Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. சாந்தனை ஓரிரு நாட்களில் இலங்கைக்கு அனுப்பி வைக்க வாய்ப்பு - நளினி, முருகன், பயஸ் எப்போது? பட மூலாதாரம்,MINISTRY OF FISHERY படக்குறிப்பு, சாந்தனின் குடும்பத்தினர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 31 ஜனவரி 2024, 13:03 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகியுள்ள இலங்கையர்களை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் திருப்பெரும்புதூர் பகுதியில் 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்றில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்தியர்கள் உட்பட இலங்கையர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். இலங்கையர்களான சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு 32 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்திருந்தனர். இந்த நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி விடுதலை செய்யப்பட்ட போதிலும், அவர்கள் இன்று வரை தாயகம் திரும்பவில்லை. யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் சாந்தனின் தாயார், தனது மகனை நாட்டிற்கு அழைத்து வரும்படி, பல்வேறு தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகிய நான்கு இலங்கையர்களையும் அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். பட மூலாதாரம்,MINISTRY OF FISHERY படக்குறிப்பு, சாந்தன் குடும்பத்தினர் தமிழ்நாடு முதல்வருக்கு அவசர கடிதம் இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். சாந்தனின் தாயாரால் தனக்கு வழங்கப்பட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ''32 ஆண்டுகால சிறைத்தண்டனையின் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில், அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கைப் பிரஜைகளான சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இதனால், இன்று வரை அவர்கள் நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து, முதுமைக் காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என்பவற்றால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன், தற்போது சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 33 ஆண்டுகளாகத் தனது மகனைக் காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார், 77 வயது நிரம்பிய தனது முதுமை நிலையில் ஒருதடவையாவது தனது மகனை நேரில் பார்க்க வேண்டும் எனவும், அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவன செய்யுமாறும் மிக உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதீத கரிசனை கொண்டிருக்கும் தாங்கள், இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்ப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும், அவரது குடும்பத்தினரின் உணர்வு நிலைப்பட்ட எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க ஆவனசெய்யுமாறு தங்களைக் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்" என சிவஞானம் சிறிதரனினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவுடன் சாந்தன் குடும்பத்தினர் சந்திப்பு சாந்தனின் தாயார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்றைய தினம் சந்தித்து, தனது மகனின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடாத்திய பின்னர் விரைவில் பதிலொன்றை பெற்றுத் தருவதாக சாந்தனின் குடும்பத்தினரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டுள்ளார். அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று (30) சந்தித்து, சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர். இதையடுத்தே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த பதிலை வழங்கியுள்ளார். பட மூலாதாரம்,SRIDARAN படக்குறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சாந்தன் ஓரிரு நாட்களில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவாரா? இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி கிடைத்தால், சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அதிகாரிகள், தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கின்றார். அத்துடன், சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். 'தமிழ்நாட்டில் இருந்து சாந்தனை இலங்கை அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சகத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதரான வெங்கட் அவர்களோடு பேசப்பட்டுள்ளது. அநேகமாக இரண்டு மூன்று நாட்களுக்குள் அந்த விடயம் சரிவரும். அத்தோடு இந்திய அதிகாரிகளால் சில ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் போது அந்த விடயம் சாத்தியமாகும்" என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சென்னையிலுள்ள இலங்கை துணை தூதுவருடன் தொலைபேசி வழியே கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார். இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின்ன் அனுமதி கிடைக்கப் பெறும் வரை காத்திருப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன் சாந்தனை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னையிலுள்ள துணை தூதர் பதிலளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சகத்தின் பதில் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலொன்றை விரைவில் வழங்குவதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''அவ்வாறான கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளதாக இதுவரை எனக்கு தெரியவில்லை. இந்த விடயம் குறித்து ஆராய்ந்து விரைவில் பதிலொன்றை வழங்குவேன்" என பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/c88np8gdpxeo
