Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 11 MAR, 2024 | 04:14 PM மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் (வயது 17) என்ற மாணவன் காணாமல் போயுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மதியம் மதியம் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையிலே இந்த மாணவன் இது வரை வீடு திரும்பவில்லை என பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். காணாமல் போன மாணவன் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்று வருவதாக தெரிய வருகின்றது. குறித்த மாணவன் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 077-4722506 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் கேட்டுக் கொண்டனர். https://www.virakesari.lk/article/178445
  2. யாழ். பல்கலையின் பொதுப் பட்டமளிப்பு மார்ச் 14, 15, 16 இல் : 2,873 பட்டங்கள், 46 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும்! 11 MAR, 2024 | 04:06 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் பங்குனி மாதம் 14ஆம், 15ஆம், 16ஆம் திகதிகளில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது. பட்டமளிப்பு விழாவின்போது 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பு ஒன்று இன்று திங்கட்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம் பட்டமளிப்பு விழாத் தொடர்பான விபரங்களை வழங்கினார். அதன் விபரம் வருமாறு : பட்டமளிப்பு வைபவமானது, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக அமைவதுடன், ஒவ்வொரு பட்டதாரியினதும் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத நிகழ்வாகவும் இடம்பிடிக்கின்றது. இம்முறை நடைபெறும் பட்டமளிப்பு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 50ஆவது வருடத்தில் பொன்விழா நிகழ்வுகளின் முக்கிய நிகழ்வாக இடம்பெற இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 38வது பட்டமளிப்பு விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப்பதக்கங்களையும், புலமைப்பரிசில்களையும் வழங்கிக் கௌரவிப்பார். இப்பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப் பீடம், பொறியியற் பீடம், விஞ்ஞான பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்பப் பீடம், இந்துக்கற்கைள் பீடம், சித்தமருத்துவ அலகு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் வெளிவாரிப் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பட்டமளிப்பு விழாவில் 441 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து எட்டு உள்வாரி மாணவர்களுக்கும், 330 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 94 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 441 பேர் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை ஒருவரும், முது மெய்யியல்மாணிப் பட்டத்தை 9 பேரும், சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை ஒருவரும், பண்பாட்டுக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 33 பேரும், கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 36 பேரும், தூய சக்தித் தொழில்நுட்பங்களில் முதுமாணிப் பட்டத்தை ஒருவரும், வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை 73 பேரும், தமிழில் முதுமாணிப்பட்டத்தை 40 பேரும், கல்வியில் முதுமாணிப் பட்டத்தை 195 பேரும், சைவசித்தாந்தத்தில் முதுமாணிப்பட்டத்தை 28 பேரும், கல்வியியலில்; பட்டப்பின் தகைமைச் சான்றிதழை (பகுதி நேரம்) 24 பேரும் பெறவிருக்கின்றனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 29 பேர் மருத்துவமாணி சத்திர சிகிச்சை மாணிப் பட்டத்தையும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 94 பேர் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 20 பேர் பிரயோக விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 168 பேர் விஞ்ஞானமாணிப் (பொது) பட்டத்தையும், 24 பேர் கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 25 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பெறவுள்ளனர். இவர்களுடன் விவசாய பீடத்தைச் சேர்ந்த 96 பேர் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பொறியியற் பீடத்தைச் சேர்ந்த 119 பேர் பொறியியல் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தொழில்நுட்பப் பீடத்தைச் சேர்ந்த 97 பேர் உயிர்முறைமைகளில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், 80 பேர் பொறியியலில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர். அத்துடன், முகாமைத்துக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 276 பேரும், வியாபார நிர்வாகமாணிப் (பொது) பட்டத்தை 7 பேரும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 81 பேரும், வணிகமாணிப் (பொது) பட்டத்தை இருவரும் பெறவிருக்கின்றனர். இவர்களுடன் கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 398 பேரும், பொதுக் கலைமாணிப் பட்டத்தை 12 பேரும், மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 21 பேரும் பெறவிருக்கின்றனர். மேலும், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திலிருந்து தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 38 பேரும், மருந்தகவியல் சிறப்புமாணிப் பட்டத்தை 49 பேரும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 60 பேரும் பெறவிருக்கின்றனர். மேலும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 15 பேர் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும்; 28 பேர் விஞ்ஞானமாணி (பிரயோக கணிதமும் கணிப்பிடலும்) பட்டத்தையும், ஒருவர் விஞ்ஞானமாணி (சூழல் விஞ்ஞானம்) பட்டத்தையும் பெறவிருக்கின்றனர். வியாபாரக்கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 42 பேர் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 4 பேர் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும்; 16 பேர் வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டத்தையும், 5 பேர் சந்தைப்படுத்தலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 46 பேர் கணக்கியல் மற்றும் நிதியியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 15 பேர் மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 13 பேர் வியாபாரப் பொருளியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர். மேலும், தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தில் இருந்து 66 பேர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தையும் பெற இருக்கின்றனர். இவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் தொலைதூரக் கற்கைகள் முறைமை மூலம் பட்டக் கற்கைகளைப் பூர்த்தி செய்த 288 பேர் கலைமாணி சிறப்புப் பட்டத்தையும், 42 பேர் சிறப்பு வணிகமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர். மேலும், 3 பேர் விஞ்ஞானத்தில் உயர் தகைமைச் சான்றிதழையும், ஒருவர் கணினி விஞ்ஞானத்தில் தகைமைச் சான்றிதழையும், 31 பேர் வங்கியியல் மற்றும் நிதியியலில் தகைமைச் சான்றிதழையும், 24 தொழில்சார் ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழையும், 34 பேர் நுண்நிதியியலில் தகைமைச் சான்றிதழையும், ஒருவர் வியாபார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழையும் பெறுவது உறுதிப்படுத்தப்படவுள்ளது. மேலும், இப்பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 46 தங்கப்பதக்கங்களும், 09 புலமைப்பரிசில்களும், 48 பரிசில்களும் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மதிப்புமிக்க பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் கலைப் பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான (Best Performance) பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப்பதக்கத்தினை பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவரும் பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பட்டமளிப்பு வைபவத்தின் ஒரு பாகமாக அமையும் நினைவுப் பேருரைகளான சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரை பங்குனி மாதம் 20ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப்பேருரை பி.ப 3.45 மணிக்கும் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவிருக்கின்றன. சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரையை எக்ஸ்ரர் (Exeter) பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையைச் சேர்ந்த பேராசிரியை கிலியன் ஜுலெவ் (Prof. Gillian Juleff), “Monsoon Steel: Serandib’s Contribution to Global History of Science and Technology” என்ற தலைப்பிலும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியை ஃபர்ஸானா எஃவ் ஹனிபா (Prof. Farzana F. Haniffa), “Modern Muslim Citizenship in 1940s Ceylon: Identity, Politics, and Community Aspirations at the Moors Islamic Cultural Home” என்ற தலைப்பிலும் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தவிருக்கின்றனர். இந்த நிகழ்வுகளுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38வது பொதுப் பட்டமளிப்பு வைபவம் நிறைவு பெறும். https://www.virakesari.lk/article/178442
  3. Published By: VISHNU 11 MAR, 2024 | 05:36 PM யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டில் இனங்களுக்கிடையே இன நல்லிணக்கம் பற்றி சர்வதேச தரப்புக்கள் உட்பட உள்நாட்டிலும் அதிகம் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் துரதிஸ்டவசமாக நாட்டின் தொல்லியல் மற்றும் பொலீஸ் திணை்களங்கள் அவற்றுக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் தொடர்ச்சியாக செயற்பட்டுவருகின்றமை கவலைக்குரியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். சமத்துவக் கட்சியின் பொது செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். சிவராத்தி தினத்தில் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் பொலீஸார் மேற்கொண்டு அடாவடித்தனமான செயற்பாடுகளை கண்டிக்கும் வகையில் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; சிவராத்திரி நிகழ்வு சைவ மக்களின் மிக முக்கிய நிகழ்வாகும், இந்த நாளில் மிகவும் பக்தி பூர்வமாக சிவ வழிபாட்டினை மேற்கொள்வதற்காக தங்களது பூர்வீக ஆலயத்திற்கு சென்ற தமிழ் மக்கள் மீதும் அங்கு பூசை வழிபாடுகளி்ல் ஈடுப்பட்டவர்கள் மீதும் பொலீஸார் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டுள்ளனர். பொலீஸாரின் செயற்பாடுகள் பௌத்த சிங்கள மேலாதிக மனநிலையின் வெளிப்பாடாகவே இருந்தது. புனித தலம் ஒன்றில் சப்பாத்து கால்களுடன் வெறுக்கத்தக்க வகையில் பொலீஸாரின் நடவடிக்கைகள் காணப்பட்டன. நாட்டு மக்களிடையே இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சட்டத்தின் வழி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடப்பாடுடைய பொலீஸ் திணைக்களம் தமிழ் மக்கள் விடயத்தில் அதற்கு மாறாக செயற்படுகிறது. இலங்கையை பொறுத்தவரை பொலீஸ் மற்றும் தொல்லியல் திணைக்களங்கள் இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் நடந்து சம்பவங்கள் போன்று இனியொரு சம்பவம் இடம்பெறாத நிலை உருவாக்கப்படல் வேண்டும்.அரச நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் சந்திரகுமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178456
  4. திரு சிறிராசா ரஜிந்தனின் (பேசமுடியாதவர்) வீட்டுத் திட்டப் பணிகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது. வட்டு கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு சிறிராசா ரஜிந்தனுக்கு (பேசமுடியாதவர்) அரசின் வீட்டுத்திட்ட உதவியாக ஆறு இலட்ச ரூபாய் கிடைக்கப்பெற்று அவருடைய குடும்பத்தினரின் முயற்சியோடு ஓரளவு வீடு கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. சமையலறை, மற்றுமோர் அறை ஆகியவற்றை பூரணப்படுத்த வேண்டியுள்ளதோடு, மலசல கூடம் அமைக்க வேண்டி உள்ளது. திரு சிறிராசா ரஜிந்தன் குடும்பத்தினருக்கு முதற்கட்ட உதவி 50000 ரூபா வங்கிக் கணக்கில் வைப்பிட்டுள்ளனர். நண்பர்கள் சிவசங்கர் 30000 ரூபா, ராஜன் 20000 ரூபா நன்கொடை அளித்துள்ளனர். மிக்க நன்றி நட்புகளே. இக்காணொளியை பார்த்து உதவ விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொண்டால் அவர்களுடைய வங்கி விபரங்களைத் தந்து உதவுவோம். எம்முடன் தொடர்ப கொள்ள சிவறஞ்சன் தேவகுமாரன் +94777775448 +94779591047
  5. Published By: DIGITAL DESK 3 11 MAR, 2024 | 03:14 PM வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருகின்றனர். மகாசிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக சட்டத்தரணிகள் கடந்த சனிக்கிழமை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை குறித்த 8 பேரையும் மன்றின் உத்தரவுக்கமைய வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அழைத்து சென்றிருந்தனர். இதன்போது குறித்த 8 பேரினதும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கைவிலங்குடன் அவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.virakesari.lk/article/178426
  6. மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு; திருக்கோவில் வைத்தியசாலையின் முன் பதற்றம் Published By: DIGITAL DESK 3 11 MAR, 2024 | 03:51 PM திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. இன்றைய தினம் காலை மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட குறித்த மாணவன் போட்டி நிறைவுற்றதும் வகுப்பறைக்கு சென்றுள்ளார். இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றதாகவும் பின்னர் அவசர சிகிச்சைக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அவருக்கான சி.பி.ஆர் சிகிச்சை உட்பட போதியளவான சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டதாகவும் எனினும்; போதிய வைத்திய உபகரணங்களைக் கொண்ட அம்பியூலன் வண்டி இல்லாததன் காரணமாக அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்ற முடியாமல் போனதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த மாணவனின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வான நிலையில் மாணவனின் உயிரிழப்புக்கு வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என மாணவர்களும், இளைஞர்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்பட படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/178439 போதிய பயிற்சிகள் எடுக்காது போட்டியில் கலந்து கொண்டாரோ?!
  7. Published By: SETHU 11 MAR, 2024 | 01:11 PM பறந்துகொண்டிருந்த பயணிகள் விமானத்தின் விமானி அறையில் இரு விமானிகளும் உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் தொடர்பில் இந்தோனேஷிய அரசாங்கம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. சுலேவெசி நகரிலிருந்து ஜகர்த்தா நகரை நோக்கி 153 பேருடன் பறந்துகொண்டிருந்த Batik Air விமானமொன்றில் இரு விமானிகளும் 28 நிமிடங்கள் உறங்கினர் என இந்தோனேஷிய போக்குவரத்து பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 25 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றிருந்ததாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. எயார்பஸ் ஏ 320 இரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் சிறிதுநேரம் வேறு திசையில் சென்றிருந்தபோதிலும் பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்தில் துணை விமானியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, தான் உறங்கப்போவதாக தலைமை விமானி கூறியிருக்கிறார் எனினும், துணை விமானியும் சிறிதுநேரத்தில் உறங்க ஆரம்பித்தார். துணைவிமானியின் மனைவி ஒரு மாதத்துக்கு முன் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த நிலையில், சம்பத்துக்கு முந்தைய இரவு, குழந்தைகளை பராமரித்ததால் துணை விமானி களைப்படைந்திருந்தார் என செய்திகள் வெளியாகியுள்ளன. உறக்கத்திலிருந்து விழித்த விமானி, துணை விமானியும் உறங்கிவிட்டதையும் விமானம் சிறிதுதேரம் பாதைமாறி சென்றிருப்பதையும் உணர்ந்தார். அவ்விமானியை ஜகார்த்தா வான் கட்டுப்பாட்டாளர்கள் தொடர்புகொள்ள முயன்றபோதிலும், 28 நிமிட மௌனத்தின் பின்னரே தொடர்பு கிடைத்தது. பின்னர் அவர் கட்டுப்பாட்டாளர்களுடன் தொடர்புகொண்ட அவர், விமானத்தை தரையிறக்கினார் என செய்தி வெளியாகியுள்ளது. விமானம் புறப்படுவதற்கு முன்னர் விமானியிடமும் துணை விமானியிடமும் நடத்தப்பட்ட இரத்த அழுத்த சோதனைகள், இதயத்துடிப்பு வேகம் ஆகியன சாதாரண அளவில் இருந்தன. இரு விமானிகளும் முழுமையான அளவு நேரம் ஓய்வில் இருந்தபோதிலும், அவர்களின் ஓய்வு தரமானதாக இருந்ததாக என ஆராய்வதற்கு சோதனைகள் தவறிவிட்டன என விமானப் போக்குவரத்து நிபுணர் அல்வின் லீ கூறியுள்ளார். இந்நிலையில் குறித்த விமான நிறுவனத்துகுக்கு இந்தோனேஷிய வான் போக்குவரத்துத் தறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/178420
  8. மட்டக்களப்பில் தரையில் நிர்மாணிக்கப்பட்ட 2 மெகாவொட் சூரிய மின் சக்தி திட்டம் நேற்று (10) காலை திறந்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இது இலங்கை மின்சார சபையின் 90 மெகாவொட் ஒப்பந்த நடைமுறையின் கீழ் கட்டப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது X கணக்கில் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். BackBay Solar தனியார் நிறுவனத்தினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295196
  9. கலியாணத்திற்கு வாங்கின காசு என்னானது?! வாமன்!
