Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஒருவர் தனிப்பட்ட முறையில் வீட்டிலேயே 3 கஞ்சா செடி வரை வளர்க்கலாம் மற்றும் தினமும் 25 கிராம் வரை உபயோகிக்கலாம் என ஜெர்மனி பாராளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது. ஜெர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்றம் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கஞ்சா உபயோகத்தை சட்டரீதியாக ஒப்புகொள்ளும் இந்த சட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அரச தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தனிநபர், சட்டம் கொடுத்த உரிமையுடன் வீட்டிலேயே 3 கஞ்சா செடிகள் வரை வளர்க்கலாம். மேலும், ஒருவர் சுமார் 25 கிராம் வரை கஞ்சாவை தினமும் எடுத்துகொள்ளலாம். கஞ்சா எடுத்துகொள்வதற்கு என்று ஒரு குழு அமைக்கப்படும் அதில் உறுபினர்கள் மட்டுமே சட்டபூர்வமாக கஞ்சா எடுத்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் சமீபக்காலமாக கஞ்சா உட்கொள்ளுதல் இளைஞர்களில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கருப்பு சந்தையில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. அதனை தடுத்து சட்டபூர்வமாக்கும்போது, விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சட்டத்திற்கு நாட்டில் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மால்டா மற்றும் லக்சம்பர்க் நாடுகளை தொடர்ந்து தற்போது ஜெர்மனியும் கஞ்சா உபயோகத்தை சட்டரீதியாக அங்கீகரித்தது பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நெதர்லாந்து நாடும் கஞ்சாவை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முனைப்பு காட்டுகிறமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/293213
  2. 1984 இல் உதவிய உக்ரைனுக்கு கைமாறு செய்யும் வெல்ஷ் தொழிலாளர்கள் கடந்த 2022 பெப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போர், 2 ஆண்டுகளை கடந்து தீவிரமாக நடைபெற்று வருவதால், உக்ரைனில் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். நூற்றுக்கணக்கான உக்ரைன் சுரங்க தொழிலாளர்களும் ரஷ்யாவிற்கு எதிராக போரில் களம் இறங்கி உள்ளனர். 1984 இல் ஐரோப்பாவின் வேல்ஸ் (Wales) பகுதியில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உக்ரைன், ஜேர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து சுரங்க தொழிலாளர்களும் ஆதரவளித்தனர். நீண்ட நாள் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தினால் வருவாய் இல்லாமல் தவித்த அந்த தொழிலாளர்களுக்கு உலகெங்கும் இருந்து பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது. அப்போது சோவியத் யூனியன் என அழைக்கப்பட்ட ஒருங்கிணைந்த ரஷ்யாவில், உக்ரைன் பகுதியில் இருந்த சுரங்க தொழிலாளர்களில் ஏராளமானவர்கள், வெல்ஷ் (Welsh) சுரங்க தொழிலாளர்களுக்கு பலவித உதவிப்பொருட்களை அனுப்பி வைத்தனர். சுமார் 40 வருடங்கள் கடந்த பிறகும், தங்களுக்கு உக்ரைனியர்கள் செய்த உதவியை மறக்காத வெல்ஷ் பணியாளர்கள், தங்களின் ஊதியத்தை நன்கொடையாக வழங்கி, பல சரக்கு வாகனங்களில் மருந்து, மளிகை உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களை தெற்கு வேல்ஸ் பகுதியில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) நகருக்கு, சாலை வழியே கொண்டு சென்று வழங்கினர். இது குறித்து உக்ரைன் சுரங்க தொழிலாளர்கள், “சுரங்க தொழிலாளர்கள் அனைவரும் ஒரே இனம் என்பதை 1984 இல் நாங்கள் மறக்கவில்லை. அதே போல் அவர்களும் எங்களை இப்போது மறக்கவில்லை. குண்டு வீச்சில் தாக்கப்படும் அபாயம் உள்ளதை அறிந்தும் அவர்கள் துணிந்து வந்து எங்களுக்கு உதவினர்” என பெருமிதத்துடன் கூறுகின்றனர். https://thinakkural.lk/article/293199
  3. எவரெஸ்ட் சிகர மலையேறும் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு இமயமலைத் தொடரில் சீனா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உலகின் உயரமான மலைச்சிகரம், மெளன்ட் எவரெஸ்ட் இதன் உயரம் 8,849 மீட்டர் (29,032 அடி). மெளன்ட் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் வடக்கில் திபெத்தும், தெற்கில் நேபாளமும் உள்ளன. எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொடும் சாதனைக்காக பலரும் தங்களை தயார்படுத்தி கொண்டு உயிரை பணயம் வைத்து கடினமான இந்த மலையேற்றத்தில் ஈடுபடுவது வழக்கம். 1953 இல் இருந்து சுமார் 300 பேர் இந்த முயற்சியில் உயிரிழந்துள்ளனர். எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (Everest base camp) எனப்படும் மலையடிவார தளம் 18,000 அடி உயரத்தில் உள்ளது. அங்கிருந்து மலையுச்சியை அடையும் முயற்சியில் பனிமழை, பனிப்புயல், பனிச்சரிவு உள்ளிட்ட காரணங்களால், காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பது மிக கடினமான செயலாக இருந்து வருகிறது. இந்நிலையில், இச்சிக்கலை தவிர்க்கும் முயற்சியாக நேபாள அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது குறித்து பேசிய நேபாள சுற்றுலா துறை தலைமை அதிகாரி ராகேஷ் குருங், “எவரெஸ்ட் மலையேறும் முயற்சியில் ஈடுபடும் அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் உடையில் அணிந்து கொள்ளும் வகையில் ஒரு மின்னணு “சிப்” அரசாங்கத்தால் வழங்கப்படும். இதன் மூலம் மலையுச்சியை அடையும் முயற்சி பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், அவசர காலகட்டங்களில் தேடுதல் பணிகளை எளிதாக்கவும் முடியும்” என தெரிவித்தார். 2023 இல் ஒரு இந்தியர், ஒரு சீனர், 4 நேபாளிகள் உட்பட 12 மலையேறும் வீரர்கள் உயிரிழந்ததாக நேபாள சுற்றுலாத்துறை அறிவித்தது. https://thinakkural.lk/article/293166
  4. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் கடந்த சனிக்கிழமை கண்டியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்வில் தான் ஒரு பெண் குழந்தையின் தந்தை என அறிவித்தார். இந்நிகழ்வில் அவரது மனைவி ஜலானியும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார் . இந்நிகழ்வில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கைப் பெண்களின் நலனுக்காக தாம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த சஜித் அண்மையில் தமது மகளை குறிப்பிட்ட அரசாங்க வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது, குழந்தைக்குத் தாங்கள் கோரிய குறிப்பிட்ட ஊசி கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. https://thinakkural.lk/article/293157
  5. போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள்! தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த உண்ணாவிரதம் மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றைய தினம் மீண்டும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கைதாகியுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பையும், நேற்று முன்தினம் முதல் தொடர் உண்ணாவிரதத்தையும் முன்னெடுத்திருந்தனர். இந்தநிலையில், தமிழக சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் நேற்று மாலை முன்னெடுத்த பேச்சுவார்த்தையையடுத்து, உண்ணாவிரதம் மற்றும் பணிப்புறக்கணிப்பு என்பன கைவிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக கடலுக்கு சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. https://thinakkural.lk/article/293153
  6. வெப்பமான காலநிலையை கருத்திற் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு விசேட அறிவுறுத்தல்! அதிக வெப்பமான காலநிலையை கருத்திற் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்குமாறும் மாணவர்களை அதிகளவில் நீர் அருந்தச் செய்யுமாறும் சுகாதார அமைச்சின் குறித்த அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் இன்று முதல் ஓரளவு மாற்றத்தை எதிர்பார்க்க முடியுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/293149
  7. யாழ். உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள ஏழு இந்து கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு உட்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள ஏழு இந்து ஆலயங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இதற்கமைய கடுவன் முத்துமாரி அம்மன் கோவில், வசாவிளான் மணம்பிறை கோவில், விசாவிளான் சிவன் கோவில், வசாவிளான் நாக கோவில், பலாலி ராஜ ராஜேஸ்வரி கோவில், பலாலி நாக தம்பிலான் கோவில் மற்றும் பலாலி சக்திவேலி முருகன் கோவில் ஆகியவற்றில் வாராந்த பூஜை மற்றும் பிற சடங்குகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். கோவில் அறங்காவலர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பல கோரிக்கைகளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. முன்னர் இந்த கோவில் வளாகத்தில் மாதாந்த மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. https://thinakkural.lk/article/293136
  8. PUCSL மின் கட்டணக் குறைப்பு தொடர்பில் ஆராய்கிறது உத்தேச மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் ஆலோசிக்க, எதிர்வரும் புதன்கிழமை (28) கூடவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. இந்த திருத்தம் ஒக்டோபர் 2023 இல் அமுல்படுத்தப்பட்ட அதிகரிப்புக்குப் பிறகு வருகிறது. இலங்கை மின்சார சபை (CEB) தற்போதைய கட்டணத்தை குறைக்க கோரி ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக PUCSL தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் நோக்கில் புதிய பிரேரணை உள்ளதாக CEB முன்னர் அறிவித்திருந்தது. https://thinakkural.lk/article/293222
