Everything posted by ஏராளன்
-
மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை; நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் பாதிப்பு
வடக்கு மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை: குற்றச்சாட்டை மறுக்கும் கடற்படை Published By: VISHNU 29 FEB, 2024 | 01:29 AM வடக்கு கடலில் தமிழ் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி நடவடிக்கைககளுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டுகின்றமைக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என, வடபகுதி மீனவர்கள், கடற்படையினர் மீது தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டுகின்ற நிலையில், உள்ளூர் தமிழ் மீனவர்களின் தொழிலுக்கு இடையூறு விளைவிப்பதாக கடற்படை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாணம் - மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்த கடற்படைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவிக்கின்றார். “என்ன அதிகாரம் இருக்கிறது? எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்துத்தான் நீங்கள் விகாரைகளில் வழிபாடு நடத்தவேண்டுமா? உங்கள் அதிகாரத் திமிர்த்தனங்களை எங்கள் மக்கள் எப்போதும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என் நினைக்காதீர்கள்.” என யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் எம்.பி கடற்படையை எச்சரித்துள்ளார். சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்தொழிலாளர்களுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட ஊடவியலாளர்கள், பின்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலையீட்டுன் அந்தத் தடை நீக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் தற்போது அப்பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி , விகாரையின் பின்புறத்தோடு இணைந்த கடல் பிரதேசத்தில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். குறித்த விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் பொது மக்களின் காணிகளை அபகரித்துள்ள விடுதிகளை அமைத்துள்ள கடற்படை, கடலையும் ஆக்கிரமித்து விடுதிகளை அமைக்கப்போகிறதா என முன்னாள் எம்.பி சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார். “விகாரைக்கு அண்மையாக, எங்கள் மக்களின் காணிகளை அத்துமீறி பிடித்த கடற்படையினர் விடுதியை அமைத்து சிங்களவர்களைத்் தங்க வைக்கின்றனர். இப்போது எங்கள் கடலையும் கையகப்படுத்தி அதிலும் விடுதி அமைக்கப்போகின்றார்களா என்ற நியாயமான சந்தேகம் எழத்தான் செய்கின்றது.” தேசிய பாதுகாப்புக் கருதி, சட்டத்திற்கு உட்பட சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு கடற்படையினருக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், எனினும் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு கடற்படைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், மாதகல் சம்பில்துறை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். “கடற்படை அவர்கள் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பேச முடியும். மதம் சார்ந்து பேசுவதற்கு எந்த அனுமதியும் இல்லை அவர்கள். கடற்படை அவர்கள், தங்களுடைய தேசிய பாதுகாப்புத் தொடர்பிலான அவர்களுடைய கருத்துக்களைச் சொல்லலாமேத் தவிர, அதுவும் சட்ட ரீதியாக, அவர்களுடன் அனுகுகின்ற தரப்பின் ஊடாகத்தான் இதனை தெரிவிக்க முடியுமேத் தவிர, நேரடியாக அந்த கடற்றொழிலில் ஈடுபட்டவர்களுக்கு தெரிவிக்கமுடியாது,” என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு கடற்பைடை ஒரு போதும் இடையூறு ஏற்படுத்துவதில்லை என, கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் - மாதகல் பிரதேசத்தில் இறால் பிடியில் ஈடுபட்ட சிலருக்கு முறையான அனுமதிப்பத்திரம் காணப்படவில்லை எனவும், ஆகவே அவர்களின் தொழில் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவிக்கின்றார். https://www.virakesari.lk/article/177557
-
ஆராய்ச்சிக் கப்பல்களிற்கு இலங்கை தடை - கடும் அதிருப்தியை வெளியிட்டது சீனா
Published By: RAJEEBAN 29 FEB, 2024 | 10:30 AM ஆராய்ச்சிக் கப்பல்களிற்கு இலங்கை தடை விதித்துள்ளமை குறித்து சீனா தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இலங்கை ஜனவரி மூன்றாம் திகதி முதல் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தடைவிதித்துள்ளமை குறித்தே சீனா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் இவ்வாறான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு இலங்கை ஒரு வருடகால தடையை விதித்துள்ளது. சீனாவின் ஜியாங் யாங் கொங் 3 என்ற ஆராய்ச்சி கப்பல் தென் இந்திய கடற்பரப்பில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையிலேயே இலங்கை இந்த தடையை அறிவித்தது. குறிப்பிட்ட கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சிற்கு உரியது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது அயலில் ஆராய்ச்சிகள் இடம்பெறுவது குறித்த பாதுகாப்புகரிசனையை இந்தியா வெளியிட்ட நிலையிலேயே இலங்கை இந்த தடையை விதித்திருந்தது. இந்திய ஊடகங்கள் இதனை சீனாவிற்கு விழுந்த அடி என குறிப்பிட்டிருந்தன . எனினும் சீன அதிகாரிகள் இலங்கையின் இந்த முடிவால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர், இன்னுமொரு நாட்டின் அழுத்தத்தினால் இலங்கை இவ்வாறான முடிவை எடுத்தமை குறித்து தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/177569
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி.
-
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை மோசடிகளால் அழிகிறதா?
Published By: DIGITAL DESK 3 27 FEB, 2024 | 04:00 PM நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வாழைச்சேனை என்றதும் அங்கு அமைந்துள்ள கடதாசி தொழிற்சாலை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். என்றாலும் 1990 களில் இத்தொழிற்சாலை மூடப்பட்டதோடு அந்நினைவு பெரும்பாலானவர்களின் மனங்களில் இருந்து நீங்கிவிட்டது. 1947 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக ஜோர்ஜ் ஈ.டி.சில்வா பதவி வகித்தார். அப்பதவி 1948 இல் ஜி.ஜி பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1951 இல் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலைக்கு பொன்னம்பலம் அடிக்கல் நாட்டினார். ஜேர்மன் நாட்டின் உதவித் திட்டத்தின் கீழ் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது. என்றாலும் 1952 இல் நடைபெற்ற பொதுத்தேர்லிலும் ஐ.தே.க வே ஆட்சிக்கு வந்தது. அந்த அரசிலும் பொன்னம்பலமே கைத்தொழில் அமைச்சரானார். அதனால் அவர் அடிக்கல் நாட்டி ஆரம்பித்த கடதாசி தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் டட்லி சேனநாயக்காவின் ஆட்சியிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. 1953 இல் இடம்பெற்ற ஹர்த்தாலைத் தொடர்ந்து சேர்.ஜோன்.கொத்தலாவல நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்ற போதிலும் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் அமைச்சு பதவி மாறவில்லை. அதன் பயனாக அவர் ஆரம்பித்த வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகள் 1956 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியாகும் போது நிறைவடையும் கட்டத்தை அடைந்தது. நீண்ட காலம் பலர் மேற்கொண்ட அர்ப்பணிப்பு மிக்க பணிகளின் ஊடாக கிழக்கு கடதாசி ஒருங்கிணைப்பு சபை என 1956 இல் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை அமைக்கப்பட்டமை தெரிந்ததே. என்றாலும் 2015 முதல் 2020 வரையும் மின்சாரம் இல்லாத காரணத்தினால் இத்தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டிருந்த போதிலும் அதன் தலைவர்கள் மாதாந்த சம்பளம் பெற்றனர். 2020 இல் தான் இத்தொழிற்சாலை அரசின் ஏற்பாட்டில் மீண்டும் திறக்கப்பட்டது. இத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நல்லதொரு காலம் உருவாகியுள்ளதாக கருதினோம். ஆனால் எதிர்பார்ப்பு பொய்த்து போயுள்ளது. அன்று இத்தொழிற்சாலைக்கு பொறுப்பான அமைச்சராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எம்.பி பதவி வகித்தார். நான் கொரிய முதலீட்டாளருடன் அவரைச் சந்தித்து இத்தொழிற்சாலையை 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பார்வையிடச் சென்றோம். 50 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மன் பொறியியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இத்தொழிற்சாலையில் உள்ள சிறந்த தொழில்நுட்ப பெறுமானங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் படி, மீண்டும் உற்பத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய நிலையில் இங்குள்ள உற்பத்தி இயந்திரங்கள் காணப்பட்டன. அவற்றைத் திருத்தவென நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அச்சமயம் தொழிற்சாலையில் காணப்பட்ட நிலையை இட்டு நாம் அதிர்ச்சியடைந்தோம். மிகவும் சிறந்த நிலையில் காணப்பட்ட கார்ட்போர்ட் உற்பத்தி இயந்திரத்தின் மூன்று பிரிவுகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு 100 முதல் 150 ஜி.எஸ்.எம். வரையான காகிதாதிகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் நான் பதவி வகிக்கும் போது 150 முதல் 550 ஜி.எஸ்.