Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,X/REALSHOAIBMALIK AND INSTAGRAM/MIRZASANIAR 20 ஜனவரி 2024, 10:57 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவரான, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் மீண்டும் திருமணம் செய்துகொண்டார். அவர் சனா ஜாவேத் என்பவரைத் மணமுடித்துள்ளார். ஷோயிப் மாலிக், சனா ஜாவேத் இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். பட மூலாதாரம்,SCREENGRAB இது சமூக ஊடகங்களில் விவாதப்பொருளாகியுள்ள நிலையில், சானியா மிர்சா - ஷோயிப் மாலிக் உறவு என்ன ஆயிற்று என்பது குறித்து சானியாவின் தந்தை விளக்கம் அளித்துள்ளார். 2010-ம் ஆண்டில் சானியா - ஷோயிப் திருமணம் ஷோயிப் மாலிக் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களது திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஷோயிப் மாலிக் உடனான திருமணத்திற்கு முன்பு, சானியா மிர்சா தனது குழந்தைப் பருவ நண்பரான சோராப் மிர்சாவுடன் நிச்சயம் செய்திருந்தார். ஆனால், சில காரணங்களால் சோராப் – சானியாவின் நிச்சயம் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் ஷோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஷோயிப், சானியா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. சானியா, ஷோயிப் தம்பதிக்கு ஐந்து வயதில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த புதன்கிழமையன்று, சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் மற்றும் விவாகரத்து என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டார். பட மூலாதாரம்,INSTAGRAM/MIRZASANIAR திருமணம் மற்றும் அதில் ஏற்படும் விவாகரத்து மிகவும் கடினமானது. ஆனால், நாம் எப்போதும் கடினமான விஷயங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சானியா தனது பதிவில் கருத்து தெரிவித்திருந்தார். அந்தப் பதிவைப் பார்த்த பல பயனர்கள் ஷோயிப், சானியா இடையிலான உறவு முற்றிலும் மோசமடைந்து இருக்க வேண்டும் என்றும் இருவரும் விவாகரத்து செய்திருப்பார்கள் என்றும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தனர். சனா ஜாவேத் யார்? பாகிஸ்தானை சேர்ந்த நடிகையான சனா ஜாவேத், உருது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல தொடர்களில் நடித்துள்ளார். அவர் 2012இல் ஷெர்-இ-ஜாத் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பட மூலாதாரம்,INSTAGRAM/SANAJAVEDOFFICIAL காதல் நாடகமான கானியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிறகு அவர் அங்கீகாரம் பெற்றார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ் அவர் லக்ஸ் ஸ்டைல் விருதுகளிலும் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. அவரது சமூக நாடகங்களான ருஸ்வாய், டன்க் மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றன. அவர் 2020இல் பாகிஸ்தானிய நடிகரும் பாடகர் மற்றும் பாடலாசிரியருமான உமைர் ஜஸ்வாலை திருமணம் செய்தார். சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் பிரிந்ததாக சியாசட் இதழ் தெரிவித்துள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் மேலும் சனா, உமைர் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை சமூக ஊடக கணக்குகளில் இருந்து நீக்கியுள்ளனர். சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் பட மூலாதாரம்,SCREENGRAB சில நெட்டிசன்கள் ஷோயிப் மாலிக் செய்துகொண்ட மூன்றாவது திருமணத்திற்கு சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஏராளமான நெட்டிசன்கள் அவரை விமர்சித்தும் வருகின்றனர். ஷோயிப்பின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு அஜிசியா என்ற பதிவர், “அந்தப் பெண் உங்களை முழு நாட்டையும் எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். மக்கள் அவரது தேசிய உறுதிப்பாட்டையே கேள்வியெழுப்பினர். அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது. ஆனால், நீங்கள் அவரை ஏமாற்றிவிட்டீர்கள். வாவ் மேன்... வாவ் மேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார். ஹீபா அர்மான் என்ற பதிவர், “ஆச்சர்யமாக இருக்கிறது. நடந்துள்ளதை என்னால் நம்ப முடியவில்லை!” என்று பதிவிட்டுள்ளார். எக்ஸ் சமூக ஊடகத்தில், #ShoaibMalik, #Divorce, #SaniaMirza ஆகிய ஷேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன. சானியாவின் தந்தை கூறியது என்ன? மறுபுறம், சமூக ஊடகங்களில் இந்தச் செய்தி மீதான விவாதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா, தனது மகள் 'குலா' கொடுத்துவிட்டதாக கூறினார். இஸ்லாத்தில் 'குலா' என்பது ஒரு பெண் தன் கணவனை விருப்பத்துடன் விட்டு விலகுவது என்று பொருள் ஆகும். இதுகுறித்து சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா கூறுகையில், “இந்த திருமணத்திற்கு முன்பு தனது மகள் சானியாவும், 41 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கும் ‘குலா’ மூலம் விவாகரத்து பெற்றுள்ளனர" என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c972d663043o
  2. மன்னார் பள்ளமடு பிரதான வீதியில் விபத்து - ஒருவர் சம்பவ இடத்தில் பலி 20 JAN, 2024 | 11:15 AM மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் . நேற்று வெள்ளிக்கிழமை (19) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், சிறிய ரக பஸ்ஸொன்று மன்னார் - யாழ் பிரதான வீதியூடாக பயணித்த போது அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது . இதன் போது கோயில் குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அதே பகுதியை சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி பஸ் சாரதியை அயலவர்கள் தாக்க முயன்ற போது இலுப்பைக்கடவை பொலிஸார் அதை தடுத்து பஸ் சாரதியை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர் . அத்துடன் விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் . https://www.virakesari.lk/article/174373
  3. 20 JAN, 2024 | 09:49 AM மாத்தறை, தெவுந்தர கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப் பொருட்களுடன் இரு படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த இரு படகுகளும் காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் இணைந்தே குறித்த படகுகளுடன் போதைப்பொருள் தொகையை கைப்பற்றியுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஹெரோயின் ரகத்தை சேர்ந்தது என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர். தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்படையினரும் பொலிஸாரும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174370
  4. கணவனின் படுகொலைக்கு மதுரையை அழிக்கும் கண்ணகி பற்றிய கதை சிலப்பதிகாரம். நீதி மறுக்கப்பட்ட கோவலனுக்காக ஒரு சிலம்பை கையிலேந்தி நீதி கேட்கிறாள் கண்ணகி. 'வண்ணச் சீரடி மண்மகள் அறியா' குணத்தவளான கண்ணகி எப்படி அவ்வாறு கோபம் கொண்டாள் என்று விளக்குகிறது கொற்றவை காவியம். திருமணத்துக்கு முன்னர் எங்கேயும் வெளியே செல்லாதவளான கண்ணகி, கோவலனை நம்பி மதுரை நோக்கிச் செல்கிறாள். தமிழ் கூறும் ஐவகை நிலங்களூடாக அவர்களின் பயணம் நடக்கிறது. கூடவே துறவியான கவுந்தியடிகளும் அவர்களுடன் துணைக்குச் செல்கிறார். கண்ணகியுடன் கூடவே செல்லும் நீலி என்னும் அணங்கு அவளுக்கு போகும் பாதைகளை விளக்குகிறது. அவள் கனவுகளுக்குள் புகுந்து வேறு உலகை காட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை தாய் தெய்வமாக, கொற்றவையாக மாற்றுகிறது. சிறுமை கண்டு பொங்குபவளாக மாறுகிறாள் கண்ணகி. மதுரை நகரை அடையும் முன்னரே, அங்கே நடக்கும் ஆட்சி பற்றி தெளிவாக தெரிகிறது. மன்னன் அமைச்சர் சொல் கேட்பதில்லை. வாளேந்திய காவல் படை மக்களைத் துன்புறுத்துகிறது. எந்த நியாயமும் இல்லாமல், குடிமூத்தோர் சொல் கேட்காமல் வாளே எல்லாவற்றையும் வெல்லும் என்கிறான் மன்னன். காவற்படையே நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. மாதவியுடனான வாழ்க்கையை மறந்து, செல்வம் அனைத்தையும் இழந்து கண்ணகி காலில் இருக்கும் சிலம்புகளை மட்டுமே ஆதாரமாக கொண்டு மதுரை வருகிறார்கள். அதே நேரம் அரண்மனையில் அரசியின் சிலம்பும் காணாமல் போகிறது. ஒரு சிலம்பை விற்க கோவலன் கடைவீதியில் பொற்கொல்லனைத் தேடி வருகிறான். அரசியின் சிலம்பு போலவே கண்ணகியின் சிலம்பும் இருப்பதால், தீர விசாரிக்காமல் கொல்லப்படுகிறான் கோவலன். படுகொலையை அறிந்த கண்ணகி இன்னொரு ஒற்றைச் சிலம்புடன் நீதி கேட்கிறாள். குற்றத்தை அறிந்த மன்னன் அப்பொழுதே இறந்து விழ, அரசியும் இறக்கிறாள். கொற்றவை கோலம் கொண்டு கண்ணகி மதுரையை அழித்த பின்னர் சேர நாடு நோக்கிச் செல்கிறாள். === ஓரிடத்தில் மக்களை விலைக்கு வாங்கும் சந்தையில் கண்ணகியும், கோவலனும் புக நேர்கிறது. அதைப்பார்த்து கோவலன் பதறி 'நான் உன்னை இங்கே கூட்டி வந்திருக்கலாகாது. உன்மனம் என்ன பாடுபடும்' என்கிறான். ; கண்ணகி அதற்கு பதில் சொல்கிறாள்; 'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அந்தப் பெண்டிர் தன் கணவர்களை நம்பி இருக்க வேண்டியதில்லை. ஒருவகையில் அதுவும் நல்லதுதான்'. கோவலன் அவளின் மனவோட்டம் அறிந்து தலை கவிழ்கிறான். 