Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு நாளை (01) முதல் அனைத்து வகை கையடக்க தொலைபேசிகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக கையடக்க தொலைபேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், நாளை முதல் கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை சுமார் 35 வீதத்தால் அதிகரிக்கப்படும். நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் வெட் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வின் மூலம் கையடக்கத் தொலைபேசி சந்தையில் சுமார் 50 வீதம் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி நாளை முதல் 100,000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசி 135,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. https://thinakkural.lk/article/286552
  2. எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தன 01 JAN, 2024 | 09:28 AM எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, புதுவருடப் பிறப்பு தினமான இன்று திங்கட்கிழமை (1) காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 366 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 464 ரூபாவாகும். ஓட்டோ டீசல் ஒரு லீட்டர் 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 358 ரூபாவாகும். சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 475 ரூபாவாகும். அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும். இதேவேளை, எரிபொருள் விலையை சிபேட்கோ நிறுவனம் அதிகரித்துள்ள நிலையில், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் அதிகரித்துள்ளன. சிபேட்கோ நிறுவனத்தின் விலை அதிகரிப்புக்கு அமைய லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சினோபெக் நிறுவனம் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளுக்கு சலுகை வழங்கியுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றருக்கு 3 ரூபா சலுகை வழங்கியுள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலையை 17 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், புதிய விலையாக 363 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் ஒரு லீட்டருக்கான விலையை 26 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/172850
  3. அனைத்து உறவுகளுக்கும் 2024 புத்தாண்டு வாழ்த்துகள்.
  4. விதுர்ஷா: சவால்களை கடந்து கல்வியில் சாதிக்கும் மாற்றுத் திறனாளி மாணவி படக்குறிப்பு, விதுர்ஷா கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 31 டிசம்பர் 2023, 10:17 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பலாச்சோலை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் விதுர்ஷா. விதுர்ஷாவுக்கு வயது 19. ஆனால் அவரைப் பார்த்தல் அப்படித் தெரியாது. ஏனெனில் இவரது உயரம் இரண்டு அடிக்கும் குறைவு. சில நாட்களுக்கு முன்னர் வரை விதுர்ஷாவின் தோற்றத்தை கேலியாகப் பார்த்த பலரும், இப்போது அவரை ஆச்சரியத்துடனும் மரியாதையுடனும் பார்க்கின்றனர். இலங்கையின் பிரபலமான முகமாக மாறியிருக்கிறார் விதுர்ஷா. அதற்குக் காரணம் கல்வியில் அவர் பெற்ற உயரம் மற்றும் கல்வியின் மூலமாக வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென்ற அவரது லட்சியமும்தான். விதுர்ஷாவிற்கு மறுக்கப்பட்ட கல்வி "எனக்கு இப்போது வயது 19. நான் இரண்டு ஆண்டுகள் பின்தங்கித்தான் படிக்கிறேன். இரண்டு ஆண்டுகள் நடக்க இயலாமல் இருந்ததால் பின்தங்கிப் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது," என்கிறார் விதுர்ஷா. தங்கை உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதும் தனக்கும் செல்ல ஆசை வந்தது என்றும், ஆனால் முதலில் அந்தப் பள்ளியில் தன்னை அனுமதிக்கவில்லை எனவும் கூறுகிறார் விதுர்ஷா. "அந்த பள்ளியின் ஆசிரியர்கள் சிலர் நான் அங்கு சேர்வதை விரும்பவில்லை. நான் ஆரம்பக் காலத்தில் படித்த பள்ளியில் சித்திரவேல் சார்தான் அதிபராக இருந்தார். அவர்தான் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பிள்ளையைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றார். அவரால்தான் என்னால் தொடர்ந்து படிக்க முடிந்தது. அவருக்கு நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்," என்று கூறுகிறார் விதுர்ஷா. உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் ஏற்படும் குறைபாடுகள் படக்குறிப்பு, விதுர்ஷாவின் அம்மா புஷ்பலதா விதுர்ஷாவின் அப்பா சாந்தலிங்கம் அம்மா புஷ்பலதா ஆகியோருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் விதுர்ஷா மூத்தவர். விதுர்ஷா மாற்றுத்திறனாளியாகவே பிறந்ததாக அவரின் அம்மா கூறுகின்றார். விதுர்ஷாவின் தம்பி ஒருவரும் இவ்வாறு குறைபாடுகளுடன் பிறந்த நிலையில், கடந்த ஆண்டு அவரின் ஒன்பதாவது வயதில் காலமானார். உறவு முறைக்குள் திருமணம் செய்ததால் இவ்வாறு குழந்தைகள் பிறந்ததாக வைத்தியர்கள் கூறியதாக விதுர்ஷாவின் அம்மா சொல்கிறார். தனது சொந்த மாமாவின் மகனைத்தான் விதுர்ஷாவின் அம்மா புஷ்பலதா திருமணம் செய்துள்ளார். "விதுர்ஷா, இரண்டு ஆண்டுகள் முடியாமல் இருந்தார். எனவேதான் அவரை பள்ளிக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தங்கையுடன் இணைந்து பள்ளிக்குச் செல்ல ஆசைப்பட்டபோது, சரி பிள்ளை ஆசைப்படுகிறாள் என்று தற்காலிகமாகத்தான் அனுப்பி வைத்தோம். பின்னர் வீட்டுப் பாடங்களைச் சிறப்பாக செய்வது, நேரத்திற்கு பள்ளிக்குக் கிளம்புவது என ஆர்வமாகச் செயல்படத் தொடங்கினார். பின்னர்தான் எங்களுக்கு அவர் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டு, பிள்ளை பள்ளிக்குத் தொடர்ந்து செல்லட்டும் என முடிவு செய்தோம்," என்று கூறுகிறார் விதுர்ஷாவின் அம்மா புஷ்பலதா. இலங்கை முழுவதும் பிரபலமான விதுர்ஷா விதுர்ஷா உடற்குறைபாடு உடையவராக உள்ளபோதிலும், படிப்பில் சிறந்து விளங்குகிறார். அரசுப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேசியரீதியில் நடத்தப்படும் கல்விப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்று 12ஆம் வகுப்பிற்குத் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, விதுர்ஷா தற்போது இலங்கை முழுவதும் அறியப்படும் முகமாக மாறியிருக்கிறார். விதுர்ஷாவுக்கு நடந்து செல்வது கடினம். அதனால் அவரின் தங்கை யதுஜா சைக்கிளில் விதுர்ஷாவை பள்ளிக்கும், மாலை வகுப்புகளுக்கும் அழைத்துச் செல்கிறார். கேலி பேசியவர்கள் இப்போது பாராட்டுகிறார்கள் படக்குறிப்பு, விதுர்ஷாவின் தங்கை யதுஜா "ஆரம்பத்தில் அக்காவை பள்ளிக்கு சைக்கிளில் அழைத்துச் செல்லும்போது, சிலர் ஒருவித நக்கல் சிரிப்புடன் எங்களைப் பார்ப்பார்கள், சிலர் கேலி செய்வார்கள். அப்போதெல்லாம் அவளுக்கு மனம் வேதனைப்பட்டாலும், படிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கா அதையெல்லாம் பொறுத்துக் கொண்டாள்," என்கிறார் தங்கை யதுஜா. மேலும் தொடர்ந்து பேசிய யதுஜா, "விடாமுயற்சியுடன் படித்து பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அதே போல 12ஆம் வகுப்பு தேர்விலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவாள் என நம்புகிறேன்," என்று கூறினார். இம்முறை 11ஆம் வகுப்பு தேர்வை யதுஜாவும் விதுர்ஷாவும் ஒன்றாக எழுதினர். விதுர்ஷா பிறந்ததில் இருந்து தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகிறார். மருத்துவ செலவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால், கடந்த பத்து மாதங்களாக மருத்துவமனைக்குச் செல்லவில்லை எனக் கூறும் விதுர்ஷா தன்னைப் போன்றவர்கள் வீட்டில் அடைபட்டுக் கிடக்காமல் வெளியே வரவேண்டும் என வலியுறுத்துகிறார். "என்னைப் போன்ற பிள்ளைகள் உங்கள் வீட்டில் இருந்தால் அவர்களை வீட்டில் முடக்கி வைக்காமல், அவர்களையும் சக மனிதர்களாக மதித்து வெளி உலகிற்குக் கொண்டு வாருங்கள். அவர்களுக்கும் திறமை இருக்கும். அந்தத் திறமையை வெளிப்படுத்தி அவர்களால் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும்," எனக் கூறுகிறார் விதுர்ஷா. அவர் 12ஆம் வகுப்பில் கலைப் பிரிவைத் தேர்வு செய்து, அதகக் கற்கும் பொருட்டு இப்போதே பிரத்யேக வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cd1eq3pgjzdo
  5. தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு 31 DEC, 2023 | 05:23 PM வற் வரி அதிகரிப்புக்கு அமைய நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் சகல தொலைபேசி கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய தொலை தொடர்பு சேவை கட்டணம் 3 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. தொலைபேசி அழைப்பின் போது அறவிடப்படும் செஸ் வரி, தொலைத்தொடர்பு வரி, சமூக பாதுகாப்பு வரி உட்பட வரி உள்ளடங்களாக வற் வரியுடன் தொலைத்தொடர்பு சேவைக்கான வரி 38. 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20.3 சதவீதமாக காணப்பட்ட இணைய சேவை வரி இன்று முதல் 23.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு அதனுடன் தொடர்புடைய சகல சேவைகளின் கட்டணமும் உயர்வடையவுள்ளன. 15 சதவீதமாக இருந்த வற் வரி நாளை முதல் 18 சதவீதமாக உயர்வடைய உள்ள நிலையில் தொலைபேசி கட்டணங்கள்,இணையச் சேவைக் கட்டணங்கள்,கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் உள்ளிட்ட இணையத்தளத்துடனான சகல சேவைகளுக்குமான கட்டணங்கள் உயர்வடையவுள்ளன. https://www.virakesari.lk/article/172836
  6. வார்டன் களத்தில இறங்கீற்றாரு! ஆனாலும் இணையம் விடாது கருப்பு....
