Everything posted by ஏராளன்
-
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
18 FEB, 2024 | 12:59 PM சென்னை: தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கச் சதி செய்ததாக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021ல் 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் 5 ஏகே 47 துப்பாக்கிகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 1000 தோட்டாக்களை ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ கொச்சி அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இலங்கைத் தமிழர்கள் உள்பட 13 பேரை என்.ஐ.ஏ கைது செய்து கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ‘இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டிருந்ததும் இந்திய பெருங்கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும்’ தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விசாரணையில் இந்த வழக்கில் நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் வேலை பார்த்த முன்னாள் உதவியாளரான சென்னையை சேர்ந்த ஆதிலிங்கத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக என்ஐ ஏ தெரிவித்திருந்தது. குறிப்பாக போதைப்பொருள் மற்றும் ஆயுதகடத்தல் மூலம் கிடைத்த பணத்தை குணசேகரன் தலைவராகவும் ஆதிலிங்கம் துணை தலைவராகவும் இருக்கும் வகையில் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்ற அரசியல் கட்சியை தமிழ்நாட்டில் ஆரம்பித்து நிதி பரிமாற்றம் செய்தது தெரியவந்ததாக என்ஐ ஏ தெரிவித்திருந்தது. இதையடுத்து 14வது நபராக ஆதிலிங்கத்தை கைது செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆதிலிங்கம் மீது பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த வழக்கில் 14வது நபராக ஆதிலிங்கம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை சட்டவிரோதமாக மாற்றிக் கொடுக்கும் வேலையை இவர் செய்துள்ளார். போதைப் பொருட்கள் விற்பனை மூலம் பெற்ற பணத்தை ஹவாலா முறையில் மாற்றம் செய்யும் ஏஜென்டாகவும் ஆதிலிங்கம் செயல்பட்டுள்ளார். இந்த பணம் விடுதலை புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படத்துறையில் பைனான்சியராக பணிபுரிந்த போது இலங்கையை சேர்ந்த குணசேகரன் அவரது மகன் திலீபன் உட்பட விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசியமாக செயல்பட்டு வந்திருக்கிறார். என என்ஐஏ தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/176670
-
தேர்தல் காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படாது; அது எதிர்க்கட்சிகள் உருவாக்கிய கதை - ஜனாதிபதி
Published By: RAJEEBAN 18 FEB, 2024 | 11:31 AM நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்காக குறுகிய வழிமுறைகள் எதுவும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு குறுகிய வழிமுறைகள் எதுவும் இல்லை என இந்தநாட்டு மக்களிற்கு நன்கு தெரியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடனான சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் இடம்பெறும் இக்காலப்பகுதியில் நிறைவேற்று அதிகார ஜனாபதி முறை நீக்கப்படாது என ஜனாதிபதி தெரிவித்தார் என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் நோக்கம் எனக்கில்லை என்பதை நான் பல தடவை தெரிவித்துள்ளேன். அதற்கான நிதிகள் உள்ளன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கம் குறித்த கதைகளை எதிர்கட்சியினரே பரப்பி வருகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எதிர்கட்சியில் பிளவுபட்டுள்ள இரண்டு குழுக்களிற்கு இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. ஒரு குழுவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளதாக தெரியவரும்போது பாரம்பரிய எதிர்கட்சி பதற்றமடைகின்றது என தெரிவித்துள்ள ஜனாதிபதி தங்கள் ஊடக நண்பர்களை பயன்படுத்தி அவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு குறித்த தகவல்களை பரப்பினார்கள் எனது பேரை பயன்படுத்தி அவர்கள் இந்த தகவல்களை பரப்புகின்றனர் என மேலும் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை அவசர அவசரமாக முன்னெடுக்க முடியாது என்பது இந்த நாட்டு மக்களிற்கு எதிர்கட்சியினரை விட நன்கு தெரியும் அதற்கான நடைமுறைகள் உள்ளன நாங்கள் இந்த பொறிக்குள் சிக்ககூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கம் குறித்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் பொருளாதார மீட்சி குறித்து பேசுங்கள் என அவர்தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176658
-
யாழில் போதைப்பொருள் தொடர்பாக இரு மாதங்களில் 250 வழக்குகள் தாக்கல்
18 FEB, 2024 | 11:58 AM யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பாக சுமார் 250 வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின்போது போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை, கடத்திச் சென்றமை, விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் 250 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/176661
-
கடந்த 2023இல் 91 சிறுமிகள் குழந்தை பிரசவிப்பு! : யாழ். போதனா வைத்தியசாலை தகவல்
18 FEB, 2024 | 10:51 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 2023ஆம் ஆண்டில் 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 91 இளவயது மகப்பேறுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176653
-
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு!
இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு எமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் தலைவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இதேவேளை 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம், அரசாங்கத்தின் அனைத்துச் சந்திப்புக்களிலும் வலியுறுத்துகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார். இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதற்தடவையாக வடக்குக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர் தனியார் விடுதியில், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், புத்திஜீவிகளையும் இராப்போசன விருந்துபசாரத்துடன் சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை இந்தச் சந்திப்பின்போது இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில், அரசியல் மற்றும் சிவில் சமூகத்தினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக முதலில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, இந்திய இலங்கை ஒப்பந்தமானது, தமிழ் மக்களையும் அவர்களது பூர்வீகத்தையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும். அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் சார்பில் இந்தியாவே கையொப்பமிட்டுள்ளது. எனினும் தற்போது வரையில் அந்த ஒப்பந்தத்தினை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. 13ஆவது திருத்தச்சட்டம் அதுமட்டுமன்றி, குறித்த ஒப்பந்தத்தின் பின்னர் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு காலத்தை இழுத்தடித்து வருகின்றது. இதேநேரம், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாது தற்போது அவை இயங்காத நிலைமைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆகவே இந்தியா இந்த விடயங்களில் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பெருவாரியாக கைகொடுத்து வருகின்ற நிலையில் அவற்றைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். நரேந்திரமோடி வலியுறுத்தல் இதற்குப் பதிலளித்த, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ் மக்களின் சுதந்திரம், சமத்துவம், சகவாழ்வு சம்பந்தமாக நாம் ஆழமாக கரிசனைகளைக் கொண்டுள்ளோம். எமது பிரதமர் நரேந்திரமோடி, நேரடியாகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் தலைவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளார். அத்துடன், 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம், அரசாங்கத்தின் அனைத்துச் சந்திப்புக்களிலும் வலியுறுத்துகின்றோம். இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை மறுதலிக்கவில்லை. ஆனால், அவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. எனினும் நாம் தொடர்ச்சியாக அந்த விடயத்தில் கவனம் செலுத்துவோம். போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு இதனையடுத்து, அவர், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள் எழுச்சிக்கு தமது அர்ப்பணிப்பான பங்களிப்பு தொடரும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். விசேடமாக, வடக்கு, கிழக்குக்கும் இந்தியாவுக்கும் நீண்டகாலமான பிணைப்புக்கள் காணப்படுகின்றன. அந்தப் பிணைப்புக்களின் அடிப்படையில், இந்தியா குறித்த பகுதியின் மீள் எழுச்சியில் பாரிய கவனம் செலுத்துவதோடு, தொடர்ச்சியான பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலாநதன், சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி.சர்வவேஸ்வரன், யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர். https://ibctamil.com/article/pm-modi-urged-to-formalize-the-india-sl-agreement-1708223045
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
கட்சி பெயரில் திடீரென திருத்தம் செய்த நடிகர் விஜய் நடிகர் விஜய் தனது 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியின் பெயரில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 2ம் திகதி விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததுடன் தனது கட்சி பெயரையும் வெளியிட்டார். கட்சிப் பெயரிலேயே தவறு அவர் அறிவித்த 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சி பெயரில், 'க்' விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். கட்சிப் பெயரிலேயே தவறு இருப்பதாக பிற கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். திருத்தம் செய்ய அனுமதி இதனை தொடர்ந்து தனது கட்சியின் பெயரில் 'க்' சேர்த்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்று மாற்ற நடிகர் விஜய் ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் 'க்' சேர்த்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/actor-vijay-who-changed-the-name-of-the-party-1708232720
-
தலைமை உட்பட அனைத்துப் பதவிகளுக்கான தெரிவுகளையும் மீள நடத்த தயார் - சிறீதரன் அறிவிப்பு
17 FEB, 2024 | 09:15 PM ஆர்.ராம் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவி உட்பட கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கான புதிய தெரிவுகள் அனைத்தையும் மீள நடத்துவதற்கு தயாராக உள்ளேன் என்று அக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தெரிவு உள்ளிட்ட தெரிவுகளுக்கு எதிராகவும், நாளை 19ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 17ஆவது தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை அடுத்து இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்தகட்டமாக எவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள என்பது தொடர்பில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 75வருட கால அரசியல் பாரம்பரியத்தினைக் கொண்ட தமிழரசுக்கட்சிக்கு எதிராக தற்போது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக கட்சி அதனை முறையாக கையாளுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ன. அதேநேரம், கட்சியின் நிருவாகம் தொடர்பில் புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளமையானது யாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது. என்னைப்பொறுத்தவரையில், எனது தலைமைத்தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும் செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன். விசேடமாக கட்சியின் மூலக்கிளை தெரிவுகளில் இருந்து அனைத்தும் மீள நடைபெறுவதாக இருந்தால் கூட அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. மேலும், தற்போது புதிய தெரிவுகள் சம்பந்தமான விடயங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளன. ஆகவே நீதிமன்றத்தின் தீர்மானித்தினைப் பின்பற்றுவதற்கும் நான் தயாராக உள்ளேன். விசேடமாக, நீதிமன்றம் தெரிவுகள் தவறாக இருக்கின்றன என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுமாக இருந்தால் நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன் அதனை மீளச் செய்வதில் எமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. எவ்வாறானினும், இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள்ளும், எதிராகவும் பல சூழ்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சூழ்ச்சிகள் பற்றி புரிதல்களும் எமக்கு தெளிவாக உள்ளன. எனவே, அனைத்து தடைகளையும் முறையாக கையாண்டு அவற்றை கடந்து எமது பாரம்பரிய அரசியல் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தற்போது செயற்பட்டு வருகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/176638
-
உலகம் முழுவதும் நடக்கும் விவசாயிகள் போராட்டம் - எதற்காக?
