங்களிலும் மிகுந்த செல்வாக்கை பெற்றுள்ளார் செரிசியர். "ஹைதியில் சமூக வலைத்தளங்களின் உதவி இல்லாமல் கொள்ளைக்காரர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்க முடியாது. இந்த நாட்டில் எப்போதும் குற்றவாளிகள் இருந்திருக்கிறார்கள், ஆனால் இந்த தளங்கள் இல்லாமல் அவர்கள் பிரபலமாக மாறியிருக்க முடியாது" என்று அயிதி டேமேன் என்ஜிஓ அமைப்பின் இயக்குனர் யுவன்ஸ் ரம்போல்ட் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் கூறினார். செரிசியர் தனது திட்டத்தை செயல்படுத்த சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினார். அவர் தனது யூடியூப் வீடியோக்களை ஜி-9 குழுவின் உருவாக்கத்தை பற்றித் தெரிவிக்க மட்டும் பயன்படுத்தவில்லை, ஹைதியின் தற்போதைய பிரதம மந்திரியை கைது செய்யும்படி காவல்துறைக்கு வீடியோ மூலம் கோரிக்கை வைத்தார். யூடியூப் மட்டுமல்லாது எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்) நாட்டைக் கைப்பற்றவும் தற்போதைய ஆளும் வர்க்கத்தை அகற்றவும் வலுவான அழைப்புகளை விடுத்துள்ளார். தனது யூடியூப் சேனலில் ஒரு நேர்காணலில் சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவம் பற்றி பேசினார் செரிசியர். "இந்த தொழில்நுட்பங்களை உருவாக்கியவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். நேரடியாக பொதுமக்களை அணுகி நாம் யார் என்பதை கூற தொழில்நுட்பம் வாய்ப்பளிக்கிறது. நான் பொய்களை கூறவில்லை," என்று அந்த நேர்காணலில் பேசியிருந்தார். மேலும், "நான் யார் என்று நான் தான் சொல்ல வேண்டும். அவர்கள் என்னைப் பற்றி சொன்னதில் 99 சதவிகிதம் பொய்கள் தான். என்னை தற்காத்துக் கொள்ள தொழில்நுட்பங்கள் எனக்கு நல்ல வாய்ப்பை அளித்துள்ளன" என்று கூறியிருந்தார் செரிசியர். https://www.bbc.com/tamil/articles/cn0wx0xq3q4o
-
45 போலி நோட்டுகளுடன் ஒருவர் கைது; பொத்துஹரவில் சம்பவம்!
06 MAR, 2024 | 10:28 AM பொத்துஹர பிரதேசத்தில் 5000 ரூபா பெறுமதியான 45 போலி நோட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை சோதனையிட்டபோதே அவரிடமிருந்து இந்த போலி நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொல்பிதிகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார். இவர் ஏற்கனமே பணம் அச்சடிக்கும் இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. https://www.virakesari.lk/article/178035
-
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தேர்தல் பத்திரம்: அவகாசம் கேட்ட எஸ்.பி.ஐ - தேர்தலுக்கு முன் ஊழலை மறைக்கும் முயற்சி என குற்றச்சாட்டு பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்குமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திங்கட்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. இந்தச் செயல்முறை 'மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும்' பணி என்று கூறிய எஸ்பிஐ கால அவகாசத்தை நாடியது. ஆனால் ஜூன் 30ஆம் தேதிக்குள் நாட்டில் மக்களவை தேர்தல் முடிந்துவிடும். தேர்தல் பத்திரம் அரசமைப்பிற்கு விரோதமானது என்று கூறி உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பிரிவு கடந்த மாதம் அதை ரத்து செய்தது. ஏப்ரல் 12, 2019 முதல் அன்று வரையில் விற்கப்பட்ட பத்திரங்களின் விவரத்தை 2024 மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்குமாறு தேர்தல் பத்திரங்களை விற்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் பத்திரங்களைப் பெயர் குறிப்பிடாமல் வைத்திருப்பது தகவல் அறியும் உரிமை மற்றும் பிரிவு 19 (1) (ஏ) ஆகியவற்றை மீறுவதாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் வேறு சில ஏற்பாடுகளைச் செய்யும் முறையை ஊக்குவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அப்போது கூறியிருந்தார். பத்திரங்கள் பற்றிய தகவலைத் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் மார்ச் 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறை. இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. இதை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். தாங்கள் விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தனது பெயரைக் குறிப்பிடாமல் நன்கொடை அளிக்கலாம். மோதி அரசு 2017இல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டம் 2018 ஜனவரி 29ஆம் தேதி அரசால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES எஸ்பிஐ என்ன சொன்னது? ’ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ இது தொடர்பாக திங்கள்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிக்க விரும்புவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் தரவுகளை டிகோடிங் செய்வது மற்றும் அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அதைப் பூர்த்தி செய்வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்கக் கடுமையான வழிகள் பின்பற்றப்பட்டுள்ளன. இப்போது நன்கொடையாளர்கள் பற்றிய தகவல்களையும் அவர்கள் எவ்வளவு தொகைக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள் என்ற தகவலையும் பொருத்திப் பார்ப்பது ஒரு சிக்கலான செயல்முறை என்று அது குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை 2018 ஜனவரி 2ஆம் தேதி வெளியிடப்பட்டது என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிக்கை 2018ஆம் ஆண்டு மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டம் தொடர்பானது. அங்கீகரிக்கப்பட்ட வங்கி, எல்லா சூழ்நிலைகளிலும் தேர்தல் பத்திரம் வாங்குபவரின் தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று அதன் விதி 7 (4)இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றம் இந்தத் தகவலைக் கேட்டாலோ அல்லது குற்றவியல் வழக்கில் புலனாய்வு அமைப்புகள் இந்தத் தகவலைக் கேட்டாலோ மட்டுமே வாங்குபவரின் அடையாளத்தைப் பகிர முடியும். “தேர்தல் பத்திரம் வாங்குபவர்களின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்கும் வகையில் பத்திரங்களின் விற்பனை மற்றும் அதைப் பணமாக்குவது தொடர்பான விரிவான நடைமுறையை வங்கி தயாரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் இவை பின்பற்றப்படுகின்றன," என்று வங்கி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES "எங்கள் எஸ்ஓபியின் பிரிவு 7.1.2இல் தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் கேஒய்சி தகவல்களை சிபிஎஸ் (கோர் பேங்கிங் சிஸ்டம்) இல் உள்ளிடக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் கிளையில் விற்கப்படும் தேர்தல் பத்திரங்களின் மைய தரவு ஒரே இடத்தில் இல்லை. அதாவது வாங்கியவரின் பெயர், பத்திரத்தை வாங்கிய தேதி, வழங்கப்பட்ட கிளை, பத்திரத்தின் விலை மற்றும் பத்திரத்தின் எண் போன்ற விவரங்கள். இந்தத் தரவு எந்த மைய அமைப்பிலும் இல்லை,” என்று வங்கி தெரிவித்தது. "பத்திரம் வாங்குபவர்களின் அடையாளம் ரகசியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக, பத்திர வழங்கல் தரவு மற்றும் பத்திரத்தைப் பணமாக்கிய தரவு ஆகிய இரண்டும் தனித்தனி இடங்களில் பராமரிக்கப்படுகின்றன மற்றும் எந்த மைய தரவுத்தளமும் பராமரிக்கப்படவில்லை." ”தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட கிளைகளில் அதை வாங்கியவர்களின் தகவல்கள் சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்படும். பின்னர் இந்த சீல் செய்யப்பட்ட கவர்கள் மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் பிரதான கிளைக்குக் கொடுக்கப்படும்.” மைய தரவு இல்லை பட மூலாதாரம்,GETTY IMAGES “ஒவ்வொரு அரசியல் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் ஏதேனும் ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்தக் கணக்கில் மட்டுமே அந்தக் கட்சி பெற்ற தேர்தல் பத்திரங்களை டெபாசிட் செய்து பணமாக்க முடியும். பணமாக்கலின்போது, அசல் பத்திரம், பே-இன் ஸ்லிப் ஆகியவை சீல் செய்யப்பட்ட கவரில் மும்பையில் உள்ள எஸ்பிஐ கிளைக்கு அனுப்பப்படும்," என்று வங்கி குறிப்பிட்டது. "அத்தகைய சூழ்நிலையில், இரண்டு தகவல் தொகுப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாகச் சேமிக்கப்பட்டன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது அவற்றைப் பொருத்துவது, அதிக நேரம் தேவைப்படும் பணியாக இருக்கும். பத்திரங்களை யார் வாங்கினார்கள் என்பது பற்றிய தகவலை வழங்க ஒவ்வொரு பத்திரத்தின் வெளியீட்டு தேதியுடன் நன்கொடையாளர் வாங்கிய தேதியைப் பொருத்த வேண்டும்”. ''இது ஓரிடத்தின் தகவலாக இருக்கும். அதாவது பத்திரம் வழங்கப்பட்டதா, யார் வாங்கினார்கள் என்ற தகவல் இருக்கும். இரண்டாவது தகவல் தொகுப்பு பின்னர் வரும். அதாவது இந்தப் பத்திரங்களை அரசியல் கட்சி அதன் அங்கீகரிக்கப்பட்ட கணக்கில் பணமாக்கியிருப்பது தொடர்பான தகவல்கள். பின்னர் வாங்கப்பட்ட பத்திரங்கள் பற்றிய தகவலை பணமாக்கப்பட்ட பத்திரங்கள் பற்றிய தகவலுடன் நாங்கள் பொருத்த வேண்டும்." கால அவகாசத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாக வாதிட்ட எஸ்பிஐ, “எல்லா இடங்களில் இருந்தும் தகவல்களைப் பெறுவது மற்றும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் உள்ள தகவல்களைப் பொருத்துவது என்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாக இருக்கும். தகவல்கள் வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளன," என்று கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2019ஆம் ஆண்டில், தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள். "பத்திர எண் போன்ற சில தகவல்கள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வாங்குபவரின் பெயர், கேஒய்சி போன்ற பிற விவரங்கள் ஆவண வடிவில் சேமிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் பத்திரங்களை வாங்குபவர்களின் அடையாளம் எந்த வகையிலும் வெளிப்படுத்தப்படக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்.” அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. “ஒவ்வொரு கட்டத்தின் முடிவிலும், பணமாக்கப்பட்ட பத்திரங்கள் சீல் செய்யப்பட்ட உறைகளில் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கிளைகளால் மும்பை பிரதான கிளையிடம் ஒப்படைக்கப்படும். இரண்டு வெவ்வேறு தரவுத் தொகுப்புகள் இருப்பதால் நாங்கள் 44,434 செட் தகவல்களை டிகோட் செய்ய வேண்டும், பொருத்திப் பார்த்து அவற்றை ஒப்பிட வேண்டும்," என்று வங்கி கூறியது. "எனவே பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பில் நிர்ணயம் செய்யப்பட்ட மூன்று வார கால அவகாசம், முழு செயல்முறையையும் முடிக்கப் போதுமானதாக இருக்காது. மேலும் உத்தரவைக் கடைப்பிடிக்க எங்களுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம்," என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் வரை கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவை சிலர் விமர்சித்து வருகின்றனர். நாட்டில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செய்யப்படுகிறது என்பது அவர்களது வாதம். 