Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கோவிட் தடுப்பூசிகளால் பல உடல்பாதிப்புகள் - சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் Published By: RAJEEBAN 21 FEB, 2024 | 04:44 PM சர்வதேச அளவில் தற்போது காணப்படும் நோய்கள் உடல்பாதிப்புகளிற்கு கொரோனா தடுப்பூசிகளே காரணமாகயிருக்கலாம் என்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. கொவிட் பெருந்தொற்றுக்காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்திய தடுப்பூசிகளே தற்போது பலநாடுகளில் காணப்படும் பல நோய்களிற்கு காரணமாகயிருக்கலாம் என்பது குளோபல் வக்சின் டேட்டா நெட்வேர்க் என்ற அமைப்பின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியா, கனடா உட்பட எட்டு நாடுகளில் சுமார் 100 மில்லியன் மக்களை இந்த அமைப்பு ஆய்விற்குட்படுத்தியுள்ளது. வக்சின் சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. கொவிட் தடுப்பூசிகளிற்கும் சில மருத்துவ நிலைகளிற்கும் இடையில் தொடர்பிருப்பதை இந்த ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. தடுப்பூசி காரணமாக நரம்பியல் இரத்தம் இதயம் தொடர்பான பாதிப்புகள்ஏற்பட்டுள்ளன என ஜிவிடிஎன் செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது. குறிப்பாக மொடேர்னா தடுப்பூசி போட்டவர்களிற்கு மயோகார்டிடிஸ் எனப்படும் இதய தசை பாதிப்பு ஏற்படுவது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை தடுப்பூசிகள் மூளையில் இரத்த உறைவு மற்றும் நரம்பியல் கோளாறு ஆகியவற்றுடன் தொடர்புபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. முதுகுத்தண்டு வீக்கம் மூளை மற்றும் முதுகுதண்டு வடத்தில் வீக்கம் போன்றவை மொடேனா தடுப்பூசி பயன்படுத்தியவர்கள் மத்தியில் காணப்படுவதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/176972
  2. ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 21 பிப்ரவரி 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக கடைப்பிடிக்கிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில், கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது. ஒரே மதத்தினராக இருந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியானது, கிழக்கு பாகிஸ்தானில் திணிக்கப்படுவதை, மக்கள் ஏற்கவில்லை. இதையடுத்து கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என்று 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி 'வங்க மொழி இயக்கம்' உருவானது. இதையடுத்து வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையின் நடவடிக்கையால், மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமாக பரவியது. கடந்த 1956ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தான் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும், பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார். தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், அதற்கான இயக்கத்தை நினைவுகூறி, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவின் அறிக்கையில், தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், ''அனைத்து தரப்பும் தாய்மொழியில் கல்வி கற்பதை உறுதி செய்ய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மையானவர்கள் தாய்மொழி தவிர பிற மொழிகளில் கற்பிக்கப்படுகிறார்கள். உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு அவர்கள் பேசுகின்ற மொழி அல்லது அவர்களுக்கு புரிகின்ற மொழியில் கல்வி கிடைப்பதில்லை. இன்றைக்கு உலகம் முழவதும் 7 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. ஒரு மொழி அழிந்து விட்டால், ஒரு கலாச்சாரமும், அறிவு சார் பாரம்பரியமும் அத்தோடு போய்விடுகின்றன. இன்றைய டிஜிட்டல் உலகில் மொழிகளை இணைப்பதும் கற்றல் உள்ளடக்கத்தை உருவாக்குவதும் இன்றியமையாதது. தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட தொலைநிலைக் கல்விக் கற்றல் முறைகள் இணைக்கப்பட வேண்டும்'' என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போராட்டம் பட மூலாதாரம்,DMK படக்குறிப்பு, 1965ல் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டம் இதைப்படிக்கின்ற போது, வங்கதேசத்தைப் போல் இந்தியாவில், தமிழ்நாட்டில் 1938, 1965ம் ஆண்டுகளில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் பலருக்கும் நினைவிற்கு வரலாம். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில், நடைபெற்ற போராட்டத்தில் 1939ம் ஆண்டு நடராசன், தாளமுத்து இருவரும் உயிரிழந்தனர். தொடர்ந்து 1965ம் ஆண்டு இரண்டாம் கட்ட போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி, பொதுக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஆனால், இது ஏன் உலக அளவில் கவனம் பெறவில்லை? என்கிற கேள்வி எழும். வங்க தேசம் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த போது உள்நாட்டில் அந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, வங்கதேசம் தனி நாடாகவும் உருவாவனது. அந்நாட்டின் பிரதிநிதி உலக தாய்மொழிகள் தின, தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை, யுனெஸ்கோவும் அங்கீகரித்தது. ஆனால், தமிழ் மொழி காக்கும் போராட்டம் கவனத்தை பெறவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் மொழிப்போரில் பங்கேற்றவர்கள். தாய்ப்பாலும் தாய்மொழியும் உயிர்ப்பானவை பட மூலாதாரம்,ARIVUMATHI படக்குறிப்பு, கவிஞர் அறிவுமதி கவிஞர் அறிவுமதி பிபிசி தமிழிடம் கூறுகையில், ''வங்கதேசத்தில் நடைபெற்றதை விட பன் மடங்கு வீரியமான போராட்டம், தமிழ்நாட்டில் நடைபெற்றது. ஆனால், வழக்கமான நம்முடைய பெருந்தன்மையால், மொழிப் போராட்ட வரலாறு யுனெஸ்கோ வரை செல்லவில்லை. பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஈகம் பெரும் வணக்கத்திற்குரியது. ஈடு, இணையற்றது. உலகத்தில் உள்ள மொழிகளைக் காக்க வேண்டும் என்று யுனெஸ்கோ உலக தாய்மொழி தினத்தை அறிவித்துள்ளது. ஒரு குழந்தை முதலில் அறிகின்ற ருசி தாய்ப்பால். அந்த குழந்தை முதலில் உணர்கின்ற மொழி தாய் மொழி. எனவே, தாய்ப்பாலை போல் தாய்மொழியும் நம் உயிர்ப்பானது. உணர்வோடு கலந்தது. தாய்மொழி என்பதும் ஒரு மொழிதானே என்று கடந்து போய்விட முடியாது. நம்முடைய 3 ஆயிரம் ஆண்டு மரபு, பண்பாடு, கலாச்சாரத்தை நினைவு அடுக்குகளில் கடத்தி வருகிறது. கருவில் இருக்கும் போதே தாய்மொழிச் சொற்களை குழந்தை கேட்கத் தொடங்கி விடுகிறது. நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம். அதுதான் ஒரு அறிவார்ந்த சமூகத்தை தொடரச் செய்யும்.'' என்கிறார். பன்மொழிக் கற்றலுக்கு தொழில்நுட்பத்தின் பயன்பாடு பட மூலாதாரம்,PROF. PONNAVAIKO படக்குறிப்பு, முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ பிபிசி தமிழிடம் கூறுகையில், ''பன்மொழிக் கற்றலுக்கு தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்கிற கருதுகோளை யுனேஸ்கோ அறிவித்துள்ளது. இன்றைய தொழில்நுட்பத்தில் யுனிகோட்-டில் அனைத்து மொழிகளையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். பல மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு இன்றைய தொழில்நுட்பம் பெரும் பயனாக இருக்கிறது. அதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பள்ளிகளில் அடிப்படைக் கல்வி மட்டுமல்ல, கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்தும் தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும். இதற்கான பரிந்துரையை கடந்த 2006ம் ஆண்டு எனது தலைமையிலான, கல்வியாளர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதில் சிலவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். காரணம், ஒரு மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்றால், எந்த சாதனையையும் படைக்க முடியாது. சாதனையாளராக வளர தாய்மொழி வழிக் கல்வி மிக அவசியமானது. அடிப்படையானது. குறிப்பாக, ஜப்பான், கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வியை வழங்கி பல கண்டுபிடிப்புகளை, சாதனைகளை நிகழ்த்தி வருவதைக் காணலாம். மாறாக வேற்றுமொழியில் பயிற்றுவிக்கப்படும் கல்வி எதிர்மறை விளைவுகளைத்தான் தரும். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை மூலம் இணைய வழியில் நேரடியாக கல்வி நிறுவனங்களுக்குச் செல்லாமல், உலகம் முழுவதும் இருந்தும் படிக்க வாய்ப்புள்ளது'' என்கிறார். தாய்த் தமிழ் பள்ளிகளுக்கு அரசு உதவி கிடைக்குமா? பட மூலாதாரம்,SIVA KALIDASAN படக்குறிப்பு, அம்பத்தூர் தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளி தாளாளர் சிவ காளிதாசன் தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்கக் கோரி, கடந்த 1999ம் ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழண்ணல் தலைமையில் 102 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவரும் அம்பத்தூர் தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளியின் தாளாளருமான சிவ.காளிதாசன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''அடிப்படை மொழி அறிவு அனைவருக்கும் முக்கியம். கருவில் இருக்கும் போதே 10 ஆயிரம் கலைச்சொற்களை உள்வாங்கி வைத்துள்ளது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். தாய்மொழியில் அடிப்படை வலுவாக அமையும் போது, எத்தனை மொழிகளையும் எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது. இதை தாய்மொழி வழிக் கல்வியின் மூலமே இந்த அடிப்படை வலுவாகும். ஆனால், குழந்தையின் பெற்றோர் பேசும், குழந்தை கேட்கும் வார்த்தைகளை வேறு மொழியில் பள்ளியில் கற்பிக்கும் போது குழந்தை குழப்பமடைகிறது. குறிப்பாக, அம்மா, அப்பா, பூனை என்று சொல்லி, கேட்டதை பள்ளியில் மம்மி, டாடி, கேட் என்று படிக்கும் போது குழந்தை குழப்பமடையும். தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளியை 1993ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறோம். இதுபோல் தமிழ்நாடு முழுவதும் 21 தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. ஆனால், பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்று கூறி, 2006ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் 23, 968 அரசுப் பள்ளிகள் தமிழ் வழிக் கல்வியில் இருந்து ஆங்கில வழிக் கல்விக்கு மாறியுள்ளன. இது பெரும் வருத்தமாக இருக்கிறது. ஆனால், தனியார் சுயநிதிப் பள்ளிகளில், 45, 000 மாணவர்கள் தமிழ் வழியில் பயின்று வருவது ஆறுதலாக இருக்கிறது. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். தனியாரால் நடத்தப்படும் தாய்த் தமிழ் பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளாக்க வேண்டும். இந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு உதவ வேண்டும்.''என்கிறார். https://www.bbc.com/tamil/global-60454435
  3. எட்கா ஒப்பந்தம் இந்தியர்களுக்கு சாதகமாக அமையும் - சரத் வீரசேகர 21 FEB, 2024 | 05:20 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டின் முக்கிய கேந்திர மையங்களான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு நேரடி தாக்கங்களை ஏற்படுத்தும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியாவுக்கு சாதகமாக செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு தற்போது சற்று மீண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் வெற்றிப் பெற்றுள்ளது என்பதையும், மக்களுக்கு பெரும் தடையாக இருந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்ததையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு சாதகமான செயற்பாடுகளை முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவின் ரூபாவை இலங்கையில் பாவிப்பதற்கும், இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக அடையாளப்படுத்துவதற்கும் எடுக்கும் செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவு வழங்க போவதில்லை. கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். நாட்டின் முக்கிய கேந்திர மையங்களாக உள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகங்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதால் நாட்டின் தேசிய பாதிப்பு நேரடியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திட விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவில் 44 இலட்சம் பேர் தொழில் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். அதேபோல் 2 இலட்சம் வைத்தியர்களும், 15 இலட்சம் பொறியியலாளர்களும் தொழில் இல்லாமல் இருக்கிறார்கள். எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு இவர்களுக்கு இலங்கையின் தொழிற்றுறைகளை வழங்கினால் இலங்கையின் இளைஞர் யுவதிகளின் நிலை என்னவாகும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது. ஆகவே மாற்றீடு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பிரிக்ஸ் அமைப்புடன் ஒன்றிணைவது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தான் பொருளாதார நெருக்கடி ஆரம்பமானது என்றார். https://www.virakesari.lk/article/176952
