Everything posted by ஏராளன்
-
கலைஞர் நூற்றாண்டு விழா
கலைஞர் 100 விழாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசனை சீண்டினாரா? என்ன நடந்தது? பட மூலாதாரம்,DIPR கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உட்பட 12 திரைப்பட அமைப்புகள் இணைந்து 'கலைஞர் 100' என்ற பெயரில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு நூற்றாண்டு விழாவை சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்தி முடித்துள்ளனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும், திரை பிரபலங்களான ரஜினி, கமல், சிவராஜ்குமார், சிவகுமார், கார்த்தி, சூர்யா, தனுஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோஹினி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, கௌதமி, வடிவேலு, சோனியா அகர்வால், ராய் லட்சுமி, லட்சுமி மேனன், சாயிஷா, அதிதி சங்கர், இயக்குநர்கள் டி.ராஜேந்திரன், ஷங்கர், பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தங்கர் பச்சான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இதில் ஆந்திர அமைச்சரும் முன்னாள் நடிகையுமான ரோஜாவும் கலந்து கொண்டார். சுமார் 4.30 மணியளவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளோடு துவங்கிய கலை விழாவில் 100 குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நிகழ்வு நடைபெற்றது. பிறகு வேல்முருகன், ராஜலக்ஷ்மி, செந்தில், டிரம்ஸ் சிவமணி, லிடியன் நாதஸ்வரம் உள்ளிட்டோரின் இசை நிகழ்வுகள் நடைபெற்றது. மேலும், இடையிடையே முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த ஆவணப் படங்கள் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய நாடகம் போடப்பட்டது. இந்நிகழ்விற்கு வந்திருந்த பல உச்ச நட்சத்திரங்களும் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தங்களது அனுபங்கள் குறித்தும் பல்வேறு நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். சூர்யா மற்றும் தனுஷ் பட மூலாதாரம்,LAVANA NARAYAN இந்த விழாவில் முதலில் பேசிய நடிகர் சூர்யா, "சினிமா மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும் என்ற டிரெண்டை உருவாக்கியது கலைஞர்தான். அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர்," என்று பேசினார். “கடந்த 1952ஆம் ஆண்டு பராசக்தி படத்தில் கைரிச்ஷாவை ஒழிக்க வேண்டும் என்ற வசனம் எழுதியிருப்பார். அதை அப்படியே 17 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்து உண்மையாக்கிக் காட்டினார் அவர்,” என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து பாராட்டிப் பேசினார் நடிகர் சூர்யா. அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் தனுஷ், "கலைஞர் ஐயாவின் அரசியல் அல்லது திரை வாழ்வு குறித்துப் பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை," என்று தொடங்கி முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். முதன்முதலில் ஒரு பட பூஜைக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியை வரவேற்கச் சென்றிருந்தபோது “வாங்க மன்மத ராஜா” என்று அவரை வரவேற்று, வரவேற்பிதழைப் பார்த்துவிட்டு மொத்த கதையையும் சொல்லிவிட்டதாகக் கூறினார் தனுஷ். மேலும் எந்திரன் படத்தை அவரோடு அமர்ந்து பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்து, "அவர் ஒரு மாபெரும் கலைஞர் மட்டுமல்ல, சிறந்த ரசிகரும் கூட' , ஒரு சிலர் மறைந்துவிட்டாலும், அவர்கள் நம்மோடு இருப்பது போலவே இருக்கும், எனக்கு கலைஞரும் அப்படித்தான்," என்று தெரிவித்தார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்துப் பேசிய அவர், இத்தகைய எளிய அணுகத்தக்க முதல்வர் கிடைத்ததில் மகிழ்ச்சி என்று கூறினார். தொகுப்பாளராக மாறிய கமல்ஹாசன் பட மூலாதாரம்,LAVANA NARAYAN "உயிரே உறவே , தமிழே வணக்கம்" என்று தனது உரையைத் தொடங்கிய நடிகர் கமலஹாசன் மேடையில் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த தொகுப்பாளர் பகுதியில் சென்று பேசத் தொடங்கினார். அதற்குக் காரணமாக, "கலைஞரின் மேடைகளில் எப்போதும் நான் ஓரமாகவே நிற்பேன்," என்று கூறினார். முதலில் விஜயகாந்த் இறுதி நிகழ்வை நல்ல முறையில் நடத்திக் கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் “கலைஞரும் தமிழும், கலைஞரும் சினிமாவும், கலைஞரும் அரசியலும் பிரிக்க முடியாதவை" என்று பேசிய அவர் தன்னுடைய தமிழ் ஆசான்களில் முதன்மையானவர் "கலைஞர், அடுத்து சிவாஜி, எம்.ஜி.ஆர்,” என்று தெரிவித்தார். "பாடல்களின் பிடியில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவை வசனம் நோக்கித் திருப்பியவர் கலைஞர்தான்," என மேடையில் பதிவு செய்தார் கமலஹாசன். “எம்ஜிஆர், சிவாஜி ஆகிய ஆளுமைகளைத் தன்னுடைய எழுத்தால் உச்ச நட்சத்திரமாக்கியவர் அவர்” என்று கூறிய கமல்ஹாசன், "அவர் தமிழ் சினிமாவிற்கு மட்டும் சொந்தமில்லை என்பதற்கு உதாரணம் அமெரிக்க இயக்குநரான எல்லீஸ் ஆர். டங்கனுக்கு மிகவும் பிடித்தமானவர் கலைஞர் என்பதே," என்று தெரிவித்தார். "நேருவின் மகளே வருக துணிச்சலான ஆட்சி தருக” எனத் துணிச்சலாகச் சொல்லும் ஒரு தைரியமான தலைவர் அவராக மட்டுமே இருந்திருக்க முடியும் என்று கூறினார் நடிகர் கமல்ஹாசன். மேலும் அவருக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் உள்ள தனிப்பட்ட உறவு குறித்துப் பேசிய கமலஹாசன், “அவரைப் பார்க்கப் போனால் யாராவது இருந்தால் வாயா கமல் என்பார், தனியாகச் சென்றால் வா என்று அழைப்பார்,” அந்தளவு நெருக்கமானவர் எனக் கூறினார். "கலைஞர் எனக்கு அன்பாகச் சூட்டிய 'கலைஞானி' என்ற பட்டம் இன்னமும் என்னைத் தொடர்கிறது. தமிழ் சினிமாவில் நீள அகலம் எதுவானாலும், மக்களுடன் பேசும் ஒரு வாய்ப்பை அவர் விட்டதே இல்லை. இது அவரிடம் இருந்து நான் கற்ற பாடம். அதனால்தான், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நான் பேசி கொண்டிருக்கிறேன்," என்று தெரிவித்தார் கமல்ஹாசன். ரஜினிகாந்த் கமல்ஹாசனை சீண்டினாரா? கலைஞரின் பேச்சாற்றல் குறித்துப் பேசிய ரஜினிகாந்த், "சில பேர் பேசுவார்கள், அவர்களுடைய மொழி திறமை, பேச்சாற்றல், அவர்களுடைய அறிவு ஆகியவற்றைக் காட்டுவதற்காகவே பேசுவது போல் இருக்கும். அவர்கள் பேசத் தொடங்கினால் எப்போது முடிப்பார்கள் எனத் தோன்றும் (இந்த வசனத்தை ரஜினி மேடையில் பேசும்போதே கீழே இருந்த ரசிகர்கள் கமல்ஹாசனைதான் சொல்கிறார் என்று சிரிக்க சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது). இதுவே, சிலர் பேசத் தொடங்கினால் ஐய்யோ இவர்கள் முடிக்கக் கூடாதே எனத் தோன்றும். கலைஞரின் பேச்சு அப்படி இருக்கும். அவரின் பேச்சில் தெனாலிராமனின் நகைச்சுவை இருக்கும், சாணக்கியரின் ராஜதந்திரம் இருக்கும், பாரதியாரின் கோபம் இருக்கும். பாமரர்கள் இருக்கும் சபையில் பாமரனுக்கே பாமரனைப் போல் பேசுவார். அறிஞர்கள் இருக்கும் சபையில் அறிஞர்களுக்கே அறிஞராகப் பேசுவார். கவிஞர்கள் இருக்கும் அவையில் கவிஞர்களுக்கே கவிஞராகப் பேசுவார்" என்று கூறினார் ரஜினிகாந்த். ‘கலைஞர் எளிமையானவர்’ பட மூலாதாரம்,LAVANA NARAYAN அடுத்ததாக மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “மு.க.ஸ்டாலினை எனக்கு 1974இல் இருந்தே தெரியும். அப்போதே ராயப்பேட்டை வீதிகளில் பொதுக் கூட்டங்களில் அவர் பேசுவதை இரவு முழுவதும் கேட்டிருக்கிறேன். அப்போது இருந்த அதே பேச்சு இப்போதும் அவரிடம் இருக்கிறது. கடினமாக உழைத்து தற்போது முதல்வராகியுள்ளார்," எனத் தெரிவித்தார். எஸ்.பி.முத்துரமான எப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தே பேசிக்கொண்டிருப்பார் எனத் தெரிவித்த ரஜினிகாந்த், "அதன் மூலமாகத்தான் அவரை அதிகம் தெரிந்துகோள்ள முடிந்தது" எனவும் கூறினார். "கடந்த 1955இல் மலைக்கள்ளன் படத்திற்கு வசனம் எழுதிய பணத்தில் வாங்கிய வீடுதான் கோபாலபுரம் வீடு. அதில்தான் அவர் கடைசி வரை வாழ்ந்தார். அந்த வீட்டில் எதையுமே மாற்றவில்லை. மிகவும் எளிமையாக ஆடம்பரமே இல்லாது வாழ்ந்தார்," என்று குறிப்பிட்டார். இதுமட்டுமின்றி, கருணாநிதி மட்டும் சினிமா துறையிலேயே இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ எம்.ஜி.ஆர், சிவாஜிகளை உருவாக்கியிருப்பார் என்றும் ஆனால் அவரை அரசியல் எடுத்துக்கொண்டது என்றும் வியந்தார் ரஜினிகாந்த். கருணாநிதியின் திறமை குறித்து வியந்து பேசிய ரஜினிகாந்த் பட மூலாதாரம்,LAVANA NARAYAN எப்போதும் ஒருவருக்கு எழுத்தாற்றல் இருந்தால் பேச்சாற்றல் இருக்காது. ஆனால், கருணாநிதிக்கு இரண்டுமே கைகூடியிருந்தது என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார். "எழுத்து இல்லை என்று சொன்னால் மதங்கள், புராணங்கள், சரித்திரம், வரலாறு, அறிவியல், விஞ்ஞானம், வர்த்தகம், கதை, கவிதை, அரசாணை, அரசன் எதுவுமே இல்லை. எழுத்து, ஓர் இயற்கை சக்தி, அது கலைஞருக்குக் கைகூடி இருந்தது. அவருடைய சில கடிதங்களைப் படித்தால் இன்னமும் கண்ணில் கண்ணீர் வரும்," என்று தெரிவித்தார் ரஜினிகாந்த். பட மூலாதாரம்,LAVANA NARAYAN கருணாநிதி - ரஜினிகாந்த் சந்திப்பு பட மூலாதாரம்,TNDIPR முதல் முறையாக நேரடியாக முன்னாள் முதல்வரைச் சந்தித்த தருணம் மறக்கவே முடியாதது என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த் அந்த சந்திப்பு குறித்துப் பகிர்ந்து கொண்டார். “என் இத்தாலியன் பியட் காரை எடுத்துக்கொண்டு ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் விடும் நேரடத்தில் கையில் சிகரெட்டை பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தேன். அப்போது பின்னாடி திடீரென சில கார்கள் வந்தன. நான் வழி விட்டேன். திடீரென அதில் ஒரு கார் மெதுவாக என் பக்கத்தில் வந்தது. அதன் கண்ணாடி இறங்கியது. யார் எனப் பார்த்தால் உள்ளே கலைஞர் இருந்தார். சிகரெட்டை தூக்கிப் போட்டுவிட்டு பார்த்தால், அவர் கையை அசைத்தவாறு புன்னகைத்தார். அது இன்னும் ஞாபகம் இருக்கு.” “"அடுத்ததாக, நான் நடித்த ஒரு படத்தின் தயாரிப்பாளர் கலைஞரின் தீவிர ரசிகன். நல்ல நண்பரும்கூட. அவர் ஒருநாள் என்னிடம், நமது படம் சூப்பர் ஹிட் ஆகப் போகிறது. கலைஞர் வசனம் எழுதுகிறார் எனக் கூறினார். ஆனால், ஏதோ ஒரு மாதிரியாகத் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறேன். கலைஞருடைய வசனங்கள் கடினமாக இருக்குமே என அஞ்சினேன். பின்னர் இருவரும் கோபாலபுரம் சென்று கலைஞரைப் பார்த்தோம். நானே அவரிடம், 'உங்கள் வசனத்தை என்னால் பேச முடியாது. கொஞ்சம் கடினமாக இருக்கும்' என்று கூறினேன். அதற்கு அவர் முதலில் எனக்கு ஏற்றவாறு எழுதிக்கலாம் எனச் சொன்னாலும் நான் அடம் பிடித்த காரணத்தால் தயாரிப்பாளரைக் கூப்பிட்டு படப்பிடிப்பு தேதியைக் குறிப்பிட்டு, அதற்குள் தர முடியாது என்பதால் வேறு ஒருவரை வைத்து எழுதிக்கொள்ளுமாறு சொல்லிவிட்டார். அப்படிச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தார் கலைஞர்," என்று தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் ரஜினிகாந்த். மேலும் பேசிய அவர், “மேலும் பேசிய அவர், "வழக்கமாக கலைஞர் ஒரு நடிகருடன் படம் பார்ப்பார். அது தேர்தல் நேரம். அப்போது அந்த நடிகர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தபோது செய்தியாளர்கள் அவரை யாருக்கு ஓட்டு போட்டீர்கள் எனக் கேட்க அவர் இரட்டை இலை எனச் சொல்லிவிட்டார். அது டிரெண்டானது. அன்று மாலை படம் பார்க்கப் போக வேண்டும். ஆனால் எப்படிப் போவது என்று தெரியாமல் குளிர்க் காய்ச்சல் என்று கூறிவிட்டார் அந்த நடிகர். ஆனால் அவர் எப்படியாவது வர வேண்டும் என்று கலைஞர் கூறிவிட்டார். அதற்குப் பிறகு அந்த தியேட்டருக்கு சென்றபோது 'வாங்க காய்ச்சல் என்று சொன்னீர்களாமே, வாங்க வந்து சூரியன் பக்கத்துல உக்காருங்க' என்று கூறினார் கலைஞர். அந்த நடிகர் நான்தான்,” என்று கூட்டத்தில் போட்டு உடைத்தார் ரஜினிகாந்த். இப்படி முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட ரஜினிகாந்த் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினருடன் சேர்ந்து 'கலைஞர் சிறப்புக் கலை மலரை' வெளியிட்டார். இதை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் பெற்றுக்கொண்டனர். நன்றியுரை கூறிய முதலமைச்சர் பட மூலாதாரம்,DIPR பிரபலங்கள் உரைக்குப் பின்னால் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நான் உரையாற்ற வரவில்லை, நன்றி கூற வந்திருக்கிறேன் என்றார். மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் நன்றி என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். இங்கு முதல்வர் அல்லது திமுக தலைவராக அல்ல, கலைஞரின் மகனாக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் திரைத் துறையினருக்கு சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில், நான்கு படப்பிடிப்பு தளங்களோடு எம்ஜிஆர் ஃபிலிம் சிட்டி 25 கோடி செலவில் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், மேலும் பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி செலவில் திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்தார். அதில் எல்இடி வால், அனிமேஷன், விஎப்எக்ஸ், போஸ்ட் மற்றும் ப்ரீ ப்ரொடக்ஷன் வசதிகள், 5 ஸ்டார் ஓட்டல்கள் வசதி ஆகியவை இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். https://www.bbc.com/tamil/articles/cyr3j3ykpxvo
-
ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் வரியாக பெறுமதிசேர் வரி - எதிர்க்கட்சி தலைவர்
Published By: DIGITAL DESK 3 06 JAN, 2024 | 09:15 PM (எம்.மனோசித்ரா) பெறுமதி சேர் வரி ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் வரியாகும். கொள்ளையடித்தவர்களிடமிருந்து பணத்தை மீட்பதற்கு பதிலாக, அவர்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றனர். எனவே இந்த வற் வரியை ஊழல் நிறைந்த வரி என்று அழைக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 62 ஆவது கட்டமாக மினுவாங்கொட நெதகமுவ கனிஷ்ட வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் சனிக்கிழமை (06) கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் வரியாகும். ஊழல் மிக்க ஆட்சியாளர்கள் ஒவ்வொரு துறையிலும் கொள்ளையடித்ததன் காரணமாகவே நாடு வங்குரோத்தடைந்தது. இவ்வாறு கொள்ளையடித்தவர்களிடமிருந்து பணத்தை மீட்பதற்கு பதிலாக, அவர்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றனர். எனவே இந்த வற் வரியை ஊழல் நிறைந்த வரி என்று அழைக்கலாம். தற்போதைய ஜனாதிபதி ஊழல்வாதிகளின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஊழல்வாதிகளை பாதுகாத்து வருகிறார். இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் 134 பேரும் கூறுவதற்கு ஏற்ப கைப்பாவை போன்று அவர் செயற்படுகின்றார். செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளால் நமது நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பதால், 250 மில்லியன் ரூபா செலவிட்டு இலங்கை கடற்படைக் கப்பலை ஈடுபடுத்தி, இந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராட தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்தார். உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் இருக்கும் போது இந்த வங்குரோத்து நாடு ஏன் இவ்வாறான செயலைச் செய்ய முன்வருகிறது என்பது ஆச்சரியமளிக்கிறது. மாணவர்களுக்கு மதிய உணவைக் கொடுக்க முடியாத,பொருட்களின் விலையை குறைக்க முடியாத இந்த அரசாங்கம் ஹூதி கிளர்ச்சியாளர்களை அடக்க 250 மில்லியன் செலவிட்டுள்ளது. நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும் வேளையில் முன்னுரிமையளிக்க வேண்டிய பல விடயங்கள் இருந்த போதிலும் ஜனாதிபதி வேறு விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளார். எந்த வித சிறப்புரிமைகளும் சலுகைகளும் வழங்காமலே ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு பல்வேறு தரப்புகளை ஒன்றிணைத்துக் கொள்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தி பணத்தையோ அல்லது சலுகையோ வழங்காது. ஏனைய தலைவர்களைப் போன்று மக்களுக்கு சேவையாற்ற நான் அதிகாரத்தை கேட்கவில்லை என்றார். https://www.virakesari.lk/article/173278
-
கிம் பற்றிய 5 மர்மங்கள்: பிறந்த நாள், தாய், மனைவி, குழந்தை என அனைத்தும் ரகசியம் ஏன்?