'தேர்தலுக்கு முன் ஊழலை மறைக்க முயற்சி' பட மூலாதாரம்,GETTY IMAGES "பத்திரங்கள் வாங்கப்பட்டது மற்றும் அதைப் பணமாக்கியது ஆகிய இரண்டு தகவ்ல்களுமே சீல் செய்யப்பட்ட உறைகளில் மும்பை கிளையில் உள்ளன. இந்த விவரம் வங்கி சமர்ப்பித்துள்ள வாக்குமூலத்தில் உள்ளது. எனவே வங்கி உடனே இந்தத் தகவல்களை ஏன் வெளியிட முடியாது?" என்று ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ், ’எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "22,217 பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்களை, பணமாக்கல் விவரங்களுடன் பொருத்த நான்கு மாத கால அவகாசம் தேவை என்று வங்கி கூறுவது முட்டாள்தனமானது,” என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். நன்கொடையாளர்களின் தகவல்களைத் தெரிவிக்க எஸ்பிஐ, தேர்தலுக்குப் பிறகு வரை கால அவகாசம் கேட்பது, ’தேர்தலுக்கு முன்பு வரை மோதியின் உண்மையான முகத்தை மறைக்கும் கடைசி முயற்சி’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பட மூலாதாரம்,SCREENGRAB “நன்கொடை வியாபாரத்தை மறைக்க நரேந்திர மோதி தனது முழு பலத்தையும் பயன்படுத்தியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் குறித்த உண்மையைத் தெரிந்து கொள்வது நாட்டு மக்களின் உரிமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் இந்தத் தகவலை தேர்தலுக்கு முன் பகிரங்கப்படுத்தக் கூடாது என்று எஸ்பிஐ ஏன் விரும்புகிறது?” என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே கிளிக்கில் பெறக்கூடிய தகவல்களுக்காக ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கேட்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு சுதந்திர அமைப்பும் 'மோதானி குடும்பமாக' மாறி அவரது ஊழலை மறைக்க முயல்கின்றன. தேர்தலுக்கு முன் மோதியின் ’உண்மையான முகத்தை’ மறைக்க இது ‘கடைசி முயற்சி’ என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார். எஸ்பிஐயின் மனு குறித்து அதிருப்தி தெரிவித்த சிபிஐஎம் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி "இது நீதியைக் கேலி செய்வதாகும். மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வையும் மோதியையும் காப்பாற்றவே எஸ்.பி.ஐ கூடுதல் காலஅவகாசம் கேட்கிறதா?” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேர்தல் பத்திரங்கள் குறித்துப் பல செய்தியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் எஸ்பிஐயின் இந்தத் தேர்தல் பத்திரங்களில் ஒரு ரகசிய எண் இருப்பதாகவும், அதன் மூலம் அவற்றை அடையாளம் காண முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த அறிக்கையின் இணைப்பைப் பகிர்ந்த சீதாராம் யெச்சூரி, “இப்படி இருக்கும் பட்சத்தில் எஸ்பிஐ ஏன் கூடுதல் அவகாசம் கோருகிறது. இது ஆளும் பாஜகவை பாதுகாப்பதற்கான தெளிவான முயற்சியாகத் தெரிகிறது," என்று எழுதியுள்ளார். “எதிர்பார்த்தபடியே மோதி அரசு எஸ்பிஐ மூலம் மனு தாக்கல் செய்து தேர்தல் பத்திரம் வாங்குவோர் குறித்த தகவல்களை வெளியிட தேர்தல் முடியும் வரை அவகாசம் கோரியுள்ளது. இந்தத் தகவல் இப்போது வெளிவந்தால் லஞ்சம் கொடுத்த பலர் பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளின் விவரங்களும் அம்பலமாகும்” என்றார் உச்ச நீதிமன்றத்தின் பிரபல மற்றும் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண். ஓய்வு பெற்ற கமடோர் லோகேஷ் பத்ரா ஒரு நன்கு அறியப்பட்ட ஆர்டிஐ ஆர்வலர். அவர் தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத்தன்மைக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். “கடந்த 2017-2018ஆம் ஆண்டில், பத்திரங்களின் விற்பனை மற்றும் பணமாக்கல் நடவடிக்கையை நிர்வகிக்கத் தனிப்பயனாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை எஸ்பிஐ நிறுவியது. 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை மொத்தம் 22217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன. விற்கப்பட்ட 22,217 பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்குவது எஸ்பிஐக்கு கடினமாக இருக்கக்கூடாது,” என்று வங்கியின் மனு குறித்து அவர் தனது ’எகஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/crg9zy7dwwno
-
கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத கடற்தொழில் முறை நிறுத்தப்பட்டது போல் வடக்கிலும் நிறுத்தப்பட வேண்டும் - முன்னாள் தலைவர் அன்னராச
Published By: VISHNU 06 MAR, 2024 | 02:44 AM கிழக்கு மாகாண ஆளுநர் எவ்வாறு சட்டவிரோத தொழில் முறையை கிழக்கு மாகாணத்தில் நிறுத்தினாரோ அவ்வாறு வடக்கு மாகாண ஆளுநரும் வடக்கு கடற்பரப்பில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத தொழில் முறைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழிலாளர் சமாசத்தின் முன்னாள் தலைவர் அன்னராச வேண்டுகோள் விடுத்தார் இந்திய மீனவர்களின் அத்துமீறல் களை நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தினால் முன்னேடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழில் முறைகளுக்கு எதிராக மீனவர்கள் போராடிய போது அவர்களை அழைத்து சட்டவிரோத தொழில் முறைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்த்துடன் உடனடியாகவே சட்டவிரோத தொழில் முறைகளை நிறுத்தியுள்ளார் .அதேபோல் தான் வடக்கு மாகாண ஆளுநரும் வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத தொழில் முறைகள்,முறையற்ற தொழில் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களை அழைத்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/178023
-
ஒரே சீனா கொள்கையை ஆதரிக்கிறோம் - ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது அமர்வில் இலங்கை அறிவிப்பு
Published By: VISHNU 06 MAR, 2024 | 02:27 AM (நா.தனுஜா) 'ஒரே சீனா கொள்கைக்கு' தாம் ஆதரவளிப்பதாகவும், மனித உரிமைகள்சார் விவகாரங்களைக் கையாள்வதில் சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பைப் பெரிதும் வரவேற்பதாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது அமர்வில் அறிவித்திருக்கும் இலங்கை, இறையாண்மையுடைய எந்தவொரு தேசத்தினதும் உள்ளக விவகாரங்களில் பிற தரப்பினரால் ஏற்படுத்தப்படும் தலையீடுகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ முடியாது எனத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை (1) வாசிக்கப்பட்டதுடன், அத்தோடு உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு அன்றைய தினமே ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவினால் பதில் வழங்கப்பட்டது. இந்நிலையில் திங்கட்கிழமை (4) இலங்கை நேரப்படி பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரின் 12 ஆவது அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதனையடுத்து உயர்ஸ்தானிகரின் அறிக்கைகள் தொடர்பில் உறுப்புநாடுகளின் பங்கேற்புடனான விவாதம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற 55 ஆவது கூட்டத்தொடரின் 13 ஆவது அமர்வில் உறுப்புநாடுகளின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் விதமாக உரையாற்றிய ஹிமாலி அருணதிலக மேலும் கூறியதாவது: உலகளாவிய ரீதியில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளின் இயலுமை மற்றும் செல்வாக்கு என்பவற்றுக்கு அப்பாற்பட்டு நியாயமான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். குறிப்பாக தற்போது காஸாவில் சர்வதேச சட்டங்களும், மனித உரிமைகளும் மிகப்பாரதூரமாக மீறப்பட்டுவருகின்றன. எனவே காஸாவில் உடனடியாகப் போர்நிறுத்தம் அவசியம் என்பதுடன், மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்போருக்கான உதவிகள் அவர்களை உரியமுறையில் சென்றடையவேண்டும். மாறாக இத்தகைய மிகமோசமான மீறலைக் கருத்திலெடுக்கத்தவறுவது சர்வதேச மனித உரிமைகள் சார்ந்து இயங்கும் கட்டமைப்பின் நேர்மைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும். அதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது அரசியல்மயப்படுத்தப்படல் மற்றும் துருவமயப்படுத்தப்படல் போன்ற காரணிகளால் அதன் உண்மையான இலக்குகளை அடைந்துகொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்படும். எனவே பேரவையின் ஸ்தாபகக்கொள்கைகளுக்கு அமைவாக, தேசிய ரீதியிலான சவால்கள் மற்றும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறானதொரு பின்னணியில் உலகின் தென்பகுதியில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம்செலுத்திவிட்டு, ஏனைய பகுதிகளில் இடம்பெறும் மீறல்கள் தொடர்பில் பாராமுகமாக இருப்பது ஏற்புடையதல்ல. இலங்கை விவகாரத்தைப் பொறுத்தமட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொருத்தமற்ற நடவடிக்கைகள் எவ்வகையிலும் பயன்தராது. எனவே இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முற்றாக நிராகரிக்கும் அதேவேளை, எமது நாட்டுக்கு நன்மையளிக்கக்கூடியதும், ஏற்புடையதுமான பேரவையின் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருக்கின்றோம். மேலும் நாம் 'ஒரே சீனா கொள்கைக்கு' ஆதரவளிப்பதுடன், மனித உரிமைகள்சார் விவகாரங்களைக் கையாள்வதில் சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பைப் பெரிதும் வரவேற்கின்றோம். அத்தோடு இறையாண்மையுடைய எந்தவொரு நாட்டினதும் உள்ளக விவகாரங்களில் பிற தரப்பினரால் ஏற்படுத்தப்படும் தலையீடுகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ முடியாது என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178021
-
சுழிபுரம்: புத்தர் சிலையை அகற்றா விட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் - சுகாஷ் எச்சரிக்கை!
