Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: VISHNU 16 FEB, 2024 | 10:28 PM இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். நயினாதீவுக்கு சென்ற உயர்ஸ்தானிகர் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில், நயினாதீவு நாகவிகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் இந்திய திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கலப்பு மின் திட்ட இடங்களையும் பார்வையிட்டு ஆராய்ந்தார். தொடர்ந்து காங்கேசன் துறை துறைமுகம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற உயர்ஸ்தானிகர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார். https://www.virakesari.lk/article/176580
  2. Published By: VISHNU 16 FEB, 2024 | 08:22 PM கிழக்குப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தால் பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (16) பிற்பகல் 5.00 மணியளவில் நடைபெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் புதிய விடுதி வளாகத்தை உடனே தாருங்கள்...!, தனித்தனியாக மானியங்கள், ஆய்வகப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குங்கள், அனைத்து மாணவர்களுக்கும் WI-FI வசதிகளை செய்து கொடுங்கள்...!, தாமதமான மகாபொல மாணவர் உதவித் தவணைகள் உடனே வழங்க ஆவண செய்யுங்கள்...! போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கண்டன பேரணியிலும் ஈடுபட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/176575
  3. Published By: VISHNU 16 FEB, 2024 | 06:04 PM யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தமது நெறிப்படுத்தல்கள் இல்லாமையும் ஒரு காரணம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு எங்களுடைய இளைஞர்களைப் பலரும் குறை கூறுகின்றனர். நிகழ்வில் இளைஞர்கள் சிலர் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் அறிந்து கொண்டேன். நிகழ்வு தொடர்பில் யாழ்.மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் கூடிய கவனம் செலுத்தி இருக்க வேண்டும். நானும் அதனை பார்த்து இருக்க வேண்டும். நானும் அது தொடர்பில் கரிசனை இல்லாமல் இருந்து விட்டேன். இனிவரும் காலங்களில் இப்படியான நிகழ்ச்சிகள் நடைபெறுமாக இருந்தால், மக்கள் பிரச்சனைகள் இன்றி சந்தோசமாக நிகழ்வுகளைக் கண்டு களிக்க கூடியவாறான ஏற்பாடுகளைச் செய்வோம் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176569
  4. தலைமன்னார் கிராமத்தில் காணாமல்போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு - சந்தேகநபர் கைது 16 FEB, 2024 | 05:07 PM மன்னார்- தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு காணாமல்போன நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை குறித்த பகுதியில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றின் பின் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தலைமன்னார் கிராமம் பகுதியில் தங்கியிருந்து தோட்டம் ஒன்றை பராமரிக்கும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த சிறுமி உள்ளடங்களாக சிறுமியின் சகோதரர்கள் 4 பேர் தலைமன்னார் கிராமத்தில் உள்ள அம்மம்மாவின் வீட்டில் வசித்து வருகின்றனர். குறித்த சிறுமியின் பெற்றோர் புத்தளம் மாவட்டம் பூங்குளம் பகுதியில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (16) இரவு குறித்த 10 வயதுடைய இயான்சி என்ற சிறுமி அம்மம்மாவின் வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். கடைக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு, குறித்த சிறுமியை தேடி வந்துள்ளனர். மேலும் குறித்த தென்னை தோட்டத்தில் சென்று குறித்த சந்தேக நபரிடம் வினவிய போது தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த நிலையில் மீண்டும் தேடியுள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள CCTV காணொளியை பார்வையிட்ட போது குறித்த சிறுமியின் பின்னால் குறித்த நபர் செல்வது தெரியவந்தது. இந்த நிலையில் குறித்த நபரை பிடித்து விசாரணைகளுக்கு உட்படுத்தி இரவு முழுவதும் தேடிய நிலையில் இன்றைய தினம் (16) அதிகாலை சிறுமியின் உடல் குறித்த தனியார் தென்னந் தோட்டத்தின் பின் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது அடையாள அட்டையில் கே.வி.அப்துல் ரகுமான் (வயது-52) குச்சவெளி திருகோணமலை என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் குறித்த நபர் தலைமன்னாரில் தனது பெயரை விஜேயந்திரன் என அறிமுகப்படுத்தி வசித்து வருவதாகவும் தெரிய வருகிறது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடல பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதன் போது சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர். தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் குற்றவாளியை உடனடியாக தூக்கில் போடுமாறும் கோஷங்களை எழுப்பினர். அத்துடன் கொலையாளிக்கு உரிய தண்டனையை விரைவில் வழங்குமாறு கோரி விசாரணைக்காக வருகை தந்த பதில் நீதவானிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர். https://www.virakesari.lk/article/176554
  5. பிறந்தநாள் வாழ்த்துகள் நுணாவிலான் அண்ணை, வாழ்க வளத்துடன்.
  6. Published By: VISHNU 16 FEB, 2024 | 08:25 PM முல்லைத்தீவு - பரந்தன் ஏ -35 வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பரந்தன் முல்லைத்தீவு ஏ 35 வீதியின் புளியம்பொக்கணை பகுதியிலிருந்து மிதிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வீதியில் நின்ற எருமை மாடுகளுடன் மோதிய போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இதன்போது 02 எருமை மாடுகளும் உயிரிழந்துள்ள நிலையிலும் இரண்டு மாடுகள் காயமடைந்துள்ளன. இதே வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் மோதிய எருமை மாட்டுடன் மோதியதால் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/176574
  7. நன்றி ரஞ்சித் அண்ணை. இயற்கையின் விடை காணமுடியாத கேள்விகளில் மனம் தொலைகிறது. உங்கள் பதிவும் ஒவ்வொருவருக்கும் பாடமாகிறது.
  8. 16 FEB, 2024 | 03:22 PM (நெவில் அன்தனி) ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. நியூஸிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் முதலாவது டெஸ்ட் போட்டி 1932இல் நடைபெற்று 92 வருடங்கள் கடந்த நிலையில் தென் ஆபிரிக்காவை டெஸ்ட் தொடர் ஒன்றில் நியூஸிலாந்து வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் 1932இலிருந்து இதுவரை 17 டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றுள்ளதுடன் அவற்றில் 14 தொடர்களில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றது. 4 தொடர்கள் சமநிலையில் முடிவடைந்தன. நியூஸிலாந்தின் ஒரே ஒரு தொடர் வெற்றி இன்றைய தினம் பதிவானது. ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் அதிகூடிய வெற்றி இலக்கை நோக்கி கடைசி இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அந்த இலக்கை அடைந்து வரலாறு படைத்தது. 267 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் நிதானத்துடன் குவித்த சதத்தின் உதவியுடன் வெற்றியை இலகுவாக்கிக்கொண்டது. தனது 98ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கேன் வில்லியம்சன் குவித்த 32ஆவது சதம் இதுவாகும். 172ஆவது இன்னிங்ஸில் 32ஆவது சதத்தைக் குவித்ததன் மூலம் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை அடைந்த வீரர் என்ற பெருமையை வில்லியம்சன் பெற்றார். 32 டெஸ்ட் சதங்களை ரிக்கி பொன்டிங் 172 இன்னிங்ஸ்களிலும் ரிக்கி பொன்டிங் 176 இன்னிங்ஸ்களிலும் சச்சின் டெண்டுல்கர் 179 இன்னிங்ஸ்களிலும் பெற்றிருந்தனர். கேன் வில்லியம்சனுக்கு பக்க பலமாகத் துடுப்பெடுத்தாடிய வில் யங் ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் பெற்றதுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 157 ஓட்டங்களைப் பகிர்ந்தார். குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்டதாக அமைந்த இந்த டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்து பெற்ற 269 ஓட்டங்களே அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 242 ஓட்டங்களைப் பெற நியூஸிலாந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. தென் ஆபிரிக்கா 2ஆவது இன்னிங்ஸில் 235 ஓட்டங்களைப் பெற்றது. தென் ஆபிரிக்காவின் 2ஆவது இன்னிங்ஸில் திறமையாக துடுப்பெடுத்தாடிய டேவிட் பெடிங்ஹாம் தனது கன்னிச் சதத்தை பெற்றார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வில்லியம் ஓ'ரூக் 93 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களைக் கைபற்றியதன் மூலம் நியூஸிலாந்து சார்பாக அறிமுக வீரராக அதிசிறந்த பந்துவிச்சுப் பெறுதியைப் பதிவுசெய்த வீரரானார். ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடராகவும் போட்டியாகவும் இது அமைந்ததால் நியூஸிலாந்தின் 2 வெற்றிகளுக்கு 24 புள்ளிகள் வழங்கப்பட்டது. முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த நியூஸிலாந்து, 261 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. 2ஆவது போட்டி எண்ணிக்கை சுருக்கம் தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 242 (ருவான் டி ஸ்வாட் 64, டேவிட் பெடிங்ஹாம் 39, ஷோன் வொன் பேர்க் 38, வில்லியம் ஓ'ரூக் 59 - 4 விக்., ரச்சின் ரவிந்த்ரா 33 - 3 விக்.) நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 211 (கேன் வில்லியம்சன் 43, டொம் லெதம் 40, வில் யங் 36, டேன் பீட் 89 - 5 விக்., டேன் பீட்டர்சன் 39 - 3 விக்.) தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 235 (டேவிட் பெடிங்ஹாம் 110, கீகன் பீட்டர்சன் 43, நீல் ப்ராண்ட் 34, வில்லியம் ஓ'ரூக் 34 - 5 விக்., க்லென் பிலிப்ஸ் 50 - 2 விக்.) நியூஸிலாந்து (வெற்றி இலக்கு 267) 2ஆவது இன்: 269 - 3 விக். (கேன் வில்லியம்சன் 133 ஆ.இ., வில் யங் 60 ஆ.இ., டொம் லெதம் 30, டேன் பீட் 93 - 3 விக்.) ஆட்டநாயகன்: வில்லியம் ஓ'ரூக், தொடர் நாயகன்: கேன் வில்லியம்சன். https://www.virakesari.lk/article/176538