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கிம் ஜாங் உனின் பிறந்த நாளில் உண்மையில் எப்போது என்று தெரியவில்லை. 6 ஜனவரி 2024 வட கொரியாவின் உச்ச தலைவர் கிம் ஜாங் உன் 40 வயதை எட்டுகிறார். ஆனால், அது உண்மையா? அவரது பிறந்தநாள் ஜனவரி 8 என்று பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் அவரது சரியான பிறந்தநாள் பற்றி ஒருமித்த கருத்து இல்லை. கிம் பற்றிய மர்மம் இது மட்டுமல்ல. 2011-ல் அதிகாரத்துக்கு வந்த வட கொரிய சர்வாதிகாரி பற்றிய விடை தெரியாத ஐந்து மர்மமான கேள்விகள் இங்கே உள்ளன. 1. கிம் ஜாங் உன் எப்போது பிறந்தார்? உண்மையில் தெரியவில்லை. "அவர் பிறந்த ஆண்டு 1982, 1983 அல்லது 1984 என பல சர்ச்சைகள் உள்ளன," என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரசியல் பாடப் ஆசிரியர் டாக்டர் எட்வர்ட் ஹோவெல் பிபிசியிடம் தெரிவித்தார். ஜனவரி 8 என்று கூறப்படும் அவரது பிறந்தநாள் கம்யூனிச நாட்டில் ஒரு வழக்கமான வேலை நாளாகும். அதே நேரத்தில் அவரது தந்தை கிம் ஜாங் இலின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 16 ஆம் தேதி "பிரகாசமான நட்சத்திரத்தின் நாள்" என்று கொண்டாடப்படுகிறது. அவரது தாத்தா கிம் இல் சூங் -ன் பிறந்த நாளான ஏப்ரல் 15-ம் தேதி "சூரிய நாள்" என்று கொண்டாடப்படுகிறது. எவ்வாறிருந்தாலும், அவரது குடும்பத்தின் பல விவரங்கள் மர்மமாகவே இருக்கின்றன. வட கொரிய நிபுணர் டாக்டர் ஹோவெல், கிம் ஜாங் உனுக்கு ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் பெயர் கிம் ஜாங் நாம் என்கிறார். அவர் 2017 -ல் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார். கிம் ஜாங் உனின் தந்தை கிம் ஜாங் இலுக்கு குறைந்தது நான்கு வாழ்க்கை துணைகள் இருந்ததாகக் கருதப்பட்டது. ஆனால் அவரது உறவுகள் பெரும்பாலும் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தன. அவரது தாய், கோ யங் ஹூய், ஜப்பானில் பிறந்ததாகவும், 1960களில் நடனம் ஆடுபவராக வேலை செய்ய வட கொரியாவுக்கு வந்ததாகவும் கருதப்படுகிறது. அவர் கிம் ஜாங் இலின் அனைத்து துணைகளிலும் மிகவும் பிடித்தமானவர் என்று கூறப்பட்டது. 1973ல் ஜப்பானுக்கு சென்றபோது கோ யங் ஹூய் எடுத்த புகைப்படங்கள் 2018ல் கண்டுபிடிக்கப்பட்டன. கோ ஹூய் நடனக் கலைஞராக இருந்ததாலும் ஜப்பானுடன் தொடர்புடைய குடும்ப பின்னணி இருந்ததாலும் வட கொரியா அவரைப் பற்றி அதிகம் விளம்பரம் செய்யவில்லை என்று கொரியா டைம்ஸ் நாளிதழ் தெரிவிக்கிறது. "இரண்டாம் உலகப் போரின் போது கொரிய தீபகற்பத்தை ஆக்கிரமித்திருந்த ஜப்பானில் பிறந்தவர் பொதுவாக சமூகத்தில் குறைந்த நிலையில் இருப்பார். ஆனால் கிம் ஜாங் இலை திருமணம் செய்ததால், அவருக்கு ஆடம்பரமான வாழ்க்கை கிடைத்தது," என்று டாக்டர் ஹோவெல் கூறுகிறார். 2. கிம் ஜாங் உனின் மனைவி யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரி சோல் ஜு-வை இசை நிகழ்ச்சி ஒன்றில் கிம் சந்தித்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. மீண்டும், நமக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவருக்கு ரி சோல் ஜு என்ற மனைவி இருப்பதாகத் தெரியும். ஆனால் அவர்கள் எப்போது திருமணம் செய்து கொண்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை (2009 இல் இது நடந்திருக்கலாம் என்ற ஊகம் உள்ளது). "தோழர் ரி சோல் ஜு" பற்றி மிகக் குறைவே தெரியும். அவர் முன்னாள் பாடகியாக இருந்து, ஒரு நிகழ்ச்சியின் போது கிம்மின் கவனத்தை ஈர்த்தாரா? அவரது பெயரில் வட கொரிய கலைஞர் ஒருவர் இருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் ஒரே நபர் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினர், புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, 2005-ம் ஆண்டு ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளுக்கான வட கொரியாவின் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் குழுவில் (cheer leaders) பங்கேற்க சோல் ஜு தென் கொரியாவுக்குச் சென்றதாகவும், சீனாவில் பாடல் பயின்றதாகவும் நம்புவதாகக் கூறினார். கிம் ஜாங் உனின் மனைவி என்பதை தவிர, வேறு எந்த விவரங்களையும் வட கொரியா கொடுக்கவில்லை. 3. கிம் ஜாங் உனுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கிம் ஜாங் உன், தனது மகள் கிம் ஜூ ஆவுடன் பொது நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இந்த விவரத்தை கண்டறிவதும் கடினம் தான். 2016 -ம் ஆண்டில் பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைந்த பிறகு ரி சோல் ஜு கர்ப்பமாக இருப்பதாக ஊகம் எழுந்தது. ஆனால் அது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஏற்கெனவே, 2010 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் இரண்டு குழந்தைகள் பிறந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் அதில், வாரிசாக இருப்பதற்கான சாத்தியம் கொண்ட, ஆண் குழந்தை பிறந்ததா என்று தெரியவில்லை. சொல்லப் போனால், அந்த குழந்தைகளைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. வட கொரிய தலைவர் தனது மகள் கிம் ஜூ-ஆவுடன் பொது மக்கள் முன்பு தோன்றியுள்ளார். இரண்டாவது மூத்த குழந்தையான அவருக்கு 10 வயதாகிறது. அதிக தகவல்கள் தெரிந்திருப்பதும் அவரைப் பற்றி தான். அவர் 2023-ல் குறைந்தது ஐந்து முறை பொது நிகழ்வுகளில் தோன்றியுள்ளார். "அவரது குழந்தைகளின் முழு கதையையும் நாம் இன்னும் அறியவில்லை," என்று டாக்டர் ஹோவெல் விளக்குகிறார். கிம் ஜாங் உனின் நண்பரான முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரமான டென்னிஸ் ரோட்மேன் 2013-ம் ஆண்டில் தான் அளித்த பேட்டி ஒன்றில் கிம்மின் மகளின் பெயரை வெளியே சொன்னார் என்று அவர் நினைவூட்டுகிறார். கிம் ஜாங் உனுக்கு வேறு குழந்தைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றி மிகக் குறைவே தெரியும். அவர்களின் தாய் யார் என்பதும் தெரியவில்லை என்று வட கொரியா நிபுணர் டாக்டர் ஹோவெல் கூறுகிறார். கிம் ஜாங் உன், தனது மகள் கிம் ஜூ-ஆவை அடுத்த தலைவராக வளர்ப்பதாக பல அரசியல் பகுப்பாளர்களும், தென் கொரியாவின் உளவு அமைப்பும் நம்புகிறது. ஆனால், டாக்டர் ஹோவெல் இதை நம்பவில்லை. கிம் ஜூ ஆ இன்னும் இளமையாக இருக்கிறார். மேலும் கிம் ஜாங் உனின் செல்வாக்குமிக்க சகோதரி கிம் யோ ஜோங், அதிக அனுபவமும், உயர் வகுப்பு மக்களுடன் சிறந்த தொடர்புகளும் கொண்டிருக்கிறார். எனவே, தனது சகோதரனைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அவருக்கே இருக்கின்றன. "வட கொரிய தலைவர் ஏவுகணை ஏவுதல், விருந்துகள் அல்லது கால்பந்து போட்டிகளில் தனது இளம் மகளுடன் பார்க்கப்படுகிறார். ஏனென்றால் அவர் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவராகவும் கருணையுள்ள தலைவராகவும் பார்க்கப்பட விரும்புகிறார்," என்று டாக்டர் ஹோவெல் நம்புகிறார். 4. கிம் ஜாங் உன் எப்படி ஆடம்பரமாக வாழ முடிகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிம் ஜாங் உன், ஆடம்பரமான வாகனங்களை அடிக்கடி பயன்படுத்துகிறார். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை உருவாக்குவதன் காரணமாக வட கொரியாவும் அதன் தலைவரும் ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட கடுமையான தடைகளை பல ஆண்டுகளாக சந்தித்து வருகின்றன. ஆனால் டாக்டர் ஹோவெல், கிம் ஜாங் உன் தடைகளிலிருந்து தப்பிக்க எல்லாவற்றையும் செய்து வருவதாகக் கூறுகிறார். “அரசு பயன்பாட்டுக்காக கணக்கில் காட்டப்படாத நிதியை வட கொரியா கொண்டுள்ளது. தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஆடம்பரமான வாழ்க்கை முறை தொடர வேண்டும் என்று கிம் விரும்புவதால் இந்த நிதி தொடர்ந்து இருந்து வருகிறது.” உலகம் முழுவதும், வட கொரியாவுக்கு நிதி அளிக்க தயாராக இருக்கும் நாடுகள் பல உள்ளன என்று டாக்டர் ஹோவெல் நம்புகிறார். இந்த பணம் வேறு வழிகளில் வரலாம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. “வட கொரியா இணைய வசதி இல்லாத தனிமைப்படுத்தப்பட்ட நாடு என்று பொதுவாக மக்கள் கருதுகிறார்கள். வட கொரியாவில் அரசு நடத்தும் இணையம் உள்ளது. சைபர் போர் வட கொரியாவின் முக்கிய உத்தியாக உள்ளது. தங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும், அணு ஆயுத திட்டத்தையும் நடத்த, கிம்மின் அரசு, பிற நாடுகளின் கணினி முறைகளை ஹேக் செய்து, பணத்தை திருடுகின்றனர்” என்று டாக்டர் ஹோவெல் கூறுகிறார். 5. கிம் ஜாங் உன் தனது மக்களைப் பற்றி கவலைப்படுகிறாரா? பட மூலாதாரம்,REUTERS 2020-ம் ஆண்டில் ராணுவ அணிவகுப்பில் கிம்மின் பேச்சு, அவரது மாறுபட்ட பக்கத்தை காட்டியது. பெருந்தொற்று மற்றும் சமீபத்திய இயற்கை பேரிடர்களை எதிர்த்து அவரது துருப்புகளின் முயற்சிக்காக அவர் நன்றி சொன்னார். ஒரு கட்டத்தில், நாட்டின் போராட்டங்களைப் பற்றி பேசுகையில் அவர் கண்களில் இருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே பேசினார். இது வட கொரிய தலைவரின் மிக அரிதான உணர்ச்சி வெளிப்பாடு ஆகும். நாடு அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், அவர் பணிவு காட்ட முயற்சிக்கிறார் என்று சில நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், வட கொரிய தலைவரின் ஆடம்பரமான வாழ்க்கை முறை அதற்கு நேர்மாறாக இருக்கிறது. கிம் ஜாங் உன், தனது தாத்தா கிம் இல் சூங் தொடங்கிய ஆடம்பரமான ரயில்கள் மூலம் நீண்ட தூர பயணம் செய்யும் பாரம்பரியத்தை தொடர்கிறார். 2001-ம் ஆண்டில் கிம் ஜாங் உனின் தந்தையான கிம் ஜாங் இல் உடன் பயணம் மேற்கொண்ட ரஷ்ய ராணுவத் தளபதி தனது நினைவுக் குறிப்புகள் ‘ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்’-ல் அதன் ஆடம்பரத்தைப் பற்றி பேசினார். கிம்மின் முன்னுரிமைகள் குறித்து இது என்ன கூறுகிறது? “அவர் தனது ஆட்சியையும், தனது ஒடுக்குமுறை மற்றும் சர்வாதிகார தலைமையையும் மட்டுமே பாதுகாக்க விரும்புகிறார். தனது நாட்டில் உள்ள 26 மில்லியன் மக்களைப் பற்றி அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை,” என்று டாக்டர் ஹோவெல் கூறுகிறார். “இது நீண்டகால திட்டமாக கைகூடும் என்று அவர் நினைக்கிறாரா? https://www.bbc.com/tamil/articles/c4ny432yq0yo
-
நியூசிலாந்து பாராளுமன்றத்தை அதிரவைத்த இளம் பெண் MP
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் 21 வயதான இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரை தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஹக்கா (haka) எனப்படும் பாரம்பரிய வெற்றி முழக்கத்துடன் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. Hana-Rawhiti Maipi-Clarke எனும் குறித்த பெண் கடந்த 170 வருடங்களில் நியூசிலாந்து வரலாற்றில் பதிவான முதல் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். நியூசிலாந்தின் ஆக்லேண்ட் மற்றும் ஹெமில்டனுக்கு இடையில் உள்ள Huntly எனும் சிறிய நகரத்தை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். மாவோரி பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். இந்நிலையில், Maipi-Clarke கடந்த மாதத்தில் பாராளுமன்றத்தில் பாரம்பரிய முறையில், ‘ஹாக்கா’ அல்லது ‘போர் முழக்கம்’ (‘haka’ or ‘war cry’ ) செய்து தனது மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியில், “உங்களுக்காக இறப்பேன்… ஆனால், உங்களுக்காக வாழவும் செய்வேன்” என அவர் கூறியதாக New Zealand Herald செய்தியில் கூறப்பட்டுள்ளது. நியூசிலாந்தை பொறுத்தவரை ஹக்கா நடனம், நியூசிலாந்து மாவோரி பழங்குடியினரின் ஆதி பழக்கங்களில் ஒன்று. போர், வெற்றி, ஒற்றுமை, இன குழுவின் பெருமை என எல்லாவற்றையும் சொல்ல அவர்கள் இதனை பயன்படுத்துகின்றனர். https://thinakkural.lk/article/287227
-
அமெரிக்க விமானம் 16,000 உயரத்தில் பறந்த போது ஜன்னல் உடைந்தது - பயணிகள் என்ன ஆயினர்?