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் நடக்கும் விவசாயிகள் போராட்டம் - எதற்காக? பட மூலாதாரம்,GETTY IMAGES 17 பிப்ரவரி 2024 இந்தியாவில் மீண்டும் ஒருமுறை மத்திய அரசுக்கெதிரான விவசாயிகள் போராட்டம் தொடங்கியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த முறை இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் பல்வேறு நாடுகளிலும் விவசயிகள் போராட்டட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள புதிய விதிகள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக போலந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நாடுகள் அனைத்திலும் முக்கிய நகரங்களின் பிரதான சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள். ஆனால், எதற்காக இந்த விவாயிகள் போராடி வருகின்றனர்? அதற்கான காரணம் என்ன? ஐரோப்பியா மற்றும் இந்திய விவசாயிகளின் கோரிக்கைகள் இரண்டும் ஒன்றா? பட மூலாதாரம்,ERIC LALMAND/BELGA MAP/AFP படக்குறிப்பு, பல்வேறு நாடுகளில் விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. எந்தெந்த நாடுகளில் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது? மேற்கு போலந்தை சேர்ந்த போஸ்னான் நகரின் சாலைகள் முழுதும் 1,400-க்கும் மேற்பட்ட டிராக்டர்களோடு விவாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே போலந்து, ஹங்கேரி, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி, ருமேனியா ஆகிய நாடுகளில் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவர்களது போராட்ட முறை ஒரே மாதிரியனதாக இருந்தாலும் கூட, ஒவ்வொரு நாட்டு விவசாயிகளுக்கும் கோரிக்கை வேறு வேறானதாக இருக்கிறது. ஸ்பெயினை சேர்ந்த விவசாயிகள் சில முக்கிய நகரங்களுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். ஹங்கேரிய விவசாயிகள் யுக்ரேனிலிருந்து ஐரோப்பாவுக்குள் வரும் விவசாய பொருட்களை தடுத்து நிறுத்துவதற்காக டிராக்டர்களோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸ் மற்றும் பாரிஸை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஐரோப்பா முழுவதிலும் உள்ள விவசாயிகள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். பட மூலாதாரம்,VILLAR LOPEZ/EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு ஐரோப்பிய விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் என்ன? ஐரோப்பாவில் உள்ள விவசாயிகள் நான்கு முக்கிய பிரச்னைகளை முன்வைக்கின்றனர். விவசாயத்தில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு. விவசாயத்தில் அதிகரித்து வரும் அரசின் தலையீடு. பசுமை ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் விவசாயிகள் மீது விதித்துள்ள விதிமுறைகள். ஐரோப்பா அல்லாத நாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரிப்பதால் உள்நாட்டு விளைபொருட்களின் விலை குறைவு. ஐரோப்பாவைச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டு விவசாயிகளுக்கும் வெவ்வேறு பிரச்னைகள் உள்ளன. போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விவசாயிகளுக்கு உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை விவசாய பொருட்களை தடுக்க வேண்டும். அதிக இறக்குமதியின் காரணமாக உள்ளூர் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்பதே அவர்களது வாதம். ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு எதிராக ஸ்பெயினை சேர்ந்த விவசாயிகளும் போராட்டம் நடத்தியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த விவசாயிகள் பட்டாசு வெடிப்பது மற்றும் குப்பைகளை சாலையில் கொட்டி தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கிரீஸ் நாட்டைச் சேர்ந்த விவசாயிகள், மின்கட்டணம் குறைப்பு, டீசல் வரி ரத்து மற்றும் கால்நடைத் தீவனத்திற்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இத்தாலியை சேர்ந்த விவசாயிகள் வருமான வரியில் இருந்து தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விதிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ள முடிவை எதிர்த்து போராடி வருகின்றனர். போலந்து விவசாயிகள் மொத்தம் 256 இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அங்கு விவசாயிகள் கையில் கொடிகளை ஏந்திக்கொண்டு முக்கியமான சாலைகளை முற்றுகையிட்டுள்ளனர். அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூற்றுப்படி, போஸ்னனில் மட்டும் 6,000 விவசாயிகள் கூடியுள்ளனர். இந்த விவசாயிகள் பட்டாசு வெடிப்பது மற்றும் குப்பைகளை சாலையில் கொட்டி தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரீஸை சேர்ந்த விவசாயிகள் மின்கட்டணம் குறைப்பு, டீசல் வரி ரத்து மற்றும் கால்நடைத் தீவனத்திற்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர் ஐரோப்பிய ஒன்றியம் கார்பன் உமிழ்வு மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை 50% குறைக்க முடிவு செய்தது. ஆனால், விவசாயிகளின் எதிர்ப்பால் அந்த முடிவு திரும்ப பெறப்பட்டது. இருப்பினும், 2040-க்குள் கார்பன் உமிழ்வை 90% கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். ஸ்பெயினில் நான்காவது நாளாக பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருவதால், பில்பாவ் போன்ற முக்கிய நகரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது முக்கிய கோரிக்கைகளாக குறைந்தபட்ச ஆதாரவிலை உத்திரவாதம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை முன்வைத்துள்ளனர். ஒருவகையில் ஐரோப்பாவில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையில் இருந்து இது மாறுபட்டதாக உள்ளது. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, இந்திய விவசாயிகள் போராட்டம் டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன? குறைந்தபட்ச ஆதார விலைக்கான தனிச்சட்டம். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 2020-2021-ஆம் ஆண்டுகளில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும். லக்கிம்பூர் கேரி வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு சட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக் கூடாது. விவசாயிகளுக்கு உடனடி கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். 58 வயதுக்கு அதிகமான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்தாண்டு (2024) இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ஐரோப்பிய நாடுகள் இந்தியா போல விவசாயத்தை சார்ந்த நாடுகள் இல்லையென்றாலும் கூட, அங்கு விவசாயிகளால் அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியும். எனவே உலகம் முழுவதும் போராடி வரும் விவசாயிகளின் அடுத்தகட்டம் என்ன? இதனால் உலக அரசியலில் தாக்கம் ஏற்படுமா? இந்த போராட்டங்களினால் இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா நாடுகளின் அரசியலில் ஏற்படும் தாக்கம் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். https://www.bbc.com/tamil/articles/cv20e2e217jo
