Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையே பாலம் கட்டப்படாதது தமிழ் தேசியத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சியா? கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 22 பிப்ரவரி 2024, 10:44 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இந்த இரண்டு மாகாணங்களுக்கு இடையில் சுமார் 800 மீட்டர் பகுதியை கடல் நீர் பிரிக்கிறது. இதை கடல் வழியாக கடக்க 6 நிமிடங்களே ஆகும், ஆனால் சாலை மார்க்கமாக செல்ல இரண்டரை மணிநேரம் தேவைப்படும். தற்போது, இந்த இரு மாகாணங்களை இணைக்கும் விதத்தில் ஒரு பாலம் இதுவரை கட்டப்படாதது ஏன், அதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில் மாகாண சபை முறைமை 1987-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அப்போது வடகிழக்கு மாகாணமாக இணைந்தே காணப்பட்டது. ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ராஜீவ் காந்தி இணைந்து மாகாண சபை முறைமையை 1987-ஆம் ஆண்டு கொண்டு வந்திருந்தனர். இலங்கையில் 1978-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தற்போதைய அரசியலமைப்பில் 13-வது திருத்தமாக மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டது. இதன்படி, தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்ததாகவே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டிருந்தன. இலங்கையின் முதலாவது மாகாண சபை தேர்தல் 1988-ஆம் ஆண்டு நடத்தப்பட்டு, மாகாண சபை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. எனினும், வடகிழக்கு மாகாண சபை குறுகிய காலமே செயற்பட்ட நிலையில், 1990-ஆம் ஆண்டு குறித்த மாகாண சபை கலைக்கப்பட்டது. அதன் பின்னரான காலத்தில் வடகிழக்கு மாகாண சபைக்காக தேர்தல் நடத்தப்படாத பின்னணியில், வடகிழக்கு மாகாண சபையை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளாக பிரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் பிரகாரம், வடகிழக்கு மாகாண சபை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளாக பிரிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் 2006-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, 2008-ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலும், 2013-ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலும் முதல் முறையாக நடத்தப்பட்டன. நிலவியல் ரீதியில் பிரிந்திருக்கும் வடக்கும் கிழக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் நிலப்பரப்பு ரீதியில் பிரிந்தே இன்றும் காணப்படுகின்றன. வடக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் இடையில் சுமார் 800 மீட்டர் பகுதியை கடல் நீர் பிரிக்கின்றமையே இந்த இரண்டு மாகாணங்களும் இன்று வரை பிரிந்துள்ளமைக்கான காரணமாக அமைந்துள்ளது. வடக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதியாக கொக்கிளாய் பகுதி காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதியாக புல்மோட்டை பகுதி காணப்படுகின்றது. இந்த இரண்டு மாகாணங்களுக்கும் இடையில் போக்குவரத்து செய்வதற்காக சிறிய படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. 800 மீட்டர் தூரத்தை படகின் மூலம் சுமார் 6 நிமிடங்களில் கடக்க முடியும். எனினும், கிழக்கு மாகாணத்திலிருந்து வடக்கு மாகாணத்தின் எல்லைக்கு வீதியூடாக செல்வதற்கு சுமார் 60 கிலோமீட்டர் காணப்படுகின்றன. இந்த 60 கிலோமீட்டரை சென்றடைவதற்கு சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றன. 6 நிமிடங்களில் கடக்க வேண்டிய இந்த பயணத்திற்கு சுமார் இரண்டரை மணித்தியாலங்களை மக்கள் செலவிட்டு வருகின்றனர். இந்த இரண்டு பகுதிகளையும் படகில் கடப்பதற்கு 6 நிமிடங்கள் எடுக்கின்ற அதேவேளை, பாலம் அமைக்கப்பட்டால் 2 அல்லது 3 நிமிடங்களில் செல்ல முடியும் என மக்கள் தெரிவிக்கின்றார்கள். மேலும், கொக்கிளாய் மற்றும் புல்மோட்டைக்கு இடையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஓரிரு சிறிய படகுகளே காணப்படுகின்றன. ஏனைய படகுகள் கடற்றொழிலுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதை காண முடிகின்றது. அதனால், இரண்டு நகரங்களுக்கும் இடையில் பயணிக்க மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 'தமிழ் தேசிய கோட்பாட்டை வலுவிழக்கச் செய்யும் முயற்சி' படக்குறிப்பு, பாலத்தை நிர்மாணித்தால் வடக்கு - கிழக்கு இணைப்பு உறுதியாகும் என்கிறார் அ.நிக்ஸன் நில ரீதியாக இணைப்பு ஏற்படும் பட்சத்தில், தமிழ்த் தேசிய கோட்பாடு வலுவடையும் என அரசியல் விமர்சகரும், ஒருவன் செய்திச் சேவையின் பிரதம ஆசிரியருமான அ.நிக்ஸன் தெரிவிக்கின்றார். ''இது மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பாலத்தை நிர்மாணித்தால் வடக்கு - கிழக்கு இணைப்பு என்பது உறுதியாகும். எப்படியென்றால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இலகுவாகும். ஆகவே நில ரீதியான தொடர்பு அங்கே வருகின்றது. நிலத் தொடர்பு வருகின்ற போது, தமிழ்த் தேசிய கோட்பாட்டிற்கு அது வலுச்சேர்க்கும்," என்றார். மேலும், "தமிழ்த் தேசிய கோட்டை உடைக்க வேண்டும், அந்த கோரிக்கையை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக தான் நில ரீதியிலான பிரிவுகளை இலங்கை அரசாங்கம் செய்து வருகின்றது. 1941-ஆம் ஆண்டு கல்ஓயா திட்டத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள குடியேற்றம், சிங்கள, தமிழ், முஸ்லிம் குடியேற்றம் என்று சொல்லப்பட்டாலும், அங்கு சிங்கள மக்களே குடியேற்றப்பட்டார்கள்," என்றார். "அங்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த குடியேற்றத்தின் நோக்கமே, இந்த நிலப் பிரிப்பு தான். ஆகவே நில ரீதியாக பிரிக்கப்பட்டால் தான் வடக்கு, கிழக்கு மாகாணத்தை பிரிக்க முடியும். அத்தோடு, தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டையும் வலுவிழக்கச் செய்ய முடியும். ஆகவே தமிழ்த் தேசிய கோட்பாட்டின் மிக வலுவாக இருப்பது அந்த பாலம் தான்," என்கிறார் நிக்ஸன். மேலும், "இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நிலத் தொடர்பு ஏற்பட்டு விடும். தென் பகுதியுடன் இணையாது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்து இயங்கக்கூடிய நிலைமை ஏற்படும். கடல் மற்றும் விவசாய வளங்கள் அங்கு காணப்படுகின்றன," என்றார். "அந்த வளங்களின் ஊடாக உள்ளுர் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, தாமாகவே தமது பொருளாதார வாழ்வாதாரத்தை சீரமைத்துக்கொள்ள முடியும். ஆகவே அந்த அடிப்படையில் தான் இது தடுக்கப்படுகின்றது," என நிக்ஸன் குறிப்பிடுகின்றார். 'வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நிராகரிக்கப்படுகின்றன' படக்குறிப்பு, மக்கள் போக்குவரத்துக்காக மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் என்கிறார் ரவிகரன் கொக்கிளாய் மற்றும் புல்மோட்டை பகுதிகளுக்கு இடையிலான பாலம் நிர்மாணிக்கப்படாமைக்கான பதிலை ஆட்சியாளர்களே வழங்க வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். ''கொக்கிளாய் பாலத்தை பொருத்த வரையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையிலிருந்து திருகோணமலை மாவட்டத்தின் எல்லையான புல்மோட்டை வரையான பகுதி கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டருக்கு உட்பட்ட தூரத்திற்கு தான் பாலம் போட வேண்டிய தேவை காணப்படுகின்றது. இது ஏற்கனவே, அமைச்சரவையில் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது. அது அங்கீகரிக்கப்பட்டதாக கூட செய்திகள் வந்துக்கொண்டிருந்தன," என்கிறார் ரவிகரன். "மாகாண சபை காலத்தில் நாங்கள் கொக்கிளாய் பாலத்தின் அவசியத்தையும், நந்திக்கடல் பாலத்தின் அவசியத்தையும் மிக முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்த பாலத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கும் அளவுக்கு மாகாண சபைக்கு வசதிகள் கிடையாது," என்கிறார் ரவிகரன். தொடர்ந்து பேசிய அவர், "எல்லா மாவட்டங்களையும் ஒரே நோக்கத்தோடு தங்களுடைய பிரஜைகள் என்ற எண்ணத்தோடு அரசாங்கம் பார்க்குமாக இருந்தால், இந்த பாலத்தை எப்போதோ செய்திருக்கலாம். இந்த பாலம் இப்படியாக இருப்பதற்கு ஒவ்வொரு ஆட்சியாளரும் பதில் சொல்ல வேண்டும். முக்கியமான அபிவிருத்தி தேவைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை," என்றார். "எவ்வளவு மக்கள் போக்குவரத்துக்காக கஷ்டப்படுகின்றார்கள். பிரதான வீதியூடாக சுற்றி வருகின்றார்கள். பாலம் போட்டால் குறுகிய நேரத்தை செலவிடும் மக்கள், கூடுதலான நேரத்தை செலவிட்டு இந்த பாதை இல்லாத துன்பத்தை அனுபவிக்கின்றார்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களை எவ்வளவு நிராகரிக்க முடியுமோ? அந்தளவிற்கு நிராகரிக்கின்றார்கள்," என அவர் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு, சமூக செயற்பாட்டாளர் அன்டனி ஜெகநாதன் பீட்டர் இளஞ்செழியன் ‘தமிழ்-இஸ்லாமிய உறவுகள் வலுப்படும்’ கொக்கிளாய் மற்றும் புல்மோட்டை பகுதிகளுக்கு இடையில் பாலம் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில், தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு இடையிலான உறவு வலுப் பெறும் என சமூக செயற்பாட்டாளர் அன்டனி ஜெகநாதன் பீட்டர் இளஞ்செழியன் தெரிவிக்கின்றார். ''கொக்கிளாய் - புல்மோட்டை பகுதிகளுக்கு இடையிலான பாலமானது, மாறி மாறி வருகின்ற எந்த அரசாங்கமும் ஒரு போதும் அதை கண்டுக்கொள்ளவே இல்லை. அதற்கு உண்மையான காரணம் இந்த பாலம் ஒரு பிரசித்தி பெற்ற பாலம். வடக்கையும், கிழக்கையும் இணைக்கின்ற ஒரு பாலம். தமிழ் பேசுகின்ற இரண்டு உறவுகளை இணைக்கின்ற பாலம்," என்றார். "அமைச்சரவையில் இருந்தவர்கள் மிக இலகுவாக பெற வேண்டிய அனுமதிகளை கூட பெறாததற்கு காரணம், வடக்கும் கிழக்கும் இணையக்கூடாது என்ற கொள்கையில் இருந்த சில இஸ்லாமிய கட்சிகளும், சிங்கள பேரினவாதிகளும் தான் அதை தடுத்துக்கொண்டு வந்தார்கள். ஆனால், மாறி மாறி வந்த அரசாங்கங்களில் தமிழ் அமைச்சர்களும் இருந்திருக்கின்றார்கள். அவர்களும் சில சலுகைகளுக்காக அதைப்பற்றி பேசவில்லை," என்கிறார் இளஞ்செழியன். மேலும், "கிட்டத்தட்ட 1கி.மீ. இணைக்கின்ற பகுதியை தற்போது செல்ல ஒன்றரை மணிநேரம் பிடிக்கிறது. வேறு நாடுகளிடமிருந்து பணத்தை கேட்டு போர்ட் சிட்டி எல்லாம் கட்டுகின்றார்கள். ஆனால், இதற்கு அப்படியொரு காசு தேவையும் இல்லை. இலங்கை மக்களின் வரிப் பணத்திலேயே அதனை செய்யலாம். இந்த பாலம் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில், தமிழ் முஸ்லிம்களுக்கான உறவு நீடிக்கக்கூடும்," என்கிறார் அவர். "எங்களுடைய உற்பத்திகளை அங்குகொண்டு செல்வதும், அவர்களின் உற்பத்திகளை இங்கு கொண்டு வராதும் தங்களுடைய விவசாயம் மற்றும் தொழில் முயற்சிகளை கொண்டு செல்வது இலகுவானதாக இருக்கும். வெளிநாடுகளிடமிருந்து காசை கேட்டு, இந்த பாலத்தை அரசாங்கத்தினால் நிர்மாணிக்கலாம் என்பதே எனது கோரிக்கை," என சமூக செயற்பாட்டாளர் அன்டனி ஜெகநாதன் பீட்டர் இளஞ்செழியன் குறிப்பிடுகின்றார். கிழக்கு மாகாண மக்களின் கருத்து என்ன? படக்குறிப்பு, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பைசர் பாலத்தை நிர்மாணிப்பதற்காக அளவீடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பாலம் இன்று வரை நிர்மாணிக்கப்படவில்லை என கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பைசர் குறிப்பிடுகின்றார். ஏமாற்றம் மாத்திரமே தமக்கு எஞ்சியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். ''புல்மோட்டை மக்களுக்கும் சரி, கொக்கிளாய் மக்களுக்கும் சரி போக்குவரத்து பிரச்னையொன்று இருக்கின்றது. பாலம் ஒன்று முக்கியமாக தேவைப்படுகின்றது. பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு படகு மூலமாக போகின்றார்கள். மோட்டார் சைக்கிள்களை படகில் ஏற்றிக் கொண்டு போகின்றார்கள். படகிற்கு பணம் செலுத்த வேண்டும். படகில் ஏற்றப்படும் பொருட்களின் அளவுக்கு ஏற்ப பணம் செலுத்த வேண்டும்." "வடக்கும் கிழக்கும் இணைந்து விடுமோ என்ற காரணத்தினாலோ தெரியவில்லை இந்த பாலம் போடாமைக்கு. அதுவாகவும் இருக்கலாம். இரண்டு பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியை அளந்தார்கள். ஆனால் இதுவரை எந்தவித பயனும் இல்லை. மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான் அளக்கப்பட்டது.ஆனால் இப்போது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. ஏமாந்தது மாத்திரமே மிச்சமாக இருக்கின்றது." என கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பைசர் தெரிவிக்கின்றார். வியாபார நோக்கத்திற்காகவேனும் இந்த பாலம் அமைக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சாதீக் கோரிக்கை விடுக்கின்றார். ''புல்மோட்டையிலுள்ள நோயாளர்கள் அண்மை காலமாக அதிகளவில் யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால், சுற்றி போக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு செல்வதற்கு அதிகளவான நேரத்தையும் அதிகளவான தூரத்தை கடக்க வேண்டியுள்ளது. காசு வீணாக செல்கின்றது என்பதை கவலையாக தெரிவிக்கின்றேன். குறிப்பாக வியாபார நோக்கத்திற்காக இந்த பாலம் அமைத்தால், மிகவும் நல்லதாக இருக்கும்," என கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சாதீக் கூறுகின்றார். வட மாகாண சிங்கள மக்களின் கருத்து படக்குறிப்பு, கொக்கிளாய் பகுதியைச் சேர்ந்த குமார ''இந்த பாலம் தொடர்பில் எந்த காலத்திலிருந்து சொல்கின்றார்கள். ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் என்றால் பரவாயில்லை. கடந்த 10-12 வருடங்களாக இழுத்தடிப்பாகவே காணப்படுகின்றது. இதற்கு தீர்வொன்று இதுவரை இல்லை. எமது ஊரில் தலைவர் இருக்கின்றார்கள். அவர் அனைவரிடமும் பேசுகின்றார். ஆனால், சரியான பெறுபேறு கிடைக்கவில்லை," என கொக்கிளாய் பகுதியைச் சேர்ந்த குமார தெரிவிக்கின்றார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த இடத்தில் பாலமொன்றை அமைப்பதற்கு எமக்கும் விருப்பம். கடலில் ஆராய்ந்தார்கள். உள்ளே உள்ள கல் பழுதடைந்துள்ளதாக கூறினார்கள். அந்த இடத்தில் மாத்திரம் கல் இல்லை. வேண்டியளவு கற்கள் இருக்கின்றன. அங்கு பாருங்கள் என கூறினோம். அந்த இடத்தின் ஊடாக செய்யுமாறு கேட்டோம்," என்றார். "அவசரமாக நோயாளர் ஒருவரை படகில் புல்மோட்டைக்கு அழைத்து செல்லும் போதே நோயாளர் இறந்து விடுவார். வாகனத்தில் ஏற்றி படகில் ஏற்றி அங்கு சென்று வாகனம் வரும் வரை காத்திருந்து அழைத்து செல்லவேண்டும். அவசரத்திற்கு அழைத்தாலும் வரமாட்டார்கள். சென்று வருவதற்கு படகில் 2,000 ரூபா எடுக்கின்றார்கள்," என கொக்கிளாய் பகுதியைச் சேர்ந்த குமார தெரிவிக்கின்றார். ஜனாதிபதி செயலகத்தின் பதில் என்ன? மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் புல்மோட்டை மற்றும் கொக்கிளாய் பகுதிகளை இணைக்கும் வகையிலான பாலத்தை அமைக்க முயற்சித்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இந்த பாலம் அமைக்கப்படுவதற்காக முயற்சிகள், பாலம் இதுவரை அமைக்கப்படாமைக்கான காரணம் உள்ளிட்ட தகவல்களை, தகவலறியும் சட்டத்தின் ஊடாக, பிபிசி தமிழ், ஜனாதிபதி செயலகத்திடம் கோரியது. இதற்கு ஜனாதிபதி செயலகம் பதில் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது. ''உங்கள் தகவல் கோரிக்கையினால் கேட்கப்பட்டுள்ள தகவல்கள் 2016-ஆம் ஆண்டு 12-ஆம் இலக்க தகவல்களை அறிந்துக்கொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் 3(1)-ஆம் பிரவுக்கமைய பொது அதிகார உரிமையில், பொறுப்பில் அல்லது கட்டுப்பாட்டில் இருக்கும் ஓர் தகவல் அல்ல என்பதனால் உங்கள் தகவல் கோரிக்கையை நிராகரிக்க நேர்ந்துள்ளதை தயவுகூர்ந்து அறிவித்துக்கொள்கின்றேன்," என ஜனாதிபதி மேலதிக செயலாளரும், தகவல் உத்தியோகத்தருமான எஸ்.கே.சேனாதீரவினால் பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் இந்த இடத்தில் பாலமொன்று நிர்மாணிக்கப்படுவது மிகவும் முக்கியம் வாய்ந்து என இரண்டு மாகாண மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/cpr883wrpy8o
  2. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் X- நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நோர்வே எம்.பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். இதற்கிடையில், நோர்வே எம்.பியான சோபி மர்ஹாக், ஜூலியன் அசாஞ்சேவை பரிந்துரைத்தார். அசாஞ்சே மேற்கத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார், இதனால் அமைதிக்கு அவர் பங்களித்துள்ளார். ஆகவே அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/292864