  4. Published By: DIGITAL DESK 3 21 FEB, 2024 | 05:17 PM நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையின் காரணமாக சூரிய ஒளியில் அதிகமாக இருப்பதை தவிர்க்குமாறும், அடிக்கடி நீராகாரங்களை எடுத்து கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளதாவது, செயற்கை குளிர்பானங்களை பருகுவதை தவிர்த்து, நீர், இளநீர் போன்ற இயற்கை குளிர்பானங்களை பருகுவதன் மூலம் உடலில் நீர்வற்றிப் போகாமல் பாதுகாக்கலாம். அதிகம் வெப்பத்தினால் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் உடலில் நீர்வற்றும் அபாயத்தில் உள்ளனர். எனவே, இவர்கள் அதிக வெப்பம் உள்ள நேரங்களில் முடிந்த வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் உடலில் நீர்வற்றிப் போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆகையால் 2.5 லீற்றர் தண்ணீரை பருக வேண்டும். இதேவேளை, பாடசாலை சிறுவர்கள் அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அத்தோடு, சிறுவர்கள் வீட்டிற்குள் அல்லது நிழலில் விளையாட இடமளிக்க வேண்டும். சிறிய பிள்ளைகள் வெளியில் செல்லும்போது பாதுகாப்பிற்காக தொப்பிகளை அணிய ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176948
  5. பட மூலாதாரம்,FB/HARINI FERNANDO கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 27 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இந்தியாவில் அண்மையில் தெரிவித்த கருத்து தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம், செய்தியாளர் சந்திப்புகள், அரசியல் மேடைகள் என பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு, போராட்டங்களும் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். இந்தியாவின் ஹரின் என்ன சொன்னார்? ''இலங்கையிலுள்ள விமான நிலையங்களை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்கவுள்ளன. மூன்று விமான நிலையங்களை முகாமைத்துவம் செய்யவுள்ளன. உண்மையில் எமக்கு உதவியாக இருக்கின்றது. எமது எரிபொருள் நிரப்பு தாங்கிகளை இந்திய நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. சூரிய சக்தியிலான மின்சாரத்தை இந்திய நிறுவனம் வழங்குகின்றது. இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்பதற்காகவே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு செல்லுமாறு கோரியுள்ளார்." என இந்தியாவின் மும்பை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கூறியிருந்தார். அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் இந்த கருத்தானது, பாரதூரமான கருத்து என தெரிவித்து இலங்கையில் எதிர்ப்புகள் எழுந்தன. பட மூலாதாரம்,FB/UDAYA PRABHATH GAMMANPILA ஹரினின் கருத்து குறித்து வெளியான எதிர்ப்புகள் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்த கருத்தானது, பாரதூரமான கருத்து என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவர் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதன் ஊடாக, இலங்கையின் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்தானது, நாட்டின் இறையாண்மைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறையாண்மை கொண்ட நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதி என கூறிய கருத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் கருத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அமைச்சரின் இந்த கருத்தானது, இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை மீறும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சராக நியமிக்கப்படும் போது, அரசியலமைப்பின் பிரகாரம் எடுக்கப்பட்ட சத்திய பிரமாணத்தை மீறும் செயல் இதுவென கூறிய அவர், அமைச்சர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையை வேறொரு நாட்டுடன் இணைப்பது தேசத்துரோகம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்ட கருத்து தொடர்பில் நாடாளுமன்றத்திலும் கருத்துகள் வெளியிடப்பட்டன. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தனது எதிர்ப்பை வெளியிட்டார். ''விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு சென்று கருத்தொன்றை முன்வைத்திருந்தார். இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என கூறியிருந்தார். அது அமைச்சரவையின் கருத்தா? அரசாங்கத்தின் கருத்தா? அல்லது அவரது தனிப்பட்ட கருத்தா?. அவ்வாறு தனிப்பட்ட கருத்து என்றால், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு குறித்து இவ்வாறான கருத்தை வெளியிட அமைச்சர் ஒருவருக்கு உள்ள அதிகாரம் என்ன?" என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பினார். இதற்கு அளும் கட்சி சார்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளித்தார். ''இது அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயம் அல்ல." என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளித்தார். அத்துடன், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் இது குறித்து பதிலளித்தார். ''இலங்கைக்கு சுற்றுலா வருமாறு அழைப்பு விடுத்த சந்தர்ப்பத்தில், வசனங்களை இணைத்து, குறைத்து சமூக ஊடகங்களினால் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான கருத்தை கேட்டால், இந்த விடயத்தை சரி செய்துக்கொள்ள முடியும்" என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிக்கின்றார். கொழும்பில் பாரிய போராட்டம் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பிலுள்ள சுற்றுலாத்துறை அமைச்சுக்கு முன்பாக போராட்டத்திற்கான பிரஜைகள் அமைப்பு இந்த போராட்டத்தை நடாத்தியிருந்தது. ஹரின் பெர்ணான்டோவை அமைச்சர் பதவியிலிருந்து விரட்டியடிப்போம் - இந்தியாவின் நாடு விற்பனை செய்யப்படுவதை நிறுத்துவோம்" என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் நடாத்தப்பட்டது. ''இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்தியாவின் கருத்துகளை முன்வைக்கின்றார். ஐ.ஓ.சி இலங்கையில் இருக்கின்றது. அதானி இலங்கையில் இருக்கின்றார். அதனால், இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என உணர்கின்றேன் என்ற வகையில் அவர் கூறுகின்றார். அவர் வீதியில் செல்லும் சாதாரண பொதுமகன் கிடையாது. ஹரின் பெர்ணான்டோ உடனடியாக அமைச்சு பொறுப்பிலிருந்து விலக வேண்டும். அதற்கான சிவப்பு எச்சரிக்கையையே இன்று நாம் வெளிப்படுத்த இந்த இடத்திற்கு வந்தோம்." என இலஞ்ச, ஊழல், வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஜாமுனி கமந்த துஷார தெரிவிக்கின்றார். ''அமைச்சரவையில் இருப்பதற்கு ஹரின் பெர்ணான்டோவிற்கு உரிமை கிடையாது. சட்டரீதியிலும் அவருக்கு அதிகாரம் கிடையாது. அமைச்சரவையிலிருந்து உடனடியாக அவரை பதவி விலக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர். ஹரின் பெர்ணான்டோவின் பதில் இலங்கை கஷ்டத்தில் இருந்த போது இந்தியா உதவி செய்ததைக் குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இலங்கை இந்தியாவின் பகுதி என கூறியதை கீழ்தரமாக எடுத்துக் கொண்டவர்கள் குறித்து தான் வெட்கமடைவதாக தெரிவிக்கின்றார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ''இந்தியாவின் நான் தெரிவித்த கருத்து நேற்று மற்றும் நேற்று முன்தினங்களில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஏன் இணையத்தள சட்டமூலம் அவசியம் என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். அது கவலையளிக்கின்றது. 15 நிமிட உரையாடலொன்றை நடாத்திய போது, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், மூன்று நிமிடம் மாத்திரமே ஒளிபரப்பு செய்வார்கள். தமது அரசியல் நோக்கத்திற்காக அந்த கருத்துக்களை திரிவுப்படுத்தும் வகையில் தயாரிக்க முடியும். அதுவே இணையத்தளத்திலுள்ள பாரிய அச்சுறுத்தல் என்பதை நாம் முன்பிருந்தே கூறிவருகின்றோம். இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகின்ற இந்த தருணத்தில், வரலாற்றில் தொடர்புகள் குறித்து பார்க்கும் போது, இலங்கை இந்தியாவின் பகுதி என்பது அரசியலமைப்பு ரீதியில் தவறானது என்ற விதத்தில் அர்த்தத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்ட ஒருவர் இந்த நாடாளுமன்றத்தில் இருந்தார். அது குறித்து கவலையடைகின்றேன். பட மூலாதாரம்,FB/HARINI FERNANDO அதற்கான காரணம், கடந்த 13 முதல் 14 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கையை இந்தியா பாதுகாத்தமைக்கான நன்றி கூறியிருந்தேன். இரண்டு நாடுகளும் பல விதமான ஒற்றுமையை கொண்டுள்ளமையினால், இலங்கை இந்தியாவின் பகுதி என கூறினேன். நான் இலங்கையை இந்தியாவிற்கு விற்பனை செய்யவில்லை. கஷ்டத்தில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியா எமக்கு உதவியுள்ளது. இந்தியா கடனுதவியை வழங்கும் போது இந்தியா சிறந்தது. இந்தியா எமக்கு மருந்து வகைகளை கொடுக்கும் போது இந்தியா சிறந்தது. வேறு எந்தவொரு நாட்டு கிரிக்கெட் அணியும் இலங்கைக்கு வருகைத் தராத போது, இந்தியா வந்தது சிறந்தது. இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்த போது இந்தியா சிறந்தது. இந்திய முதலீட்டாளர்களை அழைக்கும் போது மாத்திரம் இந்தியா மோசமானது. முதலீடுகள் இல்லாமல் எவ்வாறு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது?. சீனாவிற்கும் மேலே சென்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இந்தியாவுடனான தொடர்புகளை கூறி பேசியதை கீழ்த்தரமான முறையில் எடுத்துக்கொண்டமை குறித்து வெட்கப்படுகின்றேன்."என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/articles/ce944vxew5po
  6. Published By: VISHNU 21 FEB, 2024 | 05:55 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது. விகாரைகளில் இருந்து அறத்தை போதிக்க வேண்டும். காவியுடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் இனிமேல் வாக்களிக்க கூடாது, விகாரையிலேயே இருக்க சொல்லுங்கள். பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், நாலக கொடஹேவா ஆகியோரின் ஆலோசனைகளினால் தான் கோட்டபய ராஜபக்ஷ பாரிய நெருக்கடிக்கு உள்ளானார் என சுற்றுலாத்துறை அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். எனது வீட்டுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாத்திரமல்ல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வருகை தந்துள்ளார்கள். ஆகவே கீழ்த்தரமான கருத்துக்களை குறிப்பிடுவதை எஸ்.எம்.மரிக்கார் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், வெளிநாட்டு முதலீடுகளுடனான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவது தற்போதைய கலாச்சாரமாக காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அதிவேக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் நடு வீதியில் படுத்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் தான் இன்று அதிகளவில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துகிறார்கள். அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் 'காலத்தை வீணடிப்பவர்களை' வைத்துக் கொண்டு நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. ஆகவே தேவையற்ற எதிர்ப்பு போராட்டங்களுக்கு இடமளிக்கக் கூடாது, பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் இவ்வாறான காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகள் ஏதும் கிடையாது. பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வருகை தர கூடாது, அவர்கள் விகாரைகளில் இருந்து தர்மத்தைப் போதிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அன்று ஆளும் தரப்பிலிருந்தார். இன்று எதிரணியில் இருக்கிறார். நாளை எங்கிருப்பார் என்று தெரியவில்லை. சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் கட்சி தாவுவதை பிரதான அறமாக கொண்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் கசினோ நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது, ஆனால் ஒரு சிலரிடம் சென்று 'வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாத்திரமா கசினோ அனுமதி வழங்கப்படும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி இல்லையா ?' என்று கேட்டுத் திரிகிறார். ஆகவே இனிவரும் காலங்களில்' காவி உடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. விகாரையில் இருந்து தர்மத்தை போதியுங்கள்' என்று குறிப்பிட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். சேதன பசளை தொடர்பான தவறான ஆலோசனையைப் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரரே, அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு வழங்கினார். அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவாவும் கோட்டபய ராஜபக்ஷவுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி அவரை வீட்டுக்கு அனுப்பினார். தற்போது எதிர்க்கட்சி பக்கம் சென்றுள்ளார். நாலக கொடஹேவாவின் ஆலோசனைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டால் அவருக்கும் கோட்டபய ராஜபக்ஷவின் நிலையே ஏற்படும். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சிங்கள வாக்குகளில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து விட்டு சிங்கள தலைவரை தாக்குகிறார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எனது வீட்டுக்கு இரவில் வருகை தந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனது வீட்டுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸநாயக்க ஆகியோர் வருகை தந்துள்ளார்கள். எனது வீடு ஒன்றும் தடை செய்யப்பட்ட பகுதியல்ல. அரசியலில் எனக்கு யாரும் எதிரிகளல்ல, ஆகவே கீழ்த்தரமான கருத்துக்களை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/176991
