Everything posted by ஏராளன்
-
4வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
Published By: VISHNU 10 JAN, 2024 | 11:11 AM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் 10 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறுகின்றது. இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தொடக்கம் மாலை வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்வித பேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் அழைப்புவிடுத்துள்ளார். 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுட்டுமன்றி தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. 10.01.1974 அன்று தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டோர் விபரம்: வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15 – மாணவன்) பரம்சோதி சரவணபவன் (வயது 26) வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32) ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52 – ஆசிரியர்) புலேந்திரன் அருளப்பு (வயது 53) இராசதுரை சிவானந்தம் (வயது 21 – மாணவன்) இராஜன் தேவரட்ணம் (வயது 26) சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56 – ஆயுள்வேத வைத்தியர்) சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14 – மாணவன்) https://www.virakesari.lk/article/173584
-
ஜனவரியில் இலங்கை வருகிறார் பிரித்தானிய இளவரசி ஆன்
பிரித்தானிய இளவரசி ஆன் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்தார் Published By: DIGITAL DESK 3 10 JAN, 2024 | 09:53 AM இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) சற்றுமுன்னர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) இன்று புதன்கிழமை லண்டனில் இருந்து கொழும்புக்கு தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலே இலங்கைக்கு வருகிறார். இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளத்தில், அரச குடும்பத்திற்கு ஏற்ற சேவை! இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக லண்டனில் இருந்து கொழும்புக்கு தனது பயணத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி ஆன்னை (Princess Anne) வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இளவரசிக்கும் மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு இலங்கையின் அரவணைப்பையும் விருந்தோம்பலையும் விரிவுபடுத்துவது உண்மையிலேயே ஒரு கௌரவமாகும். எங்கள் விமான சேவையை பயணத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/173577
-
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு !
தக்காளி ரூ.700, கேரட் ரூ.800: இலங்கையில் காய்கறிகள் விலை 7 மடங்கு உயர்வு - என்ன காரணம்? கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை மக்கள் தினசரி தேவைகளை குறைந்தபட்சம் நிறைவேற்றுவதற்கே சிரமப்படும் அளவுக்கு பொருளாதார ரீதியாக, கடும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். உணவுப் பொருட்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளன. அதிலும், காய்கறி, மரக்கறி வகைகள் மற்றும் உப உணவுப் பொருட்களின் விலைகள் முன்பு இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. இந்நிலையில், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ‘வாட்’ (VAT) எனப்படும் மதிப்பு கூட்டு வரியை 15 வீதத்திலிருந்து 18 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. முன்னர் ’வாட்’ விதிக்கப்படாத பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு, தற்போது ‘வாட்’ விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மேலும் சிரமத்தை சந்திக்கின்றனர். சில்லறை விலையில் ஒரு கிலோகிராம் பீன்ஸ் 900 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கேரட் ஒரு கிலோ 800 ரூபாய். சாதாரண காலங்களில் ரூ.100-க்கும் குறைந்த விலையில் கிடைத்த ஒரு கிலோகிராம் தக்காளி தற்போது 7 மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, விலை 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 1,500 ரூபாய். இஞ்சி ஒரு கிலோ 3,000 ரூபாய் வரையில் விற்பனையான நிலையில், தற்போது 1,800 ரூயாய்க்குக் கிடைக்கிறது. சாதாரண காலங்களில் ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 200 ரூபாய்க்கும் குறைவாகும். படக்குறிப்பு, உணவுப்பொருட்களின் விலை முன்பில்லாத வகையில் உயர்ந்துள்ளது. தேங்காய் ஒன்று ரூ.100 ஒரு மாதத்துக்கு முன்னர் ஒரு கிலோகிராம் அதிகபட்சமாக ரூ.150-க்கு சில்லறைக் கடைகளில் விற்கப்பட்ட பெரிய வெங்காயம், தற்போது 600 ரூபாய் வரையில் விலை போகிறது. பெரிய வெங்காயத்தின் ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ரூ. 50-க்கும் குறைந்த விலையில் கிடைத்த தேங்காய் ஒன்று தற்போது ரூ.100 வரையில் விற்பனையாகிறது. இந்த நெருக்கடி நிலை குறித்து ஊடகங்களிடம் பேசிய ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, “தேங்காய் சம்பலுக்கு கொஞ்சம் வெங்காயத்தை எப்படிச் சேர்ப்பது எனும் போராட்டத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்” என கவலை தெரிவித்துள்ளார். ”இந்த விலையை வாழ்நாளில் எதிர்கொண்டதில்லை” படக்குறிப்பு, இந்த விலை உயர்வை வாழ்நாளில் கண்டதில்லை என்கிறார், ஏ.எம். றிஸ்லி மரக்கறி வகைகளுக்கு இந்தளவு விலை அதிகரித்ததை தனது வாழ்நாளில் கண்டதில்லை என, கிழக்கு மாகாணம்-அக்கரைப்பற்றில் மரக்கறி மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் ஏ.எம். றிஸ்லி கூறுகிறார். 