  9. ஒக்சிசன் கொள்வனவிற்காக வழங்கப்பட்ட நிதியில் தரம் குறைந்த மருந்துகள் கொள்வனவு - நீதிமன்றில் தகவல் Published By: RAJEEBAN 16 FEB, 2024 | 03:00 PM ஒக்சிசன் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்து கொள்வனவு செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. ஒக்சிசன் கொள்வனவிற்காக வழங்கப்பட்ட 14.5 மில்லியன் ரூபாயினை தரம்குறைந்த இம்யுனோகுளோபுலின் ஊசியை கொள்வனவு செய்வதற்காக குறிப்பிட்ட விநியோகஸ்தரிடம் சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதாக பிரதிசொலிசிட்ட ஜெனரல் லக்மினி கிரிஹாகம மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சராக பணியாற்றியவேளை 8வது சந்தேகநபர் மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டில் சுகாதாரதுறை வீழ்ச்சியடையும் என தெரிவித்து அவசர அவசரமாக மருந்துகளை கொண்டுவருவதற்காக சில கட்டுப்பாடுகளை ஏன் தளர்த்தினார் என்பது குறித்து விசாரணைகளை சிஐடியினர் முன்னெடுத்துள்ளனர் எனவும் பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் உள்ள கையெழுத்துக்களுடன் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் கையெழுத்துக்கள் பொருந்துகின்றனவா என ஆராயுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/176540
  10. தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அரச வர்த்தமானியின் ஊடாக தொல்லியல் சிறப்புமிக்க 11 வழிப்பாட்டுத் தலங்கள் புனித பூமியாக பெயரிடப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளை புனித பூமியாக பெயரிடுவதற்கான சன்னஸ் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நேற்று(15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அதற்கமைய அனுராதபுரம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலக பிரிவின் அம்பகஸ்வெவ புராதன விகாரை, புத்தளம் தங்கொட்டுவ பிரதேச செயலக பிரிவின் பொதுவடன புராதன விகாரை, அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முஹுது மகா விகாரை, கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான மெத்தேகம விகாரை, ஹம்பாந்தோட்டை உத்தகந்தர விகாரை, திருகோணமலை குச்சவௌி பிரதேச செயலகத்தின் ஸ்ரீ சத்தர்ம யுக்திக ஆசிரமம், குருணாகல் நாரம்மல பிரதேச செயலகத்தின் தம்பதெனிய விஜய சுந்தராராம விகாரை, குச்சவௌி பிரதேச செயலகத்தின் சாந்தி விகாரை, குருணாகல் குளியாபிட்டிய மேற்கு பிரதேச செயலகத்தின் ஸ்ரீ சுதர்மாராம புராதன விகாரை, கம்பஹா சித்த கபலே மல் சூனியம் தேவாலய, குச்சவௌி பிரதேச செயலகத்தின் யான் ஓயா விகாரை, சாகர புர சுமுதுகிரி வன ஆசிரமம் உள்ளிட்ட தலங்களே புனித பூமிகளாக பெயரிடப்பட்டிருக்கின்றன. அதற்கமைய தற்போது வரையில் நாட்டின் 142 வழிபாட்டுத் தலங்கள் புனித பூமிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/292099
  11. அஸ்வின் 500வது டெஸ்ட் விக்கெட் வீழ்த்தி சாதனை: காத்திருக்கும் புதிய சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 6 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 45 ஆண்டுகளுக்குப் பின் இந்திய கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்தினார். அதுமட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லைத் தொட்டு புதிய சாதனையைப் படைத்துள்ளார் அஸ்வின். சென்னையைச் சேர்ந்தவரான அஸ்வின் கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமானார். இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்தப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். டாப்-5 பந்துவீச்சாளர்களில் இடம்பிடித்த அஸ்வின் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அஸ்வினின் சொடுக்கு பந்துவீச்சு, கேரம் பந்துவீச்சு ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையையும், பெயரையும் பெற்றுக்கொடுத்தன. இந்த நூற்றாண்டின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை வரிசைப்படுத்தினால், அதில் அஸ்வின் பெயர் முதல் 5 இடங்களுக்குள் இடம் பெறும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். சென்னை தெருக்களில் டென்னிஸ் பந்து வைத்து கிரிக்கெட் விளையாடி அதன் மூலம் சுழற்பந்துவீச்சில் உள்ள பல்வேறு நுணுக்கங்களையும், திறமைகளையும் கற்றுக் கொண்டவர் அஸ்வின். குறிப்பாக அஸ்வினின் சொடுக்கு பந்துவீச்சு, கேரம் பந்துவீச்சு ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையையும், பெயரையும் பெற்றுக்கொடுத்தன. சுழற்பந்துவீச்சில் உள்ள பல்வேறு நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெற்ற அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஆடுகளமாக இருந்தாலும் பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்துள்ளார். அஸ்வினின் புத்திக்கூர்மை, அவரின் நுணுக்கமான ‘கேரம் பந்துவீச்சு’, ‘ஆர்ம் பந்துவீச்சு’, ஆஃப் ஸ்பின்னை கட்டுக்கோப்புடன் ‘லைன் லென்த்தில்’ வீசுவது ஆகியவை அவரது மிகப்பெரிய பலங்கள். அஸ்வின் ஒரு ஓவரை வீசினால், 6 பந்துகளும் வெவ்வேறு வகையில்தான் வீசுவாரே தவிர, ஒரே மாதிரியாக பெரும்பாலும் வீசியது இல்லை என்பதைப் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீசி, பேட்டர்களை திணறடிப்பதில் அஸ்வின் தேர்ந்தவர். அதிலும் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் அஸ்வின் பேட்டர்களுக்கு எதிராகத் தனி ராஜ்ஜியமே நடத்துவார். அணிக்கு நெருக்கடியான காலத்தில் அறிமுகமான அஸ்வின் இந்திய அணிக்குள் அஸ்வின் வந்தபோது, அணி சற்று இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. ஏனென்றால் அது கும்ப்ளேவுக்கு அடுத்தாற்போல் நல்ல சுழற்பந்துவீச்சாளராக ஹர்பஜனை தவிர வேறு யாரும் அடையாளம் காணப்படாத காலம். பகுதிநேரப் பந்துவீச்சாளராக யுவராஜ் சிங் மட்டுமே இருந்தார். அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் இடம் பெற்ற அஸ்வின், கும்ப்ளே இல்லாத குறையை நிவர்த்தி செய்தார். அஸ்வின் 2011ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி டெல்லியில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்று வியப்பில் ஆழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிகவேகமாக 400 - 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். அதிவேக சாதனைகளை நிகழ்த்திய அஸ்வின் அஸ்வின் தனது முதல் 16 டெஸ்ட் போட்டிகளில் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதிவேகமாக 250 முதல் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார். அதிகவேகமாக 400 - 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 30 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 90 விக்கெட்டுகளையும், இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டுகளையும், ஓர் ஆண்டுக்கு 50 விக்கெட்டுகள் என 4 முறை வீழ்த்தியுள்ளார். கடந்த 2016-17ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வின் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வின் 28 விக்கெட்டுகளையும், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் ஒரே ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டியில் 21 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். 500 விக்கெட் எடுத்து சாதனை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கும்போது, அஸ்வின் 96 டெஸ்ட் போட்டிகளில் 496 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதனால், முதலிரு டெஸ்ட் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், விசாகப்பட்டினத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை மட்டும் எடுத்து 499 விக்கெட்டுகளுடன் நின்றுவிட்டார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கார்வ்லேவை வீழ்த்தி தனது 500வது விக்கெட்டை பதிவு செய்தார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். தனது 98வது டெஸ்ட் போட்டியில் 500வது விக்கெட்டை வீழ்த்தியுள்ள அஸ்வின் இந்திய அளவில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். சர்வதேச அளவில் இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலிய ஜாம்பவான் மறைந்த ஷேன் வார்ன், இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயான் ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இங்கிலாந்துக்கு எதிராக ‘செஞ்சுரி விக்கெட்’ அது மட்டுமல்லாமல் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். இதற்குமுன் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகர் இங்கிலாந்துக்கு எதிராக 95 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 45 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் முறியடித்து 100 விக்கெட்டுகளை எட்டியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக பகவத் சந்திரசேகர் 95 விக்கெட்டுகள், அதைத் தொடர்ந்து அனில் கும்ப்ளே 92 விக்கெட்டுகள், பிஷன் சிங் பேடி, கபில் தேவ் தலா 85 விக்கெட்டுகள், இசாந்த் சர்மா 67 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். அது மட்டுமல்லாமல் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே உள்நாட்டில் மட்டும் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தச் சாதனையை அஸ்வின் எட்டுவதற்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் எட்டினால், உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அஸ்வினின் எகனாமி ரேட் 2.78 ரன்கள்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 250 முதல் 350 விக்கெட்டுகள் வரை அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்று முதலிடத்தில் அஸ்வின் உள்ளார் அஸ்வினின் பந்துவீச்சு சாதனைகள் அஸ்வின் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச அளவில் 9வது இடத்தில் இருக்கிறார். அஸ்வின் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 34 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 5-வது இடத்தில் உள்ளார். தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுகளை 8 முறை வீழ்த்தி 5-வது இடத்தில் அஸ்வின் உள்ளார். ஒரே டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 13-வது வயதான வீரர் (36 வயது, 298 நாட்கள்) சாதனையையும் அஸ்வின் வைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 பேட்டர்களை போல்ட் மூலம் ஆட்டமிழக்கச் செய்து 9-வது இடத்தில் அஸ்வின் உள்ளார். 250 முதல் 350 விக்கெட்டுகள் வரை அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்று முதலிடத்தில் அஸ்வின் உள்ளார். 45 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளையும், 54 போட்டிகளில் 300 விக்கெட்டுகளையும், 66 போட்டிகளில் 350 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 77 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிகவேகமாக 400 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை வைத்துள்ள அஸ்வின், 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தியும் 2-வது பந்துவீச்சாளராக சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் 10 முறை தொடர் நாயகன் விருது பெற்று 2-வது இடத்தில் உள்ளார். https://www.bbc.com/tamil/articles/cjk6ljnmv05o