  9. மும்பை இண்டியன்ஸுக்கு இரண்டாவது வெற்றி 26 FEB, 2024 | 12:02 PM (நெவில் அன்தனி) இந்தியாவில் நடைபெற்றுவரும் 2ஆவது மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது வெற்றியை ஈட்டியது. குஜராத் ஜயன்ட்ஸுக்கு எதிராக பெங்களூர் எம்.சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு நடைபெற்ற மகளிர் பிறீமியர் லீக் போட்டியில் 11 பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிபெற்றது. இந்த வருட ஆரம்பப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸை கடைசிப் பந்தில் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 127 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 18.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அமேலியா கேரின் சகலதுறை ஆட்டம், அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோரின் சிறப்பான துடுப்பாட்டம் என்பன மும்பையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. முதலிரண்டு விக்கெட்களை 21 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்ட மும்பை இண்டியன்ஸ் அதன் பின்னர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி வெற்றியை தனதாக்கியது. நெட் சிவர் ப்றன்ட் 22 ஓட்டங்க்ளைப் பெற்று ஆட்டம் இழந்தார். (49 - 3 விக்.) அதனைத் தொடர்ந்து ஹாமன்ப்ரீத் கோர், அமேலியா கேர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். அமேலியா கேர் 31 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து பூஜா வஸ்த்ராக்கர் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். (118 - 5 விக்.) எனினும் ஹாமன்ப்ரீத் கோர் ஆட்டம் இழக்காமல் 46 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார். பந்துவீச்சில் தனுஜா கன்வார் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் நான்கு வீராங்கனைகள் மாத்திரமே 15 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பின்வரிசை வீராங்கனை தனுஜா கன்வார் அதிகப்பட்சமாக 28 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட ஆரம்ப வீராங்கனை அணித் தலைவி பெத் மூனி 24 ஓட்டங்களையும் கெத்ரின் ப்றய்ஸ் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களையும் ஏஷ்லி கார்ட்னர் 15 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அமேலியா கேர் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷப்னிம் இஸ்மாய்ல் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/177316
  10. பட மூலாதாரம்,SHVETA SHARMA படக்குறிப்பு, சுவேதா ஷர்மா, பாதிக்கப்பட்ட பெண் கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி செய்திகள், டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவின் முன்னணி வங்கி ஒன்றின் கிளை மேலாளர் தனது கணக்கிலிருந்து 16 கோடி ரூபாயை கையாடல் செய்துவிட்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது அமெரிக்க வங்கிக் கணக்கிலிருந்து ஐசிஐசிஐ வங்கிக்கு தனது பணத்தை செலுத்தியதாகவும், வைப்பு நிதியில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் சுவேதா ஷர்மா தெரிவித்தார். ஆனால், வங்கி அதிகாரி ஒருவர் போலி கணக்குகளை உருவாக்கி, தனது கையெழுத்தையும் போலியாக இட்டு, தனது பெயரில் டெபிட் கார்டு மற்றும் காசோலைகள் பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். “எனக்கு வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் குறித்து போலியான ஆவணங்கள் கொடுக்கப்பட்டன. எனது பெயரில் பொய்யான மின்னஞ்சல் முகவரியும் உருவாக்கப்பட்டிருந்தது. வங்கி தரவுகளில் எனது செல்போன் எண் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. எனவே பரிவர்த்தனைகள் குறித்து எனக்கு எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். “மோசடி நடந்துள்ளது உண்மை தான்” என்று வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் ஒப்புக் கொண்டார். எனினும் ஐசிஐசிஐ என்பது பல கோடி வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கான வைப்பு நிதிகளை கொண்டிருக்கும் பிரபல வங்கி எனவும் அவர் சுட்டிக்காட்டினார். “இந்த மோசடியில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். வாடிக்கையாளர் கணக்கில் ரூ.16 கோடியை கிளை மேலாளர் எடுத்தது எப்படி? கடந்த பல ஆண்டுகளாக ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் வசித்து வந்த ஷர்மா, 2016ம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகு, ஒரு நண்பரின் மூலம் வங்கி அதிகாரியை சந்தித்துள்ளார். அமெரிக்காவில் வைப்பு நிதிகளுக்கான வட்டி குறைவாக இருக்கும் என்றும், இந்தியாவில் 5.5%-6% வட்டி கிடைக்கும் என்பதால், இந்திய வங்கியில் பணத்தை செலுத்தலாம் என்று அந்த வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார். அவரது அறிவுறுத்தலின் பெயரில், டெல்லிக்கு அருகில் பழைய குருகிராம் பகுதியில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் வெளிநாட்டுவாழ் இந்தியருக்கான கணக்கை ஷர்மா தொடங்கியுள்ளார். 2019ம் ஆண்டு முதல் இந்த வங்கிக் கணக்கில் பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்திருக்கின்றன. “எங்கள் வாழ்நாள் சேமிப்பான ரூ.13.5 கோடியை 2019ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகால வைப்பு நிதியாக செலுத்தியிருந்தோம். அந்த தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.16 கோடிக்கும் மேலாக இருந்தது” என்று கூறினார் ஷர்மா. மோசடி நடந்தது குறித்து தனக்கு சந்தேகம் ஏற்பட்டதே இல்லை என்கிறார் அவர். “வங்கி கிளை மேலாளர் அவ்வபோது வைப்பு நிதிக்கான ஆவணங்களை அனுப்பி வைப்பார். மின்னஞ்சல் மூலமும் சில நேரம் வீட்டுக்கே நேரடியாகவும் அனுப்பி வைக்கப்படும்” என்றார். ஜனவரி மாத தொடக்கத்தில், வங்கியில் புதிதாக சேர்ந்த ஊழியர் ஒருவர் அவர் வங்கியில் வைப்பு நிதி தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறினார். அப்போது தான் மோசடி நடந்தது சுவேதா ஷர்மாவுக்கு தெரியவந்தது. விசாரித்து பார்த்ததில் அவருடைய வைப்பு நிதியில் உள்ள அனைத்து பணமும் இல்லாமல் விட்டது என்பதை தெரிந்துக் கொண்டார். “நானும் எனது கணவரும் அதிர்ச்சியானோம். ஒரு வைப்பு நிதியின் மீது 2.5 கோடி முன்பணமாக பெறப்பட்டிருந்தது. நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். எங்கள் கண் முன்னே எங்கள் வாழ்க்கை அழிக்கப்படுகிற போதும் எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை” என்று அவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மோசடி தெரியவந்ததும் ஐசிஐசிஐ வங்கி என்ன செய்தது? இந்த விவகாரம் வங்கியின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு பல முறை அவர்கள் மேல் அதிகாரிகளிடையே பேசப்பட்டதாக ஷர்மா கூறுகிறார். “ஜனவரி 16ம் தேதி, வங்கி மண்டல அதிகாரிகளையும் மும்பையிலிருந்து வந்த கண்காணிப்பு பிரிவு தலைவரையும் சந்தித்தோம். தங்கள் தரப்பில் தவறு ஏற்பட்டு விட்டதாகவும், வங்கிக் கிளை மேலாளர் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்தனர்” என்றார். “எங்கள் பணம் எங்களுக்கு திருப்பி தரப்படும் என்று உறுதி அளித்தனர். தவறு செய்தவர்களை கண்டறிய எனது உதவி தேவை என்று கூறினர். நானும் எனது குழுவினரும் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த பரிவர்த்தனைகளை சரிபார்த்து, வங்கி கண்காணிப்புக் குழுவிடம் அந்த தகவல்களை அளித்தோம்” என்றார். பணம் எப்படி கையாடப்பட்டிருக்கிறது என்று தெரிந்த போது மிகவும் ஆச்சர்யமாக இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். இரண்டு வாரங்களில் விவகாரத்தை முடித்துவிடுவதாக வங்கி அதிகாரிகள் கூறினாலும், ஆறு வாரங்கள் ஆகியும் இன்னும் பணம் திரும்ப கிடைக்கவில்லை என்று சுவேதா ஷர்மா கூறுகிறார். இந்நிலையில், ஐசிஐசிஐ வங்கி தலைமை செயல் இயக்குநர் மற்றும் துணை தலைமை செயல் இயக்குநருக்கு இதுகுறித்து கடிதம் எழுதினார் ஷர்மா. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வங்கியிடம் பிபிசி கேட்ட போது, அவர்களின் எழுத்துப்பூர்வமான பதிலில், முதல் கட்டமாக 9.27 கோடி அவரது கணக்கில் செலுத்தப்படும் என்றும் மீதி தொகை விசாரணைக்கு பிறகு செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் சுவேதா ஷர்மா, வங்கியின் இந்த நடவடிக்கைக்கு ஒப்புக் கொள்ளவில்லை. “எனக்கு கிடைக்க வேண்டிய ரூ.16 கோடியை விட மிக குறைவான தொகை இது. வங்கிக் கணக்கை முடக்கி தான் இந்த தொகையை தருவார்கள். அப்படி என்றால் போலீஸ் இந்த வழக்கை முடிக்கும் வரை கணக்கு முடக்கப்பட்டிருக்கும். வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகும்” என்றார் . மேலும், “எந்த தவறும் செய்யாத நான் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்? எனது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. நான் தூங்கி பல நாட்கள் ஆகின்றன” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES 'வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்' நிதி தொழில்நுட்ப நிறுவனமான “கேஷ்லெஸ் கன்ஸ்யூமர்”-ன் ஸ்ரீகாந்த் எல், இதுபோன்ற மோசடிகள் மிகவும் அரிதானது என்கிறார். “வங்கியில் நடைபெறும் பரிவர்த்தனைகளை கண்காணிக்க வழக்கமான ஆய்வுகள் நடைபெறும். இதுபோன்ற மோசடிகளை தவிர்ப்பதற்காகவே அவை நடத்தப்படும்” என்றார். ஆனால் வங்கி கிளை மேலாளர் உங்களை ஏமாற்ற வேண்டும் என முடிவு செய்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிடுகிறார். “வங்கி கிளை மேலாளர் என்பதால் அவர் கூறுவதை சுவேதா ஷர்மா நம்பிவிட்டார். ஆனால் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் பரிவர்த்தனைகளை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார். ராஜஸ்தானிலும் வங்கி மோசடி இதுபோன்ற முறைகேடுகளுக்காக இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக ஐசிஐசிஐ வங்கி செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில், ராஜஸ்தானில் இதேபோன்ற வழக்கு ஏற்பட்டது. வங்கி மேலாளரும் ஊழியர்களும், வங்கிக்கான இலக்குகளை அடைவதற்காக, பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கான ரூபாயை கையாடல் செய்து வந்ததாக காவல்துறை தெரிவித்தனர். ஒரு வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, புதிய கணக்கு திறந்து அதில் வைப்பு நிதி தொடங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்தனர். ஐசிஐசிஐ வங்கி செய்தித் தொடர்பாளர்,இந்த வழக்கில் வங்கி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்தது என்றும் வாடிக்கையாளர்கள் யாரும் தங்கள் பணத்தை இழக்கவில்லை என்றும் தெரிவித்தார். சுவேதா ஷர்மா விவகாரத்தில், “மூன்று ஆண்டுகளாக அவரது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என அவர் சரிபார்க்கவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார். “குற்றம் சாட்டப்பட்ட வங்கி கிளை மேலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நாங்களுமே ஏமாற்றப்பட்டுள்ளோம்” என்றார். "நாங்கள் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளோம், போலீஸ் விசாரணை முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும். அவரது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவரது பணம் வட்டியுடன் திரும்பி வரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் அதுவரை அவர் காத்திருக்க வேண்டும்.'' இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளரை பிபிசியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. https://www.bbc.com/tamil/articles/crg7gk0r461o