பட மூலாதாரம்,REUTERSELIZABETH/CBSNEWS படக்குறிப்பு, காற்றழுத்தத்தைத் தாங்க முடியாததால் விமானத்தின் உடைப்பு ஏற்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், கேத்ரின் ஆம்ஸ்ட்ராங் மற்றும் தாமஸ் மெக்கிண்டோஷ் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் போயிங் 737 மேக்ஸ் 9 விமானத்தின் ஒரு பகுதி உடைந்து ஆயிரக்கணக்கான அடிகள் காற்றில் பறந்தது. அமெரிக்கன் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் போர்ட்லேண்டில் இருந்து ஒன்டாரியோ நோக்கி சென்று கொண்டிருந்தது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737 மேக்ஸ் 9 விமானம் 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது அதன் ஜன்னல் உட்பட வெளிப்புறப் பகுதி உடைந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் அதன் 65 போயிங் 737 மேக்ஸ் 9 விமானங்களையும் 'தற்காலிகமாக' தரையிறக்கியுள்ளது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் இந்த விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஆய்வு செய்யப்படும் என்று கூறியுள்ளது. விமானப் பணியாளர்கள் காற்றழுத்தப் பிரச்னை குறித்துப் புகாரளித்ததை அடுத்து விமானம் பத்திரமாகத் திரும்பியதாக அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் ஏஜென்சி தெரிவித்துள்ளது. அந்த விமானத்தில் 177 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, விமானத்தின் ஜன்னல் உடைந்ததால், ஜன்னல் வழியாக இருக்கை தொங்கியது. போயிங் நிறுவனம் விளக்கம் இந்த விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனம், இந்தச் சம்பவம் குறித்து நிறுவனத்திற்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், இது குறித்த கூடுதல் தகவல்களைப் பெற முயற்சிப்பதாகவும், நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு எந்த விசாரணைக்கும் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஃப்ளைட்வேர் (Flightwear) மற்றும் ஃப்ளைட்ராடார் 24 (FlightRadar24) என்ற விமான கண்காணிப்பு இணையதளங்களின்படி, அந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 9 ஆகும். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்ததாகவும், விமானம் போர்ட்லேண்டில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்ட விமான நிறுவனம், "இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிதானது. இருப்பினும், எங்கள் விமானக் குழுவினர் இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள பயிற்சி பெற்றுள்ளனர் என்பதுடன் நிலைமையை பாதுகாப்பாக கையாள தயாராக உள்ளனர்," எனத்தெரிவித்துள்ளது. விமான கண்காணிப்புத் துறையின் தரவுகளின்படி, விமானம் அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தபோது 16,000 அடி (4,876 மீ) உயரத்தில் பறந்து கொண்டிருந்தது என்று தெரியவந்துள்ளது. பட மூலாதாரம்,ELIZABETH/CBSNEWS படக்குறிப்பு, இரவு நேரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பதற்றமடைந்தனர். ‘விமானத்தின் ஜன்னல்கள் உடையத் தொடங்கின’ ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட படங்கள், இரவு வானத்தின் பின்னணியில் பறக்கும் விமானத்தின் சில பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டதைக் காட்டுகின்றன. மற்றொரு படம் உடைந்து விழுந்த பகுதிக்கு அருகில் உள்ள இருக்கையைக் காட்டுகிறது. ஜன்னல் இருக்கை காலியாக இருந்ததாகவும், குஷன் இல்லாமல் முன்னோக்கி சாய்ந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர். இந்தப் படங்களின்படி, பாதிக்கப்பட்ட பகுதி விமானத்தின் மூன்றாம் பிற்பகுதியில், இறக்கை மற்றும் என்ஜினுக்குப் பின்னால் இருந்தது. ஃபியூஸ்லேஜின் ஒரு பகுதி என்பது சில விமான நிறுவனங்களால் கூடுதல் அவசர வெளியேற்றப் பகுதியாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் அலாஸ்கா ஏர்லைன்ஸில் அல்ல. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருவதாக அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் சமூக ஊடகமான X இல் பதிவிட்டுள்ளது. பட மூலாதாரம்,REUTERS போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு மீண்டும் சிக்கல் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் பல பாதுகாப்பு சிக்கல்கள் வெளிச்சத்திற்கு வந்த பிறகு "விமானப் போக்குவரத்துத் துறை வரலாற்றில் மிகவும் ஆய்வு செய்யப்பட்ட விமானம்" என்று அழைக்கப்படுகிறது. மார்ச் 2019 இல், போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் இதேபோன்ற சூழ்நிலைகளில் இரண்டு விபத்துகளில் பயணிகளின் உயிரிழப்புக்களுக்குக் காரணமாக இருந்ததால் ஒன்றரை ஆண்டுகளாக அவை பயன்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு மேக்ஸ் விமானமும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டது. அதன் பின்னரே அந்த ரக விமானத்திற்கு மீண்டும் போக்குவரத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் வெளியில் இருந்து பார்ப்பதற்குத் தெரியவில்லை. மேலும், இது போன்ற மாற்றங்களை வழக்கமாக பயணிகள் கவனிப்பதில்லை. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தரவுகளின்படி, நீண்ட ஆய்வுக்குப் பிறகு, இந்த வகை விமானங்களின் பிழைகள் சரிசெய்யப்பட்டதாகவும், போயிங் நிறுவனம் இப்போது 737 மேக்ஸ் வகை விமானங்களை விரைவாக ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் கூறிவருகிறது. போயிங் நிறுவனத்தின் தரவுகளின்படி, சுமார் 13 லட்சத்து 737 மேக்ஸ் விமானங்கள் பல்வேறு போக்குவரத்து நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளன. ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் கடந்த மாதம் அனைத்து விமான நிறுவனங்களையும் பல்வேறு கட்டுப்பாட்டு அமைப்புகளில் போல்ட்டுகள் தளர்வாக இருக்கின்றனவா என மேக்ஸ் வகை விமானங்களில் ஆய்வு நடத்த வலியுறுத்தியிருந்தது. https://www.bbc.com/tamil/articles/ckr8l42y0l3o
-
நாட்டின் முன்னேற்றத்திற்காக வட மாகாணத்திலிருந்து பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும் - ஜனாதிபதி
5 வருடங்களுக்குள் வட மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி செல்லும் ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வட. மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வவுனியா மாவட்ட கலாசார மண்டபத்தில் நேற்று (05) நடைபெற்ற வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்திற்கு 50% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணம் நாட்டு பொருளாதாரத்தின் எஞ்சின் ஆக இயங்குகிறது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களையும் அதனுடன் இணைத்துக்கொண்டு 05 பிரதான எஞ்சின்களுடன் இந்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் கல்வி,சுகாதாரம், மீள்குடியமர்த்தல், காணி, மின்சாரம்,குடிநீர், சுற்றுலா, வனவன பாதுகாப்பு, மீன்பிடித் துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு, சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜனாதிபதி இதன்போது அறிவித்தார். கொழும்பு, கண்டி, வடக்கு இந்நாட்டின் மூன்று பிரதான கல்வி கேந்திர நிலையங்களாக உருவாக்கப்படும். எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு எஞ்சின் மாத்திரமே உள்ளது. அதற்கு 50% பங்களிப்பு மேல் மாகாணத்திலிருந்தே பெறப்படுகிறது. மற்றை மாகாணங்களிலிருந்து கிடைக்கும் பொருளாதார பங்களிப்பு மந்தமான நிலையிலேயே உள்ளது. நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வதற்கு எஞ்சின்களின் எண்ணிக்கையையை அதிகரிக்க வேண்டும். அதற்காக மற்றைய மாகாணங்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும். அதற்காக சில மாகாணங்கள் அறியப்பட்டுள்ளன. வடக்கு,மேற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு பெருமளவான பங்களிப்பை வழங்கும் மாகாணங்களாக மேம்படுத்தப்பட வேண்டும். தற்போது நிதி பலமும் இருப்பதால் இடைநிறுப்பட்ட வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும். அதேபோல் வெளிநாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தொடர்வதற்கான உதவிகளும் கிடைக்கப்பெறவுள்ளன. மேலும் வட.மாகாணத்திடமிருந்து இந்நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. வட. மாகாணத்திலிருந்து காற்று மற்றும் வெப்ப நிலை காரணமாக மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தயாரிப்புக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வட. மாகாணத்தில் தயாரிக்கூடிய மின்சாரத்தின் அளவை கணக்கிட்டு பார்க்கும் போது எஞ்சிய தொகையை இந்தியாவுக்கு விற்பனை செய்து பணம் பெறக்கூடிய நிலையும் உள்ளது. அதற்கான பேச்சுவார்தைகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வட.மாகாணத்தின் விவசாயிகள் திறமையும் செயற்திறனும் கொண்டவர். விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் வட.மாகாணத்தின் விவசாய நிலங்களை முகாமைத்துவம் செய்வதன் வாயிலாக ஏற்றுமதி விவசாய தொழிற்துறையை பலப்படுத்தலாம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/287204
-
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்
அகிலத்திருநாயகியை நேரில் சந்தித்து ஜனாதிபதி பாராட்டு 06 JAN, 2024 | 09:33 PM பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்து மதிப்பளித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, வயது என்பது வெறும் இலக்கம் மட்டுமே என்பதை நிரூபித்து அகிலத்தை வென்ற அகிலத்திருநாயகிக்கு ஜனாதிபதி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களுக்கு ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். இவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் ஆளுநருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான தடகளப் போட்டியில் (National Masters & Seniors Athletics) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த திருமதி அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த இவர், 1,500 மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். அப்போட்டிக்கு முன்னர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 22 ஆவது ஆசிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான போட்டியில் பங்கேற்ற இவர், அதில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றார். இவர் ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173305
-
இலங்கையில் சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு - 57 வயதிலும் காளை அடக்கும் வீரர்
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 6 ஜனவரி 2024, 08:36 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் ஏறு தழுவுதல் என்ற பெயரில் நடத்தப்பட்டது. தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன், இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக தமிழகத்தில் இருந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர். சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போட்டியில், சுமார் 200 காளை மாடுகள் பங்கு பெற்றன. இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழு முன்னெடுத்தது. இலங்கையில் இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடந்துள்ளதா? இலங்கையை சோழர்கள் ஆட்சி செய்த காலத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளதாக வரலாற்று சான்றுகளை மேற்கோள் காட்டி ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார். அதைத் தொடர்ந்து, திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் இந்தப் போட்டி சுமார் 30 ஆண்டுக் காலமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. சம்பூர் கிராம பகுதிக்குள் நடத்தப்பட்டு வந்த இந்தப் போட்டி தொடர்பில், வெளி பகுதிகளுக்குப் போதிய தெளிவில்லாது இருந்தது. தமது கிராமத்திற்குள் காணப்படும் காளை மாடுகளைக் கொண்டு, இந்தப் போட்டிகளை சம்பூர் இளைஞர்கள் நடத்தி வந்துள்ளனர். எனினும், இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து, முகாம்களில் வாழ்ந்த காலத்தில் மாத்திரம் இந்தப் போட்டிகளை நடத்த முடியவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அதைத் தொடர்ந்து, தாம் மீள்குடியமர்த்தப்பட்டதன் பின்னர் மீண்டும் இந்தப் போட்டிகளைத் தாம் நடாத்த ஆரம்பித்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ''தைப் பொங்கலை முன்னிட்டு ஏறு தழுவுதல் போட்டிகளை நடத்துகின்றோம். இந்த நிகழ்வைக் குறைந்தது 30 ஆண்டுகளுக்கு மேல் நடத்திக்கொண்டு வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுக் காலமாக இந்தப் போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. யுத்த காலத்தின்போது இந்தப் போட்டிகள் நடைபெறவில்லை. இடம்பெயர்ந்து வாழ்ந்ததன் காரணமாக வெளி ஊர்களில் இந்த நிகழ்வுகளைச் செய்யவில்லை. எனினும், இப்போது ஏற்பாட்டுக் குழு மற்றும் மாட்டு உரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும், சம்பூர் மக்களின் ஆதரவுடனும் மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றோம்," என ஜல்லிகட்டு போட்டி ஏற்பாட்டு குழுவின் உறுப்பினரான குணராசா ராஜரூபன் தெரிவிக்கின்றார். இதுவரை காலம் நடத்தப்பட்ட போட்டிகளில் 50 மாடுகள் வரை பங்கு பெற்றுள்ளன. திருகோணமலையை மாவட்டத்திலுள்ள ஈச்சிலம்பற்று, சம்பூர், 6ஆம் காலனி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமது மாடுகளை போட்டிகளுக்காக அழைத்து வருகின்றனர். இதுவரை காலம் எதிர்நோக்கிய சவால்கள் குறித்தும் குணராசா ராஜரூபன் பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார். ''இதுவரை காலமும் வீதியோரங்களிலேயே இந்தப் போட்டிகளை நடத்தி வந்தோம். மைதானங்கள் இருக்கவில்லை. இப்போது மைதானங்கள் இருக்கின்றன. முன்பு மாடுகளைத் தேடி நாங்கள் சென்றோம். இப்போது மாடுகள் எங்களைத் தேடி வருகின்றன. இந்த நிகழ்வைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்," என அவர் கூறுகின்றார். படக்குறிப்பு, செல்வநாயகம் யஜீதரன் ஜல்லிக்கட்டு விளையாடும் நோக்கிலேயே காளை மாடுகளை வாங்கி வளர்த்து வரும், மாட்டின் உரிமையாளர் செல்வநாயகம் யஜீதரன், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். ''நாங்கள் இரண்டு மாடுகளை வளர்க்கின்றோம். சுட்டியன், மறையன் என்ற இரண்டு மாடுகளை வளர்த்து வருகின்றேன். இந்த மாடுகள் மூன்று ஆண்டுகளாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு மாடுகளும் இன்று வரை ஜெயித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த ஆண்டும் நாங்கள் ஜெயிப்போம் என்றுதான் நினைக்கின்றோம். இந்த விளையாட்டை ஆரம்பிக்கும்போது குறைந்ததாட்ச அளவிலான மாடுகளை வைத்தே ஆரம்பித்தோம். அப்போது பொருளாதார ரீதியான பிரச்னைகள், சட்ட பிரச்னைகள் இருந்தன. ஆகையால் தொன்று தொட்டு வீதி வழியாகச் செய்து வந்தோம். இப்போது பிரதேச சபை மைதானத்தில் நடத்துகின்றோம். மூன்று ஆண்டுகளாக பிரச்னை இல்லை. சிறப்பாகச் செய்து வருகின்றோம்," என மாட்டின் உரிமையாளர் செல்வநாயகம் யஜீதரன் குறிப்பிடுகின்றார். தேசிய ரீதியாக இந்த விளையாட்டு முதல் முறையாக நடத்தப்படுகின்ற காரணத்தால், இந்தப் பாரம்பரிய நிகழ்வு சம்பூரில் நடத்தப்படுகின்றமை வெளி உலகத்திற்குத் தெரிய வரும் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறுகின்றார். படக்குறிப்பு, கணபதிபிள்ளை செல்வராஜா ஜல்லிக்கட்டு போட்டிகளில் விளையாடுவதற்காகவே, இரண்டு காளை மாடுகளை வளர்த்து வருகின்றார் சம்பூர் பகுதியைச் சேர்ந்த கணபதிபிள்ளை செல்வராஜா. ''முப்பது ஆண்டுகளாக சிறிய அளவில் நாங்கள் கிராமபுறத்தில் செய்து வந்தோம். 