  12. 14 FEB, 2024 | 05:30 PM கலாநிதி ஜெகான் பெரேரா ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் இவ்வருடம் நடத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிக்காட்டிவருகிறார். கடந்தவாரம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த வேளையிலும் அதை அவர் வெளிக்காட்டியதாக செய்திகள் கூறின. மக்களின் ஆணையுடன் அரசாங்கம் ஒன்று பதவிக்கு வருவதை உறுதிசெய்யக்கூடிய தேர்தல்களுக்காக காத்திருப்பவர்கள் ஜனாதிபதியின் அறிவிப்புக்களை நேர்மறையாக நோக்குவார்கள். ஜனாதிபதி பதவி நாட்டின் மிகவும் பலம்பொருந்திய பதவி. சர்வதேச வங்குரோத்து நிலைக்குள் நாடு மூழ்கிக்கிடக்கும் மிகவும் தீர்க்கமான இந்த காலப்பகுதியில் ஜனாதிபதி நாட்டுக்கு தலைமைதாங்குகின்ற போதிலும், அவருக்கு மக்களின் ஆணை கிடையாது. அரசாங்கத்தின் அடுத்த இரு மட்டங்களான மாகாணசபைகளும் உள்ளூராட்சி சபைகளும் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாதவையாக இருக்கின்றன. மக்களின் ஆணையின்றி ஆட்சிசெய்வது தீர்மானங்களை எடுப்பவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதாக இருக்கலாம். ஆனால், அதனால், பாதிக்கப்படும் நிலையில் இருப்பவர்கள் நாளடைவில் கிளர்ச்சியில் இறங்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்கள் குறித்து உட்கிடையான ஒரு சந்தேகம் இருந்து வருகிறது. உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தாமல் பல தசாப்தகாலமாக நீடித்த மூன்று அரசாங்கங்களில் உறுப்பினராக இருந்தவர் இன்றைய ஜனாதிபதி. ஆறு வருடங்களுக்கு பொதுத்தேர்தலை ஒத்திவைப்பதற்கு 1982 ஆம் ஆண்டில் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியபோது ஜனாதிபதி கல்வியமைச்சராக பதவி வகித்தார். 1917 ஆம் ஆண்டில் தேர்தல் சீர்திருத்தங்களை செய்வதில் இறங்கிய அரசாங்கத்தில் அவர் பிரதமராக இருந்தார். அந்த சீர்திருத்த முயற்சி மாகாணசபைகளை தொடர்ந்து முடக்கநிலையில் வைத்திருக்கிறது. மீண்டும், 2022 ஆம் ஆண்டில் பணம் இல்லை என்று காரணம் கூறி உள்ளூராட்சி தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்திவைத்த அரசாங்கத்தில் ஜனாதிபதியாக விங்கிரமசிங்க இருக்கிறார். சந்தேகங்களை வலுப்படுத்தும் வகையில் அமைச்சரவை பேச்சாளரான பந்துல குணவர்தன "ஒரு நிதியாண்டில் வருவாயையும் செலவினத்தையும் சமநிலைப்படுத்துவது அரசாங்கத்தைப் பொறுத்தவரை, மிகவும் சவாலான பணியாக இருக்கிறது. நீண்டகால பட்ஜெட் பற்றாக்குறைகளை கையாளுவதற்கு பொறிமுறைகளைக் கண்டறியும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. அதற்கு மத்தியிலும் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கு 1,000 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது" என்று கூறியிருக்கிறார். 1,000 கோடி என்பது 2022 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் அன்று கேட்ட தொகையாகும். இடைப்பட்ட காலத்தில் பணவீக்கம் உயர்வாக இருந்த நிலையில் அதே தொகை இரு தேசிய தேர்தல்களையும் நடத்துவதற்கு போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. பொருளாதாரம் மீட்சி பெற்றவரும் நிலையில் 2022 ஆம் ஆண்டில் 1,000 கோடி ரூபாவை தேடுவதை விடவும் இன்று 2,000 கோடி ரூபாவை தேடுவது சுலபமானதாக இருக்கவேண்டும். சுதந்திரங்களைக் கட்டுப்படுத்துதல் தேர்தல்கள் 2022 ஆம் ஆண்டில் நடைபெறும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நீண்டகாலமாக மக்களுக்கு நிராகரிக்கப்பட்டுவந்த பொருளாதாரப் பயன்களை வழங்குவதற்கு அரசாங்கம் முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு பல தசாப்தங்களாக இருபது இலட்சம் விவசாயக் குடும்பங்கள் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுவந்த நிலங்களை அவர்களுக்கு சொந்தமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. பெருந்தோட்டத் துறையில் தேயிலைத் தோட்டங்களிலும் இறப்பர் தோட்டங்களிலும் பல தசாப்தங்களாக கஷ்டப்பட்டு உழைத்தவர்களுக்கு ( இதுகாலவரையில் இவர்கள் நிலமற்றவர்களாக இருந்துவருகிறார்கள் ) வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கும் வீட்டுத் தோட்டங்களைச் செய்வதற்கும் சொந்தமாக நிலங்கள் வழங்கப்படும். மக்களுக்கு சொந்தமாக நிலங்கள் வழங்கப்படுவதால் அதில் அவர்கள் முதலீடுகளைச் செய்யக்கூடியதாக இருக்கும் அல்லது பெரியளவில் விவசாயத் தொழில்துறையை முன்னெடுப்பதில் நாட்டம் கொண்டிருக்கும் பல்தேசியக் கம்பனிகளுக்கு நிலங்களை அவர்கள் விற்பனை செய்யக்கூடியதாக இருக்கும். ஆனால், தற்போதைய வறுமைக்கு மத்தியில் அந்த நிலங்களை அவர்கள் மலிவான விலைக்கு விற்றுவிடக்கூடாது. குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது நிலங்களை விற்பனை செய்வதற்கு கட்டுபாடுகளை விதிக்கவேண்டிய தேவை ஏற்படலாம். பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது என்று பெரும்பாக பொருளாதாரத் தரவுகள் காண்பிக்கும் நிலையில், வரிகளைக் குறைப்பதற்கான சாத்தியம் குறித்தும் ஜனாதிபதி பேசிவருகிறார். சனத்தொகையில் வறிய மக்களுக்கு இந்த வரிகள் தாங்கமுடியாத சுமையாக இருக்கின்றன. மக்களின் வாழ்க்கைத்தரங்களில் மேம்பாட்டை ஏற்படுத்துவது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய நிச்சயமான வழியாகும். கடந்த வாரம் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்க ( வரைபடத்தின் பிரகாரம் ) V வடிவிலான பொருளாதார மீட்சி பற்றி குறிப்பிட்டார். வறுமை அதிகரிப்பு, மந்தபோசாக்கு, பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிடுதல் பற்றி செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் வருகின்ற எதிர்மறையான தகவல்களை பெற இது உதவும். "முன்னென்றும் இல்லாத வேகத்தில் கீழ் நோக்கிச் சென்ற பொருளாதாரம் ரொக்கட் வேகத்தில் மீட்சிபெற்றுவருகிறது.V வடிவிலான இந்த மீட்சி நம்பிக்கையைத் தருகிறது" என்று ஜனாதிபதி தனது உரையில் கூறினார். மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருவதற்கு புறம்பாக அரசாங்கம் மாற்றுக் கருத்துக்களை குறிப்பாக எதிரணிக் கட்சிகளின் கருத்துக்களை கட்டுப்படுத்துவதன் அல்லது ஒடுக்குவதன் மூலமாக பொது விவாதத்தில் தனது கருத்துக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளிலும் நாட்டம் காட்டுகிறது. எதிர்க்கருத்துக்களை சட்டவிரோதமாக்குவதற்கும் குற்றமாக்குவதற்கும் புதிய சட்டங்களை அரசாங்கம் கொண்டுவருகிறது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் விமர்சனக் குரல்களை மௌனமாக்குவதன் மூலமாக பொது விவாதத்தை அரசாங்கத்துக்கு சாதகமான முறையில் மாற்றுவதற்கு அதன் உறுப்பினர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் இணையவெளி பாதுகாப்பு சட்டம் அமைந்திருக்கிறது. இந்த சட்டம் சர்ச்சைக்குரிய சூழ்நிலைக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் இரு கொடூரமான சட்டமூலங்களையும் அரசாங்கம் கொண்டுவரவிருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் பிரதான ஊடகங்களை அச்சுறுத்தும் வகையிலான ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமுலமுமே அவையாகும்.நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்த அதே அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் விமர்சனங்களை முன்வைப்பதும், மாற்று யோசனைகளை கூறுகின்றதுமான குரல்களை நசுக்க உறுதி பூண்டிருக்கிறார்கள். ஏற்றுக்கொள்ளமுடியாத சட்டம் 1980 ஆண்டின் தன்னார்வ சமூக சேவைகள் அமைப்புக்கள் சட்டத்தை சிவில் சமூக அமைப்புக்கள் அவை செய்கின்ற பணிகளுக்கு சட்டரீதியான அந்தஸ்தைப் பெறுவதற்கு பயன்படுத்திவருகின்றன. அந்த சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கு அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பதிவு மற்றும் மேற்பார்வை சட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவரவிருக்கிறது. அதன் வரைவு இப்போது வெளிவந்து இருக்கிறது. அது சிவில் பரப்புக்கு (Civil Space ) பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்துவரும் பொதுச்சட்ட பாரம்பரியத்தின் பிரகாரம் அமைப்புக்கள் தங்களைப் பதிவுசெய்வதற்கு பலவகையான தெரிவுகள் இருந்தன. சட்ட அந்தஸ்தைப் பெறவேண்டுமானால் அமைப்புக்கள் கம்பனிச் சட்டத்தின் கீழும் தங்களைப் பதிவுசெய்துகொள்ளமுடியும் அல்லது உள்ளூர் மட்டத்தில் அரசாங்கத்தின் மாவட்ட செயலகங்களில் அல்லது பிரதேச செயலகங்களில் பதிவுசெய்து கொள்ளலாம். தற்போது கூட அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு வரும் நிதி மத்திய வங்கியின் உகந்த கவனிப்புடன் கூடிய வங்கிகளின் ஊடாகவே வருகிறது. வழங்குநர்களின் கணக்காய்வுக்கும் அந்த நிதி உட்படுத்தப்படுகிறது. தேசிய அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகத்தில் பதவுசெய்துகொள்ளாத அமைப்புக்கள் ஏனைய அரச நிறுவனங்களினால் மேற்பார்வை செய்யப்படுகின்றன. உத்தேச புதிய சட்டம் வித்தியாசமானதாக இருக்கிறது. சிவில் அமைப்புக்களை (அவை பெரும்பாக நிதி அமைப்புக்களாக இருந்தாலென்ன நம்பிக்கை நிதியங்களாக இருப்பதாலென்ன அல்லது பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டவையாக இருந்தாலென்ன) ஒரே இடத்தில் பதிவுசெய்ய அது நிர்ப்பந்திக்கிறது. புதிய சட்டத்தின் பிரகாரம் சிவில் அமைப்புக்கள் தேசிய அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகத்தில் தங்களைப் பதிவுசெய்யவேண்டும். இந்த செயலகம் தற்போது பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கிறது. பதிவு மற்றும் மேற்பார்வைச் செயன்முறை ஊடாக சிவில் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சித்து வந்திருக்கிறது. சந்தேகத்துக்குரிய சூழ்நிலைகளில் ஆயிரக்கணக்கில் பொலிஸ் முற்றுகைகளுக்கும் கைதுகளுக்கும் வழிவகுத்திருக்கும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக தற்போது தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பெரும் கவனத்துக்குள்ளாகியிருக்கும் தேசிய பாதுகாப்பு அமைச்சின் கீழேயே பொலிஸ் இருக்கிறது. பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகம் அமைந்திருக்கும் இடம் சிவில் அமைப்புக்களை சட்டம் ஒழுங்கு கட்டமைப்புக்குள் வைத்து அரசாங்கம் நோக்குகிறது என்ற எதிர்மறையான செய்தியையே கொடுக்கிறது. கொடூரமான புதிய சடடம் சிவில் அமைப்புக்கள் குற்றவியல் வழக்கு தொடுப்புக்களுக்கும் தண்டனைக்கும் உள்ளாகக்கூடிய ஆபத்தைத் தோற்றுவிக்கும்." அடிப்படை கலாசார விழுமியங்களுக்கு " எதிராகச் செயற்படுவதாகக் கூறி சிவில் அமைப்புக்களை இடைநிறுத்தவும் மூடிவிடவும் முடியும். இந்த கட்டுபாட்டின் பிரகாரம் மதசார்பற்ற அரசுக்கு கோரிக்கை விடுவதையோ, தன்பாலினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதையோ அல்லது கருக்கலைப்புக்கான உரிமைக்காக வாதிடுவதையோ அடிப்படைக் கலாசார விழுமியங்களுக்கு எதிரான செயல்கள் என கருதமுடியும். தங்களை எதிர்ப்பவர்களுக்கு அல்லது தங்களது வழிக்கு வராதவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு அரசாங்கங்கள் சட்டங்களைப் பயன்படுத்திவந்திருக்கின்ற பாணியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது உத்தேச சட்டம் மிகவும் ஆபத்தானதாகும். தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவி வகித்து முன்னைய அரசாங்கம் இதே போன்ற சட்டம் ஒன்றை 2018 ஆம் ஆண்டில் கொண்டுவந்தது. அந்த நேரத்தில் தேசிய அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுனங்கள் செயலகம் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் இருந்தது. அமைச்சுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் அலட்சியம் செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட சிவில் சமூகத் தலைவர்கள் குழுவொன்று அன்றைய பிரதமர் விக்கிரமசிங்கவைச் சந்தித்து தங்களது வேண்டுகோளை முன்வைத்தனர். சில நாட்களுக்குள்ளாகவே அந்த சட்டவரைவு வாபஸ்பெறப்பட்டது. சிவில் சமூகத்துக்கான கட்டமைப்பு ஒன்று தொடர்பில் சொந்த யோசனைகளின் அடிப்படையிலான திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு தன்னைச் சந்தித்த சிவில் சமூகத் தலைவர்களிடமே விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார். பரந்தளவில் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளுடன் இரு வருட கலந்தாலோசனைகளுக்கு பிறகு தன்னார்வத் துறையினருக்கான சட்டக் கட்டமைப்புை ஒன்று தொடர்பில் வழிகாட்டல்கள் வகுக்கப்பட்டன. அவை ஒரு வருடத்துக்கு முன்னர் அரசாங்கத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் அவற்றின் உள்ளடக்கமோ அல்லது உணர்வோ தற்போதைய சட்டவரைவில் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், 2018 ஆம் ஆண்டில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது சந்தித்துப் பேசக்கூடியதாக இருந்ததைப் போன்று தற்போதும் ஜனாதிபதியாக அவரைச் சந்தித்து அதே விடயத்தை பேசுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அன்று வெளிப்படுத்திய நல்லெண்ண அணுகுமுறையையே அவர் தற்போதும் சமூகத்தினதும் நாட்டினதும் மேம்பாட்டுக்காக கடைப்பிடிக்கவேண்டும். https://www.virakesari.lk/article/176379
  13. Published By: DIGITAL DESK 3 16 FEB, 2024 | 10:45 AM மன்னார் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (15) இரவு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் அருகில் இருக்கும் வயோதிப பெண் ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை உணவு வழங்கும் வயோதிப பெண்ணின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகின்றது. இந்நிலையில் அருகில் இருந்த சிசிரிவி கமராக்களின் உதவியுடனும் ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/176510
  14. Published By: RAJEEBAN 16 FEB, 2024 | 06:33 AM நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சரியான நடவடிக்கை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் ஏற்கனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அனுபவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு நாட்டின் அரசியல் நிலைசிறப்பானதாக உள்ளது நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது நல்லது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முழுநாடும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதால் அதனை நீக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயல்வது எதிர்கட்சியினருக்கான பொறியாக அமையலாம் எங்களிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்து நன்கு தெரியும் என மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். எந்த தேர்தல் என்றாலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் சரியான தருணத்தில் அவர்கள் மேடைக்கு வருவார்கள் அதுவரை பொறுத்திருங்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஜேவிபி தலைவரின் இந்திய விஜயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச இந்தியா போன்ற நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜேவிபி இறுதியாக உணர தலைப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176500
  15. Published By: VISHNU 16 FEB, 2024 | 06:30 AM வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள காணியில் தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு இடம் வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் பரிந்துரைத்துள்ள நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. வவுனியா மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது காணியற்ற அரச திணைக்களங்களான அரச ஒசுசல, புவிச்சரிதவியல் திணைக்களம்,தெங்கு அபிவிருத்திசபை, பனை அபிவிருத்திசபை, சமூக நீர்வழங்கல் திணைக்களம், தேசிய புலனாய்வு அலுவலகம், மற்றும் பொது அமைப்புக்களான முச்சகரவண்டி உரிமையாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், பேருந்து உரிமையாளர் சங்கம், பாரவூர்திசங்கம், ஓய்வூதியர் சங்கம் ஆகியன தமக்கு நகரப்பகுதியில் காணி ஒதுக்கித்தருமாறு வவுனியாபிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய குறித்த அமைப்புக்களுக்கு வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள பகுதி மற்றும் திருநாவற்குளம் பாரவூர்தி தரிப்பிடம் ஆகியவற்றை பிரித்து வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிடம் இன்று அனுமதி கோரப்பட்டிருந்தது. இதன்போது பூங்காவீதியில் அமைந்துள்ள காணி தேசிய புலனாய்வு அலுவலுகத்திற்கு வழங்குவதற்காக ஆளுநரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காணியினை அவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுதலைவர் தீலிபன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். புலனாய்வு பிரிவு அனைத்து இடங்களிலும் இயங்கமுடியும், அது ரகசியமாக இருக்கவேண்டிய அமைப்பு. எனவே நகரப்பகுதியில் அதற்கு காணி வழங்குவது பொருத்தமானதாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதன்போது தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/176495
  16. சர்ஃபராஸ் கான்: பெருங்கனவு நிறைவேறிய நாளில், ஜடேஜா மன்னிப்புக் கோரும் அளவுக்கு ரசிகர்களின் அன்பைப் பெற்றது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 16 பிப்ரவரி 2024, 03:21 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் அபுவின் நெடுங்காலப் பெருங்கனவு நிறைவேறி இருக்கிறது. இதில் அபு வேறுயாருமல்ல, இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முதன் முதலாக களமிறங்கிய மும்பை பேட்டர் சர்ஃபராஸ் கானின் தந்தைதான். தொடக்கப் போட்டியிலேயே சிறப்பாக ஆடி தந்தையின் கனவை நனவாக்கியுள்ளார் சர்ஃபராஸ் கான். சர்ஃபராஸ் கானுக்கு தந்தையாகவும், சிறுவயதிலிருந்தே பயிற்சியாளராகவும், கிரிக்கெட்டில் வழிகாட்டியாகவும் இருந்து இந்திய அணிக்குள் செல்ல மூலகாரணமாக இருந்தவர் அபு என்ற நெளசத்கான் கான். இந்திய அணிக்காக பல போராட்டங்களுக்குப்பின் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்றார் மும்பையைச் சேர்ந்த வலதுகை பேட்டர் சர்ஃபராஸ் கான். முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே கரங்களால் இந்திய அணியின் தொப்பியைப் பெற்று களமிறங்கியபோது, மைதானத்தில் இருந்த தந்தை நெளசத் கானும், சர்ஃபராஸ் கான் மனைவியும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இந்த தருணத்துக்காகத்தான் நெளசத்கான் நீண்டகாலம் காத்திருந்தார். தேசத்துக்காக தன் மகன் விளையாட வேண்டும், இந்திய அணிக்குள் இடம் பெற வேண்டும் என்ற பல ஆண்டுகள் கனவு நேற்று நெளசத்கானுக்கும், சர்ஃபராஸ் கானுக்கும் நிறைவேறி இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES "நினைக்கும் நேரத்தில் சூரியன் உதிக்காது" போட்டி நடந்து கொண்டிருக்கும்போது வர்ணணையாளர் பகுதிக்கும் சர்ஃபராஸ்கான் தந்தை நெளசத் கான் சென்றார். அங்கு வர்ணணையாளர் பணியில் இருந்த ஆகாஷ் சோப்ரா, நெளசத் கானிடம் “ இந்திய அணியில் உங்கள் மகன் அறிமுகத்துக்கு நீண்டகாலம் ஆகிவிட்டதா, அதிக காலம் காத்திருக்க வேண்டியது இருந்ததா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நெளசத்கான் பதில் அளிக்கையில் “ நம்முடைய விருப்பப்படி சூரியன் உதயமாகாது. இரவைக் கடந்தால்தான் சூரியன் உதயமாகும், ஆதவனைப் பார்க்க முடியும்” என்று ஆழ்ந்த பதிலைத் தெரிவித்தார். அற்புதமான பேட்டிங் நெளசத் கானின் பதிலைப் போலவே, ஆழ்ந்த அர்த்தமுள்ளதாகவும், இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன் என்பதைப் போலவும், சர்ஃபராஸ் கான் பேட்டிங் நேற்று அமைந்திருந்தது. ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அறிமுக போட்டியேலேயே சர்ஃபராஸ் கான் 96 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து, 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜடேஜாவின் தவறால் சர்ஃபராஸ் கான் 62 ரன்களில் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால், நிச்சயமாக அறிமுகப் போட்டியேலேய சதம் கண்டிருப்பார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹர்திக் சாதனை சமன் இங்கிலாந்து அணியில் நட்சத்திரப் பந்துவீச்சாளர்கள் மார்க் வுட், ஆன்டர்சன், ஹார்ட்லே, ரூட் ஆகியோரின் பந்துவீச்சை மிகவும் அனாசயமாகக் கையாண்டு சர்ஃபராஸ் கான் ரன்களைச் சேர்த்து அரைசதம் கடந்தார். அறிமுகப் போட்டியிலேயே அதிவேகமாக அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியாவின் சாதனையை சர்ஃபராஸ்கான் சமன் செய்தார். சர்ஃபராஸ்கானின் பேட்டிங் செய்யும் போது ஒவ்வொரு ஷாட்டும் ஒவ்வொரு விதமாக இருந்தது. ஸ்வீப் ஷாட், ஃபுல் ஷாட், ஸ்குயர்கட், லேட் கட், ஸ்கொயர் ட்ரைவ் என பல கோணங்களில் ஷாட்களை அடித்து ரன்களைச் சேர்த்தார். குறிப்பாக ஃபேக் ஃபுட்டில் சென்று சுழற்பந்துகளை தேர்டு மேன் திசையில் தட்டிவிடும் நுட்பத்தை சர்ஃபராஸ்கான் அருமையாகச் செய்தார். ரசிகர்கள் ஆதங்கம் இப்படிப்பட்ட பேட்டருக்கா இத்தனை ஆண்டுகள் இந்திய அணியில் வாய்ப்புக் கதவுகள் திறக்கப்படாமல் இருந்தது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தையும் காண முடிந்தது. உண்மையில், ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரஜத் பட்டிதர் போன்ற வீரர்கள் முதல்தரப் போட்டிகளிலும், ஏ லிஸ்ட் போட்டிகளிலும், ரஞ்சிக் கோப்பையிலும் அதிகமாக விளையாடாமல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்குள் வந்தனர் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். சர்ஃபராஸ் கான் மீதான ரசிகர்களின் அன்பு எந்த அளவுக்கு இருந்தது என்றால், அரைச் சதம் அடித்த பிறகு ரன் அவுட் ஆனபோது, அதற்கு காரணமான ரவீந்திர ஜடேஜாவை திட்டித் தீர்க்கும் அளவுக்கு இருந்தது. தனது தவறுக்காக ஜடேஜாவை சமூக வலைத்தளத்தில் மன்னிப்புக் கோரி பதிவிடும் வகையில் ரசிகர்கள் தங்களது அன்பை சர்ஃபராஸ் கானுக்கு தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையின் ரன்மெஷின் ஆனால், சர்ஃபராஸ் கான் இந்திய அணிக்குள் வருவதற்கு முன் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியவர், மும்பை அணிக்காக பல போட்டிகளில் பல சதங்களையும், ஏராளமான ரன்களையும் குவித்து மும்பையின் ரன்மெஷின் என்று வர்ணிக்கப்பட்டவர். குறிப்பாக 2019 முதல் 2022 சீசன் வரை ரஞ்சிக் கோப்பைத் தொடரில் 900 ரன்களுக்கு மேல் குவித்து, சர்ஃபராஸ் கான் அனைவரையும் வாயைப் பிளக்க வைத்தார். கடைசியாக 2022-23 சீசனில்கூட ரஞ்சிக் கோப்பையில் 6 போட்டிகளி்ல 500 ரன்களுக்கு மேல் குவித்து தனது சராசரியை 90 ரன்களுக்கு மேல் வைத்திருந்தார். தனது பேட்டிங்கில் எந்தவிதமான குறையும் பெரிதாகக் கூற முடியாத அளவுக்கு சர்ஃபராஸ் கான் ஆட்டம் அமைந்திருந்தும் அவருக்கான வாய்ப்புக் கதவுகள் இந்திய அணியில் திறக்கப்படவில்லை. இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? இந்திய அணியில் சர்ஃபராஸ் கானுக்கான உரிய இடம் கிடைக்கவில்லை என்பதை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா என பலரும் தங்களின் ஆதங்கங்களை பல நேரங்களில் வெளிப்படுத்தினர். 45 முதல் தரப்போட்டிகளில் விளையாடிய சர்ஃபராஸ் கான் 14 சதங்கள், 11 அரைசதங்கள் உள்பட 3,912 ரன்கள் சேர்த்தபின்புதான் இந்திய அணி அவரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. இதில் சர்ஃபராஸ் கான் ஒருமுறை முச்சதம், இரட்டை சதமும் அடித்துள்ளார். முதல்தரப் போட்டிகளில் சர்ஃபராஸ் கான் 70 ஸ்ட்ரைக் ரேட்டும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 94 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். பிராட் மேனுக்கு அடுத்தபடியாக முதல் தர போட்டிகளில் அதிகமான ரன் சராசரி கொண்ட வீரர் என்ற பெருமையை சர்ஃபராஸ் கான் பெற்றிருந்தார். இருப்பினும், சர்ஃபராஸ் கானின் பேட்டிங் திறமை மீது இந்திய அணித் தேர்வாளர்கள் மீது நம்பிக்கை ஏற்படாமல் இருந்தபோது, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு சர்ஃபராஸ் கானை தேர்ந்தெடுத்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES கிரிக்கெட்டுக்காக படிப்பு நிறுத்தம் உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கார்க் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது சர்ஃபராஸ் கான் குடும்பம். ஆனால், ஒரு கட்டத்தில் சர்ஃபராஸ் கான் தந்தை மற்றும் குடும்பத்தினர் மும்பைக்கு வந்து அங்கு தங்கிவிட்டனர். 1997, அக்டோபர் 22ம் தேதி மும்பையில் பிறந்தவர் சர்ஃபராஸ் கான். வலது கை பேட்டர், வலது கை சுழற்பந்துவீச்சாளர், தேவைப்பட்டால் மட்டும் விக்கெட் கீப்பிங் செய்யும் பழக்கம் கொண்டவர். சர்ஃபராஸ் கானுக்கு சிறுவயதிலேயே கிரிக்கெட் திறன் இருப்பதை அவரின் தந்தை நெளசத் கான் கண்டறிந்தார். குறிப்பாக பந்தை டைமிங் பார்த்து தட்டிவிடும் திறன் சர்ஃபராஸ் கானுக்கு அதிகம் இருந்தது. இதையடுத்து, இந்தத் திறமையை மேம்படுத்தும் நோக்கில் சர்ஃபராஸ் கானுக்கு தீவிரமாக பயிற்சியை நெளசத் கான் அளித்தார். ஆனால், காலநிலை சரியில்லாதது, மழை போன்றவற்றால் மைதானத்துக்கு செல்ல முடியாத சூழல் பல நேரங்களில் இருந்தது. இதனால் தனது வீட்டின் அருகே, ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, செயற்கை பிட்ச் அமைத்து அதில் மகனுக்கு நெளசத் கான் பேட்டிங் பயிற்சி அளித்து உருவாக்கினார். தீவிரமான கிரிக்கெட் பயிற்சி காரணமாக, சர்ஃபராஸ் கான் படிப்பு 4 ஆண்டுகள் பாதித்தது. வீட்டிலேயே ஆங்கிலம், இந்தி, கணித வகுப்புகள் சர்ஃபராஸ்கானுக்கு எடுக்கப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES சச்சின் சாதனையை முறியடித்தவர் பள்ளிக்களுக்கான கிரிக்கெட் போட்டியான ஹாரிஸ் ஷீல்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் தனது 12 வயதில் 2009ம் ஆண்டு பங்கேற்றார். அந்த போட்டியில் 12 சிக்ஸர்கள், 56 பவுண்டரிகல் உள்பட 421 பந்துகளில் 439 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை சர்ஃபராஸ் கான் முறியடித்தார். இந்த ஆட்டம்தான் சர்ஃபரஸ் கான் யார் என்பதை வெளி உலகிற்கு வெளிச்சம் பாய்ச்சியது. அதன்பின் மும்பை அணியில் 19 வயதுக் குட்பட்டோருக்கான பிரிவில் சர்ஃபராஸ் கான் இடம் பெற்று, இந்திய அணியின் 19வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இடம் பெற வாய்ப்பளித்தது. இதுவரை சர்ஃபராஸ் கான் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பெற்று 2 உலகக் கோப்பை(2014, 2016) தொடர்களில் விளையாடியுள்ளார். உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக அரைசதங்கள் (7அரை சதம்) அடித்த வீரர் என்ற பெருமையையும், 2016ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் 355 ரன்கள் குவித்து 2வது அதிக ரன் சேர்த்த வீரர் என்ற சிறப்பையும் சர்ஃபராஸ் கான் பெற்றார். ஆனாலும், சர்ஃபராஸ் கானின் கிரிக்கெட் வாழ்க்கை சர்ச்சையோடுதான் தொடங்கியது. 2011ம் ஆண்டு 12 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் சர்ஃபராஸ் கான் பங்கேற்றபோது அவருக்கு 15 வயது இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவருக்கு எலும்பு வளர்ச்சி பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பின் சர்ஃபராஸ் கானுக்கு நடத்தப்பட்ட எலும்பு வளர்ச்சி பரிசோதனையில் அவர் அதிக வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை அவரின் பயிற்சியாளரான நெளசத்கான் ஏற்கவில்லை. எனவே 2வது அதிநவீன பரிசோதனைக்குச் சர்ஃபராஸ் உட்படுத்தப்பட்டார். இதில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சர்ஃபராஸ் கான் சான்றிதழில் அளித்த வயதும், அவரின் எலும்பு வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருப்பதாக உறுதியானது. பட மூலாதாரம்,GETTY IMAGES சூர்யகுமார், சர்ஃபராஸ் சர்ச்சை இது தவிர 2015ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வென்றது. அந்த வெற்றிக்குப்பின், சர்ஃபராஸ் கானும், சூர்யகுமார் யாதவும் சர்ச்சைக்குரிய வகையில் செய்கையில் ஈடுபட்டும், தகாத வார்த்தைகளில் பேசியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவர் மீதான விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து, சர்ஃபராஸ் கான், சூர்யகுமார் யாதவ் இருவரும் உடனடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டனர், 2 ஆண்டுகளுக்கு இருவருக்கும் போட்டி ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களின் ஒழுக்கம் கண்காணிக்கப்பட்டது. திரும்பிப் பார்க்க வைத்த ரஞ்சி சீசன் சர்ஃபராஸ் கான் ரஞ்சி தொடரில் முதன்முறையாக மும்பை அணிக்காக 2014ம் ஆண்டு மேற்கு வங்க அணிக்கு எதிராக களமிறங்கினார். அதன்பின் 2015-16 சீசனில் உத்தர பிரதேச அணிக்காக சர்ஃபராஸ் கான் ஆடினார். 2019-20ம்ஆண்டு ரஞ்சி சீசனில் மும்பை அணிக்காக ஆடிய சர்ஃபராஸ் கான் உத்தர பிரதேச அணிக்கு எதிராக முச்சதம் விளாசி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 2022ம் ஆண்டு நடந்த சயத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் சர்ஃபராஸ் கான் மும்பை அணிக்காக விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டுள்ளார். சிறுவயதில் விக்கெட் கீப்பராக இருந்துள்ள சர்ஃபராஸ் கான், சீனியர் அணிக்காக விளையாட வந்தபோது முதன்முறையாக விக்கெட் கீப்பிங்கில் ஈடுபட்டு புதிய அவதாரமெடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பிராட் மேனுக்கு அடுத்ததாக ரன் சராசரி கடந்த 3 ரஞ்சி சீசன்களிலும் சர்ஃபராஸ் கான், ஏறக்குறைய 2,500 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்த்துள்ளார். 2019 முதல் 2022 வரை ஒவ்வொரு சீசனிலும் 900 ரன்களுக்கு குறையாமல் சேர்த்து முதல் தரப்போட்டியில் புதிய வரலாற்றை சர்ஃபராஸ் கான் படைத்துள்ளார். டான் பிராட்மேனுக்கு அடுத்தாற்போல் உள்நாட்டுப் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள இளம் வீரர் எனும் பெருமையும் சர்ஃபராஸ் கானுக்கு இருக்கிறது. இளம் வயதில் ஐபிஎல் அறிமுகம் ஐபிஎல் டி20 தொடரில் தனது 17வயதிலேயே சர்ஃபிராஸ் கான் அறிமுகமாகினார். 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் சர்ஃபராஸ் கான் ஆட்டத்தைப் பார்த்த ஆர்சிபி அணி அவரை ரூ.50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. 2015 சீசன் முதல் 2018 சீசன் வரை ஆர்சிபி அணிக்காக சர்ஃபராஸ் கான் ஆடினார். 2019 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், அதன்பின் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சர்ஃபராஸ் கானை விலைக்கு வாங்கியது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக கடந்த சீசனில் சர்ஃபராஸ் கான் விக்கெட் கீப்பர் பேட்டராகவும் செயல்பட்டார். https://www.bbc.com/tamil/articles/c1e1d44490eo
  17. எதுவுமே எழுதத் தோன்றவில்லை. ஓம் சாந்தி.