  7. பட மூலாதாரம்,NASA-JHU-APL படக்குறிப்பு, பார்க்கர் விண்கலம் எப்போதும் தனது வெப்பக் கவசத்தை சூரியனை நோக்கியே வைத்திருக்க வேண்டும். கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, பிபிசி நியூஸ், அறிவியல் செய்தியாளர் 52 நிமிடங்களுக்கு முன்னர் விண்வெளி ஆய்வு வரலாற்றில் தற்போதைய காலகட்டம் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக இருக்கும் என்று உறுதியாகத் தெரிகிறது. இன்னும் ஓராண்டு கழித்து, டிசம்பர் 24 அன்று, நாசாவின் ‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ 4 லட்சத்து 35 ஆயிரம் மைல் வேகத்தில் சூரியனைக் கடந்து செல்லும். மனிதனால் இதுவரை உருவாக்கப்பட்ட எந்தப் பொருளும் இவ்வளவு வேகமாக நகர்ந்திருக்காது அல்லது உண்மையில் சூரியனுக்கு மிக அருகில் சென்றிருக்காது. அதாவது சூரியனின் "மேற்பரப்பிற்கு" வெறும் 6.1 மில்லியன் கிலோமீட்டர் அல்லது 3.8 மில்லியன் மைல்கள் தொலைவுக்குச் சென்றிருக்காது. "நாம் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒரு நட்சத்திரத்தில் இறங்குகிறோம்," என்று பார்க்கர் திட்ட விஞ்ஞானி டாக்டர் நூர் ரவுவாஃபி கூறினார். "இது அனைத்து மனித இனத்திற்கும் ஒரு மகத்தான சாதனையாக இருக்கும். இது 1969ஆம் ஆண்டு நிலவில் இறங்கியதற்குச் சமம்" என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பயன்பாட்டு இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி பிபிசி செய்தியிடம் கூறினார். சூரியனின் ஈர்ப்பு விசை காரணமாக அங்கே பார்க்கர் விண்கலம் விழும்போது அதன் வேகம் அது உணரும் அபரிமிதமான ஈர்ப்பு விசையால் உருவாகும். இது நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 30 விநாடிகளுக்குள் பறந்து செல்வதற்கு ஒப்பானது. பட மூலாதாரம்,NSO/NSF/AURA படக்குறிப்பு, சூரிய மேற்பரப்பு அல்லது ஒளிக்கோளத்தின் உயர் தெளிவுத்திறன் காட்சிகள். அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசாவின் ‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக துணிச்சலான திட்டங்களில் ஒன்று. இந்தத் திட்டம் 2018இல் தொடங்கப்பட்டது. இது சூரியனுக்கு மிக அருகில் செல்லும் முயற்சிகளை இலக்கைக் கொண்டுள்ளது. ‘பார்க்கர்’ விண்கலம் 2024இன் பிற்பகுதியில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தில் (149 மில்லியன் கிமீ/93 மில்லியன் மைல்கள்) வெறும் 4% மட்டுமே கடக்க வேண்டியிருக்கும். சூரியனுக்கு அவ்வளவு நெருக்கமாகச் செல்ல பார்க்கர் விண்கலம் எதிர்கொள்ளும் சவால் மிகப் பெரியதாக இருக்கும். அப்போது பெரிஹேலியனில், விண்கலத்தின் முன்பகுதியில் உள்ள வெப்பநிலை 1,400 செல்ஷியஸை அடையும். தடிமனான வெப்ப கவசத்திற்குப் பின்னால் இருந்து பயன்படுத்தப்படும் கருவிகளின் தொகுப்பைக் கொண்டு சூரியனின் சூழலை அளவீடு செய்வதே பார்க்கரின் உத்தி. இதன் பயனாக, சூரியனில் என்ன நடக்கிறது என்பது குறித்து சில முக்கிய தகவல்களைப் பற்றிய எதிர்பாராத அளவுக்குப் புதிய விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இவற்றில் முதன்மையானது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கரோனாவின் செயல்பாடுகள் பற்றிய தெளிவான விளக்கமாகும். பட மூலாதாரம்,S R HABBAL AND M DRUCKMÜLLER படக்குறிப்பு, முழு சூரிய கிரகணத்தின்போது பூமியில் மட்டுமே நமக்குத் தெரியும் கரோனாவில் பார்க்கர் விண்கலம் நிலைநிறுத்தப்படும். எதிர்-உள்ளுணர்வு சூப்பர் ஹீட்டிங் போலத் தோன்றுவதை இது அனுபவிக்கிறது. சூரியனின் ஒளிக்கோளத்தில், மேற்பரப்பின் வெப்பநிலை தோராயமாக 6,000 செல்ஷியஸ். ஆனால் கரோனாவுக்குள் அது ஒரு மில்லியன் டிகிரி மற்றும் அதற்கும் அதிகமாக இருக்கும். நட்சத்திரத்தின் அணுக்கரு மையத்தில் இருந்து தொலைவில் வெப்பநிலை குறையும் என்று நீங்கள் நினைக்கலாம். மின்னூட்டம் கொண்ட துகள்களின் வெளிப்புற ஓட்டம் - எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் கனமான அயனிகள் - திடீரென்று விநாடிக்கு 400 கி.மீ வேகத்தில் நகரும் சூப்பர்சோனிக் காற்றாற்றலாக முடுக்கி விடப்படுவதும் கரோனா பகுதிக்குள்தான். பட மூலாதாரம்,NASA/JHU-APL/NRL படக்குறிப்பு, சூரியனின் கரோனாவில் ஒளி சிதறிய துகள்களைக் கண்டறிய பார்க்கர் ஒரு பக்கவாட்டுத் தோற்றமளிக்கும் கேமராவை கொண்டுள்ளது. விஞ்ஞானிகளால் இதை இன்னும் முழுமையாக விளக்க முடியவில்லை. ஆனால் சூரியனின் தன்மை மற்றும் "விண்வெளி வானிலை" நிகழ்வின் முன்னறிவிப்புகளை மேம்படுத்துவதற்கு இது மிகவும் முக்கியமானது. மற்றொன்று, சூரியனில் இருந்து வரும் துகள்கள் மற்றும் காந்தப்புலங்களின் சக்தி வாய்ந்த வெடிப்புகளைக் குறிக்கிறது. அவை பூமியில் உள்ள தகவல் தொடர்புகளைச் சீர்குலைப்பது மட்டுமின்றி மின் கட்டமைப்புகளைக்கூட தகர்க்கலாம். விண்வெளி வீரர்களுக்கு இது போன்ற கதிர்வீச்சு உடல்நல அபாயங்களையும் ஏற்படுத்துகிறது. "இது ஒரு புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. குறிப்பாக இப்போது நாங்கள் மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பவும், சந்திர மேற்பரப்பில் நிரந்தர முகாமை அமைக்கவும் யோசித்து வருகிறோம்," என்று டாக்டர் ரவுவாஃபி கூறினார். பட மூலாதாரம்,BLUE ORIGIN படக்குறிப்பு, பார்க்கர் அளிக்கும் தகவல்கள் எதிர்காலத்தில் நிலவுக்கு மேற்கொள்ளும் பயணங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை அளிக்கும். பார்க்கர் விண்கலம் வெள்ளிக்கிழமை சூரியனை மிக அருகில் நெருங்கும் முயற்சிகளில் ஒன்றை மேற்கொண்டது. அதன் சுற்றுப்பாதையை வளைத்து நவம்பர் மாதத்துக்கு முன் வீனஸை சுற்றி வந்து சூரியனை மிக நெருக்கமாகத் தொட அடுத்த ஆண்டு மேலும் மூன்று முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இப்படி 2024 டிசம்பரில் ஒரு வரலாற்று நிகழ்வை பார்க்கர் ஏற்படுத்தும். நாசாவில் அறிவியல் துறையின் தலைவராக டாக்டர் நிக்கி ஃபாக்ஸ் பணியாற்றுகிறார். அவர் தனது தற்போதைய பொறுப்புக்கு வந்ததற்கு முன்பாக பார்க்கர் திட்டத்தின் முன்னணி விஞ்ஞானியாக இருந்தார். டிசம்பர் 2024இல் பார்க்கர் விண்கலம் நிகழ்த்தும் இந்த நிகழ்வின் முக்கிய நன்மை என்னவென்றால், சூரியனின் கரோனாவில் மிக அதிக நேரம் அது இருக்கப் போகிறது. இதற்கு முன் இல்லாததைவிட அந்தக் காலகட்டம் அதிகமாக இருக்கும் என்று அவர் கூறினார். "நாங்கள் எதைக் கண்டுபிடிப்போம் என்று எங்களுக்குத் தெரியாத. ஆனால் வெப்பத்துடன் தொடர்புடைய சூரியக் காற்று ஆற்றலில் அலைகளைத் தேடுவோம்," என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். "பல ஆண்டுகளாக மக்கள் வாதிடும் செயல்முறைகளின் கலவையைச் சுட்டிக்காட்டும் பல்வேறு வகையான அலைகளை நாங்கள் உணர்வோம் என்று நான் நம்புகிறேன்." இந்த 2024ஆம் ஆண்டு பார்க்கருடைய பணியின் உச்சமாக இருக்கும்; டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அது சூரியனை நெருங்க முடியாது. ஏனென்றால் அதன் சுற்றுப்பாதை வீனஸை சுற்றியே இருந்து சூரியனை நோக்கி இன்னும் தெளிவான பாதையில் பயணிக்கக் கற்றுக்கொள்ளும். அதோடு வேறு பல காரணங்களும் உள்ளன. ஆனால் சூரியனுக்கு மிக அருகில் செல்வது, பார்க்கரின் பெரிய நோக்கத்தின் நிழலைச் சுருக்கி, விண்கலத்தின் பின்புறத்தைத் தாங்க முடியாத வெப்பநிலைக்கு உட்படுத்தும் அபாயமும் ஏற்படலாம். https://www.bbc.com/tamil/articles/ce5j6gzl817o
  8. பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் க பதவி, பிபிசி தமிழுக்காக 31 டிசம்பர் 2023, 06:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சோழப் போர்களில் கடல் கடந்த கடாரப் போர், ஈழப் போர், கம்பளிப் போர், பூண்டூர்போர், முடக்காற்று போர், பொன்மாரி போர், காந்தளூர் சாலை போர், கலிங்கப் போர் என போர்க்களங்களை வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். வெற்றி பெற்ற சோழர்களுக்கு, மறக்க முடியாத தோல்விகளைத் தந்த போர்க்களங்களும் உண்டு. அதில் முக்கியமானதுதான் சோழர்களின் எல்லைப் பரப்பை குறுகச் செய்த தக்கோலப் போர். இளவரசன் ராஜாதித்தன் தலைமையில் நடைபெற்ற தக்கோலப் போரில் அவர் கொலை செய்யப்பட்டார். யானை மேல் துஞ்சினத்தேவர் என்று அழைக்கப்படும் இளவரசர் ராஜாதித்தன் எப்படிக் கொலை செய்யப்பட்டார். வெற்றி பெரும் நிலையில் இருந்த சோழப் படையை திடீரென நிலைகுலையச் செய்ய திட்டம் தீட்டியது யார்? அவர் அதற்காகப் பெற்ற வினோதமான பரிசு என்ன? இந்தக் கட்டுரையில் விரிவாக காண்போம்... சோழப் படைகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி இருந்த திருநாவலூர் சோழ இளவரசன் ராஜாதித்தன் தலைமையிலான படை பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதிக்கு விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் மற்றும் உளுந்தூர்பேட்டை வரலாற்று ஆர்வலர் லலித் குமார் ஆகியோருடன் சென்றோம். முதலில் திருநாவலூர் சிவன் கோவிலுக்குச் சென்றபோது, அந்தக் கட்டுமானங்கள் மற்றும் அதிலுள்ள கல்வெட்டுகள் குறித்து விரிவாகப் பேசினார் பேராசிரியர் ரமேஷ். தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ள திருநாவலூர் சிவன் கோவில் பாராந்தக சோழன் காலத்தில் புனரமைக்கப்பட்டது. இதில் சோழப் பேரரசர்களின் கல்வெட்டுக்கள் நிறைய உள்ளன. குறிப்பாக பராந்தக சோழனின் மகன் இளவரசன் ராஜாதித்தனின் கல்வெட்டுகள், அவருடன் இங்கு தங்கியிருந்த படைத் தளபதிகள் மற்றும் படை வீரர்கள் உள்ளிட்ட பலரின் செயல்கள், தானங்கள் குறித்த கல்வெட்டு இங்கு அதிகம் உள்ளதாக அவர் விளக்கினார். அதேபோல் அருகிலுள்ள திருமுண்டீஸ்வரம் கோவிலிலும் இத்தகைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தானங்கள் குறித்தும், ஏரி, குளங்களின் கட்டுமானங்கள் குறித்தும் விவரிக்கின்றன. "தக்கோலப் போருக்குத் தயாராகும் நிலையில் பராந்தக சோழனின் ஆணைக்கு இணங்க இளவரசர் ராஜாதித்தன் தலைமையில் படை வீரர்கள் தங்கியிருந்த இடம் இந்த பகுதி. மேலும் போர்களற்ற காலங்களில் வீரர்களைக் கொண்டு கோவில் கட்டுமானங்கள், ஏரி மற்றும் குளங்கள் புணரமைப்புப் பணிகளையும் இளவரசர் ராஜாதித்தன் செய்துள்ளதற்குச் சான்றாக இங்கு பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன," என்றார் பேராசிரியர் ரமேஷ். பத்து ஆண்டுகளாக முகாமிட்டிருந்த ராஜராஜன் "ராஷ்டிரகூடர்கள் சோழ அரசுக்கு எதிராகப் படை திரட்டுவதை ஒற்றர்கள் மூலமாக அறிந்த பாராந்தக சோழன் கி.பி.936இல் வடதிசை காவல் பொறுப்பைத் தனது மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான ராஜாதித்தனிடம் ஒப்படைத்திருந்தார். இந்தக் காலகட்டத்தில் ராஜாதித்தன் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் என்ற ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு தன் படையுடன் முகாமிட்டிருந்தார். இவருடன் இவரின் படைத்தலைவன் சேரநாட்டு நந்திக்கரைப்புத்தூரை சேர்ந்த வெள்ளன்குமரன் மற்றும் பராந்தகரின் மகன்களும், ராஜாதித்தனின் தம்பிகளுமான கண்டராதித்தரும், அரிஞ்சய சோழனும் உடன் இருந்தனர்," என்று விளக்கினார் பேராசிரியர் ரமேஷ். கிபி. 949இல் இராஷ்டிரகூட அரசன் தம் படைகளைப் பன்மடங்கு பெருக்கியதோடு அல்லாமல், தனது மைத்துனான கங்க அரசன் பூதுகனையும், முன்னாளில் பராந்தக சோழனால் நாட்டை இழந்த வைதும்ப மற்றும் பாணர் படைகளையும் ஒன்று சேர்த்ததாகக் கூறுகிறார் அவர். "அந்தப் பெரும்படையுடன் தொண்டை நாட்டின் வட எல்லையை அடைந்தான். இந்தப் போரை ஏற்கெனவே எதிர்பார்த்துக் காத்திருந்த ராஜாதித்தன் தனது பெரும்படையுடன் எதிரிப் படைகளை தக்கோலம் என்னும் ஊரில் சந்தித்தான். (தற்போது தக்கோலம் என்னும் ஊர், இப்போதுள்ள அரக்கோணத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது). இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நடந்தது. ஆயிரக்கணக்கான வீரர்கள் மாண்டனர். இந்தப் போரில் யாருக்கு வெற்றி என்று கணக்கிட முடியாத அளவுக்கு இரு தரப்பினரும் போர் புரிந்தனர்." அப்போது, இராஷ்டிரகூட படையில் வீரர்களின் எண்ணிக்கை அதிகமிருந்த போதிலும் சோழ வீரர்கள் ஒவ்வொருவரும் அஞ்சா நெஞ்சனாய் அவர்களை வெட்டி வீழ்த்தி முன்னேறியதாகவும் அவர் விளக்கினார். போரின் திசை மாறி சிதறிய சோழ படைகள் ராஜாதித்தன் இப்போரில் தனது அனைத்து படைக் கருவிகளையும் உபயோகித்துப் போரிட்டதாகவும், அவனை நெருங்க முடியாமல் எதிரிப் படைகள் திணறியதாகவும் விவரித்தார் பேராசிரியர் ரமேஷ். "அவனது தம்பிமார்களும், படைத் தலைவனும் நாலாபுறமும் சுழன்று எதிரிகளை வெட்டி வீழ்த்தி பிணக் குவியல்களாக்கினர். இந்த நேரத்தில் கங்க மன்னன் பூதுகன், போரின் நிலையை உணர்ந்து தனது படைகளுக்கு ராஜாதித்தனை மட்டும் குறிவைக்கும் படியும், தனது படைத் தலைவனில் ஒருவனான மணலேரா என்பவனை அழைத்து ராஜாதித்தனையும் சோழப் படையையும் பிரிக்குமாறும் கட்டளையிட்டான்." பேராசிரியர் ரமேஷின் கூற்றுப்படி, மணலேரா தனது மன்னர் கட்டளையை ஏற்று சோழப் படைகளைத் திசை திருப்பி, ராஜாதித்தனை தனிமைப்படுத்தினான். கங்க மன்னனும் அவரது படைகளும், ராஜாதித்தன் இருக்கும் இடத்திற்கு ஏதுவாகச் செல்ல வழிவகை செய்தான். பூதுகன் ராஜாதித்தனை நோக்கி முன்னேறி, தன்னிடம் இருந்த அம்புகளைச் சரமாரியாக ராஜாதித்தனை நோக்கித் தொடுத்தான். இதைச் சற்றும் எதிர்பாராத ராஜாதித்தன் அம்புகளைத் தடுக்க முயன்றார். அந்த அம்புகளில் ஒன்று ராஜாதித்தன் மார்பில் தைக்கவே அவர் அந்தக் கணத்திலேயே உயிரிழந்தார். இதன் விளைவாக தலைவன் இல்லாத படைகள் குழப்பத்திற்கு உள்ளானதாகவும் அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி ராஷ்டகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணன் வெற்றி வாகை சூடினார் என்றும் யானை மீது அமர்ந்து "வீரப் போரிட்டு இறந்த ராஜாதித்தன் யானை மேல் துஞ்சினத்தேவன்" என்று அழைக்கப்படுவதாகவும் பேராசிரியர் ரமேஷ் விளக்கினார். சோழர்களின் செப்பேடுகளும் ராஜாதித்தனை "யானை மேல் துஞ்சிய தேவர்" என்றே அழைக்கின்றன. இதன் மூலம் ராஜாதித்தனை பூதுகன் கொன்றது உறுதியாகிறது. இந்தப் போருக்குப் பிறகு தனது பட்டத்து இளவரசனை இழந்த சோழ நாட்டின் எல்லை குறுகியது. தொண்டை மண்டலம் முழுமையும் மூன்றாம் கிருஷ்ணன் வசமானது. இந்த வெற்றியின் பேரால் அவரை அவரது கல்வெட்டுகள் "கட்சியும் தஞ்சையும் கொண்ட கன்னட தேவன்" எனப் புகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார். தக்கோலப் போர் நடந்தது ஏன்? பேராசிரியர் ரமேஷ் விளக்கிய வரலாற்றின்படி, பராந்தக சோழனின் தந்தை ஆதித்தனின் பட்டத்தரசி இளங்கோபிச்சுவின் புதல்வன் முதலாம் கன்னர தேவனுக்கு ஆட்சி மறுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பராந்தகன் தன்னுடைய மகளை நான்காம் கோவிந்தனுக்கு மணமுடித்தது, ராஷ்டிரகூட உள்நாட்டுப் பிரச்னையில் மூன்றாம் கிருஷ்ணனுக்கு எதிராக பராந்தகன் போர் புரிந்தது ஆகியவை இந்தப் போருக்கான காரணங்கள். "பராந்தகன் தனது ஆட்சியில் தன் அண்டை நாடான பாண்டியர், ஈழம், வாணர்கள், வைதும்பர்கள், கீழை சாளுக்கியம் ஆகிவற்றை வென்று அவர்கள் அனைவரையும் எதிரிகளாக்கினார். இதனால் தக்கோலப் பெரும்போரில் இவர்கள் பராந்தகன் படைகளுக்கு உதவ வரவில்லை." தக்கோலப் போர் நடக்க யார் காரணம்? தக்கோலப் போருக்கான காரணங்களை பேராசிரியர் ரமேஷ் விவரித்தார். ஆனால், இந்தப் பெரும்போர் நடப்பதற்குத் தொடக்க காரணமாக இருந்தது யார் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. அதுகுறித்து விளக்கினார் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் லலித் குமார். ராஜாதித்தன் தக்கோலப் போரில் கங்க மன்னன் பூதுகனால் கொல்லப்பட்டான். வெற்றி பெறும் நிலையிலிருந்த சோழப் படைகள் சிதறின. வெற்றிக் கனியை ருசித்து வந்த சோழப்படை நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்தது. "ராஜாதித்தனின் பாட்டனார் முதலாம் ஆதித்தன் காலத்தில் தனது ராஷ்டிரகூட நண்பன் இரண்டாம் கிருஷ்ணன் தனக்குப் பல போர்களில் உதவி செய்ததன் பொருட்டு, அவரது மகள் இளங்கோபிச்சுவை மணமுடித்து பட்டத்தரசி ஆக்கினார். இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைக்கு தன் நண்பன் மற்றும் மாமனான இரண்டாம் கிருஷ்ணனின் மற்றொரு பெயரான கன்னர தேவன் என்று பெயரைச் சூட்டினார். ஆதித்த சோழனின் மற்றொரு மனைவியான திரிபுவனமாதேவிக்குப் பிறந்தவர் பராந்தக சோழன். சில அரசியல் காரணங்களால் ஆதித்த சோழனுக்குப் பிறகு பராந்தக சோழர் அரியணையில் அமர்த்தப்பட்டார்," என்று தககோலப் போரின் தொடக்கப் புள்ளியை விவரித்தார் லலித் குமார். ஆனால், பட்டத்தரசி இளங்கோபிச்சுவுக்கு பிறந்த கன்னர தேவரையே அரசனாக்கி இருத்தல் வேண்டும் என்பதுதான் முறை. "இதனால் கன்னர தேவனின் உரிமையை ஆதரித்து ராஷ்டிரகூட அரசன் இரண்டாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். இப்போரில் ராஷ்ட்டிரகூட அரசுக்கு ஆதரவாக வாணர்களும் வைதும்பர்களும், சோழப் பேரரசின் மன்னரான பராந்தகனுக்கு ஆதரவாக கங்க அரசன் பிரித்திவிபதி, கொடும்பாளூர் மற்றும் கீழபழுவேட்டரயர்கள் போரில் களமிறங்கினர். மிக முக்கியமான இந்தப் பெரும்போரில் சோழர்களே வென்றனர்." ராஷ்டிரகூடர்களுடன் மீண்டும் திருமண உறவு சிறிது காலம் கழித்து கிபி.913இல் இரண்டாம் கிருஷ்ணன் இறந்த பிறகு இவரது பேரன் மூன்றாம் இந்திரன் ராஷ்டிரகூடத்தின் மன்னரானார். இவர் தனது மகனான நான்காம் கோவிந்தனுக்கு கிபி.918இல் இளவரசுப் பட்டம் சூட்டியதாகத் தெரிவித்தார் லலித் குமார். "இந்த