எம். வரையான காகிதாதிகள் உற்பத்தி செய்யப்பட்டமை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தொழிற்சாலையின் சில பிரிவுகளது உற்பத்தி செயற்பாடுகள் நிறுத்தப்பட பல இயந்திரங்கள் துண்டு துண்டாகக் கழற்றப்பட்டு வேறாக்கப்பட்டிருந்ததும் சில இயந்திரப் பாகங்கள் தொழிற்சாலை வளாகத்திற்கு வெளியே அப்புறப்படுத்தப்பட்டிருந்தமையும் காரணங்களாக விளங்கின. இத்தொழிற்சாலைக்கு பொறுப்பாக 2020 முதல் 2021 வரைப் பதவி வகித்த நிர்வாக அதிகாரி, இந்த இயந்திரத்தின் உதிரிப் பாகங்களைப் புதுப்பிப்பதற்காகக் கொண்டு செல்வதாகத் தெரிவித்ததாக ஊழியர்களே தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கீழ் மாடியிலுள்ள கடதாசி உற்பத்தி இயந்திரத்தைப் பார்வையிடச் சென்ற போது, அந்த இயந்திரமும் கூட துண்டு துண்டாகக் கழற்றி வேறாக்கப்பட்டிருந்தது. அதன் சில பாகங்கள் அங்கு காணப்படவே இல்லை. அது தொடர்பில் விசாரித்த போது உற்பத்தி முகாமையாளர், இந்த கார்ப்போர்ட் இயந்திரத்தை பொருத்துவதற்காகவே கழற்றி வேறாக்கியதாகவும் அதன் பாகங்கள் காகிதாதி இயந்திரத்திற்கு பொருத்தமானதாக இல்லை என்பது தெரிந்தது. அதனால் அதனை திருத்தியமைக்க அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்டார். வெளிநாட்டவர்கள் புதிய பாகங்களைக் கொண்டு வர முயற்சி செய்த போதிலும் அதற்கு நிதி இல்லை என நிதியமைச்சு குறிப்பிட்டதாகவும் அந்த முகாமையாளர் கூறினார். இவ்வாறான நிலையில் நான், ஏன் இந்த இயந்திரத்தைத் துண்டு துண்டாகக் கழற்றினீர்கள் என விசாரித்தேன். கடதாசி உற்பத்தி இயந்திரங்கள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற தமிழகத்தின் கோயம்புத்தூர் பொறியியலாளர்கள் மூன்று தடவைகள் இந்நாட்டுக்கு வருகை தந்த சமயம், ஜேர்மனியில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த voith கடதாசி உற்பத்தி இயந்திரத்தின் ஆயுட்காலத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் வழங்கிய அனைத்து அறிக்கைகளும் என்னிடமுள்ளது. அவர்களது அறிக்கைப்படி, இந்த இயந்திரங்களை முழுமையாகப் புதுபித்த பின்னர் மேலும் 25 வருடங்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி செயற்படக்கூடிய இயந்திரங்கள் இவை என்றும் குறிப்பிட்டுள்ளனர் என்பதையும் எடுத்துக்கூறினேன். 14 வருடங்களுக்கு பின்னர் மீளக்கட்டியெழுப்பப்பட்ட இந்த இயந்திரத்தை இவ்வாறு துண்டு துண்டாகக் கழற்றி சேதப்படுத்தியுள்ளமை குறித்து நாம் கடும் கவலைக்கும் வேதனைக்கும் உள்ளானோம். இத்தொழிற்சாலையின் தற்போதைய தலைவர் பதவி வகிக்கும் காலப்பகுதியில் திருத்தியமைக்கும் இடத்தில் பல பொருட்கள் இல்லாதுள்ளன. அத்தோடு வாழைச்சேனை நீதிமன்றத்தினால் இத்தொழிற்சாலைக்கு விடுவிக்கப்பட்ட 115 மோட்டார் இயந்திரங்களும் தற்போது அங்கிருக்கின்றதா என்பதும் கேள்விக்குரிய விடயமாக உள்ளது. இத்தொழிற்சாலையின் இந்து கோவிலுக்கு பின்பகுதியில் காணப்பட்ட பெறுமதி மிக்க தேக்கு மரங்கள் கூட வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அம்மரங்களின் அடிப்பாகங்கள் கூட பெகோ இயந்திரத்தைக் கொண்டு இருந்த அடையாளம் தெரியாதபடி அப்புறப்படுத்தப்பட்டு நிலம் சம தரையாக்கப்பட்டுள்ளன. இவற்றின் கிளைகள் தொழிற்சாலையின் நீராவி இயந்திரத்திற்கு (பொயிலர்) விறகாகப் பாவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த தொழிற்சாலையின் இதயமே இந்த நீராவி இயந்திரமேயாகும். இவற்றை திருத்தியமைப்பதற்கு 28 மில்லியன் ரூபாவுக்கு கேள்விமனு (டென்டர்) கோரப்பட்டிருந்த போதிலும் அதனை உள்நாட்டவரைக்கு கொண்டு நான் 11 மில்லியன் ரூபாவுக்கு திருத்தியமைத்தேன். இன்றும் அந்த நீராவி இயந்திரமே (பொயிலர்) இயங்குநிலையில் உள்ளது. இவை அனைத்தும் 2020 இல் இத்தொழிற்சாலைக்கு பொறுப்பான அமைச்சராக இருந்த விமல் வீரவன்ச எம்.பியினால் நியமிக்கப்பட்ட புதிய தலைவரின் பதவிக்காலத்தில் இடம்பெற்றவையாகும். அவரே தற்போதும் தலைவராகப் பதவி வகிக்கிறார். ஆனால் இத்தொழிற்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சேதங்களும் அழிவுகளும் முன்பு பதவி வகித்த தலைவர்களின் காலத்தில் இடம்பெற்றவையாக அவர் கூறிவருகிறார். மேலும் இத்தொழிற்சாலையின் வரலாற்று பின்புலத்தை அறிந்து கொள்ள வேண்டுமெனில், இத்தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் ஊடாகவும் அறிந்து கொள்ளலாம். அவர் இத்தொழிற்சாலையின் முன்னேற்றத்தில் தீவிர அக்கரை கொண்டிருப்பவர் என்பதோடல்லாமல், அவ்வப்போது இத்தொழிற்சாலைக்கு வந்து செல்லக்கூடியவராகவும் இருந்தார். அத்தோடு இதன் அபிவிருத்திக்காக பாராளுமன்றத்தில் கூட அவர் குரல் எழுப்பியுள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இவ்வாறான விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை ஒரு முக்கிய விடயத்திற்காக ஏற்பட்டுள்ளது. அதாவது கிழக்கு மாகாணத்தின் பாரிய அபிவிருத்திக்கு வித்திடும் வாழைச்சேனை சுற்றுலா ஒருங்கிணைப்பு அபிவிருத்தி கருத்திட்டம் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்காவை 2023 நவம்பர் 23 ஆம் திகதி சந்தித்து அளவலாவினேன். அச்சமயம் அவர் தெரிவித்த விடயங்கள் என்னை ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியதோடு அவற்றால் கடும் கவலையும் வேதனையும் அடைந்தேன். அதாவது வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் இயந்திரங்களும் அவற்றின் பாகங்களும் எனது பதவிக்காலத்தில் தான் இரும்புக் கணக்குக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அது தொடர்பில் முறைப்பாடு உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால் நான் உண்மையான அறிக்கைகளுடன் அவரைச் சந்திக்க சென்றிருந்தேன். அதனால் என் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து எனக்கு அறியத்தந்த இராஜாங்க அமைச்சருக்கு முதலில் தனிப்பட்ட முறையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன். இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கா நாடு தொடர்பிலும் நாட்டின் வளங்கள் குறித்தும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளக்கூடிய ஒருவராவார். அந்த வகையில் இராஜாங்க அமைச்சருக்கு சகல விடயங்களையும் ஆவணங்களின் ஆதாரங்களுடன் நான் எடுத்துக்கூறினேன். எந்தவொரு நிறுவனத்திலும் பதவியொன்றை வகிக்கும் போது நிகழ்ச்சிநிரல், நடைமுறைச் சாத்தியமான முகாமைத்துவம் குறித்த ஒரளவாவது அறிவு தேவை என்பதை நாமறிவோம். அவை எதனையும் கொண்டிராதவர்கள் செயற்றிறன் மிக்க நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் தெரிவிப்பதை விடுத்து நாட்டுக்கோ, இனத்திற்கோ, நிறுவனத்திற்கோ, எதிர்கால சந்ததியினருக்கோ உற்பத்தி திறன் மிக்க சேவைகளைச் செய்ய மாட்டார்கள். அதனால் எனக்கு எதிராக எவர் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தாலும் இத்தொழிற்சாலையின் தகுதிகாண் அதிகாரியாகக் கடமையாற்றிய காலப்பகுதியில் நிறுவனத்தின் வளங்களைப் பாதுகாத்து (ஒரு அங்குலத்தைக் கூட எவருக்கும் விற்பனை செய்யாது மொபிட்டல் நிறுவனத்தின் கோபுரத்தை அமைப்பதற்கு காணியை வழங்கி மாதா மாதம் நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபா படி வருமானம் கிடைக்கப்பெற வழி செய்யப்பட்டுள்ளது) உற்பத்தி கொள்ளளவை அதிகரித்ததன் ஊடாக வருமானம் அதிகரித்ததோடு நஷ்டத்தைக் குறைத்து இலாபம் பெறும் நிலைக்கு கொண்டு வரவென ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நடவடிக்கைகளை மேற்கொண்டேன் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனினும் அண்மையில் நாடு எதிர்கொண்ட சவால்களை வெற்றி கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதனால் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை அபிவிருத்தி செய்து அதற்குரிய காணியில் சுற்றுலா ஒருங்கிணைந்த அபிவிருத்தி கருத்திட்டத்தை முன்னெடுத்து 2000 தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி ஜனாதிபதிக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்க முடியும் என நான் நம்புகிறேன். நாம் இத்திட்டத்தை கட்டியெழுப்புவதற்கு சாதாரண பட்டங்களையோ கலாநிதி பட்டங்களையோ கொண்டிராவிட்டாலும் சரியான நிகழ்ச்சி நிரல் மற்றும் நடைமுறைச்சாத்தியமான முகாமைத்துவம் இருக்குமாயின் சவால்களை பொறுப்பெடுப்பது சிரமமான காரியமாக இருக்காது என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும். இந்த அனைத்து விடயங்களையும் புரிந்து செயற்படுவது அவசியம். எவரொருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் அதன் உண்மைத்தன்மையப் புரிந்து கொள்வது மக்கள் அபிப்பிரராயத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு அறிவுபூர்வமான வழிமுறையாக அமையும். அதனால் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை இந்நாட்டின் பொருளதாதார மேம்பாட்டுக்கு பங்களிக்கும் வகையில் மேம்படுத்துவதோடு நாட்டின் காகிதாதி உற்பத்தியின் கேந்திர நிலையமாகவும் உருவாக்க வேண்டும். இதற்கு கடதாசி தொழிற்சாலை மாத்திரமல்லாமல் இந்த அபிவிருத்தி கருத்திட்டத்தையும் இங்கு முன்னெடுப்பது அவசியம். அதற்காக தொடராக ஒத்துழைப்பது எமது பொறுப்பாகும். தேசமான்ய மங்கள சீ செனரத், முன்னாள் தகுதிகாண் அதிகாரி, வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை https://www.virakesari.lk/article/177407