  3. யாழ். விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிப்பு; விபரங்களைக் கோரி ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் Published By: DIGITAL DESK 3 22 FEB, 2024 | 12:51 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென விடுவிக்கப்பட்ட காணிகளில் 500 ஏக்கரை மீள அளவீடு செய்வது தொடர்பாக பணிகளின் அறிக்கைகளை அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன் சந்திரவுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கென மக்கள் மீள குடியேறியுள்ள வலி வடக்கு பிரதேசத்தின் குரும்பசிட்டி J/242, கட்டுவன் J/238, கட்டுவன் மேற்கு J/239, குப்பிளான் வடக்கு J/211, மயிலிட்டி தெற்கு J/240 கிராமங்களில் காணி அளவீடுகள் இடம்பெறுவதாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் எழுத்துமூலம் தெரியப்படுத்தியிருந்தார். இதனையடுத்து, குறித்த காணி அளவீடுகள் தொடர்பான விரிவான அறிக்கையை எதிர்வரும் மார்ச் 5ம் திகதிக்கு முன்பாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி செயலகத்தினால் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 16 ஆம் திகதி அன்று நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இவ்விடயம் அங்கஜன் இராமநாதனால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177029
  4. யேசுவாக நானா அல்லது நானாக யேசுவா? http://1.bp.blogspot.com/-hwxRhe7cuPY/UHsusAruoRI/AAAAAAAABDs/fcpPGEWU2bE/s320/Jesus.jpg என்னை பரவசப்படுத்தியதோர் விடயம் ஏறத்தாள 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அந்நாட்களில் நான் ஒஸ்லோவிலுள்ள ஒரு வயோதிபமடத்தில், வயோதிபர்களைப் பராமரிக்கும் தொழில் செய்துகொண்டிருந்தேன். அது ஒரு பனிக்காலத்து நாள். அன்றைய காலைநேரத்து இளவெயில் குளிரை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால்வரையில் மூடிக்கட்டிக்கொண்டு வேலைத்தளத்துக்குள் உட்புகுந்து உடைமாற்றி, வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை போட்டுக்கொண்டேன். மேலதிகாரி எமக்கு என்ன என்ன வேலைகள் இன்று உள்ளன என்றும், நான் யார் யாரை ‌எழுப்பி பராமரிக்க வேண்டும் என்ற அட்டவணையைத் தந்தார். எனது வேலையைத் தொடங்கினேன். முதவாமவரைத் துயிலெழுப்பி, பராமரித்து விட்டு இரண்டாவது நபரிடம் செல்ல வேண்டிய நேரம் வந்தது. நான் சற்று இந்த இரண்டாம் நபரைப்பற்றி இவ்விடத்தில் கூறவேண்டும். 85 - 90 வயதிருக்கும், அன்பான பெண்.. கண்பார்வை மிகவும் மங்கலாகிவிட்டது. என்னுடன் நன்றாகவே பழகுவார். தன்னருகே எப்போதும் இயேசு இருப்பது போல் நினைத்தபடியே உரையாடிக்கொண்டிருப்பார், அவர். மிகவும் குசும்பு பிடித்தவர். ஒரு நாள் அவருக்கு நான் உடைமாற்றிக்கொண்டிருந்த போது, நீ என்ன நினைக்கிறாய் என்று நான் சொல்லவா என்றார். நானும் சிரித்தபடியே சரி கூறுங்கள் என்றேன். அவர் இப்படிக் கூறினார்: ”இந்தக் கிழவி ஒரு இளம் பெண்ணாக இருந்து அவளுக்கு நான் உடைமாற்றினால் எப்படியிருக்கும்” என்று தானே நினைக்கிறாய் என்றார். இல்லை, இல்லை என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே அன்று அவரிடம் இருந்து தப்பினேன். அன்றைய நாளின் பின் இவரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாயும் இருந்தேன். அவரின் அறைக் கதவினைத் தட்டிப்பார்த்தேன். பதில் இல்லை. மெதுவாய் அறையைத் திறந்து அவரின் அறைக்குள் சென்றேன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். எனவே வெளியே சென்று வேறு ஒருவரைப் பாராமரித்துவிட்டுத் திரும்ப வந்தேன். இனி இந்தக் கதை நடைபெறும் சூழலை நான் சற்றே விபரிக்கவேண்டும். அப்போது தான் இந்தக் கதையின் முக்கியமான பகுதி உங்களுக்குப் புரியும். எனது காற்சட்டையும், மேற்சட்டையும் வெள்ளை. அந்த வெள்ளைக்கு நேரெதிரானது எனது நிறம். அந்த முதியவரின் அறையின் ஜன்னலின் ஊடாக கண்ணைக் கூசவைக்கும் வெய்யில் எறித்துக்கொண்டிருக்கிறது. நான் ஜன்னல் திரைச்சீலையை இரு பக்கங்களுக்கும் இழுத்துவிட்டு அவரை நோக்கிச் செல்வதற்காகத் திரும்பும் போது வெய்யில் என் முதுகுப் பக்கமாக எறித்துக் கொண்டிருக்கிறது. ஜன்னல் கண்ணாடியில் ‌சூரிய வெளிச்சம் தெறித்து, அறைக்குள் ஒருவித வௌ்ளை நிறக் கதிர்கள் தெறித்துக்கொண்டிருக்கின்றன. இப்போது நான் அவரை நோக்கித் திரும்பி நிற்கிறேன். இப்போது உங்கள் கற்பனைக் குதிரையை சற்றுத் தட்டிவிடுங்கள். என்னை நினையுங்கள். நான் வெள்ளை உடையுடன் நிற்கிறேன். எனக்குப் பின்புறத்தில் இருந்து ஒளிக்கதிர்கள் ஒளிர்கின்றன. முகத்தில் எத்தனை சூரியன்களின் ஒளி பாய்ந்தாலும் கறுப்பாகவே இருக்கும்படியான நிறத்தில் நான். எனவே நான் யார் என்று அந்து முதியவருக்குத் தெரிவதற்கு சற்தப்பம் இல்லை. அத்தோடு அவருக்கு இரண்டடிக்கு அப்பால் என்ன நடந்தாலும் தொரியாத அளவில் அவரின் கண்பார்வை மங்கலாகியிருக்கிறது. அந்த சுரியக்கதிர்களுக்கு நடுவில் தேவதூதர்கள் போல் நான் நிற்கிறேன். அறையினுள் வேறு வெளிச்சங்கள் இல்லை அப்படியே உங்களின் கற்பனைக் குதிரையை நிறுத்திக்கொள்ளுங்கள். அம்முதியவரின் கட்டிலுக்கு அருகிற்சென்று அவரின் கையைப் பற்றி அவவின் பெயரை சொல்லி அழைக்கிறேன். பதில் இல்லை.. அமைதியாய் சில கணங்கள் நகர்கின்றன. மீண்டும் அவர் கையை மெதுவாய்த் தடவி, மீண்டும் மெதுவாய் அவரின் பெயர் சொல்லி அழைக்கிறேன். நித்திரையால் எழும்ப முயற்சிக்கிறார். மீண்டும், மீண்டும் அவர் கையை மெதுவாய் தடவியபடியே அவர் பெயர் சொல்லி அழைக்கிறேன். தூக்கக் கலக்கத்துடன் சற்றே கண்களைச் சுருக்கியபடியே என்னைப்பார்க்கிறார். மௌனமாய் சில கணங்கள் கலைகின்றன. அவரின் சீரான மூச்சின் ஒலி அறையின் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டிருக்கிறது. சிறிது நேரத்திற்குப்பின் என்னைப் பார்த்தபடியே கேட்டார்... ”யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்” என்று எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது.... என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரின் நம்பிக்கையை கலைக்கவிருப்பாத இயேசுநாதராக நின்றிருந்தேன், நான். என்னையறியாமலே எனது கைகள் அவரின் தலையைத் தடவிக்கொடுத்தது, கைகளை மெதுவாய் நீவிவிட்டேன். அவர் மீண்டும் அப்படியே தூங்கிவிட்டார். மெதுவாய் என் கையை விடுவித்துக்கொண்டு வெளியில் வந்தேன். என்னால் அமைதியாய் இருக்க முடியவில்லை. மனதினை ஒரு வித சுகமும், சுமையும் ஆட்கொண்டிருந்தது. ஏனையவர்கள‌ை பராமரித்த பின் அவரிடம் சென்று அவரைப்பராமரித்தேன். அன்று ஏனைய நாட்களைப் போலல்லாது மகிழ்ச்சியாக இவர் இருக்கிறார்போலிருந்தது எனக்கு. எப்போது நினைத்தாலும் மனதை இதமாகத்தடவிப்போகும் நிகழ்வு இது. நான் நினைக்கிறேன், நானோ காகத்தின் நிறமானவன், வெளிச்சமும் முகத்தில் படவில்லை, சூரியகதிரும், வெள்ளை ஆடையும் இந்த பாவியை புனிதராக்கி விட்டதென்று. இயேசுநாதர் கறுப்பாக இருப்பாரா? என்று நக்கல் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது .. ஆமா. http://visaran.blogspot.com/2009/10/blog-post_19.html
  5. எல்லை தாண்டி மீன் பிடித்த 18 இந்திய மீனவர்களுக்கு விடுதலை; ஒருவருக்கு சிறை Published By: DIGITAL DESK 3 22 FEB, 2024 | 12:11 PM இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த 18 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 7 ஆம் திகதி எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அந்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (22) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு அமைவாக, IND /TN/10/MM/925 இலக்கத்தினை கொண்ட படகில் பயணித்த 7 இந்திய மீனவர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன் படகு அரசுடமையாக்கப்பட்டது. IND /TN/10/MM/324 என்ற இலக்கத்தை கொண்ட படகில் பயணித்த 11 நபர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன், படகின் ஓட்டுனருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177023 அவர்கள் அப்பாவிகள் அல்ல அண்ணை, தமது முதலாளிகளின் பேராசையால் தமிழக மீன் வளங்களை அழித்து தற்போது எமது கடலில் உள்ள மீன் வளங்களைத் தேடி வருகிறார்கள். லைலா வலை போன்ற சிறிய மீன்களையும் விட்டு வைக்காத மீன்பிடி முறைகளைக் கைவிடாத வரை எங்களுக்கும் நிம்மதி இல்லை, அவர்களுக்கும் மீட்சி இல்லை.