  2. ஜோர்தான் தாக்குதலிற்கு எவ்வாறு பதிலடிகொடுப்பது என நான் தீர்மானித்துவிட்டேன் - ஜோபைடன் Published By: RAJEEBAN 31 JAN, 2024 | 12:41 PM ஜோர்தான் ஆளில்லா விமானதாக்குதலிற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து தான் தீர்மானித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவதளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையிலேயே பைடன் இதனை தெரிவித்துள்ளார். ஜோர்தான் சிரிய எல்லையிலுள்ள அமெரிக்க தளத்தின் மீது இடம்பெற்ற தாக்குதலிற்கு ஈரானே காரணம் என தான் உறுதியாக கருதுவதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார். கட்டாய்ப் ஹெஸ்புல்லா என்ற அமைப்பிற்கு ஈரான் ஆயுதங்களை வி;ற்பனை செய்வதை அடிப்படையாக வைத்து இந்த முடிவிற்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.. டவர் 22 தளத்தின் மீதான தாக்குதலிற்கும் ஈரானிற்கும் நேரடிதொடர்புள்ளதை உறுதி செய்துள்ளீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விகளிற்கு பதிலளித்துள்ள பைடன் அது குறித்து நாங்கள் ஆராய்வோம் அதேவேளை மத்தியகிழக்கில் ஒரு பரந்துபட்ட யுத்தம் அவசியம் என நான் கருதவில்லை எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/175226
  3. 31 JAN, 2024 | 12:20 PM சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் நேற்று மாலை மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் கோப்ரா எனப்படும் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்தவராவார். மேலும் இந்தத் தாக்குதலில் 15 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெற்ற முதல் பெரிய தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா - பிஜாபூர் மாவட்ட எல்லையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சத்தீஸ்கரில் கடந்த 2021-ல் நடந்த தாக்குதலில் 23 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். நேற்றைய தாக்குதலும் அதே இடத்தில் நடந்துள்ளது கவனிக்கத்தது. முன்னதாகஇ கடந்த ஜனவரி 26 ஆம் தேதி சுக்மா - பிஜாபூர் பகுதியில் முதன்முறையாக குடியரசு தின விழாவை ஒட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மாவோயிஸ்டு ஆதிக்கம் நிறைந்த அப்பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று (ஜன.30) ஜோனாகுடா - அலிகுடா பகுதியில் கோப்ரா படையினர்இ சிஆர்பிஎஃப் சிறப்பு அதிரடிப் படையினர் கூட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். எந்தப் பக்கமிருந்து தாக்குதல் நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் மூன்று வீரர்கள் பலியாகினர். நிலைமையை உணர்ந்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். ஆனால் அதற்குள் சேதம் அதிகரிக்கத் தொடங்கியது. தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் வனத்துக்குள் தப்பிச் சென்றுவிட்டனர். முன்னதாக இம்மாத தொடக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கரில் மாவோயிஸ்டு தாக்குதல் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “அடுத்த மூன்று ஆண்டுகளில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டு இடர் களையப்படும்” என்று உறுதியளித்தார். இந்நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. https://www.virakesari.lk/article/175222
  4. 30 ஜனவரி 2024 வடக்கு இலங்கையில் உள்ள நீர்த் தேக்கம் ஒன்றில் யானை கூட்டம் நீந்திச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த பெரிய விலங்குகள் உண்மையிலேயே சிறப்பாக நீந்தக் கூடியவை. மனிதன் தவிர்த்து, பெரும்பாலான பாலூட்டிகளைப் போலவே, யானைகளும் இயற்கையிலேயே நீச்சல் திறன் கொண்டவை... அளவில் மிகப்பெரியதாக இருந்தாலும் நீரில் மிதப்பதற்கு போதுமான சக்தி யானைகளிடம் உண்டு. கால்களை துடுப்பாகவும் துதிக்கையை சுவாசிப்பதற்காகவும் யானைகள் பயன்படுத்துகின்றன. வலிமையான கால்கள் மற்றும் துதிக்கையை கொண்டிருப்பதால் யானைகளால் வெகு தூரம் வரை நீந்திச் செல்ல முடியும். 2017-ல் கடலில் 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு யானைகள் நீந்திச் செல்வதை இலங்கை கப்பற்படை கண்டறிந்தது. அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்பட்ட இந்த பலசாலி விலங்குகள் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டன. வெகுநேரம் நீந்திச் சென்று மறுகரையை அடைவதற்கு முன்பு சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக இந்த யானை கூட்டம் தண்ணீரில் விளையாடவும் செய்கிறது. https://www.bbc.com/tamil/articles/cek78dr810lo
  5. சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவுக்கு பிணை! கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் இன்று(31) உத்தரவிட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவினால் நேற்று முன்தினம்(29) கைது செய்யப்பட்டார். பொதுமக்களின் அமைதியை சீர்குலைத்தமை, அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியமை, பொதுமக்களை ஆத்திரமடையச் செய்யும் வகையிலான காணொளிகளை வெளியிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பியத் நிகேஷலவை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் நேற்று(30) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து அவரை இன்று(31) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை பிரதான நீதவான், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டார். https://thinakkural.lk/article/289993
  6. Published By: DIGITAL DESK 3 31 JAN, 2024 | 01:27 PM ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் - புதிய கூட்டணிகள் பற்றி மனோராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். நாட்டில் உருவாகிவரும் புதிய கூட்டணிகளிடமிருந்து தமது அணியை நோக்கி வரும் அழைப்புகள் பற்றி, தென்கொழும்பு கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, கோட்டாபய ராஜபக்ச போனாலும், அவரது பாவத்தின் நிழல் போகவில்லை. சட்டப்படி கோட்டாபய ராஜபக்ச 16ம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இந்த அரசு நடக்கிறது. அந்த பாவத்தில் எமக்கு பங்கு வேண்டாம் நேற்று முதல் நாள் அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணி நண்பர்கள் என்னுடன் பேசிய போது தெளிவாக ஒன்றை சொன்னேன். ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம் என்று சொன்னேன். நாம் இன்று இருக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற இடத்தில் நாம் செளக்கியமாகவே இருக்கிறோம் எனவும் சொன்னேன். தமிழ் முற்போக்கு கூட்டணி நினைத்து இருந்தால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகிய அடுத்த நாளே அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால், அதை நாம் செய்யவில்லை. ஏனென்றால் பேரினவாதம், ஊழல் ஆகிய இரண்டு பேரழிவுகளுக்கும் ஏகபோக உரிமையாளர்களான ராஜபக்சர்களுடன் கலப்பு கல்யாணம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் இல்லை. எங்கள் இந்த கொள்கை நிலைப்பாடு காரணமாகத்தான் நாம் இன்று ராஜபக்ச ஆதரவு ரணில் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை. இன்று இந்த ராஜபக்ச ஆதரவு ரணில் அரசில் அங்கம் வகிப்பவர்கள், தாம் ஏதோ வெட்டி முறித்து விட்டதாக தப்பு கணக்கு போட்டு விடக்கூடாது. நாம் அங்கே கொள்கை நிலைப்பாடு காரணமாக இல்லை. ஆகவேதான் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். அதுதான் உண்மை. சட்டப்படி கோதாபய ராஜபக்ச 16ம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இன்றுவரை இந்த அரசு தொடர்கிறது. அந்த பாவத்தின் நிழலில் அங்கமான உங்களுக்கு பாவத்தின் சம்பளம் அடுத்த தேர்தலில் கிடைக்கும். 16ம் திகதி நவம்பர் 2019 முதல் இன்றுவரை, நான்கு வருடங்கள், இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. கடந்த நான்கு வருடங்களாக இந்த அரசாங்கத்தின் பதவிகளில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளிடம், நீங்கள் இதுவரை வெட்டி முறித்த சாதனைகளை முடியுமானால் பட்டியல் இடுங்கள் என பகிரங்க சவால் விடுகிறேன். அபிவிருத்தி செய்ய நிதி இல்லை என்பீர்கள். சரி, அபிவிருத்தியை விடுங்கள். அரச நிர்வாகரீதியாக தமிழ் மக்கள் தொடர்பில் நீங்கள் அமைச்சர்களாக, துணை அமைச்சர்களாக, அரசாங்க எம்பிகளாக இதுவரை என்ன செய்து கிழித்துள்ளீர்கள் என பகிரங்கமாக சொல்லுங்கள்? வேண்டுமானால், நாம் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளையும், இன்று நீங்கள் இந்த நான்கு ஆண்டுகளில் செய்ய தவறிய சீர்கேடுகளையும் நான் பகிரங்கமாக பட்டியல் இடுகிறேன். எனவேதான், இந்த புதிய, பழைய பாவங்களின் கூட்டணியில் நாம் இல்லை. நாங்கள் சோரமும் போகவில்லை. பாவமும் செய்யவில்லை. ஆகவே இந்த பாவத்தின் சம்பளம் எமக்கு கிடையாது. எனவே தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற முற்போக்கு அரசியல் இயக்கம், அடுத்து வரும் புதிய அரசாங்கத்தில், புதிய பலத்துடன், நேர்மையாக அங்கம் வகிக்கும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/175227
  7. 65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி, நாட்டுக்கு புதிய முன்னுதாரணமாக விளங்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மேலும், அரச சேவையில் ஓய்வு பெறுவதற்கான வயதெல்லை இருப்பது போல், அரசியலுக்கும் அது நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். நுகேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “என்றாவது ஒரு நாள் என் கண் பார்வை குறையும், ஒரு நாள் என் செவித்திறன் குறையும். ஆனால் அதுதான் நிதர்சனம். அரசுப் பணியில் இருந்து 60 வயதில் ஓய்வு பெறுவது ஏன்? நீதிபதியும் 65 ஆண்டுகள் பணியாற்றலாம். கடந்த கால வரலாற்றில் ஒரு ஆளுநருக்கு 80 வயது இருக்கும் போது, அவருக்கு பணிபுரியும் மன உறுதி உள்ளதா? எனது அரசியல் வாழ்க்கையில் நாங்கள் முன்னுதாரணமாக இருக்கிறோம். 65 ஆண்டுகளுக்கு முன் அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராக இருக்கிறோம். இங்கே எல்லோரும் அப்படித்தான். அதற்கு முன்னுதாரணமாக இருக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார். https://thinakkural.lk/article/289950
  8. 31 JAN, 2024 | 01:35 PM வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 80 கட்டாக்காலி மாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (30) பிடிக்கப்பட்டன. வவுனியாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. இதனையடுத்து நகரசபைக்குள்ள அதிகாரங்களை கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்றையதினம் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 80க்கும் மேற்பட்ட கால்நடைகள் நகர சபையினரால் பிடிக்கப்பட்டு தற்போது சபையின் பாராமரிப்பில் உள்ளது. எனவே கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் தண்டப்பணத்தினைச் செலுத்தி அவற்றை மீளப்பெற்றுச்செல்லுமாறு சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபை அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/175230
  9. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை - என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கெனவே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். செவ்வாயன்று அவர் நாட்டின் ரகசியங்களைக் கசியவிட்டதற்காக 10 ஆண்டுகள் தண்டனை பெற்றார். புதன்கிழமையன்றும் ஓர் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் வழங்கப்பட்டது. தனக்கு எதிரான பல வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று இம்ரான் கான் கூறியுள்ளார். ரகசியங்களை கசியவிட்ட வழக்கு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES மார்ச் 2022இல் அமெரிக்காவில் அந்நாட்டு உயர் மட்ட அதிகாரிகளுடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு பேசப்பட்ட முக்கிய விவகாரங்கள் உள்ளடங்கிய ரகசிய ஆவணங்களை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பி வைத்தார். மார்ச் 2022இல் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் கட்சி பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். மேடையில் பேசிய இம்ரான் கான் தனது ஆட்சியைக் கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் திட்டம் போடுவதாகக் கூறி தனது சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதத் துண்டை வெளியே எடுத்துக் காட்டினார். இம்ரான் கான் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டால் அனைவரும் மன்னிக்கப்படுவீர்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக இம்ரான் கான் கூறினார். இதற்குப் பின்னணியில் எந்த நாடு இருக்கிறது என்பதை