  10. 96 ஆவது ஒஸ்கர் விருது விழா : வெற்றியாளர்களின் முழு விபரம் இதோ!! Published By: DIGITAL DESK 3 11 MAR, 2024 | 11:55 AM திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஒஸ்கர் காணப்படுகின்றது. 1929 ஆம் ஆண்டு முதல் ஒஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஒஸ்கர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், 96வது ஒஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டொல்பி திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறந்த படம், நடிகர், துணை நடிகர், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட 7 விருதுகளை ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் தட்டிச்சென்றுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஓபன்ஹெய்மர் திரைப்படம் அணுகுண்டை தயாரித்த ஜே. ரொபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு உருவானது. ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டு போடப்பட்டு பல லட்சம் உயிர்கள் பலியாக தான் காரணமாகி விட்டோம் என வருந்தும் காட்சிகளிலும், இந்த உலகமே அழியப்போகுது என நினைக்கும் காட்சிகளிலும் தனது நடிப்பால் சிலியன் மர்பி அசத்தியிருந்தார். வெற்றியாளர்களின் முழு விபரம் இதோ...! சிறந்த திரைப்படத்திற்கான ஒஸ்கர் விருதை வென்ற ஓப்பன்ஹெய்மர் சிறந்த திரைப்படத்திற்கான (Best Picture) ஒஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) வென்றுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மெர்பி நடிப்பில் வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஒஸ்கர் விருதை வென்றுள்ளது. சிறந்த நடிகை: சிறந்த நடிகைக்கான (Best Actress) ஒஸ்கர் விருதை நடிகை இமா ஸ்டோன் வென்றுள்ளார். புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை இமா ஸ்டோனுக்கு சிறந்த நடிகைக்கான ஒஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனர்: சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வென்றார். சிறந்த நடிகர் சிறந்த நடிகருக்கான ஒஸ்கர் விருதை வென்றார் சிலியன் மெர்பி. ஓப்பன்ஹெய்மர் படத்தில் நடித்தமைக்காக சிலியன் மெர்பிக்கு சிறந்த நடிகருக்கான ஒஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த ஆவண திரைப்படம் சிறந்த ஆவண திரைப்படத்திற்கான (Best Documentary Feature) ஒஸ்கர் விருதை 20 டேஸ் இன் மரியப்போல் (20 Days in Mariupol) ஆவணப்படம் வென்றுள்ளது. சிறந்த ஆவண குறும்படம்: சிறந்த ஆவண குறும்படத்திற்கான (Best Documentary Short) ஒஸ்கர் விருதை தி லாஸ்ட் ரிபெர் ஷாப் (The Last Repair Shop) குறும்படம் வென்றுள்ளது. சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான (Best Live Action Short) ஒஸ்கர் விருதை தி வொண்டர்புல் ஸ்டோரி ஆப் ஹெண்ட்ரி சுகர் (The Wonderful Story of Henry Sugar) குறும்படம் வென்றுள்ளது. சிறந்த ஒலி அமைப்பு சிறந்த ஒலி அமைப்புக்கான (Best Sound) ஒஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த துணை நடிகை சிறந்த துணை நடிகைக்கான (Best Supporting Actress) ஒஸ்கர் விருதை தி ஹொல்ட் ஓவர் (The Holdovers) திரைப்படத்திற்காக டாவினி ஜாய் ரண்டொல்ப் வென்றார். சிறந்த அனிமேஷன் திரைப்படம்: சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான (Best Animated Feature) ஒஸ்கர் விருதை தி பாய்ஸ் அண்ட் தி ஹிரோன் (The Boy And The Heron) திரைப்படம் வென்றது. சிறந்த அனிமேஷன் குறும்படம்: சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான (Best Animated Short) ஒஸ்கர் விருதை வார் இஸ் ஓவர் இன்ஸ்பயர்டு பை தி மியூசில் ஆப் ஜான் அண்ட் யொகொ (War Is Over! Inspired By The Music Of John And Yoko) வென்றுள்ளது. சிறந்த திரைப்பட தயாரிப்பு வடிவமைப்பு சிறந்த திரைப்பட தயாரிப்பு வடிவமைப்புக்கான (Best Production Design) ஒஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த திரைப்பட எடிட்டிங்: சிறந்த திரைப்பட எடிட்டிங்கிற்கான (Best Film Editing) ஒஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) திரைப்படம் வெற்றுள்ளது. சிறந்த ஆடை அலங்காரம்: சிறந்த ஆடை அலங்காரத்திற்கான (Best Costume Design) ஒஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனை: சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைக்கான (Best Hair And Makeup) ஒஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த காட்சி அமைப்பு சிறந்த காட்சி அமைப்புக்கான (Best Visual Effects) ஒஸ்கர் விருதை காட்சிலா மைனஸ் ஒன் (Godzilla Minus One) திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த பாடல் சிறந்த பாடலுக்கான (Best Song) ஒஸ்கர் விருதை Barbie பாடல் பெற்றுள்ளது. சிறந்த இசை சிறந்த இசைக்கான (Best Music) ஒஸ்கர் விருதை The Zone Of Interest திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த துணை நடிகர் சிறந்த துணை நடிகருக்கான ஒஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக ராபர்ட் டவ்னி வென்றார். சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஒஸ்கர் விருதை வென்ற ‘தி சோன் ஆப் இண்டரஸ்ட்’ சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஒஸ்கர் விருதை ‘தி சோன் ஆப் இண்டரஸ்ட்’ திரைப்படம் வென்றது. https://www.virakesari.lk/article/178391
  11. பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனதன் ஹெட் பதவி, பிபிசி செய்திகள் கோலா லம்பூர் 8 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 மார்ச் 2024 லி எர்யோவின் காதுகளில் கடந்த பத்து ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள் ‘தொடர்பு துண்டிக்கப்பட்டது’. லி எர்யோவின் மகன் யான்லின் சென்ற MH 370 விமானம் காணாமல் போனபோது, இதுதான் மலேசிய ஏர்லைன்ஸ் , அவரிடம் சொன்ன இரண்டு வார்த்தைகள். “பல ஆண்டுகளாக ‘தொடர்பு துண்டிக்கப்பட்டது’ என்றால் என்னவென கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒருவரிடம் தொடர்பு துண்டிக்கப்பட்டால், மீண்டும் அவரைத் தொடர்பு கொள்ள இயலும்தானே” என்கிறார் லி. தெற்கு பெய்ஜிங்கில் உள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளான லி எர்யோ மற்றும் அவரது மனைவி லியு ஷுயாங்ஃபெங் ‘தொடர்பு துண்டிக்கப்பட்டது’ என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றனர். உலக வான் சேவை வரலாற்றின் மிகப்பெரிய மர்மத்தை விளங்க முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். பட மூலாதாரம்,BBC/ LULU LUO படக்குறிப்பு, மாயமானவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் மலேசியாவில் அனுசரிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன் இதே நாள், மலேசியாவின் தலைநகர் கோலா லம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்க்கு வழக்கம் போல் இரவு நேரத்தில் புறப்பட்டது MH370 விமானம். போயிங் 777 வடிவமைப்புடன் 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் தாங்கிக் கொண்டு அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் மலேசிய வான் சேவை கட்டுப்பாட்டு அரங்கத்து நன்றி தெரிவித்து விட்டு, வியட்னாம் வான் பரப்பில் நுழையவிருந்தது MH 370. பத்து ஆண்டுக்கால பெருந்துயரம் திடீரென விமானம் வேறு திசையில் திரும்பியது. கட்டுப்பாட்டு மையங்களுடன் கொண்ட அனைத்து மின்னணு தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. மீண்டும் மலேசியா நோக்கி அந்த விமானம் வந்தது. பின் தெற்கு இந்தியப் பெருங்கடல் மீது எங்கோ பறந்துகொண்டிருந்தது. அதன் எரிபொருள் தீரும் வரை அங்கேயே பறந்து கொண்டிருந்தது என்று யூகிக்கப்படுகிறது. மிகத் தீவிரமான அதிக செலவிலான தேடுதல் பணி நடத்தப்பட்டது. ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் காணாமல் போன விமானத்தின் ஒரு துரும்புகூடக் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான கடல் ஆராய்ச்சியாளர்கள், விமானப் பொறியாளர்கள், இளம் புலனாய்வாளர்கள் தங்களுக்குத் தெரிந்த சொற்பமான தகவல்களைக் கொண்டு, MH370 தனது பயணத்தை எங்கு முடித்திருக்கும் எனக் கணக்கிட முயன்றுள்ளனர். பட மூலாதாரம்,BBC/ LULU LUO தேடுதல் பணியைத் தொடர்வதற்கான போராட்டம், MH 370க்கு உண்மையில் என்ன நேர்ந்தது எனக் கண்டறிவது, என இவை அனைத்தும் அந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு பத்து ஆண்டு கால பெருந்துயரத்தைக் கொடுத்துள்ளது. இந்த பிரசாரத்துக்கு ஆதரவு திரட்ட லி உலகம் முழுவதும் பயணித்துள்ளார். தனது சேமிப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி ஆசியா, ஐரோப்பா, விமானத்தில் சில எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட மடகாஸ்கரின் கடற்கரைகளுக்கும் சென்று வந்துள்ளார். தனது மகன் இருந்திருக்கும் மணலைத் தொட்டு உணர வேண்டும் என்கிறார். இந்திய பெருங்கடல் முன்பு நின்றுகொண்டு “யான்லின், நான் உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளேன்,” என்று ஓலமிட்டு அழுததை நினைவு கூர்கிறார் அவர். “எனது மகனைக் கண்டுபிடிக்க இந்த உலகின் இறுதி வரை செல்வேன்,” என்று லி கூறுகிறார். சீனாவில் ஹேபே மாகாணத்தின் கிராமப்புற பகுதி ஒன்றில் வசித்து வருகின்றனர் லி மற்றும் அவரது மனைவி. அவர்களுக்கு தற்போது 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இளமைக் காலத்தில் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கே அவர்களது வருமானம் முழுவதும் செலவிடப்பட்டது. உலகத்தைச் சுற்றிப் பார்க்க எந்த பணமும் இருந்ததில்லை. அவர்கள் கிராமத்தில் இருந்து முதன்முதலில் பல்கலைழகத்துக்குச் சென்று படித்தது யான்லின் தான். வெளிநாட்டில் வேலை கிடைத்த முதல் நபரும் யான்லின்தான். மலேசியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் யான்லினுக்கு வேலை கிடைத்திருந்தது. விசா பெறுவதற்காக மலேசியாவில் இருந்து சீனா திரும்பிக் கொண்டிருந்தார் யான்லின். அப்போதுதான் விமானம் காணாமல் போனது. “இந்தச் சம்பவத்துக்கு முன், அருகில் உள்ள ஹாண்டன் நகரத்துக்குக்கூட நாங்கள் சென்றது இல்லை,” என்கிறார் லி. தற்போது அடிக்கடி பயணிப்பவர்களாக மாறிவிட்ட லி மற்றும் அவரது மனைவி பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை பிற குடும்பத்தினருடன் அனுசரிக்க மலேசியா வந்துள்ளனர். அந்த விமானத்தில் பயணித்த் 153 சீன பயணிகளில் ஒருவர் யான்லின். மலேசிய அரசிடமிருந்து இழப்பீடு வாங்க மறுத்த 40 சீன குடும்பங்களில் அவரது பெற்றோர்களும் உண்டு. விமான சேவை, விமான தயாரிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பிறர் மீது சீனாவில் வழக்கு தொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைகள் நகர்ந்தாலும் அவர்கள் காணாமல் போன விமானத்துடன் கட்டிப் போடப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரேஸ் நாதனின் மருமகன், MH370ல் பயணித்த தனது மாமியாருக்கு எழுதியிருந்த கடிதம். MH370 காணாமல் போனபோது, கிரேஸ் நேதன், பிரிட்டனில் தனது சட்டப்படிப்பின் இறுதி ஆண்டு தேர்வுகளை எழுதி வந்துள்ளார். அவரது தாய் ஆன் விமானத்தில் பயணம் செய்தார். இன்று அவர் மலேசியாவில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கோலா லம்பூரில் நடந்த நினைவு தின நிகழ்ச்சியில், தனது திருமணத்தின்போது தாயின் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு தேவாலயத்துக்குள் நடந்து வந்ததையும், இரண்டு சிக்கலான பிரசவங்களின் போது தனது தாயின் அன்பான அறிவுரைகள் இல்லாமல் போனதையும் நினைவுகூர்ந்து பேசினார். விமானத்தில் இருந்து சிதறிய