  6. வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் - யாழில் சம்பவம் 22 FEB, 2024 | 11:58 AM வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி, அவரது மோட்டார் சைக்கிளை கும்பலொன்று கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை வழியே மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞரை, அரியாலை பகுதியில் ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது. அவ்வேளை, மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு இளைஞர் கும்பலிடமிருந்து தப்பியோடியுள்ளார். அதன் பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட கூட்டத்தினர் அங்கிருந்த இளைஞரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/177022
  7. ஈரமான செல்போனை உலர்த்த என்ன செய்ய வேண்டும்? அரிசிக்குள் வைத்தால் என்ன ஆகும்? - ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரை இருக்கிறது 53 நிமிடங்களுக்கு முன்னர் நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரையை தவறு என்று கூறியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இந்த யோசனை பயன்படாத ஒன்று என்று ஏற்கெனவே நிபுணர்கள் பலர் எச்சரித்து வருகின்றனர். இப்போது ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனமும் இதுதொடர்பான ஒரு வழிகாட்டியை வெளியிட்டிருக்கிறது. ஈரமான ஃபோனை அரிசிக்குள் வைத்தால் அதில் உள்ள சிறிய துகள்கள் ஃபோனை சேதப்படுத்தும் என்றும் அந்த வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செல்போன்கள் நீரில் விழுந்துவிட்டால் சரிசெய்வதற்கான நுட்பமான முறைகள் ஏதும் இல்லை நீரில் விழுந்த செல்போனை என்ன செய்யவேண்டும்? நீரில் செல்போன் விழுந்துவிட்டாலோ, மழையில் நனைந்துவிட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையையும் ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. அரிசிப் பைக்குள் போனை வைப்பதற்குப் பதிலாக, சார்ஜர் கனெக்டர் கீழ்நோக்கி இருக்கும் வகையில் போனை வைத்துக்கு கொண்டு மெதுவாகத் தட்ட வேண்டும் என்றும், உலர விட வேண்டும் எனவும் ஆப்பிள் நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஸ்மார்ட்போன்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும்போதிலும், அவை நீரில் விழுந்துவிட்டால் சரிசெய்வதற்கான நுட்பமான முறைகள் ஏதும் இல்லை. ஸ்மார்ட்போன்கள் எனப்படும் திறன்பேசிகள் நீரில் நனைந்துவிட்டால், அவற்றை அரிசிக்குள் வைக்கும் பழக்கும் புகைப்பட உலகில் இருந்து வந்தது. உலகின் வெப்பமான பகுதிகளில் கேமராக்கள் நனைந்துவிட்டால், அவற்றை அரிசிக்குள் வைக்கும் பழக்கம் 1940 களில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. அப்போது ஃபிலிம் சுருள்களுக்கும் இந்த உத்தியை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தப் பழக்கமே செல்போன்களுக்கும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக, அரசி உள்பட தானியங்களுக்குள் ஈரமான செல்போன்களை வைப்பது எந்த வகையிலும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு உதவாது என்று நிபுணர்கள் எச்சரித்து வந்திருக்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈரமான செல்போன்களை உலர்த்துவதற்கு வெப்பமான ஹேர்டிரையர் போன்றவற்றை சிலர் பயன்படுத்துகிறார்கள் ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டி என்ன சொல்கிறது? அரிசிப் பைக்குள் ஃபோனை வைப்பது ஒரு யோசனை என்றால், வெப்பமான ஹேர்டிரையர் போன்றவற்றைக் கொண்டு அதை உலர்த்துவதற்கு முயற்சிப்பது மற்றொரு வகை. ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டி இந்த யோசனையையும் தவறு என்கிறது. ஹீட்டர்கள் அல்லது ஹேர் ட்ரையர்கள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்கிறது ஆப்பிள். ஈரம் இருப்பது தெரிந்தவுடன் பருத்தி அல்லது காகிதத் துண்டு போன்றவற்றை போனுக்குள் நுழைக்க முயல்வதும் தவறானது செயல் என ஆப்பிள் வழிகாட்டி எச்சரிக்கிறது. அதற்குப் பதிலாக, சார்ஜரில் மீண்டும் செருகுவதற்கு முன், செல்போனை "காற்றோட்டமான காய்ந்த பகுதியில்" வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஈரமான செல்போன் "முழுமையாக உலர 24 மணிநேரம் ஆகலாம்" என்று ஆப்பிள் தனது வழிகாட்டியில் குறிப்பிடுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "ஃபோன் ஈரமாக இருக்கும்போது சார்ஜ் செய்தாலோ அல்லது சார்ஜரை செருகினாலோ பின்கள் அரிக்கப்பட்டு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தலாம் ஈரமான செல்போன்களில் என்ன செய்யக்கூடாது? ஐபோன்களைப் பொறுத்தவரை, சார்ஜர் கனெக்டரில் ஈரம் இருந்தால் உடனடியாக திரையில் எச்சரிக்கைச் செய்தி தோன்றும். மீண்டும் பயன்படுத்துவதற்கு முன், ஃபோன் மற்றும் சார்ஜர் இரண்டும் காயும் வரை காத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை தரப்படுகிறது. "ஃபோன் ஈரமாக இருக்கும்போது சார்ஜ் செய்தாலோ அல்லது சார்ஜரை செருகினாலோ பின்கள் அரிக்கப்பட்டு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தலாம், அல்லது வேலை செய்வதை நிறுத்தலாம். இதன் விளைவாக உங்கள் ஐபோனின் செயலிழந்து போகலாம்”, என ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டி குறிப்பிடுகிறது. ஆப்பிளின் புதிய வழிகாட்டி ஆவணத்தை முதன்முதலில் வெளியிட்ட மேக்வேர்ல்ட் இணையதளம், ஐபோன்களின் புதிய பதிப்புகள் அதிக நீர் எதிர்ப்புத் திறன் கொண்டதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. ஐபோன் 12 இல் தொடங்கும் அனைத்து ஆப்பிள் சாதனங்களும் ஆறு மீட்டர் ஆழம் வரை, அதிகபட்சம் அரை மணி நேரம் வரை மூழ்குவதைத் தாங்கும் திறன் கொண்டவை. ஆனால் மற்ற போன் வைத்திருப்பவர்கள், போன் நீரில் நனையும்போது அரிசி வேலை செய்யாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c514494re9zo
  8. இலங்கை மின்சார சபை பேச்சாளரின் கருத்து தொடர்பில் மின்சக்தி அமைச்சர் கண்டனம் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கு மின்சாரம் அவசியமில்லை, எண்ணெய் விளக்கு போதும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்த கருத்துக்கு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் உள்ளூர் ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, தீர்வின்மையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டமையினால் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த சிறுவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே நோயல் பிரியந்த இதனைத் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், தனது கருத்துக்காக பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார் எனவும் தெரிவித்தார். வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக இலங்கை மின்சார சபை நிர்வாகமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் தனது எக்ஸ்’ பதிவின் ஊடாக தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையானது அரசாங்கத்தின் அல்லது இலங்கை மின்சார சபையின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை என தெரிவித்த அமைச்சர், அமைச்சு மற்றும் மின்சார சபையின் சார்பாக மன்னிப்பு கோரினார். “இலங்கை மின்சார சபை பேச்சாளரின் அறிக்கை தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பலரின் உணர்வுகளுடன் நான் உடன்படுகிறேன்,” என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ‘X’ இல் பகிரப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது அறிக்கையில், இலங்கை மின்சார சபை பேச்சாளரின் ‘முழு’ அறிக்கையும் அனுதாபம் இல்லாதது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என சுட்டிக்காட்டியுள்ளார். “ இதைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மின்சக்தி அமைச்சர் எடுப்பார் என நான் நம்புகிறேன், ஏனெனில் கௌரவ. அதிகாரியின் அதே கருத்தை அமைச்சரும் பகிர்ந்து கொள்கிறார், ”என அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளார். https://thinakkural.lk/article/292817
  9. 22 FEB, 2024 | 11:58 AM யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளார். யாழில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவுறும் நிலையில், அவர் டில்லிக்கு மாற்றலாகிச் செல்கிறார். இதனால் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காணப்படும் வெற்றிடத்துக்கே சாய் முரளி நியமிக்கப்பட்டுள்ளார். சாய் முரளி 1991ஆம் ஆண்டு பிறந்தவர் (வயது 33). இவர் 2019ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சில் இணைந்து தற்போது வரை ரஷ்யாவின் மாநிலமொன்றில் இந்திய தூதரகத்தின் கொன்ஸிலர் ஜெனரலாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177025
  10. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.