இம்ரான் கான் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அதேநேரம், அவர் அமெரிக்காவை விமர்சிக்கவும் தவறவில்லை. இந்தச் சம்பவம் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது. தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற சதி வேலை நடப்பதாக இம்ரான் கான் முன்வைத்த குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரித்தது. பாகிஸ்தான் தூதர் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பிய ரகசிய தூதரக கடிதங்களை பொதுவெளியில் பிரதமரே பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதன் பின்னணியிலும் அமெரிக்கா இருப்பதாக இம்ரான் கான் சந்தேகம் தெரிவித்தார். Play video, "பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை - ஏன்?", கால அளவு 3,39 03:39 காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை - ஏன்? பத்து ஆண்டு சிறை இந்த நிலையில் இம்ரான் கானின் பதவி பறிபோன பிறகு, ஜூலை 2023இல் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் 1923இன் படி, முன்னாள் பிரதமர் மீது அரசு ரகசியங்களை பொது வெளியில் கசியவிட்டதாகக் குற்றம்சாட்டி பாகிஸ்தான் அரசு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்துமாறு நீதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வழக்கை விசாரித்த பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம், இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மஹ்மூத் குரைஷி ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீதிமன்றத் தீர்ப்பு கேலிக்கூத்தானது என்றும் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தெரிவித்துள்ளது. இம்ரான் கானின் எக்ஸ் பக்கத்திலும் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து பதிவிடப்பட்டுள்ளது. காபி குடிப்பதை நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?7 மணி நேரங்களுக்கு முன்னர் வள்ளிக் கும்மி குறிப்பிட்ட சாதிக்கானதா? பத்மஸ்ரீ விருது மூலம் வாக்குகளை கவரப் பார்க்கிறதா பாஜக?5 மணி நேரங்களுக்கு முன்னர் தீர்ப்பு பற்றி இம்ரான் கான் கருத்து பட மூலாதாரம்,GETTY IMAGES "சைஃபர் வழக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தால் இரண்டு முறை செல்லாது என அறிவிக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட ஒரு வழக்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இரண்டு முறையும் இந்த வழக்கு அரசமைப்பு மற்றும் சட்டத்தை மீறி நடத்தப்பட்டது. இந்த வழக்கு பொய், மிரட்டல், சதி, வஞ்சகத்தால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அதனால்தான் உச்சநீதிமன்றமும் எனக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கியது. இப்போது முக்கிய சாட்சிகளின் வாக்குமூலத்தில் எனக்கும், ஷா மெஹ்மூத்துக்கும் எதிராக எதுவும் வெளிவராததால், இதன் பின்னணியில் உள்ளவர்கள் பீதியடைந்துவிட்டனர். மேலும் சட்ட விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் இதை விரைவாக முடித்துவிட நினைக்கிறார்கள்," என இம்ரான் கானின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட முடியுமா? முன்னதாக, 2023 ஆகஸ்ட் மாதத்தில் அரசுக் கருவூலமான தோஷகானாவிடம் இருந்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தண்டனையை உச்ச நீதிமன்றம் அண்மையில் நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது சைஃபர் வழக்கில் 10 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தண்டனை அனுபவித்து வரும் இம்ரான் கானால் அதில் போட்டியிட முடியாது. தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் பிடிஐ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. https://www.bbc.com/tamil/articles/cv2w1yjjydko
  10. 19 வயதின் கீழ் உலகக் கிண்ண சுப்பர் 6 சுற்றில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா 30 JAN, 2024 | 10:12 PM (நெவில் அன்தனி) புளூம்பொன்டெய்ன் மங்குவாங் ஓவல் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் 6 சுற்றின் முதலாம் குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்தை 214 ஓட்டங்களால் இந்தியா மிக இலகுவாக வெற்றிகொண்டது. முஷீர் கான் குவித்த அபார சதம் உட்பட அவரது சகலதுறை ஆட்டம், ராஜ் லிம்பினி, சௌமி பாண்டே ஆகியோரது துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கின. இந்த வெற்றியுடன் அரை இறுதியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை இந்தியா அதிகரித்துக்கொண்டுள்ளது. அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 295 ஓட்டங்களைக் குவித்தது. மொத்த எண்ணிக்கை 28 ஓட்டங்களாக இருந்தபோது இந்தியாவின் முதலாவது விக்கெட் சரிந்தது. ஆனால், அதன் பின்னர் முஷீர் கான் 2ஆவது விக்கெட்டில் ஆதர்ஷ் சிங்குடன் 77 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் உதய் சஹாரனுடன் 87 ஓட்டங்களையும் பகிர்ந்து இந்தியாவை பலமான நிலையில் இட்டார். ஆரம்ப வீரர் ஆதர்ஷ் சிங் 52 ஓட்டங்களையும் உதய் சஹாரன் 34 ஓட்டங்களையும் பெற்றனர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய முஷீர் கான் 126 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 131 ஓட்டங்களைக் குவித்தார். பந்துவீச்சில் மேசன் க்ளார்க் 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். 296 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 28.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது. அணித் தலைவர் ஒஸ்கர் ஜெக்சன் (19), ஸக் கமிங் (16), அலெக்ஸ் தொம்சன் (12), ஜேம்ஸ் நெல்சன் (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் சௌமி பாண்டே 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராஜ் லிம்பானி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் முஷீர் கான் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்தியா தனது அடுத்த சுப்பர் 6 போட்டியில் நேபாளத்தை எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி எதிர்த்தாடும். ஆட்ட நாயகன்: முஷீர் கான் https://www.virakesari.lk/article/175191
  11. இது ஒரு நல்ல கேள்வி? ஆனால் எனக்குத் தெரியாது அண்ணை.