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்: இங்கிலாந்தின் 'பேஸ்பால்' கிரிக்கெட்டைச் சமாளிக்கும் இந்தியாவின் 'ஜெய்ஸ்பால்' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சஞ்சய் கிஷோர் பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இங்கிலாந்தின் 'பேஸ்பால்' கிரிக்கெட்டுக்கு பதிலாக இந்தியா 'ஜெய்ஸ்பால்' கிரிக்கெட்டை களமிறக்கியிருக்கிறது. ஆம், இந்தியாவின் இளம் இடது கை தொடக்க பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணியை ஐ.சி.யு.வுக்கு அனுப்பியதாகத் தெரிகிறது. அதிலிருந்து இங்கிலாந்து அணி மீள்வதற்கு சாத்தியமில்லை என்றும் தெரிகிறது. ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், இந்தியா இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 322 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இன்றைய காலகட்டத்தில், டி-20 போன்ற வேகமான கிரிக்கெட்டின் ஆக்ரோஷம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் ஒரு வீரரிடம் அரிதாகவே காணப்படுகிறது. உலக கிரிக்கெட்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போல் டெஸ்ட் மற்றும் டி-20 கிரிக்கெட்டை இவ்வளவு சிறப்பாக சமநிலையில் வைத்திருக்கும் ஒரு வீரர் இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி எச்சரிக்கையுடன் தொடங்கி முதல் 39 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், அதன் பிறகு அவர் விரைவில் தனது ஆட்டத்தை மீட்டெடுத்து, பவுண்டரிகளை விளாசி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்பின்னர்களின் பந்துகளை விளாசிய ஜெய்ஸ்வால் பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் இங்கிலாந்தின் அனுபவமிக்க பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை குறிவைத்தார். ஆட்டத்தின், 27வது ஓவரில் ஆண்டர்சன் பந்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசினார். லாங் ஆன் ஆஃப் ஸ்பின்னர் டாம் ஹார்ட்லி ஓவரில் சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஜெய்ஸ்வாலைக் கட்டுப்படுத்துவது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சற்று சிரமமாகவே இருந்தது. ஜெய்ஸ்வாலின் ஆக்ரோஷத்தில் இருந்து, பந்துவீச்சாளர்கள் ஜோ ரூட் மற்றும் ரெஹான் அகமதும் தப்பவில்லை இருவரின் பந்துகளிலும் ஜெய்ஸ்வால் சிக்ஸர் அடித்தார். அவரது ஆக்ரோஷத்தில் டி-20 போட்டியின் தன்மை வெளிப்பட்டாலும், அவர் ஆடித்த ஒவ்வொரு பவுண்டரியும் மிகவும் நேர்த்தியாக இருந்தது. யஷஸ்வி தான் ஆடிய டெஸ்ட் போட்டிகளில், 122 பந்துகளில் மூன்றாவது சதத்தையும், தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது சதத்தையும் அடித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில், அவர் 209 ரன்கள் எடுத்திருந்தார். குறிப்பாக இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களையும் யஷஸ்வி விட்டுவைக்கவில்லை. அவரது ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்வீப் ஷாட்கள் மிக அழகாக இருந்தன. அவரது இன்னிங்ஸைப் பார்த்த முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தனது சமூக ஊடகப் பக்கமான 'எக்ஸ்' தளத்தில், "யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு சதத்திற்குப் பின் சதம். சுழற்பந்து வீச்சாளர்கள் நடத்தப்பட வேண்டிய விதத்தில் நடத்தப்படுகிறார்கள். கொடு கொடு கொடு," என பதிவிட்டிருந்தார். சிக்சருடன் அரை சதம், நான்குடன் சதம் பட மூலாதாரம்,GETTY IMAGES யஷஸ்வி ஜெய்ஸ்வால் 39-வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். நேற்றைய ஆட்டத்தில், 133 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை அடித்து, 104 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 78.19 ஆகும். இதையடுத்து முதுகு வலி காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். சதம் அடித்த யஷஸ்வி, டேவிட் வார்னரைப் போல் காற்றில் குதித்து கொண்டாடினார். ஒருவேளை முதுகு வலிக்கு இதுவே காரணமாக இருக்கலாம். இருப்பினும், இந்த காலகட்டத்தில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விராட் கோலிக்கு பிறகு 400 ரன்கள் எடுத்த இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றார். விராட் 2018-இல் 593 ரன்களும், ரோஹித் சர்மா 2021-இல் 368 ரன்களும் எடுத்திருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹைதராபாத் டெஸ்டின் முதல் நாளில், ஜெய்ஸ்வால் 70 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த, இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்ஷா போக்லே ஆகியோர் டெஸ்டில் இருந்து டி20க்கு மாறுவது அல்லது டி20யில் இருந்து டெஸ்டுக்கு மாறுவது கடினமா என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். யஷஸ்வி, டெஸ்ட் போட்டியில் 12 ஜூலை 2023 அன்று அறிமுகமானார். அதன் பிறகு அவர் 13 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக மூன்று சதங்கள் அடித்ததன் அடிப்படையில் அவர் கூட்டாக ஏழாவது இடத்தில் உள்ளார். இந்த விஷயத்தில், முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை சமன் செய்துள்ளார். ஜெய்ஸ்வால் இதுவரை எத்தனை சதங்கள் அடித்துள்ளார்? பட மூலாதாரம்,GETTY IMAGES யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்நாட்டு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஆக்ரோஷமான பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். 2019-ஆம் ஆண்டில், ஹசாரே டிராபியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இவர் வெளிச்சத்திற்கு வந்தார். ஜெய்ஸ்வால் இன்னிங்சில் 113, 22, 122, 203 மற்றும் 60 ரன்கள் எடுத்தார். 2020-ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு அற்புதமான சதத்தை அடித்தார். இவர் அந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் முதல் சீசனில் சரியாக விளையாடவிட்டாலும், படிப்படியாக அவர் முன்னேறினார். கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 163.61 ஸ்ட்ரைக் ரேட்டில் 625 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லருடன் இவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. 13 பந்துகளில் அரை சதம் அடித்து அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். யஷஸ்வி 2019-இல் ரஞ்சி விளையாடத் தொடங்கினார். 2021-22ல், அவர் தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்து மும்பையை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். இதுவரை, அவர் 37 முதல் தர இன்னிங்ஸில் 73 சராசரியுடன் 2482 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 11 சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடங்கும். அதனால்தான் அவருக்கு ஒருநாள் மற்றும் டி-20க்கு முன் டெஸ்ட் கேப் வழங்கப்பட்டது. இரவில் சமையல், பகலில் பயிற்சி! பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது நண்பர் ராஜு பாயுடன் மும்பையில் (ஜூலை 2018) உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டம் சூரியவான் கிராமத்தைச் சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தந்தை சிறிய ஹார்டுவேர் கடை நடத்தி வந்தார். கிரிக்கெட் மீதான ஆர்வம் அவரை 11 வயதில் மும்பைக்கு இழுத்தது. தனியாகப் போராடினார். பால் பண்ணையில் கூட வேலை செய்ய வேண்டியிருந்தது. பல ஆண்டுகளாக, மும்பை ஆசாத் மைதானத்தில் உள்ள முஸ்லிம் யுனைடெட் கிளப் கூடாரத்தில் யஷஸ்வியும் வசித்து வந்தார். இங்கு இரவில் உணவு சமைத்துவிட்டு, பகலில் கிரிக்கெட் பயிற்சி செய்து வந்தார். இது தவிர கோல் கப்பாவும் விற்கப்பட்டது. இவை அனைத்திற்கும் மத்தியில், அவர் தொடர்ந்து கடினமாக உழைத்தார். கடின உழைப்பு பலன் தந்தது, மற்றவை வரலாறானது. https://www.bbc.com/tamil/articles/c4nj42w77elo
-
வீதியில் உலரவைக்கப்படும் 'நெல்லை' உணவாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு; முல்லை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்
நேரடியாக தாரில் படும் வகையில் போடுவதால் ஏதும் தாக்கம் இருக்கலாமண்ணை.
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
அஸ்வெசும : விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு! அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. ஒரே நபர் பல விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். முதற்கட்டத்தின் கீழ் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/292261
-
இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவித்தல்!