Published By: DIGITAL DESK 3 06 MAR, 2024 | 09:10 AM சுழிபுரத்திலே புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதாக எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம். அந்த தகவல் உண்மையானது. சவுக்கடி பிள்ளையார் கோவிலுக்கு பின்பாகவும் இராணுவ முகாமிற்கு முன்பாகவும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கோயிலை ஆக்கிரமிக்கின்ற வகையிலே இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் தமிழர் தாயகம் எங்கும் தற்சமயம், அதுவும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் ஆக்கிரமிப்புகள் மிகத் தீவிரம் பெற்றுள்ளது. அதனுடைய அடுத்தகட்ட பரிமாணம் தான் இந்த புத்தர் சிலை. இந்த புத்தர் சிலையை உடனடியாக அகற்றும்படி நாங்கள் இராணுவத்தினரிடம் கூறுகின்றோம். நீங்கள் அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க விட்டால் நாங்கள் வெகு விரைவில் இந்தப் பிரதேசம் மக்களோடும், இராணுவ முகாமை சுற்றியுள்ள அமைப்புகளுடனும் கதைத்து விட்டு, விசேடமாக மீனவர் அமைப்புகளுடன் கதைத்து விட்டு இதற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றோம். அப்போது அந்தப் போராட்டங்கள் என நாங்கள் மக்களுக்கு அறிவிப்போம். மக்கள் அனைவரும் இந்த இடத்திற்கு வர வேண்டும். இல்லையேல் தமிழர் தாயகம் பறிபோகும் இதை எவராலும் தடுக்க முடியாது. நாங்கள் கதைப்பதை கூட இராணுவம் அச்சுறுத்தி படம் எடுக்கின்றார்கள். தங்களைக் கதைக்க வேண்டாம், படம் எடுக்க வேண்டாம் என அச்சுறுத்தல் செய்கின்றார்கள். அச்சுறுத்தலை தாண்டித்தான் நாங்கள் இந்த இடத்தில் நிற்கின்றோம். ஏனென்றால் இது நமது மக்களின் எதிர்கால இருப்புடன் சம்பந்தப்பட்ட விடயம். மக்களே வெளிப்படையுங்கள் அல்லது இந்த நாட்டில் தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்படப் போகின்றது - என்றார். https://www.virakesari.lk/article/178027
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
“மோடி சுட்ட வடை” – தமிழ்நாடு முழுவதும் வடை விநியோகித்து திமுக நூதன பிரச்சாரம் 05 MAR, 2024 | 01:38 PM “மோடி சுட்ட வடை” என தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு வடை கொடுத்து திமுக நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக எல்லோருக்கும் எல்லாம் என்கிற பெயரில் பொதுக்கூட்டத்தை மூன்று நாட்களாக நடத்தி வருகிறது. மேலும் பல பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவார் என புதுவிதமான நூதன பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டனர். மோடி சுட்ட வடை எனக்கூறி, தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு வடை கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட மேடை அருகே கிரைண்டர் மூலம் மாவாட்டி மோடியின் முகமூடி அணிந்தவாறு அங்கேயே சுட சுட வடை சுட்டு கூட்டத்திற்கு வந்த சிறுவர், சிறுமிகள், பெண்கள் என அனைவருக்கும் இது மோடி சுட்ட வடை என்று பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரம் மூலம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. கூட்டம் ஆரம்பித்து முடியும் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடைகள் வழங்கப்பட்டது. சிவகங்கையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொது மக்களுக்கு பிரதமர் மோடியின் உருவப்படம் மற்றும் மோடி சுட்ட வடை என்கிற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களில் வைத்து உளுந்த வடைகளை விநியோகம் செய்தனர். திருச்சியிலும் இந்த நூதன பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்து கொண்டு, மோடி சுட்ட வடை, மோடி சுட்ட வடை எனக்கூறி பொதுமக்களுக்கு வடை கொடுத்தனர். மேலும் கோவை, பொள்ளாட்சியில் காவி நிறத் துண்டுகளுடனும், மோடியின் முகமூடி அணிந்தும் பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில், வடை வழங்கினர். பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாகவும், அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என கூறியும் பிரசாரம் செய்தனர். வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன்; மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் செயல்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டி காட்டும் வகையில் பதாகைகளையும் அவர்கள் கையில் ஏந்தி முழக்கம் எழுப்பினர். இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் திமுகவினர் பிரதமர் மோடியை விமர்சித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/177954
-
மாலைதீவு- சீன பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து
Published By: SETHU 05 MAR, 2024 | 01:37 PM மாலைதீவும் சீனாவும் பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பாக தெரிவிக்கையில், சீனாவின் இராணுவ உதவிகள் தொடர்பாக திங்கட்கிழமை ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டதாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இந்த ஒப்பந்தம் பலப்படுத்தும் என மாலைதீவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மாலைதீவில் உள்ள 89 இந்தியப் படையினரம் மே 10 ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டும் என மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹம்மட் முய்ஸுவின் அரசாங்கம் உத்தரவிட்டு சில வாரங்கில் சீன- மாலைதீவு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கசான் முனுமூன், சீனாவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புகளுக்கான அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஸாங் பாவோகுன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் உத்தியோபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், சீனாவுக்கு இராணுவ உதவிகளை இலவசமாக வழங்க சீனா இணங்கியுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/177953
-
விபத்தில் பலியான அருட்தந்தை ; மன்னார் அடம்பன் பகுதியில் பொது மக்கள் போராட்டம் ; வீதி தடை அமைக்குமாறு கோரிக்கை
Published By: DIGITAL DESK 3 05 MAR, 2024 | 03:51 PM மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடன் அமைத்து தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை (05) வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று திங்கட்கிழமை (4) அடம்பன் பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் மோதி அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தொடர்ச்சியாக குறித்த வீதியில் விபத்துக்கள் இடம் பெறுவதாகவும், வாகனங்கள் வேகமாக பயணிப்பதாகவும் தெரிவித்து குறித்த வீதியில் வீதித்தடை ஒன்றை அமைக்குமாறு கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த வீதியில் வீதித்தடை ஒன்றை அமைக்குமாறு முன்னதாகவே பிரதேச சபை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசப்பட்டும் இதுவரை எந்த வித வீதித்தடைகளும் அமைக்கப்படாமையினால் தொடர்சியாக இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மக்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த உதவி மாவட்ட செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பொறியியலாளர், பொலிஸார் பொது மக்களுடன் கலந்து பேசிய நிலையில் விரைவில் விபத்துக்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்த நிலையில் மக்கள் போராட்டத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177972
-
பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!
கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பில் சேர்த்த பிரான்ஸ் - முழுவிவரம் பட மூலாதாரம்,REUTERS 5 மார்ச் 2024, 06:25 GMT கருக்கலைப்பு உரிமையை தனது அரசியலமைப்பில் வெளிப்படையாக உள்ளடக்கிய உலகின் முதல் நாடாகியுள்ளது, பிரான்ஸ். பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் சுதந்திரமாக கருக்கலைப்பு செய்வதற்காக 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசியலமைப்பைத் திருத்த வாக்களித்தனர். வாக்கெடுப்பின்போது, நாட்டின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில், 780 பேர் பெண்கள் கருக்கலைப்பிற்கு ஆதரவாக வாக்களித்தனர், 72 பேர் எதிராக வாக்களித்தனர். வாக்குகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பினர். அதிபர் எமானுவேல் மக்ரோங் இந்த நடவடிக்கையை "பிரெஞ்சு பெருமை" என்று குறிப்பிட்டார். இது உலகத்திற்கு ஒரு செய்தியை அனுப்பியது. இருப்பினும் கருக்கலைப்பு எதிர்ப்பு குழுக்கள் வத்திக்கானைப் போலவே இந்தத் திருத்தத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பு 1975 ஆம் ஆண்டு முதல் சட்டப்பூர்வமாக உள்ளது. ஆனால், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி சுமார் 85% பொது மக்கள் கருக்கலைப்பு உரிமையை பாதுகாக்க அரசியலைப்பில் திருத்தம் செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பல நாடுகள் தங்கள் அரசியலமைப்பில் இனப்பெருக்க உரிமைகளை உள்ளடக்கியிருந்தாலும், கருக்கலைப்பு அரசியலமைப்பு உரிமை என உத்தரவாதம் அளித்த முதல் நாடு பிரான்ஸ். இது நவீன பிரான்சின் அரசியலமைப்பில் ஏற்கொள்ளப்பட்டுள்ள 25-ஆவது திருத்தமாகும். மேலும், 2008க்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தமாகும். சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் "என் உடல், என் விருப்பம்" என்ற வாசகம் ஒளிரச்செய்து கருக்கலைப்பு ஆதரவாளர்கள் கொண்டாடினர். வாக்கெடுப்புக்கு முன், பிரதமர் கேப்ரியல் அட்டல் நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு உரிமை "ஆபத்தில் உள்ளது" , "முடிவெடுப்பவர்களின் தயவில்" உள்ளது என்று கூறினார். "நாங்கள் அனைத்து பெண்களுக்கும் ஒரு செய்தியை சொல்கிறோம்: உங்கள் உடல் உங்களுக்கு சொந்தமானது, உங்களுக்காக யாரும் முடிவு செய்ய முடியாது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,TOM NICHOLSON/REX/SHUTTERSTOCK நாடாளுமன்றத்தில் வலதுசாரிகளின் எதிர்ப்புக்கு ஆதரவு கிடைக்காத நிலையில், அதிபர் மக்ரோங் அரசியலமைப்பை தேர்தல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். கருக்கலைப்பு விமர்சகர்கள் இந்த திருத்தம் தேவையற்றது என்று கூறுகிறார்கள், மேலும் அதிபர் தனது இடதுசாரி நற்சான்றிதழ்களை அதிகரிக்க இந்த காரணத்தை பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்ட பின், 1975 முதல் அந்தச் சட்டம் ஒன்பது முறை புதுப்பிக்கப்பட்டது - ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கருக்கலைப்புக்கான