'பயிரென்பதன் பொருட்டுப் பிறவெல்லாம் களையப்படும் மண்ணை மருதமென்றனர் மூதாதையர். பச்சை பொலிந்து தலைகுனிக்கும் ஒவ்வொரு செடிக்கும் இறந்த களைகளின் உதிரமே உணவு.' - இது போல பல வரிகள் கொற்றவையில் கவிதையாக உள்ளது. அறமே தலையாயது என்று பாண்டிய நெடுஞ்செழியனின் அமைச்சர் கூற, "மறமன்றி இம்மண்ணில் அறம் இருக்க முடியாது" என்று கோப்பெருந்தேவி சொல்ல மன்னன் அதையே பின்பற்றுகிறான். இறுதியில் அறமே வெல்கிறது. === சிலப்பதிகாரம் தோன்றிய தமிழ்நாட்டில் கண்ணகிக்கு கோவில்கள் இல்லை. மலையாள நாடான சேர நாட்டில் கண்ணகிக்கு கோவில்கள் உண்டு. முனைவர். வி. ஆர். சந்திரன் அவர்கள் எழுதி, எழுத்தாளர் ஜெயமோகன் தமிழில் மொழிபெயர்த்த 'கொடுங்கோளூர் கண்ணகி' எனும் நூல் கண்ணகி கோவில் பற்றி விளக்குகிறது. கொடுங்கல்லூர் அம்மை கண்ணகியாகவே வழிபடப்படுகிறாள். கையில் சிலம்புடன் சிலை உள்ளது. மேலும் பல பகவதி கோவில்கள் கண்ணகி கோவில்களே என்று சந்திரன் அவர்கள் கூறுகிறார். மலைவாழ் மக்களான குறும்பர்களே கண்ணகியை முதலில் கண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. கொடுங்கல்லூர் அம்மைக்கு 'குறும்பா தேவி' என்ற பெயரும் உண்டு. மீன மாதம் நடக்கும் பரணித் திருவிழாவில் இவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. முன்பு குறும்பாடு என்னும் செம்மறியாட்டை பலி கொடுக்கும் வழக்கமும் இந்த கோவிலில் இருந்திருக்கிறது. முற்காலத்தில் வஞ்சி என்னும் பெரிய ஊராக இருந்துள்ளது கொடுங்கல்லூர். போர்களை மிகப்பெரிய அளவில் சந்தித்த இடமாக வஞ்சி இருந்த்துள்ளது என்று குறிப்பிடுகிறார் முனைவர் சந்திரன். கொற்றவை நாவலுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டியது 'கொடுங்கோளூர் கண்ணகி' புத்தகம். http://ippadikkuelango.blogspot.com/2024/01/kotravai.html
  5. 20 JAN, 2024 | 09:26 PM வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக இரு பெண்கள் இன்று (20.01) கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு தண்ணீர் மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்க்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப் பகுதியில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது. குறித்த பகுதி வடிகாலமைப்பு சீரற்ற நிலையில் காணப்படுவதாலும், அனுமதியற்ற கட்டிடங்கள் காரணமாகவும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு குறித்த வீட்டாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பிரதேச சபையால் அவை தீர்த்து வைக்கப்படவில்லை. இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கழிவு நீர் வீதி வாய்கால் ஊடாக இன்னுமொரு வீட்டை அண்மித்து சென்ற நிலையில், கழிவு நீரை வீதிக்கு விட்ட வீட்டாருடன் அயல் வீட்டில் வசிக்கும் யுவதி ஒருவர் முரண்பட்டுள்ளார். இதன்போது இரு பகுதியினருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், குறித்த யுவதி மீது இரு பெண்கள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த 22 வயது யுவதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தாக்குதல் மேற்கொண்டதாக 30 மற்றும் 25 வயதுடைய சகோதரிகளான இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வவுனியாவில் அரச திணைக்களம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள பல வீதிகளில் வடிகாலமைப்பு சீர்செய்யப்படாத நிலை காணப்படுவதுடன், மழை காரணமாக பல வீடுகள் வெள்ளத்தினால் பாதிப்படைந்த போதும் வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றமையே இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174418
  6. இந்தியாவை தொடர்ந்து 5வது நாடாக நிலவில் கால் பதித்த ஜப்பான் - சாதனையிலும் ஒரு சோதனை பட மூலாதாரம்,JAXA படக்குறிப்பு, நிலவில் தரையிறங்கிய ஜந்தாவது நாடு ஜப்பான் கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர் 45 நிமிடங்களுக்கு முன்னர் ஜப்பான் விண்கலம் வெற்றிகரமாக சந்திரனைத் தொட்டுவிட்டது. ஆனால், அதன் சூரிய சக்தி அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலால், அதனால், நீண்ட நேரம் அங்கிருக்க முடியாது. நிலவை ஆய்வு செய்வதற்காக ஜப்பான் அனுப்பிய ஒரு ஸ்மார்ட் தரையிறங்கி கலன் (ஸ்லிம்) சந்திர மேற்பரப்பில் அதன் மையப் பகுதியில் மெதுவாக தன்னை நிலைநிறுத்தியது. அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா மற்றும் இந்தியாவுக்குப் பிறகு நிலவில் தரையிறங்கிய ஐந்தாவது நாடாக ஜப்பான் சாதனை படைத்துள்ளது. இருப்பினும், இந்தத் திட்டத்தை காப்பாற்ற ஜப்பான் விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படாத காரணங்களுக்காக, விண்கலத்தில் உள்ள சூரிய மின்கலங்கள் மின்சாரத்தை உருவாக்காது. இது ஸ்மார்ட் தரையிறங்கி கலனை, முழுவதுமாக அதன் பேட்டரிகளை நம்பியிருக்கச் செய்கிறது. மேலும், அந்த பேட்டரி படிப்படியாக குறையும். அதன் முடிவில், அந்த ரோபோ அமைதியான நிலைக்குச் சென்றுவிடும். அதனால், எந்தக் கட்டளைகளையும் பெற முடியாது. பூமியுடன் தொடர்புகொள்ள முடியாது. விண்கலத்தை சரி செய்யும் பணியில் உள்ள பொறியாளர்கள், ஹீட்டர்களை அணைத்துவிட்டு, விண்கலத்தில் உள்ள படங்களை பதிவிறக்கம் செய்கிறார்கள். தரையிறங்கும் மென்பொருள் எவ்வளவு நன்றாக வேலை செய்தது என்பதைத் தெரிவிக்கும் தரவையும் அவர்கள் மீட்டெடுக்கிறார்கள். ஜப்பானிய விண்வெளி ஏஜென்சி (ஜாக்ஸா) அதிகாரிகள் ஸ்லிம் விண்கலம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை என்றால், உடனடியாக அந்தத் திட்டத்தை கைவிட மாட்டார்கள். சூரிய மின்கலங்கள் சூரியனைப் பார்ப்பதைத் தடுக்கும் வகையில் அமைந்திருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. சந்திரனில் ஒளி கோணங்கள் மாறுவதால், விண்கலத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,REUTERS ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஜப்பான் தனது விண்கலத்தை நிலவில் தரையிறக்கியதாகக் கூற முடியுமா என்ற கேள்விக்கு, கூற முடியும் எனக் கூறியுள்ளார். "இத்திட்டம் வெற்றிபெறவில்லை என்றால், மிக அதிக வேகத்தில் நிலவின் மேற்பரப்புடன் மோதியிருக்கும். பின், விண்கலம் முற்றிலும் செயலிழந்திருக்கும்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். "ஆனால், விண்கலம் இன்னும் எங்களுக்கு தரவுகளை சரியாக அனுப்புகிறது. இதன் மூலம் நிலவில் விண்கலத்தை தரையிறக்க வேண்டும் என்ற எங்கள் நோக்கம் வெற்றி பெற்றுள்ளது." ஸ்லிம் விண்கலம், இரண்டு சிறிய ரோவர்களை எடுத்துச் சென்றது. திட்டமிட்டபடி தரையிறக்கத்திற்கு முன்பு, அந்த இரண்டு ரோவர்களையும் வெற்றிகரமாக வெளியேற்றியது. அகச்சிவப்பு(Infrared) கேமராவை சுமந்து செல்லும் இந்த விண்கலம், அடுத்த பதினைந்து நாட்களில் அங்கு நிலவியல் ஆய்வுகளில் ஈடுபட இருந்தது. ஆனால், தற்போது இருக்கும் நேரத்தில் அந்த ஆய்வை எவ்வளவு செய்ய முடியும் என்பது நிச்சயமற்றதாக உள்ளது. பட மூலாதாரம்,JAXA இதுவரை பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளின் அடிப்படையில், சந்திரனில் தரையிறங்குவது மிகவும் கடினமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முயற்சிகள் பாதி மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. ஜப்பான் விண்வெளி நிறுவனமான (ஜாக்ஸா) புதிய துல்லியமான வழிசெலுத்தல் தொழில்நுட்பங்களில் நம்பிக்கை வைத்துள்ளது. தரையிறங்கி கலனில் உள்ள கணினி, நிலவில் தரையிறங்கும்போது ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்க விரைவான பட செயலாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. பொறியாளர்கள் தங்களின் இலக்கு இடத்திலிருந்து 100மீ (330 அடி) தூரத்திற்கு செல்ல விரும்பினர். தற்போது, ஸ்லிம் விண்கலம் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டது என்பதை விண்கலத்தில் பதிவாகியுள்ள தரவுகளை ஆராய்வார்கள். விண்கலத்தில் உள்ள தொழில்நுட்பங்கள், வடிவமைக்கப்பட்டது போல் வேலை செய்தன என்பது ஆரம்ப அறிகுறிகள். "விண்கலத்தின் தரவுகளின்படி, ஸ்லிம் நிச்சயமாக 100மீ துல்லியத்துடன் தரையிறக்கத்தை அடைந்துவிட்டதாக நம்புகிறேன். நிச்சயமாக, நாங்கள் உங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்தது போல், தகவலைத் துல்லியமாக பகுப்பாய்வு செய்ய ஒரு மாதம் ஆகும்" என்றார் குனினாகா. பட மூலாதாரம்,NASA/LRO ஜப்பான் ஏற்கனவே இரண்டு முறை தனது விண்கலத்தை விண்கற்களில் தரையிறக்கியுள்ள நிலையில், தற்போது நிலவில் தரையிறக்கம் செய்துள்ளது மற்றுமொரு சாதனையாக கருதப்படுகிறது. இது அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் (நாசா) ஆர்ட்டெமிஸ்(Artemis ) திட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தின்படி, மனிதர்களை சந்திர மேற்பரப்பில் தரையிறக்கும் ஒரு முயற்சி. கடந்த ஆண்டு, ஐஸ்பேஸ் என்ற தனியார் ஜப்பானிய நிறுவனம் இதேபோல் விண்கலத்தை நிலவில் தரையிறக்க முயன்றது. அதன் ஹகுடோ-ஆர்(Hakuto-R) விண்கலம், நிலவுக்கு மேலே உள்ள உயரம் குறித்து உள் கணினி குழப்பமடைந்து செயலிழந்தது. ஜப்பானின் இந்த தரையிறக்கம் குறித்து பேசிய இங்கிலாந்தின் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தி்ன் பேராசிரியர் சிமியோன் பார்பன், "என்னைப் பொறுத்தவரை, இது துல்லியமான தரையிறக்கத்தைப் பற்றியது. இது ஒரு பெரிய வெற்றி. அவர்களாக இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்," என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். அதேபோல், ஸ்பேஸ்வாட்ச் குளோபல் என்ற டிஜிட்டல் இதழைச் சேர்ந்த டாக்டர் எம்மா காட்டி, ஜப்பான் கொண்டாடுவதற்கு நிறைய இருக்கிறது என்று கூறினார். "இது அவர்களுக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்தது; இது ஒரு கௌரவம். ஒரு நாடாக ஜப்பானுக்கு இது முக்கியமானது; அவர்கள் வைத்திருக்கும் அனைத்து முதலீட்டிற்கும் இது முக்கியமானது. சீனா அல்லது அமெரிக்கா போன்று பெரிய நாடுகளாக இல்லாத நாடுகளால், இதனை செய்ய முடியும் என்பதற்கான சான்று இது," என்றார் எம்மா காட்டி. https://www.bbc.com/tamil/articles/crgj5qp555zo
  7. ஓமண்ணை இன்னும் வழக்கம்பரையில் இருந்து பொன்னாலைச் சந்தி வரை ஒரு 5 கிலோமீற்றர் காப்பற் போடவேணும். ஆனால் எங்கட இடத்திற்கு கிட்ட வந்து நிறுத்திவிட்டார்கள். விரைவில் போடுவார்கள் என நம்புகிறேன்.
  8. மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், வடக்கு கடல், ஆங்கில கால்வாய், அட்லான்டிக் கடல் மற்றும் மத்திய தரை கடலால் சூழப்பட்டுள்ளது. சில வருடங்களாக அட்லான்டிக் கடற்கரை பகுதியில் பல டொல்பின்கள் உயிரிழந்து கரை ஒதுங்குவது வழக்கமான நிகழ்வாக இருந்தது. மீன் பிடிக்க செல்பவர்களின் படகுகளின் எஞ்சின் கியர்களிலும், சிறு ரக கப்பல்களின் அடியிலும், வலைகளிலும், கயிறுகளிலும் டொல்பின்கள் சிக்கி உயிரிழப்பதாக நீண்ட காலமாக கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், அரசு இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அழிந்து வரும் டொல்பின்களின் இனத்தை காக்க அவர்கள் அந்நாட்டின் நீதிமன்றத்தை அணுகினர். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, 2024 ஜனவரி 22 முதல் பெப்ரவரி 20 வரை அனைத்து விதமான வர்த்தக ரீதியான மீன்பிடி பணிகளை பிரான்ஸ் தடை செய்துள்ளது. உள்ளூர் மீனவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தடை தொடரும் என அரசு அறிவித்தது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்திற்கு பிறகு முதல் முறையாக பிரான்ஸ் மீன்பிடிக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிஸ்கே விரிகுடா (Bay of Biscay) எனப்படும் பிரான்சின் வடமேற்கு கரையோர பிரிட்டனியில் உள்ள ஃபினிஸ்டியர் பகுதியிலிருந்து அண்டை நாடான ஸ்பெயினின் கடல் எல்லை வரை மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் 450 சிறு ரக கப்பல்களும் இப்பகுதியில் பயணம் செய்ய முடியாது. பல மில்லியன் யூரோக்கள் இதனால் கடல் வணிகத்தில் இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இழப்பை ஈடு செய்வதாக அரசு உறுதி அளித்துள்ளது. https://thinakkural.lk/article/288799
  9. நிலவில் தரையிறங்கிய 5 ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றது ஜப்பானின் ஸ்மார்ட் லேன்டர் ஃபார் இன்வெஸ்டிகேடிங் மூன் (SLIM) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இவ்வாறு நிலவில் தரையிறங்கிய 5 ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதமளவில் இந்தியாவின் சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து நிலவில் தரையிறங்கிய நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் 100 மீட்டர் தொலைவில் இருந்து நிலவில் லேண்டரை தரையிறங்க முயற்சித்தது. தற்போது லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், இந்த விண்கலம் தனது செயற்பாடுகளில் வெற்றி பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள ஒரு மாத காலம் வரை ஆகலாம் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. https://thinakkural.lk/article/288790
  10. Published By: NANTHINI 20 JAN, 2024 | 03:10 PM தமிழ்நாட்டுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை (20) திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு விஜயம் செய்துள்ளார். அந்த வகையில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்த முதல் இந்திய பிரதமர் என்கிற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார். 1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், ஜவஹர்லால் நேரு இந்திய நாட்டின் முதல் பிரதமரானார். நேரு முதல் தற்போதைய நரேந்திர மோடி வரை 15 பேர் இந்திய பிரதமராக பதவி வகித்துள்ள நிலையில், இதுவரை எந்த பிரதமரும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லவில்லை. அந்த வகையில், பிரதமராக பதவி வகிக்கும் நரேந்திர மோடியே ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு சென்று ரங்கநாதரை தரிசித்த முதல் பிரதமர் எனும் பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மோடிக்கு மெளத் ஓர்கன் வாசித்துக் காட்டிய ஆண்டாள் யானை ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த மோடி, 44 வயதான ஆண்டாள் எனும் கோவில் யானையிடமும் ஆசிர்வாதம் பெற்றார். அப்போது யானை பாகன், நவராத்திரி உற்சவ காலத்தில் ஆண்டாள் மெளத் ஒர்கன் என்கிற இசைக்கருவியை வாசிக்கும் என பிரதமர் மோடியிடம் கூறியுள்ளார். அதற்கு ஆண்டாளின் வாசிப்பை கேட்க விரும்புவதாக மோடி கூற, யானை பாகன் ஆண்டாளின் தும்பிக்கையில் மெளத் ஓர்கனை கொடுக்க, ஆண்டாள் அழகாக வாசித்துக் காட்டியுள்ளது. ஆண்டாள் மெளத் ஓர்கன் வாசிப்பதை ரசித்துக் கேட்ட மோடி, யானையை அன்போடு தடவிக் கொடுத்துள்ளார். இந்த ஆண்டாள் யானை, குட்டியாக இருந்தபோது ரஜினிகாந்த் நடித்த 'தம்பிக்கு எந்த ஊர்' படத்தின் ஒரு காட்சியில் ரஜினிக்கு ஆசிர்வாதம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174389