2024 பொங்கலுக்கு கொஞ்சம் நன்றாக, பிரபல்யமாகச் செய்ய நாங்கள் விரும்பினோம். அதனால், போன வருடத்தில் நான் திட்டமிட்டேன். இரண்டு மாடுகளை வாங்கி வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன். எனது காளைகளைப் பிடிக்க விட்டு, அதை வீரர்களால் பிடிக்க முடியாத அளவிற்கு வளர்த்து எடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் இரண்டு காளைகளை வேண்டி வளர்த்துக்கொண்டிருக்கின்றேன். இந்த ஆண்டும் எனது காளை பங்கேற்கிறது. கட்டாயமாகப் பிடிக்க மாட்டார்கள் என்பது எனது தீர்மானம். வெற்றி எனது மாட்டிற்குத்தான்," என மாட்டின் உரிமையாளர் கணபதிபிள்ளை செல்வராஜா தெரிவிக்கின்றார். சம்பூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக வெளி கிராமங்களில் இருந்தும் பெருமளவான காளை மாடுகள் அழைத்து வரப்பட்டுள்ளன. படக்குறிப்பு, கிருபராசா இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வெளி கிராமத்தில் இருந்து காளை மாடுகளை அழைத்து வந்த மாட்டின் உரிமையாளர் கிருபராசா, பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். ''ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக மாடுகளைக் கொண்டு வந்திருக்கிறேன். 30 கி.மீ தூரம் நடக்க வைத்தே அழைத்து வந்தோம். ஒவ்வொரு தடவையும் கொண்டு வருவோம்," என ஈச்சலம்பற்று பகுதியைச் சேர்ந்த கிருபராசா குறிப்பிடுகின்றார். ''நாங்கள் 2013இல் இருந்து இந்த நிகழ்வில் பங்கு பெற்று வருகிறோம். எங்கட மாட்டைத்தான் ஜல்லிக்கட்டுக்கு கொண்டு செல்வோம். இந்த முறையும் கொண்டு செல்வோம். எனது மாடு நன்கு விளையாடும்," என மாட்டின் உரிமையாளர் சுசிலாதேசி தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, சுசிலாதேசி சம்பூரில் காளைகளைப் பிடிக்கும் வீரராக செல்வராஜா விஜயகுமார், தனது அனுபவங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார். ''நான் தான் மாடுகளை பிடிப்பேன். மாடு பிடிக்கிறதாக இருந்தால், அது நான்தான். இந்த முறையும் இந்த மாட்டைப் பிடிப்பதற்கு நான் ரெடியாக இருக்கின்றேன். எனக்கு இப்போது 57 வயது, குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்திருப்பேன். ஒவ்வொரு வருஷமும் காளையைப் பிடித்து வருகின்றோம்," என செல்வராஜா விஜயகுமார் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, செல்வராஜா விஜயகுமார் ஆளுநரின் கருத்து இலங்கையில் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை, மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார். ''பொதுவாக தமிழ் கலாசாரத்தை உலகளவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதைப் பாதுகாக்க வேண்டும். அது எல்லா தமிழர்களின் கடமை. அப்படி இருக்கும்போது ஏறு தழுவுதல் போட்டி மாட்டுப் பொங்கல் அன்று தமிழகத்திற்கானது மாத்திரம் அல்ல. உலகில் யாராக இருந்தாலும் உணவு உட்கொண்டுதான் வாழ வேண்டும். அதற்கு மாடுகள் மிக முக்கியம். அதற்காகத்தான் மாட்டுப் பொங்கல் அன்று பொங்கல் வைத்து மாடுகளை வணங்குகிறோம். சோழர் காலத்தில் இலங்கையில் இந்தப் போட்டிகள் தொடர்ந்து நடந்துள்ளது. அதன் பின்னரான காலப் பகுதியில் இல்லாமல் போனது," என்று தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், "அந்தப் போட்டிகளைத் திரும்ப ஆரம்பிக்க வேண்டும் என்று பகுதி மக்கள் ஆசைப்பட்டார்கள். அதனால், சோழர்களின் காலப் பகுதியில் நடாத்தப்பட்ட இந்த ஏறு தழுவுதல் போட்டியை மீண்டும் ஆரம்பித்துள்ளோம். தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கம் மற்றும் இலங்கையின் சுற்றுலா அதிகார சபையுடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்துகிறோம். முதல் தடவையாக ஆரம்பித்துள்ளோம்," எனத் தெரிவிக்கின்றார். இந்த நிகழ்விற்கான காளை மாடுகளை எவ்வாறு தெரிவு செய்தீர்கள் என ஆளுநரிடம், பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது. ''தமிழகத்தில்தான் ஏறு தழுவுதலுக்கான சிறந்த காளைகள் இருக்கிறது. தமிழர்கள் வாழும் பல நாடுகளில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. அந்த ஊரில் உள்ள காளைகளை வைத்து நடத்துகிறார்கள். அதே மாதிரிதான் இங்குள்ள காளை வைத்து நாங்கள் நடத்துகின்றோம்," என அவர் கூறினார். ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கத்தின் தொழில்நுட்ப ரீதியான பயிற்சிகள் இலங்கை வீரர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் போட்டிகளில் பங்குபெற செய்வதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/articles/c9e2jy37p3yo
-
ஆஸ்கர் விழா மேடையில் ஏ.ஆர்.ரஹ்மானை தமிழில் பேச தூண்டிய நிகழ்வு எது தெரியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 ஜனவரி 2024, 07:21 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் "என் வாழ்வில் எனக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று வெறுப்பு மற்றொன்று அன்பு. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் நான் இங்கு நிற்கிறேன்," என்று தனது இசைப் பயணம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய வார்த்தைகள் இவை. கடந்த 1992ஆம் ஆண்டு, தனது முதல் திரைப்படமான 'ரோஜா' மூலம் இந்திய சினிமாவின் இசைத் துறையையே புரட்டிப் போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான் எனச் சொன்னால் அது மிகையாகாது. இன்றுவரை தான் இசையமைக்கும் திரைப்படங்களில் ஏதேனும் ஒரு வகையான புதுமையைச் செய்து வரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று 56ஆவது பிறந்த நாள். இரவு நேரங்களில் இசையமைக்கும் வழக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES இரவு நேரங்களில் மட்டுமே திரைப்படங்களுக்கு இசையமைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது நெருங்கிய குடும்ப நண்பரும், மூத்த செய்தியாளருமான அனுபமா சுப்ரமணியன் இதுகுறித்து பிபிசியிடம் பேசினார். "ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவுக்கு இரவு நேரத்தில் சென்றால் அங்கே பல பிரபலாமான இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அவருக்காகக் காத்திருப்பதைக் காணலாம் அல்லது அவர்கள் தங்களது திரைப்படப் பாடல்களுக்காகவும் பின்னணி இசைக்காகவும் ரஹ்மானுடன் ஆலோசித்து கொண்டிருப்பார்கள். நாம் கேட்டு ரசித்த பல பாடல்கள் மற்றும் ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுத் தந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்கான பிண்ணனி இசையும் பாடல்களும் இரவு நேரத்தில் உருவாக்கப்பட்டவையே. இப்போது அந்த வழக்கத்தைக் கொஞ்சம் மாற்றியுள்ளார், பகலிலும் இசைப் பணிகளைக் கவனித்து வருகிறார்," என்கிறார் அனுபமா. "அவரை 1990களில் பேட்டி எடுக்கச் செல்லும்போது, பாலிவுட்டை சேர்ந்த பலரை அவரது ஸ்டுடியோவில் பார்க்க முடிந்தது. ஒரு தமிழரின் இசைக்காக இந்தி திரையுலகமே சென்னை வந்து காத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது," எனக் கூறுகிறார் அனுபமா. மிகச் சிறந்த மனிதர், ஆன்மீகவாதி படக்குறிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானுடன் அனுபமா சுப்ரமணியன் தொடர்ந்து பேசிய அனுபமா, "எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும் ஐந்து வேளை தொழுவதற்கு மறக்கமாட்டார். ரம்ஜான் மாதத்தின்போது 30 நோன்புகளையும் தவறாமல் கடைபிடிப்பார். ஒவ்வொரு நோன்பு நாள் அன்றும் மாலையில், அவரது வீட்டிற்கு எதிரே உள்ள அரசுப் பள்ளியில் ஏழைகளுக்கான 'ஜக்காத்' எனும் உதவியை வழங்குவார்." "செய்திகள் சேகரிப்பதற்காக அவரைப் பல முறை சந்தித்துள்ளேன். ஏதாவது கிசுகிசு கிடைக்குமா என்று ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பேன். ஆனால் யாரைக் குறித்தும் ஒரு வார்த்தைகூட தவறாகப் பேசியது கிடையாது. அவரைப் பற்றிய சர்ச்சைகளுக்கு ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாகத் தருவார். ஒரு பிரபலமான நபர் ஒருமுறை அவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். அது பற்றிக் கேட்டபோதும்கூட, அதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை என சிரித்துக்கொண்டே சொன்னார்," என்கிறார் அனுபமா. மேலும், "எப்படி இவரால் இவ்வளவு பாஸிட்டிவான நபராக இருக்க முடிகிறது என நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஒருவேளை இப்படி ஒரு மிகச் சிறந்த ஆன்மீகவாதியாகவும் நல்ல மனிதராகவும் இருப்பதால்தான் கடவுள் அவரை இவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார் போல," என்று கூறினார் அனுபமா. ஆஸ்கர் விழா மேடையில் தமிழில் பேசத் தூண்டிய நிகழ்வு பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில், ஸ்லம்டாக் மில்லினியனர் படத்திற்காகச் சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான். இதன்மூலம் ஆஸ்கர் வென்ற முதல் தமிழர் என்கிற பெருமையைப் பெற்றார். விருது பெற்ற அனுபவம் குறித்துக் கேட்டபோது, "பின்னணி இசை விருதுக்காக என் பெயர் அறிவிக்கப்பட்டபோது இது கனவா அல்லது நிஜமா என நினைத்தேன். மொத்த இந்தியாவும் ஆர்ப்பரித்தது. நான் ஒரு கிளேடியேட்டரை போல் உணர்ந்தேன். மேடையில் பேசுவதற்குக் கூட ஏதும் தயாரித்து வைக்கவில்லை. இயல்பாக என்ன தோன்றுகிறதோ அதையே பேச நினைத்தேன்." "நான் கீழே அமர்ந்திருந்த போது பெனோலோபி கிருஸ் ஸ்பானிஷ் மொழியில் பேசினார். ஓ... இது நன்றாக உள்ளதே. நாமும் தமிழிலேயே பேசிவிடலாம் என நினைத்தேன். அதனால்தான் மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் கூறினேன். நான் சொன்ன இந்த வார்த்தைகள் புனித நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். கடவுள் அருள் புரியட்டும் என்று சொன்னேன். சிலர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டனர். மதத்தை ஒப்பிட்டு பேசினர்," என்று கூறினார். விமான நிலையத்தில் கிடைத்த வரவேற்பு பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்கரை வென்று நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் தனக்குக் கிடைத்த சுவாரஸ்யமான அனுபவத்தைக் குறித்து பேசும்போது, "ஆஸ்கர் விருதுகளை என் கைப்பையில் வைத்திருந்தேன். விமான நிலையத்தில் பாதுகாவலர்கள் என் பையை பரிசோதித்தபோது, சுமார் 100 அதிகாரிகள் வரை திரண்டிருந்தனர். ஒரு அதிகாரி தனது கையில் 2 ஆஸ்கரை தூக்கிக் காட்டி நான் என்ன வைத்திருக்கிறேன் பாருங்கள் என்றார். உடனே அங்கு சிரிப்பலை எழுந்தது," என அவர் நினைவுகூர்ந்ததாக அனுபமா கூறினார். திலீப்குமார் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு குழு இசையமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சேகர் என்பவரின் மகன் தான் ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான். சிறுவயது முதலே இசைக் கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். அம்மா, அக்கா, தங்கைகள் எனப் பெண்கள் சூழ்ந்த உலகம் ஏ.ஆர்.ரஹ்மானுடையது. தன்னுடைய தந்தையின் இறப்பால் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு முழுநேரமாக இசை உலகிற்குள் நுழைந்திருக்கிறார். திலீப் குமார் என்கிற இயற்பெயர் கொண்ட இவர் பின்னாளில் ரஹ்மானாக மாறினார். தன்னுடைய இயற்பெயரான திலீப் குமாரை வெறுத்திருக்கிறார். புதியதொரு மனிதனாக உருமாற விரும்பியுள்ளார். அதன் காரணமாக இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றத் தொடங்கினார். எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுவில் பணியாற்றியுள்ளார். பள்ளிக்கல்வியைக்கூட முடிக்காதவர், தன்னுடைய இசைப் புலமையால் பின்னாளில் லண்டன் இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று இசை கற்றிருக்கிறார். எண்ணற்ற விருதுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES விளம்பரப் படங்களுக்கு டியூன் போட்டுக் கொண்டிருந்தவர், இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே தேசிய விருதைப் பெற்றுத் தந்தது அவருடைய கூடுதல் பலம். ஏ.ஆர்.ரஹ்மான் 1992 முதல் 2000ஆம் ஆண்டு வரை இசையமைத்த படங்கள் அனைத்துமே அவருக்கு ஃப்லிம் ஃபேர் விருதைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கார் விருது மட்டுமில்லாமல் கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகளையும் வென்றிருக்கிறார். 2010ஆம் ஆண்டில் ரஹ்மானுக்கு இந்திய அரசின் பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டது. தமிழ் மீதான பற்று பட மூலாதாரம்,GETTY IMAGES ஏ.ஆர்.ரஹ்மான் 'தமிழ் பற்றாளர்' என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆஸ்கார் மேடையில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று அவர் தமிழில் பேசிய காட்சி, அவரது தாய்மொழிப் பற்று மற்றும் அதன் பெருமையை உலக அரங்கில் பதிவு செய்த செயலுக்கு மிகுதியான வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ககாந்த 2019ஆம் ஆண்டு வெளியான '99' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானும் படத்தின் கதாநாயகனும் மேடையில் இருக்கும்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் இந்தியில் பேசினார். அப்போது, "இந்தியா?" எனக் கேட்டுவிட்டு, மேடையை விட்டு இறங்கினார் ரஹ்மான். கடந்த 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா "அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும்," என்று கூறியிருந்தார். அமித் ஷாவின் பேச்சு வெளிவந்த மறுநாளே அதுகுறித்து திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் கேள்வி எழுப்ப, 'தமிழ்தான் இணைப்பு மொழி' என அவர் கருத்து கூறினார். அதற்கு சில நாட்கள் முன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழுக்கும் அமுதென்றுபேர்!' என்ற பாரதிதாசனின் கவிதையில் வரும் 'தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!' என்ற வரிகளை குறிப்பிட்டு இசையமைப்பாளர் ரஹ்மான் பதிவிட்டிருந்தார். நேர்மறையான எண்ணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எப்பொழுதும் பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே சிந்திப்பார் ஏ.ஆர்.ரஹ்மான். தனக்கு கிடைத்த தோல்விகள், ஏமாற்றங்களால் அந்த பக்குவம் வந்ததாக கூறுவார். "Notes of a Dream: The Authorized Biography of AR Rahman" என்ற தனது சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவின்போது, திரைத்துறையில் சரியான அங்கீகாரம் கிடைக்காத வரையில் தோல்வியைச் சந்தித்ததாகவும், அப்போதெல்லாம் தனக்குள் தற்கொலை எண்ணம் உருவானதாகவும் பகிர்ந்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/c4nyln5jkeno
-
மேலவளவு 7 பேர் படுகொலை: இந்தியாவையே உலுக்கிய சாதிவெறியின் உச்சம்