சில துண்டுகள் அந்த நிகழ்வில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. விமானத்தின் இந்த எச்சங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. கடலுக்கு அடியில் பல நாட்கள் இருந்து துருபிடித்த விமான இறக்கைகளின் பாகங்கள் அவை. இந்த நிகழ்வுக்கு வந்திருந்த பிளைன் ஜிப்சன் தான் விமானத்தின் அதிகமான பாகங்களைக் கண்டறிந்தவர். MH 370 நெடுங்கதையின் வண்ணமயமான கதாபாத்திரங்களில் ஒருவர் ஜிப்சன். இளம் சாகசக்காரர் என்றே அவரை அழைக்கலாம். இண்டியானா ஜோன்ஸ் போன்று உடை அணிந்துகொண்டு, கலிஃபோர்னியாவில் உள்ள தனது வீட்டை விற்றுக் கிடைத்தை பணத்தைக் கொண்டு உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று புறப்பட்டவர். “முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்றபோது, கடற்கரை ஓரங்களில் மிதக்கும் கழிவுகளைக் கண்டறிய ஒருங்கிணைந்த தேடுதல் பணிகள் நடைபெறவில்லை எனத் தெரிந்தது. யாரும் அதைச் செய்யவே இல்லை. கடலுக்கு அடியில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், காணாமல் போன விமானத்தின் பாகம் கடற்கரையின் ஓரத்தில் நடந்து செல்லும் ஒருவரின் கண்ணில்தான் முதலில் படும் என்று நான் நம்பினேன். அதை யாரும் செய்தாததால் நானே அதைச் செய்தேன்,” என்றார். ஓராண்டு காலம் மியான்மர் முதல் மாலத்தீவுகள் வரையிலான கடற்கரைகளில் தேடிய அவருக்கு விமானத்தின் முதல் பாகம் மொசாம்பிக்கின் மணல்திட்டு ஒன்றில் கிடைத்தது. இதற்கிடையில் இந்தியப் பெருங்கடலில் உள்ள ரி யூனியன் தீவில் விமான இறக்கையில் இருந்து பெரிய பாகம் ஒன்று கிடைத்தது. இதன் மூலம் MH370 இந்திய பெருங்டலில்தான் வீழ்ந்து மூழ்கியுள்ளது என்பது அந்த குடும்பங்களுக்கு உறுதியானது. MH370யின் பாகங்கள் எப்படி கண்டறியப்பட்டன? பட மூலாதாரம்,BBC/ LULU LUO படக்குறிப்பு, விமானத்தின் சிதறிய பாகங்கள், நினைவு தின நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன விமானம் காணாமல் போன 16 மாதங்கள் கழித்தே அதன் பாகங்கள் கிழக்கு ஆப்பரிக்க கடற்கரைகளில் கண்டுபிடிக்கப்பட்டன. தெற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள நீரோட்ட ஆய்வுகள் மூலம், இந்த பாகங்கள் MH370இல் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று தெரிய வந்தது. அஸ்லாம் கான், மலேசிய முன்னாள் தலைமை புலனாய்வாளர் இந்த பாகங்களை எப்படி உறுதிப்படுத்தினோம் என விளக்கினார். கண்டுபிடிக்கப்பட்ட பாகங்களில் உள்ள வரிசை எண்கள், விமான தயாரிப்பாளரின் ஆவணங்களில் இருந்த வரிசை எண்களுடன் ஒத்துப் போனது. எனவே அவை மலேசிய ஏர்லைன்ஸ் போயிங் விமானம் என்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும் அந்தப் பாகங்களில் இருந்த எழுத்துகளின் வடிவங்களைப் பார்த்தபோது, அவை போயிங் விமானத்தினுடையது என்பது, வேறு எந்த போயிங் விமானமும் இந்திய பெருங்கடலில் விழவில்லை என்பதால் அது MH370இன் பாகங்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. விமானம் பறக்கும்போது அதைச் சீராக வைத்துக்கொள்ள இறக்கைகளில் உள்ள பாகம் ஃப்ளாப்ரான். அந்தப் பாகமும் கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் மீண்டும் மலேசியா நோக்கி திரும்பியதற்கு இதுவே சான்றாக அமைந்தது. இந்த பாகம் கிடைக்கும் வரை விமானம் மேற்கில் மலாய் தீபகற்பம் நோக்கி பறந்ததற்கான சாட்சி, மலேசியா மற்றும் தாய்லாந்தில் உள்ள ராணுவ ரேடார்களின் தரவுகள் மட்டுமே. மேலும் சில சான்றுகளும் கிடைத்தன. பிரிட்டன் நிறுவனமான இன்மர்சாட், தனது செயற்கைகோள்கள் ஒன்றுடன் MH370 தொடர்பு கொண்டதைத் தெரிவித்தது. தெற்கு நோக்கிச் செல்லும்போது, ஒவ்வொரு ஒரு மணிநேரத்திலும் MH370 உடன் நிகழ்ந்த ‘கை குலுக்கல்’ என்றழைக்கப்படும் ஆறு தொடர்புகளைக் கண்டறிந்தது. விமானம் மீண்டும் மலேசியா நோக்கிப் பறந்ததா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட தேடுதல்கள் எந்தப் பலனையும் தரவில்லை ஒவ்வொரு ஒரு மணிநேரத்திலும், விமானத்துக்கும் செயற்கைக் கோளுக்குமான தூரத்தைக் கணக்கிட்டு விமானம் உத்தேசமாக கடலில் எந்தப் பகுதியில் விழுந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது. அப்படி குறிக்கப்பட்ட இடம், மிகப் பரந்த ஆக்ரோஷமான ஆழமான கடல் பகுதி. அதற்கு மேல் குறிப்பான இடத்தைத் துல்லியமாக கண்டறியமுடியவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2017ஆம் ஆண்டு ஜனவரி வரை, 26 நாடுகளைச் சேர்ந்த 60 கப்பல்கள், 53 விமானங்கள் தேடுதல் பணியை மேற்கொண்டன. 2018ஆம் ஆண்டு அமெரிக்க தனியார் நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி ஐந்து மாதங்களுக்கு கடலுக்கு அடியில் செல்லக்கூடிய ட்ரோன்கள் கொண்டு தேடியது. ஆதாரபூர்வமான தரவுகள் இல்லாததால், விமானம் மாயமானது குறித்துப் பல சதிக்கோட்பாடுகள் பேசப்பட்டன. விமானம் கடத்தப்பட்டு ரஷ்யா கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் அல்லது டியகோ கார்சியா தீவில் உள்ள அமெரிக்க வான் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் எனப் பல கோட்பாடுகள் இருந்தன. காட்சிக்கு வைக்கப்பட்ட விமான பாகங்களைப் பார்த்தபோது, “இது மிகவும் வெறுக்கக்தக்கது” என்கிறார் பிரெஞ்சு பத்திரிகையாளர் ஃப்ளாரன்ஸ் டெ சாங்கி. இவர், MH370 மாயமானது குறித்து விரிவாக ஆய்வு செய்து புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். MH 370 குறித்து வெளியான நூற்றுக்கணக்கான புத்தகங்களில் இதுவும் ஒன்று. விமானம் திரும்பி தெற்கு நோக்கிப் பறந்தது என்ற கோட்டைபாட்டை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை, அது பொய்யாகச் சித்தரிக்கப்பட்டது என்கிறார். கண்டெடுக்கப்பட்டவை MH370-இன் பாகங்கள் இல்லை என்கிறார். விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட சரக்குகள் குறித்துக் கேள்விகள் எழுப்புகிறார் அவர். அந்த விமானத்தில் இருந்த சரக்குகள் காரணமாக தென் சீனக் கடல் மீது அமெரிக்க விமானத்தால் சுடப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார். தொடர்பு துண்டிக்கப்பட்டும் ஆறு மணிநேரம் எப்படி சீராகப் பறந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, MH370 மாயமானது குறித்து பல சதிக்கோட்பாடுகள் பேசப்படுகின்றன. ரேடார் மற்றும் செயற்கைக்கோள்களின் தரவுகளைப் பல நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அந்த தரவுகளின்படி பார்த்தால், விமானத்தை யாரோ தெரிந்தே தெற்கு நோக்கி இயக்கியுள்ளனர் என்பதுதான் அதற்குரிய ஒரே விளக்கம். பிபிசியின் “ஏன் விமானங்கள் மாயமாகின்றன” என்ற புதிய வீடியோவில் இரண்டு பிரெஞ்சு வான்வெளி நிபுணர்கள் பேசியுள்ளனர். அதில் ஒருவர் அனுபவமிக்க விமானி. விமானம் எப்படி பறந்திருக்கக் கூடும் என்று அவர் தொழில்நுட்ப உதவியுடன் நிகழ்த்திக் காட்டுகிறார். மலேசிய வான் கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பு முடிந்த பிறகு, தென் சீனக் கடல் மீது MH370 துரிதமாக எப்படி திரும்பியிருக்கக் கூடும் என்று விளக்குகிறார். இதை அனுபவமிக்க, திறன்கொண்ட விமானி ஒருவர் செய்தால் மட்டுமே இப்படித் திரும்ப முடியும் என்ற முடிவுக்கு வந்தனர். சரியாக மலேசிய வான் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வியட்நாம் வான் கட்டுப்பாட்டு மையத்துக்குள் நுழையும் முன் விமானம் இப்படி திரும்பியுள்ளதால், யாருக்கும் தெரியாமல் திருப்ப வேண்டும் என்று விமானி செய்திருக்கக் கூடும் என்று கருதுகின்றனர். ஏனென்றால், வியட்நாம் வான் கட்டுப்பாட்டுக்குள் விமானம் வரவில்லை என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளச் சிறிது நேரம் ஆகும். மேலும் சில கோட்பாடுகளும் உள்ளன. விமானத்தில் இருந்த அனைவரும் சீரற்ற அழுத்தம் காரணமாக ஆக்சிஜன் இல்லாமல் இறந்து போயிருக்கலாம் அல்லது திடீரென பெரிய தீ விபத்து ஏற்பட்டு, தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கோட்பாடுகள் உள்ளன. ஆனால், விமானத்தின் சவாலான திருப்பம், அதன் பிறகு தொடர்ந்து ஏழு மணிநேரம் சீராகப் பறந்தது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, மேற்சொன்ன கோட்பாடுகள் சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது. மலேசிய அரசின் மெத்தனப் போக்கு பட மூலாதாரம்,BBC/ LULU LUO படக்குறிப்பு, ஜாகிடா கொன்சாலெஸின் கணவரான பாட்ரிக் கோம்ஸ் MH 370 விமானத்தின் கண்காணிப்பாளராக இருந்தார். அதேநேரம் விமானி வேண்டுமென்றே விமானத்தை வேறு திசையில் திருப்பி பயணிகளை மரணத்துக்கு இட்டுச் சென்றார் என்பதும் நம்பத்தக்கதாக இல்லை. அந்த விமானி அப்படி செய்யக் கூடியவர் என்பதற்கான வரலாறும் இல்லை. இந்த சந்தேகங்கள், கோட்பாடுகள் அனைத்தும் குடும்பங்களின் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. “எனது மோசமான எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது” என்கிறார் ஜாகிடா கொன்சாலெஸ், MH 370 விமானத்தின் உள் இருக்கும் கண்காணிப்பாளர் பாட்ரிக் கோம்ஸின் மனைவி. “நாங்கள் இதுபோன்ற உணர்ச்சிப் பிழம்புகளுக்கு ஆளாகிக் கொண்டே இருக்கிறோம். முதன்முதலில் தேடுதல் பணிகள் தொடங்கியபோது, ஏதாவது ஒன்றைப் பார்த்து விட்டதாகக் கூறுவார்கள், அப்போது எங்கள் நம்பிக்கை அதிகமாகும். அதன் பிறகு அது MH370 இல்லை என்று கூறுவிடுவார்கள். நாங்கள் மீண்டும் காத்திருக்க தொடங்குவோம்.” என்றார். ஆரம்பத்திலிருந்தே மலேசிய அரசு குடும்பங்களால் விமர்சிக்கப்பட்டு வந்தது. ராணுவ ரேடார் தகவல்கள் கொண்டு துரிதமாக MH370 விமானத்தைக் கண்டறியும் பணியை மேற்கொள்ளாததற்காகவும், 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு தேடுதல் பணிகளை மேற்கொள்ள மெத்தனமாக இருந்ததற்காகவும் விமர்சிக்கப்பட்டது. ஓஷன் இன்ஃபினிடி என்ற தனியார் நிறுவனம், எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் கட்டணம் வேண்டாம் என்ற அடிப்படையில் தேடுதல் பணிகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளது. ஆனால், அதற்கு அரசின் அனுமதி வேண்டும். மலேசிய அரசு மேலும் சில நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என சில அரசு அதிகாரிகள் தனியாகச் சந்தித்துப் பேசும்போது ஒப்புக் கொள்கின்றனர். இதற்கு சமீப ஆண்டுகளில், நாட்டில் ஏற்பட்டு வரும் அரசியல் குழப்பங்கள் காரணமாக இருக்கலாம். அதன் பிறகு எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய கொரோனா பெருந்தொற்று பரவியது. பெருந்தொற்றுக் காலத்தில் குடும்பங்கள் வருடாந்திர நினைவு தினத்தை அனுசரிக்கக்கூட இயலவில்லை. தற்போது பொறுப்பில் இருக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக், கோலா லம்பூரில் நடைபெற்ற 10வது ஆண்டு நினைவு தினத்தில் பங்கேற்றார். மாயமான விமானத்தைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த ஆண்டில் தேடுதல் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஓஷன் இன்ஃபினிடி நிறுவனத்துடன் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார். ஓஷன் இன்ஃபினிடி 2018ஆம் ஆண்டு 1.12 லட்சம் கி.