இளவரசனுக்கு, பராந்தகர் தனது மகளான வரீமாதேவியை மணமுடித்ததோடு அல்லாமல் ராஷ்டிரகூடரின் நட்பை மீண்டும் மலர வைக்க முயன்றார். ஆனால் விதி வேறொரு பகைமைக்கு வித்திட்டது. அதாவது அந்த நேரத்தில் கீழைச் சாளுக்கிய அரசு இரண்டு பிரிவாகி வடதிசை பகுதியை யுத்த மல்லனும், தென்திசைப் பகுதியை இரண்டாம் வமீனும் ஆண்டனர். அவர்கள் இருவருக்கும் பகைமை ஏற்பட்டு போர்க்களத்தில் இறங்கினர். இதில் நான்காம் கோவிந்தன் யுத்த மல்லனுக்கு ஆதரவளித்தான். ஆனால் அதில் தோல்வியைத் தழுவினான். இதன் காரணமாக, மூன்றாம் கிருஷ்ணன் இராஷ்ட்டிரகூடத்தில் கலகம் செய்து தனது தந்தை மூன்றாம் அமோஹவர்ஷணனை (நான்காம் கோவிந்தனின் சிறிய சித்தப்பா) ராஷ்டிரகூடத்தின் அரசராக்கினான். இதனால் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நான்காம் கோவிந்தன் தன் மாமனான பராந்தக சோழனிடம் சரணடைந்தான்," என்றும் அவர் விளக்கினார். மேலும், "இதே நேரத்தில் மூன்றாம் கிருஷ்ணன் கங்க நாட்டில் ரசமல்லனை கொன்று இரண்டாம் பூதுகனை கங்க அரசின் மன்னராக்கி, தனது தமக்கையை பூதுகனுக்கு மனம் முடித்து உறவினரானான். இதனால் கங்க அரசன் பூதுகன், மூன்றாம் கிருஷ்ணனுக்கு மிகுந்த விசுவாசத்துடன் இருந்தான். தனது மருமகனை நாட்டை விட்டுத் துரத்தியதால் கடும் கோபத்தில் இருந்த பராந்தகன், மூன்றாம் கிருஷ்ணனுக்கு எதிராகவும், தன் மருமகன் நான்காம் கோவிந்தனுக்கு ஆதரவாகவும் போரிட முடிவு செய்தார். ராஷ்டிர கூடர்களுக்கும் சோழர்களுக்கும் இடையிலான பகை அதிகரித்தது. அந்தப் போர் தக்கோலத்தில் நடைபெற்ற போராகும். இதில்தான் இளவரசன் ராஜாதித்தன் கொலை செய்யப்பட்டு சோழப் பேரரசு இடைக்கால வீழ்ச்சியைச் சந்திக்க நேர்ந்தது என்று கூறினார். இந்தப் போரில் பெற்ற வெற்றி மூலம் ராஷ்டிரகூடர்கள் தங்கள் ஆட்சிப் பரப்பைப் பெருமளவில் விரிவுபடுத்தினர்," என்றும் தெரிவித்தார் லலித் குமார். ராஜாதத்தினை கொன்ற படைத்தளபதி பெற்ற பரிசு என்ன? போர்க்களங்களில் ரகசிய திட்டங்களைத் தீட்டி வெற்றி வாகை சூட உதவுவோர் அரசர்களிடம் இருந்து நாடுகள், பொன், பொருள் என ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளார்கள். ஆனால், தக்கோலப் போரில் ராஜாதித்தனைக் கொன்ற ராஷ்டிரகூட படைத் தளபதி பெற்ற பரிசு வினோதமானது என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் தாமஸ் அலெக்சாண்டர். ராஷ்ட்ரகூடர் கங்கர் வரலாற்றில் தக்கோல போர் பற்றிய குறிப்புகளை தாங்கிய ஆவணமாக அதக்கூர் நடுகல் திகழ்வதாகக் கூறுகிறார் அவர். "மைசூர் மாவட்டத்தில் மாண்டியா என்ற ஊருக்கு அருகே அதக்கூர் கிராமத்தில் இந்த நடுகல் கிடைத்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் கி.பி. 1898ஆம் ஆண்டில் அதக்கூர் நடுகல் ஹல்டிஷ் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியில் நடுகல், முறையாக கல்வெட்டு நகல் எடுக்கப்பட்டு பெங்களூர் அருங்காட்சியத்திற்குக் கொண்டு வரப்பட்டது. தக்கோலம் போரில் ராஷ்ட்ரகூட அரசர் கன்னர தேவன் மற்றும் இரண்டாம் பூதுகன் தலைமையில் ராஷ்ட்ரகூட படை சோழ அரசர் ராஜாதித்தினை வெல்கிறது. இந்தப் போரில் ராஜாதித்தன் வீரமரணம் அடைகிறார்." இரண்டாம் பூதுகனின் சேவகனான படைத்தளபதி மணலேரா என்பவன் தக்கோலப் போரில் வீரத்துடன் போரிட்டு பூதுகனின் வெற்றிக்கு உதவிய காரணத்தால் இரண்டாம் பூதுகன் மணலேராவிற்கு பரிசளிக்க விரும்பியதாகக் கூறினார் தாமஸ் அலெக்சாண்டர். பரிசாக சில கிராமங்களை வழங்கியபோது, அதற்குப் பதிலாக பூதுகன் வளர்த்து வந்த காளி என்னும் பெயர் கொண்ட மணலேரா வேட்டை நாயைக் கேட்டுள்ளார். பூதுகனும் தனது நிழல் போல் வளர்த்து வந்த காளி என்ற நாயை அவருக்குப் பரிசாக வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். எஜமானனுக்காக போரிட்டு மடிந்த வீர நாய் காளி வேட்டை நாயைப் பரிசாகப் பெற்ற மணலேரா காளி என்ற அந்த நாயை மிகவும் பாதுகாப்பாகவும் பாசத்துடன் வளர்த்து வந்ததாகவும் தாமஸ் அலெக்சாண்டர் கூறினார். இந்நிலையில், "கேலே நாட்டில் பெல்த்துர் என்ற மலைத்தொடரில் மணலேரா வேட்டைக்குச் சென்றபோது காளி ஒரு காட்டுப்பன்றியை எதிர்த்துச் சண்டையிட்டு, மணலேராவை காப்பாற்ற மரணமடைகிறது. "காளியின் வீரத்தின் நினைவாக மணலேரா அதக்கூர் சல்லேஸ்வரா கோவிலின் முன்பாக நடுகல் எழுப்பியுள்ளார். நடுகல்லுக்கு நில தானம், தினசரி பூஜை, நெல் நிவந்தம் ஆகியவற்றையும் வழங்கியதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் அங்கு காணப்படுகின்றன." மேலும், "இந்த நில நிவந்தங்களை அழிப்பவர்கள், நடுகல் வழிப்பாட்டைத் தடை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் காளியைக் கொன்ற பாவத்தைச் சுமப்பர்" என்றும் அந்தக் கல்வெட்டு கூறுகிறது. அந்தக் கல்வெட்டில், "சக வருடம் 872 எனக் குறிக்கப்படுகிறது, மூன்றாம் கிருஷ்ணன் என்ற கன்னரதேவன் அமோகவர்ஷன் எனக் குறிக்கப்படுகிறார். தக்கோலா என்ற பெயர் தக்கோலம் என்ற ஊரைக் குறிப்பிடுள்ளது. ராஜாதித்தன் முவடி சோழ என்ற பட்டப்பெயருடன் சிறப்பிக்கப்படுகிறார்." தக்கோலப் போரில் வெற்றிப் பெற்றதன் பரிசாக இரண்டாம் பூதுகனுக்கு கன்னர தேவன் பானாவாசி, பேலவோளா, புரிகிரி, கிசுகாடு, பாகிநாடு போன்ற நாடுகளை வழங்குகிறார். பூதுகன் மணலேராவுக்கு அதக்கூர் கடியூர் என்ற கிராமத்தை வழங்குகிறார். அதக்கூர் நடுகல் பற்றி விரிவாக எபிகிராபிக்கா இன்டிகா தொகுதி 6இல் உள்ளது. போர் வெற்றிக்காக அக்காலத்தில் கிராமங்களையும் ஊர்களையும் பொன் பொருளையும் பரிசாகப் பெற்றுக் கொண்டவர்களில் இருந்து மணலேரா முற்றிலும் மாறுபடுகின்றார். பூதுகனின் இந்த நாய் மிக பலம் பொருந்தியது எனவும் ஆக்ரோஷமானது, எஜமான விசுவாசம் உடையது எனவும் சில வரலாற்று அறிஞர்களும் உறுதிப்படுத்துகின்றனர். ராஜாதித்தன் கொலைக்குப் பின் துறவியாக மாறிய சோழ வீரன் தக்கோலப் போரில் சோழர்களை வீழ்த்தியதற்கு பரிசுகள் வழங்கப்பட்டதைப் போல் இளவரசர் ராஜாதித்தன் கொலை சம்பவத்திற்குப் பரிகாரமாக துறவியாக மாறிய சோழ வீரன் பற்றிய சுவாரசியமான தகவலை கல்வெட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்பிரமணியன் பி பி சி தமிழுடன் தொலைபேசியில் கூறினார். ராஜாதித்தன் கொல்லப்பட்ட தக்கோலப் போரில் பங்கெடுக்காமல் போனதற்குப் பிராயச்சித்தமாக சோழ வீரன் வல்லபன் என்கிற வெள்ளங்குமரன் துறவியாக மாறியதாக அவர் தெரிவித்தார். இதற்கான கல்வெட்டு, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலில் உள்ள இருமொழிக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேற்கொண்டு விளக்கியவர், "துறவியாக மாறிய போர் வீரன், கேரள இளவரசிக்கும் ராஜாதித்தனின் தந்தையான முதலாம் பராந்தக சோழனுக்கும் இடையிலான திருமணத்தைத் தொடர்ந்து சோழ நாட்டிற்குக் குடிபெயர்ந்த கேரளாவில் இருந்து வந்த படைத் தலைவன். இவர் ஏதோ சில காரணங்களுக்காக தக்கோலப் போரில் பங்கெடுக்க இயலவில்லை. ஆகையால், தான் உயிருடன் இருந்தும் அந்தப் போரில் ஈடுபட்டு இளவரசரைக் காப்பாற்ற முடியவில்லை என வேதனைப்பட்டு துறவியாக மாறியதாக கல்வெட்டு விவரிக்கின்றது," என்றார். https://www.bbc.com/tamil/articles/ced7y5ke2yjo
  9. பால் தேநீர், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு! Published By: NANTHINI 31 DEC, 2023 | 11:03 AM பால் தேநீர், கொத்து உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகள் நாளை (ஜனவரி 1) முதல் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் நாளை முதல் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினாலும், சோறு மற்றும் கொத்து ரொட்டியின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/172798
  10. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் இதை வைத்திருக்க வேண்டும்! புதிய சட்டம்! | VK Karikalan TIN நேரடி இணைப்பு https://eservices.ird.gov.lk/Registration/TINRegistration/ShowRequestHeader