30 வருடங்களுக்கும் மேலாக இவர் மரக்கறி வியாபாரம் செய்கிறார். ‘ஆங்கில காய்கறிகள்’ எனப்படும் கேரட், பீன்ஸ், லீக்ஸ் (வெங்காய தாள்), கோவா (முட்டைக்கோஸ்), பீட்ரூட் போன்றவற்றை, அவை உற்பத்தி செய்யப்படும் நுவரெலியா பிரதேசத்திலிருந்து கொள்வனவு செய்துகொண்டு வந்து, அக்கரைப்பற்றில் றிஸ்லி விற்கிறார். அம்பாறை மாவட்டத்திலுள்ள பல வியாபாரிகள் இவரிடமிருந்து மரக்கறி வகைகளை மொத்தமாகக் கொள்வனவு செய்கின்றனர். சில்லறையாகவும் விற்கிறார். ”மரக்கறி வியாபாரத்தில் பல்வேறு சவால்கள் உள்ளன. சில மரக்கறி வகைகளை அன்றைய தினமே விற்று முடிக்க வேண்டும். மீதமானால் அவற்றை மறுநாள் விற்பது மிகவும் கடினம். அதேபோன்று, மரக்கறி வியாபாரத்தில் சேதாரம் அதிகம். உதாரணமாக, 63 கிலோகிராம் எடை கொண்ட ஒரு மூட்டை கோவாவை கொள்வனவு செய்யும் போது, அதில் 15 கிலோகிராம் சேதாரமாகிவிடும். அதேபோன்று, மரக்கறிகள் எடை குறைவதும் பெரிய சவாலாகும்” என, தனது வியாபாரத்திலுள்ள கஷ்ட நஷ்டங்கள் குறித்து றிஸ்லி பிபிசி தமிழிடம் பேசினார். படக்குறிப்பு, கேரட் ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை பன்மடங்கு அதிகரித்த கீரை விலை பச்சை மிளகாய், தக்காளி போன்றவற்றுக்கு இதற்கு முன்னர் இந்தளவு விலை உயர்ந்ததில்லை என்கிறார் றிஸ்லி. தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை, எரிபொருளுக்கான விலையேற்றம் ஆகியவை, மரக்கறி மற்றும் உப உணவுப் பொருட்களுக்கான அதிக விலையேற்றத்துக்கு பிரதான காரணம் என அவர் கூறுகிறார். கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பசலை கீரைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டமையினாலும், பின்னர் பசலை கீரைக்கான விலைகள் பன்மடங்கு அதிகரித்தமையினாலும், மரக்கறிகளுக்கு அதிகரித்த விலை, இன்னும் சாதாரண நிலைக்குத் திரும்பவில்லை எனவும் றிஸ்லி சுட்டிக்காட்டினார். அக்கரைப்பற்றிலிருந்து நுவரெலியா சென்று, அங்கு மரக்கறிகளை கொள்முதல் செய்து, மீண்டும் அக்கரைப்பற்றுக்கு வருவதற்காக சுமார் 450 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு கொண்டு வரும் மரக்கறி வகைகளை, ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் மட்டுமே லாபம் வைத்து தாம் விற்பனை செய்வதாகவும் றிஸ்லி குறிப்பிடுகின்றார். நுவரெலியாவிலிருந்து மரக்கறியைக் கொண்டு வரும் வாகனத்துக்கு டிசம்பர் 31-ஆம் தேதி, ஒரு கிலோ ரூ. 9 எனும் கணக்கில் போக்குவரத்துக் கூலி வழங்கியதாகவும், ஆனால் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து 12 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். படக்குறிப்பு, ஒரு கிலோகிராம் பீன்ஸ் 900 ரூபாய்க்கு விற்பனை பெட்ரோல் விலையும் உயர்வு நாட்டில் 13 வீதமாக இருந்த ‘வாட்’ வரியை 18 வீதமாக அரசு அதிகரித்துள்ளதோடு, முன்னர் ‘வாட்’ விதிக்கப்படாத பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வாட் வரி விதித்தமையே போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமைக்குக் காரணமாகும். எடுத்துக்காட்டாக எரிபொருள்களுக்கு முன்னர் ‘வாட்’ விதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், தற்போது 18 வீதம் ‘வாட்’ வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒரு லிட்டர் 346 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒக்டேன்-92 வகை பெட்ரோலின் விலை, தற்போது 366 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், ஒரு லிட்டர் 329 ரூயாய்க்கு விற்கப்பட்ட டீசல், தற்போது 358 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எரிபொருள் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, குறைவான லாபத்திற்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள் ”13 ஆயிரம் கிலோவுக்குப் பதிலாக 600 கிலோ மட்டுமே விளைச்சல்” இலங்கையில் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட ஆங்கில மரக்கறிகளை உற்பத்தி செய்யும் பிரதேசங்களில் வெலிமடையும் ஒன்றாகும். அங்கு இம்முறை கேரட் செய்கையில் ஈடுபட்டுள்ளார் சிப்லி அஹமட். ஊடக நிறுவனமொன்றில் பணியாற்றிய இவர், தற்போது ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டே, தனது சொந்த இடத்தில் கேரட் விவசாயத்திலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், மரக்கறிச் செய்கை தற்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சிப்லி அஹமட் கூறுகிறார். தொடர்ச்சியான மழை மற்றும் பசளைக்கான அதிக விலை போன்றவை மரக்கறி செய்கை பாதிக்கப்பட்டுள்ளமைக்கு பிரதான காரணங்கள் என்கிறார். ”50 கிராம் காரட் விதைகளை பயிரிட்டார், 90 நாட்களில் அவற்றிலிருந்து 600 கிலோகிராம் கேரட் அறுவடை செய்வோம். கேரட் செய்கைக்கு மழையும் வெயிலும் சம அளவில் வேண்டும். ஆனால், செப்டம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருக்கிறது. இதனால் மரக்கறிப் பயிர்களின் வளர்ச்சி மிகவும் குன்றிவிட்டது. மழை காலத்தில் நோய்களால் பயிர்கள் அதிகம் பாதிக்கப்படும், ஆனாலும் பூச்சி நாசினிகளை மழைக்காலத்தில் தெளிக்க முடியாது. தெளித்தாலும் பயிர்கள் மருந்தை உறிஞ்சுவதற்கு முன்னர் மழையில் கழுவுண்டு போய்விடும். என்னுடைய மாமா ஒருவர் 1,150 கிராம் கேரட் விதை பயிரிட்டார். அதிலிருந்து ஆகக்குறைந்தது 13,000 கிலோகிரம் கேரட் அறுவடையாகக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 600 கிலோகிராம் மட்டுமே அறுவடையானது. இப்படியான காரணங்களால் மரக்கறிக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது” என்கிறார் சிப்லி அஹமட். படக்குறிப்பு, சீரற்ற காலநிலையும் இதற்கு காரணமாக இருக்கிறது. இறங்காத அரிசி விலை இதற்கிடையில், அரிசிக்கான விலையும் அதிகரித்த நிலையிலேயே உள்ளது. சில்லறை விலையில் ஒரு கிலோ சாதாரண அரிசி 220 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த சிறுபோகத்தில் 5,500 ரூபாய்க்கு விற்பனையான 66 கிலோகிராம் எடைகொண்ட ஒரு மூட்டை நெல்லின் விலை, தற்போது 7,000 ரூபாயாக உள்ளது என்கிறார், அம்பாறை மாவட்டத்தில் அரிசி ஆலை நடத்தும் ஏ.