மீ இடத்தைத் தேடிப் பார்த்தது. இதில் ஆழ்கடல் பள்ளத்தாக்குகள் போன்ற மிக சவாலான பகுதிகளும் இருந்ததால், விமானத்தைத் தவற விட்டிருக்கவும் வாய்ப்புண்டு. தேடுதல் பணியில் புதிய நம்பிக்கை பட மூலாதாரம்,BBC/ JONATHAN HEAD படக்குறிப்பு, பத்து ஆண்டுகளாக லி மற்றும் அவரது மனைவி தங்கள் மகனுக்கு என்ன ஆனது என்று தெரிந்துகொள்ள முயன்று வருகின்றனர். இந்தத் தேடுதல் பணிகளில் ஈடுபட்ட மற்றொரு நபர் ஓய்வுபெற்ற பிரிட்டன் வான்வெளி தொழில்நுட்ப நிபுணர், ரிச்சர்ட் காட்ஃப்ரே. அவர் விமானம் மாயமாகியிருக்கக் கூடும் என்ற இடத்தை மேலும் குறிப்பாகக் கண்டறிந்துள்ளதாகக் கூறுகிறார். சில சிற்றலை வானொலி சோதனைகள் மூலம் அவர் இதைச் செய்துள்ளார். ட்ரோன்கள் கொண்டு கவனத்துடன் அந்தக் குறிப்பிட்ட பகுதியைப் பல முறை தேடிப் பார்க்க வேண்டும். “ஒரு ஆண்டில் 1.7 பில்லியன் தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன. அதாவது உலகம் முழுவதும் விரிந்து கிடக்கும் ஒரு மீன் வலையை கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த வலை முழுவதும் ரேடியோ சிக்னல்கள் உள்ளன. ஒவ்வொரு முறையும் ஒரு விமானம் செல்லும் போது, இந்த வலையில் ஒரு துளை ஏற்படும். அதை வைத்து அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் எந்த இடத்தில் இருந்தது என என்னால் கூற முடியும். தெற்கு இந்திய பெருங்கடல் மீது பறந்த ஆறு மணி நேரங்களில், MH370யினால் ஏற்பட்ட 313 முரண்பாடுகள் 95 வெவ்வேறு நேரங்களில் பதிவாகியுள்ளது. அதை வைத்து விமானம் வீழ்ந்த பகுதியை மேலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்,” என்கிறார். ரிச்சர்ட் சொல்வது சரியான வழியா என்று கண்டறிய லிவர்பூல் பல்கலைகழகம் சோதனை செய்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் அதன் முடிவுகள் தெரிய வரும். மலேசிய போக்குவரத்து அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகள் நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாக குடும்பங்கள் தெரிவிக்கின்றன. மலேசிய அரசு இதுவரை கொண்டிருந்த அணுகுமுறையில் இருந்து இந்த வாக்குறுதி மாறுபட்டதாக இருக்கிறது. ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதேபோன்று அவர்களுக்குப் பலமுறை நம்பிக்கைகள் மட்டுமே கிடைத்துள்ளன. “எனக்கு விமானத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கொன்சாலெஸ் கூறுகிறார். “அப்போதாவது எனது கணவரின் ஆன்மா சாந்தியடையும். இதுவரை நான் அவரது நினைவாக எதுவும் செய்யவில்லை. என்னால் செய்ய முடியாது, ஏனென்றால் கண்களுக்குப் புலப்படும் எதையும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை” என்றார். நினைவு தின நிகழ்வில் ஒரு பெரிய பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் மக்கள் தங்கள் நம்பிக்கையை, துயரத்தை, சோகத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும். பெரிய சீன எழுத்துகளில், அந்தப் பலகையில் எழுதுவதற்காக கீழே அமர்ந்த லி, அந்த பலகையைப் பார்த்து அழுதுகொண்டே நின்றார். அதில், “மகனே, பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. உனது அம்மாவும் அப்பாவும் உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம். மார்ச் 3, 2024,” என்று எழுதியிருந்தது. https://www.bbc.com/tamil/articles/cy9z80j9g3xo
  12. திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம் 11 MAR, 2024 | 10:56 AM திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விளக்க மளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியபோது, திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என உறுதிபட கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். இந்நிலையில், திமுகவுடனான கூட்டணியை நேற்று முன்தினம் கமல்ஹாசன் உறுதி செய்தார். இந்த செயல் பல்வேறு தரப்பினரிடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இதுதொடர்பாக கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பன்முகத்தன்மை தான் அதன் தனித்துவம் என நான் நம்புகிறேன். தற்போதைய நிலை என்பது ஒரு அவசரநிலை. இது, தமிழகத்துக்கும் தேசத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்திகளுக்கு இது கைகூடி விடக் கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்திருக்கும் முடிவு. இந்த நேரத்தில் எந்த கட்சியில் இருந்தாலும் அனைவருமே சகோதரர்கள் தான். எதிர்க்கட்சியாக இருந்தாலும் என்னுடைய சகோதரர்கள் தான். தேச நலனின் முக்கியத்துவம் கருதி நான் சிலவற்றை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். தேசத்துக்காக நாம் அனைவரும் ஒரே மேடையில் அமர வேண்டும். அது தான் என்னுடைய அரசியல் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/178396
  13. Published By: SETHU 11 MAR, 2024 | 10:48 AM ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீன பிராந்­தி­யங்­களில் இஸ்­ரே­லிய குடி­யி­ருப்­பு­களை விஸ்­த­ரிப்­பது போர்க் குற்­ற­மாகும் என ஐ.நா.வின் மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் வோல்கர் டர்க் கூறி­யுள்ளார். ஜெனி­வா­வி­லுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்கு கடந்தவாரம் அளித்த அறிக்­கை­யொன்­றி­லேயே வோல்கர் டர்க் இவ்­வாறு கூறி­யுள்ளார். மேற்குக் கரையின் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பகு­தி­களில் இஸ்­ரேலின் சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்பு நிர்­மா­ணங்கள் வேக­மாக அதி­க­ரித்து வரு­கின்­றன என அவர் கூறினார். ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பிராந்­தி­யங்­களில் குடி­யி­ருப்­பு­களை உரு­வாக்­கு­வதும் விரி­வாக்­கு­வதும் இஸ்ரேல் தனது சொந்த ­மக்­களை ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு இட­மாற்­று­வ­தற்கு சம­மாகும். இது போர்க் குற்­றத்­துக்கு ஒப்பானது. இதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை குற்றப் பொறுப்­பா­ளி­க­ளாக்கக் கூடும் என அவர் கூறினார். மேற்குக் கரையின் மாலே அடுமின், இப்ரத், கேதார் பகு­தி­களில் மேலும் 3,476 வீடு­களை நிர்­மா­ணிக்கும் இஸ்­ரேலின் திட்­ட­மா­னது சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு முற்­றிலும் முர­ணா­ன­தாகும் என அவர் கூறினார். மேற்­படி யூதக் குடியிருப்புகளை நிர்மாணிக்கும் திட்­டத்துக்கு ஸ்பெய்ன், பிரான்ஸ் ஆகியனவும் கடந்த வெள்ளிக்கிழமை கண்டனம் தெரி­வித்திருந்தன. https://www.virakesari.lk/article/178395
  14. Published By: VISHNU 10 MAR, 2024 | 11:58 PM வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போது பொலிஸாரின் அட்டூழியங்களைக் கண்டித்தும், கைது செய்தோரை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி திங்கட்கிழமை (11) மாலை 04 மணியளவில் நல்லை ஆதீன முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும், இந்தப் போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்புச் சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு. அகத்தியர் அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெடுக்குநாறி மலை லிங்கேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போது பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றது. சைவர்களின் வழிபாட்டு உரிமை மிகப் புனிதமான விரத நாளில் அப்பட்டமாக மறுக்கப்பட்டு மிக மோசமாக சைவ சமய விழுமியங்களை புனித சடங்குகளை அவமதிக்கும் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. அதன் உச்ச கட்டமாக தவறேதும் செய்யாத சிவனடியார்கள் எண்வர் விரதமிருந்து பூசையில் ஈடுபட்ட தருணம் மோசமாக கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பூசை மற்றும் படையல் பொருட்கள் சப்பாத்து கால்களினால் சீருடை தரித்த நபர்களால் தட்டி அகற்றப்பட்டுள்ளது. பூசகர் சிவத்திரு மதிமுகராசா மீளக் கைது செய்யப்படுள்ளார். இந்த ஈனச் செயல்கள் மிகப் பாரதூரமான சைவத்தமிழர்களின் மனதை காயப்படுத்தியுள்ளதுடன் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயல் என்பதை உலகிற்கும், அரச உயர் பீடத்திற்கும் சொல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழர்களதும் கடமையாகும் உலகம் பூராகவும் உள்ள சைவர்களின் மிக உன்னதமான முதன்மையான விரதம் சிவராத்திரி ஆகும். அந்த வகையில் இந்த சிவராத்திரி தினத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள தொன்றுதொட்டு தமிழ்ச் சைவர்கள் வழிபட்டு வரும் ஆதி சிவன் கோவிலில் தடைபெற்ற மோசமான சம்பங்களைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட பக்தர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் நாம் அணிதிரண்டு எதிர்ப்பை பதிவு செய்வோம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178384
  15. ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு ஏழு ஆஸ்கர் விருதுகள் - கிறிஸ்டோபர் நோலன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 20 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2024ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் (ஆஸ்கார் விருதுகள்) விழாவில் ஓப்பன்ஹைமர் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குநர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சிலியன் மர்பி), சிறந்த துணை நடிகர் (ராபர்ட் டவுனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவாளர் (ஹாய்ட் வான் ஹோய்டெமா), சிறந்த திரைப்பட எடிட்டிங் (ஜெனிஃபர் லெம்ம்), சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகியவற்றுக்கு ஓபன்ஹெய்மர் பரிந்துரைக்கப்பட்டு விருதும் வென்றுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இந்தப் படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் மொத்தம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. ஓபன்ஹைமர் படம் ஏழு பிரிவுகளிலும், மற்ற படங்கள் ஆறு பிரிவுகளிலும் விருதுகளை வென்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES சிறந்த இயக்குநருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலன் பெற வந்தபோது, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவருக்கு கோப்பையை வழங்கினார். அந்தச் சந்தர்ப்பத்தில், நோலன் தனது மனைவியும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளருமான எம்மா தாமஸுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய எம்மா தாமஸ், அந்த தருணத்தைப் பற்றி தான் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும், அந்தத் தருணத்திலேயே தான் நின்றிருப்பதாகவும் கூறினார் அவர் தனது கணவரை 'தனித்துவமானவர் என்று வர்ணித்தார். இருப்பினும், ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாட்டிற்காக அவர் பெருமையடைவதாகக் கூறினார். மேலும் தனது மூன்று குழந்தைகளுக்கும் நன்றி தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற எம்மா ஸ்டோன் பட மூலாதாரம்,GETTY IMAGES எம்மா ஸ்டோன் சிறந்த நடிகையாக அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சியடைந்தார். "நான் அந்த நேரத்தில் அப்படியே சுயநினைவு இழந்துவிட்டேன். நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்,” என்று அவர் மேடைக்குப் பின்னால் கூறினார். "நான் கொஞ்சம் கொஞ்சமாகச் சுழல்வது போல் உணர்கிறேன். இது ஒரு பெரிய மரியாதை. எனக்கு இது ஆச்சரியமாக உள்ளது," என்றார். யோர்கோஸ் லாந்திமோஸ் படத்தில் பெல்லா பாக்ஸ்டராக நடித்ததில் இருந்து தான் நிறைய கற்றுக்கொண்டதாக அவர் கூறினார். "புதிதாக ஆனால் உருவகமாக நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு... மொழி மற்றும் திறமைகளை வேகமாகப் பெறும் ஒரு நபராக நடிக்கும் வாய்ப்பு... அவள் மகிழ்ச்சியும் ஆர்வமும் உண்மையான அன்பும் நிறைந்தவளாக இருந்தாள்," என அந்தக் கதாப்பத்திரத்தைப் பற்றி அவர் பேசினார். ஓபன்ஹைமர் சிலியன் மர்பிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பட மூலாதாரம்,GETTY IMAGES சில்லியன் மர்பி செய்தியாளர் அறைக்குள் வரும்போது அவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பதைப் போலத் தெரிந்தது. (அவர் வெற்றி பெற்றதில் ஆச்சரியமில்லை என்றாலும்). "நான் கொஞ்சம் திகைப்புடன் இருக்கிறேன், இன்று இங்கு நிற்கும் ஐரிஷ் நாட்டவராக இருப்பதில் நான் மிகவும் வியப்படைகிறேன், பணிவாகவும் நன்றியுடனும் இருக்கிறேன், மிகவும் பெருமைப்படுகிறேன்," என்று அவர் கூறுகிறார். “இந்தத் திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனக்கும் கிறிஸுக்கும் (நோலன்) அத்தகைய சிறப்பு உறவு இருக்கிறது. நாங்கள் 20 வருடங்களாக இணைந்து பணியாற்றி வருகிறோம், அவர் சரியான இயக்குநர் என்று நினைக்கிறேன்...என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை. நான் சிறுவயதில் அவருடன் ஒரு ஸ்கிரீன் டெஸ்ட் செய்தேன், அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்!" ஐரிஷ் நாட்டில் பிறந்த, ஆஸ்கார் வாங்கும் முதல் நடிகராக இங்கு நிற்பதில் அவர் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார். "நான் என்ன சொன்னேன் என்பது எனக்கு நினைவில் இல்லை (ஏற்புரையில்), ஆனால் அயர்லாந்தில் கலைஞர்களை ஆதரிப்பதில் நாங்கள் மிகவும் சிறந்தவர்கள். அது தொடர வேண்டும்," என்றார். https://www.bbc.com/tamil/articles/c51w4gqq9pqo