  11. நீருக்கடியில் அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியா வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கு இடையிலான மோதலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து அவ்வப்போது கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதற்கு பதிலடியாக வட கொரியாவும் தனது இராணுவ பலத்தைக் காட்டிவருகிறது. இப்படி இருதரப்பினரும் தங்கள் வலிமையைக் காட்டி வருவதால் பதற்றம் நீடிக்கிறது. சமீபத்தில் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் ஜேஜு தீவு பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். வடகொரியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பயிற்சியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இந்தப் பயிற்சியில் 3 நாடுகளையும் சேர்ந்த 9 போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. அமெரிக்காவின் விமானம்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற கப்பலும் இதில் அடங்கும். இந்நிலையில், இந்த கூட்டு பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இன்று நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பை சோதனை செய்தது. இதுதொடர்பாக வட கொரிய இராணுவ அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து நடத்திய பயிற்சிகள் வட கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எனவே பதிலடி கொடுக்கும் வகையில், கொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் கட்டமைக்கப்பட்டு வரும் நீர்மூழ்கி அணு ஆயுத அமைப்பான ஹேயில்-5-23-ன் முக்கியமான சோதனை நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. https://thinakkural.lk/article/288674
  12. 20 JAN, 2024 | 01:43 PM காசோலையை வழங்கி 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பெண்கள் உட்பட 6 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 24, 30 மற்றும் 36 வயதுடைய பேருவளை, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 3 ஆண்களும் 25, 43 மற்றும் 53 வயதுடைய யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்களுமாவர். சந்தேக நபர்கள் 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து அதற்கான தொகையாக 28,750,000 ரூபாவை பணமாக வழங்குவதற்கு மாறாக காசோலை மூலம் வழங்கியுள்ளனர். ஆனால் வழங்கப்பட்ட காசோலைக்கான பணம் உரிய வங்கிக்கணக்கில் இருந்திருக்கவில்லை. இதையடுத்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த 6 பேரையும் பண மோசடி குற்றச்சாட்டில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் ஏனைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பிரதேசத்திலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/174388
  13. இரசிக்கும்படியாக நடந்த சம்பவத்தை கதையாக்கிய கவி ஐயாவிற்கு நன்றி.
  14. மின்சார சபை ஊழியர்கள் 66 பேர் பணி இடைநீக்கம்! சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 51 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் காசாளர் கருமபீடங்களில் பணியாற்றியவர்களே இவ்வாறு சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை மின்சார சபையின் 15 ஊழியர்கள் நேற்று சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/288754
  15. பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, கிரிசெல்டா பிளாங்கோவாக சோஃபியா வெர்கரா நடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், யாஸ்மின் ரூஃபோ பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "நான் பயந்த ஒரேயொருவர் கிரிசெல்டா பிளாங்கோ என்ற பெண்மணி." இது வரலாற்றில் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் பாப்லோ எஸ்கோபர் கூறியதாகச் சொல்லப்படும் சொற்றொடர். தன்னை மற்றவர்கள் பார்க்கும் விதம் பிடிக்கவில்லை என்பதற்காக, மக்களைக் கொன்ற இரக்கமற்ற ஒருவராக கிரிசெல்டா பிளாங்கோ அறியப்படுகிறார். 1970கள் மற்றும் 80களில் மியாமியில் மிகவும் அஞ்சப்படும் பெயர்களில் ஒருவராக பிளாங்கோ விளங்கினார். புகழ்பெற்ற போதைப்பொருள் கடத்தல்காரரான பிளாங்கோவின் கதை ஹாலிவுட் வரை சென்றிருக்கிறது. அவரின் கதையை ‘கிரிசெல்டா’ (Griselda) என்னும் பெயரில் நெட்ஃபிளிக்ஸில் தொடராக வெளியாகவிருக்கிறது. கிரிசெல்டா கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகை சோஃபியா வெர்கரா நடித்துள்ளார். ஆறு எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடரில் கிரிசெல்டா, மோசமான குற்றவாளியாகக் காட்டப்பட்டுள்ள அதேவேளையில், புத்திசாலியான மற்றும் லட்சியப் பெண்ணாகவும் காட்டப்பட்டுள்ளார். தன் மூன்று கணவர்களின் கொலைக்குக் காரணமான, "கொக்கைன் தெய்வம்" என்று பெயர்பெற்ற கிரிசெல்டாவின் உண்மைக் கதை மிகவும் இருண்டது. 'என்னிடம் எதுவும் இல்லை' பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, இந்தத் தொடரில் புத்திசாலியான மற்றும் லட்சியப் பெண்ணாக காட்டப்பட்டுள்ளார் கிரிசெல்டா. கடந்த 1943இல் கொலம்பியாவில் பிறந்த பிளாங்கோ, 11 வயதிலிருந்தே குற்றச் செயல்களில் ஈடுபட்டார். ஒரு பணக்கார குடும்பத்தின் மகனைக் கடத்தி, சிறுவனின் பெற்றோர் பணம் வழங்க மறுத்ததால் அச்சிறுவனை பிளாங்கோ சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. தனது 21 வயதில் மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் சட்ட விரோதமாக 1964இல் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்து கஞ்சா விற்கத் தொடங்கினார். "கிரிசெல்டா தனது வாழ்க்கையைத் தொடங்கியபோது அவர் யார் என்பதை நினைவில் கொள்வது அவசியம். அவர் மூன்று குழந்தைகளை முற்றிலும் தனியாக வளர்த்து வந்த புலம் பெயர்ந்தவர். அவரிடம் கல்வியோ அல்லது வாழ்வாதாரமோ எதுவும் இல்லை," என்று சோஃபியா வெர்கரா பிபிசியிடம் கூறினார். கிரிசெல்டா பிளாங்கோவின் "சிக்கலான பாத்திரத்தை மனிதாபிமானப்படுத்த" விரும்புவதாகக் கூறுகிறார் தொடரின் தயாரிப்பாளரான எரிக் நியூமன். ஏனெனில், "ஒவ்வொரு நபருக்கும் தன் வாழ்க்கை குறித்த விளக்கம் இருக்கிறது. தவறான உறவில் இருந்து தப்பிக்கும் ஒரு தாய், சில நேரங்களில் யாரோ அடையாளம் காணக்கூடிய பாத்திரமாக இருக்கலாம்,” என்கிறார் அவர். "ஆண்கள் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்தும் உலகில் கோலோச்சிய பெண் அவர். அவர் தன்னை நிரூபிக்க பத்து மடங்கு கடினமாக உழைத்திருக்கிறார். மேலும், தன்னைச் சுற்றியுள்ள ஆண்களை விஞ்சுவதற்குத் தனது புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துகிறார். மக்கள் அவரை ஆதரிக்கத் தொடங்குகிறார்கள்," என்று இணை இயக்குநர் ஆண்ட்ரேஸ் பைஸ் கூறினார். 'அரக்கியாக மாற்றிய அதிகாரம்' பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, கிரிசெல்டா பிளாங்கோ கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இளம் பெண்களை உள்ளாடைகளில் கொக்கைனை மறைத்து வைத்து அனுப்பினார். போதைப்பொருள் கடத்தல் தீவிரமடைந்து, போட்டி கும்பல்களுடன் வன்முறை ஏற்பட்டதால் பிளாங்கோ மிகவும் இரக்கமற்றவராக ஆனார். 1975ஆம் ஆண்டில், தன் பணத்தைத் திருடுகிறார் என்ற சந்தேகத்தால் அவர் தனது கணவரையே சுட்டுக் கொன்றார். மேலும், 1983ஆம் ஆண்டில், தன்னுடைய மூன்றாவது கணவரையும் கொலை செய்துவிட்டு மகனுடன் மியாமியை விட்டு வெளியேறினார். அவருடைய மிருகத்தனமான மற்றும் இரக்கமற்ற நடத்தைக்காக அவர் ‘பிளாக் ஸ்பைடர்’ (தன் ஆண் துணையையே கொன்று திண்ணும் அமெரிக்க சிலந்தி வகை) என அழைக்கப்படுகிறார். பிளாங்கோவின் போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்யம் செழித்து வளர்ந்தது. 1980களின் முற்பகுதியில் அவர் உலகின் பணக்கார, பலருக்கும் மிகவும் பயத்தை வரவழைக்கும் பெண்களில் ஒருவராக இருந்தார். அமெரிக்காவுக்கு ஒவ்வொரு மாதமும் 1.5 டன் கொக்கைன் கடத்தப்படுவதை மேற்பார்வையிட்டார். "கிரிசெல்டா முதன்முதலில் மியாமிக்கு குடிபெயர்ந்தபோது, தன் குடும்பத்தை கவனித்துக்கொள்வதுதான் அவருடைய நோக்கமாக இருந்திருக்கும் என நான் நம்புகிறேன். ஆனால், அந்தப் பயணத்தில் அவர் தொலைந்து போய்விட்டார். அதிகாரமும் பணமும் அவரை அரக்கியாக மாற்றிவிட்டது," என்று வெர்கரா பிபிசியிடம் கூறினார். பிளாங்கோ 1980-களின் முற்பகுதியில், தனது சாம்ராஜ்யத்தை விட்டுக் கொடுப்பதற்காக போட்டி கடத்தல் கும்பலில் இருந்து வந்த 15 மில்லியன் டாலர்கள் வாய்ப்பை நிராகரித்தார். பட மூலாதாரம்,MIAMI-DADE POLICE படக்குறிப்பு, 70களின் பிற்பகுதியில் கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவிற்கு கொக்கைன் வழித்தடங்களின் மூளையாக இருந்தவர் கிரிசெல்டா பிளாங்கோ. 