எல். பதுறுதீன். இதேவேளை, தற்போதைய பெரும்போகத்தில் பெய்துவரும் அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல் விவசாயத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் நெல் உற்பத்தியில் 23 சதவீதம் பங்களிப்பு வழங்கும் அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக, நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் உள்ளடங்கலாக மூன்று மாவட்டங்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் இம்முறை பெரும்போகத்தில் 131,885.37 ஹெக்டேரில் நெல் விவசாயம் மேற்கொள்ள எதிர்பார்த்திருந்த நிலையில் 1,25,376.62 ஹெக்டேரில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நெல் விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவை தொடர்பான கணக்கெடுப்பு காலநிலை சீரான பின்னரே மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேயிலை மற்றும் தேங்காய் எண்ணெய்க்கும் ‘வாட்’ வரி ”’வாட்’ மூலம் 1,400 பில்லியன் ரூபாய் வருமானம் பெறத் தீர்மானம்” நாட்டில் 15 சதவீதமாக இருந்த ‘வாட்’ வரி, 2024-ஆம் ஆண்டிலிருந்து 18 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, 2024-ஆம் ஆண்டில் ‘வாட்’ வரி மூலமாக 1,400 பில்லியன் ரூபாயை அரச வருமானமாக பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி அலுவலக அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரந்த தெரிவித்திருந்தார். 2023-ஆம் ஆண்டு ’வாட்’ வரி மூலம் 600 பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 450 பில்லியன் ரூபாய் மட்டுமே கிடைத்தது என்றும் அவர் கூறியிருந்தார். கல்விச் சேவை, மின்சாரம், சுகாதாரம், மருத்துவம், பயணிகள் போக்குவரத்து, உணவு, காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட சுமார் 90 வகையான பொருட்களுக்கு ‘வாட்’ வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், முன்னர் ‘வாட்’ விதிக்கப்படாத 97 வகையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிதாக ‘வாட்’ வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ரசாயன உரங்களுக்கு ‘வாட்’ வரி விதிக்கப்பட்டுள்ளதோடு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, தேயிலை மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றுக்கும் ‘வாட்’ வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ”ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி விடும்” படக்குறிப்பு, வரி விதிப்பால் மேலும் பாதகம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார், பேராசிரியர் ஏ.எல். ரஊப் ஆனால், இந்த வரி விதிப்பானது மக்களுக்கு மென்மேலும் பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை தலைமைப் பேராசிரியர் ஏ.எல். ரஊப் கூறுகின்றார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தாமல், அல்லது அதற்குரிய திட்டங்களை முன்வைக்காமல், வரி விதிப்பின் மூலம்தான் நாட்டின் வருமானத்தைப் பெறலாம் எனும் யுக்தியை தொடர்ந்து கடைபிடிப்பது, தற்போதைய காலத்துக்குப் பொருத்தமற்றது எனவும் அவர் தெரிவிக்கின்றார். குறிப்பாக, உள்நாட்டு உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கான எந்தத் திட்டமும் முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். எடுத்துக்காட்டாக, விவசாயத்துறை மற்றும் பால் உற்பத்தி துறை போன்றவற்றை மேம்படுத்துவதற்காக எந்தவித திட்டங்களையும் அரசாங்கம் கொண்டு வரவில்லை எனவும் பேராசிரியர் குறிப்பிடுகின்றார். ”தமது வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய முடியாத சிக்கலானதொரு சூழ்நிலையில் மக்கள் உள்ளனர். மக்களின் வருமானத்தில் எந்தவித அதிகரிப்பும் இல்லாத நிலையில், மக்களுக்கு வரி விதித்து, அவர்களின் வாழ்க்கைச் செலவில் திடீரென அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளமை பாரதூரமான விடயம்” எனவும் அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கல்வி, மருத்துவ செலவுகளை குறைக்கும் மக்கள் கல்வி, மருத்துவ செலவுகளை குறைக்கும் நிலை நாளாந்த செலவுகளை நிறைவேற்ற முடியாத மக்களிடம் வரியை அதிகரித்து வசூலிப்பது, எந்த வகையிலும் நியாயமில்லை எனவும் பேராசிரியர் ரஊப் குறிப்படுகின்றார். இதனால் மக்கள் தமக்கான கல்வி மற்றும் மருத்துவம் போன்றவற்றுக்குரிய செலவுகளை குறைப்பதற்கு அல்லது கைவிடுவதற்கான நிலை ஏற்படும் எனவும் அவர் கவலை தெரிவித்தார். ”வரிகள் மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டு, ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துதான் அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால், நாளாந்த வாழ்க்கையை நடத்துவதற்கே பொருளாதார ரீதியாக தடுமாறும் மக்களிடம், வரிக்கு மேல் வரியை அரசாங்கம் அறவிட்க் கொண்டிருக்கிறது” எனக்கூறிய தலைமைப் பேராசிரியர் ரஊப் ”இந்த நிலைமையானது ஏழைகளை இன்னும் ஏழைகளாக்கி விடும்” என்று கவலை தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cxe61ly13mro
-
விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
ஓமண்ணை, மறைந்து வாழ்பவர்களை வெளிப்படுத்த வந்தாவோ என எண்ணுகிறேன்.