  7. 21 FEB, 2024 | 07:39 PM 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கான புலமைப்பரிசில் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவடையும். இந்த புலமைப்பரிசில் விருதுகள் ஆண்டுதோறும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் சுமார் 150 நாடுகள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புலமைப்பரிசில் விருதுகளை வழங்குகிறது. இந்த புலமைப்பரிசில் விருதுகள் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவுஸ்திரேலியாவின் உயர் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கும் உலக தரம் வாய்த கல்வி சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் கல்விசார்ந்த செலவுகள் , விமான பயண செலவுகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் காலம்வரை உள்ள வாழ்வாதார செலவுகள் ஆகியன வெளிநாட்டு மாணவர் உடல்நலம் காப்புறுதி (OSHC) உத்தரவாதமளிக்கிறது. இந்த புலமைப்பரிசில் விருதுகளுக்கான விண்ணப்பங்களுக்கு தகுதியுடையவர்களை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் திறந்த மற்றும் அனைவருக்கும் சமனிலையானதாக காணப்படும். இந்த புலமைப்பரிசில் விருதுகள் தொடர்பில் விண்ணப்பதாரர்களுக்கு மத்தியில் ஏற்படும் கேள்விகளை அவுஸ்திரேலியா விருதுகள் வழங்கும் குழுவிடம் முன்வைக்க முடியும். விண்ணப்பதாரர்கள் தங்களது தகவல்களை அவுஸ்திரேலியா புலமைப்பரிசில் விருதுகள் அலுவலகங்களில் அல்லது www.australiaawardssrilanka.org என்ற இணையத்தளம் மூலம் பதிவு செய்ய முடியும். https://www.virakesari.lk/article/176984
  8. காஸா போர் நிறுத்தம்: ஐ.நா.வில் அமெரிக்கா செயலால் சீனா, சௌதி மட்டுமின்றி நட்பு நாடுகளே அதிருப்தி பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், ஆடம் டர்பின் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரி ஐநாவின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளதை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலகிற்கு தவறான வழிகாட்டுதலை வழங்குவதாகவும், தொடரும் படுகொலைகளுக்கு பச்சைக்கொடி காட்டுவது போல் உள்ளதாகவும் கூறியுள்ளது பெய்ஜிங். அல்ஜீரியா முன்மொழிந்த இந்த தீர்மானம் தற்போது நடந்துவரும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்தைகளுக்கு சிக்கலை விளைவிக்கும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இந்நிலையில், ரஃபாவை ஆக்கிரமிக்க கூடாது என்பது போன்ற எச்சரிக்கைகளை உள்ளடக்கிய, தற்காலிக போர்நிறுத்த தீர்மானத்தை அமெரிக்காவும் முன்மொழிந்துள்ளது. அமெரிக்கா அல்ஜீரியாவின் தீர்மானத்தை நிராகரித்துள்ளதை பல்வேறு நாடுகளும் கண்டித்துள்ளன. இந்த தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த 15 நாடுகளில் 13 நாடுகள் ஆதரித்திருந்தனர். பிரிட்டன் வாக்களிக்கவில்லை. அமெரிக்காவின் இந்த செயல் குறித்து பேசியுள்ள ஐநாவுக்கான சீன தூதர் ஜாங் ஜுன், “இந்த தீர்மானம் தற்போது நடந்துவரும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் இடையூறு விளைவிக்கும் என்று கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியுள்ளார். மேலும் “தற்போதைய கள நிலவரத்தில், உடனடி போர் நிறுத்தத்தை தொடர்ந்து தவிர்த்து வருவது, தொடர் படுகொலைகளுக்கு பச்சைக்கொடி காட்டுவதே அன்றி, வேறேதும் இல்லை” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐநா பாதுகாப்பு கவுன்சில் அமெரிக்காவுக்கு நட்பு நாடுகளே கண்டனம் அதேபோல், “ இந்த மோதலின் தாக்கம் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வருகிறது. இது பெரிய போருக்கான அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காஸாவில் எரிந்து கொண்டிருக்கும் போரின் நெருப்பை அணைப்பதன் மூலம் மட்டுமே, அந்த பிராந்தியம் முழுவதும் போரின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாக்க முடியும் ” அவர் தெரிவித்துள்ளார். அல்ஜீரியாவின் உயர்மட்ட ஐ.நாவுக்கான ராஜதந்திரியான அமர் பெண்ட்ஜாமா "பாதுகாப்பு கவுன்சில் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் தோல்வியடைந்து விட்டது " என்று தெரிவித்துள்ளார். "உங்கள் மனசாட்சியை சோதித்து பாருங்கள், வரலாறு உங்களுக்கு தீர்ப்பு வழங்கும்" என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் நட்பு நாடுகளும் அதன் செயலை விமர்சனம் செய்துள்ளன. ஐநாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதர் நிக்கோலஸ் டி ரிவியர் இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படாததற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார். ஐநாவுக்கான அமெரிக்க தூதரான லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், "ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கும் சூழலில் உடனடி போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வர இது சரியான நேரமல்ல" என்று கூறினார். பிரிட்டனின் ஐநா தூதுவரான பார்பரா உட்வார்ட், “இந்த தீர்மானத்தால் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவே, ஆனால் தற்போதைய பேச்சுவார்த்தைகளை அது ஆபத்தில் தள்ளும்” என்று கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES சௌதி அரேபியா கருத்து என்ன? வீட்டோவை அமல்படுத்தும் அமெரிக்காவின் முடிவு குறித்து சௌதி அரேபியா வருத்தம் தெரிவித்துள்ளது. சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸாவில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோவை பயன்படுத்தி ரத்து செய்திருப்பதைக் கண்டு நாங்கள் வருந்துகிறோம். இன்று பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் தேவை, அதன் மூலம் அதன் பொறுப்புகளை நிறைவேற்றவும், இரட்டைத் தரம் இல்லாமல் உலக அமைதியைப் பேணவும் முடியும்" என்று குறிப்பிட்டுள்ளது. 'தற்காலிக போர்நிறுத்தத்திற்கு' முறையீடு செய்த தனது சொந்த தீர்மானத்தை கொண்டு வந்த பிறகு அமெரிக்கா இந்த வீட்டோவைச் செய்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் - காஸா போரில் கொல்லப்பட்டவர்கள் காஸாவில் என்ன நடக்கிறது? கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 240 பேர் பிணைக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து இஸ்ரேல் தனது எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின்படி, இதில் காஸாவில் 29,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது அமெரிக்கா முன்மொழிந்துள்ள வரைவு தீர்மானத்தின்படி, பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், காஸாவுக்கு செல்லும் மனிதநேய உதவிகளை தடையில்லாமல் அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனைகளோடு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தற்காலிக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்பான ஐ.நா வாக்கெடுப்புகளின் போது "போர் நிறுத்தம்" என்ற வார்த்தையை வெள்ளை மாளிகை தவிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில், "ரஃபா மீதான நடவடிக்கை மேலும் அதிகமான அப்பாவி மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக மாறும். அவர்கள் கூடுதலான எண்ணிக்கையில் பக்கத்து நாடுகளுக்கு இடம்பெயரவும் வழிவகுக்கும்" என்று எகிப்தை அர்த்தப்படுத்தி அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இந்த தீர்மானத்தின் மீது பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பு நடத்துமா அல்லது எப்போது நடத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் செவ்வாய்க் கிழமை பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, “தங்களது இலக்கை அடையும் வரை போர் தொடரும்” என்றும் எந்த அழுத்தத்தாலும் இந்த முடிவை மாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். காஸாவின் மக்கள் தொகையில் பாதி பேர் தற்போது ரஃபாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். எகிப்தின் எல்லை பகுதியில் உள்ள இந்த நகரத்தில் போருக்கு முன் வெறும் 250,000 மக்களே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஃபாவில் இஸ்ரேல் நடவடிக்கையில் இறங்கினால் அது படுகொலைக்கே வழிவகுக்கும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் என்ன ஆகும்? இடம்பெயர்ந்துள்ள மக்களில் பலரும் கூடாரங்கள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் மோசமான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு சுத்தமான தண்ணீர் அல்லது உணவு கிடைப்பதே அரிதாக உள்ளது. இந்நிலையில் ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது படுகொலைக்கே வழிவகுக்கும் என்று ஐநா சபை எச்சரித்தது. ஆனால், தாங்கள் ஹமாஸ் இயக்கத்தினரை மட்டுமே குறிவைத்து தாக்குவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மார்ச் 10ஆம் தேதிக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்யவில்லையெனில், ரஃபாவில் தரைவழித் தாக்குதல் தொடங்கப்படும் என்று இஸ்ரேலிய போர் அமைச்சரவை உறுப்பினரான பென்னி காண்ட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/cpw77xg5vj1o
  9. மின் கட்டணத்தை குறைத்தால் ஏற்படப்போகும் சிக்கல் உறுதியளித்தபடி மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் பராமரிப்பு நடவடிக்கைகளை தாமதப்படுத்த வேண்டி வரும் என அதன் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “தேவையான பராமரிப்பை மட்டும் செய்துவிட்டு, மற்றவற்றை நகர்த்திச் செல்லுமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூறியது. அந்த ஆணைக்குழு வழங்கிய அறிவுறுத்தலின்படி நாம் அதனை தயார் செய்தோம். பராமரிப்பு நடவடிக்கைகளை நகர்த்தியுள்ளோம். இவ்வாறான நிலைக்கு வந்தால் சரிந்த பின்னர் மீண்டும் கட்டியெழுப்பவது கடினம் என்றார். https://thinakkural.lk/article/292738
  10. உளுந்து, பாசிப்பயறு, கௌபி, சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியின்படி, உளுந்து (மற்றவை) இதுவரை ஒரு கிலோ கிராமிற்கு 200 ரூபாவாக காணப்பட்ட விசேட பண்ட வரி 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கௌபி (மற்றவை), விதை குரக்கன், விதைகள் – (தினை) உள்ளிற்றவைக்கான இறக்குமதி விசேட பண்ட வரி ஒரு கிலோ கிராமிற்கு 70 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர சோளத்துக்கும் 25 ரூபாய் விசேட பண்ட வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கௌபி மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/292707