  11. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 - 1996 காலப்பகுதிக்குரியவை : ராஜ் சோமதேவ அறிக்கையில் தெரிவிப்பு 22 FEB, 2024 | 01:37 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைய தினம் (22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இடம்பெற்ற வழக்கின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஏற்கனவே, அகழ்ந்து எடுக்கப்பட்ட எச்சங்களில் இருந்து பிறிதாக எடுக்கப்பட்ட அனைத்து பிற பொருட்கள் தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களது அறிக்கை இன்று மன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் அவர்களால் மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பகுப்பாய்வின் அடிப்படையில், இது 1994ஆம் ஆண்டுக்கு முற்படாததும் 1996ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியினை கொண்டிருக்கலாம் என பல பக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இடைக்கால அறிக்கையாக பார்க்கப்படுகிறது. அத்தோடு மீண்டும் எஞ்சிய எலும்புக்கூட்டுத் தொகுதியினை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அனேகமாக மார்ச் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கிறது. இருப்பினும், அதற்கான நிதி, அமைச்சினால் வழங்கப்படும் பட்சத்தில் அகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, மீண்டும் மார்ச் மாதம் 4ஆம் திகதிக்கு இந்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வைத்தியர்களின் அறிக்கையின் மனித எச்சங்களின் வயது, பால், இறப்புக்கான காரணம் போன்றவை இன்னும் வராமல் நிலுவையில் இருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/177034
  12. இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்புகிறது ஆப்கானிஸ்தான் Published By: VISHNU 22 FEB, 2024 | 12:28 AM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (21) இரவு நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. இலங்கையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது, அந்த ஓவரில் கமிந்து மெண்டிஸினால் 14 ஓட்டங்களையே பெறமுடிந்தது. ஒரு வைட் கிடைக்க ஆப்கானிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இலங்கைக்கான விஜயத்தில் ஒற்றை டெஸ்ட் போட்டியிலும், 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் முழுமையாகத் தொல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் தனது கடைசி முயற்சியில் வெற்றியீட்டிய ஆறுதலுடன் நாடு திரும்புகிறது. எவ்வாறாயினும் சர்வதேச ரி 20 கிரிக்கெட் தொடரையும் 2 - 1 எனற ஆட்டக் கணக்கில் இலங்கை தனதாக்கிக்கொண்டது. ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 210 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் களத்தடுப்பில் விட்ட தவறுகளும் பெத்தும் நிஸ்ஸன்க உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற நேரிட்டதும் இலங்கையின் தோல்விக்கு காரணங்களாக அமைந்தன. பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 34 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். அணியில் மீண்டும் இடம்பிடித்த குசல் பெரேரா 2 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு ஓட்டம் பெறாமல் நடையைக் கட்டினார். மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பெத்தும் நிஸ்ஸன்க 53ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது இடது காலில் உபாதைக்குள்ளாகி கடும் சிரமத்தை எதிர்கொண்டார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார். ஆனால் 60 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவர் மீண்டும் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றார். அணித் தலைவர் வனிந்து ஹசரங்க முதல் இரண்டு போட்டிகளில் போன்று அதிரடியில் இறங்க முயற்சித்தபோதிலும் இம்முறை அது பலிக்கவில்லை. அவர் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். சதீர சமரவிக்ரமவும் கமிந்து மெண்டிஸும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 39 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சமரவிக்ரம 23 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஏஞ்சலோ மெத்யூஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்து 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கமிந்து மெண்டிஸ் தனது மீள்வருகையில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கைக்கு உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து அதிரடியை ஆரம்பித்த தசுன் ஷானக்க, இலங்கையின் வெற்றிக்கு 7 பந்துகளில் 23 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 13 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். அடுத்து களம் புகுந்த அக்கில தனஞ்சய பவுண்டறி அடித்து வெற்றிக்கு தேவைப்பட்ட எண்ணிக்கையை 19 ஓட்டங்களாகக் குறைந்தார். ஆனால், கடைசி ஓவரில் 3 பந்துகள் வீணடிக்கப்பட்டதால் ஆப்கானிஸ்தான் வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது. கமிந்து மெண்டிஸ் 39 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 65 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் மொஹமத் நபி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 209 ஓட்டங்களைக் குவித்தது. சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் இலங்கைக்கு எதிராக ரி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் 200 ஓட்டங்களைக் கடந்ததும் இதுவே முதல் தடவையாகும். ஷார்ஜாவில் 2022ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்களை இழந்து பெற்ற 175 ஓட்டங்களே இலங்கைக்கு எதிராக அதன் அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இதற்கு முன்னர் இருந்தது. ஆரம்ப வீரர்களான ஹஸரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 44 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். இலங்கைக்கு எதிரான ரி20 போட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தானின் அதிசிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாகவும் இது பதிவானது. ஹசரத்துல்லா ஸஸாய் 22 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து அணித் தலைவர் இப்ராஹிம் ஸத்ரான் 10 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார். மொத்த எண்ணிக்கை 141 ஓட்டங்களாக இருந்தபோது ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆட்டம் இழந்தார். அவர் 43 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பெற்றார். அவர்களை விட அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 31 ஓட்டங்களைப் பெற்றார். மொஹமத் நபி, மொஹமத் இஷாக் ஆகிய இருவரும் தலா 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் அக்கில தனஞ்சய 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ரஹ்மானுல்லா குர்பாஸ். தொடர்நாயகன்: வனிந்து ஹசரங்க https://www.virakesari.lk/article/176999
  13. உக்ரைன் யுத்தம் - ஏவுகணை தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட ரஸ்ய படையினர் பலி Published By: RAJEEBAN 22 FEB, 2024 | 10:51 AM உக்ரைனின் ஏவுகணை தாக்குதல் காரணமாக 60க்கும் மேற்பட்ட ரஸ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பயிற்சி தளமொன்றில் முக்கிய அதிகாரியின் வருகைக்கான படையினர் தயார் நிலையிலிருந்தவேளை உக்ரைன் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக பிபிசி தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. பெருமளவு ரஸ்ய படையினர் உயிரிழந்துள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ள ரஸ்ய அதிகாரியொருவர் எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சைபீரியாவை தளமாக கொண்ட படையணியின் படையினர் ட்ருடொவ்ஸ்கே கிராமத்திற்கு அருகில் உள்ள பயிற்சி தளத்தில் தளபதியொருவரின் வருகைக்காக காத்திருந்தவேளை உக்ரைனின் ஏவுகணைகள் அவர்களை தாக்கியுள்ளன. தங்களை தங்களின் தளபதிகள் திறந்தவெளியொன்றில் நிற்கவைத்திருந்தனர் அவ்வேளை ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது என ரஸ்ய வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட தளத்தில் உயிரிழந்த நிலையில் பல ரஸ்ய வீரர்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன, https://www.virakesari.lk/article/177018
  14. பூமியில் விழுந்த ஐரோப்பிய செயற்கைக்கோள் என்ன ஆனது? பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு, பூமியில் விழுந்த ERS - 2 செயற்கைக்கோள் கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனதன் அமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர் 21 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பூமியின் தட்பவெப்பநிலையை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் பல தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்த ஐரோப்பிய செயற்கைக்கோள் பூமியில் விழுந்துள்ளது. ERS-2 எனப்படும் இரண்டு டன் எடையுள்ள இந்த விண்கலம் பசிபிக் பெருங்கடலுக்கு மேலே வளிமண்டலத்திலேயே எரிந்தது. எனினும் இதை பூமியில் இருந்து யாரும் கண்டதாக இதுவரை தகவல் இல்லை. ERS-2 என்பது வளிமண்டலம், நிலம் மற்றும் கடல்களை புதுமையான வழிகளில் ஆய்வு செய்வதற்காக 1990-களில் ஐரோப்பிய விண்வெளி முகமையால் தொடங்கப்பட்ட திட்டங்களுள் ஒன்றாகும். பூமியின் பாதுகாப்பு ஓசோன் படலத்தை மதிப்பிடுவதற்கான புதிய திறனை மேலும் ERS-2 விண்கலம் கொண்டிருந்தது. செயற்கைக்கோள் கட்டுப்பாடற்ற வகையில் பூமியில் விழும் என ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான உந்துவிசை அமைப்பு இல்லை. எனினும், ராடார்கள் விண்கலம் பூமியில் விழுவதைக் கண்காணித்தன. கலிபோர்னியாவிற்கு மேற்கே 2,000 கிமீ தொலைவில் அலாஸ்கா மற்றும் ஹவாய் இடையே வடக்கு பசிபிக் பெருங்கடலில் கிரீன்விச் நேரப்படி 17:17 மணிக்கு எரிந்துவிட்டதாக ஐரோப்பிய விண்வெளி முகமை கூறியிருக்கிறது. அதன் பாகங்கள் ஏதும் பூமியின் தரைப்பகுதியிலோ, நீரிலோ விழுந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. https://www.bbc.com/tamil/articles/c2l775gwl89o