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரிஸ் நகரில் பாவோ நூமி வென்ற 5 தங்கங்கள் பாரிஸில் காட்சிப்படுத்தப்படும் 28 FEB, 2024 | 05:19 PM (நெவில் அன்தனி) ஒலிம்பிக் விளையாட்டு விழா வரலாற்றில் அதிசிறந்த ஒலிம்பிக் சம்பியன்களில் ஒருவரான பாரோ நுமியினால் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பிரெஞ்ச் தலைநகரில் வென்றெடுக்கப்பட்ட ஐந்து தங்கப் பதக்கங்கள் முதல் தடவையாக பாரிஸ் நகருக்கு அடுத்த மாதம் கொண்டு செல்லப்படவுள்ளது. 'பறக்கும் பின்லாந்து வீரர்', 'பின்லாந்து ஆவி', 'பின்லாந்தின் ஆச்சரியத்தக்க ஓட்ட வீரர்' என்று அழைக்கப்பட்டவர் பாவோ நூமி. 1924ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மத்திய மற்றும் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் 5 தங்கப் பதங்களை வென்றதன் மூலம் பாவோ நூமி முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவர் வென்ற 5 தங்கப் பதக்கங்களில் 3 பதக்கங்கள் தனிநபர் நிகழ்ச்சிகளிலும் 2 பதக்கங்கள் அணிநிலை நிகழ்ச்சிகளிலும் பெறப்பட்டவையாகும். 1500 மீட்டர், 3000 மீட்டர், தனிநபர் நகர்வல ஓட்டப் போட்டி ஆகியவற்றில் அவர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தார். அணி நிலை நகர்வலப் போட்டி மற்றும் 3000 மீட்டர் அணிநிலை போட்டி ஆகியவற்றிலும் அணிக்கான தங்கப் பதக்கங்களை பாவோ நூமி வென்றிருந்தார். பாரிஸ் 1924 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பாவோ நூமி வென்றெடுத்த 5 தங்கப் பதக்கங்கள் இன்றும் ஒரே ஒலிம்பிக் அத்தியாயத்தில் மெய்வல்லுநர் ஒருவரால் வெல்லப்பட்ட அதிக தங்கப் பதக்கங்களாக இருக்கின்றன. நூமி குடும்பத்தாரின் பரிவான பெருந்தன்மையின் பலனாக 1924இல் நூமியினால் வெல்லப்பட்ட அந்த ஐந்து தங்கப் பதக்கங்களும் பிரெஞ்சு தலைநகர் பாரிஸின் மையத்தில் செய்ன் பகுதியின் இடதுகரையில் உள்ள மொனாய் டி பாரிஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும். ஒலிம்பிக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒலிம்பிக்கில் வென்றெடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும். அதில் நூமியின் பதக்கங்களும் அடங்குகின்றன. நவீன ஒலிம்பிக்கின் பரிணாம வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி பல்வேறு வடிவங்களைக் கொண்ட ஒலிம்பிக் பதக்கங்கள் அங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்தக் கண்காட்சியை ஊடகத்துறையினர் மார்ச் 26ஆம் திகதி பார்வையிட அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் மார்ச் 27இலிருந்து செப்டெம்பர் 22 வரை பொதுமக்களுக்கு கண்காட்சி திறக்கப்பட்டிருக்கும். https://www.virakesari.lk/article/177520
-
மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று ஆரம்பம்
றோயல் செலஞ்சர்ஸுக்கு இலகுவான வெற்றி 28 FEB, 2024 | 01:57 PM (நெவில் அன்தனி) பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (27) இரவு நடைபெற்ற இரண்டாவது மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் அத்தியாயத்தின் 5ஆவது போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸ் அணியை 8 விக்கெட்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் இலகுவாக வெற்றிகொண்டது. கடந்த வருடப் போட்டியின் ஆரம்பத்தில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், இந்த வருடம் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி தனது முயற்சியை சிறப்பாக ஆரம்பித்துள்ளது. றோயல் செலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இப்போட்டியில் துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்த வருடப் போட்டிளில் இதுவரை அணி ஒன்று பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும். குஜராத் ஜயன்ட்ஸ் அணி சார்பாக மூவர் மாத்திரமே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். அவர்களில் மத்திய வரிசை வீராங்கனை தயாளன் ஹேமலதா திறமையை வெளிப்படுத்தி 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவரை விட ஆரம்ப வீராங்கனை ஹாலீன் டியோல் 22 ஓட்டங்களையும் பின்வரிசையில் ஸ்நேஹ் ராணா 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சொபி மொலினெஸ் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரேனுகா சிங் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 12.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா 43 ஓட்டங்க ளையும் சபினெனி மேகனா ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் எலிஸ் பெரி ஆட்டம் இழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்று தமது அணியின் வெற்றியை இலகுவாக்கினர். https://www.virakesari.lk/article/177486
-
இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?
குலசேகரபட்டினத்தில் இருந்து முதல் ராக்கெட் பாய்ந்தது - இந்த ஏவுதளத்தால் இஸ்ரோவுக்கு என்ன லாபம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 27 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 28 பிப்ரவரி 2024 இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாட்டின் குலசேகரப் பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்துக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து, ரோகிணி 6 H 200 சிறிய வகை ராக்கெட்டை திட்டமிட்டபடி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இஸ்ரோவின் முக்கியமான திட்டங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஏவுதளத்தின் சிறப்புகளைப் பற்றி இந்தக் கட்டுரை விவரிக்கிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் இங்கிருந்து விண்ணில் ஏவப்படுகின்றன. தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது. அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நூறு சதவீதம் நிறைவடைந்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்ட இருக்கிறார். குலசேகரபட்டினத்தில் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும், ரோகினி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கும் இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து முதலில் வளிமண்டலத்தை ஆய்வு செய்ய ரோகிணி 6 H 200 சிறிய வகை ராக்கெட் சரியாக மதியம் 1.40 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அனைரும் கைதட்டி உற்சாகமாக கொண்டாடினர்.. இஸ்ரோ திட்டமிட்டிருந்தபடி, அந்த ராக்கெட் 75.24 கி.மீ உயரத்தை எட்டி 121.42 கி.மீ தூரம் சென்று கடலில் விழுந்தது. படக்குறிப்பு, ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நூறு சதவீதம் நிறைவடைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் அங்கு ராக்கெட்ஏவுதளம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏவுதளத்திற்கு அருகில்தான் விண்வெளி தொழில் பூங்காவைத் தொடங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க குலசேகரபட்டினத்தை இஸ்ரோ தேர்வு செய்தது ஏன்? இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டனவா? தமிழ்நாட்டில் இருந்து ராக்கெட்டை ஏவுவதால் இஸ்ரோவுக்கு என்ன லாபம்? இதுகுறித்து முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் பிபிசி தமிழிடம் பேசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கீழக்கரை, சாயல்குடிக்கு அருகில் இருக்கும் வாலிநோக்கம் என்ற இடத்தில் ஏவுதளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன ஸ்ரீஹரிகோட்டாவிற்கு முன்பாகவே தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாட்டின் வாலிநோக்கம் “கடந்த 1960களின் இறுதியில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க தமிழ்நாடுதான் முதலில் கருத்தில் கொள்ளப்பட்டது. " "இதற்காக கீழக்கரை, சாயல்குடிக்கு அருகில் இருக்கும் வாலிநோக்கம் என்ற இடத்தில் ஏவுதளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன," என்று கூறுகிறார் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன். அப்போது இஸ்ரோ தலைவராக இருந்த சதீஷ் தவான் தலைமையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்பட பலர் அடங்கிய குழு அங்கு சென்று ஆய்வு செய்தது. "அங்கிருந்த தேவாலயத்தினரும் கிராம மக்களும் மாலை அணிவித்து வரவேற்றனர், ஆனால் சில காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதற்குப் பிறகுதான் ஸ்ரீஹரிகோட்டா தேர்வு செய்யப்பட்டு அங்கு விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டது,” என்று இளங்கோவன் தெரிவித்தார். குலசேகரப்பட்டினம் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ தூத்துக்குடியில் உள்ள குலசேகரபட்டினத்தை தேர்ந்தெடுத்தது குறித்துப் பேசும்போது அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளதாக விஞ்ஞானி இளங்கோவன் தெரிவித்தார். அவை, "பொதுவாக ஒரு ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருக்க வேண்டும். ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் விண்கலங்கள் தென்துருவத்தை நோக்கி, கிழக்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து ஏவப்பட வேண்டும். அப்போதுதான் பூமியின் சுழல் வேகமான 0.5 கிமீ/செகண்ட் கூடுதலாக கிடைக்கும் (நமக்கு தேவை 8 கி மீ/செகண்ட்)," என்று அவர் விளக்கினார். இவ்வாறு ஏவப்படும்போது ஒரு ராக்கெட்டின் முழு ஆற்றலும் பயன்படுத்தப்படும் என்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைக் கூட எளிதாக ஏவ முடியும் என்று அவர் விளக்கினார். இந்தக் காரணத்திற்காக பல நாடுகள் வேறு கண்டங்களில் இருந்துகூட தங்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகின்றன. "எடுத்துக்காட்டாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்கலங்கள் தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகின்றன. பட மூலாதாரம்,BBELANGOVAN RAJAGOPALAN படக்குறிப்பு, ஸ்ரீஹரிகோட்டா, பூமத்திய ரேகை பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆனால், குலசேகரபட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. ஏவுகலங்களில் இருந்து பிரிந்து வரும் பாகங்கள் (உதாரணமாக சில பாகங்கள் ஏறக்குறைய 20 மீட்டர் நீளமும் 3 மீட்டர் விட்டமும் கொண்டவை) கடலில்தான் விழ வேண்டுமே தவிர மக்கள் வசிக்கும் நிலபரப்பின் மீது விழக்கூடாது. அப்படி விழுந்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்த விதி மிக முக்கியமானது," என்கிறார் விஞ்ஞானி இளங்கோவன். இந்த விதியை கருத்தில் கொண்டு, "ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளின் பாகங்கள் இலங்கை நாட்டின் மீது விழுந்து விடக்கூடாது என்பதால் ராக்கெட்டுகள் 'Dogleg maneuver' எனும் முறையில் விண்ணில் ஏவப்படுகின்றன. ஆனால், இந்த முறையில் ஏவும்போது எரிபொருள் அதிகமாக செலவாகும். எனவே புதிய ஏவுதளம் இலங்கை நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், எரிபொருளையும், செலவுகளையும் மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்." அதுமட்டுமின்றி, ஏவுதளம் அமைக்கப்படும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார் இளங்கோவன். மேலும், அந்தப் பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடிய பகுதியாக இருக்கக்கூடாது எனவும் புயல், மின்னல், மழையின் தாக்கமும் அங்கு குறைவாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். "தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரபட்டினம், மேலே சொன்ன அனைத்து அம்சங்களையும் கொண்ட ஓர் இடமாக உள்ளது. எனவே தான் இஸ்ரோ இதைத் தேர்வு செய்துள்ளது,” எனக் கூறினார். பட மூலாதாரம்,BBELANGOVAN RAJAGOPALAN ஸ்ரீஹரிகோட்டா - குலசேகரபட்டினம் ஓர் ஒப்பீடு “ஸ்ரீஹரிகோட்டா, பூமத்திய ரேகை பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆனால், குலசேகரபட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. எனவே, குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவும்போது அதிகளவில் எரிபொருள் மிச்சமாகும். அதோடு, ராக்கெட்டின் வேகத்தை நொடிக்கு அரை கிலோ மீட்டர் வீதம் அதிகரிக்க முடியும்,” என்று கூறுகிறார் மூத்த விண்வெளி விஞ்ஞானி நெல்லை சு.முத்து. “வழக்கமாக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கை மீது பறந்துவிடாமல் இருக்க அல்லது ராக்கெட்டுகளில் இருந்து பிரிந்து விழும் பாகங்கள் இலங்கை மீது விழாமல் இருக்க, கிழக்கு நோக்கி ஏவப்பட்டு பின்னர், தென் துருவம் நோக்கித் திருப்பப்படுகிறது. ஆனால், குலசேகரபட்டினத்தில் இருந்து ஏவும்போது இந்த பிரச்னை எழாது. ராக்கெட்டுகள் நேராக தென் திசையை நோக்கி ஏவப்படும். இது இஸ்ரோவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குலசேகரபட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைப்பதன் மூலம் பல்லாயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் இஞ்ஜினின் எரிபொருளான திரவ ஹைட்ரஜனும் கேரள மாநிலம் தும்பாவில் ராக்கெட் பாகங்கள் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. அங்கிருந்து வெகு தொலைவில், ஆந்திராவில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அவற்றைக் கொண்டு செல்வதில் கால தாமதம், பாதுகாப்பு பிரச்னை, கூடுதல் செலவு, சேதம் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால், மகேந்திரகிரி மற்றும் தும்பாவுக்கு ஓரளவு அருகில் குலசேகரப்பட்டினம் இருப்பதால் இந்த பிரச்னைகள் ஏற்படாது,” எனக் கூறினார். குலசேகரபட்டினம் சர்வதேச அளவில் கவனம் பெறும் வாய்ப்பு “குலசேகரபட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைப்பதன் மூலம் பல்லாயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். குலசேகரபட்டினம் உலக விண்வெளி அறிவியல் வரைபடத்தில் முக்கிய இடம் பெறும்," என்று கூறுகிறார் நெல்லை சு. முத்து. குலசேகரபட்டினம் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. போன்ற சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதே இஸ்ரோவின் திட்டம். சிறிய ரக ராக்கெட் பாகங்களை உருவாக்குவதும், ஒன்று சேர்த்து ஏவுவதும் எளிதானது என்பதால், "அத்தகைய சிறிய ராக்கெட்டுகளுக்கான ஒரு சிறப்பு விண்வெளி ஆய்வு மையம் அமைப்பது மிகவும் முக்கியம்," என்கிறார் அவர். இதன்மூலம் பெரிய ராக்கெட் தயாரிப்புக்கு நீண்ட காலம் காத்திருக்காமல் "தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் சிறிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இது வர்த்தகரீதியாக மிகப்பெரிய லாபம் அளிக்கும்,” என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cn0n0pxx1edo
-
உலகில் முதலாவதாக மெய்நிகர் சுற்றுலா முறையை அறிமுகம் செய்த சவூதி
28 FEB, 2024 | 08:41 PM சவூதி கலாச்சார அமைச்சு உலகின் முதல் தேசிய கலாச்சார மெட்டாவெர்ஸ் தளத்தினை கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது, இது பயனர்களுக்கு மெய்நிகர் (Virtual Reality) வரலாற்று, உல்லாசப் பயணங்களில் பங்கேற்க உதவுகிறது. மெட்டாவெர்ஸ் இன் இந்த அற்புதமான கண்டுபிடிப்பானது ஜெனரேட்டிவ் மீடியா இன்டலிஜென்ஸ் (GMI) எனும் செயற்கை நுண்ணறிவு அமைப்பு மூலம் மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. GMI உடன் இணைந்து ஹைப்பர்லெட்ஜர் ஃபேப்ரிக் 2.5 பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி droppGroup மற்றும் 'phygital' metaverse உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அற்புதமான தளம் மெய்நிகர் ஆய்வு மற்றும் அத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சவூதி ஹெரிடேஜ் மெட்டாவர்ஸ் தளமானது எண்ணற்ற வசீகர அனுபவங்களை பயனர்களுக்கு வழங்குகிறது. சவூதி அரேபியாவின் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டாடும் கலாச்சார காட்சிகள் வரலாற்றுச் சுற்றுப்பயணங்கள், இசை நிகழ்ச்சிகள், கலைக் கண்காட்சிகள் மற்றும் சிறு-விளையாட்டுகள் முதல் பல்வேறு வகையான செயல்பாடுகளை தூர தேசங்களில் இருந்து நிஜத்தில் அனுபவிப்பதை போல அனுபவிப்பதற்கான சந்தர்பத்தை இந்த தளம் ஏற்படுத்தி தருகிறது. மேலும் இத்தளமானது சவூதியின் புரட்சிகர தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு ஒரு சான்றாக உள்ளது. இது அன்மைய, சவூதியின் நிறுவன தின சிம்பொனி கச்சேரி போன்ற நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பை வழங்குகியதும் குறிப்பிடத்தக்கது. இந்த டைனமிக் டிஜிட்டல் சூழலானது மொபைல் போன்கள், VR ஹெட்செட்கள் மற்றும் டெஸ்க்டாப்புகள் உட்பட பல சாதனங்களின் மூலம் அணுகக்கூடியதாக உள்ளது. சவூதி கலாசாரத்தை சர்வதேச மக்களும் ரசிக்க, அனுபவிக்க வேண்டும் என அந்நாட்டு கலாச்சார அமைச்சகம் விரும்புகிறது. எனவே அவர்கள் உலகில் எங்கிருந்தாலும் கலாச்சார நிகழ்வுகளை அணுகச் செய்வதற்கான முயற்சியாக இது இருக்கிறது. இந்தப் புதிய முன்முயற்சி, மக்கள் கலாச்சாரத்தை குறிப்பாக ஒன்லைனில் எப்படி அனுபவிக்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கிறது. மெய்நிகர் அனுபவங்களில் பங்கேற்பதன் மூலம், மக்கள் கலாச்சாரங்களை தம்மிடையே பகிர்வதற்கான புதிய வழியை உருவாக்கித் தருகிறது. இது தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியம் இரண்டினையும் இணைக்கும் பாலமாக காணப்படுகிறது. https://www.virakesari.lk/article/177540
-
இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியுடன் மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க இணக்கம்
28 FEB, 2024 | 05:32 PM (இராஜதுரை ஹஷான்) மத்தள விமான நிலையத்தை இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தனியார் கூட்டு முயற்சியுடன் ஒழுங்குப்படுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கான யோசனை எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என துறைமுகம், கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் கூட்டிணைந்து மத்தள விமான நிலையத்தின் ஒழுங்குப்படுத்தல் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக துறைமுகம், கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மத்தள விமான நிலையத்தின் அபிவிருத்தி மற்றும் ஒழுங்குப்படுத்தல் பணிகளை முன்னெடுப்பதற்கு இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தனியார் நிறுவனங்கள் முன்னிலையாகியுள்ளன. இந்த நிறுவனங்களின் முகாமைத்துவத்துடன் பலமுறை மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களை தொடர்ந்து இந்த தீர்மானம எடுக்கப்பட்டதுடன், கலந்துரையாடல் வெற்றிப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் இந்தியா - ரஸ்யா கூட்டு ஒழுங்குப்படுத்தல் ஊடாக கிடைக்கப் பெறும் இலாபத்தின் ஒரு பகுதியை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக 247.7மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் நிதியை கொண்டு அபிவிருத்தி நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு நன்கொடைகள் ஏதும் இந்த அபிவிருத்தி திட்டத்துக்கு கிடைக்கப்பெறவில்லை. எனினும் சீனாவின் எக்ஸிம் வங்கி மாத்திரம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்கியிருந்தது. 2017 முதல்வரை ஒவ்வொரு வருடமும் இரண்டு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 2017,2018,2019,2020 ஆம் ஆண்டுகளில் இரண்டு பில்லியன் நட்டம் ஏற்பட்டாலும் 2021 ஆம் ஆண்டு சற்று முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. எனினும் இந்த வருடத்தில் அந்த நட்டம் 1.1 பில்லியனாக குறைவடைந்துள்ள துறைமுகம், கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார். மத்தள விமான நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தை காட்டிலும் அதனை நிர்வகிப்பதற்கு அதிக நிதி செலவிடப்படுகிறதால் மத்தள விமான நிலையத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியார் மயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/177525