  11. உக்ரைன் நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வை காணவேண்டும் - சிறிதளவு மனிதநேயத்திற்காக நான் கெஞ்சுகின்றேன -பாப்பரசர் உருக்கமான வேண்டுகோள் Published By: RAJEEBAN 26 FEB, 2024 | 12:38 PM உக்ரைன் நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வை காணவேண்டும் என பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிரந்தரமான நியாயமான அமைதியை ஏற்படுத்தக்கூடிய இராஜதந்திர தீர்வை காணவேண்டும் என பரிசுத்த பாப்பரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு ஆரம்பமாகி நேற்றுடன் இரண்டு வருடங்களாகின்ற நிலையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மிகவும் நீண்டதாக மாறிக்கொண்டிருக்கும் யுத்தத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் - காயமடைந்துள்ளனர், அழிவும் துயரமும் கண்ணீரும் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள பரிசுத்த பாப்பரசர் இந்த யுத்தம் அந்த பிராந்தியத்தில் மாத்திரம் பேரழிவை ஏற்படுத்தவில்லை, சர்வதேச அளவில் வெறுப்புணர்வையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். நியாயமான மற்றும் நீடித்த அமைதியை தேடும் இராஜதந்திர சூழ்நிலையை உருவாக்குவதற்காக சிறிதளவு மனிதநேயத்திற்காக நான் கெஞ்சுகின்றேன் மன்றாடுகின்றேன் என பாப்பரசர் தெரிவித்துள்ளார். கொங்கோவில் அதிகரிக்கும் மோதல்கள் குறித்தும் அவர் கவலைவெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/177320
  12. நிலவில் கால் பதிக்க அமெரிக்கா, இந்தியா, சீனா போட்டா போட்டி - முந்துவது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 பிப்ரவரி 2024, 11:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னும் சில ஆண்டுகளில் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் காலடி எடுத்து வைத்ததே முதல் முறையாக மனிதர்கள் நிலவில் தரையிறங்கியது. அதற்கு பிறகு, தொடர் அப்பல்லோ திட்டங்களின் மூலமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி இதுவரை மொத்தம் 12 பேரை நிலவில் தரையிறக்குவதில் வெற்றி பெற்றுள்ளது அமெரிக்கா. அதை தொடர்ந்து ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் நிலவில் தங்களது விண்கலம், லேண்டர்கள் அல்லது ரோவர்களை தரையிறக்குவதில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் இதில் மனிதர்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் அமெரிக்கா தனது ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. சீனா மற்றும் இந்தியாவும் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றி வருகின்றன. நிலவில் தளம் அமைக்க அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுமே போட்டாபோட்டியில் ஈடுபட்டுள்ளன. இதில் முந்தப் போவது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் காலடி எடுத்து வைத்ததே முதல் முறையாக மனிதர்கள் நிலவில் தரையிறங்கியது நிலவுக்கு பயணம் விண்வெளிக்கு செல்ல ராக்கெட் தொழில்நுட்பம் மிகமிக அவசியம். பனிப்போர் காலகட்டத்தில், யார் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது என்பதில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு போட்டித் தொடங்கியது. அந்த போட்டியில் 1961 ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் யூரி ககாரினை விண்வெளிக்கு அனுப்பி வெற்றி பெற்றது. 'தி எக்கனாமிஸ்ட்' பத்திரிகையின் மூத்த ஆசிரியரும், 'தி மூன் : எ ஹிஸ்டரி ஃபார் தி ஃபியூச்சர்' என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஆலிவர் மார்டன், “மனிதர்களை நிலவு அல்லது விண்வெளிக்கு அழைத்துச் செல்வது மிகப்பெரிய சவாலான பணி என்று கூறப்படுகிறது. இது உலக அரங்கில் குறிப்பிட்ட நாட்டின் நம்பகத்தன்மையையும், பலத்தையும் அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், சோவியத் ஒன்றியத்தின் வெற்றிக்குப் பிறகு, அமெரிக்கா மீதான அழுத்தம் அதிகரித்தது” என்று கூறுகிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், "சோவியத் வெற்றிக்கு பிறகு அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தின் சாதனையை விட வேறு ஒரு சிறந்த சாதனையை படைக்க விரும்பியது." இதை விட பெரிய சாதனையாக நிலவுக்கு ஒரு மனிதனை அனுப்புவதே கருதப்பட்டது. ஆனால், அதற்கு அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் தேவைப்பட்டது. இருந்தாலும் நிலவில் கால் பதிப்பதன் மூலம், உலக அரங்கில் தனது முத்திரையை பதிக்க விரும்பியது அமெரிக்கா” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1961 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் யூரி ககாரினை விண்வெளிக்கு அனுப்பி வெற்றி பெற்றது. “அதனை தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு, அப்பலோ 11 விண்கலம் மூலம் இரண்டு விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கி மெரிக்கா வெற்றி பெற்றது. அதன் பிறகு மற்ற அப்பல்லோ பயணங்கள் மூலம் மேலும் பத்து பேரை நிலவுக்கு அனுப்புவதில் வெற்றி பெற்றது. இது பெரிய அறிவியல் சாதனை மட்டுமல்ல, அமெரிக்காவின் அரசியல் சாதனையும் கூட. நிலவின் மேற்பரப்பில் இரண்டு மனிதர்கள் நடந்து செல்லும் படங்கள் உலகம் முழுவதும் பரவியது. ஆனால் அதைவிட மற்றொரு படம் மக்களை மிகவும் கவர்ந்தது.” மேலும் பேசிய ஆலிவர் மார்டன், "நிச்சயமாக நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் இருக்கும் படங்கள் உலகம் முழுவதும் பரவின. ஆனால், அதைவிட நிலவிலிருந்து பூமியை எடுக்கப்பட்ட படம்தான் உலக மக்களின் மனதில் இடம்பிடித்தது. உயிர்கள் வாழும் கிரகமான பூமியின் படத்தை மக்கள் பார்த்து திகைத்து போய் நின்றது மட்டுமின்றி, அவற்றை தங்களது வீடுகளில் போஸ்டர்களாக ஒட்டிக் கொண்டனர்” என்று குறிப்பிடுகிறார். அதற்கு பிறகு சோவியத் யூனியனால் நிலவுக்கு மனிதனை அனுப்பவே முடியவில்லை. ஆனால் 1970களில் மனிதர்கள் விண்வெளிக்கு பயணிப்பதன் முக்கியத்துவம் ஏன் குறைந்தது? அதற்கு காரணம் இதில் அமெரிக்கா ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதே என்று ஆலிவர் மார்டன் நம்புகிறார். அது ஏற்கனவே ஒன்றுக்கும் அதிகமான முறை மனிதர்களை ஆய்வுக்காக விண்வெளிக்காக அனுப்பிவிட்டது. இந்நிலையில் அதன் மீதான ஆர்வம் குறைந்து, அந்த திட்டங்களையே அமெரிக்கா நிறுத்திவிட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த திட்டங்கள் இப்போது உயிர் பெற்றுள்ளன. நிலவில் மனிதனை தரையிறக்கும் முயற்சியை மீண்டும் முன்னெடுத்துள்ளது அமெரிக்கா. ஆனால், மற்ற நாடுகளுக்கு முன் அதை செய்து முடிப்பது கடினம்தான். இந்த முறை போட்டியும் கடுமையாக உள்ளது என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவும் சீனாவும் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பத் தயாராகி வருகின்றனர். நிலவுக்கு செல்வதற்கான போட்டி அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான நிலையில் உள்ளது. ஆனால், இந்த முறை இரு நாடுகளும் தங்களது போட்டியை பூமிக்கு அப்பால் கொண்டு சென்றுள்ளனர். தொழில்நுட்பம் சார்ந்து எழுதிவரும் இணையதளமான ஆர்ஸ் டெக்னிகாவின் விண்வெளி விவகாரங்களுக்கான மூத்த ஆசிரியர் எரிக் பர்கர் கூறுகையில், “அமெரிக்காவும் சீனாவும் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பத் தயாராகி வருகின்றனர். இதற்காக இருவரும் சர்வதேச கூட்டாளிகளுடன் தங்களது ஒத்துழைப்பை தொடங்கியுள்ளனர். இது நேரடியாக அரசியலுடன் தொடர்புடையது என்கிறார்.” "நிலவின் மேற்பரப்பில் குறைந்த ஈர்ப்பு விசையே உள்ளது என்பதாலும், அது பூமிக்கு மிக அருகில் இருக்கிறது என்பதாலும் அது நடைமுறை சாத்தியமான மற்றும் சிறந்த இலக்காக பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். ஆனால் நிலவுக்கோ வெறும் மூன்று நாட்கள் போதும். எனவே நிச்சயமாக நிலவுதான் அடுத்த இலக்காக இருக்கும்.” நிலவை அடைவதற்கான இந்த போட்டி குறித்து பேசுவதற்கு முன், அதிலுள்ள மிகப்பெரிய தொழில்நுட்ப சிக்கல்களைப் குறித்து பேசுவது அவசியம். இந்த பயணத்தில் ராக்கெட்டை விண்வெளிக்கு எடுத்துச் செல்வதும், விண்வெளி வீரர்களை கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பதும், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதும் மிகப்பெரிய சவாலாகும். அதே ராக்கெட்டை மீண்டும் பூமிக்கு கொண்டு வர, நிலவில் இருந்து ஏவுவது இன்னும் கடினம் என்கிறார் எரிக். "பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவும்போது அதை கண்காணிக்கவும், கவுண்ட் டவுன் தொடங்கவும், எரிபொருள் இயக்கத்தை தொடங்கவும், ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் உடனே செயல்பாட்டை நிறுத்தவும் வசதிகள் உள்ளன. ஆனால், நிலவில் இது எல்லாமே தானியங்கி முறையில் தான் நடக்கும். மேலும், ராக்கெட் பூமியின் சுற்று வட்டப்பாதையில் நுழையும்போது அதன் வேகம் அதிகமாக இருப்பதால் வெளிப்படும் வெப்பத்திலிருந்து ராக்கெட்டை பாதுகாக்க வலுவான வெப்ப கவசம் தேவைப்படுகிறது.” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த போட்டியில் நிலவின் தென் துருவத்தின் மீது தான் அதிக ஆர்வம் உள்ளது. இந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, விண்வெளி வீரர்களின் உயிரையும், மக்களின் பில்லியன்கணக்கான டாலர்களையும் மீண்டும் பணயம் வைக்க வேண்டிய அவசியம் உள்ளதா? ஒருவேளை இப்போது இந்த பந்தயத்தின் வடிவம் மாறியிருக்கலாம். ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால், முதலில் நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்வது யார் என்பது அல்ல, மாறாக சந்திரனில் மனிதன் வாழக்கூடிய மற்றும் அதைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தொழில்நுட்பத்தை யார் முதலில் கண்டுபிடிப்பது?, அதாவது யார் முதலில் நிலவில் மனிதக் குடியேற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதே இந்த போட்டி. இதுகுறித்து எரிக் பர்கர் கூறுகையில், இந்த போட்டியில் நிலவின் தென் துருவத்தின் மீது தான் அதிக ஆர்வம் உள்ளது, ஏனெனில் அந்த பகுதியில் உள்ள பள்ளங்கள் சூரிய ஒளி படாமல் எப்போதும் இருளில் இருக்கும். அங்கு நீர் பனிக்கட்டி வடிவில் உறைந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இது ஒரு மிக முக்கியமான வளமாக இருக்கலாம். நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவு கொண்ட இந்தப் பகுதியில் ஆராய்ச்சி மையத்தை நிறுவ ஆய்வாளர்கள் விரும்புகிறார்கள். இது ஒரு சிறிய பகுதி என்பதால் அதன் மீதான கட்டுப்பாடு யார் என்பதில் மோதல் ஏற்படுமா? தற்போதைய கேள்வியே அதன் தொழில்நுட்ப அல்லது அரசியல் பலன் என்ன என்பதுதான். இந்த போட்டியே மக்கள் மனதில் யார் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதேயாகும். அதில் அமெரிக்காவின் பிரதான போட்டியாளராக சீனா இருக்கும் என்பதே எரிக் பர்கரின் கருத்து. எரிக் பர்கரின் கூற்றுப்படி, கடந்த இருபது ஆண்டுகளில் சீனா இதில் நிறைய முன்னேற்றத்தை கண்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் போன்ற சிறிய மாதிரியை தயார் செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் தனது பயணத்தின் போது, சீனா செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்தது மட்டுமல்லாமல், அதன் மேற்பரப்பில் தரையிறங்குவதில் வெற்றியும் பெற்றது. இது பெரிய சாதனை. 2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் தனது ஆய்வுத்தளத்தை உருவாக்க சீனா விரும்புகிறது. ஆனால் அமெரிக்கா இதே விஷயத்தை 2028 ஆம் ஆண்டிற்குள் செய்ய விரும்புகிறது. ஆனால் அதன் திட்டம் ஏற்கனவே தாமதமாகிவிட்டது. இதற்காக அந்நாடு கோடீஸ்வரர் எலான் மஸ்க் மற்றும் அவரது 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தை சார்ந்துள்ளது. நாசாவிற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ஸ்டார்ஷிப் விண்கலம் இல்லாமல் இது சாத்தியமில்லை என்று கூறுகிறார் எரிக் பெர்கர். விண்வெளி ஆய்வு பணிகளுக்காக அமெரிக்காவும், சீனாவும் தனியார் நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாசாவின் 'ஆர்டெமிஸ் மிஷன்' திட்டத்திற்காக விண்கலத்தை தயாரிக்கும் பொறுப்பு எலான் மஸ்க் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிலவில் வணிகத்திற்கான சாத்தியங்கள் நிலவில் மனிதர்களை இறக்கி, அங்கேயே சில காலம் தங்கி ஆராய்ச்சி செய்ய பல வகையான தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இதில் பல நாடுகள் ஆர்வமாக உள்ளன. நிலா குறித்த ஆராய்ச்சி மற்றும் அங்குள்ள வளங்களை அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு என்னென்னெ விதிகள் மற்றும் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்தின் வடக்கு அம்ப்ரியா பல்கலைக்கழகத்தின் விண்வெளி கொள்கை மற்றும் ஒழுங்குமுறை பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் அமெரிக்காவும் அதன் ஆர்ட்டெமிஸ் மிஷனும் இந்த திட்டத்தை தலைமையேற்று நடத்தும் என்று நம்புகின்றன" என்கிறார். "பல நாடுகளும், நிறுவனங்களும் நிலவில் தங்களது நிலைகளை உருவாக்கி, அங்கு கிடைக்கும் வளங்களைச் சுரண்ட ஆசைப்படுவதனாலேயே அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதே காரணம்தான் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கும் உள்ளது. நிலவில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்க முடியும்.” பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனது விண்வெளித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டதன் மூலம் சீனா ஓரளவு வெற்றி பெற்றது. ஆனால் இந்த துறையில் இன்னமும் மிக முக்கியமான நபராக எலான் மஸ்க் இருந்து வருகிறார். நாசாவின் 'ஆர்டெமிஸ் மிஷன்' திட்டத்திற்காக விண்கலத்தை தயாரிக்கும் பொறுப்பு அவரது நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் லட்சியம் மிகப் பெரியது என்று கூறுகிறார் கிறிஸ்டோபர் நியூமன். மேலும் "இந்த விண்கலம் தயாரிப்பு திட்டத்தில் ஈடுபட்டிருப்பதன் மூலம் மனித எதிர்காலத்தின் திசையை நிர்ணயிக்கும் பணியில் தான் ஈடுபட்டுள்ளதாக காட்ட விரும்புகிறார் எலான் மஸ்க்” என்கிறார் கிறிஸ்டோபர் நியூமன். “வேற்று கிரகங்களில் மனித குடியிருப்புகளை நிறுவுவதில் எலான் மஸ்க்கின் விண்கலம் முக்கிய பங்கு வகிக்கும். அவர்களின் லட்சியம் வெறும் லாபமீட்டுவதையும் தாண்டி மிகப்பெரியது." விண்வெளி ஆய்வுப் பணிகளில் தனியார் நிறுவனங்களை இணைத்துக்கொள்வது பல கேள்விகளை எழுப்புகிறது. இதுகுறித்து பேசிய கிறிஸ்டோபர் நியூமன் , நாம் மற்ற கிரகங்களுக்குச் செல்ல விரும்பினால் அல்லது அங்கு மனிதர்களைக் குடியேற்ற விரும்பினால், அங்கு என்ன விதிகள் இருக்கும்?, குற்றங்கள் எவ்வாறு வரையறுக்கப்படும்?, தண்டனைகள் எப்படி வழங்கப்படும்?. இந்த விதிகளின் எல்லைக்குள் தனியார் நிறுவனங்களை வைத்திருப்பது சவாலானது. இத்தகைய சூழலில், விண்வெளிப் பயணங்களில் தனியார் நிறுவனங்களைச் சார்ந்திருப்பது அரசாங்கங்களுக்கு கவலையளிக்கும் விஷயம் என்பது நிரூபிக்கப்படலாம்” என்கிறார். "ஸ்பேஸ்எக்ஸின் பிரச்னையும் இதுதான்" என்கிறார் கிறிஸ்டோபர் நியூமன். இதன் வழியாக எலான் மஸ்க் மிகவும் சக்தி வாய்ந்த நபராக மாறுவார். அதற்கு பின் அவரைக் கட்டுப்படுத்துவது கடினம். நாம் தற்போது வாழ்ந்து வரும் பூமியில் அழிவு ஏற்பட்டால் மற்ற கிரகங்களில் குடியேறி விடலாம் என்று, அங்கெல்லாம் மனித குடியேற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கிறது. அவர்களுள் ஒருவர்தான் எலான் மஸ்க். ஆனால், மற்ற கிரகங்களில் குடியேற்றங்களை நிறுவுவதற்கு முன்பு மனிதர்களை நிலவில் சில காலம் வைத்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் என்ன பலன்கள் கிடைக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் நிலவின் தென் துருவத்திலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் தரையிறங்கியது. அதன் மூலம் சந்திரனில் சல்பர், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது" நிலவில் நீர் இருக்கிறதா? இல்லையா? அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டின் பேராசிரியரும், விண்வெளிக் கொள்கை நிபுணருமான நம்ரதா கோஸ்வாமி பேசுகையில், “ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையின் குறிக்கோளே நிலவில் முகாமை உருவாக்குவதுதான். இதன் மூலம் நிலவில் உள்ள வளங்களைப் பயன்படுத்தலாம். மேலும் செவ்வாய் கிரகத்தை அடையும் திறனையும் அதிகரிக்க முடியும். சமீபத்தில், நிலவில் இரும்பு, டைட்டானியம் மற்றும் பிற பயனுள்ள கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது.” "இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் நிலவின் தென் துருவத்திலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் தரையிறங்கியது. அதன் மூலம் சந்திரனில் சல்பர், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் பனிஉறைந்த நீர் இருப்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. 2026 இல், இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து நிலவில் உள்ள பனி உறைந்த நீரைக் கண்டறிய நிலவுக்கு மற்றொரு பயணத்தை தொடங்க உள்ளன. நிலவில் மனிதர்கள் குடியேறுவதற்கு பனியாக உறைந்துள்ள நீர் அவசியம். ஏனெனில் அதில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்க முடியும்.” விண்வெளியில் மேலும் ஆய்வு செய்வதற்கு நிலவை ஒரு தளமாகப் பயன்படுத்தலாம் என்பதை இவை சுட்டிக்காட்டுகின்றன. “நிலாவை தளமாக்குவதன் மூலம் அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை எளிதில் அனுப்ப முடியும்” என நம்புகிறார் நம்ரதா கோஸ்வாமி. 2036ம் ஆண்டுக்குள் நிலவில் தளம் அமைத்து விட வேண்டும் என சீனா விரும்புகிறது. இந்தியாவும் இதே திட்டத்தை அறிவித்துள்ளது. வெற்றி கிடைத்தால், நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அங்கிருந்து ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியும். பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவுவதற்கான செலவு மிகவும் அதிகம். காரணம் நிலவின் ஈர்ப்பு விசையில் இருந்து வெளியேறுவதை விட, பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து வெளியேற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது. அதனால்தான், பல நாடுகளும் நிலவை முக்கியத்துவம் வாய்ந்த வளமாக பார்க்கின்றன. ஆனால் இது தவிர, எதிர்காலத்தில் நிலவால் கிடைக்கும் நன்மைகள் ஏதேனும் உண்டா? உதாரணமாக, நிலவின் சில பகுதிகள் எப்போதும் சூரிய ஒளியில் இருக்கும். ஆனால், அங்கு மேகங்களோ அல்லது வளிமண்டலமோ இருக்காது. எனவே நிலவின் அந்தப்பகுதியை சூரிய சக்தியை பயன்படுத்தி ஆற்றல் உற்பத்தி செய்ய பயன்படுத்த முடியும். இதுகுறித்து நம்ரதா கோஸ்வாமி கூறுகையில், "நிலவில் சூரிய சக்தியை உற்பத்தி செய்து, மைக்ரோவேவ் மூலம் குறைந்த சுற்றுப்பாதையில் பெரிய செயற்கைக்கோள்கள் வழியாக பூமிக்கு அனுப்ப முடியும்" என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியில் உள்ள புதைபடிவ எரிபொருள்கள் இன்னும் சில காலத்திற்குப் பிறகு தீர்ந்துவிடும். அதுபோன்ற சூழலில், விண்வெளியில் காணப்படும் சுத்தமான சூரிய ஆற்றல் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நிலவில் கால் பதிக்க அமெரிக்கா, இந்தியா, சீனா போட்டி - முந்துவது யார்? பூமியில் இரவு நேரம் இருக்கிறது, அதே போல் இங்கு வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் சூரிய சக்தி உற்பத்தியை பாதிக்கிறது. ஆனால் விண்வெளியில் 24 மணி நேரமும் சூரிய சக்தியை உருவாக்க முடியும். பூமியில் உள்ள புதைபடிவ எரிபொருள்கள் இன்னும் சில காலத்திற்குப் பிறகு தீர்ந்துவிடும். அதுபோன்ற சூழலில், விண்வெளியில் காணப்படும் சுத்தமான சூரிய ஆற்றல் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். தற்போது இங்கு எழும் கேள்வி என்னவென்றால், யார் இந்த வளங்களை, எந்த அளவு பயன்படுத்த முடியும்? 