  16. Published By: DIGITAL DESK 3 11 MAR, 2024 | 11:28 AM யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நியூமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். துன்னாலை வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) திடீரென மயங்கி விழுந்த இளைஞனை வீட்டார் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார். விசாரணைகளில் நிமோனியாவே உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178401
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வக்கார் முஸ்தபா பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 10 மார்ச் 2024, 11:27 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 19-ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவம். ஒரு நபர் தன் தொண்டைக்குள் லாவகமாகச் செலுத்திகொண்ட கத்தி சில நிமிடங்களில் மீண்டும் வெளியே வந்தது. டாக்டர் அடோல்ஃப் குஸ்மால் ஒரு மாலை வேளையில் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் தெருக்களில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த காட்சியைக் கண்டார். ஒரு நபர் கத்தியை விழுங்குவதைக் கண்டு டாக்டர் குஸ்மால் அதிர்ச்சியடைந்தார். "இந்த அணுகுமுறையை மனித உடலுக்குள் செய்யப்படும் பரிசோதனைகளுக்காக பயன்படுத்த முடியுமா?" என்ற கேள்வி அப்போது அவரது மனதில் எழுந்ததாக ராபர்ட் யங்சன் தனது 'தி மெடிக்கல் மேவரிக்ஸ்' (The Medical Mavericks) புத்தகத்தில் கூறுகிறார். வாள் அல்லது கத்தியை விழுங்குவது ஒரு பழங்காலத் திறமை என்றும் இந்தக் கலை சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தொடங்கியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் லாங் மற்றும் பைன் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு வந்த கலை 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியான ஒரு பத்திரிகை கட்டுரையில் "வாளை விழுங்கும் கலை இந்தியாவிலிருந்து பிரிட்டனை அடைந்தபோது இந்தச் செயல் நம்பமுடியாத ஒன்றாகக் பார்க்கப்பட்டது" யில் கூறப்பட்டுள்ளது. 1813-ஆம் ஆண்டில் லண்டனில் வசித்த இந்திய கழைக்கூத்தாட்டக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட 'வாளை விழுங்கும்' சாகசங்கள், யாரும் செய்ய முடியாத ஒரு புதிய மற்றும் வியக்கத்தக்க சாதனை என விளம்பரப்படுத்தப்பட்டன. இதேபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் செய்துள்ளனர். வாளை விழுங்கும் புதுமையான செயல் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது என 'தி டைம்ஸ்' பத்திரிகை கூறுகிறது. இந்திய மேஜிக் நிபுணர்கள் வாள் விழுங்கும் நிகழ்ச்சியால் லண்டன் நகரத்தை திகைக்க வைத்தனர். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்தக் கலை ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் பரவியது. நோய் கண்டறிய பயன்பட்ட வாள் விழுங்கும் கலை பட மூலாதாரம்,GETTY IMAGES "டாக்டர் குஸ்மால், வாள் விழுங்கும் கலையை அறிந்த 'அயர்ன் ஹென்றி' (இரும்பு ஹென்றி) என்பவரது உதவியுடன், நோய் ஆய்வுகளுக்காக உணவுக்குழாய் வழியாக உடலில் ஆழமாகச் செல்லக்கூடிய வகையில் ஒரு சாதனத்தை உருவாக்கினார்," என ஆராய்ச்சியாளர்கள் லாங் மற்றும் பைன் கூறினார்கள். 1868-இல் 'அயர்ன் ஹென்றி'க்கு எண்டோஸ்கோபி செய்யப்பட்டது என்று எழுதுகிறார் எலிசா பெர்மன். “டாக்டர் குஸ்மாலால் ஒரு நோயாளியின் உணவுக்குழாயில் இருந்த புற்றுநோய் கட்டியை சரியாக பார்க்க முடியவில்லை. எனவே அயன் ஹென்றி உதவியுடன் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 47 செ.மீ. நீளமுள்ள ஒரு குழாயை விழுங்கினார் அயன் ஹென்றி. கண்ணாடி மற்றும் எண்ணெய் விளக்கின் உதவியுடன், வயிற்றில் உள்ள உணவுக்குழாயை குஸ்மாலால் தெளிவாக பார்க்க முடிந்தது," என எலிசா கூறுகிறார். அதேசமயம், வாளை விழுங்குவது ஒரு ஆபத்தான வித்தையாகும். அது மரணத்திற்கு கூட வழிவகுக்கும். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கத்திகளை விழுங்குபவர்களுக்கு குடலில் இரத்தப்போக்கு மற்றும் உணவுக்குழாயில் கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன என தெரியவந்தது. மருத்துவ பரிசோதனைகளில் வாள் விழுங்குபவர்கள் மிக முக்கிய பங்கு வகித்தனர். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. யாரேனும் இதை சுயமாக முயற்சி செய்தால் உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும். 1897-இல் ஸ்டீவன்ஸ் என்ற ஸ்காட்டிஷ் மருத்துவர், வாளை விழுங்கும் வித்தை அறிந்த ஒரு நபரின் உதவியோடு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொண்டார் என ஆல்பர்ட் ஹாப்கின்ஸ் கூறுகிறார். 'எலக்ட்ரோ கார்டியோகிராம்' என்ற சொல் பெரும்பாலும் மருத்துவர்களுக்குத் தெரியும். அந்த நேரத்தில் அவர்களில் பெரும்பாலோர் அதை 'ஈசிஜி' என்று புரிந்து கொண்டனர். 1906ஆம் ஆண்டில், எம்.கிராமர் என்ற ஜெர்மன் மருத்துவர் இதய செயல்பாட்டைப் பதிவுசெய்ய வாள் விழுங்குபவரின் உணவுக்குழாயில் மின்முனையைச் செலுத்தி பரிசோதனை செய்தார். 'வாள் விழுங்குவதால் எண்டோஸ்கோபி எளிதாக உள்ளது' ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் டாக்டர். ஷரோன் கேப்லான். 2007ஆம் ஆண்டில் கடுமையான தொண்டைக் காயங்கள் உள்ள நோயாளிகளுக்கு உதவ வாள் விழுங்குதலை சிகிச்சை முறையில் பயன்படுத்தலாமா என்பதை முடிவுசெய்ய வாள் விழுங்கும் கலைஞரான ஆண்ட்ரூஸுடன் இணைந்து பணியாற்றினார். வாள் விழுங்கும் கலைஞரான டோட் ராபின்ஸ், "எண்டோஸ்கோபி தனக்கு மிகவும் எளிதானது" என்கிறார். அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் வாள் விழுங்கும் கலையின் வரலாறு குறித்து விரிவுரை நடத்தினார் ராபின்ஸ். அவரை பத்திரிகையாளர் ஒலிவியா பி.வாக்ஸ்மேன் பேட்டி கண்டார். "எனக்கு எண்டோஸ்கோபி செய்ய வேண்டியிருந்தது. குழாயைச் செருகுவதற்கு முன்பு நோயாளிகள் பொதுவாக மயக்கமடைந்துவிடுவார்கள். ஆனால் என்னால் ஒரு கத்தியை விழுங்க முடியும் என்பதால், மருத்துவர் கொடுத்த எண்டோஸ்கோபி எளிதாக இருந்தது" என்று ராபின்ஸ் கூறினார். ஆனால் இப்போது இந்தக் கலை அழிவின் விளிம்பில் உள்ளது. வாள் விழுங்குபவர்களின் சர்வதேச சங்கத்தின் கூற்றுப்படி, இப்போது சில டஜன் வாள் விழுங்குபவர்கள் மட்டுமே உள்ளனர். சர்வதேச வாள் விழுங்குவோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. "அறிவியல் மற்றும் மருத்துவத்திற்கு வாள் விழுங்குவோரின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த பழமையான கலை தினத்தை கொண்டாடுவதன் நோக்கம்," என்று வாள் விழுங்குவோர் சங்கம் கூறுகிறது. https://www.bbc.com/tamil/articles/cnl7d54ed0jo
  18. "என்னால என்ன முடியும்னு யோசிச்சேன்; National Games-ல Gold Medal ஜெயிச்சேன்" பெண் மாற்றுத்திறனாளி கதை
  19. http://1.bp.blogspot.com/_XsbRJpGRhp0/TFR50OkOdtI/AAAAAAAAAXc/Irhmr0Fwxio/s320/life.jpg ஊருக்குப் போயிருந்த போது ஏதேட்சையாக சந்தித்த மனிதரெருவரைப்பற்றிய கதையிது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், ஆனால் அவர் தமிழில் மட்டக்களப்பு வாசம் பலமாய் வீசியது. ஆண்டுகள் பலவாகிவிட்டதாம் புலத்தினுள்ளேயே புலம் பெயர்ந்து. அமைதியன முகமும், அதுக்கேற்ற புன்னகையையும் கொண்டிருந்தார். முகத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சுி தெரிந்தது. வயது 20 களின் முடிவில் அல்லது 30 களின் ஆரம்பத்தில் இருக்கும். நான் தங்கியிருந்த ஒரு விடுதியில் முகாமையாளராக தொழில் புரிவதாய்ச் சொன்னார். ஓரு நாள் மாலை 10 மணியளவில் ஏதேட்சையாக சந்திக்கக் கிடைத்தது இவரை. பழகி சில நிமிடங்களுக்குள்ளாகவே மிகவும் அன்னியோன்யமாய் பேசினார். பலாலி கிழக்கில் காணி, நிலங்களுடன் பெருமையாய் வாழ்ந்திருந்ததாயும், பாதுகாப்புவலையத்துக்குள் அவை உட்பட்டுப் போனதால் தங்களின் குடும்பச் சொத்துக்கள் என்று அவற்றை தம்மால் உரிமைகொண்டாடவோ, விற்பனை செய்யவோ முடியாதிருக்கிறது என்றார். விடுதலைப்போராளியாய் வாழ்ந்திருந்திருக்கிறார் மட்டக்களப்பில். உட்கட்சிப் பிரச்சனையின் பின் விடுதலை வெறுத்து ஓதுங்கிக் கொண்டாராம். வெளிநாட்டில் வேலை செய்து தங்கைகளுக்கு கலியாணம் முடித்துக் கொடுத்திருக்கிறார். தாயார் தன்னுடன் வசிக்கிறாராம். அவருக்கு இன்னும் கல்யாணகமாகவில்லை என்றும் அறியக்கிடைத்தது. பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இரண்டு வருடம் விசா இன்றி அலைந்திருக்கிறார். அது பற்றி அவர் சொன்ன விடயங்களே என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது. வாழ்வின் உச்சம் தொட்டாரோ என்னவோ, ஆனால் நிட்சயமாக வேதனையின் உச்சம் தொட்டிருந்தார் இந்த மனிதர். பிரான்சில் விசா இல்லாமல் பல தமிழர்களிடம் கள்ளமாய் வேலை செய்த பணம் இன்னும் நிலுவையில் இருப்பதாய் புன்னகையுடன் சொன்னார். மேசன் வேலை, கழுவல் வேலை, கடையில் எடுபிடி வேலை, என்று எத்தனையோ வேலைகள் செய்திருக்கிறார். வேதனை என்னவென்றால் அடிமாட்டு சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கும் பல நாட்கள் கைகட்டி, வாய்பொத்தி அலையவேண்டியிருந்ததாம். ”மனிசனுக்கு மதிப்பில்ல அங்க” என்று அவர் சொன்னபோது ஏனோ பலமாய் வலித்தது. பிரான்ஸ்சில் இன்னொரு குடும்பத்துடன் ஒரு வீட்டில் வாடகைக்கிருந்தாராம்,. அந்த வீட்டில் இரண்டு அறைகள் இருந்ததாயும் அவற்றில் ஒன்றில் அக்குடும்பமும் மற்றயதில் இவருடன் சேர்த்து 5 ஆண்களும் வாழ்ந்திருந்திருக்கிறார்கள். வீட்டு உரிமையாளர் இவரை தினமும் குளிக்காதீர்கள் தண்ணீர் ”பில்” அதிகமாய் வருகிறது என்று சொன்னதாயும், தான் அவரிடம், மேசன்வேலை 15 மணிநேரம் செய்து வந்தபின் எப்படி குளிக்காமல் இருப்பது என்று கேட்ட போது அது உங்கட பிரச்சனை என்று அவர் சொன்னதாயும், பின்பு தான் அதிக வாடகை குடுத்த பின்பே தினமும் குளிக்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார். எனக்கு இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்பது ஆச்சர்யமாகவும், வேதனையாகவும் இருந்தது. வெளிநாட்டில் பணத்துக்காய் மனிதர்கள் பிணமாவாதயும், வாழ்கையை மனிதத்துடன் வாழ மறுக்கிறார்கள் என்றும் சொன்னார். நெதர்லாந்தில் ஒரு தோட்டத்தில் வேலை செய்ததாயும், வின்டர் குளிரில் வாழ்ந்திருந்த நேரத்தை விட விறைத்திருந்த நேரங்களே அதிகமென்றார். ஒரு கட்டத்தில் வெளிநாட்டு வாழ்க்கை வெறுத்து IMO மூலமாக ஊர் திரும்பியிருக்கிறார். வெளிநாடு போவதற்கு பட்ட கடனையும், தங்கைகளுக்கு கலியாணத்தையும் செய்ய வெளிநாடு தனக்கு உதவியிருந்தாலும், அது கற்பித்த பாடங்களே தனக்கு பிச்சையெடுத்தென்றாலும் ஊரிலே வாழ் என்று உபதேசம் பண்ணியதாம். ஊர் வந்து, ‌ ஹோட்டேல் மனேஜ்மன்ட் படித்து, தற்போது விடுதி முகாமையாளராக வாழ்வதாயும், வருமானம் சிறிது என்றாலும், வலியில்லாத வாழ்க்கை வாழ்வதாய் சொன்ன போது அவரின் முகத்தைப் பார்த்தேன், உண்மையின் உண்மை தெரிந்தது அவர் முகத்தில். http://visaran.blogspot.com/2010/07/blog-post_31.html