படக்குறிப்பு, முருகேசனின் சகோதரர் காஞ்சிவனம் கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 6 ஜனவரி 2024, 06:27 GMT பிப்ரவரி 1997. அதுவரையிலும் ஊர் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படாத முருகேசன், முதல் முறையாக, அந்த பஞ்சாயத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஊருக்குள் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சென்றார். அது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராம ஊராட்சி அலுவலகம். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, சுழற்சி முறையில், மேலவளவு கிராம ஊராட்சிக்கான தலைவர் மற்றும் இதர பதவிகள் பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டது. அப்போது அந்த கிராம ஊராட்சியில், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகளால், பட்டியல் சமூகத்தில் இருந்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. பல முறை அந்த கிராம ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், 1996ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மேலவளவு கிராமத்தில் அப்போதைய காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலிகளான முருகேசனும், அவரது தம்பி ராஜா உட்படப் பலர் கிராம ஊராட்சியில் உள்ள தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். “எங்கள் தலைமுறையிலேயே பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் செல்லும் முதல் நபர் நான் தான். இதுவே முதல்முறை. இனி, எல்லாம் நன்றாக நடக்க வேண்டும்.” இப்படித்தான் ஊராட்சி தலைவர் பொறுப்பெற்றது குறித்துத் தன் மனைவி மணிமேகலையிடம் பகிர்ந்துள்ளார் முருகேசன். “ஆனால், இந்த ஊருதான் என்னையும், என் தங்கச்சியையும் வாழ விடலையே. ஒருத்தர், இரண்டு பேரு இல்ல. அன்னைக்கு அவங்களுக்கு இருந்த சாதி வெறியில், ஏழு பேர கொன்னுட்டாங்க,” என தன் கணவன் கொலை செய்யப்பட்டது குறித்துக் கூறினார் முருகேசனின் மனைவி மணிமேகலை. ஆம், கிராம ஊராட்சியின் பொறுப்புகளுக்குத் தேர்வாகியிருந்த முருகேசன், அவரது தம்பி ராஜா உட்பட ஏழு பேர், 1997ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். என்ன நடந்தது? ஜூலை 30, 1997. தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு பட்டியல் சமூகத்தினர் தேர்வாகி ஆறு மாதங்கள் ஆகியிருந்தது. ஆனால், பொறுப்பேற்ற பிறகு, பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் செல்வதில் தொடங்கி, அன்றாடப் பணிகள் வரை அனைத்திலும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் இடையூறும், அச்சுறுத்தலும் இருப்பதால், முருகேசனும், மற்ற உறுப்பினர்களும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க முடிவு செய்தனர். திட்டமிட்டபடியே, முருகேசனும் மற்றவர்களும் மேலவளவில் இருந்து சுமார் 35 கிலோமீட்டரில் உள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். மனுவைத் தயார் செய்து மாவட்ட ஆட்சியரை மதியம் மூன்று மணிக்கு மேல் சந்தித்த அவர்கள், அதைத் தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தனர். பிறகு, ஆறு மணிக்கு மேல், மதுரையில் இருந்து மேலூர் சென்று, ஏழு மணிக்கு மேல் மேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து மேலவளவு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, மேலவளவு செல்வதற்கு சில கிலோமீட்டருக்கு முன், சென்னகரம்பட்டி பகுதியில் பேருந்து மறிக்கப்பட, என்ன நடக்கிறது என முருகேசன் உள்ளிட்டோர் எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது, சாலையில் இருந்து பேருந்துக்குள் ஏறிய நபர்கள், முருகேசன், ராஜா உள்ளிட்டோரை அரிவாளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில், ஏழு பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்கள். தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில், கொலை செய்யப்பட்ட முருகேசனின் தலையை மட்டும் அப்போது காணவில்லை. பின்னர், மேலவளவின் ஊர் எல்லையில் உள்ள ஏரிக்கு அருகில் கண்டெடுத்தனர். “அப்போதெல்லாம் செல்போன் வசதி இல்லை. பேருந்தில் வந்தவர்கள் ஓடி வந்து ஊரில் தகவல் சொல்லவே, நாங்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்றோம். நாங்கள் அங்கு செல்வதற்குள்ளேயே குற்றவாளிகள் தப்பிவிட்டனர். முருகேசன் உட்பட ஏழு பேரும் இறந்துவிட்டனர்,” என அன்று நடந்ததைப் பகிர்ந்தார் முருகேசனின் மற்றொரு தம்பி காஞ்சிவனம். “அன்று நானும் அவர்களுடன்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், மாவட்ட ஆட்சியரைச் சந்திப்பதால், நிர்வாகிகள் மட்டும் சென்றால் போதும் எனக் கூறினார்கள். மேலும், அன்று வயல் வேலையும் இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில், அன்றாடம் வயலில் வேலை செய்தால் தான், உணவு கிடைக்கும்,” என்றார் காஞ்சிவனம். மதுரையில் தங்கியிருந்தால்.... படக்குறிப்பு, மேலூர் பேருந்து நிலையம் ஏழு பேர் கொலை செய்யப்பட்ட அன்று அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு, மதுரையிலேயே தங்கிவிட்டு, மறுநாள்தான் ஊருக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறினார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன். கடந்த 1997ஆம் ஆண்டு மதுரையில் பணியாற்றிய இளங்கோவன், முருகேசன் உள்ளிட்டோரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். “அன்று அவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துவிட்டு மாலை 4 மணிக்கு மேல்தான் வெளியே வந்தார்கள். அவர்களிடம் மனு நகலைப் பெற்றேன். மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பு அளிக்க உறுதியளித்ததாகக் கூறினார்கள். நான் அவர்களிடம் மறுநாள் ஊருக்கு நேரில் வந்து, விசாரித்து, மக்களிடம் பேசிவிட்டு, செய்தியாக்குவதாகக் கூறியிருந்தேன். ஆனால், இப்படி நடந்த பிறகு அவர்களைப் பார்ப்பேன் என நினைக்கவில்லை,” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போதே பொழுது இருட்டியிருந்தது. பாதுகாப்பு கருதி மறுநாள் அதிகாலைதான் ஊருக்குச் செல்வதாகக் கூறினர். ஆனால், ஏன் இரவே சென்றார்கள் எனத் தெரியவில்லை,” என்றார். மேலும், சம்பவம் தொடர்பாக இரவு 9 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறிய இளங்கோவன், மறுநாள் காலையில் ஊருக்குச் சென்றதாகக் கூறினார். “அங்கு மக்கள் நீண்ட காலமாகப் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வயல்களிலும், வீடுகளிலும் வேலை பார்த்துள்ளனர். அவர்கள் இந்த மக்கள் பொறுப்புகளுக்கு வருவதை அச்சுறுத்தலாகப் பார்த்துள்ளனர். அரசியல் ரீதியாக, மேலவளவில் தொடங்கிய பிரச்னைதான், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்ற கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான காரணங்களாக அமைந்தன,” என்றார். அன்றைய காலத்தில் இதுபோன்ற கொடூர சாதிக் கொலைகள் தொடர்ச்சியாக நடந்து வந்ததாகக் கூறிய இளங்கோவன், “முருகேசன் கொலைதான் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் இந்தக் கொலைகள் பேசப்பட்டன. இந்தக் கொலையில் ஈடுபட்டவர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்றும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால், இதுபோன்ற சம்பவங்கள் 2000க்கு பிறகு பெரிதாக நடக்கவில்லை,” என்றார் அவர். வழக்கு என்ன ஆனது? படக்குறிப்பு, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடம், மேலவளவு அந்தக் கொலை வழக்கில், மேலவளவு கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 44 பேர் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 17 பேரை குற்றவாளி என 2001ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சின்ன ஓடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டிசாமி உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, உயர்நீதிமன்றமும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், 17 பேரில், மூவருக்கு மட்டும் தண்டனையைக் குறைத்தது. அவர்கள் அந்த ஆண்டே தண்டனைக் காலம் முடிந்து, சிறையிலிருந்து வெளியே வந்தனர். பின், மீதமுள்ள 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்களில் ஒருவர், உடல்நலம் காரணமாக உயிரிழந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமும் அவர்களைக் குற்றவாளி என உறுதி செய்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி, எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நன்னடத்தையின் அடிப்படையில், இந்த வழக்கில் சிறையில் இருந்த 13 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களது விடுதலையை எதிர்த்து, முருகேசனின் மனைவி மணிமேகலை உட்பட இறந்தவர்களின் குடும்பத்தினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். ஆனால், வழக்கை விசாரித்த உயர்நீதின்றம், “சிறையில் இருந்து வெளியே வந்துள்ள 13 பேரும், பரோலில் வெளியே வந்தபோது எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. அதேபோல, முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டபோதும், கிராமத்தில் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. எனவே, 13 பேரின் முன்விடுதலை குறித்து உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்து தரப்புச் சூழலையும் பரிசீலனை செய்த பிறகே தமிழக அரசு அரசாணையைப் பிறப்பித்துள்ளது. ஆகையால், இதில் தலையிட விரும்பவில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன,” என உத்தரவிட்டது. ‘எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க, ஆனால், நாங்க தான்…’ தற்போது ஊரில் உள்ள நிலைமை குறித்துப் பேசிய முருகேசனின் மனைவி மணிமேகலை, “அவர் இறந்ததற்குப் பிறகு, எனக்கு வேறு வழியில்லை. அரசாங்கம் அப்போது கொடுத்த பணத்தில், நிலுவையில் இருந்த கடனை கட்டினேன். பின், பஞ்சாயத்தில் வேலை கொடுத்தார்கள். கொஞ்ச காலம் அதைச் செய்து, எனது மூன்று மகள்களையும், கடைசி மகனையும் படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்தேன். என் குழந்தைகள்தான் தற்போது வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்,” என்றார். ஏழு பேர் படுகொலைக்குப் பிறகு, பட்டியல் சமூகத்தினரும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் சுமூகமாக இருப்பதாகக் கூறும் மணிமேகலை, தங்களால்தான் யாரிடமும் போய் வேலை பார்க்க முடியவில்லை என்றார். “எங்கள் உறவினர்களே சிலர் தற்போது பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்களின் வயல்களில் வேலை செய்கிறார்கள், சிலர் நிலம் வாங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு அது எல்லாம் சரியாக இருக்கும். என் வாழ்க்கையையும், என் குழந்தைகள் வாழ்க்கையையும் இப்படிச் செய்தவர்களிடம் நானோ எனது குழந்தைகளோ ஒரு நாளும் வேலை செய்ய முடியாது,” என்றார். https://www.bbc.com/tamil/articles/c72yvy85789o
-
டேவிட் வார்னர்: 132 ஆண்டு வரலாற்றை திருத்தி ஆஸ்திரேலிய அணிக்குள் நுழைந்தவர்
கடைசி டெஸ்டிலும் அரைசதம் : கண்ணீருடன் ஓய்வு பெற்றார் டேவிட் வோர்னர்! அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வோர்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சிட்னியில் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த வோர்னர், ஒருகட்டத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நடுமைதானத்தில் அழுது விட்டார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருடன் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வோர்னர் ஏற்கெனவே அறிவித்து இருந்தார். அதன்படி, சிட்னியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி அவருக்கு இறுதி போட்டியாக அமைந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் 34 ரன்களை சேர்த்த டேவிட் வோர்னர், இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்களை சேர்த்தார். டெஸ்ட் போட்டிகளில் தனது 37ஆவது அரைசதத்தை வோர்னர் பூர்த்தி செய்தபோது, மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று வோர்னரை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து 57 ரன்கள் சேர்த்து இருந்தபோது சஜித் கான் பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில், தனது கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் வோர்னர் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் வோர்னருக்கு வாழ்த்து கூறி வழியனுப்பி வைக்க, ஒட்டுமொத்த மைதானமும் கைதட்டல்களால் அதிர்ந்தது. பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த டேவிட் வோர்னர், தனது கையில் இருந்த ஹெல்மெட் மற்றும் கையுறைகளை அங்கிருந்த சிறுவன் ஒருவனுக்கு வழங்கினார். முன்னதாக வோர்னர் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியபோது, அவருக்கு பாகிஸ்தான் வீரர்கள் Guard of Honour மரியாதை வழங்கினர். கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வோர்னர், 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 26 சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் உட்பட 8 ஆயிரத்து 786 ரன்களை குவித்தார். அதிகபட்சமாக 335 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். முன்னதாக ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விடைபெறுவதாக, அண்மையில் வோர்னர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. சிட்னியில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்குப் பிறகு, வர்ணனையாளர்கள் டேவிட் வோர்னரை பேச அழைத்தபோது, அவர் ஏதோ சொல்ல வந்தபோது, திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு மைதானத்தின் நடுவில் அழுது விட்டார். பின்னர் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்த டேவிட் வோர்னர், அங்கிருந்து திரும்பி சக வீரர்களிடம் சென்றார். இது தொடர்பான பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் மூன்றிலும் தோல்வியை சந்தித்துள்ளது. சிட்னி நகரில் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. கடந்த 3ஆம் திகதி தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 313 ரன்களை சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 299 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 14 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, வெறும் 115 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து 130 ரன்கள் என்ற இலக்குடன் களமிறக்கிய அவுஸ்திரேலிய அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள்கொண்ட தொடரை 3-0 என முழுமையாக கைப்ப்ற்றி பாகிஸ்தானை White-wash செய்தது. https://thinakkural.lk/article/287216
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
நோர்வேயில் தமிழ் பெண் வைத்தியர் படுகொலை Published By: DIGITAL DESK 3 06 JAN, 2024 | 02:59 PM நோர்வே நாட்டில் 30 வயதான தமிழ் பெண் வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (02) நோர்வேயின் எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் புத்தாண்டு தினத்தன்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் உடலில் பல துப்பாக்கி சூடு காயங்கள் இருந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இவர் பல் வைத்தியர் என்பதோடு நீண்ட காலமாக இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் சடலம் கண்டெடுக்கப்பட்ட காரிலிருந்து கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை மிரட்டல் தொடர்பில் உயிரிழந்த பெண் பல தடவைகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்ததோடு, அது தொடர்பில் உரிய முறையில் பொலிஸார் கவனம் செலுத்தவில்லை என குடும்பத்தினர் முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நோர்வேயில் தமிழ் பெண் வைத்தியர் படுகொலை | Virakesari.lk
-
மாலைத்தீவு கடற்பரப்பில் இரண்டு இஸ்ரேலிய எண்ணெய் கப்பல்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல்
Published By: RAJEEBAN 06 JAN, 2024 | 10:53 AM மாலைத்தீவு கடற்பரப்பில் இஸ்ரேலுக்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஆளில்லா விமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைத்தீவின் வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்பிலேயே இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த எண்ணெய் கப்பல்கள் பப் அல் மன்டாப் நீரிணை மற்றும் செங்கடலை கடந்து பயணிக்க திட்டமிட்டிருந்தன என தகவல்கள் வெளியாகியுள்ளன. பப் அல் மன்டாப் நீரிணையிலிருந்து 2000 கிலோமீற்றர் தொலைவில் இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மீண்டும் தாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக கப்பல்கள் தங்கள் பயணப்பாதையை மாற்றியுள்ளன. https://www.virakesari.lk/article/173248
-
ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: வவுனியாவில் பதற்றம்!