1967 விண்வெளி ஒப்பந்தத்தின் படி, எந்த நாடும் விண்வெளியில் அதிகாரத்தை செலுத்த முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவோ, சீனாவோ நிலவின் இருண்ட பகுதிக்கு சென்று அங்கு குடியிருப்புகளை ஏற்படுத்தினாலும் கூட, அதை தங்கள் பகுதியாக உரிமைகோர முடியாது. ஆனால் யதார்த்தம் இதிலிருந்து வேறுபட்டிருக்கலாம். நிலவின் வளங்களை சமமாக பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான எந்த சட்ட அமைப்பும் தற்போது இல்லை என்றும், முதலில் அங்கு சென்றடையும் நாடுகளே இதன் மூலம் பயனடையும் என்பதே கவலைக்குரிய விஷயம் என்றும் நம்ரதா கோஸ்வாமி கூறுகிறார். இந்நிலையில் அடுத்த முறை நிலவில் யார் முதலில் காலடி வைப்பது என்பது தற்போதைய கேள்வி? ஆனால், இந்த காலகட்டத்தில் நிலவை அடைவது என்பது விஞ்ஞான ரீதியிலான சாதனைக்கானது மட்டுமல்ல, அதை தாண்டி நிலவில் இருந்து சூரிய சக்தியைப் பெறவும், அங்கு ஒரு தளத்தை உருவாக்குவதன் மூலம் மற்ற கிரகங்களுக்கு ஆய்வு பணிகளுக்கு செல்லவும் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். தற்போதைய நிலவரத்தை பொறுத்தவரை 2028ல் அமெரிக்கா மீண்டும் நிலவில் காலடி எடுத்து வைக்கும் என தெரிகிறது. இரண்டு வருடங்கள் கழித்து சீனாவும் பத்து வருடங்கள் கழித்து இந்தியாவும் நிலவில் காலடி வைக்கும். https://www.bbc.com/tamil/articles/crg4y1jjl3xo
  13. Published By: VISHNU 26 FEB, 2024 | 06:21 PM அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஆலோசனைகளை குறிப்பிட்டு கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் தெரியபடுத்துமாறு கல்வி அமைச்சு ,அனைத்து மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலில் மாணவர்களுக்கான விசேட குறிப்பிடுவதாவது , 1. கறுப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கவும் 2. தொப்பி அணிந்து அல்லது குடையைப் பிடித்தவாறு வெயில் செல்லுங்கள் 3. வீட்டிலிருந்து செல்லும் போது சுத்தமான குடிநீரை எடுத்து செல்லவும் 4. அதிகளவில் தண்ணீர் அல்லது இளநீர் அருந்தவும் 5. அதின வெப்பநிலை காரணமாக ஏதேனும் நோய் அறிகுறிகள் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் பாடசாலை ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்களிடம் தெரிவிக்கவும் 6. உடல் சூட்டை குறைக்க தேவையானவற்றைக் கடைப்பிடிக்கவும் 7. தேவையற்ற சந்தர்ப்பங்களில் டையை இறுக்கமாக கட்டிக் கொள்வதனை தவிர்க்கவும் https://www.virakesari.lk/article/177373
  14. குஜராத்தில் தங்கத்தை தேடி தோண்டியபோது கிடைத்தவை, மனித வரலாற்றை மாற்றும் பொக்கிஷங்களா? பட மூலாதாரம்,PRASHANT GUPTA படக்குறிப்பு, லோத்ரானி பகுதியில் ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்த தொன்ம எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 26 பிப்ரவரி 2024, 02:39 GMT குஜராத் மாநிலம் கட்ச் நகரின் தோலாவிராவிலிருந்து 51 கிமீ தொலைவில் உள்ள லோத்ரானி பகுதியில் ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்த தொன்ம எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தோலாவிராவில் கிடைத்த புதைபடிவங்களைப் போன்றே இங்கும் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சிந்து சமவெளி பண்பாட்டின் முக்கிய நகரங்களாகக் கருதப்படும் ஆமதாபாத்தின் லோத்தல் மற்றும் கட்சின் தோலாவிரா ஆகியவை, தற்போது குஜராத்தின் உலகளாவிய அடையாளங்களாக மாறியுள்ளன. பேராசிரியர் டாமியன் ராபின்சன் வழிகாட்டுதலின் படி, ஆய்வாளர் அஜய் யாதவ், லோத்ரானி பகுதியில் ஆய்வு செய்து இந்த புதைபடிவங்களைக் கண்டுபிடித்துள்ளார். அவர்கள் இருவரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பகுதியின் உள்ளூர்வாசிகள் தங்கத்தை தேடும் முயற்சியில் இந்த இடத்தை தோண்டும்போது, இந்த புதைபடிவங்களை கண்டுபிடித்ததாக தெரிவிக்கிறார் அவர். அவற்றை முதற்கட்டமாக ஆய்வு செய்ததில் இந்த படிமங்கள் ஹரப்பா காலத்தைச் சேர்ந்தவை என்பதை அவர் உணர்ந்துள்ளார். அஜய் யாதவின் கூற்றுப்படி, தோலாவிராவில் கிடைத்த பெரிய அளவிலான ஹரப்பா மண்பாண்டங்களை போலவே இங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹரப்பா நாகரீகத்துடன் ஒப்பிடுகையில், இந்த குடியேற்றம் மிகவும் முதிர்ச்சியடைந்ததாக தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த இடத்தை விரிவாக ஆய்வு செய்வதன் மூலம் மேலும் பல உண்மைகளை கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. பட மூலாதாரம்,PRASHANT GUPTA படக்குறிப்பு, இதற்கு முன்பு ஏற்கனவே இந்த பகுதியில் ஹரப்பாவை சேர்ந்த மூன்று குடியேற்ற பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன? ஆய்வாளர்கள் குழு கட்சின் காதிர் மற்றும் பெல்லாபெட் பகுதிகளில் பல இடங்களை ஆராய்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில், லோத்ராணிக்கும் ராசா-ஜி கர்தாவுக்கும் இடையே தோலாவிராவிலிருந்து கிழக்கே 51 கிலோமீட்டர் தொலைவில் ஹரப்பா காலத்து குடியேற்றம் உள்ளது என்பதை தெரிந்துகொண்டார் அஜய். இதற்கு முன்பு ஏற்கெனவே இந்த பகுதியில் ஹரப்பாவை சேர்ந்த மூன்று குடியேற்ற பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு பேலியோலித்திக் காலத்தை சேர்ந்தவை. இதில் கமானியாவில் உள்ள டிம்பி-2, சயாகானில் உள்ள வந்த் மற்றும் ஜடாவாடாவிற்கு அருகிலுள்ள மோரூவின் ஹரப்பா தொல்பொருள் ஆய்வுத்தளங்கள் ஆகியவை அடங்கும். இந்த பகுதிகளில் பல தசாப்தங்களாகவே ஏராளமான ஆய்வுகள் நடைபெற்று வரும் போதிலும் கூட, எதையும் உறுதியாக கண்டறியமுடியவில்லை. இந்நிலையில் மோலோதரில் நிறைய மண்பாண்டங்கள், டெரகோட்டா பீப்பாய்கள் மற்றும் புதைகுழிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, உறுதியான குடியிருப்புகள் (ஹரப்பா காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது), துளையிடப்பட்ட ஜாடிகள், மண்பாண்டங்கள் ஆகியவை இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் குடியிருப்புகளின் சுவர்கள் சராசரியாக 3.3 மீட்டர் தடிமன் கொண்டவை. வடமேற்கு திசையில் சராசரியாக 10*10 மீட்டர் அளவுள்ள அறைகளைக் கொண்டிருக்கும் ஒரு கிணறும் உள்ளது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதைபடிவங்கள் தோலாவிராவைப் போலவே இருப்பதால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,PRASHANT GUPTA படக்குறிப்பு, பல ஆண்டுகளாக, இந்திய தொல்லியல் துறை, கேரள பல்கலைக்கழகம், கட்ச் பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்கள் லோத்ரானியில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன கேள்வி எழுப்பும் ஆய்வாளர்கள் இந்நிலையில் இந்த கண்டுபிடிப்புகள் குறித்து பல ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஸ்பெயினில் உள்ள கேட்டலான் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிளாசிக்கல் ஆர்க்கியாலஜியின் ஆராய்ச்சியாளர் பிரான்சிசி. சி , புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல் தவறானது என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவை ஏற்கெனவே ஆய்வில் இருப்பவைதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளாக, இந்திய தொல்லியல் துறை, கேரள பல்கலைக்கழகம், கட்ச் பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்கள் லோத்ரானியில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கண்டுபிடிப்பு குறித்து இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இது தொடர்பாக இந்திய தொல்லியல் துறையின் வதோதரா வட்ட கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ஏ.எஸ்.வி.சுப்ரமணியத்தை தொடர்பு கொள்ள பிபிசி குஜராத்தி பலமுறை முயற்சித்தது. எனினும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பட மூலாதாரம்,K AMARNATH RAMAKRISHNAN / FACEBOOK படக்குறிப்பு, "குஜராத்தில் இதற்கு முன்பே ஏராளமான தொல்பொருள் ஆய்வுத்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்று கூறுகிறார் தொல்பொருள் ஆய்வாளர்அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வாளர்கள் கூறுவது என்ன? குஜராத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைபடிவங்கள் குறித்து தொல்பொருள் ஆய்வறிஞரான அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் பேசினோம். குஜராத்தில் இதற்கு முன்பே ஏராளமான தொல்பொருள் ஆய்வுத்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று கூறும் அவர், இந்த பகுதி கட்ச் கடல்பகுதியை ஒட்டியிருப்பதால் பல்வேறு நகரங்களுடன் வணிகத்தொடர்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார். “ஏற்கனவே இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் பல தொல்பொருள் எச்சங்கள் கிடைத்துள்ளது. இந்த பகுதி கடலை சார்ந்ததாக இருந்ததால், இவர்களுக்கு சுமேரியன் தொடர்புகள் இருந்துள்ளது” என்றார். குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டவைகளில் இருந்து இரண்டு மாநிலங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளதா என்று அவரிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “ இன்னும் அதற்கான விரிவான ஆய்வுகள் செய்யப்படவில்லை. மகாராஷ்டிரா தைமாபாத்தோடு ஆய்வு நிற்கிறது. மேலும் ஆய்வை செய்தால் மட்டுமே தொடர்புகள் குறித்து கண்டறிய முடியும்” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிந்து சமவெளி நாகரிகம் இன்றைய இந்தியாவின் மேற்கில் சிந்து நதிக்கரையிலும், கிழக்கே பாகிஸ்தானிலும் உருவானது. ஹரப்பா நாகரிகம் என்றால் என்ன? சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகில் மூன்று பெரிய நாகரிகங்கள் இருந்துள்ளன. அதில் ஒன்றான பண்டைய