  12. Published By: DIGITAL DESK 3 31 JAN, 2024 | 10:26 AM யாழ்ப்பாணத்தில், உறவினர்களான அயலவர்கள் இடையில் கோழி வளர்ப்பினால் ஏற்பட்ட தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, அயலவர்களான உறவினர்கள் இருவருக்கும் இடையில் கோழி வளர்ப்பினால் பிரச்சினைகள் நிலவி வந்துள்ளன. இந்நிலையில், நேற்றைய தினமும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது முற்றி கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது. அதில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் உயிரிழந்ததை அடுத்து, கொலை சந்தேகநபரான 57 வயதுடைய அயலவர் கைது செய்யப்பட்டள்ளார். கைது செய்யப்பட்டவரை சுன்னாக பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/175199
  13. பெலியத்தையில் ஐவர் படுகொலை : மேலும் மூவர் கைது 31 JAN, 2024 | 11:29 AM பெலியத்தையில் ஐவரின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் மூவர் மாத்தறை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, அலவ்வ மற்றும் பூஸா ஆகிய பகுதிகளில் வசிக்கும் 28, 42 மற்றும் 58 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஹுங்கம பொலிஸாரால் இரண்டு சந்தேக நபர்களும் மாத்தறையில் ஒரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர் . படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை மறைத்தமை , பண உதவி செய்தமை போன்ற செயற்பாடுகளில் இடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைத செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175200
  14. மீசாலையில் இருந்து நவிண்டிலில் 4 மாதங்கள் இடம்பெயர்ந்திருந்தோம். 96 உலகக்கோப்பை கிரிக்கெட் நாவலர் மடப்பக்கமாக உள்ள ஒரு வீட்டில் தான் சென்று பார்த்தோம்.
  15. உலகில் எனது நேரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன் - கார் விபத்து குறித்து ரிஷப்பண்ட் உருக்கம் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப்பண்ட். விக்கெட் கீப்பரான இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்துக்கு தனது சொகுசு காரில் சென்ற போது அவர் படுகாயம் அடைந்தார். பல மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு ரிஷப்பண்ட் முழுமையாக குணமடைந்தார். இந்த விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ரிஷப்பண்ட் விளையாட இருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் கெப்டனாக பணியாற்றுகிறார். இந்த நிலையில் கார் விபத்து குறித்து ரிஷப்பண்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியதாவது:- என் வாழ்நாளில் முதல் முறையாக இந்த உலகின் நேரம் முடிந்துவிட்டது போல் உணர்ந்தேன். விபத்தின் போது காயங்கள் பற்றி நான் அறிந்தேன். ஆனால் நான் அதிர்ஷ்ட்சாலி காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை. யாரோ என்னை காப்பாற்றியதாக உணர்ந்தேன். காயம் குணமாக 16 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என டாக்டரிடம் கேட்ட போது கூறினர். விரைவில் குணம் அடைய நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும். இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார். https://thinakkural.lk/article/289897
  16. அடுத்த 3 ஐ.பி.எல். சீசன்களில் டோனி விளையாடுவார்! மகேந்திர சிங் டோனி உடனான நட்பு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கூறியதாவது:- அறுவை சிகிச்சைக்கு பின்னர் டோனி முழுமையாக குணமடைந்து விட்டார். என்னை பொறுத்தவரை அடுத்த 2 அல்லது 3 சீசன்களில் சி.எஸ்.கே. அணிக்காக அவர் விளையாட வர வேண்டும். இந்திய வீரர்கள் தாண்டி வெளிநாட்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் டோனியுடன் பேச, நேரம் செலவிட விரும்புவார்கள். டோனி மிகவும் எளிமையான பழக்க வழக்கம் உடையவர். எல்லோரையும் சமமாக நடத்தக்கூடியவர். அதேசமயத்தில் அவர் கிரிக்கெட் குறித்து தெளிவான புரிதல் வைத்திருப்பார். அவரிடம் நேரம் செலவிடுவது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடிக்கும். டோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு இருக்கிறது. டோனியை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன். அவரும் என்னை தம்பியாக பார்ப்பார் என நம்புகிறேன். எங்களுக்கு வேடிக்கையான தருணங்கள் நிறைய இருக்கிறது. கொரோனா நேரத்தில் நாங்கள் இருவரும் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்து விளையாடி உள்ளோம். களத்திற்கு வெளியே நிறைய நேரம் செலவு செய்திருக்கிறோம். அவரிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். எனக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அவரால் தான் கிடைத்தது. 2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எனக்கு விளையாட 14 ஆட்டங்கள் கொடுத்தார். அதுதான் நான் இந்திய அணிக்கு தேர்வாவதற்கு முக்கிய காரணம். https://thinakkural.lk/article/289781
  17. கடந்த 2023 இல் அயல்நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள இராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 2022 பெப்ரவரி மாதம் ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் இராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. 