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 10 மார்ச் 2024, 06:09 GMT சோழர்களின் ஆட்சியில் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் வளமான நிலப்பரப்பை உடையது. பெருவுடையார் கோவில் எனும் பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ள பகுதி. தந்தை ராஜராஜசோழன் பதவியில் இருக்கும் போதே கி.பி. 1012ஆம் ஆண்டு இணை அரசனாகப் பதவியேற்றார் ராஜேந்திர சோழன். அடுத்த இரு ஆண்டுகளில் சோழப் பேரரசின் அரியணை முழுவதுமாக அவர் வசம் வந்து சேர்ந்தது. கி.பி. 1014ஆம் ஆண்டு முதல் தஞ்சையில் மணிமுடி சூடினார் ராஜேந்திர சோழன். அரசனாகப் பதவியேற்றதும் அவர் அரண்மனைக்குள் இருந்த நாட்களைவிட, போர்க்களத்தில் இருந்த நாட்கள்தான் அதிகம். போரில் அரசர்களை வீழ்த்தி அவர்கள் ஆட்சிப்பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அரசர்கள் பலரைப் பார்த்திருப்போம். ஆனால் வீழ்த்தியவர்களிடமே மீண்டும் அரியாசனத்தை ராஜேந்திர சோழன் ஒப்படைத்த நிகழ்வு, ஒருமுறை அல்ல, பல முறை மிகச் சாதாரணமாக நிகழ்ந்திருக்கிறது. கங்கை முதல் கடாரம் வரை நடைபெற்ற பல போர்களில் அவர் வென்ற போதிலும், அப்பகுதிகள் அந்தந்த அரசர்களிடமே மீண்டும் வழங்கப்பட்டது. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் தலைமைக்கு கட்டுப்பட்டு வரி செலுத்தும் அரசாக அவற்றை ராஜேந்திர சோழன் மாற்றியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். சாளுக்கியர், பாண்டியர், சேரர், சிங்கள அரசர், வங்கதேச அரசர், கடார அரசர் என இத்தனை பேரை ராஜேந்திரன் வீழ்த்த எடுத்துக்கொண்ட மொத்த காலம் வெறும் 10 ஆண்டுகள்தான். அரசனாகப் பதவியேற்ற கி.பி. 1014 முதல் 1024 வரை போர்க்களம் மட்டும்தான் ராஜேந்திரன் தன் வாழ்வில் பார்த்தது. ராஜராஜன் காலத்திலேயே சோழர்களின் படைபலம் பெருகிய போதிலும், அவை உச்சம் பெற்றது ராஜேந்திரன் காலத்தில்தான். போருக்கு ஆயத்தமாகி படைகள் வெளியேறுவதும், வென்ற பின் ஆரவாரத்துடன் அரண்மனைக்கு திரும்புவதும் தஞ்சையில் வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகள். ஆனால் ராஜேந்திரன் காலத்தில் ஒரே நேரத்தில் அவர் கங்கை நோக்கிப் படையெடுக்க, அவரது தளபதிகள் ஈழம் நோக்கிப் படையெடுப்பர். இதனால் மிக அதிக படைகள் வருவதும் போவதுமாக இருக்கும். இவையனைத்தும் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு வேறு மாதிரியான இடைஞ்சலைக் கொடுத்தது. இருந்தபோதிலும் அரசாங்கம் பலமாக நடைபெறுவதற்கு பொருளாதாரம் மிக முக்கியம். அந்தப் பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு வணிகம் பெருகிட வேண்டும். அதன் அடிப்படையில் வணிகர்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ஏற்றுமதி வணிகம் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் ராஜேந்திர சோழன் சிந்தித்துச் செயல்படுத்திய திட்டத்தின் இறுதி வடிவம்தான் தலைநகரமான கங்கை கண்ட சோழபுரம். தஞ்சாவூரில் இருந்து எப்படி கங்கைகொண்ட சோழபுரம் தலைநகராக உருவாக்கப்பட்டது என்பது பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம். கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழும தலைவரும், பொறியாளருமான கோமகன் கங்கைகொண்ட சோழபுரம் உருவாக்கம் குறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார். ராஜேந்திர சோழ பேராறு உருவாக்கிய தலைநகரம் கங்கை கொண்ட சோழபுரம் தலைநகராக உருவாக்கப்பட்டதற்கு பல பின்னணிகள் இருந்தபோதிலும், அவற்றில் முதன்மை பெறுவது நடுநாட்டின் அரசியலும் சோழ வணிகமும்தான் என்கிறார் கோமகன். "இந்தப் பகுதி வணிக நகரமாக உருவாக்கப்பட்டதில் கொள்ளிடம் என அழைக்கப்படும் ராஜேந்திர சோழ பேராறு உறுதுணையாகவும் முதன்மைக் காரணியாகவும் இருந்தது. சோழப் பேரரசு வணிகத்திற்கு முன்னுரிமை வழங்கிய காலகட்டத்தில் சிறந்து விளங்கிய பல்வேறு வணிக குழுக்கள் பற்றிய செய்திகள் மூலம் இதை உணரலாம். இந்திய பெருங்கடல் பரப்பும், இந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசிய கடற்கரைகள் அனைத்துமே சோழ ஆதிக்கத்தின் கீழே இருந்தன. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து சிறப்பாக இருந்ததையும் அது துறைமுகத்தோடு நிலவழி மூலமும் இணைக்கப்பட்டிருந்தது என்பதையும் தற்போதைய நீர் வழித்தடங்களை ஆய்வு செய்வதன் மூலம் அறிய முடியும்," என்று பொறியாளர் கோமகன் கூறினார். நீர் வழித்தடங்கள் உருவாக்கிய சோழ வணிகம் கோமகனின் கூற்றுப்படி, சோழர்களின் நீர் வழித்தடங்கள் சோழ வணிகத்திற்குப் பெரும் உதவியாக இருந்தன. இதன்மூலம் சோழ நாட்டின் பொருளாதாரம் மேன்மை பெற்றது. சோழர்களின் நீர் ஆதார அமைப்புகள் அரச குடும்பத்தினர் பெயரில் வழங்கப்பட்டிருப்பது அந்த அமைப்புகளின் மீது அவர்கள் கொண்டிருந்த ஆதிக்கத்தை, பங்களிப்பை, ஈர்ப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. "ராஜேந்திர சோழ பேராறு என்னும் கொள்ளிடம் ஆறு, கடல் முகத்துவாரம் காவிரி பூம்பட்டினத்திற்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது. இந்தக் கழிமுக கடற்கரை சங்க காலத்தில் இருந்தே துறைமுகத் தகுதியைப் பெற்று கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது. இதை அகப்புறச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. பட்டினப்பாலை என்ற நூலில் உள்நாட்டில் கடற்கரை உப்பை விற்று பதிலீடாக விளைபொருளை ஏற்றி வந்த படகுகள் வரிசையாக குதிரைகள் நிறுத்தப்படுவது போல் நிற்கின்றன எனக் கூறுவதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்," என்கிறார். எப்படி உருவானது கங்கைகொண்ட சோழபுரம்? "தஞ்சையில் இருந்து 50 கி.மீ தொலைவில் காவிரி வடிநிலப் பகுதியான கொள்ளிடத்தின் வடகரையில் ஒரு பெரிய நிலப்பகுதி தேர்வு செய்யப்பட்டது. தலைநகருக்கு நீர்வளம் மிக முக்கியம் என்பதால் 20 மைல் நீளத்திற்கு ஒரு பெரிய ஏரியை ராஜேந்திரன் வெட்டினான். தஞ்சையைப் போல மிகப் பெரிய அரண்மனையைக் கட்டி எழுப்பினான். அகழி, கோட்டைச் சுவருடன் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலம் கொண்டதாக புதிய தலைநகரம் கட்டி எழுப்பப்பட்டது," என்கிறார் கோமகன். கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக உருவாக்கப்பட்டதில் கொள்ளிடம் என அழைக்கப்படும் ராஜேந்திர பேராறு உறுதுணையாகவும் முதன்மைக் காரணியாகவும் இருந்தது. இந்த ஆற்றின் தென்கரை கரிகாலக்கரை எனவும் வழங்கப்படுகிறது. நீர்வழி போக்குவரத்து தடத்தை பயன்படுத்திய வணிகக் குழுக்கள் ராஜேந்திர சோழன் காலத்திய கொள்ளிடம் நீர்வழிப் போக்குவரத்து தடமாக இருந்ததற்கான சான்றுகளை உறுதிப்படுத்த அக்காலத்தில் இருந்த வணிகக் குழுக்கள் மற்றும் அவற்றின் சேவைப் பிரிவுகள் நகரங்கள் பற்றி தெரிந்துகொள்வது அடிப்படை. சோழர்கள் காலத்திய சமூகம் பெரு வளர்ச்சியடைவதற்கு கடல் வணிகம் பெரிதும் உதவியது. அது பதினோராம் நூற்றாண்டில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டது. சோழர்கள் காலத்து வணிக குழுக்கள் தங்களுக்கான பாதுகாப்புப் படையை வைத்துக்கொள்ளும் வலிமையையும் உரிமையையும் பெற்றிருந்தனர். "வீரர், அங்ககாரன், கைக்கோளர், கொங்காள்வர், செட்டி, வலங்கை வீரர், வீர கோடியார், சீட்புலி உள்ளிட்ட 21 பிரிவுகள் இருந்தன. இவர்கள் வணிக நகரங்களிலும் நீர்வழி தடத்திலும், நில வழித்தடத்திலும் முக்கிய இடங்களில் வாழ்ந்திருக்கின்றனர். இவர்கள் இருந்த இடம் இவர்கள் பெயராலேயே அழைக்கப்பட்டு இன்றும் சற்று மறுவி அவர்கள் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது," என்று விளக்குகிறார் கோமகன். "கொள்ளிட தென் கரையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் உள்ள சிட்புலியூர் தற்போது சீப்புலியூர் என்று அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் கொள்ளிட வடகரை காட்டுமன்னார்குடி வட்டத்தில் செட்டித்தாங்கல் ஊராட்சி, அரியலூர் மாவட்டம் கொள்ளிட வடகரை தா.பழூர் வட்டத்திற்கு உட்பட்ட அங்ககாரன் பேட்டை தற்போது அன்னக்காரன் பேட்டை என்று அழைக்கப்படுகிறது," என்றும் கூறினார். அதேபோல், "தா.பழூர் வட்டம் அங்ககார நல்லூர் தற்போது அங்கராயநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. இருகையூர், இடங்கண்ணி ஆகிய ஊர்கள் தற்போதும் அதே பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகின்றது. மேற்கண்ட ஊர்கள் வணிகக் குழுக்களுக்கு உதவும் நோக்கில் அவர்கள் வழித்தடத்தில் இருப்பிடம் கொண்டு அவர்கள் வணிக பயணத்திற்கு ஏதுவாக கொள்ளிடக்கரை ஓரமாகவே வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு இது மிகப்பெரிய சான்று," என்று ஊரின் பெயர்களைப் பழங்கால பெயர்களுடன் படித்து தற்போது வழங்கப்படும் பெயர்களையும் விவரித்தார் கோமகன். கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரமாக மட்டுமல்லாது வணிக நகரமாகவும் வடிவமைக்கப்பட்டது என்பதற்கான சான்றுகள் நிறைய உள்ளன. அவ்வகை வணிக நகரத்திற்கு நிலவழிகள், நீர் வழிகள் அடிப்படை. அவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும் அமைந்திருந்தன. பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் நீர் தேவையும் அதற்குக் காரணம். இதன்படி கங்கைகொண்ட சோழபுரத்தை இணைக்கும் பெருவழிகள் நீர் தடத்தை ஒட்டியே இருந்துள்ளன. இவை பெரும்பாலும் வணிகத் தலங்களையும் அதிகார மையங்களாக விளங்கிய ஊர்களையும் இணைத்து இருக்கின்றன. கொள்ளிடக்கரை இருபுறமும் உள்ள சாலை அக்கால பெரு வழியாக இருந்தன. பெருவழிச்சாலை இணைத்த ஊர்கள் அதைத்தொடர்ந்து பொறியாளர் கோமகன் பெருவழிச்சாலை இணைத்த ஊர்களைப் பற்றி விளக்கி கூறினார். "மீன்சுருட்டி, காட்டுமன்னார்குடி, வீராணம் ஏரி, நெடுஞ்சேரி ஆகிய ஊர்களை சிதம்பரத்துடன் இணைக்கும் இராசராசன் பெருவழி, ஆயுதக்களம், உதயநத்தம், சோழமாதேவி, குணமங்கலம், விக்கிரமங்கலம், விளாங்குடி, கீழப்பழுவூர் பகுதிகளை திருச்சியுடன் இணைக்கும் விளாங்குடையான் பெருவழி‌ உட்கோட்டை, வானாதிராயன் குப்பம், வீரசோழபுரம், குழவுடையார் பகுதிகளை அணைக் கரையுடன் இணைக்கும் கூழையானை போனபெருவழி. (கூழை என்றால் படை அணி என்று பொருள்) பள்ளி விடை, வெத்யார்வெட்டு, கல்லாத்தூர், ஆண்டிமடம், விளந்தை, தஞ்சாவூர் பகுதிகளை திருமுட்டத்துடன் இணைக்கும் திருமுட்டம் ஏறப்போன பெருவழி என முக்கிய வழிகள் பெருநகரங்களை இணைக்கும் சாலைகளுடன் இணைந்து இருந்தன என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன," என்று கூறினார். கங்கைகொண்ட சோழபுரத்தின் தெற்கு வாசல் வேம்புக்குடியில் இருந்துள்ளது. வேம்புக்குடி வாசலுக்கு போன வழியை பற்றி கல்வெட்டு தெளிவாகக் குறிப்பிடுகின்றது. கொள்ளிடத்தின் வடகரையில் அணைக்கரை வழியாகத்தான் கங்கைகொண்ட சோழபுரத்திற்குள் நுழைய முடியும். வேம்புக்குடி வாசல் ராஜேந்திர சோழ பேராற்றின் வடகரை ஊராக மட்டுமல்லாது உள்நாட்டு படகு துறையாகவும் இருந்துள்ளது. வீரநாராயண பேரேரி எனப்படும் வீராணம் ஏரிக்கு நீரேற்றும் மதுராந்தகப் பெரிய வாய்க்கால் என்று அழைக்கப்படும் வடவாறு இங்கிருந்துதான் பிரிந்து கிளை ஆறாகச் செல்கிறது. ஆங்கிலேயர்கள் மறுசீரமைத்த அணைக்கரை "உள்நாட்டு நீர் வழித்தட மரக்கலங்கள் துறையாகப் பயன்படுத்தும் வகையில் வேம்புக்குடிவாசலின் கரை வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் கொள்ளிடம் தெற்கு தடம், வடக்கு தடம் என இரண்டாகப் பிரிந்து நடுவில் ஒரு திட்டை உருவாக்கி மீண்டும் சிறிது தூரத்தில் ஒன்றாக இணைந்து ஓடுகிறது. அத்திட்டு அணைக்கரை என இன்றும் வழங்கப்படுகிறது," என்று கூறினார் கோமகன். கொள்ளிடத்தில் இந்தத் திட்டின் குறுக்கே ஆங்கிலேயரால் கி.