  15. 22 FEB, 2024 | 10:00 AM மாணவர்கள் குப்பிவிளக்கில் கல்விகற்க பழகவேண்டும் என இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார். மாணவர்கள் அவசியம் ஏற்பட்டால் குப்பிவிளக்கில் கல்விபயில முயலவேண்டும் இந்த விடயத்தில் முன்னோர்களை அவர்கள் பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் மின்கட்டணங்கள் குறித்த கரிசனைகள் குறித்து; கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மின்கட்டணங்களை செலுத்தாததால் மின்துண்டிக்கப்படுவதால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள மின்சாரசபையின் பேச்சாளர் இலவச மின்சாரம் என்ற கலாச்சாரத்திலிருந்து நுகர்வோர்கள் மாறுவதால் இந்த நெருக்கடிகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். சமீபத்தை மின்கட்டண அதிகரிப்பு ஒரு தசாப்தகாலத்திற்கு பின்னரே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள மின்சாரசபையின் பேச்சாளர் இலங்கை மின்சார சபை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடிகள் குறித்தும் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்திற்கு பெரும்தொகையை செலுத்தவேண்டிய நிலையில் மின்சார சபை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மின்சாரசபை பேச்சாளரின் கருத்தினை சவாலுக்கு உட்படுத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நவீன தொழில்நுட்பம் இலத்திரனியல் சாதனங்கள் காரணமாக தற்போதைய சிறுவர்களை முன்னைய தலைமுறையுடன் ஒப்பிடமுடியாது என தெரிவித்தார். இதேவேளை மின்கட்டண அதிகரிப்பை நியாயப்படுத்திய மின்சாரசபை பேச்சாளர் கல்வி கற்பதற்கு ஏன் மின்சாரம் அவசியம் என கேள்வி எழுப்பியதுடன் குப்பிவிளக்குகள் போன்ற பாரம்பரிய முறைகள் போதுமானவை என தெரிவித்துள்ளார். நான் குப்பிவிளக்கிலேயே படித்தேன் என தெரிவித்த அவர் தொழில்நுட்ப வசதிகளை நம்பியிருப்பதற்கு பதில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிற்கு அவசியமான தேவைகளை மாத்திரம் வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177012
  16. மின்கட்டணம் 18 சதவீதத்தால் குறைக்கப்படும் : மின்கட்டண திருத்த யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும் - மின்சாரத்துறை அமைச்சர் 21 FEB, 2024 | 07:37 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தவறான அரசியல் தீர்மானத்தை எடுத்து நாட்டை மீண்டும் வங்குரோத்து நிலைக்கு தள்ளுவதா? அல்லது தற்போதைய பொருளாதார ஸ்திரப்படுத்தலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். மின்கட்டணம் 18 சதவீதத்தால் குறைக்கப்படும். திருத்தம் செய்யப்பட்ட மின்கட்டண திருத்த யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடு எவ்வாறான நிலையில் இருந்தது என்பதை பலர் மறந்து விட்டார்கள். எரிபொருளுக்கான நீண்ட வரிசை, 18 மணி நேர மின்விநியோக துண்டிப்பு, எரிவாயு பற்றாக்குறை என அனைத்து பிரச்சினைகளும் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீது பொறுப்பாக்கப்பட்டது. கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது, வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டது பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்ததை தொடர்ந்து மக்கள் போராட்டம் தோற்றம் பெற்றது. அதனை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகினார். அரசியலமைப்பின் பிரகாரம் அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்றால் தமது எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ? என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை. அதனை தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. முறையான மறுசீரமைப்புக்களின் பின்னர் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 2022 ஆம் ஆண்டு பொருளாதார பாதிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை பிரதான உதாரணமாக சர்வதேச மட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மாற்றமடைந்துள்ளது. பொருளாதார பாதிப்பில் இருந்து குறுகிய காலத்தில் சிறந்த மறுசீரமைப்புக்களுடன் முன்னேற்றமடைந்த நாடுகளில் இலங்கை சிறந்த உதாரணமாக சர்வதேசத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் பற்றி பேசப்படுகிறது. தவறான கொள்கையுடனான அரசியல் தீர்மானத்தை மீண்டும் எடுத்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளுவதா? அல்லது தற்போதைய பொருளாதார ஸ்திரப்படுத்தலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா? என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். மின்சார கட்டணம் அதிகளவில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். மின்னுற்பத்தியின் செலவை முகாமைத்துவம் செய்யும் வகையில் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டதால் தான் மின்விநியோகம் இன்று சீராக முன்னெடுக்கப்படுகிறது. 2023 ஆகஸ்ட் மாதமளவில் எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதியில் வறட்சியான காலநிலை நிலவும் ஆகவே அனல் மின்நிலையங்களுடனான மின்னுற்பத்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று துறைசார் தரப்பினர் குறிப்பிட்டனர். அதற்கமைவாகவே கடந்த ஒக்டோபர் மாதம் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் அதிஷ்டவசமாக கடந்த ஒக்டோபர், நவம்பர், டிசெம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றன. நீர்மின்னுற்பத்தியின் வீதம் உயர்வடைந்தது. ஆகவே மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற தீர்மானம் கடந்த டிசெம்பர் மாதம் எடுக்கப்பட்டது. இதற்கமைய மின்கட்டணத்தை 03 சதவீதத்தால் குறைக்க முடியும் என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தல், நீர்மின்னுற்பத்தி அதிகரிப்பு ஆகிய சாதகமான காரணிகளினால் மின்கட்டணத்தை அதிகளவான வீதத்தில் குறைக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினார்கள். மின்சாரத்துறையின் முன்னேற்றத்தின் பயனை நாட்டு மக்களுக்கு முழுமையாக வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். மின்கட்டணத்தை இயலுமான அளவு குறைப்பதற்கு பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. பலர் சாதகமான யோசனைகளை முன்வைத்துள்ளார்கள். இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை முழுமையாக இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வீட்டு மற்றும் மத தலங்களில் மின்கட்டணம் 18 சதவீதத்தாலும், கைத்தொழில்சாலைகள், ஹோட்டல்களுக்கான மின்கட்டணம் 12 சதவீதத்தாலும், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கான மின்கட்டணம் 24 சதவீதத்தாலும் குறைக்கப்படும். திருத்தம் செய்யப்பட்ட மின்கட்டண திருத்த யோசனை இன்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படும். இலங்கை மின்சார சபை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும். தேசிய வளங்களை பாதுகாப்போம் என்று போர்கொடி உயர்த்துபவர்கள் தமது சுய இலாபத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள். மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளார்கள். ஆகவே உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/176986
  17. மத்திய வங்கி சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் - டயனா கமகே 21 FEB, 2024 | 07:42 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக மத்திய வங்கியை சுயாதீனப்படுத்திக் கொடுக்கவில்லை.மத்திய வங்கியின் ஆளுநரின் செயற்பாடு முற்றிலும் தவறானது,ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என சுற்றாடல் துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானது. மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக 'புதிய வங்கி சட்டம் ' இயற்றப்படவில்லை. நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை.தன்னிச்சையான முறையில் வங்குரோத்து நிலையை அறிவித்தார். நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு என்பதை அவர் கவனத்திற் கொள்ளவில்லை.மத்திய வங்கி ஆளுநரின் தவறான தீர்மானத்தால் நாடு என்ற ரீதியில் மீண்டெழ முடியாமல் உள்ளது. மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக இருந்தால் தொழில் செய்யும் அனைவரின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும். நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போது மத்திய வங்கியின் ஆளுநர் நகைப்புக்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்.ஆகவே மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/176981
  18. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அய்லெத் கோன் மற்றும் ஷச்சார் ஷ்னுர்மன் ஆகிய இருவர் மட்டுமே தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்தவர்கள். கட்டுரை தகவல் எழுதியவர், லூசி வில்லியம்சன் பதவி, மத்திய கிழக்கு நிருபர், இஸ்ரேல் குறித்த செய்திகளை அளிப்பவர் 59 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேலைச் சேர்ந்த அய்லெத் கோன் மற்றும் ஷச்சார் ஷ்னுர்மன், ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் இந்த மாதம் திராட்சைப்பழங்களை அறுவடை செய்துள்ளனர். இது கேட்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். அவர்கள் வசிக்கும் பகுதி கடந்த வருடம் ஹமாஸ் தாக்குதலால் சேதமடைந்தது, எரிந்து கிடக்கும் அண்டை வீடுகளுக்கு நடுவே அவர்கள் இந்த அறுவடையைச் செய்துள்ளனர். இஸ்ரேலின் கஃபர் அஸாவில் உள்ள அவர்களது வீட்டில், வாராந்திர பார்பிக்யூ பார்ட்டிகளுக்காக பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படுகிறது இந்த திராட்சைச் சாறு. ராணுவ வீரர்கள் மட்டுமே அவர்களின் விருந்தினர்கள். காஸாவிலிருந்து 2 கிமீ (1.2 மைல்) தொலைவில் உள்ள கஃபர் அஸா, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் ஆயுதக்குழுவால் குறிவைக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். ஹமாஸின் இந்த தாக்குதலில் தெற்கு இஸ்ரேலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 240க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அடுத்தடுத்த நாட்களில், இஸ்ரேலின் பிற பகுதிகளின் ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ராணுவ வீரர்கள், நன்கொடையாளர்கள், பத்திரிகையாளர்கள், மனிதாபிமான அமைப்புகளின் உறுப்பினர்கள் கஃபர் அஸா கிராமத்திற்கு வருகிறார்கள் ஆளில்லாத இஸ்ரேலிய கிராமங்கள் வெளியேறிய மக்களில், அய்லெத் கோன் மற்றும் ஷச்சார் ஷ்னுர்மன் ஆகிய இருவர் மட்டுமே தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்தவர்கள். "மாலையில், இங்கு மிகவும் தனிமையாக இருக்கிறது," அய்லெத் கூறுகிறார். "மக்கள் சாலையில் நடந்து செல்வதையும், நம்மைப் பார்த்து ஹலோ சொல்வதையும் வழக்கமாக பார்க்கலாம். இப்போது எல்லாம் மாறிவிட்டது, இங்கு யாரும் இல்லை." என்கிறார் அவர். பகல் நேரத்தில், ராணுவ வீரர்கள், நன்கொடையாளர்கள், பத்திரிகையாளர்கள், மனிதாபிமான அமைப்புகளின் உறுப்பினர்கள் இந்த கிராமத்திற்கு வருகிறார்கள். கஃபர் அஸா ஒரு வகையான அருங்காட்சியகமாக மாறிவிட்டது. அதன் எரிந்த மற்றும் உடைந்த வீடுகள் ஆளில்லாமல் கிடக்கின்றன, அவற்றின் வாசல்கள் கயிறுகளால் தடுக்கப்பட்டுள்ளன, இடிபாடுகள் மற்றும் பொருட்கள் தரையில் சிதறிக்கிடக்கின்றன. கிராமத்திற்கு