  11. 30 DEC, 2023 | 06:45 PM (நா.தனுஜா) எமது அரசியல் முற்றிலும் மாறுபட்டதாகும். இன்றளவிலே ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதானது, அந்த அரச இயந்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவே அமையும். மாறாக இந்த ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் எதிர்க்கின்றோம் என்பதை ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமே காண்பிக்கமுடியும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் மும்மொழிகளிலும் தேர்ச்சியுடைய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் களமிறங்கினால், தான் அவரை ஆதரிப்பதற்குத் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி ஜனாதிபதித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என வலியுறுத்துவதனால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என வலியுறுத்துவதால் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியதைப்போன்ற எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடுமல்லவா எனவும், 2005 ஆம் ஆண்டு தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரித்தமை அவர்களுக்குப் பாதிப்பாக அமைந்ததாகக் கூறப்படும் கருத்துக்கள் பற்றியும் வினவியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு பதிலளித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், 2005 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் மாத்திரமன்றி, கூட்டமைப்பினரும் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு தமிழ்மக்களை வலியுறுத்தினார்கள். இருப்பினும் அப்போது அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தவர்கள் ரணில் விக்ரமசிங்க மிகவும் நல்லவர் எனவும், தமிழர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தமையினாலேயே மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார் எனவும் கருத்தக்களை வெளியிட்டனர். ஆனால் உண்மையில் யுத்தம் முழுமையாக முடிவுக்குக்கொண்டுவரப்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வளவு மோசமாக செயற்படுகின்றார் என்று பாருங்கள். ஏற்கனவே ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுன) எழுச்சியின்போது ரணில் விக்ரமசிங்க எவ்வாறு நடந்துகொண்டார் என்பதும், அதற்கு சிறந்த உதாரணமான 'பட்டலந்த முகாம்' பற்றிய கதைகளும் அனைவருக்கும் தெரியும். எனினும் இப்போது அவர் எவ்வாவு மோசமானவர் என்பது மிகத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ஆகவே 2005 இல் தமிழர்கள் தேர்தலை பகிஷ்கரித்திருக்காவிடின் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றிருந்தாலும், அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின்கீழ் இடம்பெற்றதைப்போன்ற மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். ஆனால் அது இப்போது சர்வதேச ரீதியிலும், மேற்குலகநாடுகள் மத்தியிலும் பரவலாகப் பேசப்படுவதைப்போன்று பேசப்பட்டிருக்காது. மேற்குலகம் ரணிலுக்கு ஆதரவாகவே செயற்பட்டிருக்கும். எனவே சமகால கள நிலைவரங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் 2005 இல் தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்ததில் எந்தவொரு பிழையும் இல்லை. இன்றளவிலே தமிழ்மக்கள் சார்ந்த விவகாரங்கள் கணக்கிலெடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. அதற்கு தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் காரணமாக அமைந்திருக்கின்றன. எனவே நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தனியொரு தேர்தலாகவன்றி, எதிர்காலத்தேர்தல்களை எவ்வாறு அணுகவேண்டும் என்ற ரீதியிலேயே பார்க்கின்றோம். இந்தத் தேர்தலில் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்கிப் போட்டியிடுவதால், அவர் வெல்லப்போவதோ அல்லது தமிழ்மக்களுக்கு ஏதேனும் நன்மைகள் கிட்டப்போவதோ இல்லை. எனவே தமிழர் தரப்பில் எவ்வித இழப்புக்களுமின்றி, அதேவேளை மிகவும் வலுவான செய்தியை பெரும்பான்மையின மக்களுக்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் கூறுவதற்கான மிகச்சிறந்த சந்தர்ப்பமாகவே இந்த ஜனாதிபதித் தேர்தலைக் கருதுகின்றோம். அவ்வாறிருக்கையில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்கவேண்டும் என்று கூறுவதெல்லாம், அவர்களுக்கு விருப்பமான ஏதோவோரு தரப்பை (சிங்கள வேட்பாளரை) ஆதரிப்பதற்காக மாத்திரமேயாகும் என்றார். அவ்வாறெனில் 'சி.வி.விக்கினேஸ்வரன் கூறுவதுபோல் நீங்கள் பொதுவேட்பாளராகக் களமிறங்குவதற்கு முன்வரலாமல்லவா? அதனூடாக நீங்கள் கூறவதைப்போன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்தலாம் அல்லவா?' என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், 'எமது அரசியல் முற்றிலும் மாறுபட்டதாகும். இன்றளவிலே ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதானது, அந்த அரச இயந்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவே அமையும். மாறாக இந்த ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் எதிர்க்கின்றோம் என்பதை ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமே காண்பிக்கமுடியும். ஆகவே தமிழ்மக்கள் பழைய கதைகளை நம்பி மீண்டும் மீண்டும் ஏமாறாமல், இவ்விடயத்தில் நன்கு சிந்தித்து தீர்மானமொன்றை மேற்கொள்ளவேண்டும்' என்று வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/172772
  12. 3 நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில் 30 DEC, 2023 | 06:44 PM ஆர்.ராம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமாக எதிர்வரும் நான்காம் திகதி வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இதன்போது காணிவிடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமான அறிவிப்பினை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து 250மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதனையடுத்து, அவர் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது பிரசன்னமாகவுள்ளார். https://www.virakesari.lk/article/172774
  13. Published By: RAJEEBAN 30 DEC, 2023 | 12:31 PM இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்க சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இனப்படுகொலை தொடர்பான சாசனத்தின் கீழ் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளதை ஐசிஜே உறுதி செய்துள்ளது. இனப்படுகொலை இடம்பெறுவதை தடுக்கவேண்டிய கடப்பாடுள்ளதாக தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. காசாமீதான இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக சிக்குப்பட்டுள்ள மக்களின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள தென்னாபிரிக்கா கண்மூடித்தனமான படைபல பிரயோகமும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுதலும் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றங்கள் போன்றவை இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன இனப்படுகொலை அல்லது அதனுடன் தொடர்புபட்ட குற்றங்கள் என தெரிவிக்ககூடிய சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அறிக்கைகள் வெளியாகின்றன என தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/172754
  14. பட மூலாதாரம்,NASA/ISRO கட்டுரை தகவல் எழுதியவர், ஜான்வி மூலே பதவி, பிபிசி மராத்தி 20 நிமிடங்களுக்கு முன்னர் சந்திரன் மற்றும் சூரியன் குறித்து ஆய்வு செய்யும் திட்டங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்திய இந்தியா தற்போது, சூப்பர்நோவா (விண்மீன் வெடிப்பு) உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 2024ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே எக்ஸ்போசேட் (XPoSat) என்னும் செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் XPoSat செயற்கைக்கோள் டிசம்பர் மாத இறுதியில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஜனவரி 1ஆம் தேதி வாக்கில் அந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படலாம் என இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. எக்ஸ்போசேட் என்பது என்ன? இது ஏன் முக்கியம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன. XPoSat என்றால் என்ன? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, எக்ஸ்-ரே இருமை விண்மீன் குறித்த சித்தரிப்புப் படம் எக்ஸ்-ரே போலாரிமீட்டர் சேட்டிலைட் என்பதன் சுருக்கமே எக்ஸ்போசேட் (XPoSat). இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பூமியின் கீழ் சுற்றுப்பாதைக்கு சுமார் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தும். சுமார் ஐந்து ஆண்டுகள் வரை செயலில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், கருந்துளைகளில் இருந்து வெளிப்படும் எக்ஸ் கதிர்கள் குறித்த தரவுகளைச் சேகரித்து, இந்தப் பிரபஞ்சத்தை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இப்படிப்பட்ட செயற்கைக்கோள் விண்ணுக்குச் செலுத்தப்படுவது இது உலகிலேயே இரண்டாவது முறை. டிசம்பர் 2021ஆம் ஆண்டில் நாசா மற்றும் இத்தாலிய விண்வெளி முகமை இணைந்து எக்ஸ்-ரே போலாரிமீட்ரி எக்ஸ்ப்ளோரர் அல்லது IXPE என்றழகக்கப்படும் இத்தகைய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. எக்ஸ் கதிர்கள் குறித்து ஏன் ஆய்வு செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, எக்ஸ்போசேட் விண்ணில் உள்ள பல அம்சங்கள் குறித்து வழக்கமான ஒளியியல் தொலைநோக்கிகள் மூலம் அதிகமாக அறிய முடியாது. அவற்றின் மூலம் கருந்துளைகள் போன்றவை எதனால் ஆனது, அவை என்ன செய்யும் என்பது குறித்துப் புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் விண்ணிலிருந்து உமிழப்படும் எக்ஸ், காமா, காஸ்மிக் ஆகிய கதிர்கள், ரேடியோ அலைகள் உள்ளிட்டவற்றில் இருந்து விஞ்ஞானிகள் தரவுகளைச் சேகரித்து அவற்றின் மூலம் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இந்த எக்ஸ் கதிர்கள், ஆக்ரோஷமான மோதல்கள், பெரும் வெடிப்புகள், அதிவேக சுழற்சிகள் மற்றும் வலுவான காந்தப்புலங்கள் போன்ற அதீத சூழல்களில் வெளிப்படும். இந்த அதீத நிகழ்வுகளில் கருந்துளைகளும் அடக்கம். ஆயுட்காலம் முடிவடைந்த விண்மீன் ஒன்று, தன் எடையின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் வெடிக்கும்போது உருவாகும் துளைதான் கருந்துளை எனப்படுகிறது. கருந்துளையில் உள்ள ஈர்ப்பு விசை மிகவும் அளப்பரியது. அதனால் அதிலிருந்து ஒளிகூட வெளியேற முடியாது என்பதால், நாம் அவற்றைப் பார்க்க முடியாது. இதனால் அவை குறித்து ஆய்வு மேற்கொள்ள சிறப்புக் கருவிகள் நமக்குத் தேவைப்படுகின்றன. அதனால், எக்ஸ் கதிர்களை வெளிப்படுத்தும் குவாசர் (விண்வெளியில் அமைந்திருக்கும் ஒளி உட்பட மின்காந்தக் கதிர்வீச்சு ஆற்றலை உமிழும் பெரிய விண்மீன் போன்றவை), சூப்பர்நோவா (பெரும் வீண்மீன் வெடிப்பு), நியூட்ரான் விண்மீன்கள் (விண்மீன் வெடிப்பின் எச்சம்), எக்ஸ்-ரே இருமை விண்மீன் (ஒரு நியூட்ரான் விண்மீன் அல்லது கருந்துளை துணை விண்மீனில் இருந்து வாயுவை உள்ளிழுப்பது) உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய எக்ஸ்-ரே தொலைநோக்கிகள் உதவி செய்கின்றன. நமது பிரபஞ்சம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அறியவும் அதுகுறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கவும் இவை குறித்து ஆய்வு செய்வது அவசியமாகிறது. விண்வெளி ஆய்வகம் ஏன்? பட மூலாதாரம்,ISRO இத்தகைய கதிர்கள் பூமியில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் அவை பூமியில் நுழைவதை புவி வளிமண்டலம் தடுக்கிறது. இதன் காரணமாக, இவற்றைப் பூமியிலிருந்து கண்காணிக்கப் பல தடைகள் உள்ளன. எனவே, எக்ஸ்-ரே கண்காணிப்பு ஆய்வகம் விண்ணுக்கு அனுப்பப்படுகின்றது. அப்படி அனுப்பப்பட்டதில் மிகவும் பிரபலமான விண்வெளி ஆய்வகம், நாசா அனுப்பிய சந்திரா எக்ஸ்-ரே ஆய்வகம். இதற்கு இந்திய-அமெரிக்க விஞ்ஞானியான சுப்பிரமணியன் சந்திரசேகரின் பெயர் சூட்டப்பட்டது. ஒளிக்கதிர்கள், புற ஊதாக்கதிர்கள், குறைந்த மற்றும் அதிக ஆற்றல் கொண்ட எக்ஸ்-கதிர்கள் வாயிலாக பிரபஞ்சம் குறித்து ஆய்வுசெய்ய 2015ஆம் ஆண்டில் ஆஸ்ட்ரோசேட் (ASTROSAT) என்னும் ஆய்வகத்தை இந்தியா விண்ணுக்கு அனுப்பியது. ஆனால், இந்த எக்ஸ்போசேட் எக்ஸ் கதிர்களின் மூலங்களை மட்டுமே ஆராயாமல் அதன் நீண்டகால செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள அவற்றின் துருவமுனைப்பில் கவனம் செலுத்தும். துருவமுனைப்பு மற்றும் போலாரிமீட்டர் என்பது என்ன? பட மூலாதாரம்,ISRO கண்ணைக் கூசும் ஒளியிலிருந்து தடுக்கும் வகையிலான துருவப்படுத்தப்பட்ட கூலிங் கிளாஸ் மூலமாகப் பார்க்கும் ஒளிக்கும் சாதாரண சூரிய ஒளிக்கும் இடையிலான வித்தியாசத்தை நாம் கவனித்திருப்போம். இது ஏன் நடக்கிறது? ஏனெனில் ஒளி அலைகள் ஒரு கயிற்றைப் போல, அவற்றின் பயணத்தின் திசையைச் சுற்றிச் செயல்படுகின்றன. ஆனால் அவை சிறப்பு வடிப்பான்களைக் (filter) கடந்து செல்லும்போது, அல்லது வளிமண்டலத்தில் வாயுக்களால் சிதறடிக்கப்படும்போது அவை துருவப்படுத்தப்படலாம் மற்றும் அவற்றின் அலைவுகள் அனைத்தும் வரிசையாக இருக்கும். எக்ஸ் கதிர்களும் இதுபோன்றுதான் செயல்படும் மற்றும் துருவமுனைப்பு என்பது அவை அசையும் திசையாகும். இந்தத் திசையைக் கண்காணிக்க போலாரிமீட்டர் உதவுகிறது. மேலும், எக்ஸ் கதிர்களை உமிழும் விண்வெளிப் பொருட்கள் குறித்து முக்கியமான தகவல்களையும் வழங்குகிறது. இந்த XPoSat செயற்கைக்கோளிலும் இத்தகைய ஒரு போலாரிமீட்டர் பொருத்தப்பட்டிருக்கும். எக்ஸ்போசேட்டில் என்னென்ன இருக்கும்? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சந்திரா எக்ஸ்-ரே ஆய்வகம் எக்ஸ்போசேட்டில் இருவிதமான அறிவியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும். POLIX: பெங்களூருவில் உள்ள ராமன் ஆய்வு மையம், யூ.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்துடன் இணைந்து உருவாக்கிய முதன்மை உபகரணமான POLIX பொருத்தப்பட்டிருக்கும். இது வானியல் மூலங்களில் இருந்து உருவாகும் துருவமுனைப்பின் அளவு மற்றும் கோணத்தை அளவிடும். மற்றொன்று XSPECT உபகரணம்.இஸ்ரோவின் கூற்றுப்படி, இது பிரகாசமான எக்ஸ்ரே மூலங்களின் நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் அம்சங்களை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யும் திறன் கொண்டது. https://www.bbc.com/tamil/articles/c51zk9z4kjko
  15. போலந்திற்குள் நுழைந்து உக்ரைனை நோக்கி சென்ற ரஸ்ய ஏவுகணை Published By: RAJEEBAN 30 DEC, 2023 | 09:00 AM ரஸ்யாவின் ஏவுகணைகள் போலந்திற்குள் நுழைந்து அங்கிருந்து உக்ரைனை நோக்கி சென்றதாக போலந்தின் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஏவுகணைகள் போலந்தின் வான் பரப்பிற்குள் நுழைந்தன என ஜெனரல் வைஸ்லோ குக்குலா தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் ஏவுகணைகள் ராடரில் பதிவாகியுள்ளதை தொடர்ந்து போலந்து ஜனாதிபதி அவசர கூட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். மூன்று நிமிடங்கள் ரஸ்ய ஏவுகணை போலந்தின் வான்பரப்பில் காணப்பட்டுள்ளது - இதேவேளை ஏவுகணை தென்பட்ட பகுதியில் அது விழுந்து வெடித்ததா என்பது குறித்த சோதனைகள் இடம்பெறுகின்றன. உக்ரைனின் பல நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா மேற்கொண்ட பாரிய வான்தாக்குதல்களின் போதே ரஸ்ய ஏவுகணை போலந்து ஊடாக உக்ரைன் சென்றுள்ளது. ரஸ்யா உக்ரைன் மீது மிகப்பெரியவான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உக்ரைனிற்கு எதிரான போர் ஆரம்பமான பின்னர் ரஸ்யா மேற்கொண்டுள்ள மிகப்பெரிய வான் தாக்குதல் இது என உக்ரைனின் இராணுவ வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன. உக்ரைன் மீது முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு ரஸ்யா மேற்கொண்டுள்ள ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் 12 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு முதல் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் உக்ரைன் தலைநகரும் ஏனைய முக்கிய நகரங்களும் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலத்தின் பின்னர் எங்கள் கண்காணிப்புகளில் அனைத்து பிரதேசங்களிலும் அனைத்து பகுதிகளிலும் ரஸ்யாவின் தாக்குதலை காண்கின்றோம் என உக்ரைனின் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். உக்ரைனின் தலைநகரையும் கிழக்கு மேற்கு தெற்கு பகுதிகளை இலக்கு வைப்பதற்காக ரஸ்யா 158 ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் பயன்படுத்தியுள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது. எதிரி மிகவும் வலுவாக தாக்கியுள்ளான் சிலவற்றை வீழ்த்தியுள்ளோம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என உக்ரைன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகரில் புகையிரத நிலையமொன்றை ரஸ்யா இலக்கு வைத்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் 20 பேர் காயமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/172735
  16. நினைவிலும் வைத்திருப்பதில்லை என நினைக்கிறேன்.