அணுகலை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் அந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரான்சின் அரசியலமைப்பு கவுன்சில் - சட்டங்களின் அரசியலமைப்புத் தன்மையை தீர்மானிக்கும் அமைப்பு - ஒரு கேள்வியையும் எழுப்பவில்லை. கடந்த 2001 ஆம் ஆண்டில் வந்த தீர்ப்பில், 1789-ஆம் ஆண்டு மனித உரிமைகள் பிரகடனத்தில் பொதிந்துள்ள சுதந்திரக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, கருக்கலைப்புக்கு பிரான்ஸ் அரசியலமைப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இந்த நடைமுறை அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். பல சட்ட வல்லுநர்கள் கருக்கலைப்பு ஏற்கெனவே அரசியலமைப்பு உரிமை என்று கூறுகிறார்கள். பட மூலாதாரம்,@HYUNXDE/X அமெரிக்காவில் 2022-இல் உச்ச நீதிமன்றம் சார்பில் கருக்கலைப்பு உரிமை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்சில் கருக்கலைப்புச் சட்டத்திற்கு அரசியலமைப்பு பாதுகாப்பு வழக்க வேண்டி, தற்போது இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து, அதனை அரசியலைமப்பு உரிமையாக்குவதற்கு முன், மாநிலங்கள் தாங்களாவே, கருக்கலைப்பை தடை செய்ய முடிந்துள்ளது. அது பெண்களின் கருக்கலைப்பு உரிமையை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், தற்போது பிரான்ஸின் அரசியலமைப்பில் கருக்கலைப்பை உள்ளடக்கிய நடவடிக்கை பலதரப்பட்ட மக்களால் வரவேற்கப்படுகிறது. "இந்த உரிமை (கருக்கலைப்பு) அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதனால், பிரான்ஸ் அந்த ஆபத்தில் இல்லை என்று நினைக்க எங்களுக்கு இப்போது வரை எந்தச் சான்றும் இல்லை" என்று ஃபாண்டேஷன் டெஸ் ஃபெம்ம்ஸ் உரிமைக் குழுவைச் சேர்ந்த லாரா ஸ்லிமானி கூறினார். "ஒரு பெண்ணிய ஆர்வலராகவும், ஒரு பெண்ணாகவும் நிறைய உணர்ச்சிகள் உள்ளன," என்று அவர் கூறினார். பிரான்ஸ் கத்தோலிக்க ஆயர்களால் ஏற்கனவே எழுப்பப்பட்ட கவலைகளை எதிரொலிக்கும் வகையில், "ஒரு மனித உயிரைப் பறிக்க எந்த 'உரிமையும்' இருக்க முடியாது" என்று வத்திகான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/clwe2xwleego
-
ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது: அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Published By: SETHU 05 MAR, 2024 | 12:23 PM அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது என என அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது. 2021 ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்கப் பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக, கொலராடோ மாநில குடியரசுக் கட்சி உட்கட்சித் தேர்தல் வாக்குச்சீட்டுகளில் ட்ரம்பின் பெயர் இடம்பெற முடியாது என கொலராடோ மாநில நீதிமன்றம் கடந்த டிசெம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. இது தொடர்பாக மேன்முறையீட்டு வழக்கு அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், கொலராடோ உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக 9:0 விகிதத்தில் அமெரிக்க சமஷ்டி உச்சநீதிமன்ற நீதிபதிகள் திங்கட்கிழமை (04) தீர்ப்பளித்தனர். மேற்படி குற்றச்சாட்டின் கீழ் போட்டியிடுவதை தடுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு கிடையாது எனவும், அமெரிக்கப் பாராளுமன்றத்துக்கே அத்தகைய அதிகாரம் உள்ளது எனவும் அமெரிக்க உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பானது அமெரிக்காவுக்கான ஒரு பெரும் வெற்றி என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொலராடோ உட்பட 15 மாநிலங்களில் குடியரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தல் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177943
-
ஹெய்ட்டியில் சிறை மீது ஆயுதகும்பல் தாக்குதல் - 3000க்கும் அதிகமானகைதிகள் தப்பியோட்டம்
ஹைதியில் சிறையை தாக்கிய முன்னாள் காவல்துறை அதிகாரி; தப்பியோடிய 3700 கைதிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹைதியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பிரதான சிறைக்கு வெளியே டயர்களுக்கு தீ வைக்கப்பட்டது கட்டுரை தகவல் எழுதியவர், ஹென்றி ஆஸ்டியர் மற்றும் ஜியான்லூகா அவாக்னினா பதவி, பிபிசி நியூஸ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் ஹைதி நாட்டின் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரச் சிறைக்குள் ஆயுதமேந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அந்நாட்டு அரசு 72 மணி நேர அவசர நிலையை அறிவித்தது. இந்த சிறைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 3,700 கைதிகள் தப்பினர். வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆயுத குழுக்களின் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். அவரை வெளியேற்றும் நோக்கில் செயல்படும் ஆயுத குழுக்கள், தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸின் 80% பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆயுதக் குழுவின் தலைவராக முன்னாள் காவல்துறை அதிகாரி ஹைதியில் ஆயுத குழுக்களினால் நிகழ்த்தப்படும் வன்முறை பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது. இரண்டு சிறைச்சாலைகள் வார இறுதியில் தாக்கப்பட்டதாக அரசாங்க அறிக்கை கூறுகிறது, ஒன்று தலைநகரிலும் மற்றொன்று அருகிலுள்ள குரோயிக்ஸ் டெஸ் பொக்கெட்ஸ் எனும் நகரிலும். குழுக்களின் இந்த 'கீழ்ப்படியாமை' செயல்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதற்கு பதிலடியாக உடனடியாக இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதாகவும் அரசு கூறியது, இந்த ஊரடங்கு இந்திய நேரப்படி திங்கட்கிழமை 01:00 மணிக்கு தொடங்கியது. சிறைச்சாலைகள் மீதான ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு முன்பாக அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்ப மற்ற காவல் நிலையங்கள் தாக்கப்பட்டதாகவும் ஹைதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போர்ட்-ஓ-பிரின்ஸின் சிறையில் உள்ள கைதிகளில், 2021ஆம் ஆண்டு அதிபர் ஜோவெனல் மொய்ஸ் கொல்லப்பட்டது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட குழுவின் உறுப்பினர்களும் அடங்குவர். கென்யா தலைமையிலான பன்னாட்டுப் பாதுகாப்புப் படையை ஹைதிக்கு அனுப்புவது குறித்து விவாதிக்க வியாழன் அன்று பிரதமர் நைரோபிக்கு சென்றபோது, இந்த வன்முறை சம்பவங்கள் தொடங்கின. பிரதமரை பதிவியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற நோக்கில் ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலை அறிவித்தார் ஆயுதக் குழுவின் தலைவர் ஜிம்மி செரிசியர் ("பார்பெக்யூ" என்ற புனைப்பெயர் கொண்டவர்) "நாங்கள் அனைவரும், அதாவது மாகாண நகரங்களில் உள்ள ஆயுதக் குழுக்களும் தலைநகரில் உள்ள ஆயுதக் குழுக்களும் ஒன்றுபட்டுள்ளோம்" என்று போர்ட்-ஓ-பிரின்ஸில் நடந்த பல படுகொலைகளுக்கு காரணமானவராக கருதப்படும் இந்த முன்னாள் காவல்துறை அதிகாரி கூறுகிறார். தலைநகரின் பிரதான சிறைச்சாலையை வலுப்படுத்த உதவுமாறு ஹைதியின் போலிஸ் தொழிற்சங்கம் ராணுவத்திடம் கேட்டிருந்தது, ஆனால் அதற்குள் சனிக்கிழமை சிறைச்சாலை தாக்கப்பட்டது. சிறைச்சாலையின் கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன, அதிகாரிகள் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தது. தப்பிச் செல்ல முயன்ற மூன்று கைதிகள் முற்றத்தில் பிணமாகக் கிடந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைக்குள் சென்ற ஏஎப்பி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் தோட்டாக்களால் துளைக்கப்பட்ட சுமார் 10 உடல்களைக் கண்டதாகக் கூறினார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய சிறை ஊழியர் ஒருவர், "அதிபர் மொய்ஸின் கொலைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் கொலம்பிய வீரர்கள் உட்பட 99 கைதிகள் துப்பாக்கி சூட்டிற்கு பயந்து தங்கள் அறைகளில் முடங்கிவிட்டனர்" என்று கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பியோடியதால் சிறை அறைகள் காலியாக உள்ளன அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை அன்று போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களை உடனடியாக ஹைதியை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசா சேவைகளை மூடுவதாக பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. ஹைதி பல ஆண்டுகளாக ஆயுதக் குழுக்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 2021இல் அதிபர் மோயிஸ் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. 2016 முதல் அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதால் அதிபர் பதவி காலியாக உள்ளது. ஒரு அரசியல் ஒப்பந்தத்தின் கீழ், பிப்ரவரி 7க்குள் பிரதமர் ஹென்றி பதவி விலக வேண்டும். ஆனால் திட்டமிட்டு தேர்தல் நடத்தப்படாததால் அவர் இன்னும் பதவியில் நீடிக்கிறார். கிளாட் ஜோசப், அதிபர் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டபோது தற்காலிக பிரதமராக செயல்பட்டவர் மற்றும் இப்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். பிபிசியிடம் பேசிய ஜோசப், ஹைதி நாடு ஒரு 'கொடுங்கனவில்' வாழ்ந்து வருவதாக கூறினார். முடிந்தவரை பிரதமர் பதவியில் நீடிக்க ஹென்றி விரும்புவதாகவும் ஜோசப் கூறுகிறார். "பிப்ரவரி 7ஆம் தேதி பதவி விலக முதலில் ஒப்புக்கொண்டு, பின்னர் மறுத்துவிட்டார். அவர் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தாலும், அவர் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. ஆனால் இப்போது இந்த குற்றவாளிகள் அவரை பதவி விலகுமாறு கட்டாயப்படுத்த வன்முறை வழிகளைப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது" என்கிறார் ஜோசப். கடந்த ஆண்டு ஹைட்டியின் ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்ட வன்முறையில் 8400 பேர் கொல்லப்பட்டனர் என்று ஜனவரியில் வெளியான தனது அறிக்கையில் ஐ.நா. கூறியுள்ளது. இது 2022இல் பலியானவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் எனவும் ஐ.நா. கூறியுள்ளது. வன்முறையால் பல மருத்துவமனைகள் செயல்படாமல் உள்ளன. அரசியல் வெற்றிடம் மற்றும் அதீத வன்முறையின் மூலம் வெளிப்படும் கோபம், அரசாங்கத்திற்கு எதிரான பல போராட்டங்களுக்கு வழிவகுக்கிறது. அரசு எதிர்ப்பாளர்கள் இப்போது பிரதமரின் ராஜினாமாவைக் கோருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/ce9ry752e15o
-
சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள அதிவேக ஈனுலை ஆபத்தானதா? எவ்வாறு செயல்படும்?