-
நீதிமன்றத்தை அவமதித்த இராணுவ உயர் அதிகாரிக்கு விளக்கமறியல்
09 JAN, 2024 | 05:16 PM நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றத்தினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பாக குறித்த இராணுவ அதிகாரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தனது வரவைப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் விடுத்த உத்தரவை குறித்த இராணுவ அதிகாரி அவமதித்ததன் காரணமாக பிணை முறியை மீறிய குற்றத்திற்காக நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியல் உத்தரவை இன்று (9) மேல் நீதிமன்ற நீதிபதி திருச்செல்வம் ஜோசப் பிரபாகரன் விதித்தார். மேற்படி இராணுவ உயர் அதிகாரி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173553
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு 250 மில்லியன் ரூபா செலவிடுவதால் நாட்டுக்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன - சஜித் கேள்வி Published By: VISHNU 09 JAN, 2024 | 05:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டு மக்கள் பாரிய பாொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் நிலையில் ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு அரசாங்கம் 250 மில்லியன் ரூபா செலவிட்டு கடற்படை கப்பலை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நன்மை என்ன என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 250 மில்லியன் ரூபா செலவழித்து ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு கடற்படையின் கப்பல் ஒன்றை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு அன்றாட உணவு வேளை ஒன்றை வழங்க முடியாமல் இருக்கும் நிலையில், குறிப்பாக நாட்டில் இருக்கும் 220 இலட்சம் பேரும் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டத்துடன் இருந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் 250 மில்லியன் ரூபா செலவழித்து எமது கடற்படையின் கப்பலை ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு அனுப்புவதன் மூலம் எமக்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன என கேட்கிறோம். குறைந்தபட்சம் அரசாங்கம் இவ்வாறு 250 மில்லியன் ரூபாவை முதலீடுசெய்வதன் மூலம் எமது நாடு கடன் பெற்றுக்கொண்டுள்ள நாடுகள் எமது கடனில் 25 பில்லியனாவது குறைப்பதாக வாக்குறுதி வழங்கி இருக்கிறதா? எமது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் நாட்டுக்கு சாதகமான விடயங்களுடனே சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அர்ப்பணிப்புக்காக சர்வதேசம் எமக்கு வழங்கப்போகும் பிரதி உபகாரம் என்ன? இவ்வாறான ஏதாவது இணக்கப்பாடுடனா அரசாங்கம் இந்த 250 மில்லியன் ரூபாவை செலவழிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது? அதனால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினை விளங்குவதில்லையா? பாடசாலை மாணவர்களுக்கு கணனி வசதி இல்லாமல் இருக்கிறது. இந்த 250 மில்லின் ரூபாவையும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கணனிகளை பெற்றுக்கொள்ள ஒதுக்க முடியும்தானே. எனவே நாட்டில் இவ்வளவு பாரிய தேவைகள் இருக்கும்போது அரசாங்கம் எதற்காக இவ்வாறு செயற்படுகிறது என கேட்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/173521
-
மின் கட்டணம் செலுத்தாத 10 இலட்சம் பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிப்பு - காஞ்சன
Published By: VISHNU 09 JAN, 2024 | 05:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மின்கட்டணம் செலுத்தாத 10 இலட்சத்து 64 ஆயிரத்து 400 மின்பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை குறைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஊடக கண்காட்சிக்காக எதிர்க்கட்சித் தலைவர் மின்கட்டண குறைப்பு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற அமர்வின் போது இருபத்தேழு இரண்டின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, மொத்த சனத்தொகையில் வீட்டு மின்பாவனையாளர்கள் உட்பட 76 இலட்சத்து 3923 மின்பாவனையாளர்கள் அரச மற்றும் தனியார் மின்விநியோக கட்டமைப்பின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்கிறார்கள். பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் மின்கட்டணம் செலுத்தாத 10 இலட்சத்து 64 ஆயிரத்து 400 மின்பாவனையாளர்களின் மின்கட்டணம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படவில்லை. எதிர்வரும் வாரமளவில் யோசனை முன்வைக்கப்படும். பொது மக்களின் கருத்து கோரலுடன் மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும். மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் தீர்மானம் கடந்த மாதம் 05 ஆம் திகதி அமைச்சரவை அங்கிகாரத்துடன் எடுக்கப்பட்டது. கட்டண திருத்தத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனை ஊடக காட்சிப்படுத்தல் என்றே குறிப்பிட வேண்டும். ஊடக காட்சிப்படுத்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு எதிர்க்கட்சித், தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் பாரிய போட்டி நிலவுகிறது என்றார். https://www.virakesari.lk/article/173545
-
தமிழ்நாட்டில் ஜனவரி மாதமும் தொடரும் கனமழை - 'லா நினோ' காரணமா?
படக்குறிப்பு, புதுச்சேரி மழை பாதிப்புகள் 8 ஜனவரி 2024 தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தைக் கடந்தும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கடந்த இரு தினங்களாகவே பரவலாக கனமழை பெய்துவருகிறது. திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக, சென்னையில் ஜன. 07 அன்று நாள் முழுவதும் மழை தொடர்ந்தது. புதுச்சேரியிலும் மழை பெய்துவருகிறது. இன்று (ஜன. 08) மதியம் ஒரு மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 24 செ.மீ., கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 23 செ.மீ., நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 22 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,TAMILNADU WEATHERMAN/X வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழை பெய்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜன. 9, 10 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3-4 ஆண்டுகளாகவே ஜனவரி மாதத்தில் மழை பெய்வது வழக்கமாகியுள்ளது. இதுவொரு `புதிய இயல்பா?`, இதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணமா? விவசாயிகள், பொதுமக்கள் இதற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டுமா என்ற கேள்விகள் இதையொட்டி எழுகின்றன. பட மூலாதாரம்,TAMILNADU WEATHERMAN/X லா நினோ காரணமா? இதுதொடர்பாக, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் `எக்ஸ்` (ட்விட்டர்) தளத்தில், "கடந்த 4 ஆண்டுகளாகவே ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் மழை பெய்வது வழக்கமாகிவிட்டது. தமிழ்நாட்டுக்கு அருகே கிழக்கு நோக்கி வீசும் காற்று, மேற்கு நோக்கி வீசும் காற்றுடன் தொடர்புகொள்வதால் இந்த மழை பெய்துவருகிறது" என பதிவிட்டிருந்தார். ஜனவரி மாதத்திலும் தமிழகத்தில் ஏன் மழை பெய்கிறது என்ற கேள்வியை தனியார் வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்திடம் எழுப்பினோம். "கடந்த 2-3 ஆண்டுகளாக லா நினோ விளைவு இருந்தது. அப்படியிருந்தால் பருவமழை சிறிது தாமதமாகத்தான் முடிவுக்கு வரும். இப்போது ஜனவரி முதல் வாரம் தான். அதனால் இதனை டிசம்பர் கடைசி வாரம் என்றே எடுத்துக் கொள்ளலாம். மேலும் பருவமழை தாமதமாக தொடங்கியதும் ஜனவரி மாதமும் பெய்யும் இந்த மழைக்குக் காரணமாக இருக்கலாம்" என்றார். மேலும், 2022-ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் வாரத்திற்கு பிறகும் மழை தொடர்ந்தது என தெரிவித்த அவர், இந்தாண்டு அப்படியிருக்காது என்றும் கூறினார். 