'ஆபத்தை உணர்ந்திருந்தார்' சுமார் 20 ஆண்டுகளாக மியாமியில் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்தபோதிலும், கிட்டத்தட்ட ஆதிக்கம் நிறைந்த ஆண்களால் மட்டுமே நடத்தப்படும் ஒரு தொழிலில் ஒரு பெண்ணாக, தனது நிலை ஆபத்தானது என்பதை பிளாங்கோ நன்கு அறிந்திருந்தார். ஒரு கட்டத்தில், தன் வணிகத்தை ஓர் ஆண் நிர்வகிக்க அனுமதித்தார். ஏனெனில், அந்த நேரங்களில் “ஆணிடமிருந்து வரும் ஒப்பந்தங்களை மட்டுமே உள்ளூர் வணிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்." ஒரு கொலைக்காக அவர் கைது செய்யப்பட்ட பிறகு, பிளாங்கோ போதைப்பொருள் வணிகத்திற்குத் தானே தலைமை தாங்க முடிவு செய்தார். வெளியாள் என்ற பிம்பத்தை அவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார். கடந்த 1980ஆம் ஆண்டில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், சுமார் 1,35,000 கியூபர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். மெரில்டோஸ் (Marielitos) என்று அழைக்கப்படும் அவர்களில் சிலர் ஏற்கெனவே குற்றப் பின்னணி கொண்ட கும்பல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலையாளிகளுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர். பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, பெண்ணாக இருந்ததால் இத்தகைய குற்றங்களில் இருந்து கிரிசெல்டா தப்பித்திருக்கலாம் என, சோபியா வெர்கரா கூறுகிறார். பிளாங்கோ இதைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களைத் தன்னிடம் வேலைக்குச் சேர்த்தார். மற்றவர்களைக் கொலை செய்ய அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் செய்த கொலைகள், ‘மோட்டார் சைக்கிள் கொலைகள்’ எனப் பெயர் பெற்றன. பிளாங்கோ "ஒரு வெளிநாட்டவர், அவர் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து வெளியாட்களையும் வேலைக்கு அமர்த்தினார்," என்று இணை இயக்குநர் ஆண்ட்ரேஸ் பைஸ் கூறினார். “மேலும் இத்தொழிலில் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதும் அதைக் காப்பாற்றுவதும் கடினம். அப்படியிருக்கும் நிலையில்தான் என்ன செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியும்,” என்கிறார் பைஸ். "தன் வேலையாட்களை கிரிசெல்டா தனது குடும்பத்தின் ஓர் அங்கமாக உணரச் செய்தார்" என்று பைஸ் மேலும் கூறினார். பிளாங்கோவின் அனுபவத்தில் தானும் சிலவற்றை உணர்ந்திருப்பதால் வெர்கரா, பிளாங்கோ மீது ஈர்க்கப்பட்டிருக்கிறார். "நான் கொலம்பியாவை சேர்ந்தவள், ஒரு தாய் மற்றும் வேறொரு நாட்டுக்குப் புலம்பெயர்ந்தவள். கிரிசெல்டா ஒரு பெண்ணாக மதிப்பிடப்பட்டார். இன்று என் உச்சரிப்பு காரணமாக நான் அதிகமாக வேலை செய்ய வேண்டும். மேலும், எனக்குக் குறைவான வாய்ப்புகள்தான் உள்ளன என்பதை நான் அறிவேன்," என்று அவர் கூறினார். 'ஒரு பெண்ணால் ஒருபோதும் அவ்வளவு தீயவளாக இருக்க முடியாது' பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, ஜூலியானா ஐடன் மார்டினெஸ் இந்தத் தொடரில் ஜூன் ஹாக்கின்ஸாக நடிக்கிறார். பிளாங்கோவின் குற்றவியல் சாம்ராஜ்யம் 1980-களின் நடுப்பகுதியில் நொறுங்கத் தொடங்கியது. கலிபோர்னியாவின் இர்வின் நகரில் அவர் கைது செய்யப்பட்டபோது அவரது சாம்ராஜ்யம் திடீரென முடிவுக்கு வந்தது. ஆனால், இருபது ஆண்டுகளாக மியாமியை போதைப்பொருள் வணிகத்தின் கேளிக்கை பூங்காவாக பிடிபடாமல் மாற்றியது எப்படி? இந்தத் தொடரின் பின்னணியில் உள்ள குழுவினர் அதற்கு அவரது பாலினம் காரணம் என்று கூறுகின்றனர். "அவர் ஒரு பெண்ணாக இருந்ததால், அவரால் பல விஷயங்களில் இருந்து விடுபட்டு, அவருக்குத் தேவைப்படும்போது மறைந்துவிட முடியும். ஒரு பெண் அந்த அளவுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்துவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு பெண் ஒருபோதும் அவ்வளவு தீயவளாக இருக்க முடியாது என்று மக்கள் நினைக்கிறார்கள்," என வெர்கரா கூறினார். போதைப்பொருள் கடத்தலுக்குப் பின்னால் ஒரு பெண் இருக்க முடியாது என்று ஆண்கள் தலைமையிலான போதைப்பொருள் கும்பல்களே கூறியிருக்கலாம். இதனால், விசாரணையில் பிளாங்கோ சிக்காமல் இருந்திருக்கலாம். பணிநீக்கம் செய்யப்பட்டு, தனது சக ஊழியர்களுக்கு ஸ்பானிய மொழி பெயர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மியாமி காவல் துறையின் உளவுத்துறை ஆய்வாளரான ஜூன் ஹாக்கின்ஸ், 1970களின் நடுப்பகுதியில் இருந்து பிளாங்கோவை பிடிக்கும் நோக்கத்தில் இருந்தார். பிளாங்கோவின் கதையில் இன்றியமையாத பகுதியாக ஹாக்கின்ஸ் இருந்ததாக எரிக் நியூமன் கூறினார். "அவர் கிரிசெல்டாவின் கண்ணாடி, அவர் லத்தீன் வம்சாவளியைச் சேர்ந்த ஓர் இளம் தாய், பெண்களை இழிவுபடுத்தும் உலகில் அவர் பணிபுரிந்தார்," என்கிறார் நியூமன். கிரிசெல்டா பிளாங்கோவுக்கு என்ன ஆனது? பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, கிரிசெல்டா பிளாங்கோவின் வாழ்க்கை சோகமான முடிவைக் கொண்டது. பிப்ரவரி 17, 1985இல், பிளாங்கோ அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் கொக்கைன் தயாரித்தல், இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகித்ததற்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். கூடுதலாக, அவர் மீது மூன்று கொலை வழக்குகள் சுமத்தப்பட்டு இருபது ஆண்டுகளை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழித்தார். அவரது சிறை தண்டனையின்போது, அவரது மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர். 2004இல் விடுவிக்கப்பட்டவுடன், அவர் கொலம்பியாவிற்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அவர் அமைதியான வாழ்க்கையை நடத்தினார். செப்டம்பர் 3, 2012 அன்று, அவர் தனது 69வது வயதில், மெடலினில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தன் குழுவினரால் பின்பற்றப்பட்டு வந்த கொலை பாணியின் படியே அவரும் கொல்லப்பட்டார். "அவருடைய கொலை அவர் மீதான வெறுப்பின் உண்மையான அளவைக் காட்டுகிறது. 2012இல், அவர் எந்தத் தீங்கும் செய்யாத ஒரு பெண்ணாக தனிமையில் வாழ்ந்தார். அவருடைய நான்கு குழந்தைகளில் மூன்று பேர் இறந்துவிட்டனர்," என்று நியூமன் பிபிசியிடம் கூறினார். "நம்ப முடியாத தருணங்களை அவர் அனுபவித்தார். இந்தக் கதை சோகங்கள் நிறைந்த ஒரு இழப்புடன் முடிவடைகிறது," என்றார் அவர். பிளாங்கோவின் வாழ்க்கை பெரும்பாலும் புத்தகங்களில் குறிப்பிடப்படவில்லை. போதைப்பொருள் கடத்தல் காலத்தில் கொலம்பியாவில் வளர்ந்த வெர்காரா கூட, "அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை" என்று கூறினார். மேலும், அவரது வாழ்க்கையைப் பற்றி அறிந்த பிறகு அது ஓர் உண்மைக் கதை என்று நம்புவதற்கு “சாத்தியமில்லை" என்று நினைத்தார். "அதனால்தான் நான் கிரிசெல்டாவாக நடிக்க விரும்பினேன். அவர் ஒரே நேரத்தில் தாய், வில்லி, காதலி, கொலையாளி என எல்லாமாக இருந்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்கள் எவ்வளவு சிக்கலானவர்களாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறார்," என்றார் அவர். https://www.bbc.com/tamil/articles/cql1829d7pvo
  16. பெல்ஜியத்திலிருந்து 17 இலட்சம் ரூபா ஒப்பந்தம் : யாழில் கடைகள், வாகனங்கள் தீக்கிரை : சூத்திரதாரிகள் மூவர் கைது 20 JAN, 2024 | 01:36 PM யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில், நேற்று வெள்ளிக்கிழமை (19) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார்சைக்கிள்கள், ஒரு வாள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டதுடன் 2 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் கார் ஒன்றும் எரிக்கப்பட்டது. இவை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட போது பொலிஸார் நேற்று மூன்று பிரதான சந்தேகநபர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் ஒருவரின் பெல்ஜியத்தில் உள்ள நபர் ஒருவரின் உத்தரவுக்கு அமையவே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் . கடைகளை எரிப்பதற்காக 12 லட்சம் ரூபா பணமும், வாகனங்களை எரிப்பதற்காக 7 லட்சம் ரூபா பணமும் பெல்ஜியத்தில் இருக்கும் நபரிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுவதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒன்றரை இலட்சம் ரூபா பணம் அவர்களுடைய வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது . இதையடுத்து குற்றச்செயல்களின் சூத்திரதாரியான பெல்ஜியம் வாழ் நபரை இன்டர்போலின் உதவியுடன் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174387