பட மூலாதாரம்,X/ANI கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 4 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 5 மார்ச் 2024 தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள அதிவேக ஈனுலையின் எரிபொருள் நிரப்பப்படுவதை பிரதமர் மோதி பார்வையிட்டுள்ளார். ஆனால், இந்த ஈனுலை ஆபத்தானது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதில் உண்மையில் பிரச்னை இருக்கிறதா? கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அதிவேக ஈனுலை கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் இந்த முதலுறு அதிவேக ஈனுலை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) வடிவமைத்துச் செயல்படுத்துகிறது. அதிவேக ஈனுலைகளை உருவாக்கும் திட்டம் 1980களில் திட்டமிடப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் 2004ஆம் ஆண்டில் துவங்கப்பட்டன. இந்தப் பணிகள் 2010ல் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. பிறகு, ஒவ்வொரு ஆண்டாக இது தள்ளிச் சென்றது. கட்டுமானத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இந்தத் திட்டத்திற்கான செலவு கிட்டத்தட்ட இரு மடங்காகியிருக்கிறது. ஆரம்பத்தில் இந்தத் திட்டம் 3,492 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2019 நவம்பரில் இந்தத் திட்டத்திற்கான மதிப்பு 6,840 கோடி ரூபாயாக இருக்கும் என மாநிலங்கள் அவையில் அரசு தெரிவித்தது. கடந்த ஆண்டு கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து குளிர்விப்பானான சோடியத்தை நிரப்பும் பணி, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் பத்தாம் தேதி துவங்கி 15ஆம் தேதி முடிக்கப்பட்டது. 2024 மார்ச் 4ஆம் தேதியன்று எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த அணு உலை வெற்றிகரமாகச் செயல்படும் நிலையில், இந்தியாவில் அதிகம் கிடைக்கும் தோரியத்தை இந்த அணு உலையில் பயன்படுத்த முடியும். இந்த அணு உலை 500 மெகா வாட் உற்பத்தித் திறனைக் கொண்டது. 40 ஆண்டுகளுக்கு இந்த அணு உலை பயன்பாட்டில் இருக்கும். இந்த அணு உலையில் ஆரம்ப கட்டத்தில் யுரேனியமும் புளுட்டோனியமும் கலந்த எரிபொருள் பயன்படுத்தப்படும். எரிபொருள் தண்டுகளை தாராப்பூரில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் தயாரித்து அளிக்கும். சுற்றுச்சூழலியலாளர்கள் எதிர்ப்பு சென்னைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, கல்பாக்கத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலுறு அதிவேக ஈனுலை (Prototype Fast Breeder Reactor - PFBR)ல் எரிபொருள் நிரப்பப்படுவதை பார்வையிட்டார். ஆனால், இந்த அதிவேக ஈனுலைகள் அமைக்கப்படுவதற்கு சுற்றுச்சூழலியலாளர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த அதிவேக ஈனுலைகள் எளிதில் விபத்து ஏற்படக்கூடிய அபாயம் கொண்டவை என்கிறார்கள் அவர்கள். இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அதை விட்டுவிட்டன. இந்த வகை உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் பிரான்ஸ், ஜப்பான் நாடுகளில் இத்திட்டம் தாமதம் அல்லது கைவிடப்பட்டது" என சுட்டிக்காட்டியுள்ளனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். "அதிவேக ஈனுலைகள் தேவையே இல்லை" "அதிவேக ஈனுலைகளை உருவாக்கும் முயற்சியில் பல நாடுகள் தோற்றுவிட்டன. இந்த அதிவேக ஈனுலைகளில் திரவ சோடியம் கட்டுப்படுத்தும் காரணியாகவும் (Moderator) குளிர்விப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது. திரவ சோடியம் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது. ஈரம் பட்டாலே தீ விபத்து ஏற்படும் சாத்தியங்கள் இதில் உள்ளன. ஜப்பானின் மோஞ்சுவில் உள்ள அணு உலையில் இதேபோல, சோடியம்தான் குளிர்விப்பானாக பயன்படுத்தப்பட்டுவந்தது. 1995ல் அந்த அணு உலையில் சோடியம் செல்லும் பைப்பில் இருந்து, சோடியம் கசிந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், யுரேனியத்தைப் பயன்படுத்தும் அணு உலைகளைவிட, இந்த அணு உலைக்கான செலவு மிக அதிகம். ஒரு காலகட்டத்தில் உலகில் யுரேனியம் மிக அரிதாகவே கிடைத்துவந்தது. அணு உலை எரிபொருளுக்கான தேவை அதிகம் இருந்ததால், இப்படி ஒரு தொழில்நுட்பம் யோசிக்கப்பட்டது. ஆனால், இப்போது பெரிய அளவில் யுரேனிய சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. ஆகவே இந்தத் திட்டத்திற்கான தேவையே இப்போது இல்லை" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ. சுந்தர்ராஜன். பட மூலாதாரம்,T.V.VENKATESWARAN "அதிவேக ஈனுலை பற்றிய அச்சம் வேண்டாம்" ஆனால், இந்த அணு உலை குறித்த அச்சங்கள் தேவையற்றவை என்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியான முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன். "இந்த அதிவேக ஈனுலை குறித்த அச்சங்கள் தேவையற்றவை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இதேபோன்ற 'Fast Breeder Test Reactor' செயல்பட்டு வருகிறது. அதில் கிடைத்த அனுபவம் இந்த ஈனுலையை இயக்குவதற்கு உதவும். தவிர, இந்த சோதனை ரியாக்டரில் சோடியம் கசிந்து விபத்து ஏற்பட்டதில்லை. கடந்த ஐம்பதாண்டுகளில் ஆபத்து ஏற்படும் அளவுக்கு எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை. உலகில் எல்லா அதிவேக ஈனுலைகளிலும் புளுட்டோனியத்தையே பயன்படுத்துகிறார்கள். நாம் தோரியத்தை பயன்படுத்துகிறோம். தோரியத்தை வைத்து அணுகுண்டு தயாரிக்க முடியாது" என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன். இந்த அணு உலை செயல்படும் விதம் குறித்தும் விளக்கும்போது, "இயற்கையில் யுரேனியம் இரண்டு விதங்களில் கிடைக்கும். ஒன்று யுரேனிம் - 235. மற்றொன்று யுரேனியம் 238. இதில் யுரேனியம் 235 மட்டுமே அணு உலைகளில் பயன்படும். இயற்கையில் 1/141 என்ற விகிதத்தில்தான் யுரேனியம் 235ம் யுரேயனியம் 238ம் கிடைக்கின்றன. அதிவேக ஈனுலைகளில் யுரேனியம் - 238ஐ blanketஆக பயன்படுத்தினால் அது, புளுட்டோனியம் 239ஆக மாறிவிடும். இதனை மீண்டும் எரிபொருளாக பயன்படுத்தலாம். அல்லது அணுஆயுதம் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். ஆனால் இங்குள்ள அதிவேக ஈனுலையில், தோரியம்தான் blanketஆக பயன்படுத்தப்படுகிறது. தோரியத்தை blanketஆக பயன்படுத்தினால் அது யுரேனியம் 233ஆக மாறிவிடும். இந்த யுரேனியம் 233ஐ மூன்றாம் கட்ட அணுஉலைகளில் எரிபொருளாக பயன்படுத்தலாம். இப்படி இன்னொரு அணு உலைக்கு எரிபொருள் தருவதால், இதனை ஈனுலைகள் என்கிறோம். இந்த யுரேனியம் 233ஐ வைத்து வைத்து அணுகுண்டு செய்ய முடியாது" என்கிறார். தற்போது உலகில் யுரேனியம் போதுமான அளவுக்குக் கிடைத்தாலும், இந்தியாவில் அது மிக அரிதாகவே கிடைக்கிறது. தோரியம் அதிக அளவில் கிடைக்கிறது. எனவே, எரிசக்தி பாதுகாப்பு எனும் நோக்கில் இந்த ஈனுலைகள் அவசியமானவைதான் என்கிறார் வெங்கடேஸ்வரன். பட மூலாதாரம்,GETTY IMAGES அதிவேக ஈனுலை தயாரிக்கும் 'பாவினி' கூறுவது என்ன? இந்த அதிவேக ஈனுலைகள் Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited - பாவினி - என்ற பொதுத்துறை நிறுவனத்திற்குச் சொந்தமானவை. இந்தியாவில் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், யுரேனியத்தைக் குறைவாகவும் தோரியத்தை அதிகமாகவும் பயன்படுத்தும் வகையில் மூன்று கட்டங்களாக தனது அணுசக்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதாக பாவினி கூறுகிறது. இதில் ஒவ்வொரு கட்டமும் அடுத்த கட்டத்தோடு தொடர்புடையவை. ஒரு கட்டத்தில் எரிக்கப்பட்ட எரிபொருள், அடுத்த கட்டத்தில் எரிபொருளாக பயன்படுத்தும் வகையில் இந்த அணுசக்தித் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக பாவினி கூறுகிறது. அதன்படி, முதல் கட்டத்தில் அழுத்தமூட்டப்பட்ட கனநீர் அணு உலைகள் அமைக்கப்படும். இதில் யுரேனியம் எரிபொருளாக இருக்கும். இரண்டாம் கட்ட அதிவேக ஈனுலைகளில் புளுட்டோனியம் எரிபொருளாக இருக்கும். இதிலிருந்து யுரேனியம் -233 கிடைக்கும். மூன்றாவது கட்ட அணுஉலைகளில் முந்தைய கட்டத்தில் கிடைத்த யுரேனியம் - 233 எரிபொருளாக பயன்படுத்தப்படும் என்கிறது பாவினி. https://www.bbc.com/tamil/articles/c970egezvl8o
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையே பாலம் கட்டப்படாதது ஏன்?
Sri Lanka: North - East-ஐ இணைக்க Bridge இல்லை; 800 மீட்டருக்கு பாலம் அமைக்க அரசு தயங்குவது ஏன்?
-
சாந்தனைத்தான் இழந்துவிட்டோம்; எஞ்சியோரையாவது காப்பாற்றுங்கள்; - சட்டத்தரணி புகழேந்தி
”சாந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாம் மிகக் கொடுமையானது : ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை – சட்டத்தரணி புகழேந்தி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் என்பது சிறையை விட மிகவும் கொடூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன் சார்பில் சட்டத்தரணி புகழேந்தி பல ஆண்டுகளாக வழக்காடியிருந்தார் சாந்தன் உயிரிழந்த பின்னர் அவரின் உடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான அனைத்து சட்ட ஏற்பாடுகளையும் செய்த சட்டத்தரணி புகழேந்தி, சாந்தனின் உடல் புதைக்கப்படும் இறுதி நிமிடம் வரையில் உடனிருந்தார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்று சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் : “சாந்தன் 32 ஆண்டுகள் மன உறுதியுடன் சிறையில் இருந்தார். ஆனால், ஒரு வருடத்திற்குள் அவர் திருச்சி சிறப்பு முகாமில் மன நோயாளியாக மாற்றப்பட்டார். உடல் அளவிலும் செயற்பட முடியாத அளவிற்கு மாறினார். சிறப்பு முகாமின் வடிவமைப்பு கொடுமையானது சாந்தன் இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் அங்கிருந்த மற்றொருவர் உயிரிழந்தார். அந்த முகாம் மூடப்பட வேண்டும். அங்கிருப்பவர்கள் உடன் வெளியிடங்களுக்கு மாற்றப்பட வேண்டும். முன்பு அது பெண்களுக்கான சிறையாக இருந்தது. இன்று அதன் பெயரை சிறப்பு முகாம் என்று மாற்றியுள்ளனர். மற்றப்படி அது சிறைதான். இங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில், அங்கிருக்கும் முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை உடன் மீட்க வேண்டும். அதற்கு இலங்கையில் இருக்கக் கூடிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி எடுக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்கின்றோம். இரு தரப்பினரும் இணைந்து செயற்பட்டு அங்கிருக்கும் மூவரையும் காப்பற்ற வேண்டும். அதற்காக நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்றார். https://thinakkural.lk/article/294529
-
முடங்கியது முகநூல்