பி.1826இல் கதவணைகள் அமைக்கப்பட்டது. இதற்குத் தேவையான கற்கள் கங்கைகொண்ட சோழீச்சுரத்தை தகர்த்து எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை- கும்பகோணம்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை NH45C தடம் இதன் மீதுதான் செல்கிறது. இயற்கையை மாற்றிய ராஜேந்திர சோழன் இயற்கையை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல, ஆனால் அறிவியல் நுட்பத்துடன் இணைந்து இயற்கையை மனித வளத்திற்கு தகுந்தவாறு மாற்றிய பெருமை ராஜேந்திர சோழனையே சேரும் என்று கூறிய பொறியாளர் கோமகன் எவ்வாறு மாற்றப்பட்டது என்பதையும் விவரித்தார். "இயற்கை அமைப்பில் இந்த இடத்தில் கொள்ளிடம் இரண்டாகப் பிரிவதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக இல்லை. மேற்கிலிருந்து ஓடிவரும் நீர்த்தடம் வடவாறு எனப்படும், மதுராந்தக பெரிய வாய்க்காலுக்கு நீரை வழங்கி தன் வேகத்தை குறைத்துக் கொள்வதோடு தன் இயல்பான வேகத்தோடு அதைக் கடக்கின்றது. இது தென்புறமாக தடம் மாறுவதற்கான நிலவியல் நீரியல் தேவையும் இல்லை இயற்கையாக ஆறு தன் போக்கிலிருந்து வடபுறமாக தான் தடம் மாறுகின்றன. இதற்கு வடபுல காந்தவிசை காரணம்," என்று கோமகன் கூறினார். அதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், "கொள்ளிடம் இவ்விடத்தில் இயற்கையாக நிலவியல் நீரியல் அடிப்படையில் வடக்கு திசையில்தான் ஓடியிருக்க வேண்டும். ஆனால் இது சோழனின் மனித ஆற்றலால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் நீர் வழித்தடமாகப் பயன்படுத்தப்பட்டபோது அதற்கான முதன்மை உள்நாட்டு ஆற்றுத் துறையாக அணைக்கரை எனும் வேம்புக்குடி வாசல் வடிவமைக்கப்பட்டது. அதன்படி கொள்ளிடத்தில் தென்புறப்பகுதி மரக்கலங்களை ஆற்றுத் துறையில் கையாளுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது," எனத் தெரிவித்தார். நீரியல் பண்பு நீர்நிலை இயல்பாக மாற்றப்படுதல் சோழர்கள் நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதன் நீர்பரப்பை அதிகப்படியாகக் கூட்டியுள்ளனர். மேற்கிலிருந்து வரும் நீரின் அளவு இரண்டாகப் பிரிகிறது. இதனால் நீரின் வேகம் மட்டுப்படுத்தப்படும். அகன்ற நிலப்பரப்பால் நீரியியல் பண்பு நீர் நிலையியல் பண்பாக மாற்றப்படுகிறது. இந்த அறிவியல் தத்துவத்தை ராஜேந்திர சோழன் வெகு லாகவமாகக் கையாண்டுள்ளார். கொள்ளிடம் வழியே வரும் மரக்கலங்களுக்கு இந்த இடம் ஆற்றுத் துறையாகப் பயன்பட்டு வணிக நகரத்திற்கான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி தளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம். இந்தத் துறையில் இருந்து படை அணிகள் (கூழை) மரக்கலங்கள் மூலம் நீர் வழித்தடம் வழியாக கிழக்கு கடலை விரைவாக அடையும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. வணிகப்படையினர் இந்த ஆற்றங்கரையை வாழ்விடமாகக் கொண்டதை இதன் மூலம் உறுதிப்படுத்தலாம். கடல் வழி வந்த கப்பல்களில் இருந்து உள்நாட்டிற்கு தோணி, படகுகள் மூலம் நீர்த்தடத்தின் வழியே வணிகப் பொருட்கள் வந்தன என்பதற்கு பட்டினப்பாலை பாடல்களே சான்று. தஞ்சையில் இருந்து காவிரி வழியே மன்னியாற்றை அடைந்து அதிலிருந்து பிரியும் நீர்த்தடங்கள் கொள்ளிடத்தில் இணையும் ஓடம் போக்கிகளின் தடம் இன்றும் உண்டு. அந்த இடம் படகுத்துறை, தோணித்துறை என வழங்கப்படுகின்றன. மண்ணியார் தலைப்பில் கதவணைக்கு அருகே ஓடம்போக்கி அணையும் தற்போது பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் இருக்கின்றது. மண்ணி ஆற்றில் இருந்து திருப்புரம்பியம் அருகே உள்ள கொந்தகை எனும் இடத்திலிருந்து பிரியும் ஓடம்போக்கி ஆறு கொள்ளிடத்தில் இணைகிறது. திருப்பனந்தாள் அருகே மண்ணியாற்றில் இருந்து பிரியும் ஓடம்போக்கி நீர் தடம் கொள்ளிடம் தென்கரையில் இணைகிறது. அதேபோல் கொள்ளிடம் வடகரையில் உள்ள மருதையாறு வணிக நகரங்களை இணைத்து கொள்ளிடத்தில் கலக்கிறது. ராஜேந்திர சோழன் வடபுலத்தில் கங்கை வெற்றிக்குப் பிறகு வந்தடைந்த இடம் கொள்ளிடத்தின் தென்கரையில் உள்ள திரு லோக்கியம். இங்குள்ள "ராஜேந்திர சோழதேவர் கங்கை கொண்டு எழுந்தருளுகின்ற இடத்து தொழுது" எனத் தொடங்கும் கல்வெட்டும் இதை உறுதி செய்கிறது. ராஜேந்திர சோழன் கடல் பகுதியில் இருந்து கொள்ளிட நீர் வழித்தடத்தில் வந்து சேர்ந்த இடம் இதுவே ஆகும். ராஜேந்திர சோழன் கட்டமைத்த நீர்வழி, நிலவழி தடங்கள் கொள்ளிடத்தில் வடக்கு தெற்கு தடங்களின் நிலவியல் மண்ணடுக்குகளை ஆய்வு செய்யும்போது வடக்குத்தடம் கிடை மட்டத்தில் இருந்து 9 மீட்டர் ஆழத்திலேயே ஆற்றின் உறுதியான படிமமான கங்கர் எனப்படும் சுண்ணாம்புப் பாறை உள்ளது. ஆனால் இந்த வகை பாறை தெற்கு தடத்தில் சுமார் 20 மீட்டர் ஆழத்தில்தான் கிடைக்கிறது. வடக்குத் தடத்தில் ஆறு நீண்டகாலம் பாய்வதால் சுண்ணாம்புப் பாறை படிமம் வரை இயற்கை மண் அடுக்குகள் அரிக்கப்பட்டு 9 மீட்டர் அளவிலான மணல் படிமத்தால் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் தெற்கு தடம் வடக்குத்தடத்தைவிட 11 மீட்டர் சுண்ணாம்புப் பாறையின் படிமம் மேற்பரப்பில் கூடுதலாக உள்ளது. இந்த அடுக்கின் மீதான மணல் சேர்க்கையும் குறைவாகவே உள்ளது. வடக்கு தடத்தோடு தெற்கு தடத்தை ஒப்பிடும்போது சுண்ணாம்புப் பாறையின் மேல் அடுக்குகள் வெவ்வேறான தன்மையுடையதாகவும் உள்ளது. வடக்குத்தடத்தின் வடகரையிலிருந்து வடவாறு எனும் மதுராந்தக பெரிய வாய்க்கால் பிரிந்து செல்வதால் அதற்கான நீர் ஏற்றம் வடபுறத்தின் கிடைமட்ட நீரேற்றத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும். இதனால் வடபுறத்தின் மண் அடுக்கு அரிப்பும், மேலடுக்கு மணல் சேர்க்கையும் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் தெற்கு புறத்தடத்தில் அவ்வகையான பெரிய வாய்க்கால் அமைப்புகள் இல்லை. வடக்கு புற வாய்க்கால்கள் பிற்காலத்தியவை. கொள்ளிட ஆற்றில் வடபுற தடத்தில் உள்ள அணைக்கரை, வேம்புக்குடி வாசல் பகுதியில் நீரியல் பண்புகளான நீரோட்டம், நீரோட்ட வேகம், மற்றும் ஆற்றின் போக்கு அடிப்படையிலும் இயற்கையானது. தென்புறத் தடம் அதன் அமைப்பின் அடிப்படையில் செயற்கையாகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மண் அடுக்குகள் ஆய்வின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. கொள்ளிடத்தின் மீது மனித ஆற்றல் ஆதிக்கம் செலுத்தியுள்ளது இதன்மூலம் தெளிவாக அறிய முடியும். நீரியல் தன்மையை தளர்த்தி நீர் நிலையியல் தன்மை புகுத்தப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்படுகிறது. அந்த ஆதிக்கத்தைச் செலுத்தியது ராஜேந்திர சோழன் என்பதால்தான் கொள்ளிடம் ராஜேந்திர சோழ பேராறு என அழைக்கப்படுகிறது. அந்த இடத்தில் மரக்கலங்களுக்கு ஆற்றுத் துறையை உருவாக்கி நீர் வழித்தடத்தில் கூடுதல் வசதியை மேம்படுத்தியதே இதற்குக் காரணம். வணிக நகரமாக அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இடத்தில் கடற்பயணத்திற்கு ஏதுவான உள்நாட்டு நீர் வழித்தடமும் அமைக்கப்பட்டு அது நிலவழி பெருவழிகளோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக மாற்றியதுடன் மக்களின் பொருளாதாரம் மேன்மை பெறுவதற்கும் படைகள் போர்களுக்குச் சென்று வர நிலவழி மற்றும் நீர் வழித்தடங்களை நேர்த்தியாக உருவாக்கியதை மண் ஆய்வுகளுடன் தெளிவாக பொறியாளர் கோமகன் விவரித்தார். கங்கை வரை ராஜேந்திரன் படையெடுத்து வென்ற பிறகு, அங்கிருந்த அரசர்களை வைத்து கங்கை நீரைத் தனது தலைநகருக்கு எடுத்து வந்ததன் நினைவாக, நகருக்கு "கங்கை கொண்ட சோழபுரம்" என்ற பெயர் நிலைபெற்றதாகக் கூறுகிறார் விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் பிபிசி தமிழிடம் இந்த நகரின் பெயருக்கான பின்னணியை விவரித்தார். கி.பி.1025ஆம் ஆண்டு சோழப் பேரரசின் புதிய தலைநகரம் உதயமானது. இதை திருவாலங்காட்டு செப்பேடுகள் உறுதி செய்கின்றன. தலைநகர் மாற்றம் பெற்றபின் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார் ராஜேந்திரன். இக்காலத்தில் சிற்சில போர்கள், கலகங்கள் நடைபெற்ற போதிலும், அவை மக்களின் அமைதிக்கும் வாழ்விற்கும் இடையூறுகளை ஏற்படுத்தவில்லை. ஆதலால் கி.பி 1025 முதல் 1044 வரையிலான அமைதிக் காலத்தை “பிற்கால சோழர்களின் பொற்காலம்” என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ராஜேந்திர சோழர் மன்னராட்சியிலும் கூட்டாட்சி முறையை நெறிப்படுத்தியவர் கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ். "சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் அந்த மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர். ராஜேந்திரன் கங்கை முதல் கடாரம் வரை வென்றபோதும் இந்த நிலை நீடித்தது. வென்ற பகுதிகளை முழுவதுமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்சி நடத்தியிருந்தால் ராஜேந்திரன் தனியாளாக 4 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவை ஆண்டிருப்பார். தற்போதைய இந்திய நாட்டின் பரப்பளவே அதைவிடக் குறைவுதான். (இந்தியாவின் பரப்பளவு 3.287 லட்சம் சதுர கி.மீ.)" என்றும் பேராசிரியர் ரமேஷ் கூறினார். நீர்வழித் தடத்தின் மூலமாகத் தனது நாட்டை வளமான நாடாகவும் வணிகத்தின் மூலமாகp பொருளாதார மேன்மை மிகுந்த நாடாகவும் ராஜேந்திர சோழன் மாற்றினான். கங்கை வெற்றிக்காக ராஜேந்திரன் கங்கைகொண்ட சோழன் என்னும் புகழ்பெற்ற பெயரைப் பெற்றதுடன் அவர் அமைத்த புதிய நகரம் கங்கைகொண்ட சோழபுரம் என அழைக்கப்பட்டது. கல்வெட்டுச் சான்றுகள் தொடர்ந்து பேராசிரியர் ரமேஷ் கூறுகையில்,"திருக்கழிப்பாலை பால்வண்ணாநாதர் கோவிலில் நான்கு சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன. அதில் முதலாம் ராஜராஜ சோழனின் 26வது ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் மஹாதேவன் என்பவன் நுந்தா விளக்கு எரிப்பதற்காகப் பத்து காசுகளை தானமாக வழங்கியுள்ளதைக் குறிப்பிடுகிறது. ராஜேந்திர சோழன் காலத்தில் வெளியிடப்பட்டுள்ள சிதைந்த கல்வெட்டு ஒன்றில் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்த திரிபுவனமாதேவி பேரங்காடியை சார்ந்த கூத்தன் அடிகள் என்ற வணிகன் பொன் வழங்கியுள்ளதையும், இவன் பெருநல்லூர் என்ற ஊரைப் பூர்விகமாகக் கொண்டவன் என்றத் தகவலையும் கூறுவதாக பேராசிரியர் ரமேஷ் விளக்கினார். இம்மன்னரது மற்றொரு சிதைந்த கல்வெட்டில் பூர்வதேசம், கங்கை, கடாரம் கொண்ட போன்ற சொற்களும், கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை குளியல் அறையின் பணிப் பெண்ணாகப் பணியாற்றிய ஒருவர் இக்கோவிலுக்கு தானங்களை வழங்கியுள்ள தகவலையும் சுட்டுகிறது. "விக்கிரம சோழப் பிரம்மமாராயன் என்பவன் திருக்கழிப்பாலை பால்வண்ண நாதருக்கு நாள்தோறும் ஒரு நாழி தும்பைப்பூ வழங்குவதற்காகத் தானம் வழங்கியுள்ளதை மற்றொரு துண்டுக் கல்வெட்டின் வாயிலாக அறியலாகிறது. எனவே ராஜேந்திர சோழன் காலத்தில் கொள்ளிடம் ஆற்றின் வழியாகத் தலைநகர் கங்கைகொண்ட சோழபுரத்திற்குச் செல்லும் நீர்வழிப் பாதையின் அருகில் இக்கோவில் கட்டப்பட்டிருந்ததாலேயே கங்கைகொண்ட சோழபுரம் பேரங்காடியைச் சார்ந்த வணிகரும், மன்னரின் மேலாண்மையைப் பெற்றிருந்த பணிப்பெண்ணும் இக்கோவிலுக்கு தானங்களை வழங்கி சிறப்பித்துள்ளதை நோக்கும்போது தேவிக்கோட்டைக்கும், கங்கைகொண்ட சோழபுரத்திற்கும் இடையே நிச்சயமாக கொள்ளிடம் ஆற்றின் வழியாக நீர்வழிப்பாதை ஒன்று செயல்பட்டிருக்க வேண்டும்." மேற்கண்ட வணிகனின் ஊரான பெருநல்லூர் என்ற ஊர் இன்று நல்லூர் என்ற பெயருடன் மகேந்திரப்பள்ளியின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் கங்கை பகுதியின் வெற்றியின் சின்னமாகத்தான் சோழ கங்கம் என்னும் பேரேரி வெட்டப்பட்டது. திருவாலங்காட்டு செப்பேடுகள் இதை "ஜலமயமான சயத்தம்பம்" நீர்மயமான வெற்றித் தூண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என கூடுதல் தகவலையும் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cjmx2197yeyo