  11. பஞ்சு மிட்டாயில் உள்ள நச்சுப் பொருள், நீங்கள் விரும்பி சாப்பிடும் வேறு எந்தெந்த பண்டங்களில் இருக்கிறது தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்டுள்ள ரோடமைன் பி என்பது என்ன? அது வேறு எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளது? கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2024, 02:45 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் சிறார்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரோடமைன் பி எனும் நச்சுப் பொருள் கலந்திருப்பது உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. அதனால் 90ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான இனிப்பு வகைகளின் ஒன்றான இளஞ்சிவப்பு நிறத்தில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் தற்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சோதித்து பார்த்தபோது, அவற்றிலும் ரோடமைன் பி இருப்பது தெரியவந்ததால், அங்கும் பஞ்சு மிட்டாய் விற்பது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்டுள்ள ரோடமைன் பி என்பது என்ன? அது வேறு எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளது? இதனை உட்கொள்வதால் என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பஞ்சு மிட்டாய் விற்பது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது ரோடமைன் பி என்பது என்ன? ரோடமைன் பி என்பது ஒரு செயற்கை சாயம் ஆகும். இது பளிச் என்ற சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கக்கூடியதாகும். இந்த வேதியியல் நிறமி, தண்ணீரில் கலக்கக்கூடியத் தன்மை அதிகம் கொண்டதாலும், குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடியது என்பதாலும், ஜவுளித்துறை, காகிதத் துறை, தோல் துறைகளில் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. ரோடமைன் பி- யில் உள்ள வேதிப் பொருட்கள் மக்கும் தன்மையற்றவை ஆகும். வெப்பம், வெளிச்சம் ஆகியவற்றை தாங்கக் கூடியவை. படக்குறிப்பு, ரோடமைன் பி-யை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது ரோடமைன் பி தடை செய்யப்பட்டதா? ரோடமைன் பி, ஜவுளி, தோல் உள்ளிட்ட துறைகளில் நிறமியாக பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு. ஆனால் உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களில் செயற்கையாக நிறம் கொடுக்கும் பொருட்கள் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதே. ஆனால், எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம், எவ்வளவு பயன்படுத்தலாம் என்ற வழிகாட்டுதல்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வகுத்துள்ளது. ரோடமைன் பி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது. உணவுப் பொருட்கள் தயாரிப்பதில், பதப்படுத்துவதில், விநியோகிப்பதில் ரோடமைன் பி பயன்படுத்துவோர் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு சட்டம் (2006)-ன் படி தண்டிக்கப்படுவர். ரோடமைன் பி எந்தெந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படுகிறது? சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களை தரக்கூடிய ரோடமைன் பி, அந்த நிறத்தில் உள்ள உணவுப் பொருட்களிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் மற்றொரு உணவுப் பொருளான ரோஸ் மில்க்-ல் ரோடமைன் பி கலக்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தெரிவிக்கிறார். பிபிசி தமிழிடம் அவர் பேசும் போது, "பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்ட ரோடமைன் பி, ரோஸ்மில்க், கொட்டைப் பாக்கு, சிவப்பு முள்ளங்கி ஆகியவற்றிலும் சேர்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மில்க் பேடா என்ற இனிப்பு வகையின் மீது தூவப்படும் இளஞ்சிவப்பு துகள்களிலும் உள்ளது" என்கிறார். "உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்படும் நிறமிகள் உள்ளன. உதாரணமாக சிவப்பு நிறத்துக்கு அலூரா ரெட், பச்சை நிறத்துக்கு ஆப்பிள் கிரீன். அவையும் குறிப்பிட்ட அளவு மட்டுமே உணவுப் பொருளில் இருக்க வேண்டும். ஆனால், இந்த ரோடமைன் பி எந்த உணவுப் பொருளிலும் துளி அளவும் இருப்பதற்கு அனுமதி இல்லை" என்று அவர் மேலும் எடுத்துரைத்தார். சர்க்கரை வள்ளி கிழங்கின் மேற்பரப்பில் சிவப்பு நிறம் கூடுதலாக வெளிப்படுவதற்கு ரோடமைன் பி பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று, மிளகாய் பொடி, கேழ்வரகு, சாஸ் வகைகளிலும் சிவப்பு நிறம் பெறுவதற்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ரோஸ் மில்க்கில் ரோடமைன் பி கலக்கப்படுகிறது ரோடமைன் பி இருப்பதை நுகர்வோர் கண்டறிய முடியுமா ? ரோடமைன் பி கலக்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் நுகர்வோர் பார்த்த உடனேயே ரோடமைன் பி இருக்கிறதா இல்லையா என கண்டறிய முடியாது. எனினும், சில உணவுப் பொருட்களில் ரோடமைன் பி உள்ளதா என கண்டறிய வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய சோதனைகள் உள்ளன. ரோடமைன் பி தண்ணீரிலும் எண்ணெயிலும் எளிதில் கலக்கக்கூடியதாகும். இந்த தன்மையை கொண்டு ரோடமைன் பி இருப்பதை கண்டறியும் வழிமுறைகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது. உதாரணமாக சர்க்கரைவள்ளி கிழங்கின் மேற்பரப்பில் உள்ள சிவப்பு நிறத்தை வீட்டிலேயே சோதித்து பார்க்கலாம். சிறிதளவு பஞ்சை தண்ணீர் அல்லது எண்ணெயில் நனைத்துக் கொள்ள வேண்டும். அதை கிழங்கின் மேற்பரப்பில் லேசாக தடவிப் பார்க்கும் போது, அந்த பஞ்சு இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் அதில் ரோடமைன் பி கலக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். பஞ்சு நிறம் மாறாமல் வெள்ளையாகவே இருந்தால் ரோடமைன் பி கலக்கவில்லை என்று தெரிந்து கொள்ளலாம். இதே போன்ற பரிசோதனை மூலம், கேழ்வரகில் ரோடமைன் பி கலந்திருப்பதையும் கண்டறிய முடியும். ரோடமைன் பி மற்றும் இது போன்ற தடை செய்யப்பட்ட வேறு வேதிப் பொருட்கள் உணவுப் பொருளில் இருப்பதை எப்படி கண்டறிய வேண்டும் என்று விளக்கும் வீடியோக்களை இந்திய அரசின், https://www.youtube.com/@fssai_india என்ற தளத்தில் காணலாம். பட மூலாதாரம்,FSSAI படக்குறிப்பு, சர்க்கரைவள்ளி கிழங்கின் மேற்பரப்பில் உள்ள சிவப்பு நிறத்தை வீட்டிலேயே சோதித்து பார்க்கலாம் பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி கலந்திருப்பதை நுகர்வோர் கண்டறிய முடியுமா? பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி கலந்திருக்கிறதா இல்லையா என்பதை நுகர்வோர் உறுதி செய்ய முடியாது. அந்த மாதிரிகளை உணவு பாதுகாப்பு ஆய்வகத்தில் சோதித்த பிறகே, ரோடமைன் பி உள்ளதா என்று உறுதி செய்ய முடியும். சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், ஆய்வக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அவை பாதுகாப்பற்றவை என்று உணவுப் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. "ஒரு உணவுப் பொருளில் தடை செய்யப்பட்ட நிறமி இருக்கிறதா இல்லையா என்று குறிப்பிட்டு ஒருவரால் பார்த்த உடனே துல்லியமாக சொல்ல முடியாது. ஆனால் மக்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகள், சாக்லேட், கேக் என எதுவாக இருந்தாலும் உங்கள் கண்களை கவரும் வண்ணம் பளிச்சென்று உணவுப் பொருட்கள் இருந்தால் அவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இயற்கையான நிறங்கள் பளீரென்று இருக்காது" என்கிறார் சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ் குமார். படக்குறிப்பு, இயற்கையான நிறங்கள் பளீரென்று இருக்காது என்கிறார் சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ் குமார் ரோடமைன் பி ஏன் தடை செய்யப்படுகிறது? ரோடமைன் பி புற்றுநோய் மற்றும் மரபணு பிறழ்வு ஏற்படுத்தக்கூடியது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. தோல் வியாதிகள், சுவாச பாதிப்புகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக சிதைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே மனித உட்கொள்ளுதலுக்கு தகுதி அற்றது என்பதால், ரோடமைன் பி உணவுப் பொருட்களில் தடை செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரோடமைன் பி சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. ரோடமைன் பி-யினால் புற்றுநோய் ஏற்படுமா? ரோடமைன் பி உட்கொள்வதால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்று சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருந்தியல் துறைத் தலைவர் எஸ். சந்திரசேகர் தெரிவிக்கிறார். “ரோடமைன் பி தொடர்ந்து உட்கொண்டால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ரோடமைன் பி-க்கும் கல்லீரல் பாதிப்புக்கும் உள்ள தொடர்பு பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டதே” என்றார். பட மூலாதாரம்,மருத்துவர் சந்திரசேகர் படக்குறிப்பு, ரோடமைன் பி தொடர்ந்து உட்கொண்டால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்கிறார் ஸ்டான்லி மருத்துவமனை மருந்தியல் துறைத் தலைவர் எஸ். சந்திரசேகர் ரோடமைன் பி-யினால் எந்தெந்த உறுப்புகள் பாதிக்கப்படும் ? ரோடமைன் பி உட்கொள்வதால், கல்லீரல் தவிர நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. அதன் காரணமாக, சிறு மூளை செயல்பாடுகளில் தடை ஏற்படும். மேலும் நரம்பு தளர்ச்சி, முதுகு தண்டுவட பாதிப்பு ஆகியவையும் ஏற்படும் என்று மருத்துவர் சந்திரசேகர் குறிப்பிடுகிறார். ரோடமைன் பி ஒரு முறை உட்கொண்டாலே பாதிப்பு ஏற்படுமா? பொதுவாக ஒரு பொருளை ஒரு முறை உட்கொள்வதாலேயே தீவிர பாதிப்புகள் உடனே ஏற்படாது. எந்த பொருளாக இருந்தாலும் அதை தொடர்ந்து உட்கொள்ளும் போது தான் அதிக பாதிப்பு ஏற்படும். ஆனால், “சில நேரங்களில் ஒரு முறை உட்கொண்டாலே உடலில் தீவிர நச்சுத்தன்மை ஏற்படக்கூடும். ஒவ்வொருவரின் உடல் எதிர்ப்பு சக்தி பொருத்தும், உணவுப் பொருளில் எவ்வளவுன் ரோடமைன் கலக்கப்படுகிறது என்பதை பொருத்தும் இது ஏற்படும். அப்படி தீவிர நச்சுத்தன்மை உடனடியாக ஏற்பட்டால் அது மூளையை பாதிக்கும்” என்று பிபிசியிடம் பேசிய போது விளக்கினார் மருத்துவர் சந்திரசேகர். https://www.bbc.com/tamil/articles/ce7lkdkwzd3o
  12. மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைப்பதற்கான ஒப்பந்தங்களை கோரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதே பகுதியில் 100 மெகாவாட் காற்றாலை திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதை அடுத்து மேற்படி ஒப்பந்தம் கோரப்படவுள்ளது. புதிய காற்றாலை 50 மெகாவாட் திறனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். காற்றாலை தவிர, மொத்தம் 165 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கான டெண்டர்களையும் அமைச்சு கோரியுள்ளது. நாட்டின் எரிசக்தி ஆதாரங்களை பன்முகப்படுத்தவும், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. டெண்டர்களைப் பாதுகாக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்களால் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். https://thinakkural.lk/article/292678
  13. சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சவர்க்காரம், கிருமிநாசினிகள், சலவைத்தூள்கள் மற்றும் துணிகளில் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதாக சுற்றுச்சூழல் நீதி மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த இரசாயனங்களால் சிறுநீரகநோய், புற்றுநோய், தைராய்ட், கர்ப்பம் தொடர்பான உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதோடு இரத்தம் மற்றும் தாய்ப்பாலின் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு இந்த இரசாயனங்கள் பரவ வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் செக் குடியரசில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுத் துறை நடத்திய ஆய்வில் நீரை வடிய விடும் துணியால் செய்யப்பட்ட ஏப்ரன்கள், ரெயின்கோட்கள் போன்றவற்றிலும் மோசமான இரசாயனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/292667
  14. காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு சபை தீர்மானம் - மூன்றாவது தடவையாக வீட்டோ பயன்படுத்தியது அமெரிக்கா Published By: RAJEEBAN 21 FEB, 2024 | 11:36 AM காசாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் உடனடியுத்தநிறுதத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா மூன்றாவது தடவை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உடனடி யுத்தநிறுத்தம் பணயக்கைகதிகள் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் என அமெரிக்க தெரிவித்துள்ளது. அல்ஜீரியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா மாத்திரமே வாக்களித்துள்ளது - பிரிட்டன் வாக்களிப்பை தவிர்த்துள்ள அதேவேளை 13 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. அமெரிக்காவின் நேசநாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன பாலஸ்தீன மக்களின் மனிதாபிமான தேவையே பிரதானமான விடயம் என இந்த நாடுகள் தெரிவித்;துள்ளன. 30,000த்திற்கும் மேற்பட்டமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை 2மில்லியன் மக்கள் பட்டினியில் சிக்குண்டுள்ள வேளையில் உடனடி யுத்தநிறுத்தத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியமைக்கு எதிராக பரந்துபட்ட கண்டனங்கள் எழுந்துள்ளன. பாலஸ்தீனியர்களிள் வாழ்வதற்கான உரிமைக்கு இந்த நகல் தீர்மானத்தை ஆதரிப்பது முக்கியம் என ஐநாவிற்கான அல்ஜீரிய பிரதிநிதி தெரிவித்துள்ளார். உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பது பாலஸ்தீன மக்கள் மீது சுமத்தப்பட்ட கொடுரமான வன்முறைக்கு கூட்டுதண்டனைக்கு ஒப்புதல் அளிப்பதாகும் எனவும் அல்ஜீரியா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/176930