வந்த வெவ்வேறு குழுக்கள் வெளியேறிய பிறகு, தம்பதிகள் தங்கள் வராண்டாவில் அமர்ந்தனர். இஸ்ரேலிய இராணுவ ட்ரோன்களின் சிணுங்கல் மற்றும் வெளியேறும் பீரங்கிகளின் வழக்கமான சத்தம் மட்டுமே அங்கே கேட்டது. காலியான வீடுகளோடு இருள் சூழப்பட்டு நிற்கிறது கிராமம். எதிரே உள்ள வீட்டையும், சாலையின் மற்றொரு பகுதியில் உள்ள ஒரு வீட்டையும் சுட்டிக்காட்டுகிறார் அய்லெத். "எங்கள் பக்கத்து வீட்டுக்காரர், மிகவும் நல்ல நண்பராக இருந்தவர், ஆனால் அவரை கொலை செய்துவிட்டனர்," என்று அவர் கூறுகிறார். "இது மற்ற அனைவருக்கும் இங்கு நடந்ததைப் பற்றிய ஒரு நினைவூட்டலாக இருக்கும்." என்கிறார். அக்டோபர் 7 அன்று ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து, இங்கு வசித்த பலரால் இன்னும் வெளியே வர முடியவில்லை. காஸாவில் நடந்து கொண்டிருக்கும் போர், அந்த தாக்குதல்களால் தூண்டிவிடப்பட்டது. காஸாவின் பெய்த் ஹனோன் போன்ற இடங்களில் ஏற்பட்டுள்ள அழிவை இந்த கிராமத்தின் எல்லையிலிருந்து பார்க்கும் அளவுக்கு நெருக்கமாக உள்ளது இந்தப் பகுதி. படக்குறிப்பு, பணயக்கைதிகளுக்கு ஆதரவாக, தங்கள் வராண்டாவில் கருப்புக் கொடியைத் தொங்கவிட்டுள்ளனர் அய்லெத் கோன் மற்றும் ஷச்சார். போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் இஸ்ரேல் நாட்டின் இடம்பெயர்ந்த சமூகங்களின் செலவுகள், அரசியல் மற்றும் நிதி ரீதியாக மாதந்தோறும் அதிகரித்து வருவதால், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் வகையில் அவர்களின் பாதுகாப்பு உணர்வை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது இஸ்ரேலிய பிரதமரின் சவாலாகும். தாக்குதல்களுக்குப் பிறகு, 200,000 மக்கள் இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர், காஸாவின் தெற்கு எல்லை மற்றும் லெபனானின் வடக்கு எல்லை ஆகிய இரண்டு எல்லையிலிருந்தும். ஹமாஸுக்கு ஆதரவாக இரான் ஆதரவுக் குழுவான ஹெஸ்பொலா, இஸ்ரேலியப் படைகளுடன் இந்த பகுதிகளில் போரில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலை அதன் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் ஒரு வலிமையான தலைவராக, தனது அரசியல் வாழ்க்கையை வடிவமைத்தார். ஆனால் காலியான எல்லைப் பகுதிகள், அவர் மக்களை பாதுகாக்கத் தவறியதை தினமும் நினைவூட்டுகின்றன. "நாங்கள் ஏமாந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்," என்று அய்லெத் கூறுகிறார். "அவர்கள் சொல்வது பொய் எனத் தெரிந்தும், அதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டோம்." என்கிறார். போர் முடிந்த பிறகு, ஏதாவது மாற்ற வர வேண்டும் என்று அவர் சொல்கிறார். "ராணுவம் ஒழுங்கமைக்கப்பட்ட விதம், பாலத்தீனியர்களை அரசாங்கம் அணுகிய விதம், இந்த போர்ச் சூழலை முழு உலகமும் அணுகும் விதம், என நிறைய மாற வேண்டும்." காஸாவில் "முழு வெற்றி" மற்றும் ஹமாஸை முழுமையாக அழிப்பது மட்டுமே எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் என்று நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். ஆனால் வெற்றி அவ்வளவு எளிதில்லை. ஹமாஸின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தப் போரில் கிட்டத்தட்ட 30,000 காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காஸா மக்களின் துன்பங்களைத் தணிக்கவும், ஹமாஸால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்கவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிக்க பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அதற்கு பிரதமர் ஒப்புக்கொள்ளவில்லை. "இஸ்ரேலுக்கு எதிரிகளே இருக்கக்கூடாது என்பது சாத்தியமில்லை. ஹமாஸ் இல்லாவிட்டால், ஹமாஸைப் போல் வேறு ஒரு குழு இருக்கும், அதனால் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை." என்று அய்லெத் கூறுகிறார். பணயக்கைதிகளுக்கு ஆதரவாக, இந்த தம்பதியினர் தங்கள் வராண்டாவில் ஒரு பெரிய கருப்புக் கொடியைத் தொங்கவிட்டுள்ளனர். பணயக்கைதிகளில் 19 பேர் கஃபர் அஸாவைச் சேர்ந்தவர்கள். "கடத்தப்பட்டவர்கள் காஸாவிலிருந்து வீட்டிற்கு திரும்ப வர வேண்டும்" அய்லெட் கூறுகிறார். "அதற்கு ஒரு ஒப்பந்தம் வேண்டும். அவர்கள் போரை நிறுத்த வேண்டும்" என்கிறார். காஸாவில் ஒரு தெளிவான திட்டமில்லாமல் போர் தொடரும் நிலையில், இஸ்ரேலின் வடக்கு எல்லையில் மக்களுக்கான பாதுகாப்பை எவ்வாறு உறுதிசெய்வது என்ற கேள்வி இப்போது அதிகமாக எழுகிறது. ஹெஸ்பொல்லாவுடனான போர் காஸா எல்லையில் இருந்து 200 கிமீ (120 மைல்கள்) தொலைவில், கலிலீ கடற்கரையில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருக்கும் மைக்கேல் பிஹா, இஸ்ரேலின் எல்லைச் சமூகங்களில் ஏதாவது மாற்றம் தேவை என்பதை ஒப்புக்கொள்கிறார். "ஒருவேளை மக்களை வெளியேற்றியது மிகப்பெரிய தவறாக இருக்கலாம்" என்று அவர் கூறுகிறார். "இப்போது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியாது என்பதை மக்கள் உணர்கிறார்கள்" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "இதுவரை எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக எல்லை இருந்தது. சில நேரங்களில் அங்கே அமைதி நிலவும், சில நேரங்களில் பதற்றமாக இருக்கும். நாங்கள் அதற்குப் பழகிவிட்டோம்," என்று விளக்கினார். "ஆனால் இனியும் பெய்ரூட்டில் இருந்து யார் எப்போது துப்பாக்கியால் சுடுவார்கள் என்ற பயத்தில் வாழ முடியாது" என்கிறார் மைக்கேல். லெபனான் எல்லையில் இருந்து 3 கிமீ (1.9 மைல்) தொலைவில் உள்ள மலைவாழ் சமூகமான கிப்புட்ஸ் சாஸாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 400 குடியிருப்பாளர்களில் மைக்கேலும் ஒருவர். அங்குள்ள பள்ளி ஒரு ஹெஸ்பொலா ஏவுகணையால் நேரடியாக தாக்கப்பட்டது என்றும், அதிர்ஷ்டவசமாக பள்ளி மூடப்பட்டு மாணவர்கள் வெளியேறிய பிறகு இது நடந்தது என்றும் கூறினார் மைக்கேல். கடந்த நான்கு மாதங்களாக, சிறிய விடுதிக் குடிசைகளில் வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்தப் பகுதியின் குளிர்கால மழைக்கும் மற்றும் வெளிறிய மூடுபனிக்கும் இக்குடிசைகள் ஏற்றவை அல்ல. ஒரு மருத்துவமனையுடன் கூடிய கிப்புட்ஸ் பள்ளியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சாஸாவில் சமைக்கப்பட்ட உணவு தினமும் இங்கு கொண்டுவரப்படுகிறது, இது இங்குள்ளவர்களுக்கு ஒரு ஆறுதலை அளிக்கும் என்பதால். குடியிருப்பாளர்கள் ஜூன் மாத இறுதியில் வீடுகளுக்கு திரும்ப முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது எப்படி நடக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை. எல்லையில் நிலைமை மோசமடைந்து வருகிறது, இஸ்ரேலின் இராணுவம் மற்றும் அரசியல்வாதிகள் 'இராஜதந்திர அவகாசம்' முடிந்துவிட்டதாக எச்சரித்துள்ளனர். சர்வதேச மத்தியஸ்தம் பலனைத் தரவில்லை என்றால், இராணுவப் பலத்தைப் பயன்படுத்தி எல்லையின் லெபனான் பக்கத்திலிருந்து ஹெஸ்பொல்லாவைத் தாக்கி பின்வாங்கச் செய்வோம் என அவர்கள் தெளிவாக தெரிவிக்கின்றனர். பிரதமர் நெதன்யாகு காஸாவில் இராணுவ நடவடிக்கைகளில் உறுதியாக இருப்பதாகத் தோன்றினாலும், இங்கு வடக்கில், ஹெஸ்பொலாவுடன் போர் என்பது ஒரு கடைசி முயற்சியாக தான் இருக்கும். ஹமாஸுடன் ஒப்பிடுகையில் சிறந்த ஆயுதங்களையும் சிறந்த பயிற்சிகளையும் பெற்ற ஹெஸ்பொலா ஒரு வித்தியாசமான எதிரி. எனவே இது வேறு வகையான போராக இருக்கும். நாட்டின் வடக்குப் பகுதிகளிலிருந்து இன்னும் பலர் வெளியேற்றப்படுவதால் இஸ்ரேலுக்கான செலவுகள் மிக அதிகமாக இருக்கும். ஆனால் இஸ்ரேலின் எல்லைகளில் மக்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது. "அவர் அதை எப்படி செய்வார் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால் இந்த நிலைமை ஒரு தெளிவான முறையில் முடிவடைய வேண்டும். இதனால் நாம் சாதாரண சூழ்நிலையில் பாதுகாப்பாக வாழ முடியும், எல்லையில் ஏவுகணைகள் இல்லாமல்" என்கிறார் மைக்கேல் பிஹா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் கஃபர் அஸாவில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். வீடுகளுக்கு திரும்ப விரும்பும் இஸ்ரேலியர்கள் காஸா எல்லையில் உள்ள தெற்கு சமூகங்களில், ஒரு சிலர் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இஸ்ரேலின் கிப்புட்ஸ் இயக்கத்தின் தலைவரான நிர் மீர், இஸ்ரேலின் ஹாரெட்ஸ் செய்தித்தாளிடம், "கிப்புட்ஸ் ஆர் ஹானர் பகுதிக்கு மாத இறுதியில் மக்கள் திரும்பி வருவார்கள் என்றும், இதற்காக பல தரப்பட்ட மக்களிடமிருந்தும் தொடர்ந்து பெருமளவில் விண்ணப்பங்கள் வருவதாகவும்" கூறினார். கிப்புட்ஸ் பீரியில், இடிபாடுகள் மற்றும் சேதமடைந்த வீடுகளை அகற்றத் தொடங்கியுள்ளனர். மீண்டும் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும் கஃபர் அஸாவில், தங்கள் அண்டை வீட்டார் அவ்வப்போது வந்து உடமைகளை சேகரித்துச் செல்வதையும், வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதையும் அய்லெத் மற்றும் ஷச்சார் காண்கின்றனர். "வாரத்திற்கு ஒரு முறை சிவப்பு எச்சரிக்கை சைரனையும், மாதத்திற்கு ஒரு முறை ஏவுகணைத் தாக்குதலையும் பொறுத்து கொள்வதற்கு ஈடாக இந்தச் சமூகங்கள் குறைந்த விலையில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கின" என்று நிர் மீர் கூறினார். "இப்போது ஆபத்து அதிகரித்துள்ளது, மக்கள் படுகொலைக்கான வாய்ப்பும் உள்ளது" என்கிறார். "ராணுவம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டது என்று நாங்கள் நம்புகிறோம், இனியாவது இந்த பகுதிக்கும் காஸாவிற்கும் இடையில் ஒரு சில வீரர்களை நிறுத்தி வைப்பார்கள்" என ஷச்சார் கூறுகிறார். "சில மாதங்களில் நிலைமை எப்படி மாறும் என்று யாருக்குத் தெரியும், ஆனால் இப்போதைக்கு எங்களுக்கும் காஸாவிற்கும் இடையில் 10,000 வீரர்கள் உள்ளனர். இது இஸ்ரேலில் மிகவும் பாதுகாப்பான இடம்" என்று கூறுகிறார் ஷச்சார். https://www.bbc.com/tamil/articles/cqv66wvj4p1o