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் Published By: DIGITAL DESK 3 06 JAN, 2024 | 11:09 AM வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை (05) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன், நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். இதனையடுத்து, வடகிழக்கு வலிந்துஅகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டநிலையில் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்றையதினம் மாலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மற்றைய பெண் பிணையில் விடுவிக்கப்பட்டார். https://www.virakesari.lk/article/173252
-
வறுமை நிலைக்குள்ளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளது
05 JAN, 2024 | 05:04 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் வரி சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டதால் கடும் வறுமை நிலைக்கு ஆளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50இலட்சத்தை தாண்டியுள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்கள அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2019 காலப்பகுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்த இந்த வறிய மக்கள், முழு சனத்தொகையில் 25 இலட்சமாக பதிவாகி இருந்தபோதும் தற்போது வறிய மக்கள் பிரிவுக்கு புதிதாக 30இலட்சம் பேர் இணைந்திருக்கின்றனர். நாட்டின் மொத்த சனத்தொகை சுமார் இரண்டு கோடி 20 இலட்சமாகும் இந்த சனத்தொகையில் 2019ஆகும் போது நூற்றுக்கு 11.9 வீதமானவர்களே வறுமை நிலையில் இருப்பதாக பதிவாகி இருந்தபோதும் தற்போது அந்த சதவீதம் நூற்றுக்கு 25 என்ற அளவுக்கு வந்துள்ளது. அதன் பிரகாரம் ஜனசவி, சமுர்தி மற்றும் அஸ்வெசும போன்ற வறுமை நிவாரணம் வழங்கப்படவேண்டியவர்களின் சதவீதம் நூற்றுக்கு 11.9இல் இருந்து நூற்றுக்கு 25 என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது. அத்துடன் இந்த வருடத்தில் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்பட்ட வற்வரி வீதம் நூற்றுக்கு 18வரை அதிகரிப்பதற்கு முன்னர் இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் நூற்றுக்கு 27.9 வீதமானவர்கள் 2024ஆம் ஆண்டாகும்போது வறுமை நிலைக்கு ஆளாகும் என உலக வங்கியின் கணிப்பாக இருந்தது. இதேவேளை, இதுவரை காலமும் வற்வரி விதிப்புக்கு உள்வாங்கப்படாமல் இருந்த எரிபாெருள் எரிவாயு போன்ற 79 பொருட்களுக்கு புதிதாக நூற்றுக்கு 18 வீத வற் வரி விதிக்கப்பட்டதால், இந்த நாட்டில் மிகமோசமான வறிய மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பொருளாதார மற்றும் நிதி ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் இந்த கணக்கு வழக்குகள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் நாட்டின் உண்மையான வறிய மக்களின் எண்ணிக்கை மேலும் தீவிரமாகலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கொவிட் தொற்று மற்றும் 2019இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 3வருட குறுகிய காலத்துக்குள் இந்த நாட்டின் வறியவர்களின் வீதம் இரண்டு மடங்கு வரை அதிகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/173219
-
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம்
06 JAN, 2024 | 07:46 AM வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான திருமதி சேனுகா திரேனி செனவிரத்ன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை (5) தனது நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு குறிப்பையும் பதிவிட்டிருந்தார். முன்னதாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட அந்தப் பதவியை வகித்தார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173239
-
அமெரிக்காவை பிரிட்டனின் அடிமைச் சங்கிலியில் இருந்து மீட்டெடுத்த ஒரு கோப்பைத் தேநீர்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், எலிகா கௌல்டு பதவி, பிபிசியுடன் அவர் நடத்திய உரையாடலின் அடிப்படையில் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அது 1773, டிசம்பர் 16, இரவு. ஆயுதமேந்திய ஒரு கும்பல், பாஸ்டனில் உள்ள கிரிஃபின்ஸ் ஆங்கரேஜில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மூன்று கப்பல்களில் ஏறினர். அதில் சிலர் மோஹாக் போர் வீரர்களைப் போல உடை அணிந்திருந்தார்கள். இந்தக் கப்பல்களில் 92,000 பவுண்டுகள் அல்லது சுமார் 41,000 கிலோ தேயிலை நிரப்பப்பட்ட 340 பெட்டிகள் இருந்தன. அந்தக் காலத்தில் தேநீர் அமெரிக்காவின் பாஸ்டன் பிராந்தியத்தில் மிகவும் பிரபலமான ஒரு பானமாக இருந்தது. சன்ஸ் ஆஃப் லிபர்ட்டி என்று அழைக்கப்படும் ஒரு தேசபக்த குழுவின் ஆதரவுடன் கப்பலுக்குள் ஊடுருவிய நபர்கள், அங்கிருந்த பெட்டிகளை எடுத்து தேயிலையைக் கடலில் கொட்டினர். அவை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமான தேயிலை. இன்றைய டாலர் மதிப்பில், ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் நஷ்டத்தை சந்தித்தது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி. இந்தத் தேயிலை அழிப்பு சம்பவம் 13 காலனிகளை புரட்சிக்குத் தூண்டியது அல்லது இதன் மூலம் அமெரிக்க புரட்சி பிறந்தது என்று கூறலாம். பாஸ்டனில் நடந்த இந்த நிகழ்வுதான் பாஸ்டன் தேநீர் விருந்து என்று அழைக்கப்படுகிறது. டிசம்பர் 16ஆம் தேதி வரை, காலனிகளின் அனுமதியின்றி அவர்களின் மீது பிரிட்டிஷ் நாடாளுமன்றம் மீண்டும் மீண்டும் வரி விதிக்க முயன்றபோது, காலனிகளின் ஆட்சேபனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது சாத்தியமாக இருந்தது. ஆனால், அந்த நாளுக்குப் பிறகு காலனித்துவ அதிகாரத்தின் மீதான இருதரப்பினரின் நிலைப்பாடும் மாறியது. ஒரே ஆண்டுக்குள் கிரேட் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் வெடித்தது. கிழக்கிந்திய கம்பெனி மீது தாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பல குடியேற்றவாசிகள் இந்திய மோஹாக்ஸ் போல் மாறுவேடமிட்டு கப்பல்களில் ஏறினர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாஸ்டனில் நடந்த தேயிலை அழிப்பு பல தேச பக்தர்களின் மனதைப் புண்படுத்தியது, ஏனெனில் அதன் விளைவுகள் அமெரிக்காவை பாதிக்கும். தேயிலை அழிக்கப்படுவதைப் பற்றி அறிந்ததும், அதைக் கடுமையாகக் கண்டித்தார் ஜார்ஜ் வாஷிங்டன். பெஞ்சமின் பிராங்க்ளின் இந்த நடவடிக்கையால் மிகவும் அதிருப்தி அடைந்தார். கிழக்கிந்திய கம்பெனியின் நஷ்டத்தை அவரே செலுத்த முன்வந்தார். பிரித்தானிய பிரதமர் லார்ட் நோர்த் 1773ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியுடன் செய்துகொண்ட ஊழல் ஒப்பந்தத்தில், ஒரு முக்கிய கேள்விக்கான பதில் உள்ளது. கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டனின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த குழுமமாக இருந்தது. அவர்கள் தங்களது சொந்த ராணுவத்தையும் கொண்டிருந்தனர். இது பிரிட்டன் அரசரின் வழக்கமான படைகளை விட இரட்டிப்பான அளவில் இருந்தது. தெற்காசியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தை "ராணுவம் மற்றும் சர்வாதிகாரம் மூலம் அமைக்கப்பட்ட பேரரசு" என்று விவரித்தார் அரசியல் பொருளாதார நிபுணர் ஆடம் ஸ்மித். இருப்பினும், வங்காளத்தில் கடுமையான வறட்சி மற்றும் அதன் சொந்த நிர்வாகத்தில் இருந்த ஊழல் காரணமாக, கிழக்கிந்திய நிறுவனம் திவாலாகும் நிலையில் இருந்தது. வடக்கு தீர்வு தேயிலை சட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாமுவேல் ஆடம்ஸ் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் பிரச்னைகளைத் தீர்க்கும் நம்பிக்கையில், வட அமெரிக்காவில் 17 மில்லியன் பவுண்டுகள் தேயிலையைக் குறைந்த விலையில் விற்கும் குத்தகையை கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கியது அமெரிக்க நாடாளுமன்றம். ஆனால் மறுபுறம், 1767இன் டவுன்சென்ட் வருவாய் சட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேயிலை மீதான காலனித்துவ வரியை நாடாளுமன்றம் தக்க வைத்துக் கொண்டது. வரி காரணமாக விலை கூடுதலாக இருந்தாலும், ஜான் ஹான்காக் போன்ற வணிகர்களால் அமெரிக்காவுக்குள் கடத்தி வரப்படும் வரியில்லா டச்சு தேயிலையைவிட, நிறுவனத்தின் தேயிலை மலிவாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. 1765ஆம் ஆண்டு முத்திரை சட்டத்திற்குப் பிறகு, காலனிகளுக்கு வரி விதிக்கும் நாடாளுமன்றத்தின் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்தன. மேலும் வட அமெரிக்க குடியேற்றவாசிகள் தேயிலை சட்டம் பிரிட்டிஷ் அரசியல்வாதிகளுக்கு ஒரு வெற்றியாக இருக்கும் என்று பயந்தனர். காரணம் காலனிகளின் அனுமதியின்றி வரிகள் விதித்து, அதன் மூலம் தங்களது வருவாயை உயர்த்துவதற்கு வழி செய்ய நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்று அந்த அரசியல்வாதிகள் நம்பினர். பாஸ்டன் சம்பவத்தின் தாக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES பாஸ்டனில் நடந்த நிகழ்வுகள் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள மற்ற நகரங்களிலும் எதிரொலித்தன. பாஸ்டன் நகரம் இந்தப் போராட்டத்தில் தனியாக நிற்கவில்லை. இந்த புதிய தேயிலைச் சட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பு மாசசூசெட்ஸிலும் ஏற்பட்டது. தேயிலை சட்டத்திற்கு எதிர்ப்பு பரவியதால், நியூயார்க் மற்றும் பிலடெல்ஃபியாவில் உள்ள தேசபக்தர்கள் தேயிலை கொண்டு வரும் நிறுவனத்தின் கப்பல்களுக்கு துறைமுகத்தில் நங்கூரமிடும் அனுமதியை மறுத்தனர். இதனால் கப்பல்கள் பிரிட்டனுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மற்ற இடங்களில் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தேயிலை கைவிடப்பட்டு, அழுகிப் போனது. சார்லஸ்டனுக்கு பிறகு, தென் கரோலினா வணிகர்கள் தேயிலை ஏற்றுமதிக்குப் பணம் செலுத்தினர், ஆனால் உள்ளூர் தேசபக்தர்கள் அதை துறைமுகத்தில் கடலில் கொட்டி அழிக்கும்படி கட்டாயப்படுத்தினர். வட கரோலினாவில் உள்ள ஈடன்டனில், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 51 பேர் ஒரு மனுவில் கையெழுத்திட்டு, "எங்கள் சொந்த நாட்டை அடிமைப்படுத்திய தேயிலைச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை தேநீர் குடிக்க மாட்டோம்," என்று உறுதியளித்தனர். வில்மிங்டன் துறைமுக பெண்கள் நகர சதுக்கத்தில் தேயிலையைக் கொட்டி எரித்தனர். நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லார்ட் ஃபிரடெரிக் நார்த் தேயிலை அழிவு பற்றிய செய்தி லண்டனுக்கு எட்டியபோது, அமெரிக்க நலன்கள் குறித்து அனுதாபம் கொண்ட பிரிட்டிஷ் குடிமக்கள்கூட சீற்றமடைந்தனர். இதனால்தான் பல காலனித்துவவாதிகள் இது தனிப்பட்ட சொத்துகள் மீதான தாக்குதல் என்று கூறினர். பின்னர் நாடாளுமன்றம் மூன்று தண்டனைச் சட்டங்களை பதிலாக அளித்தது. மசாசூசெட்ஸின் உரிமைகள் பறிக்கப்பட்டன, காலனியின் நீதிமன்றங்கள் முடக்கப்பட்டன. மேலும் கிழக்கிந்திய கம்பெனிக்கு பொறுப்பானவர்கள் இழப்பீடு வழங்கும் வரை, பாஸ்டன் துறைமுகத்தில் அனைத்து வணிகப் பரிவர்த்தனைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. வரலாற்று ஆசிரியர்கள் அந்தச் சட்டங்களை இன்று தண்டனைச் சட்டங்கள் என்று நினைவுகூர்கிறார்கள். எனவே காலனித்துவவாதிகள் இதை ஒரு 'சகிக்க முடியாத செயல்' என்று அழைத்தனர். மூன்று சட்டங்கள் குறித்த இரண்டு விளக்கங்களும் மிகவும் துல்லியமாக இருந்தன. நாடாளுமன்றம் கடுமையாக நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால், பாஸ்டனில் உள்ள தனியார் சொத்துகள் அழிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு அமெரிக்கர்கள் தேயிலை வரி செலுத்துவதற்கான தங்கள் எதிர்ப்பை மறுபரிசீலனை செய்திருப்பார்கள். இறுதியாக கிரிஃபின் துறைமுகத்தில் கப்பல்களில் ஊடுருவியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் நாடாளுமன்றத்திற்கு வேறு வழி இருக்கவில்லை என லார்ட் நார்த் கூறினார். "நாம் இதைச் செய்துதான் ஆக வேண்டும்," என்று அவர் 22 ஏப்ரல் 1774 அன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கூறினார், "விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல். இதைச் செய்யாவிட்டால், அனைத்தும் இழக்கப்படும்," என்றார். பிரிட்டனுக்கு ஆதரவாக சூழ்நிலையை மாற்றும் என்று நம்பப்பட்ட அந்த அரசாங்க நடவடிக்கை, கிங் ஜார்ஜ் III கட்டுப்பாட்டில் இருந்த 13 காலனிகளை சரியாக ஓராண்டு கழித்து சுதந்திரத்திற்காக கிளர்ச்சி செய்யத் தூண்டியது. டிசம்பர் 16 நிகழ்வுகளைப் பற்றி அமெரிக்கர்கள் என்ன நினைத்தாலும், மாசசூசெட்ஸில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பறிக்கப்பட்ட உரிமைகள் அவர்களை மேலும் கவலையடையச் செய்தன. இதனால் வேறு இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் இதே நிலை ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்தது. பிரித்தானியாவின் ஒரே வழி அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்துவது என்றால், அவர்களுக்கும் 'ஆயுத எதிர்ப்பு' மட்டுமே மிஞ்சும் என்று காலனித்துவவாதிகள் உணர ஆரம்பித்தனர். ஜூலை மாதம் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் ஜூலை 4, 1776இல் அமெரிக்காவின் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/czqv8enwn4xo
-
தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
இந்தியாவின் கோயம்புத்தூரில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் இன்று திறந்து வைக்கவுள்ளார். தமிழ் எழுத்துகளைக் கொண்டு சுமார் 2.5 டன் எடை கொண்டதாகவும் 20 அடி உயரம் கொண்டதாகவும் குறித்த திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிலையின் முன்பு திருக்குறளின் முதற்குரலான ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு’ என்ற குரல் பொறிக்கப்பட்டுள்ளது. விசேடமாக, இந்த சிலை முழுவதுமாக தமிழ் எழுத்துக்களால் அமைக்கப்பட்டு நெற்றியில் அறம் என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வீதியின் குறிச்சிக்குளம் பகுதியில் இந்த திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மாலை வேளைகளில் மின் விளக்குகளால் ஔிரும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் சிலை முழுவதும் உருக்கு இரும்பினால் (Steel) உருவாக்கப்பட்டுள்ளது. 52 கோடி இந்திய ரூபாய் செலவில் உருவாக்கப்படும் ‘Smart City’ திட்டத்தின் கீழ் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/287142