இங்கயும் முகநூல் வேலை செய்யவில்லை.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ்நாட்டிற்கு ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோதி வருகை - பா.ஜ.க. வியூகம் என்ன? பட மூலாதாரம்,@BJP4TAMILNADU/X 5 மார்ச் 2024, 02:56 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 7 நாட்களில் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோதி, அரசியல் கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறார். ஆளும் தி.மு.கவைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். ஆனால், இந்தக் கூட்டங்களில் கவனிக்க வேண்டிய வேறு சில அம்சங்களும் இருக்கின்றன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனுடன் உரையாடினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து: கடந்த சில நாட்களுக்குள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு பயணம் செய்துவிட்டார். தேர்தலே அறிவிக்காத நிலையிலும் அரசியல் கூட்டங்களிலும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார். என்ன காரணம்? இன்னும் பத்து நாட்களில் பல மாநிலங்களுக்குப் பயணம் செய்து, பல திட்டங்களைத் துவக்கி வைக்கவிருக்கிறார். அவரது பயணத் திட்டத்தின் அடிப்படையில்தான் தேர்தலே அறிவிக்கப்படப் போகிறது. 7 நாட்களுக்குள் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது முறையாக வந்திருக்கிறார். காலை தெலங்கானா வந்துவிட்டு, மதியம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். மீண்டும் தெலங்கானா சென்று இரவு தங்குகிறார். பா.ஜ.க. 370 - 400 தொகுதிகளைப் பெற வேண்டும் என நினைக்கிறார்கள். அந்த அளவு தொகுதிகளைப் பெறுவோமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. இதன் காரணமாக எல்லா மாநிலங்களுக்கும் தொடர்ந்து பயணம் செய்கிறார். உண்மையிலேயே வளர்ச்சி, சாதனைகளைச் செய்திருந்தால் இத்தனை பயணங்கள் தேவையில்லை. ஒரு முறை மன் கீ பாத் பேசுவதைப் போல பேசிவிட்டுப் போய்விடலாம். ஊர் ஊராக பிரசாரம் செய்யத் தேவையில்லை. இதற்கு முன்பாக 303 இடங்களை உச்சபட்சமாக பெற்றார்கள். மீண்டும் அந்த அளவுக்கு இடங்களைப் பெறுவார்களா என்பது அவர்களுக்கே சந்தேகமாக இருக்கிறது. இந்தியா கூட்டணி கலகலத்துப் போய்விடும் என்றார்கள். ஆனால், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைந்துவிட்டது. பிகாரில் அமைந்துவிட்டது. டெல்லியில், குஜராத்தில், மத்திய பிரதேசத்தில் அமைந்துவிட்டது. இப்படியாக ’இந்தியா’ கூட்டணி வலுவடைந்து வருகிறது. திங்கட்கிழமை பேசும்போது மோதி சொன்னார், "நான் சென்னை வரும்போதெல்லாம் சிலருக்கு அடிவயிற்றைக் கலக்குகிறது" என்றார். ஆனால், உண்மையில் இவர்கள்தான் பயந்துபோயிருக்கிறார்கள். 370- 400 என்ற எண்ணிக்கையில் இடங்களை உறுதிப்படுத்த வேண்டுமென்றால், அவர்கள் வலுவாக இருக்கும் மாநிலங்களிலேயே இதைச் செய்யலாமே... தமிழ்நாடு போல கட்சி பலவீனமாக இருக்கும் மாநிலத்தில் ஏன் செய்ய வேண்டும்? இங்கே 39 இடங்களையும் தி.மு.க. பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. ஆனாலும் மோதி இங்கே வருகிறார். தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி இருக்கிறது. ஆனால், மோதி எதிர்ப்பு என்ற ஒற்றை விஷயத்தின் காரணமாக தி.மு.க. அதனை அறுவடை செய்கிறது. தி.மு.கவை வீழ்த்த பா.ஜ.க. மட்டும் போதாது. அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகியவையும் வேண்டும். இப்படி ஒரு வலுவான கூட்டணியை அமைத்தால், 12- 15 இடங்களைப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அது உண்மையும்கூட. தி.மு.க. வீழ்த்த வலிமையான கூட்டணி தேவை. இது அவர்களுக்கும் தெரியும். அதனால், இப்போதுவரை அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் மட்டும் ஐந்தாறு முறை பா.ஜ.கவின் தூதர்கள் சந்தித்துவிட்டார்கள். முதலில் வாசன் சந்தித்தார். பிறகு அமித் ஷாவின் நண்பர் ஒருவர் வந்து பார்த்தார். சில நாட்களுக்கு முன்பாக முன்னாள் நீதிபதி ஒருவர் வந்து சந்தித்தார். அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அந்தக் கூட்டணிக்கு 12 இடங்களும் அதில் பா.ஜ.கவுக்கு 4-5 இடங்களும் கிடைக்காதா என்ற நோக்கம்தான் மோதியை திரும்பத் திரும்ப இங்கே வர வைக்கிறது. கடந்த கூட்டத்தில் அ.தி.மு.கவின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா ஆகியோரைப் புகழ்ந்து பிரதமர் பேசினார். அது அ.தி.மு.கவின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சி என அரசியல் நோக்கர்கள் கருதினார்கள். ஆனால், நீங்கள் பா.ஜ.க. இன்னமும் அ.தி.மு.க. கூட்டணிக்கு முயல்வதாகச் சொல்கிறீர்கள். முரணாக இருக்கிறதே.. பட மூலாதாரம்,GETTY IMAGES மோதி பேசிய பேச்சு எதிர்மறையாகிவிட்டது. எடுபடவில்லை. எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசினால், அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் பக்கம் வருவார்கள், எடப்பாடி பழனிசாமி இறங்கிவருவார் என நினைத்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பேசிய மோதி, ஏன் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசவில்லை என தொண்டர்கள் நினைக்கிறார்கள். ஒன்று, அவரது ஆட்சி மோசம் என சொல்ல வேண்டும். இல்லையென்றால், நல்லாட்சி எனச் சொல்ல வேண்டும். எதுவுமே சொல்லவில்லையென்றால் எப்படி என்றுதான் கேட்பார்கள். பல்லடத்தில் பேசிய பேச்சுக்கு பலன் இல்லை என்றவுடன் திருநெல்வேலியில் தி.மு.கவை கடுமையாகத் தாக்கிப் பேசினார் மோதி. தி.மு.கவைத் தாக்கிப் பேசும்போது, தி.மு.க. கொள்ளையடித்த பணத்தை மீட்போம் என்கிறார். மூன்றாண்டுகளாகிவிட்டன, எவ்வளவு பணத்தை மீட்டார்கள்? அ.ம.மு.கவின் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், கடந்த இரு கூட்டங்களிலும் அவர்கள் பங்கேற்கவில்லை. என்ன காரணம்? அவர்கள் கூட்டணிக்குத் தேவையில்லையென பா.ஜ.க. கருதுகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES எடப்பாடி பழனிசாமி கோபித்துக் கொள்ளக்கூடாது என நினைக்கிறார்கள். அதுதான் காரணம். பா.ஜ.கவின் கூட்டணிக் குழு, ஜான் பாண்டியன், ஜி.கே. வாசன், தமிழருவி மணியன் போன்றோரையெல்லாம் சந்திக்கிறது. ஆனால், தென் மாவட்டங்களில் 3.5 - 4 சதவீதம் வாக்கு வங்கியுள்ள டிடிவி தினகரனை சந்திக்கவில்லை. இத்தனைக்கும் ஓ.பன்னீர்செல்வம் பேச்சைக் கேட்டு, பா.ஜ.க. கூட்டணியில்தான் இருப்பதாக அவர் திரும்பத் திரும்பச் சொல்கிறார். இருந்தபோதும் சந்திக்க மறுக்கிறார்கள். கடந்த நான்கைந்து தடவைகளாக, பா.ஜ.க. தலைவர்கள் யார் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திப்பதில்லை. சில வாரங்களுக்கு முன்பாக பா.ஜ.கவின் தலைவர் ஜே.பி. நட்டா சென்னைக்கு வந்தார். அப்போது அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் விரும்பினார். அவரைச் சந்திப்பதற்காக விமான நிலையத்திலும் லீ மெரிடியன் ஹோட்டல் வாசலிலும் காத்திருந்தார் ஓ. பன்னீர்செல்வம். இருந்தபோதும் வாய்ப்பளிக்கப்படவில்லை. பல்லடம் கூட்டத்தில் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் மேடை ஏற்றப்பட்டார்கள். ஆனால், ஓ.பி.எஸ். - டிடிவி அழைக்கப்படவில்லை. சென்னையிலும் அவர்கள் மேடையேற்றப்படவில்லை. காரணம், எடப்பாடி பழனிசாமிக்காக பா.ஜ.க. காத்திருக்கிறது. பிரதமர் சென்னைக்கும் வரும் நாளில் முதல்வர் மயிலாடுதுறைக்குப் போய்விட்டார். பிரதமர் வரும்போது முதல்வர் ஊரில் இல்லாத வகையில் பார்த்துக் கொண்டதற்கு என்ன காரணம்? தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் இருக்கும் மேடையில் முதலமைச்சர் இருக்க விரும்பவில்லை. அதேபோல, பிரதமருடன் மேடையில் இருந்தால் அவர் கட்டி அணைப்பார், மிக நெருக்கமாக இருப்பதாகக் காண்பிப்பார். அது தவறான சமிக்ஞைகளைத் தந்துவிடக்கூடாது என மு.க. ஸ்டாலின் நினைக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தின் துவக்க விழாவில் பங்கேற்க எ.வ. வேலுவை அனுப்பினார். இத்தனைக்கும் அது அரசு விழா. அப்படியிருந்தாலும் ஒரே மேடையில் இருக்க முதலமைச்சர் விரும்பவில்லை. அதைப்போலத்தான் சென்னையில் இருந்தால், அவரைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் தவிர்த்துவிட்டார் முதலமைச்சர். கடந்த திருநெல்வேலி கூட்டத்தில் தி.மு.கவை பிரதமர் கடுமையாகத் தாக்கிப் பேசினார். தங்கள் திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக குறிப்பிடுகிறார். இந்தப் பேச்சுக்கு மக்கள் மத்தியில் தாக்கம் இருக்கும் என நினைக்கிறீர்களா? பட மூலாதாரம்,@MKSTALIN படக்குறிப்பு, மு.க.ஸ்டாலின் - நரேந்திர மோதி (கோப்புப்படம்) சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. நிவாரண உதவியாக தமிழ்நாடு அரசு 37,000 கோடி ரூபாயைக் கேட்டது. தன் பங்களிப்பாக மத்திய அரசு ஏதாவது கொடுத்ததா? எதுவும் கொடுக்கவில்லை. ஆனால், தாங்கள் கொடுக்கும் பணத்தில்தான் மாநில அரசு நிதி தருவதாக மேடையில் சொல்கிறார் பிரதமர். சமீபத்திய சட்டமன்றக் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு தகவலைத் தெரிவித்தார். அதாவது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பெருமளவு நிதியை மாநில அரசுதான் தருவதாக புள்ளிவிவரங்களுடன் அவர் குறிப்பிட்டார். இப்படி மாநில அரசு அதிக நிதி தரும் திட்டத்திற்கு பிரதமரின் பெயர் சூட்டப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அதேபோல, மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை பணம் தரவில்லை, இதனால் மாநில அரசே முழுச் செலவையும் ஏற்க வேண்டியிருப்பதாகவும் நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால், மெட்ரோ திட்டத்திற்கு பொத்தாம்பொதுவாக தாங்கள்தான் நிதி அளித்ததாகச் சொல்கிறார் பிரதமர். ஒரு நிதியமைச்சர் சட்டமன்றத்திலேயே குற்றம்சாட்டிய பிறகு, சென்னைக்கு வரும் பிரதமர் மோதி அதற்குப் புள்ளிவிவரங்களுடன் பதில் சொல்லியிருக்க வேண்டாமா? கடந்த இரண்டு முறைகளாக தி.மு.கவை கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார் பிரதமர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு இது பலனளிக்குமா? "ஆயுஷ்மான் பாரத்" திட்டத்தில் ஒரே மொபைல் நம்பரில் பல லட்சம் பேர் காப்பீடு பெற்றிருப்பது உட்பட பா.ஜ.க. அரசு மீது சி.ஏ.ஜி. பல விஷயங்களில் குற்றம்சாட்டியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்ததோடு பா.ஜ.க. நிறுத்திக்கொண்டது. எந்த விளக்கமும் சொல்லவில்லை. ரயில் பாதை போடுவதற்கு அதிக செலவு, சுங்கச்சாவடிகளில் மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. எதற்குமே பதில் இல்லை. தமிழ்நாட்டில் மழை - வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டபோது தமிழக அரசு ஊடக மேலாண்மை செய்ததாக குற்றம்சாட்டுகிறார் மோதி. சமீபத்தில் திறக்கப்பட்ட மும்பை - நாக்பூர் சாலையில் ஒட்டை விழுந்திருக்கிறதே... இது யார் செய்த தவறு? எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். போதைப் பொருள் பிடிக்கப்பட்டது குறித்தும் பேசியிருக்கிறார் பிரதமர். இது தி.மு.கவுக்கு பாதகமாக அமையுமா? இந்தியா முழுமையுமே போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதிகரித்திருக்கிறது. அதைத் தடுக்க தி.மு.க. தடுமாறியிருக்கிறது. ஒப்புக்கொள்ளலாம். ஆனால், 2021க்கு முன்பாக தமிழ்நாட்டில் போதைப் பொருள் கிடையாதா? இப்போதுதான் வருகிறதா? ஆனால், சமீப காலமாக போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பது வேதனையானதுதான். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தப் பொருட்கள் எங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வருகின்றன? குஜராத்தில் உள்ள இரு துறைமுகங்கள் வழியாக வருகின்றன. போதைப் பொருள் அதிகரிப்பது குறித்து பிரதமர் கவலைப்படுவது நியாயம். ஆனால், இதைத் தடுக்க வேண்டிய தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு என்ன செய்கிறது? தி.மு.க. மீது குற்றம்சாட்டலாம். ஆனால், இதையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c4njpenj2lqo
-
வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல்; பொலிசாருடனும் முரண்பாடு
கரைவலை மீன்பிடியும் கடல் வளத்தை அழிக்கிறதா?