  19. 21 FEB, 2024 | 05:15 PM (எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்) சட்டமூலம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டமா அதிபர் புதிய திருத்த யோசனைகளை முன்வைப்பது சட்ட உருவாக்க வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டது,ஆகவே இவ்வாறான செயற்பாட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சட்டமொன்று இயற்றப்படும் போது அதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட வரைஞர் திணைக்களத்தினால் சட்டவரைபு தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபரின் அனுமதியுடன் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். அந்த சட்ட வரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும். அதனை தொடர்ந்து நாட்டு மக்கள் அறிந்துக் கொள்வதற்காக சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்படும். அதனை தொடர்ந்து முதல் வாசிப்புக்காக சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் நாட்டு மக்கள் எவரும் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம். இவ்வாறான வழிமுறைகளை தொடர்ந்து வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்டமூலத்தையே உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் புதிய திருத்த யோசனைகளை முன்வைத்துள்ளார். இந்த திருத்த யோசனைகள் வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை, நாட்டு மக்கள் அறிந்துக் கொள்வதற்காக வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை. ஆகவே இந்த திருத்தத்தின் உள்ளடக்கத்தை எவரும் அறியவில்லை. ஆகவே இது தவறானதொரு எடுத்துக்காட்டு. சட்டமூலம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டமா அதிபர் புதிய திருத்த யோசனைகளை முன்வைப்பது சட்ட உருவாக்க வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டது. ஆகவே இவ்வாறான செயற்பாட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/176946
  20. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்காமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றுவது பற்றி கருத்தாடல் இடம்பெறுவது நாட்டில் மீண்டும் பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். ஜனாதிபதி முறைமை மாற்றம் பற்றி பேசுவதற்குத் தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மேலும் கூறியதாவது, ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யவேண்டுமெனில் அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம். ஆளுநர் நியமனம் நாட்டில் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடிய விடயம் இதுவாகும் என்பதால் எடுத்த எடுப்பிலேயே எதனையும் செய்துவிட முடியாது. ஜனாதிபதி முறைமையால்தான் இந்த நாடு சமஷ்டி முறைமைக்குச் சென்று, பிரிவினைவாதம் தலைதூக்கியது. எனவே, அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நீக்காமல், ஜனாதிபதி முறைமையை நீக்க முடியாது. ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு, அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கினால் ஆளுநர் நியமனம் மற்றும் முதலமைச்சருக்குள்ள அதிகாரம் எவை என்பன தொடர்பிலும் பிரச்சினை உள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் போன்ற தேசிய ரீதியிலான தேர்தலொன்றின்போது மக்கள் நீதிமன்றம் முன்சென்று, அவர்களிடம் யோசனையை முன்வைத்து, கலந்துரையாடியே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்போதைய ஜனாதிபதிக்கு இதனைச் செய்வதற்குரிய மக்கள் ஆணை இல்லை. அரசியல் இலாபம் பெறும் நோக்கிலேயே இது தொடர்பான கருத்தாடல் இடம்பெறுகின்றது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/presidential-system-change-1708563902?itm_source=parsely-detail
  21. கச்சதீவு திருவிழாவை இரத்து செய்வதாக தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை அறிவிப்பு கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவை இரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார். கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் வெளியிட்ட செய்தி குறிப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார். விசைப்படகு கடற்றொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருப்பயணிகளை அழைத்துச் செல்ல முடியாததால் கச்சத்தீவு திருவிழா இரத்து செய்யப்படுவதாகவும், இந்த விழாவில் இந்திய பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். https://tamilwin.com/article/kachchathivu-festival-cancelled-1708500414?itm_source=parsely-api
  22. நிகழ்நிலை காப்பு சட்டத்திலுள்ள ஜனநாயக சவால்கள் என்ன? - அமெரிக்காவிடம் கேள்வியெழுப்பும் அரசாங்கம் 21 FEB, 2024 | 07:43 PM (எம்.மனோசித்ரா) நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் விமர்சிப்பதற்கு முன்னர், அது தொடர்பில் முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும். அதன் பின்னர் அதில் எந்தெந்த சரத்துக்களில் ஜனநாயகத்துக்கு சவாலாகவும், ஊடகங்களை ஒடுக்குவதாகவும் அமைந்துள்ளன என்பதை அமெரிக்கா குறிப்பிட வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். மேலும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட எந்தவொரு சர்வதேச அழுத்தங்களுக்கும் அடிபணிந்து யுக்திய சுற்றி வளைப்புக்களை நிறுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்றும், இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்காவின் இராஜதந்திர மற்றும் பொது விவகாரங்களுக்கான துணை செயலாளர் எலிசபெத் எம்.அலென் குறித்த சட்டம் தொடர்பில் முழுமையாக அறிந்து கொள்ளாமலேயே இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். நாட்டில் சிலர் பேசிக் கொண்டிருக்கும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டே அவரும் இது தொடர்பில் பேசியிருக்கின்றார். இதில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் என்ன என்பது பற்றியும் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் மாத்திரமின்றி நாட்டிலுள்ள சில அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் இதுபோன்ற கருத்துக்களையே கூறிக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் எதிர்க்கட்சி அரசியல் தலைவரொருவர் இது தொடர்பில் என்னிடம் கூறிய போது, இந்த சட்டத்திலுள்ள எந்தெந்த சரத்துக்கள் ஜனநாயகத்துக்கு முரணானவையாகக் காணப்படுகின்றன என்பதைக் கூறுமாறு கேட்டேன். அதற்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை. சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறிழைப்பவர்கள் மாத்திரமே இதற்கு அஞ்ச வேண்டும். அதனை விடுத்து பிரதான ஊடகங்களுக்கோ, நாட்டின் ஜனநாயகத்துக்கோ எவ்வித பாதிப்பும் இதனால் ஏற்படாது. யுக்திய சுற்றிவளைப்புக்கள் யுக்திய சுற்றி வளைப்புக்களை முன்னெடுப்பதற்கு எனக்கு வேறு எந்த தரப்பினரதும் ஆதரவு தேவையில்லை. காரணம் இந்த செயற்திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னுடன் இருக்கின்றார். மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது என்பதற்காக இதனை நிறுத்த முடியாது. எமது இலக்கை அடையும் வரை எந்தவொரு சர்வதேச அழுத்தங்களுக்கும் அடிபணிந்து யுக்திய சுற்றி வளைப்புக்களை நிறுத்த மாட்டோம். பொலிஸ்மா அதிபர் விவகாரம் தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். எனினும் அரசியலமைப்பு பேரவை மற்றும் இந்த நியமனத்துடன் தொடர்புடைய நிறுவனங்களே அதனைத் தீர்மானிக்கும். எவ்வாறிருப்பினும் நாட்டில் அமைதியும், நீதியும் நிலைநாட்டப்பட வேண்டுமெனில் இவரே பொலிஸ்மா அதிபராகவும் நியமிக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/176980
  23. விண்வெளியில் அணு ஆயுதங்களை பதுக்கும் எண்ணமில்லை: விளாதிமிர் புடின் விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லையெனவும் இந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவானது, வெளிப்படையானது என ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடின் தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் இதனிடையே, விண்வெளி திட்டங்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யா செயல்படுவதாகவும், விண்வெளியில் செயற்கைகோள் ஆயுத திறனை அந்த நாடு பெற்றுள்ளதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில் குறித்த குற்றச்சாட்டை ரஷ்யா ஜனாதிபதி மறுத்தே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அணு ஆயுத ஒப்பந்தம் விண்வெளியில் அணு ஆயுதம் உள்பட பேரழிவு ஏற்படுத்தக்கூடிய எந்த விதமான ஆயுதங்களையும் நிலைநிறுத்தக்கூடாது என்ற ஒப்பந்தம் நடைமுறை உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யா உள்பட 130 க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/no-intention-of-storing-nuclear-weapons-in-space-1708544297
  24. நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட கிரீமால் ஏற்பட்டுள்ள ஆபத்து புறக்கோட்டையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நான்கு முக்கிய மையங்களை சோதனையிட்டுள்ளன. பாணந்துறை வலனா ஊழல் எதிர்ப்பு செயலணியால் நேற்று இவ்வாறு சோதனையிடப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கிரீம்களுடன் நான்கு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரீம் வகைகள் பெண்களின் தோலைப் பளபளக்க வைப்பதாகக் கூறி புற்றுநோய்க் காரணிகள் அடங்கிய கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் கிரீம் வகைகள் தரமற்றவை எனவும், இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிகளை கூட பெறவில்லை என குறிப்பிடப்படுகின்றது. அழகு சாதனப் பொருட்கள் இந்தச் சோதனையின் மூலம் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தடைசெய்யப்பட்ட கிரீம்கள் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த நான்கு வர்த்தகர்களும் நீண்டகாலமாக பாரியளவிலான இந்த கிரீம்களை இறக்குமதி செய்து நாடு முழுவதும் விநியோகித்து வருவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. https://tamilwin.com/article/face-cream-for-women-in-sri-lanka-1708570773
  25. காணொளி வடிவில். யாழில் அறிமுகப்படுத்தப்பட்ட பாரிய பயணிகள் படகு இலங்கையின் தொழில்நுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைனின் சமீபத்திய தயாரிப்பான பாரிய பயணிகள் படகு ஒன்று, (Eco80) யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 80 அடி நீளமும், 30 அடி அகலமும், சுமார் 40 டன் எடையும் கொண்ட இந்தக் கப்பல், ஒரே நேரத்தில் 200 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியதாகவும், முழுமையாக குளிரூட்டப்பட்ட, சுகாதார வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கப்பல் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப உணவகம் அல்லது சொகுசு வசதிகளுடன் அமைக்கப்படக் கூடியதாகவுள்ளதோடு அனைத்து மின்சாரத் தேவைகளையும் 48 சூரியக்கலங்கள் மூலமாக பூர்த்தி செய்யக்கூடியதாக அமைந்துள்ளது. குறுகிய காலத் தயாரிப்பு அத்துடன், தெற்காசியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட பங்களாதேஷின் சுற்றுலாத் துறை தொடர்பான நிறுவனம் ஒன்றிற்காக மகாசென் மரைன் இந்த கப்பலை 06 மாத குறுகிய காலத்திற்குள் வடிவமைத்து தயாரித்துள்ளது. https://tamilwin.com/article/sri-lanka-s-technological-prowess-to-the-world-1708549426

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.