  17. உக்ரைன் மீது ரஸ்யா மிகக்கடுமையான வான் தாக்குதல் - 150க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை பயன்படுத்தியது. Published By: RAJEEBAN 29 DEC, 2023 | 04:56 PM ரஸ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய வான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உக்ரைனிற்கு எதிரான போர் ஆரம்பமான பின்னர் ரஸ்யா மேற்கொண்டுள்ள மிகப்பெரிய வான் தாக்குதல் இது என உக்ரைனின் இராணுவ வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன. உக்ரைன் மீது முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு ரஸ்யா மேற்கொண்டுள்ள ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் 12 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு முதல் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் உக்ரைன் தலைநகரும் ஏனைய முக்கிய நகரங்களும் தாக்குதலிற்குள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலத்தின் பின்னர் எங்கள் கண்காணிப்புகளில் அனைத்து பிரதேசங்களிலும் அனைத்து பகுதிகளிலும் ரஸ்யாவின் தாக்குதலை காண்கின்றோம் என உக்ரைனின் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். உக்ரைனின் தலைநகரையும் கிழக்கு மேற்கு தெற்கு பகுதிகளை இலக்கு வைப்பதற்காக ரஸ்யா 158 ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் பயன்படுத்தியுள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது. எதிரி மிகவும் வலுவாக தாக்கியுள்ளான் சிலவற்றை வீழ்த்தியுள்ளோம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என உக்ரைன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகரில் புகையிரத நிலையமொன்றை ரஸ்யா இலக்கு வைத்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் 20 பேர் காயமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/172721
  18. பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 17 ஆயிரம் பேர் கைது : 450 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல்! 29 DEC, 2023 | 05:55 PM (எம்.வை.எம்.சியாம்) போதைப்பொருள் மற்றும் பாதாளாக்குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் நாடளாவிய ரீதியில் 17 ஆயிரத்து 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே ஹெரோயின், ஐஸ் உட்பட 450 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட வேலைத்திட்டம் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைய, முப்படைகளின் ஒத்துழைப்புகளுடன் நாடளாவிய ரீதியில் கடந்த 17ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கடந்த 17ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 17,666 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இருப்பினும், நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டமையால் இரண்டு நாட்களுக்கு யுக்திய சுற்றிவளைப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்புகள் கடந்த புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டதுடன் இதன்போது 2,889 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அதற்கமைவாக நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்புகளில் 17,837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட 850 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 186 பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்து குவிப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 1,187 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஏற்கனவே சந்தேக நபர்களாக பட்டியலிடப்பட்டு தேடப்பட்டு வந்த 4,665 சந்தேக நபர்களில் 1,375 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே 10 கிலோ 510 கிராம் ஹெரோயின், 6 கிலோ 740 கிராம் ஐஸ் போதைப்பொருள், 288 கிலோ 500 கிராம் கஞ்சா, ஒரு கிலோ 70 கிராம் ஹஷீஷ் போதைப்பொருள், 35 கிலோ 800 கிராம் ஹுஸ் போதைப்பொருள், 3 கிலோ 350 கிராம் தூள் போதைப்பொருள், 18 கிலோ 50 கிராம் மாவா, 71, 271 போதைப்பொருள் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 2,110,500 கஞ்சா செடிகளும் அழிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/172730
  19. விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் பட மூலாதாரம்,VIJAYAKATNTH FACEBOOK 28 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் சென்னை தீவுத் திடலில் இருந்து கட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த விஜயகாந்த் பல தருணங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மீண்டும் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். முதலில் அவரது வீடு மற்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரின் உடல் பின்னர் சென்னை தீவுத்திடலில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அவரது உடல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈவேரா சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிலையில் 6 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் விஜயகாந்த் அவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. படக்குறிப்பு, விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை விஜயகாந்த் மறைவையொட்டி அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மீண்டும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியம், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரோடு இறுதி மரியாதை நிகழ்வில் பங்கேற்ற அவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து தனது இறுதி மரியாதையை செலுத்தி விட்டு சென்றுள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலினின் சமூக வலைத்தள பக்கங்களில் ‘எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே…’ என்ற வாசகங்களோடு விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் இறுதி மரியாதை செலுத்தும் படங்கள் பகிரப்பட்டுள்ளன. படக்குறிப்பு, மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் பிரேமலதா விஜயகாந்த் உரை விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்த பிறகு தொண்டர்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றியுள்ளார். இதில் முன்வந்து நின்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அரசு மரியாதை செய்ய ஏற்பாடு செய்ததற்கும், தீவுத்திடலில் அஞ்சலிக்கு இடம் ஒதுக்கி கொடுத்ததற்கும் தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் இதுவரைக்கும் தமிழக அரசியல் வரலாற்றில் இது போல் எந்த தலைவருக்கும் கூட்டம் கூடியதில்லை. இரண்டு நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த். “இந்த சோகமான நாளில் தலைவரின் கனவை வெற்றிபெற செய்ய வேண்டும் என நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். அந்த நாள்தான் தேமுதிகவின் வெற்றி நாள். தேமுதிக அலுவலகத்தில் தலைவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் விளக்கு ஏற்றப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார். '54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்த ஒரே நடிகர்' "தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்தவர் நடிகர் விஜயகாந்த். உலக சினிமாவில் இதை வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். அதிகமான புதிய தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்" என்று தயாரிப்பாளர் சிவா ஒருமுறை கூறியிருக்கிறார். "சொல்வதெல்லாம் உண்மை திரைப்படம் மூலம் என்னை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியது அவர் தான். இந்த காட்சி எதற்கு, வசனம் எதற்கு, கதையை இப்படி மாற்றலாமா என்றெல்லாம் அவர் பேசமாட்டார். கதையை ஒத்துக்கொண்டு, சம்பளம் வாங்கிவிட்டால் எதையும் பேசாமல், விரைவாக நடித்துக் கொடுத்து விடுவார். மிகச்சிறந்த மனிதர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல தொழில்முறைக் கலைஞர் விஜயகாந்த்" என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் டி. சிவா. https://www.bbc.com/tamil/articles/ce5j35dgpv1o
  20. கொழும்பு – காங்கேசன்துறை புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் - புகையிரத திணைக்களம் 29 DEC, 2023 | 08:16 PM (இராஜதுரை ஹஷான்) வடக்கு புகையிரத பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை, யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்படும். கொழும்பில் இருந்து செல்லும் யாழ் நிலா புகையிரதம் திருகோணமலைக்கு செல்லும் என புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான புகையிரத பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை மற்றும் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் குறித்த காலப்பகுதியில் அநுராதபுரம் முதல் யாழ்ப்பாணம் வரை இரண்டு விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் அத்துடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் யாழ் நிலா புகையிரதம் அனுராதபுரத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று,திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கி புறப்படும் என்றார். https://www.virakesari.lk/article/172724
  21. எழுதுபவர்களுக்கு சரி அண்ணை. செய்தியை இணைப்பது பற்றி கூறினேன்.