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலுக்கு தோனி கொடுத்த அறிவுரை என்ன தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 28 பிப்ரவரி 2024, 05:25 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் “14 வயதில் ஒரு சிறுவன் யாருடைய உதவியும் இல்லாமல், பாதுகாவலர் இல்லாமல் நொய்டாவில் உல்ள என் கிரிக்கெட் அகெடமியில் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று என் முன்வந்து நின்றபோது திகைத்துவிட்டேன். கிரிக்கெட் பயிற்சிக்காக வீட்டை விட்டு, குடும்பத்தைவிட்டு ஓடிவந்த முதல் நபராக இவரைப் பார்க்கிறேன்” துருவ் ஜூரெல் குறித்து அவரின் சிறுவயது பயிற்சியாளர் பூல் சந்த் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டி இது. கிரிக்கெட்டின் காதலர், கிரிக்கெட்டுக்காக குடும்பத்தை விட்டு பிரிந்தவர், தந்தையின் கனவை வெறுத்து கிரிக்கெட்தான் வாழ்க்கை என விளையாடிவரும் இளம் வீரர் துருவ் ஜூரெல் என்று அவரைப் புகழ்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, துருவ் ஜுரேலிடம் தோனியின் பண்புகள் இருப்பதாகக் கூறுகிறார் கவாஸ்கர் வைரலாகும் பெயர் துருவ் ஜூரெல் என்ற பெயர் இங்கிலாந்துக்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்குப்பின் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. ஏனென்றால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை மிகப்பெரிய சரிவிலிருந்து மீட்டு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தவர் துருவ் ஜூரெல். துருவ் ஜூரெலின் ஆழ்ந்த பேட்டிங் நுட்பம், தேர்ந்தெடுத்த ஷாட்கள், ஸ்வீப் ஷாட், கவர் டிரைவ் ஷாட்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு உண்மையில் சவாலாக இருந்தது என்றுதான் சொல்ல முடியும். துருவ் ஜூரெல் களமிறங்கிய போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் டெய்லெண்டர் குல்தீப் யாதவை வைத்துக் கொண்டு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த துருவ் ஜூரெல் பேட்டிங் உண்மையில் பாராட்டுக்குரியது என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப் ஆகிய இரு பேட்டிங்கில் திறமையில்லாத வீரர்களை களத்தில் வைத்துக் கொண்டு அவர்களை ஸ்ட்ரைக்கில் நிற்கவிடாமல், ஸ்ட்ரைக்கை தக்கவைத்துக் கொண்டு பேட்டிங் செய்து ஜூரெல் ஸ்கோர் செய்தது எளிதான செயல் அல்ல. தேர்ந்த, அனுபவமான பேட்டர்களுக்கு இருக்கும் புத்திகூர்மை, எந்த நேரத்தில், யார் வீசும் பந்தை அடித்து ஸ்ட்ரைக்கை தக்கவைப்பது என்று தெரிந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை லாவகமாக ஜூரெல் கையாண்டு ரன்களைச் சேர்த்தார். அதிலும் ஒரு கட்டத்துக்கு மேல் இந்திய அணி ரன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது, விஸ்வரூமெடுத்து அதிரடியாகவும் பேட் செய்ய முடியும் என்பதை நிரூபித்த ஜூரெல் சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான டாம் மூடி ஜூரேலை பாராட்டியிருக்கிறார். அடுத்த தோனியா? ஜூரெலின் பேட்டிங், விக்கெட் கீப்பிங் நுட்பம், நேரத்துக்கு ஏற்ப முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு அடுத்த தோனி கிடைத்துவிட்டார் என்று முன்னாள் ஜாம்பவான்கள் புகழ்கிறார்கள். முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தொலைக்காட்சி வர்ணனையின்போது ஜூரெல் குறித்து கூறுகையில் “ துருவ் ஜூரெலின் அமைதி, பொறுமை, சமயோசித பேட்டிங் நுட்பம், முடிவு ஆகியவற்றைப் பார்க்கும்போது, அடுத்த தோனி உருவாகிறார் என்பதை எனக்கு காண்பிக்கிறது” எனத் தெரிவித்தார். ரத்தினத்தை கண்டுபிடித்துவிட்டது இந்தியா அதேபோல ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான டாம் மூடி எக்ஸ் தளத்தில் கூறுகையில் “ துருவ் ஜூரெல் வேறுவிதமான பேட்டர். இந்திய அணி ஒரு விலைஉயர்ந்த ரத்தினத்தை கண்டுபிடித்துவிட்டது” எனப் புகழ்ந்துள்ளார். இதேபோல, முன்னாள் வீரர்கள் விவிஎஸ் லட்சுமண், பத்ரிநாத், இர்பான் பதான், வீரேந்திர சேவாக், ராபின் உத்தப்பா, மைக்கேல் வான் என பலரும் துருவ் ஜூரெலின் பேட்டிங்கை பாராட்டியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்.எஸ். தோனி ஓய்வுக்குப்பின் சிறந்த விக்கெட் கீப்பர் இன்றி தடுமாறி வந்தது இந்திய அணி முதல் தேர்விலேயே தேர்ச்சி இந்திய அணி எம்.எஸ். தோனி ஓய்வுக்குப்பின் சிறந்த விக்கெட் கீப்பர் இன்றி தடுமாறி வந்தது. கேஎல் ராகுல், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், கேஎஸ்பரத், விருதிமான் சாஹா, இசாந்த் கிஷன், சஞ்சு சாம்ஸன் என பல வீரர்களை பரிசோதித்துப் பார்த்தது. இதில் முதல் பரிட்சையிலேயே தேறி, அனைவரின் பாராட்டையும் பெற்றவர் துருவ் ஜூரெலாகத்தான் இருக்க முடியும். தனது 2வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற துருவ் ஜூரெல் 17 முதல் தரப் போட்டிகளிலும், 10 லிஸ்ட்ஏ போட்டிகளிலும்தான் விளையாடியுள்ளார். குறைவான போட்டிகளில் துருவ் ஜூரெல் விளையாடி இருந்தாலும், சராசரியை 50 ரன்களுக்கு மேல் வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். யார் இந்த துருவ் ஜூரெல்? உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த 2001ம் ஆண்டு, ஜனவரி 21ம் தேதி பிறந்தவர் துருவ் ஜூரெல். ஜூரெலின் தந்தை நீம் சிங் ஜூரெல் ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றியவர். கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பங்கேற்றபின் நீம் சிங் ஓய்வு பெற்றார். தன்னைப் போல் தனது மகனும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும், தேசத்துக்காக சேவை செய்ய வேண்டும் என்று நீம் சிங் ஆர்வமாகவும் இருந்தார். இதற்காக துருவ் ஜூரெலை தேசிய ராணுவ அகாடெமி பயிற்சித் தேர்வுக்காக நீம் சிங் தயார் செய்தார். ஆனால், துருவ் ஜூரெலுக்கு எண்ணம், ஆர்வம் அனைத்தும் கிரிக்கெட் மீதுதான் இருந்தது. ஜூரெலுக்கு கிரிக்கெட் மீது அவ்வளவு தீராத காதல், வெறி இருந்தது , கிரிக்கெட்டில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES வீட்டை விட்டு புறப்பட்டார் இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது 14வயது வயதில் ஆக்ராவில் இருந்து ரயில் ஏறி நொய்டாவில் உள்ள கிரிக்கெட் அகாடெமியில் சேர்வதற்காக ஜூரெல் புறப்பட்டார். நொய்டாவில் செக்டர் 71 பகுதியில் கிரிக்கெட் அகாடெமி நடத்திவரும் பூல் சந்த் என்பவரிடம் கிரிக்கெட் பயிற்சிக்காக ஜூரெல் சேர்ந்தார். யாருடைய துணையும் இல்லாமல் பாதுகாவலர் இல்லாமல் 14வயதில் ஜூரெல் கிரிக்கெட் அகாடெமியில் சேர்வதற்காக வந்திருப்பதைப் பார்த்த பூல் சந்த் சற்று வியப்படைந்தார். இருப்பினும் ஜூரெலின் கிரிக்கெட் ஆர்வத்தைப் பார்த்து அவரை கிரிக்கெட் அகாடெமியில் சேர்த்து, முறைப்படி அவரின் தந்தைக்கு தகவல் அளித்தார். "இப்படியொரு சிறுவனை பார்த்தது இல்லை" ஜூரெலின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து அவரின் பயிற்சியாளர் பூல் சந்த் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “14 வயதில் ஒரு சிறுவன் யாருடைய உதவியும் இல்லாமல், பாதுகாவலர் இல்லாமல் என் கிரிக்கெட் அகெடமிக்கு வந்து “சார் நான்தான் துருவ் ஜூரெல். என்னை உங்கள் கிரிக்கெட் அகாடெமியில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று என் முன்வந்து நின்றபோது திகைத்துவிட்டேன். கிரிக்கெட் பயிற்சிக்காக வீட்டை விட்டு, குடும்பத்தைவிட்டு ஓடிவந்த முதல் நபராக இவரைப் பார்க்கிறேன், ஸ்பெஷல் வீரராகவும் பார்க்கிறேன். ஜூரெல் நடுத்தர ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் தொடக்கத்தில் பல பணச்சிக்கல்களைச் சந்தித்தார், தங்குவதற்கு இடம் கூட கிடைக்காமலும், அதற்கு வாடகை கொடுக்க முடியாமலும் சிரமப்பட்டார். ஆனாலும் மகனின் கனவு ராணுவத்தில் சேர்வதைவிட, கிரிக்கெட் மீதுதான் ஆர்வம் இருப்பதை உணர்ந்த ஜூரெலின் தந்தைக்கு அதை வரவேற்பதைத் தவிர வழியில்லை” என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "‘கிட்’ வாங்க தாயின் நகையை விற்றோம்" ஜூரெல் கிரிக்கெட் பயிற்சி எடுக்க அகாடெமியில் சேர்ந்தபோது, அவரால் பேட்டி, பேட் உள்ளிட்ட கிரிக்கெட் கிட் வாங்குவதற்குகூட கையில் பணமில்லை என்று அவரின் தந்தை நீம் சிங் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “கிரிக்கெட் கிட் வேண்டும் என்று ஜூரெல் என்னிடம் கேட்டபோது அதன் விலை 6 ஆயிரம் ரூபாயாக இருந்தது. என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. பணம் இல்லாத எனக்கு கிரிக்கெட் எதுக்கு நான் விலகிவிடுகிறேன் என்று ஜூரெல் கண்ணீர் விட்டதைப் பார்த்தபோது அவரின் தாய்க்கு மனது இடம் கொடுக்கவில்லை. உடனடியாக ஜூரெலின் தாய் தனது கழுத்தில் இருந்த தங்கநகையை கழற்றிக்கொடுத்து, அதை விற்று ஜூரெலுக்கு கிரிக்கெட் கிட் வாங்கிக் கொடுக்கக் கூறினார். அதுதான் ஜூரெலுக்கு கிடைத்த முதல் கிரிக்கெட் கிட்” என்று தெரிவித்தார். அரைசதத்தை கொண்டாடாத ஜூரெல் துருவ் ஜூரெல் கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தாலும், சர்வதேச அரங்கில் தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை அடித்தபோது, பேட்டை உயர்த்தி தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கவில்லை. மாறாக, அரங்கில் அமர்ந்திருந்த தனது தந்தைக்கு ராணுவத்தில் அடிக்கும் சல்யூட் அடித்து தனது நன்றியைத் தெரிவித்தார். ஜூரெலின் வளர்ச்சி துருவ் ஜூரெல் சிறப்பாக கிரிக்கெட் விளையாடியதையடுத்து, உ.பி.