  18. 11 FEB, 2024 | 07:22 PM நேர்கண்டவர் – ரொபட் அன்டனி ஐக்கிய நூற்றாண்டு முன்னணி அடுத்து வருகின்ற சகல தேர்தல்களிலும் போட்டியிடும். நாங்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம். எமது கட்சியில் வேட்பாளர்கள் தமது சொத்துக்களை பிரகடனம் செய்யவேண்டும். அதன்பின்னரே நாங்கள் வேட்புமனு கொடுப்போம் என்று ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர் பிரசான் டி விஸ்ஸர் தெரிவித்தார். பதிமூன்றாவது திருத்த சட்டத்துக்கு அமைவாக மாகாண சபைகளை பலப்படுத்த வேண்டும். 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவது அவசியம். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கு மக்களின் பிரச்சினைகளுடன் பார்க்கையில் வேறுபட்டவை. அதுபோன்ற மத்திய மாகாண மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டவை. எனவே அந்தந்த மாகாண மக்கள் தமது பொருளாதார செயல்பாடுகளை மேற்கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு கேள்வி : இலங்கை ஐக்கியமடைகிறது என்ற அமைப்பின் ஊடாக நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? பதில் நான் உயர்தரம் கற்றதன் பின்னர் புலமை பரிசில் பெற்று அமெரிக்காவில் உயர்கல்வி கற்க சென்றேன். அங்கு சர்வதேச தொடர்புகள் தொடர்பாக கற்றேன். அதன் பின்னர் இலங்கைக்கு திரும்பி இலங்கை ஐக்கியமடைகிறது என்ற அமைப்பை நிறுவி செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். கேள்வி : இந்த அமைப்பை எப்போது தொடங்கினீர்கள்? அதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? பதில் 2006 ஆம் ஆண்டு இதனை நாங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தோம். 2008 இல் இதனை இலாப நோக்கமற்ற நிறுவனமாக பதிவு செய்தோம். சகலரும் ஒன்றிணைந்த இலங்கை அடையாளம் என்பதே இந்த அமைப்பின் பிரதான நோக்கமாகும். அனைத்து இலங்கையர்களும் பிரதான பிரஜைகள், அனைவருக்கும் நீதி, சமத்துவம், மற்றும் செழிப்பான நாடு என்பனவே எமது பிரதான நோக்கங்களாக இருக்கின்றன. எமது முன்னைய சந்ததியினருக்கு இதனை செய்ய முடியவில்லை. நாம் அதனை செய்ய முயற்சிக்கிறோம். நீதி கிடைக்கின்ற, சகலரும் வாழ முடியுமான ஒரு நாட்டை உருவாக்குவது எமது நோக்கமாகும். எமது தாத்தா பாட்டியை எம்மால் மாற்ற முடியாது. ஆனால் எமது பிள்ளைகளை மாற்ற முடியும். நாம் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தபோது எனக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் இலங்கையில் இளைஞர் யுவதிகளில் 70 வீதமானோர்க்கு தமது இனம் தமது மதங்களுக்கு அப்பால் நண்பர்கள் இல்லை என்பதாகும். நண்பர்கள் இல்லாவிடின் வெறுப்பு ஏற்படுவது இலகுவாகும். பிரச்சினைகள் இலகுவாகவே ஏற்படும். புரிந்துணர்வு இருக்காது. தொடர்பாடலே அனைத்தையும் தீர்மானிக்கிறது. இலங்கையில் 10,400 பாடசாலைகள் இருக்கின்றன. அவற்றில் 112 பாடசாலைகள் மட்டுமே இரண்டு மொழிகளையும் மூலமாக கொண்டவையாக இருக்கின்றன. மறுபுறம் அரசியல்வாதிகள் மக்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தி ஊழல்களை செய்து மக்களை அச்சுறுத்தி தலைவர்கள் வாக்குகளை பெற்றுக்கொள்கின்றனர். உங்களுக்கு யாரும் இல்லை, நாங்கள் மட்டுமே இருக்கின்றோம் என்று கூறி மக்களிடம் வாக்குகளை பெற முயற்சிக்கின்றனர். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தபோது ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது. ஆனால் இன்று இனவாதம் மதவாதத்தை ஏற்படுத்தி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாடு எங்கு இருக்கின்றது என்பது தெரிகிறது. கேள்வி : இலங்கை ஐக்கியமடைகிறது என்ற அமைப்பில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்? அவர்கள் என்ன செய்கின்றார்கள்? பதில் எமது அமைப்பில் கிட்டத்தட்ட 30,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இலங்கை முழுவதும் 9 மாகாணங்களில் 9 அலுவலகங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமாக எதிர்கால தலைவர்கள் மாநாடு என்ற கருப்பொருளை பாடசாலைகள் மட்டத்தில் முன்னெடுக்கிறோம். இதற்காக ஐந்துநாட்கள் முகாம் நடத்தி நாட்டின் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுகிறோம். அதன்பின்னர் பாடசாலைகளுக்கு இடையில் தொடர்பாடல்களை ஏற்படுத்துகிறோம். இதுவரை கிட்டத்தட்ட 500 பாடசாலைகளில் இவ்வாறு வேலைத்திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக பாடநெறிகள் காணப்படுகின்றன. திறமை விருத்தி, தொழில் முயற்சியாண்மை, உள்ளிட்ட பல பாடத்திட்டங்கள் அங்கே காணப்படுகின்றன. இளைஞர்கள், யுவதிகள் அங்கு சென்று தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். இளைஞர்கள் யுவதிகளால் இந்த நாட்டை முன்னேற்ற முடியும். இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும், இந்த நாட்டுக்காக ஏதாவது செய்யும் முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் அவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறோம். ஆனால் இதற்கு சகலரும் ஒற்றுமைப்பட வேண்டும். ஏனையவர்களின் துயரத்தை புரிந்து கொள்வது அவசியம். எமக்கு மட்டுமே துயரம் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். மற்றவர்களின் துயரத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். எமது இந்த செயற்பாட்டின் பிரதான நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் எதிர்கால தலைவர்களை உருவாக்குதல், நீதியை நோக்கி பயணித்தல், என்பனவாகும். அதாவது கொரோனா வராமல் இருப்பதற்கு தடுப்பூசி ஏற்றுவதைப் போன்று இனவாதம் வராமல் இருப்பதற்கான தத்துவங்களை நாங்கள் இளைஞர்கள் மத்தியில் விதைக்கிறோம். நாங்கள் சகல பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து செயல்படுகிறோம். அதேபோன்று ஐந்தாம் ஆண்டிலிருந்து எட்டாம் ஆண்டு வரையான மாணவர்களுக்காக சிறுவர் நிகழ்ச்சித்திட்டங்களையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். கேள்வி : நீங்கள் சர்வதேச நிறுவனங்களுடனும் தொடர்பு பட்டிருக்கின்றீர்கள். இதனை எவ்வாறு முன்னெடுக்கின்றீர்கள் ? பதில் எமது இந்த முயற்சிகளுக்கு சர்வதேச மட்டத்தில் எமக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் உலகில் செயற்படுகின்ற 25 கீழ்மட்ட நிறுவனங்களில் ஒன்றாக நாம் அங்கீகரிக்கப்பட்டோம். உலகில் இருக்கின்ற சிறந்த இளைஞர்களை கொண்டியங்கும் எட்டு நிறுவனங்களில் ஒன்ற ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். இதனைப் பார்த்த பல சர்வதேச நிறுவனங்கள் எமது இந்த திட்டத்தை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட ஆரம்பித்தன. இளைஞர்களை ஒருமுகப்படுத்திய, நீதியை நல்லிணக்கத்தை நிலைநாட்டுகின்ற, நாட்டை கட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயற்பாட்டை ஏனைய பல நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்துள்ளன. அதனடிப்படையில் கொங்கோ நாட்டில் இருந்து ஒரு குழுவினர் இலங்கைக்கு வந்து எமது இந்த செயற்பாடு தொடர்பாக கற்றறிந்து அங்கு இதனை ஆரம்பித்து செயல்படுத்துகின்றனர். நானும் யாழ்ப்பாணம் மாத்தறை மாவட்டங்களில் இளைஞர்களை அழைத்துக் கொண்டு கொங்கோ நாட்டுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை கற்றறிந்தோம். கென்யா உகண்டா போன்ற நாடுகளிலும் எமது அமைப்பை போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 13 நாடுகளில் எமது இந்த செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுகிறது. கேள்வி : சரி இந்த பின்னணியில் ஏன் அரசியல் கட்சி ஒன்றை அதாவது நூற்றாண்டு ஐக்கிய முன்னணி என்ற அரசியல் கட்சியை ஏன் நீங்கள் ஆரம்பித்தீர்கள் ? பதில் நாம் இந்த எமது இலங்கை ஐக்கியப்படுகிறது என்ற செயற்பாட்டை முன்னெடுத்து செல்லும்போது பல அரசியல் கட்சிகள் இனவாதத்தைக் கொண்டு அரசியல் செய்வதை நாம் அவதானித்தோம். நாம் இனவாதத்தை போக்கி நல்லிணக்கத்தை மேற்கொள்ள எவ்வளவு முயற்சித்தாலும் அரசியல் கட்சிகள் அதற்கு மாறாக செயல்படும் போது இதனை மாற்றுவது கடினமானதாக எமக்கு தெரிந்தது. எனவே நாம் எமது அரசியல் கல்வியகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்து முதலில் நூற்றாண்டு கல்வியாகத்தை ஆரம்பித்தோம். அதாவது இலங்கை சுதந்திரமடைந்து 100 ஆண்டுகளாகும் போது 2048 இல் நாம் எவ்வாறான இலக்குகளை அடைய வேண்டும் என்பது தொடர்பாக சிந்தித்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம். பத்து இலக்குகளை அடைய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதில் ஆறு கொள்கை திட்டங்களை நாங்கள் இளைஞர் யுவதிகளுக்கு கற்பிக்கின்றோம். அரசியல்,சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் நல்லாட்சி மற்றும் சகலரும் இணைந்த முன்னெடுப்பு ஆகிய விடயங்களை கற்பிக்கின்றோம். மூன்று மாதங்கள் அவர்களுக்கு திறமைகளை நாம் கற்பிப்போம். பின்னர் ஏனைய பல்வேறு விடயங்கள் கற்பிக்கப்படும். அப்போது அந்த பாடத்திட்டத்திற்கு கிட்டத்தட்ட இலங்கை முழுவதும் இருந்து 1000 இளைஞர்கள் விண்ணப்பித்தனர். இதனூடாக இளைஞர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். ஆனால் அவ்வாறு எமது கல்வியகத்தில் கல்விகற்ற எதிர்கால தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகளில் இடம் கிடைக்கவில்லை. எனவே தான் நாம் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டியேற்பட்டது. நாம் அதனை ஆரம்பித்தோம். அதனூடாக எதிர்கால தலைவர்கள் என்ற பாடத்திட்டத்தை கற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேறு எந்த அரசியல் கட்சிகளையும் நாடாமல் எமது கட்சியிலே சேர்ந்து போட்டியிட முடியும். கேள்வி : அப்படியானால் அடுத்துவரும் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவீர்களா? பதில் அடுத்து வருகின்ற சகல தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிடுவோம். நாங்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம். எமது கட்சியில் வேட்பாளர்கள் தமது சொத்துக்களை பிரகடனம் செய்யவேண்டும். அதன்பின்னரே நாங்கள் வேட்புமனு கொடுப்போம். ஒவ்வொரு வருடமும் பிரகடனம் செய்ய வேண்டும். இப்போது பாராளுமன்றத்தில் 225 எம்.பி.க்களில் 15 பேர் அளவிலேயே சொத்துப்பிரகடனம் செய்துள்ளனர். 35 வீதமான வேட்பாளர்கள் 35 வயதுக்கு கீழ் பட்டவர்கள். தற்போது பாராளுமன்றத்தில் 35 வயதுக்குட்பட்ட 11 பேர் மட்டுமே இருக்கின்றனர். அதில் 10 பேர் அரசியல் ரீதியான குடும்பங்களை பின்னணியாக கொண்டவர்கள். இலங்கையில் 1931 ஆம் ஆண்டு ஐந்து வீத பெண் பிரதிநிதித்துவம் இருந்தது. 