2023க்கான கணக்கெடுப்பின்படி இதுவரை இல்லாத அளவிற்கு $238 பில்லியன் அளவிற்கு அமெரிக்க ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை ஆகி உள்ளது. அமெரிக்காவை மையமாக கொண்ட லாக்ஹீட் மார்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ராப் க்ரம்மேன் உள்ளிட்ட தனியார் இராணுவ தளவாட நிறுவனங்கள் செய்த விற்பனையை தவிர, அமெரிக்க அரசே நேரடியாக விற்பனை செய்த $81 பில்லியன் வணிகமும் இதில் அடங்கும். இப்பட்டியலில் போலந்து ($29.75 பில்லியன்) முன்னணியில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி ($8.5 பில்லியன்), பல்கேரியா ($1.5 பில்லியன்), நோர்வே ($1 ($1 பில்லியன்), செக் குடியரசு ($5.6 பில்லியன்) உள்ளிட்ட நாடுகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளை தவிர, தென் கொரியா ($5 பில்லியன்), அவுஸ்திரேலியா ($6.3 பில்லியன்), ஜப்பான் ($1 பில்லியன்) ஆகியவை அமெரிக்காவிற்கு சாதகமான ஆயுத விற்பனை வர்த்தகத்திற்கு உதவும் நாடுகள் ஆகும். இது குறித்து அமெரிக்க அரசு, “பிராந்திய மற்றும் உலக பாதுகாப்பிற்கு நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இராணுவ பாதுகாப்புக்கான வர்த்தகமும், ஆயுத விற்பனையும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமான அம்சம்” என தெரிவித்தது. ஆயுத விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் உள்ள ரஷ்யாவிடமிருந்து வாங்குவதை நிறுத்திய பல உலக நாடுகள் அமெரிக்காவிடம் வாங்க தொடங்கி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது. அமெரிக்க அரசிடம் இருந்து இராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க விரும்பும் நாடுகள், அமெரிக்காவின் தனியார் இராணுவ தளவாட விற்பனை நிறுவனங்களிடம் நேரடியாடிக பேச்சு வார்த்தை நடத்தி பெற்று கொள்ளலாம் அல்லது தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியும் வாங்கலாம். ஆனால், இரண்டு வழிமுறைகளுக்கும் அமெரிக்க அரசின் முன்அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/289891
  18. இந்த உலகம் பல அதிசயங்களை தனக்குள் பூட்டி வைத்திருக்கிறது. ஒரு நாட்டை போல மற்றொரு நாடு இல்லை, ஒரு நிலப்பரப்பை போல மற்றொரு நிலப்பரப்பு இல்லை. அபூர்வமான விஷயங்கள் இன்னும் மனித அறிவை பிரமிக்க வைக்கிறது. அந்த வகையில், `நீரின்றி அமையாது உலகு’ எனக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், மழையின்றி ஒரு கிராமம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உலகிலேயே அதிக மழை பெய்யும் மேகாலயாவில் உள்ள மவ்சின்ராம் கிராமத்தைப் போல, மழையே பெய்யாத ஒரு கிராமம் இருக்கிறது. அப்படியென்றால் அது பாலைவனமாக இருக்கும் என நினைக்கலாம். அதுதான் இல்லை, இங்கு மக்கள் வசித்து வருகின்றனர். ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் அல்-ஹுடாய்ப் என்ற கிராமம் உள்ளது. மலைப்பகுதியான இந்த கிராமம் தரை மட்டத்திலிருந்து சுமார் 3,200 மீற்றர் உயரத்தில் உள்ளது. ஒரு சிவப்பு மணற்கற்களால் ஆன மேடையில் இந்த கிராமம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் இரண்டு பள்ளிகள், ஹதிமி மசூதி மற்றும் மன்சூர் அல் யேமன் மசூதி என இரண்டு மசூதிகள் உள்ளன. அரபியில் கஹ்ஃப் உன்-நயீம் என்று அறியப்படும் `ஆசீர்வாத குகை’ ஹுடாய்ப் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது. மலையின் உச்சியில் பல அழகான வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன. மலை உச்சியில் நின்று பார்க்கும் காட்சியைக் காணவே இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கிராமத்தில் மழை பெய்யாததற்கு காரணம், இந்த கிராமம் மேகங்களுக்கும் மேல் அமைத்துள்ளது. பொதுவாகவே மேகங்கள் மழையை உருவாக்கும். மேகங்களுக்குக் கீழே மழை பொழியும். மேகங்களுக்கு மேல் கிராமம் அமைந்துள்ளதால் மழையே பெய்யாத சூழல் இங்கு நிலவுகிறது. மழை இல்லாததால் இந்த பகுதி வறட்சியுடன் காணப்படுகிறது. நன்றி – விகடன் https://thinakkural.lk/article/289871
  19. மனித மூளையில் வெற்றிகரமாக சிப் பொருத்திய மஸ்கின் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், உலக கோடீஸ்வரர்களில் முன்னணியில் உள்ளவருமான எலான் மஸ்க் நியூராலிங்க் (Neuralink) எனும் நிறுவனத்தை நிறுவியுள்ளார். மனித மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி செய்ய தொடங்கப்பட்டது நியூராலிங்க். கடந்த வருடம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை (FDA), நியூராலிங்க் நிறுவனத்திற்கு, மனித மூளையில் சிப் எனப்படும் மின்னணு சில்லுகளை பொருத்தி அவற்றின் மூலம் மனித மூளையின் திறனை மேம்படுத்தவும், நோய்களின்றி வாழ வழி செய்யவும் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது நியூராலிங்க் நிறுவனத்தின் முதல் முயற்சியாக ஒரு மனிதரின் மூளையில் “சிப் பொருத்துதல்” வெற்றிகரமாக நடந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். மேற்கொண்டு எந்த தகவலையும் நியூராலிங்க் வழங்கவில்லை. நியூராலிங்க் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட்டின் துணையுடன், மிக துல்லியமாக நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சை முறையில் இந்த சிப் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட பரிசோதனைகளில் இந்த சிப்பில் இருந்து மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் (electrical signal conduction) நடக்க தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பக்கவாதம் போன்ற மனிதர்களை செயலிழக்க செய்யும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்கள், முகம் உள்ளிட்ட உறுப்புகள் அசைவற்று போய் விடும். அந்நிலையில் உள்ளவர்களுக்கு அவர்களின் மூளை, உடல் உறுப்புகளுக்கு எண்ணங்கள் மற்றும் கட்டளைகளை உடனுக்குடன் அனுப்பும் பரிமாற்றமும் நின்று விடும். அத்தகைய குறைபாடு உள்ளவர்களின் மூளையில் மின்னணு சிப் பொருத்தி, அவற்றை எண்ணங்களின் மூலம் கட்டுப்படுத்தி, அதன் பயனாக உறுப்புகளை செயற்பட வைக்க முயல்வதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. தனிப்பட்ட பங்குதாரர்களை கொண்டு மஸ்க் உருவாக்கியுள்ள நியூராலிங்க், தற்போது $5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/289874