  15. பட மூலாதாரம்,AFP கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ இன்வுட் & ஜேக் டாச்சி பதவி, பிபிசி நியூஸ்நைட் & பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தங்கம், யுரேனியம் போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொண்டு, அதற்கு ஈடாக ஆப்பிரிக்காவில் உள்ள அரசாங்கங்களின் "ஆட்சி தொடர்வதற்கான" வழிவகையை ரஷ்யா மேற்கொள்வதாக, சமீபத்தில் வெளியான முக்கிய அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது. மேற்கத்திய நிறுவனங்களை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலிருந்து வெளியேற்றும் இலக்குடன், மேற்கு ஆப்பிரிக்காவில் சுரங்கச் சட்டங்களை மாற்றுவதற்கு ரஷ்யா எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் பிபிசிக்குக் கிடைத்த ரஷ்ய அரசாங்க ஆவணங்கள் விவரிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூனில் ரஷ்யாவில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பிறகு, ’வாக்னர்’ கூலிப்படையின் வணிகங்களை ரஷ்ய அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் செயல்முறையின் ஒரு பகுதியாகும் இது. `வாக்னர்` குழுவின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான நடவடிக்கைகள், தற்போது `ரஷ்யன் எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்` எனும் பெயரில் செயல்படுகின்றன. பிரிட்டன் தெருக்களில் நோவிசோக் எனும் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தி செர்ஜேய் ஸ்க்ரிபாலைக் கொலை செய்யும் முயற்சியின் பின்னணியில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரால் இவை நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் தரைவழிப் போர் நிபுணரும் இந்த அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான ஜாக் வாட்லிங் கூறுகையில், "இது ரஷ்ய அரசு அதன் ஆப்பிரிக்கக் கொள்கையின் நிழலில் இருந்து வெளிப்படுவதைக் காட்டுகிறது" என்றார். ஜூன் 2023-ல், யெவ்ஜெனி ப்ரிகோஜின் அநேகமாக உலகில் மிகவும் அஞ்சப்படும் பிரபலமான கூலிப்படை தலைவராக இருந்திருக்கலாம். அவரது வாக்னர் குழு, பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள நிறுவனங்கள் மற்றும் திட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அதேநேரத்தில், அக்குழுவின் போராளிகள் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு மையமாக இருந்தனர். பின்னர், அவர் மாஸ்கோவில் அணிவகுத்துச் செல்ல முடிவு செய்தார் பிரிகோஜின். பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவத்தின் தலைவரை அகற்ற வேண்டும் என்று வெளிப்படையாக அவர் அழைப்பு விடுத்தார். ஆனால் உண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அதுவரை யாரும் தராத அச்சுறுத்தல் அது. சில வாரங்களுக்குள் அவர் மிகவும் சந்தேகத்திற்கிடமான விமான விபத்தில் இறந்தார். வாக்னர் குழுவுக்கு என்ன நடக்கும் என்பது பற்றி அந்த நேரத்தில் பரவலான ஊகங்கள் இருந்தன. இப்போது, அதற்கு பதில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிரெம்ளினில் நடைபெற்ற கூட்டம் என்ன? டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, "ப்ரிகோஜினின் கலகத்திற்குப் பிறகு கிரெம்ளினில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் வாக்னரின் ஆப்பிரிக்க நடவடிக்கைகள் ரஷ்ய ராணுவ உளவுத்துறையான GRU-ன் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாக வரும் என்று முடிவு செய்யப்பட்டது" என்றார். யூனிட் 29155-ன் தலைவரான ஜெனரல் ஆண்ட்ரே அவெரியனோவிடம், 'குறிவைக்கப்பட்ட கொலைகள்' மூலம் வெளிநாட்டு அரசாங்கங்களை நிச்சயமற்றதாக மாற்றுவதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு ரகசிய நடவடிக்கையாக ஒப்படைக்கப்பட்டது. ஆனால், ஜெனரல் அவெரியனோவின் புதிய பணி, அரசாங்கங்களை நிச்சயமற்றதாக மாற்றுவதாக இல்லை. மாறாக, தங்களுக்குப் பணம் செலுத்தும் வரை ஆப்பிரிக்க ஆட்சியாளர்களின் அரசைப் பாதுகாப்பதாகத் தெரிய வருகிறது. செப்டம்பர் தொடக்கத்தில், துணை பாதுகாப்பு அமைச்சர் யூனுஸ்-பெக் யெவ்குரோவ் உடன், ஜெனரல் அவெரியனோவ் ஆப்பிரிக்காவில் முன்பு நடந்த வாக்னர் குழுவின் நடவடிக்கைகள் குறித்து அறிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். அவர்கள் லிபியாவில் போர்த் தளபதி ஜெனரல் கலீஃபா ஹஃப்தாரை சந்தித்தனர். அடுத்ததாக புர்கினா ஃபாசோவில் 35 வயதான தலைவர் இப்ராஹிம் ட்ரேரே அவர்களை வரவேற்றார். அதன் பிறகு, அவர்கள் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு சென்றனர். ஆப்பிரிக்க கண்டத்தில் மிகவும் நன்கு நிறுவப்பட்ட வாக்னர் நடவடிக்கைகள் அங்குதான் செயல்பட்டதாக கருதப்படுகிறது. பின்னர், மாலிக்கு சென்று அங்குள்ள ராணுவ ஆட்சித் தலைவர்களைச் சந்தித்தனர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்ள இந்த பேனரில், `ரஷ்யா வாக்னர், நாங்கள் ரஷ்யாவை நேசிக்கிறோம், வாக்னரை நேசிக்கிறோம்` என எழுதப்பட்டுள்ளது. இன்னும் ஆழமான நடவடிக்கைகள் அடுத்த பயணத்தில், கடந்த ஆண்டு நைஜரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவ வீரர்களில் ஒருவரான ஜெனரல் சாலிஃபோ மோடியையும் அவர்கள் சந்தித்தனர். ப்ரிகோஜினின் மறைவு அவரது வணிக ஒப்பந்தங்களின் முடிவைக் குறிக்கவில்லை என்று, வாக்னரின் கூட்டாளிகளுக்கு இருவரும் உறுதியளித்தனர் என்பதை பல்வேறு சந்திப்புகள் நிரூபிக்கின்றன. புர்கினா ஃபாசோவின் தலைவர் இப்ராஹிம் ட்ரேரே உடனான சந்திப்பு பற்றிய அறிக்கைகள், "விமானிகள் உட்பட அனைத்து மட்டங்களிலும் ராணுவ பயிற்சிக்கான" ஒத்துழைப்பு தொடரும் என்பதை உறுதிப்படுத்தியது. சுருக்கமாக, ப்ரிகோஜினின் மரணம் ரஷ்யாவுடனான ராணுவ ஆட்சிக்குழுவின் உறவின் முடிவைக் குறிக்கவில்லை. சில வழிகளில், அது இன்னும் ஆழமாகியுள்ளது. வாக்னருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மூன்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான மாலி, நைஜர் மற்றும் புர்கினா ஃபாசோ, அனைத்தும் சமீபத்திய ஆண்டுகளில் ராணுவ ஆட்சிக்குள் சென்றன. பின்னர் அவர்கள் பிராந்திய அமைப்பான எக்கோவாஸ் (Ecowas) எனப்படும் மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலிருந்து விலகுவதாகவும் தங்களுக்கென சொந்தமாக "சஹேல் நாடுகளின் கூட்டணியை" உருவாக்குவதாகவும் அறிவித்தன. கூலிப்படையினருடன் மிகவும் பின்னிப்பிணைந்த மாலிக்கு, முன்னதாக, பிரெஞ்சு ராணுவத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கையுடன் மினுஸ்மா எனப்படும் ஐ.நா. திட்டத்தின் வடிவத்தில் பாதுகாப்பு உதவி வந்தது. ஆனால் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்ஸ் மீது மாலி ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லை. எனவே, ரஷ்ய ஆதரவுடன் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாற்ற வாக்னர் குழு முன்வந்தபோது, அந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ’ஆம்பர் அட்வைசர்ஸ்’-க்காக பணிபுரியும் ஆப்பிரிக்க அரசியல் குறித்த ஆய்வாளர் எட்விஜ் சோர்கோ-டெபக்னே கூறுகையில், "பிரெஞ்சுக்காரர்கள் வரவேற்கப்படுவதற்குப் பதிலாக பொறுத்துக் கொள்ளப்பட்டனர்” என்றார். "சஹேலில் பயங்கரவாத நெருக்கடிக்கு உதவுவதற்கான பிரெஞ்சு திட்டம், குறிப்பிட்ட காலக்கெடுவைக் கொண்டது. எனவே, நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியைக் கண்டுபிடிக்காமல் பிரெஞ்சுக்காரர்கள் நீண்ட காலம், அதாவது 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருப்பது பயன்படவில்லை" என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,TELEGRAM படக்குறிப்பு, எவ்ஜெனி ப்ரிகோஜின் மற்றும் டிமிட்ரி உட்கின் ஆகியோரின் நினைவாக இந்த மலர்கள் CAR-ல் உள்ள ரஷ்ய கூலிப்படையினரின் நினைவுச்சின்னத்தில் வைக்கப்பட்டன. மனித உரிமை மீறல்கள் மாலியில் நடைமுறைக்கு அப்பால், ஏக்கமும் இருந்தது. "இந்த நாடுகளில், ரஷ்யா ஒரு புதிய கூட்டாளி அல்ல. முன்பு 1970 மற்றும் 1980களில் இங்கு இருந்திருக்கிறது" என்கிறார் அவர். "இது பெரும்பாலும் ரஷ்யாவுடனான உறவுடன் தொடர்புடையது” என எட்விஜ் சோர்கோ கூறுகிறார். ஆனால், இந்த நாடுகளை இயக்கும் ராணுவ ஆட்சிக்குழுக்களுக்கு, ரஷ்யாவின் ராணுவ பரவல் வெளிப்படையான நன்மைகள் இருக்கின்றன. "ஆரம்பத்தில், இந்த ஆட்சியாளர்கள் இடைநிலைத் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் தேர்தல்களை ஒழுங்கமைத்து ஜனநாயக நடைமுறைக்கு திரும்பக் கொண்டு வர வேண்டும்" என்கிறார் அவர். "ஆனால், இப்போது ரஷ்யக் கூலிப்படைகள் கொண்டு வரப்பட்டு, அவர்கள் விரும்பும் வரை தங்குவதற்கு அனுமதிக்கின்றனர்." பிரெஞ்சுப் படைகளை வெளியேறுமாறு மாலி ராணுவ ஆட்சிக் குழு உத்தரவிட்டது. இப்போது அதன் உள்நாட்டுப் பாதுகாப்புக்காக வாக்னரைச் சார்ந்துள்ளது. இது சாதாரண மாலியர்கள் மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. "ரஷ்யா மேம்பட்ட திறன்கள் மற்றும் வலுவான தாக்கும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்களுடன் கூடிய அதிரடிப் படையை வழங்கியது" என்கிறார் டாக்டர் வாட்லிங். "அவர்கள் பாரம்பரிய சோவியத் முறைகளைப் பயன்படுத்துகின்றனர். போராளிகளையும், போராளிகளுடன் தொடர்புடைய பொதுமக்களையும் தூக்கிலிடப்படுவதை நீங்கள் காணலாம்" என்கிறார் அவர். ஆப்பிரிக்க கண்டத்திலும், யுக்ரேன் மற்றும் சிரியாவிலும் வாக்னர் படைகள் மனித உரிமை மீறல்களை நடத்தியதாக பல கூற்றுகள் உள்ளன. மிகவும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்களில் ஒன்று, மத்திய மாலி நகரமான மௌராவில் நடந்தது. ஐ.நா அறிக்கையின்படி, குறைந்தது 500 பேர் மாலி துருப்புக்களால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. "தெரியாத மொழி" பேசிய "ஆயுதமேந்திய வெள்ளையர்களால்" இவை நிகழ்த்தப்பட்டதாக, நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்”. இதற்கு சுயாதீன சரிபார்ப்பு சாத்தியமில்லை என்றாலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறியப்படாத தாக்குதல்காரர்களை ரஷ்ய கூலிப்படையினர் என்று அடையாளம் கண்டுள்ளது. பட மூலாதாரம்,TELEGRAM படக்குறிப்பு, நூறு ரஷ்ய ராணுவ வல்லுநர்கள் கடந்த மாதம் உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களுடன் புர்கினா ஃபாசோவிற்கு வந்தனர், மேலும் பலர் விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வளங்களின் மூலம் வருவாய் மாலி, பல ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே, மரம் மற்றும் தங்கம் முதல் யுரேனியம் மற்றும் லித்தியம் வரையிலான இயற்கை வளங்கள் நிறைந்தது. சில மதிப்புமிக்கவை. மற்றவை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை. டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, வாக்னர் கூலிப்படை நன்கு கட்டமைக்கப்பட்ட பாரம்பரியத்தில் இயங்குகிறது: "ஒரு நிலையான ரஷ்ய செயல் முறை உள்ளது. செயல்பாட்டுக்கான செலவுகளை வணிக நடவடிக்கைகள் மூலம் ஈடு செய்வது. ஆப்பிரிக்காவில், அவை சுரங்கங்களால் ஈடுசெய்யப்படுகின்றன” என்றார். வாக்னர் குழு செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும், மதிப்புமிக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, செலவுகளை மட்டும் ஈடுசெய்யாமல், கணிசமான வருவாயையும் ஈட்டுவதாக தெரிகிறது. பிளட் கோல்ட் ரிப்போர்ட்டின் படி, (Blood Gold Report) ரஷ்யா கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் இருந்து 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கத்தை பிரித்தெடுத்துள்ளது, இது யுக்ரேனில் நடந்த போருக்கு நிதியளித்திருக்கலாம். இந்த மாதம், முன்பு வாக்னர் கூலிப்படையினராக இருந்த ரஷ்ய போராளிகள், புர்கினா ஃபாசோவின் எல்லைக்கு அருகில் உள்ள மாலியின் இன்டஹாகா தங்கச் சுரங்கத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். வடக்கு மாலியின் மிகப்பெரிய சுரங்கம், இப்பகுதியில் செயல்படும் பல்வேறு ஆயுதக் குழுக்களால் பல ஆண்டுகளாக சர்ச்சைக்குள்ளானது. ஆனால், புவிசார் அரசியல் முக்கியத்துவத்துடன் வேறு ஒன்று உள்ளது. "முக்கியமான கனிமங்கள் மற்றும் வளங்களுக்கான அணுகல் மீதான மேற்கத்திய கட்டுப்பாட்டை யுக்தி ரீதியாக இடமாற்றம் செய்ய ரஷ்யர்கள் முயற்சிப்பதை நாங்கள் இப்போது கவனித்து வருகிறோம்" என்று டாக்டர் வாட்லிங் கூறுகிறார். மாலியில், இயற்கை வளங்கள் மீது ராணுவ ஆட்சிக்கு அதிகக் கட்டுப்பாட்டை வழங்குவதற்காக சுரங்கக் குறியீடு சமீபத்தில் மீண்டும் எழுதப்பட்டது. அந்த செயல்முறை ஏற்கனவே ஒரு ஆஸ்திரேலிய லித்தியம் சுரங்கம், குறியீட்டை செயல்படுத்துவதில் நிச்சயமற்ற தன்மையைக் காரணம் காட்டி, அதன் பங்குகளின் வர்த்தகத்தை இடைநிறுத்தியுள்ளது. லித்தியம் மற்றும் தங்கச் சுரங்கங்கள் முக்கியமானவை என்றாலும், டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, இன்னும் பெரிய மூலோபாய தலைவலி இருக்கலாம் என்கிறார் அவர். "நைஜரில் ரஷ்யர்கள் இதேபோன்ற சலுகைகளைப் பெற முயற்சிக்கின்றனர். இது யுரேனியம் சுரங்கங்களை பிரான்ஸ் பயன்படுத்துவதை தடுக்கும்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, மாலி நாட்டில் பலர் தங்க சுரங்கம் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். "தீவிர அச்சுறுத்தல்" மாலியில் செய்யப்பட்டதை நைஜரில் அடைய முயற்சி செய்வதில் கவனம் செலுத்திய ரஷ்ய குறிப்புகளை இந்த அறிக்கை விவரிக்கிறது. மேற்கு ஆப்பிரிக்காவின் யுரேனிய சுரங்கங்களின் மீதான கட்டுப்பாட்டை ரஷ்யா பெற முடிந்தால், ஐரோப்பா மீண்டும் ரஷ்ய "எனர்ஜி பிளாக்மெயில்" என்று அழைக்கப்படுவதை அம்பலப்படுத்தலாம்" என்றார். உலகின் மற்ற எந்த நாட்டையும் விட பிரான்ஸ் அணுசக்தியை அதிகம் சார்ந்துள்ளது, 56 உலைகள் நாட்டின் ஆற்றலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை உற்பத்தி செய்கின்றன. அதன் ஐந்தில் ஒரு பங்கு யுரேனியம் நைஜரில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நைஜர் போன்ற நாடுகளை முன்னாள் காலனித்துவ சக்தி சுரண்டுகிறது என்ற கருத்துகளுடன், வர்த்தக விதிமுறைகள் குறித்து முன்பு புகார்கள் வந்துள்ளன. "மேற்கத்திய நாடுகள் தங்கள் அணுகுமுறை அடிப்படையில் காலனித்துவமாக இருக்கின்றன என்ற கருத்தை ரஷ்யா முன்வைக்கிறது" என்று டாக்டர் வாட்லிங் கூறுகிறார். "இது மிகவும் முரண்பாடானது, ஏனெனில் இந்த ஆட்சிகளைத் தனிமைப்படுத்துவது, அவர்களின் இயற்கை வளங்களைப் பிரித்தெடுப்பது போன்ற ரஷ்ய அணுகுமுறை தான் மிகவும் காலனித்துவமானது" என்றார். உண்மையில், "எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்" என்பது ரஷ்ய வெளியுறவுக் கொள்கைக்கான தீவிரமான புறப்பாட்டைக் காட்டிலும் "வாக்னர் 2.0" என்பது போலவே தோன்றுகிறது. ப்ரிகோஜின் ஆப்பிரிக்க கண்டத்தில் ஆழமான அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ உறவுகளை உருவாக்கினார். எனவே, இந்த சிக்கலான வலையை அகற்றுவது கடினமாக இருக்கும். "எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்" அதே நாடுகளில், அதே கருவிகளுடன் அதே இறுதி இலக்குடன் செயல்படுகிறது. டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, அடிப்படை மாற்றம் "ரஷ்யா தனது கொள்கையைப் பின்பற்றும் வெளிப்படையான தன்மையில்" உள்ளது. ப்ரிகோஜினின் வாக்னர் குழுமம் எப்போதும் ரஷ்யாவிற்கு செயல்பாடுகள் மற்றும் வெளிநாட்டில் செல்வாக்கு ஆகியவற்றில் நம்பத்தகுந்த உதவியை வழங்கியது. யுக்ரேனின் முழு அளவிலான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, மேற்கத்திய பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள பலர் ரஷ்யாவின் முகமூடி நழுவிவிட்டதாகக் கூறுகிறார்கள். "அவர்கள் செய்ய விரும்புவது சர்வதேச அளவில் நமது நெருக்கடிகளை அதிகப்படுத்துவதாகும். அவர்கள் வெவ்வேறு இடங்களில் தீயை மூட்ட முயற்சிக்கின்றனர், மேலும் ஏற்கனவே உள்ளவற்றை தீவிரப்படுத்தி பாதுகாப்பில்லாத உலகத்தை உருவாக்குகிறார்கள்," என்கிறார் டாக்டர் வாட்லிங். "இறுதியில், நாம் தற்போது எதிர்கொள்ளும் உலகளாவிய போட்டியில் இது நம்மை பலவீனப்படுத்துகிறது. அதனால் தாக்கம் உடனடியாக உணரப்படாது. ஆனால் காலப்போக்கில், இது ஒரு தீவிர அச்சுறுத்தலாக மாறும்" என்றார் வாட்லிங். https://www.bbc.com/tamil/articles/crg9771dg6ko