யின் 14வயது, 16வயது, 19வயதுக் குட்பட்டோருக்கான அணியில் விளையாட இடம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தேர்வாகிய ஜூரெல், 2020ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது துணைக் கேப்டனாக ஜூரெல் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 2021ம் ஆண்டு உத்தரப்பிரதேச அணிக்காக, முதல்முறையாக சயீத் முஸ்தாக் அலி கோப்பையில் ஜூரெல் களமிறங்கினார். குறைந்த அளவு போட்டிகளே ஜூரெல் விளையாடி இருந்தாலும் இவரின் ஸ்ட்ரைக் ரேட், பேட்டிங் சராசரி அனைவரையும் ஈர்த்தது. ஐபிஎல் அறிமுகம் இதையடுத்து, 2022ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜூரெலை ஏலத்தில் எடுத்தது. இதைத் தொடர்ந்து, 2022, பிப்ரவரி 17ம் தேதி ஜூரெல் தனது முதல்தரப் போட்டியில் ரஞ்சிக் கோப்பையில் உ.பி அணிக்காக அறிமுகமாகினார். 2023ம் ஆண்டு, ஜூலை 14ம் தேதி, லிஸ்ட் ஏ தரப் போட்டிகளில் ஜூரெல் அறிமுகமாகி ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிராக விளையாடினார். என்பெயர் இருப்பது எனக்கே தெரியாது இந்திய அணியில் தனது பெயர் சேர்க்கப்பட்டது கூட ஜூரெலுக்குத் தெரியாது. திடீரென்று பிசிசிஐ தொலைக்காட்சியை பார்த்தபோது தனது பெயர் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தாக ஜூரெல் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் “ நான் பயிற்சி முடித்துவிட்டு, இரவு தூங்கச் செல்லும்போது தற்செயலாக பிசிசிஐ டிவி செயலியைப் பார்த்தேன். அப்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு என் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரரும் இந்திய அணிக்காக விளையாடுவது கனவாகும். என் பெயரைப் பார்த்தபோது, நான் கனவில் இருப்பதாகவே உணர்ந்தேன்." "என்னைப் போன்ற நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வரும் வீரருக்கு, இ்ந்திய அணியில் இடம் கிடைப்பது என்பது அரிதானது, கனவு. அது நிறைவேறியது கண்டு என் தந்தை, சகோதரி, தாய் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். கடின உழைப்பு என்பது மிகப்பெரிய விஷயம். அதிலும் கனவு காண்பதும் அதைக் காட்சிப் படுத்துப் பார்ப்பதும், அதை உருவாக்கும் விஷயத்துக்கும் நான் ரசிகன்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES தோனியின் அறிவுரை ஐபிஎல் விளையாடும்போது, சிஎஸ்கே கேப்டன் தோனியைச் சந்தித்து அறிவுரை பெற்றதுதான் கிரிக்கெட் மீது இன்னும் ஈர்ப்பு ஏற்படக் காரணம் என ஜூரெல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் ஜூரெல் அளித்த பேட்டியில் “ நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். ஐபிஎல் போட்டியின்போது தோனி என் முன் வந்து நின்றபோது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முதன் முதலில் தோனியுடன் நான் பேசியபோது, நான் உண்மையில் பூமியில்தான் நிற்கிறேனா அல்லது கனவா என்பதை உறுதி செய்து பேசினேன். அப்போது அவரிடம் உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவா என்று கேட்டேன். அதற்கு தோனி சிரித்துக்கொண்டே என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது தோனியிடம், நீங்கள் 6-வது அல்லது 7வது வீரராக களமிறங்கியும் சிறப்பாக பேட் செய்வது எப்படி ரகசியம் என்ன என்று கேட்டேன். அதற்கு தோனி என்னிடம் “ கைமாறு கருதாத பணி. வெற்றியைவிட தோல்வி அதிகம் இருக்கும். அதைப்பற்றி கவலைப்படக் கூடாது. நம்முடைய பணி ஃபினிஷ் செய்வது மட்டும்தான். மோசமானதை எதிர்பார்த்துதான் எப்போதும் நாம் தயாராக வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு போட்டியையும் ஃபினிஷ் செய்ய முடியாது. களத்தில் பந்தை மட்டும் பார்க்க வேண்டும், விளையாடுவதில் மட்டும் கவனம் இருந்தால்போதும்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cn0n7mjg640o
-
மின் கட்டண குறைப்பு தொடர்பான பிரேரணை மீளாய்வு!
மின்சாரக் கட்டணத்தை 14 சத வீதத்தால் குறைக்க முன்மொழிவு! Published By: VISHNU 28 FEB, 2024 | 08:26 PM இலங்கை மின்சார சபை கடந்த 22ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்த பிரேரணையில் மின்சாரக் கட்டணத்தை 14 சத வீதத்தால் குறைக்க முன்மொழிந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணத்தை 3.34 சதவீதம் குறைப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனையை மீளப் பெற்று இந்த புதிய திட்டத்தை மின்சார சபை முன்வைத்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட அதே அளவான கட்டணத்தை குறைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/177548
-
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை பொது தனியார் கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்படுமா?
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மூடும் சூழலுக்கு இடமளிக்காமல் பொது தனியார் கூட்டு முயற்சியாக பேண வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதியிடம் முன்வைப்பதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டங்களுக்கான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான வாழைச்சேனை காகித தொழிற்சாலையின் வருடாந்த அறிக்கைகள் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவினால் அண்மையில் (20) கவனத்திற்க் கொள்ளப்பட்ட போதே குழுத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வாழைச்சேனை தொழிற்சாலையின் இயந்திரங்கள் 1956 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டதால், திருத்தியமைக்க 1.2 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர தெரிவித்தார். எவ்வாறாயினும், திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கீடு பெறப்படாததால், இதனை அரச தனியார் கூட்டு முயற்சியாக நடத்துவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், சுற்றுலாத்துறைக்காக காணி ஒதுக்கப்பட்டதால் அனுமதி வழங்கப்படவில்லை. 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழித்து தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களை பழுதுபார்த்தால் நாளொன்றுக்கு 5 தொன் உற்பத்தி செய்வதன் மூலம் மாதம் 22 மில்லியன் ரூபா இலாபம் ஈட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 340 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முழு நிலத்தையும் ஒரு பகுதியை மட்டும் சுற்றுலா வலயமாக மாற்ற பரிசீலிக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது. வாழைச்சேனை காகித ஆலையை மூடுவதாக இருந்தால், அதனை விற்பனை செய்வதற்குப் பதிலாக, பொதுத் தனியார் கூட்டு நிறுவனமாக நடத்துவது முக்கியம் என்றும், குழுவின் பரிந்துரை நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் குழுத் தலைவர் தெரிவித்தார். மேலும், சுற்றுலாத் துறையையே சார்ந்திருக்காமல், நாட்டின் தொழில்துறையை மேம்படுத்துவதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 15% மட்டுமே என்றும், அபிவிருத்தியடைந்த நாட்டில் இந்த எண்ணிக்கை 30% என்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். தொழில்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிலம் நாட்டின் மொத்த நிலத்தில் 0.04 சதவீதம் என்றும், அபிவிருத்தியடைந்த நாட்டில் இது பொதுவாக 3 சதவீதம் என்றும் அவர் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/293582
-
ஓட்டுநரே இல்லாமல் 70கி.மீ வேகத்தில் சென்ற சரக்கு ரயில் – காணொளி
'அவ்ளோ தூரம் Train ஓட்ட முடியாது' இறங்கிய Driver, Guard இல்லை| Driverless Goods Train Shocking Report ஜம்மு காஷ்மீரில் இருந்து பஞ்சாப் வரை சரக்கு ரயில் தானாக ஓடிய சம்பவத்தில் முக்கிய தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளன. கடந்த ஞாயிறுக்கிழமை, ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் இருந்து பஞ்சாப் மாநிலம் உச்சி பஸ்ஸி வரை சரக்கு ரயில் ஓட்டுநரின்றி இயங்கியது. சரக்கு ரயில் ஓடிய வழித்தடத்தில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்ட நிலையில், அசம்பாவிதங்கள் ஏதுமின்றி மணல் மூட்டைகள் மற்றும் தடுப்புகளை கொண்டு ரயில் நிறுத்தப்பட்டது. சுமார் 8 முதல் 9 ரயில் நிலையங்களை மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் சரக்கு ரயில் கடந்து சென்றது.
-
ஆவணக்காட்சிப் பெட்டகத்திற்கான பாரம்பரியப் பொருட்களை கோரும் யாழ் மாவட்ட செயலகம்!
28 FEB, 2024 | 08:41 PM யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஆவணக்காட்சிப் பெட்டகத்துக்கான பாரம்பரியப் பொருட்களை வழங்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் கோரிக்கை முன்வைத்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அழிவடைந்து செல்லும் மரபுரிமைசார் பாரம்பரியங்களைப் பாதுகாத்து. அழிவும் திரிபுமின்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் வரலாற்றுக்கடமையை மேற்கொள்ளும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆவணக்காட்சிப் பெட்டகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பழமையும் பெருமையும் மிக்க எம் பண்பாட்டு அம்சங்களை பாதுகாப்பாகப்பேணல் மற்றும் காட்சிப்படுத்தல் செயற்பாட்டை திறம்பட மேற்கொள்ள இதுவரை தங்களால் பாதுகாக்கப்பட்டு வந்த பாரம்பரியம் மிக்க பாவனைப்பொருட்கள், அணிகலன்கள், ஏட்டுச்சுவடிகள், புராதன நூல்கள் என்பவற்றை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஆவணக்காட்சிப் பெட்டகத்திற்கு இலவசமாக வழங்கி உதவுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன், பாரம்பரியப்பொருட்களை வழங்கியவர்கள் தொடர்பான விபரங்கள் ஆவணப்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/177542
-
சந்திரிக்கா, சம்பிக்கவை சந்தித்தார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்!