  20. மருத்துவ பணியாளர்கள் போல ஜெனின் மருத்துவமனைக்குள் நுழைந்து இஸ்ரேலிய படையினர் தாக்குதல் - மூவர் பலி Published By: RAJEEBAN 30 JAN, 2024 | 04:52 PM மருத்துவமனை பணியாளர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய படையினர் மேற்குகரையில் மருத்துவமனையொன்றிற்குள் நுழைந்து மூவரை சுட்டுக்கொன்றுள்ளனர். மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபின் சின மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் போல நுழைந்த இஸ்ரேலிய படையினர் மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக்கொன்றனர் என இஸ்ரேலிய பாலஸ்தீன தகவல்கள் தெரிவித்துள்ளன. தாதிமார்கள் ஹிஜாப்அணிந்த பெண்கள் மருத்துவர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய விசேட படைப்பிரிவினர் மருத்துவமனைக்குள் நுழைவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன. ஒருவர் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு செல்கின்றார் மற்றுமொருவர் குழந்தைகள் நாற்காலியுடன் காணப்படுகின்றார். மருத்துவமனைகள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் பின்னர் ஒவ்வொருவராக மூன்றாவது தளத்திற்கு சென்று இரண்டு இளைஞர்களை கொலை செய்தனர் என மருத்துவமனைக்குள் காணப்பட்டவர்களை மேற்கோள்காட்டி பாலஸ்தீன அரச செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளார். சமீபத்தில் குறிப்பிடத்தக்க பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்ட மருத்துவமனைக்குள் மறைந்திருந்த முகமட் ஜலாம்னே என்பவரே கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் மீதான தாக்குதல்கள் உட்பட பலதாக்குதல்களில் ஈடுபட்டுள்ள ஜெனின் பட்டாலியனை சேர்ந்த ஜெனின் முகாமை சேர்ந்த முகமட் அல் கஜாவியும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/175175
  21. ஜோர்தான் தாக்குதலிற்கு பின்னர் கடும் அழுத்தத்தில் பைடன் - பதில் தாக்குதல் மிகவும் உக்கிரமானதாக காணப்படும் - சிஎன்என் Published By: RAJEEBAN 30 JAN, 2024 | 11:23 AM ஜோர்தானில் உள்ள அமெரிக்க தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கான அமெரிக்காவின் பதிலடி முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு உக்கிரமானதாகயிருக்கலாம் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. ஈராக் சிரியா மீது அமெரிக்கா முன்னர் மேற்கொண்ட தாக்குதலை விட இம்முறை இடம்பெறவுள்ள தாக்குதல் உக்கிரமானதாகயிருக்கலாம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எனினும் பென்டகனும் வெள்ளை மாளிகையும் இதுவரை தங்கள் திட்டங்களை வெளிவிடவில்லை இது குறித்து எச்சரிக்கையுடன் உள்ளன எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. ஜோபைடன் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்காக பதில் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்ற கடும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளார் - ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் ஈராக் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் சார்பு குழுக்கள் 160 தடவைகளிற்கு மேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. மிகத்தெளிவான செய்தியை தெரிவிப்பதற்காக ஈரானிற்குள் தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என குடியரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் அதிகளவு அமெரிக்க படையினரை கொலை செய்த ஆளி;ல்லா விமானதாக்குதலிற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதே ஜோ பைடன் எதிர்நோக்கியுள்ள பெரும் சவால் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படையினர் வெளியேறும்வேளையில் அபேகேட்டில் இடம்பெற்ற தாக்குதலில் 13 அமெரிக்க படையினர் கொல்லப்பட்ட பின்னர் அதிக அமெரிக்கபடையினர் தற்போதைய தாக்குதலிலேயே கொல்லப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/175126
  22. அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு குறைந்தபட்ச வேகம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை அமுல்படுத்த நடவடிக்கை அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான குறைந்தபட்ச வேகம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்தும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் குணவர்தன, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படும் என்றார். விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டு அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வீதி விபத்துக்கள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் கீழ் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவித்த அமைச்சர், இந்த கலந்துரையாடலில் பொலிஸார், வீதி பொறியியலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டதாக தெரிவித்தார். “கட்டுநாயக்க – கொழும்பு நெடுஞ்சாலையில் பதிவாகும் பல விபத்துக்கள் அதிக வேகத்தினால் ஏற்படுவதாக கலந்துரையாடலில் கண்டறியப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் குறைந்த வேகத்தில் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல முற்படும் வாகனங்களாலேயே விபத்துக்கள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது,” என்றார் . பயணிக்கும் போது சீட் பெல்ட் மற்றும் ஏனைய பாதுகாப்பு உபகரணங்களை அணியாமை, குடிபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் வீதி விதிகளை பின்பற்றத் தவறியமை ஆகியன இலங்கையில் நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதாக கூறப்படுவதை மறுத்த அமைச்சர் குணவர்தன, சாரதியின் வசதிக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பிரதிபலிப்பு விளக்குகளே நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலைகளில் பல விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில், குறிப்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவத்தின் வெளிச்சத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கேரவலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்துக்கு அதீத வேகத்தினால் ஏற்பட்ட விபத்து என கண்டறியப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சரின் விபத்துக்குப் பின்னர், அதே அதிவேக நெடுஞ்சாலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கொல்லப்பட்ட மற்றுமொரு விபத்தும் பதிவாகியுள்ளது. https://thinakkural.lk/article/289908