  16. 21 FEB, 2024 | 12:45 PM கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் மிக மோசமாக அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வினால் இரணைமடு குளத்திற்கும் அதனை சூழவுள்ள வயல் நிலங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் இந்த நிலைமை தொடர்ந்தால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களை இழக்க நேரிடுவதோடு, இரணைமடு குளத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே குளத்தையும் வயலையும் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுங்கள் என உரிய தரப்பினர்களிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரணைமடு குளத்திற்கு கீழ் கோரமோட்டை ஆற்றுப்பகுதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சமீப காலமாக சட்டவிரோத மணல் அகழ்வு கட்டுக்கடங்காது மிக மோசமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு தகவல் வழங்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதோடு, அவர்களின் வீடுகளுக்குள் பட்டாசுகளை கொளுத்தி எறிந்து எச்சரிக்கை விடும் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகிறது. இதனால் கண் முன்னே இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பலர் மௌனமாக கடந்து சென்று விடுகின்றனர் எனத் தெரிவித்துள்ள பிரதேசவாசி ஒருவர் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களுக்கு பொலிஸ், பாதுகாப்புத் தரப்பினர்கள், அரசில்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கு இருப்பதாகவும் இதனால் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் எவரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குறிப்பிடுகின்றனர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்களால் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதோடு நடவடிக்கை நின்றுவிடுகிறது. மாவட்ட எம்பியிடம் முறையிட்டால் அவரும் திரும்பி பார்ப்பதாக இல்லை, பொலீஸ் உட்பட பாதுகாப்பு தரப்பினர்களிடம் முறையிட்டால் அவர்கள் மணல் அகழ்வோரிடம் எங்களை காட்டிக்கொடுக்கின்றனர். இந்த நிலையில் எங்களால் என்ன செய்வது என்றே தெரியவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/176945
  17. பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு, பூமியில் விழப் போகும் ERS - 2 செயற்கைக்கோள் 14 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு காலத்தில் முக்கியமானதாக கருதப்பட்ட ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று எந்நேரமும் பூமியின் மீது விழலாம் என்று அச்சம் நிலவி வருகிறது. ERS-2 என்ற பெயர் கொண்ட இந்த செயற்கைக்கோள் 1995ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் இருந்து பூமியை கண்காணிக்கும் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியான இது 2011ஆம் ஆண்டு செயலிழந்து போனது. அதிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக பூமியை நெருங்கிக் கொண்டிருந்த இந்த செயற்கைக்கோள் தற்போது முற்றிலுமாக கட்டுப்பாட்டை இழந்து எப்போது வேண்டுமானாலும் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன் கிழமை மாலையில் எந்த நேரத்திலும் இது பூமியை அடையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியை நெருங்குவதற்கு முன்பே எரிந்து சாம்பலாகி விடும் என்று ஐரோப்பிய விண்வெளி மையம் கூறியுள்ளது. இருப்பினும் அதன் சில பாகங்கள் பூமியின் சில பகுதிகளில் விழலாம் என்று அச்சம் உள்ளது. ஆனால், அது மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதியில் விழுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு. பூமியின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டுள்ளதால் இதன் பாகங்கள் தண்ணீரில் விழுந்து மூழ்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி முகமையின் புவி கண்காணிப்பு பிரிவைச் சேர்ந்த மிர்கோ அல்பானி இதுகுறித்து பேசுகையில், "பூமிக்கு திரும்பி வரும் இந்த செயற்கைக்கோளின் பாகங்கள் கதிரியக்கம் அல்லது விஷத்தன்மை கொண்டவை இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார். சில பேனல்கள் உள்ளிட்ட உட்பாகங்கள் மற்றும் சிறு வெளிபாகங்கள் மட்டுமே பூமியின் வெளிவட்ட பாதையிலேயே எரிந்து அழியாமல், இங்கு வந்து விழ வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு, தற்போது பூமியின் வெப்பநிலையை கண்காணிப்பதற்கு முன்னோடியாக இருந்தது ERS செயற்கைகோள்கள்தான். செயற்கைக்கோள்களுக்கு முன்னோடி ஐரோப்பிய விண்வெளி முகமை 1990இல் ஒரே மாதிரியான இரண்டு தொலைதூர புவி கண்காணிப்பு (Earth remote sensing) செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது. அவற்றின் பெயர் ERS-1 மற்றும் ERS-2. அந்த சமயத்தில் இவைதான் அதிநவீன செயற்கைக்கோள்களாக பார்க்கப்பட்டது. இதில் நிலம், காற்று மற்றும் கடலை ஆராய்வதற்கான தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவை இரண்டும் வெள்ளத்தை கண்காணிப்பது, கடல் மற்றும் கண்டங்களின் வெப்பநிலையை அளவிடுவது, பனிக்கட்டிகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பது மற்றும் பூகம்பத்தின் போது ஏற்படும் மாற்றங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை செய்தன. இதில், ERS-2 செயற்கைக்கோளுக்கு பூமியை சூரியனின் புறஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தை கண்காணிக்கும் திறனும் இருந்தது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களுக்கு முன்னோடிகள் என்று அழைக்கப்பட்டன. அதில் ஒன்றான ERS-2 செயற்கைக்கோள்தான் தற்போது முதலில் பூமியை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது. பட மூலாதாரம்,AIRBUS படக்குறிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் புதிய விதிகளின்படி, விண்வெளியில் செயலிழந்த செயற்கைக்கோள்களை ஐந்தாண்டுகளுக்குள் பூமிக்கு கொண்டு வந்திட வேண்டும். விண்வெளி மாசு இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் ஏவப்பட்ட காலகட்டத்தில் செயலிழந்த செயற்கைகோள்களினால் விண்வெளியில் உருவாகும் மாசு குறித்து எந்த கடுமையான விதிமுறைகளும் இல்லை. செயலிழந்த செயற்கைக்கோள்களை 25 ஆண்டுகளுக்குள் மீண்டும் பூமிக்கு கொண்டு வர வேண்டும் என்ற விதி அமலில் இருந்தது. ஆனால், தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் புதிய விதிகளின்படி, விண்வெளியில் குப்பைகளை உருவாக்கக் கூடாது. செயலிழந்த செயற்கைக்கோள்களை ஐந்தாண்டுகளுக்குள் பூமிக்கு கொண்டு வந்திட வேண்டும். அதேபோல், எதிர்காலத்தில் விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்களும் அதன் பணி முடிந்த பிறகு, பூமிக்கு மீண்டும் கொண்டு வரும் வகையில் கூடுதல் எரிவாயு நிரப்பி அனுப்ப வேண்டும். காரணம், உலகளவில் அதிக செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுவதால் அவை ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் உள்ளது. ERS-2 செயற்கைக்கோள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து 780 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,HEO படக்குறிப்பு, ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் கண்காணிப்பு நிறுவனம் ERS-2வை கண்காணித்து வருகிறது. எஞ்சியிருந்த எரிவாயுவின் மூலம், இது 2011ஆம் ஆண்டு பூமிக்கு சற்று அருகில் 570 கிலோமீட்டர் தொலைவில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த காலகட்டத்தில், இது கீழ் வளிமண்டலத்தில் நுழைந்து அடுத்த 15 ஆண்டுகளுக்குள் அழிந்து விடும் என்று மதிப்பிடப்பட்டது. இந்த கணிப்பு கிட்டத்தட்ட சரி என்பது இன்று நிரூபணம் ஆக உள்ளது. அதே சமயம், ERS-1 செயற்கைக்கோளையும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்றன. இதில் அதனுடனான தொடர்பு பாதியிலேயே அறுந்து விட்டது. ERS-1 செயற்கைகோள் தற்போது பூமியிலிந்து 700 கிலோமீட்டர் மேலே சுற்றிக்கொண்டிருக்கிறது. அது கீழே வந்து முழுமையாக அழிவதற்கு எப்படியும் 100 ஆண்டுகள் ஆகலாம். விண்வெளியை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்காக இயங்கி வரும் அமைப்பான செக்யூர் வோர்ல்டு ஃபவுண்டேஷன் மற்றும் அமெரிக்க நிறுவனமான லியோலேப்ஸ், விண்வெளியில் தொடர்ந்து குப்பைகள் அதிகரித்து வருவதால், அவை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளன. அவர்களது கூற்றுப்படி, ஏற்கனவே அங்கு அதிகளவிலான செயற்கைக்கோள்களால் உருவாக்கப்பட்ட குப்பைகள் சுற்றிக்கொண்டிருப்பதால், அவை உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான புதிய செயற்கைக்கோள்களை மோதி அழிக்க வாய்ப்புள்ளது. https://www.bbc.com/tamil/articles/c2l775gwl89o
  18. Published By: DIGITAL DESK 3 21 FEB, 2024 | 12:26 PM உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச உள்ளிட்ட அதிகாரிகள், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதியொன்றை திங்கட்கிழமை (19) மல்வத்து அஸ்கிரி மகா மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தனர். இச்சட்டமூலத்திற்குப் பாராட்டு தெரிவித்த மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரியத் தரப்புப் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர் இதனை மேலும் பரிசீலனை செய்து பொது நிலைப்பாட்டை அறிவிக்கவும் இணக்கம் தெரிவித்தனர். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகச் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் மேலும் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்தனர். கலாநிதி மகவெல ரதனபால தேரர், கலாநிதி முருத்தெனியே தர்மரதன தேரர் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை இடைக்கால செயலகத்தின் பிரிவு தலைவர் (கொள்கை) கலாநிதி சி. வை. தங்கராஜா, மக்கள் தொடர்பு நிறைவேற்று அதிகாரி தனுஷி டி சில்வா, சிரேஷ்ட சட்ட நிறைவேற்று அதிகாரிகளான யஸ்மதா லொகுனாரங்கொட, துலான் தசநாயக்க, இணைப்பாளர் எஸ். டி. கொத்தலாவல ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/176938