-
பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்
34 பந்துகளில் 68 ஓட்டங்களை எடுத்து அதிரடி காட்டிய பங்களாதேஸ் வீரர் - அவரை பேட்டி கண்ட ஊடகவியலாளரான சகோதரி - ஒரு சுவாரஸ்ய சம்பவம் Published By: RAJEEBAN 05 MAR, 2024 | 10:35 AM பங்களாதேசிற்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை மூன்று ஓட்டங்களால் வெற்றிபெற்ற பின்னர் இடம்பெற்றசெய்தியாளர் மாநாட்டில் 34 பந்துகளில் 68 ஓட்டங்களை பெற்று பங்களாதேசிற்கு ஒரு தருணத்தில் வெற்றிவாய்ப்பை வழங்கிய ஜாகெர் அலியிடம் ஊடகவியலாளர் சஹீலா பொபி கேள்வியொன்றை கேட்டார். சிலேட்டில் உங்கள் சொந்த மைதானத்தில் முதல் தடவை விளையாடியிருக்கின்றீர்கள் ரசிகர்கள் உங்கள் பெயரை சொல்லி கோசம் எழுப்பிக்கொண்டிருந்தார்கள் அது எப்படியிருந்தது என சஹீலா பொபி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜாகெர் அலி சகோதரி இந்த மைதானத்தில் விளையாடுவது எனக்கு எப்போதும் பிடித்த விடயம்,இந்த மைதானத்திலேயே நான் எனது முதலாவது முதல்தரப்போட்டியை விளையாடினேன் ஆடுகளமும் சூழலும் எப்படியிருக்கும் என்பது எனக்கு தெரியும் அது சிறந்த விடயம் நாங்கள் வெற்றிபெற்றிருந்தால் இன்னமும் சிறப்பாகயிருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். சகோதரியா? ஜாகெர்அலியும் அவரை பேட்டி கண்ட சஹீலா பொபியும் சகோதரர்கள் என்பது அங்கிருந்த பலருக்கு தெரியாது. மைதானத்திற்கு வந்திருந்த பல டாக்காவை தளமாக கொண்ட பத்திரிகையாளர்களுக்கும் அது தெரியாது. ஆனால் தற்போது ஆர்வம் தொற்றிக்கொண்டிருந்தது. சகோதரி கேள்வி கேட்டது எப்படியிருந்தது என ஒரு பத்திரிகையாளர் ஜாகெர் அலியிடம் கேட்டார். என்னால்அவர் பெருமையடைந்திருந்திருப்பார் அவர் மகிழ்ச்சியாக காணப்பட்டார் என பங்களாதேஸ் வீரர் தெரிவித்தார். பங்களாதேசின் கோபோர் கஜாஜ் நாளேட்டின் செய்தியாளர் ஷகீலா பொபி,அவரது கணவர் அந்த நாளேட்டின் புகைப்படப்பிடிப்பாளர் அவர்கள் தங்கள் கைக்குழந்தையையும் கொண்டுவந்தனர்,ஜாகெர் சிக்சர்கள் அடித்தவேளை அவர்கள் அதனை கொண்டாடினர். ரசிகர்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். செய்தியாளர் மாநாட்டில் ஜாகெர் அலி தனது சகோதரியுடன் காணப்பட்டார்,அதன் பின்னர் ஷகீலா ஏனைய பத்திரிகையாளர்களிடம் பேசினார்,செய்தியாளர்மாநாட்டில் ஜாகெர்அலியிடம் கேள்வி கேட்பது எனக்கு ஒரு பெரும்கனவு என அவர் தெரிவித்தார். அது சாத்தியமாகும் என நான் கனவுகாணவில்லை என அவர் தெரிவித்தார். எங்கள் முழுக்குடும்பத்திற்கும் விளையாட்டுகளுடன் தொடர்புள்ளது என தெரிவித்த சஹீலா நான் மாவட்ட அணியின் முன்னாள் தலைவி என தெரிவித்தார்.2017 இல் உயிரிழந்த அவரது தந்தை ஒரு இராணுவீரர் அவரும் ஒரு விளையாட்டு வீரர். https://www.virakesari.lk/article/177924
-
ஒரு பிட்காயின் மதிப்பு ரூ.50 லட்சம் - திடீர் உச்சம் ஏன்?
ஒரு பிட்காயின் மதிப்பு ரூ.50 லட்சம் - திடீர் உச்சம் ஏன்? 60 லட்சம் பிட்காயின்கள் காணாமல் போனது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி & விசுவல் ஜெர்னலிசம் குழு பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயினின் மதிப்பு, அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் மதிப்பு 50 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. பிட்காயின் மதிப்பு அதிகரித்தன் பின்னணியில் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த கிரேஸ்கேல், பிளாக்ராக் மற்றும் ஃபிடிலிட்டி போன்ற முதலீட்டு நிறுவனங்கள், நிலையற்றது என்று வர்ணிக்கப்படும் இந்த டிஜிட்டல் கரன்சியை வாங்க பில்லியன்கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளன. இந்த முதலீட்டின் காரணமாக, இந்த சக்திவாய்ந்த நிறுவனங்கள் 'பிட்காயின் திமிங்கலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. பிட்காயின் என்றால் என்ன? பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். இந்த பணத்தை உலகின் பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்த முடியும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொடுத்தும் வாங்கலாம். தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம். பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது. பிட்காயின் அமைப்பின்படி மொத்தமாக 2.1 கோடி பிட்காயின்கள் மட்டுமே புழக்கத்தில் இருக்கமுடியும். அதில் இதுவரை 1.9 கோடி பிட்காயின்கள் மைனிங் செய்யப்பட்டு, அவை பரிமாற்றத்தில் உள்ளன. ‘பிட்காயின் மைனிங்’ என்பது உருவாக்கப்பட்ட பிட்காயினை கணினி உதவியுடன் புழக்கத்திற்கு கொண்டு வரப்படும் நடைமுறை ஆகும். உலகம் முழுவதும் இந்த பணியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ‘பிட்காயின் திமிங்கலங்கள்’ யார்? உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், இந்த டிஜிட்டல் பணத்தில் முதலீடு செய்துள்ளனர். மொத்தமுள்ள 2.1 கோடி பிட்காயின்களில், சில நிறுவனங்கள் அல்லது தனிநபர்களிடம் இந்த பிட்காயின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. அவ்வாறு அதிக பிட்காயின்களை வைத்து அதன்மூலம் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்களை ‘பிட்காயின் திமிங்கலங்கள்’ என்று முதலீட்டாளர்கள் வர்ணிக்கின்றனர். உலகம் முழுவதும், அதிக பிட்காயினை வைத்துள்ளவர்கள் விவரத்தை பிப்ரவரி 29 வரை எடுத்தபோது சில தகவல்கள் தெரியவந்தன. கீழேயுள்ள புள்ளிவிவரங்கள், நேரடி ஆராய்ச்சி மற்றும் பொது தளத்தில் கிடைக்கும் தகவல்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மதிப்பீடுகள் ஆகும். 60 லட்சம் பிட்காயின்கள் காணாமல் போனது எப்படி? மொத்தமுள்ள பிட்காயின்களில் சில லட்சம் பிட்காயின் காணாமல் போய் விட்டதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். அச்சிடப்பட்ட பணத்தை தொலைப்பது போல பிட்காயின்களை தொலைக்க முடியுமா? பிட்காயின்கள் என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் இயங்கும் பணம் என்பதால் இதை பாதுகாக்க பல அடுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிட்காயின் கரன்சி பரிமாற்றம் நடக்கிறது. இந்நிலையில் ஒரு பயனர், தனது பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும்(பாஸ்வேர்டு) மறந்தால் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை மீட்பது கடினம். பிட்காயின் பரிமாற்றத்தில், வாடிக்கையாளர் சேவை ஏதும் இல்லாத நிலையில், கணக்குகளை மறந்ததால் லட்சகணக்கான பிட்காயின்கள் உரிமை கோர ஆள இல்லாமல் நிரந்தரமாக காணாமல் போகின்றன. முப்பது முதல் அறுபது லட்சம் பிட்காயின்கள் இப்படி காணாமல் போய் இருக்கலாம் என்கிறனர் வல்லுநர்கள். வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தூக்கி எறிந்த தனது ஹார்ட் டிஸ்கில் சேமிக்கப்பட்ட வாலட் கணக்கால் 8000 பிட்காயின்களை இழந்தார். குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிட்காயின் பரிமாற்றமும் நாளடைவில் காணாமல் போகின்றன என்று கிரிப்டோ-புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எலிப்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த புலனாய்வாளர்களின் மதிப்பீட்டின்படி, 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளான செயல்பாடில்லாத நிலையில் 31.5 லட்சம் பிட்காயின்கள் இருக்கின்றன. இவ்வாறு 5 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாடில்லாமல் இருக்கும் இந்த பிட்காயின்களால், நிரந்தரமாக காணாமல் போகும் பிட்காயின்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று செயின்லைஸிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த புலனாய்வாளார்கள் கூறுகின்றனர். காணாமல் போன பிட்காயின் குறித்து இப்படி பலரும் ஒரு மதிப்பீட்டை வழங்குகின்றனர். ஆனால் இதில் 11 லட்சம் பிட்காயின், அடையாளம் தெரியாத ஒரு நபருக்கு சொந்தமாக இருக்கலாம் என்றும், அவர் தான் பிட்காயினை உருவாக்கி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அப்படியெனில் 24 லட்சம், அதாவது மொத்த பிட்காயினில் 11% பங்கு சந்தையில் இருந்து நிரந்தரமாக காணாமல் போய்விட்டதாக மதிப்பிடப்படுகிறது. கிரிப்டோ பரிமாற்றம் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள், கிரிப்டோ-பயனர்களுக்கான வங்கிகளைப் போல செயல்படுகின்றன. இங்கு பிட்காயின் மற்றும் பிற டிஜிட்டல் கரன்சிக்கு பதிலாக டாலர், பவுண்டு, ரூபாய் போன்ற உங்களுக்கு விருப்பமான பணமாக மாற்றிக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்களின் சார்பாக சுமார் 23 லட்சம் பிட்காயின்கள் இப்படியான பரிமாற்ற மையங்களில் உள்ளதாக கே33 ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். உலகின் மிகப்பெரிய கிரிப்டோ பரிமாற்ற நிறுவனங்கள் பினான்ஸ் - 5,50,000 பிட்காயின்கள் பிட்பினெக்ஸ் - 4,03,000 பிட்காயின்கள் காயின்பேஸ் - 3,86,000 பிட்காயின்கள் ராபின்ஹூட் - 1,46,000 பிட்காயின்கள் OKX - 1,26,000 பிட்காயின்கள் அடையாளம் தெரியாத திமிங்கலங்கள் ‘பிட்காயின் திமிங்கலம்’ என்பது தங்கள் டிஜிட்டல் வாலட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பிட்காயின்களை வைத்திருக்கும் நபர்களை குறிக்க பயன்படுத்தும் சொல்லாடல். பிரபல வலைத்தளமான Bitinfocharts, உலகின் டாப் 100 பிட்காயின் பணக்காரர்களின் பட்டியலை பொதுவெளியில் இருக்கும் பரிமாற்ற தகவலின் அடிப்படையில் பட்டியலிட்டுள்ளது. இந்த 100 பேர் பட்டியலில் 80 பேரின் அடையாளங்கள் யாருக்கும் தெரியவில்லை. அடையாளம் தெரியாத இந்த நபர்களின் வாலட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பிட்காயின்கள் உள்ளன.