  22. விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி: தீவுத்திடலில் குவியும் பிரபலங்கள்; கண்ணீர் மல்க பொதுமக்கள் பிரியாவிடை 29 DEC, 2023 | 12:44 PM சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர். அரசியல் பிரமுகர்களும், திரைப் பிரபலங்களும் மேடையில் உள்ள விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிச் செல்கின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். அவரது மறைவையடுத்து சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இரவு வரை அங்கே பல்வேறு பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திச் சென்றனர். தென் மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும்கூட ரசிகர்கள் வந்திருந்தனர். வரிசையில் நின்றிருந்த சிலர் விஜயகாந்த் தமிழக முதல்வராக வந்திருக்கலாம். மக்கள் அந்த வாய்ப்பை இழந்துவிட்டனர் என்று கூறினர். விஜயகாந்த் உடலுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நெரிசலில் மக்கள் சிக்கி அவதிக்குள்ளாயினர். இதன் காரணமாக தற்போது விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிவறை வசதி என பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர். பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இன்று மதியம் 1 மணியளவில் தீவுத் திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்படும் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி: விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மகன்கள் சண்முகபாண்டியன், பிரபாகரன், மைத்துனர் சுதீஷுக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் வந்திருந்தனர். பின்னர் பேசிய அண்ணாமலை, “பிரதமர் மோடியின் முழுமையான அன்பைப் பெற்ற விஜயகாந்த் ஏழைகளின் பங்காளன். அவரின் புகழ் என்றும் ஓங்கியிருக்கும்” என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கேப்டன் இளகிய மனம் கொண்டவர். அவர் மறைவு வருத்தமளிக்கிறது. அரசியலில் மனிதநேயத்துடன் உள்ள தலைவரை நாம் பார்க்கமுடியாது. அப்படிப்பட்டவரை இழந்துவிட்டோம். கடைசி முறையாக அவருடைய முகத்தை ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்று வந்துள்ள தொண்டர்களுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். தன் பணத்தால் மக்களுக்கு உதவிய தலைவரை இழந்துவிட்டோம். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு, தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். பிரதமர் மோடி உடனடியாக இரங்கல் குறிப்பு பதிவிட்டதோடு, நம்மை நேரடியாக இங்கே அனுப்பிவைத்தார். ஆளுநர் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளேன்” என்றார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல்: விஜயகாந்த் மறைவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார். ”விஜயகாந்தின் புன்சிரிப்பை மறக்க முடியாது. அவர் தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி தமிழீழ விடுதலை வேட்கைக்கு வடிவம் கொடுத்தவர்” என்று அவர் கூறியுள்ளார். தேவா முதல் பார்த்திபன் வரை.. இசையமைப்பாளர் தேவா மகன் ஸ்ரீகாந்த் தேவாவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், “நான் பார்த்த வள்ளல் விஜயகாந்த் தான். அற்புதமான மனிதர்” என்றார். இயக்குநர், நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். இயக்குநர், நடிகர் சுந்தர்.சி, அவரது மனைவி நடிகை குஷ்பு ஆகியோரும் அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துச் சென்றனர். மாமனிதர் என்றால் அது கேப்டன்தான் என்று சுந்தர்.சி-யும், சொக்கத்தக்கம் என்றால் அது விஜயகாந்துக்கே செல்லும் என்று குஷ்புவும் புகழஞ்சலி செலுத்தினர். இயக்குநர், நடிகர் பார்த்திபன் பேசுகையில், “நான் விஜயகாந்த் என்ற நடிகரைவிட அவருடைய மனிதநேயத்துக்கு மிக்கப்பெரிய ரசிகன்” என்றார். நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இயக்குநர், நடிகர் ரமேஷ் கண்ணா அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்களுடன் பேசி ஆறுதல் கூறினர். ஓ.பன்னீர்செல்வத்துடன் புகழேந்தி வந்திருந்தார். அஞ்சலிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “2011-ல் ஜெயலலிதா முதல்வராக உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த். ஈகை குணம் கொண்டவர். நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்” என்று நினைவுகூர்ந்தார். ரஜினிகாந்த் இரங்கல்: தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் மறைந்து மிகப் பெரிய துரதிர்ஷ்டம். விஜயகாந்த் அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர் எப்படியும் அவர் உடல்நிலை தேறிவிடும் என்று அனைவரும் நினைத்தோம். ஆனால் தேமுதிக பொதுக்குழுவில் அவரைப் பார்க்கும் போது எனக்கு உறுதி கொஞ்சம் குறைந்து விட்டது. விஜயகாந்த் இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்” என்றார். தொடர்ந்து ரஜினிகாந்த் சென்னையில் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்கள் விஜய் ஆண்டனி, அருள்நிதி, லிவிங்ஸ்டன் அஞ்சலி: இன்று காலை தீவுத்திடலுக்கு குடும்பத்துடன் வந்த நடிகர் அருள்நிதி இறுதி அஞ்சலி செலுத்தினார். நடிகர் லிவிங்ஸ்டன் கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாதாரணமாக சுற்றித் திரிந்த என்னை சொந்தச் செலவில் நடிகராக்கியவர். என்னை ஒரு நடிகராக அங்கீகரித்து வளர்த்தெடுத்து, சம்பாதிக்க வைத்து வாழவைத்தவர்” என்றார். ராம்கி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்: நடிகர் ராம்கி செந்தூரப்பூவே படத்தில் விஜயகாந்துடன் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்தார். அந்தப் படத்தில் விஜயகாந்தின் கதாபாத்திரத்துக்கு பெயர் கேப்டன். அதனால் சூட்டிங் ஸ்பாட்டில் அனவருமே கேப்டன் ஷாட்டுக்கு ரெடியா, கேப்டன் வந்துட்டாரா? என்றுதான் பேசுவோம். கொஞ்ச நாளில் அது அவரது ஆஃபீஸ் வரை நீண்டது. அங்கே போன் செய்து கேப்டன் கிளம்பிட்டாரா எனக் கேட்பார்கள். அந்தப் படம் முடிந்தும் கேப்டன் என்றே அவரை எல்லோரும் வாஞ்சையோடு அழைத்தோம். கேப்டன் பிரபாகரன் படத்துக்குப் பின்னர் அந்தப் பெயர் அவரின் அடையாளமாகிவிட்டது என்றார். கண்கலங்கிய ரஜினிகாந்த்: சென்னை தீவுத் திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலிக்கு செலுத்திய ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “கன்னியாகுமரி படப்பிடிப்பில் இருந்து இங்கே வருகிறேன். மனம் மிகவும் கனக்கிறது. விஜயகாந்த் பற்றி பேச எவ்வளவோ இருக்கிறது. நட்புக்கு இலக்கணம் விஜயகாந்த். ஒருமுறை பழகிவிட்டால், வாழ்க்கை முழுக்க அதனை மறக்கவே முடியாது. அவரது அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். அதனால் தான் அவருக்கு அத்தனை நண்பர்கள். அவருக்காக உயிரை கொடுக்கக் கூட தயாராக இருந்தனர். நண்பர்கள் மீது கோபப்படுவார். அரசியல்வாதிகள் மீது கோபப்படுவார். ஊடகங்கள் மீது கூட கோபப்படுவார். ஆனால் அவர் மீது யாருக்கும் கோபம் வராது. காரணம் அவரது கோபத்தில் சுயநலம் இருக்காது. தைரியத்துக்கும் வீரத்துக்கு இலக்கணமானவர். கேப்டன் அவருக்கு பொறுத்தமான பெயர். 71 பால்களில், நூற்றுக்கணக்கான சிக்சர்களை குவித்து, மக்களை மகிழ்வித்து விக்கெட்டை இழந்து இந்த உலகம் என்னும் ஃபீல்டை விட்டு போய்விட்டார். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் யார்? விஜயகாந்த் போன்றோர். வாழ்க விஜயகாந்த் நாமம்” இவ்வாறு ரஜினி நா தழுதழுக்க உருக்கமாக பேசினார். https://www.virakesari.lk/article/172691

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.