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கமலா தியாகராஜன் பதவி, பிபிசி டிராவல் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2008ஆம் ஆண்டு ஒரு மாலை வேளையில், தென்னிந்திய நகரமான வேலூரில் உள்ள அரபிக் கல்லூரியில் முகமது சுல்தான் பாகவி 26 வயது மாணவராக இருந்தபோது, அவர் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தைக் கண்டுபிடித்தார். நகரின் லபாபீன் கப்ருஸ்தான் மசூதியில் தொழுகையை முடித்த பிறகு, மசூதியின் முற்றத்தை ஒருவர் சுத்தம் செய்வதைக் கண்டார். அவர் குப்பைகளை, காகிதங்களை, இலைகளை சேகரித்து, அவற்றை எரிப்பதற்காக மசூதியின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த ஒரு கிணற்றின் அருகே குவித்து வைத்தார். மசூதியை விட்டு பாகவி புறப்படத் தயாரானபோது, மெல்லிய காற்று வீசியது. குப்பை மேட்டில் இருந்து ஒரு காகிதம் பறந்து வந்தது. அந்த காகிதம் ஏதோவொரு புத்தகத்தின் ஒரு பகுதி என உணர்ந்த பாகவி திடுக்கிட்டார். சில மசூதிகளில் வறண்டு போன கிணறுகளை அரிய கையெழுத்துப் பிரதிகளை சேமிப்பதற்காகப் பயன்படுத்தியதை அவர் அறிந்திருந்தார். அதில் இதுவும் ஒன்றாக இருக்குமா? எரிந்து கொண்டிருக்கும் குப்பைக் குவியலைக் கூர்ந்து கவனித்துவிட்டு, நெருப்பிலிருந்து ஒரு முழு புத்தகத்தையும் அவசரமாக வெளியே எடுத்தார் பாகவி. தீயை அணைத்த பிறகு, அரிய எழுத்துக்களால் நிரம்பிய பக்கங்களைக் அவர் கண்டார். உடனடியாக அவருக்கு புரிந்து விட்டது, இதில் உள்ள எழுத்துக்கள் நீண்ட காலத்திற்கு முன் வழக்கொழிந்து போன அர்வி மொழியைச் சேர்ந்தது என. தற்போது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஜாமியா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் பாகவி, நான்கு வயதிலிருந்தே அர்வி இலக்கியங்களை படித்து வந்தார். ஆனால் அரபு மொழியைப் நன்கறிந்த முஸ்லிம்களில் கூட மிகச் சிலரால் மட்டுமே இதைப் படிக்க முடியும். பட மூலாதாரம்,AHAMED ZUBAIR படக்குறிப்பு, அர்வி எழுத்து முறை சற்றே மாற்றியமைக்கப்பட்ட அரேபிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளூர் தமிழ் பேச்சுவழக்கில் இருந்து கடன் வாங்கப்பட்டவை தமிழ்நாட்டில் உருவான அர்வி மொழி கிபி 8ஆம் நூற்றாண்டின் இடைக்கால உலகில் அதிக பயணம் மற்றும் வர்த்தகம் காரணமாக பல புதிய கலப்பு மொழிகள் உருவாகின, அதில் ஒன்று அர்வி. 17ஆம் நூற்றாண்டில், தமிழ் பேசும் மக்கள் நிறைந்த தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அதிகமான முஸ்லிம் அரேபிய வணிகர்கள் வந்திறங்கியபோது, அது இந்தப் பகுதியில் முக்கியத்துவம் பெற்றது. வணிகர்கள் தங்களுடன் கையால் நெய்யப்பட்ட கம்பளங்கள், சிறந்த ஜவுளிகள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு வந்தனர். உள்ளூர் மக்கள் மற்றும் வணிகர்கள் இடையே இரண்டு வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், உள்ளூர் மக்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்த அவர்கள் ஏங்கினார்கள். மேலும் அவர்களுக்கு இடையே இருந்த மத ஒற்றுமையும் ஒரு காரணம் என்று பதிவுகள் கூறுகின்றன. வணிகர்கள் பேசிய அரபு மொழியானது உள்ளூர் மொழியான தமிழுடன் கலந்து, அதை அறிஞர்கள் அரபு தமிழ் அல்லது அர்வி மொழி என்று அழைத்தார்கள். இந்த மொழிக்கான எழுத்து முறை சற்றே மாற்றியமைக்கப்பட்ட அரேபிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளூர் தமிழ் பேச்சுவழக்கில் இருந்து கடன் வாங்கப்பட்டவை. எடின்பர்க் பல்கலைக் கழகத்தில், 1750க்கு முன்பான இந்தியப் பெருங்கடலின் வரலாறு எனும் பிரிவில் விரிவுரையாளராக இருக்கும் மஹ்மூத் கூரியா, "அர்வி என்றழைக்கப்படும் அரபுத் தமிழ், அரபு எழுத்துக்கள் கொண்டு எழுதப்படும் பல மொழிகளில் ஒன்றாகும்" என்று விளக்கினார். "ஐரோப்பிய காலனித்துவவாதிகளுக்கு முன்பாக இந்தியாவில் தரையிறங்கிய அரேபிய மற்றும் பாரசீக வணிகர்கள் அப்போது இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்" என்று அவர் கூறினார். "இந்த மொழிகளின் வளர்ச்சி என்பது கடல் பயணம் மற்றும் வர்த்தகத்தை அடிப்படையாக கொண்டது." என்கிறார். தமிழ் பேசும் மக்களைக் கொண்ட அருகிலுள்ள இலங்கைக்கும் அர்வி பரவியது. 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோதும், தாய்மொழி பேசுபவர்கள் குறையத் தொடங்கியபோதும் இந்த மொழி அழிவின் விளிம்பில் இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று ஒரு நல்ல மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக பட்டதாரிகள் இதைப் படிக்கிறார்கள், கடற்கரையோரத்தில் உள்ள ஒரு சில கிராமங்களில், பல முஸ்லீம் பெண்கள் பண்டைய அர்வி மொழியில் பிரார்த்தனை பாடல்களைப் பாடுவதில் பெருமை கொள்கிறார்கள். "பலர் அதன் மதிப்பை உணரவில்லை. எனது சொந்த ஊரான தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் உள்ள குடும்பங்கள் அதை தங்கள் முன்னோர்களுடனான புனிதமான இணைப்பாக கருதுகின்றனர்," என்று பாகவி கூறினார். அர்வி எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்து கொள்ள, ஒருவர் தென்னிந்தியாவின் கடற்கரையோர நகரங்களுக்குச் செல்ல வேண்டும், முக்கியமாக முஸ்லிம் குடியிருப்புகளுக்கு. பட மூலாதாரம்,MAHMOOD KOORIA படக்குறிப்பு, அரபு மலையாள மொழியை நன்கறிந்த கூரியா, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நூல்களை அட்டவணைப்படுத்துவதில் பிரிட்டிஷ் நூலகத்திற்கு உதவி வருகிறார். 40 எழுத்துக்கள் மட்டுமே கொண்ட அர்வி மொழி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து தெற்கே 530கிமீ தொலைவில் உள்ள கீழக்கரை அத்தகைய நகரங்களில் ஒன்றாகும். 38,000 மக்கள்தொகையுடன் வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது, இங்குள்ள ஜும்மா பாலி மஸ்ஜித் - இந்தியாவின் பழமையான மசூதிகளில் ஒன்றாகும், இது கிபி 628இல் கட்டப்பட்டது. இந்தப் பகுதிகளுக்கு கடல் வழியாக வந்த ஏமன் வணிகர்களால் இந்த மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இஸ்லாமிய புனிதர்களின் இரண்டு பெரிய கல்லறைகள் மசூதியின் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் மற்றும் பச்சை மினாரட்டுகளுக்கு அருகில் உள்ளன. கல்வெட்டுகளின் ஒரு முனையில் அரபு மொழியும், மறுபுறம் தமிழ் மொழியும் உள்ளது. அரபு கடல் வணிகர்கள் மற்றும் உள்ளூர் தமிழ் முஸ்லீம் பெண்கள் இடையே நடந்த திருமணத்தின் காரணமாக 17ஆம் நூற்றாண்டில் அர்வியின் புகழ் பரவியது என்றும், வணிக உறவுகளை ஆழப்படுத்த வணிகர்களுக்கு இது உதவியது என்றும் சில அறிஞர்கள் நம்புகிறார்கள். அந்த வணிகர்கள் ஏற்கனவே அறிந்திருந்த அரபி எழுத்துமுறையை தமிழ் போன்ற சிக்கலான மொழியுடன் இணைத்து அர்வி மொழியில் தேர்ச்சி பெற்றனர். "தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. அர்வி மொழியில் அதைவிட குறைவாக வெறும் 40 எழுத்துக்கள். ஒரு மொழியில் உடனடியாக தேர்ச்சி பெற விரும்பும் கடல் வணிகர்களுக்கு ஏற்ற மொழியாக இருந்தது அர்வி. புதிய நிலத்தில் வணிகம் செய்து வாழ்வாதாரம் பெற அது உதவியது" என்று கே.எம்.ஏ அகமது சுபைர் கூறினார். சென்னையில் உள்ள தி நியூ கல்லூரியில் அரபு மொழியில் இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார் அகமது சுபைர். அவர் மேலும் கூறியதாவது, "வடக்கில் இருப்பது போல இல்லாமல், தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் பாகுபாடு இல்லாமல், பல நூற்றாண்டுகளாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்தனர். வர்த்தகத்தின் மூலம் அரேபியர்கள் செழிப்பைக் கொண்டு வந்ததால் இங்கு அவர்கள் வரவேற்கப்பட்டனர். சில பதிவுகளின்படி, அர்வி ஒரு ரகசிய மொழியாக பயன்படுத்தப்பட்டது. அதாவது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியுடனான வணிகப் போட்டியை எதிர்கொள்ளும் போது ரகசிய முறையில் (உள்ளூர் மக்களுடன்) தொடர்புகொள்வதற்கான வழிமுறையாக இருந்தது." என்கிறார். அரபு மலையாளம் அல்லது மாப்பிள மலையாளம் தமிழ் மற்றும் அரபு மொழிகளின் கலவையாக மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவில், மலையாளம் மற்றும் அரபு கலந்து, அரபு மலையாளம் அல்லது மாப்பிள மலையாளம் என்று அழைக்கப்படும் மொழியும் செழித்து வளர்ந்தது. குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி மற்றும் சிந்தி போன்ற பிற பிராந்திய இந்திய மொழிகளும் அரேபிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன என்று சுபைர் கூறினார். அரபு மற்றும் உள்ளூர் மொழியின் இணைப்பால் பிறந்த ஒவ்வொரு மொழியும் தனித்துவமானது. ஆனால் வெளிநாடுகளில் கணிசமான தமிழ் பேசும் மக்கள் தொகை இருப்பதால் அரேபிய வணிகர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறிய போதும் அர்வி தொடர்ந்து செழித்து வளர்ந்தது என்று சுபைர் கூறுகிறார். "வரலாற்று பதிவுகளின்படி, இலங்கை, சுமத்ரா, மலேசியா, சிங்கப்பூர், கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கும் அரபு வர்த்தகர்கள் மூலமாக பயணம் செய்தது அர்வி மொழி." என்கிறார் அவர். அரபு தமிழ் மற்றும் அரபு மலையாளம் மிகவும் பிரபலமாக இருந்தன, ஏனெனில் அவை வளமான இலக்கிய மற்றும் பேச்சுவழக்கு பாரம்பரியத்தைக் கொண்டிருந்தன, என்று கூறுகிறார் கூரியா. இந்தியா மற்றும் இலங்கை முழுவதும், அரபு தமிழில் எழுதப்பட்ட 2,000 புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன . கேரளாவில், அரிய அரபு மலையாள கையெழுத்துப் பிரதிகளை பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இருப்பினும், கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க, நீங்கள் முதலில் அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அது மிகவும் சவாலானது. மசூதியின் வளாகத்தில் புத்தகம் எரிக்கப்படுவதைக் கண்ட பாகவி, இந்தியா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட அர்வி மற்றும் அரபு மலையாள புத்தகங்களை இப்போது வரை சேகரித்துள்ளதாக கூறுகிறார். "நான் இந்த புத்தகங்களை பழைய கிணறுகளிலும், கல்லறைகளிலும் (கபருஸ்தான்கள் என்று அழைக்கப்படுகின்றன) மற்றும் முஸ்லீம் வீடுகளில் பயன்படுத்தப்படாத பழைய மாடி அறைகளில் கண்டேன்," என்று அவர் கூறினார். (தனியார் சேகரிப்பில் இருந்து இந்த நூல்களில் பல இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, மாப்பிள பாரம்பரிய நூலகத்தில் ஆன்லைனில் பதிவேற்றப்படுகின்றன) முஸ்லிம் பெண்களால் எழுதப்பட்ட நூல்கள் பட மூலாதாரம்,MUHAMMED SULTHAN BAQAVI படக்குறிப்பு, 1314ஆம் ஆண்டின் அர்வி கவிதை புத்தகம் உட்பட இந்தியா மற்றும் ஆசியா முழுவதும் உள்ள அர்வி புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை பாகவி சேகரித்து வருகிறார் காலனித்துவத்தின் விளைவாக, கையெழுத்துப் பிரதிகள் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்திற்குச் சென்றன, அவை இன்றும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அரபு மலையாள மொழியை நன்கறிந்த கூரியா, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நூல்களை அட்டவணைப்படுத்துவதில் பிரிட்டிஷ் நூலகத்திற்கு உதவி வருகிறார். "வரலாறு, மதம், மருத்துவம் மற்றும் கலாச்சாரம் ஆகிய பல பிரிவுகளில் இந்த நூல்கள் இருப்பதைக் கண்டு நான் திகைத்துப் போனேன். இவற்றில் பல நூல்கள் பெண்களால் எழுதப்பட்டவை" என்று அவர் கூறினார். "பிரசவம் மற்றும் பாலுறவு போன்ற பிரச்னைகளை எடுத்துரைக்கும் விதத்தில், கணிசமான எண்ணிக்கையிலான புத்தகங்கள் பிற பெண்களுக்காக பெண் ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. உள்நாட்டுப் பிரச்னைகளைப் பிரதிபலிக்கின்றன அல்லது உணவு வகைகள் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கின்றன" என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மதங்கள் பிரிவு விரிவுரையாளர் ஓபிரா கேம்லியேல் கூறினார். "முஸ்லிம் பெண்கள் சமூகத்தில் எப்படி ஒரு வலுவான குரலையும் அடையாளத்தையும் கொண்டிருந்தனர், எப்படி ஒரு தாய்வழி பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தனர் என்பதற்கு இது சான்றாகும்" என்று கேம்லியேல் கூறினார். இந்த பேச்சுவழக்குகள் அன்றாடம் பேசப்படுவதில்லை என்றாலும், இந்த புத்தகங்கள் மற்றும் பாடல்களால் அர்வி மற்றும் அரபு மலையாளம் இன்றும் வாழ்கின்றன. தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் பேசப்படும் அர்வி அர்வி மற்றும் அரேபிய மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இயற்றப்பட்ட மதப் பாடல்கள் பாகவியின் சொந்த ஊரான காயல்பட்டினத்தில் இன்னும் பாடப்படுகின்றன, ஏனெனில் உள்ளூர்வாசிகள் இந்த மொழியை நினைவில் வைத்து கொள்ளவும், தங்கள் வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் விரும்புகிறார்கள். இந்தப் பாடல்களைப் பாடுவதற்கு என ஒன்றுகூடுவது ஒரு பெரிய சமூக நிகழ்வு. காயல்பட்டினத்தில் உள்ள உள்ளூர் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் படித்து வரும் 18 வயது கிஜ்ர் மக்ஃபிரா, "இது ஒரு பெண்கள் கிளப் போன்றது" என்று கூறி சிரித்தார். "ஒவ்வொரு வீட்டிலும் அர்வியை நன்கு அறிந்த ஒரு உறுப்பினராவது சரளமாகப் பேசுவார்," என்று அவர் மேலும் கூறினார். "எங்கள் ஊரில், முகமது நபி பிறந்த மாதம் (இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தில், தோராயமாக செப்டம்பர் மாதம்) போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது பெண்கள் குழுக்கள் கூடி இந்தப் பாடல்களை ஒன்றாகப் பாடுவார்கள்" என்று மக்ஃபிரா கூறினார். "அவர்கள் இந்தப் பாடல்களைப் பாடும்போது அவர்களின் கண்களில் கண்ணீரைப் பார்க்கும்போது, அவர்கள் அதை எவ்வளவு ஆழமாகப் புரிந்துகொண்டு போற்றுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இது மிகவும் உணர்வுப்பூர்வமானது." என்கிறார். வீட்டில் உள்ள பெரியவர்களால் ஈர்க்கப்பட்டு அர்வியை கற்றுக்கொள்கிறார் மக்ஃபிரா. இவர் நான்கு வயதிலிருந்தே அரபு மொழியைக் கற்று வந்துள்ளார், மேலும் தமிழில் சரளமாகப் பேசுவதற்கும் அவருக்கு இது உதவுகிறது. நகரத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆண்ட்ராய்டு கைபேசியுடன் இணக்கமான ஒரு அர்வி கீபோர்டை உருவாக்கியுள்ளனர் . மக்ஃபிராவின் உறவினரான கிஸ்ர் பாத்திமா கூறுகையில், "அர்வி எழுத்து முறையை பழைய முறையில் கற்றுக் கொள்ளும் இளைஞர்களை ஊர் மக்கள் ஊக்குவிக்கிறார்கள். அவ்வாறு செய்யும் இளைஞர்களுக்கு வெகுமதியும் அளிக்கப்படுகிறது. இந்த ஊரின் பழமையான பாரம்பரியம் இது” என்றார். இவர் சமீபத்தில் தனது அண்டை வீட்டுச் சிறுமிக்கு ரூபாய் 500 பரிசளித்துள்ளார், மேலும் தான் பார்த்ததில் மிக அழகான அர்வி கையெழுத்து அந்த சிறுமியின் கையெழுத்து தான் என்று கூறுகிறார். "இந்த மொழியின் பாடல்கள், ஆன்மீகச் சிறப்பு மற்றும் வணிகர்களின் சாகசப் பயணங்களோடு இந்த மொழிக்கு இருக்கும் தொடர்பு, இப்படிப்பட்ட மொழி மேலும் வளர்வதை உறுதி செய்ய இதுவே எங்கள் வழியாகும்," என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c51wzzn3g1vo