2023 ஆம் ஆண்டிலும் பாராளுமன்றத்தில் ஐந்து வீத பெண்களே இருக்கின்றனர். எனவே எமது கட்சியில் வேட்பாளர்களில் 50 வீதமானோர் பெண்கள். கேள்வி : உங்கள் கட்சியின் கட்டமைப்பு என்ன? பதில் எமது கட்சிக்கு ஒரு நிறைவேற்று குழு உள்ளது. அதன் ஊடாக தலைவர் நியமிக்கப்படுவார். தற்போது இந்த வருடத்துக்கு நானே எமது கட்சியின் தலைவராக இருக்கின்றேன். அதேபோன்று சிரேஷ்ட பிரஜைகள் எமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். சகல மாகாணங்களில் இருந்தும் நிறைவேற்று குழுவில் உறுப்பினர்கள் உள்ளனர். கேள்வி : உங்கள் கட்சியின் இலக்கு என்ன? பதில் சுதந்திரம் பெற்ற நூறு வருடங்கள் நிறைவடையும்போது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைப்போம். நிச்சயமாக எதிர்கால சந்ததியினருடன் இணைந்து அதனை செய்ய முடியும். ஊழலற்ற பொருளாதார சுபிட்சமான நாட்டை உருவாக்க வேண்டும். மக்கள் வறுமையாக இருப்பதே அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அமைகிறது. எமது கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற கல்விமான்கள் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். கேள்வி : இலங்கையில் நீங்கள் அடையாளம் காண்கின்ற இளைஞர் யுதிகளின் பிரதான பிரச்சனைகள் என்ன? பதில் முக்கியமான சில பிரச்சினைகளை நாங்கள் அடையாளம் கண்டு இருக்கின்றோம். முதலாவதாக எமது கல்வி திட்டத்தை குறிப்பிட வேண்டும். எமது கல்வி திட்டத்தில் மேலே பயணிப்பதற்கு ஏணி இருக்கின்றது. ஆனால் ஏனியை பிடித்து எங்கே செல்வது என்பது இங்கு தெளிவாக இல்லை. அடுத்ததாக வேலையின்மை காணப்படுகிறது. தமது திறமைக்கேற்ற தொழிலை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது இலங்கையில் இருக்கின்ற பிரதான பிரச்சினையாகும். அதனால் திறமையானவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். சிறுபான்மை இளைஞர்களுக்கு தமது அடையாளம் தொடர்பான ஒரு பிரச்சினை காணப்படுகிறது. அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையில் இல்லை. தமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவர்கள் நம்பவில்லை. வடக்கில் உள்ள எனது சகோதர சகோதரிகளின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவர்களின் காயங்கள் ஆற்றப்பட வேண்டி இருக்கிறது. அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அங்கே ஆற்றுப்படுத்தல் இல்லை. இறந்தவர்களை நினைவு கூருவதற்கு உரிமை இருக்க வேண்டும். கேள்வி : தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்கு உங்கள் திட்டங்கள் என்ன? பதில் இலங்கையில் இருந்த சென்ற 3 மில்லியன் மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள். அவர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு விருப்பமாக இருக்கின்றனர். ஆனால் இங்குள்ள நிலைமை அவர்களை தடுக்கிறது. அந்த மூன்று மில்லியன் மக்கள் தமது நாடுகளின் பொருளாதாரத்துக்காக கிட்டத்தட்ட 200 பில்லியன் டொலர்களை பங்களிப்பு செய்கின்றனர். இலங்கையின் பொருளாதாரம் வெறுமனே 80 பில்லியன் டொலர்களாகும். இங்கு தொழில்சார் தன்மை வெளிப்படைத்தன்மை ஊழலற்ற தன்மை இருந்தால் நிச்சயமாக அந்த முதலீடுகளை பெற்றுக் கொள்ள முடியும். தற்போது வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இளைஞர்கள் 7 பில்லியன் டொலர்களை அனுப்புகின்றனர். அதனை 20 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க எம்மால் முடியும். அடுத்ததாக வர்த்தகங்களை செய்வதற்கான இலகு தன்மை உறுதிப்படுத்தப்படுவது அவசியம். அந்தநிலையை உறுதிப்படுத்தினால் இங்கு அதிகளவு வெளிநாட்டவர்கள் வியாபாரம் செய்ய வருவார்கள். சகல விடயங்களும் டிஜிட்டல் மையமாக வேண்டும். அனைத்து முதலீடுகளும் கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் மையத்தில் இடம் பெற வேண்டும். இவர்களுக்கு எரிபொருள் க்யூ ஆர் கோட்டா முறையை செய்வதற்கே மூன்று மாதங்கள் சென்றன. இந்தியா இந்தோனேசியா வியட்நாம் தாய்லாந்து சீனா போன்ற நாடுகளில் இருந்து வர்த்தக சந்தர்ப்பங்களை நாங்கள் பெற வேண்டும். சுற்றுலாத்துறை ஊடாக வருடம் ஒன்றுக்கு ஐந்து பில்லியன் டொலர்களே உச்சபட்சமாக இலங்கை பெற்றிருக்கின்றது. நான்கு வருடங்களில் அதனை 15 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முடியும். சிறுவர்களை இலக்கு வைத்த சுற்றுலாத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இலங்கையை சர்வதேச மாநாட்டு தலமாக உருவாக்க முடியும். அதுமட்டுமின்றி சர்வதேச மட்டத்தில் இலங்கையை நேசிக்கின்ற நாடுகள் இருக்கின்றன. எம்மால் அந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கிறது. கேள்வி : இலங்கையில் வடக்கு கிழக்கு மக்கள் நீண்ட காலமாக தமக்கான அரசியல் தீர்வை கோரி வருகின்றனர். அரசியல் தீர்வு திட்டம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன? பதில் பதிமூன்றாவது திருத்த சட்டத்துக்கு அமைவாக மாகாண சபைகளை பலப்படுத்த வேண்டும். 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவது அவசியம். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கு மக்களின் பிரச்சினைகளுடன் பார்க்கையில் வேறுபட்டவை. அதுபோன்ற மத்திய மாகாண மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டவை. எனவே அந்தந்த மாகாண மக்கள் தமது பொருளாதார செயல்பாடுகளை மேற்கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். மத்திய அரசாங்கம் தலைமைத்துவம் வழங்க முடியும். ஆனால் அதிகாரங்களை பரவலாக்கும் போது அங்கு வெளிப்படை தன்மையும் போட்டித் தன்மையும் உருவாகின்றன. ஆனால் இங்கு சகலதையும் மத்திய அரசாங்கம் வழங்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு மாகாணம் தனது பொருளாதாரத்தை இயக்குவதற்கான உரிமையை வழங்க வேண்டும். பொருளாதாரம் சட்டம் ஒழுங்கு காணி உரிமை போன்ற விடயங்கள் வழங்கப்படுவது அவசியமாகும். கொழும்பில் இருக்கின்ற மாணவிக்கும் மொனராகலையில் வளர்கின்ற மாணவிக்கும் இடையிலான திறமைகளில் வித்தியாசம் இருக்கும். மேலும் இங்கு சகலர் மத்தியிலும் அவநம்பிக்கை காணப்படுகிறது. முதலில் மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். கேள்வி : இந்த நாட்டில் ஒரு அரசியல் கலாசார மாற்றத்தை செய்ய முடியும் என்று எப்படி நீங்கள் இவ்வளவு திடமாக நம்புகிறீர்கள் பதில் உலகில் இதற்கு முன்னர் பல நாடுகள் மாறி இருக்கின்றன. எம்மைவிட யுத்தம் இருந்த எம்மைவிட வறுமையாக இருந்த நாடுகள் இன்று முன்னேறி இருக்கின்றன. சிங்கப்பூர் வியட்நாம் இந்தோனேசியா மலேசியா ருவாண்டா கானா போன்றவற்றை குறிப்பிடலாம். நாம் இன்றும் எமது இனம் எமது மதம் தொடர்பாகவே சிந்திக்கின்றோம். அந்த செயற்பாடு மாறவேண்டும் திருடர்கள் எமது வீட்டை உடைத்து திருடிவிட்டு செல்லலாம். அதனை நாம் தடுக்க வேண்டும். மாறாக நாம் வீட்டை விட்டு ஓடிவிட முடியாது. தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்கின்றது. ஆற்றுப்படுத்தல் இல்லை. 1983 ஆம் ஆண்டு இந்த நாட்டில் நடந்ததை இன்னும் தமிழ் மக்கள் மறக்காமல் இருக்கலாம். நான் அண்மையில் கனடாவுக்கு சென்றபோது அங்கு ஒருவர் 1983 ஆம் ஆண்டு கலவரம் தற்போது நடைபெற்றது போன்று என்னுடன் பேசினார். அந்த வேதனையை யாரும் ஆற்றுப்படுத்த இன்னும் முயற்சிக்கவில்லை என்பதே இங்கே குறைபாடாக இருக்கிறது. குறைந்தபட்சம் அரசாங்கம் இதுவரை மன்னிப்பு கேட்டிருக்கின்றதா ? கேள்வி : உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில்... பதில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும். காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் செயற்படுவது அவசியம். உலகத்திற்காக அல்ல, எமக்காக அதனை செய்ய வேண்டும். https://www.virakesari.lk/article/176128
  19. கான்யூனிசின் நாசெர் மருத்துவமனைக்குள் இஸ்ரேலிய படையினர் - ஹமாஸ் பணயக்கைதிகளை வைத்திருப்பதாக தெரிவிப்பு Published By: RAJEEBAN 15 FEB, 2024 | 05:04 PM இஸ்ரேலிய படையினர் கான்யூனிசில் உள்ள நாசெர் மருத்துமவமனைக்குள் நுழைந்துள்ளனர். இஸ்ரேலிய படையினர் கான்யூனிசில் உள்ள நாசெர்மருத்துமவமனைக்குள் நுழைந்துள்ளனர். நாசெர் மருத்துவமனைக்குள் துல்லிய மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர். தென்காசாவில் உள்ள நாசெர் மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளை தடுத்துவைத்திருந்தனர் என்ற தகவல் கிடைத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்குள் பயங்கரவாதிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் போல தோன்றுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து பலவந்தமாக வெளியேற்றியுள்ள இஸ்ரேலிய இராணுவம் கட்டிடத்தின் சில பகுதிகளை புல்டோசர்களை பயன்படுத்தி தரைமட்டமாக்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தின் மத்தியில் நாசெர் மருத்துவமனை பணியாளர்கள் பணியாற்றுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/176467
  20. ரஞ்சித் அண்ணை யாழின் 26ஆம் அகவைக்கான சுய ஆக்கங்களில் பதிந்திருக்கலாமே?!
  21. நிகழ்நிலை காப்பு திருத்தச் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் Published By: VISHNU 15 FEB, 2024 | 06:14 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் சட்ட வரைபு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு விரைவில் அதனை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சமூக வலைத்தளங்களைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்காக 2017இல் இருந்த அரசாங்கம் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டுவர அன்று நடவடிக்கை எடுத்துவந்தது. குறித்த சட்டம் தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து இதற்குத் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு அதனைப் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கும் பொறுப்பை அன்று ஊடக அமைச்சுக்கு வழங்கப்பட்டிருந்தது. பின்னர் சமூகவலைத்தளங்களின் தலைமையகத்துடனும் இது தொடர்பாகக் கலந்துரையாடச் சிங்கப்பூருக்கும் எமது தரப்பினர் சென்றிருந்ததுடன் அவர்களும் இங்குவந்து இதுதொடர்பாக கலந்துரையாடியபோது, சட்ட ரீதியில் கட்டுப்பாடுகளை விதிக்காமல் சுய கட்டுப்பாட்டுக்குச் செல்வதற்கு அப்போது இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்ததால், 2023வரை அதன் பிரகாரமே செயற்பட்டு வந்தது. என்றாலும் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்திக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பாக 2023 வரை 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்குக் கிடைக்கப்பெற்றிருந்தன. அதனைக் கருத்திற்கொண்டே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்தது, பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தது. இலங்கை வரலாற்றில் இந்த சட்டமூலத்திற்கு எதிராகவே உயர் நீதிமன்றத்தில் சுமார் 45க்கும் மேற்பட்ட மேன்முறையீடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் குறித்த சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகள் மற்றும் நிலைப்பாடுகளை உள்ளடக்கிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டபோதும் சில திருத்தங்களை சட்டப்பிரச்சினை காரணமாக பாராளுமன்றத்தின் குழுநிலையின்போதும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. என்றாலும் அந்த திருத்தங்கள் அனைத்தையும் கடந்த வாரம் பொது மககள் பாதுகாப்பு அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது, அதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கி இருந்தது .தற்போது அது சட்ட வரைபு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அங்கு சட்டமூலம் தயாரிக்கப்பட்ட பின்னர் அது சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும். அவர் குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்ற சான்றிதழை வழங்கிய பின்னர் அமைச்சரவை மீண்டும் அதனை அனுமதிக்க வேண்டும். அமைச்சரவை அனுமதித்த பின்னர் எந்த வேளையும் வர்த்தமானியில் பிரசுரிக்க முடியும். வர்த்தமானி வெளியிடப்பட்டு 7 தினங்களுக்கு பின்னர் எந்த வேளையும் அதனை பாராளுமன்றத்துக்கு முதலாம் வாசிப்புக்கு சமர்ப்பிக்க முடியும். அவ்வாறு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து 2வாரங்களுக்குள் அதுதொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம். எனவே இவ்வாறான சட்டங்களை கொண்டுவரும்போது பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் வகையிலும் பொது மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையிலுமே இதனை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. சமூகவலைத்தளங்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். அதனால் நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களுடன் மீண்டும் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/176473