  17. நிகழ்நிலை காப்புச் சட்டத்தினை மக்கள் பிரதிநிதிகள் எதிர்க்கவேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை 20 JAN, 2024 | 11:44 AM முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்ட முன்வரைவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நாடாளுமன்றப்பிரதிகளுக்கும் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு சிவில் சமூகத்தினரால் நேற்று வெள்ளிக்கிழமை (19) இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான சி.சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன், மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா), இரா.சாணக்கியன், ஆகியோருக்கு இது தொடர்பான வேண்டுகோள் கடிதங்கள் அவர்களது அலுவலகங்களில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன. கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வேண்டுகோள் முன்வைப்பில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்திருந்தனர். அதே நேரம், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்திற்கெதிராக மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் திங்கட்கிழமை (22) காலை மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகப்பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் போராட்டம் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதுடன், தாங்களும் அப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்நிலைக்காப்புச் சட்டத்திற்கு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் எதிர்த்து வாக்களிப்பதுடன் மாவட்ட மக்களின் எதிர் நிலைப்பாடான கருத்துக்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவேண்டும் என்ற வேண்டுகோளில், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு அவர்களே மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகம் சார்பாகத் தங்களுக்கு முன்வைக்கப்படும் கோரிக்கை யாதெனில் , இலங்கை அரசானது இரவோடு இரவாக சட்டமூலங்களை உருவாக்கி நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு சட்டமாக்குவதும் அதன் பின்னர் நாட்டில் வாழும் மக்களின் உரிமைகளையும், இந்நாட்டினுடைய ஜனநாயக விழுமியங்களையும் அடியோடு வேரறுக்கின்ற செயல்பாடுகள் காலங்காலமாக அரங்கேற்றிக்கொண்டே வருகின்றன. குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கூறலாம். அதேபோன்று இவ்வாறான சட்டங்கள் இந்நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களைக் குறிவைப்பதோடு அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை இல்லாது செய்வதற்க்குப் பயன்படுத்தப்படுகின்றமை யாவரும் அறிந்த யதார்த்தமாகும். அந்த வகையில் தற்போது வரைபு செய்யப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமானது இவ்வாறே காணப்படுகின்றது. குறிப்பாகச் சிறுபான்மைச் சமூகமாக நாம் கருத்தில் கொள்வது யாதெனில் எதிர்காலங்களில் சுதந்திரமாகத் தகவல்களை அணுகுவதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் பாரியதொரு அச்சுறுத்தலாக இச்சட்டம் செயல்படும் என்பதில் எவ்வி மாற்றுக் கருத்தும் இல்லை. ஆகையால் சிவில் சமூகமாக மட்டக்களப்பு மாவட்டத்தி பிரதிநிதி என்ற வகையில் நாம் முன்வைக்கும் கோரிக்கையானது எதிர்வரும் 22,23 ஆம் திகதிகளில் இலங்கைப் நாடாளுமன்ற விவாதத்தில் எடுத்துக் கொள்ள இருக்கும் இன்நிகழ்நிலை பாதுகாப்புச் சட்ட வரைபைத் தாங்கள் எதிர்ப்பதோடு, சிறுபான்மைச் சமூகத்தினுடைய பார்வையினையும் முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, இச்சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறும் தங்களை வேண்டிக்கொள்கின்றோம். இத்தருணத்தில் சிவில் சமூகம் என்ற அடிப்படையில் ஒரு விடயத்தை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் குறிப்பாக சிறுபாண்மைச் சமூகங்களி பிரதிநிதி என்ற வகையில் எங்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாப்பது தங்களது அடிப்படை கடமை என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/174377
  18. இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வீதி அபிவிருத்திக்காக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கு 150 மில்லியன் ரூபாவும் சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 50 மில்லியன் ரூபா கிராமிய அலுவல்கள் அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சவாலான ஆண்டில் வருமானம் மற்றும் செலவுகளில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 2022ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 1,751 பில்லியன் ரூபாவாகும். அதில் 1265 பில்லியன் ரூபா அதாவது 72% அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்பட்டது. மேலும், சமுர்த்தி உட்பட வறிய மக்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளுக்காக 506 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. வரி வருமானம் இந்த இரண்டு செயல்பாடுகளுக்கு செலவிடவே போதுமானதாக உள்ளது. மேலும், நாம் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த வேண்டும். வட்டியை செலுத்த 1,065 பில்லியன் ரூபா செலவிடப்பட வேண்டும். மேலும், 715 பில்லியன் ரூபா மூலதனச் செலவினங்களுக்காக கடன் பெற்று செலவிடப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்னர் 05 வருடங்களைத் தவிர முதன்மைக் கணக்கில் மேலதிக இருப்பு எதுவும் இருக்கவில்லை. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் 1,550 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. சுங்கத் திணைக்களம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சுங்க வரிகள் மூலம் 922 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. மதுவரித் திணைக்களம் 169 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. மோட்டார் வாகன திணைக்களம் 20 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளது. 219 பில்லியன் ரூபா வரி அல்லாத வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 16 பில்லியன் ரூபா நன்கொடைகளாகப் பெறப்பட்டுள்ளன. பல்வேறு வைப்புத்தொகைகள் மூலம் 303 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், மக்களிடமிருந்தும் மற்றும் ஏனைய அனைத்து வகையிலும் 3,201 பில்லியன் ரூபாவை 2023 ஆம் ஆண்டில் திறைசேரி பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டை விட அதீத முன்னேற்றம் என்பதைக் கூற வேண்டும். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் 1,000 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. அதைவிட வேகமாக செலவுகள் அதிகரித்துள்ளன. அரச ஊழியர் சம்பளம், நலன்புரி மற்றும் நிவாரணம் உள்ளிட்ட விடயங்களுக்காக 2,160 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2,263 பில்லியன் ரூபா வட்டி மாத்திரம் செலுத்தப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், அரசாங்கம் நாளாந்த செலவுகளுக்காக 4,394 பில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளது. அந்த ஆண்டில் அரச வருமானம் 3,201 பில்லியன் ரூபா. எனவே, 2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளை நடத்துவதற்கு போதுமான வருமானம் பெறப்படவில்லை. ஆனால் 2023ஆம் ஆண்டில் 7,727 பில்லியன் ரூபா திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. மூலதனச் செலவுகள் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் 8,898 பில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. திறைசேரியிலிருந்து 13,292 பில்லியன் ரூபா வெளியே சென்றுள்ளது. ஆனால் அரசாங்கத்திற்கு கிடைத்த நிதியின் அளவு 3,201 பில்லியன் ரூபா மாத்திரமே ஆகும். 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அரசாங்கம் 10,091 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளது. இந்தக் கடன்கள் உள்நாட்டில் திறைசேரி பத்திரங்கள் மற்றும் திறைசேரி பிணைமுறிகள் மூலம் பெறப்பட்டுள்ளன. இதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்து கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் பின்னர் பெப்ரவரி மாதம் முதல் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். இந்த ஆண்டு வீதிகளை அபிவிருத்தி செய்ய உலக வங்கி கடன் உதவியின் கீழ் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளோம். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் வீதிகளை புனர்நிர்மாணம் செய்ய சவூதி அரேபியாவின் நிதியுதவி பெறப்பட்டுள்ளது. இந்த சிரமங்களுக்கிடையில் கூட மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்திக்காக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கு 150 மில்லியன் ரூபாவும் சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 50 மில்லியன் ரூபா கிராமிய அலுவல்கள் அமைச்சின் ஊடாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பிக்க நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/288744