17 FEB, 2024 | 06:28 PM இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை எதிர்வு கூறியுள்ளது. இதனடிப்படையில் அனல் மின் உற்பத்தி 63 சத வீதம் வரை அதிகரிக்கும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். மின்தேவை அதிகரித்துள்ள நிலையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இவ்வாறானதொரு நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/176641
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
மேலுள்ள படத்தில் Avdiivka பகுதி.
-
புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா யாழ் விஜயம்
வடக்கிலுள்ள இந்து - கிறிஸ்தவ ஆலயங்களை தரிசித்த இந்திய தூதுவர் இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த நிலையில் வடக்கிலுள்ள இந்து - கிறிஸ்தவ ஆலயங்களை நேற்று (16) தரிசித்திருந்தார். அந்த வகையில் இலங்கையின் புனிதம் மிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான தொன்மைமிகு திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் அவர் வழிபாட்டினை மேற்கொண்டிருந்தார். மடு தேவாலயம் குறித்த ஆலயமானது இந்தியாவின் நன்கொடையின் மூலம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க மடு தேவாலயத்தில் வழிபாடு செய்து வடமாகாண விஜயத்தை ஆரம்பித்ததுடன், மக்களின் நல்வாழ்வு - சுபீட்சத்துக்காக பிரார்த்தித்துள்ளார். அத்துடன் மடுதேவாலயத்தில் யாத்திரிகர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை விஸ்தரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/indian-ambassador-visited-hindu-christian-temples-1708120558?itm_source=parsely-api
-
புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு
நவால்னியின் மரணத்திற்கு புட்டினே காரணம் - பைடன் Published By: RAJEEBAN 17 FEB, 2024 | 12:26 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்த எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின் மரணத்திற்கு ரஸ்ய ஜனாதிபதியே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். புட்டினே இதற்கு முழுக்காரணம் என தெரிவித்துள்ள அவர் நான் கடவுளை நம்புகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து எந்த தவறுகளையும் இழைக்கவேண்டாம் புட்டினே காரணம் என அவா தெரிவித்துள்ளார். நவால்னியின் துணிச்சலையும் மீண்டும் ரஸ்யாவிற்கு திரும்பும் முடிவையும் பைடன் பாராட்டியுள்ளார். புட்டின் அரசாங்கத்தின் ஊழல் வன்முறைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் அவர் துணிச்சலாக எதிர்த்தார் என தெரிவித்துள்ள பைடன் இதற்கு பதில் புட்டின் நவோல்னிக்கு நஞ்சூட்டினார், கைதுசெய்தார், போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்குதாக்கல் செய்தார், சிறையில் அடைத்தார் அங்கும் அவர் தனிமையில் வைக்கப்பட்டிருந்தார் என பைடன் தெரிவித்துள்ளார். சிறையிலும் அவர் உண்மையின் குரலாக ஒலித்தார் என பைடன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176606
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களில் 20 பேர் விடுதலை நெடுந்தீவுக்கு அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 20பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்குஅண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய கடற்றொழிலாளர்களின் வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 20பேர் இன்றையதினம், 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். ஒரு வருட கால சிறைத் தண்டனை மேலும் இரண்டு படகுகளின் ஓட்டுனர்களுக்கும் ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன் ஒரு கடற்றொழிலாளர் இரண்டாவது தடவையும் எல்லை தாண்டி வந்ததனால் அவருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. விடுதலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை நிறைவுற்ற பின்னர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர். https://tamilwin.com/article/bail-for-20-indian-fisherman-1708067147
-
புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா யாழ் விஜயம்
ராமர் சேது பாலப் பகுதிக்கு இந்திய தூதர் விஜயம் இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா நேற்றைய தினம் (16.02.2024) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் இந்தியா - இலங்கை இடையிலான வலுவான கலாசாரப் பிணைப்பு மற்றும் பொதுவான மரபுகளைச் சுட்டிக்காட்டும் வகையில் ராமர் சேது பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்திய இலங்கை உறவு இதன்போது இந்திய இலங்கை மக்களின் நல்வாழ்வு மற்றும் இந்திய இலங்கை உறவுகளுக்காகவும் அவர் பிரார்த்தனைகளில் ஈடுப்பட்டிருந்தார். அத்துடன் ராமர் சேது பகுதியை அடுத்து இந்திய தூதுவர் வேறு சில இடங்களுக்கும் நேற்று (16) விஜயத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/the-indian-ambassador-who-visit-rama-palam-1708117500
-
வீதியில் உலரவைக்கப்படும் 'நெல்லை' உணவாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு; முல்லை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்
17 FEB, 2024 | 09:56 AM வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் 'கற்மியம்' எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், எனவே அந்த நெல் அரிசியை உணவாக உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, பொதுமக்கள் வீதியில் நெல்லை உலரவிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற நிலையில் அக்கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது பெரும்போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் விவசாயிகள் பிரதான வீதிகளை நெல் உலரவிடும் தளங்களாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் பாரிய அளவில் வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. பலர் வீதி விபத்துக்களில் சிக்கி பரிதாபமான முறையில் உயிரிழக்கின்றனர். இவ்வாறு வீதியில் நெல் உலரவிடுவதனால் வீதி விபத்தையும் தாண்டி பாரிய ஆபத்தொன்று காணப்படுகின்றது. வாகன டயர்கள் வீதியில் உராய்வதனால் 'கற்ட்மியம்' எனும் மூலகம் வீதியில் படிந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறான வீதியிலேயே விவசாயிகள் நெல்லினை உலரவைக்கின்றனர். இவ்வாறு நெல்லினை உலரவிடும்போது குறித்த 'கற்மியம்' எனும் மூலகம் நெல்லோடு கலந்துவிடுகின்றது. இவ்வாறு இந்த 'கற்மியம்' எனும் மூலகம் கலந்த நெல் அரிசியை தொடர்ந்து பத்துத் தொடக்கம் பதினைந்து வருடங்கள் உணவாக உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்பட வய்ப்பிருக்கின்றது. எனவே, வீதியில் நெல் உலரவிடுவதை விவசாயிகள் தவிர்ப்பதே சிறந்தது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். https://tamilwin.com/article/indian-ambassador-to-sri-lanka-visited-jaffna-1708079393