1964-ஆம் ஆண்டில் தனுஷ்கோடியில் டிசம்பர் இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட `தானே` போன்ற புயல்களை ஸ்ரீகாந்த் உதாரணமாக காட்டுகிறார். `தானே` புயலின் போது லா நினோ விளைவு இருந்ததாக கூறுகிறார். லா நினோ இருந்தால் டிசம்பர் இறுதி, ஜனவரி முதல் வாரத்தில் மழை தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் அவர். பட மூலாதாரம்,TAMILNADU WEATHERMAN/X லா நினோ என்பது என்ன? "லா நினோ என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் வெப்பநிலை குறைந்து, மழைக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் நிலவும் வானிலையாகும். வெப்ப மண்டல காற்றுக்கூறுகள் மெதுவாகத்தான் பூமத்திய ரேகைக்கு தெற்கே நகரும். பூமத்திய ரேகையை நெருங்கி சென்றால்தான் மழை குறையும். லா நினோ வானிலையின் போது இந்த செயல்முறை மெதுவாக நடக்கும். எனவே, மழை தொடரும்" என்றார். எனினும், இப்போது பெய்யும் மழை `லா நினோ` விளைவால் ஏற்பட்டதல்ல என்கிறார் ஸ்ரீகாந்த். ஜனவரி மழைக்கு என்ன காரணம்? "வடகிழக்குப் பருவ மழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்திற்கு இடைப்பட்ட காலங்களில் மேற்கத்திய கலக்கம், மேடேன் ஜூலியன் ஒத்த அலைவு (MJO) மற்றும் வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதி (ITCZ) இவைகளின் நிலையே மழைக்கான முக்கிய காரணிகள். இந்த மூன்று காரணிகளில் ஏதேனும் ஒன்று சாதகமான சூழலில் இருந்தால் குளிர்கால / வெப்ப சலன மழை தென் இந்திய பகுதியில் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும்" என்பது ஸ்ரீகாந்த் போன்ற வானிலை ஆர்வலர்களின் விளக்கமாக இருக்கிறது. இதில், மேற்கத்திய கலக்கம் (Western disturbance) என்ற வானிலை நிகழ்வு, மழையை ஏற்படுத்தி வெப்பநிலையை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேடன் -ஜூலியன் அலைவு ( MJO ) என்பது வெப்பமண்டல வளிமண்டலத்தில் உள்ள பருவகால மாறுபாட்டின் முக்கிய அங்கமாகும். தற்போது தமிழகத்தில் பெய்யும் மழைக்கு எம்.ஜே.ஓ, மேற்கத்திய கலக்கம் போன்ற இரு சூழல்களும் சாதகமாக இருப்பதே காரணம் என்கிறார் அவர். "இந்த சாத்தியக்கூறுகள் இல்லையென்றால் இம்மழை இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தென் தமிழகத்தில் மட்டும் ஒருவேளை மழை பெய்திருக்கலாம்" என்கிறார் ஸ்ரீகாந்த். கடல் வெப்பம் அதிகமானால் மழையின் தன்மையில் இத்தகைய மாறுதல்கள் ஏற்படலாம் என அவர் கூறுகிறார். இப்படி பருவமழை அல்லாத காலங்களில் பெய்யும் மழையை ஓரளவு கணிக்க முடியும் எனக்கூறும் அவர், எனினும் எந்த பகுதிகளில் அதிக மழை இருக்கும் என்பதை சொல்ல முடியாது என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய இயல்பா? காலநிலை மாற்றம் இதற்கு காரணமா என `பூவுலகின் நண்பர்கள்` அமைப்பின் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, "கடந்த நான்கு ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஜனவரி மாதமும் மழை பெய்துவருகிறது. இதுவொரு புதிய இயல்புதான். பருவமழை தன்மைகள் மாறுபடுவதே காலநிலை மாற்றத்தால்தான். வளைகுடா நீரோட்டம், எம்.ஜே.ஓ போன்றவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அரபி கடலிலும் வெப்பம் அதிகரித்து அங்கேயும் பல புயல்கள் உருவாகி வருகின்றன. இந்த வானிலை மாறுதல்கள், இந்திய பருவமழையில் குறிப்பாக வடகிழக்குப் பருவமழையில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" என்றார். பாதிக்கப்படும் விவசாயிகள் இப்படி பருவம் தப்பிய மழையால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர். ஜனவரி மாதம் பெரும்பாலான பகுதிகளில் அறுவடை காலம்.மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கள்ளக்குறிச்சி அருகே மரூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டு கூறுகையில், "பருவம் தவறி பெய்த மழையால் தனது மூன்று ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த நெல் முற்றிலும் நாசமாகி போனது. எப்போதும் `தை பிறந்தால் வழி பிறக்கும்` என்பதற்கு ஏற்ப தை மாத அறுவடைக்குத் தயாராக இருக்கும் இந்த நேரத்தில் பெய்த மழையானது முழுமையான சேதத்தைக் கொடுத்து விட்டது" என தெரிவித்தார். புதுச்சேரி பகுதி கருக்கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில், "நெல் அறுவடை செய்ய வேண்டிய இந்த நேரத்தில் கதிர் முற்றி இருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த மழை எதிர்பார்க்காத ஒன்று. இதனால் செய்த செலவு கூட வராது அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கி விட்டன என்ன செய்வது என்று தெரியவில்லை. வரத்து வாய்க்காலை தூர்வாரி இருந்தால் நஷ்டத்தை சற்று குறைத்திருக்கலாம் அல்லது தடுத்திருக்கலாம்" என தெரிவித்தார். எங்கெல்லாம் பாதிப்புகள்? திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வலங்கைமான் பேரூராட்சி 14-வது வார்டு கோவில்பத்து பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட தாமரைக்குளம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாயினர். புதுச்சேரி கிருமாம்பாக்கம், ஏம்பலம், பாகூர் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. https://www.bbc.com/tamil/articles/cz9qr4pwp75o
-
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலத்தின் பின்னணியில் பாரிய சூழ்ச்சி - வீரசேகர
Published By: VISHNU 09 JAN, 2024 | 08:11 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தேசிய ஒற்றுமையை, நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயங்களை செயற்படுத்த வேண்டும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகத்தை ஸ்தாபித்ததன் பின்னர் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் அதனையும் செய்ய வேண்டும். ஆகவே நாட்டின் ஒற்றையாட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தும் எதற்கும் ஆதரவு வழங்க முடியாது. இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டார். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இந்த ஆணைக்குழு ஊடாக இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்ட முடியும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ அதிகாரிகள் இன்று தண்டிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான சட்டமூலத்தில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதற்கு உருவாக்கப்பட்ட அரச கொள்கைகளை செயற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் இந்த அலுவலகத்தின் ஊடாக அதனையும் செயற்படுத்த வேண்டும். 29 ஆயிரம் இராணுவத்தினர் இதற்காகவே உயிர் நீத்தார்கள். தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலம் சூழ்ச்சி நிறைந்தது. எதிர்காலத்தில் இராணுவத்தினருக்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், தேசிய நீரளவை சட்டமூலம் என்பன மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/173569
-
விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
இதற்காக தானோ அவங்க வந்தாங்க!