-
வடகொரியாவின் அடுத்த தலைவராகும் வாய்ப்பு இவருக்கே…!! தென்கொரியா கணிப்பு
கிம் இன்னும் இளமையாகவே இருக்கிறார். பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இல்லை. அவருக்கு வருகிற திங்கட்கிழமையுடன் 40 வயது ஆகிறது. வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் உன் இருந்து வருகிறார். ரகசிய நாடுகளில் ஒன்றாக அறியப்படும் அந்நாட்டில் அடுத்த தலைவராக யார் வருவார் என்பது பற்றி அந்நாட்டு அரசு ஊடகங்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில், கிம்மின் மகளான கிம் ஜூ யே தந்தையுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அவருடைய தந்தையின் அதிக அன்புக்குரிய அல்லது மதிப்புக்குரிய குழந்தையாக ஜூ யே இருக்கிறார் என அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கேற்ப தென்கொரியாவும் ஜூ யே, அடுத்த வாரிசாக வரக்கூடும் என தெரிவித்து உள்ளது. கிம் ஜாங் உன்னின் மகளின் அதிகரித்து வரும் அரசியல் நிலைப்பாடு மற்றும் தந்தையுடனான நெருக்கம் ஆகியவற்றை வடகொரியாவில் இருந்து வெளிவரும் செய்திகளும் மற்றும் புகைப்படங்களும் நிரூபிக்கின்றன. கடந்த செப்டம்பரில் ராணுவ அணிவகுப்பு ஒன்றின்போது, வி.ஐ.பி. பார்வையாளர் வரிசையில் இருந்தபடி அதனை ஜூ யே பார்வையிட்டு கைதட்டினார். கடந்த நவம்பரில், விமான படை தலைமையகத்திற்கு தன்னுடைய தந்தையுடன் வருகை தந்த ஜூ யே, கிம் ஜாங் உன்னின் முன்னால் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, இருவரும் கருப்பு கண்ணாடி அணிந்தபடி காணப்பட்டனர். கடந்த ஞாயிற்று கிழமை பியாங்யாங் நகரில், புது வருட கொண்டாட்டம் நடந்தபோது, கிம் ஜாங் உன் அவருடைய மகளின் கன்னத்தில் முத்தமிட்டார். பதிலுக்கு மகளும் கிம்மின் கன்னத்தில் முத்தமிட்டார். இந்நிலையில், தென்கொரியாவின் தேசிய நுண்ணறிவு சேவை என்ற உளவு அமைப்பு இன்று கூறும்போது, கிம் ஜாங் உன்னின் அடுத்த வாரிசாக கிம் ஜூ யே வருவது போன்று தெரிகிறது என தெரிவித்து உள்ளது. கிம் இன்னும் இளமையாகவே இருக்கிறார். பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இல்லை. அவருக்கு வருகிற திங்கட்கிழமையுடன் 40 வயது ஆகிறது. அதனால், அடுத்த வாரிசுக்கான நடைமுறையை பற்றிய அனைத்து சாத்தியங்களை பற்றியும் ஆலோசித்து வருகிறோம் என்றும் தெரிவித்து உள்ளது. அரசியல் படிப்புகளுக்கான சியோல் நகர ஏசன் மையத்தின் நிபுணரான டூ ஹியோகன் சா கூறும்போது, ஜூ யேவுக்கு அரசியல் சாதனைகள் என்பது குறைவாக உள்ளது. அதனுடன், நாட்டின் வருங்கால தலைவராக அவர் முறைப்படி அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். கிம் ஜாங்குக்கு அடுத்து அவருடைய வாரிசாக வருவதற்கான தகுதியை ஜூ யே பெற்றிருக்கிறார் என்று கிம் நம்புகிறார் என்று தென்கொரியாவின் செஜாங் மையத்தின் நிபுணரான சியாங் சியாங்-சாங் என்பவர் கூறுகிறார். கிம் ஜாங்கின் உடல் பருமன் தீவிரம் வாய்ந்ததுபோல் காணப்படுகிறது. அதனால், அவர் நாளைக்கே மயக்கமடைந்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறியுள்ளார். ஜு யே அவருடைய தந்தையுடன் பெரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பது, வளர்ந்து வரும் வயதிலேயே மனிதர்களுடனான தொடர்பை கட்டமைப்பது மற்றும் அரசாட்சி முறையை பற்றி கற்று கொள்வது போல் தெரிகிறது என்றும் சியாங் கூறுகிறார். இதற்கு முன் கிம் ஜாங் உன்னோ அல்லது கிம் ஜாங் 2-வோ, அவர்கள் இருவரும் பெரியவர்களாகும் வரை அரசு ஊடகத்தில் அவர்களின் பெயர் குறிப்பிடப்படவேயில்லை. ஆனால், ஜூ யேவின் பெயர் வெளிவந்திருப்பது வெளிநாட்டு நிபுணர்களுக்கு பெரிய ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது. https://thinakkural.lk/article/287090
-
தொடர்தற்கொலைகள் - ஏழு மரணங்கள் சிஐடியினர் விசாரணை- யார் அந்த மதபோகர்
அடுத்த பிறவிக்கு விரைவாகப் போகலாம் என்ற மதபோதனையால் 7 பேர் அடுத்தடுத்து தற்கொலை - காவல்துறை கூறுவது என்ன? படக்குறிப்பு, தற்கொலை செய்து கொண்ட போதகர். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 5 ஜனவரி 2024, 05:57 GMT தற்கொலை செய்துக்கொள்வதன் மூலமாக அடுத்த பிறவிக்கு விரைவில் செல்ல முடியும் என போதனை செய்ததை அடுத்து, போதகர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த சம்பவமொன்று இலங்கையில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ருவன் பிரசன்ன குணரத்ன என்ற 47 வயதான நபரொருவர், பௌத்த மதத்தை திரிவுப்படுத்தி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போதனைகளை நடாத்தியுள்ளார். தற்கொலை செய்துக்கொள்வதன் ஊடாக, அடுத்த பிறவிக்கு விரைவில் செல்ல முடியும் என அவரது போதனைகளில் கூறியுள்ளதாக போலீஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. குறித்த நபர் ஆரம்பத்தில் இரசாயன ஆய்வு கூடமொன்றில் கடமையாற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இந்த நபர் இரசாயன ஆய்வு கூடத்திலிருந்து விலகி, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் போதனைகளை நடாத்தியுள்ளார். இவ்வாறான பின்னணியில், குறித்த போதகர் கடந்த மாதம் 28ம் தேதி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். ஹோமாகம பகுதியிலுள்ள வீடொன்றில், நஞ்சு அருந்தி குறித்த நபர் உயிரிழந்தமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, குறித்த போதகரின் மனைவி, தனது மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சை வழங்கி, தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் மாலபே போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கணவனின் உயிரிழப்பை தாங்கிக் கொள்ள முடியாது, மன அழுத்தம் ஏற்பட்டமையினால், பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து, தானும் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என ஆரம்ப கட்டத்தில் போலீஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். எனினும், இந்த சம்பவம் தொடர்பில் எழுந்த சந்தேகத்தை அடுத்து, போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்த நிலையில், இந்த குடும்பத்தாரின் இறுதிக் கிரியைகளில் கலந்துக்கொண்ட நபர் ஒருவரை போலீஸார் விசாரணை செய்துள்ளனர். அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 34 வயதான பீர்த்தி குமார என்ற நபரிடம் போலீஸார் விசாரணைகளை நடாத்தியுள்ளனர். தற்கொலை செய்துக்கொண்ட போதகரின் போதனைகளில், பல வருடங்களுக்கு முன்னர் தானும் கலந்துக்கொண்டதாக குறித்த நபர் போலீஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதனாலேயே, போதகரின் மனைவி உள்ளிட்ட குழந்தைகளின் இறுதிக் கிரியைகளில் தானும் கலந்துக்கொண்டதாக அவர் கூறியுள்ளார். தற்கொலை செய்வதனை ஊக்குவிக்கும் வகையில், குறித்த போதகர் போதனைகளை நடாத்தியிருந்ததாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். விரைவில் அடுத்த பிறவிக்கு செல்லும் எண்ணத்திலேயே, போதகர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக, குறித்த நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், போலீஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய, போதனைகளில் கலந்துக்கொண்டதாக கூறப்படும் 34 வயதான பீர்த்தி குமாரவும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். மஹரகம பகுதியிலுள்ள ஹோட்டல் அறையொன்றிலிருந்து, அவரது சடலத்தை போலீஸார் கண்டெடுத்துள்ளனர். குறித்த நபர் ஜனவரி 2ம் தேதி ஒரு வகையான நஞ்சை அருந்தி, தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை போலீஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு குறித்த நபர் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் நஞ்சு மருந்தை, ஹோட்டல் அறையிலிருந்து போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன், நஞ்சு அருந்தி உயிரிழந்ததாக கூறப்படும் தாய் மற்றும் பிள்ளைகளின் இறுதி சடங்குகளில் கலந்துக்கொண்டதாக கூறப்படும் யுவதி ஒருவரும் நஞ்சு அருந்தி உயிரிழந்துள்ளார். யக்கல பகுதியிலுள்ள தனது வீட்டிலேயே, குறித்த யுவதி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். பௌத்த மதத்தை திரிவுப்படுத்தி போதனை நடாத்தியதாக கூறப்படும் போதகரின், போதனைகளில், இந்த யுவதி கலந்துக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என போலீஸார் கூறுகின்றனர். தற்கொலை செய்துக்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நஞ்சு பொருள், ஒரே தன்மை உடையதா என்பது தொடர்பில் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, போதகரின் போதனைகளில் கலந்துக்கொண்டதாக கூறப்படும் நபர் தொடர்பிலும் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விசாரணைகளின் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட ஒரு தொகுதி குழுவினரிடம் போலீஸார் விசாரணைகளை நடாத்தியுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர்களிடம், ஏதேனும் நஞ்சு வகைகள் காணப்படுகின்றதா என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சைனைட் வகையை சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு வகை நஞ்சை அருந்தியே, இவர்கள் உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,SRI LANKA POLICE ''இந்த நான்கு சம்பவங்களிலும் ஒரே வகையாக அடையாளங்கள் காணப்பட்டன. அதாவது, நஞ்சு என சந்தேகிக்கப்படும் பை கிடைக்கப் பெற்றது. சிறிய பக்கெட்களிலேயே இந்த நஞ்சு பொருள் காணப்பட்டுள்ளது. இது சைனைட் என சந்தேகிக்கின்றோம். எனினும், இந்த நஞ்சு பொருள் என்ன என்பது குறித்து இரசாயண பகுப்பாய்வு அறிக்கை வந்தவுடனேயே சரியான தகவல்களை கூற முடியும். எனினும், இது நஞ்சு தன்மை வாய்ந்தது என்பது தெளிவாக தெரிகின்றது" என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிடுகின்றார். ''நஞ்சை அருந்தி தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என குறித்த போதகர் போதனை செய்துள்ளமை புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்தால், அடுத்த பிறவியில் சிறந்ததொரு இடத்தில் பிறக்க முடியும் என்ற வகையில் போதனை செய்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் அதனை நம்பும் நபர்கள் இருக்கக்கூடும். இவரது போதனைகளில் கலந்துக்கொண்டவர்களின் உறவினர்கள், அவர் குறித்து ஆராய்ந்து பாருங்கள்." எனவும் அவர் கேட்டுக்கொள்கின்றார். https://www.bbc.com/tamil/articles/c892rjxjx5do
-
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்
பூநகரி பொலிஸார் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு! கிளிநொச்சி – பூநகரியில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பூநகரி பிரதேச செயலகத்தில் ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் பல கலந்துரையாடல்கள் இன்று (05) மாலை இடம்பெறவுள்ள நிலையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், பொன்னாவெளி பகுதியில் சீமெந்து நிறுவனமொன்றுக்கு அகழ்வு பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆர்பாட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் 10 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எவ்வாறாயினும், ஜனாதிபதி தலைமையிலான கலந்துரையாடல், பொதுமக்கள் மற்றும் க.பொ.த உயர் தர பரீட்சைக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையிலும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காத வகையிலும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க அரசியலமைப்பில் உரிமை காணப்படுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறன்றி, சட்டத்திற்கு விரோதமாக ஆர்பாட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில், பொலிஸாரினால் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்ய முடியுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ஆர்பாட்டத்தின் போது சட்ட விரோத நடவடிக்கைகள் இடம்பெறும் பட்சத்தில் பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களுக்கு உட்பட்டு அவற்றை தடுக்க பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/287148
-
சுவீடனில் கடும் பனி பொழிவு; பிரதான வீதியில் சிக்கிய 1000 வாகனங்கள்
Published By: DIGITAL DESK 3 05 JAN, 2024 | 12:00 PM சுவீடனில் 24 மணித்தியாலத்திற்கு மேலாக பொழிந்த கடும் பனியினால் ஸ்கேன் பகுதியில் உள்ள E22 பிரதான வீதியில் 1000 வாகனங்கள் சிக்கியுள்ளன. சுவீடனில் செவ்வாய்க்கிழமை கடும் குளிரினால் வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸிற்கும் கீழ் வெப்பநிலை குறைந்துள்ளது. ஹார்பி மற்றும் கிறிஸ்டியான்ஸ்டாட் இடையே இரு திசைகளிலும் பனி சூழ்ந்ததால் புதன்கிழமை அந்நாட்டு உள்ளூர் நேரப்படி காலை 9.00 மணிக்கு E22 பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது. இந்நிலையில், E22 பிரதான வீதியில் காரில் சிக்கி இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், வியாழக்கிழமை காலை வரை லொறி சாரதிகள் மட்டுமே தங்கள் வாகனங்களில் இருந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சுமார் 180 வாகனங்களை விடுவிக்க இன்னும் முயற்சி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் கடும் பனி பொழிவால் நோர்டிக் நாடுகளில் வெப்பநிலை குறைந்துள்ளது. இதன் காரணமாக சுவீடன், பின்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கடுமையான குளிர் வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், புதன் கிழமை முதல் டென்மார்க்கில் பனிப்புயலால் ஆர்ஹஸ் அருகே உள்ள அதிவேக வீதியில் வாகனங்கள் சிக்கியுள்ளன. https://www.virakesari.lk/article/173177
-
நாட்டின் முன்னேற்றத்திற்காக வட மாகாணத்திலிருந்து பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும் - ஜனாதிபதி