  20. Published By: DIGITAL DESK 3 21 FEB, 2024 | 11:24 AM தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட வைத்திய குழுவொன்று எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டிற்கு வருகை தரவுள்ளது. நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்துவதற்கான வரைப்படத்தை உருவாக்க இந்த குழு சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் என தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் தொழுநோயாளிகளின் அதிகரித்துள்ளதாக தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசான் ரணவீர தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்தற்கான விரிவான வேலைத்திட்டத்தை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். இந்த முயற்சிக்கு உதவுவதற்காக விசேட வைத்திய குழுவை மார்ச் மாதம் இங்கு அனுப்புவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எங்களுக்குத் அறிவித்துள்ளது. அவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தொழுநோயை முற்றாக தடுக்க ஒரு வரைபடத்தை உருவாக்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176934
  21. 21 FEB, 2024 | 01:13 PM மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் மற்றுமொரு சிநேகபூர்வ கலந்துரையாடல் உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் நேற்று (20) இடம்பெற்றது. வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையிலான இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எஸ்.பிரணவநாதன், திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். யாழ். குடாநாட்டில் காணப்படும் தீவுகளில் ஒன்றான நயினாதீவில் சுமார் ஆயிரம் குடும்பங்கள், ஐயாயிரம் பேர் வசிக்கின்றனர். மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய நயினாதீவு மக்களின் பிரதான ஜீவனோபாயமாக கடற்தொழில் காணப்படுகிறது. இக்கலந்துரையாடலின்போது, நயினாதீவில் உள்ள பாடசாலைகளின் குறைபாடுகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து கிராம மக்களால் எடுத்துரைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாடசாலைகளுக்கான தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். இதேவேளை போக்குவரத்து, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் தீர்வு காண்பதற்கான திட்ட வரைபை சமர்ப்பிக்குமாறும், நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் பணித்தார். தீவக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், புலம்பெயர் அமைப்புகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். இது தொடர்பாக ஆளுநர் மேலும் கூறுகையில், இயற்கை வளங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இன, மத பேதமின்றி நயினாதீவு மக்கள் இந்த கலந்துரையாடலில் பங்கெடுத்தமையானது இந்த கிராமத்தை சிறந்த முன்மாதிரியாக மாற்றுவதற்கான சிறந்த ஆரம்பம் என்றார். மக்களுடனான கலந்துரையாடலின் பின்னர், நயினாதீவு அமுதசுரபி அன்னதான மண்டப நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவிலும் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் கலத்துகொண்டனர். இதேவேளை தீவிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று மதத் தலைவர்களுடனும் ஆளுநர் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது ஆளுநரின் பணிப்புரைக்கமைய, ‍வேலைத்திட்டங்களை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நயினாதீவை முன்மாதிரி தீவாக மாற்றுவதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பித்து, அதற்குரிய திட்ட வரைபை விரைவில் ஆளுநரிடம் சமர்ப்பிப்பதாகவும் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் நயினாதீவு மக்களுக்கு உறுதிபட தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176944
  22. யாழ்ப்பாணம் 4 மணி நேரம் முன் யாழில் விபத்து; பல்கலை மாணவன் சாவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் - நீா்வேலியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக 1ஆம் வருட கலைப்பிாிவு மாணவன் உயிாிழந்துள்ளாா். விபத்தில் மானிப்பாய் - வேம்படியைச் சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே உயிாிழந்துள்ளாா். இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து நீா்வேலி நோக்கி மோட்டாா் சைக்கிளில் பயணித்தபோது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டாா் சைக்கிள் மோதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா். சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/யாழ்_விபத்தில்_பல்கலை_மாணவன்_சாவு!
  23. Published By: DIGITAL DESK 3 21 FEB, 2024 | 09:28 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) 200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொண்டதை போன்று எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள். ஜனாதிபதியின் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு பொதுஜன பெரமுனவினர் வெட்கமில்லாமல் இருக்கிறார்கள். பிரதமர் தினேஷ் குணவர்தன பூனை போல் செயற்படுகிறார். அமைச்சரவை உறுப்பினர்கள் முட்டாள்களை போல் உள்ளார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.இவ்விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது உண்மையல்ல,நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பதிலாக நெருக்கடிகளை தீவிரப்படுத்தி என்றும் விடுப்படாத நடவடிக்கைகள் மாத்திரமே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். ஆகவே மறுசீரமைப்பு தீர்மானங்களை மீள்பரிசீலனை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்கள். அமைச்சர் ஹரின் பிரனாந்து அண்மையில் இந்தியாவுக்கு சென்று 'இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ' என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஹரின் பிரனாந்து இந்தியாவில் ஆற்றிய உரையை ஊடகங்கள்திரிபுப்படுத்தியுள்ளதாகவும்,செம்மைப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிடுகிறார்.அமைச்சர் ஹரின் பிரனாந்து குறிப்பிட்ட கருத்தை எவரும் திரிபுப்படுத்தவில்லை. தேசியத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.பொரலுகொட சிங்கம் என்று குறிப்பிடப்படும் பிரதமர் தினேஷ் குணவர்தன தற்போது பூனை போல் அமைதியாக உள்ளார். டெலிகொம் நிறுவனம்,மின்சார சபை மன்னாரில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளன.இதுவா பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள். இலங்கையில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பனவற்றை இந்தியாவுக்கு வழங்குவதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் இந்த நாட்டின் என்ன மிகுதியாகும்.பாராளுமன்றத்தையும் இந்தியாவுக்கு வழங்கலாமே? இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை எதிர்வரும் மார்ச் மாதம் கைச்சாத்திட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கையின் சகல தொழிற்றுறைகளிலும் ஈடுப்பட இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.எட்கா ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை ஆளும் தரப்பின் எத்தனை உறுப்பினர்கள் அறிவார்கள்.வழங்குதை சாப்பிட்டு விட்டு இருப்பதை மாத்திரமே பிரதான செயற்பாடாக கொண்டுள்ளார்கள். 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய தமிழர்களை வெள்ளையர்கள் இலங்கையில் தங்க வைப்பதற்காக மலையக பகுதிகளுக்கு அழைத்து வரவில்லை.தொழிலுக்காகவே அழைத்து வரப்பட்டார்கள். பிற்பட்ட காலத்தில் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் ஊடாக மலையக தமிழர்கள் பலர் நாடு கடத்தப்பட்டார்கள்.சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் சரியானது என்று குறிப்பிடும் தரப்பினர்கள் இன்று எட்கா ஒப்பந்தத்துக்கு சார்பாக செயற்படுகிறார்கள். எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக தங்கியதை போன்று இந்தியர்களும் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள்.இந்தியர்கள் வெற்றிலை கடை கூட இலங்கையில் வைப்பார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நன்கு அறிவார். அதனால் தான் எதிர்காலத்தில் நடக்க போவதை முன்கூட்டியதாகவே அவர் 'இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ' என்று குறிப்பிட்டுள்ளார். வழங்குவதை சாப்பிட்டு விட்டு,அமைதியாக இருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் செயற்பாட்டை அறிய மாட்டார்கள்.பாராளுமன்றத்தில் கையுயர்த்துவதற்காகவே பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி பயன்படுத்திக் கொள்கிறார். அண்மையில் தாய்லாந்து நாட்டுடன் சுதந்திர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை.முட்டாள்தனமான அமைச்சரவை உறுப்பினர்கள் ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். எட்கா ஒப்பந்தத்துக்கும் இவர்கள் ஆதரவு வழங்குவார்கள். நாட்டின் இறையாண்மையை பிற நாட்டில் காட்டிக் கொடுத்துள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக பேசுவதற்கும், அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுவதற்கும் எவருக்கும் தற்றுணிவு கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினருக்கு வெட்கம் என்பதொன்று கிடையாது. 69 இலட்ச மக்களாணைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ராஜபக்ஷர்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். எட்கா ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஒரு அரச அதிகாரி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிவில் தரப்பினர் இந்த ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்துக்கு சென்று அவரிடம் கேள்வி கேட்ட போது 'எதனையும் குறிப்பிட முடியாது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எட்கா ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் ஒரு அணி செயல்படுகிறது ஆனால் இலங்கை சார்பில் ஒரு நபர் மாத்திரமே செயற்படுகிறார். ஆகவே எட்கா ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்கும் தரப்பினர் தேச துரோகிகளாக கருதப்படுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/176922
  24. 20 FEB, 2024 | 05:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மூன்று வேளை உணவை கூட பெற்றுக் கொள்வதில் பெரும்பாலான மக்கள் போராடுகின்ற சூழ்நிலையில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளின் சம்பளத்தை பல இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளமை எந்தளவுக்கு நியாயமானது. சுயாதீனம் என்றுக் குறிப்பிட்டுக் கொண்டு மத்திய வங்கி தன்னிச்சையான முறையில் செயற்படும் சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இவ்விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டதை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது 'மத்திய வங்கியின் புதிய சட்டத்துக்கு அமைய சம்பளம் அதிகரிக்கப்பட்டதாகவும், அது மத்திய வங்கியின் சுயாதீனம்' என்றும் அமைச்சர் பதிலளித்துள்ளார். மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு விரும்பிய வகையில் தீர்மானம் எடுக்க இடமளிக்க கூடாது என்பதற்காகவே 'புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தோம். நாட்டு மக்களில் பெரும்பாலானோர் மூன்று வேளை உணவை உட்கொள்வதில் போராடுகிறார்கள். வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பால் திண்டாடுகிறார்கள். இவ்வாறான பின்னணியில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பல இலட்ச கணக்கில் சம்பளத்தை அதிகரிப்பது எந்தளவுக்கு நியாயமானது. கரண்டி தம் கையில் இருப்பதால் மத்திய வங்கி எண்ணம் போல் உணவை பரிமாறிக் கொள்கிறது. ஜனாதிபதியின் பொருளாதார மீட்சி எந்தளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சுயாதீனம் என்று குறிப்பிட்டுக் கொண்டு தன்னிச்சையாக செயற்படும் சூழலே மத்திய வங்கிக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/176889
  25. யாழ்ப்பாணம் வந்து விட்டது சித்தமருத்துவ Spa 💆‍♀️ / Panchakarma Treatment / Tamil bros தொடர்பு இலக்கம் :- +94765245100 Viber, whatsapp

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.