28 FEB, 2024 | 05:33 PM முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/177523
-
பாதாள உலகக் குழுவினரின் மரண அச்சுறுத்தலால் வெளிநாடு சென்ற குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி துமிந்த ஜயதிலக்க!
Published By: VISHNU 28 FEB, 2024 | 05:42 PM தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக வெளியிட்ட கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார். தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் மரண அச்சுறுத்தல் காரணமாகவே தான் வெளிநாடு சென்றதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்ட கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் துமிந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளாார். அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர்களில் கஞ்சிபான இம்ரானும் ஒருவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்துவ குறித்த அச்சுறுத்தல் தொடர்பான ஒலி நாடாக்கள் குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன எனக் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/177531
-
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை இலட்சக்கணக்கில் அதிகரிப்பதில் எந்தளவுக்கு நியாயம் - விமல் வீரவன்ச
சம்பள உயர்வு: CBSL அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு பொது நிதிக்கான குழு (COPF) சமீபத்திய சம்பள உயர்வு தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நிர்வாக சபையை அடுத்த வாரம் பாராளுமன்றத்திற்கு அழைத்துள்ளது. CBSL அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர், எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்திய ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து விளக்கம் பெறலாம் என COPF தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ‘X’ பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, COPF இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசியமான எந்தவொரு நடவடிக்கையையும் ஆராயும் என்றார். “CBSL சுதந்திரமானது CBSL சட்டத்தின் பிரிவு 80 (2) (a) இன் படி சட்டமன்றத்திற்கு பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டது” வங்கியின் நிர்வாக சபையினால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் ஊதியத்தின் சமீபத்திய திருத்தம் குறித்து சமீபத்திய பாராளுமன்ற நடவடிக்கைகளில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியதை அடுத்து இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்தது. பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பிறகு, இலங்கை மத்திய வங்கியின் நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் (CBSL) 2024-2026 காலப்பகுதியை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களுடன் மூன்று வருட கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என தெளிவுபடுத்தியது. இந்த விடயத்தை மேலும் தெளிவுபடுத்திய ஒன்றியம், 2024-2026 ஆம் ஆண்டுக்கான கூட்டு உடன்படிக்கையானது நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் விளைவாகும் என சுட்டிக்காட்டியது. மத்திய வங்கியின் சம்பளம் ஏனைய சேவைகளை விட அதிகமாக உள்ளது என்பது இரகசியமல்ல என கூறிய ஒன்றியம், அழுத்தம் இல்லாமல் தங்கள் வேலையைச் செய்வதற்கு போட்டி ஊதியம் தேவை என தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/293592
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
ஜூன் மாதம் முதல் அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க Published By: VISHNU 28 FEB, 2024 | 08:00 PM அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 24 இலட்சமாக அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் 2024 மார்ச் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் எவரும் அஸ்வெசும பலனைப் பெறத் தகுதி பெற மாட்டார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டார். பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், அஸ்வெசும முதல் கட்ட கணக்கெடுப்பில், 34 இலட்சம் குடும்ப அலகுகளின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டன. இதன்படி 19 இலட்சம் குடும்பங்கள் பயன்பெற தகுதி பெற்றுள்ளன. இதுவரை பெறப்பட்ட மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளின் அடிப்படையில், ஜூலை 2024 முதல் தகுதியானவர்களுக்குப் பணம் செலுத்த நலன்புரி நன்மைகள் சபை தயாராக உள்ளது. எங்களுக்கு 12,27,000 முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளன. அவர்களில் சுமார் 11,97,000 பேர் தொடர்பில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு மேலதிகமாக, அஸ்வெசும உதவிகள் உண்மையிலேயே தகுதியான ஒரு குழுவினருக்கு கிடைக்கவில்லை. முதல்கட்ட விண்ணப்பத்தில் அவர்களுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்காததால், அவர்களுக்கு அஸ்வெசும பலன் கிடைக்கவில்லை. அதன்படி, ஒன்லைன் ஊடாக மேற்கொண்ட பரந்த விழிப்புணர்வுக்குப் பிறகு 200,000 - 250,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம். இவ்வாறாக பிரதேச செயலகங்களுக்கு நேரடியாக வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் தற்போது எமது மென்பொருளில் உள்வாங்கப்படுகின்றது. அதன்படி, இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் 2024 மார்ச் 15ஆம் திகதியுடன் நிறைவடையும். விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்காத எவரும் அஸ்வெசும பலன்களைப் பெற தகுதி பெறமாட்டார்கள் என்பதை வலியுறுத்த வேண்டும். மேலும், புதிய விண்ணப்பதாரர்களின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுப்படுத்தல் என்பன நிறைவடைந்த பிறகு, 2024 ஜூன் முதல் 24 இலட்சம் குடும்ப அலகுகளுக்கு அஸ்வெசும பலன்கள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும தொகைக்காக 205 பில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்க்கிறோம். அதனுடைய ஒதுக்கீடுகள் தற்போது முடிவடைந்துள்ளது. மேலும், இதுவரை கிடைத்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளையடுத்து சுமார் 7,000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தவறான தகவல்களை அளித்து நன்மைகளை அடைந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான நபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளோம். அவர்களிடமிருந்து பணத்தை மீளப்பெறவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/177547
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
இறப்பதற்கு முன் தனது சகோதரனிடம் சாந்தன் கூறிய கண் கலங்க வைக்கும் வார்த்தைகள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் தனது சகோதரனை சந்தித்த காணொளியொன்று தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இறப்பதற்கு முன் வைத்தியசாலையில் இருந்த போது தனது சகோதரனை ஆரத்தழுவி ஏக்கத்துடன் பார்க்கும் அந்த காணொளி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்து புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் உயிரிழந்துள்ளார். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். கடந்தவாரம் அவரது சகோதரர் அவரை வைத்தியசாலையில் பார்க்கச் சென்றபோது தனது சகோதரனின் கையைப் பிடித்துக் கொண்டு “என்னை விட்டு எங்கேயும் போகாதே” என கூறியுள்ளார். https://tamilwin.com/article/santhan-former-convict-rajiv-gandhi-assassination-1709109855
-
அரச வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும் நிலை: அமைச்சர் தகவல்
இரண்டு அரச வங்கிகளினால் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட கடன் தொகை சுமார் 602 பில்லியன் ரூபாவாகும், அதில் பெரும்பகுதியை திருப்பிச் செலுத்த முடியாததால் அறிவிடமுடியாக் கடனாக தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் அதிகாரம் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு ஒரு நிதிக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் பொருளாதாரமும் வலுவாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் இலங்கை மத்திய வங்கிக்கு கணிசமான அதிகாரம் உள்ளது. கடந்த காலத்தில் இலங்கையில் கருத்தாடலுக்கு உட்பட்ட பரேட்டா சட்டம் பற்றி குறிப்பிடுவதென்றால், இவ்விடயத்தில் மத்திய வங்கி, நிதி நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் மாத்திரமே கவனம் செலுத்தியது. இரண்டு அரச வங்கிகளினால் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட கடன் தொகை சுமார் 602 பில்லியன் ரூபாவாகும். அதில் பெரும்பகுதியை திருப்பிச் செலுத்த முடியாததால் அறிவிடமுடியாக் கடனாக தள்ளுபடி செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்தக் கடன் தொகையை நம் நாட்டில் விவசாயம் மற்றும் தொழில் துறைகளில் பயன்படுத்த முடிந்திருந்தால், அந்தத் துறைகளில் பெரும் வளர்ச்சியை எட்ட முடிந்திருக்கும். பரேட் சட்ட நெருக்கடி நாட்டில் நிதிக் கட்டுப்பாடு இல்லாததால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டது. இங்கு வர்த்தகர்களும், நிதி நிறுவனங்களும் நெருக்கடியில் சிக்காத வகையில் செயல்பட வேண்டும். அதன்படி, பரேட் சட்டத்தால் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக, நாடாளுமன்றத்தில் சில திருத்தங்களை முன்வைக்க எதிர்பார்க்கிறோம். சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு (Small and Midsize Enterprise) தனியான கடன் திட்டத்தையும் அறிமுகப்படுத்த உள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இதே கருத்தையே கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/bank-loan-in-sri-lanka-1709048948
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயக கட்சியினர் விருப்பம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - பைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயக கட்சியினர் விருப்பம் Published By: RAJEEBAN 28 FEB, 2024 | 11:29 AM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோபைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயககட்சியை சேர்ந்த அதிகளவான வாக்காளர்கள் விரும்புவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் போட்டியிடகூடாது என பெரும்பான்மையான ஜனநாயக கட்சியினர் கருதுவதும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. மிசெல் ஒபாமா டொனால்ட் டிரம்பிற்கு எதிராக போட்டியிடவேண்டும் என ஜனநாயக கட்சியினர் விரும்புகின்றனர். நவம்பர் தேர்தலிற்கு முன்னர் ஜோபைடனிற்கு பதில் கட்சி வேறு ஒரு வேட்பாளரை நியமிப்பதற்கு 48 வீதமான ஜனநாயக கட்சியினர் ஆதரவளித்துள்ளனர். 38 வீதமானவர்கள் இதனை நிராகரித்துள்ளனர். இதேவேளை இந்த தருணத்தில் அவ்வாறான ஒரு விடயம் இடம்பெறலாம் என 33 வீதமான வாக்காளர்களே நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். பைடனிற்கு பதில் யார் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்பது குறித்து ஜனநாயகட்சியினர் மத்தியில் பொதுக்கருத்து காணப்படாத போதிலும் 20 வீதமானவர்கள் மிசெல் ஒபாமாவை குறிப்பிட்டுள்ளனர். ஹமாலா ஹாரிஸ் உட்பட பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் முன்னாள் ஜனாதிபதியின் துணைவியாருக்கு அதிகளவு ஆதரவு காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/177482
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