3 பிரதான கல்வி கேந்திர நிலையங்களில் ஒன்றாக வடக்கு உருவாக்கப்படும் - ஜனாதிபதி 05 JAN, 2024 | 07:21 PM ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வட. மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்திற்கு 50% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணம் நாட்டு பொருளாதாரத்தின் எஞ்சின் ஆக இயங்குகிறது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களையும் அதனுடன் இணைத்துக்கொண்டு 05 பிரதான எஞ்சின்களுடன் இந்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வவுனியா மாவட்ட கலாசார மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) நடைபெற் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் கல்வி,சுகாதாரம், மீள்குடியமர்த்தல், காணி, மின்சாரம்,குடிநீர், சுற்றுலா, வனவன பாதுகாப்பு, மீன்பிடித் துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு, சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜனாதிபதி அவ்விடத்திலேயே அறிவித்தார். கொழும்பு, கண்டி, வடக்கு இந்நாட்டின் மூன்று பிரதான கல்வி கேந்திர நிலையங்களாக உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், "எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு எஞ்சின் மாத்திரமே உள்ளது. அதற்கு 50% பங்களிப்பு மேல் மாகாணத்திலிருந்தே பெறப்படுகிறது. மற்றை மாகாணங்களிலிருந்து கிடைக்கும் பொருளாதார பங்களிப்பு மந்தமான நிலையிலேயே உள்ளது. நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வதற்கு எஞ்சின்களின் எண்ணிக்கையையை அதிகரிக்க வேண்டும். அதற்காக மற்றைய மாகாணங்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும். அதற்காக சில மாகாணங்கள் அறியப்பட்டுள்ளன. வடக்கு,மேற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு பெருமளவான பங்களிப்பை வழங்கும் மாகாணங்களாக மேம்படுத்தப்பட வேண்டும். தற்போது நிதி பலமும் இருப்பதால் இடைநிறுப்பட்ட வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும். அதேபோல் வெளிநாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தொடர்வதற்கான உதவிகளும் கிடைக்கப்பெறவுள்ளன. மேலும் வட.மாகாணத்திடமிருந்து இந்நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. வட. மாகாணத்திலிருந்து காற்று மற்றும் வெப்ப நிலை காரணமாக மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தயாரிப்புக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வட. மாகாணத்தில் தயாரிக்கூடிய மின்சாரத்தின் அளவை கணக்கிட்டு பார்க்கும் போது எஞ்சிய தொகையை இந்தியாவுக்கு விற்பனை செய்து பணம் பெறக்கூடிய நிலையும் உள்ளது. அதற்கான பேச்சுவார்தைகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வட.மாகாணத்தின் விவசாயிகள் திறமையும் செயற்திறனும் கொண்டவர். விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் வட.மாகாணத்தின் விவசாய நிலங்களை முகாமைத்துவம் செய்வதன் வாயிலாக ஏற்றுமதி விவசாய தொழிற்துறையை பலப்படுத்தலாம் " என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதாளத்தில் விழுந்து கிடந்த போது நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியமை சிறப்புக்குரியதாகும். ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட போது சமயல் எரிவாயு இருக்கவில்லை, எரிபொருள் இருக்கவில்லை. மின் துண்டிப்பு தொடர்ச்சியாக நீடித்தது. வெளிநாட்டு கையிருப்பு முற்றாக தீர்ந்துப்போயிருந்தது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தினார். அதனால் இன்று வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிக்க முடிந்துள்ளது. வட. மாகாணத்தின் வீதிக் கட்டமைப்புக்களை பலப்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அதேபோல் போக்குவரத்து செயற்பாடுகளை பலப்படுத்தி சுற்றுலா வலயமாக மேம்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படு வருகின்றன. வட. மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் கடந்த முறை உயர்தரத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை யாழ்ப்பாணம் பெற்றுக்கொண்டது. க.பொ.த. சாதாரண தர பரீட்சையிலும் சிறப்பான பெறுபேறுகள் கிடைத்திருந்தன. மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். வட. மகாண கல்வி அபிவிருத்திக்காக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாமாக முன்வந்து செயற்திறனுடன் பணியாற்றி வருகின்றனர். அது தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியும். சுகாதார துறையில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்திகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், விவசாய அபிவிருத்தி திட்டங்கள் பலவும் தற்போதும் ஆரம்பிக்கபட்டுள்ளன. குறிப்பாக இதுவரையில் பயிர்செய்யப்படாத நிலங்களில் பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பிலான தலையீடுகளை மேற்கொண்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம். இப்பிரதேச விவசாயிகளின் அறுவடைகளை கொண்டுச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம். இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த முறை எமது பிரதேசத்திற்கு விஜயம் செய்த போதும் இங்குள்ள தேவைகளை ஆராய்ந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். இம்முறையும் ஜனாதிபதியை வரவேற்று நன்றி கூறுகின்றோம். முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான காணிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், குளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை விவசாயத்திற்கு விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன், யானை வேலி பராமரிப்பு மற்றும் மீன்பிடி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினறுமான குலசிங்கம் திலீபன் வவுனியா மாவட்டத்தில் காணி விடுவிப்பு தொடர்பான அறிவிப்பு முதன்முறையாக வனவள திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. அதற்காக ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். வவுனியா மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆலோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். அதற்கு தேவையான மேய்ச்சல் நிலங்களை விடுவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஜனாதிபதியின் வருகைக்கு நன்றி தெரிவிக்கிறோம். வரவு செலவுத்திட்ட கூட்டத்தொடரின் போது மூன்று அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. அவர்களில் இருவரை நீங்கள் விடுவித்துள்ளீர்கள். அதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம் ஜனாதிபதியின் வருகைக்கு நன்றி தெரிவிக்கிறோம். வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் புதிய பொருளாதார மத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட சுமார் 12 அரசியல் கைதிகள் இன்னமும் உள்ளதாகவும், அவர்களை விடுவிக்க அல்லது பிணையில் விடுவிக்க விசேட அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், யுத்தம் நிறைவடைந்தாலும் வவுனியாவில் அபிவிருத்திப் பணிகள் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருகின்றார். காணி விடுவிப்புப் பணிகளை நீங்கள் நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளதால், அதற்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். மேலும், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் அபிவிருத்திப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ். நோஹரதலிங்கம், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, சமூக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத் சந்திர மற்றும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/173235
-
கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?
கத்தார்: முன்னாள் கடற்படை அதிகாரிகளின் மரண தண்டனை சிறை தண்டனையாக குறைப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு தண்டனை 3 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறுத்தப்பட்டு வெவ்வேறு அளவிலான சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் 60 நாட்களில் தங்களது சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். கத்தார் அல்லது இந்தியா என இரண்டு நாடுகளுமே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்களை இதுவரை வெளியிடவில்லை. ஆனால், ஃபினான்ஷியல் டைம்ஸ், ராய்ட்டர்ஸ் செய்தி முகமை ஆகியவை அந்த அதிகாரிகள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக அடையாளம் தெரியாத வழியிலிருந்து தகவல் கிடைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, கத்தார் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இதுவரை இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கின் நீதிமன்ற ஆணையும்கூட பொதுவெளியில் பகிரப்படவில்லை. அரசின் ராஜதந்திர சோதனையாகப் பார்க்கப்பட்ட இந்த வழக்கின் முக்கியமான முன்னேற்றங்களை மட்டுமே இந்தியா வெளியிட்டு வந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மரண தண்டனையைக் குறைக்கும் நீதிமன்ற ஆணையைத் தற்போது அந்த 8 பேரின் சட்டக் குழு பெற்றுள்ளது என்றும், மேலும் அதுவொரு "ரகசிய ஆவணம்" என்றும் கூறியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். “இந்தியாவை சேர்ந்த 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, வெவ்வேறு கால அளவிலான சிறைத் தண்டனைகளாக மாற்றப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்துகிறோம்," என்று அவர் கூறினார். மேலும் தீர்ப்பை எதிர்த்து 60 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், சிறைத் தண்டனையின் அளவு என்ன என்பதை அவர் வெளியிடவில்லை. “அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தற்போது சட்டக்குழுவின் முடிவு” என்று அவர் கூறியுள்ளார். கடந்த 2023 அக்டோபர் மாதம், முதலில் கத்தார் முதன்மை அமர்வு நீதிமன்றம் 8 பேருக்கும் மரணதண்டனை விதித்தபோது, இந்தியா “மிகவும் அதிர்ச்சி” அடைந்ததாகக் கூறியது. அப்போது அனைத்து விதமான சட்டரீதியான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதாகக் கூறிய வெளியுறவுத்துறை அமைச்சகம், பின்னர் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்களை நமது நாட்டின் “முன்னாள்-படைவீரர்கள்” என்று குறிப்பிட்டார். அந்த 8 பேரின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அவர்களின் கடற்படை பணி குறித்த விவரங்களை உள்ளூர் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேர் யார்? மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களில் கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சௌரப் வசிஷ்டா, கேப்டன் வீரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுக்னகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர். இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. இந்திய அரசு மரண தண்டனை செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தது. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாகவும் வெளியுறவு அமைச்சகம் அப்போது தெரிவித்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு கத்தார் அரசுக்கு இந்நிறுவனம் உதவுவதாக பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன. நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ன? நிறுவனத்தின் பழைய இணையதளம் இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. கத்தார் அமிரி தேசியப் படைக்கு (QENF) பயிற்சி, தளவாடங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கியுள்ளது என்று நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய இணையதளத்தில் நிறுவனத்தின் பெயர் டஹ்ரா குளோபல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கத்தார் அமிரி தேசிய படைக்கு வழங்கப்பட்ட அதன் சேவைகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதன் தலைமைப் பொறுப்புகளில் இருந்த கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு கத்தார் அரசுக்கு இந்நிறுவனம் உதவுவதாக பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன. இருப்பினும், இதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர். முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு நிறுவனத்துடனான தொடர்பு என்ன? இந்த வழக்கில் சிக்கியுள்ள 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களில் ஒருவரான கமாண்டர் பூர்ணேந்து திவாரி இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2019இல் அவருக்கு பிரவாசி பாரதிய சம்மன் விருது வழங்கப்பட்டது. அப்போது கத்தாருக்கான அப்போதைய இந்தியத் தூதரும், கத்தார் பாதுகாப்புப் படைகளின் சர்வதேச ராணுவக் கூட்டுறவின் முன்னாள் தலைவருமான பி.குமரன் மூலம் கௌரவிக்கப்பட்டார். இந்திய கலாசார மையத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி கேப்டன் கவுசிக் விழாவில் கலந்துகொண்டார். தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இவர்களை கத்தாரின் உளவுத்துறை நிறுவனமான ஸ்டேட் செக்யூரிட்டி பீரோ கைது செய்துள்ளது. எதற்காக, எப்படி இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன? மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளை கத்தாரின் உளவுத்துறை நிறுவனமான ஸ்டேட் செக்யூரிட்டி பீரோ கைது செய்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் நடுப்பகுதியில் இந்திய தூதரகத்துக்குத் தெரிய வந்தது. அவர்கள் கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக அவர்களுக்கு தூதரக அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, இந்திய தூதரக அதிகாரி ஒருவர் இவர்களைச் சந்தித்தார். முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இந்திய அரசோ அல்லது கத்தார் அரசோ பொதுவெளியில் தெரியப்படுத்தவில்லை. https://www.virakesari.lk/article/173236
-
வற் வரி அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
வற் வரி அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் 05 JAN, 2024 | 06:54 PM வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, இராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை (5) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/173234