-
பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம் - பொ.ஐங்கரநேசன் அழைப்பு
ஓமண்ணை.
-
தேசிய வருமான வரி : வருடத்திற்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் பதிவு செய்தல் கட்டாயம்
பிரதேச செயலகங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களில் TIN வழங்க தனி கருமபீடங்கள் அமைக்க நடவடிக்கை 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) வழங்குவதற்காக அனைத்து பிரதேச செயலகங்களிலும் தனியான கருமபீடங்களை திறக்குமாறு நிதி அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அரச வங்கிகள், ஆட் பதிவு திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் போன்ற இடங்களில் இது தொடர்பான கருமபீடங்களை திறக்க ஏற்பாடு செய்யுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார். TIN வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம், அரச நிர்வாகம் மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) ஆகியவற்றின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அனைத்து பிரதேச செயலகங்களும் பொது மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். முன்னர் செய்தது போல், எரிபொருளுக்கான QR குறியீடுகளை வழங்குவதைப் போன்றே, TIN வழங்குவதற்கான திறமையான செயல்முறையை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தற்போதைய ஒன்லைன் பதிவு விண்ணப்பப் படிவத்தை சுருக்கவும், ஐந்து நாட்களுக்குள் எண்ணை வழங்குவதற்கான நேரத்தை விரைவுபடுத்தவும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/287577
-
யாழ். பொலிஸாரின் நிர்வாக ஊழலுக்கு நடவடிக்கை வேண்டும் - யாழ். சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தவபாலன் ஜனாதிபதியிடம் கோரிக்கை
09 JAN, 2024 | 11:37 AM யாழ்ப்பாண பொலிஸாரின் நிர்வாக ஊழல் மற்றும் பொதுமக்கள் சட்டத்தரணிகள் மீது ஆதாரமற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தவபாலன் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண விஜயத்தின் போது வட மாகாண ஆளுநர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார். அவர் தனது கோரிக்கையில் தெரிவித்த முக்கிய விடயங்களாவன, யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். வட மாகாணத்தில் இருந்து வெளிச் செல்லும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் தமிழ் மொழியில் தமது பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு வசதிகள் இல்லை. இந்தப் பிரச்சனையை தீர்கும் முகமாக ஜனாதிபது உடன் தலையீடு செய்து தமிழ் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுக்க வேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸாரின் நிர்வாக ஊழல்கள் அதிகரித்துள்ள நிலையில் சட்டத்தரணிகளை ஆதாரமின்றி முகதாவணையில் கைது செய்யும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். அது மட்டுமல்லாது பொது மக்களை கைது செய்யும்போது தகுந்த காரணங்கள் ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் அது தொடர்பில் பொலிஸ்மா ஆதிபருக்கு ஜனாதிபதி பணிபுரை விடுக்க வேண்டும். மேலும் இலங்கையில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதியரசர்களில் தமிழ் நீதியரசர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று தமிழ் நீதியரசர்களையும் உயர்நீதிமன்றத்தில் ஐந்து தமிழ் நிதியரசர்களையும் நியமிக்க வேண்டும். இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்களை வலியுறுத்தி பதின்நான்கு பக்க அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/173483
-
கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் படகோட்ட போட்டி!
2024 பிரமாண்ட கிழக்கு மாகாண கலாச்சாரப் பொங்கல் திருவிழா புகைப்படங்கள் 1008 பொங்கல் பானைகள், 1500 பரத நாட்டிய கலைஞர்கள், 500 கோலங்கள். இவை அனைத்தும் பாடசாலை மாணவர்களை ஒன்று சேர்த்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருகோணமலையில் நடைபெற்றது. https://thinakkural.lk/article/287524
-
கொழும்பில் நங்கூரமிட்டுள்ள இந்திய கப்பல் !
இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் கப்ரா கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. 50 மீற்றர் நீளமுடைய இந்த கப்பலில் 55 பணிக்குழாமினரும் இலங்கை வந்துள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஐ.என்.எஸ் கப்ரா நாளை வரை கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/287489
-
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு !
09 JAN, 2024 | 11:36 AM நாட்டில் வற் வரி அதிகரித்த நிலையில் பல அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. இந்நிலையில் சில பகுதிகளில் சீனி, உப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், கோதுமை மா, பருப்பு மற்றும் சில அரிசி வகைகளின் விலைகளும் உயர்வடைந்துள்ளன. இதன்படி , 300 ரூபாவாக இருந்த பருப்பு 1 கிலோ 350 ரூபாவாகவும், 290 ரூபாவாக இருந்த சீனி 1 கிலோ 320 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன. https://www.virakesari.lk/article/173486
-
கனேடியத் தூதுவர் யாழிற்கு விஜயம்
Published By: DIGITAL DESK 3 09 JAN, 2024 | 01:46 PM இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ், தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (09) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இக்குழுவினர் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு வருகை தந்ததுடன் பொதுசன நூலகத்தின் தற்போதைய நிலைகள், வாசகர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும், மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கை தொடர்பாகவும் விரிவாக யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலனுடன் விரிவாக இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ் கலந்துரையாடினார். இதில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகர் அனுசுயா சிவகுமார், உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், பொதுநூலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/173511
-
சிரிக்க மட்டும் வாங்க
நம்மட கூட்டாளி ஒருத்தரும் ட்ரக்கோட இழுத்து வந்ததாகச் சொன்னவர்!