எகிப்து நாகரிகம் நைல் நதிக்கரையில் செழுமையான நகரங்களையும், அரண்மனைகளையும் கட்டியெழுப்பியது. மற்றொரு நாகரிகமான மெசபடோமிய நாகரிகம் மேற்கு மற்றும் மத்திய-கிழக்கு ஆசியாவில் டைக்ரிஸ்-யூப்ரடீஸ் நதிக்கரையில் உருவானது. அதே சமயத்தில், சிந்து நதிக்கரையில் ஒரு நாகரீகமும் உருவாகியிருந்தது. மேலும் அதுவே அந்தக் காலத்தின் மிக நவீன மற்றும் நகர்ப்புற கலாச்சாரமாக கருதப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகம் இன்றைய இந்தியாவின் மேற்கில் சிந்து நதிக்கரையிலும், கிழக்கே பாகிஸ்தானிலும் உருவானது. பாகிஸ்தானில் உள்ள ஹரப்பா இந்த நாகரிகத்தின் முக்கிய மையமாக இருந்தது. எனவே இந்த பண்டைய நாகரிகம் 'ஹரப்பா நாகரிகம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் வேர்கள் வடக்கே ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கில் குஜராத் வரை பரவியுள்ளது. ஹரப்பா, கனேரிவாலா, மொஹஞ்சதாரோ, தோலாவிரா, காளி வங்காளம், ராக்கிகர்ஹி, ரூபார் மற்றும் லோத்தல் ஆகியவை இந்த கலாச்சாரத்தின் முக்கிய நகரங்களாகும். கட்சில் உள்ள தோலாவிரா மற்றும் அகமதாபாத்திற்கு அருகிலுள்ள லோத்தல் ஆகியவை குஜராத்தில் உள்ள சிந்து சமவெளி நாகரிகத்தின் தொல்பொருள் தளங்கள் ஆகும். ஆராய்ச்சியாளர்கள் இதை இந்திய கலாச்சாரத்தின் அடித்தளமாக கருதுகின்றனர். இந்தியாவின் இன்றைய வாழ்க்கைமுறை இந்த கலாச்சாரத்தின் அடித்தளத்தில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் நம்புகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c1v1w6wxggno
  15. அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71 சத வீதமானவை முறையாகச் செயற்படவில்லை: கணக்கெடுப்பில் தகவல்! Published By: VISHNU 26 FEB, 2024 | 05:21 PM நாட்டிலுள்ள அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71 சத வீதமானவை முறையாகச் செயற்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராசிரியர் வசந்த அத்துகோரலவின் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளி விபரவியல் திணைக்கள மாணவர்கள் குழுவினால் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பின்படி, அரச நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 29 சத வீதமானவை மட்டுமே சரியாக இயங்குவதாகவும் 49 சத வீதமானவை இயங்கவில்லை என்றும், 22 சத வீதமானவை செயற்பாட்டில் இருந்தாலும் யாருக்கும் பதிலளிப்பதில்லை என்றும் தெரிய வந்துள்ளது. நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகள் இந்த கணக்கெடுப்புத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன்படி, கணக்கெடுக்கப்பட்ட 276 பிரதேச சபைகளில் 98 பிரதேசங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 14 சத வீதமான தொலைபேசி இணைப்புகள் இயங்கவில்லை, 42 சத வீதமானவை பதிலளிக்கப்படவில்லை. 44 சத வீதமானவை மட்டுமே பதிலளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் பதிலளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக வழங்கப்பட்ட பதில்கள் தெளிவற்றதாகவும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தப் பயனும் அல்லது பொருத்தமும் இல்லை என்றும் பேராசிரியர் அத்துகோரள மேலும் கூறினார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதிகாரிகளும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/177367
  16. 36 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய இந்தியாவை கில் - ஜூரெல் ஜோடி கரை சேர்த்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ராஞ்சியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 5விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து டெஸ்ட் தொடரை வென்றது. டெஸ்ட் தொடர் வெற்றி 2வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்து இருந்தது. 61 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சுப்மான் கில் 52 ரன்களுடனும், ஜூரெல் 29 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்து முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்த அறிமுக வீரர் ஜூரெல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய பேட்டர்கள் தடுமாற்றம் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களும், இந்திய அணி 307 ரன்களும் சேர்த்தன. 46 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 192 ரன்கள் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 3-வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் ரோஹித் சர்மா 24, ஜெய்ஸ்வால் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 4வது நாள் ஆட்டத்தை இருவரும் தொடங்கினர். ஜெய்ஸ்வால் 37 ரன்கள் சேர்த்த நிலையில், ரூட் பந்துவீச்சில் ஆன்டர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4வது நாளில் ஆடுகளம் மந்தமாகவும், சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக இருக்கும் என்பதால், இங்கிலாந்து அணி ரூட், பசீர், ஹார்ட்லி மூலம் நெருக்கடி கொடுத்தது. ஆடுகளம் மிகவும் மோசமானதால், பேட்டரின் முழங்காலுக்கு மேல் பந்து எழும்பவில்லை. இதனால் இந்திய பேட்டர்கள் பந்தை எதிர்கொண்டு விளையாட சிரமப்பட்டனர். அடுத்துவந்த சுப்மான் கில், ரோஹித் சர்மாவுடன் சேர்ந்தார். வேகமாக ரன்களைச் சேர்த்த ரோஹித் சர்மா 69 பந்துகளில் அரைசதம் அடித்து சிறிது நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஹார்ட்லி பந்துவீச்சில் ரோஹித் சர்மா 55 ரன்கள் சேர்த்து போக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா களத்தில் இருந்தவரை ரன்ரேட் ஓரளவுக்கு வேகமாகச்சென்றது. அவர் ஆட்டமிழந்தபின் ரன்களும் வருவதும் கடினமாக இருந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தடுமாறியது. 36 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து இந்தியா தடுமாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES அதன்பின் இந்திய அணி அடுத்தடுத்து விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. ரஜத் பட்டிதார் வந்த வேகத்தில் பசீர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். 4 டெஸ்ட் போட்டிகளாக பட்டிதாருக்கு வாய்ப்பு தரப்பட்டும், ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்துவந்த ஜடேஜா 4 ரன்னிலும், சர்ஃபராஸ் கான் ரன் ஏதும் எடுக்காமலும் பசீர் சுழலிலும் சிக்கி வெளியேறினர். 99 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த 21 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஏறக்குறைய 20 ஓவர்களில் வெறும் 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆட்டம் மெல்ல இங்கிலாந்து கைகளுக்கு மாறுவதுபோல் இருந்தது. இந்திய அணியை கில்-ஜூரெல் ஜோடி கரை சேர்த்தது எப்படி? ஆனால், 6-வது விக்கெட்டுக்கு சுப்மான் கில்லுடன், ஜூரெல் இணை சேர்ந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். 3 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து இங்கிலாந்து அணி அளித்த நெருக்கடியை இருவரும் சமாளித்து பேட் செய்தனர். இருவரின் பேட்டிலிருந்து ரன்கள் பெரிதாக வரவில்லை என்றாலும், விக்கெட்டை இழந்துவிட்டால் அடுத்ததாக நிலைத்து ஆட பேட்டர்கள் இல்லை என்பது தெரிந்துவிட்டதால், தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். பொறுமையாக பேட் செய்த சுப்மான் கில் 122 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க இங்கிலாந்து சழற்பந்துவீச்சாளர்கள் கடினமாக முயன்றும் முடியவில்லை. சுப்மான் கில் 52 ரன்களுடனும், ஜூரெல் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து இ்ந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். ஆட்டத்தின் திருப்புமுனை! ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் நேற்றைய ஆட்டநேர முடிவில் சேர்த்த 40 ரன்கள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இருவரும் சேர்த்த அந்த ரன்கள் இந்திய அணியின் பேட்டர்களின் சுமையையும், நெருக்கடியையும் குறைத்தது. ஒருவேளை குறைவான ரன்களைச் சேர்த்து, விக்கெட்டையும் இழந்திருந்தால், ஆட்டத்தின் போக்கு இன்று மாறியிருக்கக் கூடும். தவறவிட்ட இங்கிலாந்து இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளராக மெக்கலம் ஆகியோர் வந்தபின் இழக்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். ஹைதராபாத் டெஸ்ட் வெற்றிக்குப்பின், டெஸ்ட் தொடரை வெல்லவும் இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அதை பயன்படுத்தவில்லை. தொடர்ந்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கவும் இல்லை. இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் சோயிப் பசீர், டாம் ஹார்ட்லி இருவரும் தங்களின் பணியைச் சிறப்பாகச் செய்தனர். இருவரும் இளம் வீரர்களாக இருந்தாலும், பந்துவீச்சில் பெரிய அளவிலான முதிர்ச்சி தென்பட்டது. இன்றைய ஆட்டம் தொடங்கும் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்களுடன் வலுவாக இருந்தது. ஆனால், பசீர், ஹார்ட்லி இருவரின் சுழற்பந்துவீச்சால் அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளானது. சிறப்பாகப் பந்துவீசிய பசீர் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வெற்றி நாயகர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES அதேபோல இந்திய அணியின் வெற்றிக்கு 2வது இன்னிங்ஸில் அஸ்வின், குல்தீப் யாதவின் பந்துவீச்சும், முதல் இன்னிங்ஸில் ஜூரெல் சேர்த்த 90 ரன்களும் முக்கியமானவை. அதிலும் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்து தடுமாறியது. அப்போது அறிமுக வீரராக ஜூரெல், குல்தீப் யாதவுடன் சேர்ந்து சரிவிலிருந்து இந்திய அணியை மீட்டது மிகப்பெரிய பணி. அதிலும் டெய்ல் எண்டரான குல்தீப் யாதவை வைத்துக்கொண்டு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஜூரெல் இந்திய அணியை மீட்டது அற்புதமான பேட்டிங்கிற்கு சான்றாகும். அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தவுடன், தனது பேட்டிங்கில் கியரை மாற்றி அதிரடிக்கு மாறி இந்திய அணி 300 ரன்களைக் கடக்க உதவினார். முதல் போட்டியிலேயே சதத்தை நெருங்கிய ஜூரெல் 10 ரன்களில் சதத்தை தவறவிட்டார். முதல் இன்னிங்கில் இந்திய அணி கவுரமான ஸ்கோரைப் பெறுவதற்கு ஜூரெல் பேட்டிங் முக்கியமாகும். 