  19. ஈழத் தமிழ் இலக்கியத்தில் மக்கள் வாழ்வியலைப் பேசுபொருளாக்கியிருந்தவர்களுள், து. உருத்திரமூர்த்தி. மஹாகவி நவீனக் கவி முன்னோடிகலில் ஒருவர் எனக் கூறுவது மரபு! நிகழ்வின் நேரலை கீழுள்ள இணைப்பில் https://www.facebook.com/raveendran.nadesan/videos/833706365102349/?mibextid=NnVzG8
  20. மேற்கிந்தியத் தீவுகளுடனான முதல் டெஸ்டில் 3 தினங்களில் வெற்றியீட்டியது அவுஸ்திரேலியா 20 JAN, 2024 | 10:14 AM (நெவில் அன்தனி) அடிலெய்ட் விளையாட்டரங்கில் துடுப்பாட்ட வீரர்கள் சிரமத்தை எதிர்கொண்டதும் 3 தினங்களுக்குள் நிறைவடைந்ததுமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 10 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது. இந்த வெற்றிக்கான 12 ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளை அவுஸ்திரேலியா பெற்றுக்கொண்டது. ட்ரவிஸ் ஹெட் குவித்த சதம் (119 ஓட்டங்கள்), ஜொஷ் ஹேஸ்ல்வூடின் 9 விக்கெட் குவியல், பெட் கமின்ஸின் சிறப்பான பந்துவீச்சு என்பன அவுஸ்திரேலியாவுக்கு இலகுவாக வெற்றிபெற உதவின. அப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 79 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களை வீழ்த்திய ஜொஷ் ஹேஸ்ல்வூட் டேஸ்ட் போட்டி ஒன்றில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார். மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் அறிமுக வீரர் ஷமர் ஜோசப் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து பாராட்டைப் பெற்றார். ஷமர் ஜோசப் தனது முதல் பந்திலேயே அவுஸ்திரேலியாவின் புதிய ஆரம்ப வீரரும் சிரேஷ்ட வீரருமான ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டைக் கைப்பற்றி வரலாறு படைத்தார். துடுப்பாட்டத்திலும் ஷமர் ஜோசப் திறமையை வெளிப்படுத்தினார். கடைசி விக்கெட்டில் கெமர் ரோச்சும் ஷமர் ஜோசப்பும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டி 3ஆம் நாள் காலை முதலாவது ஆட்ட நேர பகுதியில் நிறைவுக்கு வந்தது. அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 283 ஒட்டங்களே இந்த டெஸ்ட் போட்டியில் பெறப்பட்ட அதிகப்பட்ச இன்னிங்ஸ் எண்ணிக்கையாக இருந்தது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்த வெற்றியுடன் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ள அவுஸ்திரேலியா, சேர் ப்ரான்க் வொரல் கிண்ணத்தையும் தக்க வைத்துக்கொண்டது. எண்ணிக்கை சுருக்கம் மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 188 (கேர்க் மெக்கென்ஸி 50, 11ஆம் இலக்க வீரர் ஷமர் ஜோசப் 36, 10ஆம் இலக்க வீரர் கெமர் ரோச் 17 ஆ.இ., பெட் கமன்ஸ் 41 - 4 விக்., ஜொஷ் ஹேஸ்ல்வூட் 44 - 4 விக்.) அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சலலரும் ஆட்டம் இழந்து 283 (ட்ரவிஸ் ஹெட் 119, உஸ்மான் கவாஜா 49, நேதன் லயன் 24, ஷமர் ஜோசப் 94 - 5 விக்., ஜஸ்டின் க்றீவ்ஸ் 36 - 2 விக்., கெமர் ரோச் 48 - 2 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 120 (கேர்க் மெக்கென்ஸி 26, ஜஸ்டின் க்றீவ்ஸ் 24, யொசுவா டா சில்வா 18, ஜொஷ் ஹேஸ்ல்வூட் 35 - 5 விக்., நேதன் லயன் 4 - 2 விக்., மிச்செல் ஸ்டாக் 46 - 2 விக்.) அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 26 ஓட்டங்கள்) 2ஆவது இன்: விக்கெட் இழப்பின்றி 26 ஓட்டங்கள் (ஸ்டீவன் ஸ்மித் 11 ஆ.இ., உஸ்மான் கவாஜா 9 - உபாதையால் ஓய்வு) ஆட்டநாயகன்: ட்ரவிஸ் ஹெட் https://www.virakesari.lk/article/174368 Australia v West Indies 2023-24 | First Test | Day 2 Australia v West Indies 2023-24 | First Test | Day 3
  21. 19இன் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் : ஆரம்பப் போட்டிகளில் தென் ஆபிரிக்கா, அயர்லாந்து வெற்றி : மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜுவெல் அண்ட்றூவின் சதம் வீண் 20 JAN, 2024 | 10:12 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமான 16 நாடுகளுக்கு இடையிலான 15ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்பப் போட்டிகளில் தென் ஆபிரிக்காவும் அயர்லாந்தும் வெற்றிபெற்றன. இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் ஜுவெல் அண்ட்றூ முதலாவது சதத்தைக் குவித்து அசத்தியபோதிலும் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றதால் அவரது முயற்சி வீண் போனது. தென் ஆபிரிக்கா எதிர் மேற்கிற்தியத் தீவுகள் (பி குழு) தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற பி குழு போட்டியில் தென் ஆபிரிக்கா 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென்ஆபிரிக்கா 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களைக் குவித்தது. மொத்த எண்ணிக்கை 145 ஓட்டங்களாக இருந்தபோது 3 விக்கெட்கள் தொடர்ச்சியாக சரிந்தன. ஆனால், டெவன் மராயஸ், அணித் தலைவர் யுவான் ஜேம்ஸ் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 131 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். டெவன் மராயஸ் 65 ஓட்டங்களையும் யுவான் ஜேம்ஸ் 47 ஓட்டங்களையும் டேவிட் டீகர் 44 ஓட்டங்களையும் லுவான் டி ப்ரிட்டோரியஸ் 40 ஓட்டங்களையும் பெற்றனர். உதிரிகளாக 37 ஓட்டங்கள் கிடைத்தது. பந்துவீச்சில் நெதன் சோலி 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிற்தியத் தீவுகள் 40.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 254 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஜுவெல் அண்ட்றூ மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 96 பந்துகளில் 14 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 130 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன் 33 ஓட்டங்களைப் பெற்ற நெதன் சோலியுடன் 6ஆவது விக்கெட்டில் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சொற்ப நம்பிக்கை ஊட்டினார். ஆனால் அந்த நம்பிக்கை வீண் போயிற்று. பந்துவீச்சில் க்வேனா மஃபாக்கா 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ரைலி நோட்டன் 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். அயர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (ஏ குழு) ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக ப்ளூம்பொன்டெய்ன் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஏ குழு போட்டியில் அயர்லாந்து 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஐக்கிய அமெரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி 40.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. கியூஸ் பலாலா ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்றார். இதுவே அமெரிக்க இன்னிங்ஸில் அதிகப்பட்ச தனிநபர் எண்ணிக்கையாகும். அவரை விட பாத் பட்டேல் (13), அமோக் ஆர்ப்பல்லி (11) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் ஒலிவர் ரைலி 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரூபன் வில்சன் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜோன் மெக்நலி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 22.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் ரெயான் ஹன்டர் 50 ஓட்டங்களையும் பிலிப்பஸ் லே ரூக்ஸ் ஆட்டம் இழக்காமல் 23 ஓட்டங்க்ளையும் கியான் ஹில்டன் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆரியா கார்க் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். சனிக்கிழமை போட்டிகள் பங்களாதேஷ் எதிர் இந்தியா (குழு ஏ) - ப்ளூம்பொன்டெய்ன் இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து (குழு பி) - பொச்சேஸ்ட்ரூம் https://www.virakesari.lk/article/174366