  23. "I will always be here to play Test cricket for the West Indies," he said. "I am not afraid to say this live. There will be times when T20 might come around and Test cricket will be there … but I will always be available to play for the West Indies no matter how much money comes towards me." https://www.espncricinfo.com/story/shamar-joseph-ruled-out-of-ilt20-with-toe-injury-1418934
  24. ஐசிசி 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத்தில் ஆஸி.யிடம் இலங்கைக்கு முதலாவது தோல்வி Published By: DIGITAL DESK 3 29 JAN, 2024 | 11:15 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சி குழுவில் இடம்பெறும் இலங்கை முதலாவது தோல்வியைத் தழுவியது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கிம்பர்லியில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை தோல்வி அடைந்தது. இலங்கை இதுவரை பங்குபற்றிய 3 லீக் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதுடன் 208 ஓட்டங்களையே (49.5 ஓவர்களில்) அதிகப்பட்ச மொத்த எண்ணிக்கையாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பெற்றது. இலங்கை துடுப்பாட்டத்தில் ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒரு வீரர் மாத்திரமே 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெறுகிறார். ஏனையவர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காதது இலங்கை அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. அவுஸ்திரேலியாவுடனான போட்டியிலும் தினுர கலுபஹன மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்தார். ஆரம்ப வீரர் புலிந்து பெரேரா தொடர்ந்து துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காததுடன் இன்றைய போட்டியில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (16), சுப்புன் வடுகே (17) ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஓரளவு தெம்பை ஊட்டினர். தொடர்ந்து ரவிஷான் டி சில்வாவுடன் 4ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களையும் ருசந்த கமகேயுடன் 5ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களையும் தினுர கலுபஹன பகிர்ந்து அணியை ஒரளவு நல்ல நிலையில் இட்டார். ஆனால், இந்த மூவரும் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். ரவிஷான் டி சில்வா 30 ஓட்டங்களையும் ருசந்த கமகே 10 ஓட்டங்களையும் பெற்றனர். தினுர கலுபஹன 78 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 64 ஓட்டங்களைப் பெற்றனர். மத்திய வரிசையில் ஷாருஜன் சண்முகநாதன் 21 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் கெலம் விட்லர் 28 ஓட்டங்களக்கு 3 விக்கெட்களையும் மாஹ்லி பியடமன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டொம் கெம்பெல் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 48.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஹெரி டிக்சன் (49), சாம் கொன்ஸ்டாஸ் (23) ஆகிய இருவரும் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எனினும், அவர்கள் இருவரைத் தொடர்ந்து மேலும் இருவர் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (129 - 4 விக்.) ஆனால், ரெயான் ஹிக்ஸ், டொம் கெம்பெல் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். ரெயான் ஹிக்ஸ் 77 ஓட்டங்களுடனும் டொம் கெம்பெல் 33 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் விஷ்வா லஹிரு 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/175030
  25. ஜோபைடன் பலவீனமானவர் திறமையற்றவர்; பிரச்சாரங்களில் டிரம்ப்; அமெரிக்க பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிப்பு Published By: RAJEEBAN 29 JAN, 2024 | 03:29 PM cnn அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பலவீனமானவர், திறமையற்றவர் என்ற வாதத்தை முன்வைத்துவரும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் நிலைமை அமெரிக்காவின் கட்டுப்பாட்டை மீறி செல்கின்றது எனவும் தெரிவித்துவருகின்றார். அமெரிக்கா தன்னை காப்பாற்றுவதற்கு அவசியமான வலுவான நபராக டிரம்ப் தன்னை முன்னிறுத்திவருகின்றார். நெவெஸ்டாவில் ஆற்றிய உரையில் பைடனின் எல்லை கொள்கைகளை டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். இதன் காரணமாக எந்நேரத்திலும் தேசிய பாதுகாப்பு பேரழிவொன்று இடம்பெறலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களில் இடம்பெற்ற விடயங்களால் அமெரிக்காவில் பாரிய பயங்கரவாத தாக்குதலிற்கான ஆபத்துள்ளது பல தாக்குதல்கள் இடம்பெறலாம் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதேவேளை மத்திய கிழக்கில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்ட விடயத்தையும் முன்னாள் ஜனாதிபதி தனக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றார். இதற்கான காரணம் பைடன் என குற்றம்சாட்டியுள்ள டிரம்ப் பைடனின் போதிய வலிமையின்மையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். நான் வெள்ளை மாளிகையில் இருந்திருந்தால் தற்போதைய யுத்தங்கள் ஒருபோதும் இடம்பெற்றிருக்காது என குறிப்பிட்டுள்ள அவர் உலகம் முழுவதும் அமைதி நிலவியிருக்கும் ஆனால் தற்போது நாங்கள் மூன்றாம் உலக யுத்தத்தின் விளிம்பில் நிற்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/175068

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.