-
புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா யாழ் விஜயம்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர் இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா இன்றைய தினம் (16.02.2024) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் அவர் பார்வையிட்டு வருகின்றார். அந்த வகையில் அவர் காங்கேசன்துறை துறைமுகத்தினை பார்வையிட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாண இந்திய தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர். மேலும், நயினாதீவுக்கு சென்ற உயர்ஸ்தானிகர் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில், நயினாதீவு நாகவிகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் இந்திய திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கலப்பு மின் திட்ட இடங்களையும் பார்வையிட்டு ஆராய்ந்துள்ளார். மேலதிக தகவல் - தீபன் அத்தோடு, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பயனாளிகளுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜாவினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், யாழ்ப்பாண இந்திய தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன், யாழ்.மாநகர சபையின் ஆணையாளராக ச.கிருஷ்னேந்திரன், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர். https://tamilwin.com/article/indian-ambassador-to-sri-lanka-visited-jaffna-1708079393
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ். பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளது. அத்துடன், மத்தள விமான நிலையம் தொடர்பில் முதலீட்டு விருப்பங்கள் கோரப்பட்டன. அதன்படி, டெண்டர் சபை ஒரு முதலீட்டாளரை தெரிவு செய்துள்ளது. தனியார் கூட்டுத் திட்டம் குறித்த முதலீட்டாளருடனான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த வாரம் உடன்பாடு எட்டப்படலாம். அதன் மூலம் அந்த விமான நிலையத்தையும் இலாபமீட்டும் வகையில் மாற்ற முடியும். அத்தோடு, இந்த ஒப்பந்தம் ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/flight-service-to-india-from-jaffna-palali-airport-1708070599
-
செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரை இல்மனைட் அகழ்வதற்கு அனுமதிக்க முடியாது ; சாள்ஸ் எம்.பி கடும் எதிர்ப்பு
Published By: DIGITAL DESK 3 17 FEB, 2024 | 09:53 AM முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை தொடக்கம், கொக்கிளாய் வரையான கடற்கரையோரத்தில் இல்மனைட் அழகழ்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதி கோரப்பட்ட நிலையில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கடுமையான எதிர்ப்பையடுத்து குறித்த அனுமதியை அபிவிருத்திக்குழு நிராகரிப்பதாகத் தீர்மானித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (16)இடம்பெற்றபோதே குறித்த இல்மனைட் அகழ்விற்கான அனுமதி கோரப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த அனுமதி இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரையில் இல்மனைட் அகழ்ந்தால் அருகே உள்ள வயல் நிலங்களும் பாதிக்கப்படுமெனவும், செம்மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உவர்நீர்த் தடுப்பணையும் சேதப்படுத்தப்படுமெனவும், பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் இதன்போது சாள்ஸ் நிர்மலநாதனால் சுட்டிக்காட்டப்பட்டது. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு அனுமதி வழங்காத விடயத்தை, மத்திய அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாதெனவும், செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரை இல்மனைட் அகழ்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும் சாள்ஸ் நிர்மலநாதன் இதன்போது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு இந்த அனுமதிக் கோரிக்கையை நிராகரிப்பதாக முடிவெடுத்ததுடன், இல்மனைட் அகழ்வால் ஏற்படும் பாதிப்பு நிலையைச் சுட்டிக்காட்டி உரியவர்களுக்கு அறிக்கை அனுப்புவதெனவும் முடிவெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/176590
-
சோரா ; எழுத்துரு ஆவணத்தை கொண்டு காணொளி
Published By: DIGITAL DESK 3 16 FEB, 2024 | 04:05 PM எழுத்துரு ஆவணத்தை கொண்டு காணொளியை உருவாக்கும் கருவியை சட் ஜிபிடியை (ChatGPT) உருவாக்கி ஓபன் ஏஐ நிறுவனம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு சோரா என யெரிடப்பட்டுள்ளது. சோரா என்ற ஜப்பானிய சொல்லுக்கு வானம் என அர்த்தம். இதன்மூலம், எழுத்துரு ஆவணத்தில் வழங்கப்படும் விடயம் மற்றும் வடிவம் தொடர்பான அறிவுறுத்தல்களுக்கு இணங்க ஒரு நிமிடத்தில் யதார்த்தபூர்வமான காட்சிகளை உருவாக்க முடியும். மனதிலுள்ள ஒரு படத்தின் அடிப்படையில் ஒரு காணொளியை உருவாக்கலாம் அல்லது புதிய உள்ளடக்கத்துடன் இருக்கும் காட்சிகளை நீடிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. சோராவை ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காணொளி படைப்பாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது. ஓபன் ஏஐ சேவை விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளை சோராவின் பின்புலத்தில் இருந்து "சிவப்பு குழு" வல்லுநர்கள் சோதனை செய்வார்கள். அதாவது, "தீவிர வன்முறை, பாலியல் உள்ளடக்கம், வெறுக்கத்தக்க படங்கள், பிரபலங்களின் தோற்றம் அல்லது மற்றவர்களின் ஐபி" போன்றவற்றை தடைசெய்யும். சோராவை ஆராய்ச்சியாளர்கள், காட்சி கலைஞர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். காணொளிகள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவை என்பதைக் உறுதிப்படுத்த ஒரு வாட்டர்மார்க் உள்ளது என நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176542
-
முல்லைத்தீவு பரந்தன் வீதியில் விபத்து : எருமை மாடுகளுடன் மோதிய பேருந்து
போதிய அகலமற்ற வீதிகளில் எருமைகளை(வீதியும் கறுப்பு எருமையும் கறுப்பு எச்சரிக்கை துணிகள் எதுவுமில்லை) கொண்டு செல்வதும் பிழை என நினைக்கிறேன். அல்லது முன் பின்னாக எச்சரிக்கைத் துணிகள் கட்டியபடி இருவர் செல்லவேண்டும்.