-
பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம் - பொ.ஐங்கரநேசன் அழைப்பு
பங்கமில்லா வாழ்வுபெறப் பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம் - பொ.ஐங்கரநேசன் அழைப்பு 09 JAN, 2024 | 01:31 PM தமிழ் மக்களின் தேசியத் திருநாட்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாகும். தொன்றுதொட்டு இவ்விழாவில் இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கல் இடம்பெற்று வந்துள்ளது. ஆனால், மண்பானைகளின் இடத்தை இப்போது அலுமினியப் பானைகள் ஆக்கிரமித்து வருகின்றன. அலுமினியப் பானைகள் இயற்கையைப் போற்றுகின்ற ஒரு விழாவுக்குப் பொருத்தமற்றது என்பதோடு, உடல் நலத்துக்குக் கேடானதாகவும் உள்ளன. தமிழர் பண்பாடும் உடல் நலமும் பங்கமில்லாத வாழ்வுபெறப் பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். தைப்பொங்கலில் மண்பானைகளின் முக்கியத்துவம்பற்றி பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், அலுமினியம் மிகவும் இலேசான உலோகம், ஆகையால் இலகுவில் வெப்பத்தைக் கடத்த வல்லது. இதனால், சமையலை விரைந்து முடிக்க வல்லது. நெளிந்து வளைந்தாலும் உடைந்துவிடாது, ஒப்பீட்டளவில் விலை மலிவானது. இவை போன்ற காரணங்களால் சமையல் அறைகளில் பிரதான பாத்திரங்களாக அலுமினியப் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அலுமினியப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது அலுமினியம் உணவுடன் சேர்வதைத் தவிர்க்கும் பொருட்டுப் பாத்திரத்தின் உட்பகுதியில் அலுமினியம் ஒட்சைட்டுப் படலம் இடப்படுகிறது. அலுமினியப் பாத்திரங்களைத் தேய்த்துச் சுத்தம் செய்யும்போது பாதுகாப்புப்படலம் தேய்வடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுகிறது. மேலும், சமைக்கப்படும் உணவுப் பொருளின் அமிலகார இயல்பு, சேர்க்கப்படும் உப்பு சமையல் வெப்பநிலை ஆகியனவற்றைப் பொறுத்து அலுமினியம் கரைந்து உணவுடன் கலப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. உடலுடன் சேரும் அலுமினியம் மூளை நரம்புகளைப் பாதிப்பதுடன் ஏற்கனவே சிறுநீரக நோயுடையவர்களின் சிறுநீரகங்களை மேலும் பாதிப்படையவும் செய்கிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மட்பாத்திரங்கள் அவற்றின் மேற்பரப்பில் இயற்கையாகவே உள்ள நுண்துளைகள் ஊடாக வெப்பத்தைப் பரவி உணவைச் சீராக வேகவைக்கிறது. மெதுவாகவே சூடுபடுத்துவதால் உணவில் போசணைப்பொருட்களின் அழிவு தவிர்க்கப்படுகிறது. மண் கார இயல்பு கொண்டதால் உணவில் அமிலத் தன்மையை சமன் செய்கிறது. சமைக்கும்போது மண்ணிலிருந்து கனியுப்புகள் உணவிற்கு விடுவிக்கப்படுவதால் உணவு கூடுதல் போசணைப்பெறுமானம் பெறுகிறது. மேலும் உணவின் வாசனையுடன் மண்ணின் வாசனையும் சேர்ந்து உணவுக்குக் கூடுதல் சுவையையும் தருகிறது. எதனையுமே அவசரகதியில் செய்துவிடத் துடிக்கும் நாம் உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டிய சமையலையும் அவ்வாறே விரைந்து முடிக்கத் தலைப்பட்டு உலோகப் பாத்திரங்களை நாடியுள்ளோம். இதன் விளைவாக நோயின் வாய்ப்பட்டும் வருகிறோம். மட்பாண்டங்களுக்கு முழுமையாகத் திரும்புதல் இயலாததாக இருக்கலாம். எனினும் தமிழ் மக்களின் இயற்கையைப் போற்றும் தைப்பொங்கல் திருநாளிலாவது மண்பானைகளில் பொங்கல் இடுவோம். இது நலிவடைந்துள்ள மட்பாண்டக் கைவினைஞர்களது வாழ்வு வளம்பெறவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/173508
-
ஊருலா
இளந்தாரியள் வர முதல் ஓடுவம்😜
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
லெபனானில் இஸ்ரேல் விமான தாக்குதல் - ஹெஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி பலி Published By: RAJEEBAN 09 JAN, 2024 | 10:49 AM லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். தென்லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு விசாம் டவில் என்பவரே கொல்லப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது. ஹெஸ்புல்லா அமைப்பின் விசேட படையணியான ரட்வான் படையணியின் முக்கிய உறுப்பினரான விசாம் டவில் என்பவரே இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேலிய இராணுவம் இது குறித்து கருத்து தெரிவிக்காத அதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பினர் தங்களை நோக்கி தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. கிர்பேர்ட் செலிமின் டப்சா பகுதியில் கார் ஒன்றை இலக்குவைத்து இஸ்ரேல் ஆரம்பித்துள்ள மேற்கொண்ட விமானதாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமானதாக்குதல் காரணமாக கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.எரிந்த கார் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/173477
-
ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் கோரிக்கையை ஏற்று 17 பேரையும் விடுவித்த யாழ்ப்பாண நீதிமன்றம்
08 JAN, 2024 | 10:55 PM 2023 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தினத்தின் போது ஜனாதிபதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வரும் போது அதற்கு எதிராக எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தமை, தெற்கில் இருந்து பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட இரு குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 17 நபர்களை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்தது. குறித்த வழக்கானது இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக் கொண்டபோதே இவ் வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த மன்றில் ஆயராகிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சாள்ஸ் நிர்மில நாதன், செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன், சிவில் அமைப்பினர்கள், வேலன் சுவாமிகள், சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர்கள் நீதிவான் நீதிமன்றில் ஆயராகியிருந்தனர். குறித்த வழக்கில் சட்டத்தரணியாக மன்றில் ஆயராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.டி.தவராஜா உடன் இருந்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பொலிஸாரின் மேலதிக விசாரணைக்காக சட்டமா திணைக்களத்தின் ஆலோசனை பெறவுள்ளதாக மன்றில் பொஸிஸார் கூறியிருந்தனர். அதற்கான விண்ணப்பம் ஒன்றினை மன்றில் நான் சட்டத்தரணியாக சமர்ப்பித்திருந்தேன். இந்த வழக்கில் ஈட்டு அனைவரையும் விடுதலை செய்யுமாறு விண்ணப்பம் செய்து இருந்தேன். அதனை கேட்ட யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.ஆனந்தராஜா வழக்கினை கிடப்பில் போட்டு சகலரையும் விடுதலையாக்கினார் - என்றார். https://www.virakesari.lk/article/173459
-
இலங்கை வருகிறார் ஜப்பானிய நிதியமைச்சர்
ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி இலங்கை வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி ஜனவரி 11 முதல் 12 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜப்பானிய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். ஜப்பான் நிதி அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் பாராளுமன்றம், ஜயவர்தன மையம், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை, கொழும்பு கப்பல்துறை மற்றும் லங்கா நிப்பென் பிஸ்டெக் நிறுவனம் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளனர். https://thinakkural.lk/article/287443
-
தேசிய வருமான வரி : வருடத்திற்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் பதிவு செய்தல் கட்டாயம்
வரிக்கோப்பு இலக்கம் பெப்ரவரி முதல் அமுலுக்கு வருகிறது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 08 JAN, 2024 | 06:37 PM இந்த நாட்டில் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் 10 இலட்சம் பேர் இருந்தும், 05 இலட்சம் பேர் மாத்திரமே வரி செலுத்தி வருவதால், மறைமுக வரியை குறைக்கவும், நேரடி வரியை அதிகரிக்கவும், வரி ஏய்ப்பு செய்யும் சுமார் 05 இலட்சம் பேரையும் வரி வலைக்குள் கொண்டு வர வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். வரி செலுத்துபவர் ஒரு நாட்டில் ஸ்திரத்தன்மையை அடைந்த பலம் வாய்ந்த குடிமகன் என்றும், அது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், இந்த நாட்டு மக்களும் இத்தகைய மனப்பான்மையைக் கொண்டுவருவது நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். பெப்ரவரி முதல் திகதியில் இருந்து வரிக்கோப்பு இலக்கத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய, 2019ஆம் ஆண்டின் இறுதியில் 1,705,233 ஆக இருந்த வரிக் கோப்புகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டின் இறுதியில் 437,547 ஆகக் குறைந்துள்ளது. எமது அரசாங்கத்தின் புதிய கொள்கைகளால், டிசம்பர் 31, 2023 ஆண்டுக்குள் வரிக் கோப்புகளின் எண்ணிக்கையை 1,002,029 ஆக உயர்த்த முடிந்தது. நாம் மேலும் அந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும். அத்துடன், கடந்த வருட இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 08% ஆக இருந்த அரச வருமானத்தை 10% ஆக அதிகரிக்க முடிந்தது. 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதை 12% ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளோம். ஓரளவு நிலையான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாறுவதற்கு 2025 ஆம் ஆண்டளவில் 15% ஆக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். மேலும், வற் வரிக்கு சில திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இதுவரை 15% ஆக இருந்த வற் வரி 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 80 மில்லியன் ரூபாவாக இருந்த வற் வரி எல்லை 60 மில்லியன் ரூபாவாக அமையும். 2001 இல் வற் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகள் வற் வரிக்கு உட்பட்டது. அதில் குறைந்த எண்ணிக்கையிலான பொருட்களுக்கு வரி திருத்தச் சட்டத்தின் ஊடாக விலக்களிக்கப்பட்டன. விலக்கு அளிக்கப்பட்ட 138 பொருட்கள் மற்றும் சேவைகளில், 97 வகையானவை இந்தத் திருத்தத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. வற் வரி திருத்தத்தின் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரச வருமானம் 2.07% இனால் உயரும். இது 645 பில்லியன் ரூபாய். வரி விகிதங்களின் அதிகரிப்புடன் பணவீக்கம் 2.5% அதிகரிக்கும் என மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு பகுப்பாய்வு செய்துள்ளது. மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதன் மூலம் பணவீக்கத்தை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் மீண்டும் 5%க்குக் கொண்டு வர முடியும் என மத்திய வங்கியும் நிதி அமைச்சும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. 70% பணவீக்கம் இருந்த நாட்டில் தற்போது 5% பணவீக்க விகிதத்தை பேணவே நாம் முயற்சிக்கிறோம். அத்துடன், இந்த நெருக்கடி நிலையிலும் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது எமது நிதி முகாமைத்துவத் திறன்களின் தனித்துவமான அம்சமாகும். இன்று நேரடி வரிகள் 30% ஆகவும் மறைமுக வரிகள் 70% ஆகவும் உள்ளது. இந்த வரி விகிதத்தை மாற்றி, நேரடி வரி விகிதத்தை 40%க்கு கொண்டு வருவதே எமது இலக்கு. உலகில் அபிவிருத்தி அடைந்த ஒரு நாட்டின் நிலை அதுவேயாகும். வரி செலுத்தக்கூடிய பலம் வாய்ந்த 1 மில்லியன் மக்கள் உள்ளனர், ஆனால் தற்போது 05 இலட்சம் பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். எனவே, வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து, அவர்களை வரி வலைக்குள்ளே கொண்டு வர வேண்டும். பின்னர் மறைமுக வரிகளை குறைக்க முடியும். பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து வரிக்கோப்பு இலக்கத்தை அமுல்படுத்தத் தயாராகி வருகிறோம். தற்போது அதனைப் பதிவு செய்வதில் சிக்கல்கள் உள்ளன. மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக உள்ளதால் தான் அந்தப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. எனவே பிரதேச செயலக மட்டத்தில் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஆலோசித்து வருகிறோம். அதனை ஒன்லைன் முறை மூலம் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். வரி செலுத்துபவர் ஒரு நாட்டில் ஸ்திரத்தன்மையை அடைந்த வலிமையான பிரஜை என்பது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இவ்வாறு மக்களின் மனப்பான்மையை மாற்றுவது முக்கியம். எனவே இத்திட்டம் வெற்றியடைய அனைவரின் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/173463
-
கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் படகோட்ட போட்டி!
கிழக்கு ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வில் மற்றுமொரு அம்சமாக கிண்ணியாவில் 55 படகுகளுடன் 110 போட்டியாளர்கள் பங்கேற்ற படகோட்ட போட்டி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அததியாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் வெங்கடேஸ்வரன் பங்கேற்றதுடன், படகோட்ட போட்டியை ஆளுநர் செந்தில் தொண்டமான், டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தனர். இப்போட்டியை பார்ப்பதற்காக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாயர்கள் திரண்டு இருந்தனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 100000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 50000 ரூபாவும், மூன்றாம் பரிசாக 25000 ரூபாயும் வழங்கி வைக்கப்பட்டது. https://thinakkural.lk/article/287420