  22. இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த இடைக்கால தடை! Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 03:06 PM (துரைநாயகம் சஞ்சீவன் ) இலங்கை தமிழரசி கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (15) இடைக்கால தடை விதித்து கட்டளையொன்றினை பிறப்பித்துள்ளது. திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்றைய தினம் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் மேற்கு குறித்த இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவக்குமாருடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் மற்றும் சட்டத்தரணி புரந்தன் ஆகியோர் ஆஜராகினர். கடந்த 21 மற்றும் 27ம் திகதிகளில் நடைபெற்ற பொதுச் சபை கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானதும், செல்லுபடியற்றதும் என வாதம் முன்வைக்கப்பட்டது. எனவே, குறித்த இரண்டு பொதுச் சபை கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது. தமிழரசு கட்சியின் யாப்பு விதி அனுமதிக்கின்ற தொகையை விட அதிகளவான உறுப்பினர்கள் பொதுச் சபை கூட்டங்களில் பங்குபற்றி குறித்த தெரிவுகளின் போது வாக்களித்துள்ளமையினால், குறித்த கூட்டம் சட்டமுரணானது எனவும் இதன்போது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. குறித்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த மாநாட்டிற்கு திருகோணமலையில் மாவட்ட நீதிமன்றம் இரு வாரங்களுக்கு இடைக்காலை தடை உத்தரவு விதித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி திறந்த நீதிமன்றில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கினை திருகோணமலை சாம்பல்தீவு - கோணேஷபுரியைச் சேர்ந்த சந்திரசேகரம் பரா என்பவர் சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார் ஊடாக தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், இந்த வழக்கில் மாவை சேனாதிராஜா, எஸ். ஸ்ரீதரன், எம்.சுமந்திரன், சண்முகம் குகதாசன் உட்பட தமிழரசு கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் எதிர் மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/176446 இலங்கை தமி்ழ் அரசு கட்சியின் மாநாட்டுக்கு யாழிலும் தடை Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 04:21 PM தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக தடை உத்தரவு வழங்கக் கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் மாநாட்டை நடத்த நீதிமன்றால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (15) வழக்குதாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளை அடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருந்த தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடத்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. இதேவேளை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கினை தொடர்ந்து, திருகோணமலை மாவட்ட நீதிமன்றமும் மாநாட்டிற்கு தடை விதித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176456
  23. ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிடவேண்டிய தேவை கிடையாது - டலஸ் 15 FEB, 2024 | 05:38 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிட வேண்டிய தேவை கிடையாது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு அமைதியாக இருப்பது அதிருப்திக்குரியது என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவடையும். ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய ஜனாதிபதி ஒக்டோபர் மாதம் பதவி பிரமாணம் செய்ய வேண்டும். ஜனாதிபதி தேர்தல் குறித்து நாட்டின் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியமைப்பின் ஊடாக நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் திறமையானவர். மாகாண சபைகள் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பனவற்றை இல்லாதொழித்ததை போன்று ஜனாதிபதி தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிர்வரும் மாதங்களில் பொறுப்பாக்கப்படும். அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிடவேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதி தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் விடயம் தற்போது பேசுபொருளாக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது தொடர்பில் 1994ஆம் ஆண்டு முதல் பேசப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ,மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் நிறைவேற்று அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தவில்லை. இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி, ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். ஆகவே நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதாக தற்போது குறிப்பிடப்படுவதில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது என்றார். https://www.virakesari.lk/article/176439
  24. கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் பரவலாக மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் குறிப்பாகக் கன்றுகள் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாடுகளுக்கு பெரியம்மை நோய் பரவக் காரணம் என்ன? பெரியம்மை பாதித்த மாடுகளைப் பராமரிப்பது எப்படி? மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மாடுகள் இருக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் மாடுகளின் தோல் முழுவதிலும் கொப்புளம் கொப்புளமாக பெரியம்மை பாதிப்பு (LSD-Lumpy Skin Disease) ஏற்பட்டது. வட மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான மாடுகள் இறந்துள்ளன. தமிழ்நாட்டில் சில கன்றுகள் இறந்துள்ளன என்றாலும் மாடுகளின் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் தற்போது வரை பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கின்றன. இந்த நோயால் பாதிக்கப்படும் மாடுகளுக்கு பால் உற்பத்திக் குறைவு, மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, சில நேரங்களில் மரணம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். மாடுகளுக்கு ஏற்படும் பெரியம்மைக்கு நேரடியாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆடுகளுக்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால் செலுத்தப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.மேலும், மாடுகளுக்கு ஏற்படக்கூடிய அம்மை பாதிப்பைத் தடுக்க நேரடியாக தடுப்பூசி தயார் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஈரோடு விவசாயி குமார் கூறும்போது, "எங்களது பகுதியில் 15 விவசாயிகளின் 30க்கும் மேற்பட்ட கன்றுகள், இளம் வயது மாடுகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் அவற்றில் சில கன்றுகள் இறந்துள்ளன. அம்மை நோயால் பாதிக்கப்படும் கன்றுகளைப் பாதுகாக்க நாங்கள் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இதேபோல் கோவை, திருப்பூர், ஈரோட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகள் குறிப்பாக கன்றுகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி வருகின்றனர். இதற்குத் தேவையான முன்னெச்சரிக்கைகளை அரசு எடுத்து கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும்," எனக் கூறினார். 'ஆயிரக்கணக்கான கால்நடைகள் பாதிப்பு' இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மரபுசார் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர். என். புண்ணியமூர்த்தி பிபிசியிடம் பேசினார். தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கால்நடைகளுக்கு பெரியம்மைத் தொற்று பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. இந்தத் தொற்று ஆப்பிரிக்காவில் இருந்து பரவியது கண்டுபிடிக்கப்பட்டதாக டாக்டர்.என்.புன்னியமூர்த்தி கூறினார். மேற்கொண்டு பேசியவர், "வடமாநிலங்களில் மாடுகளுக்கு பெரியம்மை தாக்கம் இருந்ததன் காரணமாக அதிக அளவில் மாடுகள் உயிரிழந்தன. ஆனால், அந்தப் பரவல் தமிழ்நாட்டுக்கு வந்தபோது பெரிய அளவில் இறப்புகள் இல்லை. ஆனால், தற்போது வரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கின்றன. தற்போது ஆயிரக்கணக்கான மாடுகள் தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் பாதிப்புக்கு நேரடியாக சிகிச்சை முறை கிடையாது. சித்த மருத்துவ முறையில் தீர்வு இருக்கிறது," என்று கூறினார். சித்த மருத்துவமுறை கால்நடைகளை காப்பது எப்படி? "பெரியம்மை பாதிப்பு ஏற்பட்டவுடன் உடல் முழுவதும் கொப்பளங்கள் வெடிக்கும். இதனால் மாட்டின் தோல் மென்மையடையும். அந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மாட்டை மற்ற மாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்துவது அவசியம். பெரியம்மை பாதிக்கப்பட்ட மாட்டிற்கு 10 வெற்றிலை, 10 கிராம் மிளகு, கல் உப்பு, நாட்டு சர்க்கரை ஆகியவற்றைக் கலவையாகச் சேர்த்து தினசரி நான்கு வேளை ஆரம்பத்தில் கொடுக்க வேண்டும். பின்பு அதை மூன்று வேளையாக மாற்றி ஒரு வாரம் தொடர்ந்து கொடுத்தால் நல்ல பலன் இருக்கும்," என்கிறார் டாக்டர் என்.புன்னியமூர்த்தி. அதேபோல், "தோல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புகளுக்கு, நான்கு பல் பூண்டு, மஞ்சள் தூள், குப்பைமேனி தலை, வெண்ணெய் அல்லது வேப்பெண்ணையை நன்றாகக் காய்ச்சி கொப்பளங்கள் இருக்கும் பகுதியின் மீது தொடர்ந்து தேய்த்து வருவதன் மூலம் கொப்பளங்கள் ஆறிவிடும். ஒரு வயதுக்கு கீழ் இருக்கக்கூடிய கன்றுகள் தற்போது இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இவை தானாக உண்ணும் திறன் படைத்தவையாக இருக்காது. எனவே இதற்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் தனிக் கவனம் எடுத்து கன்றுகளைப் பராமரித்தால் மட்டுமே அவற்றைப் பாதுகாக்க இயலும்," என்றார். மாட்டிடமிருந்து மனிதர்களுக்கு பெரியம்மை பரவுமா? "உலக விலங்குகள் நல மையம்( WOAH - World organization for animal health) இந்தத் தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது என்பதை உறுதி செய்துள்ளது. எனவே, விவசாயிகள் அச்சமின்றி தங்களது கால்நடைகளுக்கு வரக்கூடிய பெரியம்மை நோய்க்கான சிகிச்சையை அருகிலிருந்து வழங்கலாம்," எனக் குறிப்பிட்டார் புண்ணிய மூர்த்தி. கால்நடைகளுக்கு மூன்று தவணை தடுப்பூசி இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத தமிழ்நாடு கால்நடைத்துறை உயர் அதிகாரி கூறும்போது "கடந்த 2019ஆம் ஆண்டு மாடுகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு பரவியது. இதைத் தொடர்ந்து ஆடுகளுக்கு அம்மைக்காகச் செலுத்தப்படும்( GFV - Goat Fox vaccine) தடுப்பூசி மாடுகளுக்கும் செலுத்தப்பட்டு அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டில் மூன்று முறை தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய தகுதி வாய்ந்த 62 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாடுகளுக்குப் பரவும் பெரியம்மை பாதிப்பு பற்றிய தகவல்கள் மாவட்டங்களில் இருந்து பதிவாகவில்லை. அது பெறப்பட்டால் அதற்கு ஏற்பத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்று கூறினார். கன்றுகள் உயிரிழப்பது ஏன்? இந்தத் தடுப்பூசி நான்கு மாத கன்று முதல் செலுத்தப்படுகிறது. கர்ப்ப காலத்தில் இருக்கும் மாடுகளுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக அதன் கன்றுக்கு இந்த நோய்த் தாக்கம் ஏற்படுகிறது. கன்றை விவசாயிகள் முறையாகப் பராமரிக்காத காரணத்தால் அது உயிரிழக்க நேரிடுகிறது, முறையாக கால்நடை மருத்துவமனையை அணுகுவதன் மூலம் கன்றுகள் உயிரிழப்பு தடுக்கப்படுவதாக", மதுரை கால்நடை மருத்துவர் பழனிவேல் தெரிவிக்கிறார். https://www.bbc.com/tamil/articles/c1v165wnxwxo
  25. ரஃபாவில் மக்களை பாதுகாப்பதற்கான நம்பகத்தன்மை மிக்க திட்டம் எதுவும் சர்வதேச சமூகத்திடம் இல்லை - அவுஸ்திரேலியா Published By: RAJEEBAN 15 FEB, 2024 | 01:59 PM ரஃபாவில் தஞ்சமடைந்துள்ள மக்களை பாதுகாப்பதற்கான நம்பகதன்மை மிக்க நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டம் எதனையும் சர்வதேச சமூகம் இதுவரை முன்வைக்கவில்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் கரிசனைகளையே அவுஸ்திரேலியா வெளியிடுவதாக தெரிவித்துள்ள பெனிவொங் அவுஸ்திரேலியாவின் நெருங்கிய நாடுகளின் கரிசனைகளை நாடாளுமன்றத்தில் வாசித்துள்ளார். எனது கருத்துக்கள் சர்வதேச சட்டத்தின் கொள்கைகள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படையிலானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரஃபா பகுதி மீது இஸ்ரேல் முன்னெடுக்ககூடிய பாரிய நடவடிக்கை குறித்த எங்கள்ஆழ்ந்த கரிசனைகளை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு தஞ்சமடைந்துள்ள மில்லியன் கணக்காண மக்களிற்கு பேரழிவு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் நெரிசலாக வாழும் பகுதிகளில் இராணுவ நடவடிக்கை என்பது ஆபத்தானது பொதுமக்களிற்கு இழப்புகள் ஏற்படலாம் எனவும்; அவர் தெரிவித்துள்ளார். இது நியாயப்படுத்த முடியாதது என அவுஸ்திரேலியா கருதுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176436

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.