-
புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு
அலக்ஸே நவால்னி: ரஷ்ய அதிபர் புதினை அச்சுறுத்திய இவர் யார்? எதிர்கொண்ட பிரச்னைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரசாரகரான அலக்ஸே நவால்னி, அதிபர் விளாதிமிர் புதினுக்கு எதிரான முக்கிய முகமாகக் கருதப்படுகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் தற்போது உடல்நலம் மோசமாகி உயிரிழந்துள்ளதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிகார மட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள ஊழலை வெளிப்படுத்தி இவர் வெளியிட்ட ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. இன்று வரையிலும் இவர் கிரெம்ளினுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார். புதினுக்கு எதிராக தேர்தலில் நிற்க முயற்சி செய்து அது முடியாமல் போனாலும், தனது தொடர் இயக்கத்தின் மூலமாகப் பல லட்சம் ரஷ்ய மக்கள் விரும்பும் நபராக அவர் உருவெடுத்துள்ளார். யார் இந்த அலெக்ஸே நவால்னி? பட மூலாதாரம்,GETTY IMAGES அலெக்ஸே நவால்னி ரஷ்ய தலைநகரான மாஸ்கோவுக்கு மேற்குப் பகுதியில் உள்ள பியுடன் எனும் கிராமத்தில் 1976ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி பிறந்தவர். இவர் தனது சட்டபடிப்பை 1998இல் மாஸ்கோவில் உள்ள சட்டப் பல்கலைக் கழகத்தில் முடித்தார். கடந்த 2010இல் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைகழகத்தில் ஆய்வு உதவியுடன் கூடிய Yale World Fellow திட்டத்தில் மாணவராக ஓராண்டு் ககாலம் கழித்தார். நவால்னிக்கு யூலியா என்ற மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். நவால்னி எப்படி பிரபலமானார்? ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் தீவிர எதிர்ப்பாளராக அறியப்படும் 47 வயது நவால்னி ரஷ்யாவின் அதிகார மையத்தில் நிலவும் ஊழலை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காகவே மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதுவே அவருக்குப் பல இன்னல்களையும் ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அலக்ஸே நவால்னி ஓவியம் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடவும் அவர் முயற்சி செய்தார். அதற்கான பிரசாரப் பணிகளைத் தொடங்கி, பிராந்திய அளவிலான குழுக்களையும் அமைத்தார். ஆனால், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதால், அவரால் அந்தத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. ஆனாலும், பல ரஷ்யர்களிடையே அவரது குரல் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ரஷ்ய அரசுக்கு அவர் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தார். அவரது ஊழலுக்கு எதிரான குழுவினர் மேற்கொண்ட பிரசாரங்கள், ரஷ்ய அரசின் ஒவ்வொரு மட்டத்திலும் இருந்த ஊழல்களை அம்பலப்படுத்தின. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் உலகம் முழுவதும் உள்ள பல லட்சம் பேரிடம் பிரபலமானார். நவால்னி சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதிலும், யுக்ரேன் போருக்கு எதிராக உள்நாட்டில் எழுந்த குரல்களில் முக்கியமானவராக இருந்தார். 2022ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், யுக்ரேன் போர் குறித்துப் பேசிய இவர், “புதின் ஒரு முட்டாள்தனமான போரை ஆரம்பித்து வைத்திருப்பதாக” கூறினார். புதின் மற்றும் ரஷ்ய அரசை நோக்கித் தொடர் விமர்சனம் பட மூலாதாரம்,GETTY IMAGES நவால்னி 2008ஆம் ஆண்டுதான் ரஷ்ய அரசியலில் பெரிய சக்தியாக வளரத் தொடங்கினார். ஏனெனில் ரஷ்யாவின் ஒரு சில பெரிய மாகாணங்களில் முறைகேடுகள், ஊழல்கள் நடந்தது குறித்து அவர் தனது இணையப் பக்கத்தில் எழுதி வந்தார். அவருடைய ஓர் உத்தி என்னவெனில், பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒரு சிறு பங்குதாரராக இணைந்துகொள்வார். பின்னர் மேலதிகாரத்தில் உள்ளவர்களைக் கேள்விக்கு உள்ளாக்குவார். இவர் ரஷ்யாவில் 2011இல் நடந்த போராட்டங்கள் மூலம் பிரபரலமானார். அப்போது தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி தொடர்ந்து கேள்வி எழுப்பினார். அதனால் ரஷ்யா கடந்த சில தசாப்தங்களில் சந்திக்காத மிகப்பெரிய போராட்டங்களைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து நவால்னி கைது செய்யப்பட்டபோது அது இன்னும் அவரை பிரபலமாக்கியது. மோசடி வழக்கு என்ற பெயரில் அவர் 2013 ஜுலை மாதம் சிறையில் அடைக்கப்பட்டபோது அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாவே பார்க்கப்பட்டது. ஆனால், அதே ஆண்டில் அவர் மாஸ்கோ மேயர் தேர்தலில் பிரசாரம் செய்ய அனுமத்திக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் புதின் கூட்டாளி செர்கே சோபியானியிடம் தோற்றார். அதற்குக் காரணாமாக இவருக்கு தொலைக்காட்சி ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது கூறப்பட்டது. வெறும் இணையதளம் மற்றும் வாய்வழிப் பிரசாரமே அவர் செய்ய முடிந்தது. எனவே இவரது ஆதரவாளர்கள் எதிரணியின் வெற்றி ஒரு நாடகம் என்று கூறினார்கள். புதின் மீது கடுமையான விமர்சனம் பட மூலாதாரம்,GETTY IMAGES நவால்னி தொடர்ந்து புதின் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்தார். ரஷ்யாவின் ரத்தத்தை உறிஞ்சி எடுப்பவர் என்று அதிபரை குற்றம் சாட்டினார். இவர் எளிமையான ரஷ்ய மொழியில் பேசியதால், வேகமாக ரஷ்ய இளைஞர்களின் குரலாக உருவெடுத்தார். சமூக ஊடகங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். ரஷ்யாவின் செல்வாக்கான பிரபலங்களின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரது யூட்யூப் சேனலில் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டது. அதில் குறிப்பாக இவரது ஊழலுக்கு எதிரான குழு, புதினின் அரண்மனை குறித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது. அதில், புதினின் பணக்கார நண்பர்கள் அவருக்கு அரண்மனை ஒன்றைப் பரிசளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த வீடியோ மட்டும் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. ஆனால் அதை ஒரு போலி விசாரணை வீடியோ என்றும், அந்த வீடியோ போரடிப்பதாகவும் புதின் கூறினார். மேலும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் மறுத்திருந்தார். அதைத் தொடர்ந்து யுக்ரேன் போர், ரஷ்ய அதிகார மட்டத்தில் நடைபெற்று வரும் ஊழல் மற்றும் அதனோடு அதிபர் புதினுக்கு உள்ள தொடர்பு என அரசு என அதிபரை தீவிரமாக விமர்சிப்பவராகப் பார்க்கப்பட்டார் நவால்னி. இந்த நிலையில் பலமுறை அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்படி 2020ஆம் ஆண்டு அவர் மீது நடத்தப்பட்ட நச்சுத்தாக்குதலில் அவர் கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தொடர் தாக்குதல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனைவியுடன் அலக்ஸே நவால்னி கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20ஆம் தேதி, சைபீரியாவில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் வந்தபோது திடீரென நவால்னி மயங்கி விழுந்தார். ஓம்ஸ்க் நகரில் விமானம் தரையிறக்கப்பட்டு அவசர உதவி விமானத்தில் ஜெர்மனி அழைத்து வரப்பட்ட நவால்னிக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் நச்சு ரசாயன தாக்கத்துக்கு ஆளானதாகக் கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பின்னர் ஜெர்மானிய இதழான டெர் ஸ்பீகலுக்கு நவால்னி அளித்த பேட்டியில், நோவிசோக் எனப்படும் நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடிய ரசாயன தாக்குதலுக்குத் தாம் ஆளாக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார். இவரது கூற்றானது பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனிலுள்ள ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES நோவிசோக் நச்சு ரசாயனத்தைப் பயன்படுத்துவதற்கான உத்தரவை ரஷ்யாவின் மூன்று உளவு அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமே பிறப்பிக்க முடியுமென்றும், அவர்கள் அனைவருமே புதினுக்கு கீழே பணிபுரிபவர்கள் என்றும் அவர் கூறினார். ஆனால், நவால்னியின் நேரடி குற்றச்சாட்டு குறித்துப் பதிலளித்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர், நோவிசோக் நச்சு ரசாயன தாக்குதலுக்கு நவால்னி உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லையென்று தெரிவித்தார். ரஷ்யாவில் அவர் எந்நேரமும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற நிலையிலேயே இருந்தார். அவர் மீது நடத்தப்பட்ட நோவிசோக் நச்சுத் தாக்குதலுக்கு முன்பாகவே, பல முறை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார். அடிக்கடி கைதும் செய்யப்பட்டார். அவர் மீது பலமுறை ரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒருமுறை அவர் மீது கிரீன் டை தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் கண்களில் கடும் எரிச்சலை அனுபவித்தார் நவால்னி. சிறைவாசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீதிமன்றத்தில் அலக்ஸே நவால்னி கடந்த 2013ஆம் ஆண்டே மோசடி வழக்கு ஒன்றில் இவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தேர்தலில் பங்கேற்பதற்காக அவர் சிறையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார். இந்தத் தண்டனை நிறுத்தத்திற்கான வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், அதன் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டது. அதாவது 2020 காலகட்டத்தில் வழக்கமான காவல்நிலைய வருகையை அவர் கடைபிடிக்கவில்லை எனக் கூறி மீண்டும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்வாதமாக நவால்னியின் வழக்கறிஞர்கள், அவர் அந்த நேரத்தில்தான் நச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சையில் இருந்தார் என்பதை முன்வைத்தனர். ஆனாலும், 2021ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாஸ்கோ திரும்பிய உடனேயே அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் நவால்னி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நவால்னிக்கு சிறைத் தண்டனையை 9 ஆண்டுகளாக அதிகரித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி அவற்றுக்கு நிதியுதவி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு நவால்னிக்கு கூடுதலாக 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இறுதி சிறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அலக்ஸே நவால்னியை விடுவிக்குமாறு நடத்தப்பட்ட போராட்டம் கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட அலெக்ஸி நவால்னி, இறுதியாக ஆர்க்டிக் வட்டத்திலுள்ள ஆர்டிக் பீனல் காலனி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிறையிலேயே இறந்துவிட்டதாக, சிறைத்துறை செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய செய்தி முகமைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து யமலோ-நெனெட்ஸ் பிராந்தியத்தில் உள்ள சிறைத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை நடைப்பயிற்சிக்குச் சென்று வந்த நவால்னி உடல் நலமற்றுக் காணப்பட்டதாகவும், திடீரென்று சுயநினைவற்று விழுந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவசர சிகிச்சை மருத்துவர்கள் வந்து உடனே சிகிச்சையளித்தும், பலனின்றி அவர் இறந்துவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய மருத்துவர்கள் முயன்று வருகிறார்கள் என சிறைத்துறை கூறியுள்ளதாக, டாஸ்(Tass) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நவால்னியின் மனைவி யூலியா, “இந்தச் செய்தியை நம்புவதா என்று தெரியவில்லை. இதுவரை அரசுத் தரப்பில் இருந்து மட்டுமே செய்திகள் வந்துள்ளன. புதின் அரசை நம்மால் நம்ப முடியாது. இந்தச் செய்தி மட்டும் உண்மை என்றால் இதற்கும், ரஷ்யாவிற்கு செய்தவற்றுக்கும் புதின் மற்றும் அவரது கூட்டாளிகளே பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cqqx7071k05o
-
அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்களாக யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தெரிவு
Published By: VISHNU 16 FEB, 2024 | 10:55 PM கண்டி மாவட்டத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் வீதம் தற்போது குறைவடைந்துள்ளதாக கண்டி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷான் மசாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டிலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் கண்டி தேசிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வைத்தியர் தற்போது அது 5வது இடத்திற்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். கண்டி மாவட்ட செயலக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த சில வருடங்களாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் வெற்றியடைந்தமையே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் என தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்த அறிக்கையின்படி, கண்டியிலிருந்து 10 பிரிவுகள் நாட்டின் அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு தற்போது அந்த எண்ணிக்கை 02 ஆக குறைந்துள்ளது எனவும் அதன் பிரகாரம் கடந்த வருடம் 20% டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது அது 12% ஆக குறைந்துள்ளது. இந்த அறிக்கைகளின்படி நாட்டின் அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்களாக யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன எனவும் கூறினார். இதன்போது கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ, மத்திய மாகாண ஆளுநர் லலித் வூ கமகே, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/176581