  22. 20 JAN, 2024 | 11:15 AM சீனாவில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஹனான் மாகாணத்தின் யன்சான்பு கிராமத்தில் சிறுவர் பாடசாலையில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் பாடசாலையொன்றில் இந்த தீபத்து ஏற்பட்டது பாடசாலையின் முகாமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. ஒரு மணிநேரத்தின் பின்னர் தீயணைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/174375
  23. 19 JAN, 2024 | 09:20 PM ( எம்.நியூட்டன்) மக்கள் துன்பத்தில் வாடும் நிலையில் அரசியல்வாதிகள் அக்கறையில்லாது இருக்கிறார்கள் என செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி, வரி அதிகரிப்பு தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டை ஆள்பவர்களோ, அரசியல்வாதிகளோ ஏழை மக்களை பற்றி கவலைப்படுவதில்லை, கண்ணிரை துடைப்பதற்கோ முன்வருவதில்லை. எதுவாக இருந்தாலும் மனிதனின் அடிப்படை தேவையாகிய உணவு, சுகாதாரம், இருப்பிடம் இவை மூன்றிற்கும் இந்த நாட்டில் கஸ்ரமான சூழல் ஏற்பட்டுள்ளது. பஞ்சம் என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் ஒருவேளை நல்ல உணவை உண்ண முடியாது தவிர்த்து வருபவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள். மரக்கறியாக இருந்தால் என்ன உணவுபண்டங்கள் என்றால் என்ன விலைகள் மிக அதிகமாக அதிகரித்து உள்ளது. ஒரு சாதாரண பணியில் இடுபட்டுள்ள அன்றாட உத்தியோகம் பார்பவர்கள் கூட களைப்பை போக்குவதற்கு தேநீர் அருந்தகூட முடியாத நிலை உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இத்தகைய நிலையில் நிறுவனங்கள் அதற்கு ஏற்ப சம்பளத்தை கொடுக்க முடியாத நிலையில் வருவாய் அற்ற நிறுவனங்களாக செயற்பட்டுவருகிறது. வடக்கில் வந்த துன்பம் என்னவென்றால் தென்னிலங்கையை சேர்ந்த பெரிய நிறுவனங்கள் பல்பொருள் அங்காடி என்ற பெயரில் பெரிய அங்காடிகளை உருவாக்கி பணத்தை திரட்டி கொண்டு செல்கிறார். இதனால் கிராமத்தில் உள்ள வர்த்தகர்கள், வாணிபர்கள், பெட்டிக்கடைகள் வியாபாரத்தை இழந்து முடும்நிலை ஏற்பட்டுள்ளது, தென்னிலங்கையில் இருந்து வியாபாரம் செய்யும் பலபொருள் வாணிபங்கள் கடன்கள் வழங்கமாட்டார்கள். இத்தகைய பொருளாதார சூழ்நிலையில் கடன் இல்லை, உணவில்லை, நெருக்கடியான சூழலில் மக்கள் தவிக்கிறார்கள் . உண்மையான மக்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையை யாரும் அறிந்து கொள்வதில்லை வேடிக்கையான பேச்சுக்களை நாங்கள் நடாத்திக் கொண்டிருக்கிறோம் கூட்ங்களை நடாத்திக் கொண்டிருக்கிறோம். ஏழைமக்களை யாரும் திரும்பி பார்பதில்லை. இலங்கை மக்களின் மிக முக்கியமான உணவு தேவையை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கமும் அனைத்து அரசியல் தலைவர்களும் அதற்காக உருப்படியான வேலைகளை செய்து மூன்று வேளையும் மக்கள் கஸ்ரப்படாது உணவை உட்கொள்ள வழிசெய்ய முடியாத நிலையில் என்னதான் வாய் வீரம் பேசுவதனாலும் அர்தம் இல்லை இத்தகைய அரசியல் சூழலால் தான மக்கள் நாட்டை வீட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் . வெளியேறவும் வசதியில்லாத எழைகள் வாடிவதங்கி கொண்டிருக்கிறார்கள். நல்ல சுகாதாரமான உணவு கிடைக்காது எத்தனையோ குழந்தைகள் நோயால் வாடுகிறார்கள் இவற்றையாருக்கு எடுத்துரைப்பது என்று சிந்திப்பதை தவிர வேறுவழியில்லை எல்லாம் வல்ல இறைவனே காத்தருள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/174352
  24. Published By: RAJEEBAN 19 JAN, 2024 | 05:50 PM இலங்கை அரசாங்கம் தனது உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைமீளாய்வு செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையின் தற்போது நடைமுறையில் உள்ள மிகவும் ஆபத்தான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மாற்றீடு செய்வதற்காக இலங்கையின் நாடாளுமன்றத்தில் தற்போதுஆராயப்பட்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்து மிகுந்த கரிசனை கொண்டுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பிற்கான ஒரு அர்த்தமுள்ள சீர்திருத்தமாகயிருக்க வேண்டும். ஆனால் இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமானது கடந்தகாலத்தின் உரிமை மீறல் வடிவங்களை ஆபத்தை கொண்டுள்ளது. தற்போது உத்தேச சட்டமூலம் கடந்தகாலங்களில் விமர்சனத்தின் பின்னர் கைவிடப்பட்ட சட்ட மூலங்களிற்கு ஒப்பானது, இது பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணங்களை மிகவும் பரந்துபட்டதாக வரையறுக்கின்றது. நீதித்துறையின் உத்தரவாதங்களின் வரம்பை கட்டுப்படுத்துகின்றது. குறிப்பாக சட்டபூர்வமற்ற தடுத்துவைத்தல் குறித்த நீதித்துறையின் உத்தரவாதங்களை கட்டுப்படுத்துகின்றது. மேலும் இந்த சட்ட மூலம் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை மனித உரிமை ஆணைக்குழு பார்வையிடுவதை அந்த இடங்களிற்கு செல்வதை கட்டுப்படுத்துகின்றது தற்போதைய வடிவத்தில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்கும்.மேலும் இத்தகைய அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்வதை தடுப்பதற்கான பாதுகாப்புகள் இல்லை மேலும் பிடியாணை இன்றி பாதுகாப்பு படையினர் தனிநபர்களை கைதுசெய்வதற்கான ஆபத்து அதிகரிக்கும் - இது குறித்த சட்ட அடிப்படைகளை உத்தேச சட்டமூலம் பலவீனப்படுத்தும். மேலும் இந்த சட்டமூலம் விசாரணைகளிற்கு முன்னர் நீண்டகாலம் தடுத்துவைப்பதற்கும் அனுமதிக்கும். https://www.virakesari.lk/article/174358
  25. 20 JAN, 2024 | 10:40 AM மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மின்சார சபையின் மேலும் 51 ஊழியர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துக் கொண்ட மின்சார சபையின் 15 ஊழியர்களின் சேவை ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள மின்சாரசபையின் ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. உத்தேச மின்சார சபை சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபையின் ஊழியர்கள் கடந்த 03 ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் பகல் உணவு வேளையின் போது கொழும்பில் உள்ள மின்சார சபையின் தலைமை காரியாலயத்துக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார சபையின் சேவையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார சபையின் பதில் பொதுமுகாமையாளர் மின்சார சபை சேவையாளர்களின் சகல விடுமுறைகளையும் இரத்து செய்யும் வகையில் விசேட சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். இவ்வாறான நிலையில் இந்த சுற்றறிக்கையை பொருட்படுத்தாமல் மின்சார சேவையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிறுவன மட்டத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு எதிராகவும் பொது மக்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையிலும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நிறுவன மட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். இவ்வாறு சேவையில் இருந்த இடை நிறுத்தப்பட்ட ஊழியர்கள் மின்சார சபையின் நிதி கருமபீடத்தை மூடி விட்டு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்கள். இதனால் கட்டணம் செலுத்த வந்த வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நிறுவன மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து 66 ஊழியர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரபை மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/174371

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.