இப்படி அடையாளம் தெரியாத திமிலங்களின் பிட்காயின் கையிருப்பை கணக்கிட்டால், மொத்த பிட்காயின்களில் அவை 8% வரை உள்ளன. இதுபோன்ற ஏதாவது ஒரு வாலட் உங்களுக்கு சொந்தமாக இருந்தால், இன்றைய சந்தை மதிப்பின்படி நீங்கள் பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரராக இருப்பீர்கள். புழக்கத்திற்கு வராத பிட்காயின்கள் பிட்காயின்கள் செயல்படும் விதத்தின் அடிப்படையில் அதன் எண்ணிக்கை அதிகபட்சமாக 2.1 கோடியாக மட்டுமே இருக்கமுடியும். உலகெங்கிலும் உள்ள தன்னார்வ கணினிகளின் வலையமைப்பை பயன்படுத்தி ஒவ்வொரு நாணயமும் உருவாக்கப்பட வேண்டும். இதையே கிரிப்டோ வழக்காடு மொழியில், மைனிங் செயல்பாடு என்கின்றனர். சுரங்கத்தில் இருந்து கனிமங்களை வெட்டியெடுப்பது போல, இந்த வலையமைப்பில் இருந்து ஒவ்வொரு பிட்காயினாக எடுக்க வேண்டும். இந்த பணியில் பல்வேறு நிறுவனங்கள், தங்களின் கணினிகளை பயன்படுத்தி வேலை செய்து வருகின்றன. அப்படி மைனிங் செய்யப்படும் பிட்காயின்கள் சந்தையில் புழக்கத்திற்கு வரும். இதுவரை மொத்தமுள்ள பிட்காயின்களின் 93% கரன்சி சந்தையில் புழக்கத்தில் உள்ளன. மொத்தமாக உருவாக்கப்பட்ட 2.1 கோடி பிட்காயின்களில், வெறும் 7% பிட்காயின் மட்டுமே இன்னும் மைனிங் செய்யப்படாமல் உள்ளன. உலகின் கடைசி பிட்காயின் 2140ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சத்தோசி நகமுட்டோ - பிட்காயினை உருவாக்கியவர் பிட்காயின்கள் 2009ஆம் ஆண்டு முதன்முதலாக உருவாக்கப்பட்டன. இதை உருவாக்கிய அடையாளம் தெரியாத நபரிடம் 11 லட்சம் பிட்காயின்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. அந்த நபரிடமுள்ள இந்த கிரிப்டோ கரன்சி எதுவும் இத்தனை ஆண்டுகளில் எந்த பரிமாற்றத்திலும் பங்குகொள்ளவில்லை. பிட்காயின்களை உருவாக்கிய அந்த அடையாளம் தெரியாத நபரின் பெயர் சத்தோசி நகமுட்டோ என்றும், அவர் ஜப்பானைச் சேர்ந்தவர் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இந்த பெயருடைய நபர் ஆணா, பெண்ணா அல்லது உயிருடன் இருக்கிறாரா, இறந்து விட்டாரா என்று எந்த தகவலும் தெரியாது. அவரிடம் உள்ள 11 லட்சம் பிட்காயின்களின் இன்றைய மதிப்பின் அடிப்படையில், அடையாளம் தெரியாத இந்த நபர் உலகின் 22வது பணக்காரராக இருப்பார் என்று மதிப்பிடப்படுகிறது. பிட்காயின் மதிப்பு திடீர் உச்சம் ஏன்? கடந்த ஜனவரி மாதத்தில், அமெரிக்க நிதித்துறை அதிகாரிகள் ஒழுங்குபடுத்தப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் மூலமாக பிட்காயின்களுடன் இணைக்கப்பட்ட, ஸ்பாட் பிட்காயின் பத்திரங்களை விற்க அனுமதி வழங்கினர். இதன் மூலமாக இந்த முதலீட்டு நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான பிட்காயின்கள் வாங்கின. அதைக் கொண்டு வெளிச்சந்தையில் பிட்காயின் பத்திரங்களை விற்பனை செய்தன. இப்படியான பத்திரங்களை வாங்கிய எந்தவொரு நபரும், நிறுவனமும் பிட்காயின்களை சொந்தமாக வைத்திருக்கவில்லை. பிப்ரவரி 29ஆம் தேதி இந்த முதலீட்டு பத்திரங்களை மூலமாக 9 லட்சத்து 33 ஆயிரம் நாணயங்கள் பத்திரங்களாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கே33 ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலமாக இந்த வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்த பிட்காயின் மதிப்பில் 4.5% கரன்சியை வைத்துள்ளனர். காவல்துறையிடம் எவ்வளவு உள்ளது? உலகெங்கிலும் உள்ள காவல் முகமைகள், தங்களது கைது நடவடிக்கையின் போது சட்டவிரோத செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்ட பிட்காயின்களை பறிமுதல் செய்கின்றன. இப்படி பறிமுதல் செய்யப்படும் பிட்காயின் ஏலத்தில் விடப்படுகின்றன. சந்தை வல்லுநர்களின் தரவுகளின்படி, அமெரிக்க காவல்துறை தொடர்புடைய பறிமுதல் நடவடிக்கையின் மூலமாக 2 லட்சத்து 30 ஆயிரம் பிட்காயின்கள் பிடிபட்டுள்ளன. இதேபோல 2018ல் நடந்த பறிமுதல் நடவடிக்கையின் மூலமாக இங்கிலாந்தில் 60 ஆயிரம் பிட்காயினும், அண்மையில் ஜெர்மனி காவல்துறை 50 ஆயிரம் பிட்காயினையும் பறிமுதல் செய்தனர். பிட்காயினை வாங்க ஆர்வம் காட்டும் நபர் மென்பொருள் நிறுவன உரிமையாளரான மைக்கேல் சேலர், தனது நிறுவனம் மூலமாக பிட்காயின்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 2020ஆம் ஆண்டு முதல், மைக்ரோஸ்ட்ரடேஜி என்ற தனது நிறுவனம் மூலமாக பல்லாயிரக்கணக்கான பிட்காயின்களை இவர் வாங்கி வருகிறார். ஒவ்வொரு முறை பிட்காயினை வாங்கும் போதும் அதை தனது சமூக ஊடகத்தில் மைக்கேல் பதிவிட்டு கொண்டாடுவார். மைக்கேல் தனது நிறுவனங்களின் வழியாக இதுவரை 1,93,000 பிட்காயின்களை வாங்கியுள்ளார். இதன் மூலமாக உலகிலேயே அதிக பிட்காயின்களை வைத்து நிறுவனமாக இவரின் நிறுவனம் அறியப்படுகிறது. உலகின் முதல் பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான மவுண்ட் காக்ஸ், 2011 ஆம் ஆண்டில் சுமார் 8,50,000 பிட்காயின்களை இழந்தது. இதைப் பற்றி தனது புத்தகத்தில் எழுதியுள்ள மார்க் ஹண்டர் கூறுகையில், “நாணயங்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு இன்னும் குழப்பம் உள்ளது. ஆனால் காணாமல் போன பிட்காயின்களில் பெரும்பாலானவை திருடர்களால் விற்கப்பட்டு சந்தையில் புழக்கத்தில் உள்ளன.” என்றார். பிட்காயினை வைத்திருக்கும் நாடு மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரின் அதிபருக்கு பிட்காயின் மீது அளவு கடந்த பிரியம் உண்டு. அதன் விளைவாக கடந்த 2021ஆம் ஆண்டு அந்நாட்டின் பொதுப் பணத்தை பயன்படுத்தி பிட்காயினை இவர் வாங்கத் தொடங்கினார். அதிபரின் இந்த செயலுக்கு கடுமையாக எதிர்ப்புகளும் கிளம்பின. இந்த நாட்டுக்கு சொந்தமாக 2,800 பிட்காயின்கள் இருப்பதாக கிரிப்டோகரன்சி வலைதள பதிவாளரும், டச்சு ஆய்வாளருமான எலியாஸ் கணிக்கிறார். ஆனால் அதிகாரப்பூர்வமாக எல் சால்வடோர் நாட்டுக்கு சொந்தமாக எத்தனை பிட்காயின் உள்ளன என்ற விவரம் பொதுவெளியில் இல்லை. 2023ஆம் ஆண்டின் கடைசி காலாண்டு வருவாயை டெஸ்லா நிறுவனம் வெளியிடும் போது அதில் அந்நிறுவனத்திற்கு சொந்தமாக 9,700 பிட்காயின் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டு, ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் 40,000 க்கும் மேற்பட்ட பிட்காயினை வாங்கியது. ஆனால் அண்மையில் அதில் பெரும்பாலானவற்றை அந்நிறுவனம் விற்றுவிட்டது. 1 கோடிக்கும் அதிகமான பிட்காயின்கள் பொதுமக்களிடம் உள்ளன என்று பால்பார்க் நிறுவனம் மதிப்பிடுகிறது. இதில் எத்தனை தனிப்பட்ட நபர்கள் பிட்காயின்களை வைத்திருக்கிறார்கள் என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியாது. ஆனால் கிரிப்டோ-டெக் நிறுவனமான ரிவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு மதிப்பீட்டை வெளியிட்டது. அதன்படி 81.7 லட்சம் பிட்காயின் பயனாளர்கள் பரிமாற்றங்களில் ஈடுபடுவதாக குறிப்பிடுகிறது. அப்படியெனில் உலக மக்கள் தொகையில் 1% பேர் கிரிப்டோ பயனாளர்களாக இருக்கிறார்கள். https://www.bbc.com/tamil/articles/c6pj4g5l33no
-
உலகின் பணக்கார செல்லப்பிராணி: மலைக்க வைக்கும் சொத்து மதிப்பு!
உலகின் பணக்கார செல்லப்பிராணியாக ஆறாம் குந்தர் என்ற வளர்ப்பு நாய் கருதப்படுகிறது. இந்த நாயானது, ஹாமா தீவுகளில் சொந்தமாக வீடு முதல் சொந்தமாக ஆடம்பரப் படகு என்று செல்வந்த மனிதர்களுக்கு இணையாக வாழந்து வருகிறது. குறிந்த செல்வந்த நாய், பாடகி மடோனா முன்னர் வாழ்ந்து வந்த வீட்டில் தற்போது வாழந்து வருகிறது. ஜெர்மன் ஷெபர்ட் வகையை சேர்ந்த இந்த நாயின் வீடானது, 65 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய ஒரு வீடாகும். இந்நிலையில், ஆறாம் குந்தரின் சொத்து மதிப்பு, 300 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது. அதேவேளை, குந்தனின் முன்னாள் உரிமையாளரான செல்வந்தரான Karlotta Leibenstein என்னும் ஜேர்மானிய சீமாட்டி, தான் மரணமடையும் நேரத்தில் தனக்கு குடும்பம் என்று எதுவும் இல்லாததால், தன்சொத்து முழுவதையும் தான் மிகவும் நேசித்த தனது செல்லப்பிராணியாகிய குந்தனுக்கு எழுதிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/294271