2வது இன்னிங்ஸில் அஸ்வின், குல்தீப் ஆகிய இருவரின் மாயஜாலப் பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு சுருண்டது. இதனால், வெற்றி இலக்கு இந்திய அணிக்கு இலகுவானது. இதன் மூலம் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்தது இல்லை என்ற சாதனையைத் தக்கவைத்துள்ளது. சவாலான டெஸ்ட் போட்டி வெற்றிக்குப்பின் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் “ மிகவும் கடினமான டெஸ்ட் தொடராக இருக்கிறது. ஏராளமான சவால்களைச் சந்தித்தோம். அதற்கு அமைதியாக பதிலடியும் கொடுத்துள்ளோம். உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வந்துள்ள இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். பெரிய சவாலுக்கு நன்றாக பதில் அளித்தனர். அவர்களுக்கு தேவையான சுதந்திரத்தை வழங்கியிருந்தோம். அவர்களின் ஸ்டைலில் பேட்டிங் செய்யவும் அனுமதித்தோம். ஜூரெல் அமைதியாக விளையாடி அனைத்து ஷாட்களையும் ஆடினார். அவரின் 90 ரன்கள் முக்கியமானவை. முக்கிய வீரர்களை இந்த நேரத்தில் இழப்பது வேதனைதான். இருந்தாலும் குழுவாக சிறப்பாகச் செயல்பட முடியும். அவர்களின் இடத்தை நிரப்புவது கடினம்தான். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் வெல்ல முயல்கிறோம், சிறந்த டெஸ்ட் தொடராக இதை மாற்றுவோம்” எனத் தெரிவித்தார். 'முடிவைப் பற்றி கவலை இல்லை' பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் “ சிறந்த டெஸ்ட் போட்டி. ஸ்கோர் பெரிதாக இல்லாவிட்டாலும், இரு அணிகளுக்கும் சவாலாக இருந்தது. எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். அவர்கள் சூழலுக்கு ஏற்றாற்போல் பந்துவீசினர். இருப்பினும் பெரிதாக பெருமைப்பட முடியவில்லை. 2வது இன்னிங்ஸில் அஸ்வின், குல்தீப், ஜடேஜா பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. ஆடுகளம் 4வது நாளான இன்று மாறும் என எதிர்பார்த்தோம். அப்படி எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை. ஜோ ரூட் அற்புதமான பேட்டர். அவர் மீதான விமர்சனம் நியாயமற்றது. பசீரின் பந்துவீச்சைப் பார்த்து பெருமைப்படுகிறேன். முடிவைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், நம்முடைய முழுப் பங்களிப்பை மட்டும் வழங்குவோம் என வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளேன்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c04r4g1rx0mo
  17. Published By: RAJEEBAN 26 FEB, 2024 | 11:15 AM காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த ஒருவர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தனக்குதானனே தீமூட்டிக்கொண்டார் என சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. உடனடியாக தீயை அணைத்த அமெரிக்க இரகசிய சேவையை சேர்ந்தவர்கள் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீக்குளிக்க முயற்சித்த நபர் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார் அவர் விமானப்படையை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவசீருடையில் காணப்படும் அந்த நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை என தெரிவிக்கும் இணையவீடியோவொன்று வெளியாகியுள்ளது. தன்மேல்எரிபொருளை ஊற்றி தனக்குதானே தீமூட்டிக்கொள்வதற்கு முன்னர் அந்த நபர் சுதந்திர பாலஸ்தீனம் என கோசமிட்டார் என டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காசாவில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177304
  18. Published By: DIGITAL DESK 3 26 FEB, 2024 | 03:35 PM இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சியை நடாத்தவுள்ளது என விமானப்படையின் எயர் வைஸ் மார்சல் முடித மகவத்தகே தெரிவித்துள்ளார். யாழில் இன்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிகழ்வை முன்னிட்டு, “நட்பின் சிறகுகள்” எனும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இம்முறை வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக “ எனது புத்தகமும் வடக்கில்” எனும் தொனிப்பொருளில் 73 ஆயிரம் புத்தகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 73 பாடசாலைகளை புனர்நிர்மானம் செய்யும் செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை வடக்கில் 73 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் “தொழினுட்பம் , கல்வி மற்றும் அபிவிருத்தி” எனும் தொனிப்பொருளில் கண்காட்சிகள் நடத்தவுள்ளன. கண்காட்சிகள் நடைபெறும் தினங்களில், விமானப் படையின் சாகச நிகழ்வுகள் கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன. இந்த கண்காட்சிகளுக்கு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகவும், ஏனையோருக்கு நுழைவு கட்டணம் 100 ரூபாய் ஆகும். கண்காட்சிக்கு, 2 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம். ஜெட் விமான இயந்திரம் ஒன்றினையும் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தவுள்ளோம். கண்காட்சியின் முடிவில், அதனை யாழ். பல்கலைகழகத்திற்கு அன்பளிப்பு செய்யவுள்ளோம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/177349
  19. 26 FEB, 2024 | 12:33 PM யுனைடெட் பெற்ரோலியம் அவுஸ்திரேலியா பிரைவேட் லிமிடெட் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் உள்ளூர் சந்தையில் பெற்றோலிய பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்க்ஷனா ஜயவர்தன மற்றும் யுனைடெட் பெற்ரோலியம் அவுஸ்திரேலியா சார்பாக அதன் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற வகையில் எடி ஹேர்ஸ் (Eddie Hirsch) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான பெற்ரோலிய சில்லறை விற்பனையாளர் மற்றும் இறக்குமதியாளருக்கு இலங்கை முழுவதும் 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, மேலும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/177317
  20. 26 FEB, 2024 | 10:30 AM மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சமகால விவகாரங்கள் தொடர்பில் இந்தக் குழுவினர் கலந்துரையாடினர். இதன்போது பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள், நெருக்கடிகள் தொடர்பிலும் மத்திய வங்கி ஆளுநர் குழுவினர் விளக்கமளித்தனர். அத்தோடு, சந்திப்பில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கும் மத்திய வங்கி ஆளுநர் பதிலளித்தார். இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கி ஆளுநரோடு, மத்திய வங்கியின் பணிப்பாளர்கள், பிரதி பணிப்பாளர்கள் மற்றும் வட பிராந்திய முகாமையாளர் உட்பட 8 பேர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/177295
  21. இலங்கை கடற்படை கைது செய்யும் மீனவர்களை தண்டிக்க புதிய நடைமுறை - தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அண்மையில், ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில், இரண்டு பேருக்கு ஆறு மாத சிறை தண்டனையும், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இலங்கை கடற்படை கைது செய்யும் தமிழ்நாடு மீனவர்களை தண்டிக்க கடைபிடிக்கப்படும் புதிய நடைமுறை இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணித்து பக்தர்களிடம் இருந்து பெற்ற தொகையை மீண்டும் அவர்களிடமே அளிக்க இருப்பதாக மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கூறியிருக்கின்றனர். மறுபுறம் இலங்கை கடற்பரப்பில், இந்திய மீனவர்கள் நுழைவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அத்துமீறிய பிரவேசத்தை தடுக்க தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர். 'இலங்கை கடைபிடிக்கும் நடைமுறையால் மீனவர் வாழ்வாதாரம் பாதிப்பு' இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதாகக் கைது செய்யப்படும் தமிழ்நாட்டின் மீனவர்கள் இரண்டு வார சிறையடைப்புக்கு பின் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும், சிறைபிடிக்கப்படும் விசைப் படகுகள் அதன் உரிமையாளர் நேரில் சென்று நீதிமன்றத்தில் ஆஜராகினால் படகு விடுவிக்கப்படும். ஆனால், தற்போது அந்த நிலை மாறியிருக்கிறது என்கின்றனர் இந்திய மீனவர்கள். விசைப்படகை இயக்கும் மீனவருக்கு ஆறு மாதம் சிறையும், இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவருக்கு ஓராண்டுச் சிறையும் விதித்து இருப்பதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. “எங்களது முன்னோர்கள் மீன்பிடித்த கச்சத்தீவில் தான் நாங்கள் மீன்பிடிக்கிறோம். இந்தியக் கடல் பகுதிகளிலும் இலங்கை மீனவர்களும் மீன் பிடிக்கிறார்கள்", என்கின்றனர் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள். இலங்கையில் வீணடிக்கப்படும் விசைப்படகுகள் பிபிசியிடம் பேசிய இராமேஸ்வரம் விசைப்படகு சங்கத் தலைவர் எமிரேட், "பாஜகவின் 2014ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் 135 விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அதில் 25 படகுகள் மட்டுமே மீட்கப்பட்டன். மற்றவை இலங்கையிலேயே பயனற்றுப் போயின. அதேபோல் 2019 முதல் தற்போது வரை 15 நாட்டுப் படகுகள் உட்பட 151 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்திருக்கிறது. ஆனால் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கை ஏதும் மத்திய அரசு எடுக்கவில்லை. இலங்கை அரசும் பறிமுதல் செய்யப்படும் படகுகளை நாட்டுமையாக்கி வருகிறது,” என்கிறார் . "இது கடலை நம்பித் தொழில் செய்யும் மீனவனின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாகச் சிதைத்து விடும். தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் நல்லுறவில் இல்லாததால், மாநில அரசை பழிவாங்குவதற்காக மீனவர்கள் கைது செய்யப்படும் போது மீட்பு நடவடிக்கைகள் எடுக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தி எங்களை வஞ்சிக்கிறது." என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு 2017-ஆம் ஆண்டு கச்சத்தீவு திருவிழா நேரத்தில் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதால் கச்சத்தீவு திருவிழாவை இராமேஸ்வரம் மீனவர்கள் புறக்கணித்தனர். அதேபோல் இந்த ஆண்டும் கச்சத்தீவு திருவிழா நெருங்கி வரும் நேரத்தில் இராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இருக்கிறது இலங்கை அரசு. "இது கச்சத்தீவுக்கு இராமேஸ்வரம் மீனவர்கள் வரக்கூடாது என்று மறைமுகமாக தாக்குவது போல இருக்கிறது. இராமேஸ்வரம் மீனவர்கள் கைதைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம், கருப்புக்கொடி படகில் ஏந்தி போராட்டம் செய்து வருகிறோம்," என்றார் எமிரேட். இது தொடர்பாக மத்திய மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை மீனவப் பிரதிநிதிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர். 