இது ஒரு கொலை; சட்டப்படி இடம்பெற்ற கொலை; சாந்தனின் மரணம் குறித்து சீமான் 28 FEB, 2024 | 01:50 PM இது ஒரு கொலை இதனை ஒரு சட்டப்படி இடம்பெற்ற கொலை என்றுதான் தெரிவிக்கவேண்டும் என சாந்தனின் மரணம் குறித்து நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். சாந்தனின் உடலிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிறப்பு முகாம் என்றால் அது சிறப்பு முகாம் ஆகிவிடுமா அது ஒரு வதைமுகாம் என சீமான் தெரிவித்துள்ளார். அதில் போய் சாந்தனை அடைத்துவைத்திருந்தார்கள் இரத்த உறவுகள் தவிர வேறு யாரும் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை மனுக்கொடுத்து பார்க்கமுடியாது நான் கூட மனுகொடுத்து போய்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நீங்கள் இங்குவைத்து விடுதலை செய்யவில்லை என்றால் பொதுச்சிறையிலாவது அடைத்துவையுங்கள் என கேட்டோம். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை வழங்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட பேரறிவாளன், நளினி போன்றவர்கள் வெளியே உள்ளனர். அவர்களால் இந்த நாட்டில் சட்டமொழுங்கு பாதிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ள சீமான் எங்கு இருக்கின்றார்கள் என்பது தெரியாத நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நாங்கள் அவர்கள் தாய்தந்தையிடம் கேட்கவேண்டும் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என அவ்வாறான வாழ்க்கை வாழ்கின்றார்கள் எனவும் சீமான் தெரிவித்துள்ளார். ரொபேர்ட் பயாசை இரண்டு மாதங்கள் சிறைவிடுவிப்பில் விடுவித்தீர்கள் சமூகத்திற்கு சட்டமொழுங்கிற்கு கேடுவிளைவிக்கும் விதத்தில் அவர் நடந்துகொண்டாரா என கேள்வி எழுப்பியுள்ள சீமான் பேரறிவாளனிற்கு கொடுக்கப்பட்ட தீர்ப்புதான் அனைவருக்கும் என நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர் அப்படி எனும் போது அவர்கள் தங்கள் நாட்டிற்கு செல்வதற்கு நீங்கள் அனுமதித்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சாந்தனுடைய கடைசி விருப்பம் கடைசியாக தாயை பார்த்து ஒருவாய் சோற்றை அவர் கையால் சாப்பிடவேண்டும் என்பதுதான், அதைக்கூட நிறைவேற்றிவைக்கமுடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள சீமான் இது ஒரு சட்டக்கொலை அவ்வளவுதான் நியாயமாக இது ஒரு கொலை இதனை ஒரு சட்டப்படி இடம்பெற்ற கொலை என்றுதான் தெரிவிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/177501
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி இந்தியாவின் - தமிழ்நாடு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்த சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதன்படி, அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். முதலாம் இணைப்பு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. எனினும் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 32 வருடங்களாக காத்திருந்த நிலை இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சாந்தன் ஈழத்தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார். பல முயற்சிகளின் கீழ் இலங்கை வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஜனவரி 24ம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சாந்தனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த சாந்தனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடக செய்தியில் கூறப்பட்டுள்ளது. சிபிஐயின் கூற்று சிபிஐயின் கூற்றுப்படி, “சாந்தன் சிவராசனுடன் ஏப்ரல் 1991 இல் தமிழ்நாட்டிற்கு வந்தார். சிவராசனுடன் நெருக்கமாக இருந்த புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் என்று குற்றப்பத்திரிக்கை அவரை விபரித்தது. மேலும், பெப்ரவரி 1988 இல், சிவராசன், சாந்தனை மெட்ராஸில் (சென்னையில்) தொடருமாறு பரிந்துரைத்தார். அத்தோடு, பெப்ரவரி 1990 இல், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜியில் அனுமதி பெற்றார். அங்கு அவரது செலவுகளை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டனர். ராஜீவ் கொலைச் சதியில் சிவராசனுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக சாந்தன் மீது குற்றம் சாட்டப்பட்டது.” என்றுள்ளது. சாந்தனின் உடல் மேலும் சாந்தனின் வழக்கு தொடர்பில் முன்னனிலையான தமிழ்நாட்டு வழக்கறிஞர் புகழேந்தி கருத்து தெரிவிக்கையில், '' சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இன்று அல்லது நாளை அவரது உடல் இலங்கைக்கு அனுப்பப்படும்" என கூறியுள்ளார். https://tamilwin.com/article/santhan-death-in-tamil-nadu-hospital-1709084380
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உயிரிழந்தார் பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் சென்னை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 55. கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக அவர் சிகிச்சைபெற்றுவந்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர் சாந்தன் என்ற சுதேந்திரராஜா. இவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவரையும் இதே வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த நளினி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இதில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் இந்தியக் குடிமக்கள் என்பதால் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை குடிமக்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். தங்களுக்கு தற்காலிக பயண ஆவணங்களை வழங்கி, தங்களை விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டுமென நால்வரும் கோரிவந்தனர். 32 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தனுக்கு பல உடல்நல பிரச்சனைகள் இருந்தன. குறிப்பாக கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடையவே, அவர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், இன்று காலையில் அவருக்கு இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டு, உயிரிழந்தார். எப்படி உயிரிழந்தார் சாந்தன்? இது குறித்து ஊடகங்களிடம் பேசிய ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையின் டீன் தேரணிராஜன், “சாந்தனுக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் மருத்துவர் பிரேம்குமார் தலைமையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது,” என்றார். "அவருக்கு Cryptogenic cirrhosis பிரச்சனை ஏற்பட்டிருந்ததால் அந்தப் பிரச்சனை ஏன் ஏற்பட்டது என்பதை அறிய முயற்சித்துவந்தோம். "கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் சுயநினைவு இழப்பதும் இயல்பு நிலைக்கு திரும்புவதுமாக இருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் நேற்று இரவு (பிப்ரவரி 27) பெரும் பின்னடைவு ஏற்பட்டது. "அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அதிகாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல், அவர் உயிரிழந்தார்," என்று கூறினார். சாந்தன் தனக்கு தற்காலிக பயண ஆவணங்களைக் கோரிவந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழக்கிழமை, அதாவது பிப்ரவரி 23-ஆம் தேதியன்று வெளிநாட்டவருக்கான பிராந்திய பதிவு அலுவலகத்தில் இருந்து பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கான பணிகள் தீவிரமடைந்தன. உடல்நலம் சரியானதும் அவர் இலங்கைக்கே திரும்பிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருடைய உடல்நலம் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து, உயிரிழந்திருக்கிறார். பட மூலாதாரம்,MINISTRY OF FISHERY படக்குறிப்பு, இலங்கையில் உள்ள சாந்தன் குடும்பத்தினர் சமீபத்தில், இலங்கை அமைச்சரை சந்தித்து சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். குற்றச்சாட்டு குறித்து சாந்தன் கூறிவந்தது என்ன? ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட சிவராசனின் உதவியாளராகச் செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் சாந்தன் என்ற சுதேந்திரராஜா சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார். கடந்த 1990-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கையிலிருந்து இந்தியா வந்த சாந்தன், கோடம்பாக்கத்தில் இருந்த மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இஞ்சினீயரிங் டெக்னாலஜியில் படித்தார். இந்த காலகட்டத்தில் சிவராசனுக்காக ஈ.பி.ஆர்.எல்.எஃப். போராளிக் குழுவினரை உளவு பார்த்ததாக இந்தியப் புலனாய்வு அமைப்புகள் கூறின. பத்மநாபாவின் படுகொலைக்குப் பிறகு, இலங்கைக்குத் திரும்பிச் சென்ற சாந்தன், மீண்டும் இந்தியாவிற்கு திரும்பிவந்து ராஜீவ் காந்தியின் கொலையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அடையாள மாறுபாட்டின் காரணமாகவே கைதுசெய்யப்பட்டதாக சாந்தன் தொடர்ந்து கூறிவந்தார். சாந்தன் விடுதலையான பிறகு, அவரை இலங்கைக்கு அனுப்ப முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அவரது தாயார் மகேஸ்வரி தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தார். இதுதொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனும் கோரிக்கை வைத்திருந்தார். சாந்தனின் தாயார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், ஜனவரி 30-ஆம் தேதியன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, சாந்தனை இலங்கைக்கு வரவழைக்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். சாந்தனின் குடும்பத்தினர் யாழ் மாவட்டம் உடுப்பிட்டியில் வசித்துவருகின்றனர். சாந்தனின் உடலை 'எம்பாமிங்' செய்து இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார். இன்று இரவு அவரது உடல் இலங்கைக்கு அனுப்பப்படலாம் எனக் கூறப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cgx5q0v8e91o
-
மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று ஆரம்பம்
கெப், ராதா பந்துவீச்சிலும் லெனிங், ஷஃபாலி துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்க, டெல்ஹி இலகுவாக வென்றது 27 FEB, 2024 | 05:50 PM (நெவில் அன்தனி) இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டின் ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸிடம் கடைசிப் பந்தில் தோல்வி அடைந்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ், தனது இரண்டாவது போட்டியில் யூபி வொரியர்ஸ் அணியை 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்டது. மாரிஸ்ஆன் கெப், ராதா யாதவ் ஆகியோரின் மிகத் துல்லியமான பந்துவீச்சுகள், அணித் தலைவி மெக் லெனிங், ஷஃபாலி வர்மா ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை இலகுவாக வெற்றி பெறச் செய்தன. பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யூபி வொரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷ்வீட்டா சேராவத் மாத்திரமே திறமையை வெளிப்படுத்தி 45 ஓட்டங்களைப் பெற்றார். மேலும் நான்கு வீராங்கனைகள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் அவர்களால் 20 ஓட்டங்களை எட்ட முடியாமல் போனது. பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்கள் பந்துவீசி 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். ராதா யாதவ் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 14.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. மெக் லெனிங் 43 பந்துகளில் 6 பவுண்டறிகளுடன் 53 ஓட்டங்களையும் ஷஃபாலி வர்மா 43 பந்துகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் விளாசினர். அவர்கள் இருவரும் 76 பந்துகளில் 119 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கினர். https://www.virakesari.lk/article/177448