  21. பட மூலாதாரம்,REUTERS 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவிட் பெருந்தொற்றின்போது வடகொரியா, சீனாவுடனான தனது வடக்கு எல்லையை மூடியது. அதன்பின் சில மாதங்களுக்கு வர்த்தக நோக்கங்களுக்காக அது திறக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த எல்லை மீண்டும் மூடப்படுகிறது. ஏன்? என்ன நடக்கிறது வடகொரியாவில்? சீனாவுடனான தனது வடக்கு எல்லையை மூடுவதற்கு கோவிட்-19 நேரத்தை வட கொரியா பயன்படுத்தியது. வடகொரியாவில் மக்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் வடகொரியா இடையே மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனுடன் சீனாவுடனான வடகொரியாவின் வர்த்தகமும் குறைந்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம், வட கொரியாவை தனிமைப்படுத்துவதையும், அங்கு அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடியையும் முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு ஐ.நா. உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. சமீப காலமாக, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், எல்லை பாதுகாப்பை கடுமையாக அமல்படுத்தி வருகிறார். எல்லையில் மக்கள் நடமாட்டத்தை நிறுத்த கோவிட்-19 காலகட்டத்தைப் பயன்படுத்தினார். இருப்பினும், சீனாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்க சில மாதங்களுக்கு முன்பு இது மீண்டும் திறக்கப்பட்டது. பட மூலாதாரம்,REUTERS 482கி.மீ நீளமுள்ள புதிய வேலி இது சம்பந்தமாக, 'புல்லட்டை விட வலிமையான பயங்கரவாத உணர்வு: வட கொரியாவின் மூடல் 2018-2023' என்ற அறிக்கையில், கோவிட் -19 தொற்றுநோயின் போது மக்களிடம் அதிகப்படியான மற்றும் தேவையற்ற கண்டிப்பு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள், சீனாவுடனான எல்லையில் 482கி.மீ. நீளத்துக்கு வடகொரிய அதிகாரிகள் வேலி அமைப்பதைக் காட்டுகின்றன. இது தவிர, ஏற்கனவே நிறுவப்பட்ட 260கி.மீ. நீளமுள்ள வேலி மேலும் நீட்டிக்கப்படுகிறது. எல்லையில் வேலி அமைக்கும் பணியுடன், மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில், மக்களை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்ல எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டது. எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் 20 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது. காவலர் பணியிடங்களின் எண்ணிக்கை 38-இல் இருந்து 650 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் மீது அடக்குமுறையை ஏவிய வடகொரியா கிம் ஜாங் உன் இத்தகைய கொள்கைகளை நிறுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த கொரியா ஆராய்ச்சியாளர் லினா யுன் கூறுகிறார். மக்களை ஒடுக்கும் அவர்களின் நடவடிக்கைகளால், வடகொரியா மிகப்பெரிய சிறைச்சாலையாக மாறியுள்ளது என்று அவர் கூறுகிறார். வடகொரியாவில் இருந்து தப்பி ஓடிய பெண்ணுக்கு அங்கு வசிக்கும் அவரது உறவினர் தொலைபேசியில் அரிசி மற்றும் கோதுமையை வெளியில் இருந்து நாட்டிற்கு கொண்டு வர முடியாது என தெரிவித்துள்ளார். வடகொரியாவில் வசிக்கும் அவரது உறவினர் பெண், “இப்போது ஒரு எறும்பு கூட எல்லையை கடக்க முடியாது,” என்றார். இதுபோன்ற கண்டிப்பால் வடகொரியாவை விட்டு வெளியேறும் மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் அனுப்ப முடியாமல் தவிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் வடகொரியா மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். வட கொரியாவை விட்டு வெளியேறிய மற்றொரு நபர் 2022-இன் இறுதியில் தனது நாட்டில் வசிக்கும் தனது குடும்ப உறுப்பினர்களைக் குறித்துப் பேசினார். உலகின் பல பகுதிகளில் கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலகட்டம் இது. அந்த நபர், "கோவிட் நோயை விட மக்கள் பசியால் இறப்பதற்கு அதிகம் பயப்படுகிறார்கள் என்று எனது குடும்ப உறுப்பினர்கள் சொன்னார்கள்," என்றார். மக்கள் எப்படி இருக்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES வடகொரியாவின் மிகக் கண்டிப்பான நடைமுறையால், தென்கொரியாவிடம் இருந்து பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவில் வசிக்கும் தங்கள் உறவினர்களை தென்கொரியா மக்கள் சந்திக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கோவிட்-க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, பத்து தரகர்களில் ஒருவர் மட்டுமே வெளியில் இருந்து பணம் அனுப்ப முடியும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மதிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையில், 2017-ஆம் ஆண்டு வடகொரியாவின் அணுசக்தித் திட்டத்திற்குப் பிறகு விதிக்கப்பட்ட ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான மக்களின் உரிமைகளைப் பறித்ததால் இந்த மரணங்கள் நிகழ்ந்தன. மக்கள் உணவு, சுகாதார வசதிகள் கூட இல்லாமல் தவித்தனர். "இது பெண்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக சம்பாதித்தனர், ஆனால் கட்டுப்பாடுகள் காரணமாக, சந்தையில் அவர்களின் செயல்பாடுகள் குறைந்துவிட்டன," என்று அறிக்கை கூறுகிறது. வட கொரியாவில் தொடர்புகளைக் கொண்ட முன்னாள் தொழிலதிபர் ஒருவர், தனது உறவினர்கள் நண்டுகள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களைச் சாப்பிட்டு வாழ வேண்டும் என்றும், சீனாவுடனான முறைசாரா வர்த்தகம் காரணமாக உயிர்வாழ முடிந்தது என்றும் கூறினார். ஆனால் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வணிகமும் மூடப்பட்டது. இதன் காரணமாக, இந்த தொழிலதிபர் தனது பொருட்களை வடகொரியாவில் மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டியிருந்தது. சீனாவில் வடகொரிய மக்கள் சுரண்டப்படுகிறார்களா? பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவில் பணிபுரியும் வடகொரியர்கள் பணம் கிடைக்காததால் வன்முறையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் செய்தி வெளியானது. ஆயுத உற்பத்திக்காக வடகொரிய அரசுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது அவரது குற்றச்சாட்டு. வட கொரிய மக்கள் தங்களது எதிர்ப்புகளை ஒருபோதும் வெளிப்படையாக அறிவிப்பதில்லை, ஏனெனில், அரசாங்கம் அதன் குடிமக்களை இறுக்கமாகக் கட்டுப்படுத்துகிறது மற்றும் பொது மறுப்பு மரண தண்டனைக்குரியது. வன்முறைச் செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், வெளிநாட்டில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான வட கொரியர்களின் நல்வாழ்வு குறித்த கவலையை எழுப்பியுள்ளது. சீனாவில் பணிபுரிந்த வட கொரிய தொழிலாளி ஒருவரிடம் பிபிசி பேசியது, அவர் போராட்டம் நடத்தியவர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டதாகக் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c517xj7krxxo
  22. 10 MAR, 2024 | 09:11 PM வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியை சேர்ந்த குறித்த பெண், யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில், வெளிநாடு செல்பவர்களுக்கான தொடர்பகம் ஒன்றை ஆரம்பித்து வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கல், விசா தொடர்பிலான தெளிவூட்டல்கள் போன்ற சேவைகளை கட்டணம் பெற்று வழங்கி வந்துள்ளார். அவரை நம்பி யாழ்ப்பாணத்தின் பல பாகங்களை சேர்ந்தவர்களும் பணத்தை வழங்கி வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சுமார் 60 இலட்ச பணத்தை வழங்கியுள்ளார். பணத்தை வழங்கியவர் தனது வெளிநாட்டு, பயண ஏற்பாடுகள் தாமதமாகி வந்தமையால், அப்பெண் மீது சந்தேகம் கொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது அவரது வங்கி கணக்கு இலக்கம் ஊடாக சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான பண பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதனை கண்டுபிடித்துள்ளனர். கொழும்பு உள்ளிட்ட இதர பகுதிகளில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் முகவர்களாக செயற்படும் மோசடியாளர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் தமக்கான முகவர்களாக சிலரை நம்பிக்கைக்காக அமர்த்தி அவர்கள் ஊடாக பெரும் பணம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/178373
  23. யாழ்ப்பாணத்தில் 68.57 ஏக்கர் நிலங்கள் இன்று விடுவிப்பு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள 68.57 ஏக்கர் நிலங்கள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் தற்போது படையினர் வசமுள்ள 3,412 ஏக்கரில் இருந்து 68.57 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளன. இதற்கான நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்படும் காணிகளில் காங்கேசன்துறையில் 20.03 ஏக்கரும், தென்மயிலையில் 24.9 ஏக்கரும், அரியாலையில் 0.45 ஏக்கரும், வறுத்தளைவிளானில் 23.27 ஏக்கரும் அடங்குகின்றன. அந்த நிலங்களுக்கான உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/295135
  24. 10 MAR, 2024 | 08:57 PM சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உபட்ட சரசாலை பகுதியில் 4 லீற்றர் 500 மில்லிலீட்டர் கசிப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் கசிப்பை எடுத்து சென்றபோது சாவகச்சேரி பொலிஸால் கைது செய்யப்பட்டார் . மேலதிக விசாரணைகளின் பின்னர் சிறுவன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/178375
  25. 2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எவருக்கும் தோல்விகள் ஏற்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹட்ச் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து கிராமப்புறங்களுக்கு மின்சார சைக்கிள்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கல்வி அல்லது தொழில் பயிற்சியை பின்பற்றும் அனைத்து மாணவர்களும் க.பொ.த சாதாரண தரத்திற்கு பிறகும் பாடசாலையில் கல்வி கற்க அமைச்சு அனுமதியளிக்கும் என்றார். அதன்படி, குழந்தைகள் தங்கள் பாடசாலைகளை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர்களின் கல்வி அல்லது தொழில் பயிற்சியுடன் மேலும் இரண்டு ஆண்டுகள் தொடரலாம். பின்னர், அவர்கள் தொழில் பயிற்சி திட்டங்களுக்கு அனுப்பப்படுவார்கள். “பெரும்பாலான திட்டங்களை நாங்கள் புதுப்பித்துள்ளோம். மொத்தம் 4.3 மில்லியன் மாணவர்கள் தற்போது 10,126 அரசுப் பாடசாலைகளிலும், 300க்கும் மேற்பட்ட சர்வதேசப் பாடசாலைகளிலும், 110க்கும் மேற்பட்ட தனியார் பாடசாலைகளிலும் படித்து வருகின்றனர். இப்போது நாங்கள் கல்வி திட்டத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 75 ஆண்டுகளாக, நாங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததால், நாங்கள் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றினோம்,” என்று அமைச்சர் கூறினார். பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வியில் இருந்து நடைமுறைக்கு மாறுவதற்கு அல்லது தொகுதிகளை அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் விரும்புகிறோம் என அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295117

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.