'படகுகளை அரசுடமையாக்குவது சேமிப்பை அழிக்கும்' "தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்குவது மீனவர்கள் சிறுகசிறுக சேமித்த சேமிப்பை அழிக்கிறது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். இந்திய நாட்டின் பிரதமர் மோதி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதில் தலையிட்டு நமது மீனவர்களை விடுதலை செய்வதையும், படகுகள் விடுவிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்", என தனது சமூக வலைதளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். Facebook பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Facebook பதிவின் முடிவு 10 ஆண்டு சிறை தண்டனை இந்திய மீனவர்களின் போராட்டம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய யாழ் மாவட்ட சங்கங்கள் சம்மேளனத்தின் உபத் தலைவர் அந்தோணி பிள்ளை பிரான்ஸிஸ் ரத்னகுமார், "இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களின் கடல் பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறி தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி சிறிய மீன்களையும் அள்ளிச் செல்வதால் கடல் வளங்கள் முழுவதுமாக அழிகிறது" என்றார். மேலும், "இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக விரித்து வைத்திருக்கும் வலைகளையும் அறுத்து செல்கின்றனர். இது ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்" என்றார். இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ஆறு மாத முதல் ஓராண்டு சிறை தண்டனையை இலங்கை அரசு விதிக்கிறது. ஆனால் சிறை தண்டனையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இலங்கை பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கினால் மட்டுமே, இந்திய மீனவர்கள் இங்கு வருவது குறையும் என்று இலங்கை மீனவர் தரப்பு கோரிக்கையை முன்வைக்கிறது. இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் முன்பு இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது, இந்திய மீனவர்களின் வருகையை தடுக்கும் வகையில், சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தினர். கச்சத்தீவு தொடர்பாக பேசிய இலங்கை மீனவர்கள், “இந்திய மீனவர்களை விடுதலை செய்ததால் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போம் என்று இராமேஸ்வரம் மீனவர்கள் கூறுவது தவறானது. ஒரு தொழிலை சமய வழிப்பாட்டுடன் சேர்த்து நிபந்தனையாக விதிப்பது ஏற்புடையதாக இருக்காது. எனவே, இந்திய மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வேண்டும், நாங்களும் பங்கேற்போம்", என்றனர். "சட்டத் திருத்தம் தேவையில்லை" இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் வெளிநாட்டு மீனவர்களுக்கு எதிராக சட்டத்தில் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், பிபிசி தமிழ் வினவியது. இதற்கு பதிலளித்த அமைச்சர், 'வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நாட்டிற்குள் பிரவேசித்தால், அவர்களுக்கான தண்டனை வழங்கும் சட்டம் ஏற்கனவே இலங்கையில் அமலில் உள்ளது. அந்த சட்டத்தின் இப்போது மாற்றம் கொண்டு வரப்படாது, என்றார். “2018ம் ஆண்டு அந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் தடவை பிடிப்பட்டால், பிணையில் விடலாம் என்றும், இரண்டாவது, மூன்றாவது முறை மீண்டும் பிடிபடும் போது அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் சட்டம் உள்ளது. சட்டவிரோத படகுகள் எல்லாம் அரசுடமையாக்கப்படும் என்று ஏற்கெனவே சட்டம் உள்ளது. இந்திய மீனவர்கள் தொப்புள் கொடி உறவு என்று சொல்கிறார்கள். ஆனால் இலங்கை கடல் வளத்தை அழிக்கின்றனர். கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றது. எங்கள் மீனவர்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும்." என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களுடன் கலந்துரையாட முயற்சி எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c5166517n5no
  22. சிட்னி புத்திரன் என்ற பெயரில் பொன்னாலைப் பகுதியில் மரக்கன்றுகள் வழங்கியது புத்தன் அண்ணா தான். அகரம் யுரியூப்பில் பார்த்தனான். யாழிலும் புத்தன் அண்ணா இணைத்திருந்தவர்.
  23. 26 FEB, 2024 | 10:25 AM யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பஸ்ஸின் மிதி பலகையிலிருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்துள்ள நிலையிலும், பஸ்ஸின் மிதிபலகையில் தொங்கியவாறு ஆபத்தான பயணங்களை இன்னமும் தொடர்கின்றனர். பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிலர் யாழ். நகர் பகுதியிலிருந்து காரைநகர் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸில், மிதிபலகையில் தொங்கியவாறு பயணிக்கும் போது, வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனத்துடன் மோதுண்டு விழும் காட்சிகளை ஒருவர் கையடக்க தொலைப்பேசியில் பதிவு செய்து, தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த 19ஆம் திகதி பஸ்ஸினை நிறுத்துவதற்கு முதல், பெண்ணொருவர் இறங்க முற்பட்ட வேளை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேவேளைக் கடந்த 23ஆம் திகதி நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக பஸ்ஸின் மிதி பலகையில் பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இரு உயிரிழப்புக்கள் அண்மையில் இடம்பெற்ற நிலையிலும், ஆபத்தான மிதிபலகை பயணத்திற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/177294
  24. 25 பிப்ரவரி 2024 ஓட்டுநரே இல்லாமல் 70கி.மீ வேகத்தில் ஒரு சரக்கு ரயில் சீறிப்பாய்ந்த காட்சி இது. ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் இருந்து பஞ்சாப் வரை சரக்கு ரயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமலேயே ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் திரைப்படமான அன் ஸ்டாப்பிள் பாணியில், ஞாயிறுக்கிழமை காலையில் இந்த சம்பவம் அரங்கேறியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கபப்ட்டதாகவும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது பிடிஐ செய்தி முகமையின்படி, ஜம்மு காஷ்மீரின் கத்துவாவிற்கு 53 பெட்டிகள் மற்றும் 2 எஞ்சின்களை கொண்ட சரக்கு ரயில் காலை 7:30 மணியளவில் வந்தடைந்தது. ஏற்கனவே ரயிலில் இருந்த ஓட்டுநர்கள் பணியை முடித்துக்கொண்டு கத்துவாவில் இறங்கியதால் வேறு ஓட்டுநர்களைக் கொண்டு ரயில் பஞ்சாப் செல்லவிருந்தது. ஓட்டுநர்கள் ரயிலை விட்டு இறங்கியபோது ஹேண்ட் பிரேக் முறையாக போடப்படவில்லை என கூறப்படுகிறது. ஜம்மு ஜலந்தர் பிரிவில் சாய்வான பாதையில் ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் எதிர்பாராதவிதமாக ஓட்டுநர்கள் இல்லாமேலெயே ரயில் புறப்பட்டுச் சென்றது. 70 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் ரயில் பயணித்ததால், ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர். ஜலந்தரைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி அஷோக் குமார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் ரயில் பயணிக்கும் மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில்வே கிராஸிங்குகளும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டது என்றார். காலை 7:25 மணி முதல் 9:00 மணி வரை கற்களை ஏற்றிக்கொண்டு சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் வரை தானாக பயணித்த சரக்கு ரயிலை பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்திஹ்ல் உள்ள ஊஞ்சி பஸ்ஸி அருகே மணல் மூட்டைகள் மற்றும் மரக்கட்டைகள் உதவியுடன் நிறுத்தியதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை கூறுகிறது. இந்த சம்வத்தால் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும், இந்த சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வேத்துறை அதிகாரி ப்ரதீக் ஸ்ரீவஸ்தவவை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv28xj752lpo
  25. 25 FEB, 2024 | 10:00 AM மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியுடன் அதிமுக - பாமக இடையே கூட்டணி உறுதியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சியில் இறங்கின. இரு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணியை நேரிலும், தொலைபேசியிலும் பேச்சு வார்த்தையை நடத்தினர். மேலும் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாமக திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்த மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளை தவிர்த்து மாநில கட்சியுடன் கூட்டணி அமைப்பதுஎன முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு கட்சிகளும் வெளியிடவுள்ளன. இது தொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: 2026-ல் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, இந்த மக்களவைத் தேர்தலில் மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்தால்தான் சரியாக இருக்கும். அதனால் தான் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறோம். கடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன. இந்த முறை தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் (தனி ), விழுப்புரம் (தனி), சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/177227

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.